கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலம் 1988.09

Page 1


Page 2


Page 3
ஆகஸ்டு, 1988 - வி
19 குன் ፍör[gld..፴” 锣 லம் g)47 وقՀյլն) " ஆளூ ሕጋናማ፣ 粥 இன்று മ്',క్టీష0፵፩፩ምù ጋge $ጭም°? бд7єй7 ിമ7.?
( 7","34,ി لم ليغه هي "ويبو " யம @@臀 T57 (LJ േബ് 7്& G ക്രങ്ങ് ی * ”آنگوئندانITIالP ADy. Ծլ: :Չ/ Gu J ഞl-8'ഝേ'-' s 9്. ഭ്രൂ 豊リ "ளிேப்பதில் இம் இ ്മ இம் கவயங்காததால்"இர் క్రిస్ట్రీ guba,
: 32 て少. L7ష్ట్రా కి
ിങ് வரி 5.4 器、臀s堂 வித்த వోడిస్క్రీన్ క్రై స్థి ఎలిత్స 11 l வல்கள் GJ( GaGu ai பில்
:SS ருந்துவத “چے آلبوم به نفر த்தன் $ Sa- ༽ (༠)
كيكي في أو حبه في శ**** ઉંu! --
କାଁ) .. ' ('$1' 6آ
(""گسٹن السا آئی 2 قام
శిష్ఠ్య Gurrunród, ఖైలి u (ტში بقاً للال &#> స్టోన్స్టి Guntura リ型。。 . କେଁ) பதிக்க ان ܙܵܘܬܵܧܵܐ s آب
స్త్రీ-ల్కోట శీu து"தி ஜிந்இந்தி, நீதி ஃல்லதுஅந்த - () 6 آاً @リRu 露煮○ வேண்டும் அ 塑邀臀
 
 
 
 

|溪
حصے 17 பவத்
க்கு
வேறு ;50Lーó● வழக் 本乐15伦开
i
s
さ
ཕྱི་s
སྐྱེ་
s
السكتة
ඊශ්‍රමබඛ சுதந்திரம
டுைகள் ஆகி (rഞg ബ്
*盪。蠶
e காவ 潛蠶 சந்தேகத்து
ார்க்கும் நிஜ

Page 4
: 'I ' ' ',
.. '' ' ' ' ' '.
' , ' ' 'i ' ' ' 'i' 2. ', R
山火 : : .'' سے'; s' *>షి
s 紫 ई W
The Congress is now to devote greater attent uplift-Report,
OTE RESCUE July 17, 1949
TEMRORS OF PROGRESS February 14, 1960
emerts in various fields of development were
reviewed at the inauguration of the new session of 粤
P3liäfs8rt
 
 
 
 

ாறு
ALL IN THE AR November 1959
The outlay for the Third Plan is very large
HASTEN SIOW1Y
"To move slowly is dangerous....... to move too fast might Driving the bullocks is Congress President Purushottam Das kad to conflicts..." said Nehru im his report to AICC Indon and pikoxing the plane fs Nehru.
TUG OF WAR ༄། February 23, 1958
May 29, 196e
উঁইিঞ্জ
為綜
The Prime Minister returns today from abroad.
பிள்ளை

Page 5
19
செப்டம்பர் 1988
ஆசிரியர்
நதி
ஆசிரியர் (Ֆ(ւք இரா. திரவியம் சமந்தா
ச. மா. பன்னீர்ச் செல்வம்
விலை ரூ. 2.00
ஆண்டுச் சந்தா ரூ. 25
தொடர்புக்கு :
பாலம்
12, முதல் பிரதான சாலை நேரு நகர்
அடையாறு
சென்னை-20
தொலைபேசி : 410351
இலக்கி கள் பற்றி இதழாக ப
நல்ல கின்ற வா குறைந்த எ முடைய இ தமிழின் அறிமுகம், உனனதம சிந்தித்திரு வெளிற வாழ்க்கைமு துண்டா ?
ஈழப் ( அவர்களுை முறைகள் ( நாம் உ எல்லாவற்ை விட முடியுப
சமூகம் சில நண்பர் கின்ற நம்ை முடைய செ வும், நம் வ வேண்டாமா
0 நல்ல செல்
L ஓவிய
66
566 அறி( 0 தரம! தெடு
856 எனும் சனைகளோ இயக்கத்தை
கலை ! பங்கேற்பவர்
கடிதங்க
 

LIT6)to GIT66s GLIgGO)6) ஒரு கலை இயக்கம்
ய ஆர்வத்தையும், உலக விடுதலைப் போராட்டங் ப அறிமுகத்தையும் தொடர்ந்து தருகின்ற ாலம் வருகிறது. நூல்களையும் நல்ல இதழ்களையும் தேடிப் படிக் சகர்கள் மிகவும் குறைந்தவர்களே. இந்தக் ண்ணிக்கையுடைய வாசகர்களிடமும் கூட நம் தழ்களும் நூல்களும் போய்ச் சேர்வதில்லை.
சிற்பக் கலை மரபு, நவீன ஓவியர்கள் பற்றிய இசைவெளியில் கிராமிய இசையின் இசை ஆகியவற்றை நாம் போதுமான அளவில் கிெறோமா? ாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை, 1றை, அவன்படும் துயரம் நம்மை பாதித்த
போராட்டம், ஈழத் தமிழர்களின் சமூக அமைப்பு, டய தனித்துவமிக்க கலை, பண்பாட்டு அமைப்பு குறித்து கவலை கொண்டோமா? உண்டு, நமக்கு வாழ உணவு உண்டு என்று றையும் மறந்தவர்கள்ாய் எல்லோருமே வாழ்ந்து DIT ?
பற்றிய அக்கறையில் கவனம் செலுத்த ஆங்காங்கு களாவது இருக்கத்தானே செய்கிறோம். இருக் ம நாமே அறிமுகப்படுத்திக் கொள்ளவும், நம் யல்பாட்டை வெளிப்படுத்தவும் ஒருங்கிணைக்க ட்டத்தை விரிவு படுத்தவும் முயற்சிகள் தொடங்க r?
நூல்களை அறிமுகப்படுத்தி பரவலாகக் கொண்டு லுதல் ாக்கலை, சிற்பக்கலை, நாடகக்கலை, திரைப்படக் ) எனப் பல்வேறு பரிமாணம் பெற்று விளங்கும் களை அறிமுகம் செய்தல், கலைஞர்களை முகம் செய்தல் ான வாசகர் வட்டத்தைப் பரவலாக்க, தேர்ந் க்கப்பட்ட நூல்கள் அடங்கிய சிறுசிறு நூலகங் அமைத்தல் இந்நோக்கங்களோடும் உங்கள் மேலான ஆலோ டும் "பாலம் வாசகர் பேரவை’ எனும் கலை த் தொடங்க இருக்கிறோம். - இயக்கத்திற்கான ஆலோசனைகள் மட்டுமல்ல, *களாகவும் உங்களை அழைக்கிறோம்.
5ள் எழுதுங்கள்.

Page 6
செப்டம்பர் 17 0
எங்கள் பெரியாரை
எங்கள் தந்தை பெரியாருக்கு,
இப்பொழுது இது என்ன திடீர் கடிதம் என்று யோசிக்கிறீர்களா?
உங்களோடு பேசுவதற்கான கடிதமல்ல; உங்கள் கொள்கைகளோடு பேசுவதற்கான கடிதம்.
நீங்கள் ஏற்றி வைத்த ஒளியின் வெளிச்ச ரேகைகள் பட்டுதான் எங்கள் இருளைத் துடைத்துக் கொண்டோம்.
இருளின் அடர்த்தியையும் புரிந்து கொண்டோம்.
தங்கள் வாழ்க்கையூடாக பொது வாழ்வில் சுற்றுப்பயணம் சுற்றுப்பயணம் என்று தமிழகம் முழுவதும் தங்கள் காலடி பட்டதால் தமிழகச் சிற்றுார்கள் கண் விழிப்பைப் பெற்றன. 1919 முதல் 1973 வரை ஏறத்தாழ 8200 நாட்கள் சுற்றுப் பயணம் செய்த தூரத்தை ஒப்பிடும் போது 33 முறை பூமியை வலம் வந்ததற்கு ஒப்பானதாகும் .
*குன்றுடைக்கும் தோற்றமும், நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இறுகிய உள்ள மும் ஒரே இடத்தில் கண்டோம். இந்த அணு குண்டு பட்டறைதான் பெரியார் என்பதும் கண்டோம்” என்ற பாவேந்தர் புகழுரையை நாங்கள் மறவோம்.
பழுத்துச் சிவந்த பளபளக்கும் முகமும் முகத்தை விட பளபளக்கும் வெள்ளி நரை முடியும், கறுப்புச் சட்டையும் கையில் தடியும் என்பனவற்றை ஒரு மாமனிதருடைய அடை யாளமாகக் கருதவில்லை. சனாதனத்தில் வெறி பிடித்த மதத்தையும், மதத்தின் நிழலில் ஆயிரம் ஆயிரம் சிலந்தி வலைகளாய் மனிதர்களைப் பிரிக்கும் சாதி இரும்புக் கோடுகளையும் எதிர்த்த கலகத்தின் சின்னமாய்த்தான் கருதிக் கொண்டிருக்கிறோம்.
நீங்கள் பிராமண எதிர்ப்பாளராய், மத எதிர்ப்பாளராய் எப்படி மாறினிர்கள்? நீங்களே நீங்கள் மாறிய விதத்தை கூறியிருக்கிறீர்கள்.
**அந்தக் காலத்தில் அதாவது 1890-ல் சிறிது பணக்கார வீடு என்று ஆகி இருந்தாலும், வைணவ மத விஸ்வாசமுள்ள பாகவதர் வீடா கவும் இருந்ததால், கோயில், உற்சவம் முதலிய வைகளில் சிறிது சிரத்தை எடுத்து செலவு

0 தந்தை பெரியார் பிறந்தநாள்
என்றும் மறவோம்
செய்யும் வீடாகவும் இருந்ததால், சதா சந்நியாசிகள், மத பக்தர்கள், பாகவதர்கள், புராணிகர்கள், வித்வான்கள், சொந்தமாக வந்து பயன் பெற்றுப் போகவும், 4 நாள் 8 நாள் தங்கிப் போகவுமான வீடாகவும் ஆகி விட்டதால், இவர்களிடமும் வம்பளத்தல், தர்க்கம் பேசுதல் ஆகிய வசதி அதிகமாகி விட்டது. எனவே, கடையில் கிராமத்தாருடனும் சந்தை வியாபாரிகளிடமும் பேசுவது மாத்திர மல்லாமல், வீட்டில் மத பக்தர்கள், வித்வான் களிடமும் பேசுவதுமாக நேரிட்டுவிட்டதால் பின்கண்ட இவர்களிடம் பேசுவது மத எதிர்ப்பு, சாஸ்திர எதிர்ப்பு, புராண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு என்கிற அளவுக்குப் போய்விட்டது. இதுவே என்னை சாதி, மதம், கடவுள் என்கின்ற விஷயங்களில் நல்ல முடிவு ஏற் படும்படி செய்து விட்டது. இதன் காரண மாக எனக்குப் பார்ப்பனியத்தில் ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. பார்ப்புகினர் உயர் வாழ்வில் எனக்கொரு பொறாமையும் ஏற்பட்டு விட்டது.”
(பெரியார் பற்றி பெரியார் “பெரியாரியக்கம் பெரியார் 109-வது பிறந்தநாள் சிறப்பு மலர் 17.9.87) .
மனிதனின் மேல் மனிதன் எந்தப் பெயரில் சவாரி செய்தாலும் எதிர்க்கப் பட வேண்டியது தான். நீங்கள் காலத்தின் நீதிக்காக கடின மாக உழைத்தீாகள்.
சாதி ஆதிக்க எதிர்ப்பு உணர்வு நிலையில் தான் காங்கிரஸ் அரசியலில் கலந்தீர்கள்.
**ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக, “சென்னை மாகாண சங்கம்’ என்ற பெ ய ர ர ல் பார்ப்பனரல்லாதாருக்கென்றே ஒரு சங்கம் துவங்கி வேலை செய்து வந்தது. அந்த **மெட்ராஸ் பிரசிடென்ஸி அஸோஸியேஷன்” என்ற சங்கத்துக்கு கேசவ பிள்ளை தலைவர், லாட் கோவிந்ததாஸ், சல்லா குருசாமி செட்டியார், நாகை வி. பக்கிரிசாமிபிள்ளை, (காயாரோகணம் அவர்கள் தகப்பனார்) நான், ஆகியவர்கள் உபதலைவர்கள். LITéis L.fi நாயுடு, திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களும் காரியதரிசிகள் என்பது எனது ஞாபகம். அதில், நான் அதிக பங்கெடுத்துக் கொண்டேன். பத்திரிகைக்கு 1000 ரூபா கொடுத்தேன். 1000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து ஈரோட்டில் நான் வரவேற்புக் கழகத்

Page 7
LIsr6vlb
தலைவனாக இருந்து லாட் கோவிந்ததாஸ் தலைமையில் ஒரு மகாநாடு நடத்தினேன். அதில் தமிழ்நாடு பிரபலஸ்தர்களும், தொண்டர் களும் முக்கியமான காங்கிரஸ் தலைவர்களும் அறிமுகமானார்கள்.
பஞ்சாப் படுகொலை நடந்த சமயம் அதன் பயனாய் நாடெங்கும் ஆத்திரம் பொங்கி எழுந்த காலம். பஞ்சாப் படுகொலையைக் கண்டித்து எங்கும் கண்டனக்கூட்டம் . இந்த வருஷம் 1919 என்பது ஞாபகம். இந்த டிசம் பரில் மோதிலால்நேரு தலைமையில் அமிர்த சரசில் காங்கிரஸ் ஏற்பாடாகியிருந்தது. இந்த காங்கிரஸ் பிரபல காங்கிரசாகிவிட்டது. நானும் ஆச்சாரியாரும் இந்துமித்திரன் கூட்டமும் ஏராளமான மக்கள் சென்றிருந்தோம். அங்கு சென்று நேரில் அந்த படுகொலை சம்பவங் களைப் பார்த்த பிறகு எனக்கு மிகுந்த ஆத் திரம் வந்தது. நான் தீவிர தேசியவாதியாகி 6 GL65T.'
(பெரியாரைப் பற்றி பெரியார் “பெரியார் இயக்கம்’ இதழ். செப் ’87)
தீவிர தேசியவாதியாக மாறியதால் கதர்த்துணியை தோளில் போட்டு விற்றீர்கள்; கள்ளுக்கடையை ஒழிப்பதற்காக இருந்த தென்னை மரங்களை வெட்டி எறிந்தீர்கள்.
1924-ல் கேரளாவில் ஹரிஜனங்களின் வைக்கம் கோயில் நுழைவுப் போரை நடத்தி வெற்றி பெற்றுத் தந்தீர்கள்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் முதலிய விஷயங்களில் காங்கிரஸ் தலைவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1925-ல் காங்கிரசிலிருந்து விலகி சுயமரியாதை இயக் கத்தைத் தொடங்கினிர்கள்.
ரஷ்யா சென்று வந்தீர்கள். ரஷ்யாவின் சமூக மாறுதல் தங்களைக் கவர்ந்தது. நீங்கள், சிங்காரவேலர், ஜீவா ஆகியோருடன் சேர்ந்து 1932-ல் ஈரோட்டுத் திட்டம் எனப்படும் சுய மரியாதை சமதர்மத் திட்டத்தை வெளி யிட்டீர்கள்.
1. பிரிட்டிஷ் முதலிய எந்தவிதமான முதலாளித்தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தியாவை பூரண விடுதலை அடையச் செய்வது.
2. தேசத்தின் பேரால் கொடுக்கப்பட வேண்டிய எல்லாக் கடன்களையும் ரத்து செய்வது.
3. எ ல் லா த் தொழிற்சாலைகளையும், ரயில்வேக்களையும், பாங்கிகளையும், கப்பல், படகு நீர்வழிப் போக்கு வரத்து சாதனங்களை யும் பொதுமக்களுக்கு உரிமையாக்குவது.

III
சுடுகாடும் துப்பாக்கிச் சூடும்
தஞ்சாவூர் ஆகஸ்டு 24, திருப்புறம்புயம் புதுக் காலணியைச் சேர்ந்த10 வயது ஹரிஜன சிறுவன செல்வத்தின் சடலத்தை கடந்த திங்களன்று, ஹரிஜனங்கள் வன்னியர்கள் தெரு வழியாக மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். இதை வன்னியர்கள் ஆட் சேபித்ததாகக் கூறப்படுகிறது.
உடனே ஹரிஜனங்கள் அச்சிறுவனின் சட லத்தை அங்கேயே போட்டுவிட்டுச் சென்று விட்டனர்.
இதற்கிடையே கும்பகோணம் தாசில்தார் அந்தச்சிறுவனின் ச ட ல த் தை பெருமாந்தி கிராமத்தில் புதைக்க ஏற்பாடு செய்தார்.
இதனையடுத்து சுமார் 500 ஹரிஜனங்கள் செவ்வாயன்று சாலையில் அமர்ந்துகொண்டு சிறுவனின் சடலத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி ஆப்பாட்டம் நடத்தினர். போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.
பின்னர் புதன்கிழமை காலை மீண்டும் திருப்புறம்புயம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 2000 ஹரிஜனங்கள் இதே காரணத்திற்காக சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது டன் வன்முறையில் ஈடுபட்டனர். இதனை யடுத்து போலீசார் வன்முறைக் கும்பலைக் கலைக்க வானில் துப்பாக்கியால் சுட்டனர்.
தினமணி ஆகஸ்டு 25, 1988
O.
4. எந்தவிதப் பிரதி பிரயோசனமும் கொடுக்காமல் தேசத்தில் உள்ள எல்லா விவ சாய நிலங்களையும், காடுகளையும், மற்ற தாவர சொத்துக்களையும் பொது ஜனங்களுக்கு உரிமையாக்குவது.
5. குடியானவர்களும், தொழிலாளர்களும் லேவாதேவிக் காரர்களிடம் பட்டிருக்கும் கடன் களையெல்லாம் செல்லுபடியற்றதாக ஆக்கி விடுவது. அடிமை ஒப்பந்தங்களை ரத்து செய்து விடுவது.
6. சுதேச சமஸ்தானங்கள் என்பவை களை எல்லாம் மாற்றி, இந்தியா முழுமையும் தொழிலாளர்கள், குடியானவர்கள்,
வேலைக்காரர்கள் என்பவர்களுடைய நேரடி யான ஆட்சியைக் கொண்டு வருவது.
7. தொழில் செய்பவர்கள் 7 மணி நேரத் திற்கு மேல் வேலை செய்யக்கூடாது என்ப துடன் அவர்களது வாழ்க்கை நிலையை உயர்த்

Page 8
IV
துவது. தொழில் இல்லாமல் இருக்கிறவர் களைச் சர்க்கார் போவழிக்கும்படிச் செய்வது.
இந்தச் சுயமரியாதை சமதர்மத்திட்டத்தை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தீர்கள். சமதர்மப்பிரச்சாரம் பிரிட்டிஷ் அரசை பயத் துக்கு ஆளாக்கியது. சுயமரியாதை இயக்கத்தை தடை செய்ய அரசினர் ஆலோசித்தபோது 1935-ல் திருத்துறைப் பூண்டியில் கூடிய 5-வது சுயமரியாதை மாநாட்டில் சுயமரியாதை சமதர்மத் திட்டத்தைக் கைவிட்டீர்கள்.
ஜிவா, சிங்காரவேலர் ஆகியோர் சமதர்மத் திட்டத்தைக் கைவிட்டது பற்றியும், நீதி கட்சின்ய ஆதரிப்பது பற்றியும் தங்களை கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
1938-ல் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டீர்கள். பொப்பிலி அரசர், பனகல் அரசர், சர். தியாகராயர் முதலிய செல் வந்தர்கள் அங்கம் வகித்த அரசியல் இயக்கமே நீதிக்கட்சி.
1945-ல் நீதிக்கட்சியை திராவிடர் கழக மாக மாற்றினிர்கள்.
காமராசர் தமிழக முதல்வராக துணை நின் நீர்கள். அப்போதிலிருந்து 1967 வரை காங் கிரசை ஆதரித்தீர்கள் 1967-க்குப்பின் திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடத்தை க் கைப்பற்றி அண்ணா முதல்வரான பின் தி. மு. க. வை தங்கள் இறுதிக் காலம் வரை ஆதரித்தீர்கள்.
நீங்கள் தேர்தலில் நிற்கவில்லை. அரசுப் பதவி எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் தொடக்கம் முதல் இறுதி வரை மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு எனும் நிலைகளில் சற்றும் வழுவாமல் தான் பணிபுரிந்தீர்கள். ஆனால் அரசியலில் நீங்கள் மேற்கொண்ட நிலைகள்தான் எங்களை யோசிக்க வைக்கின்றன. 1. தேச விடுதலைப் போராட்ட காங்கிரஸ்
இயக்கத்தில் பங்கேற்பு. 2. காங்கிரசிலிருந்து விலகி சுயமரியாதை சமதர்ம இயக்கம் அமைத்தல், செயல்படல். 3. காங்கிரசுக் கொள்கைக்கும் சமதர்ம இயக் கக் கொள்கைக்கும் நேர் எதிரான நீதிக் கட்சியில் பணியாற்றித் தலைவராக மாறு
தல. 4. நீதிக்கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றுதல். பின் காமராசரை ஆதரித்தல் காங்கிரசை ஆதரித்தல். 5. காங்கிரஸ் ஆட்சியைத் தமிழகத்தில் வீழ்த் திய திராவிட முன்னேற்றக் கழகத்தை 1967க்குப் பின் ஆதரித்தல். காங்கிரஸ் இயக்கம் பிரிட்டிஷ் ஆதிக் கத்தை வீழ்த்தும் நோக்கமும், இந்திய முத லாளிகள் சார்புநிலை கொண்டதும் ஆகும்.

பாலம்
சுயமரியாதை சமதர்ம இயக்கம் மேன்மை மிக்கதும் உழைப்பாளர் சார்புநிலை எடுத்ததும் சகல ஆதிக்கத்தையும் வீழ்த்தும் நோக்கம் கொண்டதுமாகும்.
நீதிக்கட்சி பிரிட்டிஷ் ஆதரவு நிலை கொண்டதும், தென்னகத்தின் செல்வாக்கு வாய்ந்த நிலச்சுவான்தாரர்களைக் கொண்ட தும் ஆகும்.
திராவிட முன்னேற்றக்கழகம் சாராம்சத் தில் காங்கிரஸ் எதிர்ப்புச் சக்தியாகும்.
இக்கொள்கை மாறல்தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டில் வளர்ச்சிநிலை என்பதற்குப் பதிலாக * கட்சி மாறல்' போன்ற தோற்றம் தான் தருகிறது. -
இந்தியா சுதந்திரம் பெற்றபின் நீங்கள் ஆளும் கட்சியை சார்ந்து நின்ற காரணத்தால் சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற தொழி லாளர் இயக்கத்தின் போராட்டங்களுக்கு எதிர் நிலை எடுத்தீர்கள்.
நீங்கள் இறுதி வரை ஏற்றுக் கொண்ட மதஒழிப்பு, சாதி ஒழிப்பு, சமூக இழிவு ஒழிப்புக் கொள்கைகளுக்கு சரியான வேலைத்திட்டமும் முன்னேற்ற வேகமும் இல்லை. வெறுமனே பிரச்சாரம், பிரச்சாரம் என்று செயல் பட்டதால் இன்றும் அரிஜனங்கள் கொளுத்தப் படுகிறார் கள். அவர்களுக்கு சுடுகாடு இல்லை. சுடு காட்டுக்குப் பாதையும் இல்லை. இன்னும் தனித் தெருக்களில் ஒதுக்கி வைக்கப்பட்டே இருக்கிறார்கள்.
தங்கள் காலடி பட்ட தமிழகத்தில் பிரா மணர் சங்கம், வன்னியர் சங்கம், முக்குலத்தோர் சங்கம் என்று சாதியப் பேய் புதிய வடிவத்தில் வந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் எங்களுக்கு கடவுள் இல்லை. எங்களுக்கு ஒளிதந்தவர். விமர்சனம் செய்ய எதையும் பகுத்தறிந்து பார் க் க க் கற்றுத் தந்தவர். எனவே தங்களை தங்கள் வழிமுறை களை, தங்கள் செயல்பாட்டை தி ரு ம் பி பார்க்கிறோம்.
எங்கள் பாதையை செப்பனிட வேண்டும் என்றால் தங்கள் பணியை, வழியை, செயல் பாட்டின் பரிமாணத்தை ஆய்வு செய்ய வேண் டும். தாங்கள் விட்டத் தவறுகளை திருத்திக் கொண்டு சரியான வழியில் முன்னேறுவோம். எங்கள் முயற்சிக்கு உங்கள் வாழ்த்துக்கள் எப் போதும் உண்டுதானே ஏனென்றால் எங்கள் பகுத்தறிவுத் தந்தையல்லவா நீங்கள்.
என்றும் அன்புடன் பாலதுரியன்

Page 9
8s
ஆயிரம் ஆயிரம் இை அ?
வாழ்வின் மீதான நேசமே பாலஸ்தீனியர் களை ஆயுத மே ந் த நிர்ப்பந்தித்தது. போராட்டத்தில் அவர்கள் மரணத்தோடு வாழ்கிறார்கள். எனிலும் மரணத்திற்கு அவர் கள் தரும் அர்த்தமென்ன? ஒரு பாலஸ்தீன கவிஞர் இப்படிச் சொல்கிறார்:
**. மரணத்திற்கு எவ்வளவோ அர்த்த
மிருக்கலாம். அவற்றில் முக்கியமானது உயிரை துச்சமாக மதித்து போராட்ட பலிபீடத்தில் வாழ்வை அர்பணிப்பதே.
இதுவே வாழ்க்கையூை மிக ஆழ்ந்து புரிந்து கொண்டதற்கான அடையாளம்; தம் மேல் கிடந்து அழுத்தி நசுக்கும் அந்நியச் சுமையைத் தூக்கியெறிய, விடுதலை மீட்சி காண, போர்க்கோலம் பூண்டு நிற்கும் மக்களைப் புரிந்து கொண்டதற்கான அடை யாளம். வாழ்க்கையை இவ்வகையில் புரிந்து கொள்ளலே, ஒரு போராளிக்கு தனது மக்களின் விமோசனத்திற்காக உயிர்த்தியாகம் செய்யவும் தயாராகும் மனவுறுதியை அளிக்கிறது.” துப்பாக்கியும் சாவும் வேதனையும் கண் ணிரும் தம் வாழ்வைச் சூழ்ந்துள்ள வேளையில் *அமைதி விரும்பிகளாக வாழ பாலஸ்தீனியச் களால் இயலவில்லை. அபுஜிகாத்தும் அகிம்சா வாதியாக இல்லை. வாழ்வின் மேலான அளப்பரிய நேசம் ஆயுதப்போரை அவர் எப் போதும் சார்ந்திருக்க தூபமிட்டது. தம் தாயகத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வேரூன்றி யுள்ள நிலையில், கொடும் அடக்குமுறைகளி லிருந்து தம் மக்களை பாதுகாக்க வேண்டிய நிலையில், புரட்சிகர வன்முறையின் தேவை உணர்ந்து அவர் செயல்பட்டார். தன் இறுதி காலம்வரை சுறுசுறுப்
5 இயங்கினார். அபுஜிகாத் எனும் விடுதலை மீட்சியில் வல்லவர் உலக அரசி தாய்நாட்டின் சுதந் களில் கவனம் பதித்தவ திர மூச்சை உணர போராட்டத்தை முன்ே
எழுந்த போராட்டத் தில் தன் வாழ்வை அர் பணித்தார்.
அபுஜிகாத்தை கொல் லத் தீட்டிய சதித்திட் டத்தை அணுப் பிசகா மல் நிறைவேற்றிய
பாலஸ்தீன விடுத தின் ஏனைய விடுதை உத்வேகப்படுத்திக் கா
அபுஜிகாத் பற்றி புரட்சிகர நிறைவேற்று சங்கர் எழுதிய கட்டுை
பெறுகிறது.

Jeff
ளஞர் நெஞ்சங்களில்
ஜிகாத்
] [ ]
சாகசத்தை, 'அபுஜிகாத்தை கொ ன் ற வரலாற்றை” கொலைகார இஸ்ரேல் உளவுப் படையினர் வீடியோ படம் எடுத்துச் சென்றுள் ளனர். அபுஜிகாத் இருக்குமிடத்திற்கு எவ் வழியில் சென்றோம்? அவரை எப்படிக் கொன் றோம்? அவரது மூளையிலும் இதயத்திலும் உடலிலும் துப்பாக்கி ரவைகள் ஏற்படுத்திய துளைகளின் ஆழ அகலம் எவ்வளவு? 'கொட்டிய இரத்தத்தின் நிறம் சிவப்பா அல்லது வேறா? என்பதையெல்லாம் இஸ்ரேல் அரசினரும், இராணுவத்தினரும், அமெரிக்க இராணுவ அறிஞர்களும் கண்டு ரசிக்கத்தான் செய்வார் கள்; கண்டு கண்டு தமது கொலைவெறி சித்
தாந்த அறிவை மேலும் மேலும் வளர்த்துக் கொள்வார்கள்.
வேண்டாம் இந்த விளக்கம். இதெல்லாம்
பற்றி பாலஸ்தீனப் போராளிகளுக்கு கவலை இல்லை. ஏன் எனில், அவர்களிடையே அபுஜிகாத் இன்றும் வாழ்கிறார். மரணத்தால் அவரை கொல்ல முடியவில்லை. காற்று எடுத்துச் செல்லும் சாம்பலாகவோ மண் அரித் துத் தின்னும் சவமாகவோ இல்லாமல், அபுஜிகாத் பாலஸ்தீன மக்களின் நெஞ்சில் ஜீவனாக விளங்குகிறார். 'உயிர்த் தியாகம் செய்த எமது தேசாபிமானிகளின் போர்ப்பாதை யில் எமக்கு வழிகாட்டும் ஒளிதீபமாக திகழ் கிறார்கள்” என்று போராட்ட வாழ்வில் உயிர்துறந்த கொள்கை தியாகிகளைப் போற்றி அவர்கள் சென்ற சுவடுகளைப் பாலஸ்தீனர்
கள் பின்தொடர்கிறார்கள்.
ஆம். அபுஜிகாத் கட்டியெழுப்பிய புரட்சி அலை பாலஸ்தீனமெங்கும் இன்னும் கொந் தளித்துக் கொண்டிருக்கிறது; மூட்டிய புரட்சித் தீ கனல் வீசி இன்னும்
போர்த்தந்திரக் கலை பல் போராட்ட எழுச்சி ாறே பாலஸ்தீன மக்கள் lனடுத்துச் சென்றார். லைப் போரை உலகத் லப் போராட்டத்திற்கு ட்டினார்.
ஈழப்புரட்சி அமைப்பின் க் குழு உறுப்பினர் இவ்விதழோடு நிறைவு
எரிந்து கொண்டிருக் கிறது. அபுஜிகாத்தின் ம  ைற வோ டே யே பாலஸ்தீன போராளிக ளிடம் அவர் வளர்த்த போர்த்திறம் மடிந்து போய் விடவில்லை.
மக்கள்
ஆயினும் ர ர ணு வ த் தி ன் தலைமை எ ஸ்ரி தி ல்
நிரப்ப முடியாத வெற்

Page 10
v1
றிடத்தை விட்டுவிட்டே அபுஜிகாத் சென்றிருக் கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில் இராணுவ அறிவிற் சிறந்த, யுத்தத் தந்திரக் கலைகளில் முதிர்த்த அனுபவம் கொண்ட ஒரு போராளித் தலைவரை பாலஸ்தீனம் இழந்து நிற்கும் அனாதரவான நிலையைத்தான், அபுஜிகாத்தின் மறைவுக்குப் பின் அங்கு நடந்தேறும் நிகழ்ச்சிகள் புலப் படுத்துகின்றன.
சிரியா அரசின் கைக்கூலிகளாக மாறிப் போன அபுமுசா கும்பல், கடந்த மாதம் பெய்ரூட்டிலிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஃபாத்தாவின் முக்கிய ராணுவத் தளத்தை பலத்த போருக்குப் பின்பு தகர்த் தழித்து விட்டது. மேலும் அங்கே ஃபாத்தா வின் கட்டுப்பாட்டிலிருந்த அகதி முகாமையும் தாக்கி பலரை படுகொலை செய்துள்ளது. தாக்குதலின் முடிவில், தெற்கு லெபனானுக்குள் மட்டுமே ஃபாத்தா இயங்கக் கூடிய சாத்தி யத்தை ஒரு ஒப்பந்தத்தின் பேரில் அபுமுசா ஏற்படுத்தியுள்ளது.
இதே வேளையில் மேற்குகரை (West Bank) காஸா (Gaza) பகுதிகளுக்கு பாலஸ்தீன விடுதலை அமைப்பு பொறுப்பேற்க வேண்டு மென்றும், அப்பகுதிகளை ஜோர்டானிலிருந்து விடுவிப்பதாகவும் ஜோர்டான் ம ன் ன ர் ஹ"சைன் அறிவித்துள்ளார். அப்பகுதிகளில் அபுஜிகாத் வழிநடத் திய போராட்டம் அவ ரது மறைவுக்குப் பின் னும் இ ன் று ம் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. அடி மைத் தளையினின்று மீளும் வெறியோடும், யுக மாற்றத்தைக் கோரும் சீற்றத்தோ டும் மக்கள் எழுச்சி அங்கே வீராவேசம் கொண் டி ருக்கிறது. இந்தப்பேரெழுச்சியும், ஜோர்டான் மன்னரின் அறிவிப்பும் **அயல் நாட்டில் இயங்கும் பாலஸ்தீன அரசை” (Government in exile) உடனடியாக அப்பகுதி களில் நிறுவவேண்டிய இடர்மிகுந்த நிர்பந்தத் திற்கு பி.எல். ஒ-வை தள்ளியுள்ளன.
இதுபோன்ற சிக்க லான சூழ்நிலைமை
 

பாலம்
கள் எழுந்த போதெல்லாம், பிரச்சனையின் பரிமாணத்தை பூரணமாக உணர்ந்து, இடர்ப் பாடுகளை இடையூறுகளை அகற்றி, போர்ப் பாதையை சீரமைத்து, பாலஸ்தீன விடுதலை அமைப்பை வழி ந ட த் தும் தலைவராய் அபுஜிகாத் இருந்தார். இராஜதந்திரத்திலும், ராணுவக் கலையிலும் தனிச்சிறப்பான புகழ் கொண்டிருந்த அபுஜிகாத் எனும் தன் மகத் தான புதல்வனின் பெருமையை இன்று பாலஸ்தீனம் உணர்கிறது. அவர் வழிகாட்டிய போர்ப்பாதை பாலஸ்தீன மக்களை ‘முட்களி லிருந்து நட்சத்திரங்களுக்கு’ நிச்சயம் அழைத் துச் செல்லும்; பிரச்சனைகள் மீதான அவரின் கூர்மையான கண்ணோட்டத்தை பாலஸ்தீன விடுதலை அமைப்பு விடாது கைக்கொண்டு இன்றையச் சூழலின் சிக்கல்களை களைந் தெறியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
அபுஜிகாத் சர்வதேசமெங்கும் உள்ள விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு விளை யும் பிரச்சனைகள் குறித்தும் நேரடியாக கவனம் செலுத்தியவர் என்பதை அவரோடு வாழ்ந்து பழகியதன் வாயிலாய் நாங்கள் உணர்ந்திருக்கிறோம். குறிப்பாக ஈழப்போராட் டத்தின் மீது காட்டிய தனி அக்கறையாலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஈழச் சூழ்நிலை யைப் புரிந்து வழங்கிய தமது ஆலோசனை களாலும் அபுஜிகாத் என்றென்றும் எம் நினை
வில் வாழ்வார்.
அவரை முதன்முத லாக சந்தித்த இடம். ஃபாத்தாவின் கட்டுப் பாட்டுக்குள்ளி ரு ந் த அந்தத்தொழிற்சாலை ..அங்கே நிகழ்ந்த சந் திப்பு. அவரது கம்பீர் யம், கைகுலுக்கல், விசாரிப்புகள் எல்லாம் இப்போது எம் கண் னருகே நிழலாடு . . . . கிறது-எமது கறுத்த துக்கம் படிந்த நிழல் ද්ඝ61 - - -
ஈழத் த மி பூழி ன ம் ! . . அடிமை இருளில் அழுந்திக் கிடந்து மரணமூச்சு விட்ட காலத்தில், கவிந்திருக் கும் அந்த இருளை அகற்ற எமது தேசத்து ஜீவனில் சு த ந் தி ர எழுச்சி முளை விட் டது. இவ்வேளையில், விடுதலைப் போரை

Page 11
Lu T6b
தீரத்தோடும் ஒழுங்கமைவோடும் கொண்டு செல்ல வேண்டிய, எழுச்சி கொண்ட ஈழத் தமிழ் மக்களை ஆயுதவீரர்களாக தயார்ப்படுத்த வேண்டிய அவசர அவசியம் எங்களுக்கு எற் பட்டது. இந்த அவசியத்தை உணர்ந்து கொண்டதோடு மாத்திரமல்ல; ஈழப்போராட் டத்தின் மற்றத் தேவைகளையும் கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றி எங்களுக்கு அபுஜிகாத் பெரிதும் துணைநின்றார்.
எங்கள் ஈழப் புரட்சி அமைப்பை (EROS) தவிர போராட்டத்தை முன்னெடுக்க எழுந்த மற்றொரு இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பாகும். ஈழப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் இந்த இரு இயக்கங்களே செயல்பட்டு வந்தன. பாலஸ்தீன விடுதலை அமைப்புடன் (PLO) எங்களுக்குள்ள உயிருக்கு உயிரான தொடர்புகளை LTE இயக்கத் தினரிடம் சொல்லி, அவர்களில் சிலரையும் ராணுவப் பயிற்சிக்கென்று பெய்ரூட்டுக்கு
அனுப்பினோம்.
அவ்வாறு பயிற்சிக்கு நாங்கள் அனுப்பி வைத்தவர்களில், இன்றைய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (PLOT) செயலதிபர் உமாமகேஸ்வரனையும் (இவர் அப்போது LLTE-யில் இருந்தவர்) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) செயலதிபர் பத்மநாபாவையும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (EPDP) செயலதிபர் டக்ளஸ் தேவானந்தாவையும் (இந்த இருவரும் அப் போது EROS-ல் இருந்தவர்கள்) குறிப்பிட்டுச்
சொல்லலாம்.
ஈழத்திலிருந்து எமது மற்ற தோழர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கத் தேவையான சாதனங் களைத் தர அபுஜிகாத் மனமுவந்து சம்மதித் தார். இந்தக் காலத்தில்தான் லெபானானை இஸ்ரேலியப் படைகள் முற்றுமாய் ஆக்கிர மித்தது; பி. எல். ஓ-வின் விடுதலைச் சக்தி ‹ዟ56◊6ኽዘ‛ லெபனானிலிருந்து அகற்றியது. அராபத், அபுஜிகாத் ஆகிய முக்கிய தலைவர் களெல்லாம் அரபு நாடுகளுக்கு வெளியேறி னார்கள். இத்தகைய அரசியல் நிலைமை பி. எல். ஓ-வுடன் எங்களுக்குள்ள தொடர்பு களை இடைநிறுத்தம் செய்தது. இனக் கலவரங்களும், தேசிய இன விடுதலைப் போராட்ட அலையும் பொங்கிப் பிரவகித்த 1983ஆம் ஆண்டில் நாங்கள் காலடி எடுத்து வைத்தோம்.
1984-ல் ஜோர்டானிலிருக்கும் அம்மானில் பாலஸ்தீன தேசிய சபை (PNC) கூடியபோது நான் அங்கே செல்லும் வாய்ப்பைப் பெற்று அபுஜிகாத்தைச் சந்தித்தேன். அவர் அதுவரை

VII
கால ஈழப் போராட்டக் கட்டங்களையும், திருப்பங்களையும், மாற்றங்களையும் கேட் டறிந்து என்னிடம் தீர்க்கமாய் விவாதித்தார். எமிது அடுத்த கட்டப் போராட்டத்தின் தேவைகளை நிவர்த்தி செய்ய இணங்கினார். ஆயுத உதவி, நிதி உதவி அளிக்கவும் சம் மதித்தார். இவற்றினும் மேலாக ஈழப் போராட்டத்தை நெறிப்படுத்துகிற, தீர்மான கரமானப் பாதையில் இட்டுச் செல்லுகிற ஆலோசனைகளை அளித்துதவினார்.
இதற்கிடையில் ஈழப் பிரச்சனையில் இந் தியத் தலையீடு நேர்ந்ததன் காரணமாக ஆயுத மற்றும் நிதி உதவிகளை முழுநிறை வாய் பி. எல். ஓ-விடமிருந்து பெறமுடியாமல் போனது. எனினும் நெருக்கடி துளைத்த காலங்களில் பி. எல். ஒ-வின் தொடர்பு அவ்வப் போது எங்களுக்கு உதவிகரமாய் அமைந்தது. 84ஆம் ஆண்டிலேயே மற்றொரு முறை நானும் தோழர் ரத்னாவும் அம்மான் சென்று அபுஜிகாத்தைச் சந்தித்து ஈழப் பிரச்சனை குறித்து கலந்துரையாடினோம்.
84-ல் மூன்றாவது முறையாக 'அபுஜி காத்தை நான் அம்மானில் சந்தித்தேன். அங்கிருந்து டுனீஷ், பாக்தாத் ஆகிய இடங் களுக்கு அவருடனேயே சென் றே ன். பிரயாணங்களின் போது தம் மக்கள் மீதான அவருடைய அளவிலா அன்பும், சர்வதேச மனிதகுலப் பிரச்சனைகளில் அவர் காட்டும் பேரார்வமும் வலுவாக வெளிப்பட்டது. இவ் வேளையில்தான் ஜோர்டான் அரசின் இராணுவ அதிகாரிகளுடனும், ஈராக் இராணுவ அதி காரிகளுடனும், ஈழப் போராட்டத்தின் அவசி யத்தையும், அதன் தேவைகளையும் பற்றிப் பேசும் வாய்ப்பை அபுஜிகாத் எமக்கு ஏற் படுத்தித் தந்தார். ஈராக் அதிகாரிகள் "விமான எதிர்ப்பு ஏவுகணைகளை' இயக்கத் தேவை யான பயிற்சியை எங்களுக்கு அளிக்க இசைந் தார்கள்.
எங்களது அறிக்கைகள், பத்திரிக்கைகள், கட்டுரைகள் முதலியவற்றை லண்டன் தூதர் ஷேக் அல்வைதா, மற்றும் டில்லி தூதர் ஷேக் காலீத் ஆகியோர் வாயிலாக அபுஜிகாத் திற்கு அனுப்பி வைப்போம். தேவைப்படும் போது அவரிடமிருந்து ‘தன்னை சந்திக்கும்படி’ அறிவிப்பு வரும், அத்தகைய நேரங்களில் டுனிஷ், அல்ஜியஸ், பாக்தாத் போன்ற அவரது தங்குமிடங்களுக்குச் சென்று பலமுறை சந்தித்து திரும்பினேன்.
இடையில் நிலவிய நெருக்கடி மிக்க அரசியல் சூழ்நிலைகளின் நிமித்தம் எங்களின் சந்திப்பு நேராமல் ஒரு யுகமே புரண்டது

Page 12
VIII
போல் சில வருஷங்கள் கழிந்தன. தமிழ் நாட்டில் எமது பயிற்சி முகாம்கள் இயங்கிக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. அப் போது ஒரு நாள் அபுஜிகாத்தால் ரகசியமாக அனுப்பப்பட்ட ஹாசன், மஹ்மூத், லூத்ஃபீர் எனும் அவரது மூன்று பிரதிநிதிகள் வந்து எங்களைச் சந்தித்தார்கள். அவர்கள் கொண்டு வந்த செய்தி எங்களை வியப்பிலும் மகிழ்ச்சி யிலும் ஆழ்த்தியது.
அபுஜிகாத் தந்தனுப்பிய செய்தி இது தான: ** ... , எங்கள் மாணவர்கள் பலர் இந்தியா மற்றும் இந்தியாவைச் சுற்றிலுமுள்ள நாடுகளில் பயின்று வருகிறார்கள். படிப்பு முடிந்து இங்கே திரும்பும்போது அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பது அவசியமென்று நாங்கள் கருதுகிறோம். குறிப்பாக மேற்கு கரைக்கு (West Bank) திரும்பும் மாணவர் களுக்கு பயிற்சி மிக மிக அவசியம். ஏனெ னில் அவர்கள் இடையில் ஈராக், டுனீஷ், அல்ஜியஸ், ஏமன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இயங்குகிற எங்களது பி. எல் ஒ. பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்று திரும்பி னால், அது இஸ்ரேல் அரசினரிடம் சந்தேகம் எழ வாய்ப்பளிக்கும். ஆகவே நமக்கிடையே யான பரஸ்பர புரிவுணர்வின்படி, அந்த மாணவர்களுக்கு பயிற்சி அளித்துதவ நீங்களே சரியானவர்களென்று நாங்கள் நம்புகிறோம். மாணவர்க்ளில் பயிற்சிக்குத் தகுந்தவர்களை நாங்களே தேர்ந்தெடுத்து அனுப்புவோம்.”
ஈழப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் அதன் போராளிகளுக்கு முதன் முதலாக ஆயுதப் பயிற்சியை அளித்தவரிடமிருந்துபாலஸ்தீன விடுதலைஇயக்கத்தின் முதல் ஆயுத பயிற்சிமுகாமை நிறுவியரிடமிருந்து-இராணுவ யுத்தத் தந்திரக் கலைகளில் உலகளாவிய கீர்த்தி கொண்டவரிடமிருந்து இப்படியொரு கோரிக்கை வருமென்று நாங்கள் எதிர்ப்பார்க்க வில்லை. எனினும் அபுஜிகாத்தின் வேண்டு கோளை கட்டளையர்க் ஏற்றோம்.
படிப்பு முடிந்து நாடு திரும்பும் முன்னர் பாலஸ்தீன மாணவர்களில் சிலர் எங்களை வந்து சந்தித்தார்கள். பி. எல். ஓ-வுக்கும் எங்களுக்கும் இடையேயான உட்தொடர்பை யும் பரஸ்பர சார்பையும் கருதி, ஒரு சர்வ தேச கடமையாக எண்ணி, எங்களால் முடிந்த அளவில் அவர்களுக்கு உதவினோம். அந்த மாணவர்கள் அபுஜிகாத்தை தமது வீரஞ் செறிந்த நாட்டின் உருவமாக காண்பதாய்ச் சொன்னார்கள். அவர்கள் அனைவரின் நெஞ் சிலும் தமது தாயகத்தை நெறுக்கிப் பிணைத் திருக்கும் அடிமை வளையத்தை ‘நொறுக்கி

பாலம்
எறியும்' வீரசபதம் முழங்குவதை உணர்ந் தோம். அபுஜிகாத்தின் மறைவுக்குப் பிறகு பாலஸ்தீன போராட்டக்களத்தில் "மாபெரும் சூன்யத்தை இஸ்ரேல் அரசு எதிர்பார்ப்பது படுமூடத்தனம். அந்த மாணவர்களைப் போன்று "ஆயிரமாயிரம் அபுஜிகாத்துகள் அடங்கிய புதிய போராட்ட சந்ததியினரை தீர்மானகரமான பாதையில் தன் பணி தொடர அவர் விட்டுச் சென்றிருக்கிறார்.
அபுஜிகாத்தின் போராட்ட வாழ்க்கை முறை பாலஸ்தீன தேசிய பிரக்ஞையில் பிரிக்க முடியாதபடிக்கு ஒன்றியிருக்கிறது; so 6935 அளவில் மக்கள் போராளிகளை ஆகர்ஷிக் கிறது; இன்றைய ஈழ அரசியலின் சிக்கல் மிகுந்த நெருக்கடிச் சூழ்நிலையில் அவரின் மறைவை பேரிழப்பாக ஈரோஸ் உணர் கிறது. ஒரு இனிய தோழரை இழந்த சோகம் என்னைச் சூழ்ந்துள்ளது.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்படு வதற்கு சில மாதங்களுக்கு முன், 1987 ஏப்ரலில், பாலஸ்தீன தேசிய சபை (PNC) அல்ஜியஸில் கூடிய நாளில் நான் அபுஜி காத்தை சந்தித்து உரையாடியதை இத்தருணத் ல் நினைவு கூர்கிறேன். விடைபெறும் பாது கைகுலுக்கி, வாழ்த்து கூறி, மறுபடி யும் விரைவில் என்னை சந்திக்க விழைவ தாகக் கூறினார்.
அந்தோ..!அதுவே எங்களின் கடைசி சந்திப்பாக முடிந்து போனது. நம் இதயத்தில் கொந்தளிப்பை எழுப்பும் அவரின் மரணம் நேர்ந்தது.
ஆனால் மரணத்தின் பின்னும் நம் நினைவு களில் அவர் சாகாதிருக்கிறார். அவரை நான் கடைசியாக சந்தித்தபோது அவரிருந்த நிலை என்றென்றும் அழியாத நினைவு.
இன்றும்கூட, உறுதியும் நேசமும் இழை யும் அவருடைய குரல் இன்னும் என் காது களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
வாஞ்சை மிகுந்த அவரது கைகுலுக்கலை இன்னும் நான் ஸ்பரிசிக்கிறேன்.
தோழமை பூத்துத் தவழும் அவரது புன் னகையை இன்னும் நான் காண்கிறேன். ()
i மதுரை மாநகரில்
நல்ல நூல்கள் பெற. சுவடி 473, கூடல்நகர் மதுரை-18

Page 13
O உங்கள் பெயர்-இதன் சீன அர்த்தம்
என்ன ? எப்படி உச்சரிக்க வேண்டும் ?
சாங்-சி-லின். சீன மொழியில் மூன்று எழுத்து. தனித்தனி உச்சரிப்பு. என் அப்பா சாங். என்மகள் சாங். வழிவழியாக வருகின்ற எனது குடும்பப்பெயர் சாங். "சி-லின்’ என் பது ஒரு வகை தேவத்தன்மை வாய்ந்த விலங்கு மான் மாதிரி. அது ஒரு கற்பனை. பெளரானிக கற்பனை. அது "நல்ல விலங்கு. அப்படியொரு மூடநம்பிக்கை. அந்த விலங்கு தோன்றினால் இந்த உலகம் அமைதியாக செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை. சீன நாட்டுப்புறக் கதைகளில் சி-லினை அதிகமாக காணலாம்.
O உங்களுக்கு தமிழ் மீது ஆர்வம் தோன்ற
காரணம்.?
பீகிங் வானொலிக் கல்லூரியில் படித்த போது, 24 வருடங்களுக்கு முன்பு, அதில் ஒரு தமிழ் வகுப்பு, நான் அங்கேதான் படித்தேன். அங்கு படித்தபிறகு, தமிழிலக்கியம் தமிழ் மக்கள் தமிழ்ப்பண்பாடு எல்லாம் தெரியவந்தது. தமிழ்மீது ஆர்வம் கொள்ள பல காரணங்கள். மிகத் தொன்மையானது தமிழ். மொழி, பண்பாடு இவற்றை சீனத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் மிக நல்ல மொழி; மிக நல்ல பண்பாடு. ஆனால் சீனாவிலே குறிப்பாக தமிழிலக்கியத்தை தெரிந்தவர்கள் இல்லை யென்று சொல்லலாம். எங்கள் ஆராய்ச்சி நிறுவனத்திலே ஒரு இந்திய இலக்கிய ஆராய்ச் சித் துறை. அதிலிருந்தவர்களுக்கு இந்திய வடமொழியே தெரிந்திருந்தது. சிலருக்கு சமஸ்கிருதம் தெரியும்; பாலி தெரியும். இந்தி தெரியும். சிலபேருக்கு வங்காள மொழி தெரி யும், உருதுமொழி தெரியும். இந்திய இலக் கியத்தில் தமிழிலக்கியத்தை யாரும் ஆராய்ச்சி செய்யமாட்டார்கள். யாருக்கும் தமிழ் தெரி யாது. இதனால் தான் எனக்கு தமிழை கற்க ஒரு எண்ணம். இந்திய இ லக் கி ய த்  ைத ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் தமிழ் மொழி இலக்கியம் மிக முக்கியமானது. இந்தி யாவின் முக்கியமான 15 மொழிகளில் தமிழ் மிகத் தொன்மையானது. இந்தி, வங்காளம், உருது இவை பிற்காலத்தில் பிறந்தவை. சீனாவில் பழம்பெரும் இந்திய இலக்கியம் சமஸ்கிருதமென்றுதான் கருதப்பட்டது. தமிழ் பற்றி தெரியாது. எனவேதான் தமிழை தெரிந்து கொள்ள வேண்டும்; ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதற்குப்பிறகு, தலை சிறந்த தமிழ்ப்படைப்புகளை சீனமொழியில் பெயர்த்து வெளியிட வேண்டும்; ஆராய்ச்சி செய்து சில கருத்துரைகள் எழுதி சீனமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இப்படியொரு குறிக்கோள் எனக்கு.

தமிழ்நாட்டில் தமிழைக் காண முடியவில்லை சீன தேசத் தமிழறிஞர் சாங்-சி-லின் வருத்தம்
O எப்போது தமிழ்மொழியுடன் உங்களுக்கு
தொடர்பு ஏற்பட்டது ? 1964 முதல் தொடர்ந்து நான்கு ஆண்டு களாக சீனாவில் தமிழ் படித்தேன். பிறகு பீகிங் அயல்மொழி பதிப்பகத்தில் ஒரு தமிழ்க் குழுவில் பணிபுரிந்தேன். 1975லிருந்து 77 வரை இலங்கையில் இருந்தேன். அங்கு கொழும்பு பக்கத்திலே வித்யாலயா என்றொரு வளாகம். அங்கே மொழியியல் துறையில் பேராசிரியர் சுசீந்தரராஜன் வழிகாட்டுதலில் தமிழ்மொழியியலும் இலக்கணத் தமிழும் பயின் றேன். சீனாவிலே 1960 ஆம் ஆண்டு தொடங் கப்பட்ட முதல் தமிழ் வகுப்பிற்கு ஆசிரியராய் இருந்தவரும் இலங்கையிலிருந்து வந்தவர் தான். இன்னொரு ஆசிரியை சாரத சார்மா எனும் மலேசியத்தமிழர். நான் இரண்டாவது தமிழ் வகுப்பிலே (1964-68) படித்தேன்.
O இப்போது சீனாவில் தமிழ்க் கற்பிக்கப்படு
கிறதா ?
இல்லை. ஆனால் தமிழ்க் கற்கும் பொருட்டு மூன்று சீன இளம் மாணவர்கள் (2 மாணவர் கள், 1 மாணவி) இந்தியா வந்து இரண்டு வருடங்களாகப் படித்து வருகிறார்கள். முதலில் மைசூர் இந்திய மொழிகள் மையத்தில் படித்த பிறகு புதுதில்லி பல்கலைகழகத்தில் படித்தனர். இப்போது விடுமுறையில் சீனா சென்றுள்ளார் கள். மீண்டும் இந்தியா வருவார்கள். அவர்கள் தஞ்சாவூர், மதுரை பல்கலை கழகங்களில் பயில் வதே நல்லது. ஏனெனில் தமிழ்மொழி கற்க வேண்டுமானால் கட்டாயம் தமிழ்நாட்டுக்கு தான் வரவேண்டும். வேறொரு சரியான இடம் இருக்க முடியாது.
O நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் அனு
பவம் பற்றி..? தமிழ்நாட்டுக்கு வந்து பார்த்ததில் எனக்கு கொஞ்சம் வருத்தம். நான் பெரிய பெரிய எதிர்பார்ப்புகளோடு வந்தேன். ஆனால் இங்கு நிலைமை வேறு. எங்கு போனாலும் சுத்தத் தமிழ் பேச மாட்டேன்கிறார்கள். வேறு வேறு மொழி குறிப்பாக ஆங்கிலச் சொற்கள் வாக்கி

Page 14
தலை சிறந்த தமிழ்ப்படைப்புகளை சீன பெயர்த்து வெளியிட வேண்டும்; ஆராய் சில கருத்துரைகள் எழுதி சீனமக்களுக் விக்க வேண்டும். இப்படியொரு கு எனககு.
யங்கள் கலந்தே பேசுகிறார்கள். இது மட்டு மல்ல. சில சஞ்சிகைகளை பார்த்தேன். அவற் றின் மொழி மோசம். என்னுடைய கருத்தில் மிக மோசம். தூய தமிழ் இல்லை. தஞ்சாவூர் கடைகளில் பெயர் பலகைகளை பாருங்கள். அது தமிழ் அல்ல; டீ, காபி என்று எழுதியுள் ளார்கள். தமிழை காண முடியவில்லை. இது மோசம்; மிக மிக மோசம்.
ஏனெனில் ஒரு தேசிய இனத்திற்கு மொழி தான் மிக முக்கியம். ஒரு தேசிய இனத்தின் கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றின் அடிப் படை அதன் மொழியே. ஆனால் என் கருத் துப்படி இப்போது தமிழைக் கலப்புமொழியாக்கி விட்டார்கள்.
இங்கே உள்ள பெரிய அறிவாளிகள் புத்தி ஜீவிகளிடம் சென்று பேசினால் அவர்கள் பேச்சில் 50 சதவிகிதம் சொற்கள் ஆங்கிலம்; சில சமயம் முழுவதும் ஆங்கிலத்திலேயே பேசு வார்கள். பள்ளி செல்லாத சிறுவர்கள் கூட தவறான உச்சரிப்பில் ஆங்கிலச்சொற்களை பேசு வதை பார்க்கிறேன். வாட்டர், டீ, ரைஸ் என் றால் எப்படி என்னால் புரிந்து கொள்ள முடி யும் ? தண்ணீர், தேநீர், சோறு என்று தமிழில் எழுதினால், பேசினால் என்ன ? ஆங்கிலம் பயன்படுத்துவதை கெளரவமாக கருதுகிறார் களோ என்னவோ ! என்னுடைய கருத்தில் இவர்களை சொல்லி குற்றமில்லை. பழக்கம் இப்படி மாற்றிவிட்டது. ஆனால் இது கவனிக் கத்தக்கப் பிரச்சினை. ܫ w
O தமிழ்மொழியைப் பயன்படுத்துவதில் இலங் கைக்கும் தமிழ்நாட்டுக்கும் வேறுபாடு இருக்கிறதா ? இலங்கைத் தமிழர்களும் ஆங்கிலம் கலந்தே பேசுகிறார்கள். சிங்கள மொழிச் சொற்கள் கலப்பும் இருக்கிறது. சமஸ்கிருதமும் கலந் துள்ளது. முகவரியை விலாசம் என்கிறார்கள். அவர்களின் உச்சரிப்பு மொழி தமிழ்நாட்டி லிருந்து வேறுபடுகிறது. ஆனால் எழுத்தில் பெரிதாக வேறுபாடில்லை.
C) இந்த மொழி கலப்புப் பிரச்சினை பல்வேறு தேசிய இனங்கள்-மொழிகள் உள்ள சீனா விலும் நிலவுகிறதா ?

பாலம்
மொழியில் இல்லை. சீனாவில் நிலைமை ap வேறுபட்டது. அங்கு மொத்தம் ಕಿ துெ 56 தேசிய မ္ဘိဓား၊rီနီနှီ ကြီမှီနိ်ု குத தா பெரும்பான்மை இனம் "ஹை" றிக்கோள் இனம். நான் கூட ஹை இனத் தைச் சேர்ந்தவன்தான். சீன மக்கள் தொகையில் 94 சதவிகி தம் ஹை இனம். மற்ற 55 இனங்களும் சிறுபான்மை தேசிய இனங்கள். ஆனால் சிறு பான்மை இனத்தினர் அவர்களின் சுயேச்சை பிரதேசத்திலே அவர்களுடைய மொழியில்தான் பேசுவார்கள்; எழுதுவார்கள். சில சிறுபான்மை இனங்களுக்கு பேச்சுமொழி மட்டும்தான், எழுத்து கிடையாது. அப்படிப்பட்ட நிலையிலும் அவர்கள் மொழிக்கு எழுத்துக்களை ஆக்கம் செய்ய அரசாங்கம் உதவி செய்தது. சீனாவின் பொதுமொழி அதன் பெரும்பான்மை இனத் தின் மொழியான ஹன் மொழிதான். எங்கு போனாலும் ஹன் மொழியே பேசுவார்கள். ஆனால் அயல்மொழிச் சொற்கள் கலந்து பேச மாட்டார்கள்; எழுத மாட்டார்கள். ஆங்கிலம் தெரிந்தவர்களும் தேவைப்படும் நேரத்தில் இடத்தில் மட்டுமே ஆங்கிலம் பேசுவார்கள். ஆனால் சீனமொழி பேசும்போது கட்டாயம் அயல்மொழி கலந்து பேசமாட்டார்கள்.
O சீன இலக்கியங்களோடு ஒப்பிட்டுப் பார்க் கையில் தமிழகத்திலிருந்து கிடைத்த உல கப் பெரும் இலக்கியச் சொத்தாக எதை கருதுகிறீர்கள் ? இங்கு வருவதற்கு முந்தி பண்டைக்கால சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நீதி இலக் கியம் எல்லாம் நான் படிக்கவில்லை. தமிழி லக்கிய வரலாறு படித்திருந்தேன். ஆனால் ‘சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை.பத்துப் பாட்டு உள்ளன, போன்ற வெறும் செய்திகள் போதுமா ? அது போதாது. திருக்குறள் மிகச் சிறப்பான இலக்கியம். உலகில் மு க் கிய மானது. ஆனால் இதை விளங்கிக் கொள்ள சீனாவில் வசதி இல்லை. அதனால்தான் இங்கு வந்தேன். சங்க இலக்கியம், திருக்குறள் நாலடியார் எல்லாம் படித்தேன். இதன் மூலம் தமிழிலக்கியத்தின் சிறப்பை மட்டுமல்ல, அந்த காலத்திய தமிழ்ச் சமுதாயம், மக்க ளின் வாழ்க்கை, பண்பாடு இவை எல்லாம் தெரிந் தேன். திருக்குறள் எனக்கு ரொம்பப் பிடித்த இலக்கியம்.
O திருக்குறளை மொழிபெயர்க்கும் எண்ண
முண்டா?
திருவள்ளுவரும் சீன அறிஞர் கன்ஃபியூசிய சும் சம காலத்தவர்கள். கன்ஃபியூசியசின்

Page 15
பாலம்
திருக்குறள் மிகச் சிறப்பான இலக்கிய முக்கியமானது. ஆனால் இதை விளங்கி சீனாவில் வசதி இல்லை. அதனால்தா வந்தேன். சங்க இலக்கியம், திருக்குறள், எல்லாம் படித்தேன்.
படைப்புகள் கூறும் தத்துவத்தை கன்ஃபியூசிய சிசம் என்போம். இருவரது படைப்புகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒற்றுமை வடிவத் தில் அல்ல; சிந்தனைகளில். நான் சீனாவிற்கு போன பிறகு இதுபற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். திருக்குறளை சீனமொழியில் பெயர்த்து வெளியிட வேண்டும். எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். இது என் திட்டம். திருக்குறள் ஏழு சீர் கொண்டது; ஆனால் சீன மரபு கவிதை வடிவத்தில் அப்படியே மொழிபெயர்ப்பது மிக கடினம். அந்த வடிவத் தில் இருந்தால் பொருள் கெட்டுப் போகும். அதனால் நான் நினைக்கிறேன் : முதலில் பொருள் நன்கு வெளிப்பட வேண்டும். எனவே மொழிபெயர்ப்பின் முதல் பதிப்பு உரைநடையில் அமைய வேண்டும்.
O இந்தியா மற்றும் தமிழ் நாட்டுடன் சீன தேசத்தவரது தொடர்பு குறித்து..? தொடர்பு பற்றிய செய்திகள் வரலாற்று ரீதியில் பார்த்தால், நிறைய உண்டு. சீனாஇந்தியா தொடர்பு குறித்தான பல செய்திகள் சீன வரலாற்றுச் சுவடிகளில் உள்ளன. இது நன்றாக ஆராய்ச்சி செய்யத் தக்கது. இரு நாட்டுக்குமிடையே பண்பாட்டு கலாச்சார பரி மாற்றம் தொடங்கி குறைந்தபட்சம் இரண்டா யிரம் ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. பெளத்த மதம் சீனாவில் பரவிய பிறகு இந் தியப் பண்பாடு பெரிய அளவில் சீனப் பண் பாட்டின் மீது தாக்கம் ஏற்படுத்தியது. சீனா வின் மொழி, இலக்கியம், கலை, மருத்துவம், வானவியல் போன்ற பல துறைகளில் இந் தியப் பண்பாட்டின் தாக்கம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டுடன் தொடர்பு என்று பார்த் தீால், குறிப்பாக ராஜராஜன், ராஜேந்திரன் காலத்து சோழ அரசாங்கங்கள் சீனாவுடன் அதிகாரப்பூர்வமான உறவு வைத்திருந்தன. ஒரு முறை சோழ நாட்டிலிருந்து 52 பேர் அடங்கிய ஒரு தூதுக்குழு சீனாவிற்கு வந்தது. இது பற்றி சீன வரலாற்றுச் சுவடிகளில் குறிப் புகள் உள்ளன. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு - தமிழ்நாட்டின் காஞ்சிபுரத் திற்கு சீனாவிலிருந்து அறிஞர் யென்-சாங் (யுவான் சுவாங்) வந்தார். அவர் சீனா திரும்

ம். உலகில் பியதும் ஒரு பயணக்குறிப்புப் க் கொள்ள புத்தகம் எழுதினார். அதில் ன் இங் 'திராவிடநாட்டின் தலைநகரம் கு காஞ்சிபுரம்’ எனும் தலைப்பில் நாலடியாா ஒரு அத்தியாயம் அது பெரும்
விவாதமாக இருந்தது.
பழங்காலத்திலே சீனாவிற்கும் தென்னிந்தி யாவிற்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது. வடஇந்தியாவுடன் தரைவழியாகவும், தென் னிந்தியாவுடன் கடல் வழியாகவும் சீனர்கள் தொடர்பு கொண்டார்கள். சமீபத்தில் தென் சீனாவிலே சென்ஜூ நகரத்தில் ஒரு பழங் காலத்திய (கி.பி. 11-ஆம் நூற்றாண்டு) கல் வெட்டை கண்டுபிடித்துள்ளார்கள். அ தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளது. கீழே ஒரே ஒரு வரி மட்டும் சீனமொழியில் உள்ளது.
இங்கே சர்க்கரையை சீனி என்கிறார்கள். சீனாவிலும் சீனிக்கு இதே அர்த்தமுண்டு. மற்றும் சீனவெடி, சீனக்களிமண் என்ற சொற் பிரயோகங்களையும் தமிழிலே காண்கிறோம். இங்கே தேநீர் என்பதிலுள்ள “தே’ உச்சரிப்பு சீனாமொழியில் குறிப்பாக சீனாவின் புட்டேன், ஹோண்டும் போன்ற தேயிலைத் தோட்டப் பகுதிகளில் தேநீரையே குறிக்கிறது. இது போல் சீனமொழியில் சமஸ்கிருதமும் கலந் துள்ளது. தேநீரை குறிக்கும் சா என்ற சமஸ் கிருத உச்சரிப்பு அதே அர்த்தத்தில் வடசீனா வில் பழக்கத்திலுள்ளது.
O சீனாவிலும் தமிழ்நாட்டிலும் நிலவும் மக் களின் வாழ்க்கைச் சூழலை ஒப்பிட்டுச் சொல்லுங்களேன்.? ܗܝ
பழங்கால சீனாவிற்கும் தமிழ் நாட்டுக்கும் சமய நம்பிக்கை, ஒழுக்கம், நன்னெறி என பண்பாட்டு ரீதியில் ஒற்றுமை இருந்தது. ஆனால் இப்போது இல்லை. 1949-ல் புரட்சி வெற்றி பெற்று சீன மக்கள் குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட பிறகு, சீன மக்கள் வாழ்க் கையில், பண்பாட்டில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முந்தி சீனாவிலே பெரும் பாலோர் பெளத்த மதத்தைச் சார்ந்தவர்கள், ஆனால் மத சம்பந்தமான மூடநம்பிக்கைகள், சடங்குகள் இப்பொழுது இல்லை. அவை எனக்கு மூத்த தலைமுறையினர் சிலரிடம் ஒட்டி உள்ளதே தவிர, பெரும்பாலும் ஒழிந்து விட்டது. சீனாவிலே ஹொய்னி இன முஸ்லீம்களும் மற்றும் கிறித்துவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் கோயில்களும் உள்ளன. ஆனால் இப்போது கோயிலுக்கு செல்பவர்கள் குறைவு; ரொம்ப குறைவு.

Page 16
ஆனால் தமிழ்நாட்டில் நான் பார்க்கிறேன். இங்கே கிட்டத்தட்ட எல்லோருக்கும் சமய நம்பிக்கை உண்டு. தலைவிதி. தலையெழுத்து என்ற நம்பிக்கை உண்டு. சீனாவிலே இது மூடநம்பிக்கை.
சீனாவிலே சமத்துவம் உள்ளது. ஆண் களுக்கு பெண்களுக்கு மட்டுமல்ல. எல்லோரும் சமம் என்ற உணர்வுடன் வாழ்கிறார்கள். அங்கே ஒரு பேராசிரியரும் தொழிலாளியும் சமமாக உட்கார்ந்து பேசலாம். இங்கே நான் பார்த்தேன். தொழிலாளிகள் பேராசிரியர் களோடு சமமாக அமர்ந்து பேசமுடியாத அவல நிலை. இதுபோன்ற காட்சிகள் சீனாவில் இல்லை. வேலையில் வேறுபட்டிருக்கலாம். ஆனால் மனிதன் என்ற முறையில், சீனாவில் எல்லோருக்கும் சம உரிமை.
அங்கே எல்லோருக்கும் வேலை. எல் லோருக்கும் ஊதியம். ஆனால் இங்கே வேலை யில்லாத் திண்டாட்டம் பெரிசாக இருக்கிறது. அங்கே பெரிய பணக்காரன் இல்லை; மிக ஏழ்மையான பிச்சைக்காரனும் இல்லை. இங்கோ சிலர் பெரும் பணக்காரர்களாக இருக் கிறார்கள். பலர் கஷ்டப்பட்டு உழைத்தும் சேரியில் வாழ்கிறார்கள்; பிச்சைக் காரர்களும் இருக்கிறார்கள். இதுதான் பெரிய வித்தியாசம். இது சீனாவிலும் இங்கும் உள்ள சமுதாய அமைப்பின் அடிப்படையான வித்தியாசம். O சீனாவில் புத்திஜீவிகளுக்கு மாவோ காலத்
தில் தரப்படாத தனிமதிப்பு இப்போது
அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறதே ?
சீனாவில் படித்த அறிவாளிகளுக்கு ஊதி யம் மிக குறைவு. சில சமயம் தொழிலாளியை விட குறைவு. இது அநியாயமான நிலை. சமத்துவம் என்பதெல்லாம் அரசியல், உரிமை கள் மட்டத்தில்தான். ஆனால் உண்மையில் அங்கே சில வேறுபாடுகள் இன்னும் இருக் கின்றன. h−
உழைப்புக்குத் தகுந்த ஊதியம் என்பதே சோசலிசநாட்டுக் கோட்பாடு. ஒருவர் 20 ஆண்டுகள் படித்துவிட்டு வேலைக்கு போனார். மற்றொருவர் 10 ஆண்டுகள் படித்தப்பின் தொழிற்சாலைக்குப் போனார். அவர்கள் செய் கின்ற தொழிலில் வித்தியாசமிருக்கிறது. ஆகை யால் ஊதியத்திலும் வித்தியாசம் இருக்க வேண்டும். இல்லையென்றால் அது அநியா யம். எனவேதான், ‘புத்தி ஜீவிகளுக்கு மதிப்ட கொடுக்க வேண்டும்; அப்போதுதான் நாடு வளர்ச்சி அடையும்’ என்ற கருத்து சமீட காலமாக சொல்லப்படுகிறது. ஆனால் எனச் குத் தெரிந்த வரையில் புத்திஜீவிகளின் ஊதி யம் பழைய நிலையில்தான் உள்ளது. எது வாயினும், ஊதிய விகிதத்தில் இங்குள்ளதைப் போல் பெரிய வித்தியாசம் அங்கு இல்லை

பாலம்
O சீன எழுத்தாளர் லூசுனின் படைப்புகள் மட்டுமே ஆங்கில வழியாக தமிழில் வந் துள்ளன. வேறு மொழிபெயர்ப்புகளை வெளியிட சீனா ஏன் முயற்சிக்கவில்லை? பீகிங் அயல்மொழி பதிப்பகத்தின் தமிழ்க் குழுவில் நான் வேலை பார்த்ததை முன்னமே சொன்னேன். அந்தப் பதிப்பகம் சார்பாக தலைவர் மாவோவின் நூல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டோம். அந்த நூல்கள் இலங்கைக்கு நன்கு அறிமுகமாகி உள்ளது. ஆனால் இந்திய அரசாங்கத்தின் தடையால் இங்கே வரவில்லை. பீகிங் அயல் மொழி பதிப்பகத்திலிருந்த தமிழ்க்குழு கலைக் கப்பட்டுவிட்டது. அதை மீண்டும் கூட்டி தமிழ் மொழி மதிப்பை தொடங்க வேண்டும் என்று நான் இங்கு வந்த பின் சீனாவிற்கு கடிதம் எழுதினேன். எங்களுக்கும் தமிழ்ப் புத்தகங்கள் தேவைப்படும் நிலை. நீங்களும் கடிதம் எழு துங்கள். O சீனாவிற்கு விரைவில் திரும்ப உள்ளீர்கள். தமிழ்நாட்டுக்கு நீங்கள் வந்ததற்கான நோக்கம் நிறைவேறிவிட்டதா ?
இங்கே வருவதற்கு முந்தி என் ஒரே நோக்கம், தமிழ்நாடு போய் தமிழிலக்கியம் நன்றாக படிக்க வேண்டும் என்பதே. ஆனால் இலக்கிய ஆராய்ச்சி செய்பவனுக்கு இலக்கியம் படிப்பது மட்டும் போதாது. ஒரு நாட்டின் இலக்கியம் என்பது அந்நாட்டின் சமுதாயம், வரலாறு, பண்பாடு, சமயம், தத்துவம் சம்பந்த மானது. ஒரு புதினம் வாசித்து நன்றாக புரிந்து கொள்ள வேண்டுமானால் அதில் வரும் மனிதர்கள் வாழும் சூழ்நிலையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நோக் கத்தோடுதான் இங்கு வந்தேன். என் நோக்கம் நிறைவேற இங்குள்ள நண்பர்கள், ஆசிரியர் கள் அனைவரும் உதவி செய்தார்கள். வந்து திரும்புவதில் திருப்தி உள்ளது. சில தலை சிறந்த இலக்கியப் படைப்புகளை வாங்கி சீனாவிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்த வேண்டும் என்பதும் என் நோக்கம். இந்த வருடம் அக்டோபர் வரை நான் இங்கே இருக்க வேண்டும். ஆனால் இந்த மாதத்திற்குள் போக வேண்டியதாகி விட்டது. பல நண்பர்" கள் அன்பளிப்பாக புத்தகங்களைத் தந்துள்ளார் கள். தற்காலத் தமிழ் நாவல்கள், சிறுகதைகள், நாடோடிக் கதைகள், ஆய்வுக் கட்டுரைத் தொகுதிகள் என்று தாமாக வேறு புத்தகங்களை வாங்கியுள்ளேன். இவற்றோடு உங்களுடன் தமிழ் நாட்டில் நான் வாழ்ந்த நினைவுகளை யும் சுமந்து கொண்டு சீனா செல்கிறேன்.
பேட்டி : மதிவாணன் செல்வபாண்டியன்

Page 17
பெய்ஸ் அ
தனிமை
துயர் படிந்த என் மனதைத் தேற்ற யாராவது வந்திருக்கிறார்களா? இல்லை, இல்லை-யாரோ வழிப்போக்கன் அவன் போகும் இடம் வேறு.
வானம் வரை நிறைந்த இருள் திக்கற்ற சில நட்சத்திரங்களையும் மூடி மறைக்கிறது. தூங்கி வழியும் சில விளக்குகள் தாழ்வாரத்தில் ஆடி விழுகின்றன. காத்திருந்து, காத்திருந்து அலுத்துப் போய் சாலைகள்கூட உறக்கத்தில் ஆழ்ந்தன, முன்னால் பதிந்த காலச் சுவடுகள் சுழன்று பறக்கும் புழுதியினால் மறைந்தன! விளக்கை அணையுங்கள், மதுக் கிண்ணங்களையும், திராட்சை ரசத்தையும் உடனே அகற்றி விடுங்கள். என்னோடு கண்விழித்து அலுத்துப்போன கதவுகளின் தாழ்ப்பாள்களையும் உடனே மூடி விடுங்கள். இனிமேல் என்னைத் தேடி யாரும் 6 UT DIT LITT SB56TT . ஒருவருமே வரமாட்டார்கள்!
--மூலம்: உருது (
பார்த்துக்
உன் கால்விரல்களில் தீ பற்றிக் கொண்ட பின்னும், பார்த்துக் கொண்டிரு அதை. யாரேனும் காப்பாற்ற வரக்கூடும்.
உன் வீட்டுப் பெண்டிரின் புடவை நுனி வெறிக் கரங்களில் சிக்கும்வரை பதறாதே. உன் சுவர்களுக்கு வெளியே எது நடந்தால் என்ன?
உன்வீடு.
உன்தொழில்.
உன் மனைவி.
உன் பிள்ளை.
உன் உலகம் . பெட்ரோல் விலையேற்றம்தான் கொஞ்சம் பிரச்னை.

கமது பெய்ஸ்
இந்த இரவில் வேண்டாம்
சோகம் சொட்டும் அந்த இசையின் நரம்புகளை இன்று மீட்ட வேண்டாம். வேதனை நிறைந்த என் இறந்த காலம் என் மனத்திலிருந்து நாடு கடத்தப்பட்டது நாளைக்கு என்ன நடக்கும் என்பதை யாரறிவார்?
இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் பிரிக்கும் எல்லைக் கோடுகள் மங்கிப் போய் விட்டன. பொழுது விடியாவிட்டால் போகட்டும். நான் கவலைப் படவில்லை.
உயிரோடிருப்பதன் பெயர் வாழ்க்கையா? சீ வேண்டாம் இந்த நரகம்! ஆனால் இந்த இரவு மட்டும் தேவதைகளுடன் நடனமாடுவேன்!
1 தமிழில்: காதம்பரி
கொண்டிரு
நாளை,
உன் தெருவில் இரும்புப் பூட்சுகள் மனிதத்தை மிதித்து நசுக்கும் போதும், வானத்திலிருந்து குண்டுகள் வீசப்படும் போதும், உன் புனிதக் கதவுகளை உடைத்து நொறுக்கி விட்டு ஹிட்லரின் வெறிநாய்கள் உள் நுழையும் போதும், கவலையற்றிரு.
நொறுங்கித் தூளாகிக் கிடக்கும்
உன் வீடெங்கும்சுப்ர பாத கேஸெட்டும், விஸ்கி, பிராந்திப் பாட்டில்களும், உன் இனிய மென்மையான வாழ்க்கையும்.
புதிய ஜீவா

Page 18
ஸ்லவோமிர் ம்ரோசெக்
தமிழில் : மனசு
5sări) : IMPRINT
அந்த மிருகக் காட்சிசாலையின் டைரக்டர் ஒரு அற்பமான ஆசாமி. மிருகங்களை தன் முன்னேற்றத்திற்கான வெறும் கருவிகளாக நினைப்பவர். கல்வி சம்பந்தமாக அது முக்கிய மான இடமாயிற்றே என்பதெல்லாம் அவருக் குப் பெரிசில்லை.
அங்குள்ள ஒட்டைச்சிவிங்கிக்கு கழுத்து குட்டையாக இருக்கும். நீர்நாய்க்கு வளை கிடையாது. மைனாக்கள் எப்போதாவது சுரத்தில்லாமல் ஏனோ தானோ வென்று சீட்டி யடிக்கும். பள்ளிக் குழந்தைகள் அடிக்கடி பார்க்க வருகிற இடத்தில் இப்படிப்பட்ட குறை கள் இருக்க விடலாமா.
மிருகக் காட்சிசாலை மாநிலத் தலைநகரில் இருந்தது. அங்கே ரெம்ப முக்கியமான சில மிருகங்களுக்குப் பஞ்சம். அதில் யானையும் ஒன்று. ஆயிரம் முயல் இருந்து என்னசெய்ய. கம்பீரமான ஒரு யானைக்கு நிகராகுமா. எப்படியோ, சரியாகத் திட்டமிடப்பட்ட முறை யில் குறைகள் தீர்க்கப்பட்டுத்தான் வந்தன. நாடு முன்னேறி விட்டதில்லையா.
ஜூலை 22. நாட்டுக்கு வி டு த  ைல கிடைத்த நாள். அந்தக் கொண்டாட்டத்தை யொட்டி மிருகக்காட்சி சாலைக்கு ஒரு யானை ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்தது. கருமமே கண்ணாயிருக்கும் ஊழியர்களுக்கு இந்தச் செய்திகேட்டு ஆனந்தம். ஆனால் அந்த யானைக்குப் பதிலாக ரெம்பவும் சிக்கன மான முறையில் வேறு யானை வாங்குவதற் குத் திட்டம் தீட்டி வார்சாவுக்குக் கடிதம் எழுதிவிட்டார் டைரக்டர், இந்த விஷயம் அவர்களுக்குத் தெரியவந்தபோது இன்னும் பெரிய ஆச்சரியம். புதுத்திட்டம் இதுதான்;
“யானையை முன்னிட்டு போலந்து சுரங் கத் தொழிலாளர்களுக்கும் உலோக ஆலைத் தொழிலாளர்களுக்கும் எவ்வளவு பெரிய சுமை என்பதை நானும் ஊழியர்களும் நன்கறிவோம். நமது செலவுகள் குறைக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன். அதற்கு இதோ ஒரு யோசனை. தங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட யானைக்குப் பதிலாக நாங்களே ஒன்றை வாங்கிக் கொள் கிறோம். அதே அளவுக்கு ரப்பரில் யானை செய்து காற்றடைத்து கிராதிக்குப் பின்னால் வைத்து விடலாம். அதே நிறத்தில் ஜாக்கிர தையாக பெயின்ட் அடித்து விடலாம். கிட்டத் திலிருந்து பார்த்தால்கூட நிஜ யானைக்கும்
S

T6)6OT
போலந்துச் சிறுகதை
அதற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. யானை மந்தமான மிருகம் என்பதும் ஓடி யாடிக் குதிக்காது என்பதும் தெரிந்ததே. அதிலும் இந்த யானை படு மந்தம் என்று நோட்டீஸ் போர்டு எழுதி கிராதியில் மாட்டி விடலாம். இந்த வழியில் மிச்சமாகும் பணத்தை ஜெட்விமானம் வாங்கவோ தேவாலய நினை வுச் சின்னத்தைப் பாதுகாக்கவோ பயன் படுத் தலாம்.
இந்த யோசனையும் செயலும் பொதுப் பணிக்கும் போராட்டத்திற்கும் எனது எளிய காணிக்கையாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
என்றும் நான்.இப்படி.” இந்தக் கடிதம் ஒரு ஆத்மா இல்லாத அதிகாரி கையில் கிடைத்திருக்கணும். முழுக் கவும் அதிகாரத் தோரணையில் கடமையைச் செய்கிற அவர் இந்த விஷயத்தின் முக்கியத் துவம் பற்றியெல்லாம் பரிசீலிக்கவில்லை. செல வைக் குறைக்கணுமென்று உத்தரவு இருக்குது. அதன்படி நடந்தார். டைரக்டர் அனுப்பிய திட்டத்தை ஏற்றுக் கொண்டார். மந்திரி சபை யின் ஒப்புதலும் கிடைத்துவிட்டது. ரப்பர் யானை செய்ய டைரக்டர் தடபுடல் படுத் தினார்.
இரண்டு யானைப்பாகர்கள் ஆளுக்கொரு புறமிருந்து ரப்பர்யானையின் உடம்பில் காற்று ஊதி புடைக்கவைக்க வேண்டியிருந்தது. இந் தக் காரியம் கமுக்கமாக இருக்கணும் என்பதற் காக ராத்திரியிலேயே செய்து முடிக்கவேண்டிய நிலைமை. ஏனென்றால் மிருகக் காட்சி சாலைக்கு யானை வரும் செய்தி கேட்டு நகரத்து ஜனங்கள் அதைப் பார்க்க ஆவலாக இருந்தார் கள். டைரக்டர் நடவடிக்கைகளை துரிதப் படுத்தினார். அவருடைய யோசனையை வெற்றிகரமாகச் செய்து முடித்தால் போனஸ் கிடைக்குமே.
யானைப் பாகர்கள் இருவரும் ஒரு கொட்ட கையைப் பூட்டிக் கொண்டு ஊத ஆரம்பித்தார் கள். அந்த கொட்டகையில் பொதுவாக பட் டறை இருக்கும். முக்கி முக்கி இரண்டு மணி நேரம் ஊதியும் ரப்பர்தோல் தரையிலிருந்து இரண்டு அங்குலம் தான் எழும்பியிருந்தது. அந்த ஊத்தமும் கொஞ்சங்கூட யானைச் சாய லுக்கு இல்லை.
ராத்திரி நேரம் கரைந்து கொண்டிருந்தது. வெளியே மனுஷ சத்தங்கள் ஓய்ந்துவிட்டன.

Page 19
பாலம்
ஆண் கழுதையின் கனைப்பு மட்டுமே இருட் டின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந் தது. களைத்துப்போன யானைப் பாகர்கள் ஊதுவதை நிறுத்தி விட்டு உள்ள காற்றும் வெளியேறுகிறதா என்று பார்த்துக் கொண்டார் கள். அவர்கள் இளைஞர்களில்லை. இந்த மாதிரி வேலை செய்து பழக்கம் கிடையாது. ஒருவன் சொன்னான்:
‘நம்ம இந்தக் கதியில போனா விடியிற துக்குள்ள முடிச்சுக்கிற மாட்டொம். என் வீட்டுக்காரியிட்ட என்ன சொல்லட்டும். ராத் திரி முழுக்க யானத்தோல ஊதிக்கிட்டிருந் தென்னு சொன்னா நம்பவே மாட்டா.”
மற்றவன் ஆமோதித்தான்.
*அது சரிதான். தெனமும் ஊதிக்கிட்ருக் கிறது தானா வேல. எல்லாம் நம்ம டைரக்ட ரால வந்த வென. ஐயா இடதுசாரியாச்சே.”
மறுபடியும் ஊதத் தொடங்கினார்கள். அரை மணிக்கு மேல் விடாமல் ஊத முடிய வில்லை. ரப்பர் ஊத்தம் முந்திக்கு இப்போது பெரிசாகியிருந்தது. ஆனால் யானைச் சாயல் தான் இல்லை.
முதல் பாகன் சொன்னான். **போகப் போக ரெம்ப கஸ்டமாருக்கே” இரண்டாம் பாகன் மறுக்கவில்லை.
**ரோதனையான வேலையாப் போச்சு.
சரிசரி கொஞ்ச நேரம் தவிப்பாறிக்கிருவொம்.”
அவர்கள் தவிப்பாறும்போது காற்றடிக்கும் குழாயொன்று ஒருவன் கண்ணில் பட்டது. குழாயின் துனியில் வால்வு இருந்தது. அடடா யானைக்குள் காற்றடித்து விடலாமே. மற்ற வனிடம் இந்த யோசனையைச் சொன்னான்.
அந்தப்படியே முயற்சி செய்வதென்று முடிவுக்கு வந்தார்கள். யானையை குழாயில் பொருத்தி வால்வைத் திருகினார்கள். கொஞ்ச நேரந்தான், கொட்டகைக்குள் முழு உருவத் தில் ஒரு மிருகம் நின்றது. அவர்களுக்கென் றால் சந்தோஷம். நிஜ யானையே தான். பெருத்த உடம்பு. துணைப் போல கால்கள். சுளகுக்காதுகள். நீண்டு தொங்கும் துதிக்கை. பேராசை பிடித்தாட்டிய டைரக்டருக்கு தெம்பு வந்தது. அடேங்ப்பா, மிருகக் காட்சிசாலை யில் நிஜமாகவே ரெம்பப் பெரிய யானை நிற் கப் போகிறது.
காற்றடிக்கும் யோசனை சொன்ன பாகன் துள்ளினான்.

*அருமையாருக்கு. இனிமே நம்ம வீட்டு குப் போகலாம்”.
காலையில் யானை விசேஷமாக மிருகக் காட்சி சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. குரங்குக் கூண்டுக்கு அடுத்து 6óL鳕LQ厂6芯丁 இடத்தில் நிறுத்தினார்கள்.
பெரிய நிஜமான பாறைக்கு முன்னால் நின்ற யானை பயங்கரமாகவும் அற்புத்மாக வும் தோற்றமளித்தது. கிராதியில் பெரிய நோட்டீஸ் போர்டு,
**இது குறிப்பாக மந்தமானது. அரி தாகவே அசையும்.”
அன்றைக்குக் காலையில் முதலாவது வந்த பார்வையாளர்களில் உள்ளூர் பள்ளிக் குழந்தை களின் குழுவும் ஒன்று. அவர்களைக் கூட்டி வந்திருந்த வாத்தியார் யானையைப் பற்றி நேருக்கு நேரான பாடம் நடத்தத் திட்டமிட் டிருந்தார். யானைக்கு முன்னால் அவர்களை நிறுத்தி பாடத்தை ஆரம்பித்தார்.
'யானை சாகபட்சணியான பாலூட்டி
இனத்தைச் சேர்ந்தது. துதிக்கையால் மரக் கன்றுகளைப் பிடுங்கி இலைகளைத் தின்னும்.”
குழந்தைகள் ஆர்வம் கொப்பளிக்க யானையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது மரக் கன்றைப் பிடுங்குவதைப் பார்க்கணு மென்று காத்திருந்தார்கள். ஆனால் அந்த மிருகம் கிராதிக்குப் பின்னால் இன்னும் சும்மா நின்று கொண்டிருந்தது.
** யானையானது பண்டைய காலத்தில் உயிர் வாழ்ந்து அழிந்து போன ராட்சத யானையின் நேரடி வம்சமாகும். ஆகவே இதுவே நிலத்தில் வாழும் மிகப் பெரிய மிருகம் என்பதில் ஆச்சரியமில்லை.”
மாணவர்கள் ரொம்ப அக்கறையாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
**திமிங்கலம் ஒன்றுதான் யானையைவிட அதிக எடையுள்ளது. ஆனால் அது கடலில் வாழ்கிறது. அதனால் நிலத்தில் யானைதான் ராஜா என்று அடித்துச் சொல்லலாம்.”
மிருகக்காட்சி சாலையின் மரக்கிளைகள் காற்றுக்கு அசைந்தன.
*"முழு வளர்ச்சியடைந்த ஒரு யானையின் எடை ஒன்பதாயிரம் முதல் பதிமூன்றாயிரம் ராத்தல்களாகும்.”

Page 20
ஈழத்துக்
மனிதன்
கடவுள் என் கனவில் தோன்றினார் சுவர்க்கத்தின் வாயிலையும் நரகத்தின் வாயிலையும் திறந்துவைத்துக்கொண்டு
நீயார் என்றார் கடவுள் மனிதன் என்றேன் உன் பெயர் என்ன என்றார் மனிதன் என்றேன் உன் இனம் என்ன என்றார் மனித இனம் என்றேன் உன் மதம் என்ன என்றார் மீண்டும் மனிதம் என்றேன்
சரி நீ சுவர்க்கம் புகக்கடவாய்
என்றார் கடவுள் ஒரு புன்னகையுடன்
அந்தோ என் கனவு கலைந்ததும் நான் நரகத்தில் கிடக்கக் கண்டேன்
எம். ஏ. நுஃமான்
அந்தக் கணத்தில் யானை காற்றுக்கு நடுங்கி மேலே எழும்பியது. சில வினாடிகள் தரைக்குச் சற்று உயரத்தில் ஊஞ்சலாடியது. ஆனால் திடீரென வந்த காற்று அதன் பருத்த நிழலுருவம் ஆகாயத்துக்கெதிராகத் திரும்பும் வரை மேல் வாக்கில் தள்ளியது. அதன் பாத வட்டங்களையும் பானை வயிற் றையும் துதிக்கையையும் தரையிலிருந்த ஜனங் களால் கொஞ்ச நேரம் பார்க்க முடிந்தது. சீக்கிரத்திலேயே காற்றின் உந்துதலால் வேலிக்கு மேலே மிதந்து மர உச்சிகளுக்கப் பால் மறைந்து விட்டது. கூண்டுக்குள்ளிருந்த குரங்குகள் பிரமித்துப் போய் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.

விதைகள்
குயிலின் காதல்
குக்கூ குக்கூ குக்கூப் பாடல் மூடிய கண்களுள் இதயம் விழித்தது. எனது கிராமத்து ஒரடிப்பாதையில் "வான்கோ தனது பொற்றுாரிகையால் தீண்டிய தமது வயல்வெளிப் பரப்பில் வசந்தக் குழந்தைகள் ஒளித்துப் பிழைக்கும் கானகங்களில் சென்ற நூற்றாண்டின் பலூன் பயணிபோல் உல்லாசமாக மிதத்து செல்கிறேன் அதிகாலையிலே சன்னலின் வெளியே கொய்யாமரத்தின் கிளைகளிலமர்ந்து ஏழை எனக்காய் கவிபாடுகிறாய்! நொந்துபோன எனது நெஞ்சுக்கு தேன்சிந்தும் நாவால் ஒத்தடம் தருகிறாய் நன்றி, பூங்குயிலே! விரக்திப் புதைகுழி தகர்த்து மீண்டும் உயிர்த்தெழுகிற தெம்பைப் பெற்றேன்! வாழிய குயிலே! எனது கிராமத்துத் தெருக்களிலிருந்து விரட்டப்பட்ட நாள்முதலாக உலகப்பந்தில் தெரு நாயாக ஒடி இளைத்தேன். கொழும்பு நகர கட்டிடக் குவியலுள் கொங்கிறீட் பொந்துள் எலிபோல் வாழ்கிறேன். எனினும் மனிதன் நான்என உணர்த்தும் இனியபாடலை இசைக்கிறாய் குயிலே! காடாய் அநீதியும் தோல்வியும் சூழினும் மானிட இருப்பு இனிதெனும் கவிதையை இன்னமும்பாடுக!
எங்கும் பாடுக!
வ. ஐ. ச. ஜெயபாலன்
அடுத்துள்ள தாவரவியல் பூங்காவில் யானைவி ழுந்து கிடந்தது. கள்ளிச் செடியில் இறங்கியதால் ரப்பர் தோலில் முள் குத்தி பழுதடைந்து விட்டது.
மிருகக் காட்சி சாலையில் நடந்த கதை யைப் பார்த்த பள்ளிக் குழந்தைகள் விரை விலேயே படிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு ரவுடிகளாக மாறிவிட்டனர். அவர்கள் சாராயம் குடி த் து விட்டு ஜன்னல்களை உடைத்துக் கொண்டு திரிவதாகத் தகவல். அவர்களுக்கு யானைமேல் நம்பிக்கையற்றுப் போயிற்று.
O

Page 21
பாட்டி தனியாய்ப் போய் விட்டாள். காபிப் போட்டு காலையில் வந்து யாரும் எழுப்ப வில்லை. சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளி என்று யாரும் அடம்பிடிக்கவுமில்லை. பாட்டியின் இடம் வானம் ' பார்த்த சமவெளி மாதிரி வெறுமையாய் இருக்கிறது.
பாட்டிக்கு நிறைய வேடமிட தெரிந்திருக் கிறது. பச்சைக் குழந்தையிலிருந்து, சமவயது நபர்கள் முகபாவம் வரை நொடியில் பாட்டி முகத்தில் வந்து போகும். அவரவர் ரசனைக் கேற்ப அவரவர் பாணியில் அவரவரிடம் ஸ்நே கிதமாய் கைகுலுக்கிப்போவாள்.
பாட்டி நல்ல ரகம். நல்ல சரீரம். நல்ல சாரீரம். இந்த ஒன்னரை வருடத்தில் நிறைய மாறிப்போய் இருக்கிறாள். இரண்டு முறை ப்ரஷர் வந்து படுத்ததில் எல்லோரையும் நிறையவே கலக்கிவிட்டாள். ஒரு முறை கிணற் றடியில் வழுக்கி விழுந்து, தொடைக்கு மேலே அடிபட ஒரு வாரம் நடமாடவில்லை.
அந்த ஒரு வாரத்தில் பாட்டிக்கு எல்லாம் கிருஷ்ணன்தான். அதில்தான் பாட்டி இவனுக் குள் ரொம்பவும் நெருக்கமாய் வந்து உட் கார்ந்து கொண்டாள். நல்ல ஸ்நேகிதியாய் இருந்தாள். நிறைய பேசினாள். ஊடே சில சமயம் அம்மாவை குறைப்பட்டுக் கொண்டாள். * 'இந்தக் குழந்தையை வளர்க்க நான் என்ன பாடுபட்டேன்.” பாட்டி வெறும் அம்மாவாய் இருந்து அம்மாவை வளர்த்த கதை சொல்லு வாள். கேட்க மலைப்பாய் இருக்கும். இன்னும்
நிறைய கேட்க வேண்டும் போல் இருக்கும்.
பாட்டிக்கு சூடு பறக்க தலையில் தைலம் தேய்த்து விட்டுக்கொண்டே கேட்பான். நெற்றி கருந்தோலில் தைலம் பட்டு விரல்கள் வழுக்கி வழுக்கி அந்தப்புறமும் இந்தப்புறமும் ஏதோ பயணம் போகிற அவசரத்தில் மாறி மாறிக் கொண்டிருப்பது ரொம்ப பிடித்திருந்தது. சுட்டு விரலின் நுனியில் சூடாய் சுகமாய் இருக்கும். பாட்டி போதும் என்று சிறிது நேரம் கண்மூடி லயித்துப் போவாள். பிறகு மூக்கு உறிஞ்சி சரியாய் விட்ட இடத்திலிருந்து தொடங்குவாள்.
அது ஒரு அரையாண்டு தேர்வு விடுமுறை. அதுதான் ரொம்ப செளகர்யமாய் போய் விட்டது. இல்லையென்றால் பாட்டி தனியாய் அவஸ்த்தைப் பட்டிருக்க வேண்டியதுதான். இவன் கூட பக்கத்தில் உட்கார்ந்து கவனித் திருக்கமுடியாது. காலையில் அப்பா பைக்

சிக்கிமுக்கிக்கல்
- ரோகாந்த்
உதைத்ததும் பின்னால் போய் தொற்றிக் கொள்ளவேண்டும். போகிற வழியில் ஸ்கூல் ரோடுதொடர்கிற பிரிவில் பிரிந்து போக வேண்டும். அம்மா எட்டு மணி பஸ் பிடிக்க குட்டியை இழுத்துக் கொண்டு போய் கான் வெண்டில் விட்டு விட்டு ஓடுவாள்.
ஆக வீட்டில் எட்டிலிருந்து ஆறுவரை பாட்டி சாம்ராஜ்யம் தான். அது மட்டும் விடு முறை நாட்களாய் இல்லா விட்டால், அந்த சாம்ராஜ்ய நேரத்தில் பாட்டி தனியாய் கண் மூடி முணங்கி நிறைய மூளையை கசக்கிக் கொண்டு சவமாய் கிடந்திருக்க வேண்டும். வாசல் எல்லாம் பூட்டி கட்டிலில் கிடத்தியிருக்க வேண்டும். நடக்க முடியாமல் காலை இழுத்துப் போட்டு இடுப்பை பிடித்து நடந்து போய் தேவைகளை பூர்த்தி செய்ய தனியாய் தவித் திருக்க வேண்டும்.
இவன் கூட இருந்து ஒத்தாசை செய்ததில் பாட்டிக்கு ரொம்ப சாந்தோஷம். நிறைய பேசினாள். 'நா வளர்ந்த பிள்ளையாச்சே." என்று நிதானமாய் மூச்சு விட்டு விஷயங்களுடே இளைப்பாறிக் கொண்டாள்.
பத்து வயது வரை இவனை பாட்டிதான்
வளர்த்தாள். பாட்டியின் கைகளில் குழந்தை வளர்க்கிற நேர்த்தி இருந்தது. மிரட்டாமல் உருட்டாமல் வழிக்கு கொண்டு வருகிற பாங்கு தெரிந்திருந்தது. விஷயம் கற்றுக் கொடுப்பதில் ஆவல் இருந்தது. இருக்காதா பின்ன..? ஒரு கிராமத்து குழந்தைகளை ஒன்றாய் ஒரு கூரை யின் கீழே வைத்து எழுத்து கற்றுக் கொடுத்த ஆசிரியை ஆயிற்றே.
எல்லாம் அந்த ஒரு வார படுக்கையில்
சொன்னாள். திடுமென முணுமுணுத்துக் கொண்டே "உனக்கு இந்தப் பாட்டு தெரியுமா கிருஷ்ணா.” என்று கேட்டாள்.
'என்ன பாட்டு பாட்டி.”
‘யாரடி காதலி கேளடி.” கீழ்க்குரலில் ஒரு வரி பாடி நிறுத்தினாள். 'தமிழ் ஒளி எழுதினது தெரியுமாடா..?”
இவ்ன் தெரியாது என்று தலையாட்டி னான். W
பாட்டி கொஞ்ச நேரம் தரை பார்த்து விட்டு ராகத்தோடு பாட ஆரம்பித்தாள்.

Page 22
10
யாரடி காதலி கேளடி-உந்தன் ஆசைக் குரியவன் சொல்கின்றேன் பாரடி மானிடச் சாதியை-அவர் பட்டிடும் துன்பத்தைப் பாரடி மாரடித் தேழைகள் மாய்கிறார்-சிலர் " மஞ்சத்தில் உண்டுமே சாய்கிறார் தேரடி பட்டிடுந் தூளெனத்-தொழில் செய்பவர் நாளுந் துடிக்கிறார். பாட்டி மெதுவாய் நிறுத்தி யோசித்தாள்.
"நிறைய இருக்கு எனக்கு மறந்து போச்சு.” தன்னை நொந்து கொள்வது போல் சொல்லிக் கொண்டு, தனக்குள்ளேயே நிறைய வரிகளை மாற்றி மாற்றி பாடிக் கொண்டாள். நிமிட இடைவெளியில் மறுபடியும் பாடினாள்.
மக்களுக்காக உழைக்கவும்-அவர் வாழ்விடர் முற்றும் ஒழிக்கவும் தக்க செயல் செய்ய எண்ணினேன்.எனைத் தாவி அழைத்தது தேசமும்! இக் கருத்தோடுன்னைக் கேட்கின்றேன்
-உந்தன் இன்பம் எதிலுண்டு சொல்லடி! இக்கணந் தொட்டு நம் ஆசையும்-காதல் இன்பமும் மக்களின் தொண்டடி! - பாட்டியின் இமையோரம் சின்னதாய் நீர்த்திவளைகள் தொண்டையை அழுத்தி தடவிக் கொடுத்தாள். 'முன்ன மாதிரி பாட முடியல.” நிலம் பார்த்துச் சொன்னாள். ‘அற்புதமான பாட்டு கிருஷ்ணா.காதல் இன்பம் மக்களின் தொண்டாம், புரியுதா. இந்த பாட்ட முதல்ல படிச்சப்ப அப்படியே உங்க தாத்தா நினைவு...” நீளமாய் மூச்சு விட்டாள். V. w
தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீர ராம். சரிதான் இப்பொழுது பாட்டிக்கு பென்ஷன் வருகிறதே.
பாட்டி பாடி முடித்து நீளமாய் மூச்சு விட்டபின் வாய் திறக்கவில்லை. அன்றைய பொழுது ரொம்ப கஷ்டமாய்ப் போனது.
தவிப்பாய் இருந்தது.
பாட்டி அந்த மாதிரி இருந்து பார்த்த தில்லை. என்னவாகி விட்டது. பாட்டி ரொம்ப நேரம் அப்படித்தான் இருந்தாள். பாட்டி அப்படி வாயடைத்து இருப்பது சகிக்க முடி யாததாய் இருந்தது. நீளமாய் கிடந்த வீட்டில் பேச்சுத் துணைக்கு ஆளில்லை. அப்பா காலையிலேயே பைக் உதைத்துப் போய் விட்டார். அம்மா பாட்டி பக்கத்தில் வந்து எட்டு மணி பஸ் பிடிக்கிற அவசரத்தில் நாலு வார்த்தைப் பேசினாள்.

பாலம்
"வரும்போது ஏதாவது வாங்கிட்டு வரவா.உங்களுக்கு என்னம்மா வேணும்.” "எனக்கென்ன ஒண்ணும் வேண்டாம்.” பாட்டி பேச்சு முறித்தாள். ۔ “ஞாபகப்படுத்திச் சொல்லுங்க அப்புறம் இங்க வந்ததுக்கப்புறம் அலைய முடியாது.” அம்மா பேசிக்கொண்டே பாட்டி தலை ம்ாட்டில் இருந்த ப்ரட் பாக்கட் எடுத்தாள். அது ரொம்ப குள்ளமாய் இருந்தது. நாலு ஸ்லேஷ் இருக்கும். Y−
'இது போதுமா என்ன...வேற ஏதாவது வேணும்னா சொல்லுங்க.“ y
* வேண்டாம்.”
பாட்டி ஒற்றை வார்த்தை உதிர்த்தாள்.
அம்மாவுக்கு கொஞ்சம் எரிச்சல். அவள் கடிகாரத்தில் மணி பார்த்தாள். எட்டடித்து ஓய்ந்திருந்தது. சரியாய் மணி ஏழு ஐம்பது. அம்மா நிதானமிழந்தாள். அதற்கு சரியாய் பத்து நிமிடம் முன்னதாய் ஓட வேண்டும் என்று அப்பாவின் கட்டளை. அம்மாவின் அபிப்ராயம் அதுவே. எல்லேர்ருக்கும் ஏதோ ஒரு வகையில் அது சொகர்யமாய் பட்டது. ஏழு இருபதுக்கு எல்லாம் ஏழைரையாகி விட்டது. சீக்கிரம் சீக்கிரம் என்று கடிகாரம் பார்த்து பாத்ரூமுக்கும், சாப்பாட்டுக்கும் , பைக் உதைக்கவும், அவரவர் பிய்த்துக் கொண் டு ஓடுவதற்கும் செளகர்யமாய் இருந்தது.
அம்மாவை அவசரப்பட வைத்தது. பாட்டி சரியாய் பதில் சொல்லவில்லை.
**கிருஷ்ணா. பாட்டிக்கு ஹார்லிக்ஸ் குடு. கொஞ்சந்தான் இருக்கு. தின்னுத் தீத்துடாத, இங்க பாரு ஒழுங்கா வீட்ல இரு கிரிகெட் அது இதுன்னு சுத்தாத.”
அம்மா ஓட்டத்தினூடே சொல் லி ப் போனாள்.
பாட்டி அதன் பிறகுதான் வாய் திறந் தாள். சின்னதாய்க் கோபம், "பெத்தவள் நா நடக்க முடியாம கிடக்கிற கொஞ்சம் கூட கண்டுக்காம ஆபீஸாக்கு ஒடுறா.வேத்து மனுஷா மாதிரி ப்ரட் வாங்கிட்டு வரவா ஹார்லிக்ஸ் வேணுமான்னு தள்ளி நின்னு கேக்கறா.என்ன பொழப்பு” என்கிற மாதிரி யான வருத்தம்.
கொஞ்ச நேரம் மெளனமாய் இருந்தாள். அதன் பிறகு இவன் சட்டை கழட்டி குளிக்க ஆயத்தமாகும் போதுதான் பேச்சு கொடுத் தாள்.

Page 23
T6)b
திறந்த மார்பை பார்த்து சொன்னாள். “நீ உங்க அப்பா வழிதான். உங்க அப்பா வழிலதான் மார்பெலும்பு இப்படி துருத்திக் கொண்டிருக்கும். உங்க தாத்தா மார்ப பாக்கணும். நல்ல பாறாங்கல்லு மாதிரி திண்ணுன்னு இருக்கும். தோள் ரெண்டு விரிஞ்சு.அந்த மாதிரியான உடம்பு இப்ப எவனுக்கு இருக்கு. அது ராத்திரி பகல்னு பாக்காம காடு மலைனு திரிஞ்சு வளந்த உடம்பு. எங்க அவுங்களுக்கு தூங்க நேரம் இருந்துச்சு, சதா ஒட்டம், மறைமுக கூட்டம். பேசணும். காரியம் செய்யணும்.காந்திஜின்னா அப்படி உயிர். ஆனா காந்திக்கு நேர்மாறத் தான் தாத்தா நடந்திருக்காங்க வீட்டிலேயே துப்பாக்கி இருந்துச்சு துணி மூடி நிறை குண்டு இருந்துச்சு. வீட்ல இருக்கவே ப்யமா இருக்கும். எந்த நேரத்துல யார் வருவாங்கன்னு சொல்ல முடியாது. உங்க தாத்தாவ தேடி தினுசுதினுசா ஆள் வரும். யார் முகமுமே மனசுல நிக்கல. எல்லாரையுமே புதுசா பாக்கிற மாதிரி இருக்கும்.
** என்னம்மா என்னத் தெரியலையா.” நா தெரியலேம்பேன் **நாத்தா அன்னிக்கு வ ந் தே னே
சிங்காரம்-”
துளிகூட சம்மந்தமிருக்காது முதநா பாத்த சிங்காரத்துக்கும் முன்னாடி நிக்கிற சிங்காரத்திற்கும்.மீசை கூட் பூனை மயிர் மாதிரி இருக்க வந்தவன். அப்புறம் தாடியெல் லாம் நரைச்சு வந்திருப்பான். நிமிஷத்துக்கு நிமிஷம் எல்லாம் புதுசா தோணும். பல தடவை உங்க தாத்தாவையே வேத்து மனுஷான்னு நெனைச்சு வாசக் கதவு தட்டி வழியா. யாரு என்னன்னு விசாரிச்சேன். உங்க தாத்தாவுக்கு குறும்பு. என்னல்லாமோ பேசி என்னை குலை நடுங்க வைச்சுட்டாக.. கட்ட கடைசி மட்டுக்கும் நா கதவே தொறக் கால. அப்புறம் என்னட்ான்னா 'நாந்தா புள்ள சரியான பயந்தாங் கொள்ளியா இருக் கியேன்னு. பெரிசா சிரிக்கிறாக."
பாட்டி அத்தோடு பேச்சை நிறுத்தி விட்டாள். எங்கோ வெறித்துப் புார்க்க ஆரம் பித்தாள். குளிக்க சட்டை கழட்டியவன் பாட்டி பேச்சைக் கேட்டு பனியனோடு உட் கார்ந்திருந்தான். பாட்டி மெளனமாகிப் போன தற்குப் பிறகு அப்படி உட்கார்ந்திருக்க கஷ்ட மாய் இருந்தது. பாட்டி பேசுவாள் பேசுவாள் என்று பார்த்து கடைசியில் சோபாவில் சாய்ந்து பத்திரிகை புரட்டி தூங்கிப் போனேன்.
பதினோரு மணிக்கு பாட்டி தோளை பிடித்து குலுக்கினாள். கண் கசக்கி எழுந்தேன்.

11
பாட்டி ஒற்றை காலில் பேலன்ஸ் செய்து சுவரைப் பிடித்து நின்றாள். முன்னாள் இருந்த டம்ளரில் இருந்து ஆவி பறந்தது. கண் கசக்கி விழித்த, நொடியில் புரிந்து போனது. தூங்கிப் போன நிமிஷங்களில் என்ன நடந்திருக்கிறது என்பதை யூகிக்க முடிந்தது.
“எதுக்கு பாட்டி.சத்தம் குடுந்திருந்தா முழிச்சிருப்பேனே.?”
**அதுக்கென்ன எத்தன நாளைக்கு படுத் துருக்க முடியும் சொல்லு பரவாயில்ல சுவத்த பிடிச்சு நடக்க முடியுது. எனக்கு ஹார்லிக்ஸ் வேணாம். நீ குடி நா காபி போட்டு குடிச் சுட்டேன்.”
பாட்டி முணங்கியபடி சோபாவில் ரொம்ப மெதுவாய் உட்கார்ந்தாள். இடது பிருஷ்டம் அழுத்தாமல் நுனிப்புல் மேய்கிற லாவகத்தில் பட்டும் படாமல் உட்கார்ந்திருந்தாள்.
பாட்டியிடம் இன்னும் கேட்க வேண்டும் போல் இருந்தது. தாத்தாவை பற்றி ஏதோ அம்மா சொல்லியிருக்கிறாள். அம்மாவுக்கு தெரிந்ததெல்லாம் பாட்டியின் , வாயிலாகத் தான். அம்மாவே தாத்தாவை பார்த்தது கிடையாது.
பாட்டி விட்ட இடத்தில் இருந்து இந்த விஷயத்தை மட்டும் தொடரவில்லை. முகத்தை பார்க்க தொடர்திற மாதிரியும் தெரியவில்லை. வெற்றிடம் வெறித்து மெளனமானாள்.
அப்ப்ா முதுகில் ஒரு போடு போட்டார். தூக்கம் கலைந்தும் புரள்கிற சுகம் பறிபோனது. கண்ணுக்குள் எரிச்சல், தூக்கத்தின் மிச்சமாய் மிதந்து கொண்டிருந்தது. தலையணை கிறக் கம் எழுந்திருக்க முடியாமல் இறுக்கிப் போட் டது. ‘எழுந்திருடா. எருமமாடு டயம் என் னாச்சு...” அப்பா கத்தி பின்னால் போனார்.
காலை இப்படி விடிந்தது. பாட்டியின் கொஞ்சல் இல்லாமல் விடிந்தது. ஒவ்வொரு நிகழ்விலும் பாட்டி முகம் வந்து போனது. எதிரில் இன்றும் பந்தாய் சிவப்பு கோளமாய் சூரியன் மேல் எழும்பி வந்தது. லேசாய்தலை காட்டி கொஞ்சம் கொஞ்சமாய் ஊர்ந்து பக் கென்று உயர துள்ளும்போது பரவசமாய் இருக்கும். உள்ளுக்குள்ளேயே செந்தழலாய் சுற்றி சுற்றி அலைபாய்வது அலாதிதான். புரியாமல் வேடிக்கையாய் பார்த்துக் கொண் டிருந்ததை பாட்டிதான் ரசனையாய் ரசிக்கக் கற்றுக் கொடுத்தாள். பாட்டி இருந்தால் பக்கத் தில் உட்கார்ந்து ஏதாவது பேசி இந்த சோம் பேறித்தனத்தை இந்நேரம் குட்பை சொல்லி விலகிப் போக வைத்திருப்பாள்.

Page 24
12
தலையணையை இன்னும் நெருக்கமாய் இறுக்கிக்கொண்டு சுருண்டு கிடந்தான். இது சுகம். எந்த அலைக்கழிப்பும் இல்லாமல் நிம்மதியாய் கிடக்கிற சுகம். பாட்டி அடிக்கடி சொல்கிற சமவெளி நீரோட்ட்ம் மாதிரியான சுகம். சமவெளி நீரோட்டம்-பாட்டி இந்த அறுபது வருஷ வாழ்க்கையில் நிச்சயம் இந்த சுகம் அனுபவிக்கவில்லைதான். பாட்டி நிறைய பட்டிருக்கிறாள். பாட்டியின் வாழ்க்கை நீரோட் டத்தில் எல்லாம் நீர்வீழ்ச்சிகள்தான். எங்கே சமவெளி நீரோட்டம் பார்ப்பது?...பாட்டிக்கு அனுசரிக்கத் தெரியும். அனுபவத்தில் நிறைய கற்று இருக்கிறாள். கற்றதில் முழு நம்பிக்கை யாய் ஊன்றி நின்றிருக்கிறாள். இன்று பிசகிப் போனது ஆச்சர்யம்தான். அனுசரிக்கத் தெரிந்த பாட்டி அடாவடித்தனம் செய்வதாய்த் தான் படுகிறது. பாட்டிக்கு இது ஒன்றும் அத்தனை பெரிய விஷயமில்லை. தூசு தட்டிப் போகிற விஷயந்தான். அதற்கு அப்படி வாச லில் நின்று பேசியிருக்க வேண்டாம். வேகமாய் நாலு வெள்ளை புடவை மடித்து கிளம்பியிருக்க வேண்டாம். -
இப்பொழுது கிராமத்திற்குப் போய் என்ன செய்யப் போவதாய் உத்தேசம்...? என்ன செய்ய முடியும்.? தாத்தா பென்ஷன் வாங்கி ஜீரணிக்க முடியும். "இத்தனை வயசுக்கப்புறம் இந்த நெலமையா...' என்று திண்ணை தேய்த்து வாய் பிளக்கிறவர்களுக்கு ஒட்டியும் ஒட்டாமலும் பதில் சொல்ல முடியும். இன்னும் அதிகபட்சம் போனால் பழங்கதை நினைத்து தலையில் கைவைத்து மருகிப்போய் உட்கார முடியும். எல்லாவற்றையும் மீறி பாட்டிக்கு இருக்கிற அறிதல் புத்திக்கு இதில் திருப்தி பட்டுக்கொள்ள முடியாதுதான், எதையும் துருவித் துருவி பார்க்கிற குணம் உண்டு.
இந்தத் துருவித் துருவி பார்ப்பதில் வந்தது தான் அத்தனையும். பாட்டி சொன்ன மாதிரி மறுநாள் பெட்டியுடன் கிளம்ப வைத்ததும் இதுதான். பாட்டியும் அம்மாவும் சின்னதாய் அடிக்கடி கடித்துக் கொள்வார்கள். சில நேரம் ரசிக்கத்தக்கதாகவே இருக்கும். அதன்பிறகு ஒரு மணி நேரம் பேசிக்கொள்ளவே மாட்டார் கள். குட்டிய்ை மாற்றி மாற்றி தூது விடு 6ts6t. wW
**போ. உங்க பாட்டிகிட்ட போய் சொல்லு.”
அம்மா குட்டியை முடுக்கி விடுவாள் : **பாட்டி.அம்மா இனிமே சண்டைக்கு வரமாட்டாங்க.”
**யேய்.குட்டி யார் சொன்னா நாங்க சண்டை போட்டோம்னா..”

பாலம்
'நாந்தா பார்த்தனே.”
"என்னத்த.”
'அம்மா சத்தம் போட்டது நீங்க தலை யில கைவச்சு உக்காந்தது.”
*சரி இப்ப என்ன வேணும்.”
*"அம்மா எல்லாம் மறந்தாச்சாம். நீங்க சாப்ட வரணுமாம்”
'உங்க அம்மாவுக்கு வாயில்லையா
என்ன...” ar
"என்னது உங்கம்மர் உங்கம்மா..? எங் கம்மா உங்க பொண்ணுதான். மறந்து போச்சா..?” -
குட்டி பக்கென்று முகம் தூக்கி சின்னதாய் கோபத்தில் பேச்சு வெட்டிப் போவதில் பாட்டிக்கு மகா சந்தோஷம். வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து விடுவாள். முயலாய் ஒடு கிற குட்டியை துரத்திப் பிடிப்பாள். அப்பா அம்மா எல்லோரையும் உட்கார வைத்து சாப்பாடு பரிமாறுவாள். *"நா" எதுக்கு சொல்றே.எல்லா உங்க நல்ல்துக்குத்தான்.” என்று இடை இடையே அம்மாவைப் பார்த்துக் கொள்வாள். அப்பா சிரிப்பார்.
எல்லாம் மறந்து போகும். சாப்பாட்டு
மேஜை அமர்க்களப்படும். “இதக் கேளு சரசு.”
என்று அம்மா தோளை தட்டி பழங்கதை சொல்வாள். !
ஒருசமயம் பாட்டி நடத்திக் கொண்டிருந்த சேரி பள்ளியில் இன்ஸ்பெக்ஷன். பாட்டி பள் யில் சூரியன் கூரைவழியாய் நலம் விசாரிக்கும், பாடம் கேட்கும். கருந்தோல் பையன்களிட மும், மேல்சட்டை இல்லாமல் மூக்கு வழிய இடுப்பில் ஒன்றை இடுக்கிக்கொண்டு உட்கார்ந் திருக்கும் பெண்பிள்ளைகளிடமும் ஸ்நேகமாய் கை குலுக்கும். இந்தக் கூட்டத்தில்தான் எழுத்து கற்றுக் கொடுத்தாள், நிறைய கற்றுக்
கொண்டாள்.
எழுத்து அறிவித்தல் உத்தமம். பாட்டிக்கு ஏதோ ஒரு வகையில் அது தெம்பாய் இருந் தது. ‘என்னால் போய் துப்பாக்கி தூக்கி இந்த சமூக மாறுதலுக்கு ஒண்ணும் செய்ய முடியாது. அது அத்தனை தூரம் சாத்யமும் இல்லை. இதில் ஒரே சமயம் ஆயிரம் தோட் டாக்களாய் குழந்தைகளை வளர்த்தெடுக்க முடியும். இதுகளுக்குள் நேசம் வளர்க்க முடி யும். உண்மையைத் தேட வைக்க முடியும். தன்னைச் சரியாய் வைத்துக்கொள்ள கற்றுக் கொடுக்க முடியும்."
இந்த கோணத்தில்தான் பாட்டி பள்ளி ஆரம்பித்தாள். சொந்த பந்தம் எல்லாம்

Page 25
பாலம்
w
தூக்கி எறிந்த பின் பாட்டிக்கு தாத்தா விட்டுச்
சென்ற இடமும் இதுவும் போதுமானதாய் இருந்தது. வெள்ளைப் புடவையை தூரத்தில் பார்த்தால், “ராஜம் டீச்சர்.ராஜம் டீச்சர்." என்று எல்லாம் சரியாய் உட்கார்ந்து கொள்ளும்.
இன்ஸ்பெக்ஷன் அன்று அந்த கூரை குடிலுக்கு முன்பு ஜீப் வந்து நின்றது. பாட்டி வாசலில் வெள்ளை புடவையில் மரியாதையாய் நின்று கொண்டிருந்தாள். பாட்டி நிச்சயம் அப்பொழுது பாட்டியாய் இருக்கவில்லைதான். நல்ல அழகு. லேசாய் மெழுகிவிட்ட கருப்பு. அந்த கண்களில் நிறையவே கம்பீரம் இருந் தது. உடலெல்லாம் முறுக்கேறி தெம்பாய் இருந்தாள். குழந்தைகள் ‘அச்சமில்லை. அச்சமில்லை.” என்று புாரதியின் வரியை பாடிக் கொண்டிருந்தார்கள். *ஷடுக்கால் நுழைந்ததும் எல்லாம் அமைதியானது.
ஒரு நிமிஷம் நிசப்தத்தில் ஷஉஒலிக்க வந்தவர் நின்ற இடத்தில் நின்று சுற்றினார். அநேகமாய் குழந்தைகள் சுருண்டு கொண்டன. இடுப்பில் இருந்த மூக்கு உருஞ்சிகள் தங்கள் தங்கள் துணைகளோடு இறுகிக் கொண்டன.
வந்தவர் சற்று இடைவெளிவிட்டு பேச, ஆரம்பித்தார். பாட்டி கூட பேசி நடந்தாள். பள்ளி நிலவரம் சொன்னாள். \
'நீங்கதா இங்கு எல்லாம்.? வந்தவர் ஷலி ஒலி நிற்க புருவம் நெளித் தார்.
**ஆமாம்.” பாட்டி சாதாரணமாய் மேலே தொடர்ந் தாள்.
**யெங் விடோ..?”
பாட்டி பர்சனல் பேச இது இடமில்லை என்கிற மாதிரி பேச்சு வளர்த்தாள்.
* ‘கவர்மெண்ட் உதவி கெடச்சா இன்னும் நிறைய பண்ண செளகர்யமாய் இருக்கும்.”
வந்தவர் சகலத்திலும் ಶ್ದಿ நிறை யவே கேள்வி கேட்டார். ன்னதாய் அனு தாபப்பட்டார். “தன்னந்தனியாய் இவ்வளவு தூரம் செய்வது சிரமமில்லையா..?” என்று அக்கறையாய் விசாரித்தார்.
பாட்டி எல்லாவற்றிற்கும் ஒட்டுமொத்த மாய் பதில் சொன்னாள்.
**இது செளகர்யம் அசெளகர்யம் பார்க் கிற காரியமில்லை. செயல் முக்கியம். இது ஒரு வகையில் தவம்-யாகம். எனக்கு அப்

13
படித்தான் படுது. என் புருஷன் சுதந்தரத்துக் காக போராடி ஒரேடியா சுதந்தரம் பாக்காம லயே போயாச்சு. இன்னைக்கு நா நிக்கறது சுதந்தர பூமி. எத்தன தூரம் சுதந்திரம்.? எனக்குப் புரியல...இன்னைக்கு டெல்லி கோட் டைல நம்ம நாட்டவர் அரியாசனத்துல உக் காந்து இருக்காருன்னு சொல்லி பெருமை பட்டுக்கறதுக்கா சுதந்திரம்.இந்தா இந்த குழந்தைக்கு தெரியணும் நாம வாங்குன சுதந் தரத்தோட மதிப்பு புரியணும். நாளைக்கு ஆளப் போறதுங்க இதுங்கதான். இத்தன உயிர்களை ஏப்பம் விட்டு வெளிவந்த சுதந் தரத்தை செம்மையா நடத்தி கூட்டிப் போகிற பாக்கியம் இந்த குழந்தைங்க கிட்டதான் இருக்கு. ‘அதுங்கள தயார் செய்யறது நம்ம கடமை. அதைத்தான் செய்றேன். என்னால கோட்டை கட்ட முடியாது. வேணா ஒரு செங்கலா. ஒரு சட்டி சாந்தா.இருக்கலாம். இது ஒரு வகைல ஆத்ம திருப்தி. இன்னொரு வகையில என்னோட புருஷன் விட்டுப்போன கடமை. அவ்வளவுதான்.”
பார்த்ததும் கைகூப்பி தூசுதட்டி நாற்காலி காட்டி உட்காரச் சொல்லுகிற வாத்திமார்களை பார்த்தே பழக்கப்பட்டவருக்கு இது வினோத மாய் இருந்தது. இத்தனை நீள பேச்சு கேட் டதில் உதட்டை ஈரப்படுத்திக்கொள்ள வைத் தது. பதவி தோரணைக்கு களங்கம் வராதபடி பார்த்துக்கொள்ள நிறையவே முயற்சித்தார்.
சம்பிரதாய கேள்வி கேட்டார்.
**எல்லாம் சரிம்மா. உன்னோட குழந் தைங்க ரொம்ப மோசமா இருக்குதுங்களே...”
'வாஸ்தவம். இது சேரி குழந்தைங்க சார். இத்தன தூரம் வந்து உட்கார்ந்து இருக்குதுங்களே அதே பெரிய விஷயம். தொடர்ந்து ஒரு வாரம் ஸ்கூலுக்கு வர்ற குழந் தையை இதுல பொறுக்கி எடுக்கறது அபூர்வம், ஒவ்வொரு நாளும் பெத்தவங்க கால்ல விழாத குறையா கெஞ்சிதான் இதுங்கள கூட்டிட்டு வறோம். எல்லாம் கூலியாட்கள். அவங்க கிட்ட போய் குழந்தைக்கு மேல்சட்டை போட்டு விடுன்னா நீயுமாச்சு உன்னோட பள்ளிக்கூடமு மாச்சுனு மூஞ்சுல அடிச்சுட்டு போய்டுவாங்க. தலைக்கு எண்ணெய் தேய்ச்சு விடுன்னு அவங்க கிட்ட சொல்றது அபத்தமாத்தான் இருக்கும். இந்தா இந்த குழந்தை இங்க உட்கார்ந்திருக் கிற நேரத்துக்கு பெத்தவ பின்னாடி போயிருந்தா இன்னைக்கு ஒரு ரூபாய் சம்பாதிச் சிருக்கும். அதுதான் அவங்களுக்கு பெரிசு. முடிஞ்ச வரை நானே குழந்தைகளுக்கு தலை வாரி விடுறேன். மூஞ்சு கழுவுறேன்.”
"ஆயிரம் இருக்கட்டும்: மொத்தமா பாக்குறப்போ திருப்தி அடைய முடியல.

Page 26
4.
ஸாரி இந்த பள்ளி நல்ல ஆரோக்யமா இல் லன்னு தான் என்னால சொல்ல முடியும்.”
!"வருத்தமில்ல சார். என்னால முடிஞ்சத செஞ்சுகிட்டு இருப்பேன் இந்த கூட்டத்துல இருக்கிற குழந்தையே நாளைக்கு பெரிய போஸ்ட்ல வரலாம். நிச்சயமா உங்களோட சர்டிபிக்கட் என்னை பாதிக்காது. இது மனசுல இருந்து வர்ற செயல். நல்லத நினைச்சு நல்லதுன்னு தீர் மா ன ம் பண்ணி நல்லதயே செஞ்சுட்டு இருக்கேன். நிச்சயம் இதுல கோணல் இருக்காது சார் நிறைய நம்பிக்கை இருக்குது. செய்ற அளவு மனசுல திடம் இருக்கு போதும்.”
கேள்வி கணை தொடுத் த வ ர் அமைதி யானார். மெதுவாய் எழுந்து வணக்கம் சொல்லி விடைபெற்றார். வாசலில் கிடந்த சாணி, மிதித்து, தடுமாறி முகம் சுளித்து, வெளி
யேறினார்.
இதெல்லாம் சொல்லும்போது பாட்டி கண் களில் ஒரு வித பிரகாசம் இருக்கும். சோகச் சாயல் சீராய் நீவி விட்டமாதிரி தெரியும்.
அத்தன்ை அழுத்தமான பாட்டிதான் *செய்ற அளவு மனசுல திடம் இருக்கு போதும்.” என்ற பாட்டிதான். இப்பொழுது மாறிப் போனாள். ஒன்றுமே இல்லாத விஷயத் திற்கு கோபித்து கிராமத்தில் போய் உட்கார்ந் திருக்கிறாள்.
இங்கு எல்லாமே செயற்கையாய் தெரி கிறது. பாட்டி இருக்கும்போது எல்லாம் வலது கை பழக்கம் மாதிரி ரொம்ப செளகர்யமாய் இருக்கும். இப்பொழுது திடீரென்று இடக் கையில் எழுத எழுத்து வெட்டி வெட்டி நிற்கிற மாதிரி ஒவ்வொரு செயலும் குறையாய் தெரி கிறது. காலையில் படுக்கையில் இருந்து எழும். புவது முதல் எல்லாம் ரொம்ப பிரயத்தனப்பட்டு செய்வதாய் தோ ன் று கிற து. இயல்பாய் இல்லை.
இது சகிக்க முடியாதது தான். பாட்டி இல்லாமல் எலலோரும் அனிச்சையாய் திரிகி றார்கள்; அப்பா எந்திரமாய் பைக் உதைத்து போகிறார். அம்மா நீளநீளமாய் மூச்சு விடு கிறாள். குட்டியிடம் அத்தனை ‘துருதுரு' இல்லை. இவனுக்குள் என்னமோ அறுத்தெடுத்த மாதிரி ஒரு உணர்வு. ‘கிருஷ்ணா." என்று பாட்டி வந்து தலை கேசங்களுக்குள் கைவிட்டு எழுப்ப வேண்டும் போல் இருந்தது. A.
இன்னும் கொஞ்சநேரம் படுத்திருந்தால் அப்பா இன்னும் ஒன்று ஓங்கி போட்டுவிட்டு ஒரு கையால் அப்படியே வெடுக்கென்று தூக்கி விடுவார். ஒரு ஐந்து நிமிடம் கர்ட்டு கத்து

1 Πτου ιο
கத்துவார். பொறுப்பில்லை என்பார். எதற்கு வம்பு.? பின்னால் சத்தம் கேட்டது. அப்பாவும் அம்மாவும் மாறி மாறி பேசிக் கொண்டிருந் தார்கள். குட்டி சிணுங்கிக் கொண்டிருந்தது. அப்பாவுக்கு பெரிய தொண்டை. அம்மா வுக்கும் சரியாய் ஈடு கொடுக்கிற குரல். என்ன பேசினாலும் சண்டை இட்டுக் கொள்வதாகவே படும். . W
இதில் எல்லாம் பாட்டி அனாவசியமாக கொஞ்ச நாட்களாய் தலையிடுகிறாள். அம்மா வின் முறைப்புக்கு ஆளாகிறாள். அப்பாவின் எரிச்சலுக்கு ஆட்படுகிறாள். ஏகப்பட்ட முரண் பாடு. அடிக்கடி முறைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு சாப்பாட்டு வேளையில் வந்தது வினை.
டைனிங் டேபிளில் தண்ணிர் கொண்டு வந்து வைத்துவிட்டு கடைசியாய் பாட்டி தன் நாற்காலியை இழுத்து போட்டு உட்கார்ந்தாள்.
அப்பா தண்ணீர் எடுக்கிறேன் பேர்வழி என்று சாதம் இருந்த யேஷனில் கையை சுட்டுக் கொண்டார். "ஐயோ...' என்று சின்னதாய் கத்தினார். கையை பலமாய் உதறிக்கொண்டு ‘அத தள்ளி வைக்க கூடாதா.." என்று அடிக் குரலில் அம்மாவைப் பார்த்து உறுமினார்.
அம்மா பலமாய் சிரித்தாள். 'இந்த சூடு தாங்க முடியல்யா என்ன..” என்றபடியே பேஷனை தன் இரு கைகளுக்குள்ளும் அடக்கிக் கொண்டாள். மறுபடியும் சிரித்தாள், சிரிப்பு இவனையும், குட்டியையும், பாட்டியையும் தொற்றிக் கொணடது. இவன் டேபிள் கீறி தலையாட்டிச் சிரித்தான். குட்டி கை தட்டி ஷேம்.ஷேம். என்று ஆ லட்ட லா ய் சிரித்தது. பாட்டி உதடு பிரியாமல் சிரித்து ‘சாப்பிடுங்க”.என்றாள்.
சகலரும் சிரிக்க அப்பாவின் கொடி துவண் டது. முகம் சிறுத்தது. மெளனமாய் சாப்பிட் டார், திடுமென ஈகோ கோரமாய் பல்லிளித் தது. பட்டென்று கொதிக்கிற குழம்பெடுத்து சாதம் பிசைந்து கொண்டிருக்கிற அம்மாவின் கையில் ஊற்றினார். அம்மா எதிர்பாராத விதமாய் கத்தினாள், பட்டென்று எல்லோரும் திரும்பிப் பார்க்க அம்மா கண்களில் நீர் துளிர்த் திருந்தது. பலமாய் கையை ஊதிக் கொண்டே 'எழுந்தாள். பாட்டி பதறிப் போனாள். பளிச் சென்று நாற்காலி தள்ளி எழுந்து அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டாள், நிஜமாய் அம்மாவின் கை சின்னதாய் பொத்திருந்தது.
பாட்டிக்கு கண் கலங்கி விட்டது. "இது என்ன . மடத்தனம்..” அப்பாவைப் பார்த்து முணுமுணத்தாள். அப்பா சாதம் வெறித்து உட்கார்ந்திருந்தார். அம்மா சமாளித்துக் கொண்டு வந்து உட்கார்ந்தாள்.

Page 27
பாலம்
சகிக்க முடியாத ஒரு நிசப்தம், பாட்டி தான் பேசத் தொடங்கினாள்.
'நீங்க செஞ்சது சரியா சொல்லுங்க. ஆயிரந்தான் விளையாட்டுனாலும் இது குரூர மில்லையா. என்ன மனோ நிலை இது, என்னால புரிஞ்சுக்க முடியல. இதுக்கும் பெண் டாட்டிய சிகரெட்டால் சுடுறதுக்கும் என்ன பெரிய வித்யாசம். "துளி இவ கண் கலங்கினா லும் என்னால தாங்கிக்க முடியாது, பூ மாதிரி வைச்சுப்பேன் அவ்வளவு காதல். அப்படின்னு சொல்லித்தான கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க. கல்யாணம் பண்ணி ரெண்டு பெத்ததுக்கப்புறம் அந்தக் காதல் போயிடுமா? நீங்க தெரியாம கையை சுட்டுக்கிட்டதுக்கு அவசிரிச்சது தப்புங் கறீங்களா.. அது தமாஷ். அந்த பேஷன்ல அத்தன சூடு இல்லிங்கறது தெரிஞ்ச விஷயம். இப்ப அவ தமாஷ்னு சிரிக்கலாம். ஆனா அப்புறம் ‘கையை சுட்டுக்கிட்டேங்களேன்னு நீவி விடலாம். இது அந்தரங்கம். பளிச்சுன்னு எல்லார் முன்னாடியும் செய்ய முடியாது. என்ன பாத்தா சிரிக்கிற இந்தா உனக்கும் சூடுங்கறது மோசமான மென்டாலிடி. நா இவ்வளவு பேசறது தப்பா படலாம். அதிகப் பிரசங்கித்தனமா படலாம், மகளுக்காக வரிஞ்சு கட்டிகிட்டு வரதா தோணலாம். இந்த காரி யத்த அவ செஞ்சிருந்தாலும் நா பேசப் போறது இதுதான் புரியுதா..?
புரிந்ததா.புரியவில்லையா என்று சொல் வதற்கு அப்பா அங்கில்லை. பேச்சின் இடை யிலேயே அப்பா கை உதறி எழுந்து போயிருந் தார். பின்னாலேயே அம்மாவும் போயி ருந்தாள்.
பாட்டி புரியுதா என்று தலை உயர்த்திய போது இவனும் குட்டியும் தான் பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாட்டிக்கு முகத்தில் அடித்த மாதிரி இருந்தது.
சின்ன மெளனம்.
திடுமென அப்பா பெரிதாய் கத்தினார்.
*சும்மா பொழுதன்னைக்கும் இதுன்னா என்னால தாங்கிக்க முடியாது.”
'சரி இப்ப என்ன நடந்தது. அதுக்கு இப்பிடி பாதி சாப்பாட்டுல கை உதறி வரணுமா.”
அம்மா சமாதான பத்திரிகைப் படித்தாள். **பின்ன உங்க அம்மா க்ளாஸ் எடுப்பா நாகை கட்டி உக்காந்து கேக்கணும்.அப்படித்
99
தான.

15
இந்த வார்த்தைக்கு பாட்டி பட்டென்று எழுந்து அப்பா அறைக்குப் போனாள்.
*"க்ளாஸ் எ டுக் கறன T-என்ன இது பொதுவா விஷயங்களைச் சொன்னேன் தப்பர-”
பாட்டி அமைதியாய்த் தான் சொன்னாள்.
அப்பா திரும்பவில்லை. நறநறவென்று பல் கடித்தார். முஷ்டிகளை மாற்றி மாற்றி குத்திக் கொண்டார். .
‘'எதுக்கு இந்த டென்ஷ்ன்.” பாட்டி தொடங்கியதும் அம்மா ”குறுக்கே புகுந்தாள்.
* வாய வச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் சும்மா இருங்களேம்மா.”
அம்மாவின் இந்த த்வனி பாட்டியை குறுக வைத்தது. கண் கலங்கியது. அப்படியே வெறித்து நின்றாள்.
'சரி சாப்பிட வாங்க- அம்மா அப்பா கை பிடித்து இழுத்தாள்,
‘விடுடி.என் வீட்ல என்னால நிம்மதியா இருக்க முடியல-நீங்கள்லா போய் கொட்டிக் கோங்க..”
அப்பா வெடுக்கென்று அம்மா கையை உதறினார்.
இங்கே அம்மா ஈகோ அப்பாவை நலமா என்றது.
"டீ.போட்டு பேசறளவு வந்தாச்சா. செஞ்சது அசட்டுத்தனம் இதுல பொல்லாத கோபம் வேற-” . .
ச்சே அம்மா தொண்டை எப்பொழுது ஆலை சங்கானது.”
**கத்தற நீ. என்ன சொன்ன அசட்டுத் தனமா...”
அப்பா கை ஓங்கி முன்னால் வந்தார். ‘ஓகோ. அடிச்சுருவீங்களா..” என்று அம்மா ஒரு அடி முன்னால எடுத்து வைத்தாள்.
பாட்டி வேகமாய் போய் அம்மா கைை பிடித்து இழுத்தாள்.
**அவர்தான் கோபத்துல கத்துறாருன்னா நீயும் சரிக்கு சரி நிக்கனுமா.”
*விடும்மா.எல்லா உங்களால T. . . உங்கள யாரு இங்க கூப்பிட்டா G
அம்மா பேயாய் கத்தினாள். பாட்டி அந்த இடத்திலேயே ப்ொலபொல வென்று கண்ணிர் வடித்தாள்.

Page 28
16
அம்மா விருட்டென்று வெளியேறினாள்.
அப்பா இறுக்கமாய் உட்கார்ந்திருந்தார்.
அதன் பிறகு அவரவர் ஒவ்வொரு மூலை யில் போய் ஒளிந்து கொண்டார்கள். யாரும் சாப்பிட வரவில்லை. இவனையோ குட்டி யையோ சாப்பிட்டாச்சா என்று கூட கேட்க வில்லை.
குட்டி வெறுமன. சாதம் அலைந்து கொண் டிருந்தது. இவன் கால் மணி நேரம் காத்தி ருந்து கஷ்டமாய் எழுந்து போனான்.
அன்று மாலை பாட்டி, யாருடன் என்றில் லாமல் நீளமாய் பேசி புறப்பட்டு போய் விட்டாள். அம்மா இதை எதிர்பார்க்கவில்லை. அப்பா ‘என்ன இது’ என்று வந்து பார்த்தார். ஆனால் பாட்டி, யாரும் நெருங்க முடியாத அள வுக்கு விஸ்வரூபம் எடுத்திருந்தாள். அந்த விஸ்வரூபம் அடங்காமலேயே ஒரு அடி எடுத்து வைத்து வீட்டைவிட்டு மறைந்து போனாள்.
யார் மேல்தவறு.? அவரவருக்கு அவரவர் காரியம் முக்கியம். காரியத்தின் நியாய அநி யாயம் சந்தர்ப்பம் சாதகமாக இருக்கும் வரையே மனதில் நிழலாடும். காரியம் ஆன பின் வேண்டுமான்ால் தவறாய் இருப்பின் உறுத்த்லரம், இங்கு யாருக்கும் உறுத்துகிற தாய் தெரியவில்லை. பிரிவு வேதனை ஆட்டிப் படைக்கிறது அவ்வளவுதான்.
ஒன்று புரிகிறது பாட்டியின் வெளி நடப்பு யார் தவறாலும் திகழ்ந்ததல்ல. ஒட்டு மொத்த மாய் எல்லோர் பலகீனமும் வெளிப்பட்டு விட்டது. அவ்வளவுதான். அதன் தாக்கம் தான் எல்லோருக்கும் சகலத்திலும் தவிப்பாய் ਲੇ(5Dg·
அப்பா லுங்கி மடித்து கட்டிக்கொண்டே வந்தார். பின்னால் அம்மா தெரிந்தாள். அப்பா நிச்சயம் கத்த மாட்டார். தெம்பாய் சோம்பல் முறித்தான். V
“எக்ஸாம் தா முடிஞ்சாச்சே லீவுதான இன்னும் கொஞ்ச நேரம் படுத்துருக்கனே.” அம்மாவை பார்த்து கொஞ்சலாய் நீளமாய் இழுத்தான். f
“சரி...சரி.எழுந்திரு இன்னைக்கு ஊருக்கு கிளம்பற.” Y
அப்பா ரொம்ப சாதாரணமாய் சொன் னார். صحصہ
காலை சுற்றிக் கிடந்த போர்வை விலக்கி எழுந்தான். "நிஜமா.”கண் விரிய கேட்டான்.

шлт6ob
இவன் முகம் பார்த்து அப்பா உதட்டோ ரம் சிரித்தார்.
அம்மா சொன்னாள், !
** இன்னைக்கு ஈவ்னிங் கிளம்பி பாட்டிய கையோட கூட்டிட்டுவர்ற...”
உற்சாகமாய் பார்த்தான்.
அப்பா தொடர்ந்தார்.
*எத்ாவது ஆம்னி பஸ்ல ஏத்தி விடரேன் காலை அஞ்சு அஞ்சரைக்கு திருநெல்வேலி போய் சேர்ந்துருவ, அங்கயிருந்து பாபநாசம் பஸ் பிடிக்கணும் தெரியுமில்ல.” ܙ
ge 9
Dos
**ப்ாதை தெரியலைனா கேளு.பத்திரமா போய்ட்டு வரணும். ஊர்ல யாரும் அம்மா வரலியான்னு கேட்டா லீவு இல்லேன்னு சொல் லிடு. எல்லோரையும் கேட்டதாச் சொல்லு. பாதையெல்லாம் தெரியுமா ? தெரியும் தெரி யும்னு தலையாட்டிடு அங்க போய் மூழிக்காத தெரியலைனா கேளு.”
*சும்மா தொண தொணங்காத.உம்புள்ள என்ன பச்சை குழந்தையா.பதினெட்டு வய சாகப் போறது. அதெல்லாம் போய்ட்டு வந்துரு வான்”
'அவன் பத்து பன்னிரண்டு வயசுல போனது இப்ப ஞாபகம் இருக்குமோன்னு சொன்னேன். சும்மா சொல்லக் கூடாதா.”
**சும்மா என்ன சும்மா.”
*"அப்பா..இனிம்ே வாயே தொறக்க லே.”
மாறி மாறி குதறிக் கொண்டார்கள். இந்தக் குதறல் அவர்களுக்கு முச்சுக் காற்றாகி விட்டதோ என்னவோ.
O O O
சகலமும் ஏற்பாடானது. பாட்டியை பார்க் கப் போகிற சந்தோஷமே தவிப்பாய் இருந் தது. காலையிலயே பேண்ட் சர்ட் எல்லாம் எடுத்து போட்டு அயர்னிங்-இல் உட்கார்ந் தான். அம்மா கூப்பிட்ட குரலுக்கு கை கால் உதறிப்போய் கிணற்றடியில் தண்ணீர் எடுத் துக் கொடுத்தான். சைக்கிள் எடுத்து காலனி யை வலம் வந்து ஸ்நேகிதர்களுக்கு அறிவித்து வந்தான்.
(தொடரும்)

Page 29
நூல் விமர்சனம் 0
தமிழ்நாட்டில் வரலாற்று ஆராய்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. அதிலும் குறிப்பாக, வெள்ளையரின் வருகைக்குப் பிறகு பிரித்தானிய குடியேற்ற ஆதிக்க காலத் தைப் பற்றியும், அத்தளையிலிருந்து விடுபடு வதற்கான விடுதலைப் போராட்டம் குறித்தும் உண்மையான வரலாற்று ஆய்வு நம் தமிழ் நாட்டில் மிகக் குறைவு. ‘வரலாற்றை விருப்பம் போல் கற்பனை செய்து கொண்டு மனப் புணர்ச்சி இன்பம் காண்பதும், நான்கு புத்தகத்தைப் பார்த்து ஐந்தாவது புத்தகத்தை எழுதுவதும் தமிழுலக நடைமுறையாக இருந்து வந்துள்ளது.
ஆனால் அண்மைக் காலத்தில் இப் போக்கில் குறிப்பிடத்தகுந்த மாறுதல்கள் நிகழ்ந்து வருவதை பலர் கவனித்திருக்கக் கூடும். இரண்டாந்தர, மூன்றாந்தர நூல் களிடையேயும் சில நல்ல நூல்கள் வெளி வந்துள்ளன. இத்தகைய நல்ல நூல்களை எழுதுவோர் என்று சி. எஸ். சுப்பிரமணியம், பெ. சு. மணி, கோ. கேசவன், ஆ. சிவசுப்பிர மணியன் ஆகியோரைச் சொல்லலாம். புலமை, திறமை, உழைப்பு, ஆழம், பார்வை, கருத் தியல் (Ideology) எனப் பல நிலைகளில் இவர்களிடையே பெரிய வேறுபாடுகள் உண்டு. இந்தப் பட்டியலைக்கூட அதில் குறிப்பிடப் பெறும் ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்ளாமல் போகலாம்.
ஆனால் அவர்களுக்கிடையே நான் காணும் ஒற்றுமை இவைதாம்: இவர்கள் அனைவரும் கல்வித்துறையைச் சாராதவர்கள்; ஒவ்வொரு வரும் ஒரே வழியில் இடதுசாரி (நெகிழ்ந்த பொருளில்) சார்பு கொண்டோர் ஆவர். இவற்றுக்கும் மேலாக, இவர்கள் எழுதும் நூல்களுக்கு அடிப்படையாக ஆவணக்காப்பகத்
தில் கிட்ைக்கும் முதன்மைச் சான்றுகள் (அரசாங்க ஆவணங்கள்) பயன்படுத்தப் படுகின்றன.
இதுவரை ஆவணக்காப்பகத்துள் நுழை வோர் கல்வித்துறை சார்ந்தவர்களாக எம்ஃபில் பி. எச். டி. பட்டம் பெறுவதற்காகவே ஆய்வு செய்வோராகப் பெரும்பாலும் இருந்து வரு

‘பகத்சிங்கும் இந்திய அரசியலும்’
பகத்சிங்கும் சுப.வீ.யும்
ஆ. இரா. வேங்கடாசலபதி
கின்றனர். பட்டம் பெறுவதற்கு மிகக் குறைந்த பட்சமாக எவ்வளவு ஆவணங்களைப் பார்வை யிட வேண்டியிருக்குமோ அவ்வளவையும் பார்வையிட்டு ஆய்வுரை எழுதி வருகின்றனர். பட்டம் பெற்றதோடு ஆய்வுலகத்தோடு இவர்கள் தொடர்பு அறுகின்றது. அதற்குப் பிறகு, அவர்கள் ஆய்வு  ெச ய் த துறையில் பூகம்பங்களும் பிரளயங்களும் தலை கீழ் மாற்றங்களும் நடந்தால் கூட அவர் களுக்கு அக்கறையில்லை. அவர்கள் எழுதிய ஆய்வேடுகள் அச்சாகி நூலாக, வெளிவருவது மில்லை; அறிவுலகத்துக்குப் பயன்படுவதும் இல்லை. இன்றைக்கும் இதே நிலைதான் பெரும்பாலான சமூக-அறிவியல், மானிடவியல் துறைகளில் நீடிக்கின்றது. (தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் மானியம் காரணமாகவும் இன்று பல தமிழ்த் துறை ஆய்வேடுகள் நூல் களாக வெளிவந்துள்ளன.)
அண்மைக்காலத்தில் சில வரவேற்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து வருவதற்கு மேலே குறிப்பிட்ட ஆய்வாளர்களும், அவர்களுக்கு இடையே நிலவும் சில பொதுத்தன்மைகளும் காரணங்கள் ஆகும்.
இப் பின்னணியில் சென்ற ஆண்டு தொடக்கத்தில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் எழுதிய "பகத்சிங்கும் இந்திய அரசியலும்’ எனும் நூல் வெளிவந்தது. பெரும்பாலான வட்டாரங்களில் நல்ல வரவேற்பைப் பெற் றுள்ள இந்நூல் விவாதங்களையும் கிளப்பி விட்டுள்ளது.
வரலாற்றாய்வாளன் தான் வாழும் சமூ கத்தோடு பிணைக்கப்பட்டுள்ளான். தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தைப் பற்றித்தான் அவன் ஆய்வு செய்ய முடியும். ஆய்வுக்குரிய சான்று மூலங்கள் அப்பகுதியிலேயேதான் பெரும்பாலும் கிடைக்கும் என்பதோடு ஆய்வின் முடிபுகளும் அச்சமூகத்துக்கு பெருமளவு பயன்படக்கூடும்.
அவ் வகையில் சுப.வீயின் ஆய்வுப் பொருள் ஆய்வாளனின் கடின உழைப்பை வேண்டி நிற்கின்றது. சுப. வீயும் உழைப்புக்கு அஞ்சவில்லை என்று எடுத்தவுடனே சொல்லி விடலாம். தம் ஆய்வுக்குரிய செய்திகளைச் சேகரிப்பதற்கென புது தில்லியிலுள்ள தேசிய

Page 30
18
ஆவணக் காப்பகத்தையும் சென்னையிலுள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தையும் பயன் படுத்தியுள்ளார். பகத்சிங்கின் சமகாலத்தவர் சிலரையும் கண்டு அக்காலச் சூழல்களையும் அறிந்து கொள்ள முயன்றுள்ளார்.
வரலாற்று நூல் எழுதுவதற்கெனத் தமிழ் நாட்டில் இத்துணை முயற்சிகள் எடுத்துக் கொள்வோர் மிகச் சிலரே ஆவர். எனவே சுபவியை முதற்கண் பாராட்ட வேண்டும்.
女 ★ ★
பகத்சிங்கைத் தம் ஆய்வுப் பொருளாக சுபவீ ஏன் எடுத்துக் கொண்டார் என்ற கேள்வி மிக முக்கியமானது. பகத்சிங்கின் தியா கம் எழுச்சி ஊட்டுவது; அவருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் நாடகத்தன்மை (Dramatic) மிக்கவை என்பன போன்ற மேம் போக்கான காரணங்களுக்காக, பகத்சிங்கைச் சுபவி தேர்ந்தெடுத்தார் என்று சொல்வது சுபவியை மலினப் படுத்துவதாக அமையும்.
சுபவி தம் ஆய்வுக்குப் பகத்சிங்கைத் தேர்ந்தெடுத்தது தற்செயலானதன்று. அதற் குரிய காரணங்கள் ஆழமானவை, நுட்ப மானவை. அவற்றை அறிவதற்குச் சுபவியின் சிந்தனைப் போக்கை-அல்லது கருத்தியலைசற்றே பார்க்க வேண்டும்.
சுபவி திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் வருபவர், அவருடைய கால்கள் அதில் ஆழப் பதிந்துள்ளன. ஆனால் மற்றொரு பக்கத்தில் இடதுசாரி, (தீவிர) மார்க்சிய சிந்தனைகள் அவரை ஆட்கொண்டுள்ளன. சுபவியின் செயற்பாடுகளிலும் எழுத்துகளிலும் இவ்விரு போக்குகளின் மோதலையும் இணைப்பையும் காண முடியும். (இந்தியாவில் தேசிய இனச் சிக்கலுக்குச் சரியானதொரு விளக்கத்தை இந்திய மார்க்சியர்கள் இதுவரை வரையறுத் துக் கொள்ளாததே, இதுபோன்ற Լ0 աd. Ց: நிலைகளுக்குக் காரணம்.)
இவ்விரு போக்குகளின் தன்மைக்கும் ஏற்ற பொருளாக பகத்சிங் அமைகிறார் என்பதை மேலோட்டமாகப் பார்த்தாலுங்கூட தெரியும். திராவிட இயக்கத்தின் முக்கியக் கூறு காந்தி(ய) எதிர்ப்பு. இவ்வெதிர்ப்பை வலுவாகக் காட்டுவதற்குப் பகத்சிங் பயன்படு கிறார் என்பது வெளிப்படை. (திராவிடர் இயக்க பாணியில், ‘காந்தியார்’ என்றே இந் நூல் நெடுகவம் காந்தி குறிப்பிடப் பெறு கிறார்.) மேலும், பகத்சிங் நாத்திகராவர். S96 fř 6T(ų6 Lu Why I am an Atheist 6T6öITAM) கட்டுரை அந்நாளில் ஜிவா அவர்களால்

பாலம்
மொழி பெயர்க்கப்பட்டு, சுயமரியாதை பிரச்சார
நிறுவன வெளியீடாகவும் வெளிவந்தது.
தீவிர இடதுசாரிப் போக்குக்கும் சிந் தனைக்கும், பகத்சிங்கின் செயல்களும் எண்ணங் களும் இசைவாகவே இருக்கின்றன.
சுபவிதம் ஆய்வுக்குப் பகத்சிங்கை எடுத்துக் கொண்டதில் உள்ள நுட்பம் இதுத்ான். ஆனால், இந்த ஒர்  ைம யு டன் தா ன் (Consciously) சுபவி ஆய்வு செய்தார் என்று நாம் சொல்ல வரவில்லை. கருத்தியல் நிலைப் பாடுகள் பெரும்பாலும் தனிநபரின் ஓர்மை யில்லாமலேதாம் வெளிப்படுகின்றன.
★ 女 ★
தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு இந் நூலை எழுதியமைக்காகச் சுபவி பாராட்டுக் குரியவர். செய்திகளை முயன்று தேடித் தொகுத்து நூலை அமைத்துள்ளார்.
இதுவரை, கலகக்காரனாகவும் தியாகி யாகவும்தாம் பகத்சிங் காட்டப்பட்டுள்ளார்; 96 (563) Lui தெளிவுமிக்க சிந்தனையும், மார்க்சியத்தை நோக்கிய பயணமும் அழுத்தத் துடன் வலியுறுத்தப்பட்டதில்லை. அப்பணி யைச் சுபவி இந்நூலில் செம்மையாகச் செய் துளளாா.
இப் பாராட்டோடு ஆக்கமுறையிலான விமரிசனங்கள் இரண்டொன்றையும் ங்கே
恩 {Dպ முன்வைக்க வேண்டும்.
முதலாவதாக இந்நூல் எழுதப்பட்டுள்ள முறையையும், கையாளப்பட்டுள்ள மொழி நடையையும் சொல்ல வேண்டும். சினமும் ஆத்திரமும் கொப்புளிக்கும் நடை வர லாற்று நூலுக்கு உரியதன்று. காந்தி யின் போக்கும் பிறவும் அறச்சீற்றத்தை உண்டாக்கக் கூடியனவே என்பதில் ஐய மில்லை. ஆனால் நூலாசிரியன் இவற்றை எழுதும்போது அமைதியாக இருக்க வேண்டும்; படிப்பவன்தான் வெகுண்டு எழவேண்டும். அதுதான் எழுத்தின் வெற்றி. 3 u 6?'G5a u Fr குத்துச் சண்டை களத்தில் உள்ள உணர் வோடும், வரலாற்றுப் போக்கிலே ஏற்பட்ட கோணல்களை நிமிர்த்தி, துரோகிகளை எல்லாம் மாய்த்து விட வேண்டும் என்ற விரைவோடும் இந்நூலை எழுதியுள்ளார். இப்போக்கை அவர் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது நம் கருத்து.
இந்நூலில் பல செய்திப் பிழைகள் ஏற் பட்டுள்ளன. வங்காளத்தைத் துண்டாடிய

Page 31
பாலம்
லார்டு கர்சான் வைலியை மதன்லால் திங்கரா சுட்டுக் கொன்றார் என்று இந்நூலில் காணக் கிடக்கின்றது (ப. 34). உ ண்  ைம யி ல், வங்காளத்தைத் துண்டாடிய லார்டு கர்சான் வேறு; மதன்லால் திங்கரா சுட்டுக் கொன்ற கர்சான் வைலி வேறு. லார்டு கர்சான் பிரிட்டிஷ் இந்தியாவுக்குக் கவர்னர் ஜெனரல். கர்சான் வைலி இந்தியச் செயலரின் உதவியாளர் (aide-de-camp to Secretary of State for India).
பிறிதொரு இடத்தில் (ப. 67) திலகர், வ. உ. சி. , அரவிந்தர் ஆகியோர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர் என்று குறிப்பிடப் படுகின்றது. இச் செய்தியும் தவறு.
இத்தகைய பிழைகள் நேர்ந்தமைக்குச் சுபவியின் அறச்சீற்றமே காரணம் போலும்.
பகத்சிங்கோடு தொடர்புடைய ஆவணங் கள், கட்டுரைகள் சிலவும், ஆங்கில நூல்களி லிருந்து மேற்கோள்களும் தமிழில் பெயர்க்கப் பட்டு இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்பைச் சிறிது செம்மைப்படுத்த லாம் என்று தோன்றுகின்றது. இந்நூலுக்கு
முன்னுரை எழுதிய கவிஞர் இளவேனிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
'பொன்
புதிய
சிங்கள இனவெறி தீவிரவாதக் குழுக்களி
சிறந்த
சிங்கள பெளத்த இ
i l' L. I
பெண்நிலை வாதம் என்றா பெண்நிலை வாத வரலாறு ப
மார்க்சியமும் பெ
ஒவ்வொரு நூலும் இருநூல்களும் வேண்டுவோர் அஞ்சல் செலவ
பொன்னி, 12, முதல் பிரதான சாலை, நே

9
நூலின் இறுதி இயலாக "பகத்சிங்கும் தமிழகமும்" அமைந்துள்ளது. இவ்வியல், நூலின் முக்கிய பகுதி எனலாம். இதில் பல அரிய செய்திகளைச் சுபவி முதன்முறையாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார். பகத்சிங் தூக்கி லிடப்பட்டதை ஒட்டி பகத்சிங்கைப் பற்றித் தமிழில் வெளிவந்து தடைசெய்யப்பட்ட பதினொரு நூல்களைப் பற்றிய செய்திகளும் இதில் உள்ளன. இவற்றைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்று கிறது. மேலும், இந்நூல்களுக்குரிய சான்று களைக் காட்டுகையில், அந்த அரசாணைகள் எப் பிரிவைச் சேர்ந்தவை என்ற குறிப்பும் இல்லை.
அடுத்துவரும் பதிப்புகளில் மேற்குறித்த வற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
பாராட்டத் தகுந்ததொரு நூலை எழுதி யிருக்கும் பேராசிரியர் சுபவி அவர்களுக்கு நாம் விடுக்க விரும்பும் வேண்டுகோள் ஒன்று உண்டு: தயவுசெய்து இந்நூலை எழுதியதோடு தன்னிறைவு அடைந்து விடாதீர்கள்! O
f0f}*u%მნწr
நூல்கள்
ன் பெளத்த மதப் பின்னணியை ஆராயும் புத்தகம்
னவெறி தீவிரவாதம்
F 6i) is
ல் என்ன என்பது பற்றியும் றியுமான தத்துவார்த்த நூல்
of 6606)Giffbpti
விலை ரூ ஐந்து. ம் சேர்த்து ரூபாய் பதினொன்று அனுப்புக.
ருநகர், அடையாறு, சென்னை - 600 020

Page 32
20
ரயில்பெட்டி
எனக்குத் தெரியும் நாம்-நீயும் நானும் எப்படிச் சென்றாலும் ஒருபோதும் சந்திக்கப் போவதில்லை என்று ஏனெனில் ஒருபோதும் சந்திக்காத தண்டவாளங்கள் போன்றவர் நாம் ஒருவரையொருவர் நெருங்கினாலோ நம் இதயத்தின் ரயில்பெட்டி கவிழ்ந்துவிடும் அப்போது நீ உணர்வாய்எத்தனைக் காதல் கடிதங்கள் எத்தனை நறுமணத் தைலக் குப்பிகள் எத்தனை ஈர முத்தங்கள் மடியும் நம்மிருவருக்காக கொந்தளிப்பு மிகுந்ததொரு ரயில்பெட்டி கவிழ்கையில்
குர்து இனமக்கள் இன்றைய ஈரானின் தெற்குப் பகுதியிலும் ஈராக்கின் வடபகுதியிலும் வாழ் கின்றனர். தமக்கே உரிய நீண்ட வரலாற்றையும் பண்பாட்டையும் மொழியையும் கொண்ட இத் தேசிய இனத்தவர் பன்னுாறு ஆண்டுகளாக அந்நியராட்சிகளின் கீழ் ஒடுக்கப்பட்டு வருகின்றனர் இவர்களது சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்ட வரலாறு சிக்கல் மிகுந்தது. ஈரானி லும் ஈராக்கிலுமுள்ள பிற்போக்கு சக்திகள் தத்தம் சுயநல நோக்கங்களுக்காக இந்த இனத்தைச் சார்ந்த குலத்தலைவர்களையும் அரசியல் தலைவர் களையும் பிரிவினை கோருமாறு தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததுண்டு. தங்கள் புவிசார் நலன் களுக்காக வல்லரசுகள் குர்துகளின் நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்து வந்ததும் "காவு கொடுத்து வந்ததுமுண்டு. ஈரானிலும் ஈராக்கிலு மாகப் பிளவுண்டு கிடக்கும் தமது பாரம்பரியத் தாயகத்தை ஒன்றிணைத்துத் தமக்கான சொந்த தேசத்தை மீட்டெடுக்கப் போராடும் குர்துகளின் இயக்கத்தை உலகமக்களிற் பெரும்பகுதியின

பாலம்
குர்திஷ் கவிஞன் ஷெர்கோ பெகாஸ்
வேர்கள்
வான்வெளியில் கொல்லப்பட்டன அந்தப் பறவைகள் கொலைகாரருக்கெதிராக நட்சத்திரங்களும் மேகங்களும் காற்றும் கதிரவனும் சாட்சி கூறாவிட்டாலும்
அடிவானம் அதற்கு செவிமடுக்க விரும்பாவிடினும் மலைகளும் அருவிகளும் அவற்றை மறந்து விட்டாலும் ஏதேனுமொரு மரம் அக்கொடுஞ் செயலைப் பார்த்துத்தானிருக்கும் தன் வேர்களில் அக்கொடியோரின் பெயர்களை எழுதி வைக்கத்தான் செய்யும்.
தமிழில் : எஸ். வி. ராஜதுரை
இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. வல்லரசுகளின் அரசியலும் காரியவாத அரசுகளின் சூழ்ச்சிகளும் மிகுந்த இன்றைய உலகசூழ்நிலையில் குர்து இன மக்களின் அன்றாட வாழ்வுக்குள்ள சவால்கள், மானிட கெளரவத்துக்கும் சுதந்திரத் துக்குமுள்ள அச்சுறுத்தல்கள், பகிரங்கமாக இழைக் கப்படும் அநீதிகள், சமாதானத்துக்கும் சுதந்திரத் துக்கும் சிறு தேசத்தின் ஏக்கங்கள் ஆகிய விஷயங் கள் இந்த நான்கு கவிதைகளில் எளிமையான உருவங்களினுநூடே சொல்லப்படுகின்றது.
குர்திஷ் கவிஞர்களில் மிகவும் புகழ்பெற்றவர் களில் ஒருவரான ஃபய்க்பெகாஸின் மகன் ஷெர்கோ பெகாஸ். 1940ஆம் ஆண்டு மே திங்கள் 2ஆம் நாள் தென் குர்திஸ்தானிலுள்ள (இது இப்போது ஈராக்கின் பகுதி) சுலப்மானியாவில் பிறந்தார். சுலப்மானியாவிலும் பாக்தாதிலும் கல்வி பயின்ற இவரின் முதல் கவிதைத் தொகுப்பு அங்கு 1968இல் பிரசுரமாயிற்று.

Page 33
பாலம்
குர்திஷ் கவிஞன் ஷெர்கோ பெகாஸ்
பிரிவு
எனது கவிதைகளுக்குள்ளிருந்து மலரை நீ எடுத்து விட்டால் என் பருவங்களிலொன்று மடிந்து விடும் காதலை நீ அகற்றிவிட்டால் என் பருவங்களிலிரண்டு மடிந்து விடும் ரொட்டியை நீ விலக்கி விட்டால் என் பருவங்களின் மூன்று மடிந்து விடும் சுதந்திரத்தை நீ பறித்து விட்டால் என் பருவங்கள் நான்கும் மடிந்து விடும் அவற்றோடே நானும், தமிழில் : எஸ்.வி. ராஜதுரை
1965இல் குர்திஷ் தேசிய விடுதலை இயக் கத்தில் சேர்ந்த ஷெர்கோ பெகாஸ் அதனோடு நெருக்கமாக இணைந்திருந்தார். “குர்திஷ்தானின் குரல்" என்ற அந்த இயக்கத்தின் வானொலி நிலை யத்தில் பணியாற்றினார். இந்த இயக்கத்தோடு அவர் கொண்டிருந்த நெருக்கமான பிணைப்பின் தாக்கத்தை அவரது கவிதைகளில் காண முடியும். மானிட கெளரவம், சுதந்திரம் ஆகியவற்றுக்கான போராட்டமே அவரது கவிதைகளின் முக்கிய கருவாக அமைந்துள்ளது.
வானொலி நிலையத்தில் பணியாற்றிய பிறகு அவர் சிறிது காலம் அந்த இயக்கத்தின் செய்தி தகவல் பிரிவில் பணியாற்றினார். 1975 இல் அவர் தென் ஈராக்கிற்கு மூன்றாண்டுகள் நாடு கடத்தப் பட்டார். இதற்குக் காரணமாக அமைந்தது, அன்று ஈரான் மன்னரும் (ஷா), ஈராக்கிலுள்ள பாத் (Ba'ath) கட்சி அரசாங்கமும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தமாகும். இது விடுதலை இயக்கத் துக்குப் பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தியது.

21
ஒரு கானகத்தில்
இருள் பரவியது தனது குகைக்குள்ளிருந்து ஒரு சிங்கம் நினைத்தது: நாளை, அண்டையிலுள்ள புலியைத் தாக்குவது எப்படி? புலி சிந்தித்தது : நாளை, அந்த நரியின் தோலை உரிப்பது எப்படி?
நரி யோசித்தது : நாளை, புறாக் குஞ்சுகளைத் தின்ன தோட்டத்திற்குள் நுழைவது எப்படி? புறா நினைத்தது : நாளை, வேடனையும் காட்டுப் பறவைகள் விலங்குகளனைத்தையும் ஒரேயிடத்தில் சேர்ப்பது எப்படி ? முடியுமா தன்னால் என வியந்தது புறா.
ஆயினும் அவரது இயக்க வேலைகள் தொடர்ந்து நீடிக்கவே செய்தன. 1984-1987 ஆம் ஆண்டு களில் அவர் குர்திஸ் விடுதலைப் போராளிகளுடன் வாழ்ந்து வத்தார்.
1987 தொட்டு ஷெர்கோ பெகாஸ் ஸ்வீடனில் வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார்.
பல்வேறு நாடுகளுக்குச் சென்று தன் கவிதை களைப் படித்துக் காட்டியிருக்கிறார். 1975க்கு முன்பு பாக்தாதில் அவரது கவிதைகள் ஏழு தொகுதி களில் பிரசுரிக்கப்பட்டன. இரண்டு கதைப் பாடல் களையும் ஒரு நாடகத்தையும் பிரசுரித்திருக்கிறார். l987 gai) gauclidig Giugil Gilair Pen Club's Tuchowsky" பரிசு வழங்கப்பட்டது. பரிசு வழங் கியவர் ஸ்வீடனின் பிரதம அமைச்சர். அதே ஆண்டு அவருக்கு இத்தாலியின் ஃப்ளாரன்ஸ் நகரத்தின் சுதந்திரக் குடிமகன் என்ற விருதும் கிடைத்தது.

Page 34
கொள்ளை நோய் பாலத்தையு
பாலம் இதழ் தரமான ஓர் இடத்தை நோக்கித் தனது பயணத்தை நிறுத்தாது தொடர்வது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நெல்சன் மாண்டெலா அவர்களது அட்டைப் படம் எடுப்பாக உள்ளது. தோழர் தியாகு அவர்கள் மிக நன்றாக எழுதியுள்ளார். சங்கர் அவர்கள் அபுஜிகாத்தைப் பற்றி எழுதும் தொடர் கட்டுரை வெறும் வாழ்க்கை வரலாறு போலவும் அல்லாது நினைவுக் குறிப்புகளைப் போலவும் அல்லாது வித்தியாசமான முறையில் அபுஜிகாத்தை ஒவ்வொரு விஷயத்திற்காகவும் முன்னும் பின்னும் தொட்டுப் படம் பிடித் திருப்பது உயிரோட்டமாகவுள்ளது, இரண் டாவது ஒரு தொடர்கட்டுரையானது தனித் தனிக் கட்டுரை போலவும் அமைந்து கிளர்ச்சி யூட்டுகிறது. இவ்வகையான விஷயங்கள் பாலத்தை வரலாற்றில் நிலைக்கச் செய்வன.
மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் உயிரைத் தடவிக்கொடுத்தன என்றுதான் சொல்ல வேண்டும்.
'ரிஷி” இந்த இதழில் மேலும் வளர்ந் துள்ளார் என்பதாகவே படுகிறது.
*கூடவரும் அவர்கள்’ - 'தூரம்' இரு சிறு கதைகளைப் பொறுத்தவரை அவற்றின் ஆசிரியர்களே எதற்காக அந்தக் கதையை நகர்த்தினார்களோ அந்த எல்லையை அவர் கள் அடையவில்லை என்றே கருதுகிறேன். தூரத்தில் கூட உதயஷங்கர் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் ‘கூடவரும் அவர்களில்’ மனிதநேயம் வெளிப்படவில்லை என்பதே என் கருத்து.
சாதாரணன் பக்கங்கள் சாதாரணமாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினால் விமர்சனம் தேவை இல்லை. ஆனால் அது சாரமுடனும் ஈரமுடனும் இருக்க வேண்டுமென விரும்பினால் விமர்சனம் தேவை. **நம்மை ஆளத் தகுந்தவர் சினிமா நடிகர்தானா?”-- இது தேவைதானா?.
சமூகத்தின் அடித்தளம் மேல் கட்டு மானத்தை நிர்மானிக்கிறது. ஆனால் அதே நேரத்தில் மேல்கட்டுமானம் அடித்தளத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. அதாவது மேல்கட்டு

விமர்சிப்போம்
ம் பற்றிக்கொள்ள வேண்டாம்
மானம் அடித்தளத்தையும் அடித்தளம் மேல் கட்டுமானத்தையும் பரஸ்பர வினைகளால் பாதுகாக்கிறது. அவ்வாறிருக்க மேல்கட்டு மான கலை சமூகத்தைக் கவ்விப் பிடிப்ப தென்பதோ கலைஞன் சமூகப் பிரக்ஞையாய் மாறி மக்களை ஆகர்ஷிப்பது என்பதோ மோச மான காரியமல்ல. அதே போல அவன் ஆட்சிபீடம் ஏறுவது எ ன் பதும் மோச மானதல்ல.
இந்திய விடுதலைப் போருக்குப் பிறகு எந்தப் பூர்ஷாவா அரசியல்வாதியும் தியாகமோ மக்கள் சேவையோ செய்ததில்லை. விடுதலைப் போர் முடிந்தும் 41 ஆண்டுகள் முடியவுள்ளன. இந்த நிலையில் பூர்ஷாவா வர்க்கமே அரசியல் தலைமையோ ஆட்சித் தலைமையோ ஏற்கத் தகுதியற்றது என்று சொல்லி விடலாமா? அப்படிச் சொன்னால் அது அரசியல் ஆகுமா?
பூர்சுவா கலைஞனுக்கு ஈடாகப் பாட்டாளி வர்க்கக் கலைஞன் வளரவில்லையே என்று வருத்தப்படுவதில் நியாயம் உள்ளது. அதே நேரத்தில் ஒரு பாட்டாளி வர்க்கக் கலைஞன் தலைமையில் ஆட்சியமைவது கூடாதா என்ன? இது நடக்கக் கூடியதுதானே? M.G.R., N.T.R ரேகன், ஜெயலலிதா இவர்களெல்லாம் நடிகர் கள் அல்லது கலைஞர்கள் என்பதற்காக அவர்கள் ஆட்சி சரிப்படாது என்றால் கலை மட்டும் எப்படிச் சரிப்படும்? ஆட்சியை, கொள் கையைக் குறை சொல்வது என்பதுதான் சரியே தவிர இதர விஷயங்கள் சரியல்ல.
இன்றைய தமிழகப் பத்திரிகை உலகை ஒரு பிளேக் நோய் தொற்றிக் கொண்டுள்ளது. தங்களால்தான் ராஜாக்களைத் தெரிவு செய்ய முடியும் அல்லது உருவாக்க முடியும் என்பதே அது. அந்தக் கொள்ளை நோய் பாலத்தையும் பற்றிக் கொள்ள வேண்டாம்.
சி. அறிவுறுவோன், அம்மையகரம்
போராட்டச் செய்திகள்
ஜூலை மாத பாலம் பல நல்ல போராட்டச் செய்திகளைச் சுமந்து வந்திருக்கிறது.

Page 35
பாலம்
உன் சுய சரிதை எனும் கவிதை ரிஷி என்ற ஈழப் பெண் போராளியின் மனதைத் திறந்து காட்டுகிறது.
பசீரின் வள்ளல்களைத் தேடிய பூதம்கவிதை நன்றாக இருந்தது.
மெய். இரெ. பொற்கொடி. முகவை
இதழுக்கு இதழ்
பாலம் இதழுக்கு இதழ் முன்னேறி வருகிறது. பாராட்டுக்கள்.
ப்ரகாஷ், தஞ்சை
சிரத்தை தெரிகிறது
பொதுவாகவே பத்திரிகையில் சிரத்தை எடுத்த எடுப்பிலேயே தெரிகிறது. என் மன மார்ந்த வாழ்த்துக்கள். மதுரை நாடக விழா பற்றிய கட்டுரை பக்குவமாக இருந்ததாகத் தோன்றியது. தகழி அவர்களுக்கு ஞானபீட பரிசு அளித்தாகி விட்டது. மெண்டலா (அவர் பெயர் உச்சரிப்புக்குத் தமிழில் இதுதான் மிக அருகாமையான வடிவம்) கட்டுரையில் ஓரளவு 96), (560 Lu வாழ்க்கை வரலாற்றையும் கூறியது மிகவும் சரியான முயற்சி.
அசோகமித்திரன், சென்னை
இலக்கி
தனி இதழ்: ரூ. 2-00
சந்தா செ
தொட
பாலம், 12 முதல் பிரத அடையாறு, செ

23
நியாயத்தின் குரல்
பாலம் எங்களின் நேசத்திற்குரிய இதழ். இலக்கியத்தை, அதன் தரத்தை விரும்புகின்ற யாரும் அதை நேசிக்காமல் இருக்க முடியாது.
அடக்குமுறை, ஏகாதிபத்தியம், இன ஒதுக் கல் ஆகியவற்றை எதிர்க்கின்ற போராட்டங் களின் 'நியாயக்குரலாக" பாலம் எமக்கு காட்சி யளிக்கிறது. ஒரு நல்ல இலக்கியத்தின் நோக்கமும் அதுவாய்தான் இருக்கக் கூடும். உங்களுடன் நட்புறவிற்காய் கரங்கோர்ப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
ஜூலை '88 இதழ் மிகவும் சிறப்பானதாய் அமைந்திருக்கிறது. கால் நூற்றாண்டாய் சிறையினில் வாடும் தென் ஆப்பிரிக்க மக் களின் மாபெரும் தலைவர் நெல்சன் மாண்டேலாவின் பிறந்த நாள் விழா மலராய் காட்சியளிக்கிறது. மாபெரும் போராட்ட வரலாற்றை தன் வாழ்க்கையாக கொண் டிருக்கிற மாண்டெலாவின் வாழ்க்கை வரலாற்றை கட்டுரையாகத் தந்த தோழர் தியாகு அவர்களை எமது பேரவையின் சார்பில் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். அதே போல் தான். விடுதலைப் போரின் எழுகதிர் அபுஜிகாத் கட்டுரையும்.
சுப்ர பாரதி மணியனின் கூட வரும் அவர்கள்’ மற்றும் உதய ஷங்கரின் "தூரம்’- -சிறந்த யதார்த்த படைப்புக்கள்.
காசிம், புஷ்கின் இலக்கியப் பேரவை
சென்னை
லம்
ப இதழ்
ஆண்டுச் சந்தா : ரூ. 25-00
லுத்துங்கள்
.ர்புக்கு
ான சாலை, நேருநகர், ன்னை-600 020 .

Page 36
புகழேந்தியின் உருவ
சுந்
இலக்கியம், இசை, ஓவியம், நடனம், சிற்பம் போன்ற பல கலைத் துறைகளிலும் தன் பங்கை விடாமல் செலுத்தி வருகிற தஞ்சாவூர் மாவட்டத்தின் மற்றொரு கலைஞ னாய்-ஒவியனாய்-புகழேந்தி நுழைந்திருக் கிறார். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் இறுதி ஆண்டு கலைத்துறை மாணவனாய் பயின்று வருகிறார். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட ஒவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. லலித்கலா அகாடெமி உள்ளிட்ட பல ஸ்தாபன விருது கள் பெற்றிருக்கிறார். 1987-ல் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய ஓவியப் போட்டி யில் 2-ம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட புகழேந்தி கடந்த ஜூலை 21ஆம்தேதி முதல் 23ஆம் தேதிவரை தஞ்சாவூர் பெஸன்ட் ஹாலில் “ONE MAN SHOW” ஒன்றை நடத்தினார். அதுபற்றிச் சொல்வதற்கு முன் னால் நவீன ஓவியத்தின் ஆரம்பத்திற்குப் போகலாம்.
ால்லாக் கலைத்துறைகளையும் போலவே வெவ்வேறு மாற்றங்கள் சம்பவித்ததாலே ஒவியத் துறையின் வளர்ச்சியும் நிர்ணய மானது. கற்கால மனிதர்கள் முதல் இன்று வரை ஓவியம் நிலைத்து நிற்க-காலத்தோடு தன்னை இணைத்துக் கொள்ள-என்னென் னவோ மாதிரியான மாற்றங்களையெல்லாம் எதிர் கொள்ள வேண்டியே இருந்தது. இருப் பதை இருப்பது மாதிரி காட்டும் ஓவியங்கள் பல ஆண்டுகளைச் சாப்பிட்டிருக்கின்றன. பல ராஜாக்களை திருப்தி படுத்தும் உருவ (Portraits) ஒவியங்களின் ஆக்கிரமிப்பு நிறைந்த வருஷங்கள், புதிய கற்பனைக்கும் புதிய சிந்தனைக்கும் தங்களை ஆட்படுத்திக் கொள் ளாமல் அழிந்து போன தலைமுறைகள் என ஓடிப் போய்க் கொண்டிருந்தன காலத்தின் கால்கள். பக்திமார்க்கம் கடவுள்களை மட்டுமே வரையக்கூடிய கற்பனையைக் கொடுத்தது. பல கைகளை-பல தலைகளை உடைய கடவுள் கள்-யானைத்தலை கொண்ட விநாயகன் என்று அறிந்தோ அறியாமலோ சர்யலிஸ் ஓவி யங்களின் காலங்கள். இந்த மண்ணில் ஒவியர் களின் கண்ணில் பட்டவையெல்லாம் அப் படியே தூரிகைகளால் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.

ச்சிதைப்பு ஓவியங்கள் தர்ஜி
இந்திய ஓவியங்களில் சமதளத்திலேயே நீண்ட தூரங்களைக் காட்ட முடிந்த ஆரம்பங் கள்-மினியேச்சர்கள் (Miniatures)-மேற்கத் திய ஓவியர்களைப் பாதித்திருக்கின்றன, அதற்கு முன்பு மைக்கேல் ஆஞ்சலோ, லியானார்டோ, டா வின்சி, அதற்குமுன் ஃபிரான்ஸிஸ் கோயாவின்சென்ட் வான்கா என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக பெயர்கள் முளைத்திருந்தன. வண்ணங்களின் தேர்ந்த பிரயோகம், புதிய சிருஷ்டி (Creativity)-இவையெல்லாம் முழு அளவில் வெளிப்படத் தயங்கி எங்கோ வெளி யில் அலைந்து கொண்டிருந்தன. மைக்கேல் ஆஞ்சலோ, டாவின்சியின் ஓவியங்களின் துணுக்கமான விவரப்பதிவுகள் ஒரு புதிய வழிக்கு ஆதாரமாயிருக்கின்றன. ஒடும் குதிரைகளின் பெளருஷம்-மனிதர்களின் உடற் கூற்றுப் பதிவுகள். இப்படி, இப்படி-காலம் ஒடிக்கொண்டிருந்தது. திருப்பங்கள் தோன்றின பெருமளவில். சால்வர்டோர் டாலி தன் சர்ரியலிஸ ஒவியங்களால் நவீன சிந்தனையை ஒவியத்துறையில் ஏற்படுத்துகிறார். டாலியின் பாதிப்பு பல நவீன ஓவியர்களிடமும் காணப் படுகிறது. பிக்காஸோ மற்றும் ப்ராஹ் என்ற இளைஞர்கள் இந்த வழியில் வரைந்து வரும் காலங்கள் இன்னொரு மாற்றத்திற் காக காத்திருக்கிறது. ஆக, பிக்காஸோ பல விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. *தன் ஓவியங்கள் மக்களுக்கும், விமர்சகர்களுக் கும் புரிய வெகு காலம் ஆகும்’ என்று ஒரு கலைஞனுக்குரிய கர்வத்தோடும், வருங்காலக் கலைத்துறையின் சரியான தேவை உணர் வோடும் உருவச் சிதைப்பு ஒவியங்களை அறி முகப்படுத்துகிறார். அப்போது பிக்காஸோவின் வயது இருபதுக்குள்தான் என்பதும் ஒரு
செய்தி.
அவருடைய “விபச்சாரக் காட்சி ஓவியத் தில் பெண்களின் முலைகள் கண்கள் போலவும் கை கால்கள் மிகப் பெரிய அளவில் விரி வடைந்து அருகாமையிலும், மூக்கின் எலும் புகள் முதுகுத் தண்டுகள் போலவும், முலைகள் முதுகுப்புறத் தோள் எலும்புகள் போலவும் என பல்வேறு தோற்றங்களைத் தருகின்றன. இந்த ஓவியம் ஓவிய உலகையே அதிர்ச்சி யால் பாதிக்கிறது. புதியவற்றை எப்போதும் மறுக்கிற விமர்சகர்கள் பிக்காஸோவின் ஒவியத்தை வன்மையாக நிராகரிக்கிறார்கள்.

Page 37
Lists) b
பிக்காஸோவின் நண்பன்-ஒவியன்-ப்ராஹ் ‘இது என்ன குழப்பம்’ என்று ஒதுக்குகிறார்!’ பிக்காஸோ தன் முயற்சியில் தீவிரமாயிருக் கிறார்.
எல்லாம் நாம் ஏற்படுத்திக் கொண்ட கற்பனைகள்தானே. காலத்தை நாட்களாக அளப்பதும், சூரியனின் தூர அளவைகளும் இது போலத்தானே. எனக்கு ஒன்றாகத் தெரிவது அடுத்தவனுக்கும் அப்படியே தெரியு மென்பது என்ன நிச்சயம்?
காலம் செல்லச் செல்ல பிக்காஸோவின் ஓவிய மொழி புரிய ஆரம்பிக்கிறது. செசானே யின் பாதிப்புக்களுடன் வரைந்து கொண் டிருக்கும் ப்ராஹ்ஹின் ஒ வி ய ங் களி ல் பிக்காஸோவின் உருவச்சிதைப்பு ஒவியங் களின் பாதிப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன. இருவரும் ஒன்றே போல் வரைந்து செல் கிறார்கள். பிக்காஸோவின் ஒவியங்களில் தெரியும் ஆஃப்பிரிக்க முகமூடிகள் (Masks) மட்டுமே ப்ராஹ்ஹின் ஒவியத்தைப் பிரித்துக் காட்டுகிறது. சால்வடோர் டாலி மூலம் தெரிய வந்த நவீன ஓவியங்களில் உருவச் சிதைப்பு முறை ஒவியங்கள் இவ்வாறு பிக்காஸோ மூலம் தொடங்கி உலகப் பிரபல்யம் அடைகின்றன.
புகழேந்தியின் ஓவியங்களில் பெரும் பாலானவை உருவச்சிதைப்பு ஒவியங்களாக இடம் பெற்றிருக்கின்றன. ஆரம்ப காலங்கள் எல்லோருடையதையும் போலவே புகழேந்திக் கும் அமைந்திருக்கின்றன. படிபோட்டுக் கொடுத்திருக்கின்றன. உருவப்படங்கள் (Portraits) 65.36, Taslds sir (Linocats) 6Tsiro தான் தொடங்குகிறது ஆரம்பம். \ தத்ரூபமாக வரைவதில் ஆர்வம் கொண்டவையாக ஆரம்ப கால ஓவியங்கள் தெரிகின்றன. இளவயது மனோநிலைக்குப் பல வடிகால்கள் உண் டல்லவா?-புரியாத செக்ஸ், வறுமையின் கோர அறிமுகம், பசி, கனவுகள், சுரண்டலைக் கண்டு கோபம், பொய்யர்களின் புரட்டு, தப்பைக்கண்டு கோபத்தால் எரிவது, நோயின் பார்வை எனப் பல வகையாகப் பிரிந்து நிர்ணயம் கொள்கின்றது இளமை, இவை எல்லாவற்றிலும் சட்டென்று சிக்கிக் கொண்டு
வெளிவந்: இலங்கை மலையகத் தமிழ் மக்
ஆய்வு
மலையகத்
விலை ரூ பொன்னி, 12, முதல் பிரதான சாலை,

IX
விடாமல், பதிலை ஒவ்வொரு ஓவியமாகத் தேடி முயற்சித்திருக்கிறார்.
இலங்கைப் படுகொலையைச் சித்தரிக்கும் ஓவியம், நீரில் கோபுர நிழல் விழும் ஓவியம், கூட்ட நடுவில் மக்கள் முகங்கள், கொஞ்சம் அலட்சியமான வர்ணத் தேர்வுகள் என்று ஆரம்பம் கொள்கிறது இவரது பயணம் .
ஆனால் மிகக்குறுகிய காலத்தில் சட்டென்று விழித்துக் கொண்டு "புதிதாக என்ன செய்ய முடியும்!’ என்று யோசித்திருப்பது பல நல்ல ஒவியங்கள்ைத் தந்திருக்கிறது. சில பகுப்பு களின் மூலம் சிதைத்து, ஒவியத்தின் சில பகுதி களைப் பூதாகாரமாக நம் கண் முன் காட்டி, அவற்றில் தன் நுண்மையான கவனத்தைச் செலுத்தி சதைத் திரட்சிகளின் மூலம் தான் சொல்ல வருவதைக் காட்டிவிடுகிறார். தன் பசி, வறுமையைத் தவிர ஏதும் அறியாது மல்லாந்து கிடக்கும் மனிதன், தன் சுயத்தைப் பற்றிச் சிந்திக்கும் மனிதன், தன்னைப் பறிகொடுத்து நிற்கும் பெண், அடக்கு முறைகளால் அடை யாளம் இழந்து போனவன் என்று பல நிலை களில் உருவங்களைச் சிதைத்துப் பார்த்திருக் கும் புகழேந்தியின் ஒவியங்கள் தமிழக ஓவியத் துறைக்குப் புதியவை. பல நவீன ஓவியர்களின் வறண்டுபோன கற்பனைகளுக்கிடையில், போலி ஈடுபாடுகளுக்கிடையில்-ப்ளேஜியாரிசங்களுக்கு நடுவில் - புகழேந்தியின் ஓவிய சிந்தனை ஆரோக்யம் தருகிறது. புகழேந்திக்குள் புதைந் திருக்கும் ஆளுமை, சிந்தனை முதலியவை குறித்து நம்பிக்கை கொள்ளச் செய்கின்றன இவரது வெளியீட்டுத்திறன். வண்ணங்களில் இன்னும் அதிகமான கவனமும், "புதிய புதிய புதியவைகளும் இன்னும் விசாலம் பெறுமென் றால் புகழேந்தியின் ஒவியங்கள் காலத்தின் பதிவுகளைத் தன் மீது கொள்ளும். சால்வடோர் டாலியின் சர்ரியலிச ஓவியங்களையும்-பொது வாக தன் முன்னோர்களின் ஒவிய சாதனை களையும் தன் பார்வைக்குள்ளாகவே ஆட்படுத் திக் கொள்வது புகழேந்தியை மேலும் வளர்க் கும
பொதுவில்-வறண்டு போன பார்வை களுக்கு மூன்று நாட்கள் ஒரு நல்ல அனுபவமாக வாய்த்தது புகழேந்தியின் ஓவியக் காட்சி.
துவிட்டது களின் வாழ்நிலைப் பற்றிய
நூல் மிழ் மக்கள்
நான்கு நேருநகர், அடையாறு, சென்னை-20

Page 38
-- ------- நூல் E究
கல்லறை மே
(கவிதைத்
கொந்தளிக்கும் கடல் நடுவே இலங்கைத் தீவு. புயலின் நடுவே ஈழம் , சுழன்றடிக்கும் புயலிலும், அலையோடு அலை மோதுவது போல் துக்க உணர்ச்சியும் கோப உணர்ச்சி யும் போரிட நிற்கின்றனர் ஈழத்து இளைஞர் கள். அந்த இளைஞர்களின் அச்சமின்மைக்கும், தன்னம்பிக்கைக்கும் சான்றாக விளங்கும் கவிதைகளை இத்தொகுப்பில் காண்கிறோம். கல்லறை மேலான காற்று: மானுட நேசம் மிகுந்து வரும் தென்றலாகவும் தவழ் கிறது. சண்டமாருதமாகவும் சீறுகிறது. **கல்லறைக்குள் புதைந்தவர்கள் 3258) LD களல்ல; விடிவு காண சாவை துச்சமென்று கருதி போராடிய போராளிகள்” என முழங்கு கிறது.
ஈழ இளைஞர்கள் அகிம்சாவாதத்தில் நம்பிக்கையிழந்து ஆயுதத்துடன் எழுந்த காலம். கொடுங்கோன்மைக்கு அடங்காது தேசத்தையே படைவீடாக்கி சமர் புரிந்த காலம். இன ஆதிக்கத்தின் ஆணிவேரையே அசைத்து சுதந்திரக் கனலை மூட்டிய காலம். இலங்கை அரசின் கொலை வெறி ராணுவம் தமிழர்களை பீரங்கிகளுக்கு இரையாக்கி ஈழ தேசத்தை பிணக்கோலமாக்கியது. குண்டுமாரி பொழிந்து கொலைக்கூத்து நடத்தியது. இனப் பகைமையில் மனித உயிர் மலினமாகிப் போனது. இனவெறியின் வேட்டைக்களமாய் வடமராச்சி மாறிவிட்ட கழிவிரக்க நிலையில், ஒரு கவிஞனின் தீனக்குரல் எழுகிறது.
** இனிய வடமராட்சிமீன்கள் துள்ளும் 5-6)606) ஓரம்பேய்கள் குவியும்!!பிணங் களை உருட்டும்! பின். அவற்றை தவறெனச் சொல்லும்!|மன்னிப்பு கேட்கும்!!தேடுதல் வேட் டையின் பேரில்/தேவைகளை தீர்த் து க் கொள்ளும்|சோதனை என்னும் பெயரில் பெண்களை சுவைத்துப் பார்க்கும்’-இளம் மனம் கசியும் கண்ணீர்த்துளிகளே இவ்வரிகள். ஆனால் அதன் பின் எழுவது அபசு ரமல்ல. ‘நமது தலைமுறை நிமிர்ந்து நிற்கட்டும்” என்று அறை கூவுகிறான் அந்தப் போராளிக் கவிஞன்.
வாலிபரை *எதிர்கால அபாயமாக" எண்ணி இலங்கை ரா ணுவ ம் கொன் றொழிக்கும் போதிலும், எதிரியின் பிணந் தின்னும் துப்பாக்கியைவிட வலிமை வாய்ந்த எழுதுகோலை இயக்குகிறான் இன்னொரு காளைக் கவிஞன்
**ம க் களுக்காய்/மரணிப்பதையிட்டு/நான் மகிழ்ச்சியடைகிறேன்/அதனால் என் துப்பாக்கி

றிமுகம்
லான காற்று தொகுதி)
பறிபோவதையிட்டே/நான் வருத்தமடைகிறேன் ஏனெனில்|என் குழந்தைக்கு/அது மிகவும் அவசியம்.”
ஈழத்தமிழர் சாவின் பிடியில் தத்தளிக்கும் நிலை, “ஆண்டவனும் தோற்றான் அரசபயங்கர வாதத்திற்கு” என்கிறான் வேறொரு கவிஞன். பின், மரணத்திலும் வாழ்வோம் என்று சொல்லி.,
மண்ணில் ஒவ்வொருத் துகளும்/அந்நியர் கால்களில் நசுங்கிப் போனதும் எங்கள் கால் களை இழந்து/எங்கள் முகங்களை இழந்து எங்கள் பரம்பரையை இழந்துஆத்மாவை மாத்திரம்|நகத்தின் இடுக்கில் ஒளித்து/இன்று வரையிருப்பதை/எப்படி மறப்போம்?
என பழிவாங்கும்வெறி பொங்க உள்ளம் குமுறுகிறான். சர்வாதிகாரம் ஆட்சி செய்யும் மரணத்தின் உலகமாய் ஈழம் உருமாறிய கோரச்சூழலை, ஈழத்தமிழரின் புராதன பெருமை வாய்ந்த கலாச்சார சின்னங்களை அழித் தொழிக்கப்பட்ட குரூரத்தை இன்னொரு கவிதை இப்படி சித்தரிக்கிறது.
கோயில்களையும் தூளாக்கிய|கொடுமை. கொடுமை/பயந்தோடி பதுங்கு குழியில் பயங்கரவாதிகளாக்கப்பட்டம ழ  ைல க ள் மறக்க மனம் மறுக்கிறது.|மாண்டாள் வெளி களில்/மண்னே வெடி மருந்தாக மணக் கிறது. முலைப்பாலை குடிப்பதற்குள்/மூச்சை நிறுத்திய முப்படைத் தாக்குதல்.lதாயை. தகப்பனை.தமயனை வீட்டு நாயைக்கூட இழந்தோம்.
-என போர்முகத்தின் கோரத்தை சிங்கள இராணுவத்தின் வேட்டை வெறிச் செயலை, பழுது பட்ட ஈழ மக்கள் வாழ்வின் அவலத்தைச் சொல்லி ‘'தாயே, அம்மா, முடியாது வரலாறு. முள்வேலிக்கப்பால் உன் வரலாறு/நீயே தொ டர்ந்து கொள்!” என்று நம்பிக்கையூட்டுகிறது.
மாணவர் இளைஞர் பொது மன்றத்தால் (GUYS) வெளியிடப்பட்ட இத்தொகுப்பில் அடங்கிய அனைத்தும் எரிதழல் கவிதைகள். படிப்பவர் நெஞ்சில் உணர்ச்சிப் புயலை எழுப்புகின்றன. இவற்றை எழுதியவர்கள் இளைஞர்கள், வளருங்கவிஞர்கள். அவர்கள் ஈழத்தமிழரின் மானுட வாழ்வை ஒத்தையாய் தனித்து நின்று பார்க்கவில்லை. போராடும் மக்கள் மத்தியில் நின்று, அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்று, அவர்கள் உறுதி தளரும் போது நம்பிக்கை தருபவர்கள் என் g கவிதைகளின் ஒவ்வொரு வரியிலும் ஒளிர்கிறது. ()

Page 39
Lu IT6a)uib
மல்லின
டொமினிக் ஜிவா-ஈழத்தின் பழம்பெரும் எழுத்தாளர். கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக மல்லிகை எனும் இலக்கிய சஞ்சிகையை தன் அயராத உழைப்பால் தொடர்ந்து நடத்தி வரும் பத்திரிகையாளர். அவரது மணி விழாவை ஒட்டி ஈழத்து அறிஞர்கள், எழுத் தாளர்கள் 'ஜீவா பற்றி எழுதிய கட்டுரை களின் தொகுதியே இது.
ஜீவா இலங்கை தமிழ்ச் சிறுகதைக்கான முதல்ாவது சாகித்ய மண்டல பரிசினை பெற்ற எழுத்தாளர். தண்ணிரும் கண்ணிரும், பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் அனுபவ முத்திரைகள், ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல் எனும் நூல்களும் வெளி வந்துள்ளன. அவரது கதைகளில் பல செக், பிரெஞ்ச், ரஷ்ய மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன. அண்மையில் சோவியத் யூனியன் ஜீவாவை வரவேற்று விழா நடத்தி கெளர வித்துள்ளது. ダ −
ஜீவா-அவர் ஒரு பொதுவுடைமைவாதி, அரசியல்வாதி, மேடைப்பேச்சாளர், நல்ல நண்பர். எழுத்தின் யதார்த்தமாய் வாழ்பவர். ஈழ இலக்கிய உலகில் பலருக்கு குருவாகவும், வழிகாட்டியாகவும் திகழ்பவர்.
1948-ல் தன் தலைமறைவு வாழ்க்கையின் போது பா. ஜீவானந்தம் தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, அவரை டொமினிக் சந்தித்து உத்வேகம் பெற்றார். இதனால் டொமினிக் ஜீவா வானார். இன்று டொமினிக் ஜீவாவை விட மல்லிகை ஜீவா வே கீர்த்தி கொண்ட பெயராகி உள்ளது.
மல்லிகைக் ஈழத்தின் தனிச்சிறப்பான மண்வாசனை கமழும் விதைகளின் தொகுப்பு. டொமினிக் நடத்தும் மல்லிகை இதழில் 70 களின் தொடக் கத்திலிருந்து 86 வரையிலும் முகிழ்த்த கவிதை கள்; சில சந்தப்பாடல்கள்; இ ல ங்  ைக யின் அமைதி வாழ்வை இனப்பகைமை குலைத் தழித்த குரூரத்தை படம்பிடித்த ஒரு சிங்கள கவிதை; நாட்டுப்பற்றும், ஆக்கிரமிப்பாளரை அகற்றி ஒழிக்கும் நெஞ்சுறுதியும் அலைவீசி கொந்தளிக்கும் ஒரு ஆப்பிரிக்க கவிதை என கனல் மணக்கும் கவிதைகள் அடங்கிய தொகுப்பு.
ஈழத் தமிழ் மண்ணோடும் வாழ்வோடும் ஒன்றிய இக் கவிதைகளின் குரல், மனிதனின்
மேன்மையை வலிமையை கோணல்களை,

XI
க ஜீவா
பலமுறை தமிழகம் வந்து தமிழிலக்கிய வாசகர்களோடும், இலக்கிய நண்பர்களோடும் தம் உறவை வளர்த்துக் கொண்டவர் ஜீவா. தமிழகத்தில் ஈழத்திலக்கியத்தின் பிரச்சாரக ராகச் செயற்பட்டவர். சரஸ்வதி, தாமரை, கலைமகள் ஆகிய தமிழகத்துச் சஞ்சிகைகளில் எண்ணற்றச் சிறுகதைகளை எழுதியவர். தமிழ் நாட்டுக்கு அப்பால் வாழ்ந்த ஈழத் தமிழ்ச் சமுதாயத்தின் அவலச்சுவை நிறைந்த சூழலை, அவர்தம் போராட்டத்தை தமிழக வாசகர் களுக்கு அறிமுகப்படுத்தியவர், ஜீவா. 4.
சமூக நிலையில் ஒடுக்கப்பட்ட வர்க்கத் தின் புதல்வனாய் பிறந்த ஜீவா உயர்வு தாழ்வுகளை ஒழித்துக்கட்டும் ஆத்திரம் தியாய் எரிய, வர்க்கப்போராட்டத்தில் த ன்  ைன இணைத்துக் கொண்டவர். இலங்கை முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தூணாக விளங் குபவர். மனித நேசமிக்க இலக்கிய நெஞ்ச மென புகழப்படுபவர். அவருக்கென்று ஒரு இயக்க கொள்கை இருப்பினும், மற்றவர் களின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து * மல்லிகை"யில் இடமளிக்கும் இலக்கிய நேர்மை கொண்டவர். இளம் எழுத்தாளர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார்.
ஜீவா தனது சில பலவீனங்களை முற்று மாக கடந்தவரல்லர். சபா ஜெயராசாவின் மல்லிகையும் ஆசிய ‘முறைமையும்’ எனும் கட்டுரை அவரது கொள்கைஊனத்தைப் பற்றி யும் சிந்திக்க நம்மைத் தூண்டுகிறது. கார்த்தி கேசு சிவத்தம்பி, செங்கை ஆழியான் ஆகியோர் கட்டுரைகள் அவரின் சிறப்புகளை நன்கு அறிந்து கொள்ளவும், சிக்கலானவராய் அவர் விளங்குவதற்கான காரணங்களை தெரிந்துக் கொள்ளவும் துணைபுரிகின்றன. 0
கவிதைகள்
இழிவுகளை உரக்க ஒலிக்கிறது. சுரண்டல்கேடு, வர்க்க பேதம், சாதி பாகுபாடு, சமய வாதம், அடக்குமுறை, இன ஒடுக்கல் என மானுடத் திற்கு இழைக்கப்படும் சகல கொடுமைகளுக்கும் எதிராய் இம் மல்லிகைக் கவிதைகள் பூத்தெழு கின்றன. போராட்ட அலை எழுச்சியில் சகல மனித விரோதங்களும் சிதைந்து அழிந்தொழி யும் எனும் உண்மையை நம்பிக்கை உறுதிபட கோபம் கனல்வீச பரப்புகின்றன.
ஈழத்திற்கே உரிய இயற்கைச் சூழல், பண் பாடு கலாச்சாரம், ஈழப்பேச்சுத் தமிழில் வாழும் தனித்தன்மை வாய்ந்த தமிழ், தனிமனித நடத் தைகள் யாவற்றையும் இக்கவிதைகள் எளிமை யாக நேரடித் தன்மை கொண்டு நம்மிடம் பகிர்கின்றன.

Page 40
XII
ஆயினும் இந்த மல்லிகைத் தொகுப்பி னுாடே மெலிதான துர்வாடையையும் நாம் உணர்கிறோம். பூ என்பதற்காகவே எல்லாப் பூக்களையும் ரசிக்க முடியுமா ? வாசமில்லா பூவை நம் பிணம் கூட ஏற்காதே ! அநியாயத் திற்கு எதிராக கலகம் செய்கிற இக் கவிதை களில் பல மொழியுருவில் தமிழ்மொழியின் வளமைக்கு முன் தோற்றுப் போயுள்ளன என்றே சொல்ல வேண்டும்.
சமகாலத்தில் உருவத்திலும் சமூக சார் புள்ள உள்ளடக்கத்திலும் புதிய புதிய பார்வை களோடும் நடையோடும் மகத்துவமிக்க தமிழ்க் கவிதை உலகை கட்டியவர்கள் ஈழத்துக் கவிஞர் களே. ஆனால் அந்தச் சாதனைக் கவிதை களுக்கு மாறுபட்டு "மல்லிகைத் தன்மை’ இருப் பதையே இத்தொகுப்பில் அறிகிறோம். ஆண்
தீம்தரிகிட
ஒரு தமிழ் இளைஞனும் சிங்களப் பெண் ணொருத்தியும் உயிருக்குயிராய்க் காதலிக் கிறார்கள். கடைசியில் அந்தக் காதல் தோல்வி பெற இனவெறி காரணமாகி விடுகிறது. அதோடு ஈழப் பிரச்னையின் வேர்மூலம்எது என்பதை அரசியல் பின்னணியோடு தொட் டுக் காட்டுவதுதான் தீம்தரிகிடதித்தோம். 1956-இல் சிங்களம் ஆட்சிமொழி ஆக்கப்பட்ட போது, தமிழீழத் தந்தை செல்வா, திரு. ஜி. ஜி. பொன்னம்பலம், திரு. சி. சுந்தரலிங்கம் போன்ற முதுபெரும் தலைவர்கள் சாத்வீக் முறையில் கிளர்ச்சி நடத்தி, தமிழ்மக்களின் அதிருப்தியைத் தெரிவித்தனர். அறவழியில் நடைபெற்ற அந்தத் தலைவர்களின் போராட் டத்தை, ‘சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக் கும் இடையிலான போர்’ என்று அர்த்தப் படுத்தி அன்றைய இலங்கை பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டார நாயகா போலி ஸாரின் பலத்த பாதுகாப்போடு” சிங்கள ரெளடிகளை ஏவி போராடிய ஈழதமிழர்களை அடித்து நொறுக்கினார். பரம்பரை பரம்பரை யாக தமிழ் பேசும் மக்கள் வாழக்கூடிய தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மக்களைக் வலிந்து குடி யேற்றி, பொருளாதார, சமூக, கலாசார நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதோடு, சிங்களத்தை மட்டுமே ஆட்சி மொழி ஆக்கி இருப்பது - தமிழ்பேசும் இனத்தை நசுக்கிதமிழ் மக்களை இரண்டாந்தர குடிமக்களாக் கும் பிரிவினை உணர்ச்சியாகும் என்று பாராளு மன்றத்தில் தமிழ்த்தலைவர்கள் முழங்கினர்.
எந்தப் பயனும் இல்லை. நாளாக, நாளாக சுயநல மதவெறியர்களின் கையில், 'மகுடிக்கு அடங்கி ஆடும் பாம்பாக சிங்கள அரசு சிறை பட்டுப் போனதால், சிங்கள மக்களுக்கும் தமிழ்

Tsib
பெண் உறவுமுறையை விளக்க முனையும் இடத் தில், பழமைவாத விலங்கைத் தரித்து பிறந்துள்ள கவிதைகளும் இதில் அடங்கியுள்ளன. தேசிய இன விடுதலைப் போர் வீறு கொண்டிருந்த காலத்தைக் காட்டும் கவிதைகள் வெகு சொற்ப மாகவே உள்ளது வருந்தத்தக்கது.
கடவுளுக்கு (அ. யேசுராசா), என் கிரா மத்துப் பட்டதாரி (வ.ஐ.ச. ஜெயபாலன்), அழகு-முரண்பாடு (சபா. ஜெயராசா) காலனி நதியோர கனவுகளும் பாலத்துறை பாலத்தடி யும் (மேமன்கவி) விஸ்வரூபங்கள் (சண்முகம் சிவலிங்கம்), உள்ளேயிருந்து கொல்லும் நோய் கள் (வ. இராசையா) ஆகிய கவிதைகளை இத்தொகுப்பில் நறுமணம் வீசும் மல்லிகை
களாய் உணர்கிறோம்.
0 ஜே. சாந்தாராம்
தித்தோம்
மக்களுக்கும் இடையே இருந்த இடைவெளி அதிகப்பட்டுக் கொண்டே போனதே தவிர அடியளவும் குறைந்தபாடில்லை.
**நின்றால் குத்து, நடந்தால் வெட்டு” என்பது மாதிரி கண்ணில் கண்ட தமிழர்களை யெல்லாம் ஓட ஓட விரட்டி அடித்தனர். தமிழனா, சிங்களவனா என்று அடையாளந் தெரியாத சிங்கள ரெளடிகள் அவர்களுடைய தலையை முகர்ந்து பார்த்து, “நல்லெண்ணெய் மணத்தால் அவன் தமிழன்", காதுகளில் கடுக் கன் போட்ட துளைகள் தெரிந்தால் அவன் தமிழன்’ என்று வீதியில் உருட்டி உருட்டி அடித்தனர்”-இவையெல்லாம் இந்நாவலில் வரும் நடுங்கவைக்கும் சம்பவங்களாகும்.
தமிழர்கள் தாக்கப்படும் சூழலில், பிரதமர் பண்டார நாயகாவின் மகன் பிறந்த நாள் விழா வில் கலந்து கொண்ட அந்த முதுபெரும் தமிழர் தலைவர்கள் **அரசியல் வேறு, நட்பு வேறு” என்று கதைத்துக் கொண்டு’ கேளிக் கைக் கூத்துகளில் ஈடுபடுவதாய் நாவலில் வரும் சம்பவம் நமக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அந்தப் போலித் தலைவர்களின் மிதவாதத்தில் நம்பிக்கையிழந்து தமிழிளைஞர் கள் ஆயுதமேந்திப் பேர்ராட ஏன் நிர்பந்திக்கப் பட்டார்கள் என்பதை உணர்த்தும் விதமாய் இச்சம்பவம் அமைந்துள்ளது.
முந்தைய மிதவாதிகளின் தலைமையில்
நடந்த போராட்ட காலத்தை தன்னுள் கொண் டுள்ள இவ்வரலாற்று நாவல் ஆரம்பகால ஈழப் போராட்ட வரலாற்றை அறிய நமக்கு பெரி தும் பயன்படும். நாவலின் படைப்பாளி செங்கை ஆழியான்.
1) க. சந்திரசேகர்

Page 41
சாதாரண
பத்திரிகைகளுக்கு வாய் பூ கலக்கும் வியாபாரிகள் D ே தமிழீழ விடுதலைப் புலிகள்
சுதந்திர இந்தியா, பத்திரிகைகளுக்கு வாய்பூட்டுச் சட்டம்
**க ல் வி ய ர னது பணிவின்மையையும் மரபுக்கு மாறுபட்ட நடத்தைகளையும் தோற்று வித்துள்ளது. அந்த வசதி இவற்றுக்குத் தூண்டு கோலாக இருப்பதோடு அரசுக்கு எதிரான செயல்களையும் வெளிப்படுத்துகிறது. எனவே கல்வியும் அச்சு வசதியும் பரவலாக அணுகாதபடி ஆண்டவன் நம்மைக் காப் பாற்றட்டும்” என்று பர்க்ளே என்பவர் 1671 ஆம் ஆண்டே கூறிச் சென்றுள்ளார்.
ஆனால் பிரதமர் ராஜீவ்காந்தி ஆண்ட வனை எல்லாம் நம்பத் தயாராக இல்லை.
படித்தவர்களும் பத்திரிகைகளுமே கேள்வி கள் கேட்கின்றனர், உண்மைகளைத் தேடுகின் றனர் என்ற குற்றச்சாட்டை ஆட்சியிலிருப் பவர்கள் சுமத்துவதுண்டு.
ஆனால் படித்தவர்கள் எல்லாம் சமூகப் பொறுப்போடு இருப்பதுமில்லை. பத்திரிகை கள் எல்லாம் விழிப்புணர்வைத் தூண்டுவது மில்லை.
வியாபாரம் எனும் பெயரில் வெறும் கனவுகளை மட்டும் விதைப்பதும், கிசுகிசு எனும் பெயரில் திரைப்பட நடிகைகளின் அந்தரங்கங்களில் அத்துமீறி நுழைவதும்,
தர்மமாக்கிச் செயல்படும் பத்திரிகைகள் தான் அதிகம்.
"இன்வெஸ்டிகேஷன் ஜெர்னலிசம்’
எனும் பெயரில் பெயர்களை மட்டும் எடுத்துக் கொண்டு சம்பவங்களில் கதை எழுதி காசு சம்பாதிக்கும் இதழ்களும் ஏராளம்.
இந்தப் பத்திரிகா தர்மப் பிரபுத்துவத்தை யும் மீறி அங்கங்கே பத்திரிகைகளால் உண்மை கள் வெளிப்படத்தான் செய்தன.
பகல்பூரில் சிறைக்கைதிகள் கண்கள் குருடாக்கப்பட்ட சம்பவத்தை அம்பலப்படுத் தியது பத்திரிகைதான்.
இந்திராபிரதான் டிரஸ்ட் எனும் பெயரில் ஊழல் புரிந்த மகாராஷ்டிர முதல்வர் அந்துலேயையும் வீட்டுக்கனுப்பியது பத்திரி கைகள்தான். இப்படி பல நல்ல செயல் களை பத்திரிகைகள் செய்யத்தான் செய்கின் றன.
சமீபத்தில் பிரதமர் ராஜீவ்காந்தி மீது

பக்கங்கள்
ட்டுச் சட்டம் () விஷத்தை தசிய பாதுகாப்புச் சட்டத்தில் 0 நாற்பது ஆண்டு கால
ஆயுத பேரஊழல், நீர்மூழ்கிக் கப்பல் பேர ஊழல், விமானம் வாங்கியதில் ஊழல் என நாளும் பல ஊழல் குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டு வருகின்றன. -
இந்து நாளிதழ் சில ஆதாரங்களையும் வெளியிட்டது.
எப்பொழுதாவது அபூர்வமாக உண்மை வெளிப்படுவதையும் தடுக்க *அவதூறு மசோதா’ எனும் பெயரில் ஒரு மசோதாவை மக்களவையில் உள்துறை இணை அமைச்சர்
ப. சிதம்பரம் தாக்கல் செய்ய, மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியாளர் மீதோ அல்லது தனிநபர் மீதோ ஊழல் குற்றச்சாட்டை வெளியிடும் பத்திரிகை மீது வழக்குத் தொடரலாம். ஊழல் குற்றத்துக்காளான நபர் வழக்கு நடைபெறும்போது தான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கத் தேவையில்லை.
ஊழல் குற்றம் சுமத்திய பத்திரிகையே இதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமாம். ஆட்சியாளர் மீது ஊழல்குற்றம் சுமத் தப்படும்போது ஆதாரம் முழுவதும் அரசிடம் தான் இருக்கும். w
பத்திரிகையாளர் மிகுந்த சிரமத்துக் கிடையே தேடி வெளியிடும் செய்தியை நிரூ பிக்க அரசு உரிய ஆவணங்களைத் தருமா என்ன? i −
தன் ஊழலுக்குத் தானே ஆதாரமும் தருகிற அரசு எங்கே இருக்கிறது?
அதிகார பலத்துக்கும் பண பலத்துக்கும் ஆட்சியாளரின் மிரட்டலுக்கும் இடையே உண்மையிலேயே பத்திரிகையாளர் களுக்குத் தான் பாதுகாப்பு தேவை.
ஆனால் மாறாக ஊழல் செய்பவருக்கே இம் மசோதா பாதுகாப்புத்தரும் கேடயமாக இருக்கிறது.
இம் மசோதா சட்டமாக நிறைவேற்றப் பட்டால், இச்சட்டத்தின் மூலம் பத்திரிகை ஆசிரியர், பத்திரிகை வெளியிட்டாளர், பத்திரிகை அச்சிடும் அச்சக உரிமையாளர் மூவரையும் தண்டனைக்குள்ளாக்கலாம்.
இச்சட்டம் நாடு முழுக்க உள்ள பத்திரிகை உரிமையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும்

Page 42
XIV
எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பை எதிர்கொண் டுள்ளது.
4-9-88 அன்று பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் இம்மசோதா மீதான ஆலோசனை கேட்பதற்கு அமைச்சர்கள் மட்டத்தில் குழு ஒன்றை நியமித்துள்ளார்.
5-9-88 அன்று மாநிலங்களவையில் இம் மசோதாவை தாக்கல் செய்ய மாட்டோம் என்றும் பிரதமர் அறிவித்து சட்டமாக்குவதில் சற்று தயங்கி நிற்கிறார்.
ஆனால் நாடு முழுக்க உள்ள பத்திரிகை யாளர்கள் திட்டமிட்டபடி 6-9-88 அன்று வேலைநிறுத்தம் செய்தனர். மசோதா திருப்பப் பெறும் வரை கிளர்ச்சி தொடரும் என்று அறிவித்துள்ளார்கள்.
தன் வாயைக் கட்ட வருபவனைப் பார்த்து யார்தான் சும்மா இருப்பர்?
விஷத்தைக் கலக்கும் வியாபாரிகள்
ராஜேஷ்குமார் ராஜேந்திரகுமார் புஷ்பா தங்கதுரை சுஜாதா போன்றோர் மாதநாவல் போட்டியில் போட்டிப் போட்டு கொண்டு ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
ஒருத்தர் துப்பறியும் நாவல், ஒருத்தர் க்ரைம் நாவல், ஒருத்தர் செக்ஸ் நாவல் என்று வகைக்கொரு வியாபாரிகளாய் கடை விரித் துள்ளனர்.
கொஞ்சகாலம் ஆங்கில நாவல்களைப் படித்துதமிழ்ப் பெயரில் கதைப் பண்ணினார்கள்.
ன் பல்வேறு நாட்டு வீடியோ படங்களைப்
பார்த்து கொஞ்சம் தமிழ்ப் பேர், கொஞ்சம் தமிழ் ஊர் இவற்றைச் சேர்த்து ஒரு குலுக்கு குலுக்கி தந்தால் போதும். ஒரு மாத நாவல் ரெடி,
ராஜேஷ் குமாரை ஒரு ஆண்டுக்கு கிரைம் நாவல்கள் எழுதுவதற்காக மொத்த குத்தகைக் கும் எடுத்துக் கொண்ட பத்திரிகாதிபர்களும் உண்டு. அறுபதினாயிரம் எழுபதினாயிரம் என்று முன்பணமாகப் பெற்றுக்கொண்டே நாவலைத் தருகிறார் ராஜேஷ்குமார்.
இவர்கள் வீடியோ பார்த்து, சேர்த்து கலந்து, குலுக்கித் தருகின்ற மாத நாவலைத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் மீண்டும் வீடியோ மூலம் தமிழில் கண்டு களிக்கவும் பாக்கியம் பெறப் போகிறார்கள். மாதம் ஒரு வீடியோ சினிமாவாக, மாதம் ஒரு வீடியோ நாவல் வரப் போகிறது. முதல் வீடியோ நாவலாக சுஜாதா கதை வெளிவரப்போகிறது. திரைக் கதை வசனம் எ முது ப வர் அறந்தை நாராயணன். இயக்குநர் என். கிருஷ்ணசாமி.
ஆபாசம் என்பது இதுவரை படிக்கத் தெரிந்த வயதுவந்த நபர்களை மட்டுமே பிடித்திருந்தது என்பது போய் இனி குழந்தை கள் வரையும் தழுவப் போகிறது.

பாலம்
நமக்கு விஷமாகத் தெரிவதே இவர்களுக்கு வியாபாரமாகத் தெரிகிறது.
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நூற்றைம்பது பேருக்கு மேல் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டுக்குச்சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பாதிப் பேருக்கு மேல் சண்டையில் உடல் ஊனமுற்று மருத்துவச் சிகிச்சைக்காக வந்து இருப்பவர்கள்.
40 லட்சம் பேரான ஈழத் தமிழ் மக்கள் பிரச்சினையை மூவாயிரம் பேருடைய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சினையாக இந்திய அரசு தேய்த்து தேய்த்து கட்டெறும்பாகக் குறைத்து விட்டது.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இன்றும் அரசியல் கைதிகள் சிறை யிலிருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு இணைக்கப் படவில்லை. தமிழ்ப் பகுதிகளில் சிங்களக்குடி யேற்றத்தை நிறுத்தமுடியவில்லை.
இதையெல்லாம் இந்திய அரசினர் கவனத் தில் எடுப்பதாகத் தெரியவில்லை.
தமிழீழ விடுலலைப் புலிகளைத் துடைத் தெறிந்து விட்டால் பிரச்சினைகள் முடிந்து விடும் என்று இந்திய அரசினர் ஒரு புறம் செயல்பட்டுக் கொண்டே மறுபுறம் அவர்களோடு பேச்சு வார்த்தையும் நடத்துகிறார்கள். பேச்சு வார்த்தை தடைப்பட்டநேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஒருசேர ஈழத்திலும் தமிழகத்திலும் நடவடிக்கை எடுத்து இருக் கிறார்கள்.
நியாயமான பிரச்சினைகள் என்பது 40 லட்சம் தமிழ் மக்கள் சம்பந்தப்பட்டது.
அரசியல் ரீதியாக பேச்சு வார்த்தை நடத்துவதற்குப் பதில் நிர்ப்பந்தத்தின் மூலம் பணியவைக்கிறமுேயற்சிகளை இந்தியா தொட ரும் போது பிரச்சினை எப்போது தீரும்?
பிரச்சினைகளை சுயேச்சையாக, சரிசமமாக அமர்ந்து பேசித் தீர்வுகாண இந்தியா, இலங்கை, போராளி இயக்கங்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தைகளை உடனே தொடங்க வேண்டும். பேச்சு வார்த்தை தொடங்குமுன் போர்நிறுத்தம் அவசியம் வேண்டும்.
ஆட்டோ சங்கர் மீது பாயாத தேசியப் பாதுகாப்புச் சட்டம் மருத்துவ சிகிச்சை பெறும், உடல்நலம் பாதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பாய்வதில் என்ன பயன்?

Page 43
Lite) b
O
சுதந்திர தினச் செ
40 ஆண்டு சுதந்திர இந்தியா. முகத்தைக் காட்டும் பக்கங்களை துள்ளோம். நேருகாலத்திய கார்ட்டூன்களு ராஜீவ் காலத்து கார்ட்டூன்களுக்கும் எள் ஒற்றுமை .
சுதந்திர இந்தியாவின் ஆகஸ்ட் முந்திய 14 ஆம் தேதி செய்திகளும், பிந்திய செய்திகளும் சிலவற்றை மாதி தந்துள்ளோம். வாழ்க இந்தியா.
நாத்வாரா பூரீநாத்ஜி ஆலயத்தில் கா தனையில் 45 ஹரிஜனங்கள் கலந்து கொள்ள பட்டனர் என்றாலும், அவர்கள் வெளியேறி கோயிலை தூய்மைப் படுத்தும் புனித கொள்ளப்பட்டது. -தினமணி,
ஒரிசா மாநிலத்தில் சமீபத்திய மாதங்கள் வயிற்றுப்போக்கு நோய்கள் தாக்கி 300-க் மானோர் இறந்துள்ளதாகவும், நோய் பரவி களில் நாளொன்றுக்கு 100 பேர் வீதம் மருத் வந்த போதிலும் மருத்துவ வசதி கிட்டாமை செல்வதாகவும் தெரிய வருகிறது. -தினமணி
விசாரணைக்கென போலீசாரால் பிடிக்கப்ப விசாரணையின் போதே போலீஸ் காவலில் நாட்டிலிலுள்ள எல்லா மாநிலங்களிலும் அதிகரி குறித்து உச்ச நீதிமன்றம் தன்னுடைய தெரிவித்திருக்கிறது. -தினமணி,
பம்பாயில் விஷச் சாராயம் குடித்து இ உட்பட 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 ே மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யத்தில் எரி சாராயம் (மெதில் ஆல்கஹல்) க பட்டதே இச்சம்பவத்திற்கு காரணம்.--தினமணி
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் வி வெகு குறைவான கூலி தரப்படுகிறது. வட தென்னார்க்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் யித்த குறைந்தபட்ச கூலி கூட பெண் தொழில தரப்படுவதில்லை. -தினமணி
மேற்கு வங்க மாநிலம் பெஹாலா, டா: களில் சமையல் எண்ணெய்யில் டிரைகிரிசைல் என்ற விஷப்பொருள் கலப்படம் செய்யப்பட்டத கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குழ கை கால்கள் செயலிழந்து போயின. பாதி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கலப்பட தில் ஈடுபட்ட, மத்திய உணவு ஆராய்ச்சி சாலையில் பணிபுரிந்த 10 விஞ்ஞானிகளுக்குப் தோல் எரிச்சல் போன்றவை ஏற்பட்டுள்ளது.
-தினமணி,

XV
ய்தி அதன் ணைத நக்கும் வளவு
15க்கு 15க்கு ரிக்குத்
லை பிரார்த் அனுமதிக்கப் ய பிறகு அக் ப்பணி மேற் ஆகஸ்ட் 14.
ரில் காலரா, கும் அதிக புள்ள பகுதி துவமனைக்கு பால் திரும்பி
ஆகஸ்ட் 14.
டும் ஆள்கள், உயிரிழப்பது த்து வருவது கவலையைத ஆகஸ்ட் 14.
ரு பெண்கள்
பர் மருத்துவ 56ir6T母 FTTT
லந்து விற்கப்
}, ஆகஸ்ட் 17
வசாயிகளுக்கு - ஆற்காடு, அரசு நிர்ண ாளர்களுக்குத் , ஆகஸ்ட் 15
பிகஞ்ச் பகுதி பாஸ்பேட் ால் ஆயிரக் )ந்தைகளுக்கு க்கப்பட்டோர் த்தை அறிவ சோதனைச் ) D. Essf.
ஆகஸ்ட் 15.
நாற்பதாண்டு சுதந்திர இந்தியா
சுதந்திரம் என்பது இன்பம் தரும் போதையல்ல; இருக்
கிற துயரங்களை எல்லாம் மறப்பதற்கு.
போராட்டத்தின் மூ ல ம்
வென்றெடுக்கப்பட்ட நிதர்சன மிக்க உரிமை. நம்மை நாமே செயல்பட வைக்கின்ற உணாவு.
200 ஆண்டு கால பிரிட்டிஷ்
ஆட்சிமுறையை நாம் சுமந்து தீரவேண்டிய கட்டாயத்தில்
இருந்த போது இந்தியாவின்
செழுமைமிக்க கிராமிய பொரு ளாதாரச் சுயச்சார்பு நிலை அடித்து நொறுக்கப்பட்டது.
செழுமையான சில கலாச் சார மரபுகளும் அழிக்கப் பட்டன. இந்திய வரலாறு ஆங்கிலேயக் கண்ணோட்டத் தில் எழுதப்பட்டது.
நம்முடைய பரந்ததேசத்தை பிரிட்டிஷார் தம்முடைய மிகப் பெரிய மார்க்கெட்டாக வைத் துக் கொண்டு நம்முடைய செல்வாதாரங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு போனார் ‹ቿ56፲፫ •
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தங்களுடைய ஆட்சி வசதியைக் கருதி போக்குவரத்தை நவீனப் படுத்தினார்கள். இயந்திரத் தொழிலை நிறுவினார்கள். கல்வி முறையைக் கொண்டு வந்தார்கள். V.
ஆனால் இதுவரை இந்தியர் கள் பெறாத நவீனக் கண் ணோட்டம் புதிய கல்வி முறை யால் இந்தியர்களைப் பற்றிக் கொண்டது. இந்த நவீனக் கண்ணோட்டமே ஆங்கிலே யர்க்கு எதிராக செயல் படவும் வைத்தது.
தங்களுடைய மரபின் செழு மையைப் பொருளாதார வளத்
தைத் தூக்கிப்பிடிக்க இந்தி

Page 44
XVI
அடுத்த இதழில்
O
ஓவியக்கலை பற்றிய தொடர் கட்டுரை
Π
நாட்டுப்புற இசை:
தெருவிலிருந்து மேடைக்கு.
கே. ஏ. குணசேகரன் பற்றிய அறிமுகம்
O
உறவுகள்
சாருமதி சிறுகதை
O
இலங்கை: பிரச்சினையிலிருந்து
பிரச்சினை. செய்திக் கட்டுரை
கவிஞர் அப்துல்ரகுமான் மொழி பெயர்ப்பில் இந்திக் கவிஞர் ஸாகிர்
பாடல்கள்
O
மற்றும் வழக்கமான
நூல் அறிமுகம் சாதாரணன் பக்கங்கள்
யாவில் ஆங்கில தவர்களைகளை பிரிட்டிஷ் ஏக கெதிரான பே மக்களிடம் ஒன் பித்தது. இ அனைததுப இருந்து சுத வீரர்கள் புறப்ப பொம்மன் வ தேவன் வந்தா வந்தார், தி தார், பெரிய காந்தி வந்தார் வந்தார், நே காமராசர் வந்த
இவர்களல்ல காங்கே ஆவே யோடு ஆயுதட் களும் நடைபெ தில் 1930-ல் சிட்டகாங் ஆய பஞ்சாபில் காத பிரதேசத்திலும் இந்துஸ்தான் சங்கக் கிளர்ச்சி யருக்கெதிராக குறிபார்த்தன.
இவ்வாறு ச ராட்டத்திற்கா6 வேறு கருத்துக வேறு தளத்திலி மத நம்பிக்கைச தனர்.
அகிம்சைப் திலும் ஆயு; திலும் இந்தியா டிருந்தபோது
கண்ணோட்டச்
செயற்பாட்டோ
மாகினர்.
சரி இவர்கள் கனவுகளையும் தியாவில் தே பவன்தான் போவான்.
நேர்மைக்கு துக்கும் அர்ப்ப கிற உணர்

பாலம்
க் கல்வி படித் ாத் தூண்டியது. ாதிபத்தியத்திற் ாராட்ட அலை ாறு திரள ஆரம் ந் தி யா வின்
பகுதிகளிலும் ந்திரத்திற்கான LL6夺T町。 5 L- Lந்தார். புலித் ர், வ. உ. சி ரு. வி. க வந் Tio வந்தார், , நேத்தாஜி, (5 வந்தார்,
5Tii.
TLDs) ங் சமிக்க எழுச்சி போராட்டங் ற்றன. வங்கத்
தொடங்கிய புதக் கிளர்ச்சி, ர் கட்சி, உத்திர
பீகாரிலும்
ஜனநாயக என வெள்ளை
ஆயுதங்களும்
தந்திரப் போ ண வீரர்கள் பல் ளிலிருந்து பல் ருந்து பல்வேறு 5ளிலிருந்து வந்
போராட்டத் ந போராட்டத் நிலை கொண் பகத்சிங்கும்
ர்களும் இவை மீறிய புதிய தோடு புதிய ாடு உ த ய
அனைவரின் சுதந்திர இந் டினால். தேடு
காணாமல்
நியாயத் ணித்துக் கொள்
위, ஒருவருக்
கொருவர் உதவுகிற மனோ பாவம், காசால் யாரையும் விலைக்கு வாங்க முடியாது என்ற நிலை பொது வாழ்வில் உள்ள பதவியாளர்களிடமும் ஆட்சியாளர்களிடமும் காண
முடிகிறதா?
நமது பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் லட்சக் கணக்கில் செலவு செய்கிறார். நூற்றுக்கணக்கில் அடியாட் 56)6 வைத்திருக்கிறார். லட்சக் கணக்கில் அல்ல, முடிந் தால் கோடிக்கணக்கிலும் ஊழல் செய்கிறார்.
நம்முடைய பிரதிநிதி சாராயக் கடை நடத்துகிறார். விபச்சார விடுதி உரிமையாள ராக இருக்கிறார். அதே நேரத்தில் வாய்ப்பு வரும் போது மேடையில் இவற்றை
எதிர்த்து பேசவும் செய்கிறார்.
சரி இவர்கள் நமக்கென்று
எதைத்தான் விட்டு வைத் தார்கள்?
மக்களுடைய பொதுவான
உணர்வு நிலைகளே அதிகாரத் திற்கு அடி பணிவது, பணத் திற்கு அடி பணிவது மிரட்ட லுக்கு அடிபணிவது 66 *பணிவுடன்’ செயல்படும் போது, இதை எதிர்க்கிற தீப்
பொறியை எந்த இடத்தில் பற்ற வைப்பது?
இந்தச் சகல அழுக்கு களோடு சாதிய ஆதிக்கம், மத ஆதிக்கம் வேறு கை
கோர்த்துக் கொள்கிறது.
இவ்வகையான வண்ண வ ண் ண ச் செயல்பாடுகள் இந்தச் சமுதாய அமைப்பில் தான் ஆரம்பம் கொள்கின் றன.
பொதுமக்களாகிய நாம் நம்மை நாமே சுத்திகரித்துக் கொண்டு புதிய மனிதர்களாக பிறப்பெடுத்து எழமாட்டோ மா? ஒற்றுமையுணர்வில் சாதி மத பண ஆதிக்கத்தை எரிக்க மாட்டோமா?
O

Page 45
研
請
Α
ap agrusty 1960 мм.
Now is of Along
m is sym ow.
 
 

A.
துஆஓ/
திரத்து
fSeafargay APory ልMp 4ዳmW6 45&OARY AMøsviccess no ny

Page 46
ህJG∂ .
"ஜெயலலிதாவைப் -9յ6ն35/TԱ)]
மூதேவி, மூளி அலங்காரி முதல்வராகி விடுவாரா?
OfT6) / மறைந்து விட்டது. மேகம் விலகி விட்டது. பண்ருட்டியார்
பிடித்து வைத்துள்ள பிள் ளையார்தான் நெடுஞ்செழி இருவருக்கும் முதல் வர் பதவிக்கு ஆசை. இந்த பெண்மணிக்கும் ஆசை, மூப்பனாருக்கும் ஆசை. இந்த மூதேவி, மூளி அலங் காரி முதல்வராக வந்து விடுவ்ேன் என்கிறார். இங்கு நீ முதல்வராக வர முடி யுமா?
கருணாநிதி ப்போது
கொண்டு வருகிறார். அவர் முதல்வராக இருந்த போது தவறான கணக்கு போட்டுத் தான் எம்.ஜி.ஆரை கட்சி யில் இருந்து தூக்கி விசி னார். நிலைமை என்ன ஆனது. கருணாநிதித்கு கணக்கு தவறு என்று தெரிந் தது. ஆட்சியை இழந்தார்.
தஞ்சை, ஜூன். 16
கணவர்
ஜி.ஆர். 3-வது தானே?" என எஸ்.எஸ். ராஜேந்திரன் கடுமையாக
தாக்கி பேசினார்.
பேராவூரணியில் ஜெய லலிதா அணி அ.தி.மு.க. கூட்டம் நடந்தது.
தவறான கணக்கு போட்டுக்2
பற்றி வ?ை பேசுகிறீர்களே? டது (வன் ஜானகி மட்டும் யோக்கிய மானவரா? ஜானகிக்கு எம்.
级 ف آقایق
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான்பதும், பிரதமரின் வட்ட அல்லது அந்த வட்டாரத்தையே சேரந்தவர்களே7 கையூட்டுட்/ பெற்றிருக்கவேண்டும் என்பதும் சந்தர்ப்ப ச7ட்சியங்களரிவி 5ந்து அனுமானமாகத் தெரியவந்திருக்கின்றன. அதனால்தான் 7யான விளக்கம் கொடுக்கவோ, ഖീക7ഞെy A54 -335 Gavir 7ஆவ் மறுக்கிற7ர் என்று கட்டு
.7677i கூறுகிறார்له قه0
r **" \*高 A. கார் தீவிரவாதிகளின் டி a ாட்டில் சித்தாந்தத்தை ஜாதீய அம்சம்தான் முக டத்தை வகிப்பதாகக் படுகிறது. மாவோயிஸ்ட் னிஸ்ட் மையம 9.சி.) என்ற அமைப் சேர்ந்த தீவிரவாதிகள் 42 த்திரர்களைப் படுகொ செய்த தலேல்சக்-பாகவ் ம்பவம் இதைத் ಇನ್ಹಿ। கிறது. சி.பி.ஐ. (எம்.எல். ಸ್ಥಿತಿ: எதிர்ப்பு), சிபி.ஐ. ால்) (கட்சி ஒற்றுமை), பாயிஸ்ட் கம்யூனிஸ்ட் &2. ழ்,ஆகிழவூஇந்த வட் &ை தில் தீS செயல்ப டு, இயக்கு

Page 47
V பெய்ரூட், உயிர்தப்பி ஓடும்
பாலஸ்தீனியர்கள்.
 

ாமல் துயரம்,
● b?uu போர்க்களத்திலிருந்து இளைஞன் தன் குடும்பத் மீண்டும் சந்திக்கிருன்.->

Page 48