கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1984.06-07

Page 1
பூலே யூன
84 9. 1.
5/-
繫 議
鼻鼻鼻
繫繫
 

9 சிவ. இராஜேந்திரன்
இ முருகையன்
யோ. பெனடிக்பாலன்
சன்மார்க்கா
O சி, சிவசேகரம்
O இ. சிவானந்தன்
齡繫繫繫繫繫繫繫

Page 2

2 : "חט6םu
இதழ்: 4
0 மற்றும் ஒரு அடிப்படை உரிமை
மறுக்கப் படுகிறது. e
சி சர்வதேசப் பயங்கரவாதமும் இலங்கையும். அ ஒலிம்பிக் அரசியல் விளையாட்டு.
புனைப்பெயரில் பத்திரிகைகள், பிரசுரங்ளில் எழு தக்கூடாது என்பது ஒரு புதிய சட்ட விதியாக வர இருக்கிறது. இது இந்நாட்டுப் பிரசைகளின் அடிப் படை உரிமைகளை மறுக்கும் நடவடிக்கைகளில் மேலும் ஒரு நடவடிக்கையாகும். போதிய தெளிவற்ற சாதா ரண மக்களுக்குத் தெரியப்படுத்தவும் அவர்களால் குரல் எழுப்பவும் இவ்வித உரிமைகள் உதவுகின்றன. அவை மறுக்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கைக்குப் பின்னல் எவர் எவர் இருக்கிருர்களோ நாம் அறியோம். மோசடி, ஊழல், பேரினவாத நோய் இவற்றிற்கு முகம் கொடுக்க அஞ்சு பவர்கள் திரைக்குப் பின் இருக்கிருர்கள் என்பதனைச் சுலபமாகச் சொல்ல முடியும்.
பத்திரிகை ஆசிரியர்கள், நிறுவன அதிபர்கள் எவரேனும் தாம் தெரிந்து கொள்ளாத எவரது கட் டுரைகள், அறிக்கைகள், செய்திகள் எவற்றையும் பிர சுரிக்க மாட்டார்கள். இதன் பொறுப்பை அவர்களே ஏற்றுக்கொண்டு இருக்கிருர்கள். பின்னர் இப்படி ஒரு
l

Page 3
சட்டத்தைக் கொண்டுவர அரசிற்கு என்ன தேவை
இருக்கிறது ? இதனுல் குண்டர்களுக்கு இனம் காட் டவா என்ற கேள்வி எழுகிறது!
அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் இதர துறைகள் பொதுப்பணத்தை துஷ்பிரயோகம் செய் வது, அனவசியப் பயணங்கள், முன்யோசனையற்ற விதத்தில் தேவையற்ற பண்டங்களை - இயந்திரங்களை கொள்வனவு செய்தல், கொடுக்கல் வாங்கல் மோசடி கள், சமூக விரோத உணர்வுகள் - செயல்கள் இவை போன்றவற்றை புனைப்பெயரில் அம்பலப்படுத்தவும் எதிராக நடவடிக்கை எடுக்கவும் இதுவாை வாய்ப்பு இருந்தது. இனிமேல் அது முடியாது. எழுதுபவர்கள் குண்டர்களுக்கு அஞ்சவேண்டும். நீதியரசர்களுக்கு நடந்தது நாடறிந்த ஒன்று.
* எல்லாவிதமான சுதந்திரங்களைக் காட்டிலும், ஒன்றைத் தெரிந்து கொள்வதற்கும், பேசுவதற்கும், விமர்சிப்பதற்குமான சுதந்திரம் முதன்மையானது. இந்தச் சுதந்திரம் சர்வாதிகாரிகளுக்கு விம சொப் பனம்.’’ இவ்விதம் லண்டன் ரைம்ஸ் ப. திரிகையின் முன்னுள் ஆசிரியர் விக்ஹம் ஸ்ரீட் (Wickham Steed) பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றிக் கூம் (ருக்கிருர், எமது கவனத்திற்கு இது உதவட்டும். தம் , னெதும், ஜனநாயகத்தினது பேராலும் அரசு சட்டவிதியை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள் கிருேம்.
o
பயங்கரவ்ாதத்தை எதிர்க்க சர்வதேச ரீதியாக நாடுகள் ஒன்றுபட வேண்டும் ஒன்றுபட்ட ஒரு அமைப்பை உண்டாக்க வேண்டுமென நமது >னதிபதி அழைப்பை விடுத்திருக்கிருர். அமெரிக்கா0ை ந் தவிர வேறு நாடுகள் எதுவும் இதுபற்றி அலட்டிககொள்வ தாகத் தெரியவில்லை.
2

தென் அமெரிக்க நாடுகளும் மக்களும் விடுதலைக் காகப் போராடுவது, கொரிய மக்கள் வட - தென் கொரிய இணைப்பிற்காகப் போராடுவது, பாலஸ்தீன மக்கள் விடுதலைக்காகப் போராடுவது அமெரிக்கா விற்குப் பயங்கரவாதம். அப்படியானல் நாம் எங்கே போகிருேம், எமது வெளிநாட்டுக் கொள்கை என்ன, இந்த நாடுகளுக்கு எதிராக நாம் அமெரிக்காவுடன் அணிசேருகிருேமா என்ற கேள்வி மக்கள்முன் எழு கிறது; அந்த நாடுகளிலிருந்து அமெரிக்கா விடுபட வேண்டும் அதுவே அரசியல் தீர்வு.
நமது நாட்டில் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும். அதுவே நீதி, நீதி நிலைநிறுத் தப்பட்டால் தான் சமாதானம் நிலை நிறுத்தப்பட முடி யும். இது அமெரிக்காவிற்கும் பொருந்தும்.
Ο
ஒலிம்பிக் போட்டிகள் விளையாட்டுக்கள் மனித ஒற்றுமை உணர்வை ஊக்குவிக்கும் இலக்கையுடை யன. ஆயினும் அமெரிக்காவையும் சோவியத் யூனி யனையும் பொறுத்தவரை அது அவர்களது சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் ஒரு காயாகி விட்டது. 1980 ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா பகிஷ்கரிக்கக் காட் டிய நியாயம் செல்லுபடியாகக் கூடிய ஒன்றே-அதா வது சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பை நடத்திய ஆண்டு அது. அமெரிக்கா விற்கோ அந்தப் பகிஷ்காரத்துக்கான தார்மீகத்தகுதி இல்லை. அமெரிக்கா சோவியத் யூனியனைவிட எந்த வகையிலும் குறைவான ஆக்கிரமிப்பாளன் அல்ல.
இம்முறை சோவியத் யூனியனும் அதன் ஆதிக் கத்திற்குட்பட்ட நாடுகளும் பகிஷ்கரிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. சோவியத் யூனியன் காட் டும் காரணங்களோ மிகப்பலவீனமானவை. ஆட்சே பனைகள் எல்லாமே கடைசி நேரத்தில் திட்டமிட்டு
3

Page 4
எழுப்பப்பட்டவை. அமெரிக்காவிற்கு, பதில் மூக் குடைப்பு ஒன்றே சோவியத் யூனியனின் குறிக்கோள்.
அமெரிக்கா ஒலிம்பிக் போட்டியை மிகவும் வர்த்தகமயமாக்கி விட்டது என்ற குறைபாடு ஒலிம் பிக்போட்டிகளின் தாயகமான கிரேக்கத்தில் எழுந் துள்ளது. அது மிக நியாயமான குற்றச்சாட்டே. ஆனல் முதலாளித்துவ சமுதாயங்களில் விளையாட்டு, கலைகள், கல்வி, விஞ்ஞானம், மருத்துவம், எல்லாமே வியாபாரமாகிவிட்டன. எனவே ஒலிம்பிக் போட்டி யின் நிலை வியப்புக்குரியதல்ல,
ஒலிம்பிக் போட்டிகளில் வல்லரசு அரசியலைத் தடுக்க அயல் நாடுகளில் படைகளை வைத்துள்ள ஆட்சி நிலவும நாடுகளிலும் அயல் நாட்டுப் படை களின் ஆக்கிரமிப்பிலுள்ள நாடுகளிலும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியாது என்ற தர்மானம் செய்வது ஒருவேளை பயன்தரலாம். அல்லது நிரந்தர மாகவே போட்டிகளின் தாயகமான 'ரேக்கத்தில் அவை எப்போதும் நடைபெறுவதற்கான ஏற்பாட் டினைச் செய்யலாம்.
S சொல்வதைக் கேள்
- யோ. பெனடிக்பாலன்
இந்த வட்டத்துக்குள் கண்களை மூடு வந்து நில் சொல்வதைக் கேள் இரு கால்களையும் இப்போது சேர்த்து வை வாயிலிருந்து கை கட்டு கை எடு வாய் பொத்து கை கட்டு மூச்சுக் காட்டாதே சொன்னதைச் சொல் கண்களை மூடு "எமது நாடு துப்பாக்கியைப் பார்க்காதே சுதந்திரமான
ea)6 சட்டமும் அமைதியும் நிலை நாட்டும் கருவிகள்
d
ஜனநாயக நாடு"

டு அந்த இரவின் விடியல்களில்.
ஆடிக்காற்றும் அறுதுயில் கொள்ளும் அமைதியான நடுநிசி நேரம் அசைவுகள் இன்றி ஊரே உறங்கும் ஒசைகளில்லா இரவின் மெளனம் எங்கோ ஊர்ந்த வாகனம் நிற்க எழுந்த பேரோசையில் எல்லாம் கலைந்தது அக்கம் பக்கம் எல்லாம் அதிர்ந்தது இடியும் மின்னலும் தன்கதை தொடர்ந்தது மழைப் புகார்களில் மறைந்து தெரிந்த மங்கிய நிலவில் நாடகம் நடந்தது.
இரவுத் திரைகள் விலகிய விடியலில் எலும்புகள் தசைகள் நரம்புகளாக கதிரவன் ஒளியில் காட்சிகள் விரிந்தன கம்பிகள் இல்லாத் (வ)தந்திகள் தாவின தொட்ர்ந்து பல்லாண்டுகள் அரசு வளர்த்த வெறிகள் எழுந்து தாண்டவ மாடின ஏதுமறியா மனிதரின் தலைகள், மளமள வென்று சரிந்தன மண்ணில் மறைந்து கிடந்த இனவெறி உணர்வுகள் எழுந்து தீயாய் இலங்கையை எரித்தது.
கைதிக் கூண்டில் குதறிய உடல்கள் குண்டுகள் பாய்ந்து சிதறிய தலைகள் வீதிகள் தோறும் விழுந்த பிணங்கள் வெந்து சாம்பலில் அழிந்த சுவடுகள் மனித மலர்கள் கருகிய விடியல்கள் மாறி ஓர் நாள் விடியல்கள் தோன்றும் அந்த விடியலில் வானம் சிவக்கும் அழகு மலர்களாய் வையகம் பூக்கும் மனிதன் மனிதனய் மனிதனை மதிக்க புதிய மனிதன் எழுந்து நடப்பான்.

Page 5
G திசைமாறிய
மாஜி நண்பனுக்கு.
O Gass
**இல்லாத ஊருக்கு நாளை புறப்பட்டு நேற்றிரவு போய்ச்சேர இந்த இரவின் இருளால் வழிகாட்டு” என்றென்னைக் கேட்டாய்.
'ஏலாது" என்றேன் "எதிரி என என்னை ஏசிவிட்டுப் போனுப்.
முன்னெருநாள், *போகும் இடம் தெரிதல் வழிதெரிதல், வகைதெரிதல் நேரம் தெரிதல் எதுவும் பெரிதல்ல போதல் தனியே பெரிது’ என ஒதிக் * கீதை மொழி என்ருய்
என்னுட் சிரித்தேன் என்ருே த்ெளிவாய் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற வந்தாய் இரவில் வழிகேட்டு என்னை ஒழித்தால் உன்னை வழிகாட்ட இல்லாமலோ போவார்.
போனுய் விடியலிலே வாலைத் துரத்தி
வளைய வளைய வரும் AntiGLIrri gifScyti
O
திசைகெட்டு ஏறுகிற வெய்யிலுடன் ஏறுகி வேகத்தில் ஒடுவாய் நேரத்தை வெல்லும் குறி போலும்.
"ஒரு கணமே நில் லென்ருல் நீ குரைப்ப அல்லாற் கடிப்பாய் அறிவேன் அகல்கிறேன் உன்போல என்னல் ஒடல் இயலாது. ஆனல் எனக்குப் போகும் இடம் தெரியும் வேளை, வழி, வகையும்.
நன்றி: செம்பதா
மனிதனும் மிருகமும்
அமெரிக்காவில் (யூ. எஸ். வளர்ப்புமிருகங்களின் உண வுக்கு வருடாவருடம் 5ே0
Sav66uusir Grrro (600 ( கோடி ரூபா) செலவாகிறது அதே சமயம் வறுமை கார ணமாக 26 மில்லியன்பே அமெரிக்காவில் உணவு போசனைக் குறைவிற்கு ஆளாகியுள்ளனர்.

ruii
SING
b
பாரதி ஆய்வரங்குக் கட்டுரை - 8
(தேசிய கலை இலக்கியப் பேரவையிஞல் நடத்தப்பெற்ற பாரதி நூற்றண்டு ஆய்வுரைகளை தொடர்ச்சியாக கட்டுரை வடிவில் தருகிறேம்.)
கல்வியியற் சிந்தனைகளும் பாரதியும்
- சிவ. இராஜேந்திரன்
மனித சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கோடு, முன்னேறி வரும் மனிதகுலத்தின் அறிவுத் தத்துவமும், பகுத்தறிதலும் மனிதனின் வரலாற்றுப் போக்கில் புதிய பரிமாணத்தை வர லாற்ருேடு இணைந்த அடிப்படையிலேயே பெற்று வருகின்றது: சமுதாய வளர்ச்சிப் போக்கில் ஒரு கட்டத்தில் சேர்க்கப்பட் டிருக்கும் கருத்துக்களின், தத்துவங்களின், நடைமுறைகளி லிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அறிவானது சமுதாயத்தை இன்னுெரு கட்டத்திற்கு முன்தள்ளிவிடும் ஒரு ஆவணமாக அமைகின்றன. இது ஒரு வரலாற்றுப் பணித்திட்டமாக அமைந்து வருகின்றது. மனிதகுலம் தனது வரலாற்று ஓட்டத் தில் பெற்று வைத்திருக்கும் அறிவுக் களஞ்சியங்களின் முழு மையை நடைமுறை மனித சமுதாயம் மேலும் விருத்திசெய் யவும் அனுபவிக்கவும் ஒரு ஊடகமாக அமைவது கல்வி என்று ஒரு வரைவிலக்கணத்தை கூறலாம். ஆனல் சமுதாய வளர்ச் சிப் போக்கிலே கல்வி என்பது சிலவேளைகளில் சில நடை முறைகளைப் பேணிக் காப்பதற்கான, பிழையான விடயங் களுக்கும் அடிப்படையாக அமைந்திருக்கின்றது. வரலாற்றை நோக்கும்போது, சில கட்டங்களில் சில "வகையான" சிந்தனை கள் பேணப்படுவதையும், எதிரான கருத்துக்கள் அது சரி யாகவோ அல்லது பிழையானதாகவோ இருக்கலாம் நிராகரிக் கப்பட்டும் வந்துள்ளது. புவி சூரியனைச் சுற்றி வருகின்றது என்ற கருத்தை வலியுறுத்த முற்பட்டு கலிலியோ தனது எழு பது வயதில் ஒன்பது ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார். கத்தோலிக்கத் திருச்சபையினுல் அன்று அந்த உண்மை நிரா கரிக்கப்பட்டது. ஆனல் அதே விடயம் இன்று மனிதனல் பன் மடங்கு வெல்லப்பட்டுள்ளது.
விஞ்ஞான விடயங்களில் மட்டுமன்றி சமூக, பண்பாட்டு, கலாச்சார விடயங்களிலும் முழுமையான அக்கறை செலுத்தி பொருள்முதல்வாத அடிப்படையில் சிந்திப்பதன் மூலம், சமு
S

Page 6
தாயத்தின் அடுத்த கட்டத்தைப்பற்றி முடிவு செய்யவும் அதற்கேற்ற நடைமுறைகளை முன்னெடுக்கவும் முடிகின்றது. இதற்கு அடிப்படையாக கல்வி அமைகின்றது.
ஐரோப்பாவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் சமூக எழுச்சி நடைபெற்ற காலங்களில் கல்வியியல் தொடர் பில் பல்வேறு சிந்தனைகள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. இதனல் சரித்திர கால சமூக விஞ்ஞானிகள் தமது படைப்பு களில் கல்விக்கும் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளனர். இந்த அடிப்படையில் நோக்கும்போது, ஐரோப்பாவில் 18-ம் நூற் ருண்டில் பரவலாக எழுச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, 1872-ம் ஆண்டு வெளியிடப்பட்ட "கம்யூனிஸ்ட்
கட்சி அறிக்கையில்”* மாக்ஸ் ஏங்கெல்ஸ் ஆகியோர் 'பாட் டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்" எனத் தலப்பிட்டு எழுதிய போது. "உங்கள் சித்தாந்தத்தின் சாரத் தன்மையும் போக்
கும், உங்களது வர்க்கம் நிலவுவதற்கு வேண்டிய பொருளா தார நிலைமைகளால் தீர்மானிக்கப்படுகிறவைதான்" என்றும் வீட்டுக் கல்விக்குப் பதிலாக நாங்கள் சமூகமுறையிலான கல்வி யைப் புகுத்தி மனிதர்களிடையிலான உறவுகளிலே மிகப் புனித மானவற்றை நாசமாக்க விரும்புகிருேம் என்பீர்கள். உங்க ளுடைய கல்வி இருக்கின்றதே அதுமட்டும் என்ன?. என்றும் கூறி எந்த சமூகநிலை - அமைப்பு காணப்படுகின்றதோ அதற் கேற்பவே கல்வி முறையும் அமைகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றனர்?’ ஆளும் வர்க்கத்தினது (முதலாளித்துவ ) செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவிக்கவுமே கம்யூனிஸ்டுகள் முயலுகின்றனர்" என்கின்றர்கள்.
கைத்தொழிற் புரட்சியோடு மாற்றியமைக்கப்பட்ட உற் பத்தி நிறுவன அமைப்பானது, சிறுவர்களை உழைப்புக் கருவி களாக மாற்றக்கூடிய நிலையை உருவாக்கியதோடு பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளின் நிலையிலேயே இருத்தப்பட் டனர். இறுதியில் "எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுப் பள் ளிக்கூடங்கள், இலவசக் கல்வியளித்தல், ஆலைகளில் குழந்தை களது உழைப்பின் தற்போதைய வடிவை ஒழித்தல், கல்வியை பொருளுற்பத்தியுடன் இணைத்தல்" போன்ற செயற்பாட்டுத் திட்டங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர்.
அடுத்து மாபெரும் அக்டோபர் புரட்சியின்போது லெனின் தனது ஆக்கப் படைப்புகளில் கல்வியியல் சிந்தனைகளுக்கு முக் கியம் கொடுத்துள்ளார். 'பாட்டாளி வர்க்க கலாச்சாரம் எப்படித் தோன்றும்? அது முதலாளித்துவ சமுதாயம் நிலப் பிரபுக்களின் சமுதாயம் அதிகாரவர்க்க சமுதாயம் ஆகியவற்
6

றின் ஆதிக்கத்தில் மனிதகுலம் சேர்த்து வைத்திருக்கும் அறி வுக் கருவூலத்தின் தர்க்கரீதியான வளர்ச்சியாகவே இருக்கும்?? எனவே மனிதகுலம் ஆக்கிப் படைத்திருக்கும் வரலாற்று ஒட் டத்திலே கண்டுபிடித்த சகலவற்றையும் அறிந்து தெளிதல், அதற்கேற்ற அமைப்பில் கல்வித் திட்டத்தை வகுத்தல் அவசிய மானதாகும் என வலியுறுத்துகின்ருர். மேலும் புத்தகங்களுக் கும் நடைமுறைக்கும் இடையிலான அதள பாாதள வேறுபாடு பழைய முதலாளித்துவ சமுதாயம் நமக்கு விட்டுச் சென்றுள்ள பெருங் கேடுகளிலும் இன்னல்களிலும் ஒன்ருகும்" என்பதையும் எடுத்துக் காட்டுகின்ருர். 'மனிதனை மனிதன் சுரண்டும் நிலை யினை மாற்ற புதிய தலைமுறையினை உருவாக்கக்கூடிய, புதிய கம்யூனிஸ் சமுதாயத்தை தோற்றுவிக்கப் போகிற இந்தப் புதிய தலைமுறையினை வளர்த்து ஆளாக்குவதும், பயிற்றுவிப் பதும் இதற்கு கல்வி போதமளிப்பது அவசியம்" என்பதையும் 6 த்துக் காட்டுகின்ருர்,
இந்த அடிப்படையிலேயே இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு, எதிரான தேசிய விடுதலையை பெறுவதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட காலத்திலே கல்வியியல் சிந்தனைகள் அக்கால அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது. பாரதி, காந்தி, சுவாமி தயானந்தர், சுவாமி விவேகானந்தர் போன்றேர் கல்வி தொடர்பில் பல்வேறு சிந்தனைகளை முன் வைத்தனர்.
பாரதியின் கல்வியியல் சிந்தனைகளின் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள அக்கால சமூக பொருளாதார நிலைபற்றி விளங்க வேண்டியது அவசியமாகும். சுதேசிய இயக்கத்தினல் கல்வியிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும் - கல்விச் சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது. இதே சமகாலத்தில்தான் பாரதியின் கல்வி யியல் சிந்தனைகள் ஊற்றெடுத்தது. இக்கோரிக்கை வலுவடை யும் போது ஆங்கில அரசாங்கம் அவ்வப்போது சில நடவடிக் கைகளை மேற்கொண்டது எனினும் ஒரு திட்டமும் முழுமை யான வெற்றியை தரவில்லை என்பதை அச்சீர்திருத்தங்கள் மூலம் உணரமுடிகின்றது.
பாரதி வாழ்ந்த சமகாலத்தில் கல்வியற்றிக் கூறிய ஏனைய அறிஞர்கள்
பாரதி வாழ்ந்த காலப்பகுதியில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் உச்சநிலையை அடைந்தது. நாட்டின் விடுதலைக்கு கல்வித்துறையிலும் மாற்றங்கள் தேவையென்ற அடிப்படையில்
7

Page 7
பல்வேறு அறிஞர்கள் கருத்துக்கள் கூறினர். ஆரம்பத்தில் குருகுலக் கல்வியாக இருந்தமுறை பின்னர் ஒரிடத்தில் பலர் கூடி கல்வி கற்கும் பாடசாலை முறைகள் ஆங்கிலேயரது வருகை யோடு தோற்றம் பெற்றது எனலாம். இதே வேளையில் கிறிஸ்து சமயப் பிரசாரர்களின் சமயம் சார்ந்த கல்விக் கருத் துக்களும் முன் வைக்கப்பட்டன.
1. சுவாமி தயானந்தர்
ஆரிய சமாஜ இயக்கத்தினை தோற்றுவித்து. தேசியக்கல்வி, பெண்கல்வி, சகலருக்கும் பொதுவான கல்வி வழங்கப்பட வேண்டும் என கூறினர். உண்மையறிவு கடவுளிடமிருந்து வருகின்றது என்ற கருத்தை கொண்டிருந்தார். "சத்தியார்த்த பிரகாசம்’ எனும் நூலில் இவரது கருத்துக்கள் உள்ளன. மும்மொழித் திட்டம் தேவையென்ருர். ( தாய்மொழி, வட மொழி, வேற்று மொழி ).
2. சுவாமி விவேகானந்தர்
கிருஷ்ணரது ஆன்மீக போதனையை பரப்புவதில் அக்கறை காட்டியவர். மனிதனுக்கு தேவை சமயமும் கல்வியும்தான். இந்தியாவுக்கு இவை உடனடியாகத் தேவைப்படுகின்றன என்ருர், சமயக்கல்வி முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டி சுதந்திரமான கல்வி, பெண்கல்வி, நாட்டின் ஒருமைப்பாட்டு வளர்ச்சிக்கு உதவுவதாக கல்வி அமையவேண்டும் என்ற கருத் தினை கொண்டு இருந்தார்.
3. Los Teór அரவிந்தர்
கல்விப்பருவம் முழுவதையும் இங்கிலாந்தில் கழித்தவர். இழந்த ஆன்மீக உறவுகளைக் கட்டி வனர்க்க வேண்டும். தனி மனிதனுக்கும் வாழும் நாட்டிற்கும் உறவை ஏற்படுத்தும் அடிப்படையில் அமையவேண்டும் என்ற கருத்துக் கொண்டி ருந்தார். இவருடைய கருத்துக்கள் "தெய்வீக வாழ்க்கை" எனும் நூலில் காணப்படுகிறது.
4. ரவிந்திரநாததாகூர்
இயற்கை சூழலில் கல்வி பயிலவேண்டும். இயற்கையை புரிந்துகொள்ள வேண்டும். சமுக நன்னடத்தை ஆகியவற் றிலும் இசை நுண்கலை போன்றவற்றில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.
8

3. மகாத்மாகாந்தி
வாய்மை சக்தி, அகிம்சை ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ள வேண்டும், கல்வி நாட்டு மக்கள் வாழ்க்கையுடன் தொடர்பு உடையதாக இருக்கவேண்டும். ஆதாரக் கல்வி, இலவசக் கல்வி வழங்கப்படவேண்டும் இதுபோன்ற பல கருத் துக்களை "ஹரிசன்" பத்திரிகையில் வெளியிடுகின்றர்.
கல்வியியல் தொடர்பான சிந்தனைகள் மேற் கூறப்பட்டபடி பாரதி வாழ்ந்த சமகாலத்திலே பல சிந்தனையாளர்களாலும் ஆன்மீகவாதிகளாலும் முன் வைக்கப்பட்டிருப்பினும், மற்றவர் களோடு ஒப்பிடும்போது பாரதியின் கல்வியியல் சிந்தனையானது கருத்துப்பரிமாண அடிப்படையிலும் அன்றைய நடைமுறைக்கு மிக அவசியமானது எது என்ற அடிப்படையிலும் தனித் தன்மையான - முதன்மையான தொன்றகவே காணப்படு கின்றது. தேசிய விடுதலைக்கு அவசியமான, அல்லது தேசிய விடுதலை எண்ணத்தை ஊக்குவிக்கின்ற அடிப்படையில் கல்வி அமைய வேண்டும் என்றும், விடுதலை பாரதம் - சம உடமை தன்மை கொண்டதாக இருக்கவேண்டும் என்று கருதிய பாரதி,
"வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது
யந்திரம் பெருகுது தந்திரம் வளருது
மந்திர மெல்லாம் வளருது வளருது?* என்று சாத்திரம்பாடி, விடுதலையடைந்த பாரதம் சுய பொரு ளுற்பத்தியிலே வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார் பாரதி. இதற்காக தேசியக் கல்வி, பெண் கல்வி போன்ற பல்வேறு விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி யிருந்தார்.
கிறிஸ்து சமயப் பிரச்சாரம் - கல்வி சீரழிவு குறித்து பாரதி
பாரதி வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி அதற்கு முன்னும் பின்னும் கிறிஸ்து மத பாதிரிகள், ஞானம் ஆத்மீகம் என்ற நச்சை பாரதம் முழுவதுமே பரப்பினர். இந்தியாவில் கோடானு கோடி மக்கள் இன்றுங் கூட ஒரு மாற்றத்தை தமது வாழ்விலே ஏற்படுத்திக்கொள்ள முடியாமல் ஒருவித 'நச்சு வாயை" தொடர்ந்து பேணி வரும் பெருமை இவர்களையே சாரும், மதப்பிரசாரமே இவர்களின் அடிப்படை நோக்கம்.
9

Page 8
இதற்காக உண்மைகளை எல்லாம் பொய்மையாக்கி, சகலதுக் கும் விதியே காரணமென்று கூறி, மறு பிறப்பு பசப்பு வார்த் தைகளைக் கூறி நாட்டின் சிந்தனை வளர்ச்சியில் தொடர்ச்சி யான மலுங்கல் நிலையை ஏற்படுத்தியவர்கள் இந்தப் பாதிரி களேயாவர். பாரதி காலத்து நிலைமைகளை விளங்க அவரது துடிப்பான வசன நடையை நோக்கலாம். 'மிசனரி பாடசாலை களை விலக்கி வைத்தல்?" என்ற தலைப்பில் பாரதி எழுதும் போது, மிசனரி பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்விமுறை களை பலமாகக் கண்டித்து எழுதியுள்ளார். "கிறிஸ்து பாதிரி மார் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை திரிபுபடுத்தியும், பொய்மையாகவும் கற்பித்து வந்தநிலை அன்று பலராலும் உண ரப்பட்டு இருந்தது. பாரதி காலத்து மக்களின் தேசிய உணர் வினையும் கிளர்ந்தெழும் மனப் போக்கினையும் மலுங்கடித்து திசை திருப்பும் நோக்கத்துடன் புராதன சரித்திரத்தை திரிபு படுத்தி மாணவர் மனதில் சமயப் பகையையும், சரித்திரகால சுதேசிய மகான்களை இழிவாக எண்ணக் கூடிய மனேநிலையை யும் உருவாக்கினர். இப்பாடசாலைகளுக்கு பிள்ளைகள் செல்லு மாயின் உண்மைக்குப் புறம்பான, பொய்யான கட்டுக் கதை களையும், திரித்துக் கூறப்படும் வரலாற்றுப் போக்கினையும் பெற்று சீரழிந்துபோய்விடுவர் என்பதை பாரதியார் அறிந் திருந்தார். இதனுல் இப்பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப் பும் தந்தையர்களை "தேசத்துரோகிகள்" என வர்ணிக்கின்ருர். ஆனல் இதில் பாரதியின் நோக்கம் சமயப் பகைமையை ஒழித்து வெகுஜன ஒற்றுமையை ஏற்படுத்துவதாயும் இருந்தது. இத னற்ருன் அவர் கிறிஸ்து மார்க்கத்திலோ, கிறிஸ்து நாதரிலோ பகைமை பாராட்டவில்லை. கிறிஸ்துவ பாடசாலைகளில் கல்வி போதிக்கும் முறையினையே கண்டித்தார். "சரித்திரத்தை அது அன்னியர்களின் அறியாமையால் எழுதப்பட்டிருப்பின் அதை கழற்றி எறிந்துவிட்டு, நவீன அறிவுகலந்த உண்மையான சரித் திரம் எழுதத் தலைப்படவேண்டும்' என்ற புதுமையான சிந்த னையைக் கொண்டிருந்தவர் பாரதியார். ஐரோப்பிய நாடுக ளில் முதலாளித்துவ அரசாங்கத்தின் உற்பத்தி நிறுவன அமைப்புக்களைத் தொடர்ந்து பொதுகாத்து தாமும் வயிறு வளர்க்க அரசாங்கத்துக்கும் விசுவாசமாக நடந்து கொண்ட பாதிரிமார்கள் எவ்வாறு அரசாங்க பாதுகாப்பில் இருந்தனர் என்பதும், அவர்களது பாதகமான நடவடிக்கைகளை ஊக்கு விக்கும் தோரணையிலேயே அரசாங்க அமைப்பும் காணப்பட் டது, என்பது பாரதியார் மட்டுமன்றி சகலரும் அறிந்த ஒரு வரலாற்று உண்மையேயாகும். ஆதலால் கிறிஸ்து பாதிரி களால் நடாத்தப்பட்ட பாடசாலைகளை ஆங்கிலேயரின் அடக்குமுறை ஆட்சியில் ஒழித்துக் கட்டுவது என்பது இயலாத

காரியம் என்பதால், பாரதியார் மெளனியாகிவிடவில்லை. "சுதேசிய கல்லூரிகளையும் (School) ஸ்கூல்களையும் பாதிரி களின் பள்ளிக்கூடங்களுக்கு நிகராக்கவேண்டும் என்ற கோரிக் கையை முன் வைத்தார். ஆனல் பாதிரிகளின் பள்ளிக்கூடங் களை அழித்துவிடவேண்டும் என்று அவர் கருத்து தெரிவிக்க வில்லை. நிராகரிக்க வேண்டும் என்றே கேட்டுக்கொண்டார்.
"கிறிஸ்தவ பாதிரிமார்கள் மத சம்பந்தமான பிரச்சா ரத்தை உத்தேசித்து, உண்மைகளைப் பொய்மையாக்கி, இப் படித் தாழ்ந்துபோய் மகத்தான அநாகரிக நிலையில் இருக்கும் சனங்களை கிறிஸ்து மதத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்தைச் செய்வதாக சொல்லுகின்ருர்கள்." கிறிஸ்து வின் பெயரால் இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பெரும்பா லான பாகங்களில் இத்தகைய பாதகச் செயல்முறைகள் தொடர்ந்து நடைபெறுவதை யதார்த்த உலகில் காணக்கூடிய தாக உள்ளது.
தொடர்ந்து பாரதியார் இச்சமய பிரச்சாரங்களால் யார் யார் நன்மை அடைகின்ருர்கள் என்பதை "மடாதிபதிகளும், சன்னிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர் வதாகக் கொண்டு, ஆனந்தம் அடைந்து வருகின்ருர்கள். . ஹிந்து சனங்கள் நமது இரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர். ஹிந்துஇஸ்தானத்து சனங்கள் ஏனென்று கேட்பாரில்லாமல் பசிப்பிணியால் மாய்ந்து போகின் றனர். அவர்களுக்குக் கல்வியும், தர்மமும் கொடுத்து நாமே ஆதரிக்கவேண்டும். இல்லையேல் அவர்கள் எல்லோரும் நமக்கு பரிபூர்ண விரோதிகளாக மாறிவிடுவார்கள்" என்ற ஒரு வர லாற்று உண்மையை தெளிவுபடுத்துகின்ருர். வெகுசனங்கள் என்றே ஒருநாள் எழுந்தே தீருவார்கள் என்பதை, இங்கு மறைமுகமாக கூறுகின்ருர். உயர் வர்க்கத்தினருக்கு ஒரு பய முறுத்தலையும் மறைமுகமாக ஏற்படுத்துகின்றது.
பாரதியின் கல்விப்பராயமும் அவரது அநுபவங்களும்
பாரதியார் தனது வாழ்விலே இளவயதிலேயே தாயன்பை இழந்தவர். பாரதியின் தந்தை சின்னசாமி ஐயரிடமே பாரதி யார் ஆரம்பக் கல்வியைக் கற்ருர். தனது பிள்ளை ஆங்கிலத் தில் புலமைபெறவேண்டும் என்ற எண்ணமே சின்னச்சாமி ஐயரிடங் காணப்பட்டது. பொருத்தமற்ற கல்வி, முறைமை கள் பாரதியாரை இளவயதிலேயே பள்ளிப்படிப்பில் அக்கறை யின்மையை ஏற்படுத்தியது. தந்தையின் வற்புறுத்தலோடு உயர்கல்வி மட்டும் 'படித்துத் தேறிப் பட்டம்பெற்றவராவர்.
1.

Page 9
வாழ்விலே அக்காலத்தே பாரத பிரஷை ஒருவன் கண்டு அநு பவிக்க வேண்டிய அனைத்து நடைமுறையுண்மைகளையும் உணர்வு பூர்வமாக கற்றவராவர். எனவே அவர் கல்வியற்றி கூறுவ தற்கு பூரண தகைமை படைத்தவர் என நான் கருதுகின் றேன்.
ஆங்கிலம் கற்கச் சென்றபோது தனது நிலைமையினை:-
நரியுயிர்ச் சிறு சேவகர் தூதர்கள் நாயெனத் திரி யொற்றர் உணவினைப்
கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங் கலைபயில்கென என்னை விடுத்தனன் அருமை மிக்க மயிலைப் பிரிந்துமிவ் அற்பர் கல்வியின் நெஞ்சு பொருந்துமோ?
பாரதி காலத்து கல்வி முறையின் தன்மையினை எடுத்துக் காட்ட அதற்கு முன்னைய காலத்து கல்வி நிலையோடு ஒப் பிட்டு ஆராய்கின்ருர்,
"முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் " மூண்டிருக்கு மிந் நாளின் இகழ்ச்சியும்?? எனப் பாடுகின்ருர்,
ஆங்கிலேயர் வருகையோடு மாற்றியமைக்கப்பட்ட இந்திய உற்பத்தி நிறுவன அமைப்பு முறைகள் இந்தியாவின் பெரும் பகுதி மக்களின் கல்விநிலையில் வீழ்ச்சியினை ஏற்படுத்தியதோடு, பிழையான கல்வி முறைமைகள் ஏற்படுத்தப்பட்டன. இதை பாரதி தனது வசன நடையில்:-
"இந்நாட்டிலே கல்வி மங்கிப் போய்விட்டது. நூற்றிலே தொண்ணுறு ஜனங்கள் "அ" எழுதச் சொன்னல் தும்பிக்கை யொன்று வரைந்து ஆன எழுதக்கூடிய நிலையிலிருக்கின்றனர். தேசத்து ஞானக் களஞ்சியங்களுக்கு காப்பாளிகளாக இருந்த பிராமணர் மடைத் தவளைகளைப் போல சிற்சில மந்திரங் களை சம்பந்தமில்லாமல் யாதொரு பொருளறியாமல் கத்து கிருர்களேயல்லாது உண்மையான ஞானப் பெருமை இவர் களுக்கு லவகேசமும் இல்லாமல் போய்விட்டது. மகரிஷிகளின் வழியில் தோன்றிய பிராமணர் மடைத் தொழில் செய்வதும் நீசர்களிடம் போய்த் தொண்டு புரிந்து பணம் வாங்கிப் பிழைப்பதும், இதைக் காட்டிலும் இழியனவாகிய எண்ணற்ற் பிறவிருத்திகளில் காலம் கழிப்பதும் ஸர்வ ஜனங்களும் அறிந்த விடயங்களே."
42

இங்கே பாரதி மூன்று முக்கிய விடயங்களை எடுத்துக் காட்டுகின்ருர், ஒன்று தொண்ணுறு வீதமான மக்கள் கல்வி யறிவின்றி இருந்தமை, இம்மக்கள் ஆங்கிலேய அரசினதும், ரனைய உள்ளூர் முதலாளிகளினதும் திட்டமிட்டு ஒதுக்கப்பட்ட கிராமப்புற மக்களேயாவர். இரண்டாவது தேசத்து ஞானக் களஞ்சியங்களுக்குப் பொறுப்பாக இருந்த பிராமணர்களின், கெடுபிடித்தனம், தனிச்சொத்துரிமையை தொடர்ந்து பேணு வதற்கு என்னென்ன முறைகளை எல்லாம் அறிமுகம் செய்யப் படவேண்டுமோ, அதனையும் மறுபுறம் விசுவாசமான பொரு ளுற்பத்தியை மேற்கொள்ளவும் எவ்வாருண் கல்வி முறையினைப் புகுத்தி மக்களை மட்டந்தட்டி வைக்கமுடியுமோ, அம் முறை களைச் சமயம், ஒழுக்கநெறி என்று புடம்போட்டு, குடும்பம், கல்வி என்றும் பெற்ருேருக்கும் குழந்தைகளுக்குமுள்ள புனித மான உறவு என்ற பகட்டுப் பேச்சும் கொடுத்துக் காத்த "ஞானப் பொறுமையை" பிராமணர்கள் கொண்டிருந்தது, பாரதியின் பார்வைக்குத் தப்பமுடியுமோ அவரது வசனக் கவிதையில், "ஓயாமல் குளிர்காற்று வீசுகின்றது. தமிழ் மக் களில் பலருக்கு ஜூரம் உண்டாகின்றது. நாள் தோறும் சிலர் இறந்து போகின்ருர்கள். மிஞ்சியிருக்கும் மூடர் விதிவசம் என்கிருர்கள். ஆமாடா, விதிவசந்தான் அறிவில்லாதவருக்கு இன்பமில்லை என்பது ஈசனுடைய விதி; சாஸ்திரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி. தமிழ்நாட்டிலே சாஸ் திரங்கள் இல்லை; உண்மையான சாஸ்திரங்களை விளக்காமல் இருப்பனவற்றையும் மறந்துவிட்டு தமிழ்நாட்டுப் பார்ப்பர் பொய்க் கதைகளை மூவரிடங் காட்டி வயிறு பிழைத்து வரு கின்ருர்கள்."
சகலதுக்கும் விதி என்ற சமாதானத்தைக் கூறி வரும் பிரா மணச்சாதி, ஒருபுறமிருக்க மறுபுறம் அடிமை ஜாதியார் "மனம் குன்றி உடல் சோர்ந்து உண்ண உணவின்றி கண் குழிந்து போய் இந்நாட்டில் மகாபரிதாபகரமாக வாழ்க்கை நிகழ்த்து கிருர்’ என ஞானரதம் கட்டுரையில் குறித்துக் காட்டுகின் ருர்.
கிறிஸ்து சமய பிரச்சாரம் குறித்தும், அவரது வாழ்க்கை அனுபவத்தில் கண்ட ஆங்கில கல்வி குறித்தும் பாரதி எவ்வித கருத்தைக் கொண்டிருந்தார் என்பதை தொகுத்துப் பார்க் கின்றபோது சில அம்சங்கள் புலனுகின்றது. ஆங்கிலக் கல்வி யானது அன்றைய ஆட்சியின் பிரதான மொழியாக இருந்த தோடு, உயர் கல்வி பீடங்களில் பயிற்று மொழியாகவும் இருந் தது. ஆங்கில அரசின் அனுசரணையுடன் கிறிஸ்து சமய பாதிரி கள் ஆன்மீகக் கல்வியை புகுத்தினர். இந்த இரண்டு பிரிவின்
3

Page 10
ரும் வழங்கிய கல்விமுறைகளிலே சில உண்மைகள் இருக்கவே செய்தன. இவற்றின் நோக்கம் இந்திய பாரம்பரிய கல்வியியல் அம்சங்களையும் எழுச்சிபெறும் பயக மக்களின் விடுதலை வேட் கையையும் அழித்தொழிப்பதாகவே இருந்தது. இவர்களால் வழங்கப்பட்ட கல்வியியல் அம்சங்களில் நன்மையானவற்றைப் பெற்று அதை இந்திய பாரம்பரிய விடயங்களோடு இணைப் பதன் மூலம், இந்திய தேசிய கலாச்சாரப, லூடாக ஒரு விடு தலை பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பாரதி யீன் சிந்தனையில் இழையோடி இருப்பதைக் காண முடிகின்றது. “ “g tou 69 urias6ilai) 3, Ll Lutg 6 “Best of Hinduism” 6T6ër பதை கருத்தாகக் கொண்டிருந்தான். அன்மீக சிந்தனையானது இந்தியாவின் பாரம்பரிய, கலாச்சார டி லயோடு இணைந்தது என்பதை உணர்ந்திருந்த பாரதி சமய சிந்தனைகளிலும் இந் திய விடுதலையையே கண்டான்" என்ருர் பேராசிரியர் கைலாச பதி. ( கலந்துரையாடல் 3 - 9 - 1982),
அரசியலுக்கும் சமயத்துக்கும் இ!ை யிலான தொடர்பை ஏற்படுத்திய உயரிய சிந்தனையாளன் பா டு. சமயம் தொடர் பான விடயங்களில் "நல்லவற்றை பெ.வதன் மூலம், ஆங் கிலக் கல்வி, கிறிஸ்தவ பாதிரிகளின் சமயப் பிரச்சார நோக் கிலான ஆன்மீகக் கல்வி ஆகியவற்றில் உள்ள உண்மைகள் நல்ல அம்சங்களை" பெறுவதன் மூலமும், மக்கள் நம்பிக்கையை புடம்போட்டு காக்கவேண்டும் என்ற அடிப்படையில் பாரதி யின் கல்வியியல் சிந்தனை சென்றுள்ளதை உணர முடிகின்றது.
பழைய விடயங்களுக்கு புதிய பரிமாணம்
மேலும் இந்திய வெகுஜனங்கள் பழைய அமைப்பிலிருந்து மரபுரிமையாய் பெற்றுக்கொண்ட பழைய வழிமுறைகளையும் பழக்கப்பட்டு இறுகிப்போன மாருத நடைமுறைகளையும் நம்பி அதில் ஊறிப்போய் இருந்தனர். பிராமண கிறிஸ்தவ சமயப் பிரசாரக்காரர்களும் இதற்கு வழியமைப்போராய் அதனை எந் நாளும் கட்டிக் காப்போராய் இருந்தனர். இதனல் சொத் துடமை வேறுபாட்டை வலியுறுத்திப் பாதுகாக்கும் வகுப்பறை வரம்புக்குள்ளான முறையில் பழமையினை திணிப்பதை பாரதி வெறுத்தார். இந்நிலைமையினை w சூத்திரனுக் கொரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேருெரு நீதி சாத்திரம் சொல்லுமாயின் அது சாத்திரமன்று சதியெனக் கண்டோம். என்கிருர், வேதகாலம் என்று கூறப்படும் காலம் தொடக்கம் நிலவி வந்த மூட பழக்கவழக்கங்கள் சிந்தனைகள் என்பன இந்
14

கிய மக்களின் சிந்தனையை மேலோங்கவிடாது தடை செய்வன வாகவே அமைந்திருந்தன. இந்நிலைமையில் பாரதி, "வேத காலத்து முதலாக இன்று வரை பாரத தேசத்திலுள்ள ரிஷி களெல்லாம் ஒன்றும் தெரியாத மூடர்கள். அர்ஜ"னனும், காளி தாசனும், சங்கராசாரியாரும், சிவாஜியும், ராமதாஸரும், கபீர் தாசரும் அதற்கு முன்னும் , பின்னும் நேற்றுவரை இருந்த பாரத தேசத்தார் அனைவரும் நெஞ்சில் வளர்ந்துவந்த பத்திக ளெல்லாம் அநாகரிகமான மூட பக்திகளே என்கிருர், கண்ணன் பாட்டில்,
சாத்திரங்கள் பல தேடினேன் - அங்கு சங்கையில்லாதன சங்கையாம் - பழங் கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்மைக் கூடையில் உண்மை கிடைக்குமோ?
அக்காலத்தில் பொய்மையான சரித்திரங்களே இந்தியாவில் மலிந்திருந்தன என்றபடியால்தான் இங்கு பாரதி பொய்மைக் கூடை என விழிக்கின்ருர், பாரதியார் வாழ்ந்த காலத்திலே பழைய புராணங்கள் பல நிலவின; இவை ஒன்றில் பொய்மை யான கதையொன்றினைக் கூறுவதன்மூலம் மக்களின் புரட்சிகர மான சிந்தனையில் தடையை ஏற்படுத்தியது. அப்புராணங்கள் ஒன்றிலொன்று முரண்பாடுடையதாகவும் காணப்பட்டது. எனி னும் சில புராணக் கதைகள் சில நீதிக் கதைகளை எடுத்துக் காட்டுவனவாக அமைந்திருந்தன. புராணங்கள் தொடர்பில்,
ஒன்று மற்றென்றைப் பழிக்கும் - ஒன்றில்
உண்மை யென்ருேதி மற்ருென்று பொய்யென்ருல் நன்று புராணங்கள் செய்தார் - அதில்
நல்ல கவிதை பல பல தந்தார் - அக் கவிதை மிக நல்ல தேனும் - அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம். என்கிருர், எனினும் அக்காலத்தில் புராணங்களில் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர் என்ற தொடர்பிலும், ஒரு சில புராணங்கள் நீதியைப் போதிப்பனவாயிருந்தது என்ற தொடர் பிலும் சில வரிகளை பின்வருமாறு இறுதியில் சேர்க்கின்றர். புவிதனில் வாழ நெறிகாட்டி - நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம்.
பாரதி இவ்வாறு கூறியதை வைத்துக் கொண்டு அவர் பழையவற்றை நிராகரித்துவிட்டார் என்ற முடிவுக்கு வந்து விடமுடியாது. பேராசிரியர் கைலாசபதி அவர்கள் இதுபற்றிக் கூறியபோது "பாரதி பழைய விடயங்களுக்கு புதிய மெருகு
15

Page 11
கொடுப்பதன் மூலம் சில விடயங்களை சாதிக்க முயன்றிருக் கின்ருர் . இதை வெளிப்படையாக பாரதி காட்டிக்கொள்ளா விடினும் அவருடைய ஆக்கங்களை ஆராய்ந்து பார்க்கின்ற போது இவ் உண்மை புலப்படுகின்றது" என்ருர்,
பாரதியின் தேசியக் கல்வி, குடும்பக் கல்வி பற்றிய சிந்தனைகள்
பாரதி பாரத தேசத்தின் தேசிய விடுதலையை எதிர்நோக்கி உணர்ச்சிமிக்க தேசியப் பாடல்களை இயற்றிஞர். இந்த அடிப் படையில் தேசிய ரீதியில், ஒரு சிறந்த கல்வித் திட்டத்தை எதிர்பார்த்தார். "தேசிய கல்வியை கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசம் என சொல்லுதல் தகாது" என்ற கருத்தை கொண்டிருந்தார். இக்காலத்தில் ரவீந்திரநாத தாகூர், அணி பெசன்ட், மணி ஐயர் போன்ருேர் தேசிய கல்வியை பரப்பு வதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். கல்வியின் நோக் கம் சமூகத்தில் அதன் தாற்பரியம் என்பன சகல நாடுகளுக்கும் பொதுவானதே. ஆனல் அது தேசங்களில் பிரயோகிக்கப்படும் பொழுது இடத்தின் குணங்கள் அந்நாட்டின் அமைப்புக்கு ஏற்ப வெவ்வேருகப் பிரிந்து தேசியமாகின்றது. ஆனல் இந் தியாவின் கல்வி முறையானது தேசிய கல்விமுறையாக இருக்க வில்லை. "இங்கிலாந்தில் விளையாட்டும் சரிரப் பயிற்சியும் முக் கியமாக இருக்கின்ற அதேவேளையில், இத்தாலியில் சிற்பம் முக்கியம் பெறுகின்றது. அமொரிக்காவில் ஜனதிபதிபற்றியும் போதிக்கின்றர்கள். ஆனல் இந்தியாவில் தேசியக் கல்வி இல்லை. அது பிரிட்டிஷ் குணமுடையதாக இருக்கிறது. சென்னையிலிருக் கும் பிரசிடென்சி காலேஜ் கட்டிடமும் நமது தேசிய முறையை தழுவியதன்று. அது பழைய இத்தாலி வழியை சார்ந்தது" என பூரீமான் ஜீனராஜதாசர் கூறிய கருத்தை பாரதியார் முழுமையாக ஏற்றுக்கொள்கின்ருர், கட்டிட அமைப்புக்கூட தேசவழமை சார்ந்ததாக இருக்கவேண்டும் என எண்ணிய இவர்கள் மொழிக்கும், தேசிய மரபுகளுக்கும் எவ்வளவு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை ஊகித்து அறிய முடிகின்றது.
அரவிந்த கோஷ், மிர்ஜா ஸ்மி, உல்லா பேக் ஆகி யோர் இதே காலப்பகுதியில், இந்தியா ஜாதிமத பேதங்க ளால் சிதைந்து போயிருக்கின்ற தென்றும் "ஸ்வராஜ்யத்துக்கு தகுதியுடையவர்களாக உங்களைக் காட்டிக்கொள்ள விரும்பினல் தேசியக் கல்விக்குத் துணை செய்யுங்கள், தேசியக் கல்வியை வளர்ப்பதற்கு அக்காலமே பொருத்தமானது என இவர்கள்
16

கருதினர். ‘ஒத்து நின்ருல் ஒழிய அதனை நிறைவேற்றுதல் மனதால் சாத்தியமில்லை" என்ற கருத்தையும் வலியுறுத்தினர். இதற்கு ஆண்மக்கள் ஒருவருக்கொருவர் நட்பு செய்யவேண்டும் தேசிய நெறியில் இது அவசியமானதாகும்" என்ற சித்தாந்த வெளிப்பாட்டையும் இவர்கள் முன்வைத்தனர்.
"சுதேசியக் கல்விமுறை நமது இளைஞர்களுக்கு வழங்கப் படவேண்டும் என்ற கருத்தை பாரதி தமது இறுதிக் காலம் வரை கொண்டிருந்தார். ஆளுல் ஆங்கிலத்தை சகலரும் நிரா சரித்துவிடவேண்டும்" என கூறவில்லை. ஆங்கில பாசையி லேயே புதிய விஞ்ஞான தொழில்நுட்ப முறைகளும் புதியகண்டு பிடிப்புகளும் வெளிவந்தன. இன்றும் வெளிவருகின்றன. ஆங் கிலம் என்பது மிக முக்கியமான அந்நிய மொழி என்பதால் "ஆங்கில பாஷையில் நமது மாணவர்கள் தேர்ச்சிபெறவேண் டும்" என கருதியிருந்தார். ஆனல் கல்வி போதிக்கும் மொழி சுதேசிய பாஷையாகவே இருக்கவேண்டும் என விரும்பினா. ஆங்கிலப் பயிற்சி தொடர்பில் தனது அனுபவத்தை எழுதும் போது,
*நரியுயிர்ச் சிறு சேவகர் தாதர்கள்
நாயெனத் திரி ஒற்றர்.
கருதுமிவ்வகை மாக்கள் பயின்றிடுங்
கலை பயில் கென எனைவிடுத்தனன் அருமைமிக்க மயிலைப் பிரிந்து மிவ்
அற்பர் கல்வியின் நெஞ்சு பொருந்துமோ?"
எனப் பாடுகின்ருர்,
பாரதியின் தேசியக் கல்வியின் பரிமாணம் இந்திய மக்கள் விடுதலை, பொருளாதார விடுதலையோடு மட்டுமின்றி "சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்றவரை சென்றுள் ளது இங்கு நோக்கப்பட வேண்டியதாகும்.
தேசியக் கல்வியினல் ஏற்படும் அறிவு கஞ்சி குடிப்பதற்கு கூட வழியில்லாமல் போனதற்கு காரணத்தை அறிவதாய் அமையவேண்டும் என்பதை,
*கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்
காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்" என்றும்,
**சாத்திரங்கள் ஒன்றும் காணுர் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தையை நம்பியே."
17

Page 12
எனப் பாடும் பாரதி அன்றைய கல்வி குறித்தும் எடுத்துக் காட்டுகின்ருர். பாரதத்தில் நூற்றுக்கு தொண்ணுறு பேர் "அ" எழுதக்கூட தெரியாமல் உண்ண உணவின்றி உடல் மெலிந்து போய் இருக்கும் நிலை ஏற்பட காரணம் என்ன? என்பதை ஆராய்வதாக கல்வி அமையவில்லை. அதனை ஆராய் வதற்கும் அந்த காரணிகளை அழித்தொழிப்பதற்கான வழி வகைகளை ஆராயவும் கல்வி அமைப்பையே பாரதி எதிர்பார்த்
EST T.
இந்த தொடர்பிலே பாரதி பாரத தேசத்து பிள்ளைகள் எல்லோருக்கும், தேசபக்தி என்பது கல்விமூலம் உணர்த்தப்பட வேண்டும். பிரான்ஸ் தேசத்து பெரும் புரட்சிக்கு அடிப்படை யாக இருந்தது தேசப்பற்றும் விடுதலை உணர்வுமேயாகும். மாபெரும் அக்டோபர் புரட்சி, நெடும்பயணம் போன்றவற் றுக்கு மேற்கூறப்பட்ட தேசபக்தியும் அடிப்படையாக அமைந் தது. உலகநாடுகள் பலவற்றில் மகத்தான சாதனைகளை நிறுவு வதற்கு தேசபக்தியே அடிப்படையாக அமைந்தது. "ஆனல் இந்தியாவைப் பொறுத்தவரையில் இதே காலகட்டத்தில் தேசாபிமானிகள் என்று தம்மைத் தாமே கூறிக்கொண்டிருந் தவர்களைப் பார்த்து கண்ணிர் விடுவதா? நகைப்பதா? என்று கேள்வியினை எழுப்புகிருர் பாரதி. பொருத்தமற்ற கல்வியின லும், பாதிரிமார்களின் வரலாற்றினை திரிபுபடுத்தும் சமய பிரச்சாரங்களினலும் தேசபக்தி என்னும் மகோன்னத தன்மை யினை புரிந்து கொள்ளாது சொத்துப்படைத்த உயர் வர்க்கத் தினர் அல்லது ஆங்கில அரசாங்கத்திற்கு விசுவாச சேவைகளைப் புரிந்தவர்கள். தாம் தேசாபிமானிகள் என்று தம்பட்டமடிப் பதைப் பார்த்து பாரதியார் எள்ளிநகையாடுவதை மேற்குறிப் பிட்ட வசனப்பகுதியில் இருந்து விளங்கமுடிகின்றது. இந்தி யாவில் கல்வித்திட்டம் மேற்கத்தேயம் சார்ந்தாக இருந்த தோடு கற்பிக்கும் உபாத்தியாயர்களுக்கு தேசபக்தி என்பது சிறிதளவும் இல்லை. எனவே இந்தியா என்பது யதார்த்தமாக ஒரே தேசம் என்ற அடிப்படையில் இளமையிலேயே பிள்ளை களுக்கு தேசாபிமான வித்தை இடவேண்டும் என்ற சிந்தனையை பாரதி கொண்டிருந்தார். இதே சமகாலப் பகுதியில் எகிப்து நாட்டில் தேசாபிமான உணர்வு வலுவடைந்திருந்தமையை எடுத்துக்காட்டும் பாரதி இந் நிலைமை இந்தியாவில் ஏற்படு வதற்கு இந்திய தேசிய கல்வித்திட்டத்தில் அடிப்படை மாற் றங்கள் பலவற்றை மேற்கொள்ள வேண்டும் என்பதை பாரதி யார் பலமுறை எடுத்துக்காட்டியிருந்தார்.
ஒரு நாட்டின் சமூக பொருளாதர நிலைமையை நிர்ணயம் செய்வதில் குடும்பம் என்பது மிக முக்கியம் பெறுகின்றது.
8

வரலாற்றுக் காலத்தில் நிகழ்ந்த உற்பத்திப் பரிமாற்ற நிறு வன மாற்றங்களோடு பல்வேறு வகையான மாற்றங்களை குடும்ப அமைப்பு ரீதியாகவும் குடும்ப ஆதிக்கரீதியாகவும் பல மாற்றங் பூஜாப் பெற்று வந்தது. எனவே தேசியத் தன்மையை நிர்ண யம் செய்வதில் குடும்பம் என்பது மிக முக்கிய மூலமாக அமை கின்றது என்பதை பாரதி உணர்ந்திருந்தார். இதனல்தான் தேசியக் கல்விக்கு குடும்பமே வேர்” என்று கூறுகின்ருர், வீட்டுப் பழக்கம்தான் நாட்டிலும் தோன்றும் என்கிருர். ஆனல் ாரதி வாழ்ந்த அதே சம காலத்தில் குடும்பத் தலைவனின் ஆதிக்கம் பெண்ணடிமை முறை என்பன ஒரு குடும்பத்தின் தேசிய பெறுமானத்தை குறைப்பதாக அமைந்தது. தான் பெற்ற குழந்தைகளிடையே பாடிப் பாதஞ்செய்தவன் அக்கால சமூகநிலைமையில் ஊரின் நியாயாதிபதியாக நியமனம் பெற்றன். இவ்வாறு நியமனம் பெற்றவன் ஒன்றில் நாகரீகமடையாத குடும் பத்திலிருந்து வந்தவனகவோ அல்லது தனது குடும்பத்தில் விடு தலை இல்லாதவனுகவோ இருந்தான். எனவே அதே சமகாலத்தில் இந்திய தேசத்துக் குடும்பமொன்று, இந்திய தேசிய விடுதலை யிலோ அல்லது பொருத்தமான கல்வியைப் பெறுதலிலோ அக் கறை இல்லாமல் இருந்தது. இதனல்தான் இவ்வாருண குடும்பத் திலிருந்து வந்த சமுதாயத்தைப் பார்த்து
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ தரும மொன்றி யற்றிலாய் போ போ போ நீதி நூறு சொல்லுவாய், காசொன்று நீட்டினல் வணங்குவாய் போ போ போ. என்றும்
நூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூறும் நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ என்கிருர் எனவே இந்நிலைமையிலிருந்து விடுபட்ட ஒரு சமுதாயத்தினை எதிர்பார்த்து,
"ஒளி படைத்த கண்ணினய் வா வா aJnto என்று தொடங்கி,
மெய்மை கொண்ட நூலையே அன்போடு வேதமென்று போற்றுவாய் வா வா வா பொய்மைகூற லஞ்சு வாய் GT or of பொய்மை நூல்க ளெற்றுவாய் வா வா" என்ருர், ஆனல் அக்கால சமயநிலை பிரச்சாரமானது. வீடு என்ற சொல்லுக்கு விடத்தக்கது தான் வீடு", வீட்டை விட்டுச் சென்று சந்நியாச நிலையில் வாழுவதே சிறந்தது என்பதை
19

Page 13
பாரதி ஏற்றுக்கொள்ளவில்லை. "விடத்தக்கது வீடு என்பது கற்ருேர் துணிவாயின், அவர்கள் வீட்டில் குடியிருப்பது யோக் கியதையன்று. அவர்கள் காட்டில் வாழ்தலே தகும். "குழந் தைகள் வீட்டையே அரணுகக் கருதுகின்றர்கள். ஸ்திரிகளும் அப்படியே கருதுகின்றனர். இடை வயதிலுள்ள ஆண்மக்கள் கள் பெரும்பாலும் வீட்டைக் காட்டிலும் வெளியிடங்களில் அதிகம் இன்பம் காணுகின்றனர். இந்த விடயத்தில் குழந்தை கள் ஸ்திரிகள் முதலியோரின் கொள்கையை பின்பற்றுதலே தகும் என நம்புகிறேன்" என்கிருர். இளைஞர்கள் வீட்டிலி ருந்து வெளியே போய் சீரழிந்து போவதற்கு அக்கால மேற் கத்தைய கலாச்சாரம் சீரழிந்ததாக காணப்பட்டது. இவ்விடய மானது. இந்தியாவில் மட்டுமன்றி ஆங்கிலேயரது ஆட்சி எங் கெங்கு இருந்ததோ, அங்கெல்லாம் நடைபெற்றன. இவர்கள் வீட்டுக்குப் பொறுப்பு இல்லாததனுல் நாட்டிற்கும் பொறுப்பு இல்லாமல் நடந்து கொண்டார்கள் மறுபுறம் பெண்ணடிமை முறையானது பெண்கள் கல்வி பெறுவதிலிருந்து குடும்பத்தில் சமபங்கு பெறுவது வரை இழிநிலையையே அனுபவித்தனர். பாரதி பெண்விடுதலையை அழுத்தி கூறியவராவர். இதனல் வீடு துயரமாவதற்கு காரணம் வீட்டில் தாயன்பு இல் லாமையேயாகும். வீட்டில் அண்ணன் தங்கைகளையும் தாய் தந்தையர்களையும், பெண்டு பிள்ளைகளையும் அடிமைப்படுத்தி ஆளச் சதி செய்யும் சனங்களின் கூட்டங்களே தேசங்களையும் அடிமையாக்கி ஆளச் சதி செய்கின்றன" என்கிருர், எனவே ஒழுங்குபடுத்தப்பட்ட குடும்பக் கல்வி மிக அவசியமானதென்று இவர் வலியுறுத்துகின்ருர், ஆணினது அதிகாரத்தைக் கொண்ட பாரதிகால குடும்ட அமைப்பு அன்புடனும், சமத்துவத்துட னும் அமையவில்லை என்பதால் அதன் விளைவுகளான கொடுங் கோன்மை, போர் ஆகியன விளையும் என்பதை எடுத்துக் காட்டுகின்ருர் பாரதி, குடும்ப விடுதலையுடன் தொடர்புடைய கல்வியானது தேசிய கல்வியுடனும், தேசிய விடுதலையுடனும் மிக தொடர்புள்ளதாக அமைகின்றது என்பதால் "குடும்பங் கள் இல்லாவிட்டால் தேசமில்லை. தேசமில்லாவிட்டால் தேசிய கல்விபற்றி பேச இடமில்லை" என்ருர்.
**தமிழ்நாட்டில் தேசியகல்வி என்பதாக ஒன்று தொடங்கி, அதன் தமிழ்ப் பாஷையை பிரதானமாக நாட்டாமல் பெரும் பான்மை கல்வி இங்கிலிஸ் மூலமாகவும், தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுதினல் அது தேசீயம் என்ற பொரு ளுக்கு முழுவதும் விரோதமாகவே முடியும் என்பதில் ஐயமில்லை" என்கிழுர், தேசியக்கல்வி என்பது தேசிய பாஷையை அடிப் படையாக கொண்டதாக இருக்கவேண்டும். ஒவ்வொரு பிரதே
20

சத்திலும், அங்கு எம்மொழி பிரதானமாக இருக்கின்றதோ, அதே மொழியிலேயே தேசிய கல்வி வழங்கப்பட வேண்டும்
இக்கோட்பாட்டை பாரதியாரும் கையாண்டு இருந்தார். அவர் தமிழ்மேல் பக்திகொண்டிருந்தாலும், குறுகிய மொழி வெறி மயைக் கொண்டிருக்கவில்லை இதை பாரதியாரே வெளிப்படை யாகக் கூறுகின்றர்.
"இவ்விதம் தமிழ் பிரதானம் என்று நான் சொல்லுவதால் டாக்டர் நாயரை தலைமையாகக் கொண்ட திராவிட கட்சி யார் என்ற போலிப் பெயர் புனைந்த தேசவிரோதிகளுக்கு நான் சார்பாகி "ஆரியபாஷா" விரோதம் பூண்டு பேசுகின்றேன் ான நினைத்து விடலாகாது" என்று கூறி ஒவ்வொரு மொழி யையுமே வாழ்த்துகின்ருர்,
எவ்விடயத்திலும் அந்நியத் தன்மை பெற்றிருந்த பாரதம் சுய பொருளாதார நிலைமைகளினின்றும் விடுபட்டு எடுத்ததற் கெல்லாம் ஆங்கிலேயரையும், அந்நிய உற்பத்தியிலும் தங்கி யிருக்கவேண்டிய நிலை அன்று நிலவியது. இந்நிலைமையினை தொடர்ந்து பேணிவருவதற்கான கல்வி நிலையே அன்று காணப் Ull-gil. ஆனல் பாரதி விடுதலையடையும் பாரதமானது பொருளுற்பத்தியிலும், கைத்தொழிலிலும் சுயமான ஒரு நிறைவு நிலையை பெறவேண்டும் என விரும்பியிருந்தார். எனவே தேசியம் என்பதற்கு இங்கு முக்கியம் கொடுத்து தேசியப் பற்று குடும்பநிலையிலிருந்து எழ வேண்டும் என்பதை யும் கல்வியும், இவ்விடயங்களில் அடிப்படையான கவனத்தை செலுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
இந்தியாவின், பொருளாதார அமைப்பு சார்ந்த பாரதியின் கல்வியியல் நோக்கு
ஒரு பொருளாதாரத்தின் உற்பத்திக் கருவிகளும் சாதனங் களும் எவரின் கைகளில் இருக்கின்றனவோ அவர்களின் நலத் தைப் பேணும் வகையிலேயே கல்வி முறைகளும் அமைவது இயல்பாகும். பாரதி வாழ்ந்த காலத்திலே ஆங்கிலேயரது காலனித்துவ ஆட்சிக் கொடுமைகளை இந்திய பொருளாதாரம் அனுபவித்த காலமாகும். இவர்கள் இந்தியாவிலிருந்து எவ்வளவு செல்வத்தை கொள்ளையடித்துச் செல்லமுடியுமோ அவ்வளவையும் சுரண்டிப் பெறுவதிலேயே கவனம் செலுத் தினர் என்பதால் கல்வி வளர்ச்சியில், அல்லது இந்திய மக்களின் கலாசாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இது விடயம்
2.

Page 14
தொடர்பில் எழுதிய. மிஸ்டர் ப்ரயன். 'டி'ஆங்கிலேயர் நாட்டின் செல்வத்தை கொள்ளையிட்டுப் போதல் மரணவீதத் தின் அதிகரிப்பு. நீர்ப்பாசனத்தை கவனியாமல் ஜனக் கல்வியை ஆதரியாமல் அமுக்கப்பார்க்கும் நிலையைப் பாதகச் செயலாகக் கொண்டுள்ளனர்', இக் கட்டுரையை ப்ரயன் ஆங் கிலத்திலேயே எழுதியிருந்தார். இக்கட்டுரையானது. நடை முறை உண்மையினை ஒரளவு விளங்கப்படுத்துவதாக அமைந் திருந்தமையால் பாரதி'இதை மொழிபெய்ர்த்து சுதேசமித்திர னில் வெளியிடவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.
இவ்விடயும் ஒருபுறமிருக்க, பொருளாதார நிலைமைகளில்
வறுமையிலும் பட்டினி நிலைமையிலும் மட்டும் வளர்ந்திருந்த கிராமப்புற ஏழை மாணவர்களது கல்வியில் எவ்வித அக்கறையும் மேற்கொள்ளப்படாமல் இருந்தமையால் பொருளாதார விடு தலை முதல் தேவையாக அமைகின்றது என்பதை பாரதி;
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக் கெல்லாம் -
பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப் பாரை. உயர்த்திட வேண்டும்.
ሐr
:இங்கு பொருளாதார விடுதலையையே முக்கியப்படுத்து கின்ருர்ல. பாரதி.
, சரீரப் பயிற்சியில் கூட கல்விபெற முடியாத ஏழை மாண, வுரின் நிலைபற்றி,
"இங்கிலிஸ்’ப்ாடசாலைகளில் கூட நமது பிள்ளைகளுக்கு பொருத்தமான சரீரப் பயிற்சி கொடுக்கவில்லையா? இங்கிலிஸ் பள்ளிக்க்ட்த்தில்" ப்ேரி படிக்கத் தகுதியற்றி "ச்ொத்தில்லாத பிள்ளைகள் எங்கள்.தேசத்திலேகோடிக்கரைக்காக இருக்கின் றனர்; அவர்களுடைய சரீரம் பலமடையக்கூடாது என்று ஏதேனும் சாஸ்திரமேனும் உண்டா?' என ஒரு கேள்விக்குறி யோடு நிறுத்துகின்ருர் -இதிலிருந்து பாரதி எம் மாணவர்கள் மீது அக்கறை கொண்டிருந்தார் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. தனியே இம் மாணவர்களை-கைவிட்டுவிடவில்லை. கல் வித் துறை மட்டுமின்றி, சகலதுக்கும்.விடுதலைப் பாதையையும்
*இனியொரு விதி செய்வோம் அதை
எந்நாளும் smrčiGB unrî به ۱ : ... " : : . . ۵ : ۱ தனி யொருவனுக்குணவில்லை எனில் இந்த
... ககத்தின.அழிப்போம்"
22

இந்த நோக்கில் அவதானிக்கும் பேர்து பார்தியின் நோக்கு உலகம் தழுவியதாக் அமைந்திருப்பன்தக் காணலாம். ஆங்கி லேய்ர் ஆட்சியில் ஏற்ப்டும் அட்க்குமுறையினை ஒழித்தல் மட்டு மன்றி ' தொடர்ச்சியாக விடுதலைப் பாதையை கட்டிக்க்ாக்க வேண்டும் என்பதில்ேயே பாரத ம்க்களோடு சேர்ந்து 'இனி யொரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம் என் Septi.” " w
கல்வி போதனை தொட்ர்பில் பாரத 'மக்ாகவி பாரதி வெறும் கவிஞன் மட்டும்ல்லி ஒரு சிறந்த ஆசிரியனுமாவான். இந்திய்" தேசத்து மக்களைக் குறித்தும் உலக மாந்தரோடு அவர்களுக்கு இருக்கவேண்டிய உறவுகுறித் தும் உயரிய சிந்தனைகளைக் கொண்டிருந்தார்.
பாரதி காலத்திலும் ஜப்பான் பொருளுற்ப்த்தியில் உலகத் தின் கவனத்தையீர்த்த ஒரு நாடாக இருந்தது. இந்தியா வில் இத்தகைய நிலைமிை காணப்ப்டவில்லை. ஆனல், ஆத்ம் ஞானத்திலே இந்தியா சிறந்து விளங்கியது என்பதை பாரதி யார் வெளிப்படையாக எடுத்துக் கூறுகின்றர். "ஜப்பானுக்கு நமது பிள்ளைகளை அனுப்பி தொழிற் கல்வியிலும் “லெளகீக சாஸ்திரங்களிலும், மற்ற ஜாதியினருக்கு சமானமாக முயலுதல் அவசியத்திலும் அவசியமாகும்' என்கிருர், இந்தியாவின் சுய அபிவிருத்தி என்பதை இவர் கல்வியோடு இணைந்து நோக்கு ssirgiř. - * -
தொடங்கி”
r ܐܶܡܶ- ܫ̄ .ܚܙܝܠ ”
காசிநகர்ப்புலவர் பேசும் உரைதான காஞ்கியில் கேட்பதற்கு கருவி செய்வூோம் என்கிழுர்,
விஞ்ஞானத்தை விருத்திசெய்வதற்கான அவா இதுவாகும்:
.சரித்திரக் கல்வி பாரதப் பிள்ளைகளுக்கு அவசியம் என் பதை உணர்ந்து 'சரித்திர வரலாற்றில் முக்கியம் பெறும் அராபிய, பாரசீக, ஐரிஸ் போலிஸ், ருஷ்ய, எகிப்திய இங் கிலிஸ், பிரெஞ்சு அமெரிக்க, இத்தாலி, கிரேக்க, ஜப்பானிய துருக்கிய சாத்திரங்களும் கற்பிக்கப்பட வேண்டும்பே எனங் பாரதி கருதினர். உலக வரலாற்றுச் சம்பவங்களைக் காரணி காரியத்தோடு. விளக்குவதன் மூலம் இந்தியாவின் நிலையை விளங்கிக் கொள்வதற்கும் டிசமூக வரலாற்றின் ஓட்டத்தைப் புரிந்து கொள்வதற்குமான தெளிந்த ஞானத்தை - பிள்ளைகள்
23.

Page 15
பெறவேண்டும் எனக் கருதினர் பாரதி, வரலாற்றுக் கல்வி யானது ஒரு பிள்ளை தனது எதிர்காலத்தைப் பற்றிய ஒரு முடிவை பெறுவதற்கான - அல்லது ஒரு தீர்மானத்தை எடுப் பதற்கான ஆற்றலை உருவாக்குகின்றது என்பதை அன்று பாரதி உணர்ந்திருந்தமையினுற்ருன் பாரதப் பிள்ளைகளுக்கு வரலாற் றுக் கல்வியை நாடு தழுவிய பிரதேசம் தழுவிய, சர்வ தேசம் தழுவிய அடிப்படையிலே வழங்க வேண்டும் என வலியுறுத் தினர். பூகோள சாத்திரம், உலகநாடுகளின் சமூக பொருளா தாரம், இந்திய மக்கள் எங்கெங்கே சென்று குடியேறி யுள்ளனர் என்பதிலும் நமது பிள்ளைகள் நல்ல ஞானம் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்தியா வின் பொருளாதார சமூக நிலையை ஏனைய நாடுகளோடு ஒப்பிட்டு ஆராய்வ்தன் மூலமும், இந்திய மக்கள் ஏனைய நாடு களில் படுகின்ற துன்பத்தை அறிவதன் மூலமும், தேசிய விடுதலை உணர்வையும், பொது உடமை பாரத மொன்றையும் உருவாக்க பிள்ளைகளுக்கு ஒரு விவேக வித்தாக அமையும் என்பதை பாரதி உணர்ந்திருந்தார். இந்தத் தொடர்பில் பாரத மக்கள் ஏனைய நாடுகளில் படும் கஸ்டத்தைப் பார்த்து
*"கரும்புத் தோட்டத்தில்ே.
நாட்டை நினைப்பாரோ - எந்த நாளினி போயதை காண்பதற்கே." எனப் பாடுகிருர்,
சரித்திரம், பூமிசாத்திரம், என்பவற்றில் என்னென்ன விடயங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலி யுறுத்திக் கூறும்போது, பாரத மக்களின் வரலாற்றுக் காலத் தில் அவர்கள் வாழ்க்கை முறையானது எந்தெந்தக் கட்டங் களில் விருத்தி பெற்று பின்னர், ஆங்கிலேயர் ஆட்சியிலும் அதைத் தொடர்ந்து வந்த காலங்களிலும் மக்கள் தாழ்ந்து போய் தேசப்பற்றின்றி, விடுதலையின்றி, அடிமையாய் இருக் கும் நிலையை எடுத்துக் க்ாட்டவேண்டும் என கருத்து கொண் டிருந்தார் என்பது தெளிவாகின்றது. "உலகத்திலுள்ள பல தேசங்களின் நாகரீக வளர்ச்சியைக் குறித்து பிள்ளைகள் தக்க ஞானம் பெறவேண்டும்" என்று வெளிப்படையாகவே எடுத் துக் காட்டுகின்றர். "மத ஒற்றுமை, பாஷைகளின் நெருக் கம். இந்தியாவின் விளைபொருட்கள், அளவற்ற செல்வம், ஆசார பேதங்கள். தற்காலத்தில் இந்நாட்டில் வந்து குடியேறி யிருக்கும் பஞ்சம், தொற்று நோய்கள் இவற்றிற்கான காரணங் கள், ஜல வசதி குறைவு, வெளிநாடுகளுக்கு ஜனம் குடியேறிப் போகுதல் இந்த அபாயங்களைக் குறித்து மாணவருக்கு தெளி வான ஞாானம் ஏற்படுத்த வேண்டும்" என கூறுவதிலிருந்து பாரதியின் கல்வியியல் சிந்தனையானது எவ்வளவு விரிவுபெற்றது என்பதை உணரமுடிகின்றது.
24

ராஜ்ய சரித்திரம், பொருள்நூல் போன்றனபற்றிக் கூறும் போது, உலக நாடுகள் பலவற்றில் குடியரசு, ஜனப்பிரதிநிதி யாட்சி என்பன விருத்திபெற்றுச் செல்லும் நிலையினையும், அந் நாடுகளில் வாழும் மக்களின் ராஜாங்கம் இவற்றில் அக்கறை கொண்டிருக்கின்றன என்பதையும், பொருள் நூல் பாடத்தில் இந்திய வர்த்தகத்தை விருத்திசெய்தல், தனியுடமையை போக் குதல் என்பவற்றையும் வலியுறுத்துகின்ருர், "ஜனங்களுக்குள்ளே சமாதானத்தைப் பாதுகாப்பதும், வெளிநாடுகளிலிருந்து படை யெடுத்து வருவோரை தடுப்பதும் மாத்திரமே ராஜாங்கத்தின் காரியங்கள் என நினைத்துவிடக் கூடாது. ஜனங்களுக்குள்ளே செல்வமும், உணவு, உடை, வாசம் முதலிய செளகர்யங்களும் கல்வியும், தெய்வ பக்தியும், ஆரோக்கியமும், நல்லொழுக்க மும், பொது சந்தோஷமும் மென்மேலும் விருத்தியடைவதற் குரிய உபாயங்களை இடைவிடாமல் அனுஷ்டித்துக் கொண் டிருப்பதே இராஜாங்கத்தின் கடமையாவது" என்றும் "இப் போது பூமண்டலத்தில் இயல் பெறும் முக்கியமான இராஜாங் கங்கள் எவ்வளவு தூரம் மேற்கண்ட கடமைகளைச் செய்கிறது, என்பதை எடுத்துரைக்க வேண்டும் என்பதிலிருந்து மேலே குறிப் பிட்ட அரசியல் பொருளாதார சமூக விடயங்களில் பாரதி கூடிய அக்கறை கொண்டிருந்தார் என்பது புலப்படுகின்றது.
ஸயன்ஸ் அல்லது பெளதீக சாஸ்திர படிப்பிலும் கூட பாரதி, மகோன்னத கருத்தை கொண்டிருந்தார். "கவலையும் பயமுமே ஒருவனது இறப்புக்கு வழிவகுக்கின்றது" என்று கூறி மண்ணுலும், நீராலும், காற்றலும் மனிதனுக்குப் பயங்கர நோய்கள் வந்துவிடக்கூடும் என்ற ஐரோப்பிய விஞ்ஞானக் கருத்தை மீறியவிதத்திலே நோய்களுக்கும், இறப்புக்கும், வறு மைக்கும் உள்ள தொடர்பை முக்கியப்படுத்துகின்றர்.
இதைவிட கைத்தொழில், விவசாயம், தோட்டப் பயிற்சி, வியாபாரம், சரீரப்பயிற்சி, யாத்திரை போன்றவற்றின் முக்கி யத்துவத்தை வலியுறுத்தி, மாணவர்களின் ஒற்றுமையை மேற் கூறப்பட்ட பயிற்சிகள் விருத்தி செய்யும் என்பதனையும் எடுத் துக் காட்டுகின்ருர். எனவே தேசிய விடுதலை , இந்தியாவின் சுய பொருளுற்பத்தியின் அவசியம், இவற்றிற்கான மூலமான அரசு மக்கள் அரசாக இருக்கவேண்டும் என்பதையும் வலி யுறுத்துவது புலனுகின்றது. ஆனல் அன்றைய ஆங்கில அரசு இதற்கு மாருக இருந்தமையினல் எதிர்காலத்தில் பெரிய கேடு கள் உருவாகக்கூடும் என்பதால் மக்கள் உசாரடையவேண்டும் என்பதனையும் இதற்கு கல்வி அடிப்படையாக அமையவேண்டும் என்பதனையும் பாரதியின் சிந்தனை விளக்கி நிற்கின்றது எனலாம்.
25

Page 16
பாப் பொருள் தொடர்பான பர்ரதியின் சிந்தனையில் அடுத்து முக்கியம் பெறுவது மதப்படிப்பு தொடர்பான கருத்து களாகும்.*நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி பார்தி பழைய விடயங்களுக்கு புதிய மெருகு கொடுத்தார் என்பதற்கு இல் விடயம் சிறந்த உதாரணமாகின்றது. 'ஹிந்து மதம் 'ஒன்று தான் பிரிக்கமுடியாது. ' பிற்காலத்தில் S சில குப்பைகள் நம் மூடிைய ஞான ஊற்ருகிய புராணங்களில் கலந்து விட்டன. மதத்துவேஷங்கள், அணுவசிய மூடபக்திகளே அந்த பொய்மை க்ளாம்" என்றும் பாரத ஒற்றுமையை பேணுவதற்காக **கட் வுள் ஒருவூரே, அவரை ரிஷிகள் பலபெயர் கொண்டு அழைக் கின்றனர்.என்கிருர். சகலருக்கும் பொதுவான வாழ்வை வழங்குவதான வகையில் சமயக் கல்வி'அமையவேண்டும் “ள்ன் பதே இவரின் கருத்தாக இருந்தது. பழைய விடயங்களுக்கு புதிய பரிமாணத்தை கொடுப்பதன் மூலம் தேகிய விடுதலை கொடியை உயர்த்திப் பிடித்தவன்ஃப்ாரதி என்பது புலனுகின்ற தன்ருே?
பெண் கல்வி: குறித்து பாரதி
குடும்பரீதியாகவும், சமுதாய அமைப்பு ரீதியாகவும் பெண் ணடிமை முறை வரலாற்றுப் ப்ோக்கில் ஏற்படுத்தப்பட்ட ஒன் ருகும். இந்நிலைமையிலிருந்து விடுபட்டு பாரதநாட்டு விடுதலை யோடு பெண்களும், சமவாய்ப்புகளைப் பெறவேண்டும் என்ற அடிப்படையில் பெண்கல்விக்கும்_பெண்ணடிமை உடைபடுவதற் கான அடிப்படைகளுக்கும் பாரதி தனது கல்வியியல் சிந்தனை த்துவம் கொடுக்கின்ருர், பொருத்தமற்ற வயதில் திருமணம், தேசியக்கல்வியிலிருந்து ஒதுக்கப்பட்டமை குடும்பத் தில் அடிமைநிலை போன்ற சமூக சீரழிவு நடவடிக்கைகள் பெண்ணை ஒரு அடிமை விலங்காக வீட்டில் பூட்டிவைக்கும் நிலைமையினையே உருவாக்கின.
۹ - ۱ و در ۹ تن)، بنا
**பெண்களின் அடிமைச் சங்கிலி உடைபடுவ்தற்கும், பாரத தேச விடுதலையில் அவர்களின் பங்களிப்பினையும் பெறுவதற்கு டிெண்கல்வி மிக அத்தியாவசிய்மாண்து' என்பதை பாரதி உண்ர்த்தில் இருந்தrர்" எனிவிே 'இயன்றவரை 440 வயதுவரை யேனும்:பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கவேண்டும். இது அத்தியாவசியமானது 'எனக் கருத்துத் தெரிவிக்கின்ருர், தேசியகல்வி என்பதில் பெண்களுக்கு:சம்மர்ன, உரிமை வழங் கப்படவேண்டும் ல்ஸ் இல்லையேல் அது சுதேசியக் கல்வியாக அமையசமோட்டாது: ஃபீ*தமிழ் நாட்டில் தேசியக் கல்வியின் கிளையொன்று ஏற்படிவேண்டும்; இதில் பாதிப் பேர் தமிழ் ஸ்திரிகளாக இருக்க வேண்டும்"&என்று.குறிப்பிடுகின்ருர் &
26
 
 

இயற்கையிலே பெண் பிறக்கும் போது சுதந்திரமகவே இருக்கின்றுள், ஆ, ஆனல் காலப்டிேரக்கில் சமூகிபொருனரிதார கலாச்சார அமைப்பின் சின்னத்தனங்கள் அவளுக்கு அடிமை விலங்கை இட்டுவிடுகின்றன. இதனை-பாரதி,
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும். ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல.
மாதரறிவைக் கெடுத்தார்' என்கி(?ர்.
இதைவிட பெண்கள் அனைவரும் தேசியத்தைக் ата; 4. வேண்டும் என எதிர்பார்த்தார். மத அபிவிருத்திக்காக கிறிஸ் தவப் பாதிரிகள் பாடசாலைகளை நடத்திக் கொண்டிருந்தபோது பெண்கள் அதைப் படித்துக்கொண்டு வருவதைக் கண்டு மனம் நொந்தவர் பாரதி. எனினும் எதிர்காலத்தில், பெண்களின் எழுச்சியை உறுதிப்படுத்தி தனது தீர்க்கதரிசனத்தில்,
விலகி விட்டிலோர் பொந்தில் வளர்வதை * வீரப்'ப்ெண்கள் விரைவில் ஒழிப்பராம்
சாத்திரங்கள் பல பல கற்பராம்
சவுரியங்கள் பல பல செய்வராமீ.
"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீம்ையென்
றெண்ணி யிருந்தவர் 'மாய்ந்து விட்டார்.
விட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற
- விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். - என்று ப்ாடுவதன் மூலமாக பெண்ண்டிமை முறிைய்ை ஒழித்து விட்ட்' விடுத்ல்ை பாரதத்தை கண்முன் கொண்டு வந்தார் பாரதி. *ந்ழ் தேசம் முன்போல கீர்த்திக்கு 'விர வேண்டு மென் உண்மையான வகுப்புகள் தொட்ங்கிப்ப்பு வேண்டும்' பாரதி'கருதியதன் நோக்கங்கள் ஒன்று பெண்ணுக்கு உரிமை, சமகல்வி வாய்ப்புக்கள் வழங்கப்பட்வேண்டும் என்பது மாகும்.)
O ,ة جعيتبة
ல
"ஆணும்-பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும்*
என முழுவையகத்தையுமே கருத்தில் கொண்டு பாடுகின்றன் பாரதி. விடுதலை பெறப்போகும் பாரதம் புெண்விடுதலையையும் உறுதிப்படுத்த வேண்டும் என எண்ணியே. தனது ஆக்கங்கள். - சிந்தனைகள் படைப்புக்களில் பெண்விடுதலைக்கு. முக்கிய பூங், கினை அளித்துள்ளான். & " . . . . . "
2.

Page 17
கிராமியப் பள்ளிகள் - இலவசக் கல்வி குறித்து பாரதி
ஆங்கிலேயர் ஆட்சியாலும், பாதிரிகளின் மதப் பிரச்சார நடவடிக்கையாலும் கல்வியில் தாழ்ந்திருந்த கிராம மக்களுக்கு கல்வி வழங்கப்பட வேண்டும், கிராமங்களில் பள்ளிக்கூடங்களை தொடங்க வேண்டும் என கருதி 'தானங்களில் சிறந்த தானம் வித்தியா தானம்" என வலியுறுத்துகின்ருர் பாரதி. மேலும்
வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்களெங்கும் பல பல பள்ளி தேடு கல்வி யிலாத தொரூரைத் தீயினுக் கிரையாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுத மென் அன்னை" என்கிருர்,
இரவீந்திர நாத் தாகூர் தேசம் ( Nation) என்பதற்கு முக்கியம் கொடுத்து எழுதுகின்ருர். அவர் வேற்று நாட்டுக் குச் சென்று அந்நாடுகளின் தேசபக்தி உணர்வினை அறிந்து "மேற்குப் பாகத்தார் தெய்வம்போல் தேசத்தை ஆதரிக்கின் றனர்' என்ருர். "எல்லா தேசத்தாரும் சகோதரர், மனுஷ்ய ஜாதி முழுவதும் ஒன்றென்று' கருதுகின்ருர்,
ஆனல் பாரதி அதற்கும் அப்பால் சென்று தேசிய நிலை மைகளில் கூடிய கவனத்தைச் செலுத்துகின்ருர். "வெளித் தேசத்தாருக்கு தருமோபதேசம் செய்கையில் நமது நாட்டில் குற்றங்கள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா" என்கிருர். கல்வி மற்றும் பல அடிப்படைகளில் கிராமம் புறக் கணிக்கப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டுகின்ருர் பாரதி. கிரா மங்களில் பாடசாலைகளை ஏற்படுத்தி அங்கு வாழும் குழந்தை களுக்கும் சமகல்வி பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் எனக் கருதி 'பிள்ளைகளிடம் வசூல் சேர்க்கக் கூடாது. நன்கொடை பெறலாம் ஏழைகளுக்கு. இலவசப் புத்தகம், வஸ்திரம், உணவு அவசியம் என்பதை அறிந்து இயன்றவிடத்து ஆகாரச் செலவும் கொடுக்க வேண்டும்" என்று கருத்து தெரிவிக்கின்றர். கிராமங்கள் அன்றைய நிலையில் எவ் வளவு இழிநிலையில் இருந்திருக்கிறது என்பதை மேற்குறிப்பிட்ட வசனப் பந்தியிலிருந்து விளங்கிக்கொள்ள முடிகின்றது. உண்ண உணவுமின்றி ஜீவமரணப் போராட்டத்தை நடத்திக் கொண் டிருந்த கிராமப் புறங்கள் அன்றைய அரசினல் கைவிடப்பட் டிருந்ததோடு, கிராமப் பிள்ளைகள் நகரப் பாடசாலைகளுக்கு
28

செல்லமுடியாத நிலையில் இருந்தமையால்தான், அன்றைய தன வந்தர்கள் தானம் வித்தியாதானமாக இருக்கட்டும். என்றும் அது கிராமத்திலிருந்து தொடங்கவேண்டும் என்றும் கருதியிருக் கின்ருர் பாரதி. தேசிய கல்வியில் "மனுஷ்ய தன்மை" பேணப் படவேண்டும் என்று அன்று அரவிந்தகோஸ், திலக், அணிபெ சண்ட் போன்றேர் கருதியிருந்தனர். இதையே பாரதியும் வலி யுறுத்துகின்ருர், **ராஜாங்க விடயத்தில் அனைவரும் ஒரே ஜாதி. விடுதலை வேட்கை பிராமணருக்கு இருப்பது மட்டுமல்ல எல்லா ஜாதியாரும் விண்ணப்பம் செய்கின்ருேம்" என்ற கிராமப் புற மக்களோடு (பஞ்சமர் ) இணைந்து குரல் கொடுக்கின்ருன் பாரதி. நாகரீகமடைந்த ஒரு நாட்டில் இலவசக்கல்வி வழங் கப்பட வேண்டும் என்பதே அவர் முடிபாகவும் இருந்தது.
'வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - இங்கு
வாழும் மனிதர் எல்லோர்க்கும்"
"அன்பென்று கொட்டு முரசே - அதில்
யாவர்க்கும் விடுதலையுண்டு பின்பு மனிதர்கள் எல்லர்ம் - கல்வி
பெற்று பதம் பெற்று வாழ்வார்'
"அறிவை உயர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்ருய்”*
என்ற பாடல் வரிகளின் மூலமாக அன்றைய வர்க்க வேறு பாட்டு நிலை, விடுதலையின் அவசியம், அதற்கு கல்வியின் முக்கி யத்துவம் போன்றவற்றை பாரதி வலியுறுத்துவதைக் காண முடிகிறது.
கல்வியானது நடைமுறையுடன் இணைந்ததாக இருக்க வேண்டும், உண்மையானதும் விஞ்ஞான பூர்வமானதாக இருக்கவேண்டும் என்பதால் 'எனது குழந்தைகள் எனது மூதா களைப் பற்றியும், எனது தேசத்துச் சரித்திரம் பற்றியும் ஒன் றுமே தெரியாமல் நான் நம்பும் வேதங்கள் சாத்திரங்கள் முத லியவற்றின் பெருமைகளை அறியாமல் ஜீவனத்துக்கு வேண்டிய மனிதர்களை போனகிராப்' பெட்டிகளாக செய்யும் நாடக மான கல்வி கற்கும்படி செய்து அவர்களைக் கெடுக்கமாட்
டேன். ஐரோப்பிய கல்வியிலே பாதகமான அம்சத்தை மட்டும் கற்றுக் கொடுக்கும்படி எனது தேசத்து ஞானமும் அவை குழந்தைகளுக்கு ஏற்படும்படி செய்வேன்." என்
றும், "மெல்ல மெல்ல ஜனங்களுக்கு அவர்களது நடைகளின்
29

Page 18
தீமைகள் விளங்கும்படியான கல்வி பயிற்சியளிக்க வேண்டும். ஜனங்கள் தாமே தமது குறைகளை உணர்ந்து நல்வழிப்படு மாறு உணர்த்த வேண்டும்" என்றும் நடைமுறைப் படிப்பின் அவசியத்தை உணர்த்துகின்ருர் பாரதி.
பாரத மக்கள் தேசம் என்று மட்டும் இருந்துவிடாமல் சர்வதேசத்துடன் இணைந்த அடிப்படையில், சமூக பொருளா தார விடயங்களில் மற்றவர்களின் நன்மை தீமைகளிலும் பங்கு கொள்ளவேண்டும் என்றகருத்தையும் பாரதி கொண்டிருந்தார். “உலகத்தாருடன் கூடி எல்லா வகையிலும் மற்ற உலகத்தா ரைப் போலவே கோல் செய்துகொண்டு உலக விவகாரங்களை நடத்தியவண்ணமாக அஞ்சலுக்கு இடம் கொடாமல் தன் மன தைக் கட்டக்கூடிய திறமை பயன்தரக் கூடியது" என்று பார தியின் சிந்தனை பரந்து விரிகின்றது.
பாரதி வாழ்ந்த அதே சமகாலப் பகுதியில் பாரதியின் கல்வியியல் சிந்தனைகள் சில நடைமுறையில் இருந்தது. இந்தி யாவின் தொழிற்பாடசாலைகளை விருத்தி செய்தல், தொழிற் கல்வியை விருத்தி செய்தல் ஆகிய நோக்கங்களை அடிப்படை யாகக் கொண்டு மைசூரில் தொழிற் பாடசாலைகளை வளர்த்து வருகின்ற முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது (1906-1907 ஆண்டு காலப் பகுதிகளில் ) இம்முயற்சியையும் மைசூர் கவர் மண்டையும் பாராட்டி பாரதி "இந்தியா’ பத்திரிகையில் கட்டு ரைகளை வெளியிட்டிருந்தார். இலவசக் கல்வி சகல குழந்தை களுக்கும் வழங்கவேண்டும் என எண்ணம் கொண்டிருந்த பார தியின் கோஷத்தை ஓரளவு ஈடுசெய்யும் வகையில் தொழிற் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவிப் பணம் கொடுக்கப்
ULL --gd •
இதே காலப்பகுதியில் நடைபெற்ற சுதேசிய பொருட்களின் கண்காட்சியின் போது அரசாங்கத்தினர் கண்காட்சியின் நோக் கத்தினை தவிடுபொடியாக்க முயற்சியை மேற்கொண்டனர். இந்த விடயத்தை பாரதி அம்பலப்படுத்தினர். "பரதேசிகளின் பொருட்களைத் தூக்கி எறியவேண்டும் என்றும்" தேசிய கல்வி யில் கைத்தொழில் கல்வியை முக்கியப்படுத்த வேண்டும். உள் நாட்டு பொருளுற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் பரதேசிய பொருட்களை தூக்கி எறிய வேண்டும் என தனது "இந்தியா" பத்திரிகையில் எழுதினர். w
சீனவில் இதே காலப் பகுதிகளில் (1906-07 ஆண்டுகள்) இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு, கைத்தொழில்
3O

முறைகள், நாகரீக புதுமைகள் போன்றவற்றை கற்றுவர ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது.
பெண் கல்விக்கு விருத்தி ஏற்படுத்த முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டிருந்தன. உள் நாட்டில் உயர் வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டு வெளிநாட்டு நிபு ணர்களால் கல்வி போதிக்கப்பட்டது. சாதாரண மக்களும் கல்வி பெறக் கூடிய நிலைக்கு முயற்சிகள் முன்னெடுக்கப் பட் டன. பிற்காலத்தில் ஏற்பட்ட சீனுவின் சமூக பொருளாதார மாற்றத்திற்கு இக்காரணிகளும் அடிப்படையாக அமைந்தன. இந்நிலைமையினை அவதானித்த பாரதி "சீன தனது தூக்க நிலையிலிருந்து எழுந்து விட்டதனுல் பிறகு கீழ்த்திசை முழுவ தும் உன்னத நிலைக்கு வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை" என சாத்திரம் கூறினன் பாரதி. அவனது எண்ணத்தையும் மிஞ்சிய அளவிலே சீன இன்று கல்வித்துறையில் விருத்திபெற் றுள்ளமைக்கு அந்நாட்டின் அரசியல் பொருளாதாரத் துறை யில் ஏற்பட்ட மாற்றமே அடிப்படை என்பதில் கருத்து மாறு பாடு இருக்கமுடியாது என நான் கருதுகின்றேன்.
பாரதியார் வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கல்வியியல் மாற்றங்கள் ஆங்கிலேயரின் ஆட்சியின் போது கிழக்கிந்தியக் கம்பனிச் சட்டம் புதுப்பிக்கப்படும் பொழுது 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவின் கல்விநிலை பற்றியும் ஆராயும் நிலை இருந்து வந் தது. இந்நடவடிக்கைகளானது, ஒருபுறம் இந்திய மக்களின் பல்வேறுபட்ட போராட்ட வடிவங்களின் பெறுபேறுகளாக இருப்பினும், இந்தியாவின் கல்விநிலையில் ஒரு அமுக்கநிலையை தொடர்ந்து பேணுவதற்காக, ஆங்கில அரசாங்கம் மேற். கொண்ட ஒரு திட்டமிட்ட நடவடிக்கையே ஆகும் எனலாம்: இந்தியாவின் பரிபாலனத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்றுக் கொண்ட பின், மேற்கூறப்பட்ட 20 வருட கால இடைவெளி யில், சம்பிரதாய பூர்வமான இந்நடவடிக்கை கூட, மேற் கொள்ளப்படவில்லை. எனினும், அரசியல் சார்ந்த அடிப்படை யில் இந்தியாவின் கல்வி வளர்ச்சியில் அந்தந்தக் காலங்களில் ஏற்படும் வெகுஜனங்களின் கல்வி வேட்கையை மறைமுகமாக அடக்கிவைக்க அவ்வக் காலங்களில் அரசாங்கத்தினுல் சில நட வடிக்கைகள் மேற்கொள்ளப்ப்ட்டன.
1854-ம் ஆண்டு உட்கல்வி அறிக்கையொன்று வெளியிடப் பட்டது. இவ்வறிக்கையானது பொதுமக்கள் மட்டத்தில் என் னென்ன எதிர்பார்ப்புக்கள் இருந்தனவோ, அதற்கு எதிர்மா
31

Page 19
ருகவே அமைந்து இருந்தது. மறுபுறம் இத்திட்டத்தின் நடை முறை மூலத்திட்டத்திற்கு மாருனதாகவே இருந்தது என, இந்தி யாவின் பலபாகங்களிலும் இருந்து எதிர்க்குரல்கள் எழும்பின. இதில் இன்னுெரு முக்கிய அம்சம் என்னவென்முல், இந்தியா வில் மட்டுமன்றி வரலாற்றுக் காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலும் நாடுகளின் தேசியக் கல்விக்கு பெரும்தடையாக இருந்த கிறிஸ்து சமயப் பிரச்சாரர்களும் ( இந்தியாவில் இருந்த வர்கள்) இத்திட்டத்தை எதிர்த்தனர். ஏனெனில் இத்திட் டம் ஒரு வகையில் கிறிஸ்து சமயப் பிரச்சாரக்காரர்களின் சமயம் பரப்பும் பணிக்கு எதிராக இருந்தது. இத்திட்டம் உயர்கல்வி பற்றி மட்டுமே ஓரளவு அக்கறை கொண்டு இருந்தது. இங் கிலாந்து அரசாங்கத்திற்கு மெளனிகளாக இருந்து, கைகட்டி சேவகம் பார்க்கும் கூட்டமொன்று தேவையாக இருந்ததே இதற்கு அடிப்படைக் காரணமாகும்.
இதன் பின்னர் 1882-ம் ஆண்டு ஒரு ஆய்வுக்குழு ஏற்படுத் தப் பட்டது. (Indian Education Commission) 20 உறுப்பினர் களை உள்ளடக்கியிருந்தது. இந்திய வெகுசனங்களின் மீது அக்கறையில்லாத சமயப் பிரச்சாரர்கள், கல்வியாளர்கள், உயர்வர்க்க இந்தியர்கள் ஆகியோர் பங்கெடுத்துக் கொண்ட னர். இக் குழுவின் தலைவராக இருந்தவர் ஆங்கிலேயர். (Sir William Hunter) இக்குழு எட்டு மாதங்கள் இந்தியாவைச் சுற்றி பயண்ம் செய்தது. உயர் கல்வி நிலைமைகளில் ஆங் கிலமே பயிற்று மொழியாக இருந்தது. இதுகுறித்து இந்திய மக்களிடையே, எதிர்ப்பு உணர்வு இருந்தபோதிலும், இக்குழு இதுபற்றி ஒன்றும் கூறவில்லை. எனினும் சில சிறப்பான பரிந் துரைகளை இக்குழு மேற்கொண்டது. பொதுமக்கள் கல்வி, தனியார் நிறுவனக் கல்வி, ஆசிரியர், பயிற்சி. தொழில் கல்வி பயிற்சி ஆகிய விடயங்களை உள்ளடக்கி இருந்தது. தன்ரியார் துறை கல்வி, ஆங்கிலக் கல்வி ஆகியனபற்றி எவ்வித மாற்றமும் மேற்கெள்ளப் படாமையால் 'பாட்டாளி உலகம்’ என்று வர்ணிக்கப்பட்ட கிராமப்புறங்கள் கைவிடப்பட்டனவாக இருந் தன. பயிற்று மொழிபற்றி இக்குழு தெளிவான எக்கருத்தை யும் கொண்டிருக்கவில்லை. பெண்களுக்கு இலவசக் கல்வி வழங் கப்பட வேண்டும் எனக் கூறியிருந்தாலும் பெண்களுக்கு தனிப் பாடங்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தையும் கொண் டிருந்தது. பெண்ணடிமையை நிர்ணயம் செய்யக்கூடிய தனிக் கல்வித் திட்டம் ஏனைய கல்விகளிலிருந்து விலக்கு என்பன அக் காலத்து தேசியவாதிகளால் விமர்சிக்கப்பட்டன. இத்திட்டத் தின் பின்னரே பஞ்சாப், அலகபாத் போன்ற இடங்களில் கல்வி நிலையங்கள் தோன்றின.
32

1885-ல் உருவான தேசிய காங்கிரசும், தேசிய இயக்கமும் கல்வி வளர்ச்சியில் புதிய மாற்றங்களைச் செய்வதற்காக போரா டியதோடு, சிறிய அளவிலான கல்வி வளர்ச்சியினையாவது அக் கால அரசியல் அமைப்பில் வேண்டி நின்றன. கிராமப்புறங் களிலும் கல்வி வளர்ச்சியினை ஏற்படுத்தவேண்டும், தேசியக் கல்வி முறையொன்று பாரதநாட்டில் ஏற்படுத்தப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்து, போராடியதன் விளை வாக தேசிய ரீதியில் வளர்ச்சி பெற்ற கல்விமான்கள் கல்லூரி களின் பொறுப்பை ஏற்றனர். இந்தக் காலத்திலேயே மாண வர்களது தொகையும் ஒரளவு கூடத் தொடங்கியது. இக்கால கல்வியானது மாணவர்களது பண்பை வளர்ப்பதில் மட்டுமே அக்கறை கொண்டு இருந்தது. தவிர மாணவனை சமுதாய அடிமட்டத்தைப் பற்றி சிந்திக்க வாய்ப்பினை அளிக்கவில்லை. அத்தோடு தாய் மொழியில் கல்வி பயிற்றுவதற்கான எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. சிறப்பாக இது உயர் கல்வியில் முக்கியம் பெற்றது. இக்காலத்தில் கிறிஸ்து சமயப் பிரச்சாரக்காரர்களின் கிராமம் நோக்கிய படர்ச்சியானது தொடங்கியது. கல்விப்பணி மட்டும் மதமாற்றத்திற்கு இட்டுச் செல்லாது என்ற கருத்து கிறிஸ்தவ பாதிரிமார்களிடையே ஏற்பட்டமையே இதற்குக் காரணமாகும்.
1890-ம் ஆண்டுக்கு பின்னரே தேசிய கல்வியை வளர்த்து எடுக்கவேண்டிய அவசியத்தை இந்தியர் பலரும் உணர்ந்தனர். இந்தக் காலகட்டத்திலேயே பாரதி என்னும் மகாகவியும் உதயமானர். இந்நிலையில் 1899-ல் பதவியேற்ற "கர்சன்" இந்திய கல்வி அமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வர முயன்ருர். இவரது மாற்றங்களும் இந்திய கிராமங்களை ஒதுக் குவதாகவே அமைந்து இருந்தது. பொதுவாக இந்திய வெகு சனங்களின் எதிர்பார்ப்பை இவரது திட்டம் சிறிதுகூட கவனத் தில் கொள்ளவில்லை. 1897 முதல் 1902-ம் ஆண்டுவரை பாரத நாட்டில் ஏற்பட்ட பஞ்சம், வரட்சி, தொற்று நோய் என்பன நாட்டினை பெரும் இழிநிலைக்குக் கொண்டு வந்தது. இந்தக் காலகட்டத்திலேயே பாரதி அலகபாத் சர்வகலாசாலையில் பிர வேசித்து, தேர்ச்சி பெறுகின்ருர். 1902ம் ஆண்டில் இந்திய பல்கலைக் கழகத்திற்கான ஆய்வுக்குழு ஒன்று நியமனம் செய் யப்பட்டது. இக்குழுவின் சிபார்சுகள் 1904ம் ஆண்டு இந்திய பல்கலைக்கழகச் சட்டமாக வந்தது. பல்கலைக் கழகங்கள் அர சின் கட்டுப்பாட்டிலேயே இருக்கவேண்டும் என்பது இதன் முக் கிய அம்சமாக இருந்தது. இந்தப் பரிந்துரையின் பல அம்சங் களை கோபால கிருஷ்ண கோகலே போன்றேர் எதிர்த்தனர்.
33

Page 20
இந்நூற்ருண்டின் ஆரம்பக்ாலம் இந்திய மக்களின் விடு தலை உணர்வை மிகைப்படுத்தியது எனலாம். இவ்வுணர்வா னது தேசியரீதியில் கல்வியோடு மிகத் தொடர்புடையதாகவும், புதிய பரிமாணத்தை பெற்றதாகவும் அமைந்தது. 1905ம் ஆண்டு ஏற்பட்ட வங்கப்பிரிவினை அந்தத் தொடர்பில் நாட்டு மக்களிடையே ஏற்பட்ட அக்கறை, ருஷ்ய யப்பான் போரில் யப்பானின் வெற்றி, யப்பானின் எழுச்சிபற்றிய உலகளாவிய எண்ணங்கள், அது இந்தியாவையும் பாதித்த நிலைமைகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் சுதேச இயக்கத்தின் வளர்ச்சியும் இளைஞர்களை அரசியலில் ஈடுபட வழிசமைத்தது: அந்நிய நாட்டுப் பொருட்களை புறக்கணித்தல் தேசிய உற்பத் தியை வளர்த்தல் போன்ற விடயங்களை ஒழுங்கமைக்கவேண்டு மாயின், இந்தியக் கல்விமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் சனங்களிடையே வளர்ச்சி பெற்றது. தேசியக் கல்வி அவசியம் என்பது பலராலும் உணர்வு பூர்வமாக ஏற் றுக்கொள்ள வேண்டியநிலை ஏற்பட்டது. இந் நூற்ருண்டின் தொடக்க காலத்தில் (1905 ) வங்கப் பிரிவினை எதிர்ப்புக் கிளர்ச்சியிலும் சமூக சீர் திருத்தத்திலும் பாரதி முழு மூச்சாக ஈடுபட்டார். கல்விமுறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற் றங்களையும் சீர்திருத்த முறைகளையும் தேசிய கல்வியின் அவ சியத்தையும், பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும் எடுத் துக் காட்டினர். இதைத் தொடர்ந்து நாட்டில் தேசிய கல்வி யொன்றை ஏற்படுத்த குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. சேர். குர்தாஸ் பனர்ஜி, ராஷ்பிகாரி கோஸ், ரவீந்திரநாத தாகூர் போன்றவர்கள் உறுப்பினராய் இருந்தனர். இதன் பின்னரே கல்கத்தாவில் ஒரு தேசிய கல்லூரியும், ஜபல்பூரில் ஒரு தொழில் நுட்பக் கல்லூரியும் உதயமாகின. 1906ம் ஆண்டு தொடங் கப்பட்ட முஸ்லீம் லீக் தனக்கு தனியான தேசிய பாடசாலைகள் தேவையென வலியுறுத்தின. இதே காலத்தில் பாடசாலைகளில் மதவேறுபாடுகள் தலைதூக்கத் தொடங்கியிருந்தது,
இதே காலப்பகுதியில் கோபால கிருஷ்ண கோகலே கல் வித்துறையில் தேசியரீதியான மாற்றங்களை, பெறுவதற்காக சட்டமன்றத்தில் தீர்மானங்களைக் கொண்டு வந்தார். இவரது 2-வது தீர்மானம் சபையில் தோற்றுப்போய் விட்டது. எனினும் சுதேசிய இயக்கம் போன்றவற்றின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தொடக்கப்பள்ளிகளில் காசு கட்டணம் ஒரளவு குறைக்கப்பட் டது. இதன் பின்னர் 1913-ம் ஆண்டு அரசின் கல்விக் கொள் கைபற்றிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதே காலத்தில் 1-வது மகாயுத்தமும் ஆரம்பமாகியது. புதுவையில்
34

தேசபக்தர் தொல்லைகள் அதிகரித்தன. பின்னர் 1917-ம் ஆண்டு "ஸேட்லர்" குழுவொன்று கல்வி விடய தானங்களில் அக்கறை செலுத்தியது. நாட்டு மக்களின் பல்வேறு போராட்ட வடிவங்களின் பெறுபேருக பட்ன வர்ண்சி, அலிகார், டாக்கா, மைசூர், அண்ணுமலைநகர் போன்ற இடங்களில் புதிய பல்கலைக் கழகங்கள் தோன்றின.
1917-ம் ஆன்டு ரஷ்யப் புரட்சியும் அதன் தாக்கமும் இந் திய மக்களின் மனேநிலையில் பல புதிய சிந்தனையையும், அதன் பரிமாணத்தில் புரட்சிகர மாற்றத்தையும் ஏற்படுத்தியது. 1921-ம் ஆண்டு தொடக்கம் 1930ம் ஆண்டு வரை உள்ள காலம் இந்திய கல்விச் சீர்திருத்த காலம் என்று கூறப்படும். மாகாண - மத்திய அரசுகளிடையே ஏற்பட்ட கருத்து மோதல் இந்திய மக்களின் மனேநிலையில் ஏற்பட்ட மாற்றம் தேசிய இயக்கத்தின் உக்கிரமான போராட்டங்கள் என்பன தேசிய பள்ளிகள் எழுவதற்கு அடிப்படையாக அமைந்தன. எனினும் உயர்கல்வி விடயங்களே நோக்கப்பட்டன. கிராமப்புறங்கள் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தன.
பல்வேறு போராட்டங்களின் மத்தியில் 1947-ம் ஆண்டு பாரதம் சுதந்திரம் - பெற்ருலும் பாரதி எதிர்பார்த்த அந்த "முழுமையான' கல்வி நிலை இன்றும் ஏற்படவில்லை என்றே கூறவேண்டும்.
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்" "தனியொருவனுக் குணவில்லையெனில் - இந்த
ஜகத்தினை அழத்திடுவோம்" "அறிவை உயர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்ருய்"
என்கின்ற பாரதியின் கோஷங்கள் சுதந்திர இந்தியாவில் இன்
றும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்கு பல்வேறு அரசி யல் பொருளாதார காரணிகளே அடிப்படையாகின்றன.
35

Page 21
உசாத்துணை நூல்கள்
சந்தனம் எஸ்.
பாரதி தரிசனம்
சமூகம்
பாரதி நூல்கள்
கல்வி வரலாறு - முதல் பகுதி
இந்திய கல்வி வரலாறு,
வெளியீடு: த. பா. நி, சென்ன்ை. 1976 ).
(பாரதியின் "இந்தியா? பத்திரிகை கட்டுரைகள் - தொகுப்பு: இளசை மணியன் ) வெளியீடு: நியூ செஞ்சரி புக் ஹவுஸ்,
சென்னை. (1975)
Luntu 3urtř
- (கட்டுரைகள்}
வெளியீடு: பாரதி பிரசுராலயம் -
சென்னை (1947 )
பாரதியும் உலகமும்
பாரதியும் தமிழகமும்
பாரதியும் பாரத தேசமும் -م
- ( பாரதியின் கவிதை, கட்டுரை
தொகுப்புகள்) தொகுப்பு: பொ. துரன் வெளியீடு: வானதி பதிப்பகம்,
சென்னை (1979 ).
பாரதி தமிழ் வகனத் திரட்டு
தொகுப்பு: பொ. தூரன் வெளியீடு: நாஷனல் புக் டிரஸ்ட்,
புதுடெல்லி (1976),
றிேங்கிற்கு மறுப்பு - ஏங்கெல்ஸ்
கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை - மாக்ஸ் ஏங்கெல்ஸ்
ranssa

ஒரு தாயின் ஒப்பாரி
O சன்மார்க்கா
தெருப்புழுதியில் உன் உடம்பு
முதுகெல்லாம் இரத்த வெள்ளம் நீதான என்று குனிந்து பார்த்தேன்
ஒம் ராசா நீயேதான். ஏன் ஆச்சி அழுகின்ருய்?"
என்று கூடிநிற்கும் சனம் கேட்க * பெடியனைத் தெரியுமா உனக்கு?"
என்று மிரட்டுகிறன் காக்கிச்சட்டைக்காரன் அவன் கை சுழல் துப்பாக்கி ዶ
வெய்யிலில் மின்னுகிறது "தெரியாது" என்று தலையசைத்தேன் நான் பெற்ற முதல் முத்தை நெஞ்சம் பதறுதையா,
குருசேத்திரத்தில் கர்ணன் விழ
"ஐயோ மகனே" என்று குந்தி ஒடிச்சென்று அணைத்தாளே
ஐயோ ராசா நான் பாவி இப்போ வந்து பிறந்துவிட்டேன் என் பிள்ளை என்று சொல்ல முடியாத பாவியானேன்
எனக்குமட்டும் பலமிருந்தால் இரவிரவாய் உன்னை எடுத்துச் சென்று செம்மணியில் எரித்திருப்பேன் முந்தநாள் சாமம் உனக்குப்
பழம் சோறு போட்ட கை க்கக் கடனையும் ಡಿಸಿ: செய்திருக்கும்.
இராவணன் கொடுமை தாங்காது
காடாறு மாதம் போனவன் நீ
நமது தலைவர்கள் போல்
ஏதாவது சாட்டுச் சொல்லி
அங்கேயே இருந்திருக்க லாகாதோ?
திரும்பிவந்து ஒரு கிழமைக்குள்
உன்னைச் சுட்டார்களோ கொடும்பாவிகள்
ஏன் ராசா திரும்பி வந்தாய்?
37

Page 22
உன்னை மகனென்று நான் வீட்டே
கொண்டுபோனல் உன் தம்பிமாரை விட்டு வைப்பரோ இந்தக் கொடியவர்கள்?
வேட்டையாடித் தீர்த்து விட்டுக் கொட்டிலையும் எரிப்பார்கள்
மாட்டையும் லொரியில் ஏத்தி பலாலி போய்ச் சேர்வார்கள்
யாரென்று கேட்க யாரிருக்கிருர் மகனே நான் ஏழையல்லோ!
பெரிய இடத்துப் பிள்ளையெல்லாம்
மேல்நாடோடி டாக்டராக நீயேன் ராசா எல்லாத்தையும்
உன் தோள்மேல் ஏற்ருய் உன்னை நம்பி வாழ்ந்த எம்மை
என்னென்று மறந்து போனப்? என் ஒருத்தி கூலியிலே
உங்களை நான் வளர்த் தெடுத்தேன் நீங்கள் வளர்ந்து மரமாகி
எனக்கு நிழல் தரும்வேளை என் கனவெல்லாம் தெருப்புழுதியில் அப்பிடியே அழிஞ்சு போச்சு என் கடைசி காலம் வரை
என் கைதான் எனக்குதவி,
மெய்யே ராசா, நான் போய் வாறன்
மிச்சத்தை வீட்டில் அழ என் வயித்தெரிச்சல் ஒரு நாள்
இப்பாவிகளை எரிக்குமல்லோ! தனிநாடு கேட்டு மேடையேறிக்
கனக்கக் கதைத்தவர்கள் அயல்நாட்டில் விருந்துண்டு
பாதுகாப்பாய் இருக்கையிலே ஊருக்காய் மடிந்த பிள்ளை
தெருப்புழுதியில் கிடக்கின்றன் அவனை அங்கு விட்டுச் செல்ல
என் நெஞ்சம் விம்முதையா! என் பிள்ளை என்று சொல்ல
முடியாத பாவியானேன்.

0 சீருடை
'கணேசன் மாஸ்ற்றர்!" என்ற குரல் சைக்கிள் ஏற உயர்ந்த என் வலது காலை மறு படி தாழ்த்தியது. இந்த இடத் தில் ஒரு சிறு விளக்கம் அவசி யம். நான் பள்ளிக்கூட ஆசிரி யன் அல்ல. இந்த "மாஸ்ரர்" என்ற பேர் வந்த காரணம் நான் ஏ. எல். எடுத்துவிட்டுப் பல்கலைக் கழக அனுமதிக்குக் காத்திருந்த நீண்ட நாட்களில் பள்ளிக்கூடத் தில் எட்டு முதல் பத்தாம் வகுப்பு வரை சில விஞ்ஞான பாடங்களை (சம்பளம் இல்லாமல்) படிப்பித் தது மட்டுமே. ழுது போக்காகவும் என் ஊரின் ஒரே உயர் பாடசாலையில் அப் போது விஞ்ஞான ஆசிரியர்கள் போதாமை காரணமான கஷ் டங்களைக் குறைக்கவும் உதவியது. நான் படிக்கும் நாட்களிலும் இடைக்கிடை பழைய மாணவர் கள் இப்படி உதவியது உண்டு. என்னிடம் படித்த மாணவர்கள் கொஞ்சம் வளர்ந்த பிறகு "சேர்? என்பதை விட "மாஸ்ற்றர்" என் பது கொஞ்சம் உடன்பாடான பட்டமாகி நிலைத்து விட்டது, அவ்வளவும்தான்!
நான் சொல்ல வந்த விஷ யத்தை கிட்டத்தட்ட மறந்தே விட்டேன்! என்னைக் கூப்பிட்ட குரல் சண்முகசுந்தரத்தினுடை யது. மிகவும் புத்திசாலியான
அது நல்ல பொ
e
o Glgð
போதும் ஓ.எல். லுடன் படிப்பை நிறுத்திக்கொண்டான். ஒருவேளை புத்திசாலி என்றதால்தான் நிறுத் திக் கொண்டானே என்றும் யோசித்திருக்கிறேன். அவனைக் கடைசியாகச் சந்தித்தது ஆறேழு வருஷம் இருக்கும்.
"என்ன சண்முகசுந்தரம், நீ ஆள் மாறேல்லை. இன்னமும் தையல் கடைதானே? எப்பிடிப் போகுது. தொழில்?"
t "ஐயாவுக்குச் சுகமில்லாமல்
போனதோட நான்தான் கடை
யில முழுப் பொறுப்பும். இப்ப நிறையத் துணிமணி வருகுது. ஸ்ரைல்களும் தெரியாதா. அதால வரும்படி பிழையில்ல எண்டாலும் சிலவுகளுக்குக் கா குது. நீங்க டொக்டருக் கெல்லா படிச்சனீங்கள்??
* 'இல்ல அது கிடைக்கேல்ல அப்போதிக்கரி. வெளி இடங்க ளுக்கு வேலைக்கு அனுப்பினதால வீட்டுக்கு மாதம் ஒருதரம் இரண்டு தரம் வருவன். மற்ற அலுவல்களுக்கு எங்க நேரம் ? ஒரு மாதிரி பேர்ன கிழமதொட்டு இங்க, கரச்சல் எதிலையும் மாட் டிக்கொள்ளாட்டி இங்க மூண்டு வருசம் இருக்கேலும்"
"கரைச்சலில மாட்டாமல் இருக்கிறது வரவரக் கஷ்டம்
39

Page 23
மாஸ்டர். யூ. சி. யில பியோன இருக்கிருர் ராசையா அண் ணன்ட தம்பி முருகையாவ
நினைப்பிருக்குதா? சும்மா இருந் தவன். இப்ப பொலீஸ் தேடு 5.nrb.'"
" உன்னுேட முந்தி எப்ப வும் திரியிறவன் எல்லா? ஒரு நாள் நீயும் அவனும் மற்ணி ஷோ பாக்கப்போய் கிளாஸ் மாஸ்ற்ற ரிட்ட அம்பிட்டது நல்லா நினைப் பிருக்குது'
*அதெல்லாம் அப்ப.கொஞ் சம் விளையாட்டுப் புத்தி. அவன் நல்ல பெடியன். இப்பிடி வரு மெண்டு நான் நினைக்கேல்ல'
எனக்கு நேரமாகிக் கொண் டிருந்தது. பின்னர் சந்திப்பதா கச் சொல்லி விட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன்.
முருகையாவை எனக்கு நன் முக நினைவிருக்கிறது. விளையாட் டில் சூரன். படிப்பிலும் அவன் பிழையில்லை. மேற்படிப்புப் பற் றிய ஆசை பொதுவாகவே என் ஊரில் பலருக்கும் இல்லை. முரு கையாவை உற்சாகப் படுத்தக் கூடிய சூழ்நிலை ஊரில் இல்லாத தோடு தமையனின் குடும்பத்துக் குப் பாரமாக இருக்க விருப்பம் இல்லாததால் பள்ளிக்கூட விடு முறை நாட்களில் மெல்ல, மெல் லக் கடைகளில் உதவிக்குப் போ கப் பழகிவிட்டான். ஓ. எல். பரீட்சைக்கு, ஒரு தவணை முதல் பள்ளிக்கூடத்தினின்று சொல்லா மல் விலகிவிட்டான். அவனுக்கு நிரந்தரமாக ஏதாவது வேலை
40
அகப்பட்டதோ தெரியாது. என் ருலும் காற்பந்து விளையாட்டில் உள்ள அக்கறை மட்டும் நீடித் தது. போன வருடத்துக்கு முதல் வருடம் ஒருநாள் நான் மாத் தளையில் வேலையாக இருந்த
போது கண்டிக்குப் போன கால்
பந்துக் குழுவுடன் வந்தவனைத் தற்செயலாகச் சந்திக்க முடிந் தது. அவன் வீணுன வ்ம்புதும் புக்குப் போவான் என்று நான் இன்னும் நம்பவில்லை.
அடுத்த சனிக்கிழமை பின் னேரம் சண்முகசுந்தரத்தின் தை யற் கட்ையைத் தாண்டிப் போன் போது கொஞ்ச நேரம் கடைக் குள் தலையை நீட்டலாம் என்ற யோசனை வந்தது. சைக்கிளைத் திருப்பினேன்.
கடைக்குள் சண்முகசுந்தரம் மிஷினை மிதித்தபடி பக்கத்தி லிருந்த ஒரு மீசைக்கார பொலீஸ் காரனுடன் பேசிக்கொண்டிருந் தான். "சும்மா எட்டிப் பார்க்க நினைச்சன்" என்று விட்டுத் திரும்ப முனைந்த என்னை மறித்து பக்கத்துக் கதிரையில் கிடந்த உடுப்புக்களைத் தூக்கி மேசை மேல் வைத்தான். "இந்தப்
பொலீஸ்காரன் யாரெண்டு தெரி
யுமா?’ என்று கேட்டான். என்னுல் உடனடியாக அடையா ளம் காணமுடியவில்லை. பொலீஸ் காரன் தொப்பியைக் கழற்றிவிட் டுச் சிரித்தபோதுதான் தெரிய வந்தது.
**நவரத்தினம் எல்லா.”* "மாஸ்ற்றர் இப்ப ஊரோட வந்திட்டீங்கள் எண்டு ஆஸ்பத்

திரியிலை அறிஞ்சன், எப்பிடி உங்கட சுகங்கள் எல்லாம்."
மீசைக்குப் பின்னலிருந்து குரல் 'எழுந்தது
முருகையாவைப்பற்றிக் கேட் போமா என்ற எண்ணம் எழுந் தது. ஆனல் ஏனே கேட்காமல் விட்டு விட்டேன்.
பழைய கதைகள் பல அங் கும் இங்குமாக சில நிமிஷங்கள் உயிர்த்து உறங்கின. பிறகு பி.சி. 17359-க்கு கடமை நினைவுக்கு வந்தது. தொப்பியை மாட்டிக் கொண்டு எழுந்தான். VM
"இவன் பழைய சினேகிதன் எண்டு யூனிபோமைத் தைக்கக் குடுத்தன். கடத்திருன் மாஸ்ற் றர். டேய் சண்முகம் நாளைக்கு வேணும்"
நேரம் போயிட்டு. நான் வாறன் மாஸ்டர். கண்டது சந்தோசம்"
போய்விட்டான்.
"முருகையாட விசயம் நவ ரத்னமா சொன்னவன்?"
*ள்ன்ன மாஸ்ற்றர், அவன் இதெல்லாம் எங்களோட கதைப் பான? பிறகு நாளைக்கு அவன்ட வேல் சரி. அதெல்லாம் வேற் விதமிா, போம் போட்டா , அவன் வேற ஆள். இவ்வளவு காலமாப்போட்
டுப்போட்டு அது அவண்ட உடம் አ·
பில ஊறிப்போச்சு"
பாதி பகிடியாகவும், பாதி உண்மையாகவும் சொன்னலும் அவன் நினைப்பில் அதிகம் பிழை யில்லை என்றுதான் தெரிந்தது.
அறியிறனங்கள் யூனி
o Gla,0 தலில் லாபம்
புகைத்தல் ஆரோக்கி யத்துக்குக் கெடுதலானது என்று விளம்பரம் செய்வது மட்டும் போதாது; புகைத் தல் பற்றிய விளம்பரங்கள் கூடக் கட்டுப்படுத்தப்பவேண்டும் என்று பிரித்தா 'a னிய மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தி வந்துள்ளது. அதே சங்கம், மருத்துவர் கள் தம் பணத்தை முதி லிட அதிகம் லாபகரமான துறை புகையிலை தொடர் & பான கம்பணிகளே என் றும் ஆலோசனை வழங்கி யுள்ளது.
முருகையா என்ன செய்த
வன் எண்டு தேடுருங்கள்?"
"இந்த நாள்ள ஒண்டுஞ்
செய்யாட்டாலும் காணும்"
அது தெரியும். எண்டா
லும் ஏதண்டாலும் ஞாயம் சொல்லாமலா தேடுவாங்கள்?"
போன மாசம் இங்கை ஒரு ஆள வெட்டிப் போட்டாங் கள். அவன் பொலிசுக்குக் கதை சொல்லிறவன். அரசியல் விசய மாயிருக்கும். அதோட முருகை யாக்கும் தொடசல் இருக்கு மெண்டு நினைக்கிருங்கள். பாவம் தமையன் ராசையாவுக்கும் éFfl
lurrar GuurtsFðaor. ' CupCUB56055" | இப்ப இங்க இல்லையெண்டுதான் நினைக்கிறன்'
41

Page 24
நேரம் கடந்து இருளத் தொடங்கிவிட்டது. சைக்கிளில் விளக்கும் இல்லை என்பதால் வீட் டுக்குத் திரும்பினேன். பிறகு சில நாட்களாகச் சண்முகசுந்த ரத்தைச் சந்திக்கக் கிடைக்க வில்லை. எதிர்பாராதவிதமாகத் திடீரென்று ஒரு நாள் ஆஸ்பத் திரிக்கு வந்தான்.
"என்ன, ஆருக்கும் ஏதா வது சுகவீனமோ??*
**சுகவீனமில்லை, முருகையா ஆஸ்பத்திரியில. நல்லா அடிச் சுப் போட்டாங்கள். நீங்கள் ஏதாவது செய்யேலுமெண் டால். அதுதான் சொல்லிப் போட்டுப் போக யோசிச்சன்"
"ஆள் எப்ப அம்பிட்டவன்?”
"மூண்டு, நாலு நாள் இருக் கும். ஒரு கதையும் தெரியாது. விசாரிக்கவும் ஏலாது. உங்க ளுக்கு ஏலுமெண்டால். ராசை யா அண்ணனுக்குப் பெரிய யோசனை. பாக்கப் போனவர். கதைக்கவும் விட மாட்டாங்கள் கன புறக்டர்மார் காசு குடுத் தாலும் இப்ப இப்ப பஞ்சிப்படு கினம். ராசையா அண்ணன் யூ. சி. யில பழைய மெம்பர்மா ரிட்டயும் கேட்டவர். அவைய
ளுக்கும் தங்கட தங்கட கரச்சல்'
கள்.. ?"
'எந்த வோட்டில போட் டிருக்காம்?"
'ஏழாக்கும் காவல் போட்
டிருக்கினம்..??
*"நாளைக்குச் சிலநேரம் ஏலு மெண்டால் பாக்கிறன்"
42
நான் எதிர்பார்த்ததை விட எளிதாக என்னல் ஏழாம் வாட் டுக்குப் போய் முருகையாவைச் சந்திக்க முடிந்தது. ஆனலும்
அதிக நேரம் பேசி வீண் சிக்கல்
களை உருவாக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. ரிமாண்ட் சிறையி விருந்து அவனை அனேகமாக வெளியூர் முகாமுக்குத்தான் அனுப்புவார்கள் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனலும் முரு கையா இருந்த நிலையில் அவனை எங்கேயும் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குக் கொண்டு போக முடியாது. அவனுக்கும் குறிப்பிட்ட கொலைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை அவன் மிகவும் கஷ்டப்பட்டுத் தான் உணர்த்தினன்.
இந்த நாட்களிலும் வழமை க்கு மாருகச் சில நேரங்களில் குற்றம் செய்யாதவர்கள் விடுதலை யாகி விடுகிருர்கள். நான் அதி கம் உதவினேன் என்று சொல்ல முடியாது. எனினும் ஒரு சில தொடர்புகள் சில சில காரியங் களைத் துரிதப்படுத்த உதவுகின் றன. முருகையா இரண்டு வாரங் களில் விடுதலையாகிவிட்ட கார ணம் கொலை செய்யப்பட்டவ ருக்கு வேறு தனிப்பட்ட எதிரிகள் இருந்தமை கொலையின் அரசியல் முக்கியத்துவத்தை இல்லாமல் செய்து விட்டதுதான்.
சில நாட்களின் பின்பு ஒருமாலை இருண்ட பிறகு சண்முகசுந்தரத் துடன் முருகையா என் வீட்டுக்கு வந்தான். வீட்டுக்குள் வர இரு வருமே விரும்பாததால் தோட் டத்துச் சுவரோரம் நின்று பேசி

னுேம் சண்முகசுந்தரம் நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு எங்கேயோ அண்ணுந்து பார்த்த படி நின்றன்.
"நீங்க செய்த உதவிக்கு நன்றி சொல்லிப்போட்டுப் போ கத்தான் வந்தனன்’’
*நான் பெரிசாக ஒன்றுமே செய்யேல்லையே! உன்னில குற் றம் இல்லாததால விட்டுட்டாங் கள்...
என்னைப்போல நிலையிலஇரு ந்தவங்களோட கதைக்கவும் கன பேர் பயப்படுகிற காலம். அண் டைக்கு ஆஸ்பத்திரியில என்னை வந்து பாத்ததே பெரிய விசயம் அண்னரும் நீங்கள் செய்த உதவி
களைப் பற்றிச் சொன்னவர் .
என்னைப் போக விட்டிருப்பங் கள் இன்னம் மூன்று மரசம் வதைச்சபிறகு. 5
"ஒண்டு சொல்லிறன், கோ விச்சுக் கொள்ளாத நீஒளிச்சு ஓடி னது பேத்தனம்.'
'இல்ல மாஸ்டர், அம்பிட் டதுதான் பேத்தனம். எப்படியும் மற்ற உன்மைகள் வெளிக்கு வர முதல் என்னைப் பிடிச்சிருந்தா நல்லா அடிச்சுத்தான் இருப் turrissoit."
என்னல் அதை முற்ருக மறுக்க முடியவில்லை.
"ஏன் உன்னிலை ஐமிச்சம் வந்தது?’’ W
**வெட்டுப்பட்டவன் செல்வ ராசா அஞ்சாறு பேரைப் பொலி ஸில மாட்டி விட்டிருக்கிருன்.
டன்ே.
என்னையும் முந்தி ஒருக்காப் பிடிச் சுக் கொண்டு போனவங்கள் ஒரு இரவு வச்சு அடிச்சுப் போட்டு அடுத்தநாள் விட்டவங்கள். கிட் டடியில தான் செல்லராசாட வேலை எண்டு தெரிஞ்சது. அவண்ட வீட்டை போய் நேரா ஏசிப்போட்டன். அவன்ட மச் சான்காரன் கேட்டுக் கொண்டு நிண்டவன். அவனுக்குக் கொஞ் சம் உத்தியோகப் பவறும் இருக்கு நான் ஏசிப்போட்டுப் போன மறு
நாள் இரவு ஆரோ இவன்டசுவரில
துரோகி எண்டு என்னவோ எழுதிப் போட்டுப் போனங்கள் பிறகு ரண்டு நாள்ள அம்மாள் கோயில் வளவுக்குக் கிட்ட வச்சு ஆரோ வெட்டிப் போட்டாங் கள். . இவனுக்கு கிட்டடியில காசு கையில பிளங்கத் துவங்கின பிறகு கன தொடசல்கள் கோயில் வளவிலயும் எங்கையோ இளம் பெட்டைகள் இருக்கிற வீட்டில பிறத்தி ஆக்களைக் கொண்டுபோய் சேட்டை விட்டிருக்கிருன்..." எனக்கு நிலைமை கொஞ்சங் கொஞ்சமாகத் தெளிவாகியது. எனக்கே ஏனென்று தெரியாது. 'நவரத்தினம் உன்ன ஸ்ரேசனில கானேல்லையா?" என்று கேட்
'அவன் என்னைக் கண்ட மாதிரியே காட்டல்ல',
** கடமை' என்று முதற் தடவையாகக் குறுக்கிட்டான் சண்முகசுந்தரம். அவனது குர
லில் கேலி இழையோடியது.
**அவன் வேற ஒருத்தனை அடிச்சதக் கண்டன். என்னை அடிச்சவன் அவனுேடை ஒப்பிட் டாச் காது! கதறக்கதற வெளுத்
43

Page 25
தான். அதுக்குப் பிறகு தான் என்னைக் கண்டவன் காணுத மாதிரிப் போயிட்டான்?". என்று முருகையா தொடர்ந்தான்.
முன் கேற்றை untGSgrrr திறந்த சத்தம் கேட்டது. முரு கையாவும் சண்முகசுந்தரமும்
அத்தோடு போய்விட்டார்கள்.
அடுத்த தடவை சண்முகசுந் தரத்தைச் சந்திக்கமுதல் நான்கு நாட்கள் கடந்து விட்டன. கடை வாசலில் எனக்காகவே காத்து நின்றவன் போல “மாஸ்ற்றர் ஒரு பெரிய விசயம் கதைக்க வேணும் உள்ளுக்கு வாlங் களா?" என்று அழைத்தான். அவனது மனக் கலவரம் முகத் தில் அப்படியே தெரிந்தது,
“முருகையாவைக் காணேலை எண்டு தெரியுமா மாஸ்ற்றர்?
“பொலிசோ, ராணுவமோ
என்று நினைக்கிருயா?* கொஞ்ச நேரம் யோசித்தான்.
"மாஸ்ற்றர் இது உங்களுக்கு மட்டும் தான் சொல்லுறன் நேத்து முருகையா ஊரைவிட் டுப் போயிட்டான். அவன் அடுத்தமுறை அம்பிட்டுப்போக முதல் ஏதாவது செய்து போட் டுத்தான் போவான் எண்டு நினைக்கிறன்"
"சொன்னவனு???
சொல்லத் தேவையில்லை. பல மாதிரியும் புத்தி சொன் னன். இப்ப அவன் வேற ஆள் அவனுக்கு நிதானமும் இல்லை.
44
ஒரு விதமான முன் யோசனையும் இல்லை. ஒரு வெறி. எவனையா
பலியெடுக்கிற வெறி. மிருகம் மாதிரி. s šo
அவனைப் பிழை சொல்லி றியா???
அவரைச் சொல்லி என்ன. அநியாயமா ஒரு நல்ல பெடியன் அவன் சொல்வி முடிக்குமுன்னம் ந்வரத்தினத்தின் குரல் கேட்டது.
*ஒ, மாஸ்ற்றரா? மாஸ்ற்ரர் இவன் இன்னம் என்ட யூனிபோ மத் தைக்கேல்ல, கதையில மட் டும் வீரன்..."
ஏண்டாப்பா இன்னம் முடி யேல்லையா?*
‘இந்தா. போன கிழமை
க்கு முந்தின கிழமை தைச்சனன்
நீ தான் வரேல்லை"
"இந்தாப்பா நாற்பது ரூவா மிச்சம் பிறகு தாறன்??
"அடுத்த யூனிபோமுக்கு வரேக்கதான் உன்ட மிச்சம் வரும்" என்று சண்முகசுந்தரம் சொல்லி முடிக்குமுன் நவரத்தி னம் போய் விட்டான்.
சில நிமிஷ நேர மெளனத் தின் பின்பு "மாஸ்ற்றர் நான் தைச்ச இந்த யூனிபோம் எத்தினை மணிசரை மிருகமாக்கிப் போட் டுது?" என்று கேட்டான்,
என்னுல் மறுமொழி சொல் லமுடியவில்லை.
↔接

இ மண்ணுலகத்தினிற் பிறவிகள்.
wmwlow இ. சிவானந்தன்
vé
மண்ணிலே பிறந்து மண்ணிலே வளர்ந்து மண்ணிலே மடிகின்ற மக்கள் இனம் நாங்களெல்லாம் மண்ணிலே நிற்பதற்கு மனசுவரா மானிடர்கள் விண்ணிலே பறப்பதற்கு விரைவதஞல் விபரீதம். மண்ணிலே காலூன்றி மற்றவற்றைச் சிந்திப்போம், திண்ணியராய் நாம் வாழத் திருத்தங்கள் செய்திடுவோம்.
நிலத்தின் கீழ் நெடுந் தூரம் சென்றுவர வாருங்கள் அழைக்கின்றேன், அனுபவத்தை அதன்பின்பு கூறுங்கள் உங்கள் உடம்பை உண்மையில் ஓர் கூராக்கி உள்ளுக்குக் கீழே ஆண்மட்டும் போய் வருதற்கு உவப்பான பாரத்தை உடலுக்கு உள் ஊட்டுகிறேன்.
பூமியின்ரை சட்டை பூப்போட்ட சட்டை அல்ல, நல்ல நல்ல பூக்கள் நறுமணமும் உண்டெனினும்; முள் குத்தும் புதரும், மூக்கு முட்ட மணக்கின்ற, எல்லாவித அழுக்கும், இசகு பிசகான எத்தனையோ சிதம்பல் இழவுகளும் இருந்தாலும், மண்ணிலே தான் நாங்கள் வாழுகிருேம், ஆதலினல் தொல்லைகளும் துடக்குகளும் தொந்தரவும் தொடரவரும். நல்லவற்றை இனம் கண்டு நாம் அவற்றில் இசைந்துவிட்டால். காற்றுடன்ே ஒட்டியுள்ள காய்ந்த நிலம் விட்டிறங்கி கீழ்ப் போய் நாம் பார்ப்போமே கீழுலகை விரிவாக, கூரான எமதுடம்பு கீழ்நோக்கி மெல்ல மெல்ல போகுமொரு பான்மையினைப் போல நினைத்திருங்கள்.
சொரசொரத்த மண்ணும் சுட்டமண்ணும் பச்சைமண்ணும். கலகலத்த மண்ணும் களிமண்ணும் கூழ்மண்ணும் எல்லாமே சென்ருெழிய எம்சடலம் இறங்கிறது, வேரடியில் மண்ணும் வெகிர்மண்ணும் கூடவரும், சூடு குறைந்தழியச் சுனைபோல நீர் சுரக்கும், இலேசான மண் போகும், இடிபாடு கோடி வரும். கூழாங்கல், மக்கி, கிறவல், குறுணி வகை, ஈர மணல்வகைகள் இழிந்த கழிவெண்ணெய், பார மணல்வகைகள் பல கன்ரிய உப்புக்கள், ĻumrGosp Augub Lu avont 607 600auiTyp GML-u Luav ஆமான கற்கள் வந்து, அவையும் பிழவுபடும்.
45

Page 26
அடடா நாம் நிற்குமிடம், அண்ணுந்து பார்த்தால் அங்குலங்கள் அல்ல அடிக்கணக்கில் அல்ல யாரோ மைலோ யாமறியோம் எண்ணுதீர், கணக்கெடுக்க முடியாத கனதூரம் இழிந்துவிட்டோம். எல்லாமே பாரம் எள்ளளவும் காற்றில்லை, பூமியின்ரை மையம் பிடித்திழுக்கும் பான்மையினல் உடல் எல்லாம் இறுகி இரும்பாகக் கணக்கிறது. மேலெழுந்து மீண்டும் மண்ணுக்குப் போவோமா மேனி அமுக்கம் மென்மேலும் கூடிவர மூச்சு விடக்கூட முடியாத கஷ்டநிலை ஒளிக்கீறே சுவடாத அமாவாசைக் கும்மிருட்டு, வேண்டாமே இந்த விபரீதக் கீழ்ப் பயணம் மேலெழுந்து மீண்டும் மண்ணுக்கே போவோம் நாம்.
வந்த வழிவழியே வாருங்கள் மெல்ல மெல்ல சிந்தை குழம்பாது சீரியராய் மேல் எழுவோம். சாதாரணமான சனங்களைப்போல் மண்தரையில் மல்லாந்து படுத்து மலர்த்துங்கள் விழிகளினை. வேர்வை துடைத்து விசுக்கி உலரவிட்டு வளியும் ஒளியும் இனி வந்து எம்மை ஆதரிக்க "ஹாய்' ஆகச் சிறுபோது தரித்திருப்போம், களைமாறி மண்ணுலகத்தினிற் பிறவி மறுவினைகள் மாற்றிடுவோம்.
சி அணு ஆயுத எதிர்ப்பு
9ே அணு ஆயுதங்கள் காரணமாக யுத்த ஆபத்து ஒரு புற மிருக்க விபத்துக்கள் பற்றிய கரிசனையும் அதிகமாகியுள்ளது. ஆனலும் இதுவரை அணுசக்தி நிலையங்களில் ஏற்பட்ட விபத் துக்களும் கழிவுப்பொருட்களைக் கையாளும் போது ஏற்பட்ட தவறுகளும் அவற்றின் நீண்டகால விளைவுகளும் பாரியவை. அணுசக்தி பற்றிய அறிவைவிட அறியாமை பயங்கரமானது. இலாபநோக்கம் பல சமயம் பாதுகாப்புத் தேவைகளை மறக்கச் செய்துவிடுகிறது. எனவே மனிதனைப் பொறுத்தவரை அணு சக்தியின் சமாதான நோக்கங்கட்கான பிரயோகம் கூட முற்றி லும் பாதுகர்ப்பானதல்ல.
9 ஒல்லாந்து (டச்சு) அரசாங்கம் அமெரிக்க ஏவுகணைகளைத் தன் மண்ணில் நிறுவுவதற்கு பலத்த ஆட்சேபனைகளை எதிர் நோக்கியுள்து. ஒல்லாந்தின் தயக்கம் மற்ற ஐரோப்பிய நாடு களில் ஆயுத ஒழிப்பு இயக்கங்கட்கு ஆதரவாகச் செயற்படலாம் என்று கருதப்படுகிறது அமெரிக்க-சோவியத் ஆயுதப்போட்டியில் தங்களைப் பகடைகளாக்குவதை மேற்குஐரோப்பிய நாடுகள் இப்போது பகிரங்கமாகவே எதிர்க்க ஆரம்பித்துள்ளமை ஒரு ஆரோக்கியமான அறிகுறியாகும். t
46

கவிதையில்பேச்சுவழக்கு ĜuDTLĴÙ ÎJG3LIIT5b
O S. சிவசேகரம்
பேச்சுவழக்கு மொழிப் பிரயோகம் தொடர்பாக, முன்னர் ஒருதடவை எழுதியபோது பேச்சுவழக்கை எழுத்து முற்ருகப் பிரதி பலிக்க இயலாது என்பதையும், பேச்சு வழக்கை அப்பட்டமாகப் பிரதி செய்வது மூலமே "மண்வாசனை’யை ஏற்படுத்தமுடியும் என்ற கருத்துடன் எனது முரண்பாட்டையும் குறிப்பிட்டேன். மொழியியல் ஆய்வுகட்கும் ஒரு வட்டார வழக்கின் தனித்துவ மான மொழியியல் அம்சங்களை அல்லது ஒட்டுமொத்தமான தனித்தன்மையை வலியுறுத்தும் நோக்கிலும் அல்லாமல் பிரதேச வழக்கில் இலக்கியத்தைப் படைப்போர் அதைஒரு துணைமொழி யில் படைக்கிருர்கள் என்பதனல் அவர்களது படைப்பு அந்தத் துணைமொழி பேசும் வட்டத்துக்குள் அடைபட்டு விடுகின்றது என்பது ஒரு முக்கியமான கண்ணுேட்டமாகும். இதை விட, பிரதேச வாரிய்ான (அல்லது சமுதாயப் பிரிவின் அடிப்படை யிலான ) பேச்சுவழக்குகட் கிடையிலான பெருத்த வேறுபாட் டைப் போலன்றி எழுத்து மொழி வழக்கு குறைவான வேற் றுமைகளையே காட்டுகிறது. ( புதிதாகப் புனையப்படும் சொற் ருெடர்கள், அயல் மொழிச் சொற்களைத் தழுவிய பதங்கள் போன்றவற்றை ஒருபுறம் ஒதுக்கினல் எழுத்து மொழியானது வேறுபாடுகள் அற்றது என்று நான் வாதிக்க முனையவில்லை.) விறைப்பான வழக்கொழிந்த மரபுசார்ந்த மொழி நடையை யும் கொச்சைத்தனமானதும் பிழைகள் மலிந்ததுமான நடை யையும் தவிர்த்துப் பார்த்தால் இலகு தமிழில் எழுதும் பயிற்சி பெற்ற ஒருவரது எழுத்தைச் சராசரியான தமிழ் மொழியறி வுடைய இன்னெருவர் விளங்கிக்கொள்வது அவ்வளவு சிரம மானது அல்ல. பிரதேச வாரியான வேறுபாடுகள் சொற்பிர யோகத்தில் தலைகாட்டுவது உண்மையே. எனினும் எழுத்து மொழி வழக்குகளிடையே கூடுதலான ஒற்றுமை இருக்கிறது என்பது நாம் எளிதில் உணரக்கூடிய ஒன்று.
அன்ருடப் பேச்சுவழக்கு எழுத்திற் பிரயோகிக்கப் படுவது பற்றிய விவாதம் மிகவும் பழையது. பேச்சு வழக்கு தன்னை இலக்கியத்தின் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக
47

Page 27
நிலைநாட்டிக் கொண்டுள்ளது. பிரச்சனையானது பேச்சு வழக்கின் பிரயோகம் சரியா பிழையா என்ற விளிம்பை எப்போதோ கடந்தாயிற்று. ஆயினும் எந்த அளவுக்கு, எவ் வாறு என்ற விஞவானது, எழுத்தின் நோக்கம் அதன் வலிமை ஆகியன தொடர்பான அம்சங்களில் தொடரவே செய்கிறது. இந்தப் பிரச்சனைக்குத் திட்டவட்டமான விறைப்பான தீர்வுகள் தருவது, ( என்னளவில் ) சாத்தியமில்லை என்றே தெரிகிறது. எனினும், சில விஷயங்களையிட்டு என் கருத்துக்களை முன்வைப் பது, இவ்விஷயத்தில் மேலும் ஆழமான சிந்தனைக்கும் எழுத் தில் பேச்சு மொழியின் பிரயோகத்தை எவ்வாறு அதிக விளை பயனுடன் ( விளைபயன் என்பது எழுதுபவரது நோக்கத்தின் சார்பாகவே கருதப்படுகிறது) நடைமுறைப் படுத்தலாம் என் பது தொடர்பாகப் பயனுள்ள வாதப் பிரதிவாதங்களைக் கிளப்புதற்கும் பயன்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
நாடகம், சினிமா போன்றவற்றில் நேரடியான உரையா டல்களின் பங்கு தவிர்க்கமுடியாமலே, பேச்சுமொழியை வலி யுறுத்திற்று. மரபுசார்ந்த செந்தமிழ் அல்லாமல் அதினும் எளிமை யான இலகு தமிழும். பேச்சுமொழிக்கு ( அதன் கொச்சைத் தனத்துக்கும் கூட) விட்டுக்கொடுக்க நேர்ந்தது. இன்று சராசரியாகப் பார்த்தால் நாடகங்கள் சினிமாக்கள் போன்ற வற்றில் மரபுசார்ந்த மொழி வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதன் பாதிப்பு உடனடி யாகவே எழுத்தையும் தொற்றிக்கொள்கிறது. உரையாடல் களும் ஆசிரியர் தன் நேர்முக அனுபவமாக உரையாடும் பாணி யில் எழுதும் இடங்களிலும் பேச்சு வழக்கோடு தழுவிய மொழி நடையையும் அவ்வாறில்லாத படர்க்கையான விவரணங்களில் மரபுசார்ந்த எழுத்து மொழியோடு ஒட்டிய நடையையும் பர வலாகக் காணலாம். பேச்சு வழக்கு மொழியை இழிசனர் வழக்கு என்று நிராகரிக்க முனைந்தவர்கள் கூட அதை என் றைக்குமே எழுத்திற் தவிர்க்க முடியும் என்று முழு மன துடன் நம்பினர்களோ என்று நிச்சயமில்லை. ( என்னளவில் "இழிசனர் வழக்கு" என்ற பதமே குறிப்பது போல ஒரு வர்க்க சார்பான நோக்கமே இந்தவிதமான "மொழித் தூய்மையை” வலியுறுத்தி நின்றது. இழிசனர் வழக்கு என்ற பதம், கலை மகள், ஆனந்த விகடன், கல்கி போன்ற சஞ்சிகைகளில் வந்த அக்ரஹாரத்துத் தமிழைக் குறிப்பிடப் பயன்பட்டதாக நினை வில்லை. இந்தத் தமிழ்க் காவலர்களது வீடுகளில் வாரந்தோ றும் மாதந்தோறும் அந்தப் பத்திரிகைகள் வந்து போகாமலும் இருக்கவில்லை. w
எவ்வாருயினும் இன்று சிறுகதை, நாவல், நாடகம் போன் றன சமகாலச் சமுதாயத்தின் நேரடியான சித்தரிப்புக்களாக
4别

வெளிவருகிறது!
பத் துக் கட்டுரைகள்
பாரதி நூற்ருண்டு விழாவை யொட்டி தேசிய கலைஇலக்கியப் பேரவையால் தொடர்ச் சியாக நடாத்தப்பெற்ற ஆய்வுரைகளின் தொகுப்பு - நூல் வடிவில் வெளிவருகிறது.
அமையும் சந்தர்ப்பங்களில் உரையாடல்களின் பதிவு அன்ரு டப் பேச்சு வழக்கை ஒட்டிய அல்லது அதன் சற்றே மெரு கிடப்பட்ட வடிவமாகவே அமைந்து விடுகிறது. மரபுசார்ந்த எழுத்து மொழிப் பிரயோகம் உரையாடல்களில் குறிப்பான தேவைகளை யொட்டியே இன்று பயன்படுத்தப்படுகிறது என் ருல் மிகையாகாது. பேச்சுமொழிப் பிரயோகத்திற்கு எதிரான தளைகள் இருந்த காலத்தில் அதனை மீறி எழுதுவதில் இடர்ப் பாடுகளும் இருந்தன. அவை மீறப்பட்ட பிறகும் அவற்றை மீறுவது அவசியம் என்று காட்டப்பட்ட பிறகும் பிரச்சனை பேச்சு மொழியை எவ்விதம் கையாள்வது என்னும் திசையிற் திரும்பியது. ஆக்க இலக்கிய வடிவங்களில் பேச்சு மொழியின் பாவனை நியாயப்படுத்தப்பட்ட போதும் சில துறைகளில் பேச்சு மொழியைப் பயன்படுத்துவது மிகவும் வரையறைக்குட்பட்டே இருக்கிறது. மரபோடொட்டிய இசைப் பாடல்களில் பேச்சு மொழிப் பிரயோகம் வரையறைப்பட்டிருக்கிறதும் சினிமாப் பாட்டுக்களில் ( இசையென்ற சொல்லைப் ப்ாவிக்க மனம் வர வில்லை!) பேச்சுத் தமிழ் (கொச்சை உட்பட) பரவலாக இடம் பெறுவதும் நம்மை வியக்க வைப்பதில்லை. ஆயினும் நாட் டார் பாடல்கள் போன்று பேச்சு மொழியை அடிப்படை ஆதாரமாகக் கொண்ட இசைப்பாடல் / கவிதை மரபு இருந் தும், கவிதையின் இலக்கணப் பிடிகள் புதுக்கவிதையின் தோற் றத்தை யொட்டித் தளர்ந்துபோன பின்பும், கவிதைகளில் ( புதுக் கவிதை உட்பட) சொல்லமைப்பு (உரைநடை ஆக்க
49

Page 28
இலக்கியங்களுடன் ஒப்பிடுகையில் ) மரபு தழுவியே அமைந் திருக்கிறது எனலாம். இதற்கான காரணம் இசுலாமையோ அல்லது மரபின்பிடிப்போ என்று என்னுற் கருத இயலவில்லை.
பேச்சு மொழியைக் கவிதையிற் பயன்படுத்துவதை ஒரு “சாதனை” என்ற விதமாக அண்மையில் மஹாகவி பற்றிய விமர்சனம் ஒன்றில் ஒருவர் எழுதியிருந்தார். என்னளவில் பேச்சுமொழியில் கவிதை எழுதுவதில் “சாதனை" எதுவும் இல்லை. (இது மஹாகவி பற்றிய குறைவான மதிப்பீடு அல்ல. நம்மில் பெருவாரியான எழுதப்படிக்க நன்கு தெரிந்தவர்கட்கு எழுத்து மொழியோடு ஒப்பிடத் தக்களவு பேச்சு மொழியில் பரிச்சயம் உண்டு. எனவே குறைவான பாவனைப் பரிச்சயமுடைய எழுத்து மொழி நடையில் கவிதை புனைய முடியுமாயின் அதையே பேச்சு மொழியில் செய்வது சிரமமல்ல. பிரச்சனை வேறெங்கேயோ இருக்கிறது என்றே நினைக்கிறேன். கவிதைக் கான மொழிப் பிரயோகம் உணர்வு பூர்வமாகவே தெரிந் தெடுக்கப்படுகிறது. பேச்சு மொழியைக் கவிதையில் பயன் படுத்தும் போது அது ஒரு தேவை கருதியே அங்கு பயன்படு கிறது என்றே நான் நம்புகிறேன்.
கவிதையில் வரும் வாக்கிய அமைப்புக்கள் உரைநடையிலும் வேறுபாடானவை. ஒரு கருத்தை வசனமாகக் கூறும்போது போலன்றி கவிதையில் கூறும்போது அங்கே ஓசை நயம் மட்டு மன்றி இறுக்கமான வார்த்தை அமைப்பு, கருத்துச் செறிவு, அழுத்தம் போன்ற பல தேவைகள் உள்ளன. எழுத்துமொழி யில் வரும் வசனத்தினின்றும் மாறுபடுவது கவித்துவத்தின் தேவையை யொட்டியது. பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வாக்கிய அமைப்பை (ஓரளவு பரிச்சயமானவாறு அல்லது எளிதாக உணரக்கூடியவாறு) குறிப்பிட்ட ஒரு நோக்கத்துடன் மாற்றியமைக்கும்போது கவிதை மரபுக் கவிஞனின் துணைக்கு வருகிறது. பேச்சுமொழி கவிதையில் பிரயோகமாகும் போது அது அடிப்படையான மொழியாக (நாட்டார் பாடல்களிற் போன்று) அமையாதபோது பேச்சு மொழியே ஒரு பிறழ்வாக அமைகிறது. எனவே மேற்கொண்டு அதிலும் மாற்றங்களை அமைக்கும் போது பேச்சுமொழியைப் புகுத்திய நோக்கமே சில சமயம் சிதறிவிடலாம். அதாவது கவிதை அடிப்படையில் எழுத்து மொழியிலேயே படைக்கப்படுகிறது. பேச்சுமொழிப் பிரயோகம் கவிதையின் தேவையை ஒட்டிய மாற்றமாக இயங்குமளவுக்கு அதுவே கவிதையின் மொழியாகவில்லை. எனவே பேச்சுமொழியின் பிரயோகத்தின் வெற்றி தோல்வி கள் அதன் பாவனை கவித்துவத்துக்கோ அல்லது அப்பிரயோ கம் உணர்த்த முயன்ற பண்பிற்கோ எவ்வளவு உதவியது
50

என்பதையே சார்ந்துள்ளது. பேச்சுமொழி ஒரு உத்தி என்ற முறையிற் செயற்படும் போது ஒரு உத்தியின் பயன்பாடு மட் டுமே சாதனையாகிவிடாது. அதன் விளைபொருளே முக்கியத் துவம் பெறுகிறது.
1. "இனிய நீர்ப் பெருக்கினை
இன் கனி வளத்தினை' "முப்பது கோடி முகமுடையாள்" 3. "நாட்டையெல்லாந் தொலைத்தாய்; அண்ணே
நாங்கள் பொறுத்திருந்தோம் ? 4. "நெஞ்சு பொறுக்குதில்லையே" 5. "மண் வெட்டிக் கூலி தின்னலாச்சே - எங்கள்
வாள்வலியும் தோள் வலியும் போச்சே?"
6. "சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது"
இந்த இடங்களிலெல்லாம் வருவன வெவ்வேறு வகை மொழிப் பிரயோகங்கள் ஒவ்வொன்றும் கவிதைக்குரிய ஒவ்வொரு சூழ் நிலைகளைப் பிரதிபலிப்பன. "அண்ணே', 'நெஞ்சு பொறுக்கு தில்லையே" என்பவற்றில் மரபுசார்ந்த பிரயோகம் தளர்கிறது என்ருல் "தின்னலாச்சே"யும் 'போச்சே"யும் பேச்சு வழக்கைத் தழுவி நிற்கின்றன; 'சாதிகள் சேருது” எந்தத் தமிழ்ப் பண் டிதரையும் கதிரையிலிருந்து உருட்டிவிட்டிருக்கும். ஆனல் மறவன் பாட்டோ, குடுகுடுப்பைக் காரன் பாட்டோ முற்ருகவே மறவர் அல்லது குறவர்களது பேச்சைப் பிரதிபலிக்கின்றனவா? இல்லை. பேச்சு மொழியை நோக்கிய ஒரு சிறு பெயர்ச்சியால் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடிகிறது. இதை விட அதிகமான *பேச்சு மொழிப் பிரயோகம் எந்தளவு பயனை அளித்திருக்குமோ தெரியாது. ( கவிதை ஒரு வேளை முற்ருகவே வேறு விதமாக அமைந்திருக்கலாம். அது வேறு விஷயம். பாரதி பயன்படுத்தியவை சந்தமும் வழக்கு மொழியின் ஓரிரு அம்சங்களுமேதான். அதன் மூலம் ஒரு சூழலை உருவாக்க முடிகிறது. பாரதியின் நோக்கம் குடுகுடுப்பைக் காரனையோ மறவனையோ ஒரு சமுதாயச் சித்தரிப்பாய் காட்டு வதல்ல. ஒரு சமுதாயச் சூழலை ஒரு குடுகுடுப்பைக்காரன் மூல மும் ஒரு மறவன் மூலமும் உணர்த்துவதே.
இனிய நீர்ப் பெருக்கினை" என்பது எழுத்து மொழி உரை தடை வழக்கில் கூட ஓரளவு செயற்கைத் தன்மையுடையது. ஒரு பழைய மொழி > நடைக்கு உரியது. ஆயினும் பாரத மாதாவுக்கான அஞ்சலியாக வரும்போது பொருந்துகிறது.
Sl

Page 29
கூறப்படும் பொருளுக்கும் கவிஞனுக்குமுள்ள உறவுக்கு ஏற்ப மொழிநடை தெரிந்தெடுக்கப்படுகிறது. இந்த உறவு நிரந்தர மான ஒன்றல்ல. கவிதை குறிக்கும் சூழலையும் ஒட்டிய ஒன்று. ஆக்க இலக்கியமாக பேச்சு மொழியின் வெற்றிகரமான பிர யோகம் அதன் சாராம்சம் எவ்வளவு திறமையுடன் கிரக்கிக் கப்பட்டுப் பிரயோகிக்கப்படுகிறது என்பதில் தங்கியுள்ளதே யொழிய அது எவ்வளவு தூரம் அப்பட்டமான அன்ருட மொழி வழக்கைக் குறிக்கிறது என்பதில் அல்ல.
கவிதை நாடகங்கள் போன்றவற்றில் அன்ருடப் பேச்சு மொழி சந்த வலிமையோடு இணைவதன் மூலம் ஒரு தாக் கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே பேச்சு மொழியைப் புகுத் துவது மட்டுமே சாதனையாகிவிடாது. அதன் முக்கிய பரிமா ணம், அதாவது அது புகுத்தப் பட்டதன் நோக்கம் எவ்வளவு தூரம் நிறைவேற்றப் பட்டுள்ளது என்பது, கணிப்பில் எடுக் கப்படவேண்டும்.
ஆங்கிலச் சொற்கள் பல 7மட்டுமன்றி ஆங்கிலச் சொற் ருெடர்களும் கூட இன்று தமிழில் ஒரு பகுதியாகிவிட்டன என்ற கருத்தை நான் நெடுநாட்களாக வலியுறுத்தியுள்ளேன். ஆயினும் எழுத்தில் இயன்றவரை எளிய தமிழ்ச் சொற்கள் மூலமே கருத்துக்களைக் கூறுவதை விரும்புகிறேன். தமிழின் வளர்ச்சியின் தவிர்க்கமுடியாத ஒரு அம்சம் அயல்மொழிச் சொற்களும் சொற்ருெடர்களும், பிறபண்களும் என்பதால் அவை யதார்த்த பூர்வமாக உள்ளன்ம ஏற்கப்பட வேண்டும், அதற்கேற்ப தமிழ் திருத்திஅமைக்கப்பட வேண்டும் என்பது ஒரு விஷயம். ஆனல் தமிழின் வலிமை அதன் மிக எளிய சொற்களிலேயே தங்கியுள்ளது என்பதும் நாம் மறக்கமுடியாத விஷயம். பேச்சு வழக்கில் உள்ள ஆங்கிலச் சொற்கள் வைத் துக் கவிதை வடிப்பது ஒன்றும் சாதனை அல்ல. ஆனல் அவ்ற்றைவிட வேறு சொற்கள் உதவாத சூழ்நிலைகள் உள் 660 அவற்றைச் சரியாக அடையாளங் காணும் போது முறையான அயல்மொழி வார்த்தைப் பிரயோகம் தன் முழு வலிமையையும் வழங்குகிறது.
கவிதையில் பேச்சுமொழிப் பிரயோகமும் பேச்சுமொழியில் கவிதை எழுதுவது என்பதும் சற்றே வேறுபட்ட விஷயங்கள் என்பதைப்பற்றி என்னுடன் உடன்படுகிறவர்கள் மற்ற விஷ யங்களிலும் பெரிதும் உடன்படக் கூடும் என எதிர்பார்க் இறேன். மற்றவர்கள் என்ன கருதுகிருர்கள் என அறிய ஆவலாக இருக்கிறேன்.
ロ 52

மாடு மாடு என்று பல ஏசி.
மாடு மாடு என்று பல ஏசி, திட்டிக் கொட்டித் துரத்தி விரட்டிச் சாமம் வரைக்கும் சாறு பிழிந்து சக்கை வாங்குவீர்கள் பொடியனை - வீட்டு வேலைக்காரப் பொடியனை
மாடுகள் " தங்கள் வாய் நுரை தள்ள மூசி மூசிக் களைக்கா விட்டால் . . உங்கள் வீட்டில் உலைகள் கொதிக்குமோ ?
பொடியனின் தமையனும் தாயும் தந்தையும் மாமனும் மாமியும் மச்சான் பொடியனும் உடம்பைப் பிழிய ஒருப்படாதிருந்தால். மலை முகடுகளில், தேயிலை வளருமோ ? 4.
வங்கியில் எல்லாம் காசு புரளுமோ?
ஐந்து நட்சத்திர ஃகோட்டலில் அமர்ந்து நண்டைக் கடித்து விறண்டி சுவைத்தபின் புகையினை ஊதும் இளைய மருமகள் தேன்மதி நாட்களில், திலக்கா எனப்படும் இளைஞரின் அருகில் இருந்து கொஞ்சவும் கண் இமை செருகிக் கனவில் ஆழவும் உச்சக் குரலில் ஒசை புறப்பட எச்சில் வாயால் இராகம் இழுக்கவும் மச்சில் வாழவும் வசதிகள் வாய்க்குமோ ?
மாடு மாடென ஏசுகிறீர்கள் மாடும் கயிறுகள் அறுக்கும், ஆடவர் மகளிர் அது செய்யாரோ ?
O 55

Page 30
ச9 பேயும் பெருமரமும்
•sa
மேகம் பேயாகி கட்டுக் கடங்காமல் நீண்ட பெருமரத்தை ஆனமட்டு மசைத்து அதுமுடியாது போக; பூவையும் பிஞ்சையும் காயையுமாகப் பெருமரத்திலிருந்து பெயர்த்து வீழ்த்தி வேகமாய் ஓடிய வெள்ளத்தோடிழுத்து; வாய்க்காலில் பனை வெளியில் தெருவோரச் சந்திகளில் வெய்யில் கொழுத்தி விறகாய் அடுக்கியது:
பூவும் பிஞ்சும் காயும் கனியுமென்று காலத்தை வீணடிக்காது *காரியமாற்ற' வென்று காய்களைப் பிடுங்கி மெல்ல, எங்கோ, கோற்காலியில் பெட்டகத்தின் மூலையில் வைக்கோலிடும் சிற்சில முயற்சிகள்; பழுக்கலாம் வெம்பி பயனற்றனவாய்!
மண்ணில் வேர்பரப்பி நின்ற பெருமரம் காற்றில் கலைந்து வெய்யிலில் கருகி வெள்ளத்தில் அழுகிய தன்னுயிர்ச் சுவடுகளை
56 O
O செண்பகன்
ஆழமாய்ப் புதைத்த அடி வேர்களினூடாக நின்று உறிஞ்சி நிமிர்ந்த தோழ்களினூடு கிளைகளில் தொங்கிய பூவுக்கும் பிஞ்சுக்கும் பாலூட்டி மகிழ்ந்து கனத்து நிற்கும் காய்கள் பழுத்து நிறைந்து மகிழும்; விதைகள் நிலத்தில் புதைந்து எழுந்து மீண்டும் மீண்டும் நிமிரும் நிலைக்கும்.
நிலக்கரியும்
தேயிலையும் அமெரிக்காவின் செல்வத் திற்கு முக்கியமான ஆதா ரங்களுள் ஒன்று நிலக்கரி. ஆயினும் நிலக்கரிச்சுரங்கத் தொழிலாளர்களே அங்கு மிகவும் ஆரோக்கியக் குறை வானவர்களாக உள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளி அங்கே நிலக்கரிச் சுரங்கங்களில் இறக்க நேர்கிறது. நமது தோட்டத் தொழிலாளர் களின் நினைவு உடனடி யாக மனதிற்கு வருகிறது
gdi3 unt?


Page 31
0 இலங்கையில் செய்திப் பத்தி,
Registered as a news paper
அண்மையில்
வெளிவந்த சீன ( மற்றும் சஞ்சிகை புத்தகங்களைப் பெ.
0IJsbJjsbij
வெலிங்டன் சந்
யாழ்ப்ப
இப் பத்திரிகை தேசிய கலே பாணம், 15/1, மின்சார நிலை ம அவர்களால் யாழ்ப்பாணம் கே. ே அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட

SSDDDD DS S S S S S S S S S S S S S
கையாக பதிவுசெய்யப்பட்டது. n Sri Lankil.
இலக்கியங்கள்
ற்றுக்கொள்ள
தகநிலையம்
$கூட்டு விதி,
நிக்கு அருகாமை'
ானம்,
இலக்கியப் பேரவைக்காக யாழ்ப்
வீதியிலுள்ள க. தணிகாசலம் 1. எஸ். வீதியிலுள்ள பூரீ காந்தா பட்டது.