கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1984.08-09

Page 1
செப்ரெய்ர் 。)。
影
OOOOOOOOOOO
 
 

இந்த இதழில்.
இ எம். ஏ. நுஃமான் 0 செண்பகன் இ முருகையன்
ຫຼືກິ໋
• இ. சிவானந்தன்
| 9. Fasil | இ ஆர்.எம்.நெளஸ்ாத்
9 அம்புஜன் | 9 சன்மார்க்கா
இ சி. சிவசேகரம் | இ சேகர்
sssssssssssssss

Page 2

அரசின் பயங்கரவாத ஒழிப்பும் இனப் பிரச்சனையும்
S மாணவர் பகிஷ்கரிப்பும்
எதிர் காலமும்
“பயங்கரவாதத்தை" ஒழிப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. துணைக்கு அமெரிக்க றிகனையும், இஸ்ரேலியர்களையும் அழைக்கிறது. நாட் டின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவரும் பூரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியுமான திருமதி பூரீமாவோ பண்டார நாயக்கா, "பயங்கரவாதம் என்பது ஒரு நோயின் அறிகுறி. இதற்கு நோயின் காரணத்தை அறிந்து அதனைக் குணப்படுத்த வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
இதனைத்தான் நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்புகிருர்கள். அரசு ஏன் தயங்குகிறது. தனது ஆற்றமைக்கு மற்றவர்கள் மீது ஏன் பழி சுமத்து கிறது. r
ஏதோ 21-9-84 அன்று வட்டமேசை மாநாட் டில், இதுவரை நடந்த கூட்டங்களின் ஒரு தொகுப்பை பொதுத் திட்டம் என்ருே அல்லது பொதுக்கொள்கை

Page 3
அறிக்கையென்றே சகல கட்சிகளினதும், ஸ்தாபனங் களினதும் விவாதத்திற்கும் அபிப்பிராயத்திற்கும் முடிவிற்கும் விட்டிருக்கிருர் ஜனதிபதி.
அதேவேளை 22 - 9 - 84 வானுெலிச் செய்தியில் "பயங்கரவாதத்தை ஒழிப்பதே முதல் தேவை’ என்று குரல் கொடுத்திருக்கிருர். இது வண்டிலுக்குப் பின் னல் குதிரையைப் பூட்ட முயலும் செயலாகும். இவ் விதம் "பயங்கரவாதத்தை ஒழிப்பதென்பது முழுத் தமிழ் மக்களையும் அவலத்தில் தள்ளுவதாக முடியும்.
அரசு, நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாடு சுபிட் சம் ஆகியவற்றை முதன்மைப் படுத்துவதாகத் தெரிய வில்லை. இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வல்ல அரசியல் தீர்வு காணவேண்டுமென நாம் பல தடவை களில் குறிப்பிட்டுள்ளோம்.
நாட்டு நலனில் அக்கறை கொண்ட திரு. தொண்ட மான் உட்பட பல கட்சிகளும், ஸ்தாபனங்களும், பிரமுகர்களும், தமிழர் பிரச்சனைக்கு பிரதேச சுயாட்சி முறையை நல்ல தீர்வாகக் கருதுகின்றனர். வடக்குக் மாகாணங்களில் வாழும் தமிழ் தேசிய இனத்திற்கு முழு அளவிலான சுயாட்சி அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் ஒன்றே இரண்டோ ஏற்படுத்துவது பொருத்தமானது.
தன் நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனதிபதி யைக் கொண்டுள்ள அரசு நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாடு, சுபிட்சம் கருதி இதனைச் செய்ய முன் வரவேண்டும்.
() () GO
வடபகுதியில் அரசின் நடவடிக்கைகளால் மாண வர்களின் மனேநிலை பாதிக்கப்படுவது உண்மையே. அவைகளுக் கெதிராக ஒழுங்குபடுத்தப்பட்ட ஆட்சே பனைகளை பகிஷ்கரிப்புகளை ஒரு நாளோ இரு நாளோ
2

மேற்கொள்வது நியாயமான ஒன்ருகும். இதனை விடுத்து வருடத்தில் பாதி நாட்களை அல்லது அதற் கும் மேலான நாட்களை பகிஷ்கரிப்பில் செலவிட்டால் என்ன ஆகும்? இது மாணவர் பகிஷ்கரிப்பு ஒருவித பொழுது போக்கா என்ற கேள்வியை எம் முன் எழுப்புகிறது.
1984 மூன்ரும் பருவ ஆரம்பத்திலேயே பகிஷ் கரிப்பு ஆரம்பித்துவிட்டது. வருடத்தில் குறைந்த பட்சம் 180 பாடவேளைகளில் எத்தனை பாடங்கள் முடிக்கப்பட்டன? எத்தனை மாணவர்கள் பங்குபற் றினர்?
பல நாட்டவர்களாலும், அறிஞர்களாலும் எமது கல்வி வளர்ச்சி, ஒழுக்கம் முன்னர் போற்றப்பட்டது - முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டது. தென் இலங்கையிலிருந்து இங்கு வந்து கல்விச் செல்வத்தைப் பெற்றவர் தொகை அதிகம்.
பொருமை கொண்ட பேரினவாதிகள் சிலரின் தூண்டுதலால் புகழ் வாய்ந்த யாழ். நூல்நிலையம், தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றன ஹாட்லிக் கல்லூரி அதன் நூல்நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது.
இயக்கங்களும் இவ்விதம் போட்டி போட்டுக் கொண்டு ஒரு இளந் தலைமுறையை கல்வி, ஒழுக்கம் அற்ற காட்டுமிராண்டிகளாக்குவதற்கு உதவலாமா?
கல்விக் கூடங்களுக்குச் சொந்தமான நவீன இயந்திரங்கள், பிறசாதனங்களைக் கொள்ளை அடிப்பது அல்லது எடுத்துச் செல்வது மாணவர்களின் கல்வியில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும்? இவ்வித சாதனங் களைக் கல்விக் கூடங்கள் மீண்டும் பெற்றுக்கொள் வதற்கு அரசு உதவுமென்பது முயற்கொம்பு தேடும் கதை. எமது இளஞ் சந்ததியின் கல்வி, ஒழுக்கம், மேன்பட்டு பிரகாசம் மிக்க எதிர்காலத்தை உருவாக்க உதவட்டும்.

Page 4
பிணங்களின் மறுபெயர்.
O செண்பகன்
அதிகாலை ஆறு மணி ஆஸ்பத்திரிக் கடமைக்காய் அடையாள அட்டையுடன் சைக்கிளில் செல்கையில் சுடப்பட்டுச் செத்ததனுல் போரிலே எதிர்கொண்ட பயங்கரவாதி அவஞஞன்! ஆதலினல் பிணமானன்.
கட்டு மரமேறி
கடலிலே சென்று வயிறு கழுவுதற்காய் வலைபோட்ட வேளையிலே சுடப்பட்டுச் செத்ததனுல் போரிலே எதிர்கொண்ட பயங்கரவாதி அவனுஞன்! ஆதலினுல் பிணமானன்.
வேளைக்காய் எழுந்து வாழைக்குலை விற்பதற்காய் தோழில் துவாயுடன் வேகமாய் செல்கையிலே சுடப்பட்டுச் செத்ததனுல் போரிலே எதிர்கொண்ட பயங்கரவாதி அவனனன் ஆதலினல் பிணமானன்.
உண்ணவும் உடுக்கவும் எண்ணி நடப்பவர் மண்ணில் துவக்கால் சுட்டு மடிந்தால். தொழிலாளி விவசாயி வர்க்க உணர்வோடு அநியாயம் சாய்க்கும் அணியாகத் திரள்வோம் நாம்

பாரதி ஆய்வரங்குக் கட்டுரை - 9
(தேசிய கலை இலக்கியப் பேரவையினல் நடத்தப்பெற்ற பாரதி நூற்றண்டு ஆய்வுரைகளை தொடர்ச்சியாக கட்டுரை வடிவில் தருகிறேம்.)
நவீனத்துவமும் பாரதியும்
- எம். ஏ. நுஃமான்
பாரதி நூற்ருண்டு தொடர்பாக நடைபெற்றுவரும் இவ் ஆய்வரங்குத் தொடரிலே, பத்தாவதாக "நவீனத்துவமும் பாரதியும்" என்னும் பொருளில் கட்டுரை சமர்ப்பிக்கும்போது அசெளகரியமாக அல்லது அதுவே செளகரியமாக அமைய்க் கூடிய ஒரு அம்சத்தை முதலில் சுட்டிக் காட்ட விரும்புகின் றேன். இதுவரை கட்டுர்ை வாசித்த எல்லோரும் ஏதோ ஒரு வகையில், பாரதியின் நவீனத்துவம் பற்றிய வெவ்வேறு அம் சங்கள் பற்றியே அலசியுள்ளார்கள். ஆகவே, ஒருவகையில் எனது கட்டுரை பெரும்பாலும் இதுவரை பேசப்பட்ட விசயங் களின் தொகுப்புரையாகவே அமையக்கூடும் என்று எதிர் பார்க்கலாம். சிலவேளை கூறியது கூறல் என்னும் குற்றத்துக் கும் நான் ஆளாகக் கூடும். ஆயினும் முடிந்தவரை இது வரை பேசப்பட்ட அம்சங்களில் இருந்து உதாரணங்களைத் தவிர்த்து, மதம், மொழி, இலக்கியம் ஆகிய துறைகளுக்கு முதன்மை கொடுத்து பாரதியின் நவீனத்துவம் பற்றி ஆராய லாம்' என்று எண்ணுகின்றேன்.
2
முதலில் நவீனத்துவம் என்ருல் என்ன என்பதை வரை யறுத்துக் கொள்வது பயனுடையது. ஆங்கிலத்திலே இது Gosit tuits Modernity, 3 Modernism, Modernization gau பதங்கள் உள்ளன. இவற்றை முறையே, நவீனத்துவம், நவீன வாதம், நவீனமயமாக்கல் என தமிழிலே பெயர்த்துக் கூறலாம். இவற்றுக்கிடிையே பொருட்பரப்பில் அடிப்படையான வேறு பாடுகள் உள்ளன. எனினும், தற்காலத்துக்குரியது, புதியது என்ற பொருள்தரும் Modern என்னும் சொல்லடியாகவே இவை பிறந்துள்ளன. அவ்வகையிலே இவற்றுக்கிடையே ஒரு பொதுவான பொருள் ஒற்றுமையினையும் நாம் காணலாம்:
5

Page 5
வழிவழி வந்த மரபில் இருந்து மாறுபட்டு, புதுமையைச் சார்ந்து நிற்றல், அல்லது புதுமையை நாடிச் செல்லல் என்பது இவை உணர்த்தும் பொதுப் பொருள் எனலாம். ஆயினும் நவீனத்துவம் (Modernity) என்பது சமூக, அரசியல், பொரு ளாதார பண்பாட்டு அம்சங்கள் எல்லாவற்றையும் உள்ளடக் கும் ஓர் வளர்ச்சி நிலையைச் சுட்டுகின்றது.
நவீனத்துவத்தின் பிரதான பண்புகளாகப் பின்வருவன வற்றை வகுத்துக் கூறுவர். 1
1. பொருளாதாரத்தில் சுயநிறைவான வளர்ச்சி அல்லது
குறைந்தபட்சம், உற்பத்தி, நுகர்வு, ஆகிய இரண்டி லும் கிரமமான அதிகரிப்புக்குப் போதுமான வளர்ச்சி.
2. ஆட்சி நிருவாகத்தில் பொதுஜனப் பங்குபற்றுதல் அல் லது குறைந்தபட்சம் ஆட்சி மாற்றங்களை வரையறுப் பதிலும், தெரிவு செய்வதிலும் ஜனநாயகப் பிரதி நிதித்துவம்
3. கலாசாரத்தில் சமயச்சார்பற்ற அறிவுசார்ந்த நியமங்
களின் வியாபகம்.
45 சமூக அசைவியக்கத்தில் அதிகரிப்பு. இது பெளதீக
சமூக உள இயக்கத்தில் தனிமனித சுதந்திரத்தைக் குறிக்கும்.
நவீன மயமாக்கம் (Modernization) என்பது மரபுசார்ந்த அம்சங்களை இத்தகைய நவீனத்துவ அளவுகோல்களுக்கேற்ப மாற்றி யமைத்தலைக் குறிக்கும். ஆனல் நவீனவாதம் (Modernism) என்பது, குறிப்பாக ஐரோப்பாவில் 18-ம் நூற் ருண்டின் பிறகு மதம், கலை இலக்கியம் ஆகிய துறைகளில் செயற்பட்ட ஒரு இயக்கமாகும். சமூக விஞ்ஞானக் கலைக் களஞ்சியம், “மரபுரீதியானவற்றை புதுமைக்குக் கீழ்ப்படுத்து கின்றதும், நிலைபேறடைந்த, சம்பிரதாய பூர்வமானவற்றை இன்றையத் தேவை நிர்ப்பந்தங்களுக்கேற்ப இணங்கப்படுத்து கின்றதுமான ஒரு மனப்போக்காகும்" என நவீனவாதத்தை விபரிக்கின்றது. "இந்த மனப்போக்கின் செயல்முறைத் தாக் கம் பழமை பேணுவதாக அல்லது புரட்கிகரமானதாக இருக்க லாம். பழமையை அழியாது காப்பாற்றுவதற்காக அதைப் புதுமையுடன் இணங்கப்படுத்தும்போது அது பழமை பேணுவ தாகின்றது, புதுமையின் நிமித்தம் பழமையை நிராகரிக்கும் போது அது புரட்சிகரமானதாகின்றது. மதங்களைப் பொறுத்த வரை நவீன வாதத்தின் பழமைபேண் வகையைக் காணலாம் என்றும் கலைகளில் நவீன வாதத்தின் புரட்சிகரமான வகை
6

யைக் காணலாம்" என்றும் அது மேலும் கூறுகின்றது.2 பார தியின் நவீனத்துவம் பற்றி ஆராய்கையில் நவீன வாதத்தின் சில அம்சங்களையும் கருத்தில் கொள்ளுதல் பயனுடையது. ஆயினும் முதலாளித்துவத்தின் முதிர்ச்சிக் கட்டத்தில் தோன் றிய சிம்பலிசம், இமேஜிசம், சர்ரியலிசம் போன்ற நவீனவாத இலக்கிய இயக்கங்களுடன் பாரதியை தொடர்புறுத்தி நோக் குதல் பொருந்தாது.
3
நவீனத்துவம் என்பது தொடர்ந்து நடைபெறும் ஒரு வளர்ச்சி நிலையாகும். எனினும் முதலாளித்துவ சமூக அமைப் பின் தோற்றத்துடனேதான் நவீனத்துவம் பற்றிய பிரச்சினைகள் முதலில் தோன்றுகின்றன என்பதை வரலாறு காட்டுகின்றது. வளர்ச்சியடைந்து வரும் முதலாளித்துவ பொருளாதார அடித் தளம், தன் வளர்ச்சிக்கு உதவும் வகையிலே சமூக, சமய, அரசியல் பண்பாட்டு நிறுவனங்களை மாற்றியமைக்கவேண்டிய தேவை நிர்ப்பந்தங்களைத் தாற்றுவிக்கின்றது. இந்த மாற்றம் பாரம்பரிய நிலப்பிரபுத்துவ நிறுவனங்களின் அமைப்பில் இருந்து பெரிதும் வேறுபட்டதாகும். மதநிறுவனங்களுக்கும், மத மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான விஞ்ஞான மனப்பாங்கு, தனிமனித சுதந்திரம், அரசியலில் ஜனநாயகக் கோட்பாடு மக்களிடையே சமத்துவம், பெண்களுக்குச் சம உரிமை, கலை இலக்கியத்தில் சமயச் சார்பின்மை, புதிய கலை இலக்கிய வடி வங்களின் தோற்றம் முதலியவை இவ்வாறு முதலாளித்துவ சமூக அமைப்பு உருவாக்கிய நவீனத்துவம் சார்ந்த அம்சங் களாகும். இவை நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக்கு எதிரானவை. அந்த வகையிலே முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டம் - இதுவே மறுமலர்ச்சி யுகம் என்றும் அழைக்கப்படுகின்றது - எவ்வளவு குரூரமானதாக இருந்தபோதிலும் முற்போக்கானதாகும். பிரடெறிக் ஏங்கெல்ஸ் இக் காலகட்ட மாற்றங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் "இதுவரை மனிதகுலம் அனுபவத்தில் கண்ட வற்றில் இதுவே ஆகப் பெரிய மகத்தான முற்போக்குப் புரட்சி யாகும்" என்று விபரித்தார். 3 எனினும் முதலாளித்துவத்தின் பிந்திய வளர்ச்சி அதிநவீனத்துவ கலாச்சாரச் சீரழிவுகளுக்கே இட்டுச் சென்றுள்ளதை நாம் அறிவோம்.
இந்தியா போன்ற காலனித்துவ நாடுகளிலே முதலாளித் துவ வளர்ச்சி, இயல்பான வளர்ச்சி விதிகளின் அடிப்படையில் ஏற்பட்டதல்ல. அது ஏகாதிபத்திய தலையீட்டினுல் திணிக்கப் பட்டதாகும். அந்த வகையிலே இந் நாடுகளின் நவீனத்துவம் சார்ந்த இயக்கங்கள் சிலவேளை முற்றிலும் பழமை பேணுவ
7

Page 6
தாக, சிலவேளை முற்றிலும் மேற்கத்தைய மயமாதலை நாடுவ தாக அல்லது நிலப்பிரபுத்துவ பண்பாட்டு அம்சங்களை மட்டு மன்றி ஏகாதிபத்திய பண்பாட்டு அம்சங்களையும் எதிர்ப்பதாக அமைந்தன என்பதை நாம் இங்கு மனங்கொள்ள வேண்டும்.
19-ம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்தியாவிலே நவீனத்துவம் சார்ந்த இயக்கங்கள் செயற்படத் தொடங்கி யதை அறிகின்ருேம். ஆரம்பத்தில் இவை சமய, சமூக சீர் திருத்த இயக்கங்களாகவே இருந்தன. பிரம்மசமாஜம் (1828), ஆர்யசமாஜம் (1975), இராமகிருஷ்ணமிஷன் (1886), இந்து இலக்கிய சங்கம் (1820), இந்து முற்போக்கு அபிவிருத்திச் சங்கம் (1852), திருவல்லிக்கேணி இல்க்கியச் சங்கம் (1868) போன்ற இயக்கங்கள் வட இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் அமைக் கப்பட்டன. இந்த இயக்கங்கள் எல்லாம் வெவ்வேறு அள விலே இந்தியப் பண்பாட்டை நவீனப்படுத்த உழைத்தன.
இவ்வியக்கங்களைப் பற்றிக் கூறுகையில் "பத்தொன்பதாம் நூற்ருண்டிலே தேர்ன்றிய இயக்கங்கள் புதிய அரசியல் இயக் கங்களுக்குத் தேவைப்பட்ட கலாச்சாரப் புரட்சியை நிகழ்த்திக் கொடுத்தன. ஆட்சியாளரின் அரசியல், நிருவாக சட்டத்துறை களில் இந்த இயக்கங்களின் காரணமாகப் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. இந்திய தேசிய இயக்கமும், சமூக சீர்திருத்த இயக்கமும் நாடு தழுவிய விரிந்த களத்தைக் கண்டன" என்கிருர் பெ. சு. மணி.4
ஆயினும் 19-ம் நூற்ருண்டின் நடுப்பகுதியிலிருந்து தமிழ் நாட்டில் தோன்றிய ஆரம்டிகால நவீன சிந்தனையா ளர்கள் பெரும்பாலும் ஏதோ ஒருவகையில் பழமையை நிலைநிறுத்த முயலும் நோக்குடையவர்களாகவே காணப்ப்டு கின்றனர். நமது ஆரம்பகால நவீன படைப்பிலக்கியகாரர் இதற்கு நல்ல உதாரணமாகக் காணப்படுகின்றனர். ஐரோப் பாவிலே நவீன சமூகத்தின் சின்னங்களுள் ஒன்ருகத் தோன்றிய நாவல் இலக்கியத்தை முதல்முதல் தமிழுக்கு அறிமுகப்படுத் திய எமது ஆரம்பகால நாவலாசிரியர்கள் பற்றி டேராசிரியர் க. கைலாசபதி கூறுவது இங்கு மனங்கொள்ளத்தக்கது. "அற வியலை வற்புறுத்திய ஆரம்பகால நாவலாசிரியர்கள் பெரும்பா லான இந்திய சமூக சீர்திருத்தவாதிகள் போக்கிற்கேற்ப, புத்தம் புதிய தத்துவம் எதையும் வேண்டிற்றிலர். தொண்டு தொட்டுவரும் ஆசாரங்களிற் படிந்துள்ள தூசுதும்பு துடைத் துச் சுத்தம் செய்தால் போதும் என்றே எண்ணினர்' என்பது அவர் கருத்து.க
8

க. நா. சுப்பிரமணியம் கூறுவதுபோல 'பழமை மாறிப் புதுமை நம் வாழ்விலே இடம்பெறுவதையே?’ நமது ஆரம்ப கால நாவலாசிரியர்கள் சித்தரித்துள்ள போதிலும் சாராம்சத் தில் அவர்கள் பழமையின் சார்பிலேயே நின்றர்கள். பண்டித நடேச சாஸ்திரியின் தீனதயாளு நாவல்பற்றி எழுதுகையில், "பழமையில் நம்பிக்கை வைத்து பழைய மாதிரியே குடித் தனத்தை ஒரே குடும்பமாகச் செய்து வரத் தீனதயாளு படாத பாடுபடுகிரு:ன். ஆசிரியரின் அனுதாபம் பூராவும் கதாநாயக னிடமே இருக்கின்றது என்பது பக்கம் பக்கமாகத் தெளிவா கின்றதே தவிர அவன் இப்படி அரும்பாடுபடுவது அணுவசியம் என்று அவர் ஒரு இடத்திலும் சொல்லவில்லை" என க. ந. சு. கூறுகிருர், 6 தி. ம. பொன்னுச்சாமிப்பிள்ளை, தனது ஞானம் பிகை நாவலுக்கு எழுதிய முன்னுரையிலே, "எமது தேசத்தில் வைதீக மார்க்கமும் தளிர்த்தோங்குவதற்கு ஒரு முகாந்திரம் ஏற்படும் என்பதும் இக் கதைகளை எழுதுவதில் unresir S. L-600கொண்டிருக்கும் உட்கருத்து" என்று குறிப்பிடுகிருர், 7
தமிழில் முதல் நாவலாசிரியரும், பெண்களின் கல்வி முன் னேற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி 1869-ம் ஆண்டிலேயே "பெண்கல்வி’ என்ற பெயரில்” நூல் எழுதியவருமான வேத நாயகம்பிள்ளை பெண்களின் சமூக அந்தஸ்துப்பற்றிய பிரச்சினை யிலே மரபுவழிச் சிந்தனைப் போக்சில் உறுதியாக இருக்சிருர், பெண் கல்வி என்ற தனது நூலிலே, "உடல் ஆற்றலிலும், அறிவிலும், நாட்டுச் செயல்களை நடப்பிக்கும் திறமையிலும் குடும்பப் பாதுகாப்பிலும் மிக வல்லவர்களான ஆடவர்களே தலைமைக்கும் தகுதியானவர்களாதலால், மாதர்கள் தெய்வத் துக்குப் படிந்து நடப்பதுபோல் ஆடவர்களுக்கும் படிந்து நடக்கி வேண்டும் என்பது மறைமொழியாய் இருக்கின்றது" என்றும் "மேலும் முதலில் பெண்ணுனவள் முன்னர் தீவினை செய்து, ஆடவனையும் கெடுத்தவள் ஆதலால், அவள்மேல் ஆடவன் முறைமை செலுத்தவும், அந்த ஆட்சிக்கு அவள் உட்பட் டிருக்கவும், பிள்ளைப்பேறு முதலிய துன்பங்களை நுகரவும் தெய்வ கட்டளை பெற்றுக் கொண்டவளாயிருப்பதால் அவள் எவ்வளவு படித்தாலும் ஆடவனுக்கு அடங்கி நடக்கவேண்டியவளே அல் லது மீறக்கூடாது" என்றும் திட்டவட்டமாகக் கூறுகின்ருர் . 8 எமது ஆரம்பகால நவீனத்துவம் பெரிதும் பழமையைச் சார்ந்தே இருந்தது என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள் தேவை u(ບ.
4
20-ம் நூற்ருண்டின் தொடக்கத்தில் இருந்து இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் தீவிர வடிவம் பெற்றது. அர சியல் பொருளாதார விடுதலையோடு கூடிய பூரண சமூக
9

Page 7
விடுதலை இதன் குறிக்கோளாகியது. இதன் அடிப்படையிலே நவீனத்துவம் பற்றிய நோக்கிலே புரட்சிகரமான அபிவிருத்தி கள் ஏற்பட்டன. இக்காலகட்டத்திலேதான் தமிழகத்திலே பாரதி, தன்காலத்தில் வாழ்ந்த பிற எல்லாரைக் காட்டிலும் புரட்சிகரமான நவீன சிந்தனையாளனுக மலர்ச்சியடைந்தான்: பாரதியின் நவீனத்துவம் பற்றிய நோக்கு, நான் ஏற்கெனவே கூறியது போன்று சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டு அம்சங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்குவது. அந்த வகையில் ஒரு முழுமையான பார்வையைத் தருவது.
ஆயினும் பாரதியிடம் கூட அவர் காலத்துப் பிற தேசிய வாதிகளிடம் காணப்பட்டது போன்று, தங்கள் பழைய நாக ரிகம் பற்றிய பெருமிதம் வேரூன்றி இருப்பதைக் காணலாம். முன்னர் நாடு திகழ்ந்த பெருமை பற்றிப் பாரதியார் பல இடங்களிலே பேசுகின் ருர். "ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் பிற இடங்களிலும் காணப்படும் நாகரிகங்களுக்கெல்லாம் முந்தி யதும், பெரும்பான்மை மூலாதாரமுமாக நிற்பது ஆர்ய நாக ரிகம். அதாவது பழைய சமஸ்கிருத நூல்களிலே சித்தரிக்கப் பட்டு விளங்குவது. இந்த ஆர்ய நாகரிகத்துக்குச் சமமான பழமை கொண்டது தமிழரது நாகரிகம் என்று கருதுவதற்குப் பலவிதமான ஸாஷ்யங்களிருக்கின்றன. ஆரியரும் தமிழரும் உலகத்தில் முதல்முதலாக உயர்ந்த நாகரீகப் பதவி பெற்ற ஜாதியார். இங்ங்ணம் முதல்முதலாக நாகரிகம் பெற்ற இவ் விரண்டு வகுப்பினரும் மிகப் பழைய நாட்களிலேயே ஹிந்து மதம் என்ற கயிற்ருல் கட்டுண்டு ஒரே கூட்டத்தாராகிய செய்தி பூமண்டலத்தின் சரித்திரத்திலேயே மிக விஷேஷ்மும் நலமும் பொருந்திய செய்திகளில் ஒன்முகக் கணித்தற்குரியது" என பாரதியார் தமிழ்நாட்டு மாதருக்கு என்ற கட்டுரையிலே எழுதுகின்ருர், 9
ஆயினும் இத்தகைய பழம் பெருமை தேசிய விடுதலைப் போராட்ட காலத்திலே செயற்பாட்டு முக்கியத்துவம் உடைய தாக இருந்ததையும் நாம் மனங்கொள்ளவேண்டும். பலம் பொருந்திய பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு இது ஒரு மனுேபலத்தைக் கொடுத்தது. பாரதியைப் பொறுத்த வரை, "ஆரியரும் தமிழருமே உலகில் முதன்முதலாக உயர்ந்த நாகரீகப் பதவிபெற்ற ஜாதியார்?" என்ற கருத்து நவீன ஐரோப்பிய நாகரீகத்தின் முற்போக்கான அம்சங்களையும் உத றித்தள்ளும் பிற்போக்குப் பழமை வாதமாக மாறவில்லை என் பதுதான் நம் கவனத்துக்குரியது.
நவீன ஐரோப்பிய நாகரீகத்தின் வளமான அம்சங்கள் பற்றிப் பல இடங்களில் பாரதி புகழ்ந்து பேசுவதைப் பார்க்
10

கின்ருேம் பாரதி தனது தமிழ்ச்சாதி கவிதையில் சுட்டிக் காட்டுவது போல, நிலப்பிரபுத்துவ முறைமையில் இருந்து இந்திய சமூகம் தீவிர மாற்றத்துக்குள்ளாகிக் கொண்டிருந்த கால கட்டத்திலே, ஐரோப்பிய நாகரீகத்தினை அவ்வாறே பேணுவிட்டால் தமிழ்ச்சாதி அழிந்துவிடும் என்போரின் கருத் தையோ, அல்லது மூதாதையரின் வழிமுறைகளை அப்படியே தழுவினல்தான் தமிழர்க்கு உய்வுண்டு என்போரின் கருத் தையோ பாரதி ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டின் கலப்பிலே இந்தியப் பண்பாடு புதிய வலுப்பெறும் என்றே அவன் கருதி ஞன். தமிழ் நாட்டு மாதருக்கு என்ற கட்டுரையிலே பாரதி இதுபற்றி விரிவாகப் பேசுவதைக் காணலாம். அவன் கூறு கிருன்.
"சகோதரிகளே, நீங்கள் ஐரோப்பிய நாகரீகத்தின் சேர்க் கையைக் குறித்துச் சிறிதும் வருத்தப்படவேண்டாம். அது நமக்குத் துணை. அது நாம் அஞ்சுவதற்குரிய பிசாசன்று. வெவ்வேறு வகைப்பட்ட இரண்டு நாகரீகங்கள் வந்து கூடும் போது அவற்றுள் ஒன்று மிகவும் வலியதாகவும் மற்றென்று மிகவும் பலவீனமானதாகவும் இருக்குமாயின், வலியது வலி மையற்றதை இருந்த இடம் தெரியாமல் விழுங்கிவிடும். வலி மையற்ற நாகரீகத்துக்குரிய பாஷையும், மதமும் முக்கியத் தன்மையற்ற புது ஆசாரங்கள் மாத்திரமேயன்றி விவாகமுறை முதலிய முக்கிய ஆசாரங்களும் அழிந்து மறைகின்றன. அந்த நாகரிகத்தைக் காத்துவந்த ஜனங்கள் பலமுடைய நாகரிகத்தின் பாஷை, மதம் முதலியவற்றை கைக்கொள்ளுகிருர்கள். பிலிப் பைன் தீவில் அமெரிக்க நாகரிகம் இவ்வகை வெற்றியடைந் திருக்கிறன்து. ஆனல் நம்முடைய ஹிந்து நாகரீகம் இங்ஙனம் சக்தியற்ற வஸ்துவன்று. பிற நாகரிகங்களுடன் கலப்பதினுல் இதற்குச் சேதம் நேருமென்று நாம் சிறிதேனும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உலகத்திலுள்ள நாகரீகங்கள் எல்லா வற்றிலும் நம்முடைய நாகரீகம் அதிக சக்தியுடையது. இது மற்றெந்த நாகரீகத்தையும் விழுங்கி ஜீரணித்துக்கொள்ளும் சக்தி வாய்ந்தது. ஆதலால் ஐரோப்பிய நாகரீகத்தின் கலப் பில் இருந்து ஹிந்து தர்மம் தன் உண்மையியல்பு மாரு திருப் பது மட்டுமேயன்றி முன்னைக்காட்டிலும் அதிக் சக்தியும் ஒளி யும் பெற்று விளங்குகின்றது. இந்த விசயத்தை நம்முடைய மாதர்கள் நன்ருக உணர்ந்து கொண்டாலன்றி, இவர்களுடைய ஸ்வதர்மரஷ்ணம் நன்கு நடைபெருது. ஐரோப்பிய நாகரீகத் தின் புறத்தோற்றங்களிலே ஆட்சேபத்துக்கிடமான அம்சங்கள் பலவும் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனல் இஃது வியக்கத்தக்கதொரு செய்தியல்ல. நமது ஸநாதன ஹிந்து தர்மத்தின் புறநடைகளிலே கூடப்பல வெறுக்கத்தக்க அம்சங்
11

Page 8
கள் வந்து கலந்துதான் கிடக்கின்றன. அது அதுபற்றி ஐரோப் பிய நாகரீகத்தையே வெறுத்தல் சால மிகப் பெரிய பேதமை யாம். நம்முடைய ஹிந்து தர்மமாகிய வேத தர்மத்துக்கு ஐரோப்பிய நாகரீகம் தனது தத்துவநிலையில் விரோதமான தன்று. அதன் உள்நிலை நான் மேலே குறிப்பிட்டபடி நமது ஹிந்து தர்மத்துக்குப் பெருந்துணையாக அமைந்திருக்கின்றது’. பாரதியின் இக்கூற்றுக்கள் 10 பாரதியைப் பொறுத்தவரை நவீனத்துவம் என்பது முற்றிலும் மேற்கத்தைய மயமாதல் அல்ல் என்பதையே தெளிவு படுத்துசின்றன. ஹிந்து தர்மத் தின் அடித்தளத்தில் நின்றுகொண்டே அவன் நவீன ஐரோப் பிய நாகரீகத்தை உள்வாங்கிக் கொண்டான்.
ஆயினும் ஹிந்து மதம்பற்றிய பாரதியின் நோக்கிலே ஸநாதனப் போக்குக்குப் பதிலாக அறிவு வாதத்தின் செயற்: பாட்டையே அதிகம் காண்கின்ருேம். பாரதியைப் பொறுத்த வரை மதம் ஆன்ம ஈடேற்றத்துக்கான அல்லது மோட்சத்துக் கான ஒரு வழியல்ல.
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்றே எண்ணி இரப்பார் பித்த மனிதர் அவர் சொல்லும் சாத்திரம் பேயுரையாம் என்றிங் கூதடா சங்கம் .
என்று பாடியவன் பாரதி. சடங்குகள், ஆசார, அனுஷ்டா னங்கள் ஆகியவற்றை மதத்தில் இருந்து வேறுபடுத்திப் பார்ப் பது பாரதியின் நோக்கு. "ஆசாரங்களும் பழக்கங்களும் சில சமயங்களில் மதக் கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டிருக்கக் கூடும். யதேச்சையாகவும், அங்ங்ணமின்றி வெறுமே அர்த்த மில்லாமலும் தோன்றி நடைபெறவும் கூடும். குடுமிவைத்துக் கொள்ளும் மாதிரிகள், இவை போன்ற சரீர அலங்கார சம் பந்தமான வழக்கங்களை நமது நாட்டில் மதக் கொள்கையுடன் பிணைத்து ஸ்மிருதிகளிலே அவற்றைக் குறித்துச் சட்டம் போடத் தொடங்கினர்கள். இந்தப் பரிதாபகரமான தவறு தல் ஆதிகால முதல் மற்ற நாடுகளிலும் ஏற்பட்டு வந்திருக் கின்றது" என்று பாரதி எழுதியுள்ளான். பாரதி பூணுரலை அறுத்தெறிந்ததை இங்கு நாம் நினைவு கூரலாம்.
மதத்தைப் பழமையான வழியில் இருந்து மீட்டு சமூக வாழ்வுடன் இணைக்கும் போக்கினையும் நாம் பாரதியிடம் காண் இன்ருேம். "இங்கும் அறிவு வாதமே செயற்படுகின்றது. வாழ்க்கையை நிராகரிக்கும் துறவு மார்க்கத்தையும் மடங்களின்
ஆதிக்கத்தையும் பற்றி பாரதி பின்வருமாறு கூறுகிறன்.
2

"பெண்டுபிள்ளைக்ளையும் சுற்றத்தாரையும், இனத்தாரையும் நாட்டாரையும் துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்க்ை விதிகளைத் துறந்து செல்வோன் வலிமையில்லாமல் அங்ங்ணம் செல்கிருன். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சிபண்ணுகிருன், பெளத்த மதமே துறவு நெறியை உல கத்தில் புகுத்திற்று. அதற்கு முன் அங்கங்கே சிலசில மனிதர் துறவிகளாகவும் சிலசில இடங்களில் சிலர் துறவிக் கூட்டத் தாராகவும் இருந்தனர். துறவிகளின் மடங்களை இத்தனை தாராளமாகவும், இத்தனை வலிமையுடையனவாகவும் செய்ய வழிகாட்டியது பெளத்த மதம். எங்கே பார்த்தாலும் இந்தி யாவை அம்மதம் ஒரே சந்நியாசி வெள்ளமாகச் சமைத்து விட்டது. பாரத தேசத்தை அந்த மதம் ஒரு பெரிய மட மாக்கிவிட்டது. ராஜா, மந்திரி, குடி, படை எல்லாம் மடத்துக் குச் சார்பிடங்கள். துறவிகளுக்குச் சரியான போஜனம் முதலிய உபசாரங்கள் நடத்துவதே மனித நாகரிகத்தின் உயர் நோக்கமா கக் கருதப்பட்டது. துறவிகள்தான் முக்கியமான ஜனங்கள். மற்ற ஜனங்கள் எல்லாரும் அவர்களுக்குப் பரிவாரம் மடந்தான் பிரதானம். ராஜ்யம் அதற்குச் சாதனம். பிற்காலத்தில் பெளத்த வழியைத் தழுவி, பலமான மட ஸ்தாபனங்கள் செய்த ரோமன் கத்தோலிக்க மதத்திலும், குருக்களுடைய சக்தி மிஞ்சிப் போய் மனித நாகரீகத்துக்குப் பேராபத்து விளையும் போலிருந்தது. அதை ஐரோப்பிய தேசத்தார்கள் பல புரட்சி களாலும், பெருங் கலகங்களாலும், யுத்தங்களாலும் எதிர்த்து வென்றனர். அதுமுதல் மடாதிபதிகளுக்கு ராஜ்யத்தின் மீதி ருந்த செல்வாக்கும் அதிகாரமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றன." 12 மதச்சார்பற்ற அரசு, சமூக வாழ்க் கையில் மடங்களின் ஆதிக்கம் ஆகியவை பற்றிய பாரதியின் நவீன கருத்தோட்டத்தை நாம் இங்கு காண்கின்ருேம்.
ஊழ்வினை அல்லது புனர்ஜன்மம் பற்றிய பாரதியின் கண் ணுேட்டத்திலும் இத்தகைய அறிவுவாதத்தின் செயற்பாட் டைக் காணலம், பாரதி அதுபற்றிப் பின்வருமாறு கூறுகிருன், 'புனர்ஜென்மக் கொள்கை பூர்வ புராணங்களிலேயே இருந் தது. பெளத்த மதம் அக்கொள்கையை, அறிஞர் கண்டு நகைக்கத்தக்க படியாக, வரம்பு மீறி வற்புறுத்திற்று. பிற் கால ஹிந்து மதத்தில் அக்கொள்கை அளவுக்கு மிஞ்சி, நிரார்த்தமாக ஏறிப்போய் இப்போது ஹிந்து நம்பிக்கையி லுள்ள குறைகளில் ஒன்ருக இயல்கின்றது. சாதாரணமாக ஒருவனுக்குத் தலைநோவு வந்தாலும் கூட அதற்குக் காரணம் முதல்நாள், பசியில்லாமல் உண்டதா, அளவுமீறித் தூக்கம் விழித்ததோ, மிகக் குளிர்ந்த அல்லது அசுத்தமான நீரில்
13

Page 9
ஸ்நானம் செய்ததோ? என்பதை ஆராயும் முன்பாகவே, அது பூர்வஜன்மத்தின் கர்மப்பயன் என்று ஹிந்துக்களிலே பாமரர் கருதக்கூடிய நிலைமை வந்துவிட்டது. உலக வியாபார நிலை மையையும், பொருள் வழங்கும் முறைகளையும் மனித தந்திரத் தால் மாற்றிவிடலாம் என்பதும், அங்ங்ணம் மாற்று மிடத்தே, செல்வ மிகுதியாலும், செல்வக்குறைவாலும், மனிதர்களுக் குள்ளே ஏற்படும் கஷ்டங்களையும், அவமானங்களையும், பசி களையும், மரணங்களையும் நீக்கிவிடக்கூடும் என்பதும். தற்கா லத்து ஹிந்துக்களிலே பலருக்குத் தோன்றவே இடமில்லை. பிறர் சொல்லிய போதிலும் அது அவர்களுக்கு அர்த்தமாவது சிரமம். ஏனென்ருல் பணவிசயத்தில் ஏற்பட்ட பயங்கரமான பேதங்களையும், தாரத் தம்மியங்களையும், பாரபகஷ்ங்களையும் கண்டு அதற்கு நிவகடிணம் தேட வழி தெரியாத இடத்திலே தான், பெரும்பாலும் இந்தப் பூர்வஜன்ம கர்ம விஷயம் விசேஷ மாகப் பிரஸ்தாபத்துக்கு வருகின்றது. அற்பாயுள் - நீண்ட ஆயுள், நோய் - நோய் இன்மை, அழகு - அழகின்மை, பாடத் தெரிதல் - பாடத் தெரியாமை, படிப்புத் தெரிதல், - அது தெரியாமை முதலிய எல்லா பேதங்களுக்கும் பூர்வஜன் மத்தின் புண்ய பாவச் செயல்களையே முகாந்திரமாகக் காட் டினர்கள் எனினும், பணவிசயமான வேறுபாடுகளே இவை யெல்லாவற்றையும் காட்டிலும் மனிதர்களுக்கு உள்ளக் கொதிப்பையும், நம்பிக்கைக் கேட்டையும் விளைத்து அவர்களை இந்த ஜன்மத்தின் துக்கங்களுக்குப் பூர்வ ஜன்மத்திலே கார ணந் தேடுவதும் அடுத்த ஜன்மத்திலே பரிகாரம் தேடுவதுமா. கிய வினேத தொழிலிலே தூண்டின.
எனவே இந்தப் பூர்வ ஜன்ம சித்தாந்தத்தைப் பெளத்த மதம் நமது தேசத்தில் ஊர்ஜிதப்படுத்தியது பற்றி நாம் அதற்கு அதிக நன்றி செலுத்த இடமில்லை’. 13
மதத்திலே அறிவுக்குப் புறம்பான அம்சங்களை இவ்வாறு பாரதி ஒதுக்கியதுபோல் சமூக நீதிக்குப் புறம்பான அம்சங் களையும் நிராகரிக்கின்றன்.
சூத்திரனுக்கொரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேருெரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் - அது சாத்திரமன்று சதி என்று கண்டோம். என்பது பாரதி வாக்கு. இவ்வாறு சநாதை இந்து மதத்திலே அறிவு வாதத்தைப் புகுத்தியது பாரதியின் நவீனத்துவத்தின் ஒரு அம்சமேயாகும். ஆயினும் அதேவேளை, அறிவுவாதத்துக் குப் புறம்பான தீவிர இந்துமதப் பற்றும், இந்து மேலாதிக்க
14

உணர்வும். பாரதியிடம் வேர்கொண்டிருப்பதையும் நாம் காண் கின்ருேம் . ஏற்கெனவே நான் காட்டிய சில மேற்கோள்களிலும் இந்த உணர்வு வெளிப்படுவதைக் காணலாம். வேறுபல இடங் களிலும் பாரதியின் இந்த உணர்வு புலப்படுகின்றது. உதாரண மாகத் தமிழ்ப் பெண்கள் கிறிஸ்தவப் பாடசாலையில் சேர்ந்து படிக்கச் சேர்ந்தமை பற்றி எழுதுகையில் பாரதி பின்வருமாறு ஆதங்கப்படுகிருன்.
**ஐயோ! எத்தனை எருஷங்களாக "பெண்கல்வி வேண்டும்? "பெண்கல்வி வேண்டும்" என்று கூச்சலிட்டதெல்லாம், நமது பெண்கள் பாதிரிப் பள்ளிக்கூடத்துக்குப் போய் “பைபில் வாசித்துக்கொண்டுவரும் பொருட்டாகத்தான? வருங்காலத் தில் இந்தப் பெண்களா தாய்மாராகி நமது ஜாதிக்கு (Nation) காப்புத் தெய்வங்களாக இருக்கப்போகிருரர்கள்?".14 இந்த ஆதங்கம் மேலாதிக்க உணர்வின் வெளிப்பாடுதான். இதனல் தான் "உலகத்திலே உள்ள ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத் திறமையில் மேம்பட்டது” என பாரதியால் கூற முடிந்திருக்கின்றது. 15 'ஆஹா ஸ்வாமி விவேகானந்தரைப் போல பத்துப்பேர் இருந்தால் இன்னும் ஒரு வருஷத்துச்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகெங்கும் நாட்ட லாம்". 16 என்றும், "இந்த ஸமயத்தில் மனுஷ்ய ஸமூகம் அழிந்து போகாமல் அதைக் காப்பாற்றி நல்ல வழியிலே சேர்க்கக்கூடிய ஜாதியார் நம்மைத் தவிர வேறு யாரு மில்லை" என்றும், ஆகவே ஹிந்து தர்மத்தைப் பரப்ப “வெளிநாடுக ளுக்கு நூற்றுக்கணக்கான பிரசங்கிகளை அனுப்பும்படி, ராஜாக் களையும், ஜமீந்தார்களையும், செட்டியார்களையும், மடாதிபதி பதிகளையும் பிரார்த்தனை செய்கிறேன்." 17 என்றும் பாரதி எழுதுவது இத்தகைய ஹிந்து மேலாதிக்க உணர்வினல் தான். மதத்துறையிலே நவீன வாதம் பழமை பேணுவதாகவே அமை கின்றது என்று நான் முன்பு கூறியது பாரதியைப் பொறுத்த வரையிலும் கூட உண்மை என்பதை நாம் இங்கு காண்கின் ருேம். மதத்தைப் பொறுத்தவரை புராதன ஹிந்து தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவே, பாரதி கதை நவீனத்துவத்துடன், அறிவுவாதத்துடன் இணங்கப்படுத்த முனைகிருன் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
5
மதத்துறையை விட மொழித் துறையிலே பாரதியின் நவீனத்துவ நோக்கு புரட்சிகரமானதாக இருப்பதைக் காண லாம். எனினும் தமிழின் தோற்றம், தொன்மை, வலிமை, இனிமை போன்றவற்றைப் பாரதி ஆங்காங்கே கூறியுள்ள சில
5.

Page 10
கருத்துக்கள், அறிவுக்குப் புறம்பான, பொதுஜன ஐதீகங்களை (Popular myth) அடியொற்றியதாக இருப்பதைக் காண்கின் ருேம். உதாரணமாக, 'ஆதியில் பரமசிவனல் படைப்புற்ற மூலப் பாஷைகள் வடமொழி என்று சொல்லப்படும் சமஸ் கிருதமும் தமிழுமேயாம்” என்று பண்டைத் தமிழர் சொல்லி யிருக்கும் வார்த்தை வெறுமனே புராணக் கற்பனையன்று. தக்க சரித்திர ஆதாரங்களுடையது' 18 என்று பாரதி கூறு வதைக் காட்டலாம். இதையே,
ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றேர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான். என்று கவிதையிலும் பாடுகிருன். இவ்விசயத்திலே சூரிய நாராயண சாஸ்திரியார் பாரதியை விட அறிவு பூர்வமாக இருப்பதைக் காண்கின்ருேம். அவர் தனது தமிழ்மொழி வரலாறு என்ற நூலிலே "தமிழ் நூலாசிரியர் பலரும், இக்காலத்திலும் ஆங் கில நூற்பயிற்சியில்லாத நண்பருட் சிலரும் தமிழ் மொழியும் வட மொழியும் தேவ பாஷைகளென்றும், இவ்விரண்டும் முறையே அகத்தியனர்க்கும், பாணினியார்க்கும் சிவபெருமா ஞல் உபதேசிக்கப்பட்டன என்றும் கூருநிற்பர்" எனக் கூறு கின்ருர், 19 ஆயினும் சிறந்த ஆங்கில நூற்பயிற்சியுள்ள பாரதி இந்த ஐதீகத்துக்குச் சரித்திர ஆதாரங்கள் இருப்பதாக அடித்துச் சொல்வது மிகவும் அபத்தமாகவே அமைகின்றது. "எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. இவற்றிலே தமிழைப்போல் வலிமையும் திறமையும், உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேருென்றுமில்லை’ 20 என பாரதி கூறுவதும் இதைப் போன்றதுதான், இவை அகநிலைச் சார்பான அறிவுக் குப் புறம்பான கருத்துக்கள். ஒவ்வொருவனுக்கும் அவனது மொழி சிறந்ததாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
பாரதி மொழிபற்றி இத்தகைய சில ஐதிகங்களைக் கொண் டிருந்த போதிலும் தமிழ்மொழியை நவீன தேவைகளுக்கேற்ப நவீன மயமாக்கும் அவனது கிந்தனைப் போக்கிலே இவை செயற்பாட்டு முக்கியத்துவம் எதையும் செலுத்தவில்லை என் பது நமக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும். தமிழை நவீனப் படுத்துவதில் பாரதி தீவிர ஆர்வம் காட்டினன். ஏனைய துறை களில் பாரதியிடம் இருந்ததுபோல் மொழிபற்றியும் ஓர் இயக்க வியல் நோக்கை நாம் பாரதியிடம் காண்கிருேம். மொழியை ஒரு மாறும் சாதனமாகவே பாரதி காண்கிறர். **நெடுங் காலத்துக்கு முன்பே எழுதப்பட்ட நூல்கள் அக்காலத்துப் பாஷையை தழுவியவை. காலம் மாற மாற பாஷை மாறிக்
16

கொண்டு போகின்றது. பழைய பதங்கள் மாறிப் புதிய பதங் கள் உண்டாகின்றன. புலவர் அந்தந்தக் காலத்து ஜனங்களுக் குத் தெளிவாகத் தெரியக்கூடிய பதங்களையே வழங்க வேண் டும்" என ‘புனர்ஜன்மம்" என்ற கட்டுரையில் பாரதி கூறு கிருன், 21
பாரதியின் மேற்காட்டிய கூற்றிலே இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று காலம் மாற மாற மொழி மாறுகின்றது என்பது மற்றது புதிய மாற்றத்துக்கேற்ப புதிய மொழி வழக்கைக் கையாள வேண்டும் என்பது. இந்த இரண்டாவது அம்சம் முதலாவது அம்சத்தின் விளைவாகும். அதாவது மொழியில் ஏற்படும் மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை அவ சியமானவை என்பதைப் புரிந்து கொண்டால்தான் புதுமை களைப் புகுத்துவது பற்றிச் சிந்திக்கமுடியும். பாரதியிடம் நாம் இந்த இரு பண்புகளையும் காண்கிருேம். பொதுவாக மொழி மாற்றம், மொழி வளர்ச்சி பற்றிய பாரதியின் சிந்தனைகளிலே நவீன விஞ்ஞான நோக்கு அடிப்படையாக உள்ளது.
மொழி வளர்ச்சி சமுதாய வளர்ச்சியிலே தங்கியுள்ளது என்ற அடிப்படை உண்மையை பாரதி புரிந்து கொண்டிருந் தான். "தமிழ்ப் பாஷைக்கு உள்ள குறைகள்" என்ற கட்டுரை யிலே இதுபற்றி பாரதி விபரமாக எழுதுகின்றன்.
"மனுஷ பாஷைகள் மனுஷ வாழ்க்கையோடு ஒட்டி உடன் வளர்ந்த பொருட்கள் அல்லவோ? தலைமுறை தலைமுறையாய் எத்தனையோ நூற்ருண்டுகளாக ஒரு நாட்டார் பேசிவரும் பாஷை அவர்களின் உயிரோடு ஒன்றிவிடுகின்றது. மனித அறிவு வளர்ச்சிக்குப் பாஷை ஒரு கண்ணுடி. ஒரு நாட்டில் அறிவு வளர்ந்து கொண்டு வரவர அந்நாட்டின் பாஷையும் விசாலமடைந்து வருகின்றது. தமிழ் நாட்டிலே பொது ஜனங்களுக்கு எழுதப் படிக்கத் தெரிவது கூட அருமையாய் இருக்கின்றது. வயிற்றுப் பிழைப்பே பெரிய கஷ்டமாயிருக் கிறது. ராஜாங்கத்தார் பொதுஜனக் கல்விக்கு மிகவும் வெட் கக் கேடான சிறுதொகை செலவிடுகிருர்கள். சிறுபான்மை யோருக்குத் தரப்படும் கல்விகூட அவர்களைக் குமாஸ்தாக் களாக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் கொடுக்கப்படுவதே யன்றி வேறு எவ்விதமான பெருந்தொழிலுக்கும் தகுதியாக்க அன்று. எனவே இந்நாட்டார் பொதுவாக மிகவும் அறிவு சுருங்கிப்போய் இருக்கிருர்கள். இதற்குப் பாஷை என்ன செய் யும்? நீராவியினல் ஒட்டப்படும் ரயில் வண்டி இந்தியாவில் வழக்கமாயிருக்கிறது. இப்போது பொது ஜனங்கள் அதற்கு வார்த்தை ஏற்படுத்திக்கொள்ளாமலா இருக்கிருர்கள்? மின்
17

Page 11
சார சக்தியால் தந்தி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்குத் தமிழ் வார்த்தை உண்டாக்கிக் கொள்ளவில்லையா? கோவணம் இல்லாத நிர்வாண தேசத்தாரின் பாஷையிலே பட்டு அங்க வஸ்திரத்துக்குப் பெயர் கிடையாதென்ருல் அதற்கு அவர் களுடைய பாஷைமேல் என்ன குற்றம் இருக்கிறது? துணியைக் கொண்டு கொடுத்து வழக்கப்படுத்தினுல் முறையே வார்த்தை களும் உண்டாக்கிக் கொள்வார்கள். தமிழ் நாட்டிலே தொழில் வகைப்பாடும் ஆலோசனை மிகுதியும் ஏற்பட்டால் தமிழ்ப் பாஷை அன்றைக்கே வளர்ந்துவிடும்'. 22
தமிழ்நாட்டிலே கைத்தொழில் வளர்ச்சியும் அதை ஒட்டி வாழ்க்கை அமைப்பிலும், சிந்தனையிலும் புதிய மலர்ச்சியும் ஏற் படும்போது தமிழ் மொழியும் தானே வளர்ச்சியடையும் என்பதே இங்கு பாரதி கூறுவதன் சாராம்சமாகும். மொழிவளர்ச்சியின் அடிப்படை பற்றிய பாரதியின் இக்கருத்துக்கள் முழுச் சமூக முன்னேற்றம் பற்றிய அவனது சிந்தனையின் வெளிப்பாடாகும் என்பது தெளிவு.
பாரதியின் மொழிச் சிந்தனைகள் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரை யொன்றிலே தமிழை நவீனப்படுத்துவது பற்றிய பாரதியின் நோக்கினை விரிவாக விபரித்துள்ளேன். இங்கு அவற்றைச் சுருக்கமாக விளக்க முயல்கின்றேன்.
1. தாய்மொழியைக் கல்வி மொழியாக்குவது மொழியின் நவீனத்துவ வளர்ச்சிக்கு அவசியம் என்பது பாரதியின் திட மn ன கருத்து. தேசியக் கல்வி என்ற கட்டுரையிலும், தாகூர் எழுதி, பாரதி மொழி பெயர்த்த "கல்வி கற்பிக்கும் பாஷை" என்னும் கட்டுரையிலும் இதுபற்றி விரிவாகப் பேசப்படுகின் றது. "தேச பாஷையே பிரதானம் என்பது தேசியக்கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்து விடக்கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படு கின்ற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பூரண சகாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானுல், இந்த முயற்சிக்கு தமிழ்ப் பாஷையே முதற்கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதை தம்பட்டம் அறிவிக்க வேண்டும்.’’ என்று பாரதி எழுதியுள் ளான். -
2. தமிழைக்கல்வி மொழியாக்குவதோடு கலை, விஞ்ஞானம் ஆகிய எல்லாப் பாடங்களும் தாய்மொழியிலேயே கற்பிக்கப் படவேண்டும் என்பதும் பாரதியின் கருத்தாய் இருந்தது. இதன் பொருட்டு விஞ்ஞானம் சம்பந்தம்ான ஐரோப்பிய மொழி களில் உள்ள நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்றும் அவன் கருதினன்.
18

மொழி பெயர்ப்பிலே இரண்டு பிரதான பிரச்சனைகள் உள்ளன. ஒன்று கலைச்சொல்லாக்கம். மற்றது பிறமொழிப் பெயர்களைத் தமிழில் எழுதுதல். இவையிரண்டும் மொழி வளர்ச்சியோடு சம்பந்தப்பட்ட முக்கிய அம்சங்களாகும். இவ் விரு அம்சங்கள் பற்றியும் பாரதியிடம் திட்டவட்டமான சில கருத்துக்கள் இருந்தன. கலைச் சொல்லாக்கத்தின் அவசியத் தைப் பாரதி நன்கு உணர்ந்திருந்தான். " கூடியவரை சா ஸ் திர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால் பிறகு மொழி பெயர்ப்புத் தொடங்குவோர்க்கு அதிக சிரமம் இராது" என அவன் எழுதினன். 24 தேசம் முழுவதிலும் கலைச் சொல்லாக் கத்தில் ஓர் ஒருமைப்பாடு நிலவ வேண்டும் என்பதும் பாரதி யின் கருத்தாய் இருந்தது. இதன் பொருட்டுச் சமஸ்கிருத மொழியைக் கலைச் சொல்லாக்கத்தின் பொதுமொழியாகக் கொள்ளலாம் என்பதும் பாரதியின் கருத்தாகும். இதுபற்றிப் 'பரிபாஷை சேகரிக்க ஒருபாயம் என்னும் தலைப்பில் பின்வரும் குறிப்பொன்றைப் பாரதி எழுதியுள்ளான். "பூரீ காசியிலே நாக ரிகப் பிரசாரணி சபையார் ஐரோப்பிய சங்கேதங்களையெல் லாம் எளிய சமஸ்கிருத பதங்களில் போட்டு, மிகப் பெரிய தோர் அகராதி உண்டாக்கி வருகிறர்கள். இந்தச் சொற்களை வேண்டியவரை, இயன்றவரை தேசபாஷைகள் எல்லாவற்றி லும் ஏககாலத்தில் கைக்கொண்டு வழங்கலாம். ஐரோப்பாவில் எல்லாப் பாஷைகளும் இவ்விதமாகவே லத்தீன், யவன பரி பாஷைகளைக் கைக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு செய்தால் நமது தேசபாஷைகளில் சந்தேக ஒற்றுமை ஏற்படும். அதனல் சாஸ்திரப்பயிர் தேசம் முழுவதிலும் வளர்ந்தோங்கி வருதல் எளிதாகும்".25 என்பது பாரதி கருத்து.
மொழி பெயர்க்கையில், அல்லது சுயமாக எழுதுகையில் பிறமொழிப் பெயர்களைப் பொறுத்தவரை அவற்றைத் தமிழில் எவ்வாறு எழுதுவது என்பது பற்றிய கருத்து வேறுபாடுகள் இன்றுவரை நிலவுகின்றன. தமிழின் பாரம்பரிய ஒலியமைப் பைச் சிதைவின்றிப் பேணவேண்டும் என்பதே மொழிப் பழமை வாதிகளின் கொள்கையாகும். இவர்கள் ஸ்பெயினை, சுபானியா என்றும், சேக்ஷ்பியரை செகப்பிரியர் என்றும், ஹஜ்ஜ" என் பதைக் கச்சு என்றும் எழுதவேண்டும் என்பர். பாரதி இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தான். பிறமொழிச் சொற்களை ஒலிச் சிதைவின்றித் தமிழில் எழுத வேண்டும் என்பது பாரதியின் நிலைப்பாடாகும். தமிழில் வழக் கில் உள்ள எழுத்துக்களைக் கொண்டு, பிறமொழிச் சொற்களை ஒலிச் சிதைவின்றி எழுத முடியாது. ஆகையால் அதன் பொருட்டுப் புதிய குறியீடுகளை ஆக்கவேண்டும் என்று கருதி யது மட்டுமன்றி தானே சில புதிய குறியீடுகளையும் ஆக்கியுள்ள
19

Page 12
தாகவும் பாரதி எழுதியுள்ளான். அவ்வகையில் தமிழ் எழுத் துச் சீர்திருத்த இயக்கத்தின் முன்னேடியாகவும் நாம் பாரதி யைக் காண்கின்ருேம். 1915ம் ஆண்டு “ஞானபானு' என் னும் பத்திரிகையில், பாரதி எழுதிய "தமிழில் எழுத்துக் குறை" என்னும் கட்டுரை இவ்வகையில் முக்கியமானது. அதில் உள்ள சில கருத்துக்கள் பின்வருமாறு.
'நமது பத்திரிகைகளில் ஐரோப்பாவில் உள்ள நகரங்கள், மக்கள் முதலியவற்றின் பெயர்களைப் பார்க்கும்போது கண் கூசுகின்றது. அதைத் தமிழ் மாத்திரம் அறிந்த தமிழர் எப் படி வாசிப்பார்கள் என்பதை நினைக்கும்போதே காது கூசுகின் றது. இங்கிலீஷ் அக்ஷரத்தில் ப்ரெஞ், அரபி, பார்ஸி, ஸமஸ்கிருதம் முதலிய பாஷைகளின் பதங்கள் சிலவற்றை எழுதுவதற்கு இங்கிலீஷ் அரிச்சுவடி இடங்கொடாததைக் கருதிச் சில புதிய குறிகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிருர்கள். எல்லா ஐரோப்பிய பாஷைகளுமே அன்னிய பாஷைகளிலுள்ள விசேஷ உச்சரிப்புகளுக்கு இணங்கும்படி சில தனிக் குறிகள் ஏற்பாடு செய்து வைத்துக் கொண்டிருக்கின்றன. நாமும் அப்படியே சில விசேஷ குறிகள் ஏற்பாடு செய்துகொள்ளுதல் அவசியமா கும். இதனுல் எழுத்தின் வடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்து நமது தமிழ்மொழி விசாலழடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் 26
ஆயினும் பாரதி கருதுவதுபோல பிறமொழிச் சொற்கள் எல்லாவற்றையும், பிறமொழியாளர் உச்சரிப்பது போன்றே ஒலிச் சிதைவின்றி எழுதவேண்டும் என்பதை நாம் முற்றிலும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. பொதுவாக மொழிகள் பிற மொழிச் சொற்களை தம் ஒலி இயல்புக்கு ஏற்றவாறே கடன் வாங்குகின்றன. ஆங்கிலம் தமிழ்ச் சொற்களே எவ்வாறு கடன் வாங்கியுள்ளது என்பதையே நாம் உதாரணமாகக் கொள்ள லாம். தமிழ் என்பதை (Tamil) என்றே ஆங்கிலத்தில் உச் சரிக்கிருர்கள் எழுதுகிறர்கள். எனினும் நவீன தேவைகளுக் கேற்ப தமிழ் வரிவடிவத்திலே மாற்றங்களும் புதிய குறியீடு களும் தேவை என்பதில் ஐயம் இல்லை. இதை முன்கூட்டியே பாரதி உணர்ந்து செயற்பட்டான் என்பது அவனது நவீனத் துவ உணர்வையே காட்டுகின்றது.
6
இலக்கியத்துறையிலே பாரதியின் நவீனத்துவ நோக்கு பரவலாக அறியப்பட்ட ஒன்ரு கும். குறிப்பாக, தமிழ்க் கவி தையைப் பொறுத்த வரையிலே தமிழ் இலக்கிய வரலாற்றில்
20

முதல் முதலாக அதை நவீன யுகத்துக்கு இழுத்து வந்தவன் பாரதிதான். பாரதிக்கு முந்திய கவிதை முற்றிலும் நிலப் பிரபுத்துவ வாழ்க்கை உள்ளடக்கத்தைக் கொண்டதாக, பெரிதும் சமயச் சார்பானதாகவே இருந்தது. கடவுள், பக்தி, கோயில் என்ற வட்டத்தையே சுற்றி வந்தது. சுருக்கமாகச் சொன்னல் மனிதனின் ஆன்மீக வாழ்வு பற்றியதாக அது இருந்தது எனலாம். ஓரளவு அரசர்கள், பெருமக்கள் பற்றிய தாகவும் இருந்தது.
பாரதிதான் முதல்முதல் சாதாரண மக்களின் சமூகவாழ் வைக் கவிதையில் கொண்டுவந்தான். அரசியல், பொருளா தார சமூகப் பிரச்சினைகளைக் கவிதையில் கையாண்டான் பாரதிமூலம்தான் தமிழ்க் கவிதை சமூகச் சார்புடையதாக மாறிற்று. இவ்வாறு நான் கூறுகையில் பாரதி கவிதையில் ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று நான் கருதுவதாகப் பொருள் கொள்ளத் தேவையில்லை. ஆயினும் பாரதியின் இன்றைய முக்கியத்துவத்துக்கு அவனது ஆன்மீக நோக்குக் காரணமேயல்ல. பாரதியை விட மாபெரும் ஆன்மீ கக் கவிஞர்களைத் தமிழ்க் கவிதை மரபில் நாம் காண்கின்ருேம்: ஆணுல் ஆன்மீகத்தையும் சமூக வாழ்வையும் ஒன்றிணைத்த தில் தான் பாரதியின் முக்கியத்துவம் இருக்கின்றது. அவனது ஆன்மீக உணர்வும் கூட சமூக நாட்டத்தை அடிப் டையாகக் கொண்டே அமைகின்றது. "வல்லமை தாராயோ இந்த மானிலம் பயனுற வாழ்வதற்கே" என்றுதான் அவன் சக்தியிடம் வரம்கேட்கிருன். பாரதி இவ்வாறு கவிதையில் தொடக்கி வைத்த சமூகச் சார்புதான் நவீன மரபாகும். அதுதான் இன்றுவரை தொடர்கின்றது; இனியும் தொடரக் கூடியது. பாரதியின் நவீனத்துவத்தின் பிரதான அடிப்படை யும் அதுதான்.
பொருள் அடிப்படையில் தீமிழ்க் கவிதையை நவீனப்படுத் தியதுபோல, தமிழ்க் கவிதை வடிவத்தையும் நவீனப்படுத் தியவன் பாரதி. விநாயகர் நான்மணி மாலை, பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி, போன்ற இடைக் காலப் பிரபந்த வகைகளை பாரதி கையாண்டுள்ளதை மறுப் பதற்கில்லை. ஆயினும் அவற்றிலும் புதிய உள்ளடக்கமே புகுத் தப் பட்டுள்ளது மனங்கொள்ளத் தக்கது. பழமைக்குள் புது மையைப் புகுத்துவதாக நாம் இதை விளங்கிக் கொள்ளலாம்: முற்றிலும் புதிய உள்ளடக்கத்துக்கேற்ற புதிய தன்னுணர்ச் சிக் கவிதை வடிவம் பாரதி மூலமே தமிழுக்கு அறிமுகமாகின் றது. ஷெல்லி போன்ற ஐரோப்பியப் புனைவியல் வாதக் கவி
21

Page 13
ஞர்களை உள்வாங்கிக்கொண்டு பாரதி அதனைத் தமிழில் புதி தாகத் தந்துள்ளான். குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், சுய சரிதை போன்ற தமிழ்க் கவிதை வரலாற்றில் முற்றிலும் புதிய வடிவ பரிசோதனைகளையும் நாம் பாரதியிடம் காண்கின்ருேம். பாரதிக்குப் பின்வந்த கவிஞர்க்ளிலே அவனது இத்தகைய பரி' சோதனைகள் பெரும் பர்திப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.
கவிதையின் மொழிப் பயன்பாட்டிலும் - யாப்பு வடிவம், மொழி நடை ஆகியவற்றில் - பாரதி புகுத்திய புதுமைகள் முக்கியமானவை. இங்கு எளிமையும், ஜனரஞ்சகமும் பாரதி யின் மூல மந்திரமாகும். இடைக்காலக் கவிதை பற்றி எழுது கையில் பாரதி பின்வருமாறு குறிப்பிடுகின்ருன்: 'நமது கவிதை யிலே ஆனந்தம் குறையத் தொடங்கிற்று. ருசி குறைந்தது. கரடு முரடான கல்லும், கள்ளி முள்ளும் போன்ற பாதை நம் கவி களுக்கு நல்ல பாதையாகத் தோன்றலாயிற்று. கவிராயர் "கண்‘ என்பதைச் சக்கு என்று சொல்லத் தொடங்கினர். ரசம் குறைந்தது, சக்கை அதிகப்பட்டது. உண்மை குறைந்தது, பின் னல் திறமைகள் அதிகப்பட்டன. அருமையான உள்ளக் காட்சிகளை எளிமைகொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை. ஆனல் சென்ற சில நூற்றண்டுகளாக, புலவர்களும் சாமியார்களும் சேர்ந்து வெகு சாதாரண விஷயங்களை அலெள கீக, அந்தகார நடையில் எழுதுவதுதான் உயர்ந்த கல்வித் திறமை என்று தீர்மானஞ் செய்துகொண்டார்கள்," 27 பாரதி கூறுவதுபோல் இவ்வாறு புலவர்களும் சாமியார்களும் செய்து கொண்ட இத் தீர்மானத்துக்கு விரோதமாகச் செயற்பட்டவன் V . .8תחוL
"எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள் ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற் றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனகிருன்." 28 என்றும் பாரதி இதுபற்றி எழுதியுள்ளது யாவரும் அறிந்ததே. தன் எளிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் பாரதி உருவாக் கிய நவீன படைப்புக்கள் தமிழுக்குப் புதிய உயிர் கொடுத்தன என்பதில் ஐயமில்லை.
ஆயினும் எளிமையின் உருவாக்கத்துக்குரிய முழுப் பெரு மையும் பாரதிக்கு மட்டுமே உரியதல்ல. 18ஆம் 19ஆம் நூற் ருண்டுகளில் அருணுசலக் கவிராயர், கோபாலக்கிருஷ்ண பாரதி யார் போன்ருேர் பாரதிக்குப் பாதை சமைத்துக்கொடுத்தவர் கள் எனலாம். ஆனல் அவர்கள் வளர்த்த ஜனரஞ்சகமான
22

எளிய செய்யுள் நடைக்கு சமுதாயச் சார்பான புதிய உள்ளடக் கத்தைக் கொடுத்தவன் பாரதி. அதனல் எளிமை ஒரு புதிய பரிணுமம் பெற்றது எனலாம்;
இவ்வாறு கவிதையைப் பொறுத்தவரை, புதிய உள்ளடக் கம், வடிவ பரிசோதனை, உயிர்த் துடிப்பான மொழியைப் பயன்படுத்துதல் போன்ற அம்சங்களில் நவீன வாதத்தின் புரட்சி ஆரமான அம்சங்களை நாம் பாரதியிடம் காண்கின்ருேம். எனி னும் உரைநடை இலக்கியத்தைப் பொறுத்தவரை சிறுகதை, நாவல் போன்ற நவீன வடிவங்கள் பற்றிய வடிவப் பிரக்ஞை பாரதியிடம் இருந்ததாகத் தெரியவில்லை. பாரதியின் கதைகளை நாவல் என்ருே, சிறுகதை என்ருே பாகுபடுத்தாமல் புனைகதை என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. இத்துறைகளிலே தாகூருக்கு இருந்த வடிவப் பிரக்ஞையும், பரிசோதனை நாட்ட மும், தாகூரின் சில சிறுகதைகளை மொழிபெயர்த்த பாரதியா ரிடம் இருக்கவில்லை என்பது மனங்கொள்ளத் தக்கது. தமிழ் இலக்கியம், புனைகதைத் துறையைப் பொறுத்தவரை பாரதி யிடம் இருந்து நவீன பலத்தைப் பெறவில்லை என்றே கூற வேண்டும்.
இது எவ்வாருயினும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது, சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டுத் துறைகளில் பாரதி தீவிரமான நவீன சிந்தனைப் போக்கைப் பிரதிபலித்தவன் என்பதிலும் பாரதியின் மூலமிே நாம் ஓர் நவீன யுகத்துள் பிரவேசிக்கின்ருேம் என்பதிலும் ஐயமில்லை. பழமையில் இருந்து புதுமைக்கு மாறும் காலகட்டத்தின் நடுவழியிலே தமிழ்ச் சமூ கத்தில் தோன்றிய ஒரு மாபெரும் நவீன சிந்தனையாளனுக, படைப்பாளியாக பாரதியை நாம் காண்கின்ருேம். அந்தவகை பிலே அவன் ஒரு யுக புருஷனுகின்றன்.
அடிக் குறிப்புகள்
1. International Encyclopedia of the Social Seiences.
Vol. 10. Macmillan, 1968. P. 387.
2. Encyclopedia of the Social Sciences
Vol. 9, 10, Macmillan 1963. P. 564.
3. பிரடறிக் ஏங்கெல்ஸ், *இயற்கையின் இயக்கவியல்" முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ. பக். 40
4. பெ. சு. மணி "பாரதியாரும் சமூக சீர்திருத்தமும்’
Gageirãov, 1980. ud. 19
23

Page 14
O.
1. 12.
13. 14.
I5,
6.
7.
18.
9.
20.
21.
22。
2岛。
24。
25。
26。
27.
28.
க. கைலாசபதி தமிழ் நாவல் இலக்கியம்" சென்னை, 1968. Ltd. 54 .
க. நா. சுப்பிரமணியம் முதல் ஐந்து தமிழ் நாவல்கள்' சென்னை, 1957. பக். 88
க. கைலாசபதி "தமிழ் நாவல் இலக்கியம்" மேற்கோள் பக்.55 மு.வேதநாயகம்பிள்ளை பெண்கல்வி" சென்னை 1948 பக்.22 சுப்பிரமணிய பாரதி, "மஹாகவி பாரதியார் கட்டுரைகள்" அருணு பதிப்பகம், மதுரை 1964, பக். 194, 119 அதே நூல் பக். 198, 199, 200 அதே நூல், பக். 198 பாரதியார் ‘பகவத் கீதை' பூம்புகார் பிரசுரம், சென்னை 1977, பக். 37, 45, 46
அதே நூல், பக். 47, 48 பெ. சு. மணி "பாரதியாரும் சமூக சீர்திருத்தமும்’ மேற்கோள் பக். 129 பெ. தூரன், "பாரதி தமிழ்” சென்னை, 1953 பக். 193 அதே நூல், பக். 240 VM
அதே நூல், பக். 242
சுப்பிரமணியபாரதி, 'மஹாகவி பாரதியார் கட்டுரைகள்" Ludi. 194
வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், "தமிழ் மொழி வரலாறு" சென்னை 1932, பக். 7. பெ. தூரன், "பாரதி தமிழ்" பக். 103 சுப்பிரமணியபாரதி, "மஹாகவி பாரதியார் கட்டுர்ைகள்" பக், 45 ረ ரா. அ. பத்மநாபன், "பாரதி புதையல் 1, Gargiraf, 1958, பக். 70, 71
கப்பிரமணிய பாரதி, "மஹாகவி பாரதியார் கட்டுரைகள்
பக் 256
அதே நூல், பக். 154
அதே நூல், பக். 185 ரா. அ. பத்மநாபன், "பாரதி புதையல்- 1", Luči. 68, 69
சுப்பிரமணிய பாரதி, "மஹாகவி பாரதியார் கட்டுரைகள்?
Luci. 45, 46, சுப்பிரமணிய பாரதி, ‘பாரதியார் கவிதைகள்", மேர்க்குரி புத்தகக் கம்பனி, கோவை 1969, பக் 357

டு வேறுவிதங்கள்
0 முருகையன்
LTட்டர் கிழவர்
தம் பல்லில்லா வாயினல் நூற்றுக் கணக்கான பேய்க்கதைகள் சொல்லுவார். கேட்கும் சிறுவர்களும் பல் இல்லா வாய்பிளந்தே "ஆ" என்றவாறு மிக ஆச்சரியம் கொள்வார்கள்.
கொள்ளிவாய்ப் பேய்கள் எல்லாம் குபுக்கென்று நெருப்புக் கக்கி வெள்ளி செவ்வாய்கள் தோறும் வெளிக்கிட்டுத் திரியும் என்றும்
சுடலையிற் புளியின் மேலே தொற்றிய முனியைக் கட்டிப் பிடரியில் ஆணி வைத்தார், பிலாவடிச் சின்னர் என்றும்.
ஓங்கியே அடித்த பின்னர் உறிஞ்சி நல்லிரத்தம் முற்றும் வாங்கிய பிசாசு பற்றை வளவிலே உறங்கும் என்றும்.
பல பல கதைகள் சொல்வார்? பாட்டனர்.
சிறுவர் கேட்பார் சில வருடங்கள் போக, சிறுவர்கள் இளைஞர் ஆனர்.
இளைஞரின் அநுபவத்தில் இப்படிப்பட்ட பேய்கள் நுழைவது குறைந்து போச்சு, நோக்கிய அவர்கள்,
"ஒகோ, தெரு விளக்குகளின், சிறந்த மின் ஒளியினல் பேய்கள், பிசாசுகள் முனிகள் யாவையும் ஒட்டம் பிடித்தன போலும்

Page 15
இப்போது, முன்னர்ப் போல அதிகம் பேய்களைக் காண்பது மிகவும் அருமையாய் உள்ளது" - என்ற ரீதியில் எண்ணத் தொடங்கினர்.
இளைஞரின் எண்ணம் இப்படி இருந்தது;
ஆனல், ஒன்று வேறு விதங்களில் மிகப்பல பேய்கள் குறுக்கும் மறுக்கும் திரிவன இருட்டிலும் வெளிப்பிலும் இரவிலும் பகலிலும்.
69 LITTLbL/ass
Iரநிழலில் இருந்த ஒர் கல்லாசனத்தில் நான் அசையாது இருந்தேன். மரத்தினடியில் ஒரு பாம்பும் அசையாது சுருண்டு கிடந்தது. அதைக் கண்டதும் நான் பயந்து ஓடினேன். பாம் பும் பாணம்போல் புதர்களுக்கிடையில் பாய்ந்து புகுந்து மறைந்தது.
நான் வீடுசென்று என் மனைவியிடம் கூறினேன்.
"நான் உன்னை மீண்டும் ஒருபோதும் காணமுடியாத நிலை எனக்கு ஏற்பட இருந்தது"
"ஏன், என்ன நடந்தது?"
"நான் காட்டில் ஒரு நச்சுப்பாம்பைக் கண்டேன். அதைக் கண்டவுடன் நான் அவ்விடத்தை விட்டு ஓடினேன். பாம்பும் வேகமாக ஓடி மறைந்தது. எங்களில் யார் மற்றவரிடம் கூடு தலாகப் பயம் கொண்டிருந்தோம் என்பது எனக்குத் தெரிய 662)
எனது மனைவி சொன்னுள்,
*நீங்கள் ஒடியிராவிட்டால், நீங்கள் இரு வருமே பயந் திருக்க மாட்டீர்கள் உங்களைப் பொறுத்தளவில் அது ஒரு நச்சுப் பாம்பு. ஆனல் பாம்பைப் பொறுத்தளவில் நீங்கள் அதனைவிடப் பயங்கரமானவர்"
ஆனல் நான் எனக்குள் பின்வருமாறு சிந்தித்தேன். இரு வரும். சமமாகப் பயந்தால்தான் சமாதானம் நிலவும். ஒரு வர் மற்றையவரை விட துணிவுடையவராக இருந்தால், ஒன் றில் அவர் என்னைத் தாக்குவார். அல்லது நான் அவரைத் தாக்குவேன்.
26

Pறுகதை
நேடந்தது
அவனுடைய நினைவு இப் போது ஏன் மனதிற்கு வருகிற
தோ தெரியாது. ஆனலும் வரு
கிறது. அவனுடைய முழுப்பேர் குடாகமே பொடிரால ஹாமி லாகே வில்சன் புஞ்சிபண்டா கரு ரைத்ன. கே. பி. வி. பி. கருணு ரத்னவை யாருமே அவனது நீண்ட பேரில் எந்தவொரு பகு தியாலும் அழைத்ததாக எனக் குத் தெரியாது. எல்லாருக்கும் அவன் கபரால் தான் (அதற்கான காரணம் பள்ளிக்கூட நாட்கள் தொட்டே அவன் ஆபிரிக்க விவ காரங்களில் காட்டிய அக்கறை யே என்ற விடயம் ஒரு வர லாற்று நுணுக்கம் என்பதை விட இங்கே அதற்கு ஒரு முக்கியத் துவமும் இல்லை) அவனை எனக் குத் தெரிய வந்தது கண்டி கச் சேரியில் நான் சில வருடங்கள் வேலை செய்த காலத்தில் தான். அவனுடைய சொந்த ஊர் கண் படிக்கு அதிக தூரமில்லை. குடும்ப நிலவரங்களை அனுசரித்து ஜி.சி.ஈ. ஏ. எல் முடிவுகட்குக் காத்திருக் காமல் அரசாங்க உத்தியோகத் தில் தொற்றிக் கொண்டான். முடிவுகள் வந்தபின்பு பல்கலைக் கழகம் போகும் வாய்ப்பு இருந்த
3 ஒரு நாள் மத்தியானம்
ژO ---------------------------------- 8lp
போதும் அது பற்றிய அக்கறை எதுவுமே காட்டவில்லை நான் கண்டிக்கு வந்த நேரம் அவன் கச்சேரியில் மிகுந்த செல்வாக் குள்ள ஊழியர்களுள் ஒருவனுக இருந்த போதிலும் தொழிற்சங்க விவகாரங்களில் அவனுக்கு அக் கறை இருக்கவில்லை. அவனை சங் கத் தேர்தலில் இழுக்க, பலரும் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை என்னுடைய வயதுக்கும், அணு பவத்திற்கும் அவன் மதிப்புக் காட்டிய அதே சமயம் அவனு டைய, மிகவும் சுதந்திரமான நிலைப்பாடுகளை நான் எதிர்க்கும் ப்ோது கூசாமல் பதிலடி தரு வான். ஆனலும் அதில் கூட அவ னது நடத்தை கண்ணியமானது என்றே நினைக்கிறேன். 1977 ம் ஆண்டு தேர்தலை அடுத்து எனது வேலை மாற்றம் நடந்தது. கண் டியில் என்னல் அரசாங்கக் கட் சிக்கு விரோதமான நடவடிக்கை யில் இறங்க முடியாது என்ற எதிர்பார்ப்பில் தான் நான் மன் ஞரிலிருந்து மாற்றப்பட்டேன்.
கபரால் போன்ற சில
நண்பர்கள் கண்டிக்கு வந்த நாட் களில் என்னிடம் காட்டிய பரிவு
27

Page 16
எனது விவகாரங்களைச் சமாளிக்க மிகுந்த தெம்பை அளித்தது. அரசியல் விஷயங்களில் அவனது அக்கறை எவ்வளவுதான் இருந்த போதும் அவனை மதிப்பிடுவது எனக்கு முடியாமலே இருந்தது. என்னுடைய உறுதியான கண் ணுேட்டத்தின் பிடிப்புகளுக்கும், எல்லாவற்றையுமே விமர்சிக்கத் துணியும் அதே சமயம் எதிலுமே ஒட்டாத அவனது நிலைப்பாட் டிற்கும் பெருத்தவேறுபாடு இருந் தது. அவனுடைய கருத்துக்கள் சுதந்திரமானவை என்ற அளவுக் குச் சரியானவையாக இருக்க வில்லை என்பது என் அபிப்பிரா யம். நான் ஒரு வரட்டுத்தனமான இடதுசாரி என்பது அவனது அபிப்பிராயம். அவை என்றைக் குமே மாறும் என்று இருவருமே எதிர்வார்த்ததும் இல்லை.
1980 நடுப்பகுதியில் ஒரு வியாழக்கிழமை மத்தியானம் 2-30 மணி இருக்கும். ஜி. ஏ.யின் அலுவலகத்திற்கு வருமாறு எனக்கு அழைப்பு வந்தது. அங்கே ஜி. ஏ. யின் அலுவலகச் செயலாளர் பீரிஸ் கொஞ்சம் பதட்டமான நிலையில் இருந்தார். என்னுடைய பிரிவில் புஞ்சி பண்டா என்று யாராவது இருக் சிருர்களா என்று கேட்டார். எனக்குத் தெரிய யாரும் இல்லை என்றேன். நன்முக விசாரித்து வரும்படி என்னைப் பணித்துவிட்டு மோட்டார் வாகனப் பகுதித் தலைமைக் கிளாக்கரைக் கூப்பிடு மாறு பியோனிடம் சொல்லி அனுப்பினர். கண்டிக் கச்சேரி யில் ஒரு புஞ்சிபண்டா கூட
28
இல்லை என்ற உண்மை எங்களுக் குக் கொஞ்சம் அதிசயமாகத் தான் இருந்தது. அடுத்த நாட் காலை பீரிஸ் என்னை அலுவலக வாசலில் கண்டபோது,
*"நேற்று என்ன விஷயம்
தெரியுமோ?" என்று கேட்டார்.
**தெரியாது" என்றேன்.
"சீ.ஐ.டி. யிலிருந்து விசாரிக் கிருர்கள்" -
"என்ன விஷயமாம்?"
'அதெல்லாம் சொல்ல முடி Lurrsintubo”
" அப்படித்தானென்ருல் அவர்களாகவே ஆளைக் கண்டு பிடிக்கட்டுமே".
* நான் அந்த விதமாகத்
தான் ஏதோ சொன்னேன். என்
Cigllb. . . see . . .
"என்ருலும் என்ன?
“எனக்கு என்னவோ இது கொஞ்சம் சிக்கலான விஷயம் போல தெரிகிறது’.
“ “ rašir?” o
"முந்தியும் சீ. ஐ. டி. எங்க ளிடம் விசாரித்திருக்கிறது. ஆணுல் இந்தமாதிரி டெலிபோன் விசா ரணை நடக்கவில்லை" .
"சீ. ஐ. டி. இல்லை என்று நினைக்கிறீரோ?"
"அப்படியும் இல்லை. இந்த நாட்களில் எதுவும் நடக்கலாம். ஆளுல் விசாரித்த விதம் கொஞ் சம் முரட்டுத்தனமாக இருந்தது*

அதற்குப் பிறகு வேறு விஷ யங்களுக்குக் கதை தாவியது. அலுவலகத்தில் கபராலைக் கண் டவுடன் என்னுல் அந்த விஷயம் பற்றிய பேச்சு இயல்பாகவே எழு ந்தது.
‘நேற்று நீ மத்தியானம் வர வில்லை. இங்கே யாரையோ சீ.ஐ.டி. தேடுகிறது தெரியுமோ?" "என்னைத்தான் தேடுகிறது என்று சொல்கிறீர்களோ?" என்று கேட்டு விட்டு வழமை யான உரத்த சிரிப்பை உதிர்த் தான்.
"இல்லை, இல்லை உனக்குத் தெரியுமோ.. புஞ்சிபண்டா என்று யாராவது இங்கே வேலை செய்கிருர்களா?"
"புஞ்சி பண்டா? நான் தான் புஞ்சி பண்டா". அவனுடைய சிரிப்பு திடீரென்று நின்றது. * சீ. ஐ. டி. , புஞ்சி பண்டா என்று விசாரித்தார்களா அல்லது கருணுரத்ன என்று விசாரித்தார்
søTIT ?
"புஞ்சி பண்டா என்று கேட் டார்களாம். மிகவும்கவிழ்டப்பட்டு இங்கே ஒரு புஞ்சி பண்டாவும் இல்லை என்று கண்டுபிடித்தோம். "இப்போது அதுவும் பொய் யாய் விட்டது". என்னுடைய பகிடிக்கு அவன் சிரிக்கவில்லை. “ “ Lurrrflub 6Fnrif?šGrrritas Gir?”
மிஸ்ற்றர் பீரீஸ்...”*
திடீரென்று எழுந்து போ ஞன். பத்து நிமிடத்தில் திரும்பி வத்தான்.
"அது சீ.ஐ.டி.என்று நான் நினைக்கவில்லை!’ அவனது குரல்
| "சும்மா இருபிள்ளை. உனக்
டுறீர்.நாட்டுநிலைமை இது.
கிருர்.
மனிதனும் யானையும்
அதர்மிகள் யாரோ யானை யொன்றைச் சுட்டுவிட்டார் கள். நொண்டி நொண்டி | நடந்து திரிந்த யானைக்கு எமது நாணயத்தில் ரூபாய் இருபத்தையாயிரம் செலவு செய்து மருத்துவம் நடை பெறுகிறது. தொலைக்காட்சி யிலும் இது விரிகிறது.
* அம்மா. துவக்காலை சுட ஆக்கள் சாகினே. ஏனம்மா uurr&ar FTGsävčav?”
சிறுமி தாயிடம் கேட்கி ருள். o
'யானைக்கு வருத்தம். அதுதான் மருந்தை வைச்சு துவக்காலை சுடுகினம்’’ k
*அப்ப ஆக்களுக்கு."
கேன் உதுகளை?* Z *ஏனப்பா பிள்ளையை அதட்
மணிசற்றை உயிருக்கு சதத் துக்கும் மதிப்பில்லை”
தந்தையார் வெறுப்பால் முகத்தைச் சுழித்தபடி கூறு
வழமையான நிதானமான இயல் பைப் பிரதிபலித்தது.
நான் வேலையில் மும்மரமாக
இருந்ததால்"அது ஒருபெரிய ஆறு தல்" என்று விட்டு மறுபடி காகி
தக் கட்டுகளுக்குள் அமிழ்ந்தேன். 'எனக்கு அது அவ்வளவு நிச்சயமில்லை". என்று அவன்
சிரித்தவாறே சொன்னது மெலி
தாகக் காதில் விழுந்தது.
9

Page 17
இரண்டு கிழமைக்கு பின் னும் ஒருநாள் மத்தியானம் (βουόου நேரத்துக்கு முன்பே அலுவலகத் துக்குப் போனபோது வாசலில் நின்ற பழைய பியோன் அரனே லிஸ் வெற்றிலை சப்பியவாறே "ஆ, மாத்தயா' என்று தன் பத்துப் பற்களும் தெரியச் சிரித் துவிட்டுத் துப்புவதற்காக விருந் தையைக் கடந்தார். அலுவல
கத்தினுள் கபராலும் வேருெரு
வரும் மும்மரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். என்னைக் கண் டதும் கபரால் "இவரை உங்க ளுக்குத் தெரியாது. என் மைத்து னர் ஜயரத்ன u6ötlfr• • • • • • • • இவர் மிஸ்டர் நடராஜா, என் னுடைய நல்ல நண்பர். иčlah, டர் நடா நீங்கள் கார் வாங்க நினைத்தால் ஐயா தான் ஆள் அவர் 77க்குப் பிந்திய முதலாளி தான் என்ருலும் இன்னமும் அவ ரிடம் இருதயம் இருக்கிறது" அவனுடைய பகிடிக்கு ஐயாவின் சிரிப்பு மிகவும் சங்கடமான ஒன் ரூக இருந்தது.
"நான் உங்களைக் குழப்ப விரும்பவில்லை பிறகு வருகி றேன். *’ என்று கழரப் பார்த் தேன்.
இல்லை, அவசியமில்லை நாங் கள் கதைத்து முடிந்து விட்டது. ஐயாவுக்கும் நேரமாகிவிட்டது"
அதற்குப் பின்னர் ஓரிரு வார்த்தைகளுடன் ஐயா ப்ோய் விட்டார். கபரால், ‘வெக்கங் கெட்டவர்கள்" என்று சொல் விக் கொண்டே ஒரு ஃபைல் கட்டை மேசை மேல் தூக்கிப் போட்டான்:
30
'உம்முடைய மைத்துனர் அப்படி மோசமான ஆள் போல் தெரியவில்லையே!”
**அவர் ஒன்றும் பெரிய மகாத்மா இல்லை. என்ருலும் நான் அவரை ஏசவில்லை!"
*அப்படியானல் என்னையா?" என்னுடைய கேள்வி அவனது கோபத்தைக் கொஞ்சம் தனித்து விட்டது.
* சீ. ஐ. டி. என்னைத் தேடி வந்த கதை நினைவிருக்கிறதா?" " ஓம், இன்னமும் தேடுகி முர்களா?"
*"அது சீ.ஐ.டி. இல்லை என்று எப்போதே தெரியுமே?
**இது அவர்களைவிட பெரிய கைகள்"
* *<9/rrrăsă TT?” ”
கட்சி, ஆட்
'உங்களுக்கு எப்போதுமே அரசாங்கக் கட்சி நினைவு தான் ஆளூலும் இந்தத் தடவை நீங் கள் சொல்வது சரி".
*என்ன நடந்தது?" *"நான் ஒரு நாள் மத்தியா னம் வரவில்லை. அந்த நாள் தானே அந்த சீ. ஐ. டி, விசா ரணை நடந்தது. மிஸ்டர் நடா?"
"ஒம்" 'அன்று நான் மத்தியானத் தோடு வீட்டுக்குப்போகும்வழியில் சுமித்திராவை பஸ்சில் கண்டேன் ஓ! சுமியை உங்களுக்குத் தெரி யாது. அவள் என் ஊர்க்காரி. அவளுடைய புருஷன் பேணுட் பெணுன்டோ ஒரு கூட்டுத்தாப

னத்தில் பெரும் புள்ளி. அதாவது 1977 இல் அவனுடைய தமையன் மெல்வின் இங்கே கட்சி வட்டா ரத்தில் உயர்ந்த தானம் அடை ந்த பிறகு அவர்கள் எல்லாம் வெளியூராட்கள். அவன் 1976க் குப் பிறகு கட்சி தாவின ஆள் இப்போது நல்ல வியாபாரம். பேணுட்டுக்கும் என்னுடைய மைத்துனர் இன்றைக்கு வந்தாரே அவருக்கும் வியாபாரத் தொடர் புகள் சிறியதும் பெரியதும்.
'சுமித்ராவை பஸ்ஸில் நான் எதிர்பார்க்கவில்லை. “தற்செயலா பஸ் ஏற வேண்டி வந்துவிட்டது. கார் பழுது, டாக்ஸி அகப்பட வில்லை! என்னவோ என்று நான் கேட்காமலே விளக்கம் தந்தாள். *"எங்கள் டாட்டா பென்ஸ் இல் போக நீங்கள் தரவழி அதிஷ் டம் செய்ய வேண்டும் என்று பகிடியாகச் சொன்னேன். பிடிக்க வில்லை. முன்னைய சுமித்ரா இல்லை அவள் ஒன்று மாறி ஒன்ருகக்
கதை அரசியலில் வந்து முடிந்
தது. அதோடு நான் சிங்களத்தில் கதைக்க அவள் ஆங்கிலத்தில் மறுமொழி சொல்ல. என்னு டைய பிடிவாதம் தளரவில்லை. அரசாங்கத்தைப் பற்றியும் அவர் களுடைய பல்வேறு நடவடிக்கை களைப் பற்றியும் காரசாரமாகக் கொஞ்சம் சொல்லி விட்டேன். லஞ்ச ஊழல்கள் எதிர்க்கட்சித் தலைவி மீது பழி வாங்கல் பற்றிச் சொன்ன போது அவளுடைய முகம் கோபத்தில் சிவந்து விட் டது, அதற்குப் பிறகு சில நிமி ஷம் பேசாமல் இருந்து விட்டு இறங்கும் போது ஒரு திடீர் புன் னகையுடன் கையை ஆட்டி விட் டுப் போய் விட்டாள்".
'நீ என்ன செய்தாய்?" 'நினைவில்லை. பதிலுக்கு ஒரு
வேளை கையை ஆட்டியிருப்பேன். பெரும் பாலும் சிரித்திருக்க மாட் G_dr**
"என்னல் நினைத்துப் பார் க்க முடியும்" என்றேன் கேலி
s
"உங்கள்ால் நினைத்துப் பார் க்க முடியாதது என்ன?" என்று
கேலியாகப் பதிலுக்குச் சொல்லி
விட்டுத் தொடர்ந்தான். “அன் றைக்கு அந்த சீ. ஐ. டி. விஷயம் யாரோ சேட்டைக்கு செய்ததாக நினைத்தேன் இன்று தான் விஷயம் தெரிய வந்தது.”* **மைத்துனர் சொன்னரா???"
ஏதாவது
"ஒம். பேணுட் சுமியின் புரு ஷன் அவரிடம் சொன்னதைச் சொன்னர்.
“நான் சுமியுடன் உரக்க விவாதித்ததை யாரோ அவர்க ளது கட்சி ஆட்கள் கண்டார்க ளாம். அரசாங்கத்தைத் தாக்கி நான் பேசியதை எல்லாம் கேட் டார்களாம். என்னை பஸ்ஸிலேயே வைத்து அடித்திருப்பார்களாம். ஒருவேளை சுமிக்குத் தெரிந்த ஆள் என்று விட்டு விட்டார்களாம். பிறகு சுமி வீட்டுக்குப் போய். விசாரித்தார்களாம். சுமி என் னைப் பற்றிய முழு விவரங்களையும் கொடுக்காத காரணத்தால் அவள் சொன்ன அரைகுறை விஷயங்களை வைத்துக் கொண்டு என்னை ஒரு தடவை மிரட்டினர்களாம். பேணுட் பிறகு அவர்களிடம் கதைத்சுச் சரிக்கட்டி விட்டா Drtrib': '.
31.

Page 18
'அவ்வளவும் தான் என்ருல் பரவாயில்லையே!" என்றேன்.
“இன்றைக்கு வியாபாரத்தை யும் விட்டுவிட்டு மைத்துனர் ஐயா இதைமட்டும்தான் சொல்ல. வந்தார் என்று நினைக்கிறீர்களா? பொது இடங்களில் கவன மாகக் கதைப்பது நல்லது என்றும் சொன்னர்".
அவனுடைய குரல் கொஞ். சம் எரிச்சலைக் காட்டியது.
"அதில் ஒன்றும் பிழையில் ஆலயே இப்போது நாட்டில் நில வரங்கள் அந்த மாதிரித்தானே இருக்கின்றன." என்று அவனைக் கொஞ்சம் தணிக்கப்பார்த்தேன். "ஒம் சுமி சொன்னது உண்மை என்ருல்!"
'உண்மையாக இராதா?” “என்னுடைய பேர் புஞ்சி, பண்டா என்று இங்கேயோ. கண்டியிலேயோ யாருக்கும் தெரியாது. சுமி என் ஊர்க்காரி" "அதைக் கட்சித் தடியர்களி டம் சுமி சொல்லியிருக்கக் கூடும். என்ருலும் அதில் ஒன்றும் பெரிய பிழை இல்லையே. அவள் அவர் கள் எதையும் செய்வார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட், Lள்?? என்று சமாதானம் சொன்னேன்.
உங்களுக்கு அவர்களது கட்சித் தடியர்களைப் பற்றித். தெரிகிற அளவுக்கு சுமிக்கும் பேணுட்டுக்கும் அவர்களது கட் டளைக்குட்பட்ட தடியர்களைத் தெரியாதா?”
என்னல் பதில் சொல்லல் முடியவில்லை.
32.
*சுமி இப்போது ராஜவம் சம். அவளோடு வாக்குவாதம் செய்வதற்கு எனக்கும் உங்களுக் கும் தகுதியில்லை. தன்னுடைய பேர் வெளிவராமல் எனக்குப் பாடம் படிப்பிக்க முயன்ருள். சூழ்நிலை எனக்கு வசதியாக இருந்ததால் தப்பி விட்டேன். அதோடு நான் இப்போது என்
மனைவியின் ஊரில்தான் இருக் கிறேன்.
அவள் தூண்டிவிட்டுத்தான்
இது நடந்தது என்று நிரூபண மாகி விடாதே" என்று குறுக் கிட்டேன்.
"அந்தத் தடியர்கள் போன பிறகு அவள் என்னை எச்சரிக்க முயற்சிசெய்யவே இல்லை. அவ ளுக்கு நான் கச்சேரியில் வேலை பார்ப்பது மட்டும் தெரியும்"
"நேரம் இருந்திராது” *"அப்படியானல் அதைப். பற்றி இவ்வளவு நாளும் பேசா மல் இருந்தம்ாதிரியே இருந்திருக் கலாம். மைத்துனர் மூலம் வந்த எச்சரிக்கை?"
"நீ சொல்வதும் உண்மை யாகவே இருக்கலாம். ஆனல் மற்ற விதமாகவும் இருக்க முடி պւհ՚ "...,
"இருக்கலாம், ஆனல் ஒருசிறு பிழை விட்டு விட்டாள். நான் அலுவலகத்துக்குத் திரும்பிப் போக நேரம் இருக்குமோ என்று, யோசியாமலே அவர்களிடம் மிர ட்டும்படி சொல்லி விட்டாள். அவள் இறங்கின. போது நேரம் இரண்டு மணிக்கு நெருங்கி விட் டது. அந்தத் தடியர்கள்:பஸ்ஸில்

இருந்திருந்தால் அவள் இறங்கிய
இடத்தில் இறங்கியிருந்தாலொ ழிய 2-30 க்கு டெலிபோனில் மிரட்டியிருக்க முடியாது அவள் சொன்ன கதை வேறு விதமாக இருந்தது. உண்மையில் அன்று சீ. ஐ. டி. என்று மிரட்டியவர்கள் பஸ்ஸில் இருந்தவர்கள் யாரும் இல்லை. கவே இருக்கலாம்".
**மற்றதும் முற்ருகவே அசா த்தியமில்லை!"
"அது சுமி பேணுட்டின் மனைவி இல்லையென்ருல் ஒரு
வேளை உண்மையாக இருக்கும்.
பேணுட்டைப் பற்றி உங்களுக் கும் தெரியும்".
*அப்படியானல் உன்னை இது வரை விட்டு வைத்தார்களே!"
"என்னைப் பற்றி விசாரித்து அடிக்குமளவுக்கு நான் முக்கிய மான ஆள் இல்லையோ தெரி யாது. அதை விட, அவர்கள் தங்கள் கை தெரியாமல் இயங்கு கிறவர்கள். புதிய கனவான்கள் என் மைத்துனர் அன்றைக்கு மறு நாள் அல்லது மறுநாள் பேணுட் டைச் சந்தித்திருக்கலாம்".
"எல்லாம் முடிந்து விட்டது தானே!"
“இல்லை ஆரம்பித்து விட் 一垒j· மைத்துனர் வந்தது மிரட்ட மாத்திரம் தான்".
"இருக்கலாம். ஆனல் உன் ஞல் நீ நினைப்பது உண்மை என்று நிச்சயப்படுத்த முடியுமா? என்று கேட்டேன். ஆனல் பிர யோசனமில்லை. குடும்பத்திற்குள் ளும் சில பிரச்சனைகள் வரலாம்:
அவளுடைய புருஷனு
ஆனல் முடியும். இந்த மாதிரிக் குப்பை கூளங்களைப் பற்றி விசாரித்து என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மிஸ் டர் நடா, நீங்கள் முன்பு சொன் னது நினைவிருக்கிறதா?."
* எது? p “முழு அறிவுடன் சிந்திப்பு வன். நடுநிலைமை வகிக்கக்கூடிய வசதி வரவரக் குறைந்து கொண்டே வருகிறது என்கிறீர் கள். **
"இப்போது (apuunr?””
*இல்லை. எவனுமே நடு நிலைமை வகிக்கமுடியாத நிலைமை வந்துவிட்டது என்கிறேன்" என்று கண்ணைச் சிமிட்டினன்.
2. Løör LuG6?
அதற்குமேல் கதையைத் தொடர வாய்ப்பு இருக்கவில்லை. அவனும் அதைப்பற்றிப் பிறகு பேச முயலவில்லை. வழக்கம்போல
நிதானமாகவும் ஆறுதலாகவும் இயங்கினன்.
இரண்டு கிழமைகட்குப் பின்பு
அவனுக்கு 24 மணி நேரத்தில் மொனராகலைக்கு வேலை மாற்ற ஆணை வந்தபோது நான் யாழ்ப் பாணத்தில் இருந்தேன். அதற் குப் பிறகு தொடர் தொடரான வேலை மாற்றங்கள். நானும் கண்டியிலிருந்து மட்டக்களப் புக்கு LDITsbspl? பட்டேன். ஏனென்று தெரியவில்லை. சமீப காலமாக கபராலின் நினைவுமட்
டும் அடிக்கடி மனதிற்கு வரு
கிறது. தொடர்பு விட்டு இப் போது நாலு வருஷம் இருக் குமா?.
33

Page 19
டு துரன் போர்
9 இ. சிவானந்தன்
உல்லாச புரியிலே உன்மத்தன் சூரனின் உருட்டுகள் புரட்டுகளாம், உண்மையாம் ஊர்வாயை உலைமூடி கொண்டோரு உலுத்தன் அடைப்பதுண்டோ?
வல்லமை தந்தவர் வாழ்நில மக்கள் தம் வண்ணம் மறந்து விட்டான், தன்னுடை கீர்த்தியால் தரணியை ஆள்வதாய்த் தப்புக் கணக்கெடுத்தான். தறிகேட்டு நிலைகெட்டுத் தன்னடை தலையிலே தன் கையால் மண் போட்டான், தலைகுத்துக் கறணமாய்த் தாச்சியில் விழுந்திடத் ததிங்கிண தோம் போட்டான். இல்லாத பொல்லாத இடியப்ப்ச் சிக்கலில் இன்றவன் வீழ்ந்து விட்டான், இனி இவன் கதை சரி, இந்தொரு முடிவுடன் இரவி உதித்திடுமோ? இந்தொரு சூரனைச் சங்காரம் செய்வதால் என்னத்தைக் கண்டிடலாம்? எங்களை வாட்டிப் பிழிந்திடும் சூரர்கள் ஏராளம் உள்ளனரே.
இரண்டொரு சூரனைச் சங்காரம் செய்வதால் இன்னும் பிரச்சினைகள், இல்லாமற் செய்வதும் இன்றைய கட்டத்தில் இயலாத சங்கதியே.
மாநிலம் ஆண்டிடும் மாபெரும் சக்தியும் மக்களின் சக்தியேதான், மாற்றத்தை ஆக்கிடும் மாட்சிமை வாய்ந்ததும் மக்களின் சக்தியே தான். மாபலம் தந்திடும் மக்களின் சக்தியை மாற்றி அமைத்திடுவோம். நல்லவை கெட்டவை நாட்டில் இனம் காணும் நன்னெறி நாட்டிடுவோம்.
34
YAR

இ கற்பைப் பற்றி
எனது கருத்துக்கள்
சீனவில் பழங் காலம் தொட்டு " உலகம் நாசமாய்போப் விட்டது. மனிதர் சீர்கேடடைந்து கொண்டே போகிருர்கள். நாடு குட்டிச் சுவராகி விட்டது". என்று மக்கள் வருத்தம் தெரியப்படுத்துவதைக் கேட்கலாம். ஆனல் காலத்திற்குக் காலம் "சீர்குலைவு" வேறுபடும். முன்பு அது வேறு அர்த்தம் கொண் டிருந்தது. இப்பொழுது அது வேறு பொருள்படும். மேற்கூறிய வாறு பேசினல், பேசியவர் சீர்கெட்டவர் வரிசையில் இருந்து தன்னை விலக்கிக் கொள்கிா?ர். இப்பொழுது கொலைகாரர்கள், தீ மூட்டுபவர்கள், காமுகர்கள், மோசடி செய்பவர்கள் போன்ற கயவர்கள் கூடத் தங்கள் தீயசெயல்களுக்கு இடையிலே “மனி தர் சீர்கேடடைந்து கொண்டே போகிருர்கள்" என்று அங்க
Genruiu Luriř.
ஒழுக்க முறைமையை பொறுத்த மட்டில் தீயவற்றைத் தூண் டுவோர் மட்டும் சீர்கெட்டவர்கள் என்று சொல்வதற்கில்லை. அவர்கள் மட்டுமல்லாது அதனை மன்னித்து விடுபவர்களும், அதில் மனமகிழ்ச்சி காண்பவர்களும், அதற்காக வருத்தம் தெரி விப்பவர்களும், சீர்கெட்டவர்கள் எனலாம். இதனுல்தான் இந்த ஆண்டு சிலர் வீண்பேச்சுப் பேசிக் கொண்டிராமல், இது விஷ யத்தில் தங்கள் பேரச்சத்தைத் தெரியப்படுத்திய பின், அதற் கான பரிகாரத்தைத் தேடுகிருர்கள். சிலர் கற்புநெறியைப் பாராட்டுவதன் மூலம் இதற்குப் பரிகாரம் தேடுகிருர்கள் இதற் கியைய எழுத்தாளரும், மேடைப் பேச்சாளர்களும் கற்பைப் பற்றிப் புகழ் பாடிக் கொண்டிருப்பதால் தம்மைச் "சீர்கெட் டவர்" வரிசையில் இருந்து உயர்த்தி வைத்துக் கொள்கிருர்கள். இதுவே இவர்களுக்கு இருக்கும் ஒரே வழி.
முன்னர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய சிறந்த பண்பாகக் கற்பு இருந்து வந்தது. இதன் விளைவாக எமது இலக்கியங்களில் "கற்புடைய நன்மகன்' போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன, ஆனல் இன்று கற்பு நிலை என்பது பெண்
35

Page 20
களுக்கு மட்டுமே உரித்தாகி விட்டது. ஆண்களுக்கும் அதற்கும் ஒருவித சம்பந்தமும் இல்லை. தற்காலத்தில் ஒழுக்க முறை போதிப்பவர். கற்புள்ள பெண்ணுனவள் கணவன் இறந்த பின் னர் மறுமணம் செய்யாமலும், காதலனுடன் ஒடிப் போகாம லும் இருக்க வேண்டுமென்பர். அதிலும் கணவன் இளமையிலே இறந்து, அவள் வறுமையில் வாடினல் இன்னும் அதிக கவனத் துடன் கற்பைக் காக்க வேண்டும். இவர்களைவிட இன்னும் ஒரு வகை கற்புடைய மகளிர் இருக்கின்றனர். ஒரு வகையினர் தம் கணவரோ அல்லது தாம் திருமணம் செய்ய இருந்தவரோ இறந் தவுடன் தற்கொலை செய்து கொள்பவர்கள். மற்றையவர் தம்மை எவரும் பலாத்காரம் செய்ய வந்தால் தற்கொலை செய்து கொள் பவர்கள் அல்லது பலாத்காரம் நடக்கும் பொழுது அப்போ ராட்டத்தில் இறந்து போபவர்கள். எவ்வளவு கொடுமையாக அவள் இறக்கின்ருளோ அவ்வளவு புகழ் அவளுக்குக் கிட்டும்.
சுருங்கக் கூறினல், ஒரு கணவன் இறக்கும் பொழுது அவள் மனைவி மறுமணம் செய்யாதிருக்க வேண்டும், அல்லது இறக்க வேண்டும். ஒரு காமுகனிடம் அகப்பட்டாலும் அவள் இறக்க வேண்டும். அப்படிப்பட்ட பெண்ணின் புகழ்பாடும் சமூகம் ஒழுக்கம் மிக்க சமூகமாக இருப்பதுடன் சீனுவின் எதிர்காலம் பற்றி நம்பிக்கையுடனும் இருக்கலாம். சுருக்கமாகக் கூறிஞல் இதுதான் விஷயம்.
நான் இங்கு சில கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை யும் தருகிறேன். நம்முடைய நாட்டின் பெரும் பான்மையான மக்கள், பெண்களின் கற்பினல் உலகம் உய்யும் என்று நம்புவ தால், அவர்கள் எல்லோருக்கும் முன்பு இக்கேள்விகளையும் பதில் களையும் வைக்கிறேன்,
என்முதற் கேள்வி: கற்புநிலை தவறிய பெண்களால் எவ்விதம் நாட்டுக்குத் தீங்கிழைக்கப்படுகிறது? இப்பொழுது நாடு குட்டிச் சுவராகி யிருக்கிறது. சண்டைகள், கொள்ளைகள், பஞ்சம், வெள் ளம், வரட்சி என்பன ஒன்றன்பின் ஒன்ருக வருவதுடன் நாட் டில் நடைபெறும் வன்செயல்களுக்கும் குறைவில்லை. இதற்கான காரணம் எமது எண்ணங்களும் செய்கைகளும் காலத்திற்கு ஒவ் வாததாய் இருப்பதுடன், எங்களுக்கு நவீன ஒழுக்க முறையும் விஞ்ஞானப் பார்வையும் இல்லாததேயாகும். இதனுல்தான் நாங் கள் இருண்ட காலகட்டத்தில் இருப்பது போல் இன்று இருக் கிருேம். அது மாத்திரமல்ல, அரசாங்க, இராணுவ பல்கலைக் கழக, வர்த்தக உத்தியோகங்கள் எல்லாவற்றிலும் ஆண்கள் தான் பதவி வகிக்கிருர்கள்; கற்புநெறி தவறிய பெண்கள் அல்ல. ஆகவே அதிகாரத்தில் ஆண்கள் தான் இருக்கின்றனர். வெள்ளம்
36

வரட்சி, பஞ்சத்தை எடுத்துக் கொண்டால் அவற்றிற்குக் கார ணம் நவீன அறிவு இல்லாதது, பாம்புகளையும் வேதாளங்களையும் வணங்குவது, காடுகளை வெட்டுவது, தண்ணிரைச் சேமிக்காது இருப்பது என்பனவாகும். இவற்றிற்கும் பெண்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. யுத்தங்களும் கொள்ளைகளும் கற்புநெறி தவறிய பெண்களை உருவாக்குகின்றன என்பது உண்மை. ஆகவே யுத்தங்களும் கொள்ளைகளும் கற்புநெறி தவறிய பெண்களை தோற் றுவிக்கின்றனவே ஒழிய அவர்களின் ஒழுக்கமற்ற செய்கைகளால் யுத்தங்கள், கொள்ளைகள் ஏற்படுவதில்லை.
எனது இரண்டாவது கேள்வி: உலகத்தைக் காக்கும் பொ றுப்பு முழுவதும் ஏன் பெண்களின் தோள்களில் சுமத்தப்படுகின்றன? பெண்கள் வீடுகளில் ஆண்களின் உடமைகளாக இருப்பவர்கள், அப்படியானல் நாட்டை அரசாள்வதும் காப்பதும் ஆண்களின் பொறுப்பல்லவோ, மென்மையான பெண்களிடம் இத்தகைய பெரிய பாரத்தைச் சுமத்திவிட முடியுமா? நவீன காலத்தில் ஆண் களும் பெண்களும் சமமெனக் கருதப்படுகிறது. பெண்கள் தங் கள் கடமைகளைச் செய்வது போல் ஆண்களும் தம் பங்கைச் செய்யவேண்டும். பெண்கள் மேலதிக சுமையைச் சுமக்கவேண்டிய தில்லை. பெண்களுக்கு அறிவுரை கூறி அல்லது அவர்களைத் தண்டிப் பதை விடுத்து, ஆண்கள் தங்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனது மூன்ருவது கேள்வி; எதற்காகக் கற்புநிலை காக்கப் படவேண்டும்? உலகில் உள்ள பெண்களை அவரவர் கற்புநிலையின் படி பகுப்பதானல் அவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம் (1)அவர்கள் தங்கள் கற்புக்காகப் புகழ்ந்துரைக்கப் படவேண்டிய வர்கள். (2)கற்புநெறி தவறியவர்கள். (3)திருமணமாகாததால் அல்லது கணவன் உயிருடன் இருப்பதால் அல்லது அதுவரை பலாத் காரம் செய்யப்படாததால் இவர்களின் கற்புநிலை இன்னும் சோ தனக்கு உள்ளாகவில்லை. முதற்பகுதியினர் புகழுடன் இருப்பதை அறிவோம். இரண்டாம் பகுதியினர் கைவிடப் பட்டவர்கள், ரனெனில் சீனவில் தவறிய பெண்களுக்கு மன்னிப்பே இல்லை. அவள் அவமானத்தில் சாகவேண்டியதுதான். மூன்ரும பகுதி யினரே முக்கியமானவர்கள். இவர்கள் தங்கள் மனதில் "என் கணவன் இறந்தால் நான் மறுமணம் செய்யமாட்டேன். என்னை எவரும் பலாத்காரம் செய்தால் உடனே தற்கொலை செய்துகொள் வேன்' என்று கங்கணங்கட்டிக் கொண்டு இருப்பவர்கள். இவர் களின் இப்படியான முடிவுகள் சமுதாய ஒழுக்கநெறியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? அது ஆண்களால் அல்லவோ நிர் ணயிக்கப்படுகிறது.
37

Page 21
இருபதாம் நூற்றண்டில் வாழும் நாம் இரு முக்கிய விஷயங் களைக் கவனிக்கவேண்டும். முதலாவதாகக் கற்புநெறி என்பது ஒரு சிறந்த ஒழுக்கமா? அது சிறந்த ஒழுக்கமென்முல எல்லாருக்கும் பொதுவில் அன்ருே இருக்கவேண்டும். எல்லா ஆண்களும் இதில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளதால் இதனை ஒரு சிறந்த பண் பாகக் கொள்ள முடியாது. ஒரு காடையன் ஒருபெண்ணைப் பலாத் காரம் செய்ய முற்படும்போது அவளது தந்தை அல்லது சகோ தரர்கள் அல்லது கணவன் அல்லது அயலவர்கள் காப்பாற்ற முடி யாதபோது, இறப்பது ஒன்றே அவளுக்குத் தென்படும் ஒரே வழி கற்பழிக்கப்பட்டபின் அவள் இறக்கலாம் அல்லது இறக்காமல் விடலாம். இதன்பின்னர் அவளது தந்தை, சகோதரர்கள், கண வன், அயலவர்கள் ஒன்றுகூடி எழுத்தாளர்கள், புத்திசீவிகள், ஒழுக்கசீலர்களுடன் சேர்ந்துகொண்டு தங்கள் கோழைத்தனத்திற் காகவும் கையாலாகாத்தனத்திற்காகவும் வெட்கப்படாமல், குற்ற வாளியைத் தண்டிப்பதைப் பற்றியும் அக்கறை ஏதும் எடுக்காமல் வெறும் விதண்டவாதத்தில் இறங்கிவிடுவார்கள்; அவள் இறந் தாளா, இல்லையா? கற்பழிக்கப் பட்டாளா, இல்லையா? அவள் இறந்திருந்தால் சிறப்பாக இருக்கும்; இறக்காதிருந்தால் அதிர்ச்சி யாக இருக்கும்! இப்படியே இந்த ஆண்கள், கற்புக்கரசிகளை ஒரு புறமும் சீரழிந்த பெண்களை இன்னெருபுறமும் உருவாக்கி வரு கிருர்கள். இதனைச் சிந்தித்துப் பார்க்கும் பொழுது இது எவ்வளவு மனிதாபிமானம் அற்றது என்பதும் இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை என்பதும் தெளிவாகிறது.
எமது இரண்டாவது கேள்வி, பலதாரங்கள் உள்ள மனிதன் என்ன உரிமையுடன் பெண்களின் கற்புநெறிபற்றி விதந்துரைக்க லாம்? பழைய ஒழுக்கநெறியாளர்கள், ஆண்கள் தாங்கள் ஆண்க ளாகப் பிறந்த ஒரே காரணத்தினுல் இந்த உரிமையைப் பெறுகிருர் கள் என்று கூறுவர். ஆனல் சமுகந் தனியே ஆண்களைக் கொண்டது அல்லவே. ஆண்களும் பெண்களும் சமன் என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொண்டு அவர்கள் இரு வரும் ஒரே நீதிக்குக் கட்டுப் பட்டவர்களாக்க வேண்டும் ஆண்கள் பெண்களுக்கென்று சில விதிகளை உருவாக்கி விட்டுத் தாங்கள் மட்டும் அதன்படி ஒழுகி நடப்பதில்லை. அப்படியான விதிகளை அவர்கள் உருவாக்கக் கூடாது மேலும், திருமணம் ஒரு வியாபாரமாகவோ, மோசடியாகவோ அல்லது ஒருவகைப் பரிசாகவோ அமைந்து விட்டால் ஒருவன் அவனது மனைவியைத் தனக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. பலதாரங்கள் உள்ளவன் எப்படி கணவரோடு கட்டையேறும் பெண்ணைப் புகழ்ந்துரைக்க முடியும்?
இத்துடன் என் கேள்விகளும் பதில்சளும் முடிவடைகின்றன. ஒழுக்கம் பேசுகிறவர்களின் வழக்கு இத்தனை பலவீனமாக இருந்
38

தும் எப்படி இவ்வளவு காலமும் இருந்து வந்திருக்கிறதென்பது புதுமை தான். இதனை விளங்கிக் கொள்ள கற்புநெறியானது எப்படித் தோன்றி, பரவி, இதுகாலவரை ஏதும் மாற்றமின்றி நிலைத்திருக்கிறதென்பதைக் கவனிக்க வேண்டும். ஆதிகால சமூ கத்தில் பெண் ஆணின் உடமையாக இருந்ததால், அவன் அவளைக் கொன்று விடலாம், தின்று விடலாம் அல்லது தான் விரும்பிய படி எதுவும் செய்யலாம். அவன் இறந்த பின்னர் அவனுடைய ஆயுதங்களையும் விரும்பிய பொருட்களையும் புதைக்கும் பொழுது அவனது மனைவியரையும் புதைத்து விட ஒருவித ஆட்சேபனையும் இருக்கவில்லை. பின்னர் சிறிது சிறிதாகப் பெண்களை உயிருடன் புதைக்கும் வழக்கம் நீங்கி கற்புநெறி என்னும் கருத்துருவம் வழக்கத்திற்கு வந்தது. அப்பொழுது பெரும்பாலும் விதவைகளை ஆண்கள் திருமணம் செய்து கொள்ளாதது அவளது இறந்த கணவனின் பேய் அவளைத் தொடர்கிறது என்ற பயத்தின் கார ணமாகும்; பெண்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள் ளக் கூடாது என்பதற்காகவல்ல. இன்று காணப்படும் புராதன சமூகங்களில் இந்த வழக்கு இன்னும் இருக்கிறது. பின்னர் சுங் அரசபரம்பரையினர் காலத்தில் தான் கன்பூசியஸ் சிந்தனையா ளர்கள் "கற்பை இழப்பதைவிடப் பட்டினி கிடந்து சாவதே மேல்" என்று கூற ஆரம்பித்தனர். வரலாற்றில் ஏதாவது ஒரு பெண் இருதரம் திருமணம் செய்ததைப் படிக்கும்பொழுது தங்கள் அதிர்ச்சியைத் தெரிவித்தனர். இந்தக் காலப்பகுதியில் ஆண்கள் சீரழிந்து கொண்டு வந்ததுடன் நாடும் வீழ்ச்சியடைந்து கொண்டு வந்ததென்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கான் மன்னர்கள் காலத்தில் கற்புநெறியில் மேலும் மாற்றங்கள் ஏற்பட்டன. பேரரசர்கள் பிரஜைகளிடமிருந்து அதிக விசுவாசத்தை எதிர் பார்கத் தொடங்கினர். ஆண்கள் பெண்களிடமிருந்து அதிகக் கற்புநெறியை எதிர்பார்க்கத் தொடங்கினர்.
ஒரு நாடு மற்ருெரு நாட்டினல் கைப்பற்றப்படும் வேளையி லும் கற்பைப் பற்றியும் தற்கொலை செய்து கொள்ளும் பெண் களைப் பற்றியும் மிகவும் உயர்வாகப் பேசுவார்கள். மனிதன் வேருெரு நாட்டிற்கு அடிமையாக இருக்கும் பொழுது அவளுல் அவனது மனைவியைப் பாதுகாக்க முடியாமலும் எதிரியை எதி ர்க்க முடியாத கோழையாகவும் இருப்பதால் அவளைத் தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டுகிறன். இது அவனுக்குப் புலப் படும் சிறந்த வழி.
மனிதன் தன்னை மட்டும் பாதுகாத்துக்கொள்ளும் சமுதாயத் திலே, பெண்கள் கற்புடையவர்களாகவும் ஆண்கள் பலதாரங் கள் உள்ளவர்களாகவும் இருந்துவருவதால், ஒழுக்கம் தகாவழி
39

Page 22
யில் செல்வதுடன், கொடுமையானதாகவும் நாளுக்கு நாள் மாறு கிறது. இதில் விநோதம் ஒன்றும் இல்லை. இத்தனை கொடுமைகளை யும் பெண்கள் எப்படி எதிர்ப்புத் தெரிவிக்காமல் சகித்துவந்த னர்? அடிபணிந்து போவதே ஒரு மனைவியின் சிறந்த பண்பு என்று கூறப்பட்டதனல் அவள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டாள். இது விஷயங்களில் பெண்களின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. அவள் வாய் திறவாமல் இருப்பதே சிறந்த பண்பு என்று கூறி அவள் வாயையே அடைத்துவிட்டனர்.
ஒரு பெண் தனது கற்பை ஒரு ஆணினுல்தான் இழக்கிருள் என்பதை எல்லோரும் அறிவர். ஆணுல் பெண்ணை மட்டுமே குற் றம் கூறுவதுடன் விதவையை மணந்து அவளது பெயரைக்கெடுத்த ஆணைப்பற்றியோ அல்லது ஒரு பெண்ணைக் கற்பழித்து அவளது சாவுக்குக் காரணமாயிருந்த கொடியவனைப்பற்றியோ மெளனம் சாதிப்பார்கள். ஆண்கள் பெண்களைவிட பலம் வாய்தவர்களாக இருப்பதால் ஆண்களுக்குத் தண்டனை வழங்குவதைவிட, இறந்த பெண்களுக்குப் புகழ் பாடுவது இலகு போலும்,
கற்புநெறிப்படி ஒழுகுவது கடினமானதா? ஆம், மிகவும் கடின மானது. அது எவ்வளவு கஷ்டமானது என்று ஆண்களுக்குத் தெரிந் தமையால்தான் அவர்கள் அதனைப் புகழ்ந்துரைக்கிருர்கள். பெண் களே கற்பைக் காக்கவேண்டியவர்கள் என்ற ஒரு பொது அபிப் பிராயம் நிலவிவருகின்றது. பெண்களின் கற்பை இழக்கச் செய் யும் எந்த ஆணும் தண்டிக்கப்படுவதில்லை. ஆண்கள் தண்டிக்கப் படாததால் அவர்கள் எந்த வெட்கமும் இல்லாமல், தாங்கள் விரும்பியபோது மேலும் மேலும் இக் குற்றத்தைச் செய்து கொண்டே போகின்றனர். எழுத்தாளரும் இவற்றைக் காதல் காவியங்கள் என்று நோக்குவர். இதனல் பெண்களை அபாயம் சூழ்ந்திருக்கிறது. அவளது தந்தை, சகோதரர்கள், கணவனைத் தவிர்ந்த எல்லா ஆண்களும் அவளைக் கெடுக்கக்கூடியவர்கள். இத ஞல்தான் கற்புநெறியைக் காப்பது கடினமென்று கூறுகிறேன்.
கற்புடன் இருப்பது வேதனை தருவதா? ஆம், வேதனை மிக்கது. இது எத்தனை வேதனையானது என்று தெரிந்துதான் ஆண்கள் அத னைப் புகழ்ந்து உரைக்கின்றனர். எல்லோரும் வாழவே விரும்பு வார்கள்; ஆனல் தியாகியாவதற்கோ இறக்கவேண்டும். ஒரு கற் புடைய விதவை வாழ்கிருள் என்று வைப்போம். அவளுடைய கணவனை இழந்த வேதனையை நாம் புரிந்துகொண்டாலும் அவளு டைய வாழ்க்கை வழி கஷ்டமானது. ஒரு விதவைக்கு ஒரு சுதந் திரமான வருமானமும், ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்களும் இருந்தால், அவள் தனியே வாழ்ந்துவிடலாம். ஆனல் சீனவில்
40

துர்அதிர்ஷ்டவசமாக அதற்கு மாறன நிலைமையே இருக்கிறது. ஆகவே அவளிடம் பணமிருந்தால் அவள் வாழலாம்; அவன் ஏழையாக இருந்தால் பட்டினி கிடந்து சாகவேண்டும்.
அப்படியானல் கற்பை இழந்து வாழ்தல் இதனைவிட குறைந்த வேதனை தருவதாக இருக்குமா? இல்லை, அதுவும் அதிக வேதனை தரும். ஏனெனில் இப்படியான பெண்களைச் சமூகம் ஒதுக்கி வைத்துவிடுகிறது. கற்பை இழந்த பெண்கள் தங்கள் வாழ்நாளில் எல்லோராலும் அவமதிக்கப்பட்டு, இம்சிக்கப்பட்டுத் துன்புறுகிருர் கள். இதனுல்தான் இதுவும் துன்பம் மிக்கது என்கிறேன்.
பெண்கள் கற்புநெறிக்கு சார்பாக இருக்கிருர்களா? இல்லை. எல்லோருக்கும் தங்கள் தங்கள் இலட்சியங்களும் நம்பிக்கை களும் இருக்கும். உயர்ந்ததோ, தாழ்ந்ததோ எல்லோருடைய வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும். மற்றவர்களுக் கும் நமக்கும் எது பயனுள்ளதாக இருக்கிறதோ அது நன்மை யானதாகும். குறைந்தது நமக்கு ஏதாவது நன்மை தரும் என்று எதிர்பார்க்கலாம். ஆனல் கஷ்டமானதும் வேதனைமிக்கதுமான கற்புநெறி ஒருவருக்கும் பயன்தராதது.ஆகவே பெண்கள் கற்பு
நெறியை ஆதரிக்கிருர்கள் என்று கூறுவது நேர்மையற்றதாகும்.
நான் மேற்கூறிய வாதங்களில் இருந்து மீண்டும் வற்புறுத்த விரும்புவது, கற்புநெறியானது கஷ்டமும் வேதனையும் நிறைந்த தோடு அமையாது ஒருவராலும் விரும்பப்படாததொன்ருகவும் இருக்கிறது. அத்தோடு அதனல் ஒருவருக்கோ, ஒரு சமுதாயத் திற்கோ, அல்லது நாட்டிற்கோ எவ்வித பயனும் இவ்லாததோடு எதிர்காலத்திலும் ஒரு பயனும் ஏற்படாது. அது தனது வலிமையை இழந்துவிட்டதுடன் அது நிலைத்திருப்பதற்கு ஒருவித நியாயமும் இல்லாமல்போய்விட்டது.
கடைசியாக நான் ஒரு கேள்வி கேட்கிறேன். கற்புநெறியா னது தனது வேகத்தையும், நிலைத்திருப்பதற்கான காரணத்தை யும் இழந்துவிட்டதால் கற்புடைய பெண்கள் பட்டகஷ்டமெல் லாம் வீணுகிவிட்டதா?
என்னுடைய பதில்: அவர்கள் கருணைக்குரியவர்கள். இந்தப் பெண்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள். ஒரு நல்ல காரணமும் இல்லாமல், சம்பிரதாயம் என்னும் பொறியில் அகப்பட்டுக் கொண்ட இவர்கள் வீணுகப் பலியிடப்பட்டார்கள். நாங்கள் இவர் களுக்கு ஒரு இரங்கல் நிகழ்ச்சி வைக்கவேண்டும்.
M v
இறந்தவர்களுக்கெல்லாம் வருந்தியபின்னர், புத்திசாலிகளாக வும், தைரியசாலிகளாகவும், ஆர்வமுள்ளவர்களாகவும், முற்போக் காகவும் இருக்கச் சத்தியம் செய்துகொள்ள வேண்டும் எல்லா
4.

Page 23
() செக்கல்
حمحمجي
நேரக் குருவி நிமிடச் சிறகுகளை அசைக்கும்
O
மேற்குத் திசைப் பலிபீடத்தில் சூரியனின் படு கொலைக்கு
சிவப்புக் கம்பளம் விரிக்கப்படும்
C ஆர். எம். நெளஸாத்
《། དེ་
அப்பாவிச் சூரியன் அதை நோக்கி
மெல்ல நகரும்.
O
இரவுக் கன்னி காலையில் கழற்றி எறிந்த தன் இருள் போர்வையைத் தேடி வான வீதியால் புறப்படுவாள்.
O வானத் தாயின் குறைப் பிரசவங்களாய் ஓரிரண்டு நட்சத்திரச் சிசுக்களின் முந்து பிரசவம் நிகழும் வானச் சுவரில்
பிறைப் போஸ்டரை' ஒட்டும் வேலையும் நடக்கும்.
O
வேலைக்குப் போன மேகங்கள் அவசர அவசரமாய் வீடு திரும்பும். இன்னும் சில கிழக்கு வான் முற்றத்தில் சும்மா இருந்து அரட்டை அடிக்கும்.
O
மாலைப் பெண்ணின் திசைக் கன்னங்கள் இரவுக் காதலனின் இரகஸ்யச் சந்திப்பை எண்ணிக்
கன்றிச் சிவக்கும்.
事
வித முகமூடிகளையும் கிழித்தெறியவேண்டும் மற்றவர்களுக்கு கஷ்
டங்கள் உண்டாக்கி அதில் இன்பம் காணும்
மூடத்தனத்தை
யும் கொடுமையையும் ஒழித்துக்கட்ட வேண்டும்
எல்லா மனித இனமும் உண்மையான இன்பம் காண வழி செய்வோம் என்று சத்தியம்செய்துகொள்வோம்;
ஜூலை, 1918.
42

9ே பணப்பேயின் ஆட்சி.
9 அம்புஜன்
உழைப்பாளர் உரமிழந்தார் - ஒன்றுபட்டு புத்துலகை உருவாக்கும் திறனிழந்தா ரென்ற பிழைப்பான தத்துவத்தை உடைத் தெறிந்து புறப்படடா தோழா உன் பணிக ளாற்ற. உழைப்பாளர் சக்திதனை பிரித்து வைக்க இனப்போரை இந்நாட்டில் தொடக்கி வைத்தார் பணப்பேயின் ஆட்சிதனை நிலை நிறுத்தி படுகுழிக்குள் எம் நாட்டைத் தள்ளிவிட்டார்
சிறுவர்கள் மாணவர்கள் இளைஞர் மீதும் முதியோர்கள் பெண்களென்ற பேதமின்றி துப்பாக்கி பீரங்கி வேட்டுத் தீர தெருக்களிலே மனிதவதை தொடரும் நாளும்.
அந்நியரின் கைப்பாவை ஆட்சியாலே இன்னுயிர்கள் இம் மண்ணில் வீழும் காட்சி மண்ணதனை நேசிக்கும் மக்களெல்லாம் மனம் வெந்து ஒன்றுபட்டால் மாழும் மாழும். விழித்தெழடா தோழா உன் வீரமிங்கு விளைத்துவிட்ட அதிசயங்கள் சிறிதா என்ன! வையகத்தை வாழ வைக்கும் உனது சக்தி வலுவிழந்து விட்டதென எவர்தான் சொன்னர், மாநிலத்தின் தளையறுக்கும் மனித சக்தி மாபெரிய உழைப்பாளர் சக்தி யென்ற மாக்ஸ் அளித்த தத்துவத்தின் ஒளியில் நின்று மானுடத்தின் கீதமதை தொடர்ந்து பாடு. பாழ் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் உந்தன் நீள் பொறுமைக் கோரெல்லை இங்கு உண்டு வெறுமைக்கா உன் வாழ்வு என்று கண்டாய் சிறுமைகளுக் கெதிராகச் சினந்தே சீறு.
உழைப்பாளித் தோழா உன் கரங்க ளிங்கு உயர்ந்துவிட்டால் விலங்கெல்லாம் தகர்ந்து போகும் உழைப்போரைச் சுரண்டுகின்ற அமைப்புச் சாயும் இனப்பகையும் ஜாதி மத பகையும் மாயும்.
食
43

Page 24
9 விழிப்பு
O சன்மார்க்கா
சமையல் செய்யும் இயந்திரமாக
ஆண்டுகள் பல துாங்கிக் கிடந்தாய் உன் சிறு வீடே உனதுலகானது உப்பும் புளியுமே பிரச்சனையானது உன் வாழ்நாள் இவ்வாறு
உழுத்துப் போனது உன்னைச் சுரண்டி வாழ்ந்தது உலகம் உனக்காகவோ அழுதவர் கொஞ்சம்
ஆணுல் - தாயே! நீ இன்று விழித்துக் கொண்டாய் தெருவில் இறங்கி ஊர்வலம் வந்தாய் அன்னையருடன் அணிதிரண்டு விட்டாய் அகப்பை பிடித்த கைகளில் பதாகை போதும் கொடுமைகள் என்ற முடிவு பிள்ளைகள் பற்றி நெஞ்சினில் ஏக்கம் கண்களில் சோகம், நடையினில் வேகம் இறுதியில் வெற்றி உனக்கே தாயே!
உலகில் பாதி பெண்கள் ஆனதால் உங்கள் பலத்தை உணர்ந்து விட்டீர்கள் நித்திரை செய்த காலமும் முடித்தது நீதியைக் கேட்கும் காலமும் வந்தது வீட்டுக்கு வீடு அன்னையர் வந்தனர் சிறுதுளி பெருவெள்ளமாய் திரண்டு நின்றனர் உன் பலம் கண்டு நீயே பிரமித்தாய் தாயே எமக்கு விடிவு வந்தது!
முகமூடிகள் பல கிழிந்து போயின ஏமாற்றுக்காரரை இனங்கண்டு விட்டாய் அண்ணனின் நாறிய அரசியல் வேண்டாம் நாசம் செய்யும் படைகளும் வேண்டாம் அடக்கு முறைகளும், அராஜகங்களும் கொலையும், கொள்ளையும் நமக்கு வேண்டாம் சரியான பாதையில் போகிருய் தாயே! எமக்கு விடிவு வேளையும் வந்தது.
44
@一

விமர்சனம்
அ பாரதி ஆய்வியலுக்கு
ஒரு பயனுள்ள பங்களிப்பு
O (p(560.5usi
நூல்: பாரதியின் மொழிச் சிந்தனைகள் -
ஒரு மொழியியல் நோக்கு ஆசிரியர்: எம். ஏ. நுஃமான்
1982 ஆம் ஆண்டிலே "தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் பாரதி நூற்ருண்டு விழா கொண்டாடப்பட்டது. இலங்கை யிலும் இது , கணிசமான அளவு ஆர்வத்துடன் கொண்டாடப் படலாயிற்று. அந் நூற்ருண்டு விழாவின் ஒரு அம்சமாக, பாரதி பற்றிய ஆய்வுகள் சிலவும் பல்வேறு அளவுகளில் நடை பெற்றன. இத்தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்து மொழியியல் விரிவுரையாளர் எம். ஏ. நுஃமான் அவர்கள் எழு திய நூலே இப்பொழுது மதிப்புரைக்காக எடுத்துக்கொள்ளப்படு கிறது. இது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீட வெளி யீடாகும்.
பாரதியின் மொழிச் சிந்தனைகளை ஆராயும் இந்த நூல் ஐந்து அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. பாரதியின் மொழி உணர்வு, பாரதியும் தமிழ் இலக்கணமும், மொழி மாற்றமும் பாரதியும், மொழி வளர்ச்சியும் பாரதியும், இந்தியாவுக்குப் பொதுப் பாஷை என்னும் ஐந்துமே அந்த அதிகாரங்கள். இவற்றின் வழியே, பாரதியின் மொழிச் சிந்தனைகள் எவை என்பதை நமக்கு அறிமுகஞ் செய்து வைப்பதுடன், மொழி இயலாகிய விஞ்ஞானத்துறை நோக்குப்படி அச்சிந்தனைகள் பற் றிய குறிப்புரைகள் சிலவும் நூலாசிரியராற் கூறப்பட்டுள்ளன.
மொழி பற்றிப் பாரதி கொண்டிருந்த எண்ணங்கள் பெரும் பாலும் தமிழையும் சமஸ்கிருதத்தையும் பற்றியே படர்ந்துள் ளன எனலாம். அத்துடன் நவீன மொழி, ஆட்சியாளர் மொழி என்ற முறையிலே ஆங்கிலம் பற்றியும், சுதேச இயக்கத் தொடர் புள்ள கூறுகள் என்ற வகையிலே இந்தியாவில் வழங்கும் ஏனைய மொழிகள் பற்றியும் பாரதியின் எண்ணங்கள் படர்ந்து செல்வ தன இந்த நூலின் வாயிலாக நாம் உணர்ந்துகொள்ளுகிருேம்:
45

Page 25
"மொழி மாற்றம், மொழி வளர்ச்சி என்பன பற்றிய பாரதியின் கருத்துக்கள் அறிவியல் ரீதியானவையாகவும் புரட்சிகரமானவையாகவும் உள்ளன, அதே வேளை, ஆச்சரியப் படத்தக்க வகையில் தமிழின் பிறப்பு, சிறப்பு, தொன்மை, வலிமை, இனிமை என்பனபற்றிப் பாரதி ஆங்காங்கே கூறி யுள்ள கருத்துக்கள் அறிவியலுக்குப் புறம்பான பொதுஜன ஐதீகங்களைப் (popular myths) பிரதிபலிப்பனவாக இருப்பதை யும் காண்கிருேம்" என எம். ஏ. நுஃமான் தமது முன்னுரை யிலே கூறியுள்ளமை கவனிக்கத் தக்கது.
அறிவியலுக்கு இசைந்தவை என நுஃமான் கருதும் பாரதி யின் சிந்தனைகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:-
(1) மொழி இலக்கண விதிகள், சாஸ்திர விதிகள் என்னும் வகைக்குள் அடங்குவன. சாஸ்திர விதி மனிதனுல் எழுதப்பட் டது. காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப, சாஸ்திர விதிகளை மாற்றுதல் அவசியமாகின்றது.
(2) காலம் மாற மாற பாஷை மாறிக்கொண்டே போகி றது. பழைய பதங்கள் மாறிப் புதிய பதங்கள் உண்டாகின்றன. ( இது, பாரதியின் இயங்கியற் பார்வையின் வெளிப்பாடாகும்.)
(3) மனுஷ் பாஷைகள் மனுஷ வாழ்க்கையோடு ஒட்டி உடன் வளர்ந்த பொருள்கள் தலைமுறை தலைமுறையாய் எத் னையோ நூற்றண்டுகளாக ஒரு நாட்டார் பேசி வரும் பாஷை அவர்களின் உயிரோடு ஒன்றிவிடுகிறது. ( மொழி வளர்ச்சி சமு தாய வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது என்ற அடிப்படையில் இக்கருத்து அமைந்துள்ளது எனலாம்.)
(4) தமிழிலே புகுந்துள்ள புதிய ஒலிகள் சிலவற்றுக்கு எழுத் தில் இடங்கொடுக்க வேண்டும். ( அதன் பொருட்டு இன்றுள்ள தமிழ் எழுத்துகளுடன் சில குறியீடுகளைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும் என்று பாரதி கருதினர். புதிய ஒலிக்குறிகள் எவ் வாறமையலாம் என்பதையிட்டு, மொழி இயலாரிடையும் பிற ரிடையும் கருத்து வேற்றுமைகள் உள்ளன.)
மேற் கூறிய சிந்தனைகளின் வழியிலே, தமிழ் மொழி விருத் தியை முன்னிட்டுச் சில ஆலோசனைகளைப் பாரதியார் முன்வைத் தார். அவற்றுட் பிரதானமானவை பின்வருமாறு -
(அ) எளிமையான தமிழ் நடையை, அதாவது மக்கள் இலகுவில் விளங்கிக்கொள்ளத்தக்க தமிழ் நடையை விருத்தி செய்து வரவேற்கவேண்டும். (ஆ) மொழியிலே தெளிவு வேண்டும். கூடிய வரை பேசு
வது போலவே எழுதுவதுதான் உத்தமம்.
46

(இ) தமிழ் மக்கள் தம் அலுவல்கள் அனைத்துக்கும் தமிழ் மொழியைக் கையாளல் வேண்டும். சங்கங்கள், சபைகள், அறிவித்தல், கல்வி, ஆட்சி, கலை ஆகிய எல்லாத் துறைகளிலும் தமிழ் பயன்படல் வேண்டும்.
(ஈ) பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களையும் அறிவியல் விடயங்களையும் எடுத்துரைப்பதற்குத் தமிழ் கருவியா தல் வேண்டும். இதற்கு மொழிபெயர்ப்புப் பெரிதும் உதவியாகும்.
(உ) புதுச்சொல் ஆக்கத்தின்போது தமிழ் மொழிக் கூறு
களுக்கே முதலிடம் வழங்குதல் வேண்டும்.
(ஊ) ( இந்திய ) நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேம்படுதல் வேண்டும். எனினும் தமிழ் நாட்டில் தமிழ் மொழி தலைமை பெற்றுத் தழைத்தல் வேண்டும்.
அன்று பாரதி கூறிய மேற்படி ஆலோசனைகளிற் பல, இன் றைய நிலையிலும் ஏற்புடையனவாகவே இருப்பது மனங்கொள் ளத் தக்கது.
இனி, மொழியியல் முறைகளுடன் இசைந்து போகாதவை என நுஃமான் காட்டியுள்ள பாரதி சிந்தனைகளைப் பார்க்கலாம். அவற்றை நாம் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
(1) மொழியின் பிறப்புப் பற்றிய கடவுட் கொள்கை.
(2) வலிமையிலும் திறமையிலும் "உள்ளத் தொடர்பிலும்" தமிழ் மொழியே முதன்மையானது. - ஈடிணை அற்
Digil » (3) தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக் கணத்தை அனுசரித்தே அமைக்கப்பட்டிருக்கிறது.
(4) பிற மொழிப் பெயர்களை நாம் அந்த மொழியில் உச்
சரிக்கப்படுவது போல் ஒலிச் சிதைவின்றி உச்சரிக்கவும்
எழுதவும் வேண்டும்.
மேற்படி சிந்தனைகளிற் பல, பாரதியின் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பத்திரிகைக் குறிப்புகளிலும் பயின்று வந்துள்ளன. அறிவியலுடன் இசைந்து போகாதவை என நுஃமான் சுட்டிக் காட்டும் எண்ணங்களே பாரதி பாடல்களில் மேலோங்கி நின்று தமிழ் மக்களிடையே மொழிப்பற்றைத் தூண்டி வளர்ப்பதற்கு உதவியுள்ளன. இதனையும் நாம் புறக்கணித்து விடல் இயலாது. இவ்வாறு வளர்க்கப்பட்ட மொழி உணர்வின் பேருக, தமிழ்
47

Page 26
மொழியைப் பொறுத்தவரையில் வரவேற்கத்தக்க அபிவிருத்திகள் சில நிகழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாரதியின் மொழிச் சிந்தனைகள் பற்றி மொழியியல் நோக் கில் எழுந்துள்ள இந்த ஆய்வு நூலினைப் படிக்கும்போது வேறு சில கேள்விகளும் ஐயங்களும் தோன்றுகின்றன. அவற்றுள் இரண் டொன்றை இவ்விடத்திலே குறிப்பிடுவது பொருத்தமாகும்.
ஒளி, குளிர்ந்த நடை, தண்மை, நேரே பாய்ந்து செல்லும் வசனம், தத்தளிப்பு போன்ற பதங்கள் சிலவற்றைப் பாரதி பயன்படுத்தியுள்ளார். இவை "எதை உணர்த்துகின்றன என் பதை மொழியியல் அடிப்படையில் நாம் புறநிலையாக விளக்க முடியாது என்பது தெளிவு. மொழி நடையைப் பொறுத்தவரை இவையெல்லாம் மனப்பதிவின் பாற்பட்டவையாகும்" föll நுஃமான் தெரிவிக்கிருர், நமது கேள்வி இதுதான் - மொழியிய லின் இன்றைய நிலையில் இவை வரையறுக்கப்படாமல் இருக்க லாம். எனினும் இப்பதங்கள் எவ்வித அந்தமும் இல்லாதவை அல்லவே. புதிய ஆய்வாளர்கள் முயற்சி செய்து இவற்றை வரையறுத்து அளந்தறிய முற்பட்டால் என்ன? உதாரணமாக, பெளதிக இயலிலே வெம்மை ஈரலிப்பு ஆகிய பதங்கள் மனப் பதிவின்பாற் பட்டவை என ஒரு காலத்தில் எண்ணப்பட்டவை. ஆனல் அவை இன்று அளந்தறியக்கூடிய கணியங்களாக வரை யறுக்கப்பட்டு, திட்பமான அலகுகளைப் பெற்றுவிட்டன. வெப்ப மாணிகளும், ஈரப்பதன் மாணிகளும் இன்று பள்ளிச் சிறுவர் களுக்கும் பழக்கமான கருவிகள். அவ்வாறே மொழித் தெளிவுக் கும் நேரடித்தன்மைக்கும் சிற்சில சுட்டிகளைக் கண்டறிந்து இவற் றையும் அளந்தறிவதற்குக் கருவிகளை அமைக்க மொழி இயலார் முன்வரலாமே! இது நிபுணர்கள் சிந்திக்கவேண்டிய ஒரு பிரச்சினை.
மற்ருெரு கேள்வி ஆறுமுக நாவலருக்கும் பேச்சுத் தமிழுக்கு முள்ள தொடர்பு. 'நாவலரின் உரைநடையிலே பேச்சுவழக்குக்கு இடமில்லை" என நுஃமான் ஓர் இடத்திலே தெரிவிக்கிறர்(பக்.28). சொல் வடிவங்களைப் பொறுத்த வரையில் இது உண்மையே, ஆனல் வாக்கிய அமைப்பிலும் ஓசை ஓட்டத்திலும், சொற் பிரயோகத்திலும் பல சந்தர்ப்பங்களில் நாவலர் மக்கள் மொழியைத் தழுவியுள்ளமைக்கு உதாரணங்கள் பல உண்டு. அவரது கண்டனங்களிற் பலவும், பொது மக்களை நோக்கிய விஞ்ஞாபனங்களும் நேரே பேசுவது போன்ற சொல்வரிசை அமைப்பையும் தொனியையும் பெற்றுள்ளன. ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு, யாழ்ப்பாணச் சமயநிலை போன்ற பிரசுரங்களை ஆதாரமாக வைத்து, பேச்சுத் தமிழுக்கும் நாவலருக்கும் உள்ள தொடர்பினை ஆராய்வது பயனுள்ள பயிற்சியாக இருக்கலாம்.
48

9 செப்பனிட்ட ԼյլջԼ05/56ir
O Gassir
கோழியெறிந்த கணங்குழை இடறும் பொற்றே ருருட்டும் சிறுவர் கரங்கள் முத்து எறிந்து நன்மணி சிதறும் அலைகடற் கரைமேல் பிச்சை இரக்கும்.
தாயார் அடைப்ப மகளிர் திறப்பத் தேயும் குடுமிக் கதவுகள் பின்னல் நேயக் கலவி மயக்கம் தெளியும் கைகள் காசைத் துகிலென அள்ளும்:
முறத்தாற் புலியை அடித்த மறத்தி தெருவாற் தனியே போகாள் - போனல் மார்வேல் தாங்கா எங்கள் மறவன் ஏறு தழுவான், சீழ்க்கை ஒலிப்பான்.
G
அத்துடன், நாவலரின் மொழிச் சிந்தனைகளையும் மொழியியல் நோக்கில் எவரேனும் ஆராய முற்பட்டால் அதுவும் வரவேற்கத் தக்க முயற்சியாயமையும்.
கூட்டு மொத்தமாக நோக்குகையில், பாரதியின் மொழிச் சிந்தனை பற்றி நுஃமான் இயற்றியுள்ள இந்த நூல், விஞ்ஞான நோக்குப்படியான பரிசீலனைக்கு ஒரு நல்ல உதாரணமாகத் திகழ் கின்றது. பாரதி ஆய்வியலுக்கு இது பயனுள்ளதொரு பங்களிப் பாகும். பாரதியின் மொழிச் சிந்தனைகள் பயின்று வரும் பாடற் பகுதிகளும், வசனப் பகுதிகளும் பின்னிணைப்பாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளமை மிகவும் வரவேற்கத்தக்க ஓர் அம்சம் எனலாம்.
49

Page 27
9 நவீன ஓவியம் பற்றி
சில சொற்கள்
O சி. சிவசேகரம்
9.1. ஒழுங்காக ஒரு வசனம் எழுத முடியாதவர்கள் எல்லாம் புதுக் கவிதை பண்ணுகிருர்கள்" என்பதில் உள்ள அளவு "உண்மை நேராக ஒரு கோடு வரைய முடியாதவர்கள் எல்லாம் நவீன ஓவியம் வரைகிருர்கள்" என்பதிலும் உண்டு. புதுக் கவிதையும் நவீன ஓவிய முறையும் கையாலாகாத்தனத்துக்கு மூடு திரைகளாக இருப்பது என்னவோ உண்மைதான் என்ருலும் புதுக் கவிதை எழுதுவோர் அனைவருமோ நவீன ஓவியர்கள் அனைவருமோ ஏமாற் றில் ஈடுபடுகின்றனர் என்பதில் நியாயம் இல்லை.
0.2. எந்த ஒரு கலை வடிவமும் அதற்கான ஒரு சில விதிகளையும் அடிப்படைகளையும் கொண்டே அமைகிறது, மொழிக்கு இலக்க னமும் வார்த்தைப் பிரயோகங்களும் எவ்வாருே அவ்வாறே ஒவ்வொரு கலைவடிவத்திற்கும் விதிகளும் மரபுகளும் அமைகின் றன. சமுதாய வளர்ச்சியையொட்டி மொழியில் எவ்வாறு மாற் றங்கள் நிகழ்கின்றனவோ அவ்வாறே கலை வடிவங்களிலும் மாற் றங்கள் நிகழ்கின்றன. மொழிகள் மங்கி மடிகின்றன புதிய மொழி கள் உருவாகின்றன. கலை வடிவங்களும் இவ்வாறே. புதிய சமு தாய மொழி எதுவுமே தனித்துப் பிறப்பதில்லை. புதியது அதற்கு முந்திய பழைய மொழி மரபினின்று தெளிவான ஒரு முறிவு இருக்கும் அதே சமயம் பாரம்பரியம் சார்ந்த சில தன்மைகள் தொடரவே செய்கின்றன. மொழி மாற்றங்களில் கால அளவுகள் சற்றே நீளமாக உள்ளன; கலை வடிவங்களில் கால அளவுகோல் ஒப்பிடுகையில் குறுகலாக இருக்கிறது எனலாம்.
0.3 எந்தவொரு கலைப்படைப்புமே அடிப்படையில் ஒரு கருத் துப் பரிமாறல் தான் என்பதை நாம் உணர்ந்தால் (அல்லது ஏற் றுக் கொண்டால்?) கலை வடிவங்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் சில பொது விதிகள், மரபுகள் பேணப்படுவதன் அவசியத்தையும் உணரலாம்.
0.4. ஒரு குறிப்பிட்ட மொழி வழக்கிலேயே கருத்துப் பரிமாற லில் உள்ள இடர்பாடுகளை நாம் அறிவோம். ஒரே வார்த்தை அல் லது வாக்கியம் அதனைப் பயன்படுத்தும் சூழ்நிலையையொட்டியோ அல்லது நபரையொட்டியோ வேறுபாடாக அர்த்தப்படலாம்
50

என்பது ஒருபுறமிருக்க, கேட்பவரையும் அவரது மனநிலையையும் அவருக்கும் சொல்பவருக்குமிடையிலான உறவையும் சார்ந்து வெவ்வேறு விதமாக விளங்கிக் கொள்ளப்படக் கூடும். கட்டுப் பாடான மரபுகளும் விதிகளும் உள்ள சூழ்நிலையிலேயே இவ்வா ருன சிக்கல்கள் ஏற்படலாம் என்ருல் ஓரளவு தளர்வான விதி களும் மரபுகளும் ஆளும் சூழ்நிலைகளில் உள்ள குழப்பங்கள் நாம் கற்பனை செய்ய முடியாதனவல்ல. எனவே கருத்துப் பரிமாறலின் தேவைகள் விதிகளை ஏற்படுத்தும்படி நிர்ப்பந்திக்கின்றன. விதி கள் கருத்து வெளியீட்டை வழி காட்டும் அதே சமயம் கருத்து வெளியிடுபவரின் சுதந்திரத்தில் குறுக்கிடுகின்றன. இந்த முரண் பாட்டின் வழியிலேயே கலை வடிவங்களின் வளர்ச்சியும் புதிய ക് வடிவங்களின் தோற்றமும் நிகழ நேரு கின்றது. இதை விட, அந்நிய மரபுகளதும் புதிய அனுப வங்களதும் தொடர்பும் மேற்கூறியவாருன, மாற்றங்கட்குக் காரணமாகின்றன.
0.5. புதிய கலை வடிவங்களின் தோற்றமும் வளர்ச்சியும் சமு தாயச் சார்புடையன. ஒரு குறிப்பிட்ட கலை வடிவம் ஒரு சமு தாயத்தில் செல்வாக்குப் பெறுவதற்கான காரணங்கள் அச் சமு தாயச் சூழலுக்குள்ளேயே உள்ளன. பல நவீன கலை வடிவங்கள் நம் சமுதாயச் சூழலில் வேரூன்ற முடியாமைக்கு பல சமயம், அவை நம் சமுதாயச் சூழலின் சமகால நிலைமைகளுடன் பொருந்த முடியாமை ஒரு காரணமாகிறது.
1.1. நவீன முறை ஒவியங்கள் தத்ரூபமாகப் பொருட்களைச் சித் தரிப்பதில்லை. அவை விகாரமாக அமைகின்றன என்பன போன்ற முறைப்பாடுகள் பரவலானவை. அவற்றைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது இன்னுமொரு முக்கிய முறைப்பாடு. முத லாவது முறைப்பாடு ஒவியன் என்பவனுக்கும் புகைப்படக் கலை ஞனுக்கும் உள்ள வேறுபாட்டை உணர மறுக்கும் முறைப்பாடு தத்ரூபமாக வரைவது மிகவும் திறமை வாய்ந்த செயல், அதற்கு மிகுந்த கைத்திறன் அவசியம். ஆனல் தத்ரூபமாக வரைவது என்றுமே கலையாகி விடுவதில்லை. கண் காண்பதைக் கை அப்படியே வரைகிறது. என்ருல் அங்கே மனதின் குறுக்கீடு புறக்கணிக்கத் தக்கதாகவே இருக்கிறது. ஒரு கலைப்படைப்பில் மனித உணர்வு சார்ந்த பரிமாணம் ஒன்று குறுக்கிடவே செய்கிறது. காணுகின்ற பொருளில் தான் அவதானித்த ஏதோ அம்சத்தை வலியுறுத்து வது ஒவியனுக்கு அவசியமாகிறது. அந்த இயல்பு அவனது செய லில் இயந்திரத்தன்மையை அகற்றி ஒரு தனிமனிதப் பண்பைப் புகுத்துகிறது. எந்த ஓவிய மரபிலும், எவ்வளவு கட்டுப்பாடான மரபாக இருப்பினும் தத்ரூபமாக வரைவது நோக்கமாக இருந் ததில்லை. (மனிதர்களது உருவப்படங்கள் உட்பட)
5.

Page 28
1.2. கலைஞனது நோக்கம், கலை வடிவத்தின் தன்மை ஆகியன வற்றையொட்டி ஒரு ஓவியம் அது குறிக்கும் பொருளினின்று வேறுபடலாம். ஆயினும் அது குறிக்கும் பொருளை மட்டுமன்றி கலைஞன் கூற முனையும் விஷயத்தையுங் கூட பயிற்சி பெற்ற ஒரு பார்வையாளனல் புரிந்து கொள்ள முடிகிறது. ஒவியனுக்கும் பார்வையாளனுக்கும் இடையே உள்ள ஒரு "மொழி" உறவு இத் தகைய கருத்துப் பரிமாறலைச் சாத்தியமாக்குகிறது . ஒவியனின் "மொழி? சிக்கலாகிக் கொண்டு போகும் போது அதைப் புரிந்து கொள்ளக் கூடிய பார்வையாளர்களின் தன்மையும் அதையொட்டி வளர மறுத்தால் அந்த ஓவியனது படைப்புக்களை ரசிக்கக் கூடி யவர்களது தொகையும் குறுகிக் கொண்டே போகும். இங்கே கலைஞன் தான் யாருக்காகப் படைக்கிருன் என்ற விஷயத்தைப் பற்றியும் தன் படைப்பின் நோக்கம் என்ன என்பது பற்றியும் ஒரு நிலைப்பாட்டுக்கு வருவது அவசியமாகிறது.
1.3. படைப்பின் நோக்கம் முடிவானதன் பின்பு அந்த நோக்கம் எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறது என்ற அளவில் தான் கலைஞன் தன்னளவில் திருப்தியடைய முடிகிறது. தன் படைப்பை மற்றவர்கள் ரசிக்க வேண்டுமென எதிர்பாக்கும் ஒருவன் மற்ற வர்கள் ரசிக்கவும் அனுபவிக்கவும் கூடிய வடிவங்களிலேயே படைக்க வேண்டும். தனக்கும் பார்வையாளனுக்குமிடையிலே ஒரு பொதுவான மொழியை அடையாளங் காண வேண்டிய தேவை அவனுக்கு உண்டு. இதனல், சிக்கலான கலை வடிவங்கள் படைக்கப்படக் கூடாது என்று கருதுவதற்கு இடமில்லை. ஆயி னும் எவருமே புரிந்து கொள்ள முடியாத ஒரு கலைப்படைப்பு கருத்துப் பரிமாறல் என்ற அளவில் தோல்வி அடைகிறது. தான் மட்டுமே அல்லது தன்னேடு ஒட்டிய குறுகிய வட்டம் ஒன்று மட்டுமே அறியவும் அனுபவிக்கவும் கூடிய கருத்துக்களைப் பரி மாற விரும்பும் எவருமே அந்த வகையான அந்தரங்க உலகத் தில் சஞ்சரிக்கலாம். ஆனல் அவர்கள் தங்களது திறமைக்குப் பரவலான அங்கீகாரம் போதாது என்று முறைப்படுவது முற்றி லும் நியாயமாகி விடாது. பார்வையாளரின் ரசனையையும் கலை உணர்வையும் உயர்த்தவும் சிக்கலான கலை வடிவங்களுடன் பார்வையாளனைப் பரிச்சயப்படுத்தவும் முனையும் ஒருவன் பார்வை யாளனது சமகால நிலையைக் கணிப்பில் எடுக்காது தன் படைப்புக்களை வழங்கும் போது தன்னைத் தன் பார்வை யாளர்களிடமிருந்து தனிமைப் படுத்திக் கொள்கிருன். அவனது படைப்புக்கள் சமகாலத்தில் பெறத் தவறிய அங்கீகாரத்தை, அருமையாக ஒரு வேளை பின்ஞெரு காலத்தில் பெறக் கூடுமா யிருக்கலாம். ஆனல் அது பெரும்பாலும் கலைஞனது நோக்கம் சர்ர்ந்த ஒன்றல்ல.
52

* தியாகங்கள்
-O siisut(69
சிறையினிலே பிறந்ததனல் கிருஷ்ணன் என்ருல் சிலுவையிலே இறந்ததனல் யேசு என்ருல் போர்க்களத்து வார்த்தையெலாம் கீதை யாகும், படுகொலைகள் அத்தனையும் யாகம் ஆகும்: வாழுகிற நாள் முழுதும் சிறையில் வாடி வேதனையால் உந்தன் உயிர் போனுற் கூட ஏதுக்காய் எவருக்காய் என்ற கேள்வி முன்னிற்கும். அவ்வேளை மக்கட்காக நகமொன்றை இழந்தவனும் உன்னில் மேலாய் உயர்வாதல் கூடும் அதை உணர்வாய், கேளாய் சிலுவையிலே ஒரு யேசு சாய்ந்தபோது இரு கள்வர் அருகினிலே அறையப்பட்டார்.
==
1.4. ஓவிய உபகரணங்களின் தன்மை ஒவிய முறைகளின் இயல்பு போன்றன பற்றிய பரிச்சயம் இல்லாமல் நவீன ஓவியம் வரை பவர்கள் தாம் பயன்படுத்தும் ஓவியமுறையின் இயல்பை நன்கு உணர்ந்து தான் பயன் படுத்துகிருர்களோ என்பதில் எனக்கு மிகுந்த சந்தேகம் உண்டு. விதிகளும் நெறிகளும் தெளிவாக இல் லாத ஒரு கலைவடிவத்தில் எதையுமே கைக் குவந்தபடி வரைந்துவிட்டு மனதிற்கு வந்தபடி விளக்கம் தரும் சந்தர்ப்பங்களுக்கு நிறையவே இடம் உண்டு. ஒவியம், சிற்பம் போன்ற கலைகளில் பம்மாத் துக்காரர்கள் எப்போதுமே இருந்து வந்துள்ளனர். ஆயினும் நவீன ஓவியத்தின் வருகை இத்தகையோரின் ஏமாற்றுக்களை மேலும் எளிதாக்கியுள்ளது. இதனுற் தான் நவீன ஓவியத்தின் தந்தையருள் ஒருவரான பிக்காஸோ நவீன ஓவியத்தின் ரகிகர் களைப் பற்றி மிக இழிவாகவே பேச நேர்ந்தது. ஆங்கிலமே தெரியாதவர்கள் உள்ள ஊரில் யாராவது ஒருவன் வாய்க்கு வந்ததை எல்லாம் ஆங்கிலம் என்று சொல்லி உளறினுல் அது விளங்குகிறது என்று பாசாங்கு பண்ணவும் கூட ஆட்கள் இருப் பார்கள். ஆபத்து எப்போதென்றல், ஆங்கிலம் தெரிந்த ஆசாமி ஊருக்குள் நுழையும் போது, நவீன ஓவியத்தில் இந்தப் பிரச்
S3

Page 29
சனை கூட இல்லை: 4000 வருஷம் பழைய எகிப்திய பாஷை பேசுகிற மாதிரி எவணுவது பாவனைபண்ணுகிற நிலையில் அங்கே குற்றம் காண எவருக்கும் முடியாது. அது ஆபத்தே இல்லாத விளையாட்டு. ஆனல் விளையாடவும் ஆட்கள் குறைவு.
1. 5. நவீன ஓவியர்கள் எல்லாருமே ஏமாற்றுகிறர்கள் என்ருே பெரும்பாலானேர் ஏமாற்றுகிருர்கள் என்ருே கூட நான் வாதிக் கவில்லை, ஆனல் "ஆகா! ஒகோ!" என்று போற்றப்படுகிற ஒவி யங்கள் பலவற்றில் பிரமிக்கச்செய்யும்படியான சாதனைகளை என் ஞல் காணமுடியவில்லை. நான் முட்டாளா அல்லது அவற்றை விய ந்து ரசிப்பவர்கள் முட்டாள்களா என்று எனக்குத்தெரியாது. (ஒரு சமயம் இரண்டுமே உண்மையாக இருக்கலாம்)
2.1 நவீன ஓவியம் என்பது மரபு சார்ந்து வளர்ந்த மேலைநாட்டு ஓவிய முறைகள் தம் வளர்ச்சிப் போக்கில் வந்தடைந்த ஒரு நிலை. இது முதலாளித்துவ சமுதாயத்தின் வளர்ச்சியின் இறுதிக் கட்டத் தினை அடுத்து நிகழ்ந்த ஒன்று. மேலை முதலாளித்துவ சமுதாயத் தின் சமுதாய, கலாச்சார நெருக்கடிகளுடன் அதற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அதன் கலைத்தன்மையும் உள்ளடக்கமும் அந்தச் சமுதாயச் சூழலில் முக்கியமாக உயர்-நடுத்தர வர்க்க புத்திஜீவி கள் மத்தியில் தமக்கான இடங்களை உடையன. அதனை ஒட்டிய போலித்தனமும் கூட அந்த வர்க்க இயல்பினின்று பிரித்துப்பார்க்க முடியாத ஒன்று தானேயெனினும் அந்தக் கலாச்சாரச் சூழலைக் கொஞ்சமேனும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதற்குரிய கலை வடிவங்களை முழுமையாக ரசிப்பது சிரமமான காரியமே. (இது பல மரபு வழிக் கலை வடிவங்கட்கும் பொருந்தும்.)
2:2 நம்மூர் (தென் ஆசியாவின் பல பகுதிகளையும் இதனல் குறிக்க முடியும்) நவீன ஓவியர்கள் என்ன நோக்கத்திற்காக நவீன ஓவிய முறையை நோக்கித் திரும்புகிருர்கள் என்பதையோ, அதன் மூலம் யாருடன் கருத்துப் பரிமாற முனைகிறர்கள் என்பதையோ, எதைக் கூற முனைகிருர்கள் என்பதையோ என்னல் இன்றுவரை தெளிவாக உணர முடியவில்லை.
2.3 மரபுசார்ந்த ஓவியமுறைகளைக்கொண்டும் சற்று நவீனத்துவ தாக்கத்துக்குட்பட்ட அல்லது அந்நியப் பாதிப்புக்குட்பட்ட ஓவிய முறைகளைக் கொண்டும் கூடச் சாதிக்க முடியாத விஷயங்கள் பல உண்டு. அங்கே நவீனத்துவத்துக்கு அவசியம் ஏற்படலாம். ஆனல் இதையெல்லாம் உணர்ந்து தான் நம் நவீன ஓவியர்கள் செயற்படு கிருர்களா என்று தெரியவில்லை. மரபுவழி ஓவியமொன்றன் மூலம் ஏற்படுத்த முடியாத ஒரு தாக்கத்தையோ அல்லது கூற முடியாத ஒரு விஷயத்தையோ நவீன முறை மூலம் திறம்படச் செய்யும் ஒரு கலைஞன் தன் நோக்கத்தில் வெற்றி பெறவே செய்கிருன்.
S4

இந்த வகையில் எத்தனை கலைஞர்கள் நம்மிடையே வெற்றி கண் டிருக்கிருர்கள்? १
2.4. நவீனத்துவத்தை மரபுடன் இணைத்து வெற்றிகரமாகச் செயற்பட்ட ஓவியர்கள் இருக்கிருர்கள். அவர்களது வெற்றி மர பின் வலிமையை நவீனத்துவம் வழங்கும் புதிய பரிமாணங்களு டன் இணைப்பதன் மூலம் பெறப்பட்ட ஒன்று. ஆயினும் எத்தனை பேர் இந்த வகையில் இருக்கிறர்கள்?
2. 5. நம் கலாச்சாரச் சூழல், மரபின் நலிவினைக் கொண்ட ஒன்று. இந் நலிவு நம் சமுதாயத்தின் நலிவு காரணமானது. பிற புதிய கலாசாரத் தாக்கங்களை முழுமையாகக் கிரகித்துக் கொள்ள முடியாமலும் மரபை உயிர்ப்பிக்க இயலாமலும் தடு மாறும் ஒரு சூழலில் போதுமான புரிதல் இல்லாமல் மேலைநாட்டு ஒவிய நவீனத்துவம் அப்படியே பிரயோகிக்கப்படும் போது அது போலித்தனமான ஒன்ருகவும், சமுதாயத்துடன் ஒட்டாத ஒன்ரு கவுமே பெரும்பாலும் அமைந்து விட நேருகிறது. நமது ஓவியக் கலையின் நெருக்கடியில் உள்ளடக்கம் சார்ந்த பிரச்சனை பற்றிய அக்கறையை விட கலை வடிவம் பற்றிய சிரத்தையே அதிகம் போற் தெரிகிறது. நமது ஓவிய மரபு மிகவும் பலமான ஒன்றல்ல ரவிவர்மாவிலிருந்து தொடங்கி சினிமா பேனர்கள் வழியாக வளர்ந்து பத்திரிகையில் அரை நிர்வாணப் படம் வரைகிற அள வில் உள்ள ஒரு மரபு நாம் பெருமைபடக் கூடிய ஒன்றல்ல. நம் ஓவியக் கலை மிகவும் மந்தமான நிலையில் உள்ள ஒன்று தான். அதற்கான காரணம் வெறுமே கலை வடிவம் தொடர்பானதல்ல. அதற்கான பரிகாரத்தை மேலைநாட்டு நவீன ஓவிய முறையில் தேடுவோர் நிஜமான பிரச்சனைக்கு முகங் கொடுக்கிருர்களா தெரியவில்லை. நமது சமுதாயச் சூழலுக்கு உரியதும் அதன் மாற்றத்துக்குத் துணை போவதுமான புதிய ஓவிய மரபுகட்கு அவசியம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இருந்தாலும், இன்று நாம் காணும் நவீனமுறை ஓவியங்களில் தீர்வு இருப்ப தாக எனக்குத் தெரியவில்லை.
2.6 நவீனமுறை ஒவியர்களையோ ஒவியங்களையோ வேண்டாம் என்று நான் ஒதுக்கவில்லை. அவர்கள் தங்கள் சுயதிருப்திக்காக வரைபவர்களானல் வரைந்துகொண்டே போகட்டும். ஆயினும் அவர்கள் மத்தியில் உள்ள சமூகப் பிரக்ஞை உள்ளவர்கள் தாங் கள் யாருக்காக எதை வரைகிருர்கள் என்று இடைக்கிடை தம் மையே கேட்டுக்கொள்வது நல்லது. இல்லாத பட்சத்தில், இவர்களைவிடப் பட்டிக்காட்டில் உள்ள ஆங்கிலப் பண்டிதர்கள் கெளரவிக்கத்தக்கவர்கள் ஆவார்கள். அவர்களுக்காவது, ஒரு சமயம், உண்மையிலேயே சிறிது ஆங்கிலம் தெரிந்திருக்கக் கூடும்.
saresmissans
55

Page 30
இ 'தாயகம்" இதழ் கிடைத்தது. உங்குள்ள நிலைமைகள் எங் களுக்கு மிகுந்த துயரத்தையும் அக்கறையையும் ஏற்படுத்தியுள் ளது. இத்தகைய சூழ்நிலைகளிலும் தங்களது முயற்சியானது வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. 'தாயகம் மிக நன் ருக இருக்கிறது. மற்ற இதழ்களையும் அனுப்பி வைக்கவும்.
A, மாக்ஸ் - தஞ்சாவூர்
0 தாயகம் இதழைப் படித்துச் சுவைத்தேன். மிகவும் சிறப்பாக ஆக்கங்கள் யாவும் இடம் பெற்றுள்ளன. சிந்திக்கத் துாண்டும் கவிதைகள், கட்டுரைகள் யாழ் மண்ணின் வாசனையையும், அம் மண்ணின் மைந்தர்களின் உணச்சிப் போராட்டங்களையும் சித்தரிக் கின்றன. 'அம்புஜன்' எழுதிய 'அந்த இரவின் விடியல்களில்’ அருமையான கவிதை. ‘ஒரு தாயின் ஒப்பாரி"க்கு "அந்த இரவின் விடியல்கள் பதில் கூறும்.
S, தாரினி - மாத்தளை
இ ஆறு பக்கங்களில் 'தூது’ வெளியிட்டு நாம் படும்பாடு அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். தங்கள் "தாயகம்" மாதம்தோறும் தொடர எம் ஆசிகள் என்றும் உண்டு. ஆதரவும் சேர்த்தே
R. M. நெளஷாத் - சாய்ந்தமருது
இ தாயகம் சஞ்சிகையில் காரசாரமான உங்கள் ஆசிரியத் தலையங் கத்திலிருந்து கவிதைகள், கட்டுரைகள். சிறுகதைகள் அத்தனையும் உண்மையிலேயே மிகச் சிறப்பாக வெளிவருகின்றன. தாயகத்தில் மலரும் சகல ஆக்கங்களும் மிகவும் பின்தங்கிய அடிமட்ட மக்களின் வாழ்கைகளையே பிரதிபலிப்பவை. அவர்களின் விழிப்புணர்வுக் காகவே படைக்கப்படுபவை. “குமுதன்". யோ. பெனடிக்பாலன் *செண்பகன்' ஆகியோரின் கவிதைகள் கதைகள் உன்மைகளை அப் பட்டமாகத் துணிந்துணர்த்தி நிமிர்ந்து நிற்கின்றன. 'சன்மார் க்கா" வின் ‘ஒரு தாயின் ஒப்பாரி" உணர்வு பூர்வமாக நெஞ்சைத் தொடுகிறது. -
சி. எவ், பிரேமினி - அரியா?ல )ே தங்கள் சஞ்சிகையின் வளர்ச்சி ஈழத்துப் பாட்டாளி வர்க்கத் துக்கும் உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கும விமோசனத்துக்கு வழி
வகுக்கும் வகையில் அமைந்துள்ளன. எனவே அச் சஞ்சிகையின் வளர்ச்சியில் நானும் பங்குமகாள்ள விரும்புகிறேன்.
வன்னியசிங்கம் ஜெயராசா - கரவெட்டி
O தங்களது வெளியீடான 'தாயகம்" இதழ்கள் என் பார்வைக்கு கிடைத்தன. பாரதி ஆய்வரங்குக் கட்டுரைகள் “டொப்" (Top). இலக்கியதாகம் நிறைந்தவர்க்கு குளிர்பானம் போன்றிருக்கிறது.
$6 எஸ். எம். எம். றபிக் - சாய்த்தமருது
 


Page 31
இலங்கையில் செய்திப் புதிதி Registered as a newspaper
பூ அண்மையில்
வெளிவந்த சீன சிறுவர் புத்தகங் மற்றும் சஞ்சிை புத்தகங்களைப் ெ
0lifhjóls lj 374A. Lría வெளிங்டன் சந்
யாழ்ப்ப
இப் பத்திரிகை தேசிய கலே பாணம், 15/1, மின்சார நிக் அவர்களால் யாழ்ப்பாணம் கே. ே அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட

ரிகையாக பதிவுசெய்யப்பட்டது,
in Sri Lanka.
இலக்கியங்கள் கள்
ககள் பற்றுக்கொள்ள
贏 BAILIN
கூட்டு விதி,
நிக்கு அருக விம
orðrio -
Es
இலக்கியப் பேரவைக்காக யாழ்ப் வீதியிலுள்ள க. தணிகாசலம் க. எஸ். வீதியிலுள்ள பூரீ காந்தா ப்பட்டது.