கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1985.08

Page 1
உள்ளே. .
இ சி. சிவசேகரம் 0 குமுதன் 0 சி. மெளனகுரு இ முருகையன் இ சி எல். பிரேமினி
சிவ. இராஜேந்திரன் இ மணி
இ அம்புஜன் இ சத்தியா 0 சேரியூரான் இ செண்பகன்  ேஆர். எம். நெளசாத் இ நயினேகுலம்
豐豐營豐
 

ஓகஸ்ற், 1985
馨繫繫擊繫繫擊

Page 2

இதழ் 12
uDavi: 3
இ) மாற்றுப் பிரேரணைகளை
எதிர்பார்க்கும் பூட்டான் மகாநாடு
() தொண்டமான் பங்குபற்ருதது ஏன்?
உலகின் பலதரப்பினராலும் ஆர்வத்துடன் எதிர் பார்க்கப்பட்ட பூட்டான் பேச்சுவார்த்தைகள், அரசு முன்வைத்த யோசனைகளை தமிழ் விடுதலை இயக்கங்கள் நிராகரித்தும், தமிழ் விடுதலை இயக்கங்களின் மாற்று யோசனைகளை பரிசீலனை செய்து, புதிய பிரேரணைகள் அரசு தரப்பினரால் முன்வைக்கப்படும் என்றும், இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதை அடுத்து ஆகஸ்ட் 12ம் திகதிக்கு மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுg
எமது அரசு நாட்டின் ஒருமைப்பாடு, சமாதானம், சுபீட்சம் இவற்றில் நம்பிக்கை கொண்டு அதற்காக இதய சுத்தியுடன் செயற்படுகின்றதா? அல்லது அரசு தரப்பிலுள்ள ஒரு சில பேரினவாதிகளின் அங்கலாய்ப்பை பூர்த்தி செய்ய விரும்புகிறதா? இப்பேரினவாதிகள், தமிழ் மக்களின் எந்தவிதமான உரிமைகளையும் வழங் காமல், பிரச்சினைகளுக்கு இராணுவத் தீர்வு காண்ப தையே விரும்புகிருர்கள். முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் கதை இது

Page 3
அரசு நடந்து முடிந்த மாநாட்டிற்கு சமர்ப்பித்த பிரேரணைகள், முற்று முழுதாக வட்டமேசை மாநாட் டில் சமர்ப்பிக்கப்பட்ட அதே பிரேரணைகள்தான். இதனை தமிழர் விடுதலைக் கூட்டணி முற்றக நிராகரித்திருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியாலேயே நிராகரிக்கப்பட்ட பிரேரணைகளை எவ்வாறு இதர விடுதலை இயக்கங்கள் ஏற்றுக்கொள்ளும் என்று அரசு எதிர்பார்த்தது?
அரசு கண்ணும்பூச்சி விளையாடுவதை விடுத்து, தமி ழர்களுடையதும், இந்திய வமசாவழி மக்களுடையது மான அபிலாசைகளை உணர்வுபூர்வமாக ஏற்று, அரசியல் தீர்வு ஒன்றிற்கான சரியான மாற்றுத் திட்டம் ஒன்றை பூட்டான் இரண்டாவது மாநாட்டில் முன்வைக்க வேண் டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் என்பதனை ஏற்று, அந்த அடிப்படையிலான ஒரு திட்ட மாக அது அமையவேண்டும்.
முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பூட்டான். மாநாடு பெற இருப்பது நல்ல அம்சம்; அதேவேளை, திரு. தொண்டமான் பூட்டான் மாநாட்டிற்கு அழைக் கப்படாதது ஏன்? இதற்கு முந்திய பேச்சுவார்த்தை களில் முக்கிய பங்கு வகித்தவர் தொண்டமான், அரசு தரப்பு மந்திரியாக இருந்தும் இந்திய வம்சாவழி மக் களினதும், தொழிலாளர்களினதும் தலைவர் என்ற அடிப் படையில் தமிழர் விடுதலை இயக்கங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் அவர். இந்திய வம்சாவழி மக்களி னதும், தொழிலாளரினதும் குரலை அவர் பூட்டான் மாநாட்டில் கொடுக்க முடியாத நிலையில் இருப்பது வருத் தத்திற்குரியது. சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தன் போதும் இந்திய வம்சாவழி மக்களினதும் தொழிலாளர்களின தும் ஸ்தாபனங்களின் சம்மதம் பெறப்படாதது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வேளையிலாவது மலையக மக் களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்தாபனங்களும் இயக் கங்களும் தமது குரோதங்களை மறந்து மலையக மக்களின் நலன்களை முன்னெடுப்பது அவசியமானது. 02-08-95
2 O

e இரத்தப்
பூக்களே.
அந்நியரின் காலடிச்சுவடுகளால் அழித்து மறைக்கப்பட்ட எனது தேசத்தின் எல்லைகளை தேடுகிறேன்.
egyal 6örgil கால்கள் இந்த மண்ணைவிட்டு அகன்ற போதும் அவன் பண்ணிய பாவங்களின் பயன்களையே இன்றும் நாம் அறுவடை செய்கிருேம். அவனது அடிவருடிகளே தொடர்ந்தும் ஆட்சிக்கு வருவதால் அவர்களது அடிச்சுவடுகள் இன்னும் அழிக்கப்படவில்லை. தேர்தல் சின்னங்களை பார்த்து பார்த்து தேசப் படத்தையே நாம் மறந்துபோய்விட்டோம்.
தெருவோரத்துப் போஸ்ரர்களில் காலாய் அரையாய் குறுகிப் போய்விட்ட கற்பனைக் கோடுகளை உறுதிப்படுத்த ஒரு தியாக வேள்வியே இங்கு தொடர் கதையாகிறது. கங்கைகள் பாயாது காய்ந்து கிடக்கும் எம் பூமித் தாயின் தாகத்தைத் தீர்க்க செங்குருதி மண்ணில் தொடர்ந்து சொரிகிறது. வரலாற்றைத் தவருக பின்பார்த்த மனிதர்களால் வாலிழந்த மனிதர்களின் காலங்களுக்கு
Birth வலிந்து இழுக்கப்படுகிருேம் மாணவப் பருவத்தில் இந்த மண்ணின் எல்லைகள்
O அம்புஜன் எம் கண்களுக்கு மறைக்கப்பட்டன.
உழைப்பாளியாக
எம் வயிற்றை எம் உழைப்பால் நிரப்ப முனைந்தபோதுதான் எமது உரிமைகளின் எல்லைகளை நாம் தெரிந்துகொண்டோம்.
வடக்குக் கிழக்கும் மகாவலியும் மலைநாடும் மட்டுமல்ல அழகான இத்தீவின் கடற் கரைகள் எல்லாமே எமது நிலம்.
sgil P. . . இதுவே எம் தாய்த்திருநாடு.
இழந்து கொண்டிருக்கும் எமது பிரதேசங்களை பாதுகாக்க மட்டுமல்ல எமது தேசத்து மண்ணில் பதிந்து விட்ட அந்நியச் சுவடுகளை அழிக்கவும் நாம் போராட வேண்டும். மரணங்களுக்காக நாம் மனம் வருந்துகிருேம் அதையும் விட மனிதத்துவத்தின் மரணத்துக்காகவே எமது இதயங்கள் பிழிந்தெடுக்கப்படுகின்றன.
எமது மண்ணின் இந்த இரத்த வடுக்களை அடியோடு அழிக்க ஒரு சமுதாய விடியலுக்காக மரணத்தையும் எதிர்நோக்கி காத் தருக்கும் இரத்தப் பூக்களே. இது விடியலின் ஆரம்பம்தான் விழித்தெழுங்கள்
冲

Page 4
O தோழனே
திரும்பிப்பார்
அன்பின் தோழன்ே எங்கே செல்கிருய் LDr L-trés e-6Opég ஓடாகிப் போனுய் மீண்டும் மீண்டும் மாடாக உழைக்க மலைக்குப் போகிருயா கொஞ்சம் நில்.
உன் பரம்பரையில் ஒருவன் முள்ளாய்க் கிடந்த இந்நாட்டை தன் இரும்புக் கரங்களால் பிடுங்கி எறிந்து காட்டை நாடாக்கினன் அவன் பிள்ளை - அதிலே தேயிலையை நட்டான் egy 6u6ör 19eirőkn. அவனது பிள்ளைகள் இவர்களின் பிள்ளைகள் பிள்ளைகளின் பிள்ளைகள் இன்று நீ.
ஓ. எனதன்பின் தோழனே கொஞ்சம் நில் இந்த மலைகளுக்கிடையே ஒடுகிறதே நதி டெவனிலே பாய்கிறதே அருவி. இந்நாட்டின் பாரிய அபிவிருத்திக் கென. திசை மாறிய மாவலி இவற்றில் என்ன நீரா ஒடுகின்றது..?
நீ நடந்த பாதையில் நடந்து பார்
" எேஸ். ஆர். நிசாம்
ஒவ்வொரு ஊற்றின். ஒவ்வொரு புற்பூண்டின் அடியில் புதைந்து கிடப்பது உன் அப்பன், அவன் அப்பன், அவனின் பாட்டன் இந்தப் பாட்டனின் முப்பாட்டன்.
எத்தன் தலைமுறையின் st leasefir - இங்கே 4தைந்து கிடக்கின்றன எநீதிக்ன பரம்பரையின் உதிரங்கள். மாவலியை
நிரப்பியிருக்கின்றன:
ஒ. தோழனே கொஞ்சம் நில். எத்தனை பரம்பரையின் எதிர்காலம் - உன் காலடியில் இருக்கிறது
ஆளுல் .
உன் கையிலிருப்பதோ பரம்பரைச் சொத்தாகிய மண்வெட்டியே.
posmrðir... நீ மண்ணில் வீழ்ந்துவிடலாம் கவலைப்படாதே உன் மண்வெட்டி அமைக்கும் புதுப்பாதை உன் பரம்பரைக்கே சோலையாக அமையட்டும் அங்கு வீசும் தென்றலை உனது பிள்ளைகள் அநுபவிக்கட்டும்.
C

சிறுகதை
X X X X X X X X X X
X X X X X X X X X X
 ைவேலிகள்ஐ
யாழ் நகரின் அழகான பல கட்டிடங்கள் தொடர்ந்து
நடந்த போராட்டங்களினல்
<到站岛 நகரமே சோபை யிழந்து காட்சியளித்தது.
அந்த இடிபாடுகளுக்கு இடை யிலும், தெருவோரங்களிலும், சந்திகளிலும் "பயங்கரவாதி கள்" என்ற பட்டப்பெயரோடு
சாதாரண பொதுமக்கள் சூடு
பட்டு இறந்து கிடந்த அந்தக் கொடூரக் காட்சிகள் கூட இன் னும் மக்களது மனங்களைவிட்டு அகலவில்லை. "போர்நிறுத்த"த் தின் பின் ஏற்பட்ட அந்தச் சிறிய அமைதியில் மக்கள் ஒவ் வொருவரும் தமது நிலைமை களைச் சீர்செய்வதில் சுறுசுறுப் படைந்தனர். வாகனங்களின் இரைச்சலும், , ஜன நடமாட்ட மும் படிப்படியாகக் கூடி நகரம் மீண்டும் களைகட்டி நின்றது. முன்பெல்லாம் தொல்லையாகத் தெரியும் யாழ்தேவி, இன்ர
சிற்றி ரயில்களின் இரைச்சல்
கள் கூட மக்களின் காதுகளுக்கு பிடித்தமாக மாறி இருந்தது.
அவன் விற்பனையாளனுகப் பணிபுரியும் யாழ்நகரின் பிர பல்யமான அந்த நிறுவனத்தை அங்கு அருகே நடந்த ஒரு சம்
0 குமுதன்
பவத்தைச் சாட்டாக வைத்து இராணுவத்தினர் தீவைத்துக் கொழுத்திவிட்டனர். எஞ்சி யிருந்த நிறுவனத்தின் ஒரு பகுதி யும் இருபது தடவைகளுக்கு மேல் துப்பாக்கி இளைஞர்களின் கொள்ளைகளுக்கு இலக்கானதால் முற்ருக மூடிவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இத ஞல் வேலை இழந்து போனவர்க ளில் அருளானந்தமும் ஒருவனக இருந்தான். குடும்பம் மனைவி குழந்தைகளுடன் மாதாமாதம் கிடைத்து வந்த ஊதியமே போதாத நிலையில், கடனேடும் வட்டியோடும் காலங் கழித்த அவனுக்கு வேலையே பறிபோன போது. அதுவும் கடைச்சிப்பந் தியாக மட்டுமே இருந்து பழக் கப்பட்டுவிட்ட அவனது கைகால் களைக்கொண்டு புதிதாக எந்தத் தொழிலையும் தேடுவதில், செய் வதில் உள்ள சிரமங்களை அவன் உணர்ந்தபோது மிகவும் வேத னையடைந்தான். அவனைப் போன்ற ஒரு நிலையில்தான் 80 ஆம் ஆண்டு பொது வேலை நிறுத்தத்தில் இந்த அரசால் பழிவாங்கப்பட்ட் ஊழியர்களில் பலபேர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதை அவனுல் உணரமுடிந்தது. ஆனல் அவனிடம் இருந்த கொள்

Page 5
கைப் பற்றும் மன உறுதியும் அத்தகைய முடிவுகளுக்கு அவ%ன வரவிடாமல் தடுத்து அரசுக் கெதிரான வர்க்க வைராக்கியத் தையே அவனிடம் மேலும் வளர்த்து விட்டிருந்தது.
நகரத்தில் கூடும் ஜனங்க ளின் எண்ணிக்கையைப் பார்த் ததும் தன்னைப்போல ஒரு சிலர் தான் அந்த இடைக்காலத்தில் பாதிக்கப்பட்டதாக அருள் நினைத்திருந்தான். தனது நெருங் கிய உறவினரிடம் கைமாற்று வாங்குவதற்காக ஒரு விவசாயக் கிராமத்துக்குச் சென்று வெறுங் கையோடு திரும்பியபோதுதான் ஒவ்வொருவரது முகத்திலும் வெளித்தெரியும் பொருளாதார அவலங்களின் வெளிப்பாடுகளை அவனுல் அடையாளங் காண
முடிந்தது. தொடர்ச்சியான மருந்து உர விலைகள், எண் ணெய் தட்டுப்பாடுகள், LDGOop
வெள்ள அழிவுகள், உற்பத்திப் பொருள்களுக்குச் சந்தை வசதி யில்லாமை என்பவற்ருல் அந்த விவசாயிகளின் நாளாந்த
வாழ்வே பாதிக்கப்பட்டிருந்தது.
அதை நேரில் கண்டபோது போர்க்காலத்தில் இயல்பாகவே ஏற்படக்கூடிய பாதிப்புகள், இழப்புகள், பட்டினிச் சாவு களுக்கெதிராக எல்லோருமே விழிப்பாக இருக்கவேண்டும் என்பதை அவன் உணர்ந்தான். இருந்தபோதும் சில இயக்கங் களைச்சேர்ந்த இளைஞர்களின் தவ முன நடவடிக்கைகளினல் ஏற்ப டும் உயிரிழப்புக்களையும், பொரு ளழிவுகளையும், பாதிப்புக்களை
4ம் இயல்பானது என்று அவ
6
குல் கருதமுடியவில்லை. அவனது
கருத்தை உறுதிப்படுத்துவது போல கிராமப் புறங்களிலும், நகரங்களிலும் அத்தகைய நட வடிக்கைகளுக்கு எதிராக மக் கள் விழிப்படைந்து ஊர்வலங்
களையும், உண்ணுவிரதப் போராட்டங்களையும் பரவலாக நடத்தி வந்தனர், அத்
தகைய நடவடிக்கைகள் அரசுக் கெதிரான அந்த இயக்கங்களைப் பலவீனப்படுத்திவிடும் என்று அருள்கருதியதினுல் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு எதி ராக அப்படியான போராட்டங் களை நடத்துவதை அவன் விரும்பவில்லை.
ஆனல் வெவ்றுே இடங்க ளில் நடைபெற்ற அத்தகைய
போராட்டங்கள் அவர்களையும்
பாதித்திருக்க வேண்டும். கனகுவைப் போன்ற இருநூற் றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கவேண்டியிருந்த தினுல் அவர்களது உணர்வும் ஐக்கியமும் ஒரு பலமாக மாறி யது. கொள்ளகள், தீச்செயல் களுக்கு எதிராக உண்ணுவிரதம் ஊர்வலம் நடத்துவது என்ற முடிவுக்கும் அவர்கள் வந்து விட்டனர்.
அன்று வேலை முடிந்ததும் உதவி முகாமையாளர் ரவீந் திரன் அருளிடம் வந்தார்,
" அருள். நாங்களும் சும்மா இருக்கேலாது. சத்தியாக்கிரக மாவது செய்யவேணும், "
"என்ன, TSprirsGautr?'''
இயக்கங்களுக்கு

8. நாங்கள் இயக்கங்களை எதிர்க்கேல்லை. அவையின்ரை தவருண நடவடிக்கையளை த்தான் எதிர்க்கிறம். "
"ஒ. கட்டாயம் உதுகளைக் கண்டிக்கத் தா ன் வேணு ம். ஆனல் பகிரங்கமாச் செய் யேக்கைஇயக்கங்களைப் பாதிக்கு மெண்டுதான் நினைக்கிறன்."
அவர்களது நடவடிக்கை யால் பாதிக்கப்பட்ட பின்னும் அவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று எண்ணும் அருளின் அர சக்கெதிரான அந்த உணர்வைக் கண்டு ரவீந்திரன் ஒரு கணம் வியப்படைந்தார்.
ஏன் சாதாரணமாக ஒன்றுமறி யாதவர்கள் என்று கரு தப்படும் மக்கள் கூட இளைஞர்கள் விடும் தவறுகளை, அவர்கள்தான் Gଇଥf till தார்கள் என்ற உண்மையை அறிந்தபின்னும், "உது அவங் கள்தான்செய்துபோட்டு பொடி பங்களைச் சாட்டுருங்கள்" என்று மூடி மறைப்பதையும், அதை எவராவது உறுதிப்படுத்தி விட்டால் "நாங்கள் உப்பிடித் தான் கதைக்க்வேணும்" என்று கூறி அவர்களைப் பாதுகாக்கும் அரசுக்கெதிரான மக்களின் அந்த உணர்வையும் கண்டு அவர் வியப்புற்றிருக்கி முர். ஆஞல் அந்த மக்களின் உணர்வு களை மதிக்காது அதை தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு தவறு களைச் செய்யத் துணியும் சில இளைஞர்களின் நடத்தையால். அதே மக்கள் பாதிக்கப்படும் போது. மக்கள் அதை எ கிர்ப் பது சரியானது என்பதை அவர்
உணர்ந்தார். தாங்கள் எடுத்த முடிவு தவறில்லை என்பதை மீண் டும் அவர் உறுதிப்படுத்திக் Gossnit GTL.-nr tf .
"தோழர். பகிரங்கமாகக் கண்டிக்கிறது எனக்கும் விருப்ப மில்லை. ஆனல் சம்பந்தப்பட்ட வையை. தனிப்படச் சந்திக் கிற ஒரு நடைமுறைப் பிரச்சனை இருக்கு . அதுக்காக. மக்கள்
கண்டிக்காமை விடுறதாலையும்.
பிழையள் கூடி. மக்கள் பாதிக் கப்படுறதோடை மட்டுமில்லை. இயக்கங்களுக்கும் நிச்சயமாப் பாதிப்பு வரும்."
"ஒ. சனங்களும் சும்மா. பின்னலை நிண்டு உசார் குடுக் காமை இறங்கினத்தான் போரா ட்டம் சரியான தி க் கிலை போகும்."" -
* நேரமாகுது. அவையோ டையும் கதைச்சனன். ஒரு க்கா முடிவை அறிவிச்சுவிடுறீரே."
"ஒ.ஓ.. நான் கதைக் கிறன் ??
அங்கு நின்று கதைத்த
அந்தச் சொற்ப நேரத் தாம தத்தை ஈடுசெய்வதுபோல வேக மாக நடக்கும் ரவீந்திரனையே பார்த்தபடி நிற்கிருன் அருள் இருபது வருடங்களுக்கு மேலாக இருவரும் ஒரே ஸ்தாபனத்தில் வேலைசெய்து வருவதுடன் அர் சியல் ரீதியாக அவர்களிடையே இருந்துவந்த நெருங்கிய உறவை அவர்கள் வெளிக்காட்டாமலே இருந்து வந்தனர்.
படித்துவிட்டு வேலைதேடி அலைந்த காலத்திலேயே அந்த

Page 6
நிறுவனத்தில் சாதாரண கிளாக்
காக வேலைக்குச் சேர்ந்த ரவித்
திரன் தனது ஒழுக்கம், நேர்மை செயற்றிறன் இவைகளால் உதவி முகாமையாளராகப் பதவி உயர் த்தப்பட்டபோது, அதை விரும் பாத பல மேல்தட்டு உத்தியோ கத்தர்களின் புறுபுறுப்புக்க% அருள் தனது காதுகளாலேயே கேட்டிருக்கிருன், தான் 32C5 அரசியல் இயக்கத்தவன் என்று வெளிக்காட்டி ஆடம்பரம் எது வும் செய்யாமலே அமைதியாக இருந்து உறுதியாகவும் உற்சாக மாகவும் செயற்படும் அவரது நடைமுறை அந்த இயக்கத்தின் மீதே அருளுவுக்கு நம்பிக்கையை வலுப்படுத்தியிருந்தது.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்க ஜனநாயகம் பூர்த்துக் குலுங்கும் Gosmišs பூமியாகப் பலபேரும் கனவுகண்ட அந்த நாட்களி லேயே இந்தோ சீனத்தில் அமெ ரிக்க வெறியர்கள் செய்த படு கொலைகளுக்கெதிராக Luntibuunt னத்துக்கு வருகை தந்த அமெ ரிக்க ஸ்தானிகருக் கெதிரான ஆர்ப்பாட்டத்திலும், பலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்த இஸ்ரே லிய சியோனிச வாதிகளுக்கெதி ரான ஆர்ப்பாட்டங்களிலும் முன்னின்ற அவர் வடபகுதி யில் நடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களிலும் அந்த மக்களின் பக்கம் உறுதி யாக நின்ற அந்தக் காலங்களை அவன் நினைத்துப் பார்க்கிருன், அருள்கூட அந்த இளம் வயதில் வறுமையும் அவரது நட்பும் கற்
8
நாட்டை
றத்தந்த வரிக்கப் பாடத்தை இன்னும் மறக்கவில்லை. பாராளு மன்ற ஆட்சி மாற்றங்களாலல்ல ஆயுதப் போராட்டத்தால் ஏற் படும் ஓர் அடிப்படைச்சமூகமாற் மத்தின் மூலமே தங்களைப்போன் றவர்களின் துயர்களுக்கு விடிவு கிட்டும் என்று தனது தோழர் களுடன் சேர்ந்து நகரத்தின் தெருக்களெல்லாம் போஸ்டர் கள் ஒட்டிய காலத்தினை நினைத் துப் பார்க்கிருன். அப்பொழுது முதல் மக்களோடு சேர்ந்து போராடும் போராளிகளாகவே தம்மைக் கருதிக்கொண்ட அவர் கள் அத்தகைய போராளிகளுக்கு இருக்க வேண்டிய ஒழுக்கம்,கட்
டுப்பாடு, மக்களை நேவிக்கும் உயர்ந்த பண்பு இவைகளைத் தி "மும் கடைப்பிடிப்பதில்
உறுதியாயிரு ந்து வந்தனர்.
கிராமங்களிலும் - நகரங்க ளிலும் - அந்த மண்ணிலேயே காலூன்றி அந்த மக்களிலேயே தங்கி நின்று - ஒன்றிணைந்து வேலை செய்யும் அவர்களிடம் எத்தனையோ முன்னுதாரன மான நடவடிக்கைகளை அவன் கண்டிருக்கிருண்.
அந்த நிறுவனம் இராணுவத் தினரால்தீவைக்கப்பட்டு எரிந்து கொண்டிருக்கும் போது சு) அந்த அரசியல் கட்சியைச் சேர் ந்த இரு தோழர்கள் அந்தத் துப்பாக்கி முழக்கங்களுக்கிடை யிலும். அங்கு வந்து. அந்த நிறுவனத்தின் ஒரு பகுதியை எரிய விடாமல் பாதுகாப்பதில் காட்டிய தீரம் - ஜுவாலை விட் டெரியும் தீப்பிளம்புகளுக்குமத்தி யில் - தொழிலாளர்களுட' ன் சேர்ந்து இடிந்து விழுந்துகொண் டிருக்கும் கட்டிடங்களுக்கு மத்
தியில்-மக்களின் பாவனக்குரிய

O ஆசியாவில் பெண்கள் நிலை.
காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட இன்று ஆசியப் பெண்களின் நிலை முன்னேற்றமாகவுள்ளது. எனி னும் பழைய சமுதாயத்தின் மீதமிச்சமான பெண்களுக் கெதிரான பாகுபாடு இன்றும் இருந்து வருகிறது.
ஜூலை 11 இல் அவுஸ்திரேலிய தேசிய பல்க%லக்கழகத் தில்ை ஆரம்பிக்கப்பட்ட "ஆசியாவில் பெண்கள் நிலை" என்ற கலைப்பிலான மூன்ருவது கருத்தரங்கின் பொதுவான கருத்து இதுவாக இருந்தது. இக் கருத்தரங்கில் அவுஸ்திரேலியா, இந்தியா, இந்தோனேஷிபா, சீனு, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து சமூக நடவடிக்கைகளில் ஈடுபாடுள்ள 150 பெண்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.
இந்தியப் பிரதிநிதி பேசும்போது, பாலியல் அடிப்படை யில் பெண்களது உழைப்பின் பொருளாதாரப் பெறுமதி குறைத்து மதிப்பிடப்படுகிறது என்றும், அதன் அடிப்படை யில் பெண்கள் வேலைப் பிரிவினைக்கு உட்படுத்தப்பட்டு, குறைந்தளவு உழைப்புச் சக்தியாகக் கருதப்பட்டு, சிறிய ஆல்ை முக்கியமான வேலைகளில், குறைந்த சம்பளங்களு டன் அமர்ர்த்தப்படடுச் சுரண்டப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
சீனப்பிரதிநிதிகள் குறிப்பிடும்போது, தமது நாட்டில் ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் நாட்டின் அபிவிருத் திக்கான பெரும்பணிகளில் பங்கு கொள்கி ?ர்கள் என்றும், ஆணுலும் பெண் சளைவிட ஆண் கள் மேலானவர்கள் என்று கருதும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் எச்ச சொச்சங்களால் பின்தங்கிய பகதிகளில் பெண்களுக்கெதிரான பாகுபாடுகள் இன்னும் இருந்து வருகிறது. அவை மற்ருக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூறினர்.
அந்தப் பொருட்களை மீட்பதில் தங்களது உயிரையும் உடலையும் மதியாது செயற்பட்ட அந்த காட்சியினை - அந்த உணர்வை இந்த இளைஞர்களும் பெறக் கூடாதா என்ற ஏக்கம் அருளு விடம் அன்றே எழுந்திருந்தது.
மறுநாள் காலைத் தினசரியில் அ வர் க ள து உண்ணுவிர தச் செய்தி முன்பக்கத்தில் வந்திருந் தது. மக்களுடன்தொடர்புடைய
பிரபலமான நிறுவ்னத்தின் ஊழி யர்கள் எடுத்த முடிவுக்கு மக்க ளின் ஆதரவு இருந்தது. காலை யில் கடைத் தெருவால் வரும் பொழுது பத்திரிகை படித்துக் கொண்டிருந்தவர்களின் விமர்ச னங்களிலிருந்து அருள் இதைத் தெரிந்துகொண்டான். இயக்ங்க களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காலையில் அங்கு வந்த னர். ரவீந்திரன் அமர் ந் திருந்த

Page 7
அறையை நோ க் கி ந ட ந் தனர். அவர்கள் தங்களை அறி முகப்படுத்திக் கொண்டே சிநேக பூர்வமான முறையில் பேச ஆரம் பித்தனர். அந்த நிறுவனத்தின் ஊழியர்களும் உத்தியோகத்தர் களும் அறைக்குள் வந்து கூடி னர்,
"எப்படியும் நீங்கள் உண்ணு விரதத்தைக் கைவிட வேணும். இதுகளாலை இயக்கங்களைப் பற்றி மக்கள் தவழு நினைப்பினம்."
ரவீந்திரன் பதவி 2-աn 5 தப்பட்டபோது ւIԱյւյմ):55 உத்தியோகத்தர் சிலர் "ஏன் தொல்லைகளுக்குள் அகப்படு are o என்று அச்சத்தால் மெளனமாகிவிடுகின்றனர். ரவீந் திரன்தான் முன்னின்று பதிலளிக் கிருர்,
"நாங்களும் அதை உணரு ஹம். ஆனல் பாதிக்கப்படுகிற தொழிலாளற்றை வாழ்க்கைப் பிரச்சினை இது -இதிலை நாங்கள் ஒண்டும் செய்யாமல் இருக்கே லாது?"
"நீங்கள் இந்த நிறுவனத்தை இழுத்து மூட வேண் டாம். கொள்ளை போரை பொருட்களை நாங்கள் மீட்டுத்தர முயற்சிக் 6፱ወub.” “
"அப்படியெண்டா அது நல்ல
விஷயம். உண்ணுவிரதத்தை நாங்கள் ஒத்திபோடுறம். அதுக் கிடையிலை நீங்கள்' இதைச் செய்து தரவேணும்."
"ஒ. அப்பிடி மீட்டுத் திராட்டி நீங்கள் உண்ணுவிரதம் இருங்கோ ??
19
"நாங்களும் ஒரு அரசியல் கட்சியைச்சேர்ந்தவர்கள்தான். ஆயுதப் போராட்டத்தைத்தான் நாங்களும் நம்பிறம். ஆனல் யுத்தத்திலை உணவு விநியோ கத்தைத் தடுக்கிறது எதிரியள் செய்யிற வேலை. ஒரு வழியிலை மக்சளுக்குத் தேவையான உணவு விநியோகத்தை பாதுகாக்கிற வேலையைத்தான் நாங்கள் செய் யவேணும்."
"ஒ. நீங்கள் சொல்லுறது சரிதான்." .
ரவீந்திரனின் அந்த மெலி ந்த உருவத்துக்குள் அடங்கி யிருக்கும் துணிச்சலும் அறிவும் தன்னலமற்று மக்களை நேசிக் கும் அந்த உணர்வும் அங்கு கூடியிருந்தவர்களிடமும் ւմՄ6! கிறது.
“இந்த ஸ்தாபனம் தொட ர்ந்து நடந்தால்த்தான் அரசாங் கத் திட்டை நஷ்டஈடு, இன்சூ ரன்ஸ் எதண்டாலும் எடுக்க லாம். அதுதான் போனலும். இந்த ஸ்தாபனத்தை, நம்பி. இஞ்சை வேலைசெய்யிற ஒவ் வொரு தொழிலாளியளின்ை fD குடும்பக் கஷ்டங்களும் எனக்குத் தெரியும். அவையள் ஒவ்வொரு வரும் ராஜினுமாக் digs is தோடை வரிசையா வந்து நிக் கேக்கை. சீ. எங்கையோ போராட வெளிக்கிட்டு. எங் கையோ நிக்கிறம்.
“உங்கடை நிலைமை எங் களுக்கு விளங்குது. எப்பிடியும் தொடர்த்து நடத்திறதுக்கு தாங்கள் உதவி செய்யிறம்

வெடிப் புளுகர்
வீட்டுக்காரர்: அண்ணை நேற் றைக்கும் பொடியள் பிரட் lg. G. Irr i l-n lă o art b. நூ ற் றை ம் பதுக்கு மேலை முடிஞ்சு தாம். உவங்கள் மறைக்கிருங்கள்.
முன் வீட்டுக்காரர்: ஏனப்பா வில்லங்கப்படுழுய். எங் கடை வீடுகளுக்கு முன்னலை யும் ராத்திரி தாட்டுக்கிடக் காம். கணக்குப் பிழைக்கா மல் பாத்து எண்ணு மன்.
வீட்டுக்காரர் என்ன? எங் கடை வீட்டுக்கு முன்ன லையோ? இஞ்சை என்ன கோதாரிக்கு வைச்சவங்க ளாம்? அதை எடுப்பிக்க வேணும்.
ரவீந்திரனின் வார்த்தை கள் அவர்களுக்கு நியாயமாகப் பட்டிருக்க வேண்டும். அமைதி யாக விடைபெற்றுக் கொண்டு வெளியேறுகின்றனர்.
தங்களைப் போன்ற தொழி லாளர்களின் பாதிப்புக்களுக் கெதிராக துணிச்சலுடன் நிற் கும் ரவீந்திரனின் உணர்வு அருளுவுக்கும் ஏனய தொழிலா ளர்களுக்கும் மேலும் உற்சா கத்தைக் கொடுக்கிறது.
குறிக்கப்பட்ட நாட்கள் நகர்ந்தபின்னும் கொள்ளை போன பொருட்கள் திருப்பிக் கொடுபடவில்லை.
அன்றைய காலைத்தினசரி யில் மீண்டும் உண்ணுவிரதம் பற்றிய செய்தி இடம்பெறு கிறது. ...
இராணுவத்தினரால் எரித் துத் தகர்க்கப்பட்ட அந்த நிறு
ளர்கள்
வனத்தின் மூன்ல்ை இளைஞர் களின் கொள்ளைகளினுல் மூடப் பட்டு வேலை இழந்த தொழிலா சுலோக அட்டிை. களுடன் அமர்ந்திருக்கின்றனர். ஜன நடமாட்டம் அதிகமுள்ள அந்தப் பிரதான வீதிகள் சந் திக்குமிடத்தில், சுலோக அட் டைகளுடன் பெருந் தொகை
யான தொழிலாளர்கள் அமர்ந்
திருந்த அந்தக் காட்சி. எல் லோரது மனங்களையும் ஈர்க் கிறது.
மதியவேளைக்குப் பின் உண் ணுவிரதத்தை முடித்துக் கொண்டு ஊர்வலம் புறப்படு கிறது. கோஷங்கள் முழங்கு கிறது. *
"மக்களின் உடமைகளில். கை வையாதே"
விடுதலை இயக்கத்தில். கொள்ளையர் கும்பலா?"
கொள்ளையடித்த பொருள் களை. திருப்பிக்கொடு”
யாழ்நகரின் வீதிகளின் இரு மருங்கும் பெருந் தொகையான மக்கள் கூடிநின்று பார்க்க அதன் நடுவே தொழிலாளர்கள் உணர்ச்சிவசமாக கோஷங்களை எழுப்பியபடி முன்னேறுகின்ற னர்,
ஊர்வலத்தின் முன்ஞல் ரவீந்திரனும், அருளும் உறுதி шта6ф கோஷமெழுப்பியபடி செல்கின்றனர். எதிரிக்கு எதி ராக மக்களை அணிதிரட்டுவ தற்கு மட்டுமல்ல, போரட்டத் திசைகளை நேர்ப்படுத்திச் சீராக் கவும் அதுபோன்ற ஊர்வலங் கள் தொடர்கினறன. மக்கள் மேன்மேலும் விழிப்படைகின் றனர்.
O

Page 8
O இரத்தச் சுவடுகளும்
நிர்வாணக் கோலங்களும்
Dலையக்த்தில்
பொங்கிவரும் வெறியாட்ட நிகழ்வுகள் புதிய உருவெடுத்து ஹொலிரூட்டில் (Holy Food தாண்டவமாடுகின்றன:
நடப்பதற்கு பாதமிருந்தும் முழங்கால் நடையுடன் முதுகெல்லாம் உதைகளுமாய் வெறியாட்ட நிகழ்வுகள் இதோ புதிய உருவத்தில் ஹொலிரூட்டில் தாண்டவமாடுகின்றன
பாதைகளிலும் வீதிகளிலும் நிர்வாணக் கோலங்களில் எமது பயணங்கள் தொடர்கின்றனவே உள்ளங்கள்
கனக்கின்றன.
அடே மிருகங்களே! எம் தோழமை உயிர்களை உங்கள் இஸ்டப்படி உதைக்க கால்களைக் கொடுத்தது ?ח"חוש
0 சிவ. இராஜேந்திரன்
உழைக்கின்ற
வர்க்க மடா!
வெறியாட்ட மிருகங்களே உங்களுக்கு உண்ண
உடுக்க உயிரோடு இருக்க ஒட ஜீப்பும் உதைக்கக் வலுவும் கொடுத்தது யார்?
உதையுங்கள் உதையுங்கள்
குருராஜ வழியினிலே நாளை மலரும் மலையக ரோஜாக்கள் மடியாத முள்ளுடன் நிமிர்ந்து אי உங்கள் கருவறுக்கும் நாட்கள் நெருங்கி வருகின்றன.
உதைகளை தொடர்ந்து உயர்ந்த கரங்கள் ஓயாது ஓயாது
உம் கூட்டம் ஒழியும் மட்டும் ஓயாது!
Yr

OOOOOOOOOD
தமிழ் மூலம் விஞ்ஞான உயர் கல்வி
சில பிரச்சனைகள்
O S. SauGssyb
LIல சமயங்களில் நியாயமான கேள்விகளும் ஐயங்களும் கருத்து முரண்பாடுகளும் எழுப்பப்படும்போது அவை பகைமை யான நோக்கம் காரணமாக எழுப்பப்படுவதாகக் கருதப்படுகின் றன. விமர்சனங்களும் மாற்றுக் கண்ணுேட்டங்களின் கார ணங்களை விளங்கவும் விளக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளும் மாற்றுக் கண்ணுேட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரமாகக் காணப்படுகின்றன. இக்கட்டுரையின் நோக்கம் தமிழில் விஞ் ஞான உயர் கல்வி தேவையா இல்லையா என்ற கேள்வியையோ சாத்தியமா இல்லையா என்ற கேள்வியையோ பற்றியது அல்ல, இவ்விஷயத்தில் என் நிலைப்பாடு தாய்மொழி மூலமான கல்வி யின் சாத்தியப்பாட்டையும் அவசியத்தையும் வலியுறுத்தும் ஒன்று என்பதை மீண்டும் வலியுறுத்திக் கொண்டு தமிழ்மூலம் விஞ் ஞான உயர்கல்வி பற்றிய எதிர்பார்ப்புக்கள் ஏன் நிறைவேற வில்லை என்பதையும் சம்பந்தப்பட்ட சில அடிப்படையான பிரச் சனைகளையும் சிறிது அவதானிக்கலாம் என எண்ணுகிறேன். தீர்வு கள் இறுதி ஆராய்வில், நடைமுறை சார்ந்தன என்பதால் சில கருத்துக்களை மிகவும் மேலோட்டமாகவே வைப்பதுடன் நிறுத் திக்கொள்கிறேன்.
விஞ்ஞானம் சமுதாய நடைமுறை சார்ந்தது. மொழியும் அவ்வாறே. ஒரு மொழிமூலம் ஒரு விஞ்ஞானத் துறையில் அறி வைப் பெறவும் வளர்க்கவும் முடியுமா என்பது அந்த மொழிக் கும் அதன் மூலம் உணரவும் உணர்த்தவும் முயலும் விஷயங் கட்குமான தொடர்பையும் பொறுத்தது. ஒரு மொழி ஒரு சமு தாயத் தேவையை நிறைவேற்ற வ்ேண்டிய தேவை ஏற்ப்டும் போது அது மாறவும் மாற்றத்தின் மூலம் வளரவும் செய்கிறது: அம் மாற்றம் மறுக்கப்படும்போது வளர்ச்சி மறுக்கப்படுகிறது. எனவே அச் சமுதாயத் தேவையை நிறைவேற்றும் சாத்தியக்
13

Page 9
கூறுகள் மறுக்கப்படுகின்றன; மொழி சமுதாய வளர்ச்சிக்குத் ğ560)l— unumrés göfibé6ôApği; எனவே அது ஒதுக்கப்படும் வாய்ப்பு உருவாகிறது.
தமிழின் தொன்மை அதன் பெருமைகளுள் ஒன்று. அதன் அடிப்படையான அமைப்பு மாருமல் அது நீண்டகாலம் நிலைத் திருப்பது அதன் பெருமையே. எனினும் அதுவே தமிழில் ஏற் பட்ட சகல மாற்றங்களையும் மூடி மறைக்கவும் அடையாளங் காணப்பட்ட சகல மாற்றங்களையும் மொழியின்மீது திணிக்கப் பட்ட மாசுகள் என்று ( பாசாங்காகவேனும் ) ஒதுக்கமுனையவும் பெரு ஆயுதமாகும் போது அதுவே தமிழ்யொழியைப் பலவீனப் படுத்தவும் நாளடைவில் இறந்த மொழியாக்கவும் கருவியாகி விடுகிறது. தமிழ்மூலம் ஆற்றமுடியாத தெதுவும் தமிழனுக்கு அவசியமில்லை என்ற விதமான தனித்தமிழ் வாதங்கள் இன்று எடுபடுவதில்லை. தமிழனுக்கு நவீன சமுதாயம் தேவை, தொழில் முறை தேவை, மருத்துவம் தேவை, விஞ்ஞான அறிவு தேவை. தமிழ் இத் ைேவகட்கு எவ்வாறு ஈடுகொடுக்கும் என்பதே கேள்வி. தமிழில் விஞ்ஞான உயர் கல்வியின் வளர்ச்சியின் மந்தமான போக்கிற்கு தமிழில் விஞ்ஞானப் போதனை பற்றிய மொழிக் கொள்கையின் பங்கு முக்கியமானது என்பது என் கருத்து. ஆயினும் இக்கொள்கை சாத்தியமாக நமது சமுதாயச் சூழலே காரணமாக நின்றது என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். தமிழ் மூலம் விஞ்ஞானக் கல்வி பற்றிய தவருன அணுகுமுறையின் விளைவுகள் முற்ருக உணரப்படவில்லையெணி னும் உணர்த்த இயலாதவையோ திருத்தமுடியாதவையோ அல்ல. அந்தத் தவருண அணுகுமுறையைச் சாத்தியமாக்கும் சூழல் அதி லும் அதிகளவு முக்கியமானது. என்பதை மனத்திற் கொண்டு தமிழ்மூலம் விஞ்ஞானக் கல்வியின் வளர்ச்சியையொட்டி வளாந்த பிரச்சனைகளைக் கவனிப்போம்.
தாய்மொழி மூலம் நவீன கல்விபற்றி இந்தியத் துணைக்கண் டத்தில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி கொலனித்துவ விரோதப் போராட்டத்தின் வளர்ச்சியோடு ஒட்டியது. ஆயினும் தேசிய விடுதலைப் போராட்டங்களின் வளர்ச்சியையும் வெற்றிகளையும் அடுத்தே தாய்மொழி மூலம் நவீன கல்வி முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. தேசிய சுதந்திரத்தின் பின்பு தான் தாய்மொழி மூலம் விஞ்ஞானத் துறையில் கல்வி பயிற்றுவது நடைமுறையில் ஒரு முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. விஞ்ஞானத்தைத் தமிழ் மூலம் கற்பிக்கவும் தமிழில் விஞ்ஞானக் கருத்துக்களைப் பரப்பவு மான முயற்சிகள் தேசிய சுதந்திரத்திற்கும் முற்பட்ட நாட்களி லேயே ஆரம்பித்தமையும் அத்தேவை அதற்கு முன்னமே வலி
14

யுறுத்தப்பட்டமையும் ஒரு சமுதாயத் தேவை சரியாக அடை யாளங் காணப்பட்டதையே குறிக்கின்றன. தாய்மொழிக் கல்வி யின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்ட சூழலில் தாய்மொழி மூலம் கற்பிப்பதன் அவசியம் பற்றிய உற்சாகத்துக்கு ஈடான அளவில் தாய்மொழியின் சமகால நிலைக்கும் அது முகங்கொடுக்க முனையும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் முயற்சி அமையவில்லை.
தமிழ் என்பது நூற்ருண்டுகள் முன்பு இலக்கண நூல்கள் வரையறுத்க ஒரு விறைப்பான மொழிவடிவம் எனும் கண்ணுேட் டமும் தமிழின் வளர்ச்சியை அதன் தூய்மையின் பேரால் பழமை பேணும் போக்கின் வரையறைகட்குள் சாதிக்க முனையும் குறுகிய பார்வையும் தமிழ்க் கல்வித்துறையில் செலுத்திய ஆதிக்கம் தற் செயலானதல்ல. தமிழிற் கலைச்சொற்களைப் புனைவதில் "தனித் தமிழ் வாதம்” கணிசமான காலத்திற்குச் செல்வாக்குப் பெற் றிருந்தது. பின்னைய காலங்களிலும் தீவிர மரபுவாதிகளது பிடி முற்ருக நீங்கியது என்று கூறமுடியாது. தமிழ் நாட்டி லும் இலங்கையிலும் விஞ்ஞானத் துறையில் கலைச்சொல்லாக்கம் சுயாதீனமாக நடந்ததாலும் மொழி பற்றிய அணுகுமுறை யிலிருந்த வேறுபாடுகள் விஞ்ஞானத் தமிழ்ப் பிரயோகங்களை அன்(mட மொழி வழக்கினின்று பிரிந்த ஒரு மொழிக்குழாமாக அன்றி இரண்டு மொழிக் குழாங்களாகப் பிரிக்கும் அபாயம் இன்னும் தொடர்கிறது. விஞ்ஞானக் கல்விக்குரிய மொழிப் பிர யோகம் ஒரு புதிய சமஸ்கிருதமாக (வடமொழி என்ற கருத்தி லன்றிப் புனையப்பட்ட செயற்கைமொழி என்ற பொருளில்) உரு வாகியதில் கலைச் சொற் பிரயோகத்தில் தனித் தமிழ் வாதத்தின் பங்கு பெரிதும் முக்கியமானது எனினும் முழுப் பழியும் அங்கேயே சுமத்தப்படல் தகாது.
நமது சமுதாயக்கிற்கு நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்ப மும் அயல் மொழி பேசுவோர் வாயிலாகவே வந்தன என்பதோடு அவற்றின் பாவனை இன்னுங் கூட ஆங்கிலம் பேசுவோர் ஆதிக் கத்திலேயே உள்ளது என்பதோடு அவை ஆங்கில மொழி மூலமே நடைமுறையில் செயற்படுத்தப்படுகின்றன. தமிழிற் கற்கப்படும் விஞ்ஞானத் தொழில் நுட்பக் கலைச்சொற்கள் பரீட்சையில் தேற வும் பல்கலைக் கழகம் புகவும் கல்வி புகட்டவுமே முக்கியமாகப் பயன்படுகின்றன. விஞ்ஞான தொழில் நுட்ப நடைமுறையின் பிர யோகம் தமிழ் மூலம் நிகழும். சில சூழ்நிலைகளில் அதிகாரபூர் வமான கலைச்சொற்களின் பிரயோகம் பெருமளவுக்கு ஆங்கிலச் சொற்களதும் வேறு அன்ருட வழக்கிலுள்ள சொற்களதும் பிர யோகத்துக்கு வழி விட்டு ஒதுங்கிவிடுகிறது.
15

Page 10
தமிழ் மூலம் அடிப்படையான விஞ்ஞானக் கல்வி கற்போரும் தொழில் நடைமுறை தொடர்பான நிலைகளை அனுசரித்து காலக் கிரமத்தில் ஆங்கிலத்திற்கு மாறுவதை நாம் காண முடிகிறது, தமி ழில் புத்தகங்கள் போதாமை, தமிழ்நாட்டுத் தமிழ் நூல்கட்கும், இலங்கை நூல்களுக்குமிடையிலான கலைச்சொல் வேறுபாடுகள், அமிழில் உயர் கல்வியும் ஆராய்ச்சியும் செய்வதில் நடைமுறைப் பிரச்சினைகள், சர்வதேச அரங்கில் விஞ்ஞானத் துறைகளின் அதி துரிதமான வளர்ச்சி ஆகியன தமிழ் பேசும் விஞ்ஞானிகளை ஆங் கிலத்திலேயே தம் விஞ்ஞான நடைமுறைகளை வைத்திருக்குமாறு நிர்ப்பந்திக்கின்றன. தமிழ் மூலம் விஞ்ஞானக் கல்வி நடைமுறை யிற் பலவீனமான துறைகளை நடைமுறை சாராத ஒரு கிளை மொழி மூலம் கற்பிக்கும் நிலையிலேயே உள்ளது! தமிழ் மூலம் விஞ்ஞானக் கல்வி வலிமை பெற்று வாழ்வதற்கு விஞ்ஞான நடை சிேறு பரவலாவதும் வலிவு பெறுவதும் அவசியம். நமது பின் சிங்கிய சமுதாயச் சூழல் தமிழ் மூலம் விஞ்ஞான உயர்கல்வி சாத்தியமில்லை என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லலாம். ஆயினும் நாம் அவதானிக்க வேண்டிய உண்மை யாதெனின், நம் சமுதாயச் சூழலின் பின்தங்கிய நிலையினின்று விடுபடுவதும் விஞ் ஞான-தொழில் நுட்பக் கல்வியினதும் நடைமுறைகளினதும் பரவலாக்கலும் முற்ருகவே பிரிக்க முடியாதவை சமுதாயத்தின் நவீனமயமாக்கலின்றி மொழியின் நவீனமயமாதல் சாத் தி ய மில்லை என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அவ்வாழுயின் தமிழ் மூலம் உயர் விஞ்ஞானக் கல்விக்கான முயற்சிகளும், விஞ்ஞானத் தைப் பரவலாக்கலும் புதிய கலைச்சொல்லாக்கமும் பயனற்றவை யாகி விடுகின்றனவா? இல்லை, ஆயினும் தரப்பட்ட சமகால சமு 'ச் குழலிலும் உலக நிலையிலும் தமிழை விஞ்ஞானத் துறை யில் ஆங்கிலம் போன்ற உலக மொழியின் தரத்துக்கு உயர்த்த எடுக்கும் முயற்சிகள் பெரும் பயனளிக்கப் போவதில்லை, தமிழில் உயர் விஞ்ஞானக் கல்வி பற்றிய முயற்சிகள் சில அடிப்படையான எளிய பிரச்சினைகள் பற்றிக் கூடிய அவதானம் செலுத்துவது பெருந்தொகையான புதிய கலச் சொற்களின் புனைவை விட அதி கம் பயனுள்ளது. தமிழரிடையே விஞ்ஞானத்தினதும் விஞ் ஞான முறையினதும் பரவலாக்கலும். தமிழ்ப் பேசும் சமுதாயத் தின் பன்முக நவீனமயமாத லும் தமிழின் வளர்ச்சியினின்று பிரிக்க முடியாதவை.
தமிழ் மூலம் விஞ்ஞானக் கல்வி தொடர்பான கடந்த கால அலுகு முறையில் உள்ள சில போக்குகளுடன் என் கரு த் து முரண்பாடுகளைக் கூறலாமென நினைக்கிறேன். அயல் மொழிச் சொற்களைத் தமிழ்ப் படுத்துவதில் சொற்கூறுகளை இயன்றவரை, கருத்தின் அடிப்படையில் மொழி மாற்றம் செய்வது எப்போதுமே
16

0 நண்பருக்கு.
உங்களை மலைபோல் உயிருக்குச் சேதம் நம்பியிருந்தோம் எம் வாழ்க்கையும் நாசம் நாங்கள், இரவிரவாய் விழித்திருந்தீர் மலைகளும் சரிந்தன, நம்பிய எங்களுக்காய் மனங்களும் ஒடிந்தன உறங்கியும் நாங்கள் எங்கள் தோட்டத்து உங்களுக்காக அழுதோம் வேலிகளாய் ஆறலைத்தார் நின்றிருந்தீர் நீவிர் உங்கள் பெயரால் இறுமாந்திருந்தோம் நாம், ஒருசிலர் எங்களை வேலிகளே இன்று அல்லற்படுகின்ருேம் முரண்பட்டுப் போனதால் அகதிகளானுேம்,
O சேரியூரான்
i
நல்ல பயனை அளிப்பதில்லை. பல சமயங்களில் அயல்மொழிச் சொற் களை அப்படியே அல்லது வேறு சிக்கல்கள் ஏற்படா வண்ணம் தமிழ்ப்படுத்துவது பயனுள்ளது. (இது தமிழில் சொல்வளத்துக்கு ஊட்டம் அளிக்கும் எனினும் இது குருட்டுத்தனமாகப் பின்பற் றக் கூடிய ஒரு முறை அல்ல.)
அன்ரு. மொழி வழக்கில் உள்ள அயல்மொழிச் சொற்கள் மட்டுமன்றிக் கொச்சை என்று கருதப்படும் பல பதங்களும் தமி ழின் புதிய சொல்வளத்தின் ஒரு பகுதியாகுவதற்குக் கருதப்பட வேண்டும். பல சமயங்களில் ஒத்த ஆனல் நுண்ணிய வேறுபா டுடைய பொருட்களைக் குறிக்க இவ்வா?ன புதிய சொற்கள் உத வக் கூடும். அன்முட வழக்கில் ஏறத்தாழ ஒன்றையே குறிப்பி னும் விஞ்ஞானப் பயன்பாட்டில் நுண்ணிய (ஆனல் புறக்கணிகக முடியாத) வேறுபாடுகளை இவ்வாறன சொற்கள் தெளிவாக வேறுபடுத்தி உணர்த்த இயலுமாயிருக்கும்.
அயல் மொழிகளது கலைச்சொல்லாக்க அனுபவம் கணிப்பில் எடுக்கப்பட வேண்டும். விஞ்ஞானத் துறைகள் பலவற்றில் இன்று முக்கியமான கலைச்சொற்கள் சர்வதேச அடிப்படையில் அமைகின் றன. இவற்றை விஞ்ஞானத்தில் பயன்படும் தமிழினின்று விலக்கு வது அசாத்தியம். இவற்றைத் தமிழ்ப்படுத்தும் போது தமிழில் ஓசை வேறுபாடுகள் தொடர்பான பிரச்சினை எழுகிறது. தமிழில் k - g, t - ன் போன்ற ஓசை வேறுபாடுகளை எழுத்தில் தெளிவாகக்
17

Page 11
காட்டவேண்டிய தேவையை மேலும் நீண்ட காலத்திற்குத் தட் டிக் கழிக்க இயலாது. விஞ்ஞானத்திற் பயன்படும் சர்வதேசச் சொற்களைக் கையாளும் பிரச்சினைக்குத் தமிழில் பாரிய சீர்திருத்தம் அவசியமாகலாம்.
அயல் மொழிச் சொற்கள் (விஞ்ஞானத்திற் பயன்படும்) தமி ழில் புகுவது பற்றிய ஆட்சேபனைகளில் மிகவும் எதிர்பார்க்கக் கூடிய ஒன்று: இவ்வாறன சொற்களின் பெருந் தொகை யிலான வருகை தமிழில் அயல்மொழிச் சொற்களைப் பெரும் பான்மையினவாக்கித் தமிழின் தன்மையே சிதைந்துவிடும் என்பது. இது மிகவும் தவருன ஒரு வாதம். தமிழில் ஏற்கெனவே உள்ள பல அயல்மொழிச் சொற்களை தமிழினின்று வேறுபடுத்த முடியா தளவு தமிழில் ஒரு பகுதியாகிவிட்டன. புதியவையும் காலப் போக்கில் தமிழாகிவிடுவது எதிர்பார்க்கக் கூடிய ஒன்று. அதை விட முக்கியமாக, விஞ்ஞானத் துறையில் பயன்படும் சொற்கள் தொகையில் அதிகமாயினும் மொத்த நாளாந்தப் பிரயோகத் தில் மிகவும் குறைவானவை. இவற்றுட் பெருவாரியானவை மிக மிகக் குறைவாகவே பயன்படுவன. குறிப்பிட்ட விசேடமான துறைகளில் மிகச் சிலரால் விசேடமான சூழ்நிலைகளில் பயன் படுத்தப்படும் கலைச்சொற்கள் பல உள்ளன. இவை மொழியின் விளிம்பில் நின்று இயங்கும் சொற்கள். சமுதாய வளர்ச்சிப் போக்கில் சில சமயம் இவை மூலவடிவிலோ அல்லது சுருக்கப் பட்ட வடிவிலோ மொழியுட் புகமுடியும். எனவே சர்வதேசச் சொற்களைத் தமிழில் அப்படியே புகுத்துவதும் அயல் மொழிச் சொற்களை ஏற்றவாறு தமிழில் புகுத்துவதும் மொழியில் உட னடியான விகாரம் எதையுமே புகுத்தப் போவது இல்லை. இச் சொற்களின் நிராகரிப்பு தமிழ் மூலம் விஞ்ஞானக் கல்வியை மேலும் சிரமமாக்குவதன் மூலம் தமிழில் கற்ற விஞ்ஞானிகளைத் தொடர்ந்தும் தமிழிற் செயற்பட முடியாது ஆங்கிலம் போன்ற மொழியை நோக்கி உந்திவிடுவது நிச்சயம். ஏற்கெனவே விஞ் ஞானிகட்கு ஆங்கில மொழியில் செயற்படுவதன் கவர்ச்சி அதிக மாக உள்ளது என்பதும் கவனத்திற்குரியது.
தமிழ் வசன அமைப்பும் விஞ்ஞானம் கணிதம் ஆகிய துறை களில் உள்ள குறியீட்டு முறைகளும் முற்ருக உடன்பாடானவை அல்ல ஆயினும் அவற்றை நாம் தயக்கமின்றிப் பயன்படுத்து கிருேம். அதே சமயம் கணிதம் விஞ்ஞானம் போன்ற துறை களினதும், தொழில் நுட்பம், வணிகம் போன்ற துறைகளினதும் தேவைகளையொட்டி மொழியில் முறையான, திட்டமிட்ட மாற் றங்களைப் புகுத்துவது பற்றிச் சிந்திக்க மறுக்கிருேம். ஆங்கிலத் தின் மீது சமுதாயத்தின் நவீனமடைதல் பல மாற்றங்களைத்

திணித்தது. அதன் விளைவாக ஆங்கிலமொழி வளரவும் வலிமை பெறவும் முடியுமாயிற்று. தமிழில் இவ்வாருண மாற்றங்கள் ஏற் படாமைக்கு ஒரு காரணம் தமிழ் பேசும் சமுதாயங்களில் ஏற் பட்ட நவீன விஞ்ஞான / தொழில் நுட்ப / வணிகத் தாக்கங்கள் அயல் ஆதிக்கத்தாலேயே புகுந்தமை எனலாம்.
கலைச்சொற்களின் பிரச்சனையில் விசேடமான சொற்களைவிட பரவலான உபயோகத்தில் உள்ள சொற்கள் முக்கியமானவை. விஞ்ஞானம் அளவையியலினதும் ( Logic) மெய்யியலினதும் (Philosophy ) ஆதாரமின்றி வளரமுடியாது. எனவே அளவை யியலிலும் மெய்யியலிலும் பரவலாகப் பயன்படும் கருதுகோள் களை ( Concepts) குறிக்கும் சொற்கள் மிகவும் தெளிவாகவும் முரண்பாடின்றியும் நிர்ணயிக்கப்படுவதும் அவை பிற அறிவியற் துறைகளிலும் உடன்பாடான முறையில் பயன்படுத்தப்படுவதும் மிகவும் பயனுள்ளது. கலைச்சொல்லாக்கத்தில், முக்கியமாகப் பரவ லாகப் பயன்படும் சொற்களின் விடயத்தில், அளவையியல், மெய்யியல் ஆகியதுறைகள் மையமானவையாகக் கருதப்பட்டு அவற்றுடன் உடன்பாடான முறையிலும் துறைக்குத் துறை முரண்பாடற்ற முறையிலும் புதிய கலைச் சொற்கள் புனையப்படு வது விரும்பத்தக்கது.
சொற்களின் எளிமை, பேச்சு வழக்குடன் பொருந்தும் தன்மை, இலகுவில் பொருளை உணர்த்தக் கூடிய தன்மை ஆகி யன பரவலாகப் பயன்படுத்தப்ப்டும் சொற்களின் விடயத்தில் வலியுறுத்தப்படும் அதே சமயம் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் பயன்படும் சொற்கள் ( குறிப்பாகப் பரவலான பயன்பாட்டுக் குரியன) முடிந்த வரை ஒத்து அமைவதும் மிகவும் அவசியம்,
இவையெல்லாம் மொழி நிர்மாணம் தொடர்பான விஷயங்க ளாயினும் தமிழ் பேசும் சமுதாயத்தின் நடைமுறை விஞ்ஞானத் துடன் பரிச்சயமில்லாமல் இருக்கும்வரை புதிய கலைச்சொற்கள் எல்லாம் வாழும் மொழிக்கு அந் நியமானவையாகத் தொடர்வது தவிர்க்க இயலாதது. தொழிலுக்கான விஞ்ஞானக் கல்வியும் விஞ்ஞானத் தகவல்களும் மட்டுமன்றி விஞ்ஞான ரீதியான சிந்தனை பும் அணுகுமுறையும் பரவலாக்கப்படுவதும் சமுதாயத்தின் நவீன மயமாதலும் பொருளாதார வளர்ச்சியும், தமிழின் நவீனமயமா
தலுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதன. "பஞ்ச பூதச் செயல்களின் நுட்பம். சொல்லும் திறமை தமிழ் மொழிக்கு உண்டு" . கைகால்கள் கட்டிப்போடப்பட்ட பழமைவாதத்
தமிழ்மொழிக்கு அல்ல - கட்டவிழ்ந்த, சுதந்திரமான ஜீவனுள்ள தமிழ்மொழிக்கு நிச்சயமாக உண்டு.
O 19

Page 12
39 சொர்க்க
பூமி
9 நயினைகுல
சிTமது பூமி சொர்க்க பூமியாம். எமது பெற்றேருக்கே அதன் அர்த்தம் புரியவில்லை.
எங்கள் பூமியில் தொடரும் தேடுதல் வேள்வியில் தீராது பலியாகும் பலிக்கடாக்களாக
நாங்கள் மரணத்தின் சாட்டையால் விரட்டப்படுகிருேம்
இங்கே,
இளஞர்களின் வேலைவாய்ப்புகள் வெறும் கனவுகளுடனேயே நின்றுவிட ஒட்டிய வயிறுடன் ஓயாத போராட்டம் தொடர்கதை எழுதுகின்றன.
அந்த உல்லாச வெறியர்களின் இரவுக் கேளிக்கைகளில் எத்தனை இளசுகளின்
ஏதோ ஒரு இழப்பின் முகாரிகள் இந்த சொர்க்க பூமியின் தேசியத்திற்கு இசைமீட்டுகின்றன.
அப்பாவி இளைஞர்களில் வலிந்து ஒட்டப்பட்ட சிததரவதை போஸ்டர்களால் கறைபடிந்த சிறைக் கூடங்களே வெட்கித் தலைகுணிகின்றன. எமது நாடு சொர்க்க பூமியாம்.
துப்பாக்கி வேட்டுகளும் பீரங்கி ஓசைகளும், அப்பாவி உயிர்களுக்கு அழைப்பு விடுக்க அகதிகளாக அணரிவகுக்கும் தேசியங்கள் அதிகரிக்க எமது நாடு சொர்க்க பூமியாம்.
சொர்க்கத்தில் இருப்போர்க்கு நரகத்தைப்பற்றி சிந்திக்க நேரமில்லை நரகத்தில் இருப்போர்க்கு
உள்ளாடைகள் சதா சொர்க்கத்தின் சிந்தனையே நெகிழ்ந்து கொண்டிருக்கின்றன. பெய்துகொண்டிருக்கையில்
மழைநீர் எமது நாடு துளி, சொர்க்க பூமியாம். வெள்ளமாகிவிட்டால் இங்கே அதுவே ஒவ்வொரு வீட்டிலும் காட்டாறு.
ly
20

சிறுகதை
வாழ்க்கைப் பாதையில்.
O சி. எல். பிரேமினி
Iனேரம்மியமான அந்தக் காலைப்பொழுது (3au&Tu? di) அடிக்கடி காற்றுப் போய்த் தொல்லை கொடுக்கும் சைக்கிளை உருட்டியவாறு குச்சொழுங்கை களினூடாக நடந்துகொண்டி ருந்தவனை 'தம்பி சாந்தன்" என்ற குரல் தடுத்து நிறுத்தி Liġi
காவி படிந்த தன் பற்களைக் காட்டிச் சிரித்தபடி ஜோசப் வேகமாக சாந்தனை நெருங்கிக் கொண்டிருந்தார்.
"என்ன பெரியவரே வேளை யோடை வெளிக்கிட்டிட் цLш6іт?”
என்று கேட்டபடி பதிலுக் குத் தானும் சிரித்தான்.
'அன்ரன் தம்பியின்ரை அலுவலாத்தான் கடையடிப் பக்கத்திலையிருந்தும் நாலைஞ்சு பேர் வாறனெண்டவை . இஞ் சைதாரும் சைக்கிளை. சந்திக் கடையிலை காத்தையும் அடிச்சுக் கொண்டு வாறன்"
"உங்களுக்கேன் சிரமம்”*
வாத்சல்யம் நிறைந்த இந்த வார்த்தைகளில் பொதிந்திருந்த உண்மையான பாசத்தை மீற மாட்டாதவளுக கூறியபோதும்
சைக்கிளை வலிந்து பெற்று உருட்டிக் கொண்டு செல்லும் அவரையே உற்று நோக்கியபடி நின்றன்.
உருண்டு திரண்ட கறுத்த மேணி. அகன்ற தோள்கள். நடையில் மிடுக்கு நிறைந்த கம் பீரமான தோற்றத்துடன் அவர் போகும்போது தொழிலாள வர்க்கத்தின் தலைவனைப் போல். மேல் மட்ட வர்க்கமென்று தம் மைப் பிதற்றிக் கொள்பவர் களிடமிருந்து எத்தனையோ துயர அனுபவங்களை எதிர் கொண்டு அந்த அடிகளின் வேதனைப் பழுவில். தங்களை யெல்லாம் பாதுகாக்கப் பதி லடி கொடுத்துச் "சண்டியன்" என்று நிலை பெற்ற பட்டப்பெய ரோடு வாழும் ஜோசப்பின் உள் உணர்வுகளின் தாக்தங் களை மிக ஆழமாகப் புரிந்து வைத்திருந்தான் சாந்தன்,
அன்ருெருநாள் சமூகசேவை நிறுவன மொன்றுடன் இணைந்து சாந்தனும் இவர்களிடம் வந்த போது "கலைவாணி படிப்பகம்" என்னும் பெயரில் அரைகுறை யாகக் கட்டப்பட்டிருந்த படிப் பகத்தினுள் அவர்களை அழைத் துச் சென்றபோது இவர்களை நோக்கி அங்கு இருந்தவர்களைக்"
21

Page 13
கண்டதும் அவர்களது கண்க னில் வெறுப்புக் கலந்த ஒரு பார்வை ஊடுருவி நின்றதை மிகத் துல்லியமாக அவதானிக் கக் கூடியதாக இருந்தது.
படிப்பகத்தின் வெளி முன் றலில் இடுப்பில் குழந்தைகளைச் சுமந்த தாய்மார்களும், அரை நிர்வாணத்துடன் சிறுவர் சிறுமி களும், இளைஞர்களும், முதிய வர்களுமாக ஐநூறுக்கும் அதிக மானேர் கூடியிருந்தனர். எதிர் பாத்திராத ஏகப்பட்ட கூட்டம். சாந்தனுடன் சென்ற ஏனையவர் கள் இவர்களின் நடை உடை பாவனைகளைக் கண்டு முகம்சுழித் தனர் அவர்களிற் Lu avrif வெறும் பேரும் புகழும் வேண் டிப் பொழுது போக்கிற்காக நிறுவனத்தில் இணைந்துகொண் டவர்கள் என்பதில் யாருக்குமே சந்தேகமில்லை. அன்ருடம் உடல் வருத்தி உழைத்தும் வாழமுடி யாத நிலையிலுள்ள அந்த ஏழை மக்களை முன்னேற்றுகின்ருேம் என்ற நோக்கில் அரச மட்டத்தி லிருந்தும், பொதுநிறுவனங்கள், அயல்நாட்டு நிறுவனங்களிட மிருந்தும் நிதியுதவிகளைப் பெற்று சிறு உதவிகளைச் செய்து வந் தனர்.
அங்கு குழுமியிருந்த ஏழ்மை இருள் அப்பிய அவர்களின்
தோற்றம் சாந்தனின் நெஞ்சை
நெகிழ வைத்தது. ஆரம்பத்தில் அந்த் நிறுவனத்தில் இணைந்து செயல்படத் தொடங்கிய அவன் அந்தக் கல்மிஷமற்ற மக்களுடன் பழகுகின்ற ஒவ்வொரு நிமிஷ மும் அவர்களிடம் தன்னைப்
22
பறிகொடுத்தான் அவர்களின் நல்வாழ்விற்காகவே தன்னை அற் பணிக்க முற்பட்டபோதுதான் அந்த உதவிகளாலும் சீர்திருத் தங்களாலும் மட்டுமல்ல சகல இன்னல்களையும் களையக்கூடிய சமத்துவமான ஒரு சமுதாயத் தைப் படைக்கவேண்டும் என்ற உணர்வு அவனிடம் வளர்ந்து வந்தது.
நிறுவனம் முதன் முதலாக நடாத்திய அந்தக் கூட்டத்தில் ஜோசப் ஆவேசத்துடன் எழுந்து நின்று ஆக்ரோ ஷமாகப் பேசிய போது கேட்டுக் கொண்டிருந் தோர் இரத்த நாளங்களெல் லாம் புடைத்து உணர்வுக்கலங் கள் புல்லரித்துக் குத்திட்டு நிற்க அப்படியே அசந்துபோய். அந்தச் சில கணத்துள் சுடலை ஞானம் பெற்றவர்கள் போல் அங்கு வந்திருந்தவர்களெல்லாம் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
"...உங்களைப் போன்ற எத் தனை நிறுவனங்கள், இயக்கங்கள் சங்கங்கள் எங்களிடம் வந்தன. உங்களுக்காக உயிரைக்கொடுப் போம் என்ருர்கள். சிறுவர் பாடசாலைகளை அமைத்துத் தரு வோம்.பெண்களுக்கு பயிற்சி நிலையங்களை ஆரம்பிப்போம். வைத்தியசாலைகளை நிறுவு வோம். தெருவீதிகளைச் செப்ப னிடுவோம் குடிசைகளை அழித்து கல்வீடுகள் கட்ட உதவுவோம். உங்களது கஷ்டங்களையும் துன் பங்களையும் விளங்கிக் கொண்ட
எங்களைப்போல வேறு யாரா
லுமே உங்களுக்கு உறு துணை

யாக இருக்க முடியாது. உங் கள் துன்ப துயரங்களில் பங் கெடுத்து உங்களை முன்னேற்று வத்ே எங்கள் கடமை. இப்படி
உதட்டளவில் பீறிவரும் வார்த்
தைகளோடு நாம் கொடுக்கும் குளிர்பானங்களைக்கூட மிக அரு வருப்போடு குடித்துவிட்டுப் புறப்படுவார்கள் . தொட்ட
தீட்டுப் போகச் சவர்க்காரமிட்
டுக் கழுவிய பின்னர் எங்கள் கண்ணுக்கு ar 9ířůu-TLo36u மறைந்துவிடுவார்கள். மாரி காலங்களில் நாலு பக்கங்களா லும் பாய்ந்து வரும் வெள்ளம் தேங்கி நின்று எமது குடிசை களைச் சீரழித்துக் குழந்தை களின் உயிருக்கே அவலம் விளை விக்கும் நிலையிலுள்ள பள்ள மான இந்தச் சேரியையாவது சீர்திருத்தித் தரமாட்டார்களா? என்ற நம்பிக்கையின் நப்பாசை யில் எழும் பரிதாபக் கேள்விக் குப் பச்சாதாபப் படக் கூட யார் இருக்கிருர்கள்...? எப்ப டியோ வீட்டைக் கண்டுபிடித்து வீடுதேடிச் சென்று அவர்களி டம் உதவி கேட்டுவிட்டால் முற் றத்தில் வைத்தே ஏதோ சாக் குப்போக்குச் சொல்லி. எனக்கு இப்போ நாற்பத்தியெட்டு வயது. வாழ்க்கையில் மிகக் கேவலமான அனுபவத் தாக்கங் களால் கன்றிப்போயிருக்கும் என் நெஞ்சைத் திறந்து உங்க ளிடம் கொட்டுவதென்ருல். உங்கள் முன்னிலையில் சிறிய கட்டிடமாக எழுந்து நிற்கும் கலைவாணி படிப்பகம்? எங்கள் உடல் உழைப்பின் சக்தியால் எழுந்தது. தம்மைப் பெரி தாகப் பறைசாற்றிக்கொண்டு
கொண்டிருந்தபோது
(9 ஒண்டுமில்லை.
உங்க்டை இடத்தி லைதானே பிரச்சினை யளாம். எப்பிடி?
ஒருவர்:
மற்றவர்: அங்கை, ஒண்டு
மில்லை.
ஒருவர்: அதுதானே! எல்லா ரும் ரிெய அழி வெண்டு கதைக்கி
னம். ஒண்டையும்
நம்ப முடியாமைக்
கிடக்கு. மற்றவர்: அதுதான் சொல்லு
றன் அங்கை ஒண்டு
மில்லை.
... ...? ...?
ஒருவர்:
வந்தவர்கள். உயர் பதவிகளில்
உள்ளவர்கள் யாராவது உதவி ஞர்களா..? எங்களைச் சாட் டாக வைத்து வருவாயைத் தேடிக்கொள்ளும் உலுத்தர்களை யெல்லாம் நாம் இனங்காணுமல் இல்லை."
ஜோசப்பின் உக்கிரமான பேச்சு உச்சநிலைக்குச் சூடேறிக் அங் கிருந்த சில இளைஞர்கள் 96)ř அவரைத் தடுத்து இருக்கையில் அமரச்செய்தார்கள் ,
ஒரு சில நிமிடங்கள் ஆவேசந் தணியாதவராக பலவித நினைவுக் கோடுகளைக் கிழித்தபடி அமர்கிருர் ஜோசப்.
அவரைப் பேசவிடுங்கோ. பெரியவர். நீங்க பேசுங்கோ"
ஜோசப்பின் பேச்சில் ஒடுக் கப்படும் அந்தச் சமூகத்தின்
23

Page 14
Gsn"LjrrGalgeb வெளிப்படுவதை உணர்ந்த சாந்தன் அவரைத் தொடர்ந்து பேசும்படி தூண்டி ஞன்.
“அவரைப் பேசவிடுங்கோ. உண்மைகளை உண்மைகளா அவர் உடைச்சுப் பேசுறது உங் *ளுக்கு அசூசையாப்பட்டால். விரும்பாதவை வெளியேறலாம். இப்பிடி வார்த் தைகளைக் கொ டுற திலையாவது எங்களுக்காகத் தன்ரை
நிக்கிற அந்த நெஞ்சு ஆறு லடையட்டும்?
சாந் தனது வார்த்தைகஜா ஆமோதிப்பதுபோல எழுந்து நின்று பேசிய அன்ரன் அன்றி விருந்தே அவனது உள்ளத்தில் இடம்பிடித்து விடுகிருன், W
அடங்காத ஆத்திரத்துடன் மீண்டும் பேச எழுந்த ஜோசப் பை ஒரு மக்கள் வீரராக FrT iš தணுல் தரிசிக்கமுடிந்தது.
"என்னைத் தடுத்த வாஞ் சைமிகு தம்பிமாரை நான் மன் னிக்கத்தான் வேணும். இறுடைய பேச்சு அவையளுக்கு புலம்பலாவும் பட்டிருக்கும். அவர்களுக்கு அது அப்பிடி இருந்தாலும் இந்தத் தம்பிமர் ifissir விருப்பத்துக்காகவாவது நான் என்ரை மனவேதனையளை சொல்லித்தான் தீரவேணும். இதே படிப்பகத்திற்கு இந்த ஊர் உயரதிகாரி ஒருவரிடம் தளபாட வசதி செய்து தரும் படி கேட்டுச் சென்றபோது.
24
சுகதுக்கங்களையெல் லாம் வெறுத்து உரிமைகேட்டு
என்
"உங்களுக்கு ஏனடா வாங்கு மேசையெல்லாம் இரவில் குடிச் சிட்டுக் கிடந்து உடைச்செறி யத்தானே." எண்ட கேள்விக் கணேயால் எங்களை மடக்கினர். நாங்கள் தாழ்ந்தவர்களாம். வைத்தியசாலைக்குப் போனல் வெளியாலை போ எண்ட அதட் டல் குரல். உயர் பாடசாலை களில் பிள்ளைகளுக்கு அனுமதி கேட்டுச் சென்ருல் இடமில்& யெண்டு காறி உமிழும் படிச்ச மேதையள். நாங்கள் நாளும் பொழுதும் பாடுபடுகிற தொழி லாளியள். ஆரையுமே சுரண்டி வாழாமல் எங்களையே நாங்கள் சக்கையாகப் பிழிஞ்சு வாழுற உழைப்பாளியள்.எங்கடகளைப் பைப்போக்கக்குடிக்கிறம். 5fri கள் ஏன் மற்றவங்களில G份凸嘉 வைக்கிறம் ? மனிஷத் தன்மை இல்லாமல் எங்க%ள அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்தி வாருங் களே. ! அதுக்காகத்தான் நாங் களும் திருப்பிக் கை நீட்டுறம். எங்களுக்கு இழக்கிறதுக்கு எது வும் இல்லாததாலை எங்கடை உடற் பலத்தையே «ещериотд; இக் கொள்ளுறம். இதில கூடி யிருக்கிற உங்களைக் கேக்கிறன் .
கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கோ குட்டக் குட்டக் குணியமுடியுமா? இந்த உடல்
கட்டையள் உங்களுக்கு உழைக் கிறதுக்காக நீங்கள் சூட்டுற பட்டம் சாதியிலை குறைஞ்சது கள். அப்படியானல் எங்கட உழைப்பிலை உயர்வா இருக்கிற நீங்கள் பச்சைத் துரோபென். இனி ஆரும் எங்களை ஏமாத் தேலாது..?

ஜோசப்பின் ஒவ்வொரு வார்த்தைகளும் நெருப்புத் துண்டங்களாகச் சீறிப்பாய்ந்து
இதயங்களைத் தீய்த்தது. எங்கும் ேேர நிசப்தம் கவிந்துகிடந்தது.
தனது பேச்சின் தாக்கத்தால் இரத்தம் சூடேற. கண்கள் கலங்க. தனது பேச்சையே அவதானித்தபடியிருந்த சாந்த னப் பார்த்ததும் அவரது உள் ளத்தில் நம்பிக்கைக் கதிர்கள் வடுருவிப் பாய்கின்றன.
'தம்பி. உங்களைச் சுற்றி யிருக்கின்ற சமூகத்தைப்பாருங்க அழுக்குச் சாக்கடையால நாறுற இந்தச் சமூகத்துக்குச் சேவை செய்பிற மெண்டதுக்காக எங் களையெல்லாம் ஒதுக்கி ஒதுக்கி வைக்கிருங்களே. சாக்கடை யையும் எங்களையும் ஒரு சேரத் தானே மதிக்கிருங்கள். நாங் களும் உங்க%ளப்போலை மணிசர் தானே. ஆயிரம்தான் நாங்கள் வீம்பு பேசினுலும். எங்கடை மனசில தகிச்சுக் கொழுந்துவிட் டெரியிற வேதனைத் தீயை. அவங்களும் இந்த நிலையில் இருந் திருந்தால்தான் தம்பி புரியும். இந்தச் சின்னத் தொழிலை மீறி வேற ஒரு தொழிலையுமே செய்து முன்னேறிவிடாதபடி இவங்கள் போட்ட அநியாயக் கட்டுப்பாடு கள். அவதந்தரங்கள். எங் கட வருமானப் பற்ருக்குறை யால எந்தக் கெதியுமே இல்லா மல் எத்தினை பொழுதுகள் பட் டினியோடை கிடந்து எழும்பி யிருப்பம்."
தமது வறுமையின் கேவல மான வாழ்க்கையின் அந்தகார
நிலைமைகளின் அசுரக்கொடுமை களை வெப்பியாரத்துடன் சொல் லிக் கொண்டிருந்தார்.
சமூகசேவை நிறுவனங்கள் மூலம் தாங்கள் செய்யும் பணி களால் சில சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடியுமேயொழிய அடிப்படையான வறுமையையும் சாதி உணர்வுகளையும் அவை மாற்ாது என்பதை அவரது பேச்சிலிருந்து அன்றே புரிந்து கொண்டான்.
இன்று ஏழு வருடங்கள் கழிந்த பின் அங்கு ஏற்பட்டு விட்ட மாற்றங்கள். கரு நிறத் தில் நீளக்கோடிட்டுக் கிடந்த தெருவீதிகள் இடையிடையே நான் என்ற மிடுக்கோடு எழுந்து நிற்கும் கல்வீடுகள். ஆங்காங்கு அழகாகக் கோலமிட்டிருந்த கடைகள், சிறிய தொழிற்சாலை கள், ! வைத்தியசாலையென்று கட்டடங்கள் மதில்களெல்லாம் எழுந்திருந்தன. நூற்றுக்கு மேற்
பட்ட மாணவ மாணவியர்கள்
அட்வான்ஸ் லெவல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தனர். பத்துப்பேருக்கு மேல் பல்கலைக் கழகத்துக்குள் கூடப் புகுந்து விட்டார்கள்.
அந்த மாற்றங்களுக்கெல் லாம் ஜோசப்போன்ற ஏழைத் தொழிலாளர்களும் ஏதோ ஒரு வகையில் உதவிசெய்திருக்கிார் கள். ஆனல் அவர்களைப்போன்ற ஏழைத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் எந்தவித மாற் றமும் ஏற்படவில்லை.
25.

Page 15
பாரதி விளையாட்டரங் கின் மத்தியில் தன்னந்தனியணுக பரந்து செழித்து மதத்து நின்ற பலாமரத்தின் கீழ் பரப்பப்பட்ட மணலில் ஜோசப்பின் வரவை எதிர்பார்த்து அமர்கிருன் சாந் தன். காலை நேர உடற்பயிற்சி யில் பல இளைஞர்களும் சிறுவர் களும் ஈடுபட்டுக் கொண்டிருக் கின்றனர்.
சற்று தொலைவில் விதானை யார் வீட்டில் வைக்கப்பட்டிருந்த *பொக்ஸ்? சுக்கூடாக வெளிவந்த மேலைநாட்டு 'றம்? இசை அவ னுக்கு வெறுப்பைத் தருகிறது. அந்த விளையாட்டரங்கை உரு வாக்க முனைந்த போது நடந்த சம்பவங்கள் அவனது நினைவில் வருகிறது. மழைகாலத்தில் வெள்ளம் நிரம்பி வழியும் உப யோகமற்றுக்கிடந்த பள்ளக் காணியை மேடாக்கும் முயற்சி யில் அனைவரும் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நாலைந்து பேரின் துணையோடு வரிந்துகட் டிக் கொண்டு விதானையார் வந் தார்.
"ஆரைக் கேட்டு. என்ன துணிவிலையடா. உதெல்லாம் செய்யிறியள்."
என்ற அதிகாரக் குரலுக்கு கிடைத்த பதிலும், குதறிப் பிடுங்கத் தருணம் பார்த்திருந் தவர்களைப்போல ஆவேசத்து டன் அவர்கள் தாக்க முன்வந் ததும் விதானையார் பயத்தால் பின்வாங்கிச் செல்லும் போது சாந்தனையும் அவனேடு கூடி நின்றவர்களையும் பார்த்து என் னவோ உறுமிவிட்டுப் போன தும் நினைவில் வந்தது.
26
இவர்களோடு சேர்ந்து நிற்கிருர் கள் என்பதற்காக சாந்தனின் கூட்டத்தவர்களுக்கு உறவினர் வீடுகளில் நடக்கும் இன்பதுன்ப நிகழ்ச்சிகளிலும் பங்கில்லை. மாருக இவர்களை நோக்கிவரும் நச்சரிப்புகள் - நடுச்சந்தியில் வைக்து அடிப்போமென்ற குழு ரைகள் நயமும் பயமும் கலந்த மிரட்டல்கள்; எதையுமே அவர் கள் பொருட்படுத்தியதுமில்லை, என்றைக்குமே அசந்து கொடுத் ததுமில்லை.
நேற்று இரவும் அன்ரனது சகோதரியின் பிரச்சனை பற்றிக் கூடிக்கலந்தாலோசித்துக்கொண் டிருந்ததில் நேரம் பன்னிரண்டு மணியையும் கடந்து விட்டது. சாப்பாட்டிற்கு வீட்டிற்குச் சென்ற சாந்த%ன தாய் கண் டும் காணுதவள் போல் அறைக் குள் சென்று முடங்கிக் கொண் டாள். எவ்வளவு ஆத்திர மும் கோபமும் இருந்தாலும் எத்த னையோ புத்திமதிகளுக்கிடை யில் 'தம்பி சாப்பிட வாடா.. எண்டு அன்போட சாப்பாடு
தரும் அம்மா ஏன் இப்படி..?"
எனச் சிந்தித்த சாந்தன் வீட் டில் ஏதோ நடந்திருக்கிறதென்
பதைச் சிலாகித்துக் கொண் டான். எவ்வளவோ சகித்து விட்ட அவனுக்குத் தாயின்
அலட்சியம் எந்தளவிற்கு.? பொது நலவாழ்வு என்கின்ற புனித கைங்சரியத்திற்குள் தன்னை அர்ப்பணித்துக் கொண் ட உள்ளங்களுக்கு இத்தகைய செயல்களெல்லாம் வெறும் அற் பமாகவேபடும். **6Tוb}($3ythuחמ

என்ர சாப்பாடு. ? வலிந்து கேட்டுக் கொண்டே அறைக் குள் புகுந்தான்.
it is செய்கிறதெல்லாம் உனக்கே நல்லாயிருக்காடா சாந்தன்.? ஊரே சேர்ந்து நிண்டு என்னை உயிரோட சித் திரவதை செய்யுதடா. உன்ர அண்ணன் இருக்கிற நாட்டுக் குப் போக அலுவலைப் பார். இல்லையெண்டால் உனக்கு ஒரு கலியாணத்தைச் செய்து கட் டிப் போடச் சொல்லி எல்லா ரும் வற்புறுத்துகினம். நானும் எத்தினை காலத்துக்கு உன்னேட இருக்கப் போறன்.? நீ தான் கெட்டுச் சீரழிஞ்சு போரு யெண்டு ஊரில உள்ள பெடி பெட்டையஞக்கும் சகோதரத் துவம், சமத்துவம், ஒற்றுமை, எண்டெல்லாம் கூட்டம் கூடிப்
போதிச்சு. அதுகளையும் உன் னுேட சேர்த்துக் கொண்டு திரிஞ்சால் ஊரவை சும்மா
விடுகினமே...? உன்ர ஊதாரிப் பிள்ளை எளிய சாதியளின்ர வீடு களில நக்கித் திரியுதெண்டு எங்கட குழந்தைகளைக் கூடத் தன்னைப் போலப் போட்டுது. இனி எங்கட கையாலதான் உவனுக்கு சா எண்டெல்லாம் பேசுகினம். உனக்கேனடா இந்த வேலையள்? எத்தினை நாளைக்கு மற்றவை யிட்ட இடிபடுறது.?" தாய் பெரும்குரலின் ஒலத்தில் தன் உள்ளத்துச் துன்பச் சுமையெல்
லாம் ஒரு பாட்டம் அழுது தீர்த்தாள்.
"அம்மா நீங்கள் இவை
யின்ர வெருட்டுக்களுக்கெல்லாம்
திறதுக்கும் பழக்கிப்
கலங்காதையுங்கோ. தாங்கள் பெரிய மனுஷராக இருந்து அடக்கியாள வழி இல்லை
யெண்டு கொதிச்சுப் பொருமு
கினம் எங்களை இவையாலை ஒண்டும் செய்ய முடியாதம்மா என்னில கை வைச்சால். கை
வைச்சவனை நேரக்கி எத்தினை
யோ கையள் நீளுமம்மா." தைரியமான வார்த்தைகளைத் தாய் முன் சமர்ப்பித்தான்.
தாயின் பிரலாபக் குரல் ஓயாது போல் இருக்கவே முற்றத்து மல்லிகைப் பந்தலின் பக்கமா கச் சென்று படுத்தான்.
நித்திரை வரவில்லை. சற்று முன்னர் நடந்த கூட்டத்தில் ஆவேசத்துடன் பழிக்குப் பழி வாங்கும் உணர்வுடன் எழுந்து நின்ற அன்ரனின் தோற்றமே கண்முன்நின்றது.
*அன்ரன் பழிக்குப் பழி வாங்கிறதாலை நாங்கள் சாதிக் கப்போறது ஒண்டுமில்லை. உன் ரை தங்கச்சியின் ரை வாழ்க்கை சீரழியிறதுமட்டுமல்ல. இந்தப் பச்சோந்திச் சமுதாயம் திருந் * வழி இல்லாமல் போயிடும். நீ கவலைப்படாதை அன்ரன். நாங்கள் எல்லாரும் சேர்ந்து நிண்டு எங்கடை பலத் தைக் காட்டி அவனை வழிக்குக் கொண்டு வருவம். அதுக்கு மிஞ்சினல் பிறகு பாப்பம்."
"ஒ. தம்பி சொல்லுறது
தான் சரி.??
சாந்தனது முடிவு ஜோசப் பின் ஆமோதிப்புடன் அனைவ ரது முடிவுமாகிறது. அன்ரனும் நம்பிக்கையும் ஆறுதலுமடைந்த வணுக இரவு சென்றன்.
2.

Page 16
முதல் நாள் தீர்மானித்த படி குறிப்பிட்ட நேரத்துக்கு விளையாட்டரங்குக்கு ஒவ்வொரு வராக வந்து சேர்ந்தனர். சாந் தனது சயிக்கிளை அன்ரன் RQவர ஜோசப் முன்னுக்கிருந்து வருகின்ருர், பின்னல் பல சயிக் கிள்களில் இளைஞர்கள் நடுத்தர வயதுடையவர்கள் ஊர்வலம் போல சாந்தன் இருக்கும் மணல டியில் வந்து இறங்குகின்றனர்.
சோடனைகளும் அலங்கார முமாக களைகட்டி நின்ற கவி பாணப் பந்தலுக்குள் ஒருவர் பின் ஒருவராக புகுந்தவர்களைக் கண்டதும் அங்கு குதூகலத்து t-air குழுமியிருந்தவர்கள் திகைத்துப்போய் நின்றர்கள். விதானையார் ஒரு சிலர் நியாயம் கேக்க வருவார்கள் சமாளித்து விடலாம் என்று நினைத்திருந் தார். ஊரே திரண்டு வந்த
போது எதுவும் தெரியாதவர் போல நடித்த்ார். வீண் பழி என்று மறுத்தார். சாந்தன்
மீதும் பழிசுமத்த முற்பட்டார். எதுவும் எடுபடவில்லை.
வீட்டில் எதிரும் புதிருமாக வீசிக்கொண்டிருந்த புயல் நியா யமான பக்கம் சாராமல் நீடித் தால் நிச்சயம் பலத்த அனர்த் தங்கள் நிகழும் என்பதை விதா னையார் ஒருசில நிமிஷங்களி லேயே விளங்கிக்கொண்டார். ஆத்திரத்தில் குமுறிக்கொண்டி ருந்த அன்ரனின் அருகே நின்ற சாந்தனின் கைகளைச் சமாதான மாகப் பிடிக்கிருர்,
"தம்பி நடந்தது நடந்து போச்சு. இப்ப நடக்கிற கலி யாணத்தைக் குழப்பாமை விட் டியளெண்டா நட்ட ஈடாப் பாத்து நீங்கள் கேக்கிற தொ கையைத் தாறன்"
28
அவர் சொல்லி முடிக்கு முன்பே ஆத்திரத்தில் விதrஆன யாரின் கைகளை உதறுகிமுன் சாந்தன். அன்ரனின் கரங்கள் அவரது முகத்தை நோக்கி நீளு கிறது. எல்லோரும் ஆத்திரத் தில் கொதித்தெழுகின்றனர்.
மாப்பிளை அழைக்க வந்த பெண்வீட்டார்சினந்துகொண்டு வெளியேறுகின்றனர்.
'பிரச்சனை வேண்டாம். நான் வதணுவை ஏற்றுக்கொள் ளுறன்??
விதானையாரின் மகனது வார்த்தையுடன் ஆத்திரமடைந் திருந்த அந்தக்கூட்டம் அமைதி யடைகிறது.
"ஓம். நீ ஏத்துக்கொள் ளடா. ஆணுல் இண்டையிலை யிருந்துநான் உன்னை ஏத்துக் கொள்ளமாட்டன் , GSLurl T வெளியாலை.!"
அந்த அமைதியைக் கிழித்த 14. அவரது குரல் அந்தப் பந்த லெங்கும் பலமாக ஒலிக்கிறது.
மேடும் பள்ளமும் நிறைந்த இந்தக் கரடுமுரட்ாணி வாழ்க் கைப்பாதையில், ஏற்படுத்தும்
வெறும் சீர்திருத்தங்கள் எந்த
மிாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை விதானையாரின் குரல் மேலும் உறுதிப்படுத்துவதை
சாநதன் உணர்ந்து கொண்டது
போலவே அங்கு வந்த அனைவ
ரும் உணர்கின்றனர்.
இன்னும் எத்தனையோ ர்ே கேடுகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற மனஉறுதியுடன் அவர்கள் பிரிந்துசெல்கின்றனர்.
இருள் மண்டிக்கிடந்த வான மெங்கும் நீலம் பாரித்துக் கிடந்தது.
x

தி இன்னும் சாகவில்லை!
0 செண்பகன்
பொருள் தேட ஜேர்மனிக்கு போன என் மகனே, நீ போட்ட கடிதம் படித்தேன். பொறுக்காமல் எழுதுகிறேன் பதில் படி பொறுப்பாய்.
அகதியாய்ச் செல்லுங்கள் இந்தியாவுக் கென்று உன் அம்மாவுக் கெழுதிய
மகனே,
கொஞ்சம் நில்! அப்பாவையும் இழுத்துக்கொண்டு ஒடுங்களென் றெழுதிய என் மகனே
கொஞ்சம் பொறு
அன்பு மகனே, உன் தாயின் குணங்களை அறிந்துமா நீ சொல்கிருய் அகதியாய்ச் செல்லென்று
கொள்கை வழிநின்று செயற்படுமுன் கொப்பனர் தன் கோட்டைத் தாண்டிவந்து என் கைப்பிடித்த நாயகஞர். குறுக்குச் சேலை கட்டடியென்று கொக்கத் தடிகள் கொழுவி இழுத்த காலம் ஒன்றில், கறள்பேணியிலும் சிரட்டையிலும் தண்ணீர் வார்க்க குடிக்கக் கொலுவிருந்த காலம் ஒன்றில் தீண்டாமை ஒழிப்பென்று திராணியுடன் எழுந்தவர் ஆண்ட பரம்பரையின் அரிச்சுவட்டை மாற்றவென்று வேண்டாதவையென்று அவர் சொன்னவையெல்லாம் வேண்டும் என்று செய்தவர்.

Page 17
30
துப்பாக்கிக் குண்டு தன்
தோளைத் துளைக்காது
தன் தோழர்களைச் சாய்க்காதென்று சயத மெடுத்தவர்;
நேராய் நெடும்பயணப் போரிலே முன்னின்றவர் காக்கிகளின் கைகளைக் களைக்கச் செய்தவர் அவரைப் பார்த்தா சொல்கிருய் இன்று நீ அகதியாய்ச் செல்லென்று இன்னும் சாகவில்லை - நாம்
உயிருடன்தான் இருக்கின்ருேம்.
மகனே செல்வம் ஆடையின்றி அம்மணமாய் நீ மண்ணை அளைந்து 6&Turgeoiù அப்போது உன்னை அள்ளி அனைத்து தூக்கிக் கொஞ்சித் தன் தோழிலே சுமந்த உன் "ஆ. அசை. மமா." தின் ஐம்பதாவது வயதிலே தெருவிலே சுடப்பட்டுச் செத்த பின்னருமா அகதியாய்ப் போ என்று மகனே நீ சொல்கிருய்
இன்னும் சாகவில்லை - நாம் உயிருடன் தான் இருக்கின்ருேம். பசித்து நீ சினப்பதைப் பார்த்ததும் உடன்ஓடி வாய்த்ததைக் கொண்டு வந்து தீத்தி மகிழ்ந்த உன் பக்கத்து வீட்டுச் சரசக்கா பாதையிலே பதைபதைத்துச் செத்த பின்னருமா அகதியாய்ப் போ என்று மகனே நீ சொல்கிருய் இன்னும் சாகவில்லை - நாம் உயிருடன் தான் இருக்கின்முேம், அன்பு மகனே, “வாழ்விலும் சாவிலும் உன் அப்பருடன் தானிருப்பேன்

இன்பத்திலும் துன்பத்திலும் உன் அப்பருடன் தான் வாழ் வேன்" என்று முன்னுளில் நான் கடிதங்கள் எழுதியதை என் நெஞ்சு மறக்கவில்லை
தன் கணவனைக் கள்வனென்று கொன்ற போது பெண்ணுெருத்தி கோபங் கொண்டு எரித்தாளென்ருல் என் கணவனை. என்று உன் அன்னை பொறுக்காள் மகனே.
யமனென்று ஒருவன் இருப்பானகில் பின்ல்ை சென்றுநான் பிள்ளை வரம் கேட்பேன் பின்னலென் கணவனுயிர் காத்து நான் மீள்வேன்! அப்படியில்லை இப்போதென்பதால் அகதியாய்ச் செல்லென்று நீ என்னைக் கேட்காதே.
எண்பத்தைந்து ஆனி மூன்று சனி இன்று போகவில்லை இன்னும் நாம் சாகவில்லை
அன்பு மகனே நான் கோழையைக் கணவனப் அடையவுமில்லை, கோழை மகனை நான் பெற்றதுமில்லை.
ஆதலால் உனக்கோர் ஆணையிடுகின்றேன் நாட்டுக்குத் திரும்பு நாட் செல்லும் முன்னே.
அகதியென்று சொல்லும் அர்த்தத்தை மாற்ற வீட்டுக்குக் கிளம்பு வினைகள் ஆற்ற மகனே!
- உன் அம்மா
31

Page 18
o சென்ற இதழ்தொடர்ச்சி.
9ே சடங்குகளிலிருந்து 5TL 5lb GIG)
(ஈழத்துத் தமிழ் நாடகத்தின் தோற்றம் பற்றிய ஒரு குறிப்பு) 9 சி. மெளனகுரு
2-5 நாடக நிகழ்வுகள் தனியாகப் பிரியத் தொடங்கிய
சமயச் சடங்கு
இயக்குபவன் வேருகவும், நடிகன் வேருகவும் பிரியும் முறை யும், ஐதீகக் கதைகள் அபிநயிக்கப்படுவதும் சேர்ந்த தனல் நாட கம் தனி ஒரு கலையாகப் பிரியும் தன்மை ஏற்படுகிறது. இந்த மாறும் அம்சத்தினை கிழக்கிலங்கையில் கல்முனையின் அருகே யுள்ள பாண்டிருப்பிலுள்ள திரெளபதை அம்மன் கோயிலில் நடை பெறும் நாடகம் சார்ந்த சமயச் சடங்கிலே காணமுடிகிறது.
இத் திரெளபதி கோயிலில் ஆடுவோர் மீது பஞ்சபாண்டவர் களும், திரெளபதியும் வந்து முற்படுவார்க்ள். ஆடுபவர்கள் தம்மைப் பஞ்சபாண்டவர் போலவும், திரெளபதி போலவும் பாவித்து பாரதக் கதையின் சில பகுதிகளைக் கோயிற் சடங்கின் போது நிகழ்த்துகின்றனர். பஞ்சபாண்டவர் வனவாசஞ் செல்லு தல், அர்ச்சுனன் தவஞ் செய்யச் செல்லல், அரவானைக் களப்பலி கூட்டுதல் என்பன இவர்கள் நிகழ்த்தும் நாடக அம்சம் நிரம்பிய சடங்குகளாகும். ஒரே நேரத்தில் நாடகமாகவும், சடங்காக வும் தோன்றும் இத் திரெளபதி அம்மன் கோயிற் சடங்குமுறை நாம் முன்னர் பார்த்த சடங்குமுறைகளிலிருந்து நாடக அம்சத்திற் சற்று வளர்ச்சியடைந்த நிலையிற் காணப்படுகிறது எனலாம். இச் சடங்கின் பிரதான நிகழ்ச்சிகள் அம்மன் கோயில் முன்றலில் நிகழ்ந் தாலும் சில நிகழ்ச்சிகள் பாண்டிருப்பைச் சூழவுள்ள அயற்கிரா மங்களிலும் வீதிகளிலும் சந்திகளிலும் நடைபெறுகின்றன.
பாண்டிருப்பு திரெளபதி அம்மன் ஆண்டுக்கொருமுறை பூசை நடைபெறும் கோயிலாகும். இங்கு 18 நாட் சடங்கு நடைபெறு கிறது. 16 ஆம் நாட் சடங்கன்று நாடகத் தன்மை நிறைந்த வனவாசம் ஆரம்பமாகிறது. இதிற் பஞ்சபாண்டவர் ஐவரும்,
32

திரெளபதியும் வனவாசம் செல்வது போன்ற காட்சி அபிநயிக்கப் படுகிறது. இவர்கட்கு உருவேறி ஆடுபவர்களை மக்கள் தெய்வ மாக எண்ணி வணங்குவார்கள். இச் சடங்கன்று கோயிலைவிட்டு அயற்கிராமங்களுக்குத் தெய்வக்காரர் பிரயாணமாவர். அச்சமயம் தருமர் கொடுக்கும் வாளை பீமன் வாங்கிச் சென்று அண்டை அயலில் உள்ளவர்களின் வளவுகளுக்குட் புகுந்து அங்கு காணப் படும் காய்கனிகளை வெட்டிக்கொண்டு வருவான். பீமனுடன் செல்லும் ஊரவர்கள் அவற்றைச் சுமந்து வந்து கோயிலுக்குக் கொடுப்பர். இங்கே வனவாச காலத்தில் பீமன் தன் சகோத ார்கட்குக் காய்கனி தேடிக் கொடுத்தமை அபிநயிக்கப்படுகிறது.
17 ஆம் சடங்கு அருச்சுனன் தவநிலை எனப்படும், சடங்கா
கும். வனவாசச் சடங்கில் தருமனும் வீமனும் முக்கிய இடம் பெற இதில் அருச்சுனன் முக்கிய இடம்பெறுகிருன். அன்றைய தினம் இரவு அருச்சுனனுக்கு ஆடுபவர் உருக்கொண்டு கோயில் முன்றிலில் ஏற்கெனவே அமைத்து வைத்திருக்கும் ஏணி வழியாக மரமொன்றின் உச்சிக்குச் செல்லக் கோயிலுக்குள் இருந்து புறப் படுவார். காவியுடையணிந்து பூசாரிமார் பிற்பாட்டுப் பாட அருச்சுனன் கோயில் வீதியில் நடப்பார். வழியில் பேரண்டச்சி வேடமிட்ட ஒருவர் வந்து மறிப்பார். வழிமறிக்கின்ற அரக்கிக்கு வருபவர் அரக்கிபோல வேடமிட்டிருப்பார். அவர் அருச்சுனனைப் பார்த்து
மார்பைப் பார் தோளைப்பார்
சந்நா நி சந்நாசி - என்
வண்ணமுகம் நீர்பாரும்
என்பன போன்றமைந்த பாடல்களைப் பாடுவார். இப்பாட லுக்கு அருச்சுனன் வேடம் பூண்டவர் ஆட்டமும் ஆடுவார். பேரண்டச்சி மறித்து ஆடுவாள். இவர் மறுப்பார். அருச்சுனன் அம்புவிடுவது போல பாவனை செய்ய பேரண்டச்சி ஓடி விடு வாள், பின்னர் ஒருவர் பன்றியாக வேடமிட்டு வந்து அருச் சுனனை மறிப்பார். அருச்சுனனுக்கு முன்னுற் பன்றி அங்கும் இங்கும் ஒடும். இறுதியிற் பன்றிமீது அருச்சுனன் அம்பெய்து விட்டு ஏணியில் ஏறிச்சென்று தவத்தில் நின்று பதிகம் பாடு வார். பின்னர் சங்கினை எடுத்து ஊதி மணியும் அடித்துவிட்டு கீழே இறங்கி வருவார். பின் அண்ணனைக் காண்பார்.
அதன்பின் அதே இரவு மூன்றரை மணியளவில் அரவானைக் களப்பலி கூட்டும் சடங்கு நடைபெறும் இச் சடங்கில் தரு மரும், திரெளபதியும் முக்கிய இடம்பெறுகிருர்கள். முதல்நாள் அரவானப் போன்ற ஒரு மண்ணுருவம் செய்து கோயிலின் ஒரு
33

Page 19
பக்கத்தில் மூடி வைத்திருப்பர். தவநிலை முடிந்ததும் தருமரும் திரெளபதியும் சென்று அரவான எடுத்து அரவானின் சிரத்தைத் தருமர் பிடிக்க திரெளபதி அம்மண்ணுருவின் சிரத்தை ஆரி வாள். சிரமறுக்கையில் பூசாரிமார்
தந்தை சிரம் பிடிக்க என் மகனே அரவான நாககன்னி புத்திரனே பெற்ற பிள்ளையை நான் கழுத்தறுத்தேன்
எனத் திரெளபதி புலம்பலாய் அமைந்த பாடல்களைப் பாடுவார் இப்பாடல்கள் எளிமையும், இனிமையும் உருக்கமும் நிறைந் தவை. பின் காலையிற் கோயிலில் தீப்பாயும் சடங்கு நடை பெறும்
கோயில் முன்றிலே மேடையாக அமைய இக் காட்சிகளிற் பெரும்பாலானவை மேடையாகிய அம்முன்றிலேயே நடைபெறும். நாம் முன்னர் பார்த்த சமயச் சடங்குகளில் ஆடலிற் பங்க கொள்பவர்கள் பாடுவதில்லை. ஆனல் இங்கு தெய்வநில யில் உருவேறி நிற்பவர்கள் பாடி, பேசி, நடித்து இந்நிகழ்ச்சியை நடத்துகிருர்கள்.
முந்திய சமயச் சடங்குகளில் பாத்திரத்தைத் துலக்கமாகக் காட்டச் சிறப்பாக வேடமணிதல் இல்லை. இச்சடங்கில் வேட மணியப்படுகிறது. அத்துடன் சமயச் சடங்கோடு சம்பந்தப் படாத பேரண்டச்சி, பன்றி போன்ற அஃறினை, உயர்திணைப் பாத்திரங்கள் அதற்குத்தக வேடமணிந்து இதிற் பங்குகொள் கின்றன. பாரதக் கதையின் பிற்பகுதியின் சில அம்சங்கள் நாடகமாக நடிக்கப்படுகின்றன. நடைபெறவேண்டிய நிகழ்ச்சி களைப் பூசாரிமாரும் பாடுபவர்களும் தம்முடைய பாடல்களா லேயே கூறிவிடுகின்றனர். இது மட்டக்களப்பு மரபுவழி நாட கங்களில் வரும் கதை கூறும் அண்ணுவிமாரையும், பிற்பாட்டுக் காரரையும் நமக்கு நினைவூட்டுகிறது. திரெளபதி அம்மன் கோயி லில் காணப்படும் இம்முறை கிரேக்க கோரஸ் முறை பினை ஞாபக மூட்டுகிறது. கிரேக்க தெய்வமான டயோனிஸஸ் கூட்டுப் பாட லில் இருந்து கிரேக்க நாடகம் தோன்றியது என்ற உண்மை இங்கு மனங்கொள்ளத் தக்கது.
இங்கு முந்திய சடங்குகளைப்போல நாடகமானது சடங்கு களுடன் பின்னிப்பிணைந்து இராமல், தனியாகத் தெரிவதனையும் சமயச் சடங்குகளிலிருந்து நாடகம் மெல்லப் பிரிவதனையும் காணமுடிகிறது.
34

மலையகத்திலே நடைபெறும் காமன் கூத்தும் இத்தகையதே. இங்கு காமனைச் சிவன் எரித்த கதை அபிநயிக்கப்படுகிறது, அதே வேளை இதில் வரும் சிவன் மக்களாற் பூசனை செய்யப்படு கின்ருர், மன்மதன் இரதி ஆகியோருக்கு மக்களே வேடம்பூண்டு இந்நாடகத்தைத் திறந்த வெளியில் ( மலைச்சாரலில் ) நடத்து வர். மலைச்சரிவுகளில் மக்கள் நின்று இந் நாடகத்தைப் பார்த்து மகிழ்வர். இந் நாடகம் இரவில் நடைபெறும். மன்மதன், இரதி ஊர்வலத்தில் ஊர் முழுவதும் பங்குகொள்ளும், சிவன் வருகை, அவர் தவம் செய்தல், காமன் அம்பு வீசுதல், மன்மதன் தகனம் என்பவை திறந்த வெளியில் நடைபெறும். சிவனுக்கு வேட மிட்டு ஆடிவருபவரை மக்கள் பக்தி சிரத்தையோடு கர்ப்பூரதீப மேற்றி வணங்குவர். இங்கு நாடகமானது சமயச் சடங்குடன் பின்னிப்பிணையாமல் மெல்லப் பிரிவதனை அவதானிக்கலாம்,
மேற் குறிப்பிட்ட சமயச்சடங்குகளிலே கோயிலின் உட்புற மும், வெளிப்புறமும் மேடையாய் அமைந்தன. சடங்கில் பங்கு கொள்வோர் தெய்வங்களுக்கு அபிநயித்தனர். தெய்வமுற் ருேரை மக்கள் தெய்வம் என நம்பி அவர்களோடு பேசினர். இதனையே நாம் புராதன நமது நாடகம் (Primitive Theatre) என்று அழைக்கின்ருேம். இந் நிகழ்ச்சிகள் வெளியிலே பலரும் காணப் பெரும்பாலும் பகல் நேரத்திலும் சிறுபால் இரவு நேரத்திலும் நடைபெற்றன. தெய்வங்களாக அபிநயிப்போர் கொடுக்கணிந்து கையில் வேப்பமிலைக் கொத்து ஏந்தி, மேல் முழுவதும் மஞ்சள் குங்குமம் பூசி சாதாரண மனிதரிலிருந்தும் வேறுபடுத்திக் காட் டும் வகையில் வேடமிட்டுத் தெய்வமாடுவர். இங்கெல்லாம் நாடக மாந்தர் வேடமிடுவதற்கான அபிநயிப்பதற்கான வித்துக் களைக் காணுகின்ருேம். ஆனல் இவை யாவும் சமய நம்பிக்கை யோடு நடைபெற்றமையினல் கேளிக்கைகளுக்குரிய நிகழ்ச்சிகளாக அவை கருதப்படவில்லை, மாறவுமில்லை. தமது வாழ்வோடு ஒன் றிய ஒரு நிகழ்ச்சியாகவே மக்கள் அதனைக் கொண்டனர். இத ஞல் அச் சடங்குகள் நாடகமாக முடியவில்லை. எனினும் அரங்கு, நடிப்பவர்கள், இயக்குபவர்கள், பார்வையாளர்கள் என்ற நான்கு வகை அம்சங்களையும் கொண்டதாக, நாடகத்துக்கான மூலவித் துக்களையும் இவை கொண்டிருந்தன. கோயிலே அரங்கு, தெய்வம் ஏறி ஆடுபவர்களே நடிகர்கள், பூசாரியே இயக்குபவர், மக் களே பார்வையாளர்கள். இன்றும் வெளிநாட்டவர் ஒருவரின் பார்வைக்கு நமது சிறு தெய்வ வணக்கம் சடங்கு முறைகள் ஒரு புராதன heatre ஐயே ஞாபகமூட்டும். இச்சடங்குகளிலே காவி யம், தாலாட்டு, அம்மானை, சிந்து கண்ணி, விருத்தம், கலித் துறை போன்ற பா வடிவங்களில் அமைந்த பாடல்கள் பாடப் படுகின்றன. இப் பா வடிவங்களில் அமைந்த பாடல்களை உடுக்
35

Page 20
கடிக்கு ஏற்பப் பாடுகையில் தெய்வக்காரர் மேலும் வேகமாக ஆடுவார். ஆடல்களும் பல்வேறு வகைப்படும். உடம்பின்"மேற் பகுதியை மாத்திரம் வளைத்து ஓர் இடத்தில் நின்றபடி ஆடல் தலை சுற்றி ஆடல், காலை இடந்து இடந்து கூட்டி ஆடல் இரண்டு கைகளிலும் இரண்டு சிறு குலங்களைத் தாங்கியபடி விரை வாகச் சுழன்முடல், இரண்டு கைகளிலும் அம்மனைக் காய் பிடித்து கும்மி அடிப்பதுபோல இரண்டு கைகளையும் தட்டித்தட்டி ஆடல், முழங்காலில் நின்றபடி கும்பத்தை மேலே எறிந்து ஆடல் என் பன போன்ற பல ஆடல் வடிவங்களை இச்சமயச் சடங்குகள் தமக் குள் அடக்கியுள்ளன. இவ் ஆடலுக்கும், பாடலுக்கும் தக உடுக்கு, தவில், பெரும் தவில், சிறு தவில், மேளம், சிலம்பு, அம்மனைக் காய் முதலிய வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. இவ்வண்ணம் புராதன வணக்கமுறைகளே இசை, ஆடல், பாடல் என்பன தோன்றவும் வளரவும், அவை மக்கள் மத்தியிற் பரவ வும் காலாயின. இவற்றில் வரும் சில பாடல் வகைகளையும், ஆடல் முறைகளையும் வாத்தியக் கருவிகளையும் பின்னுளில் நாடக மாக முகிழ்த்த கூத்துக்களிலே காணுகின்ருேம். சமயச் சடங்கிற் காணப்பட்ட பல அம்சங்களைத் தனக்குள்ளாக்கிக் கொள்ளும் பொது விதிக்கமைய இங்கும் பின்ளிைற் தோன்றிய கூத்துகள் சமயச் சடங்கிற் கானைப்பட்ட சில அம்சங்களைப் பெற்றுக் கொண்டன.
3-1 சமயக் கரணங்கள் சார்ந்த நாடகங்கள்
மேற் குறிப்பிட்ட சமயச் சடங்குகளை ஈழத்து நாடக வளர்ச் சியில் முதலாம் நிலையாகவும், புராதன Theatre ஆகவும் கொண் டால் இரண்டாம் நிலையான சமயம் சார்ந்த நாடகக் கரணங் களாக பெருந்தெய்வக் கோயில்களில் நடைபெறும் சூரன் போர். பூதப்போர் போன்றவற்றைக் குறிப்பிடலாம். கந்தசுவாமி கோயில்களில் நடைபெறும் சூரன்போர் சிவன்கோயில்களில் நடை பெறும் இயம சங்காரம், திருமால் கோயில்களில் நடைபெறும் கம்சன் போர், பிள்ளையார் கோயில்களில் நடைபெறும் பூதப் போர் என்பன சமயம் சார்ந்தவை. ஆனல் இவை கோயிலின் பெருவெளியில் நடைபெறும் நாடகங்களும் ஆகும். சூரபத்ம னுடன் முருகன் செய்த போரையும் சூரனை முருகன் வதைத்து அவனைச் சேவலாகவும் மயிலாகவும் மாற்றி அருள்கொடுத்த கதையையும் கோயில் வெளியில் நிகழ்த்திக் காட்டும் நிகழ்ச்சியே சூரன் போர் ஆகும். மரத்தினற் செய்யப்பட்ட பிரமாண்டமான சூரன் சிலையினை ஒரு சாரார் வீதிவெளியிற் காவிக்கொண்டு நிற் பர். முருகன் திருவுரு கோயிலுக்குள் இருந்து இன்னெரு சாரா ராற் காவிக்கொண்டு வரப்படும். நாரதர், வீரவாகுத்தேவர்,
36

பூதகணங்கள், தேவகணங்கள் ஆகியோருக்குச் சில குறிப்பிட்ட மக்களே வேடமிட்டிருப்பர். கோயில் வெளி வீதியிலே இந்நாட கம் ஆரம்பமாகும். வீரவாகுத்தேவர் சூரனிடம் தூது செல்வர். சூரனுடன் வாதிடுவதுபோல அபிநயிப்பார். மீண்டும் வந்து முரு கனிடம் போருக்குப் போகும்படி கூறுவார். இடையில் நாரதர் அங்கும் இங்கும் திரிந்து சண்டையை உண்டாக்குவதற்காகக் கோள் மூட்டுவார். பார்வையாளர்களுடனும் சம்பாஷிப்பார். மனிதரே முருகனைச் சூழ்ந்து தேவ கணங்களாகவும், சூரபத்ம அனச் சூழ்ந்து அசுரகணங்களாகவும் வேடமிட்டு வருவர். கோயிலின் வெளிவீதியைச் சுற்றி பின்பகுதிக்கு உலா வந்ததும் முருகன் வேலை எறிந்து சூரனின் தலையை அறுப்பார். (தேவ கணங்களுள் ஒருவரே வேலை எறிவர்) தலையிழந்த சூரன் பல்வேறு முகங்களை எடுப்பான். இறுதியில் மாமரமாக வருவான். முருகன் மீண்டும் வேல் ஏவ அவன் சேவல், மயிலாக மாறுவான். அதன் பின்னர் கோயில் வாயிலில் வைத்து முருகன் சிலைக்கு ஆராதனை செய்து கோயி லுக்குள் எடுத்துச் செல்வர். இரவிலே தேங்காய் எண்ணெய் தோய்த்த பந்த வெளிச்சத்தில் கோயில் வெளிவீதியில் இத்தகைய தொரு சூரன்போர் மட்டக்களப்பு மண்டூர்க் கந்தசுவாமி கோயி லில் நடைபெறுகிறது. இத்தகைய சூரன்போர் ஈழத்தில் தமிழர் வாழும் பகுதிகளிலுள்ள கந்தசுவாமி கோயில்களில் நடைபெறு கின்றன.
இதேபோல இயமசங்காரம், கம்சன் போர், கயமுகாசுரன் போர் (பூதப்போர் ) களும் கோயில் வெளிவீதிகளில் நடத்தப்படு கின்றன. இப் போர்களிலே மரத்தாற் செய்யப்பட்ட பெரிய சிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஐதீகக்கதை பெரும் தொகையான பார்வையாளர்கள் மத்தியில் முழுமையாக நடித்துக் காண்பிக்கப்படுவதைக் காணுகிருேம். முந்திய சமயச் சடங்குகள் போல அன்றி வேடப் புனைவும் அபி நயிப்பும் ஒரு முழுக்கதை வெளிப்பாடும் இங்கு கூடுதலாக இடம் பெறுகின்றன. சிறு தெய்வ வழிபாட்டில் காளிக்கோ வைர வருக்கோ உருவேறி ஆடும் தெய்வக்காரரின் வாக்குகளைப் பக்தி சிரத்தையோடு கேட்கும் பக்தர்கள் போல சூரன்போரில் வரும் வீரவாகுத் தேவரின் உரையையோ, நாரதரின் உரையையோ, மக்கள் பக்திசிரத்தையுடன் கேட்கமாட்டார்கள். ஒரு நடிகனைக் கணிப்பது போலவே இவ் வேடம் தாங்கியோரையும் கணிப்பர். இங்கெல்லாம் இந்நிகழ்ச்சி சமயச் சடங்கு நிலையினின்று கேளிக்கை அல்லது நாடக நிலைப்பட்டு விடுவதனக் காணமுடியும். முந்திய சடங்குகளைப்போல அன்றி ஒரு ஐதீகக் கதையினையும் இவை உள்ளடக்கமாகப் பெற்றிருப்பதனல் முந்திய சடங்குகளை விட செழுமையையும் ஒரு நாடகத்தன்மையையும் இவை பெற்றுவிடுகின்
37

Page 21
றன. ஆனல் இவற்றை ஒரு நாடகமாக மக்கள் கணிப்பதில்லை. தமது வாழ்வோடு இணைந்த சமயத்தின் ஒரு அங்கமாகவே கன்னிக் கின்றனர். எனினும் முன்னர் கூறிய சமயச் சடங்குகளினின்று இது வேடப்புனைவு, கதைக்கரு, கதை நிகழிடம், பாத்திரங்கள் என்பனவற்றில் பல முன்னேற்றங்களைப் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. அதே வேளை சமயச் சடங்கினின்று விடுதலை பெற வும் இல்லை.
மரத்தாற் சூரனுக்குச் சிலையமைப்பதை விடுத்துத் தாமே வேடம் தாங்கி மரச்சிலைகள் செய்த செயல்களைச் செய்யும் முறைமை பின்னல் வந்திருக்கவேண்டும். ஆரம்பத்தில் பாவைக் கூத்து முறையே இருந்ததென்றும், பாவைகளுக்குப் பதிலாக மாந்தர் பாவைகள் போல அபிநயிக்கத் தொடங்கிய பின்னரேயே நாடகம் தோன்றியது என்றும் ஆசிய நாடகத்தின் தோற்றம் பற்றிக் கூறும் சிலரின் கருத்து இவ்விடத்தில் நினைவு கூர்தற்குரிய தொன்ரு கும்.
4-1 தொகுப்பு
மேற்குறிப்பிட்ட நாடக அம்சம் நிரம்பிய சடங்குகளிலே நாம் ஒரு படிமுறை வளர்ச்சியைக் காணலாம்.
வேட்டை ஆடும் சடங்கு, மாடுகட்டும் சடங்கு, தேன் எடுக் கும் சடங்கு, தேன் பூச்சி குத்தி விழுவதுபோல அபிநயிக்கும் சடங்கு போன்றவற்றில் எல்லாம் புராதன வாழ்க்கை முறையின் சில கூறுகள் அபிநயிக்கப்படுவதனைக் காணுகிருேம். இங்கு பெரும்பாலும் பூசகரும் ஆடுபவரும் ஒருவராகவே உள்ளனர். இது மத குருவாகவும், நடிகனகவும் ஒருவனே இருந்த நிலையை காட்டுகிறது.
மாரியம்மன் குளுத்தி, கண்ணகி அம்மன் குளுத்தி ஆகிய சடங்குகளிலும், கொம்பு முறித்தலிலும் நிலையாக வாழத்தொடங் கிய மக்கள் மழை வேண்டியும், வளம் வேண்டியும் இயற்கைச் சக்திகளை வசியம் செய்ய அவைகளைப்போல அபிநயிப்பதனையும் காணுகிருேம், இங்கெல்லாம் மதகுரு வேரு கவும், நடிகன் வேருக வும் ஆகிவிடுகிறன்.
காத்தவராயன் ஆட்டம், அனுமார் ஆட்டம் நரசிங்க வைர வர் ஆட்டம் என்பனவற்றில் புராணங்களிற் கூறப்பட்ட குறிப் பிட்ட தெய்வங்கள் போல அபிநயித்து ஆடுவதனைக் காணுகிருேம். இங்கு மதகுரு வேறு நடிகன் வேருக இருப்பதுடன் ஒரு குறிப் பிட்ட ஐதீகக் கதை தரும் கற்பனையில் ஒரு பாத்திரம் உருவகிக் கப்படுவதினையும் காணுகிருேம்.
38

பாண்டிருப்பில் நடைபெறும் திரெளபதி அம்மன் கோயிற் சடங்கில் ஐதீகக் கதைகளுள் ஒன்றன மகாபாரதக் கதையின் சில பகுதிகள் அபிநயிக்கப்படுகின்றன. இச் சடங்கில் சடங்கு அம்சத் துடன் பேரண்டச்சி, பன்றி போன்ற சடங்கிற்கும் புறம்பான பாத்திரங்கள் தோன்றிவிடுவதனைக் காணுகிருேம். ஒரே வேளை யில் இது சடங்காகவும், கேளிக்கைக்குரிய ஒன்ருகவும் ஆகிவிடு கிறது. மலையகத்தில் நடைபெறும் காமன் கூத்திலும் இப் பண் பையே காணுகின்றுேம். இங்கு மதகுரு வேறு நடிகன் வேருக இருக்கும் அதே வேளை மதகுரு அண்ணுலியாரின் பங்கை ஏற்று பிற்பாட்டுகள் பாடி கதையின் சில அம்சங்களை நடத்தி முடிப் பதனையும் காண்கிருேம்.
இவற்றின் வளர்ச்சியாக அமைபவை சூரன் போர், பூதப் போர் போன்ற கோயிலின் வெளிவீதியில் நடைபெறும் நாடகங் களாகும். இங்கு (மழுக்க முழுக்க ஐதீகக்கதை கதை ஒன்று மக்களால் நடத்தி முடிக்கப்படுகிறது. மக்கள் இதிகாச பாத்திரங்களாக அலங்கார வேடமும் இங்கு அணிகின்றனர். சூரர்கட்கும் பெரும் சிலைகள் இங்கு அறிமுகம் செய்யப்படுகின் றன. இங்கு மதகுருவைவிட நடிகர்களும் சிலைகளுமே முக்கிய இடம்பெறுகின்றன.
இவ்வண்ணம் தமது வாழ்க்கையை அபிநயித்துக் காட்டும் நிலையிலிருந்து ஒரு கதையை வேடமிட்டு அபிநயித்துக் காட்டும் நிலைவரை ஒரு பரிணும வளர்ச்சியை ஈழத்துத் தமிழர் சடங்கு முறைகளில் காணமுடிகிறது. இது சடங்கு நாடகமாக மாறும் தன்மையினைக் காட்டி நிற்கிறது. உலக நாடக வரலாற்றுப்பின் னணியில் ஈழத்துத் தமிழரிடையேயும் புராதன நாடகங்கள் காணப்பட்டமைக்கு இவை பிண்டப் பிரமாணமான சான்றுகளா கும். இவற்றை மென்மேலும் மானிடவியல், சமூகவியல் துறை நியதிகளினடியாக ஆராயும்போது ஈழத்துத் தமிழரின் புராதன வாழ்வு, சமூக அமைப்பு பற்றிய தகவல்கள் மேலும் வெளி யாகும்.
இதுவரை சடங்கு நிலையினின்று மெல்ல மெல்ல நாடகம் பிரிந்து வந்தமை கூறப்பட்டது. இவ்வண்ணம் பிரிந்து வந்த நாடகமே பின்னுளில் பொழுது போக்கு அம்சம் கொண்டதாக, கேளிக்கைக்குரியதாக நிகழ்த்தப்படுகிறது. சமயச் சடங்குகளின் வளமான செயல்முறைகளுக்கு ஊற்றுக் கண்ணுக அமைந்த கற் பனை, புராண, இதிகாச ஐதீகக் கதைகளே பின்னளில் வளர்ச்சி யுற்ற கேளிக்கை அம்சம் Tநிரம்பிய - சமயத்திலிருந்து பிரிந்த நாடகங்களுக்கு அடிப்படையாக அமைந்தன. பின்னளில் நாட கங்கள் நடிக்கப்படத் தொடங்கியபோது அவை கோயிலுக்கருகி லேயே கோயில் வெளியிலேயே ஆடப்பட்டாலும் முன்னர் குறிப் பிட்ட சடங்குகளைப்போல வழிபாட்டம்சம் கொண்டவையாக அமையாமல் கேளிக்கை அம்சம் கொண்டனவாகி விடுகின்றன. முந்திய சடங்குகளில் பக்தி சிரத்தையுடன் மக்கள் ஈடுபட்டனர். முழு நம்பிக்கையுடன் ஈடுபட்டனர். இவ் ஐதீக புராண இதி காசக் கதைகள் பின்னளில் மேடையில் நடிக்கப்படத் தொடங் கியபோது முந்தி இருந்த முழு நம்பிக்கை, பக்தி என்பன குறைய பொழுது போக்கு கேளிக்கை அம்சங்களே மேலோங்கின.
39

Page 22
ஈழத்துத் தமிழரின் நாடக வளர்ச்சிப் போக்கில் பின்ஞளில் எழுந்த மகுடிக் கூத்து, வசந்தன் கூத்து, காத்தான் கூத்து, தென் மோடிக் கூத்து, வடமோடிக் கூத்து என்பன சமயச் சடங்குகளி னின்று பிரிந்துவிட்ட சமயக் காரணம் சாராத நாடகங்களாகும், இத்தகைய நாடகங்களின் தோற்றத்தின் ரிஷிமூலம் முன்னைய சமயச் சடங்குகளே.
ஈழத்துத் தமிழர் மத்தியில் இருந்த மிகப் புராதனமான நாடக வடிவம் மகுடிக் கூத்தாகும். இம் மகுடிக் கூட்த்தில் மந்திர தந்திர விளையாட்டுக்களும், சிறு தெய்வ வழிபாட்டு வர லாறுகளுமே முக்கிய இடம்பெறுகின்றன. கோயிலுக்குள் நம்பிக் கையோடு செய்தவற்றைக் கோயிலுக்கு வெளியே கேளிக்கையா கச் செய்ய முயன்றதன் விளைவே மகுடிக் கூத்தாக வெளிப்பட் டது. இது தனியாகவும் விரிவாகவும் ஆராயப்படவேண்டியது.
துணை நூல்கள்
1. தாம்சன் ஜோர்ஜ், மனித சமூகசாரம் சென்னை 1981 பக். 86 2. மேற்படி நூல் பக். 69 3. Anand Mulkraj, The Indian Theatre, London (Undated)
P. 18 4. தம்சன் ஜோர்ஜ் பக். 72 5. மேற்படி நூல் பக். 72 6. Brockett, G. Oscar, History of Theatre, U.S. A. '97 P.2 7 hamby K., Drama in Ancient Thamil Society, Madras,
1979. 8. Dramatic Literature, ENCYCLOPEDIA BRITANICA,
Voume 5, P. 980 9. சிவத்தம்பி கா., "நாடகக் கலையின் சமூக இயல் அம்சங்கள்"
மல்லிகை, யாழ்ப்பாணம், ஆகஸ்ட், 1978, பக். 11 10. தொல்காப்பியம், இளம்பூரணருரை, கழகவெளியீடு, சென்னை,
1969, பக். எ0 I 1. Harrison Jane Ellen, Ancient Art and Ritul, Britan, 1951 12. ரவீந்திரன், செ., "தெருக்கூத்து ஒரு அறிமுகம்" யாத்ரா,
சிவகங்கை, செப்டம்பர் , 1979 13. Sivathamby, K, Drama in Ancient Tamil Society. 14. கைலாசபதி, க. அடியும் முடியும், சென்னை. 15. மேற்படி நூல், பக். 16. கந்தையா, வீ. சி., மட்டக்களப்புத் தமிழகம், யாழ்ப்பாணம்.
40 O

)ே மாநகர் : மோகினி
O Losñ
உன் கொடுநோயோ தீராப் பெரும் பசியோ
தாகமோ
அவர்கட்குத் தெரிவதில்லை.
உன் பூச்சும் மினுமினுப்பும் பகட்டும் பொய் முறுவலும் அவர்களைத் தங்கள் கடலோரங்களினின்றும் வயல் வெளிகளினின்றும் மலைக் காடுகளினின்றும் உன்னை நோக்கி இழுக்கின்றன.
உன் வாயிலில் அடிவைத்த நேரமே
வசமிழந்து
நாற்றமெடுக்கும் உன் கால்வாய்க் கரைகளிலும் காற்ருடாத கற் கோபுரங்களிலும் புழுதி அடங்காத வீதி ஓரங்களிலும் உறைந்து விடுகிறர்கள்.
நீ அவர்களது மாமிசத்தையோ இரத்தத்தையோ விரும்பி அருந்துவதில்லை, ஏனெனில் அவர்களது அயராத இயக்கம் உனக்கு ஊட்டமளிக்கிறது -
ஆணுலும் நீ
அவர்களது ஆன்மாக்களையே ஆகாரமாக்கிவிடுகிருய்.
இரவில் மின்னும் உன் வண்ண விளக்குகளில் அவர்கள் ஈசல்கள்போல மொய்த்து விடியலில் விழுந்து கிடக்கிருர்கள்; உன்னுடைய அவலக் கூச்சலே சங்கீதமாக ஒலிக்க அவர்கள் உன் குப்பைத்தொட்டிகளில் விருந் துண்ணுகிருர்கள்
உனைச்சூழ எரிகின்ற தீயும் சொரிகின்ற ரத்தமும் . அவர்கட்கு அச்சமோ அருவருப்போ தருவதில்லை தங்கள் ஆன்மாக்களினின்று பிரிந்த அவர்களும் பிசாசுகளாகிவிட்டார்கள்.
4.

Page 23
உன்னுடைய உருவம் விகாரமடைந்து உன்னுடைய தேகம் வீங்கிவருகிறது,
ஆளுலுைம் உன் கவர்ச் ெ
தவளையின் பசைபடிந்த நாக்
தூரத் தூர நீள்கிறது -
குப்போல
இளம் மனிதர்கள் உனக்கு இரையாகிருர்கள்.
என்றென்றைக்குமே அல்ல
ஈசாப்பின் தவளையின் வயிறுபோல,
ஊதிவரும் உன் தேகம்
ன்ருே நாளையோ, வெ க்கத்தான் போகிறது.
Gy? էգ
நீ விழுங்கிய ஆன்மாக்கள் விடுதலைபெற்று
மனிதர்கள் உயிர்க்கத்தான் போகிருர்கள்.
事
)ே நிழல் நிஜமாகிறது
இரவுகள் மீள நினைவுகள் நீளும். விரதங்கள் வேண்டுதல்கள் பிரார்த்தனைகள் அண்ணு. l உன் வருகைக்காய் நான் இருந்திட்ட கோலங்கள் கண்ட பயன் ஏதுமில்லை அவை வெறும் நிழல்களே
வீடின்றி
உணவின்றி இளமை வசந்தமின் இன்பங்களைப் பலிகொடுத்து சுதந்திரம் வேண்டினுய், கண்டபயன்
அதிகாரத்தின் விலங்குகள் உன் கைகளில். பசித்திரு, தனித்திரு, விழித்திரு அதுவே அவர்கள் அளித்திட்ட ப.த.வி.
42
O g5Sur
இறப்பை இலகுவாக்கிட ー虚 தற்கொலை செய்யவில்இ
இது
சத்திய சோதனைதான் உண்மையின் உறுதி நிலையின் சோதனை காலம் ட இதில் வென்றது உன் நெஞ்சுறுதி அன்பும் அஹிம்சையும் ஆதிகார வர்க்கத்திம் செல்லாது உறவுகளைப் பிரித்து உரிமைகளைப் பலிகொண்ட வெறி நாய்க%ள
அடக்கிட
அதோ!
அணிதிரண்ட யுகப்புரட்சி வெகுவிரைவில்.
சுதந்திர மனிதனுய் உனக் காண்பேன்
இதுவே நிஜமண்ணு

ஒரு கடிதம் எனக்குள் சில குழப்பங்கள
ஆசிரியர் அவர்கட்கு,
"தாயகம்" புத்தகத்தை அதன் எட்டாம் இதழ் தொடக்கம் தவருது படித்து வருகிறேன். எனது கருத்தைத் தங்கள் சஞ்சிகை மிகவும் கவர்ந்துள்ளது. அதனல், அதன் பழைய இதழ்களையும் தேடிப் படிப்பதற்கு முயற்சி செய்து வருகிறேன்.
மே மாத இதழில் சி. மெளனகுரு என்பவரின் கட்டுரையை விரும்பிப் படித்தேன். 'சடங்குகளிலிருந்து நாடகம் வரை. என்ற தலைப்புடன் கூடிய அந்த வியாசம் மிகவும் அருமையாக இருந்தது. முன்னர் நான் கேள்விப்பட்டிராத விசயங்கள் பலவற்றை அறி யும் வாய்ப்புக் கிட்டியது. வேட வெள்ளாளரின் குமார தெய் வச் சடங்கு பற்றியும் மாரியம்மன் குளுத்திச் சடங்கு பற்றியும், கண்ணகி அம்மன் சடங்கு பற்றியும், கொம்பு முறிப்பு பற்றியும் பிசாசுகளை ஒட்டும் கழிப்புச் சடங்கு பற்றியும் மெளனகுரு அவர் கள் நல்ல வடிவாய் விவரித்துள்ளார். இவற்றிலே ஒன்றிரண்டு சடங்குகளை நானும் பார்த்திருக்கிறேன். என்ருலும் இவற்றையும் நாடகக்கலையையும் தொடர்புபடுத்தி நான் ஒரு பொழுதும் நினைத் துப் பார்த்ததில்லை. ஆனபடியால், அந்தக் கட்டுரையை மெளன குரு அவர்கள் எப்படி முடிக்கப்போகிருர் என்று தெரிந்துகொள் ளும் ஆவல் எனக்குள்ளே தோன்றி வளர்ந்து கொண்டிருக்கிறது. தாயகத்தின்" அடுத்த இதழ் எப்பொழுது வரும் எப்பொழுது, வரும் என்று எதிர்பார்த்தபடி இருக்கிறேன். நாடகக் கலையின் உற்பத்தி பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு உண்டாகி யிருக்கிறது. 'நச்சுக் கோப்பை "தூக்கு மேடை" மந்திரி குமாரி" "பணம்" ஆகிய நாடகங்களில், சில பாத்திரங்களை ஏற்று நடித்த அநுபவம் எனக்கு உண்டு. நானுஞ் சில நாடகங்களை எழுதியிருக் கிறேன். ஆனல் எதையும் மேடையேற்றுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என்ருலும் சிறுவயது தொடக்கம் இந்த நாடகப் பித்து எனக்கு இருந்து வந்தது. மெளனகுரு அவர்களின் கட்டுரை அந்தப் பித்தை வெகுவாகத் தூண்டி விட்டிருக்கிறது. அதனல் நாடகக் கலைபற்றி மேன்மேலும் விளக்கம் பெற விரும்புகிறேன்.
மே இதழில் வெளிவந்த அந்த வியாசத்தின் ஆரம்பப் பகுதி யிலே சிற்சில விசயங்கள் கருகலாக இருக்கின்றன. கட்டுரையின் தொடக்கத்தை விளங்கிக் கொள்வது சற்றுச் சிரமமாக உள்ளது.
43

Page 24
எனக்குள்ளே தோன்றிய சில ஐயங்களைத் தெரிவிக்கிறேன். யாரா வது இவற்றை விளங்கப் படுத்தி விட்டால், பெரிய உதவியாக இருக்கும்.
முதலாவது தியேட்டர், ட்ருமா, பிளேய் ஆகிய சொற்களைப் பற்றிய ஐயம். இவை மூன்றும் வெவ்வேறு கருத்துடையவை என்று நான் நினைத்திருந்தேன். "தியேட்டர் என்பது படமாளிகை தானே! நீகல் தியேட்டர், ராணி தியேட்டர், முருகன் தியேட் டர் என்றெல்லாம் படமாளிகைகள் குறிக்கப்படுகின்றன. தென் னகத் தமிழ் நாட்டிலிருந்து வரும் சில சினிமாப் பத்திரிகைகள் இப்பொழுதெல்லாம் படமாளிகைகளைத் "திரையரங்குகள்" என்று குறிக்கின்றன போல இருக்கிறது இது என்னுடைய ஊகம் தான். அடுத்து, "ட்ருமா? என்ற சொல் நாடகத்தைக் குறிக்கிறது என்று எண்ணுகிறேன். மற்றது "பிளேய்" என்பது. சாதாரண மாக அது விளையாட்டைக் கருதும். பள்ளிச் சிறுவர்களுக்கும் அந்தக் கருத்துத் தெரியும். வேறு கருத்துக்களும் அதற்கு (பிளேய்க்கு) இருக்க வேண்டும். மெளனகுரு அவர்களின் கட்டு ரையைப் படிக்கும் போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகி
Dg
தொடக்கத்திற் குறிப்பிட்டது போல, தியேட்டர், ட்ருமா, பிளேய் என்பன வெவ்வேறு கருத்துக்களை உடையன என்று தான் நான் முன்பு எண்ணியிருந்தேன். ஆனல், "Theatre, drama, play ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு நாம் தமிழிற் பெரும்பாலும் நாடகம் என்ற ஒரே ஒரு சொல்லையே உபயோகிக்கின்ருேம். இவ் வண்ணம் உபயோகிப்பது இவற்றினிடையே காணப்படும் வேறு பாடுகளை நாம் புரிந்து கொள்ளாமையையே காட்டுகிறது" என்று மேற்படி கட்டுரையை எழுதிய அறிஞர் கூறுகிறர். இந்தப் பகுதி தான் எனக்குச் சரியாக விளங்கவில்லை. நான் என்னுல் இயன்ற மட்டும் யோசித்துப் பார்த்து விட்டேன். எனக்கு அவற்றிணி டையே காணப்படும் வேறுபாடுகள் தான் தெளிவாகத் தெரிகின் றன.
இவை மூன்றுக்கும் நாடகம் என்னும் ஒரேயொரு சொல் லையே அறிவாளிகள் ஏன் உபயோகிக்கிருர்கள்?
மேற்படி கட்டுரையில், "Theatre என்ற சொல்லுக்குள் நாட் டிய நாடகம், பாவைக்கூத்து, கதாகாலட்சேபம், நாட்டுக்கூத்து, நாடகம் ஆகிய பல பிரிவுகளும் அடங்கும்?" எனவும் சொல்லப் பட்டுள்ளது. இவற்றிலே கடைசியாகச் சொல்லப்பட்ட நாடகம், தான் "ட்ருமா? என்று நினைக்கிறேன். நான் விளங்கிக் கொண் டது சரியானல், தியேட்டர் என்பது படமாளிகை மாத்திரமல்ல. அது விரிந்த கருத்தையுடையது. அதன் ஒரு சிறுபகுதி தான்
44

(9 அரசும் கல்வியும்
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான, கலாச் சார நிறுவனமான UNESCO விலிருந்து (1985) இவ்வாண் டின் ஆரம்பத்தில் அமெரிக்கா வெளியேறியதினுல் அந்த நிறுவனத்துக்குக் கிடைத்துவந்த நிதியுதவி கால்ப்பங்காகக் குறைந்துள்ளது. அவர்களது முன்மாதிரியைப் பின்பற்றி "அரசியல், நிர்வாகப் பிரச்சனைகளை மேற்கோள் காட்டி தானும் வெளியேறப்போவதாக பிரிட்டனும் அச்சுறுத்தி வருகிறது.
உலக சமாதானம், ஆயுத பரிகரணம் என்பவற்றை வலி யுறுத்தும் "யுனெஸ்கோ"வின் நடவடிக்கைளும், ஓர், புதிய உலக செய்தித்துறை அமைப்பை உருவாக்க அது எடுத்த முயற்சிகளும் சில வல்லரசு நாடுகளின் பார்வையில் தமது நலன்களுக்குப் பாதகமான "அரசிய"லாகப் பட்டதே பிரச் சனைக்குக் காரணமாகும். இதிலிருந்து சர்வதேசரீதியாகவும் கல்வி என்பது அடிப்படையில் வர்க்கம் சார்ந்த, அரசியல் சார்ந்ததாகவே உள்ளது என்ற உண்மை புலணுவதுடன், எத்தகைய உதவிகளையும் தமது நலன்களைக் கருத்திற் கொண்டே அந்தநாடுகள் வழங்கி வருகின்றது என்பதும் புலனுகின்றது.
ட்ருமா. அப்படியானல், பிளேய் என்பது என்ன? அது ட்ருமா வின் ஒரு சிறு உட்பிரிவா? அறிவாளிகள் விளங்கப்படுத்தினல் என் போன்றவர்கள் நன்மை அடைவார்கள்.
வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமையாலே தான், நாடகம் என்ற ஒரே ஒரு சொல் உபயோகிக்கப்படுகிறது என்று சுட்டிக் காட்டிய கட்டுரையாசிரியர் அம்மூன்று சொற்களையும் வரைய றுத்து, ஒற்றுமை வேற்றுமைகளைக் காட்டித் தெளிவுபடுத்தியிருத் தல் வேண்டும். அவர் தியேட்டர் என்பதற்கு ஒரளவு விரிவாக விளக்கந்தர முற்பட்டுள்ளார். அது நல்லது ஆணுல் ட்ருமா, பிளேய் என்பவற்றையிட்டு எது வித விளக்கமும் தர எண்ணினரில்லை. அவ்வாறன விளக்கம் இல்லாத நிலையில், என்போன்றவர்களின் திகைப்பும் குழப்பமும் அதிகமாகியுள்ளன.
அத்துடன் நில்லாமல், "இங்கு நான் தெளிவு கருதி நாட கம் என்ற சொல்லை Theatre என்ற அர்த்தத்திற் கையாண்டுள் ளேன்" என்றும் மெளனகுரு அவர்கள் எழுதியுளளார். வேறு பாடுகளைப் புரிந்து கொள்ளாத நிலையிலே தானே தியேட்டர் நாட கம் என்பவற்றிடையே மாருட்டம் நேரிடுகிறது? கட்டுரையாசிரி
45

Page 25
யர் 'விளங்கப்படுத்திய பிறகு தியேட்டரின் ஒர் உட்பிரிவுதான் நாடகம் என்று நாங்கள் விளங்கிக்கொண்டு விடுகிருேமே! அதன் பிறகு மறுபடியும் ஏன் இந்தச் சொல் மாருட்டம்?
ஒரு வேளை தியேட்டர் என்பது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்த ஒன்று என்பதனுல் கட்டுரையாசியர் அச் சொல்லை விலக்க நினைத்திருக்கலாம். தியேட்டர் என்பது படமாளிகை என்று என் போன்ற பலர் எண்ணுவதால், அதன் பேருக நிகழும் குழப்பங் களைத் தவிர்ப்பதும் மெளனகுரு அவர்களின் நோக்கமாக இருந் திருக்கக் கூடும். என்ருலும் தியேட்டர் வேறு நாடகம் வேறு என்று இவ்வளவு பாடுபட்டு விளங்கப்படுத்திய பிற்பாடு, பிறகும் பழையபடி நாடகம் என்ற சொல்லை. Theatre என்ற அர்த்தத் திற் கையாண்டு சொல் மாருட்டம் புரிவது பொருத்தமாகத் தோன்றவில்லை!
தியேட்டர் என்பது அந்நியச் சொல் என்று அறிவாளிகள் கருதினல், அதற்கு ஈடான பொருள்பயக்குஞ் சொல்லொன்றை புதிதாக ஆக்கித் தரலாமே! நாடக முன்னேடிகளும் கூத்துக் கலை ஞர்களும் நிறைந்துள்ள ஈழத் தமிழ்த் தாயகத்தில் இது ஒரு பெரிய காரியமா என்ன? பிளேய் என்பதற்கும் தேவையாயின் ஒரு தமிழ்ச் சொல்லை ஆக்கிக் கொள்ளக் கூடாதா?
மேற்படி கட்டுரையில் வரும் மற்றுமோர் ஐயப்பாட்டை யும் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். 'நாடகம் அவைக்கு ஆற் றப்படும் கலைகளுள் (Performing art) ஒன்ருகும். கட்டுரையாசிரி யர் கூறியபடி, நாடகமென்னுஞ் சொல் தியேட்டரைக் குறிக்கவே இங்கு பயன்படுகிறது என எண்ணுகிறேன். அப்படியானல், தியேட்டருக்கும் பெஃபோமிங் ஆட்ற் றுக்குமிடையே உள்ள வேறுபாடுகள் எவை? தியேட்டர் அல்லாத பெஃபோமிங் ஆட்ற் றுக்குச் சில உதாரணங்களைத் தந்தால், தெளிவு ஏற்படும் என எண்ணுகிறேன். விசயம் தெரிந்தவர்கள் விளங்கப்படுத்தினுல் நல்லது.
இந்தக் கட்டுரையை எழுதி வரும் மெளனகுரு அவர்கள் மேலை நாட்டு ஆராய்ச்சி நூல்களைப் படித்து அவற்றிலிருந்து பெற்ற பல செய்திகளையும் கருத்திற் கொண்டு சிந்தித்துள்ளார். என்று எண்ணுகிறேன். அந்த பின்னணி அறிவு இல்லாத என் போன்ருேருக்கு விசேசமான விளக்கங்கள் தேவையாயிருக்கும். அதன் பொருட்டே இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன் மற்றும்படி குறை கூறும் நோக்கம் எதுவும் இல்லை. வணக்கம்,
புதுக்குடியிருப்பு. அன்பன் 4-7-85 ம. கு. ஆனந்தராஜ்
46

G முனைப்பும் முதிர்ச்சியும்
O முருகையன்
சிப்பாய்போல் விளையாடும் பழக்கமுள்ள சிறு பொடியன்
சிணுங்குகிருன். - அண்ணனிடம் உள்ளவைபோல் ஆயுதங்கள் கட்டாயம் தர வேண்டும்
என முரண்டு பிடிக்கிருன்
கதறுகிருன் ,
தந்தையையும் தாயினையும் வேண்டுகிருன்.
முற்போக்குத் தனமுடைய தந்தையுடன் யோசித்து முனைப்புரிமைத் திறன் மிகுந்த, தாயும் ஒரு முடிவெடுத்தாள்? தற்காப்புத் தேவைக்காய், பாக்குவெட்டி, கத்தரிக்கோல், தடிக்கம்பு, கைக்கத்தி இவை நான்கும் கொடுத்தார்கள்.
அப்போது தொடக்கம் அந்தச் சிறுபொடியன் GBLunturntorf, ஆயுதங்கள் ஏந்தியதால் அனைத்துரிமை அதிகாரி
2
கத்தரிக்கோல் எடுத்தவன், தன் தாயார் கூந்தல் கனமாக வளர்ந்ததென்று கருதிக்கொண்டான். அத் கனையும் குட்டையாய் நறுக்கிவிட்டான் அன்னை அவள் தன் பிடரி தடவிப் பார்த்தாள் எதனையோ பறிகொடுத்த எண்ணமொன்றும் எழுந்தது தான் அத்தாயின் இதயமீதில் அது தனது முனைப்புரிமைக் கொள்கைக்காக அவள் பொறுத்தாள்.
லேசாக முறுவல் செய்தாள்.
அடுத்தபடி சிறு பொடியன்
தந்தையாரை அணுகி, ஓர் அடி போட்டான் மண்டையோட்டில் - துடிச்சு விழுந்தொழியும் அப்பா, பேன் எல்லாமே! சொன்னபடி துள்ளினுன், சிறிய பையன். பாட்டி அங்கே குனிந்திருந்தாள்
47

Page 26
சின்னப் பையன் பாக்கு வெட்டியால் அவளின் செவி அரிந்து போட்டு விட்டான் வாணலியில் சுர் சுர் என்று பொரிவனவாம் செவி இரண்டும் அப்பளம் , போல்!
அடுப்பெரிக்க விறகில்லை என்பதாலே அப்பப்பா முழங்காலைக் குறுக்கே வெட்டி மடக்கென்று பிளந்து வைத்தான் நெருப்புக்குள்ளே. மனைக்குள்ளே பெரிய திகில்;
மரண ஒலம்.
- சிக்கனமும் பொருளியலின் நலமும் நல்ல சீர்திருத்த நாகரிகப் பாங்கும் 67660früh இக்கருமம் நான் முனைஞ்சு செய்ததாலே இசைந்தன என்று உரைக்கின்றன், சிறிய பையன்;
3
சின்னப் பொடியனின் தாயும் தந்தையும் தீர்மானத்தை மறுபடி ஆய்ந்தனர் - இளைஞரை ஒடுக்குதல் இழிந்ததே ஆயினும், கத்தரிக் கோலும் கம்பும் கத்தியும் பாக்கு வெட்டியும் பத்து வயதுக் குழப்படிப் பயலிடம் கொடுப்பது சரியா என்பது தொடர்பாய் எண்ணலாயினர்.
A.
ர்ே கோழிக் கள்ளன்
ஒருவன் தினமும் அயலவரின் கோழிகளைத் திருடி வந் தான். யாரோ ஒருவர் அவனிடம் திருடுவது தவறென்று வற்புறுத்தினர். "சரி, இனிமேல் மாதம் ஒருமுறை திருடு வேன். அடுத்த வருடம் திருட்டை முற்ருக நிறுத்தி விடுவேன்?’ என்ருன்,
"திருடுவது தவறு என்று உண்மையாகவே அவன் உணர்ந்திருந்தால் திருடுவதை உடனேயே நிறுத்தியிருப் பான். ஒரு வருடம் கேட்டிருக்கமாட்டான்." என்று அவனிடம் பேசியவர் மனதுக்குள் எண்ணிக்கொண்டார்.

நூல் விமர்சனம்
பாரதியின் மொழிச் சிந்தனைகள்பற்றி
நூஃமான் : சில குறிப்புக்கள்
LSL LSSL L S LLLLSLLLLLSLLLLLSLLLLLSLL LLSLLLLLSLLLLL LS LSSLHHLHLYSLHHLSSLLLLLLS D O சி. சிவசேகரம்
திரு. எம். ஏ. நுஃமானின் "பாரதியின் மொழிச் சிந்த ரைகள்: ஒரு மொழியியல் நோக்கு" என்ற நூலின் விமர்சனங்கள் சிலவற்றை வாசித்து வெகுநாட்களான பின்பே அவரது நூலைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது, அவரது முயற்சி எவ்வளவு பய னுள்ளது என்பது பற்றி முன்பு திரு. முருகையன் எழுதியுள்ளார். எனவே அதுபற்றி நான் அதிகம் எழுத அவசியம் இல்லை. இவ் விஷயத்தில் அவரது பார்வையுடன் அடிப்படையில் எனக்கு அதி கம் வேறுபாடில்லை என்பதால், என்னுடைய குறிப்புக்களில், அவ ரது முயற்சியில் அவர் தொட்டிருக்கக் கூடிய ஒரிரு விஷயங்கள் பற்றியும் சில அவசியமான தெளிவாக்கங்கள் பற்றியும் சில கருத்து வேறுபாடுகள் பற்றியுமே எழுத முனைகிறேன்,
**மொழி உணர்வு சமூக, அரசியல் நிலைமைகளின் வெளிப் பாடாகும்" என்று ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டிவிட்டு, நுஃ மான், பாாதியின் மொழி உணர்வின் அடிப்படையை அவருடைய சுதேச உணர்வில் அடையாளங் காட்டுகிருர். பாரதியின் கருத் துக்கள் சில அடிப்படையிலேயே தவருனவையாயும் அறிவியலுக் குப் புறம்பானவையுமாக அமைவதையும் அதே சமயம் வேறு இடங்களில் பாரதியின் மொழிச் சிந்தனைகள் நவீன சிந்தனையுடன் உடன்பாடானவையாக அமைவதையும் பல்வேறு இடங்களிலும் நுஃமான் தெளிவுபடுத்துகிாழர். இவ்வா(mன தன்மை பாரதியின் சமுதாயப் பார்வையிலும் பிற சிந்தனைகளிலும் கூட உள்ள ஒன்றே. இதனற்தான் பாரதியின் சிந்தனைகளைப் பற்றிய வக்கிரமானவியாக் கியானங்கள் எளிதிற் சாத்தியமாயின, நுஃமான் இவைபற்றியும் தொட்டுக்காட்டியிருக்கலாம். இதற்கு மேலும் பல பக்கங்கள் அவ சியமாகி இராது என்றே நினைக்கிறேன். இதன் முக்கியத்துவம் யாதெனில் மொழி பற்றிய பாரதியின் சிந்தனைகளில் சில அடிப் படையான பெருந் தவறுகள் இருக்கையில், பாரதியால், நடை முறை சார்ந்த சில முக்கியமான விஷயங்களில் எவ்வாறு நவீன
49

Page 27
சிந்தனைக்கு உடன்பாடான கருத்துக்களைக் கூற இயலுமாகியது என்பதே, பாரதியின் ‘சரியான" கருத்துக்கள் பாரதியின் சிந்தனையின் பழமைவாத அம்சங்களையும் மீறி உருவானது பாரதியின் அக் கருத் துக்கள் சமுதாயத் தேவைகளையும் சமுதாய நடைமுறையையும் சார்ந்து நின்றதாலேயே என்ற கருத்தை நுஃமான் மேலும் தெளிவு படுத்தியிருந்தால் நன்முய் இருந்திருக்கும். இதனை வேறு பல சிந் தனையாளர்கள் விஷயத் சிலும் நாம் அடையாளம் காணல் பயனுள் ளது என்பதாலேயே நுஃமான் இதற்குச் சிறிது தூரம் கவனங் காட்டியிருக்கலாம் என்று கருதுகிறேன். கீழ்மட்ட, லத்தீன் அமெ ரிக்க கத்தோலிக்க குருமார் பலர் இன்று மாக்ஸிஸ் புரட்சிகர நடைமுறையுடன் காணும் உடன்பாட்டுக்குக் காரணம் அவர்க ளது சமு காய நடைமுறை அவர் கட்கு உணர்த்தும் உண்மை கள் அல்லவா! அவர்கள் தம் நவீன சமுதாயப் பார்வையைக் கிறிஸ் துவின் போத%னகளின் பேரில் திருச்சபையின் சிந்தனையுடன் முரண் படாதவாறு முன்வைக்கும் முயற்சிகள் இங்கு கவனிக்கத்தக்கன.
நுஃமான் கூறியிருப்பதுபோல, ஆறுமுகநாவலர் தமிழ் உரை நடையை எளிமைப்படுக்த முயன்றமைக்கும் பாரதி தமிழ் உரை நடையை எளிமைப்படுத்த முயன்றமைக் கமிடையிலான வேறுபாடு இரண்டு வேறுபட்ட சாமு காயப் பார்வைகளைப் பிரதிபலிக்கிறது. ஆறுமுகநாவலாநடைய பார்வை "மரபை நிலைநிறுத்துவ கனையே அடிப்படை நோக்கமாக உடையது. ஆயினும் யதார்த் கத்துக்கு மதிப்பளிக்கவேண்டிய நிர்ப்பந்தம், ஒரு வகையான எளிமையை அவாக்கும் அவசியமாக்குகிறது. பாரதியின் பார்வை மரபை மாறக்கூடிய ஒன்ரு?ய்க் கருதி சமுதாயத்தின் மொழித்தேவையை முதன்மைப்படுக் காகிறது. அகன் குறைபாடுகள் பல. ஆயினும் பாரதியால் தமிழின் பல பிரச்சனைக%ளச் சரியாகவே அடையா ளங் காண மடிகிறது. தீர்வகளில் உள்ள குறை நிறைகள் பற்றி நுஃமான் மேலும் ஆழமாகக் கவனித்திருக்கலாம்.
பேச்சுக்கம் எழுத்துக்கமிடையே உள்ள இடைவெளி தமி ழுக்க மட்டுமே உரிய ஒனறல்ல. அது எழுத்தறிவு ஒரு சிறுபான் மையினருக்கே உரியகாக இருந்க காலத்தில் இயல்பானதாயும் இந்த "ஜனநாயக யுகக் தில்" முக்கிய கவனத்துக்குரியதாயும் நுஃ மான் குறிப்பிட்டிருக்கி?ர். அவர் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ள விஷயம் ஒன்று தவருக விளங்கிக்கொள்ளப்படஇடமிருக்கிறது என்று நினைக்கிறேன். பேச்சுக்கும் எழுத்துக்குமான இடைவெளி எழுத் தறிவு பரவுவதன் மூலம் இல்லாமற் போய்விடுவதில்லை. இன்றைய நவீன சமுதாயத்தின் தொழில் நுட்பமும் கலாச்சார மாறுதல் களும் மொழிமீது ஏற்படுத்தும் தாக்கங்கள் பேச்சுக்கும் எழுத்துக் கும் இடையில் உள்ள இடைவெளியை மட்டுமின்றித் துறைக்குத் துறை வேறுபடும் கிளைமொழிகளையும் உருவாக்குகின்றன. ஆயி
SO

னும் தமிழின் பிரச்சனை ஆங்கிலத்தைவிட வித்தியாசமானது. நம் பின்தங்கிய சமுதாய வளர்ச்சி பேச்சுமொழியையும் எழுத்து மொழியையும் ஒன்றுபடுத்தும் காரியத்தை மேலும் சிரம்மாக்கி வருகிறது. பேச்சுக்கும் எழுத்துக்குமான இடைவெளி இன்றும் வளர்வதற்கு ஒரு சமுதாயப் பிரச்சனை ஆதாரமாக இருக்கிறது இந்த இடைவெளி, நிரப்பப்படமுடியாது, ஒரு சமுதாயப்பிரச்சனை ஒரு பெரிய முரண்பாடாகும் அபாயமும் இருக்கிறது. தமிழ் பேசும் சமுதாயங்கள் நவீனமடைவதன் மூலமே தமிழ் மொழி நவீனமடை வது சாத்தியமாகும். என்னளவில் இவ்வான இடைவெளி இருப் பதுஎன்றைக்குமே இயல்பானது. ஆனல் அந்த இடைவெளியின் தன்மைநம் கவனத்துக்கு உரியது. இதில் நுஃமானுக்கு முரண் பாடு இராது என்பது என் எண்ணம்.
இலக்கண ஆசிரியனின் பங்கு பற்றி நுஃமான் கூறும் இடத் திலும் "இலக்கண ஆசிரியன் இந்த (இலக்கண) அமைப்பைப் படைப்பதில்லை அவன் ஆராயும் முன்பே அந்த அமைப்பு இருக் கின்றது. இருக்கும் அமைப்பை விளக்குவது மட்டுமே அவன் வேலையாகும்." என்கிறர். இங்கே அவர் கூறுவது இலக்கண ஆசிரியரின் பங்கை ஒரு புதை பெருள் ஆராய்ச்சியாளனுடைய பங்குடன் ஒப்பிடும் பாங்கில் அமைந்து விடுகிறது. நுஃமான் சரியான ஒரு கருத்தை வலியுறுத்தும் நோக்கில் இலக்கண ஆசி ரியன் ஆற்றும் இன்னெரு காரியத்தைப் புறக்கணித்து விட்டார் என்று தோன்றுகிறது. இலக்கண ஆசிரியனது பணி இலக்கண அமைப்பை விளக்குவது என்பது அடிப்படையான உண்மை. ஆனல் அந்த விளக்கத்தின் நோக்கம் எனன? விளக்கங்கள் வேறுபடுவது ஏன்? இலக்கண விதிகள் பற்றிய கருத்து முரண்பாடு கள் எவ்வாறு உருவாகின்றன? எனவே இலக்கண ஆசிரியனின் பணியில் மேலதிகமான ஒரு நோக்கமும் அது சார்ந்த செயலும் உள்ளமை தெரிகிறது. இலக்கண ஆசிரியன் சில விஷயங்களைக் காலப் போக்கில் மொழிக்குள் புகுந்து விட்டவையாயும் ஏற்கத் தக்கனவாயும் வேறு சிலவற்றை மொழிக்கு ஏற்புடையனவல்ல எனவும் கூற நேர்கிறது. எனவே இலக்கண ஆசிரியன், விரும்பியோ விரும்பாமலோ நேரடியாகவே மொழி வளர்ச்சியை நெறிப் படுத்தும் காரியத்திலும இறங்கி விடுகிருன்.
பாரதி வடமொழி இலக்கணத்திலிருந்து தமிழ் மொழி இலக் கணம் தோன்றியமை பற்றியும் தமிழுக்கு இலக்கணம் வகுத்தோர் பற்றியும் தமிழ்மொழி இலக்கணம் வடமொழிக் கலப்புக்கு முன்பு வேருக இருக்கலாம். என்றவாறும் எழுதியிருப்பதை நுஃமான்' தவறென்று தெளிவு படுத்தியிருக்கிருர். ஆயினும் தமிழுக்கு இலக்கண நூல் அமைக்கும் எண்ணம் வடமொழியில் இலக்கண நூல் ஏற்பட்ட பின்பே ஏற்பட்டமைக்கும் தமிழ் எழுத்துக்கள்
S1

Page 28
முதலில் வடமொழிக்கு அமைக்கப்பட்ட பிராமி எழுத்துக்களை யொட்டியே உருவாகின என்பதற்குமான ஆதாரங்கள் உள்ளன. தமிழ்மீது வடமொழியின் செல்வாக்கும் அது சார்ந்த பண்பாட் டின் பாதிப்பும் மிகவும் பெரியது. பாரதி இலக்கணத்தையும் இலக்கண நூலையும் குழப்பிக்கொண்டதை நுஃமான் சுட்டிக்காட்டு வது சரியே. இங்கு பாரதியின் கருத்துக்கள் ஆதாரமே அற்றவை என்று நிராகரிப்பதைவிட அவை இலக்கணம் பற்றிய குழப்ப மான ஒரு கருத்தின் விளைவானவை என்பது கூட நியாயமானது.
எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பாக நுஃமான் S. W. சண்
முகத்தின் கருத்துக்களையே மேற்கோள் காட்டுவது மூலம் அவர்
பின்னவருடன் உடன்படுவது போன்றே தெரிகிறது. இவ்விஷயத்
தில் என் கருத்துக்களை வேறு இடங்களில் விளக்கமாக வெளியிட்
டுள்ளேன் என்பதோடு மேலும் மேலும் எழுத இருப்பதால் அது
பற்றி இங்கு எழுத விரும்பவில்லை, எழுத்துச் சீர்திருத்தத்தின்
தேவை பற்றி பாரதியின் அடிப்படையான கருத்து மிகவும் சரி யானதே. அதற்கு பாரதி காட்டிய காரணங்களிற்போன்று, கூறும் தீர்வுகளிலும் தவறுகள் உள்ளன, அவை ஓரளவுக்கு பாரதியின்
சமுதாயச் சூழலின் விளைவானவை, எனவே, இன்றைய சூழலில்
அவைபற்றிய புனர் நோக்கு பயனுள்ளது.
இந்தியாவுக்குப் பொதுப் பாண்ஷ பற்றி பாரதியின் கருத்துக் களைச் சொல்லியபிறகு சமஸ்கிருதம் இந்தியாவின் தேசிய மொழி யாவது அசாத்தியம் என்று நுஃமான் சரியாகவே சுட்டிக்காட்டு கிருர். இந்தியைத் தேசிய மொழியாக்குவதன் பிரச்சனைக்ளையும் அதன் காரணமாகத் தேசிய ஒற்றுமை குலையும் சூழ்நிலையையும் அவர் சுட்டிக்காட்டுகிருர், ஆயினும் ரஷ்யாவில் (உண்ம்ையில் முழு சோவியத் யூனியனிலும்) ரஷ்ய மொழி தொடர்பு மொழியாகி யதற்கு அது ஏனைய மொழிகளைவிட வவர்ச்சிபெற்றமையைக் கார ணமாக்கி அது இயல்பாகவே பொதுத் தொடர்பு மொழியாகியது என்கிருர், இஸ்ரேலில் ஹீப்று பொது மொழியாக மறுபடி சிருஷ் டிக்கப்பட்டமைக்கு அங்கு குடியேறிய யூதர்களிடையே பல வேறு மொழிகளையும் பேசுவோர் இருந்தமையால் ஒரு பொது மொழி அவசியமானமையைக் காரணமாகக் காட்டுகிருர். இவைகூடக் கட் டுரையைச் சுருக்கமாக அவர் எழுத முயன்றதன் விளைவுகளோ தெரியவில்லை. நுஃமான் சுட்டிக்காட்டியவற்றை விட முக்கியமான அரசியல் காரணங்கள் உள்ளன என்பது என் அபிப்பிராயம், ஆயி னும், அவர் பொதுப்படக் கூற முனைவது போல, சமுதாயக் கார ணிகளே இவ்விஷயங்களில் முதன்மை வகிக்கின்றன என்பது எனக்கு உடன்பாடானது.
O 52

நாடகம் - ஒரு பார்வை
G “புழுவாய் மரமாகி’
O கலையன்பன்
கிலை என்பது மனித உணர்வுகளுக்கு விருந்தளித்து மகிழ்ச்சி யூட்டும் வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல. தனி மனிதன் அல்லது ஒரு சமுதாயம், ஒரு வர்க்கம், ஒரு இனம், அல்லது ஒரு தேசத்து மக்கள் தாம் எதிர்நோக்கும் ஜீவாதார பிரச்சனைகளை கலைவடிவில் வெளிக்கொணர்ந்து தெளிவுபடுத்தி அதன் தீர்வு நோக்கி உற்சாகமாக மக்களை ஐக்கியப்படுத்திச் செல்ல உதவும் ஒரு சாதனமுமாகும். சமாதானமான காலகட்டங் களைவிட நெருக்கடியான காலகட்டங்களிலேயே இந்த உண்மை எல்லோராலும் உணரப்படுகின்றன.
இன்று இந்த நெருக்கடிகளின் மத்தியிலும் பல்வேறு கலை முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலிருந்தும் வெளிவருகின்றன கலைத்துவமா பிரச்சாரமா என்ற கேள்விக்கே இடமில்லாத வகை யில் பிரச்சாரத்துக்கான கலையின் முன்தேவை நன்கு உணரப்பட் டுள்ளது. இவை சமூக மட்டத்தில் மட்டுமல்ல பல்கலைக்கழகங் களையும் பாடசாலைச் சுவர்களையும் தாண்டி முன் செல்கின்றன. இது ஆரோக்கியமான ஒன்றே. எனினும் வெளிவரும் படைப் புக்களில் கால ஓட்டத்துக்கேற்ப அதிதீவிரப் போக்குகளும், நிதானமாக முன்செல்லும் போக்குகளும் தென்படுகின்றன. அவை மக்களால் விமர்சிக்கப்பட்டு ஏற்கவோ நிராகரிக்கவோ படவேண்டியவையாகும் .
நாடு முழுவதும் பல பாடசாலைகளில் "கமிழ்த் தின விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அவை சூழலுக்கும் நிலைமைகளுக்கும் ஏற்ப சிறப்பாக நடைபெற்ாலும் சுண்டிக்குழி. மகளிர் கல்லூரில் யூலை 10ல் நடைபெற்ற தமிழ்த் தின விழாவில் இடம்பெற்ற நிகழ்ச்சி கள்காலத்தின் தேவையை ஒட்டி அமைந்தவை எனலாம். அங்கு இடம்பெற்ற இசைநிகழ்ச்சி, கவிதா நிகழ்வு, கவியரங்கம், நாட் டிய நாடகம், அனைத்துமே சிறப்பாக அமைந்தது. இறுதியாக இடம் பெற்ற “புழுவாய் மரமாகி" என்ற நாடகம் ஏற்றத் தாழ்வான இச்சமூக அமைப்பில் அதனைப் பாதுகாக்கும் நோக் குடன் அமைந்த கல்விக்கொள்கைகளினல் பாதிப்படையும் மாணவ மாணவிகள் புழுவாய்த் துடிப்பதிையம் உணர்ச்சியற்ற மரங் களாகக் கருதப்படுவதையும் தெளிவுபடுத்துகிறது. திரு. குழந்தை சண்முகலிங்கம் அவர்களால் எழுதப்பட்டு திரு. சிதம்பரநாதன் அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட இந்நாடகத்தில் நடித்த கல்லூரி மணவிகள் அனைவருமே சிறப்பாக நடித்தனர்.
மத்தியதர, மேல்மத்தியதர உயர் வர்க்கக் குடும்பங்களிலும் வைத்திய அதிகாரி, பொறியியலாளர், கணக்காளர் என்று வரி சைப்படுத்தி மதிப்பளிக்கும் மனப்பாங்கே இன்றைய சமூகத்தில் இருந்து வருகிறது. இதல்ை தமது பிள்ளைகளின் மனவிருப்பங்கள் இயல்பூக்கங்கள் எதுவாக இருந்தாலும் அவைகளைப் புறக்கணித்து அத்தகைய நிலைகளுக்கு அவர்களை கள்ளிவிட பெற்றேர் முயல் கின்றனர். இதஞல் அவர்களது திறமைகள் மழுங்கடிக்கப்படுவ டன், இரண்டுங்கெட்டான் நிலைக்குத் தள்ளப்படும் அவர்கள் ஏற் றத்தாழ்வான இச்சமூக அமைப்பை மாற்ற உறுதிகொள்கின்றனர்.

Page 29
x அஞ்சாதீர்கள் அத்தான்!
அத்தான் நீங்கள் மேற்கிலே உழைப்பதற்காய் வாழ்வதற்காய் நான் இலங்கையிலே சிறை மீட்பதற்காய் நீங்கள் வரும்போது நான் சீவியம் விடுவேனே நிச்சயமாய்த் தெரியாது. கிறைபட்ட மேனியள் ஊர்பேசும் என்று சொல்லி (ஊரென்று ஒன்றிருந்தால்) தீக்குளிக்கச் சொல்வீர்களோ எனக்குத் தெரியாது. காட்டுக்குச் செல்லென்று கட்டளையிடுவீர்களோ நானறியேன். ஆனல் ஒன்று அகலிகைகள் இங்கே தேவர்களின் சூழ்ச்சியில் பலியான பின்னரும் '56üavnriju Guro« என்று சாபங்கள் செய்யாதீர் ஏனென்ருல் பலிக்காது முனிவரில்லைத்தானே நீங்கள் அத்தான் உங்களுக்கோர் அதிசயம்நான் சொல்லவேண்டும் அண்மையில் ஒர்நாள் இராமன் தெருவிலே தடக்கையில் காவிலே * கல்" பட்ட போது அகலிகை உயிர்பெற்ருள் i UNT 6n Lib, இராமனே கற்சிலையானுன் ஆதலினல் நான் உயிர் பெற்று விட்டேன்; அஞ்சாதீர்கள் அத்தான்
- லக்ஷ்மி S4
கேற்றப்பட்ட
பெற்றேர் சுற்றத்தவர்கள் மாணவர்களை அவர்கள் விரும் பாத துறைகளைப் படிக்கும்படி ஆாண்டுவதும் "மூஆள இல்லாத் மொக்குகள் என்று திட்டும் போது ஏற்படும் வக்கிர உனர் வை வெளிப்படுத் தும் உளவியல் தாக்கத்தை - கொடிய உருவங் கிள் மாணவர்க%ளக் கொடுமைப் Hடுத்துவதாக அமைந்த உளமக் காட்சி சிறப்பாக அமைந்தது.
மற்ஸ் ரிச்சர், பேராசிரியர், ஆசிரியர், தாய் தந்தையர், ஊமம் நிகழ்த்தியோர் அனைவ ரும் தமது ப்ாத்திரங்களைச் சிறப் பாகச் செய்திருந்தனர்.
இந்த சமூக அமைப்பு மாற வேண்டும் என்று அதில் பங்கு கொண்ட 6 மாணவிகளும் மேடையில் நின்று கோஷம் போடும்போது அதில் பார்வை யாளர்களும் ஒன்றிவிடுவின்றனர். அது நன்றே. எனினும் மத்திய *ரவர்க்கத்துக்கு மேற்பட்டு ரையே பாதிக்கும் திவருண இச் சமுதாய அமைப்பை பாதுகாக் கும் இக்கல்விக் கொள்கைகள் பணவசதியற்ற பெருந்தொகை பன தொழிலாள விவாதி ளின் பிள்ளைகளை எவ்வளவு மோசமாகப் புறக்கணிக்கிறது என்பதை மாணவர்கள் உணர் ଈusint as வார்த்தைகளிலாவது உணர்த்தியிருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்
D60p
பரததாட்டியம் போன்ற பல நாட்டிய மரபுகள் பல சிறப்பம் சங்களைக் கொண்டிரு ந்தும் புதிய கருக்களை ஏற்றுப் புத்துயிர்வி கும் முயற்சிகள் சிறிய அளவி லேயே தடைபெற்று வருகின் றன. திரு. மெளனகுரு அவர் களால் தயாரிக்கப்பட்டு கல்லூரி மாணவிகளால் சிறப்பாக அரங் மழை நன்முக இருந்தது. எனினும் யாகத்தால்
மழையைக் கொண்டு வருவது
காலத்துக்கேற்ப கருமாறவில்லை என்பதையே காட்டுகிறது.

6) நாளையும் இப்படியே நகரும்.
எங்கள் ஊரின் சந்தோஷ் இரவுகள் காணுமல் போகும் பச்சை உடுப்புக்களைச் சுமந்த சப்பாத்துக் கால்கள் ராஜபவனி வரும் வருகின்ற திசையெல்லாம் தீப்பிளம்புகள் தோரணங்களாகும் வழி நெடுக. மானுடப் பூக்கள் குண்டுமாலைகளாய்ச் சிதறிக் கிடக்கும் குருதித் துளிகள் பன்னிராய்த் தெறிக்கும்
இலட்சியக் குரல்களோ சுவரொட்டிகளில் மட்டும் செவிடுபடக் கேட்கும் திணவெடுத்த தோள்கள் பிணமாகிக் கிடக்கும் களப்பலிச் சுவரொட்டிகளோ கணப்பொழுதில் அஞ்சலிக்கும் மின் கம்பங்கள் மானுட மாலைகள் அணியும்
போதி மரத்தின் உச்சானிக் கொம்பிலிருந்து வட்ட மேசைகள் ஓலமிடும் மனித உயிர்ப் பானம் அருந்தி மானுடத்தைப் போதிக்கும்
அந்நிய தேச மரத்தின் உச்சி மாநாட்டுக் கொப்பில் காக்கைகளும், குருவிகளும் சமாதானம் விரும்பி கைகுலுக்கும்
பாரதிநூற்ருண்டின்
O Jgeñr. எம். நெளசாத்
எங்கள் இதய்த் தரைகளில் நம்பிக்கை விதைகள் முளைவிடத் தொடங்க.
LO DJLJ Ug.
எங்கள் ஊரில் பச்சை உடுப்புகளைச் சுமந்த சப்பாத்துக் கால்கள் ராஜபவனி வரும் மீண்டும். பன்னீர்த் தூத்தல்களும் மானுட மாலைகளும் தீப்பிளம்புத் தோரணங்களும்.
நம்பிக்கை முளைகள் கருகிப் போய். நாளையும் இப்படியே நகரும். I
யாழ்நகரின் புத்தகக்கடைகள் யாவிலும் விற்பனையாகிறது ! பாரதி பன்முகப் பார்வை தேசிய கலை இலக்கியப் பேரவையின்
ஆய்வரங்கக் கட்டுரைத் தொகுப்பு
ரூபா 301
55

Page 30
வடக்குக் கிழக்கின் சமகால அரும் சொற் தொகுதி
அதிரடிப்படை அஞ்சலி அகதிகள் அடையாள அட்டை அனுமதிப்பத் திரம் ஆட்கடத்தல் ஆய்வு இணைப்பதிகாரி இயக்கம் இளைஞர் இனம்தெரியாதோர்
perfenu Gouħ எரித்தல்
எதிர்த் தாக்குதல் எச்சரிக்கை
ஒலம் ❖@uêም 6ጪሀIr&sGörth • கண்ணிவெடி கிடத்தல் கடல்வெடி கற்பழிப்பு கலைத்தல் கண்காணிப்பு கட்டுப்பாடு கசிப்பு காட்டிக்கொடுப்பு குடியேற்றம் கொள்ளை சமூகவிரோதி &FL-6th சந்தர்ப்பவாதி சீருடை
சோதனை
2567 L-ar தட்டுப்பாடு
தாக்குதல் தீவிரவாதிகள் தேடுதல் தோல்வி துப்பாக்கி துரோகிகள் நகைகள் Լյ09&ո աւծ பயங்கரவாதிகள் பலி
Lu Garb பகிஷ்கரிப்பு பறித்தல் பிரசுரம் பேச்சுவார்த்தை பேட்டி போராட்டம் மனநோயாளி LDT6007th மகஜர் மின்கம்பம்
faaf? Gaforr.
. (pá5íruh
Tଜ୩ ରusfr ராணுவம் ரோந்து
6. வங்கி
GotT 56oTb விசாரணை விடுதலை
வீதி வெற்றி வேண்டுகோள் ஹர்த்தால் ஹெலிகோப்ரர்
9 தொகுப்பு: எஸ். எஸ். கெளரி
S6


Page 31
ஒ இலங்கையில் செய்திப்பத்திரி
Register ed AS A news ha per
#\ !
தாயகம் பல நெருச் தனது 12-வது இதழை தொடர்ந்தும் சிறப்பாக ளும் இவ்வேளேயில். சந்தா வழங்கியும், தனி நன்கொடைகள் அளித்து சிறுகதை, கவிதை, Ef. அதன் தரமுயர உதவிே
கள் மூலம் எமை உற்சாக
வாசக நண்பர்களுக்கும் பூர்வமான நன்றியைத் கிறது.
O Ly தீ சந்தா தாயகத்திற்கு புதிய சந்தாவுக்க சந்தாவைப் புது புதியசந்தாதாரர்க
சிக்கும் ஒத்துழை கிருேம்! " .
இப் பத்திரிகை தேசிய 6 ܘܬܶܗ
னம், 15/1, மின்சார நிலேய
"அவர்களால்
யாழ்ப்பானம்
பூரீகாந்தா அச்சகத்தில் அச்சிட்(
 

கையாக பதிவுசெய்யப்பட்டது
in Sri Lankah,
கடிகள் மத்தியிலும் ப் பூர்த்தி செய்து
மலர உறுதிகொள் அதன் வளர்ச்சிக்கு ப்பிரதிகள் பெற்றும், ம் உதவியோருக்கும், ட்டுரைகள் வழங்கி யாருக்கும், கடிதங் முட்டி ஊக்குவித்த நாயகம் தனது இதய
தெரிவித்துக்கொள்
வழங்குங்கள்!
சந்தா வழங்கி உதவியோர் ான பணத்தை அனுப்பி ப்பித்துக் கொள்வதுடன், ளை இணைக்கும் எமது முயற் ப்பு நல்கும்படி வேண்டு
லக்கியப் பேரவைக்காக யாழ்ப்பா
வீதியிலுள்ள க தணிகாசலம்
கே. கே. எஸ். வீதியிலுள்ள டு வெளியிடப்பட்டது