கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1984.02-03

Page 1
紫斃繫馨繫繫繫
 ைந. இரவீந்திரன்
சி. சிவசேகரம்
இ ச. முருகானந்தன் அ மலேயாண்டி
கு யோ, பெனடிக்பாலன்
இ க. கைலாசபதி இ மஹாகவி
9 குமுதன்
முருகையன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசியல் இலக்கியமும் பாரதியும்
அக்கறையற்ற உனக்கு
நியதிகளே உடைக்கும் நிகழ்காலங்கள்
வெள்ளம்
பெண்குழந்தை வடக்கே ஒரு பல்கலைக்கழகம் மீண்டும் தொடங்கும் மிடுக்கு
மவிழி
KO)
Ο
O
O
Ο
Ο
Ο
O Ο
கடவுளுக்கு விளேயாட்டு
பெப்ருவரி ι0ITήό: 1984
விலே! 5/ー
斃繫繫斃斃繫繫

Page 2

இதழ்: 2
ib6a)df: 2
0 மக்கள் மீது
பலமுனைத் தாக்குதல்கள் e ஜனுதிபதியின்அமெரிக்கவிஜயம்
ஒரு புதுவிஷயம்
9 இனவாத அரசியலும் ஜனநாயக சக்திகளும்
யூ. என். பி. அரசின் திறந்த பொருளாதாரக் கொள்கையால் ஏற்கனவே பாரிய நிதி-பொருளாதார வாழ்க்கைத்தர நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள மக் களைக் கடந்த ஆண்டு மனிதனல் உருவாக்கப்பட்ட பேரிழப்புகள் ஒரு புறமும் தற்பொழுது "இயற்கை யால் ஏற்படுத்தப்பட்ட பேரிழப்புகள் மறுபுறமும் மேலும் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் ஏற் பட்ட வெள்ளப் பாதிப்பு அப் பகுதி மக்களுக்கு மட் டுமே உரியது ஒன்றல்ல. சிங்கள-தமிழ்-முஸ்லிம் மக் கள் எனப் பாகுபாடு காட்டாமல் அது முழு நாட்டை யுமே தாக்கியுள்ள ஒரு பாதிப்பாகும்.
நெல் அபரிதமான உற்பத்தி, அரிசியை தேக்கி வைப்பதற்கு இடங்கள் போதாதென்று சமீபத்தில் தான் அரசு அறிவித்தது. 700,000 மக்கள் வீடு வாசல் கள் இல்லாதவர்களாகவும். அரசு எதிர்பார்த்த நெல்வெங்காய விளைச்சல்களில் ஏறத்தாள முப்பது வீத மானவை நாசமாகிவிட்டதென்பதையும், சமூக சேவை

Page 3
கள் அமைச்சு செயலாளர் விடுத்த ஒரு அறிக்கையில், சிறிய குளங்கள் முன்கூட்டியே செப்பனிடப்பட்டு வைத் திருக்கப்படவில்லை என்ற சாரத்தையும் நாம் அவதா னித்தால், இது இயற்கையால் மட்டும் ஏற்பட்ட ஒன் றல்ல என்பதும் அரசு மதிநுட்பத்தைப் பயன்படுத் தத் தவறியதென்பதும் தெளிவாகும்.
பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணம் வேண்டும். அரசு தனது பிரசார சாதனங்கள் மூலம் இயற்கை மீது பழியைப் போடும். அதே வேளை வழமைபோல ஏனைய நாடுகளின் உதவியைத் தவருமல் கேட்கும். இது கூட பதில் கிடைக்காத கேள்வி ஒன்றுடன் இணை ந்து நிற்கிறது. சூரு வளிக் காலத்தில் வெளிநாடுகளி லிருந்து வந்த உதவிகள் ஜனதிபதி உதவி நிதியுடன் இணைக்கப்பட்டது. பாதிப்புற்ற மக்களின் தேவைகள், நிலைமைகள் தீர்க்கப்பட்டனவா? யூலை வன்செயல் களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கிடைத்து வரும் வெளிநாடுகளின் உதவிகள் என்ன நிலைமையிலுள்ளன?
நிலைமைகள் இப்படி இருக்கும்போது வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பொலநறுவைப் பகுதியில் இளை ஞர் விவகார அமைச்சு தேசிய இளைஞர் சேவைக் கவுன்சில் மூலம் கடந்த வாரம் மாபெரும் தமாஷா விற்கு பெரும் தொகை செலவிட்ட செய்தி எவ்வளவு வருத்தத்திற்குரியது. வர்ணபகவானுக்கே இது பிடிக்க வில்லைப் போலும். அவர் சீறிவிட்டார்.
. Ο O O
இவ்விதம் நாடு பெரும் நெருக்கடிகளுக்குள்ளான நிலைமைகளில்தான் ஜனதிபதி ஜயவர்தன அவர்கள் அமெரிக்கா புறப்பட இருக்கிருர், நாட்டின் தலைவர் கள் அமெரிக்க விஜயத்தை மேற்கொண்டது வழமை. அது புதுமையல்ல. நமது ஜனதிபதி ஜெயவர்தன அவர்களுக்குக் கிடைத்த அழைப்பு விசேஷமானது.
இதுவரை இலங்கையின் எந்த ஒரு ஜனதிபதிக்கோ, பிரதமருக்கோ கிடைக்காத அழைப்பு. ஏனையவர்க
2

ளுக்குக் கிடைத்த அழைப்பு சாதாரணமானது. இவ ருக்கு கிடைத்த அழைப்போ வேறுபட்டது. இவருக்கு இவ்வித அழைப்பு கிடைத்தது ஏன் என்பது ஒரு கேள் விக்குரியதாகும்.
இவர் அன்றிலிருந்து இன்றுவரை அதன் மேலும்
அமெரிக்க மேலாதிக்கத்தின் நம்பிக்கைக்குரிய இலங் கைப் பிரஜை. அவர் நீண்ட காலம் தன் சேவையையே அதற்காகவே அர்ப்பணித்தவர்.
இலங்கையை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரு வதற்கு அமெரிக்க மேலாதிக்கம் நீண்ட பெரும் முயற் சிகளை மேற்கொண்டது வரலாறு. கொத்தலாவலை காலத்தில் அது சியாட்டோ இராணுவ ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையைக் கொண்டுவர நிர்ப்பந்தித்தது. இலங்கை மக்களின் ஏகோபித்த எதிர்ப்பால் அது நிர் மூலமாக்கப்பட்டது -
பின்னர்வந்த பிரதமர்கள் ஜனதிபதிகள் எவரும் வெளிநாட்டு விவகாரத்தில் மக்கள் அபிலாசைகளுக்கு எதிராகச் செயல்படத் துணியவில்லை. ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔
இப்போதுள்ள, தன்நிறைவேற்றுள்ள அதிகாரம் படைத்த ஜனதிபதி ஜெயவர்த்தன அவர்கள் அமெ ரிக்க விஜயத்தை மேற்கொள்ளவிருக்கிருர், அவர் அமெ ரிக்கா போவதற்கு முன்னரே சீன போக இருப்பது ஒரு நல்ல விஷயம்.
சீனுவின் பிரதான தலைவர்களில் ஒருவரான டெங் சோ பிங் அவர்கள் பல தடவைகளில் சொல்லியிருக் கிருர், "சீன மக்கள் எப்பொழுதும் தாங்கள் எத னைச் சொல்கிருேம் எதனைச் செய்கிருேம் என்பதை முன்கூட்டியே புரிந்துதான் செய்கிருர்கள்’ என்று.
அமெரிக்காவிற்குப் புறப்படும் எமது ஜனதிபதி அவர்கள் எமது நாட்டு மக்களின் அபிலாசைகள் என்ன என்பதை முன்கூட்டியே புரிந்துகொள்வது நல்லது.

Page 4
நாட்டு மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர். இதே வேளையில் எதிரணி ஜனநாயக சக்திகளிடையே யுள்ள ஒற்றுமையின்மை, இனவாத அரசியல் ஆகிய இரண்டும் யூ என், பி. அரசை நிலைத்துநிற்கச் செய்கின் றன.
மைத்திரிபால சேனநாயக்கா அணியினர் மீண்டும் சிறிமாவோ தலைமையிலான சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது நாட்டு மக்களின் அபிலாசைகளைப் புரிந்துகொண்டுள்ளதையே எடுத்துக் காட்டுகிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு பொது வேலைத் திட்டத்தின்கீழ் ஏனைய ஜனநாயக சக்திகள் ஐக்கியப்பட முன்வரவேண்டும்.
வட்டமேசை மாநாட்டின்மூலம் தேசிய சிறு பான்மை இனப் பிரச்சினைகளுக்குக் குறுகிய காலத் தீர் வுக்கு உள்ள வாய்ப்புக்களையும் இல்லாமற் செய்யுமாறு சில சில குழுவினர்கள் நடந்துகொள்வது மிகவும் கேவல மானது. இனவாத அரசியல் மூலம் பாராளுமன்ற அர சியலில் சுலபமாக லாபம் தேடிய காலம் போய்விட்டது. இப்போது இனவாத அரசியல் மிகவும் பயங்கரமான பின் விளைவுகளையே தருவதுடன் அதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தின் அடிப்படையே தகர்ந்துவிடும். நாட்டின் பிற்போக்கு சக்திகளுடன் மிகவும் கொடிய பகுதியினருக்கும். மேலாதிக்கவாதிகளுக்குமே இது நன்மைதரும் என்பதனையும் நடந்த சம்பவங்கள் நிரூ பித்துள்ளன என்பதை கருத்தில் கொண்டு ஜனநாயக சக்திகள் செயல்படவேண்டும்.
குறிப்பாக திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா வும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் வட்டமேசை மகா நாடு பற்றிய தமது சமீப முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- 04 - 03 - 84.

பாரதி ஆய்வரங்குக் கட்டுரை - 6
(தேசிய கலை இலக்கியப் பேரவையினுல் நடத்தப்பெற்ற பாரதி நூற்றண்டு ஆய்வுரைகளை தொடர்ச்சியாக கட்டுரை வடிவில் தருகிறேம்.)
அரசியல் இலக்கியமும் பாரதியும்
- ந. இரவீந்திரன்
அரசியல் இலக்கியத்தின் தோற்றுவாய் தேசிய எழுச்சிப் பேரலையில் பாரதி ஒடுக்கு முறையைச் சாடும் பாங்கு அக்டோபர் புரட்சிபற்றி பாரதி பேரெழுச்சி தோற்றிய புதிய விதி ஆயுதப் புரட்சியும் பாரதியும் தேச சுதந்திரமும் சமூக விடுதலையும் புதிய உலக நோக்கும் பாரதியும்
1. அரசியல் இலக்கியத்தின் தோற்றுவாய்
சிமகாலத் தமிழ் இலக்கியத்தில் அரசியல் இலக்கியம் என்ற கோட்பாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் பாரதியுடன் மிக நெருங்கிப் பிணைந்த உறவைக் கொண்டுள்ள காரணத் தால், அரசியல் இலக்கியத்தில் பாரதியின் ஈடுபாட்டை ஆராய் வது மிகவும் அத்தியாவசியமான ஒன்ருயமைந்துள்ளது. பொது வாக இலக்கியம் - அது சங்க காலத்ததாயிருப்பினும், அன்றிப் பக்தி இயக்கத்தின்பாற் பட்டதாயினும் - ஆரம்பந்தொட்டே, ஏற்றத்தாழ்வான வர்க்கங்களாகப் பிளவுபட்டுவிட்ட சமூகத்தில் ஆதிக்கஞ் செலுத்துவதற்காக வர்க்கப் பிரிவுகள் தம்முள் நடாத் தும் போராட்டத்தில், ஒரு வர்க்கஞ் சார்ந்ததாக நின்று, பாலில் நெய்போல் தன்னகத்தே அரசியல் கோட்பாட்டை மறைபொருளாகத் தாங்கிவந்துள்ளது. அதன் திரண்ட வெளிப்பாடு, அதாவது அரசியல் சிந்தனைகள் இலக்கியத்தில் வெளிவெளியாகவே இனங்காட்டிக்கொள்ளும் போக்கு. பாரதி பாவரிகளில்தான் ஆரம்பமாகின்றது. அவருக்கு முந்திய இலக் கியத்தில், 19ம் நூற்ருண்டின் கடைக்கூற்றிலிருந்தே சமுதாயச்
5

Page 5
சார்பு மிகுதியாக இருந்து வந்தபோதிலும், அது அரசியல் இலக்கியமாகப் பரிணமித்தது பாரதியின் வாயிலாகத்தான். இத்தகைய மாற்றநிலை ஒன்றை பேராசிரியர் க. கைலாசபதி, *தமிழிலக்கிய மரபில் பொதுமைச் சிந்தனைகள்’ பெற்று வந்த வளர்ச்சிப் படிநிலைகள் ஊடாகப் படம்பிடித்துக் காட்டி யுள்ளார் :
* பழங் காலத்திலே சமயக் கருத்துகளாகவும், தார்மீகக் கட்டளைகளாகவும், அறவியற் கோரிக்கைகளாகவும் இலக்கியத் தில் இடம்பெற்ற பொதுமைச் சிந்தனைகள் இருபதாம் நூற் ருண்டிலே நேரடியாகவே அரசியற் சமுதாய விஷயங்களாக உருப்பெற்றன. இது இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சிப் போக்கிற்கு அமைய உள்ளது. பல நூற்ருண்டுகளாகச் சமயங் களைத் தழுவி. வளர்ந்த தமிழிலக்கியம் பத்தொன்பதாம் நூற் முண்டின் கடைக்கூற்றிலிருந்து சமயச்சார்பு குறைந்தும் சமு தாயச் சார்பு மிகுந்தும் புதுவழியிற் செல்வதாயிற்று. தொடக் கத்திலே சமுதாயச் சீர்திருத்தம் இலக்கியத்தின் முனைப்பான உள்ளடக்கமாய் இருந்தது. நாளடைவில் சமுதாயப் புரட்சி யும், புத்தாக்கமும் இலக்கியத்தின் உந்து சக்திகளாகவும் அமைந்தன."
இத்தகைய புரட்சி இலக்கியத்துக்கு முன்னேடியாக பாரதி விளங்கினர். இதன் வெளிப்பாடுதான், " வினயகர் நான் மணி மாலை புனையும் போதும் பாரதி "நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்’ என்று வீராவேசமாகப் பிரகடனஞ் செய்வது; இதன் நேரடிப் பயன் தான்,
'பொய்க்குங் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே, மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன், தெய்வ விதியிஃதே."
என்று குளுரைப்பது.
இது தமிழிலக்கியத்தின் வளர்ச்சி விதி மட்டுமல்ல; மாருக *இது இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சிப் போக்கிற்கு அமைய உள்ளது" என்பதே உண்மை. அதாவது, இந்தப் பரி னம வளர்ச்சி உலக இலக்கியப் பரப்பில் அரசியல் இலக்கியம் இடங்கொள்ள ஆரம்பித்த வளர்ச்சி நிலையை ஒத்திருக்கின்றது.
இதன் உலகளாவிய தோற்றத்தை 1789இன் பிரெஞ்சுப் புரட்சியுடன் காண முடிந்தது. பிரெஞ்சுப் புரட்சியானது, ஒவ்வொரு தேசிய இனத்தையும் விழிப்புறத் தூண்டி, அதைத்
6

தொடர்ந்த ஒவ்வொரு நிகழ்ச்சிகளினூடாகவும் வரலாற்றைப் பொதுமக்களின் அனுபவத்துக்குட்படுத்தியது. இதன் விளைவாக, மக்கள், கொந்தளிக்கும் அரசியல் இயக்கங்களின்பால் ஈர்க்கப் பட்டனர். இவ்வாறு? சமுதாயச் சச்சரவுகளில் வெகுஜனங்கள் கிளர்ந்தெழுந்து செயலாற்றும்போது, அதனைக் கலை - இலக்கிய வாதிகள் ஆர்வ மிகுதியோடு ஆதரிக்க முன்வந்தார்கள். இது கலைஞர்களுக்கும் வெகுஜனங்களுக்குமிடையே பாலமிடவே, முதன் முறையாக கஜலகஜலக்காக" என்ற போக்குத் தகர்க்கப் பட்டு, கலை - இலக்கியம் மக்களுக்குப் பயன்படவேண்டும் என்ற கோட்பாடு மேலோங்கத் தொடங்கியது. இவ்வாறு தோன்றிய கலை - இலக்கியத்தின் பயன்பாட்டுக் குறிக்கோளையே பிளக்கனேவ் மேல்வருமாறு குறிப்பிடுகிறர் :
2a) பற்றிய் பயனீட்டுவாதக் கருத்தோட்டம் எனப்படு வதும், அதாவது கலைப் படைப்புகள் வாழ்க்கைப் புலப்பாடுகள் குறித்துத் தீர்ப்புக் கூறும் சிறப்புடையவை எனக் கருதும் போக்கும், எப்போதும் இதனுடன் இணைந்து காணப்படும் மகிழ்ச்சிவாய்ந்த ஆவலாகிய சமுதாயச் சச்சரவுகளில் பங்கு கொள்ளும் ஆவலும், சமுதாயத்தில் கணிசமான பகுதியோருக் கும் கலைப் படைப்புகளில் மிகுதியாகவோ குறைவாகவோ செயல்முனைப்புள்ள அக்கறை காட்டுகிறவர்களுக்கும் இடையே பரஸ்பரப் பரிவு உணர்ச்சி நிலவுகிறபோதெல்லாம் தலை தூக்கவும் வலுவடையவுஞ் செய்கின்றன."2
அத்தகைய சூழ்நிலையைத் தேசியப் புரட்சி வழங்கும். போது, கலை - இலக்கியவாதிகள் முதலாளித்துவ - ஐனநாயகப் புரட்சிக்கு உந்துசக்தியாகத் தமது படைப்புகளை வெளிக் கொணர்ந்ததுடன், மகிழ்ச்சிவாய்ந்த ஆவலோடு அதில் பங் கெடுத்துங்கொண்டார்கள். அதன் விளைவாக, வெகுஜனங் களைத் தட்டியெழுப்பி அரசியல் கோரிக்கைகளின்பால் கவர்ந் திழுக்கும் முதலாளிவர்க்க இயல்பு காரணமாக, அவர் களுடைய ஆக்கங்களில் அரசியல் கோரிக்கைகள் அழகியற் தாரதம்மியத்துக்குட்பட்டு வடித்தெடுக்கப்பட்டு விடுகிறது. இதற்குரிய சூழ்நிலை விளங்கிக்கொள்ளத்தக்கதே. இதைப் பிளக்கனேவ் தெளிவாகக் காட்டியுள்ளார்;
*கருத்து உள்ளடக்கம் அறவே இல்லாத கலைப் படைப்பு ஏதும் இல்லை.அதோடு, எந்தக் கருத்தும் ஒரு கலைப் படைப் பின் அடிப்படையாகிவிட முடியாது. எது மக்களிடையே தொடர்புக்கும் உறவுக்கும் உதவக்கூடியதோ, அது மட்டுந் தான் கலைஞனுக்கு மெய்யாகவே உத்வேகமூட்டவல்லதாய்
7

Page 6
இருக்கும் இத்தகைய தொடர்புக்கும் உறவுக்கும் சாத்திய மான வரம்புகள் கலைஞனல் நிர்ணயிக்கப்படுகிறவை அல்ல, அந்தக் கலைஞனைத் தனக்குரியவனுகக் சுொண்ட சமுதாயம் முழுவதுமாய் வந்தடைந்துள்ள கலாசார வளர்ச்சி நிலையால் நிர்ணயிக்கப்படுகிறவை. அனல் வர்க்கங்களாகப் பிளவுண் டிருக்கும் சமுதாயத்தில் இவ்வரம்புகள் இதன்றி, இந்த வர்க் கங்களது பரஸ்பர உறவுகளாலும், மற்றும் இந்த வர்க்கம் ஒவ்வொன்றும் அப்போது வந்தடைந்துள்ள வளர்ச்சிக்கட்டத் தாலும் நிர்ணயிக்கப்படுகிறவை. முதலாளி வர்க்கம் சமயச் சபைப் பிரபுக்கள், லெளகிகப் பிரபுக்களது ஆதிக்கத்திலிருந்து தனது விடுதலைக்காக இன்னமும் பாடுபட்டுக் கொண்டிருந்த போது, அதாவது அது புரட்சிகர வர்க்கமாய் இருந்தபோது, உழைப்பாளிப் பெருந் திரளினர் யாவருக்கும் அது தலைவனகி அவர்களோடு சேர்ந்து தனியொரு “மூன்ருவது" வகுப்பாய் அமைந்து செயல்பட்டது. அந்தக் காலத்தில் முதலாளி வர்க் கத்தின் தலைசிறந்த சித்தாந்தவாதிகள், "தனிச் சலுகைக்கு உரியோரைத் தவிர்த்து தேசம் அனைத்துக்குமான' தலே சிறந்த சித்தாந்தவாதிகளாகவும் விளங்கியவர்கள். வேறுவித மாகச் சொல்வதெனில், முதலாளித்துவ நோக்கு நிலையை ஏற் றுக்கொண்ட கலைஞர்களது படைப்புகளைச் சாதனமாகக் கொண்டு மக்களிடையே நிகழ்ந்த உறவாடலின் வரம்புகள் ஒப்பளவில் மிகவும் விரிந்தனவாய் இருந்தன."
இதன் தமிழகப் பிரதிநிதியாகப் பாரதி திகழ்ந்தது தற் செயலானதல்ல. இந்த வரலாற்றுப் பாத்திரத்தை நிறைவு செய்ததன் வாயிலாகத்தான் பாரதி தனது சம காலத்து கலை - இலக்கியவாதிகளிலிருந்தும் தனித்துவம் பெற்றுக் காலத்தை வென்று நிலைபெற முடிந்திருக்கிறது. இத் திகை மையை ஆய்வாளர்கள் ஒரு மனதாக ஏற்கத் தவறவில்லை யெனினும், பாரதி ஒரு முதலாளித்துவக் கவிஞன் என்ற காரணத்தினல், அவருக்கு இத்தனை முக்கியத்துவம் வழங்கப் பட வேண்டியதில்லை என்ற கருத்தொன்றும் முன்வைக்கப் படுவதைக் காணமுடிகின்றது. இக் கருத்துப் பிரிவினர் ஏதோ ஒருவகையில் இன்றைய கால நிலைமையின் அடிப்படையில் வைத்து பாரதியை அகநிலை ரீதியாக மதிப்பீடு செய்வதனலேயே இம் முடிவுக்கு வருவதாகக் கொள்ளவேண்டும்.
இவர்கள், இவ்வாறு கருதுவதற்கு இன்றைய முதலானித் துவக் கலை - இலக்கியவாதிகளின் நசிவு இலக்கியப் போக்கும், * கலை கலைக்காக" என்ற இலட்சியப் பித்தும் ஒரு காரணமாக இருக்கலாம். இன்ருே முதலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக்
8

கைப்பற்றி ஆளும் வர்க்கமாக மாறிவிட்டது;அது முற்போக்கு வர்க்கமாயிருந்து மக்களை அரசியல் கோரிக்கைகளின்பால் கவர்ந் திழுத்துக் கிளர்ச்சி செய்யத் தூண்டிப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய நிலை இன்று இல்லை. இன்று, முதலாளி வர்க்கம் வெகுஜனங்கள் அமைதியாக அடங்கி வாழவேண்டுமென விரும்புகிறது. அதன் பலமுனைச் செயற்பாடுகளால் சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் சமூகச் சச்சரவுகளிலிருந்து ஒதுங் கியவர்களாக, அதாவது ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு ஒருமுறை வாக்களிக்கும் அரசியல் நடவடிக்கை தவிர அதிக பட்சம் ஈடுபாடில்லாத நிலையில், அரசியலில் நேரடிப் பங்கு கொள்ளாதவர்களாகக் காணப்படுகிருர்கள். இந்த நிலை யில், கலை - இலக்கியம் தன்னளவில் பயனிடுள்ளதாயிருக்க வேண்டுமென்று ஆளும் வர்க்கமாகிவிட்ட முதலாளிவர்க்கம் விரும்புகிறது. இதற்கு, இழிவான கலை - இலக்கியத்தைக் காட்டிப் பணம் குவிக்க முயலும் "வர்த்தகக் கலாமேதைகள்", முதலாளித்துவக் கலாச்சாரச் சீரழிவைப் பிரதிபலிக்கும் நசிவு இலக்கியத்தைக் குவித்து மக்கள் மனதை நச்சுப்படுத்த முயல் வதன் மூலம் சேவை செய்கிருர்கள். இதற்கு மாருக, இலட் சியப் பற்றுள்ள கலை - இலக்கியவாதியாலோ இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் முதலாளித்துவ சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் சீரழிவுகளால் செயலிழந்தபோது, தம் மைத் தாமே சமூகப் பிரஷ்டம் செய்துவிடுகிருர்கள். "எங்கே கலைஞர்களுக்கும் அவர்களைச் சுற்றிலும் உள்ள சமுதாயச் சூழ லுக்கும் இடையே பிணக்கு ஏற்படுகிறதோ, அங்கே கலை கலைக்காகவே என்கிற போக்கு தலைதூக்குகிறது.*4
இதற்கு முற்றிலும் மாறுபட்ட - பிற்போக்கு சக்திகளுக்கு மரண அடி கொடுக்கும் - போராட்ட சூழலில் வாழ்ந்து, அத் தகைய அரசியல் கொந்தளிப்பின்பால் வெகுஜனங்களைக் கவர்ந் திழுத்து அணி திரட்ட இலக்கியம் படைத்தவர் பாரதி. அத் தகைய வரலாற்று நிகழ்வின் ஒரு பகுதியாக விளங்கும் பார தியையும், பொதுவான சமூகப் பிரச்சினைகளை ஆய்வுக்குட்படுத் தும் வரலாற்றுப் - பொருள் முதல்வாதக் கண்ணுேட்டத்தில், புறநிலை ரீதியாக ஆராயவேண்டும்.
அவர், பிரித்தானியாவுடனன ஏகாதிபத்தியப் பிணைப்பைத் தகர்த்துப் பூரண சுயராஜ்யத்தை நிலைநாட்டுவதன் மூலமே இந்திய மக்களின் பொருளாதார சுபீட்சத்தை ஈட்ட முடியு மென்ற முடிவுடன் தளராது போராடி, மிதவாதத்தைத் தீவிர வாதிகள் முறியடிக்கத் தொடங்கிய 1905ஆம் ஆண்டில் அர சியல் இலக்கியத்தின் பிரதிநிதியாகப் பரிணமித்தார்; அன்றி
9

Page 7
லிருந்து தனது இறுதி மூச்சவி நேரடியாக அரசியல் நட வடிக்கைகளில் ஈடுபட்ட பாரதி தேசிய அரசியல் நீரோட்டத் தின் வளைவு கழிவுகளிலெல்லாம் சரியான மார்க்கத்தை யமைக்கும் தன் அயராதி முயற்சியையும் ഖങിu'L ഖങ്ഞ് மாய் முன்னேறி வந்தார்:
அக் காலத்தை மூன்று கூறுகள"* வகுத்து ஆய்வு செய் தல் வசதியாக இருக்கும். முதலாவது கட்டம் 1905 - T 9 10 வரையிலான, முதலாவது தேசிய எழுச்சிப் பேரலைக்குரியது. இரண்டாவது கட்டம் 60 - 1919 வரையிலான மந்தப் போக்கும் அடக்குமுறை தஜலவிரித்தாடியதுமான காலகட்டம் மூன்ருவது கட்டம் gg - 1921 வரையான இரண்டாவது தேசிய எழுச்சிப் பேரலைக்குரியது.
2. தேசிய எழுச்சிப் பேரலையில் பாரதி
பாரதி எட்டயபுரத்து ஜமீன்தாரின் சமஸ்தானத்தில் ஆஸ் தான சுவியாக வாழ்வதை வெறுத்து "
திமிங்கில உடலும் ஒறிய புன்மதியும் ஒரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன் தன் பணிக்கிசைந்து என் தருக்கெல்லாம் அழிந்து வாழ்ந்தனன்,'
என வருந்தித் தொடர்ந்தும் நீசத் தொண்டு புரிதலே வெறுத்து நீங்கித் தமிழாசிரியராய்ச் சில காலம் மதுரையில் பணிபுரிந்தார். அதன்மீதும் ஆத்மதிருப்தி காணுத பாரதி பரி பூரணமாகத் தன்னைத் தேசத் தொண்டுக்கு அர்ப்பணிக்கும் நோக்குடன் சென்னைக்கு வந்தார். அங்கே, 1904-ம் ஆண் டில் 'சுதேச மித்திரன்' பத்திரிகையில் மொழிபெயர்ப்பாளராக இணைந்த பாரதி தேசிய உணர்வு கொழுந்துவிட்டெரிந்த வங்கத்தில் இந்து-முஸ்லிம் இனவாதத்துக்குத் தூபமிடுவதன் வாயிலாக, அங்கே தேசிய உணர்வு வளர்ச்சி பெறுதலையும், அது தேசம் பூராவும் பரவிவிடுவதையும் தடுக்கமுடியும் என்ற நோக்குடன் ஏகாதிபத்திய அரசு வங்கத்தைத் துண்டாட முற் பட்டபோது, அதை எதிர்த்து இளர்ந்தெழுந்து போராடிய வங்கத்தின் இந்து - முஸ்லிம் மக்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்துக்குத் தலைசாய்த்து, "வங்கமே வாழிய" என்ற கவிதையை 1905 செப்டம்பர் 15ந் தேதி 'சுதேச மித்திரனில் வெளியிட்டதன் வாயிலாக, அரசியல் இலக்கியத்தில் <别L乐 யெடுத்து வைக்கிருர்,
10

இந்த வங்கப் பிரிவினை எந்த நோக்கத்துக்காக மேற் கொள்ளப்பட இருந்ததோ, அதற்கு மாருன விளைவைத்தான் அன்று ஏற்படுத்திவைத்தது. இது, ஏகாதிபத்தியவாதிகள் எண்ணி யது போல தேசிய உணர்வை அணைப்பதற்கு மாருகப் பன் மடங்காகக் கொழுந்துவிட்டெரியத் தூண்டுவதாயிற்று. இத னைப் பின்னல் "அதுவும் ஒரு நன்மைக்கே’’ என மகுடமிட்டு பாரதி இலக்கிய நயத்தோடு எடுத்துக்காட்டியிருக்கிருர் :
'..தற்கால இந்தியர்களுக்கு நேரிட்டுவரும் விபத்து களெல்லாம் அவர்களின் பிற்கால நலனையுத்தேசித்தே நன்மை யாக வந்தவையாவது காண மிகவும் வியக்கிருேம். லார்ட் கர்ஸன் இந்தியர்களுக்கு செய்ய நினைத்த தீங்குகளெல்லாம் அவர்களுக்கு நன்மைபயப்பதாகவே முடிந்தன. இந்த மகா னின் கொடுமைகளிலிருந்து சுதேசிய விருகூடிம் கிளம்பியது. பின்னர் புல்லர் பெருமானல் விருத்தியடைந்து செழிக்க ஆரம் பித்தன. வங்கதேச வாசிகளின் ஒற்றுமைக்குப் பங்கம் விளை விக்க எண்ணி முயன்றவர்களின் முயற்சி அதற்கு நேர் விரோத மாக அமைந்தது மிகவும் அதிசயிக்கயாவதே. அதுவும் ஒரு நன்மைக்கே என்ற வாக்கியத்தை நமக்குச் செய்திகள் நேரும் போதெல்லாம் உபயோகப்படுத்த ஒருபோதும் மறந்துவிடக் dial-sigil. . . . . . துன்பங்களுக்கு இனிமேல் சொல்லவேண்டிய வாக் கியம் என்ன? அதுவும் ஒரு நன்மைக்கே. 15
இது அழகு நடையில் கிண்டல் தொனிக்க எழுகிற குரலா யிருக்கும் அதே வேளை, ஆழ்ந்த பொருள் செறிவுடனுமிருப்பது பாரதியின் மேதா விலாசத்தைப் பறைசாற்றுவதாகும். இதன் மூலம், மனிதன் தனது முயற்சியினல் "தீய அம்சங்களை நல்ல அம்சங்களாக மாற்றமுடியும்" என்பதையே பாரதி வலியுறுத்து கிருர்.
அவ்வாறுதான் வரலாறும் அமைந்தது. அந்த வங்கப் பிரி வினைக்கெதிரான தேசம் பரந்த எதிர்ப்பியக்கந்தான் தீவிர வாதிகளின் கோட்பாட்டை முன்னணிக்குக் கொண்டுவந்தது. அத்தகைய வீறுகொண்ட எழுச்சிக் குரலை 'சுதேச மித்திரன்" எதிரொலிக்க இடமளிக்காத நிலையில் பாரதி நண்பர்களுடன் இணைந்து "இந்தியா’ பத்திரிகையை 1906இலிருந்து வெளியிடத் Gosmrš66 "Llmtrio.
இதே ஆண்டு (1906 ஆம் ஆண்டில்) இந்தியாவுக்கு விஜ யஞ் செய்த வேல்ஸ் இளவரசரை வரவேற்று பாரதி எழுதிய கவிதை அவரது வரலாற்றறிவையும் சுதந்திர உணர்வையும் ஒருங்கே எடுத்துக்காட்டுவதாயுள்ளது. அக் கவிதையில், ஆங் கிலேயர் வருகை இந்தியத் தொழில் விருத்திக்கு அத்திவார
11.

Page 8
மிட்டதை எடுத்துக்காட்டுகிருர்; சமூகத்தில் புரையோடிக் கிடந்த மதக் குரோத உணர்வுகளையும் மதத்தின் பேரிலே மறைந்து கிடந்த சமூகக் கொடுமைகளையும் ஒழிக்கவேண்டிய உணர்வைத் தோற்றுவித்ததைக் காட்டுகிருர்; பெண்ணடிமைத் தனத்தின் வேரைக் கெல்லியெறியும் நடவடிக்கைகளுக்காகப் பாராட்டுகிறர். அதேவேளை "இந்திய சுதந்திரம்’ என்ற கோஷத்தைக் கேட்டு எள்ளிநகையாடும் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியின் முன்னுல் துணிவுடன் நெஞ்சை நிமிர்த்தி நின்று தொடர்கிருர் -
* 'ஆயினும் என்ன? ஆயிரங் கோடி
தொல்லைகள் இன்னும் தொலைந்தனவில்லை நல்குர வாதி நவமாம் தொல்லைகள் ஆயிரம் எனவந் தடைந்துள நுமரால்."
இதற்குமேல் என்ன? எமது சுதந்திரத்தை அங்கீகரித்து வெளியேறுவதுதான் நீடித்த நட்புறவுக்கு இலட்சணம் என் பதை வேறு சொல்லவேண்டுமா? இதன் வாயிலாக, மேற்குல கின் மறுமலர்ச்சிக்கு ஒளிபாய்ச்சிய இங்கிலாந்தின் கைத்தொழிற் புரட்சியின் ஒளிக் கிரணங்களில் ஒருசில எம்மீதும் விடிவைத் தோற்றுவித்ததென மனதார வாழ்த்தி, அதற்காக வரவேற்ற போதிலும், எமது தொடர்ச்சியான வளர்ச்சிக்கு இடப்பட்ட முட்டுக்கட்டையும் இப்போது உங்களால் அல்லவா ஏற்பட்டி ருக்கிறது என்பதையும் ஒருங்கிணைத்துச் சொல்லிவிட்டார்.
இக்கவிதை தன்மானமிக்க இந்திய அன்னை தன்னேடொத்த நாட்டின் புதல்வனுக்களித்த வரவெற்பு என்ற கோதாவில் மட் டுமே அமைக்கப்பட்டிருக்கிறது. இதை வைத்து பாரதி சுதந் திரத்தை இரந்து கேட்டதாகக் கொள்ளமுடியாது. இதற்கு மாறுபட்ட கருத்தையே பாரதி ஆரம்பந்தொட்டு இறுதிவரை கொண்டிருந்தார். அதனை அவர் படைப்புக்களில் பரக்கக் காணலாம். அவர், மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதையே விரும்பி வலியுறுத்தினர் என்பதற்கு 26 - 01 - 1907 இல் எழு திய 'பிரிட்டிஷாரின் வாள் பலம்' என்ற கட்டுரை சான்று பகர்கிறது :
...... 30 கோடி ஜனங்களின் மனுேநிச்சயத்தை தகர்க்கக் கூடிய வாளும் பீரங்கியும் இந்த உலகத்தில் எங்கே இருக்கின் றன? கும்பகர்ணன் உறங்கிக்கொண்டிருக்கும்வரை அவனுடைய சரீரத்தின்மீது எலிகள் கூடச் சென்று நகத்தால் பிராண்டியும் கூச்சலிட்டும் விளையாடிக் கொண்டிருக்கலாம். கண்விழித் தெழுந்துவிட்ட ராக்ஷன் முன்பாக 20, 30 ஜனங்கள் நின்று
2

வாள்! வாள்! என்று கத்தி என்ன பிரயோஜனம் இருக்கிறது"6
என்று கேட்கிற அதேவேளை விழிப்படையாத இந்திய மக்கள் நிலைகண்டும், அவர்களை விழிப்புறத் தூண்டுவதை விடுத்து அர சுக்கு மன்ருட்ட மகஜர் அனுப்புவதே தம் பணியாய்க் கொண்டு விட்ட மிதவாதிகளின் பேதமையைக் கண்டும் வருந்துகிருர் -
"...ஆடுகள் எத்தனை காலம் பொறுமையுடன் நீதி சாஸ் திர உபதேசம் செய்தபோதிலும், ஓநாய்களின் ஜென்ம இயற்கையை மாற்ற முடியாது. நீதி சாஸ்திர உபதேச சக்தி யினுல் இழந்துபோன ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் எங்கும் எந்தக் காலத்திலும் கிடையாது. அவரவர்கள் தத் தம் துக்கங்களுக்கு தாங்களே நிவர்த்தி தேடிக்கொள்ள வேண்டுமென்பது இயற்கை நீதி. நமது ஜனங்கள் அந்நியர் களிடம் விசுவாசம் வைத்திருக்கும்வரை எவ்விதமான அனுகூல மும் ஏற்படப்போவதில்லை என்பது திண்ணம்."
இந்த நிலை அவர் நெஞ்சம் புண்படக் காரணமாயிருந்தது. அக்கால மாந்தர் நிலைகண்டு நெஞ்சு பொருமினர்:
'நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே;
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவை யென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் ருரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே."
என்று அங்கலாய்க்கிருர், இதற்குரிய காரணத்தைத் தேடினர். இத்தகைய மக்களுக்கு உண்மையை விளக்கி கிளர்ச்சி செய்யத் தூண்டி, அதனூடாக மக்களை ஸ்தாபனப்படுத்தும் வெகுஜன இயக்கமாக காங்கிரஸ் இல்லாததைக் கண்டார். அது வெறு மனே, ஆங்கிலங் கற்ற விற்பன்னர்கள் வருடத்தில் மூன்றுநாள் கூட்டம் போட்டுச் சில வேண்டுதல்களை அரசுக்குச் சமர்ப்பித் தற்கு நடாத்தப்படும் வெறும் திருவிழா என்ற காரணத்தை யும், அந்த நிலையை மாற்றுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதையும் 'நாம் அனுசரிக்கவேண்டிய வழி' என்ற கட் டுரையின் வாயிலாக சுருக்கமாகவும், தெளிவாகவும் வெளிப் படுத்துகிருர்: w
' ' . . . . . . காரணமின்றி ஒரு காரியமும் உலகில் நடவாது. ஆகையால், காங்கிரஸின் உபயோகக் குறைவிற்குப் பல காரணங் கள் உள; அவைகளில் முக்கியமானதும் மரத்திற்கு வேர்
13

Page 9
போன்றதுமான ஒரு காரணம் உள்ளது. அதென்னவெனில், இப்போது கூடும் பொதுக்கூட்டம் பொது ஜனங்களான நிலச் சுவ்ான்தார்களாலும் இன்னும் பல வர்த்தகர்களாலும் ஏழைக் குடிகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்டதல்ல. இந்த காங்கிர ஸானது முழு பலத்தை உண்டுபண்ணவும், அதன் கீர்த்தியை நிலைநாட்டவும் வேண்டுமென்ற எண்ணம் நமக்கிருக்குமாயின் இதை மூன்றுநாள் திருநாளாக்காமல் தினம் நாம் செய்யும் கடமையெனக் கொண்டு 'காங்கிரஸ் ஆபீஸ்' என்ற ஆபீஸ் என்றைக்கும் நிலைபெற்றிருக்கவேண்டும். பெரிய தேசாபிமானி களனைவரும் இந்த ஆபீஸின் காரியத்தை நிருவகித்து இந் தியாவை பல சிறு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் ஒரு சங்கமேற்படுத்தி, அச் சங்கத்தார் தலைமை ஆபீஸிற்கு ஆறு மாதத்திற்கொருதரம் அப்பிரிவின் நிலைமைகளையும் குறை களையும் எழுதியனுப்பவும், கடைசியாக காங்கிரஸ் கூடும்போது பொதுஜனங்கள்ைக் கொண்டு அச் சங்கத்தில் காங்கிரஸுக்குப் போக முன்னிற்கும் தேசாபிமானிகளில் 'ஒட்" மூலமாய் எவரையேனும் தெரிந்தெடுக்கவும் இன்னும் பல நன்மைகளைச் செய்யவும் ஏற்பாடு செய்யவேண்டும். இருளடைந்து பலவகை துன்பங்களில் ஆழ்ந்து கிடக்கும் கோடிக்கணக்கான ஜனங் களுக்கு இக் காங்கிரஸ் இன்னதெனவும், அதில் அவர்களுக்கு உரிமையுண்டெனவும் நன்முய் விளக்கி அந்தந்த நாட்டு பாஷை யில் மாதந்தோறும் எடுத்துப் பேசியுள்ள அவ் விஷயங்களை அவர்கள் முன்வைத்து அவர்களைக் கண் விழித்துப் பார்க்கும் படி செய்யவேண்டும். '8
இவ்வாறு எழுதியதோடமையாது, இவற்றைச் செயலாக்கு வதில் தானே முன்னின்று உழைக்கும் பாங்குமுடையவராய் பாரதி விளங்கலானர். அவர் ஸ்தாபன ஒழுங்கமைப்பைப் பேணுவதில் உறுதியாக இருந்துவந்திருக்கிருர் என்பதற்கு 1906 இல் கல்கத்தா காங்கிரஸுக்குப் போகும் பிரதிநிதிகளை ஜனநாயக முறைப்படி தெரிவு செய்வதில் அவர் காட்டிய அக் கறை ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்: ( கல்கத்தா காங்கிர ஸ"சக்கு)
...... பிரதிநிதிகள் அனுப்பவேண்டுமென்று பூரீ விபின சந்திரபாலர் நமது ஆபீசுக்கு எழுதினபடியால் 17ம் தேதி யன்று காங்கிரஸ் டெலிகேட்டுகள் தெரிந்தெடுக்கும் பொருட் டாக "இந்தியா" ஆபீசில் ஒரு பொது சபை கூட்டப்பெறும். 19
என அறிவித்து, அத்தகைய பொதுச்சபைக் கூட்டத்துக்கூடா கவே தீர்மானங்களும் நிறைவேற்றப்படலாயிற்று என்பதையும் நாம் காணலாம். அவ்வாறே, மக்களைக் கிளர்ந்தெழத் தூண்டும்
14

ஆர்வத்தையும் அவர் மரணமடையுங் காலம்வரை கைவிட வில்லை. அவர் கலங்காத நெஞ்சோடு, தளராத நம்பிக்கை யோடு தன் கவிதைகளை ஊடகமாகக் கொண்டு மக்கள் மத்தி யில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
இத்தகைய தீவிர பிரச்சாரம் திலகர் - விபின் சந்திர பால் - லாலா லஜபதிராய் போன்றேர் முன் முயற்சியால் தேசம் பூராவிலும் வியாபித்திருந்தது. இது பொதுஜனங்களைச் சிறுகச் சிறுக ஆட்கொண்டு, வீறுகொண்ட தேசிய எழுச்சிப் பேரலையின் முதல் அத்தியாயங்களை வடித்தது. இந்த உத் வேகத்தில், 1907இல் பாரதி "சுதந்திரப் பள்ளு" இசைத்தார்;
"ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று."
இப்படிக் குதூகலிப்பது நிறைவு பெறுதற்கு, ஈட்டப்படும் சுதந்திரம் அரசியல் சுதந்திரமாக மட்டுமல்லாமல் சமூக விடு தலையைக் கொணர்வதாகவும் அமையவேண்டுமென அவர் எதிர்பார்த்தார்:
"எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே." -
என்று பிரகடனஞ் செய்து :
*உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம் விழலுக்கு நீர்ப்பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஒயமாட்டோம்.'
என்று சபதமெடுக்கிருர்,
இந்த மகிழ்வு நீடிக்கமுடியாமல் ஒரு வருடத்தில் வரலாற் றுத் திருப்பம் ஒன்று ஏற்பட்டது. இவ்வாறு வரலாறு வளைவு சுழிவைக் காட்டுவதற்கு மக்களின் எழுச்சி, அபிலாஷை ஆகிய வற்றைக் கண்டு எதிரிகள் தாமாகவே பணிந்து போய்விடா ததே காரணம் என்பதை ஏகாதிபத்திய அரசு நிதர்சன உண்மையாக்கிக் காட்டியது. அது செயலில் இறங்கத் தொடங்கிவிட்டது; 1908இல் திலகர் முதல் தமிழகத்தின் தலை வர்களான வ. உ. சி., சுப்பிரமணிய சிவா வரையிலான தீவிரவாதிகள், ஒன்றில் நாடுகடத்தப்பட்டனர், அல்லது கொடுஞ்சிறையின் சித்திரவதைக்காளாக்கப்பட்டனர்; எங்கும் அடக்குமுறை கோரத்தாண்டவமாடியது: "இந்தியா' காரி
15

Page 10
யாலயம் "சீல்" வைக்கப்பட்டு அதன் நிர்வாக ஆசிரியர் கைது கைதுசெய்யப்பட்டார்: பாரதி கைதுசெய்யப்படும் அபாயம் கருதி அவரை நண்பர்கள் புதுவை சென்று "இந்தியா’ பத் திரிகையைத் தொடர்ந்தும் வெளியிடப் பணித்தனர்.
அவ்வாறே பாரதி, பிரெஞ்சு - இந்தியாவான புதுவை சென்று அங்கிருந்து "இந்தியா’ பத்திரிகையை வெளியிட்டார். அங்கிருந்து பிரித்தானிய இந்தியாவினுள் "இந்தியா பிரச் சாரப் பிரயாணம் செய்வதாயிற்று. இதற்கும் 1910இல் ஆப்பு வைக்கப்பட்டது; கடுமையான தடைச்சட்டம் காரண மாகப் பத்திரிகை பிரித்தானிய - இந்தியாவினுள் நுழைய முடியாது போகவே இறுதியில் "இந்தியா நின்றுபோய்விட்டது.
3. ஒடுக்குமுறையைச் சாடும் பாங்கு
இந்த நிலையிலிருந்துதான் பாரதியின் அரசியல் வாழ்வின் இரண்டாவது கட்டம் தொடங்குகிறது. அவருடைய சொந்தப் பத்திரிகை வாயிலாகத் தொடர்ந்தும் பணியாற்ற முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டபோதிலும், மீண்டும் அவர் பத்திரிகை வாயிலாக மக்களை அணுகும் நோக்குடன், நாலு வருடத்துக் குள்ளாகவே "சுதேச மித்திரன்’ களத்தைத் தெரிவு செய்து, அதனுடன் இணைந்தார். இந்த இடைக் காலத்திலுங்கூட, அதாவது 1910ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் பத்திரிகைக் களத்தைத் தேடியது வரையான நாலு வருடங்களில் கூடப் பாரதி கதிகலங்கிச் செயலற்று வாழாவிருக்கவில்லை. மாருக, இச் சிறியகால இடைவெளியே "பாஞ்சாலி சபதம்" கருக்கொள்ள வும், அதன் முதல்பாகம் அச்சேறவும் உதவியது; பகவத்கீதை மொழி பெயர்ப்பைப் படைக்கவும் மகத்தான முன்னுரை அதற்கு வழங்கவும் வகை செய்தது; வீரச் சபதம் நிறைவேற் றும் ‘விஞயகர் நான்மணிமாலை"யைத் தந்தது. இவையனைத் தும், நம்பிக்கையற்ற அச் சூழ்நிலையை பாரதி மாற்றியமைப் பதற்கும், தளராத நம்பிக்கையை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாயிருக்கின்றன.
அவற்றில் ஒன்ருன "பாஞ்சாலி சபதம் எழுதப்பட்ட காரணத்தைக் கலாநிதி கா. மீனுட்சிசுந்தரம் எடுத்துக் காட்டுகிருர் :
**இதில் மறைமுகப் பிரச்சாரம் அமைந்திருப்பதை நம் மால் உணராமல் இருக்கமுடியாது. பாஞ்சாலியின் உறுதி
16

வாய்ந்த எதிர்ப்பிலும் அச்சமற்ற சபதத்திலும், அவமதிக்கப் பட்ட இந்திய மக்களின் பொங்கியெழுந்த சினக்குரலையே கேட் கிருேம்."10
இவ்வாறு எண்ணுவதற்கு நியாயமான காரணம் இருக் கிறது. பாஞ்சாலி வடிவில் பாரதி பாரத மாதாவைத் தான் படம் பிடித்துக் காட்டினர். இதை ப. ஜீவானந்தம் பல ஆதாரங் களுடன் நிரூபித்திருக்கிருர், அவற்றில் உச்சக் காட்சியான உயர் சாட்சி ஒன்று : பாஞ்சாலியைத் துச்சாதனன் கூந்தல் பற்றி வழிநெடுக இழுத்துவரும்வேளை அவனைக் கொன்று பாஞ்சாலியை மீட்டு அந்தப்புரத்தில் சேர்க்காதிருந்த "அப் பாவி மக்களின் பேடித்தனங் கண்டு கொதித்துக் குமுறியெழும் பாரதியின் ஓங்காரக் குரலினைத் தொட்டுக் காட்டி, இது பாரத மக்கள் பாரததேவியை அரியணையேற்றத் திராணியற்றிருக்கும் நிலைகண்டு பாரதி கொதிப்படைந்ததன் வெளிப்பாடுதான் என்று கூறியதன் மூலம், ப. ஜீவானந்தம் எடுத்துக்காட்டியிருக் கிழுர், அவர் காட்டிய பாரதியின் இந்த வரிகள், அந்த உண் மையைத்தான் தெளிவுபடுத்துகிறது:
"...வழி நெடுக மொய்த்தவராய்
"என்னகொடுமையிது வென்று பார்த்திருந்தார் ஊரவர் தங்கீழ்மை, உரைக்குந்தர மா மோ? வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன் தன்ன்ை மிதித்துத் தராதலத்திற் போக்கியே, பொன்னையவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல், நெட்டை மரங்களென நின்று புலம்பினர் பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையா மோ?"
இவ்விதம் துயர் தோய்ந்த சினக்குரலில் எழும் கேள்வி வாயிலாக, ஆண்டாண்டுகால அடிமைத்தனத்தைத் துடைத் தெறிய வக்கில்லாத அவலமான ஒலத்தை, அதே நிலையில் தகர்க்கப்படவேண்டிய பெண்ணடிமைத்தனத்தின் புலம்பலுடன் இணைத்துப் “பெட்டைப் புலம்பல்" என அழகான, ஆழமான உவமைச் சிறப்புடன் பாரதி வெளிப்படுத்தியிருக்கிருர்:
அதே வேளை நிலவிவந்த அடக்குமுறையைப் "பேயரசு செய்தால், பிணந் தின்னும் சாத்திரங்கள்!' எனப் பொங்கி யெழுஞ் சினக்குரலில் சாடுகிருர். இந்த நிலை நீடிக்கப்போவ தில்லையென்பதையும் பாரதி தெட்டத் தெளிவாகச் சொல்லி வைக்கிருர். அதை அர்ச்சுனன் வாயிலாக நிதானத்துடன் சொல்கிருர்.
17

Page 11
'தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்: தருமமறு படி வெல்லும்’ எனுமியற்கை மருமத்தை நம்மாலே யுலகங் கற்கும் வழிதேடி விதியிந்தச் செய்கை செய்தான் - கருமத்தை மேன்மேலுங் காண்போம். இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; கால மாறும் தருமத்தை யப்போது வெல்லுக் காண்போம் தனுவுண்டு காண்டீவ மதன்பேர்.'
என்றன் ( அர்ச்சுனன்).
அத்தகைய வீரச்சமர் விரைவில் வரவிருப்பதை பாரதி நம் பிக்கையோடு எதிர்நோக்கியிருந்தார். அதுவரை யாது காரணம் முன்னிட்டும் கலங்காதிருக்கும் திண்ணிய நெஞ்சம் வரப்பெற்ற பாங்கினை "விஞயகர் நான் மணி மாலை"யில் காட்டி நிற்கிருர்:
"அச்சமில்லை அமுங்குதலில்லை
நடுங்குதலில்லை நாணுதலில்லை பாவமில்லை பதுங்குதலில்லை ஏதுநேரினும் இடர்ப்படமாட்டோம்.'
இவ்வாறு எத்தகைய நெருக்கடி நிலையிலும் வாடிப்போகாது நம்பிக்கையுடன் கடமையைச் செய்யத் தூண்டும் நோக்குடனே * கீதை மொழிபெயர்ப்பை” ( 1912 இல் ) பாரதி செய்திருப் பதை அதன் முன்னுரையிலிருந்து புரிந்துகொள்ள முடியும். அந்த முன்னுரையிலேயே, கீதையின் சில கோட்பாடுகளுடன் (மறுபிறப்பு, துறவு, யாகம் போன்றவற்றுடன் ) அவர் உடன் பாடில்லாததைக் காணமுடியும். அப்படியிருந்தும் அதனை முக் கியத்துவமானதாக அவர் கருதியதற்கு ஒரு காரணம், "கட மையைச் செய்வது மனித இயற்கை இலட்சியம் வெற்றி பெறும் - அது இயற்கை (தெய்வ ) நியதி, அந்தப் பயனில் மனிதனுக்குப் பொறுப்பில்லை’ என்பதை உணர்த்துவதன் வாயிலாக நம்பிக்கையை விதைக்கும் உன்னத குறிக்கோள் ஒன்றுதான்.
இதேவேளை, 1914இல் 1ம் உலக யுத்தம் தொடங்கித் தொடர்ந்து கொண்டிருந்தது. இவ்வேளை ஆங்கில அரசுக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடாது, யுத்தம் முடிந்தால் "சுயராஜ் ய"த்தைத் தந்துவிடுவார்கள் என்று காந்தியுட்படக் காங்கிரஸ்முஸ்லிம் லீக் தலைவர்கள் சொல்கிருர்கள். இதனை மறுத்த பாரதி இப்போதே ( யுத்தகாலத்திலேயே ) சுயராஜ்யத்தை வழங்கிவிடும்படி காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும் வற்புறுத்தி,
18

மக்கள் மத்தியில் கிராமம் கிராமமாச் சென்று குரல் எழுப்ப வேண்டுமென்கிருர். இதைக் காங்கிரஸ் - முஸ்லிம் லீக் தலைவர் கள் நிறைவேற்ருத போதிலும், பாரதியின் பாதையைக் காலங் கடந்தாயினும் மேற்கொள்ளும் நிலைக்கு அவர்கள் தள் ளப்பட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்த அளவில்கூட ஏகாதி பத்திய அரசு 'கருணை" காட்டத் தவறியது. இந் நிலையில் அதிருப்தியுணர்வு எங்கும் ஆட்கொள்ளத் தொடங்கியது; காங்கிரஸின் கும்பகர்ணத் தூக்கத்தை அரசு அடக்குமுறைப் பீரங்கியால் அதிரவைத்தது.
மீண்டும் தேசிய உணர்வு கொந்தளிக்கத் தொடங்குகின் றது; அதற்குரிய அகநிலை 1916 இலிருந்தே உருவாகத் தொடங்கிவிட்டது. அதே வேளை புறநிலை ரீதியாக, பலமான அரசொன்றை உழைப்பாளி மக்கள் திரள் தொழிலாளி வர்க் கத் தலைமையில் போராடி வீழ்த்தித் தமது கரங்களில் ஆட்சி யதிகாரத்தைப் பெறமுடியுமென்ற அசையாத நம்பிக்கையைச் செயலாக்கிக் காட்டியதன் மூலம், இந்தியத் தொழிலாளர் விவசாயிகளை உலுக்கி எழுப்பியது, 1917 இன் லெனின் தலை மையிலான ரஷ்ய அக்டோபர் புரட்சி.
4. அக்டோபர் புரட்சி -பற்றி பாரதி
இப் புரட்சியை வாழ்த்தி வரவேற்றுப் பாடிய முதலாவது இந்தியக் கவி பாரதிதான். இந்த உண்மையைச் சில 'அதி தீவிரப் புரட்சி" வீரர்களால் சீரணிக்க முடியவில்லை. அத் தகையவர்கள், பாரதி ஒரு முதலாளித்துவக் கவிஞரென்பதால் அவர் அக்டோபர் புரட்சியை வாழ்த்தியிருக்கமுடியாதென்று கருதி, பாரதி அதே ஆண்டில் பெப்ரவரியில் நடந்த, ஜார் மன்னன் தூக்கியெறியப்பட்டுக் கெரென்ஸ்கி தலைமையில் தற் காலிக அரசு பதவியேற்ற பெப்ரவரி (முதலாளித்துவப்) புரட் சியையே வாழ்த்தினர் என்று கூறி உண்மையை விகாரப் படுத்துகிருர்கள்; இல்லையென்ருல், “லெனின் தலைமையிலான போல்ஷ்லிக் அரசு நீடித்து அரசாள முடியாதென்று பாரதி சொல்லியிருப்பாரா?” என்று கேட்கிருர்கள்.
இந்த மாதிரி முதலாளித்துவ சார்பு நிலைப்பாட்டுக்கும் சோஷலிஸப் புரட்சியைக் குதூகல மனுேபாவத்துடன் வர வேற்றுப் பாடிய கவிதா உணர்வுக்குமிடையே ஒரு சீன நெடுஞ் சுவர் எழுப்பிப் பிரிக்கவேண்டியதில்லை. அத்தகைய தடைச் சுவர்களையும் தகர்த்துக்கொண்டு அக்டோபர் புரட்சி தேசிய
19

Page 12
வாதிகளை ஆகர்ஷித்துக் கொண்டதென்பது ஒரு புறநிலை ரீதி யான உண்மை. இதனல்தான் "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்ற கோஷத்துடன் "ஒடுக்கப்பட்ட தேசங் களே ஒன்று சேருங்கள்" என்ற கோஷத்தையும் இணைப்பது நடைமுறைச் சாத்தியமானது. அதற்குரிய நம்பிக்கையான சூழ்நிலையையும் அக்டோபர் புரட்சி வழங்கியது. அப் புரட்சி யொன்றே முதன் முதலாகத் தேசிய இனங்களின் சுய நிர்ண யத்தை அங்கீகரித்துத் தனது நாட்டின் காலடியில் அடக்கப் பட்டு வந்த தேசங்களின் சுதந்திரத்தை அங்கீகரித்திருந்தது. அது மட்டுமல்லாமல், தேசங்களைக் கபஸ்ரீகரம் செய்யும் ஏகாதி பத்திய யுத்தத்திலிருந்து தனது மக்களைத் திருப்பியழைத்த புரட்சிகர நடைமுறையை அக்டோபர் புரட்சிதான் நிதர்சன உண்மையாக்கிக் காட்டியது. இவற்யையெல்லாம், தீவிர தேசியவாதியான பாரதி பார்க்கத் தவறவில்லை. அதோடு அவர் கெரென்ஸ்கி அரசு தோன்றிய உடன் புதிய சகாப்தம் உருவாகியதாகக் கருதவில்லையென்பதற்கும் அக்டோபர் புரட் சியையே கிருத யுகத்தைக் கட்டியங் கூறிய புரட்சியாகக் கரு தினர் என்பதற்கும் பல நூறு ஆதாரங்கள் உண்டு. அவர் 28.03.1917 இல், பெப்ரவரிப் புரட்சியின்பின் சொல்கிருர்:
"பூமியில் நல்ல யுகம் தோன்றப்போகிறது. மனித ஜாதி முழுமைக்கும் விடுதலை உண்டாகப்போகிறது. ருஷ்ய ராஜ் யப் புரட்சியானது இனி வரப்போகின்ற நற்காலத்தின் முன் ரைடையாளங்களில் ஒன்று."
இவ்வாறு அக்டோபர் புரட்சிக்கு முன் "இனிவரப் போகின்ற நற்காலத்துக்கு அடையாளம் தெரிவதையே அவர் கண்டு, காட்டினர். அதன் பின்னர், அக்டோபர் புரட்சி வெற்றி வாகை சூடிய பின்னர், ஜாரின் கொடுமையின் முடிவைப் போல்ஷ்விக்குகளே உறுதிப்படுத்தியதை ‘நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்" என்ற கட்டுரையில் -
'ருஷ்யாவில் ஜார் சக்கரவர்த்தியின் ஆட்சி பெரும்பாலும் ஸமத்துவக் கக்ஷயார் அதாவது போல்ஷிவிஸ்ட் கட்சியாரின் பலத்தாலேயே அழிக்கப்பட்டது. எனினும் ஜார் வீழ்ச்சியடைந்த மாத்திரத்திலே அதிகாரம் போல்ஷிவிஸ்ட்களின் கைக்கு வந்துவிடவில்லை. அப்பால் சிறிதுகாலம், முதலாளிக் கூட்டத் தார் கெரென்ஸ்கி என்பவரைத் தலைவராக நிறுத்தி, ஒருவித மான குடியரசு நடத்தத் தொடங்கினர்கள். ஆணுல் கெரென்ஸ்கியின் ஆட்சி அங்கு நீடித்து நடக்கவில்லை. இங் கிலாந்து, ப்ரான்ஸ் முதலிய நேச ராஜ்யங்களிடமிருந்து பல வகைகளில் உதவி பெற்ற போதிலும், புதிய கிளர்ச்சிகளின்
20

வெள்ளத்தினிடையே கெரென்ஸ்கியால் தலைதூக்கிநிற்க முடிய வில்லை. சில மாஸங்களுக்குள்ளே கெரென்ஸ்கி தன் உயிரைத் தப்புவித்துக் கொள்ளும் பொருட்டாக, ருஷ்யாவினின்றும் ஒடிப்போய், நேசவல்லரசுகளின் நாடுகளில் தஞ்சம் புகநேரிட் டது." 12
என்கிருர். இவ்வாறு குதூகலிக்கும் அதேவேளை போல்ஷ்விக் ஆட்சிக்கு அபாயந் தரும் நிலையைக் கண்டபோது அவர் வருந் தினர் என்பதுதான் உண்மை; நேச வல்லரசுகள் கெரன்ஸ்கி போன்றேரின் உதவியுடன் உள் நாட்டு யுத்தத்துக்குத் தொடர்ந்து தூபமிட்ட வண்ணமிருந்தார்கள். இது, பாரதிக் குத் தூக்கமில்லாத அளவுக்கு மன உலைச்சலைக் கொடுத்தது. அவர் பலவாருக வருந்தி, தான் தூக்கமின்றி அவதிப்பட்ட தைச் சோகரசங் கலந்த நகைச்சுவை உணர்வோடு எழுதும் போது ' உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரு பக்கம் இடி, லெனினுக்கு லட்சம் பக்கத்திலே!"13 என்கிருர்,
இத்தகைய நெருக்கடிகளை முறியடித்துப் படிப்படியாக வெற் றியை உறுதிப்படுத்தும் பல சட்டங்களை ருஷ்யப் பாட்டாளி வர்க்கக் கட்சி நிறைவேற்றுவதைக் கண்டபோது, இலட்சியப் பற்றுமிக்க பொருமையுணர்வுடன் குதூகலிக்கிருர் பாரதி. அவர் கிருத யுகத்தை இந்தியா முதலில் உலகுக்களிக்கும் என்ற அசையாத நம்பிக்கையுடன் -9յաՄո Ց] உழைத்தவராத லால் புதிய ருஷ்யாவின் உறுதியான வளர்ச்சியைக் கண்ட போது -
**ருஷ்யாவில் “சோஷலிஸ்ட்" கட்சியார் ஏறக்குறைய நம் முடைய நோக்கத்தை நிறைவேற்றிவிடக்கூடுமென்று தோன்று கின்றது." 14
என்று எழுதினர். இவ்வாறு அவரது முழுமையான தோற்றம் தெளிவாகக் காட்டும் ஒரே உண்மை அக்டோபர் புரட்சியே கிருத யுகத்துக்குக் கட்டியங் கூறிய புரட்சியென அவர் கருதி ஞர் என்பதும், ஆதலால் "புதிய ருஷ்யா அக்டோபர் புரட்சி யையே வாழ்த்திப் பாடப்பட்டது என்பதுமாகும்.
இவைதவிர, இன்னும் பல ஆதாரங்களை வைத்துப் பல ஆய்வாளர்கள், பாரதி அக்டோபர் புரட்சியை வாழ்த்திப் பாடிய கவிதைதான் ‘புதிய ருஷ்யா” என்பதை எடுத்துக் காட்டி யுள்ளார்களாதலால் இதற்கு மேல் "அதிதீவிரப் புரட்சி வீரர் களிடமிருந்து நிஜமான பாரதியை மீட்க நாம் நேரத்தைச் செல விட வேண்டாம். . ... ',
21

Page 13
அவர் அக்டோபர் புரட்சியின் சாராம்சத்தைக் கிரகித்து அதைக் கவிதா நயத்துடன் வடித்திருக்கிருர்:
"குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி கடிதொன்றில் எழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார்! அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது அடிமையில்லை அறிக என்ருர்!’
என அகவயப்பட்ட மகிழ்வுணர்வோடு கூறித் தனது இலட்சிய சகாப்தம் இனி எதிர்காலத்துக்குரியதல்ல; அதற்குக் கட்டியங் கூறப்பட்டுவிட்டதெனப் பாடிவைக்கிருர் :
**இடிபட்ட சுவர் போல் கலிவிழுந்தான்
கிருத யுகம் எழுக மாதோ'
5. பேரெழுச்சி தோற்றிய "புதிய விதி'
இத்தகைய ஆனந்தக் களிப்பும், நம்பிக்கையும் பாரதியிடம் மட்டுமல்ல, தேசம் பரந்த அளவில் பலரிடம் வேர்பரப்பத் தொடங்கிவிட்டது. இந்த நம்பிக்கை யொளியுடன் எழுந்த இந்திய தேசிய எழுச்சிப் பேரலையை, 1919 இல் அடக்க எண்ணி அரசு மேற்கொண்ட "அமிர்தசரஸ் படுகொலை”, எரிகிற நெருப் பில் நெய்யை வார்த்தாற் போலானது. அரசின் 1919 இன் சீர்திருத்த நடவடிக்கையை இந்திய மக்கள் தீரத்துடன் எதிர்த் துப் போராடினர். அதில், புதுவையிலிருந்து 1918 ஆம் ஆண் டில் பிரித்தானிய - இந்தியாவுக்கு மீண்டுவிட்ட பாரதியும் கலந்து கொண்டார்.
அதேவேளை 1919 டிசம்பர் வரை ஏகாதிபத்திய அரசில் நம்பிக்கை பாராட்டிய காந்தி "ஒத்துழையாமை”யை முன் வைக்கிருர். இந்த ஒத்துழையாமையை விபின் சந்திரபால், ரஞ்சினதாஸ் உட்பட பாரதி ஈருக உள்ள "பழைய தீவிர வாதிகள் எதிர்க்கின்றனர். அவ்வாறு எதிர்ப்பதற்கான கார ணத்தை பாரதி தெளிவாக 30 - 11 - 1920 "சுதேசமித்திரன்' இதழில் விளக்குகிருர் .
"...இந்த ஒத்துழையாமை முறையையே மிகவும் உக்ரம்ா கவும், "தீர்வை மறுத்தல்" முதலிய அதன் இறுதிப் படிகளை உடனே உட்படுத்தியும், அனுஷ்டித்தால், ஒருவேளை அன்ய ராஜாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்வதாகிய பயன் அதனல் விளையக்கூடும்,
22

எனினும் இப்போது காண்பிக்கப்பட்டிருப்பதாகிய முதற் படியின் முறைக்ளால் அந்தப் பயன் எய்துவது ஸாத்தியமில்லை. தேசாபிமானிகள் மாத்திரமே சட்டசபை ஸ்தானங்களை பஹிஸ் காரம் செய்ய மற்ற வகுப்பினர் அந்த ஸ்தானங்களையெல்லாம் பிடித்துக் கொள்வதினின்றும் இந்தியாவில் ஆங்கில ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்தல் அரிதென்று தோன்றுகிறது. இங்ங்ணமே வக்கீல்கள் தம் உத்தியோகங்களையும், பிள்ளைகள் படிப்பையும் விடும்படி செய்தல் இப்போது நம்மால் முற்றிலும் ஸாதிக்க முடியாத விஷயமாகத் தோன்றுவதுடன் அதனல் குறிப்பிட்ட பயனெய்தி விடுமென்று தீர்மானிக்கவும் இடமில்லை."
இதில் ஓர் உண்மையை வரலாறு நிரூபித்தது. பாரதி எதிர்பார்த்தது போலவே வக்கீல்கள் பகிஷ்கரிப்புப் படு தோல் வியைத் தழுவியது; தாஸ், மோதிலால் நேரு ஆகிய வக்கீல்கள் மாத்திரமே நீதிமன்றத்தைப் பகிஷ்கரித்தனர்; அதேவேளை காந்தியால் அறிவிக்கப்படாத போதிலும் பாரதி விரும்பியது போலவே விவசாயிகள் தன்னெழுச்சி பூர்வமாக தீர்வை மறுத் தலில் இறங்கி இந்தியா முழுவதும் அதுவே இயக்கமாகப் பரிண மித்தது.
இது முதலாவது தேசிய எழுச்சிப் பேரலையில் காணமுடி யாத அம்சம். இப்போது வீறுகொண்ட எழுச்சி பாரதி விரும் பியபடி கீழ்நிலை வரை உலுக்கிவிட்டது. தொழிலாளர். விவசா யிகள், ஓரளவில் மாணவர்கள் என்ற வெகுஜனப் பெருந்திரள் முதல் முறையாக அரசியல் அரங்கில் தமது மகத்தான பங்க ளிப்பை வெளிப்படுத்தி விட்டார்கள்; அதனல்தான் ராஜனி பாமி தத் "இன்றைய இந்தியா' என்ற நூலில் “இதனை முந் திய தீவிரவாதிகள் கண்டால் அதிசயித்துப்போவார்கள்'16 என்ருர், அந்த அதிசய சக்தியை நேரில் கண்ட பாரதி பெரும் உற்சாகத்துடன், தான் முதல் எதிர்த்த அதே ஒத்துழையா மையை ( காந்தி ) -
*கெடுதலின்றி நந் தாய்த்திரு நாட்டின்
கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய்கின்ருன்!"
a இன்று பாரதப் பொன்ன டெங்கும்; மாந்தரெல் லோரும் சோர்வை அச்சத்தை மறந்து விட்டார்
காந்திசொற் கேட்டார், காண்பார் விடுதலை கணத்தி
னுள்ளே.'
என்று பாரதமாதா நவரத்தின மாலை"யில் பாராட்டி ஆதரிக் கத் தொடங்குகிருர், இருந்தபோதிலும் எந்தக் காரணத்துக்
23

Page 14
காக பாரதி மஹாத்மா காந்தி பஞ்சகம்" படைத்தாரோ அதற்கு ஏற்பட்ட கதியைக்காண அவர் உயிருடன் இருக்க வில்லை. எதைக்கண்டு பாரதி குதூகலித்துக் கொண்டு 1921-09-12 அன்று கண்களை மூடினரோ, அதைக்கண்டு காந்தி கலங்கினர். அதன் விளைவாக, காங்கிரஸ் செயற் கமிட்டியின் அவசரக் கூட்டம், 1922-2-12 இல் (பாரதி மறைந்து சரியாக ஐந்து மாதங்களின் பின் ) பர்தோலி என்ற இடத்தில், காந்தி தலைமையில் கூட்டப்பட்டது. அது மக்களின் தீர்வை மறுத்தல் இயக்கத்தைத் தயவு தாட்சன்யமின்றிக் கண்டித்து, "ஜனக் கூட்டத்தின் சண்டாளத்தனமான நடத்தையைக் கண்டு காரி யக் கமிட்டி வருந்துகிறது' என்று அரசிடமும், ஜமீன்தார்களி டமும் மன்னிப்புக் கோரியது; அது சனங்களின் "காடைத் தனத்தைச் சாடியது; அதோடு நில்லாது, “நிலவரியையும் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய இதர வரிகளையும் செலுத்தும்படி விவசாயிகளுக்கு யோசனை கூறி* 17 வெகுஜன எழுச்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க முழு முயற்சியெடுத்தது. இதற்குப்பின்தான் காந்தி 'பக்குவப்படாத சனங்களை'ப் பேசா திருக்கும்படி பணித்துவிட்டுத் தனிநபர் சத்தியாக்கிரகத்தை அறிமுகப்படுத்தினர்.
இவ்வாறு மக்கள் குரல்வளை நெரித்து அடக்கப்பட்டதற் காகக் காந்திக்கு பாரதி கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பை ஓரள வுக்குக் கற்பனை செய்யமுடியும். அது புதிய மிதவாதத் தலைவர் காந்தியின் குருவான பழைய மிதவாதத் தலைவர் கோகலேயை 'கோகலே சாமியார்? என்று கிண்டல் செய்து எழுதிய "கோகலே
சாமியார் பாடல்" போன்று இருக்காதா? இவ்வாறு கோலேயை பாரதி கிண்டல் செய்த அதேவேளை -
“...வேறு சில சாமானிய ஜனங்களைப் போல, கோகலே படித்தினலேனும் அற்ப ஆசைகளினலேனும் ஜனப்பிரியமான முயற்சிகளை எதிர்த்துப் பேசும் சுபாவமுடையவரில்லை. தமக்கு உண்மையாக புலப்படும் விஷயங்களையே பிறருக்குப் போதனை செய்ய முயலும் இயற்கையுடையவர்."18
என்று மதிப்பீடு செய்து அக்காரணத்தினல் கோகலேயை பாரதி மதித்ததையும் நாம் மறக்கக்கூடாது. அதேபோல காந் திக்கிருந்த வெகுஜனச் செல்வாக்கைக் கண்டு, அதன் வாயிலாக மக்களைக் கிளர்ந்தெழத் தூண்ட முடிந்ததென அறிந்து, வாழ்த்தி வரவேற்ற பாரதி, இறுதியில் அதுவே எழுச்சியை நசுக்கவும் பயன்பட்டதெனக் கண்டிருந்தால் மிகவும் வேதனைப் Lட்டிருப்பார். அச்செயலை மிக வன்மையாகக் கண்டிப்ப தற்கு காந்திமீதான மதிப்புணர்வு அவரை ஒருபோதும் தடுத்
24

திருக்காது. அதைவிட சுதந்திர ஆர்வமே அவரிடம் மேலோங்கி யிருந்ததால் கிண்டல் தொனிக்கும் நடையில் கடுமையாகச் சாடியிருப்பார். அதற்கு இடமில்லாமல் அவர் மறைந்த பின் ஞலேயே எழுச்சி நசுக்கப்படலாயிற்று. •
இவ்வாறு இரண்டாவது தேசிய எழுச்சிப் பேரலை பாரதி யின் மறைவுக்குப்பின் அடக்கப்பட்டபோதிலும், அது வீறு கொண்டு பொங்கியெழுந்ததைக் கண்டு மகிழ்ந்தவர் பாரதி: அந்த மகிழ்ச்சி காரணமாகவேதான் அவர் புதிய "பாரத சமுதாயம் குறித்தும் கட்டியங் கூறுகிருர் :
"முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை ஒப்பில்லாத சமுதாயம் ܗܝ
உலகத்துக்கொரு புதுமை - வாழ்க’
இவ்வாறு, "நெருங்கிய பயன் சேர் "ஒத்துழையாமை" நெறியினல்" தோன்றிவிட்ட தீர்வை மறுத்தலின் உக்கிர நிலை யின் மகத்துவத்தை உணர்ந்து காட்டியவர், அது எத்தகைய விளைவை உண்டுபண்ணப் போகிறது என்பதையும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிருர் :
*"மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?*
இருக்கமுடியாது! இந்த நிலைகளும், இல்லையென்ற சொல்லே கூட இல்லாதொழிக்கப்படும் ஒப்பில்லாத சமுதாயத்தின் தாரகமந்திரம்- புதிய விதி, பாரதியால் படைக்கப்பட்டுவிட் டது. இதனூடாக பாரதி கஞ்சிகுடிப்பதற்கிலாத காரணத்தை அறியாது வாடிய, மக்களின் துயர்களைக் களைந்தெறிய வழியறி யாத, பழைய நிலையிலிருந்து தெளிவுபெற்று, இப்போது வழி யறிந்து அதைப் பறைசாற்றுகிருர் :
"இனியொரு விதிசெய் வோம் - அதை
எந்த நாளும் காப்போம்; தனியொருவனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடு வோம்!"
இதனை உறுதியுடன் பறையறையும் புதிய மனிதன்- இவ் வாறு எழுச்சிபெற்றுவிட்ட இந்திய மனிதன் - இனிப் பூரணத் துவம் பெற்றுவிடுவான்; அதன் மூலம், ஒவ்வொரு மனிதனும்
25

Page 15
எங்கோ உள்ள பூரணத்துவத்தைத் தேடுவதல்ல, தன்னுள் நிறைந்துள்ள பூரணத்துவத்தைக் கண்டு, அதையே விருத்தி செய்யும் தத்துவத்தை நிறைவுசெய்வதினூடாக, இந்தியா அதனை உலகுக்கு எடுத்துக்காட்டும் என்று ஆர்ப்பரிக்கிருர்:
** "எல்மா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்"
என்றுரைத்தான் கண்ண பெருமான் எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும்."
6. ஆயுதமேந்திய எழுச்சியும் இந்திய விடுதலையும்
இந்த நிலையைத் தோற்றுவிக்கும் வகையில் தீர்வை மறுத் தல் இயக்கத்தின் உக்கிரநிலை இதற்கும் மேலான உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்கப்படுவதற்கு மாருக, "பர்தோலி செயற் கமிட்டி ஊடாகக் காந்தி அதனை முறியடித்தபோதி லும், இந்த இயக்கம் கதவைத் திறந்துவிட்டதால் தன்னெழுச்சி பூர்வமாகவே அரசியல் அரங்கில் பிரவேசித்த பாட்டாளி வர்க் கம், பாரதியின் மரணத்துக்கு அடுத்த ஓரிரு ஆண்டுகளிலேயே தனது ஸ்தாபனத்தை உருவாக்கி, 1925 இல் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற வடிவில் தனது அரசியல் ஸ்தாபனத் தையும் உருவாக்கிக்கொண்டுவிட்டது. இதன் விளைவாக 1930 -34 இன் மூன்ருவது தேசிய எழுச்சிப் பேரலை தொழி லாளர் - விவசாயிகளின் வளர்ச்சியடைந்த போராட்ட வடிவத் தைச் சந்திக்க முடிந்தது. இதையடுத்து 1942 இன் தேசம் பரந்த எழுச்சி நேரடியாக ஆயுதபலத்தின் மகிமையை வெளிப் படுத்திவிட்டது. இப் புரட்சியின்போது ஏகாதிபத்திய அரசு வழக்கம்போல் காங்கிரஸின் தீவிரவ்ாதிகளையும், கம்யூனிஸ்ட் தலைவர்களையும் மட்டும் சிறையிடவில்லை. இம்முறை வெளியே இருந்து சத்தியாக்கிரகம் போதிக்க இடமில்லாமல் காந்தியையும் உள்ளே இழுத்துவைத்தார்கள். இதனல் சுதந்திர தாகம் தணி யாத மக்கள் இறுதி நிலையிலாவது, தங்கள் கைகளில் அகப்பட்ட ஆயுதங்களையேனும், ஏந்திக்கொள்ள முடிந்தது? இதனுல்தான் காந்தீய தத்துவம் இந்திய சுதந்திரத்தின் அத்திவாரம் என முழக்கமிட்டபோதிலும், இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றுப் புத்தகமான “சுதந்திரப் போராட்டம் மழுப்ப முடியாத நிலையில் இப்படிச் சொல்கிறது :
‘‘1942ஆம் ஆண்டுப் புரட்சி தோல்வியுற்றதற்குக் காரணம் ஆயுதம் தாங்காத மக்கள், வழிகாட்டுவதற்குத் தலைவர்களும், கட்டுக்கோப்பாகச் செயலாற்றுவதற்கு வாய்ப்பும் இல்லாமல்
26

நடத்திய போராட்டம், ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஏகாதி பத்திய வல்லரசின் இராணுவ வலிமைக்கு ஈடுகொடுக்க முடியா மல் போனதுதான். ஆனல் அப் புரட்சியினல் இரண்டு சாதனை கள் கிட்டின. ஏகாதிபத்தியத்தின்மீது இந்தியா கொண்டிருந்த சீற்றத்தையும், சுதந்திரம் அடைய நாடு கொண்டிருந்த உறு தியையும், அப் புரட்சி உலகுக்குத் தெளிவாகவும் துணிவாகவும் உணர்த்தியது. மக்களின் தேசிய உணர்வுகள் எந்த அளவு வலுத்து, ஆத்திரத்தின் உச்சநிலையை அடைந்திருந்தன என் பதற்கும், சுதந்திரம் பெறத் தங்கள் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள தியாகங்களையும் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் உறுதி மக்களிடையே எவ்வளவு வலுத்திருந்தது என்பதற்கும் அப் புரட்சி உயிருள்ள சான்ருக அமைந்தது. இரண்டாவதாக, 1942 ஆம் ஆண்டுப் புரட்சிக்குப்பின், இந்தியாவில் ஏகாதிபத் திய ஆதிக்கத்தின் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது என்ற தெளிவு, பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கும் ஏற்படும்படி செய்தது அப் புரட்சியின் மற்ருெரு சாதனை.
ஒருவகையில் 1942 ஆம் ஆண்டுப் புரட்சி, இந்திய சுதந்திர இயக்கத்தின் வெற்றிக்கட்டமாக அமைந்தது என்று கூறலாம். அப் புரட்சிக்குப்பின், நாடு சுதந்திரம் பெறுமா என்ற ஐயத் துக்கு இடமில்லாமல், எப்பொழுது சுதந்திரம் பெறும், இந்தியர் கைக்கு அதிகாரத்தை மாற்ற என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும், சுதந்திரத்துக்குப் பின்பு நாட்டில் எத்தகைய அரசாட்சிமுறை நிறுவப்படவேண்டும், என்பவை தான் விவாதத்துக்குரிய பிரச்சினைகளாக இருந்தன. 1942ஆம் ஆண்டுப் புரட்சிக்கும், 1947 இல் நாடு சுதந்திரம் பெற்றதற்கும் இடையே பல அரசியல் பேரங்களும் பேச்சுவார்த்தைகளும், அரசியல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன என்பது உண்மைதான். ஆனல் சுதந்திரப் போராட்ட வெற்றியில் ஐயப்பாட்டுக்கு இடமில்லாத நிலையை உண்டாக்கியது, 1942 ஆம் ஆண்டுப் புரட்சியின் மகத்தான சாதனையாகும்.' 19 . . . .
இத்தகைய வரலாற்றுப் படிப்பினைகளும் பாரதி ஆய்வுக்கு அத்தியாவசியமானவையே. இல்லையெனில், ப. ஜீவானந்தங் கூட, "ஆயுதப்பரிகரணம்’, ‘சமாதான சகவாழ்வு" போன்ற கோஷங்களுக்கு ஆட்பட்டு, "வருங்கதிகண்டு பாரதி தீர்க்க தரி சனத்துடன் காந்தியின் அஹிம்சா மகத்துவத்தை வாழ்த்திய தாகக் கருதிய நிலைக்கு நாமும் வருவோம்; அல்லது பாரதி ஆயுதமேந்திய மக்கள் எழுச்சியைப் பாடவில்லையென்றும், காந்தியத் தலைமையை ஏற்ருரென்றும் ஆராய்வின்றிக் கூறி, பிற்போக்குவாதியென்ற பட்டத்தை பாரதிக்குச் சூட்ட நாமும் நிர்ப்பந்திக்கப்படுவோம். இத்தகைய தவருன இரு போக்குகள்ை நாம் இன்றும் காணமுடியும் .
27

Page 16
இவற்றுக்கு மாருகவே உண்மை நிலை காணப்படுகின்றது. பாரதி “வாழ்க நீ எம்மான்" என மகாத்மா காந்தி பஞ்சகம் படைத்து -
'நெருங்கிய பயன்சேர்' 'ஒத்துழையாமை'
நெறியினுல் இந்தியாவிற்கு வருங்கதிகண்டு பகைத்தொழில் மறந்து வையகம் வாழ்க நல்லறத்தே."
என்றபோது, ஒத்துழையாமை அதன் ஒரு உயர் வடிவமான தீர்வை மறுத்தல் இயக்கமாகப் பரிணமிக்கத் தொடங்கி விட்டது. அந்நிலையில்தான் வருங்கதி பற்றிப் பார்க்கிருர் என் பதை நாம் மறக்கக்கூடாது. அதே வேளை இதை மாத்திரம் வைத்து பாரதியின் தீர்க்கதரிசனத்தை அளவிடவுங் கூடாது. அவ்வாறு அளவிட முயற்சித்தால், இதற்கு மாருக இந்திய வரலாறு ஆயுதமேந்திய மக்கள் எழுச்சிக்கும் சுதந்திரத்துக்கும் இடையே இருந்த தொடர்பை எடுத்துக்காட்டியதை பார்க்கத் தவறியவர்களாவோம்; அல்லது இந்த உண்மை காரணமாக "பாரதியிடம் தீர்க்கதரிசனம் இருக்கவில்லையே' என்று கூறுவோம்.
பாரதியின் தீர்க்கதரிசனத்தை, இன்னும் இரண்டு மூன்று தசாப்தங்களின் பின்னல் மட்டுமே சிலரால் உணர முடிந்த சுதந்திரத்தின் சாத்தியப்பாட்டை முன்கூட்டியே அறிவித்ததில் தான் பார்க்கவேண்டுமேயன்றி, அது அமையப்பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் செயல் வடிவங்கள் பற்றி அவர் கூறிய வற்றில் தேடிப்போகக்கூடாது. செயல் வடிவங்களைப் பொறுத்த வரை, அது தேச - கால வர்த்தமானங்களுக்கு ( நிலைமை களுக்கு ) அமைய மாறுபடும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
இல்லையென்ருல் அவர்,
"பூரீமான் காந்தி நல்ல மனுஷர். அவர் சொல்லுகிற ஸத்ய விரதம், அஹிம்சை, உடைமை மறுத்தல், பயமின்மை இந்த நான்கும் உத்தம தர்மங்கள். இவற்றை எல்லோரும் இயன்றவரை பழகவேண்டும். ஆனல் ஒருவன் என்னை அடிக் கும்போது நான் அவனத் திருப்பி அடிக்கக்கூடாது என்று சொல்லுதல் பிழை.**20 ر
என்று கூறியிருக்க அவசியமில்லை. அவர், காந்தி இந்திய அர சியலுக்கு வருவதற்கு ஒரு தசாப்தத்துக்கு முன்பே அந்நியப் பொருள் பஹஸ்காரத்தை உள்ளிட்ட அஹிம்சை வழிப் போராட்டத்தைத்தான் ஏற்றுக்கொண்டவர். இதன் மூலம் தானக ஆயுதம் ஏந்துவதைத் தவிர்த்து, தனிநபர் பயங்கர
8

வாதத்தை நிராகரித்தபோதிலும் எதிரி ஆயுதம் ஏந்தும்போது அஹிம்சை பற்றிப் பேசி மக்களை நிராயுதபாணியாக்கும் நிலைக்கு அவர் ஒரு போதிலும் வந்ததில்லை.
இதை "ஸர்க்கார் அதிகாரிகள் கவனிக்கவும்' என்ற அவருடைய கட்டுரையிலிருந்துகூட நாம் விளங்கிக்கொள்ள (Մ)ւգ-պւհ :
'ஜனங்கள் சமாதான வழிகளினல் தங்கள் நோக்கங்களை எதுவரை நிறைவேற்ற விரும்புகிருர்களோ அதுவரை கவர்ன் மென்டார் சும்மா இருக்கக் கடமைப்பட்டிருக்கிருர்கள். அப் படியல்லாமல் பொதுக்கூட்டங்களைத் தடுத்தல், பாடசாலைகளை பயமுறுத்த ஜனத் தலைவர்களை தீபாந்திரத்திற்கு ஏற்றி அனுப்பு தல் முதலிய கொடுங்கோல் முறைமைகளை அனுசரிப்பது ஸர்க் காருக்கே பெருங் கேடாக முடியும். சமாதான வழிகளிலே விருப்பம் கொண்டு வேலை செய்யும் ஜனங்களை கவர்ன்மென் டார் உக்கிர வழிகளிலே செல்லும்படி பலவந்தப்படுத்தல் அவர்களுக்கு கேஷமகரமான செய்கையாகுமா'21
ஆகாது என்பதை அறிந்து கொண்டு, ஆயுதத்தால் நேரும் அழிவைத் தடுக்க அரசு "பொறுமையுடனும் அடக்கத்துடனும் அறிவுடனும் வேலை செய்யவேண்டும். உக்கிரம் காண்பிப்பார் களானல் கலகமும் முதிர்ச்சி அடைந்துவிடும்" என்று பல இடங்களிலும் சொல்லியுள்ளாரேயன்றி, மக்கள் ஆயுதமேந்திய போது அதைத் தவிர்க்கமுடியாத தேவையென்றே அவர் கருதி வந்திருக்கிருர். அத்தகைய நிலைமைகளில் ஆயுதமேந்திய கல வரங்களை ஆதரித்துமிருக்கிருர்,
அவருடைய மரணத்துக்குப் பின்னல்தான், தேசம் பரந்த ஆயுத எழுச்சி ஒன்றே இந்தியாவின் பூரண சுதந்திரத்துக்கு வழியென்பதைச் சரித்திரம் எடுத்துக்காட்டியிருக்கிறது. அப் போது பாரதி இருந்திருந்தால் அவர் அநுபவத்தினூடாக அதைப் படித்திருக்கமுடியும். அப்போது மட்டுமே மக்களைக் கிளர்ந்தெழ இலக்கியம் படைத்த அவர் ஆயுத எழுச்சியைத் தூண்டிப் புதிய பணியை மேற்கொள்ள முடிந்திருக்கும்.
இதே நிலையில் வாழ்ந்த சீன எழுத்தாளர் லூசுன், 1919 - 20ம் ஆண்டுகளில் மார்க்ஸிஸவாதிகளுடன் தொடர் பிருந்தபோதிலும், 1921இல் சீனக் கய்யூனிஸ்ட் கட்சி உதய மான போதிலும், தன்னளவில் கருத்து முதல்வாதியாகவே இருந்து, 1927 இன் புரட்சித் தோல்வியின் படிப்பினையிலிருந்தே, அவர் பொருள் முதல்வாதியாக, மார்க்ஸிஸவாதியாக மாற முடிந்தது என்பதைக் காணமுடிகிறது. இதைப்போல பாரதிக்
29

Page 17
குங்கூட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகு முன்பே, மார்க்ஸிஸத்துடன் பரிச்சயமுள்ள சிங்காரவேலுச் செட்டியார் போன்றேருடன் தொடர்பிருந்திருக்கிறது. பாரதியுங்கூடக் கூர்மையான வர்க்கப் போராட்டத்தைத் தேசிய இயக்கத்தி னுாடாகக் கண்டு அதை இலக்கியமாக்கித் தந்திருக்கமுடியும் இதற்குச் சந்தர்ப்பமில்லாமல், அதற்குரிய புறநிலை முதனிலை கள் தோன்றுமுன் பாரதி மறைந்தது நமது துரதிர்ஷ்டம்.
7. தேச சுதந்திரமும் சமூக விடுதலையும்
இவ்வாறு, வர்க்க முரண்பாடுகள் தெளிவாக வெளிப்பட்ட இந்நூற்ருண்டின் மூன்ருவது தசாப்தத்தில் (இருபதாம் ஆண்டு களில் ) தொடர்ந்து வாழ்ந்திருந்தால் பாரதி விஞ்ஞானபூர்வ மான வர்க்கப் போராட்டக் கோட்பாட்டை ஏற்றிருப்பார் என்று சொல்வது சரியானதுதான? சரியானதுதான் என்பதற்கு அவருடைய சமூகப் பார்வை உயிருள்ள சான்ருக இருக்கிறது. அவர் தேசிய விடுதலையுடன் சமூக விடுதலையை இணைத்துவந் திருக்கிருர். அதனுலேயே "சுதந்திரப் பள்ளு’ப் பாடியபோது, தேசம் விடுதலையடைந்தவுடன் -
"பார்ப்பான ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே."
என்று ஆனந்தப்படப் போவதை எண்ணிப் பார்த்திருக்கிருர், இதைத் தெளிவாகப் பகுத்து "விடுதலை’ என்ற கவிதையிலும் வெளிப்படுத்துகிருர், அக் கவிதையில் சாதியொடுக்குமுறை யிலிருந்து விடுதலை, ஏற்றத்தாழ்விலிருந்து விடுதலை, பெண் விடுதலை என்ற அம்சங்களே சுதந்திர இந்தியாவில் துலங்க
வேண்டும் என்பதையும், அந்த அம்சங்கள் உயர்ந்த கல்வி ஞானத்தால் நிறைவு செய்யப்படவேண்டும் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிருர், f
இவை மூன்றிலும் பெண்ணடிமைத்தனத்தைச் சாடும் பண்பு தான் பாரதியிடம் மேலோங்கியிருக்கிறது என்பது தெளிவு. இது இயல்பானதுதான். அதற்குரிய காரணத்தை அவருடைய இலக்கியமே கூறுகிறதே -
"நிலத்தின் தன்மை பயிர்க்குள g5 Tg5 L DinTub;
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய் தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சாலவே யரி தாவதோர் செய்தியாம்."
30

இவ்வாறு, தெளிந்த நல்லறிவும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத சுதந்திர மனப்பாங்கும் அமையப்பெற்ற அன்னையே மாண்புயர் மனிதனைப் பெற்றெடுக்கமுடியும் என்றவர், நெஞ் சுரமிக்க பெண்கள் வாழக்கூடிய புதிய சமூகத்தைத் தோற்று விக்கவல்ல கிருதயுகத்தைத் தனது இலட்சிய சமுதாயமாகக் கொண்டவர். அத்தகைய கிருதயுகத்தை முன்னறிவித்த புரட்சியாய் அக்டோபர் புரட்சியை அவர் கண்டார். அவ் வாறு அக்டோபர் புரட்சியிஞல் உதயமான நவீன ருஷ்யாவில் அறிவிக்கப்பட்ட புதிய விவாக விதிகள் பெண் விடுதலை அம் சத்தை முழுமையாகக் கொண்டிருப்பதைக் கண்டு, காட்டினர். அதே வேளை ஐரோப்பிய நாடுகளில் மேலோங்கிய (முதலாளித் துவக் கலாச்சாரச் சீரழிவின் விளைவான) "காதலில் சுதந்திரம்" என்பதைக் கண்டித்து அது கூடச் சுயநலங்கொண்ட காமுக ரான ஒரு சில ஆண் ஆதிக்க வெறியர்களின் ஆசையே’ எனச் சாடிக் கவி படைத்தார் :
காதலிலே விடுதலையென் முங்கோர் கொள்கை
கடுகிவளர்ந் திடுமென்பார் யூரோப் பாவில்; மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னேர்; பேதமின்றி மிருகங்கள் கலத்தல் பேலே,
பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்துவிட்டால், வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று
வேருெருவன் றனைக்கூட வேண்டும் என்பார்.
வீரமிலா மனிதர் சொல்லும் வார்த்தை கண்டீர்
விடுதலையாங் காதலெனிற் பொய்மைக் காதல்! சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது
சுவைமிக்க பெண்மைநல முண்ணுகின்ருர் காரணந்தான் யாதெனிலோ ஆண்க ளெல்லாம்
களவின்பம் விரும்புகின்ருர்; கற்பே மேலென்று ஈரமின்றி யெப் போதும் உப தேசங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்பு வாரே!
ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ? நாணற்ற வார்த்தையன்ருே? வீட்டைச் சுட்டால், நலமான கூரையுந்தான் எரிந்தி டாதோ? பேணுமொரு காதலினை வேண்டி யன்ருே
பெண்மக்கள் கற்புநிலை பிறழு கின்ருர்? காணுகின்ற காட்சியெலாம் மறைத்து வைத்துக் கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் ருரே?
("பாரதி அறுபத்தாறு"
3.

Page 18
இக் கேடுகெட்ட நிலை கடந்த, உயர்ந்த நாகரிகத் தரத்தை சோவியத் அரசே பிரதிநிதித்துவப்படுத்துகிறது" என்பதையே *"நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்" என்ற கட்டுரையில் அவர் எழுதினர். இந்த உயர் நாகரிகத்தை, அதாவது பெண் விடுதலையம்சத்தை, இன்றைய இந்தியா உள்ளிட்ட முதலாளித் துவ நாடுகள் எவற்றிலும் காணமுடியாது. மாருக, இந்நாடு களில் முதலாளித்துவ, அரை நிலப்பிரபுத்துவச் சித்தாந்தங் களின் ஆட்சிநிலை காரணமாகப் பெண் விடுதலைபும், ஒரு புறம் முதலாளித்துவக் கண்ணுேட்டத்தில் தனிநபர் விமோசனமாகக் குறுக்கப்பட்டும், மறுபுறம் “விடுதலை காதல்’ எனும் கலாச்சாரச் சீரழிவை நோக்கி வளர்ந்து கொண்டும் இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டே, பேராசிரியர் க. கைலாசபதி, காப்பியங் களிலிருந்து நவீன இலக்கியங்கள் வரை அகலிகை பட்ட பாட்டை அலசி ஆராய்ந்துவிட்டு இப்படிச் சுட்டிக்காட்டி யுள்ளார்.
'உண்மையில், மகாகவி பாரதியார் கற்பனை கண்டள விற்குங்கூட இன்னும் எமது சமூகத்திற் பெண்கள் உரிமையும் உயர்வும் பெறவில்லை. "பட்டங்கள் ஆள்வதும் / சட்டங்கள் செய்வதும் / பாரினில் பெண்கள் / நடத்தவந்தோம்’ என்று கவிஞர் பாடியதை மேலீடாகக் கொண்டு ‘மாதர் நல்லறம்' நடைமுறைக்கு வந்துவிட்டது என்று சிலர் மயங்குவர்.
எமது நாடுகளில், மத்தியதர வர்க்க, பூர்ஷ்வா மனப் பான்மையோடு சில பெண்கள் பொது வாழ்க்கையில் புகழொடு விளங்குகின்றனர். ஆனல் இது "பாரதப் பெண்குலம்’ முழு வதற்கும் பொருந்துமா?. .
இறுதியாக ஒன்று கூறலாம். கடந்த பல நூற்ருண்டுக் காலமாக - அரசியல் அதிகாரம், வம்ச (குல) அதிகாரம் Pதி அதிகாரம், ஆண் (கணவன்) அதிகாரம் ஆகிய நான்கு வகை யான அதிகாரங்களுக்கு ஆட்பட்டவர்களாய்ப் பெண்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவற்றில் சில நவீன காலத்தில் பல வீனமுற்றிருக்கின்றன. எனினும், பெளதிக முறையிலும், கருத்து முறையிலும், நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ - சித் தாந்தங்கள் இவற்றை ஆதரிக்கவே செய்கின்றன. மேற்கூறிய அதிகாரங்களிற் சில ஆண்களையும் உட்படுத்துகின்றன. எனவே ஆணும் பெண்ணும், யாவரும் சேர்ந்து இவ்வதிகாரங்களுக்கு ஆதாரமான சமுதாய அமைப்பைத் தகர்த்தெறியும்பொழுது தான் பெண் விடுதலையும் கிடைக்கும். அது வாய்ப் பேச்சாலன் றிப் போராட்டத்தினலேயே வருவதாகும்."22
32

அத்தகைய போராட்டங்களில் புடம்போட்டெடுக்கப்படும் இயக்கங்கள் பெண் விடுதலையைத் தனிநபர் விமோசனம் என்ற வகையிலன்றிச் சமூக விடுதலை முழுமையினதும் பிரதான பகுதியாகக் கணிக்கின்றன. அதன் காரணமாகவே பெண் விடுதலையில் தீவிர ஆர்வமும் முற்போக்குச் சிந்தனையுங் கொண்ட பெண்கள், முதலாளித்துவ - ஏகாதிபத்தியச் சிந் தனையின்பால் சோரம்போன பொழுதுபோக்கு மோதர் சங்கங் களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தித் தேசிய - சமூக விடுதலை இயக்கங்களுடன் தம்மை இணைத்துக்கொண்டு, ஆண் களுடன் சரிநிகர் சமானமாக நின்று போராடுகிருர்கள். ஏன், ஸ்பெயின் குடியரசுப் போராட்டத்தின் வரலாற்றில், ஐரோப் பாவையே உலுப்பிவிட்ட வீரஞ்செறிந்த உள்நாட்டு யுத்தத்தின் போது முழு மக்களுக்கும் தலைமை கொடுத்தும், அப்போது ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தலைமை தாங்கியும் இபா றுாறி, மக்கள் விடுதலை இயக்கத்தில் பெண்ணின் பங்கைத் தலைமை தாங்கும் நிலைவரை உயர்த்தியுமுள்ளார்; இப் பாரம் பரியத்தை இன்றுவரை விடுதலை இயக்கங்களில் இணைந்துள்ள பல்லாயிரக்கணக்கான பெண்கள் சிறந்த தலைமைப் பண்பின் வாயிலாகப் பேணிவந்துகொண்டிருக்கிருர்கள். இத்தகைய இயக்கங்களினூடாக சோஷலிஸ் அமைப்பை வென்றுகொண்ட சீன போன்ற சோஷலிஸ் நாடுகளில் பெண்கள் விடுதலைக்கு முன் இருந்த அடிமை நிலையிலிருந்து பலபடி வளர்ச்சியைத் (தனி மனித அந்தஸ்துக்கு மேலாகச் சமூக ரீதியாகவே ) பெற்றுவிட்டார்கள், மேலும் பல வெற்றிகளைப் பெற்றுவரு கிருர்கள் என்பது ஒருதலை.
இந்த வரலாற்று உண்மைகள் ஒரு அடிப்படையான படிப் பினையை வழங்கியிருக்கின்றன. அதாவது, முதலாளித்துவ அமைப்புத் தகர்க்கப்பட்டு - ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்பட்டு, சோஷலிஸ் அமைப்பு நிர்மாணிக்கப்படுவதன் வாயிலாகவே பெண் விடுதலை (சாதியொழிப்புங் கூட ) நிறைவுபெற முடியும். அதற்கு முன் தேவையாக தேச விடுதலை ஈட்டப்படவேண்டும். இதற்கு மாருக, தேசவிடுதலை இன்றியே, அதற்கு முன்பே ஆசாரத்திருத்தம் குறித்துச் சிலர் பகற்கனவு கண்டனர் - இதைத் தவறெனக் கண்டித்த பாரதி, தேச விடுதலையுடன் தான் சமூக விடுதலை சாத்தியமாக முடியும் என்பதில் உறுதி யான நம்பிக்கை வைத்திருந்தார். இதற்கு 10 - 11 - 1906இன் "இந்தியா"வில் "மகாராஷ்டிர ஜனேந்திரராகிய பூரீமத் பால கங்காதர திலகர்' பற்றி எழுதியது சிறந்த சான்ருகும் :
33

Page 19
''. . . . . . . . . . . . "விதவைகளுக்கு விவாஹம் செய்யவேண்டும், *சர்வ ஜாதியாருங் ஒன்ரு ய் கலந்துவிட வேண்டும்" என்பது போன்ற கொள்கைகளுடைய ஆசாரத்திருத்தல் கட்சியிலே திலகர் தம்மால் சேரமுடியாதென்கிருர் . அதன்பேரில், இந்த ஆசாரத்திருத்தல் கட்சிக்காரர்களிலே அநேகர் அவரை தாறு மாருக நிந்திப்பதுடன் அவர் ராஜதந்திர விஷயங்களில் ஜனத் தலைமை பூண்பதற்கு சிறிதேனும் தகுதியற்றவரென்று பழிக் கிருர்கள்.
ஆசாரத் திருத்தல்காரர்களின் கோட்பாடு சரியா தப்பா என்பதைப்பற்றி நாம் இங்கே விவரிக்கவேண்டியது அவசிய மில்லை. அவர்களின் கோட்பாடுகள் சரியென்றும், திலகரின் கொள்கைள் தப்பென்றுமே வைத்துக்கொள்வோம். அதிலிருந்து திலகர் ராஜதந்திர விஷயங்களில் வழிகாட்ட உரிமைபெற்ற வரல்லவென்று வாதாடுவது மூடத்தனமல்லவா?.
.திலகரது கல்வியும், ஜனுபிமானமும், தேசபக்திபும் மனே திடமும் வரம்புகடந்தனவாகும். இங்ங்ணம் உயர்வுடைய மனிதரை ஆசாரத் திருத்தக் கட்சியார் கண்டனை செய்யும் போது உதாசீன வசனங்கள் போதித்திருக்கக்கூடாதா?’23
இவ்வாறு தேசவிடுதலைக்கு முதன்மையளித்த பாரதி, எந்த வகையிலும் சமூக விடுதலையைக் குறைத்து மதிப்பிடவில்லை யென்பதும், உண்மையில் தேச விடுதலையின்பால் அவர் காட் டிய தீவிரப் பற்று, அது சமூக விடுதலையை ஈட்டுவதற்கு அத் தியாவசியமாகத் தேவைப்படும் முன்முயற்சியென்பதன் காரண மாகவேதான் என்பதும் நாம் ஏற்கனவே பாரதியிடம் அறிந்த குளும்சங்கள். அந்த உணர்வுக்கான அடிப்படை தான் என்ன? அது, அவரது ஆழமான வரலாற்றுப் பார்வையினதும், அவர் மனித நேயமிக்க கவியென்பதினதும், அவர் உழைப்பை மிக உயர் ஸ்தானத்தில் வைத்துப் பூசித்ததினதும் வெளிப்பாடு. அதனுல்த்தான், “கடமைசெய்யாதவன் பிழைப்பதே நடக்காது’’ என்று கிருஷ்ணன் சொல்லுகிருர் என்பதில் அதிகளவு ஈடுபாடு காட்டினர்; உழைப்பாளிகளைப் பிரமாவுக்கு ஒப்புவமை காட் டிய அவர் தனது பல புனைகதைகளை, ஒடுக்கப்பட்டுத் தீண் டத் தகாதவர்களாக ஒதுக்கப்பட்ட உழைப்பாளர்களின் விடு தலை நாடிச் சாதிக்கொடுமையைத் தகர்ப்பதற்கென்றே ஆக்கி வழங்கினர். அதோடு அமையாது “ஆறில் ஒரு பங்கு" என்ற கதையின் முகவுரையில் பெருமையோடு இப்படி எழுதினர்.
"...இந்நூலை, பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவுகொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர்
34

பறையர் முதலிய பரிசுத்தத்தன்மை வாய்ந்த வைசிய சகோத ரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன் ??.24
இந்த அர்ப்பணம் நுனித்து ஆராயத்தக்கது. இது பார தியை, வர்க்கப் போராட்டத்தின் வடிவத்தைக் காணக்கூடிய சந்தர்ப்பத்துக்கு இட்டுச் சென்றிருக்க வல்லதென்பதை உற்று நோக்குங்கால் புரிந்துகொள்ள முடியும்; இந்தப் "பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்கள்? முன்னெடுக்கும் (தீண்டாமை ஒழிப்பு உட்பட) போராட்டத்தி னுாடாகவே ஏகாதிபத்தியப் பிடிப்பையும் - அதன் பின்புலமாக அமைந்த, கொத்தடிமை முறையின் சமூகத்தளமான நிலப்பிரபுத்துவப் பிடிப்பையும் தகர்த்தெறிய முடியுமென்பதையும் அறியும் வழி யிலான சிந்தனை வளர்ச்சிக்கு இந்த அர்ப்பணிப்பு உணர்வு அவரை இட்டுச் சென்றிருக்க முடியும்; தேசியப் போராட்டம் அதன் தவிர்க்கமுடியாத இணைப்பான நிலப்போராட்டமெனும் வர்க்கப் போராட்ட வடிவத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதை, அந்த உண்மையை வெளிப்படுத்தும் புறநிலை முதனிலைகள் உரு வான இருபதாம் ஆண்டுகளில் தொடர்ந்து வாழ்ந்திருந்தால், இந்த உணர்வு பாரதியை விட்டுச் சென்றிருக்கும் (அதற்குச் சன்ருதாரமாக, அவர் தீர்வை மறுத்தல் இயக்கத்தின் தேவையை முன்னறிந்து கூறியதைக் கொள்ளமுடியும்); இந்த முற்போக்குச் சிந்தனையின் வளர்ச்சி நிலையில், "தேசியப் பிரச் சனையென்பது சாராம்சத்தில் உழவர் பிரச்சனையே’ என்ற ஸ்டாலினின் ஆய்வினை ஆதர்சமாகக் கொண்டு "புதிய - ஜன நாயகப்" புரட்சியை முன்னெடுத்த, மாஒசேதுங் தலைமையி லான சீனப்புரட்சியின் அனுபவம் புகட்டிய, V
**சாராம்சத்தில் சீனப் புரட்சியானது உழவர் புரட்சியா கும்; இப்போது நடக்கும் ஜப்பான எதிர்த்த தாக்குதல் என் பது சாராம்சத்தில் உழவர்களின் தாக்குதல் ஆகும். சாராம் சத்தில் புதிய ஜனநாயகத்தின் அரசியல் என்பது உழவர்களுக்கு உரிமைகளைக் கொடுப்பதாகும். 225 - என்ற நடைமுறை யதார்த்தம் நோக்கி ஆகர்ஷிக்கப்பட் டிருப்பார்.
இந்த வகையில், முரணற்ற ஜனநாயக வாதியான பாரதி, தவறற்ற இலட்சியத்தைத் தெரிந்து நெறிபிசகாது உழைத்த பாரதி தேசவிடுதலைக்குப் பின் சுதந்திர இந்திய அரசியல் நிறு வன அமைப்பில் பெண்களும், சகல சாதிப் பிரிவினரும் அங் கம் வகித்து தமது மக்கள் பிரிவினரின் குறைகளை விவாதித் துத் தீர்ப்பதன் மூலம் சமூகக்கொடுமைகளையும், ஏற்றத் தாழ் வையும் தகர்க்கமுடியுமென்ற கருத்தையும் முன்வைத்தார்.
35

Page 20
அவர் இவ்வாறெல்லாம் உருவாகும் சமத்துவ சமுதாயத்தையே கிருத யுகமாகக் கண்டார். அங்கு எத்தகைய ஏற்றத் தாழ்வு களும் இருக்கமுடியாது. அத்தகைய அமைப்புக்கு ருஷ்யப் புரட்சி கட்டியங் கூறிவிட்டதென்று உவகை கொண்ட பாரதி கனவு கண்டது போல, அப்புரட்சி காட்டிய சோஷலிசப் பாதையில், முதலாளித்துவ இடைக் கட்ட மின்றியே தேசவிடு தலை இணைக்கப்படுவது சாத்தியமாகி யிருக்கமுடியுமா? இதற்கு, முடியுமென்ற பதிலையே லெனின் கருத்து வாயிலாகப் பெறு வோம்:
* 'இப்பொழுது விடுதலையடைந்து கொண்டிருக்கும் பின் தங்கிய நாடுகளில், போருக்குப் பின் முற்போக்குகள் காணப் படுகின்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் முதலாளித் துவக்கட்டம் நிச்சயம் ஏற்பட்டுத்தான் தீருமா? பிரச்சினை இவ் வாறு எழுப்பப்பட்டிருந்தது. இக்கேள்விக்கு இல்லையென்று நாம் பதில் அளித்தோம். வெற்றிகரமான புரட்சி தொழி லாளி வர்க்கம் பின்தங்கிய இனங்களிடையே தொடர்ச்சியான பிரச்சாரத்தை நடத்தினல் அதேவேளையில் சோவியத் சர்க்கார் தன்னலான எல்லா வகையிலும் அவற்றிற்கு உதவிபுரிய முன் வருமானல் - அப்பொழுது பின்தங்கிய தேசிய இனங்கள் முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தை அடைந்துதான் தீர வேண்டுமென்று கொள்வது தவருகும். காலணிகள், பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் நாம் சுயேச்சையான போராட்ட அணி களையும், கட்சி ஸ்தாபனங்களையும் உருவாக்குவது மட்டுமன்றி, விவசாயிகளின் சோவியத்துகளை அமைப்பதற்கும் அவற்றை முதலாளித்துவத்திற்கு முந்திய நிலைமைகளுக்குப் பொருத்துவ தற்கும் பாடுபடவேண்டும். தவிரவும் இந்தப் பின்தங்கிய நாடுகள் முன்னேற்றமடைந்த நாடுகளின் தொழிலாளி வர்க்க உதவியால் முதலாளித்துவக் கட்டத்திற்குச் செல்லும் அவசிய மின்றியே திட்டவட்டமான வளர்ச்சிக் கட்டங்களின் மூலம் சோவியத் அமைப்பிற்கு மாறிச் செல்ல முடியும்."26
இந்த வகையில் இந்தியப் புரட்சி வளரமுடியாதபோதிலும் இந்த நிர்ணயிப்பு சரியென்பதைச் சீனப்புரட்சி எடுத்துக்காட்டி யிருக்கின்றது. அதைப்போன்று, இந்தியா சோஷலிஸத்தைக் கட்டியமைக்க முடியாமல் முதலாளித்துவ அமைப்பில் உள்ள காரணத்தினுல்தான் பாரதியின் கனவு நிறைவுபெருமல் இன் றுங் கூடப் பெண்ணடிமைத்தனம் (முதலாளித்துவக் கலாச் சாரச் சீரழிவு பெண்களை இழிவு செய்யும் மடமையை நீடிப் பது ), சாதியொடுக்குமுறை, வறுமை, அறியாமை என்பன கோரத்தாண்டவமாடுகின்றன.
36

截
8. புதிய உலக நோக்கும் பாரதியும்
இந்த வகையிலே, பாரதியின் இலக்கியம் இன்றுங்கூடக் காலங்கடந்ததாகிவிடாது உயிரோட்டமுள்ளதாய் விளங்குகின் றது. அவர், தேச விடுதலைக்கு விஞ்ஞான தத்துவம் இல்லாத நிலையில் தேசிய முதலாளி வர்க்கம் மதவடிவில் கண்ட தத்து
வத்தை ஏற்றுத் தன் அரசியல் இலக்கியப் பணியை ஆரம்பித் தார். அதனலேயே அவரது ஆரம்பகால இலக்கியத்தில் “வெறி
கொண்டதாய்’, 'பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி", பாரத் தேவியின் அடிமை", "சத்ரபதி சிவாஜி போன்ற மதத் தொடர்பு மேலோங்கப் பெற்றிருக்கிறது; வடிவத்தைப் பொறுத்தவரை பேராசிரியர் க. கைலாசபதி "இரு மகாகவி கள்’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டதுபோல இளம் கவிக்கே யுரிய தன்மையுடன் பக்தி இலக்கிய வடிவத்தைப் புதிய அர சியல் உள்ளடக்கத்துக்குப் பயன்படுத்தியதையும் காணமுடி கின்றது.
இருந்தபோதிலும், இருபதாம் ஆண்டுகளில் ( இந் நூற்ருண் டின் மூன்ரும் தசாப்தத்தில்) பாட்டாளிவர்க்கம் அரசியல் அரங் கில் தீர்க்கமாகப் பிரவேசித்துத் தன்னை ஸ்தாபனப்படுத்தியதி னுரடாக, அதன் விஞ்ஞானபூர்வமான மார்க்ஸிஸ் - லெனி னிஸம் என்ற தத்துவ ஆயுதம் தேசிய இயக்கத்துக்குப் புதிய தென்பையும் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் வழங்கியது. அது தனது பாணியில் உலகை மாற்றியமைப்பது என்ற வசை யில் தேசிய இயக்கத்துக்கு விஞ்ஞானபூர்வ விளக்கத்தை வழங் கியது. அத்துடன் ருஷ்ய அக்டோபர் புரட்சியின் விளைவாக சோஷலிஸ் சகாப்தம் உருவாகி உலகப் பாட்டாளி வர்க்கத் துக்கு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியது. இந்த நிலையில் தீவிர வாதிகளான தேசிய முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள், ஒரு
புறம் ஏகாதிபத்தியத்துடனன முரண்பாட்டைக் காணும்போது
"சோஷலிஸம்" பற்றிப் பேசினர், மறுபுறம் வெகுஜன எழுச்சி யைக் கண்டு ( அது தன் வர்க்க நலனையும் துடைத்தழித்து முன்னேறிவிடும் என்பதை அறிந்து ) கிலிபிடித்துக் காந்தீய மிதவாதத்தில் அடைக்கலம் தேடிக்கொண்டனர்; இந்த முரண் பட்ட நிலையை பாரதியிடம் காணமுடியாது. அவர் தேசிய முதலாளிவர்க்கக் கவியாக இருந்தபோதிலும் ஐரோப்பிய முத லாளித்துவக் கவிஞர்களிலிருந்து வளர்ச்சிபெற்ற வரலாற்று நிலை காரணமாக மாறுபட்ட வளர்ச்சிப் போக்கையே காட்டி நிற்கிருர். இதைப் புரிந்துகொள்ள முடிலாமல்தான் 'அதி தீவி ரப் புரட்சி" வாதிகள், பாரதி அக்டோபர் புரட்சியைப் பாடி யிருக்க முடியாதெனக் கருதுகிருர்கள். அவருடைய வளர்ச்சி,
7ו

Page 21
வரலாற்றின் பிரதிபலிப்பு என்பதைப் புரிந்துகொண்டால் இந்தக் குழப்பத்துக்கு இடமில்லாமற் போய்விடும்:
அவர் இந்தியா’ பத்திரிகையின் முத்திரையாகப் பொறித்த “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்றும், 1907இல் “சுதந்திரப்பள்ளு” பாடியபோது "எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே" என்றும் - "சட்டத்தின் முன் சமத்துவம்" தேடிய முதலாளித்துவக் கோஷத்துடன் இலக்கியப் பணியைத் தொடங்கி, 'தனியொருவனுக்குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்றும், "மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்க"த்தைத் துடைத்தழிப்பதென்றும் "பொருளாதாரச் சுதந்திரத்தை" தேடும் பாட்டாளி வர்க்கக் கோஷத்தை நோக்கி வளர்ந்த நிலையில் மறைந்துவிடுகிருர். இவ்வாறு தேச விடு தலையை நேசித்த அதே வேளை அவர் மக்களைச் சார்ந்து நிற் பதில் உறுதியாக இருந்தமையினலும், அவருடைய கவிதா சக்தியின் முதிர்ச்சி நிலை காரணமாகவும் அவரது பிற்காலக் கவிதைகள் மிகுந்த சமூகப் பிரக்ஞை உடையனவாயுள்ளதைக் காணமுடிகிறது. அதே வேளை வடிவத்தைப் பொறுத்தவரை இரண்டாவது படிநிலையில் பாஞ்சாலி சபதம்" வாயிலாகவே சிந்துக்குத் தந்தையாக வளர்ந்துவிடுகிருர் .27
அவர் வர்க்கப் பகைமை கூர்மையடையாத சூழலில், தேசிய முதலாளி வர்க்கம் முரண்பட்ட போக்கைக் கடைப்பிடிக்கு முன் - தேசப்பற்றுள்ள நிலச்சுவான்தார்கள், தேசிய முதலாளி கள், தொழிலாளர், விவசாயிகள் போன்ற வர்க்கங்கள் "மக் கள்" என்ற நிலையில் ஐக்கியப்பட்டுத் தேச விடுதலைக்குப் போராடிய நிலையிலேயே இறந்துவிட்டதால் "வர்க்க ஒற்றுமை" அவருடைய இலக்கியத்தில் காணப்படுவது வியப்புக்குரியதோ, தவருனதோ இல்லை.
இதேவேளை, இந்த வரலாற்றுப் போக்கின் வளர்ச்சி காரணமாக பாரதி ஆன்மீக வளர்ச்சியில் மிக உயர்ந்த படி நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் காணமுடிகின்றது. இந்த வையகத்தில் அமரநிலை எய்துவது, உலகையே மோட்ச சாம்ராஜ்யமாக மாற்றுவது என்ற கருத்துத் தொடங்கித் தனது நடைமுறையில் கருத்துகளைப் பெறுவதில் வாழ்நிலையி லிருந்து தொடங்குவதும், காரணமின்றிக் காரியம் இருக்க முடியாது என வாதிப்பதுவரை ஃபேயர் பாக் ' சமய உல கைக் கரைத்து" அதனிடத்தில் அவர் “பொருள் முதல் வாதம்" என்ற பெயரை ஏற்காதபோதிலும் பொருள் முதல்வாதக் கோட்பாட்டை நிலைநிறுத்திவிட்டதுபோல - 28 அவர் விஞ் ஞானபூர்வமான பொருள் முதல்வாதத்தை ஏற்காதபோதிலும்,
38

அந்த நிலைக்கு வளர்ந்து "சமய உலகைக் கரைத்து" அந்த இடத் திற்குப் பழைய வேதகாலத்தை மீட்டெடுப்பது என்ற பாணி யில் அதன் ( வேதகாலத்தின்) வளர்ச்சி நிலையான பொருள் முதல்வாதத்தையே கொண்டு வருகிருர், "வேதகாலக் கோட் பாட்டை நிலை மறுத்து சித்தாந்தக் கோட்பாடு இடங் கொண் டது; அந்த சித்தாந்தம் பாரதியின் இலக்கியத்தில் நிலை மறுக் கப்பட்டதன் மூலம் நிலை மறுப்பு நிலை மறுக்கப்பட்டுள்ளது."29 இதனேடு கூடவே இலக்கியப் பரப்பில் தேச, கால வர்த்த மானங்களுக்கு அமைய ஆராயும் அவரது நோக்கும் போக்கும், தீய அம்சங்களை மனித இயக்க ஆற்றலால் நல்ல அம்சங்களாக மாற்றமுடியும் என்பதும், மாற்றம் இயற்கையினதும் சமூகத் தினதும் (அதன் கூறுகளான பொருளியல், அரசியல் துறை களினதும் ) தவிர்க்க முடியாத நியதி என்பதன் வாயிலாகவும் அவர் இயங்கியல் கண்ணுேட்டத்தை வந்தடைவதைக் காண முடிகின்றது.
இவ்வாருக, விஞ்ஞானபூர்வமான இயங்கியல் - பொருள் முதல் வாதத்தை விளங்கி ஏற்றுக்கொள்ளாதபோதிலும், பாரதி, தமிழ் இலக்கிய உலகின் இயல்பான தத்துவ வளர்ச்சி யென்ற வகையில் அதற்கு மகத்தான பங்களிப்பைச் செய்துள் ளார். அவ்வாறு ஆன்மீகத்துறையின் வளர்ந்த - வளர்க்கப் பட்ட உயர் வடிவம் (கருத்து முதல்வாதத்தின் நிலை மறுப்பு வடிவம் ) பாரதியின் அரசியல் இலக்கியத்தின் தத்துவ வடிவ மாக விளங்கியது. இது அவரது முற்போக்குக் குணும்சத் துக்கு எந்த வகையிலும் முரணல்ல; மாருக இதுவே அவரது ஆளுமையின் உயர் விருத்தியைக் காட்டுகின்றது:
\,
இந்த அம்சத்தைக் கண்டுகொள்ளாததன் விளைவாகவே, பாரதி பற்றிய ஆய்வுகளில் சில அடிப்படையான தவறுகள் மேலோங்கி நிற்கின்றன; இந்த வளர்ச்சி நிலையை வேறு பிரித் துப் பார்க்காததாலேயே, பாரதி மதவாதியாகையால் அவரின் புரட்சிகரக் குணும்சத்திலும் முரண்பட்ட போக்குகள் தொக்கி நிற்கிறதென்றும், அதுவே அவர் பிற்காலத்தில் காந்தீய மித வாதத்தை ஏற்றுக்கொள்ள வழிகோலியதென்றும் சில ஆய் வாளர்கள் தவழுக எடைபோடுவதற்கு வகைசெய்திருக்கிறது; மேலும் இந்தப் பலவீனமான போக்கே இவர்கள் பாரதியிடம் மிகையாகப் பலவீனத்தைத் தேடத் தூண்டுகோலாயிருந்திருக் கிறது.
சரியான உலகக் கண்ணுேட்டத்தின் ஒளியில் பாரதியின் வாழ்வைப் பார்த்தால், கண்ணனையும் மாகாளியையும் நம் பிக்கையின் வடிவமாகக் கொண்டு அவர் வாழ்ந்தது, எத்தகைய
39

Page 22
நெருக்கடி நிலையிலும் உறுதிகுலையாத மனப்பாங்கைப் பேணவே அவருக்கு உதவியதென்பதைக் காணலாம். அவ்வாறே, ஆரம்பம் முதல் இறக்கும்வரை மக்கள் இயக்கம் வெற்றிகொள்ளும் என்ற மனந்தளராத பற்றுறுதியை அவர் கொண்டிருந்தார்; எந்த வடிவிலான தனிநபர் சாகஸங்களும் சுதந்திரத்தை ஈட் டும் மார்க்கமல்ல என்பதில் தெளிவாக இருந்தார். அவர் தனி நபர் சாகஸங்களுக்கு மாருக, மனிதகுல வளர்ச்சியின் முழு மையை ( அடிப்படையான சமூக மாற்றத்தை ) வேண்டிநின்ற மையினலேயே, மனிதன் பூரணத்துவம் பெறும் போக்கு நோக்கி முன்னேறத் தடையாயுள்ள விலங்குகளைத் தகர்ப்பதற்கு ஒவ் வொரு மனிதனும் கிளர்ந்தெழுந்து போராட வேண்டுமென விழைந்தார். அதனலேயே அவர், தான் போற்றிப் பின்பற்றிய தீவிரவாதத் தலைவர் திலகர் கருத்துக்கு மாருகக் கூட ஆசா ரத் திருத்தலின்பால் ( சமூக விடுதலையின்பால் ) அக்கறை காட்டினர். -
இவ்வாறு, தனதுகாலத் தவருன ஒட்டங்களை மேவி, சமூ கப் பாய்ச்சலை மனங்கொள்ளும் உலக நோக்கு அவரிடம் மேலோங்கியிருந்ததாலேயே, ஆன்மீகத்துறையையும் விமரிசனக் கண்ணுேட்டத்தில் அலசியாராய்ந்து, ஸ்தூல நிலைமைக்கேற்பக் கொள்கை வகுக்க உதவியது. முரணுரையாகச் சொன்னல், ஆன்மீகக் கோட்பாடுகளைப் புதிய நிலைக்கேற்ப வளர்த்துப் பிர யோகித்ததன் விளைவாக, அவர் முரணற்ற ஜனநாயகவாதியா கத் திகழத் தடையேது மிருக்கவில்லை. அவ்வாறு, தனது சிந் தனக்கு விலங்கிடும் தத்துவமாக ஆன்மீகத்தைக் கொள்ளாது, அந்த ஆன்மீகத்தையே புதிய நிலைக்கு மாற்றியமைக்கத் துணிந்த அவர் பாங்கைப் புரிந்து கொண்டால் பாரதியின் பல வீனம்பற்றி அதிகம் பேச்செழாது. மாமுக தமிழிலக்கிய மர பில் சரியான உலகநோக்கை உருவாக்கும் வளர்ச்சியின் மிகச் சிறந்த பிரதிநிதியாக அவரைக் காணலாம்.
இவையனைத்தும் பாரதி சிறந்த முன்னுதாரண புருஷனுக வாழ்ந்து காட்டியதை உணர்த்துவன. அவர், இலக்கியத்தில் அழகியல் குறித்து, லூசுன் கொண்டிருந்த கருத்துப்பற்றி லூசுன் ஆய்வாளர்கள் வெளிப்படுத்திய இலக்கிய மதிப்பீட்டில், உண் மையில் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பதை யாரும் மறுக்கமுடி யாது. அந்தக் கோட்பாடு இதுதான் :
‘அழகியல் கலையின் தாரதம்மியம்பற்றி அளவிடுவதில் மூன்று அம்சங்களை நாம் கருத்தில் கொள்கின்ருேம். எந்த வொரு கலை ஆக்கமும் உண்மை, நன்மை, அழகு ஆகிய
40

மூன்று அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும். குறித்த காலத்தில் வாழ்க்கை அம்சங்களின் உண்மை நிலையை அது எடுத்துக்காட்ட வேண்டும்; சமூக வளர்ச்சிக்கு அது பயன்பட வேண்டும்; அதன் அழகு ஆத்மீக அநுபவத்தைக் கொடுக்க வேண்டும். இந்த மூன்று அம்சங்களையும் தன்னில் இசைந்து வழங்கக் கூடிய கலை - இலக்கிய ஆக்கங்களே நிரந்தர பயன் பாடு உடையன.30
இந்த அடிப்படையில், சிறந்த இலக்கியவாதியாக - அர சியல் இலக்கியத்தின் முன்னேடியாக வாழ்ந்து வழிகாட்டிய - பாரதி, அதேவேளை மனந்தளராத புரட்சியாளராகவும், முற்போக்குச் சிந்தனையாளராகவும் விளங்கியதன் காரணமாகக் குறுகிய வாழ்வுப் பகுதியினுாடாகவே மனிதகுல விடுதலைக்கு உழைத்த அறிஞர் வரிசையில் அழியாத இடத்தைப் பெற்று விட்டார்.
குறிப்புகள்
1. கைலாசபதி க., "சமூகவியலும் இலக்கியமும்", fig
செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட். பக். 113
2. பிளெஹானவ் கி.வ. "கலையும் சமுதாய வாழ்க்கையும்", முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ, 1979, பக். 27 - 28,
3. அதே நூல் பக். 65
4. அதே நூல் பக். 17
5. இளசை மணியன் தொகுத்தது. "பாரதி தரிசனம் II o ‘’, *இந்தியா’ பத்திரிகையில் 05-01-1907 இல் எழுதப்பட்ட கட்டுரை.
6.7. அதே நூல்
8. அதே நூல்: "இந்தியா' - 12 - 1 - 1907 இல் எழுதப்
பட்டது. མ་
9. 'பாரதி தரிசனம் 1" - "இந்தியா’ - 22-12-1906,
*புதிய கட்சியாரின் கொள்கைகள்" 10. டாக்டர் கா. மீனுட்சிசுந்தரம், 'பாரதி பா நிலை", பக். 54 11. தூரன். பெ தொகுத்த “பாரதி தமிழ்"
4

Page 23
2.
卫苏。
Iた。
8.
19.
A 20
21.
23.
23.
24。
25。
26.
27.
**கட்டுரைகள்" பாரதியார், இன்ப நிலையம் - மையிலாப் பூர், சென்னை. நவம்பர் 1963, "மாதர்" பக். 67 - 68
‘ “ Lunt prg 50gف** ---- **சில வேடிக்கைக் கதைகள்"
குறிப்பு 12 இன் அதேநுால். "சமூகம்" பக். 110. 'பாரதி தமிழ்" பக். 313 - 316
ராஜனி பாமெதத் (மொழிபெயர்ப்பு: ராமகிருஷ்ணன். எஸ்) "இன்றைய இந்தியா", ஜனசக்தி பிரசுராலயம், 6,டேவிட் சன் தெரு, ஜி. டி. சென்னை ஜனவரி 1948. பக். 308
அதே நூல் பக். 317
"பாரதி தரிசனம் II" 09 - 02-1907 கோகலேயும் பஹிஸ்கார முறைமையும்’
பிபன் சந்த்ரா, அமலேஷ் திரிபாதி, பாரூன் டே ஆகியோ ரால் எழுதப்பட்ட “சுதந்திரப் போராட்டம்'(தமிழாக்கம்) Luis. 279 - 280.
பாரதியார் கதைகள். தராசு பக். 502
'பாரதி தரிசனம் 1" - "இந்தியா 18.05. 1907.
கைலாசபதி க. “அடியும் முடியும்’. பாரிநிலையம்.
59, பிராட்வே, சென்னை 1. மார்ச் 1970 பக். 195 - 197
'பாரதி தரிசனம் ' பக். 44 - 46. குறிப்பு 12 இன் அதே நூல் "சமூகம்" பக். 1
மாஓசேதுங் 'புதிய ஜனநாயகம்" பாட்டாளிகள் வெளி யீடு. சென்னை. 1978. பக். 54 - 55
லெனின். வி. ஐ., “கிழக்கத்திய மக்களின் தேசிய விடுதலை இயக்கம்" என். சி. பி. எச். பிரைவேட் லிமிடெட். 1963. Léš, 391
பாரதியின் இலக்கிய வடிவம்பற்றி பேராசிரியர் க. கைலாச பதி "சிந்துக்குத் தந்தை” என்ற கட்டுரையிலும் ஆய்வு செய்துள்ளார். பார்க்க: கைலாசபதி. க. "ஒப்பியல் இலக்கியம்**: சென்னை புக் ஹவுஸ் (பி) லிட். 6, மேட்லி strrčav, Garsirôtor 600 0 17. GlJFú. 1982. uš. 211-257:

28.
29.
30
பார்க்க: ஏங்கெல்ஸ். பி. “லுத்விக் ஃபாயர் பாகும் மூலச் சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்" என்ற நூலின் பிற்சேர்க்கை: மார்க்ஸ் எழுதிய "ஃபாயர்
பாக் ஆய்வுரைகள்". முன்னேற்றப் பதிப்பகம், 97-98
பார்க்க: ஏங்கெல்ஸ். பி. ‘டூரிங்குக்கு மறுப்பு" முன் னேற்றப் பதிப்பகம். மாஸ்கோ 1979, பக். 241 - 242
... Liu Zaifu Social Sciences in China' Aesthetic criteria for Literary and art criticism Vol II. No. March
1981 Page 19t)
22ܓܰ 兖
ஸ்பானிய ஓவியர் ஜோன் மீருே
பிக்காசோவிற்குப் பிறகு உலகின் மிகச்சிறந்த நவீன கலைஞர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட ஸ்பானிய ஓவிய ரான ஜோன் மீருே தனது 90வது வயதில் காலமாஞர்.
1924ல் (சறியலிஸ்ற்) பிரகடனத்தில் ஒப்பமிட்ட ஓவி யர்கள், எழுத்தாளர்கள் குழுவில் இடம் பெற்றவர்களுள் இறுதியாக மரணமானவர் ஜோன் மீருே வாகும். அவர் பிரகாசமான வர்ணப் பண்புகளுக்கும் புகழ் பெற்றிருந் தார்.
அவரது ஓவியமொன்று அண்மையில் பதினைந்து இலட்சம் டொலருக்கு விற்பனையானது. இதுபற்றிக் குறிப்பிட்ட மீருே "ஒவியங்கள் டொலர்கள் அல்ல' எனத் தெரிவித்தார்.
மீருேவின் கீர்த்திபெற்ற சுவர் ஓவியங்கள் பாரிஸி
லுள்ள யுனெஸ்கோ தலைமைக் கட்டிடச் சுவர்களிலும்,
ஹாவாட் சர்வகலாசாலைச் சுவர் ஒன்றிலும், மட்றிட் மாளிகையிலும் காணப்படுகிறது.
சர்வதேசப் புகழ் பெற்றிருந்தும் மீருே மிகவும் அடக்கமாகவே வாழ்ந்தார். “நான் எதையும் புதிதாகக்
கண்டுபிடிக்கவில்லை" என்று அடிக்கடி கூறுவார்.
43

Page 24
அக்கறையற்ற உனக்கு.
சி.சிவசேகரம் -
நடைபாதையில் குத்தாக நிற்கும் கூரிய கண்ணுடிச் சில்லை ஓர்மாக ஒதுக்கி விடவோ பஸ்ஸில் உன் கண்முன்னே நடக்கின்றதிருட்டை பிடிக்கவோ மறிக்கவோ தெருவைக் கடக்க முடியாமல் தடுமாறும் கிழவனுக்கு துணையாக நடக்கவோ தடுமாறிக் கீழே விழுகின்ற நோயாளிக் கிழவியை தாங்கி நிற்கவோ அரை இருளில் எவனே முரடனிடம் திணறுகிற பெண்ணை மீட்கவோ V கூட்டத்தில் இழந்துபோய் அழுகின்ற குழந்தையை யாரென்று கேட்கவோ
உனக்கு அவசியமில்லை.
ஏனென் ருல், வெறுங்காலோ பறிபோகும் பணமோ பண்டமோ உனதல்ல, கிழவன் உன் அப்பனே கிழவி உன் ஆத்தாளோ அல்ல, திணறுகிற பெண் உனக்குத் தங்கையோ மனைவியோ அல்ல, குழந்தை உனதல்ல -
அனேகமாக.
அது போக,
அலுவலகத்துக்கோ, கடற்கரைக்கோ, சீட்டாடவோ, சினிமாவுக்கோ
ஒடுகிற உனக்கு
நேரந்தான் ஏது?
படித்தவன் நீ : நடப்பது எதுவுமே உனக்கல்ல என்று நன்ருக அறிவாய். அப்படியே ஒருநாள் உனக்கே தான் ஏதேன் நடந்தாலும் உன்னைக் காப்பதற்கு எவனே மடையன், வேலையற்று இல்லாமலா போவான் ?
உலகம் தெரிந்தவன் நீ:
உன் நேரம் பொன்னனது.
44

ச. முருகானந்தன்-ே
O ÉIIj6)III
உடைக்கும்
நிகழ் காலங்கள்
அந்தி சாய்ந்து விட்டநேரம்.
உள்ளே புழுக்கமாக இருந்த தால் சிவசாமிக் குருக்கள் வெளி மாலுக்குள் வந்தமர்ந்து கொண் டார். வெத்திலைப் பெட்டியுடன் வந்த அன்னபூரணி அம்மாள், அதை அவர் முன்னே வைத்து விட்டு பாக்கைச் சீவ ஆரம்பித் தாள். பசுமையான வெத்திலை ஒன்றை எடுத்து, காம்பை ஒடித்து சுண்ணும்பு தடவி, சிவலை
வைத்து மடித்து கொடுப்புக்குள்
வைத்துக் குதப்ப ஆரம்பித்தார் குருக்கள்.
வெற்றிலை பாக்கும், தேநீருமி ருந்து விட்டால் அவருக்குச் சாப் பாடே தேவையில்லை எனலாம். சில நாட்களில் அயற் கிராமங் களில் புண்ணியதானம் செய்ய அதிகாலையிலேயே புறப்பட்டா ரானல் திரும்பிவர அந்திப்பொழு தாகிவிடும். அப்படியான நாட் களில் வெத்திலை பாக்கும் இள நீரும் தான் சாப்பாடு,
ஐம்பது வயதிலும் அவர் இளமையுடன் காட்சியளிப்பதற் குக் காரணம் அவரது மெல்லிய
உடம்பும், கருமை மாருத கிப்பித் தலையும் தான். எனினும் முதுகு கேள்விக் குறியாய்க் கூனி வளைந்து விட்டது. முகத்திலும் சுருக்கங் கள் விழுந்துவிட்டன.
எழுந்து ஒதுக்குப் புறமாக வெற்றிலைச் சக்கையைத் துப்பி விட்டுத் திரும்பியபோது, சங்க டப்படலையடியில் நின்றுகொண்டு "ஐயா. ’ என்று யாரே அழைத்தார்கள். 'ஆர் தம்பி? என்று கேட்டுக்கொண்டு டோர்ஷ் லைற்றும் கையுமாக வாசலுக்கு
வந்தவர் * என்ன விசயம்? என்று கேட்டார்.
"அது நான் நடராசன் ஐயா. நாளைக்கு அப்புவின் திவசம். மத்தியானம் போவு வாருங்கோ ஐயா." . .
“எங்கிணைக்க இருக்கிறனீர்?"
**வாசிகசாலை தாண்டினு போல, சங்கக் கடைக்கு முந்தி கிழக்குப் பக்கமாகப் போற ஒழுங் கையிலை மூண்டாவது வீடு ஐயா. நீலநிறத் தகரக் கேற் போட்டி ருக்கும்." நடராசன் தன் வீ"
டுக் குறிப்பைக் கூறினன்.
35

Page 25
"நாளைக்கு ஸ்கந்தபுரத்திலை பும் ஒரு துடக்குக் கழிவு இருக் விறதால என்னை நேரத்துக்கு விட் டிடவேணும்- பதினெருமணிக்கு முன்னம் எல்லாம் ஆயுத்தம் செய் யுங்கோ வாறன்"
சரி அப்ப நான் போட்டு வாறன் ஐயா..!"
ஐயர் மறுபடியும் மாலுக்குள் கையிலை காசில்லே எண்டு
வந்து
கவலைப்பட்டன்- நாளைக்கு
இரண்டு இடத்திலை வேலை
யிருக்கு. நாளையிண்டைக்கும்
ஒரு மாசியம் இருக்கு." என் ர். 'இப்பேன் உங்களுக்குக்
காசு" என்று அம்மா குறுக்குக் கேள்வி கேட்டதும் குருக்களுக்கு கோபம் வந்துவிட்டது. *நான் ஒருத்தன் உழைச்சுவந்து கொட்ட வேண்டியது. * நீ ஊர் சுத்திச் செலவளிக்கவேண்டியது.* ய்ே. எனக்கெண்டு ஒருசதம் வைச்சி ருக்க விடமாட்டியே! இந்த இற ல் சயிக்கிளிலை ஒ4 எனக்கு நெஞ்செல்லாம் நோகுது. பழிே தாய்ப்போயிருக்கிற மோட்டார்ச் பிக்கிளைத் திருத்திக் கொண்டு வருவமெண்டால் ഞsuി br് Gafd': விடுறியில்லையே'
«Glor:Tířë Fufisaðarš
திருத்தவெண்டு எத்தினை முறை யாழ்ப்பாணம் போட்டு வந்திட் டியள்? காசு செலவளிக்கிறது
தான் மிச்சம். பழம் சயிக்கி ளுக்கு அநியாய விலை கொடுத்து
ஒரு மாசம் கூட- உருப்படியாய் ஒடேல்லை. ஆறேழு மாசமாய்க்
ராச்சிலையிருந்து கறள் கட்டுது" சும்மா இரு. உன்ரை கொப்பன் வீட்டுச் சீதனத்தையே
46
செலவளிக்கிறன்." என்று ஐயர் வெடுக்கென்று பாய்ந்ததும் ஐய ரம்மா அடங்கிப்போனள்.
சின்ன வயதிலிருந்தே ஐய ருக்குப் புரோகித வேலைகளிலும் பார்க்க பழம் இரும்புகளில்தான் நாட்டம் அதிகம். கொஞ்ச நாள் "லவுட் ஸ்பீக்கர்’ வைத் திருந்து வாடகைக்கு விட்டு வந் தார். பின்னர் சில காலம் கார் வைத்திருந்து ‘கயர்' ஓடினர். அன்னபூரணி அம்மாளைக் கைப் பிடித்ததும் படிப்படியாக எல்லா வற்றையும் விட்டு புரோகிதவேலை யில் முழுமையாக ஈடுபடும்படி யாகிவிட்டது. என்னதான் இருந் தாலும் அம்மா கீறிய கோட்டுக் குள் ஐயர் அடக்கம்! அதற்குப் பாசமா அல்லது பயமா காரணம் என்று சொல்வது கடினம்.
அம்மா கெட்டிக்காரி. அவ ளது கட்டுமட்டான் திட்டமிட்ட முயற்சியினல் தான் அத்திவார மில்லாத அவர்கள், ஓரளவுக் காவது தலையெடுக்க முடிந்தது சிக்கன வாழ்வினல், வரும் சொற்ப வரும்படியிலும் f5& Fith கண்டு, வட்டிக்கும் கொடுத்து. ஒட்டும் பிடித்து ஒருவாறு கொண் டிழுத்தாள். ஐயாவிடம் பொறுப் பை விட்டிருந்தால் பாதிப்பணம் பழைய இரும்புக் கடைக்கு த்தான்
போயிருக்கும். பழையதைக் கண் -டால் பாய்ந்து வாங்குவது அவ
ரது பிறவிக் குணம்.
எது எப்படியோ ஐயர் நாண
யமானவர்: ஒழுக்கசீலர்; ஆண் டவன் சந்நிதானத்தில் உண்மை
யான குருவாக இயங்குபவர்

இதனுல்த்தானே என்னவோ அநேகமான கோயில்களில் அவ ரால் நிலைத்து நிற்கமுடியவில்லை. தர்மகர்த்தாக்களின் ஊழல்களைக் கண்டும் காணுமல் இருந்திருந் தால் நகர்ப்புறக் கோயில்களி லேயே இருந்திருக்கலாம். அவ ரது நேர்மை அவரை இந்தக் குடியேற்றப் பிரதேசத்திலுள்ள சிறிய கோயிலுக்கு விரட்டி விட் » الأساسا
இங்கே சம்பளம் இருநூறு ரூபா என்று பேச்சு, பூசைச் செலவுக்கு மாதம் ஐம்பது ரூபா, அமுது வைக்க முப்பது படி அரிசி, முப்பது தேங்காய், ஒரு போத் தல் தேங்காய் எண்ணை - எல் லாம் முதல் ஐந்தாறு மாதங்கள் ஒழுங்காக வந்தன. காலம்போ கப் போக கழுதை தேய்ந்து கட் டெறும்பான கதைதான். அம்மா தான் வாதாடி வாங்குவாள். கோயிலிலும் அர்ச்சனை அப்படி இப்படி அதிக வரும்படி இல்லை. விசேட நாட்களில் கூட பத்துப் பதினேந்து ரூபா தேறுவது கடி னம்,
எனினும் ஊரிலும், அயலூர் களான பண்டிவெட்டி, அக்கரா யன் குளம், ஸ்கந்தபுரம், அம் பலப்பெருமாள், கோட்டைகட்டி முதலான இடங்களிலும் மாசி யம், திவசம் என்று வருவதால் அந்த ஏழைப் பிராமணக் குடும் பத்தின் வயிறு கழுவப்பட்டு வந் தது. பழைய லொட லொட சயிக்கிளில் ஒடி ஒடி வேலைபார்க் கும் ஐயரைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.
டு வெள்ளம்
மாரி காலம் முடிந்தது
மழையும் வந்தது
வீடெல்லாம் - சிறுநெல் வயலெல்லாம் சீறிய காற்றில் சிதறுண்டு போயின வீதியெல்லாம் மூழ்கியிருக்க விடாத கனமழை - செய்சி எங்கள் லயத்தில் முப்பது காம்பிராக்கள் முழங்கால் தண்ணிர் வெள்ள நிவாரணம் தொற்று நோய் தவிர்ப்பு வேலை விடுதலை ஒன்றும் எமக்கில்லை ஏனெனில் இந்த வெள்ளம் சிறுமழையானலும் எங்கள் லயங்களில் என்றும் இருப்பதே இந்நிலை மாற எமது விதியை நாமே நிர்ணயிக்கும் நாள் வர வேண்டும்.
இத்தரை கஸ்டங்களுக்கிடை யிலும் மூத்தவனே ஜீ. சீ. ஈ: வரை படிப்பித்து, திருக்கேதீஸ் வரம் குருகுலப் பாடசாலைக்கும் அனுப்பி, பூநூல் சடங்கும் முடித் தது அம்மாவின் கெட்டித்தனத்
47.

Page 26
தால் எனலாம். இளையவன் விக்கி விளையாட்டுப் போக்கு! எனினும் தகப்பனேடு கூடமாட கோயில் வேலைகளில் உதவி செய் வான். கடைக்குட்டி மங்களம் மாவுக்கு மாங்கொட்டை விளை யாடும் வயது. கூழாம் பழமும், நாவற்பழமும் பொறுக்குவது
அவளது பொழுது போக்கு. அம் ”
மாதான் காரியக்காரி.
"வாயைக் கொப்பிளிச்சுப் போட்டு வாங்கோ. சாப்பிடு வம்" என்று அம்மா அழைத் தாள். ஐயர் சம்மணம் கொட்டி இலையின் முன் அமர்ந்ததும் அம்மா பரிமாறினள். “குழம்பு வைக்கேல்லையே? ஒடாய் உழைச் சும் என்ன பிரயோசனம்?" ஐயர் அறம்கொட்ட ஆரம்பித்த போது அம்மா அவரது வாயை அடக்கினுள்.
சாப்பிட்டு முடித்ததும் பழைய றேடியோ ஒன்றை எடுத்து வந்து அக்குவேறு ஆணி வேருகக் கழட்டி ரிப்பேர் செய் தார். "ஒரு சின்னப் பாட்ஸ் இருந்தால் பாடும்’ என்று தனக் குள் முணுமுணுத்துவிட்டு வந்து படுத்துக் கொண்டார்.
ம்றுநாள் காலையில் எழுந்து, நீராடி, அனுட்டானம் செய்து, அமுது வைத்து கோயிலில் காலைப் பூசையை, பக்தர்கள் 'எவரும் இன்றியே வழக்கம்போல் முடித் துச் சாப்பிட்டார். சயிக்கிளை எடுத்துக் கொண்டு p5 TT mrF6ör வீட்டிற்குப் போனபோது அங்கு சமையல் முடிந்திருக்கவில்லை.
48
மாந்தோலில் அமர்ந்து, கும் பங்கள் வைத்து, தீபம் ஏற்றி, பிள்ளையார் பிடித்து, அறுகம்புல் சொருகி அடுக்குப்பண்ணினர்.
நடராசனின் கையில் தெற் பை அணிவித்து, புரோகிதங்கள் ஒதி, புதிர்ப் படையல் வைத்து, கிரியைகளை மள மள என்று முடித்தார். ஐயாவின் சுருக்க மான கிரியைமுறை பலருக்குப் பிடித்தாலுங் கூட, சிலர் அவ ருக்குச் சரியாக மந்திரத் தெரி யாது என்று குறைகண்டனர்.
நடராசன் தெட்சணையாக ஐம் பது ரூபா ஐயருக்கு வைத்த போது அவர் ஆச்சரியப்பட்டார். சாதாரணமாக வன்னேரிமக்கள் பத்தோ பதினைந்தோதான் தட் சஆண வைப்பது வழக்கம். அரிசி, தேங்காய், மரக்கறி, தூள் என்று பல பொருட்களை உரப்பையில் வைத்துக் கட்டி சயிக்கிளில் வைத்து ஐயரை வழியனுப்பி வைத்தான் நடராசன். சீனியும் வாங்கி, றேடியோவுக்கு பற்றியும் வாங்கலாம் என்று எண்ணிக் கொண்டார் ஐயர்.
வீட்டுக்கு வந்த ஐயர் அரை வாசிப் பணத்தை தன்னிடம் வைத்துக் கொண்டு மிகுதியை அம்மாவிடம் பக்குவமாக நீட்டிய
போது அவள் சந்தேகப்பட வில்லை. மறுபடியும் ஸ்கந்தபுரம் போய்வர மாலையாகிவிட்டது.
அவர் வந்து சிறிது நேரத்துக் கெல்லாம், 'ஐயா வந்திட் டாரோ? என்று கேட்டபடி தர்மகர்த்தா வந்து சேர்ந்தார். அவர் முகத்தில் எள்ளும் கொள் ளும் வெடித்துக்கொண்டிருந்தது.

ரைம்ஸ்" களை வெளியிட்டது.
யுள்ளனர்.
பொறியியலாளர்களில் சென்றவர்களாகும்.
e இந்தியாவில் இப்படி?
இந்திய விஞ்ஞான கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவனத் தின் ஆய்வொன்றை மேற்கோள் காட்டி
இரண்டு மாதங்களுக்கு முன் சில புள்ளி விபரங்
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 12, 906 இந்திய விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், துறை அறிஞர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறி 1977ல் இருந்து 1979 வரையான காலப் பகுதி யில் அமெரிக்காவிற் குடியேறிய மொத்த வெளிநாட்டுப் 15 வீதமானேர் இந்தியாவிலிருந்து நிரந்தரமாக வசிப்பதற்காக அமெரிக் காவுக்குச் செல்லும் விஞ்ஞானிகளில் இந்தியா வழங்கியுள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
'ஹிந்துஸ்தான்
டாக்டர்கள் ஏனைய
15 வீதமானுேரை
"என்ன இந்த நேரத்திலை.?" ஐயர் புன்னகையுடன் கேட்டார். தர்மகர்த்தாவின் முகம் இன்னும் கடுகடுவென்றே இருந்தது.
'ஐயா, நீங்கள் கட்டாடி நடராசன்ரை வீட்டுக்குப்போய் திவசம் செய்தனிங்களே?' குர லில் ஓர் அழுத்தம்.
**நடராசன் கட்டாடியே. எனக்குத் தெரியாது"
**விசாரிச்சுக் கொண்டு போ யிருக்கலாமே? காசுபணம் எண்ட வுடனை நியதியளை எல்லாம் விட்டு விடுறதே? இக்கணம் எங்கடை ஆக்கள் அறிஞ்சால் ஐயரையே துரத்து எண்டு நிப்பாங்கள்."
இந்த விவகாரம் அடுத்த ஆலய நிர்வாக சபைக் கூட்டத் திற்கும் வந்தது; ஐயர் இனி
மேல் சாதியை விசாரித்து அறிந்து கொண்டுதான் போகவேண்டும் என்று கூறப்பட்டது. ஐயரும் ஏற்றுக்கொண்டார்.
நாட்கள் நகர்ந்தன.
ஐயாவுக்கு அம்மா புதுச் சயிக்கிள் வாங்கிக் கொடுத்திருந்த தால் ஐயர் குதூகலமாக இருந் தார். ஐயாவின் பழுதான மோட் டார் சயிக்கிள் திருத்தமுடியாமல் பாட்ஸ் கடைக்குப் போனதில் ஐயாவுக்குக் கவலைதான். "சயிக் கிளுக்குப் பதிலாக மோட்டார் சயிக்கிளாக வாங்கித் தந்திருக்க லாம்" என்பது ஐயரின் நப்பாசை பாவம்; கஸ்டம் புரியாத பிறவி, அம்மாவுக்கு மகள் வளர்ந்து வரு முன் வீடொன்று கட்டவேண்டு மேயென்ற கவலை. புரோகித வரு
49

Page 27
மானத்தில் வீடு கட்டுவதென்பது
முடிகிற காரியமா என்ன?
காலம் போய்க்கொண்டிருந் -
Bögül •
ஒருநாள் ஐயரம்மா வீட் டுக்கு வந்த செங்கமலம் ஆச்சி ஒரு சுவையான செய்தியைக் கூறி ஞள். ‘எங்கடை தர்மகர்த்தா வின்ரை ஏகபுத்திரன், கட்டாடி நடராசாவின்ர தங்கைச்சியைக்
கிளப்பிக்கொண்டு ஓடியிட்டா
ஞம்". y
ஆர், செல்வலிங்கமோ?" 'ஓம் அம்மா." அரிசி
வாங்கிக் கொண்டு விடைபெற் முள் செங்கமலம் ஆச்சி.
இவர்கள் உரையாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மூத்த மகன் கண்ணன், உலகம் முன்
னேறிக்கொண்டு வருகுது’ என்
முன். அம்மாவுக்குச் சுரீர் என்று கோபம் வந்தது. **இக்கணம் நீயும் சூத்திரப் பொம்பிளையைத் தான் கொண்டோடப் போருய் போல’ என்ருள்.
அதற்கென்ன இப்ப" என்று வெடுக்கென்று பதிலளித்தான் கண்ணன். அவனது பதிலில் ஒரு கணம் ஆடிப்போன அன்னபூ ரணியம்மாள் கண்டிப்போடு கூறி ஞள். 'பெடியா சொல்லிப் போட்டன். உன்ரை போக்கே சரியில்லை. கண்ட கண்ட பெடிய ளோடை சேர்ந்து கும்மாளம் அடிக்கிருய். இது எங்கினைபோய்
முடியப் போகுதோ?*
கண்ணன் சிரித்துவிட்டுப் போய்விட்டான்.
50
இந்த வருட ம்மழை நன்ரு கப் பெய்து கொடுத்ததால் வன் னேரி விவசாயிகளுக்கு நல்ல சிறு வடை கிடைத்தது. குளத்தில் தண்ணி குறைவில்லாமல் நின்ற தால் தொடர்ந்து வந்த சிறு போகமும் கைகொடுத்தது. மடை, பொங்கல், அபிஷேகம் என்று கோயிலுக்கும் வரும்படி பரவாயில்லை. "இந்தச் குட் டோட கோயிலுக்கு ஒரு மணி வாங்கிக் கோபுரமும் கட்டிப் போடுங்கோ" என்ருர் சிவசாமிக்
குருக்கள்.
போப்பம்" என்று பதில் கிடைத்தது. அவ்வளவுதான்.
"ஐயா, நாளைக்கு அப்பு வின்ர திவசம்." என்று நடரா சன் வந்தபோது அதற்கிடையில் ஒரு வரிசம் ஓடிக் கழிந்துவிட் டதே என்று ஐயர் வியப்பில் ஆழ்ந்தார்.
சிவசாமிக் குருக்களின் நில தர்மசங்கடமான நிலை! என்ன பதில் சொல்வது என்று புரியா மல் தலையைக் குடைந்தார்.
"நான் அ ப்ப போட்டு வரட்டே ஐயா?*
பொறும் தம்பி. நான் உங் கட வீடுகளுக்கு வாறதை இங் கத்தை ஆக்கள் விரும்புகினம் இல்லை. போனமுறை கண்டிப் பாகச் சொன்னவை." ஐயர் தயங்கினர்.
நோங்களும் இந்த ஊர் ஆக் கள்தான் ஐயா..."
அதுக்கில்லைத் தம்பி. இக் கனம் தர்மகர்த்தா ஆக்களோட

ஆடேலாது. என்ரை பிழைப்பிலை
யும் மண்விழுந்திடும். " ஐயர்
பக்குவமாக எடுத்துரைத்தார்.
‘என்னவோ அவையளைக்
கேட்டு பின்னேரம் எனக்கொரு முடிவு சொல்லுங்கோ, ஒண்டு
மட்டும் சொல்லிப்போட்டன். நீங்கள் எங்கட திவசத்துக்கு வராட்டிக்கில், எங்கட ஆக்
கள் இனிமேல் உங்களுக்கு வெளு க்கமாட்டம். அதோட செத்த வீடு, கலியாண வீடுகளுக்கும் வரமாட்டம்" நடராசன் உறுதி யாகக் கூறிவிட்டு வெளியேறி ஞன்.
ஐயர் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தார்.
மாலையில் தர்மகர்த்தா வந் திருந்தபோது ஐயர் விஷயத்தைக் கூறியதும் தர்மகர்த்தா துள்ளி மிதித்தார். “வண்ணுரப்பிள் ளைக்கு அவ்வளவாய்ப் போச்சோ?
எங்கட பொடியளை விட்டு நல்ல
பாடம் படிப்பிக்கிறன்' என்று அவர் கூறிக் கொண் டி ருந்த போதே நடராசன் வந்துகொண் டிருந்தான்.
‘என்னகாணும் ம யிர் ச் சேட்டை விடுகிறீர்?" என்று அவன் மீது சீறிவிழுந்தார் தர்ம கர்த்தா.
"வீண் கதை வேண்டாம். இது எங்கட மானப் பிரச்சினை. ஐயா, நீங்கள் வாறியளோ இல் 2) Guint?'"
ஐயர் பதில் சொல்லாமல் விழித்தார்.
தாயகம் வளர. தாயகம் தொடர்ந்துவர விற்பனைக்கு உதவுங்கள்! அதன் தரமுயர தங்களது ஆக்கங்களை விமர்சனங்களை அனுப்பிவையுங்கள்!
நடராசன் தொடர்ந்தான்: "இக்கணம் தர்மகர்த்தா ஐயா வின்ர திவசமும் எங்கட வீடுக ளிலைதான் நடக்கவேணும். உங் கட ஏகபுத்திரன் செல்வலிங்கம் என்ரை தங்கச்சியோட இப்ப என்ரை வீட்டிலை தான் குடியிருக் கிருன்.'"
தர்மகர்த்தா ஒரு `கணம்
ஆடிப்போனர். என்ருலும் தன்
னைச் சுதாகரித்துக்கொண் டு, "அவனைத்தான் கைகழுவிவிட் டிட்டேனே. செல்வலிங்கம் இனி என்ர மகனில்லை." என்ருர்,
இவர்கள்உரையாடிக்கொண் டிருந்தபோதே வீட்டுக்கு ன் வரி ருந்து வெளியே வந்த சிவசாமிக் குருக்களின் மூத்த மகன் கண் ணன், "நடராசா நீ போ.நான் நாளைக்கு திவசம் செய்ய வாறன் ...ம். கண்டறியாத வேறுபாடு கள். இவையள் என்ன வேண் டாம் எண்டால் உங்கட வீடுக ளிலை மட்டும் கிரியை செய்து சீவிப்பன்.இல்லாட்டில் ஒரு சயிக் கிள் ரிப்பேர் கடை போட்டா சுதந்திரமாக உழைக்கலாம்."
இளைய தலைமுறையினரின்
மாற்றத்தை ஜீரணிக்கமுடியாத தர்மகர்த்தா மரம்போல வாய
டைத்து நின்ருர்.
51

Page 28
3 பெண்
என் அப்பனே இப்போதுதான் பிறந்திருக்கும் என்னைப் பார்த்து ஏன் நீ கண்ணீர் சிந்துகிருய்?
நான் Ο பெண் குழந்தை யானதால உனக்கு
சுமையாகிப் போனேனென்ரு2
அம்மா ! பெண்ணே! என்ஆணப் பத்துமாதம் சுமந்து பெற்ற நீயுமா கலங்குகிருய். எனக்கு முலைப்பால் ஊட்டும் உன் கண்களில். கண்ணிரேன்? நீங்கள் போடும் உணவைத் தின்னும் வாயோடு மட்டும்
நான் பிறக்கவில்லையே? ஆணைப் போல் ஒரு மூளையுடனும் இரு கைகளுடனும்தானே நானும் பிறந்துள்ளேன். உண்மையில் நீங்கள் என்னை நினைத்து அழவில்லை. பெண்ணை அடிமை செய்யும் ஒர வஞ்சக ஆணுதிக்க சமுதாயத்தில் எனக் கேற்படப்போகும் துன்பங்களின் நினைவு உங்களை அழவைக்கிறது. கவலையை விடுங்கள் என்னை யிட்டுக் களி கூருங்கள்
குழந்தை
யோ. பெனடிக்ற்பாலன்
பெண்ணில்லைய்ேல்
இவ்வுலகில் உயிரில்லை இனிய அழகில்லை வானத்தின் பாதி
என்னை யிட்டு ஆனந்தியுங்கள்.
நான் ஒரு பராசக்தி என் மூளையால்
சிந்தனை செய்வேன் ஞானம் பெறுவேன்.
எம்மைக் கட்டியுள்ள அடிமைத் தளைகளை அம்பலமாக்குவேன் கைகளால் ஆயுதஞ் செய்வேன் அடிமைத் தளைகளை அறுத்தெறிய முன்னடப்பேன்.
உழைப்பதில்
உற்பத்தி செய்வதில்
goods
மாற்றி அமைப்பதில்
ணுக்கிங்கே நாம்
சளைத்தவரில்லை யென
நிரூபணம் செய்வேன்.
சுமையாக இருக்கமாட்டேன் நிச்சயமாய்
மைகளை இறக்கிவைப்பேன்.
ஆகையினல்
பெண்ணைப் பெற்றதற்காய் கண்ணிர் வடிப்ப்தைவிட்டு களி கூருங்கள் பெருமை கொண்டு கைகொட்டி ஆர்ப்பரியுங்கள்,
女
52

வடக்கில் ஒரு பல்கலைக்கழகம் 0 க. கைலாசபதி
ஒரு முழுமையான பல்கலைக் கழகம் என்ற எண்ணக் கருவை காலஞ்சென்ற பேராசிரியர் க. கைலாசபதி எவ்வாறு கண்டு கொண்டார் என்பதை 1974 ஆண்டு 'தாயகம் ஆனி இதழில் 'பரமன்' என்ற புனைபெயரில் வெளியான இக்கட்டுரை உணர்த்து கிறது. - ஆசிரியர் குழு
வடபகுதிக்கு ஒரு பல்கலைக் கழகம் வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக பல்வேறுபட்ட அரசியல், கல்வி, சமூக ஸ்தாபனங் களால் முன்வைக்கப்பட்டுவந்த ஒரு விஷயமாகும். இவ் ஸ்தாப னங்களும் அதன் தலைவர்களும் பெயரளவிலான ஒரு பல்கலைக் கழகத்தை வேண்டி நின்றபோதிலும் அவர்களது நோக்கங்கள் வெவ்வேருனவை என்பது தெட்டத்தெளிவானது. வடக்கில் அமை யும் பல்கலைக்கழகம் தமிழ் மாணவர்களுக்காக மட்டும் இருக்க வேண்டும் என்று சிலர் கூறுகிருர்கள். தமிழ், இந்து நாகரிகத்தை வளர்ப்பதற்கு இப் பல்கலைக் கழகம் உதவவேண்டும் என்று இன் னெரு சாரார் விரும்புகின்றனர். வேருெரு பகுதியினர் தமிழ் மொழியையும், கலை கலாச்சாரத்தையும் பேணிப்பாதுகாக்கவும் இப் பல்கலைக்கழகம் செயல்படவேண்டும் என்று கூறுகிருர்கள்.உண் மையில் இவர்கள் எல்லோரும் ஒரு நாட்டின் பல்கலைக்கழகம் எவ் விதமாக அமைந்து, எத்தகைய வழிகளில் செயல்பட்டு; நாட்டுக்கு பயன்படவேண்டும் என்பதில் சுத்த சூனியமாகவே உள்ளனர். வடக்கே பல்கலைக் கழகம் வேண்டும் என்று கோரியவர்களில் பெரும் பாலானவர்கள் தத்தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்கும், அல்லது சொந்த நலன்களைப் பேணுவதற்கும்தான் இப் பல்கலைக் கழகக் கோரிக்கையை முன்வைத்து வந்துள்ளனர். இவர்கள் எல் லோரும் தமிழ் மொழியையும், வட பகுதியையும் முழு இலங்கை யிலுமிருந்து பிரித்து வேருகப் பார்த்தே தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். உண்மையில் வடக்கில் பல்கலைக்கழகம் நிறுவு வதன் நோக்கம்தான் என்ன? பல்கலைக் கழகக் கட்டிடத்தைக் காட்டி கண்துடைப்புச் செய்யவா? அல்லது அங்கு வரும் அலுவ லர்களைக் காட்டி அரசியல் வளர்க்கவா? இன்றுவரை பல்கலைக் கழ கத்தின் நோக்கம் புரியாதபுதிராகவே உள்ளது.
வடக்கில் ஒரு பல்கலைக்கழகம் என்னும் அடிப்படையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள பரமேஸ்வராக் கல்லூரியை ஒரு பல்கலைக் கழக வளாகமாக திறப்பதற்கு வேலை கள் நடைபெறுகின்றன இவ்வளாகம் எப்படி இயங்கப்போகின்
53

Page 29
றது என்பது எல்லோரினதும் கேள்வியாகும். இவ்வேளை நாம் இலங்கையிலுள்ள ஏனைய வளாகங்கள் எவ்வாறு செயல்படுகின் றன என்பதைப் பார்ப்பது அவசியமாகும். பேராதனை வளாகத்தில் கலை, விஞ்ஞானப் பட்டதாரிப் படிப்புகளும், பொறியியல், மருத். துவம், பல்வைத்தியம். விவசாயம், மிருகவைத்தியம் ஆகியவை யும் போதிக்கப்படுகின்றன. (இவற்றுள் பொறியியல், பல்வைத் தியம், விவசாயம், மிருக வைத்தியம் முதலியன ஏனைய வளாகங் களில் கற்பிக்கப்படுவதில்லை). பொறியியல் படிப்பதற்கு அங்குள்ள பரிசோதனைகூட வசதியும், இலங்கையில் உள்ள சிறப்பான பல் வைத்தியசாலை பேராதனையில் இருப்பதும், விவசாய திணைக் களம், பேராதனைப் பூங்கா ஆகியவை அமைந்திருப்பதும் இவற் றுக்குக் காரணமாகும். இவ்வசதிகள் ம ற்  ைற ய வளா கங்களில் இல்லை. எனவே இத்துறைகள் பேராதனை வளாகத்திற் குச் சிறப்பாக உள்ளன. இதனுல் இத்துறைகளில் ஆராய்ச்சி செய் வதற்கான வசதிகளும் அதிகமாகவே உள்ளன.
கொழும்பு வளாகத்திலே கலை, விஞ்ஞானப் பட்டதாரிப் படிப்புகளும், வைத்தியமும் போதிக்கின்றர்கள். அத்துடன் திட்ட மிடல், அபிவிருத்திக் கல்வி, கந்தோர் நடைமுறை ஆகியவையும் கற்பிக்கப்படுகின்றன. கொழும்பு நகரத்தில் உள்ள அலுவலகங் களை நேரே பார்த்து கந்தோர் நடைமுறைகளைப் படிப்பதும், திட் டங்கள் யாவும் கொழும்பில் இருந்து ஆக்கப்படுவதால் அவற்றுடன் தொடர்பு கொள்வது சுலபமாகையால் இவ்வளாகம் கொழும்பில் அமைந்துள்ளது.
வித்தியாலங்கார வளரகத்தில் கலை, பட்டதாரிப் படிப்புகளும் விஷேசமாக கலாச்சாரம், மொழியியல், மானிட இயல் போன் றன கற்பிக்கப்படுகின்றன.
வித்தியோதய வளாகத்தில் விஞ்ஞானமும், விஞ்ஞான நுட்பங் களும், வர்த்தகவியலும் முகாமைக் கல்வியும் கற்பிக்கப்படுகின் றன. கட்டுபத்தை வளாகத்திலே பொறியியல் நுட்பங்களும், கைத்தொழில் வளர்ச்சிக்கான பாடங்களும் கற்பிக்கப்படுகின் றன. இங்கு பிரயோக விஞ்ஞானம் சிறப்பிடம் பெறுகின்றது.
இந்த ஐந்து வளாகங்களில் கற்பிக்கப்படுவனவற்றை தொகுத் துப் பார்த்தால் அவற்றுள் பொதுவாக கலை, விஞ்ஞான பட்டதா ரிப் படிப்புகளும் அதே வேளை ஒவ்வொரு வளாகத்திற்கும் சிறப்பா கச் சில வகுப்புகளும் நடாத்தப்படுவதை நாம் காண்கிருேம்,இவை குறிப்பிட்ட மதத்தினருக்கோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தின ருக்கோ மட்டும் உரியனவல்ல. அனைவருக்கும் பொதுவானவை Այո (35ւb. V
மேற்கூறிய ஐந்து பல்கலைக் கழக வளாகங்களில் கற்பிக்கப் படும் கல்வி முறைகளும், ஆராய்ச்சிகளும் அவ்லது அவை வழங் கும் பட்டங்களும் நாட்டின் பொருளாதார, அரசியல், கல்வி, கலாசாரத் துறைகளில் எத்தகைய அளவில் முன்னேற்றத்தைக் கொடுக்கின்றன என்பது கேள்விக்குரியதாக இருந்தபோதிலும்
54

அல்லது ஒரு நாட்டிற்கு எவ்விதமான பல்கலைக் கழக அமைப்பு முறை வேண்டும் என்ற பிரச்சினையை வேருெரு கட்டுரையில் ஆராய்வது நன்று.
ஆனல் நடைமுறையில் இயங்கும் பல்கலைக் கழக வளாகங்கள் அமைந்திருப்பதற்கு கூறப்படும் சிறப்பு அம்சங்கள் போன்று வட பகுதியிலும் அமைய இருக்கும் வளாகத்திற்கும் சிறப்பியல்பு உண்டு. எவ்வளவு தூரம் பூரணமாகப் பயன்படுத்தப்படுமோ? என் பது நம்மால் கூறமுடியாவிட்டாலும் அச் சிறப்பை நாம் கூறி வைப்பது அவசியம். இலங்கை கடலால் சூழப்பட்ட ஒரு தீவு. மீன் வளம் நிறைந்த பகுதிகள் இலங்கையைச் சுற்றி உள்ளன. ஆனல் இம் மீன் வளத்தை நமது நாடு எவ்வளவுக்குப் பயன்படுத்துகின் றது என்பது கேள்விக்கான விஷயம். அதேவேளை வடபகுதி விசே ஷமாக யாழ்ப்பாணம் ஒரு குடா நாடு. கடலில் வாழும் மீன் இனங்களைப் பற்றியும், உயிரினங்களைப் பற்றியும் படிப்பதற்கும், ஆராய்ச்சிகள் செய்வதற்கும் ஏற்ற சகல வசதிகளும் உண்டு. மேலும் யாழ்ப்பானம் நீர்ப்பிரச்சினை உள்ள பகுதி. அதே வேளை உவர் நீர்நிலைகள் அநேகம் உள்ள பகுதியும் கூட. இந்நீர் நிலைகளை அண்மித்த பகுதிகள் எவ்வித உற்பத்திக்கும் ஏற்ற நிலங் தளாக இல்லை. எனவே இவற்றை நல்ல உற்பத்திக்கான நிலங் களாக மாற்றுவதற்கான ஆராய்ச்சிகளைச் செய்வது அவசியம் இவ் ஆராய்ச்சி யாழ்ப்பான வளாகத்தில் அமைவது முற்றிலும் சாத்தியம்.
அத்துடன் வடபகுதி விவசாய முறை நாட்டின் ஏனைய பகுதி களைவிட வித்தியாசமானதாகும். எனவே அத்தகைய விவசாய முறையை மேலும் விரிவாக்குவதற்கான ஆராய்ச்சிகளை மட்டு மல்ல அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய பட்டதாரிகளை உரு வாக்குவதும் அவசியமாகும். சிறுகைத்தொழில்களுக்கான வாய்ப் புகள்கூட வடபகுதியில் ஏராளமாக உள்ளன. எனவே இத்தேவை களின் அடிப்படையில் வடபகுதி வளாகம் அமையுமானல் நாட் டிற்கும் மக்களுக்கும் பிரயோசனமாக இருக்கும்.
இவ்விதமாக அமையும் வளாகத்தில் இன அடிப்படையில் அல்லாமல் இத்துறைகளில் வல்லமை கொண்ட சகல மாணவர்க ளும் அனுமதிக்கப்படவேண்டும். அதுவே தேசிய நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும், தேசிய உணர்வுக்கும் வழிகோலுவனவற் றுள் ஒன்ருக அமையும்.
இதை விடுத்து வடபகுதியில் அமையும் வளாகம் தமிழ் மான வர்களுக்கு ஒரு அகதிகள் முகாமாகவோ, பழம்பெருமை பேசு வதற்கான ஒரு நூதனசாலையாகவோ அமையக் கூடாது. தமிழ் மக்களுக்கு ஒரு வெறும் கண்துடைப்பாகவோ அல்லது தத்தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதற்கு ஒரு பெயர்ப்பலகைப் பல்கலைக்கழகமாகவோ இருக்கக்கூடாது. நாட் டிற்கும் வடபகுதிக்கும் பலன்தரும் முழுமையான எவ்வித பாகு பாடுமற்ற ஒரு பல்கலைக்கழக வளாகத்தையே மக்கள் வேண்டுகின் முர்கள். மக்களது விருப்பம் நிறைவேறுமா?
A. 55

Page 30
மிடுக்கு O - - Daspirass
மப்பன்றிக் கால மழை காணு மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது; ஏர் ஏருது: காளை இழுக்காது; ஸ்னினும் அந்தப் பாறை பிளந்து பயன் விளைப்பான் என்னுாரான். ஆழத்து நீருக் ககழ்வான் அவன். நாற்று வாழத் தன் ஆவி வழங்குவான். ஆதலால் பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன்னெல்லு. தங்க நகைகள் தலைக்கணிந்த பெண்களே
கூடிக் குனிந்து கும்மி கொட்டுவதும் காதினிக்கப் பாடிக் கவலை பறக்கச் செய் கின்றதும்போல், முற்றி, மனிதன் முயற்சிக்கு இறை கொடுக்கும், பொற்காசாம் நெல்லுப் பொதிசுமந்து கூத்தாடும் அந்தப் பயிரின் அழகை அளந்தெழுத எந்தச் சொல் உண்டாம் எமக்கு? அவ்வுழைப்பாளி உள்ளம் நெகிழ்ந்தான். ஒரு கதிரைக் கொத்தாகக் கிள்ளி முகர்ந்தான்; கிறுகிறுத்துப் போகின்றன் வாடும் வயலுக்கு வார்க்கா முகில், கதிர்கள் சூடும் சிறுபயிர்மேல் சோ? வென்று நள்ளிரவிற் கொட்டும்; உடன் கூடும்கொலைக்காற்றும் தானுமாய் எட்டுத்திசையும் நடுங்க முழங்கி எழும். ஆட்டத்து மங்கையர்போல் அங்கு மொய்த்து நின்ற பயிர் பாட்டத்தில் வீழ்ந்தழிந்து பாழாகிப் போய்விடவே கொள்ளைபோல் வந்து கொடுமை விளைவித்து வெள்ளம் வயலை விழுங்கிற்று . பின்னர் அது வற்றியதும் ஒயா வணக்கரத்தில் மண்வெட்டி பற்றி, அதோ பார், பழையபடி கிண்டுகிறன், சேர்த்தவற்றை முற்றும் சிதறவைக்கும் வானத்தைப் பார்த்தயர்ந்து நிற்கும் பழக்கமற்றேன் வாழி, அவன் ஈண்டு முதலில் இருந்தும் முன்னேறுதற்கு மீண்டும் தொடங்கும் மிடுக்கு.
56

குமுதன்--0
மழை
**வடக்காலை மேகம் கறுக்
குது. அப்பனேயெண்டு 1060)gp பெஞ்சுதெண்டா. எண்ணைக் காசு மிஞ்சும்??
"ஒமப்பா. எத்தினை தரம் உந்த மிஷினைக் கலட்டிப் பூட்டி யாச்சு. அது சனியன் நல்லா எண்ணை குடிக்குது. இந்தப் போகத்தோடை கடன்பட்டா தல் ஒரு நல்ல மிஷின் வேண்ட வேணும் ?
முதல் நாள் வடக்குத் திசை யில் வானம் கறுத்து வந்தபோது அவனது மனைவி கமலா நம்பிக்கை யோடு சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிருன் பரமு. எல்லோரது நம்பிக்கைகளையும் பாழடித்து இப்படி ஒரு மழை. அதுவும் பணிப்புகார் படரும் மாசிமாத முற்பகுதியில் தொ டர்ந்து பெய்யுமென்று எவருமே எதிர்பார்க்கவில்லை.
அவன் காலையில் சென்று பார்த்த போது இரவிரவாக பொழிந்து தள்ளிய மழையோடு வரம்புகளே தெரியாமல் வயல்
கள், தோட்டங்கள் எல்லாம் வெள்ளத்தால் மூடப்பட்டிருந் தன.
அவன் வாரத்துக்குச் செய் யும் வயலில் கோடையில் தக்கா ளிக்குப் போட்ட பசளைகளின்
~്യത്യ-സ്മൃഭ
மிச்சங்களை எல்லாம் உள் இழுத்து உப்பி விளைந்து முற்றி நிலத்தில் சாய்ந்து அறுவடைக் குத் தயாரக இருந்த நெற்கதிர் கள், குத்தகைநிலத்தில் பச்சைப் பசேலென்று தடல் விரித்து வளர்ந்து நின்ற வெங்காயமெல் லாம் வெள்ளத்தால் மூடப்பட்ட போது இயல்பாகவே உறுதி யான மனம்படைத்த பர முகூட கலங்கிவிட்டான்.
வாசற்படியோடு போடப் பட்டிருந்த அந்த வாங்கில் அமர்ந்தபடி பேரிரைச்சலுடன் பெய்யும் மழையையே வெறித் துப் பார்க்கிருன் பரமு. முற்றத் தில் பெருகி ஒடும் வெள்ளத்தின் மீது ஆலங்கட்டிகளாய் விழும் மழைத்துளிகள் குழி வெட்டித் தெறிக்கின்றன, 'மழை போ. வெய்யில் வா" என்று சிறுவர் களாய் கூடிக் கத்திய காலத்திலி ருந்து இன்றுவரை மழை வெள் ளத்தைக் கண்டால் அவனுக்கு
மகிழ்ச்சியாகவே இருக்கும். வயல்
வெளிகளில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இப்படி பலத்த மழை பெய்தால் ஓடி ஒதுங்கமால் மழைநீரில் குளிப்ப தில் ஆனந்தமடைவான். ஆனல் அந்த மழை இன்று அவன் கடன் பட்டு அடகு வைத்து மண்ணில் போட்ட எதையுமே எடுக்கமுடி
57

Page 31
urg 6r6ä AD நிலைக்கு அவனைத் தள்ளியபோது ஒரு வெறுப்பும் சோர்வுமே அவனிடம் ஏற்பட் டிருந்தது.
தனது தங்கைக்கு 626tu IIT lடுக் காட்டுவதற்காக அவனது ஆறுவயது நிரம் பிய மகன் குமார் கடுதாசியில் செ ய்துவிட்ட கப்பல் ஒறிது தூரம் மிதந்துவிட்டு ஒடு இன்ற வெள்ளத்தில் உருக் குலைந்து அள்ளுப்படுகின்றது" மகிழ்ச்சியால் துள்ளிய தங்கை யின் முகம் வாடுவதைக் கண்டகுமார் அதைத் தூக்கிவிடுவதற் காக மூக்குச்சளியை உள்ளிளுத்தி படி மழைக்குள் பாய்ந்து மீள் கிருன்.
அதைக் கண்டுவிட்ட பரமு விற்கு ஆத்திரம் வருகிறது.
டேய் குமார். தடிம னுேடை மழைக்கை நனையிரு என்ன...? மருந்துக்குக் காசு வைச்சிருக்கிறீராக்கும்"
ஒரு கிழமைக்குமேல் வீட்டுக் குள் அடைபட்டுக் கிடக்கும் குழந்தைகளுக்கும் பொழுது ாேக்கு வேண்டு மென்பதை உணர்ந்தவனக அன்பாகக் கண் டிக்கிருன்.
பழைய பற்றியோடு அனுங் இக்கொண்டிருந்த ரேடியோ வும் மழைக் குளிரோடு முற்ருக வாயடங்கி விட்டது. பக்கத்து ஒட்டு ரேடியோவின் சத்தத்தை யும் மீறி மழை இரைந்துகொண் டிருக்கிறது.
"இஞ்சாருங்கோ. சனி அடுப்பு எரியுதில்லை. கடைக் கொருக்காப்போட்டுவாங்கோ’
58
பார்க்கிருன் ,
அடுப்படி எங்கும் புகைபரவி விட்டுக்குள்ளும் தலை நீட்டுகின் Dgël • ஈரவிறகை வைத்து ஊதி ஊதி வீங்கிய முகத்துடன் Grif? கின்ற கண்களைக் கசக்கியபடி அடுப்படி வாசலில் நின்று சொல் திருள் கமலா, வழமையாக தோட்டத்தில் வெட்டி எறியும் வெண்டி, கத்தரி, மிளகாய் அடிக் கட்டைகளை யெல்லாம் பொறுக் ச்ெ சேர்த்து கொத்து விறகு வாங்காமலே அவள் சமாளித்து விடுவாள். இன்று இவளவு முயற்சிக்குப்பின்னும் இயலாமல் தான் கேட்கிருள்.
சட்டைப் பையைத் தடவிப் பார்க்கிருன் பரமு. வெங்காயத் துக்கு மருந்தடிக்க, அரிவுவெட்ட வென்று வங்கியில் அட-கு வைத் துப் பெற்ற காசு, 5 Lair 605 மாற்று என்று கரைந்து மீதி இருக்கிறது. வாங்கை விட்டு எழுந்தவன் சுவரில் மாட்டப்பட் டிருந்த கண்ணுடியில் முகத்தைப் ஒரு கிழமைக்கு மேலாக வழிக்கப்படாத தT4 மீசைகள் நீண்டு அவனது மனத் தின் சுமையை மேலும் வெளிக் காட்டியது அவனுக்கு ஒருமாதிரி யாக இருந்தது. கண்ணுடிக்கு மேல் ஆணியில் செருகியிருந்த ஒப்பை எடுத்து தலையை வாரிக் கொண்டான். அடுப்படி வாசலில் விரித்தபடி வைக்கப்பட்டிருந்த கம்பிகள் அறுந்த குடையை சரி செய்து கொண்டு புறப்படத் தயாரானன்.
'மாடுகளுக்கு வைக்கலும் வேண்டவேணும். கொட்டிலும் ஒழுக்கு. அதுகள் பாவம் படுக்க

இடமுமில்லாமல் நிண்டு விறைக் குதுகள்"
"எல்லாத்துக்கும் காக கிடக்கே. மழையைக் கண்ட உடனை விலையளையும் ஏத்
திப் போடுவாங்கள். சனங்கள் என்னண்டுதான் சீவிக்குதோ தெரியேல்லை?"
"விளைஞ்ச நெல்லை மூடிப் போட்டுது கோதாரி ԼD6ծէք... இல்லாட்டி. கொஞ்ச நாளைக் காதல் சமாளிச்சிருப்பம்’
நாட்டு நிலைமையஞம் நல்
லாயில்லை. இது அழிவுக்குத் தான் பெய்யுது"
அங்கினைக்க கதைச்சுக்
கொண்டு நிக்காமை கெதியா வாங்கோ. பொழுதும் தெரி
யேல்லை. பிள்ளையஞக்கு பசி.
ஏன் சயிக்கிளிலை போங்கோவன்’
*இந்த மழேக்கை grundia
ளிலை போன. தோஞ்சுதான்
வரவேணும்."
சாரத்தை உயர்த்திச் சண்டி
கட்டிக்கொண்டு கணுக்காலுக்கு
மேலாக வாரடித்து ஓடும் ஒழுங்
கை வெள்ளத்தில் குடையுடன் இறங்கி நடக்கிருன் பரமு. உடம்
பைக் குறுக்கி குடையைப் பிடித் துக்கொண்டு நடந்த போதும் குடை வட்டுக்குள்ளால் தெறிக் கும் நீர்த்திவலைகள் பட்டு அவ னுக்கு உடலெங்கும் கூதல் ஒடு கிறது.
கொட்டும் மழையில் நனைந்து தோய்ந்தபடி அரையை விட்டு அவிழ்ந்த வேட்டி வெள்ளத்தில் இழுபட ஒரு கையால் வேட்டி
இப்ப
யைப் பிடித்தபடி ஒழுங்கையில் நின்று தள்ளாடுகிருர் தம்பி முத்தர் w
“ஆற்ரு அவன். தம்பி. பரமுவே. தம்பி மன்னிக்க வேணும். மன்னிக்கவேணும்"
'அண்ணை இதென்ன இது. சன்னியெல்லே பிடிக்கப்போகுது சீ. கட்டுங்கோ வேட்டியை"
குடையைத் தோழில்வைத் துக் கழுத்தைச் சரித்து இறுக் கிப் பிடித்துக் கொண்டு அவரது வேட்டியைச் சரிப்படுத்தி விடுவ தற்குள் பரமு பாதிக்குமேல் நனந்துவிட்டான்,
"தம்பி. நட்ட வெங்காய மும் போச்சு. பாங்கிலை வைச்ச தகையும் போச்சடா..?
தம்பிமுத்தர் சொல்லிவிட்டு
அழுகிருர், பரமுவுக்கு விரை வாக கடையடிக்குப் போகவேண்
டும் போல இருக்கிறது. இருந்
தாலும் அவரை அந்த நிலையில் விட்டுவிட்டுப் போக அவனுக்கு மனம் வரவில்லை,
"அழிவும் நட்டமும் எல்லா ருக்குந்தான். அதுக்கு குடிச்சுப் போட்டு நிண்டா பிரச்சனை தீருமே. நடவுங்கோ வீட்டை" 'தம்பி. எனக்கு வெறி இல்லை. நான் போவன். நீர் Guntib””
இடையிடையே நின்று நகர மறுத்த தம்பிமுத்தரை இழுத் துக்கொண்டு செல்கிருன் பரமு.
தம்பிமுத்தர் குடியைப் பழக்கமாகக்கொண்டவர் அல்ல, எப்பொழுதாவது தவிர்க்கமுடி
59

Page 32
யாத சந்தர்ப்பங்களில் சிறிய
அளவில் பாவித்து வந்த அவ ருக்கு இன்று ஏற்பட்டுவிட்ட கஷ்டநிலை கதிப்பை வாயில் வைக் கத் தூண்டிவிட்டது?
செல்லக்கா. அண்ணைக்கு Furub gi 60 L-35 துவாய் குடுங் GgfT ''
படலையைத் திறந்து ഖി'-' ഖr ി ഖ ഞ!T கொண்டு சென்று
விடுகிருன்.
வயற்கரை ஓரத்தில் பள்ளக்
காணிக்குள் இருந்த அவிதி வீட்டுப்பின்புறச் கவரோடு வயல் வெள்ளம் வந்து அலை மோது கிறது.
ஒதுக்குப்புறத்தில் இருந்த
வங்கில் ஈரத்துக்காக ஏறி அமர்ந்திருந்த அவரது புதல்வி கள் இருவரும் இறங்கி நிற்கின் றனர். காதுகளில் கூட எதுவு நில்லாமல் வெறுமையா? நிற் கும் அவர்களைப் பார்க்கும்போது தம்பிமுத்தரின் மனவேதனையை அவனல் உணரமுடிகிறது.
அண்ணை இருங்கோவன்’ go) பேசப்போருள் தங்கச்சி. நான் கடையடிக்குப் போட்டுவரவேணும்"
சாந்தாவுக்கு பதில் சொல் லிக் கொண்டே ஒழுக்குக் 585 வைக்கப்பட்டிருக்கும் பாத் திரங்களைப் பார்க்கிறன். சருவம் சருவச்சட்டி பேசின்கள் எல்லா வற்றையும் பரப்பி வைத்தும் ஒழுக்குக் கட்டுப்படாததால் அவரது வனுக இருந்தாலும்
60
செத்தை
கள் கட்டிய ஏ
ஒரே மகன் பாலு சிறிய
யில் ஏறி பொலித்தீன் உரப்பை யைச் செருக முயல்கிருன். ஒழுக் இல் கரைந்து சுவர்களின் ક69 பகுதிகள் இடிந்துகிடக்கினறன.
“ of Go6upă 55TULI நடுகைக்கு காசைவிட்டதிலை. மேச்சலைக் கவனிக்காமை விட்டிட்டார்’
* 'ஓம் தம்பி. கடைசியிலை ஒண்டும் இல்லாமல் போச்சு. தம்பி. பயிரழிவுக்கு ஏதாலும் குடுப்பாங்களே?" -
ஒ. அங்கினை பேருக்குக் கிள் ளித் தெளிப்பங்கள். எதுக்கும் விதானையாரைச் சந்திச்சுக் கேக் கிறன். வாறன் அக்கா’’
@J(Լք வருடங்களுக்கு முன் கமலாவைத் திருமணம் செய்த நாட்களில் இப்படித்தான் சுவர் ாள் இடிந்துவிழ ஒழுக்குகளுக் குள் இருந்து அவதிப்பட்டிருக் கிருன். தோட்டக்கார Loftus 1986/T களைத் தேடித்திரிந்த காலம். நிளகாய் வெங்காயத்துக்கு விலை இருந்த அந்தக் காலத்தில் მიწ08) ஜனய விவசாயி ஜளப் போலவே அவனும் வந்த வருமானத்தோடு மனைவியின் நகைகளையும் விற்று ஒரு சிறிய கல்வீட்டைக் கட்டியிருந்தான் அந்த நாட்களுக்குப்பின் шцу и படியாக நாட்டில் ஏற்பட்டுவந்தி மாற்றங்கள் மண்ணை நம்பி உழைத்த அவன்போன்ற 666&sr
யிகளை படிப்படியாகப் பாதித்து
வந்தது. அவனது வயதைச் சேர்ந்த எத்தனையோ இளைஞர் கள் நிலங்களை விட்டு வெளிநாடு சென்றுவிட்டனர். அவனைப் போன்ற சிலர்தான் இன்னும்
(மறுபக்கம் பார்க்க)

கடவுளுக்கு விளையாட்டு.
حسرحیح سر سرہ . p(52)stusirل
O MTNY~~- - -17N-W^*NSYNTYNWYNWYN.
தொடர்ந்து மூசிச் சுழற்றிய காற்றும் ஒய்ச்சலே இன்றி ஊற்றிய மழையும் விளைத்த சேதமோ மிகமிகப் பெரிது.
வெள்ள நிவாரண வேலையின் பொருட்டு ஜிப்பிலும் லொறியிலும் நடந்தும் அலைந்தவர், மாட்டு வண்டி, வள்ளம், சயிக்கிள், கிடங்கிலும் சேற்றிலும் விழுந்தெழ உலேந்தவர் - கடமையின் இறுதியில்,
காரால் இறங்கிய அரசதிகாரி அலுத்துக் கொள்கிருர் - ‘கடவுளுக்கு விளையாட்டு கவிண்மென்ற்றுக்குச் சீவன் போகுது!"
அரசின் ஒர் அங்கம் என்ற முறையிலே உரிமையும் உண்டுபோலும்! அந்த அலுவலர் அலுத்துக் கொள்கிருர்,
★
கடற்கொக்கும் சிப்பியும் சிப்பி ஒன்று வெய்யில் காய்வதற்காக கரையேறியது. அதே சமயம் கடற்கரைக் கொக்கு ஒன்று அதைக் கொத் தியது. சிப்பி கொக்கின் அலகுகளை தனது ஓடுகளால் இறுகப் பற்றிக்கொண்டது.
"இன்ருே நாளையோ மழை பெய்யாவிட்டால் இங்கே ஒரு இறந்த சிப்பி கிடக்கும்" என்றது கொக்கு.
"உன்னுல் என் பிடியைத் தளர்த்த முடியாவிட்டிால் இங்கே ஒரு இறந்த கடற்கரைக் கொக்கு கிடக்கும்’ என் றது சிப்பி. f
இரண்டில் ஒன்றுமே விட்டுக்கொடாமல் போகவே வழியே வந்த மீனவன் ஒருவன் இரண்டையுமே எடுத்துச் சென்சூரன்.
- சீனக்கதை
61

Page 33
பிடிவாதமாக அந்த மண்ணை விட்டு நகராமல் இருந்தனர்.
அவனையும் போகவேண்டும் என்று கமலா முதலில் வற்புறுத் திய போதும் நாட்டில் தூண்டி விடப்பட்ட பொருளை மட்டுமே தேடும் ஆவலும், அதனுல் நாளும் பொழுதும் நடந்துகொண்டிருக் கும் கொலைகளும் கொள்ளைகளும் சமுதாயச் சீரழிவுகளும் வாழ்க் கையின் அர்த்தங்களை அவளுக்கு உணர்த்தியிருந்தது.
அந்த மழையிலும் கடைத் தெருவில் சனக்கூட்டமாக இருந் தது. மழைக்கு ஒதுங்கி நின்ற செல்வம் பரமு வருவதைக் கண்டு குடையை விரித்துப் பிடித் துக்கொண்டு படியால் இறங்கி முன்னே வருகிருன்.
"அண்ணை ராத்திரி பாங் அடிச்சிட்டாங்களாம்’
"ஒ. சொல்லி அழுதவர். நகையள் காசுகள் எல்லாமோ?’’
"ஒ. முழுக்கப் தாம்"
போட்டு
*மழைவெள்ளம் ஒரு 'பக் கம்.இவங்களும் ஒரு பக்கம்’
*"அதுதானே அண்ணை. அடுத்த மாதம் மச்சாள்ப்பெட்
டைக்கு 'கலியாணத்துக்கு வைச்
சிருந்த நகையையும் அடைவு வைச்சனன்’’’
'எல்லாற்றை கதையும் இஞ்சை உதுதான். ஒருக்கா வாசியசாலையடிக்கு வாரும்’
பரமு கடைப்படியில் ஏறும் போது. ஊர் மக்கள் பலரைச்
62
தம்பிமுத்தண்ணை
சிறை வைத்து இரவு நடந்த வீரதீரச் செயல்களை நடுத்தர @hI ULuğ5I60)L—UL u ஒருவர் சுவைபடக் கூறுகிருர், அங்கு நின்றவர்கள் எந்தவித உணர்வுமின்றி அபிப் பிராயம் எதுவும் கூருமல் மெளன மாக அவர் கூறுவதைக் கேட் கின்றனர்.
வைக்கலேயும் விறகையும் சுமந்தபடி பரமு திரும்புகிருன். மழை சிறிது ஒய்ந்தாலும் தூறல் நிற்கவில்லை. s
விறகை அடுப்படி வாசலில் வைத்துவிட்டு நிமிர் கிருன்.
‘துரை வந்திட்டுப்போகுது’ தேனீர்ப் பேணியை நீட்டிய படி கமலா கூறுகிருள்.
'தனியத்தான் வந்ததோ" "படலேக்கையும் ஆரோ நிண்டவை. சமையல் முடியுது gril 9 Gl போங்கோ "
“எனக்கிப்ப பசிக்கேல்லை. கொஞ்சம் பொறுத்து வாறன்’
தேனீர்ப் பேணியை அவளி டம் கொடுத்துவிட்டு வேகமாக நடக்கிருன் பரமு.
வாசிகசாலையில் பலர் கூடி யிருக்கின்றனர்.
“மட்டக்களப்பு, பொலநறு வைப் பக்கமெல்லாம் பெருஞ் சேதமாம்’
"பயிரழிஞ்சு போச்செண்டு தற்கொலை கூடி செய்திருக்குது
gero.”
"ஏன் இஞ்சை பாக்கேல் லையே. எங்கடை இழவுகளை. எல்லாப் பக்கத்தாலையும் பிரச்

சனையெண்டா செய்யிறது"
“ஒ. கண்ணை மூடிக்கொண்டு,
4ள்ளடியளைப் போட்டுத்தானே இப்ப. பேய்பிசாசுகளை வளத்து விட்டிருக்கிறம்"
பத்திரிகைச் செய்திகளைப் பார்த்துவிட்டு அபிப்பிராயங் களே வெளியிடுகின்றனர். பரமு வருகிருன்.
"வாங்கோவன். இந்தத் அாறலோடை வெள்ளத்தை ஒரு கை பாப்பம்"
*ஒ. உங்களைத்தான் பாத் துக்கொண்டு நிக்கிறம்" 坂
அங்கு நின்றவர்கள் அனைவ ரும் வயல்க்கரையை நோக்கி நடக்கின்றனர். போகும் வழியி லுள்ள வீடுகளிலுள்ள பிக்கான் கள் மண்வெட்டிகள் அவர்களது தோள்களில் ஏறுகின்றன. மேசன் தொழில் செய்யும் துரை ரத்தினமும், சுருட்டுத் தொழி லாளி சிவலிங்கமும் கூட அவர் களுடன் செல்கின்றனர். அவர் களது வேஃகளும் தொடர்ந்து பெய்யும் மழையால் பாதிக்கப் பட்டிருந்தன.
"நில்லுங்கோடா தம்பிமார் நானும் வாறன் ?
முருகேசண்ணரும் LDGov வெட்டியைத் தோழில் வைத்த படி விரைந்து வருகிருர்.
ஒழுங்கை சென்று முடியும் அந்த வயல்வெளி முகப்புக்கு அனைவரும் விந்துவிடுகின்றனர். எங்காவது தெரியும் பெருவரம்
புகளைத்தவிர குளங்கள் கிணறு
சனம் என்ன
கள் எல்லாம் மேவி ஒரே நீர்ப் பரப்பாக அந்த வயல் வெளி காட்சியளிக்கிறது.
*"மேகத்திலையும் ஒரு வெளிப் பையுங் காணேல்லை. உந்த வெள்ளத்தை எங்கை வெட்டி. எங்கைவிடப்போறம்??
"அதுதானே. குளக்கட் டையும் மூடி நிக்குது?
நீர்ப்பரப்பை பார்த்துவிட்டு சிலர் நம்பிக்கை இழக்கின்றனர். *உதுக்கை இறங்கி நாங்கள் ஒண்டும் செய்யேலாது. கிழக்கு ருேட்டுப் பக்கம் பாலங்கள் வெள்ள வாய்க்கால்களைப் பாப் t_Jtb 6ưfrtải (33rro.”
பரமுவின் வார்த்தைகள் நம்பிக்கையூட்ட ஒழுங்கையில் திரும்பி நடக்கின்றனர்.
வயல்வெளியின் மறுகரை யில் வெள்ளத்தை மறித்து நிற் கும் பெரும் அணையாக குறுக்கே நீண்டிருக்கும் கல்லு ருேட்டு அமைந்திருக்கிறது. அந்த நீண்ட தெருவின்நடுவே குளத்திலிருந்து வரும் வெள்ள வாய்க்காலுக்கு மேலாகப் போடப்பட்டிருக்கும் பழைய ஒற்றைக்கண் மதகு, இடிந்து தூர்ந்து அடைபட்டு போக்கு வரத்துக்கும் தடை யாக இருக்கிறது. அதற்குள் ளாலும் தண்ணிர் துளைத்துக் கொண்டு சிறிய அளவில் பாய் கிறது.
“மதகுக்கண் அகலங்காணுது ருேட்டைப் பிரிப்பம்??
பிக்கானத் தெருவில் ஓங்கிப் போடுகிருன் செல்வம்.
63

Page 34
ஏனப்பா. மதகு இடிஞ்சு
போய்க்கிடக்குது. ஒரேயடியாப் பிரிச்சுப் போட்டு. அகண்ட மதகாக் கட்டுவிவிச்சா என்ன?
பரமு சொல்கிருன்.
அதுதானே. ஒவொரு முறையும் வந்து ருேட்டுப் Lolili கிறதே. உதுகள் ஒரில்லாததாலை தானே. இஞ்சை அரைவாசி அழிவு'
"ஒ. யாழ்ப்பாணத்திலை எந்த ருேட்டுச் சீரா இருக்கு. பிரிப்பம் மதவை**
*அண்ணை ஒருத்தனும் ஒண் டுக் கேளாங்களே"
"நாங்கள் போய்ச் சொன் னத்தான். ஏன் பிரிச்சனீங்கள் எண்டு எங்களைக் கேப்பாங்கள்’
செல்வத்தின் வார்த்தைக்கு எல்லோரும் சிரிக்கின்றனர்.
கேக்கிறவைக்குப் பிறகு பதில்சொல்லலாம். இப்ப பிரி
யுங்கோ மதவை"
பிக்கான்கள் மண்வெட்டிகள் ஓங்கி விழுகின்றன. தேங்கி நின்ற நீரின் வேகமும் அவர் களுக்கு உதவி செய்ய மதகு இருந்த இடம் தெரியாமல் மறை கிறது. அந்த அகன்ற பாதைக் கூடாக பெருக்கெடுத்து ஒடும் ஆறுபோல தண்ணீர் இரைச்ச லுடன் பாய்வதைப் பார்த்ததும் ஒரு நம்பிக்கையும் உற்சாகமும் அவர்களிடம் பிறக்கிறது. வெள்
ளத்துக்குள் இறங்கி மேலும் வாங்க்கால்களைச் சீர்ப்படுத்து கின்றனர். を一
மழை தொடர்ந்து தூறிக்
கொண்டிருந்தபோதும் அன்று
64
விட்டது.
மாலையாவதற் கிடையில் வெள் ளம் பாதிக்குமேல் வடிந்துவிட் வரம்புகள் பச்சைப் பசேலென்று கோடிட்டுத் தலை நிமிர்த்துகின்றன.
விவசாயிகள் தலையில் தலைப் பாவும் தோளில் மண்வெட்டியு ாக வயலில் இறங்குகின்றனர்.
வரம்புகளை வெட்டி நீரை வடிய விடுகின்றனர்.
6வெங்காயம் தடலெண்டா லும். அழுகாமை இழுத்து வைப்பம்’ ’
தம்பிமுத்தர் மயக்கம் தெ ளிந்து கடகத்துடன் வருகிருர்,
x.
அந்த நீருக்குள்ளும் அறு 66 ஆரம்பமாகிறது. ஏணி போல தடிகளைக் கட்டி, நெற்
கதிர்க் கட்டுகளை அதில் வைத்து இருவர் தோள்களில்மேல் சுமந்து வருகின்றனர்.
வர்க்க எதிரியளுக்கெதிரா மட்டுமில்லை. இயற்கையின்ரை
அழிவுக்கெதிராவும் போராட வேண்டியிருக்கு .
நீருக்குள் மூழ்கியிருந்த நெற்
கதிர்களை சிரமத்துடன் அறுத் துக்கொண்டு நிமிர்ந்த பரமு வைப் பார்த்து துரைரத்தினம் அரிவாள் முனையில் படிந்த சேற் றைத் துடைத்தபடி கூறுகிருன்மழை தொடர்ந்து தூறிக் கொண்டே இருக்கிறது.
கமலா தேனீர்ச் சருவத்
துடன் வருகிருள்.
அந்த இழப்புகளின் மத்தி யிலும் அவர்களிடையே ஒரு புத்துணர்வு பிறக்கிறது.
O


Page 35
O இலங்கையில் செய்திப் பத்திரிை
Registered as a newspaper in
KIAJAN JEWE
OÜSE
கஜன் ஜுவ
நகைத் தொழிற்சாலேயும்,
இன்றைய நவநாகரி தங்க நகைகளை பெ இன்றே விஜயம்
இப் பத்திரிகை தேசிய கலே இல பாணம், 151, மின்சார நியே 6 அவர்களால் யாழ்ப்பாணம் கே. கே. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்ப
 

கயாக பதிவுசெய்யப்பட்டது: Sri Lanka,
ଭି) ରୁ ୩ରାର୍ଥୀ) । நகை வியாபாரமும்
க டிசைன்களில் 1ற்றுக்கொள்ள செய்யுங்கள்!
* கே. கே. எஸ். வீதி,
ஆஸ்பத்திரியடி
இணுவில்,
1க்கியப் பேரவைக்காக யாழ்ப் வீதியிலுள்ள சு. தணிகாசலம் எஸ். வீதியிலுள்ள பூரீ காந்தா ட்-தி-