கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலம் 1988.11

Page 1

ஜப்பானிய சிறுகதை நவீன ஓவியக் கலை தென் ஆப்பிரிக்க விடுதலைப் 8LTUTÜLö LÕÜ.
$JTÕLÜ LITLi ö6008äJ6ö

Page 2
நமது கவலை, வருத்தம், அதிர்ச்சி, ஆறுதல், துயரம், கோபம், அன்பு எல்லாவற்றையும் இந்த அரிஜனச் சிறுவன் புரிந்து கொள்வானென்று நம்புவோம். ,
 
 

தேவா குர்டத்தை
s
s
g (Y 2-A SS SS A12
R كرمك 参 سے سخحیٰ
ru ܐܐ
・? 多〜 ܒ Z گے டுக்கு சேவை செய்வதற்காக முதலமைச்சர் பதவியைத் க்க உத்தேசித்திருப்பதாகச் சொல்கிறீர்களே! நாட்டுக்குச் வ செய்வதாகச் சொல்லித்தானே எல்லோரையும் த்துப் பிடித்து முதலமைச்சர் ஆனிர்கள்?

Page 3
தமிழ்ப்பகுதிகளில் இராணுவ ந வாளர்கள் பலர் கொல்லப்படுதல் () ம
திசைமாறி அந்நிய சக்திகளுக்கு விலை
துயரம் தொ ஈழத்தின் எ
பூரீலங்காவில் ஜனாதிபதி தேர்தல் வரப்
போகிறது. இந்த மழைக்காலத்திலும் அனல் பறக்கும் பிரச்சாரத்தால் தூள் கிளப்புகிறார்கள்.
ஆளும் கட்சி சார்பில் பிரேமதாச போட்டி யிடுகிறார். எதிர்க்கட்சி சார்பில் பூனிமா பண்டார நாயக போட்டியிடுகிறார்.
இருவருமே ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நலம்பயக்கும்படி என்ன என்ன திட்டங்களை தீட்ட்ப் போகிறோம் என்று சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்லவில்லை.
*தமிழர்களின் வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பை ரத்து செய்வோம்; இந்திய இராணுவத்தை திரும்ப அனுப்புவோம்” என்று ஆவேசப் பிரச்சாரம் நிகழ்த்துகிறார்கள். இரு தரப்பினருமே ஒரே கருத்தை வேறு வேறு வார்த்தைகளில் பேசிக் காட்டுகிறார்கள்.
பூரீலங்கா தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்றால் **இவ்வளவு ஒப்பந்தத்தை ரத்துச் செய்தோம். தமிழர்களின் இவ்வளவு உரிமைகளை பறித்தெடுத்தோம். இவ்வளவு தமிழர்களை கொன்றோம்? என்று சாதனைப் பட்டியல் வெளியிட்டால்தான் சிங்கள மக் களிடம் ஒட்டு வாங்க முடியும் என்ற விஷத் தைப் பரப்பி கலந்து வைத்திருப்பவர்களும் இந்த அரசியல்வாதிகள்தான்.
1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்தி அரசுகளிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் தமிழர் களுக்கு இது வரையில்லாத உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறோம் என்று இந்தியப் பிரதமரும், பிறரும் பிரச்சாரம் செய்து வரு கிறார்கள்.
இந்தப் பிரச்சாரம் பொய் என்பதைத்தான் பூரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிடும் பிரேமதாசாவும், பண்டார நாயகாவும் நிரூபிக்கிறார்கள்.
1987 ஜூலையில் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இனி தமிழர் இனப் பிரச்சினைத் தீர்ந்தது என்று ஈழத் தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடவில்லை.
ஒப்பந்தத்தில் பல்வேறு குறைபாடுகள் நிரம்பிக் கிடந்தன.

டவடிக்கை 0 இயக்கம் சார்ந்த ஆதர ர்ம மரணங்கள் () தமிழ் இளைஞர்கள் போய்ச் சீரழிதல் ()
டரும திர்காலம்
குறிப்பாக மலையகத் தமிழ் மக்களின் நாடற்றவர் நிலையில் மாற்றமில்லை.
ஒப்பந்தபடி பூரீலங்கா அரசு உரிய காலத் தில் சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்ய வில்லை. வடக்கு-கிழக்கை இணைக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தைத் திரும்பப் பெறவில்லை. இதையெல்லாம் பூரீலங்காவிடம் இந்திய அரசு வலியுறுத்தவில்லை. அதற்குப் பதிலாக தமிழீழ விடுதலைப் புலிகளை மோதல் பாதைக்கு இழுத்து வந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே மோதல் நடை பெற்றது. ஓராண்டுக்கும் மேலாக இந்திய ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலி களுக்கும் சண்டை நடைபெற்று வருகிறது.
தென்னிலங்கையிலும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தும் இந்திய இராணுவம் வந்ததை எதிர்த்தும் அரசுக்கு எதிராக கலகங் கள் வெடித்து வளர்ந்த வண்ணமே இருக் கின்றன. உயிர்ப்பலிகள் ஆயிரக்கணக்கைத் தாண்டி விட்டன.
முழு இலங்கையுமே மனித உயிர்களுக்குப் பாதுகாப்பற்ற பிரதேசமாகி விட்டது.
இரண்டு நாடுகளிடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தமானது உலகத்திலேயே சிறந்தது முன் மாதிரியானது; உலகத் தலைவர்களின் பாராட் டைப் பெற்றது என்று இந்திய அரசின் வெளியுறவுத்துறை புகழுரைச் சூட்டாத நாளே இல்லை. ஆனால் இந்த ஒப்பந்தத்திற்குப் பின்னர்தான் முழு இலங்கையிலும் என்றுமில் லாத அளவிற்கு அமைதி குலைந்து வரு கிறது.
தமிழீழ விடுதலைப்புலிகள் மோதல் பாதைக்கு வந்த பின், இந்திய இராணுவத் தின் நடவடிக்கைகள் பூரீலங்கா இராணுவத்தின் செயல்பாடுகள் பூரீலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் போலவே ஈழத்தில் வாழும் சாதாரணப் பொதுமக்களுக்கு எதிராய் அமைந் தன. தேடுதல் எனும் பெயரில் அப்பாவி இளைஞர்களைத் துன்புறுத்துதல், சுட்டுக் கொல்லுதல், பெண்களை பலாத்காரம் செய் தல் எனும் இராணுவச் செயல்பாடு அமைந்தது.
இந்திய இராணுவத்தால், ஈழத்தில் சமூக விரோத சக்திகளால் நடத்தப் பெறும்

Page 4
கொலைகளைத் தடுத்து நிறுத்த முடிய வில்லை. இயக்கங்களுக்கிடையேயான மோத
லைத் தடுக்க இயலவில்லை. மர்மமான முறை யில் மக்கள் மரணமுறுவதையும் தடுக்க முடிய வில்லை.
சரி. இந்திய இராணுவம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது?
தினசரி மூன்று கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து கொண்டிருக்கிறது.
1980-லிருந்து 1987 வரை இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கையின் கீழும் 1987 முதல் இந்திய இராணுவ நடவடிக்கை யின் கீழும் ஈழத் தமிழ் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகஸ்டு மாதம் இலங்கை ஜனாதிபதி திடீ ரென்று வடக்கு-கிழக்கு மாகாண இணைப்புப் பற்றிய பிரகடனத்தை வெளியிட்டார்.
செப்டம்பர் மாதம் வரும் நவம்பரில் வடக்கு-கிழக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதி அறிவித்தார். சில வாரங்களுக்கு முன் வடக்கில் ஈழ புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த வர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் அவசரகால நிலை இருந்த போது இந்திரா காந்தி தேர்தலை அறிவித்தார். அப்போது தற்காலிகமாக அவசரகால நிலைச் சட்டத்தை விலக்கினார். சிறையிலிருந்த எதிர்க்கட்சியினரை விடுதலை செய்தார்; பத்திரிகை தணிக்கைச் சட்டத்தைத் திரும்பப் பெற்றார். M
இந்திய ஜனநாயக நாடு, இந்திய இராணு வத்தின் கட்டுபாட்டிற்குள் இருக்கும் ஈழத்தில் என்ன செய்திருக்க வேண்டும்?
மாலை 7 மணிமுதல் அதிகாலை 5 மணி வரைஊரடங்கு அமலில் உள்ளது.
சிறைக்கைதிகள் விடுதலை செய்யப் பெற வில்லை.
பொதுகூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த முடியாத நிலை. N
கருத்துப் பிரச்சாரத்திற்கு இந்திய இராணுவத்திடம் அனுமதி கோரும் நிலை.
இத்தகைய அவசரகால இராணுவ நடை முறையின் கீழ் எப்படி சுதந்திரமான தேர்தல் நடைபெற வாய்ப்பிருக்க முடியும்?
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்பட்டபின், இராணுவம் விலக்கிக் கொள்ளப் பட்டபின், சிறையிலிருப்பவர்கள் விடுதலை செய்யப்பட்டபின், சுமுகமான அமைதிநிலை திரும்பியபின் தேர்தல் நடத்தியிருந்தால் நியாயமானதாக இருந்திருக்க முடியும்.
அச்சிடுபவர் : ஜே. ரமணி, பிளேஸ் பிரிண்டர்ஸ், ெ 12, முதல் பிரதானசாலை நேரு நக

பாலம்
ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. தொடர்ந்து இராணுவத்தின் தேடுதல் வேட்டை. இடையில் தேர்தல் எனும் பெயரில் நியமனம்தான் நடைபெற்றிருக்கிறது!
கிழக்கிலும் இவ்வாறு நியமனம் நடை பெற வேண்டியிருக்கிறது.
இவ்வாறு நியமனத் தேர்தல் நடந்து முடிந்த பின்னும் அமைதிச் சூழ்நிலை நிலவுமா? இந்திய இராணுவத்தின் தேடுதல் வேட்டை, ஊரடங்கு உத்தரவு, கருத்துரி மைக்குத் தடை ஆகிய தொடர்நிகழ்வுகளின் மூலம் ஈழமக்கள் தொடர்ந்து அல்லலுறும் நிலை நீடிக்கிறது.
இதற்கு இடையில் மேலும் ஒரு சம்பவம் திகைக்க வைக்கிறது.
** மாலத்தீவை தமிழ்ப் போராளிகள் கைப் பற்றினர். அதிபர் கையூம் பிணைக்கைதி யாகப் பிடிபட்டார்."
நவம்பர் 3 ஆம் தேதி மாலை பத்திரி கைகள் இச்செய்திகளை வெளியிட்டன.
மாலத்தீவு கைப்பற்றப்பட்டச் சம்பவமும், இந்தியாவால் விடுவிக்கப்பட்ட மாலத்தீவை மீண்டும் அதிபர் கையூம் வசம் ஒப்படைக்கப் பட்டச் சம்பவமும் மர்மம் நிறைந்தவைகளாகி விட்டன. இது ஒரு புறமிருக்கட்டும்.
மாலத்தீவிற்கு ஆயுதம் ஏந்திச் சென்ற குழுவில் தமிழ்பேசும் இளைஞர்களும் இருந் தனர் என்பது ஊர்ஜிதமாகி வருகிறது.
தமிழ் மக்களின் தேசிய தனித்துவம், பாரம்பரிய பிரதேச உரிமை வாழ்க்கைப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யாத ஒரு ஒப்பந்தம் இந்திய-இலங்கை அரசுகளுக் கிடையே ஏற்பட்ட பின் வரும் தொடர் விளைவு களில் மாலத்தீவு சம்பவமும் ஒன்று.
தமிழ்த் தேசிய இனப் போராட்டம் தடுக் கப்பட்டு இடை நிறுத்தப்பட்டதாலும், தமிழர் களின் அபிலாசைகளை நிறைவேற்றாத ஒப்பந்த வெறுப்பினாலும் தமிழ் இளைஞர்கள் அந்நிய சக்திகளுக்கு கைப்பாவையாக மாறும் துர்நிலையும் வந்து விட்டது.
O
தமிழ்ப்பகுதிகளில் தொடர்ந்து இராணுவ நடைமுறை.
இயக்கம் சார்ந்த ஆதரவாளர்கள் பலர் கொல்லப்படுதல்.
தமிழ் இளைஞர்கள் திசை மாறி அந்நிய சக்திகளுக்கு விலை போய் சீரழிதல்.
இவ்வகையான துயரம் ஈழத்தில் தொடர் கிறது.
*ன்னை-600020. வெளியிடுபவர் : இரா. திரவியம் , சென்னை-600020. ஆசிரியர் : நதி

Page 5
0 பயங்கரவாதத் தடைச்சட்ட
ஊரடங்குச் சட்டம் ஆகிய6 0 யுத்த நிறுத்தத்தை நிரந்த O அனைத்து அரசியல் கைதி
தேர்தல் பழ
தேர்தல் குறித்தான ஈழப் புரட்சி அமைப் பின் நிலைப்பாட்டை இங்கு தெளிவுபடுத்த விரும்புகின்றோம். நாம் காத்திரமான ஜன நாயகத்தையும், வரம்புகளையும் அதன் அங்க மான தேர்தல்களையும் முற்றிலும் நிராகரிப் பவர்கள் அல்லர் என்ற நிலைப்பாட்டிலிருந்து எமது விளக்கமானது இங்கு தரப்படுகின்றது.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட போது அது ஒரு திருப்புமுனை என்பதையும் தற்காலிக ஆறுதல் தரவல்லது என்பதையும் நாம் அன்றைய காலகட்டத்தில் தெரியப்படுத்தி யிருந்தோம். இது இனப் பிரச்சினையையும், இந்தியாவின் பாதுகாப்பையும் ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். இனப் பிரச்சினையில் மலையக மக்கள் அனைவரை யும் நாடு கடத்துவதை ஆமோதித்தும், எமது எதிர்காலத்தை நாமே நிர்ணயிக்கும் உரிமை யையும் தட்டிக் கழித்து காணப்படும் விடயங் களை நாம் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.
இவற்றில் திருத்தங்கள் கொண்டு வரப் படுமென இந்தியத் தரப்பில் தெரிவித்தபோது அதை நாம் வரவேற்றோம். மேலும் இந்திய பாதுகாப்பு, இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு என்ற வகையில் இந்த அம்சத்தையும் நாம் ஏற்றுக் கொண்டிருந்தோம். இவற்றுக்கு அடையாளமாகவே எமது ஆயுத ஒப்படைப்பை நிறைவேற்றியிருப்பது இலங்கைஇந்திய ஒப்பந்தம் இந்திய இராணுவ-புலிகள் மோதலுக்கு திட்டமிட்ட வேளையில் அமை திக்குப் பின்பு தேர்தல் மூலம் தெரிவாகும் பிரதிநிதிக்கூடாகவே ஒப்பந்தத்தில் திருத்த மும், இனப்பிரச்சினைக்கு இடைக்காலத் தீர்வும் ஏற்படுத்தப்படுமென்றதும் எமக்கு ஏற்புடையதா கவே இருந்தது. இதற்காக உடனடி அமைதி கோரி நாம் மக்களின் மன எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஈழத்தில் பல பாகங் களிலும் கையெழுத்துப் பகிரங்க பிரச்சாரங்கள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் படி இங்கு இன்னமும் அமைதி தோன்ற ல்லை. அமைதியின் பின் தேர்தலா, தேர்தலின் பின் அமைதியா என்பது த ற் போ  ைத ய பிரச்சினையாகவுள்ளது. தேர்தலின் பின் அமைதி என்ற இலங்கை இந்திய அரசுகளின் தற்போதைய நிலைப் பாடானது ஒரு ஜனநாயக செயல்முறையல்ல. அமைதி குலைந்த நிலையில் நடைபெறும் தேர்

ம், அவசரகாலச் சட்டம், பற்றை நீக்குக ரமாக்குக
களையும் விடுதலை செய்க
]றி ஈரோஸ்
தல் செயற்கையானது, பலவந்தமானது. இதற் காக விடுதலை அமைப்புகளை கூறுபடுத்தி அணுகுவதும், அவர்களை இணங்கச் செய் வதும், அவற்றின் அறிகுறிகளே. இது நடை முறைக்கு வருமாயின் இனத்துக்குள்ளான குழப்ப நிலைக்கும் இந்தியாவுக்கும் புறம் பான அந்நியச் சக்திகளின் ஊடுருவலுக்கும் வழிகோலும் ஆபத்து உருவாகும் என்பது நிச்சயமானது. இந்த வகையில் நடைபெற்ற இவ்வகைச் செயற்கையான மாகாணசபைத் தேர்தலும், சபை உருவாக்கமும் எமக்கு படிப் பினையாகவுள்ளன.
இந்திய இராணுவமும், இலங்கை இராணு வமும் தற்போதுள்ள நிலைகளில் இருந்து நீங்கி தமக்குரிய பிரதான கேந்திர ஸ்தானங் களுக்குச் செல்ல வேண்டும்.
யுத்த நிறுத்தம் நிரந்தரமாகவே நிலவ
வேண்டும்.
பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசர காலச் சட்டம், ஊரடங்குச் சட்டம் ஆகியவை நீக்கப்பட வேண்டும். V,
ஒப்பந்தத்தின்படி அனைத்து அரசியல் கைதிகளும் நிப்ந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும்.
இந்தியாவிலும், இலங்கையிலும் அகதி களாக விளங்கும் மக்கள் மீளக் குடியமர்த்தப் பட்டு வாக்களிக்கும் நிலைக்கு வர வேண்டும். மக்கள் தமது செயற்பாடுகளுக்காக இடம் விட்டு இடம் நகரவும், தமது கல்வி, தொழில் முதலானவற்றை மேற்கொள்ளவும், கலாச் சாரத்தைப் பேணவும், சுதந்திரமாகப் பேசவும் இடமளிக்க வேண்டும்.
காலனித்துவ இராணுவத்திடம். அனுமதி கோருவதுபோல் அமைதிப் படையினரிடம் அனுமதி கோரும் அனுமதிச்சீட்டு முறை அற்றுப் போக வேண்டும். தமிழ்ப் பேசும் மக்களின் அடுத்த ஆரம்பம், ஜனநாயகத் தைக் காப்பாற்றும் முறைமை என்பது எவருக்கும் புரிந்ததொன்றாகும். இதனைப் பிரதிபலிக்கும் வகையிலேயே ஈழப் புரட்சி அமைப்பானது தனது நிலைப்பாட்டை வெளிப் படுத்தியிருக்கின்றது.
இவ்வாறு ஈரோஸ் 13-10-88 அன்று விடுத்த அறிக்கையில் கூறியுள்ளது.

Page 6
ஜப்பானிய ரஷோ
அகுடகவ்ா ர்யுனோசுே தமிழில் :
புராதன ஜப்பானியக் கதைகளை நவீன உளவியல் ரீதியான பார்வைன படுத்தும் கலையானது அகுடகவா ர்யு அதன் சிகரத்தைத் தொட்டது. அற்பு கரத்தைக் கருவாகக் கொண்டும் (macat கதைகள் எட்கார் ஆலன் போவின் எ போவின் கதைகளைப் போலவே அ மரணத்துக்குப் பின்னரே வரவேற்பு அத் ஒருவரே ஜப்பானிய நவீன எழுத்தாள
பட்ட, மொழிபெயர்க்கப்பட்டவர் ஆவார்
"ரஷோமோன்' - இவருடைய அகுடகவாவின் சிறுகதைகளில் சிறந்த தொகுப்பான கொஞ்சகு மோனோகடா என்பதிலிருந்து ஆதாரமாக எடுத்துக் இதுவும், **தோப்பில்” என்கிற மற்ெ வெனிஸ் திரைப்பட விழாவில் மிகச்சிறந் பெற்ற **ரஷோமோன்” சினிமாவின் தி
ஜப்பானின் பழைய தலைநகரான க்யோட்டோவின் மிகப் பெரும் நுழைவாயில் ரவேஷாமோன் ஆகும். 106 அடி அகலமும், 26 அடி திண்மையும் மேலே நீண்ட ஸ்தூபியும் கொண்டது. அதன் கற்சுவர் 75 அடி உயரம் கொண்டது. இப்பெருங் கதவு கி. பி. 789ல் அப்போதைய ஜப்பானியத் த  ைல நகர் க்யோட்டோவுக்கு மாற்றப்பட்டபோது கட்டப் பட்டது. மேற்கு க்யோடோவின் வீழ்ச்சியி லிருந்து மிகவும் பழுதடைந்து போய் உடைந்து நொறுங்கி, திருடர்களும், வழிப்பறிக் கொள் ளைக்காரர்களும் ஒளிந்து கொள்ளும் இட மாகவும். அனாதைப் பிணங்களை நிராதரவாக
விட்டுச் செல்லும் இடமாகவும் மாறிவிட்டது.
அது ஒரு குளிர்ந்த மாலை நேரம். சாமுராய் என்ற வேலைக்காரன் ஒருவன் மழை நிற்பதற்காக ரஷோமோனின் கீழே காத்து நின்றான்.
அப் பெருங்கதவின் கீழே வேறு யாரு மில்லை. அங்கும் இங்குமாக வர்ணம் தீட்டப் பட்ட ஒரு தூணில் ஒரு வெட்டுக்கிளி உட் கார்ந்திருந்தது. சுஜாகு அவென்யூவில் அந்த ரஷோமோன் நின்று கொண்டிருப்பதால்,

சிறுகதை
of 667
க D தகவழி கொஜிமா
சுந்தர்ஜி
மறுபடியும் சொல்லும்போது அதற்குள் u (Psychological Insight) pluGustasi னோசுகே (1892-1927)யின் காலத்தில் தமான பாணியும் (style), சாவின் பயங் ore theme) 66Ti(5th 9(5lds6.J froísir U6) rழுத்தை ஞாபகப்படுத்துகின்றன. தவிர குடகவாவின் கதைகளுக்கும், அவரின் திகரித்தது என்று தோன்றுகிறது. இவர் ர்களிலேயே அநேகமாக அதிகம் அறியப்
ஆரம்பகாலச் சிறுகதைகளுள் ஒன்றும், நதுமாகும். இது 12ம் நூற்றாண்டின் ரி” (புதிய மற்றும் பழைய கதைகள்) கொள்ளப்பட்ட இரு நிகழ்ச்சிகளாகும். றாரு சிறுகதையும் சேர்ந்தே - 1951ல் g5 Lullöläs STGOT (Grand prix) LU fl60pF' ரைக்கதைக்கு மூலமாக அமைந்தது.
குறைந்தபட்சம் ஓலைத் தொப்பியிலோ அல்லது கனவான்கள் அணியக் கூடிய தலைக்கவசத் திலோ இன்னும் சிறிது மக்களும் மழை நிற் பதற்காக அங்கே காத்துக் கொண்டிருப் பார்கள் என எதிர்பார்க்கப் படலாம். ஆனால் இவனைத்தவிர அருகாமையில் வேறு யாரு மில்லை.
கடந்த சில வருஷங்களாக க்யோட்டோ நகரைப் பெருந்துயரங்களும், பூகம்பங்களும், சூறைப் புயல்களும் நெருப்பும் தொடர்ச்சியாக முற்றுகையிட்டதில் க்யோட்டோ பெருமளவில் நாசமடைந்தது. புத்த உருவங்களின் உடைந்த துண்டுகள் மற்றும் சில புத்தமதப் பொருட் களின் வார்னிஷ், வெள்ளி அல்லது தங்கத் தகடுகள் அழிந்து போய், சாலைகளின் ஓரத்தில் குவிக்கப்பட்டு அடுப்பெரிக்கும் விறகுகளாக விற்கப்பட்டதை பழைய குறிப்புகள் தெரி வித்தன. க்யோட்டோவின் நிலைமை இப்படிப் பட்டதாக இருந்ததால், ரஷோமோனைப் பழுதுபார்ப்பதென்பது கேள்விகளுக்கப்பால் இருந்தது. இந்தச் சீரழிவைப் பயன்படுத்திக் கொண்டு நரிகளும் கொடிய விலங்குகளும் அப்பெருங்கதவின் சிதைந்த பாகங்களைத் தங்கள் குகைகளாக்கிக் கொண்டன. திருடர் களும் வழிப்பறிக் கொள்ளைக்காரர்களும் அங்கேயே வசிக்கத் தொடங்கினார்கள். இது

Page 7
பாலம்
தவிர கேட்பாரற்ற பிணங்களைப் பெருங்கத வருகே கைவிட்டுச் செல்வது வழக்கமாக மாறி விட்டது. இருட்டியபின் அந்த இடத்தை யாரும் நெருங்க பயப்படும் அளவிற்குப் பிசாசு பிடித்தது போலிருந்தது.
காக்கைக் கூட்டங்கள் எங்கிருந்தோ பறந்து உள்ளே வந்தன. பகல் நேரங்களில் இப்பறவைகள் கத்தியபடியே கதவின் மேலி ருக்கும் ஸ்தூபியைச் சுற்றியபடி இருக்கும். சூர்யாஸ்தமனத்துக்குப் பின் செவ்வானப் பின்னணியில் பெருங்கதவின் எதிரே கடுகை வாரி இறைத்தது போல அவை தோற்ற மளிக்கும். ஆனால் அன்று ஒரு காக்கையைக் கூடக் காண முடியாததற்கு அநேகமாக வெகு நேரமாகி விட்டது காரணமாக இருக்கலாம். உடைந்து நொறுங்க ஆரம்பித்து, அவற்றின் இடுக்குகளில் புற்கள் வளர ஆரம்பித்திருந்த படிக்கட்டுகளில் இங்குமங்குமாக காக்கையின் எச்சங்கள் வெள்ளை வெள்ளையாகப் பொட் டிட்டிருந்தன. ஏழாவதும் உயரமானதுமான படியில் தன் நீல கிமோனோ அங்கியுடன் அந்த வேலைக்காரன் உட்கார்ந்து வெறுமை யாக மழையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கவனம் அவனுடைய வலது கன்னத்தில் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த பெரிய பருவின் பக்கம் திரும்பியது. ஏற்கெனவே சொன்னதுபடி, மழை நிற்பதற்காக அந்த வேலைக்காரன் காத்துக் கொண்டிருந்தான். ஆனால் மழை நின்றபின்னால் என்ன செய்வது? என்று அவனுக்கு குறிப்பிட்ட ஒரு யோசனையும் இல்லை. சாதாரணமாக அவன் தன்னுடைய எஜமானனின் வீட்டுக்குத் திரும்பக் கூடும். ஆனால் கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் அவன் அங்கிருந்து வெளியேற்றப் பட்டான். க்யோட்டோ நகரத்தின் வளம் வெகுவேகமாக அழியத் தொடங்கி இருந்ததால் - அவன் வெகுகாலம் வேலை செய்து வந்த அவனுடைய எஜமானனால் இந்த வீழ்ச்சியின் விளைவுகளா லேயே வேலையிலிருந்து நீக்கப்பட்டான். இவ்விதம் மழையால் கட்டிப் போடப்பட்ட அவனுக்கு எங்கே போவதென்றே தெரிய வில்லை. அவனுடைய கனமான மனநிலைக்கு கால நிலையால் கொஞ்சமும் உதவமுடிய வில்லை. நாளைக்கு என்ன செய்வது? என்ற சிந்தனைகளில் அவன் தன்னை இழந்தான். இரக்கமற்ற விதியை, தொடர்பற்ற அவன் சிந்தனைகள் எதிர்த்துக் கொண்டிருந்தன. சுஜாகு அவென்யூவில் கொட்டிக் கொண்டிருந்த மழை, ஓசையை வெறுமனே அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.
ரஷோமோனைச் சூழ்ந்த மழை, மிகுந்த வலுவுடன் கனத்த ஓசையுடன் பெய்துகொண்டு

5
இருந்ததை வெகு தொலைவிலிருந்து கூடக் கேட்க இயலும் போலிருந்தது. திரண்ட கருப்பு மேகம் ஒன்று கதவின் கூரை ஓடுகளின் நுனியில் அடர்ந்து தெரிந்ததைப் பாாத்துக் கொண்டிருந்தான் அவன்.
அவனிடம் மிஞ்சிய சந்தர்ப்பங்களின் உதவி யின்மையால் - சரியோ தப்போ - அவனால் தேர்வு செய்ய மிகக் குறைந்த வழிகளே இருந்தன. அவன் நேர்மையான வழியைத் தேர்ந்தெடுத்தால் சந்தேகமில்லாமல் அந்தக் கதவினருகிலோ அல்லது சுஜாகு வாசலிலோ பசியால் வாடிச் சாவதுதான் முடியும். அவனும் இந்தக் கதவுக்கு எடுத்துவரப்பட்டு அனாதை நாயைப் போல எறியப் படுவான். அவன் திருடுவதற்கு முடிவெடுத்தால்.நீண்ட நேரம் சுற்றிச் சுற்றி யோசித்தபின், கடைசியில் அவன் ஒரு திருடனாக மாறலாம் என்ற முடி வுக்கு வந்தது அவன் மனம்.
ஆனால் பலதடவை சந்தேகம் கிளம்பியது. அவனுக்கு வேறு தீர்வில்லை என்பது முடிவான தானாலும், அவன் ஒரு திருடனாகும் முடிவுக்கு வந்ததை நியாயப் படுத்தும் தைரியத்தை அவனால் சேகரிக்க முடியவில்லை.
இரைந்த தும்மலுக்குப் பின் மெதுவாக அவன் எழுந்தான், க்யோட்டோவின் மாலை நேரக் குளிர்ச்சி ஒரு கணப்பு அடுப்பைத் தேடத் தூண்டியது. மாலை நேர ஊதல் காற்று கதவின் தூண்களின் வழியே ஊடுருவி வீசியது, வர்ணம் தீட்டப்பட்ட தூணில் உட் கார்ந்திருந்த அந்த வெட்டுக்கிளி முன்பே போய்விட்டிருந்தது. தலையைக் குனிந்து கதவைச் சுற்றிலும் அவன் பார்த்தான். தன் மெல்லிய கால்சட்டையின் மேல் அணிந்திருந்த நீல கிமோனோ அங்கியைத் தோள்களில் நன்கு இழுத்து விட்டுக் கொண்டான். காற்றி லிருந்தும் மழையிலிருந்தும் காப்பாற்றக் கூடிய தனியான ஒரு மூலையைக் கண்டு கொள்ள முடிந்தால், இரவை அங்கேயே கழித்து விட அவன் முடிவெடுத்தான். கதவுக்கு மேலே அகன்ற மாடிப்படி ஒன்று ஸ்தூபிக்கு இட்டுப் போவதை அவன் கண்டான். அங்கு யாரும் இருக்க முடியாது; அப்படி இருந்தார்கள் என்றால் அவர்கள் இறந்தவர்களாக இருப் பார்கள். ஆகவே முன் ஜாக்ரதையாக தன் இடுப்பு உறையிலிருந்து வாள் நழுவி விடா திருக்கிறதா ? என்று பார்த்தபடி, தாழ்ந்த படிக்கட்டுகளில் அடியெடுத்து வைத்தான்
அவன்.
சில கணங்களுக்குப் பின், படிக்கட்டுகளில் பாதியை அடைந்தபின், மேலே ஏதோ ஒரு

Page 8
அசைவை அவன் கண்டான். மூச்சை அடக்கி, ஒரு பூனையைப் போல் பதுங்கி, ஸ்தூபிக்குப் போகிற அகன்ற மாடிப்படியின் நடுவே அவன் கவனித்தபடிக் காத்திருந்தான். ஸ்தூபியின் மேல் பகுதியிலிருந்து வந்த ஒரு ஒளி முணுக் முணுக் கென்று மின்னியபடி அவன் வலக் கன்னப் பக்கமாகத் தெரிந்தது. அடர்ந்த மயிர்களுக்கு அடியில் சிவந்த பழுத்த பரு இருந்தது அந்தக் கன்னத்தில்தான். ஸ்தூபியின் உள்ளே இறந்தவர்களைத்தான் அவன் எதிர் பார்த்தான். ஆனால் சில படிகளை அவன் அடைந்ததுமே மேலே ஏதோ எரிவதையும், யாரோ அசைவதையும் கவனித்தான். மங்கிய மஞ்சளில் குதித்துக் குதித்து எரிந்த வெளிச் சத்தில் உத்திரத்திலிருந்து தொங்கிய சிலந்தி வலைகளின் பளபளப்பு பிசாசுத்தனமாய் இருந்தது. ரஷோ மோனில் விளக்கை ஏற்றிக் கொண்டு திரியும் இவன்-எப்படிப்பட்டவனாக இருப்பான்?.அதுவும் இந்தப் பேய் மழையில்? -முன்பின் தெரியாத பயங்கரம் அவனைக் கலக்கியது.
ஒரு பல்லியைப் போல நிசப்தத்துடன் படிக்கட்டுகளின் உச்சிக்கு தரையோடு ஊர்ந்து சென்றான் அந்த வேலைக்காரன். கை கால் களில் உடலைத் தாங்கியபடி மெல்ல தலை யைத் தூக்கி ஸ்தூபிக்குள் எட்டிப் பார்த்தான்.
வதந்திகளின் படியே, தரையில் அலட்சிய மாகப் பல பிணங்கள் இரைந்து கிடந்ததைப் பார்த்தான். வெளிச்சம் மிக மங்கலாக இருந்த தால் எண்ண முடியவில்லை அவனால், சிலர் நிர்வாணமாகவும், சிலர் ஆடைகளுடனும் கிடந் ததை மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது. அவர்களில் சிலர் பெண்கள்; அவர்கள் எல் லோருமே தரையில் வாயைப் பிளந்தபடியோ அல்லது கைகளை அகல விரித்தப்படியோநிறையக் களிமண் பொம்மைகளைப் போலஉயிர்ப்பின் எந்த அசைவையும் காட்டாமல் கிடந்தனர். அவர்கள் உயிரோடிருந்தாலும் கூட இந்த வித அமைதியோடு அவர்கள் இருக்கமுடியுமா? என சந்தேகப் படக்கூடும் சிலர். அவர்களுடைய தோள்கள், மார்புகள் மற்றும் முண்டங்கள் மட்டுமே மங்கிய ஒளியில் தெரிந்தன; மற்ற பாகங்கள் இருளில் கரைந் திருந்தன. உருக் குலைந்து கிடக்கும் இப் பிணங்களின் துர்நாற்றம் அவன் கைகளை மூக்கிற்குக் கொண்டு சென்றன.
அடுத்த நொடியில் கைகளைக் கீழிறக்கி, அவன் வெறித்துப் பார்த்தான். ஒரு பிணத் தின் அருகில் பிசாசின் கோர வடிவத்தில் ஏதோ ஒன்று நெருங்கி நின்றது அவன் பார்வையில் பட்டது. அது வயதான கிழவி போலவும், பார்ப்பதற்கு நோய்பிடித்து,

பாலம்
நரைத்த முடிகள் கொண்ட சாமியாரின் தோற்றம் போலவும் உருக் கொண்டு இருந் தது. தன் வலது கையில் விளக்கொன்றுடன், நீண்ட கருத்த தலைமுடியைக் கொண்ட ஒரு பிணத்தின் முகத்தினுள் அக்கிழவி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆர்வத்தைக் காட்டிலும் பீதியால் பீடிக்கப்பட்ட அவன் ஒரு சமயம் வரை சுவாசிக்கவும் மறந்தான். தன் தலையிலும் உடலிலும் மயிர்கள் குத்திட்டு நிற்பதை அவன் உணர்ந்தான். அவள் விளக்கை இரு மரத் துண்டுகளின் மேல் வைத்துவிட்டு, பிணத்தின் தலையில் கைகளைப் பதித்து - ஆண் குரங்கு பெண் குரங்கின் தலை யிலுள்ள பேனை நசுக்குவது போல - நீள மான மயிர்களை ஒன்றன்பின் ஒன்றாக பிடுங் கத் தொடங்கியதை கவனித்த அவன் பீதி யுற்றான், அவளுடைய கைகளின் இயக்கத்திற் கேற்ப மயிர்கள் மிகச் சாதாரணமாக வந்தன.
ஒவ்வொரு மயிராகப் பிடுங்கத் தொடங் கியதும் அவனுள்ளிருந்த பயம் மறைந்து அந்தக் கிழவியின் மீது வெறுப்பு வளரத் தொடங்கியது. வெறுப்பு தீமைகள் எல்லாவற் றிற்கும் எதிரான வெறுப்பாக விரிந்து சென் றது. அந்த நிமிடத்தில் - கொஞ்ச நேரத் திற்கு முன் அவனிடம் தோன்றிய அந்தக் கேள்வியை-அவன் பட்டினி கிடந்து சாவானா? அல்லது திருடனாக மாறுவானா? என்று அவ னிடம் யாரேனும் கேட்டிருந்தால் அவன் சாவைத் தேர்ந்தெடுக்கத் தயங்கி இருக்க மாட்டான். அந்தக் கிழவி நிலத்தில் ஊன்றி யிருந்த பைன் மரத்துண்டுகளின் அழுத்தத் துக்குச் சமமாக தீமைகளின்மேல் அவன் வெறுப்பு இருந்தது.
இறந்தவர்களின் மயிரை அவள் ஏன் பிடுங்குகிறாள்? என்று அவனுக்குத் தெரிய வில்லை. அதுபோலவே அவள் செய்கை நேர்மையானதா தீமையானதா என்றும் அவ னுக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் கண் களுக்கு, இப்படி மழை கொட்டும் ஒரு இரவில்ரஷோமோனில் - இறந்தவர்களின் மயிரைப் பிடுங்கிக் கொண்டிருப்பது ஒரு மன்னிக்க முடி யாத குற்றமாகத் தெரிந்தது. ஆனால், சிறிது நேரத்திற்கு முன்னால்தானே அவனும் ஒரு திருடனாவதைப் பற்றி எண்ணினான் என்பது ஒருபோதும் அவன் மனசில் புகவில்லை.
பின்பு, தன் கால்களில் பலத்தைச் சேகரித்துக்கொண்டு-கைகளை வாளில் பதித்த படி-படிக்கட்டுகளில் இருந்து எழுந்து அந்தக் கிழ உருவத்தின் முன்னால்போய் நின்றான். அந்தக் கொடியவள் கண்களில் பயங்கரத்தோடு திரும்பினாள். தரையிலிருந்து எழுந்து நடுங்கி னாள். சிறிது நேரம் தாமதித்து கூக்குரலிட்டு

Page 9
பாலம்
அலறியபடியே படிக்கட்டுகளைப் பார்த்துப் பாய்ந்தாள்.
நடுங்கியபடியே அவனைத் தாண்டிப் போக முயற்சித்த அக்கொடியவளின் வழியை மறித் துக் கொண்டு ‘பிசாசே! எங்கே போகிறாய்?”- என்று கத்தினான். இருந்தும் அவள் தப்பிப் போகவே முயற்சித்தாள். அவள் முதுகைப் பிடித்து இழுத்தான் . தடுத்தான் . அவர்கள் போராடி-பிணங்களின் நடுவே விழுந்து அங் கேயே மோதிக் கொண்டார்கள். இவ் விஷயத் தில் சந்தேகத்துக்கே இடமில்லை. அடுத்த சில நொடிகளில் அவள் கைகளைப் பிடித்து முறுக்கியபடி சம தரைக்குக் கொண்டுபோய் நிறுத்தினான் அவன். அவள் கைகள் எலும் பும் தோலுமாக இருந்தன. ஒரு கோழிக் குஞ்சின் இறைச்சியைவிட அதிகமான சதை அவற்றில் இல்லை. அவளைத் தரைக்குக் கூட்டிப்போன உடனேயே, தன்-வெள்ளி போல் பளபளத்த-வாளை உருவி அவள் மூக்கின் முன்னே ஆட்டினான். அவள் மெளன மாயிருந்தாள். அவள் வலிப்பு வந்ததுபோல் நடுங்கினாள். இமையிலிருந்து தெறித்து விழுந்து விடுவதைப்போல் அகலமாக அவள் கண்கள் விரிந்தன. அவள் மூச்சு, விட்டுவிட்டுக் கனமாய் வெளிப்பட்டது. அந்தப் பிசாசுக் கிழவி யின் உயிர் இப்போது அவன் கையில். இந்த நினைப்பு அவன் கோபத்தைக் குளிர்வித்து, அமைதியையும் நிம்மதியையும் வரவழைத்தது. அவன் அவளைப் பார்த்து அமைதியான குர லில், “இங்கே பார், பெரிய போலீஸ் அதிகாரி இல்லை நான். இந்தக் கதவு வழியாகப் போய்க் கொண்டிருந்த ஒரு அந்நியன் நான். நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன். ஆனால் நீ இங்கே என்ன செய்து கொண்டிருந் தாய் என்பதைச் சொன்னால்தான் விடுவேன்” என்றான்.
கிழவி தன் கண்களை இன்னும் அலக விரித்து, வேட்டையாடும் பறவையுடையதைப் போல சிவந்த கூரிய கண்களால் நிலையாக அவன் முகத்தை வெறித்தாள். அவள் மூக்கோடு சுருங்கி இருந்த, எதையோ மென்று கொண்டி ருந்த உதடுகளை அசைத்தாள். அவளின் வற்றிய தொண்டை எலும்பு அசைந்தது. ஒரு காக்கையின் கத்தலைப் போன்ற கம்மிய குரல்
அவள் தொண்டையிலிருந்து கிளம்பியது:
*நான் மயிரைப் பிடுங்கியது . நான் மயிரைப் பிடுங்கி எடுத்தது.ஒரு விக் தயார் செய்யத்தான்.”
அவள் பதில், அவர்களிடையே அறியா திருந்த அனைத்தையும் போக்கி ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அப்போது அங்கே ஒரு கிழவி

7
தான் நடுங்கியபடி நின்றிருந்தாள். ஒரு பிசாசுக் கிழவி இல்லை; தன் ஜீவனத்துக்காக செத்த உடல்களின் மயிர்களை எடுத்து விக் தயாரித்து விற்கும் ஒரு கொடியவள்தான் நின்றிருந்தாள். குளிர்ச்சியாய் அவனை ஏதோ சூழ்ந்தது. அவனை விட்டுப் பயம் விலகி முன்போலவே வெறுப்பு சூழ்ந்தது. இந்த உணர்வை அவள் உணர்ந்திருக்க வேண்டும் போல. பிணங்க ளிடமிருந்து பிடுங்கிய மயிர்களை அளைந்த படியே அந்தக் கிழஉருவம் தன் கரகரத்த குரலில் இந்த வார்த்தைகளை உதிர்த்தது.
**செத்துப்போன உடல்களிலிருந்து மயிர் எடுத்து விக் தயாரிப்பது உண்மையிலேயே உனக்குப் பெரிய தீமையாகத் தோன்றலாம். ஆனால் அந்த உடலுக்கு அந்த மாதிரி நல்ல தகுதியெல்லாம் கிடையாது. நான் இந்தக் கறுத்த அழகான மயிரை யார் தலையிலிருந்து பிடுங்கினேனோ அந்தப் பெண் ராணுவ முகாம் களில், பாம்பை வெட்டி அந்தக் கறியைக் காய வைத்து அதைக் கருவாடு என்று சொல்லி விற்கப் பழகிக் கொண்டாள். ப்ளேக் நோயால் அவள் சாகாமலிருந்திருந்தாள் என்றால் இப்ப வும்கூட அவள் அதை விற்றுக் கொண்டிருப் பாள். ராணுவ வீரர்களும் அவளிடமே வாங்க விரும்பினார்கள். அவளின் மீன்தான் ருசி யானது என்றும் சொல்லப் பழகிக் கொண்டார் கள். அவள் செய்தது தப்பான செய்கை ஒன்று மில்லை, அவள் அப்படிச் செய்யாமலிருந்திருந் தால் என்றால், பசியால் துடித்துச் செத்திருப் பாள். வேறு வழி எதுவும் இல்லை. நான் உயிர் வாழ இது மாதிரிக் காரியம் செய்கிறேன் என்பது அவளுக்குத் தெரியுமானால் அவள் அதை லட்சியம் செய்யமாட்டாள்.”
அவன் வாளை உறையில் தள்ளி இடது கையால் கைப்பிடியைப் பிடித்தபடி அவள் சொல்வதையே மந்திரம்போலக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் வலது கை அவன் கன்னத்திலிருந்த பெரிய பருவைத் தொட்டுக் கொண்டிருந்தது. கேட்டுக் கொண்டிருந்த அவனுள், சிறிது நேரத்துக்கு முன் கதவின்கீழே உட்கார்ந்திருக்கையில் பெறாத தைரியம் இப் போது பிறந்தது. அந்தக் கிழவியைப் பிடிக்கும் போது ஏற்பட்ட தைரியத்தின் எதிர்த்திசைக்கு அவனை ஏதோ வினோதமான சக்தி இழுத்துப் போனது. இனிமேலும் பட்டினிகிடந்து சாவதா? திருடனாவதா? என்றெல்லாம் யோசிக்க அவ னால் முடியாது. அவனிடம் கடைசி விஷயமாக நிலைத்திருந்த பட்டினி என்பது இப்போது அவன் மனதிலிருந்து வெகு தூரத்தில் இருந்தது.
அவன், அவள் பேசி முடித்ததும், தன் கட்டைக் குரலில், "நிச்சயமாகத்தான் சொல்

Page 10
பிரதீபன் ச
தலைமுறை மீறியும் என்னுடன் பழகிவந்தான் இக்கிழவன்; நிறைநாழியால் அரிசியளந்து வியாபாரம் செய்தவன்; நாழி அளந்த பின்னும் சிரங்கையால் ஒருகை அள்ளியிட்டு சாப்பிடுங்க என்றுசொல்லி சந்தோஷம் கொண்டவன்; மிஞ்சிய சில்லரை வாங்காமல் இருக்கட்டும், கோட்டையா கட்டிவிடுவீர்கள் என்று போனவன் இவனது வாடிக்கையாளன்; நினைந்து நெடிதுயிர்த்துச் செல்லும் இவன் என் நண்பர்களில் ஒருவன்
O
ஆறுகள் வந்து கலந்தவண்ணமிருக்கின்றன கடலில் பன்னெடுங்காலமாய். அமேஸான் கலக்குமிடத்தில் நூறு மைலுக்கும்மேல் நல்ல தண்ணிர்.
ஆனால் எந்த நதியும் நினைத்ததில்லை கடல் முழுவதையும் நல்லநீராய் மாற்றி விடலாமென்று.
பிரதீபன்
கிறாயா?” என்று கேட்டான். தன் வலது கையைப் பருவிலிருந்து எடுத்த அவன், முன் னால் வளைந்து, அவள் கழுத்தை வளைத்துப் பிடித்தான், சொன்னான்:
"அப்படி என்றால் நான் உன்னைக் கொள்ளையடித்தால் தப்பில்லை. அதையும் செய்யாமல் இருந்தேனென்றால் நான் பட்டினி யால் சாகவேண்டியது தான்.”
அவன் அவளுடலில் இருந்த ஆடைகளைப் பிய்த்தெடுத்து பிணங்களின் நடுவே அவளை எட்டி உதைத்தான். அவள் தடுமாறி அவன் கால்களைப் பிடித்துக்கொள்ள முயன்றாள். ஐந்து படிகள் கடந்து அவன் மாடிப்படியின் உயரே நின்றான். அவளிடமிருந்து பிடுங்கிய மஞ்சள் ஆடைகள் அவன் கைகளில் இருந்தன. கண்சிமிட்டும் நேரத்தில் படிகளில் வேகமாய்

விதைகள்
கோவிலே இல்லாதபோது சன்னிதியும் கர்ப்பக் கிருகமும் எங்கென்றுபோய் தேடமுடியும் சரவிளக்காக படைக்கப்பட்டது சாபமேதான்.
| } 'நீ எதனால் செய்யப்பட்டிருக்கிறாய்?” ஷேக்ஸ்பியர் கேட்டான் தான் நேசித்த பிரபுவைப் பார்த்து அவன் அழகை வியந்து: பதில் இங்கே தெரிகிறது வைட்டமின்களால், புரோட்டீனால், கொழுப்பினால், இன்னும் தாதுஉப்புக்களின் செழுமையினால் பிரபுவின் குடிகள் தந்த திறைகள் இவை.
நமக்கு தெரிகிறது, ஷேக்ஸ்பியருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. D
திக்குகள் எட்டும் சென்று சேர்த்து வருக கலையெல்லாம் என்றது ஓர் குரல்
சரி வந்தாயிற்று; இவைகளை வைத்துக்கொண்டு இனி என்ன செய்வதென்றே தெரியவில்லை
O
கவிதைகள்
ஓடி, இரவின் ஆழத்தில் கலந்தான். அவன் ஒடிய இடிபோன்ற சப்தம் வெறுமையான ஸ்தூபியில் எதிரொலித்தது. பின் முழு அமைதி பரவியது.
அக்கிழவி கொஞ்ச நேரத்துக்குப் பின் பிணங்களிடையிலிருந்து எழுந்தாள். முனகியும், முணுமுணுத்தபடியும் இன்னும் மினுங்கிக் கொண்டிருக்கிற விளக்கின் உதவியுடன் மெல்ல மேல்படிக்குப் போனாள். தன் முகத்தில் தொங்கிய நரைத்த முடிக்கற்றைகளின் வழியே விளக்கின் துணையால் கடைசிப்படியை உற்றுப் பார்த்தாள்.
இதற்குப்பின்.தெரிந்துகொள்ள முடியாத படி..அறிய வழியற்ற..இருட்டு மட்டும் அங் கிருந்தது. ★

Page 11
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகால ஆண்டுகளில் மேலை நாட்டுக் கலாச்சாரம் பல துறைகளிலும் முன்னேறியது. பெரும்சிந்தனைப் புரட்சிகள் தோன்றி ஆழமான விளைவு களை உண்டாக்கின. டார்வினின் பரிணாமக் கோட்பாடு, ஐன்ஸ்டினின் சார்புக் கொள்கை குவாண்டம் கோட்பாடு, ஃபிராய்டின் உளப் பகுப்பியல் கோட்பாடு, தத்துவத்தில் இருத் தலியல் மற்றும் இலக்கியத்தின் போக்கையே மாற்றிய சோதனை முயற்சிகள்-இவைகள் மேலைக் கலாச்சாரத்தின் புதிய பரிமாணங்கள். இது முக்கிய காலகட்டம். ஒரு பக்கம் ஏற் கனவே நம்பப்பட்டு வந்த உண்மைகள் அறி வெழுச்சியால் தகர்க்கப்பட்டன. இன்னொரு பக்கம் பிரபஞ்சத்தின் இயற்கை பற்றியும், மனிதனின் அகவியல் தன்மைகள் பற்றியும் புதிய கருத்துக்கள் உருவாகின. இந்தக் கட் டத்தில்தான் ஓவியக்கலையில் அடிப்படையான மாற்றங்கள் நிகழ்ந்தன.
இருபதாம் நூற்றாண்டின் கலை வளமை யானது, பல்வேறு வகைப்பட்டது. 6) கலைஞர்களின் சொந்த மேதைமைகளாலும், சாதனைகளாலும் உருவானது. மேலை நாட்டுக் கலாச்சாரத்தைப் பொதுவாக எது பாதித்ததோ அது கலையையும் பாதித்தது. கலாச்சாரத்தைத் துண்டித்துக் கொண்டு கலை இல்லை. கிளாசிகல் கலையை இங்கு நினை வில் கொண்டு வந்தால் இது தெளிவாகும். கிளாசிகல் கலையின் லட்சியம் எக் காலத் திலும் மாறுபடாமல் நிலைத்து நிற்கும் உட் பொருள் ஒன்றின் இயல்பை வெளிப்படுத் துவதே. அதற்கான சட்டத்திட்டங்கள் வகுக்கப் பட்டன; விதிகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றை மீறியவை கலையாக ஒப்புக் கொள்ளப்பட வில்லை. இதற்கு நேர் எதிரானது நவீன பாணி கலை. நவீன ஒவியர்களது மிகச்சிறந்த படைப்புகள் சிலவற்றை நவீன பாணியின் சில வகை மாதிரிகளுக்குள்ளே கூட அடக்கி விட முடியாது. ஒவ்வொன்றும் சுய மேதைமை யின் எழுச்சியே.
நவீன கலை வரலாற்றில் சட்டென புலப் படுவது, கணக்கற்ற பரிசோதனைகள் செய்யப் பட்டதுதான். கலையின் எல்லையை விரிவு படுத்த புதிய பிரதேசங்களைக் கண்டுபிடிக்க இடையறாது முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. முந்தைய ஐரோப்பியக் கலைஞர் களிடமிருந்து மட்டுமல்லாமல், ஐரோப்பியரல்
நவீன ஓவியக் கலை ஓர் அறிமுகம்

கி. ஆ. சச்சிதானந்தம்
லாத பிற நாடுகளின் பண்பாடுகளிலிருந்தும், பழங்குடி மக்களின் கலைகளிலிருந்தும், ஏன், குழந்தைகளின் சித்திரங்களிலிருந்தும் கூட கலா ஊக்கம் பெறப்பட்டது. வலுவாக நின் றிருந்த மரபுகள், பழக்க வழக்கங்கள் உடைக் கப்பட்டன. கலையை அதன் கால்கோளி லிருந்தே விமர்சிக்கும் போக்கு, ஆராயும் மனோபாவம் மேலோங்கி வந்தது. கலையின் அடிப்படைகளையே கேள்வி கேட்கத் தொடங் கினர். எதுவும், அது பழமையானது என் பதற்காகவோ, இதுவரை ஏற்றுக்கொள்ளப் பட்டது என்பதற்காகவோ ஒப்புக் கொள்ளப் படவில்லை. எதையும் பரிசோதனைக்குட் படுத்துவது என்ற போக்கு புரட்சிகரமான மாறுதல்களை இலக்கியத்திலும், தத்துவத் திலும், சமயத்திலும், அறவொழுக்கத்திலும் கொண்டு வந்தது.
சுயத்தன்மையில் மதிப்பும், அக்கறை காட்டும் போக்கும் உருவாகியது. தனி மனி தனை, மேலாண்மையிலிருந்து விடுவித்து அவனது சுய வெளிப்பாட்டிற்கு உதவுவதே இப்போக்கின் லட்சியமாகும். இக் கலாச்சாரப் போக்கை கலையும் உள்வாங்கிக் கொண்டது. இப்போக்கினால் இரு பிரச்சினைகள் உரு வாகின. கலையின் சேதியை ரசிகனின் மனம் உட்கிரகிப்பதில் சிக்கல் எழுந்தது. சேதிப் பரிவர்த்தனை நடப்பதில் தடைகள் எழுந்தன. கலையில் கட்டற்ற முழுச் சுதந்திரம் எடுத்துக் கொண்டதுதான் இதற்குக் காரணம். இதற்கு இணையான இன்னொரு கலாச்சார பிரச்சினை சமூகத்தில் முழு சுதந்திரம் வந்ததால், மனித உறவுகளில் பிரச்சினைகள் எழுந்தன.
எல்லாவற்றையும் விட கலையில் மிகப் பெரிய மாறுதல் நிகழ்வதற்கு காரணமாய் இருந்தது, உட்பொருள் (Reality) பற்றிய சிந்தனை மாறுதல். உட்பொருளின் தன்மை மாற்றங்களுக்கு உட்பட்டதா? இல்லையா? மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட, அவைகளால் பாதிக்கப்படாத உட்பொருள், உண்டா? மறு மலர்ச்சிக் காலத்திலிருந்து தொடர்ந்து வந்த கலைஞனின் அக்கறை தன்னைச் சூழ்ந்துள்ள உலகத்தைப் பற்றி மட்டுமே இந்த உலகம் இன்னது என்றும் அதன் இயற்கை இப்படிப் பட்டது என்றும் கண்டறிய முடியும். இது ஒரு நிலைத்த உலகம். இதன் இயல்பை முழுவதுமாக மனிதன் எப்படியோ இறுதியில் புரிந்து கொள்வான். உற்று நோக்கிப் பார்த்து, அதைத் தனக்குச் சாதகமாக அவ

Page 12
10
னால் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தக் கருத்துச் சூழலில் கலைஞனின் பணி என்ன? உட்பொருள் காட்டும், மனம் ஏற்றுக் கொள்ளும் படிமங்களை அல்லது பிரமைகளைக் கொடுக்க வேண்டும். பெளதீகக் கூறுகளை விடாமல், அதே சமயத்தில் அவைகளை முப் பரிமாணங்களில் ஒழுங்காய் அமைக்கும் கலை தான் உன்னதமானது. இதை விட்டது கலை யாகாது. இருபதாம் நூற்றாண்டு வரை இப் படித்தான் கருதப்பட்டது.
உட்பொருளானது மாறுபாடு அற்ற நிலைத்த இயற்கையினை கொண்டது அல்ல. இந்த அடிப்படை கருத்து மாறுதலை, நவீன பாணி கலை ஏற்றுக் கொண்டது. நமக்குப் பரிச்சயமான உலகத்தைப் பற்றி இதுகாறும் கொண்டிருந்த கருத்து தவறானது என்றும், அதற்குப் புதிய விளக்கமும் வரையறையும் கொடுக்கப்பட்டன. உயிரினங்களது வடிவங் களும் இயற்தன்மையும் இடையறாத மாற்றங் களுக்குட்பட்டவை என்று விஞ்ஞானம் நிரூபித் தது. இதுதான் இறுதியானது என்று எந்த உட்பொருளும் இல்லை. மிக எளிமையான அமைப்பு முறை எங்கும் எதிலும் இல்லை. ஒரு பொருளின் அமைப்பிற்குள்ளேயே, நிச்சய மற்ற தன்மை-மாற்றம் ஆவதற்கான தன்மை இருக்கிறது. மேலும் தொடர்ந்து நடத்தப் தப்பட்ட ஆராய்ச்சியானது தெளிவாய் ஒன் றைக் காட்டியது. பொருளானது உருவாகும் முறையினை-அமைப்பினை அலசிக்கொண்டே போனால் இறுதியாய் இருப்பது பெளதிக மானது அல்ல; சடம் அல்ல. இந்த இறுதி நிலையை மனதால் கூடப் பார்க்க முடியாது. இன்னொன்றும் தெரிய வந்தது. அதாவது விஞ்ஞான ஆராய்ச்சி சொந்த விருப்பு வெறுப்பு களால் ஆன மனச்சாய்வுகளால் பாதிக்கப்படா தது என்ற எண்ணம் கூட தவறானதே. மணி தனின் புரிந்து கொள்ளும் ஆற்றலுக்கெதிராக சக்தி வாய்ந்த கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இந்த உண்மை, உளப்பகுப்பு ஆய்வாளர் களின் கோட்பாடுகளிலிருந்து அறியப்படுகிறது. ஃபிராய்ட் பார்வையில் உட்பொருள் பற்றிய ஒருவனின் கருத்து அவனது சொந்த மனதின் பிரதிபலிப்பே. இந்தப் பிரதிபலிப்பு கூட மனதின் நனவிலியின் இருண்ட உந்துதல் களால் பாதிக்கப்பட்டதே. இருபதாம் நூற் றாண்டில் மனிதனுக்கு உட்பொருள் நிலைத்த இயல்பினைக் கொண்டது இல்லை. இடை யறாது மாறிக் கொண்டிருக்கிறது. நுணுகி நுணுகி ஆராய்ந்தாலும் இன்னதென்று திட்ட வட்டமாகத் தெரியவில்லை. பகுத்தறிவுக்கு உட்படவில்லை. ஆகையினால் உட்பொருளின் விளக்கம் பெரும்படாயிற்று.
உலகத்தைப் பற்றி புதிய பார்வை உரு வாகி வந்தது. இதுதான் நவீன பாணி ஓவி

பாலம்
யத்தில் புரட்சிக்ரமான பண்புகளை ஏற்றியது. விளக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. எக்ஸ் பிரஷனிச பாணியின் முக்கியப் பண்பாக, அடிச்சரடாக இருக்கும் எண்ணம் இதுதான். புற உலகத்திலுள்ள பொருட்களைப் பார்க் கிறோம். ஊன்றிப் பார்க்கிறோம். அப்போது மனம் வெறும் எந்திரகதியில் செயல்பட வில்லை. பார்வையால் ஏற்படும் படிமத்தை உணர்ச்சிகளும், மனோநிலையும் பாதிக் கின்றன. ஆகையால்தான் ஓவியம் "நிலைத்த உட்பொருளைச் சித்தரிக்கவில்லை, கலைஞன் அனுபவத்திற்கு அகப்பட்ட உட்பொருளைத் தான் சித்தரிக்கிறது. இது எக்ஸ்பிரஷனிச பாணியின் தாத்பரியம். உலகத்தை நேருக்கு நேராக சந்தித்த கலைஞன், அவனுக்கு அனுபவ மான விசித்திரமான, தனித்த தன்மைகளை ஓவியமாக்கி விடுகிறான். தத்துவத் துறையில் இத்தகைய பாணி ஃபினாமினாலஜி, எக்ஸ்ஸிஸ் டென்சியலிசம் என்று புதிய கோட்பாடுகளாக உருவாகியது.
இந்த சிக்கலான அனுபவத்தை எளிதாகக் காட்ட முடியாது. அந்த அளவிற்கு சிக்குப் பட்டிருக்கிறது. இப்படி இருப்பதை சுலப மாக கற்பனையில் மீண்டும் உருவாக்க முடி யாது. பின் எப்படித்தான் இந்தப் பிரச் சனைக்குத் தீர்வு காண முடியும்? ஒரே ஒரு வழிதான். அதாவது அது மீண்டும் கிளறப்
பட வேண்டும். மறைமுகமாக, உள்ளுறை யாகக் காட்டப்பட வேண்டும். குறியீடு மூல மாக வெளிப்பட வேண்டும். படிமத்தின்
வேலை என்ன? அது விவரிக்காமல் குறிப் பால் உணர்த்த வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால் பல சமயங்களில் நவீன ஓவியங்கள் புரியாமல் போகலாம். வெற்று அலங்கார மாகத் தோன்றலாம். என்றாலும், பழங்குடி களது ஒவியங்களில் உள்ளது போன்ற குறி யீட்டு வடிவங்களை இதில் காணமுடியும்.
மனிதனின் படைப்பாற்றலுக்கு இப்போது சிறப்பான மதிப்பு கொடுக்கப்பட்டது. பரி ணாமத்திலும், மனித வரலாற்றிலும் வாழ்க் கையின் சாராம்சம்தான் என்ன? படைப்புதான் தன் வெளிப்பாடு, தன் அறிவு அறவொழுக் கத்தின் இலட்சியங்களாயின. இன்னொரு போக்கும் வலுப்பெற்று வந்தது. ஒட்டு மொத்தமாய் பார்த்தால் நவீனபாணி கலை, தற்காலத்திய மனதின் சிக்கலை எல்லாம் கொண்டிருக்கிறது எனலாம். விஞ்ஞானம், உளவியல், தத்துவம், இலக்கியம் போல அனுபவத்தின் சிக்கலுக்கு உண்மையாக ஈடு கொடுக்கும் வடிவத்தில் கலை வளர்ந்தது.
(தொடரும்)

Page 13
29 ஜூ
பெங்களூரில் ரஜீவும் ஜே.ஆரும் சந்தித்துக் கொண்டபோது தூற்றலாக மழை பெய்து கொண்டிருந்தது வெளியே.
நந்தி மலைகளின் மேலாக
இறங்கிய காற்று புல்வெளியின் மீது படர்ந்து தவழ்ந்தது.
அன்றும்
அலைகள் ஓங்கிய பாக்குநீரிணைக்கு அப்பால் இருபதுபேர் இறந்து போனார்கள்.
தானியங்கித் துப்பாக்கித் தொடர் வேட்டு; கணநேரக் கொலைத் தீர்ப்பு; எரிப்பு;
தெருவுக்குச் சாம்பல் குழந்தைகளின் கனவுக்கு இரத்தம். ஆக, இப்போதைய எண்ணிக்கை: 15,587. கோப்பைகளிலிருந்த தேநீர் திடீரென்று குருதியாக மாறியதை உணராமல் இரண்டு தலைவர்களும் கண்காணா அரசியலுக்குள் காலம் சென்றார்கள். மானுட எலும்புகளிலிருந்து வனையப்பட்ட கரண்டிகளும் மண்டையோட்டு மூலங்களிலிருந்து பிறந்த தட்டுக்களுமாக உருமாற்றம் பெற்றது
சாப்பாட்டு மேசை,
எல்லாத் தொலைக்காட்சிக் கண்களும் குருடாயின.
நமக்கு அப்பாற்பட்ட சமரசம்.
 

லை 87
சேரன் துயரமும் உறுதியும் வீரமும்
இதயம் உள்வாங்கி ஆயிரமாயிரமாய் உயிர் வாங்கிக் குருதியில் எழுதிய சரித்திரத்தின் மீது மை பூசுகிறது
வர்க்க நலன்.
உங்களைச் சொல்லி என்ன?
நாமும்தான்; பொதுவுடைமை லட்சியத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு புதை குழி மேல் எந்த வகையான கல்லறை கட்டுவது என்பதில் விவாதம் புரிந்து அடிபட்டுப் பிளவுற்றுக் கொலையுண்டு நீர்த்தோம்.
(அதிகார வெறி வேறு!)
மூளைக்குள் வெடி மருந்தை அடைத்துத் திணித்து விட்டுச் ܢ -  ܼ சித்தம் குழம்பிச் சவாரி செய்தோம். மக்கள் மேல். விமர்சனத்தின் வீரியத்தை விழுங்க முடியாமல், முகம் தெரியா இருளிலெல்லாம் கொன்று புதைத்தோமே நம்மவரை. பல்லி சொல்லைக் கேட்டுப் பயணம் கை விட்ட கதை நமக்குள்ளும் பல உண்டே யாரோடு நோக..?
கணக்கெடுக்க மறந்து தம் காலத்தைக் கோட்டை விட்டோம்.
தன்னுடைய வரலாற்றுச் சவப்பெட்டிக்குத் தங்க முலாம் பூசும் ஜே.ஆருக்குத் துணை புரிந்த

Page 14
2
ரஜீவ் இளவரசனுக்கு திரைப்படத்தில் வாள் சுழற்றி நிஜ வாழ்வில் துருப் பிடித்த ராமச்சந்திர வாழ்த்து
கை தட்ட வேண்டாம். சிரிக்கக் கூட என்ன இருக்கிறது?
சந்தோஷப் பித்தேறிச் சாவதற்கு நமக்கென்ன இந்திரர்கள் வந்தா வரம் தந்து போனார்கள்?
முதல் பரிசு போனாலும் முயற்சிக்குத் தலை சாய்த்து ஆறுதல் பரிசு வாங்க லொத்தர் விளையாட்டா போராட்டம்?
உத்தேச வாய்பாட்டில் உல்லாசக் கணக்கெழுதி நித்தியமும் கண்மயங்க எங்கெங்கோ இருந்தவர்கள் இனித்தான் வருவார்கள்.
GluDgpe
இத்துடன் ஒரு கட்டுக் கதை முடிகிறது. பாதையோடு போகும்போது நிமிர்ந்த தோள்களுடன் நான் மரணத்தை உருவகப் படுத்தும் ஒரு வெறுமையைக் காண்கிறேன். மாடிப்படிகளைக் கடந்து நான் செல்கையில் மெழுகுவர்த்தியை ஏற்றுகிறேன்.
ஒரு அறை முடியும் இடத்தில் இன்னொரு அறை வருகிறது ஒரு கதை இங்கு முடிகிறது. எனினும் இங்கு நினைவுக் குறிப்பு ஏதுமில்லை.
 

IT6)b
எல்லாம் முடிந்தது? y இல்லை! சொல்லுக்குள் அடங்காத என் சோகத்தைச் சற்றே கேள்
நீண்ட பயணத்துக்குக் குறுங்காலத் திட்டங்களும் குறுகிய பயணத்திற்கு நெடுங்காலத் திட்டங்களுமாய் குழம்பிய நாள் வேண்டாம் குழப்பிய நாள் வேண்டாம்
நில்லாமல் செல்கின்ற வரலாற்று ஓட்டத்தின் முனைப்பறிவோம்
● 61st சரியான கணக்கெடுப்பு
அதன் பின்னர் புது எடுப்பு.
5, 8.87
女
குவர்த்தி
மரணத்தைப் போன்ற அமைதி மழையினால் நனைந்த மல்லிகைக் கொடிகள்
மெழுகுவர்த்திய்ை இப்படியும் அப்படியும் திருப்பித் தோட்டத்தின் பசிய பாசியைப் பார்க்கிறேன்.
ஒரு அறை முடியும் இடத்தில் மற்றோர் அறையின் வாயில் மெளனம் ஜ்வலிக்கிறது! ஒரு கதை முடிகிறது.
- அலோக் சர்க்கார்
மூலம்: வங்காளி தமிழில்: காதம்பரி

Page 15
சென்ற இத
சிக்கிமு
(βιτ Π.,
குட்டி இவனையே ஒருமாதிரிப் பார்த்துக் கொண்டிருந்தது. இவனுக்குள் சின்னதாய் ஒரு நெருடல், என்றுமில்லாத கனிவாய் குட்டி யிடம் பேசினான்.
“பாட்டிய கூட்டிட்டு எ ப் ப வ ரு வ
கிருஷ்ணா.”
குட்டி மெதுவாய் கேட்டது.
இங்கு தான் ஒரு விஷயம் உதைக்கிறது. பாட்டி அத்தனை சுலபமாய் வந்து விடுவா 6i.
6 restroT
பாட்டிக்கு அழுத்தம் ஜாஸ்தி. இருந் தாலும் நிச்சயம் முகம் துர்க்க மாட்ட்ாள். கோபம் இருந்தால் கூட பேரன் என்கிறபோது அத்தனை நிஷ்டூரமாய் வெளிப் படா ğ5 . இதைப் புரிந்து தான் அம்மாவும் அப்பாவும் இவனையே தேர்ந்தெடுத்தார்கள். ஒரு பக்கம் அவர்களுக்கு அலைச்சல் அசெளகர்யம் என்கிற போதும், இந்த் தூக்கலாய் இருந்தது.
“சீக்கிரம் வந்துருவே.” அப்பா பைக் உதைத்தார். இவன் பின் னால் தொற்றிக் கொண்டான்.
அம்மாவும் குட்டியும் வாசலில் நின்று கையசைத்தார்கள்.
குட்டி முகம் சோகமாய் இருந்தது. *கிருஷ்ணன் மட்டும் ஊருக்குப் போற்ான்" என்று கண்கள் நீர் முட்டிக் கெஞ்சியது. கூடவே சமாதானப் பட்டுக் கொண்டது தெரிந்தது.
கு ட் டி  ைய ப் பார்க்க இவனுக்கு ஏனோ பாவமாய் இருந்தது.
எக்மூரில் ஒரு வீடியோ கோச்சில் அப்பா ஏற்றிவிட் டார். புறப்படுகிற வரை ஜன்னல் g? T மாய் நின்றார். பேச்சுக்கு நடுவே அடிக்கடி *எரும மாடு இது தெரி
யாதா” எ ன்று
 

த் தொடர்ச்சி. கிக் கல்
5ாந்த்
அப்பா ப்ராண்ட் வார்த்தை உபயோகிக்க வில்லை.
பாட்டியின் பிரிவு அப்பாவை கூட பாதித் திருக்கிறது. அப்பாவுக்கு ஏகப்பட்ட வருத்தம். பாட்டி பட்டென்று அறுத்துக் கொண்டு கிளம் பியது பெரிய அடி தான். யாரும் எதிர்பார்க் காதது. அப்பாவுக்கு பாட்டியின் மீது நல்ல மதிப்பு உண்டு. அப்பா வீட்டில் எல்லோரும் அரிவாள் கம்பு தூக்க பாட்டி தான் துளியும் சட்டை செய்யாமல் அப்பாவுக்கும் அம்மாவுக் கும் தனியாய் நின்று கல்யாணம் செய்து வைத் திருக்கிறாள். கிராமத்தில் தனியாய் இருந்த பாட்டியை அப்பா தான் வலுக்கட்டாயமாய் கூட்டி வந்தார். ۔۔
பஸ் புறப்படுகிற சமயம் ஜன்னல் வழியாய் அப்பா இவன் கையைப் பிடித்து இறுக்கினார்.
அப்பா ஏன் அன்று சாப்பாட்டு மேஜையில் அப்படி நடந்து கொண்டார்.
என்னமோ நெஞ்சுக்குள் குடைந்தது.
பஸ் வேகம் கூடியது. பக்கத்தில் இருந் தவர் புகை கக்கினார். ஜன்னல் வழியாய் வெளியில் பார்த்தான். எல்லோருக்கும் எல்லா வற்றுக்கும் பின்னோக்கி பயணம் வேகமாய் நிச்சயமானது.
பாட்டி படுக்கை யில் கிடந்த நாட்க ளில்தான் அந்த குயர் நோட்புக் கொ டு த் தா ள். பாட்டி சுயசரிதம் இருந்தது. இடை
ல் கோலம் அலங் கரித்தது. முதல் பக்கத்தில் பெரிய தாய் நீள நீள எழுத்துக் களி ல் "அன்பு மகள் லஷ்மிக்கு’ என்று எழுதி யிருந்தது. அம்மா ஹ ரா ஸ் ட லி ல் இருந்து படித்துக் கொ ண் டிருந் த

Page 16
14
போது பாட்டி எழுதி - எழுதி பாரம் குறைத்திருக்கிறாள். எல்லாவற்றையும் ‘நோட் புக் கில் கொட்டி இளைப்பாறி சாந்தப் பட் டிருக்கிறாள்.
நிறைய விஷயம் இருந்தது. அம்மாவை பற்றிய கனவு இருந்நது. சந்தோஷத்தின் சுவடு இருந்தது. பட்ட காயங்களின் வேதனை தெரிந்தது. எல்லாம் மீறி நம்பிக்கை ஊன்றி நின்றது.
பாட்டி ஒரு மழைக்காலத்தில் விடிகிற நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறினாள். அப்பா அம்மா எல்லாம் எதிர்த்து தாத்தா பின்னால் வந்திருக்கிறாள்.
பாட்டி பிறந்த போதே தாத்தாவுக்குத் தான் என்று நிச்சயித்து விட்டார்கள். தாத்தா, பாட்டிக்கு முறைப்பையன். ஒரு நாள் கூட தாத்தா கட்டிக் கொள்ளப் போகிற பெண்ணா யிற்றே என்று பாட்டியை திரும்பி கூட பார்த்த தில்லை.
தாத்தாவிற்கு வேகம் ஜாஸ்தி, வீட்டிற்கு அடங்கவில்லை ஊர் கோடியில் உள்ள அய்ய னார் கோவில், ஏரிக்கரை மதகு.என்று தான் அநேக இரவுகளை கழித்திருக்கிறார். இந்த ஓட்டம் தாத்தா விற்கு அவஸ்யமாய் பட்டது. தேடி அலைந்து கொண்டிருக்கும் வெள்ளைக் கார சிப்பாய்களிடம் இருந்து தப்பிக்க வசதி யாய் இருந்தது.
தாத்தாவின் இந்தப் போக்கு பாட்டிக்கு தவிப்பாய் இருந்தது. தாத்தா பற்றிய தகவல் அறிய நிறைய பாடுபட்டாள்; அறிந்த போது அல்லாடினாள். இவருக்கு ஏன் இந்த பொழப்பு என்று தவித்தாள். 'வந்தே மாதரம்’ கோஷ்டி யை இங்கு தாத்தா தான் நடத்திப் போகிறார் என்பது கேள்வி பட்ட போது பாட்டி நடுங்கிப் போய் விட்டாள். தாத்தாவை பற்றி ஊரில் நிறைய பேச்சு அடிபட்டது. சிப்பாய்கள் வீடு முற்றுகையிட்டார்கள்.
இந்த இடத்தில் தான் பாட்டி வீட்டில் உஷாரானார்கள். “யார் என்ன பண்ணினா இவனுக்கு , என்ன ? காவாலிப்பயல் கொழுப் பெடுத்து அலையறான். இவன் போய்தான் நாட்டையே காப்பாத்தப் போறான்” என்று குத்தலாய் சிரிக்க ஆரம்பித்தார்கள். இவன் தேற மாட்டான்.இவனுக்குப்போய் என் பொண்ண கொடுக்கவா.அதுக்கு பாழும் கெணத்துல தள்ளலாம்” வீம்பாய் சொந்தத் திலேயே வேறு மாப்பிள்ளை பார்த்தார்கள்.
இது பாட்டி எதிர்பார்க்காதது. தவித தாள். தனியாய் உட்கார்ந்து அழு தா ள் அடம் பிடித்தாள். நிறைய அடி வாங்கினாள்

பாலம்
ஒரு நாள் ஆற்றங்கரைக்கு தண்ணீர் எடுக்க போன போது தாத்தாவை சந்தித்தாள்.
“உங்கள தவிர யாரையும் கட்டிக்க எனக்கு மனசு ஒப்பல.வீட்ல தெனைக்கும் அடியும் உதையுந்தா.என்னை என்ன பண்ணாலும் பொறுத்துப்பே சும்மா ஒங்கள திட்ராக அதா பொறுத்துக்க முடியல...”
'என்ன புள்ள அழுதுகிட்டு.இந்தாரா சம் என்ன பத்தி தெரியுமில்ல எப்ப வருவே எப்ப ஒரேடியா போவேன்னு சொல்ல முடியாது. உன்னால முடியுமா..?”
**செத்துப்போவேன்னு ப ய முறுத் துறே களா.சின்ன வயசுல இருந்து எனக்கு ஒங் களதா தெரியும். சுகமோ துக்கமோ ஒங்க நிழல்ல ஒண்ட இடங்கெடச்சா போதும்”
**சரி அப்பால வருத்தப்படக்கூடாது.” ‘'எதுக்கு வருத்தப்படனும்” **ம்...ஒண்ணு புரிஞ்சுக்கோ என க் கு பொண்டாட்டியா வர்றவ என்னை நேசிக்கற அளவுக்கு இந்த சமூகத்த நேசிக்கணும். எவனோ ஒருத்த நம்ம நாட்ல வந்து நம்ம அடிமையா நடத்தறான் இந்த கேவல வாழ்க் கை வாழனுமா புள்ள இப்ப சொல்லு ஒங்க மனுஷங்க சொல்ர மாதிரி நா காவாலி பயலா. நா போற பாதை சரிதான. ஒனக்கு சந்தோ ஷந்தான.”
பாட்டி தலையாட்டினாள். **சரி என்னோட வா..” ‘'இப்பவே வா.” பாட்டி நெஞ்சில் கைவைத்தாள். **பயமா.” * 'இல்ல.” ** souт...” பாட்டி இடுப்பில் நிறைகுடத்துடன் தாத்தா வுடன் நடந்தாள்.
தாத்தா தன் தளவாடத்தின் பக்கமாய் ஒரு கூரை போட்டு பாட்டியை உட்கார வைத் தார். சகதோழர்கள் அரணாய் இருந்தார்கள். இதெல்லாம் நடக்கும் போது பாட்டி எப் படி இருந்திருப்பாள். உண்மையிலேயே பாட்டி வாழ்க்கை ரொம்ப அலாதியானதுதான்.
பாட்டி அடிக்கடி அம்மாவை பார்த்து சொல்லுவாள் : "அநேகமா யா ரு க்கு மே கிடைக்காத" பாக்கியம் உனக்கு தா கிடைச் சுருக்கு. முதமுதல்லா நீ வெளியே வந்ததுமே தாங்கி புடிச்ச கை உங்க அப்பா கைதாண்டி.”

Page 17
LUT6) Lly
அப்பொழுதெல்லாம் பாட்டியின் குரல் கர் வம் தோய்ந்து ஒலிக்கும்.
தாத்தா உள்ளே நுழைந்த போது பாட்டி இடுப்பு பிடித்து கால் அகற்றி சாய்ந்திருந் தாள். கண்களில் மிரட்சி. தாத்தாவை பார்த் ததும் எழ எத்தனித்து நிலை கொள்ளாமல் தவித்தாள்.
'உக்காரும்மா.” தோள் பிடித்து பாட்டியை அமர்த்தினார். பாட்டியின் கண்களில் நீர் உருண்டோடியது. பல் கடித்தாள். உடல் முறுக்கினாள்.
'இப்பவேயிருக்கு மோன்னு ப ய மா யிருக்கு.” Y
திணறி திணறிச் சொன்னாள். ‘அதா நா வந்துட்டேன்ல என்னபயம்.” "யம்மா...முடியல ம்..ம்மா.ஆ.ஆ.” **கொஞ்சம் பொறு.” A. தாத்தா பரபரத்தார். அடுப்பில் வெந் நீருக்காய் தணணிர் வைத்தார். படுக்கை விரித்து படுக்கச் சொன்னார்.
“வேணா யாரையாச்சும் கூட்டியாங்க.”
‘பேசாம படு. ‘சொல்லிவிட்டுருக்கே. ஐயோ கத்தாத புள்ள கால மடக்குடி இப்படி இப்படி அகட்டிப் போடும்மா..”
ஒருமாதிரி பாட்டியை கிடத்தினார். “ம்.நீங்க வெளில போங்க யம்மா.” *சும்மா கெட.” ** வேண்டா. வேண்டா.”
பாட்டி தரையை பிறாண்டினாள் கை களால் ஓங்கி ஓங்கி அடித்தாள். வேதனையி னுாடே கால்மாட்டில் இருந்த தா த் தா  ைவ பிடித்து தள்ளினாள். தாத்தா தடுமாறினார். கோபப்பட்டார். கத்தினார்.
'கொன்னுடுவே.பேசாமகெட நா ஒம் புருஷன் பிறக்கப் போறது எம்பிள்ளேடி.”
பாட்டி தலையைப் போட்டு தரையில் உருட்டினாள். கண்ணெல்லாம் வெளியில் தெரிக்க தயாராய் இருப்பது போல் மருண்டிருந் தது. வாயில் எச்சில் வடிந்தது. உதட்டை கடித்துக் கொண்டாள். உடலை முறுக்கினாள். சின்ன அதிர்வுகளைக் கூட குழந்தைக்கு கொடுக்காமல் பத்திரமாய் சூழ்ந்திருந்த பனிக் குடம் உடைந்தது. ரத்தப் பெருக்கினூடே தலை வெளிப்பட்டது.
அலைபாய்ந்த கைகளை பிடித்து இறுக் கினார். பாட்டி திமிறினாள்.

15
வெளிப்பட்ட தலையை இரண்டு கைகளா லும் தாங்கினார். -
‘இன்னுங் கொஞ்சந்தா பொறுத்துக்க. நல்லா முக்குடி.” W
சிவப்பாய் குழந்தை நழுவி வந்தது. தாத்தா கூத்தாடினார். அது ஒரு தெய்வீக வாழ்க்கை. சரியாய் குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் தாத்தா, செத்துப்போனார்.
ஒரு அந்திவேளையில் தாத்தா மூக்கில் ரத்தம் வழிய வீட்டிற்கு வந்தார். உடல் முழுக்க அங்கங்கே சிராய்ப்புகள். மூட்டிற்கு கீழே சதை கொத்தி எடுத்த மாதிரி ஒரு துளை ரத்தம் கொப்பளித்து இருந்தது. தாத்தா கால்களை இழுத்துப் போட்டு கதவில் சாய்ந் தார். விரிந்த மார்பில் நீளமாய் ரத்தக் கோடு. &
பாட்டி பதறிப் போனாள். வேகமாய் வந்து தாங்கிக் கொண்டாள்.
தோள் கொடுத்து உள்ளே கூட்டிப் போனாள். ' w
**ராஜம்.ராஜம்.” "என்ன நா பக்கத்துலோயதா இருக் கேன் ...”
*அழாத புள்ள...” ** எப்படி முடியும்.” 'இப்ப என்னாயிருச்சுன்னு அழற.” * "ஐயோ கால்ல என்ன?” *" குண்டு பாஞ்சுருச்சு...” வலியினுடே சொன்னார். “ரொம்ப வலி க்கு தா. நா என்ன பண்ணுவே.”
** தொடாத புள்ள...ஒண்ணுமில்ல வெளில எடுத்தாச்சு.” M
‘எப்படி?...” ** எப்படியோ..” பாட்டி அழுதாள். ரத்தம் துடைத்து விட் டாள். மடியில் சாய்த்துக் கொண்டு நிறைய புலம்பினாள். தாத்தா பாட்டியின் இடுப்பை சுற்றி கை போட்டுக் கிடந்தார். நீள நீள
மாய் மூச்சு விட்டார்.
११
அன்று படுத்ததோடு சரி, ஒரு மாதமாய் தாத்தா படுக்கையில்தான் கிடந்தார். முதுகு தண்டை நொறுக்கி விட்டார்கள்.
ஒரு கும்பல் துப்பாக்தி சனியன்கள் சூழ தாத்தா கோஷ்டி சிதைந்திருக்கிறது. வெடி

Page 18
6
குண்டு எறிந்து திசை திருப்பியிருக்கிறது. தாத்தாவின் களம் சிதைக்கப்பட்டது.
ஒரு நிமிடம் நிதானமிழந்தார். பிடிபட போவது நிச்சயம் என்று சூழல் உணர்த்த பரபரத்தார். அடுத்தடுத்து வேகமாய் நாலு குண்டு பறக்க விட்டார். புகைப்படலம் மொத்தமாய் சுருண்டு கொண்டு எழுந்தது, ஊடே பாய்ந்தார். துரத்துகிற துப்பாக்கி சனியன்களுக்கு கண் கட்டி வித்தை காட்டி னார். துப்பாக்கி தோட்டா காதோரமாய் உரசிப் போனது. காது விளிம்பில் போய் பிசு பிசுத்தது. கால்கள் அனிச்சையாய் வேகத்தை குறைத்துக் கொண்டன. நொடிப்பொழுது தடுமாறினார். சமாளித்து வேகம் எடுக்கை யில் வலது காலில் அசுரபலத்துடன் ஒரு தோட்டா புகுந்து ரத்தம் சொட்ட வைத்தது.
வலியில் கால் மடக்கி நொண்டி நின்றார். நின்ற நொடியில் பூட்ஸ் காலால் பின் கழுத் தில் ஓங்கி ஒரு உதை விழுந்தது. குப்புற விழுந்தார். முதுகில் அணி வகுப்பு நடந்தது. முணங்கலாய் வந்தே மாதரம் சொன்னார்.
சமயம் பார்த்து சகத்தோழர்கள் களத்தில் குதித்தார்கள். இரண்டு தொப்பி தரையில் உருண்டது. புகை சுருண்டு சுருண்டு கொப் பளித்து குமுறி உயரே எழுந்தது.
மயங்கி கிடந்தவரை தோளில் சுமந்து ஒரு தோழன். மறைந்து போனான்.
ஒரு மணிநேர கண்ணசரலுக்குப்பின் கூடி யிருந்த நபரை போய் காரியம் கவனிக்கச் சொல்லி இருட்டுகிற சமயம் வீட்டு வாசல் கதவில் வந்து சாய்ந்தார்.
**ராஜம். உனக்கு நா நிம்மதியவே கொடுக்கல இப்பவும் உன்ன நான் ந - தனியா விட்டுட்டு போய்டுவேன்னு பயமா யிருக்கு. நீ தளர்ந்து போய்ட கூடாது புள்ள. * இந்த பொண்ண நல்லபடியா வளக்கனும்.”
தாத்தா முதல் முறையாய் கண்ணிர் வடிப் பதைப் பார்த்தாள்.
கடைசியாய் தாத்தா பாட்டி மடியில்தான் கண் மூடினார். -
‘இந்தப் பொண்ண நல்லபடியா வளக் கணும்.உங்க தாத்தா சொன்னது இன்னும் எங்காதுக்குள்ள நிக்கிது. இந்த நாட்டுக்காக புருஷனையே கொடுத்துட்டு ஒரு குழந்தை யோட வெள்ளப் புடவை கட்டி பத்தொம்போது வயசுல தன்னந்தனியா நா நின்ன அவஸ்த்தை இன்னைக்கு யாருக்கு தெரியுது. அட யாருக் கும் தெரிய வேண்டாம். அவுங்க பொண்ணு ஒவ்வொரு நிமிஷமும் அந்த கொடூரமான

பாலம்
சூழல்ல என் வயித்துல வளந்த பொண்ணு உங்க அம்மாவுக்குத் தெரிய வேண்டாமா..? கெழம் பொலம்புதுன்னு முனங்கிப் போறா. எப்படி அந்த வீட்ல இருக்க முடியும்.”
கிருஷ்ணன் மெளனமாய் உட்கார்ந்திருந் தான். −
இவன் வீட்டிற்குள் நுழைந்தபொழுது பாட்டி ஈரப்புடவையில் நின்று சினிமா பாடல் பாடிக் கொண்டிருந்தாள்.
*புத்தம் புது உலகம் இங்கே தெரிகிறது வானம் என்னை வா வென்றது.' வாசல்படியில் ஈரச்சுவடு இருந்தது. சத்தம் கொடுக்காமல் நின்றான். லேசாய் முதுகுத் தண்டு சிலிர்த்தது.
ஒரு பனித்துளியில் இந்த ஜெகம் அடங்கும் அட்டா உலகம் அழகின் சுரங்கம் முதுகுபுறம் ஏதோ நிழலாட பாட்டி பட் டென பாட்டு நிறுத்தி திரும்பிப் பார்த்தாள்.
*யேய் கிருஷ்ணா.” * வேகமாய் வந்து இவன் கன்னங்களை தாங்கிக் கொண்டாள். ஈரக்கை சில்லென்றது. லேசாய் நெளிந்தான்.
பாட்டி நலம் விசாரித்தாள். குட்டியைப் பற்றி ரொம்ப குதூகலமாய் கேட்டாள். கூட கூட்டிட்டு வந்தா என்ன..? குறைபட்டுக் கொண்டாள். அப்பா பற்றி பேசும்போது சின்னதாய் சிரித்துக் கொண்டாள். அம்மா வின் பேச்சை ரொம்ப நிதானமாய்த்தான் எடுத்தாள். முகம் இறுகி இருந்தது. கண்ணுக் குள் லேசாய் கலக்கம். அனாவசியமாய் வர வழைத்துக் கொண்ட அலட்சியம் இருந்தது. அத்தனை வலு இல்லை. பேச்சு வளர்ந்து போகப்போக பொட்டென்று உடைந்தது. கண் களில் நீர்முட்டி வழிந்தோடியது.
பாட்டி அம்மாவாய் இருந்தாள். திரும்பி நின்று கண் துடைத்தாள். 'உங் கம்மா நல்லாயிருக்கால்ல.” உடைந்த குர லில் கேட்டாள். அதன் பிறகுதான் இப்படி யொரு நீளமான பேச்சு பேசினாள். 'கெழம் பொலம்புதுன்னு முனங்கிப் போறா.” பாட்டி திரும்ப திரும்பு சொல்லி அழுதாள்.
பாட்டி அழுது பார்த்ததில்லை. தவிப்பாய் இருந்தது. நிமிஷ நேர அழுகைதான். சட்
டன ட்ரக் மாறிப் போனாள்.
*நா. இப்ப பாடுன பாட்டு யார் பாட்டுடா.” w

Page 19
பாலம்
**வைரமுத்து.”
**நல்லாயிருக்குடா...ஒரு பனித் துளியில் இந்த ஜெகம் அடங்கும்...எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா. ஒவ்வொரு நிகழ்வையும் இந்த உலகம் பாதிக்குது, ஒவ்வொரு நிகழ் வும் இந்த உலகத்தை பாதிக்குது, பனித்துளி யில் ஜெகம் அடங்கும்தான். ஆனா பனித்துளி யில நம்ம விரல் நுணியவாவது பாக்க முடி யுமா சொல்லு. இங்க நாம தெரிஞ்சுருக்கற விஷயம் ரொம்ப குறைச்சல். எல்லாம் மீறி அந்தப் பாட்டோட பாஸிட்டிவ் அப்ரோச்தான் பிசின் தடவி ஒட்டினமாதிரி வந்து ஒட்டிக்கிது.”
அப்பா.பாட்டியிடம் இந்த மாதிரி பேச்சு கேட்டு எத்தனை நாளாகிவிட்டது.
சந்தோஷமாயிருந்தது. *"நா பேசாம பேசிக்கிட்டேயிருக்கே. களைச்சுப் போய் வந்திருப்ப இல்ல தூங்கி யிருக்க முடியாதேடா . ஆத்தாங்கரைக்குப் போய் குளிச்சுட்டு வர்றியா.நா இப்பத்தான் குளிச்சுட்டு வர்ரே என்னடா பேசாமயிருக்க...”
** என்ன பேச.” **ரொம்ப சலிச்சுக்கறா.” சிரித்தான். பாட்டியை பார்த்ததில் உள் ளுக்குள் நிறைய சந்தோஷம் இருந்தது. எப் படி வெளிப்படுத்த பேசாமல் பாட்டி மடியில் படுத்துக் கொள்ளலாம்.
பாட்டி நெருங்கி வந்து தலையை கோதி விட்டு குனிந்து என்னடா என்கிற மா தி ரி பார்த்தாள்.
‘நீங்க என்னோட வர்றிங்க அம்மா கூட்டி வரச்சொன்னாங்க...”
* என்னடா புதுக்கதை.? **இங்க தனியா இருந்து என்ன பண்ண போறிங்க...”
‘நிம்மதியா இருக்கப்போறே.” கோபம் வந்தது. நடிக்கிற பாட்டியை பார்க்க பாவமாய் இருந்தது.
“எது நிம்மதி. இப்படி தனியா மனசப் போட்டு அலைக்கழிய விட்டு தவிக்கறதா. நீங்க இங்க நிம்மதியா இருக்கப் போறதில்ல சதா எங்க நினைப்புதான் ஆட்டும்.”
**அது din-L- சுகந்தான்” ‘'எது.பழசை நினைச்சு மருகு ற து, வேதனையில லயிச்சு சுய பரிதாபப்படறது
சுகம்னா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த பாட்டுல பாஸிட்டிவ் அப்ரோச் பத்தி பேசி

17
யிருக்க வேண்டாமே..அடடா உலகம் அழகின் சுரங்கம்.உலகம் , அழகின் சுரங்கம்தான். தங்கச் சுரங்கம்னா எத்தனையோ கஷ்டங் களுக்கு நடுவில தான் போராடித்தான் தங்கம் எடுக்க முடியும். அது மாதிரி தான் அழகின் சுரங்கம் இந்த உலகத்துல எத்தனையோ கஷ்டங்கள் வரும். போராடி வெற்றியடைஞ்ச வனுக்குத்தான் உலகம் அழகின் சுரங்கமா படும். ஐயோ கஷ்டம்னு ஒதுங்கறவனுக்கு நரகம்தான்.’
'போதும் நா போராடி கண்டது அந் நிக்கு சுதந்தர போராட்டம் . எத்தனையோ கனவு இருந்துச்சு ஒண்ணும் நினைவாகல. அந்தப் போராட்டத்துக்கு பிறகு நா ஒரு அழ கையும் பாக்கல. அப்புறம் உங்க அம்மாவை வளக்கறப் போராட்டம்.நம்ம பொண்ணு எதா வது சாதிக்கனும்னு நினைச்சே காதலிச்சு கலி யாணம் க்ண்ணிக்கிட்டா. அவ்வளவுதான் அப் புறம் சாதாரண வாழ்க்கை. ஒரு சே ரி யி ல ஸ்கூல் நடத்தினே. அதுலயும் நா எதிர்பார்த்த ஒண்ணும் இல்லை. போதும்டா எ ல் லா ம் சும்மா இருந்து தான் அழகை பார்க்கப் போறேன்”
‘ “ 3 ibidit யிருந்தா . சும்மா யிருத்தல்னு உண்மையில ஒண்ணுமேயில்ல. வெளி யி ல சும்மாயிருக்கறதா இருந்தாலும் உள்ள சும்மா யிருக்க முடியாது இது இயற்கையோட நிர் பந்தம். சரி அப்படியே சும்மாயிருக்கணும் என்றாலும், சும்மாயிருக்க முடியவில்லை எதை யேனும் செய்ய வேண்டும் என்றாலும் ஒரே வழி மனிதனை நேசித்தல் தான். ஊர் உலக மெல்லாம் நேசிக்கனும்னா முதல்ல வீட்ட நேசிக்கணும். வீட்டு மனுஷர்களை முறைச்சு கிட்டு வீட்ட நேசிக்க முடியுமா அதனால நீங்க அங்க வந்தே சும்மாயிருங்க...”
பாட்டி ஏற இறங்க பார்த்தாள், படபடவென பேசியவன் சின்னதாய் முறு வலித்தான்.
**நல்லா பேசக் கத்துக்கிட்ட.ஐயோ இன் னும் புடவை கூட மாத்தல அப்படியே நின்னு பேசிக்கிட்டிருக்கேன் முதல்ல போய் குளிச்சுட்டு வா...”
ஆற்றங்கரைக்கு கிளம்பியபோது பாட்டி கேட்டாள்.
'தவராம எண்ணெய் தேய்ச்சு குளிச் Fu fr...” -്.
வெளியேறியவன் சட்டென திரும்பினான். **பாட்டி கையால எண்ணை வாங்கி தேச்
சுக்கிட்டாதான் குளிச்சமாதிரி இருக்கும்.”

Page 20
18
ஒரு நெருடுகிற பார்வை பார்த்து வெளி யறினான். 4
பாட்டி போகிறவனையே வியந்து பார்த் துக் கொண்டிருந்தாள்.
б) O QO od
‘பாட்டி இது இயந்திரயுகம் லைட்டரை ப்ரஸ் பண்ணினதும் கேஸ்ல நெருப்பு பக் குன்னு பத்திக்கனும். இதுதா எல்லோரட எதிர்பார்ப்பு. இது ஒரு வகையில அ வ சி ய த் தேவை.”
நாலு குச்சி உரசிப் போட்டு ஐந்தாவதுக்கு தீப்பெட்டியை திறந்த பாட்டி தலை நிமிர்ந் தாள். என்ன புதுசா. பேச்ற என்கிற மாதிரி கொக்கியாய் பார்த்தாள்.
"இப்ப அதிகம் பேருக்கு தீக்குச்சி உரசர
அளவு பொருமை கிடையாது’
** எனக்கு பொறுமை இருக்கு” பாட்டி குச்சி உரசி அடுப்பு பற்ற வைத்தாள்.
*இருக்கலாம். அந்த பொறுமை சகலத் லிலயும் இருக்கனுமே.”
** அதுக்கு அப்படியொரு வாழ்க்கை வாழ்ந் துட்டு. என்னால பொறுத்து பொறுத்து போக முடியாது.”
'இல்ல.அந்நிக்கு நடந்தது ஒரு அக்ஸி டண்ட் நீங்க வந்ததுக்கப்யுறம் அப்பாவும் அம்மாவும் எப்படி தவிச்சுப் போனாங்கன்னு எனக்கு தெரியும்.”
பாட்டி மெளனமானாள்.
எப்படி அனுஷரனையாய் இருந்தபாட்டி, சகலத்துலயும் வழி நடத்திய பாட்டி இப் பொழுது வீம்பு பேசுகிறாள்.
**என்னமோ லைட்டர்.தீப்பெட்டி உரசு பொறுமையில்ல நேர்மில்லன்னையே இந்த லைட்டருக்கு முன்னாடி இந்த தீப்பெட்டிதான் சகலமும் தெரியுமா...”
பாட்டி இவனுக்குள் பிடி கொடுத்தாள்.
** வாஸ்தவம் லைட்டருக்கு முன்னாடி தீப்பெட்டி தான். ஆன்ா தீப்பெட்டிக்கு முன் னாடி முதல் முதலா சகல காரியமும் பண்ண சிக்கி முக்கி கல்தான் ஞாபகம் இருக்கா..? நமக்கு முன்னோர்கள் அத உரசித்தான் தேவையை பூர்த்தி செய்தாங்க; நீங்க அடுப்பு பத்தவைக்கறப்போ என்னைக்காவது ஒரு நாள் இந்தத் தீப்பெட்டிக்கு மூலமே சிக்கிமுக்கி கல் தான்னு நெனச்சுருக்கீங்களா..? எது பழசு? எது மரபு.? எது உயர்வு...? அவங்க அவங்

Luts) lb
களுக்கு அவங்க கடந்து வந்த பாதை பழசு,
மரபு உயர்வு.”
பேசி முடித்தவனை பாட்டி கண்கள் விரிய
பார்த்தாள்.
அவரவருக்கு அவரவர் கடந்து வந்து வந்த பாதை பழசு, மரபு உயர்வு.
பாட்டி மெளனமானாள். நான் யார்.என் காரியங்கள் எதன் பொருட்டு.இந்த வீம்பு என்ன சாதிக்கும்.? நான் என்ன சாதரணமா..? ஒரு சுதந்திர போராட்ட வீரரோட மனைவி. பள்ளி வாச னையே இல்லாத சேரியில் எத்தனையோ இடர் களுக்கு நடுவில் எழுத்து கற்றுக் கொடுத்தவள். தன்னந்தனியாய் வந்த பிரச்சனைகளை சமா ளித்து நின்றவள். துணிச்சலாய் துணை தேடி வந்தவளை இந்த சமூகத்தில் என் பங்கு இன் னும் இருக்கிறது. ஒரு படி உசத்தியாகவே இருந்தவள் எப்படி பிசகிப்போனேன். காலம் கெட்டுப் போய்விட்டதா.சத்யமாய் இல்லை. மாறுதல் அவ்வளவுதான். முதலில் ரயிலை பார்த்து பயந்தார்களாம். பிசாசு என்றார்களாம். இந்த தலைமுறை அதிசயப்படுகிறது ரசிக் கிறது. இன்று கம்ப்யூட்டர் வளர்ச்சி கண்டு நடுங்குகிறார்கள். இப்படியே போனால் என் னாகும்.” இதைப் பார்த்து இனி வரப் போகிற தலைமுறை அதிசயிக்கப் போகிறது. சிரிக்கப் போகிறது.
இன்னும் நிறைய கடமை இருக்கிறது. ந்த சமூக வளர்ச்சிக்கு என்னால கோட்டை கட்ட முடியாது. வேணா ஒரு செங்கலா ஒரு சட்டி சாந்தா இருக்கலாம்.
அதைச்செய், முன்னால் இருக்கும் இந்த புத்திசாலி குழந்தையை வழிப்படுத்து. எதிர் காலம் இன்னும் பிரகாசமாய் இருக்கும்.
நீண்ட மெளன இடைவெளிக்குப் பிறகு பாட்டி வாய் திறந்தாள்.”
*நாளைக்குப் போய் ஊருக்கு ரெண்டு டிக்கட் ரிசர்வ் பண்ணிட்டுவா.”
இவன் குதூகுலமாய் எழுந்து பாட்டி கை யை பிடித்து முத்தம் கொடுத்தான். ם
நல்ல நூல்களே நல்ல வழிகாட்டி ܫܝ
நல்ல நூல்கள் பெற
- őről).
473, கூடல்நகர், மதுரை-18

Page 21
நெல்சன் மாண்ெ இன ஒதுக்கல்
நொறுக்கி
(தென்னாப்பிரிக்க மக்களை ஒருமித்தப் போராட்டத்திற்கு அழைக்கும் இந்த அறிக்கை ராபன்தீவுச் சிறையிலிருந்து கடத்தப்பட்டு, 1980 ஜூன் 13-ல் தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் ஆலிவர் டாம்போவால் வெளியிடப்பட்டது. 1979-ல் ‘சர்வதேச புரி வுணர்க்கான ஜவஹர்லால் நேரு பரிசை நெல்சன் மாண்டெலாவிற்கு வழங்குவதாய் இந்தியா அறிவித்ததும், மாண்டெலா சார்பில் அவரது மனைவி வின்னி மாண்டெலா பரிசைப் பெற்றுக்கொள்ள இந்தியா வருவதற்கு தென் னாப்பிரிக்க அரசு தடைவிதித்தது. பிறகு நவம்பர் 1980-ல் இந்தியா வந்து மாண்டெலா விற்கான பரிசைப் பெற்றுச் சென்றவர் ஆலிவர் டாம்போ. அவரது அ றி மு க உரையுடன் தென்னாப்பிரிக்க மக்களுக்கு மாண்டெலா விடுக்கும் அழைப்புச் செய்தியை இங்கே தருகிறோம். (மூலம்: Aliver Tambo and the Struggle against Apartheid. Edited by-Es. Reddy) .
டாம்போவின் அறிமுக உரை
நமது தேசாபிமானிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பெரும்போரில் இறங்கும் நாளை எதிர்நோக்கி, ர்ாபன்தீவுச் சிறையி லிருந்து விடுக்கப்படும் போர் அழைப்புச் செய்தியை தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இப்போது உங்களின் பார்வைக்கு வைக்கிறது. நெல்சன் மாண்டெலாவும், நூற்றுக்கணக்கான நமது தோழர்களும் கடந்த 17 வருடங்களுக்கு மேலாக இந்த இனஒதுக்கல் அரசின் சிறை களில் வரழ்கிறார்கள். “சோவெட்டோ பேரெழுச் சிக்குப் பிறகு எதிரிக்கு நேர்ந்துள்ள இன்றைய நெருக்கடி நிலையை போராடும் பெருந்திர ளான மக்களுக்கு விளக்கிக் கூறும் வகையில் இநதச் செய்தி நெல்சன் மாண்டெலாவால் அறிவிக்கப்பட்டதாகும்.
இந்தச் செய்தி அறிக்கையை ராபன் தீவுச் சிறையிலிருந்து பலப்பல தடைகளையும்,
சிரமம் மிகுத்த சூழல்களையும் தகர்த்து கடத்தி, நம்மிடம் கொண்டு வந்து சேர்க்க

லா அறைகூவல்
ஆட்சிப் பீடத்தை
எறிவோம்
இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் மாண்டெலாவின் செய்தி இன்னமும் புதி தானது. செல்லத்தக்கது; அது மக்களிடம் அவசியம் பகிரப்பட வேண்டிய ஒன்று என நாங்கள் நம்புகிறோம். கறுப்பின ஓர்மைக்கும் ஒன்றுபட்ட போராட்டத்திற்கும் அவர் விடுக்கும் அழைப்பு ( இந்த் வருடத்தில்விடுதலைப் போராட்டம் தொடங்கி 25 ஆண்டு கள் முடிந்து விட்ட இந்தப் பொழுதில்-நமது, மேலான கவனத்திற்கு உரியதாய் உள்ளது! இந்த அழைப்புக் குரலுக்கு செவிசாயுங்கள். செய்ல்படுங்கள்! 1980-ஐ மக்கள் பேரெழுச் சியின் ஆண்டாக மாற்றுங்கள்! என தென் னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் உங்களை அவசரப்படுத்துகிறது.
. . . . .
இனஒதுக்கல் ஆட்சி பீடத்தை நொறுக்கி எறிவோம்! (மாண்டெலாவின் முறையீடும் அழைப்பும்)
நமது வரலாற்றில் துப்பாக்கி முக்கிய இடம் வகித்துள்ளது. வெள்ளை காலனி யாதிக்கத் தலையீட்டை எதிர்த்தெழுந்த கறுப்பின மக்களின் போராட்டம் துப்பாக்கி முனையின் கீழ் நசுக்கப்பட்டது. வெள்ளை யாதிக்கத்திலிருந்து விடிவு பெற நம் மக்கள் போராடினர். அவர்களை ஈவு இரக்கமற்ற ஆயுத பலாத்காரம் ஒடுக்கியது. இன்று வரை அதே கதைதான். தொடர்ந்து அமைந்த வெள்ளை ஆட்சிகள் தற்காப்பில்லாத நிராயுத பாணிகளான கறுப்பின மக்களை எண்ணற்ற அளவில் படுகொலை செய்தன. எங்கெல் லாம், எப்போதெல்லாம் துப்பாக்கிகள் ஏந்தப் படுகிறதோ எந்துகிறதோ, அப்போதெல்லாம் *கொடூர துப்பாக்கிச் சூடுகள்” ஆப்பிரிக்க மக்கள் மீதே ப்ரிசோதிக்கப்பட்டன.
வெள்ளை ஆதிக்க அரசுகளின் ‘இன ஒதுக்கல் கொள்கை இனவெறி-அடக்குமுறை மனிதவிரோதம் ஆகியன ஒருமித்த வடிவம்.

Page 22
20
இக்கொள்கையின் நிதர்சனமான கோரமுகத்தை இன்று நிலவும் அரசியல் சட்ட விதிகளில் நாம் காணலாம். மூடுதிரைகளுக்கு அப் பால் அவ்விதிகளில் பொதிந்துள்ள வஞ்சகத் தையும், அவற்றின் சொற்றொடர்களில் வார்த்தைகளில் உள்ளாழ்ந்துள்ள ஏமாற்றும் புத்தியையும் நாம் இனங்காண வேண்டும்.
துப்பாக்கிச் சத்தங்களும், நீர்யானையை ஒத்த கவச வாகனங்களின் உறுமல்களும் கடந்த 1976 ஜூனிலிருந்து தொடர்ந்து நாராசமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இன வெறி இராணுவமும், போலீசும் நாடு முழுமை யிலும் குண்டு மழைப் பொழிந்து நூற்றுக் கணக்கான ஆண்கள் பெண்கள் குழந்தைகளை கொன்று குவித்து முடமாக்கி வருகிறது. கடந்த காலத்து படுகொலையெல்லாம் விஞ்சு மளவிற்கு இன்றைய ஆட்சியில் சாவு விகித மும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இனஒதுக்கல் கொள்கை யின் ‘விசுவாசப் பணியாளர்கள்’ தூக்கிலிட்டு கொள்பவனும், துப்பாக்கியுமே ஆகும்.
கவசந்தரித்த நீர்யானை வாகனங்கள், துப்பாக்கிகள், தூக்குமரங்கள் இவையே இன ஒதுக்கல் கொள்கையை கடைப்பிடிப்பவர்களின் நல்வழிகள் (!) இவ்வழிகள். இன்னமும் தென் னாப்பிரிக்க இனவெறி ஆட்சியாளர்களுக்கு
இலகுவான புகலிடமாகவும், எப்போதும் நாடக்கூடிய அடைக்கலமாகவும் விளங்கு கின்றன.
இன்றைய எரியும் பிரச்சனைகளுக்கிடை யில், நமது மக்களின் காலம் கொல்லப்பட்டவர் களை எண்ணுவதிலும், படுகாயங்களை பேணு வதிலுமாய் கழிகையில், அவர்கள் தம்மை நோக்கி இவ்வாறு சொல்லிக் கொள்கிறார்கள்.
**நமக்கு முன்னுள்ள கடமைகள் என்ன? சாதகமான எதையும் ஆட்சியாளர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. துப்பாக்கிகளுக்கு தலைவணங்கவும், விரல்களால் துப்பாக்கிச் சுடு விசையை சீராட்டவும் தம்படைவீரர்களுக்கு அவர்கள் கட்டளையிடுகிறார்கள். உத்திரவாத மற்ற உறுதி மொழிகள்; சேதமடைந்த இன ஒதுக்கல் சித்தாந்த யந்திரத்தை அவ்வப்போது பழுது பார்க்கும் முயற்சிகள்; அரசியல் சட்டங் களின் கண்கட்டு வித்தைகள்; மக்களை கூட்டம் கூட்டமாய் கைது செய்து சிறை யிலடைத்தல்; கறுப்பின மக்களின் ஒற்றுமையை குலைத்து பலவீனப்படுத்தும் முகமாக பொய்ப் பிரச்சார சாதனங்களை அடிக்கடி புதுப்பித்துக் கொள்ளல் என்று இதுநாள்வரை சென்ற துன்மார்க்கங்கள் வழியேதான் இனியும்

பாலம்
அவர்கள் செல்வார்கள். தென்னாப்பிரிக்கா வின் பெருந்திரளான கறுப்புமக்கள் கொண்டு டுள்ள தீர்மானகரமான கருத்தில் கவனம் செலுத்த அவர்களுக்கு திறனோ அல்லது விருப்பமோ இல்லை”
கறுப்பினத்தவரிடமிருந்து அவர்தம் உறுதி மிக்க கருத்து தெளிவாய் எழுந்தொலிக் கிறது. * 'இனஒதுக்கல் செயல்திட்டம் தோல்வி அடைந்த ஒன்று. அதை நிராகரிப் பதில் நமது மக்கள் வயது வித்தியாசம் பார்ப்பதில்லை. இளைஞர்கள்-முதியோர்கள், பெற்றோர்கள்-குழந்தைகள் எல்லோருமே அதை மனங்கசந்து நிந்திக்கிறார்கள்”
1976/1977 காலப்பகுதியின் சிறப்புக் குரிய எழுச்சி அலை நமது மாணவர்கள் இளைஞர்களிடையே ஆர்ப்பரித்தது. அவர்கள் பல்கலைகழங்கள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் ஆரம்ப பள்ளிகளிலிருந்தும் கூட வந்தார்கள். அவர்கள், மூளைகளில் நச்சை விதைக்கின்ற இனத்துவேசர்களுடைய பாடத் திட்டத்தின்படி தமது முழுக்கல்வியையும் பயின்ற தலைமுறையினரின் இனஒதுக்கல் ஆட்சிமுறைமைக்கு கீழ்ப்படியும் சாதுக்களாய் நமது குழந்தைகளை மூளைச்சலவை செய்யும் மிகக்கொடிய கல்வித் திட்டம் அது. அந்த “பண்டு கல்வி முறையின் 20 வருஷகால நடைமுறைக்குப்பின் அந்த கல்வி வட்டம் மூடப்பட்டது.
மாணவ-இளைஞர்களின் கலக எழுச்சி யைத் தவிர வேறெதுவும் இனஒதுக்கல் செயல் திட்டத்தின் 'கையாலாகாத் தன்மையை” மிகத் தெளிவாய் மெய்ப்பித்துக் காட்டியதில்லை அந்த எழுச்சியை ஒடுக்க கொடூரம், மனித விர்ோதம் எனும் இனஒதுக்கலின் தீங்கானப் பாதைகள் திறந்து விடப்பட்டன. அத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகளை தென் ஆப்பிரிக்க மக்கள் யாவரும் ஒரு சேர வன்மை யாய் எதிர்த்தார்கள். ܫ
அக்காலத்தின் போராட்டப் படிப்பினை களை இன்றைய எழுச்சி கைகொண்டிருக் கிறது. இது, எல்லா திரைச்சீலை மூடல் களுக்கும் சாந்தமான பேச்சுக்களுக்கும் அப் பால் இனஒதுக்கல் சித்தாந்தம் சகிக்க முடி யாமல் போனதையே பிரதிபலிக்கிறது. இவ் விருப்புணர்வு நமது அடிமைத்தனத்தின் எல்லாத் தடைகளையும் மீறி எழுந்துள்ளது. இந்த ஆழ்ந்த உண்மையை, இனவெறியாட்சி யில் மனித உயிர் மலிவாய் போனதை அனுபவிக்கும் நமது மக்கள் யாவரும் அங்கீ கரிக்கிறார்கள்.

Page 23
பாலம்
எளிதில் அசைக்க முடியாதபடிக்கு ஆழ வேர் கொண்ட, சுற்றிலும் வலுவான பாது காப்பு அரண்களை எழுப்பிக் கொண்ட, ஒரு போதும் இணங்க மறுக்கின்ற எதிரிக்கு முகங் கொடுத்து போரிடுகிறோம் நாம். விடுதலை நோக்கிய நமது பயணம் நீண்ட நெடியதும், துன்பதுயரங்கள் நிறைந்ததும் ஆகும். ஆனால் நமது எல்லைகளுக்கு உள்ளாகவும், வெளியிலேயும் வெற்றியின் எதிர்காலத் தோற்றம் மேலும் மேலும் பிரகாசமடைந்து வருகிறது.
வெற்றிக்கு கறுப்பின ஒற்றுமையே முன் நிபந்தனை. கறுப்பின மக்களை பிரித்தாள கைக்கொள்ளப்படும் ஒவ்வொரு பிரயர்த்தன மும், கறுப்பின போராட்டக் குழுக்கள் ஒன்றிற் கொன்று குழிபறிக்கிற இணக்கங் கொள்ளா திருக்கிற போக்குகளும், தீவிரமாய் பின்னுக்குத் தள்ளப்பட்டு களையப்பட வேண்டும். நமது மக்கள்-ஆப்பிரிக்கர்கள், இந்தியர்கள், வெள்ளை ஜனநாயக வாதிகள், வேறு கலப்பினத்தவர் கள் யாவரும் ஒரே பெரும்திரளாய், உறுதி மிகுந்த தடுப்புச் சுவராய் எழ வேண்டும். பொதுமக்கள் பெருமளவில் ஈடுபடும் போராட் டத்தை முன்னெடுக்க வேண்டும்.
நமது போராட்டம் கூர்மை பெற்று வருகிறது. ஒற்றுமையின்றி குழுக்களாகப் பிரிந்து செயல்படும் டாம்பீகத்திற்கான காலம் இதுவல்ல. எல்லா மட்டத்திலும், வாழ்க்கை யின் தளங்கள் ஒவ்வொன்றிலும் நாம் இணைய வேண்டும். தோளணைந்த மக்களிடையே எழும் வேற்றுமைகள், இனஒதுக்கல் ஆட்சி முறையையும் இன ஆதிக்கத்தையும் முழுவது மாய் துடைத்தெறியும் ஒரே இலட்சியத்தின் முன் மறக்கப்பட வேண்டும்.
இன ஒதுக்கலுக்கு எதிராக உலகின் பார்வையில் வெறுப்பு மிகுந்து வருகிறது. தலைமை அதிகார பீடத்தில் வீற்றிருக்கும் வெள்ளை முன்னணியினர் பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மொ சாம் பி க், அங்கோலா நாடுகள் விடுதலை அடைந் துள்ளன. நமீபியா, ஜிம்பாப்வே நாடுகளில் விடுதலைப் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
நமது கண்டத்திலிருந்து வெள்ளை சிறு பான்மையினரது ஆட்சியின் கடைசி அடை யாளச் சின்னங்களையும், அடிச்சுவட்டையும்
அகற்றி ஒழிக்க நம் தேசத்து மண் கோபா
வேசமிக்க போரையும், கூர்மை கொண்ட போர்முனைகளையும் மேற்கொள்ள விதிக்கப் பட்டுள்ளது. உலகம் நமது பக்கத்தில்
ஆப்பிரிக்க ஐக்கிய ஸ்தாபனமும் (OAU), ஐ. நா. சபையும், இனஒதுக்கல் எதிர்ப்பு

2.
இயக்கங்களும் நம் தேசத்தின் இனவெறி ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்து நெருக்கடியைத் தந்துள்ளன.
*தென்னாப்பிரிக்காவை" தனிமைப்படுத் தும் ஒவ்வொரு முயற்சியும் நமது போராட்டத் திற்கு பலம் சேர்க்கிறது. போராட்டத்தின் எல்லா மட்டத்திலும், நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நாம் சாதித்தவை நிறைய; சாதிக்க வேண்டியதும் நிறைய இருக்கிறது. எனினும் வெற்றி நிச்சயம்.
ப்ரிடோரியா ஆட்சியின் சிறைகளில் அழுக்கடைந்த சுவர்களுக்குள் முடக்கப்பட் டிருக்கும் நாங்கள் உங்களுக்கு மென்மேலும் நெருக்கமாகிறோம். துப்பாக்கியாலும், தூக்கி லிட்டுக் கொல்பவனின் கயிறிலும் உயிரிழப் பவர்களின் ப ட் டி ய லி ல் உங்களையும் இணைத்தே கணக்கிடுகிறோம். போராட்டத் தில் வாழ்கிற, பாடுகாயமுற்ற, இறந்த, நெஞ்சுறுதியுடன் கொடுங்கோலாட்சியை எதிர்த்தெழுகிற உங்கள் அனைவரையும் வணங்குகிறோம்! வாழ்த்துகிறோம்.
*அவர்களின் இடுகாடுகளில்" தலை சாய்க்க நேரிடும் போதிலும், நாம் இவற்றை மனங்கொள்ள வேண்டும்: **இறந்தவர்கள் நம்மிடையே வாழ்கிறார்கள்; நம் நினைவு களில், இதயங்களில் வாழும் போரில் உயிர் நீத்த கொள்கைத் தியாகிகளைப் போல அவர்கள்,
-நமது ஒற்றுமையின்மைக்கு எதிரான 56Rf60 TDFTs...
-கொடும் அடக்குமுறையை அனுபவிக்க நேருகையில் மாபெரும் மக்கள் சைனியம் இழைக்கும் தவறுகளின் படிப்பினையாக.
-விடுதலை சக்திகளின் ஒன்றிணைப்புக் கான நமது முயற்சிகளுக்கு உத்வேகமாக.
-நமது மக்களுக்கான சுதந்திரம் இன்னும் வெல்லப்பட வேண்டியுள்ளதை அறி வுறுத்தும் நினைவாக வாழ்கிறார்கள்’.
இனஒதுக்கல் வன்முறை ஆட்சிக்கு தொண்டூழியம் செய்யும் துப்பாக்கிகள் அதற்கு நிச்சயம் வெற்றி ஈட்டித் தராது. துப்பாக்கி களை நம்பி வாழ்பவர்கள் துப்பாக்கிகளால் அழித்தொழிக்கப்படுவார்கள்.
*ஒன்றுபட்ட புரட்சி செயற்பாடுகள்? எனும் பட்டறைக் கல்லுக்கும், "ஆயுதமேந் தியப் போராட்டம்’ எனும் சம்மட்டி அடிக்கும் இடையில் குரூரமிக்க இனஒதுக்கல் சித்தாந்த இயந்திரத்தையும், வெள்ளை சிறுபான்மை யினரின் இனவெறி ஆட்சிப் பீடத்தையும் நாம் நொறுக்கி எறிவோம்.
Amandala Ngawethu!
Matla ke a Rona! தமிழில்: சமந்தா

Page 24
வெளியே வானம் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. இவனது கண்கள் மூடி வைத்திருந்த கண்ணாடி ஜன்னலில் வழிந்த நீரையே பார்த்துக்கொண்டிருந்தன. கன்னங் களில் வழியும் கண்ணிர்போல நீர் வழிந்து கொண்டிருந்தது. சுதந்திரமாய் அழுதால் எப்படியிருக்கும் என்று தோன்றியது இவனுக்கு. அழவேண்டும், அப்போதுதான் மனது கரைந்து லேசாகிறது. அப்போதுதான் இருள் விலகி வெளிச்சம் தென்படுகிறது. அழவேண்டும். ஆனால் நினைத்தவுடன் அழ முடிகிறதா என்ன? முகத்தைத் துடைப்பதுபோல் கண்ணின் ஈரத்தைத் துடைத்துக்கொண்டான்.
பேராசிரியர் கரும் பலகையில் பூப்பூவாக பார்முலாக்களை எழுதிக் கொண்டிருந்தார். கெமிஸ்ட்ரி வகுப்பு. மனது எதிலும் படிய மாட்டேன் என்றது இவனுக்கு. காலையில் அண்ணன் வந்ததும் அம்மாவுடன் தகராறு செய்தது மட்டும் மனதில் புகைந்து கொண் டிருந்தது. இவனால் இப்படி இருக்க முடிய வில்லை. வ கு ப் பி ல் அமர்ந்துகொண்டு மழையை வெறித்துக் கொண்டிருப்பது தப்பு என்று பட்டது. பாடத்தில் மனது படிய மறுத்
595.
**இதுதான் கார்பனின் சிறப்பம்சம்” என்றார் பேராசிரியர். "இதுக்கு நேசம்கூட. யாரையும் கட்டிப்பிடிச்சிடும்”.
இவர் ஒரு மாதிரி ஜாலியான டைப். ஆங்கிலம் எப்போதாவது சாஸ்திரத்துக்கு வரும். மற்றபடி தமிழ்தான். அது அந்த கிராமியக் கல்லூரிக்குத் தேவையாகவும் இருந்
535.
“யாரும் கெடைக்கலன்னு வைச்சுக்குங்க. தன்னையே - தன் இனத்தையே - கட்டிப் பிடிச் சிக்கும். அப்படித்தான் வைரம் உண்டாவது.”
இவன் சற்று கவனிக்க ஆரம்பித்தான்.
**வைரத்தை எரிச்சு எடுத்தா என்ன கெடைக்கும் கரி.வெறும் கரி.”.
இவனுக்கு இதயத்தில் ஏதோ இடறியது. வைரம்கூட கரியாகும்.எதுவும் எழுதப்படா மலிருந்த நோட்டை எடுத்து முதல் பக்கத்தில் எழுதினான். வைரம்கூட கரியாகும்.மீண்டும் அதையே எழுதினான். கரியை அழுத்தி எழுதினான். இன்னும் கொஞ்சம் அழுத்தி எழுதினான்.

FATOLOG
என்ன.”
அந்த ஏகத்தாளமான ‘என்ன அவனின் காதருகே கேட்டது. சட்டென்று தலை நிமிர்ந் தான். பேராசிரியர் இவனருகே நின்றிருந் தார். முட்டைக் கண்ணாடியின் வழியே கண்கள் இவன் நோட்டை மேய்ந்தன. எழுந்து நின்றான். கையில் பாலபென் ஆடியது. நோட்டின் பக்கங்களை மூடினான். நிமிர்ந்து பார்த்தான். அவரின் முன் வழுக்கை யில் டியூப் லைட் பளிச்சிட்டது. ‘கரியில ஏன் அவ்வளவு அழுத்தம்?” இவன் மெளனமாய் இருந்தான்.
வைரம் எப்போதும் இல்லை. கரிதான் எல்லாமும் என்று சொல்லாமா? "க்ளாசுக்கு வாராதே, ஆடிக்கு ஒரு வாட்டி. அம்மாசிக்கு ஒரு வாட்டி.வந்தா இப்புடி.”
இவன் கண்களில் நீர் சுரந்தது. அழக் கூடாது. அழுகை பலவீனத்தின் அடையாளம். அழக்கூடாது. தனது ஒற்றை நோட்டை கையில் எடுத்துக்கொண்டான். செருப்பை மாட்டிக்கொண்டு நகர்ந்தபோது பெஞ்ச் இட றியது. உடைந்து விடுவேனோ என்று பயந் தான். பின்னால் ஆசிரியரின் குரல் கேட்டது.
**லைப்ரரி பில்டிங்குக்கா . மழையில் சிகரெட் நனைஞ்சிடப் போவுது” மாணவர்கள் சேர்ந்து சிரித்தார்கள். இவன் கதவருகே சற்றே தயங்கி திரும்பிப் பார்த்தான். சுவிட்ச் போட்டால்போல சிரிப்படங்கியது. மாணவிகள் பக்கத்திலிருந்து மட்டும் தனியே கெக்கலிக்கும் ஒரு குரல் கேட்டது.
மழையில் நடந்தான். லைப்ரரி பில்டிங் இவனை "வா வா" என்று அழைத்தது. அது தான் இந்தக் கல்லூரியில் அமைதியான இடம். மாணவர்கள் வருவதில்லை. ஆசிரியர்கள் வசதிப்பட்டால் வருவார்கள். பல சமயங்களில் வசதிப்படுவதில்லை. தொந்தரவு இல்லாத இடம்.
அந்தக் கட்டிடம்"ட" வடிவில் இருந்தது. ஒரு மூலையில் லைப்ரரி. இன்னொரு கோடியில் கேன்டின். கேன்டீனில் அடுப்பெரிந்ததாய் யாருக்கும் நினைவில்லை. அவன் அந்த மூலையில் அமர்ந்து கொண்டான்.
வானத்திற்கும். பூமிக்கும் திரையிழுத்தாற் போல மழை இறங்கிக்கொண்டிருந்தது. கட்டி டத்தை அடுத்திருந்த மாமரங்கள் மழையில் சடசடத்தன. மாமரங்களுக்கு அப்பால் பனை மரங்கள் வரிசையாய் முதுகு மட்டும் நனைய நின்றிருந்தன. சி த நி ய மழைத்துளிகள்

Page 25
உறவுகள்
தூவானமாய் இவன் முகத்தில் படர்ந்தன. சற்றே இதமாய் இருந்தது. மனதில் வெம்மை யெல்லாம் அடங்கினாற்போல் . மழைத்திரை யும், “ஹோ' என்ற இரைச்சலும் கொடுமை மிகு உலகத்தினின்று இவனைப் பிரித்துவிட்டது போல.
ஜாக்கிரதையாய் பாக்கெட்டில் பத்திரப் படுத்தி வைத்திருந்த சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்திக்கொண்டான். மழையில் நனைந்து வளைந்திருந்தது. நாலைந்து குச்சி களை பிரயோகித்து பற்ற வைத்தான். சிகரெட் டின் காரம் போதுமானதாய் இல்லை,
உதட்டில் சிகரெட்டின் வெம்மை படர்ந்த போது பயம் வந்தது. மரியா கோபிப்பாள்.
**பொம்பளை உதடு மாதிரி செவப்பா இருக்கு...சிகரெட் புடிச்சா என்ன ஆகும்? ஒடம்பு முன்னாடியே ஒட்டடைக்குச்சி.”என்று ஆரம்பித்தால் கையை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருப்பாள். அவளின் வாயைவிடவும் கை அசைவுகள்தான் ரொம்பவும் பேசும்’ *செல்ல மக்கு’ என்று தலையில் குட்டுவாள்.
ஆனாலும் இவனுக்கு சிகரெட் தேவையாய் இருந்தது. சிகரெட்டைக் கண்ணுக்கெதிரே பிடித்துப் பார்த்தான். மின்மினி பூச்சிபோல மினுமினுத்தது. விரல் முனையைச் சுட்டது. அப்படியே தரையில் சிதறியிருந்த நீரில் அழுத்தினான். நீரில் தெரிந்த இவன் முகம் சற்றே கலங்கி கூடியது. சிகரெட் செத்துப் போனது. இவன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
“என்னையா நான் சுட்டேன்.இல்ல எங் கண்ணனை.”
இவளது அண்ணன் இவனைவிட இருபது வயது மூத்தவர். மற்றபடி இவனைப்போலவே சரியாய் சொல்வதென்றால் அவரைப்போலவே இவன். இவனை அவர் தொட்டிலில் இட்டு பாட்டுப்பாடியது இவனுக்கு ஞாபகம் இருக் கிறது. பனைமரத்து மணல் மேட்டில் இவனைத் தூக்கிப்போட்டு அவர் பிடிக்க கை தவறி இவன் நழுவ இரண்டு பேருமாய் மணலில் உருண்டது ஞாபகம் இருக்கிறது. முதன் முறையாக அவர் “மெட்ராஸ்” போன போது இவனின் காலை பேப்பரில் வைத்து வரைந்து கொண்டுபோய் "பூட்ஸ்" வாங்கி வந்தது ஞாபகம் இருக்கிறது. அந்த அண்ணன் ஏன் இப்படி மாறிப் போனார் என்பது மட்டும் இவனுக்கு ரொம்ப நாளாய் புரியவில்லை.
இவன் இன்று காலையில் வீட்டின் பின் புறத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

பக்கத்து டீக்கடையில் வாங்கிய விறைத்துப் போன இட்லியும் கருகிப்போன உருளைக் கிழங்கு முருகிய சாம்பாரும்தான் வழக்கமாக காலை டிபன். ஒவ்வொரு துணுக்கையும் உள்ளே இறக்க ஒரு வாய் தண்ணீர் தேவைப்
L-L-gl.
அம்மா வீட்டின் முன்புறம்.அதுதான் அவளின் கடை. வியாபாரம் செய்து கொண் டிருந்தாள். **வா தம்பி” என்ற அம்மாவின் குரலே இவனுக்கு அண்ணன் வந்திருப்பதைச் சொன்னது. இ வளி ன் அம்மாவைவிட அண்ணன் ஐந்தாறு வயதுதான் இளையவர். சின்ன வயதிலேயே சின்னம்மாவாக வந்து சேர்ந்தவர் அம்மா. அதனால் அண்ணன் இவருக்கு ‘தம்பி’யானார். அப்புறம் அதுவே அம்மாவைப் பொறுத்தவரையில் அவரின் பெய ராயிற்று.
இவன் எழுந்து முன்னே சென்றான். இவனைக்கண்டு அண்ணன் முகத்தில் ஒரு புன் சிரிப்பு கூட தோன்றவில்லை. குனிந்து வேஷ்டிக் கரையை நீவிவிட்டுக் கொண் டிருந்தார். கால்மேல் கால்போட்டு அமர்ந் திருந்தார். சற்று நின்று பார்த்துவிட்டு மறுபடி யும் சாப்பிடத் திரும்பினான். அம்மாவும் அண்ணனும் பேசத் துவங்கினார்கள். அப்பா இறந்துபோன சில வருடங்களில் குடும்பம் சிதைந்து போனது. வேலையைக் காரணம் காட்டி அண்ணன் குடும்பத்தோடு பாண்டி சென்றுவிட்டார். அப்புறம் சொந்த ஊரைக் கூட மறந்து போனார். அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தபோதும் அம்மாதான் போய் பார்த்துவிட்டு செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு வந்தார். இவன் பள்ளியில் படித்த நாட்களில் கோடை விடுமுறைக்கு பாண்டி சென்றுவருவான். இப்போது அதுவும் இல்லை. அம்மாதான் கடையில் பாடுபட்டு அப்பா விட்டுப்போயிருந்த மாந்தோப்பை பராமரித்து அக்காளுக்கு கல்யாணம் செய்து வைத்தாள். பிரசவம் பார்த்தாள். இவளைப் படிக்க வைத்தாள்.
அண்ணனின் குரல் உரத்து ஒலிப்பது கேட்டு இவன் கவனம் அங்கே திரும்பியது. **.ல்ல இப்ப என்ன சொல்றீங்க?”
*அதாஞ் சொல்லிட்டன்ன தம்பி.கொட்டி கொட்டி அளந்தாலும் அவ்வளவுதான். தோட் டத்த வித்துப்புட்டா அப்புறம் என்ன இருக்கு? அப்புறம் இந்த விடுத்தான படிக்க வைச்சு வேலைக்கனுப்புறது எ ப் படி . அவனுகுக்ம்
கல்யாணம் காச்சி நடத்த வேணாமா?.”

Page 26
24
**அதாங் கடை இருக்கல்ல. அப்புறம் நா மட்டும் சும்மா இருந்துடுவனா?” 'கடையில என்னா இருக்கு”.சுருட்டுக்கட்டு.புகையில. சூத்து எரிய ஒக்காந்தாலும் காலனா பார்க்க தாளம் போட வேண்டியிருக்கு.ஒன்ன வேலை யில வைக்க நா என்ன பாடுபட்ட எம் புள்ளைக்கு என்ன செஞ்சிட்டீங்க...இனிமே நா’ இல்லையான்னு சொல்றதுக்கு?’.
அம்மாவின் குரல் ரொம்பவும் ஓங்கி ஒலித் தது. கடையின் முன் கூட்டம் கூடிவிட்டதை இவனால் உணர முடிந்தது.
**சரி இ.எம்மவளுக்கு நல்ல எடமா அமைஞ்சிருக்கு பதினைஞ்சாயிரம் பணம் வேணும்.நா எங்க போவட்டும்.”
*ஆங்.அதா எந்தக் கம்மனாட்டி கழுத்துல தாலியிருக்கும் அத அறுத் துக் கி ப், டு போவோம்ன வந்துட்டியாங்காட்டியும்”
**ஆமா ஒங்க கழுத்துத் தாலிய நாந்தான் அறுத்தே.பேசவந்துட்டாங்க”.
அண்ணன் கோபத்தில் எழுந்து செல்ல ஸ்டூல் உருளும் சப்தம் கேட்டது. அம்மா அழும் சப்தம் கேட்டது. யார் யாரோ அம்மாவை சமாதானம் செய்வது கேட்டது. இவன் கையைக்கூட கழுவாமல் எழுந்தான். நினைவில்லாமல் கிடைத்த நோட்டை எடுத்துக் கொண்டு கொல்லைப்புற வழியே நடையைக் கட்டினான். அம்மாவும் அண்ணனும் பணம் தேடும் வல்லூறுகளாய் பிராண்டிக்கொள்வதாய் உணர்ந்தான்.
நினைவு தெரிந்த நாளிலிருந்து இவனுக் குள் குடியிருந்த தனிமை பினம்போல மன துக்குள் கனத்து விஸ்ரூபம் எடுத்தது. O
'மழை ரொம்ப சுகமாயிருக்கோ..?”
இவன் தலை நிமிர்ந்தான். முட்டியைக் கட்டிக்கொண்டு கவிழ்ந்து கிடந்ததால் பேத லித்துப்போன கண்களில் அவள் தெரிந்தாள். இரட்டைச் சடைகளில் ஒன்றை மார்பில் தவழ விட்டவாறு அவள் நின்றிருந்தாள் மரியா,
**ஏற்கெனவே ஒட்டடைக்குச்சி.” அவள் பார்வை சென்ற திசையில் நசுங்கிப்போன சிகரெட் கிடந்தது. இவன் பார்வையைத் திருப்பிக்கொண்டான். மாமரங்களுக்கு அப் பால் முதுகு நனைய நின்ற பனைமரங்கள் தெரிந்தன. இதேபோல ஒரு மழைநாளில் மரத்திலிருந்து தவறி விழுந்து தவறிப்போன அப்பா நினைவுக்கு வந்தார். இவன் கண் களில் நீர் திரண்டு உருண்டது,
மரியா அக்கம்பக்கம் பார்த்துவிட்டு அவசர மாய் அவன் கண்ணிரைத் துடைத்தாள்.

Luirélსub
"கிளாசை விட்டு வெளியே வரும்போது பார்த்த பார்வை என்னமோ ராஜபார்வை. அந்த ராஜாதானா இது.என் ராஜாதானா.”
அவளின் குரல், விரல்களின் நேசம், மழைக் காற்றில் 'சடசடத்த புடவைத் தலைப்பின் நாதம்.
இவன் அப்படியே அவளின் தோளின் மேல் சாய்ந்து அழ விரும்பினான்.
*சரி. இங்க நின்னு பேச வேண்டாம். ஜெசி வீட்டுக்கு வந்துடுங்க என்னா . நான் போறேன்”
** எப்படி?" “ஐயா பின்னாடி டபுள்சா வர முடியும். நா பஸ். நீங்க சைக்கிள்.” அவள் போய் விட்டாள். சிறிது தூரத்தில் ஜெசி இவளோடு சேர்ந்து கொள்வது தெரிந்தது. மஞ்சள் பூவைப்போல ஒரு குடையைப் பிடித்துக் கொண்டு இருவரும் நடந்தனர். ஜெசி மலை யாளத்துப் பெண். அப்பா ரயில்வே அதிகாரி. அம்மா ஸ்டாப் நர்ஸ். பல சமயங்களில் இவர் களின் சந்திப்பு ஜெசியின் புண்ணியத்தில் அவள் வீட்டில்தான். இவனும் புறப்பட்டான். OO
இவன் ஜெசி வீட்டில் நுழைந்தபோது துப்புரவாக நனைந்திருந்தான். செருப்பைக் கழற்றி விட்டு பனியனுக்குள் வைத்திருந்த நோட்டை எடுத்து மரியாவின் கையில் கொடுத்து விட்டு தண்ணிரை வழித்து விட்டான்.
**சும்மா உள்ள வாங்க?" என்று ஜெசியின் குரல் அழைத்தது. உள்ளே நுழைந்ததும் மரியாவின் கைகளில் டவல் ஒன்றைக் கொடுத்து விட்டு ஏதோ வேலை இருப்பதைப் போல ஜெசி சமையலறைக்குள் நுழைந்துகொண்டாள். அவளின் வழக்கமான தந்திரம் அது.
அந்தப் பெரிய ஹாலில் அவனும், அவளும் மட்டும் தனியே இருந்தனர். அவள் இவனை நெருங்கி டவலால் தலையைத் துவட்டி விட் டாள். அந்த மெல்லிய டவல் போதுமானதாய் இல்லை. அப்புறம் தனது முந்தானையால் துவட்ட ஆரம்பித்தாள். இவன் மழையின் குளிருக்கும் மேலாக இவளின் கதகதப்பை உணர்ந்தான். குளித்து முடித்தபிறகு தலைக்கு சாம்பிராணி புகைக் காட்டும் அம்மா நினை வுக்கு வந்தாள்.
அதையெல்லாம் அம்மா மறந்து ரொம்ப நாளாகிறது.
**லொடுக்கு லொடுக்குன்னு’* தலையை ஆட்டிக்கிட்டு இருந்தா எப்படி? சட்டையைக் கழட்டுறதுதான.”
இவனுக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந் தது. "ஜெசி வந்துட்டா என்ன செய்யறது?”

Page 27
Lustsub
**அதெல்லாம் வர மாட்டா”*
அதற்குள் ** டீ ரெடி * என்றது ஜெசியின் குரல். இவள் உள்ளே சென்று எடுத்து வந்தாள். இவன் சட்டையைக்
கழற்றி வாஷ் பேசினில் பிழிந்தான். டீயை மெளனமாக உறிஞ்சினார்கள். இவன் எதை யோ யோசித்துக் கொண்டிருக்க இவன் என்ன யோசிக்கிறான் என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். வெளியே மழை பிய்த்து உதறிக் கொண்டிருந்தது. முருங்கை மரம் ஜன்னலுக்கும் காம்பவுண்டு சுவருக்கும் அல் லாடிப் பார்த்து விட்டு ‘மளக் கென்றுமுறிந்து விழுந்தது. ஜன்னலில் பதிந்த இவனின் பார் வையை மின்னல் தீண்டி தலை குனிய வைத் தது. இவனின் கண்களுக்கு முயலின் அடி வயிறு போல மென்மையான பாதங்கள் தெரிந் தன. பெருவிரலின் நுணி மருதாணியால் ரத்தப் பொட்டாய் இருந்தது. ’’ ۔۔
மரியா இன்னமும் நெருங்கி அமர்ந்தாள். "என்ன ஆச்சு என் ராஜாவுக்கு. அம்மா வோட தகராறா..?” மழையின் ஹோவென்ற எரிச்சலோடு இவன் மனதில் சந்தோஷம் பொங்கியது. சந்தோஷமா அது? அல்லது கழிவிரக்கம் உடைபடும் வேதனையா? இப்படி யொரு கேள்வியை யாரேனும் கேட்க மாட் டார்களா? என்றுதானே இவன் மருகிக் கிடந்தது.
'சொல்லுங்க.வகுப்புல மூட் அவுட். பிடிக்காதீங்கன்னு சொன்னாலும் சிகரெட் பிடிக்கிறீங்க.என்ன ஆச்சு வீட்டுல.?”
இவன் சொன்னான். காலையில் அண்ணன் வந்தது முதல் அனைத்தையும் சொன்னான். அவள் விக்கித்துப் போயிருந்தாள், இவன் அவளின் தோளில் சாய்ந்திருந்தான். அவளின் விரல்கள் அவன் தலையில் அலைந்தன.
“ஏதோ கோபத்துல ரெண்டு பேரும் அப்படி பேசிட்டு இருப்பாங்க. அத நீங்க சீரியஸ்சா எடுத்துக்கிறதா?’’
இவனுக்குச் சந்தேகம் வந்தது. இது சீரியஸ் இல்லையா? எல்லாமும் தலை கீழாய் இழிந்து போவது சீரியஸ் இல்லையா? இப் படிந்தான் உறவுகள் இருக்கணுமா? “இல்ல அப்பா செத்ததிலேர்ந்தே குடும்பம்”ங்கிறது இல்ல. அம்மாவை அம்மான்னு கூப்பிடக்கூட தோண மாட்டேங்குது. "நா ஒருத்தன் இருக் கிறது யாருக்கும் தெரிய மாட்டேங்குது”
'எனக்குத் தெரியுதே அது போதாதா?” இவன் அவளை நேரே பார்த்தாள். கோணல் வகிடு எடுத்து இரட்டையால் பின்னி யிருந்த கூந்தலை. துளியூண்டு பொட்டை. கண்களில் தெரிந்த சிரிப்பை.தலையசைவுக்கு இசைவாக ஆடிய காது வளையங்களை.

25
**இந்த புள்ளைய கண்டிக்க.அடிக்க நா இல்ல?” சற்றே குனிந்து இவன் நெற்றி யில் முத்தமிட்டாள். அவள உதடடின வெம்மை இவன் நெற்றியிலிருந்து மூளைக்குப் பயணித்தது, வர்ணஜாலம் செய்தது. இவன் விடுவித்துக் கொண்டு சொன்னான்,
** இன்னும் கொஞ்சம் கீழே’’ **ஆசைதான்”, என்றாள் அவள். கிச்சன் பக்கம் சற்று நோட்டம் விட்டுவிட்டு உதட்டில் உதட்டைப் பொருத்தினாள். அவளுக்கும் ஆசைதான். அவள் இவனுக்குள் இனித்தான் அவளின் சுவாசம்கூட சுகந்தமாய் இருந்தது இவனுக்கு.
**இனிமேல் சிகரெட் பிடிக்காதே இந்த உதடு-’’
இவன் தலையாட்டினான். மிரட்டிய அவளின் ஒற்றை விரலை பிடித்து கைகளில் வைத்துக் கொண்டான்.
**சரி. அது என்னமோ கரி கரின்னு எழு தினிங்களாம்ல, கிளாசில?” அவள் இவனின் நோட்டை எடுத்துப் புரட்டினாள்.
**வைரம் dan -- கரியாகும்’ என்று உரக்கப்படித்தாள்.
** என்னது ராஜா.சொல்லும்மா” இவன் மழையை வெறித்துக் கொண்டிருந்தான், **.ம் கவிதை எழுதப்போறே.” 'ஏய் காதல் க வி ைத யா, வேற மாதிரியா..?”
**வேறு மாதிரி.எல்லா உறவும் கரி தான்.""
அவள் புரியாமல் விழித்தாள். இமைகளின் பின்னால் கருவிழிகள் உருண்டன.
*பத்துப் பதினைந்து வருஷங்களுக்கு முன்னாடி எனக்கும் எங்க அண்ணனுக்கும் இருந்த உறவு வைரம். இப்ப வெறும் கரி.' மரியா இவனை விநோதமாகப் பார்த் தாள். அப்புறம் வெகுளித்தனமாக ஒரு கேள்வி கேட்டாள். ክ
"நம்ம உறவு என்னைக்கும் வைரம் தானே?”
இவன் யோசித்தான்.அவள் அப்பாவின் கருத்த முகத்தை. மாதாக் கோவிலின் உச்சி யில் சிவப்பாய் தெரியும் சிலுவையை.டெல் லியில் வேலை செய்யும் அவளின் அண்ணன். அப்புறம் தன்னை, ஊஹ"ம்ெ இது கரியாகக் கூடாது என்று மனச்சுவர் அதிர தனக்குள் கத்திக் கொண்டான். அவளின் கரங்களைத் தனக்காய் இழுத்துக் கொண்டு சிறைக்கம்பிகள் போல இறங்கிய மழையை வெறித்தான்.
O

Page 28
முதலாளித்துவ
மாக்சிம்
(கார்க்கி 1930இல் எழுதி அவரே பூர்த்தி செய்யாது விட்ட கட்டுரையிலிருந்து சில பகுதி கள். தமிழாக்கம் : வல்லிக்கண்ணன்
பழைய புத்தகக் கடைகளில் காணப்படுகிற கழிவுக் காகிதங்கள் எல்லாம், இறந்த காலத் தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை எடுத்துச் சொல்லும். இன்று மக்கள் எவ்விதம் வாழ்கிறார்கள் என்பதை உணர்வதற்கு செய்தித்தாள்களில் வருகிற விளம்பரங்களும், போலீஸ் செய்திகளும் நன்கு துணைபுரியும். செய்தித்தாள்கள் என்று நான் கூறுகிறபோது, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள *கலாச்சார நகரங்களில் இருக்கின்றனவே, அவற்றிலுள்ள ‘பொதுமக்களின் அறிவு அபி விருத்திக்கான சாதனங்களை’த்தான் குறிப்பிடு கிறேன்.
தங்கள் எஜமானர்களைப் பற்றி வேலைக் காரர்கள் ஒளிவுமறைவு இல்லாமல் சொல்லக் கூடிய விஷயங்களைக் கேட்பதைப் போலவே, முதலாளித்துவப் பத்திரிகைகளைப் படிப்பதும் பயன் அளிக்கும் என்று நான் கருதுகிறேன். ஆரோக்கியமாக இருக்கிற ஒருவனுக்கு வியாதி கள் சுவாரஸ்யமான விஷயங்களாகத் தோன்ற முடியாது; தோன்றவும் கூடாதுதான். ஆனால் அவற்றைப் பற்றிக் கற்றறிய வேண்டியது டாக்டரின் கடமையாகும். வைத்தியனுக்கும் பத்திரிகையாளனுக்கும் பொதுவான அம்சங்கள் சில உண்டு. அவ்விருவரும் வியாதிகளை நிர்ணயம் செய்து, அவற்றை விவரிப்பதில் ஈடுபடுகிறார்கள்.
O O O
முதலாளித்துவப் பத்திரிகைகளைப் பார்க் கிலும் நமது பத்திரிக்கையாளர்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். ஏனெனில், சமுதாய வியாதி விஷயங்களுக்கு உரிய பொதுவான காரணங்களை அவர்கள் நன்கு அறிவார்கள். நோயாளி ஒருவனின் அலறல்களையும் முனகல்
O நவம்பர் புரட்
 

பத்திரிகைகள்
கார்க்கி களையும் வைத்தியன் எவ்வாறு கவனிப்பானோ, அதே மாதிரித்தான் சோவியத் பத்திரிக்கை யாளனும் முதலாளித்துவ பத்திரிக்கைகளின் சாட்சிகளை சிரத்தையோடு கவனிக்கவேண்டும்.
நம் நாட்டில் உள்ள திறமைசாலிகளில் எவராவது முன்வந்து, ஏதாவது ஒரு "கலாச் சார நகரத்திலிருந்து வெளிவரும் செய்தித் தாள்களில் காணப்படுகிற போலீஸ் செய்திகளி லிருந்து போதுமான விவரங்களைச் சேகரித்துக் கொண்டு, சில்லறைக் கடைகள் உணவுவிடுதி கள் கேளிக்கை நிலையங்கள் முதலியவற்றின் விளம்பரங்களோடும், சபைக்கூட்டங்கள் வர வேற்புகள் பொதுவிழாக்கள் பற்றிய வர்ணிப்பு களுடனும் அவற்றை ஒத்துப் பார்த்து அவர் அவ்விவரங்களை எல்லாம் கொண்டு ஆராய்ச்சி நடத்தினால், இன்றைய முதலாளித்துவ சமுதா யத்தின் கலாச்சார வாழ்க்கை பற்றிய மயக்கத் தையும் அதிர்ச்சியையும் அளிக்கக்கூடிய சித்திரத்தை நமக்கு அளிக்க முடியும்.
O O Ο
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள பத்திரிக்கையாளர்களின் அலுவல் பற்றி நான் நன்கு அறிவேன். அவர்களைச் சில்லறைப் பொருள்களைத் தெருவில் விற்பவர்களாகவே கருதுகிறேன். அவர்களுடைய கடுமையான ஓய்வற்ற பத்திரிகைத் தொழில் மனிதர்கள்மீது அவர்களுக்கு ஆழ்ந்த அசிரத்தையை உண் டாக்கி விடுகிறது. அவர்கள் மனநோய் மருத்துவசாலையில் வேலை பார்க்கும் பணி யாட்களைப் போலவே காணப்படுகிறார்கள்; அப்பணியாட்கள் நோயாளிகளையும் டாக்டர் களையும் பைத்தியங்களாகக் கருதுவதற்குப் பழகிவிட்டார்கள். வாழ்க்கையின் மிகவும் வேறு பாடான அம்சங்களைப் பற்றி அவர்கள் எழுதும் குறிப்புகளில் உணர்ச்சியே காணப்படாமலிருப் பதற்கு இந்த அசிரத்தைதான் காரணம் ஆகும். நன்றி : “கார்க்கி கட்டுரைகள்"
சி வாழ்த்துக்கள் O O O

Page 29
பொன்னி
புதிய வெளியீடுகள்
O
அபுஜிகாத் சில நினைவுகள் சங்கர்
விலை ரூ. 2.50
[ ]
சிட்டகாங் வீரர்கள்
கல்பனாதத் விலை ரூ. 18-00
O
மலையகத் தமிழ் மக்கள் இரா. சிவச்சந்திரன் குமாரி ஜயவர்த்தனா விலை ரூ. 4-00
நூல் அறிமுகம் பெருந்தன்மை வே Зл-L—Гg5Ј.
கூரிய பார்வை
மாறன்
6T.
* எஸ். வி. ராஜது இன மக்களின் டே சின்ன அறிமுகமே
ஷெர்கோ பெக வளவு எளிமையான
சி. குமாரசாமி
வா பகத்சிங்கும் ச கட்டுரை "சுப. வீ’ச் சின்ன சின்ன பிழை துக்கள் என்று கூறு: சிதம்பரம்
口
பெய்ஸ் அகம
வலிக்கச் செய்தன. *உயிரோடிருப்பு
நரகம்? - மிகவும்
எஸ். கவிதா
(psi) தோழர் சங்கர் பெற்றாலும் அபுஜி இருப்பார்.
தமிழ் நாட்டில் தமிழறிஞரின் வருதி வெட்கித் தலைகுன *சிக்கிமுக்கிக் க கிறேன். தான் சூ( மனிதன் என்று ம
சாதாரணன் d-8585 - 866 நாமே அடைவதா கோ. வண்ணமதி
கோவிலைச் சுற்றி யோடு நடப்பதற். போராட்டம். பால
பாலபரிதி

Gioff GUTib
இன்னும் ஆழமாக செறிவாக இருக்க வேண்டும். ண்டும்தான். அதற்காக வீண்புகழ்ச்சி இருக்கக்
யோடு கூடிய நூல் விமர்சனம் இனி வரட்டும்.
திருச்சி
கிருந்தார் எஸ். வி. ஆர்? ரை இவ்வளவு நாள் எங்கிருந்தார். குர்திஷ் ாராட்டம் பற்றியும் குர்திஷ் கவிஞர் பற்றியும் என்றாலும் சிறப்பான அறிமுகம். ாஷ் தமிழில் எழுதியதைபோல் இருக்கிறது, அவ்
மொழிபெயர்ப்பு.
குடந்தை
ழ்த்துக்கள் கூறுவதுபோல். . .
ப. வீரபாண்டியனும் எனும் நூல் விமர்சனக் க்கு மலர்மாலை அணிவித்து மலர்ச்செண்டு தந்து கள் இருக்கிறது. திருத்திக் கொள்ளுங்கள், வாழ்த் வதுபோல் இருந்தது.
சேலம்
அர்த்தம் நிறைந்த வரிகள்
து பெய்ஸ்சின் கவிதைகள் படிப்பவர் மனசை
பதன் பெயர் வாழ்க்கையா? சீ வேண்டாம் இந்த அர்த்தம் நிறைந்த வரிகள்.
புதுவை
றுப் பெறமாட்டார் அபுஜிகாத்
எழுதிய அபுஜிகாத் பற்றிய கட்டுரை முடிவு காத் எங்கள் உள்ளங்களில் முற்றுப் பெறாமல்
தமிழைக் காண முடியவில்லை எனும் சீனத் தம் நியாயமானதுதான். ஒவ்வொரு தமிழனும் ரிய வேண்டியதுதான். ல் கதையில் வரும் தந்தையை மிகவும் வெறுக் பட்டதால் தன் மனைவிக்கும் சூடு போட்டவனை நிக்க முடியுமா? பக்கங்கள் அருமையாக இருந்தன. அட்டையின் ளக் காணும்பொழுது முடிவில்லாத துயரங்களை த் தோன்றுகிறது.
சத்திரப்பட்டி
வைக்கம் போராட்டம்
காவில் நுழைவுக்காகப் பெரியார் போராடவில்லை. ய வீதிகளில் தாழ்த்தப்பட்டவரும் சம உரிமை 5ாக நடத்திய போராட்டம்தான் ஐயா வைக்கம் சூரியன் கவனமாக எழுதவேண்டும்.
மதுரை

Page 30
திரைப்பட Lin ւ-6ծ
6,606)Los
பாடுவதா பெண் ஆண்களுக்குப் பிறவியைக் கொடுத்தாள். ஆண்களோ அவளுக்கு கடைத்தெருவைக் கொடுத்தார்கள். நினைத்தபோதெல்லாம் கசக்கினார்கள், முகர்ந்தார்கள்
நினைத்தபோது தூக்கியெறிந்து விட்டார்கள்.
தங்கக்காசுகளில் எடை போடப்படுகிறாள் கடைத்தெருக்களில் விற்கப்படுகிறாள்
உல்லாசக்காரர்களின் சபைகளில் நிர்வாணமாக ஆட்டுவிக்கப் படுகிறாள்.
கெளவரவமான மனிதர்களால் பங்குபோடப்படும் கெளரவமில்லாத ஒருபொருள் இவள்.
O
ஆண்களென்றால் எந்தக் குற்றமும் அனுமதிக்கப்படுகிறது. பெண்ணுக்கோ அழுவதும் குற்றமாகிவிடுகிறது.
ஆண்களுக்கு ஆயிரம் சிங்காதனங்கள். பெண்ணுக்கோ ஒரே ஒரு சிதை.
ஆண்களுக்கோ
எல்லா இன்பங்களுக்கும் உரிமை பெண்ணுக்கோ வாழ்வதும் ஒரு தண்டனை.
எந்த மார்பகம் இவனுக்கு ஊட்டியதோ அந்த மார்பகத்தையே வியாபாரம் செய்கிறான். எந்த மடியில் வளர்ந்தானோ அந்த மடியையே பேரம் பேசுகிறான்.
தமிழில் : கவிஞர்

இந்திக் கவிஞர் ஸாகிர்
Gir
...
எந்த உடலில் பிறந்து வந்தானோ அந்த உடலையே அவமரியாதை செய்கிறான்.
ஆண்களே சம்பிரதாயங்களைச் செய்தார்கள் அவற்றை உண்மையின் கட்டணங்கள் என்றார்கள்.
பெண் உயிருடன் எரிவதை தியாகம் என்றார்கள்.
மானத்திற்குப் பதிலாய் உணவைக் கொடுத்தார்கள், அதையும் கருணை என்றார்கள்.
சமூகத்தின் ஒவ்வொரு அவமானமும் இவளுடைய மடியில் வளர்கிறது.
ஆண்களுடைய காமமெல்லாம் பெண்களின் பாபமாகச்
சொல்லப்படுகிறது.
பெண்
சமூகத்தின் விதி ஆனாலும் அவள் தலையெழுத்து கோணலாக இருக்கிறது
அவதாரபுருஷர்களையும் தூதர்களையும் பெறுகிறாள்.
இருந்தாலும் சாத்தானின் மகள் எனப்படுகிறாள்
இவள்
துரதிர்ஷ்டமானதால் மகன்களின் சிங்காதனங்களின் மீது படுத்திருக்கிறாள்.
அப்துல் ரகுமான்

Page 31
ஈழப் புரட்சி அமைப்பின்
கொடியை ஏற்று அறைகூவல் விட்டு அ
போராட்டம் வரலாறாவதும் வரலாறே போராட்டமாவதும் ஈழத்திற்கு மிகப் பொருத்த மாகி வருகிறது.
ஈழப் போராட்டம் பற்றிய நிகழ்வுகளைக் கவனிக்கும் போதெல்லாம் அடிக்கடி நினை விற்கு வரும் வரிகள் இவைதான்:
வரலாறு மிகவும் நேர்மையானது, கணக்குத் தீர்க்கும் நாள் நிச்சயம் வரும். சரியான பக்கத்தில் நிற்பவர்கள், தலைமை வகித்துச் செல்வார்கள். தவறான பக்கத்தில் நிற்பவர்கள் வீழ்வார்கள். சீன மொழியில் சென்யி என்பவர்எழுதியவரிகள்.
இந்திய - இலங்கை ஒப்பந்தம், ஈழத்தில் இந்திய இராணுவச் செயல்பாடுகள், விடு தலைப் புலிகள்-இந்திய இராணுவம் மோதல் இந்தப் பின்னணியில் அதுவும் ஈழ மண் ணிலேயே ஒரு இயக்கம் ஆற அமர யோசிக் கவும் தன் கடந்த கால வழிமுறைகளை விமர்சிக்கவும் தவறுகளைத் திருத்தி சரியான வழிமுறைகளை வளர்த்தெடுக்கவும் முடியும் என்றால்.அதை ஈழப் புரட்சி அமைப்பு சாதித்து இருக்கிறது என்றால் "மரணத்தி லிருந்து மரணமே எழுகிற நிலையையும் மீறி நிற்கிற செயல்தான்.
ஈழப் புரட்சி அமைப்பு 1975 ஜனவரி 3ஆம் தேதி கருக்கொண்டு 1975 நவம்பர் 23இல் முதல் பிரகடனத்தையும், 1977 ஏப்ரலில் இரண் டாவது பிரகடனத்தையும், 1980 ஏப்ரலில் மூன்றாவது பிரகடனத்தையும் 1984இல் நான்காவது பிரகடனத்தையும் வெளியிட்டு தனது செயல்பாட்டை நெறிப்படுத்திக் கொண்டது.
தற்போது நிலவிவரும் சிக்கல் மிகுந்தச் சூழ்நிலையில் தன் வழியைத் தெளிவுபடுத்த திட்டப்பிரகடன மாநாட்டைக்கூட்டி வெற்றிகர மாக முடித்துள்ளது.
ஐந்து அரங்குகளாக நடைபெற்ற திட்டப் பிரகடன மாநாட்டின் தொடக்க உரையை தோழர் பாலகுமாரன் நிகழ்த்தினார்.
முதலாவது அரங்கான கருத்தரங்கில் தமிழ் பேசும் மக்களின் தற்போதைய நிலையும் எதிர்நோக்கும் பிரச்சினைகளும்; வர்க்கப் பாகுபாடும் தமிழ் பேசும் மக்களும் எனும் தலைப்பின் கீழ் மலையக மக்கள், இஸ்லாமிய மக்கள், பெண்கள், மாணவர் இளைஞர் ஆகிய உட் தலைப்பிலும், தொழிற்சங்க அமைப்பின் சாத்தியம், போராட்டத்தில் கலை இலக்கியம்,

T is Liga LGUT மாநாடு
அது பறக்கட்டும்
தேசிய இனப் போராட்ட நிலை, இலங்கை இந்திய ஒப்பந்தமும் எதிர்காலமும் எனும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன.
இப்பொருள்கள் பற்றி பல்வேறு அறிவுத் துறையைச் சார்ந்தவர்கள் பங்கேற்ற கருத் தரங்குகளை ஆய்வுநிறுவனம் சார்பில் தனியாக முன்கூட்டியே நடத்தி அச்செய்திகளை திட்டப் பிரகடன மாநாட்டில் பரிசீலித்ததும் விவாதித் ததும் நல்ல முன் மாதிரியாகும்.
ஆய்வு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இவ்வகைக் குழுநிலை விவாதக் கருத்தரங்கு
களில் சபா ஜெயராசா, சண்முகதாஸ், செம்பியன் செல்வன், நீர்வை பொன்னையன், அண்ணாமலை, சிவா சுப்பிரமணியம்,
குகதாஸன், ஐ.தி. சம்பந்தன், இரா. சிவச் சந்திரன், திருமதி சிவச்சந்திரன், சண்முக லிங்கம், பேராசிரியர் சிவத்தம்பி, கலாநிதி சோ. கிருஷ்ணராஜா, பேராசிரியர் பால கிருஷ்ணன், நேசன், எம். ஏ. நுஃமான், இக்பால், திவகலாலா, சுந்தர், பார்வதி கந்தசாமி, செல்வி சுமங்கலா கைலாசபதி, திருமதி கைலாசபதி, செல்வி நாளாயினி, செல்வி அருந்ததி, பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை ஆகியோர் பங்கேற்றனர்.
செப்டம்பர் 25 ஆம் தேதி தொடங்கி அக் டோபர் 20ஆம் தேதி வரை திட்டப்பிரகடன மாநாடு நடைபெற்றது.
மலையகம், அம்பாறை, மட்டு நகர், மூதூர், திருமலை, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப் பாணம் என பகுதி வாரியாக இதுவரை நடை பெற்ற இயக்கச் செயல்பாடுகள் பற்றிய விமர்சனப் பூர்வமான விவாதம் நடைபெற்றது. எதிர்காலம் பற்றி தனித்த அரங்கும், பிரகடனத்திற்கென தனித்த அரங்கும் மாநாட்டில் இடம் பெற்றன.
திட்டப்பிரகடன மாநாட்டிற்கு ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய வெளிநாடுகளி லுள்ள ஈழப் புரட்சி அமைப்பின் கிளைகளி லிருந்து முறையே சிங்கம் குகன், அழகிரி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
ஈழப் புரட்சி அமைப்பு இதுவரையும் தான் பெற்றிருந்த உறுப்பினர்களை வர்க்கச் சார்பற்ற சமூகப் பிரதிநிதிகளால் சூழப் பெற்ற தாக" சுயப் பொறுப்பேற்றுக் கொண்டு இனி வர்க்கச் சார்பு நிலைக்கு மாற வேண்டிய அவசி யத்தை உணர்ந்து உரைத்துள்ளது. புதிய அணுகுமுறையைத் தெளிவுபடுத்தியுள்ளது.

Page 32
30
**போர்க் குணாம்சத்தோடு கூடிய மலை யகத் தோட்டத் தொழிலாளர்களே போராட் டத்தின் முன்னணி சக்தி.
வடக்கு கிழக்கில் விவசாயத்துறை சார்ந்த கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்து, நில. வுடைமையாளரின் மறைமுக ஒடுக்குமுறைக்குட் பட்டு, தொழில் வாய்ப்புக்களுக்காக இடத்துக் கிடம் மாறி கிராமத்தன்மையோடு பரந்து பட்டு வாழும் இவர்கள் போராட்டத்தின் மறைமுக சக்தி.
இனப்பிரச்சினைகளிலும் வர்க்கப் பிரச் சினைகளிலும் நிகழ்வுறும் போராட்டத்திற்கு ஆதரவு நல்கிடும் இளைஞர்கள் குட்டி முதலாளித்துவப் பகுதியிலிருந்து வருபவர்கள். குடா நாட்டிலும் ஏனைய நகர்ப்புறங்களிலும் வாழ்பவர்கள் இவர்கள். இவ்விளைஞர்கள் போராட்டத்தின் ஆதரவு சக்தி”.
போராட்டத்திற்குரிய முன்னணி சக்தி, மறைமுக சக்தி, ஆதரவு சக்தி எனும்மூவகை யினருடைய பிரதிநிதிகளையும் ஈழப் புரட்சி அமைப்பின் செயல்படும் சக்தியாக தன்னுள் இணைத்து இளைஞர் இயக்கமாக இருந்த ஈரோஸ் மக்கள் இயக்கமாக தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் என்றும் அறிவித் துள்ளது.
எங்கள் கைகளில் எதையாவது கொடு. அதன் மூலம் நாங்கள் சாகிறோம். அப்படியாவது நாங்கள் வாழ்ந்ததாக இருக்கட்டுமே எனும் நஸ்ருல் இஸ்லாம் கவிதை வரிகளாக வாழும் ஈழத்து இளைஞர்கள் மத்தியில் **இந்த நாசத்தில் வாழ்வற்றவர்களின் வாழ்வு மறைந்து கிடக்கிறது” என்ற உணர்வோடு அரசியல் தீர்க்கத் தரிசனத்தில் விழித்தெழும் சக்தியாக ஈழப் புரட்சி அமைப்பு புது வடிவம் எடுத்துள்ளது.
தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் நில அபகரிப்பு நோக்கில் கேந்திரத்தன்மை பார்த்து நிறுவப்படும் சிங்களக் குடியேற்றங் களைத் தமிழ் பேசும் மக்களின் பிரதானப் பிரச்சினையாக முன்மொழிவது, தமிழ் பேசும் மக்களை வலுவிழக்கச் ச்ெய்யும் நடைமுறை களைக் கையாளும், சிங்கள மேலாதிக்கச் சக்தி களையே பொது எதிரியாக இனங்காட்டுவது என்று அரசியல் கொள்கை நிலையை ஈரோஸ் எடுத்துள்ளது.
பெ ரு ந் தோ ட் ட ப் -பொருளாதாரம் கிராமியப் பொருளாதாரம், நகர்ப்புறப் பொருளாதாரம் என்று பொருளியல் கட் டமைப்பை வகைப்படுத்தி பெருந்தோட்டப் பொருளாதாரம் நிலவும் மலையகப் பகுதிகள் போராட்டத் தளமாகவும், கிராமியப் பொருளா தாரம் நிலவும் வடக்கு கிழக்குப் பகுதிகள் ஆதரவுத் தளமாகவும், நகர்ப்புற பொருளா தாரத்தைச் சார்ந்த பகுதிகள் தேசிய அரசியலை

பாலம்
கையாளும் புலமாகவும் கருதிச் செயல்படும் கொள்கை அரசியலை ஈழப் புரட்சி அமைப்பு முன் வைத்துள்ளது.
சமத்துவ சமதர்ம ஆட்சி முறை கொண்ட ஈழத்தை தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை களுக்கு இறுதித் தீர்வாகவும் இந்தத் தீர்வை அடைய பல படிநிலைப் போராட்ட முன் னெடுப்புகளையும் ஈரோஸ் அறிவித்துள்ளது.
வடக்குக் கிழக்கில் அரசியல் அதிகாரத்தை கையாளுவதன் மூலம் மலையக மக்களின் போராட்டத்திற்கான ஆதரவுத் தளத்தை அமைத்தல், வடக்கு கிழக்கு மலையக இணைப் பிற்குரிய உள்ளகக் கட்டமைப்பு ஒன்றை நிறுவு வதற்கு வகை செய்தல் என்ற படிநிலை போராட்ட அறிவிப்பையும் முன் வைத்துள்ளது. மாநாட்டிற்கு பிரதிநிதிகளாக வந்தவர்கள் கீழ்க்கண்ட உறுதிமொழிகளை ஏற்றனர் :
**ஈழப் புரட்சி அமைப்பு முன்மொழியும் கொள்கை-கோட்பாடுகளுக்கும், செயல்திட்டங் களுக்கும் அவற்றுக்கான அமைப்பு வடிவத் திற்கும் திரிகரண சுத்தியாய் இருப்பேன் என்றும் அதன் முடிவுகள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் உளப்பூர்வமாக ஏற்பேன் என்றும் ஈழப் புரட்சி அமைப்பின் பணிகளை ஆற்றும் தோழராக உங்கள் முன்னிலையில் உறுதி ஏற்கிறேன்.” ஈழப் புரட்சி அமைப்பின் நிறுவனர் தோழர் ܗܝ இ. இரத்தின சபாபதி முதன் முதலில் உறுதி மொழி ஏற்றார். உறுதிமொழி ஏற்ற ஏனைய பிரதிநிதிகளுக்கு மாநாட்டுப் பதக்கங்களை இரத்தின சபாபதி அணிவித்தார்.
இதைத் தொடர்ந்து புதிய முப்பது பேர் கொண்ட பொதுக்குழுவும் தேர்வு செய்யப் பட்டது.
கொள்கைத் தீர்மானம், செயல் தீர்மானம், நடைமுறைத் தீர்மானம் ஆகிய முடிவுகள் எடுக்கும் பொறுப்பு கொண்டதாக புதிய பொதுக் குழு விளங்கும். r
பொதுக் குழுவிலிருந்து ஒரு நிறைவேற்றுச் செயலாளர் உட்பட 11 பேர் கொண்ட மத்தியக் குழுவும் தேர்வு செய்யப்படும்.
இறுதியாக கவிதை வரிதான், பாலத்தின் கருத்தாக ஈழப் புரட்சி அமைப்புக்குத் தெரிவிக்கக் கடமை பட்டுள்ளோம்:
பிரம்மாண்டமான உலகங்களை உனது தியாகத்திலிருந்து எழுப்புகிறாய். கொடியை ஏற்று அறைகூவல் விட்டு அது பறக்கட்டும்!
ஈழப் புரட்சி அமைப்பின் திட்டப் பிரகடன மாநாட்டின் முழுவிபரங்களும் திட்டப்பிரகடனங்களும் வரும் இதழ் களில் வெளியாகும்.

Page 33
சாதாரண
இசை : தெருவிலிருந்து
டாக்டர் கே. ஏ. குணசேரகன் நாட்டுப்புறவியலில் ஆர்வம்கொண்டவர். நாட்டுப்புறக்கலைகளில் ஆய்வு செய்து மதுரை பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். கல்லூரி நாட் களிலேயே கிராமிய இசை நிகழ்ச்சி களை நடத்தியவர். தற்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணிபுரி கிறார். குணசேகரன் பற்றிய அறிமுக மாக அமையாது, அவர் மேடைதோறும் எடுத்து பாடி வரும் நாட்டுப்புற இசை பற்றிய அறிமுகம்தான் இக்கட்டுரை.
வயல் வெளிகளின் காற்றில், வாய்க்கால் நீரின் சலசலப்பில், நாற்று நடும் சேற்றில், பளு தூக்கி இறக்கும் ஆசுவாசப் பெரு மூச்சில், ஏற்றம் இறைக்கும் சாலின் சப்தத்தில்.
வாழ்க்கையின் சோகத்தை, தீர்க்க முடி யாத விருப்பத்தை, பொங்கிவரும் இன்பத்தை எல்லாம் கலந்தார்கள். கானமிசைத்து இசைத்து, கலை என்று பிரிக்காமல் வாழ்க் கையின் பின்னிப் பிணைந்த அம்சமாய் வாழ்ந் தார்கள்.
தாங்கள் பாடுவது பாடல் என்றோ, இசை என்றோ அறியாமலே தங்கள் உணர்வுகளை இசைத்தார்கள். எதிரில் இருப்பவர்கள் மனிதர் களாக இருந்தாலும் சரி, மரமாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, காற்று மழை என எதுவாக இருந்தாலும் சரி பேசினார்கள். அவை பேசாப் பொருள் பற்றியெல்லாம் பேசி 6. f66.
வாழ்க்கையிலிருந்து கலையைப் பிரித் தெடுத்துச் சென்று கடவுள் கடாட்சம் என்றோ தெய்வீக அருள் என்றோ தங்கள் இசையைப் பார்க்கவில்லை.
எப்படி வாழ்ந்து காட்டினார்களோ எங்கெங்கெல்லாம் வாழ்ந்தார்களோ அவ்வெளி கள்தான் அவர்களின் இசை மேடைகளாக மாறின.
அந்த மனிதர்களிலிருந்து அந்த மண்ணின்
மணம் மாறாமல் அந்த மக்கள் எந்த உணர்வை

ன் பக்கங்கள்
s மேடைக்கு
வெளிப்படுத்தினார்களோ அந்த உணர்வை முழுவதும் உள்வாங்கி ஒரு கலைஞனாக கே. ஏ. குணசேகரன் ‘இலக்கண சுத்தமான மேடையில் இசைத்து வருகிறார்.
இசைப் பண்டிதர்கள் தாங்களே வடிவமைத் துக் கொண்ட அளவுகோலால் நாட்டுப்புற மக்களின் இசையை அளந்து அளந்து பார்த்து தோற்றபின் வயல்வெளிப் பாடல்களைப் பார்த்து, வயல்சேற்றில் இறங்கக் கூசும் பிராமணன்போல் தூர ஒதுங்கிக் கொண் டார்கள்.
எந்த மண் தானியங்களை விளைவித் ததோ, எந்த மண் கணிப்பொருள்களைத் தந் ததோ, எந்த மண் இயற்கையாகி நின்றதோ அந்த மண் தான் இசையையும் தந்தது.
மண, மணதான. மண் சிலையாக மாறும்போது கடவுளாகி விடுகிறது. '
நாட்டுப்புற மண்ணின் இசையிலிருந்து பிறந்த ஒழுங்குபடுத்தப்பட்ட சங்கீதம் தெய்வ அநுக்கிரமாகி விட்டது.
எங்கள் பெருமூச்சின் ஒரு பிசிறுக்கு ஒரு ராகம், எங்கள் அழுகையின் தொடக்கத்துக்கு ஒரு மெட்டு, எங்கள ஆவேச எழுச்சியிருந்து ஒரு துக்கடா என்று எங்களிடமிருந்தே இசை யைப் பிரித்துக்கொண்டு போனதுமன்றி எங்கள் இசையை உதாசீனப் படுத்தியும் ‘சங்கீதமூர்த்தி களாக தங்களை உயர்த்திக் கொண்டார்கள்.
வயலிலிருந்த எங்கள் பாடலின் மெட்டை
கோயிலுக்கும் அரண்மனைக்கும் திருடி
சங்கீதம் பற்றி சாதாரணன்.?

Page 34
32
எடுத்துப்போய் வழிப்பட்டு பக்தி ‘நாயன்மார், ஆழ்வார்கள்’ ஆனார்கள்.
இழிமக்கள், இழிமக்கள் இசைக்கருவிகள், இழிமக்கள் இசை வடிவங்கள் என்று ஒதுக்கப் பட்டு தெருவிலே கிடந்த நல்முத்துக்களை மேடைக்குக்கொண்டு வந்த பெருமையும், இலட்சிய வடிவம் கொடுத்தச் சிறப்பும் குணசேகரனுக்கே உரியது.
கொல்லங்குடி கருப்பாயி, அழகிரிசாமி வாத்தியார், காந்தி அண்ணாவி, கோட்டைச் சாமி, கங்கை பாலன் என்ற கிராமிய இசைக் கலைஞர்களை மேடைக் கலைஞர்களாக...இடது சாரி அரசியல் உணர்வுடையோர் அங்கீகரிக்கும் கலைஞர்களாக குணசேகரன்தான் அறிமுகப் படுத்தினார்.
நாட்டுப்புற இசை வடிவமும் அது எடுத் துரைக்கும் செய்தியும் நேரடித்தன்மை வாய்ந் தவை. மக்கள் தனித்தனியாகவும் கூட்டமாக வும் அனுபவித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் தன்மை கொண்டவை. எனவே அனுபவங்களே பாடல்களாக விளையும்போது வெற்றுக் கோஷங்களுக்கு இடமில்லை.
குணசேகரனுக்கு முன்பும் இடதுசாரி அரசியல் உணர்வு உடையோர் மேடைப் பாடகராக இருந்திருக்கின்றனர்.
அவர்கள் பெரும்பாலும் திரை இசை
மெட்டுக்குப் பாடல் எழுதி தினசரி அரசியலின் தேவையைப் பூர்த்தி செய்தனர்.
ஆனால் குணசேகரன் நாட்டுபுறப் பாடலின் வேரிலிருந்து வந்த காரணத்தால் மக்கள் அனுபவங்களைப் பாடலாக்குதல் என்பதும் அவ்வனுபவங்களின் செய்தியே ஒரு அரசியல் ஆவதும் குறிப்பிடத்தகுந்த செய்தி.
இவ்வழியில் இன்றைய கவிஞர்களான பச்சைநிலா, பரிணாமன், க ந் த ர் வ ன், தணிகைச் செல்வன், இன்குலாப் ஆகியோர் ஒரு சில பாடல்களை எழுதியுள்ளனர்.
என்னம்மா தேவி சக்கம்மா
ஒலகம் தலைகீழா
தொங்குதே நாயமா?
சின்னஞ் சிறுசெல்லாம்
சிகரெட்டுக் குடிக்குது என்று நாகரிக முரண்பாட்டைச் சுட்டி வரும் போது w
இப்பக்
கசாப்புக் கடையிலே
கால்வைக்க முடியலே ,
காய்கறிக் கடையிலே
தலைநீட்ட முடியலே
இப்பக்
கஞ்சிக் குடிச்சவன்
காலையும் மாலையும்
காப்பித் தண்ணியிலே
காலத்த ஓட்றான்

Lurresudb
என்று தேவி சக்கமாவையே கோவிலிலிருந்து அழைத்து வந்து கசாப்புக் கடையையும், காய்கறி கடையையும் காட்டும் பாங்கையும் நடைமுறைச்சிக்கலை இணைப்பதையும் பார்க் கிறோம்.
உழைக்காத கூட்டமடா. ஒத்தமாடு செத்துப் போச்சு. முக்கா முழம் நெல்லுப் பயிரு. என்ற வரிகளில் தொடங்கும் பாடல்கள் மக் 5(1560L. (Li மனவெளிப்பாட்டை உரத்து முழங்குபவை.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தன்னானே பாடல்கள் எனும் பெயரில் கேசட் ஒன்று வெளி வந்துள்ளது.
குணசேகரன், சின்னப் பொன்னு, கங்கை பாலன் ஆகியோர் பாடியுள்ளனர். காந்தி அண்ணாவி நாதஸ்வாரம் வாசித்துள்ளார்.
கிராமிய கலை என்பது மனிதக் கூட்டத் தின் தொடக்கக்கால கலையுணர்வு என்ற வகையில் மகிழ்ச்சி வெளிப்பாட்டைப் பூர்த்தி செய்தமையால் கலைஞர், ரசிகர் என்ற வேறு பாட்டைத் தகர்த்தெறிந்தது.
எனவே பழமையான அந்த அம்சம் இன்றும் கிராமிய வாத்திய இசையில் தொடர் கிறது. கேட்பவர்களைச் சுண்டியிழுக்கும் நாதஸ்வர இசையை காந்தி அண்ணாவி தரு கிறார்.
பள்ளிச் சிறுமியின் பஞ்ச நிலைமை, விவ சாயியின் ஏழ்மைத் துயரம், வேலை இல்லா இளைஞனின் அவஸ்தை, திருமணமானப் பெண்ணுக்கு நேரிடும் சீதனப் பிரச்சினை என பல பிரச்சினைகள் அனைத்தும் நாம் சம்பந்தப் பட்டவைதான்.
இவை பாடலாகும் போது நாம் பாடி னால் எப்படி உணர்ச்சி வசப்படுவோமோ அவ் வாறே இவர்கள் பாடும்போதும் உணர்ச்சி வசப்படுகிறோம்.
வீதிகளில் பரந்து கிடந்து பரவசப்படுத்திய இசையை மேடைக்கு எடுத்து வரும்போது மாறுதலுக்கு உள்ளாகும். அத்தகைய மாறு தலுக்கு காரணமானவர் குணசேகரன்தான்.
”மேடைக்கு மட்டுமே நாட்டுப்புற இசை வந்து விட்டதால் உரிய அங்கீகாரம் கிடைத்து விடாது.
மேடைக்கலைகளிலும் ஒரு பெரும் மாற்றத் தைத் தரும் வகையில் குணசேகரனும் மாற வேண்டும்.
கர்நாடகசங்கீத இசை அறிஞர்களும் அங்கீகரித்து வியக்கும்படியாய் குணசேகரன் இரு இசை நிலையிலும் செழுமை பெற்றுயர வேண்டும்.
இன்னும் மேடைக்கு வராத இசைக்கரு விகள், இசை வடிவங்கள் மூலம் புதிய புதிய நிகழ்ச்சிகளை குணசேகரன் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். O

Page 35
இனஒடுக்கலை எதிர்த்து வந்த சிறுவனை வெள் விரட்டுகின்றது.
 

స్టోట్ట
நடந்த ஊர்வலத்தில் ளை போலீஸ் அடித்து

Page 36