கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1986.02

Page 1
匾g回国
இந்த இதழில்
3 ந. சுரேந்திரன் இ} சி. சிவசேகரம் 3 ஆர். எம். நெள 8 குமுதன் ஆ} + சி கிருஷ்ணமூர் L । ;ே சத்தியா ஒ செண்பகன் இ) கவிஞர் பொன்ஃ ஒ அழ, பகீரதன் இ) மலேயமான் 8 செ. தமிழரசன் 3 மணி 8 அம்புஜன்
 
 

ܒ݂
பெப்ருவரி, 1986
ຫຼິນ 5 #ー
-
LSL S SLSTSTLSLLLLT SLLSLL LLLLSLLSSSSSSLSL SSLSSSSLS S LSLSLSL SLLLL LLLLLLLLSDSSSDLLSSSSL LLLL S

Page 2

LDGPff: 3
இதழ்; 4
t
德 அரசியல் தீர்வு காண்பதற்கு அரசின் இராணுவ ஒத்திகை! 6) மலையக மக்களின் பிரசாவுரிமை
வெறும் அடையாள அட்டையல்ல.
டெக்கு கிழக்கு மாகாணங்களில் சமீப காலமாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் படுகொலை களும், இதர நடவடிக்கைகளும் தமிழ்பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காணுவதற்கு முன் பாகவே தமிழ் பேசும் மக்களின் ஒரு பகுதியின ரையும், இளைஞர்களையும் ஒழித்துக் கட்டும் ஒத்திகை போல் தெரிகிறது.
விதேச நலனையும், இனவெறி கொண்டு அலேயும் பேரினவாதிகள் சிலரையும் கொண்டுள்ள யூ என். பி. அரசு, நாட்டின் ஒருமைப்பாடு, தேசத்தின் பொருளா தாரம், மக்களுக்கான சுபிட்ச வாழ்வு போன்றவற் றைப் பொருட்படுத்தாது, இனவாதத்தையும் அரச பயங்கரவாதத்தையும் கட்டவிழ்த்து விடுகிறது. அந்நிய நாட்டுக் கூலித் துருப்புகளின் உதவியைத் தன்னுட்டு மக்களின் ஒரு சாராரை ஒழித்துக்கட்டப் பயன் படுத்துகிறது.
தனது அடக்குமுறை அட்டூழியங்கள், படுகொலை களை "பயங்கரவாத ஒழிப்பு" என்ற போர்வையில் நியா யப்படுத்த மிகவும் பிரயத்தனப்படுகிறது.

Page 3
உண்மையையும் பொtயையும், நீதியையும் அநீதி யையும், தர்மத்தையும் அதர்மத்தையும் இனங்கான மறுப்பதும், அதற்குள் (குழப்பத்தை ஏற்படுத்துவது மான வீண் முயற்சியே இது.
மக்கள் உண்மையை அறிவர். அவர்களே சரித் திரத்தின் சிருஷ்டி கர்த்தாக்கள்.
தற்போது ஜனதிபதி இன்று எமி முன்னுள்ள சஜன இனப்பிரச்சனையேயாகும் எனப் பொலநறுவை யில் 17.2.86-ல் கூறியுள்ளார்.
ஜனதிபதி அவர்களும், அரசும் உண்மையில் இனப் பிரச்ச2ணக்குத் தீர்வு காணவும், நாட்டின் ஒருமைப் உடையும் மக்களின் சுபிட்ச வாழ்வையும் இதயசுத் தியுடன் முதன்மைப் படுத்துவதானுல் இனப்பிரச் சனைக்கு அரசியல் ரீதியான தீர்வுகாண முன் வர வேண்டும்.
இதற்கான முன்தேவையை நாம் திமிபுப் பேச்சு வார்த்தைகளின் ஆரம்பக் கட்டத்திலேயே (14-5-35) பின்வருமாறு கூறியிருந்தோம். "பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 8ந்தாவது பிரிவையும், அரசியல் யாப்பில் ஆருவது திருத்தச் சட்டத்தையும் அரசு நீக்கிவிட்டு வடக்குக் கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தை வாபஸ் வாங்கியோ அல்லது நடமாட்டமி இல்லாது நிலைகொள்ளச் செய்வது மூலமோ பேச்சுவார்த்தை களுக்கான முன் ஏற்பாட்டைச் செய்யவேண்டும்"
தற்போதைய நிலைமையில் தமிழர் விடுதலைக் கூட் டணி பேச்சுவார்த்தைகளுக்காக முன்வைத்த மாற்று யோசனைகளை அரசு ஏற்று, தமிழ் மக்களால் அங்கி கரிக்கப்பட்ட தலைவர்கள் தமது சுதந்திரத்துடனும்: கெளரவத்துடனும் மக்களோடும் இயக்கங்களோடும் கலந்து பேச வழிசெய்யும் பொருட்டு நாம் முன்கூறிய யோசனைகளை அமுல் நடத்த முன்வர வேண்டும்.
2.

O O
இலங்கையில் நாடற்ற பிரசைகளாக இருந்த இந் திய வம்சாவழித் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக நடத்தி வந்த போராட்டம் 1984 மே மாதத்தில் பத்து நாட்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தின் போது உச்சக்கட்டத்தை அடைந்தது. முதல் தடவை யாக ஜனதிபதி ஜெயவர்த்தகு அவர்கள் பிரசாவுரிமை இல்லாமல் இருக்கும் சகல இந்திய வம்சாவழிப் பிரஅை. களுக்கும் பிரசா வுரிமை வழங்கப்போவதாக பகிரங்க மாக வாக்குறுதி கொடுத்தார். இதனை அதே ஆண்டு கூடிய சர்வ கட்சி மாநாடும் (பெளத்த மதத் தலைவர்கள் உட்பட) அங்கீகரித்தது.
இந்த முடிவுகளும் வாக்குறுதிகளும் 1986 வரை நிறைவேற்றப்படவில்லை. .ொறுத்திருந்த தோட்டத் தொழிலாளர்கள் சகலரும் சங்கங்களின் வேறுபாடுக&# விட்டு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தலைவர் தொண்டமானின் தலைமையில் பிரசித்திபெற்ற பிரார்த்தனைப் போராட்டத்தை ஆரம்பித்ததன் வினை வாக வெற்றி பெற்றனர். s
பிரசாவுரிமை என்பது வெறும் அடையாள அட் டைபோல் இருக்கமுடியாது. இந்நாட்டு ஏனைய பிரசை களைப் போல சமமாக நடத்தப்படவும், அச்சமின்றி தமது பாரம்பரிய பிரதேசங்களில் வாழவும், தமது தாய்மொழியில் நாட்டின் எப்பாகத்திலும் பேசு உரிமை உட்பட இதர சுதந்திரங்களைப் பெறவும் வேண்: டும். குறிப்பாக வீட்டு வசதி, வீட்டுத் தோட்டத்திற் கான காணி, கல்வி, கலாச்சாரத்துறை வளர்ச்சி பொரு ளாதார மேம்பாடு போன்றவற்றிற்காகப் போராட தோட்டத்தொழிலாளர்கள் தமது ஐக்கியத்தை மேலும் பலப்படுத்தி தேசிய ரீதியாக சகல தொழிலாளர்களின தும் ஜனநாயக சக்திகளினதும் இதர பேராரட்டங் களுக்கு ஆதரவு கொடுத்து தமது பேரராட்டங்களுக் கும் ஆதரவைப் பெறவேண்டும்.
3

Page 4
இ) நத்தார் நாள் வெறுவயிற்றில்
பெரியவெள்ளிக்கிழமை நினைவுகள்
யேசுவே l மானுடனகப் பிறந்து மானுடனக மரித்தீர். சிலர் உம்மைத் தேவகுமாரன் என்கிருர்கள் - ஒரு வேளை, நாமெல்லோருமே தேவகுமாரர்களாக இருக்கலாம். நான் அறிந்த அளவில், சகமானுடரை உய்விக்க உம்வழியில் முயன்றீர், ஒடுக்கப்பட்ட ஒவ்வொருவனுக்காகவும் குரல் எழுப்பினீர், உம் சொல்லிலும் செயலிலும் உறுதியுடன் நின்றீர், சிலுவையில் சாகடிக்கப்பட்டீர். மானுடத் துக்காக மரித்ததனல்
மூன்ரும் நாளல்ல, மரித்த மறுகணமே மரணத்துள் உயிர்த்தீர்.
உம் பிறப்பும்
உம் செயல்களும்
அற்புதங்களாக்கப்பட்டு
நீரும் சித்து விளையாட்டுக்காரருள் ஒருவராக்கப்பட்டு அந்த அற்புதங்கள் தூண்களாய் உம் கல்லறை அத்திவாரமாய் திருச்சபை ஒன்று நிறுவப்பட்டு. அது ஓங்கி வளர்ந்தபோது
உம்மால் எழுச்சிபெற்ற ஏழைகள் சிலுவைக்குக் குத்தகைக்காரர்களால் மறுபடி நசுக்கப்பட்டார்கள். அ~ர்கள் கூறும்
உம் மூன்ரும் நாள் உயிர்ப்பில் உம் தியாகத்தின் நற்பயன்கள் சிலுவையில் அறையப்பட்டன. அவர்களோ இன்னமும் நம் எல்லோரையும் சிலுவையில் அறைகிருர்கள். அவர்களிடம் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் அணுகுண்டுகளும் ஏவுகணைகளும் அவற்றை இயக்கக் கூலியாட்களும் கூலி கொடுக்க நிறைப் பணமும் உள்ளது. அவர்களுக்குத் திருச்சபையின் ஆசீர்வாதமும் இருக்கிறது.
ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறுகன்னத்தைக் காட்ட நம் குழந்தைகள் முகத்தில் கன்னங்கள் இல்லை-குழிகள் இருக்கின்றன சிலுவையில் ஏறி அலுத்ததனல் சிலுவையில் ஏற்றுகிறவர்களைச் சிலுவை ஏற்றப்போகிருேம். பாமபிதாவுக்கு இனி ஒரு நாளும்
தன் குமாரன் எவனையும்
சிலுவையில் அறையப்படுவதற்காக பூமிக்கு அனுப்பும் அவசியம் ஏற்படாது.
ட வித்தோரியோ ருெஹரஸ்

அகதி
சிறுகதை
ஒடு மாதத்துக்கு மேலாக யாழ்ப்பாணத்திலுள்ள அந்த அகதி முகாமில் முடங்கிக் கிடந்த விமலன் அங்கு தயாரிக்கப்படும் கண்ணுடிப் பைகளில் அடைத்த *மிக்சர்' பக்கற்றுக்களை உரப் பைகளில் போட்டுக் கொண்டு விற்பனைக்காகப் புறப்பட்டவர் களுள் தானும் ஒருவனனன்.
அகதி முகாமுக்கு அவன் வந்து சேர்ந்த நாட்களில் சமூக சேவை நிறுவனங்கள், பொது ஸ்தாபனங்கள் மூலம் அரிசி, மரக்கறி. உணவுவகைகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தது. திருகோணமலையில் நடந்த அழிவு களைக் கேள்வியுற்ற மக்கள் அகதி களுக்கு உதவுவதில் முன்னின் றனர். சமயலுக்குத்தேவையான விறகுகளைக் கொத்துவது முதல் தண்ணீர் நிரப்புவது போன்ற கடினமான வேலைகளைச் செய் வதில் விமலன் தனது மன உழைச் சல்களையும் கவலைகளையும் மறக்க முயற்சித்தான்.
செல்ல
உதவிகள் அவர்களும்
நாட்கள் செல்லச் முகாமுக்கு வரும் குறைந்து வந்தன.
ஏதாவது முயற்சிகளில் இறங்கி
8 குமுதன்
ஞல் தான் வாழலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆண்கள் வெளியில் ஏதாவது வேலைகள் கிடைத்தால் செய்ய லாம் என்று முடிவெடுத்திருந்த னர். விமலன் அங்கு வந்து போவோர்களை விசாரித்துப் பார் த்ததில் அங்கு நிலவும் பதட்ட நிலை காரணமாக அங்குள்ளவர் களுக்கு வேலைவாய்ப்புகளும் வரு மானங்களும் குறைந்திருந்தது.
அறுவடை காலம் ஆசை யால் அவனுக்குப் பரிச்சயமான விவசாய வேலைகள் பரந்தன், கிளிநொச்சிக்கு அப்பாலுள்ள விவசாயப் பிரதேசங்களில் இருப் பதாக க் கேள்விப்பட்டான். இருந்தும் அங்கு நடைபெறும் சம்பவங்களைக் கேள்விப்பட்ட பின்னர் அங்கு செல்வது நல்ல தல்ல என்று அங்குள்ளவர்கள் தடுத்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னரும் அந்த அகதி முகா முக்கு சற்று தொலைவிலுள்ள இராணுவ முகாமைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் நடந்த ஹெலிகப்டர் சூடுகள் ஷெல் வெடிகள். எங்குமே பாது காப்பு இல்லை என்ற உணர்வை அவனுக்கு ஏற்படுத் திஇருந்தது.
5

Page 5
யாழ்ப்பாணத்தில் அவனது தந்தையார் வழியிலுள்ள உற் வுக் காரர்கள் நன்ருகப் படித்து, வசதியாக இருப்பதாக சிறு ைய திலேயே கேள்விப்பட்டிருந்தான், தத்தையார் முன்னுெருதடவை யாழ்ப்பாணம் வந்த பொழுதே அவர்கள் அசட்டையாக நடந்து கொண்டதிலிருந்து. அந்த உறவை அவர்கள் முற்ருக மறந்துவிட்டார்கள். குளக்கட்டு வேலைக்காக ப ன் கு ளத் துக் கு விந்த மேற்பார்வையாளர் தவ ராசா அவனுக்கு நன்கு பழக்க மாணவர், முகவரி இல்லாமல் அவரை அவனுல் அங்கு தேடிக் கண்டு கொள்ள முடியவில்லை.
அந்த ஊரில் எந்த உறவுமே இல்லாத அவனுக்கு அகதிகள் முகாமும் அங்கு தொடங்கிய மிக் சர் வியாபாரமுமே கைகொடுத் தது.
பன்குளத்தின் வயல் வெளி களில் கடுமையாக உழைப்பதைத் தவிர எந்தவித வேலைகளோ வியாபாரப் பழக்கங்களோ தெரி யாத அவனுக்கு அந்தப் புதிய வேலே ஆரம்பத்தில் ஒரிரு நாட் கள் கஷ்டமாகவே இருந்தது. மிக்சர் பக்கற்றை எவரிடமா வது நீட்டி அதை அவர்கள் வாங் காமல் விட்டபோது அதற்காக அவன் வெட்கமும், வேதனையும் அடைந்தான். நாட்கள் செல்லச் செல்ல அந்த ஏமாற்றங்களை சகித்துக் கொள்ள அவன் பழகிக் கொண்டான்,
கேற்றையோ, தெருப் பட லயோ திறந்து மிக்சர் பையை
6.
நீட்டியபடி. “அகதி முகாமில் இருந்து வருகிருேம்' என்று சொல்ல வே எண்டும். வசதி இருந் தால் வாங்காமல் விடுபவர்கள் கிடையாது. சில வசதி படைத்த பெரிய வீடுகளில் மிக்சர் பையை வாங்காமலே காசைக் கொடுக் கும்போது அவனுக்கு ஒரு மாதிரி யாக இருக்கும். எண்ணெய்ப் பலகாரம் எல்லோருக்கும் பிடிக் காது என்று எண்ணிக் கொள் வான்.
பல வகையான மனிதர்களை, பல்வேறுவகையான வாழ்க்கைத் தரத்தையுடைய மக்களைச் சந் திக்கும் அந்தப் புதிய வேலையில் படிப்படியாக அவனுக்குப்பிடிப்பு ஏற்பட்டது. ஆட்களே இல் லாமல் நிமிர்ந்து நிற்கும் பெரிய வசதியான வீடுகளைக் காணும் போது அகதி முகாமில் அவர்கள் படும் நெருக்கடிகள் அவனது நினைவுக்கு வரும்.
பாவ?னயற்றிருந்த பழைய பெரிய வீடுகளைத்தான் அகதி முகாமாக மாற்றியிருந்தார்கள்.
அகதி என்ற பதத்துக்குள் அடங்
கிவிட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே அந் தக் குறுகிய இடத்துக்குள் உண் பது, குளிப்பது, உறங்குவது, காலைக்கடன் கழிப்பது எல்லாமே கஷ்ட நிலைதான். இரவு படுக்கப் போகும் போது குமாரண்ணர் சொன்ன வார்த்தைகள் அவ னுக்கு நினைவில் வந்தது.
'விமல்!"என்ரை தம்பியும் ஜேர்மனியிலை அகதி முகாமிலை தான் இருக்கிருன், என்ன வசதி

யான படுக்கை, சாப்பாடு, சம் பளம் படங்கூட அனுப்பினவன் என்ன இருந்தாலும் வெள்ளைக் காறன் வெள்ளைக்காறன்தான்"
** Geral y Gy_urt 60T 6n ffi?”.”
*பிரச்சினையள் வரே க்கு முன்னமே போட்டான்'
* எப்பிடிப் போனவர்”*
*ஒ. பன்குளம் காட்டுக்கை இருந்த உனக்கு என்ன தெரியும் காசிருந்தா நீயும் போகலாம். பாஸ்போட் எடுத்து ரிக்கற் புக் 1ண்ணினச் சரி?"
தனக்கு அங்கு கிடைக்கும் போர்வை வசதிகளைக் கூட முகா மிலுள்ள சிறுவர்களுக்கும் குழந் தைகளுக்கும் கொடுத்துவிட்டு பனிக்குளிரையும் நுளம்புக் கடி களையும் தாங்கிக் கொள்ளும் அவனது மனதில் சொகுசான வாழ்வு பற்றிய கனவுகள்எழுந் ததே இல்லை.
ஆனல் அவன் காதலித்து மணம் முடித்த இளம் மனைவி
பிரேமாவையும் **ம்மா’ என்ற
சொல்லைத்தவிர எதையுமே அறி பாத"அவனது அன்புக் குழந்தை யையும் பிரிந்து வாழும் அந்த மனவேதனை, அதுவும் அவன் வாழும் சூழலில் அந்தச் துன்பச் சுமைகளை எவரிடம் சொல்லி ஆறமுடியாத ஒரு நிலையில் இர வின் தனிமையில் அவனது கண் கள் குளமாகி விடுவதை அவன் தடுக்கமுயற்சித்தும் அவளுல்ை முடியாமல் இருந்தது.
பன்குளத்து வயல்வெளிகள் காடுகள் குளக்கரைகளில் தான்
அவனது முப்பத்திரண்டு வருட வாழ்க்கையின் பெ ரும் பகுதி கழிந்திருந்தது. திருகோணமலை யில் வெள்ளையர்கள் தளம் வைத் திருந்த காலத்திலேயே அவனது தந்தையருடன் ஒன்ருக (!) செய்த அந்தச் சிங்களக் கு(ம்ப மும் வெள்ளையர்கள் சென்ற பின் னர் பன்குளத்தில் அருகருகே குடியேறினர். ஒருவரது மொழி யை ஒருவர் கற்றுக்கொண்ட தால் இரு குடும் பங்களுக்கு மிடையே மொழிப் பிரச்சனையே எழவில்லை, இதன் மூலம்தான் அந்தக் குடும்பத்தின் ஒரே மக ளான பிரேமாவதியும், ஒரே மகனன சுனிலும் விமலனுக்கு மிக நெருங்கியவர்களானர்கள்.
எழுதப் படிக்கத் தெரிந் தும் உழைப்பையே வாழ்வாகக் கொண்டிருந்த அவன் இப்படி மோசமானநிலைமைகள் வரும் , என்பதை சிறிதும் எதிர்பார்த் திருக்கவில்லை. சுனில்"கூட் ஏதோ புரட்சிகர இயக்கத்தில் இணைந்து கொண்டு பண்ணைகள் வைத் திருக்கும் சிங்களப் பெரும் முத லாளிகளுடன் இடையிடையே மோதல்களில் இறங்கினன். விமலனையும் தன்னுடன்இணைப் பதற்கு அவன் எவ்வளவோ பிரயத்தனப் பட்டான். இவை யெல்லாம் அன்றைய சூழலில் அவசியம் இல்லாதவையாகவே விமலனுக்குப் பட்டது. அவன் விவசாயத்திலும் வேட்  ைட யாடுவதிலுமே பொழுதைக் கழித்து வந்தான்.
இத்தகைய நிலையில்தான். திருகோணமலையிலும் சுற்றுப்
T

Page 6
புறங்களிலும் நடந்த சம்பவங்கள் அவனையும் அவனது குடும்பத் தினரையும் பாதிக்கத் தொடங் கியது. மூன்று தந்தையான விமலனது தமைய ஞர் இராணுவத்தினரால் சுடப் பட்டு இறந்தார். முப்பது வரு டங்களுக்குமேல் காடு வெட்டிப் பண்படுத்திக் குடியிருந்த வீடு கள் நிலங்களைவிட்டு வெளியேற
வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்
பட்டது. பதினைந்து நாட்களுக்கு மேல் சிங்களக் குடும்பங்கள் அவர்களைப் பாதுகாத்தது.இறுதி யில் பாதுகாப்பளித்த அவர்களே
பாதுகாப்பிழந்து அகதிகளாகப்
போனபோதுதான் அவனது வாழ்க்கையில் அந்தத் துயரச் சம்பவம் அவனுக்கு ஏற்பட்டது.
தனது மனைவி குழந்தை களுடன் ஒரே முகாமுக்கு நம் பிக்கையோடு செல்ல முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் அவர் கள் பிரிய நேரிட்டபோது அவனது மனைவி பிரேமா தாய் தந்தையர் முன்னிலையிலேயே கட்டி அணைத்தபடி ஒலமிட்டுக் கதறிய அந்தக் காட்சி அங்கு நின்ற அனைவரிடமும் கண்ணிரை ரையும் அழுகையும் வரவழைத் தது. எதிலும் உறுதியாக நிற் கும் சுனிலினது கண்ணிர் திரையிட்டு நின்றது.
"மச்சான். சிறியாதவுக்கு போட்டுவரேக்கைஹற்றன் ஸ்ரே ஷனிலை கேட்ட எஸ்ரேற் தொழி லாளியின்ரை அதே அழுகைக் குரல்தான் இஞ்சையும் கேக்குது, தாங்கள் பேசாமலிருந்தால் நாடு
பிள்ளைகளுக்கு
கண்களிலும்
முழுக்க இதுதான் கேக்கும், மச்சான். நிலைமையள் நிச்சயம் மாறும். நிச்சயமா நாங்கள் சந் திப்பம்”*
விமலனது கைகளை உறுதி யாகப் பிடித்தபடி சுனில் சிங்க ளத்தில் சொன்ன அந்த வார்த் தைகளின் ஆழத்தை அவன் புரிந்து கொள்ளா வி ட் டாலும் ஒரு நம்பிக்கையோடு தனது குழந்தையை தாக்கி முத் தம் கொடுத்துவிட்டு திரிகோண மலை அகதி முகாமுக்கு வந்து சேர்ந்தான்.
சுனில் நினைவூட்டிய அந்த ஹற்றன் சம்பவத்தை அவன் மனதில் அசை போட்டுப் பார்த் தான். அந்த சம்பவத்திற்காக மட்டுமல்ல விமலனுக்கும் பிரே மாவதிக்கும் ஏற்பட்ட காதலுக் கும் அடித்தளமாக அந்த சிவ னுெளிபாத யாத்திரைப்பயணமே அமைந்தது. சிறியாதயாத்திரை" க்கு அந்த சிங்கள குடும்பத்தினர் அவனை அழைத்தபோது அவர் களின் வற்புறுத்தலுக்காகவே அவன் சென்ருரன். அந்த மலைப் பாதையில் வளைந்து வளைந்து செல் லும் புகையிரதத்தின் கதவுகளோடு நின்றபடி இயற்கை அழகு கொஞ்சும் மலைச்சாரல் களில் பாய்ந்து விழும் நீர் வீழ்ச் சிகளை, ஊற்றெடுக்கும் அருவி களை, பெருகி ஓடும் நதிகளை ஆழ்ந்து அகன்று கிடக்கும் பள் ளத்தாக்குகளையும் தேயிலை தோட்டங்களையும் கண்டு மனம் பூரித்தான். அவனைப் போலவே அந்த இயற்கைக் அழகி னை

இரசித்த பிரேமாவின் அன்பு கலந்த வார்த்தைகளும் உபசரிப் புகளும் இருவரின் இதயங்களுக் குமிடையே ஒர் ஏற் த்ெதியிருந்தது. சிவனுெளி டா நமலே உச்சியில் தங்கியிருந்து கடும் குளிரையும் பொருட்படுத் தாது வெள்ளிப்பாளமாக மின் னிய முகில் கூட்டங்களையும்காலைச் சூரியோதயத்தின் அழகுக் காட் சியையும் கண்டு இரசித்து விட்டு தான் அவர்கள் திரும்பினர்.
ஹற் றன்ஸ்ரேஷனில் புகை யிாதம் நின்றபோதுதான் அங்கு கூடியிருந்தவர்களின் அழுகை
ஒவிே : வர்களை திகிலடைய வைத்
தது. சுனிலும் விமலனும் யாருக் காவது எதுவும் நடந்திருக்கலாம் என்ற உணர்வில் புகையிரதப் பெட்டியிலிருந்து பாய்ந்து இறங் கிஞர்கள்.
இந்தியாவிற்குச் செல்லும் அகதிகளை வழி அனுப்ப வந்தவர்
களே இப்படி கத்தி அழுகிருர்
கள் என்பது பின்னர் களுக்குத் தெரியவந்தது.
“வெள்ளைக்காரத் தொரை மாரு அவங்க சம்பாதிக்கிற துக்கு கொணந்து சேத்தாங்க. எத்தினை சந்ததீங்க இப்பிடிக் கண்ணீர் விடருங்க.." மீண்டும்
அவர்
இருவரும் பெட்டியில் ஏறிய போது அங்கிருந்த பெரியவர் பெருமூச்சுடன்கூறிஞர், "இந்
யாதானே போருங்க் . இதுக்கு ஏன் இப்படிஅழுவான்?
சுனில் தனது சந்தேகத்தை தீர்ப்பதற்காகக் கேட்டான்.
"அங்க போயும் என்னங்க! வஈற கடதாசியைப் பாத்தா
நெருக்கத்தை
இங்கிட்டு இருக்கிறது பரவாயில் லைங்க??
அந்த ஸ்ரேசனை விட்டு நெடும் தூரம் வரும்வரை அவர் கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. மகிழ்ச்சிகரமான அந்தப் பயணத்தின் துன்பகர மான அந்த நிகழ்ச்சியும் அவர் களது மனதை விட்டு இன்னும் மறையவில்லை.
சுனில் சொன்னது போல இன்று தாங்களும் அந்தக் கதிக்கே உள்ளாகி இருப்பதை விமலனனல் உணரமுடிந்தது.
திருகோணமலை அகதிமுகாமில் இருந்தால் வாய்ப்பு ஏற்பட்டால் பிரேமாவையும் குழந்தையையும் சந்திக்கலாம் என்ற உணர்வில் தான் அங்கு இருக்க விரும்பி ஞன். ஆனல் அங்கு அடிக்கடி வந்து இராணுவத்தினர் அகதி களை துன்புறுத்துவதும் கைது செய்வ தும் நடந்தவண்ணம் இருந்தது. போராளிகளை ஒத்த தோற்றமுடைய விமலன் அங்கு இருப்பது அவனுக்கு ஆபத்தை கொடுக்குமென்று அந்த முகாமில் உள்ளவர்களே அவனை வற்பு றுத்தி யாழ்ப் பாண த் துக் கு அனுப்பி வைத்தனர். கடல் மார் க்கமாக முல்லைத்தீவுக்கு வந்து பல சிரமங்களுக்கு மத்தியில் இந்த அகதி முகாமுக்கு வந்து சேர்ந்தான். இன்றுவரை தனது குடும்பங்களைப்பற்றிய உண்மை யான விபரங்களை பெரும்பாலும் கூரு தவிர்த்துக் கொண்டான். ஆனல் ஒரு கிழமைக்கு முன் மிக்சர் வியாபாரத் துக் குச் சென்ற போது தன்மீது மிகவும் அக்கறையாகவும் அன்பாகவும்
9.

Page 7
நடந்து கொண்ட த ன் னை ப் போன்ற அந்தக் கிராமத்து விவ சாயியிடம் அவன் மனம் திறந்து அனைத்தையும் சொன்னன்.
அன்று வியாபாரம் கொஞ் சம் மந்தமாக இருந்த பேது புதிய புதிய இடங்களைப் பார் வ யிட வேண்டுமென்: அவனிடம் எழுந்திருந்த . அந்த வீதியால் வந்த ஒரு இளைஞனின் சைக்கிளில் ஏறிக் கொண்டு நகருக்கு வெளியே கிராமங்களை நோக்கிச் செல்லும் அத்தெரு வால் வெகுதூரம் வரை சென்று இறங்கினன். செம்மண் தரை யில் பச்சைப் பசேல் என்ற பயி " வகைகள் வளர்ந்திருந்த தோட் டங்களைப் பார்த்தட்டி தார்ச் குட்டையும், தலையில் படும் ல்ெ ய் பிலையும் பொருட்படுத்தாது நடந்தான். பன்குளத்தில் அவன் விதைத்த காலபோக நெல் கூட எவ்வளவு அழகாக-பசுமையாக இலை விரித்து நின்றது. கதிர் முட்டி நன்ருக விளையுமென்று எதிர்பார்த்த அவனது நினைவு கள் கனவாகியதை எண் ணிப் பெருமூச்சு விட்டபடி பனைமரங் கள் கூடலாக வளர்த்திருக்க அந்த தெருவோரத்திலிருந்த ஒழுங்கையால் திரும்பினன்.
பனை ஓலைகளால் அடைக்கப் பட்டிருந்த அந்த வேலிகள் கறையான் அரித்து கயிறுகள்
அறுந்ததினுல் விழுந்ததும் விழா
த துமாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. படலையே இல்லாமல் திறந்துகிடந்த அப்பா தைக்கூடாக விமலன் சென்றன். அந்தச்சிறிய முற்றத்தில் கிண ற்றுநீரால் செழித்திருந்த இர இண்டு மூன்று வாழையடிகள்செவ்வந்திகள்- செம்பருத்திப் பூக்களைப் பார்த்தபடி பனை ஓலை
10
அ6 76 ம்
களால் வேயப்பட்ட அந்தச்சிறிய வீட்டை நிரி து பார்த்தான். திண்ணையில்: ) த்து கணவ னுக்கு மனைவி உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். மதிய (ఫడిiT சாப்பாட்டு நேரம் என்பதை அலி துை வயிறும் அவனுக்கு உணர்த்தியது. எ ப் படி யும் பையைக் காலிபண்ணிவிட்டுத் திருப்பி விடவேண்டும் என்ற உணர்வில் ஒரு பக்க ற்  ைற எடுத்து நீட்டுகிறன்.
'அகதி முகாமிலை இருந்து வாறம்'
அவனது வாய் பழகிப்போய் விட்ட அந்த வார்த்தையை உணர்வின்றிச் சொல்கிறது.
வாய்க்குள் உணவை வைத்து மென்றபடியே கணவன் முகபா வனையால் காட்ட, மனைவி எழுந்து வந்து தட்டிக்கு மேல் போடப்பட்டிருந்த செம்பாட்டுக் காவி ஏறிய வெள்ளைச் சேட்டை எடுத்து சில்லறைகளைக் கணக்குப் பார்க்கிருள்.
"எவளவு காசு?" அவள் தான் கேட்கிருள்.
'இரண்டரை ரூபா" "அடுத்தமுறை வரேக்கை வாரும்’ ’
திரும்பவும் கையிலுள்ள சில் லறைகளைப் பார்த்தபடி ஏமாற் றத்துடன் அவள் சொல்லும் போது, தங்களது விளையாட்டை யும் நிறுத்திவிட்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்த அந்தக்
குழந்தைகளின் முகத்திலும் அதே
ஏமாற்றத்தை அவதானிக்கிருன்,

**எவளவு gsfri இருக்கு? என்று கேட்டு கொடுத்து விட
எாமா என்று ஒரு எண்ணம்
எழுந்தாலும் மறுவிஒடியே இல்லை என்றவுடன் திரும்பிவிடும் அந்தப் பழக்கதோஷம் அவனி டம் வந்துவிடுகிறது. கையி லுள்ள பைக்கெற்றை பையில் போட்டுக்கொண்டு இரண்டொரு வீடுகளுக்குச் சென்றிருப்பான்.
"வீட்டை ஒருக்கா வந்திட் டுப் போம்"
கழுவிய கையும் காயாமல் வேகமாக நடந்துவந்த அவளது
கணவன், விமலனது பதிலுக்குக்
காத்திருக்காமலே அவனது கை யைப் இறுகப் பிடித்தபடி மறு கையை முதுகில் வைத்து அ த்து தள்ளியபடி வீட்டை நோக் கிக் கூட்டிச் சென்ருன்,
"ஏன். என்னத்துக்கு?"
முன்பின் தெரியாத அந்த இடத்தில் ஏதாவது நடந்து விடுமோ என்று விமலன் அஞ்சி ஞ ன்.
"ஏன் என்னத்துக்கு எண்ட
பேச்சு பேந்து. இப்ப நடவும் வீட்டை"
விமலன் அவனிடமிருந்து
விடுபட முயற்சிப்பதற்கிடையில் படலைவரை அவனைக் கொண்டு வந்து சேர்த்துவிடுகிருன்,
*தம்பி. உந்தக் கத்தியைக் Glj5rtsorGleurt.ir'
ஏதோ விபரீதம் தான் நடக் சுப்போகிறது என்ற முடி க்கு வந்த விமலனுக்கு முற்றத்தில் நின்ற ஒரு வாழை மரத்தின் இலையை அலன் வளைத்துப் பிடித்த, போ ஏதான் நிம்மதி பெருமூச்சு ள்ெ விவந்தது.
அங்கை போய் கைகழுவத்
'தம்பி. இரும். ராசம் தண்ணியைக் குடு"
'அண்ணை உங்களுக்கு ஏன் சிரமம்" '
"இண்டைக்கு சாப்பிட்டுட் டுத் தான் போகவேணும். காசு மணிசரிட்டை எந்த நேரமும் இருக்குமே"
இப்படிச் சொன்னபின்னும் மறுக்க மனமின்றி உரப்பையைத் திண்ணையில் வைத்தான். மிக் சர் பக்கெற்றுக்களில் இரண்டை எடுத்து அந்தச் சிறுவர்களிடம் கொடுத்தான். செம்பாட்டுப் புழுதி தனது சேட்டில் படிவதை யும் பொருட்படுத்தாமல் அந்தச் சிறுவனத் தூக்கியபோது அவ னது குழந்தையின் நினைவு அவ னுக்கு வந்தது.
வீட்டைவிட்டு வந்த பின் தனது வீட்டில் உண்பதுபோன்றி உணர்வுடன் வயிருற உண்டான். அ, னது குடும்ப நிலைமைகளைப் பற்றி கேட்டபோது அவர்களி டம் எதையும் அவனுல் மறைக்க முடியவில்லை. அவனது கதையை கேட்டு அவர்கள் அவனுக்காக வருத்தப்பட்டார்கள்.
"நாங்கள் குத்தகைக்குத் தான் தோட்டம் செய்யிறம். இப்ப :ொஞ்சக் காலமா மாறி DIT ? ஒரே அழிவாத்தான் கிடக்கு? M
மண்ணையே நம்பிப் பிழைக்
கும் இரு ரும் தமது மண உழைச்சல்களைப் பகிர்ந்துகொண் டார்கள்.
1.

Page 8
விமலன் என்றைக்கும் இல் லாத ஒரு மனத்திருப்தியுடன் அகதி என்ற உணர்வை மறந்தவ கை விடைபெறும் போது அவன் வழியனுப்பி வைத்தான்.
அவன் அந்தக் கிராமத்துக் குச் சென்று இரண்டு கிழமை கள, கிவிட்டது. போய் வந்த மறுநாளே அந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு வீச்சு நடந்ததாக பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. அந்தக் குடும்பத்துக்கும் ஏதாவது நடந் திருக்குமோ என்ற ஏக்கத்துடன் அவர்களைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந் தான். முகாம் வேலைகளுடன் வசதியீனங்களும் சேர்ந்து நாட் களை நகர்த்திவிட்டன. இன்று எப்படியும் செல்வது என்ற முடி வுடன் வியாபாரத்தை முடித்துக் கொண்டான். அந்தக் குழந்தை களுக்காக மறந்துவிடாமல் ஒரு பிஸ்கற் சரையையும் வாங்கிக் கொண்டு ஒரு மிணிவானில் தொற்றி ஏறிக்கொண்டான். தோட்ட வெளிகளையும் பனைமரங் களையும் குறிப்பாக வைத்து மினி வானில் இருந்து இறங்கியதும் இடிந்து கிடந்த தெருவோரத்து
மதிற் சுவர்களும், முறிந்து காய்ந்து கிடக்கும் அரசமரக் கொப்புகளும் அங்கு ஏதோ
அனர்த்தங்கள் நடந்திருப்பதை அவனுக்கு உணர்த்தியது. ஒழுங் கையில் இறங்கி வேகமாக நடந் தான். அந்த வீடு வெறிச்சோ
டிக் கிடந்தது. தண்ணிர் இல் லாமல் அங்கு நின்ற வாழை, செவ்வந்தி, செம்பருத்திப் பூங்
கன்றுகள் எல்லாமே வாடிவதங்கி நின்றன. முற்றமெங்கும் பன் ஞடைகளும் சருகுகளும் பரவிக் கிடந்தன. அருகிலுள்ள காணி பில் உயர்ந்து நின்ற வைரப் பனைகளில் ஒன்று பாதியுடன் முறிந்து சரிந்து கிடந்தது.
12
அந்தக் குழந்தைகளுக்காக வாங்கி வந்த கையிலிருந்த பிஸ்க கற் சரையை அவன் திருப்பிப் பார்த்தான்.
‘ஆரைத் தம்பி பாக்கிரு. எல்லாரும் கலட்டிக்கை பள்ளிக் குடத்திலை போய் இருக்கினம். பாத்தியே தம்பி பனைமரத்தை. குழந்தை குஞ்சுகளையும் வைச்சுக் கொண்டு மணிசர் இஞ்சை இருக் கேலுமே. குறுக்காலை போன வங்கள் ஒரிடமும் இருக்க விடு ருங்களில்லை"
இரண்டு கோழிக் குஞ்சுகளை பறந்துவிடாமல் மார்போடுஇறுக அணைத்தபடி அந்த ஒழுங்கை யால் வந்த வயோதிபர் விரக்தி யுடன் கூறிவிட்டுச் செல்கிருர்,
*ஒரிடமும் இருக்க விடுருங் களில்லை' என்ற அந்த வயோதி பரின் இறுதி வார்த்தைகளை எல்லா மக்களுமே ஒன்றுசேர்ந்து விமலனின் காதுக்குள் உரத்துக் கத்துவதுபோன்ற பிரமை அவ னுக்கு ஏற்பட்டது.
**இனியும் நாங்கள் பேசா மல் இருந்தால் எல்லா இடமும் இதே அழுகுரல்தான் கேட்கும்* என்ற சுனிலின் வார்த்தைகள் அவனது நினைவில் வந்தன.
அவனது கைகளுக்குப்பரிட் சயமான-அவன் பாதுகாப்பாக பன்குளத்தில் மறைத்து வைத் திருந்த அவனது இரட்டைக் குழல்த் துப்பாக்கியை அவன் நினைத்துக்கொண்டான்.
இனியும் நான் அகதியில்லை என்ற உணர்வோடு உறுதியாக நடந்தான்.

இ) தமிழும்
அயல் மொழிகளும் - 4
இ சி. சிவசேகரம்
திமிழில் சீர்திருத்தங்களை வரவேற்போரிற் பலர் அவற்றை அரைமனதுடன் தான் வரவேற்கிருர்கள் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இதற்கான காரணங்கள் தமிழ் மொழி பற்றிய சில தவருண கருத்துக்களுடன் தொடர்புடையன என்று சந்தேகிக் கிறேன். தமிழை நவீனமயமாக்கல் அதன் தூய்மையையும் தனித் துவத்தையும் சிதைத்துவிடும் என்ற கருத்து நவீனமயமாதலை எதிர்ப் போரை மட்டுமன்றி ஆதரிப்போரையும் பாதித்திருக்கிறது என்பது முற்றிலும் நியாயமற்ற கருத்தல்ல. செந்தமிழ், கன்னித்தமிழ் என்றவிதமான கருத்துக்கள் மொழி வளர்ச்சியின் வரலாற்று விதி களை அலட்சியம் செய்வன. இக்கருத்துக்கள் சார்ந்த மனுேபாவமே தமிழ் எழுத்து முறையின் தனித் தமிழ்த்தன்மை பற்றிய பிரமை யையும் தமிழின் குறைபாடுகளைக் கூட அதன் சிறப்புக்களாகக் காணும் குருட்டுத் தனத்தையும் தாங்கிநிற்கிறது.
தமிழில் எழுத்துச் சீரிதிருத்தம் அவசியமா என்ற கோள்வி எழும்போது அதைத் தட்டிக் கழிப்பதற்குக் காட்டப்படும் நியா யங்கள் தமிழுக்கு அவசியமான மாற்றங்களை ஒத்த மாற்றங்கள் பிறமொழிகளில் மேற்கொள்ளப்படவில்லை என்ற பாங்கிலேயே அமைகின்றன. இவ்வாழுன வாதங்கள் சரியானவையும் அல்ல நேர்மையானவையும் அல்ல. தமிழுக்கு அவசியமான எழுத்துச் சீர் திருத்தம் பலவேறு தேவைகளைத் தழுவியது. அதை மெற்கொள் வதன் அவசியம் தமிழின் தேவை பற்றியதே அல்லாமல் பிற மொழி களின் தேவைகள் பற்றியது அல்ல என்பதை முதலில் நாம் உணர வேண்டும். பிறமொழிகளின் அனுபவங்களை நாம் பயன்படுத்துவது தமிழின் பிரச்சனைகட்கு நாம் காணும் தீர்வுகளைச் சிறப்பிக்க உதவும்.
தமிழில் பேச்சு வழக்கிலுள்ள சொற்கள் பல அயல்மொழி மூலத்தை நெருங்கிய வடிவிலேயே இன்று பழக்கத்தில் உள்ளன. அவற்றுட் பலவற்றுக்கு மரபுவழியிலான தமிழாக்கலையோ அல்லது சென்ற நூற்ருண்டின் பிற்பகுதியிலும் இந்த நூற்றண்டின் முற் பகுதியிலும் செய்தது போன்று தமிழில் எழுதக்கூடியவிதமான
13

Page 9
வடிவங்களையோ (பிரக்கிராசி, சக்கடத்தார், கோடு, ஆசுப்பத்திரி ஆகியன போன்று) வழங்க இயலாது. ஏனெனில் பேச்சுத் தமிழ் சிலபுதிய ஒலிகளையும் ஒலி வேறுபாடுகளையும் தன்னுள் ஒரு பகுதி யாக்கிவிட்டது. இந்தப் பிரச்சினை பிறமொழிகட்கு இல்லையா, ஏன் தமிழில் மாத்திரம் இவ்வாருண பிரச்சனைக்கு எழுத்துச் சீர்திருத் தம் அவசியம் என்ற வாதம் மிகவும் நைந்துபோன ஒன்று. தமிழில் மெய்யெழுத்துக்கள் தொடர்பான பிரச்சனை போன்று பிற இந்திய மொழிகளில் இல்லை என்று முன்பு ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டி யிருந்தேன். உயிரெழுத்துக்களைப் பொறுத்தவரை பிரச்சனை அவ் வளவு உக்கிரமான ஒன்றல்ல. ஆயினும் ஒரு முழுமையான சீர்திருத் தம் முடிந்தவரை சமகாலக் குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த் திக்கும்படி அமைவது பயனுள்ளது. அதுமட்டுமன்றி அது எதிர் காலத்தில் எழக்கூடிய பிரச்சனைகட்கும் முகங் கொடுக்கு மாருன முறையில் அமைவது சிறப்பாயிருக்கும் என்பது என் அபிப்பிராயம்.
தமிழுக்குப் பாரிய எழுத்துச் சீர்திருத்தம் அவசியமில்லை என்று வாதிப்போர் சிலர் அடிக்கடி காட்டும் உதாரணம் யப்பானிய மொழி யப்பானிய எழுத்தில் ர மட்டுமே உள்ளது. ல | ள |ழ எதுவுமே கிடை யாது. ர/ல வேறுபாட்டை அவர்கள் கவனிப்பதில்லை. "பால குருவை அவர்கள் ‘பாரகுரு' என்றே எழுதி வாசிப்பார்கள். இங்கே நாம் கவனிக்கத் தவறுவது ஏதென்ருல், யப்பானியப் பேச்சு மொழி ர/ல வேறுபாட்டை இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பதே. என்று யப் பானியப் பேச்சுமொழியில் அந்த வேறுபாடு முக்கியத்துவம் பெற்று இரண்டு ஒலிகளும் வேறுபடுத்தப்படுவது அவசியம் என நடைமுறை யில் எப்போது நிறுவப்படுகிறதோ அப்போது அவர்கள் "ல"வை எழுத்தில் குறிப்பது பற்றிச் சிந்திப்பார்கள். அதுவரை அவர் உட்கு அந்தப் பிரச்சினை இல்லை. நம் நிலையோ வேறு. நம் பேச்சு மொழியை எழுத்தில் சரிவரக் காட்ட இயலாத நிலை வரவர மோசமாகி வரு கிறது. பேச்சு மொழியை ஏதோ உண்மையான தமிழ்" இல்லாத ஒன்ருகப் பாவனைசெய்கிருேமே ஒழிய, பரிகாரம் தேட முயற்சிப்ப தாக இல்லை.
சீர்திருத்தம் என்பது புதிய எழுத்துக்களைப் புகுத்துவது மட்டு மல்ல அவசியமற்ற எழுத்துக்களை அகற்றுவதும் ஆகும். இன்றைய தமிழில் பேச்சிலும் எழுத்திலும் ந - ன வேறுபாடு முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. இரண்டு எழுத்துக்களில் ஒன்றை ("ன" வை) மட் டுமே வைத்துக்கொண்டாற் போதும் என்ற நிலை வந்துவிட்டது. எழுத்துக்கள் வழக் கொழிந்து போவது ஒன்றும் புதிய விஷயமல்ல. சிங்களத்தில் இன்று சில எழுத்து வடிவங்களை வெகு சிலரே அறிவார் கள். அவை பல சமயம் அரிச்சுவடியில் கூடக் காட்டப்படுவதில்லை.
14

தமிழ் எழுத்துவடிவங்கள் தமிழர் “கண்டுபிடித்தவை அல்ல. இவை பிராமி எழுத்து வடிவங்கஃாத் தழுவி உருவானவை. காலப் போக்கில் எழுதும் உபகரணங்களின் தன்மையும் மொழியின் சமு தாயத் தேவைகளும் அவற்றில் படிப்படியான சிறு மாற்றங்களையோ அல்லது கணிசமான மாற்றங்களையோ புகுத்தின. பிராமி எழுத்து முறைகூட இந்தியாவுக்கு வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட 01ழுத்துமுறையைத் தழுவி உருவானது என்ற கருத்துக்கும் ஆதாரங் கள் பல உள்ளன. இந்த இடத்தில் நமக்கு இவ் வரலாற்று நுணுக் கங்களை விட தமிழ் எழுத்துமுறை நீண்டகால வளர்ச்சியையும் மாற்றத்தையும் தன்னகத்தே உடையது என்ற உண்மையே முக்கிய
மானது.
உலகின் எழுத்து முறைகளை எடுத்தால் அவை சித்திர எழுத்து முறையில் தொடங்கி இன்று வழக்கில் உள்ள மூன்று முக்கியது எழுத்து வகைகளில் வந்து முடிந்துள்ளன. ஒன்று ஐரோப்பிய மொழி களின் எழுத்து வழக்கிலுள்ள முறைகளான ரோமன் எழுத்துமுறை (ஆங்கிலத்தில் பயன்படுவது) , சிரிலிக் எழுத்துமுறை (ரஷ்ய மொழி யில் பயன்படுவது) கிரேக்க எழுத்துமுறை ஆகியனவும் அரபு, ஹிப்று எழுத்து முறைகளையும் உள்ளடக்குவது. இங்கு உயிர், மெய் ஒலி யன்கட்குத் தனித்தனி எழுத்துக்கள் உள்ளன.
இரண்டாவது அசை எழுத்து வகை எனலாம். அரபு எழுத்து முறையைப் பயன்படுத்தும் உருது மொழிபோக இந்திய மொழிகள் யாவும் இவ்வாருன, எழுத்து வகைகளையே பயன்படுத்துவன. இதில் உயிர், மெய், ஒலியன்கட்குத் தனி எழுத்துக்கள் போக உயிர்மெய் எழுத்துக்கள் தனித்தனி வடிவங்களால் குறிக்கப்படுகின்றன. இதை விட சில மொழிகளில் கூட்டெழுத்துக்களும் உள்ளன. ( தமிழில் கூட நாம் பூரீ, க்ஷ ஆகியவற்றுக்குக் கூட்டெழுத்துக்களைப் பயன் படுத்துகிருேம்.) இந்தியாவில் வளர்ந்த இம்முறை பரவி தாய், காம்போஜ மொழிகளில் இன்றும் வழக்கில் உள்ளது. வியட் மிைய, இந்தோனீசிய மொழிகளில் இருந்துவந்த மரபுவழி எழுத்து வடிவங்கள் இன்று இல்லை. மாருக ருேமன் எழுத்து முறையைத் தழுவியே நவீன எழுத்து முறைகள் அமைந்துள்ளன. மூன்ருவ தாகச் சித்திர எழுத்துமுறை சீன, கொரிய, யப்பானிய மொழிகளில் பயன்படுகிறது. யப்பானிய மொழிக்கு மரபுவழிச் சீன எழுத்து முறையும், எளிமைப்படுத்தப்பட்ட ஒரு யப்பானிய மரபு வழி எழுத்து முறையும் அதைவிட அண்மையில் வகுக்கப்பட்ட நவீன எழுத்து முறை (லத்தின் எழுத்து முறையை ஒத்தது ) ஒன்றும் உள்ளன. யப்பானிய பேச்சொலிகளின் தன்மையும், யப்பானிய மொழியில் பேச்சு மொழியில் உள்ள பரவலான ஒருமையும்
15

Page 10
நவீன எழுத்துமுறையைப் பரவலாக்குவதற்கு மிகவும் உதவியாக உள்ளன. சீன மொழியின் பிரச்சனையோ வேறு. சீன மொழியை ஒருமைப்படுத்துவது அதன் எழுத்து முறையே. ஆணுல் சீன மொழிக்கு நான்கு முக்கியமான பேச்சுமுறைகளும் பலவேறு பிராந் திய வேறுபாடுகளும் உள்ளன. எழுத்தில் உள்ள ஏதாவது ஒரு வசனத்தை சீனமொழி பேசுவோர் எவருமே சரியாக விளங்கிக் கொள்வதில் சிரமம் இல்லை. ஆனல் அதைச் சீனுவின் ஒரு பகுதி யைச் சேர்ந்தவர் வாசிப்பதைக் கேட்கும் இன்ஞெரு பகுதியைச் சேர்ந்தவரால் அதை விளங்கிக் கொள்ள இயலாது. காரணம் ஏதெனில் எழுத்துக்கள் சித்திரமுறையில் உள்ளதால் எழுத்தில் அவை குறிக்கும் பொருள் எங்கும் ஒன்றே ஆயினும் ஒவ்வொரு சித்திரத்திற்கு ஒவ்வொரு பிராந்தியத்திலும் வேறு ஒசை வடிவங் கள் உள்ளன. எனவே யப்பானில் போன்று சீனவில் புதிய எழுத்து முறை உடனடியாகப் புகுத்தப்பட்டால் சீன மொழி பல கிளைமொழி களாகப் பிளவு படும். இதனுற்தான் சீன மொழிக்கு ஒரே பொதுப் பேச்சு மொழியாக மன்டரின் பேச்சு முறையை நிறுவும் முயற்சி முதலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்டரின் பேச்சு பரவலாக்கப் பட்டபின்பே 1950களில் முன்வைக்கப்பட்ட (ரோமன் எழுத்து முறையை ஒத்த) புதிய எழுத்து முறை பரவலாக்கபபடும். சீன அரிச் சுவடியில் இன்றும் 10,000க்கு மேற்பட்ட தனித்தனி எழுத்துக்கள்" உள்ளன. இவற்றைக் கற்பதில் உள்ள சிரமம் போக அச்சிடுவதில் உள்ள பிரச்சினைகள் சீனுவின் நவீன மயமாதலுக்கு ஒரளவு பாதக மாகவே உள்ளன.
சீன, வியற்னுமிய மொழிகளில் உயிர்-மெய் வேறுபாடுக% விட தொனி வேறுபாடுகளும் முக்கியமானவை. எனவே வியற்னுமிய மொழியில் லத்தின் எழுத்துக்களுடன் தொனி வேறுபாடுகளைக் காட் டும் குறியீடுகளும் பாவிக்கப்படுகின்றன. இவை பிரெஞ்சு "செல்வாக் கினல் புகுத்தப்பட்டவை. இவற்றில் உள்ள இடர்பாடுகளைப் பற்றி இங்கு நான் விவரிக்க விரும்பவில்லை. ஆயினும் நான் வலியுறுத்த விரும்புவது யாதெனில் தமிழை ஒத்தளவு பழைய (அல்லது தமிழி னிலும் அதிகம் பழைய) எழுத்து வடிவங்களை உடைய மொழிகளில் எழுத்துச் சீர்திருத்தங்கள் அந்தந்த மொழிகளின் தேவைகளை ஒட்டி மேற் கொள்ளப்பட்டுள்ளன என்பதே.
இந்திய மொழிகளில் வழக்கில் உள்ள அசை எழுத்து முறை நூற்றுக்கணக்கான அச்சு வரிவடிவங்களை அவசியமாக்கியுள்ளது. அச் சிடுதல், தட்டெழுத்து போன்ற துறைகளில் இவை ஏற்படுத்தும் சிரமங்கள் கணிசமானவை. இதைவிட இந்திய மொழிகள் கிட்டத் தட்ட ஒவ்வொன்றும் தனித்தனி எழுத்துமுறைகளை உடையன.
6.

0 ஸ்பாட்டக்கஸ் ஒரு அடிமைக் கிளர்ச்சி வீரன்
அழகிய ரோம் நகரின் இடிபாடுகளை இன்று காணும்போது இலக்கியத்திலும், வரலாற்றிலும் இடம்பெற்றுவிட்ட, சீசர், புரூட்டஸ், அன்ரனி, கிளியோபாட்ரா, நீரோ போன்றவர் வர்களின் பெயர்களே பலராலும் நினைவு கொள்ளப்படும். ஆணுல், அந்தப் புகழ்மிக்க ரோம சாம்ராச்சியத்தின் அடிக்கற் களாக, தூண்களாக இருந்து தமது இரத்தத்தையும், தசை களையும், உயிர்களையும் இழந்த பல இலட்சக் கணக்கான அடி, மைகளின் வரலாறுகள் மறைக்கப்பட்டு விட்டன. வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் வரலாறுதான் என்பதை உறுதிப்படுத்துவது போல, அந்த அடிமைகளின் தலைவனுக ஆயிரக்கணக்கான அடிமை விவசாயிகளை அணிதிரட்டி ரோமா னிய சாம்ராச்சியத்துக் கெதிராக வீரத்துடன் போராடி மடிந்த ஸ்பாட்டக்கஸ் இன்றும் உலகின் ஒடுக்கப்பட்ட மக்களால் நினைவுகூரப்படுகிருன். “தொன்மைக் காலவரலாற்றில் காணப் படும் மிகச்சிறந்த மனிதன், போர்த் தளபதி, சிறந்த பண் பாளன், தொன்மைக்காலப் பாட்டாளி வர்க்கத்தின் சிறந்த பிரதிநிதி' என்று ஸ்பாட்டக்கஸ் பற்றி கார்ல் மாக்ஸ் அவர் கள் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் இன்று கிரேக்கமொழி போக மற்றவை எல்லாமே அடிப்படையில் இரண்டே எழுத்து முறைகளைப் பயன்படுத்துகின் றன. இது பிறமொழிகளைக் கற்பதிலும் அச்சு வசதிகளைப் பயன் படுத்துவதிலும் பலவாருன வசதிகளை அளிக்கிறது. முழு இந்தியா வுக்கும் (ஏன், தென்ஆசியாவுக்குமே) பயன்படக்கூடிய ஒரு எழுத்து முறையை வகுப்பது சாத்தியம். லத்தீன் முறை போன்று 30 க்கு மேற்படாத வரி வடிவங்களைக் கொண்டதாக அதை அமைக்க இய லும். இது தென் ஆசிய மக்களிடையே நல்லுறவுகளை விருத்திசெய்ய மிகவும் உதவும் என்பது என் எண்ணம். ஆயினும் இது நம் உடன டியான சமுதாயச் சூழலில் சாத்தியமான ஒன்றல்ல. அடிப்படை யான சமுதாய மாற்றம் ஒன்றன் தொடர்ச்சியாக இவ்வாறன. :* சீர்திருத்தம் ஏற்படுவது மிகவும் சாத்தியம் என்று கருது
றன.
புதிய எழுத்து முறை புகுத்தப்படுவதை எதிர்ப்போர் அதன் விளைவாகக் கல்வி அறிவு குறைந்தோர் பாதிக்கப்படுவர் என்று வாதிப்பது வழமையாகிவிட்டது. உண்மையில் அந்த வாதம் அவ் வளவு பலமானதல்ல. புதிய எழுத்துமுறை எதுவுமே ஒரே நாளில்
17

Page 11
பழைய எழுத்துமுறையைத்தூக்கி எறியப்போவதில்லை. நீண்ட காலத்துக்கு இரண்டு எழுத்துமுறைகளையும் ஒரு மொழி பயன்படுத் தும் தேவை இருக்கும். (யூகோஸ்லாவியாவின் தேசிய மொழியான சேபோ-குருேட் மொழி ரோமன் எழுத்திலும் சிரிலிக் எழுத்திலும் எழுதப்படுகிறது. இதற்கான காரணங்கள் வேறு வகையின. ஆயி னும் நான் கூறமுனைவது ஏதெனில் ஒரு மொழிக்கு இரண்டு எழுத்து முறைகள் ஏக காலத்தில் இருக்க இயலும் என்பதையே.)
தமிழுக்கு ரோமன் எழுத்துக்களே உகந்தவை என்பதோ அல் லது உள்ளபடியே அவை திருப்திகரமானவை என்பதோ என் வாத மல்ல. ஆயினும் தமிழர்கட்கும் பிற த்ென் ஆசிய மக்களுக்கும் பரிச் சயமான எழுத்துக்கள் என்றவகையில் தென் ஆசிய மொழிகட்கு ஒரு பொது எழுத்துமுறை வகுக்கப்படுமாயின் ரோமன் எழுத்துக் களால் அதற்கு நல்லதொரு பங்களிக்க இயலும் என்றே நினைக் கிறேன்.
இது தமிழின் உடனடியான பிரச்சினை அல்ல என்ருலும் தமிழின் எதிர்காலம் பற்றிச் சிந்திப்போர், ஒரு புறம் தமிழின் உடனடியா ல பிரச்சனைக்குத் தீர்வு தேடுவதில் இன்றைய எழுத்து முறைக்குச் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிச் சிந்திப்பதுடன், மறுபுறம் நீண்டகாலக் கண்ணுேட்டத்தில் தமிழின் எதிர்காலத்தைப் பிற இந்திய மொழிகளுடைய எதிர்காலத்துடன் இணைத்து நோக்க முற் படுவதும் பயனுள்ளது.
தமிழுக்கு நவீன எழுத்துமுறை ஒன்று வரும்வரை தமிழின் தேவைகள் காத்திருக்க அவசியமில்லை. இன்றைய எழுத்துமுறை யுடன் இசைவான முறையில் புதிய வரிவடிவங்களைப் புகுத்துவதை இனியும் பின்போட இயலாதது. தட்டெழுத்து , அச்சு முறைகளை மேலும் எளிமைப்படுத்துமாருண வகையில் எழுத்துக்களை ஒரு சீராக் குவதும் கவனிப்புக்கு உரியது. இதை விட, தமிழில் தொடுத்தெழு துவதற்கான ஒரு முறை வகுக்கப்படுவது பற்றியும் நாம் கவனம் செலுத்தலாம்.
நவீன பேச்சுத் தமிழ் இலக்கணம், பேச்சுத்தமிழை ஒழுங்கு படுத்தப்டுட்ட நவீன எழுத்துத்தமிழுடன் இணைத்தல், தொழில் நுட் பத்திற்கான தமிழ், மொழிபெயர்ப்புப் பிரச்சனைகள் போன்று பல வேறு முக்சியமான பிரச்சினைகள் நீண்டகாலமாகப் போதிய கவனம் பெருமல் இருந்து வருகின்றன. இத்துறைகளிலும் பிற நவீன மொழிகளின் அனுபவங்களினின்று நாம் சிறிது கற்க இயலுமாயின் அது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் பெரும் பங்களிக் கும்.
18

ଜିଅ "சிட்டிசன்” வேண்டி
சீறும் மலையகம்
C ஜனயுகன்
1ெழும் உரிமை தெரியாது வதை படும் மக்கள் மலைகளிலே வாழும் உரிமை தெரிந்து விட்டால் வதை படும் அவர்கள் வளமாவர் - என ஒதிய வார்த்தை ஒலிக்கிறது மலைகளின் மனதை அரிக்கிறது.
ஒதிய “சீ. வி. ஒய்ந்துவிட்டார். - அவர் ஒதிய வார்த்தை ஒலிக்கிறது மலைகளின் மனதை அரிக்கிறது.
ஒதிய வார்த்தை உண்மை பெறின் வதை படும் மலையே எழவேண்டும் - அது வாழும் நிலைமை வர வேண்டும்.
சிலோனின் மத்திய மலைகளிலே சிட்டிசன் கேட்டு, சிட்டிசன் கேட்டு சிணுங்கிய நிலைமை மாறி - அங்கு சீறும் நிலைமையைப் பாரீர்!
வக்கற்ருேர் வாழ்வற்றேர் பற்றற்றேர் நாடற்றேர் எண்ணம் மாறி - ஒரு ஏற்றம் கண்டிடவே
மலைகளின் மீது மாந்தர்கள் கூடி - அங்கு "சிட்டிசன் வேண்டும் சிட்டிசன் வேண்டும்" - என சீறும் நிலையைக் காண்பீர்!
சீறும் நிலையில் ஏற்றம் கண்டு நாறும் நிலையில் மாற்றம் காண - அங்கு நல்ல சகுனம் கேட்போம் நாடும் நலம் பெறப் பார்ப்போம்!
19

Page 12
தமிழகத்திலிருந்து
இ9 சினிமாவும் சுவரொட்டியும் V O sylp. பகீரதன்
மனிதம் இங்கழியும் விலங்கினி விழிக்கும்
சடங்குகள் குலையும் சரித்திரம் மாறும்!
தெருச் சிவர் மீது உருவங்கள் நிற்கும் முகம் பார்க்கும் சுகம் கேட்கும்!
சுவர்களை எதிர்க்கும் சுடரொளி எங்கே! பெண்களே திரள்வீர் பேதமை ஒழிப்போம்!
வாகனம் ஒட்டுபவரையும் வசமாய் இழுக்கும் பெண்மைக் கோலம் - இது பேதமைக் காலம்!
சுண்டி இழுக்கும் சுவரொட்டிகளால் சுருதியும் அடங்கும் தெருவின் நடுவில்! அரைகுறை ஆடையும் ஆடவர் அணைப்பும் கற்பில் இங்கு கறை பூசப்படும்! ஆடவர் பெண்டிர் முதியவர் சிறியரும் அசிங்கத்தை நோக்கணும் அரசினது ஆவல்! இனிமாவால் உலகினை உணர்ந்தார்க் கினி தமிழர் பண்பாடு இதுவாய் மாறும்! சினிமாவால் அரசும் சிறுத்துப் போனதால் சிந்தை அழிந்தது சிறுமை வென்றது! சினிமாவால் இங்கு சீரழியும் நாடு தெருச் சுவர்களும் ஒத்து உழைக்கும்! 20
கு நம்மவர் நிலை.
1983 யூலை கலவரத்தின் பின் 130,000 பேர் :இலங் கையிலிருந்து அகதிகளாக இந்தியா சென்றுள்ளனர். பெரும்பாலும் இவர்கள் தமி ழகத்திலேயே தங்கவைக்கப் பட்டுள்ளனர். சென்னைப் பல்கலைக்கழகப் புள்ளிவிபரப் படி பாதுகாப்பாக வாழ உத் தரவாதம் அளிக்கப்பட்டால் 75% மக்கள் நாடு திரும்ப விரும்புகின்றனர். 10% மக் கள் தங்களது குடும்பங்களில் ஒருவரையாவது இழந்துள்ள னர். மூன்றிலொரு பகுதியி னரின் வீடுகள் அழிக்கப்பட் டுள்ளன. பாதிப் பேர் நேர டியாகவே பாதிக்கப்பட்டுள் ளனர். அவர்களில் 25%
மக்கள் நாடு திரும்ப விரும்ப வில்லை. 5% மக்கள் இந்தியா
விலேயே உழைத்து வாழ லாம் என எண்ணுகின்றனர். எஞ்சியோர் மேற்கு நாடுக ளுக்கு அகதிகளாகச் செல்ல விரும்புகின்றனர்.
-YSTU th: Refugees 24-85

சீனச் சிறுகதை u rig36żir
() ஒரு அடிமையின்
இதயம்
O தமிழில்: ந. சுரேந்திரன்
6
6னது மூதாதையர் முன்னுளில் அடிமைகள்’ பெங் ஒருநாள் என்னிடம் பெருமையுடன் ஆர்ப்பரித்தான்.
பெரும்பான்மையான எனது நண்பர்கள் தங்கள் குடும்பப் பரம் பரைப் பின்னணியைப்பற்றிக் கூறும்பொழுது, "எங்கள் மூதாதையர் களிடம் ஒரு தொகை அடிமைகள் இருந்தனர்' என்றே பெருமைப் படுவார்கள். அவர்களுடைய பலகுடும்பங்கள், தற்போதும் அடிமை களைக் கொண்டிருந்தனர். சில குடும்பங்களிடம் தற்போது ஒருஅடிமை யும் இல்லை. ஆனல் எல்லாரிடமும் அடிமைகளை வைத்து ஆண்ட அந்தப் “பொற்காலத்தைப்" பற்றி பெருமையுடன் நினைவுகூரும் மனப்பான்மை காணப்பட்டது.
என்னைப் பொறுத்தவரை, எனது முப்பாட்டனர், நான்கு அடிமைகளைப் பெற்றிருந்தார். எனது பாட்டனர், எட்டு அடிமை களைக் கொண்டிருந்தார். எனது தகப்பனர் பதினறு அடிமைகளை வசப்படுத்தியிருந்தார். நான் அந்தப் பதினறு அடிமைகளையும் முதிச மாகப்பெற்றேன். அத்தோடு அடிமைச் சொந்தக்காரணுக இருப்பதில் பெருமிதமும் அடைந்தேன். அதோடு மட்டுமல்ல அந்தப்பதினருேடு இன்னும் பதினறு அடிமைகளைப் பெறவேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன்.
இதன் பின்னர்தான், பெங் எனது வாழ்க்கையில் குறுக்கிட் டான். தனது மூதாதையர் அடிமைகள் என்பதை பெருமையுடன் திடமாகத் தெரிவித்தான். நான் அவனை ஒரு பித்தன் என்றுதான் கணித்தேன்.
பெங்கின் சமூக சூழலைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது ஆணுல் நாங்கள் நண்பர்கள் ஆனுேம். நண்பர்களானதும் ஒரு பு:
2

Page 13
மையான முறையிலேயே நடந்தது. தற்செயலாகத்தான் எனது வாழ்க்கையில் அவன் சந்தித்தான். இவ்வாறுதான் அது நடை பெற்றது.
ஒருநாள், பின்னேரம், குழப்பமான மனநிலையோடு, கல்லூரியை விட்டு எங்கு செல்கின்றேன் என்ற சிந்தனையில்லாது நடந்து கொண் டிருந்தபோது, ஒரு கார் எனக்குப்பின்னல் "ஹோண்’ சத்தம் எழுப் பியபடி விரைவாக வந்துகொண்டிருந்தது. ஆனல் அந்த ஒசை எனக்குக் கேட்கவில்லை.
ஒரு பலம்மிக்க கரம் எனது கரத்தைப் பற்றி, என்னை தள்ளி யிருக்காவிட்டால், நான் அந்தக் காரால் மோதி மிதிக்கப்பட்டிருப் பேன். நான் தடுமாறியபோதும், ஆடத்தின்றித் தப்பினேன். நான் என்னை சுதாகரித்துக் கொண்டு திரும்பிப்பார்த்த பொழுது, ஒரு உயர்ந்த மெலிந்த இளைஞன், என்னை உற்றுநோக்கிக் கொண்டிருந் தான். எனது நன்றிக்கு ஒரு பதில் கூட அவன் சொல்லவில்லை. ஒரு புன்சிரிப்புக்கூட அவன் முகத்தில் தவழவில்லை. கூரிய பார்வையுடன் என்ஜன உற்று நோக்கினன். ‘இனியாவது கவனமாக இரும்' தனக் குள்ளேயே சொல்லிக் கொள்ளுவதுபோல் சொல்லிக்கொண்டான். இதிலிருந்துதான் எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது.
கல்லூரியில் நாங்கள் வெவ்வேறு பாடத்துறைகளில் பயின்ருேம். நான் இலக்கியத்தையும், "பெங் சமூக விஞ்ஞானத்தையும் பயின் ருேம். ஒரே வகுப்புகளில் பயிலாவிட்டாலும் நாங்கள் அடிக் கடி ஒருவரை ஒருவர் சந்திப்போம். நாங்கள் அதிகம் கதைக்கா விட்டாலும், விரைவில் நண்பர்களானேம். w
நாங்கள் நீண்ட நேரம் கதைப்பதில்லை. காலநிலைபற்றிக் கூட நாங்கள் அதிகம் பேசுவதில்லை. ஆனல் நாங்கள் பேசமுற்பட்டால் எப்போதும் அது அந்தப் பிரச்சினையின் முழுப் பிரவாகத்தையும் அளந்தே தீரும். w
இதிலிருந்து நீங்கன் நினைப்பீர்கள் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று. ஆனல் ‘பெங்’’கை நான் ஒருபோதும் நேசித்ததில்லை,
எனது நன்றியறிதலை வெளிப்படுத்துவதற்காகவும், ‘பெங்'கின் குண, தோற்ற வெளிப்பாடுகளில் ஏற்பட்ட ஒரு ஆர்வம் காரண மாகவுமே அவனிடம் நட்புக் கொண்டிருந்தேன். நான் அவனை நேசித்தேன் என்பதைவிட அவனிடம் மரியாதை கொண்டிருந்தேன் என்பதே பொருத்தம். அவனது தோற்றத்தில், போக்கில் நடத் தையில் நட்போ, கனிவோ தென்படவில்லை. ஆனல் அவனுடைய உருவம் பிரத்யட்சமாகும்போது ஒரு மரக்கட்டை போன்றே தோற்ற மளித்தான்.
22.

அவனது குடும்பப் பின்னணி எத்தகையது எனபதை அவன் ஒருபோதும் கூறியதில்லை. ஆனல் அவனேடு கல்லூரியில் பழகிய வகையில் அவன் ஒரு செவ்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பதை மட்டும் என்னல் விளங்கக் கூடியதாக இருந்தது. ஏனைய பட்டதாரி மாணவர்களைப் போன்று அல்லாது அவன் கஞ்ச கை, கருமியாக விளங்கியதோடு, மேற்கத்திய ஆடைகளைத் தவிர்த் தும், நாடகங்கள், நாட்டியங்களினல் ஈர்க்கப்படாதவனுகவும் இருந் தான். வகுப்புகளுக்குச் செல்வதைத்தவிர தனது முழு நேரத்தையும் தனது அறையில் படிப்பதிலும், விளையாட்டு மைதானங்களிலும், நகரிலும் உலாவுவதிலேயே செலவழித்தான். அவன் முகத்தில் புன் சிரிப்பு அல்ல, வெறும் அமைதியே குடிகொண்டிருந்தது.
நான், பலமுறை "பெங்'கின் உள்ளத்தில் என்ன புகைகின்றது என்று ஆச்சரியப்படுவேன். மூன்று ஆண்டுகள் நாங்கள் வகுப்புத் தோழர்களாக இருந்தோம். ஆனல் எனக்குத் தெரிந்தவரை பெரும் பாலான நேரத்தை ஆழ்ந்த யோசனையில் ஈடுபடுவதிலேயே செல வழித்தான். ጳ
நான் ஒருநாள் பெங், நீ எந்த நேரமும் எதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிருய் என்று கேட்டேன்.
*உன்னல் அதைப் புரிந்து கொள்ள முடியாது’’ என்று அமைதி யாகக் கூறிவிட்டு பெங் நகர்ந்தான். V,
அவன் சொன்னது உண்மைதான். ஒரு இளைஞன் இவ்வாறு மகிழ்ச்சியற்றவனுகவும் நடத்தையிலும், செயலிலும் மாறுபட்டவ ஞகவும் இருப்பதை என்னுல் விளங்கிக் கொள்ள முடியவில்லை என் பது உண்மைதான்.
எனது ஆச்சரியமான ஆர்வம், இந்த குழப்பத்திற்கு விடைகாண என்னை மேலும் தூண்டியது. ஆகவே அவனது நடத்தையிலும், அவன் படிக்கும் புத்தகங்களிலும், அவனது கூட்டாளிகளின் மீதும் மிகவும் கவனம் செலுத்தி வந்திருக்கிறேன்.
அந்த ஆராய்ச்சியின் முடிவில் அவனுக்கு உள்ள ஒரே தோழன் நான்தான்; நான்மட்டும்தான் என்பதை அறிந்தேன். அவன் வேறு சிலரோடு பழகினலும், அவர்களோடு நட்பு வைத்துக் கொள்வதை அவன் விரும்பாததால், அவர்கள் அவனேடு அதிகம் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை.
மாணவிகள் அவனுடன் கதைக்க முற்படும்போதும் அவன் ஒரு புன்சிரிப்பைக் கூட உதிர்ப்பதில்லை. அவன் என்னேடு நட்புறவு கொண்டிருந்தபோதும் அவன் என்னிடமும், விறைப்பாகவே
23

Page 14
நடந்து கொண்டான். அதனுல்தான் எனக்கும் அவன்மீது வெறுப்பு எற்படுகிறது என்று தீர்மானித்துக்கொண்டேன்.
அவன் எத்தகைய புத்தகங்களைப் படிக்கிருன் என்பதை அவ தானித்தேன். நான் கேள்விப்பட்டேயிராத நூலாசிரியர்கள் உருவாக் கிய, இயற்கைக்கு ஒவ்வாத பல வகையான நூல்களை அலன் படித்தான். பலநூல்கள், நூலக அடுக்குகளிலே இது வரை யாரா லும் கைவைக்கப்படாதவைகளாகும். அவன் எல்லாவகை நூல்களை யும் படித்தான். ஒரு நாள் ஒரு நெடுங்கதை. மறுநாள் ஒரு தத்துவ பாடம் . இன்னெருநாள், வரலாறு. அந்த நூல்களில் என்ன உள் ளது என்பதை நான்படித்தாலே தவிர, அந்தநூல்களின் சாராம் சம் என்னவென்றே எனக்கும் தெரியாத நிலையில் இப்புத்தகங்களை வைத்து ‘பெங்'கின் குணநலனை என்னல் அளவிட முடியவில்லை.
ஒருநாள் மாலை எவ்வித முன்னறிவித்தலும் இன்றி "பெங்’ எனது அறைக்குள் நுழைந்தான். அந்தத் தவணையின் போது நான் ஒரு வசதியான விடுதிக்கு மாறிவிட்டிருந்தேன். எனது மேல்மாடி அறை கல்லூரிக்குச் செல்லும் பாதையையும் , புதிதாகத் திறக்கப் பட்ட ஒரு சிறு கோல்ப் மைதானத்தையும் முன்புறம் கொண்டிருந் திதி
பெங் உள்ளே வந்து எனது வெள்ளை சோபா நாற்காலியில் தனது பழைய உடையின் தூசிய்ைத் தட்டியவண்ணமே அமைதியாகச் சாய்ந்தான்,
நான் எனது மேசையில் படித்துக் கொண்டிருந்தேன். அவனை சிறிது உற்றுப் பார்த்துவிட்டு மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்தேன். எனது கண் புத்தகத்திலும் எனது மனம், "பெங்'கின் பழைய தூசிபடிந்த ஆடை எனது புதிய வெள்ளை சோபாவில் ஏற்படுத்தப் போகும் அழுக்கைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தது.
“சீனவில் இன்று எத்தனை அடிமைகள் இருக்கிருரர்கள் என்று உனக்குத்தெரியுமா ஸெங்?" திடீரென்று பெங் கரடுமுரடான தொனியில் என்னிடம் கேட்டான்.
"பல லட்சம் பேராக இருக்கவேண்டும்’ எனது மனதில் சிந் திக்கப்படாத ஒரு விஷயம் ஆதலாலும், சில நாட்களுக்கு முன்னர் எனது நண்பன் ஒருவன் கூறிய தொகையை வைத்துக் கொண்டு சரியோ பிழையோ தெரியாத நிலையில் இந்தப் பதிலைக் கூறினேன்.
"பல லட்சங்கள் அல்ல பல கோடி அடிமைகள் உள்ளனர். சரியாகச் சொல்வதானல் சீனுவின் மக்கட் தொகையில் முக்கால் வாசிப்பேர் அடிமைகளே. ' விசர் பிடித்தால்போல் பெங் கத்திஞன்.
24

'நல்ல காலம் அந்த அடிமைகளில் நான் ஒருவனில்ல்ை" நான் சுயதிருப்தி அடைந்து கொண்டேன்.
*உன்னிடமும் அடிமைகள் உள்ளனரா? அவன் திடீரென்று கடுமையான குரலில் கேட்டான்.
என்னிடம் அடிமைகள் இல்லை என்ருல் அவன் என்னை கீழ்த்தர மாக நினைப்பானதலால், நான் “என்னிடம் பதினறு அடிமைகள் உள்ளனர்" என்றேன்.
அவன் தன்னிடம் அடிமைகள் இல்லாத காரணத்தால் ஏற் பட்ட பொருமையால்தான் என்னிடம் நோட்டம் பார்க்கின்றன் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, அநுதாபத்தோடு "உனது குடும்பத்திற்கும் பல அடிமைகள் இருப்பார்கள்தானே' என்றேன்.
ஆச்சரியமூட்டக் கூடியமுறையில் என்னை மீண்டும் அவன் உற்று நோக்கிஞன். பின்பு பெருமை நிறைந்த குரலில் ஏதோ ஒரு இமா லய சாதனை புரிந்தாற்போல் “எனது மக்கள் அடிமைகள்' என்று பெருமிதப்பட்டான்.
‘இருக்க முடியாது, நல்ல நண்பர்களுக்கு இடையில் இவ்வா ருன அடக்கம் தேவையில்லை’ நான் நிலை தடுமாறிய நிலையில் கூறி னேன்.
*அடக்கமா? எதற்காக நான் அடக்க உணர்வை பிரதிபலிக்க வேண்டும்? ஆச்சரியத்துடன் பெங் கேட்டான்.
“ஆஞல் அடிமைப் பரம்பரையைச் சார்ந்தவன் என்று தெளி வாகக் கூறினயே?"
"நூற்றுக்கு நூறு உண்மை"
**ஆனல் நீ ஒரு கல்லூரி மாணவன்’ நான் இன்னமும் அவ னது கருத்தை நம்ப மறுத்தவனகப் பதிலிறுத்தேன்.
*"ஏன்? அடிமைப் பரம்பரையினர் கல்லூரி மாணவர்களாக வரக்கூடாதா?’ அவன் திருப்பிக் கொக்கரித்தான்; பின்பு சொன் னன் “நான் நிச்சயமாகச் சொல்லுவேன், உனது முன்னேர்கள் சில பேர் கூட அடிமைகளாக இருந்திருக்கலாம்."
அவன் கொடுத்த சாட்டையடி எனது தலையைச் சுழற்ற, ‘'எனது மூதாதையரை உனது மூதாதையரோடு ஒப்பிடுகிருயா ? என்று கேட்டவாறு அவனைக் கடுமையாக நோக்கிய வண்ணம் முன்னே சென்றேன்.
25

Page 15
"உனக்குத் தெரியாது. நான் சொல்கிறேன். எனது தகப்பனரிடம் 16 அடிமைகள் இருந்தனர். எனது பாட்டனரிடம் 8 அடிமைகள் இருந்தனர். எனது முப்பாட்டனரிடம் 4 அடிமைகள் இருந்தனர். அதற்கு முன்னரும் எனது மூதாதையர் பல அடிமைகளை வைத் திருந்தனர்.”* w
ஆனல் உண்மையில் எனது மூதாதையர்களைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது, பாட்டனரின் பாட்டனர் சில வேளைகளில் அடிமைகள் வைத்திராத சிறிய வியாபாரியாக இருந்திருக்கலாம். அல்லது அவர் ஒரு அடிமையின் மகனகவே இருந்திருக்கலாம். ஆனல் அவரைப் பற்றி நான் கற்பனை செய்யும்போது பல நூறு அடிமைகளையும், பெரிய மாளிகையையும், ஏராளமான வைப்பாட் டிகளையும் உடைய ஒரு பெரிய அதிகாரியாகவே கற்பனை செய்து வந்திருக்கிறேன்.
“எனது மூதாதையர், பெரிய அரசாங்க அதிகாரிகள்' என்று நான் பலரிடம் கூறியிருக்கின்றேன். அப்படிப்பட்ட நிலையில் "பெங்’ எனது முகத்துக்கெதிரே என்னை அடிமைப் பரம்பரை எனக் கூறி யது எனது வாழ்க்கையிலேயே நான் பட்ட பெருத்த அவமானமா கத் தெரிந்தது. இது பொறுக்க முடியாதது. இதற்கான சரியான பதிலடி கொடுக்கவேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் அவனைக் கர்ணகடூரமாக உற்று நோக்கினேன். ஆனல், அவனது உருக்குப் பிழம்பு போன்ற கண்களை எனது கண்கள் சந்தித்தபோது நான் நிலைதடுமாறினேன். அவனுக்கு நான் செலுத்தவேண்டிய நன்றிக் கடனே நினைத்தபோது அமைதியுடன் எனது இருக்கைக்குத் திரும்பினேன்.
‘ஆம் நான் அதை நம்புகிறேன். உன்னைப் போன்றவர்கள் அடிமைகள் வைத்திருக்கும் ஒரு குடும்பத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும். ஆனல், என்னைப் போன்றவர்கள் அத்தகைய குடும்பத் தில் ஒருக்காலும் பிறந்திருக்க முடியாது. அதனல் தான் நான் பெருமைப்படுகின்றேன்." அவன் மீண்டும் கொக்கரித்தான்.
உண்மைதான் என்மீது ஏற்பட்ட பொருமை அவனது மனதில் கிலேசத்தை ஏற்படுத்திவிங்டது. நான் வேறு வழியின்றிச் சிரித் தேன்.
அவனது முகத்தில் கருமை படர்ந்தது. எனது தோற்றத்தை தனது பார்வையிலிருந்து மறைக்குமாப்போல் தனது கரத்தை அவனது புருவங்களுக்கு முன்னே உயர்த்தினன்.
'எதை எண்ணிச் சிரிக்கிருய்? அடிமை வம்சத்தில் உதித்ததற் காக நான் பெருமிதம் அடைகிறேன். ஏனென்ருல் எங்களுடைய
26

இதயங்கள் பாசக்கயிற்றினல் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன, உனக்கு இவை பற்றி என்ன தெரியும்? உனது செல்வந்த அறை யின் பஞ்சணை மெத்தையில் படுத்துக் கொண்டு இனிய கற்பனைக் கனவுகளிலே மிதக்கும் உனக்கு, இந்த விஷயங்களைப் பற்றி எவ் வாறு உணரமுடியும். உன்னைப் போன்றவர்களுடைய அகக்கண் களை என்னல் திறக்கமுடியும் என்றே கருதுகிறேன். ஆம், நான் ஒரு அடிமைப்புத்திரன்தான். நான் இல்லை என்று சொல்லவில்லை, நான் இதைப் பெருமையாய் பிரகடனப் படுத்துகிறேன். எனது தந்தையும் தாயும் அடிமைகள். அதற்கு முன்பே எனது பாட்ட னும் பூட்டனும் அடிமைகள். அதற்கு முன்னலும் சென்றல் அடி மைகளாக வாழாத யாரும் எனது மூதாதையராக இருந்திருக்க முடியாது. ’’
நான், ‘பெங்கிற்கு விசர் பிடித்துவிட்டதோ என்று ஐயுற்றேன் அவன் ஏதாவது பிரச்சினையைத் துவக்கும் முன்பு அவனைத் தந்திர மாக வெளியே அனுப்பிவைக்க நினைத்தேன். ஆணுல் அவன் தொடர்ந் தான்.
*உன்னிடம் 16 அடிமைகள் உள்ளனர், உனக்குத் திருப்தி, மகிழ்ச்சி, பெருமை. ஆனல் உனது அடிமைகள் எப்படி வாழ்கின் முர்கள் என்பது உனக்குத் தெரியுமா? அவர்களில் ஒருவருடைய வரலாற்றை உன்னல் என்னிடம் கூறமுடியுமா? ஆம்! உன்னல் கூற முடியாது.”*
'அதிருக்கட்டும், நான் உனக்குச் சில கதைகளைச் சொல்லுகி றேன். எனது பாட்டனர் மிகுந்த கீழ்ப்படிவுள்ள ஒரு அடிமை. அவ ரைக்காட்டிலும் விசுவாசமுள்ள ஒரு அடிமையைப் பார்த்ததில்லை. தனது எஜமானர்களின் வீட்டில் 50 ஆண்டுகள் கடூழியம் செய்தவர். ஒரு அடிமையின் மகன் என்ற வகையில் மிகுந்த இளமையிலேயே வேலைக்குச் சேர்க்கப்பட்டார். எனக்குத்தெரிந்த காலத்திலிருந்தே அவரது தலைமயிரில் நரை விழுந்திருந்தது. நானும் எனது பெற் ருரும், எனது பாட்டனரும், எஜமானனின் வீட்டின் பின்புறம் இருந்த ஒரு உடைந்து விழும் நிலையிலிருந்த கொட்டகை ஒன்றில் குடியிருந்தோம்.
எனது தயார் வீட்டில் படுப்பதில்லை. எஜமானிக்கும், அவரது மகன்மாருக்கும் பணி செய்வதிலேயே அவரது வாழ்நாள் முழுவதும் செலவழிந்தது. எஜமானும், அவரது மகன்மாரும் எனது பாட்ட னுரை கண்டபடி பேசுவதை நான் அடிக்கடி அவதானித்திருக்கி றேன். தலை குனிந்தவண்ணம், அவற்றை அவர் தாங்கிக் கொள்வ தையும் பார்த்திருக்கிறேன். பனிக்காலத்தில், அடிக்கும் காற்றில்
27

Page 16
எங்கள் வீட்டின் கூரைப்பகுதி ஆடும். அப்போது பனிக்காற்று எங்கள் வீட்டினுள் புகுந்துவிடும். மரத்தால் செய்த கட்டிலில் ஒரு மெல்லிய போர்வையைப் போர்த்திக் கொண்டு குளிரால் நடுங்கு வோம். எனது வயது முதிர்ந்த பாட்டனரும், வாலிபரான எனது தந்தையும், குழந்தையான நானும், வீட்டில் சூடு ஏற்படுத்துவதற் காக காய்ந்த சருகுகளையும், வைக்கோல், விறகுகளையும் சேகரிக்க வெளியில் செல்வதுண்டு.
நாங்கள் அவற்றை எரித்து சூடு உண்டாக்கும் போது எனது பாட் டனரின் வாய் சிலவேளைகளில் திறக்கும். அப்போது அவர் சொல்லு
வiார், “நல்லவனுகவும், நேர்மையானவளுகவும் வாழ்! தான் எவ் பொறு தனது எஜமானனுக்குப் பணிவிடை புரிந்தேனே அதே பாணி யில், நம்பிக்கைக்குப் பாத்திரமானவனகப் பணிசெய்! நன்மை எப்பொழுதும் நல்ல பரிசுகளையே தரும் 1.*’ எனது தகப்பனர்
அதிகம் பேசமாட்டார். எனது பாட்டனர் தனது உரையை முடிக் கும்போது நெருப்பும் அணைந்துவிடும். பின்பு நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடியே குளிர்ந்த இரவில் நித்திரையில் ஆழ்ந்துவிடுவோம்.
‘நன்மை எப்பொழும் நல்ல பரிசுகளையே தரும்' என்ற எனது பாட்டனருக்கும் 'நல்ல பரிசு" விரைவிலேயே கிடைத்தது. ஒரு கோடைகாலக் காலைநேரத்தில், நாங்கள் கண்விழித்தபோது அவர் வீட்டில் இல்லை. எங்கள் தோட்டத்தில் உள்ள மரக்கிளை ஒன்றில் அவர் பிணமாகத் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவ ரது முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்கவும் எனது தாயார் என்னை அனுமதிக்கவில்லை. அவரது பூதவுடல் விரைவாக ஒரு மரப் பெட்டியில் வைக்கப்பட்டு ஒரு பாயால் மூடப்பட்டுப் புதைக்கப் பட்டது. அவரது அழுக்கேறிய பெரிய கால்களைத்தான் என்னல் பார்க்க முடிந்தது. அதுதான் எனக்குக் கிடைத்த எனது பர்ட்டன ரின் இறுதித் தரிசனம்.
அவர் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார்? ஒரு எளிய காரணம் ஒன்று கூறப்பட்டது. எஜமானர் தனது விலையுயர்ந்த பொருட்கள் சில தொலைந்துபோனதை அறிந்து எனது பாட்டனர் தான் குற்றவாளி என்று குற்றம் சாட்டினர். பாட்டனர் இக்குற் றத்தை மறுத்து தனது நாணயத்தை வெளிப்படுத்த இயலாதவ ராஞர். எனது பாட்டனர் ஒருக்காலும் தனது எஜமானிடம் திருடி யிருக்க மாட்டார்-ஆனல் இதற்காக அவரது காதுகள் புடைக்கப் பட்டு, மிகக் கொடிய வார்த்தைகளால் அவதூறு செய்யப்பட்டார். அதோடு அந்தப் பொருட்களுக்கான பெறுமதியை செலுத்துமாறு
28

கட்டளையிடப்பட்டார்; பாட்டனர் அவமானத்தால் தலைகுனிந்தார். அதுமட்டுமன்றி தனது எஜமானன் தன்னிடம் காட்டிய அன்புக்குப் பிரதியுபகாரம் செய்யமுடியாமல் போனது குறித்தும் அவரது நம்பிக்கையை இழந்து போனது குறித்தும் வருந்தினர். இது அவரை நிலைகுலையவைத்தது. அத்தோடு இத்தனை வருட அடிமை வாழ்வுப் பணியின் உழைப்பு மீதியாக அவரிடம் ஒரு செம்புக் காசுதானும் இருக்கவில்லை-அந்த இழப்பை ஈடுசெய்ய. ஆக, ஐம்பது ஆண்டுகள் அவரது நேர்மையான விசுவாசமான உழைப்புக்குப் பிரதிபலஞக‘நன்மை செய்தவர்களுக்கு நன்மையே பரிசாகக்கிடைக்கும் என்று அவர் சொல்வதுபோல’- தனது சொந்த இடைப்பட்டி (பெல்ட்) யையே தூக்குக் கயிருகப் பாவித்து மாத்தில் தனது உயிரை நீத்தார். இதுதான் அவருக்குக் கிடைத்த ‘நல்ல பரிசு.* ܐ
விட்டிலுள்ள அனைவரும் அவருக்காக இரக்கப்பட்ட போதிலும் அவர் கான் பொருட்களைக் களவாடியவர் என்றே நம்பினர்கள். ஆகவே நான் ஒரு அடிமையின் மகன் மட்டுமல்ல இப்போது ஒரு திரு டனின் பேரணுகவும் ஆகிவிட்டேன். இருந்தாலும் நான், எனது பாட்டனர் எதையும் களவெடுத்திருச்க மாட்டார் என்பதைத் திட மாக நம்பினேன். அது அவருடைய பண்பாடு அல்ல. அவர் ஒரு நல்ல மனிதர்.
பல மாலை நேரங்களில் எனது தகப்பனர் தனது க்ைகளில் என்னை வைத்துக்கொண்டு ஆட்டுவார். அன்று ஒருநாள் வேலைப்பளுவின் காரணமாகவோ என்னவோ ள்ன்னைக் கைகளில் வைத்த வண்ணமே உறங்கிவிட்டார். எனது பாட்டனரின் இனிய நினைவுகளிலே லயித்து அவரது இழப்பால் துயர்த்தில் ஆழ்ந்த எனக்கு அன்று நித்திரை வரவில்லை. அவரது இனிய முகத்தை நினைத்தபொழுது எனது கண் களில் நீர் வடிந்தது. நான் திடீரென, பாட்டனரின் கரங்களிலே இருப்பதாக எண்ணிக் கொண்டு, "தாத்தா! நான் நீ எதையாவது திருடியிருப்பாய் என்பதை நம்பமாட்டேன். வேறுயாராவது தான் திருடியிருக்க வேண்டும்” என்றேன்.
“குட்டி எருது நீ என்ன சொல்கிருய்” எனது அப்பாவின் குரல் தான் கேட்டது. எருது வருடத்தில் (சீனக் கலண்டர்) நான் பிறந்த தால் எனக்குப் பெயர் "குட்டி எருது'
நான் எனது கண்களைத் துடைத்துக்கொண்டேன். ஆனல் எனது தகப்பனர். எனது கண்ணிரைப் பார்த்துவிட்டார். நான் தாங்க முடியாது குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினேன். அவரால் நித்திரை கொள்ள முடியவில்லை. அத்தோடு அவரது கண்களும் கலங் கின. அவர் என்னைச் சமாதானப் படுத்தினுர்,
29

Page 17
"நீ சொல்வது சரிதான் மகனே, உனது பாட்டனர் எதையும் தளவெடுக்கவில்லை; எனக்குத் தெரியும், யார் உண்மையான திருடன். என்று'
"அவரது கைகளைப்பற்றிக் கொண்டு எல்லாவற்றையும் என்னி டம் சொல்லும்படி அவரைக் கெஞ்சினேன்."
"சிறிது தயங்கிவிட்டு, அப்பா கேட்டார். வேறுயாரிடமும் சொல்லமாட்டேன் என்று எனக்கு வாக்குத்தா'
நான் தலையை ஆட்டினேன். அவர் ஆத்திரத்தோடு சொல்லத்துவங்கினர். "எஜமானனின் மூத்த மகன்தான் திருடன். உனது பாட்டன ருக்கு அது தெரியும். ஒரு ஈ, காக்கைக்கும் இந்த விஷயம் தெரியக் கூடாது. உனது தாத்தா, தனது உயிரைக் கொடுத்து சின்ன எஜ மானனைக் காப்பாற்ற விரும்பினர். அதனுற்தான் நான் உண்மை யைச் சொல்லவில்லை. இப்பொழுது உனது தாத்தா இறந்து விட் டார். நான் உண்மையைச் சொன்னுலும் யாரும் என்னை நம்ப மாட்டார்கள். அத்தோடு இது எங்களுக்கு மேலும் பிரச்சினையைத் தோற்றுவிக்கும்.
பெங் கதையை இடைநிறுத்திவிட்டு மீண்டும் தொடரு முன்பு ஒரு எக்காளச் சிரிப்பை உதிர்ந்தான். 'எனக்கு எனது தந்தையார் சொன்னதன் சாராம்சத்தைத்தான் உனக்குச் சொல்லுகிறேன் நண்பா. அவர் கூறிய வார்த்தைகளை அப்படியே சொல்லவில்லை. நான் இதை எனது சொந்தக் கற்பனையில் கூறுவதாக மட்டும் எண் ணுதே. நான் முக்கியமான விஷயம் எதையும், விடவில்லை?"
நான் தலையை ஆட்டிவிட்டு கதையைத் தொடர அனுமதித்தேன். **அப்பா சொன்ன காரணத்தின் அடிப்படைக் காரணிகளை என்னல் விளங்கிக் கொள்ள முடியவில்லை, ஆனல் அவரிடம் மேல திகமாகக் கேள்விகள் எழுப்ப நான் விரும்பவில்லை. ஆனல் தாத் தாவின் இழப்புப் பற்றிய சிந்தனையில் ஆட்பட்டு நான் மீண்டும் தொடர்ந்து அழுதேன்."
தாத்தா இல்லாவிட்டாலும் என்னைப் பார்க்க எனது தந்தையும் அன்னையும் இருந்தனர். நாங்கள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்தோம். எனது பாட்டனரின் மறைவுக்குப் பின்பு எனது அப்பா எதையோ இழந்தவர்போல் காணப்பட்டார். அவரது முகத்தில் ஒரு பொழுதும் புன்சிரிப்புக்கூடத் தவழ்ந்ததில்லை,
ஒருநாள் மாலை-அப்போது பணிக்காலம் துவங்கிவிட்டதுநானும் அப்பாவும் வீட்டினுள் குளிர் காய்வதற்காக நெருப்பு மூட் டிக் கொண்டு இருந்தபோது, வீட்டிற்கு வெளியில் திடீரென்று ஒரு
30

கலவரம் ஏற்பட்டது."உதவி உதவி!! என்று யாரோ கத்தும் சத்தமும் கேட்டது. பயத்தால் எனது அப்பாவின் கழுத்தை இறுக்கிக் கட்டிப் பிடித்துக் கொண்டேன். அவர் எனது காதுக்குள் ‘நான் அப்பா உன்னேடு இருக்கிறேன் பயப்படாதே" என்ருர், பின்பு வெளியிலே அமைதி ஏற்பட்டது.
ஆனல் சிறிது நேரம் செல்லுமுன்பே என் அப்பாவை எஜமான் அழைப்பதாக யாரோ வந்து சொன்னர்கள். அப்பா நீண்டநேர மிாக வீட்டிற்குத் திரும்பாததால் நான் தனியே இருந்து பயந்து கொண்டிருந்தேன்.
பின்பு எனது தாயும் தந்தையும் ஒன்ருகத் தேம்பி அழுத வண் ணம்ஃவீட்டில் நுளைந்தனர். அப்பா விம்மி அழுதபடி தனது கரங் களால் என் கையைப் பற்றி இறுக்கிக்கொண்டார். ஏங்கிய வண்ணம் தாயோடு கதைத்துக் கொண்டிருந்தார். அன்றிரவு நாங்கள் மூவ ரும் பின்னிப் பிணைந்த வண்ணம் ஒருங்கே படுத்து உறங்கினுேம், எனது பெற்றேர் பேசிக்கொண்டதை என்னல் முழுமையாக விளங் கிக்கொள்ள முடியவில்லை. எனக்கு விளங்கியது இவ்வளவுதான். ‘என்னைவிடு நான் சாகிறேன்' நான் வாழ்வதால் என்ன பயன், நாம் எஜமானின் அடிமைகள், அவர் சொல்வதைச் செய்ய வேண் டியவர்கள். wm
‘நமக்கு மேலும் குழந்தைகள் பிறந்தால், அவர்களுக்கு அடுத்த தலைமுறையிலும் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் எல்லா ரும் எப்போதும் அடிமைகளாகவே இருப்பார்கள். அந்த விதியை யாராலும் மாற்றி எழுத முடியாது. நான் உயிர் வாழ்வதால் "குட்டி எருதும் அடிமையாகத்தான் வாழவேண்டும். நமது அடிமை 3rtiff Fras.
“அதைக் காட்டிலும் எனது எஜமானுக்கு எனது உயிரை விற் கிறேன். அதன் மூலம் "குட்டி எருது’’ பாடசாலைக்குச் செல்ல முடி யும். அதன்பின்பு அவனது சொந்தக் கால்களில் புதிய பிரவாகமாக இப்பூமித்தாயின் மண்ணில் அவன் நடக்கமுடியும்."
"பெங்'கின் கண்கள் இரத்தச் சுவாலையாக ஒளிப்பிழம்பாகின. ஒரு சிறிது அமைதிக்குப்பிறகு அவன் தொடர்ந்தான். எனது தந்தையார் தனது தியாகப் பயணத்தின் இறுதிக் கட்டத்தில் உச்ச சித்த ஒவ்வொரு வார்த்தையும் நினைவில் இருக்கின்றன. எனது வாழ்வின் கடைசி வினடிவரை நான் அதை மறக்கமாட்டேன். அவர் உச்சரித்த வார்த்தைகளின் மொழித் தாக்கத்தை, உனது மொழித் தாக்கத்துக்கு ஏற்ற வண்ணம் மாற்றிச் சொல்லுகிறேன்"
3.

Page 18
ஆணுல் அந்த வார்த்தைகளின் உணர்ச்சிப் பிரவாகத்தை உன்னல் உணர்ந்து கொள்ள, கிரகிக்க முடியுமென்று நம்புகிறேன்."
எனது தாயார் அதிகம் கதைக்கவில்லை. எனது தந்தையாரைச் கட்டிப்பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந் தார். ‘நீங்கள் இல்லாமல் நான் எப்படி உயிர் வாழப்போகிறேன்" என்ன பிழைநடந்துள்ளது என்பதை உணராவண்ணம் நானும் அழுது கொண்டிருந்தேன்.
பொலிசார் மறுநாட் காலை, எனது அப்பாவைத் தேடிக் கொண்டு வந்தபோது நாங்கள் படுக்கையில் இருந்து எழுப்பவில்லை. அம்மா அப்பாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு அழுதார். நானும் அழு தேன். முதல் நாள் மாலை யாரையோ கொன்றதாக அப்பாகுற்றம் சாட்டப்பட்டிருந்தார். நான் அதை நம்பவில்லை. அத்தக் கலவரம் நடந்தபோது அப்பா 6:ன்னுடன் நெருப்பருகே இருந்தார். அவர் என்னைக் கட்டிப்பிடித்தவாறு என்னை விட்டு அகலாது இருந்தார். அப்படி இருக்க, எப்படி வெளியே உள்ள ஒருவரை அவர் கொலை செய்திருக்க முடியும். அப்பா தன்னைப் பாதுகாக்க முயலவில்லை. தனது தலையைக் குனிந்தவாறு பொலிசாருடன் சென்ருர். அவர் பின்னல் அவரது கைகளைப் பிடிக்க நான் ஓடினேன். அம்மா ஒன்றும் பேசவில்லை. அவர்கள் என்னை அடித்து வீழ்த்திவிட்டு அப்பா வைக் கொண்டு சென்றனர்.
அதுதான் நான் அப்பாவைக் கடைசியாகப் பார்த்தது. சில மாதங்களுக்குப் பிறகு, சிறையிலே அவர் நோயினல் பீடிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்தக் காலகட்டத்தில், எனது தாயார் எஜமான னின் வீட்டில் வேலைசெய்வதை நிறுத்திவிட்டார். störr Gör t. t TL சாலைக்குச் சென்றுகொண்டிருந்தேன். எங்களுடைய செலவுகள், அனைத்தும் எஜமானரால் பாரம் எடுக்கப்பட்டிருந்தது. தனது மக னின் உயிரைக் காப்பதற்காக எனது தந்தையின் உயிரை விலக்கு வாங்கியவரல்லவா! ( எஜமானனின் மகன்தான் அந்தக் கொலை யைச் செய்தவன் என்று நான் பின்னர் கேள்விப்பட்டேன்.) ஆனல் எஜமானன் வாக்குத் தவறவில்லை. அப்படியானுல் இந்த எஜமா னனுக்கு நான் நன்றியறிதல் உள்ளவஞக இருக்க வேண்டுமா? இல்லை. எஜமானனையும், அவனது மகனையும் நான் வெறுத்தேன். அவர்கள் எனது எதிரிகள். எனது பாட்டனுரையும், தகப்பளுரை யும் கொலைசெய்த கயவர்கள். எனது அப்பாவின் உயிருக்கு விலை யாகக் கொடுத்த பணத்தை நான் செலவழித்தேன். நான் இன்று சமூகத்தில் பெற்றுள்ள அந்தஸ்த்துக்காகத்தான் அப்பா தனது இன் னுயிரை இளவயதிலேயே ஈந்தார். அந்தப் பெருமகனின் - ஒப்பில் லாத் தியாகியின் இலட்சியம் நிறைவேறிவிட்டது. என்ன வந்தா
32

தி) மகாவம்சம் பற்றி
--- ஒரு சிங்களக் கல்விமான்.
“இனவாத மோதல்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரு நட்டமும் வேதனையும் ஏற்படுகிறது. "வாசெட்ட என்ற பிராமணனுக்கும், பாரத்வாஜ என்ற பிராமணனுக் கும் இடையில் ஏற்பட்ட இனவாதத்திற்கு புத்தர் வாசெட்ட சூத்திரம் என்ற போதனையை நடத்தினர். ஆனல் இப்போதுள்ள பெளத்த பிக்குகள் இதைப் போதிப்பதில்லை. பதிலாக, துட்டகெமுனு தமிழர்களைக் கொன்று குவித்ததாகக் கூறப்படும் ஒரு கதையையே போதிக்கிருர்கள். அதனல்தான் துட்டகைமுனுவின் வீரச்செயல் என்று சொல்லும் பெளத்த வரலாற்று நூலான மகாவம்சத்தை முற்ருக எரித்துச் சாம்ப ராக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். இனவாதத்தைப் பரப்புகிறவன் ஒரு பைத்தியக்காரன். முழு மனித இனத் தினதும் பரம எதிரி.'
(இப்படிக் கூறியிருப்பவர் அண்மை பில் காலம்சென்ற கல்வி மானும் பேராசிரியருமான E. W. அதிகாரம் )
லும் சரி எங்கள் மூதாதையரின் அடிமைப் பாரம்பரியம் என்னேடு அழிந்துவிடும்.
"பெங்’ திடீரென கதையை நிறுத்தினன். அவனது முகத் தில் பயங்கரம் நிழலாடியது. உயர்த்தெழும் கோபக்கனலை அணைக்கு மாப்போல அவனது உதடுகளை அவன் கடித்தான். அவன் இன் ணும் எதையோ மறைக்கிருன் என்று நான் கருதினேன். நான், அவன் கூறிய கதையால் உணர்ச்சி மேலிட்டபோதும், “இன்னும் எத்தகைய பயங்கர ரகசியங்கள் உன்னிடம் உள்ளன" என்று கேட் குமாப் போல் அவனது முகத்தைக் கூர்ந்து நோக்கினேன்.
அவன் எனது உள்ள அலைகளைப் புரிந்திருக்கவேண்டும், ஏனென் முல் அவனது முகம் செஞ்சூரியனைப் போலப் பிரகாசித்தது. அது அவமானத்தால் ஏற்பட்ட தோற்றமா? - கோபாவேசத்தால் ஏற் பட்ட முகபாவமா? - தெரியவில்லை. எனது அறைக்குள் இரண்டு மூன்று முறை குறுக்கு நெடுக்காக நடந்த பின்பு மீண்டும் இருக்கை
33

Page 19
யில் அமர்ந்தான். அவனது முகம் மீண்டும் ஆவேசமுற்றது. **ஆம் அந்தக் கதை அத்துடன் முடியவில்லை. நான் சிலவற்றை இன்னும் சொல்லவில்லை. சரி, நான் அவற்றையும் கூறிவிடு கிறேன்".
ஒருநாள், பாடசாலையில் இருந்து வழமைக்கு சிறிது முன்பாக வீடு திரும்பினேன். எனது தாயார் கட்டிலில் வேருெரு ஆடவ னுடன் இருக்கக் காணப்பட்டார். அவர்கள் நான் வந்ததை அவ தானிக்கவில்லை. ஆகவே நான் மெதுவாக வெளியேறினேன். எனது இதயம் கோபாவேசத்தாலும் அவமானத்தாலும் வெடித்துக்கொண் டிருந்தது. நான் முழு நேரத்தையும் பள்ளியில் படிப்பதிலேயே கவ னத்துடன் செலவழிக்கிறேன். வீட்டிலே எனது தாயார் விபசாரத் தில் ஈடுபட்டிருக்கின்றர். இந்த நிலை என்னைப் புழுங்க வைத்தது" இருப்பினும் எனது தாயை எல்லையில்லாப் பாசத்துடன் நேசித்தேன். அவரை ஏச எனது மனம் ஒருப்படவில்லை. அதுமட்டுமல்ல! அம்மா வோடு உடனிருந்தவன் வேறு யாருமல்ல! எஜமானனின் மகன் தான். எனது பாட்டனரை அழித்துவிட்டு, எனது அப்பாவைக் கொன்று விட்டு எனது தாயாரையும் ஒழித்துக்கொண்டிருக்கிருன்.
**குட்டி எருது’* வருமுன்பு கெதியாக வெளியே போ' என்று எனது தாயார் கூறினர். அதற்கு எஜமானின் மகன் ஏதோ தாயா சிடம் கூறினன். அதற்கு அம்மா, "உனது இரக்கத்தின் சாட்சி யாக இங்கு தொடர்ந்து வராதே! பின்பு நீ 'குட்டி எருதை' சந்திக்கவேண்டி நேரிடும். தயவு செய்து உனது இதயத்தைத் தொட்டு நட**
நான் உள்ளே சென்றபோது, தாயார் தனிமையாகக் கட்டிலில் இருந்தார். நான் நேராக அவளிடம் சென்றேன். ‘'நீ வந்துவிட் Alitunt?”” 9ubunt Gairul DIT55 Gai IlliTi.
நான் அவருடைய கரங்களைப் பற்றினேன். கோபத்துக்கும், அedமானத்துக்கும் இடையே துலண்டவனுக, "கேவலம் அம்மா கேவலம்! அப்பா இறந்து இன்னும் ஒரு வருடம் பூர்த்தியாக வில்லை. அதற்குள்ளாக நீ வேறு மனிதர்களோடு விளையாடிக்கொண் டிருக்கிருய். நான் பள்ளியில் எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்கிறேன். அப்படியிருக்க நீ இவ்வாறு நடக்கிருய். எப்படி அம்மா! உன்னல் இப்படி நடக்க முடிகின்றது?
அம்மா அழுதவண்ணம், “குட்டி எருதே' என்றவள் அப் படியே விம்மல் தாளாமல் படுக்கையில் சாய்ந்தாள். இது எனது கல்மனதைக் கரைத்தது. அவள் என்மீது செலுத்தும் அன்பும் பரிவுணர்வும், நான் மாலை வேளைகளில் எனது வீட்டுப் பயிற்சிகளைச்
34

செய்யும்போது உடனிருந்து எனக்க வழங்கும் ஆறுதல் மொழிகளும் உற்சாக வார்த்தைகளும் என் முன்னே நிழலாடின.
"என்னை மன்னித்துவிடு அம்மா!'" நான் மன்ருடினேன்,
"நான் இவ்வாறு உனது மனம் புண்படும்படி பேசியிருக்கக் கூடாது. என்னை மன்னித்துக்கொள் அம்மா!"
சிறிது நேரம் கழித்துத் தலையைத்தூக்கி இருக்கையில் அமர்ந்து என்னை அணைத்துக் கொண்டாள்.
*நீ சொன்னது உண்மைதான் குட்டி எருது நான்தான் உன் னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். உனது அப்பா இறந்த பின்பு எனக்கு உள்ள ஒரே சொத்து நீ மட்டும்தான். நான் உனக்காக மட்டும்தான் வாழ்கிறேன். நீ மட்டும் இல்லாதிருந்தால், நான் மகிழ்ச்சியோடு உனது தந்தையின் புதைகுழியிலேயே விழுந்து உயிரை விட்டிருப்பேன். அப்பாவுடைய இறுதி வார்த்தைகளை மறந்துவிட்டாயா? நீ அடிமையாக வாழ்வதைத் தாங்கமுடியா மல், நீ படிக்கவேண்டும் புது மனிதனக பூமித் தாயின் மடிமீது தவழவேண்டும் என்று விரும்பினர். அவர் அந்த இலட்சியத்துக் காகத் தனது உயிரைத் தியாகம் செய்தார் என்ருல், நான் ஏன் எனது உயிரையும் தியாகம் செய்யக்கூடாது. எனது முற்பிறப்பில் செய்த பாவங்கள் காரணமாகவோ என்னவோ! எஜமானனின் வீட் டில் எடுபிடியாளாக வேலைசெய்த போதிருந்தே என்னைத் தொல்லைப் படுத்திக் கொண்டிருந்தான். நான் அவனிடமிருந்து தப்பமுடிய வில்லை. உனது தந்தை இறந்த பின்பு, நாங்கள் வீடு மாறி இங்கு வந்த பின்பு தொடர்ந்து என்னைத் தேடி வந்துகொண்டிருக் கிருன். வேறெங்கும் செல்வதைவிட என்னிடம் வருவது அவனுக்கு இலகுவானது. மற்றது நான் அழகான தோற்றமாயிருப்பதும் என ஏ குற்றம்தான். இன்னென்று அவனுடைய குடும்பம்தான் எங்களைப் பராமரிக்கிறது. நீ படித்துக் கொண்டிருக்கிருய். அவர்களுடைய பணம் இல்லாமல் நாங்கள் வாழ முடியாது. சின்ன எஜமான் எதை யும் செய்யத் துணிந்த கொடூர நெஞ்சன். அவனுடைய விருப்பத் துக்கு அடிபணிவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
குட்டி எருது! என்னை மன்னித்துக்கொள். நீ படித்து முன் னேறுவதும், நீ, அடிமையாக வாழவேண்டும் என்ற அவசியம் ஏற் படாமல் இருப்பதற்குமாக நான் எந்தத் திபாகத்தையும் செய் வேன்; எந்தத் துயரத்தையும் ஏற்றுக்கொள்வேன்; எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை" இதுவும் அவள் உச்சரித்த முழுமை யான சொற்பதங்கள் அல்ல. அந்த உணர்ச்சிப் பிரவாகத்தின் சாராம்சமே. அந்தத் தியாகம் செழும் சொற்களின் சிறு பகுதியே.
35

Page 20
நான் தாயாரைக் கட்டி அணைத்தேன். அவர் மீது எனக் கிருந்த அன்பு மேலும் பன்மடங்கு பெருகியது. "உன்னல் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாது அம்மா! நான் பாடசாலைக்குப் போவதை நிறுத்திக்கொள்கிறேன். இந்தக் கீழ்த்தரமான எளிய வாழ்வுக்கு உன்னை நான் அனுமதிக்கமாட்டேன். நான் படிக்க விரும்பவில்லை. அதைக்காட்டிலும் அடிமையாகவே இருந்துவிட்டுப் போகிறேன் - வாழ்நாள் முழுவதும்".
உடனே அவள் எனது வாயைத் தன் கரத்தால் பொத்தினள். “முட்டாள் தனமாகக் கதையாதே. நீ படித்து புதிய வரலாறு படைக்கவேண்டும். எனது வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இந்தக் கீழ்த்தரமான வாழ்க்கையை ஏற்றுக்கொள்வேன். அவள் கதறிஞள்.
அன்று மாலை முழுவதும் கண்ணீரும் கம்பலையுமாக என்னைத் தேற்றுவதில் ஈடுபட்டாள். இறுதியாக அம்மாவின் வேண்டு கோளுக்கு உடன்பட்டேன். அடுத்த நாட் காலை வழமை போல் பாடசாலை சென்றேன். “பாடசாலை செல்லப்போவதில்லை' என்ற கதையை நான் பின் ஒருபோதும் கூறியதில்லை. அதன் பின்பு தான் கடுமையாக கல்வியில் ஈடுபட்டேன். பாடசாலைக் கல்வியோடு எங்கும் எதிலும் நான் அறிவைப் பெருக்குவதில் ஈடுபட்டேன். அது எனது பிற்காலத்தைப் பொற்காலமாக்கும் என்று நம்பினேன். எனது பெற்ருேரின் விருப்பத்தை நிறைவேற்றி எங்களது அடிமை வாழ்வை நிர்மூலமாக்குவதில் என்னை அர்ப்பணித்தேன்.
ஆனல், கொடுமையான பிரத்யட்சநிலை என்னை மிக மோசமாக அழுத்தின. எனது இறந்தகால நிகழ்வுகள் ஒரு பிசாசுபோல் என்னை ஆக்கிரமித்தன. வாழ்க்கை மிகவும் கீழ்த்தரமானதாக இருந்தது. அ விம் எனது அடிமை வாழ்வை அகற்றும் போராட்டம் மிகக் கீழ்த்தரமானதாக விளங்கியது. இருந்தாலும் எனக்கு திடநம் பிக்கை இருந்தது. என்னை விழித்தெழச் செய்ய எனது அன்னையின் அன்பும் எதிர் பார்ப்புகளும் துணைநின்றன. அது எந்தப் பிரச்சினை யையும் எதிர்கொள்ளும் மனேதிடத்தை எனக்கு வழங்கியது.
*எனது சிறிய எஜமானன் தொடர்ந்து தாயாரிடம் வந்து சென் ற 8 உண்மைதான். ஆனல் அதை நான் பார்த்தும் பாராதிருந் தேன் அவன் சென்ற பிறகு, தாயார் ஒரு வேறுபாடான பெண்ணுகக் காட்சி அளித்தாள். அம்மா தொடர்ந்து அழுவதை நிறுத்துவதற்கு எனக்கு நீண்ட நேரம் பிடிக்கும். இது தொடர்ந்து நடந்திருந்தால் எனது தாயார் விரைவில் இறந்திருப்பார். ஆனல் அதிர்ஷ்டவசமாக நான்கு ஐந்து மாதங்களின் பின்னர் சிறிய எஜமானன் ஒரு பெண் ணைத் தனது நிரந்தர வைப்பாட்டியாக எடுத்துக்கொண்டு எனது
36

தாயாரிடம் வருவதை நிறுத்திக் கொண்டான். அதன் பின்னர் எனது தாயார் நீண்டகாலம் என்னுடன் அமைதியாகக் காலம் கழித்தார். நான் கல்லூரியில் சேரும்வரை அவர் உயிர் வாழ்ந்தார், எனது தாயார் இறந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. எனது தாயாரையோ எனது தந்தையையோ, எனது பாட்டன ரையோ ஒருநாளாவது நினைவுகூர மறந்ததில்லை. நீான் அடிக்கடி அவர்களது கீழ்த்தரமான வாழ்க்கையைப் பற்றி நினைப்பேன். ஆனல், அவமானச் சிந்தனையோடு அல்ல. தான் அவர்களுக்காக முகம் சிவந்ததும் இல்லை. எனது மூதாதையர் அடிமைகள் என்று கூறுவதில் எக்காலத்திலும் நான் பெருமை அடைந்துள்ளேன். ஆம் உண்மையான பெருமை அடைந்திருக்கின்றேன். எனது பாட்டனர் திருடன் என்ற பெயரால் பட்டைதீட்டப்பட்ட பொழுதிலும்,- அதன் பெறுபேருக தூக்கக் கயிற்றிலே மாண்ட பொழுதிலும், எனது தந்தை சிறையிலே, பழி ஒரிடமும், பாவம் ஓரிடமும் என்றவகை பிலே மடிந்த போதிலும், எனது தாயார் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் விபசாரியாக்கப்பட்ட போதிலும் அவர்கள் தங்கள் சுயசெயலாற்ற லால் பிழைவிட்டவர்கள் என்று குற்றம் சுமத்துலாயா? யாருக்கு எதிராக எந்தக் குற்றத்தை அவர்கள் செய்தார்கள்?
பெங் செயலிழந்தவன் ஆனன்.
**இத்தசையோர் மீது நீ சீறி விழுவாய் இவர்களைக் கீழ்த்தர மானவர்களாக எண்ணுவாய்! அத்தகையோரது மனேநிலையை உன் ல்ை புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் தங்கம் நிகர் தூய இதய பங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தார்கள் - உனது மக்களைப் போன்று அல்லர்.
*அவர்களைப் பற்றிய சிந்தனை என்னைப் பல இரவுகளில் நித் திரை அற்றவணுக ஆக்கியிருக்கின்றன. அவமானம் அல்ல, ஆத் திரமே என்னை முழுமையாக ஆட்கொண்டிருக்கிறது. நான் யோசிக் கிறேன் - இங்கு நான், வசதியான படுக்கையில் படுத்துறங்குகை யில் எத்தனை லட்சக் கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் தங் கள் விதியை எண்ணி, துயருற்றிருக்கின்றனர். எனது பாட்டனர் வாழ்ந்த அதே கீழ்த்தரமான வாழ்வையே இம் மக்கள் இன்றும் வாழ்கின்றனர். அதே நேரத்தில், அவர்களுடைய எஜமானர்கள், இனிய கற்பனை உலகில் வாழ்ந்துகொண்டு, அடிமைகள்மீது-வயதா னவர்கள் திருட்டுக் (சற்றம் சாட்டப்பட்டு தூக்குக்கயிற்றை நாடும் நிலையையும், இளைஞர்கள் - எஜமானர் செய்யும் அநியாயத்துக்குக் களப்பலி யிடப்படும் பலியாடுகளாக மாற்றப்படும். நிலையையும் - தாய்மாரும் பெண் குழந்தைகளும்-எஜமானரது காம உணர்ச்சி களுக்குப் பலியிடப்படுபவர்களாக - அதைப் பார்த்துக் குழந்தை கள் - அதைப் பார்த்தும் பாராமல் குழந்தையை அணைத்துக் கொண்டு இருக்கவேண்டிய நிலையில் தந்தையர் உள்ளாக்கப்படும் நிலையையும் உருவாக்கியுள்ளனர்.
நான் இத்தகைய மனித மிருகங்களைக் கோரமாகத் திட்டுகிறேன். உன்னையும் உனது வர்க்கத்தையும் ஏசுகிறேன். உங்கள் அனைவரை, யும் பரம்பரைகளே இல்லாமல் - ஒரு துரும்பும் மிஞ்சாத வகை யில் மட்டும் என்னுல் அழித்து ஒழித்துவிட முடியுமென்ருல் ஆஹா! எவ்வளவு திருப்தியடைவேன்.
37

Page 21
எனது பாட்டனரைத் தூக்குச்சாவை அரவணைக்குமளவு வேட் டையாடித் துரத்தினீர்கள். எனது தந்தையின் உயிரை விலைக்கு வாங்கினீர்கள். எனது தாயைக் கற்பழித்தீர்கள். அவர்கள் அனை வரும் இறந்து விட்டார்கள். ஆனல் நீங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். உன்னை நான் பழிவாங்க விரும்புகிறேன். அவன் எழுந்து என்னருகே விறைப்பாக வந்தான். நான் பயத் தால் திகைத்து நடுங்கினேன். நான் என்னைப் பாதுகாத்துக்கொள்ள முயன்றபோது அவன் நடந்து யன்னலருகே சென்றன். திடீரென்று வெளியே கையைக் காட்டி "இதோ பார்" என்று புகைந்தான்.
நான் அத்திசையை நோக்கினேன். அவன் வீட்டு முன்பு உள்ள கோல்ப் மைதானத்தை நோக்கிய வண்ணம் இருந்தான். ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்ட அந்த மைதானத்தில், சில வெள்ளை ஆடையணிந்த பணியாட்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந் தனர். நுழைவாயிலில், ஆபாச உடை அணிந்த ஒரு வெளிநாட் டுப் பெண்மணி நுழைவுச் சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்தாள். சோடி சோடியாக இளைஞர்களும் யுவதிகளும் கைகோர்த்து புதுப் பாணி உடையணிந்து உலவிக் கொண்டிருந்தனர்.
*எங்கள் மக்கள் உடல்தேய, எலும்புமுறிய ஆண்டாண்டு காலமாக ஓய்வின்றி ஊழியம் செய்கின்றர்கள். எங்கள் பாட்டன் மார் தூக்குப்போட்டுக் கொள்கின்றனர். எங்கள் தகப்பன்மார் சிறையிலே அழிகின்றனர். எங்கள் தாய்மாரும் சகோதரியரும் கற்பழிக்கப்படுகின்றனர். எங்கள் குழந்தைகள் அழுகின்றனர். ஆனல் உங்கள் வர்க்கத்தில் ஒருவருக்காவது மனச்சாட்சி என்று ஒன்று இருக்கிறதா."
யுகாந்தரமாக அடக்கி ஒடுக்கப்படும் ஒரு முழு வர்க்கத்தின் உரிமைக்குரலாக அவன் குரல் முழக்கமிட்டது. நான் சாட்டை யால் அடிப்படுவது போன்ற ஒரு உணர்வைப் பெற்றேன்.
திறந்த எனது கண்களின் முன்னுல் எண்ணற்ற கொடுமைச் சம்பவங்கள் நிழலாடின. என்வீட்டில் பதினறு அடிமைகள் ஊழி யம் செய்வது தெரியும். அதை முப்பத்திரண்டாக அதிகரிக்கவேண் டும் என்ற 6ானது ஆசையும் தெரியும்.
எண்கள் பதினறும் முப்பதிரண்டும் என் அகக்கண்ணில் ஒளி உமிழ்ந்தன. நான் "பெங்'கின் சிறிய எஜமானனக என்னைக் கற் பனை செய்துகொண்டேன். பெங்கின் பாட்டனைக் கொன்றது, தகப்ப னைச் சிறையிலடைத்தது, தாயைக்கற்பழித்ததுபோன்ற கொடுமைகள் என் கண்முன்னே நிழலாடின. நான் பயத்தால் ஆட்கொள்ளப்பட் டேன். இரண்டு மிருகக்கண்கள் என்னை ஊடுருவுமாப்போல் கற் பனை செய்தேன். எனது இறுதிக்காலம் வந்துவிட்டாற்போல் பயங் கரமாக ஒலமிட்டேன்.
38

*"ஸெங் உனக்கு என்ன நடந்தது! ஏன் இவ்வாறு ஒலமிடுகிருய்' அவன் பண்போடு கேட்டான்.
பேசமுடியாத நிலையில் எனது கண்களைத் துடைத்தேன். ‘என்னைப்பார்த்துப் பயப்படுகிருயா? ஸெங்! நான் உன்னைப் புண்படுத்தமாட்டேன் என்பது உனக்குத் தெரிந்திருக்க வேண் டாமா?" அவன் ஒரு அர்த்தபுஷ்டியுள்ள சிரிப்பை உதிர்த்தான்.
நான் சிறிது அமைதி அடைந்தேன். அவனது முகத்தை உற்று நோக்கினேன். அதில் பயமுறுத்தல் எதுவும் தோற்றவில்லை. அவன் முன்பு என்னைக் காப்பாற்றியதை நினைவுகூர்ந்து "பெங்! அன்று ஏன் எனது உயிரைக் காப்பாற்றினய்’ நானும் ஒரு அடிமை உரிமை யாளன். உனது எதிரி. அந்தக் காரால் அடிபட்டுச் சாக என்னை நீ ஏன் அனுமதிக்கவில்லை.
மீண்டும் ஒரு அர்த்தமான புன்முறுவல். பின்பு அவன் சொன் ன்ை “நான் நினைக்கிறேன், எனக்கு இன்னும் அடிமை மனப் பான்மை இருக்கிறது.”*
கண்களில் நீர் துளிர்க்க, நான் அமைதியாய் அவனை உற்று நோக் கினேன்.
எனக்கு அவனது கருத்து விளங்கவில்லை என்று அவன் யோசித் திருக்க வேண்டும். அவன் மீண்டும் அந்தக் கருத்தை துலாம்பரமாக விபரித்தான்.
"மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக தனது சுய இன்பத்தைத் துறத்தல்-மற்றவர்கள் வாழ்வதற்காக எந்த மன வருத்தமும்இன்றி தனது உயிரைத் தியாகம் செய்தல்" இதுதான் அடிமைகளின்
மனப்பான்மை
இந்த மனப்பான்மை எனது மூதாதையரிடமிருந்து எனது பாட் டனருக்குத் தரப்பட்டது. அவரிடமிருந்து எனது அப்பாவுக்குக் கிடைத்தது. அவரிடமிருந்து நான் அதைப்பெற்றேன். அவன் தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டினன். அங்கே ஒரு செஞ்சுவாலை உமி ழும் சிவந்த இதயம் பிரத்யட்சமாயிற்று. நான் எனது "இதயத்தைப் பார்த்தேன். எனது பிளானல் மேலணியால் அது மூடப்பட்டிருந்தது.
"நான் எப்பொழுது இந்த அடிமை மனப்பான்மையை-- அடிமை இதயத்தை-என்னிலிருந்து அகற்றப்போகிறேன்" அவனது விரக்தியுற்ற குரல் ஒலி எனது காதுகளைப் பொடிப்பொடி ஆக்கிற்று நான் எனது காதுகளைப் பொத்திக்கொண்டேன். எனக்கோ ஒரு அடிமை இதயம் கூட இல்லை. நான் பெரும்பாலும் இதயமே அற்ற வன். அதுதான் உண்மை. அவமானத்தாலும், பயத்தாலும், துய ரத்தாலும் ஆட்கொள்ளப்பட்ட நான் பிரக்ஞை இழந்தேன். “பெங்" எப்பொழுது வெளியே சென்றனே எனக்குத் தெரியாது.
39

Page 22
==কেক
பாஜின் சீனுவின் தல் சிறந்த நாவல்ாசிரியர்களில் ஒருவர். 1 904th ஆண்டில் பெரும் நிலப்பிரபுத்துவக் குடும்பம் ஒன்றில் பிறந்த இ ர் 1919ல் சீனவில் நடை பெற்ற ஏகாதிபத்திய எதிர் ப்பு, நிலப்பிரபுத் துவ எதிர் ப்பு இயக்கமான மே இயக்கத்தின் முற்போக் கான கருத்துக்களை ஏற்றுக் கொண்டு செயல்பட ஆரம் பித்தார். ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், தரகு
முதலாளித்துவம் என்பவற்
றுக்கு எதிரான சீனப்புரட் சியின் நடைமுறைகளுக்கும் வெற்றிக்குமான இலக்கியப் பங்களிப்பை வழங்கிய பா ஜின் வயது முதிர்ச்சியுற்ற போதும் உறுதியாக இன் றும் இலக்கியப் பணியாற்றி வருகிருர். அவர் சீன மக் கள் காங்கிரசின் உதவித்
தலைவராகவும், அகில சீன
இலக்கிய சம்மேளனத்தின் தலைவராகவும் தற்போது
இருந்து வருகிருர். அல் ர் எழுதிய. சிறுகதைகளில் ஒன்றே "ஒரு அடிமையின்
இதயம்" என்ற புகழ்மிக்க இக் கதையாகும்.
- ஆர்-குழு.
அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு அவனே நான் அதிகம் சந்திக்கவில்லை. நாளாக நாளாக அவன் ஒரு தனி த்துவமான மனிதன் ஆஞன், வி%ளயாட்டு மைதானத்திலே நகரிலோ அவனைக் காணமுடி! வில்லை. அவனது அறையிலும்
அவனைச் சந்திக்க முடியவில்லை. எங்களிடையே தொடர்பற்று போன பிறகு, அவனது கதை
யையே நான் மறந்துவிட்டேன்.
எனக்கென்று தனியான நண் பர்களும் தனியான களியாட்டங்" களும் அமைந்தன. திரைப்படங்க ளுக்கும்,நடனங்களுக்கும் சென்று வரலானேன். உனதுதோழியோடு கோல்ப் விளையாடச் சென்று த் தேன். எனது நன்பர்களோடு பேசும் போக எனது பதினறு அடிமை ஊழியம் பற்றிப் பெரு மிதப்படுவேன். அதை அதிகரிக்க
இருப்பதாகவும் கூறிக்கொள் வேன்.
எனது மேற்படிப்பை முடித்த
சில ஆண்டுகளில், எனது இலட்சி
சியத்தை அடைந்தேன். இப் போது எனது வீட்டில் 32 அடிமை கள் ஊழியம் செய்கின்றனர். மகிழ்ச்சியும், திருப்தியும் எனது மனதில் ஏற்படுத்திய நிறைவால் ‘‘பெங்' கையும் அவன் அடிமை களைப்பற்றிக் கூறிய கதையையும்
து முற்ருக மறந்தேன்.
ஒரு நாள் எனது மனைவியுடன், ஐந்து அடிமைகள் பணிசெய்ய, எனது பூங்காவின் குளுமையை அனுபவித்துக் கொண்டிருந்தேன். அன்றைய நாளிதழின் பங்கங்களைப் புரட்டியபோது, உள்ளூர் செய் திப்பகுதியில், ஒரு புரட்சி வாதிதூக்கிலிடப்பட்ட விபரம் வெளி யிடப்பட்டிருந்தது. அவனது பெயர் "பெங்’ எனக்குத் தெரியும் அது எனது நண்பன்."பெங்’ காகத்தான் இருக்கமுடியும்-என்னைக் காப்பாற்றியவனும், என்னல் முழுதாக மறக்கப்பட்டவனுமாகிய அதே ‘பெங்'தான்.
40

வானமே
நீ JI (95T6t).....
விடக்கும் எரிகிறது! கிழக்கும் எரிகிறது!
வானமே! நீ அழுதால் நீர் நிறையும் நெருப் பழியும்.
அவன் கூறிய அந்தக் கதை - நீண்ட வருடங்களாக நான் மறந்துவிட்ட கதை-எனது மனக் கண் முன்னே புனர்ஜென்மம் எடுத்து நிழலாடியது. அவன் கூறிய அவனது அடிமை இத யத்தை இப்பொழுது ‘பெங்' தன்னில் இருந்து நிரந்தர அகற்றி விட்டான். அவ னது அடிமைச் சந்ததி நிரந் தரமாக முடிவடைந்து விட்டது. ஆம்! இது ‘பெங்குக்கு மகிழ்ச் சியைத் தரும் விஷயம் தான். ஆனல் அவன் எனக உயிரைக் காப்பாற்றியதை நினைவு கூர்ந்த பொழுது அவனுக்குச் செலுத்த
வேண்டிய நன்றிக் கடப்பாட்டை
நினைவுக்குக் கொண்டுவந்தேன். மீண்டும் அந்தச் செய்தியைப் படித்த போது இருமுறை பெரு மூச்சு விட்டேன்.
'அன்பே ஏன் திடீரென்று பெரு மூச்சு விடுகிறீர்கள்!" எனது மனைவி அன்புடன் என்னை செல் லமாகத் தட்டி வினவினுள்.
எனது மனைவியின் அழகிய முக
மும், அகன்ற கண்களும் மோகத் தில் மிதக்க நான் மீண்டும் எல் லாவற்றையும் மறந்தேன்.
女 1931
8 மலையமான்
வீண் பயமோ? விண்ணுக்கும் இழிவாக உன் மடியில் இரக்கமற்ற இஸ்ரேலியனும் தவழ்வு தால்
தாமதமோ? (கடில்கள் எரியும் கோடிகள் அதிர - உன் இளைய மைந்தர்கள் நாளும் மடிகிருர்கள் டயரோடு எரிக்கிருர்கள், பலியாகும் மைந்தர்கள் முகிலாக நின் மடியில் இரக்கமில்லை! ஈரமில்லை! நின் பேர் விழிக்கு.
நின் இடி ஒய்ந்தது பீரங்கி இடிக்கும் திராவிடர் நாளாய் வெண்காயம் செழித்ததிலே புண்காயம் மலிந்து ' தீவிரம் அடைகிறது.
தப்பியவர் ஒழிப்பதுவும். ஒழித்தவரைப் பிடிப்பதுவும் ‘பூசாவில் வாடுவதும் புனர் ஜென்மம் எடுக்கிறது.
வட கிழக்கு மூலைகளில் வாழ்வு மடிகிறது வையம் புரிகிறது நீயோ மறுக்கின்ருய் நின் பேர் விழி நீர் சிந்த,
வானமே! நீர் மறுத்தால் மண்ணின் வகை அறியும் வாழும் நிலை தெரியும்.
暑
4.

Page 23
இ9 மாநகர்: அற்புதங்கள்
-8 மணி
விண்டில் மாடுகள் நடந்த தடத்தில் சூறைக் காற்றென வாகனம் விரையும்." விரலைச் சொடுக்கி ஓசை எழுமுன் விண்ணை நோக்கிக் கோபுரம் உயரும். பொழியும் ஒளியில் இரவு அமிழும். கோடை வெய்யிலுள் வீடு குளிர்ந்து கற்சுவர் நடுவே தென்றல் வீசும். அற்புதம் இன்னும்ஓங்கி உயர்ந்த கொங்கீறீற் வனத்துள் மின்மலர் விரிந்து பிளாஸ்ற்றிக் கணியும், மாநகர் கணமும் உருவம் மாறும். அற்புதம் இன்னும் பெரியன உண்டுகாணும் பொறிகள், காட்டும் பொறிகள், பேசும் பொறிகள், கேட்கும் பொறிகள், நடக்கும் பொறிகள், சுமக்கும் பொறிகள், கொடுக்கும் பொறிகள், பறிக்கும் பொறிகள், பணிக்கும் பொறிகள், பணியும் பொறிகள், இயக்கும் பொறிகள், இயங்கும் பொறிகள், ஆளும் பொறிகள், அடிமைப் பொறிகள்புணர்தல் செய்து பொறிகளை ஈன்று உறங்கி விழித்து இயங்கி ஒழியும். மானுடம் இழந்த பொறிகளின் உலகம் நேற்றின் அற்புதம். நாளைய அற்புதம் அதனிற் பெரிது.
பாண்டியன் ஆண்ட பழைய மதுரையில் நரிகள் பரிகள் ஆயின ஒருநாள் மறுநாள் வேருெரு அற்புதம் நிகழ்ந்தது
பொறிகளினின்று மானிடர் எழுவர்.
42

திரைப்பட விமர்சனம்
மகேந்திரனின்
G பூட்டாத பூட்டுக்கள் 99
ஐ சசி கிருஷ்ணமூர்த்தி
நிவீன விஞ்ஞானத்தின் வெளிப்பாடுகளுள் ஒன்றன திரைப் படம், மரபுரீதியான பல்வேறு கலைகளின் கூறுகளையும் உள்ளடக்கிய புதியதொரு கலைவடிவமாகும். இக் கலாவெளிப்பாட்டுச் சாதனம் சர்வதே ச ரீதியில் பல்வேறு பரிணமங்களைக் கண்டுவிட்ட நிலையில், தமிழில் வெறும் பொழுதுபோக்குச் சாதனமாக, கலாம் சங்கங்களில் எந்தவிதப் பரிசோதனைக்குமுட்படாத விதத்திலேயே கையாளப்பட்டுவந்துள்ளது. போலித்தனமான ஒழுக்க நெறிகளும். யதார்த்தத்திற்குப் புறம்பான வாழ்வியலும், வக்கரித் கப்போன பாலுணர்வும், இடைக்கிடை கற்பனவாத சீர்திருத்தங்களுமே இக் கலைமூலம் வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளன. (புறநடையு முண்டு. மிகக்குறைவே) இங்கே திரைப்படமென்பது முக்கியமாக பார்வைக் கான ஊடகம் என்பது கவனத்திலெடுக்கப்படாது, தாடகத்தின் பிறிதொருவடிவம் என்ற முறையிலேயே கையாளப்பட்டு வந்தது. அண்மைக்காலமாக இந்நிலையில் சிறிது மாற்றமேற்பட்டு வந்துள் ளது. இக்கலையை வெறும் வியாபாரக் கண்ணுேட்டத்திலன்றி ஒரு கலைவெளிப்பாட்டுச் சாதனமாகப் பார்த்த இளந் தலைமுறை யினர் சிலர் அதுபற்றிய சரியான அறிவோடும், முறையான பயிற்சியோடும் திரைப்படக்கலையைக் கையாளத் தொடங்கினர். இவர்கள் தமது படைப்புத்திறனில் சர்வதேச தரத்தை எட்ட வில்லையாயினும் நம்பிக்கையூட்டுபவர்களாக உள்ளனர். இவர்கள் மிகச்சிலரேயாயினும் இவர்களது பாதிப்பு முக்கியமானது. தமிழ்த் திரைப்படத்துறையில் இவ்வாருண பாதிப்பைச் செலுத்தி வருபவர் களுள் மகேந்திரன் என்ற நெறியாளரும் ஒருவர். மக்களை இலகு வில் எட்டமுடியாத முழுக்கலைப்படங்களாகவுமல்லாமல், வியாபாரத் தனமான "மசாலா" ப்படங்களாகவுமல்லாமல்-ஆஞல் - உயர்ந்த ரசனைமட்டத்தை நோக்கி இட்டுச்செல்லக்கூடிய இடைப்பட்ட சினிமா போக்கில் நம்பிக்கை கொண்டவரான மகேந்திரனின் “முள்ளும் மலரும்', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘உதிரிப் பூக்கள்", “மெட்டி’, ‘நண்டு’, ‘பூட்டாத பூட்டுக்கள் தமிழில் வித் தியாசமான திரைப்படங்களாகும். குறிப்பாக ‘உதிரிப் பூக்கள்", "பூட்டாத பூட்டுக்கள்" இரண்டும் தமிழ்ப்பட வரலாற்றில் முக்கிய மான நிகழ்வுகளாகும். V
43

Page 24
“பூட்டாத பூட்டுக்க'ளில், திருமணமாகிய பெண்ணுெருத்தி நீண்டகாலமாக பிள்ளையொன்று இல்லாததையிட்டு ஏமாற்றமடை கின்ருள். குழந்தைக்காக ஏங்கித்தவிக்கும் அவள், அக்கிராமத்துக்கு தொழில் நிமித்தம் வரும் ஒருவன் தன்மேல் காட்டும் அன்பில் மயங்கிவிடுகிருள். இருவருக்குமிடையே ஏற்படும் உறவு பற்றி ஊருக் கும் கணவனுக்கும் தெரியவருகின்றது. கணவனுடன் இதுசம்பந்த மாக சச்சரவிடும் அவள் கடைசியில் காதலனேடு வாழுவதற்காக அவனைத் தேடிப் போகிருள். அவனே அவளை ஏற்றுக்கொள்ளாமல் தனது போலியுறவை வெளிப்படுத்துகிருன். ஏமாற்றமடையும் அவள் பிறிதொரு கிராமத்தில் கூலிவேலை செய்து பிழைக்கிருள். கணவன் இவளைத் தேடியலைகிருன். சிறிதுகாலத்தின்பின் அவளைச் சந்திக்கும் முதியவரொருவர் அவளைக் கணவனிடம் சேர்க்கின்ருர். அவள் வீட்டை விட்டு வெளியேறியதற்கு அவளது காதலன் கார ணமல்லவென நினைக்கும் கணவன், தனது மனைவிக்குப் புத்திமதி கூறி தன்னுடன் சந்தோசமாக வாழும்படி கேட்டுக்கொள்ளுமாறு அவனை வற்புறுத்துகிருரன். அவனும் அவர்களது வீட்டுக்கு வந்து ஒழுக்கம்பற்றி அறிவுரை கூறுகிருன். அவனின் போலித்தனத்தை யிட்டு ஆத்திரமுறும் அவள் அவன்மீது அழுக்குத் தண்ணீரையூற்றி விளக்குமாற்ருல் அடித்து விரட்டுகின்ருள். பஞ்சாயத்து அவள் ஊரைவிட்டுப் போனதுபற்றி விசாரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றது. அது தனது குடும்பப் பிரச்சனை என்று கூறும் கணவன் பஞ்சாயத்துக்குக் கட்டுப்படாமல் அவளோடு ஊரைவிட் டுப் போகின்றன்.
இங்கே, நடைமுறை வாழ்வோடு ஒட்டியதாகவும், தர்க்கரீதி பிலான முறையிலும் கதை வளர்த்துச் செல்லப்படுகின்றது. சமூக உளவியல் தன்மைகள் இயல்பாக வெளிப்படுத்தப்படுகின்றன. இவை கவனத்திலெடுக்கப்படுகின்ற தமிழ்த் திரைப்படங்கள் மிகச்சிலவே. அதுமாத்திரமன்றி, கணவனின் ஆண்மையற்ற தன்மையில் அதிருப் தியறும் மனைவி தனக்குப் பிடித்தவனுடன் (கணவனேடு வாழ்ந்து .ே ருெருவனேடு சோரம் போகாமல் ) போகத் துணிவதும், தான் விரும்பிய ஒருவன், தன்னுடன் வெறும் இச்சைக்காக உறவுகொண் டதைக் கண்டு அவனை அவமானப் படுத்துவதும், வேருெ?ருவனுடன் போக முற்பட்டதற்காக மனைவியை ஒதுக்கிவிடாமல் கணவன் அவளை ஏற்றுக்கொள்வதும், அதற்கெதிரான சமூகத்தடைகளுக் கெதிராகப் போரிடத் துணிவதும், வேறு தமிழ்ப் படங்களில் காண முடியாத வித்தியாசமான அம்சங்கள். சாதாரணமாகத் தமிழ்ப் படங்களில் பெண் கொச்சைப்படுத்தப்படுவதற்குப்பதிலாக இங்சே அனுதாபத்துடன் அணுகப்படுகின்ருள். கிராமிய வாழ்வின் இறுகிப் போன குடும்ப உறவில் இயல்பாகவிருக்கும் பெண்ணடிமைத்தனத் திலிருந்து அவள் தன்னளவில் மீறுவதும், பஞ்சாயத்தினருக்
44

இ9 அமெரிக்காவில் நிறவெறி.
ஆபிரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டுவரப் பட்ட கறுப்பு நிறமக்கள் பலநூற்ருண்டுகளாக பண்ணைகளிலும், தொழிற்சாலைகளிலும் மிருகங்களாக நடத் தப்பட்டனர். அக்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் காலத்துக்காலம் ஆங்காங்கு நடைபெற்று வந்துள்ளன. 1955ம் ஆண்டு அலாபாமா மாநிலத்தில், மொன்கொமரி என்னும் இடத்தில் பஸ்ஸில் சென்ற ஒரு கறுப்பு அமெரிக்கப் பெண் ஒரு வெள்ளையருக்கு தனது இருப்பிடத்தை எழுந்து கொடுக்க மறுத்தமைக்காக கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் களது போராட்டம் வலுவடைந்தது. இப்போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய கலாநிதி மாட்டின்லூதர் கிங் ஒரு வெள்ளை நிறவெறியனல் 1968ம் ஆண்டு சுட்டுக் கொலைசெய் யப்பட்டார். அமெரிக்க மக்கள் தொகையில் 12 வீதத்தின
ரான 2 கோடி 85 லட்சம் கறுப்பின மக்களுள் மூன்றிலொரு பகுதியினர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். கடந்த
ஆண்டு வேலையற்றேர் புள்ளிவிபரத்திலும் வெள்ளையர்கள் 59 வீதமாக இருக்கும்போது கறுப்பர்கள் 15 வீதம் வேலையற்றிருந் தனர். கடந்த வருடம் பிலடெல்பியாவில் வெள்ளையர்கள் வாழும் அயற்பகுதியில் குடியிருக்கச் சென்றமைக்காக கறுப் பின மக்களின் வீடு கொழுத்தி எரிக்கப்பட்டது. um
குக் கட்டுப்படாது போவதன் மூலமும், பாரம்பரிய நடைமுறையை மீறுவதும் முக்கியமான அம்சங்கள். கதையைப் பொறுத்தவரை சிற்சில குறைபாடுகள் இருப்பினும், சமூக யதார்த்தங்கள் ஒரளவு கவனத்திலெடுக்கப்பட்டு, அவற்றை ஏதோ ஒரு வகையில் விமர் சனத்துக்கு உட்படுத்துவதன் மூலம் சமூக நோக்கை வெளிப்படுத்து கின்ற தன்மை நம்மை இதன்பால் அதிக அக்கறைகொள்ள வைக் கின்றது.
நடிப்பைப் பொறுத்தவரை, மேடை நாடகப் பாதிப்பிலிருந்து இன்னும் தமிழ்ப்படவுலகம் முற்ருக விலகவில்லையென்றே கூறவேண் டும். இதற்கு விதிவிலக்கு மிகச் சிலவே. இவ்வரிசையில் சேரும் "பூட்டாத பூட்டுக்க'ளில் நடிகர்கள் பாத்திரங்களின் தன்மைகளைப் புரிந்துகொண்டு, மிகவும் இயல்பாக உணர்வுகளை வெளிப்படுத்து கின்றனர். கணவனுக நடிக்கும் ஜெயன், மனைவியாக நடிக்கும் சாருலதா ஆகியோர் தமிழ்த் திரைப்படத் துறையில் பிரபல்யம் பெருதவர்களாக இருந்த போதிலும் அவர்களது நடிப்பு வியப்பைத் தருகிறது. குறிப்பாக கடைசிக் காட்சியில் சாருலதா மெளனத்தின் மூலம் தனது அகவய உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கு மனதைத் தொடுகிறது.
45

Page 25
திரைப்படங்களில் குறியீடு ஒரு முக்கியமான அம்சம். சொல் வரும் விடயங்களை கலைத்துவமாக வெளியிடுவதற்கு இக் குறியீடுக பயன்படுகின்றன. ஆனல் தமிழ்ப்படங்களில் குறியீடுகள் தேை யற்ற விதத்திலும், ஆழமான அர்த்தத்தை வெளிப்படுத்தாத முல யிலுமே பயன்படுத்தப்படுகின்றன. இப்படத்தில் குறியீடுகள் ஓரள செவ்வையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வேறு ஒ வன் மேல் சபலங்கொண்டு கணவனை விட்டுப்போன மனைவி திரு பவும் கணவனிடம் வந்து வீட்டுக்குள் வரத் தயங்கி நின்றபோ அவளது முதுகில் கிடக்கும் கஞ்சல் ஒன்றை மெதுவாக கணவ தட்டிவிடுவது மிகவும் ஆழமான அர்த்தத்தைக் கொடுக்கிறது.
திரைப்படம் பார்வைக்கான ஒரு ஊடகமாக விருப்பதால் If சிப்படுத்தல்-ஒளிப்பதிவு முக்கியம் பெறுகிறது. பெரும்பாலா தமிழ்ப்படத்தில் இவ்விடயம் கவனத்திலெடுக்கப்படுவதில்லை. இ படத்தில் ஒளிப்பதிவாளர் அசோக்குமார் (தமிழ்த் திரையுலகி விரல் விட்டெண்ணக்கூடிய மிகச்சில சிறந்த ஒளிப்பதிவாளர்களு இவரும் ஒருவர்.) பாத்திரங்களின் உணர்வு வெளிப்பாட்டையுப் சூழலையும் உயிரோட்டமாக, அழகியல் அம்சங்கள் (3560)apangul-ITLD காட்சிப்படுத்துகின்ருர்,
கருத்துக்களை அல்லது சமூக நடப்பியல்புகளை இலகுவாக பார்ை யாளரிடம் மனங்கொள்ளவைக்கவும், அழகியல் சார்ந்தவிடயங்கஜ நுணுக்கமாக வெளியிடவும் திரைப்படம் மிக முக்கியமானதொ சாதனம். இதனல் எந்தக் கலையையும்விட அது மக்களை இலகுவ ஈர்க்கின்றது. எனினும் இன்றைய வியாபாரச் சூழலில், இது வெறு வியாபார பரிவர்த்தனைப் பண்டமாகவே அவர்களை எட்டுகின்றது இதனுல் ஒரு சிறந்த கலைவடிவமான இது உரிய விழுமியங்கஜா இழந்: போலியானதொன்றகவே மக்களை எட்டுகின்றது. இவையே ஆதி கம்செலுத்துகின்ற கலையாகவும் இருக்கின்றன. வாழ்வின் உண்மை தன்மைகளை, உணர்வுகளை, பிரச்சினைகளை கலைக்கேயுரிய விதங்களி வெளிப்படுத்துகின்ற நல்ல படைப்புக்கள் பரந்துபட்ட மக்களை சென்றடையாமல், ஒரு சிறுவட்டத்தையே சென்றடைகின்றன வர்த்தகரீதியிலான படைப்புக்களே மக்கள்மீது திணிக்கப்படுகின் அமைப்பு முறைகளால், அவர்கள் நல்ல படைப்புக்களை இனங்கண் கொள்ளவும் அனுபவிக்கவும் முடியாதுள்ளது. இந்தப் போக்ை மாற்றுவதில் கலை இலக்கியங்களில் அக்கறைகொண்ட அமைப்புக்கள் முக்கிய பங்காற்ற முடியும். கலைத்தரமுள்ள திரைப்படங்களை ம களுக்கு அறிமுகம் செய்து வைப்பதன் மூலமும், திரைப்படம் பற்றிய அறிவுச்சூழலை விஸ்தரிக்கின்ற முயற்சிகளை எடுப்பதன் மூலமும் ஆரோக்கியமான திரைப்பட ரசனையை வளர்க்க (Մ)ւգսյւն.
集6 A.

ல்
b
() எழுக யாழ்ப்பாணமே!
8 செண்பகன்
*டுவிட்டுக் கூடுபாய்ந்து குடாநாட்டில் கொலுவிருக்கும்
ஏழு முகங்களுடை ஆயிரந்தலைவாங்கி, அபூர்வ சிந்தாமணி. அந்தக் காவல் முனியின் வேள்விக்காய்க் காத்திருக்கும். எமது யாழ்ப்பாணமே!
ஆனையிறவானும் ஆற்றின் விளிம்பின் அருகுடையானும் கீரிமலையானும்
ஊர்காவல் பருத்தித்
துறையிலானும் பலாலியானும்
நாவற்குளியானுமென.
அந்த அட்டதிக்குப் பாலகரின் கடாட்சத்துக்காய் காத்திருக்கும். எமது யாழ்ப்பாணமே!
*"கட்டுங்கள் உடனே" கட்டளையிட்ட "அன்புக் கடிமை" யின் ஆசையினலன்று முத்த வெளியில் முறிந்த ஒன்பது தூண்களும் நிமிர்ந்து ஒல்லாந்தர் கோட்டையின் தூக்குமரத் தூண்களின் வரவுக்காய் காத்து நிற்கும். − எமது யாழ்ப்பாணமே
Ο Ο ஒன்பது ஆண்டுகள் முன்னே துலங்கிய யாழ் நகர் கண் முன்னே யுதிக்கும். முத்த வெளியிலும் பண்ணைக் கரையிலும் காத்துச் சுகமாய் வீசிச் செல்லும்.
கோட்டையில் அந்நியர் நூதனம் பார்க்கும். தூக்கு மேடை யொன் றிருந்தது கண்டு அதிசயித்துக் கண்கள் அகலத் திறக்கும். தினகரன் விழாவின் வாண வேடிக்கைகள் வானத் திக்கெங்கும் வர்ணம் காட்டும். கள்ளக்கறுவல் கடைசியாய் எழுந்து சவாரியில் முன்னே பாய்ந்து முந்தும்.
47

Page 26
-8
யாழ் பொறித்த மாநகர் மண்டபத்தில் முத்தமிழ்க் கலைகளும் முனைப்பாய் நடக்கும்; நூலகத்தில் மாணவர்கள் நுளைந் தாங்கிருந்து வித்தைகள் கற்று வினைகள் நிகழ்த்துவர்.
திறந்த வெளியரங்கும் வீரசிங்கம் மண்டபமும் இறுதியாய் றிம்மரும் ரீகல் படமாளிகையும்.
முனியப்பர் கோயிலின் முன்னே வெளியிலும் முத்த வெளிமுழுதும் கடற்கரை மணலிலும் ஊர்வலங்கள், கூட்டங்கள், மேதினத்து நிகழ்வுகள் நெஞ்சில் கனத்து நினைவுகள் நெருடும்-6ாமது யாழ்ப்பாணமே!
О о
ரிேமலையில் மீண்டும் அந்தியேட்டி நாளை நடக்கும் நிச்சயமாய். சன்னதியில் காவடிகள், கரகங்கள் ஆடும்: நயினைபில் பக்தர்கள் தேரை இழுப்பர் விகாரையைத் தொழுவர்; பாலைதீவு, கச்சதீவு ஆண்டவரைத் தரிசிக்க வள்ளங்கள், படகுகள் கடலைக் கிழிக்கும்.
கதிர்காமக் கந்தனைக் காண்பதற்காயங்கே மாணிக்க கங்கையில் குளிப்பதற்காயங்கே மீண்டும், மீண்டும் ஆயிரமாயிரமாய் ஊரெல்லாம் கூடும்; நெடும்பயணந் தொடங்கும்.
சிவஞெளிபாத உச்சியில் நின்று உதய சூரியனைக் காண்போம்; விரைவோம்.
சுடுகாடும், நெருப்பும், வெள்ளமும், புயலும் ஒருபோதும் மக்களைத் தடுத்திடமாட்டா; நேராய் நெடும்பயணப் போரிலே நாம் நடப்போம்.
எழுக யாழ்ப்பாணமே!
எழுக, எழுகவே!
----- *-బజా"

* சிறுகதை
mam- .
“ராசாத்தி நான் பாண் வாங்கிக்கொண்டு கொஞ்ச நேரத்துக்குள்ள வாறன்’
"பிள்ளையளப்படுக்கப் போட் uqurrgj’’
கூறிவிட்டு குமார் தான் கொண்டு வந்த பத்து ரூபாயுடன் பஸ் த ரிப்பு நிலையத்திலுள்ள கடைக்குச் சென்றன்.
அவளின் பெயர் சரசுவதி. ஆனல் கலியாணம் செய்த நாள் தொட்டு அவளை செல்லமாக ராசாத்தி என்றே அழைப்பான். இந்த ஏழுவருட காலத்துக்குள் அவன் அடித்ததோ, பேசியதோ கிடையாது. அவ்வளவு இனிமை யாக கழிந்தது அவர்களது குடும்ப வாழ்க்கை. மாநகரில் சொந்த வியாபாாம் செய்து கொண்டு காலம்கடத்திய குமார் கஸ்டம் என்பதே தெரியாமல் தனது அருமை மனைவியையும் அன்பு மக்கள் இருவரையும் வளர்த்துக் கொண்டுவந்தான்.
திடீரென கிளம்பிய கலவரம் அவனை ஏழையாக்கி அக் கிரா மத்திற்க அடித்துச் சென்று விட்டது. அவன் தீயவர்களால் தீயிடப்பட்ட கடையை திருத்தி,
காப்புறு ப்ெ பணம் மூலம் மீண். டும் விப" பாரம் தொடங்கத் தீர்
tbfaಣಿ * rar
காற்றேடு காற்றக.
sumo 8 செ. தமிழாசன்
ஆனல் சரசோ அதற்கு அனுமதிக்கவில்லை.
"இஞ்சாருங்கே என்ர தாலி நிலைக்கோணும் நம்மட பொம் புளப் புள்ளையஸ் மானம் மரியா தையா வாழனும்??
“அதுதான் சொல்றன். நாம இஞ்சருந்து எங்கண்டான நிம்மதியான ஊருக்கு போயிடு வம் அத்தான்"
அந்த உத்தமியின் வார்த்தை கள் அந்த நேரத்தில் அவனுக்கு உசிதமாகவே தென்பட்டன. இல்லாவிட்டால் எவரையுமே முன்னறியாத அக்கிராமத்திற்கு அவன் வந்திருப்பான
ஆனல் மாநகரில் செய்த வியாபாரத்தை அவனுல் அங்கு செய்ய முடியவில்லை. அனேக மாணவர்கள் வறுமைக்கோட்டின் கீழ்வாழும் விவசாயிகள்.
அந்தப் பழைய சிறுகுடிசை யுடனை காணியை வாங்கவே அவனிடம் இருந்த முதல் அள வாக இருந்தது. அக் கிராமத் தின் கொடிய நோயான வறு மைக்கு அவர்களும் விலக்காக வில்லை. தன் பால்மணம் மாருக் குழந்தைகள் பசியால் தவிப்பதை urri isë சகிக்காத அவன் பழகாத, தெரியாத வேலைகளுக் கெல்லாம் சென்றன். அவன்
49

Page 27
சம்பாத்தியத்தினுல் அந்தப் பிஞ்சுகளின் அரை, கால் வயிறு கள் நிரம்பின.
தனது குடும்பநிலை என்று
மாறுமோஎன்று அவன் ஏங்காத நாளில்லை. ஆளுனல் சரசோ நிம்
மதிப் பெருமூச்சு விட்டாள். கஞ்சிய்ைக் குடித்தாவது நிம்மதி
யாக, பாதுகாப்பாக இருந்ததுவே அவளுக்கு போதுமானதாயிருந் தது. கட்டிய கணவனையும், கண் னிறைந்த மக்களையும் விட அவ ளுக்கு மற்றென்றும் பெரிதாக தெரியவில்லை.
நகரில் அவன் வாழ்ந்த கால
த்தில் கொஞ்சமே உழைத்தாலும் அந்தக் குஞ்சு களி ன் வா யி ல்
ஹோர்லிக்ஸ், கொக்கோ, சொக்
கா, சோடா என்று குறைவில் லாமல் ஊட்டிக் கொண்டே இருந்தான். அப்படிப்பட்ட அந் தக் குழந்தைகளுக்கு இன்று கஞ் சியை விட மிஞ்சி ஒன்றும் கிடைப்பதில்லை. துள்ளிக்குதித் தோடிய குழந்தைகள் துவண்டு படுக்கத் தொடங்கினர். *
ஏழைகள் வாழ்வதை இயற் கையும்வெறுக்கின்றது போலும். இல்லையேல் பருவ மழை தன் பலத்தைக் காட்டி அவன் வாழ் த் தி அக் கிராமத்தையே பாழா க்கவேண்டுமா?
அடைமழை, வெள்ளம் அவன் செய்த வேலையையும் அடித்துச் சென்றது.
பசி, பட்டினி என்ற பயிற்சி யில் அந்தப் பச்சிளம் குழந்தை
களும் பங்கெடுக்கத் தொடங் ଶିଜor.
50
கேட்கமுடியவில்லை.
அன்று முழுவதும் அந்த நால்வருக்கும் ஆகாரம் எதுவு மில்லை. "பசிக்குதம்மா" என்று குழந்தைகள் அழும்போதெல் லாம் பச்சைத்தண்ணிரை மட் டுமே அவளால் கொடுக்க முடிந் ტნჭნl •
'பசிக்குதம்மா. பாணுவது வாங்கித்தாங்கம்மா" ·
மீண்டும் அதே குரல். பிஞ்சு கள் கெஞ்சுவதை அவளால் எங்கோ சென்று பத்து ரூபாய் கடன் வாங்கிவந்தாள்,
. . O
மணி பத்துக்கு மேலிருக்கும். ‘ஏழு மணிக்குப் பாண் வாங்கப்போனரே இ ன் ன ம் காணல்லையே" க ன வ னின் வருகைக்காக காத்திருந்த சரசு தனக்குள்ளே முணு முணுத்துக் கொண்டாள்.
வழமையான குண்டுச் சத் தங்களுடன் மாரித்தவளைகளின் சத்தமும் கலந்து கொண்டது.
அந்தக் குடிசைக்கு ஒளியூட் டிக்கொண்டிருந்த அந்தக் குப்பி விளக்கும் , எண்ணெயில்லாமல் அணைந்துவிடும்போல் இருந்தது. மழையால் வீடு முழுவதும் ஒழு கிப்போய் இருந்தது. ஒரமாய் ஒரு மூலையில் பிள்ளைகள் இரண் டையும் மடிமேல் , போட்டுக் கொண்டு பாணுக்காக அவன் வரவைப் பார்த்துக் கொண்டி ருந்தாள் அந்த அப்பாவி.
மழைசோவெனக் கொட் டிக் கொண்டிருந்தது. குடிசைக்குள் ஒழுகும் நீர்த்துளி

கள் விளக்குவெளிச்சத்தில் மின் னிக் கொண்டிருந்தன. பசிக்களை ஒருபுறம், பயம் மறுபுறம். சில் லென்ற குளிர்காற்றில் உதடுகள் நடுங்க, சில நேரம் தன் குழந்தை களையே பார்த்துக் கொண்டிருந் தாள் சரக.
'அம்மா எனக்கு வகுத்துக் குள்ளகுத்துது’* மழலை மொழி யில் கூறியது அவள் மடியில் கிடந்த குழந்தை.
"எங்க அப்பா இல்லாடா, கொஞ்சநேரம் படுத்துக்க மவனே அப்பா வந்திருவார்*
ஆறுதல் படுத்திய அவள் அவ்விடத்தில் தொடர்ந்தும் இருக்க விரும்பாமல் படலைக்கே வந்துவிட்டாள் குழந்தைகளு
மாரிகாலக் கும் மி ருட் டு. இடை இடை எதிரிடும் மின்னல் ஒளியில் மெதுவாக அத்தானின் வரவை அவதானிக்க அவள் தவறவில்லை. கொட்டும் மழைத் துளியை அவள் பொருட்படுத்தவில்லை. முந்தா னையை முன்னல் எடுத்து தன் குழந்தைகளே மூடிக்கொண்டாள் தான் நனைந்து கொண்டு.
அவள் முகத்தில் வழிந் தோடிய தண்ணீரிலேயே அவள் கண்ணீரும் கலந்து கொண்டது. பொறுமையை இழந்தவள் படலையையும் தாண்டி பாதி வழிக்கே வந்து விட்டாள்.
'தம்பி என்ர அவர எங் கெண்டான்ன கண் டெய லா sgytur?''
அவ்வீதியிலே வந்த இளைஞர் களிடம் கேட்டாள் அவள்,
"இல்லக்கா மழைபேயுது தானே. எங்கெண்டான்ன நிப் பார். அவர் வந்திருவார். நீங்க போங்கக்கா" என்று கூறிவிட்டு ஏதோ அவசரம க அவர்கள் சென்றனர். ;
அவர்கள் . போராடுவ தற் காக வாழ்பவர்கள். அவள் வாழ்வதற்காகப் போராடுஇன் ருள் என்பதை அவர்கள் அறி 6 Irtiċi, GT tir?
அதோ. தூரத்தில் ஒருமனி தர் தடத்து வரும் காலடி ஓசை கேட்கின்றது. ஆத்தான் ஸ்ன்று அலறிக் கொண்டே அங்கே ஒடு
ஆனல் அது அவளின் அத் தானல்ல. அவ்வூரில் திரியும் ஒரு பைத்தியக்காரன். பித்துநிலை
மழை ஒய்ந்த க. குளிர்
காற்று குறையவில்லை அந் து மூன்று ஜீவன்களும் துடித்துக் கொண்டிருந்தன.
பிள்ளைகள் பசி எ ன் s அழுது கொண் டி ருந்தனர். எப்படியும் அவர்களை நித்திரை யாக்க குடிசைகளை நோக்கி நடந்தாள் சரசு நடைப்பிணி
i is
தூரத்து பட்டாளத்து முகா மில் திடீரெனத் தோன்றிய தீச்சுவாலை அந்தக் கும்மிருட் டைக் கலைத்தது. அக்கணமும் அவள் திரும்பிப்பார்த்தாள் அத் தான் வருகின்ருரா என்று.
வானத்து மேகத்துடன் சங் கமித்துக் கொண்டிருந்தது தீச் சுவாலை. தனது கணவனும் மேகத்துடன் கலந்து விட்டான் என்பதை அறிவாளா அந்தச் சரசுவதி. 食
5

Page 28
O ஏவற் பேயும்.
9 8 கவிஞர் பொன்னையா
2-ப்பு விளையும் கிராமம் ஒன்றில் நிலவொளி மறைந்து நாய்கள் குரைத்தன காரணம் எதுவெனக் கலங்கினர் மக்கள் காலைக் கதிரவன் உதிக்கு முன்னே காக்கிச் சட்டைகள் ஊரை வளைத்தன.
துப்பாக்கி வேட்டுகள் எட்டுத் திக்கிலும்
அப்பாவி மைந்தர்கள் தப்ப முயன்றனர் கவச வண்டிகள் எங்கும் திரிந்தன வேலிகள் சரிந்து வண்டிகள் வந்தன பற்றைகள் மீது குண்டுகள் பறந்தன.
வீட்டினை விட்டு ஓடினர் மக்கள் வீதியில் வெளியில் வேட்டுக்கள் தீர்ந்தன காடுகள் மக்களைக் காக்க முயன்றன காட்சி கொடுத்தோர் கைதிகளாயினர் கைகட்டி உணவின்றிக் கருவாடாகினர்.
மாடு மேய்ப்பவன் மார்பினில் சூடு மீனுடன் வந்தவன் தலையினிற் சூடு வள்ளத்துள் வலையுடன் எரித்தனர் இங்கே தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்த குடும்பம் தாயும் சேயுமாய் சரிந்தனரிங்கே. மந்தைகள் பறவைகள் வீடு வந்தன மாந்தர் வீடு செல்லத் தயங்கினர் மந்தைக்கும் பறவைக்கும் சுதந்திரம் உண்டு மாந்தர்க்கு அங்கே சுதந்திரம் இல்லை தார்மீகத்தின் இலக்கணம் சிரித்தது. அன்று லெபனனில் அகதிகள் பலரை கொன்று குவித்தது இஸ்ரேல் 'அரசு இன்று இங்கேயும் அகதிகள் பலரை கொன்று குவிப்பதும் கூலிப் படைகள் என்று தீரும் இப்படு கொலைகள். சுதந்திரம் கேட்கும் மக்கள் ஓரணி கொலைவெறி நோக்கில் அரசுகள் பேரணி ஏவல் பேய்களின் கைகளில் துவக்கு எய்தவன் இருக்க அம்பை நோவதேன்
ஏவல்பேயும் உண்மையை உணரும்.

இன்றைய தினசரியில்
பார்த்தவை!
ஆர். எம். நெளஸாத்
தினவரம்
குரோதன ஆண்டு. மார்கழி மாதம் உ. தமிழர் பிரச்சினைக்கு மாநாடு தொண்டா -ஜே. ஆர். பேச்சு. கிளிநொச்சி பொலிஸ் தாக்குதல் கண்ணிவெடி ஏழுபேர் பலி! காரைதீவில் மின்கம்பச் சடலம். எமது கருத்து. நாளை பூரண ஹர்த்தால்...! புங்குடுதீவு வங்கிக்கொள்ளை. 20 பயங்கரவாதிகள் பலி! 2 பொலிசாருக்குச் சிறுகாயம். தீவிரவாத முகாம் முற்றுகை! யாழ். கச்சேரி பனம் அபேஸ்! மர்மப் பார்சல் வெடித்தது! அன்னையர் மறியல் போர்! 86 க்கான பஞ்சாங்கம் உள்ளே. நாடு பிரிவதை முஸ்லிம்கள் முழு மூச்சாக எதிர்க்கின்றனர் சபையில் அமைச்சர் சூழுரை! மட்டுநரில் கிரனைட் வீச்சு சீருடை இளைஞர் திகில்கொள்ளை! "இஸ்ரேலை லெளியேற்றுக!" சபையில் கோரிக்கை! தீவிரவாதிசளுக்கு இந்தியா புகலிடம்? பிரஜைகள் குழு மன்னர் பயணம் இராணுவ ம் உஷார் நிலையில்! இலங்கையில் ஆகக் கூடிய விற்பனையுள்ள தேசியத் தினசரி எமது தினவரமே!
ஒறறுமை
==== சத்தியா
நெஞ்சம் கனன்றும் நினைவுகள் மடிந்ததும் அவை நிழலாய் நெஞ்சில் படர்ந்தன.
கனவுகள், கற்பனைகள்
எதிர்பார்ப்புக்கள் எல்லாமே அந்தரத்தின் அவலத்தின் அலட்சியங்களாக்கப்பட்டு
விட்டன இதயங்களின் வேட்கைக்கு இரும்புத் திரையாம் அவர்கள் லாழ்வு தடம்புரள நேரிட்ட அந்த ஓர் கணம் தங்கி, தரித்து மீண்டு போனது.
அங்கே, அவர்கள் வாழ்வு
புதியதோர் உலகம்
ஒற்றுமையின் மசுத்துவம் ஆனல்.
வெளியில் நடந்து வரும் அர்த்தமற்ற குத்துவெட்டுகள் புதிய நண்பர்கள் வரவால் புதிய பல செய்தி பரவும் வெளியேறும் நண்பர்களால் ஒற்றுமைச் செய்தி பறக்கும் நோக்கம் ஒன்றே!
Ga ண்டியது விடுதலையேயன்றி
வேறில்லை.
இன்னுமேன் வேற்றுமை?
(uD.L. Lin.
53

Page 29
-----
சூரியனின் ஒரே கதிர்களும் உயிர்ச் சிட்டுக்கள் சப்திக்கும் ஓசையும் வெம்மையும், குளுமையுமாய் வீசும் காற்றும் வேண்டிடும் அடி, உதை சித்திரவதைகளும் அனுபவித்திடும் தனிமை, இருள், மெளனம். எல்லாமே எல்லார்க்கும் ஒரே மாதிரி அவர்கள் உணர்வுகளும் அதே மாதிரி அவர்கள் எதிர்பார்த்த எதிர்பார்க்கும் நோக்கமும் ஒன்றே இதயத்தின் உணர்வுகள்
நிகழ்ச்சிகளின் திரைகள், நினைவுகளின் தன்மை,
மனங்களின் துல்லியம் மறைவின்றித் தெரிந்தன. வாய்மொழியிலும் கண்மொழிகள் வீரியம் கொண்டதாயிருந்தது தங்கள் விடுதலையின் வேளையை வேண்டி ஒற்றுமையின் செய்திக்காக காத்திருக்கின்றனர் அவர்கள்
இங்கே
இவர்கள் ஒன்றுபட்டு மனித குலத்தைப் பிணைத்த அடிமைத் தளைகளைத் தகர்க்கும் அடிகளின் பேரோசை விடுதலைச் செய்தியை எப்போது அவர்களுக்கு உரைக்கும்?
*தாயக ம்” ஆண்டுச்சந்தா செலுத்தி விட்டீர்களா?
6T.து பழைய சந்தாதாார்களை புதிய சந்தாதாரர்களாகக்
கருதி தொடர்ந்து தாயகத்தை அனுப்பி வைக்கிருேம். எனவே உங்கள் ஆண்டுச் சந்தா ரூபா 60/- ஐ எமது முகவரிக்கு கிடைக் கக் கூடியதாக அனுப்பி வைக்கும்படி வேண்டுகின்ருேம். மேலும் புதிய சந்தாதாரர்களையும் சேர்க்கும் எமது இயக்கத்துக்கு உங் கள் ஒவ்வொருவரதும் ஒத்துழைப்பைக் கோருகின்றேம்.
54、
-நிர்வாகி

தேசிய கலை இலக்கியப் பேரவையின் மரத இதழான 'தாயகம்? 11வது இதழ் கிடைத்தது. நான் இங்கு இந்தியப் பத்திரிகைகளை பாத்திரம்தான் வாங்கி வாசித்தேன். அவற்றிற்கும் "35rasb" புத்தகத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒவ்வொரு சொற் ருெடர்களும் எவ்வளவோ ஆழ்த்தக ருத்தைக்கொண்டிருந்தன 9 போல இலக்கியப் பகுதியில் குறிப்பிட்ட சமய சாஸ்திர நாடகமுறை கள் மக்களின் மரபு ரீதியான வளர்ச்சியை தெளிவுபடுத்தக் ésngu u தாக இருந்தது. அதுபோல சிறுகதையும் இருந்தது.
அதோடு, 'மண்சுமந்த மேனியர்' நாடகத்தின் விமர்சனம் (கலேயன்பன்) நேரடியாக நாடகம் பார்த்த அளவுக் கத் திருப்தியை தந்தது. அதில் குறிப்பிட்ட மாதிரி யாழ்ப்பாணத் தின் இக்கட்டான நிலையில் சாதரண மக்களும் பங்காளிகளாகவேண்டும் என்ற கரு ந் துள்ள நாடகத்தை எழுதிய சண் மக லிங்கம் பாராட்டப்பட வேண்டி யவரே. நாடகத்தைப் பார்க்கக் கொடுத்துலைக்கவில்லை.
- த. தவராசா, குவைத்.
நாட்கள் கடந்து செல்லும்போதே தாங்கள் புத்தகம் வெளியிட படும் கஷ்டங்களையும், நாட்டு நி%லமையினுல் தங்களுக்கேற்படும் சிரமங்களையும் அறிந்து நாம் மனம் மிக வருந்துவதுண்டு.
11வது இதழில் "லூ சுன்’ எழுதிய கற்பைப்பற்றி. தமிழாக்கம் ஆழமான கருத்துக்கள் அடங்கியவை. கற்பிழந்த பெண்களுக்கு சமுதாயத்தில் இன்னும் அதே 'மதிப்பு தான் வழங்கப்படுகிறது. "ஒருபெண் தனது கற்பை ஒரு ஆணினுல் தான் இழக்கிருள்" இதை எல்லோரும் அறிவர். ஆனல் ஆண்கள் இதை உணர்ந்திருக் கின்ருர்களா?
'அம்புஜனின்" பணப்பேயின் ஆட்சி. புரட்சிக் கனல் தெறிக் கும் உரைவீச்சு, துயின்று கொண்டிருக்கம் உழைப்பாளியை விழித் தெழச் செய்யும் சங்கநாதம். மயக்கநிலையில் வலுவிழக்க, ஒளி யிழந்து பரிதவிக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு ஓர் விடிவெள்ளியென இக்கவிதை ஒளிர்கிறது; கவிஞர் அம்புஜனுக்கு எனது பாராட் ( க்கள் - எஸ். தாரிணி, மாத்தளை.
"இந்தியத் தலையீடும் இனப் பிரச்சி?னயும்" என்னும் ஆசிரியர் தலையங்கம். பிரச்சி%னகள் மிக்க இந்த நெருக்" டியான காலகட்டத் தில் எத்தகைய பணி அவசியமென்பாகை நன்கணர்ந்து எழுதப்பட் டுள்ளது. பயந்தோ பரிந்நோ மூடி மரைக்கப்பட்டு விடாக நியாய மான வார்த்தைகள். ஆனல் எத்தனை பேர் இவற்றையெல்லாம் சரிவர உணர்ந்து கொள்ளப் பேகிறர்கள். "நாட்டு நலனுக்ாான எந்தவொரு நடவடிக்கையிலும் சொந்தக் கெளரவப் பிரச்சினை குறுக்கீடு செய்யக் கூடாது" இந்த வார்த்தைகளைக் கொஞ்சமாவது யோசித்துப் பார்ப்பார்களானூல்.

Page 30
"தெற்கு நோக்கி’ என்ற குமுதன் அளர்களின் சிறுகதை யதார்த்தமான பிரச்சனைகளை மிகத் தெளிவாகவும், உணர்வு பூர்வ மாகவும் எடுத்துக்காட்டுகிறது. எங்கள் வீதிகளில் . வீடுகளில். நடக் கும் அவலங்களையெல்லாம் அட்பட்டமாகச் சித்தரித்துக் காட்டியிருக் கின்றர். "அந்தப் போாாட்டங்களுக்கான கோசங்களை முன் ைதத வசதி படைத்த பலர் இந்திய வுக்கும், ஏனைய நாடுகளுக்கும் சென்று பாதுகாப்பா:வும், வசதியாகவும் வாழ்ந்த னர். சாதாரண உழைப் பாளி மக்களே தமது வாழ்வும் சாவும் இந்த மண்ணில்தான் என்ற முடிவே டு இருந்த6 ர்' என்னும் சொற்:ளில் சுரண்டல் தனங் களில் போலியான சொகுசு வாழ்க்கையையும், பாட்டாளி வர்க்கத் தின் உறுதியான- ைராக்கியமான நிலைப்பாட்டையும் காணக் கூடியதாக இருக்கின்றது.
'தமிழும் அயல்மொழிகளும்’ என்னும் சி. சிவசேகரம் அவர் களின் கட்டுரையும், 'சடங்கு களிலிருந்து நாடகம்வரை. கலாநிதி சி. மெளனகுரு அவர்களின் கட்டுரையும் உயர் கல்வி கற்கம் மான வர்களுக்கு மட்டுமல்ல இன்றைய எமது தமிழ் இனத்திற்கே மிகவும் அத்தியாவசியமான கட்டுரைகளே! இத்தகைய கட்டுரைகளை தாய கத்திற்கு அடுத்தபடியாக மல்லிகை"யில் தான் ஓரளவுக்குப் படிக்க முடிகிறது.
கலையன்பனின் 'மண் சுமந்தமேனியர்' நாடகத்தின் விமர்ச னம். நாடகத்தை நேரில் பார்ப்பதைக் காட்டிலும் மிகத்தத்ரூப மாக விளக்கப்பட்டிருக்கிறது. சி. எல், பிரேமினி, யாழ்ப்பாணம், வரவர தாயகத்தில் நிகழும் பிரச்சினைகளால் 'நமது தாயகம்" நின்றுபோய்விடக் கூடாது என்பது என் ஆதர்ஷமான கவலை. எல்லா இலக்கிய கர்த்தாக்களும் தாயகத்தை அடைத்ல் தேவை. சிற்றிலக் கிய ஏடு என்ற பெயருடன் தம் புகைப்பட விளம்பரங்களை அச்ச டிக்கின்ற இக்கால இலக்கிய வாதிகளில் (?) உண்மையில் ஒரு சின்னப் புகைப்படமோ, ஆசிரியர் பற்றிய ஒரு சின்ன பெரு மிதக்குறிப்போ இன்றி வரும் தாயகம் மனதை சந்தோஷிக்கச் செய்கிறது.
தாயகத்தில் வாசகரின்"எண்ண வெளிப்பாட்டுக்கென ஒரு டாக தி இல்லை. வாசகர் கருத்து என்று புகழ்ச்சிக் கடிதங்கள் பிரசுரிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. என்ருலும், சராசரி ஓர் ஆாாய்ச்சி நோக்கில் பார்க்கும் ஒருவருக்கு, தாயகத்து வாசகர்கள் தாயகம் பற்றிக் கொண்டுள்ள கணப்பினைப் பரிந்து கொள்ள அப் பகுதி உதவக் கூடும் என்றுதான் கூறுகின்றேன்.
கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஆசிரியரின் கூர்மையான பொல்லாத பார்வையையும், நோக்கையும் உணர்ந்து கொள்ள முடி கிறது. தாயகத்தின் அழுத்தமான இலக்கியத்தடம் பதிந்துவிட்டது. -ஆர் எம் .நெளஸாத், தாயகத்தின் 'மே' இதழ் கண்டேன். குமுதனின் ‘தெற்கு நோக்கி' என்ற சிறுகதை இன்றைய தமிழ்ப்பகுதிகளின் உண்மை நிலையை அப்படியே தோல் உரித்துக் காட்டுவதை அவ
தானிக்க முடிகிறது.
-பி. மெஸ்மர்
56


Page 31
罩 °*呜呜(岛 Registered as a Newspaper
புத்தரின் அன்புத் த புனித மண்ணிலே இரத்த வடுக்களும் வெடியொலி கேட்டே
ஒருசிலர் நலன்களே ! அரசு தன் குடிகளே ஆயுதச் சந்தையில் பு அடகு வைத்தது.
இறக்கை முளேத்த இ. ஊர்மனே எங்கும் எட்
இரத்தமும் தசையும் எந்திரப் பறவைகள் எரிநாக்குகளால் ஊ ை
வீடுகள் எங்கும் குண் ஓடுகள் கூரைகள் சித மனித உயிர்கள் பெறு மானமும் தனது மதி
இரவின் கனவி விடிந்ததும் எ
இச்சஞ்சி ைதேசிய கலே இலக்கி 15/1, மின்சார ரீலேய விதியிலுள் ਪੰL ਹੈ। இன் அச்சிட்டு வெளியிடப்பட்ட
 
 
 
 

சிசெய்யப்பட்டது. புAAA
in Sri LEATilta. THAYAKAM
நிறைந்த மண்ணில்.
லர்ந்த பொழுதுகள்
த்துவம் ஆளும்
எலும்புமே மிஞ்சின
விடிந்தன பொழுதுகள்.
உறுதிசெய்வதற்காய்
அழித்திடத் துணிந்தது மானுட உயிர்களே
டியேற்றுப் பிளம்புகள் டி ப் பார்த்தன
தேடி அலேந்து வாகனத்தில் பறந்தன
Tத் துனாவின.
டு கள் விழுந்தன 1றிப் பறந்த ை மதி இறந்ததா ல்
ܒ .
t
- Lř || 3šT
கியப் பேரவைக்காக யாழ்ப்பாணம், । । । ரீதியிலுள்ள யாழ்ப்பான - ச்சகத் 堑"·