கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலம் 1987.08

Page 1
燃焼リ W.
%
ά
残
వ్లో 纷
梁 盈 §§
『페*
혁 圈■聆劑 绑丝
澄后与1参
途)
لمعقل للقلق
gio ప్రస్త్ర
 

& نه دي؟
後%

Page 2
ஈழ நண்பர் கழக
மாத இதழ்
ஆசிரிய f நதி
ஆசிரியர் குழு இரா. திரவியம் சமந்தா
ச. மா. பன்னீர்ச்செல்வம்
தனி இதழ் ரூ. 1,50 ஆண்டுச் சந்தா ரூ. இருபது
படைப்புகள்
சந்தா நன்கொடை அனுப்புதல் முதலிய அனைத்துத் தொடர்புகளுக்கும்
Lu Fr6ULD
12, முதல் பிரதான சாலை நேரு நகர்
அடையாறு
இது ெ ரத்தத்திற்கு இலட்சியமு இலங்ை .که தோடும்
பிணைந்து g
மண்ணி போராடிய துணை புரிந், இன்று இறு இந்திய கள் இது.
ஈழத்தில் கிடைத்த ே அறியாமலே அரசுகளிடை
இந்தத் கூடாது என இனவெ மான கோரி சினைக்குத் போரை ஒப் முடியாது. இ கையின் ஒட்( எடுக்காது, தொழிலாள6 உள்நா! மிக்க ஏகாதி தை மட்டும் வது வேண் (ஆனல் ஏ தொடர்ந்து
இராணு கண்ணிர் சி வேண்டி தம் கள், இப்பே பெற முடிய
ஈழத் கண்ணிரைத் ஈழத்தமிழர்க நாம கணணி
நாம் ஆவேசமுறுவி நியாயப தில்லை. அது ஒன்றைச் ச களும், பழை ஈழத் தமிழ் ப அறுத்தது. துக் கொண் இந்த நல்ல திலும் தெ
6r 6örgl 6 TLD,
 

போராட்டம் தொடரும்
ரை காலமும் இலங்கையில் தமிழர்கள் சிந்திய ம் கண்ணிருக்கும் பின்னே, கனவுகளும் ஒரு ம் இருந்தது. . )கத் தமிழர்களின் கனவுகளோடும் லட்சியத் தமிழகத்து மக்கள் இரத்தமும் சதையுமாக
ருந்தனர். ல் கால் பதித்து மக்களோடு ஒன்றிணைந்து போராளிகள் மத்தியிலும், அவர்களுக்கு உறு து உற்சாகம் தந்த தமிழக மக்கள் மத்தியிலும் |க்கமும் நிராசையும் நிறைந்து கிடக்கிறது.
சிறிலங்கா ஒப்பந்தம் ஏற்படுத்திய விளைவு
9 தமிழர்கள் போராடியதற்கும் உயிரிழந்ததற்கும் கெளரவம் அவர்கள் விருப்பத்தை என்னவென்று யே அவர்களுக்காக ஒரு ஒப்பந்தம் )ந்த இரு யே ஏற்பட்டதுதான்.
துயரம் எந்த நாட்டு போராளிகளுக்கும் நேரக் ன்பது மட்டுமல்ல அனுமதிக்கவும் கூடர்து. 1றியைத் தோற்கடிப்பதும் தமிழர்களின் நியாய க்கைகளை வெற்றி பெற வைப்பதும் தான் பிரச் தீர்வாக இருக்க முடியுமே தவிர, உரிமைப் பந்தங்களால் திரை போட்டு மறைத்து விட இப்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில் கூட்ட இலங் டு மொத்த தமிழ்ச் சமுதாயத்தைக் கணக்கில் வழக்கம் போல, மலையகத் தமிழ்த் தோட்டத் ரை கைவிட்டு விட்டனர். ட்டு இன முரண்பாட்டைத் தீர்க்காமல் பகைமை பத்திய இராணுவச் சக்திகளை தடுத்து நிறுத்திய பிரச்சனைக்குத் தீர்வு என விளம்பரப் படுத்து டுமென்ருல் விளம்பரத் தீர்வாக அமையலாம். ாகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கம் அப்படியே இருக்கிறது.)
6. ஒடுக்குமுறைக்கு எதிராகப் (ši 1TTIгиந்திய தம் மக்களின் துயரத்தைத் துடைக்க ழெகத்தின் ஆதரவைத் திரட்ட வந்த போராளி ாது தஞ்சம் புகுந்த மக்களிடம் கூட விடை ாத இறுக்கத்தோடு தாயகம் திரும்புகின்றனர். தமிழர்கள் கண்ணிரோடு வந்த போது துடைத்து ஆதரவு தந்தோம். நம்மோடு இருந்த ளை இன்றைக்கு காணமுடியவில்லை. இப்போது ரீரோடு நிற்கிருேம்.
அழமுடிவதால் தான் ஆவேசப்படுகிருேம். பதால் போர்க்குணம் எய்துகிருேம். 0ான உரிமைப் போர் எங்கும், என்றும் தோற்ற து ஈழத்திலும் தொடரும் என்ற நம்பிக்கையில் ஈட்டிக்காட்ட விரும்புகிருேம். ஜாதிய பிரிவினை மைப் பிடிப்பும் பெண்ணடிமைத் தனமும் நிறைந்த க்களின் போராட்டம் ஜாதியத் தளைகளை ஒரளவு பெண்கள் தங்கள் பழமை வட்டங்களை உடைத் டு வெளியேறி போராட்டத்தில் பங்கேற்றனர். அம்சத்தை ஈழத்தமிழர்கள் இனிவரும் காலத் ாடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் து வேண்டுகோள்.

Page 3
வியத்நாம் தொடர்கதை )
குயென் அடிக்கடி கைக்கடிகா ரத்தைப்பார்த்துக் கொண்டே இருந்தார். சற்று நேரத்தில் பக்கத்து அறையிலிருந்து ஒரு பெண்ணின் குரல் கே ட் டது. *" குயென், நேரம் ஆகிவிட் டது” என்று குரல் வந்தது.
இன்று மாலை 8-30 மணிக்கு ரேடியோ ஹ ஞ யி லி ரு ந் து ஒலி பரப்புச் செய்தியொன்று கீழ்கண் ட வா று கூறி ய து **இப்பொழுது வட வியத்நாம் முழுவதும் திரையிடப் பட்டு வரும் நகூயென் வான் ட்ராய் என்றும் வாழ்கிருர்’ எ ன் ற திரைப் படத்தின் முழு ஒலிச் சித்திரம் ஒலி பரப்பப்படும்” என்பதுதான் அறிவிப்பு.
ஒலிபரப்புத் தொடங்கிய முதல் விஞடியிலிருந்து ட்ராய்க் குப் பின்னுலேயே ந ட ந் து தூக்குமேடைக்களத்தை நோக் கிச் செல்வதைப் போல வே அனைவருக்கும் உணர்வு தட் டியது. வானுெலி வர்ணனை யாளரின் குரல் உணர்ச்சி வசப் படும். சிலசமயங்களில் வெறுப் புணர்வோடு சீறிப்பாய்வார். ஒவ்வொரு காட்சியாகக் கடந்து கொண்டு போய்க்கொண்டிருந் தது. பத்திரிகையாள ரி டம் ட்ராய் பேசினர். பசுமையான செடிகளிடம் நிற்கிருர், தன் கண்கட்டை திடீரென்று கிழித் தெறிகிருர்,
டிரான்சிஸ்டர் ரேடியோவை கையில் அனைத்துப் பிடித்துக் கொண்டு குயென் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டுக் கொண்டு வந்தார். ஒவ்வொரு சொல் லும் வானுெலிமூலம் கே ட் கும் போதும் அவருடைய கண்ணி லிருந்து நீர் பொங்கிப் பொங்கி வடிந்தது. நேரத்திற்கு நேரம் பெண் பிரதிநிதிகளிடமிருந்து பெருமூச்சும், அழுகைக் குரலும் வெடித்து தது. W−
காட்சி மாறுகிறது. இரவு பகலாக சைக்கோன் நகரில் கிளர்ந்கொமகிருர்கள் மக்கள்.
வந்துகொண்டிருந்
தீவட்டிகள் காட்சி தருகி
நகர மின்சார
யத்தில் நடை நிகழ்ச்சியில் ட் தொழிலாளியா படுத்துகிருர் . ஆலையொன்றில் உயரத்தில் ை அவ்வளவு உய மிகப் பெரிய : மாட்டுகிருர்கள் வகுப்பறையில் நினைவுகள் றன. .
**வியத்நாமி வாழ்கிருர் ட்ர 36 (560) Ltly கள்-மலை மு தீவுகள் வரை, லிருந்து கடற் கும் அவரது உ காட்சி தருகின்
கப்பலின் த
கடல் அலை ஒ
னனையாளரின் வானெலியில்
களையும் அங்கு கிறது.தென்ஸ் தலை செய்யப் சின்னஞ்சிறு வி வாழும் பத்து
பேர் இந்த ஒ
 

தமிழில் பொன்னி வளவன்
தெருவெல்லாம் Dது. ஹ ஞய உற்பத்தி நிலை டபெற்ற ஒரு -ராய கவுரவத s பிரகடனப் இரும்பு எஃகு ஸ் எ வ வ ள வு வக்க முடியுமோ ரத்தில் ட்ராயின் உருவப்படத்தை பள்ளிகளில்
வ ரு  ைட ய
அ எதிரொலிக்கின்
ல் இ ன் னு ம். ாய், எ ங் கும் உருவப்படங் முகடுகளிலிருந்து கட்டாந்தரையி கரை வரை எங்
ளத்தில் மோதும் சையோடு, வர் கு ர லும் வருகிறது...எங் கொண்டு செல் பியத்நாமில் விடு பட்ட பகுதியில்  ெடா ன் றில் ப் பனிரெண்டு
லிபரப்பைக் கூர்
என்ற
மையாகக் காது கொடுத்துக் கேட்டுக்கொண் டி ரு க் கி ரு ர் கள்-அவர்களும் ட்ரா யு ட ன் தாயகத்தைக் காக்கும் வகையில் கடற்கரை ஓரமாக ரோந்து சுற்றும் படகில் ப ய ண ம் போய்க்கொண்டிருக்கிரு ர் க ள் இரவு பகலாக!
எங்களைச் சுற்றிலும் மாநாட் டிற்கு என ஒதுக்கப்பட்டுள்ள முகாம் முழுவ தி லு மிருந்து வெளிவந்துகொ ன் டி ரு ந் த வானுெலியில் கம்மிய குரலில், உணர்வு பீறிட, க விஞர்
தோஹியூ தனது 'என் சொற்
களை நினைவிற் கொள்ளுங்கள்” கவிதையைக் கூறிக் கொண்டிருக்கிருர், அத்தோடு நிகழ்ச்சி வானுெலியில் முடி வடைகிறது.
வானுெலி நிகழ்ச்சி முடிந்தும் முடியாமலே சைகோன் பிர நிதிகளிடையே விவாதங்க ள் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு வரும் ஏதாவது கூறினுர்கள். **வடவியத்நாம் மக்கள் தங்கள் சொந்தப் பிள்ளைகளைவிட அதி கமாகவே ட்ராயை நேசிக்கிருர்
கள்’-** உண்மை யிலே யே
ட்ராய் வடவியத்நாமிற்கு இப் பொழுது வருகை தந்திருக்கி
ரு ர் - 8 வ -
ய த் நா ம்

Page 4
Jr 6) b
போர் ப் ப  ைட யி ல் ட் ரா ய் சேர்ந்துவிட்டார்’, ‘அவர் கடற்படையில் இருக்கிருர் .”
ஒரு பேராசிரியை “யூ’ என் பவர் ட்ராயின் மரணம் குறித்து மேலும் சில விவ ர ங் களை க் கூறினுள்.
**வடவியத்நாமில் ட்ராயினு டைய மரணத்தைப்பற்றி ஒரு சின்னப் படம் தான் இருக் கிறது என்று நினைக்கிறேன். ட்ராயின் மரண தண் டனை நிறைவேற்றப்பட்டபோது என் னுடைய மாணவனுடைய சகோதரன்-ஒரு பத்திரிகை நிருபர்-அங்கிருந்திருக்கிருர், ஆகையால அந்த ! [}|fHT &შშ, I’ வனுக்கு சில விஷயங்களைச் சொல்லியிருக்கிருர் . சில பத்தி ரிகை நிருபர்கள் ட் ர எ யை நிறையப்படம் பிடித்து விட் டார்கள் என்றும், குறிப்பாக அவர்களது கேள்வி க ளு க் கு ட்ராய் பதில் சொல்லும்போது படம் பிடித்திருக் கி ரு ர் கள். மரண தண்டனையை நிறை வேற்றும் துப்பாக்கிப் படை யைக் கண்டவுடன் ட்ராய் நிலை குலைந்து விழுந்துவிடுவார் என்
றும் தனது குற்றங்களை மனம் திறந்து ஒப்புக்கொண்டு எல்லா ரகசியங்களேயும் சொல்லிவிடு வார் என்ற நப்பா  ைச யில் அமெரிக்க-கான் கூட்டுக் கும்
பல் வெளிநாடுகளிலிருந்தெல்
லாம் பத்திரிகையாளர்களைக் கொண்டு வந்திருந்தார்கள், கூலிக்கு மாரடிக்கும் சில
கூலிப் பத்திரிகையாளர்களும், ரகசிய உளவாளிகளும் ஆத்திர மூட்டும் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று தயாராக இருந்த னர். ஆன ல் பா ழ  ைட ந் த ஒதுக் க ப் பட்ட தனிமைச் சிறையிலி ருந்து ட்ராய் வெளியே வரு வதைப் பார்த்த மாத்திரத்தி லேயே இவனை ய T ரு ம் அசைக்கமுடியாது எ ன் ப ை த அறிந்துகொண்டார்கள். பத்தி ரிகையாளர்களைப் பார் த் து மெல்லப் புன்னகை செய்தார்.
அங்கே கூடி சிலர் மரண த வேறப் போவ
கதிகலங்கிப்
கள். ஆணுல் ட மகிழ்ச்சி ததும் சிரித்தவண்ணம் பத்திரிகையாள எல்லா கேள்வி சொன்னுர், 6 மாணவன் தன கூறியதை அ ஞன். ட்ராய் பத்திரிகையாள கள் அனைவரு யாளர்கள், ஆ நடந்துகொண்ட பது உங்களுக் தெரியும். எங் அமெரிக்கர்கள் கொண்டிருக்கிரு னங்களிலுைம், குண்டு வீச்சுகள மக்களைக் கொ கொண்டிருக்கி( வியத்நாமை ெ மக்நமாரா ஒரு வகுத்துவைத்தி னுடைய தந்ை அளவு கடந்து அமெரிக்கர்கள் அபகரிக்க
டிருக்கமாட்டே றைக்கும் எங்க களுக்கு எதிரா கிடையாது. ந கர்களுக்குத்தா6 தெற்கு விய, கொலைகள் நட மாகவிருந்த அ வைத் தொலைத் பினேன். 穷究
அப்பொழுது யாளர் ட்ரான
**சாவதற்கு மு
கவாவது கவலை
என்ருர் .
ஏதும்
அதற்கு ட்ரா ** என்னுடைய மெல்லாம் கொல்வதில் டேனே என்பது

பிருந்தவர்களில் ண்டனை நிறை தை எ ன் னி போயிருக்கிருர் -ராய் மட் டு ம் பும் முகத்துடன் இருந்தார். si கே ட் ட களுக்கும் பதில் ானக்கு அந்த து சகோதரர் ப்படியே கூறி அப்பொழுது ர்களிடம் நீங் ம் பத்திரிகை கையால் என்ன டிருக்கிறது என் குெ ந்ன்ருகத் கள் நா ட்  ைட ஆக்கிரமித்துக் ரர்கள். விமா L. rh is is 35 ரினுலும் எங்கள் ன்று குவிக்தூக் ரர்கள். தென் வற்றி கொள்ள பெரியதிட்டமே ருக்கிருர் . என் தயா நாடடை நேசிக்கிறேன். எனது பூமியை சகித்துக்கொண் ன். நான் என் 5ள் நாட்டு மக் க இரு ந் த து நான் அமெரிக் T எ தி ரி. த்நாமில் படு டக்கக் காரண ந்த மக்நமாரா துக்கட்ட விரும்
ஒரு பத்திரிகை யைப் பார்த்து ன்ல்ை எதற்கா வருந்துகிருயா?
) s 65 TLIt?'
ாய் உடனேயே ஒரே வருத்த மகநமாராவைக தோற்றுவிட் துதான்.”
ஒரு கத்தோலிக்கப் பாதிரி யார் ட்ராய்க்குப் பாவ விமோ சன ஜெபம் நடத்த விரும்பிய போது, அதற்கு ட்ராய் மறுத்து விட்டார். ‘ஒரு பா வ மும் நான் செய்யவில்லை. அந்த அமெரிக்கர்கள்தான் பாவத் தின் சின்னங்கள்” என்ருர் .
வாழ்வின் இறுதி மணித் துளி வரை அங்கு கூடியிருந் தோரை ஆச்சரியத்தில் ஆழ்த் திக்கொண்டிருந்தார். தண்டனை நிறைவேற்றத்தின் முதற்படியாக முதல் குண்டுகள் சுடப்பட்டன. அவை அவரது நெஞ்சில் தாக்கின; ஆனுலும் உரத்த குரலில் 'வியத்நாம் நீடூழி வாழ்க!” என்று கூறி ஞர்.
சில பத்திரிகையாளர்கள் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது * SEff '
வென்று அழுதனர். இப்படி யொரு மனிதன் சாவை இவ்
வளவு அமைதியாக ஏற்றுக் கொள்ள முடிகிறதா, இவ் வளவு ஆழமானதா அவனது
தாய் நாட்டன்பு எ ன் ப  ைத நம்பவே முடியாது திகைத்து நின்றனர்.
ட்ராய் தனது கண்ணைக் கட்டியிருந்த கருப்புத்துணி யைக் கிழித்து எ றி ந் து
கொண்டே ‘ஓ! என் தேசத் திற்குரிய மண்ணை, என் நாட் டைப் பார்க்க என்னை விட்டு விடுங்கள்!” என்று பலமாக சத்தம் போட்டார்.
பிற்போக்குப் பிண்டங்கள், மனித குலத்தை ஏ மா ற் றி த் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள 'கம்யூனிஸ்ட்டுகளுக் குத் தாயகமோ, நாடோ கிடை யாது’ என்று பல்லாண்டு களாக நஞ்சூட்டி வைத்திருந் தார்கள். ஆணுல் இதோ சில
பத்திரிகையாளர்கள் 26 மையை நேருக்கு நேராகச் சந்திக்கிருர்கள்.
L} தொடரும்
idges

Page 5
தமிழக மக்களுக்கு R தோழர் சுந்தர்
வாழத் துடித்த ஒரு மானுடக் கூட்டத்தின் பிரதிநிதிகளாய் நாங்கள் உங்களுக்கு அறிமுக மானுேம். *77 ஆம் ஆண்டு ஆகஸ்டு கலவரம், தமிழகத் தேசிய சக்திகளை எம்மீது அனுதாபம் கொள்ளச் செய்தது. இந்திய உபகண்டப் பிரச்சினைகளில் ஈழப் பிரச்சனையும் பின்னிப் பிணைந்திருப்பதனுல், இந்தியாவின் முக்கியத் துவத்தை உணர்ந்து எமது போராட்டத்திற்கு பின் தளமாய் இந்தியாவைக் கொள்ள நாம் எண்ணம் கொண்டோம். இந்தியாவின் உள் ளாம்ச முரண்பாடுகள் எம்மைப் பாதிக்காவண் ணம் அவர்களின் உதவியை, ஆதரவை வகை யாகப் பயன்படுத்தத் திட்டமிட்டோம். 177 இன் இலங்கைக் கலவரம் எம்மை இத்தீர்மானத்திற்கு உந்தித் தள்ளியது. அவ்வேளையில் தொடக்கக் கால ஈழப் போராளிகள், தேசிய சக்திகளுடன் தம்மை அடையாளப்படுத்தியிருந்தனர். பரவ லான அபிப்பிராயத்தை அவ்வேளையில் ஈழப் போராட்டம் பெற்றிருக்கவில்லை. *77 இன் பின்னுல் ஈழத் தேசிய இனப் போராட்டத்தின் தீர்மான சக்தியாய் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை அடையாளப் படுத்தி, உருப்பெறத் தொடங்கியிருந்தனர். இவ்வேளையிலேயே நாங் கள் இங்கு அறிவுஜீவிகள் மத்தியில் எம்மை அறிமுகப் படுத்திக் கொண்டோம். ஈழப் போராட்டத்தின் தத்துவ வேறுபாட்டை, உள் முரண்பாடுகளை, சிக்கல்களை, சரியான திசையை நாம் புரிய வைத்தோம். தமிழக அறிவுஜீவிகளில் சிலர் எம்மைப் புரிந்து கொண்டனர். ‘தமிழக ஈழ நட்புறவுக் கழகமாய் 1977 இல் தம்மை அமைப்பு வடிவத்திற்கு உட்படுத்திக் கொண் டனர். இக் கழகமே ஈழப் போராட்டத்தின் ஆதரவாளர்களை அமைப்பு வடிவமாகக் கொண்ட முதல் ஆதரவாளர் அமைப்பாகும். இவ்வமைப்பு மாதாந்தக் கூட்டங்களை நடத்தி யது. எம்முடன் அரசியல் உறவுடன் அல்லாது, எமது இலக்கியம், கலை, சமூக இயல், வரலாறு இவற்றுடனும் உறவு கொன்டது. சிறு வெளி
 

எங்கள் நினைவுகளே உங்களிடம் கையளித்துள்ளோம்
ழப்புரட்சி அமைப்பின்
எழுதிய கடிதம்
யீடுகளை வெளிக்கொணர்ந்தது. ‘இலங்கையில் ஈழம்' என்னும் சிறு நூல் அவ்வேளையில் ஈழப் போராட்டத்தை, அதன் வரலாற்றை புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தியது. இதனைக் கண்டு தமிழீழத் தேசிய சக்திகள் தம்  ைம தமிழகத் தேசிய சக்திகளுடன், அவற்றைப் பிரதிபலித்த கட்சிகளுடன் தம்மை நெருக்கமாய் அடையாளப்படுத்திக் கொண்டன. ஒவ்வொரு தமிழக கட்சிகளும், ஒவ்வொரு தமிழீழ இயக் கங்களை ஞானக் குழந்தைகளாக சுவீகரித்துக் கொண்டன. நாம் இவற்றில் இருந்து ஒதுங்கி, பார்வையாளர்களாய் இருந்ததுடன் தமிழகத் தின் முற்போக்காளர்களிடம் எம்மை அடை யாளப் படுத்தினுேம் . அவர்களிடம் நண்பர் களாய் உறவு கொண்டோம்; தோழமையை வளர்த்துக் கொண்டோம்; கருத்துக்களைப்
பரிமாறிக்கொண்டோம், விவாதித்தோம்; தாயகத் தமிழன், சேயகத் தமிழன் எ ன் ற மனப்பாங்குடன் நாம் உறவு கொள்ள
வில்லை. நாம் இருவரும் மனித நேயத் தையே உயர்த்திப் பிடித்தோம். ம னி த குலத்தை துன்பங்களும், து ய ர ங் களு ம் சூழுகையில் துன்பப்பட்டோம்; எதிர் கொள்ளும் பக்குவம் பெற்ருேம்; ஆற்றலை வளர்த்தோம். உலகெங்கும் ஆன அடக்குமுறைகளை எதிர் கொள்ளும் ஒவ்வொரு பே ா ர T விரி  ைய யு ம், தோழனையும் நினைவு கொண்டோம். அவர்கள் உணர்வுகளுடன் இறுக்கமானுேம். அப் போரா விரிகளின் வெற்றிகள் எமக்கு உற்சாகமூட்டின, அவர்களுடைய அனுபவங்களை நாம் உள் வாங் கிக் கொண்டோம். எங்களுக்கும் இந்தியா விற்குமான, குறிப்பாகத் தமிழகத்திற்குமான உறவு இப்படித்தான் இருந்தது. அறிவுஜீவி களுடன் ஆரம்பித்த எமது உறவு, இலக்கிய அமைப்புகள், பெரியாரின் கருத்துக்களை ஏற் றுக் கொண்டவர்கள் என விரிவடையத் தொடங் கியது. அப்போது நாம் "லங்கா ராணி’ என்ற நாவலை வெளியிட்டோம். இந் நூல் எமக்குப்

Page 6
பரவலான தொடர்புகளைப் பெற்றுத் தந்தது. எமது வெளியீடுகளை அனுப்பிக் கொண்டிருந் தோம்; கருத்துக்களில் இணை ந் தோ ம். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், எழுத் தாளர்கள், கவிஞர்கள், கலை இலக்கியவாதிகள், டாக்டர்கள், இளம் வக்கீல்கள், முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்கள், ப ல் ல வ ன் பேருந்து ஊழியர்கள், பேச்சாளர்கள், மாண வர் அமைப்பினர், இளைஞர் அணியினர், சிற்று பூழியர்கள், ஆலைத் தொழிலாளிகள், இப் படிப் பல மட்டங்களில் தொடர்புகள் இறுக்க மாகின. இவற்றை விடவும் கிராமப் புறத்து விவசாயிகள், இளைஞர்கள், கரையோர மீன் பிடித் தொழிலாளர்களும் எம்மீது அன்பு கொண்டிருந்தனர். இவர்களுடன் கழி ந் த எமது பொழுதுகள் இனிமையானது. சென்னை நகரில், கூவம் நதிக் கரை ஓரமும், பக்கிங்காம் கால்வாய்க் கரை ஓரமும் நாம் வாழ்ந்த பகுதி களாய் இருந்தன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக்களே 6 fligi வதியிடங்களாய் இருந்தன. இந்த மக்களிடம்தான் நாம் தமிழகத்தின் ஆத்மாவை, மனிதத்துவத்தை தரிசித்தோம் . நாங்கள் அழுகையில் அவர் களும் அழுதார்கள்; நாங்கள் சி ரி க்  ைக யில் அவர்களும் சிரித்தார்கள்; எம்முடன் அவர்கள் பட்டினி கிடந்தனர். எமது பெரும்பாலான சாப்பாட்டுப் பொழுதுகள் இவர்களது இல்லங் களிலேயே நிகழ்ந்தன. ஒருவர் முதுகின் மேல் ஒருவர் ஏறி நின்று சுவரொட்டி ஒட்டினும் . எங்களுக்கு அவசியமான நேரங்களில் இவர்கள் கடன் பட்டனர். நாம் முன்னேறிச் செல்வதில் இவர்கள் ஆர்வம் காட்டினர்; உற்சாகம் தந் தனர். சிறந்த நண்பர்களை நாம் இங்கு பெற்றிருக்கிருேம். எம்மைப் புரிந்து கொள்ளா மல் முரண்பட்டுப் போன 'தமிழக ஈழ நட்புற வுக் கழகம்’ தற்போது எதார்த்தங்கள் புரிகையில் குற்ற உணர்வுடன் எம்முடன் மீண்டும் உறவு கொள்ள கூச்சம் கொள்கின்றனர். ஆணுலும் “ஈழ நண்பர் கழகம்’ மூலம் நாம் இன்று பரந்த உறவைப் பெற்றிருக்கிருேம். கொடிய பசி வேளைகளில், வெயிலின் கொடுமையில் அலைந்து திரிகையில், எத்தனைக் குடும்பங்கள் எ ங் களை அரவணைத்தன! முகமலர்ச்சியுடன், விரு ந் தோம்பும் உணர்வுடன் எங்கள் க வ லை களை, சோகங்களை, கோபங்களை வருடிக் கொடுத் தனர்; நாங்கள் அவர்களைத் தா யா ய், தந்தையாய், தோழராய், உறவினர்களாய் மதித்தோம்.
இன்னும் புலராத எங்களின் இந் த ப் பொழுதிலும், எத்தனையோ நினைவுகள் குமிழிடு கின்றன. தமிழகத்தின் மாவட்டம் தோறும் நடைபெறும் மாநாடுகளின் பந் த ல் களின் கீழ் நாங்கள் உங்களைச் சந்தித்தோம். சந்

பாலம்
திப்புகள் அனைத்திலும் விவாதங்கள், கருத்துப் பரிமாறல்கள், சந்தேக விளக்கங்கள், சண்டை கள், உறவுகள். தமிழகத்தின் இயற்கையை ரசித்தோம், இந்தியாவின் சிறப்புக்களை வியந் தோம். இந்தியாவில் ஒரு மா னு ட ம், உழைக்கும் மானுடம் வீழ்ந்து கிடக்கிறது, அதன் ஆன்மாவை எம்மால் தரிசிக்க முடிந் தது. இந்தியாவில் உள்ளக முரண்பாட்டின் விளைவுகளாய், சோகமும், வேதனையும், வேலை யில்லாமையும், பட்டினிச் சாவும், தெருவோர வாழ்வும்; அந்த வாழ்விலும் அ வ ர் க ளின் களங்க மற்ற சிரிப்பும் மகிழ்வும்; அவர்களின் சண்டைகளையும், கோபங்களையும் அதனுள் இருக்கும் ஆற்றல்களையும், அதன் D6 ஓசையைப் புரிந்து கொள்ள முடியாத வித்த கம் செய்யும் தத்துவ வாதிகளையும், சமூக அமைப்பின் கோரங்களையும், நாங்கள் இங்கே கண்டோம். தேநீர் கடை ஒரத்திலும், சிக ரெட் பிடித்தபடி பத்திரிகை புரட்டும் பெட்டிக் கடையிலும், கை ஏந்தி உணவைச் சுவைத்த படியும்; கன்னிமாராவிலும், தேவநேயப் பாவாணர் நூலகத்திலும், அதன் மகாநாட்டுக் கூடங்களிலும், கருத்தரங்குகளிலும், ஊர்வலங் களிலும் நாங்கள் கிளர்ச்சியுடன் சந்தித்துக் கொண்டோம். குற்ருலச் சாரலில் நனைந்தும்; தேக்கடியிலும், பெரியார் அணைக்கட்டிலும், மேற்கு மலைத் தொடர்ச்சிக் கா டு க ளில் அலைந்தும்; ஊட்டிக் குளிரில் விறைத்தும் ; கொடைக்கானல் குளிரில் படகு விட்டும்; கோவில்பட்டி, சிவகாசி, அருப்புக்கோட்டை கரிசல் நிலத்தில் வெயிலில் வாடியும்; சேலத் தில், ஆத்தூரில் செம்மண் பரப்பைக் கண் டு வியந்தும்; வண்டிப்பெரியாரில், கடலூரில் மலையகத்தின் சோகத்தை எண்ணியும்; சிவ காசியின் அச்சுத் தொழிலையும், தீப்பெட்டி உற்பத்தித் திறனையும் கண்டு ஆச்சரியம் கொண் டும்; சிறுவர்கள் உழைப்பினைச் சு ர ண் டு ம் கோரத்தைக் கண்டு துணுக்குற்றும்; கிராமத்து அகலவாய்க் கிணறுகளிலும், ம  ைட களி லும் நீந்தி நீராடியும்; கம்பங்காட்டிலும், சோளக் கொல்லைகளில் வயல் வரப்புக்களில் ந ட ந் து திரிந்தும்; கிராமங்கள் தோறும் பண்டையக் கலைகளைக் காண்பதற்காய் இரவுகள் விழித் தும்; கும்மியும், குரவையும், கோலாட்டமும், தெருக்கூத்தும் கண்டு ரசித்தும்;
நண்பர்களே! உங்களோடிருந்த நினைவுகள் எம்மைக் கிளர்ந்தெழச் செய்கின்றன.
எந்த நினைவுகளை நாம் இந் நேரத்தில் உங் களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்
ஈழம் பற்றி-ஈழப் போராட்டம் பற்றி தமிழக மக்கள் கனவுக்குள், மாயைக்குள் ஆழ்த் த ப்

Page 7
பாலம்
பட்டுள்ளனர். செய்திகள் முழுமையாக அவர் களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆரம்பத்தில் எங்களைச் சந்தித்தவர்கள், ‘நீங்கள் மலையாளமா பேசுகிறீர்கள்?’ என்றனர். நாம் தமிழ் பேசும் மக்கள் என்பதையும், தமிழ் பேசுகிருேம் என் பதையும் நம்ப வைப்பது என்பது பெரிய செயல் எங்களுக்கு; அப்புறம்’ ‘* பிழைக்கப் போனவன், அங்கு ஒத்து வாழ்வது தானே? என்ன தனி நாடு கேட்பது? கொழும்புச் சிங் களவர், யாழ்ப்பாணத் தமிழர்கள் இவர்களுக்கு சண்டை, அய்யோ பாவம் தமிழர்கள்; தமிழர் கள் கொல்லப்படுகின்றனரே, கற்பழிக்கப்படு கின்றனரே' என்ற ஒலம். அப்புறம், 'நான்கு கோடித் தமிழர்கள் நாங்கள், நாங்கள் புறப் பட்டு வந்தோமானுல் இலங்கை தாங் கா து’’ என்ற வீரச் சொற்கள்; அப்புறம், உலகுக்கு அறிவித்து விட்டு பயணம் சென்றனர்; கருப்பு பாட்ஜ் அணிந்து துக்கம் கொண்டாடினர்; 'இரணுவத்தை அனுப்பு என்றுகூச்சலிட்டனர்’ இராணுவம் தற்போது அனுப்பப்பட்டு விட்டது. போராட்டம் முடிந்து விட் டது (?)
தமிழக மக்கள் பெருமூச்சு விட்டனர்; தங் களின் வழமைக்குத் திரும்பிவிட்டனர்.
மலையகத்தில் 10 இலட்சம் தமிழ் பேசும் மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். அவர்களின் துயரத்தை ஏன் தமிழக மக்கள் உணரவேயில்லை. இலங்கை நாட்டை வளப்படுத்தியவர்கள் இன்று நாடற்றவர்கள்’. மூன்று தலைமுறைக் கும் மேலாக சோகத்தையே சுமையாக்கி,
கனவுகளையே உணவாக்கி வ T ம் ந் து கொண்டிருக்கின்றனர். 150 வருடங்களுக்கு மு ன் னு ல் தமிழக மண் ணி ல்
இரு ந் து தா ன் உங்கள் சகோதரர்கள் மலேசியாவுக்கும் , பிஜிதீவுக்கும், இலங்கைக்கும் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். 150 வருடங்களின் பின்னுல்-மூன்ரும் தலைமுறைக் குப் பின்னுல்-அவர்கள் இங்கே திரும்பி வந்த போது, எந்தப் பாவமும் அறியாத அவர்களை, தமிழக மக்கள் ஊரின் புறத்தே ஒதுக்கி வைத் திருக்கும் காட்சியையும் கண்ணிருடன் நோக்கு கிருேம். வேற்று மொழி மாநிலங்களுக்குக் கொத்தடிமைகளாய் இவர்கள் விற்கப்பட்ட கதை எம் நெஞ்சத்தில் வலி ஏற்படுத்தியுள்ளது. இக் கொத்தடிமைகளை மீட்க அவர் க ளின் துயரங்களை அரங்கத்திற்குக் கொண்டு வந்த தமிழக நண்பர்கள் எங்கள் நினைவிற்கு வரு கின்றனர். இவர்களை நண்பர்களாய் பெற்றதில் நாம் பெருமையடைகிருேம்.
தமிழக மக்கள் இன்று வெறும் வீர வழிபாட் டிற்குள் மூழ்கி உள்ளனர். துப்பாக்கி ஏந்திய ஈழப் போராளிகளின் படங்கள் தமிழக மக்கள்

3
மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்றிருந்தது. ஏனைய சமுதாயக் குழுக்களை விடவும், தமிழக மக்கள் வீரக் கனவுகளில் ஆழ்வதிலும், வீர வழிபாட்டில் மூழ்கி விடுவதிலும், த ங் க ள் வீரத்தை துறந்துவிட்டனர். மதுரை வீரனும், கருப்பசாமியும், சில குல தெய்வங்களும் அவர்கள் வழிபாட்டிற்குரிய சிலை வடிவங்கள். அன்றைய குலம் காத்த வீரம் செறிந்தவர்களாக, தனிமனிதர்கள் உயர்த்திப்பிடிக்கப்பட்டதை வரலாற்றுப் பொருள் முதல்வாதம் தெரிந்த நாம் எப்படி மறந்து விட முடியும். அந்த மாயைக்குள் இருந்த அவர்களை வெளிக் கொணர்வதுதான் எவ்வளவு கடினம் என்பதில் நாம் பெற்ற அனுபவங்களை மறக்க முடியுமா? இந்த மாயைக்குள் சிக்காதவர்கள் ஆதலால் தானே நீங்கள் எங்களுக்கு நண்பர்களானிர் கள்!
வடமராட்சி துன்பத்தை விடவும், கிழக்கு மாகாண விவசாயிகள் பெற்ற துன்பங்கள்
கொடுமையானது. அவர்களின் போராட்ட வாழ்வு மகத்தானது; அவர்கள் துயரங்கள் அளப்பரியது. மூதூரிலும், மட்டக்களப்பு
கொக்கடிச் சோலையிலும், தங்கவேலாயுதபுரத் திலும் அவர்கள் மரணத்துள் வாழ்ந்தார்கள். ஆணுல் தமிழக மக்களும், அவர்களின் தளபதி களும் இந்த மக்களின் துயரத்தின் போது மெளனமாக இருந்தனர்; எமது இதயத்தில் ரத்தம் கசிந்தது. யாழ்ப்பாண விளம்பரத்திற் குள், அந்த மக்கள் அடைந்த சோகம் மறைக் கப்பட்ட போது, நண்பர்களே! நீங்கள் தான் எங்கள் கவலைகளில் பங்கு கொண்டீர்கள்.
போராளிகள் வானத்தில் இருந்து குதித்த தேவர்கள் என்று தான் தமிழக மக்கள் எம்மை நம்பியிருந்தனர். வீர வழிபாட்டில் மூழ்கி இருக்கும் சமுதாயத்தில் இது தவிர்க்க முடி யாதது ஆகும். தமிழக ஆட்சி மாற்றங்களைக் கவனிப்போர், இவ் ஆட்சி மாற்றங்கள் வீர வழிபாட்டு மனப்பான்மையின் பங்காகியிருப் பதை உணரலாம். இக் கருத்தை நாம் உடைக்க முயற்சித்தோம். நாங்கள் போராளி கள், இரத்தமும் சதையுமான ம னி த ர் கள்; இந்தச் சமூக அமைப்பின் விளைபொருட்கள், இந்தச் சமூக அமைப்பின் எச்சங்கள், எங்களை யும் ஒட்டியுள்ளன. போராளிகளை, போராட் டத்தை இவ்வகையிலேயே நோக்குங்கள் என்று அடித்துச் சொன்னுேம். ஆணுல் நண்பர்களே! உங்களால் தான் அந்த உ ண்  ைம  ைய உணர்ந்து கொள்ளமுடியும். தமிழக மக்களும், போராளிகளின் சமூக விரோதச் செயல்களையும், சட்ட ஒழுங்கு மீறலையும் கண்டு முக த்  ைத ச் சுழித்தனர்; ஏளனமாய் நோக்கினர். நாங்கள் அனிச்ச மலராய் சுருங்கிப் போனுேம். இச்

Page 8
சமூக அமைப்பை, அதன் குணும்சத்தை, அதன் வெளிப்பாடுகளைப் புரிந்து கொண்ட நண்பர்கள் எங்களை அரவனைத்தனர். ஆதரவு காட்டினர்.
ஈழத்தின் உள்ளக முரண்பாடுகள் உங் களுக்கு இங்கே மறைக்கப்பட்டுள்ளது; நாங் கள் அவற்றை வெளிப்படையாகவே உங்கள் முன் வைத்தோம். தேசிய இனப் பிரச்சனையின் கூர்மைக்குள் உள்ளக முரண்பாடுகள் மறைக் கப்பட்டிருந்தன. இவற்றை கேள்விப்பட்ட வேளையில் உங்களுக்குக் கசப்பாகத் தான் இருந்தது. ஏனெனில் இங்கிருந்த உள்ளக முரண்பாட்டின் கோரங்கள் உங்களை மிகவும் பாதித்திருந்தது. தேசிய இனப் போராட்டத் ன் உச்சத்தில் உள்ளக முரண்பாடுகளின் கோரங்கள் நீங்கிய ஒரு சமுதாயம் ஈழத்தில் அமைய வேண்டுமென நீங்கள் விரும்பினிர்கள். அதற்காகவே ஈழப் போராட்டத்தை திரிகரண சுத்தியுடன் ஆதரித்தீர்கள். ஏ ற் ற த் தாழ்வும், சாதிய வேறுபாடும், சுரண்டலும், பிற்போக்குத்தனங்களும் நீங்கிய ஒரு ஈழத்தை உருவாக்க நாங்களும், நீங்களும் கனவு கண் டோம். ஆணுல் இந்திய சுதந்திரப் போராட்ட வேளையில், ஒரு கட்டத்தில் பாரதி பாடிய பாடல் ஒன்று ஏனுே இவ்வேளையில் எங்களுக்கு நினைவிற்கு வருகிறது.
(cun
நிறுவன
புதிய
மலையகத்
ნი?2%).
Goun
12 முதல் பி
நேரு
அை
சென்

L. Tapis
** தண்ணிர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை,
கண்ணிரால் வளர்த்தோம் கருகத்திருவுளமோ” என்ற இவ்வரிகள் எங்களுக்கு மிகச் சரியாகப் பொருந்துமா என்பது தெரிய வி ல் லை. தற்போதைய சூழ்நிலைமைகளை "பாலம்’ இதழின் இன்னுெரு பக் க த் தி ல் தோழர். பாலகுமாரன் விளக்கியிருக்கிருர் .
வாடிய பயிரைக் கண்டு வாடும் தார்மீக சிந்தனையை முற்ருக நிரரகரித்தவர்கள் நாங் கள்; வாடும் பயிருக்கு எவ்வகையில் தண்ணிர் பாய்ச்சுவது என்பது இதுவரையான எ மி து போராட்ட வரலாற்றின் அடிப்படைக் கொள் கையாகும். இந்த அடிப்படையை எவ்வேளை யிலும் நாம் கைவிடத் தயாராயில்லை. நண் பர்களே! இது விடைபெறும் தேரம் தாணு என்பதும் தீர்மானமாகவில்லை. ஆணுலும் எங் கள் நினைவுகள் உங்களின் அன்பு, நட்பு, தோழமை இவற்றையே தாங்கியுள்ளன. உங்களிடமும் இவற்றையே கையளித்துள் Ga Tb .
என்றென்றும் அன்புடனும், நட்புடனும், தோழமையுடனும், சுந்தர்
ன்னி
ாத்தின்
நூல்
தமிழ் மக்கள்
ტუნ. 4
ன்னி
ரதான சாலை
5 SIG
-ting
2.5GT-20

Page 9
“ւIւն
66
- it
திராவிட இயக்கத்திற்காகவும், வும் முதல் முதலாகப் பாடல்கள் இந்திய விடுதலை போராட்டக் கா போகும் விடுதலை, சாதிகளற்ற க களுக்கான விடுதலையாக மலர நின்று அதற்காகப் பாடல் புனைந்த பட்டக் கவிஞரின் வரலாறு இங்ே
கவிஞர் பிறந்தது 1905ம் ஆண்டு. பிறந்த தேதி தெரியவில்லை. பிறந்த ஊர் : நாகப் பட்டினத்திலிருந்து 3 கி. மீ தொலைவிலுள்ள அந்தணப்பேட்டை என்ற கிராமம். தந்தையின் பெயர் வேலுப்பிள்ளை. தாயாரின் பெயர் தெரிய வில்லை. கவிஞர் பிறந்த 3 ம் ஆண்டிலேயே தந்தை மறைந்துவிட்ட்ார்.
**எளிய குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை யார் என்று அறிவதற்கு முன்பே பறி கொடுத்தவன். அம்மா, அத்தை, பாட்டி இம் மூன்று கைம்பெண்களின் அரவணைப்பில் வாழ்ந்த ஏகப்புதல்வன். பாட்டி மோர் விற் பாள். அத்தைக்கும், அம்மாவுக்கும் நெல் குத்தும் வேலை. சம்பா கலம் ஒரு ரூபாய். குறுவை நெல் கலம் 14 அணு. நான் கற்ற பள்ளிப் படிப்பு ஆரம்ப பாடசாலையில் மூன்ரும் வகுப்பு’’ என்று தனது இளமைக் காலம் பற்றிக் குறிப்பிடுகிருர் கவிஞர். •
தொடர்கிருர் கவிஞர் : வயது 12. மளிகைக் கடையில் மாதம் ஒரு ரூபாய் சம்
 

டினிக் கொடுஞ் சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்?
அறை கூவல் விடுத்த கவிஞர் சாமிநாதன்
Լ0IT. 6216IT6)յ6ծr சி. அறிவுறுவோன்
பொதுவுடைமை இயக்கத்திற்காக எழுதியவர் கவிஞர் சாமிநாதன். லத்திலேயே நாம் வென்றெடுக்கப் ஈமூக விடுதலையாக உழைப்பாளர் வேண்டும் என்பதில் உறுதிபட வர் சாமிநாதன். நம்மால் மறக்கப்
க சுருக்கி தரப்படுகிறது.
பளத்திற்கு வேலை செய்யத் துணிந்தேன். ஐந்து ரூபாய் வரை சம்பளம் உயர்ந்தது. வயதும் பதினருய் உயர்ந்தது.' •
அதற்குப் பிறகு ஆங்கிலேயரால் நடத்தப் பட்ட தென்னிந்திய ரயில்வே ஒர்க் ஷாப்பில் தினசரி 0-5-4 என்ற சம்பளத்திற்கு (கிட்டத் தட்ட 31 பைசா) வேலைக்குச் சேர்ந்தார். இளைஞர் சாமிநாதனுக்கு இப்போதுதான் பகுத்தறிவுக் கருத்துக்கள் வளரத் துவங்கியது.
**ஓய்வு நேரத்தில் சித்தர் நூல்கள் படிப் பேன். என் உள்ளத்திலே ஒளிவீசிய உருவ வணக்கம், தூங்கியவன் கைப்பொருள் போலே நழுவி விட்டது. அந்த வாகன் ஷாப்பிற்கு கோபால்சாமிப் பிள்ளை என்பவர் மேஸ்திரி. அவர் மன்மதன் எரியவில்லை என்று பாடுபவர் ; பாடல் இயற்றுபவர். மன்மதன் எரியவில்லை என்று எவன் பாடுகிருணுே அவனுக்குத் தொழு நோய் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை. மதன் எரிந்தான் என்பவரும்

Page 10
புராணத்தில் இருந்துதான் ஆதாரம் காட்டுகி ரூர். மதன் எரியவில்லை என்பவரும் அதே புரா ணத்தில் இருந்துதான் ஆதாரம் காட்டு கிருர் . ஆதலால் புராணத்தை எழுதியவருக்குத் தான் தொழு நோய் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை' , '
இதற்கிடையில் கவிஞரை வாகன் ஷாப் பிலிருந்து பாய்லர் ஷாப்பிற்கு மாற்றியிருக் கிருர்கள். இங்கே கவிஞருக்கு வேலை, ஒரு பெரிய தகட்டை நெளிவில்லாமல் நிமிர்த்துவது தான். வேலையைச் செய்து கொண்டே லாவணிப் பாடல்களைக் கவிஞர் படிப்பது வழக்கம். இதனைப் பார்த்துக் கொண்டே இருந்த சாண்டோ கோவிந்தசாமி என்பவர் போர்மன் கோபால்சாமிப் பிள்ளையிடம் போய் சாமிநாதன் இப்படிச் செய்துவருவதைச் சொல்லிவிட்டார். கோபால்சாமி, சாமிநாதனை அழைத்து, **நல்ல பிள்ளையா இருக்கே. நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள் ளாமல் மன்மதன் எரித்தான இல்லையா என் பதை பற்றிப் படித்துக் கொண்டிருக்கிருயே!' என்று சொல்லி திராவிடன்’, ‘குடியரசு’ போன்ற பத்திரிகைகளைக் கொடுத்து படித்து வரச் சொல்லியிருக்கிருர், 'பத்திரிக்கையைப் படிக்கப் படிக்க போர்மன் யார், சாண்டோ கோவிந்தசாமி என்பவர் யார் என்பதைப் புரிந்து கொண்டேன். இவர்கள் இரண்டு பேரும் எனக்கு அரசியலில், சமுதாயத்தில் ஈடுபாடு கொள்ள அடித்தளம் அமைத்தவர்கள். என் இதயத்தில் என்றென்றும் நிலைத்து நிற் பவர்கள். நாளாக, நாளாக நானும் சுயமரி யாதைக்காரணுகி விட்டேன்’’.
அந்தக் காலத்திலேயே சாமிநாதன், ரெயில்வே தொழிற் சங்கத்தில் சேர்ந்து தீவிரப் பணியாற்றி இருக்கிருர்.
**1928 - தென்னிந்திய ரயில்வே தொழிற் சங்கத் தலைவர் கிருஷ்ணசாமிப் பிள்ளை. நான் அதில் அங்கத்தினன். ரயில்வே நிர்வாகம் கொடுமையான சட்ட திட்டங்களைத் தொழி லாளி மீது சுமத்தியது. அதை எதிர்த்து பிரச் சாரம் செய்ய என்னையும் குரு குமரசாமிச் செட்டியாரையும் தமிழ் நாடு பூராவும் அனுப்பி வைத்தார்கள். “கொடுமையான சட்ட திட்டங் களை நிர்வாகம் வாபஸ் வாங்காவிட்டால், குறிப்பிட்ட தேதியில் ரயிலை ஓடவிடமாட்டோம். தண்டவாளத்தில் படுப்போம் என்பது உறுதி" என்று பிரச்சாரம் செய்தோம்’’.
பிரச்சாரம் செய்ததோடு நிற்கவில்லை. நீடாமங்கலத்தில்,சாமிநாதன் தண்டவாளத்

பாலம்
தில் படுத்து ரயிலை மறித்தார். மூன்று மாதம் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந் ததும் வேலை போய்விட்டது. ‘கொள் என்ருல் வாயைத் திறப்பதும், கடிவாளம் என்ருல் வாயை மூடுவதுமான திறன் இல்லாமையால் வேலை இழந்தேன். 1929 டிசம்பரில் எனது பள்ளித் தோழன் ஜி. சுப்பிரமணியன் யோசனை யின் பேரில் ஒரு சலவைச் சாலையை நாகை யில் துவங்கினேன்’’.
சொந்தமாக்க் கடை துவங்கியதோடு நிற்கவில்லை, தமிழகத்திலேயே முதன் முதலில் 1930ல் சலவைத் தொழிலாளர்களுக்கும், 1933ல் முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கும் சங்கம் அமைத்த பெருமையும் கவிஞர் சாமி நாதனுக்கே உரியது என்பதனையும் அறிந்து நாம் வியப்படைகிருேம்.
* ‘சலவைத் தொழிலாளர் சங்கத்தை இந்த மாகாணத்திலேயே முதன் முதலில் அமைத்த பெருமை எங்களைச் சார்ந்ததாகும். பிறகு 1933ல் எனது குருநாதன் துரைசாமி அவர் களின் ஞாபகமாக சலவைத் தொழிலாளர் சங்கத்தை முதன் முதலாக அமைத்த பெருமை அடியேனைச் சார்ந்ததாகும். 1930 லிருந்து 1933 வரை என்னேடு பங்காற்றிய தோழர் கே. முருகேசன், டி. என் ராமச்சந்திரன் (இம யம் பதிப்பகம், சென்னை) இவர்கள் இரண்டு பேரும் என் இணைபிரியாத் தோழர்களாவார்
56
அப்போது சுயமரியாதை இயக்கத்தில் தீவிர பங்காற்றி வந்த தோழர்களுடன் சாமி நாதனுக்கு நட்பு ஏற்பட்டது. **ப. ஜீவானந் தம், பட்டுக்கோட்டை அழகிரிசாமி போன்ற பேச்சாளர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்களா ஞர்கள். இப்போது சுயமரியாதை இயக்கத் தைப் பற்றிய பாடல்கள் வெளிவருகின்றன. அந்தக் காலத்தில் சுயமரியாதை இயக்கப் பாட்டு என்று எழுதினவன் நான் ஒருவனே. அதில் சில பாட்டுக்கள் ஈரோட்டில் பெரியார் பதிப்பகத்தில் புத்தக ரூபமாக வெளிவந்தது”.
1931ம் ஆண்டு நடைபெற்ற கராச்சி காங்கிரசில், மக்களின் அடிப்படை உரிமை களுக்கு உத்தரவாதம் அளித்தல், சாதி சமய வேறுபாடுகளை நீக்குதல், மொழிவாரி மாநிலங் களை அமைத்தல், வரிப்பளுவைக் குறைத்தல், சுதேச சமஸ்தானங்களில் நிலவிவந்த “பேகார்" எனப்பட்ட கட்டாய உழைப்பு முறையை நீக் குதல், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், எட்டுமணிநேர வேலை

Page 11
பாலம் :
போன்ற பல முற்போக்கான தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டதைத் தொடர்ந்து கவிஞர் சாமிநாதன் போன்ற இடது சாரிச் சிந்தனை கொண்ட தீவிரவாதிகள் காங்கிரஸ் இயக்கத்தின்பால் ஈடுபாடு கொண்டனர்.
இதற்கிடையில் பெரியார் ரஷ்யா போய் விட்டுத் திரும்பினுர் . அதன் விளைவாகப் பெரி யாரின் சிந்தனையில் பல புரட்சிகரமான மாற் றங்கள் ஏற்பட்டன. அப்போது பெரியார், கொழும்பில் ஒரு புரட்சிகரமான பிரசங்கம் செய்தார். அதுவும் கவிஞரை மிகவும் ஈர்த் தது. 1932 டிசம்பரில் சிங்காரவேலர், ஜீவா ஆகியோருடன் இணைந்து பெரியார் "ஈரோட் டுத் திட்டத்தை வெளியிட்டார். அதன் சிறப்பு
அம்சங்களாவன :
1. பிரிட்டிஷ் முதலிய எந்தவிதமான முதலாளித்தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தியாவைப் பூரண விடுதலை அடையச் செய்வது.
2. தேசத்தின் பேரால் கொடுக்கப்பட வேண்டிய எல்லாக் கடன்களையும் ரத்து செய் வது.
3. எல்லாத் தொழிற்சாலைகளையும், ரயில் வேக்களையும், பாங்கிகளையும், கப்பல், படகு நீர்வழிப் போக்குவரத்து சாதனங்களையும் பொது மக்களுக்கு உரிமையாக்குவது.
4. எந்தவிதப் பிரதிபிரயோசனமும் கொடுக்காமல் தேசத்தில் உள்ள எல்லா விவ சாய நிலங்களையும், காடுகளையும், மற்ற தாவர சொத்துக்களையும் பொது ஜனங்களுக்கு உரிமை யாக்குவது.
5. குடியானவர்களும், தொழிலாளர் களும், லேவாதேவிக்காரர்களிடம் பட்டிருக் கும் கடன்களையெல்லாம் செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவது. அடிமை ஒப்பந்தங்களை ரத்து செய்துவிடுவது.
6. சுதேச சமஸ்தானங்கள் என்பவைகளை எல்லாம் மாற்றி, இந்தியா முழுமையும் தொழி லாளர்கள், குடியானவர்கள், சரீர வேலைக்கா ரர்கள் என்பவர்களுடைய நேரடியான ஆட்சி யைக் கொண்டு வருவது.
7. தொழில் செய்பவர்கள் 7 மணி நேரத் திற்குமேல் வேலை செய்யக்கூடாது என்பதுடன் அவர்களது வாழ்க்கை நிலையை உயர்த்துவது.

தொழில் இல்லாமல் இருக்கிறவர்களைச் சர்க் கார் போஷிக்கும்படிச் செய்வது.
மேற்கண்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டம் புரட்சிகரமான சிந் தனையுள்ள யாரைத்தான் ஈர்க்காது? முற் போக்குச் சிந்தனையுடைய, தொழிற்சங்க இயக் கங்களில் ஆர்வமுள்ள கவிஞர் மறுபடியும் தீவிரமான சுயமரியாதைக் காரரானுர். ベ
இந்தத் திட்டம் வெளியானபின் மத்திய, மாகாண அரசுகள் சுயமரியாதை இயக்கத் தைக் கவனிக்கத் துவங்கின. 1934 ஜூலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை அரசு தடை செய்தது. அப்போது ஜஸ்டிஸ் கட்சி அமைச் சரவையில் இருந்த சர். ஏ. டி. பன்னீர் செல்வம் பெரியாரை அழைத்து, கம்யூனிஸ்ட் கட்சியைப் போல் சுயமரியாதை இயக்கத்தையும் ஆரசு தடைசெய்ய ஆவன செய்துவருவதால் பொது வுடைமை இலட்சியத்தை கை கழு வி வி ட் டு ஒழுங்காகச் சமூகசீர்திருத்தப் பிரச்சாரம் மட்டும் செய்து வருவது சுயமரியாதை இயக்கத்திற்கு நல்லது என்று அறிவுரை சொன்னர். பெரி யாரும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு பத்திரிக்கையில் அறிக்கை விட்டார். இது ஜீவா, சிங்காரவேலர் போன்ற பொதுவுடைமை இலட்சியத்தை ஏற்றுக் கொண்ட தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
1935ல் தஞ்சை மாவட்ட ஐந்தாவது சுய மரியாதை மாநாடு திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பெரியாரும் வந்திருந்தார். அதில் தோழர்கள் பூவானூர் செல்வக் கணபதி, ஜீவா, முத்துசாமி வல்லத் தார் போன்ருேர், பெரியார் பொதுவுடைமை இலட்சியத்தைக் கை விட்டு விட்டது பற்றியும், ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பது பற்றியும் கடு மையாகத் தாக்கிப் பேசினர்கள்.
இறுதியில் பெரியார் அவர்கள் குற்றச் சாட்டுகளுக்கு பதில் சொன்னுர், பெரியார் சொன்ன நியாயங்கள் சிங்கார வேலர், ஜிவா, கவிஞர் சாமிநாதன் போன்ருேரைத் திருப்திப் படுத்தவில்லை. எனவே அவர்கள் சு.ம. இயக்
கத்தை முற்றிலுமாக விட்டுப் பிரிய நேர்ந்தது.
1935ல் சர்வதேச தொழிலாளர் கீதத்தை தமிழில் பெயர்க்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. அப்போது ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து இந்தக் கீதத்தை தோழர் ஏ.எஸ். கே அவர்கள் தமிழில் பொழிப்புரையாக எழுதிக் கொடுத்திருக்கிருர். அதனை அடிப் படையாகக் கொண்டு நமது கவிஞர் அவர்கள் இயற்றியதுதான் “பட்டினிக் கொடுஞ்சிறைக்

Page 12
கவிஞர். வே. சாமிநாதனின் சமதர்மகீத வந்துள்ளது. (பொன்னி, 12, முதல் பிரதான ச விலை ரூ. 4.50) அந்நூலிலிருந்து சில பாடல்
1
பட்டினிக் கொடுஞ் சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள் பாரிற்கடையரே எழுங்கள் வீறுகொண்டே தோழர்காள் கொட்டுமுரசு கண்டனம் முழக்கமெங்கும் குமுறிட குதித்தெழுப் புதுஉலக வாழ்வதில் திளைத்திட பண்டைய பழக்கமெனும் சங்கிலி அறுந்தது பாடுவீர் சுயேச்சைக் கீதம் விடுதலை பிறந்தது.
2
எட்டிப் பிடிப்போமென்பார் சுயாட்சி எளியவர்க் கில்லையதனுல் மாட்சி
பட்டியின் மாடது போல் கெதியாச்சு பயனில்லை மாந்தர்க்கென கொட்டுமுரசே
3 வானுலகத் தீர்ப்பைக் கெஞ்சோம் வல்லரசின் எதிர்ப்புக் கஞ்சோம் பேணிச் சமதர்மம் நாட்டிப் பேசுவோம்
குள் பதறுகின்ற மனிதர்காள்’ என்னும் அந் தப் புகழ்பெற்ற பாடல். தோழர் ஜீவா அவர் களும் சர்வதேச கீதத்தை தமிழில் பெயர்த்த தாகவும் ஆணுல் கவிஞர் அவர்களின் மொழி பெயர்ப்பையே கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இது முதன் முதலில் "புது உலகம்' பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.
1942ல் வெள்ளையனே வெளியேறு இயக் கத்தில் கலந்து கொண்டு கவிஞர் கைதாகி இருக்கிருர், ஆறுமாதம் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிருர்,
1981 டிசம்பர் மாதம் 17ந் தேதி வியாழன் (17-12-81) இரவு 9 மணிக்கு கவிஞரின் உயிர் பிரிந்தது.
19306) திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த திலகவதியைக் கவிஞர் T. R. ஆறு முகம் பிள்ளை தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்.

பாலம்
ம்’ எனும் நூல் பொன்னி வெளியீடாக வெளி
ாலை, நேரு நகர், அடையாறு, சென்னை - 20. வரிகளைத் தருகிருேம்:
4
சமரசமே சமரசமே தகுமோ யினிமேலிந்த செகமழிவதனுலும்
சமரசமே சமரசமே.
எனதிருமைத் தோழர்கள் தூக்கினில் மாள இர்வின் காந்தி ஒப்பந்தம் என் செய்தவர் மீள.
ஈரமில்லா நெஞ்ச சாரினச் சாதி ஏழைகட்கென் றுமவ ரளித்திடரா நீதி வீரமுடன் கோவிந்தா நந்தரின் சேதி விளம்பிப் போர்முனைச் செல்வோம் வெற்றிச்சங்கூதி.
5
வீர சுதந்திரங் கோருதற்கு முன்னம் வேண்டும் சுயமரியாதை பாரதில் தேசியப் போருக்கழைப்பது பாமரரை ஏய்க்கும் பாதை மக்களுக்குள் ஜாதி சிக்கலிருக்கின்ற மட்டும் சுயாட்சியின் வாசம் எக்காரணங் கொண்டு தர்க்கித்த போதிலும் ஏற்றுக் கொள்ளீர் சுத்த மோசம்
கவிஞருக்கு மூன்று ஆண் குழந்தைகள் லெனின் (1932), மோகன்தாஸ் (1940), சோகன் (1943) (பஞ்சாப் க ம் யூனிஸ் ட் கட்சித் தலைவரின் நினைவாக இப்பெயரைச் சூட்டியிருக்கிருர்). м
இரண்டு பெண் குழந்தைகள் சரோஜா (1934), சுசீலா (1936).
தொடர்ந்து வாழ்க்கையில் வறுமையுடன் போராடிவந்திருக்கிருர். 1950ல் ஒரு வெற்றிலை பாக்குக் கடை வைத்தார். இது 1952 புயலில் வீழ்ந்து விட்டது. தொடர்ந்து வாழ்க்கைப் போராட்டம் தான். 'காலையும் மாலையும், மாறி மாறி வருவது போல இன்பமும், துன் பமும் என் வாழ்க்கையில் மாறி மாறி வரும்.”
தியாகிகள் பென்ஷன் கிடைத்தற்குப் பின் வாழ்க்கை ஒரளவு பரவாயில்லை.
1979ல் கவிஞரின் மனைவி திலகவதி அம்மையார் மரணம் அடைந்திருக்கிருர்,

Page 13
ஈழத்துச் சிறுகதை கோச3ல
அம்மன்
**குலம்1. மாடுகளுக்குக் கொஞ்சம் வைக்கல் இழுத்துப்போடு மேனே’’
குலம் மல்லாந்து படுத்துக் கிடந்தான். ஓலைப்பாயில் தலையணைகூட இன்றித்தான் இவன் படுப்பான். முதுகு வலிக்குமா, இல் லையா ? இவன் ஏன் ஒரு காட்டுப் பிறவி மாதிரி இருக்கிருன் !
அம்மா திண்ணைக் குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தவாறே திரும்பத் திரும்பச் சொல் லிக் கொண்டிருந்தாள்.
**கொஞ்சம் வைக்கல் இழுத்துப் போடன் அப்பன். மாடுகள் கத்துதெல்லே!. y 9
குலம் நெற்றியில் முழங்கைகளை அழுந்தப் போட்டவாறு, கால்களை ஆட்டியவாறு படுத்துக் கிடந்தான். அம்மா இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். மார்பில் உரோமங்கள் படர் கிற வயது. முரட்டுத்தனமான உடல்வாகு. குரல் கூடக் கட்டைக் குரல், இவனுடைய அப்பா மாதிரி. நெற்றியில் தூக்கிப் போட்டிருந்த கைகளைப் பார்த்தாள். நரம்புகள் புடைத்துக் கொண்டு விம்மித் தெரிந்தன. உள்ளங்கைகள் முதலையின் முதுகு மாதிரி காய்த்துப் போயிருந் தன. விரல்கள் ஒயிலும் கிறீஸ7ம் படிந்து பழுப்பு நிறமாகத் தெரிந்தன. நகக் கண் களில் ஒயில் அழுக்குப் படிந்திருந்தது.
**குலம்1. கொஞ்சம் வைக்கல். s
அவசரமாகப் பாய்ந்து இடை வெட்டிய வாறு மகன் சிடுசிடுத்தான்.
"நீயே இழுத்துப் போடன். எனக்கு ஒரே அலுப்பு.’’
அம்மா சற்றே வேதனையின் சாயல் படியச் சிரித்தாள்.
சீலன் இருந்தால் இப்படியா எல்லாம் இருக் கும்? அம்மா சொல்லாமலேயே வேலை எல்லாம் செய்து கொடுப்பான். மாடுகளுக்கு வேளா

வேளைக்கு வைக்கோல் இழுத்துப் போடுவான். தண்ணீர் கொண்டு போய் வைப்பான். கோழி களைக் கவனித்துக் கூடுகளில் அடைப்பான். சமயத்துக்கு தேங்காய் கூட அம்மாவுக்கு துருவிக் கொடுப்பான்.
எவ்வளவு அருமையான மகன் ! அவன் ஏன் அப்படிப் போனன் ? ஊரை நீங்கித் தூரே வயல்வெளிகள் பரந்திருக்கின்றன. இடையிடையே வனங் கூடல்களும் திடல்களும் தனித்துக் கிடக்கின் றன. மாலை நேரங்களில் அம்மா அவ்விடங் களில் புல் செதுக்கிக் கொண்டுவரப்போவாள். சைக்கிள் ஒட்ட முடியாது அவ்விடங்களில், சீலன் சைக்கிளில் சாய்ந்தபடியே ரோட்டில் காத்து நிற்பான். அம்மா புல்லுக் கட்டுடன் திரும்பி வரும் நேரங்களை அவன் நன்கு அறி வான். அம்மாவின் உருவம் மிகத்தூரே மங் கலாக தெரியும் போதே ரோட்டை விட்டிறங்கி
சிற்பம் : கலைஞர் . எஸ். தனபால்

Page 14
10
அம்மாவை நோக்கி விரைந்து போவான். பாரத்தை மாற்றிக்கொண்டு அம்மாவுக்கு முன்னே வீட்டுக்கு சைக்கிளில் பறப்பான்.
அம்மா வழியிலேயே துரவில் உடம்பைக் கழுவிக் கொள்ள முருகன் கோயில் மணி சிணுங்கி அழைக்கும். அம்மா உருகியவாறு கோயிலுக்குப் போவாள். பூசை முடிய நன்ருக இருள் சூழ்ந்து விடும். உள்ளங்கையில் பொத் தியபடி விபூதியும் சந்தனமுமாக திரும்பி வரும் போது, சீலன் வீட்டில் 'பளிச்சென விளக் கேற்றியிருப்பான்.
மேசைக்கு முன்னுல் விளக்கொளியில் முகம் விகசித்துத் தெரியும்படிக்கு அவன் உட் கார்ந்திருப்பான். ஏதாவது படித்துக் கொண்டோ, எழுதிக்கொண்டோ இருப்பான். முன்னுல் மென்குரலில் இசைத்தபடி ரேடியோ அவனை ரசிக்கும். பக்கத்திலே சைக்கிள் முன் சில்லை ஒயிலாக ஒடித்துச் சாய்த்தபடி அவனைப் பார்த்து பளிரென ஒளிவீசிச் சிரிக்கும். R
மகள் அழகிய மொட்டு. மிகவும் சின்ன வள்தான். ஆயினும் குசினியில் தேநீர் தயாரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பாள். குலத்தை மட்டும் காணக் கிடைக்காது. அவன் வீட்டில் இருக்கும் நேரங்களை அம்மாவுக்கு அறுதியிட்டுக் கூறமுடியாது. அவன் தொழில் அப்படி !
மாடுகள் கழுத்து மணிகள் கிணு கிணுக்க புல்லை அர்ைக்கின்ற சத்தம் கேட்கும். கூடவே மாடுகள் பலத்து மூசி மூச்சு விடுவதும் வாலைத் தூக்கி ஈக்களை விளாசி விரட்டுவதும் கேட்கும். சாணியின் மணத்துடன் பசும்புல்லின் வாசனை நாசியில் உறைக்கும். கோழிகள் எல்லாம் ஏற் கனவே கூடுகளில் அடைக்கப்பட்டிருக்கும். குறுகுறுவெனக் கொக்கரிக்கும். பட பட” வெனச் சிறகுகளை உல்லாசமாக அடிப்பது கேட்கும்.
சுடச்சுட ஒரு கோப்பை தேநீர். கடுமையான உழைப்புக்குப் பின், தொழுகை யின் பின், மோகனமான இரவின் பிறப்பு நேரத்தில். அருமையான தனது பிள்ளை களுடன் அம்மா அருந்துவாள். அதுவல்லவோ வாழ்க்கை

பாலம்
எல்லாமே சீலனுடன் கூடவே சேர்ந்து அம்மாவிடம் பிரிவு சொல்லாமலே போயினவோ ?
S9b DMT அலுத்தபடியே வைக்கோல் போரை நோக்கிப் போனுள்.
ஒரே வயிற்றில் உதித்த பிள்ளைகள் ஏனே இவ்வாறு வேறுவேறு குணம் கொண்டவர் களாய் ஆகிப் போனுர்கள் ? இரண்டு பேரையும் அம்மா ஒரே மாதிரித்தான் சீராட்டினுள். ஒரே மாதிரித்தான் உணவூட்டினுள். ஒரே பள்ளிக் கூடத்திலேதான், கொண்டுபோய்ச் சேர்த்து விட்டாள். புத்தகங்களை தூக்கிக் கொண்டு, எண்ணெய்ப் பூசி படியச் சீவிய தலைகளுடன் அவர்கள் பள்ளிக்கூடம் போவதை வாசலில்
நின்று பார்த்து ரசித்தாள்.
குலம் படிப்பை ஒரேயடியாகக் குழப்பினுன் அண்ணனுடன் நெடுகலும் சண்டை போட் டான். அம்மாவுடன் கோபித்துக்கொண்டு சில வேளை சாப்பிடாமலே போனுன். ஆரும் வகுப் புக்கு மேல் அவனுல் ஏறவே முடியவில்லை. அம்மா அறிவாள், அவனது இளைய மகன் மிகவும் புத்திசாலி. ஆணுலும் ஏன் அவனுல் படிக்க முடியவில்லை என அம்மாவுக்கு புரிய வில்லை.
சீலன் அமைதியாகப் படித்தான். - அவன் மிகவும் அமைதியான மகன். இரைந்து கதைக்கத் தெரியாதவனுக இருந்தான். நடப் பது கூட மிகவும் மென்மை. ஒரு கம்பீரம் இருக்கத்தான் செய்தது. ஆயினும் புல்லுக்குக் கூட நோகாத நடை. கண்கள் பெரிதாக இருந்தன. உள்ளங்கைகள் மென்மையாகவும். குளிர்ச்சியாகவும் இருந்தன. நகங்கள் ரோஸ் நிறமாகவும், நீளமாகவும். விரல்கள் கூட மெலிந்து நீளமாக நளினமாக இருந்தன, பெண்களைப் போல.
சீலன் ஒரு மோக்னமான மாலை நேரம் பிறந்தான். பறவைகளின் கீச்சொலிகள் அடங் கிய பிறகு, மாடுகள் எல்லாம் மேய்ச்சல் நிலங் களிலிருந்து திரும்பி வந்துவிட்ட பிறகு, மென் மஞ்சட் கதிர்களை மண்ணெண்ணை விளக்குகள்

Page 15
+ 3 T6)üb
உமிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில். அம்மாவின் இடது தொடையை சற்றே உரசிய படி, ஒரு வளர் பிறை நாளில் சீலன் பிறந் தான். புனர்பூச நட்சத்திரம். இவன் பெரிய காரியங்களைச் சாதிக்கப் பிறந்தவன்” என அவனது சாதகம் சொல்லிற்று.
குலம் அத்த நட்சத்திரம். அதுதான் அவ னிடம் முரட்டுச் சுபாவங்கள் சேர்ந்து விட்டன வோ? அத்தம், அதமம் என்ருர்கள் சாத்திரிமார்.
மத்தியான நேரம் கொடுமையானது. மெளனமானது. காற்றை வெயில் விரட்டி விடும். ஒழுங்கைகளில் படிந்திருக்கிற புழுதி யில் கச்சான் வறுக்கலாம் எனத் தோன்றும். பூவரச மரங்கள் கொடுவெயிலில் வாடித் துவஞம். சனங்கள் வெளியில் தலைகாட்டவே மாட்டார்கள். சொறி பிடித்த நாய்கள் மட்டும் நாவைத் தொங்கப் போட்டபடி இளைத்தவாறு நிழல் தேடி ஓடித் திரியும், ‘கர்ர்ர்’ எனக் கடூரமாகக் கத்துகின்ற காக்கைகள் நீர் தேடிப் பறக்கும்.
குலம் ஒரு மத்தியான நேரம் பிறந்தான். பிறந்தவுடன் எட்டு இருத்தல் நிறைகாட்டினன். அம்மா இராஜவலியில் துவண்டாள். மயக்கம் தீர நெடு நேரமாயிற்று. காய்ச்சல் ஒய சில நாளாயிற்று.
என்னவோ அம்மாவுக்கு குலத்தைவிட சீலனை மிகவும் பிடித்தது. அவன் அவளை விட வளர்ந்து விட்ட பிறகும், மேலுதடு அரும்பிய பிறகும் . அவனது கேசங்களை வருடுவதில் அம்மா இன்புற்ருள். ஒரு குழந்தையினது போல மிகவும் மிருதுவான தலைமயிர்.
குலத்துக்கு மிகவும் முரட்டுத் தலைமயிர் சுருண்டு சுருண்டு இருக்கும். கண்கள் சிறுத்து உள்வாங்கி இடுங்கி இருந்தன. மேனியில் மண்ணெண்ணெய் நாற்றமும் ஒயில் நாற்றமும், வியர்வை வாடையும் சதாகாலமும் வீசிற்று. அவன் தொழில் அப்படி 1 குலம் ஒரு மெக் கானிக் ஆகவேண்டி ஆயிற்று, அவனது மாமனைப் போல நேரங்காலமற்ற வேலை. சில நாட்கள் சேர்ந்தாற் போல வராமல்

11
இருக்க நேர்ந்தது. நேரத்துக்கு உண்ண முடியாமல் போயிற்று. தன்னைக் கவனிக்க நேர மில்லாமல் போயிற்று. அண்ணன் நிறையப் படிக்க வேண்டுமென நினைத்தானுே, என்னவோ ? ஒய்வொழிச்சல் இல்லாமல் வேலை வேலை எனப் பறந்தான்.
நினைக்க நினைக்க அம்மாவுக்கு நெஞ்சை பிளக்கும்படி நெடுமூச்சு எறிந்தது.
சீலன் ஏன் அப்படிப்போனன் ?
அம்மா மெல்ல மெல்ல போரிலிருந்து வைக் கோலைப் பிடுங்கி இழுத்தாள். நாய் அம்மா விடம் ஓடிவந்தது. கால்களில், "சில்லென இருந்த ஈரமூக்கைத் தேய்த்தது. வாலைத்தூக்கி சுழற்றிச்சுழற்றி ஆட்டியது. அம்மா காலால் எட்டி உதைக்க நினைத்தாள்.
நாயின் கண்களில் நன்றி வழிந்தது. அது சீலன் கொண்டுவந்த நாய். அம்மா அதை உதைப்பாளா ? கால்களை மடக்கிக் கொண்டாள்.
*சொதசொத" வென்ற மாரி காலத்தின் சோம்பலான ஒருநாளில் சீலன் அதைத் தூச் கிக் கொண்டு வந்தான். வந்தபோது வெள்ளை நிறமாக இருந்தது. இப்போ பழுப்பு நிறமாக வளர்ந்து விட்டது.
மழை நீர் ஓடிக்கொண்டிருந்த தெருக் களில் மிகவும் நனைந்து போய் அனுங்கிய குரலில் கத்தியபடி நடுங்கிக் கொண்டிருந்தது. யாருக்கும் தோன்ருத இரக்கம் அவனுக்குள் சுரந்தது. தூக்கிக் கொண்டு வந்தான். ஒலைப்
ジ

Page 16
12
பெட்டியால் கவிழ்த்து மூடினன். பெரிய காரியவாதி போன்ற பாவனையுடன் அம்மாவுக் குச் சொன்னன்.
**வளர்ந்தாப் பிறகு நல்லது. I DUT: நாய் வராதம்மா . கோழிகளுக்குக் காவலா யிருக்கும்.
தினமும் செங்காரிப் பசுவில் பால் கறந்து ஊட்டினன். அவனுக்குத் தெரியும், எந்தப் பசுவின் பால் ருசியும், கொழுப்பும் மிக்க தென்று.
அம்மா மாடுகளை நோக்கிப் போனுள், நாய் அம்மாவின் கால்களை தடுக்கப் பண்ணி விளையாடியபடி பின்னே ஓடியது.
வாலிபத்தில் துள்ளுகிறது நாய், கொழுப் பேறி உடல் பளபளக்கிறது. நன்ருகத் தான் கொழுத்துவிட்டது. சீலன் கூட கொழு கொழு என்றுதான் இருந்தான். தி ரட் சி யா ன கன்னங்களும், காந்தக் கண்களுமாக. எவ்வளவு அழகனுக இருந்தான். இந்த அம்
மாவின் மகன்!
அமைதியாக இருந்தான். ரேடியோவைக் கூட சத்தமாக முடுக்கி விட மா ட் டா ன். அவனைச் சுற்றி மட்டுமே இசை இருக்கும். இரண்டாம் பேரைத் தொந்தரவு செய்ய அவன் விரும்புவதில்லை. அவன் படிக்கும்போது கூட ரேடியோ முன்னுலிருந்து ஏதாவது முணு முணுத்துக் கொண்டிருக்கும். சைக்கிளைத் துடைக்கும் போதும் பாடியவாறு பா ர் த் து க் கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் உதய காலத்தில் 'பள பளவென மின்னுமாறு சைக் கிளைத் துடைப்பான். காற்று இருக்கிறதா எனக் கவனித்து திருப்தியுடன் த லை  ைய க் குலுக்குவான். எதிலும் ஒரு ஒழுங்கு அவனிடம் இருந்தது.
அவன் போன பிறகு எல்லாமே ஒழுங்கற்றுப் போயிற்று. ரேடியோ அநேகமாக மெளனித்து விட்டது. அந்த வீடே ஜீவனற்றுப் போயிற்று. சைக்கிள் சீந்துவாரற்று தூசி படிந்து போய், ரயர்கள் காற்று இறங்கி மெலிந்துவிட, சுவ ரோடு சாய்த்து வைக்கப்பட்டு விட்டது.

பாலம்
குலத்துக்கு சைக்கிள் அவசியமென்றில்லை. அவனுக்கு நேரத்துக்கு ஒரு வாகனம். காரோ , வாணுே, மோட்டார் பைக்கோ. காற்றைக் கிழித்துக்கொண்டு வருபவனென வந்து நிற்
Lu T6ăT.
சீலன் போன பிறகு இந்த வீ ட் டி ல் முரட்டுத்தனமும், மெளனமும், அம்மாவின் ஏக்கப் பெருமூச்சுகளும் மட்டுமே மிஞ்சி நிற் கின்றன. மகளோவெனில் மிகவும் சின்னவள். புரியாத - பேதை. அழகிய சிறு மொட்டு.
சீலன் ஏன் வீட்டை விட்டுப் போனன்?
அம்மா நன்ருகவே கவனித்தாள். சில நாட்களாக சீலன் சரியாகவே இல்லை. பரீட்சை வேறு நெருங்கிக் கொண்டிருந்தது.
*سم
எதையோ குறித்து தீவிரமாகச் சிந்தித் துக் கொண்டிருப்பதாகத் தோ ன் றி ய து; எதையோ குறித்து மிகவும் கவலை கொள்பவனு கவும் தெரிந்தது.
பரீட்சையை நினைத்துக் கலவரப் படு கிருனுே? ஏன், நன்ருகத்தானே படித்தான்!
பிடிப்பில்லாதவன் போலக் காணப்பட்டான். அம்மாவை நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த்தான். வாய்க்குள் ஏதோ முனகிக் கொள்பவனுய் தலையை அடிக்கடி குலுக்கினுன் . இர வு நேரங்களில் நித்திரையைத் தொலைத்து விட் டான். புரண்டு புரண்டு படுக்கின்ற அரவங்கள் கேட்டன. காலை நேரங்களில் அவன் சைக் கிளைத் துடைப்பதில்லை. ரேடியோவை மீட்டு வதில்லை. ஆம்! ரேடியோவை அவன் மீட்டு வதாகத் தான் அம்மா இவ்வளவு காலமும் எண்ணினுள். ரேடியோவில் இருந்து அவனது இனிய சாரீரமே மிதந்து வருகிறது போல.. உலகின் இனிய வஸ்துக்கள் யாவும் அவனுக் காகவோ படைக்கப்பட்டிருப்பதென. அவன் தொட்டதெல்லாம் துலங்கும் என. அவனுக்காக எங்கோ ஒரு அரிய நங்கை வளர்ந்து வருகிருள் என.. . அவர்கள் அம்மாவுக்கு அழகிய, மதலை குதம்பும் பேரக் குழந்தைகளைப் பெற்றுத் தருவார்கள் என.

Page 17
பாலம்
சீலனே எனில் சில நாட்களாக ஏனுே தானே என மாறிவிட்டான். 'பரீட்சை எழுதப் போனன், மற்றப் பையன்களிடம் காணப்பட்ட ஆர்வமோ பரபரப்போ அவனிடம் காணப் பட வில்லை. அம்மா அவனை ஏதும் கேட்கவில்லை. அவளது இனிய குழந்தையைத் தொந்தரவு செய்ய அவள் விரும்பவில்லை. எங்காவது காதல், கீதல். என்று ஏதாவது?. அவனுகவே சொல்லட்டும் என விட்டு விட்
L6.
பரீட்சை நடந்து கொண்டிருந்தது. சீலன் வரவர மிக வெளிறினன். முகத்தில் ததும் புகிற ஜீவகளை எங்கே போயிற்று? அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
சீலன் அன்று வெகு சீக்கிரமே எழுந்தான். மிக நீண்ட நேரம் எங்கோ கவனமாக பல் துலக்கினன். தன்னுணர்வற்றவன் போல உல வினுன், பளிச்சென அம்மா , பெருக்கி விட் டிருந்த முற்றத்தில் அவனது"சீரான காலடிகள் பதிந்தன. அம்மா மிகவும் அதிசயப்பட்டாள்.
"நேரமாகுதெல்லே மேனே. sy
சரியாகச் சாப்பிடத்தானும் இல் லை. சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான். வழமை போல் ஒரே தாவலில் ஏறிப் பறந்து விட வில்லை மிக நிதானமாக ஏறி உட்கார்ந்தான். காற்றை அளப்பவனைப் போல் சுற்றிலும் பார்  ைவ ஒட்டினுன்.
99
** போயிட்டு வாறன் அம்மா.
* வடிவாக் கடவுளை நேர்ந்து கொண்டு போ. 99
பிறகும் ஏன் நிற்கிருன்?
99.
G நேரமாகு தெல்லே.
s
**நான் போறன். முணுமுணுத்தான்.
மொட்டையாக
மெல்ல மெல்ல ஒரு கிழவனைப் போல உழக்கிக்கொண்டு போனன். அம்மா அவன்

3
மறுபடியும் நினைவூட்டுகிருேம்
அவசர அறிவிப்பு
பாலம் சந்தா சேர்ப்பு இயக்கம் விரைந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சந்தா புத்தகம் பெற்றுள்ள நண்பர்கள் தங்கள் பணியை விரைந்து முடித்து உரிய பணத்தை யும் சந்தா புத்தக அடிக்கட்டையையும் அனுப்ப வேண்டுகிருேம். பாலம் பலம்பெற இப்பணி அவசிய அவசரமானதாகும்.
- ஆசிரியர் குழு
ग्रू
பின்னுலேயே போனுள். தெருவில் இறங்கி நின்றுகொண்டு அவன் போவதைப் பார்த்தாள். முடுக்கால் திரும்பி மறையுமுன் "சட்’ என ஒரு தரம் திரும்பி பார்த்தான்.
9ıbLDAT உள்ளே வந்தாள். சற்று நேரம் திண்ணையில் உட்கார்ந்தாள். பிறகு, தலைக்கு எண்ணெய் பூசி சீவி முடிந்துகொள்ள நினைத்து எண்ணெய்ப் போத்தலைத் தேடினுள்.
வாசலில் யாரோ சைக்கிளில் வந்து நிற் பதைப் போல உணர்ந்தாள். எட்டிப் பார்த் தாள்.
என்னவாயிற்று இன்று இவனுக்கு?
மீண்டும் சீலன் உள்ளே வந்தான். எதை யாவது மறந்துபோய் விட்டுவிட்டுப்போனுனுே?
திண்ணையில் ஏறி அமர்ந்தான். முக ம் செத்துப்போய் இருந்தது. W
2
"ஏன் மேனே தலையிடிக்குதோ.
** சாச் சாய்... ... ??
குனிந்து நிலத்தைக் கீறவாரம்பித்தான்.
**இரு கோப்பி போட்டுத் தாறன்.
sy
s
**இண்டைக்குப் பாடம் உனக்கு ஓடா தோ?”

Page 18
14.
அசிரத்தையாகத் தலையை குலுக்கினுன்
**அப்ப ஏன் ஒரு மாதிரியாக இருக்கிருய்?”
6 6.
**காசு.கீசு. ஏ தா வ து வேணுமோ?”
சிரித்தான். இந்த அம்மா எவ்வளவு அப் பரவி!
அம்மா அவசரமாகக் கோப்பி கொண்டு வந்து கொடுத்தாள். வாங்கினன். இல்லை, பறித்தான்! அவனது ஆவலும் பரபரப் பு b அம்மாவை வியப்பிலாழ்த்தின. வாங்கும் போது அம்மாவின் கைகளை அவன் விரல்கள் தீண்டின. என்றுமில்லாத அழுத்தம் அவ்விரல்களில் இருந் தது. உள்ளங்கைகள் பிசுபிசுத்து வியர்த் திருந்தன. -
**தங்கச்சி எங்கை அம்மா..?
N. **பச். உங்கை தான் எங்கையாவது போயிருப்பாள்.”
藏 兹 s
66ir'
**சும்மா தான்”
** அவளைப் பாத்துக் கொண்டு நில்லாமல் வெளிக்கிடு. நேரம் போகுது. ورو
ஏதோ ஒரு உறுதியுடன் விரு ட் டெ ன எழுந்தான். விறைத்து நின்று கொண்டான் சிறு நேரம். ஒரு நொடி அம்மாவின் கண்களைக் கூர்ந்து பார்த்தான். அவளது கண்களுக்குள் எதையே தேடினுன் போலும்!
**நான். போ-ற-ன்.அம்மா!”
வெடுக்கெனத் திரும்பிச் சைக் கிளில் பாய்ந்து ஏறினன். வெகு வேகமாகப் போனன். ஏதோ ஒரு இனம்புரியாத சக்தி அவனை அம்மாவிடமிருந்து பிரித்து இழுத்துச் செல் கிறதென.
அம்மா கலவரத்துடன் தெருவுக்கு விரைந் தாள். சீலன் முடுக்கால் திரும்பி மறைந்து

பர்லம்
கொண்டிருந்தான். ஒரு தரம் திரும்பிப் பார்ப் பான் என எதிர்பார்த்தாள். அவன் பார்க்க வில்லை. ஆணுல் ஹாண்டிலில் ஒரு சிறு பொலித் தீன் பாய்க் தொங்கிக் கொண் டி ரு ப் ப  ைத அம்மா அப்போதுதான் கவனித்தாள். சைக் கிள் சில்லு தெரு நீளத்துக்கு பாம்பு ஊர்ந்து போன சுவடாகத் தடம் பதித்துத் தெரிந்தது.
அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை, புரு வங்களைச் சுருக்கினுள்.
மாலையில் யாவும் புரிந்தன. த யங் கித் தயங்கி ஒரு பையன் சீலனின் சைக் கிளை த் தள்ளிக் கொண்டு வந்தான். தலையைக் குனிந்து கொண்டே போய்ச் சுவருடன்  ைசக் கிளை ச் சார்த்தினுன். அவனை எங்கோ பார்த்த ஞாபகம் காட்டிற்று அம்மாவுக்கு. அம்மாவின் முகத்தை பாராமல் எங்கோ வேண்டுமென்றே பார்வை யைத் திருப்பினுன்,
வெகு ஆயத்த்மாக தொண்டை  ைய ச் செருமிச் சரிபண்ணிக் கொண்டான்.
**சீலன்.இதை.இஞ்சை கொண்டு வந்து
விடச் சொன்னவர்.
**ஆங்1.சீலன் எங்கையப்பு.
* ஐயோ! என்ரை பிள்ளை. 9 s அந்தக் குரலின் அவலம்  ைப ய னை த் துரத்தியது. தலையைக் குனிந்தவனுய் விடு விடென விரைந்து போனன்.
அம்மா பதைத்தாள் கிரீச்சிட்டாள். “ of 66öT எங்கையப்பு”
பையன் பின்னே தட்டுதடுமாறி ஓடியபடி அம்மா கேட்டாள். அவன் பதில் சொல்ல முடியாமல் ஓடத் தொடங்கினுன்
**சீலன் எங்கையப்பு.
இலேசாக குளிர்ந்துபோய் த ன் னை க் கடந்துபோன காற்றை, அம்மா கேட்டாள், அது மெளனமாகப் போனது.

Page 19
LT6ab
இவ்வாருண எத்தனை அன்னையரின் சோகங் களை அது பார்த்திருக்கிறது! அது பேசாமல் போனது.
"ஐயோ, என்ரை சீலன் எங்கை.
சிவந்து மின்னிக் கொண்டிருந்த அந்தி
வானை அம்மா கேட்டாள்.
இவ்வாருண எத்தனை சீலன்கள் அதன் கீழ் உள்ளனர். அது பேசாமல் கண்ணை மூடிற்று
** சீலன் எங்கை?”
அவளுக்குத் திருப்தியான பதிலைத் தர ஒருவரும் இல்லை,
* சீலன் எங்கை?”
அம்மாவின் பரிதாபமர்ன அக்கேள்வி ஊர் மேல் ஓங்கியடித்தது. அம்டிாவைச் சுற்றி ஊர்ப் பெண்கள் ஒவ்வொருவராகக் கூடத் தொடங் கினர்கள்.
அவர்களுக்குப் புரிந்தது சீலன் எ ங் கே
போனுன் என்று! இவ்வாருண எத்தனை கதை
களை அவர்கள் அறிந்திருக்கின்றனர். அம்மாவை ஆதரவாக உள்ளே கூட்டிப் போயினர்.
பிறகு,
அந்த எளிமையான சிறிய வீட்டின்
ஆனந்த வாழ்வும், அவனுடன் கூடப் போய் விட்டதாய்.
வெறுமை.
O
மாலை நேரங்களில் அம்மா ஊரை நீங்கித் தூரே இருக்கின்ற வயல்வெளிகளிலும், பனா கூடல்களுக்குள் தனித்துக் கிடக்கின்ற திட6 களிலும் புல் செதுக்கிக் கொண்டு வர போவாள். முழுத்தூரமும் இளைத்து, இளைத்து முதுகொடியச் சுமந்து வந்தாள்.
அவள் பாரத்தை மாற்றிக்கொள்ள யாரு இல்லை !

15
அவள் பாதி வழியில் வரும்போதே முருகன் கோயில் மணி சிணுங்கிக் கேட்கும். அவளால் வேளா வேளைக்குப் பூசை காணப் போக முடிய வில்லை. அவள் போகும்போது கோயில் நிசப்த மாக இருளில் மூழ்கி இருக்கும். பூசை முடிந்து போனதின் தடங்களாக, சிந்திக் கிடக்கின்ற சில மலர்களும். மெல்லமெல்லக் காற்றில் கரைந்து கொண்டிருக்கிற கற்பூர வாசனை யும்.முணுக்கென எரிகின்ற ஒரு சிறு தூண் டாமணி விளக்கும்.இழுத்துப் பூட்டப்பட்டிருக் கிற சித்திர வேலைப் பாட்டுடன் கூடிய கனத்த கதவும்.
அம்மா வாசலில் நின்று தனியே தொழு தாள். தனது அருமையான புதல்வனின் நலத்
துக்காக அம்மா தினமும் தனியே நின்று
உருகினுள்.
வீட்டுக்குத் திரும்பிவரும் நேரங்களில் மாடுகள் பின்புறத்தில் ஒன்றையொன்று கொம்புகளால் குத்தி விரட்டியபடி துள்ளித்
திரியும். கண்ட இடத்திலெல்லாம் குளம்பு
களால் உழக்கிய அடையாளங்களும்.சாணி
யும்.
அம்மாவே ஒவ்வொன்ருக இழுத்து வந்து கட்டைகளில் கட்டவேண்டியிருந்தது.
கோழிகள் பூவரச மரங்களில் குடிபுகப் பழ கின. அம்மா கற்களை எடுத்து வீசுவாள். ‘சூ” என விரட்டுவாள். நிசப்தமான முன் னிரவு அவற்றின் கொக்கரிப்புக்களாலும், சிற கடிப்புக்களாலும் நிம்மதி இழந்து தவிக்கும்.
* அம்மாவே தனியாக, அவற்றைக் கூடு களில் அடைக்க வேண்டி இருந்தது.
புகை படிந்துபோய் மங்கிய ஒளி சிந்தும் ஒரு சிறு விளக்கு. மேசையின் மீது சீலனின் புத்தகங்கள். ஒரு சைக்கிள். மெளனமாகி விட்ட ஒரு ரேடியோ , அருகிலே மகள் அமர்ந்திருப்பாள், அழகிய சிறு மொட்டு. வயதுக்கு மீறிய குருட்டு யோசனைகள், கொட்டக் கொட்ட விழித்தபடி தனிமையில்
உட்கார்ந்திருப்பாள். பாவம் !

Page 20
16
அந்த அருமையான மாலைநேரத் தேநீர் அம்மாவுக்குப் பிறகு கிடைக்கவேயில்லை.
அம்மா வரவர மெலிந்தாள், கண்களைச் சுற்றிக் கருவளையங்கள் தோன்றின. நடை வரவரத் தளர்ந்தாள். முன்புபோல உற்சாக மாக வேலை செய்ய முடியவில்லை. 'அம்மா வயோதிபத்தை நோக்கி மெல்ல மெல்ல போய்க் கொண்டிருந்தாள்.
இரவு நேரங்களில் நித்திரையின்றி வாடு வாள். புரண்டு புரண்டு படுப்பாள். அலுத் துப் போய் எழுந்து உட்கார்வாள். ஏதோ ஏதோ விபரீத எண்ணங்கள் தோன்ற பெரு மூச்சுகள் விடுவாள்.
குலத்தைப் பற்றியும் அம்மாவுக்கு வர வர ஒன்றும் புரியவில்லை. எப்போதாவது மூன்று நான்கு நாட்களுக்கொருமுறை வரு வான். அம்மா அரைத் தூக்கத்தில் அவஸ் தையுடன் புரளும் போது கன வேகத்தில் வந்த ஒரு வாகனம் வாசலில் நின்று ஒரு தரம் உறுமி ஒயும். குலம் 'திமுதிமு' வென உள் ளே வருவான். அம்மாவுடன் ஒரு வார்த்தை ' கூடப் பேசாமலே.அம்மா முகத்தைச் சரியாக ஏறிட்டுக்கூடப் பார்க்காமலே. கைகளில் பணத் தைத் திணிப்பான். சேட்டைக் கழற்றிக் கண்ட இடத்தில் எறிவான். ஒலைப்பாயை விரித்து, தலையணைகூட இன்றிப் படுப்பான். வலிய கரங்களை நெற்றியின் மீது அழுந்தப் போட்டபடி.கால்களை ஆட்டியபடி. மயிரரும் பும் மார்புகள் விம்மித் தணிய ஒரு நொடியில் தூங்கிப் போவான்.
இப்போ தூங்கிக் கொண்டிருக்கிருனே, அது மாதிரி ! ஒரு காட்டுப் பிறவி !
இப்போ,
குண்டுச் சத்தங்கள் அடிக்கடி கேட்கின் றன. குண்டுச் சத்தங்களைக் கேட்டவுடன் அம்மா நடுங்குவாள். கண்கள் பீதியால் விரி யும். அடிவயிறு குலுங்கும்."
*அவர்கள்’ அடிக்கடி ஊர்களைச் சுற்றி வளைத்தனர். கனரக வாகனங்களின் உறும லைக் கேட்டவுடன் அம்மா பாதி உயிரற்றுப் போவாள். நீட்டிய துப்பாக்கிகளுடன் ** மகன் எங்கே?” என உறுக்கியபடி அவர்கள் வரும் போது-துப்பாக்கிச் சனியன்களில் குத்திக் கொண்டு போகும் பாவனையில் பிள்ளைகளை அவர்கள் வளைத்துக் கூட்டிச் செல்லும்

பாலம்
போது-அம்மா படும் சஞ்சலம் சொல்லி மாளாது.
'கடவுளே!.நான் சாக முதல் என்ரை பிள்ளையை ஒருக்கால் கண்ணிலை காட்டு.”
ஊரில் னதிமும் இரவு நேரங்களில் குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. அம்மாவின் காதுச் சவ்வுகள் கிழிந்து விடுமாற்போல் 'கிண்’ என வலிக்கின்றன. நெஞ்சு நீரற்று வரண்டு போய்விடுகின்றது.
ஓ ! இந்த இரவுகள் மிகவும் கொடியன.
அம்மாவுக்கு மிகவும் பரிச்சயமான அந்த வயல் வெளிகளிலே, பனங் கூட்ல்களுக்குள் தனித்துக் கிடக்கும் திடல்களிலே பொடியன் கள்’ குண்டு வெடிக்கவைத்துப் பழகுகின்ருர் கள் என ஊர்ப் பெண்கள் அம்மாவிடம் சொல்லினர்.
சீலனும் அவர்களுள் ஒருவனுக இருகக் லாமோ ? அம்மா பெரும் பீதியுடன் எண்ணி ணுள். ஆணுல் சீலனைக் கண்டதாக ஒரு நாய் கூட அம்மாவிடம் சொல்லவில்லை.
அவன் எந்த ஊரில் குண்டு வெடிக்க வைத்துப் பழகுகிருனே ? அம்மா பிற ஊர் களை அதிகம் அறியாள். இந்தச் சிறு குடிசை வீடும்.முருகன் கோயிலும். புழுதி பறக்கின்ற ஒழுங்கைகளும் . பனங் கூடல்களும் . திடல் களும். மாடுகளும்.கோழிகளும் தான் அம்மா வின் உலகம். அவளது பிள்ளைகளே அவளிட் டிய ஈடற்ற செல்வம்.
இன்று அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. ஒவ்வொரு சத்தத்திற்கும் சீல னின் நினைவு அம்மாவுக்குள் கனதியாக ஏறிற்று.
குலம்கூட நாலைந்து நாட்களாக வீட்டுக்கு விரவில்லை. இன்ருவது அவன் வருவான் என அம்மா மிகவும் ஆசைப்பட்டாள்.
இவன் என்ன பிள்ளை ? வீட்டுக்கு வரு வதே குறைவு. வந்தவுடன் விழுந்து படுக் கிருன்.
'அம்மா.பசிக்கிது” என ஒரு வார்த்தை!
ம் ஹாம்.

Page 21
Lufr"6a)Lib
பசி என ஒரு பிள்ளை கேட்டாலே தாயின் வயிறு நிறைந்து விடுமே. இதுகூடப் புரியாத, ஒரு காட்டுப் பிறவி.
எங்கேதான் இவன் சாப்பிடுகிருனே
இன்று குலம் கட்டாயம் வருவான் என எண்ணினுள் அம்மா, தூங்காமல் விழித்திருந் தாள். திண்ணைக் குந்தில் கால் நீட்டி உட் கார்ந்தாள். ܗܝ
இன்று மங்கிய நிலவு வெளிச்சம் இருக் கிறது. சந்திரனின் முகம் ஒரு அழகிய பெண் ணின் நெற்றி போலத் தெரிகிறது. வெள்ளை மேகங்கள் வேகமாக வானில் திரிவதை அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள். பூவரசமிலைகள் மங்கிய நிலவொளியில் பளபளத்துத் தெரிகின்
65t.
அம்மா மட்டும் தனித்திருந்தாள். விளக் கின், சிம்னி புகை படிந்திருந்தது. மகள் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். மாடுகள் மூச்சு விடும் சத்தத்தை, கோழிகள் குறுகுறுப்பதை, நாய் மூச்சுவாங்கி அங்கும் இங்கும் ஓடுவதை, நிலத்தைப் பிராண்டு வதை.அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிள் வண்டு ஒன்று கீரிச்சென குரலெடுத்து அலற ஆரம்பித்தது. நாய் காரணமற்றுப் பலமுறை குரைத்தது. நிலவைக் கண்டு அது குரைப்பதாக எண்ணினுள்.
செங்காரிப்பசு வேதனையான குரலில் கதறி யது. எதுவோ அதைத் துன்புறுத்துவதாகத் தோன்றியது. அம்மாவால் எழுந்து பின்புறம் போக முடியவில்லை. ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
நடுநிசியின் மணத்தையும், உருவத்தை யும், சத்தத்தையும் அம்மா உன்னிப்பாகக் கவனித்தாள். எங்கோ புல்லாந்தி மலர்ந் திருக்க வேண்டும். குரக்கன் பிட்டுவாசனை மூக்கைக் கமறச் செய்கிறது. புடையன் பாம்பு இரையெடுக்கின்ற போதும் இதே வாசனை ! வேலி சரசரத்தது. உடலெங்கும் கபடான அழகுமிக்க முத்திரைகளைப் போர்த்தியபடி கொடிய விஷமுடைய புடையன் பாம்பு, வழுவி வழுவி . வேலிக்குள் ஊர்கிறதோ ?. அம்மா வுக்கு ஒரே பயம் !
குலம் எப்போது வருவான் ? அவன் கட் டாயம் வரவேண்டும் என அம்மா முருகனை அடிக்கடி வேண்டினுள்.

17
அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கின் றன ; நிலமும், காற்றும், வானும் அதிர்கின் றன. அடிவயிறு குலுங்குகிறது.
சிறுவயதில், இருளைக் கண்டு பயந்து அம்மாக்கள் பக்கத்திலேயே ஒட்டியபடி படுத் திருந்த புதல்வர்கள் யாருமற்ற வயல்வெளி களிலே, பிசாசுகளும் உலவத் தயங்கும் நடு நிசி வேளைகளிலே இவ்வாறு திரிய எப்படிப் பழகினர் ? இந்தப் பயங்கர சத்தங்களை எவ் வாறு தாங்கிக் கொள்கின்றனர் ? இந்த ஆபத் துக்களை எவ்வாறு சிரிப்புடன் ஏற்றுக் கொள் கின்றனர் ? இவ்வளவு வேகத்தையும் வெஞ் சினத்தையும் அவர்களின் மனங்களில் விதைத் தது யார் ?
*" கடவுளே!.எவளெவள் பெத்த பிள்ளை யளோ,...இப்பிடி வாய்க்கு வயித்துக்கில்லா மல். -
குண்டு ஒன்று பிசிறடித்த சத்தத்துடன் வெடிக்கின்றது. கேட்டுப் பழக்கமில்லாத வித்தியாசமான வெடிப்பு. மிகவும் வெறுக்கத் தக்க, அருவருப்பான சத்தம்-அரைகுறையில் பிரசிவமான ஒரு உயிரற்ற முண்டத்தைப் போல. 'ኑ
அம்மாவுக்கு உடல் "பட்டென வியர்த் தது. ஏதோ கெட்ட விஷயம் நடந்தேறிய தாக உள்ளுணர்வு சொல்லிற்று.
எழுந்து மேசையை நோக்கிப் போனுள். நடுங்கும் கரங்களால் விளக்கைத் தூண்டினள். இறங்கி முற்றத்துக்கு வந்தாள். சேலையை இழுத்துப் போர்த்திக்கொண்டு குண்டுச் சத்தம் வந்த திசையில் பார்த்தாள். நாய் அம்மா வின் காலடியில் நின்றது. வாலைக் கால்களுக் கிடையில் நேராகத் தொங்கப் போட்டபடி செவிகளை வானுேக்கி உயர்த்தி எதையோ உற்றுக் கேட்டது. மெல்ல உறுமிற்று. பிறகு வேதனையான குரலில் ஊளையிட்டது. வீட்டைச் சுற்றிச்சுற்றி வேகமாக ஒடியது. அம்மாவின் கால்டியில் நிற்பதும்.பிறகு ஓடுவதும்.கெட்ட சேதியொன்றை அம்மாவுக்கு உணர்த்த அது துடித்தது போலும் !
செங்காரிப் பசு மீண்டும் மீண்டும் கதறி யது. சிள் வண்டின் பிலாக்கண ஓசை மிகை பட்க் கேட்கலாயிற்று. குரக்கன் பிட்டு வாசனை எங்கும் நீக்கமற நிறைந்தது.
அம்மா சோர்ந்துபோய், துடிக்கும் நெஞ் சுடன் முற்றத்தில் உட்கார்ந்தாள். நெஞ்சு

Page 22
18
மிக வரண்டு விட்டது. தொண்டைக் குழிக்குள் கனமான வஸ்து ஒன்று அடைத்து விட்டது போலத் திமிறித் திமிறி மூச்சுவிட்டாள்.
சீலனை நினைத்து நினைத்து ஏங்கினுள். குலம் இன்ருவது வருவான் என்ற நம்பிக்கை யும் பொய்த்தது. இரவு மிகவும் முற்றி அம்மாவைச் சுற்றிக் கனமாகப் படிந்தது. துன்பம் தரும் குரலில் ஏதோ சொல்லிற்று.
சற்றுத் தூரே போகும் ரோட்டில் ஒரு வாகனம் விரைந்து போகும் சத்தம். ஆபத் தான நோயாளியை யாரோ சிலர் அவசர அவசரமாகச் சுமந்துகொண்டு காப்பாற்ற ஓடிக் கொண்டிருப்பதாக.
எங்கோ ஏதோ பிசகு நடந்துவிட்டது.
கோழி ஒன்று பரிதாபமாகக் குழறுகிறது, மரநாய் பிடித்திருக்க வேண்டும். தீனமான, அந்தச் சத்தம் மெல்ல மெல்லத் தேய்ந்து தேய்ந்து தூரே போய், மறைகிறது. நாய் துரத்திக் கொண்டு ஓடிப்போய் இயலாமையு டன் திரும்பி வருகிறது.
விழிகள் திறந்தபடியே இருக்க அம்மா கனவு கண்டாள்.
வயல் வெளியில் அம்மா நிற்கிருள் சூரி யன் பயங்கரமாகக் காய்ச்சுகிருன். மழையும் பெய்கிறது. வெம்மையாக அம்மா உடலைப் பொசுக்கிற்று மழைநீர், அம்மா ஓடுகிருள். இழைத்து இழைத்து ஊருக்குள் நுழைகிருள். ஒழுங்கைகளில் வெள்ளம் பாய்கிறது. ஒரு சிவப்பு நூல்போல இரத்த ஒடை ஒன்று வெள் ளத்தில் கலக்கிறது. அம்மா அதன்வழி போ ஞள். வெகுதூரம்.வெ-கு-தூ-ர-ம்.கடைசி யில் வந்து சேர்ந்தாள். வீட்டு வாசலில் சீலன் தலையைக் கவிழ்ந்தபடி இருக்கிருன். கண்களி லிருந்து இரத்தம் தாரை தாரையாகக் கொட்டு கிறது; மழை நீரில் கலக்கிறது. வீடெங்கும் இரத்தம். ங்ாய் இரத்தத்தை நக்கி நக்கிக் குடிக்கிறது.
கனவில் இரத்தத்தைக் காண்பது கூடாதே! அம்மா வீரிட நினைத்தாள். இயலாமல் போயிற்று. '
குலம் அன்று வரவேயில்லை. அம்மா முழு இரவும் தூங்காமல் விழித்திருந்தாள். அந்தக் கொடிய இரவின் ஒவ்வொரு விணுடியையும் வேதனையுடன் அனுபவித்தாள்.

Li T6b
கிழக்கு வானிலே விடிவெள்ளி காலித்தது. சந்திரனை அது மேற்கு நோக்கி விரட்டிற்று. காகங்கள் துன்பம் நிரம்பிய குரலில், விடிந்து கொண்டிருப்பதைப் பூமிக்குச் சொல்லின. கோழிகள் சிறகடித்துக் கொக்கரித்தன, கூவின. முதல் நாள் இரவில் பறிபேர்ன தங்களது தோழனுக்காக அவை அஞ்சலி செலுத்தின. மாடுகள் மடிநிறையப் பால் சுரந்து கனக்கின்ற வேதனை தாளாமல் கன்றுகளை அழைத்தன. செத்த வீட்டுக்கு தலையைக் குனிந்து கொண்டு வரும் ஒருவனைப் போல், சூரியன் மெல்ல மெல்ல உதயமாகினுன்.
புரியாத பேதையான மகள் சோம்பல் முறித்தபடி எழுந்து வந்தாள். முற்றத்தில் நாடியில் கையூன்றி உறைந்து போய்விட்ட அம்மாவைப், புரியாத பார்வையால் அளந் தாள். அம்மாவின் ஜீவன் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டது. சிறு காற்றுக்கூட அம்மா வின் பலகீனமான தேகத்தைப் பூமியில் புரட்டி விடும்.
மெல்ல எழுந்து திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்தாள். யாராவது ஒரு வேலையற்ற , பெண் அம்மாவைத்தேடி வரமாட்டாளா ? கேவும் குரலில் அவளிடம் தன் துன்பங்களைக் கொட்டி அம்மா ஒரு பாட்டம் அழுது ஒய
மாட்டாளா?
ஒருவரும் வரவில்லை. பதிலாக மகள் பள்ளிக்கூடம் போகவேண்டியிருந்தது. மாடு களை அவிழ்த்து மேய்ச்சலுக்குத் துரத்தவேண்டி யிருந்தது. கோழிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது.
அம்மா யந்திரகதியில் அவற்றைச் செய் தாள். மூளை வேலை செய்து மரத்துப் போ! யிற்று. கண்கள் காந்தின. அம்மாவுக்கு உட் காய்ச்சல் கண்டுவிட்டது. நெருப்புக் காற்றுப் போல உஷ்ணமான மூச்சுக்கள் உதடுகளைப் பொசுக்கின. காரணமற்று சில தப்படிகள் நடப்பதும்.பிறகு நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்வதும்.துரே அர்த்தமற்றுப் பார்வை பதித்து பெருமூச்சுக்கள் எறிவதும்.
சூரியன் யாருக்கும் பிரிவு சொல்லாமல் மறைந்து போனது. இருளுடன் போரிட்டுத் தோற்றுப்போய் அழுது வடிகிறது நிலவு. காற்று சோர்வாக நடந்து போய்க் கொண்டி ருந்தது. அம்மாவால் இவற்றைக் கவனிக்க முடியவில்லை.

Page 23
Ls),6b
சீலன் என்ன ஆணுன்?
குலம் ஏன் நாலைந்து நாட்களாக வர வில்லை ?
அம்மர் மனதில் கேள்விகள் மாறி மாறி எழுந்தன ; ஒன்றை ஒன்று துரத்தின.
தொடர்ந்து மூன்று நாட்களாகக் குண்டுச் சத்தங்கள் கேட்கவில்லை. அச்சமூட்டும் பேர மைதி ஊர்மேல் கவிந்தது. மூன்று நாட் களும் அம்மாவால் ஒரு வாய்கூட உண்ண
முடியவில்லை. ஒரே விக்கல் 1
நாலாவது இரவு வேகமாக வந்தது.
ஓ ! இந்த இரவுகள் மிகவும் கொடியன.
அம்மா திண்ணைக் குந்தில் கால்நீட்டி உட்கார்ந்திருந்தாள். மரஇலைகள் நடுநடுங் கிக் கொண்டிருக்க, காற்று அவற்றைச் சீண்டி விட்டுப் போய்க் கொண்டிருந்தது. நிலவு மேகங்களுக்குள் பயந்துபோய் ஒளித்துக் கொண்டு அடிக்கொருதரம் எட்டி பார்த்து, 'சடக் எனத் தலையை உள்ளிழுத்துக் கொண் டிருந்தது. ஒழுங்கையில் யாரோ சுருட்டுப் பிடித்துக் கொண்டு போனுன் போலும். “குப் பென சுருட்டின் நாற்றம் வீசிற்று. நாய் சுருண்டுபோய் அம்மா பக்கத்தில் படுத்திருந் தது.
வாகனம் ஒன்று வருவதை அம்மா உணர்ந் தாள். அளவான வேகம். கண்களைக் கூசச் செய்யும் ஒளி வெள்ளத்தை உமிழ்ந்தபடி வாச லில் நின்றது. "ஹோர்ன்'ஐ ஒலித்து, வந்து விட்டதாகச் சேதி சொல்லிற்று.
அம்மா ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள்.
கடவுளுக்கு நன்றி ! குலம் இன்று வீட் டுக்கு வந்திருக்கிருன் !!
கதவுகளைத் திறந்து அறையுஞ் சத்தம். லம் மட்டுமல்ல, வேறும் சிலர் வந்திருக்க வண்டும். குசுகுசுவெனக் கதைக்கின்ற சத் தம். படலையை மெல்லத் தள்ளித் திறந்தனர்.
கூட்டமாக வந்தனர்.
யாரோ ஒருவனைக் கைத் தாங்கலில் கூட் டிக் கொண்டு வந்தனர். அம்மா பயந்தவ ளாய் விருட்டென எழுந்தாள். விளக்கைத் தூக்கி உயரப்பிடித்தாள்.

19
குலம் சோர்ந்துபோய் வந்துகொண்டிருந் தான். அவனைத் தாங்கி அழைத்து வருகின் றனர். வலது கையை ஒருவன் மென்மை யாகப் பற்றியபடி வந்தான். மணிக்கட்டுக் குக் கீழே இரத்தம் ஊறிப்போன ஒரு துணிப் பந்து !
ஐயோ ! இந்த அம்மாவின் முரட்டுக் குழந்தைக்கு என்னவாயிற்று ?
SlbLost அலற நினைத்தாள் முடியவில்லை, நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.
அம்மா அசைய நினைத்தாள், арц ш வில்லை. பாதங்களை யாரோ ஆணியால் தரை
யுடன் சேர்த்து அறைந்தது மாதிரி.
அவர்கள் ஓலிைப்பாயை விரித்தனர். தலை யணைகளைப் போட்டனர். குலம் பொறுக்க முடியாமல் முனகியபடி சரிந்தான். முகம் மிக வெளிறியிருந்தது. உதடுகள் காய்ந்து தோலு ரிந் திருந்தன. மிகவும் தாகமாக இருந்தான். நாவால் உதடுகளை நீவினன்.
99.
** அம்மா..
தீனக்குரல் அம்மாவை அழைக்கிறது. அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. -
மகன் தாகத்தால் தவிக்கிருன், அம்மா வால் அசைய முடியவில்லை.
அவர்கள் கிட்ட வந்தனர். தலையைக் குனிந்தபடி அம்மாவைச் சூழ நின்றனர். ஒருவன் அம்மாவைத் தொட்டசைத்தான். அம்மா இமைக்க மறுக்கும் விழிகளால் அவர் களைப் பார்த்தாள். :
அவர்களை அம்மா அடையாளங் கண் டாள் ! நடு நிசிகளில். யாருமற்ற வெளி களில்.திரிகின்ற புதல்வர்கள் ! !
ஓ ! குலமுமா இந்த ப்பாவி அம்மாவை இவ்வளவு காலமும் ஏமாற்றித் திரிந்தான் ?
*கோப்பி வச்சுக் குடுங்க்ோ.”
அம்மாவின் தோள்களைக் குலுக்கியபடி ஒருவன் சொன்னன்.
அவளுடைய முரட்டு மகன், புரியமுடியாத புதல்வன் கையைக் காவு கொடுத்து வந்திருக் கிருன் ! தாகத்தால் தவிக்கிருன்! !

Page 24
கடவுளே! அம்மாவுக்கு கொஞ்சம் பல
மளிக்கமாட்டாயோ ?
அம்மா எதுவோ - கேட்க உன்னினுள். அர்த்தம் குலைந்த பலகீனம்ான ஒரு முனகல் மட்டுமே வந்தது.
அம்மா அசைய முயற்சித்தாள். பெரும் பிரயாசையுடன் கால்களைப் பெயர்த்தாள். உடல் முழுவதும் மரண வேதனை போலும் நோவெடுத்தது. ஒரடி எடுத்து வைத்தாள். "மொளக் கென ஏதோ சுளுக்கிக் கொண் டது. அம்மா பிருஷ்டம் அடிபட மல்லாந்து விழுந்தாள். .
அவர்கள் அம்மாவைத் தூக்கினர். ஒலைப் பாயை விரித்தனர். தலையணைகளைப் போட் டனர். பாயில் அம்மாவை மெல்லச் சரித்தனர்.
ஊருக்குள் எப்படித்தான் விஷயம் பர விற்ருே ?
அவசர அவசரமாக மண்ணெண்ணெய் விளக்குகள் மீண்டும் ஏற்றப்பட்டன. ஒவ் வொருவராக ஊர்ப் பெண்கள் அம்மாவின்
வீட்டு முற்றத்தில் கூடத் தொடங்கினர்.
**கையிலையே வெடிச்சிடுத்தாம்.” ஒருத்தி பீதி கவ்விய குரலில் மற்றவளிடம் குசுகுசுத் ததை, அம்மா கனவிற் கேட்பதைப் போலக் கேட்டாள்.
குலத்தைப் திரும்பிப் பார்த்தாள். அரை மயக்கத்தில் கிடந்தான். சொட்டுச் சொட் டாகக் கருஞ்சிவப்பு இரத்தம் தலையணையில் சிந்திக் கொண்டிருந்தது.
முத்து முத்தாக சூடான கண்ணிர் அம்மா வின் கன்னங்களை நனைத்தபடி சிந்தத் தொடங் கிற்று. -
முதுகுப் பிடிப்புடன் ஒரு முதியபெண். அவள் வெகு வேகமாகக் கிழவியாகிக் கொண் டிருந்தாள். ஊரில் ஒருவருடனும் அவள் இப்போ பேசிச் சிரிப்பதில்லை.
ஒரு அழகிய சிறு மொட்டு. புரியாத பேதை, வாடிக்கொண்டிருக்கும் பூமரம். அவளது வயதுக்கு மீறின குருட்டு யோசனை கள் கவலைகள். ஏக்கங்கள். தாயின் வேலை யில் பாதிக்குமேல் இதன் பிஞ்சுத்தோள்களில்

Lurresidud
YA
பலவந்தமாக இறக்கி வைக்கப்பட்டது. பள் ளிக் கூடத்துக்கு ஒழுங்காகப் போவதில்லை, போகும் நாட்களிலும் பிந்தித்தான் போகும். ஒரு அழுக்கு யூனிபோமுடன், கலைந்த கேசத் துடன், வாடிய முகத்துடன், கண்களில் பிந்தி விட்டதின் கலவரமும் பயமும் தெறிக்க, மார் பில் புத்தகக் கட்டுக்ளை அணைத்தபடி, புழுதி பறக்கும் ஒழுங்கைகள் வழியே ஒட்டமும் நடையுமாக விரையும் . .
ஒரு முரட்டு இளைஞன். மணிக்கட்டுக்குக் கீழே அவனது ஒரு கரத்தைத் துணித்து விட் டார்கள். அவனிடம் அடிக்கடி அவன் தோழர் கள் வருகின்றனர். அவன் ஒரு அருமையான மெக்கானிக். மிகவும் மூளைசாலி. அவசிய மானவன். ஒற்றைக் கையால் கடுமையாக உழைக்கக்கூடிய அசகாயசூரன். நாலைந்து நாட்களுக்கொருமுறை நடுநிசி நேரம் வீட்டுக்கு வருவான். அவன் முகத்தில் காணப்படும் கடுமையும், ஏதோ ஒரு வெறியும் காண்போ ரைப் பிரமிக்கச் செய்யும். அவன் ஒரு முசுடு. அதிகம் பேசமாட்டான். வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவுக்குப் பணம் கொடுப்பான். உடனே ஒலைப்பாயை விரித்தபடி தலையணை கூட இன் றித் தூங்கிப்போவான்.
வீடு மிகவும் பழையது. ஒரு சிறு குடிசை, கூரை மிகவும் உக்கிப் போய்விட்டது. முற் றத்தில் எங்கணும் பூவரசமிலைகள் சருகாக குப்பையாகச் சேர்ந்திருக்கும்.
ஒரு நாய். அதைக் கவனிப்பாரில்லை, எலும்பெடுத்துத் தெரிய மெலிந்து விட்டது. சொறி பிடித்து விட்டது. காதுகளில் உண்ணி கள் படையாகப் பெருகிவிட்டன. காதுகள் கீழ்நோக்கி வளைந்து பாரத்தால் தொங்கி விட்டன. வளவின் ஒரு மூலையில் மண்ணைத் தோண்டிவிட்டுச், சோம்பிப் படுத்திருக்கும். அது குரைப்பதோ, ஓடுவதோ கிடையாது, விரைவில் இறந்துவிடும்.
அடிக்கடி இந்த வீட்டுக்கு மாட்டுத் தரகர் கள் வருகின்றனர். கதறக் கதற ஒரு பசுவை யோ, கன்றையோ இழுத்துப் போகின்றனர். கால்களைப் பரப்பிக் கொண்டு, போக மறுத்து அது கதறும். உதவிக்கு அம்மாவை அழைக் கும். தன் இனத்தை அழைக்கும். பரிதாப மான குரலில் மாடுகள் எல்லாம் சேர்ந்து 9(gD. ༣་
இரவு நேரங்களில் அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கும். மரநாய்கள் கோழிகளைக்

Page 25
Luirgh
பாலம் கடந்த இரு இத! அட்டைப்பட ஓவியம் வீர. சந்தான
குழறக் குழற தொண்டையில் திருகியபடி இழுத்துப்போகும். உயிரை வாட்டும் அத் தீனமான ஒலம் மெல்ல மெல்லத் தேய்ந்து தூரேபோய் மறையும்.
அம்மா இப்போ குண்டுச் சத்தங்களைச் சட்டை செய்வதில்லை. அவள் துன்பங்களுக் கும் இழப்புக்களுக்கும் பழக்கப்பட்டவள்.
குலத்தினதும் சீலனினதும் ஜாதகங்களைத் தூக்கிக் கொண்டு பெயர் பெற்ற சாத்திரி மார்களைத் தேடிப் போகிருள்.
சீலன் புனர்பூச நட்சத்திரம் ! ராமன் கூடப் புனர்பூச நட்சத்திரம் !!
அவனும் காடுகளில் வசிக்க நேர்ந்தது ! கடலைக் கடக்க நேர்ந்தது 1 அதர்மர்களுடன் நெடுகலும் போரிட்டுக் கொள்ள நேர்ந்தது ! வெல்ல முடியாது என்ற இறுமாப்பில் தென்னிலங்கையில் மமதை கொண்டிருந்தவர் களை அவனும் வென்ருன் !
சாபத்தால் பீடிக்கப்பட்டவர்களுக்கு அவ னும் விமோசனமளித்தான் !
D கதைக்கு அட்டை ஒ
 

21
ழ்களுக்கும் இவ்விதழ்க்கும் வரைந்தவர். ஒவியர் rம் அவர்கள் :
அவனும் பேதங்களைக் கடந்தவன். குரங் கும் வேடவனும் அவனது தோழர்கள் !
ஓ ! ஆயினும் ராமன் பேரில் அன்பு கொண்டவர்கள் அவன் பிரிவால் துன்புற நேர்ந்தது.
தசரதன் 1.கோசலை 1.சீதை !
குலம் அத்த நட்சத்திரம். அத்தம் அத மம் என்ருர்கள் சாத்திரிமர்ா.
அவன் ராஜத்துரோகமான காரியங்களில் ஈடுபடுவான் என்றும்.
மிகப் பெரிய கண்டங்களில் மாட்டிக் கொள்ள நேரும் என்றும்.
மறியல் வீட்டுக்குப் போகின்ற பலன் கூட அவனுக்கு உண்டென்றும்.
கிரகங்கள் யாவும் நீசதிசை அடைந்திருக் கின்றன வென்றும். .
நன்றி அலை
நதானம
巴F
யம் :

Page 26
ஆயுதங்கள் அதி அரசியல் இல துணை செய்கி பாலகுமாரன் 'இந்து இ
ロ ஆயுத ஒப்படைப்பு பற்றி..?
0 ) முதலில் நான் இந்திய "அமைதி காக் கும் படை இலங்கை சென்றுள்ளதைப் பாராட்டியே ஆக வேண்டும்- எங்கள் பகுதிகளில் அமைதியை நிறுவ இந்தியப் படைக்கு உதவி புரியுமாறு எங்கள் தோழர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தி யுள்ளோம். அமைதியை நோக்கிய இந்தியப் படைகளின் முயற்சிகளுக்கு எமது தோழர்கள் தடங்கலாய் இருக்க மாட்டார்கள் என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியும். இந்திய அமைதிகாக்கும் படையிடம் எங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விடுவதில் எங்களுக்கு ஆட்சேபமில்லை. ஆணுல் இந்திய அரசு எமது கஷ்ட நஷ்டங் களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
() என்ன கஷ்டங்கள்.?
() () கடந்த பத்து வருட காலமாய்ப் போ ராடி வரும் எமது தோழர்களை திடீ ரென ஆயுதங்களை கீழே போட ஒப்புக் கொள்ளச் செய்வது அவ்வளவு சுலப மான வேலையல்ல ; எங்களின் தோழர் கள் மனத்திலும் ஆயுதந் தரித்திருக் கிருர்கள். இந்த போராட்ட உணர்வே எங்கள் தோழர்களுக்கும், மக்களுக்கும் ஒரு பாதுகாப்புக் கேடயமாக விளங்கு கிறது, அதனுல்தான் சாதகமான சூழல் உருவாகாத நேரத்தில் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு எமது தோழர்களின் இசைவைப் பெறுதல் எளிதான, சுலப மான வேலையல்ல என்று சொன்னேன். எதுவாயினும் சரி; நான் இங்கே ஒன் றைத் தெளிவுப் படுத்த விரும்புகின் றேன். நாம் ஆயுதங்களின் பின்னுல் பித்துப்பிடித்துத் திரியவில்லை, ஆயுதங் கள் என்பதற்காகவே அவற்றை ஏந்தி யிருக்கவில்லை. எங்களின் சக்தி, ஆயுதங் களுக்குள் மாத்திரமே அடங்கியிருக்க வில்லை. அதாவது எங்கட்கு ஆயுதங்கள் வெறும் அதிகாரச் சின்னமல்ல. உண்

காரச் சின்னமல்ல க்கை அடைய
ற கருவிகளே
தழிற்கு அளித்த பேட்டி
-----
மையைச் சொல்வதானுல், எங்களின் மகத்தான அரசியல் இலக்கை அடை யத் துலைச் செய்கிற கருவிகளே ஆயுதங்கள்.
ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தணு ஒப்பந் தத்தை பூரீலங்கா பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டுமென்பதே எங்கள் நிலைப்பாடு. அதனுல் ஆயுதங்களை ஒப் படைப்பதற்கு உரிய கால அவகாசம் தேவை. ஒப்பந்தத்தை பூரீலங்கா
வடக்கு, கிழக்கு தமிழர்களின் அமைதியான,
ஆரோக்கியமான வாழ் நிலைச் சூழலிற்காக
தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களை ஒரு போதும் சாக அனுமதிக்க மாட்டோம்.

Page 27
T6) b
பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டதற் கான நம்பிக்கையை எங்கள் தோழர் களிடம் ஏற்படுத்தியப் பின்பே ஆயுதங் களை கைவிட இயலும். ஆனல் எது எப்படியாயினும், இந்திய அமைதி காக்கும் படை சென்றிருக்கும் இச் சூழ்நிலை பற்றி எங்கள் தோழர்களோடு விவாதித்து வருகிருேம். விரைவில் ஒரு முடிவைக் காண்போம் என்று
நம்புகிருேம்.
A 1) இந்த ஒப்பந்தம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா அல்லது வேதனை தரு கிறதா ?
6) L நாங்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்க வில்லை ; அதாவது, இது எங்களுக்கு மனநிறைவைத் தருவதாய் இல்லை. ஆணுல் நாங்கள் முழு மூச்சாய் எதிர்க்க வில்லை. எனினும் இந்த ஒப்பந்தம் வெளிநாட்டுச் சக்திகளுக்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இழிந்த கைக்கூலி களுக்கு, குறிப்பாக மனிதாபிமானத்தின் முதல் எதிரியும், எண்ணற்ற பாலஸ் தீனப் போராளிகளைப் படுகொலை செய் ததுமான இஸ்ரேல் மொசாத்திற்கு இலங்கையை விட்டு வெளியேற வழி வகுத்திருக்கிறது, மேலும் இது, இந்து மகா சமுந்திரம் மீதான அமெரிக்கா வின் நாசகாரச் செயல்முறைகளைத் தடுத்துள்ளது. இத் திட்டங்களை நிறை வேற்றுவதால், ஒப்பந்தத்தை இந்த நோக்கில் நாங்கள் வரவேற்கவே செய் கிருேம் . ஆணுல் நாங்கள் ஒப்பந்தத்தை ஏன் முழு மனதோடு வரவேற்க வில்லை என்பதற்கு பல காரணங் கள் இருக்கின்றன. 1975 இல் நிறுவப் பட்ட ஈழப் புரட்சி அமைப்பு (ஈரோஸ்) மலையகத் தமிழர்கள் நலன்களை பாது காப்பதையே தனது அடிப்படைக் கொள் கைத் திட்டமாகக் கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசிய இனத்தில் மலையக மக் களே ஜீவனுன, இன்றியமையாத அங்க மாக விளங்குகிருர்கள். எனவேதான் தமிழ்த்தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தத் தீர்வும் அல்லது எந்த ஒப்பந் தமும் மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைக்கான தீர் வையும் உள்ளடக்கியதாய் இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிருேம் . ஆனல் துரதிஷ்டவசமாக இந்த ஒப்பந் தம் அவ்வாறு இல்லை. ஆதலால் அர சியல் ரீதியிலான பலவகைப் போராட்

23
களில் தொடர்ந்து ஈடுபடப்போவதாய் கூறியிருக்கிருேம். பூணிலங்கா அரசு எங்களை போராட விடாமல் தடுத்தால், நிச்சயம் நாங்கள் வேறுபல போராட்ட வடிவங்களைக் கைக்கொள்வோம்.
மேலும் கிழக்கு மாகணத்தில் ‘கருத்து வாக்கெடுப்பு’ ‘நடத்தப் போவதாய் கூறியிருப்பதை நாங்கள் எதிர்க்கவே வேண்டியிருக்கிறது. இந்தக் கருத்து வாக்கெடுப்பு முறையை எண்ணி நாங் கள் வருந்தவில்லை. மாருக, கடந்த நாற்பது வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றம் நிகழ்ந்து வந்துள்ளதை எண்ணியே பெரிதும் வருந்துகிருேம். 1986 டிசம் பர் 19-இல் அறிவிக்கப்பட்ட புதுத் தீாமானங்கள் விவாதத்திற்குரிய பல கேள்விகளை எழுப்பின; அந்தத் தீர் மானத்தின் ஒரு கூறு கிழக்கு
மாகணத்திலிருந்து *அ ம் பா  ைற தேர்தல் தொகுதியை விலக்கி வைத்து விட்டதாய் அறிவித்தது. ஆளுல்
இன்ருே, அவர்கள் அம்பாறையை இணைக்கப் போகிருர்களாம். இந்த நேரத்தில் கருத்து வாக்கெடுப்பு முறை குறித்து எங்களது கவலை, அவர்கள் சி ங் க ள ப் பெருபான்மையினரைக் கொண்டு இந்த மாகாணங்களின் கூட்டிணைவிற்கு எதிராய் வாக்களிக்கச் செய்து விடுவார்கள் என்பதே. 1957-இல் ஏற்பட்ட பண்டாரநாயக்காசெல்வநாயகம் உ ட ன் ப டி க்  ைக, 1957-இல் இருந்தே சிங்களக் குடி யேற்றத்திற்குத் தடை விதித்தது. என்ருலும் துரதிஷ்டவசமாய் அந்த உடன்படிக்கையும் வழக் கொழிந்து கிடப்பில் போடப்பட்டு வி ட் டது . 1963-இல் இலங்கை வரைபடத்தில் புதிய அம்பாறை மாவட்டத்தின் எல்லை கள் கிழக்கு மாகாணத்தினுள் அடங்கி யதாய் வரையறுக்கப்பட்டன. பிறகு 1970-இல் அம்பாறை மற்றும் சேரு வில (திருகோணமலையில் உள்ளது) ஆகிய தேர்தல் தொகுதிகளின் எல்லை
கள் நிர்ணயிக்கப்பட்டன. எனினும் கிழக்கு மாகாணத்தில் இனவாத சிறீ லங்கா அரசின் 2» — 25 6f G ш т 6
நிகழ்ந்த சிங்களக் குடியேற்றத்தை இந்தக் கருத்து வாக்கெடுப்பு முறை சட்டப் பொருத்தமுடைய செய்கை யாக மாற்றிவிடுமோ என்று அஞ்சு கின்ருேம். ஆகவே இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு இந்திய
irつr

Page 28
24
எது எட்
அரசுக தியாை பிரச்சி2 விடும் எ
அரசைக் கேட்டுக் கொண்டிருக்கின் ருேம். சிங்கள குடியேற்றக் காலத்தை நாங்கள் 1957-ஆம் வருடத்துடன்
துண்டிக்க வேண்டுகின்ருேம். 1957ஆம்
ஆண்டிற்குப் பிறகு கிழக்கு மாகாணத் தில் குடியேறியவர்கள் இந்த கருத்து வாக்கெடுப்பில் கண்டிப்பாக வாக் களிக்கக் கூடாது. எனவே இந்தியாவிற்குமுடிந்த அளவிற்கு துணைபுரிய நாங்கள் முயற்சிப்போம். அதன் "அமைதி நிலை நாட்டலுக்கான முயற்சிகளுக்கு இடையூருய் நாங்கள் இருக்க மாட்டோம் . எது எப்படியா யினும் சரி ; எமது பகுதிகளில் அமைதி யை காக்க வேண்டி படைகளை அனுப் பியதற்காக இந்திய அரசிற்கு நாங்கள் நன்றி சொல்லியேத் தீர வேண்டும். இந்தியப் படைகளின் வரவால் பல வருடங்களாக சிறீலங்கா பாதுகாப்புப் படையினரின் கோரப் பிடியில் அல்ல லுற்ற எங்கள் மக்களின் துயரங்கள் ஓரளவு நீங்கும்.
எங்களது பிரச்சினைகளை எடுத்துக் கூறி இந்திய அரைச தமிழ் பேசும் மக்களின் நண்பனுக நடந்து கொள்ளுமாறு கேட் டுக் கொண்டிருக்கிருேம். இந்தச் சந் தர்ப்பத்தில், இந்திய மக்களுக்கு, குறிப் பாக, தமிழ் நாட்டு மக்களுக்கு அவர் கள் செய்து வந்த உதவிக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிருேம். மேலும் இந்தத் தொடர்பும், இணைப்பும், ஒட்டுற
 

பாலம்
புடியாயினும் சரி ; இந்த ஒப்பந்தம் ‘இரண்டு ளுக்கிடையே’ ஏற்பட்ட ஒன்று. நாங்கள் இந் வநீண்ட நெடுங்கால நண்பனுய்க் கருதுகிருேம்.
னயை இந்த ஒப்பந்தம் முழுவதுமாய் தீர்த்து ான்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.
வும் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென் பதே எங்கள் விருப்பம்.
0 மலையகத் தமிழர் வாழும் தலவாக் கெலயில் உள்ள தோட்டப் பகுதிகளில் கலவரச் சூழல் நிலவுவதாய் செய்தி கள் தெரிவிக்கின்றனவே.?
() () இந்த நிகழ்ச்சிகள், எங்கள் கொள்கை நிலைப்பாட்டின் நேர்மையை எடுத்துச் சொல்வனவாய் உள்ளன. குறுகிய சிங்கள தேசிய இன வெறியர்கள் தோட்டத் தொழிலாளர்களை தமிழ் பேசும் மக்களில் ஒரு பகுதியாகவே காண்கிருர் கள். எனவே, தொடந்து அ வர் கள் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சொல் லொண்ணுத் தொல்லைகளைத் தந்து அட்டூழியம் புரிந்து வருகிருர்கள். அத ணுல் தான் மலையகத் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படாத வரை யி ல் இலங்கைப் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காண்பது சாத்தியமில்லை என்று நாங்கள் கூறுகிருேம். வடக்கு, கிழக்கு தமிழர்களின் அமைதியான, ஆரோக் கியமான வாழ் நிலைச் சூழலிற்காக தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் வேதனையுறவோ, சாகடிக்கப்படவோ நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் . இந்தப் பிரச்சினை தொடரும், ஈழப் புரட்சி அமைப்பும் (ஈரோஸ்) தொடர்ந்து அதன் போராட் டத்தை மேற்கொள்ளும்,

Page 29
“சிறிது தாமதித்து செயல் முன்னெடுத்தாலும் எமது
ட்டப் போராட்டம் தொட
ஈரோசின், புரட்சிகர நிறைவேற்றுக் குழு உறுப்பினர் தோழர் வி. பாலகுமாரன் அவர் கள் "பாலம்’ இதழிற்கு அளித்த பேட்டி.
L) தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள கல
வரங்களால், இந்த ஒப்பந்தம் நீடிக் குமா?
() () இதுவரை காலமும் தென்னிலங்கை அரசியல் வாதிகள் தமது அரசி ய ல் பிழைப்புக்காக வகுப்புவாதத்தையே நம்பியிருந்தனர். இன்றைக்கு அதே சக்திகள் தமது அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தாம் பற்றியிருந்த வகுப்புவாதத்தை கை விட்டு விட்டதாய் வேஷமிடுகின்றனர். இந்த வகுப்பு வாதச் சக்திகள் என் றைக்கும் இணங்கிப் போகப் போவ தில்லை. இந்த உடன்படிக்கை இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படுமா என்பது சந்தேகம்ே. அவ்வாறு நிறைவேற்றப்பட்டாலும். சம் ப ந் த ப் பட்ட அரசியல் தலைவர்களுடைய நிலை கள் எவ்வாறு இருக்கும் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. இவ் ஒப்பந்தத்தை தெற்குப் பகுதி மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் சரியான கருத்துக்கள் மக்களைச் சென்றடையாத நிலையில், இவ் ஒப்பந்தம் நீடிக்குமா என்பது எம்மைப் பொறுத்தவரை கேள்
விக் குறியாகவே இருக்கின்றது.
() தமிழ் பேசும் மக்களிடையே ஏற்கனவே ஏற்பட்ட ஒப்பந்தங்கள் பற்றியும், தற் போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக் கலையும் விளக்குவீர்களா?
() 1921 ஆம் ஆண்டு முதல் இற்றை
வரை ஏற்பட்ட ஒப்பந்தங்கள் யாவும்

அமல்படுத்தப்படாமல் குப்பையில் வீ.
யெறியப்பட்டுள்ளன. இதற்கு சிங்க
அரசுகளின் காலங்காலமான ஏமாற்றுங் குணும்சமே காரணம் ஆகும் . ஆணுல் இது, அம்மாதிரியான ஒப்பந்தங் கள் அல்ல. இவ் ஒப்பந்தம் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்குமிடையே ஏற்பட்டதல்ல. இரு வேறு அரசுகள் அதாவது இந்திய, இலங்கை அரசுகள் தம்முடைய பரஸ்பர அனுகூலமிக்க நலன்களுக்காகவும், பாதுகாப்பிற்கா கவும் ஏற்படுத்திய ஒப்பந்தமாகும்
இது. ஆனல், இந்த நோக்கங்களுக்கு
இனப்பிரச்சனை தடையாக இருப்பதால், அதனை ஓரளவிற்கு நிவர்த்தி செய்வதற் கான தற்காலிகத் தீர்வே இதன் பயனுக இருக்க முடியும். சிங்கள மக் கள் எந்த அளவிற்கு இந்த ஒப்பந்தத் திற்கு மனப்பூர்வமாக ஒத்துழைக்கப் போகிருர்கள் என்பதை பழைய வர லாற்றுச் சம்பவங்கள் மூலம் நாங்கள் கற்றுக் கொண்டிருப்பதால் தான், இந்த ஒப்பந்தம் பூரணமாக நிறை வேற்றப்படுமா என்பது கேள்விக் குறியே என்று கூறுகிருேம் .
ஈரோசின் எதிர் கால நடவடிக்கைகள்
பற்றி..?
ஈரோஸ் இயக்கமானது திட்டவட்ட மான கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதால், இத்தகைய இன்னல்கள் தடைகள் ஏற்படும் போதி லும், சிறிது தாமதித்துச் செயல்பாட்டை நாம் முன்னெடுத்தாலும், எமது அடுத் தக்கட்டப் போராட்டம் தொடரும் என் பதில், எமக்கு நம்பிக்கையுண்டு. 1983 ஆம் ஆண்டின் பின், தேசிய இன அழிப்பு முறையால், தேசிய இன விடு தலைப் போராட்டம் கூர்மையடைந்து தேசிய சக்திகள் பலம் பெற்றன. நாமும்

Page 30
Lu T6db
தவிர்க்க இயலாமல் தேசிய இன விடு தலையில் கவனங் கொள்ள வேண்டிய தாயிற்று. இதை நாங்கள் வரலாற்றின் ஒரு கட்டமாக, வளர்ச்சிப் போக்காகவே கருதினுேம், இவ்வேளையில் சிறீலங்கா இராணுவத்தின் இன அழிப்பு போன் றவை மிகுந்த அளவு குறைக்கப்படு மாயின், அதன் விளைவால் இனப்பற்றுக் காரணமாக உருவாகிய தேசியப் பற் றும், தேசிய இனவுணர்ச்சியான வீச்சு களும், தன்மைகளும் குறையும் பொழுது, எமது அடிப்படைக் கொள்கையின் வாக்கச் சிந்தனைகளை, வர்க்கப் புரட்சிக் கான கருத்துக்களை ஆழமாக வேரூன் றிச் செலுத்த முடியும் என்று நம்புகி ருேம். மேலும் அடுத்தக்கட்ட திட் டத்தை, பிரச்சினைகளை ஆராய்ந்து, அதற்கான மூல உபாயம், த ந் தி ர உபாயங்களே வகுத்து, எமது அடிப் படைக் கொள்கைக்கேற்ப 6Tib LDrtei) விரைந்து செயல்பட முடியும் எ ன் று ஈரோஸ் நம்புகிறது. ஏ னெ னரில் ஈரோஸ் மட்டுமே இதுவரை 569 சிக்கலினுள் தலையைக் கொடுத்து, மீட் டெடுத்து, கட்டுக் கோப்பான அமைப்
புருவோடு இன்றும் எஞ்சி நிற்ப  ைத
வரலாறு காட்டுகின்றது.
போர் நிறுத்தம் அமலில் உள்ள போதி லும் சிறீலங்கா இராணுவம், ஈரோஸ் போராளிகளைக் கொன்றுள்ளதைப்
அந்தச் செயகையின் மூலம், இன்னமும் ஆயுதம் தாங்கிக் கொண்டு முகாமுக்கு வெளியே திரிந்து, இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் திட்டமிட்டு சீர்குலைக்க சிறீ லங்கா இராணுவத் தீயசக்திகள் முயற்சி செய்கின்றன. சிறீலங்கா இராணுவத் தின் கொடூரத்தன்மை மாருது இருப் பதும் இச் சம்பவத்தின் மூலம் வெளிப் படுத்தப்பட்டுள்ளது. கொடூரமாகக் கொல்லப்பட்ட எமது போராளிகளின் உ ட ல் களை அழித்து விட்டு அல்லது மறைத்துவிட்டு ஒன்றுமே நடக்கவில்லை’ என்று கூறும் சிறீலங்கா அ ர சின் நாடகம் அதன் சுய ரூபத்தை அம்பலப் படுத்துவதாகவே உள்ளது. இச் செய் கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக 09.08.1987 ஞாயிறன்று ஈழத்தில் பூரண ஹர்த்தால் ஈரோசால் அனுஷ்டிக்கப்பட் டது. இலங்கை இராணுவம் முற்ருக எமது பகுதியில் இருந்து வெளியேறும் வரை, எமக்கும் பூரண அமைதி கிட்டாது

.
O
என்பதையே இச் சம்பவம் துலாம்பரமாக
வெளிப்படுத்துகிறது.
இனி வரும் காலத்தில் தமிழ்-சிங்கள மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக் கான ஒட்டு மொத்தத் தீர்வு சாத்தியமா? அல்லது தேசிய இனச் சிக்கல் தொடர்ந்து நீடிக்குமா?
இன்றைய உலகில் குறிப்பாக மூன்ரும் உலக நாடுகளில் தேசிய இனச் சிக்கல் மற்றும் வர்க்கப் புரட்சி குறித்து பல விவாதங்களும், ஆய்வுகளும் ந - ந் து வருகிறது. ஈழத்தைப் பொறுத்தவரை யில் இச் சிக்கல் நீடிக்கத்தான் செய் கிறது; ஈரோஸ் இயக்கம் மலையக மக் களை முன் வைத்துப் புரட்சியைக் காண விரும்பிய போதும், தேசிய இனச் சிக் கலுக்கு விடிவுப் பிறக்காமல், சமதர்ம சமுதாயம் காணமுடியாது எ ன் ப த ன் அடிப்படையில் பணியாற்றி வரும் இவ்வேளையில், தற்போது ஏற்பட்டுள்ள இவ் ஒப்பந்தம் தமிழ் தேசிய இ ன ச் சிக்கலுக்குத் தீர்வு கண்டதாகச் சொல்ல முடியாது. தமிழ்த் தேசியத்தின் 40 % மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டு, தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை சின்னு பின்னப்படுத்தப்பட்டிருக் கும் நிலையில்- ஒட்டு மொத்த புரட்சிக் கான காரணங்கள் குறைந்தே காணப்
படுகின்றன.
தேசிய இனச் சிக்கலுக்கு தீர்வு காணப் படாத பொழுதும், சிங்கள வகுப் பு வாதத்திற்கு தற்காலிகமாகவேனும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இரு:இன மக்களும் ஒருவரைவொருவர் தாக்கிக் கொள்வது தடுக்கப்பட்டுள்ளது. இவ் வகுப்புவாதச் சக்திகளின் பிடிதளர்த் தப்பட்டிருக்கிறது. இவ்விதமாய் சிங்கள மக்களை நோக்கி நாம் நேசக் கரம் நீட்டக் கூடிய சூழ்நிலை உருவா கி இருப்பதும் உன்மை தான் - சிங்கள மக்
கள் மத்தியிலும் வகுப்புவாதம் நீங்கி,
எங்களை நோக்கி அவர்கள் நேசக் கரம் நீட்ட வேண்டும் என்றே விரும்புகிருேம். ஆனல் முதலாளித்துவ முறை யில் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பங்கீட்டுத் தீர்வை தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ளமுடியாது. இப்பொழுது இனப் பி ர ச் சனை யி ன் வீச்சு குறைக்கப்பட்டிருக்கிறது. இதுவே ஒட்டு மொத்தப் புரட்சிக்கு சாதகமான சூழ்நிலைகள் என்று கூறமுடியாது. ()

Page 31
மரியா, அன்பு மூதாட்டியே ! நீ செத்துக் கொண்டிருக்கிருய். ஆகையால், ஒரு முக்கிய விஷயம் பற்றி உன்னுடன் நான் பேச விரும்புகிறேன்.
உன் வாழ்வு இடைவிடாத துன்பங்களைக் கொண்டிருந்தது. நீ நேசித்த ஒரு மனிதனில்லாமல் ஆரோக்கியமும் பணமும் இல்லாமல்
பகிர்ந்து கொள்வதற்கு உன்னிடமிருந்ததெல்லாம்
பசி மட்டுமே.
8, 6ότ நம்பிக்கைகளைப்பற்றி நான் உன்னுடன் பேச விரும்புகிறேன்.
எவ்வாறு என்று தெரியாமலேயே உன் மகள் உருவகம் செய்துவிட்ட உன் மூன்று வெவ்வேறு நம்பிக்கைகள் பற்றி ஒரு குழந்தையின் கையைப் போன்ற இந்த மனிதனின்கையை சலவைக்கட்டி தளர்ச்சியுற வைத்த உன் கைகளால் பற்றிக்கொள்.
உன் கைகளிலுள்ள தடித்த கட்டிகளையும் உன் உண்மையான விரல் மூட்டுக்களையும் வெட்கிக்கும்படி மிருதுவாயிருக்கும் என் மருத்துவக் கைகளோடு தேய்த்துக்கொள்.
கவனமாய்க்கேள், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த அம்மையே ! வந்து கொண்டிருக்கும் மனிதனிடம் நம்பிக்கை கொள்.
நீ என்றுமே காணமுடிந்திராத அந்த எதிர்காலத்தில் நம்பிக்கைகொள்.
உன் வாழ்நாள் முழுதும் உன் நம்பிக்கைக்குப் பொய்யுரைத்த கருணையற்ற அந்தக் கடவுளை நீ வழிபடாதே

சேகுவாரா கவிதை
அன்பு மூதாட்டியே! மரியா,
கொண்டிருக்கிருய்
பழுப்பு நிறமான உன் செல்வங்கள் வளர்வதைப் பார்ப்பதற்காக சாவின் கருணையை நீ வேண்டாதே. செவிட்டு வானங்கள், உனக்கு மேலே கவிந்திருக்கும் இருட்டு, எல்லாவற்றுக்கும் ஒரு சிவப்புப் பழிவாங்குதல் உனதாயிருக்கும் என் லட்சியங்களின் சரியான பரிமாணங்களின்படி நான் சத்தியமாகச் சொல்கிறேன்.
உன் எல்லாப் பேரப்பிள்ளைகளும் இந்த விடியலைக் கண்டு வாழ்வார்கள். அமைதியாக உறங்குவாயாக. நீ அதிகமாகப் போராடிவிட்டாய். நீ செத்துக் கொண்டிருக்கிருய் மரியா, அன்பு மூதாட்டியே ! நீ உறங்கும் அந்நாளில் மூடப்பட்ட முப்பது திட்டங்களும்
L) பிரியா விடையை உனக்குச் சொல்லும்.
நீ செத்துக் கொண்டிருக்கிருய் மரியா அன்பு மூதாட்டியே ! சாவு ஆஸ்த்மாவினேடு நெருங்கும்போது அவர்கள் தம் அன்பை உன் தொண்டைக்குள் இறக்கும்போது அறையின் சுவர்கள் மெளனித்துப் போய்விடும்.
வெண்கலத்தாலான அந்த மூன்று செல்வங்கள் (உன் இருளைத் தணிக்கும் ஒரே விளக்கு) பசி போர்த்திய அந்தஉன் மூன்று பேரப்பிள்ளைகள், எப்போதும் ஒரு புன்னகையைக் காணக்கூடியதாயிருந்த இந்தத் தளர்ந்த கைகளை
ததுப JT T6,

Page 32
நட்புறவு பாலம் ஆகஸ்டு 1987 விஃப் 1.5
உன்னிடம் இ | id |
சேகுவர
அவ்வளவுதான் மரியா , அன்பு மூதாட்டியே! உன் வாழ்வு இடைவிடாத மேலிவுற்ற துன்பங்களேக் கொண்டிருந்தது. நீ நேசித்த ஒருமனிதனில்லாமல் ஆரோக்கியமும் சந்தோசமும் இல்லாமல் பகிர்ந்து கொள்வதற்கு உன்னிடமிருந்ததெல்லாம் பரிமட்டுமே
உன் வாழ்வு துயரமானது மரியா, அன்பு மூதாட்டியே நிலேயான ஓய்வின் சமீபம் உன் கண்மணிகளின் வலியை முடும்போது ஓய்வில்லாமல் துடைத்துக் கழுவிய է 1 - ն: I : 1 -ե Ա - 1] கபடமற்ற வருடஃப்க் கடைசியாக உணரும்பே து
நீ அவர்களே நிஃனப்பாய்,
புல பபு: 1.
பரிதபமான மரியா, என் அன்பு ၅၂.j", "TT’ lဒု ဖိ၊! l,
வேண்டாம்
அதைச் செய்யவே செய்யாதே ! உன் வாழ்நாள் முழுவதும் f ன் நம்பிக்கைக்குப் பொய்யுரைத்த ஆந்தச் சோம்பேறிக் கடவுளே வழிபடாதே சாவின் கருஃைைய நீ வேண்டாதே.
உன் வாழ்: கொடூரமான பசியால் போர்த்தப் பட்டிருந்தது: ஆஸ்த்மா போர்த்திய முடிவாகிறது.
I I fl:  ́ :-) 1) தமிழில் மொலீனு தேன்ெ
சேதுவர வாழ்க்கைச் சித்திர
வெளியிடுபவர். இரா. திரவிய நேரு நகர், சென்னே -20 |)
பிளேஸ் பிரிண்டர்ஸ், சென்
 

பதிவு எண் : டி என். எம். எஸ். (எஸ்) 371
ருந்ததெல்லாம் மட்டுமே
" கம்பிதை
, ।।।। உனக்குச் சொல்ட் விரும்புகிறேன் .
பணிவும், வீர ழமுள்ள ஒரு நம்பிக்கையின்
, ' ')
ii, కా சிவப்பம் : மார் மிக அத கமா ? சிவப்பும் விர முழன்ன பழிவாங்குதல்கள் பற்றிபன் ப்ெட்சியங்களின் சரிபார பரிபானங்களின்படி
.. i エキリエ cm。 : T·T 丐禹山I エ ciaFT。 ք, I)uir.
ஆறு குழந்தையின் கையைப் போன்ற இந்த மனிதனின் கையை عی சலவைக்கட்டி தன | ඝා911ද්ය් உன் கைகளால் பற்றிக்கோள், உன் கைகளிலுள்ள தடி த்த கட்டிகளேயும் உன் உண்மையான விரல் மூட்டுகளேயும் ட்ெகிக்கும்படி மிருதுவாயிருக்கும் என் மருத்துவக் கைகளோடு தேய்த்துக்கொள்.
அமைதியாக ஓய்வுகொள்.
மரியா,
அன்பு மூதாட்டியே! அமைதியாக ஓய்வுகொள். நீ அதிகமாகப் போராடி விட்டாய். உன் எல்லாப் பேரப்பிள்ளைகளும் இந்த விடியலேக் கண்டு வாழ்வார்கள்.
இதை நான் சத்தியமாகச் சொல்கிறேன்.
மாழி - யமு ைராஜேந்திரன் )
ம் அடுத்த இதழில் தொடரும்
ம்- 12, முதல் பிரதான சாலே
அச்சிடுபவர் ஜே. ரமணி, னே-20, ) ஆசிரியர் : நதி