கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலம் 1988.06

Page 1


Page 2
ਉ86
fisco'Lifsh)
12, முதல் பிரதான சாலை நேருநகர் அடை

திறமான தூய்மையான அச்சு வேலைகளுக்கு
யாறு சென்னை-20

Page 3
0 அட்டைப்பட
ஈழப் போராட்டத்தின் நெருக்கடிமிக்க காலக்கட்டத்தில் எல்லாம், சரியான திசை வழிக்கான ஆலோசனைகளை வழங்கிய வர் அபுஜிகாத் அவர்கள். பாலஸ்தீன G3. விடுதலை இயக்க நிறுவனர்களில் ஒருவர். அவ்வமைப்பின் இராணுவத்தளபதி.
அபுஜிகாத் அவர்களோடு பலமுறை நேரில் பழகிய அனுபவங்களை ஈழப்புரட்சி அமைப்பின் புரட்சிகர நிறைவேற்றுக் குழு உறுப்பினர் தோழர் சங்கர் இங்கே எழுதுகிறார்.
O
1988 ஏப்ரல் 14-ல் நான் ஐரோப்பாவில் இருந்த சமயம்; தோழர் அபு ஜிகாத் டுனிஷ் நகரில் (டுனிவழியாவின் தலைநகரம்) இருந்தார். அப்போது அவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். தத்தம் தேசத்துச் சூழலைப் பற்றி பரஸ்பரம் சிறிது நேரம் விவா தித்தோம். பிறகு நாங்கள் இருவரும் அடுத்த மாதம் மே 5 இல் பாக்தாத் நகரில் சந்திப்பதாக முடிவு செய்தோம்.
மீண்டும் நான் டில்லி திரும்பியபோது நம்பமுடியாத அந்த அதிர்ச்சிச் செய்தி காத் திருந்தது. ‘பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ராணுவத் தளபதி அபு ஜிகாத் இஸ்ரேல் உளவுப் படையினரால் கொல்லப்பட்டார்”.
தோழர் இறந்தார்; ராணுவப்போர் தந் திரக் கலைகளில் முதிர்ந்த அனுபவம் வாய்ந்த, மக்கள் தலைவர் இறந்து விட்டார். அபு ஜிகாத் * வாழ்க்கையை மிகவும் நேசித்தார்’ என்பதா லேயே, அவர் இஸ்ரேல் அரசுக்கு ஒரு பயங்கர வாதியாக தெரிந்தார். இனவெறி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை துடைத்தெறியும் போராட்டத் திற்கு மக்களைப் பயிற்றுவித்த, போராட்டப் பாதையை வகுத்துத் தந்த அவரை ‘வாழ்க் கையை நேசித்த குற்றத்திற்காக' வஞ்சகமாய் படுகொலை செய்துவிட்டார்கள்.
ஈழப் போராட்டத்தின் சரியான திசை வழியை ஆய்ந்தறிய வேண்டிய நெருக்கடி மிக்க காலக்கட்டங்களில்-கடந்த 12வருஷ கால மாக, அவரது *அரசியல் முன்னெடுப்பு ஆலோசனைகளும், போராட்ட அனுபவங் களும் எங்களுக்குப் பெரிதும் துணை நின்றன. அவர் இறந்தது, எமது நெஞ்சில் ஒரு உயிர்த் தோழரை இழந்த அதிர்ச்சியையும், கொந் தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் உண்மையிலேயே ஈழவர் போராட்டத் திற்கு பேரிழப்பாகும். - -
இந்நிலையில் நான் அவரது உடல் அடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முயற்சித்தேன். ஆனால் 'நிகழ்ச்சி நிரல்’ முடிவு செய்யப்படாம லிருந்தது. டுனிஸிலிருந்து எடுத்துப் போய் எங்கே அவரை அடக்கம் செய்வது? அம்மானிலா

க் கட்டுரை ப
அபுஜிகாத் 1 பாராட்டத்தை மட்டுமல்ல உங்கள் நினைவையும்
சுமந்து செல்கிறோம் 6Ř5í
(ஜோர்டான்) அல்லது டமஸ்கஸ்சிலா (சிரியா)? எதுவென்று உறுதிப்படுத்தாததால் குழப்பம் நிலவியது.
இந்தக் குழப்பம் எழுந்ததற்குக் காரண, மிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக மேற்கு 56oT (West Bank), asT6mor 6io' f' Lu@g55 களில் வீரதீரமிக்க மக்கள் பேரெழுச்சி உக்கிர மடைந்துள்ளமைக்கு பிரதான பங்காற்றியவர் அபு-ஜிகாத். இதனால் அவரின் 'e L6) அடக்கம்” அம்மானில் நிகழ்வதே மிகவும் பொருத்தம். ஏனெனில் “அந்நிகழ்ச்சி மேற்கு கரையில் தீவிரம் அடைந்துள்ள போராட்டத் மென்மேலும் அரசியல் தாக்கத்தை (Political impact) 96f Lusitas 960) LDub. 9,60TT6i) PFLP-65T (Popular Front for the Liberation of Palestine) p,00616) if g Tig oli T6b, DFLP-6õT (Democratic Front for the Liberation of Palestine) 5666) if நைஃப் ஹவத்தமாவும், "இந்த நிகழ்ச்சியை டமஸ்கஸ்சில் நடத்துவதன் மூலம் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் அராபத்தின் FATAH இயக்கத்திற்கும் சிரியாவிற்கும் இடையே சீர்கெட்டிருக்கும் உறவை சீரமைக்க லாம்’ என்று வலியுறுத்தினர். இந்த முடிவு டமஸ்கஸ்சிலேயே வசிக்கும் அபு-ஜிகாத்தின் வயதான பெற்றோர்களுக்கும் சகோதரர் களுக்கும் ஏற்புடையதாக இருந்தது. எனவே உடல் அடக்கம் டமஸ்கஸ்சில் தான் என்று இறுதியில் முடிவானது. கடைசி நேரம் வரை இடம் உறுதி செய்யப்படாத இந்தக் குழப்ப நிலை, நிகழ்ச்சிக்கு செல்வதற்கான பிரயாண ஏற்பாடுகளை செய்ய முடியாதபடிக்கு என்னை முடக்கிவிட்டது.
என்றபோதிலும், டில்லி பாலஸ்தீன தூதர கத்தில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் ஈழப்புரட்சி அமைப்பின் (ஈரோஸ்) டில்லி பிரதிநிதி நேருவும், தோழர் ரத்னாவும் கலந்துகொண்டு, தூதுவர் ஹாலித்-அலிஷேக் அவர்களிடம் ஈரோஸ் சார்பாகவும், ஈழவர் சார்பாகவும் தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தனர். V

Page 4
தாய்நாடு மீட்புக்கும், தற்காப்புக்குமான போராட்டத்தில் பாலஸ்தீன மக்களை விடு தலை நோக்கி வழிநடத்திச் சென்றவர் அபு ஜிகாத். அவர் சர்வ தேச அளவில் ஒடுக்குவோருக்கு எதிரான போராட்ட இயக்கங் களுக்கு தனது மகத்தான ஆதரவை வழங் கினார். அவர் கொலையுண்ட கோரநிகழ்ச்சி உலகெங்குமுள்ள மனிதாபிமானிகளுக்கும், மக்கள் போராளிகளுக்கும் வருத்தத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. துயரம் தோய்ந்த இப்பொழுதில் அவரிடம் நாம் கற்ற படிப்பினைகளும், அவருக்கும் எமக்கும் வலு வான இடை உறவாய் உருவான நட்பும், ஈழப் போராட்டத்திற்கு வலிமை சேர்த்த அவரது சில அரிய ஆலோசனைகளும் எம் நினைவில் மிளிர்கின்றன. அவரை முதன் முதலாக சந்தித்த நிகழ்ச்சியை நினைவு கூர்கிறோம்.
அப்போது-1976ஆம் ஆண்டில் லெபனா னில் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் உள்நாட்டுப்போர் மூண்டு பெய்ரூட் நகரம் எரிந்து கொண்டிருப்பதாக லண்டன் பத்திரிக் கைகளில் படித்தோம். இதிலிருந்து மூன்றா வது நாள், ஏற்கனவே திட்டமிட்டிருந்ததன் tl uiq, லெபனானுக்கு விமானத்தில் பயண மானோம். என்னுடன் கானக்சும், அருளரும் வந்தார்கள். 350 இருக்கைகளைக் கொண்ட அந்த விமானத்தில் எங்கள் மூவரையும் சேர்த்து மொத்தம் 14 பேரே பயணம் செய் தோம்.
பெய்ரூட் நகர்மீது விமானம் தாழ்வாக பறக்கத் தொடங்கிய போது நா ங் க ள் அதிர்ந்து போனோம். கண்ட காட்சிகள் நெஞ்சைப் பிசைந்தன. நகரம் முழுவதையும் குரூரம் கவ்வியிருந்தது. எரிந்து ஜ்வாலை அடங்கிப்போய் கட்டிடங்கள் புகைந்து கொண் டிருந்தன. நகரம் சுடுகாடாய் தோற்றங் காட்டியது. விமானம் இறங்கி வெளி வந்த எங்களுக்கு விமான நிலையம் ஒரு ராணுவமுகாம் போல் தோன்றும்படிக்கு, ஆயுதம் தரித்த ராணுவவீரர்கள் அங்கே மந்தை மந்தை யாய் நிறைந்து கிடந்தனர். கொடிய ஆயுதங் களை நிறைந்த அளவில், மிக நெருக்கத்தில், இதற்கு முன்னர் நாங்கள் கண்டதில்லை. போராடுவோர்கள் இந்த ஆயுதங்களின் கீழ் எப்படியெல்லாம் ஒடுக்கப்படுவார்கள்? நினைக் கவே பயங்கரமாய் இருந்தது. சூழல் மூச்சை நெரிக்கும் அவ்வேளையில், FATAH இயக்கப் பொறுப்பாளர்கள் ராணுவ வீரர்களை நோக்கி "இவர்கள் எங்கட ஆட்கள்’ என்று ஆங்கிலத் திலும், அரேபிய மொழியிலும் குரலிட்டவாறே எங்களை நோக்கி வந்தபோதுதான், நிராயுத பாணி நிலையிலிருந்து விடுபட்ட உணர்வை நாங்கள் பெற்றோம்.

பாலம்
உடனடியாக அங்கு நின்ற செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் ஆயுதந்தாங்கிய பாலஸ்தீன தோழர்களின் பாதுகாப்புடன் மேற்கு பெய்ரூட் PLO (Palestine Liberation Organisation) செயலகத்திற்குச் சென்றோம். வழியெங்கும், கொல்லப்பட்டு சிதிலமடைந்த உடல்கள். கிளைகள் சிதறி வேரடி மண்ணோடு வீழ்ந்து கிடக்கும் மரங்கள். இடிபாடுகளிடையே எரிந்து புகையும் கட்டிடங்கள்.கொடூரத்திலும் கொடுர மான சூழல். நெஞ்சு பதற, கண்கள் துடி துடித்துச் சுழல, முற்றிலும் புதிதான பயங்கர உலகில் இருப்பதைப் போன்ற உணர்வு எங்களுக்கு.
கிரீன்லைன் சாலைதான் கிறிஸ்துவர்கள் வாழும் கிழக்கு பெய்ரூட்டையும் முஸ்லீம்கள் வாழும் மேற்கு பெய்ரூட்டையும் பிரிக்கின்றது. கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்குமான இந்த உள்நாட்டுப் போரைப்பற்றி ஏற்கனவே நாங்கள் பத்திரிக்கைகளில் படித்தபோது அந்த சாலையும் அறிமுகமாகியிருந்தது. ஆபத்துமிக்க அந்த கிரீன்லைன் சாலை வழியாகத்தான் எங்கள் வாகனம் விரைவதை அறிந்தோம்.
பி. எல். ஒ. லண்டன் பிரதிநிதி
சாயித்ஹமாமி

Page 5
பாலம்
செயலகம் போய் சேர்ந்ததும், அங்கே PLO-வின் மத்தியக் குழு உறுப்பினர் அபுமேய்சரை சந்தித்து அவரிடம் எங்களை அனுப்பி வைத்த லண்டன் PLO பிரதிநிதி சாயித் ஹமாமின் அறிமுகக் கடிதத்தை கொடுத்தோம். பிறகு ஈழமண்ணின் மைந்தர்களாய் அவரோடு உறவு கொள்ளும் விதத்தில் எம் மக்களின் இரத்தத்திற்கு ஈடானா தேயிலை நிரம்பிய பாக்கெட்டுகளை அவருக்குப் பரிசளித்தோம்.
அதன்பின், தூரத்தில் குண்டுகள் வெடித் தெழும் அந்த அசுரப் பொழுதில், அங்கிருந்து சுற்றிலும் பலத்த பாதுகாப்புடன் மேடு பள்ளங் கள் நிறைந்த ஒரு மலைப்பாதை வழியே பெக்கா பள்ளத்தாக்கை நோக்கி நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம். இறுதியில், Fatah-வின் கட்டுப்பாட்டுக்குள் இயங்காது விடப்பட்டிருந்த ஒரு தொழிற்சாலையை வந்தடைந்தோம். PLO உயர் ராணுவ அதி காரிகளை நாங்கள் எதிர்பார்த்து நின்ற அந்த இடம் “சத்துாரா’-சிரியா எல்லையிலிருந்து 6 கி.மீ. தொலைவிலிருந்தது.
சிறிது நேரத்தில் பலத்த ஆயுத பாது காப்புடன் வந்து சேர்ந்த வாகனங்களிலிருந்து ஆயுதந்தரித்தவாறும், சாதாரண உடையிலு மாய் ஆறேழுபேர் இறங்கி எங்களை அணுகி **Welcome Comrades* 6T6öTspiria,6ïr. 19r யாணத்தைப் பற்றியும், பெய்ரூட் சந்திப்பு குறித்தும் ஆவலோடு விசாரித்தார்கள். லண்டன் PLO பிரதிநிதி சாயித் ஹமாமியையும், ஈரோஸ் தோழர் ரத்னாவையும் பற்றி அக்கறையோடு கேட்டார்கள். பிறகு தம்மைப் பற்றிய அறி முகத்தை மேற்கொண்டார்கள். அவர்களில் கம்பீரமான தோற்றத்தோடு ராணுவ உயர் அதிகாரி போலிருந்த ஒருவர் எங்களை தனிப் பட்ட முறையில் விசாரித்தார். எங்களுக்கு பொறி யியல் துறையில் அனுபவம் இருப்பதை அறிந்து கொண்ட அவர், 'அப்படியானால் நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும். எங்கள் பண்ணையில் ஒரு உழவு எந்திரம் பழுதாகி விட்டது. அதை நீங்கள் நாளை காலையில் சரி பார்த்துத் தந் தால் எமது விவசாயிகளுக்கு அது பெரிதும் பயனளிப்பதாக இருக்கும். இன்று நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்.
இராணுவப் பயிற்சி பெறச் சென்ற எங் களை அந்த அதிகாரி விவசாயிகளுக்கு உதவ அழைத்தது சற்றே திகைப்பைத் தந்தது. பிறகு அவர் எங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு அகன்றார். அதன்பிறகு, அவர் யார் என்பதை அறியும் ஆவலோடு அங்கிருந்த வேறு சில பாலஸ்தீன தோழர்களை கேட் டோம். அவர்தான் PLO-வின் ராணுவதளபதி அபு ஜிகாத் என்பதை அறிந்து வியந்தோம். இதுவே எங்களின் முதல் சந்திப்பு.

அக்காலத்தில் குரூர யுத்தச் சூழல் லெப னானில் நிலவியதால், சிரியா - டமஸ்கஸ்சில் ஹமூரியா எனும் இடத்திலிருந்த பாலஸ்தீன பயிற்சி முகாமில் கேப்டன் மஜாத் தலைமை யில் ராணுவப்பயிற்சி நடந்தது. அது ஒரு சர்வதேச பயிற்சி முகாம். பிரான்ஸ், ஈரான், குர்துஸ்தான், உகண்டா, ஐரீஸ், நிகரகுவா, ஜெர்மன், மற்றும் அரபுநாடுகளான குவைத், சவுதி, எகிப்திலிருந்தெல்லாம் பயிற் சிக் கு வந்திருந்தார்கள். இவர்களோடு நாமும் பயிற்சி பெற்றோம். பயிற்சி ஆரம்பித்து இரண்டு வாரத்தில் முகாமிற்கு வந்த PLO தலைவர் அராபத், எங்கள் போராட்டத்தையும், எங்களையும் பற்றி தீர விசாரித்து தெரிந்து கொண்டார். எங்கள் பயிற்சி தொடர்ந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் பாலஸ்தீன விடுதலைப் போரையும், அதன் வரலாற்றையும் மேலும் தெளிவா அறிந்து கொண்டோம். அதோடு, பயிற்சிக்கு வந்த மற்ற நாட்டினரின் பிரச்சனை களையும், அந்நாடுகளின் போராட்டச் சூழலை யும் ஆழ்ந்து அறிந்து கொள்ளும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைத்தது. பாலஸ்தீனம் மற்றும் 6Ꭻ6ᏡᎠ6ᏈᎢ ᏓᎥ Ꭵ தே ச த் து தோழ ர் க ள் ஈழப்போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்து தங்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித் தனர். அவர்களோடு வாழ்ந்த காலம் மறக்க முடியாதது. ஈழப்போராட்டத்தை தீரத்தோடு முன்னெடுக்க வேண்டி, முதன் முதலாக வெளி நாட்டில் இராணுவப் பயிற்சி பெறச் சென்ற ஈழவர்கள் நாங்களே என்பதால், ஈழப்போராட் டத்தின் வலிமையையும், வெற்றியையும் உறுதிப் படுத்தும் வகையில், சகலவிதமானப் பயிற்சிகளையும் அங்கே பெற்றோம்.
பயிற்சி காலத்தின் போதும் அபு ஜிகாத்து தான் ராணுவத் தளபதியாக இருந்தார். பயிற்சி முகாமிலிருந்து போர்முனைக்கு நா ங் கள் அனுப்பப்பட்டபிறகே அவரை அடிக்கடி சந் திக்கும் சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அங்கே ராணுவத் தயாரிப்பு வேலைகளை கவனி ப் பதற்கென்று அவர் அடிக்கடி வருவது வழக் கம். வரும்போதெல்லாம் எங்களை அணுகி, 'பயிற்சி காலத்தில் நீங்கள் கற்றதென்ன ?” *வேறு எவற்றில் உங்களுக்கு பயிற்சி தேவை ? என்றெல்லாம் கேட்பார்.
அந்த வேளைகளில் அவரின் சகல ஆளுமை களையும் தெரிந்து கொண்டோம். கட்டளை 60) LDu is 56 (Command Centre) g(5&65i வரைபடங்களை காட்டி போர்முனையில் எங்க ளது நகர்வுகளின் திசையையும், அவை எப்படி அமைய வேண்டும் என்பது பற்றியும் அவர் விளக்கிச் சொல்வார். விமான எதிர்ப்புப் பீரங்கி கள், கட்சுசியா ஏவுகணைகள், ஸ்கட் ஏவுகணை

Page 6
2
கள் போன்ற நவீன ஆயுதங்கள் கையாளப்படும் சமயங்களிலெல்லாம் கண்காணிப்புக்காக அவர் எப்போதும் இருப்பார். எல்லா ராணுவ முகாம் களின் நிலையையும் நேரில் சென்று அறிவார். அவருக்கு இரவும் இல்லை ; பகலும் இல்லை. நேரம் காலம் பார்க்காமல், தற்பாதுகாப்பு குறித்த அச்சம் துளியுமின்றி, போர்முனை முகாம்களுக்கு அடிக்கடி வந்து போவார். அவர் எங்கே எப்போது ஓய்வு எடுப்பார் என் பது அனைவருக்கும் புரியாத பு தி ரா க வே தோன்றியது.
போர்முனைக்கு வந்திருந்த ஒரு சமயம் அபு ஜிகாத் ஈழமக்கள் படும் துன்பங்களையும், அவற்றை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது நாங்கள், **இது போன்ற பயிற்சி எங்களில் குறைந்தது இன்னும் 50 பேர்களாவது பெறுவார்க ளானால் ஆயுதபாணிகளாய் எம் மக்களை மாற்றி, பயிற்றுவிக்கும் பணி எங்களுக்கு மிக எளி த ர க இருக்கும்” என்றோம். அதற்கு பதிலாக அவர் மெலிதாக புன்னகை செய்தார். பிறகு அறிவுரை சொல் லும் தொனியில், 'நண்பர்களே ! என் அனுபவத் தில் க ற் ற ஒன்  ைற ର ଥF f ଶୈ୬ கிறேன். அதை எப்போதும் மனங்கொள்வது நல்லது. அதாவது, முதலில் நீங்கள் உங்கள் பலத்தை நம்பவேண்டும். ஒருவர் மட்டுமே தேவைப்படுகிற வேலைக்கு இருவரை நிய மிப்பது தவறு. இன்னும் ஐம்பது பேருக்கு பயிற்சி தேவையில்லை. பல நூற்றுக்கணக்கான *ஐம்பது பேர்களை" நீங்கள் மூவருமே உரு வாக்கிக் காட்ட முடியும். அதற்கேற்ப உங் களது தேவைகள், பயிற்சிகள் எல்லாவற்றையும் நல்லமுறையில் நிறைவேற்றுவோம். நம்பிக்
கையோடிருங்கள்” என்றார்.
அவ்விதமே சகல பயிற்சிகளிலும் கை தேர்ந்தோம். ஆயுதப் போராட்டத்தை மேற் கொள்வதற்கான முன் நிபந்தனைகளை அங்கு பெற்ற அனுபவங்களின் வாயிலாக அறிந் தோம். இவ்வாறாய் எங்களில் வித்தியாச மான புதிய பரிமாணங்களை நிகழ்த்திய அந்த பயிற்சிகாலம் முடிந்தது. சரி ! இனி திரும்ப வேண்டும். ஆனால் பணம் இல்லாத நிலை, எங்களை வருத்தியது. அந்த நேரம் பார்த்து அபு ஜிகாத் எங்களை அவரது இல்லத்துக்கு அழைத்தார். சென்றோம். அவர் அங்கிருந்த வேறு இரு உயர் அதிகாரிகளை அறிமுகப் படுத்தினார். பிறகு பயிற்சி திருப்தியாய் அமைந்ததா ? என்றார். ‘மிகவும் திருப்தி’ என்றோம். எங்களது போராட்டத் தேவை களை ஆர்வத்தோடு கேட்டறிந்தார். எங் களுக்குள்ளோ பணமில்லா நி ரா த ர வா ன நிலையை எப்படி அவருக்கு தெரியப்படுத்து வது ? என்ற கேள்வி குமைந்து கொண்டி

Lμπ6υιο
ருந்தது. கடைசியில் தயங்கித் தயங்கி சொல்லி விட்டோம். இதை ஏற்கனவே எதிர்பார்த்த தைப் போல் அவர் பலத்தகுரலில் சிரித்தார். பிறகு அவருக்கு பக்கத்திலிருந்த ஒரு அதி காரியை காட்டி, "'உங்களை நல்லவிதமாய் திருப்பி அனுப்பும் பொறுப்பையெல்லாம் இவர் கவனித்துக் கொள்வார். நீங்கள் கிளம்புங்கள்; மறுபடியும் நாம் சந்திக்கும் போது விபரமாக பேசலாம்” என்றார்.
பயிற்சி முடிந்து திரும்பும் வேளையில் இந்த சந்திப்பு சிறிது நேரமே நிகழ்ந்தது என்பது எங்களுக்கு சற்றே ஏமாற்றத்தை ஏற் படுத்தியது. எனிலும், அபு ஜிகாத் வெகு சீக்கிரத்தில் எங்களுக்கு விடைகொடுத்த விதம் * உங்களது போராட்டம் தயார்நிலையில் இல்லை. தயார் நிலைக்கு வரும் காலத்தில் நாம் சந்திப்போம்” என்று மறைமுகமாய் எங்களுக்கு உணர்த்தியது. நாங்கள் நன்றி கூறி விடை பெற்றோம்.
லண்டன் திரும்பியதும் காலதாமதம் செய் யாமல் நாங்கள் ஈழத்திற்கு திரும்பினோம். லண்டனிலும் சரி ; ஈழத்திலும் சரி ; எமது தோழர்களும் மக்களும் முதன்முதலாக வெளி நாட்டில் ராணுவப் பயிற்சி பெற்று திரும்பிய எங்களை ஆர்வத்தோடு வரவேற்றார்கள். அவர்கள் எல்லோரிடமும் ராணுவப்பயிற்சியின் சகல நுணுக்கங்களையும் தாமும் கற்க வேண்டும் என்ற துடிப்பு நிறைந்திருந்தது. ஏனெனில் அப்போதைய ஈழத்து அவலச்சூழல் ஆயுதமேந்திய போராட்ட வழிமுறையையே தேர்வு செய்யும்படி ஈழவர் அனைவரையும் நிர்பந்தித்தது. ஆயுதப் பயிற்சியும் விடுதலை போராட்ட இயக்கங்களுடன்ான தொடர்பும் எங்களுக்கு அப்போது அவசர அவசியமாயிருந் தது. அந்த காலக் கட்டத்தில் இது போன்ற ஆயுதப் பயிற்சியை PLO போன்ற விடுதலைக் காக போராடும் இயக்கங்களே ஏற்று நடத்தி வருவதை அறிந்து எமது மக்கள் மகிழ்ச்சி யும், நம்பிக்கையும் பெற்றார்கள்.
துப்பாக்கிச் சனியனை ஏந்திப் போராட வேண்டிய காலக் கட்டாயத்தில், ஈழப் போராட் டத்திற்கான முன்தயாரிப்பு வேலைகளில் எமது மக்களுக்கு ஆயுத பயிற்சி அளிப்பதையே பிரதான பணியாகக் கருதி செயல்பட்டோம். நாங்கள் பெற்ற கடினமான பயிற்சியையும் அனுபவங்களையும் எமது மக்களோடு பகிர்ந் தோம் ; அவர்களை பயிற்றுவித்தோம். கூட் டங்கள் வாயிலாய் பாலஸ்தீன வி டு த  ைல இயக்கத்தோடு எமக்குள்ள தொடர்பையும் உறவையும் எடுத்துக் கூறினோம் : பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வரலாற்றை விளக்கிச் சொன்னோம்.

Page 7
ஒரு நாள ஒரு குரங்கு ஒரு மனிதனைச் சந்தித்து, “பல கோடி வருஷங்களுக்கு முன் V னால் நீயும்கூட என்னைப் குரா போல குரங்காகத்தான் இருந் தாய். இன்று ஒரு நாள் மட்டும் ஏன் நீ ஒரு குரங்காக மாறி வாழ்க்கையை எங்களைப் போல் அனுபவிக்கக் கூடாது?” என்று கேட்டது.
முதலில் அந்த மனிதன் த ய ங் கி ன ர லும், சிறிது யோசனைக்குப் பின், *“守f ஒரு நாளைக்கு மட்டும் என் னைக் குரங்காக மாற்றிக் கொள்ள ான் ஒப்புக்கொள் o g. கிறேன்” ஃான் இந்திச்சி
குரங்கு சந்தோஷமடைந் தது. ‘அப்படியானால் உன் தோலைக் கழற்றி என்னிடம் கொடு. நான் மனிதனாக மாற் றிக் கொள்கிறேன்” என்று
சொன்னது.
அவர்கள் தத்தம் தோலை மாற்றிக் கொண்டார்கள். மனி தன் குரங்காகவும், குரங்கு மனிதனாகவும் மாற் ற ம் தமிழ் நிகழ்ந்தது.
மனித-குரங்கு மரத்தில் ஏறிக் கொள்ள, குரங்கு-மனிதன் அலுவலகம் சென்று மனித னாக வேலை பார்க்கச் சென்
திறது.
ஈழம் நிர்மாணிக்கப்பட வேண்டிய, சிங்கள இனவெறி ராணுவத்தின் ரத்த பயங்கரமிக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதமேந்தி எழ வேண்டிய காலத்தின் தே  ைவ  ைய உணர்ந்து எண்ணற்றோர் ஆயுதபயிற்சியை பெற விழைந்து முன்வந்தார்கள். வ ய து வரம்பின்றி ஏராளமான இ  ைள ஞர் களும், முதியோர்களும் சாவை துச்சமாய் மதித்து ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்க முழுமன தோடு விருப்பம் தெரிவித்தார்கள். இந்த நேரத்தில் அபு-ஜிகாத் கூறியதைப்போல இவர் கள் அனைவருக்கும் ஆயுதபயிற்சி அளிக்க நாங்கள் மூவரே போதும் என்பது சாத்திய மானதாக தோன்றவில்லை. எனவே, நிலை மைகளை விளக்கி, ‘போராட்டம் வேகமாய்
முன்னேறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்

மீண்டும் இருவரும் மாலை யில் சந்தித்துக் கொண்டார் d கள். குரங்கு-மனிதன் மனிதAJG5 குரங்கிடம் மிகவும் அலுப் படைந்த குரலில், “சகோதரா! நான் மனிதனாக இருப்பது துன்பகரமாக இருக்கிறது. தயவுசெய்து என் தோலைத் திருப்பித் தா. இந்தா உன் னுடையது” என்றது.
மனித-குரங்கு, 'பல கோடி வருஷங்களாக நான் மனித னாக வசித்து வருகிறேன். ஏன் நீ குறைந்தது ஒரு நூறு வருஷ மாவது மனிதனைப் போல றுகதை வ சித் துப் பார்க்கலாமே?”
என்று சொன்னான்.
அந்தக் குரங்கு அழத் தொடங்கியது. **வேண்டாம் சகோதரா. இவ்வளவு குரூர மாக நடந்து கொள்ளாதே.”
ஆனால் மனித-குரங்கு ஒவ் வொரு கிளையாகத் தாவித் தாவி காட்டுக்குள் மறைந்தது"
ஜில் : குழப்பமடைந்து போ ன
குரங்கு-மனிதன் அலுவலகத்
நர்ஜி 體 வேலை பார்க்கத் திரும்பிப்
பானது.
அதன் பின்னிருந்து மனிதன் குரங்காகவும், குரங்கு மனிதனா கவும் வாழ்ந்து வருகிறார்கள்.
அதை மேலும் விரைவுப்படுத்த வேண்டு மென்றால் இன்னும் சிலருக்கு ஆயுத பயிற் சியை நீங்கள் அளித்துதவ வேண்டும்” என்று அபு-ஜிகாத்திற்கு செய்தி தெரிவித்தோம். அவரும் நிலைமை புரிந்து எங்கள் கோரிக் கையை ஏற்றார்.
எமது தோழர்கள் சிலர் பயிற்சிக்கென்று பெய்ரூட் சென்றார்கள். அவர்களை கவனிக் கும் பொறுப்பாளராய் நான் செயலதிபர் ரத்னாவால் நியமிக்கப்பட்டேன். பிற கு அவரது பணிப்பை ஏற்று நானும் பெய்ரூட் டுக்கு பயணமானேன். மனத்தில் மறுபடியும் அபு-ஜிகாத்தை சந்திக்கப் போகிறோம் என்ற
சந்தோசம் நிறைந்தது.
தொடரும்

Page 8
வர்க்கங்களும் அரசும் இல்லாத ஒரு சமுதா யத்தைக் கற்பனை செய்து பார்ப்பதற்குச் சமூக விதிகள் இடந்தருகின்றன. ஆனால் அவை அரசு என்பது சுயேச்சையான ஒரு நிறுவனமாக இயங்க முடியும் என்று குறிப்பிட வில்லை. வர்க்கச் சார்புள்ள அரசுகளே வரலாற்றில் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றன.
ஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வ ர ல |ா றே என்றும், ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தின் மீது அடக்கு முறை செய்து ஆதிக்கம் செலுத்துவதற் காக உருவாக்கப்பட்ட ஒரு கருவியே அரசு என்றும் பிரகடனப்படுத்துகிறது மார்க்சியம். இதைக் கட்டுரையாளர் அம்சா ஆலவி மரபு வழி மார்க்சியக் கோட்பாடு” என்கிறார்.
ஆனால், 'அரசு பற்றி மார்க்சியம் கூறும் தெளிவான முடிவிற்கு வரவில்லை என்று சொன்னால் வர்க்கப் போராட்டத்தை நடத்து வதோ, பட்டாளி வர்க்க அரசை நிர்மாணிப் பதோ சாத்தியமில்லை” என லெனின் அவர் கள் தமது நூல்களில் தெளிவுபடுத்தியிருக் கிறார். இந்த மார்க்சிய வழியில் சென்றதன் விளைவே ருஷ்யாவில் மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சி; இது உலகமே ஒப்புக் கொண்ட உண்மை. பாரீஸ் கம்யூனின் தோல்வியினின்று கிடைத்த படிப்பினையின் வாயிலாய்ப் பாட் டாளி வர்க்கம் நடைமுறையில் பெற்ற போதத்தின் அடிப்படையில்தான் ருஷ்யாவில் பாட்டாளி வர்க்க அரசு நிர்மாணிக்கப்பட்டது. இதை அம்சா ஆலவி மறுக்கவில்லை.
அதே சமயம், அரசு பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை அம்சா ஆலவி எத்தகைய பார்வையில் மரபு வழிப்பட்டதாய் காண்கிறார்?
**ஐரோப்பாவில் முழுமையாக வளர்ச்சி பெற்ற முதலாளித்துவம் தனது அரசியல் அதிகாரத்தைத் தானே கையிலெடுத்துக் கொண்டதால் முதலாளி வர்க்க அரசுகளை அது அமைத்தது. ஆனால் காலனியாதிக்க நாடுகளில் அந்நாடுகள் சுதந்திரம் அடைந்த பிறகு அமைந்த அரசுகள் பெரும்பாலும் (குறிப்பாக இந்தியா நீங்கலாக) ஐரோப்பிய நாடுகளில் அமைந்தது போல் அமையவில்லை. அதற்கு மாறாகப் புதிதாக விடுதலை அடைந்த

பாலம்
நூலகம்
அம்சா ஆலவியின் கற்பனை வகைப்பட்ட பொய்யான இந்தப் புனைகருட்டு. .
சி. அறிவுறுவோன்
காலனி நாடுகளில் எந்த வர்க்கச் சார்புமில்லாத அரசுகள் இருக்கின்றன. அவை ராணுவ மற்றும் அதிகார வர்க்கங்களினால் நடத்தப் படுகின்றன. இதற்குக் காரணம், இந்நாடு களில் உள்ள நிலப்பிரபுத்துவ வர்க்கம், தேசிய முதலாளித்துவ வர்க்கம், பெரு முதலாளி வர்க்கம், இவை மூன்றுமே பலவீனமாக உள்ளன. அரசு எந்திரம் ஏகாதிபத்தியத்தின் வசதிக்கேற்ப தயாரிக்கப்பட்ட பிருமாண்டமான அமைப்பு. இது மேல் கட்டுமானம். மேற் குறித்த பலவீனமான மூன்று வர்க்கங்களுமே அரசுக்கு அ டி த் தள ம். பலவீனமான அடித் தளத்தின் மீது பிருமாண்டமான அரசு எந்திரம் தாக்கு பிடித்து நிற்க முடியாது. மேலும் இந்த ‘மூன்று வர்க்கங்களும்’ தங்களுக்குள் மோதிக் கொள்ள T ம ல் சமாதானபடுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதனால்தான் காலனியாதிக்கத்திற்குப் பிந்திய சமுதாயத்தில் அரசு வர்க்கச் சார் பின்றி சுயேச்சையானதாகச் செயல்படுகிறது. இது மார்க்சியத்தின் அரசு பற்றிய மரபு ரீதியான கோட்பாட்டிற்கு மாறுபட்டது” என்கிறார் அம்சா ஆலவி.
மார்க்ஸ்- ஏங்கல்ஸ் காலத்திற்குப் பின்னால் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறிய காலக்கட்டத்தை லெனின் ஆழ்ந்த விஞ்ஞான முறையில் பகுத்தாராய்ந்து, அதற்கான விதி களைத் தொகுத்து மார்க்சியத்தை செழுமைப் படுத்தியதை நாம் ஏற்கிறோம். மாறாக மார்க்சியத்தின் அடிநிலைக் கோட்பாட்டையே திரித்துப் புரட்டிக் கூறும் அம்சா ஆலவியை நாம் அங்கீகரிக்க முடியுமா?
மார்க்சியம் தேங்கிப் போன குட்டை அல்ல. அது சமூக வளர்ச்சியை உசுப்பிவிட்டுத் தானும் வளர்ந்து வரும் சமூகவியல். அதனால்தான் இன்றளவும் உலகை மாற்றியமைக்க கூடிய உயரிய ‘தத்துவ-வழிகாட்டியாக அது திகழ் கிறது. அம்சா ஆலவி கூறியது சரியான விஷய மாக இருந்திருக்குமானால் அதை ஏற்றுக் கொள்வதில் நமக்கு எந்தத் தயக்கமும் ஏற்பட் டிருக்காது. சரியல்ல என்பதாலேயே அவரின் கருத்தை மறுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.
ஏகாதிபத்திய இந்தியாவில் நடைபெற்ற

Page 9
பாலம்
սյո Ժlւնւլ
இந்தத் தனிமை மிகவும் கொடுமையானது. என் அன்பே. ஒரு மல்லிகை பூவைப்போல மனதினுள் பாதுகாத்து வைத்துள்ளேன் உனது நினைவுகளை. காற்றும் அசைய மறுக்கும் அந்த இரவுகளில். சூரியன் மட்டுமே ஒளியைத் தரும் பகற்பொழுதுகளில். நெஞ்சிற்குள் உன்னை உனது நினைவுகளை சுமந்தபடி, தாங்கும் சக்தியை. உலகில் வாழும் இயலளவை. இழந்து விடும் முன்பு 6666 வந்தடைய மாட்ட்ாயா. ? எனது கனவுகளை நனவாக்கமாட்டாயா. ? எனது ஆளுமைகளை
எனக்கு ハ மீட்டுத்தரமாட்டாயா..? எனக்கென வரையறுத்துக் கொண்ட லட்சியங்களை கடமைகளை நிறைவேற்றும் வலுவை உள்ளத்திற்கும் உடலுக்கும் நீ வழங்க மாட்டாயா. ?
O O
சுதந்திரப் போராட்டத்தில் *இ ன்  ைற ய பாகிஸ்தானும் வங்காள தேசமும்’ பங்கு
பற்றியது அ  ைன வ ரும் அறிந்ததே. போராட்டத்திற்கு தலைமையேற்றது காங் கிரஸ் இயக்கம். அது தோற்றுவிக்கப்பட்ட முறை இந்திய முதலாளித்துவத்திற்கு ஏற் புடையதாக இருந்தது. ஏனெனில், அதன் பிரதான கோரிக்கையே அதிகார அமைப்பில் முதலாளி வர்க்க அறிவாளிகளைப் பங்கு பற்ற வைப்பதுதான். காங்கிரசின் "குடியேற்ற அந்தஸ்து கோரிக்கை மிதவாதத் தன்மை கொண்டது எனினும், முதலாளி வர்க்கம் தன்னுடைய பிரதிநிதிகளைக் கொண்ட சட்ட மன்றங்களைக் கோரியதையும், அது ஜன நாயகத் த ன்  ைம கொண்டிருந்ததையும்

5
கவனிக்க வேண்டும். *அதனுள்ளேயே முழு விடுதலைக்கான போராட்டமும் நடந்து வளர்ந்து வந்ததையும், காந்தியார் தலைமை வெகு ஜனங்களை காங்கிரசின் பால் ஈர்த்ததை யும், அதே சமயம் மக்களின் பேரெழுச்சியை காங்கிரஸ் தலைமையே மட்டுப்படுத்தியதை யும் நாம் கவனிக்க வேண்டும். இவற்றையே முஸ்லீம் லீக்கும் செய்தது.
இது, விடுதலைக்காகப் போராடிய முத லாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தோடு சமரசம் செய்து கொண்டிருந்ததன் பிரதிபலிப்புதான். ஆகவே 'பிரிவினையோடு விடுதலை அடைந்த பாகிஸ்தானிலோ, அதற்குப் பின் விடுதலை யடைந்த வங்கதேசத்திலோ பெருமுதலாளித் துவத்திற்கும், நிலபிரபுவத்திற்கும் 'சமரசம்’ செய்துவைப்பதற்காகவே ராணுவம் ஆட்சியை கைபற்ற வேண்டிய அவசியமேற்பட்டது” என்ற அம்சா ஆலவியின் கருத்து ஏற்புக்குரிய தாய் இல்லை.
பாகிஸ்தானில்-பலுச்சி, பட்டாணி, சிந்தி ஆகிய தேசிய இனங்களைச் சார்ந்த தேசிய முதலாளிகளின் பிரிவினை கோரும் இயக்கம் வலுவடைந்து வருகிறது. பெருமுதலாளிகளின் பிரதிநிதி பெனாசிர் புட்டோவின் ஜனநாயக இயக்கம் வலுவடையாமலிருப்பதற்கு இது ஒரு காரணமல்லவா? இந்நிலை, ‘ராணுவம் சிறு முதலாளிகளை அதாவது தேசிய முதலாளி களை பெரு முதலாளி மற்றும் நிலப்பிரபுக் களோடு ஒத்துப்போகச் செய்கிறது. அதனால் தான் ராணுவ ஆட்சி நீடிக்கிறது” என்ற அம்சா ஆலவியின் கூற்று தவறே என்று சுட்டிச் சொல்லும் சாட்சியாய் உள்ளது. இதி லிருந்து ‘காலனியாதிக்கத்திற்குப் பிந்திய சமுதாயத்தில் “தேசிய முதலாளிகள் பெருநகர முதலாளிகளுடன் தாம் வைத்துள்ள உறவின் கட்டமைப்பில் கீழ்நிலை வாடிக்கைக்காரர் என்ற நிலையில் உள்ளனர்” (கா. பி. ச. அரசு பக் 49) என்று அம்சா ஆலவி குறிப்பிட்டுள்ளது, இந்தியாவிற்குப் பொருந்தும். ஆனால் பாகிஸ் தானுக்குப் பொருந்தவே பொருந்தாது என் பது புலனாகிறது.
மேலும் மதத்தின் பெயரால் ஒரு தேசிய வாதம் இருக்க முடியாது. அது கற்பிக்கப் பட்ட வாதம. அதன் பலனைத்தான்’ தற் போது பாகிஸ்தானும் வங்காளதேசமும் அனுபவிக்கின்றன.
பாகிஸ்தான் இஸ்லாம் தேசியத்துக்கு ஓர் எடுத்துக் காட்டாக அமையவில்லை. அது மேற்கு பஞ்சாபி ஆதிக்கத்தையே’ கொண் டிருக்கிறது. (வங்காள தேசம் பிறந்தது ஒரு புறம் இருக்கட்டும்). மேற்கு பஞ்சாபி ஆதிக் கத்திற்கு எதிரான சிந்தி, பலுச்சி, பட்டாணி தேசிய இனங்களின் எழுச்சி இதைத்தானே பிரதிபலிக்கிறது! இதை அம்சா ஆலவியே ஒப்புக்

Page 10
6
கொள்கிறார் (கா. பி. ச. அ. பக்-52, 53) இவற்றை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம்: பெரு முதலாளிகள் நிலப்பிரபுக்களோடு சமன் படுத்தப் பட்டிருக்கிறார்கள். எனினும், பெருமுத லாளிகளின் பரந்த’ நலன்களில்தான் நிலப் பிரபுத்துவ ந ல ன் கள் உள்ளடங்கியுள்ளன. ராணுவ அரசு "பஞ்சாபிய தேசிய ஆணவத் துடன் நடந்து கொண்ட போதிலும் பாகிஸ் தான் முழுமையிலும் பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கவே செய்கின்றது.
இராணுவத்துக்கும் முதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கும் இடையே இப் போது காணக் கூடிய தனிவகையான ஒரே முரண்பாடு, ஜின்னா காலத்திய "ஜனநாயக நலன்களோடு அல்லது புட்டோ எழுப்பிய “ஜனநாயக அலையோடு ராணுவம் இசை விணக்கம் கொண்டிருக்கவில்லை என்பதே. இதற்கு மூலகாரணம் ராணுவம் அமெரிக்க மேலாதிக்க நலன்களோடு ஒத்திசைந்துப் போவதே ஆகும். ஆக, பாகிஸ்தானில் ராணுவ மற்றும் அதிகார வர்க்கம் அமெரிக்க ஏகாதி பத்திய நலன்களையே பிரதிபலிக்கிறது என்ப தோடு உள்நாட்டில் பெரு முதலாளி மற்றும் நிலப்பிரபுக்களைப் பாதுகாக்கும் நிலைபாட்டை யும் எடுத்துள்ளது. இன்றைய பாகிஸ்தான் சூழலில், பெனாசிர் புட்டோ அமெரிக்க ஏகாதி பத்திய நலன்களோடு எந்த அளவிற்கு சார்ந் திருப்பார் என்பதைப் பொறுத்தே பாகிஸ் தானில் ஜனநாயகம் திரும்புமா? திரும்பாதா? என்பதற்கு விடை கிடைக்கும். (அப்படித் திரும்பினால் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது வேறு விஷயம்). எனவே, ராணுவ வர்க்கச் சார்பற்ற சுயேச்சை அரசு பாகிஸ்தா னில் உள்ளதென்பதை ஏற்க இயலாது. ‘பிரிவினைக்குமுந்திய கிழக்கு வங்கத்தில் ஷேக் முஜீப் அவர்களின் அரசியல் கோரிக்கை பாகிஸ் தானுக்கு உட்பட்ட சுயாட்சியாக இருந்தது என்று அம்சா ஆலவியே கூறுகிறார். வங்கத் தில் தேசிய முதலாளித்துவக் கோரிக்கையால் பலனடைந்தவர்கள் பெருமுதலாளிகளே என் பதையும் அவர் விளக்கி உள்ளார். இந்தியத் தலையீட்டையும் சரியாகச் சுட்டிக் காட்டியுள் ளார். மெளலானாபாஷானி விஷயத்திலும் அவரது மதிப்பீடு சரியானதே. ஆனால் முஜீப் அவர்களும் அவாமிலிக் கட்சியும் பெருமுதலாளி மற்றும் நிலப்பிரபுக்களை பிரநிதித்துவப்படுத்து வதை தெளிவின்றிப் பார்க்கிறார். ‘ஏகாதி பத்திய எதிர்ப்பு’, ‘ஏகாதிபத்திய ஆதரவு’ என்ற பெருமுதலாளிகளின் இரட்டை குணத்திற்கே முஜீபும், அவாமிலிக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்ததை உணர்ந்தால் குழப்பம் நீங்கும்.
பிரிவினைக்குப் பின் முஜீப் அதிபராட்சியை ஏற்படுத்தியதானது அவரை வெகுஜனங்களிட

பாலம்
ஆற்றாமை வேறு கணப்புதேடி விரைந்தனர் செய்தியாளர். தூக்குமேடைக்குப் போட்டியிட்டத் தலைவரெல்லாம் கருப்புக் கொடியேற்றிக் கடன் முடித்தார். புழுதிப் புயல்வீச்சின் உக்கிரத்தில் மெல்ல மெல்ல சாகிறது உமது குரல். அறிவோம்தான் உம்முடைய சூழலின் பின்புலமும். அறிந்து என்ன ? வழங்குதற்கு இன்று வார்த்தைகள்தான் கையிருப்பு. வக்கற்றுக் கவிழும் மண்டைக்குள் தகிக்கிறது சேகுவேரா w பெத்யூன் உயிர்ப்பித்த வாழ்வின் நெடி, -ரவிக்குமார் O O மிருந்து தனிமைப்படுத்தியது. வெகுஜன உணர்வையே ராணுவ வீ ரர் க ஞ ம் "புதி தாய் சுதத்திரமடைந்திருந்த" அந்த நாட்டில் பிரதிபலித்தனர். ஆனால் இந்நிலையை ராணுவத்தின் மேல்மட்டத்தில் இருந்தவர்கள் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு சாதக மாகப் பயன்படுத்திக் கொண்டனர். அம்சா ஆலவின் தீர்க்கதரிசனத்தின் படியே முஜீப் தீர்த்துக் கட்டப்பட்டார். ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
ஆக, பாகிஸ்தானிலும் வங்க தேசத் திலும் ராணுவ அரசு அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் “படைக்கருவியாகச் செயல்படுவது நன்கு விளங்குகிறது. ராணுவ மற்றும் அதிகார வர்க்க ஆட்சி சுயேச்சையானதல்ல; இந்தோனேஷியாவிலும் இதே நிலைமைதான். இதிலிருந்து, அரசு எந்தவொரு வர்க்கச் சார்பும் அற்றதாய், சுயேச்சையானதாய் நிலவமுடியுமாதென்னும் மார்க்சியக் கோட் பாடே மிகச் சரியானது என்பதை ஐயந்திரிபற அறிகிறோம்.
ஆனால், அம்சா ஆலவி தன் "வர்க்கச் சார்பற்ற அரசு’ கோட்பாட்டை எந்த இடத் திலிருந்து விரிவாக்குகிறார்? தனது கட்டுரை யில் 8-வது அடிக்குறிப்பு கூறும் விஷயமாக இப்படித் தொடங்குகிறார்:
**போனபார்ட்டிசத்தை "முதலாளிகளின் மதம்’ என்றும், இது எல்லாவித முதலாளித்துவ

Page 11
usted b
ஈழத்தின் புதல்வர்களே.
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க கொக்குகள் மட்டுமல்ல பருந்துகளும், கழுகுகளும் ஆந்தைகளும் கூட போட்டியிட்டன. ஆமாம். ஈழத்தின் புதல்வர்களே, சித்தாந்தத் தெளிவின்றி அகப்புறச் சூழலின் சரியான ஆய்வின்றி போராடப் புறப்பட்டு ஆயுதங்களையே அதிகம் நம்பி மக்களிடமிருந்து அந்நியப்பட்டீர்கள். அடிபட்டுக் கொண்டீர்கள். மக்கள் சக்தியை அணிதிரட்டி வழிநடத்த வேண்டிய அதிகாலை வேளையில் அந்நிய சக்திகளின் விரலசைப்பில் ஆடும் பொம்மைகள் ஆனிர்கள். திசைக்கொரு கோணமாய் சிதறுண்டு போனீர்கள். இருள் சூழ்ந்த இந்தப் பொழுதிலாவது முன் வருவீர்களா ? கடந்த காலங்களிலிருந்து கற்றுக் கொள்வதற்காக ஒன்றுபடுங்கள். உங்களுக்குள் மட்டுமல்ல மக்களுடனும். புரிந்துகொண்டு செயற்படுங்கள், தத்துவங்களை மட்டுமல்ல dFLD 6 sI 6) யதார்த்தங்களையும் கூட.
-ரிஷி
O Γ} O
அரசுக்குமான பண்பு என்றும் மார்க்ஸ் குறிப் பிடுகிறார். மேலும், ஆளும் வர்க்கத்தின் பல்வேறுபட்ட பிரிவினரிலிருந்து ஒப்பீட்டளவில் தனித்தியங்கும்போது மட்டுமே, அது ஆளும் வர்க்கத்திற்குச் சேவை செய்ய முடியும் எனக் காண்பிக்கிறார். அப்போதுதான், அவ்வரசா னது அவ்வர்க்கம் முழுமைக்குமான மேலாதிக் கத்தை நிறுவ முடியுமெனத் தெளிவுப்படுத்து கிறார்-” இந்தக் கருத்தை மையமாகக்

7
கொண்டே அம்சா ஆலவி காலனியாக இருந்து விடுதலையடைந்திருக்கும் நாடுகளுக்கான தனது கோட்பாட்டை விரிவுபடுத்துகிறார்.
போனபார்ட் அரசைப் பற்றி மார்க்ஸ் குறிப்பிடுவது என்ன? மார்க்ஸ் சொல்கிறார் : “இரண்டாம் போனபார்ட்டின் காலத்தில் மட்டும் தான் அரசு தன்னை முற்றிலும் சுதந்திரமான தாக ஆக்கிக் கொண்டதாகத் தோன்றுகிறது. சிவில் சமூகத்தின்மீது அரசு எந்திரம் தன்னு டைய நிலையை மிகவும் தீவிரமான முறையில் உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டது”. ** எனி னும், அரசு அதிகாரம் என்பது ஆகாயத்தில் தொங்கவிடப்பட்டிருப்பதல்ல. போனபார்ட் ஒரு வர்க்கத்தின் பிரதிநிதி; அதிலும் பிரெஞ்சு சமூகத் தின் மிகப்பெரிய வர்க்கமான சிறு நிலவுடைமை விவசாயிகள் வர்க்கத்தின் பிரதிநிதி” (லூயி போனபார்ட்டின் 18ஆம் புரூமெர், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, தமிழ் பக்-171).
“எனவே நிர்வாக அதிகாரம் சமூகத்தையே தனக்குக் கீழ்ப்படுத்திக் கொள்வதில் இந்தச் சிறு நிலவுடைமை விவசாயிகளின் அரசியல் செல்வாக்கு கடைசியாக வெளிப்படுகிறது’ (டிை நூல் பக்-173). இரண்டாம் போனபார்ட் (நெப்போலியன்) சிறு விவசாயிகளின் வர்க்க இயல்பை நடித்துக் காட்டினான் என்பதையே மார்க்ஸ் இவ்வாறு விளக்கியுள்ளார்.
மார்க்ஸ் மே லும் தெளிவுப்படுத்து கிறார்: * பிரெஞ்சு தேசத்தின் பெருந் திரளான மக்களை மரபுகளின் சுமையிலிருந்து விடுவிப்பதற்கும், அரசாட்சிக்கும் சமூகத்திற்கும் இடையே உள்ள எதிர்ப்டை கலப்பற்ற வடிவத் தில் மாற்றியமைப்பதற்கும் பேரரசு என்ற கேலிக்கூத்து தேவையாக இருந்தது. சிறு அளவு நிலவுடைமை மென்மேலும் அதிகமாகத் தகர்ந்து கொண்டிருக்கும்போது அதன்மீது உருவாக்கப்பட்டிருக்கும் அரசு அமைப்பும் வீழ்ச்சி அடைகிறது. நவீன சமூகத்திற்குத் தேவைப்படுகின்ற அரசு மத்தியத்துவபடுத்துதல் என்பது நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து உரு வாகியிருக்கிற இராணுவ-அதிகார வர்க்க அரசு எந்திரத்தின் அழிவிலேதான் உருவா கிறது (டிை நூல், பக்-182, 183).
இந்த இராணுவ-அதிகார வர்க்க அரசை யார் அடித்து நொறுக்குவது? முதலாளி வர்க் கம் அல்லது தொழிலாளி வர்க்கம்தான் அதைச் செய்ய முடியும். முதலாளி வர்க்கம் என்ன செய்தது? மார்க்ஸ் சொல்கிறார் : "திடீர்ப் புரட்சிக்குப் பிறகு பிரெஞ்சு முதலாளிகள் கூக் குரலிட்டார்கள். இனிமேல் டிசம்பர் 10-ந் தேதிச் சங்கத்தின் தலைவரால் (நெப்போலியனால்) மட்டுமே முதலாளித்துவ சமூகத்தைக் காப்பாற்ற முடியும். திருட்டு மட்டுமே இன்னும் சொத்தைக் காப்பாற்ற முடியும்; பொய் சத்தியம் மட்டுமே மதத்தைக் காப்பாற்றும்; விபச்சாரமே குடும்

Page 12
8
பத்தைக் காப்பாற்றும்; குழப்பமே ஒழுங்கைக் காக்கும்” (டிை நூல் பக்-183). இவ்வாறு முதலாளி வர்க்கம் நெப்போலியன் போனபார்ட் எதிர்ப்பைக் கைவிட்டது. ஆனால், தொழிலாளி வர்க்கம் ஏன் அமைதியாயிருந்தது? மார்க்ஸ் பதிலுரைக்கிறார்: 'பாட்டாளி வர்க்கம் தீவிர மான கலகத்தை ஆரம்பித்திருந்தால் அது உடனே முதலாளித்துவ வர்க்கத்திற்கு புத்துயிர் கொடுத்திருக்கும். அதற்கும் ராணுவத்துக்கும் சமரசம் ஏற்பட்டு ஜூன் மாதத்தில் நடந்ததைப் போல தொழிலாளர்கள் மறுபடியும் தோல்வி யடைவது நிச்சயமாகியிருக்கும்” (டிை நூல் பக்-167).
இந்த நிலையில்தான் சுயேச்சையான சக்தியாக மாறிவிட்ட நிர்வாக அதிகாரம் என்ற முறையில் போனபார்ட் ‘முதலாளித்துவ அமைப்பைக் காப்பதே தன்னுடைய வாழ்க் கைப் பணி என்று கருதுகிறார்” (டிை நூல் பக்-183) என்றால் அது அனுபவரீதியாக நெப்போலியன் கற்றுக் கொண்டதாகும். நெப்போலியன் போனபார்ட்டுக்கு முதலாளி வர்க்கத்தின்மீது தோன்றிய பச்சாதாபத்தால் அதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வர வில்லை. பாட்டாளி வர்க்கத்தின் தலைமை யில் ‘திவாலான சிறுவிவசாயிகள்' எழுச்சி கொண்டு திரண்டு வருவதானது நெப்போலி யனை அந்த முடிவிற்கு வரச் செய்தது.
மார்க்ஸ் கூறுவதைப் பாருங்கள்: 'இனி மேல் விவசாயிகளின் நலன்கள் (முதலாம்) நெப்போலியன் காலத்திலிருந்த மாதிரி முத லாளித்துவ நலன்களோடு மூலதனத்தோடு பொருந்தியிருக்கவில்லை; அவற்றுக்கு எதிர்ப் பாக இருக்கின்றன. எனவே விவசாயிகள் முதலாளித்துவ ஆட்சி அமைப்பை ஒழிப்பதைக் கடமையாகக் கொண்டுள்ள நகர்ப்புறப் பாட் டாளி வர்க்கத்தைத் தங்களுடைய இயற்கை யான தோழனாக, தலைவனாகக் காண்கின் றனர். ஆனால் பலமான, வரையறை இல் லாத அரசாங்கம் என்பது (முதலாம்) நெப்போலியன் கருத்துக்களின் இரண்டாவது அம்சமாகும். இதை இரண்டாவது நெப்போலியன் நிறைவேற்ற வேண்டும். இந்த அர சாங்கம் இத்தகைய “பொருளாயத’ அமைப்பை வன்முறையினால் பாதுகாக்க வேண்டியிருக் கிறது. கலகம் செய்கிற விவசாயிகளுக்கு எதிராக போனபார்ட் வெளியிட்டிருக்கும் பிரகட னங்கள் எல்லாவற்றிலும். இந்த "பொருளாயத அமைப்பு’ என்பது முக்கியமான கோஷமாக இருக்கிறது (டிை நூல் பக்-179).
இவ்விதமாய் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிர்நிலையிலிருக்கும் a C3 ш. д. 60o aғ. ш. т бот நெப்போலியன் நிர்வாகத்துக்கு முதலாளி வர்க்கத்தைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் வருகிறது. பாட்டாளி வர்க்க விரோதியாய்

LT6)b
மதுரையில் நல்ல நூல்கள் உங்களைத் தேடிவர
நாடுங்கள் :
&r 6 g.
473, கூடல் நகர்
மதுரை - 18
நேரெதிர்ப்பு நிலையில் நெப்போலியன் வைக்கப் பட்டுவிட்டதால் அவனுடைய அரசின் சுயேச் சைத்தன்மை அழிந்து போய்விட்டது. இந் நிலையில் ஒரு ‘லும்பன் விவசாயியின் ஆட்சி எப்படிப்பட்ட அவலட்சணமுடையதாக இருக் கும் என்பதையே தனது "லூயி போனபார்ட்டின் 18ஆம் புரூமெர்’ நூல் முழுவதும் மார்க்ஸ் விளக்கி உள்ளார்.
நெப்போலியான் எவ்வளவுதான் தன்னை வர்க்கச் சார்பற்றவராக காட்டிக்கொள்ள முற் பட்டாலும் நடைமுறையில் அவர் அப்படி இருக்க வில்லை. மார்க்சின் இந்த முடிவுக்கு மாறாகப் பார்ப்பது விஞ்ஞானப்பூர்வமான பார்வையாக இருக்காது. உண்மையில், வர்க்கச் சார்பில்லாத அரசிற்கு கற்பனையில்கூட இடமில்லை. ஆகவே, வர்க்க சமரசத்தை சமூக விஞ்ஞான விதிகள் அனுமதிக்க வேண்டும் என்று வெளிப்படையாக வேக் கோரும் ஒரு முயற்சியின் வடிவமாகவே *வர்க்கங்களுக்கு மேலான அரசு’ எனும் அம்சா ஆலவியின் கோட்பாடு உருவாகியிருப்பதைக் காண்கிறோம்.
இது மார்க்சின் பெயரால் மார்க்சியத் தையேக் கொச்சைப்படுத்தும் முயற்சி; அதன் புரட்சிக் கூர்முனையை மழுங்கடிக்கும் முயற்சி. அம்சா ஆலவியின் ‘கற்பனை வகைப்பட்ட, பொய்யான இந்தப் புனைச் சுருட்டு’ சக்திமிக்க சமூக விஞ்ஞானமான மார்க்சியத்தின் முன் தகர்ந்தழிந்து போகும். () காலனியாதிக்கத்திற்குப் பிந்திய சமுதாயங்
களில் அரசு, விலை : ரூ. O
gi basFrr ,Guv6ýî (University of Manchester)
() வெளியீடு : கார்முகில் பதிப்பகம், 129-A, பாலம் ஸ்டேஷன் ரோடு, கோரிப்பாளையம், மதுரை-2.

Page 13
கண்களின் முன்னே விரிந்து பரந்திருந்த வேப்பமரம், வீரய்யாவுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியைத் தந்தது.
பல ஆண்டுகளுக்கு முன் ஐந்து வயதான வீரய்யா சின்னஞ்சிறுவர்களோடு குப்பை மேட் டில் விளையாடிக் கொண்டிருந்தான். அடை யாளம் கூறமுடியாத செடிகளின் நடுவே அந்தக் குப்பை மேட்டில் தக்காளிச் செடிகளும் வளர்ந் திருந்தன. குழந்தைகள் இருக்கிறார்களே. அவர்களுக்கு எந்தச் செடியுமே அடையாளம் தெரிவதில்லை. தக்காளிச் செடி மட்டும் அடை யாளம் தெரிந்துவிடும். ஆளுக்கொன்றாக அவற்றைப் பிடுங்கியெடுத்து வீட்டுக்குக் கொண்டு வந்தபோது, வீரய்யாவின் கவனம் மட்டும் ஒரு வேப்ப்ஞ்செடியில் நிலைத்து நின் றது. பசிய இலைகளுடன் அப்பாவித்தனமாக நின்று கொண்டிருந்த அந்தச் செடியின் விதை யிலைகள் தண்டின் இருபுறமும் "சிறுநீரகங்கள்" போல ஒட்டிக் கொண்டுதானிருந்தது. அவ் வளவு சிறிய செடி. ஒண்டியாய் நின்ற இந்தச் செடிமீது என்ன காரணத்தினாலோ வீரய்யா வுக்கு ஒட்டுதல் ஏற்பட்டுவிட்டது. மெலிய, வளைந்த அதன் ரம்பம் போன்ற இலைகளை வீரய்யா மெதுவாக நீவினான்.
இப்போதெல்லாம் அவனுக்கு விளையாடு மிடம் குப்பைமேடுதான். விளையாட்டுத் *தோழன்’ வேப்பஞ்செடிதான். தனது தோழ னுடன் ஆசைதீர விளையாடி விட்டுத்தான் மாலையில் வீரய்யா வீடு திரும்புவான். பல வேளைகளில் தேங்காய் சிரட்டைகளில் தண்ணீர் எடுத்துச் சென்று தனது இதயங் கவர்ந்த தோழனுக்கு ஊற்றுவான்.
ஒருநாள் குப்பை வண்டிகள் வரிசையாக வந்து குப்பைமேட்டில் நின்றன. தகவல் தெரிந்த வீரய்யா தலைதெறிக்க வீட்டிலிருந்து ஓடிவந்தான். நல்லவேளை. இவன் வருவதற் குள் குப்பையினை அள்ள ஆரம்பிக்கவில்லை. அந்த வேப்பஞ்செடியை "ஆணிவேர்’ அறுந்து போகாமல் மெதுவாகத் தோண்டியெடுத்து,

ழன்
ந்திரகுமார்
வேரை வானத்துக்குக் காட்டாமல் அடிமண்ணு
டன் எடுத்து வந்தான்.
**செடியின் வேரை வானம் வார்த்துவிட்
டால் செடி வளராதாமே?”
செடியை எங்கே நட்டு வைப்பது?
வீரய்யாவின் வீடுதான் ஊரில் கடைசிவீடு. வீட்டிற்கு எதிரே ஒரு குளம். வீட்டின் முன் செல்லும் ரோட்டுக்கும், குளத்துக்கும் இடைப் பட்ட நிலத்தில் வளர்ந்திருந்த முள்செடிகளின் நடுவே தனது பிஞ்சுக்கைகளால் வேப்பஞ் செடியை நட்டு வைத்தான்.
தோழனைப் பார்க்க இனி குப்பைமேடு செல்லவேண்டாம்.
வீரய்யாவும் வளர்ந்தான். வேப்பஞ்செடி யும் வளர்ந்தது.
ஏழாண்டு காலத்தில் வேப்பஞ்செடி வேப்ப மரமானது. பசிய கிளைகளுடன் பெருமைசாற்றி நின்றது. இளந்தென்றல் வீசியபோதெல்லாம் சதிராடிச் சப்தமிட்டது. வேப்பமரத்தை விட்டு வீரய்யா இன்னமும் அகன்றபாடில்லை. தோழ னுக்கு உரமிடுவான். நீர் வார்ப்பான். வேப்ப மரமும் அவ்வழியில் போவோர் வருவோர்க் கெல்லாம் இயற்கையளித்த குடையாய் கரிய நிழல் பரப்பி நின்றது.
இலையுதிர் காலத்தில் வேப்பமரம் இலை களை உதிர்த்து நின்றபோதெல்லாம் வீரய்யா வின் மனம் இளைத்துப்போகும். வாடிய வேம்பைக் கண்டு வாடுவான். இலைகள் துளிர் விடத் துவங்கும்போது கு தூ க லிப் பா ன். ஆனந்தம் இவனுள் துளிர்விடும். மழைநீர் வேப்பமரத்தைக் கழுவிவிட்ட மறுநாள் இள வெயிலில் பளபளப்புடன் பகட்டாக நிற்கும் தோழனைக் கண்டு மயக்கத்தில் மறுகி நிற் பான். சித்திரை, வைகாசி மாதங்களில் வேப்பமரம் பூக்களாகப் பூத்துச் சொரியும்போது பூரித்துப் போவான். அருகிலிருந்தும், எட்டிச் சென்றும் பலப்பல கோணங்களில் பார்த்துப்

Page 14
10
பார்த்து மகிழ்ந்து மனம் விம்மலின் மிகுதியால் விழாக்கோலம் காணும். வறண்ட நேரத்தி லெல்லாம் உடலை வருத்தி எங்கிருந்தோ தண்ணிர் கொண்டுவந்து தோழனுக்கு வார்ப் LU Yr 6ör. தன் குளியலைக்கூட மரத்துக்குக் கீழேயே வைத்துக் கொள்வான். பல் தேய்ப் பதற்கு என்று எவராவது வேப்பமரத்தில் குச்சியை ஒடித்துவிட்டால் போதும். நொறுங்கி விடுவான். விரல்களைப் பறிகொடுத்த வேத னையில் சிக்கித் தவிப்பான். அதுவும் தன் னைப் பயன்படுத்துபவரின் வாயில் தன் மனக் கசப்பைக் காட்டிக் கொள்ளும்.
மழைக்காலமும், வெயில் காலமும் மாறி மாறி வந்தது. வழக்கமாக பிசின் மட்டும் வடியும் மரத்தில் ஒருநாள் வெண்மையாகப் பால் போன்ற திரவம் வடியத் துவங்கியது. கைக்கெட்டும் உயரத்தில், கிளைகள் பிரியும் இடத்திலுள்ள கணுவிலிருந்து சொட்டுச் சொட் டாக வழிந்து அடிமரத்தைத் தொட்டது. பிடித்தது வினை.
இந்த விபரம் அண்டை வீட்டுக்குத் தெரிந் தது. அடுத்த தெருவுக்குத் தெரிந்தது. ஊர் முழுதும் தெரிந்தது. ஊர் மக்கள் மொய்த்தனர்.
மரம் ‘சாமி மரமானது". பக்தர்கள் குவிந் தனர். வேப்பமரத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர். மரத்தடியில் கிடந்த மண்ணையெடுத்து நெற்றியில் இட்டுக் கொண்
-60,
வீரய்யாவை எவரும் கண்டு கொள்ள வில்லை. ஆசையான தோழனிடமிருந்து விலகி அன்னியனானான். ஊர்த் தலைவரும், ஊரி லுள்ள பெரிய மனிதர்களும் வந்தனர். மக்கள் கூட்டம் அலை மோதியது. பின்னர் வந்த சில நாட்களில் வேலைகள் வேகமாக நடந்தன. உண்டியல் வசூல் அமர்க்களப்பட்டது.
மரத்தைச் சுற்றி திண்டு கட்டப்பட்டது. மரத்தை எவரும் நெருங்காதபடி, தொட்டுப் பார்க்காதபடி இரும்புக் கம்பியினால் வேலி கட்டப்பட்டது. விநாயகர் சிலையொன்றும் அங்கே கொண்டு வந்து வைக்கப்பட்டது. "வேப்பமரத்து விநாயகர்’ என்று அவர் "நாம கரணம்’ சூட்டப்பட்டார். சில நாட்களில் நிரம்பி வழிந்த உண்டியல், கட்டிடம் ஒன்றுக்கு வழிகோலியது. விநாயகரையும், வேப்பமரத் தையும் கட்டிடம் தன்னுள் அடக்கியது. விநாயகருக்குக் கூரை, வேப்பமரத்துக்குத் திறந்தவெளி. மரத்தில் பால் வடிவது மட்டும் என்றைக்கோ நின்றுவிட்டது.
பின்புறம் வேப்பமரம். முன்புறம் விநாயகர். நாள் தவறாமல் மக்கள். நேரந்தவறாமல்

பாலம்
பூஜை. கோவிலில் பலர் பெயரில் ‘உபய விளக்குகள். கோவிலுக்குப் பக்கத்தில் தேங்காய், பழம், மாலை விற்கும் கடைகள்,
இப்போது அது ஒரு பஸ் ஸ்டாப். பெயர் வேப்பமரத்து விநாயகர் கோவில்.
தலபுராணம் இன்னும் எழுதப்படவில்லை. அதற்கு எத்தனை நாளாகிவிடும்?
வீரய்யா..?
தோழனைப் பிரிந்த துயரத்தால் ஏங்கிப் போனான். விநாயகருக்குப் போடப்பட்ட மாலைகள் மறுநாள் கழற்றி வேப்பமரத்தின் மீது எறியப்பட்டது. மரத்திலிருந்து குடல் தொங்குவதுபோல காய்ந்துபோன மாலைகள் தொங்கின.
வேப்பமரத்தில் பால்"வடிந்த நாளிலிருந்து வீரய்யா தனது தோழனின் அருகே போகவே இல்லை. யாரும் போகவிட்டால்தானே? 'சாமி மரமாம்.
சாம்பிராணிப் புகையும், ஊதுவத்தி வாச மும் எழும்போதெல்லாம் வீரய்யாவுக்கு ஆத்தி ரம் பீறிடும். கோயிலில் முன்னே கட்டப்பட்ட வெண்கல மணி ஒலிக்கும் போதெல்லாம் இவனது நெற்றி விண்விண்ணென்று தெறிக் கும். கோயிலுக்கு வருகைதரும் சம்பந்தமே யில்லாத மனிதர்கள் மீதெல்லாம் விரோதம் பாவித்தான். அனைத்துக்கும் மேலாக விநாயக ரைப் பார்க்கும் போதெல்லாம் அருவருப் படைந்தான். தனது "தோழன்’ பச்சைப் பசுமையாய்.இந்த விநாயகரோ வாயும் வயிறுமாய்.
வேப்பமரம் முளைத்த குப்பைமேட்டை இப்போதும் காண்பான். ஆற்றாமை பெருக் கெடுக்கும். . இன்றும் குப்பைமேடு அதே இடத் தில், அன்றுபோலவே இன்றும் அடையாளம் காணமுடியா அளவில் சிறுசிறு செடிகள். அவை யெல்லாம் "தோழனுக்கு இணை ஆகுமா?
வேப்பமரம் கூடைகூடையாய்ப் பூக்களைச் சுமந்தபடி நின்றது. கூட்டமெல்லாம் குறைந்து போன ஒருநாள் கனத்த மனதுடன் வீரய்யா தோழனுக்கருகே சென்றான். அடிமரமெல்லாம் காய்ந்துபோன குங்குமமும், சந்தனமும் நிறைந் திருந்தது. தனது பால்யகாலத் "தோழனை' ஏக்கத்துடன் பார்த்தான். முகம் சிவப்பானது.
வலுவாக வீசத் துவங்கிய காற்று இவன் மீது "பொலபொலவென வேப்பம் பூக்களை
உதிர்த்தது. வீரய்யா அழுதுவிட்டான்.

Page 15
ஞானபீட ஒரு லட்சம் ரூபாயும் குறிப்பிட்ட ஒரு மொழி படைப்புக்குக் கிடையாது என்பது தெரியுமா? இந்திய இலக்கியத்தில் மிகப் பெரும் கெளரவமும் பரிசு மாகிய பாரதீய ஞானபீடப் பரிசு, இந்த ஆண்டிலிருந்து குறிப்பிட்ட மொழியின் ஒரு ஆசிரியருக்கு-அவரது இலக் கியப் படைப்புக்கள் எல்லா வற்றிற்குமாய் மாற்றப்பட் டிருக்கிறது. இவ்வாண்டு இப் பரிசைப் பெறுகிறவர் மலை யாள இலக்கிய ஆசிரியர் தகழி சிவசங்கரம் பிள்ளையாவார்.
முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களையும், ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், இருபதுக்கும் மேற்பட்ட தொகுப்புகளையும், இரண்டு மூன்று சுயசரிதைகளையும் எழுதி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, இரண்டு தலைமுறை எழுத்தாளர்களையும் கலைஞர் களையும் த ர ன் டி தனது
74ஆம் வயதிலும் எழுதிக் கொண் டிருக்கும் மூத்த கலைஞர் தகழி ஆவார்.
1912 ஆம் ஆண்டு தகழி என்னும் கிராமத்தில், கதகளி நடனக் கலைஞர் குரூப்புக்கு மகனாகப் பிறந்தார். பார்வதி யம்ம இவரது தாயார். இவரது சகோதரிகளும் கதகளி நடனக் கலைஞர்களே. ஏழ்மை யும் வறுமையும் இருந்தாலும் கடுமையாய் உழைத்த கலைஞர் களிடையே வளர்ந்தவர் தகழி. பள்ளிப்படிப்பு தகழி கிராமத் திலும், ஆங்கில உயர் கல்வி ஆலப்புழை நகரத்தருகே கடப்புறம் உயர்நிலைப்பள்ளி யிலும் பெற்றுமெட்ரிக்குலேசன் தேறி, திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து வக்கீலுக் குப் படித்து தேறினார் தகழி சிவசங்கரம் பிள்ளை.
சிறுவயதிலேயே கதை கேட்கும் ஆர்வமும், சொல்லும் திறமும் இருந்ததை தாமே உணர்ந்தார் தகழி. தன்னுடன் படித்த சிநேகிதி ஒருத்தியைப் பற்றி தனது ஆசைகளை எல் லாம் உருவமாக்கிக் கதை
யாய்த் தீட் டி அவளிடமே
இனி மலை
ஞானபீ
860L
ப்ரக
தகழி சிவசங்
ஞானபீட
岛60H

யாளத்திற்கு
- Uför
LLINSj)
ாஷ்
卫
கரம்பிள்ளை:
பரிசு பெற்ற
லஞர்
* கொடுத்தார்.பிள்ளைப் பிராயத்
திலேயே இந்தக் கதை மறுக்கப் பட்டிருந்தால், இன்று தகழி சிவசங்கரம்பிள்ளை எ ன் ற இந்திய இலக்கியப் படைப் பாளி உருவாகியிருக்க முடி யாது. சிநேகிதி கோபம் கொண்டு கதையை நிஜம் எனக் கருதி, காதல் கடிதமாய் நம்பி எரிச்சலுற்று பாய்ந்து விட இடமுண்டு எனக் கருதி, பயந்து கொண் டி ரு ந் த தகழிக்கு, அவளது பாராட்டு அமிர்தமாய் வந்து சேர்ந்தது. ** மிக நல்ல கதை, பாராட்டுக் கள்’’ என்று பெண்மை தவழும்
சின்னஞ்சிறு சிவப்பு எழுத்துக்
களில், கதைப் பிரதியிலேயே தனது கருத்தை"எழுதி, தைரிய மும் ரசனையும் நி ைறந்த தனது குணத்தை வெளிப் படுத்திய அந்தக் காலத்துச் சிநேகிதியை, தகழி இன்றும் பாராட்டுகிறார்.
1950 - களில் த கழி யி ன் சிறந்த நாவல் 6 செம்மீன்" இந்திய இலக்கியத்திலேயே வித்தியாசமான சம்பவமாய் வெளிவருகிறது. இரண்டே ஆண்டுகளில் பல பதிப்புகள் வெளிவந்து பா ரா ட் ட ப் படுகிறது. சாஹித்திய அகாட மியின் மதிப்பையும் பரிசையும், கேரள சாஹித்திய அகாடமி பரிசையும் பெறுகிறார் தகழி. தொடர்ந்து த கழி யி ன் “இரண்டு படி” நாவலும், அகில இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. இந்திய நாவல்களில் தமது * கிழக்கும் மேற்கும்’ என்ற திட்டத்தின் கீழ் ஐரோப்பிய மொழிகளில் எல்லாம் வெளி யிடத் தேர்ந்து கொண்ட நாவலாய் °செ ம் மீ  ைன யுனெஸ்கோ நிறுவனம் தேர்ந்து கொண்டு தகழிக்குப்
பரிசளிக்கிறது.
குட்டநாட்டு மலையாள விவசாயத் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டத்தைச் சித் தரித்து, இரண்டு படி’ நாவல் உலகப் புகழ் பெறுகிறது. இதனைத் தொடர்ந்து தகழி கெளரவிக்கப்படுகிறார். தகழி
யின் படைப்புலகம் விரிவடை
கிறது. கேரளத்தின் கிராமக்

Page 16
2
கரையில் வாழ்வதையே தமது லட்சியமாய் கூறும் தகழியின் படைப்பின் விரிவு ஆச்சரியம் தரும் உண்மையாகும். கேரள கிறிஸ்தவர்களின் வாழ் க் கையைத் தத்ரூபமாகச் சித்
தரிக்கும் ‘ஒளசேப்பின்'மக்கள்';
கேரளத்தின் தொழிலாளர் கொலையையும், புரட்சியையும் புன்னப்புரா வயலார் என்ற இடத்தில் நேர்ந்த போராட் டத்தையும் சித் த ரி க்கு ம் *மண்டை ஒடு"; மீனவர் வாழ் வைச் சித்தரித்த ‘செம்மீன்’ நெல்வயலில் போராடிய பசித்த தொழிலாளரின் போரினைப் பாடிய ‘இரண்டு படி'; தெரு விலே பொறுக்கித் திரிந்த பொறுக்கிகளையும், பிச்சைக் காரர்களையும் அவர்களது இருண்ட வாழ்வையும் சித் தரிக்கும் "பொறுக்கிவர்க்கம் திருவனந்தபுரத்து ந க ரி ன் வாழ்வைப் படம் பிடித்த ‘ஏணிப்படிகள்’; நகர் சுத்தித் தொழிலாளர் உரிமைகளைப் பிரதிபலிக்கும் *தோட்டியின் மகன்'; நவீன காலத்தின் ஹிப் பி மனோபாவங்களை, உருவில் அடங்காத இன்றைய பிரச் சி  ைன க  ைள ப் பிரதி பலிக்கும் "ஆகாசம்’-என விசித் திரமான உலகின் கேரளத்தின் நிஜங்களை யதார்த்தமாக சித் தரித்து, இந்திய இலக்கியத் தின் பாதைகளை அகலமும் ஆழமும் தெளிவும் நுண்மையும் சிறப்பும் பெற ச் செய்தவர் தகழி. கடைசியாய் 78 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட புதிய படைப்பாகிய கயறு" பிரமாண்டமான பின்புலனில் சித்தரிக்கப்பட்ட அருமையான நாவலாகும்.
தகழி ஒரு எழுத்தாளர் மட்டு
மல்ல, அவர் ஒரு வழக் கறிஞரும் கூட, ஆலப்புழை முன்சீப் கோர்ட்டில் 1936 ஆம் வருடம் முதல் 1957 வரை
இருபத்திரண்டு வருடங்களாய் வக்கீல் வேலை செய்தார். அப்போது ஆலப்புழை தாசில் தார் கோர்ட்டிலும், தனது முன்சீப் கோர்ட்டிலும் பல ஆண்டுகளாய் இருந்துவந்த
ع
கோர்ட் தஸ்
தகழியின் கண்
நில உரிமை
யதை பத் தி நூற்றுக்கணக்க களின் வழக்
.வற்றை தக!
செய்தார். மனிதன் ஆராக் காதல் பில் ஆழ்த்தியது பல நூற்றாண் வழிச் சமுதாய மருமக்கள் வ அமைந்த கேர6 தாயம் என்பது தாயச் சிக்கல ஒழிக்க கேரள போராடினார்க வாழ்க்கை ( ஏராளமான நீ களை தகழி நூறு ஆண்டுகள் ஏற்பட்ட எல்ல. சியல் மத ம உட்கொண்ட ச மு தா ய த் அம்சங்களையு பாக ‘கயறு’ படைத்துவிட்ட 500 கதா ப கொண்ட ப  ைக ப் புல 6 நாவலுக்காக தகழி உழைத் கிறார். அச் ஒன்றுக்கு எட் அளவில் ஆயி பக்கங்களில் ந திருக்கிறது.
*கயறு நாள் யின் மாஸ்டர் கள் விமர்சகர்க கயிறு நாவலுக் 73-வது வ ய *பலூன்கள்’ என நாவலை வெ கேரள இ ல அதிர்ஷ்டம் ெ தலைமுறைகை எல்லா அம்சங் த ரி க்கு ம் நாவலை எழு இன்றும் புதிய
எ(ழக்கக்
(

Pr6O Lb
தர்வேஜூகளும் "களில் பட்டன. என்னும் பாத் ர ங் கள், பல 5ான குடும்பங் குகள் ஆகிய N பரிசீலலைன நிலத்தின் மீது கொண்டிருக்கும் அவரை வியப் து. மலையாளம் ாடுகளாக தாய் மாய்த் துவங்கி N மான்மியமாய் ாத்து மருமக்கள் பயங்கர சமு ாகும், அதனை த்தில் மக் க ள் 6. அந்த pறை பற்றிய திமன்ற வழக்கு படித்தார். முந் ரில் கேரளத்தில் ா சமுதாய அர ாறுதல்களையும் ஒரு பெ ரும் தி ன் எல்லா ம் ஏற்ற படைப் நாவலை தகழி ார். ஏறத்தாழ ா த்திரங்களைக் பிரமாண்டமான விரி ல், இந்த 22 வருடங்கள் து எழுதியிருக் - சி ல் டெம்மி டு ஆக்டெபோ ரத்து நாற்பது நாவல அமைந்
பல்தான் தகழி பீஸ் என்கிறார் ள். தகழியோ குப் பின் தமது தி லும் கூட ன்ற தமது புதிய |ளியிட்டுள்ளார். க் கி ய உலகம் சய்தது. மூன்று 6 அதன களுடனும் சித் அருமையான திய பின்னும் தலைமுறை
லைஞர்களுடன்
போட்டியிட்டு எழுதி வரும் முதுபெரும் எழுத்துக் கலைஞர் தகழி சிவசங்கரன் பிள்ளை இன்றும் புதிய எழுத்தைத் தர வாழ்ந்து வருவது பெருமையே அல்லவா ! இந்திய மொழி களில் வேறு எந்த மொழிக்கும் இந்த அதிர்ஷ்டம் இல்லை என்றே சொல்ல வேண்டும். 1920-களில் எழுத ஆரம்பித்து இன்று வரை எழுதி மக்களா லும் படிக்கப்பட்டு வ ரு ம் எழுத்துக் கலைஞர்கள் எந்த மொழியிலும் அரிதாகவே காணப்படுகிறார்கள்.
‘இனி எழுதாமல் முடியாது" எழுதியே தீர வேண்டும் என்று தோன்றுகிற வரை பேனாவை தொடவே மாட்டேன்” என் கிறார் தகழி. இதையே தனது வாழ்நாளில் எழுத அவர் எழுத்துக்கு  ைக கொ ன் டிருக்கும் ஒரே தாரக மந்திரம், **வாழ்க்கை எனக்கு பிரச்சனை யில்லை, மனிதனே” என்கிறார். தமது கயறு நாவலை முப்பது வருடங்களுக்கு முன்பே எழுத திட்டமிட்டார் தகழி. இன்று பாரதீய ஞானபீடப் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்ட நாவல் கயறு ஆகும். இது திட்டமிடப் பட்ட வெற்றியே ஆகும். பல முறை மறுபடி மறு படி, திரும்பத் திரும்ப எழுதப்பட்டு திருத்தி அமைக்கப்பட்ட வடி
வமைப்பு தகழியின் தனித் தன்மை. இந்த நாவலை எழுதித் தீர்க்க அவர் 20
வருடங்கள் எடுத்துக் கொண் டார். பல எதிர்ப்புகளும் கேலி
களும் தொடர்ந்தன. கயறு நாவலை எழுதுவதற்கு தனக்கு தைரியம் போதாது என்று எண்ணினார் த க பூழி. . இத் தனைப் பெரிய நாவலை எழுத மனஉரம் போதாது என்று எண்ணிய தகழி அதனை
முடிக்க பயிற்சி தேவை என்றும் எண்ணினார். எனவே கயறு எழுதிக் கொண்டிருந்த காலத் திலேயே பயிற்சிக்காக வேறு சில நாவல்களை சிறிது ம் பெரிதுமாய் தனக்குத்தானே ஆத்ம தைரியமும் இலக்கியவள (மும் இன்னும் ஆழமாய் முயற்

Page 17
பாலம்
சிக்க தெளிவும் நுண்மையும் எழுத்திலே கற்றார். முயற்சியின் வி ரத்  ைத ப் பலரிடம் வெளிப்படையாகவும் பேசினார். அது பலருக்கும் குறிப்பாக விமர்சகர்களுக்குக் கேலியாக இருந்தது. கயறு எழுதிக் கொண்டிருந்த காலத் தில்தான் "ஒளசேப்பின் மக்கள்" என்ற ஒரு, இரு தலைமுறை கிறிஸ்தவ கேரளத்து வாழ்வை
எழுதிப் பார்த்தார். சிறு சிறு நாவல்களாய் சில படைப்பு களையும் iPO) is மறுபடி செய்து பார்த்தார். இப்படி
பலவாறாலும் ‘கயறு முறுக்கப் பட்டு மணிக் கயிறாகியது. ‘ஐந்து பெண்கள்' 'ஒளசேப் -பின் மக்கள்’ ‘வாழ்க்கை அழகு தான் ஆனால் 'தர்மநீதியா அல்ல வாழ்க்கை” போன்ற பயிற்சி நாவல்களை எழுதிய போது விமர்சக ர் க ள |ா ல்
*தோல்வி' என்று தீர்மானிக்கப் பட்டார். தகழி விமர்சகர் களால் மீண்டும் . மீண்டும் தாக்கப்பட்டார். செம்மீன்
என்ற நாவலை தகழி எழுத வில்லை என்ற பொருளில் கூட தனி விமர்சனமே எழுதப் பட்டது. கயறு என்ற நாவல் பிரம்மாண்டமான அ ள வில் 1978-ல் வெளிவந்த போது எல்லா கூச்சல்களும் ஒழிந்தன. தற்போது அகில இந்திய ரீதி யில் கயறு பிரசித்தம் அடைந்து விட்டிருக்கிறது. விமர்சகர் கள் சொ ன் ன தெல் லாம்
பொய்த்து விட்டது. கயறு
என்ற நாவல் சரித்திரம்
படைத்து வருகிறது.
இந்த நாவலுக்கு கதா
நாயகன் இல்லை, நாயகியும் கி  ைட யாது. சமுதாயமே
இந்த
இதில் நாயக அதன் நாய தகழி. முந்நூறு நிகழ்ந்த நிகழ் செலுத்திய
D666F முறை é. தொடர்ந்து வரு யாய்ச் சித்தரி கேரளம் விசித்த நாட்டுக் க:ை மதம் ஆகியை காது ஏற்ற வின் யதைப் போ6 புராதனப் இந்தியக் கை மான சமஸ்கிரு கேரளத்தின் இருந்து வருகில் அரசியல் மாறு தனை சாட்சி பாடுகளையும் காணமுடியும். களின் அத்தனை புது எழுச்சிகை தில் முழுவேகத் யலாம். இந்தச் அந்த அம்சங்க யும் பிரதிபலித் பெரும் இலக்
கயறு நாவலி
மூர்த்திகரம். இந்த நாவ6
78-ஆம் ஆண்
தில் முதல் பதி விற்றுத் தீர்ந்த மூன்றாம்பதிப்ட பருவத்தில் இ
தகழி பிள்ளைக்கு, மக்கள், ஒரு டாக்டராய்த் ெ வருகிறார். குழந்தைகளுட
மரணம் விடிந்தது எனிலும்.
பைத்தியவெறி கொள்ளும் வரலாறு, ஆட்டைக் கொல்வது போல் நம்மைக் கொல்லும். கவலை இல்லை ! கோபத்தில் குமுறுகிறது கடல் : கொல்லப்படும் நாம்
கரைக்கு
பாலஸ்தீனக்
பாலமாய் நீள் சினத்தில் சிவந்
265 560 6 உயிரினும் உய இறந்த நம் வீர 6T(Lρ,
பழிதீர்க்கும் ெ விலகியோட மு
கவிஞர் - டாவிச்

直3
öT , கிராமமே என்கிறார் வருடங்களில் ச்சிகளில் அரசு மனித னின் மட்டும் தலை தலைமுறையாய் நவதை அருமை க்கிறார் தகழி. திர பூமி. வெளி ல, தத்துவம், வகளை தயங் )ளநிலம். புதி பழையதும் பண்பாடுகளும், லகளின் ஆழ த சம்ஸ்காரமும் தனித்துவமாய் *றன. இந்திய தல்களின் அத் sளையும் வழி கேரளத்தில் இந்திய மதங் ன வடிவங்களின் ளயும் கேரளத் துடன் கண்டறி
• சமுதாயத்தின் ள் அனைத்தை த்துக் காட்டும் கிய முயற்சியே ன் படைப்பின் நூறு ரூபாய் மின் வி  ைல. டு ஒரே மாதத் ப்ெபு முழுவதும் து. இப்போது விற்றுத் தீரும் ருக்கிறது. சி வ ச ங் க ர ம் நான்கு பெண்
LD&soil. மகன் தொழில் செய்து நிறைய பேரக்
ன் தமது சங்கர
நாவலான
மங்கலம் வீட்டில் அமைதியாய் தன் தகழி கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். தகழிக்கு டெல்லி அரசு பத்மபூஷன் விருது கொடுத்து கெளரவித்தது. கேரள சாஹித்திய அகாடமி இவரது "இரண்டு படி' நாவ லுக்கு பரிசளித்தது. இந்திய சாகிந்திய அகாடமி தகழியின் “செம்மீன்' நாவலுக்கு ஆறா யிரம் ரூபாய் பரிசளித்து இந்திய மொழிகளில் வெளியிட்டது. கேரளத்தின் புரட்சி அவார் டான வயலார் பரிசை கயறு நாவல் ஏற்கனவே பெற்று தற்போது பாரதீய ஞானபீடப் பரிசுக்கு தகழியைத் தயாராக் கியிருக்கிறது. செம்மீன், கலை ஞர் ராமுகாரியத் மூலம் திரைப்
படம் ஆகி இந்திய திரைப்பட
விழாவில் தங்கப்பதக்கம் பெற் றுள்ளது. கேனஸ் விழாவுக்கும் ஆஸ்கார் விழாவுக்கும் செம் மீன் அனுப்பப்பட்டது.
தமிழில் தகழி புதியவரல்ல. 1960 களிலேயே தகழியின் செம்மீன் நாவல் தமிழின் சிறந்த எழுத்தாளரான சுந்தர ராமசாமியால் நாஞ்சில் கடற் கரை ஓர, செம்படவத் தமிழ் மொழியால் மொழி பெயர்க்கப் பட்டு, இரண்டு பதிப்புகளுக்கு மேல் வெளியாகியிருக்கிறது. தகழியின் மற்றொரு சிறந்த "இரண்டுபடி" கேரளத் தமிழிலேயே கே. கே. சிவசங்கரம் பிள்ளை என்பவர் மொழி பெயர்த்து சாஹித்திய அகாடமி வெளியிட்டுள்ளது. ஏணிப்படிகள் நாவலை நேஷ னல் புக் டிரஸ்ட் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது. கயறு நாவலையும் விரைவில் வெளியிடயிருக்கிறார்கள். ()
கிறோம். த தாய்நிலமே! ம் நேசம்
ரியது. னைப் புதைத்து
வறிகொண்டு யலும்
நாளை
விடாதே.
இன்றும் மரணமே விடிந்தது எனிலும், எவரையும் இழக்கவில்லை. நாம் V,
புதியதாய் பிறந்திருக்கிறோம். 口
5 ஜயாத் 0 ஆங்கிலம் வழி தமிழில் : சமந்தா

Page 18
துளிர்
Curtain Club
தளிர் -- கூத்துப் பட்டறை பரிக்ஷா நிஜ நாடக இயக்கம்
நவீனம் என்பது தமிழில் மிகவும் சர்ச் சைக்குரிய விஷயம்தான். கலை விஷயத்தில் நவீனம் என்பது வடிவத்தில் இருக்கிறதா உள்ளடக்கத்தில் இருக்கிறதா என தொடர்ந்து கொண்டே இருக்கும் விவாதம்தான்.
பாரதியார் கூட மக்கள் ஏற்கனவே பாடிக் கொண்டிருந்த நாட்டுப்புற இ ைச வடிவத்தை கையில் எடுத்துக்கொண்டு நவீன மிக்க அரசியல் எழுச்சியை கலைப் படுத் தினார்.
ஆனால் நாடக இயக்கத்தில் மட்டும் அயல்நாட்டு நாடக வடிவத்தழுவலே தமிழில் மேலோங்கி இருந்தது, இருக்கிறது.
தமிழர்களின் தியேட்டர் என்று சொல்லப் பட வேண்டுமானால் அது தெருக்கூத்துச் சார்ந்த மக்கள் கலைகளுக்கே பொருந்தும்.
தமிழர்களின் தெருக்கூத்தில் பாரதியார் போல நவீனக் கருத்தை வைத்து க  ைலப் படுத்தும் முயற்சி நடைபெற்றுளதா என்பது கேள்விக்குரிய விஷயம்தான்.
பார்சி நாடக வடிவமேடை கலை ஒப்பனை முறைகளை நிராகரிக்கும் நவீன நாடக முயற் சித் தமிழில் 76க்குப் பின் தொடங்குகிறது.
காந்தி கிராமத்தில் 1977 ஜூன் 20 மூதல் 26 வரை ஏழு நாட்கள் நடந்த நா ட க ப் பயிற்சிப் பட்டறையின் விளைவாக தமிழகத்தில் பல இடங்களில் நவீன நாடக இயக்கம் துளிர்விடத் தொடங்கியது.
மதுரையில் மு. ராமசாமி அவர் கள T ல் நிஜ நாடக இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு *விழிகள்’ எனும் இதழைக் கூட கொண்டு வநதனா .
தற்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நாடகத்துறை இணைப் பேராசிரிய ராகப் பணிபுரிந்து வருகிறார் நிஜ நாடக இயக்க மு. இராமசுவாமி. w கடந்த நான்கு ஆண்டுகளாக தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற நாடகக் குழுக்

மதுரையில்
ஒரு நாடகக்கலைவிழா
மெய். இரெ. பொற்கொடி
களின் நாடகங்களை ஒரு சேர மேடையேற்று கிற நவீன நாடகக்கலை விழாவாக நிஜநாடக இயக்கத்தின் முன் முயற்சியால் சிறப்பாக மதுரையில் நடைபெற்றது.
தமிழ் நாடக வரலாற்றில் நவீன நாடகக் குழுக்களை ஒரு சேர அழைத்து விழாவாக நடத்துவது இது முதல் முயற்சியாகும். இம் முயற்சியை நிஜ நாடக இயக் கத் தி ன் பத்தாண்டு காலச் செயல்பாட்டின் ஒரு மைல் கல்லாகக் கருதலாம்.
இவ் விழாவில்தளிர் அரங்கு, கா ந் தி áTTLDib, CURTAIN CLUB LD560)T, g5/5/flit தஞ்சாவூர், கூத்துப்பட்டறை சென்  ைன, பரிக்ஷா சென்னை, நிஜ நாடக இயக்கம் மதுரை ஆகிய குழுக்கள் பங்கேற்றன.
துளிர் நாடகக் குழு வெறியாட்டம் என்ற நாடகத்தையும், சென்னை கூத்துப்பட்டறை முற்றுகை, சுவரொட்டி என்ற இரு நாடகங் களையும் பரிக்ஷா நாடகக்குழு 'தேடுங்கள்’ என்ற நாடகத்தையும், மதுரை நிஜ நாடக இயக்கம் சாபம் 1 விமோசனம் ?’ ‘துர்க்கிர அவலம், என்ற நாடகங்களையும் சிறப்பாக நடத்தின. இந்நாடக விழாவை கலைமாமணி எம். கே. துரைராஜ் தொடங்கி வைத்தார். பேராசிரியர் ஜி. சங்கரபிள்ளை, மற்றும் நாடக ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
வெறியாட்டம் : கிரேக்க நாடக ஆசிரிய ரான யூரிபிடீஸ் எழுதிய “டிராய் நாட்டுப் பெண்கள்’ என்னும் நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டது. இதன் நெறி யாளு நர் சே. இராமரனுஜம் அவர்கள்.
முற்றுகை : மகேந்திரவர்ம பல்லவனின் நாடகத்தின் தமிழாக்கம் ந. முத்துசுவாமி. நெறியாளுநர் வ. ஆறுமுகம்.
சாபம் 1 விமோசனம் ? : உன்னத நிலை யில் இருந்து சந்தர்ப்பவசத்தால் மிகக் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டாலும், முதலில் அதை ஏற்க மறுக்கிறமனசு பின் அதற்கு ஏற்பத் தன்னைத் தயார்ப் படுத்திக்கொண்டு அந்தப்

Page 19
பாலம்
போக்கையே நியாயப்படுத்துகிற நிலையையும், அதை வெல்ல நினைக்கிற சக்தி க ளி ன் போராட்ட நியாயத்தையும் காட்டுகிறது இந் நாடகம். பாரதியின் கவிதைக் க ரு த்  ைத அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந் நாடகத்தை வடிவமைத்தவர்கள், மு. இராம சுவாமி மற்றும் அவரது து  ைண வி யா ர் செண்பகம் இராமசுவாமி ஆகியோர். நெறி யாளுநர் மு. இராமசுவாமி.
துர்க்கிர அவலம் : சோபாக்ளிசின் ஆன்டி கனியைத் தழுவிய தமிழ் நாடகம். தமிழாக்கம் செண்பகம் ராமசுவாமி, மு. இராம சுவாமி, வடிவமைப்பு. நெறியாள்கை : மு. இராம சுவாமி. 1984ல் மைய சங்கீத நாடக அகாடமி நடத்திய தேசிய நாடக விழாவில் கலந்து கொண்டது இந் நாடகம்.
நாடகத்தில் கட்டியங்காரனின் வருகை குழுப்பாடல்கள், நடன அசைவுகள் இவை அனைத்தும் தெருக்கூத்து அமைப்பை நினை வூட்டின. பழைய தெருக்கூத்து வ டி வில் நாடகம் அமைந்திருந்தாலும் ஒலி, ஒளி, மேடை அமைப்பு, காட்சியமைப்பு போன்றவற் றில் புது உத்திகளைக் காண மு டி ந் த து. நடிப்பும் உடை, ஒப்பனையும் சிறப் பா க அமைந்திருந்தது. மு. இராமசுவாமி, காந்தி மேரி, பிரசாத், இரவி, முத்தையா ஆகியோரின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக இருந்தது. 'துர்க்கிர அவலத்தில்’ இ  ைட யிடையே ஆடப்பட்ட "தேவராட்டம்’ நாட கத்தை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றது.
சுவரொட்டி : இதன்மையமான பாத்திரம் ஒரு தனிமனிதனல்ல, அவையில் அ ம ர் ந் திருக்கும் அத்தனைப் பேருமேதான். அவை யினர் பங்கு என்பது. நாடக உத்தியாக்கப் படாமல், அவையினரை முக்கியப் பாகமாக மாற்றியுள்ளது இந்நாடகம், நாடக ஆசிரியர் ந. முத்துசுவாமி வடிவமைப்பு, நெறியாள்கை : வ. ஆறுமுகம். -
தேடுங்கள் : வங்க நா ட கா சி ரியரும் மூன்றாம்வகை நாடக முறையின் முன்னோடியு மான பாதல் சர்க்கார் 1976ல் எழுதிய ‘மிக்சில்” (ஊர்வலம்) நாடகத்தின் தமிழ் வடிவம் இந் நாடகம். இன்றைய வாழ்க்கை, இதன் பின் னுள்ள நமது அரசியல் வரலாறு, அவலமான சூழலிலிருந்து விடுதலை தேடிச் சோர்வுற்ற இளைஞன், உடல் தளர்ந்தும் மனம் தளராத கிழவன் ஆகியோரின் தேடலைச் சித்தரிக் கிறது. கடந்தகால நம்பிக்கைப் பொறிகள் ஏமாற்றிய போதும், எதிர் காலம் பற்றி நம்பிக்கை கொள்ள இன்னும் மிச்சம் இருக் கிறது என்கிறது நாடகம்.
வீதி நாடகம் என்ற வகையைச் சேர்ந்த இந்நாடகத்தில் நாடகக் கருத்துக்கு மட்டுமே

5
முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தனிப்பட்ட உடை, ஒப்பனை மேடை அமைப்பு எதுவும் இல்லை. எளிமையான நாடகம்.
இன்றைய வாழ்க்கைச் சிக்கல்களை எடுத்துக் காட்டுவதாய் சிறப்பாய் இருந்தது. நம்பிக்கை வறட்சி நிலவும் இச்சமூகத்தில் நம்பிக்கை ஒளி ஊட்டுவது போல், முடிவில் நாடக நடிகர்கள் மேடையில் இருந்து இறங்கி பார்வையாளர்களுக்கிடையில் வந்து தங்கள் தேடலைத் தொடங்குவதும், பார்வையாளர் களும், கையை உயர்த்தி நம்பிக்கையுடன் கோஷமிட்டு, பின் தொடர்ந்து செல்வதும் புது உத்தியாக உற்சாகம் அளிப்பதாய் வரவேற்கத் தக்க வகையில் அமைந்திருந்தது.
நாடகங்களுக்கிடையே 'நாடகக் கருத்துப் புலனாக்கத்தில் அரங்கமைப்பின் பங்கு’ என்ற கலந்துரையாடலும், நவீன நாடகத் தேடலில் பாரம்பரியக் கலைகளின் பங்களிப்பு’-ஒரு விசாரணை என்ற விவாத மேடையும் நடை பெற்றது. இதில் ந முத்துசுவாமி கோமல் சுவாமிநாதன், ஞாநி, அக்கினிபுத்திரன் கே. ஏ. குணசேகரன், மு. இராமசுவாமி, சே. இராமானுஜம், அஸ்வகோஷ் போன்ற நாடகக் கலைஞர்கள், இயக்குநர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதி நாளன்று முனைவர் ச. அகத்தியலிங்கம் சிறப்பு  ைர யாற்றினார்.
ந. முத்துசுவாமியின் ‘சுவரொட்டிகள்’ என்ற நாடகம் அங்கு வந்திருந்த நா ட க் கலைஞர், கவிஞர்களால் பெரிதும் வானளாவப் புகழப்பட்டது. ஆனால் இளைய தலைமுறை யினரான மாணவர்கள் பலருக்கும் இந்நாடகம் தெளிவாக விளங்கவில்லை. 'நீ வாழ்க’ என பொதுநல சேவை செய்தது அ ன்  ைற ய அரசியல்; "நான் வாழ்க’ என்று சுயநலம் கொண்டு சுரண்டுகிறது இன்றைய அரசியல்இதுவே இந்நாடகத்தின் மையக்கருத்தாகும். இதைச் சொல்வதற்கு 1 மணி நேரம் தேவையா? என்று கேட்கத் தோன்றுகிறது. ஆசிரிய ர் சொல்ல வந்ததை விளக்க 5 நிமிட ங் கள் போதும். மற்றும் சில அங்க அசைவுகள் அரு வருப்பூட்டுவதாயும் அமைந்திருந்தன. நடன அசைவுகளே நாடகத்தை நடத்திச் சென்ற தால் பார்வையாளர்களின் கவனம் கருத்தில் பதியாது அங்க அசைவுகளிலே நி ைல த் து விட்டது. நாடகம் முடிந்து வெளியே வந்த போது மிகப் பலரின் கருத்து 'ஒன்றும் புரிய வில்லை" என்பதும், புரிந்து கொண்டவர்கள் அறிவு ஜீவிகள் என்பதும்தான்.
தெருக்கூத்து வடிவத்தில் கவனம் செலுத்தி அதன் சில அம்சங்களையாவது நவீன நாடகங் கள் ஒரு சிலவற்றில் கையாண்டிருப்பது வரவேற்கத் தக்கது. O

Page 20
அந்த மனுஷ உடலில் மிருக வாலைப் பார்த்த போது டாக்டர் திகைத்துப் போனார். வாலுடன் அந்த மனிதன் பிறந்தானா? அல்லது அது பின் காலத்தில் வளர்ந்ததா? என் றறிய-மற்ற டாக்டர்களுடன்
அவரும் ஆர்வப்பட்டார்.
அந்த வாலைப் பற்றி ஒவ்
வொரு டாக்டரும் ஒவ்வொரு விதமாக அபிப்ராயப் பட் டார்கள். அம் மனிதனின்
கண்கள் அந்த டாக்டரின்முகத் தையே பார்த்தன. அவனும், அவனுடைய வாலும் வித்தியா சமான துடிப்போடும் அதிர் வோடும் இருந்ததை ஒரு நர்ஸ்
உணர்ந்தாள்.
*மனிதன் தன் வாலைப் பல லட்சம் வ ரு வடி ங் களு க் கு முன்பே இழந்து விட்டான். இது இருபதாம் நூற்றாண்டின் வால். அறுவை சிகிச்சை வர லாற்றின் பார்வையில் இது தான் முதல் ஆபரேஷனாக இருக்கப் போகிறது” என்றார் டாக்டர். அவ ன் உடல் எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது. ஒரு முழுநீள பரிசோதனைக்குப் பின் ஒரு அறிக்கை தயாரிக்கப் பட இருந்தது.
**நாளைக்கி நாம் ፴፰GÙ முடிவுக்கு வரலாம். எக்ஸ்-ரே ரிபோர்ட்டும் அ ப் போ து கிடைத்து விடும்” என்று இன் னொரு டாக்டர் தன்தலையைத் தடவிக் கொண்டே சொன் 6ύΤΠ Π .
மூன்றாவதாக ஒரு டாக்டர் தன் கண்ணாடியைக் கழற்றி
சிந்திச் சிறுகை
O
o
6) T6)
ロ ப்ரிஜ் மோக
D
தமிழில்: சுந்த
விட்டு, **வா எடுத்து ரசா
தனைக்குட் படு என்ருர் .
இன்னொருத் தீவிரமாக ** இ. வால் போல என்ருர்,
* இப்ப போய்ட்டு நா போது உங்க வோட ரி ப் ே கொண்டு வர ம ஒரு வேளை அ! 9 b | DFT ip6adi வந்திருக்கிற வி இருக்கலாம்னு நெனக்கிறோம் "எங்க அட் லாம் உயிரோட *அதனால உங்க குடும்ப யிருந்து உங்க வோட பழை இருந்தா அதக் * * ағ т і ... - உயிரோட இல் **ரொம்ப சரி உங்களோட கூ
f Ff FIT'
அந்த டாக்ட ருமே தவறாக ே மெடிகல் f கேட்கிறார்கள் எண்ணினான். பெற்ருேர்கள், களுக்குப் பதில சக ஊழியர்கள் வலக கிளெர் களுடைய ரி

ர்ஜி
'606) பனப் பரிசோ த்த வேண்டும்”
தர் ரொம்பவும்.
து ஒரு நாயின்
இருக்கிறது
வீ ட் டுக் கு ப் ளைக்கி வரும் அபபா அமமா Li fi T - 60D - 95 றந்துடாதீங்க. து உங்க அபபா உங்களுககு பம்ச காரணமா நாங்க பாக்க 99
அம்மால் இல்லை சார்” பரவாயில்ல, டாக்டர்ட்டே அம்மா அப்பா ) ரிபோர்ட் கொண்டாங்க”
, உங்க பையன ட்டிட்டு வாங்க” என்றான். .ர்கள் எல்லோ வறு யாருடைய ப்போர்ட்டையே என்று அவன் அவனுடைய பையன் இவர் r 35 596JSB)6Od L-u
, அவன் அலு க்குகள் இவர் போர்ட்டுகளைக்
வெட்டி
கேட்டால் மட்டுமே அவர் களால் சரியான முடிவுக்கு வர (Upಧ್ಧ-Ub அவன் அ ப் ப gஎணணக காரணம் அவன் வால் வளர் ச் சி பெற்றதே அவன் வேலையில் சேர்ந்த பின்னால்தான்.
மருத்துவ நிபுணர்களுடன் இதை விவாதிப்பது பயனற்றது என்று நி  ைன த் தா ன் . அவன் பரிசோதனை மேஜை யி லி ரு ந் து இறங்கி தன் உடைகளை அணிந்துகொண்டு தன் வாலை ம  ைற த் து க் கொனடான்.
வீட்டை அடைந்தவுடன், *தான் சுகமாக இல்லை’ என்று தனக்குத் தானே சொல்லி விட்டு தன் அறையை அடைந் தான். விளக்கை அணைத்து விட்டு படுக்கை விளிம்பில் மிக கவனமாக உட் கார் ந் து கொண்டான் அவன்.
அவனுடைய மனைவி அடிக் கடி 'அவன் பலவீனமானவன் என்று சொல்லப் பழகிக் கொண்டு விட்டாள். சில சமயங்களில் அவனும் கூட அதை ஒப்புக் கொண்டிருக் கிறான். உண்மையிலேயே அவன் பலவீனமானவன்தான். அவன் தன் எஜமானனின் முன்னால் தன் வாலை ஆட்டப் பழகி வி ட் டா ன். எந்த நேரத்தில் அவனுடைய எஜ மானன் சி ங் க ம் போலக் கோபத்தில் கர்ஜித்தாலும் பதிலுக்கு அவன் ஒரு பூனை போல மெல்ல முனகிவிட்டு பின்பு மெளனமாகி விடுவான்.
'நீ ஒரு முட்டாள், நீ ஒரு பயூனுக இரு க் கத் தா ன்

Page 21
60L
Lu mt 6u)ib
லாயக்கே தவிர க்ளர்க்காக இல்லை, ஏன் அதுக்கும் கூட நீ லாயக்கில்லாதவன்தான்.” தவிர அப்படிப்பட்ட நேரங் களில் அவன் வால் இன்னும் நீளமாகி வெகு வேகமாக ஆடத் தொடங்கி விடும்.
எஜமான் நிறைந்த அறி வுள்ளவர். அவர் மனிதர்களை விட நாய்களையே விரும்பு கிறார். இவனோ அவருக்கு எந்தநேரத்திலும் வாலாட்டக் கூடிய உணமையுளள நாய. ‘தன்னுடைய சக ஊழியர்களும் நாய்கள்தான்" என்று அவன் நினைத்தான். அவர்களுக்கும் தன்னைப் போல வால் வளர்ந் திருக்குமா இல்லையா என்று அவனுக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் அவ ன் அவர்களுடைய பின்பக்கத்தை பார்த்து விட்டு அவர்கள் தங்கள் வால்களை தங்கள் உள் ஆடைகளுக்குள் ம  ைற த் து வைத்திருப்பார்கள் என்று எண்ணினான்.
அவன் எல்லோருடைய பின் பக்கங்களையும் உற்றுப் பார்ப்பதை பழகிக் கொண்டு விட்டான். அவன் தன் மனைவியின் உடலிலும் ஒரு வாலிருக்க வேண்டும் என்று எண்ணினான். இதுவரையில் அப்படி இல்லா விட்டாலும் நிச்சயமாக அது ஒரு நாள் வெளிப்படும் எ ன் றெண் ணினான். அவன் அவனுடைய எஜமானனின் நாய். அவள் அவனுடைய பெண் நாய். அவளுக்கு வாலில்லா விட் டாலும் கூட அவளுடைய பின்புறம் ஆடு வது போல இருக்கும். எந்த நேரம் அவன் நிறையப் பணமிருக் கிறதோ அப்போதெல்லாம் அவள் தன் இயல்பான குணத்தை மறந்து விடுவாள். அப்படிப்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நிகழுமானுல், அவ ளுக்கும் கூட நிச்சயமாக ஒரு வால் முளைத்து விடும்.
ஒவ்வொரு புடவை, பாவா 60), ட்ராயர்களுக்குள்ளும் மறைந்திருக்கும் வால்களைப் பார்ப்பதையே ப்ெ ா முது
போக்காக்கிக் மனிதன் தன்னு காலத்திற்குத் தாகவும அவன எப்படியோ யில் வாலைப் ட மாக சிந்தனை லாததாக சீக்கி குச் சென்றான்.  ைப ய ன் ک கூட்டிக் கொண் அவன் ஒவ்வெ யும் நர்ஸையும் த்து வணங்கின பற்றிக் கேள்வி மற்ற டாக்டர்க பார்த்தவுடன் ஒ 66.
டாக்டர்கள் அ உள்ளே கூட்டிச் அவனுக்காக அ யில்லாமல் அை காத்திருத்தான் வெளியே வந் சந்தோஷமடை சலனமில்லாத டாக்டர் சொன் பையனுக்கு வ இல்லை. இனி கும்னு தோணன உயிரணுக்கள்ல ளோடதிலிருந்து படுது. அவன் : லைன்னு நாங் றோம்”.
** என்ன சொ
டீன்னா அவன்
LD66öT60TT Garré 'அதை நீ பண ண னு ம. சொந்த விஷ மேலும் விவா விரும்பாமல் ட னார்.
*ஆனா ஒன்னு பொண்டாட்டி போல உண்டை தன்னோட கன னொரு ஆம்ப நென்ைக்க மாட் **உங்க வா னோட நேரத் தீங்க. இப்ப நீ நாங்க உங்க வ
எடுத்துடுவோம்

17 .
கொண்டான். டைய புராதன திரும்பு வ உணாநதான. அந்த ராத்திரி ற்றியே அதிக செய்ய இய ரம் படுக்கைக் காலையில் தன் ஆஸ்பத்திரிக்குக் ாடு போனான். ாரு டாக்டரை தனியே பார் ான். அவனைப் ப் பட்டிருந்த ளூம அவனைப }ன்றாகக் கூடி
|வன் பையனை சென்றார்கள். வன் பொறுமை ரைமணி நேரம் 60D IL U 63T ததும் அவன் ந்தான்.
5 முகத்துடன் னார். **உங்க  ா ல் எதுவும் மேலும் இருக் லை. அவனோட [TLD 5 வித்யாசப் ஓங்க பையனில் பக நெனைக்கி
ால்றீங்க ? அப் ஒரு தேவடியா bறிங்க??? வ்கதான் முடிவு அது உங்க யம்’ என்று தத்தை நீட்ட
.ாக்டர் சொன்
று டாக்டர். எம் சீ  ைத  ைய ப் மயானவ. அவ வுல கூட இன் ளயப் பத் தி
LT.'
தத்தால என் த வீணாக்கா வ்க போகலாம். ாலைத் தனியா ” என்று கோப
கண்ணிர் மறைத்தது.
விடுவோம், மடைஞ்ச மனுஷனுக்கு வாலி
மாக டாக்டர் சொன்னார்.
** எனக்கு ஆபரேஷன்னா பயம் டாக்டர். நான் ஆபரே ஷன்ல பொழைக்காட்டி எம் பொண்டாட்டியையும் பைய னையும் யார் காப்பாத்துவாங்க
டாக்டர்? நான் ஒருத்தன்தான்
எங்குடும்பத்துல சம்பாதிக்கற வன்” என்று கெஞ்சினான்.
டாக்டர் ** பயப்படாதீங்க நீங்க ஒன் னு ம் செத்துப் போயிட மாட்டீங்க. நாங்க ஒங்க வாலை மட்டுந்தான்
தனியா எடுக்கப் போறோம்”
என்று அவனைப் புரி ந் து கொள்ள வைக்க முயன்றார்.
* 'இல்லை டாக்டர், எனக்கு பயமாயிருக்கு, என்ன ஏன் இப்படி இறுக்கிப் பிடிச்சிருக் கீங்க? நான் ஒண்ணும் பைத் தியமில்ல.” அவன் கண்களைக் “தயவு பண்ணி என்ன விட்டுடுங்க’’. ** ஒங்க வா  ைல வெட்டி எடுத்தபின்னாடிதான் உங்கள ஒரு நா க ரி க
ருக்கறதொன்னும் நல்ல விஷய மில்ல”;
**ஆனா ஆபரேஷன் பண்ண பின் ன ர ல யு ம் வளந்திருச் சுன்னா?”
** மறுபடியும் வெட்டி எடுத் துடுவோம்’ கோபமாய் டாக்டர் சொன்னார்.
‘இல்ல டாக்டர், என் வாலை வெட்டி எடுக்க வேண்டாம். அதுதான் நா வாழறதுக்கே காரணமா இருக்கு. தயவு பண்ணி என்ன விட்டுடுங்க. எனக்கு வால் போய்டுச்சின்னா வேலையும் போய்டும். வேலை போய்டுச்சுன்னா எங்குடும்பமே தவிச்சு அலையும்.தயவுபண்ணி என்ன மன்னிச்சுடுங்க டாக்டர். நா மறுபடியும் இந்த ஆஸ்பத்
திரிக்கு வரவோ, என் வாலைப்
பத்திப் பேசவோ மாட்டவே மாட்டேன். தயவு பண்ணி மன்னிச்சுடுங்க”. அ வ ன்
கெஞ்சினான். அந்த டாக்டரின்
கால்களில் விழுந்தான். அவன் மேல் இரக்கப்பட்ட அந் த டாக்டர்கள் அவனைப் போக விட்டார்கள். O

Page 22
18
*வீடு' திரைப்படம் தமிழின் சிறந்த படமாகத் தெரிவு செய் யப்பட்டு தேசிய விருது வழங் கப்பட்டிருக்கிறது. தமிழில் இதுவரை வந்த படங்களில் * வீடு' திரைப்படம்தான் 'Neat film என்று படம் பார்த்த நண்பர்கள் கருத்துச் சொன் 656.
நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த தனியார் அலுவலகத் தில் பணியாற்றும் பெண்ணாக அர்ச்சனா நடித்திருக்கிறார். சாதாரண மனிதர்களாக அன்றாடம் அல்லாடி, பிரச் சினைக்கு முகம் கொடுப்பவர். களாக வாழும் நடுத் த ர குடும்பப் பெண் பாத்திரத்தில் இயல்பாக வருகி ற ர ர் அர்ச்சனா. இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.
ரிட்டயர்யான ш т L“ (5. வாத்தியராக|முதிய தாத்தா வாக வருகிறார் சொக்கலிங்கம் பாகவதர். பழங்கால நாடக நடிகர். விடுதலைப் போராட்டக் காலத்தில் விடுதலையுணர்வு மிக்க நாடகங்களில் நடித்தவர். அவருக்கு இது முதல் திரைப் LJ LL) .
இந்தப் படத்தின் கதாநாய கனே இந்தத் தாத்தா தான், முதியவருக்கான தனிப்பட்ட உலகம், அதில் தன் பேத்தி களின் மேல் இவர் செலுத்தும் அன்பின் ஆட்சி, சக நண்பர் இறந்தார் என்றவுடன் தன் F.T66 முன் உணர்த்தல், பின் தன் பேத்திகளுக்காக தம் முடைய உடைமையைப் பகிர் தல் என ஒவ்வொரு சூழ்நிலை யிலும் நம்மை மறக்க வைக் கிறார். உ ண்  ைம யில் இவருக்குத்தான் சிறந்த நடி கருக்கான தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்.
ஒரு நல்ல திரைப்படத்திற்கு எப்படி திரைக்கதை எழுதப்பட வேண்டும், கேமிரா இயங்க வேண்டும் என்பதைத் தமிழுக்கு உணர்த்தியுள்ள இயக்குநர் பாலு மகேந்திரா அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள். 0
**இவ கள்’ எனு நண்பர் ெ மாகி விட் கவிஞ எல்லாம் போக்கும்
எதிரி வேண்டும் யும் திரட் பல்வே நடவடிக்ை பேசினாலு தளர்ந் தில் பரவி விடாது ெ அவா அவருள் இ மதுை புரம் எனு உரிய இய இளை குரிய தாய பாடல்க6ை நின்ற பே யரின் பாட பாடல்களி: பாடல் ஆ களைத் ெ உயர்ந்து
360பொருளாத யும் வெற். சங்கைவே6 தலை ஆசி கிறார். ச ஆழம் பெ.

பாலம்
சாதாரணன் பக்கங்கள்
சங்கை வேலவன் வாழ்க () சிவா க்கு விருது கிடையாதா? D கமல ாசன் சுடுகாடாவது வாங்கித் தருவா 2 ) கதவைத்தட்டும் போலீஸ் ாற்கைப் பாண்டியர்கள் 0 ஆர். 1ங்கட்ராமன் அவமதிக்கப்பட்டார்? ) :ெ நல்ல திரைப்படம்.
பர்தான் சங்கை வேலவன்; கவிஞர், “சிவப்புக் கனவு ம் கவிதை நூலின் ஆசிரியர்” என்று ஒரு நாள் 1. நா. சிவம் அவர்கள் அறிமுகப்படுத்த, நெருக்க L_s瓦厂。 ன், அறிவாற்றல் மிக்கவன் என்ற திமிர்களை மீறி எப்பொழுதும் அப்பாவித்தனமும் வெகுளிப்
நிறைந்து காட்சித் தருபவர். லிருப்பவர் அனைவரையும் பரவ ச ப் படுத் த என்பதற்காக சகலமானப் பேர்களின் ஒப்புதலை டிப் பின் பேசுகின்ற தனிச்சிறப்பு வாய்ந்தவர். வறு உணர்வுச் சூழ்நிலைகளில் அ வ ரு  ைடய ககளை அவர் மனம் புண்படும்படி விமர்சித்துப் ம் அதற்காக மனம் தளராதவர். ந்த நடை, தொலைவில் படிந்த பார்வை, முகத் க் கிடக்கும் வெகுளித்தனம் இவற்றுக்குள் இடை சயல்படுகிற மனம் .
கவிஞரா இல்லையா என்பது வேறு விஷயம், இருக்கும் செயல்படுகிற மனம் பெரிய விஷயமே. ர மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் சங்கரா ம் குக்கிராமத்தில் பிறந்து அந்த மண்ணுக்கே பல்போடு தமிழகத்திற்கு அறிமுகமாகியுள்ளார். rயராஜா என்கிற இசைக்கலைஞன் வளர்வதற் ப் நிலமாக இருந்த பாவலர் வ ர த ரா ஜ னின் ளத் தொகுத்தவர், முற்போக்கு இயக்கமே மறந்து ாது வெ. நா. திருமூர்த்தி எனும் பாடல் ஆசிரி டல்களைத் தொகுத்துத் தந்தவர், தி  ைர ப் பட ல் பகுத்தறிவு இயக்கத்தின் முகத்தை எழுதிய , சிரியர் உடுமலை நாராயண கவியின் பாடல் தாகுத்து தந்தவர் எனும் செயல்களின் மூலம் நிற்கிறார் சங்கைவேலவன். நிலை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே நாரப் பலவீனங்களையும் உடல் பலவீனங்களை றிக் கொண்டு சமூக உணர்வு மிக்க மனிதனாக லவன் திகழ்கிறார். பாரதிதாசன் விழாவில் விடு ரியர் கி. வீரமணி அவர்களால் கெளரவிக்கப்படு ங்கை வேலவன் செயல்கள் வளம் பெறுக, மேலும் றுக என்று வாழ்த்துகின்றோம். () ,

Page 23
0 மறைமலை நகர் காங்கிரஸ் மாநாட்டிற்கு ராஜீவ் காந்தி வருகை புரிந்தபோது சென்ை "திகிலூட்டப் பட்டிருந்தது’ என்று ஒரு நண்பர்
மக்களைப் பாதுகாக்கிற ஒரு அரசின் தலைவி மக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள படுகிறார் என்பதை அவருடைய பாதுகாப்பு புலப்படுத்துகின்றன. ۔۔۔۔۔
பயங்கரவாதிகளிடமிருந்து பிரதமரைப் பாது எனும்பெயரில் மக்களை பயமுறுத்துவது, அவர் கதவை போலீஸ் தட்டுவது நல்லதல்ல.
கலைஞர்கள், கவிஞர்கள், அரசியல் உன இளைஞர்கள் வரை காவல்துறையின் கரம் நீள்வது மேன்மைக்கு ஏற்புடையதல்ல. () நந்தன், சிதம்பரம் நடராசப் பெருமான் ே செல்ல முடியாது தடுக்கப்பட்டதை பெரிய புர பிடிக்கும்.
மனித உணர்வுகளுக்கு மாசுகற்பிக்கும் சாதி கடவுள் பிணைக்கப்பட்டிருந்தார் என்பதற்கு ந ஒரு சாட்சியம்.
ஆனால் இப்போது? இந்தியக் குடியரசுத் தலைவர் ஆர். வெ அவர்களை சிதம்பரம் கோவிலில் கருவறை விடாமல் தில்லை வாழ் அந்தணர்கள் தடுத்துள்
வெற்றுடம்போடு மட்டுமே கருவறைக் முடியும் என்பது பழமையான ஐதீகம்.
கடவுள் நிலைக்கு மக்களை அழைத்துச் ெ பதில், குருமார்கள் கடவுளரிடம் செல்லும் தடுக்கிறார்கள் என்பது ஒருபுறம். மக்களுடை தலைவரையே தடுக்கிறார்கள் என்பது மறுபு ஐதீகத்தின் சிக்கல் மட்டும் அல்ல. இந்து மத பாட்டுச் சிக்கலும் கூட. ()
கமலஹாசன் ரசிகர் மன்றம் தேசியவிருது பெற்ற கலைஞர்களுக்கு சென்னையில் பாராட்டுவிழா நடத்தியது. விழாவில் கலைஞர் மு. கருணாநிதி, ஜானகி ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் ஆகியோர் விருது பெற்றவர்களைப் பாராட்டிப் பேசினர். விழாவில் ‘ஒரே ஒரு கிராம த்திலே பட இயக்குநரை பாராட்டலாம் படத் தின் கருத்தைப் பாராட்டமுடியாது. ஜாதிகள் ஒழிய வேண்டும் என்ற பொதுவான கொள்கை வாகனங்கள் செல்கிற பாலத்திற்கு ஒப்பானது. பாலம் பழுது பட்டு விட்டது, எனவே ரிசர்வ் வேஷன் என்கிற பைபாஸ் சாலையைப் பயன் படுத்திவருகிறோம். பழுதுபட்ட பாலம் சீரமைக் கப்படும் வரை பைபாஸ் சாலை இருந்தேதீரும். இதற்கு விரோதமாகச் செயல்படுவதைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டுவரும் எங்களைப் போன்ற இயக்கங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கலைஞர் குறிப் பிட்டார்.
கமலஹாசன் பேசும் போது 'பைபாஸ் சாலையை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். பழுது பட்டப்பாலத்தை அப் படியே விட்டு விட்டார்கள் என்ற கருத் து முற்போக்குச் சமுதாயங்களிடையே நிலவு கிறது” என்று குறிப்பிட்டார்.

தமிழ் மண்ணின் இயல்பை
குப் பிரதமர் ன நகரம் நடிப்பில் பிரதிபலிப்பவர்கள் சொன்னார். சிவாஜி கணேசன், சத்யராஜ் வர் தன்னை போன்றவர்கள் முன் வரிசை படாதபாடு யில் வருகின்றார்கள். முதல் ஏற்பாடுகள் மரியாதையில் சிவாஜிகணேசன் அங்கங்கே நா ம் பார்த்த காக்கிறோம் கிராமத்து மனிதனை பிரதி
கள் வீட்டின்
பலித்தார். சத்யராஜ் கூட வேதம் புதிதில் பாலுத்தேவ
ணர்வு மிக்க ராக வந்தார். தமிழ் மண்ணை
து ஜனநாயக இயல்பாய் பிரதி பலிக்கும் கலைஞர்களுக்கு தேசிய விருது
காவிலுக்குள் கிடைக்காது போலும்,
ாணம் படம்
ப வலையில்
சிறந்த நடிகர்தான் கமல ஹாசன். சாருஹாசனும்தான். சுகாசினியும் நடிக்கப் பிறந்த
நதன கதை வர்தான். தொடர்ந்து ஒருவர் மாற்றி ஒருவர் வரிசையாக
பங்கட்ராமன் தேசிய விருதைப் பெறுவது க்குச் செல்ல எனபது **இவர்கள் குடும்பச் “ளனர். சொத்தா தேசிய விருது ?” குச் செல்ல என்று கேள்விக் கேட்பவர் களுககுப் பதில் சொல்ல சல்வதற்குப் வேண்டியிருக்கிறது. த குதி மக்களையே திறமையை ஒரேகுடும்பத்தில் ய குடியரசு அப்படியென்ன தேடித் தேடி
ம். பார்க்கிறார்கள் திரைப்படப் நீதின் ಟ್ವಿಖ್ಖ பரிசு வழங்கும் குழுவினர்?
நல்லது கமலஹாசன் அவர்களே. நீங்க ளாவது "பழுது பட்ட பாலத்தைச் சீரமைக்க" வந்து விட்டீர்களே ?
முற்போக்குச் சமுகத்தினரே ! LD615 தைச் சுமக்கவும், மலச்சாக்கடையில் மூழ்கி எழவும் செய்கிறானே நகரச்சுத்தித் தொழி லாளி, அந்த வேலைக்குப் போட்டி போடுங் கள். சேற்றில் இறங்கி ஏர் உழுது நாற்று நடுகிற கடிய உழைப்புக்குப் போ ட் டி போடுங்கள். அங்கே எல்லாம் போக மாட் டீர்கள். அங்கே ஒன்று இங்கே ஒன்று. அரிஜனன் அரசாங்க வேலைக்கு வந்தது உங்களுடைய கருத்துப்படி நீண்ட காலமாகி விட்டது. அப்படித்தானே கமலஹாசன் அவர்களே.
ஆயிரக்கணக்கான வருஷமாக அரிஜன னாக, ஒதுக்கப்பட்டவனாக, வாழ்கிறார்களே அங்கே பாருங்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எரிக்கச் சுடுகாடு இல்லை, சுடுகாட்டுக்கு சரி யான பாதை இல்லை, டீக்கடையில் தனிக் கிளாசில் டீ, தனி இடம் எனும் மிருகத்தனம் இன்னும் ஒழிய வில்லை. சாதியை ஒழிப்பதாக இருந்தால் கிராமத்துக்குப் போங்கள். தாழ்த்தப் பட்ட வருக்கு முதலில் சுடுகாடாவது வாங்கித் தாருங்கள். பிறகு பேசுங்கள் கமலஹாசன் அவர்களே. 0

Page 24
20
ஆயுளின் அந்திவரை இது இறுதிப் பகுதி : சோகமும் கேள்வியும் காதலோடு உடன் பிறந்தவை போலும். எதைப் பார்த்தாலும் காதலுக்குரியவ ரோடு பொருத்திப் பார்த்தலும் பின் வருந்தலும் தான்.
• O
மணப் பெண்ணே! இங்கே கொட்டிக் கிடக்குமிந்த இரவுகளையெல்லாம் அள்ளிக் கொண்டு
போ. உனக்கென்று கொடுக்க வேறு நல்லதாய் என்னிடம் என்ன இருக்கிறது ? உனக்குத்தான் தெரியுமே, நான் கொள்ளையடிக்கப்பட்ட வீடு ! O Y அன்பே ! காதலிக்கா விட்டாலும் பரவாயில்லை. கணவனாகவாவது ஏற்றுக் கொள்ளேன். அதறகு யாராக இருந்தால்தான் என்ன ?
ஒருநாள
ரோஜா.
ஒருநாள்
மல்லிகை.
ஒருநாள்
Ȱ J 5 IT DU TLD . உன் கூந்தலில் பார்த்ததாய் ஞாபகம். அதுசரி பெண்ணே !
6
இதயம் எப்போது கூந்தலானது ?
பெண்ணே ! நீ ஊமையில்லை என்பதை நிரூபிக்க
நான் எவ்வளவு பேசவேண்டியிருக்கிறது.பார்! காதல் தேவதையே ! உன்னை நான்
அழைக்கவில்ை
65s காத்துக் கொ இல்லை. ஆனாலும் வந்து விட்டா வந்ததுதான் ஒரு கையில் பூக்களைக் ெ இன்னொரு 6 கண்ணிரை ை
என் மெழுகுள் எனக்கு மட்டு கொடுப்பதற்க இன்னும் எவ்வளவு கண் வைத்திருக்கிற இருக்கட்டும். உனது பெய சொல்லிக் கெ
என்னுடன் இ
ଦେif வேறென்ன இருக்கப்போக்
அந்திச் சூரிய6 விளையாடிக் ( என்னிடம் வ போகவேண்டி மாளிகைக்கான வழி கேட்டா அழைத்துப் ே பூட்டிக் கொண் 6T60T
குடிசை.
அற்புதமான உனது ஒவ்வொரு கலி முற்றுப் புள்ளி
எத்தனை மா
செய்கிறாய்.
6

Lurs)
லை.
ண்டிருக்கவும்
ய், வந்தாய்.
காடுத்துவிட்டு
கையில் வத்துவிட்டாயே!
பர்த்தியே ! மே
frui
ாணிரைத்தான் pri ?
ரைச்
ாண்டு
ருக்க
றெது ?
னை மேய்த்தபடி கொண்டிருந்த ந்து நீ
. பாய் நின்றேன். ாடு காத்திருந்தது
விதையின் ரிக்கு முன்னும் ாற்றங்கள்
ஆயுளின் அந்திவரை உன் இதயம் எப்போது கூந்தலானது
அறிவுமதி
காதலும் அப்படித்தான். இங்கே நான் முற்றுப்புள்ளி !
எத்தனை பேர் குடியிருந்த வீட்டில் நான புகுந்திருக்கிறேன்.
ருந்தும் என்ன ? எல்லோரும் இடித்துவிட்டுப் போனவர்கள்தானே !
நான் இறந்து விட்டேன். என் காலடியில் பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. என் தாய் நினைவிழந்து விட்டாள். என் தோழிகள்
உறவினர்
எல்லோரும் என்னருகில், என் காதலன் மட்டும் அழாமல்
6666
போலவே.
t
காதல் உன் தோட்டத்தில் எத்தனையோ பூக்களை பூக்கச் செய்து உதிர்த்து மீண்டும் பூத்து. இப்போது உனக்காக என்னிடத்திலும்
(U)
马· உதிர்த்து விடாதே, மறுபடியும் பூப்பதற்கு
என் செடியில் அரும்புகள் இல்லை.

Page 25
எங்கே விலங்குகளின் பிடி எங்கே மனிதம் மதிப் எங்கே நம் செளந்தர்யங்க
அங்கெல்லாம்
கி. பி. அ
இஸ்காரா இதழுக்கு லெனின்தான் தலைமையாசிரியர்; பிளக்கனோவ் உள்பட மேலும் ஐவர் ஆசிரியர் குழுவில் இடம் பெற் றிருந்தனர். இரண்டாவது ருஷ்ய சமூக ஜன நாயக காங்கிரசுக்கான வேலைத் திட்டத்தை தயாரிக்கத் தொடங்கிய போதே இஸ்காரா ஆசிரியர் குழுவில் கருத்து முரண்பாடுகள் முளைவிடத் தொடங்கின.
1903 ஆம் வருட காங்கிரஸ் வாதங்களின் போது தவிர்க்க முடியாதபடிக்கு இஸ்காரா ஆசிரியர் குழுவில் லெனின் தனியாகவும், மற்ற ஐவர் வேறாகவும் பிளவு நேர்ந்தது. இதனால் லெனின் சிறிதும் கலங்கவில்லை. உறுதிமிக்க பெரும்பாலான தோழர்கள் லெனி னையே ஆதரித்து நின்றனர். லெனின் தலைமையிலான இவர்கள், தம்மை போல்ஷ் விக்குகள் என்றழைத்துக் கொண்டனர், மூத்த மார்க்சியவாதியான் பிளக்கனோவ் மென்ஸ் விக்குகளை ஆதரித்தார். இந்த மென்ஸ்விக்கு கள் இறுதியில் தோல்வியுறுவர் என்ற கணிப் பீட்டை லெனினால் முன்னரே யூகிக்க முடிந் தது. ஏனெனில் இவர்கள் தத்துவார்த்த ஊச லாட்டம் நிறைந்தவர்களாய் இருந்தனர்.
ருஷ்ய சமூக ஜனநாயக காங்கிரஸ் கட்சி யின் இரண்டாவது காங்கிரஸ் பெல்ஜியம் நாட்டுத் தலைநகர் பிரஸ்ஸல்சில் தொடங்கி லண்டனில் முடிவுற்றது. இதில் 37 கூட்டத் தொடராய் நிகழ்த்தப்பட்ட விவாதங்களில் லெனின் 120 முறை உரையாற்றினார். இக் காங்கிரசில்தான் கட்சியின் செய்முறை விதி களும், செயல் திட்டங்களும் முடிவாயின. புரட்சிக்கான கட்சி ஒழுங்கமைக்கப்பட்டது.
பீட்டர்ஸ்பர்க் ந க ர் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்கள் பலர் வேலை நீக்கம் செய்யப்பட்டதானது, ருஷ்யாவில் மாபெரும் தொழிலாளர் எழுச்சியாக வடிவெடுத்தது. இதுவே 1905-புரட்சி ஆகும். தொழிலாளர் கள் குளிர்கால அரண்மனை முன் அணிதிரண் டனர். ஜாரிடம் நியாயம் கோரிய அம்மக்கள்
() சென்ற இதழ்

பில் மானுடம் நசிகிறதோ: பிழந்து போகிறதோ, ள் கொள்ளை போகிறதோ, 6)5OfsOTIT....
ரவிந்தன்
மீது கடுமையான வன்முறை கட்டவிழ்த்துவிடப்
பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப் பட்டார்கள். இந்நிகழ்ச்சி தொழிலாளர்களை உசுப்பியது. தடையரண்களை அமைத்து
தமக்குத் தெரிந்த போர்முறைகளை தொழி லாளர்கள் கைக்கொண்டனர். ஆயுதப் பரிச்சய மும் பெற்றுக்கொண்டனர்.
இந்தப் போராட்டம் ஜார் அரசால் ஒடுக் கப்பட்டு பின்னடைவுக்கு உள்ளானதால், மார்க்சியவாதிகள் அனைவரும் ஏகக்குரலில் தம் நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தினர். ஆனால் லெனின் அவர்கள், **இந்த எழுச்சி பயனுள்ளதாக இருந்தது. ஆயுதமேந்திப் போராடுவது தொழிலாளர்களுக்குத் தேவைப் பட்டது. தொழிலாளி வர்க்கம் இந்த அக்கினிப் பரிட்சையில் தேறிவிட்டது” என்று உறுதிமிக
கூறினார்.
இவ்வெழுச்சியின் போது லெனின் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்தார். ஜார் அரசின் வேட்டைகள் லெனினை குறிவைக்கத் தொடங் கியதால், அவர் வெளிநாடு செல்வது அவசிய மாகியது. 1917 ஆம் ஆண்டு புரட்சி காலக்
கட்டம் வரைக்கும் அவர் தலைமறைவு
வாழ்க்கையை மேற்கொண்டார். பல்வேறு தோற்றங்களில் தன்னை உருமாற்றம் செய்து கொண்டார். உளவாளிகளை அடையாளம்
காணுதலும், அவர்களின் பார்வையிலிருந்து தப்பித்தலும், இருப்பிடங்களை மாற்றிக் கொள் ளுதலும், அதே நேரம் தோழர்களுடனான தொடர்புகளை பேணுதலும் என பல்வகைப் பணிகளை சாதுர்யத்துடனும், கூர்மையோடும் மேற்கொண்டார்.
தலைமறைவுக் காலங்களில் அவர் ஒடும் ரயிலிலிருந்து குதிக்க வேண்டியிருந்தது; பனிப் பாலங்களை கடக்க வேண்டியிருந்தது; தன்னந் தனியனாய் பைன் மரக்காட்டில் வசிக்க வேண்டி யிருந்தது. நீராவிப் புகை வண்டியில் கரி தள்ளுவோனாய் பணியாற்ற வேண்டியிருந்தது. அவர் உறுதியுடனேயே செயலாற்றினார்.
தொடர்ச்சி 0

Page 26
22
வெளிநாடுகளில் வசிக்க நேரிட்ட காலங் களில், லெனின் அவர்கள், அந்நாடுகளின் மார்க்சியர்களை எல்லாம் ஒன்றிணைப்பதிலும், தம் போதனைகளால் அவர்களை ஒழுங்கு படுத்துவதிலும் நேரங்களைச் செலவழித்தார். ருஷ்யாவிற்குள் "சட்டவிரோதமாக பணி யாற்றிக் கொண்டிருந்த தோழர்கள் அனை வரையும் கட்சி மத்தியக் கமிட்டியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தார். அவர்கள் அடிக்கடி ருஷ்யாவிற்கு வெளியே லெனினை சந்தித்து தத்தம் பணிகள், பணிமுறைமைகள் இவற்றை தெளிவுப்படுத்திக் கொண்டனர். இந்நிலை, மார்க்சியப்பள்ளி ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை லெனினுக்கு உணர்த்தியது.
பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரத்தி லிருந்து 15 கி. மீ தொலைவிலுள்ள லோண்டுமா எனும் கிராமத்தில் கட்சிக்கான முதலாவது மார்க்சியப்பள்ளியை லெனின் தொடங்கினார். அதில் தம் தோழர்களுக்கு நான்கு மாதங்கள் புரட்சிகர கல்வியைப் பயிற்றுவித்தார். லெனி னோடு, குரூப்ஸ்கயா மற்றும் சில மத்தியக் கமிட்டித் தோழர்கள் பயிற்சியாளர்களாய் கடமையாற்றினர். இது தொழிலாளர்களுக்கு புரட்சி பற்றிய அறிவையும், நம்பிக்கையையும் வளர்ப்பதற்கு துணை புரிந்தது.
1905-ல் தொடங்கிய எழுச்சி இரண் டாண்டுகள் நீடித்தது. ஜார் அரசாங்கம் ஆட்டம் கொள்ளுமளவிற்கு அது தீவிரம் கொண்டது. ஆனால் விவசாயிகள் தொழி லாளர்கள் இடையே இசைவான ஒத்துழைப்பு இல்லாததாலும்,அவர்களுக்கு ஆயுதக் கலையில் போதிய பயிற்சியில்லாததாலும் எழுச்சி பின்ன டைந்தது. தொழிலாளர்கள் ஆயுதமேந்தி போராடியிருக்கக் கூடாதென பிளக்கனோவ் பகிரங்கமாகவே தெரிவித்தார்.
இந்நிலையில் ஜார் அரசு பசப்பு மிகுந்த உறுதிமொழிகளுடன் ஒரு சமாதான திட்டத்தை அறிவித்தது. தன் முடியரசை எவ்வழியிலே னும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு எழுச் சியை சர்ந்தப்படுத்தும் பணியில் இறங்கியது. ஜாருக்கு மென்ஷ்விக்குகள் ஒத்துழைத்தனர். மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய டூமா (நாடாளு மன்றம்) கூட்டப்படுமென்றும் தேர்தல் நடத்தப் படுமென்றும் ஜார் அறிவித்ததை லெனின் நிராகரித்தார். டூமாவில் பங்கு பற்றுவதோ, தேர்தலில் கலந்து கொள்வதோ துரோகத்தன மென லெனினும் போல்ஷ்விக்குகளும் அறிவித்
தனா .
ஆனால், 1905 ஆம் ஆண்டு எழுச்சி நசுக்கப்பட்டது. கட்சி நெருக்கடிக்கு உள்ளா

பாலம்
னது. போல்ஷ்விக்குகள் பெருமளவில் கைது செய்யப்பட்டனர். ஜார் அரசு மூர்க்கத்தன மான தன் வேட்டையைத் தொடங்கியது. லெனின் அவர்கள், கட்சியினை ஒழுங்குமுறை யுடன் பின் வாங்கிச் செல்வதற்கு ஆலோசனை கள் வழங்கினார். போல்ஷ்விக்குகள் பலர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். ருஷ்யாவிற்கு வெளியே மையமிட்டனர். லெனி னும் வெளியேறினார்.
நாட்டுக்கு வெளியிலான இவ்வாழ்க்கைக் காலத்தில்தான் தேசிய இனப் பிரச்சினை சம்பந் தமாக, தம் தோழர்களுக்கு லெனின் விரிவுரை யாற்றினார். ஏனெனில், ஜாரின் ருஷ்யாவில் தேசிய இ ன ங் கள் ஒடுக்கப்பட்டிருந்தன. 1905 ஆம் ஆண்டு எழுச்சியின் படிப்பினை தொழிலாளர்களும், விவசாயிகளும் இறுக்க மாய் ஒன்றிணைய வேண்டும் என்பது மட்டு மல்ல; ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் ஒன் றிணைய வேண்டும் என்ற அவசியத்தை லெனினுக்குத் தெளிவுப்படுத்தியது.
தத்துவ ஆசான்கள் மார்க்சும் ஏங்கல்சும் தேசிய இன சுயநிர்ணயம் குறித்து கூறிய வற்றை லெனின் அவர்கள் செழுமைப்படுத் தினார். 1903 ஆம் ஆண்டு கட்சி காங்கிரசி லேயே இப்பிரச்சனைக்கான விவாதங்களை லெனின் தொடங்கி  ைவ த் தி ரு ந் தா ர். 1905-க்குப் பின்னால் அது மீ த ர ன ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங் கினார். ரோசாலக்சம்பர்க் போன்ற மூத்த மார்க்சியவாதிகள் இப்பிரச்சினை குறித்து முரண்பாடான கருத்துக்களையே வெளியிட் டனர். இக்கருத்துக்கள் தேசிய இனப் பிரச் சனையில் தெளிவான வரையறைக்கு கட்சி வரவேண்டுமென்கிற அவசியத்தை லெனினுக்கு உணர்த்தின. ஆதலினால் ‘தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்’, *சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்’, ‘தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை' என்பதான பல தலைப்பு களில் மிகச் சிறந்த ஆய்வுரைகளை லெனின் வழங்கினார்.
** மார்க்சியவாதிகள் ஜனநாயகத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் துரோகம் செய்யா மல் இருக்க விரும்பினால், தேசிய இனப் பிரச்சினையின் விசேஷ கோரிக்கையை ஆதரித்து போராட வேண்டிய கடப்பாடு உடையவர் களாக இருக்கும் ஒரு சந்தர்ப்பம் உள்ளது. அதுதான் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை. அதாவது அரசியல் ரீதியில் பிரிந்து போகும் உரிமை” என போல்ஷ்விக்குகளுக்கு அறிவுறுத்தினார். s

Page 27
பாலம்
** சுயநிர்ணய சுதந்திரத்தை, அதாவது பிரிந்து போகும் சுதந்திரத்தை ஆதரிப்பவர்கள் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்குகிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது, மணவிலக்கு சுதந் திரத்தை ஆதரிப்போர் குடும்ப பந்தங்கள் அழிக்கப்படுவதை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவதைப் போலவே முட்டாள்தன மானது; வஞ்சனையானது” என அனைத்து மார்க்சியவாதிகளுக்கும் எடுத்துரைத்தார்.
லெனினின் 118வது பிறந்த நாளை நினைவு கூறும் இவ்வேளையில் தமிழில் அவரது கருத் துக்கள், போதனைகள் எந்நிலையில் பேணப் படுகின்றன? இது நமக்கு மிகுந்த கவலைக் குரிய விடயம். ஏனெனில் ஈழத்தில் முனைப்பு பெற்ற போராட்டம் எவ்வகையானது? அதன் அடிப்படைகள் என்ன? தேசிய இனப் பிரச் சனைக்கும் ஈழக் கோரிக்கைக்கும் என்ன தொடர்பு? இவை குறித்தெல்லாம் தமிழில் மார்க்சிய-லெனினியர்கள் சரியான முடிவுக்கு வராதது, ‘மார்க்சிய-லெனினியத்தை அவர் களது பரணில் பூஞ்சனம் பிடிக்க விட்டிருக்கிற அவல நிலையையேக் குறிக்கிறது.
கடந்த மார்ச் 23 ஆம் தேதி சோவியத் ரஷ்யாவின் ‘சுப்ரீம் சோவியத் தலைமைக் குழு’ கூட்டம் தேசிய இனப் பிரச்சனை மீது விவா திக்க வேண்டிய வருந்தத்தக்க கட்டாயச் சூழலுக்கு உள்ளாகியது. சோவியத் குடியரசு 566 அஸர்பெய்ஜானிலும், ஆர்மீனியா விலும் கசப்பான இன மோதல் சம்பவங்கள் நடந்தேறின. இது உலகெங்குமுள்ள மார்க்சிய வாதிகளை கவலை கொள்ளச் செய்தன. இந் நிகழ்ச்சிகள் சோவியத் நாட்டில் தேசிய இனங் களுக்கு இடையேயான உறவுகள் மிக மோச மடைந்திருப்பதையேப் பறைச்சாற்றுகின்றன. அத் தேசிய இனமக்களின் சமூக பொருளாதார கலாச்சார வளர்ச்சியில் ஏற்பட்ட தவறுகள், அல்லது தேசிய இன சுயநிர்ணயம் குறித்து லெனின் அவர்கள் வகுத்தளித்த வேலைத் திட்டத்தின் செயற்பாட்டுக் குறைபாடுகள் இவைகளே இனப்பிரச்சனையை தலைதூக்கச் செய்த காரணிகளாய் இருக்க முடியும் . இந் நிலை, 70 ஆண்டு காலமாய் தொடரும் சோஷலிச கட்டுமானப் பணிகளுக்கு அப்பால், இன்னமும் தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப் பட வேண்டிய அவசியத்தை, தேசிய இன சுய நிர்ணய உரிமையை மிக நுணுக்கமாய், தீர்க்க மாய் அணுகவேண்டிய தேவையை மார்க்சிய
வாதிகளுக்கு சுட்டிச் சொல்கிறது.
தேசிய இன விடுதலை இயக்கத்தினை புரட்சி நடவடிக்கைகளுடன் இணைப்பதற்காக லெனின் கடும் முயற்சி செய்தார். அவரது முயற்சியை தடுக்கும் குழிபறிப்பு வேலைகளை

23
ஜார் அரசு கடைபிடித்தது. தேசிய இன வெறியை ஊட்டி தொழிலாளர்களை பிளவுப் படுத்துவதிலும், அவர்களின் புரட்சிகர மனப் பான்மையை குறுகிய தேசிய நலன்களுக்குள் முடக்குவதிலும் ஜார் அரசு பெரிதும் கவனம் செலுத்தியது. ஜாரினது இப் பொய்முகத்தின் குரூரத்தை லெனின் தோலுரித்துக் காட்டினார். தொழிலாளர் ஒற்றுமையை சீர்குலைக்கும் நயவஞ்சகத்தை அம்பலப்படுத்தினார்.
தனது நாசகார நடவடிக்கைகள் 1905புரட்சியை’ கரித்தூளாக்கியதைக் கண்டு ஜார் அரசு பூரித்தது. ஆனால் சாம்பல் பூத்திருந்த எழுச்சி மறுபடியும் ஜூவாலை வீசி எரியத் தொடங்கியது. 1910 ஆம் ஆண்டில் தொழி லாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் பூதாகரமாய் எழுந்தது. இவ்வெழுச்சியினை போல்ஷ்விக்குகள் அழகாய் ஒழுங்குப்படுத்தி அமைப்பதில் 9 ibg T3, LDITuli ஈடுபட்டனர். தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் இப் பிரதான பணிக்கு உதவியாய், தொழிலாளர் களை தொடர்பு கொள்ளும் ஊடகம் ஒன்றின் அவசியம் மீண்டும் எழுந்தது.
1912 இல் ருஷ்யச் சூழலை பிரதிநிதித்து வப்படுத்தும் பிராவ்தா நாளிதழ் வெளிவரத் தொடங்கியது. இதை வெளிவராது தடுக்க ஜார் அரசு தீவிரங்காட்டியது. பிராவ்தா அக்டோபர் புரட்சி காலக்கட்டம் வரை எட்டு தடவைகள் தடைசெய்யப்பட்டது. ஆனால் எல்லாத் தடைகளையும் தகர்த்துக்கொண்டு அது வெளிவந்தது. அவ்விதழ மூலம் லெனின் தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று திரட்டி புரட்சியை நோக்கி வழிநடத்தினார். பிராவ்தா இதழ் "சட்ட விரோதமான கட்சிக்கு" வெகு ஜன ஆதரவை வென்றெடுக்கும் சாதனமாக விளங்கியது.
ஜார் அரசு அமைத்த டூமாவில் போல்ஷ்விக் ஆதரவாளர்களின் தொகை பெருகத் தொடங் கியது. இவ்வேளையில்தான், 1914இல் முத லாம் உலகப்போர் மூண்டது. இப்போரின் நாசவிளைவாய், உலகப் பிரசித்திப் பெற்ற சோசலிஷ்ட் தலைவர்களெல்லாம், 'தாய்நாட் டின் தற்காப்பு’ எனும் பதாகையின்கீழ் முதலாளி வர்க்க அரசுகளுடன் கைகுலுக்கிக் கொண்டனர். தொழிலாளர்களையும் முதலாளித் துவ அரசுகளை ஆதரிக்கும்படி நிர்ப்பந்தித் தனர்.
ஆனால் லெனின் அவர்கள், "போருக்கு எதிரான போர்’ என்ற செயல் திட்டத்தை முன்மொழிந்தார். ருஷ்யத் தொழிலாளர்களுக் கும், உலகத் தொழிலாளர்களுக்கும், "போர் புரியும் அரசுகளுக்கு எதிராகப் போர் புரியுங் கள்” என்ற அறைகூவலை விடுத்தார்.

Page 28
24
முதலாம் உலக யுத்தம், ருஷ்ய மக்களுக்கு மிகக் கொடுந்துன்பங்களை விளைவித்தது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து ஜார் அரசின் திட்டங்கள் முளையிலேயே கருகின. ஜாரின் ‘அரசாளும் திறமையின்மை வெளி படத் தொடங்கியதும், அவரைத் தாங்கி நின்ற பூர்சுவா வர்க்கம் ஆளும் தகுதி வாய்ந்த * இன்னொரு நபரை தேடத் துவங்கியது. ஆனால் மக்கள் ஜாரையும் பூர் சுவா வர்க்கத் தையும் ஒருசேர வீழ்த்த உறுதி பூண்டனர். *போருக்கு எதிரான போர் ருஷ்யா எங்கெணும் வீச்சுபெறத் தொடங்கியது. ‘ஆயுதப் போராட் டத்தை ஒழுங்கமையுங்கள்; விடாது தொடருங் கள்’ என மத்திய கமிட்டிக்கு லெனின் அறி வுறுத்தினார்.
இப்போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு ராணுவப் புரட்சி கமிட்டிக்கு வழங்கப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் ஆயுத பாணிகளாயினர். ஜாரின் படைவீரர்கள் திரள் திரளாக போல்ஷ்விக்குகளின் பக்கம் சேர்ந்து கொண்டனர். செம்படை நிறுவப்பட்டது.
பீட்டர்ஸ்பர்க் நகரில் ஸ்மால்னி மாளிகை எனும் ஒரு பெண்கள் கல்லூரி, ராணுவப் புரட்சி கமிட்டியின் செயலகமாக மாற்றப்பட் டது. அடுத்து தொடரப்பட வேண்டிய புரட் சிக்குரிய நடவடிக்கைகள் குறித்து மிகுந்த நுணுக்கத்தோடு செயலகம் திட்டம் வகுத்தது. லெனின் தனது நேரடி மேற்பார்வையின் கீழ் ராணுவப் புரட்சி கமிட்டியின் செயற்பாடுகளை சீர்படுத்தி வழிநடத்தினார்.
புரட்சி முதிர்ந்து கனியும் சூழலை நன்கு கணித்தபின், தாற்காலிக அரசினரை கைது செய்யும்படியும், குளிர்கால அரண்மனையைக்  ைக ப் பற் றும் படி யும் புரட்சியாளர்களுக்கு லெனின் உத்தரவிட்டார். குளிர்கால அரண் மனையின் பின்புறம் கடலில் நிறுத்தப்பட்டி ருந்த அரோரா போர்க்கப்பல் தனது பீரங்கி களை முழங்கியது.அரண்மனையில் செங்கொடி பறந்தது.
அன்றைய தினம் 1917 அக்டோபர் 24 இரவு வழுக்கைத் தலையரும், கரகரப்பான குரல் கொண்டவரும், கட்டுக்குட்டானவரும், பலம் பொருந்தியவருமான லெனின் அவர்கள் ராணுவப் புரட்சி கமிட்டியின் செயலகத்தி லிருந்து தனது தோழர்களின் பதிலை-தான் இரண்டு பகல்களும், இரவுகளும் உறக்கமின்றி ஓய்வின்றி திட்டமிட்ட செயற்பாட்டின் இறுதி முடிவை-எதிர்நோக்கிக் காத்திருந்தார்.
இத்துணை களைப்பு மிகுந்த நிலையிலும், பெரும் மகிழ்ச்சியை அளித்த ‘வெற்றிச் செய்

பாலம்
தியை’ தெரிந்துகொண்ட பிறகும்கூட அவர் உறக்கத்திற்குச் செல்லவில்லை. அடுத்த நாள் காலையில் மக்களுக்கு அறிவிக்க வேண்டிய முதலாவது அரசாணையை - கட்சி மத்தியக் கமிட்டிக்கு சமர்ப்பிப்பதற்காக - எழுதுவதில் ஈடுபட்டார்.
நீண்ட காலம் ருஷ்யாவிற்கு வெளியே வாழ்ந்து தமது தாய்நாட்டின் நிகழ்ச்சிப் போக்குகளைக் கவனமாய் ஆராய்ந்து, ருஷ்யா வின் ‘எதிர்கால உலகை சரியாக மதிப்பிட்டார். அவர் ருஷ்யாவில் ஏற்படுத்திய மாற்றம் உல கின் போக்கையே தலைகீழாக திருத்தியமைத் தது. சோசலிச கட்டுமானத்தின் மகத்துவத்தை உணரும் அனைவரும் லெனினை ஒரு தலை சிறந்த ‘மனிதனாய்’ புரிந்து கொள்கிறார்கள்.
மனிதர்கள் ஆயிரமாயிரம் ஆண்டு கால மாய் கண்டு வந்த கனவை லெனின் யதார்த்த மாக்கினார். உலகின் முதல் சோசலிச தேசத்தை நிர்மாணித்தார். மேதகு மார்க்சும் ஏங்கல்சும் படைத்தளித்த மானுட விடுதலைத் தத்து வத்தை நடைமுறையுடன் ஒன்று சேர்ப்பதில் வெற்றி கொண்டார்.
லெனினது வாழ்க்கை, குணாம்சம், தன் மைச் சித்தரிப்பு, மேதைமை யாவும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. அவர் மனிதனை நேசித் தார். மனிதத்துவத்தை உணர்த்தினார்; மனித
னாய் வாழ்ந்தார்.
லெனின் இறந்து எவ்வளவோ காலமாகி விட்டது. ஆனால் இன்றும் அவர் நம்மிடையே வாழ்கிறார்.
** என்னை
யாரென்றா கேட்கிறாய்? நான்தான் லெனின்”
எனும் நித்ய நம்பிக்கையின் குரல் நம்மில் எழுகிறது. இன்றிருக்கும் மனிதனை இன்னும் மேலானவனாக உயர்த்தும் கடினமான பணியில் ஈடுபட்டிருக்கிறோம், எண்ணற்ற நாம்; எண் ணற்ற லெனின்கள் !
எங்கே பாசிச நிழல் படர்கிறதோ, எங்கே விலங்குகளின் பிடிப்பில் மனிதம் நசிகிறதோ, எங்கே மானுடம் மதிப்பிழந்து புோகிறதோ, எங்கே நம் செளந்தர்யங்கள் கொள்ளை போகி றதோ அங்கெல்லாம் லெனினாய் நாம் கிளர்ந் தெழுகிறோம்.

Page 29
பாலஸ்
பொங்கியெழும் ம
ஜெருசலேமிலி
மில்டன்
(புராதன ஜெருசலேம் நகரத்திலிருந்து அமெரிக்க இடதுசாரிப் பத்திரிகையாளர் மில்டன் பியர்ஸ்ட் மதர்ஜோன்ஸ் இதழில் எழுதிய கட்டுரையை நாகார்ஜூனன் மொழி யாக்கம் செய்துள்ளார்) −
சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் காசா பகுதியில் வெடித்துக் கிளம்பிய பாலஸ்தீன் மக்களின் எழுச்சி வேகமாகப் பரவி ஜெருசலேம் நகரத்திலும், மே ற் கு க  ைர (West Bank) பிரதேசத்திலும் இன்றளவும் தொடர் கிறது. 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி யின் போது பாஸ்டில், சிறையைத் தகர்த்து புரட்சியாளர்கள் வெளியேறியது போல, 1960 களில் அமெரிக்க நகரங்களை மாணவர்கள் முற்றுகையிட்டது போல, இதுவும் திடீரென்று ஏற்பட்ட கிளர்ச்சிதானா ? புரட் சி யி ன் அடித்தளத்தில் ஊர்ந்து சென்று கொண் டிருக்கும் காரணங்கள் யாவை?
1948 இல் பாலஸ்தீனர்களது நாடு முழுமை fT «5 இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1967 இல் ஆக்கிரமிப்பு பரவி, தமது சொந்த மண்ணிலேயே பாலஸ்தீனர்கள் அன்னியர் களாயினர். அவர்களது போராட்டத்தை வீரம் செறிந்த வகையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) வெளிநாடுகளிலிருந்தவாறு இயக்கி வந் தாலும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்கள் நேரடியாகப் போராடும் நாளை அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள்.
1967 போ:ைர எடுத்துக் கொள்வோம். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக எகிப்து, சிரியா, இராக், ஜோர்டான் ஆகியநாடுகள் போரில் குதித்தன. இஸ்ரேலின் இராணுவ வல்லமைக்கு முன் தோல்வி அடைந்த இந்நாடுகள் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கான தம் ஆதர வின் தீவிரத்தை மழுங்கடித்துக் கொண்டன; எகிப்து போன்ற நாடுகள் ஆதரவை நிறுத்தியே விட்டன. 1982 ஆம் ஆண்டு இஸ்ரேல் இராணு வம் லெபனான் மீது படையெடுத்து, பாலஸ்தீன கெரில்லாக்களை அழித்து, அகதி முகாம்களி லிருந்த மக்களைக் கொன்று குவித்தபோது, அரபுநாடுகள் வாய்மூடி மெளனம் சாதித்தன.
பாலஸ்தீனர்கள் சர்வதேச அனாதைகள் ஆகிவிடுவாரோ என்ற பயம் தொடர்ந்தது.

நீனத்தில்
க்கள் போராட்டம்:
நந்து ஒரு கடிதம் பியர்ஸ்ட்
1986 பிப்ரவரி மாதத்தில் 'அமெரிக்க ஏகாதி பத்தியம் பாலஸ்தீனர்களது சுயநிர்ணய உரிமையை எதிர்ப்பதாக திட்டவட்டமாக அறிவித்து விட்டது. சென்ற வருடம் அரபு நாடுகளின் தலைவர்கள் ஜோர்டானில் சந்தித்த போது பாலஸ்தீனர்களது பிரச்சினை பின் தள்ளப்பட்டு விட்டதையும் கண்டோம். இதை யடுத்து பாலஸ்தீனர்களது பி ர ச் சி  ைன பாலஸ்தீனர்களாலேயே தீர்க்கப்படவேண்டும்தீர்க்கப்பட முடியும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்!
※ ※ 米
டிசம்பர் மாதத்தில் திடீரென்று ஒருநாள் இஸ்ரேலியர் ஒருவர் காசா பிரதேசத்தில் குத்திக்கொல்லப்பட்டார். அடுத்த நாளே டிரக் ஒன்று மோதி அரபு தொழிலாளிகள் நால்வர் இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர். டிரக்கை ஒட்டியவர் குத்தட்பட்ட இஸ்ரேலியரின் உறவினர், என்றும் அவர் பழிவாங்கவே டிரக்கை மக்கள்மீது எற்றினார் என்றும் செய்தி பர வியது. பாலஸ்தீன இளைஞர்களோ தைரியத் துடன் இப்பிரச்சினையை எதிர்கொண்டனர்; இருவாரங்களுக்கு முன்பு லெபனானிலிருந்து Gas it sig56LDT 60th (Hang Glider) segirfsi) பறந்துவந்து தாக்கி ஆறு இஸ்ரேலிய இராணு வத்தினரைக் கொன்ற பாலஸ்தீன கெரில்லா வைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.அவர்கள். இஸ்ரேல் அரசு டிரக் ஒட்டியவருக்குதண்டனை எதுவும் கொடுக்காமல் விட்டதால், பாலஸ்தீன இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தனர்!
உடனே இஸ்ரேல் தனது ஆயுதப்படைப் பிரிவை அனுப்பிப் போராட்டத்தை நசுக்க ஆரம்பித்தது. ஆனால் ஒடுக்குமுறை அதிக மாக அதிகமாக, போராட்டமும் பெருக்கெடுத்து விட்டது. பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்துப் பாலஸ்தீனர்களும் பங்கெடுக்கும் போராட்டமாக அது மாறிவிட்டது! இஸ்ரேலிய அரசு முதலில் பாலஸ்தீன விடுதலை இயக்கமே இப் போராட்டத்தை ந ட த் துவ தாக அறிவித்தது. ஆனால் (பாலஸ்தீன விடுதலை இயக்கமே மகிழ்ச்சியுடன் வியக்கும்படி) மக்களே போராட்டத்தை நடத்தினர். போராட்டம் தொடங்கிய இரண்டு மூன்று வாரங்களுக் குள்ளாகவே இஸ்ரேலிய அரசு பயங்கர

Page 30
* ஒரு நாட்டின் மக்கள்
அந்த ந எந்த அந்நிய இராணுவத்தா
. மகாத்மா
வாதத்தைத் தவிர வேறெதையும் பிரயோ கிக்கத் தெரியாமல் தாடுமாறியது. பாலஸ்தீன இளைஞர்களோ விடுதலை உணர்வையும், போராட்ட அறிவையும் ஒருசேர அனுபவித் தனர்!
போராட்ட எழுச்சிக்கு ஒரு முக்கிய உந்து சக்தியாக முபாரக் அவாத் என்ற 44 வயது பாலஸ்தீனரின் போதனைகள் இருந்தன. அவாத் ஒரு கிறித்துவ அராபியர். அவரது தந்தை 1948 இல் நடந்த யுத்தத்தில் இஸ்ரேலி யர்களால் கொல்லப்பட்டார். தாய் அவரை ஜெருசலேமிலிருந்து அமெரிக்காவுக்குக் கடத்திச் சென்று அங்கு கிறித்துவ இறையியலாளர் பள்ளிகளில் சேர்த்தார். மாணவராயிருந்த அவாத் வியட்நாமில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்த பல்கலைக் கழகப் போராட்டங் களில் பங்கெடுத்தார். இளம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் உளவியலாளராக (Counselor) Lil Lib Guibol 605 Gust நகரத்தில் பணியாற்றி வந்தார்.
ஆயினும் தாயகத்துக்குத் திரும்ப வேண்டும் என்ற உணர்வு இவரை உந்தித்தள்ள, 1983ஆம் ஆண்டில் ஜெருசலேமுக்கு வந்தார். பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு அடிமையாகி, ஆக்கிரமிப்பை உள்வாங்கிக் கொண்டு வி ட் ட ன ர் (Internalising the Occupation) 6T66s of 56&T L-flig5 T i. 9,ids. T மிப்புப் பிரதேசத்திலிருந்த மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றின் மோசமான நிலைமைகளுக்குக் காரணமாக பாலஸ்தீனர்கள் இஸ்ரேலையே கருதியதைப் பார்த்தார். பாலஸ்தீனச் சிறுவர்கள் பலரும் சிறிய குற்றங் களில் சிக்கிக் கொண்டிருப்பதையும் பார்த்து மனம் வருந்தினார்.
ஆயினும் அவாத்தின் முதல் கூட்டத்துக்கு அதிகப்பேர் வந்தனர். பின்பு அவருடைய செயல்பாடுகளுக்கு ஆ த ர வு பெருகியது. பாலஸ்தீன மக்களிடையே கொஞ்சம் கொஞ்ச மாக அவர் ஓர் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். இதன்படி **பாலஸ்தீனர்கள் யாரும் அடையாள அட்டை எடுத்துச் செல்ல மாட்டார்கள்! லைசென்ஸ்களை வாங்க மாட் டார்கள். வேலை அத்தாட்சி சீட்டுக்களை
இஸ்ரேலியரிடமிருந்து பெற மாட்டார்கள்.

ஒத்துழைக்க மறுத்தால் ாட்டை
லும் ஆக்கிரமிக்க முடியாது ”
காந்தி
| O
வரிகள் செலுத்த மாட்டார்கள். இஸ்ரேலின் பொருளாதாரத்தில் பங்கு கொள்ள மாட்டார் கள்”.
தடை செய்யப்பட்டிருந்த பாலஸ்தீன விடுதலைக் கொடி, அவாத்தின் ஆலோசனை யின் பேரில் காசா பிரதேசத்தில் பறக்கவிடப் பட்டது. சாலைகள் இளைஞர்களால் மறிக்கப் பட்டன; தொலை பேசிக் கம்பிகள் அறுத்தெறி யப்பட்டன; மக்கள் பொங்கியெழுந்தனர். பலர் கைதாயினர்.
அவாத்தின் அணுகுமுறைகளைப் பலர் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றனர்; சிலர் அவரை அமெரிக்க எஜெண்டு என்கிறார்கள். சிலர் அவர் பாலஸ்தீன விடுதலை இயக்கத் துக்குப் போட்டியாக வந்துவிட்டார் என்றும் நினைக்கின்றனர். ஆனால் அவாத் தான் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்குக் கட்டுப் பட்டவர் என்றே கூறுகிறார். மேலும் அவரது அணுகுமுறைகள் ஆயுதப் போராட்டமாக இல்லாவிடினும், அவையே ஆக்கிரமிப்புப் பிர தேசத்தில் இஸ்ரேலிய அரசுக்கெதிராக சிறந்த வெற்றிகளை ஈட்டியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. அவாத்தை அமெரிக்காவுக்குத் திருப்பியனுப்ப இஸ்ரேல் அரசு தீர்மானித்து விட்டது.
முதலில் இதை எதிர்த்த அமெரிக்க அரசு பிறகு வாயை மூடிக்கொண்டு விட்டது. தொடர்ந்து வாஷிங்டனிலுள்ள பாலஸ்தீன விடுதலை இயக்க அலுவலகத்தை மூடிவிடு மாறும் இஸ்ரேல் நிர்பந்திக்கிறது.
எனினும் அவாத்துக்கும் அவரது ஆதர வாளர்களுக்குமே பாலஸ்தீன மக்களின் எழுச்சி பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கக் கூடிய தாக இருந்தன. பாலஸ்தீன இளைஞர்கள் நேர டியா க ச் சாலைகளில் இறங்கித் தொடர்ந்து போராடியதை அவர்கள் அவ்வளவாக எதிர்பார்க்கவில்லை என்றே தெரிகிறது.
இதுவரை சுமார் 200 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆ ன ர ல் இஸ்ரேலிய இராணுவத்தினர் யாருமே சாக வில்லை. ஓரளவு ஆயுதங்களைத் தவிர்த்த இப் போராட்டம் வெற்றியடைந்திருப்பதைப் புரிந்து கொண்ட பாலஸ்தீன விடுதலை இயக்க ஆதர

Page 31
வாளர்களும் கூட தங்கள் ஆயுதங்களை மறைத்து விட்டுக் கடுமையாகப் போராட விழைந்துள்ளனர். தொலைக்காட்சி இயக்குவ தும் சர்வதேசப் பத்திரிகையாளர் குழுக்கள் போய்வருவதும் போராட்டத்தின் எழுச்சித் தன்மையை உலகம் அறிந்து கொள்ள வழி வகுத்துள்ளன.
முதலில் போராட்டத்தலைவர்களைக் கைது செய்து அவர்களுடன் ஒரு பேரத்தை நடத்திப் போராட்டத்தை மழுங்கடிக்கலாம் என்று இஸ்ரேலிய அரசு எண்ணியது. 1970களில் ஆக்கிரமிப்புப் பிரதேசங்களிலிருந்த தலைவர் களைக் கொன்று குவித்த இஸ்ரேலுக்கு இப் போது வேறுவழிகள் எதுவும் இல்லை. அவாத் போன்றவர்களைப் பொறுத்தவரை போராடும் இளைஞர்களை அவர்களால் கட்டுப்படுத்தவும் இயலாது. உண்மையில் ‘தலைவர்கள்" என்று யாருமே இல்லை. அகதிகள் முகாம்களில் வாழும் இளைஞர்களே தினசரி மாலை வேளை களில் தங்கள் நண்பர்களுடன் போராட்டத் துக்கான தந்திரங்களையும், வழிமுறைகளையும் வகுத்ததை நான் நேரே கண்டேன்.
இஸ்ரேல் பல முக்கிய குடிமகன்களைக் கைது செய்தது. ஆனால் உடனடியாக எந்தவிதப் பயனுமில்லை. போராட்டம் தொடர்ந்தது. கைது செய்யப்பட்டவர்கள் இஸ்ரேலிய அரசிடம் சொன்னார்கள்:
'நீங்கள் ஆக்கிரமிப்பை வி லக் கி க் கொள்ளும் வகையில் அரசியல் தீர்வுக்குத் தயாராகுங்கள். அதற்காக எங்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்!”
பலவருடங்களாகப் பேச்சுவார்த்தை என்ப தையே தவிர்த்து வந்த இஸ்ரேலியத் தலைவர் களை இஸ்ரேலிய மக்கள் இப்போது விமர் சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 'பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் பேசுவதில் என்ன தவறு!’ என்று இப்போதுதான் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்! பாலஸ்தீனர்களின் சுயநிர்ணய உரிமைக்கு இஸ்ரேலிய மக்களிட மிருந்து ஆதரவு வரும் என்பது போலத் தெரி கிறது. தங்கள் அரசு பாலஸ்தீனமக்களை ஒடுக்கிவருவதற்கு இனியும் தாங்கள் துணை போகக் கூடாது என்பதில் அவர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள்.
ஆனால் மக்களின் உணர்வு நிலையில் உள்ள மாற்றத்தை உள்வாங்கக்கூடிய சக்தி இஸ்ரேலிய அரசியல் கட்சிகளிடம் இல்லை. எனினும் உலக அரங்கில் தனிமைப்பட்டுப் போயுள்ள இஸ்ரேல், இனியும் பாலஸ்தீன மக்கள் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்க முடியாது என்பதை டிசம்பர் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
O

t
ஈழ நண்பர் கழக மாத இதழ்
ஆசிரியர் நதி
ஆசிரியர் குழு இரா. திரவியம்
சமந்தா ச. மா. பன்னீர்ச்செல்வம்
ஆண்டுச் சந்தா ரூ. இருபது
.
முன் அட்டை : பாலஸ்தீன விடுதலை இயக்கத் தளபதி அபு ஜிகாத்
O
பின் அட்டை : பாலஸ்தீனர்கள் போராட்டத்திற்கு, போராட்ட ஆதரவைத்
தெரிவிக்கும் சுவரொட்டி
தொடர்புகளுக்கு : Lu IT 6)tib 12, முதல் பிரதான சாலை நேருநகர்
அடையாறு சென்னை-20

Page 32
பதிவு என
***si|- **) 劈) saesis.s.·Laesae; *
■■
sae
 
 
 

டி. என். எம். எஸ். (எஸ்) 371