கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1986.06

Page 1
இ) இ. பாலசுந்தரம்
3) சி. சிவசேகரம் இ9 இ. சிவானந்தன் )ே என். சண்முகலிங்கன் இ9 செந்திரு )ே சாம்பவன்
乓· சுரேந்திரன் இ) இப்னு அஸ அமத் ஒ எஸ். தேவேந்திரன் 岛
ஜனயுக நன்
இ) சாருமதி இ9 ஸ்வப்னு
8 கே. கே. தேவர்
 
 
 
 
 
 

5.
யூன், 1986

Page 2

14 ஜூன் 1986
急曾 நீதிக்காகப் போராடிய மக்கள்
தோல்வியைக் கண்ட
வரலாறே இல்லை
இன ஒடுக்கலுக்கு எதிரான தமிழ் மக்களுடைய போராட்டத்தை ஆதரித்து உலக நாடுகள், இந்தியாவின் மத்தியஸ்த்தத்துடன் நேர்மையான அரசியல் தீர்வு ஒன் றைக் கரண இலங்கையின் ஜே. ஆர் அரசை வேண்டி நிற் கின்றன.
பேரினவாதிகளைக் கொண்டுள்ள ஜே. ஆரின் எதேச் சாதிகார அரசு உலக நாடுகளின் விருப்பத்திற்கு மதிப் பளிப்பதாக இல்லை. அது இராணுவ ரீதியான தீர்வு ஒன் றையே நாடிநிற்கிறதென்பதை சமீபத்தில், கிளிநொச் சியில் மக்கள் மீது அது கட்டவிழ்த்து விட்ட பயங்கரக் கொலைகளும் தீவைப்புகளும். விமானத்தாக்குதல்களும் தலவாக்கலையில் தேடுதல் ஆரம்பமும், கொழும்புவில் பதட்டத்தை ஏற்படுத்தியமையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச்சுமை, மக்க ளின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பு அளிக்காமை, தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளமை, ஊழல், அடக்குமுறை, எதேச்சாதிகாரம் போன்றவற்றை எதிர் த்து, மக்கள், அரசிற்கு எதிராக கிளர்ந்து எழுவதை யும் மாற்று அரசு ஒன்றை விரும்புவதையும் ஜே.ஆர் அரசு
1

Page 3
விரும்பவில்லை. அது, மக்களால் தூக்கி எறியப்படாது தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டி இனவாதத்தை முடுக்கிவிட்டு, மக்களைப் பிளவுபடுத்தி தனது எதேச்சா திகார ஆட்சியை நிலை நிறுத்த இறுதியாக முயற்சிக் கிறது.
ஒரே நாட்டில் வாழும் இன்னுெரு இனமக்களை இந்த அரசு அடக்குகிறது. அவர்களது பாரம்பரிய பிரதேசங் களை மறுக்கிறது, ஒரு இனத்திற்கு முழுமையாக நீதியை மறுக்கிறது. நீதிக்கான அவர்களது போராட்டத்தை பயங்கரவாதம் என்ற போர்வையில் அடக்க வீண் முயற் சியை மேற்கொண்டுள்ளது.
இது முழுநாட்டிற்குமே ஆபத்தைத் தரும் ள் ன் பதை எண்ணுத ஆளுபவரின் தேசபக்தியை எப்படிச் செல்வது? மக்கள் இழிச்ச வாயர்களல்ல என்பது தற் பொழுது பாதுகாப்பில் இருக்கும் இருநூற்றுக்கு மேற் பட்ட சிங்கள இளைஞர்களது நிலையும் தா திமார் போராட்டமும் எடுத்துக் காட்டுகின்றன. அரசின் எண் ணம் ஈடேறப் போவதில்லை.
நீதியை மறுக்கும் ஒரு அ ர சு, அமைதியை எதிர் பார்க்க முடியாது, நீதிக்காகப் போராடிய மக்கள் தோல் வியைக் கண்ட உலக வரலாறே இல்லை. பயங்கரவாதம் என்று அபயக்குரல் எழுப்புவதைக் காட்டிலும், "பயங் கர வாதம் இளைஞர்களை ஏ ன்பற்றியது என்பதைத் தான் அரசு பிரித்துப் பார்க்க வேண்டும். பயங்கரவாதத்தை நாம் ஆதரிக்கவில்லை. அரசின் பயங்கரவாத நடவடிக்கை களே அதன் தோற்றுவாய் என் கிருேம், ஜே. ஆரின் பேரி னவாத, எதேச்சாதிகார அரசிற்கு எதிரான தமிழ் மக்க ளின் போராட்டம் நியாயமானது, அது ஒரு சில பேரின வாதிகளை எதிர்த்து, பெரும்பான்மை இன மக்களுடன் 8க்கியப்பட்டதும், இன ஒடுக்கலுக்கு எதிரானதும் விடு தலைக்கான போராட்டமுமாகும் என்பது எமது கருத்து,
நாட்டின் நலனை முதன்மைப் படுத்தி, தமிழ் மக்கள் அவர்களது பாரம்பரிய பிரதேசங்களில் uur".
2

ச்ெ லுத்த வாய்ப்பை ஏற்படுத்தும் அரசியல் தீர்வைக் காண அரசு முன் வரவேண்டும். அதுவே சரியான வழி rip 60) p ,
பிரச்சனைக்கு, நேர்மையான அரசியல் தீர்வு ஒன்றை மறுத்து வெறும் பயங்கரவாதப் பூச்சாண்டியில் அரசு தங்கி நிற்குமானுல் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங் கைப்பிடித்த கதையாக முடிவடையும், Σ»
மறைந்த டானியலுக்கு
s t எமது அஞ்சலி
இலங்கைத் தமிழர் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களி டையே தனது பெயரைப் பதித்த கே. டானியலின் மறைவுச் செய்தி வருத்தத்திற்குரியதொன்ருகும். அவர், ஒடுக்கப்ப்ட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் இலங்கைக் கம்யூ னிஸ்ட் கட்சியுடனும் அதன் வெகுஜன ஸ்தாபனங்களுடனும் இ2ணந்து போராடிவந்தார், அந்தப் போராட்டங்களில், பல பகுதிகளிலும் சிதறி வாழ்த்த ஒடுக்கப்பட்ட மக்களை ஒருமுனைப் படுத்துவதற்கு அவர் வழங்கிய பங்களிப்பு பாரியது. அப் போராட்ட வரலாற்றுடன் அவருடைய நாமம் என்றென்றைக் கும் இணைத்தே இருக்கும்.
தனது போராட்ட அனுபவங்களை அவர் சிறுகதைகளாயும் நாவல்களாயும் எழுத்தில் வடித்திருக்கிறர். அதன்மூலம் ஒடுக் | கப்பட்ட மக்களின் வாழ்வையும் போராட்டங்களையும் தமிழி லக்கியத்துக்கு அறிமுகப்படுத்த முயன்றர். அவரது எழுத்துக் க்ளில் வெளிப்படும் சமூகக் கண்ணேட்டம் தொடர்பாக "தாய கம் தனது கருத்துக்களை பின்வைத்துள்ளது (Reserve).
அவருடைய போராட்டப் பங்களிப்புகள் அவரை என் றென்றைக்குமாக நினைவு கூரத் தூண்டும். அவரது இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினருடனும், உறவினருடனும், நண்பர்களுடனும் 'தாயகம்" இணைந்து கொள்வதுடன் மறைந்த கே. டானியல் அவர்களுக்கு அஞ்சலியையும் தெரிவித்துக்கொள் கிறது. -ஆசிரியர் குழு
3.

Page 4
மறைந்த பண் டிதமணி அவ ர்களுக்கு
எமது அஞ்சலி
"ரம்பரிய தமிழ்ப் புலமையின் பிரதிநிதியாக இருந்துள் ளார். வடஇலங்கையின் பிரத்தியேக ஈடிபாட்டுக்குரியதாகிய புராணப்படிப்பிலே பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளைக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. கந்தபுராணம், சைவசித்தாந்தம் ஆகிய கண்ணுடியினுாடாகவே அவர் மனித வாழ்வை நோக்கினர். அவர் தாம் விசுவாசித்த தத்துவங்களையும் கொள்கைகளையும் தமது மாணவர் மூலம் பரப்பியுள்ளார். பல நூற்றுக்கணக் கான தமிழ் ஆசிரியர்களை உருவாக்கியுள்ளார்.
*Mwum
இந்த வகையிலே அவரது சாதனை ஈடு இணையற்றதாக விளங்குகிறது. பொதுவாக இவரது இலக்கிய நோக்கிலே விமர் சனத்தன்மை முனைப்பாக இருந்தது. ஆகையினல் தாம் பிழை யெனக் கண்டவற்றை வெளிவெளியாக எடுத்துரைத்து வந் துள்ளார். இவரது மறைவு மரபுவழிக் கல்வியின் வளர்ச்சி க்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவால் துயருறும் குடும்டத்தினர், அபிமானி கள், மாணவர்களுக்கும் அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன்
*தாயகம் தனது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறது.
- ஆகிரியர் குழு

ALSLSSASASAAAAA LALAeATA qLqA LMLL qAASqS LAMALMLSS qSq LJSLLLAJSLLLL LLALSLMLMALASSSLLS SqTSTeALLASMSMqMALeSSLASAAAA
5ேருநாகலிலிருந்து சில மைல் தொலைவில் உள்ள மாவத்தகம என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் புஞ்சி பல டா. கமுகு, தென்னை, வாழை, பலா மரங்களோடு கோப்பி, மிளகு ஆகிய பணப் பயிர்களும் நெல்லும் செழித்துக் கொழிக்கும் அழகிய கிராமம் மாலத்தகம.
ஆனல் இந்த அழகு, கண் களால் மட்டும் பார்த்து அநு விக்கக் கூடிய ஒன்ருகத்தான் ஞ்சிபண்டாவின் குடும்பத்தின ரைப் பொறுத்தவரை இருந்தது. நிலம் என்னும் நல்லாளால் புறக் கணிக்கப்பட்டவர்கள் அவர்கள் ஹாஜியார் முகமது இபுராஹீம் அவர்களின் தென்னந் தோட்டக் காவலாளி, புஞ்சிபண்டாவின் தந்தை அப்புஹாமி. அவன் ஒர் அப்பாவி, கள்ளங்கபடு இல்லாத சு பாவம், தானும் தன் மனைவி மெனிக்காவும் பிள்ளைகளும் அது பவிக்கும் துன்பங்கள் எல்லாம் பூர்வகர்மப் பயன் என்பது அவ லது அழுத்தமான நம்பிக்கை. இதன் காரணமாக யார் என்ன தொல்லை கொ டு த் தாலும் பொறுத்துப் பொறுத்துச் சூடு சுரணையற்றவனுகவே அவன் ஒருநாள் செத்துப் பேஈ ஞன் .
ஹாஜியாரின் தோட்டத் திலேயே ஒரு கொட்டிலில் வாழ்க்கை நடத்திக் கொண்டி
தTள் .
~~இ சாம்பவன் ருந்த புஞ்சிபண்டாவின் குடும்
பத்தினருக்கு அப்புஹாமியின் மர ணத்தோடு போக்கிடம் இல்லாது போய்விட்டது. புஞ்சிபண்டா வுக்கு அப்பொழுது பத்துவயது . இரண்டு தங்கைகள், ஒரு தம்பி, முப்பத்தைந்து வயதில் அறுபது வயதுக் கிழட்டுத் தனத்தை அடைந்துவிட்ட தாய் மெனிக்கா எல்லாரும் எங்கே போவது? சமையலுக்கான இரண்டொரு மண்பாத்திரங்களும், கறள் கட் டிய றங்குப்பெட்டி ஒன்றும் அதனுள்ளே அடைந்து வைத் திருந்த கிழிந்ததும் அழுக்கானது
மான நாலு ஐந்து சா ற ம், சட்டை துணிமணிகளுந்தான்
அவர்களின் சொத்துக்கள்! "
மெனிக்கா ஹாஜி யாரின் கால்களில் விழுந்து கதறி அழு ர். 'மாத்தயா, இந் த க் குஞ்சு குருமானுடன் நான் இனி என்ன செய்யிறது ? எனக்கு ஒரு
வழி சொல்லுங்கோ",
மெனிக்காவின் கலைந்த கூந் தலும், கண்களை முட்டி உடைத் துப் பெருகிய கண்ணிரும், கசங்கி அழுக்கேறிய கந்தைத் துணியும் ஹாஜியா ரைக் கலக்கிவிட்டன. அழகையே ஆராதித்து வந்த அந்தப் பெருந்தனவந்தர், அவ லட்சணங்களைக் கண்டால் முகத் தைச் சுழிப்பதையே வழக்கமாக கொண்டவராயிருந்தும் அந்தக்
5

Page 5
கனத்தில் பல வீ னப் பட்டு ப் போனுர் .
"அழாதை மெனிக்கா, f உன்ர தொட்டிவிலே தொடர்ந்து இருக்கலாம். புதிசாய் வரப்போ கும் காவலாளி புத்ததாசாவிற்கு வேறை ஒரு கொட்டில் போட் டுக் கொடுக்கலாம். நீயும் பிள் ளேயரும் தேங்காய் பொறுக்கிப் போடுங்கோ நீயும் புஞ்சி பண்டா வும் தேங்காய் உரிச்சுத் தரலாம்; மட்டையளே உள்றப்போடலாம். அதுகளுக்கான கூலி நான் தருவன்."
ஹாஜி யார் இப் படி ச் சொன்ன பொழுது மெனிக்கா ஆறுதல், நன்றி, மகிழ்ச்சி ஆகிய உண்ர்வுகளால் விழுங்கப்பட்ட வளாப் மீண்டும் ஹாஜியாரின் கால்களில் விழுந்து அழுதாள்.
இதுவரை வாழ்க்கை பற்றி எவ்வித நம்பிக்கையோ கனவு களோ இல்லாது ஐந்தறிவுப் பிராணிபோலவே உண்பதும், உறங்குவதும், பிள்ளேயுற்பத்திக் கான சுருங்களில் தன் சுனேவி னுேடு இணேந்து செயற்படுவதும் உடல் அலுத்துக் களத்து விழும்
வரை பாடுபடுவதும் மட்டுமே செய்துவந்த மெனிக்கா இப் பொழுது சற்றுப் பொறுப்
புள்ள சி யோ டு ம் பி டி ப் ri வ' ற் ன சு  ைய நோக்கத் தொடங்கினுள். தோட் டத்து வேலைகளைச் செய்வதோடு காலே நேரத்தில் அப்பம் சுட்டு, புஞ்சிபண்டாமூலம் கிடைகளுக் குக் கொடுப்பித்து அதிலும் நாடி
Ё.
காசு சிம்பாதிகத நாடங்கி ஞள்.
"புஞ்சிபண்டானைப் படிப் பிடிச்சு உத்தியோகத் த ஐ ப் ஆக்க வேணும் பெண்பிள்ளேயண் பும் ஆனரை படிப்பிச்சு நல்ல வங்க கையிலே பிடிச்சுக் கொடுக் வேணும். கிடைக் ட்டி ரம்பண் டாவைத் தமையனுந் தமக் என: மாரும் பார்த்துக் கொள்ளுவினந் தானே?" இப்படியே சிந்தித்துத் திட்டமிட்டு மிகுந்த சிக்கனமாக வும், மனக்கட்டுப்பாட்டுடனும், கஷ்டங்களேச் சகித்துக் கொண்டு
பிள்ஃாக்ளே
விெக்கா,
வ எ Tத் தி " பி ,
புஞ்சிபண்டா நல்ல சிறுவின்
தாயிலும் உடன் பிறப்புக்களி ஓம் அவனுக்கு உயிர். தனது புரிந்துகொள் ו"Lו שלj}{3}ad, הTה ור3 எாத அவன் தன் கண்முன்பு சுமுகங்கன்றுகள் போலக் கிசுகிசு என்று மதாளித்து வளர்த்து கொண்டிருந்த சகோதரங்களேப் பார்த்து பிரமித்துப் போஒன். அந்தப் பிரமிப்பிலே பெருமிதங் கலந்த மகிழ்ச்சியும் இழையோ டத்தான் செய்தது. ஆனல் அதே வே3ள தேய்ந்து தேய்ந்து மரண வாசஃலு நெருங்கிக் கொண்டிருந்த தாயைப்பார்க்கும் பொழுதெல் அவனுடைய தெ ரே க வேதனேயால் உடைப்பெடுத்து உருகி, அது கண்களிலே வந்து தேங்கியும் விடும்.
ауіптігі
இப்பொழுது புஞ்சிடஸ்பத்தொன்பது வயதுக் கார்) ஜி. சி. ஈ பாஸ் EST IGyf? 3? I šķi

கள் தேடி انِي إلڑی۔'Tآل انتق நிஃiயில்
இலங்கைக் காலாட்படைக்கு ஆள் சேர்க்கப்பட்ட பொழுது இரண்டாவது யோச
*னக்கே துடர்  ைவ க் கா து அதற்கு விண்ணப்பம் அனுப்
பினுன்
பெனிக்காவிற்கு அவ ன் முடிவு கொஞ்சமும் பிடிக்கவில்ே "புத்தா நீ என் ரை மூத்த மகன். :னக்கு ஒண்டெண்டால் நானும் உன்ர தங்கச்சியுள், தம்பியும் சான்ன ஆவம் எண்டு போகிச் சியே அதோடை, உயிரை வாங் கிற கொலேத்தொழிலுக்கு நான்
உன்னே எப்படி அநுமதிப்பன்சி' என்று மெனிக்கா மகனின் முகத் தைப் பாசத்தோடு தடவிக்
கொண்டு அழுதாள்.
"அம்பே, படையிஃ சேருற வனெல்லாம் சா கிற தி ல் லே அதோடை இலங்கைப்படை எப் டவாவது போர்செய்ய வேண்டிய
தேவை ஏற்படப் போகுதே? ஏதேன் குழப்பங்கள் உள்நாட்
புலே ஏற்பட்டால் அடக்கிறது, வேஃலநிறுத்தம் என்று உண்டா ஒல் அந்தநேரத்தில் அரசாங்கக் கட்டளேயை ஏற்று வேலேசெய் கிறது இப்படியான விஷயங்கள் தானே? கைநிறையச் சம்பளம், சாப்பாடு, சீருடை, பலவித அல :ன்கள் எண்டு கிடைக்கும்.
நீங்கள் ஒண்டுக்கும் யோசியா தையுங்கோ' என்று அவன் ம்ெனிக்காவை ஆறுதற்படுத்தி ஜன்.
வஞ்சகமில்லாத வளர்ச்சியும் சுறுசுறுப்பும், வேலேயைப் பெற வேண்டும் என்ற து டி ப் பும்
கொண்ட புஞ்சிபண்டா படை வீரனுகத் தெரியப் பட்ட து பெரிய விஷயம் அல்ல. ஆறு மாதம் தியத்தலாவை பில் கடும் பயிற்சி பெற்றபின் சிறந்த பனவிரன் என்ற விருதுகளும் பெற்: சிங்கள் றெஜிமென்றில் அே னுக்கு இடமும் கிடைக்கிது.
தாய்க்குச்
åነ'UI!
புஞ்சிபண்டா சு றி து போல் நான்கு ஷங்கள் எந்தப் பிரச்சினேகளும் இல்லாது கழிந்தன.
1983 ஆம் ஆண்டு பிறந்தது.
"உங்களே யாழ்ப்பானத்தில் பலாலி இராணுவ முகாமிற்கு அனுப்புகிருேம், அங்கு நிைேம கட்டுக்கடங்காததாகி வருகிறது. இயக்கங்களின் பெயரால் தமிழ்ப் பொடியளின் அட்டகாசம் ஆஃப் யெடுத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் ராணுவ விTர்கள். பர ஒனம் உங்களைத் தேடி ரலாம்: மரணத்தைப் பிறருக்கு அளிக்க நீங்களும் அதைக் கைகோத்துச் செல்ல நோலாம். எ தீ ம் ஆ ம் தயாராயிருங்கள். இரக்கம், ! க்
கம் என்பதெல்லாம் நெருக்கடி காலத்திலே செல்லாக்காசுகள். அவற்றை இருக பங்களிலிருந்து
கஃாந்து விடுங்கள் யாழ்ப்பானத் திலே சேவைசெய்ய உங்கள் ஒவ் வொருவருக்கும் மாதந்தோறும் விசேட அவைன்ஸ்ாக மாதம் 75 - வழங்க ப்படும். உங்கள் உயி ருக்கு ஆபத்து உ எண் - 7 ஞ ல் gl || $( '#', ଶif git ஓ ப் புேக் க ஈ என வயதுக் கால ம்
சம்பளம் உங்களின்
s! Sort for [l];if குடும்பத்

Page 6
நிற்கு வழங்கப்படும். அதன் பிறகும் ஓய்வூதியமும் கிடைக் கும். இவற்ருேடு இறக்கும் ஒவ் வொருவருக்கும் ஒருலட்சம் ரூபா நட்ட ஈடாக வழங்கப்படும்"
படைப்பிரிவுத் தஃலவரின் பேச்சைக்கேட்டு ராணுவ வீரரி டையே ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் பேச்சுமுடிந்ததும் அவர்களின் த்ரகோஷம் அந்த மண்டபத் தையே அதிர வைத்தது.
அநியாயமாக உயிர் க ாே அழிப்பதற்கு விசேட அலவன்ஸ்! ஒரு யுத்துவீரனின் உயிர்போனுல் அந்த உயிருக்குப் பெறுமதி ஒரு லட்சம் ரூபாவும் இறுதிவரை சம்பளமும், ஓய்வூதியமுமே!
இந்தக்கருத்தை ஜீரணிக்க முடியாத ஒரே ஒரு ஜீவன் அந் தப் படை முழு வ தி லு மே புஞ்சிபண்டா மட்டுமே. அவன் வேறு தொழில் கிடைக்காமல் படையில் சேர்த்தவன்; பன்ச8ல யில் மைத்திரி என்னும் சுருனே பற்றியும் அஹிம்சை பற்றியும் பிக்குகளின் உபதே சங்க ஆள் க் கேட்டு உள்ளத்தில் இரக்க உணர்வை வளர்த்துக் கொண்ட வன். "ஓர் உயிரைக் கொடுக்க முடியாதவனுக்கு அதனே எடுத் சுவும் அதிகாரமில்ஃ' என் இழி எப்பொழுதோ குருனுன்சே ஒரு வர் உபதேசித்தது அவனது நிஜன வில் அவ்வேஃாயில் பவனி allյե நிதி
அவன் மற்றவர்கள் போல ஆரவாரிக்கவில்ஃல. கைதட்ட வில்லே, அசையாது சிஃபோலச்
8
சிந்தனையில் ஆழ்ந்து உறைந்து போய்க் கல்லாகிவிட்டான். பச் tத்திலிருந்த சகா அ வ னே த் தோளில் தட்டிச் சுயநினேவிற்கு கொண்டுவர வேண்டியதாயிற்று.
படைவீரர்களின் ஆரவார மும் குதூகலமும் சாப்பாட்டு மண்டபத்திலும், பா சி லும், புகைவண்டியிலும் தொடர்ந்த
வண்ணம் இருந்தன. ஒரு சான் தாரத்திலே மரணத்தை நிறுத்தி வைத்துக் கொண்டு அதுபற்றித் தாங்கள் சற்றும் சர்ஃப் அண்டய வில்லே என்று வெளியிற் காட்டிக் கொள்கிருர்களா?
தங்களின் மனத்தில் எழுந்த அச்சத்தை மறைக்கவும் மறக் கவும் இப்படி எல்லாம் நடந்து கொள்கிருர்களா?
நண்பர்களுடன் சிரிதர பார்த்துளிட்டு, ஏக எந் தம் நிறைந்த நள்ளிரவில் செறிந்த இருளினி டையே வானளாளி மரங்கள் பூதங்கள் பேய்பிசார் களாகத் தோற்றுவதைக் கண்ட்
படி நடந்துவரும் சிறுவர்கள் உரத்துக்கத்தி உற்சாகமுடைய
வர்களாய்க் காட்டுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்
Llysgy&rAr y griw LT சாவுக்குப் பயப்படவில்லை. ஆனுல் சாவைப் பிறருக்கு அளிப்பதற்கே பயந் தான். தன்னுல் அளிக்கப்படாத ஒன்றைத் தானே கவர்வது கொள்ளேயல்லவா? அ  ைதத் தானும் செய்து தானுக வேண்
 

| மின்னன் என்றெல்லாம்
திமா இவ்வாறு எண்ணி எண் ஈரியே அவள் மறுகிஞன்.
La " ???+ Ior rigaj tio #2 (byFITH, I DIT ளே இருப்பவன் எவரோடும் கலகலப்பாகப் பேசுபவன், குடிக் காமலே குடித்த வர் கர்ரி லு ம். மே"பாகக் கலட்டா பண்ணு - Fall sit, 53 LIGIJFT | rrr - gan fisi
ಚಿಳಿಸಿ: படையணியிலே பெயர் பெற்றி ருந்த புஞ்சிபண்டாவின் அசாதா
ரன மெளனமும், தனிமைவிரும்
பும் அவன் சகாக்களுக்கு வியப் பாயிருந்தன.
அவர்கள் அவரோக் கோட்டா பண்ணிஞர்கள். சா வுக் குப் பயந்து விட்டான் என்று ஏள னம் செய்தார்கள். ஆன ல் அவனே அவனது தியான யோகத் திலிருந்து விடுவிக்க எவராலும் முடியவில்&ல.
ஒருவாறு பலாலி ராணுவ
முகாமையும் வந்து சேர்ந்தா யிற்று. இரவு போனது பகல் வந்தது. பகல் போய். இரவு
வந்தது. மாறி மாறி.
ஒவ்வொரு நாளுந்தான் எத்
தண் சம்பவங்கள். எத்தஐ கொடிய சாடுகள்.
படைலீரர்கள் ட்றக்குகளி
ஆலும் கவசவாக ாைங்களி லும் ஏதோ பகை நாட்டைப் பிடிக்கப் போவது போலக் காஃலயிலே
புறப்பட்டுச் செல்வார்கள் சந்
தேகத்துக்குரிய பொடிய3ளப் பிடிப்பார்கள். அவர்கள் ஒடிஞல்
யந்திரத்துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவார்கள். அவர் களின் இலக்குகள் எப்பொழுதும் இயக் கப் பொடியளைத்தான் அழிக்கும். சிதைக்கும் என்பதில்லை.
பெண்கள், சிறுவர்கள், சிறு மிகள், குழந்தைகள், முதியவர் கள் என்று அப்பாவிப் பொது மக்களும் அடிக்கடி இரையாவ துண்டு. ஆணுல் படைவீரர்களின் கணிப்பிலும் அரசுச் செய்தி நிறு வனங்களின் செய்திகளிலும் இவர்கள் எல்லாம் பயங்கரவாதி #ಣೆಗೆ, frir!
இடையிடையே போராளி கனின் கண்ணிவெடிகளுக்கு ப் படைவீரர்களும் வாகனங்களும் இரையாவதும் சகஜமாயிருந்தது.
மரணத்தோடு நடத்தும் பயங்கரவி3ளயாட்டில் அழிப்ட் வர்களும் அழிக்கப்படுபவர்களும் போராளி சு ஸ், படைவீரர் கிள், மக்களாயிருக்க அரசின் மேவிடமோ மாநாடுகளேயும், விவாதங்களையும் ஒழுங்காக நடத் திக் கொண்டு அமர் # is q} it aff, ஆடம்பரமாக, ஆனந்தமாகத் தொடர்ந்து சேவை யாற்றி க் கொண்டிருந்தது.
பலாலி இராணுவ முகாமில் எப்பொழுதும் ஒரு இறுக்கமான திெருக்கடி நிறைந்த சூழலே காணப்பட்டது. நாட் செல்வச் செல்லப் படைவீரர்களின் மனங் கள் இறுகிக் கட்டிபட்டுக் கல்லா கிக் கொண்டிருந்தன.

Page 7
புஞ்சிபண்டாவோ கரையில் வீசப்பட்ட மீனேப் போலத் துடி துடித்தான். கடமைக்காக அவன் தனது சகாக்களோடு வெளியிற் செல்லும் போதெல்லாம் தாங்க வியலாத நரசுவேதனேயை அநுட் வித்தான்.
அன்று திருநெல்வேலிச் சந் தியில் நள்ளிரவில் டிறக்கிலே சென்ற இராணுவத்தினர் பதின் மூன்றுபேர்கண்ணிவெடிக்குஇலக் காகித் துண்டுதுண்டாகக் கிடந்த பொழுது. முகாம் எங்கும் ஒரே அமளிதுமணி.
படைவீரன் ரினது முகத்திலும் வெறித்தனமே நர்த்தனமாடியது "இந் த த் தமிழ் வேசிமக்களதி தொலைக்க வேணும். ஒருத்தனே யும் மிச்சம்மீதி வைக்கக்கூடாது'
ஒவ்வொருவ if (L říši I. T
அடுத்தநாள் வெறிப்படை புறப்பட்டது. திருநெல்வேலிச் சந்தியிலிருந்து கந்தர்மடச் சந்தி வரை விடுவீடாகப் புகுந்து அப் பாவிமக்களே இளேஞர்கஃப் பலி பிட்டுத் தனது வெறியைத் தணித்துக் கொண்டது.
"பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்ற புதுமையான நீதியைக் க்ண்டு புஞ்சிபண்டா தன்னுள்ளே செத்துப்போனுன், அவன் நெஞ்சு
வே த ஃனயால் து வண்டு போயிற்று.
ஆல்ை அவனுல் என்ன
செய்யமுடியும்? 'அம்மே, உங்
O
கடை புத்திமதியைக் கேட்காமல் படையிலே சேர்ந்தன். இந்த அக் சிரமங்களே கொஃ:களே, கொள் ளேகளே என்னு: சகிக்க வில்லேயே நான் என்ன செய்ய:
என்று அவன் மல்கூடத்திற்குள் பூட்டிக்கொண்டு இருந்து : நிக் குமிழி و لأن لا تزيين إلى
(J{ಷ್ಠಿ..!!
"என் Tருக்கும் இரத்தம் சிவப்பு. அதுபோலத்தானே எல் வாருக்கும் ஒரே மா திரி உயிர் தமிழ&னக்கொல்வதும் சிங்கள வஐனக் கொல்வதும் பல்லாப கொலேதானே? சித்திரவதைத் துன்பங்களும் சாவின் இழப்பு களும் எல்லாருக்கும் ஒரேமாதி ரித்தானே?” என்று அவின் நினைத்து நினைத்து வேதனையால் சாம்பிப்போனுன்
இலங்கையின் பாகங்களிலும்கொலே சுெ தீவைப்பு, கற்பழிப்பு ரவதை என்று ஒரே பயங்கரமயம் இனவெறி, மொழிவெறி. அதி சாரவெறி என்று அத்தள்ே வெறி களும் தலே எடுத்துப் 3 I II u rr...' - li li ஆடிய பொழுது.
சித்தி
புஞ்சிபண்டாவுக்கு வாழ்வே வெறுத்துப் போப் வி ட் டது. மிடாக்குடியும், கலாட்டாவும், ஆட்டமும் பாட்டுமாய் அவன் தன் கவல்ேகளே மறக்க முற்பட் டான். தன் சகாக்களப்போலவே வெளியிலே சென்று கண்கன் மூடிக் கொண்டு இலக்கின்றிச் கட்டு அந்தப் பயங்கரச் சப்தத் தில், மரண ஒலங்களில் ஆழ்ந்து

* உலகை அச்சுறுத்தும் அணு விபத்து
*1ண்மையில் சோவியத் யூனியனில் இடம்பெற்ற சேர்னே பில் அணு விபத்தினுல் ஏற்பட்ட தாக்கம் உலக மக்கள் மத்தி பின் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்துடன் உல் கில் ஏற்பட்ட அணுவிபத்து 153 ஆகவும் உயர்ந்துள்ளது. இவ் வித அணுவிபத்திலிருந்தும் அணு ஆயுதப் போரில் இருந்தும்
மனிதகும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதே Iէ քllժե
மக்களின் இன்றைய அவாவாகும்.
போக முயன்ருன் ஆணுல் எதுவும் முடிந்தது. ஆணுல் ஏதும் அறி
அ எ எனு க் த மனச்சமாதானம் அளிக்கவில்ஃப்
அன்று பிறிகேடியரின் கட்ட
ளேப்படி அனுைம் மேலும் நூற் றுக்கணக்கான படைவீரர்களும் டிரக்குகளிலும் கவசவாகனங்க எளிலும் கலசுப்பிராந்தியமாகிய வல்வெட்டித்துறைக்குச் ரேன் ரூர்கள்,
அதிகாஃப் பொழுது. தமக்கு நிகழப்போவதை அறி பாத சனங்கள் தமது நாளாந் தக் கடன்களில் ஈடுபட்டிருந்த
வேளே அது. ராணுவத்தின் வெறியாட்டத்திற்கு உ க ந் த நேரம்.
வீடுகள் மீது குண்டுவீச்சு. சிதறி ஓடியவர்கள் மீது பந்திரக் துப்பாக்கிப் பிரயோகம். அகப் பட்ட பொருள்களேக் கொள்ஃள படித்தல்.
தனிமையில் அக ப் பட் . பெண்களேப் பலவந்தப்படுத்தி.
STåstrI. கொள்ள்
புஞ்சிபண்டாவால் வற்றையும் சகித்துக்
山T占 அபாக்கியவதிகளான அப் பாவிப் பெண்களே அவர்களின்
அங்கங்களேக் காமவெறிக்கு இலக்காக்கி அந்தப் பயங்கர வே 3ள பி லும் இ ன் பசு கம்
கண்டவர்களே அவளுல் மன்னிக் கவே முடியவில்லை.
புஞ்சிபண்டாவின் பந்திரத் துப்பாக்கி அந்தக் காடையர்: நோக்கித் திரும்பியது.
ஆணுல்.
அ வ ஃன் முந்திக்கொண்டு வந்த துப்பாக்கிச் சன்னம் ஒன்று அவன் தலேயில் ஒருபுறமாகப் பாய்ந்து மறுபுறமாக வெளிப் பட்டு.
புஞ்சிபண்டா த  ைரயில்
சாய்ந்தான். மங்கிக்கொண்டி குந்த அவன் கண்களிலே அவ தினது தாயும் சகோதரிகளும்
தேவதைகள் போல மிதக்க. "அம்மே” என்ற இறுதி ஒலத் துக்குத் திறந்தவாய் திறந்திருக்க அவன் கண்கள் மூடிக்கொண்
Lt. 贵
l

Page 8
தி - இ9 'தாயகம்' ஆய்வரங்குகள்.
35 Tuzli இதழ்களுக்கான ஆய்வரங்குகள் யாழ்ப்பாத்தும், கொழும்பு, தலவாக்கொல்லே ஆகிய இடங்களில் நடைபெற்றன.
யாழ். பல்கலைக்கழகத்தில்.
யாழ்ப்பாணத்தில் 19 3 1988 அன்று யாழ் பல்லேக்கழக கைலாசபதி கலேயரங்கில் திரு. இ. முருகையன் தஃப்மையில் ஆய்வு ரங்கு நடைபெற்றது. பேராசிரியர் அ சண்முகதாஸ், திரு சொக் ஆன் ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர். தேசிய கண் இலக்கிய பேரவையும், யாழ் பல்கலைக் கழகத் தமிழ்மன்: மும் இணேந்து இவ்வாய்வரங்கை நிகழ்த்தியது. திரு. சு. மணிவண்ணன் வரவேற் புரையும் திருவாளர்கள் பொ. செங்கதிர்ச்செல்வன். க. தணிகாசலம் ஆகியோர் நன்றியுரையும் கூறினர்.
கொழும்பில்.
கொழும்பில் 6 , f - 86 அன்று இஸ்லாமிய வாவிட முன்னணி மண்டபத்தில் திரு இ . தம்பையா துல்லமையில் ஆய்வரங்கு நடை பெற்றது. கவிஞர் மேமன்சவி திரு . லெ முருகபூபதி திருகே . செந்திவேல் ஆகியோர் ஆய்வுரை நிக்ழ்த்தினர், தேசிய சுலே இலக் கியப் பேரவையின் கொழும்புக்கிஃா ஏற்பாடு செய்திருந்த இவ் ஆய்வரங்கிற்கு திருஅ சந்திரகாசன் நன்றி கூறினூர்.
மலேயகத்தில்.
தலவாக்கெல்ஃலயில் 15 5 88அன்று ஆய்வரங்கு திரு வி. விஜயன் தலைமையில் நடைபெற்றது. திருவிாளர்கள் பல்விகை தமார், கவிஞர் அகளங்கன், என் . இரவீந்திரன், இ , தம்பையா ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தினர், திரு சோ. தேவராசா நன்றி கூறிஞர். இவ்வாய்வரங்கை தேசிய கலே இலக்கியப் பேரவையின் மலேயகக் கமிட்டி ஒழுங்கு செய்திருந்தது.
இம்மூன்று ஆய்வரங்குகளின் மூலம் தாகம் ஆக்கபூர்வமான விமர்சனங்களேயும் தனது இலக்கியப் பயணத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய முன் அனுபவங்களேயும் பெறக்கூடியதாக இருந்தது. ஆய் அரைகள் யாவும், தஃவயங்கம், சுட்டுரை, சிறுகதை, கவிதைகள், இதரவிடயங்கள் என்ற வகையில் குறிப்பானதும் காத்திரமானது மான் கருத்துக்களேக் கொண்டிருந்தன. பல்வேறு நிலகளிலும், தரங் கிளிலும் உள்ள ஆய்வாளர்கள் இவ் ஆய்வரங்குகளில் பங்குகொண் டமையும், பெருந்தொகையான இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கன. தாய இத்தின் வளூர்ச்சித்து இவ் ஆய்வரங்குகள் பயன் உள்ள பங்களிப் பாகும். மேலும்" இவை ப்ோன்ற ஆய்வரங்குகளே தாயகம் ஆன லுடன் எதிர்பார்க்கின்றது. ஏனெனில் ஆக்கபூர்வமான கருத்து விமர்சனங்கள் தாயகத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாகும். 4

營 பண்பாட்டுப் பாதுகாப்பு
ஒ இ. பல சுந்தரம்
சிேனத்தினரிடையே பரம்பரை பரம்பரையாக வழங்கிவரும் சீரிய விடயங்களின் தொகுப்பே அன்வினத்தாரின் பண்பாடு எனக் கருதப்படுகின்றது. இப்பண்பாடு சமூக தடைமுறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், கிலேநிகழ்விகள், பண்பாட்டை மதிக்கும் மனித குலத்தின் உரிமை உணர்வுகள் ஆகிய இன்னுேரன்ன நடவடிக்கை களின் மூHம் பாதுகாப்புப் பெற்றுவரும் வாய்ப்பினேப் பெறுகின்றது. வளமான, அமைதியான, நிலயான மக்களின் வாழ்க்கை நெறி போடு பண்பாடும் வளமாகவும் நிலையானதாகவும் வழங்கி வருகின் றது. மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் நேரடி 'ாகம் உடனுக்குடனுகவும் அவர்களது பண்பாட்டு வாழ்க்கை பிலும் திடீர் மாற்றங்களையும் பாதிப்புக்களேயும் ஏற்படுத்துகின்றன. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி' என்பது ஆன்ருேர் வாக்கு. எனவே ஒரு நாட்டின் பண்பாட்டைக் கட்டி வளர்ப்பதிலும் பேணு எதிலும் (அழிப்பதிலும்) அந் நாட்டின் அரசும் கணிசமான பங்கைப் பெறுகின்றது.
இயற்கைக்கு மாருகப் பேராசை பிடித்த கொடுங்கோலர் ஆட் சியும் அவர்களின் அடிவருடிகள் நாட்டுமக்களே அல்லற்படுத்தும் போக்கும் இன்று இல்லாமல் இல்லே. எனவே இதற்கு இத்தகு குழி வில் அரசு பண்பாட்டுப் பாதுகாவலனுக இருக்கும் தகைமையை இழந்து விடுகிறது. இச் சந்தர்ப்பங்களிலே வள்ளுவர் கூறிய குறள் மொழி பொருத்தமாக அமைகிறது.
"பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மண்' எனரே அரசு பண்பாட்டைப் பாதுகாக்கத் தவதுமிடத்து பண்பாட் டுப் பாதுகாவலராம் பொதுமக்கள், பண்பாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுதல் மிக இன்றியமையாததா தும் அதனே அவர்களின் பண்பாட்டுணர்வுடனுன கடமையுணர் Gjura. GJIT,i).
பண்பாட்டை உருவாக்கியவர்கள், வளர்த்தவர்கள், பாதுகாப் Tiri īir rari அப்பண்பாட்டின் உறுப்பினர்களே அதன் உரிமை யாளர். எனவே பண்பாட்டு உரிமையாளரே அதன் பாதுகாப்புக்கும் உரிமையாளராகின்றனர்.
மொழி, இலக்கியம், மற்தும் பல்வேறு கலேவடிவங்கள், பழக்க வழக்கங்கள், தொல் பொருட்கள், சமயம் முதலான பண்பாட்டு விட
3.

Page 9
பங்கள் பற்றிச் சிந்திக்கும்போது, அப்பண்பாட்டின் 'உரிமையாளர்" ானப்படுவோர் அங்கு முதன்மை பெறுகின்றனர். அச் சந்தர்ப்பங் களில் அவர்களிடம் உளவியல் ரீதியான பண்பாட்டுப் பெறுமானங் கள் பற்றிய சிந்தனேகள் தோற்றம் பெறுகின்றன. எனவே ஒவ்வொரு மனிதனதும் சிந்தனேயின் பெறுமானங்களே, அவனேப் பண்பாடுபறி றிச் சிந்திக்கவும், அதனேப் பேணவும் வழிவகுக்கின்றன. பண்பாட் டைப் பேணுவதற்குரிய உந்து சக்தியாகவும் அவை அமைகின்றன.
இன்று, இலங்கையில் தமிழர் பண்பாட்டுக் கோலங்கள் சீரழிக் கப்படுகின்றன. இவற்றைப் பேணவேண்டும், சீர்ப்படுத்தவேண்டும் என்ற உணர்வு முதலில் உளநோக்கு அடிப்படையிலேயே தோன்று கின்றது. அதன் விளேவாக உரிமையுணர்வு தலையெடுத்து, செய லுனர்வைத் துண்டுகின்றது. அதன் பிரதிபலிப்பாகப் பண்பாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டுமாயின் "உரிமையுணர்வு" ஒவ் வொருவரிடமும் முதன்மைப்பட வேண்டும் என்பது தோற்றமாகின் ,D51 •
பாரம்பரியக் கலைகள், நாட்டார் வழக்காறுகள் முதலியன அழிப் பாரின்றியே அழிந்து கொண்டு வருகின்றன. இதற்கு முதற்காரணம் இவற்றின் உரிமையாளர்கள் இவற்றினின்றும் அந்நியப்பட்டு விடு கின்றமையாகும். நவீன நாகரீக மோகம் அத்தகு உரிமையாளர் களே அந்நியப்படுத்துகின்றது. எனவே பாரம்பரியங்கள் நாட்டார் வழக்காறுகள் முதலான பண்பாட்டு விடயங்கள் அழிந்து போகாமல் பாதுகாப்பதற்கு முதலில், அவற்றின் மீதான உரிமை யுணர்வு அவ்வுரிமையாளரிடம் தோன்றுதல் அவசியமாகின்றது.
பண்பாட்டு விடயங்களப் பொறுத்தபட்டில், உரிமையுணர்வு 'பொது நோக்கு" உடையதாக இருத்தல் மிக இன்றியமையாதது. 'சிறுவட்டம்" அல்லது 'தனிநபர்" என்ற அடிப்படையில் உரிமை நோக்கு அமையும்போது, பண்பாட்டுப் பாரம்பரியங்கள் அழிந்து போவதற்குரிய வாய்ப்பும் வசதிகளும் சுலபமாகி விடுகின்றன. சித்த மருத்துவம், அண்ணுவி மரபுக் கூத்துகள், காவடி, கரகம், பன்றமேளக் கூத்து, மகுடிக் கூத்து முதலான கலைவடிவங்களும், அறி வியல் விடயங்களும் சிறு வட்டத்தினுள் மறைக்கப்பட்டு வரும் இரங் கத்தக்க பரிதாப நிலேயினேயும் காணக் கூடியதாக இருக்கின்றது. எனவே பண்பாட்டுப் பாதுகாப்பு என்ற விடயத்தில் உரிமை" உணர்வு "உரிமை கொண்டால்" என்ற விடயங்கள் எவ்வாறு அணு சுப்பட வேண்டும் என்பதும் முக்கியத்துவம் பெறுகின்றது.
'கலேஞர் கர்வம் கொண்டவராக இருக்கக் கூடாது" என்ற உண்மையைப் பல கலேஞர்கள் ஏற்க மறுத்தாலும், அந்தப் பொது உண்மையின் மூலமே கலேவளரவும், பரவல் அடையவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இங்கு உரிமை-பொதுமை அடையும் போக்கைக் காண்கின்ருேம்.
*

இக் கட்டுரையில் எம்மவரின் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் பலர்ந்து வளர்ந்துவந்துள்ள சித்தமருத்துவச்சுஃபைச் சான்ருக எடுத்து உரிமை-பொதுமை-கலேப் பாதுகாப்பு என்ற விடயங்கள் அணுகப்படுகின்றன. தமிழ் நாட்டின் சுதேசிய மருத்துவ சிந்தனேகள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாய்மொழி மரபில், குரு சீட பரம்பரை பில் பேணப்பட்டும், ஏடுகளில் எழுதிவைக்கப்பட்டும் வந்துள்ளன. அவற்றைக் காட்டுவாரின்றி அறியுமாறில்லே. இடைக்காலத்தில் வாழ்ந்த சித்தர் இம் மருத்துவ நெறிக்கு அருந் தொண்டாற்றிச் சென்றனர்.
சித்தர் மொழியில் பரிபாசைகள், மறைமொழிகள் ஏராளம்: ஏராளம். குருவின் மூலமே சித்த வைத்திய உண்மைகள் அறிந்து கொள்ளத்தக்கனவாக உள்ளன. ஒருவர் தாமாகவே நூல்களேப் படித்து நோய்களே அறிந்துகொள்ளவோ மருந்துகளேச் செய்யவோ முடியாது, குரு சிட பரம்பரையில்தான் இக்கலே போதிக்கப்பட வேண்டியது. ஆகவேதான், “தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது என்று முன்ஞேர் மொழிந்தனர். கைபாகம், செப்பாகம், புடபாகம் என்ற மருத்துவ முறைகள் குருவை அணுகி காட்சிப் புலஞல் அறியவேண்டியவையே.
எனவே "குரு" என்ற அந்தஸ்திலுள்ள அனுபவமிக்க வைத்தியர் நள் தம்மை அணுகும் சிறந்த மானவராம் இளேய தஃமுேறை வைத்தியர்களுக்கு அவற்றைப் போதிக்க வேண்டியது அவரது கடமை; அவரது உரிமை, அக்கடமை தவறும்போது அவரோடு அவருக்கிருந்த உரிமையும் அழிந்துபோகும் என்பதை அவர் உணர் வாரா?
சித்தமருத்துவம் சம்பந்தமான நூற்றுக் கணக்கான பழைய ஒலேச்சுவடிகள் கிராமங்கள் தோறும் வைத்தியர்களிடமும், அவர்களது பரம்பரையினரிடமும் தேங்கிக்கிடக்கின்றன. அவற்றிற் பெரும்பாலானவை பாதுகாப்பற்றும், பயனற்றும் செல்லரித்துக் கொண்டிருக்கின்றன. அன்றியும் சித்த வைத்தியர்களின் அனுபவ ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புக்கள் மருந்து முறைகள், மருத்துவ முறைகள் என்பன நாளுக்கு நாள் அருகிக் கொண்டே வருகின்றன. இந்த அறிவுச் செல்வங்களேப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புத் தமிழ்பண்பாட்டுப் பாதுகாவலர்களின் தலையாய கடமை" துரிமை, பழைய மருத்துவ ஏடுகள் யாவும் சேகரிக்கப்பட வேண்டும்; பாழ் பல்கலைக் கழக சித்த மருத்துவத் துறையில் அருஞ் சுவடிச்சாலே அமைத்து இவற்றைப் பேணவேண்டும். தொடர்ந்து கூட்டுமுறையி லான ஆய்வுகள் நடைபெற வேண்டும். சித்த மருத்துவ மருந்து ளேத் தயாரித்து அவை மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்
15

Page 10
இ9 மீண்டும் வரும்.
% என். சண்முகலிங்கன்
வீரபத்திரர் கோயில் வீதிச் செம்பாட்டு மணற்பரப்பில் இருந்தபடி நாகசுரக் கச்சேரி, மேளச்சமா லயங்களிலே கலந்த நாட்கள் உடன் மீண்டும் வரவேண்டும் ஊமைக்குழல் ஊதி. ஜதி ஐயோ.
நெஞ்சு வெடிக்கும் இந்த அவலம் முடிக்கும் நேச இசை மீண்டும் வரவேண்டும் ஒரே ஸ்ருதியில் ஆயிரமாயிரம் நாகசுரங்களில் அடாளு அலைகளே எழுக! பல்லாயிரமாய் தவில்களே முழங்குக! எங்கள் உணர்வுகளைச் சிறைவைத்த கோட்டைகள் பொடிப்பொடியாகும். மீண்டும் வீரபத்திரர் கோயில் வீதிச் செம்பாட்டு மணற்பரப்பில் இருந்தபடி நாகசுரக் கச்சேரி, மேளச்சமா லயங்களிலே கரைவோம்.
டும். இவை எமக்குரிய உரிமைகள், உரிமைகளைப் பயன்படுத்தத தயக்கமேன்?
மேஞட்டார் இந்திய மருத்துவப் பழஞ்சுவடிகளை எடுத்துச் சென்று அவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றை ஆங்கிலப் மிருத்துவ முறைகளுடன் ஒப்பிட்டாய்வு செய்து, புதிய மருந்துகளைக் கண்டுபிடித்து வர்த்தக அடிப்படையில் பெரும் பயன் பெற்றுவருவ தாகக் கூறப்படுகிறது. நமது செல்வம் பிறர் அனுபவிக்கிருர்கள். நாம் உரிமை இழந்து பிறர்கையை எதிர்பார்த்து நிற்கிருேம். நமது உரிமைகளை நாம் அனுபவிக்க வேண்டில் பழம் அறிவியற் செல்வங் கள் சேகரிக்கப்படவேண்டும். அவைபற்றிய புதிய விஞ்ஞான ஆய்வு கிள் நடத்தவேண்டும். அப்போதுதான் பண்பாடும் பாதுகாக்கப் படும் உரிமையும் பேணப்படக்கூடிய வாய்ப்டம் க்ைகூடும்.
16

@ பின்னல். திரும்பு!
மூலம்: வை. ஆர். குணதிலக தமிழில்: இப்னு அஸஅமத்
1. (5 ft தினத்துக் காலையில் வெண்மை நிறத்து ஆடைகளைப் போர்த்தியவாறு 'நெங்கல அருண’ விஹாரையில் "சில் எடுத்தேன் - என் அம்மாவுடன் நான் சின்னப் பிராயத்தில்!
“ஒரு இலையானையேனும் சாகடிக்க மாட்டேன் உயிரினங்களைக் கொல்லல் பாவம்" என்ற அம்மா உனது வார்த்தைகள் வெடிச் சப்தங்களின் மத்தியில் இன்று எதிரொலிக்கிறது!
‘கெடம்பொல்லால்” விடுத்துக் கொண்டைக் குருவியைக் கொன்று நான் - நிலம் மீது வீழ்த்தியபோது. என் முதுகுப் படலத்தில் தழும்புகள் பிளக்க அம்மா நீ
அடித்தது எனக்கு
ஞாபகம்!
இன்று - இயந்திரத் துப்பாக்கியை நீட்டியவாறு யுத்த களத்தினைக் கும்பிட்டு வாழ்வதற்காக நான்
மனிதர்களைக் கொல்லுகிறேன்.
அம்மா நீ மெளனமாயிருக்கிருய்
மணல் பரப்பில் பனை மரங்களினூடாக வரும் சவால்கள் வளர்கின்றன வாழ்வைத் தியாகம் பண்ணும் இளைஞர் கூட்டத்தினர் - வெள்ளை மணலை சிகப்பாக மாற்றுகின்றனர்.
நான் எப்படி ஒரு இலட்சியத்தை நோக்குவது? என்னிதயமே என்னைத் w திட்டுகிறது. துப்பாக்கியின் வாயினூடாக நான் காண்பது எனது சகோதரர்களையே *
சாதிகள் 116
"சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாரதி பாடிச் சென்று அரை நூற்ருண்டுக்கு மேலாகி விட்டது. ஆஞல் அந்தச் சாதிக் கொடுமைகள் தமிழர் சமுதாயத்திலிருந்து இன்னும் மறைய வில்லை. அண்மையில் , வெளிவந்த செய்திக் குறிப் பிலிருந்து தமிழ் நாட்டில் 118 சாதிப் பிரிவுகள் இருப்ப தாகத் தெரியவந்துள்ளது.
17

Page 11
ல நண்பனும் எதிரியும் :
பகுதியும் முழுை
ԼDսկID
னெம் முழுதும் முகில் மூடி
மன்ழ்
ஓயாது அழுத குளிர்ந்த
இருண்ட பகற் பொழுதுகள் அடுக்கடுக்காய் நின்றவொரு இளவேனில், துளிர்கள் அவிழ்தலும் மலர்கள் விரிதலும் தொடர்ந்தன.
வெண் பனியின் தூவல் மறந்து வரனம் நீலமாய் விரிந்து வெய்யில் வழிந்த இதமான நாட்கள் தொடர்ந்த குளிர்கால வெதுவெதுப்பு. மலர்கள் விரியாது இலைகள் முளையரது கரந்தன.
-8 ஸ்வப்னு
18

இ9 தளவாட மோகம்
8 இ. சிவானந்தன்
சிங்கியிலே கடன் எடுத்தேன் வட்டிக்குக் காசு பெற்றேன் பெட்டகத்தில் மூடிவைத்த பெரிய பொருள் தாலியுடன் அட்டியலும் காப்புகளும் அறுந்த சில சங்கிலியும் விற்றெடுத்த காசு கொண்டு வீடும் ஒன்று கட்டிவிட்டேன்.
அறைகளுமோ அதிகம் இல்லை ஆசைக்கு இரண்டே தான் ஆன பணம் செலவாக அரைகுறையில் கையைவிட்டேன் பெடிபொட்டை தம்பாட்டில்
Blu TuiùGAurayub 6&smru untug, இடிபட்டுப் போகாமல்
பெரியொரு "ஹோல்" ஹோலிலே விளையாடிக் குதூகலித்துக் களைப்பதனல் தோளிலே போட்டாட்டித் தூங்கவைக்கத் தேவையில்லை. கட்டிலில்லை மெத்தையில்லை தலையணையும் தேவையில்லை பாயிலே படுத்துருண்டு பைம்பலாய் வாழ்ந்திருந்தோம்.
சாய்ந்திருக்கக் கூடியதாய்ச் சுவரோடு போட்டுவிட வருபவர்கள் இருப்பதற்காய் வாங்கில் ஒன்று வாங்கிவைத்தேன் பேந்தொருக்கால் இரண்டு நல்ல பிரம்புக் கதிரை களும் தேத்தண்ணிப் பேணி வைக்க ‘ரீப்போ'வும் வாங்கிவைத்தேன்.
பெண்சாதி புறுபுறுத்தா பொடியளுக்கும் திருப்தி இல்லை "குஷன் வைத்த சோபா'வும் கொண்டுவத்த செற்றியுமாய் இடம் கொஞ்சம் மட்டுமட்டாய்
டைஞ்சலாய் இருந்தாலும் ன்றைக்கோ என் வீடு லட்சணமாய் இருக்குதுதான்
என்ருலும், மூந்தியைப்போல் எடுத்தெறிந்து கைகாலை வீசிவிட்டுக் கிடந்துருண்டு ஒய்வெடுக்க வசதியில்லை. ஒடுங்கி ஒதுங்கி இன்று ஒஞ்சுகிறேன் நான், ஆஞல் உள்ள தளவாடம் எல்லோ உடம்படங்க முட்டுகுது,
வாங்கிவந்த தளவாடம் வாணிசுடன் பொலிகமிட்டேன் வடிவான குசினியிலே வடிப்பதற்கோ அரிசி இல்லை. ஓங்கி வளருதற்கோ ஒருவிதமும் உய்தி இல்லை தேங்கி வனப்பிளந்து தேய்ந்து திரிகின்றுேம்.
வீடுவெளி போதாமல் வீண் சுறட்டு சோலிவர அடிபுடியும் பட்டதனுல் அழுகற் படையானுேம். தளவாடம் மெத்தவந்து தலைவாசல் நிரப்பியதால் பலவேளை பொடியளுக்குத் தலைகாலே அடிபடுது.
பங்குனியாம் மாதமின்று பகலிரவு புழுக்கம். ஐயா! எங்களின்ரை வீட்டில் ஒரே இடிபாடு, பொடிபொட்டை தங்களின்ரை விருப்பத்தில் தலை சாய்க்க வழியில்லை எங்கும் ஒரே தளவாடம் இடறி எமை விழுத்துகுது.
தளவாடக் கடன் தந்த தனவந்தர் வருவார்கள் தேந்தண்ணி குடிப்பதற்கும் புதிய கடன் தருவார்கள்.
வேர்த்தகுரு திணவெடுக்க
வெப்புநோய் கொப்பளிக் ச்சுவிட மாட்டாமல்
முட்டுப் படுகின்ருேம்.

Page 12
@ இருவர் LI IT u L6i)
- @ ருமதி
உச்சால வெப்பில் காய ஊரை விட்டுப் போற மச்சான் வட்டைக்குள்ள போறியோ கா ஆமிக்காறன் வாற வழி.
ஆமிக்காறன் வார வழி அய்யனும் நான் போற வழி வட்டைக்குள்ள போகாட்டா வகுத்துச் சோத்துக் கென்ன வழி. வகுத்துச் சோத்தைப் பாத்தியெண்_ா வம்புல நீ மாட்டிருவா ஆமிக்காரன் சுட்டுப் போட்ட ஆடு திருவா உசிருணக்கு? போறவழி வாறவழி பெரும் பயமே என்று போனுள் ஊட்டுக்குள்ள் நானிருந்து உசிரக் காத்து என்ன பயன்:
உன்னே நம்பி நானிருக்க உசிரை நீ உடலாமோ? எண்ட கிள் மச்சானே இண்டைக்கு நீ போகாத கா!
வட்டைக் கெண்டு போக வந்த வழியில நீ நிண்டு கொண்டு
இட்டு மங்கள் ஏன் மச்சாள் என்னே விடு நான் போக. இட்டு மத்துக்கில்ல மச்சான் இலுப்படிப் பள்ளத்தால பத்துப் பேரைச் சுட்டுப் போட்டு பாதகர்கள் போரூராம்.
பாதகர்கள் செய்யும் வதை
பார்த்திருக்க ஒன்னலேயே மச்சாள் *,* நீதி இதுக்கில்லேயோ இந்த
நீசராட்சி முடிவ தெப்போ?
 

சீனச் சிறுகதை
பாஜின்
9 நிலவு பூத்த இரவு
தமிழில்: --8 ந. சுரேந்திரன்
i.
"-
திகருக்கு செல்வதற்காக "லீ"யின் படகு தயாராக இருந்தது. ாேசேந்திரன், உயர்ந்த ம&களுக்கு மேலாக மெதுவ்ர்சு உயர்ந்து, அதன் ஒளிக்கதிர்கரே ஆற்றங்கரையில் பரப்பிக் கொண்டிருந்தது. மல் அடிவாரத்தில் இருளில் மூழ்கிக் கிடக்கும் ஒரு தேருதி 'இது சந்திர ஒளியிலே, பளபளத்த எண்ணம் அமைதியாக'அந்தி ိနှီးနှီ; ஒடிக்கொண்டிருந்தது. அத் தச் சிற்றுறின்மேல் மிதந்துகொண்டி ந்ேத சந்திரபிம்பம், ஆந்து ஆறு கலக்கும் யாங்வி ஆறுவரை அந்த ஆற்ருேடு செல்ல விரும்பாபோர் தோற்றமளித்தது. :
வினுடிக்கு வினுடி இருள் :சுன்து சொண்டிருத்தது. ஆணுங் வ&லவிரித்தாற்போல் தோன்றிய ஒளி மூட்டத்தால், மலேசுள், மரங் சுள், ஆறு, வயல்கள், வீடுகள் அதன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. இந்த இருண்ட இயற்கைச் சூழலுக்கு ஆட்ாக நனது (5 г. тя LoLTrಘ೫
ஒளி வெள்ளத்தை பாய்ச்ச சந்திரகுள் முடியவில்:31,
அந்த ஆற்றின் கரையிலிருந்து ஆற்றுக்குள்ளே ஆண்டுருவியிருந்தது ஒருகற்களாலானபடகுத் துன்ற அதற்கு அருகில் சுட்டப்பட்டிருந்தது 'லீ"யின் ப்டது. அடர்த்தியாக எர்ந்த நீர்-வில்லிச் செடிகளால் இந் , நப் படகு சுற்றி வ&ளக்கப்பட்டிருந்தது. நாவல் நிறப் பூக்கள் மலர்த் நிருந்தன.
அந்தப் படகினுள்ளே ஒரு விளக்கு பிரகாசமின்றி எரிந்து கொண்டிருந்தது. கரையிலிருந்து பார்க்கும்போது இருண்ட நிழல் கிளிடையே உறங்கும் படகுபோல் தோற்றமளித்தது. ஒரே நிசப்தம். அப்படகு ஒரு கைவிடப்பட்ட தீவுபோல் தோற்றமள்ளித்தாலும் அதனுள் பலர் அமர்ந்திருந்தனர்.
இரு பிரயாணிகள் மூடப்பட்ட அறையிலும், படகின் முன் முனையில் ஒரு சிறுவனும் உறங்கிக் கொண்டிருந்தனர். படகுக்காரன் வீ துடுப்பின் அருகே புகைத்துக் கொண்டிருந்தான். எல்லோரும் அமைதியாக இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் படகு புறப்படும்
2.

Page 13
நேரம் தெரியும் ஏனென்றல் அவர்கள் அனைவரும் வழன்மியான பிரயாணிகள். ஒவ்வொருநாளும் அந்தப்படகு irravuó நகரத்துக்குச் செல்லும் அடுத்தநாள் காலை திரும்பிவிடும். இந்த நிரந்தரமான நடைமுறை ஒரு நாளும் மாறுபடுவதில்லை. வழமையான பிரயாணி கள் ஒரு கிழமையில் பல தடவை பயண்ம் செய்பவர்கள். குறிப் பிட்ட, அதேநேர்த்துக்கு படகுத்துறைக்கு வந்துவிடுவார்கள் பிரயா ஒணிகள் படகுக்குள் நுழைந்தவுடன் பேசாமல் படுத்துவிடுவார்கள். நகரத்தைப் படகு நெருங்கும்போது எழும்பி விடுவார்கள். அவர் களில் சிலர் இறங்கிவிடுவார்கள். சிலவேகிள் மாகாண்த் தலைநகருக்கு செல்வதற்காக, அங்குள்ள ஒரு சிறிய நீராவிக் கப்பலில் ஏறிக் கொள்ளுவார்கள். இன்று அந்தப்படகில் உள்ள இளம் பிரயாணி அந்த ஊர்ப்பாடசாலை ஆசிரியர். அவரது வீடு நகரத்தில் இருந்தது. ஒவ் வொரு சனிக்கிழமை இரவும் அவர் வீடு சேல்வார். மற்ற வயது மூதிர்ந்த மனிதர் நகரத்தில் உள்ள ஒரு *&mt.-u$á síðu.18ærurrørtif. அவர் இந்தக் கிராமத்தில் வசிக்கிருர், அவரது கடை நிர்வாகி அவரை அடிக்கடி வியாபார நிமித்தம் மாகாணத் தலைநகருக்கு அனுப்புவதுண்டு.
சந்திர ஒளி, அந்தப்படகின் முற்பகுதி முனேயிலே படுத்திருக்கும் அந்தச் சிறுவனின் தலைமயிரை கோதிவிட்டுக் கொண்டிருந்தது. அவன் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். களைப்பினுல் மூடிக்கொண்டிருக்கும் அவனது கிண்கள் அடிக்கொரு தடவை திடீ ரென்று திறக்கும். ஆற்றங்கரையிலுள்ள பாதையை நோக்குவான். அல்லது தண்ணீரைக் குனிந்து பார்ப்பான் ஒரு மாற்றமும் இல்லை என்று அறிந்ததும், தனக்குத்தானே ஏதாவது கதைத்துக்கொண்டு உறங்கிவிடுவான்.
"புதுமையாக இருக்கிறதே! ஏன் "கென்ஷெங்" இன்னும் வர வில்&ல?" பாடசாலை ஆசிரியர் இவ்வாறு கேட்டவாறே ஒரு சிறு துவாரத்தின் மூலம் கரையை நோக்குகின்ரூர்.
எல்லாம் அமைதியாக இருக்கிறது. ஒரு விளக்கு ஒளியும் தெரிய வில்லை. கரையிலுள்ள ஒரு கோவிலும் இருளில் மூழ்கியிருந்தது. ஆளரவமற்ற நெடும்பாதையாக, சந்திர ஒளியில் நெடுந்தூரம் அந்தப்பாதை தெரிந்தது.
அந்தத்தவாரத்தை மூடிவிட்டு அவர் மீண்டும் சாய்த்தார். விற்பனையாள்ர் "வாங்ஷ்ெங்" படகுக்காரனைப் பார்த்து உரத்த குரலில், "லீ இப்போது என்ன நேரமென்று உனக்குத் தெரியுமா? நாம் ஏன் புறப்பட்டிக்கூடாது?"
"கென்ஷெங் இன்னும் வரவில்லை. புறப்பட ன்னும் தேரம்" இருக்கிறது. நீ எதற்காகக் கவலைப்படுகிருய்?
22

சுக்கானைப் பிடித்த வண்ணம் "லீ° பதிலளித்தான்.
"கென்ஷெங் எப்பொழுதும் ஏழுமணிச்கு வருவான் ஆனல் இன்று' தனது மணிக்கூட்டைப் பார்த்தபடி 'ஏழு நாற்பது ஆகி விட்டது, இன்னும் அவன் வரவில்லையே' என்று கூறிக்கொண்டு மீண்டும் அந்தத் துவாரத்தினூடாக பாதையை உற்று நோக்கினர் ஆசிரியர் ஜான்.
*கேன்ஷெங் கட்டாயம் வருவார். நகரத்திற்கு எடுத்துச் செல்லவேண்டிய அவருடைய பொருட்கள்சில உள்ளன. ஜூன், நீகவலைப்படதே! மிஸ்டர்வாங்! நீர் ஒரு நீண்டகால வாடிக்கையா வான். அந்தச் சிறிய நீராவிக்கப்பலை எப்பொழுதாவது நான் தவற விட்டிருக்கிறேன? -உனக்கு நன்கு தெரியும்”
“கென்ஷெங் இதற்கு முன் ஒருநாளும் நேரம் பிந்தி வந்ததில்லை, எப்பொழுதும் முன்னதாகவே வந்துவிடுவார் இன்று எங்களையல்லவா காத்திருக்க வைத்துவிட்டார்.** இது ஆசிரியரின் முறையீடு.
“ஏதோ ஒரு காரணத்துக்காகத் தாமதப்படுகிருர் போல் தெரி கிறது’* வாங்ஷெங் பதில் கூறுகிமுன்
"எனக்கு கென்ஷெங்கைத் தெரியும். அப்படி ஏதும் காரணம் இருக்க முடியாது. அவன் அபின் அருந்துவதில்லை. குடிவகைகள் பாவிப்பது மில்லை. ஒன்றும் அவனைத் தாமதப்படுத்த முடியாது. அவன்விரைவில் வந்துவிடுவான்". இவ்வாறு கூறியபடிப. குக்காரன், படகின் முற்பகுதி முனைக்குச் சென்று ‘லின்’ என்றசீறுவனை எழுப்பி ஞன். நித்திரை கலைந்து எழும்பிய சிறுவன் ‘லின்" பார்த்துவிட்டு படகுக்காரன் துறைமேடையில் இறங்கி ஆற்றங்கரையில் சிறிதுதுரரம் நடந்துவிட்டுப் படகுக்குத் திரும்பினுன்."
பூரண சந்திரன் அவனுக்கு நேர் எதிராக ஒளிவெள்ளம் ப ய்ச் சியது. அதன் வெள்ளிக் கிரணங்கள் பன்னீர் போல அவனது தலையை நீராட்டின. ܗܝ
கோவிலுக்கருகிலுள்ள ஒரு அரச மரத்திற்கு அருகிலே இருந்து ஒரு கருநிழல் வெளிவந்தது.
"கென்ஷெங் வருகிறர்" படகுக்காரன் தன்னுள் நினைத்துக் கொண்டு அந்தச் சிறுவனப் பார்த்து உத்தரவிடுகிருன். 'கென் ஷெங் படகில் ஏறிய மறுவினுடி நாம் புறப்படுகிருேம், உடனே தயாராயிரு” . : * "、
"ஒம், அப்படியே செய்கிறேன்” என்று தனக்குள் முணுமுணுத்த வாறே சிறுவன் "லின்" ஒருநீண்ட மூங்கில் தடியை எடுத்து நீருள் அமிழ்த்தி படகைக் கரையருகே செலுத்தினன்.
疹
2荔

Page 14
படகுக்காரன் லீ படகுத்துறை மீது நின்று கொண்டு உற்று நோக்கினன். அத்த இருண்ட உருவம் அருகே வந்தது. ஒரு பின் னல் கூடையைத் தூக்கிக்கொண்டு வரும் அந்த மனிதன் சரியான கட்டை மனிதன். அவன் “கென்ஷெங்காக இருக்க முடியாது. அவனது பெயர் ஷாங். கிராமத்திலுள்ள ஒரு பலசரக்குக் கடை உரிமையாளன். ஷாங்கும் இன்று நகரத்துக்குச் செல்கின்றன்.
*ஆக, இன்னமும் நீங்கள் புறப்படவில்லை" படகுக்காரனைப் பார்த்துச் சிரித்தவண்ணம் கூறிக்கொண்டே துறை மேடையில் ஏறிஞன்.
'நீ சரியான நேரத்துக்கு வந்துவிட்டாய் நாங்கள் கென் செங்கை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்" படகுக்காரனின் பதி லில் ஒருவித ஏக்கம் காணப்பட்டது.
‘எட்டுமணியாகிவிட்டது. கென்ஷெங் இன்னும் வரவில்லையே அவர் நிச்சயமாக வரமாட்டார்" ஆசிரியர் அறைக் குன் இருந்து சத்தமிட்டார்.
இன்னும் வராதது விந்தையாக உள்ளது. வழமை யாக புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு பு) வின் தாகவே வந்துவிடு வாரே'. புதிய பிரயாணி லாங் படகிற்குள் துழைந்து தனது பெரிய கூடையை ஒரத்தில் வைத்துவிட்டு ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தார். மெதுவாகச் சிகரெட்டைப் புகைத்தவாறே நிலா வெளிச்சப் பக்கமாகத் திரும்பிஞர்.
"ஏய் லீ கென்செங் இங்கு இருக்கிருரா?" படகுத்துறையில் நின்று மஸ் லின் மேலாடையும், காற்சட்டை யும் அணிந்த, கட்டையான கூந்தலையுடைய, ஒரு பெண் சித்தமிட் டுக் கேட்டாள். -
*எல்லாரும் இன்றிரவு சுென்செங்கிற்காகக் காத்துக்கொண் டிருக்கிருர்கள். எங்காவது ஒளித்திருக்க வேண்டும். உனக்குத்தான் தெரிய வேண்டும் கென்செங் எங்கிருக்கிருர் என்று லீ கிண்டல் செய்தான்.
*அப்படியென்ருல் கென்செங் வரவில்லையா?* அந்தப் பெண் ஏக்கத்தோடு கேட்டாள்.
“அவனுடைய நிழல்கூட வரவில்லை’ shயின் பதில் . “நீங்கள் வேடிக்கை பண்ணுகிறீர்களா? எனக்குப் பெரிய அதிர்ச்சியாக உள்ளது" அந்தப் பெண்ணின் குரல்.
யார் விளையாடுகிருர்கள்? எனக்கு இனி நேரமில்லை. எனக்குத் தெரியவேண்டியதென்னவென்ருல் உனது கணவன் இன்றிரவு இந்தப்
படகில் வரப்போகிருஞ? இல்லையா? என்பதுதான்.
24

லீ கடுமையாகக் கேட்டான். பெருந்துயர ஒலத்தை எழுப்
பியவாறு அந்தப் பெண்மணி ம் திரும்பி ஓடத் துவங்கினள் கிரா தாசன
மத்தை நோக்கி. ஆயிரம் மக்களின்
"சகோதரி ஒடாதே நில்! அன்ருட மரணங்களில் ኣ፡
இவளுக்கு என்ன நடந்தது 'கத் அருவருப்பானவை கூட
தினன் படகுக்காரன் வீ. புதிய
ஆற்றின் கரையோரமாக அர்த்தத்தைத்தான் அலறியபடி அத்தப் பெ କାଁଡ୍ଜ୍]] - போதிக்கின்றது.
எதையும் பொருட்படுத்தாது ! எரிமலையின் அடக்கம்
ஓடினுள். உண்மையிலேயே
அவளுடைய கதறல்ஒலி படகுக் இறுக்கமானவைதான் காரனின் சிந்தனையை நிலை குலைய இந்த அரங்கேற்றங்களின் வைத்தது. அந் த த் துறை அவரோகணங்கள் மேடையில் மரக்கட்டைபோல புதிய அவன் நின்ருன். அத்திவாரங்கள்,
"என்ன பிரச்சினை மூன்று -ஏ. கே, தேவர்
lm
பிரயாணிகளும் படகுக்காரனிடம் ஒருமித்துக் கேட்டார்கள்.
"பிசாசுக்கு மட்டும்தான் விளங்கும்" லீ அதிருப்தியுடன் பதில ளித்தான்.
'கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள பிரச்ஓஜ போலும், கென் ஷெங் கோபித்துக்கொண்டு வெளியே போயிருப்பான். அப்படி ஏதும் பிரச்சினையாக இருக்கும் ஜாங் கூறிஞன்.
**கென்ஷெங் மனைவியுடன் ஒருநாளும் சண்டை பிடிப்பதில்லை. இது வேறு ஏதோ பிரச்சினை எனக்கு நிச்சயமாத் தெரியும் லீ கூறினன். அவனுக்கு இது பெரிய புதிராக இருந்தது. இது என்ன பிரச்சினையாக இருக்கும்." y
கென்ஷெங், கென்ஷெங் அந்தப் பெண்ணின் துயரக்குரல் இரவைக் கிழித்துக் கொண்டிருந்தது. -
‘லி, இனி நாம் என்னசெய்வோம்’ ஆசிரியர் படகுக்காரனைக் கேட்டார். அவனது குரலுக்கு ஒருவரிடமிருந்தும் பதில் வரவில்லை. "நாம் புறப்படுவோம்’ விற்பனையாளர் பொறுமையிழந்து சத்தமிட்டார். அந்தச் சிறிய நீராவிக் கப்பல் மாவட்டத் தலைநக குக்குப் புறப்படுமுன் தங்கள் படகு அங்கு போய்ச்சேருமோ என்று அவர் சந்தேகப் பட்டார். ;
25

Page 15
தொடர்ந்து அந்தப் பெண்ணின் அழுகுரலைக் கேட்டுக் கொண் டிருந்த, படகுக்காரன் லீ நேரம் செல்லச் செல்ல பிரயாணிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் படகுத்துறையில் கணவனைத் தேடிக் கொண்டிருக்கும் அந்த மனைவியின் அழுகுரலை அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.
இது சரி வராது அவன் ஏதோ பாரதூரமான துயரத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிருள்." என்று கூறிய படகுக்காரன். படகுத் துறையில் இருந்து கரையில் குதித்து, அவள் ஒடும் பாதையில் அவளைப் பின்தொடர்ந்து ஒடிஞன்.
படகில் டடுத்திருந்த படகுக்காரனின் மகன் எழுப்பி * ஆப்பா நீ எங்கே போகின்ருய்” என்று கூறியவாறு அப்பாவைப் பின் தொடர்ந்து ஓடலானன்.
படகுக்காரன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தான். அவன் பதில் எதுவும் கூறவில்லை. அவனைப் பின் தொடர்ந்து மகனின் குரல் வெளிப்படாத நிசப்தத்தால் காற்று அமைதியாக வீசியது. ஆனல் அதே காற்று அந்தப் பெண்மணியின் துயருற்ற ஒசையால் நிறைந் திருந்தது.
ஒரு சேற்றுச் சகதிப் பாதையில் அந்த மூவரும் ஒடிக்கொண் டிருந்தனர்-அந்தப் பெண், படகுக்காரன், அவனுடைய மகன், ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தின் பின்பு அந்தச் சிறுவன் ஒட்டத்தை நிறுத்திவிட்டு திரும்பினன்.
படகு துறையில் அமைதியாக ஆடிக்கொண்டிருந்தது. அதிலி ருந்து மூன்று பிரயாணிகளும் தங்களுக்குள் விவாதித்துக் கொண் டிருந்தார்கள்.
அந்தப் பெண்ணின் துயர ஒலம் மெதுவாகக் குறைந்து நிசப்த மாகியது. ஒரு மரத்துக்கடியில் படகுக்காரன் லீ அந்தப் பெண்மணியை மடக்கிஞன். அந்த மரத்தடியில், கலைந்த கூந்த லோடு, கண்ணீர் பெருக்கெடுத்தோட, மென்மையாக அழுதவண் னம், ஆற்றின் எதிர்க்கரையை உற்று நோக்கியவாறு, ஒரு பிசாசு போன்று அவள் தோற்றமளித்தான்.
“என்ன உனக்கு நடந்தது. சகோதரி? உனக்கென்ன பைத்தி யமா? என்ன பிரச்சினையாக இருந்தாலும் என்னிடம் சொல்" அந்தப் பெண்ணைப்பிடித்து உலுப்பியவாறே லீ கேட்டான்.
அவள் அழுகையை நிறுத்திவிட்டு, தனது முகத்தை நிமிர்த்தி அவனை உற்று நோக்கினுள். நீண்ட நேரத்துக்கு பிறகு, 'கென் ஷெங், கென்ஷெங்’ என்று முணுமுணுத்தாள். qSS S S SS
"கென்ஷெங்"கிற்கு என்ன நடந்தது? சொல்லு! லீவற்புறுத்திக்
to
26

“எனக்கு தெரியாது" அவள் சர்வசாதாரணமாகப் பதிலளித் தாள்.
'தூ' லீ பொறுமையிழந்து துப்பினுன். "அப்படியென்ருல் நீ ஏன் அழுகிருய்? உனக்கு விசரா?”
“அவர்கள் கென்ஷெங்கைக் கைது செய்திருக்க வேண்டும், நிச்சயமாக அவர்கள் அவனைக் கைது செய்துதான் இருக்கவேண் டும்" அவள் காட்டுக் கத்துக் கத்தினள். அவள் முகம் பயங்கரமாகத் தோற்றமளித்தது.
“யார் அவனைக் கைது செய் தது. யாரோ அவனைக் கைது செய்த தாகக் கூறிஞய்?” நெஞ்சு பதைபதைக்க லீ அவளிடம் கேட்டான். கென்ஷெங் லீயினுடைய நண்பன். ஒரு நேர்மையான மனி தன். யாரும் அவனைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? லீ நினைத் துக்கொண்டான்.
'இது ராங் ஸிபானுடைய வேவயாகத்தான் இருக்கவேண் இம்.கேற்று, ராங், மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் ெ ஷெங்கிற்கு கொள்ளையர்களோடு தொடர்புள்ளதாகக் குற்றஞ், சாட்டியிருப்பதாக கென்ஷெங் என்னிடம் கூறிஞன். இதை நான் முதலில் நம்பவில்லை. ஆனல், இன்று மாலை கென்ஷெங் வெளியில் 0)FairspGLIngi rrrúGSML-u அடியாட்கள் சிலர் அவனைப் பின் தொடர்ந்து சென்றதாக சிலபேர் என்னிடம் கூறினர்கள். ஒரு துப்பறியும் நிபுணர் உட்பட அவர்கள் பலபேர் இருந்தார்களாம். அதன் பின்பு கென்ஷெங் வீடு திருப்பவில்லை. அவர்கள்தான் கெஷ் ஷெங்கைக் கைது செய்திருக்க வேண்டும் என்று திச்சயமாக நம்பு கிறேன். vr
"ராங் ஒரு பணம் கறக்கும் காடையன். ஆஞல் கென்ஷெங் மீது அவனுக்கு என்ன பிரச்சினை சகோதரி! நீ சொல்வது பிழை. உனது கணவனைக் கைது செய்வதை நீஉன்கண்களால் பார்த்தாயா?* லீ அவளுக்குப் பொதுப்படையாக ஆறுதல் கூறிஞன். அவனது குரலில் சிறிது வேகம் குறைந்திருந்தது.
"நீ நீம்பாததால் அதைப் பொய் என்கிரூயா? ராங் தனது நகரத்தலைவர் பதவியை இழந்து விட்டான் அதஞல் அவன் கோபா வேசத்தோடு இருக்கிருன்,
'அவன் யீ என்பவரைக் கொல்ல ஒரு ஆளே அனுப்பிஞன். ஆளுல் "ராங்"கால் யீயைக் கொல்ல முடியாதுபோனதோடு தனது கிராமத் தவைர் பதவியையும் இழந்து விட்டான், சில தாட்
27

Page 16
ளுக்கு முன்பு, பீயின் சகோதரனும் கென்ஷெங்கும் சேர்ந்து ஒரு உழவர் சங்கம் ஒன்று உருவாக்கிஞர்கள். அதன் மூலம் "ராங்கை புதிர்த்துப் போராட முடிவு செய்தனர். அந்தக் கிழட்டுக்காடைய னுேடு ஒரு பிரச்சினேயும் வேண்டாம் என்று எனது கனவனுக்கு எவ்வளவோ புத்திமதி சொன்னேன். ஆணுல் அவர் கேட்கவில்லே. நிலப்பிரபுக்அன்பு, அவர்களது கொடிய அடிவருடிகளேயும் விழுத்த வேண்டும் என்று நாள் முழுவதும் புறுபுறுத்துக் கொண்டிருந்தார். இப்பொழுது அவர் கதை முடிந்துவிட்டது. அவரது தவேயைத்தான் கிரைச்சேதம் செய்யாது விட்டாலும் அவரை உயிரோடு திரும்ப அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். “கொள்ளேயர்களோடு கூட்டு என்பது பாரதூரமான கிறிமினல் குற்றமாயிற்றே",
”H அவ்வளவு கடுமையானவன் என்று நான் நம்பவில்லே, זוועי* * இடைமறித்தான்.
'ராங்கிலும் பணும் இருக்கிறது. மாவட்ட மஜிஸ்ரேட் அவனு டைய நெருங்கிய நண்பர். அவன் சொல்வதையெல்லாம் அந்த நீதி பதி கேட்பார்". அவள் தற்போது சிறிது நிதானமாகப் பேசினுள். ஆணுல் அவளது குரல் உரத்துத் தொனித்தது. அவளது கண்கள் நெருப்பைக் கக்கின. அவனது கோபம் துயரத்தை அடக்கியது."யி போன்ற ஒரு நல்ல மனிதனேக் கூட அவன் கொல்ல நிரேக்கிருன் என்ருல். ஏன்! அதறிலுவின் கதையை நீ மறந்துவிட்டாயா!' மீண்டும் அவள் கண்களில் பயத்தின் வாட்டம் நிறைந்தது.
லீ சலனமற்று இருந்தான், ஆம்! அவனுக்கு ஞாபகம் வந்தது அஹிலுவின் சரித்திரம், அஹிலு ஒரு நேர்மையான மனிதன். விவசாடிச் செய்கைகள் நிறைந்த காலங்களில் அவன் ஒரு கூலியானாது வேலைசெய்து வந்தான். மற்றக் காலங்களில், ஒரு சுமைதூக்கியாகக் கடமை ஆற்றினுள். ஒருதடவை தனது சுமை தூக்கித் தடிக்கு விதிக்கப்பட்ட மேலதிக வசி சம்பந்தமாக மேலும் chIF[ தூக்குவோரைச் சேர்த்துக் கொண்டு ராங்ת: lau வீட்டிற்குக் கென்று பிரச்சினை எழுப்பினுன், ராங் தான் அப் பொழுது வ்ரி சேகரிப்பவனுக இருந்தான். இரண்டு நாட்கள் கழித்து பொலிசார் அஹிலுவைக் கைது செய்தார்கள். கொள்ளேயர்களோடு தொடர்பு கொண்டிருந்தான் என்ற குற்றச்சாட்டின் மீது பதினேந்து வருடச் சிறைத் தண்டனை அவனுக்கு விதிக்கப்பட்டது. அஹிலு கைதுசெய்யப்பட்டபோது, அவன் லீயின் படகுக்குப் பொதிகளேச் சுமந்து சென்று கொண்டிருந்தான்.
விக்கு இப்போது எல்லாம் விளங்கியது. அஹிலு-ஒரு நேர்மை பூான மனிதன்-வாழ்க்கையில் எக்குற்றமும் செய்யாத அப்பாவிஇருந்தபோதிலும் அவனுக்கு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தண்
28

னே-ாேள்ளேயர்களுடன் கூட்டுவைத்த குற்றம். இது உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது. இப்போது சென்ஷெங் சொல்லி பதை i முழுமையாக நம்பிஞன். அவனது தலே கவிழ்ந்தது. ஒரு பெரிய கற்பாறை தனது இதயத்தை நசிக்குமாப்போல உளhர் தான். கனகசுஃாப் பிணேத்துக்கொண்டு அவன் சிந்தித்தான் அலி அணுக்கு ஒருதீர்மானத்துக்கும் வர முடிமவில்லை. அவனது தஃப நோகத் தொடங்கியது. அவனது மூ&ளயில் பல விஷயங்கள் பளிச்சிட்டன. அவன் மிகவும் குழப்பமடைந்து போஞன். கென்செங்சின் மனேவி
பின் கைகளே இழுத்து எழுப்பியவாறு கூறிஞன்.
"எழும்பு, கென்ஷெங் கைது செய்யப்பட்டிருந்தால், அவனே எப்படிக் காப்பாற்றுவது என்று யோசிக்கவேண்டும். நீ இங்கிருந்து அழுவதனுல் என்ன பயன் விஃாயப்போகிறது." நதிக்கரை ஒரட0 கவே அவர்கள் வேகமாக நடந்தார்கள்.
சிறிது தூரம் அவர்கள் செல்லுமுன்பே அந்தச் சிறுவன் அவர் க3ள நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தான் "அப்பா" "கென்ஷெங் கலவரமடைந்திருந்த அவனது வாயிலிருந்து இந்த இரண்டு சொற் களும்தான் வெளிவந்தன. அவன் தனது தந்தையின் காங்களே இறுக்கிப் பிடித்தான். வேறு ஒன்றும் அவனுல் பேசமுடியவில்லே,
"அவர் எங்கே' நடுக்கமுற்ற குரலிலே அந்தப்பெண் அந்தச் சிறுவனேக் குலுக்கினுள்.
"பேசு! வின் என்ன நடந்தது' வீயும் பொறுமை இழந்தபடி கேட்டான். அவனுக்கு ஒரு பயங்கர முன்னெச்சரிக்கையாக தனது மகனின் சொற்கள் தெரிந்தன.
அந்தச் சிறுவனின் தஃப் ஷேர்வையால் வழிந்தது. அவனது பிஞ்சுமுகம் பயத்தால் வெளிறியிருந்தது. "கென்ஷெங். அவர்.' அவர்கள் இருவரையும் இழுத்துக்கொண்டு அவன் ஓடினன்.
ஆற்றங்கரைக்கு அருகேயிருந்த ஒரு பள்ளத்தில், படகின் ஏனேய மூன்று பிரயாணிகளும் அமர்ந்திருந்தனர். வழிப்பாதையிலிருந்து மிகவும் கீழே அந்தப் பள்ளம் இருந்தது. சிறுவன் தான் முதலில் அந்த இடத்துக்குச் சென்றன். அப்பா இங்கே பாருங்கள் சிறுவன் சத்தமிட்டான்.
கென்ஷாங்கின் மனைவி, பயங்கரமாக ஒலமிட்டவாறு முன்னுேக்கி ஒடிஞள். லி பின்தொடர்ந்தான்.
நாவல்நிற நீர்க்குமுத மலர்கள் பெருமளவில் ஆற்றங்கரையில் வியாபித்திருந்தன. புற்தரையில் மண்டியிட்டவாறு ஆசிரியர் அந்த செடிகளே தனது கையால் நீரிலிருந்து அகற்றிக்கொண்டிருந்தார்.
29

Page 17
ஒரு ஊதிப்போன சடலம் நீரிலே அமைதியாக மிதந்தது. அவனது கருநிற மஸ்லின் ஆடைகள் ஒரு மரவேரிலே சிக்கிக்கொண்டிருந் தன. அவனது உள்ளாடையின் பின் புறத்திலே சிறிது இடப் பக்க மாக ஒரு துவாரம் தெரிந்தது.
*கென்ஷெங்" என்று அலறியவாறே அவனுடைய மனைவி அவன் சடலத்தின் மேல் விழுந்து கட்டிப்பிடித்து அழுதாள். இதயம் பிளந்து விடுமோ என்பது போல் இருந்தது அவளுடைய சோக அலறல்,
படகுக்காரனைப் பார்த்து "கென்ஷெங் இறந்துவிட்டான்' என்று மெல்லிய குரலில் ஆசிரியர் கூறினர்.
‘அவரை முதலில் சுட்டிருக்கவேண்டும். அதோ பாருங்கள் ரத்தக்கறை” என்று விற்பனையாளர் தெளிவுபடுத் தினர்.
"நாம்முதலில் அந்தச் சடலத்தை வெளியில் எடுப்பே <ir i'r மத்து முதலாளி பிரேரணை செய்தார்.
GS பெருமூச்சு விட்டான். தனது மகனின் திடுங்குங் கரங்க% இறுகப் பற்றியபடி ஆற்றுநீரை வெறித்துப் பார்த்தான்.
கென்ஷெங்கின் மனைவியின் அழுகுரல் தொடர்கதையாக உடைந்த இதயத்தின் சிதைந்த சனதகள்போல் காற்றைக் கிழித் துக் கொண்டிருந்தன. அந்த நிலவு பூத்த இரவை ஊடுருவில் கொண்டிருந்தன. காற்று, நிலம், நீர்-அனைத்தும் அழுது கொண்டி ருந்தன-ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு புல்பூண்டும் ஒவ்வொரு மலரும்,-ஒவ்வொரு நீர்க்குமுத மலரும்- துயரத்தால் விம்மிக் கொண்டிருந்தன.
பூரண சந்திரனின் வெள்ளிக் கதிர்களிலே அந்தக் கிராமம், அந் தச் சிற்றறு அனைத்தும் உறங்கிக் கொண்டிருந்தன.
அந்த முழுக் கிராமச் சூழலும், இந்தத் துயரச் குழ்நிலையைப் பார்த்துக் கதறுமாப்போல் தோற்றமளித்தது. ஒவ்வொருவர் கண் ணிலும் கண்ணீர் நிறைந்திருந்தது.
அது ஒரு அழகான மதி முகிழ்த்த இரவு. காற்ருே மழையோ அற்ற அற்புதமான இரவு. ஆனல் வியினுடைய பட்கு - நகருக்குச் செல்லும் அந்த சிறு நீராவிக்கப்பலைப் பிடிப்பதில் தவழுத ஒருநாளும் தவழுத-அந்தப் படகு - அன்றிரவு முதற்தடவை யாக நீராவிக் கப்பலைப் பிடிக்கத் தவறியது.
食 3O.

இ9 நம்பிக்கை பிறக்குது
மூச்சினிலே.
6
ைேடயர்கள்" ஆட்டத்தால் கிடைத்த புள்ளிகள் “சீனுவும்’ ‘தாளுவும் சீர்கெட்ட அச்செயலால் சிங்கார மலையகமும், சோர்ந்து போனதுவோ? இப்போ அச்சமும் பயமுமே, மலையகத்தின் பொழுதாகி, அமைதியும், ஒற்றுமையும் கோரும் ஏராளம் மூச்சுக்கள் கேளீர்!
8 ஜனயுகன்
நான் வீட்டிற்குச் சென்றேன். கலவரம் ஒய்ந்து காலம் மாதமாகி - எனது மாதம் ஒருமுறைப் பயணம். மாதம் இரண்டாகிய பின் அன்று,
தொடர்ந்தது. வீட்டின் இரவுகளில் வளமை போல் டி.என் நெஞ்சிலே தூங்க வந்த - என் அண்ணனின் பிஞ்சு மகன், என் "ஸ்டாலின்* கத்தி தடியுடன் கடிநது வநதான.
‘ஐயா" **ஆணுக்காரன்’ வந்தால் அடிச்சித் துரத்தனும்” தடியையும் கத்தியையும் - என் தலைமாட்டில் வைத்தான். இங்கு "கடிவாளம்’ என்பவர்கள் காடையருக்குத் துணை போவார்
31

Page 18
இன்று
பிஞ்சுகள் கூட வெறுத்து ஒதுக்கும் பிரிவினராயினர் விடியலின் நினைவோடு அணைத்த நித்திரை கடுதிலே பிரிந்தது
காலையில் ፳ "ஆணுக்காரன் செத்துட்டான்' ஒசை வந்த திசையில் “ஸ்டாலின் பொம்மையை அடிக்கின்றன்.
காலால் உதைக்கிறன்.
தான் திரும்பும் போதெல்லாம் அவன் 'ஸ்டாலின்" அப்பிளுக்கும் கிரேப்சுக்கும் அடம் பிடித்துக் கெஞ்க பவன்
மாருக
இம்முறையோ, “தோக்கு' வாங்கி வா காதோடு சிணுங்கினன்.
ஆணுல் இரண்டு ஆண்டிற்கு முன் பின் இரவு நேரத்தில் என் அண்ணி அவன் அன்னை
அவனை வயிற்றில் சுமந்தபடி எமதில்லம் நுழைந்தாள். "பாமஸ்டன் வாழ் அண்ணன் சோடி "பன்குளம் வாழச்சென்று "ஆணுப் பாவிகளால் அலண்டு ஆடிப்போய் வந்தனர். இன்று
9y6hI fifé95asir tAb956ör “ஸ்டாலின் அவன் போக்கிற்கு அதுவும் காரணமோ

இ9 பால் - ஊழ் - விதி:
சில சிந்தனைகள்
9 செந்திரு
Pதுரையில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சிக் கருத்தரங் திலே (1981) பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் சமர்ப்பித் திருந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் அண்மையிலே 'தாயகத் தில் வெளியாகியிருந்தது. இதிலே, "தலைவிதி" என்னும் எண்ண: கரு தமிழர் சமுதாயத்தில் எவ்வாறு முளை கொண்டு வளர்ச்சி பெற்றது என்பதை, மறைந்த பேராசிரியர் இலக்கியச் சான்றுக:ை யும் ஒப்பியற் சமூகவியற் சான்றுகளையும் காட்டி விளக்கியுள்ளார். இவ்விளக்கத்தின் தொடர்ச்சியாக நாம் அவதானிக்க வேண்டிய சிந்தனைகள் சிலவற்றை இங்கு எடுத்து நோக்குவோம்.
பால், ஊழ், விதி ஆகிய சொற்கள் இன்று ஏறத்தாழ ஒரே கருத்தினை உடையன என்று கொள்ளப்படுகின்றன. ஆனல், பழந் தமிழ் இலக்கியச் சான்றுகளை வைத்து நோக்கும்போது, இவற்றி ஞற் கட்டப்பட்ட எண்ணக் கருவானது படிப்படியாக மாறி வளர்ந்து பரிணுமம் பெற்று வந்தமையைப் பேராசிரியர் சமூக வரலாற்றுடன் இணைத்துக் காட்டியுள்ளார்: (1) மிகவும் முற்பட்ட காலத்திலே பால் என்பது பங்கைக் குறிப்பதாயிற்று. புராதன மரபுவழிச் சமு தாயத்திலே உணவும், கொள்ளை, வேட்டை ஆகியவற்றின் பயனரை பிற பொருள்களும் சமூக உறுப்பினரிடையே பங்கிடப்பட்டன. அப் பங்கீட்டிலே ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பங்கு சமமாக இருந் தது. அதனல் அது இயல்பானதாகவும் இருந்தது. ஆகவே பால் என்ற சொல் இயல்பான நன்னெறியுடன் தொடர்புடையதாய் இருந்தது. நலம் பயக்கும் வழி சமபங்கீடு; ஆகையினல், undo என்னும் சொல் மக்கள் மனத்திலே நன்னம் பிக்கையை ஊட்டுவதாக விளங்கிற்று. (2) காலப்போக்கிலே தனி யுடமை முறை தோன்றியது. அரசு உதயமானது. பொருட் பங் கீட்டிலே முறைகேடுகள் புகுந்தன; சமத்துவம் கெட்டது; ஏற்றத் தாழ்வுகள் தோன்றின. இக்காலகட்டத்தில் ஒவ்வொருவரின் பங் கையும் அல்லது பேற்றையும் அல்லது ஆங்கிலத்திற் கூறப்படுவது போல "லொற்றையும் கண்க்ாணத தெய்வமே வகுக்கிறது என் னும் நம்பிக்கை தோன்றியது. இத்தெய்வம் "பால் வரை தெய்வம்" என்று குறிப்பிடப்பட்டது. கண்ணுக்குப் புல்ப்படாத ஒன்ருகை
33

Page 19
யால் "அதிருஷ்டம்" எனவும் அது சொல்லப்பட்டது. திருஷ்டம் - காணப்படுவது; அதிருஷ்டம் - காண இயலாதது. இயற்கை நீதி யாகிய, இயல்பு நெறியான ‘பால் இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வத்துடன் தொடர்புடையதாக எண்ணப்பட்டது. விளங்கப் படுத்த முடியாத ஏதுக்களால் நன்மை தீமைகள் உண்டாகும்போது, அவை ஊழ் வலியால் நேர்ந்தன என மக்கள் அமைதி கண்டனர். ஊழினுல் நன்மையும் விளையலாம்; தீமையும் விளையலாம் என்னும் கொள்கை உருவாயிற்று. நன்மை தரும் ஊழ் ஆகூழ்” எனறும் தீமைதரும் ஊழ் போகூழ்" என்றும் சுட்டப்பட்டன.
தெய்வம் என்னும் தனிச்சொல்லுக்கே ஊழ் என்னும் கருத்து உண்டு. “திஸ் இஸ் மை லொற்' என்று ஒருவர் அலுத்துக் கொள் ளூம் போது "இது தான் எனது அதிட்டம்" என்று ஒதுங்கும் மனப் போக்கு வெளிப்படுகிறதல்லவா? அதிட்டம் பார்ப்பது 'லொற்றறி" “ன்று கூறப்படுகிறது. அதனை லொத்தர் என்றும் நம் வழங்கு கிருேம். திருவுளச் சீட்டு எடுப்பது என்ருல், "ட்ருேயிங் ஒவ் லொற்ஸ்’ என்பதாகும். இது யாருடைய திருவுளம்? தெய்வத்தின் திருவுளம்; பால்வரை தெய்வத்தின் திருவுளம். (3) பிறிதொரு *ாலகட்டத்தில், பங்கீடு சமமில்லாமற் போனமைக்குத் தத்துவ ரீதியிலே விளக்கம் தரப்பட்டது. அப்பொழுது வினைப்பயன் கொள்கை உருவாயிற்று. நல்வினை செய்தவன் நல்ல பலனைப் பெறுவதும் தீவினை செய்தவன் தீயபலனைப் பெறுவதும் இயற்கை யான நியதியாகும். அப்படி அல்லாமல், அடிதலை மாறி நடக்கு மானுல், நியதியில் ஏதோ பிசகு இருத்தல் வேண்டும். இப்பிசகை நியாயப்படுத்துவதற்கு முற்பிறப்புக் கோட்பாடுகள் பெரிதும் உத வின. ஒருவன் நல்வினை செய்யவும் அவனுக்கு நற்பலன் கிடைக்கா விட்டால் அதற்கு அவன் முந்திய பிறவியிற் செய்த தீவினையே காரணமாகும் என்று கற்பிக்கப்பட்டது. அதே போல, தீவினை ஆற்றும் ஒருவனுக்கு, நற்பலன் கிடைக்குமானல், அதற்கும் அவன் முந்திய பிறவியிற் செய்த நல்வினையே காரணமாகும் என்று விளக் கம் தரப்ப்பட்டது.
இவ்வாருக (அ) இயல்பான பொருட் பங்கீட்டை ஆதியிலே குறித்தது ‘பால்" (ஆ) பின்னர் பங்கீட்டின் ஏற்றத்தாழ்வுகளுக்கு அதிகார ஏதுவாக எண்ணப்பட்டது "தெய்வம்" அல்லது "ஊழ்”. (இ) அடுத்து, தத்துவ ரீதியிலே அநீதிகள் நியாயப்படுத்தப்பட்ட போது, பெரிதும் வழங்கிய சொல் "விதி". இதுவே தலைவிதி என வும் படும். பல பிறப்புக்கொள்கையும், வினைப்பயன் கோட்பாடும் இவ்வெண்ணக் கருவுக்கு உறுதுணையாக உள்ளன.
34.

"தலைவிதி" என்னும் எண்ணக்கரு, நீதிப் பிழைகளையும், நியதிப் பிசகுகளையும் சகித்துக் கொள்ளும் மனப்போக்கை வளர்க்கிறது. ஆகையால் அது உருப்படியான, ஆக்கபூர்வமான, செயலூக்கம் நிறைந்த முயற்சிகளைத் தடுத்து நிறுத்துகிறது; அல்லது தணித்து வைக்கிறது. ஆனல் இவ்வாறு தணிந்து ஒடுங்கிப் போவதே எல் லாக் காலங்களிலும் மனித இயல்பாக இருந்தது என்று கூறிவிட முடியாது. முறைகேடுகளைப் பொறுக்க முடியாத மக்கள் பொங்கி எழுந்து அவற்றையும் பொடிப்பொடியாக்கிய சம்பவங்கள் வரலாற் றில் நிறைய உண்டு. உலக சரித்திரத்தில் ஆரம்ப அறிவுபடைத்த பள்ளி மாணவர்களே இதற்தான உதாரணங்களை அள்ளித்தர வல்லவராவர். அவ்வளவு ஏன்? இன்று நம்மைச் சூழவுள்ள உரிமைப் போராட்டங்களின் நிகழ்காலப் போக்குகளை உன்னிப்பாக கவனிக் கும் எவருக்கும் உதாரணங்கள் உடனடியாகப் புலப்படும். ஒடுங்கு தலையும் ஒடுக்கப்படுதலையும், அடங்குதலையும் அடக்கப்படுதலையும் 'தலைவிதி' என்று நம்பிச் சோர்ந்து கிடக்கும் போக்கு இங்கு குறைந்து வருகிறது.
தலைவிதிக் கோட்பாடு வலிமை பெற்றிருந்த பழங்காலத் தொட்டே தலைவிதியை மாற்றி அமைப்பதற்கு முயலும் போக்கும் எண்ணமும் ஆசையும் தலை தூக்கி வந்துள்ளன.
"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலேவின்றித்
தாழாது உஞற்றுபவர்'', தெய்வத்தால் ஆகாதெனினும், முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரும்"
என்று வள்ளுவர் கூறுவன, தலைவிதிகளை மாற்றும் முனைப்பையும் முயற்சியையும் போற்றிப் பாடும் பாட்டே என்பது கவனிக்கத் தக்கது. ஆயினும், ஆள்வினை உடைமை என்னும் அதிகாரத்தில் உள்ள இந்தப் பாட்டுகள் அரசியல் என்னும் இயலிலேதான் வகு கின்றன. தலைவிதிகளை மாற்றும் முயற்சி, அரசுகளின் தரப்பிலிருந்து நோக்கப்பட்டு, ஆட்சியாளர்களின் கோணத்திலிருந்தே இங்கு கருத் துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. d
ஆஞல், நவீன கவிஞராகிய பாரதிதாசனின் பாட்டிலே, ஆளப் படுவோரின் பார்வைக் கோணத்திலிருந்து தலைவிதி தொடர்பாக சில ககுத்துக்கள் முன்வைக்கப்படுவதனை நாம் காண்கிருேம்.
"பாதிக்குதே பசி என்றுரைத்தால்-செய்த பாபத்தைக் காரணம் காட்டுவார்-மத வாதத்தை உம்மிடம் நீட்டுவார்-பதில் ஒதி நின்ருல், படை கூட்டுவார்!"
35

Page 20
என்ற வரிகள் கவனிக்கத் தக்கவை. இங்கு மதவாதம்’ என்று சொல்லப்படுவது, பிரதானமாகத் தலைவிதிக் கோட்பாட்டுச் சார் 'ான வாதங்களையே என்பது வெளிப்படை. மேலும், பாரதிதாச னின் பின்வரும் பாட்டடிகளையும் நினைவிற் கொ6ாளல் தகும்
"மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை
எக்களிக்க வேண்டும் இதயத்தில்! . ஈதன்றி நல்லறிவை நாளும் உயர்த்தி உயர்த்தியே புல்லறிவைப் போக்கிப் புதுநிலை தேடல் வேண்டும் மக்கள் உழைக்காமுன் மேலிருந்து வந்திடுமோ? எக்காரணத்தாலும் இன்மையிலே உண்மையுண்டோ?'
“மேலிருந்து வருதல்’ என்னும் கருத்து ஊழ் அல்லது தலைவிதி பற் மிய எண்ணக்கருவுடன் தொடர்பு கொண்டு நிற்பது கண்கூடு.
பாரதிதாசனுக்கு ஆசான்போல் விளங்கிய பாரதியார் தமது கவிதையிலே பல இடங்களில் விதி பற்றிக் குறிப்பிடுகிறார். பொதுப் 'டையாக நோக்குகையில், விதியின் வலிமையை அழுத்திக் கூறு வனவாகவே அவருடைய கவிதைப் பகுதிகள் தோற்றமளிக்கின்றன.
'காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்.
காலமே மதியினுக்கோர் கருவியாம் என்ருன்’
என்னும் வரிகளை எடுத்துக்காட்டலாம், ஆயினும், விதிவசப் பட்டுச் சோர்ந்துவிடாமல், உழைப்பின் வலிமையை வலியுறுத்தும் பகுதி களும் பாரதி பாட்டில் உண்டு. ‘புதிய ஆத்திசூடி" யில் வரும் வசனங்கள் சில மனங்கொள்ளத்தக்கவை.
*ஒய்தல் ஒழி. கேட்டிலும் துணிந்து நில்.சிதையா
நெஞ்சு கொள். சோதிடந் தனை இகழ்" என வரும் வாக்கியங்கள் வகைமாதிரியானவை. சோதிடம் பற்றிய கருத்து நமது அக்கறைக்கு உரியதாகும். வினைப்பயன் கோட்பாட் டுக்கும் சோதிடத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தலைவிதியை மனிதர்கள் அறிந்து கொள்வதற்கு, கிரகநிலைகள் திறவுகோலாக உள்ளன என்பதே சோதிடத்தின் அடிப்படை எடுகோள். கைரேகைகளும் பிறந்த தேதி முதலிய எண்களும் கைரேன்கச் சாத் திரத்துக்கும் எண்சோதிடத்துக்கும் திறவுகோல்கள் என்று கொள் ளப்படுகின்றன. இந்தச் சாத்திரங்களெல்லாம் தலைவிதிக் கொள் கைக்கும் வினைப்பயன் கோட்பாட்டுக்கும் சார்பானவை. ஆகவே தான், சோதிடந்தனை இகழ்” என்று பாரதி டாடும்போது, அது தலைவிதி பற்றி அவர் பூண்டிருந்த மனப்பான்மையை நமக்குக் காட்டிக்கொடுத்து விடுகிறது.
6 في

ஒ மரணம் மரணமாவதில்லை - ஐ எஸ். தெய்வேந்திரன்
'Dr.னம் t தினமும் எங்கள் மண்ணில் ஜனனமாகிறது.
உற்சாகமாக நடந்து கொண்டிருந்த நகரம் திடீரென கலைந்து போகிற்து அமைதியான கிராமம் அதிர்ந்து போகிறது. காத்திருந்த குண்டுகள் அவசரமாக ஒன்றுகூடி விடுதலை பெற்று தமிழ் உடல்களில் சுதந்திரத்தை பிரகடனம் செய்கின்றன.
பூமியில் விழுந்த பிணங்கள் ... ரத்த நீரைக் கொப்பளித்து ஓய்ந்தபோது மீத மிருந்த நிலங்களும் சிவப்பாயின்.
மரணமானவர்கள் பட்டியலில் ஏணி வைத்து ஏறும் எண்ணிக்கைகள் மயக்கம் போட்டு விழுந்தன.
மரணம் மரணமானலும் S & நம் மண்ணில் அது மறுபிறப் பெடுத்து விடும். -- ச்
நிகழ்காலத்து இலக்கியங்களையும் கலைகளையும் நோக்கும்போது, அவற்றிலே தலைவிதிக் கொள்கை மேலாண்மை பெற்று விளங்குவதை தாம் பரவலாகக் காண்கிருேம். நமது கதாசிரியர்கள் படைக்கும் நாவல்கள், சிறுகதைகள் முதலியவற்றிலும், நம்மிடையே தோன்றும் நாடகங்கள் சினிமாப் படங்கள் ஆகியவற்றிலும் விதிவாதம் பல படப் பயின்று வருகிறது. குறிப்பாக, திரைப்படப் பாடல்களிலே விதிவாத எண்ணங்களை நாம் தாராளமாக இனங்கண்டு கொள்ள
3) Tru)
இவ்வித எண்ணங்கள் கலேயிலும் இலக்கியத்திலும் பயின்று வருவது எதனைக் காட்டுகிறது? நம்மவரிடையே சோதிடம், கை ரேகை சாத்திரம், எண்சோதிடம் என்பன மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளமை எதனைக் காட்டுகிறது? நம் சமூகத்தில் ஒரு கணிச மான பகுதி, நன்னம்பிக்கை குன்றிச் சோர்வு கொண்டு தவிப்ப தையே காட்டுகிறது. வாழ்க்கையின் தலிவுகள் கலைகளிலும் எதி
ரொலிப்பது இயல்புதானே.
3.

Page 21
@鷲部 நந்தா மாலினியின் குரல்.
சி, வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தலைசிறந்த சிங்கள பின்னணிப் பாடகிக்கான ஜனதிபதிப் பரிசை தனது ஒரேயொரு பாடல் மூலம் பெற்றவர்தான் நந்தா மாலினி. இப்பாடலின்
மூலம் சிங்கள இசையுலகில் தனி இடத்தைப் பிடித்துக்கொண்ட
இவர் பல இசை நிகழ்ச்சிகளை, தனித்து நடாத்தியதுடன் பல இசைத் தட்டுகளையும் வெளியிட்டுள்ளார். பாரம்பரிய சிங்கள சங்கீதத்துடன் இசைவான பாடல்களை படிவரும் இவருடைய பாடல்கள் சென்ற வருடங்களில் ரூபவாகினியிலும் வானுெலி யிலும் தொடர்ந்து ஒலித்து வந்தன.
“சுனில் ஆரியரட்ன" என்பவரின் புரட்சிகா பாடல்களை பாடி யதன் மூலம் இவர் தன்னை முதன் முதலில் முற்போக்கானவர் என இனங்காட்டிக் கொண்டார். அண்மையில் வெளியிடப் பட்ட "கசெற்" ஒன்றில் 'சுனில் ஆரியரட்ன இன் பாடல் மூலம் இவர் தமிழ் இளைஞர்களை சிங்கள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து பொது எதிரியான ஆளும் வர்க்கத்திற்கெதிராக போரிட அழைத்துள்ளார். இந்த "கசெற்" வெளியானதன்பின் சிறிது காலத்திற்கு ரூபவாகினியிலும், வானுெலியிலும் இவர் முற்றகவே இருட்டடிப்பு செய்யப்பட்டார். ஆயினும் சிங்கள இசை யுலகில் இவர் முடிசூடா இராணியாகவே திகழ்ந்தார். இதனுல் ஒரிரு முறை தங்கள் கொள்கைகளுக்கு பாதகமில்லாத பாடல்கள் சில ரூபவாகினியில் ஒளிபரப்பாயின. சிங்களதிரைப் பட, இசைத் துறைகளில் பிரபல்யமான சகலரும் அரசின் கால டியில் தவம் இருக்கின்ற இந்த வேளையில் நந்தா மாலினி அர சிற்கு பெரிய தலையிடியாகவே இருந்துவந்துள்ளார்.
அண்மையில் தாதிகளின் போராட்டத்துடன் அவர் ஒரு புதிய பரிமாணத்தையே அடைந்துவிட்டார். கொழும்பு ரீ. எம். யூ. மண்டபத்தில் தாதிகளின் பொதுக்கூட்டம் அண்மையில் தடை பெற்றது. தன் சுயவிருப்பின் பேரில் தந்தாமாலினி இந்த நிகழ்ச்சி யில் இசை விருந்தளிந்தார். பல புரட்சிகர பாடல்கள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட தாதிகளை உத்வேகப்படுத்தியதுடன் பொதுமக்களையும் உணர்வு பெறவைத்துள்ளார். இந் நிகழ்ச்சி யின் மூலமே நந்தா மாலினி தன்னை வ்ெளிப்படையாக அரச அடக்குமுறைகளுக் கெதிரான புரட்சிகர பாடகி என பிரகட
னப் படுத்தியுள்ளார். இது அரசுக்கெதிரான ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கலை இலக்கிய ஆர்வலர்
களை உற்சாகப்படுத்துகின்றது.”
- அசன்

விமர்சனம் :
ஒ9 மரணத்துள் வாழ்வோம் (யாழ்ப்பாணம்: தமிழியல், 1985, X V +170 ப.)
8 சி. சிவசேகரம்
ق. م 6ة
Pரணத்துள் ஒ17:வோம்’ கவிதைத் தொகுதியின் உறைகளில் உள்ள படத்தைப் :ர்த்தேன். அதிலிருந்த பூட்ஸ் சுவடுகளும் அவற்றுக்கமேலாக முனைத்து விரிந்த மலர்களும் தொகுதியின் உள் ளடக்கத்திற்குப் டொருத்தமானவையாகவே தெரிந்தன. வாசித்து முடிந்தபின் இன்ஞெருமுறை கவனித்துப் பார்த்தேன். அப்படத் திலிருந்த சுற்கள் சுவடுகள் பதிந்தபின் வைக்கப்பட்டவை போல் தெரிந்தன. ஒருவேளை காளான்களோ என்றும் நினைத்தேன். ஒரொரு நேரத்தில் கவனயீனமூம் வேருெருநேரத்தில் மிகையான சொற் பிரயோகமும் எவ்வாறு கவிதை W LLLLSLLLLLLLL LLLL S S LL S S LLLLLLaLLLLLLLaLaE0SLLLLE SSSLSS
யைத் தெளிவீனப்படுத்தி வலு
இழக்கச் செய்து விடுகின்றது "ழமுரசு வார மலரில்" என்ற எண்ணம் மனதில் நெருடி வெளிவந்த இக்கட்டுரை பல் : Ամֆl. வேறு வகையான கருத்துக்
களும், விளக்கங்களும் எழு வதற்கு தூ ன் டு கோ லாக அமைந்தமையால் அதன் முக் கியத்துவம் கருதி தாயகம் மறுபிரசுரம் செய்கிறது.
தொகுதியில் உள்ள கவிதை களில் பல, கவிதை என்ற வகை யில் மிகவும் பலவீனமானவை, பலவீனமான படைப்புக்கள் எல் லாமே "புதிய சடைப்பாளிகட்கு உரியன அல்ல, "தே ர் ந் த” கவிஞர்கள் என்று கரு த ப் படுவோ ரது சில எழுத்துக்களும் பலவீனமாகவே உள் ளன. எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவதும் கவிதைகளில் கவித் துவத்தை வலியுறுத்துவதும் முரண்பாடானவை அல்ல. காலத் தின் தேவை என்ற பேரில் குறைபாடுகளைக் காணுததுபோல் விடு வதால் கவிதை வளரப்போவதும் இல்லை. காலத்தின் தேவை நிறைவு செய்யப்படப் போவதும் இல்லை. விமர்சனம் என்பது யாரோ யாரையோ மட்டந்தட்டுகிற காரியமாகத் தெரிந்தால் அது விமர் சனம் பற்றிய அறியாமையின் வெளிப்பாடு நல்ல விமர்சனம் பய னுள்ள முடிவுகளைக் கூறலாம். சிறந்த விமர்சனம் பயனுள்ள கேள் விகளை எழுப்புகிறது, கேள்விகள் மூலமும் அவை தூண்டிவிடும்
- 39
ஆ--குழு,

Page 22
தேடல்கள் மூலமும் படைப்பாளிகளும் படைப்புக்களும் உயர முடி கிறது. நமக்கு இலுப்பம் பூவே போதும் என்கிற மனுேபாவம் தொடர்ந்தால், மண்ணுங்கட்டியே சர்க்கரை என்கிற நிலை உருவாக அதிகம் நாளாகிவிடாது. கவிதைகளின் தெரிவும் தொகுப்பாளர்களுள் ஒருவரான சேரனின் முன்னுரையும் இந்தப் "போதுமென்ற மனத் தைப் பிரதிபலித்தாலும், தொகுப்பாளர்களில் ஒரிருள் ராவது ஒரு $ாலத்தில் வானம்பாடியில் வந்ததுபோன்ற அரசியல் கவிதைகள் அவற்றின் ஸ்லோகத்தனத்திற்காகக் கண்டிக்கப்பட்டதைக் கை கொட்டி வரவேற்றதைக் நினைவு கூரும்போது, இந்தச் சகிப்புத் தன்மை ஸ்லோகம் வரும் திசையைப் பொறுத்தது என்றே கருத வேண்டி இருக்கிறது. கோ ஷங்ளும் ஸ்லோகங்களும் பயனுள்ள சமு தாயப் பணியாற்றக் கூடிய நிலைமைகளை நான் அங்கீகரிக்கின்றேன். அபத்தமான சினிமாமெட்டில் வந்த இயக்கப்பாடல் கவிதையைவிட அதிகம் பயன்பட்ட சூழ் நிலைகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். வெய்யிலில் தவிக்கிறவனுக்கு தூர இருக்கும் ராஜகோபுரத்தை விட அருகிலிருக்கும் திண்ணை நிழல் அதிக பயன் தருகிறது. அதனுல் தெருத்திண்ணை ராஜகோபுரமாகிவிடாது. படைப்பாளிகள் மட்டு மன்றி வாசகர்களும், யாரோ வகுத்த காலத்தின் தேவையான ஸ்லோகப் படலைகட்குள்ளேயே நிரந்தர வாசம் செய்ய (1pւգնաn 3). எனவே தான் கவித்துவத்தைப் பற்றி வலியுறுத்துவது அவசியம் என் கிறேன். அரைவேக்காட்டுக் கவிதையைவிடக் கருத்துத் தெளிவான இயக்கப்பn டலும் கொள்கைப் பிடிப்பான கோஷமும் உயர்ந்தவை வெற்றுப் புகழ்ச்சி மூலம் உருப்படியான கோஷம் இயற்றும் திறமை யைக்கூடச் சாகடித்துவிட முடியும். M
தொகுப்பில் இடம்பெற்றுள்ள முப்பத்தொருவரின் எண்பதி ரண்டு படைப்புகளையும் விமர்சிக்கும் உத்தேசம் எனக்கு இல்லை. விமர்சிக்கும் அவசியமும் இருப்பதாக நான் எண்ணவில்லை. தொகுப் பின் தன்மை தொகுப்பாளர்களின் பார்வை பற்றி நிறையவே சொல் கிறது, சேரனின் முன்னுரையில் அது மேலும் வலியுறுத்தப் பட்டுள் ளது. சமகாலத்தின் தேவைபற்றிய என். பார்வையில், அதன் கோளாறுகளைச் சற்றே தொட்டுக் காட்டும் அவசியம் தெரிகிறது. சில கவிதைகளைப் பற்றிய சிறு குறிப்புக்கள் வாசகர்களதும் என் போன்று இன்னும் கற்கவேண்டிய படைப்பாளிகளதும் சிந்தனை யைக் கிளறும் என்ற எதிர்பார்ப்பில் எழுதப்பட்டுள்ளன. سم
தொகுப்பு பெரும்பாலும்,அலை, புதுசு ஆகிய இரண்டு சஞ்சிகை களிலும் பிரசுரமான கவிதைகளைக் கொண்டது. பிற ஈழத்துச் சஞ்சிகைகள் அநேகமாகத் தவிர்க்க இயலாமை காரணமாகவோ தயை உணர்வு காரணமாகவோ தம்வங்கைச் செலுத்த அனுமதிக்
O

கப்பட்டுள்ளன. முருகையன் அண்மையில் எழுதிய நல்ல கவிதைகள் (தொகுப்பில் வராதன) தாயகத்தில் பிரசுரமாயின. சிவசேகரத்தில் இரண்டு கவிதைகளும் செம்பதாகைக்காக எழுதப்பட்டவை. அ6ை செம்பதாகை/தாயகத்தில் வந்தபின்னரே படிகளில் பிரசுரமாயின. (படிகளில் வந்த வடிவங்கள் தமிழவன் பார்வைக்காக மட்டுமே அனுப்பப்பட்டவை:). இருட்டடிப்பு என்கிருர்களே, அதற்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா?
ஒருவரது அக்கறை இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற் றிய ஒருவரது அக்கறை ஒரு மொழிவாரி1 இனவாரி முரண்பாடாச் மட்டுமே அதைக் காணச் செய்கிறதென்ருல் அது ஆழமற்ற பார்வை யின் விளைவான அக்கறை, நேற்று ஒடுக்கப்பட்ட யூதனை இன் றைய ஆக்கிரமிப்பாளனுக மாற்றிய ஸியோனிஸத்தின் அக்கறை. அவர்கள் மத்தியில்கூட சோஷலிஸம் பேசியவர்கள் இருந்தார்கள் இஸ்ரேலிய பிரதமர்களாக "சோஷலிஸ் ஸியோனிஸ்டுகள் இருந்து பலஸ்தீன மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தினர்கள். தமிழ் ம களது போராட்டம் ஒரே ஒரு முரண்பாட்டை (அதாவது இன முரண் பாட்டைப்) பற்றியது என்ற பார்வையை வலியுறுத்தும் விதமா கவே கவிதைகள் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு அக முரண்பாட்டை (பெண் விடுதலை பற்றி யதை) வலியுறுத்தும்
* 'இன்றெமது போராட்டம் / இனவிடுதலைக்கானது / மட்டு மல்ல" என்ற வரிகளைக் கொண்ட கவிதை ("தோழி உனக்குத் தான்" அருள் , தீப்பொறி ) மெலிதான விதிவிலக்கு. நா. சபே சனின் கவிதை ஒன்று பெண்களின் அரசியல் விழிப்புப்பற்றியதாக இருந்தாலும். (அது அருளின் கவிதை கூறும் முரண்பாடு பற்றிய தல்ல. ஆதவனின்) 'ஆதரே பிரிந்த சிங்களச் சினேகிதியை விளித்து எழுதப்பட்டது. கடைசி வரிகளுள் “என் நெஞ்சினுள் / மனிதம்மனித உறவு / சந்தேகமானது என உணர்கிறேன்’ என்ற சொற் கள் நியாயப்படுத்தப்படாத விதமாக வந்து விழுகின்றன. (அல்லது ஆதவன் மனிதம் பற்றிக்கொண்டுள்ள பார்வையைக் கூறுகின்றன?) வ. ஜ. ச. ஜெயபாலனின் நீளமான கவிதையின் இறுதியில் சிங்கள நண்பர்கள் பற்றிய அவரது வார்த்தைகள் முழுமையின் விரக்தி யையும் கசப்பையுமே உணர்த்துகின்றன. -
சிங்கள மக்களைப்பற்றிய ஒரு குரோதமற்ற பார்வை சேரனுக்குச் சாத்தியம் என்று என்னை எண்ணவைத்ததும், அவரது அண்மைய கவிதைகளில் உணர்வின் ஆழத்திலும் கவித்துவத்திலும் என்னைக் கவர்ந்ததுமான "ஒரு சிங்களத் தோழிக்கு எழுதியது” இத் தொகுப் பில் இடம்பெறவில்லை. (இந்த ஒரு கவிதையில் சேரன் தன் "தேசிய
41

Page 23
எல்லைகட்கு அப்பால் எட்டிப்பார்த்து விட்டுப் பின்னர் தலையைப் பின்னுக்கிழுத்துக் கொண்டாரோ என்று சந்தேகிக்கிறேன்!). சிங்கள 48க்கள் பற்றிய நட்புணர்வு இல்லாமை ஒருபுறமிருக்க, பெளத்த மதத்துக்கும் சிங்கள மொழிக்கும் சிங்கள மக்களுக்கும் எதிரான இனத் துவேஷத்தைப் பிரதிபலிக்கும் சொற்தொடர்கள் பிரயோக 10ாகும் கவிதைகள் சில (காலத்தின் தேவை கருதி?) இடம்பெற்றுள்
6.
'' logs Fair அங்கிகளுக்கும் / மழித்த தலைகளுக்கும் / புலப்ப -ாது.' ('அகங்களும் முகங்களும் 1", வில்வரத்தினம்)
‘சூழவும் / உடைபடும் கடைகளின் ஒலியும்/வெறிக் கூச்சலும்
வேற்று மொழியும் 1 விண்ணுயர்ந்த தீச்சுவாலையும்’
(*81 மே 31 இரவு-புஷ்பரா, ஜஸ்)
“வேற்று மொழி வெறிக் கூச்சலுக்கும் தீச்சுவாலைக்கும் நடுவில் வைக்கப் பட்டுள்ளது. வேற்றுமொழியில் வெறியர்கள் கூச்சல் என்று வந்திருந்தால், வேற்றுமொழி வெறியர்களை அடையாளங் காட்டும் வேற்றுமொழி, வெறிக் கூச்சலுக்குச் சமாந்தரமாகப் பயன்படும் போது அதன்பாதிப்பு வேறுவிதமாகவே அமைகிறது.
'தார் மிக உலகில் / கால்கள் பதிக்க / விரும்பாத மனத்துடன் உலகை வெறுத்து / போதிமரத்தில் / தூக்குப் போட்டுச் செத்தான் புத்தன்/ பரி நிர்வாணமாய். 少‘象
(புத்தனின் நிர்வாணம்’, ஹம்ஸத்வனி) இவ்வாருன வார்த்தைகள் இவற்றைவிடப் புத்திசாலித் தன மாகவும் கருத்தாழத்துடனும் அலை | புதிசு முகாங்களைச் சேராத யாராலும் எழுதப்பட்டிருந்தால் அது அபத்தம் கொச்சைத்தனம் என்றுகியிருக்கும். வார்த்தைகளின் அர்த்தமும் அவை ஏற்படுத்தும் பாதிப்பும் பற்றிய அறியாமையால், உணர்வு வேகத்தில் இவை எழுதப்பட்டவை என்று சமாதானப் படுத்திக் கொள்ளலாம்.
மைத்ரேயியின் கல்லறை நெருஞ்சிகள்’ என்ற கவிதை "அவர் களைப் பற்றிக் கூறுகிறது. "அவர்கள் முழுச் சிங்கள மக்களுமா அல்லது ஆளும் அதிகார வர்க்கமா என்பது தெளிவாகாதவாறு கவிதை அமைந்துள்ளது. தமிழ் இன விடுதலையை சிங்கள இன விரோதத்துடன் சேர்த்தே பார்த்துப் பழகுவோரது சூழலில் ஏற் கெனவே உள்ள கசப்புணர்வுக்கு உரமூட்டுமாறு அமையும் அளவில் அது வருந்தத் தக்கது.
“சென்று வருகிறேன் ஜென்ம பூமியே', வண்ணச்சிறகு சிறிமாசாஸ்திரி உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுக்குத் திரும்பிய போது
А о سا بما

எழுதியது. "நதி சஞ்சிகையில் பிரசுரமானதாகவோ பிரசுரமாக இருந்ததாகவோ நினைவு. அந்த வகையில் தொகுதியின் பிற கவிதை களின் கால இடைவெளிக்கும் சூழலுக்கும் வெளியில் நிற்கிறது.
*சிந்தனையின் ஆழமும் படைப்பு வீச்சும் ஒருங்கே இணைந்து வரும் கவிதைகளை உயர்ந்தவை என்றும் ஒசை, உணர்ச்சி சார்ந்து வரும் கவிதைகள் ஒருபடி இறங்கியவை என்றும் ஒரு கருத்து நிலவு கிறது. எங்களுடைய அனுபவம் இது சரியல்ல என்பதையே உணர்த் துகிறது”. என்று சேரன் கூறுகிருர். இது இந்தக் கவிதைத் தொகு தியை நியாயப்படுத்தும் அவருடைய கண்டுபிடிப்பு. (முன்னெரு தடவை "வானம்பாடியில் மரபுவழிக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கு மிடையிலான வேறுபாட்டை செவிப்புலன் வழி கட்புலன் வழி வேறுபாடு என்று காட்டும் ஒரு கண்டுபிடிப்பை உதிர்த்தார்!) தொகுப்பில் உள்ள கவிதைகளைக் கவனித்தால் மரபு வழிக் கவிதைகளை எழுதி வந்தவர்கள் பெரும்பாலும் ஓசை நயது தைப் பேணுவதையும் ‘புதுக்கவிதை'யாளர் பலர் ஓசை நயம் பற்றிய உணர்வே இல்லாமல் எழுதியிருக்கிறதையும் காணலாம். சாதாரண மனிதனுக்கு சாதாரண கவிதையும் புத்திஜீவிக்கு ஸ்டெ ஷல் கவிதையும் என்ற விதமான பேச்செல்லாம் கவிதையை உரை நடையினின்றும் சினிமாப் பாட்டினின்றும் வேறுபடுத்திக் காட்டு வது என்ன என்ற கேள்வியைத் தவிர்த்ததால் வந்த விஜணகள் கவிதையை ஒருவர் விரும்புவதே அவரது இலக்கிய ரச%னயை வெறுமே வீரகேசரி செய்தியும் சுஜாதாவின் தொடர்கதையும் வாசிக்கிறவரினது ரசனையினின்று வேறுபடுத்துகிறது. கவிதை பற் றிய ரசனையும் கவியுணர்வும், தரமான கவிதையுடன் பரிச்சய படுவதாலே வளர்வன. ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு சிக் லான சொல்லடுக்குகளாகக் குவியவேண்டியதில்லை, படைப்பு வீச்சு வாசகனைப் பயமுறுத்தும் விஷயமுமில்லை. படைப்பாளி யாருக்காக எதைப்படைக்கிருன், அவனது (உடனடியான) கருத்துப் பரிமாறு: நோக்கம் எவ்வளவு தூரம் வெற்றிபெற்றுள்ளது என்பன மட்டுமல் அவனது படைப்பு வாசகனது சிந்தனையை எவ்வளவு தூரம் கிள கிறது என்பதும் முக்கியமானது. நல்ல கவிஞன் பாதையை உணர்த்து கிருன். அல்லாதவன் தானே முழுப் பிரயாணத்தையும் செய்து காட்டுகிருன், அவனது வாசகன் வெறும் பார்வையாளனக அணு பவத்தைப் பகிரமுடியாத அந்நியனுகிருன். கவிதையானது ஒரு செய்தியைக் கூறிவிட்டு 'இத்துடன் இலங்கை-வானெலியின் செய்தி அறிக்கை முடிவடைகிறது" என்ற விதமாக நின்றுவிட முடியுமா? நிகழ்வுக்கும் அப்பால் பார்க்குமாறு வாசகனது சிந்தனையைக் கிளறி அவனையும் கவிஞனது தேடலில் ஒரு பங்காளியாக்க வேண்டாமா? வெறுமனே தகவலையும் அபிப்பிராயத்தையும் கூறுவதானுல் கவி
43

Page 24
தையைவிடக் கொட்டை எழுத்தில் வசனமாக போஸ்டர் எழுதிச் ஈவரில் ஒட்டுவதில் அதிகம் பயனிருக்கும். ஊரடங்குச் சட்டம்
அமுவில் இல்லாத நேரத்தில் பலரும் வாசிப்பார்கள்.
இரண்டு கவிதைகளில் உள்ள அச்சுப்பிழைகளேச் சுட்டிக்காட் டிய பிறகு கவிதைகளில் சொற்பிரபோசுத்தின் பலவீனங்கள் பற்றிக் கவனத்தைச் செலுத்த எண்ணுகிறேன்.
சண்முகம் சிவலிங்கத்தின் கவிதைத் தலைப்பு 'இன்றிலென்சி லும் நா8ள'என்றிருந்திருக்க வேண்டும் "அலேயில் "இன்றிலெங்கினும் நா%ள" என்று பிரசுரமானவாறே மறுபிரசுரமாகியுள்ளது. சினி ரேகரத்தின் '52" இல் "அற்புதங்கள் ஒருக்காலே நடந்தாலோ’ என்று படிகளில் வந்தவாறே பிரசுரமாகி உள்ளது. இவற்றில் உள்ள அப்பட்டமான தவறுகள் தவிர்த்திருக்கக்கூடியவை. அறியாமை ாரணமாகவோ அசட்டை காரணமாகவோ நேரும் அச்சுப்பிழைக் தும் எழுத்தாளரின் பிழைக்கும், வேண்டுமென்றே தரப்படும் 'தவ நுண் பிரயோகத்திற்கும் வேறுபாடு காண்பது படைப்பாளியின் எழுத்துடன் பரிச்சயமுள்ளவர்கட்கு மிகவும் சிரமமானது அல்ல. சில்லரைத் தவறுகள் அர்த்தத்தையே சீர்குலத்துவிடும் அபாயம் உரைநடையை விடக் கவிதையில் அதிகம். ஏனெனில், கவிதை பொதுவாகவே, இறுக்கமானதும் சிக்கனமானதுமான Friti
 ைமப்பைபுடையது.
முருகையனுடைய இரண்டு கவிதைகளிலும் பத்மநாதனுடைய கவிதையிலும் எளிமையான சொல்லமைப்பும் தெளிவும் சந்த விெ மையுடன் இ&னந்து வலிமையான கவிதையாகின்றன. கவிதை என் பது ஜிகினு மினுமினுப்பல்ல. அதிகம் அலட்டிக் கொள்ளாமலே ஆழமான சிந்த&னயையும் உணர்வின் தீவிரத்தையும் வெளிப்படுத் தும் வகையில் இவை எனக்கு மிகவும் பிடித்திருந்தன. சண்முகம் சிவலிங்கத்தின் தரமான இரண்டு கவிதைகளுள் ஒன்றில் உணர்ச்சி யின் தீவிரம் ஓங்கி நிற்கிறது. அவரது கவித்துவத்தின் வழமையான சிறப்பு 'பாடாத பாடல்களில்" வரிக்குவரி வெளியாகிறது ".ஆணு லும் நீ என்னேப் பாடச் சொல்கிருய், குருதி உறைந்த பாடல்கள் பிணங்கள் அழுகும் பாடல்கள் இருள் கன்னங்கரிய புகையாய் தலைமேல் கவியும் பாடல்கள் கருச்சிதையாமல் மூளியாய் துவாலே இறைத்துக்கட்டி விழாமல் 'நெஞ்சைப்பிளந்து குரல் வளையில் இடறி 'நாவில் வெடிக்கின்ற காலம் ஒன்று வரும் அப்போது கேள்- இப் போதல்ல" தா. இராமலிங்கத்தின் கவிதைகட்கு அவருக்கே கைவந்த ஒரு சந்த அபைப்பின் சிறப்பு உண்டு. "நெஞ்சு பதறுகுது', "அகால மரணங்கள்','சாவிளைச்சல்' ஆகிய-மூன்றிலும் காணப்படும் சந்த
44

விமை கருத்து ஒன்று படுவோம் கவிதையில் தளர்கிறது, கொடி யேற்றத்தில் இல்லாமலே போய்விடுகிறது. அவரது கவிதைகளில், நடுநடுவே, சந்தத்துடன் இ&னத்து பிறக்கும் வர்ன?னகளே மிகவும் ாசித்திருக்கிறேன், "கொடியேற்றம்' அதையும் இழந்து பலவீனமான
டிமங்களாலான பிரசாரமாக சிற்கிறது.
கவிதையில் சொற்ருெடர்களே அடுத்தடுத்து மீண்டும் சொல்லு ஒதன் பாதிப்பு அவற்றின் அர்த்தத்தை முக்கியமான வகையில் மாற்றுவதற்கோ அல்லது எழுத்தத்தை உச்சப்படுத்துவதற்கோ பயன்படும். ( இது உரை நடையில் சுடப் பயன்படும் உந்தி, "பேTங்கோ போங்கோ" என்பது "போகாதீர்கள்" என்பதையோ போங்கள்' என்பதை வலியுறுத்திக் கூறவோ பயன்படலாம். இங்கு பேச்சின் தொனியும் சந்தர்ப்ப சூழ்நிஃலயுமே அர்த்தத்தை உணர்த்து கின்றன. கவிதையில் இவ்வாருண் பிரயோகம் கவனமாகச் செய்யப் படவேண்டும். அல்லாத இடத்தில் அது வெறும் ஜடத் தன்மை பாகவே வந்து விழும். நான் கண்ட சில கவியரங்குகளில், பாந்தி சரீகமான முறையில் சிலபேர் இவ்வாறு திரும்புக் கூறியமை அவர் சுளுக்குத் தம் வார்த்தைகளின் வலிமைமீது உள்ள நம்பிக்கையினத் ஒதயே எனக்கு உணர்த்தியது. யேசுராசாவின்
'உஷ்ண வட்டம் நிதமும் தாக்கையில் கல்லும் உயிருறும் நாட்களும் வரும் கல்லும் உயிருறும் நாட்கள் வரும்"
"கற்கள் உயிர்த்துச் சுடரை விசையில்
அடக்கிய சக்திகள் தப்ப முடியுமா? அடக்கிய சக்திகள் தப்ப முடியுமா?"
"கற்கள் உயிர்க்கையில். கற்கள் உயிர்க்கையில்.
மக்கள் அலேயாய்த் திரண்டே எழுவர்"
'அந்த அலேயிற் கரைந்தே போகும்!
அந்த அலேயிற் கரைந்தே போகும்!"
என்றவாறு மீண்டும் மீண்டும் வரும் வரிகள் அவற்றில் இல்லாத வேகத்தையும் வீச்சையும் பெறவேண்டித் திரும்பக் கறப்பட்டு ஸ்திர்பார்த்த அழுத்தம் ஏற்படாமல் துவண்டு விழுகின்றன. இங்கேதான் சந்த வலிமையுடன் எழுதுகிறவர்களும் பேச்சோசை பின் வீலிமையைக் கிரகித்துக் கொள்கிறவர்களும் பெரும்பாலும் வெற்றிபெறுகிருர்கள். அவருடைய "சூழலின் தோர்த்தம்", "உன் ஆட்ையவும்:கதி ஆகிய இரண்டும் ஒப்பிடுகையில் நன்ரூக அமைந்
45

Page 25
துள்ளன. ஆயினும் "உன்னுடையவும் கதி' யில் முழுவதும் இலக் கண ரீதியான மரபுவழி எழுத்துத் தமிழில் இருந்தாலும், நடுவே. "யாரும் ஒன்றுங் கேட்க ஏலாது” என்ற வரி, ஒசையிலும் சொல் லமைப்பிலும் துருத்திக்கொண்டு நிற்கிறது. அது பயன் கருதி அவ் வாறு அமைந்ததாக நம்ப இடமில்லை. אי
வ. ஜ. ச. ஜெயபாலன் "உயிர்த்தெழுந்த நாட்கள்” என்ற நீண்ட கவிதையில் 83 ஜூலை வன்முறை நிகழ்வுகளைப் பதிய எடுத்த முயற்சி ஒரு சுயபுராணமாகவும் அவர் தன்பாற்கொண்ட பரிதாப உணர்வை வலியுறுத்துவதாகவுமே அமைந்துள்ளது. அவருடைய விேத்துவம் இடையிடை தலைநீட்டத் தவருவிட்டாலும் முழுமையில் செயற்கைத் தன்மையான த்திஜீவித்தனம்தான் ஓங்கிநிற்கிறது.
சேரனுடைய படைப்புக்களில் மலையகச் சூழலில் இனவாத வ.ை முறையை மையமாகக் கொண்ட "எல்லாவற்றையும் மறந்துவிட லாம்" சிறந்து நிற்கிறது. கனயினமான சொற்பிரயோகம் நல்ல எழுத்தை எவ்வாறு பாழாக்கலாம் என்பதைப் பற்றிச் சேரன் அறிவார் என நம்புகிறேன்.
**கொள்ளையடிக்க வந்த
சிங்களவர் மீது துவக்கால் சுடுவதைப் புத்தர் கூட அனுமதிக்க மாட்டார் என்பதை அரசு அறியும்"
*அவர்கள் அவனைச் சுட்டுக்கொன்றபோது’ கவிதையில் வரும் வரி கள் இவை. இவற்றின் அர்த்தம் என்ன? புத்தர் அகிம்சாவாதி யில்லையா? அகிம்சாவாதி என்ருல் ‘புத்தர் கூட" என்ற சொற் ருெடர் உணர்த்துவது என்ன?
*உயிர்ப்பு கவிதையில் சரளமாகப் பாய்ந்து கொண்டிருந்து சொல்லோட்டம் "அடுத்தது மரணம்' என்று ஒரு உச்சக்கட் டத்தில் வந்து நின்றபின் 'சொல்லாமற் செய்வர் பெரியர்" சொல்லாமற் கொல்வான் கொடியோன்”
என்று தொடரும்போது ஏமாற்ற உணர்வே மிகுகின்றது. இங்கே சேர்ன் அதிபுத்திசாலித்தனமான வார்த்தை முத்துக்கள்ை உதிர்த்து விட்டதாக நான் எண்ணவில்லை. 'அடுத்தது மரணம்" என்ற சொற்கள்தரும் அதிர்ச்சியினின்று வாசகனை மீட்டுக், கவிதை யைத் தொடர இயலாத தடுமாற்றமே அங்கு புலஞகிறது. இந்த இரண்டு வரிகட்குல் பதிலாக ஒரு க்ரிய கோடோ அல்லது பெரிய இடைவெளிய்ோ சாதகமான ப்ாதிப்பை எற்படுக்தி இருக்கும்.
其务

. மு. பொன்னம்பலத்தின் கருத்துக்களில் ஆன்மீகமும் ஆயுதப் போராட்டமும் சங்கமிப்பது எனக்கு வியப்பளிக்கவில்லை மு. தளைய சிங்கம் விட்ட இடத்திலின்று தொடர்கிற பயணத்தில் மு . த . வின் குழப்பங்களினின்றும் விடுபடமுடியாமல் மு. த. வாழ்ந்த சூழலை விடச்சிக்கலான ஒரு சூழலில் ஆன்மீகத்தையும் குறுகிய அரசியல் பார்வையையும் ஒன்றுபடுத்தும் தத்தளிப்பு சீஷ்யகோடிகளுடை பது. மு.பொ.புராண இதிகாசங்களிளின்றும் படிமங்களை உருவாக்கிப் பயன்படுத்த முனைவது புதியதல்ல என்ருலும் மற்றக் கவிஞர் களினின்று அவரை வேறுபடுத்துகிறது. இவ்வாறன படிமங்களின் பாவனையில் இதிகாச மரபை நேரடியாகவே சமகாலச் சூழலில் பிரயோகிப்பதும் சமகாலச் சூழலின் யதார்த்தத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு மரபில் வேண்டுமென்றே மாற்றங்களைப் புகுத்துவது மான இரண்டுமே சாத்தியம் ஆணுல் வேண்டுமென்றே செய்யப்படும் மாற்றமும் தவருன பிரயோகமும் ஒன்றேயல்ல. “முன்னிரவின் மோக னம்’’ கவிதையில் முன்னிரவின் மங்கும் இருளில் புற உலகு கருமோகினியாக ஒட பஸ் மாசுரன் துரத்துகிருன். சிவபெருமான் தலையிலிருந்து மேற்கில் விழுந்துமறையும் பிறைநாளை மோகினியாய்ப் பொங்கி எழும் எரிகோள் என்று கவிதைமுடிகிறது. எது மோகினி என்ற குளப்பம் ஒரு புறம் நிற்க புராணத்துடனன வேறுபாடு திட்ட மிட்டுப் புகுத்தப்பட்டதாகத் தெரியவில்லை மாருக, படிமத்தின் பலவீ னத்தையே உணர்த்துகிறது. “காலனின் கடைவிரிப்பு அப்பாவி மக்களின் படுகொலைகள்மூலம் "எழுச்சி தேரென எழுந்து விடுதலை இலக்கை அடையும்' என்பதனுல், காலன் கடை விரிப்பைக் கை நீட்டி வரவேற்கிறது. அணுவசிய மரணங்கள் தடுக்கப்படவேண்டும். எனவே, காலனைக் கடையை மூடுமாறு எட்டி உதைப்பது தான் எனக்கு நியாயமாகப்படுகிறது. மு.பொ. என்னைப் போலன்றி ஆன் மீகவாதி. எனவே நம்பார்வைகள் வேறுபடுகின்றன.
வில்வரத்தினத்தின் “விடுதலைக்குருவியும் வீட்டுமுன்றிலும்மிகவும் சராசரியான ஒரு கவியரங்கு சமாச்சரம். ‘எங்கள் வீதியை எமக்கென மீட்போம்" பெரிதும் சீரான சந்த வலியுைடைது மட்டுமன்றிப் பயனுள்ள படிமப்பிரயோகங்களையும் கொண்டது. ஆயினும், விதி முறை உள்ளன விதிமுறை உள்ளன" "விதிமுறை இருந்து ம் விதிமுறை இருந்தும் ’எக்கணமேனும் எக்கணமேனும் போன்ற பிரயோகங்களால் அதிகம் பயன் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அவசியமற்ற சொற்களை அகற்றிவிட்டு இதை அவர் மறுபடி எழுதியிருந்தால் மனதில் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கும். 'தூது’ கவிதையில் 'நண்ப நினக்காக / நெகிழும் என் நெஞ்சு நின்னிய துணைக்காகவும் தான்’ என்ற இனிய ஓசை நயத்துடன் பழைய ஆனல் எளிய, மரபுசார்ந்த எழுத்துத் தமிழில் தொடங்கி, நடுநடுவே பல சமயம் அந்த ஒசை நயத்தை
47

Page 26
யும் சொல் அழகையும் இழந்து விடுகிறர். மொழிப் பிரயோகத் தில் கவனயீனம் காரணமாக நலிந்துபோன கவிதை இது.
தொகுப்பாளர்களின் பார்வையில் "முதிர்ந்த கவிஞர்களது எழுத்துக்களில் உள்ள பலவீனங்களைச் சுட்டிக்காட்டினேன். ஒரு சில படைப்பாளிகள் "பேர்களை உதிர்க்கும் அவசியத்தால் இடறிவிழும் சூழ்நிலைகளையும், சுட்டிக் காட்டலாம் என நினைக்கிறேன்.
"பலஸ்தீனமும் எனது மண்ணும்’ (புஷ்பராஜன்) கவிதையில் "பலஸ்தீனத்தின் பொய்கைக் கரைகளின் ஒரம், சுதந்திரச் சிலையின் ஏந்திய தீபச் சுடரின் ஒளியில், சல்பீனிய விதைகள்’ என்று வரு கிறது குழப்பமாக இருக்கிறது.
பீனிக்ஸ் பறவை தன் எரிந்த சாம்பலினின்று மீண்டும் எழு வது. புஷ்பராஜனின் “பீனிக்ஸ் நெருப்புச் சூழும்போதே புத்தொளி கொண்டு மீண்டும் மீண்டும் வானில் பறக்குமாம். ஆச்சரியமாக இருக்கிறது.
ஆதவன் “பேட்டன் ரஸ்ஸலையும்’ “விற்கின்சனையும் பற்றிக்
குறிப்பிடுகிறர். உதிர்க்கிற பேர்களையாவது சரியாக அறிந்து வைத் திருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.
ஊர்வசியின் கவிதைகளின் எளிமையும் தெளிவும் மனத்துக்கு
இதமானவை.
"ஐம்பது துவக்குகள் / ஏந்திய கரங்கள் / என்னுள் பதிந்த சுவ: டுகள் / மிகவும் கனத்தவை. அந்த இரவு / அவர்களுடையது’.
இந்த வரிகள் மனதில் திக்கும் சுவடுகள் கூடக் கனமானவை தான். "அவர்களுடைய இரவு காத்திருப்பு இரண்டும் ஆர்ப் பாட்ட மில்லாமலே செல்லும் ஆழ நதிபோன்ற ஒட்டமுடையவை. நான் எழுதுவது புரிகிறதா உங்களுக்கு கவிதை, ஒருவேளை புரி யாது போனலும் என்று, அதிகமாகவே கடைசியில் சொல்லிவிட் டாற்போல் படுகிறது.
இளவாலை விஜேந்திரனுடைய ஆண்ட பரம்பரை' மிகவும் சரா சரியான ஒரு கிண்டல், ஆணுலும் அவரது கவிதைகளில் வரும் படிமங்களில் புதுமை இருக்கிறது. நிலாந்தனின் 'கடலம்மா"வில் சந்த மும் வேகமும் முன்பகுதியில் நன்ருகவே இருக்கின்றன.'கடலம்மா நீ மலடி ஏனந்தத் தீவுகளை 1 அனதரவாய் தனியே விட்டாய், என்று மனத்தாங்கலுடன் எழுந்த கேள்விக்குப் பின்னர் வரும் பகுதி கவிதையுடன் ஒட்டாது மேடைப் பிரசங்கம்போல நிற்கிறது. அரு ளின் கவிதையில் பெண் விடுதலைக் கருத்து மட்டுமன்றி சொல்லமைப் பின் வலிமையும் படிமங்களும் கவனத்தை ஈர்க்கின்றன.
48.

RAMB0 (ராம்போ)
உலகின் அடக்கி ஒடுக்கப்படும் நாடுகளுக்கும் மக்களுக் கும் எதிராக, நேரடியாகவும் மறைமுகமாகவும் அமெரிக்கா
எடுத்துவரும் கொலைவெறி நடவடிக்கைகள் நாளாந்த நிகழ்வு
களே. அன்று கொரியா, வியட்னும், கம்பூச்சியாவிலும் இன்று எல்சல்வடோர், நிக்ராகுவா, லிபியா போன்ற நாடுகளிலும் தனது ஏகாதிபத்திய நலன்களை காப்பதற்காகத் தொடரும் கொலைவெறி நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும், மூடிமறைக் கவும் 'ரம்போ’ போன்ற திரைப்படங்கள் திட்டமிட்டே தயா ரிாகப்படுகின்றன. நவீனரக ஆயுதங்களைக் கையில் ஏந்தியபடி கட்டான உடலுடன், கொலைவெறிப் பார்வையுடன் சாகசங் கள் நிகழ்த்துவதன் மூலம் உலகின் புரட்சிகர மக்களிடம் வாங் கிய அடிகளின் தழும்புகளை மறைக்க முனையும் ஏகாதிபத்திய கலைவடிவாக ரம்போ திகழ்கிறது.
“அடைகாத்த / புயல் முட்டை / உடையட்டும் / நம் கரங் கள் இருந்த இடத்தில் / சிறகு முளைக்கட்டும்!”
கவிதைகள் பற்றிய குறிப்புக்கள் இதுவரை கவிதையின் உருவ அமைப்புப் பற்றியனவாகவே இருந்தன. கவிதைகளின் உள்ளடக் கமும் அவற்றின் முழுமையான பாதிப்பையும் கவனிக்கும் போது பெரும்பாலானவை நேரடியான அநுபவமும் சூழ்நிலையின் பாதிப் பால் ஏற்பட்ட உடனடியான உணர்வுகளும் பற்றியவையாகவே உள்ளன. சில உபதேசங்களாகவும் உள்ளன. சொல்லாமலே உணர்த்தவும் சிந்தனையைக் கிளறிவிடவும் கவிதையை மீண்டும் மீண்டும் அசைபோட்டு அநுபவிக்கவும் தூண்டுமாறு எத்தனை கவி தைகள் அமைந்திருக்கின்றன? முன்பு ஒரு தடவை ஈழத்துத் தமிழ்க் கவிதையின் எதிர்காலம் பற்றிய என் அச்சங்களைத் தெர் வித்திருந்தேன். சுயதிருப்திக்குள் தமிழ்க் கவிதை முடங்கிவிடும் ஆபத்து இன்னும் இருக்கிறது. மரபின் பிடிப்பை தளர்த்தி ஆயிற்று. ஒசையாற் கவிதை என்றில்லாமல் கவிதைக்காக ஒசை என்றும் ஏற்றுக் கொண்டாயிற்று. இந்த விடுதலையைக் கவிஞர்கள் எவ் வளவு தூரம் கவிதையை மேலும் ஒருபடி உயர்த்தப் பயன்படுத்த இயலும் என்பதே நம் முன் உள்ள சவால்.
முன்னுரையில் சமகால அரசியல், இலக்கிய வரலாறுகள் தொடர்பான கருத்துக்கள் சேரனது அரசியல் நிலைப்பாட்டின் அடி, படையிலானவை. அவற்றின் முழுமையின்மை பற்றியும் சமமினLை பற்றியும் இங்கே எழுத அவசியம் இல்லை. ஆனலும் மரபுதொடர்
4

Page 27
பாக சேரன் குறிப்பிட்ட ஒரு விஷயம் தொடர்பாக, இலக்கியவாதி கட்கு முக்கியம் என்ற வகையில், ஒரு சிறு விளக்கம் பயன்படும் என நினைக்கிறேன். '
"உணர்ச்சிக் கவிதைகள் பற்றிக் குறிப்பிடும்போது “இவற்றி லும் வீரம்’, செங்களம், வாள் ( கவனிக்க கூம்; துப்பாக்கி அல்ல), குருதி, இறப்பு என்பன இடம் பெற்ரு?லும் அனுப3 ம், வீச்சு, உண்மையற்ற சடங்களாக இருந்தன’ என்கிருர், “கவனிக்கவும்: துப்பாக்கி அல்ல" என்று அடைப்புக்குறிக்குள் வரும் குறிப்பு ஒரு வேளை சேரனது விகடத் துணுக்காக இருக்கலாம். ஆனலும் அது 10ரபின் தன்மையையும் அதன் சிறப்பையும் அவர் சரிவர உணரா ததையே காட்டுகிறது. வாள் போர்க் கருவியாகவும், வீரத்துக்கு உரியதாகவும், துப்பாக்கி கொலைக்கருவியாகவும் கருதப்படுவதற்கான காரணத்தை நீளமாக விளக்க அவசியம் இல்லை. பண்டைய இந்திய மர புகளில் வீரம் பற்றிய கருத்துக்கள் அதன் நாகரிகத்தின் மேன்மை யினின்று பிரிக்க இயலாதவை. வேலும், வில்லும், வாளும் மறத்தைமட்டுமல்ல அந்த மறத்தினின்று பிரிக்கமுடியாத ஒரு அறப் பார்வையையும் குறிக்கின்றன. சமுதாயம் மாறிவிட்டது எனவே கவிஞர்கள் வேலும், வாளும், புறமுதுகிடாமையும் பற்றியே பாடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனல் அணுகுண்டு யுகத்தில் கூட கவிதையில் வாளுக்கு உரிய இடம் இருக்கிறது.
“கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே " என்ற பாரதிதாசனின் ( தமிழ் இனவாத ) அறைகூவவிலெனினும்,
"இந்திரசித்தன் இரண்டு துண்டாக எடுத்தவில் யாருடைய வில்?’ என்ற பாரதியின் தேசிய உணர்வின் எழுச்சியிலெனினும் . வாளும் வில்லும் கவிதைக்கு தரும் வலிமையை எந்த நவீன போர்க் கருவியாலும் தர இயலாது.
மரபு எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதையொட்டியே அது நவீன சமுதாயத்துக்குச் சேவையாற்றுகிறது.
*"மரணத்துள் வாழ்வோம்’ தொகுதியில் சேர்க்கப்படாததும் அதனுட் சேர்க்கப்பட்டவற்றினின்று பார்வையில் வேறுபட் டதும் தரத்தில் ஒப்பிடத்தக்கதும் சில சமயம் உயர்ந்ததுமான படைப்புக்கள் அண்மையில் அலை, புதுசு அல்லாத சஞ்சிகைகளில், கண்டிருக்கிறேன். கவிதைத் தொகுதியில் அவை சேராமையால் ஏற்படும் இழப்பு அவற்றை ஆக்கிய கவிஞர்கட்கல்ல.
A. 50

穩》 பெண்கள்
வீட்டு அடிமைகளா?
“பெண் விடுதலை" என்ற விசயத்தில், தர்க்க ரீதியாகவும் சரி, நடைமுறைப் போராட்ட ரீதியாகவும் சரி, நாம் சந்திக்கவேண்டி யது எவ்வளவோ உள்ளது. அது பற்றிய விவாதங்களையாவது தொடக்கி வைப்பது இன்று நம் முன் உள்ள முக்கியபணி. அப்படி யொரு விவாதத்தை புகழ்பெற்ற மார்க்சிஸ ஆசான்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோருடன் நடத்தி ஞல் என்ன என்று ஆசைப்பட்டோம். அவர்கள் ஐவரையும் ‘கார்க்கி நூலகத்தில் இளந்தோழன் சந்தித்தார். கேள்விகள் இளந்தோழ னுடையவை, பதில் வாசகங்கள் மார்க்சிய ஆசான்களுடையவை.
இளந்தோழன்:
உலகமே மெச்சுகிற மேதைகளான உங்கள் ஐந்து பேரையும் ஒரே இடத்தில் (நூலகத்தில்) சந்திக்க முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. பெண்கள் நிலை, பெண்ணுரிமையின் அவசியம், பெண்களை அமைப் பாக்குவது போன்ற பல சந்தேகங்களையும் இந்த விவாதம் தீர்த்து, வைக்குமென்று நம்புகிறேன். பெண்களின் இன்றைய நிலையை வீட்டு அடிமை நிலை என்று குறிப்பிடுவது சரியாக இருக்குமா?
லெனின்:
பெண்கள் வீட்டு அடிமைகள் என்று அழைக்கப்படுவதில் வியப் பில்லை. பெண்கள் சமையலறையிலும் விட்டு:வேலைகளிலும், முதுகை முறிக்கும் தன்மையதும் மனச் சோர்வடையச் செய்வதுமான உழைப்பினல் அழுத்தப்படுகிருர்கள். மிகவும் முன்னேற்றமடைந்த முதலாளித்துவ நாடுகளிலும் கூட பெண்களின் நிலை இவ்வாறுதான் உள்ளது. எந்த முதலாளித்துவ நாட்டிலும், மிகு சுதந்திரமான குடியரசிலும் கூட, மாதர்களுக்குப் பூரணசமத்துவம் என்பது இல்லை. மேற்கு ஐரோப்பாவில், சகல விடுதலை இயக்கங்கள்களும் பல பத் தாண்டுகளாக அல்ல, பல நூற்ருண்டுகளாக பெண்களும் ஆண்களும் சம உரிமை உடையவர்களாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை களை முன்வைத்துள்ளன. எனினும் ஐரோப்பிய நாடுகள் எதுவூம் அதைச் சாதிக்கவில்லை. ஏனெனில் முதலாளித்துவம் எங்கிருத்தி
5

Page 28
1றதோ, நிலத்திலும் ஆலைகளிலும் எங்கெங்கு தனி உடமை இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆண்கள் தங்கள் தனிச்சலுகைகளை நீடித்துக் கொண்டிருக்கிறர்கள்.
இளந்தோழன்
பெண்களின் நிலை ஆதிகாலந் தொட்டே, இப்படித்தான் இருந் திருக்கிறதா?
ஸ்ராலின்
இல்லை. வரலாற்றில் தாய்வழிச் சமுதாயம் என்ருெரு கட்டம் இருந்தது. அப்போது பெண்கள்தான் உற்பத்தியைக் கட்டுட்டடுத்துட வர்களாக இருந்தார்கள். புராதன விவசாய முறை நிலவி வந்த அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்குத்தான் உற்பத்தியில் பிரதான பங்கு இருந்தது. அப்போது ஆண்கள் காடுகளில் அலைந்து திரிகிற வர்களாக இருந்தார்கள். பிறகு தந்தைவழிச் சமுதாயம் தோன்றிய போது உற்பத்தியின் பிரதான பங்கு பெண்களிடமிருந்து ஆணுக்கு ந்ேதுவிட்டது.
ரங்கெல்ஸ்
இப்போது ஆண் பிரதானமானவனுக மாற்றப்பட்டதும் அவ னது உயர்ந்த நிலையை நிறுவுவதில் இருந்த தடைகள் எல்லாம் விழுந்துவிட்டன. தாய்வழி உடமையை தந்தைவழி உடமையாக மாற்றியதன் மூலமும், ஒரு தார மணமுறையை படிப்படியாக உருவாக்கியதன் மூலமும் இந்த சர்வாதிகாரம் நிறுவப்பட்டுவிட்டது.
இளந்தோழன்:
தாய்வழிச் சமுதாயம் தந்தைவழிச் சமுதாயமாக மாற்றப் 1ட்ட காலம் எதுவென்று சொல்லமுடியுமா?
ஏங்கெல்ஸ்:
அது எப்பொழுது நடந்தது என்பது பற்றி நம்மிடம் தகவல்
கள் இல்லை. வரலாற்றுக்கு முந்திய கால கடடத்தில் இது நடந்
திருக்கிறது. ஆனல் இந்த மாற்றம் நடந்துள்ளது என்பதற்கு மட்
டும் திட்ட்வட்டமான சான்றுகள் உள்ளன.
இனந்தோழன்
இந்தமாற்றத்துக்கும், பெண்ணினத்தின் அடிமை நிலைக்கும் என்ன் தொடர்பு என்பதை விளக்கிச் சொல்லுங்களேன்?
2
S

தாய்வழி உரிமை தூக்கி எறியப்பட்டது என்பது உலக வர லாற்றில் பெண்ணினத்துக்கு ஏற்பட்ட தோல்வி ஆகும். ஆண் இப்பொழுது வீட்டையும் ஆள்பவனுக மாறிவிட்டான். பெண் னின் நிலையோ தாழ்வுபடுத்தப்பட்டு அடிமை நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டது. அவள் ஆணின் போகப்பொருளாக மாற்றப்பட்டாள். வெறும்பிள்ளை பெறும் இயந்திரமாக மாற்றப்பட்டாள். இவ்வாறு பெண்கள் இழிவான நிலையில் வாழ்ந்தது என்பதை கிரேக்க நாட்டு வரலாற்றில் மிகத் தெளிவாகப் பார்க்கமுடியும், இன்றைய சமூகத்திலும் அந்த இழிநிலை என்பது மாற்றப்படவே இல்லை.
இளந்தோழன்
முதலாளித்துவ சமுதாயத்தின் பெண்கள் எப்படிச் சுரண்டப் படுகிருர்கள் என்பதைச் சொல்ல டியுமா?
லெனின்
நவீன முதலாளித்துவ சமுதாயத்தில் எண்ணற்ற குடும்பங்கள், விவரிக்கவொண்ணுத அளவு ஏழ்மையில் உள்ளன. இத்தகைய குடும் பங்களில் கோடிக்கணக்கான பெண்கள் வீட்டுவேலை செய்யும் அடி மைகளாக வாழ்கின்றனர். எப்டியோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, காலம்தள்ளுகின்றனர். ஒரு சில காசுகளைக் கொண்டு, தங் கள் குடும்பத்திற்கு உணவும், உடையும் அளிப்பதற்கு படாத பாடு படுகின்றனர். தங்கள் சொந்த உழைப்டைத் தவிர, மற்ற யாவற்றி லும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இந்த பெண்களிடையே இருந்துதான் குறைந்த கூலிக்கு ஆட்களைத் திரட்ட முதலாளிகள் மிகவும் ஆவலாய் உள்ளனர். ஏனென்ருல், இந்தப் பெண்கள்தான் தங்கள் குடும்பத்திற்கு ஒரு கூடுதல் துண்டு ரொட்டியை சம்பா திப்பதற்காக கொடூரமான அளவு குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதற்குத் தயாராய் இருக்கிருர்கள்.
இளந்தோழன்
பெண்களின் உரிமை பற்றியும் சமத்துவம் பற்றியும் பேசும் போது “கம்யூனிஸ்டுகள் பெண்களை எல்லாம் பொதுவாக்கிவிடுவார் களே என்று சிலர் கூக்குரலிடுகிருர்களே?
மார்க்ஸ்
( பலமாகச் சிரிக்கிருர் ) பெண்களை எல்லார்க்கும் பொதுவாக் கும் கைங்கர்யத்தை கம்யூனிஸ்டுகள் செய்யத் தேவையில்லை. நெடுங் காலத்துக்கு முன்பிருந்தே செய்யப்பட்டு வருகிறது. கம்யூனிஸ்டுகள் மீது இப்படி புரளிபண்ணிவிட்டு முதலாளிகள் நல்லொழுக்க சீலர் களாக சீற்றம்கொள்கிருர்களே அதைக்காட்டிலும் நகைக்கத் தக்
கது வேறு எதுவும் இருக்கமுடியாது.
53

Page 29
இளந் தோழன்
பெண் விடுதலை என்பதைப் பெண்களைப் பொதுவாக்குவது என்று இவர்கள் கொச்சையாய் புரிந்துகொள்வது ஏன்?
முதலாளியாய் இருப்பவர் தனது மனைவியை வெறும் உற்பத் திக் கருவியாகவே பார்க்கிருர், உற்பத்திக் கருவிகள் எல்லார்க்கும் பொதுவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட போவதாய் கேள்விப்பட்ட தும் இதே கதிதான் பெண்களுக்கு ஏற்படப்போகிறது என்று இயற் கையாகவே முடிவு செய்து கொள் கிருர், பெண்கள் வெறும் உற் பத்திக் கருவிகளின் நிலையில் இருத்தப்.ட்டிருப்பதை ஒழிக்க வேண் டுமென்பதே நமது நோக்கம் என்பது அவருக்குக் கனவிலும் கருது, முடியாத ஒன்ருகும்.
இளந்தோழன்
பெண்ணினத்திலேயே கூட அதிகமாக இழிவுபடுத்தப்படும் விலை
மகளின் நிலை, இந்தப் பிரச்சினையின் தீர்வைப் பற்றிக் கொஞ்சம்
சொல்லுங்கள். ۔۔۔۔۔۔
லெனின்:
விலைமகளிர் பரிதாபத்துக்குரியவர்கள்! முதலாளித்துவ சமுதா யத்திற்கு இரு வழிகளில் பலியானவர்கள். முதலாவதாக, இச்சமு தாயத்துக்குரிய கேடுகெட்ட சொத்துரிமை அமைப்புக்கும், இரண் டாவதாக அதன் கேடுகெட்ட தார்மீக கபடத்தனத்துக்கும் பலி யானவர்கள். இவை மிகத் தெளிவாகத் தெரிபவை. உணர்ச்சிப் பண் பாடில்லாத குருட்டு ஆளால்தான் இதனை மறுக்க முடியும். விலை மகளிரைப் பயனுள்ள உற்பத்திப் பணிகளுக்குத் திரும்பும்படி செய் தாகவேண்டும்; சமுதாயப் பொருளாதா'த்தில் அவர்சள் தமக்குரிய இடங்களைப் பெறும்படி செய்தாகவேண்டும். இளந்தோழன் :
அப்படித் திரும்பச் செய்வது சோஷலிச சமுதாயத்தில் கன் சாத்தியம். அப்படித்தானே?
மார்க்ஸ்
ஆம். முதலாளித்துவ பொருள் உற்பத்தி அமைப்பு ஒழிக்கப் படும்போது இந்த அமைப்பிலிருந்து எழும் பொதுப்பெண்டிர் முறையும்-அதாவது பகிரங்கப் பொது விபச்சாரமும், இரகசியத் தனி விபச்சாரமும் கூடவே ஒழிக்கப்பட்டுவிடும்.
இளந்தோழன்:
பெண்கள் இயற்கையிலேயே உடல் ரீதியாக பலவீனமாக படைக்
கப்பட்டிருக்கிறர்கள். அதனல் ஆண்களுக்கு ஈடாக அவர்களால் வரலாற்றுக்கடமை ஆற்றமுடியாது என்கிறர்களே.
54

οή) , που σότ :
அடிமைகளின் போராட்ட வரலாற்றில் கூட ஆயிரக்கணக்கான பெண் வீராங்கனைகளும் பெண் தியாகிகளும் பங்கு பெற்றிருக்கிருர் கள். தொழிலாளி வர்க்கத்தின் புரட்சி இயக்கத்திலோ பல இலட் சக்கணக்கான பெண்கள் விடுதலைக்காக போராட முன்வருகிருர்கள். ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றில் எந்த ஒரு இயக்கமும் பெண் களின் பங்கேற்பு இல்லாமவ் வெற்றி பெற்றதில்லை.
இளநீகோழன்:
புரட்சியில் பெண்கள் பங்குகொள்ள முடியுமா? இதுவரை அவா கள் புரட்சியில் ஆற்றிய பணி என்ன?
லெனின்
பெண்களின்றி புரட்சியில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடி யாது. அவர்கள் காட்டிய வீரதீரத்தை இன்றும் அவர்கள் புரியும் வீரச்செயல்களையும் என்னென்பது! அவர்கள் ஏற்றுச் சகித்துவரும் இன்னல்களையும் இழப்புகளையும் கொஞ்சம் எண்ணிப் பாருங்களேன. ஆனல், சிறிதும் தளராத உறுதியுடன் நிற்கிருர்கள். நம்முடைய தொழிலாளிப் பெண்கள் அதியற்புதமானவர்கள், வர்க்க உணர்வு கொண்ட போராட்ட வீராங்கனைகள்--1906-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி பிரேஸ்னயா மாவட்டத்தில் நடந்தது ஒரு நிகழ்ச்சி. பத்தாயிரம் பேரைக்கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தை தாங்குவதற் காக கசாக்கியப் படையினர் வந்தனர். அப்போது அந்த மக்கள் கூட்டத்திலிருந்து இரண்டு இளம் உழைக்கும் பெண்கள் செங்கொடி ஏந்தி முன்னல் வந்தனர். “ஏ கசாக்சியர்களே, எங்களை வேண்(; மானல் கொன்று போடுங்கள்; ஆனல் எங்களுக்கு உயிர் இருக்கும், வரை எங்கள் கொடியினை சரணடைய அனுமதிக்க மாட்டோம்? என்று சவால் விட்டுப்பேசினர், எதிர்பாராத இந்த வீரப் பேச்சி ஞல் திகைப்படைந்து நின்றனர் கசாக்கியர்கள். உடனே ‘கசாக்கி பர்கள் வாழ்க’ என முழக்கமிட்டு அவர்களை நண்பர்களாக்கி விட் டனர் மக்கள். பெண்கள் காட்டிய இதுபோன்ற துணிச்சலும் வீர மும் நமது நெஞ்சத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இளந்தோழன்:
புரட்சியில் அத்தனை ஆர்வம் கொண்டிருந்த பெண்கள் பற்றிக்
குறிப்பிட்டீர்கள். புரட்சிக்குப் பிந்திய சமுதாயத்தைக் கட்டி நிறுத்
துவதில் பெண்களின் பங்கு பற்றி சொல்லுங்கள்.
மாசே துங்:
ஒரு மகத்தான சோசலிச சமுதாயத்தை கட்டி நிறுவுவதற்கு பெண்களை அமைப்பாக்குவதும் அவர்களை உற்பத்தி செயலில் ஈடு
55

Page 30
படச் செய்வதும் மிக முக்கியம். உற்பத்தியில் ஆணும் பெண்ணும் சம ஊதியம் பெறுவதாக இருக்கவேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கு நிடையே உண்மையான சமத்துவம் என்பது முழு சமூகத்திலும் சோசலிச மாற்றம் ஏற்படும்போதுதான் உணரப்படும். இளந்தோழன்
ஒரு புரட்சிகர அரசு அமைக்கப்பட்டதின் மூலம் பெண்களின்
நி3லயில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் கண்கூடாகப் பார்த்திருச் கிறீர்கள். அதைப்பற்றிச் சொல்லுங்களேன்.
லெனின்
சோவியத் வடிவ ஆட்சி உழைப்பாளி மக்களின் ஆட்சி. அது தோன்றிய துவக்க மாதங்களில், பெண்கள் சம்பந்தப்பட்ட கட்டத் தில் மிகவும் திட்டவட்டமான ஒரு புரட்சியை நடத்தியது. பெண் களின் பல்வீனமான நி3லயைப் பயன்படுத்தி அவர்களே அவமானகர மான நிலேக்குத் தள்ளுகிற சட்டங்களே துடைத்துத் துப்பரா செய்து, பெண்கரே சமத்துவ மற்ற நிலையில் வைத்து விவாகரத்து உரிமையைக் கட்டுப்படுத்துவது, அதனேச் சுற்றி வெறுப்படையச் செய்யும் சம்பிரதாயங்களே ஏற்படுத்துவது, முறைப்படியற்ற திரு மணங்களின் பயனுப் பிறந்த குழந்தைகளே அங்கீகரிக்க மறுப்பது, அந்தக் குழந்தைக்ளின் தந்தைய்ாரை கண்டுபிடிக்கும் முயற்சியை அமுலாக்குவது போன்ற சட்டங்கள் நடைமுறையில் தரை
சட்டமாக்கப்பட்டன.
இளந்தோழன் :
மனிதகுலத்தின் முன்னேற்றப்பான யில் பெண் விடுதலேயின் அவசியம் பற்றிக் கூறுங்கள். லெனின்:
மிகத்திரளான பெண்களே அரசியலிலும் பொதுவாழ்விலும் ஈடு படச்செய்யாவிட்டால் சலிப்பூட்டுகிற வீட்டு வேஃவகளிலிருந்தும் சமயலறையிலிருந்தும் அவர்களே நாம் விடுதலே செய்யாவிட்டால் சோசலிச்த்தை விட்டுவிடுங்கள்- உண்மையான ஜனநாயகத்தைக் it, L. Frida, ply (IITs). இளந்தோழன் :
உண்மையான ஜனநாயகத்தைக்கூட இன்னும் சாதிக்காத எமீது நாட்டில் பெண்விடுதலையின் அணுசியத்தை நன்கு உணர்திருேம். உங் எளிடம்விவாதித்தது பெண்ணுரிமை பற்றிய பல்வேறு விஷயங்களில் தெளிவை ஏற்படுத்தியுள்ளது. மிக்கமகிழ்ச்சி. கடைசியாக ஒரு வேண்டுகோள். பெண்ணினத்துக்கு நீங்கள் விடுகிற அறைகூவல் என்ன?
'GIG, ysgrif sir:
உங்களால் போராட முடியும் என்பதைக் காட்டுங்கள்.
நன்றி; மன ஓசை


Page 31
செய்திப் பத்திரிகையாக பதி Registered a. a Newspaper
ANBU
IMPORTERS & EXPOR
AND HARD
100 & 333, C
COLOM
PHONES Y
TELEX 2.
GRAMS. AN
இச்சஞ்சிகை தேசிய கலே இலக் 15/1, மின்சார நிலேய வீதியிலும் யாழ்ப்பாணம் 407, ஸ்ரான்லி இல் அச்சிட்டு வெளியிடப்பட்ட

வுசெய்யப்பட்டது. ཡོད།
is . THAYAKAMA
ਜ<੩
Sa taga na Q్క N TELS
RTERS OF FOODSTUFFS
WARE TEMS
ld Moor Street,
IBO - I2.
} , 75, 2 7
] | 8 ANH U CE
BOO COLOMBO
கியப் பேரவைக்காக யாழ்ப்பாணம், ள்ள க, தணிகாசலம் அவர்களால், வீதியிலுள்ள யாழ்ப்பான அச்சகத் ..