கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1986.10

Page 1
இ ச. முருகானந்தன் 9ே இ. முருகையன் 8 சி. சிவசேகரம் | L இ எஸ். ஆர். நிஸ்ாம்
சோ. பத்மநாதன் 8 சசி கிருஷ்ணமூர்த்தி )ே ஆர். எம். நிலமே பண்டார 8 சிதம்பர திருச்செந்திநாதன்
ஒடு என். சண்முகலிங்கன் 8 சிவ. இராஜேந்திரன் திே ஏ. ரி.பொன்னுத்துரை
8 செ. கணேஷ்
இ சேகர்
8 சேரியூரான்
8 அன. பகீரதுன்
8.வி. பி. ருெஹாஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 2

°C%*” இதழ்: 16 AWMWAN
VillEggihIDAShvri.. 2584 Asis
as ஒக்ரோபர் 1986
உ சிறைகளில் நடத்திவரும்
போராட்டம் நியாயமானவை
@ அரசின் போக்கும்
பேச்சுவ ார்த்தையும்
திமிழ் மக்கள் இரண்டாம்தரிப் பிரஷைகளாக்கப் பட்டதிலிருந்து தமிழ் மக்களின் போராட்டங்கள் முனைப்படைந்தன; ஒருவகையில் கற்சுவர்கள் சூழ்ந்தி ருக்கும் அறைக்குள் "காவலர்கள் அறியாமல் காவல் கைதிகள் கொலையுண்டதிலிருந்து இளைஞர்களின் ஆயு தப் போராட்டம் கூர்மையடைந்தது எனலாம். பின் னர், தமிழ் மக்களைப் பொறுத்தவரை நாடே சிறைக் கூடமாகிவிட்டது. s " .
இன்று அரசு இளைஞர்களுக்கு எதிராக வழக்கைச் “சோடிக்கக் கூடவும் முடியாத நிலையில் பல இளைஞர் கள் வெலிக்க டையிலும் பூஸாவிலும் அடைத்துவைக் கப்பட்டுள்ளார்கள். அவர்களில் பலர் சாகும்வரை உண்ணுவிரதத்தில் குதித்து, ஆபத்தான நிலையையும் அடைந்துள்ளார்கள், உண்ணுவிரதிகளின் கோரிக்கை கள் மிக மிகக் குறைந்தபட்சமானவை.
தமிழ் மக்கள் மத்தியிலிருந்து வந்த ஓர் அரசியல் கோரிக்கையை சட்டம்போட்டு ஒழித்துக்கட்ட முடியும் என்ற நினைப்பில் அரசியல்யாப்பில் 6வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது; அதனை நீக்குவதன் மூலம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றம் வரவும்
1.

Page 3
பேச்சுவார்த்தையை அர்த்த புஷ்டியானதாக்கவும் வகை செய்வேன் என்று ஜனதிபதி திருவா " மலர்ந்தருளி ஓரிருமாதங்கள் கடக்கவில்லை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 5வது பிரிவை நீக்குவதன் மூலம் அரசியல் தீர்வைத் துரிதப்படுத்தவும் - சாத்தியமானதாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு எழுப்பப்பட்ட குரல்கள் ஓய வில்லை; உண்ணுவிரதிகளோ தம்மை விசாரணைக்கு உட் படுத்துமாறே கேட்கிருர்கள்.
இது இன்றைய பாஸிஸ அடக்குமுறையின் வெளிப் பாடாக் வந்த "பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குங் கூட உட்பட்ட ஒரு கோரிக்கைதான். சாதாரண நிலை யில், 24 மணித்தியாலங்களுக்குமேல் ஒருவரைத்தடுத்து வைக்க முடியாது என்ற ஜனநாயகப் பாரம்பரியம் வேண்டாம், தானே ஆக்கிய பயங்கரவாத தடைச்சட் டத்தின் பிரகாரம் 18 மாதத்துக்கு மேல் ஒருவரைத் தடுத்துவைத்திருக்க முடியாது என்ற "அதி உயர் ஜன நாயகத்துக்கே அரசு பணியாதிருப்பது ஏன்?
இதுபோன்றே சிறை உண்ணுவிாதிகளின் சகல கோரிக்கைகளும் எந்தவித தட்டிக் கழித்தலுக்கும் இட மற்றவகையில் சர்வசாதாரணமானவையே. அவற்று ஃகு உடன் செவிசாய்த்து அரசு ஆவன செய்யவேண்டும்.
இன்று எமது தேசிய இனப்பிரச்சனை சர்வதேசக் கவனத்தை ஈர்த்ததோடு அமைதிகாணவில்லை. இரு மேலாதிக்க வல்லரசுகளின் கண்களும் கூர்மையாக இந்துசமுத்திரத்தைத் துளாவிவருகின்றன. இந்துசமுதீ திரப் பிராந்தியம் சமாதானப் பிராந்தியமாக இருக்க வேண்டுமென்பது தெற்காசிய நாடுகளின் அபிலாஷை மட்டுமல்ல, உலக சமாதானத்தை வேண்டிநிற்கும் சகல சக்திகளினதும் வேணவா. அமைதியை வேண்டி நிற்கும் அனைவரதும் விருப்பத்தை அரசு கவனத்திற் கொள்ளவேண்டும்.
இந்தியாவின் நல்லெண்ணத்தைப் பயன்படுத்தி அரசியல் தீர்வுகாண்பதற்குப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதாக உலகுக்குக் காட்டி, மறுபுறத்தில் தான் சொன்னவற்றை வெறும் வார்த்தைகளாகவே கொண்டு
2

அரசு செயற்படுகின்றது என்பதையே கிழக்குமாகாணச் சம்பவங்களும், அா சின் சகல நடவடிக்கைகளும் மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டுகின்றன.
அரசு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை க3ள நேர்மையான முறையில் முன்னெடுக்கவேண்டும்; நடைமுறைச் செயற்பாட்டின் மூலம் நீ வுக்கான தனது விருப்பத்தை நிரூபிக்க வேண்டும்.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் அப்பால், இதர தமி ழிழ விடுதலை இயக்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை களைத் தொடர்வது நாட்டின் நலனைப் பொறுத்து அத் தியாவசியமானதாகும். அதற்கான சுமூகநிலையை அரசு தான் தோற்றுவிக்க வேண்டும்.
பேச்சுவார்த்தைகளும் அதன் மூலமான தீர்வுக் கான அவகாசமும் இழுத்தடிக்கப்படக் கூடாதவை. தமிழி மக்களைப் பொறுத்தவரை s9 g5 அதிக I u IT ġ5 பையே ஏற்படுத்தும். பேச்சுவார்த்தை என நாம் வலி யுறுத்துவது போராட்டத்தைக் கைவிடுவதையோ சர ணடைவதையோ குறிப்பதாகாது. எனவே இதனைக் கவனத்திற்கொண்டு சகல விடுதலை இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியிலாரும் இணைந்து ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைப்பதற்கு முன்வரல் வேண்டும்,
கே. ஜி. அமரதாசாவுக்கு எமது அஞ்சலி
தேவிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து யுத்தமாக மாற்றப்பட்டுவிட்ட ஒரு சூழலில் இரு இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும், ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்த, தனது ஆற்றலுக்கேற்ப கலை இலக்கியத் துறையின் மூலம் பணிபுரிந்த கே. ஜி. அமரதாசா அவர்களின் இழப்பு காலத்தின் பேரிழப்பாகும். இரு இன மக்களின் வேறுபாட்டு உணர்வுகளையே மிகைப்படுத்திப் பிரசுரிக்கும் பலம்படைத்த முதலாளித்துவ சாதனங்களுக்கு மத்தியில் ஒருமைப்பாடான அம்சங்களை வலியுறுத்தும் சிறுகதை, கவிதை, கட்டுரைகளை பரஸ்பரம் இருமொழிகளிலும் மொழிபெயர்ப்பதில் அவர் ; , முன்னின்றர். பாரதியின் கவிதைகளை சிங்களத்தில் மொழி பெயர்த்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Page 4
இ9 கடற் கரையும்
தனித்த மாலைப்பொழுதும்
8 சேகர்
*cor மீது வலை உலரும். நண்டுக் கூடைகள் காவலிருக்கும். வள்ளங்கள் அயர்ந்து சரிந்திருக்கும். பறங்கியர் கோட்டையை உசுப்ப முடியாமல் மணற் கோட்டைகளை இடிக்கும் கடலலைகள். ஈரமணலில் கால்புதைத்து அலைகளை விரட்டும் சிறுவர்களின் வீரமுழக்கங்கள் செவியில் விழுந்த நாட்கள் நகர்ந்து நெடுங்காலமில்லை.
கரையிற் குழிதோண்டி நீர்தொட்டு சிறு நண்டு பிடித்து
கிளிஞ்சல் பொறுக்கி வீசுங் காற்றில் மணல் இறைக்கும் கைகளும் அலைச் சுவட்டை மிதித்து ஒடியும் நடந்தும் நின்றும் கரை நெடுகப் பதினுயிரம் சுவடுகள் பதித்த கால்களும் கடலிலே கண்ணையும் காதையும் புதைத்திருக்கும் முகங்களும்
இன்று இல்லை
சிறையுண்ட நகரின் நீண்ட மணல் விளிம்பைப் பிரிக்கும் பெரும்பாறை.
மானிடரை
மறிக்கும் கோட்டை மதில். பறங்கியர் இடித்தெறித்த கோயிலை விழுங்கிய கடலைப் பார்த்திருக்கும் கோணேசர், இன்னும் இடித்தெறிய முன்னிற்கும் இனவெறியர் இழிசெயலைக் காண மனங்கூசி எதிர்த்திசையை நோக்கிக் கல்லாய்ச் சமைந்த போதிசத்துவர் கடப்பாரை எடுப்போம் மானிடரைப் பிரிக்கின்ற மதிற்கவர்கள் அத்தனையும் தாக்கித் தகர்த்தெறிவோம். மாநகரை விடுவிப்போம். மானிடத்தை விடுவிப்போம். 一冲

சிறுகதை
ல "சந்தர்ப்ப.!"
8 இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
6. "னத்தில் பறவையல்ல ஹெவி ஒன்று வட்டம் போட் டது. விடியற்காலையில் வழமை யான இனிய ஒலிகளையும் மீறி
வெடிச் சத்தங்கள் கேட்டன,
தூரத்தில் கரும்புகை பரவிக் கொண்டிருந்தது. நிச்சயம் அது சாதாரண புகையாக இருக்காது. எத்தினை லட்சங்கள் எரிகின்
p6OTGoharr?
புளியடிக்கு முன்னுல் பேப் பர் கடையருகில் எப்போதும் போல சனங்கள் கூடி நின்றர் கள். எதற்குத்தான் கூடமாட் டார்கள். கூடிநிற்காமல் விட் டால்தானே ஆச்சரியம்,
பேப்பர். கடைக்கு, பேப்பர் இன்னமும் வரவில்லை. பேப்பர் பார்சலுடன் வரும் சைக்கிள் கார பையனுக்காக அவர்கள் காத்திருந்து காத்திருந்து கடை சியில்,
பெடியன் வந்து பார்சலை அவிழ்த்து பேப்பரை கடைக்குக் கொடுக்க, முனைப்புடன் கூடியி ருந்த சனங்கள் தாக்குதலுக்கு தயாராஞர்கள்.
சில நிமிடங்களுக்குள் பேப்
பர்களுடன் எல்லோரும் சித றுண்டு மூழ்கிப்போஞர்கள். கூடவே ஆரோக்கியமானதும்
மிகமிக முக்கியமானதுமான விடீர் சனங்களில் இறங்கிவிட்டார்கள்.
இவற்றை செய்ய அவர்களை விட்டால், வேறு யார் இருக்கின் ருர்கள். அந்தப் பிரதேசம் குடா நாட்டின் மத்தியில் இருக்கின் றது. கடற்கரையோர வலையங் களுக்கு அப்பால், கடலில் இருந்து பாயும் "செல் வங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதார்
கிட்டடியில் காவறகோபுரங் கள், முகாம்கள் அகதி முகாம்கள் அல்ல. இல்லாதபடியால் அந்தப் பகுதியில் பெரும்பாலும் பிரச்ச னைகள் இருப்பதில்லை. தூர இருக் கும் முகாம்களுக்கும் காவலுக்கு யார்பெத்த பிள்ளைகளோ காவல் இருக்கிருர்கள். பிறகென்ன.
இருந்தாற்போல் வான் மண் டலத்து வல்லூறுகள் குண்டு மழை பொழிந்தால் சரி. இல்லா விட்டால் தூரத்து இடி முழக் கங்களைக் கேட்டு பெரிதாக அலட்
டிக் கொள்ளாமல்,

Page 5
நித்தமும் தெருக்களிலும் திண்ணைக் குந்துகளிலும் கூடி யிருந்து கதைத்து பேச்சு வார்த் தை சரிவராதா? அவன்கள் ஏறி வந்தால் என்ன? இவன்கள் இறங்கிப் போனல் என்ன? என்று அலசோ அலசு என்று அலசி கடைசியில் ஆளை ஆள் திட்டிக் கொண்டு பிரிந்து,
கோயிலடியில் குறைவில்லா மல் சனங்கள் தூரத்தில் வெடிக் சத்தம் கேட்டாலும் கோயிலின் தூய்மை பேணும் ஸ்பீக்கர்கள் அலறிக்கொண்டு இருக்கும்.
கழுத்தில் மடித்துப்போட்ட தங்கச் சங்கிலிகளுடன் கோயில் மணியகார வேலை பார்க்கும் பக் தர்கள். கலியாண வீட்டில் கார ண்மில்லாமல் அசைந்து திரியும் பருவப் பெண்களைப் போல மெது வாக அல்ல விரைவாக அசைந்து
யார் சொன்னர்கள் நாட் டில் பிரச்சனை என்று. வந்து பார்த்தால் எவன் நம்புவான், போராட்டங்கள் நடக்கின்றன GFCor.
முன் வீட்டுக்கு வந்த பிரச் சனை பக்கத்து வீட்டுக்கும் பின் வீட்டுக்கும் வந்து விட்டாலும் பரவாயில்லை எங்கடை வீட்டை வராதவரை நாங்கள் எதற்கும் சம்மதம்தானே.
பேய்மழை பெய்யட்டுமன், கொடிய வெய்யில் எரிக்கட்டுமன் என்னதான் நடக்கட்டும் எங்கள் வீட்டு வளவு தாண்டி எல்லாம் தடக்கட்டும்.
is
ஏனைய இடங்களில் வீட் டோடு அள்ளிக்கொண்டு போகட்
டும். எங்கடை வீட்டிலை குண்டு மணி அளவும் பாதுகாப்பாக இருக்கட்டும்.
இவைதானே எங்கள் மண் ணின் பாரம்பரிய பண்பாடுகள் ஒரு சில விதிவிலக்குகளை விட் டால்? வேறைஎதைத்தான் காண
• (tpւգԱյւն .
"பேப்டரில் என்னவாம்" என்று கேட்டுக்கொண்டு வந்த கந்தசாமி நன்முக காறிக் கடை வாசலில் துப்பினர். யார் காலில் மிதிபட அந்தத் துப்பல் பண்ணி யம் செய்ததோ தெரியாது.
"பேப்பரில தினம்தான்." சின் ஆறுதலாக பேப். வாசித் துக் கொண்டிருந்த நாகலிங்கம் சொல்லிக்கொண்டு கந்தசாமி யை திரும்பிப் பார்க்கவில்லை.
'அதுதான் என்ன புதினம் என்று கேட்கிறன்."
"இண்டைக்கு Grarಳ್ நானலஞ்சு இடத்திலே நல்ல یWit{ அடிச்சிருக்கிருங்கள்"
“கணக்க விழுந்துதோ என்ன மாதிரி???
'சா. கணக்க அல்ல' “மடையன்கள் மினக்கெட் டுச் செய்யிறவங்கள் போரப் பொலிய கனக்க விழுத்தினுல் Grsörgsr?'''
*உனக்கு என்ன விசரே."
8 sy (EF,

"அவன்கள் இப்ப முந்தின மாதிரியே!”
* "அப்ப என்ன கஸ்டமே”*
"tairsor...'
"எண்டாலும் மிணைக்கெட் டுச் செய்யேக்கை கணக்க விழுத் கினல் தானே நல்லது”
* '15 சொல்லுறதும் சரிதான் ஆனல் இவன்களுக்குக் கெட்டித் நனம் காணுது”
“அது எண்டால் மெய்தான்’
"இஞ்சைபார் பேப்பரைப் பார்க்காமல் கதைக்கத் தொடங் கியிட்டம்’
*சரி. சரி. வேறை என்ன இருக்கு’’
“எங்கடை கிழக்குப் பகுதி
யில கனபேர் அகதிகளாகப் பள்
3ளிக்கூடங்களிலை இருக்கினமாம்”
*அங்கால நெடுகப் பிரச்
சனைதான்”*
பிரச்சனைகள் வராட்டி பிரச் சனை தீருமே. நடக்கிறது நடக் கட்டும்"
அங்கால செய்யிறமாதிரி இங் காலையும் செய்வினமோ'
உது நடக்காது இவன்கள் விடுவங்களே’
**அதுதானே என்னவோ நல்ல காலம் இஞ்சைதான் கொஞ் சம்தன்னும் நிம்மதியாய் சீவிக் கிறம். அடிக்கிற அடியளை அங் கால அடிச்சு எங்களை நிம்மதி யாய் இருக்கவிட்டால் காணும்"
"யார் செய்த புண்ணியமோ
இஞ்சாலை பிரச்சனையும் இல்லை.
சாமான்கள் கொஞ்சம் கூட விலை வித்தாலும் எங்கடை பாடு பர வாயில்லை” என்ருர் நாகலிங்கம்,
“இஞ்சை பாரன் நான் வந்த விசியத்தை மறந்துபோய் எங்கையோ போட்டன்’ எனச் சொன்னர் கந்தசாமி.
у е.
**என்ன. "கொழும்பு பஸ் என்னமா திரி போய் வருகுதோ’
நேற்றைக்கு போன பஸ் அரைவாசி வழியில திரும்பி வந் திட்டுதாம். இனி என்ன மாதி ரியோ..”*
"அப்பிடியோ விசியம். பாவம் பெடியன் கொழும்பில நின்று கஸ்டப்படப் போகுது”
“எந்தப் பெடியன்.”
"என்ரை கடைசிப் பெட் டையின்ரை புருஷன் சவூதியால போன கிழமை வந்து கொழும்பில நிக்கிருன். ஏதோ கொஞ்ச அலு வல்கள் இருக்குது. அதை முடிச் சுக்கொண்டு இண்டைக்கு நாளை க்கு வாறதெண்டு போனில சொன்னவராம்”*
“இப்ப என்ன அவசரம் . கொழும்பில நிக்கட்டுமன். அங் கை நிண்டால் பார்த்து ஆறு தலாய் வரலாம் தானே.”
*அங்கை நின்ற வீண்செலவு தானே. ஹோட்டலில நிற்க ஒரு நாளைக்கு எவ்வளவு முடியும்.
7

Page 6
அதோடை பெடியன் கனசாமான் களோடை வந்திருக்கும். அது இதுஎன்று விதம் விதமாய் கணக்க கொண்டுவந்திருப்பர் ம். என்ன செய்யிறது என்றுதான் யோசினை யாய் இருக்கு."
“ஒன்றுக்கும் யோசிக்காதே
பெடியன் ஆறுதலாய்
பும்.
வரட்டும் நேற்றைக்குத் தானே
பஸ் திரும்பி வந்தது. நாளைக்கு நாளையிண்டைக்கு ஒடும் அதுக் கிடையில ஏதும் பிரச்சினை வாரட்டி சரிதானே' என்ருர் தாகலிங்கம்.
‘இவன்கள் சும்மா இருப் பன்களே. சும்மா அவன் களை, சொறியிறது அவன்கள் திருப்பி சொறிய. உந்த ரயில் ஒடின மாதிரி ஒடிக் கொண்டி ருந்தால், எவ்வளவு நல்லாய்
இருத்திருக்கும். மருமேன் பெடி
பனும் பிரச்சனை இல்லாமல் சவூ தியால வத்த உடனேயே வந்தி
5 LuLunTrio”
மெய்
“அது எண்.ால்
தான்'
"நான்லஞ்சு நாளைக்குத் தன் னும் கடைசி ஒரு பிரச்சினை தன்னும் இல்லாமல் பஸ் ஓடி னல் மருமேன் வந்திடுவன்’
‘என்னவோ அவசரப்பட்டு வர வேண்டாம் என்று ரெலி போன்செய்து விடும்"
“வேறை என்னத்தை செய் யிறது. இவன்கள் யாரைப்பற்றி யோசிக்கிருன்கள் சனம் எவ்வ ளவு கஷ்டப் படுகுதுகள் என்று
8 -
கொஞ்சம் தன்னும் சிந்தனை இருக்கோ' என சவித்துக்
கொண்டார் கந்தசாமி.
பேப்பர் கடைக்கு அப்பால் பெற்ருேல் கடை போட்டிருந்த சிறு பெடியன் ஒருவன் ‘பெற் ருேல். பெற்றேல்.’’ எனச் சத் தம் போட்டு ருேட்டால் போய் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்களின் பின் ஞல் கொஞ்சத்தூரம் ஓடுவதும் நிற்பதுமாக அலைந்துகொண்டி ருந்தான்.
'தம்பி பெற்றேல் என்ன 62?” என்ருர் ஒரு மோட்டார் சைக்கிள் காரர்.
"இருபத்தினுலு ரூபாய் அண் ணை’ என்ருன் பெடியன்.
"என்ன இருபத்தினலோ, நேற்றைக்கு இருபதுதானேவிற் நிறது.
"அதுக்கு என்ன செய்யிறது இண்டைக்கு லொறியள் போசே, ல்லையே... ? ?
'நல்ல கதைதான் ஏன் தம்பி உந்த அநியாயம்"
'நாங்கள் என்ன செய்யிறது நாங்கள் வேண்டித்தான்விச்கிறம் எங்களுக்கும் கொஞ்சம் வைச்சுத் தானே விற்பம்’
என்று கதைத்துக் கொண்டு இருக்க, கடைவாசலில் நின்ற சின்னத்துரையர் ஒடிப்போனர். பெற்ருேல் விற்கும் பெடியனை நெருங்கினர்.

தமிழ்ச் சான்றேர் போன்றர்
89 கே. கணேஷ்
செக்திழுத்தார் முன்னர் சிதம்பரஞர் வெஞ்சிறையில் "செக் கிழுப்பார் இந்நாள்நம் சீர்தலைவர் ட கொக்கரித்தே ஏராள வாய்க் குண்டெறிவார் சங்கையெனில்
பாராளு மன்றத்தில் பார்,
வள்ளுவர் சீர் நெறியில் வாழ்க்கை வகுப்பதாய்த் துள்ளும் சிலர்தம் சுயகுறளில் - கள்ளுண்ணுப் பக்கம் இலையாம் பனைமர நீர் உள்ளருந்தச்
சிக்கல் இலையாம் சிறிதும்.
கண்ணகியின் கற்புநெறி காட்டிப் பெருமுழக்கம் விண்ணதிரப் பேசுபவர் வீட்டில்தம் - பெண்ணரசி இல்லாத நேரம் இருப்பாளாம் மாதவியாள் பொல்லாத "மேகலை’யைப் போர்த்து,
女
'தம்பி மெய்யாய் லொறி
கொழும்புக்கு போகேல்லையோ’ என்று கேட்டார்.
'நல்ல கதைதான் கதைக்கிறி யள் நாட்டு நடப்பு உங்களுக்கு தெரியாதோ,நேற்றுப்பின்னேரம் ஒரு பிரச்சனை நடந்து. போன
லொறி, பஸ் எல்லாம் திரும்பி
வந்திட்டுது* s
"அப்ப இனி என்ன, எப்ப
சரிவரும்’ என்று கேட்டார்
சின்னத்துரையர்.
“யாருக்குத் தெரியும் போ கேக்க காணவேண்டியதுதான்' என்ருன் பெடியன்.
*என்ன சின்னத்துரையர் லொ மியிலை ஏதும் அனுப்பினீரோ?* என்று கேட்டார் நாகலிங்கம்.
“சாச்சா, அப்பிடி ஒன்றும் இல்லை?
“பிறகு ஏன் லொறிபோகுதேச வருகுதோ என்று விசாரிக்கிறீர் காரணமில்லாமல் தீர் எங்கையும்
கால்வைக்க மாட்டீரே" என்ருர்
கந்தசாமி. 、こ
“லொறியள் கொழும்புபோ கேல்லையாம்??
“ஒமோம்”
‘'இப்பிடியே ஒரு கிழமைக்கு போகாமல் நின்றிட்டால் நல்லது
என்றர் ஆர்வத்துடன் சின்னத் துரிையர்,
'ஏன்' ஏன்று கேட்டார் கந்தசாமி.
“கொஞ்சம் பிரியமhரன சா மான் இருக்கு. இப்ப கொஞ்சம் விலை டல் லொறியள் கொழும் பால வராமல் நின்ருல் நல்டி) விலைக்கு விற்கலாம். என்றர்
சின்னத்துரையர், *
9

Page 7
இ) திருவாசகத்தின்
பொருளுருவமும் தத்துவ நோக்கும்
8 முருகையன்
திமிழில் எழுந்த இலக்கிய வரலாறுகளில், இலக்கியப் படைப் புகளின் உள்ளடக்க அமைப்பு முறை செம்மையாக ஆராயப்பட் டுள்ளது என்று கூறுதல் பொருந்தாது. பொரும்பாலான இலக்கிய வரலாற்று அறிஞர்கள் இரு வித அக்கறைகளை உடையவர்களாக இருந்துள்ளனர் (1) இலக்கியத்தின் உள்ளடக்கத்தை வகைப்படுத்திக் காட்டுதல், (II) கால ஆராய்ச்சியில் ஈடுபடுதல் ஆகிய இரண்டுமே அந்த அக்கறைகள்.
உள்ளடக்கத்தை வகைப்படுத்திக் காட்டும் முயற்சி தமிழ் மர
பிலே மிகப் பழைய காலத்திலேயே தொடங்கிவிட்டது; தொல்காப் பியரின் பொருளிலக்கணம் வரலாற்று நோக்குடன் அமையாவிட்டா லும் கவிதைப் பொருளை இனங்கண்டு வகுத்து மரபு என்னும் ஒழுங்குட் பொருத்தி அமைதி காணும் முயற்சியின் உயரிய பேருக அந்த இலக்கணம் நமக்குக் கிடைத்துள்ளது. ஆயினும் தமிழிலக் கியத்தின் பொருட்பரப்பு விரிவடைந்து பல்கிய பின்னர், பொருளி லக்கணப் பகுப்பாய்வு படிப்படியாகக் கைவிடப்பட்டது எனலாம்.
கால ஆராய்ச்சி என்பது அண்மைக் காலத்து ஆய்வாளர்களின் முயற்சி, அவர்களிற் சிலர் தமிழின் தொன்மையை நிலைநாட்ட வேண்டும் என்னும் ஆர்வத்தினலே உந்தப்பட்டுச் சற்றே பக்கச் சாய்வு பெற்ற தருணங்களும் உண்டு. ஆயினும் நடுநிலையும் விஞ் ஞான நோக்கும் கொண்ட ஆய்வறிஞர் சிலர் நம்மிடையே தோன்றி, கணிசமான பணிகள் சிலவற்றை ஆற்றியுள்ளனர், சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் எஸ். வையாபுரிப்பிள்ளை, வி. செல்வ நாயகம் ஆகியோர் புகழ்வாய்ந்த கால ஆய்வாளர்களிற் சிலராவர். இவ்வகையான கால ஆய்வின் தேவை எவ்வாறு எழுந்தது? தமிழ் மரபிலே, கலைஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாறனது புராண இதிகாச ஐதிகங்களுடனும் செவிவழிச் செய்திகளுடனும் கட்டுக்
O

கதைகளுடனும் கலந்து மயங்கிக் குழம்பிப் போயிற்று. அதனல், நம்மவரிடையே வரலாற்றுணர்வும் மெய் பொய்யைப் பாகுபடுத்திப் பிரித்தறியும் திறனும் ஓரளவு குன்றிக் கிடந்தன. ஆகையினலே வாலாற்று மெய்ம்மை சார்ந்த கால ஆராய்ச்சி அவசியமாயிற்று,
வேருெரு விதமான வரலாற்று ஆய்வும் நம்மவரிடையே பயின்று வருகிறது. இலக்கியத்தில் மேலாண்மை பெற்றுத் திகழும் கத்துவங்களையும் கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் கருத்திய *லயும் ஆராய்ந்து, வரலாற்று நோக்கிலே அவற்றின் படிமலர்ச்சியை நிர்ணயிப்பதே அவ்வகை ஆய்வின் அடி நோக்கமாகும். அவ்வித ஆய்வுக்கு, ஆ. வேலுப்பிள்ளை அவர்களது ‘காலமும் கருத்தும்" என் ம்ை நூல் நல்லதோர் எடுத்துக்காட்டாகும். நா. வானமாமலை, சாமி சிதம்பரனர், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகிய அறிஞர் களின் ஆக்கங்களிலே சமூகவியலையும் இலக்கியப் பொருளையும் இணைத்து நோக்கும் பண்பு முனைப்பாகக் காணப்படுகிறது. தமிழ்ப் பாட்டுகளையும் கதைகளையும் கூத்துகளையும் படிக்கும்போது சமூக வரலாற்றுணர்வின் வெளிச்சத்தில் அவற்றைப் பார்ப்பதனல், புதிய விளக்கம் கிடைப்பது உண்மையே,
་་་་་་་་ لی ஆயினும்,தமிழ் இலக்கியத்தின் உள்ளடக்கக் கூறுகள் எவ்வாறு ஒழுங்காக்கம் பெற்றுக் கலைவடிவு கொள்கின்றன என்னும் ஆராய்ச்சி, பயனுள்ள இலக்கிய நயப்புக்கு முக்கிய முன் தேவையாகும். இலக்கி யத்தின் பொருளுருவம் பற்றிய ஆய்வு என நாம் சுட்ட விரும்பு வது இதனையே ஆகும். பொருளுருவம் பற்றிய ஆய்வு புதியதொரு பொருளிலக்கணமே. ஆனல், பழைய பொருளிலக்கணத்துக்கும் இதற்கும் நிறைய வோறுபாடுண்டு. பழைய பொருளிலக்கணம், இலக்கியப் பொருள் மரபை அசையாத, இறுக்கமான சட்டதிட்ட மாக வகுத்துரைப்பது. ஆனல், புதிய பொருளிலக்கணத்தில் அல் லது பொருளுருவ இயலில், வாலாற்றேடொட்டிய மாற்றங்களும் கணிப்பில் எடுக்கப்படும். பழைய பொருளிலக்கணம் நிலைப்பிய லானது; புதிய பொருளிலக்கணம் இயங்கியலானது அது (1) கால வரன்முறைப் பண்புகளையும் (1) சமூக வரலாற்றுப் பண்பாட்டுக் கூறுகளையும் எடுத்துநோக்கி இலக்கியப் பொருளின் சேர்க்கை முறையை ஆராயம். V,
நமது இலக்கியப் படைப்புகள் அனைத்தையுமே, அப்படிப்பட்ட விரிவான பொருளுருவ இயல் ஆய்வுக்கு உள்ளr க்குதல் வேண்டும் பத்துப்பாட்டு,எட்டுத் தொகை, பதினெண்கீழ்க் கணக்கு, பக்திப் பனுவல்கள், காப்பியங்கள், தனிப்பாடல்கள், பிரபந்தங்கள், நவீன கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், நாட்டார்பாட்டு கள், கூத்துகள், திரைப்பாட்டுகள் ஆகியவை யாவற்றையும் அங்ங்ணம்

Page 8
பகுத்தாய்ந்து மதிப்பிடலாம். இம்முயற்சியின் தொடக்க நிலையிலே பாட்டுக் கலையை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்ருல், வரலாற்று நோக்கிலே காணும்போது, தமிழரின் தலையாய இலக் கிய ஊடகமாய் இருந்து வந்துள்ளது பாட்டேயாகும்.
இக்கட்டுரையின் நோக்கம்
இக்கட்டுரையின் நோக்கம் திருவாசகத்தின் பொருள் வைப்பு முறையையும் அதன் பொருளுருவ இயல்பையும் சற்றே நுணுகி நோக்குவதாகும். சைவ சமயகுரவர் நால்வரில் ஒருவராகிய மணி வாசகரின் இப்படைப்பினை நாம் எடுத்துக் கொண்டது ஏன் என் பதையிட்டுச் சில சொற்கள் கூறுதல் வேண்டும். இவ்வாருன பரி சீலனைக்கு உட்படும் தகைமை திருவாசகத்துக்கு நிறைய உண்டு. தமிழ் இலக்கியப் பொருளுருவ இயலின் வளர்ச்சியை நாம் எடுத்து நோக்கினல், ஓர் உச்சக்கட்டத்தின் பேருகத் திருவாசகம் உள்ளமை நமக்குப் புலணுகும்.
தத்துவ நோக்குகளை நிலைப்பியல் (மெற்ருஃவிசிக்கல்) நெறிப் பட்டவை எனவும் இயங்கியல் (டயலெக்ற்றிக்கல்) நெறிப்பட்டவை எனவும் வகைப்படுத்திக் கூறுவதுண்டு. பிரபஞ்சத்தின் தன்மையும் அசைவுகளும் என்றென்றைக்கும் மாருது ஒரு நிலைப்பட்டு உள்ளன எனவும், மாற்றங்கள் போன்று தோற்றமளிப்பன கூட மீண்டும் மீண்டும் அச்சொட்டாக ஒரே விதத்திலே சுழல் சக்கரமாக மறு தலிக்கின்றன எனவும் கருதுகின்ற உலக நோக்கு - நிலைப்பியல் நெறிப்பட்டது என்று கூறப்படும். நித்தியமான பொருள்களிடையே நித்திய வலிமையுள்ள நியதிகளுக்குக் கட்டுப்பட்டு நிரந்தரக் கோலத் தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அசைவுகளையே நிலைப்பியல்வாதி கள் ஒப்புக்கொள்வார்கள். ஆனல், இயங்கியல்வாதிகளோ, பிரபஞ் சத்தின் மாறும் இயல்புகளைப் பிரதானப் படுத்துவார்கள். மாறுதல் பற்றிய நியதிகளைக் கண்டுணர்ந்து வகுத்துக் கொள்கைகளாக்கி, அக்கொள்கைப் பிரயோகத்தினுல், புறவுலகையும் சமூகத்தையும் மாற்றுவதற்கு முயற்சி செய்வார்கள்.
இவ்விரு தத்துவ நோக்குகளுள்ளும், நிலைப்பியல் நோக்கினைச் சார்ந்ததாகத் திருவாசகம் திகழ்கிறது. அந்த நோக்குக்கு மிகவும் இசைவுடைய, அந்தத் தத்துவ நோக்கைப் பிரதிபலிக்கின்ற, தெளி வாக எடுத்துக் காட்டுகின்ற, ஒரு சீரிய பொருளுருவச் சாயலைக் கொண்டதாகத் திருவாசகம் தொகுத்து அமைக்கப்பட்டுள்ளது. அந்நூலின் பொருள் வைப்பு முறையையும், உள்ளடக்க அமைப் பியலையும் பகுப்பாய்வு செய்யும்போது இந்த உண்மை வெளிப் பட்டுத் தோன்றுகிறது. அது எவ்வாறு என்பதனை இனி நாம்
காண்போம்.
12

பின்னணி
திருவாசக காலத்துக்கு முன்பும் அதற்குச் சற்றே பின்பும் எழுந்த தமிழ் இலக்கியங்களின் அமைப்பியல் வரலாற்றை நினைவு கூருவது இவ்விடத்திலே பொருத்தமாகும். சங்கத் தமிழாகிய எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் இடம்பெறும் தனிப்பாட் (டுகள் அகம் என்றும் புறம் என்றும் பேசப்பட்டன. பருமட்டாகச் சொன்னல், அகம்-காதல்; புறம் ஏனையவை. அவை தலைவ்ன், கலைவி, பாங்கன், பாங்கி, நற்ருய், செவிலித்தாய், பாணன், விறலி முதலான பாத்திரங்களின் கூற்றுகளாக, நன்கு வரையறை பெற்ற மரபுகளுக்கு இசையுமாறு ஆக்கப்பட்டன. இந்த மரபு தொல்காப் பியத்திலும் இறையனர் களவியலிலும் விரித்துக் கூறப்பட்டுள்ளது.
பத்துப் பாட்டைத் தொடர்ந்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இவை நீதி நூல்கள். பெரும்பாலும் வெண்பா யாப்பில் அமைந்தவை. நீதிகளைச் சுருக்கிச் செப்பமாகச் செப்புவதற்கு இந்த யாப்புப் பொருத்தமானதென்று புலவர்கள் கருதினர்கள் போலும். இவை அறம், பொருள், இன்பம், வீடு பற்றிப் பேசலா
பின்னர், சமயச் சார்பான பக்தி இயக்கம் தமிழகத்திலே தலைதூக்கிற்று, சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் பக்திப்பாடல்களை இயற்றினர். இவை தமிழகத்துக் கோயில்களைச் சார்ந்து அமையலாயின. பொரும்பாலும் பதிகங்களாய் இருந்தன. பதிகம் என்பது பத்து அல்லது பதினெரு செய்யுள்களைக் கொண்ட தாகும். ஒவ்வொரு செய்யுளும், நாலடி கொண்டு அமைந்தன. இவற்றின் ஒசைகளும் வண்ணங்களும் பலதிறப்பட்டவை. சைவ நாயன்மார் நால்வரும் வைணவ ஆழ்வார்கள் பன்னிருவரும் ஆயி ரக்கணக்கான பக்திப் பாடல்களை நல்கியுள்ளனர். இவை இசைப் பாட்டுகள். இயற்பாட்டுக்குரிய கவிதைப் பண்புகளைக் காட்டிலும் இசைப்பண்புகளே பக்தி இலக்கியத்தில் மேலோங்கி நின்றன.
தமிழ்ப் பாட்டின் பிரதான ஒட்டம் பக்தி வெள்ளமாகப் பெரு கிய சமயத்திலே, உலகியற் பாட்டுத் துறையிலும் பரிசோதனைகள் சில இடம்பெற்றன எனலாம். நெடிய கதைப்பாட்டுகளுக்குப் பொருத்தமான அமைப்பு எது; யாப்பு யாது, என்றெல்லாம் புல வர்கள் தேடுதலில் ஈடுபட்டனர். இத்தேடுதல் பல்வேறு மட்டங் $ளில் நடைபெற்றுள்ளன, இதன் பேருகக் கிடைத்த இலக்கியங்கள் பல வகையின. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரு வகையான காப்பியங்களுக்கு எடுத்துக்காட்டுகள். திருத்தக்கதேவரின் சீவக சிந்தாமணி தொடக்கம், கம்பனின்" ஈடிணையற்ற சாதனையாகிய
13

Page 9
ವ್ಹಿಜ್ಡ வரையுள்ள காப்பியங்கள் வேறெரு வகையின. இவை விருத்த யாப்பில் எழுந்தவை.
திருவாசகத்தின் அமைப்பியல் விபரிப்பு
மேலே காட்டியுள்ளது சுருக்கமான பின்னணியாகும். இனி திருவாசகப் பாட்டுகளுக்கு நேராக வருவோம். திருவாசகம் மணி வாசகர் ஆக்கியது. அவரது மற்றுமோர் ஆக்கம் திருக்கோவை யார். திருவாசகத்தில் ஐம்பத்தொரு பாட்டுகள் உள்ளன. சில
LIFTLடெண்
9-12
3
14
5
16
729
30
3.
32
33.38
39
40-43
44
45
46
47.
48
49
50
5.
அடிக ளின் தொகை
95
罩45
183
225
400
200
80
90
80
76
57
56
54
40
28
40
44
40
12
40 24 40
8
44
28
32
28
36
செய்யுள் களின்
தொகை
1
100
50
20
15
20
9 19 14
9
0.
10
1 10 3.
IO
S
0
14
பாட்டுகள் ஒரேயொரு செய்யுளால் இயன்றவை சில பாட்டுகள் பல செய் யுள்கள் கொண்டவை. (யாப்பியலின் படி தொடக்கமும் முடிவும் கொண்ட ஒவ்வொன்றும் இங்கு செய்யுள் என்று சுட்டப்படுகின்றன. இது ஆங்கிலத்தில் ‘ஸ்ற்ருன் (Z)சா" எனப்படும்.) திரு வாசகத்தில் வரும் ஐம்பத்தொரு பாட் டுகள் பற்றிய அளவு விவரங்களைப் பின் வரும் அட்டவணையிற் காட்டியுள் ளோம்.
இந்த அட்டவணையைப் பார்த்த வுடனே ஒர் உண்மை புலப்படும். பாட்டுகளின் நெடுமையை வைத்துத் தான் திருவாசகம் தொகுக்கப்பட்டுள் ளது. எட்டுத்தொகையிலும் பத்துப் பாட்டிலுங்கூட, பாட்டுகளின் பருமனை அடிப்படையாகக் கொண்டு அவை தொகுதியாக்கப்பட்டுள்ளன. ஆகை யால் இது தமிழ் மரபுக்குப் புதிய தொன்று அன்று.
திருவாசகத்தின் தொடக்கத்தில் நான்கு நெடிய பாட்டுகள் உள்ளன. அவை சிறு செய்யுள்களாகப் பிரிக்கப் படாது தொடர்ச்சியாகச் செல்கின் றன. அத்துடன் 95, 145, 183, 225 அடிகளால் முறையே இயன்று, ஏறு வரிசையில் ஒழுங்காக்கப்பட்டுள்ளன. சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித்திருவக வல், என்னும் இந்த நாற்பெரும் பாட்டுகளைத் தொடர்ந்து திருச்சதகம்,

நீத்தல் விண்ணப்பம் ஆகிய பாட்டுகள் வருகின்றன. இவை முறையே 100 செய்யுள்களையும் 50 செய்யுள்களையும் உடையன. இவையிரண்டும் திருவாசகப் பாட்டுகளுள் இரண்டாம் கூட்டத் தைச் சேர்ந்தவை எனலாம். அடுத்து வரும் ஐந்து பாட்டுகளும் 14 முதல் 20 வரையிலான செய்யுள்களைக் கொண்டவை. இவை மூன்ரும் கூட்டத்தைச் சேர்ந்தவை. இவற்றுட் பெரும்பாலானவை 19 அல்லது 20 செய்யுள்களைக் கொண்டவை. ஒரு பாட்டு 15 செய் புள்களையும் மற்ருெரு பாட்டு 14 செய்யுள்களையும் கொண்டவை. இறுதியில் வரும் நான்காம் கூட்டத்துப் பாட்டுகள் பெரும்பாலும் பதிகங்கள்; 10 செய்யுள்களால் ஆனவை. இந்த நான்காம் கூட் டத்துப் பாட்டுகளின் கீழெல்லை 7 அடிகளும் மேலெல்லை 11 அடிக ளும் எனலாம். 2 செய்யுள்களைக் கொண்ட ஒரு பாட்டையும் 3 செய்யுளாலான மற்ருெரு பாட்டையும் விதிவிலக்குகளாகக் கொள்ளலாம்.
மேலே நாம் தந்துள்ளது பருமன் அடிப்படையிலான அமைப்பு. ஆஞல், இக்கட்டுரையின் பிரதான அக்கறை பொருளுருவ அமைப் பியலே ஆகும். பருமன்முறையான அமைப்பியல்பும் பொருளுருவ அமைப்பியல்பும் திருவாசகத்தில் வியக்கத்தக்க வகையில் இசைந்து போகின்றன. அதாவது, அடியெண்ணிக்கையின் படி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருவாசகப் பாட்டுகளில், பொருளுகுவக் கோல மும் நேர்த்தியாக வந்து பொருந்தி விடுகிறது. இதனை நன்கு விளங்கிக் கொள்வதற்கு, திருவாசகத்தின் பொருளுருவ அமைப் பினை விபரித்தல் வேண்டும். அதாவது அதன் உள்ளடக்க வைப்பு முறையினையும் ஒழுங்காக்கத்தின் பண்புகளையும் காணுதல் வேண்டும்.
சிவபுராணம்
சிவபுராணம் திருவாசகத்தின் பாயிரம்போல் விளங்குகிறது. முழுநூலின் உள்ளார்ந்த தத்துவத்தைத் திரட்டித் தருகிறது. முத லில் வரும் பதினைந்து அடிகளிலும் சிவபெருமானைப் போற்றி வணங் கும் மணிவாசகர், அடுத்து
'சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனல் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஒய உரைப்பன் யான்.'"
என்று அந்தப் பாட்டின் பண்பையும் பயனையும் நோக்கத்தையும் எடுத்துக் கூறுகிளுர்,
15

Page 10
உயிர்களின் கதியும், தொடர்ந்து செல்லும் பிறப்புகளும் (மறு பிறப்புக் கொள்கையும்), ஞானத்தை மறைக்கும் இருள் மலத்தின் இயல்பும், நல்வினை தீவினைகளின் பீடிப்பும், வீடுபேற்றை உதவும் திருவருளின் திறமும் பாட்டுப் பண்பின் நயமெல்லாம் ஒருங்கே பொங்கி எழும் உயிரின்பச் சொற்களால் உணர்த்தப்படுகின்றன. பாட்டு முழுவதும் தன்னுணர்ச்சிப் பாங்கானது. ஞானப் புலவரின் சொந்தக் குரலே இங்கு ஒலிக்கிறது. இந்தப் பாட்டின் 'பேசுநர் மணிவாசகரே. வேறு பாத்திரங்கள் இங்கு இல்லை. ஆனல் அவர் தனியாளாக நின்றுவிடவில்லை. உயிர்கள் அனைத்துக்கும் ஒரு குறி யீடு போலவும் உள்ளார். 'நோக்கரிய நோக்கும் நுணுக்கரிய நுண் ணுணர்வும்’ ஆகிய கடவுளை - 'சொல்லற்கு அரியானைச் சொல் லித் திருவடிக்கீழ்ச் / சொல்லிய” பாட்டே சிவபுராணமாகும்.
கவிஞரின் தத்துவ நோக்கு முழுவதும் சிவபுராணத்திலே சுருக்கி உரைக்கப்படுகிறது. சிவபுராணம் திருவாசகத்தின் பிழி சாறு, ஆனல், தத்துவ ஞானம் இங்கு கட்டித்த கருத்துகளாகவோ, சலிப் புத்தரும் வாதங்களாகவோ முன்வைக்கப்படவில்லை. தத்துவஞானக் கற்கண்டுகளை, பொங்கிப் பெருகும் உணர்வுப் பாலிலே கரைத்து வழங்குகிறர் கவிஞர். அவருடைய அநுபூதியின் வழிவந்த தத்துவ நோக்கு நிலைப்பியற் பாங்கானது. பதி, பசு, பாசம் என்னும் முப் பொருளுண்மையின் விளக்கமாக இயல்வது. முப்பேரகவல்கள்
சிவபுராணத்தைத் தொடர்ந்து வருவன கீர்த்தித் திருவகவல்,
திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல் என்னும் மூன்று பாட்டு களுமாகும். இவை நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட அகவல்களால் ஆனவை.
கீர்த்தித் திருவகவலில், சிவபெருமானுடைய அருஞ்செயல்கள் கூறப்படுகின்றன. புராணங்களிலும் மரபுவழிக் கதைகளிலும் வருஞ் செய்திகள், மணிவாசகரின் வாழ்க்கையில் நடந்தனவாகப் பேசப் படும் செய்திகளுடன் கலந்தும் அக்கம் பக்கமாக வைக்கப்பட்டும் உள்ளன. கவிஞரின் தனி ஆளுமை பரம்பொருள் எனப்படும் பொதுமையில் மூழ்கி அமிழ்ந்து விடுவதனுல், "சிவன் செயல்?? அனைத்தும் கவிஞருடைய அநுபூதி உலகிலே ஒரே தரத்தனவாகநெருக்கமான வலிமையுள்ள உணர்வுகளாக - உருக்கொண்டு விடு கின்றன என்று கூறலாம். ... is
அடுத்து வருவது திருவண்டப் பகுதியாகும். பிரபஞ்சத்தின் பெருமையையும் விரிவையும் படஞ்செய்த பின், அவ்வாருன, பெரு மையெல்லாம் கடவுளின் முன்னிலையிற் சிறுத்துப்போகின்றன என்று
6

- வெயிலிலே ஒங்கிப் பரக்கும் தூசு துணுக்கைக்குச் சமானம்என்றுகாட்டுகிறர். எல்லையில்லாப் பரம்பொருளின் வலிமையையும் அறி வையும் அருளையும் புறவுலகின் சிறுமையுடன் ஒப்பிடல் இயலா தெனக் காட்டுவதே கவிஞரின் நோக்கமாயிற்று. , ,
இதன் பின்னர், மனித உயிரின் ஆன்மிக யாத்திரையை LoGoof வாசகர் பாடுகிருர் . இந்த யாத்திரையில் எதிர்ப்படும் பல்வேறு தடைகளையும், இறுதி உண்மையைத் தெளிந்துகொள்வதன் முன் நேரும் ‘தத்துகளையும் கவிஞர் காட்டுகிருர், கல்வியாளர், துறவி கள், சமயவாதிகள், யோகியர் ஆகியோரின் சிந்தனைக்கெல்லாம் அப் பாற்பட்ட ஒன்றே கடவுள் என்பார், மணிவாசகர். திருவண்டப் பகுதி யில் வரும் சொற்கோவைகளும் படிமங்களும் குறியீடுகளும் தமிழ் மரபுடன் இறுகப் பிணைந்தவையாகும். சொற்களின் ஆற்றலும் சுழிப்பும் நயமும் தமிழ்மொழிக்கே உரியவை. திருவாசகம் முழு வதையும் மொழிபெயர்த்த வண. ஜி. யு. போப் (போப்பையர்) அவர்கள், திருவண்டப் பகுதியில் வரும் 66 முதல் 95 வரையுள்ள அடிகளை மொழிபெயர்த்தல் இயலாதென்றே கூறிவிடலாமென்ருர், சிவபெருமானின் திருவருளை உணர்த்தும் பொருட்டு நுட்பமும், ஒக் கலும் வாய்ந்த உள்ளுறை உருவகமொன்று அந்த அடிகளில் எடுத் தாளப்படுவதே இதற்குக் காரணமாம்.
".. . . என்னிற் கருணை வான் தேன் கலக்க அருளொடு பராவமு தாக்கினன் பிரமன் மால் அறியாப் பெற்றியோனே’’
என்னும் அடிகளுடன் திருவ ண்டப் பகுதி முடிவடைகிறது.
அடுத்து வருவது போற்றித் திருவகவல். இதில் மனித உயிருக்கு நேரும் இன்னல்களும் இடைஞ்சல்களும் பேசப்படுகின்றன. திருவண் டப் பகுதியிற் போலவே இந்தப் பாட்டிலும் உயிர்களெல்லாம் மேற்கொள்ளும் "புண்ணிய நெடும்பயணமே" பேசப்படுகிறது. இங்கு கவிஞர் தம்மை ஓர் உதாரணம்ாக்கிக் கொண்டு பொதுமை யான ஈடேற்றக் கோட்பாடுகளை விளக்குகிருர், மேற்கூறிய யாத்தி ரையில் நேரத்தக்க விபத்துகளையும் சோதனைகளையும் வேதனைகளையும் அவர் காட்டுகிருர், ஆசை, கல்வி, செல்வம், வறுமை முதலான உலகியற் சூழல்கள் எல்லாமே இடையூறுகளாகக் கணிக்கப்படுகின்றன. வறுமை மட்டுமன்றி, செல்வமும் ஒர் இடைஞ்சலாகவே உணரப் படுகிறது. இளமையும் காமமும் இன்ப நுகர்ச்சியும் அவ்வாறே. இத்தடங்கல்களெல்லாம் சுட்டிப்பான, உணர்வு மூட்டும் சொற்கள் கொண்டு படஞ்செய்யப்படுகின்றன.
7

Page 11
"தெய்வம் என்பதோர் சித்தம்" உண்டாவது இந்த நெடும் பயணத்தில் முக்கியமானதொரு கட்டமாகும். ஆனல், இதுகூட இறுதி இலக்கு ஆகாது. "ஆறு கோடி மாயா சத்திகள் /வேறு வேறு சீம் மாயைகள்” தொடங்குவதாலும் "ஆத்தமானுர் அயலவர் கூடி தாத்திகம் பேசி நாத்தழும்பு" ஏறுவதனலும், "உலகாயதம் எனும் ஒண்டிறற் பாம்பின் /கால பேதத்த கடுவிடம்’ எய்துவதனலும் "சமய வாதிகள் தத்தம் மதங்களில் /அமைவதாக” வாதிப்பதனலும் "விரதமே” பெரியதென்று வேதியர்கள் சாத்திரங்களை மேற்கோள் காட்டி வலியுறுத்துவதனலும் பல மயக்கங்கள் தோன்றுகின்றன என்கிருர் மணிவாசகர். இவற்றையெல்லால் கடந்து தான் மெய் யறிவு விளக்கம் உண்டாதல் வேண்டுமாம்.
மெய்யறிவு தோன்றியதன் பின்னர், அசையா உறுதியும் ஊன் றிய அன்பும் குலையாத பக்தியும் சித்தக்கின்றன. கவிஞர் கூறுகிறர்:
“மற்ருேர் தெய்வம் கனவிலும் நினையாது. அன்பெனும் ஆறு கரையது புரள நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி.” போற்றித் திருவகவல் விடா மழைபோன்று சொரியும் அரும் பொருட் பிழம்பான சொற்களால் இறைவனைப்போற்றிப் புகழ்ந்து வணங்கிப் பூசித்து நிறைவெய்துகிறது.
திருச்சதகமும் நீத்தல் விண்ணப்பமும்
திருச்சதகம் பப்பத்துச் செய்யுள்களாலான பத்துப் பதிகங்களைக் கொண்டது. போப்பையரின் கருத்துப்படி, சமய அநுபூதியின் பல் வேறு கட்டங்களைக் காட்டுவதே திருச்சதகத்தின் அடிப்படை நோக் கமாகும். முன்னைய அநுபவங்களை நினைவுகூர்ந்து திளைப்பதே இப் பாட்டின் சாராம்சம் என்று தோன்றுகிறது.
திருவாசகத்திலே இருபதாம் பாட்டாகிய திருப்பள்ளி யெழுச்சி யைத் தொடர்ந்து வரும் பதிகங்களையும் பிற பாட்டுகளையும் திருச்சத கத்துடன் ஒப்புநோக்கி வேற்றுமை காண்பது பயனுள்ளது. இறுதிக் கூட்டத்துப் பாட்டுகளாகிய பத்துகளும் பிறவும் அளவிற் சிறியன. இவை பல்வேறுபட்ட கால இடைவெளிகளில் அவ்வப்போது இயற் றப்பட்டன என்று கருதலாம். ஒருவிதத்திலே பார்க்கும்போது, திரு வாசகத்தின் ஈற்றில் இடம்பெறும் இக்கவிதைகள் மணிவாசகரின் வாழ்க்கையில் அவ்வப்போது நிகழ்ந்த சம்பவங்கள், தலயாத்திரை களின்போது நேர்ந்த அனுபவங்கள் ஆகியவற்றின்பதிவுகள் போல்-ஆவனங்கள்போல் - உள்ளன. இவற்றினை மணிவாசகர் தம் வாழ்க் கையின் பிற்பகுதியிலே மறுமதிப்பீடு செய்து, மீழ ஒழுங்காக்கி, மறு
8

ைெரவு செய்தார் என்றும் கொள்ள இடமுண்டு. அதன் பேறே திருச்சதகமும் நீத்தல் விண்ணப்பமுமாகும்.
இவ்வகையில் நோக்கும்போது, திருச்சதகத்திலும் நீத்தல்விண் ணப்பத்திலும், உணர்ச்சிகள் அமைதியில் நினைவு கூரப்படுகின்றன (இமோஷன் றிக்கொலெக்ற்றெட் இன்- ற்றங்க்குவிலிற்றி) எனலாம், நீத்தல் விண்ணப்பமானது, மணிவாசகரின் வாழ்க்கையிலே ஒரு வகையான பிரிவுணர்ச்சி நிரம்பிய காலகட்டதிலே தோன்றியிருத்த தல் வேண்டும். (தனிமையுணர்வும், பதைபதைப்பும், இரங்கலும் இப்பாட்டில் நிரம்பியுள்ளன.) ஆனல் அந்த வேளைகளிலும் மணி வாசகர் தமது உறுதியைக் கை விடவில்லை. தம்மைக் கைவிட வேண்டாம் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டார். இதுவே நீத்தல் விண்ணப்பம்.
நீத்தல் விண்ணப்பம் கட்டளைக் கலித்துறைகளால் ஆனது. ஆறுதலாக அமர்ந்து நினைவு கூர்ந்து செப்பமாகச் செய்யுளியற்று வதற்கு மிகவும் வாய்ப்பான யாப்பு, இது. எனினும் உணர்வு நெருக் கத்தின் மணமும் செறிவும் எவ்வித ஊறுமின்றி நிலைத்து நிற்பதனை நீத்தல் விண்ணப்பத்திலும் நாம் காண்கிருேம்,
ஆட்டமும் பாட்டும் உரையாட்டும்
அடுத்து நாம் காண்பவை ஆடல்களாகவும் விளையாட்டாகவும் உருவாக்கஞ் செய்யப்பட்ட பாட்டுகள். உரையாடல்களாயும் நாட கத் தனி மொழி போன்றும் இவற்றுட் சில உள்ளன. திருவெம்பா வையும் திருப்பொற்சுண்ணமும், திருப்பள்ளியெழுச்சியும் மிகவும் பிரபலமானவை.
இக்கூட்டத்துப் பாட்டுகளில், ஆன்மிக அநுபவங்களும் சர்வ சாதரணமான உலகியல் நிகழ்வுகளும் அற்புதமாக இணைக்கப்பட் டுள்ளன. சிறுமியரின் ஆடல்களும் பாடல்களும் விளையாட்டுப் பேச்சுகளும் கேலியும் கிண்டலும் வேடிக்கையுமாகிய உலகியல் நிலை களெல்லாம், கடவுள் அநுபவத்தின் குறியீடுகளாகவும் உவமைகளா கவும் உருவகங்களாகவும் மாற்றம் பெறுகின்றன. கடவுளதுபவத்தை மாட்டி வைக்கும் சட்டகங்களாக உலகியல் நிகழ்ச்சிகள் உதவு கின்றன.
திருவெம்பாவையில் இவ்வித பாட்டாக்கல் முறை திறம்பட இடம்பெற்றுள்ளது. விளையாட்டுப் போக்குள்ள சிறுமிகள் சிலர் மார்கழி நீராட ஆயத்தஞ் செய்வதையும் அவர்கள் நீராடுவதையும் கவிஞர் படஞ் செய்துள்ளார். பெயர் சுட்டி அறிமுகஞ் செய்யப் படாத அந்தப் பாவையரின் கூற்றுகளாக உள்ளவையே திருவெம்
9

Page 12
பாவைப் பாட்டுகள். நமக்குக் கிடைக்கும் முதலாவது தமிழ்க் கவிதை நாடகம் என்றும் இதனை. நாம் குறிக்கலாம். பாவையரின் ஆனந்தமும் நையாண்டியும் கேலியும் கிண்டலும் அங்கதமும் விக டமும் மிகவுஞ் சுவையாக வெளிப்படுகின்றன. அதே வேளை சிரத் தையும் பக்தியும் அழுத்தமும் பற்றுறுதியும் மறுபுறத்தில் ஆழமாக உணர்த்தப்படுகின்றன. இவ்வாறு "இருமையின் ஒருமையை" வெளிக்கொணரும் தகுதிப்பாடு கொண்டதாக மணிவாசகரின் பாட்டியல் உத்திமுறை உள்ளது.
திருவாசகத்திலே குரல்கொடுத்துள்ள பாத்திரங்கள்-அதாவது பேசுநர்கள்-அம்மானை ஆடுகிருர்கள்; சுண்ணம் இடிக்கிறர்கள்; தெள்ளேணம் கொட்டுகிறர்கள்; சாழல் ஆடுகிறர்கள்; பூக் கொய் கிருர்கள்; தோள் நோக்கம் ஆடுகிருர்கள்: ஊஞ்சல் ஆடுகிருர்கள். திருவாசகத் தொடக்கத்தில் வரும் பெரும் பாட்டுகளில் உணர்த்தப் பட்ட உயரிய தத்துவமும் ஞானமும், பின்னர் வரும் விளையாட்டுப் பாட்டுகளில் உயிர்ப்பும், நறுமையும், குளிர்மையும், இளமையும் பயிலும் எழுச்சிக் கீதங்களாகப் புத்துயிர் பெறுகின்றன. இங்கு ஒரு பொதுமையான மரபு வட்டத்தினுள்ளே புதுமையான உற்சாகக் கிளர்ச்சியொன்று துள்ளி எழுவதனை நாம் உணர்கிருேம்.
விளையாட்டுப் பாட்டுகள்போலவே திருவாசகத்தில் வரும் அகத் துறைப் பாட்டுகளும் சிவனையே தலைவனக உடையன. ஆன்மாவைத் தலைவியாகவும் இறைவனைத் தலைவனுகவும் பாவனை செய்யும் இப் பாட்டுகள் பக்தி நிலையின் பல்வேறு திணைகளையும் துறைகளையும் உணர்த்துவன. இவை கற்பனைப் பாத்திரங்களின் கூற்றுகளாக இயற்றப்பட்டுத் திருவாசகத்தில் இடம் பெறுகின்றன. தலைவனை நினைந்து இரங்கி ஏங்கும் உணர்வு நிலைகள் பாடற் பொருளாய் அமைந்து கிடக்கின்றன. இவை தனி மொழிகளாயும் உரையாடல் களாயும் உள்ளன. தாயுடன் பேசும் மகள் (அன்னைப் பத்து) கிளி யுடன் பேசும் சிறுமி (திருத்தசாங்கம்) தன்னுடன் சேர்ந்து தனது தலைவனைக் கூவுமாறு குயிலை வேண்டிக் கொள்ளும் தலைவி (குயிற் பத்து) -இவர்களெல்லாம் ‘திருவாசகம் பேசும்” பேசுநர்கள். தனக்கு மிகவும் பிரியமான உரிப்பொருளைக் கவிஞனின் கற்பனை எவ்வாறெல்லாம் அணுகும் என்பதற்கு இவை எடுத்துக்காட்டு களாகும்.
பத்துகளும் ஏனைய பாட்டுகளுமி
இப்பாட்டுகள்பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். திருச்ச தகத்துடனும் நீத்தல் விண்ணப்பத்துடனும் இவற்றை ஒப்பிட்டுக்
காட்டிஞ்ேம். இவற்றுட் பல திருப்பெருந்துறையில் அருளியவை என்று குறிக்கப்பட்டுள்ளன. இவை மணிவாச்க்ரின் பாட்டுகளுட்
... O

剧 நாயின் எதிருரை.
பிச்சைக்காரன் போலக் கந்தையுடுத்திக் குறுகிய بقیه آ اb ஒழுங்கை யொன்றின் வழியாகச் செல்வது போலக் கனவு கண்டேன். எனது பின்புறத்திலிருந்து நாயொன்று என்னை நோக்கிக் குரைத்துக் கொண்டிருந்தது. ஆத்திரம் அடைந்த நான் அதனைத் திரும்பிப் பார்த்து "எச்சில் பொறுக் கியே! வாயை மூடு’ என்று கத்தினேன்.
நாய் என்னை நோக்கி “நானென்றும்மனிதர்களைப்போல கேடுகெட்ட பிறவியில்லை’ என்றது.
என்னைப் பெரிதும் புண்படுத்திய நாயிடம் “நீ என்ன உளறுகிருய்?’ என்று ஆவேசத்தோடு கேட்டேன்.
"பித்தளையையும் வெள்ளியையும் தரம்பிரித்து மதிக்க வோ, பட்டுடுத்தவரையும், பருத்தியுடுத்தவரையும் சீர்தூக் கிப் பார்க்கவோ, அதிகாரம் படைத்தவரையும், அதுவற்ற பாமரனையும் வித்தியாசமாக நடத்தவோ உன்னைப்போலக் கற் றுக்கொள்ள வில்லையே. ஆண்டானுக்கும் அடிமைக்கும் பேதம் காணவோ. S. P.
நாயின் கடும் வார்த்தைகளைக் கேட்கச் சகிக்காமல் ஒட்டம்
பிடித்தேன்.
*"கொஞ்சம் பொறு. நான் கூறுவதைக் கேளேன்." என்று நாய் என்னைத் தடுத்து நிறுத்த முயன்றது. 一
நான் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தேன். கனவும் கலைந் தது. மீண்டும் உறங்கலானேன்.
23- 4 - 1925 லூ சுன்
காலத்தால் முற்பட்டவையாய் இருத்தல் கூடும். இவற்றுள் ஒர ளவு பரிசோதனை முயற்சியின் பேருன ஆக்கங்களும் உள்ளன என லாம். பல யாப்பு வடிவுக் கூறுகளைக் கலக்கும் முயற்சியும் ( கல வைப் பாட்டு), பதிகங்கள் அல்லது பத்துகளின் பருமனை வேறு படுத்தும் போக்கும் காணப்படுகின்றன. ( சில பதிகங்களில் 6 அல் லது 7 செய்யுள்களும் உள்ளன; 2, 3 செய்யுள்களைக் கொண்டி பாட்டுகளையும் மணிவாசகர் ஆக்கியுள்ளார்.) , இவையெல்லாம்_பரி சோதனையின்பாற் பட்டவை என்று கொள்வது பிழையாகாது.
2.

Page 13
திருவாசகத்தின் இறுதியில் வரும் இப்பாட்டுகள் பரந்ததொரு வீச்சில் அமைந்த உணர்ச்சி வண்ணக் கோலைகளாயுள்ளன. வாழாப்பத்திலும் அருட்பத்திலும் பிடித்தபத்திலும் 6)|(5b tulá. கள் சில, உணர்ச்சி ஈர்ப்பு நிரம்பியவை: பலரும் விரும்பிப் படிப்பவை.
இப்பாட்டுகளில் உணர்ச்சி உருக்க மும் பக்தியின் நெருக்கமும் உண்டு. அந்த வகையில் இவற்றை மணிவாசகரின் பாட்டியல் நாளேடு (பொயெற்றிக் டயறி) என நாம் 65Gog56nth. இந்த நாளேட்டிலேதான் இந்தக் "கடவுட் புலவரின் உள்ளக எண்ணங் களும் உணர்ச்சிப் பொங்கல்களும் உடனுக்குடன் பதிவாயின. திரு வாசகத்தின் முற்பகுதியில் வரும் தேறல்களும் தெளிவுகளுமாகிய பெரும் பாட்டுகளுக்குப் பின்னிணப்புகள் போலவும் ஆவணச் சான்றுகள் போலவும் இந்தப் பாட்டியல் நாளேடு விளங்குகிறது எனலாம். இவ்வாறு கூறுவது, இப்பிற்பகுதிப் பாட்டுகளின் உள் ளார்ந்த பெறுமதியை - தம்மளவிலான பெறுமானத்தை - எல் வகையிலும் சிறுமைப்படுத்துவது ஆகாது.
பேசுநர்பற்றி ஒரு குறிப்பு
திருவாசகத்தில் வரும் பேசுநர் பற்றி நாம் ஒன்றை மனங் கொள்ளல் வேண்டும். திருவெம்பாவையில் நீராடும் பாவையரும், திருப்பொற் சுண்ணத்திற் சுண்ணமிடிக்கும் பெண்களும், குயிற்பத் திற் குயிலுடன் பேசும் குமரியும் மணிவாசகப் புலவரது கற்பனை பாற் வடைக்கப்பெற்ற பாத்திரங்களே. ஆயினும் அவர்கள் முற்றி லுஞ் சுதந்திரமான தனியாட்கள் அல்லர். “புலவரே பல முகமூடி களை அணிந்துகொண்டு ஆடுகிருரென்றும் நாம் நினைத்துப் பார்க்க லாம். தாம் அணிந்துகொள்ளும் முகமூடியினூடே சிலவே&ள தேம் மைப் புலவர் காட்டிக்கொள்கிறர். திடீரென்று தமது முகமூடி யைக் கழற்றி எறிந்தும் விடுகிருர், மணிவாசகர் கவிஞர்தான். ஆனல் அவர் ஒரு ஞானியாகவே மேலோங்கி நிற்கிருர், அவருள் இருக்கும் கலையுணர்வை விட இறையுணர்வே மேலாதிக்கம் உடை Yf gğ5I. . , . .
திருப்பள்ளியெழுச்சியில் இத ற்கு உதாரணம் காணலாம். திருப் பெருந்துறையுறை சிவபெருமானை அடியார் குழாம் துயில் எழுப்பு வதற்காக பாட்டுகள் பாடிப் பரவிநிற்கிறது. இதுவே புலவரின் கற்பனை. துயில் எழுப்புவோர் அடியார்கள் அவர்கள் பலர்; தனி ஒருவர் அல்லர்: மணிவாசகர் அல்லர். இந்தக் கற்பனையை அல்லது பாவனையைப் பாட்டின் பெரும்பகுதியில் மணிவாசகர் பேணிக்கொள்கிருர். ஆனல் இரண்டு மூன்று இடங்களிலே மணி வாசகர் தம்மையே மறந்து எட்டிப் பார்த்து விடுகிமுர், . பாட்டு
22

முழுவதிலும் அடியார்களைக் குறிப்பதற்குத் தன்மைப் பன்மையைக் கையாளும் அவர், "என் வாழ் முதலே' என்றும் "எனை உடை பாய்’ என்றும் ‘என்னையும் ஆண்டு கொண்டு” என்றும் பாடும் போது தன்மை ஒருமையைக் கையாண்டு விடுகிருர். இவ்விடங் களில் மணி வாசகராகிய கவிஞரை அவருள் நிறைந்திருக்கும் பக்தர்? மிஞ்சிவிடுகிருர்,
பிற கவிஞருடன் ஒப்பீடு
பாட்டுக்களை நாலடி கொண்ட பத்துச் செய்யுளாக - பதிகங் களாக அல்லது பத்துகள' க - அமைக்கும் வழக்கம் தேவாரப் பாட்டுகளிலும் காணப்படுகிறது. தேவாரம் பாடிய அப்பரும் சம் பந்தரும் சுந்தரரும் மூவர் முதலிகள் என்று சைவசமயத்தினராற் கொண்டாடப்படுவர். மூவர் முதலிகள் தேவாரங்களெல்லாம் சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவராக உடையன. இவர்க ளுள்ளே, சம்பந்தரின் பதிகங்களிலே திடமானதோர் அமைப்புக் கோலம் உண்டு. உதாரணமாக, இராவணன் பற்றிய குறிப்டம், பெளத்த சமணர் பற்றிய குறிப்பும் எல்லாப் பதிகங்களிலும் வரும். ஆனல் அப்பரும் சுந்தரரும் அவ்வாறு திடமான அமைப்புக் கோலம் எதனையும் கைக்கொண்டாால்லர். அவ்வப் பதிகத்துக் குப் பொருத்தமான அமைப்பு நெறியை அவர்கள் கைக்கொண்ட
gf
பதிகங்களுள் வரும் செய்யுள்களின் பொருள் ஒழுங்கு முறை யைப் பொறுத்த வரையில், சம்பந்தரை அன்றி, அப்பரையும், சுந் தரரையும் ஒத்தவராக மணிவாசகர் உள்ளார். மணிவாசகரின் பத்துகளுள் வரும் செய்யுள் ஒவ்வொன்றும் தன்னளவில் முழுமை பெற்று விளங்குவதுடன், பதிகத்தின் இன்றியமையா உறுப்பாகவும் விளங்குகிறது.
மணிவாசகருக்கும், இளங்கோவடிகளுக்கும் உள்ள ஒற்றுமை யொன்றும் இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கது. ஆடலிசைப் பாட்டுகளை இயற்கவிதையின் பொருட்டு இளங்கோவடிகளுஞ் சிலப்பதிகாரத்திலே கையாண்டுள்ளார். வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை முதலிய நாட்டார் ஆடலிசைப் un G9 வண்ணங்களை இளங்கோவடிகள் எடுத்தாண்டுள்ளார். நா. வான மாமலை சுட்டிக்காட்டுவது போல, சிலப்பதிகாரத்திலே, “நாட்டார் 1.ாட்டுகளின் உறுப்புருவங்கள், பண்டைய பாட்டியற் புலமை மர புடன் ஒன்றிணைக்கப்பட்டன". திருவாசகத்திலும் எளிமையான மக்களின் ஆடலிசைப் பாட்டு வண்ணங்கள் சமயத் தத்துவங்களு டன் இணைக்கப்பட்டன. கற்றறிவாளாகம் மரபுணர்ந்த அறிஞரு
23

Page 14
மான மணிவாசகரின் ஆழமான சமய அக்கறைகள் மச்சுளிசையு டன் சங்கமிக்கும் அபூர்வச் சேர்க்கையை இவ்விடத்தில் நாம் கண் டுனருகிருேம்.
மணிவாசகரின் புலமை, அவருடைய மற்ருெரு படைப்பாகிய திருக்கோவையாரில் நன்கு வெளிப்பட்டுத் தோன்றுகிறது. அவ ருடைய பன்முக ஆளுமையின் பிறிதோர் அம்சத்தைக் கோலையா ரில் நாம் காண்கிருேம். சான்ருேர் காலத்துச் சங்க நூல்களெல் லாம் அகப்பொருள் பற்றிப் பேசும்போது மரபுவழிப்பட்ட வாழ்க் கைச் சந்தர்ப்பங்களையும் படித்தறிந்து விளங்கிக் கொள்ளக்கூடிய வழமையான திணைகளையும் துறைகளையும் சார்ந்தே பாட்டுகளைப் படைத்தன. இன்ன பாத்திரம் இன்ன சந்தர்ப்பத்திலே இப்படிப் பேசும் என்பதை மரபின் உதவியுடன் ஊகித்தே உணர்ந்து கொள் ளல் வேண்டும். ஆனல், கோவை என்பது சற்றே வேறுபட்ட பாட்டு வடிவமாகும். இது தனிப்பாட்டுகளைத் தொகுத்தும் வகுத் தும் ஒழுங்குசெய்த ஒரு காலத்திலே மலர்ச்சிபெற்ற பாட்டு வடிவ மாய் இருத்தல் கூடும். தனிப்பாட்டுகளைத் தொடுத்துக் கோத்து (கோவை செய்து) தொடர்ச்சியான கதையொன்றின் சாயலிலே கோவைப் பிரபந்தம் அமைகிறது.இது பாட்டியல் நெறியிலே அணி வகுப்புச் சீர்மையையும் உள்ளார்ந்த திட்டத்தையும் தாடிய ஒருதேடலே ஆகும். கோவைப் பிரபந்தத்தில் மணிவாசகருக்கு இருந்த ஈடுபாடு, பரிசோதனை முயற்சியிலும், பாட்டியல் அமைப்பாக்கத் திலும் அவருக்கு இருந்த அக்கறையை நன்கு புலப்படுத்துகிறது. நாலடிப் பாட்டுக்களை அவர் விரும்பினர் என்பதற்குச் சான்ருகத் திருவாசகமும் திருக்கோவையாரும் விளங்குகின்றன. இது புதிய வடிவங்களை வரவேற்கும் போக்கின் பிரதிபலிப்பாகும். ஆணுல் அவர் கலிவெண்பா யாப்பிலும் அகவல் யாப்பிலுங்கூடக் கவிதைகளை இயற்றியுள்ளார். இவை நாலடியால் ஆகிய பாட்டுகள் அல்ல. பல அடிகளாலே தொடர்ந்து நடக்கும் இயல்பினை உடையவை. கலிவெண் பாவையும் அகவலையும் அவர் பயன்படுத்தியமை, அவருடைய பழம் புலமை மேம்பாட்டின் பேறு என்பது பிழையாகாது.
முடிபுகளும் பேறுகளும்
திருவாசகத்தின் பொருளுருவ அமைப்பியல்பை இதுவரை கண் டோம். இவற்றிலிருந்து பெறத்தக்க முடிபுகள் சிலவற்றைப் பின் வருமாறு பொழிப்பாக எடுத்துரைக்கலாம். V−
1. திருவாசகத்தின் தொகுப்பு முறையிலே, தொகையளவான கோலமொன்று உண்டு. முதலில் வரும் நாற்பெரும் பாட்டுகளும் அடி எண்ணிக்கையிலே ஏறுவரிசைப்படி அமைந்துள்ளன. மீதிப் பாட்டுகளெல்லாம் இறங்கு வரிசைப்படி உள்ளன. சில புறனடை
24

கள் உண்டெனினும் அத்தகைய ஒழுங்கீனம் முக்கியமான ஒன்று அன்று
ாகையளவுக் கோலத்துடன் இசைந்து போகும் வகை பண்பியற் கோலமொன்றும் திருவாசகத்துக்கு உண்டு. அக் பின்வருமாறு -
(அ) முதலிலே தத்துவஞான வழிப்பட்ட சித்தாந்தம் எடுத் துரைக்கப்படுகிறது. பதி, பசு, பாசம் - அதாவது ஆண்டவன், அடியவன், அடிமைத் திறம் - என்னும் முப்பொருளும் அவற் றிடையே உள்ள உறவுகளும் கூறப்படுகின்றன. பின்னைய பாட்டு களில் இடம்பெறும் தத்துவங்கள் அனைத்தும் முதலாவது சூத்திரிப் பிலிருந்து பெறப்படுவனவாகவே உள்ளன.
(ஆ) பின்னர் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம் என்பன வருகின்றன. இவை மணிவாசகரின் சொந்த வாழ்வு சார்ந்தன: இவை மறுமதிப்பு, நினைவு கூரல், செப்பமான மறுவரைவு ஆகிய முயற்சியின் பேறுகள்.
(இ) அடுத்து வருவன ஆடற் பாட்டுகள். இவை கற்பனைப் பாத்திரங்களின் பாடல் போலவும் பேசல் போலவும் பாவனைசெய் யப்பட்டன. உயரிய இலட்சிய உலகினையும் எளிமையான மக்கள் உலகையும் இசைவிக்கும் முயற்சியின் பேறுகள் இவை.
(ஈ) திருவாசகத்தின் இறுதிப் பாகத்தில், தனிப் பாட்டுகள் எனவும் எண்ணத்தக்க படைப்புகள் உள்ளன. மணிவாசகரின் பாட்டியல் நாளேடு போன்று உள்ளன.
மேலே தரப்பட்ட பொழிப்புக்கும் ஒரு பொழிப்பினை நாம் பின்வருமாறு கூறலாம்; திருவாசகத்தின் பொருளுருவத்தில் (i) கோட்பாட்டு முன்வைப்பும் (ii) விளக்க - நடைமுறைப் பிரயோகமும் (ii) உதாரணப் பதிவாகிய ஆவணங்களும் பொருந்தி விளங்குகின்றன.
இவ்வாறு காணும்போது, திருவாசகத்தினல் வெளிப்பட்டுத் தோன்றும் தத்துவநோக்கு நிலைப்பியல் (மெற்ருஃவிசிக்கல்) நெறி பட்டதென்பது புலணுகும். உயிர்களையும் உலகினையும் நிலைப்பியல் நோக்கிலே காண்பவராக மணிவாசகர் காட்சி தருகிருர். இவரது தத்துவ நோக்கு நிலைப்பியல் வழி நிற்கிறது என நாம் கூறுவது ஏன்? ஏனெனில், இவர் வாழ்க்கையின் இயற்கை நிகழ்முறையை ஒரு திசைப் பட்டதாகவே காண்கிருர், பதி - பசு - பாசம் என்னும் நித்தியமான பதார்த்தங்களுக்கிடையே நித்தியமாக நிலைத் துக் கிடக்கும் உறவு முறைகளின் பெறுபேருகவே வாழ்க்கையில் தேரும் அசைவாட்டங்களும் ஏற்ற இறக்கங்களும் உள்ளன, என்
25

Page 15
பது அவருடைய கோட்பாடு. பிரபஞ்ச இயக்கம் சுழல் சக்கரம் போல மீண்டும் மீண்டும் ஒரே போக்கிலே சுற்றிக்கொண்டு இருக் கிறது; ஆக்குதல், காத்தல், அழித்தல், அருள் தருதல் என்பன என்றென்றும் மாருத இறைவனின் தொழில்கள். இவ்வாருன கருத்தோட்டங்கள் நிலைப்பியல் நோக்கின்படி அடையப்படும் எண் னைங்களாகும்.
நிலைப்பியல் நெறிப்படி முன்வைக்கப்பட்ட கருத்துகளுக்கு மிக வும் இசைவான ஒரு வடிவத்திலே, திருவாசகத்தின் பொருள் வைப்பு முறை அமைந்துள்ளது. தான் எடுத்துக்கொண்ட தத்து வத்துக்கு ஏற்ற தகுதிப்பாடும் பொருத்தமும் உள்ள கலைவடிவம் திரு வாசகத்துக்கு வாய்த்துள்ளது. திருவாசகம் பேசும் உணர்வுகள், மனக்கிளர்ச்சிகள், நடத்தைகள், செயல்கள், அநுபவங்கள் யாவும் முதல் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளின் நோடிப் பேறுகளாக உள்ளன. இதனுல் திருவாசகத்திலே வேறு, எவற்றையும்விட, கருத்து கள் முதன்மை பெறுகின்றன. நயமிக்க பாட்டுகளின் ஆக்கக்கூறுகளை நேர்த்தியாக ஒன்றிணைக்கும் ஆற்றற் சிறப்புவாய்ந்த பெருங்கவிஞ ராக மணிவாசகர் பொலிகிருர் பொருளுருவ அமைப்பியற் சீர்மை யில் அவர் ஈட்டியுள்ள பெருவெற்றியே இதற்குக் காரணமாகும்.
இந்த வகையில், கதை கூறும் இலக்கியங்களை விலக்கிவிட்டு நோக்கும்போது, தமிழிலக்கிய வரலாற்றிலே திருவாசகமானது நடு நாயகமாக விளங்குகிறது. கதைகளைப் பொறுத்த வரையில், அவற் றின் பின்னல் முறையும், நிகழ்வுத் தொடர்ச்சியும் தனியானதொரு வடிவக் கோலத்தைக் கோரிநிற்கின்றன. இவை பருமையான சட்ட கங்களாகப் புலவனுக்குத் துணை நிற்கின்றன. ஆகையால், கதை கூருப் பாட்டுகளைத் தனியானதொரு வகையின எனக் கருதுவது பொருத்தமே ஆகும். தத்துவபுத்திக் கவிதைகளையும் பக்திப் பாட் டுகளையும் புறம்பானதோர் உபவகையாகக் கொள்வதும் நியாய மானதே. அவ்வாறு நோக்கும்போது, திருவாசகத்தின் பொருள் வைப்பு முறையானது நமது அழகியல் உணர்விற்கும் பூரண திருப்தி தருவதாயுள்ளது. இதன் பொருட்டுப் பாராட்டப்பட வேண்டியவர் திருவாசகத்தின் தொகுப்பாசிரியர் மாத்திரமே என்றும் கூறிவிட முடியாது. புராணச் செய்தியின்படி அதனைத் தொகுத்தவர் தில்லைச் சிற்றம்பலமுடையார். மணிவாசகரே திருவாசகத்தின் பொருள் வைப்பு முறைக்குப் பொறுப்பானவரோ, இல்லையோ- யாமறி யோம். எவ்வாருயினும் திருவாசகத்தின் தொகுப்பாசிரியருக்குத் தொகையளவான அக்கறையே பிரதானமாய் இருந்துள்ளது. முதல் நான்கு பாட்டுகளை ஏறுவரிசைப் பருமனின்படியும், ஏனைய பாட்டுகளை இறங்குவரிசைப் பருமனின்படியும் அவர் தொகுத்திருக் கிறர்.
26

இ9 அந்த நாள் வரை.
3 ஆர்.எம். ஆர். நிலமே பண்டார
மேம் எங்குமே பறவைகள் பீதியுடனும் கலங்கிய பறக்கின்றன துப்பாக்கியேந்தி கண்ணிருடனும் விம்மி திடுக்கிட்ட வியப்புடன் அழுகிருன் விம்மி தாய் மடியில் பச்சிளம் பாலகன், புரள்கின்ருன் பாலகன்
பூமாதேவி பிளப்பதைப் போலவே சமாதான மலர்களே
குண்டுகள் முழங்கும் ஒசை கையேந்தி அசைகின்றன கவசவண்டிகள் ஒற்றுமை இன்னிசையுடன் ஒன்றன் பின் ஒன்ருக, பறவைகள் பறக்கும் நாள் வரை
பச்சிளம் பாலகன் அழுகின்றன். 冲
பருமனின்படியான ஒழுங்காக்கமும் பொருளமைதியின் படியான ஒழுங்காக்கமும் கை கோத்து இணைந்து பொருந்திச் செல்ல வேண்டு மானல் உருவ உள்ளடக்கத் தொடர்புபற்றிப் படைப்பாளி கொண்டி ருக்கும் உள்ளுணர்வு மிகவும் நுட்பமானதாய் இருத்தல் வேண்டும்: அத்துடன் அடியாழத்திலே தொழிற்படுவதாகவும் இருத்தல் வேண்டும். புலமையின் ஆழத்தையும் பொருத்தமான கலையுருவம் பற்றிய உணர்வுக் கூர்மையையும் இது சுட்டுகிறதென்பதில் ஐய
உசாத்துணைகள் 1. மாணிக்கவாசகர், திருவாசகம் 2. மாணிக்கவாசகர், திருக்கோவையார் 8. திருஞானசம்பந்தர், தேவாரம் 4. திருநாவுக்கரசர், தேவாரம் 5. சுந்தரமூர்த்தியார், தேவாரம் 6. இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் 7. மறைமலையடிகள், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
தொகுதி 1, 11 8. அருளம்பலவஞர், பண்டிதமணி,சி. திருவாசக ஆராய்ச்சி
யுரை, தொகுதி 1, w 9. POPE, Rev. G. W. Tirvacagam v 20. WANAMAMALA, N., Studies in Folk Literature 11. VAIYAPUR PILLA, S,. History of Tamil Language
and Literature 事

Page 16
வில்லா நெக்ரோ கிராமத்தில்
ஹாவான் பாதிரியாரின்
முதல் நாளும் இறுதி நாளும்
சீர்த்தரது கட்டளைகளையும் தேவகுமாரனது நற்செய்தியையும் , ரட்சணிய மார்க்கத்தையும் அவிசுவாசிகட்கும் பாவிகட்கும் அறியத்தருவதற்காகவும், நரகப் படுகுழியில் அவர்கள் வீழாமல் ரட்சணை பெறவும், கருதினுல் மூலமாக வந்து பெரிய பாதிரியார் வாயால் வழங்கப்பட்ட போப்பரசரது நல்லாசிகளை நெஞ்சிலும்
ராத்தங்கலுக்கான பொருட்களைப் பையிலும் சுமந்தபடி, மாதாங்கோவிலுக்குரிய குளிரூட்டப்பட்ட காரில் அனுப்பப்பட்டேன்.
மழை நீர் ஊறிய மண் வீதிச் சேற்றில் வண்டி போக மறுத்தது. கர்த்தரின் புனித சித்தம் அதுவாயின் அப்படியே ஆகட்டும். ஆமென். விரைவாகத் திரும்பும் அவசியம் சாரதிக்கு
8
ஐ பி. வி. ருெஹா ஸ்
பெரிய பாதிரியார்
வணக்கத்துக்குரிய கல்டேரா
மாலை விருந்தொன்றுக்குப் போகிருா.
ஜெனரல் ஹெர்னன்டெஸ் L-irr (eg 6moT விசுவாசி என்று மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன்.
புதிய கிராமம் வில்லா நெக்ரோவுக்கு
இன்னும் - ஒன்றரை கிலோமீற்றர்.
பையைத் தோளில் மாட்டியபடி
வெள்ளை அங்கியை சேறுபடியாமல் உயர்ததி, பட்டியை இறுக்கிக் கொண்டு ஒரமாக நடந்தேன். ஓங்கிய மரங்களூடாக சூரிய ஒளியும்
அதன் நடுவே கரிய மனித நிழல்வடிவுகளும் தெரிந்தன.
அவர்கள் நான் போய்ச் சேரும்வரை பார்த்திருக்கவில்லை.
வந்த ஏழுபேரும்
அழுக்கேறிய கால்கள்

சேற்றில்பதிய ண்ைடியிட்டு வரவேற்றனர்.
தேவ கிருபையால்
மிறுநாள் செபமும் 4865 urr ti செய்துவைத்து போதனைப் பிரசங்கமும் 5ன்ருகவே நடந்தன.
ஆனலும் அவர்களுக்கு
அதிகம் விளங்கியிராது. அவர்களுடைய பாவச் செயல்களின்
பட்டியல் நீளமானது 曾
விதவை மாகரித்தாவின் ஆறு குழந்தைகட்கு மூவர் தகப்பன்மார்.
*வளுடைய காதலன் பெரு (छ
வேறிரண்டு காதலிமார், சூஸேக்கும் (poufř.
ஹோஸே கோபத்தில் கொஜல செய் தான். அகப்படவில்லை,
1ளவெடுத்து மானுவேல் ஜெயிலால் ஒரு மாதம், பாவத்தில் பிறக்காத பிள்ளை ஏதுமில்லை. களவும் காமமும் கொலையும் அவர்கட்குப் பாவங்களாகத் தெரியவில்லை; அவை பற்றி இரகசியங்களும் இல்லை.
*ன் வற்புறுத்தலில் இரண்டு பேர் மட்டும். மரியாவும் இஸபெல்லும்ட
ாவமன்னிப்புப் பெற்றனர்.
கர்த்தரே!
பாவிகள் அனைவரையும் பிழைகளை உணரச் செய்து மன்னித்து ரட்சிப்பீராக. ஆமென்.
X x x.
என் நேரம்
போதனையையும் ஜெபத்தையும் விட
பயிர்ச்செய்கையிலும் கிராமத்துப் பிள்ளைகட்குக் கற்பிப்பதிலும் செலவாகி விடுகிறது.
இரண்டு வருஷத்தில் வில்லா நெக்ரோ கொஞ்சம் மாறித்தான் உள்ளது
இப்போதெல்லாம் கிராமத்துக் குழந்தைகளின் விலா எலும்பு தெரிவதில்லை மரிஹ"வான பயிரிட்ட நிலத்தில் மரவள்ளியும் சோளமும் நிற்கின்றன. மாலை நேரங்களில் பெற்றே மாக்ஸ் விளக்கொளியில் அழுக்கு இல்லாத ஆடைகளுடன் பாடி ஆடுகிறர்கள்,
ஆஞலும் நாளைப் பகலோடு வில்லா நெக்ரோ
மூடப்பட உள்ளது.
அரசாங்கம் இந்த நிலங்களை, அமெரிக்கன் கொம்பனிக்கு விற்றுவிட்டது. ܝ

Page 17
கல்தேரா பாதிரியார் கார் அனுப்பியிருந்தார் நாளை வருவதாகச் சாரதியிடம் சொன்னேன். ஜெனரல் சூஸொவின் படைப்பிரிவினர் அதிகாலையிலேயே வந்து விட்டார்கள்.
மானுவேல் தன் பழைய துப்பாக்கிக்கு எண்ணெய் பூசுகிருன், சூஸேயும் ரமோனும் கத்திகளுக்குச் சாணைபிடிக்கிருர்கள்' மாகரீத்தா கழிகளின் முனைகளைக் கூராக்குகிருள்
கர்த்தரே நாளைப் பின்னேரம் வானம் மட்டுமே சிவப்பாக இருக்கட்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
கிராமவாசிகளில் நால்வர் மரணம். காயம்பட்ட முப்பதுபேரில் மூவர் பெண்கள் ஏழுபேர் குழந்தைகள்,
சூஸேயைக் கொண்டு போய்விட்டார்கள் அனேகமாக பிழைக்கமாட்டான். மனுவேலின் பிணம் மரவள்ளிகளின் மறைவில் கிடந்தது.
மிஞ்சியவர்கள் காட்டுக்குள் தலைமறைவாஞர்கள்.
கர்த் 5Gul
நான் காட்டிலிருந்து திரும்பி வரும்வரை மரப் பொந்தில் வைத்துள்ள என் வெள்ளை அங்கியையும் தோல் உறைபோட்ட
பைபிளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் என்னுடைய மக்கள் பத்திரமாக ஊர் திரும்பிய பிறகே எனது அடுத்த ஜெபம் நடைபெறும்.
அது வரையில், கர்த்தரே என்னே மன்னிப்பீராக. ஆமென். *
ஆஸ்பிரின் - குழந்தைகளுக்கு தடை
நீண்ட காலமாக குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை சாதாரண விளம்பரங்களை நம்பி பாவித்து வந்த அஸ்பிரின் வில்லகளும் அதனேடு இணைந்த மருந்து வகைகளும் தற்
உட்பட்ட குழந்தைகள் இதனை உட்கொள்ளுவதால் உயிரா பத்து விளைவிக்கக் கூடிய ஈரல், மூளை வியாதிகள் ஏற்படுவ
தாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே தகுந்த மருத்துவ
ஆலோசனைகள் இல்லாமல் எந்த மருந்து வில்லைகளையும் குழந்
போது பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன. 12 வயதுக்கு
தைகளுக்குக் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
30

0 ‘ஒரு இந்தியக் கனவு’ - திரைப்படம் பற்றிய ஒரு பார்வை
3 சசி கிருஷ்ணமூர்த்தி
போலித்தனமான உணர்வுகளையும், பொய்யான உ)ெ கத்தையும் நாடக பாணியில் காட்டிவந்த தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக சிலமாறுதல்கள் ஏற்பட்டுவருகின்றன. (பெண் *4மைபற்றியும் (“அவள் அப்படித்தான்"), அடிப்படை வாழ்க் கைத் தேவை யொன்றுக்காக மக்கள் போராடுவது பற்றியும் 'தண்ணிர் தண்ணீர்"), தேயிலைத்தோட்டத்து தொழிலாளர்கள் பிரச்சினை பற்றியும் ("புதிய அடிமைகள்") தமிழ் சினிமா கவனம் செலுத்த முற்படுகின்றது, வர்க்க முரண்பாடு, தொழிலாளர் கிளர்ச்சி, சாதியமைப்பு ஆகிய சமூக உள்ளடக்கங்களை பல திரைப் படங்கள் கையாளுகின்றன. இவை வரவேற்கத்தக்க மாற்றங்கள் தான். நாம் வாழும் காலத்தின் சமூகத்தேவையுங்கூட. ஆயினும் இவ்வாருன சமூகப்பிரச்சினைகளைக் கையாள்வதால் மட்டும் இத் திரைப்படங்கள் சிறந்த கலைப்படைப்புக்களாகி விடுமா? நிச்சயம் அவ்வாறு இருக்க முடியாது. கையாளப்படுகின்ற விடயங்கள் எவ்வளவு தூரம் பிரக்ஞையோடு, சரியான பார்வையோடு கையா ளப்படுகின்றன. அவை எவ்வாறு திரைப்படத்துக்குரிய கலே யம்சங்களோடு முறையாக வெளிப்படுத்தப்படுகின்றன என்பன அடிப்படை விசயங்களாகும். ஆயினும் இன்று வெளி வருகின்ற முற்போக்கு" திரைப்படங்கள் பலவும் சொல்ல வருகின்ற கருத்தை ஆழமாக விளங்கிக் கொள்ளாமலும், கொச்சைப்படுத்துகின்ற விதத்திலும் சினிமா என்ற ஊடகம் பற்றிய தெளிவின்றி அவை வியாபாரத்தனமாகவே எடுக்கப்படுகின்றன. அரசியலோ சமூகப் பார்வையோ இல்லாத மசாலாப் படங்களுக்கும் இவ்வாருன திரைப்படங்களுக்கும் அடிப்படைவேறுபாடு இல்லாமலும் போகின் றது. இந்தப் பின்னணியிலேயே இந்திய அரசின் பிராந்திய ரீதியான பரிசொன்றையும் பெற்றுக்கொண்ட கோமல் சுவாமி நாதனின் ஒரு "இந்தியக் கன"வையும் நோக்க வேண்டும்.
மலைவாழ் மக்களைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வரும் கல்லூரி மாணவிகளில் அனுேமிகா அந்த மலைவாழ் மக்களின் பின்தங்கிய நிலையையும், அங்கு வாழும் பெண்கள். கேவலப்படுத்தப் படுவதை யும் கண்டு அனுதாபங் கொள்கிருள். ( தமிழ்ப் படங்களில் வெவ் வேறு விடயங்கள் தற்செயலாக நடப்பதைப்போல்தான் ) ஆராய்ச்சி
3.

Page 18
முடிந்து நகரத்துக்குத் தரும்பிப் பட்டமும் பெற்றபின் அந்த மலை வாழ் மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் நோக்குடன் அதே கிரா மத்துக்குத் திரும்பி வருகின்ருள். அங்கு வந்தபோது, முன்பு அவ ளுடன் நெருங்கிப் பழகிய சினேகிதியாயிருந்த மலைவாழ் பெண் ணுெருத்தி தற்கொலைசெய்து விட்டதை அறிகின் ருள். அதற்கு அவர்கள் சொன்ன காரணங்களை அவள் நம்பவில்லை. அந்தத் தற் கொலைக்குப் பின் ஏதோ விபரீதம் நடந்திருக்க வேண்டுமென்று நம்பும் அவள் அதனை அறிய முற்படுகின்ருள். அந்த ஊரில் இருச் கும் பயணிகள் விடுதியில் ஓரிரவு தங்கிய அரசியல் வாதியின் மகனுெருவணுல் கெடுக்கப்பட்டதால் வாழ விரும்பாமலேதான் அவள் தற்கொலை செய்தாளென்பதை அறிகின்ருள். நகரத்துக்கு வந்து பத்திரிகைக்காரர்களை அழைத்து அந்த விடயத்தை அம்பலட் படுத்துகின்ருன். கிராமத்தில் அதேமக்களைக் கொண்டு போராட் டம் நடாத்த முனைகின்ருள். அந்த ஊர் பொலிஸ் அதிகாரியும் தனது பதவியைத்துறந்துவிட்டு அவர்களோடு போராட முன் வருகின்றர். (மக்களில் கொண்ட அனுதாபமா? அனுேமிகா வில் கொண்ட காதலா? சுத்த சினிமாத்தனம்) அதிகாரபலம் மக்களை அச்சுறுத்துகிறது. அவர்கள் வாழ்க்கையில் கஷ்டங்களேற் படுகின்றன. அவர்களுக்குச் சலிப்பேற்படுகின்றது. அனேமிகாதான் தமது கஷ்டங்களுக்கெல்லாம் காரணமென்று குற்றம் சாட்டு கின்றர்கள்" அவளுக்கும் சலிப்பேற் படுகின்றது. எனினும் மனம் குலையாது போராட்ட நியாயங்களை, அவசியத்தை எடுத்து விளக்கு கின்ருள். இறுதியில் மக்கள் போராட அணிவகுத்துச் செல்கின்ருர் கள். அவளும் முன்னுள் பொலிஸ் அதிகாரியும் (காதலர்களாகவும்) முன் செல்லுகின்றர்கள். கோசங்கள் வான முட்டுகின்றன. போராட்டத்தின் முக்கியத்துவம் பின்னணியில் விவரிக்கப்படு கின்றது.
கதையைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவிற்கு அந்நியமான தென்பது உண்மைதான். ஆயினும் அவை "சினிமாவிற்கெனத் தயாரிக்கப் பட்ட கதை. அந்த மக்களின் யதார்த்த வாழ்க் கையை, அவர்களது பிரச்சினைகளை ஆழமாகத் தொடவில்லை. அதுமாத்திரமன்றி சொல்லவந்த விடயமே அபத்தமாக்கப்படு கின்றது. கால காலமாகப் பின்தாங்கிய நிலையில், தமது பிரச் சினைகள்பற்றி அறியாது, போராட்டவுணர்வின்றி வாழும் மr களை தாமே தமது பிரச்சினைகனை உணர்ந்து உணர்வு பூர்வமாக (நிர்ப்பந்தப்படுத்தாமல்) போராடத் தூண்டுவது போல இல் லாமல், வெளியார் வந்து அவர்களைப் போராடத் தூண்டி விடு வதும், அவர்களுக்குத் தலைமை தாங்குவது போலக் காட்டுவதும் செயற்கைத் தன்மையானது மாத்திரமல்ல, பிற்போக்குத் தை மானதுங்கூட. பல்வேறு இடங்களில் தர்க்கரீதியான முரண்பாடு
32

கள் காணப்படுகின்றன. ஒழுக்கம்பற்றியே அவ்வளவாகப் பொருட் படுத்தாத சூழலில் கற்பழிக்கப்பட்டதால் ஒருத்தி தற்கொ)ே செய்துவிடுவது "சினிமாவிற்கானதாகிவிடுகின்றது.
கதைப்பிரதியாக்கத்தில் உள்ள குறைபாடுகளைப்போல அவற் றைக் காட்சிப்படுத்துவதிலும் குறைபாடு காணப்படுகிறது. மலை வாழ்மக்களின் வாழ்க்கைப் பின்னணி நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தப்படவில்லை. சினிமாவில் மிகவும் இலகுவாகக் கூடிய அகவுணர்வு வெளிப்பாடு கவனத்திலெடுக்கப்படவில்லை. போராட்ட முக்கியத்துவத்தை காட்சிகள் மூலம் வலியுறுத்தாமல் பின் னணியில் விபரிக்க முயல்வதே திரைப்படத்தின் முக்கிய குறைபா டாகின்றது.
"தண்ணீர் தண்ணீர்? நாடகத்தின் மூலம் (இதே நாடகம் தான் பின்னர் பாலச்சந்தரால் திரைப்படமாக்கப்பட்டது.) வெளித் தெரியவந்தவர் கோமல் சுவாமிநாதன், அவர் அந்த நாடகத்தின் மூலம் சாதித்த அளவிற்கு இந்தத் திரைப்படத்தின் மூலம் எதசை யும் சாதித்துவிடவில்லை என்பது உண்மையாகும். 食
இ9 போதை வஸ்து ஸ் அழ. பகீரதன்
யிேட்சை தருகுது உழைக்கும் மக்களை
எங்களைக் கொல்லுது வயித்தை வருத்துது
வாழ்வை அழிக்குது
மரியாதை கெடுக்குது :
கோழைகளாக்குது
சரியெது பிழையெது
அறிதலை தடுக்குது!
போரிடும் உணர்வினை
போக்குது போதை
அரசது அதற்காய்
ஆக்குது பாதை!
இயந்திர மாக்குது இழைக்கும் கொடுமை
மறைக்குது மருந்து
சிறியவர் பெரியவர்
சிந்தையைத் தடுக்குது
வறியவர் துன்பம்
காரணம் மறைக்குது?
போதையை எதிர்த்து
போரிட துணிந்திடு
பாதையை வகுத்திடு
பயணத்தை தொடர்ந்திடு:
寅

Page 19
鬱》 'சந்நிதிக்குச் செல்வேன்"
8 செண்பகன்
செல்வச் சந்நிதியானிடம் செல்லவும் செல்லக் கதிர்காமம் நோக்கிக் கால்நடையாய்ச் செல்லவும் விரதங்கள் பூண்டேன்; வெளிக்கிட்டுவிட்டேன்.
பறவைக் காவடியில் பறக்கவும் பிறதட்டை போட்டு வீதிமண்ணில்புரளவும் நேர்த்திகள் செய்தேன்; நேராகப் புறப்பட்டு விட்டேன்
மாருக வந்திடும் பேய், முனி மோகினிப்பிசாசு, சங்கிலிமாடன், எறிமாடன், பேரின வெறிமாடன் ஆதியோடந்தமாய் நீருகி எரியும் கோயிலின் தேரும் கோபுரவாசலும் கண் முன்னே தெரியும்.
"நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்? என்ற நாவுக்கரசன் கண்டதரிசனம் காண்பேன் தொண்டமானுற்றில் தோய்ந்து எழுவேன்; மாணிக்க கங்கையில் மூழ்கி மகிழ்வேன்; நடுச்சாமந்தானும் காவடி, கரகங்கள் நெடுநேரம் ஆடும்; நெஞ்சங்கள் பாடும்,
சிதம்பரம் செல்வேனென்று சூளுரைத்த நந்தன் சிரம்சாயவென்று தீநெருப்பினிலேயிடும் தில்லைவாழந்தணர்கள் சூழ்ச்சிகள் சாகவென்று கரங் கொண்டு ஆயுதம் காவல் வென்று வாசலுள் சென்ற சரித்திாம் கண்டவன் நான் சாகாவரம் பெற்றவன் நான், கொடுங் கோலன் மாயும் குணங்குறிதெரியும்.
இரணியன் எங்கள் இரட்சகனல்லவென்று பிரகலாதன் அங்கே பிரச்சாரம் செய்ய நரசிம்மன் அவதாரம் நானெடுப்பேன் நாளை.
34
食

சிறுகதை
குருர ம்
பிரசவத்திற்குக் காத்திருக் கும் பெண் போல அந்த வயற் பிரதேசம் புதுப் பொலிவோடு காட்சியளித்தது. இன்னமும் இரண்டு வாரம் போஞல் அறு வடையை ஆரம்பிக்கலாம்,
தத்தித் தாக்கம் அதிகமாக இருந்ததால், அதைக் கட்டுப் படுத்த, மருதநாயகமும் நண்பர் களும் மருந்தடித்துக் கொண்டி ருந்தார்கள்.
வாய்க்கால் கரையோரம் நடந்து வந்துகொண்டிருந்தான் சின்னப் போடி, வயலிலே
தெளித்த பூச்சிக் கொல்லியின் மணம் காற்றில் மிதந்து வந்தது .."ஒ இன்னிக்கு வயலுக்கு மருந் தடிச்சிருக்கிருங்க போலிருக்கு” என்று மனதுள் நினைத்தபடி, வாய்க்காலுக்குக் குறுக்காகப் போட்டிருந்த மரப்பாலத்தைக் கடந்து கமத்துள் நுழைந்தான். அவன் பெருரெம்பில் ஏறிய G - யற்காட்டில் மும்மர மாக ைேல நடந்து கொண்டி ருப்பது தெரிந்தது. எப்படியா வது மருதநாயகத்தின் கூட்டத் தாரின் நெல்லை அறுவடையின் போது கொள்முதல் செய்ய
9ே ச. முருகானந்தன்
வேண்டும் என்பது அவனது திட் டம். அதைப் பட்டணத்தில் கொண்டுபோய் விற்பதன் மூலம் பெருலாபம் சம்பாதிக்க முடியும் என்று மனக்கணக்குப் போட்டி ருந்ததால், பகைமையையும் பொருட்படுத்தாமல் மருதநா:
கத்தைச் சந்திக்க வந்திருக கிருன்,
தன் வரவை அறிவிக்கும்
முகமாக சின்னப் போடி செரு மினன்.
வேலையில் மும்மரமாக ஈடு பட்டுக் கொண்டிருந்த மருத நாயகம் ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தான்.
"என்ன” மருந்தடிப்பா?. எல்லாம் முறைப்படி தான் நடக் கிறது போலிருக்கு." பெரு வரம்பில் நின்றிருந்த சின்னட் போடி சிறிது கிண்டலாகக் கேட்
டான். 'விளைச்சல் எப்படி?
“ஏதோ ஆண்டவன் புண் ணியத்தில் பரவாயில்லை. தோட் டமும் நல்லாய் வந்திருக்கு." முண்டாசாகக் கட்டியிருந்த சால் வையை அவிழ்த்து முகத்தில் வடியும் வியர்வையைத் துடைத்
35

Page 20
தபடி பதிலளித்தான் மருதநாய கம். ‘இவன் இப்போ எதற்காக வந்திருக்கிருன்?" என்று மனதில் எண்ணியபடியே, “உங்களுக்கு விளைச்சல் எப்படி?” என்று ஒப் புக்குக் கேட்டு வைத்தான்.
“அதையேன் கேட்கிறே?. தத்தி விழுந்து எல்லாம் சப்பி யாய்ப் போச்க் ஏக்கருக்கு ஐம் 19து அறு.பது புசல் அடிக்குமோ என்கிறது சந்தேகம் தான்.”
“விவசாயம் கைகொடுக்கலை . வியாபாரத்தையாவது கவ னிக்க வேண்டாமா?. அறுத்த டிப்பு முடிஞ்சதும் உன்னுடைய ஆக்களின்ர நெல்அல எனக்குத் தான் தரணும் . நியாயமான விலைக்குக் கட்டுவேன்.” சின் னப்போடி வேண்டுகோள் விடுத் தீதும் மருதநாயகம் கொடுப்புக் குள் சிரித்துக் கொண்டான்.
சின்னப்போடியைத் தெரியா,
தார் எவரும் ஒதியமலைப் பிரதே சத்தில் இல்லை எனலாம். அவ னைப் பெயர் பெற்ற விவசாயி என்று சொல்வதிலும் பார்க்க, பெரிய முதலாளி என்று சொன் ஞல் மிகையாகது.
பத்துப் பதினைந்து வருடங் களுங்கு முன்னர் குறுமன்வெளிக் குடி யேற்றப்பகுதிக்கு குடிவந்த போது சின்னப்போடி ஓர் அன்ரு டம் காய்ச்சி தான். அரசாங்கம் கொடுத்த மூன்றேக்கர் நீர்ப்பா சனக் காணியையும், ஒரு ஏக்கர் மேட்டுக் காணியையும் தவிர அவனிடம் எதுவித மூலதனழும் இருக்கவில்லை, காடுவெட்டிக்
36
களனியாக்கி, மேட்டுப் பகுதியில் தோட்டமும் போட்டு படிப்படி யாக முன்னேறினன். ஆரம்பத் தில் உடலுழைப்பை நம்பியிருந் தவன், காலப்போக்கில் எல் லாமே அல்லாவின் கிருபையினல்
என்று சொல்லிக் கொண்டு அடுத்தவர்களையும் சுரண்ட ஆரம்பித்தான்.
ஆரம்பக்காலத்தில் யானைக் கும், பாம்புக்கும், மலேரியா நோய்க்கும் பயந்து வெளியேறிய குடியேற்ற வாசிகளின் காணிகளை எல்லாம் குத்தகைக்கு என்று எடுத்து, காலப்போக்கில் காண வேண்டியவர்களைக் கண்டு, கவ னிக்க வேண்டியவர்களைக் கவ னித்து, எல்லா நிலங்களையுமே தனதாக்கிக் கொண்டான்.
குறுமன் வெளிச்சந்தியில் சின்னப்போடி போட்ட பெட் டிக்கடை நாளாவட்டத்தில் வளர்ந்து பெரிய கடையாகமாறி யது. பலசரக்குச் சாமான்கள், விவசாய உரவகைகள், கிருமிநா சினிகள் பாத்திரபண்டங்கள், ஆடம்பரப் பொருட்கள், ஆடை
அணிகள் அனைத்துமே அங்கே கிடைத்தன. பிரயாணவசதி குறைந்த பிரதேசமாதலினல்
சின்னபபோடி வைத்தது தான் 6.
நாளாவட்டத்தில் , அப்பிர தேசத்தில் குடியேற்றமும் அதி கரித்தது. வெகு சீக்கிரத்திலேயே சின்னப்போடி இரண்டு டிரக்ரர் களும், ஒரு வானும் வாங்கினன். உள்ளூர் விவசாயிகளின் உற்பத் திப் பொருட்களை மலிவு விலையில்

கொள்முதல் செய்து, நகருக்கு கொண்டுசென்று விற்றுப் பெரு முதல் தேடினன். அவனது பண வலிமையினல் அங்கு அவன் வைத்ததுதான் சட்டம் என்ரு னது w
எதுவித எதிர்ப்புமின்றி சுரண்டல் வாழ்வில் சுகபோகம் அனுபவித்துக் கொண்டிருந்தவ
னுக்கு இடைஞ்சலாக அண்மை யில் மருதநாயகம் அங்கு வந்து சேர்ந்தான்.
மாருதநாயகம் இவ்வூருக்குப் புதியவனல்ல. அவன் பிறந்ததே குறுமன்வெளியில் தான். அவ னது தகப்பணுர் குறுமன்வெளிக் குடியேற்றப் பிரதேசத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவர். சிறந்த உழைப்பாளி யான அவர் அற்ப ஆயுளிலேயே அரவம் தீண்டி இறந்து போக, அவனது அம்மா இளம்விதவை யாளுள்ை. அவளது அழகுத் தடா கத்தில் நீச்சலடிக்க முயன்ற சின் னப்போடி முதலாஞேர் மூக்கு Gð? -- ul. L-GOWrif.
தனித்து விடப்பட்ட அப லைப் பெண்ணுன அவள் எதிர்ப் புகளைச் சமாளிக்க முடியாமல், சின்னஞ்சிறு பையனுக இருந்த மருதநாயகத்துடன் அவ்வூரை விட்டு வெளியேறி, தனது பிறந்த ஊருக்குச் சென்ருள். அங்கு வறு மையுடன் போராடி மகனை
1ளர்த்து உருவாக்கினுள்.
இருபது வருடங்கள் உருண் டோடின.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்கள் சிறு பான்மை மக்களை நலிவடையச் செய்தன. அவர்களது கிராமத் தில் அத்துமீறிய வெளியார் குடி யேற்றங்கள் திட்டமிடப் பட்டுச் செயற்படுத்தப்பட்டன வைர வர் கோயில் அரசமரத்தருகே விகாரை ஒன்று அமைக்கப்பட்
-gile ;
சிறு சிறு பூசல்கள்.மோதல் கள்.
ஒரு நாள் ஆயுதபாணிக as வந்தவர்கள் சோதனை என்ற பெயரில் புரிந்த அராஜ கத்தினல் தமிழர் குடிமனைகள் தீக்கிரையாகின. மருதநாயகத் தின் தாயார் குடிசையோடு கரு கினள். எஞ்சியிருந்தவர்கள் காடு மேடு என்று ஓடி அகதிகளாக வெளியேறினர்.
அகதிமுகாமில் சிலகாலம் இருந்து விட்டு மறுபடியும் தனது ஊருக்குச் சென்ற மருதநாங்கம், அங்கு வெளியார் பலர் புதிதா சுக் குடியேறியிருப்பதை அவதா னித்தான். அங்கிருந்த ஊர்கா வற் படையினரிடமிருந்து அவன் தப்பி வந்ததே தெய்வ செயல். என்னசெய்வதென்று தெரியாது தத்தளித்துக் கொண்டிருந்த மரு தநாயகம், போராளி இயக்க மொன்றில் சேர்ந்து செயற்பட எண்ணிஞன். ஆனல், அவர்க ளுக்கிடையே ஏற்பட்ட உட்பூசல் கள் அவனது எண்ணத்தை மாற்
றியது. அப்போதுதான் தாயார்
அடிக்கடி சொல்லும் குறுமன்
37

Page 21
வெளிக் காணி ஞாபகத்திற்கு வத்தது.
அவன் குறுமன்வெளிக் குடி யேற்றப் பிரதேசத்திற்கு வந்த போது, அவனது காணி சின்னப் போடியின் ஆக்கிரமிப்பில் இருப் பது தெரிந்தது. அவர்களது காணியைப் பராமரித்து வந்த மலையகத் தொழிலாளி ஒருவனைக் "கள்ளத் தோணி என்று பயமு றுத்தி வெளியேற்றி விட்டு சின் னப்போடி அக்காணியை ஆக்கிர
மித்திருந்தான். சின்னப்போடி யிடம் கேட்டபோது ஈவிரக்க மின்றி காணியைக் கொடுக்க மறுத்துவிட்டான்.
LD(D515ITtt J5th, சம்மந்தப் பட்ட அதிகாரிகளுக்கு மனுச் செய்தான். எனினும் உடனடி நிவாரணம் எதுவும் கிடைக்க
வில்லை. இதனுல் மனம் குன்றிய மருதநாயகம் ஒரு விவசாயியின் வீட்டில் தங்கி அவ்வூர் மக்க ளோடு மக்களாக உழைத்து அவர் களது சுகதுக்கங்களில் கலந்து உழைத்தான்.
நீண்ட நெடுங்காலமாக வேத னையை அனுபவித்து வந்த அப் பிரதேச மக்களின் நலனில் அக் கறை கொண்டு செயற்பட்ட மரு தநாயகம் வெகு சீக்கிரத்திலேயே
அவ்வூர் மக்களின் மனதில் இடம்
பிடித்தான். விவசாயத்தில் நவீன விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெறும் வழிவகைகளை அவ்வூர் விவசாயிகளுக்கு எடுத்துரைத் தான். பலரும் அவனுக்கு நண், பர்களாகினர்.
38
ணுல்
இதற்கிடையில் தனது காணி யில் காலபோக விதைப்பைத் தானே மேற்கொள்ளும் முடிவுக்கு வந்தான் மருதநாயகம். இக்கா லப் பகுதியில் மலையகத்திலிருந்து அகதிகளாகப் பலர் ஒதியமலைப் பிரதேசத்துக்கு வந்தனர். குறு மன்வெளிக் குடியேற்றப் பகு திக்கு வந்த அகதிகளுக்கு அதிக வேலை வாய்ப்பும் இருக்கவில்லை. மருதநாயகமும் நண்பர்களும் அவர்களது நலனிலும் அக்கறை கொண்டு செயல்பட்டனர்.
மருதநாயகம் காலபோக விதைப்பை ஆரம்பித்த போது சின்னப்போடி வெகுண்டெழுந்
தான். தனது பணபலத்தால் பலாத்கார நடவடிக்கைகளில் இறங்கினன். எனினும் இளரத்
தங்களின் அசாத்தியத் துணிச் சலின் முன்னே அவனது பாச்சா பலிக்கவில்லை. இறுதியில் அவன் பணிந்து போக நேரிட்டாலும் வஞ்சக நோக்குடனேயே செயற் பட்டான்.
மேலும் மருதநாயகத்தின் குறுகிய கால வளர்ச்சியை அவ ஜீரணிக்க முடியவில்லை. மருதநாயகத்தையும், அவன்
தங்கியிருந்த வீட்டுப் பெண்ணை
யும் சேர்த்துக் கதை கட்டினன்.
ஆளுல் சின்னப்போடி வாரி யிறைத்த சேறு மருதநாயகத்தை அழுக்காக்கவில்லை.
தானும் தன் முயற்சியுமாக அயராது உழைத்தான் மருத நாயகம். விவசாய அலுவலர் களைச் சந்தித்து தேவையான

ஆலோசனைகளைப்பெற்று முறைப் படி வேளாண்மை செய்தான். அடியுரமிடல், கிருமிநாசினி முதலானவற்றைப் பயன்படுத்தல், நாற்று நடும் முறை என பல்வேறு உத்திகளைக் கையாண்டான்.
முதலாவது அறுவடை நல்ல விளைச்சலைத் தந்தது. இதனல் எதிர்காலத்தில் நம்பிக்கை பிறந் தது. உள்ளூர் விவசாயிகள் அனை வரும் அவனுக்கு நன்றி கூறினர் ö@了。
'தம்பி வந்த பிறகுதான் இப்படி ஒரு விளைச்சலைக் கண் டிருக்கிறம்.” ரசீத் காக்கா பூரிப் போடு கூறினுர்.
"மகன். இப்படியே இருந்து இன்னும் எத்தனை நாளைக்குக் கஸ்டப்படப் போருய்? காலா காலத்தில் மனதுக்குப் பிடிச்ச
பெட்டையாய்ப் பாத்து முடிக்க : சமையல்,
வேண்டியது தானே?. சாப்பாட்டுப் பிரச்சினையும் தீந்
திடும். வயலிலையும் கூடமாட ஒத்தாசையாய் வேலைவெட்டி செய்யலாம்.' முத்துலிங்கத் தாத்தா தனது பொக்குவாய்ச் சிரிப்புடன் விண்ணப்பித்துக் கொண்டார். ' **
** அதுவும் நல்லது தான் மகன். வீண் கதைகளுக்கும்
இடமிருக்காது மகன்' பாலாச்சி
பரிவோடு கூறினள்.
அவர்களது அன்பு வேண்டு தலில் உள்ள நியாயம் கண்டு
அவனும் சம்மதித்தான். விரை
விலேயே திருமணமும் நடந்தது.
களைக்கொல்லி,
வார்கள்,
அவனுக்கு வாய்த்த லட்சுமி யும் அவனைப் போலவே முயற்சி யுடன் செயற் பட்டதால் வாழ்க்கை இனிதே முன்னேற்றப் பாதையில் நகர்ந்தது. அவன் எள் என்று சொல்ல முன்னரே, அவள் எண்ணையாகச் செயற் பட்டு நிறைவைத் தந்தாள். அவளது அன்பான அரவணைப் பிலும், ஊராரின் ஒத்துழைப்பினு லும் மருதநாயகம் உற்சாகமா கச் செயற்பட்டான். தன்னைச் சார்ந்தவர்கள் நித்திய வறுமை யிலும் கடனிலும் மூழ்காமல் இருப்பதற்கு வேண்டிய நடவடிக் கைகளை எடுத்தான். வங்கியில் கடன் பெறுதல், விவசாய இன் சூரன்ஸ் செய்தல் முதலான வற்றை அவர்கள் மத்தியில் அறி முகப்படுத்தி பயன்பெறச் செய் தான்.
அறுவடை முடிந்த பிறகு அங்கே வயல் வேலைகள் அதிகம் கிடையாது. ஆடிக் கலவரத்தில் அடிபட்டு மலையகப் பகுதிகளி லிருந்து அகதிகளாகி அங்கு பல
ரும் வந்து சேர்ந்த பின் கூலி
வேலை கிடைப்பதென்பது குதி ரைக் கொம்பாகி விட்டது.
பொதுவாக அறுவடை
முடிந்து, நிலத்தின் ஈரம் காய்ந்து
விடுமுன் உழுந்து அல்லது எள்ளு விதைத்து ஒருழவு உழுதுவிடு அதுவும் வயற்காடு
'அடைப்பாக இருக்கும் இடங் டிகளில் மாத்திரம்தான். சாதா ரண விவசாயிகளின் காணிக
ளுக்கு நல்ல வேலி இல்லாதத ஞல் இது சாத்தியப்படுவதில்லை.
39

Page 22
இடையில் ஒரு மழை பதத் திற்குப் பெய்தால், வயல்களைத் தரிசடித்து மறுத்துக் கட்டி உழுது விடுவார்கள். இகளுல் புல்லுகள் அழிந்து மண்ணும் பதப்படும். மழை இல்லாவிட்டால் போக விதைப்பின் போதுதான் உழவு எனவே இடையில் சோம்பல் வாழ்க்கைதான்.
மறுபோக விதைப்பு முடிந்து பயிர் செழித்து வளர ஆரம்பித்த பின்னர் அதிக வேலை கிடையாது. பின்னர் அறுத்தடிக்கும் போது தான் வேலை. இந்த இடைப் பட்ட காலத்தில் விவசாயிகள் பாடு கஸ்டம்தான்.
இதைப் பயன்படுத்தி, கோட் டைக் கடன் கொடுக்கும் போடி மார்பாடு கொண்டாட்டம்தான். அதனலேயே கோட்டை கட்டிய சில போடிகளும் அங்குண்டு.
மருதநாயகம் வருமுன்னர் இந்த வஞ்சனையில் விழாத விவ சாயிகளே அங்கு இல்லை என antib.
"இதை நிரந்தரமாக போக்க என்ன வழி?" என்று சிந்தித்த மருதநாயகமும் நண்பர்களும், தமது கூட்டத்து ஆட்களுக்கு சும்மா இருக்கும் காலங்களில் ஏதாவது வேலை கிடைக்க வழி வகைகளை ஆராய்ந்தனர்.
காணி உள்ளவர்களின் வேலி களைச் சிரமதான முறையில் சீர் செய்து உழுந்து, பயறு, எள்ளுப் போட வாய்ப்பளித்தனர்.
காணி இல்லாதவர்கள்பாடு?
40
பலவாருக யோசித்த மருத நாயகத்திற்கு, ஊருக்குக் கிழக்கே ஆற்றுப் படுக்கையின் மேலக்கரை யில் கடு மண்டிக் கிடந்த பிர தேசம் நம்பிக்கையூட்டியது. சில பாரிய பாலை மரங்களும், விழா, முதிரை மரங்களும், நாணல் முட்புதர்களும், நொச்சி தாளைக் கூட்டங்களும், எருக்கலை ஆ8 ணக்குப் பத்தைகளும் சேர்ந்து காடுமண்டிக்கிடந்த அப்பிரதே சத்தில் குரங்கும், உடும்பும், கீரிப் பிள்ளைகளும், காட்டுக் கே. பூழிக ளும்தான் வாசம்செய்து வந்தன.
உபயோமற்றுக் கிடக் கும் இந்த ஆற்றுப் புறம்போக்கு நிலத்தை வெட்டித் திருத்திக் காய்கறித்தோட்டம் போட்டால் என்ன? என்ற எண்ணம் மனதில் வேரூறியதும், இதுபற்றி நண்பர் களோடு கலந்து,உரையாடி (tpւգ. வுக்கு வந்தான்.
திட்டமிட்டபடியே மறுநாள் காட்டுக்கத்தி, கோடரி, கூடை, மண்வெட்டி சகிதம் புறம்போக்கு நிலத்தில் பலரும் கூடினர்கள் முட்செடிகளை மூட்டோடு வெட்டி முதவில் அடையாள வேலியிட் டனர். வேறு சிலர் பெருமரங் களுக்குத் தீ வைத்தனர். இன் னும் சிலர் தாளை, எருக்கலை, ஊமத்தை, தொட்டாவாடி, ஆம் ணக்கு முதலானவற்றை வெட் டிச் செருக்கிக் குவித்துக் கொழுத் திஞர்கள். எரியும் ஜுவாலையின் வெக்கை தாங்காமல் காட்டுக் கோழிகளும், கீரிப் பிள்ளைகளும் எட்டம் கட்டின. குரங்குக் கூட் டம் கிளை தாவிப் பாய்ந்து கிலி கொண்டு ஒலி எழுப்பின.

காடு மண்டிக் கிடந்த தரை யெல்லாம் சில நாட்களுக்குள்ளா கவே ஒப்பரவாக்கப்பட்டுத்தோட் டக் காணியானது. செடிகொடி கள் சப்புச் சவறுகள் எல்லாம் ஒதுங்கிவிட்டன. நான்கு புறமும் சீரான முள்வேலி அமைந்துவிட் l-gil.
தோட்டம் நிரப்பாகி, பத வல்கள் ஒழிந்த பின் தோட்டப் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற செந் நிற வண்டல் தறையாகக் காட்சி யளித்தது. .
ஆற்றங் கரையோரம் வந்து
பார்த்த பலரும் வியப்போடும்
எரிச்சலோடும், பொருமையோ
டும் பார்த்துப் பெருமூச்சு விட்
டனர்.
ஏற்கெனவே இந்கப் புறம்
போக்கு நிலத்தைத் தனதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற எண் ணம் சின்னப்போடியிடம் இருந்த தால் இது அவனுக்குப் பெரும் விசனத்தை ஏற்படுத்தியது. "உவன் மருதநாயகம் நம்மளை உருப்பட விடமாட்டான் போலி ருக்கே.** என்று மனதில் கறு விக் கொண்டான், மருதநாய கத்தைத் தனது பரம வைரியா கவே கருதவும் ஆரம்பித்தான்.
அன்று மாலையே இபுனுப் போடி, கந்தப்போடி, செல்லப் போடி முதலானுேரைச் சந்தித் தான் சின்ன்ப்போடி,
*மேலக்கரைப் பக்கம், ஆத் துப்புறம் போக்கை அடைச்சுத் தோட்டம் போடுருனுக! இந்தப்
பயக செய்யுற அட்டூழியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தா எப் படி? இனி இப்படியே ஆளுக்கு ஆளு கரையை அடைச்சுத் தோட்டம் போட்டால் ஆறு என்னத்துக்கு ஆகும்?” வெற் றிலையைக் குதப்பியபடி ஆவேச மாகக் கேட்டான்.
"உண்மைதான். ஆனல் அது அரசாங்க நிலம், கேகAற துக்கு நீங்க யாரு என்பான். அதோடை அவனுக தனி ஆளு இல்லை. அறுபது 67 (pl. 1 i 3LCU... அதையும் கவனிக்கணும்”. சுந் தப்போடி நிதானமாகப் பதி லளித்தான்.
**அரசாங்கம் சரியாக இயங் காமலிருக்கிறதுதான் அவனுக ளுக்கு வாசி. ஆன ஒரு நியா
யம் வேண்டலமா?? என்ருன் செல்லப்போடி,
"நாம பொலிசில தகவல் GolarG)'GBuntub...” சின்னப்போடி கூறிஞன்.
"பொலிஸ் இப்ப வெளியில வரமாட்டாங்களே” இபுணுப் போடி நிதர்சனமாகப் பதிலளித் தான். “அதுமட்டுமல்ல பொ லிஸ் ஸ்டேசன் பக்கம் போறதே ஆபத்து தந்திக் கம்பத்திலும் தொங்கவேண்டி வரும்’.
**அவங்களே மிரட்டிப் பார்ப்போம். சீ. ஒ. வையும் ஜீ. எஸ். சையும் பிடிச்சு பாட்டி
* *ों ३ि
வைச்சால் அலுவல் நடக்கும்
கந்தப்போடி சிரித்தான். **காக்கா இது அந்தக் கால்
4.

Page 23
அவனைக்கேட்டா அவன் நம் மைத் திருப்பிக் கேட்பன். வெள்ளக் கரைப் புற ம்
போக்கு நிலத்திலை நீங்க வாழைத்
தோட்டம் போடலையா? தென் னங்கன்று நாட்டலையா? என் பான். நமக்கேன் வீண் வம்பு. கஸ்டப்பட்டு வந்தவங்க புழைக் கட்டுமே.”*
“அட நீங்க ஒண்ணு. பின்னே இதை இப்படியே விட் டுறச் சொல்லுறியளா?. அவ ணுக கை ஓங்கிடுமே?” சின்னப் போடி அமைதியடையவில்லை.
எனினும் அவன் மருதநாய கத்துடன் நேரடியாக மோதிக் கொள்ளவில்லை. நீறுபூத்த நெருப் பாகச் சீற்றம் இருந்தாலும் அவனுேடு பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனமில்லை என்பதை உணர்ந்து கொண்டதால் ஒடும் 4ளியம்பழமுமாகப் பழகி வந் தான் சின்னப்போடி.
இவனது இரட்டை வேடத் தை மருதநாயகம் நன்கு உணர்ந் திருத்தான். எனினும் பேச்சை முறித்துக் கொண்டதில்லை.
எனவே தான் இன்றும் சின்
னப்போடி கதை கேட்டதும் நிதானமாகப் பதிலளித்துக் கொண்டிருக்கிருன்"
“என்ன மருது, எனக்கு ஒரு மறுமொழி சொல்லலையே???
“மன்னிக்கவேணும் போடி யார், இந்தமுறை நாங்களாகவே நெல்லைக் கட்டி டிரக்டரிலை கொண்டுபோய் ரவுணில கொடுக் கப் போறம்."
42
*"அங்க மில்காரர் மடக்கடி விலை சொல்லுவாங்கள். " சின் ன்ப் போடியார் மடக்கப் பார்த் தார். *டிரக்ரர் கூலி வேற.”
"இல்லைப் போடியார். உங் கட விலையிலும் பார்க்கக் கூடக் கொடுப்பானுக.”
அவனது பதில் சின்னப் போடிக்கு எரிச்சலை ஏற்படுத் தியது. தனது வியாபாரத்திலும் மண்விழுவதை உணர்ந்து மேலும் சீற்றம் கொண்டான். ‘இவனுக் குச் சரியான பாடம் புகட்ட னும்., என்று கறுவிக் கொண்டு நடந்தான்.
வழியிலே மருதநாயகத்தின் கூட்டத்தினரின் தோட்டத்தின் செழிப்பையும் பார்த்ததும் சின் னப் போடியின் வயிற்றெரிச்சல் மேலும் அதிகரித்தது.
தோட்டம் போட் டு இரண்டு மாதங்களாகி விட்டால் மிள காய்க் கன்றுகள் செழிப்புற வளர்ந்து பிஞ்சு பிடித்திருந்தன. உயரமாக வளர்ந்திருந்த வெண்டி மரங்களில் மஞ்சள் மஞ்சளாய்ப் கத்தரியிலும் தக்கா ளியிலும் மொ ழு மொ ழு என்றுகாய்கள் ! வெள்ளரியும், பூசணியும் பிஞ்சு பிடித்திருந்தன. அவரையும் பயித்தையும் கொடி யோடிப் பிஞ்சு பிடித்திருந்தன. முளைக்கிரை விற்பனைக்குத் தயா
பூக்கள் !
ரான நிலையில் இருந்தது.
பலவருடங்களாகக் காடுமண் டிக்கிடந்த நிலம். போதாக்கு றைக்கு அடியுரமுமிட்டிருந்த

3rio ஒவ்வொரு பயிரும் செழிப் புற்றிருந்தது.
“காடு மண்டிக்கிடந்த புறம்
போக்கு நிலமா இது?’ என்று ஆச்சரியப்பட்டான் சின்னப் போடி,
அவன் வீட்டை அடைந்த போது வானெலியில் செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பயங்கரவாதிகள் பற்றித் தகவல் தருவோருக்கு லட்சரூபா சன்மா னம் வழங்கப்படும் என்று தெரி விக்கப்பட்டது.
அன்று முழுவதும் சின்னப் போடி தூக்கமின்றித்தவித்தான். அடுத்த சில நாட்களில் குறு மன்வெளிப் பிரதேசம் சுறுசுறுப் பானது. அறுவடை ஆரமயித்து விட்டதால் அனைவருக்கும் கூலி வேலை கிடைத்தது.
அறுவடை முடிந்ததும் வயல் வெளிகளில் சூடுகள் ஆங்காங்கே உழைப்பின் சின்னங்களாக 82-шгѓ ந்து நின்றன.
மருதநாயகத்தின் கூட்டத் தார்க்கு இம்முறை விளைச்சல் எக்கச் சக்கம்! எப்படிப்பார்த் தாலும் ஏக்கருக்கு நாற்பது மூடைக்குக் குறையாது என்று கணித்திருந்தார்கள்.
நிலா வாயும் ஒரு இராப் பொழுதில் சூட்டடிப்பு வேலைகள் நடைபெற ஆயத்தங்கள் நடந் தன.
மருதநாயகமும் நண்பர்களும் "டிரக்ரரில் வந்து இறங்கினர் கள். இரவிரவாகப் பல சூடுகள் அடிக்கவேண்டும் என்பது திட்
டம். எனவே அறுபது எழுபது பேர்கள் வரையில் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
லட்சுமி தேநீர் தயாரித்துக் கொண்டு ந்ெது அனைவருக்கும் பரிமாறினுள்.
*"நெல்லு வித்தவுடரை உனக்கு ஒரு சங்கிலி செய்விக்க வேணும். ** மருதநாயகம் லட்சு மியின் காதோடு கிசுகிசுத்தான்.
**காசைக் கண்டவுடன் செலவளிக்கிற எண்ணம் தான். பிறகு பிள்ளைப் பெறுச் செலவுச் கும் வேணுமெல்லே." அவள் நாணத்தோடு சிரித்தாள்.
தேநீர் பருகியதும் சூட்ட டிப்பு வேலைகள் ஆரம்பித்தன.
சூட்டுப் போரைச் சுற்றிய படங்குகள் விரிக்கப்பட்டதும், பருத்து நிமிர்க் நின்ற பட்ட டையில் ஏறிய மருதநாயகம், கதிர்க்கத்தைகளைப் படங்குகளில் விழுத்த, மற்றவர்கள் அதைப் பரப்பி விசிறிஞர்கள்.
பகிடிகளுடனும், கேலிப் பேச்சுக்களுடனும் வேலை தொ டர்ந்தது.
*முத்தண்ணை, எப்ப உங்கட கலியாணம்??
"அதுக்கென்ன அவசரம். இன்னும் நாலைஞ்சு வரிசம் போகட்டுமே. இப்ப முப்பத் தாறு வயது தானே அவருக்கு." 'இந்த அறுவடையோ. ஒண்டை அவிழண்ணை, இல்லாட் டில் இக்கணம் ஒருத்தியும் பாரா ளவை.”
3.

Page 24
"நேரமாகுது. தேங்காயை
உடைச்சுக் கற்பூரத்தைக் கொழுத்திப் போட்டு மிசினை ஸ்ராட் பண்ணுங்கோ."
அடுத்த சில நிமிடங்களில் fங்காரமிடும் வண்டாய், பம்பரம்
போல, உதறிக் குவித்த நெற்க
திர்களின் மேல் "டிரக்ரர்" சுழன்று கொண்டிருந்தது.
களத்திற்கூடாகச் சுற்றி நடந்து வந்த மருதநாயகத்தின் கால்கள் நெல்மணிகளுக்குள் புதையவே அவனது மனது பொலியை எண்ணி மகிழ்ந்தது. அடிபட்ட பொலியைத் தடி பினல் கிளறி வைக்கோலை வெளியே விசுறுகையில் படங்கில் சொரிந்து கிடந்த நெல்லில் தடி உராய்ந்து சலசலத்தது.
முதலாவது சூடு அடித்து முடிந்ததும் நெல்மணிகளைத் கிரட்டி குவியலாக்கினுர்கள். அவர்களது வியர்வைத் துளிகள் நெல்மணிகளைத் தழுவிச் சல்லா பித்தன.
அடுத்த சூடு . அடுத்த சூடு அடுத்த சூடு.
டுமீல். டுமீல். டுமீல். திடீரென்று தோன்றிய துப் பாக்கி வேட்டுக்கள்!
ஐயோ அம்மா.. 2uhunft... geg|GulunT...
g3uUT
எங்குமே மரண ஒலம்!
சூட்டுப் போரெல்லாம் ஜுவாலை விட்டெரிந்தன.
சீருடைகள் எக்காளமிட்டுச் சிரித்தன.
*மேக்க அபே ரட்ட. மேக்க அப்பே ரட்ட. கொட்டியாட்ட
மெஹி இட நக.”
44
மறு நாள்.
வயற்காட்டில் குவியல சு ஐம்பதறுபது மண்டை ஓடுகள்!
உலகத்தின் மூலை முடுக்குகளி லிருந்தெல்லாம் இந்தக் குரூர மான இனப்படுகொலை பற்றிய செய்திகள்!
எமது வானெலியும், ரூபவா கினியும் முதலில் மெளனம், தாமதமாக லங்கா புவத்தை ஆதாரம் காட்டி ஒலிபரப்பிய செய்தி- அறுபது பயங்கரவாதி கள் குறுமன்வெளியில் கொல்லப் பட்டனர்!
"இப்படி ஒரு குரூரமான அராஜகத்தை என்ர வாழ்நாளில் கண்டதில்லை. முழுப் பூசணிக்கா யைச் சோற்றில் மறைக்கப் பாக் கிருங்களே. படுபாவிப் பயலுக, ஆக்களையும் கொன்று எங்க எல் லாருடைய சூட்டையும் தீக்கி ரையாக்கீட்டாங்க. என்ன அரு மந்த பொடியன். அப்பாவிச் சனங்கள்.”
சின்னப் போடியும் மனம் வெதும்பிப் புலம்பிக்கொண்டிருந் தான்.
லட்சுமியை யாராலும் தேற்ற முடியவில்லை. ஊரெல் லாம் செத்த வீடு! யாரை யார் தேற்றுவது?
*அத்தான் உங்களையும் நீங்க விதைச்ச பயிரையும் அழிச் சிட்டாங்க. ஆன நீங்க என்ம. டியில விதைச்சது பத்திரமாக
இருக்கு. அவன் பிறந்து வரு
வான். ம்..”
மனதில் சபதமெடுத்துக்
கொண்டாள் லட்சுமி. 贪

O 660) g 8 சோ. பத்மநாதன்
աnd செய்த வேளாண்மை? யார் வெட்டு வோர்கள்? யார்நட்ட பனைவடலி? யார்தறிக்கின் முர்கள்?
யார்கையில் கொடுவாட்கள்? யார்கைகும் பிடுங்கை?
யார்கொல்லப் படுவோர்கள்? யார்கொன்று மகிழ்வோர்?
யார்வபலை உழுகிறவன்? யார்விளைச்சல் பெறுவோன்?
யார்தறியில் நெய்கிறவன்? யார் உடுத்து மகிழ்வோன்?
யார்சேனை நடத்துபவன்? யார்போரில் மடிவோன்? யார்விற்ற ஆயுதங்கள்? யார்சுட்டுச் சாவோர்?
போர்சிவிகை ஊருவது? யார்சுமக்கும் ஆட்கள்?
யார்நாட்டை ஆளுவது? யார்ஆளப் படுவோர்?
யார்கையில் துப்பாக்கி? யார் உடலில் ரவைகள்?
யார்சிறையில் வாடுவது? யார்கையில் திறப்பு?
யாருக்கு நந்தவனம் யாருக்குக் காடு?
யாருக்கு மலர்மஞ்சம்? யாருக்கு முட்கள்?
tாருக்குக் குளிரூட்டும் அறை? யாருக்கு வெய்யில்?
யாருக்குத் தாவாரம்? யாருக்கு உப்பரிகை?
வாருக்குச் சுகபோகம்? யாருக்குச் சுமைகள்?
யாருக்கு மண்குடிசை? யாருக்கு மாடம்?
1ாருக்குச் சமிபாடு குறைவு? பசி யார்க்கு?
யாருக்கு மோஹனம்? யார், யாருக்கு முஹாரி?
யார்கையில் வானெலி? வாஹினி ஏடு வகைகள்? யார்வாயில் ஊதுகுழல்? ஒத்தூது . ரொர்?
யார்செய்த பாவம், பொய் - புரட்(டு) எந்த நாளும்?
அலைபாய்ந்து செவிமீதில், விழிமீதில் மோதல்?
வினுக்கள்தாம் எத்தனை! ஏன் விடை கிடைக்க வில்லை?
வெம்போர்மூண்(டு) எத்தனைநாள்! விடுதலை ஏன் இல்லை? னுக்காணும் புதியயுகம் ஏன் விடியவில்லை?
கண்ணீரும் கம்பலையும் ஏன் ஒய வில்லை?

Page 25
நாடக விமர்சனம்: மேடை நோக்கில் “வெறியாட்டு’
68 6J「。 f. பொன்னுத்துரை
இன்றைய நாடக ரசிகன் வளர்ந்து வருகிருன். நாடக உலகும் காத்திரமான முன்னேற்றம் கண்டு வருகிறது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்த மட்டில் 1978க்கு பின், அதாவது நாடக அரங்க கல்லூரி நடாத்திய நாடகப்பட்டறையை அடுத்து நாடக உலகில் நல்ல திருப் பத்தைக் கண்டோம். அவைகாற்று கலைக்கழகத்தின் பங்களிப்பும் நினைவு கூரத்தக்கது. "கோடை" "பொறுத்தது போதும் ‘சங்காரம்" கூடி விளையாடு பாப்பா ‘கந்தன் கருணை 'அதிமானுடன் "யுகதர்மம்' 'அபசுரம்" "மண்சுமந்த மேனியர்-1" 'சக்தியிறக்குது" "மண்சுமந்த மேனியர் 2" போன்ற நல்ல நாடகங்களை நாடு கண்டு நயந்தது. நவீன நாடகம் என்ற வகைக்கு நல்ல உதாரணங்களாக இவை அமை கின்றன. இந்த வகையிலே வெறியாட்டும் நல்ல ஒரு நாடகமே.
நல்ல ஒரு கருப்பொருளைக் கொண்ட நாடகம் இது. "புதிய தோர் பூங்கா செய்வோம், பழைய வரட்சிகள் பாழ்படும்படியே என்ற அடிநாதக் குரல் நாடகம் முழுவதும் விரவிநிற்கிறது. அண் மையில் நடந்த சமூகநிகழ்வை (அநீதியை) மையப் பொருளாக வைத்து கதை பின்னப்பட்டுள்ளது. கவிஞர் முருகையனின் புதிய வார்ப்பு இது. பழைய கஞ்சி அல்ல.
ஒருகள நவீன உத்தியில் நாடகம் நிகழ்வதாய் உள்ளது மட்டு மன்றி நாடக பாத்திரங்கள் குறியீட்டுப் பாத்திரங்களாய் மிளிர் கின்றன. புதுமை வீச்சு பரந்து விரிகிறது நாடகத்தில். இத் தகைய சிறப்பம்சங்கள் நிறைந்த கவிஞர் முருகையனின் நாடகப் பிரதியை மேடையிட முன்வந்த வி. எம். குகராஜாவை எவ்வளவும் பாராட்டலாம். எடுத்த முயற்சிகளும் மெச்சப்பட வேண்டியன. இருப்பினும் நாடகம் 40 வீதத் திருப்தியையே மேடை நிலையில் தந்தது. 75 வீத திருப்தியையாவது நாடகம் தந்திருக்க வேண்டும். தவறியது ஏன்? இதுவே என் சிந்தனைகள் பல நாட்களாக.
ஒழுங்கு கட்டுப்பாடு (Discipline) பொதுவாக தளர்நிலையில் இருந்தன. சுவைஞர்கள் கூடத்தில் பார்வையாளர்கள் அமரத் தொடங்கியபின், நடிகர்குழு வருவது ஒப்பனை செய்வது என்பன பல வழியில் ஒழுங்கு நிலையைப் பாதிப்பன.
46

வேலியர்களாக நடித்தவர்களின் அசைவுகளில் அழகும் பளிச் சிட்ட தெனினும் அவலட்சண கோலம் மிக்கிருந்தது. சுத்தமற்ற நன்கு "பொலிஷ் பண்ணுத கூட்டு நடிப்பு நாடகத்தரத்தினைப் பெரிதும் பாதித்ததெனலாம். சிலவேளை வம்புத்தனங்களும் மின் னலிட்டன.
முற்பகுதியில் ஆர்வத் துடிப்புடன் ஆடிப்பாடி ஆர்ப்பரித்த அளவுக்கு பிற்பகுதியில் அந்த மட்டத்தை (Level)காப்பாற்ற வேலி யர்க்கு முடியவில்லை. குரல்வளம், உடல்வளம் என்பனவற்றை முழுநாடகத்துக்கும் சமமான வீதத்தில் பகிர்ந்தளிக்கும் அளவுக்கு மதிநுட்பத்துடன் நடிகர்கள் தம்மை வைத்திருந்தால் இப்படியான தளர்நிலை ஏற்படா. வேலியர்கள் முழுவாக கும்பலாக நடித்த கட்டத்தில் கலையொழுக்கின் ஒட்டம் நன்கு பேணப்படவில்லை. குரங்கு விளையாட்டுக்களை கோணங்கித் தனங்களைச் சற்று மட்டுப் படுத்தியிருக்கலாமே எனத் தோன்றிற்று.
நடிப்பில் இருந்த அட்டகாசங்கள் பேச்சின் முக்கியத்துவத்தை அமுக்கும் அளவுக்கு இருந்ததால் அவசியம் கிரகிக்கவேண்டிய வச னங்களை சுவைஞன் சில சந்தர்ப்பங்களில் தவறவிட நேரிட்டது. 'ஆவரசு பூவரசு" சம்பந்தமான உள்ளார்ந்த அம்சத்தை என்னல் அன்று உட்கொள்ள முடியவில்லை. நகைச்சுவை மிகமிக அதிகமாக விரவிய நிலை தணிய கூடிய நேரம் எடுத்த நிலைப்பாடு, அட்சர சுத்தியுடன் கேட்கக்கூடிய அளவுக்கு எறிந்து பேசாத தன்மை நுட்ப மான முக்கிய அம்சங்களை ரசிகன் தவறவிட வைத்தன. ஆழமாக நாடகத்துடன் இணையமுடியா நிலையை இவை ஏற்படுத்தின.
ஏதோ ஆனந்தத்தில் சமைத்து உண்பதாக ‘மைமிங்" அமைய வில்லை. உதுஎன்ன? என்று கேட்குமளவுக்குமைமிங்’செய்கிருர்கள். முழு விழக்கத்தை அளிக்கும் வகையில் "மைமிங்'நாடகத்தில் தேவையா?
வேலியரின் கொடிய போக்கை காட்ட ஒரு பக்கத்தில் இருந்து மற்றப்பக்கத்துக்கு ஒரு குழந்தையை வீசி எறிகிருர்கள். அவ்வேளை சுவைஞர்கள் ரசனை தடைப்படுகிறது. அந்தப் பச்சிளம் பாலக னுக்காக பரிதாபப்படுகிருர்கள். நாடக நயப்பு தடைப்படுகிறது. இப்படியான "ஸ்ரன்ட் வேலைகள் நாடகத்துக்கு அவசியம்தான?
ஒருவர் பிரமுகரிடம் எழுதுவதற்கு பேப்பர் பேனை கொடுக் கிருர், பேப்பர் சற்று பெரியது. பேனையோ சாதாரணமான சிறு பேன. இவ்விடத்தில் மிகப் பெரிய அளவிலாலான பேப்பர் போன்ற ஒன்றை மிக நீண்ட அபரிமித அமைப்புடைய பேன போன்ற ஒன்றை உபயோகித்திருக்க வேண்டும். இக் கட்டத்தில் வேண்டிய அக்கறை காட்டப்படவில்லை. மண்டியிடும்போது இருக்க
47

Page 26
盛 உண்மை இப்படி!
Dமேதை மாஓசேதுங் அவர்கள் மறைந்து 1986 செப் டெம்பர் 9ம் திகதி பத்து வருடங்கள் பூர்த்தியடைந்து விட்டன. அவரது நினைவாக 1977ல் சீனுவின் தலைநகரமான பீஜிங்கில் மணி மண்டபம் கட்டப்பட்டு அங்கே மாஓவின் பூதவுடல் பாதுகாக்கப் பட்டுவரப்படுகிறது. நாளாந்தம் சீனமக்களும் வெளிநாட்டவர் களும் அம் மணிமண்டபத்திற்குச் சென்று மறைந்த தலைவரின் பூதவுடலுக்கு மரியாதையும் அஞ்சலியும் செலுத்திவருகிறர்கள். இவ்வாறு கடந்த வருடத்தில் மட்டும் ஒருகோடி பேர் மரியாதை செலுத்தியுள்ளனர். இதில் ஒருலட்சத்து எழுபதினுயிரம் பேர் வெளிநாட்டவர்களாகும். தலைநகரின் பிரதான சதுக்கமான ரியன் அன் மென் சதுக்கத்தில் மாஒ உயிருடன் இருக்கும் போது வைக் கப்பட்ட பெரிய அளவிலான மா ஓ வின் படம் இப்பொழுதும்
பாதுகாக்கப்விட்டுவருகின்றது.
-ஆதாரம்: பீஜிங் றிவியூ
வேண்டிய நிலையினைக்கூட ஒரு நடிகர் பிழையாகச் செய்துள்ளார். எறிவதற்காக உபயோகிக்கப்பட்ட குழந்தை நடுவே இருந்த பீடத் துக்கு பின்னல் இருந்து செய்த சேட்டைகளையும் சில சுவைஞர்கள் பார்த்தனர். ரசனை நிலையிலிருந்து விடுபட்டு பின் நாடகததை நயக்க முனைந்தனர்.
தீ மூட்டப்படும் கட்டத்தை குகராஜா நவீன உத்தி முறை யைக் கையாண்டு செப்பனிட்டு முன்வைத்துள்ளார். பிரமுகருக்கு தண்ணிர் பருக்கிய இடமும் சுவைஞர்களை ஈர்த்தது. மகளிர் வரு தல் ஆடுதல் பாடுதல் என்பன நாடகத்துடன் நன்கு இணைந்து பிணையவில்லை.
கவிஞர் முருகையன் இது ஒரு ‘பாட்டுக் கூத்து" என்றும் மெல்லிய இயக்கத்துக்கு இடமுண்டென்றும், நாட்டுக்கூத்து அன்று என்றும், அறிஞர் எஸ்லின் குறிக்கும் நாடக வகையை ஒத்ததாக “வெறியாட்டு இயற்றப்படவில்லை எனவும் முன்னுரையில் குறிப் பிடுகிருர். எனவே இதை ஒரு பரீட்சார்த்தா நாடகம் எனலாம். பரீட்சார்த்தா நாடகங்களை குகராஜா மேட்ையிடத் துடிப்பதை துணிவதை கலையுலகு போற்றுகிறது. இந்நாடகத்தைப் பொறுத்த வரை ஆக்கியோன் ஆலோசனைகளை கூடப் பெற்றிருந்தால் மேடை நிலையில் காத்திரமும் கனதியும் கூடி இருக்கலாம். மேடைநிலையில் சில விளங்கவில்லை; வாசித்த வேளை வெளிவந்தன; ருசியும் தந்தன. பத்துக்கு மேற்பட்ட அரங்குகளில் நடிக்கப்பட்ட இந்நாடகத்தை மூன்று மேடைகளில் மாத்திரம் பார்க்க முடிந்தது. சில அரங்குக ளில் மேடையேற்றம் சிறப்பாக அமைந்திருக்கலாம். சீகுகராஜாவின் முயற்சி பாராட்டுக்குரியது.
48

விமர்சனம்:
கல்வயல் குமாரசாமியின் LDU 600T நனவுகள் قبرجY யாழ் இலக்கிய வட்டம் L: 40 இ9 சி. சிவசேகரம்
இது கல்வயல் குமாரசாமியின் கவிதைகளின் விமர்சனம் என் பதை விட, அடிப்படையில் மரபு சார்ந்த சிந்தனையை உடைய ஒரு படைப்பாளி நவீன சூழலொன்றன் நெருக்கடிகட்கு முகங்கொடுக் குமாறு தன் படைப்புக்களை முன்வைக்கும் போது, மரபு வழியான சிந்தனைக்கும் நவீனத்துவத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் தம்மை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்று காட்டும் ஒருசிறு முயற்சி என்பதே பொருந்தும். w
1977க்குப்பின் முக்கியமாக 1983ஐ அடுத்து, இலங்கைத் தமிழர் முகங்கொடுக்க நேர்ந்த அடக்குமுறையும் இன ஒடுக்கலும் அவர்களி டையே ஒரு கலாச்சார அதிர்ச்சிக்கு காரணமாகியது. ஏகாதிபத்திய கலாச்சாரச் சீரழிவை மேல் நாட்டுக் கலாச்சாரம் எனவும் நவீனத் துவம் எனவும் மயங்கும் ஒரு போக்கினல் ஒரு கலாச்சார மரபு சிதைவுக்குட்படும்போது அதனைத் தடுப்பதில் மரபுவாதமும் முற்போக்கான நவீனத்துவமும் தோற்றத்தில் ஒன்றுபடுகின்றன. ஆயினும் நோக்கில் வேறுபடுகின்றன. முன்னது மாற்றங்களை மறுத்து மரபை நிலைநிறுத்த முற்படுகிறது. பின்னது மரபின் நல்ல அம்சங் களை ஒரு நவீன சமுதாயப் பார்வையுடன் இணைந்து முன்னேக்கிச் செல்ல முனைகிறது. அண்மைக்கால மாற்றங்கள் ஒரு புதிய புறநெருக் கடியுடன் தொடர்புடையன. அதன் விளைவுகளைப் பரிச்சயப்பட்ட மரபின் முறைகளால் புரிந்து கொள்ள முடிவதில்லை. பிரச்சனையின் அடிப்படையான முரண்பாடு சரியாக அடையாளங் காணப்படா மையால், வெறுமே புறத்தேரற்றத்தின் அடிப்படையிலே பிரதான முரண்பாடு எதுவென்று காணப்பட்டு பேரினவாத அடக்குமுறைக்கு மறுமொழி குறுகிய இனவாதமே என்ற முறையில் தீர்வுகளை முன் வைப்போர் “சோஷலிஸ் தேசியவாதம்’ ‘நவமாக்ஸியம்’ போன்ற அலங்கார முக்காடுகளால் தம் குறுகிய பார்வையை மூடுகின்றனர். குமாரசாமியின் பார்வை மரபுசார்த்ததாயும் முரண்பாட்டின் அடிப் படையைச் சரியாக அடையாளங் காணுததாயும் இருந்த போதும் அவர் சார்ந்து நிற்கும் மரபின் மனிதாபிமானம் அவரைக் குறுகிய இனவாதப்பார்வையினின்று தடுத்து நிற்கிறது. சமுதாயத்தில் நியாயத்தையும், கொடுமைகட்கு முடிவையும் வேண்டிநிற்கும் அெ
雀9

Page 27
ருடைய கவிதைகளில் அவரது நகைச்சுவை உணர்வு ஒரு வலிய கருவியாகச் செயற்படுகிறது.
அவரது கவிதைகளிற் பெருவாரியானவை பேச்சுமொழியைச் சார்ந் ருப்பது மரபுடன் அவரது முறிவைக் காட்டுவதாகக் கொள்ள இயலாது.மரபுவழிச் சந்தமேமிகுந்திருக்கும் அவரது கவிதைகளில் அந் தச் சந்தம் தெரியாதவிதமாக வரிகளை மாற்றி அமைத்துள்ளமை ஒரு புதுக்கவிதைத் தோற்றத்தைத் தந்தாலும் அங்கு மரபுச் சந்தத்தை அடையாளம் காண்பதில் சிரமம் இல்லை. மஹாகவியும் முருகை யனும் எழுதிய மரபுவழிக் கவிதைகளை பொருட்தெளிவு வேண்டி மரபுசார்ந்த வண்ணம் அமைந்த வரிகளைப் பிரித்து எழுதிய வடிவில் வரக்கண்டிருக்கிறேன். கல்வயல் குமாரசாமியின் கவிதைகள் பிரிக்கப் பட்டுள்ள விதம் இந்த நோக்கையே உடையதென்ருல் கூட அதன் அவசியம் பற்றிய ஐயங்கள் எனக்குள்ளன. அதைவிட மரபின் சந்தம் வாசிப்பவரால் அடையாளங் காணமுடியாது போவதுடன் மாற்றி அமைக்கப்பட்ட வரிகள் பேச்சோசையின் ஒலி நயத்தைப் பெருமல் இரு வகையிலும் இழப்பாகிவிடுகிறது என்றே நினைக் கிறேன். மரபுவழிக் கவிதை நடையில் தேர்ந்தவனல்ல. என்னல் மரபின் சந்தத்தை இடையிடை பாவிக்க முடிகிறதே ஒழிய அதன் மீது எனக்கு ஆளுமை குறைவு. ஆயினும் மரபுவழிக் கவிதைக்கு இனி இடமில்லை என்ற வாதம் எனக்கு ஏற்புடையதல்ல. அதற்கு என்றுமே தமிழில் உயர்ந்த இடமுண்டு. அதன் உயர்வு அது எவ் வளவு சிறப்பான கவித்துவத்துடன் சமகால சமுதாயத்தைச் சார்ந்து நிற்கிறது என்பதிலேயே தங்கியுள்ளது. கர்நாடக சங்கீதத்தையும் பரதத்தையும் சிற்பக் கலை பற்றி யும் பெ ரு  ைம ப் பட முடியுமானல் தம் மரபுக் கவிதை பற்றியும் பெருமைப்படலாம். இக்கலைகளில் வல்லவர்கள் ஆற்றக்கூடிய பணியாதெனில் தம் ஆற் றலை நவீன சிந்தனையுடனும் புதிய சமுதாயத் தேவைகளுடனும் பிணைப்பதே. புதுக்கவிதைக்கு அதிக இடம் இருப்பதால் மரபுக் கவிதை அம்சங்கள் அழிய அவசியமில்லை. இன்றும்கூட பாரதியின் மரபுக் கவிதைகளில் நாம் காணும் கவித்துவத்தையும் சிந்தனையில் நவீனத்துவத்தையும் எத்தனை புதுக் கவிதைகளில் காணமுடிகிறது? மரபுக் கவிதையை அதன் மரபு வடிவிலேயே வழங்கத் தயங்க வேண்டியதில்லை என்றே அபிப்பிராயப்படுகிறேன். உதாரணமாக,
ஆண்மை அற்ற அலிகள் Goouri பூவை ஏன் கசக்கிப் புழுதியில் எறிந்தார்? (சத்தியமூச்சின் முற்றுப் புள்ளி, என்ற வரிகள் கருத்து மேலும் தெளிவாக வரவேண்டுமாயின்
* “புழுதியில் எறிந்தார்’ བ་ என்பது ஒரே வரியில் வந்திருக்க வேண்டும். "எறிந்தார்’ என்ற பதத்திற்கு அதிக அழுத்தம் தருவதே நோக்கமானலும், "புழுதியில்"
SO

என்ற பதம் முன்னைய வரியில் வரும் சொற்களுடன் வருவது பொருந்தவில்லை. அதே கவிதையின் இறுதி வரிகளான
அமைதியாய்
உறங்கு நீ
அம்மா விடுதலைப் பூக்களால்
வைத்துணை
விடுதலைப் பூக்கள் வைத்து
உனை இறைஞ்சுவோம் என்ற வரிகள் கூட கவிஞரின் நோக்கம் பற்றியும் அது நிறைவேறி யதா என்பது பற்றியும் கேள்விகளை எழுப்புகின்றன.
*தாய்களுக்கு வந்த நடப்பு கவிதையில்
நம்நாட்டில்
தாய், பிள்ளை, தம்பி
சகோதரங்கள்
எல்லாமே
நாய்க்குப் பிறகு தான்
நாங்களும் கூடத்தான்.
என்றவரிகளில் "சகோதரங்கள்" (தம்பி சகோதரம் இல்லையா?) "தாய் பிள்ளை, தம்பி’ என்ற வரிக்குச் சமாந்தரமாக அமைவதற்கு அதிகம் நியாயம் தெரியவில்லை. 'தம்பி சகோதரங்கள் பேச்சு வழக்கில் வரும் ஒரு சொற்ருெடர் என்ருல் அது கவிதையில் ஒன்ருகவே வைக்கப் பட்டிருக்கலாம். உண்மையில் மரபுச் சந்தம் சார்ந்துவரும் அரை வரிகளான
"தாய், பிள்ளை, தம்பி
சகோதரங்கள் எல்லாமே நாய்க்குப் பிறகு தான்
நாங்களும் கூடத்தான்' என்பன அதிக நியாயமின்றிப் பிரித்து அடுக்கப்பட்டுள்ளன. இதனல் கவிதைக்கு எவ்வகையிலும் வலுவூட்டப்படவில்லை.
மரபினின்றும் கல்வயல் குமாரசாமி வேறுபட்டு நிற்கும் சந்தர்ப் பங்கள் உள்ளன. எதுகை மோனைகளை அவர் எல்லா இடத்திலும் பேணவில்லை. சந்தத்தைக்கூடச் சில இடங்களில் அவர் தளர விடு கிருர், ஆயினும் மரபுடனன அவரது முக்கியமான வேறுபாடு கவிதையில் சமகாலப் பேச்சுமொழியின் பிரயோகம். இது நவீனத் துவம் ஆகிவிடும் என்று நான் கருதவில்லை. (அப்படியானல் நாட் டார் பாடல்கள் எல்லாம் நவீனத்துவமானவையே). பேச்சுமொழி யில் மரபுச் சந்தத்தை இனைப்பதில் அவர் பெரிதும் வெற்றி கண்

Page 28
KwArtik*:M
கலைஞர் த. சண்முகசுந்தரத்திற்கு V
எமது அஞ்சலி
சண்முகசுந் தரம் பிறந்தார், கற்ருர், ஆசிரியராக மிளிர்ந் தார் என்பதில் அவர் தனித்துவம் பெருமை என்பன நிலை நிற்க வில்லை. கலை இலக்கியம் என்ற சிந்தனையில் உழன்று, அவை வளர துடித்தாரே சதா இயங்கினரே இதில் தான் இவரது சிறப்பு அமைந்துள்ளது.
றுகதை, நாவல், நாடகம், கட்டுரை, ஆய்வு போன்ற பல வேறு வேறு துறைகளில் காலுன்றி தக்க பல ஆக் கங்களை முன்வைத்தார். 20 சிறுகதைகளுக்கு மேல் எழுதிய இவர் மீனுட்சி, ஆசைஏணி, நாகமணி, விதியின்கை, அணை யாத அகல்விளக்கு முதலிய நாவல்களைப் படைத்தார். வாழ்வு தந்த வல்லி, பூதத்தம்பி, இறுதி மூச்சு என்பன நூல் வடிவில் வந்த நாடகங்கள். ‘வாழ்வு தந்த வல்லி" சாகித்ய மண்டலப் பரிசு பெற்ற நாடகம். ஏராளமான கட்டுரைகளை எழுதியும், வானுெலிப் பேச்சுக்களை பேசியும் மக்கள் கலைகளின் வளர்ச்சிக்கு ஊட்டம் சொடுத்தவ ர். காவடி, கரகம், வசந்தன், கோலாட்டம், கும்மி, கூத்து வண்டில் சவாரி, நாதஸ்வரம் என்பவை பற்றி எல்ல்ாம் சிறு நூல்கள் பல எழுதியவர். கலையருவி கணபதிப்பிள்ளை என்ற ஆக்கத்திற்கும் சாகித்ய மண்டலப் பரிசு பெற்றவர்.
சண், சண்முகம், நையாண்டி, தசம், நிறை என்ற புனைபெயர்களிலும் தன் பேணுவன்மை காட்டிய அமரர் த. சண்முகசுந்தரம் எழுத்தாளர்களை கலைஞர்களை பெரிதும் நேசித்த பெருமகன். இவரது மறைவு ஈழத்து கலை இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பே. . . . . . .
டிருக்கிருர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் மரபுத் தமிழ் பொருந்தாமலே சில இடங்களில் வந்துவிடுகிறது. - உதாரணமாக, “கட்டாயம்" என்ற கவிதையில் இறுதி வரி:
கட்டாயம் வேண்டும் "கலை" ' "கலை" என்ற சொல்லை மேற்கோட் குறிக்குள் அவர் பாவிப்பது அதன் அர்த்தம் வாசகர்களுக்கு ஒரு வேளை தெரியமாட்டாது என்ற ஐயத்தினைக் குறிக்கிறது. கவிதையில் மிகுதி பெருமளவும் பேச்சு வழக்கிலுள்ள சொற்களாலானது. "
"என்னை விடுங்கே 7 " என்பது வெண்பாக்களால்ானது அதில் வெண்பாவின் சீர் விதிகளின் நிர்ப்பந்தம் கவிதையின் சொற்பிர யோகத்தில் சில கோளாறுகளைப் புகுத்தி விடுகிறது. நீங்கள்’ என்று தன்னைத் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தும் அத்தானைப் பன்மை பில் விளிக்கும் கவிதையில் முன்னிலை வினைச்சொல் ஒருமையில் வருகிறது. (வலை விரிப்பதெல்லாம் ! தராது பயன/ தவிர். என்ன வரை! அத்தருமம் காக்கும் / அறி) சீர் ஒழுங்கைப் பேணும் நிர்ப்
52.

பந்தம் அடிப்படையான இலக்கண விதிக்கே ஆப்பு வைத்துவிட்டாற் போல் தெரிகிறது இவ்வாறன தவறுகள் தவிர்த்திருக்கக் கூடியன:
குமாரசாமியின் சமுதாயப் பார்வை தமிழர் சமுதாயத்தில் காலங்காலம்ாக நிலவும் கோட்பாடுகளை அதிகம் கேள்வியின்றி ஏற் கொண்டது என்றே தோன்றுகிறது. கற்பு, ஆண்மை, காதல், வீரம் என்பன பற்றிய அவரது படிமங்கள் கண்ணகி, பரணி படைத்தல், ஆண்மை அற்ற அலிகள் என்ற பழகிப்போன பழைய சூத்திரங் களுக்குள் நின்று விடுகின்றன. பரிச்சயப்பட்ட ஒரு கடந்த காலத் தின் நினைவுகளில், அந்தப் பழமையின் மீட்சிக்காக ஏங்கும் மனத் தையே கேலியில்லே" போன்ற கவிதைகளிற் தரிசிக்க முடிகிறது. சமகால நிலவரங்களை "மரண நனவுகள்', "அக்றை இல்லையோ' போன்ற சில கவிதைகள் சித்தரித்தாலும் அவை பிரச்சனையின் அடிப்படையைத் தொடத் தவறுகின்றன. கவிஞருடைய நகைச் சுவையும் இனக்குரோதமற்ற பார்வையும் கவிதைகளின் நல்ல அம் சங்கள். இடையிடை மிகவும் நயமான சொல்லமைப்பைக் காணக் கூடியதாக உள்ளது.
'ஒட்டைக் குடத்துக்குள்
றங்கை ஃவிட்டு மூண்டெழும்பும் தீயை அணைக்கிறம்பார் எண்டு சொன்னர் போட்டுவிட்டு ஒடுகின்றர் குடத்தைக் கரையோரம்", (அக்கறை இல்லையோ) இங்கே (வரிபிரிப்பின் கோளாற்றையும் மீறி) ஊர்நிலவரத்தைச் சித்தரிக்கும் சொற்கள் சிறப்பாக உள்ளன. ஆயினும் முழுக் கவி தையும் இதே விதமான இறுக்கத்தைக் காட்டத் தவறி விடுகிறது. எனினும் வடக்கின் நிலைபற்றிய ஒரு நல்ல சித்தரிப்பு என்றே கருது கிறேன்.
குமாரசாமியின் அரசியல் பார்வையின் குறைபாடு இந்திரா காந்தியைச் சத்திய மூச்சாகக் காணும் இடத்திற்தான் அப்படியே புலனுகிறது. (இந்திரா காந்திக்கும் சத்தியத்தக்கும் என்ன தொடர் பென்று எனக்குத் தெரியவே தெரியாது.) இந்திரா காந்தியின்கொலை மிகவும் கண்டிக்கத்தக்கதும் அருவருப்பானதும் என்பது முக்கியமான விடயம். ஆனல் இந்திராவின் அரசியல் மோசடிகளே அவரது அழி வுக்கும் வழிகோலின என்பது பற்றி பலருக்கும் தெரியும். இந்திரா வையும் இந்தியலையும் தமிழினத்தின் ரட்சகர்களாகப் பார்த்துப் பழகிவிட்ட இலங்கைத் தமிழ் நடுத்தர வர்க்கத்தின் பார்வையே குமாரசாமியிலும் தெரிகிறது. ༨
கல்வயல் குமாரசாமியின் மரபுவழிக் கவிதை புனையும் சொல் லாற்றலும் அவரது சரளமான மொழிப் பிரயோகமும் நவீன சிந் தனையுடனும் புதிய சமுதாயப் பார்வையுடனும் எதிர் காலத்தில் இணையவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.
食
53

Page 29
இ9 காத்துக் கிடக்கும்
கவ்வாத்துக் கத்திகள்
இடு சிவ. இராஜேந்திரன்
சின்று வெள்ளைத்தோல் மனிதர்களால் கள்ளமாய் குட்டப்பட்டு தலைகளைக் குனிந்தோம் அவர்கட்கு சொர்க்கபுரி வாழ்வுதர குனிந்து குனிந்து கொழுந்து பறித்தே மேலும் கூனலானுேம்.
கொடி மாற்றம்
நடந்த பின்பு குணிந்து நின்ற முதுகினில்ே களித்துச் சவாரிவிட ஆயிரமாய் இலட்சங்களாய் உள்ளூர்க் குள்ள நரிகள் நீவிர் துள்ளிப் பாய்ந்து ஏற வந்தீர்.
சவாரிக்குக் கூலிகளாய் அடிகளையும் உதைகளையும் அவ்வப் போது வெள்ளீய ரவைகளையும் பரிசாக தந்தீர்கள் காலை வேளையேனும் -எம் உலைகளில் அரிசியிட தலையிலே சுமைக்கூடையுடன் றம்பொடை ஏத்தமென்ன மெடக்கும்பர ஏத்தமென்ன மிண்டோனவில் வீழ்ந்தெழுந்து இமயத்தில் ஏறுதல் போல் கூன் விழுத்த நிலையினிலும் - பல கோடிகளை உழைத்துத் தந்து
போதாதென்று எங்கள் மண்டைகளில் குட்டுப் பள்ளங்கள் மாரு வண்ணம் நீங்களும் குட்டினீர்கள் குனிந்தோம். - குணிந்து நிற்கும் உட்லினிலும் கூன் விழுந்த முதுகினிலும்" . உதைக்கத் துணிந்து நின்றீர்.

கையை இடுப்பில் வைத்து மேலும் கீழ்குனிய
தலவாக் கொலையினிலும் ரெனிய கலையினிலும் பூண்டு லோயாவிலும் விருஷ்டத்தில் உதைக்க வந்தீர்.
அன்று கீனுகொலையிலும் டெவனிலும் கொப்பளித்து வீழ்ந்த குருதித் துளிகள் விறைத்துப் போன எங்கள் , பாதங்களையும் இதயங்களையும் பதமாக்கிக் கூராக்கி பாதையினை காட்டின அந்தக் குருதியில் மலர்ந்த குறிஞ்சியின் மைந்தர்கள் - சில பொரிகளை தூவப் புரிந்து கொண்டனர். எங்கள் நாளைய பரம்பரை உங்கள் கொடுரச் செயல்களின் கருவினை அறுக்கக் கவ்வாத்துக் கத்திகளுடன் காத்துக் கிடக்கின்றன
நாளை
கனவில் கூட
காலைத் தூக்கினல்
உங்கள் مح۔ கழுத்துக்கள் வாய் திறக்கும். குட்ட நினைத்தாலோ குரல் வளைகள் செயலிழக்கும். 本
9ெ மனிதாபிமானம்
68 எஸ். ஆர். நிஸாமி
Dனிதாபிமானம் மண்ணிற்குள் புதைத்துவிட்டது ஆசைகள் அவாக்கள் திருவிழாக்களாக தெருவெங்கும் அலைகின்றன. அன்பு அச்சில் இருக்கிறது இதயத்தில் இல் *தன்னைப்போல் பிறரையும் நேசி’ என்ற கூற்று தத்துவத்தில் இருக்கிறது எவரது தலையிலும் இல்லை
முத்திரையில் இருக்கிறது as s56...... . . . . . . . . . . . . . . . ...?

Page 30
இ9 புண்ணிய
பூமி
மெது பூங்காவில் பிள்ளையை இழந்த பெற்றர்; பெற்ருரை இழந்த பிள்ளை கணவனை இழந்த தாரம்: தாரத்தை இழந்த தலைவன் -என எங்களிற் பலரை நாம் நித்தமும் இழக்க இந்த உலகின்
ஜனநாயகக்
காவலர் நாம், மன்னனும் நாமே மக்களும் நாமே, எந்த உயிரும் இங்கு உவகை பெறும். என்ற கணைப்புக்கள் இடையரு தொலிக்கும்.
பால் குடிக்கும் சிசுவும்: பள்ளி செல்லும் பொடியும்; வீடிருந்த பெண்ணும்; வீழுங் கிழமும் - தினம் பயங்கரமாய் மாழத் தர்மத்தின் ஆட்சியளர் நாம்
ஐ சேரியூரான்
சாதனங்கள் ஒலிக்கும்-அ-
தர்மமும் செழிக்கும்.
கூடுவிட்டு வந்த கறுப்புகள்
எம் உடல்களைச் சிதைக்க வீடுகள்;
வீதிகள்; விளை நிலங்கள் யாவும்; நீலப் பெருங் கடலும் செங்கடலாய் செந்நிறம் ஆகும்.
இடிந்த வீடுகளும்; வேலைத் தலங்களும்; மடிந்த பயிர் கொடியும்; விலங்குகளும்
சாட்சி சொல்லாத்
தன முனைப்பில்
இரந்து பெற்ற
பெருந்தனத்தில்
இந்நாட்டின்
பொருள் வளங்கள் உயர்வதாக புள்ளிகள் காட்டும்
தர்மமும் நீதியும் புண்ணிய எம்மிடைச் செழித்த பூமியிது. வரலாறும் உண்டென்று 事
தாயகம் g சந்தாதாரராக சேருங்கள் 1வருட சந்தா ... is eit a 60 - 00 6 மாத சந்தா . ரூபா 30 - 00
(தபாற் செலவு உட்படfஉள்நாடு )
-நிர்வாகி


Page 31
செய்திப் பத்திரிகையாக பதிவு Registered bis a News paper
இ அர்த்தம்
நி லமகளே,
எந்தையும் தாயும் கு என் தேசத்து நிலமகளே,
அகழ்வாரைத் தாங்கு உன்னேப் புகழ்வார்கள் நான் உன்னே இகழவி ஆஞலும் உன் பொறுமைக்கு 4
உடையா பகுதிகளும் அடையும் படியாய்க் உனேப் பதப்படுத்திப் இரவல் பள்ளத்திலே கிடந்தா
இன்றே எல்லாப் பகுதிகளும் கொலே வலயங்கள் இ உன் பொறுமைக்கு எ
பொறுத்தவள் நீ பொ சக்தியை நான் அறி ஆணுலும் உன் பொங்கலிலே பள்ளத்தில் வீழ்ந்தவர் உள்ளமிலார் எல்லாம் ஏற்பாடு வேண்டுமி
இல்லேயெனில், இடன் பொறுமையைப் பொங்குதலும் அர்த்த
இச்சஞ்சிகை தேசிய கலே இலக்கி 15/1, மின்சார நிலேய வீதியிலுள் யாழ்ப்பாணம் 407, ஸ்ரான்லி : தில் அச்சிட்டு வெளியிடப்பட்ட
 
 
 

செய்யப்பட்டது. THAYA JAWA in siri Lanka. TVAN ’N TYYTY
வேண்டும் " டு என். சண்முகலிங்கன்
லவி மகிழ்ந்த
மீ நிலம் போலு என்று
ir....
இது
ான்னம்மா அர்த்தம்?
உடையவர் பகுதிகளுமே கிடந்தாய்
பாடுபடும் ஆரோ
萨,
அழியும்படியாய் 1ளர்ப்பாய். ான்னம்மா அர்த்தம்? "ங்கும் பூகம்பத்தின் இவன்
கிள் எழுந்திடவும்
வீழ்ந்திடவும்
போல்
இழக்கும். -
கியப் பேரவைக்காக யாழ்ப்பாணம், ான க. தணிகாசலம் அவர்களால், வீதியிலுள்ள யாழ்ப்பாண அச்சகத் தி: