கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1984.04-05

Page 1

இலக்கியமாத இதழ்
0 செண்பகன்
0 சி. மெளனகுரு மே இ சோலேத்திரி
O -Club Ligsdor
0 ஸ்வப்னு இ முருகையன் 9 எம். ஏ. நுஃமான்

Page 2

இதழ் 3
மலர் : 2
てプー
* எதிர்காலத்திற்கான
நல்ல சகுனங்கள் தோட்டத் தொழிலாளருக்கு ஜே!
வட்டமேசை மாநாடு இழுத்தடிப்பு எதற்கு?
G சமாதானம் வேண்டுமெனில்
நீதியை நிலைநாட்டவேண்டும்!
மேதினத்திற்கு முன்னதாகவே இலங்கைத் தோட் டத் தொழிலாளர், வரலாற்றில் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை நடத்தி வெற்றிபெற் றுள்ளனர். தோட்டத் தொழிலாளர் மத்தியிலுள்ள சகல தொழிற் சங்கங்களும் ஐக்கியப்பட்டு சம்பள உயர்வு உட்பட மற்றும் கோரிக்கைகளை அரசாங்கத் திடம் மார்ச் மாதத்தில் முன் வைத்தது. அரசு ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
அரசாங்கத்தின் எதிர்ப்பு, பயமுறுத்தல்கள், பத்திரிகை களின் சிண்டு முடிப்புகள், இனவிரோதக் கூச்சல்கள் இத்த னைக்கும் அஞ்சாது, அரசு சார்பு தொண்டமான் யூனியன் உட்பட சகல தொழிற்சங்கங்களும் குறிப்பிட்ட காலக்கெடு வான ஏப்ரல் முதலாம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தன.

Page 3
முற்று முழுக்க அரசுசார்பான லங்கா தேசீய தோட்டத் தொழிலாள யூனியன் தொழிலாளர்களும் தமது தலைமைக் கட்டளையை மீறி வேலை நிறுத்தத்தில் சேர்ந்து கொண்டனர். தோட்டத் தொழிலில் இல் லாத இலங்கையின் ஏனைய சகல தொழிற்சங்கங்களும் சம்மேளனங்களும் ஆதரவு தெரிவித்து தமது ஒருமைப் பாட்டை வெளிப்படுத்தின. இது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு நாட்டின் ஜனநாயக சக்திகளினது ஆதரவையும் பெற உதவியது.
இதனல் மந்திரிசபைக்குள் புயல்வீசியது. திரு. தொண்ட மான் மீது மறைமுகத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. பத்திரிகைகள், வானெலி மூலம் வேலை நிறுத்தத்திற்கு எதிராகப் பிரசாரம் முடுக்கப்பட்டது. வேலைக்குத் திரும்பினுல்தான் பேச்சு வார்த்தை என்று அரசு அதட்டிச் சொல்லியும் பயன் இருக்க வில்லை. இரண்டு ரூபா கூட்டித் தரலாமென அரசு இறங்கியது. **இது பிச்சையா. வேண்டாங்க" என்று தொழிலாளர்கள் ஏற்காதது வியப்பான ஒன்றல்ல. போராட்டம் தொடர்ந்தது.
வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தை யாருடனும் நடத்துவதில்லை யென்பது அரசு இதுவரை காலமும் கடைப்பிடித்து வந்த ஒரு விதிமுறை. இதனைக் கைவிடும் நிர்ப்பந்தத் திற்குள்ளான அரசு, வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பேச்சுவார்த்தை நடத்த இணங்கியது. இது தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டு சகல தொழிலாள வர்க்கத்திற் கும், ஜனநாயக சக்திகளுக்கும், மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
பத்து நாட்கள் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் கீழ்க்கண்ட கோரிக்கைகளைப் பேச்சு வார்த்தையிற் பெற்று வெற்றி கண்டது.
(1) சமதொழிலுக்கு சமசம்பளம். (2) சம்பள உயர்வு. மார்ச் மாதத்தில் 18 ரூபா 01 சதமாகவிருந்த சம்பளம் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஒரு தொழிலாளிக்கு நாளொன்றிற்கு ரூபா 23-75 சதமாக உயரும். பெண்களின் சம்பளமும் அப்படியே.

(3) இதுவரை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் தான் வேலை கிடைக்கும். ஏப்ரல் மாதத்திலிருந்து வாரத்தில் ஆறு நாட்கள் வேலை வழங்க உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.
மாதத்தில் இருபத்து நான்கு நாட்கள் வேலைக்கு உத்தர வாதத்தைப் பெற்றுக்கொண்டதன் மூலம் இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் தமது மாதச் சம்பளக் கோரிக்கைக்கான போராட்டத்தில் ஒரு பாய்ச்சலைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசா உரிமை இல்லாமல் இருக்கும் சகல இந்திய வம்சா வளிப் பிரசைகளுக்கும் பிரசாவுரிமை வேண்டுமென்ற கோரிக் கையை அரசாங்கம் நிறைவேற்ற முன்வந்திருக்கிறது.
*தட்டிக் கேட்க ஆள் இல்லையென்ருல் தம்பி சண்டப்பிர சண்டம்" என்பார்கள். தோட்டத் தொழிலாளர்கள் தமது ஐக்கியத்தை மேலும் கட்டி எழுப்பி தேசரீதியான சகல தொழி லாளர்களினதும் ஜனநாயக சக்திகளினதும் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து தமது பிரசாவுரிமை, வெறும் கடுதாசிப் பத்திரமாக இல்லாமல் இந்நாட்டு ஏனைய பிரஜைகளைப் போல சமமாக நடத்தப்படவும், அச்சமின்றி தமது பாரம்பரிய பிர தேசங்களில் வாழவும், தமது தாய் மொழியில் நாட்டின் எப் பாகத்திலும் பேசும் உரிமை உட்பட இதர சுதந்திரங்களைப் பெறவும் தொடர்ந்து போராட வேண்டும்.
இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள் பெற்ற மாபெரும் வெற்றி இந்நாட்டு சகல தொழிலாளிவர்க் கத்தினதும் ஜனநாயக சக்திகளினதும் எதிர்காலப் போராட்டங்களுக்கு நம்பிக்கையையும், தென்பையும் கொடுத்துள்ள ஒரு நல்ல சகுனமாகும். -
O
ஒரு சுதந்திர ஜனநாயக சுபீட்சம் மிக்க இலங்கை யைக் கட்டியெழுப்பப் போராடி வரும் இந்நாட்டு உழைக்கும் மக்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும், நம்பிக்கையைக் கொடுக்கும் நல்ல சகுனம், இவ்வாண்டு இலங்கைத் தலைநகரில் நடந்தேறிய அரசு உட்பட சகல மேதினப் பேரணிகளிலும் கூட்டங்களிலும் அர சியல் கட்சி - தொழிற்சங்கத் தலைவர்கள் தத்தமது

Page 4
மேடைகளில் தமிழர்களது பிரச்சனைகளுக்குச் சரியான தீர்வு காணப்பட வேண்டுமெனவும், கடந்த யூலைச் சம்பவங்களேக் கண்டித்தும் மேலும் இதுபோன்ற சம்ப வங்கள் நடக்க அநுமதிக்கக் கூடாதென்றும் ஏகோ பித்துக் குரல் கொடுத்ததுமாகும்.
பேரினவாத நோய்க்கு ஆட்பட்ட ஒரு சிலரைத் தவிர, நாட்டு மக்களும், பொது ஸ்தாபனங்களும் இனவாத அரசியலை வெறுக்கிருரர்கள். தமிழர் பிரச் சனைக்குச் சரியான தீர்வு காணப்பட வேண்டுமென விரும்புகிருர்கள். அவ்விதமான தீர்வு ஒன்றே நாட்டை நல்ல எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லும்.
அரசு ஏன் இழுத்தடிக்கிறது? இழுத்தடிப்பால் மேலும் மேலும் சம்பவங்கள் தொடரவே செய்யும். ஏப்பிரல் ஒன்ப தாம் திகதியிலிருந்து பன்னிரண்டாம் திகதி வரையான கரி நாட்களில் மக்கள் எவ்வளவு துன்பதுயரத்தை எதிர்நோக்க நேர்ந்தது எத்தனை குழந்தைகள் அதிர்ச்சிக்குள்ளானர்களோ! பாடசாலையிலிருந்து திரும்பமுடியாது மாணவர்கள் ஆசிரியர்கள் பட்ட கஸ்டம் எவ்வளவோ. அவசிய சிகிச்சை பெற ஆஸ்பத்திரி களுக்குப் போக முடியாது நோயாளர் தவித்தனர். ஒரே பீதி. நகரெங்கும் துர்நாற்றம்.
எத்தனைபேர் இறந்தனர் என்பதனைச் சரியாக யாராலும் சொல்லமுடியாது. உத்தியோகபூர்வமான தகவலே குழப்ப முடையதாக முப்பத்தி ஏழு என்ருே ஐம்பத்தி ஏழு என்ருே கூறுகிறது. உத்தியோகப்பற்றற்ற கணிப்பு இருநூறு அல்லது இருநூற்று ஐம்பது என்பதாகும். பிரேதங்கள் மட்டுமல்லாது காணுமல் போனவர்கள், கண்டுபிடிக்க முடியாமலிருப்பவர்களும் இந்த எண்ணிக்கையில் அடங்குவர். மரண விசாரணையின்றி இராணுவமோ பொலிசோ பிரேதங்களை அகற்றமுடியும். இந்த நிலையில் யாருமே சரியான எண்ணிக்கையை எப்படிச் சொல்ல முடியும்? O
யாழ்ப்பாண ஐக்கிய வியாபாரச் சங்கம் ஒரு பழம் பெரும் மட்டுப்படுத்தப்பட்ட கூட்டுறவு நிறுவனம். நடுத்தரவர்க்கத்தினரின் பெருமளவு ஆதரவைப்பெற்ற இந்தநிறுவனத்திற்கு அருகில் அரசினர் பெரிய ஆஸ் பத்திரி இருப்பதையும், நோயாளிகள் என்ன நிலைமைக் குள்ளாவார்கள் என்பதைக்கூடப் பொருட்படுத்தாது

தீ மூட்டப்பட்டது. நகரின் கத்தோலிக்க தேவாலயம் சேதப்படுத்தப்பட்டது. அரசு மெளனம் சாதிக்கிறது.
நாகவிகாரை, சிங்களப் பாடசாலை சேதப்படுத்தப்பட்டமை சில விஷமிகளின் செயல். நமது மக்களின் பண்பிற்கும், விருப் பிற்கும், நாகரிகத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்று. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிருேம். ஆள்கடத்தல், பணயம் வைப்பு போன்ற செயல்களும் ஏற்கக்கூடிய ஒன்றல்ல.
Ꭷ
சர்வகட்சி மாநாடு கூட்டுகிருேம் என்று மற்றக் கட்சிகளை சிண்டுமுடித்தல், ஒத்திப்போடல் மதத்தலை வர்கள் கூட்டம் போன்ற இவையெல்லாம் தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாணத் தனது ஆற்றலின்மை அல் லது விருப்பமின்மைக்கு மற்றவர்களையும் பங்காளி ளாக்க அரசு முயற்சிப்பதாக மக்கள் கருத இடமுண்டு.
அமைதி சமாதானம் பற்றி ஜனதிபதி அவர்களும் பிரதமரும் எவ்வளவு தூரம் போதிததாலும் நீதி நிலை நாட்டப்படவில்லையேல் அது மறு விளைவைத்தான் தரும். நீண்ட போதனையைக் காட்டிலும் செயலில் தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டு நாட்டின் சுதந்திரம், இறைமையைப் பாதுகாத்து நாட்டு மக்க ளின் மேம்பாட்டை முன்வைக்க அரசு முன்வர
வேண்டும். இதுவே நீதி.
9 எல்லாமே விலையாகும்
..இதுவரை பராதீனப்படுத்தமுடியாதவை என மணி தர்கள் கருதியவை யாவும் இப்போது பரிவர்த்தனைச் சரக் குகளாக விலைக்கு விற்கவும் வாங்கவும் கூடிய பண்டங் களாய் ஆக்கப்பட்டன. எதையும் இப்பேர்து பராதீனப் படுத்த முடியும் என்ருகியது. இதுவரை ஒருபோதும் விலைக்கு வாங்கப்படாதவைகளாய் இருந்துவந்த அன்பு, பண்பு, திட நம்பிக்கை, அறிவு, மனச்சாட்சி முதலான அனைத்தும் - சுருங்கங் கூறின் ஒன்று பாக்கியில்லாமல் இப்போது வாணிபத்தின் அரங்கத்துக்குள் வந்து சேர்ந் தன. பொதுவான ஊழலுக்கும், நசிவுக்கும் எதைவேண்டு மானுலும் விற்று வாங்குகின்ற மனுேபாவத்துக்கும் உரிய காலம் இது.
- கார்ல் மாக்ஸ்

Page 5
பெருமரங்கள்.
O செண்பகன்
முகில் முட்டி மேகத்தில் திகிலூட்டும் போர் நடத்தும் வெறி ஆட்டும் மழைகொட்டிச் சேருக்கும் மண்ணில் இரத்தம் ஊறும்.
வைரவியின் இரத்தத்தில் அரிசிகள் சிதறும் கர்ப்பிணியின் உடலில் குண்டுகள் பாயும் கறிவிற்ற கைகள் சோரும் கைக்குழந்தை நிலத்தில் வீழ்ந்து சாயும் பிணமாகும் முதலே மூழ்கிய வெள்ளத்தில் மூச்சுகள் திணறும்
சந்தைகள் சுடுகாடாக சன்னதம் பெருகியாடும் தார்மிக நியதி இது தட்டிக் கேக்க. பார்த்திருக்கும் பெருமரங்கள் ஈரமண்ணில் ஆழமாக வேரையூன்றும்.

பாரதி ஆய்வரங்குக் கட்டுரை - 7
(தேசிய கலை இலக்கியப் பேரவையினுல் நடத்தப்பெற்ற பாரதி நூற்றண்டு ஆய்வுரைகளை தொடர்ச்சியாக கட்டுரை வடிவில் தருகிறேம். )
கலைகளும் பாரதியும்
சி. மெளனகுரு
பாரதி அரசியல், பொருளியல், மெய்யியல், சமூகவியல், அழகியல், கல்வியியல் முதலாம் சகலதுறைகளிலும் தன் கூரிய பார்வையைச் செலுத்தியவன். அவன் பார்வையினைக் குறுகிய வட்டத்துள் வைக்காமல் அதன் சகல பரிமாணங்களுடனும் விளங்கிக்கொள்ள வேண்டும். விளங்கிக் கொள்வதுடன் இன் றைய நடைமுறைக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்ள வும் வேண்டும். பாரதி ஒரு கலைஞன் என்ற வகையில் அவன் ஆழ்ந்த கலைகள் கவிதைக்கலை, உரைநடைக்கலை ஆகியனவாம். சங்கீதக்கலைபற்றி நல்ல அபிப்பிராயங்களைக் கூறியுள்ளான். நாடகக் கலையைத் தொட்டுப் பார்த்திருக்கிருன். ஒவியம், கட்டிடம் சிற்பம்பற்றி ஓரிரு குறிப்புக்கள் கூறியுள்ளான். அவன் கூறியவற்றை வைத்து கலைகள் பற்றிய அவனது "நோக்கையும், தமிழ்க் கலைகளில் அவனுடைய பங்கையும், ஆராய்
தலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கலை இலக்கிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் மேதைகளைப் பற்றி மாக்ஸிய அறிஞரான பிளக்கனேவ் ஓர் இடத்திற் பின் வருமாறு கூறுகிருர்,
**இலக்கியத்திலும் கலையிலும் காண்கிற ஒவ்வொரு குறிப் பிட்ட போக்கின் ஆழத்தை நிர்ணயிப்பது, அது எந்தப் பக்கத் தின் ஜனப்பகுதிகளின் ருசிகளை வெளியிடுகிறதோ, அந்த வர்க் கத்திற்கோ ஜனத்திற்கோ அது எவ்வளவு முக்கியமாயிருக்கிறது என்ற விஷயமும் அந்த வர்க்கமோ ஜனப்பகுதியோ வகிக்கும் சமுதாயப் பாத்திரமுந்தான்"
பிளக்கணுேவின் கூற்றை நாம் பாரதி காலத்துக்குப் பொருத்திப் பார்த்தல் வேண்டும். பாரதி வாழ்ந்த காலத்தில் முக்கிய சமுதாயப் பாத்திரம் வகித்த வர்க்கம் எது? . அந்த வர்க்கத்தின் ருசிகளை அவன் வெளியிட்டான?

Page 6
பாரதி வாழ்ந்த காலம் நிலப்பிரபுத்துவ யுகத்திலிருந்து முதலாளித்துவ யுகத்திற்கு இந்தியா மாறிவிட்டிருந்த காலம். இதுபற்றி E. M. S. நம்பூதிரி பாட் தமது "இந்திய வரலாறு ஒரு மாக்ஸியக் கண்ணுேட்டம்" என்ற நூலில் பின்வருமாறு கூறுகிருர்.
"சுதந்திரமான ஒரு இந்தியத் தொழில் துறை வளர்வ தற்குத் தடையாக இருந்த பிரிட்டிஷ் ஆட்சி அமைப்புக்குள் ளேயே படிப்படியாகவும் அங்குமிங்குமாகவும் சில நவீன தொழிற்சாலைகள் வளரத் தொடங்கின. பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறுதியில் அது தெளிவான வடிவத்தை அடைந் தது. இதிலிருந்து வளர்ந்து வந்த ஒரு சிறு தொழில் முத லாளி வர்க்கம் புறக்கணிக்க முடியாத ஒரு சக்தியாகியது"
இச் சக்தியே இந்தியத் தேசிய முதலாளித்துவமாகும். தேசிய முதலாளிகள் விதேசிய பெரும் முதலாளிகளுக்கு எதி ராகக் குரல் எழுப்பினர்.
'இருபதாம் நூற்றண்டின் முதல் ஆண்டுகளிலே காலணி யப் பொருளாதார அமைப்பையும் நிர்வாக இயந்திரத்தையும் அன்னிய ஆட்சியின் கொள்கைகளையும் நேரடியாக எதிர்த்து அவற்றுடன் மோதவேண்டிய நிலைக்கு இந்திய முதலாளிகள் தள்ளப்பட்டனர்" என்கிருர் ஆராய்வாளர் கோ. கேசவன் தமது "இயக்கமும் இலக்கியப் போக்குகளும்’ எனும் நூலில்.
ஆங்கிலேய ஆட்சி உருவாக்கிவிட்ட ஆங்கிலம் கற்ற மத்திய தரவர்க்கத்தினர் பாரதி வாழ்ந்த காலகட்டத்திலே பிரிட்டிஷ் எதிர்ப்புத் தன்மை கொண்ட சுயராஜ்யம் கோருகிற புத்திஜீவி களாக உருவாகிக் கொண்டிருந்தனர். இந்திய காங்கிரஸ் கட் சிக்குள் மிதவாதி - தீவிரவாதி பிரிவுகள் இதனைக் குறிப்பன வாக இருந்தன. சுருங்கச் சொன்னல் விதேசிய முதலாளி களுக்கு எதிராகச் சுதேசிய முதலாளிகள் தமது போராட்டத்தை ஆரம்பித்த காலம் இது.
தேசிய முதலாளி வர்க்கம் வரலாற்றுப் போக்கில் இரண்டு விதமான பாத்திரங்களை வகிக்கும். ஒன்று தன்னை வளர்த்துக் கொள்வதற்காக பொதுமக்களை - உழைப்பாளரை தன்னுடன் அணைத்து ஜனநாயகம் பேசிக்கொண்டு அந்நிய முதலாளிகளு டன் போராட்டம் நடத்தும், இரண்டு, தான் வளர்ச்சியடைந்த பிறகு தன் வளர்ச்சிப் போக்கிற்கு எதிராக பொதுமக்களோதொழிலாளரோ கிளர்ச்சி நடாத்துகையில் தனது ஜனநாயகப் போர்வையை விலக்கி அவற்றை நசுக்கும்.
6

இதில் முதற் பாத்திரம் முற்போக்கானது. இரண்டாவது பாத்திரம் பிற்போக்கானது. தேசிய முதலாளித்துவ வர்க்கத் தின் தோற்றம் வரலாற்றுப் போக்கில் முற்போக்கான பாத் திரமே. பாரதி காலகட்டத்தில் வளர்ச்சியடைந்து வந்த தேசிய முதலாளி வர்க்கம் தனக்கேயுரிய ஆரம்ப முற்போக்கு அம்சங் களைக் கொண்டிருந்தது.
இந்தியத் தொழிலாளர் வர்க்கம் பாரதி காலத்தில் அரசி யல் அரங்கிற்குள் ஒரு சக்தியாக வரவில்லை என்பதையும், சோஷ லிசக் குரல் இந்திய அரசியல் அரங்கில் தீவிரமாக ஒலிக்கவில்லை என்பதையும் நாம் மனதில் இருத்த வேண்டும். இக்கால கட் டத்திலே தோன்றிய பாரதியின் கருத்துக்களில், சிந்தனைகளில் தேசிய முதலாளி வர்க்கக் கண்ணுேட்டம் நிரம்பியிருப்பதில் வியப்பில்லை. எனவே பாரதி தன் காலச் சிந்தனையோட்டத் தைப் பிரதிபலித்தான் எனலாம். ஒரு மேதைக்கு இது மாத் திரம் போதாது. அவன் தன் கால நிகழ்வுகளைவிட தொலே தூரம் பார்வையுள்ளவனக இருக்க வேண்டும். தன் கால வரம் பினுக் குட்பட்டாலும் சில விசேட குணும்சங்கள் பெற்றமை யால் பாரதி தொலை நோக்கும் கொண்டிருந்தான்.
ஒரு மகாபுருஷனைப் பற்றிப் பிளாக்கனேவ் ஓரிடத்தில் பின் வருமாறு கூறுகிருர்:
"கருராகச் சொன்னல் மகாபுருஷன் எனப்படுவன் தொடக்கி வைப்பவன்தான். ஏனெனில் மற்றவர்களைவிட அவன் அதிக தூரம் பார்க்கிறன். மற்றவர்களைவிட விஷயங்களை அவன் அதிக ஆர்வத்துடன் விரும்புகிருன். சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியின் முந்திய வளர்ச்சியால் சிருஷ்டிக்கப்பட்ட புதிய சமுதாயத் தேவைகளை அவன் சுட்டிக் காட்டுகிருன். அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவன்தான் முதல் முயற்சி செய்கிருன்.
இங்கு நான்கு விடயங்கள் முக்கியப்படுத்தப் படுவதனைக் é55rT6023r 6)rTub.
(1) அதிக தூரம் பார்த்தல் (2) பிரச்சனைகட்கு விடை அளித்தல் (3) >புதிய சமுதாயத் தேவைகளைச் சட்டிக்காட்டல் (4) அதனை நிறைவு செய்ய அவனே முதலில் முயற்சி
செய்தல்.
மகாபுருஷனுக்குரியதாக, ஒரு சரித்திர நாயகனுக்குரியதான மேற்கூறிய அம்சங்கள் அனைத்தையும் பாரதியிடம் காண முடி
7.

Page 7
கிறது. தன் காலத்திலே வாழ்ந்த தேசியத் தலைவர்களான ராஜாராம் மோகன்ராய், அரவிந்த கோஷ், பாலகங்காதர திலகர், கரம்சந்திர காந்தி போன்ருேரைப் போலவே பேசி ஞன். தேசிய முதலாளிகள் அன்றைய சுதேசிய பொருளாதார இயக்கத்தின் வெளிப்பாடான சுதேசியத்தை இவர்கள் யாவ ரும் வற்புறுத்தியவர்கள். அன்று இந்திய வரலாற்றைச் சுதே சியப் பார்வையில் பார்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டன. இதன் விளைவாக வேதங்களும் உபநிடக்ங்களும், இந் திய ஆத்மீக ஞானமும், இந்தியக் கலைகளும் கட்டிடங்களும் உன்னதங்களாக, தேசியச் செல்வங்களாக மதிக்கப்பட்டன. இதே குரலைத்தான் பாரதியும் ஒலித்தான். தனது கவிதை யிலும் கட்டுரையிலும் நாட்டின் தொழில் வளர்ச்சி பற்றி நிறையக் கூறுகிருன், தேசியக் கல்வி, தேசியக் கலைகள், தேசிய மருத்துவம், தேசிய பாஷை என்ற வகையிற் பேசுகிருன்.
**நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கூட்டு, நமது பாஷை, நமது கவிதை, நமது சிற்பம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள் நமது குடிசைகள் இவை அனைத்துக்கும் பொதுப் பெயர் ஆர்ய ஸம்பத்து. இச் ஸம்பத்திலே துருப்பிடிக்க இடம் கொடுத்தால் இந்த ஜாதியைச் செல்லரித்துவிடும்’ என்ற பாரதியின் எழுத் துக்கள் முக்கியமானவை.
இங்கேதான் பாரதியின் வேறுபாடும் தொலை நோக்கும் நமக்குத் தெரிகின்றது. நமது கோபுரம், நமது மண்டபம் என்று சொன்ன பாரதி நமது குடிசைகளையும் ஆர்ய ஸ்ம்பத்துள் அடக்குவது முக்கியமானது. பின்னல் இந்தியாவின் ஆத்மா கிராமங்களில் இருக்கிறது என்று கூறிய மகாத்மா காந்திக்கு முன்னதாகவே குடிசைகளையும் இந்திய சிேயத்துடன் இணைக் கின்ற தூரநோக்கைப் பாரதியிடம் ஆரம்பம் முதலே காணலாம். தன்காலத் தேசியத் தலைவர்கள் பலரை அவன் விமர்சித்த விமர் சனங்கள் பலவற்றில் இத் தூர நோக்கைக் காணலாம். அத் தலைவர்கள் தொடாத அல்லது அதிக அக்கறைப்படாத பெண் விடுதலை, தாய்ழொழிக் கல்வி, சமதர்ம ஆட்சி, தொழிலாளர் பெருமை, அவர்களின் முக்கியத்துவம், சாதிப் பிரிவினையை மிக வன்மையாக எதிர்த்தல், புதிய யுகத்தைத் தோற்றுவித் தல் போன்ற புதிய கருத்துகளை வேகமாக - தீவிரமாக உரத் துக் கூறினன். தன் காலத்தில் பிரச்சனைகளாகத் தெரியத் தொடங்கியவற்றிற்குத் தேசியம் என்ற விடை அளித்ததோடு தூரப் பார்வையில் மேற்கூறிய அம்சங்களைக் கண்டு புதிய சமு தாயத்தின் தேவைகள் அவைகளே எனச் சுட்டிக் காட்டினன்.

அவனே முதல் முயற்சியாக அவற்றை எழுத்தில் வெளியிட் டான். இவ்வகையில் பாரதியும் ஒரு மகாபுருஷனே.
ஒரு கலைஞனை வழி நடத்துவது அவன் நம்பும் தத்துவமும் அவனுடைய நடைமுறையுமாகும் பாரதியின் தத்துவப் பார் வையை இவ்விடத்தில் நாம் புரிந்துகொள்வது அவசியம்.
(1) பாரதி அடிப்படையில் ஓர் ஆன்மீகவாதி. சக்தி உபாசகன்; கடவுள் நம்பிக்கையுடையவன்; அதன் காரண மாகப் பழமையிலே நம்பிக்கை கொண்டவன். நமது கலை, நமது பண்பாடு என்ற கூற்றுக்களிலே இப் பழமைப் பிடிப்பின் சாயலையே காணுகிருேம்.
(2) முதலாளித்துவ வளர்ச்சி காரணமாகவும், பத்திரி கைத் தொழிலில் ஈடுபட்டமையாலும் மாறுதல்களைப் புரிந்து கொள்ளும் பண்பு அவனுக்கு ஏற்படுகிறது. ‘இன்று படுத்தது நாளை உயர்ந்து ஏற்றமடையும் உயர்ந்தது இழியும் என்று பாடல் அடிகளில் இத்தத்துவத்தை வெளிப்படுத்துகிருன்.
"காலத்துக் கேற்ற வகைகள் - அவ்வக் காலத்துக் கேற்ற ஒழுக்கமும் நூலும் ஞல முழுமைக்கும் ஒன்ரு ய் - எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றுமில்லை”
என்ற அவனுடைய பாடல் அடிகள் எதுவும் மாறிக்கொண் டிருக்கும் என்ற தத்துவத்தை அவன் நம்பியமைக்குச் சான்று பகருகிறது.
(3) இவ்வண்ணம் மாறுதலைப் புரிந்தமையினல் எதிர்காலம் இப்படித்தான் அமையும் என்று யூகித்துணர்கிருன். இதன லேயே பொய்க்கும் கலியை நீக்கி புதிய கிரேத யுகத்தினைக் கொணர்வோம் என்கிருன். அப்புதிய யுகத்திலே பெண் விடுதலை, சாதிபேதம் இன்மை, ஏழையென்றும் அடிமையென் றும் எவனுமில்லாத சமதர்ம வாழ்வு என்பன அமையவேண்டு மெனக் கனவு காண்கிருன். ஜகத் சித்திரம் எனும் தனது சிறிய நாடகத்திலே 'மானுடன் தனைக் கட்டிய தளையெல்லாம் அறுக’ என அவன் உரைப்பதும் அவனுடைய எதிர்காலக் கற்பனை உலகை சாரமாகக் காட்டுகிறது.
மேலே குறிப்பிட்ட மூன்று அமிசங்களும் அவனுடைய கலை பற்றிய கருத்துக்களிற் செறிந்துள்ளன. அவனுடைய கலைபற் றிய கருத்துக்கள்
9

Page 8
(1) ஆத்மீக சம்பந்தமானதாயிருக்கும் (2) கலையின் இயங்கு நிலைபற்றியதாயிருக்கும் (3) கலையின் எதிர்காலம் பற்றியதாயிருக்கும்
இவை மூன்றும் அவனுடைய கவிதை, கட்டுரைகளிற் கலந்திருப்பதைக் காணலாம்.
**உலகெலாமோர் பெருங்கனவஃதுள்ளே உண்டுறங்கி இடர் செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவினுங் கனவாகும்"
எனப் பாடும் பாரதிதான் இன்னேரிடத்தில் “குழந்தைகள் பொய்யா? நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குல தெய்வம் பொய்யா?" என்று கேட்கிழுன். ஓரிடத்தில் யந்திரங்களையும் ஆலைகளையும் புகழ்ந்து பாடிய பெல்ஜிய தேசத்து கவிஞர் எமில் வெர்ஹரன் பற்றிக் கூறுமிடத்து, யந்திரங்களைப் புகழ் தல் தகும்" எனக் கூறி அதற்குத்தக "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்' எனப் பாடுவான். அதே நேரம் **இயற்கையையும் மறந்து யந்திரங்களைப் பாடத் தொடங்கி ஞல் கவிதை செத்துவிடும்" என்பான். மேற்காட்டிய உதா ரணங்களில் அவனுடைய பழமைப் பிடிப்பும், அதற்கு எதி ரான போக்கும் இணைந்திருப்பதைக் காணலாம். இப்போக்கு அவனிடம் காணப்படும் முரண்பாடு போலத் தோற்றமளிப் பினும் இதுவே அவனது பரிமாணமும் ஆகும்.
கலைக்குப் பொருள் எதுவாக இருக்கவேண்டும்? என்பதில் அவனது ஆத்மீகப் பார்வையும் அவன் காலச் சமூக நிலையும் முட்டி மோதுவதை இங்கு காணலாம். ஆத்மீகப் பார்வை தெய்வத்தையும் இயற்கையையும் பாடு என்கிறது. அவன் வாழ்ந்த சமகாலச் சூழல் யந்திரங்களைப் பாடச் சொல் கிறது. இம்மனேநிலை பாரதிக்கு என்றும் இருந்ததை அவனது பின்வரும் பாடல் நன்கு புலப்படுத்துகிறது.
"நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலை எய்தவும்
மூட்டு மன்புக் கனலொடு வாணியை முன்னுகின்ற பொழுதி லெலாம் குரல் காட்டி அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவும் தனக்கெனக் கேட்கிருள்" இதன் விளைவாகவே அவன் தெய்வப் பாடல்களைப் பாடி ஞன். இயற்கையைப் பாடினன். அத்தோடு சமகால நிகழ்ச்சி
10

களையும் பாடினன். காலப்போக்கில் அவன் தெய்வத்தைப் போல மக்களையும் பாடினன். அவனுடைய வேதாந்த தத்து வப் பின்னணியில் மனிதனைத் தெய்வமாகக் கண்டான். அரும்பு வியர்வை உதிர்த்துப் புவியில் ஆயிரம் தொழில் செய்யும் தொழிலாளரை பிரமதேவன் கலைகள் என்கிருன். நமக்குத் தொழில் கவிதை நாட்டுக் குழைத்தல், பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடல்வேண்டும், இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன். வயிற்றுக்குச் சோறிட வேண் டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம், மண்ணில் தெரியுது வானம் அது வசப்படலாகாதோ என்றெல்லாம் மக்கள் நல ஞட்டம் அவனின் கவிதைப் பொருளாயிற்று.
இந்த மக்கள் நலனட்டம் பற்றிய ஆர்வமே "எல்லோரும் ர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் இந்நாட்டு மன் னர்" என்று தூரநோக்குடைய சமத்துவப் பாடல்களாக வெடித்தன. அவனுடைய தொழிலாளர் விடுதலை, பெண் விடு தலைப் பாடல்களையும் இத் தூரநோக்குடைய பாடல்களுக்குள் அடக்கலாம்.
கலைக்கோட்பாடுகள் யாவை? கலையின் உள்ளடக்கம் எது வாக இருக்கவேண்டும்? அதன் உருவம் யாது? கலை யாருக் குரியது? அதன் பயன்பாடு என்ன? என்பன வெல்லாம் கலை யுலகில் அன்று தொட்டு இன்றுவரை விவாதிக்கப்பட்டு வரும் விடயங்கள். ஒரு கலைஞன் என்ற வகையில் காலம் வினவிய இவ் வினுக்களுக்கு பாரதியும் விடைதரவேண்டியிருந்தது. அவன் இவைகட்கு அளித்த விடையிலே, முன்னர் குறிப்பிட்ட மூன்று தள நிலைகளையும் காணமுடியும், கலை என்னும் தனது கட்டு ரையில் S.
"சங்கீதம், கவிதை, சிற்பம் சித்திரம் என்பன இவ் வினத்தைச் சேர்ந்தவை. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான பழக்கத்தின் மேலும் பயிற்சியின் மேலும் ஏற்படக் கூடியன என்ருலும் பொதுவாக இவை ஆழ்ந்த மனக்கிளர்ச்சி யுடை யோரும் வரப்பிரசாதிகள் என்று கருதப்படுவோருமாகிய பெரி யோர்கட்கு இனிது சாத்தியம்" என்கிருன்.
இக்கூற்றிலே கலைபற்றிய மூன்று முக்கிய விடயங்களைப் பாரதி கூறியுள்ளான்.
(1) கலை பயிற்சியால், பழக்கத்தால் வருவது (2) ஆழ்ந்த மனக் கிளர்ச்சியுள்ளோரே கலைஞராகலாம் (3) கவிஞன் வரம் பெற்றவன்

Page 9
முதலிரு கருத்துக்களும் கலைபற்றிய இன்றைய கோட்பாடு கள். நவீன கருத்துக்கள். முதலாவது சூழல் பற்றியது. இரண்டாவது உடலியல் பற்றியது. ஆனல் கலைபற்றிய பாரதி யின் மூன்ருவது கருத்து மரபு ரீதியான கருத்து. இதனையே பாரதி கவிதா சக்தி என்கிழுன். கவிதை இயற்றும் பண்பு கடவுளால் அருளப்பட்டது என்கிருன். பராசக்தியிடமும் சரஸ்வதியிடமும் நல்ல பாட்டுப் பாடத் தனக்கு அருள்தரும் படி கேட்கிருன்.
இன்றைய நவீன ஆய்வாளர் இக்கருத்தை ஏற்பதில்லை. பாரதி தனது தத்துவச் சார்பு காரணமாக புதுமைக் கருத்தை யும் பழமைக் கருத்தையும் இணைத்து விடுகிருன். எனினும் நடைமுறையோடு முன்னேறிய பாரதியின் எழுத்துக்களில் முத லிரு கொள்கைகளுமே கதிர்க்கின்றன.
கலையின் உள்ளடக்கம் பற்றிய பாரதியின் கருத்து கவனிப் பிற்குரியது. தமிழ் இலக்கியத்தை நவீன திசை நோக்கித் திருப்பியவன் பாரதி. பாரதிக்கு முந்திய இலக்கியங்கள் மன் னரையும் பிரபுக்களையும் உள்ளடக்கமாகக் கொள்ள, பாரதிக்குப் பிந்திய இலக்கியம் மக்கள் பிரச்சனைகளை வாழ்வின் அனுபவங் களைக் கூறியது. இம் மாற்றத்தை ஏற்படுத்திய பாரதி தன் சம காலத்தில் வாழ்ந்த வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலி யார், பூண்டி அரங்கநாத முதலியார், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை போல மரபுக் கவிதைகளை ஆரம்பத்திலே பாடினுலும் அவர்களினின்றும் விடுபட்டு புதிய வழியில் தனது இலக்கியத் தைப் படைக்கத் தொடங்குகிறர். இதற்கான காரணம் என்ன? 1909 இல் அவர் வெளியிட்ட ஜன்மபூமி இரண்டாம் பாகத்துக்குரிய முன்னுரை இதனைத் தெளிவாக்குகிறது. அம்
முன்னுரை வருமாறு:
'சூரியன் உதித்தவுடனே சேதனப் பிரகிருதி மட்டுமே யன்றி அசேதனப் பிரகிருதியும் புதிய ஜீவனையும் உற்சாகத்தை யும் பெற்றுத் திகழ்கின்றன. இவற்றினை ஒப்பவே ஓர் புதிய ஆதர்சம் - ஓர் கிளர்ச்சி - ஓர் மார்க்கம் தோன்றுமானல் மேன் மக்களின் நெஞ்சமனைத்தும் இரவியை நோக்கித் திரும் பும் சூரிய காந்தம் போல அவ் ஆதர்சத்தை நோக்கித் திரும்பு கின்றன. சென்ற சுபகிருது வருஷத்திலே பாரதநாட்டிலே சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய தேசபக்தி என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தையெல்லாம் உடனே புளகிதமாயின. நல்லோருடைய குணங்களிலே குறை யுடையவனகிய நானும் தேவியினது கிருபையினல் அப்புதிய
2

சுடரினிடத்து அன்பு பூண்டேன். மாதாவும் அதனை அங்கீ காரம் செய்து கொண்டாள்.'
மற்றவர்களைப் போலன்றி நாட்டு மக்கள் வாழ்வுடன் தன்னை இரண்டறப் பிணைத்துக் கொண்டமையினலேயே பாரதி யால் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது. பிளக்கனேவ் சொன்னபடி, சமுதாயத்தால் கேட்கப்பட்ட வினவுக்கு, இலக் கியத்தின் பொருள் யாது? என்ற வினவுக்கு பாரதி விடை தந்தான். நாட்டு விடுதலையே இலக்கியத்தின் பொருள் என் ருன். தேசிய விடுதலைக் கோஷம் அன்றைய தேசிய முதலாளி களின் கோஷம். அதனையே தன் வயமாக்கி இலக்கியம் செய் தான் பாரதி. அவன் இலக்கியங்கள் இதிலிருந்தே பிறந்தன.
கலையின் பொருள் உலக வாழ்வோடு ஒட்டியிருக்கவேண்டும் அனுபவத்தோடு ஒட்டியிருக்வேண்டும். என்பதை அவனுடைய " மனத்தலைவிக்கு வாழ்த்து' என்னும் கவிதை விளக்குகிறது.
*தினமும் இவ்வுலகில் சிதறியே நிகழும்
பல பல பொருளிலாப் பாழ்படு செய்தியை வாழ்க்கைப் பாதையில் வளர் பல முட்கள் பேதை உலகைப் பேதமைப் படுத்தும் வெறும் கதைத் திரளை.
... ஆங்கு தனிப் பதர்ச் செய்திகள் அனைத்தையும் பயனிறை அனுபவமாக்கி உயிரிலாச் செய்திகட்கு உயிர்மிகக் கொடுத்து ஒளியிலாச் செய்திகட்கு ஒளி அருள் புரிந்து வானசாத்திரம் மகமது வீழ்ச்சி சின்னப் பையன் சேவகத் திறமை எனவரு நிகழ்ச்சி யாவையே யாயினும் அனைத்தையு மாங்கே அழகுறச் செய்து இலெளகீக வாழ்க்கையில் பொருளினை யினைக்கும் பேதை மாசத்தியின் பெண்ணே வாழ்க’ இது பாரதியின் இலக்கியக் கொள்கைப் பிரகடனமாகும் "மண்ணுலகத்து ஓசைகள்" எனப் பாரதி குறிப்பிடுவதும் இவையே. இக்கொள்கை இன்றைய இயற்பண்புவாத இலக் கியச் சாயல் கொண்டது. மனித வாழ்வின் சாதாரண சம்ப வங்கள் கூட கலையாக்கப்படவேண்டும் என்ற ஒரு கோட்பாட் டினை இங்கு காணுகிருேம், இதனையே பாரதி தன் வாயால் "பொருள் புதிது" என்றழைத்தான்.
அவனது கவிதையிலும், உரைநடையிலும் நாடகங்களிலும் இக்கொள்கையின் பிரதிபலிப்பைக் காணமுடிகிறது. சிறப்பாக அவனது கதைகளிலே இந்த இயற்பண்பு வாதத் தன்மையைக் காணமுடிகிறது. சிறுகதை உலகில் ஒரு சிறுகதை இலக்கிய கர்த்தா என்ற அளவுக்கு அவன் எழமுடியவில்லை. எனினும் அவனது சிறுகதைகளில் அவன் கூறும் பொருள் புதுப்பொருள்:
13

Page 10
வ. வே. சு. ஐயருடன் ஒப்பிடுகையில் சிறுகதையின் உள்ளடக் கத்தில் இயல்பான வாழ்க்கையை அதிகம் காட்டியவன் பாரதி. இதனைப் பற்றிக் கொண்டு அதனை சிறுகதை இலக்கியமாக வளர்த்தவர் புதுமைப்பித்தன். காட்சிகளைக் கண் முன் கொண ரும் திறன்; சிறிய வசனங்கள், கிண்டல் நடை என்பன பாரதியின் வசனத்தின் சில அமிசங்கள். இவற்றைப் புதுமைப் பித்தனிலும் காணுகிருேம். இவ்வகையில் பாரதியினுடைய உரை நடை வாரிசு எனப் புதுமைப்பித்தனைக் குறிப்பிடலாம். கலையின் உருவம் பற்றிய பாரதியின் கருத்து யாது? பாரதி ஒரு கலைஞனன படியினல் அதன் உருவச் சிறப்பில் மிக அக் கறை செலுத்தியுள்ளான். பாரதிதாசனுக்கு பாரதி கூறியவை அவர் கவிதைபற்றி வைத்திருந்த இலக்கிய ஆக்கத் தன்மைக்கு ஒர் உதாரணமாகும். துணிக் கடைக்காரருக்கும், சீலை நெய் வோருக்கும் அறிவுரை கூறுவதுபோல அவர் கூறுகிருரர். 'உனக்கு மென்மேலும் லாபம் பெருகும் நாட்டுத்துணி வாங்கி விற்ருல்" எனக் கூறிவிட்டு.
நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வது மேல். காசிப் பட்டுப் போல பாட்டு நெய்யவேண்டும். அல்லது உறுதியான உழவனுக்கு வேண்டிய கச்ச வேஷ்டி போலே நெய்யவேண்டும். LD 6iy, நெசவு கூடாது. மஸ்லீன் நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு ஆழம் நேர்மை இத்தனையும் இருக்கவேண் டும். இதற்குமேல் நல்ல வர்ணம் சேர்த்தாற் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்"
என்று கூறுகிருன். இக் கூற்றில் கவிதைக்கு எளிமை, அழகு, வலிமை, ஆழம் என்பன வலியுறுத்தப்படுவதும், அலங் காரம் அவசியமின்மையும் கூறப்படுகிறது. அலங்காரங்களையே அழகியலாக எண்ணும் பண்டிதர் கூட்டத்தாருடன் பாரதி உடன்பாடில்லை என்பது புலனுகின்றது.
ஜப்பானியக் கவிதைபற்றிய அவருட்ைய கட்டுரையில் இலக்கிய உருவாக்கம் பற்றிய சில கருத்துக்கள் வெளியிடப்படு கின்றன. அதிலே அவர் ஜப்பானியப் புலவர் ஒருவர் Modern Review என்ற கல்கத்தாப் பத்திரிகை ஒன்றில் எழுதிய ஒரு லிகிதத்திற்கு வந்த கவிதை பற்றிய கருத்துக்களை அலசுகிருர். மேற்கு நாட்டுக் கவிதையில் சொல் மிகுதி என்றும், எதுகை, சந்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பற் குணத்தாலும் தெளிவில்லாமையாலும் பல சொற்களைச் சேர்த்து வெறுமனே பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துப் போகிருர் கள் என்றும், ஜப்பானில் வேண்டாத சொல் ஒன்றுகூடக் கலப்பதில்லை என்றும் கூறி, கவிக்குரிய சொற் சிக்கனத்தை
14

வலியுறுத்துகிருர், அதே போல உயோகோ நோகுச்சி குறிப் பிட்ட மிஸ்ரீஸ் என்பவரை அவரின் சொற் சிக்கனத்துக்காகப் பாராட்டுகிருர், இதேபோல வாஷோ மத்ஸுவோ என்ற ஜப்பானியக் கவிதையையும், ஹொகூஷி என்ற ஜப்பானியக் கவிஞரையும் புகழ்ந்து ஹொகூஷி அவருடைய வீடு பற்றி எரிந்தபோது தமது குருவான வாஷோசுக்கு எழுதிய "தீப்பட் டெரிந்தது. வீழுமலரின் அமைதி என்னே" என்பதனைக் குறிப் பிடுகின்றர். இவ்வண்ணம் சொற் சிக்கனம் வேண்டியமையி ஞலேயே அவரால் "மந்திரம் போல் வேண்டுமடி சொல்லின்பம்" என்று பாடமுடிந்தது. இவ்வண்ணம் கவிப்பொருளில் மாத்திர மன்றி கவி அமைப்பிலும் அவர் அக்கறை கொண்டார்.
பாரதியார் மிகவும் ஆழ்ந்து ஈடுபட்ட இன்னெரு கலை சங்கீதக் கலையாகும். அவருடைய பாடல்களின் அடியிலே சங் கீதம் ஒலிப்பதைக் காணலாம். அவரது எந்தப் பாடலையும் வாய்விட்டுப் பாடலாம். சங்கீதம், நாட்டியம் பற்றி எப்போ தும் அவர் ஆராய்ச்சி நடத்திக் கொண்டேயிருப்பார் என்று ஓரிடத்தில் பாரதியாரின் மகள் தங்கம்மாள் பாரதி குறிப்பிட் டுள்ளார். சங்கீதம் பற்றியும், பரத நாட்டியம் பற்றியும் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் அக்கலைகளின் செம்மையிலும், வெகு ஜனத் தன்மையிலும் அவருக்கு இருந்த அக்கறையைக் காட்டு கின்றன.
சங்கீதத்துக்கு ரஸம் அவசியம். இக்கால வித்துவான்கள் ரஸஞானமில்லாதபடி சங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டுப் பிணத் தைக் காட்டுகிருர்கள் எனக் குறிப்பிடுகிருர், சங்கீதம் பற்றிய அவரது கூற்று இங்கு நினைவு கூரத் தக்கது.
'நானும் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக்கொண்டு வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. ‘வாதாபி கணபதிம்" என்று ஆரம்பம் செய்கிருர். "ராம நீ சமான மெ வரு", "மரியாத காதுரா", "வீரமுலொசகி". ஐயையோ ஒரே கதை:
எந்த ஜில்லாவுக்குப் போ, எந்தக் கிராமத்துக்குப் போ, எந்த வித்வான் வந்தாலும் இதே கதைதான். தமிழ் நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாட்டுக்களை வருஷக் கணக்காகக் கேட்டுக்கொண் டிருக்கிருர்கள். தோற் காது உள்ள தேசங்களில் இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்"
சங்கீதம் ஒரேதடத்திற் சென்று கொண்டிருக்கக் கூடாது. புதிய கண்டுபிடிப்புகள் அதில் ஏற்படவேண்டும் என்ற ஆதங் கம் இதிற் தென்படுகிறது. தமிழ்ப் பெண்களின் பாட்டுக்களைப் பற்றிக் கூறுமிடத்து அப்பாட்டைக் கையெடுத்து வணங்குகி
13

Page 11
ருேம். ஆனல் அதில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் பல இருக்கின்றன என்று கூறி தாளஞானம் அவர்கட்கு அவ சியம் என்கிருர், சங்கீதத்தில் ஹார்மோனியம் புகுவதைக் கண்டித்து, y
'சங்கீதத்தில் கொஞ்சமேனும் பழக்கமில்லாதவனுக்குக் கூட இக்கருவியைக் கண்டதும் ஷோக் பிறந்து விடுகிறது. . ஒரு வீட்டில் ஹார்மோனியம் வாசித்தால் பக்கத்தில் ஐம்பது வீடுகட்குக் கேட்கிறது, அறியாதவன் தன் அறியாமையை ஒரு வீட்டில் இருந்தபடியே இரண்டு மூன்று வீடுகட்குப் பிரசரரம் புண்ணவேண்டுமானல் இதற்கு இந்தக் கருவிபோல வேருென் றில்லை. ஒரு தேசத்தாரின் செவியைக் கெடுத்து சங்கீத வுணர்ச்சி குறையும்படி செய்யவேண்டுமானல் கிராமந்தோறும் நாலைந்து ஹார்மோனியம் பரவும்படி செய்தால்போதும்'
என்று சங்கீதத்துக்குக் கெடுதியாக வந்த வாத்தியமான ஹார்மோனியத்தைக் கண்டிக்கிருர். 'அதற்குப் பதிலாக வீணை, தம்புரா என்பன பாவிக்கலாம் என்றும் 'அந்தச்சுருதி கள் பாட்டை விழுங்காது?’ என்றும் கூறுகிருர், 'விணை மணி தன் குரல் போலவே பேசும். இன்பச் சுருள்களுக்கும், பின்னல் களுக்கும் வீணை மிகவும் பொருத்தமானது. அதன் ஒலி சாந்திமய மானது" என்கிருர், கள்ளத் தொண்டையிற் பாடாது தொண் டை திறக்க தெளிவாகச் சங்கீதம் பாடவேண்டும் என்கிழுர்,
நாடகம் பற்றிக் குறிப்பிடுமிடத்து 'தீவிரமான தாளகதி யும் மதுரமான இசையும் உடையதாய் நர்த்தனத்திற்கு உத வக்கூடிய பாட்டுக்கள் நாடகக்காரர்களுக்கு வேண்டும்" என் கிருர், வேதபுரத்திலே ஒரு பாகவதர் நடத்திய 'நந்தனர் சரித்திரம்" நாட்டியத்தைப் பார்த்துவிட்டு அவர் எழுதிய **கூத்தின் அபிநயமே பிரதானம்" என்று கூறிய குறிப்புக்கள் நடனத்தின் உருவச் செம்மையில் அவர் காட்டிய ஆர்வத்திற்கு உதாரணம். இவ்வண்ணம் கலை உள்ளடக்கத்தில் மாத்திர மன்றி உருவச் செம்மையிலும் அவர் அக்கறையுடையவரா யிருந்தார். W
பழைய உருவங்களுக்குள் நின்று கொண்டிராமல் புதிய புதிய உருவங்களையும் தேடியவர் பாரதி. உள்ளடக்கத்திற்கு ஏற்ப உருவத்தைக் கையாண்டவர் அவர் . தேசியப் பாடல் களை இசை வடிவிலும் ஹிந்துஸ்தானி மெட்டிலும், ஆனந்தக் களிப்பு, தெம்மாங்கு, நாடகப் பாடல் மெட்டுக்களிலும் எழுதி ஞர். விநாயகர் நான்மணி மாலையை மரபுரீதியான அகவல், வெண்பா, விருத்தத்தில் இயற்றினர். குயிற்பாட்டை அகவ லில் தந்தார். இங்கெல்லாம் எடுத்துக்கொள்ளப்பட்ட பொாக ளுக்கு ஏற்ப உருவம் அமைவதைக் காணலாம்.
16

புதிய புதிய பொருளைக் கூறியதுபோல புதிய உருவங்களை யும் கண்டு பிடித்தவர் பாரதி. பாஞ்சாலி சபதத்திற்கு அவர் எழுதிய முன்னுரை இதற்குச் சான்று. அதனை அவர் புதிய காவியம் என்கிருர். தனது சுயசரிதையை இது வினுேதார்த்த மான ஒரு நூல் என்கிருர், வசனகவிதை அவர் ஏற்படுத்திய புது வடிவம். இவ்வண்ணம் கலையின் உள்ளடக்கத்துடன் இயைந்த உருவம் என்பது அவரது கலைபற்றிய அழகியல் நோக்காகும்.
கலை யாருக்குரியது? என்பதில் பாரதியாருக்குத் திடமான கருத்து இருந்தது. இவ் இருபதாம் நூற்றண்டிலும் கலை இலக் கிய ரசனை என்பன ஞானவான்களுக்க்ேயுரியது; அதனை ரசிக்க வும் அனுபவிக்கவும் நுண்ணிய பயிற்சி தேவை என்று கூறு வோர் இருக்கின்றனர். எனினும் கலை இலக்கியம் மக்களுக் குரியது என்பது இன்று முன்னேற்றம் வேண்டுவோர் கருத் தாகும். இக் கோட்பாடு தமிழ் இலக்கியக் கலை உலகில் தமிழ் நாட்டுக்குள் வரமுன்னரேயே இதனை ஒரு கோட்பாடாக முன் வைத்த கலைஞன் பாரதி என்பது மனம் கொள்ளத் தக்கது.
கலை இலக்கியம் மக்களுக்குரியது என்ற அவரது கோட் பாடு அவரது சிந்தனைகளில் பிரதிபலிக்கின்றது. இவ் வகையில் பாரதி "சுத்த இலக்கியவாதிகட்கு எதிரானவர். "சங்கீத விஷ யம்’ என்னும் கட்டுரையில் அவர் பின்வருமாறு கூறுகிறர்.
“இப்போது உலகம் முழுவதுமே ராஜாக்களையும், பிரபுக் களையும் நம்பி வித்தை பழகும் காலம் போய்விட்டது. இனி மேல் பொது ஜனங்களை நம்பவேண்டும். இனிமேல் கலைகளுக் கெல்லாம் போஷணையும் ஆதரவும் பொது ஜனங்களிடமிருந்து கிடைக்கும்." W
மக்களை நம்பியிருக்கும் கலை மக்களை வாழ்விக்கவும் வேண் டும் என்பதைப்
*பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப்
பாலித்திட வேண்டும்"
என்ற அடிகள் புலப்படுத்துகின்றன. "வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே" என்று கேட்பதும் இதனுலேயே.
பொதுமக்களுக்குக் கலை செல்வதானுல் அது புரிகிற தன்மை
யுடையதாயிருக்க வேண்டும். "எளிமை" என்பதை இளக்கார மாக எண்ணும் விமர்சகர் கூட்டம் இன்று முண்டு. மற்றவ ருக்கு விளங்காமல் சிக்கலாக எழுதல், முடமாகக் கூறுதல்
என்பனவே உயர்ந்த இலக்கியத்தின் அம்சங்கள் என்ற கோட் பாடு இன்றும் உண்டு. இந்நிலையில் எளிமைக்கு அதிக முக்கி யத்துவம் கொடுத்தான் பாரதி.
17

Page 12
"தமிழ்ப் புலவர்களிடம் போனல் நிகண்டுக்குக் கூட அர்த் தம் தட்டும்படியான வார்த்தைகளை எழுதிக் கொடுப்பர். ஸாமான்ய பாஷையில் எழுதும் தொழில் புலவர்கட்குத் தெரி யாது’ என்கிருர்.
"தமிழ்நாட்டில் நாடகம்" என்ற கட்டுரையில், "அருமையான காட்சிகளை எளிமையான நடையில் கூறவேண்டும்" என்கிருர்.
*"எளிய நடை. எளிய பதம். யாவருக்கும் புரியும் தன்மை. ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ளவனுக்கும் விளங்கும் தன்மை" என்பது கவிதைக்குப் பாரதி கொடுத்த புதிய இலக் கணம். *ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ளவன்" என்பது பாரதி வைத்த ஓர் எல்லைக்கோடு. இவனையும்தாண்டிப் பாமர னுக்கும் விளங்கக் கூடியதாக அவர் பாடினர். அவரது இசைப் பாடல்கள் தந்தனர் சரித்திரக் கீர்த்தனை ஒட்டியமைந்த பாடல் கள் யாவும் படிப்பறியாப் பாமரனுக்கான பாடல்கள் ஆகும். சென்னைக் கடற்கரையில் அவர் பாடிய தேசபக்திப் பாடல்கள் படித்தோரையும் படியாதோரையும் கவர்ந்த பாடல்களாகும். "மக்களிடமிருந்து படிப்பது அதை மக்களுக்குத் திருப்பித்தருவது" என்பது 20 ஆம் நூற்ருண்டின் பிரசித்தமான கோட்பாடாகும். பாரதியின் பல பாடல்களின் மெட்டுக்களும் சொற்களும் மக்களி டமிருந்து பெற்றனவாகும். குயிற் பாட்டில் அவர் தம்மைக் கவர்ந்த பாடல்களாக ஏற்றநிர்ப் பாட்டு, நெல்லுக்குற்றும் பாட்டு, சுண்ணமிடிப்பார் பாடும் பாட்டு, கும்மிப் பாட்டு ஆகிய வற்றைக் குறிப்பிட்டுள்ளார். "வண்டிக்காரன் பாட்டு, பாம்புப் பிடாரன் பாட்டு, குறத்திப் பாட்டு, முதலிய பாமரர் பாட்டுக் களில் இலக்கணப் பிழைகள் இருப்பினும் கவிதா ரஸம் உண்டு?? என்று குறிப்பிட்டுள்ளார். "தொழிற் பெண்களின் பாட்டு மிக வும் ரஸமானது. சந்தமும் இன்பமும் ஒன்றுக்குப் பாதி நல்ல கவிதை" என்கிழுர்,
யதுகிரி அம்மாள் தனது குறிப்புக்களில், ஒரு நாள் கட்ற் கரையில் மீனவர் வலை இழுக்கும்போது பாரதி அருகில் சென்று அப்பாடலை ரஸித்து, அதனைக் கேட்டு எழுதித் தமக்கு விளக்கிய தாகக் கூறியுள்ளார். அவருடைய "பாருக்குள்ளே நல்ல நாடு" என்ற புகழ் பெற்ற பாடல், ரெயிலில் பிச்சை எடுக்கும் பிச்சைக் காரி பாடிய ஹிந்துஸ்தானி மெட்டில் இருந்து பிறந்தது என் கிருர் செல்லம்மா பாரதி. ”மாயச் சூதினுக்கே ஐயன் மனமிரங்கி விட்டான்" என்று பாஞ்சாலி சபதத்தில் வரும் பாடல், 'மாயக் காரணம்மா கிருஷ்ணன் மகுடிக்காரனம்மா’ என்று பாசிமணி விற்கும் குறத்தி பாடும் பாடல் மெட்டிலிருந்து பிறந்தது என்பர். இவ்வண்ணம் மிக மிகச் சாதாரண மக்களிடமிருந்தெல்லாம் இசை வடிவங்களைப் பெற்ருர் பாரதியார். தமது முன்னுேரிலும்
18

இக் கொள்கைகட்குப் பொருந்தி வந்த சித்தர்கள். கோபால கிருஷ்ண பாரதி, அருணுசலக் கவிராயர், இராமலிங்க சுவாமி கள் போன்ருேரையே ஆதர்சமாகக் கொண்டார். ر
சிந்து, கிளிக்கண் ணி,ஆனந்தக்களிப்பு, பள்ளு, குடுகுடுப்பைக் காரன் பாட்டு, அம்மாக்கண்ணுப் பாட்டு, குறத்திப் பாட்டுக் பாம்புப் பிடாரன் பாட்டு, சித்தர் பாட்டு போன்ற நாட்டுப் பாடல் வரிகளையும், போச்சுது, ஆச்சுது, படிச்சவன், பயித்தி யம், மண்டி, கருப்பு, பொந்து, சதம், அப்பன், வருகுது,தொல் யுது, சொல்லு, பெருகுது, தெரியுது, வாத்தி, இம்மி, அத்தை, சங்கதி போன்ற பாமரப் பேச்சு வழக்குச் சொற்களையும் தன் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் கையாளுகிருன் பாரதி.
இவ்வகையில் மக்களிடமிருந்து வடிவங்களையும் அனுபவங் களையும் பெற்று அவற்றை மக்களுக்குத் திரும்ப வழங்கியவன் பாரதி என்பதில் அதிகம் பிழையில்லைப்போலப் படுகிறது.
இன்று மொழி பெயர்ப்பு ஒரு கலையாகிவருகிறது. Technique of Translation என்ற தலைப்பில் பல்கலைக் கழகத்தில் வினத் தாள்களும் தயாரிக்கப்படுகின்றன. நிறைய ஆங்கில நூல்களை வாசித்தமையாலும், மொழிபெயர்ப்புக்களைச் செய்தமையாலும் பாரதிக்கு இது மிகவும் கைவந்த கலையாக இருந்தது. புத்தம் புதிய கலைகள் மெத்த வளருது மேற்கே என்று கூறி, "சென்றிடு வீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்” என்று கூறியவர் பாரதி. பிறநாட்டு நல்லறிஞர் சாத் திரங்கள் தமிழ் மொழியில் பெயர்க்கையில், இறவாத புகழு டைய தமிழ் நூல்களும் இயற்றச் சொல்கிறன். எத்தகைய மொழிபெயர்ப்பு வேண்டுமென்பதை அவனது பின்வரும் கூற்று புலப்படுத்துகிறது.
"முதலாவது எழுதப்போகிற விடயத்தை இங்கிலீஷ் தெரி யாத ஒரு தமிழனிடம் வாயினுற் சொல்லிக் காட்டு. அவனுக்கு நன்ருக அர்த்தமாகிறதா என்று கேட்டுக்கொண்டு எழுது. அப் போதுதான் நீ எழுதும் எழுத்து தமிழ் நாட்டுக்குப் பயன்படும்" என்கிருர்.
இவ்வகையில், 'நன்மையு மறிவும் எத்திசைத் தெனினும், யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ்வீராயின் அச்சு மொன்றில்லை" என்கிருர். பிரான்சிய மொழியிலிருந்து எமில்: வெர்ஹரனையும், வங்காள மொழியிலிருந்து சரத் சந்திரரின் * வங்கமே வாழி" பாடலையும், ஆங்கிலத்திலிருந்து பல மொழி பெயர்ப்புக்களையும், சமஸ்கிருதத்திலிருந்து வேத ரிஷி பாடல் களையும் மொழி பெயர்த்தவர் பாரதி. அவர் கூடுதலாக மொழி பெயர்த்தவை நாட்டுக்குத் தேவையானவையே. அவருடைய
9.

Page 13
மொழி பெயர்ப்புகள் உருவ வளம் மாத்திரமன்று உள்ளடக்க வளமும் மிக்கவை.
இவ் வண்ணம் கலை நோக்கு, கலையின் உள்ளடக்கம், கலையின் உருவம் , கலையின் பயன்பாடு என்பதில் திட்டமான கருத் துக்கள் கொண்டிருந்த பாரதி இத்தகைய கருத்துக்களைக் கூறு பவராக மாத்திரம் நின்றுவிடவில்லை. தானே முன்னேடியாகச் செயற்படவும் செய்தார். நாங்கள் எந்தக் கொள்கைக்கும் தாலி கட்டிக்கொண்டவர்கள் அல்ல. எதனுேடும் சார்ந்தவர்கள் அல்ல என்று பேசும் பல கலைஞர்களை நாம் இன்று காணுகிருேம். ஆனல் பாரதியோ ஒரு சார்புக் கலைஞன். (Committed Artist) தன்னை இயக்கங்களுடன் இணைத்துக்கொண்டவன். சுருங்கச் சொன்னல் உலகை வியாக்கியானம் செய்தவன் மாத்திரமல்ல, அதை மாற்றிப் புதியதொரு சமூகத்தைத் தோற்றுவிக்க உழைத் தவனும் ஆவன்.
தொகுத்துக் கூறின், கலைக் கோட்பாடு பற்றிய பாரதியின் கருத்தை மூன்ருக வகுக்கலாம். ஒன்று கலை பயிற்சியால் வரு வது. இரண்டு கலை மதிநுட்பத்தால் வருவது மூன்று கலையுணர்வு கடவுளின் கொடையாக வருவது. கலையின் உள்ளடக்கம் பற் றிய பாரதியின் கருத்தை நான்காக வகுக்கலாம். ஒன்று கலை யின் உள்ளடக்கம் ஆன்மீகம். இரண்டு கலையின் உள்ளடக்கம் அன்ருட நிகழ்ச்சி. மூன்று அதன் உள்ளடக்கம் எதிர்காலச் சுபீட்ச வாழ்வு. நான்கு கலையின் உள்ளடக்கம் மரபோடிணைந்த புதுமை. கலையின் உருவம் பற்றிய பாரதி கருத்தை இரண்டாக வகுக்கலாம். ஒன்று கலையாக்கம், செம்மை, அழகு, தெளிவு: இறுக்கம் மிக்கதாயிருக்கவேண்டும். இரண்டு கலையின் உள்ளடக் கத்திற்கும் உருவத்திற்கும் இயைபு இருக்கவேண்டும். கலை யாருக்கு என்பதில் அவனுடைய கருத்தை இரண்டாக வகுக் கலாம். ஒன்று கலை மக்களுக்கு, இரண்டு பாமர மக்களுக்கு. கலை கலைஞன் பற்றிய கொள்கையில் பாரதி கலைஞன் வாழ்வும் கலை ஞன் கருத்தும் சொல்லொன்று செயலொன்றில்லாமல் இரண் டும் இணைந்திருக்கவேண்டுமெனக் கூறியதுடன், கலை இன்பம் தருவதுடன் மனிதனைச் செயலூக்கம் பெறச் செய்யவும்வேண்டு மென்ற கருத்தும் கொண்டிருந்தான். இக் கருத்துக்களிற் சில இன்றைய சமூகத்துக்குத் தேவைப்படாதவை. பல தேவைப்படு பவை; நம் முன்னேரிடமிருந்து நாம் கற்கவேண்டும். தள்ளுவன தள்ளி நமக்குத் தேவையானவற்றை, கொள்வனவற்றை கொள் ளவும் வேண்டும். பாரதியாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பல.
20

அம்புஜன்"
e சிவந்த பாதையில்.
யாழ். நகரில் அன்றும் அமர்க்களம் ஆரம்பமாகிவிட் டது. மிதிபலகைகளில் நெருங் கியபடி தொங்கும் பயணிகளைச் சுமந்தபடி மினிவான்கள் பிர தான வீதிகளுக்கூடாகப் பறக் கின்றன. ஹோண்களை தொ டர்ந்து அடித்து ஒலியெழுப்பி அலறிக் கொண்டு செல்லும் அவைகளைத் தொடர்ந்து பஸ் கள், கார்கள், மோட்டார் சைக் கிள்கள், சயிக்கிள்களும் முட்டி
மோதிக்கொண்டு செல்கின்றன.
பொதுமக்களும் கிலி கொண்டு ஒடுகின்றனர். பிரதான வீதிக ளெங்கும் புழுதி எழும்புகிறது.
காலையில் அப்பொழுது தான் திறந்த கடைகள், தொ ழிற்சாலைகள், அலுவலகக் கத வுகள் படபடவென்று சாத்தப் படுகின்றன.
பிராதான வீதியில் அமைந் திருக்கும் அந்தக் கண்ணுடித் தொழிற்சாலையின் இரும்புக் கத வுகளும் இழுத்து மூடப்படுகின் றது. அங்கு வேலைசெய்யும் பெருந் தொகையான தொழி லாளர்ர்கள் இளைஞர்களும், பெண்களும் தத்தமது வேலை களை விட்டுவிட்டு கலவரத்துடன் தெருவை அவதானிக்கின்றனர்.
அனல் கக்கும் உலைக்களத் துக்கு முன்னல் நின்று உருகிய கண்ணுடிக் குழம்பை குழாய் களில் எடுத்து ஊதிக்கொண் டிருந்த உதயன் சினத்துடன் குழாயை வீசி எறிந்து விட்டு
முகத்தைச் சுழித்தபடி வரு கிருன்.
வியர்வையில் தோய்ந்து
புளித்துப்போன அவனது உடை யிலிருந்து வீசும் மணம் மற்ற வர்களுக்கு அருவருப்பைத் தரும் என்ற எண்ணத்துடன் வாசலில் கூடி நின்ற தொழிலாளர்களை கைகளால் விலக்கியபடி தெரு வுக்கு வருகிருன். *
*" என்ன நடந்தது'
பதட்டத்துடன் ஒட்டமும் நடையுமாக வந்து கொண்டி ருந்த நடுத்தர வயதுடைய ஒரு
வரைப் பார்த்து உதயன் கேட்
கிருன்,
*அங்கை சூடு நடக்குது. ஏழெட்டு முடிஞ்சுதாம். உதிலை நிண்டு புதினம் பாக்காமை. போங்கோ வீடுகளுக்கு.??
ஓடிவந்த களைப்பினல் மூச்சு வாங்கியபடி இழுத்திழுத்துக் கூறிவிட்டு தொடர்ந்தும் ஒடு கிருர்,
21

Page 14
● "அப்ப பிரச்சனைதான். இண்டைக்கும் வேலையை நிப் பாட்டுவம்' "
உதயனுக்கு அருகே வந்து
நின்ற மனேச்சர் முடிவைக் கூறுகிருர், தொழிலாளர்கள் அவசர அவசரமாகப் புறப்படு
வதற்காகக் கலைந்து செல்கின் றனர். உதயனும் அவனைப் போல சயிக்கிளில் செல்லும் அவ னது நண்பர்களும்தான் மனேச்
சருடன் இன்னும் வெளியே நிற்
கின்றனர்.
அந்த மாதத்திலேயே ஆரு வது நாளாக அநத தொடர்கிறது. ஒரு பக்கத்தில் மக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு நிலை; போன்று அன்ருடம் உழைத்து உண்ணும் தொழிலாளர்களின் அவல நிலை. எதுவுமே செய்ய முடியாத நிலையில் வெறிச்சோ டிப்போகும் அந்த வீதியையே உற்றுப் பார்த்தபடி விறைத்து நிற்கிருன் உதயன்,
அவனது உழைப்பு வயிற்றை நிரப்பவே போதாமல் இருந்த போது வீட்டு வாடகை, தங்கை யின் படிப்புச் செலவு, ரியூசன் செலவு எல்லாமே மலையாக வளர்ந்து அவனது ஆசாபாசங் களைமட்டுமல்ல அத்தியாவசியத் தேவைகளையே தவிர்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவனைத் தள்ளியது.
முன்பெல்லாம் பாணுக்கு இரண்டு சதம் விலை ஏற்றினலே தெருவெல்லாம் போஸ் ர்கள்,
22
ஓட்டம்
மறுபக்கத்தில் அவனைப்
"#Tóー
நாடெல்லாம் எதிர்ப்பு இயக்கங் கள். அவன் கூட தனது நண்
பர்களுடன் பசை வாளியையும்
இழுத்துக்கொண்டு பல இரவுகள் நகரவிதிகளில் அலைந்திருக்கிருன்.
இப்பொழுதுகூட சுவர்களை மறைக்கும் பெரும் சிகப்புச் சுவ ரொட்டிகள் எங்கும் காணப்பட் டாலும் தொழிற்சட்டத்துக்குட் பட்ட சாதாரண உரிமைகளும் மீறப்பட்டு முதலாளிமார்களது மனச்சாட்சியை நம்பி வாழ வேண்டியநிலைக்கு அவர்கள் தள் ளப்பட்டிருந்தனர். வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கமுடியாமல் வீட்டைவிட்டுத் தொழில்பார்க்க வந்த பெருந் தொகையான பெண்கள் குறைந்த ஊதியத் துடன் வேலை செய்தனர். அவ னது தொழிற்சாலையில் இரவிற் கூட பெண்கள் வேலைக்கு அமர்த் தப்பட்டனர். இதையெல்லாம் நினைக்கும் போது ஒரு உண்மை மட்டும் அவனுக்குப் புலப்படு வதை அறிந்தான்.
மாறிய கோஷங்களைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்ட வளர்க்க வேண்டியதை வளர்த்து ஒழிக்கவேண்டியதை ஒழித்து தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு வந்தது. அவனைப் போன்ற நேர்மையாக உழைத்து உண்ணும் தொழிலாளர்களுக்கு இருந்துவந்த சிறிதளவு உரிமை களும் பறிக்கப்பட்டு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு வரு வதை உதயன் உணர்ந்தான்
காலையில் அவன் போட் டிருந்த வியர்வையூறிய அந்தக்

ாற்சட்டையைக் கண்டு விட்டு ,
அவனது தங்கை கூறிய வார்த் கைள் நினைவுக்கு வருகின்றன.
உதயன் நாள் தவருமல் போட்டுக்கொண்டுவரும் நெக்கி நிறம் மாறிப்போன காற்சட் டையைக் கண்டு, பாஷன் மாறி யதால் தான் போடாமல் விட்டு விட்ட காற்சட்டையில் ஒன்றை கொடுத்திருந்தான் அவனது நண்பன் ரவி. அதைப் பெற்றுக் கொள்ளக் கூச்சமாக இருந்த போதும் தேவையின் நிர்ப்பந் தத்தால் வேலைக்குப்போடலாம் என்ற சாட்டோடு அதனைப் பெற்றுக் கொண்டான்.
இரண்டு மூன்று நாட்களாக அதை அவதானித்த அவனது தங்கை காலையில்தான் வாய் திறந்து சொன்னள்.
*அண்ணை தான்மட்டும் உடுப்பு வாங்கிப்போட்டார்."
அப்படி அவள் கூறியபோ தும் உதயன் அவள்மீது ஆத் திரப்படவில்லை. நிதானமாக உண்மையைக் கூறிய போது தனது தவறை உணர்ந்து அவள் அழ ஆரம்பித்துவிட்டாள்.
தங்கச்சி. அழாதை. ஒவற்றைம் செய்தாவது இந்த மாதம் உடுப்பு வாங்கித்தாறன்’
காலையில் இப்படிக் கூறித் தேற்றிவிட்டுத்தான் வேலைக்கு வந்தான். இன்று வேலையே இல்லை என்றபோது. நாளாந்த வாழ்க்கைப் பிரச்சனைகளே இன் னும் மோசமாவதை உணர்ந் தான்.
கள் வருகுது.
4.
மோசடிகள்
அறிவியல், சமயம், அர சியல், சமூகம் - இவை சம்பந்தப்பட்- எல்லா * வாசகங்களுக்கும் பின்னல் ஏதாவது ஒரு வர்க்கத்தின் நலன்கள் இருக்கும். இதை கண்டுபிடிக்கக் கற்றுக் கொள்ளும்வரையில் அர சியலில் மக்கள் மோசடிக் கும், சுயமோசடிக்கும் எப் போதுமே பலியானர்கள், இனியும் பலியாவார்கள்.
மே மாதத்திலை கன லிவு எல்லா நாளும் வேலை செய்யவேணும்"
உடைகளை மாற்றி புறப்படு வதற்கு தயாராக நின்ற தொழி லாளர்களுக்குப் பொதுவாகக் கூறிவிட்டு, கலிங் கிளாஸ்"க் st T is உதயனைப் பார்த்து ஏதோ அர்த்தத்துடன் சிரிக்கிருர் மனேச்சர் .
"ஒ. மே மாதத்திலை மே தினம், வெசாக், தேசியவீரர் தினம். நாலு நாள் இருக்கு"
சேட்டுப் பொத்தானை பூட் டியபடி மனேச்சரின் கூற்றை ஆமோதிப்பதைப் போலக் கூறி விட்டு உதயனைப் பார்க்கிருன் அவனது நண்பன் ரவி,
23

Page 15
உதயனின் மனத்தில் ஏற் பட்ட உறுதி முகத்தில் பளிச் சிடுகிறது;
*"ஒ. டிட்டு மற்ற செய்வம்?
மேதினத்தை விட் நாளிலை வேலை
உறுதியுடன் கூறுகிருன் உத யன். மனேச்சரும் ரவியும் அதே பதில்தான் அவனிடமிருந்து வரும் என்பதை எதிர்பார்த் தனர்.
உதயனின் மனக்குதிரை பதினைந்து வருடங்கள் பின்னேக் கிப் பாய்கிறது.
O மக்கள் பீதியுடன் ஓடிவரும் இதே தெருக்களில். பொலிசா ரின் தடைகளையும் மீறி ஆவே
சத்துடன் முன்னேறிச் சென்ற
அந்த நீண்ட மேதின ஊர்வலம் அவனது மனக்கண் முன் வந்து நிற்கிறது.
அவனது குடும்பத்தின் வறு மைநிலை பாடசாலைப் படிப்புக்கு முடிவுகட்டிவிட சிறுவயதிலேயே அந்தக் சாலையில் வேலைக்கமர்ந்தான். அவனுக்கும் அவனது நண்பன் ரவிக்கும் சீமெந்துத் தொழிற் சாலையில் வேலைசெய்யும் சிவலிங் கத்தின் தொடர்பு ஏற்பட்டிருந் ததினல் அவர்களது போக்கில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.
அந்தவேளையில்தான் அந்த வருட மேதினம் வந்தது.
இன்று இருப்பதைப் போல தொழிலாளர்கள் தங்களது பிரச் சனைகளை மறந்து மேதினத்தில்
24
கண்ணுடித் தொழிற்
மகிழ்சியில் ஆழ, சினிமாத் தியேட்டர்களில் அரைச்சலார் என்ற நிலை அன்று இல்லை. தொழிற்சாலை முதலாளிகள் தான் சிரமப்பட்டு தேநீர் விருந் துகள் இசைக்கச்சேரிகளை நடத்த வேண்டியிருந்தது.
அந்தக் கண்ணுடித்தொழிற் சாலையிலும் அன்று காலையில் தொழிற்சாலை லொறியில் இரி மலைக்குச் செல்வதற்கும், மாலை யில் அப்பொழுது பிரபல்யமா யிருந்த இசைக் கோஷ்டியின் இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடாகி யிருந்தது. முதலாளி ஒரு தமி ழபிமானி. எம். பி. யாக வரு வதற்கும் முயற்சிசெய்துகொண் டிருந்தார்.
உதயனும், ரவியும் தடை செய்யப்பட்ட அந்த மேதின ஊர்வலத்தில் தாங்கள் கலந்து கொள்வதென்று தீர்மானித்த துடன், தொழிற்சாலையில் அன்று நடைபெறும் கேளிக்கை நிகழ்ச் சிகளில் தொழிலாளர்களைப் பூங்குபற்ற வேண்டாமென்று தடுக்க முயன்ருர்கள். முதலாளி வரை இந்த விஷயம் எட்டிய போது மனேச்சர் மிகவும் ஆத் திரமடைந்தார். உதயனே நோக்கி அவர் வந்ததைக் கண் -தும் எல்லாத் தொழிலாளர்
களது முகங்களும் அவனை நோக்
சித் திரும்புகின்றனறது.
'உதயன். என்ன ஏதோ கதைச்சுக்கொண்டு திரியிறீராம் நாளைக்கு இஞ்சை வராட்டி. இனிமேல் வேலை இல்லையெண்டு நினைச்சுக்கொள்ளும்"

கண்ணுடிக் குழம்பு பட்டுப் பொத்தல் விழுந்த சேட்டுடன் குந்தியிருந்து மற்றவர்கள் ஊதிக் கொடுக்கும் கண்ணுடிக் குமிழ் களை அச்சுக்குள் ஏற்று இறுக்கிக் கொண்டிருந்த உதயன் அச்சை அப்படியே விட்டுவிட்டு எழும்பி நிமிர் கிருன்.
**மேதினத்தை எப்பிடிக் கொண்டாட எங்களுக்குத் தெரியும். நாங்கள் நாளைக்கு வரமாட்டம். வேணு மெண்டா. வேலையிலையிருந்து நிப்பாட்டிப் பாருங்கோ'
உதயன் சிறுவனுக இருந்தா லும் உறுதியுடன் நிமிர்ந்து நின்று பதில் சொன்ன விதம் அவன் மீது அவர்களுக்கு ஒரு மதிப்பை ஏற்படுத்தியது.
*சரி நாளைக்குப் பாப்பம்"
மனேச்சருக்கும் அவனது பதிலில் இருந்த நியாயமும் உறு தியும் சிறிது தளர்வை ஏற்படுத் தியிருக்க வேண்டும். சமாளித் துக்கொண்டு திரும்பிவிட்ார்.
அன்று மேதினம்.
அன்று காலையிலிருந்தே வானெலி அடிக்கடி அலறிக் கொண்டிருக்கிறது.
*இன்று மேதின ஊர்வலங் கள் கூட்டங்கள் தடைசெய்யப் பட்டுள்ளது. மீறுவோர் கடுமை யாகத் தண்டிக்கப்படுவர்?"
பத்திரிகைகளும் முன்பக்கத் தில் "அரசின் எச்சரிக்கை", மே தின நிகழ்ச்சிகளுக்குத் தடை
வேணுமெண்டு
வெகுஜனங்களே.
வெகு ஜனங்களே உண்மையான தீரர்கள். நாமோ பலசமயம் சிறு பிள்ளைத்தனமும் அறியா மையும் உடையவர்கள்; இந்த விளக்கம் இன்றேல் மிக அற்ப சொற்ப அறி வைத் தானும் பெறுவது அசாத்தியம்.
- மாஓ
என்ற செய்திகளை தடித்த எழுத் தில் பிரசுரித்திருந்தன.
வழமையான மாட்டுவண் டிகள், நாதஸ்வர மேளதாள ஊர்வலங்கள் நடைபெறவில்லை. மூண்டு மணிக்கு பஸ்ராண் டுக்கு வாங்கோ. எப்பிடியும் ஒரு மைல் தூரமாவது நாங்கள் ஊர்வலம் போகவேணும்"
இரவு சந்தித்த தோழர் சிவ லிங்கம் உதயனிடம் உறுதியா கச் சொல்லிவிட்டுப் போனர்.
முதல் நாளிலிருந்தே ஊர்வ லத்துக்குத் தலைமை தாங்குபவர் களைத் தேடி பொலிசார் அலை கின்றனர். ஊர்வலம் ஆரம்ப LDrts Gurr (5th இடத்தையும் அறிய முயல்கின்றனர்.
உதயனும், ரவியும் இரண்டு மணிக்கே பஸ்ஸில் ஏறி அமர் கின்றனர். பஸ்ஸிலும் பலர் ஊர்வலத்தைப்பற்றிக் கதைக் கின்றனர். உதயன் அந்த முகங் களைத் திரும்பிப் பார்த்துவிட்டு மெளனமாகிவிடுருன்,
25

Page 16
"புரட்சிகர மேதின ஊர் வலம் - சுன்னகம் சந்தையில் இருந்து ஆரம்பம்"
ஆஸ்பத்திரிச்சுவரில் ஒட்டப் பட்டிருக்கும் சிவப்பு மையால் எழுதப்பட்ட பெரிய எழுத்துச் சுவரொட்டியை பஸ்ஸில் இருந் தவர்கள் திரும்பிப் பார்க்கின் றனர்.
"ஊர்வலம் சுன்னகத்திலை இருந்தாம் தொடங்குது"
ஒ. அதுதான் சுன்னுகம் சந்தைக்கை. றக்குகளும் ஜீப் புகளும் நிக்கு?"
பஸ்ஸிலிருந்த இரு முதிய வர்கள் தங்களது கருத்துகளைப் பரிமாறிக்கொள்கின்றனர்.
“ஒரு வேளை சிவலிங்கண் ணைக்குத் தெரியாதோ'
அவர்களின் ரவிக்குச் சந்தேகத்தை கிளப்பு கிறது. மெதுவாகத்தான் கேட் கிருன். V
"உஸ். உதிலை விசயம் இருக்கு. பேசாமை இரும்"
உதயன் குரலைத் தாழ்த்தி
கண்களால் பின்புறம் ஜாடை காட்டியபடி மெதுவாகக் கூறு கிருன். ரவியும் நிலைமையைப் புரிந்தவனுக மெளனமாகிருன்.
பஸ்ராண்டில் அவர்கள் பஸ் லிலிருந்து இறங்கித் தெருவுக்கு வந்ததும் அவர்களை உராய்த்துக் கொண்டு செல்கிருன் ஒரு இளை ஞன்.
"சரியா நாலுமணிக்கு. வின்ஸர் தியேட்டர் சந்திக்கு வாங்கோ'
26
உரையாடல்
அவர்களைத் திரும்பிப்பார்க் காமலே கையில் மடித்துவைத் திருந்த பத்திரிகையால் தனது வாயை மறைத்தபடி மெதுவா கக் சொல்லிக் கொண்டு செல் லும் அவனைப் போலவே அவர் களும் தொடர்பில்லாதவர்கள் போல நடந்துகொள்கின்றனர்.
நேரம் மூன்றுமணி.
முனியப்பர் கோவிலடியை
நோக்கி இருவரும் நடக்கின்ற
னர், வெள்ளை உடையில் அவர் களைப் பின்தொடர்ந்துவந்த ஒரு வர் பின்பு மறைந்துவிடுகிருர்
ஒரு மணித்தியாலத்தை
கோவிலடியிலும் கோட்டை மதி
லும் கழித்துவிட்டு குறிப்பிட்ட இடத்தை நோக்கி அவர்கள் நடக்கின்றனர்.
ஜீப்புகளும் றக்குகளும் நக ரைச் சுற்றி அடிக்கடி வலம்வரு கின்றன.
அந்த வீதி வெறிச்சோடிக் கிடக்கிறது. பூட்டிய கடையின் வெளிப்புறக் குந்துகளில் அங்கு மிங்குமாகப் பலர் குந்தியிருக் கின்றனர். தொருவின் இருமருங் கிலுமுள்ள தியேட்டர் வாசல் களில் மட்டும் ஒரே ஐனக்கூட் டம் நிரம்பி வழிகிறது. ஒரு வேளை சிலர் அபிப்பிராயப்பட் டதைப்போல ஊர்வலத்துக்குத் தலைமை தாங்க எவருமில்லாமல் ஊர்வலம் நின்றுவிடுமேமோ என்ற ஐயம் உதயனிடம் எழு கிறது.
அந்தச் சந்தியை அவர்கள் நெருங்கியபோது பொலீஸ் ஜீப் ஒன்று வேகமாகவந்து நிற்கிறது.

"பொது மக்களுக்கு ஒரு அறிவிவிப்பு. கைக்குண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்களு டன். நகருக்குள் வந்திருக்கும் காடையர் கூட்டம் எந்த நேர மும் உங்கள் மீது தாக்குதல் தொடுக்கலாம். அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டா மென்று பொதுமக்களைக் கேட் டுக் கொள்கிருேம்?"
ஜீப்பில் பொருத்தப்பட்டி
ருந்த ஒலிபெருக்கி அலறுகிறது.
அவர்கள் பாவித்த அந்த வார்த் தைகள் உதயன ஆத்திரப்படுத்
தியதுபோலவே தியேட்டர் வாச
லில் நின்றவர்களையும் ஆத்திரப் படுத்தியிருக்கவேண்டும். அவர் கள் ஆவேசத்துடன் ஜீப்பைச் சுற்றிவளைக்கின்றர்
"மேதினம். வாழ்க...”* தெருவைக்கடந்து அங்கு செல் லக் காலைவைத்த உதயன் இடி
யோசை போன்ற கோஷத்தைக் கேட்டு ஆவலுடன்திரும்புகிருன்.
இரு தியேட்டர்களுக்கும் நடுவே உயர்ந்த பெருஞ் செங்கொடி களின்காட்சி அவனைப் புல்லரிக்க வைக்கிறது. கொடிகளை உயர்த் தியபடி கோபாவேஷத்டன் குதித்து முன்னேறிவரும் அந்த வெகுஜனப் பேரலையைக் கண்ட தும் தனித்து நின்ற பொலீஸ் ஜீப் ஓடி மறைகிறது.
*அடக்கு முறைக்கு. அஞ்ச Lorrl GSLT h" m
மாலை நேரத்தின் மங்கிய
வெய்யிலில் செங்கொடிகள் கள் காற்றில் அசைந்து பள ப்ளக்க. நகரை அதிரவைக்கும் கோஷங்களோடு ஊர்வலம் நீண்டு தொடர்கிறது. உதய
தன் மாஸ்ரர்
னும், ரவியும் அதற்குள் சங்கம மாகிவிடுன்றனர்.
அவனது ஊரிலிருந்து கிளி நொச்சிக்கு விவசாயம் செய்யச் சென்ற சற்குணம், சீவல் தொ ழிலாளி சண்முகம், லோகநா இப்படி ஊரி லுள்ள பலரது முகங்களை ஊர் வலத்தில் கண்டதும் உதயன் மேலும் உற்சாகமடைகிருன்,
ஊர்வலம் பஸ்நிலையத்தைச் சென்றடைந்த போது பெருந் தொகையான மக்கள் திரண்டு நின்றுபார்த்து தங்களது ஆதர வைத் தெரிவிக்கின்றனர்.
அங்கிருந்து ஊர்வலம் முற்ற் வெளியை நோக்கித் திரும்பிய போது வேகமாக வந்த பொலீஸ் ஜீப்புகளும் ற்க்குகளும் சந்தியை வழிமறித்து நிற்கின்றன. ஊர் வலம் வேறுதிசையில் திரும்ப அவர்கள் ஏமாற்றமடைகின்ற னர். அப்படி இரு முறை மறித் தும் ஏமாற்ற மடைந்ததனல் ஆத்திரமடைந்த GOL up1 GŷgFitri ஊர்வலத்தை முந்திச் சென்று மறிப்பதற்கு முயல்கின்றனர். பொலீஸ் ஜீப் உறுமிக்கொண்டு முன்னே பாய்கிறது. அதற்கு ஈடுகொடுத்து ஊர்வலமும் வேகத் துடன் முன்செல்கிறது. தெரு வெங்கும் புழுதி எழும்புகிறது.
ஊர்வலம் சத்திரச் சந்தி தாண்டி பொன்னம்மா மில்ல டியை நெருங்கிவிட்டது. இன் னும் சிறிது தூரம் சென்ருல்
முற்றவெளி. அதில் வைத்து அவர்களைக் கட்டுப்படுத்துவது சிரமம் என்பதை உணர்ந்த
பொலீசார் வேகமாகச் செயற் படுகின்றனர்.
27

Page 17
ஊர்வலத்தின் முன்னுல் பாய்ந்து நின்ற ஜிப்புகள் றக்கு களிலிருந்து துப்பாக்கிகளை நீட் டியபடி குதித்திறங்கிய பொலி சார் பாதையின் குறுக்கே வேக மாக அணிவகுத்து நிற்கின்றனர். ஊர்வலத்தின் முன்னணியில் நின்ற தோழர்கள் வந்த வேகத் துடன் அவர்களையும் முட்டிப் பின்தள்ளுகின்றனர்.
பொலீஸ் அதிகாரி gp(U பொலீஸ்கரரிடம் துப்பாக்கியை வாங்கி ஊர்வலத்தில் தலைமை தாங்கிவந்த தோழரின் நெஞ்சில் குறுக்கே வைத்து சிரமத்துடன் தள்ளுகிருர்.
"ஊர்வலம் செல்வது சட்ட விரோதம். உடனடியாகக்
கலைந்து செல்லவேண்டும். இல்
லாவிட்டால் சுடுவதற்கு உத்தர விடுவேன்."
**இது எங்கடை உரிமை. நாங்கள் ஊர்வலம் நடத்தியே தீருவோம்'
உயர்த்திய செங்கொடியை தாழவிடாமல் கைகளில் பிடித்த
படி உறுதியாகச் சொல்கிருர் அவர்.
அவர்களது உறுதியைக்
கண்ட பொலிசார் பலாத்காரத்.
தில் இறங்குகின்றனர். கண். ணிர்ப்புகைக் குண்டுகள் பலத்த ஓசையுடன் வெடிக்க்கின்றன. துப்பாக்கிப் பிடிகள், குண்டாந் தடிகள் ஊர்வலத்தில் சென்ற மக்களின் மீது விழுகின்றன: உடைகள் இரத்தத்தில் தோய் கின்றன. ஆத்திரம் கொண்ட ஜனக்கூட்டம் பொலிசாருடன் மோதுகிறது. கற்களும் கொடித்
28
தடிகளும் ஆயுதங்களாக மாற அந்த இடமே யுத்தகளமாகிறது. உதயனும் கண்ணிர்ப்புகை எரிவையும் தாங்கிக்கொண்டு ஒரு கல்லைத் தேடி எடுத்து குறி வைத்து எறிகிருன். குறி தவற வில்லை. முன்னணியில் நின்ற தோழர்கள் மோசமாகத் தாக் கப்படுவதைக் கண்டு கையில் தூக்கிய மறுகல்லோடு உதயன் முன் செல்கிருன்.
"தோழர் அங்கை போக வேண்டாம். கூட்டம் நடக்கிற இடத்துக்குப் போங்கோ. '
அங்கே வந்த ஒரு இளைஞர் தடுத்தும் நிற்காமல் முன்னே றிய உதயனின் தலையில் பொலீ சாரின் குண்டாந்தடி விழுகிறது. தலையிலிருந்து வழிந்த இரத்தம் உடையை நனைக்கிறது.
அவனைத் தடுத்த அதே தோழரே ஓடிவந்து அவர்மீது விழுந்த ஓரிரு அடிகளையும் தாங் கியபடி இழுத்துச்செல்கிருர்,
முன்னணியில் நின்ற தோழர் கள் கைதுசெய்யப்படுகின்றனர்.
தலையில் போட்ட கட்டுடன்
நகரத்தின் ஒரு பகுதியில் நடந்த அந்த மேதினக் கூட்டத்திலும்
கலந்துவிட்டு ஒரு போராளியின்
உணர்வோடு உதயனும் ரவியும் வீடு திரும்புகின்றனர்.
s
அந்த சிவந்த பாதையில் பெற்ற உணர்வும், உறுதியும் சிறிதும் குலையாதவனுக, எங்கோ கேட்கும் துப்பாக்கியின் அலறல் கள் காதில் விழுந்தபோதும் உத யன் வெறிச்சேடிக்கிடக்கும் அவ் வீதிகளினூடாக நம்பிக்கையு டன் செல்கிருன்.

O GOTfGILIffair பிரச்சனைகள்
O சி. சிவசேகரம் -
ஒரு மொழியில் எழுதப்பட்ட எந்தவொரு படைப்பையும் இன்னுமொரு மொழிப்படுத்துவது சிரமமான காரியம். நல்ல மொழிபெயர்ப்புக்கு மூலத்தின் மொழியிலும், மொழிபெயர்க் கப்படும் மொழியிலும் நல்ல புலமையினதும் அவசியம் பற்றி நம்முட் கருத்துவேறுபாடு இராது. ஆயினும் மொழிபெயர்ப் பின் பிரச்சனைகள் மொழிப் புலமை மூலம் மட்டுமே தீர்க்கப் படக் கூடியனவல்ல. சில பிரச்சனைகள், தரப்பட்ட இரண்டு மொழிகளதும் சமுதாயத்தன்மைகளால் ஆளப்படுவன என்ப தால் சில சூழல்களில் அவை மொழிபெயர்ப்பை ஏறத்தாழ அசாத்தியமான ஒன்ருகவே செய்துவிட முடியும். சில சமயங் களில் ஒரு வார்த்தைப் பிரயோகம் அது பயன்படுத்தப்படும் சூழலையொட்டிய அர்த்தத்தை யுடையதாயும், அச்சூழலுக்குப் புறம்பாக அது பொருளற்ற ஒன்ருகியும் போய்விடமுடியும் என்பதால் மொழிபெயர்ப்பு எனும் மொழிப்புலமை மூலம் தீர்க்கமுடியாததாகி விடுகிறது. ஒரு படைப்பை மொழிபெயர்க் கும்போது மொழி அறிவுக்கும் மேலாக அப்படைப்பு உருவான சமுதாயச் சூழல் பற்றிய அறிவும் படைப்பாளியின் சமுதாயக் கண்ணுேட்டமும் பற்றிய அறிவும் அவசியமாகின்றன. இவ் வளவும் படைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள அவசிய மானவை. மொழிபெயர்ப்பில் ஏற்படும் அடுத்த பிரச்சனை நாம் சரியாகவே புரிந்து கொண்டதை இன்னெரு மொழியில் எடுத் துரைக்க முடியுமா என்பது.
மொழியின் சமுதாயச் சார்பான தன்மையையும் காலத்தை யொட்டியே வளரும் அதன் தன்மையையும் உணர்ந்துகொண் டால் சில கருத்துக்களை, ஒரு மொழியில், அம்மொழி உள்ள படியே உள்ளவாறு எடுத்துரைப்பது சாத்தியமில்லாமற் போய் விடுகிறது. மொழி என்பது அதன் பாவனையாளர்களைச் சார்ந்த ஒன்று. மொழி பாவனையாளர்கட்கு அப்பாலாகின்ற போது இயக்கமற்ற ஒன்ருகிவிடுகிறது. பாவனையாளர்களுக்குப் பரிச்சய மற்ற அவர்களாற் தெரிந்துகொள்ள முடியாத எதுவுமே பாவனையாளர்களது மொழிக்கு வெளியே நின்றுவிடுகின்றன.
29

Page 18
பாவனையாளர்கள் அறியவல்ல ஒன்றை மொழிக்குள் கொண்டு வரப் பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. வழக்கில் உள்ள சொற்களில் நெருங்கிய பொருளுடைய சொல்லை (அல் லது சொற்ருெடரை) உபயோகித்தல், சமகால மொழிவழக் இல் உள்ள (அல்லது மொழியில் உள்ளதாக ஏற்றுக்கொள்ளக் கூடிய, ஆனல் வழக்கொழிந்து போன ) சொற்களின் அடிப் படையில் புதிய சொற்களை ஆக்கல், பிறமொழிச் சொல்லைத் தமிழ்ப்படுத்தல், பிறமொழிச் சொல்லை அது பரிச்சயமான வாறே பயன்படுத்தல் போன்றன மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமன்றி, மொழியை உபயோகிக்கும் மற்றவர்களும் அறிந்த உத்திகளே. இவை ஒவ்வொன்றிலும் பிரச்சனைகள் உள்ளன. ஆயினும் மொழிபெயர்ப்பு, அது சாத்தியமாக, இவ்வாருன ஒரு செயற்பாட்டை நிர்ப்பந்திக்கிறது.
ஒரு சொல்லைப் புதிதாகப் புனைந்தோ புகுத்தியோ ஆயிற்று என்பதோடு பிரச்சனை தீர்ந்துவிடுவதில்லை. அச் சொல் குறிக்க எண்ணியதைக் குறிப்பதாக வாசகனுல் புரிந்துகொள்ளப்படு கிறதோ என்பது நிச்சய் மற்ற ஒன்ருகிவிடுகிறது. குறிக்க எண் ணிய கருத்து வாசகனுக்குப் பரிச்சயமான ஒன்முக இல்லாத வரையில் அண்ணளவான எதையோ சுட்டிக்காட்டுவதற்கு அப்பால் புதிய வார்த்தை வேறெதையுமே செய்வதில்லை. ஒரு நிலை இது குரு டனுக்குப் பால் காட்டியமாதிரித் தோன்றலாம். ஆயினும் இவ்வாருன சுட்டுதல் இல்லாமல் தரப்பட்ட ஒரு மொழி மூலம் புரிதல் என்பது சாத்தியமில்லாமல் போகிறது. புகுத்தப்பட்ட சொல் குறிக்கும் மூலக் கருத்து, அதனுடன் பரிச்சயமானேரின் தொடர்பு, அச்சொல் குறிக்கும் கருத்தில் அதன் தொடர்ச்சியான பிரயோகம் என்பன அச்சொல்லுக்குக் காலப்போக்கில் அதன் பொருளையும் பயன்பாட்டையும் நிறுவு கின்றன ஆயினும் மூலத்தில் அது குறிக்க எண்ணியதும் இறுதி யில் அது குறிப்பதும் மிகவும் வேறுபட்ட விஷயங்களாகிவிட வும் இடமுண்டு. (இது வேறு பிரச்சனை);
சில சூழ்நிலைகளில் மூல மொழியில் நுண்ணிய வேறுபாடு களைக் காட்டுமாறு பல சொற்கள் ( தோற்றத்தில் நெருங்கிய பொருளுடையனவாகவோ ஒன்றையே குறிப்பனவாகவோ ) இருக்கலாம். ஒரு சொல்லை உபயோகிப்பவர் அந்த நுண்ணிய வேறுபாடுகளைக் கருத்திற்கொண்டே அச் சொல்லைத் தெரிந் தெடுத்திருக்கவோ, மாருக, அச் சொல்லின் ஒசை அல்லது வேறு பயனுள்ள இயல்பு கருதியோ அதைத் தெரிந்தெடுத் திருக்க முடியும். இவ்வாருன ஒத்த பொருளுடைய பல சொற் கள் ஒவ்வொன்றுக்குமுரிய தனித்தனியான சொற்கள் இன் ணுெரு மொழியில் இருக்க அவசியமில்லை. இத்தகைய சொல்
30

வளம் சமுதாயச் சூழல் தொடர்பான ஒன்றே என்பதால் வெவ்வேருன சொற்களின் அவசியம் சமுதாய ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படும் வரை ( அதாவது அவை குறிக்கும் நுண்ணிய வேறுபாடுகளை அடையாளங் காண்பதன் அவசியம் உணரப் படும் வரை ) இவற்றுடன் தொடர்பான மொழிபெயர்ப்புப் பிரச்சனை தீர்க்க முடியாத ஒன்ருகவே இருக்கும். மொழி மாற் றம் சமுதாய மாற்றத்தையொட்டி ஏற்படுவதால் ஒரு காலகட் டத்தில் காணுதிருந்த நுண்ணிய வேறுபாடுகள் பின்னெரு கால கட்டத்திற் காணப்படவும் வலியுறுத்தப்படவும் இடமுண்டு. அவ்வாறே ஒரு காலகட்டத்தில் வலியுறுத்தப்பட்ட நுண்ணிய வேறுபாடான பிரயோகங்கள் பின்னெரு காலகட்டத்தில் புறக் கணிக்கப்படவும் கூடும்.
எனவே, மொழிபெயர்ப்பின் பிரச்சனை பொருத்தமான வார்த்தைகளைப் பொறுக்கியெடுத்துப் போடுவதுடன் தீர்ந்து விடுவதல்ல. மூலத்தினின்று மொழிபெயர்க்கப்படும் கருத்துக்கள் அவை மொழிபெயர்க்கப்படும் மொழிக்கும் அம்மொழி வழங்கும் சமுதாயத்திற்கும் பரிச்சயமானவையா, உடனடியான சூழலில் பரிச்சயமாக்கப்படக் கூடியனவா என்ற கேள்விகள் எழுகின்றன. இவற்றின் தீர்வு மொழிபெயர்ப்பாளனுடைய பணியை ஒரு மொழியிலுள்ள வாக்கியங்கட்கும்ாற்று வாக்கியங்கள் தேடுகிற ஒன்ருக மட்டுமன்றிப் பரிச்சயமற்ற புதிய சிந்தனைகளையும் கருத் துக்களையும் பரிச்சயப்படுத்துகிற ஒன்முக விரிவுபடுத்துகின்றன. புதிய சொற்கள் சொற் பிரயோகங்கள் என்பனவற்றைப் புகுத்தும் தேவைகள் மொழி பெயர்ப்பாளனை மற்ற மொழி பெயர்ப்பாளர்கள் வாசகர்கள் ஆகியோருடனன தொடர்பு மூலம் மொழியின் மாற்றத்திலும் வளர்ச்சியிலும் பங்களிக்கு மாறு நிர்ப்பந்திக்கின்றன.
சொற்களின் தெரிவுபற்றிய பிரச்சனை தீர்ந்தவுடன், குறைந்தபட்சம் விஞ்ஞானம், மெய்யியல், சட்டம் போன்ற அறிவுத்துறைகளில் மொழி பெயர்ப்புப் பிரச்சனை தீர்ந்துவிடு கின்றது என்ற கருத்துக் கற்ருேர் மத்தியிலும் பரவலாக இருந்து வந்துள்ளது. பாட நூல் மொழி பெயர்ப்புக்களில் கலைச்சொற்களை உருவாக்குவதில் காட்டப்பட்ட ஆர்வம் மொழி பெயர்ப்பின் பிற அம்சங்களில் காட்டப்பட்டதாகத் தெரிய வில்லை. ஆங்கிலப் பதங்களுக்குரிய தமிழ்ப் பதங்கள் வழங்கப் படுவது முக்கியமான பணியே. எனினும் அந்தப் பதங்கள் குறிக்கும் கருத்து சரியாக தமிழில் விளங்கிக் கொள்ளப்படு கின்றமை பிரயோகம் சார்ந்த ஒன்று என்பது முக்கியமானது. சமுதாய வழக்கிற்குப் புறம்பான புதிய சிந்தனைகளை பரிச்சயப் படுத்தப் புதிய சொற்களைப் புகுத்துவதும் அவற்றைப் பாட
31

Page 19
நூல்களில் புகுத்துவது மட்டுமே போதுமானவையல்ல. அந்தந் தத் துறைகள் சார்ந்த சிந்தனை முறைகளும் மரபுகளும் கூடவே பரிச்சயமாவது அவசியமாகிறது. அல்லாத பட்சத்தில் தமிழ்ச் சொற்கள் ஆங்கிலச் சொற்களுக்குரிய தற்காலிகமான பிரதி யீடுகளாக மட்டுமே இருந்துவிடுகின்றன. முக்கியமான சிந்தனை களும் ஆக்சங்களும் மூல மொழியான ஆங்கிலத்திலேயே நிகழு மாறு நேர்வதுடன் தனியே தமிழில் செயற்படுமாறு வரைய றைப்பட்டவர்கள் பின்தங்குமாருன நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது. விஞ்ஞானம் மற்றும் அறிவியற் துறைகளில் ஆங்கில மொழி பேசுவோரிடை ஏற்பட்டுள்ள துரித வளர்ச்சி தமிழிற் செயற் படுவோரிடை ( தமிழ்ச் சமுதாயத்தில்) இல்லாமை இப் பிரச் சனையை உக்கிரப்படுத்துகிறது. எனினும், தமிழ் மொழியில் கலைச்சொல்லாக்கத்தில் சிறிது விறைப்பற்ற கொள்கையும், பேச்சு வழக்கு மொழியினது தேவைகளையும் தன்மையையும், அனுசரித்துச் செயற்படும் போக்கும் தமிழில் புதிய சிந்தனை கள் பரவுவதற்கு உதவியாக இருந்திருக்கும். சொற்களின் தெரிவு என்பது ஒரு திட்டவட்டமான தீர்மானம் அல்லது சட்டமியற் றல்மூலம் எக்காலத்துக்குமாகச் செய்யப்படும் ஒன்றல்ல. ஒரே ஆங்கிலப் பதத்தைக் குறிக்கும் பல சொற்களுக்கு பிரதியான சொல்லாக தமிழில் முடிவிற் பயன்படும் சொல் பலவேறு சூழ் நிலைகளால் நிர்ணயமாகிறது. கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் என்ற சொற்கட்குப் பல்வேறு தமிழ்ப் பிரதியீடுகளையும் புறக்கணித்து ஆங்கில வார்த்தைகளைத் தழுவிய சொற்களே வழக்கில் மிஞ் சின. கொம்ரேட் என்ற சொல்லுக்கு தோழர் என்ற சொல்லே ஆங்கில மூலத்தைத் தழுவிய சொற்களை மீறி நிலைத்துள்ளது.
நவீன மெய்யியல் தமிழுக்குப் புதியது. எனவேதான் தமிழ் எழுத்தில் நவீன சிந்தனைகளைப் படைப்பது எளிதான ஒன்ருக இருக்கவில்லை. ஆங்கில மூலத்தில் மிகவும் இலகுவாக அமை கிற வாக்கியங்கள் தமிழ் வடிவத்தில் மிகவும் விறைப்பாகவும் செயற்கையாகவும் அமைவதை நாம் அவதானித்திருக்கலாம். இது மொழி பெயர்ப்பில் உள்ள பிரச்சினை, மாற்று வார்த்தை கள் காண்பது தொடர்பானது மட்டுமல்ல வாக்கிய அமைப் புத் தொடர்பர்னதும் கூட என்பதையும் உணர்த்தும். இதைவிட சில சமயங்களில் கருத்துக்களை முன்வைப்பதில் ஆங்கில மொழி வழக்கிற்குப் பரிச்சயமான முறை தமிழுக்கு முற்றிலும் அந்நிய மான ஒன்ருக அமைவதும், நவீன சமுதாய வளர்ச்சியை யொட்டி ஆங்கில மொழியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட மாற்றங்களை யொத்த மாற்றங்கள் தமிழில் ஏற்படாமையும் மொழி பெயர்ப்புக்களைச் சிக்கலானவையாக்குகின்றன. இப் பிரச்சனைகளின் தீர்வு தமிழ்ப்பேசும் சமுதாயம் நவீன சிந்தனை
32

யுடன் பெரிதும் பரிச்சயமாகி அச்சிந்தனைகள் இலகுவான அன்ருட மொழி வழக்கில் பரிமாறப்படக்கூடிய சூழ்நிலையிலேயே சாத்தியமாகும். ' அதாவது அப் பிரச்சனைகளின் தீர்வு சமுதாய வளர்ச்சியுடனெட்டிய மொழி வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சுருங்கக் கூறின் ஒரு சமுதாயத்தின் நடைமுறையுடன் தொடர்பற்ற ஒரு அயலான கருத்தை அச் சமுதாய நடைமுறைக்குரிய மொழியிற் குறிப்பது சிக்கலான தாகவே இருக்கும்.
நவீன மேற்கத்திய சிந்தனைகளைத் தமிழிற் தருவதன் முக் கிய பிரச்சனை தமிழ் மொழியின் அடிப்படையான பலவீனம் ஏதேனும் தொடர்பானதல்ல, சமுதாய ரீதியான பலவீனம் தொடர்பானதே. சமுதாயத்தில் புதிய சிந்தனைக்கான தேவை யும் தேடலும் பரவலாகும் பொழுது மொழியும் அதற்கேற்பத் தன்னை வளர்த்துக் கொள்ளவே செய்யும்.
ஆக்க இலக்கியங்களில் மொழி பெயர்ப்பின் பிரச்சனை வேருெருவகையில் சிக்கலானதாகிறது. சொற்களுக்கும் சொற் பிரயோகத்துக்கும் உள்ள சமுதாய முக்கியத்துவம் ஆக்க இலக் கியங்களில் முதன்மை பெறுகின்றது. சொற்களும் சொற்ருெடர் களும் அகராதி அர்த்தத்திற்கும் புறம்பான முறையில் விஷேட மான அர்த்தங்களுடன் பாவிக்கப்படுவதை நாம் அறிவோம். இவ்வாருன வழக்குகள் பிரதேச, சமுதாயத் தொடர்பான மாறுபாடுகட்குட்படுவதையும் குறிப்பிடவேண்டும். பழமொழி கள், உவமைகள் என்பன ஒரு குறிப்பிட்ட மொழிவழக்கில் செயற்படும் வலிமையை மொழிபெயர்ப்பில் இழந்துவிடுகின்றன: , சில சூழ்நிலைகளில் மாற்று வாக்கியங்களும். சொற்ருெடர் களும் பயன்படக்கூடுமாயினும் மொழிபெயர்ப்புப் பிரச்சனையை முற்ருகத் தீர்ப்பது எப்போதுமே சாத்தியமல்ல. வட்டார, வழக்குச் சொற்பிரயோகங்கள் மொழிபெயர்ப்புகளில் 616) விழந்து விடுகின்றன. அங்கதம், நையாண்டி போன்றன ബ டையான சொற் பிரயோகங்களுடன் சேர்ந்து வரும்போது மொழிபெயர்ப்பு மேலும் சிரமமாகின்றது.
இலக்கியப் படைப்புகளை அவற்றின் உடனடியான சமுதா யச் சூழலுக்கு வெளியே (கால அளவிலும், ஸ்தல அள விலும்) வைத்து நோக்கும்போது படைப்பாளியையும், சமு தாயத்தையும் அவர்கட்கிடையிலான உறவையும் முற்ருகப் புரிந்து கொள்வது எளிதல்ல. எனவே ஒரே மொழியிலேயே ஒருவரது படைப்பு அவரது காலத்துக்கும் சூழலுக்கும் அந்நிய மான ஒருவரால் தவருகவே விளங்கிக் கொள்ளப் படுவதை உணர்த்த பண்டைய தமிழ் இலக்கியங்களை வியாக்கியானஞ்
33

Page 20
செய்வதில் உள்ள முரண்பாடுகளே போதுமானவை. சமகால இலக்கியங்களிலேயே இவ்வாறன பிரச்சனை உள்ளபோது சூழ ஆக்கும் புறம்பான காலத்தால் வேறுபட்ட படைப்புக்களில் இவை வியப்புக்குரியனவல்ல.
ஒரு படைப்பின் சூழல் பற்றிய சரியான அறிவு இருந்தா லும், மொழிபெயர்ப்பாளர் அதைச் சரியாக உணர்த்தாதபட் சத்தில் ஒரு மொழி பெயர்ப்பைப் படிக்கும் வாசகர் அதைத் தன் சூழலினதும் அனுபவங்களினதும் அடிப்படையிலேயே வியாக்கியானம் செய்யவும், அதை தவருகவே புரிந்துகொள்ள வும் மிகுந்த இடமுண்டு. எனவே பல சமயங்களில் அடிக்குறிப் புக்களும் விளக்கங்களும் மிகவும் அவசியமானவையாகின்றன.
w ஒரு படைப்பின் சமுதாயச்சூழல், அதன் சமுதாய நிலைப்பாடு, அதன் கலாச்சாரப் பின்னணி போன்றவை மொழிபெயர்க்கப் படும் மொழிபேசும் சமுதாயத்தினது அல்லது சமுத்ாயப் பிரி வினது அநுபவங்களுடன் பொதுவான பண்புகளை உடையதாக உள்ளபோது மொழிபெயர்ப்பின் காரணமான இழப்புக்களும் விகாரங்களும் குறைக்கப்படலாம். ஆயினும் முற்ருகத் தவிர்க் கப்படமுடியுமோ என்பது வேறு விஷயம். ஆயினும் ஒரு மொழி யினதும் அது சார்ந்த கலாச்சாரத்தினதும் சமுதாயத்தினதும் விருத்தியில் மொழிபெயர்ப்புக்களது முக்கியத்துவம் புறக்கணிக் கத்தக்கதல்ல.
மொழிபெயர்ப்புக்கள் தம் பிரச்சனைகளைத் தீர்ப்பதன்மூலம் மட்டுமன்றி தம் பிரச்சனைகள் காரணமாகவும் மொழிவளர்ச் சிக்குப் பங்களிக்கின்றன. அதே போன்று ஒரு மொழிபெயர்ப் பாளன் மொழிபெயர்ப்பின் குறைபாடு காரணமாக மூலத்தின் சில அம்சங்களை இழந்துவிடுகிறபோதும் தன் திறமை மூலம் அந்த இழப்பைக் கால பூர்வமாக, ஒரு பகுதியேனும், ஈடு செய்யமுடியும். ஆயினும் மொழிபெயர்ப்பாளர்கள், முக்கிய மாக ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள், மொழிபெயர்ப் பின் சிக்கல்களை மனதிற்கொண்டு செயற்படுவது பயனுள்ளது.
* நோயாளி யானை
நெஞ்சுத் தடிமனுல் துன்பப்பட்டுக் கொண்டிருந்த யானைக்கு ஒரு மருந்துமே பலனளிக்காததைக் கண்ட நீர் நாய் ஒன்று தென்புற மலையிலிருந்து வந்த வைத்தியரான தெள்ளிடம் அதனை ஒப்படைத்தது. யானையின் தோலில் மூன்று நாட்களைக் கழித்தபின் தெள்ளின் பிடி தளர்ந்தது. தெள்ளு கூறியது 'நீர் நாய் என்னை ஏமாற்றிவிட்டது. இங்கே யானையே இல்லையே."
- சீனத்து கிராமியக்கதை
34

ஓ உண்மை சொன்னல் உதை
நான் கண்ட கனவு ஒன்று. - லூசுன்
எனது ஆரம்ப பாடசாலையிலிருந்து கொண்டு கட் டுரை எழுத முயன்றேன். எனது. ஆசிரியரைக் கேட்டேன். *அபிப்பிராயம் வெளியிடல்" என்பதுபற்றி எப்படி எழுது வதென்று.
"அது மெத்தக் கடினம்" என்று தனது மூக்குக் கண் னடியின் ஓரங்களினூடாக ‘என்னைப் பார்த்துக் கூறினர். **உனக்குக் கதையொன்று கூறட்டுமா?" என்ருர்,
வீட்டிலே ஆண் குழந்தை ஒன்று பிறந்துவிட்டால் குடும்பத்தோர் அனைவரும் பூரிப்புக் கொள்வர். மாதம் ஒன்று சென்ற பின்பு வைக்கின்ற விழாவிற்கு வரும் நண்பர் குழாம் குழந்தையை பாராட்டுவாரென எதிர் Lumrri Luri.
வந்தவர்களில் ஒருவர் "இவன் பெரும் தனவந்தன் ஆவான்' என்ருர். அனைவரும் அவரை நன்றியோடு நோக்கினர்.
மற்றவர் ஒருவர் "இவன் பெரிய அதிகாரி ஆவான்? என்ருர், அனைவரும் பூரிப்பும் பெருமையும் கொண்டு அவரைப் பாராட்டினர்.
வேருெருவர் ‘இக்குழந்தை இறப்பது உறுதி" என் ருர். எல்லோருமாக அவரை நன்முகத் தாக்கினர்.
பிறந்த குழந்தை இறப்பது என்னவோ உண்மை. ஆனல் பெரும் தனவந்தணுவதோ - அதிகாரியாவதோ நடக்கக்கூடியதென்று யார் கண்டார்? முழுப் பொய்யை அல்லவா கூறுகிறர்கள். பொய் கூறினுேர் பாராட்டப் படுகிருர்கள். உண்மை சொன்னவனுக்கு அடியும் உதை
யும். நீ ள்ன்ன கருதுகிருய் என ஆசிரியர் என்னைக்
கேட்டார்.
"ஐயா எனக்குப் பொய் சொல்லவும் விருப்பமில்லை.
அதே நேரம் உண்மையைக் கூறி அடிவாங்கவும் சக்தி
யில்லை. என்ன செய்யலாம்?’ என்றேன்.
ஆசிரியர் கூறினர், "குழந்தையைத் தூக்கி முத்த மிட்டு “இவன். இவன். இஈ. இச. இவன். இவன்." என்று இழுத்துக் கொண்டு போ. உன் கடமை
முடிந்து விடும்' என்ருர்,
35

Page 21
மழை நாளில்.
O சோலைக்கிளி --
நேற்றிரவு நல்லமழை கீரைப் பாம்புக் கூட்டம் போல நிலத்தில் வீழ்ந்த நீரின் கோர்வை எக்கச்சக்கம். . .
எங்கோ தவளை இருந்து கொண்டு இழுத்த இழுவை.
கிழக்கு; மூலைக் குள்ளே முட்டி உடைக்கும் போட்டி நடத்திப் போட்டி நடத்தி
இடிமுழக்கம்.
நேற்றிரவு நல்லமழை!
வளர்ப்பு நாயை வந்து பார்த்தேன். ஐயோ பாவம் படுத்த வாக்கில் பச்சைக் குட்டி செத்துக் கிடக்க மின்னல் ஒன்று மின்னிச் சென்றது.
நல்ல குட்டி! ஆறுமாதம் அன்பைக் கொட்டி வளர்த்த பெட்டை!
கண்டால் போதும் கேவிக் கேவிக் குதியை நக்கும் வாலை ஆட்டும் வலிப்புக் காட்டும் கப்பை அகட்டிக் கறணம் போடும் செத்துப் போச்சு
நேற்றிரவு நல்லமழை
எங்கோ தவளை இருந்து கொண்டு இழுத்த இழுவை.

출 விசாரணை
ஸ்வப்னு
0 நன்றி செம்பதாகை
விடியற் காலையில் வீதியோரமாய் விழுந்து கிடக்கின்றன் அலங்கோலமாக, அவனை யாரென்று தெரியுமோ உனக்கு? எனக்குத் தெரியாது. வெறிபோல் இல்லை, வலிப்போ மயக்கமோ போலவும் இல்லை. முதுகுச் சட்டையில் அப்பிக் கிடப்பது காய்ந்த ரத்தம். ஆகவே அவன் செத்து நெடுநேரம் இருக்கலாம். அந்தச் சட்டையின் கீழே தோட்டா ஒன்று புதைந்து இருக்கலாம் அதை ஜனித்த துப்பாக்கி ஆருக்கு உரியதோ அதை அறிந்தால் அதுவே அவனது அடையாளம். (அவனது ஊரோ பேரோ முக்கியமல்ல) காக்கிச்சட்டைக் காரனுக்குரியதேல் கட்டாயம் அவன் பயங்கரவாதி. போட்டி இயக்கக் காரணுக்குரியதேல் நிச்சயமாய் அவன் சமூகவிரோதி. போதும் இது. அவனைச் சுட்ட துப்பாக்கி யாருக்குரியது என்பதனை அறிதல் இப்போதைக்கு எனக்கும் உனக்கும் இயலமாட்டாது. தேவையும் இல்லை. வெய்யிலேறட்டும் மரண விசாரணை அதிகாரி வரட்டும்.
女
37

Page 22
முருகையன்
() நதிக்கரை மூங்கில்
எந்த மொழியிலும், சொற்கள் தமது முழு ஆற்றலுடன் பிரயோகமாவது கவிதைக் கலையிலேதான். பொதுவாக நில வும் ஓர் அபிப்பிராயம், இது. தமிழ் மொழியைப் பொறுத்தவரை யில், இதனை உதாரணங்கொண்டு விளக்க முற்படுவோர் அநேக மாக எப்பொழுதுமே, பழந்தமிழ்ச் செய்யுள்களையே நாடிச் செல்வதுண்டு* இவ்விதமான பழமைநாட்டத்துக்கு ஒரு கார ணம், புதிய படைப்புகளிலே அப்படிப்பட்ட உதாரணங்களைக் காண்பது அரிதாக உள்ளமை எனலாம்.
கவிஞர் சிவசேகரம் அவர்களின் "நதிக்கரை மூங்கில்" என் னும் தொகுதியில், ஆற்றல் வாய்ந்த சொற்பிரயோகங்கள் சில வற்றை நாம் சந்திக்க முடிகிறது. புதிய தமிழ்ப் படைப்புகளிலி ருந்தும் கவிதைக் கலை நுட்பத்தை விளக்கும் உதாரணங்களை நாம் பெற்றுக்கொள்ளலாமென்பது. தேறுதலளிக்கும் செய்தியாக உள்ளது. அவ்வாருன உதாரணங்கள் சிலவற்றை இங்கு தரு Gauntuh.
ஹிற்லர் டயறிகள் இத்தொகுதியின் இறுதிக் கவிதை. இதன் இறுதி வரி, 'அல்லது புண்ணில் முள்ளால் செதுக்கும்’ என்பது. புண்ணில் முள்ளாற் செதுக்குதல் எத்தனை வேதனை தரும் சிற்பஞ் செதுக்குதல் பற்றித்தான் நாம் அதிகமாக எண்ணிப் பார்ப்போம். புண்ணிலே முள்ளாற் செதுக்குவதென் முல். துன்புறுத்தி இன்பங்காணும் செய்டிசத்தின் சிகர நிலை யின்றே இது '
இத் தொகுதியின் முதலாவது கவிதை ‘ஒரு பெருமழைக்குப் பின் என்பது. "மேற்கே தலை நீட்ட/முயல்கின்ற சூரியனை/ ஏமாற்றும் காற்று./கிழக்கே/வரமறுக்கும் வானவில்" -இவை கவிஞர் காட்டும் காட்சியில் ஒரு துணுக்கு. "வரமறுக்கும் வான வில்" என்ற எண்ணம் கவனிக்கத்தக்கது. வானவில்கள் முழு மையாக வந்து பலிப்பது அடிக்கடி நிகழும் சங்கதி அன்று. எப் போதோ சில நாட்களில், சிலவேளைகளில் மட்டுமே வானவில் * மனம்வைத்து வானத்திலே தன்னைக்காட்டும். மற்றும்படி,வரு வதுபோலத் தோற்றங்காட்டி, வராமல் ஏமாற்றுவதுதான்
38
 
 

வானவில்லின் வழக்கம், "வரமறுக்கும் வானவில்'- மிக மிகப் பொருத்தமான - அருமையான தொடர். . . . . . . .
“பயணம்" என்னும் மற்ருெரு கவிதையில் இரவின் தொடக் கம் சித்திரமாகிறது. "நெடிய தென்னை தலையை விரிக்கப்பேய் கள் அஞ்சி ஒடுங்கி நிற்கும்" என்று கவிஞர் கூறுகிருர், தென்னை மரத்தின் வட்டு, சீவி முடிக்காத விரித்த தலையாக அந்தப் பாதி இருட்டுவேளையிலே தோற்றமளிக்கிறது, கவிஞருக்கு. அந்தப் பேய்க் கோலத்தை மனக்கண்ணுற் காணும் நாமும், இங்கு பிறப் பெடுக்கும் கலை நயத்தைச் சுவைத்துத் தலையசைக்கிருேம்.
"அரசாங்க வாகனங்கள்/ராப்பகலாய் ஓடும். வீதிக ளில்/வீதிக் கரையோரம்/நேற்றிரவு நின்றவனே/இன்று/மதகடி யில்/இல்லையெனில்/வாய்க்காலில்/பிணமாக-I ஒன்ருயோ துண் டாயோ' என ஒரு கவிதை பேசுகிறது! நேற்று நின்றவன் இன்று கிடக்கிருன் பிணமாகக் கிடக்கிறன். இச் செய்தியே எம்மைத் திடுக்கிடவைக்கிறது. அதிர்ச்சி தருகிறது. அத்துடன் நிற்கா மல் மேலும் இரண்டு சொற்களைக் கொண்டு வந்து ஒட்டிவிட்டுப் போகிருர், கவிஞர். "ஒன்ருயோ துண்டாயோ' , ஒன்ருயோ இரண்டாயோ " என்றுதான் சாமானியமாக எவர் வாயிலும் வரும். ஆனல் கவிஞரோ அதனைச் சற்றே மாற்றிவிடுகிருர்"ஒன்றயோ துண்டாயோ. என, "துண்டு’ என்னுஞ் சொல். இவ் விடத்திற் சொல்லுங் கதைகளோ, மிகப் பல.
பல்கலைக் கழக மாணவன் வீரசூரிய செத்துப்போனபின் அவனுக்கு ஒரு நினைவுச் சின்னம் (நடுகல்!) நாட்டப்பட்டது. அத னைச் சொல்லும்போது, "வீரகுரிய நினைவாய் இன்று/நிற்பது கொங்கிறீற் குச்சி ஒன்று" என்கிருர், கொங்கிறீற் குச்சி" என். னும் பிரயோகம் அச் சின்னத்தின் சடத்தன்மையையும் எளி மையையும் செம்மையாகப் புலப்படுத்துகிறது. ஷேக்ஸ்பியர் ஓர் இடத்தில் மனிதனை "forked animal ஆகக் காட்டுவது இவ்வி டத்தில் ஒப்புநோக்கத்தக்கது,
(அ) புண்ணில் முள்ளாற் செதுக்குதல் (ஆ) வரமறுக்கும் வானவில் (இ) தலைவிரிக்கும் பேய்த் தென்னை (ஈ) ஒன்ருயோ துண்டாயோ (உ) கொங்கிறீற் குச்சி என்றவாறு சில மொழிப் பிரயோகங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டோம். இவை போல் அருமையான பிரயோகங்கள் "நதிக்கரை மூங்கிலில், நிறைய உண்டு. மாதிரி காட்டுவதற்கு இவ்வளவும் போதும்.
( II ) w ஆனல். ஒன்றை நாம் மறந்துவிடலாகாது. சொற்பிர யோக அருமைப்பாடு, சிவசேகரம் கவிதைகளின் ஓர் அம்சமாக உள்ள அதே வேளையில், அவருடைய கவிதைகளின் பொருளுரு
39.

Page 23
வம் - அதாவது உள்ளடக்கத்தின் ஒழுங்கமைப்பு - கட்டுறுதி வாய்ந்து செப்பம் பெற்றுள்ளது. -
"வீர சூரிய-வேருெரு கோணம்" என்னும் கவிதையை நாம் எடுத்துக்கொள்ளலாம். 'பாரத மண்ணில் பம்பாய் நகரில்/ பார்ஸி இனத்தவர் கிடத்தும் பிணத்தை/இடுகாட்டுறையும் கழு குகள் தின்னும்" - என்று தொடங்குகிருர், பின்னர், பல்கலைக் கழக மாணவன் வீரசூரியாவின் மரணத்தை - அதனை ஒட்டிய சம்பவங்களை விவரிக்கிருர், இடைநடுவில் ஒரு தடவை சென்னை நகர் பற்றிய குறிப்பும் வருகிறது. 'தமிழகத் தலைநகர் சென்னை நகரில்/வீதி மருங்காய்க் கிடக்கும் பிணத்தின்/கிரியைகட் கென்று கைகளை நீட்டி வழிப்பறி நடக்கும்- என, பிணத்தைக் காட்டி நடக்கும் பிழைப்பினைக் கவிஞர் குறிப்பிடுகிருர், அதன் பின், வீரசூரியாவின் இறப்பை மூலதனமாக்கி இலாபந் தேடு வோரின் செயல்களை விவரித்த பின்னர், இறுதியில் "பம்பாய் நகரின் இடுகாட்டுறையும்/பிணத்தைத் தின்னும் கழுகுகள் என் றும்/மனிதரைக் கொன்று தின்றுள்ளனவோ!"-என முடிக்கிருர் இக் கவிதை காட்டும் களங்களை நோக்கினல், பம்பாய்பேராதனை-சென்னை-இலங்கை (கொழும்பு)-பம்பாய் - என்று அமைவதனை அவதானிக்கலாம். முதலிலே வந்த பம்பாய் கடைசி யிலும் வருகிறது. பிணந்தின்னும் கழுகுகள் தொடக்கத்கிலும் ஈற்றிலும் வருகின்றன. ஆனல் அக் கழுகுகளின் செயலைக்காட்டி லும் அருவருப்பான கொடுஞ் செயல் புரிவோரை இனங்காட் டவே கவிஞர் பம்பாய்க் கழுகுகளைப் பயன்படுத்துகிருர், பிணத் தைக் காட்டி நடக்கும் பிழைப்பினை நினைவூட்டும் பொருட்டு, நம்மை ஒருதடவை "சென்னைக்கு அழைத்துச் செல்கிருர், சிவ சேகரம். காலத்தாலும் இடத்தாலும் பிரிபட்டுக் கிடக்கும் அநு பவக்கூறுகளை, தேர்ச்சிமிக்க கலைநயத்துடன் அருகருகே வைத்து, தமது நோக்கத்தை நிறைவேற்றிவிடுகிருர், கவிஞர்.
‘ஒரு சமகாலச் சிறுவர் கதை’, ‘மாவலியின் மார்கழியில்", "அதிசயங்கள்”, “உன் மண்ணும் என் மண்ணும்", "ஹிற்லர் டயறி கள்", "ஆற்றங்கரையின் அந்தியும் மூங்கிலும்" ஆகிய ஆக்கங் களில், பொருளுருவக் கட்டுறுதி சிறப்பாய் அமைந்துள்ளமையை நுண்ணுணர்வு மிக்க சுவைஞர்கள் அடையாளங் கண்டு கொள்வர்.
( III ) ஆற்றல் வாய்ந்த மொழிப் பிரயோகத்துடன் கட்டுறுதி யான பொருளுருவத்தைப் படைத்து, அறிஞர் சிவசேகரம் உணர்த்த முயல்வது யாது? இந்த விஞ முக்கியமானது.
ஆறும் கடலும், வானும் மண்ணும், ஒளியும் நிழலும், மூங் கிலும் தென்னையும், இலையும் சருகும், பனியும் மழையும் என
40

O வாழ்க்கை
மனிதனது உடமைகள் அனைத்திலும் விலை மதிக்கமுடியா தது அவனது வாழ்வாகும். மனிதன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலமெல்லாம் குறிக்கோளின்றி பாழாக்கிவிட் டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்புக் கொடுக் காமல் அவன் சீராக வாழவேண்டும். அற்பணுக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்ப தற்கு இடமில்லாத வகையில் நேராக வாழவேண்டும் உலகத்தின் தலைசிறந்த இலட்சியத்துக்காக, மனிதகுலத் தின் பொன்னன விடுதலை வாழ்வுக்கான போராட்டத்திற் காக எனது வாழ்வு முழுவதையும், சக்தி முழுவதை யும் அற்பணித்தேன் என்று இறக்கும் பொழுது கூறும் உரிமை பெறும் வகையில் அவன் வாழவேண்டும்.
- நிக்கலோய் ஒஸ்திரோவஸ்கி
இயற்கைப் பொருள்கள் பல இக் கவிதைகளிற் பயின்று வருகின் றன. அவ்வாருஞல், இயற்கை வனப்பை ஒவியமாக்குவதுதான் இக் கவிஞரின் நோக்கமா? காட்சிச் சித்திரம் மட்டுந் தானு, கவி ஞரின் குறிக்கோள்?
இல்லை. வருணனைகளின் வாயிலாகவும் மன நிலைகளை உணர் த்துவதே கவிஞரின் அக்கறையாக உள்ளமை தெளிவு. "ஆற்றங் கரையின் அந்தியும் மூங்கிலும்” என்பதை எடுத்துக்கொள்ள லாம். மேலோட்டமாகப் பார்த்தால், இதில் வரும் 28 வரிகளுள் 27 வரிகளும் இயற்கை வருணனை தான்; மிகவும் நுணுக்கமான வருணனை, "சீராய் வளர்ந்த மஞ்சள் வனப்பு/மேலே மெலிந்து வளைந்த மேனி/நீரின் பரப்பில் செறிதே நெளியும்/மேனிச் செழிப் பைக் குனிந்த மூங்கில்/காணும், நிமிரும், மீண்டும் குனிந்து/ மெலிந்த முனையால் நீரை அளைந்து/நிழலைக் குலைத்து நீர்த்துளி சிதறும். சாயும் ஒளியும் இலைகளின் நிழலும்/மூங்கில் தண் டின் கணுக்கள் இடையே/தீட்டிய பச்சைப் படைகள் மேலாய்த்/ தாவிப் பாய்ந்து தம்முள் மகிழும்/வானம் வியந்து வாயை விரிக் கும். " இவ்வாறெல்லாம் வருணனை விரிந்தாலும், கவிதை யின் ஈற்றயல் அடியை 'நெஞ்சில் உனது நினைவு ஊரும்" என அமைத்து, அதன் பொருள் நோக்கினையே முற்றுமுழுதாய்த் திசைமாற்றியுள்ளார் கவிஞர்.
மேற்படி கவிதையில் வரும் நினைவு யாரோ ஒருவர் பற்றிய தாகும். அவர் யாரென்பதைக் கவிஞர் வெளியாக்கவில்லை, அந்த வகையில் அது "சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெருத அகத் துறைப் பாட்டு எனலாம். ஆனல் இத் தொகுதியிலுள்ள கவிதை
41

Page 24
களிற் பெரும்பாலானவை, அவ்வாருன அந்தரங்க உணர்வுகளைக் கூறுவன அல்ல. மக்கள் வாழ்க்கையின் நடப்பியல் மெய்மை களிளின்றும் தோன்றும் பொது உணர்வுகளையே இவை பேசுகின் றன. வாழத் துடிக்கும் மனித வேட்கை, இடர்களைக் களையும் எண்ணங்கள், கொடுமையை ஒழிக்கும் கொள்கை நோக்கம், நீதிப் பண்புகளை நிலைநாட்டும் அறப்பற்று, அறியாமையையும் மூடத்தனத்தையும் பம்மாத்துகளையும் எள்ளி நகையாடும் நையாண்டி-இவையெல்லாம் இக் கவிதைகளின் வாயிலாக எடுத் துரைக்கப்படுகின்றன; உணர்த்திவைக்கப்படுகின்றன.
*கரையோரப் புதர் மூங்கில்/கையசைக்க நேசமுடன்/நிழல் வாகை மலர் சிரிக்க, காற்றினிலே புல் வளைய, மலை கிடக்க, மார்கழியில் நீ நடக்க-நாம் உலகை மாற்றிடுவோம்" இதுதான் இக் கவிதைத் தொகுப்பின் இதய ஒளி, உயிரோசை,
இத் தொகுதியிலுள்ள கவிதைகளிற் பலவற்றையுமிட்டு அவற்றை ஆக்கிய கவிஞரே தமது விமரிசனத்தைத் தெரிவித் துள்ளார். 'சாதனைகள் செய்துவிட்டோம் என்று சுயதிருப்தி தரும் மாய வசியத்திற் கிடப்போர் மத்தியில் இப்படிப்பட்ட சுய விமரிசனம் ஆரோக்கியமானதோர் அறிகுறியாகும். சிவசே கரமவர்களின் விமரிசனக் கருத்துக்களிற் பல நமக்கும் சம் மதமே, ஆனல் இந்நூலின் பதிப்புரையில் வரும் அபிப்பிராயங் d5 6... ...
*குமரன்" சஞ்சிகையில் "செத்துவரும் செய்யுள்" என்ருெரு கட்டுரை வெளியாயிற்று. அதிலே, கவிதைக்கலை வழக்கொழிந்து வருகிறது என்னும் கருத்து வருகிறது. சிவசேகரத்தின் புத்த கத்தைப் பார்த்த பிறகு நாம் சொல்லுகிருேம்- கவிதை செத்து வருகிறதென்று, எவனம் சொன்னன்? பேயன்.
பேராசிரியர் சிவசேகரத்தின் நதிக்கரை மூங்கில் விற்பனையாகிறது
(கவிதைத் தொகுதி)
கிடைக்குமிடம் வசந்தம் புத்தக நிலையம் ,374A, மின்சாரநிலைய வீதி ܖ விலை: 20/- யாழ்ப்பாணம்.
42.

அ இலக்கியமும்
வியர்வையும் - துகள்
தமிழில்: எம். ஏ. நுஃமான்
ஒரு ஷங்காய் பேராசிரியர் இலக்கியம் பற்றி விரிவுரையாற் றுகையில், இலக்கியம் நிலைத்து வாழவேண்டுமானல் நிரந்தர மான மனிதப் பண்புகளை விபரிக்கவேண்டும் என்று கூறினர். உதாரணமாக, இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியரும் வேறு இரண் டொருவருமே நிரந்தரமான மனித இயல்பு பற்றி எழுதினர். அதனல் அவர்கள் இன்றும் படிக்கப்படுகின்றனர். ஏனைய எழுத் தாளர்கள் இதனைச் செய்யத் தவறினர். அதனுல் அவர்களது படைப்புக்கள் மறைந்துவிட்டன.
இது உண்மையில் “நீ எவ்வளவுக்கு விளக்குகின்ருயோ நான் அவ்வளவுக்கு மூடனு வேன்’ என்ற கதைதான். அநேக ஆங் கில இலக்கியங்கள் அழிந்திருக்கும் என்றே நான்நினைக்கின்றேன். ஆனல் நிரந்தரமான மனித இயல்பை விபரிக்கத் தவறியதால் தான் அவை அழிந்தன என்று நான் ஒரு போதும் கூறமாட் டேன். அந்தப் படைப்புக்கள் அழிந்துபோயிருந்தால், அவற் றைப் படித்து அவற்றுள் ஒன்றுமே நிரந்தரமான மனித இயல்பு களைச் சித்திரிக்கவில்லை என்று கண்டறிய இப் பேராசிரியரால் எவ்வாறு முடிந்தது என்பதை என்னுல் விளங்கிக்கொள்ள முடிய வில்லை.
எது வாழ்கிறதோ, அது சிறந்த இலக்கியம்; எது மறைந்து விட்டதோ, அது மோசமானது. வானத்தின் கீழ் உள்ள அனைத் தையும் எவன் கைப்பற்றுகிருனே அவன் ஒரு அரசன்; எவன் கைப்பற்றத் தவறுகிருனே அவன் ஒரு கொள்ளைக்காரன், வர லாறு பற்றிய இச் சீனக் கோட்பாடு, இலக்கியம் பற்றிய சீனக் கோட்பாட்டுக்கும் பொருந்தும் என்று என்னிடம் சொல்லவேண்
l-sTLD •
மனித இயல்புகள் உண்மையில் ஒருபோதும் மாறுவ gavðavulumr?
43

Page 25
ஆதிக் குரங்கு, குரங்கு-மனிதன், புராதன மனிதன், பண் டைய மனிதன், நவீன மனிதன், எதிர்கால மனிதன். வாழும் உயிர்கள் உண்மையில் பரிணமிக்கமுடியுமானல் மனித இயற் கையும் உண்மையில் மாருமல் இருக்கமுடியாது. குரங்கு மணி தனின் உணர்வுகளை விட்டுவிட்டாலும் புராதன மனிதனின் உணர்வுகளையென்றலும் நம்மால் யூகிக்கமுடியுமா என்பது எனக்குச் சந்தேகமே. இதுபோல் எதிர்கால மனிதர்கள் பெரும் பாலும் எங்களைப் புரிந்துகொள்ளமாட்டார்கள். நிரந்தரமான மனித இயல்புகள் பற்றி எழுதுவது என்பது நிச்சயமாகச் சிக்க லானது.
உதாரணமாக வியர்வையை எடுத்துக்கொள்வோம். மணி தர்கள் மிகப் பழங்காலத்திலேயே வியர்வை சிந்தினர்கள். அவர் கள் இன்றும் வியர்வை சிந்துகிருர்கள். இனி வருங்காலத்திலும் அவர்கள் வியர்வை சிந்துவார்கள். ஆகவே, இது ஒப்பீட்டள விலே நிரந்தரமான மனிதப் பண்டு என்று கணிக்கப்படவேண் டும். ஆனல் அழகு மிகுந்த இளம் சீமாட்டிகளின் வியர்வை இனிப்பானது. அதே வேளை எருமைகள் போன்ற தொழிலாள ரின் வியர்வையோ துர்நாற்றம் வீசுவது. ஒருவன், தான் ஒரு எழுத்தாளன் என்ற வகையில் தனக்கு என்றும் அழியாத ஒரு இடத்தைப் பெற்றுத்தரக்கூடிய ஒரு படைப்பைப் படைக்க வேண்டுமானல் அவன் இனிப்பான வியர்வையை விவரிப்பது சிறந்ததா? அல்லது துர்நாற்ற வியர்வையை விபரிப்பது சிறந் ததா? இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும்வரை இலக்கிய வரலாற்றில் ஒரு எழுத்தாளனின் நிலை பயங்கர அபாயத்திலேயே இருக்கும்.
உதாரணமாக, இங்கிலாந்தில் பெரும்பாலான ஆரம்பகால நாவல்கள் சீமாட்டிகளுக்காகவே எழுதப்பட்டன என்று நான் அறிகிறேன். அவ்வகையில் இயற்கையாகவே இனிப்பான வியர்வை முதன்மை பெற்றது. ஆயினும் 19ஆம் நூற்ருண்டின் இறுதிப் பகுதியில் இருந்து ருஷ்ய இலக்கியத்தின் செல்வாக்கினல் துர்நாற்ற வியர்வையின் மணம் கணிசமாக வீசியது. எது எதை அழிக்கும் என்பதைக் கூறுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது.
சீனவில் தாஒ வாதிகள், தாஒ பற்றிக் கூறுவனவற்றையோ அல்லது விமர்சகர்கள் இலக்கியம்பற்றி நீட்டி முழக்குவதையோ கேட்பதே உன்னை அச்சுறுத்துவதற்குப் போதுமானது. வியர்வை சிந்த யாருக்கு இயலும்? ஆனல் சிலவேளை இதுவே சீனர்களின் நிரந்தரமான மனித இயற்கையாக இருக்கலாம்.
டிசம்பர் 23, 1927
44


Page 26
இலங்கையில் செய்திப்
Registered as a news P: =======
அண்மையில் வெளிவந்த சீன
மற்றும் சஞ்சின்
புத்தகங்களைப்
6)IJJ551D |
-  ܼ 374. A ps
Q量砷_* 寺
LLIrr yjbt
இப் பத்திரிகை தேசிய க பானம் 15/1, மின்சார நி அவர்களால் யாழ்ப்பாணம் ரே அச்சகத்தில் அச்சிட்டு வெளி
 

பத்திரிகையாக பதிவுசெய்:புடிடது.
poF in Sri Lanką,
r இலக்கியங்கள் Din iseħor
பெற்றுக்கொள்ள
s
|կ
^
ததக Jß2a)LIIfi
விக்க விதி, நீதிக்கு அருகாம்ைபு
sõb.
லே இலக்கியப் பேரவைக்காக யாழ் யே வீதியிலுள்ள க, தணிகாசவம் , கே. எஸ். வீதியிலுள்ள பூரீ காந்த
பிடப்பட்டது.