கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1984.01

Page 1
இந்த இதழில்.
மா. சின்னத்தம்பி
மாவலி
கேசவன்
குமுதன்
முருகையன் அழ. பகிரதன் செண்பகன்
சி. சிவசேகரம் ம. சண்முகலிங்கம் யோ. பெனடிக்பாலன் சகாதேவன்
 

இலக்கிய மாத இதழ்
(9)
ஜனவரி, 1984

Page 2

இதழ்: 1
O கடந்த ஆண்டும்
புதிய ஆண்டும்
சமீபகால வரலாற்றில் கடந்த ஆண்டு இலங்கை மக்களுக்கு ஒரு கறை படிந்த ஆண்டு. புதிய ஆண்டு சமாதானம், தார்மீகம் என்ற புனித பதங்களுடன் ஆரம்பித்தாலும் கூடவே அது மக்களைப் பாதிக்கும் பாரிய பிரச்சினைகளையும் திணிப்புகளையும் சுமந்து வந் திருக்கிறது.
இங்கு "ஆண்டு" என்று நாம் கூறும்போது அர சையே குறிப்பிடுகிருேம். அரசு இனப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு இந்திய அரசின் நல்லாதர வோடு எடுத்துவரும் நடவடிக்கைகளும், வட்டமேசை மாநாடும் மக்களின் கவனத்தை தம்பால் ஈர்த்துள்ள நல்வாய்ப்பை பயன்படுத்தி அதே போர்வைக்குள் நின்று சாதாரண ஏழை மக்கள், விவசாயிகள், தொழி லாளர்கள், புத்திஜீவிகள் போன்ற மக்கள் பகுதி யினர் மீது பாரிய வாழ்க்கைச் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இதன் தாக்கம் உழைக்கும் சகல பிரிவு மக் களையும் பற்றிப் படர்ந்து தாக்கி வருகின்றது.
LDİTony, Lurtaör போன்ற உணவுச் சமான்களின் விலை அதிகரிப்பை ஏற்படுத்தியதோடு ஆரம்பித்து சகல சாமான்களினதும் விலைகளை பன்மடங்கு அதி
3

Page 3
கரிக்கச் செய்துள்ளது. ஒரு கிலோ அரிசி ஒன்பது ரூபா, ஒரு சிறிய தேங்காய் ஏழு ரூபாவிற்கு மேல் போகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கும், ஏனைய தொழிலாளர், ஊழியர்களுக்கும் புனருத்தாரண வரி, கொழும்பு நகரத்தில் வாழும் மக்களுக்குத் தண்ணிர் வரி, போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட லாம். மேன்மேலும் வரிகளும், கட்டணங்களும் அதி கரித்த வண்ணமே இருக்கும் அதேவேளை சம்பள உயர்வு பற்றியோ, விலைவாசி உயர்வுகளை கட்டுப் படுத்துவது பற்றியோ எவ்வித பேச்சும் இல்லை.
பஞ்சம், பட்டினி, வேலை இல்லாத் திண்டாட் டம் இவற்ருல் பாதிக்கப்படும் சிங்கள, தமிழ், முஸ் லிம் உழைக்கும் மக்கள் மத்தியதர வர்க்கப்பகுதியினர், இளைஞர், மாணவரின் ஒன்றுபட்ட ஒரு போராட் டத்தை எதிர்நோக்கும் அரசு, முன்கூட்டியே முப் படைகளையும் உசார் நிலையில் வைத்திருப்பதுடன் போதிய நவீன ஆயுதங்களையும் வாங்கியுள்ளது.
தமிழரால் ஆபத்து என்ற அரசு சார்பு இனவாதி கள் கொடுக்கும் சீனி தடவிய தோட்டாக்களை விழுங்க சிங்கள மக்கள் ஏமாளிகளல்லர்.
அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு இலங்கை கட்டுப் பட்டுள்ளது. இலங்கையை ஒரு தென் கொரியாவோ, பிலிப்பீன்சோ போன்ற சர்வாதிகார நாடாக அரசு மாற்ற முயற்சிக்கிறது என்பதை சிங்கள மக்கள் அறிய அதிக காலம் தேவைப்படாது.
S፻፷ባሕጂ

பாரதி ஆய்வரங்குக் கட்டுரை - 5
தேசிய கலை இலக்கியப்போவையிஞல் நடாத்தப்பெற்ற பாரதி. நூற்றண்டு ஆய்வுரைகளே தொடர்ச்சியாக கட்டுரை வடிவில்
தருகிறேம்
(b ற - ஆசிரியர் குழு
வர்க்கங்களும் பாரதியும்
- மா. சின்னத்தம்பி
கவிஞர்கள் உள்ளதைப் பாடுவதும், இல்லதைப் புகழ்வதும் மரபு. ஆனல் கவிஞன் சமூகத்தில் ஒரு பார்வையாளனுக மட்டுமன்றி ஒரு வழிகாட்டியாகவும் இருப்பதே கவிதைக்கு ஒரு வரலாற்று முதன்மையை அளிப்பதாகும். இந்த இரண்டாவது தகுதிநிலையில் இருப்பவன்தான் மகாகவி பாரதி. அவன் சமூகத்தை தன் கவி உள்ளம் என்ற அகன்ற கண்களால் பார்த்தவன், சமூகத் துடிப்பை உணர்ந்தவன். சமூக அலங் கோலங்களைத் தேடித்தேடிப் பார்த்துக் கோபங்கொண்டவன், தீர்வு நாடிக் குமுறியவன். இதனுல் சமூகத்தில் எப்போதுமே காணப்படும் ஆண்டான் - அடிமைத்தன நிலைப்பாடுகளை சரியாக அடையாளம் கண்டு கொண்டதில் ஆச்சரியமில்லை.
சமூகத்தை அணுகும் முறையில் அவன் பொருளாதார ரீதியான சமூக உறவுமுறைகளை விளங்கிக்கொள்கிருன். அதை விளக்குகிருன். சமூக உற்பத்தித் தொழில்சார் சமூகத் தொடர்புகளையும், அது தொடர்பான வர்க்க நிலைப்பாடுகளை யும் உணர்ந்து கவிதைகளில் விளக்குகிருன்,
பாரதி அடிமைப்பட்ட வர்க்கத்தினருக்காக குரல் கொடுக் கிருன். அவர்களது அடிமைத்தனத்திற்கான காரணங்களை வெளியேயிருந்தும், உள்நோக்கியும் நோக்குகிருன், சமூகத் துள்ளே கவிக்கண்களை அகல விரித்து மனதை கூர்மையாக்கி அவதானிக்கின்ருன். காரணங்களைத் துருவித் துருவித் தேடு கின்ருன் , அவனது கோபம், அவனது உள்ளம் உணர்ந்து விட்ட - சமூகத்தில் கண்டு கொண்ட - தெளிவான கார ணங்களிலிருந்தே தோன்றுகிறது. அடிமைத்தனத்தை நிலைப் படுத்தப் பாடுபடுவோர் மீது ஆத்திரம் கொண்டு கவிபாடுவ தோடு நின்றுவிடவில்லை. அடிமைப்பட்ட சமூகத்திடம் காணப் படும் குறைபாடுகளையும் சாடுகின்ருன், நசுக்கப்படும் வர்க்கத்
s

Page 4
தினுள்ளும் எத்தனை பிரிவினைகள். இந்தப் பிரிவினைகள்தான் அடிமைப்படுத்துவோர்க்கு இரட்டிப்பு பலத்தைக் கொடுக் கிறது, அடிமைப்பட்ட வர்க்கத்தினரிடம் பிரிவினைகள் வளர் வதும் அவர்கள் அடிமை நிலை தொடரக் காரணம். இதை பாரதி காட்டத்தவறவில்லை.
"கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென்றல் அது பெரிதாமோ அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்
ஆறுதலை என்று மகன் சொல்லிவிட்டால் நெஞ்சு பிரிந்திருப்பார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்" இந்த பாரதியின் பார்வை அடக்கி ஒடுக்கப்படும் வர்க்கத்தின் விடுதலைக்காக முதலாளித்துவ நாடுகளில் இயங்கும் கட்சிகளுக் கும் பொருந்தும். முதலாளித்துவ கட்சியாளரிடையிலான ஒரு மைப்பாடுகளைவிட இடதுசாரிகளிடையிலான பிரிந்திருக்கும் தன்மை அதிகமாகிறது. தமக்கிடையே தத்துவார்த்த போட் டிகளில் அதிகம் ஈடுபடுவதால் பொது எதிரிகள் பாதுகாக்கப் பட்டுவிடுகின்றனர். இதனல் இக் கட்சிகளின் வளர்ச்சி சிதைவு பட்டதாகிறது. இது பாரதியின் பார்வையிலிருந்து பெறக் கூடிய ஒரு முடிபாகும்.
நசுக்கப்படும் வர்க்கத்திடமுள்ள அறியாமை அவர்களின் இந்நிலையிலிருந்து மீள்வதற்குத் தடையாகும். இதனல் அடிமைப் படுத்துவோர் சுரண்டுவோர் தமக்குக் கீழே உள்ள பிரிவின ரிடம் அறியாமையை வளர்க்கப் பாடுபடுகின்றனர். அதற்காக பணம் செலவிடுகின்றனர். இதனல் அறியாமை போக்கும் கல்வி வழியை மூடுகின்ருர், கல்வியால் உருவாக்கக் கூடிய தன்னம்பிக்கையைத் தடுக்கின்ருர். இதனல் அவர்தம் விடுதலை உணர்வை மறைக்கின்றர். இதனல் அறியாமை அவர்கள் துன் பத்திற்கு ஒரு காரணம் என்பதை பாரதி காட்டுகிறன்.
"பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்தே துஞ்சி மடிகின்ருரே - இவர்
துயர் தீர்க்க ஓர் வழியில்லையே' இவ்வாறு அவர்கள் விடிவுக்கான வழிதெரியாது வாடுவதை பாரதி சுட்டுகிருன். அறியாமை இவர்களது வீரத்தைக் களை கிறது. இதனல் அச்சம் என்பதை உச்சத்தில் கொண்டார். இழப்பதற்கு எதுவுமில்லாத நிலையிலும் கூட இவர்களிடம் விடு தலைக்கான துணிவு தோன்றவில்லை. அதைக் காண்பவர்களுக்கு அந்த நிலை கோபத்தையும் எரிச்சலையும் ஊட்டுவதாகிறது,
6.

அந்த வர்க்கத்தினரின் விடுதலையை நாட்டமாகக் கொண்டு ஏங்குவதால்தான் பாரதி,
* 'நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே" என்ருர்,
பாரதி பிறப்பில் பார்ப்பண்ணுக இருந்தாலும் அவர் சமூ கத்தை பார்க்க விளைந்த முறை, அவர்தம் சொந்த வறுமை, தீவிரவாதியான திலகரின் தொடர்பு, தமிழ்நாட்டில் வ.உ.சி. யின் பழக்கம் என்பன பாரதியினிடத்து அரசியற் பார்வையை வலுவாக ஏற்படுத்தியிருந்தன. 1906-ல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸில் "ஸ்வராஜ்யம்" என்ற இலட்சியம் வெளிப்படை யாகிறது. இதில் பிரதிநிதியாக கலந்துகொண்ட பின்தான் அவருக்கு அரசியல் உணர்ச்சி ஏற்படுகிறது. அரசியல் உணர்ச்சி சமூக வாழ்வை ஒழுங்குபடுத்துவதிலான தனி மனிதர்களின் பங்கை ஒருங்கிணைக்க உதவுகிறது. தனி மனிதர்களில் ஒருவ ராக பாரதி சேர்ந்து கொண்டதோடு நிற்கவில்லை. சமூக, தேச விடுதலைக்கான மக்களை திரட்டுவதற்கான சங்கநாதமாக அவர் தன் பேச்சுக்களையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் பாவிக்கிருர் பாரதி. சமூக அடிமைப்பட்ட நிலையின் ஒவ்வொரு நிலைப்பாடுகளையும் துன்பியல் நோக்கில் காட்டுவதாலே பாரதி பாரத மக்களை ஏகாதிபத்திய ஆங்கிலேய அரசுக்கெதிராக போர்க்கொடி உயர்த்தும்படி செய்கிருன், போகின்ற பார தத்தை சபிப்பதாக அவன், அடிமைத்தனத்தில் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி அதைத் துரத்த ஒன்றிணையும்படி செய் யப் பாடுகிருன்.
வலிமையற்ற தோளினய் - போ போ போ மார்பிலே ஒடுங்கினய் போ போ போ
இன்பிடித்த நெஞ்சிகும்போ பேர்கள்
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ' இங்கு பாரதியின் வெறுப்பு பலதடவை போ, போ என கூறுவதால் தெரிகிறது.
“மனிதன் சுதந்திரமாகப் பிறக்கின்ருன். இன்று எங்கும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளான் - இச் சங்கிலி தகர்த் தெறியப்படவேண்டும்' - இவ்வாறு ரூஸோ தமது சமூக ஒப் பந்தத்தில் கூறுகிருர். பாரதியும் இதையேதான் கூறுகிருர், எங்கெங்கு மக்கள் தனித்தும் கூட்டாகவும் கீழ்மட்டத்திலிருந்து
7

Page 5
மேல்மட்டம் வரை நசுக்கப்படுகின்றனர். குடும்பத்திலிருந்து, சமூகத்திலிருந்து, நாட்டிலிருந்து, சர்வதேசியத்திலிருந்தெல் லாம் நசுக்கப்படும் மக்கள் பிரிவைத் தேடுவதோடும்; அங்கு நிலவும் அலங்கோலங்களையும் விபரிப்பதோடு நின்றுவிடவில்லை. அவற்றைத் தீர்க்கவேண்டுமென தனிமனிதனுக்கும் மக்கள் கூட்டத்துக்கும் அறிவிப்பது, பத்திரிகை ஆசிரியன் என்ற முறையிலும் ஒரு சமூக உணர்வுள்ள கவிஞன் என்ற முறையி லும், விடுதலை விரும்பியான அரசியல்வாதி யென்ற முறையிலும் பாரதியிடம் தெளிவாகத் தெரிகிறது.
குடும்ப அடிமைத் தனங்களை பேணும் சமூகம், அடிமைத் தனங்களை அடியிலிருந்தே பாதுகாக்கும் இயல்புடையதாகும். குடும்ப சொத்துடமை முறைதான் தேச சொத்துடமைக்கு வழிவகுக்கிறது. இந்த நோக்கில் குடும்பத்தின் ஒரு அங்கத்தவ ராகிய பெண்கள் நசுக்கப்படுதற்கான சாத்திரங்களையும், விதி முறைகளையும் சமூகம் பேணுவது கைவிடப்படவேண்டும் என் பது பாரதியின் முதல் வாதம். பாரதியின் குடும்ப வறுமை யில் அவர் மனைவி செல்லம்மா பங்கெடுத்தது மட்டுமன்றி, வாழ்க்கை ஒட்டத்திற்கே அச்சாணியாக இருந்திருக்கிருள். இந்த அநுபவஞானம் பாரதிக்கு பெண்கள் சார்ந்த சிந்தனையை வீட்டிலிருந்து கிளர்ந்தெழச் செய்து நாடுவரை வியாபிக்கச் செய்தது. சக்தியைக் கூறி சமுதாயத் தீமைகள் ஒழிப்பவளாக பாரதி கொள்வது வெறுமனே மத பக்தியல்ல. அவர் பெண் ஆற்றலை கூறவிளைகிற முறையுமாகும். பழமையான பாஞ்சாலி சபதத்தை மீண்டும் காவியமாக பாரதி பாடமுனைந்தது, இந்திய மாதாவின் விடுதலையை தூண்டுவதான ஒப்புமைக்காக மட்டு மல்ல, பெண்கள் குடும்ப மட்டத்திலும் உறவுமுறையின் பேரா லும், சமுக மட்டத்தில் சொத்துரிமையின் பேராலும் நசுக்கப் படுவதைச் சுட்டிக்காட்டுதற்குமாகும்.
"எங்கள் முத்துமாரி' என்ற பாடல் தொகுதியில் பாரதி கூறுகிருன்:
மணி வெளுக்க சாணையுண்டு. மனம் வெளுக்க வழியில்லை . . . பிணிகளுக்கு மாற்றுண்டு . . . . . . பேதமைக்கு மாற்றில்லை . இங்கு பெண் விடுதலை சமூகத்தின் முதற் கட்டம் என்பதை வற்புறுத்துகின்றர். இன்றும் சமூகத்தின் விடுதலை, நாட்டின் விடுதலை என்பன பெற்ற பின்னும் நாடுகள் நலிவடையக் காரணம் பெண்கள் விடுதலை இல்லா மைதான். திருமணம் என்ற சமூகப் பிணைப்புக்களில் இன்றும் கூட ஆண் தலைமைத்
8

துவம் பெறும் ஏற்பாடுகள் வலுவடைந்திருக்கின்றன. இவை சமூகத்தினர் அனைவருக்குமான பாதிப்பாகிறது. இதனல் தேச விடுதலை எத்துணை அவசியமோ, அந்தளவுக்கு பெண் விடுத யும் தேவை என்பதை பாரதி வற்புறுத்துகிருன்:
மாதர்தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொழுத்துவோம் வைய வாழ்வு தன்னில் எந்த
வகையினும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும் சரி நிகர் சமானமாக
வாழ்வம் இந்த நாட்டிலே. பாரதி மடமையை மன்னிப்போம் என்று கூறவில்லை. சுரண்டி இலாபம் பெற்றவர்களை அடிமைப் படுத்தி ஏகபோகம் அணு பவித்தவர்களை பாதிக்கப்பட்டவர்கள் மன்னிப்பதெங்ங்ணம்? அவர் மீண்டும் பழைமைக்கே திரும்புவர். இதனுல் அழிக்கப்பட வேண்டியவை மடமைகள் என சமூகத்துக்கு விடுதலைப் பாடம் போதிக்கிருன்.
நசுக்கப்படுவோர் சமூக மட்டத்திலும் சாதி என்ற பெய ரால் துன்பப்படுகின்றனர். சமூகத்தின் பல பிரிவினரும் மொத்தமாக அதிக நன்மை பெறலாம் என்ற சமூக ஒப்பந்த உணர்வில்தான் பல தொழிலும் பல தொகுதி மக்களுடைய தாகியது. தொழில் வாய்ப்பும் தொடர்ந்து பெருகி சமூக அமைதி பேண அவை உதவின. ஆனல் இதுவே பின் "சாதி” என்ற சமூக மனித மதிப்பின் அளவுகோலாக மாறிவிட, மேலே தங்களைக் கொண்டோர், ழே இருப்போரை அந்த மட்டத் திலேயே நிறுத்தி வைப்பதால் தமக்குரிய வாழ்வின் வசதிகளில் தனியுரிமை கொள்ளலாம் எனக் கருதினர். இதற்கு சாதித் திரை உதவியது. "தாழ்ந்த சாதி' என்ற அடைமொழியில் அடைத்து வைக்கப்பட்ட, ஒதுக்கிவைக்கப்பட்ட தொழில்களை பிறர் நன்மை கருதிச் செய்தவர் மனதில் தாழ்வுணர்ச்சியை வளர்த்துவிட்டனர். மறுபுறம் "தாம் உயர்ந்த சாதி’ என்ற உயர் மனுேபாவத்தையும் வளர்த்துக் கொண்டதால் சமூக இடைவெளி - சுரண்டுதற்காக வசதிகளின் அளவு - விரிவ டையலாயிற்று. இந்தப் பொருளாதார நலன் பாதுகாப்புக் காக - கீழ்மட்டத்தவர் வசதிகளைச் சுரண்டிக்கொள்ள வசதி யாக்கிக் கொள்ள இந்த சாதியமைப்பு வலுப்படுத்தப் பட்டி ருந்தது. தமது துன்பங்கள் ‘தெய்வ நியதி' எனக் கற்பித்து, அப் பாடத்தை விமர்சனமற்ற வேதமாக்கி விடுவது அவசிய மாகிவிட்டது. இந்த தன்மையை உணர்கிருன் பாரதி. சமூகத்
9

Page 6
தின் உயர் சாதியாகப் பிறந்தாலும் வாழ்வின் பொருளாதார துன்பங்களுக்கும் உட்பட்டவன் பாரதி. இங்கு துன்பங்களை எல்லோருக்கும் பொதுவாக்கி பார்க்கும் பெருநோக்கு அநு பவமாகி விடவே சாதி என்ற மற்ருெரு அடிமைத்தனத்தை பாரதி சாடுகிருன். பாரதி ஏழ்மைத் துன்பத்தை ஒடுக் கப்பட்ட சாதி என்ற அடிமைத் துன்பத்துடன் ஒப்புமைப் படுத்தி பார்க்கிருன்,
“ஏழையென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்' என பாடுகிருன். இதற்கு முன்னே, "பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை" என்று பாடும்போது ஒசையும், உணர்ச்சியும் ஒத்துப் போவ தாக உணர்கிருேம். பின்பு அவன் ஒரு தலைவனுகிறன் இந்த சாதி அடிமை உடைய நல்லதொரு வழி சொல்கிருன். இது கற்பனை ஓட்டமல்ல. சமூக அரசுகள் இன்று பேதம் களைய கையாளும் நடவடிக்கைகளை அவன் ஆலோசஃனயாகப் போதிக் கிருன்.
"திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே’’ இந்திய அரசாங்கம் இன்று ஒதுக்கப்பட்ட சாதி மக்களுக்காக கல்வியில் விஷேட சலுகையளிக்கிறது. சாதி அடிப்படையில் நசுக்கப்படும் வர்க்கத்தினர் எந்த வகையிலும் தம் குழந்தைகளை உயர் கல்விக்கு எடுத்துச் செல்ல முயல்வது மிக அவசியம். கல்வி என்ற விடுதலை வித்து நன்கு ஆழமாக விதைக்கப்பட்டால் தான் எதிர்காலத்தில் சாதி அமைப்பின் அலங்கோலங்களி லிருந்து விடுதலை காண முடியும். இதற்காக எப்போதும் நசுக் கப்படும் பிரிவினர் கல்வி வசதிகளை இயன்றளவு தமதாக்கு வதே மிக அவசியம். இது பாரதியின் சிந்தனைத் தெளிவு.
**நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
நயவஞ்சகருக்கும் நாசம் வந்ததே’’ உயர் சாதியினர் அல்ல, நல்லவர்களே பெரியவர் என ஒளவை யார் சொல்லிச் சென்ற "பெரியோரைக் கனம்பண்ணு' என்ற ஆத்திசூடிக்கு விளக்கவுரை தருகிருர்,
பாரதி பார்க்கின்ற அடுத்த சமூக நோக்கு முதலாளி - தொழிலாளி அமைப்பு பற்றியதாகும். நவீன பணப் பொரு ளாதார தோற்றுவாயுடன் வளரத் தொடங்கிய கைத்தொழில்
0

சமூகத்தின் முதல் விளைவுகள் இந்த தொழிலாளி முதலாளி வர்க்க பேதங்களாகும். மூலதனத்தை - பணத்தின் திரட் சியை - கொண்ட ஒரு சிலர் தமது சுரண்டலுக்கு வசதியான உற்பத்தி முறைகளை - தொழில் நுட்பக் கருவிகளை - அறி முகப்படுத்திக் கொண்டனர். தொழிலாளியிடம் பணம் திரண்டு மூலதனமாக மாறுதற்கு போதியதான வருமானத்தைப் பெருத வாறு அவர்களைச் சுரண்டினர். இந்தச் சுரண்டலின் துன்பங் களுக்கு "தெய்வ விதிகளை" காரணமாக காட்டினர். இந்த தொழிலாளர் அடிமைத்தனத்தை பாரதி நிறையவே பாடி யுள்ளார். சமூகத்தின் தாங்கு தூண்கள் தொழிலாளர்கள் தான். அவர்களுக்கு மகிழ்ச்சியில்லாத சமூகம் சமூகமல்ல. இதை பாரதி உணர்த்துகிருன். ஆங்கிலேயர் தொழிலாள வர்க்கத்தை சுரண்டி இலாபம் உழைக்க இந்தியா சிறந்த இட மாக உணர்ந்தனர். அகன்ற பாதங்களும், கறுத்த தோலும் உடையவர்கள் நல்ல உழைப்பாளிகளாக இருப்பர்’ என மானிடவியலாளர் கூறுகின்றனர். இந்த விளக்கம் இந்தியர் களுக்கு, சிறப்பாக பாரதி வாழ்ந்த தமிழகத்திற்கு மிகப் பொருத்தமானது. இத்தகைய மக்களை சொந்த நாட்டில் வைத்து சுரண்டுதற்கான வசதிகள் குறைந்து போகும் கால கட்டத்தில் - தொழிலாளரை இந்தியாவிலேயே வைத்துச் சுரண்டுதற்கான செலவு கூடிய நிலையில் வேறு பல நாடுகளுக்கு தொழிலாளர் நகர்த்தப்பட்டுச் சுரண்டப்பட்டனர். தமது தாய் நாடல்லாத பிறதேசங்களுக்கு தொழிலாளரை கொண்டு சென்று சுரண்டினர். பிறநாட்டின் நிலச்செழிப்பு, கனிவளங் களைச் சுரண்ட இந்தியாவின் தொழிலாளர்களைச் சுரண்டினர். இந்த இரட்டிப்பு இலாபம் இங்கிலாந்தில் குவிந்தது. இங்கு தொழிலாளர் சுரண்டலை பாரதி மிக தெளிவாக சாடுகிருன். தொழிலாளர் துன்பத்தை விளக்குவதால் அவர்களைச் சுரண்டு வோர் மீது வெறுப்பையும், அவர்களை எதிர்ப்பதற்கான வலு வையும் தருகிருன் பாரதி. 'கரும்புத் தோட்டத்திலே என்ற பாடலை முடிக்கும்போது
"மிஞ்சவிடலாமோ? ஹே!
வீரகாளி, சாமுண்டி காளி!' என கொதித்தெழுகின்றன். "சுதந்திரப்பள்ளு" வில்
*"வீணில் உண்டு களித்திருப்போரை
நிந்தனை செய்வோம்
வெறும் வீணருக்கு உழைத்துடலம்
ஒயமாட்டோம்"
என்கிருன், "புதிய கோணங்கி'யிலே,

Page 7
"தொழில் பெருகுது, தொழிலாளி வாழ்வான்' என்று பாடுகிருர், "பாரத சமுதாயம்' என்ற பாடலில்,
"மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ'
இனியொருவிதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம் தனியொருவனுக் குணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்'
என்று பட்டினியில் நலியும் தொழிலாளிக்கு உணர்வை ஊட்டு கிருன்.
'கொடுமையை எதிர்த்து நில்"
** அச்சம் தவிர்*
** சீறுவோர்க்குச் சீறு"
**ரெளத்திரம் பழகு’
“போர்த் தொழில் பழகு'
**வீரியம் பெருக்கு”*
**வெடிப்புறப் பேசு'
**நையப் புடை”*
**வையத் தலைமைகொள்' இவ்வாறு புதிய ஆத்திசூடியில், விடுதலைக்குத் தயார் செய்ய பயிற்சியளிக்கிருன் தளபதி பாரதி. "கிருதயுகம் எழுக மாதோ' என ஆர்ப்பரிக்கும் பாரதி "உழுதுவிதைத்தறுப்பார்க்குண வில்லை என தொழிலாளர் மட்டுமன்றி விவசாயிகளும் சுரண் டப்படுவதை வற்புறுத்திப் பாடுகிறன். 'எமிலி பேண்ஸ்" - தனது "ஜேர்மினல்’ நாவலில் சுரங்கத் தொழிலாளர்கள் வாடிய வயிறுகளை அலங்கரிக்க முயல்வதாக எழுதுகிருர், பாரதி தன் நாட்டில் தொடர்ந்து வந்த உணவுப் பஞ்சங்களை உணர்ந்தது மட்டுமன்றி, உணவு உற்பத்தி செய்பவன் பட்டி னியால் இறப்பதை உணர்ந்தவன். இதை மாற்ற வழி சொல் கிருன். "இனி ஒரு விதி செய்வோம்’ என்கிருன், கொடுமை கள் அழிய கிருத யுகம் எழவேண்டும், அடிமைத்தனம் புதைய வேண்டும். இதுதான் இனி விதி.
பாரதி அடிமைப்பட்ட மக்களை பல்வேறு கோணங்களை நோக்கி தீர்வு கூற, உணர்ச்சி பூர்வமாக பேசுகிருன். ஆனல் எல்லா இடத்தும் தெய்வ பக்தி மிஞ்சி நிற்கிறது. "மதம் ஒரு அபினி' என்ருல் அதை வைத்து தொழிலாளரை சுரண்டமுடி கிறது என்பதனல் பாரதி ஏன் கடவுள் பேரால் சமூக விடு தலையைப் பாடுகிருன். பாரதி மக்கள் மொழியில் பாடியவன்.
12

பாமரர் கையாளும் சந்தங்களைக் கையாண்டவன். இதேபோல் மக்களுக்கு - சிறப்பாக இந்திய மக்களுக்கு பழக்கப்பட்ட - பிடித்தமான தெய்வ நோக்கில் சொல்ல வேண்டியதை சொல்லி முடிக்கிருன். அங்கு ஒரு சிருஷ்டி கருத்தாவுக்கான உத்தியை அவன் கையாளுகின்றன். தமிழ் ஒரு பக்தி மொழி என்பர். அந்தப் பக்தியை காட்டியே பக்தியின் போலித்தனங்களை சாடும் திறமை, துணிவு அக்காலத்திலேயே பாரதிக்கு இருந்தது. அவன் மோட்சத்துக்காகக் கடவுளைப் பாடவில்லை. இவ்வுலக லெளகீக இன்பங்களுக்காக கடவுளை வேண்டுகிருன். உலக வாழ்வு என்பது இவ்வுலகில்தான் உண்டு என்ற நம்பிக்கையுடை யவன்.
"காணி நிலம் வேண்டும் - பராசக்தி' என்று தொடங்கி மாளிகை, தென்னைமரம், நிலவொளி, கத்தும் குயிலோசை, இளந் தென்றல், பத்தினிப்பெண் களித்திடக் கவிதை என இவ்வுலக இன்பங்களைத்தான் பராசக்தியிடம் கேட்கிருன் பாரதி.
உலகம் எந்த வழிகளிலிருந்தெல்லாம் விடுதலையடைய வேண்டுமென விரும்புகிருரோ, அதைத்தான் கடவுளிடம் கேட் பதாகப் பாடுகிருர். “பராசக்தி” பாடலில்,
நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
நையப்பாடென் ருெருதெய்வங் கூறுமே கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வையம் முழுதும் பயனுற நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
நானிலத்தவர் மேனிலையெய்தவும். என மக்கள் விடுதலை நாடிக் கோருவதும் கவனிக்கப்படவேண் டியதே.
ஆனலும் பாரதியின் பிறந்த குடும்பம், வளர்ந்த சூழல் என்பவற்ருலோ, பிற காரணங்களாலோ பாரதி மதத்தின் மீது கூடுதலான நம்பிக்கை கொண்டுள்ளான். பாரதியின் தத்துவ தரிசனமாக பல கடவுளரைப் பாடுகிருன். கிரேக்க இயற்கை வழிபாட்டு மதமான ஹெலனிக் வழிபாட்டை மேற் கொண்டவன் போல காற்றையும், நிலவையும், சூரியனையும், தீயையும் வணங்குவதாகப் பாடுகிறன். மஹா சக்தியைப் பாடுகிருன் தத்துவ போதனைகளைச் செய்ய - ஆஸ்திக முறை யைக் கையாண்டான் என்ருலும், பாரதியையும் அறியாமல் பல இடங்களில் ‘தெய்வ விதி ஒன்று உண்டு என கூறிவிடு கிருன், இது மீண்டும் அடிமை நிலையிலுள்ள நசுக்கப்படும் வர்க்கத்தினரை தொடர்ந்து சுரண்டுவோர் சுரண்டிக்கொண்டே அது "தெய்வ விதி" என்று விளக்கிவிட இடமளித்து விடும்
9

Page 8
இது பாரதி வர்க்க விடுதலைக்கு பாதகமாக சொற்களைக்
கையாள்வதைக் காட்டுவதாகும், வருகின்ற பாரதத்தை வாழ்த்தும் இடத்தில்,
**தெய்வ சாபம் நீங்கவே - எங்கள் சீர்த்
w தேசமீது தோன்றுவாய் வா வா வா. எனப் பாடுகிருன். இந்தியாவின் வறுமை சுரண்டலை தொழி லாகக் கொண்ட ஏகாதிபத்தியத்தினல் என்ற உண்மையை வற்புறுத்துவதில் நம்பிக்கைக் குறைவை இது ஏற்படுத்துகிறது. எதற்கும் "தெய்வ சாபம்’ ஒன்று உண்டு என பாரதியாரே நம்புவதை இது காட்டுகிறது.
*தேசமுத்துமாரி" என்ற பாடல் தொடரில்,
*"நம்பினேர் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம் ? என்கிருர், நவீன தொழிற்துறைகளில் தொழில் முதலாளிகள் தொழிலாளர்களை ஏமாற்றக் கூறுவதும் இதுதான். தொழில் நிர்வாகத்தில் நம்பிக்கை வையுங்கள். எதிர்க்காமல் தொழில் செய்யுங்கள். நன்மை பெறுவீர்கள். வாழ்வு மலர கடவுளை வழிபடுவதே நல்லது எனக் கூறி ஏமாற்றுகின்றனர். பாரதி இந்த இடத்தில் கடவுள் வழிபாடு "நல்ல தீர்வு’ என்ற முரண் பாட்டை கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
இவ்வாறு பாரதி கவிதையில் உணர்ச்சி அதிகம், உரை நடையில் தெளிவு மிகுதி. இதனுல் பாரதி கவிதைகளில் தெரிந்தோ தெரியாமலோ தெய்வ நீதியை அதிகம் வற்புறுத் துவதால் அடிமைத்துவம் தொடர்ந்து நிலைக்க குரல் கொடுப் போர்க்கும் உதவி செய்கிருன் என்பதும் கவனிக்கத்தக்கதே.
சொந்த நாட்டிலே எல்லாவித அடிமைத்தனங்களையும் எதிர்த்தார். எந்த நாட்டில் அடிமைத்தளை அறுக்கப் போராட் டம் நிகழ்ந்தாலும், அதைப் பாராட்டுவதன் மூலம் தன் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டியவன் பாரதி. ரூசிய புரட்சியைப் பார்த்துப் புகழ்ந்தவன், தேசிய நிலையிலிருந்து சர்வதேசியத்தைத் தொட்டவன் பாரதி.
வர்க்க பேதங்களை கண்ணுற்று, சோசலிச சித்தாந்தங்களை தமிழ்க் கவியில் முதலில் சொன்னவன் பாரதிதானே. இந்திய சமூகத்திலும், தேசிய இனங்களுக்கிடையிலும், உலகரீதியாக வும் பொதுமைத்துவம் வேண்டும் என்று கருதி அடிமைத்தனம் ஒழிக்கப் பாடுபட்ட அவர் பங்கு பின் பல தலைவர்களுக்கு சிந்தனைக் கருவை வழங்கியதென்ற முறையில் பாரதிக்கு என் றும் சிறப்புண்டு,
10

6p(Iნ பிரியாவிடை
இரவோடிறுகிய பனிப்பிடி இளகும் நகரைச் சூழ நாலு திசையிலும் ஒன்றென்முகக் குன்றுகள் நிமிர்ந்து நில்லெனக் கூறும், நின்வழி மறிக்கும். புதினம் பார்க்கும் மேகத் தலைகள் தம்முட் குழம்பித் தவித்துத் திரியும். ரோசாப் பூவின் கண்ணீர் துடைக்க நீளுஞ் சூரியக் கரங்கள முந்தி நீர்த்துளி வீழ்ந்து நிலத்தை நனைக்கும்.
நண்பர்கள் விழிநீர் விால்களிற் சிதறும் இரையும் ஒசைகள் இடையோர் ஊதல்: பாரிய பிரிவொன் றெளிதாய் நிகழும்.
பிறந்து தேய்ந்த மண்ணை இழந்து பிறிதோர் மண்ணlல் தேய்வுறப் பெயரும் நண்ப,
நாளை நம்மிடை வருக. மாறிய இந்த மண்ணின் மீது ஒவ்வொரு குன்றும் தன்பிரம் தாழ்த்தி நம்முடன் சேர்ந்து நல்வர வுரைக்கும்.
O) - Diഖി
'உண்மையான தேவிய க?'நர்கள் தனது மக்களுடன் மிகவும் நெருக்கமாகவும் முக்யெமாகவும் பிணைந்து நிற் பார்கள். அவர்களது வரலாற்றின் எதிர்காலத்தையும் அதன் வரலாற்று நோக்கங்கள் மற்றும் பாதையையும் புரிந்து கொண்டிருப்பார்கள். தமது தேசத்தின் உயர் நலன்கள் பால் ஈடுபாட்டுடன் இருப்பார்கள். தமது மக்களின் நாட்டு மொழியில் தமது சிந்தனைகளையும்
உணர்வுகளையும் வெளியிடுவார்கள்'
- பவல்கோரின்
1.

Page 9
12
அ கூலி உழவனின்.
ஒட்டைகள் பலகொண்ட ஒலைக்குடில் தனில் ஒண்டியாகிவிட்டதோர் ஏழைக் கிழவனிவன் உற்ருரும் உறவினரும் ஏன் இவனுக்கில்லேயெனில் ஏர் கலப்பை பிடித்தவொரு கூவி உழவணிவன்.
காலை எழுந்தவுடன் கைகால் முகம் கழுவி கைவிட்டுச் சென்றதன் கஞ்சப் பிள்ளைகட்கு கருணைதனை செய்யுமாறு கடவுளை வேண்டிவிட்டு காளையுடன் நடக்கிருன் களனிவயல் நோக்கி.
களனிக் கரையோரம் காளைகளை விட்டுவிட்டு கால் நீளச் சுருட்டொன்றை கணநேரம் புகைத்துவிட்டு வானத்தைப் பார்த்து மனமார மகிழ்ந்துவிட்டு வயதான நேரத்திலும் வயலுக்குள் இறங்கிவிட்டான்.
உச்சிவெய்யிலிலே உரம் காய்ந்த நிலந்தனிலே உள்ளத் துயர்கெடவே உழுகின்ருன் இவ்வுழவன் ஏர் பிடித்த கைகளங்கு ஒய்ந்து வலியெடுக்க உள்ளத்தில் எண்ணுகிருன் இறந்துவிட்ட இல்லாக்ள.
பசியின் வேகம் வந்து பிடிவாதம் தளர்ந்திடவே பண்படுத்தும் நிலந்தன்னை பாதியிலே விட்டுவிட்டு மாலைச் சூரியனில் மணிக்கணக்கை பார்த்துவிட்டு மங்கும் வெளிச்சத்திலே வெளிப்பட்டான் வீட்டுக்கு.
வீட்டிற்கு வந்து அவன் விளக்குதனை ஏற்றிவிட்டு காக்கொத்து அரிசியிலே கஞ்சிதனை காய்ச்சிவிட்டு கால்வாசி வயிற்றினையே கஞ்சியினல் நிரப்பிவிட்டு கந்தல் பாயினிலே படுத்துவிட்டான் நிம்மதியாய்.
நிம்மதியாய் படுத்துவிட்டான் என்று நினைக்கையிலே நிம்மதியற்று அவன் நிலைகுலைந்து அழுகின்ருன் உறவு பந்தம் பாசமெல்லாம் பணத்துக்கே என்ற நிலை உள்ள இந்த அமைப்பதனை உளமார வெறுக்கின்றன்.
- கேசவன்

வானத்தை நோக்கி வளர்ந் திருக்கும் கரிய நேர்க்கோடுகளாக நெருங்கி உயர்ந்து வளர்ந்திருக் கும் பனங்கூடல்கள். அதன் வலிமை மிகுந்த பசிய ஒலைகளால் குளிர்மை பெறும் வானம், நிழல் பெறும் வளமான செம்மண்தரை அந்தக் கிராமத்து மக்களின் வாழ் வோடு அவை இணைந்து நிற்ப தைக் காட்டி நிற்பதுபோல அதே பனை ஒலைகளால் வேயப்பட்டு அதே செம்மண்ணுல் எழுந்த சுவர்களோடு அங்குமிங்குமாகத் தென்படும் ஏராளமான குடிசை
கள். பொருத்தமான நிறங்களு l6ir மிக இயற்கையாகவே அமைந்திருக்கும் ஒரு ஓவியனின் கைவண்ணம் போல அந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருந்
தது அந்தக் கிராமம்.
நாலு வருடங்களுச்கு முன் அந்தப் பனங்கூடலுக்குள் உள்ள சிறுவர் பாடசாலைக்காக ஒதுக் கப்பட்டிருந்த சிறிய கொட்டி லுக்கு நான் ஆசிரியனுக வந்த போது "உதுக்கையே படிப்பிக் கப்போறனி" என்று எனது சமூ கத்தவர்கள் என்னைக் கிண்டல் செய்தனர். அந்தக் கிண்டல் களில் மறைந்திருந்தது அது ஒரு ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதி என்பது மட்டுமல்ல, அதி லும் மிகப் பின்தங்கிய மக்கள் வாழும் பகுதி என்ற பொருளும்
மறைந்திருந்ததை உணர்ந்து கொண்டேன்.
ஊர்கள்தோறும் சிறுவர்
பாடசாலைகளை நடத்தும் அந்த பொது ஸ்தாபனத்தின் மூலம் தான் அந்தக் கிராமத்துக்கு நான் அறிமுகமானேன். மிகக்குறைந்த சம்பளத்தை வருமானமாகப்
13

Page 10
பெற்றபோதும் ஒரு நிலமற்ற விவசாயியின் மகனகப் பிறந்து நானடைந்த சமூகப் பாதிப்பு களால் என்னுள் ஏற்பட்ட ஒரு இலட்சிய வேகம் கிண்டல்களை யும் மீறி அந்தக் கிராமத்துடன் என்னை இறுகப் பிணைத்திருந் 凸gi·
அந்தக் கிராமத்தின் ஒவ் வொரு முகங்களையும் நான் அறிந் திருந்தேன். சீவல் தொழில், கூலி விவசாயம், கல்லுடைத்தல், சயிக்கிளில் பெட்டி கட்டி மீன் விற்றல் போன்ற தொழில்கள் தான் அவர்களின் அன்ருட வரு மானமாக இருந்தது. கல்விச் சாலைகள், பொது இடங்களெல் லாம் அவர்களுக்கு மூடப்பட் டிருந்தன. அன்ருடங்காச்சி களான அவர்களின் வாழ்க்கை இன்னல்கள் நிறைந்ததாகவே இருந்தது.
முதன் முதல் அந்தச் சிறுவர் பாடசாலையில் கல்வி கற்பிக்கத் தொடங்கிய போது என்னிடம் பாடங் கற்கும் இந்தச் சிறுவர் கள்தான் வளர்ந்து இந்தக் கிராமத்தின் சரித்திரத்தை மாற் றப்போகிருர்கள் என்று எண்ணி யிருந்தேன். "மாஸ்டர்" என்று சிரமத்துடன் அந்தக் கிராமத்து இளைஞர்களாலும், **வாத்தி யார்" என்று முதியவர்களாலும் அன்பாக அழைக்கப்படும் போது அந்தக் கிராமத்துக்கே நான் வாத்தியாராக இருப்பதுபோன்ற திருப்தி என்னுள் வளர்ந்திருந் 岛岛。
14
ஆனல் இரண்டு வருடங்க ளாக அந்தக் கிராமத்தில் வேல் தொழில், கூலி விவசாயம், கல் லுடைத்தல் போன்ற தொழில் களில் ஈடுபடும் உழைப்பளிகவான இளைஞர்களிடமும் முதியவர்களி டமும் ஏற்பட்டுவந்த மாற்றங் கள் அந்த உணர்வை என்னிட மிருந்து அகற்றி என்னையும் வளர்த்து வருவதை நான் உணர் கிறேன். என்னிடம் கல்விபெறும் சிறுவர்கள் அல்ல படிப்புவாசனை குறைந்த அந்த இளைஞர்களே தங்களது பொறுப்புகளை உணர் வதுபோல கிராமத்தில் ஏற்பட்டு வரும் படிப்படியான மாற்றங்கள் எனது கண்களில் படுகின்றது.
'நாளைக்கு வகுப்பு நடவாது Lorr6ň) ř**
நேற்று வகுப்புமுடிந்து வரும் போது அந்தக் கிராமத்துக்கு அடிக்கடி வந்துபோகும் அந்த இளைஞரோடு சயிக்கிளில் எதிரே வந்த சிவலிங்கம் புன்முறுவலு டன் மிக உற்சாகமாகச் சொல் லிக்கொண்டு சென்ருன். பிறேக் இல்லாத எனது சயிக்கிளை தட் டுத்தடுமாறி கால்களைக் கொடுத் துத் தடுத்து நிறுத்தி ஏன்?" என்று கேட்பதற்கிடையில் அவர் கள் சிறிது தூரம் சென்றுவிட் டனர்.
"நாளேக்கு வாங்கோவன்??
எனது குரல்க் கேட்டு திரும் பிய சிவலிங்கம் நான் நிற்பதைக் கண்டு சயிக்கிளை நிறுத்திக் காலை யூன்றியபடியே உரத்துக் கூறு கிருன். திரும்பவும் அவனிடம்

சென்று என்ன விசயம் என்று கேட்டுவிடவேண்டும் என்ற அவா என்னுள் எழுந்தாலும் அந்த இளைஞருடன் செல்வதால் ஏதா வது அவசர அலுவலாக இருக்க லாம் என்று திரும்பிவிட்டேன்.
ஏதோ முக்கியமான விசயம் நடைபெறப் போகிறது என்பதை மட்டும் என்னுள் உறுதிசெய்து கொண்டேன். தங்களுள் ஒருவ ஞகவே என்னைக் கருதி கிராமத் துப் பிரச்சனைகள் எல்லாவற்றை யும் அலசி ஆராயும் அவர்கள் நடக்கப்போகும் அந்த ஏதோ ஒரு நிகழ்வு பற்றி தெரியப்படுத் தாதது எனக்கு ஒரு மாதிரி யாகவே இருந்தது. இருந்தும் கட்டுப்பாடான அந்த இயக்கச் செயற்பாடுகளை அறிந்து கொள் ளும் அளவிற்கு நான்தான் இன் னும் என்னை வளர்த்துக்கொள்ள
வில்லை என்று எனக்குள் நான்
சமாதானமடைகிறேன்.
இன்று காலையில் எழுந்ததி லிருந்து அந்தக் கிராமத்தைச் சுற்றியே எனது எண்ணங்கள் வளைகின்றன.
*மத்தியானம் மினக்கெடாமை வா. பின்னே ரம் குழை தாழ்க்கவேணும்'
வழமையாக மதியவேளை யுடன் வகுப்பு முடிந்து வந்து விடுவேன். மாலை நேரங்களில் தோட்டத்தில் உதவி செய்வது எனது வழக்கம். இன்றும் வகுப்பு இருக்கிறது என்ற முடிவுடன் அந்த வார்த்தைகளைக் கூறிவிட்டு மண்வெட்டியை தோழில் வைத்
ஒரிடமும்
துக்கொண்டு புறப்படுகிருர் எனது வயதான தந்தையார். அவருக்கு உதவி செய்யவேண்டும் என்ற உணர்வு எனக்கு இருந் தாலும் எப்படியும் அந்தக் கிரா மத்துக்கு செல்லவேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்திருந்ததனுல் பேசாமல் இருந்துவிடுகிறேன். நானும் வழமையை விட முன்ன தாகவே சயிக்கிளையும் எடுத்துக் கொண்டு புறப்படுகிறேன். காலை நேரத்தின் மெல்லிய பணிக்காற்று உடலுக்கு இதமளிக்கிறது.
இன்று. வெள்ளிக்கிழமை சிலவேளை ஏதாவது. கோயில் விசயங்களாக இருக்குமோ.
அதற்காக ஒருநாள் சிறுவர்களின் படிப்பை நிறுத்துமளவிற்கு அவர்
கள் இன்று இல்லை. எண்ணங் கள் தொடர்கின்றன.
அந்தக்கட்சியைச் சேர்ந்த
பலர் அடிக்கடி அந்தக் கிராமத் துக்கு வந்து போகத் தெடங்கிய பின்னர்தான் அங்குள்ள கூலி விவசாயிகள் தொழிலாளர்களின் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் ஒரு உறுதியும் தெளிவும் ஏற் படத் தொடங்கியது.
நான் பாடசாலை மாணவ ஞக இருக்கும்போது சங்கான, மாவிட்டபுரம், மட்டுவில், கன் பொல்லை போன்ற வடபகுதியின் பல இடங்களில் நடந்த தீண்டா மைக்கு எதிரான போராட்டங் களை தீவிரமாக ஆதரித்து சக மாணவர்களுடன் வாதாடியிருக் கிறேன். ஆணுல் சமூக மாற்றத் திற்கு பலாத்காரமே வழி என்ற
S

Page 11
அவர்களது கொள்கையை அன்று நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
அந்தக் கிராமமே உலகமாக தாமுண்டு தங்கள் வீடுண்டு என்று வாழ்ந்த இளைஞர்கள் அவர் களின் தொடர்புக்கு பின்னர்தான் தமது கிராமத்துப் பிரச்சனைகளை மட்டுமல்ல தேசப்பிரச்னை, இனப் பிரச்சனை, நகரத்துத் தொழிலா ளர் பிரச்சனை, உலகப்பிரச்சனை களைப்பற்றியெல்லாம் கதைக்கத் தொடங்கினர். சிறுவர் பாட சாலைத் திறப்பு விழாவின்போது ஒரு வார்த்தைகூட பேசத் தெரி யாமலிருந்த தனபாலன் சென்ற கிழமை வாசிகசாலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் எவளவு தெளிவாக ஆணித்தரமாக பிரச் சனைகளை ஆராய்ந்து பேசினன்.
அயலூரில் சாதிவெறியர்கள் இ. போ. ச. தொழிலாளி சின் னச்சாமியை கைகால்களை வெட் டிக் கொலைசெய்த போது, அதை எதிர்த்த அந்த துடிப்பான இளை ஞனை ஏமாற்றிக் கூட்டிச் சென்று உருத்தெரியாமல் கொழுத்தி எரித்துக் கொலைசெய்தபோதெல் லாம் தங்களுள் ஒருவருக்கு நேர்ந் ததுபோல அந்தத் துயரச் சம்ப வங்களிலெல்லாம் அவர்கள் பங்கு கொண்ட நிசழ்வுகள். சகலவித மான அடக்குமுறைக்கும் உள்ளா கும் மக்களோடும் நெருங்கிவரும் அவர்களது உறவுகள். அவர்கள் ஒன்றுபட்டுப் பலப்படுகிருர்கள் என்பதை வெளிக்காட்டி நின் றன.
இப்பொழுதுங் கூட அந்தக் கிராமத்தின் அயற் பகுதிகளில்
16
கொட்டில் குடிசைகளை தீயிட்டுச் கொழுத்தி குடியிருப்பு நிலங்களி லிருந்து அவர்களை வெளியேற்றும் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந் தது. அந்த நிசழ்வுகள் எனது மனதையும் மிகவும் பாதித்திருந் தது. நிலமற்ற மக்கள் வாழும் அந்தக் கிராமத்தில் நிலவுட மையாளர்களின் ஆதிக்கம் அவர் களது முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருந்தது.
அதுபற்றித்தான் இன்று ஏதாவது கூட்டம் நடத்தப்போகி ருர்களோ.. என்ற எண்ணத் துடன் பிரதான வீதியிலிருந்து அந்தக் கிராமத்து எல்லைவரை செல்லும் ஒழுங்கையில் எனது சயிக்கிளை திருப்புகிறேன். ஒழுங் கையில் இடையிடையே சிலர் கூடி நின்று கதைப்பதும் ஏதோ அர்த்தத்துடன் எனது முகத் தைப் பார்க்கின்ற Llanrif 600au களும் எனது ஆவலேத்தூண்ட சயிக்கிள் பெடகில வேகமாக அழுத்துகிறேன்.
அந்த ஒழுங்கை முகப்பில் சயிக்கிள் திரும்பியதும் தொலை வில் நான் கண்ட காட்சி. பனிப் புகார் மறையாத அந்தக் காலைச் சூரியனின் மங்கிய ஒளித் தெறிப்பில். இக்ளயவர், முதிய வர், பெண்கள் என்ற பேதமின்றி கடகங்கள், மண்வெட்டிகள், பிக் கான்கள், கோடரிகள், கத்திகளை கைகளில் ஏந்தியபடி அந்தக் கிராமமே அணிவகுத்து இயங்கு கின்ற காட்சி. உணவுப் பருக் கைகளை பொறுக்கிச் சேர்க்க வீட்டு முற்றத்தில் ஊர்வலம்

போகும் எறும்புக் கூட்டம்போல சுறுசுறுப்பாக வரிசையாக நீண்டு நின்று மண் கடகங்களை தலைமாறு வதும், கொட்டிய வெற்றுக் கட கங்களை கைகளில் மாறுவதுமாக அவர்கள் நின்ற அந்தக்காட்சியை கண்டதும் எனது கண்கள் மகிழ்ச் ஒயால் அகல விரிகின்றன. சயிக்கி ளிலிருந்து குதித்து அருகில் நின்ற பனையோடு அதை சாத்துகிறேன். வேட்டியை மடித்து சண்டி கட் டிக்கொண்டு வேலை நடைபெறும் இடத்தை நோக்கி வேகமாக நடக்கிறேன். நான் செல்வதை அவர்கள் முகங்களைத் திருப்பி
புன்முறுவலோடு அவதானித்தா லும் தமது வேலைகளிலேயே கவ
னமாக இருக்கின்றனர்.
"மாஸ்டர் இண்டைக்குப் பாதை திறக்கிறம்”*
தொடர்ந்து பெய்த பெரு மழையால் நனைந்து ஈரமான மண்ணை கழுத்துத் தாழ ஒரு கட கத்தில் சுமந்தபடி செல்லும் சண் முகம் புன்முறுவலுடன் சொல் லிக்கொண்டு போகிருன். எதிரே கோடரிகள் கத்திகளை தோழில் வைத்தபடி பத்துப் பன்னிரண்டு இளைஞர்கள் வேகமாக வருகின் றனர். ஒரு பட்டாளப் பிரிவு நகர்ந்து வருவதுபோல நெஞ்சை நிமிர்த்தி உற்சாகமாக நடந்து வரும் அவர்களுள் ஒருவனக சிவ லிங்கமும் வருகிருன்.
“மாஸ்டர் குறை நினையா தேங்கோ. நேற்றைக்கு ஒழுங் கையிலை கானேக்கை சொல்லி யிருப்பன். அதிலை நிண்டு கதைச்சா அம்பலமாப் போம் எண்டுதான்."
கலை இலக்கியம் பற்றி
'கலை மக்களைச் சேர்ந் தது. அதனுடைய வேர் களை உழைக்கும் மக்களின் மிகுந்த நெருக்கத்தில் ஆழ மாக ஊன்றிவிட வேண் டும். அது அந்த மக்களால் புரிந்து கொள்ளப்படவும், நேசிக்கப்படவும் வேண் டும். அது அவர்களுடைய உணர்ச்சிகளையும் சிந்தனை களையும், விருப்பங்களையும் கண்டிப்பாக உயர்த்தவும் ஒன்றுபடுத்தவும் வேண் டும். அது கண்டிப்பாகச் செயலுக்கு கிளர்ந்தெழச் செய்யவேண்டும்**
வி. ஐ. லெனின்
"சீ. இதிலே என்ன குறை பொது விசயத்திலை. அப்ப அவங் கள் சம்மதிக்கேல்லை’
'உரிமையளைப் போராடிப் பெறவேணுமெண்ணுறதிலைதான் மாஸ்டர் எங்களுக்கு நம்பிக்கை. கடைசியிலே அதுதான் சரியாப் போச்சு. மாஸ்டர் வேலையள் கிடக்கு. அங்கை தனபாலண்ணை நிக்கிருர். அவரடிக்குப் போங் GBT ””
சிவலிங்கத்தின் கதையிலும் நிதானம் தவருத ஒரு அவசரம். என்னை அவர்கள் தங்களிலிருந்து பிரித்துப் பார்க்கவில்லை என்பதை அவனது வார்த்தைகள் உறுதிப்
17

Page 12
படுத்தியபோது என்னுள் ஏற் பட்ட ஒரு புதிய உற்சாகத்து டன் ரக்ரர்கள் இரையும் இடத் தை நோக்கி நடக்கிறேன்.
அந்தக் கிராமத்து மக்களின் ஏனைய பிரச்சனைகளைப் போலவே பாதைப் பிரச்சனையும் நீண்டகால மாகவே அவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வந்திருக் கிறது.
பிரதான வீதியிலிருந்து வளைந்து செல்லும் ஒழுங்கைகள், இடையிடையே தெரியும் மின் கம்பங்கள் யாவும் அந்தக் கிரா மத்தின் எல்லைவரை வந்ததும் நின்றுவிடும். அதற்கப்பால் ஒற் றையடிப் பாதைகள்தான் கலட்டி நிலங்களுக்கூடாகவும் பனவெளி களுக்கூடாகவும் வளைந்து வளைந்து செல்லும்,
மாரிகாலம் வந்துவிட்டால்
அந்தப் பனங்கூடலில் பலத்த ஓசையுடன் பெய்யும் மழைத்துளி கள் மனதுக்கு இதமாக இருக்கும். ஆனல் மேடும் பள்ளமுமாக இருக் கும் செம்மண்தரை சேறும் சகதி யுமாக மாறிவிடும். பாதையோ ரங்களில் பரட்டைத் தலைபோல முட்களை நீட்டிநிற்கும் காரை, கள்ளி, கத்தாழை, நாகதாளிகள் பசுமை பெற்று புதிய குருத்துக் களை வெளியே தள்ளி நிற்கும். இடையிடையே மண்ணைப் பிளந்து வெளித்தெரியும் கூர்மை யான பாறைக் கற்கள் மழை
நீரில் குளித்து பார்ப்பவர்களின்
கண்களுக்கு ஏற்ப பற்பல தோற் றங்களை அளிக்கும் தெளிவற்ற உருவச்சிலைகளாக காட்சிதரும்.
18
ஆரோக்கியமான ஒருவரே அவதானமாகச் செல்லவேண்டிய பாதையில் வயோதிபர்கள், நோ யாளிகள் அதுவும் வானத்து நிலவை நம்பி இருக்கும் அந்த இருண்ட வெளிகளில் சிறிது நிதா னம் தவறினுல் கூட பனைமரங் கள் பற்றை முட்கள், பாறைக் கற்கள் மீது முட்டிக்கொள்ள வேண்டும். பிரசவ வேதனையால் அவதியுறும் பெண்களைக் கூட ஒழுங்கையோடு நின்று விடும் காரடிக்கு நீண்ட தூரம் அந்த நோவோடும் வலியோடும் கைத் தாங்கலாகத்தான் தூக்கிச்செல்ல வேண்டும். எனது சயிக்கிள் ரயர்களைக்கூட எத்தனையோ தட வைகள் இந்த முட்கள் பதம் பார்த்திருக்கின்றன.
கிராம மக்களில் பெரும்பா லானேர் பங்குபற்றிய பொதுக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தனபாலனும் சிவலிங்கமும் ஒரு வருடத்துக்கு மேலாக அரசாங்க அதிபர்முதல் எம். பி., விதான என்று எல்லாப் படிகளிலும் ஏறி இறங்கியிருக்கிருர்கள். சிலரை எவளவோ சிரமப்பட்டு கிராமத் துக்கு அழைத்துவந்து காட்டியும் அவர்கள் ஒவ்வொருவராக சாட் டுதல்கள் கூறி இறுதியில் நிலச் சொந்தக்காரர்களே அதைப்பற்றி தீர்மானிக்க வேண்டும் என்று விட்டுவிட்டார்கள்.
இந்த முடிவை தனபாலன் சிவலிங்கம் போன்றவர்கள் எதிர் பார்த்திருந்தாலும் பலபடிகளி லும் ஏறி இறங்கி அவர்கள் எடுத்த முயற்சிகள் ஒருவர் வேறு

பாடின்றி முழுக் கிராமத்தையும் ஐக்கியப்படுத்துவதில் உதவியாக அமைகிறது.
நான் அங்கத்துவம் வகிக்கும் அந்தப் பொது ஸ்தாபனத்திலும் இந்தப் பிரச்சனை பற்றி நான் கூறியபோது நிலச்சொந்தக்காரர் களுக்கு விரோதமாக நடந்து கொள்ள முடியாது என்றுவிட் டார்கள். அப்படி அவர்கள் சொன்னபோதே அவர்களது சமூ கப்பணியின் எல்லையை நேரடி யாகவே விமர்சித்து அவர்களுடன் முரண்பட்டுக்கொண்டேன்.
இன்று அந்த கிராமத்தையே ஒரு புரட்சிகரமான நடவடிக் கைக்கு அணிதிரண்டு எழவைத்த அந்தக் கட்சி உணர்வை கண்ட தும் அந்த உணர்வுகள் என்னுள் ளும் ஆழமாகப் பதிவதை நான் உணர்கிறேன்.
பலத்த இரைச்சலுடன் உறுமி உறுமி இழுக்கும் அந்த ராக்ரரைச் சுற்றி ஒரே ஜனக் கூட் டம். ஈரமண்ணின் சுமையால் சேற்று நிலத்தில் ரக்ரர் சில்லுகள் புதைந்துவிட்டன. இயந்திரத் தின் இயலாமையை அதன் பேரி ரைச்சல் வெளிப்படுத்துகிறது.
'இவளவுபேர் நிக்கேக்கை என்னதான் முடியாது. பிடி யுங்கோ’
தனபாலன் உரத்துக் கூறிய படி புதைந்து கிடக்கும் பெட்டி யில் கையைப் பிடிக்கிருன்.
'பிடியடா பிடி'
கள்,
பெட்டி நிறைந்துவிட்ட
'gift is L-IT தூக்கு?
ரக்ரரின் இரைச்சலையும் மீறி அவர்களது உற்சாகமான குரல் கள். நானும் கைபிடிக்கலாம் என்று முயற்சிக்கின்றேன். கை பிடிக்க இடமில்லை. மண்னேடு சேர்த்து அந்த ரக்ரர் பெட்டி யை சேற்றிலிருந்து மீட்டு மேட்டு நிலத்தில் வைத்துவிடுகின்றனர்.
ராக்ரர் றைவர் துரைச்சாமி வியப்புக் கலந்த ஒரு முகமலர்ச்சி யோடு சுற்றி நின்றவர்களைத் திரும்பிப் பார்க்கிருன். உழைத்து உழைத்து உருக்காகிவிட்ட கரங் ஒன்றுபட்டு விட்டதால் எதையும் எதிர் கொள்வோம் என்ற நம்பிக்கையில் மலருகின்ற முகங்கள். மீண்டும் தமது ઉ6uટ%p களை தொடர்வதற்காக கலைந்து செல்கின்றனர்.
அவனும் அதே நிலவுடமை யாளரின் சமூகத்தைச் சேர்ந்த வன்தான். ஒரு குத்தகை 626uérir யியாக இருந்த அவனல் அவர்க ளது போராட்டம் நியாயமானது என்பதை உணரமுடிந்தது இருந் தும் காலையில் ரக்ரரை எடுத் துக்கொண்டு வரும்போது தனது சமூகத்தவரிடமிருந்து எதிர்ப்புக் கள் வரலாம் என்ற அச்சம் அடி மனதில் அவனுக்கு இருந்தது. அங்கு அவர்களிடம் காணப்பட்ட ஐக்கியமும் எழுச்சியும் அவனுக்கு உற்சாகமூட்ட வேகமாக ரக்ரரை எடுத்துக்கொண்டு முன் செல் கிருன்.
புதைந்த ரக்ரரை தூக்குவ தில் உற்சாகமாக உதவி செய்த பரமு வலக்கை மணிக்கட்டை
19

Page 13
இடது கையால் இறுகப் பொத் தியபடி கூட்டத்தை விட்டு அப் பால் செல்கிறன்.
"என்ன பரமு. என்ன நடந்தது"
அவனைப் பின் தொடர்ந்து சென்ற நான்தான் கேட்கிறேன்.
"ஒண்டுமில்லை மாஸ்டர். ஒரு சின்னவெட்டுத்தான்"
பொத்தியிருந்த 65 மெதுவாக விரிக்கிருன் உள்ளங் கையில் நிறைந்திருந்த இரத்தம் வழிந்து நிலத்தில் வீழ்கிறது. அநுதாபப் பார்வைகளுடன் ஆட் கள் அங்கு கூடுகின்றனர்.
**அது சின்னக் காயம்தான்
போய் பாதையைப் போடுங் கோ. உயிரையே குடுக்கத் தயாரா இருக்கிற எங்களுக்கு
இது ஒரு காயமே."
இரத்தம் தோய்ந்த கையை உயர்த்திப்பிடித்தபடி நிமிர்ந்து நின்று மறு கையை உயர்த்திக் காட்டி ஒரு தளபதி கட்டளையிடு வதுபோல உணர்ச்சிவசப்பட்டுக் கூறுகிருன் பரமு.
கைகளிலிருந்து பெருகிவழிந்த இரத்தமும் அவன் கூறிய வார்த் தைகளும் அவர்களுக்கு உணர் வூட்ட புதியவேகத்துடன் கலைந்து செல்கின்றனர்.
'தம்பி. இப்போதைக்கு இது ரத்தப்பெருக்கை கட்டுப் படுத்தும். மருந்து கட்டத்தான் வேணும்."
வேலப்புக் கிழவர் அருகில் பற்றையோடு நின்ற பண்வடலி
20
யின் குருத்துக்களில் படிந்திருந்த பஞ்சு போன்ற பனந் தூசியை சேர்த்துக் கொண்டுவந்து காயத் தில் வைத்து கட்டிவிடுகிருர்,
"நீர் கொஞ்சம் ஒய்வெடும்’
'இல்லை மாஸ்டர். இண் டைக்குச் செய்யாத வேலை இனி மேல் ஏன்?"
காயம்பட்ட கையைத் தூக் கியபடி தொடர்ந்தும் தன்னல் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் நடக்கிருன் பரமு. அவனையே நான் வியப் புடன் பார்த்துக் கொண்டு நிற் கிறேன்.
முன்பெல்லாம் பரமு என் ருலே அந்தக் கிராமத்துக்கு மட்டு மல்ல அயற்கிராமங்களுக்குக் கூட பிரச்சனையான ஒருவனுகத்தான் இருந்து வந்திருக்கிருன். அது போன்ற பின்தங்கிய கிராமங்க ளில் அவனைப் போன்ற பலரை நான் சந்தித்திருக்கிறேன். அந்தக் கிராமத்தில் ஏற்பட்ட மாற்றம் படிப்படியாக அவனிலும் ஏற் பட்டு வந்து இன்று ஒரு பொதுக் கடமைக்காக தன் உயிரையும் அற்பணிக்கத்தயார் என்று கூறி இரத்தம் சிந்தவும் அவன் முன் வந்தபோது அவர்கள் அடிக்கடி கூறும் வெகுஜனங்கள் பங்குபற் றும் புரட்சிகரப் போராட்டத் தின் உயர்ந்த தன்மைகளை அநு பவத்தின் மூலமாகவே நான் உணர்ந்து கொள்கிறேன்.
வேகமாகச் சென்ற ரக்ரர் கள் குறுக்கே நீண்டிருக்கும் வேலி யால் தடைப்பட்டு நிற்கின்றன.

**வெட்டுங்கோடா?
அங்கு நின்ற ஒரு முதியவ ரின் குரலோடு ஆண்டு கடந்து பருத்து நின்ற பூவரசு, கிளுவை, முள் முருக்க மரங்களின் அடியில் ஓங்கிய கோடரிகள், கத்திகள் மாறி மாறி விழுகின்றன. வேலி படபடவென்று சாய்கிறது. வள வுச் சொந்தக்காரர் வடிவேலர்
வேகமாக சயிக்கிளில் வந்து இறங்குகிறர்.
"என்ன. என்ன இஞ்சை
நடக்குது. ஓ. நீரும் ராக்ரர் விடுறிரோ..?
ஆத்திரத்தில் கத்தியபோதும் அவர்கள் நிற்கும் வேகத்தை உணர்ந்து அவர்க ளோடு முகங்கொடுத்துப் பேசுவ தைத் தவிர்த்து தனது சமூகத் தைச் சேர்ந்த துரைச்சாமியின் பக்கம் அவர் திரும்புகிருர்,
* பிரச்சனையை இஞ்சை கதையுங்கோ. என்ன பிரச்
F?'
வடிவேலரை இடைமறித்து கையிலிருந்த கத்தியின் கூரியபா கத்தை மறுகை விரல்களால் தடவியபடி ஆத்திரத்துடன் ஆனல் நிதானமாக கேட்கிருன் தனபாலன்.
Taire L9grji goraberG3u urri... காணிச் சொந்தக்கறன் நான் இருக்கிறன். ஒரு கேட்டுக் கேள் வியுமில்லாமல்.’
**கேக்கிறதுக்கு வீடு தேடி வந்தாலும். உங்களுக்கு கேட்க விருப்பமில்லை. பேந்தென்ன உங் களிட்டைக் கேள்வி?
படபடத்துக்
வேலைகளைக் கைவிட்டு விட்டு ஆயுதங்களுடன் விசுவநாதர் நிற் கும் இடத்தை சுற்றி வளைக்கின் றனர். அவர்களிடமிருந்து ஆத் திரத்துடன் குரல்கள் கிளம்பு கின்றன.
"இந்தப் பாதைக்காண்டி. எங்கடை பெடியள். எத்தினை படியள் ஏறி இறங்கினவங்கள்’
"சட்டத்துக்குமாரு பாதை போட ஆர் சம்மதிப்பாங்கள்??
நெஞ்சில் பயம் இருந்தாலும் தோல்வி போகக்கூடாது என்ப தற்காக குரலைத்தாழ்த்திக் கூறு கிருர் விசுவநாதர்.
*"ஒ. சட்டங்கள் ஆருக் காண்டி இருக்கெண்டும் எங்களுக் குத் தெரியும். அதை எப்பிடி உடைக்கிறதெண்டும் எங்களுக்குத் தெரியும்??
"உவரோடை கதைச்சுக் கொண்டு நிண்டால் எங்கடை வேலை முடியாது. இப்பென்ன. வந்தியள். பாத்திட்டியளெல் லே. போய்ச் செய்யிறதைச் செய்யுங்கோ. என்ன வந்தாலும் நாங்கள் பாதை திறந்துதான் தீருவம்"
அவர் போக வேண்டிய திசை யைக் கைகளால் காட்டியபடி தன பாலன் ஆவேசத்துடன் கூறுகி ருன். அந்த வார்த்தைகள் அங்கு நின்றவர்களையும் ஆவேசப்படுத் துகிறது. இனியும் அங்கு நின் முல் தனக்கு எதுவும் நடக்கலாம் என்பதை உணர்ந்து கொண்ட விசுவநாதர் விறுக்கென்று சயிக் கிளையும் எடுத்துக்கொண்டு நழுவு கிருர்,
2.

Page 14
"ஓ. இப்ப நீங்கள் வளந் திட்டியள்"
வாய்க்குள் முணுமுணுத்த படி வந்த வேகத்திலேயே திரும் பிச்செல்லும் விசுவநாதரை ஒரு வெற்றிக் களிப்புடன் அவர்கள் பாத்துக்கொண்டு நிற்கின்றனர்.
‘போறபோக்கிலை ஏதாலும் அலுவல் நடந்தாலும் நடக்கும். கெதியா வேலையை செய்யுங்கோ?* சிவராமனின் குரலோடு மீண் டும் ஒரு வேகம். இரண்டு ரக்ரர் களும் வீழ்ந்து கிடக்கும் வேலி களுக்கு மேலாக மண்ணைக் கொண்டு பாய்கின்றன. ரக்ரரில் மண்ணை ஏற்றிவிட, கொட்டிய மண்ணைப் பரவ, குறுக்கே நிற் கும் மரங்களைத் தறித்து வீழ்த்த, அவைகளைத் தூக்கி அப்புறப் படுத்த. எல்லாமே இரவு கூட் டத்தில் தீர்மானித்தபடி குழுக் கள் குழுக்களாகப் பிரிந்து
பொறுப்பேற்று வேலைகள் வேக
மாக நடைபெறுகிறது.
பாதையின் குறுக்கே நின்ற வேம்புகள், பனைகள் போன்ற பெருமரங்கள் தறிக்கப்பட்டு சட சடவென்று பலத்த ஓசையுடன் சரிகின்றன. முட்புதர்கள் வெட் டப்படுகின்றன. பாறைக் கற்கள் அடித்து நொருக்கப்படுகின்றன. மாறி மாறி பேரிரைச்சலுடன் ரக்ரர்கள் கொண்டுவந்து கொட் டும் மண்ணை பெண்களும் ஆண் களும் வேகமாகப் பரவு னெறனர். பற்றை முட்களை இழுத்துச் சென் றபடி என்னிடம் படிக்கும் சிறுவர் கள் கோடரியுடன் நின்ற என் னைப் பார்த்துச் சிரிக்கின்றனர்.
22
இடிவிழுந்து பட்டுப்போய் உழுத்து நின்ற ஒரு பனையைத் தறிக்கும்போது அது பலத்த ஓசை யுடன் வீழ்வதைக் கண்ட ஞானம் எதற்கு அதை உவமையாகக் கற் பனை செய்தானே "கூ" என்று உரத்துக் கத்திவிடுகிறன். அரை மைலுக்கு அப்பால் உள்ளவர் களும் வேலைகளை விட்டுவிட்டு கை யில் வைத்திருக்கும் ஆயுதங்க ளுடன் ஒரு ஆவேச உணர்வுடன் குரல் வந்த திசையை நோக்கி ஓடி வருகின்றனர். ஞானத்தோடு நின்றவர்கள் 'எட மடையா’’ என்று ஞானக்தை பேசிவிட்டு ஒவ்வொரு நிக்கிலும் பிரிந்து ஓடி, ஓடிவருபவர்களை தடுத்து நிறுத்தி நடந்ததைக் கூறுகின்றனர். ஞானம் ஒன்றும் அறியாதவனப் திகைத்தபடி, அவர்கள் ஓடுவதை பார்த்துக்கொண்டு நிற்கிருன்.
ஆட்கள் கூடிவிட்டால் உற் சாகமடைந்து அப்படி நடந்து கொள்வது ஞானத்தின் இயல்பு தான். என்ருலும் இரவு மண் வெட்டி கடகங்கள் சேகரிப்பதற் காக அயற்கிராமத்துக்குச் செல் லாமல் கூட்டத்துக்குச் சமுகமளித் திருந்தால் அவன் அப்படி நடந்து கொண்டிருக்க மாட்டான். எதிரி களால் ஏதாவது ஆபத்து என்ருல்
மட்டுமே அப்படிக் கூச்சலிட வேண்டுமென்று தீர்மானமாக இருந்தது.
ஓடி வந்தவர்கள் ஏமாற்ற மடைந்தாலும் தங்களது தீர்மா னத்தைப் பரீட்சித்துப் பார்த்த தில் ஏற்பட்ட ஒரு திருப்தியுடன் திரும்பவும் தங்களது இடங்க ளுக்கு விரைகின்றனர்.

மதியவேளை ஆகிவிட்டது. பாதைபோடும் இடங்களிலுள்ள வீடுகள் ஒவ்வொன்றிலுமிருந்து அடிக்கடி பெண்கள் தேநீர் தயா ரித்துக்கொண்டு வந்து தருகின் றனர். வேலைகளோடு ஒன்றி விட்ட உணர்வில் பசியே தெரிய வில்லை.
எனது தந்தையார் காலையில் வரும்போது குழை தாழ்ப்பதற்கு நேரத்துடன் வரச் சொன்னது ஞாபகம் வருகிறது. இருந்தும் எனது வாழ்நாளில் நான் பெற்றி ராத உணர்வுபூர்வமான அந்த வேலையிலிருந்து என்னுல் விலக முடியவில்லை.
எனது சிறுவர் பாடசாலைக் கொட்டிலில் இருந்து புகைமண் டலம் கிளம்பி பனங்கூடலெங்கும் பரவுகிறது. கிராமப் பெண்கள் அனைவரும் கூடி சமையல் வேலை யில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். உணவு பரிமாறும் சிரமத்தை தவிர்ப்ப தற்காகவும், வேலைகள் தடை யின்றித் தொடர்வதற்காகவும் பகுதி பகுதியாகவே உணவு பரி மாறப்படுகிறது.
ஆரம்பச் சபையிலேயே அமரு மாறு என்னை வற்புறுத்தியபோ தும் பிடிவாதமாக மறுத்து குழந் தைகள் முதியவர்கள் அனைவரும் உண்டபின் தனபாலனும் அவ னைச் சார்ந்தவர்களும் அமர்ந்த கடைசிச் சபையில்தான் நானும் அமர்கிறேன். மாலை நேரமாகி விட்டாலும் ஒரு பொதுக்கட மைக்காக அந்தக் கிராமமே தம் முள் இருந்த சிறு சிறு பகைமை
களையும் மறந்து ஓரிடத்தில் அமர்ந்து பகிர்ந்து உண்ட அந்த உணவு வயிற்றை மட்டுமல்ல மனத்தையும் நிறைக்கிறது.
காலையிலிருந்து பாதைபோ டும் வேலையில் ஈடுபட்டிருந்த முதி யவர்களும் நடுத்தர வயதுடைய வர்களும் அன்று அவர்களுக்கு ஏற்பட்ட புதிய உணர்வால் உந் தப்பட்டு அடிமை முறையின் கொடுமைகளை நினைவு கூருகின்ற
I
* வளைவைச்சுக் கொட்டில் போட்டாலும் சமனப் போடுவ மெண்டு வட்டக்குடில்தான் கட்ட வேணுமெண்டு சட்டம் வைச்ச வங்கள்??
பாதையோரத்தில் தறித்து வீழ்ந்திய பனையின் ஒலைகள் குருத் துக்களை கத்தியால் வெட்டியபடி கூறுகிருர் வேலப்புக் கிழவர்.
'குமருகட்டையள்கூடி மேலு டம்பை மறைக்கேலாது. ஏன் *வளவுக்கு வாடா" எண்டு கூப் பிட்டு என்னை எத்தினை நாள் தங்கடை முத்தத்து மாமரத்தைக் கட்டிப் பிடிக்கச் சொல்லி துவரந் தடியாலை அடிச்சவை. ஒருநாள்ப் பார்த்து. அடிச்சுப் போட்டு அவங்கள் தந்த சாப் பாட்டை நான் வாங்கிச் சாப்பி (BL6)ટ%ોp**
கொட்டிய மண்ணை மண் வெட்டியால் தட்டிப் பரவிக் கொண்டிருந்த பொன்னப்புக் கிழ வர் அவரது பணிந்து போகாத தன்மைக்காகப் பெற்ற அடிகளை நினைந்து ஆத்திர உணர்வுடன் தலையை நிமிர்த்தி வெளிப்படுத்து கிருர்.
23

Page 15
**ஏன் எனக்கும் ஒரு நாள் நான் வேலை செய்து களைச்சுப் போய். தண்ணி விடாயிலை. வத்தப்பழம் பிடுங்கிப்போட்ட னெண்டு. உப்பிடித்தான் கூப் பிட்டு அடிச்சவர். அடுத்த காணி அவற்றைதானே. வரட் டும் பார்ப்பம்”*
சிவலிங்கம் உணர்ச்சி வசப் பட்டுக் கூறுகிருன்.
"ஏன் பழைய கதையளைக் கதைக்கிறியள். இப்பென்ன கொடுமையள் குறைஞ்சே போச்சு கொட்டிலைக் கொழுத்திக் குடி யெழுப்பிக் கலைக்கிருங்கள்.நிலத் தை வைச்சுக்கொண்டு நிமிரவிடு ருங்களில்லை"
நடுத்தர வயதுள்ள கூலி விவ சாயி சிவராமன் கூறுகிருன்.
"ஒமடா தம்பி உந்தக் கூப் பன் கடையை வைச்சுக்கொண்டு எங்களை மகாஞ்சப்பாடே படுத்தி னவங்கள். அந்தக் கட்சிக்காற ரோடை எங்கடை பெடியள் சேந்தப் பிறகெல்ல்ோ. எல்லாம் மாறிவருகுது"
பொன்னப்புக் கிழவன் பழைய நிலைமைகளையும் மாறிவரும் புதிய நிலைமைகளையும் கணக்கிலெடுத்து நம்பிக்கை ஒளி முகத்தில் படர ஒரு நன்றி உணர்வுடன் நினைவு கூர்கிருர், களும் கதைகளும் அந்த இயக்கத் தைச் சுற்றிச் சுழல்கிறது.
*உங்காலை சீர்ப்படுத்திறதை பேந்து பாப்பம். இப்ப எல்லா
ரும் இஞ்சை வாங்கோ. பொ
ழுது படேக்கு முன்னம் பாதை
24
எல்லோரது உணர்வு
தெருவிலை தொடவே
போப் ணும்"
பாறைகளும் முட்புதர்களும் மட்டுமே எஞ்சிநின்ற அந்த நீண்ட வெளியை சிவலிங்கத்துடன் சென்று ஒருமுறை பார்த்துவிட் டுத் திரும்பிய தனபாலன் உரத் துக் கத்துகிருன்.
பிரதான வீதிவரை நீண்டி ருக்கும் அந்தக் கலட்டி வெளி ஊரின் பிரதான நிலச்சொந்தக் காரர்களுள் ஒருவரான முத்து வேலு விதானையாரின் ஆதிக்கத் திலிருந்தது. "வளவுக்கு வாடா" என்று அடித்த பழக்கத்தை கைக் கொண்ட கடைசி மனிதரான
அவரது நிலத்தில் முன் தயாரிப்
புடன் வேலைசெய்வது என்று முத லிலேயே முடிவெடுத்திருந்தனர்.
வேகமாக அந்த நிலத்தில் வேலைசெய்ய வேண்டியதன் அவசி யத்தை எல்லோரும் உணர்ந்த வர்களாய் நீண்ட வெளியில் பட் டாளம் போல அவர்கள் முன் னேறுகின்றனர். பற்றைகள் வெட்டப்பட்டு, பாறைகள் நொ ருக்கப்பட்டு, மக்கி பரப்பப்பட்டு தெருவிலிருந்து தொடங்கிய அந் தப் பாதை முடிவடையும் இடத் திற்கு வந்துவிடுகிறது.
**விதானையார் வாழுர்"
தொலைவில் வரும் போதே அவரது காரை இனங்கண்டுவிட்ட ஒருவரது குரலோடு எல்லோரது முகங்களும் ஒழுங்கை முகப்பை நோக்கி திரும்புகிறது. அவர்கள் திறந்த புதுப் பாதையில் முத்து வேலரின் கார்தான் முதலில் வரு கிறது. காரை ஓட்டிவரும் விதத்

AA
அறியாமையின் பயன்பாடு
ஒரு காலத்தில் நீல அஸ்பெஸ்ரொஸ் நார் சுவாசப் பையில் புற்று நோய்க்குக் காரணமானது என்று அதன் உபயோகம் பல தொழில்களிலும் தடை செய்யப்பட்டிருந் தது. இன்று சாதாரண வெள்ளை அஸ்பெஸ்ரொஸ் நாரும் கூட அபாயகரமானது என்று உணரப்பட்டுள்ளது. இந்த அஸ்பெஸ்ரொஸ் நார்தான் கூரைத் தகடுகளை செய்யச் சீமெந்துடன் கலந்து பாவிக்கப்படுகிறது. கூரைத் தகடு கள் ஆபத்தற்றவை. ஆனல் அவற்றை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள அஸ்பெஸ்ரொஸ் நாரைக் கைாயளவேண்
டியுள்ளது. அவர்க்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஐரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்கா விலும் பாதுகாப்புப் பற்றித் தொழிலாளர்களிடையே
மிகுந்த விழிப்புணர்வு உண்டு. பல இடங்களில் அஸ்பெஸ் ரொஸைக் கையாளத் தொழிலாளர்கள் மறுத்துவிடுகிருர் கள். பல மூன்ருமுலக நாடுகளில் தொழிலாளர்களுக்கு இது போன்ற விஷயங்களில் உள்ள அறியாமையை முதலாளிகள்
தங்களுக்கு வசதியாகப் பாவித்துக் கொள்கிருர்கள்.
திலேயே அவர்கள் சிதறி ஒட வேண்டும் என்று கருதியவராய் காரின் பின்சீற்றில் சாய்ந்திருக் கிடிர் முத்துவேலர். வேகமாக ஒட்டிவந்த காரை அங்கு மண் பறித்துக் கொண்டிருந்த ரக்ரரின் முன்னல் திடீரென பிரேக்கைப் போட்டு நிறுத்தி கதவை படா ரென்று திறந்தபடி இறங்குகிருன் முத்துவேலரின் மகன் தியாகு.
*"எங்கண்டை வளவுக்கை ஆற்ரு உன்னை ரக்ரர் விடச் சொன்னது. டேய். உங்களைப் பாதைபோடச் சொன் னது??
e2.prl-fr
ஒற்றையும் பென்சிலுமாக ரக்ரரின் முன்னுல் வந்து ஆத்திரத் தில் கத்துகிருன் தியாகு. அவனை சிலர் பாய்ந்து பிடித்து சேட்டுக் கொலரைப் பற்றி இழுக்க சனக் கும்பலில் அவன் இழுபடுகிருன்.
“Guiu... வளவு???
ஆற்றையடா
"ஆருக்கடா. நிலம் சொந் தம்”*
"இன்னும் பழைய ஆக்க” ளெண்டு நினைச்சியளோ"
மாரிகாலத்தின் அந்த Lomão பொழுதில். மாலை வெய்யிலின்
25

Page 16
மங்கிய ஒளித் தெறிப்புக்கள் கருமுகில்களில் பட்டு செவ் வொளியாகச் சிதறி. அந்தச்
செம்மண் பூமியை மேலும் சிவப் பாக்குகிறது. அந்த மண்ணில் ஆத்திரத்தால் சிவந்த கண்களு டன். கத்திகள், கோடாரிகள், அலவாங்குகள், பிக்கான்களு டன். அந்தக் கிராமமே ஆவே சங்கொண்டு எழுந்து நின்ற காட்சி. முத்துவேலரை கலங்க வைக்கிறது.
காரிலிருந்து தயக்கத்துடன் இறங்கிய அவரது வேட்டியின் முன் தலைப்பில் ஈரம் கசிந்து அவரது கால்களை நனைக்கிறது.
'தம்பிமாரே நிப்பாட்டுங் கோ. நான் வரேக்கையே சொன் னணுன் உவனுக்கு. அவங்கள் பழையாக்கள் இல்லையெண்டு. நீங்கள் பாதையைக் கொஞ்சம் அரக்கிப் போடுங்கோ. நான் அளப்பிச்சு விடுறன்"
பதட்டப்படுவதை மறைத்து ஒருவாறு பழைய தொனியில் கூறமுயற்சிக்கிருர் முத்துவேலர் தியாகுவைப் பிடித்த கைகளை அவர்கள் தளர்த்துகின்றனர்.
"நாங்கள் போட்டதுதான் பாதை. அங்காலை இஞ்சாலை அரக்கேலாது"
உறுதியாக உரத்துக் கூறு கிருன் தனபாலன். முத்துவேல ரின் முகத்தில் ஆத்திரரேகைகள் கோடிட்டாலும் அவர்களது ஒன்றுபட்ட பலத்தின்முன் தனது இயலாமையை உணர்ந்தவராய்
26
கதி
காரில் ஏறி அமர்கிருர், கார் மெதுவாக நகர்கிறது.
முதல்முறையாக தங்களது
பலத்தை தாங்களே உணர்ந்தவர் களாக முகமலர்ச்சியுடன் கார் மறையும் வரை பார்த்துக்
கொண்டு நிற்கின்றனர்.
“பாதை திறந்து போட்
டம். இனிமேல்த்தான் நாங் கள் ஒற்றுமையா விழிப்பா இருக்கவேணும்'
தனபாலனின் அந்த வார்த் தைகள் அவர்களது மனங்களில் ஆழப் பதிய, ஒரு புதிய நம்பிக் கையின் பூரிப்பு அந்தக் கிராமத்து இளைஞர்கள், பெண்கள், முதிய வர்கள் அனைவரது முகங்களிலும் பளிச்சிடுகிறது.
ஒரு மனநிறைவோடு சயிக் கிளையும் எடுத்துக் கொண்டு கிராமத்தை விட்டு வெளிவந்த நான் இரைச்சல் கேட்டு திரும் பிப் பார்க்கிறேன்.
அவர்கள் கொட்டிப் பரப் பிய ஈரமக்கியில் கோடு பதித்த படி அதே பாதையில் நிலவுடமை
யாளரின் நலன்களைக் காக்க பொலீஸ் ஜீப் பாய்ந்து செல் கிறது.
தூரத்தே அந்தக் கிராமத்தில் அடர்ந்து நெடுத்து வளர்ந்திருந்த அந்தப் பனங்கூடலின் மீது செவ் வொளியின் கீற்றுக்கள் அந்த மாலையின் மெல்லிய இருளிலும் மேலும் பிரகாசிக்கின்றன.
冲

சடுதி அடுக்குகள்
மர்மக் கதைகள் எல்லாம் வாழ் நிலைமை மெய்ம்மைகளாய் உண்மைக் கதையாகும் ஒர் உலகில் வாழுகிருேம்.
முன்னர் நாம் சாண்டில்யன், கல்கி சக அன்பர் மாயாவி போன்ற சிலர் தீட்டும் வரலாற்று நாவலிலும் அற்புதக் கற்பனைச் சித்திரக் காதையிலும் மட்டும் தான்
மர்மத் திகில்கள் வரும் என்று
நம்பி இருந்தோம்.
நமது நிகழ் காலமோ,
இப்போதெல்லாம் அற்புதத்தில் அற்புதமாய் அன்ருடம் காணப்படுகிறது
யாரும் அறியா வகையில் திடுமென்ற தாக்கல், சிறை மீட்சி, ஆள் கடத்தல் சொல்லாமற் கொள்ளாமல் ஷொக்கடிக்கும் பான்மையிலே ஒற்றர்கள், தூதர், உளவறிவோர் என்றெல்லாம். சம்பவங்கள் யாவும் சடுதி அடுக்குகளாய் நேர்ந்து விடுகின்ற நேரங்கள், நாழிகைகள் தானே, இக்காலத்துச் சாதாரண நாள்கள்!
அப்படியானல், அன்பரீர், சடுதி நிழ்வுகள் தான் இனி இயல்போ? திகில்களின் தொடர் தான்
சீவியம் ஆகுமோ?
இல்லையேல், நேர்வை, எதிர்வை, தொகுவை முறைப்படி - தீசிஸ், அன்ற்றிதீசிஸ், சிந்திசிஸ் முறைப்படி - முரணற இசைந்த முன்னேறல்களால் சாந்தி என்பதோர் சாதாரண நிலை
தோன்றுதல் கூடுமோ?
சொல்லுவீர் - வான்புகழ் தமிழிலே, வாய்மையின் முடிபினை.
长
27

Page 17
டு பேப்பர் அவுட்டாம்!
இளைய பருவத் துடிப்பினேடு பள்ளி, ரியூசன் சென்று பாதிப் பணக் கல்வி இலவசமாய் மீதி பெற்றுப் படிக்கிறேன்.
உண்டது பாதி உடுத்தது பாதியாய் ஒரு கட்டுக் கொப்பி புத்தகத்துடன் தெருவெல்லாம் திரிகிறேன்.
இரவு பகல் பாராது என் அப்பா அம்மா தருகின்ற வேலையெல்லாம் தட்டிக் கழித்து தினமும் விழிதனை புத்தகத்தில் பதியவைத்து படிக்கிறேன் மனதில் பதிக்கிறேன்.
விளையாடிக் கழிக்க விழைகின்ற தூண்டல் நண்பருடன் பேசிக் கலக்கின்ற ஆர்வம் நாலுபத்துப் படம்பாத்து பொழுது போக்கும் ஆசை கற்பனை கலந்த கதைப் புத்தகங்கள் வாசித்துச் சுவைத்திடும் ஆசை இத்தனையும் சிற்சில நாள் ஒதுக்கி வைத்து விட்டு முழுமூச்சாய் படிக்கிறேன்.
பிரயாசை மிகப்பட்டு படித்த கல்வியினை பழைய விஞத்தாள் வாங்கிவந்து
28
பரீட்சித்துப் பார்த்து மன நிறைவுடன் நாளை வரும் பரீட்சைக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அந்த வேளையில் வந்து வாசலில் நண்பன் சொன்ன சேதி "பேப்பர் அவுட்டாம்" நெஞ்சில் ஒரு பேரிடி வந்து விழுந்த நினைவு மலைத்து நிற்கிறேன்
“l DTT 607 60 milltir St Gi)6anrith ஆலாய்ப் பறக்கினம் நீயோ வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிருய் GTổv Gavintuò Lurr Ligyptib அவுட்டாப் போச்சாம் டியூட்டறி எல்லாம் அவசர வகுப்பாம். நாளைய பேப்பர் இந்தா цэц கொப்பிபண்ணி உடனே தா நண்பர் பலருக்கு கொடுக்க வேணும்
என்று பல சொல்லி நீட்டுகிருன் பேப்பரை எனக்கு வந்த ஆத்திரத்தில் ஓங்கி அடிப்பதற்கு எழுகின்றேன்
ஆருக்கு அடிப்பதென்று எனக்குத் தெரியவில்லை.
- அழ. பகிரதன்

SEPTEMBER
രുത്തത്തൺ
பொருக்கு வெடித்துக் கிளம் பும் சுண்ணும்புக் காவியை சுவ ரில் மாட்டப்பட்டிருக்கும் அந்தக் கலண்டர் காற்றில் ஆடியபடி தட்டிக்கொண்டிருக்கிறது. தலை யை நிமிர்த்திப் பார்க்கிறேன்.
இன்று, 1983-ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம். முப்பத் தொராம்தேதி என்னைப் பார்த்து மிரட்டுசிறது.
வழக்கம் போல காலமேலை வந்து கதவைத் தட்டுற சத்தம். போதாக் குறைக்கு கறுவல்கள் இரண்டும் சத்தம் போடுகின: கிழவன் பொல்லையூண்டி வாற தைக் கண்டு.
துவாயைத் தோழிலை போட் டுக் கண்ணைத் துடைச்சுக் கொண்டு கதவுப் பலகைத் தடி யைக் களட்டி கதவுத் திருங்கை யிழுத்துக் கதவைத் திறந்து கொண்டு (பெரிய பாதுகாப்பான அரண்மனை), "ஜிம்மி. ஜோன்" எண்டு நான் சத்தம் போடவும் ரெண்டுபேரும் வாலைத்தாழ்த்திக் கொண்டுபோய் குந்துகினம்.
கிழவனைப் பார்த்து “வாருங் கோ. இருங்கோ. வாறன் ?? எண்டு திரும்பேல்லை; கந்தர்
0 செண்பகன்
நாளுக்கு நாள்.
வாசல்லை, 'வாருங்கோ' எண் டன் மதிப்போடை.
குணிந்து சைபூண்டி வாசல் படியிலை குந்துகிருர் கிழவன். **ஏன் கதிரேலை இருங்கோவன்" எண்டன் அன்போடை. "எங் களுக்குக் கதிரையள் சரிப்பட்டு வராது" எண்டார் கிழவன். கொஞ்சம் உறைப்பாய்த்தான். எனக்கு முகம் கறுத்ததோ. சுருங்கினதோ.
நான் அறேக்கை வந்து ரின் னுக்கையும் சுவாமித் தட்டிலையும் கிடக்கிற தாளுகளையும் சில்லறை யளையும் பொறுக்கிக் கொண்டு வந்து கதிரேலை இருந்து எண்ணிக் கணக்குப் பார்க்கிறன்.
"இரண்டுபேர். எப்பிடிச் சமாளிக்கிறது" எண்டு மலைக்க மனைவி லட்சுமி மூண்டு கோப்பி யைச் சுடச்சுட கொண்டு வந்து குடுக்கிருள். ஏதோ ஒருமாதிரிச் சமாளிப்பம் எண்ட நினைப்பு.
திரும்பவும் அறேக்கைபோய் மொத்தமான பெரிய கணக்குப் புத்தகத்தை தூக்கியந்து, வெளி விருந்தை மேசேலை வைச்சுக் கணக்குப் பார்க்கிறன். பேப்ப ரைப் பிரட்டிப் பிரட்டி வேறை
29

Page 18
யொரு கடதாசியிலை எழுதுறன். கணக்கை கடுமையாப் பார்க்கி றன்; கூட்டுறன் கழிக்கிறன். பெருக்கிப் பிரிக்கிறன் எண்டா லும் சமன்படேல்லை. எப்பிடிச் சமன்படும்? எல்லாமே மைனஸ் தான்.
நான் "கோழி மேச்சாலும் கொறணமேந்திலை மேய்க்கவே ணும்" எண்ட பரம்பரையிலை தான் வந்துதிச்சஞன். அந்த நாளிலை கச்சேரிக்குப் போறதுக்
கும் காரிலைதான் போய் வந்த ஞன் அப்பதான் லட்சுமியைக் கைப்பிடிச்சனன். இப்பவெண்
டால் கால் மிதிக்க ஒடுற சைக் கிள்ளை “கலாதியாய்? உசாராய் கச்சேரிக்குப் போய் வாறன்: காரை விக்க மனமில்லை. அது தான் அந்த கோடி மூலையிலை நிக்குது. நிண்டாலொரு நினை வுச் சின்னமாயெண்டாலு மிருக் குந்தானே.
கிழவன் பொல்லைக் குந்திலே தேய்க்குது. மருமேன் கமலன் வந்தான் முத்துக்குமாரு வீட்டுக் குக் காசுக்கு விட்டன். ஆடு வித்த காசு', 'ஏன் அவர் தேடு வான். என்னட்டையோ தம்பி வந்தனி" எண்டு ஏதோ சொல் லித் திருப்பி அனுப்பிப் போட் டாராம். கொதிகிளம்பினதான், அடக்கிப் போட்டன்.
கணக்கைப் பாத்துக் கந்த ருக்கு அரைகுறையாயிருந்ததைக் குடுத்தன். “இண்டைக்கென்ன திடீரெண்டு" என்று கந்தரைக் கண்டதும் முதல்லே கேட்டுவைச் சன். நாளைக்குத்தான் அவருக்
30
குச் சொன்ன தவணை, "அப்ப நாளைக்கு வாருங்கோவன்'. கந் தர் ஒருமாதிரிக் களண்டார்.
இதுக்கிடையிலை தங்கச்சி வாசுகி வீட்டுச் சிலவுக்கு ஒரு முந்நூறு ரூபா வேணுமெண்டு, கேட்டு மாமாவின்ரை மேள் சின்னவள் நந்தினியை விட்டிருக் கிருள்: "பொறு பாப்பம்”* எண்டு அவளை இருத்திப்போட்டு கிழவனுக்கு நோட்டைக் காட்டிக் கதைப்பமெண்டு அதைத் தேடு றன். கிழவன் புறுபுறுக்கிறது கேக்குது. வைச்ச இடத்திலை தேடுறன். காணேல்லை; லட்சுமி யும் தேடுருள்
வெளி விருந்தையிலை வந்த இரண்டு பேரோடையும் முதல்லை கதைச்சுக் கொண்டிருக்கேக்கை லட்சுமி சொன்னதாலை, இரண் டாவது மகள் கல்யாணி வீட் டைக் கூட்டினது ஞாபகத்திலை வருகுது
புத்தகங்கள் பெட்டியளைப் பிலத்த சத்தத்தோடை தூக்கி வைச்சுத் தேடுறன். லட்சுமி யைப் பார்த்துச் சொல்லுறன். இல்லை. கத்துறன். "இஞ்சை உனக்கு ஆக்களிருக்கேக்கைதான் வீட்டைக் கூட்டுவிக்கவேணும்" "இஞ்சா', 'உ6ா "கு" இரண்டை
யும் அழுத்திச் சொல்லிப் போட்
டன்.
'லட்சுமி' இந்தப் பேரை உச்சரிக்கவே இரும்பும்துரும்பான காலமொண்டு எனக்கிருந்தது. இண்டை வரைக்கும் "நீங்கள். நாங்கள்." எண்டுதான் மரியா

தையாக் கதைக்கிறம் - அப்பிடி யேதும் விஷேசமான மரியாதை யெண்டொண்டு எங்களுக்கை அவசியமோ மதரியேல்லை. ஆளுல் இப்ப. "இஞ்சா. உனக்கு",
"இதெங்கை கிடக்குது. நேத்துப் பார்த்த கணக்கிலை நூறு நூறு ரூபா வட்டியிலே குறைஞ்சுது. இண்டைக்கென்ன கணக்குப பிழைக்குது"
இதுக்குப் பிறகும் இலட்சுமி யும் தேடுருள். கிடைக்கேல்லை. ஏதோ கிடைக்கிறதை ஒண்டும் விடாமல் பொறுக்கிச் சேர்க்கி றன். ஒரு மாதிரிச் சரிப்படுகுது அதாலை "உரோசம்’ பிறக்குது.
“இண்டைக்கு sed ši 4956öbel வீட்டையெல்லே வாறனெண்டு சொன்னனன். ஏன் இஞ்சை வந்தனிங்கள்?? எண்டு வெறுப் போடையும் எரிச்சலோடையும் அக்கறை கூடினவன் GL ča காசைக் குடுத்தபடி கிழவனைப் பாத்துக் கேக்கிறன்.
*வெள்ளண்ணை வராட்டில் உம்மைச் சந்திக்கேலாது உத்தி யோகத்துக்குப் போவிடுவீர்.” எண்டார் கிழவர் அமைதியாய்க் காசை வாங்கிக் கொண்டு.
கிழவன் சொல்லுறதும் உண்மை. இண்டைக்குக் கிழவ னுக்குச் சொன்னமாரிக் காசு கிடைச்சால் வீட்டை கொண்டு போய்க் குடுப்பம் எண்டுதான் இருந்தனன். லட்சுமியிட்ட்ை கிழவன் நேத்து வந்து எங்கை' எண்டு அலுத்துப் பேசி னதும் வாசல்லை விடியவே வந்
**ஆள்
திருந்து புறுபுறுத்ததும் மனதிலை அரிக்குது.
"சொன்னல் வருவன்தா னே. ஏதோ செத்துப்போ விடு வன் எண்டமாதிரி ஒடி. ஓடி. வாறியள். இஞ்சார். கட்டா யம் உங்களுக்குப் பிறகுதான் நான் சாவன்' எண்டு ஆக்ரோ சத்தோடை அளக்கிறன்.
**காசு வேண்டேக்கை நீர் வீட்டை வந்தவுடனை பெட்டி யைத் திறந்து எடுத்துத் தந்தன். இப்ப நானெண்டால் நல்லாய் அலையிறன்' கிழவன் எரிச்ச லோடை சொல்லுருர்,
இதெண்டால் ஞாயம்தான். கிழவன் தந்த கடனுக்குப் பொறுப்பாய் கிழவனுக்கு நான் குடுத்த நோட்டையே, முந்த நாள் முதலை நான் திருப்பிக் குடுத்ததாலை, என்ரை நம்பிக்கை யிலை வட்டி வேண்டாமலே திருப் பித் தந்தது கிழவன். எண்டா லும் ஊரிலை இப்பவும் எனக்கு நாணயமிருக்குது. கடனைக் குடுக் கச் சீட்டைத் தொடங்கினன். சீட்டைக்கட்ட மாதாமாதம் சில் லறையாய்க் கடனும் வாங்கிறன். "சீட்டு முதலாளி எண்டொரு பேரும் எனக்கு வந்து வாச்சுது. இருபதுபேரை இழுத்துப் பறிக் கிறன். இப்பதான் எட்டாவது சீட்டு.
ஒரு மாதம் முந்தித்தான் சந்தியடியிலை ஒருத்தர்; சந்தை யடியிலை இரண்டுபேர். மொத் தமாய் எங்கடை பக்கத்திலை பதின்மூண்டு பேர். போன போன இடத்திலை. ஒண்டுமறி
3

Page 19
யாமை காலமை ஏழரைக்கே அநியாயமா செத்த பிணங்களா
6 go...
"என்ரை சீட்டு இருபதிலை எடுத்த ஏழிலை. ஒண்டோ. இரண்டோ. அல்லாட்டி நானுே முடிஞ்சால்..." சுவரிலை மாட்டி யிருந்த தேசிய சேமிப்பு வங்கிக் கலண்டர் என்னைப் பார்த்துப் பல்லிளிக்குது.
சரி, விசயத்துக்கு வரவே ணும். கிழவனிட்டை வாங்கின 85 Ll6ör 1700/- etj5umr; வட்டி 1530/- ருபா மூண்டு வருசத் துக்கு முந்தின கடன் 6767 l. தாலை இரண்டு வட்டிதான். ( இதிலையும் ஒருவித திருப்தி ). "அப்ப எவளவு குறைக்கிறியள்" எண்டன். "அப்பசரி. ஐம்பதை குறையுமன்” எண்டார். ‘என்ன ஐநூறையோ' எண்டு மனதிலை ஒருகணம் குதூகலம். என்ன செய்யிறது? கிழவன் ஐம்பது ரூபா எண்டுதான் சொல்லிச்சுது. அப்பிடியெண்டா வட்டி 1480/- ரூபா கொடுக்கவேணும். ஆனல் காசு கொஞ்சம் கூடக் கிடக்குது; பிறகேன் குறை வைப்பான்.
கணக்கைப் பார்த்து சரியாக 1530/= ரூபா வட்டி முழுதையும் கழிக்காமல் குடுக்கிறன். கிழவன் எண்ணிப்பார்த்துவிட்டு **ஏன்?" எண்டு என்னைப் பார்க்குது.
நான் தலையை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி "நீங்கள் இஞ்சை வந்து அலைஞ்சதுக்கு" எண்டு அவர் கழிச்ச ஜமபது ரூபாவையே கூலியாகக் குடுக்கிற
32
6) intaol
கொண்டு
தாக ஒரு பாசாங்குப் பேச்சுப் பேசுகிறன்.
முந்தநாள் பின்னேரம் இப் பிடியொருமுறைப்பாட்டோடை வந்தவள் லட்சுமி; “என்னப்பா ஊரெல்லாம் ஒரே கதையாம். ஏதோ ஒரு தங்கச்சிக்கு ஒரு வீடு கட்டிக் குடுத்தனிங்களாம். நகை போட்டனிங்களாம். அவ்வளவு தானே. இப்ப பெரியக்கா சொல்லுரு. இவ்வளவு கால மும் உழைச்சதெங்கை உன்ரை புருசனுக்கு. உன்ரை குஞ்சுகள் இரண்டும் குமராகப் போகுதுகள் வீட்டிலை இருந்து அதுகளுக்கென்னடி செய்யப்போருய். எண்டு" நியா யந்தான்!
ஓம். எனக்கு வாச்ச இரண்டு குஞ்சுகள். பெட்டை யள்தான். அதிலை என்ன?
உழைச்சதெல்லாம் எங்கை போச்சுது? கணககைக் கவன மாய்த்தான் பாத்தனன். திண்டு குடிக்கச் சம்பளம் போதுமே?
ஐம்பதாயிரம் கடன்பட்டு உரோசத்தோட மூத்த தங்கச் சிகுக் கலியானம் செய்து வைச் சன். ஆனல் கணக்கிலை ஒண் டைத் தாண்டுது கடன். எப் பிடி இந்தமாதிரி வந்தது?
இப்ப யோசிக்கக் கொஞ்சம் விளங்குது. அப்ப நவரத்தாரிட் டையும் இரத்கினம்மானிட்டை யும் நகை வேண்டித்தான் அடை வுவைச்சஞன். கொஞ்ச நாள் போக நவரத்தார் மகனை வெளி

நாடனுப்ப நகை வேணுமெண்
டார்; இரண்டு மாதம் பிந்தி இரத்தினம்மான் மேஞக்குக் கல்யாணம் எண்டார். சொன்ன சொல்லைக் காப்பாத்த வேணும்! என்ன செய்யலாம். நான் ஒரு கவுண்மேந்து உத்தியோகத்தன். சிவதாசின்ரை பெண்டில் பெரிய ஒளி. பாக்கியம் சிவயோகத் தின்ரை மேள். சிங்கப்பூர் நட வம் வீடு. மிஸ்சிஸ் சிவலிங்கம் எங்கடை இலட்சுமி. அதுதான் கோணி வீட்டு இலச்சுமி . இப் பிடியே நீண்டு வளந்த பட்டி யல்லை உள்ளதும். இல்லாதது மான சனமெல்லாத்திட்டையும் ருேலிங். ருேலிங். சொன்ன சொல்லைக் காப்பாத்த வேணுந் தானே. ஒண்டரை வரியம் ஓடி
முடிஞ்சுது. உழைச்சது- gFnTulio பாட்டுக்கும் மற்றத் தங்கைச்சி வாசுகியின்ரை செலவுக்குமாய் இழுத்துப் பறிச்சுப் பறந்து போச்சுது. முேலிங். ருேலிங். முதலும், வட்டியும் சேர்ந்து
பெத்த குட்டியள் பேரப்பிள்ளை, பீட்டப்பிள்ளை, கொப்பாட்ட னையும் கண்டதாலைதான் ஐம்ப தாயிரம் ஒண்டாச்கது. உண் மேஜல நான் மக்களைப் பெத்த மகாராசன்தான்.
நான் பெருமூச்சிலை கரைய
கிழவன் கையூண்டி எழும்பிப் பொல்லையூண்டியபடி வெளியிலை போகுது. ல்ட்சுமி என்னட் டைச் சொல்லுருள். “அது பாவம். கிழவன் ஏன் கொதிச்ச விங்கள்?? - நேத்து என்னே வீட்டிலை தேடிக் காணுமல் கிழ வன் என்னைப் பேசினதென்ப தையே எனக்குச் சொன்ன லட் தி ஏன்? எண்டு நிதானமாய்க் கேக்கிருள்.
நாகரிகத்தின் ܠܚܰܒ݂ܒ݂ܰܕ݂ Vy
தோற்றம்
மனித நாகரிகத்தின் தோற் றம் 3âou உண்டாக்க மனி தன் கற்றதுடன் ஆரம்பமா னது. அதாவது வேலையை வெப்பமாக்கலாம் என்ற கண்டுபிடிப்புடன் ஆரம்ப மானது மனித நாகரிகத் தின் அடுத்த தாவல், அதா வது நவீன யுகத்தின் தோற் றம் எஞ்சின்களுடன் ஏற்
பட்டது. அதாவது வெப்
பத்தினின்று வேலையைப் பெறலாம் என்ற கண்டு பிடிப்புடன் நவீன யுகம் உருவானது.
ட ஏங்கெல்ஸ்
ஏன்? எனக்குத் தெரியுமே? "நாளைக்கு முதலாந் திகதி. gւடுக் காசு குடுக்கவேணும். இது வரேலை எட்டுப்பேர்தான் தந்தி வை. என்ன செய்யப் பேரறி ள் லட்சுமி இதையும் கேக் கிருள். தந்த எட்டிலை இருந்து தானே இப்பவும் வறுகின்னன். 'உம். நாளைக்குத்தானே."
எங்கடை அரசன். அவன் தான் இலங்கை வேந்தனுக்கு. இராமர் சொன்னவராம்.
இப்ப. பணம் எண்ட ஆயு தத்தை என்னட்டை இழந்து பரி தவிக்கிற நவீன ராமர்களான என்ரை கடன்காறருக்கு இலங் கை வேந்தனகிய - நான் திருப் பிச் சொல்லக்கூடிய சொல்லு.
** இன்று போய். நாளை 6) umor...”
33

Page 20
சி. சிவசேகரம் - 9
ஒரு பழம் புதுக் கவிஞர்
ஆசிரியர் த. சிவராமலிங்கம் என்ற பேருக்கு உரிமையாளராக இருந்தவரும் தொடர்ந்து பிரமில் பானுச்சந்திரன், தர்மூ ஒளரூப் சீவராமூ என்பன உட்படப் பல் வேறு பேர்கட்கு உரிமையாளராக இருந்தவரும் இலங்கையின் திரு கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தர்மு சிவராமு என்ற பெயரில் புதுக்கவிதை வட் டங்களில், முக்கியமாகப்புதுக்கவி தை இயக்கத்தின் எழுச்சிக்காலத் தில், ஒரு பிரதான புதுக்கவிதை யாளராகக் கருதப்பட்டவருமான எழுத்தாளரின் கவிதைகள் பற் றிச் சற்றே எழுதலாம் என்று நினைக்கிறேன்.
தர்மு சிவராமுவின் கவிதை கள் பற்றி விமர்சிப்பதில் அவற் றின் உள்ளடக்கம், கவித்துவம் என்பனபற்றியே எழுத விரும்பு
கிறேன். அவரது இலக்கியக் கொள்கையையும் சமுதாயப் பார்வையையும் முடிந்தவரை
அவரது கவிதைகள் மூலமே காண முனைகிறேன். அவருக்கும் அவரது இலக்கிய வட்டத்துக்குமிடையி லான வாதங்களில் கைவைக்க நான் விரும்பவில்லை. தர்மு சிவ ராமு தன் கவிதைகட்கு வழங்கிய முன்னுரைகளைக்கூட என் விமர்
34
சனத்தில் நேரடியாகப் பயன்படுத் தாமலிருக்க முயற்சிக்கிறேன்.அவ ரது அரசியல், சமுதாயக் கொள் கைகள் தெளிவீனமானவை. அவ ரிடம் கம்யூனிஸ் விரோதமும் வெகுசனங்கள் பற்றிய கீழான மதிப்பீடும் போக, வலிமையான முரண்பாடற்ற அடிப்படை எது வுமே இல்லை. அவர் தன்னைப்பற்றி வைத்திருக்கிற உயர்வான அபிப் பிராயத்தைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. அவரது இலக்கியக் கொள்கையை விவாதிப்பதற் குரிய இடமும் இதுவல்ல. இக் கட்டுரையை அவரது கவிதை பற் றிய ஒரு மறுபரிசீலனை என்று கொள்ளலாம். தமிழ்ப் புத்தி ஜிவி வட்டாரத்தில் ஒரு பரவ லான மனுேபாவம், தெளிவாக எழுதுபவனை நல்ல ஆசிரியனுக ஒப்புக்கொள்ளலாம். ஆனல் எல் லோருக்கும் விளங்கக்கூடியதை எல்லோருக்கும் விளங்கக் கூடு மாறு எழுதுபவன் எப்படி மேதை யாக முடியும்?
எனவே புதிர் போடுகிறவன் மேதையாகிருன். புதிர் கூட என்னவென்று புரியாதவாறு எழு துபவன் ஞானியாக,யோகியாக, ரிஷியாக உயர்ந்து விடுகிமுன். தர்மு சிவராமுவைத் தூக்கிப்
 

பிடித்த கூட்டம் இப்போது கொஞ்சம் ஓய்ந்துவிட்டது. கார ணம் அவர்களது அறிவு தெளி ந்துவிட்டமையோ Ligi Gurtl. நிறையப்பேர் முளைத்துத் தமிழக் கவிதை: பழைய விடுகதையும் அல்ல புதிய விடுகதையுமல்லி என்ற உண்மை அவர்களுக்குத் தெளிவாகிவிட்டமையோ, புதிர் கவிதையை அவர்களால் மேலும் ஒரு படி உயர்த்தவோ அதன் மூலம் உண்மை"யைக் காணவோ காட்டவோ முடியாமற் போன மையோ எனக்குத் தெரியாது. ஆனல் எழுத்து" பத்திரிகை தொடக்கி வைத்த புதுக் கவிதை இன்று மரித்துப்போன ஒன்று.
தர்மு சிவராமு கவிதைகளில் அவரது படிமங்கள் முக்கியத்து
வம் பெறுகின்றன. வெறும் படி
மம் கவிதையாகிவிடாது. ஒரு படிமக் கோவைகூட கவிதையாகி விடாது.
பூமித் தோலில் அழகுத் தேமல் பரிதி புணர்ந்து படரும் விந்து இருளின் சிறகைத் தின்னும் கிருமி. வெளிச்சச் சிறகில் மிதக்கும் குருவி. மேற்படி "கவிதை” விடிவின் சித்தரிப்பு. இதுபோல மேலும் சில உள்ளன. இங்கே படிமங்கள் நான்கு ஒன்றுக்கொன்று உற
வற்று நிற்கின்றன. (அர்த்தம் பற்றிய கேள்விக்கே நான் வர வில்லை) இங்கே கவிதை தரக்
கூடிய ஒரு அனுபவத்தை என்
குற் பெறமுடியவில்லை. இதை விட ஆழமான அர்த்தத்துடன்,
அணுவின் துகளில் முளைத்த sisterfrøðr . கூடு பிளந்து எழுந்த பூதம் அறிவின் தகனச் சுடலை மேகம். என்று அணுகுண்டு பற்றி எழுதினலும் (இது தர்மு சிவரா முவின் கவிதையல்ல) அது கவி தைக்குரிய அனுபவ முழுமை யைத் தராது ெ
கல்வீச்சு என்ற தலைப்பில் இன்று (அதாவது இக் கணம்) என்பதே நேற்று நாளை ஆகிய இரண்டுக்கும் காரணமாகின்றது என்று சுட்டிக்காட்டுகிருர்:
காலக் குளத்தே நாளை நேற்றென்றே அலையேன் புரள்கிறது? "இன்று”எனும் கல்த்துளிகள் விசி விழுவதனல்,
கல்த்துளி என்பது ஒரு புது மையான வார்த்தைப் Gg Gunr கம். ஆனல் அந்த வலிமையான கற்பனையின் வளம் வார்த்தைப் பிரயோகத்துக்குள் மட் டுமே அடங்கி விடுகிறது. இன்று என் பதைக் குறிக்க கற் துணிக்கைகள் போதாது போகின்றன. ஒவ் வொரு அலையுமே நேற்ருகவும் நாளையாகவும் அமைவதோடு அல் லாமல் இன்ருகவும் நின்று இயக் குகிறது.மேலோட்டமாகப் εμπιήό கும்போது (சில வேளை யாருக்கும் பிரமிப்பூட்டக்கூடிய இந்தப் படி மம் நிதானமாக யோசிக்கும்
35

Page 21
போது தன் போதாமையை வெளிப்படுத்திவிடுகிறது. கவிதை மட்டுமல்ல, ஒரு சிந்தனையாகவே கூட இது ஒரு குறைப் பிரசவம் தான். இவ்விதமான பல கவிதை களை தர்மு சிவராமுவின் ஆரம்ப கால எழுத்துமுயற்சிகளின் குறை பாடுகள் என்றே ஒதுக்கிவிட்டா லும் அவரது பிற்காலப் படைப் புக்களிலும் இந்தவிதமான ஆழ மின்மை ( அல்லாதவிடத்துக் கருத்துக் குழப்பம்) தலைநீட்டவே செய்கிறது, குருக்ஷேத்ரம்" கவி தையில்,
இன்று வேலை நிறுத்தம் ‘கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே" என்று சொல்லி விட்டுக் காரில் நழுவப் பார்த்த கண்ணபிரானுக்குக் கல்லடி. சுவரெங்கும் பசிவேத சுலோகங்கள். அர்ச்சுனன் கிளைத்து அரக்கணுப் காத்த வீர்யார்ச்சுண்ணுய் தலை ஆயிரம். கை இரண்டாயிரம் கண்ணபிரான் நெற்றியிலே உதிரத்தின் நாமக்கோடுகள் விஸ்வரூபத்துக்காக முயற்சிக்க வலுவில்லை. இருந்த கால்களில் எழும்ப முயன்ருன் கீதையைக் கேட்க அர்ச்சுனன் இல்லையென்ருல் கூப்பிடு கெளரவரையென்ருன் பறந்தது போன் செய்தி பொலீசுக்கு.
36
இங்கே அர்ஜுனன் தொழி லாளிகளைக் குறிக்கிருன், பொலி ஸார் கெளரவர் என்ருல் கண் ணன் யார்? முதல்ாளி என்றே தென்படுகிறது. முதலாளி-தொ ழிலாளி உறவு கிருஷ்ணுர்ஜ"ன உறவா? பொலிஸ் முதலாளிக்கு எப்போது எதிர்த்தரப்பில் இருந் தது? கண்ணபிரான் ஒருவேளை கருங்காலியோ அல்லது தொழிற் சங்கத் தலைமையிலுள்ள துரோ கியோ என்ருல் கூட கெளரவர் எப்படிப் பொலீசாராக முடியும்? தொழிலாளி போராடுவது முத லாளி வர்க்கத்துக்கு எதிராக அல் லவா? பொலீசார் கெளரவரின் சேனை என்று வேண்டுமானல் வைத்துக்கொள்ளலாம். ஆனல் கடமையைச்செய் பலனை எதிர் பாராதே என்பது எங்கே பொருந் துகிறது? கீதோபதேசமே அது தான? தர்மு சிவராமுவுக்கு வெகு ஜனங்கள் என்ருலே கும்பல், சிந் திக்கத் தெரியாத முட்டாள்களின் கூட்டம். அதை இழிவுசெய்யும் பணியில் கீதையையும் கொச்சை பண்ணிவிடுகிறர். இங்கே ஒரு சராசரியான கிண்டல் உள்ளதே தவிர கவித்துவமோ முழுமை யான ஒரு குறியீட்டு முறையோ உருவாகவில்லை. Աrf6ֆ "հյո, நம்பிக்கை என்ற கவிதைகளும் இத்தகைய குழப்பத்தையே ஊர் ஜிதம் செய்கின்றன.
மாக்ஸியத்தை அறியாமல் மாக்ஸியம் பற்றித் தன் மனதில் ஏற்படுத்திக் கொண்ட ஒரு படி மத்தை மட்டுமே அடிப்படையா கக் கொண்டு அதைத் தாக்கி அழிப்பது என்று கங்சணங்கட்டி நின்றவர்கள் வரிசையில் இன்னெ

ருவர் என்பதை விட தர்மு சிவ ராமுவின் சமுதாயப் பார்வைக்கு அதிக முக்கியத்துவம் வழங்க என் ஞல் இயலவில்லை.
புதுக்கவிதை எனப்படுகிற படைப்புக்களில் பெருவாரியான வற்றுள் கவித்துவம் சாராத அம் சங்களில் புதிர்போடுவதும் வரட் டுத் தத்துவம் பேசுவதும் உள்ள டங்கும். தர்மு சிவராமுவிடம் இவ்விரண்டையும் காணலாம். அவரது குத்தலான நகைச்சுவை உணர்வு காரணமாக அவரது கவிதைகள் சிலவற்றை ரசிக்க முடிகிறது. அவரது கவிதையில் வலிமையான அம்சமே, என்னள வில், அவரது சாதுரியமான குத் தல் தான். அவர் போடுகிற புதிர்கள் சராசரிப் புதுக்கவிதைப் புதிர்களை விட ஒரு படியாவது உயர்வாக இருந்தாலும் அங்கு மனதில் தங்குகிற மாதிரி அதிகம் இல்லை.
தாசி
"குலக்கொடி நான் ஆனல் இது V பசிக்கொடுமையில்" என்ருய் எனவே நான் பேரம் பேசவில்லை;
விழித்தெழுந்த போது கண்டேன் உன் கண்களில் ஒரு மலட்டுத்தனம்.
நேற்றிரவு பேரம் பேசியிருக்கலாம்
என்ற பாங்கில் விபச்சாரி
ஒருத்தியுடன் ஒருவனது அனுப வத்தின் சித்தரிப்பும் "நிகழ மறுத்த அற்புதம்" என்ற கவிதை யில் ( ராமன் உணர்வு பூர்வமாக மிதிக்கிருன், கல் உயிர்க்க மறுத் தது. )
**த்ஸ்" என்முன்
மனிதன் ராமன்.
வழி நடந்தது
அவதாரம், என்று வரும் வரிகளும் அவரது குத்தலான கிண்டலுக்கு இரு உதாரணங்கள். இதிலே அவரது ஆழமான தத்துவச் சிந்தனைகளைத் தேடுவோர் இருக்கலாம். அவர் களுள் நான் இல்லை. சில கவிதை களில் துளியும் ஆழமே இல்லை. இந்தியமரபில் கேட்டுப் புளித்துப் போன தத்துவக் கருத்துகள்கூட தர்மு சிவராமுவின் "ஞானத்தை" ஒரோரு சமயம் மிஞ்சிவிடுகின் றன. உதாரணமாக,
வழி வயிற்றுப்பசி தீர்க்க வாராதா என்றேங்கி மழைக்கு அண்ணுந்த
5650756 கண்டு கொண்டன. өoуптолub எல்லையற்றது.
அதே சமயம் இந்திய மரபில் மாயை பற்றிய பார்வையைப்
பயன்படுத்தி அவர் படைத்த
கவிதையில் மிக ஆழமாக ஒன்றும் இல்லையென்ருலும் “அருவுருவம்" என்ற அக்கவிதையில் செம்பாறை யாகத் தோன்றிய களிமண் பாறை என்று அதை உதைத்த
37

Page 22
போது காலில் குத்த அது பாம் பென்று கிறது. பின்பு நெருங்கிப் பார்க்க அது செம்பாறையே என்று தெரி கிறது.
காவியம்
சிறகிலிருந்து பிரிந்த / இறகு ஒன்று / காற்றின் தீராத பக்கங் களில் / ஒரு பறவையின் வாழ் வை / எழுதிச் சென்றது.
என்ற கவிதையும் ( அவர் இதை முதலில் ஆங்கிலத்தில் எழுதினர்.) እ
'அவனுக்கு ஏழே வயதாய் இருக்கலாம் / ஆனலும், பார் / அவன் காற்றை அடக்கிவிட் டான் / ஒரு காற்ருடிகொண்டு' என்பதும் ( பின்னையதன் மொழி பெயர்ப்பு எனது ) மிகவும் சரா சரியான சிந்தனைத் துணுக்குகள்.
கவிதை வட்டத்தில் விஞ்ஞா னம் தெரிந்தவர்கள் கொஞ்சம்
குறைவு என்பதாலோ என்னவோ
E=Mc2 என்னும் தலைப்பில் அவ ரது கவிதைக் குழறுபடிகள் தப்பி விடுகின்றன. அஜீரணமான விஷ யங்களை வைத்துக்கொண்டு வித் தை காட்டுவதில் அவருக்கு மாக் ஸியம் மட்டுமே அகப்பட்டது என்று யாரும் சொல்லிவிட முடி யாது. விஞ்ஞானமும் தான். "ஊமை” கவிதையில், "நட்சத் திரங்களைவிட நியைவே பேசுவது
அவற்றிடையே உள்ள இருள்”
என்பது வருகிறது விஞ்ஞான ரீதியான ஒரு உண்மை. இதை ஊமை " பேச்சுக்கும் அப்பாற் தாண்டிக்" கண்ட கலையென்று
38
மனதில் பயமுறுத்து
முனையும் ஊமையின் சமிக்ஞையைக் குறிக்க முற் படும்போது, ஊமையின் சமிம் ஞை பேச்சுக்கு அப்பாற் தான் டிய விஷயம் இல்லை என்பது ஒரு புறமிருக்க, வலிந்து திணிக்கப் பட்ட விஞ்ஞானத் தகவல் உண் மையில் அவர் சுறவந்த கருத் துடன் நன்கு உபின்படவில்லை.
காட்ட
தர்மு சிவராமுவைத் திறமை
யற்றவர் என்று ஒதுக்க நான் முயலவில்லை. ஆனல் அவரது சமுதாய உணர்வின் போதாமை பல விஷயங்களை ஆழமாக அணுக முடியாமல் அவரை மறித்துவிட் டது என்பது என் கருத்து. அவ ரது கவிதைகள் எதையோ சொல்ல முனைகின்றன. ஆனல் சொல்ல முனைந்தது, அங்கு இல் லாததாலோ அல்லது கவிதை மூலம் ஒரு முழுமையான அனு பவத்தை அவரால் பரிமாறவோ பகிரவோ இயலாது போன தாலோ (கொஞ்சம் சிரமப்பட்டு வாசகனுக்கு ஒருபடி மேலேயே சஞ்சரிக்கும் நிர்ப்பந்தம் காரண மாக?) அகப்படாமல் நழுவிவிடு கிறது. பல புதுக்கவிதையாளர் களிடம் காண முடியாத ஒரு வேகத்தை அவரது கவிதைகளில் (எப்போதும் இல்லாவிட்டாலும் அடிக்கடி காணலாம்.
"சேற்றில் விழுந்த சொற்கள்
தானியமாயின.
புற்றரைமீது பூக்களாயின.
போன்ற வரிகள் பைபிள் வாசகங் களை நினைவூட்டினுலும் அங்கு கவித்துவமான புதுமை இல்ாை மல் இல்லை.

கவிதை பற்றிய அவரது கவிதை அவரது திறமையான எழுத்துக்களில் ஒன்று- ஆயி னும் அதன் புதிர்த்தன்மைதான் முதலில் மனதில் படுகிறது. திமிங்கிலம் பிடிக்கக் கப்பலேறி/ கடல் நீர் குழிபறித்தேன்;/ வந்து கல்வி / வசப்படுமென்று / புலிக்கு இரையாய்/தூண்டிற்புழு தொங்க விட்டு/மரத்திலேகாத்திருந்தேன்/ தூண்டில் துளிர்த்து / இலையிலுரர் ந்து / வசமாயிற்று / புயல் / நீர் சுழன்று குழிந்து/பிடிபட்டது/ பிர
6I'll ILD,
கவிதையின் தற்செயலான தன்மையை வலியுறுத்தும் இக் கவிதையை எடுத்த எடுப்பில் புரிந்துகொள்வது பெ ரும் பா லான /வாசகர்கட்குச் சாத்திய மில்லை. (அவர்களைப்பற்றி அவ ருக்கும் அக்கறையில்லை?)
ஆளுல் தர்மு சிவராமு ஒன் றும் பெரிய மேதையும் இல்லை. இன்று புதிர்களும் அரை வேக் காட்டுத் தத்துவங்களும் மலிந்து விட்ட இந்தியத் தமிழ்ப் புதுக்
முக்கியத்துவம் அதன் முன்னேடி என்ற அளவில் நிலைக்கும். அந்த அளவை மீறி அவரது கவிதையை நிலைக்கவைக்க அவசியமான ஒரு பரிமாணம் அவரிடம் இல்லை. தர்மு சிவராமு தன் வரட்டுத் தனத்தால் தன் திறமைக்கே வேலியிட்டுக்கொண்ட ஒருவர் என்றுதான் எனக்குப் படுகிறது.
அவரது கம்யூனிஸ எதிர்ப் பும் வக்கிரமான சமுதாயக் கண் ணுேட்டமும் எப்போதும் தன் னையே மையமாகக் கொண்டு முழுச் சமுதாயத்தையும் தன் தேவைகளை ஒட்டி அமைந்த ஒன் முக நோக்கும் ஒரு பார்வையின் வெளிப்பாடுகளே. சமுதாயத்தி லிருந்து ஒதுங்கி வாழ்ந்த யோகி களும், ஞானிகளும், சித்தர்களும் காலங்காலமாக இருந்திருக்கிறர் கள். தர்மு சிவராமு அந்த ரகம் இல்லை. நிச்சயமாக அவரது கவி தைகளில் தெரிவது ஞானமே அல்ல-மனித நேயமின்மைதான் ஞானத்தின் அடையாளமென்று
* யாரும் கருதினலொழிய:
கவிதையில் தர்மு சிவராமுவின் O
4t ། O f go ஆ மாணவர்களும் கல்குலேற்றர்களும்
வட அமெரிக்காவில் பெருவாரியான இளம் மாணவர்கட்கு எண்களைக் கையாளும் திறமை குறைவாகவே உள்ளது. இதன் காரணம் முறையான கணிதப்பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுப் பயில்வதற்கு முன்னமே கல்குலேற்றர்களையும் கொம்பியூட்டர்
களையும் பாவிக்க ஆரம்பித்துவிடுகிருர்கள்.
கணித அடிப்படை
கள் பற்றிய தெளிவின்றி இயந்திரரீதியாக இந்த வகையான உபகரணங்களைப் பயன்படுத்துவது அறிவுக் கூர்மையின் வளர்ச் சிக்குப் பாதகமானது என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். ஆயினும் கல்குலேற்றர்கள் கொம்பியூட்டர்கள் இன்று சாதா
ரண வியாபாரப் பண்டங்களாகி விட்டன. உபயோகத்தை நெறிப்படுத்துவது மிகவும்
மாகியுள்ளது:
எனவே அவற்றின் சிரமமான காரிய
39

Page 23
o O -- ம. சண்முகலிங்கம் நாடகம
நாடகமேடையின் முன்திரை விலகப் பின்திரையில் நீல ஒளி படர்கிறது. வேறு ஒளி மேடையில் இல்லை. இருளுருவங்களாக நடிகர் தெரிவர். அவர்கள் புகையிரத வீதியொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது அவர்கள் பாடும் பாடலிலிருந்தும் அவர்களது ஊமச் செயல்களிலிருந்தும் புலப் படுகிறது. "ஏலேலோ", "ஐலசா" ஆகியவற்றை அனைவரும் சொல்லுவர். a
அனைவரும். ஏலேலோ!. ஐலசா!. ஏலேலோ ஐலசா
ஏலேலோ ஐலசா!
உரைஞர்: ஒரு தட்டு - ஏலேலோ
மண்ணெடுத்து - ஐலசா நான் போட்ட - ஏலேலே! ரயிலு ருேட்டு - ஐலசா நான் போட்ட - ஏலேலோ! ருேட்டுக்குள்ளே - ஐலசா? நம்ம துரை - ஏலேலோ! வருவாரிப்போ - ஐலசா! நம்ம துரை - ஏலேலோ! வந்தவுடன் - ஐலசா! நமக்குப் பணம் - ஏலேலோ! தருவாரிப்போ - ஐலசா! கொடுக்கிறது - ஏலேலோ! ராணித்துட்டு - ஜலசா! எடுக்கிறது - ஏலேலோ! மணிப்பிரம்பு - ஐலசா!
"நம்ம துரை வருவாரிப்போ" என்ற அடி வரும்போது இது வரை மேடையின் முன் இடது புறத்தில் நின்று பாடிக்கொண் டிருந்த மூன்று உரைஞர்களில் ஒருவர் இரண்டடி விலகிநின்று, துரைபோல் ஒரு தலைப்பாகையை அணிந்து, வாயில் ஒரு புகை பிடிக்கும் “பைப்பைக்' கொழுவிக் கொண்டு, கையில் பிரம்புடன் ஆயத்தமாக நின்று, பாடல் முடிவடைய கம்பீரமாக ராஜநடை போட்டு வீதியமைப்போரிடம் சென்று நிற்க, மேடையில் ஓரளவு
40.

ஒளி படர்கிறது. உடனே வீதி அமைப்போர் ஒருவர் பின் ஒருவ ராக வரிசையாக நின்று முன்னுக்கு நிற்பவரின் தோள்களை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு, குந்தியிருப்பர். துரை. வரிசை யின் நடுப்பகுதியில் இருக்கும் ஒருவரது தோளில் ஏறி இருக்க, எல்லோரும் எழுந்து நிற்பர். (யாராவது தோளில் ஏறியிருந் தால்தான் இவர்களால் எழுந்துநிற்க முடியும்போலும்) மற்று மொரு உரைஞர் பச்சைக்கொடி காட்டி "விசில் ஊத, வரிசையில் நிற்பவர் "கூ.!"என்று கத்த, எல்லோரும் புகையிரதம்போல் அசையத் தொடங்குவர். அவர்கள் "சுக்குப் புக்கு’ என்று கத்திய வண்ணமே ஒடுவர் ஐந்து தரம் 'சுக்குப்புக்கு" சொன்ன பின்னர் உரைஞர் ஒருவர் முன்னர் பாடிய ‘ஒரு தட்டு" பாடலை பாடு வர். றெயில்" விடுவோர் "ஏலேலோ", "ஐலசா' வுக்குப் பதிலாக "சுக்குப்புக்கு" வைச் சொல்லுவர். இவ்வாறு பாடல் முடியுமட்டும் *றெயிலோடிவிட்டு மேடையின் பின் இடது புறத்தால் வெளி யேறுவர். வெளியேறியதும் மேடையில் இருள்,
இதையடுத்து மேடையின் முன் இடதுபுறத்தில் ஒரு ஒளிப் பொட்டுப் பிரகாசிக்கிறது. அந்த ஒளியில் உரைஞர் மூவரும் நிற் பது தெரிகிறது,
1; வந்தனம் கூறுகிருேம் - இங்கு வந்த அனைவர்க்கும்
கைகளைக் கூப்பி - வந்தனம். 2: வந்தவுடனேயே நாங்கள் - உம்மை வந்தனை கூறி
யேன்வரவேற்கவில்லை - வந்தவுடனேயே. 3; நொந்துபோயுள்ளோமையா - நாம் நித்தமும்
வந்தனை கூறியேவந்து-நொந்துபோ. 1; நொந்தவலுப்பிலே நாங்கள்-ஊரில்
வந்தனை கூறி வணங்குதல் விட்டோம் -நொந்த.
மேடை முழுவதும் படிப்படியாக ஒளி படர்கிறது. அங்கு பலர் கடினமான வேலைகளைச் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். பின் வரும் பாடல்களின் பொருளுக்கேற்ப அவர்கள் அசைவுகளும் சைகைகளும் அமையும். உரைஞர் பாட, ஒவ்வொரு இரண்டா வது அடியின் முடிவில் இவர்கள் முதலாவது அடியைத் திருப் பிப் பாடுவர்.
உரைஞர்
2: கல்லுடைத்ததும் நாமே - நல்ல
கல்வீதி அமைத்ததும் நாங்களே ஐயா - கல்லுடைத். 3. சொல் லொணத்துயர் பட்டு - இங்கு
புகைவண்டி வீதியும் அமைத்தோமே ஐயா - சொல்.
41

Page 24
: ராஜ காரியமென்றே - எம்மை
அடிமைகள் ஆக்கினர் அன்றைய அரசர் - ராஜ காரி. ராஜ அதிகாரம் மாறி -- இன்றும்
எம்மையே நம்சிலர் ஆள்கிருர் போங்கள் - ராஜ அதி. "பீ டபிள்யு டீ" என்றும் - மற்றும் "சிஜிஆர்" என்றுமே வந்திட்டபோதும் - பி டபிள்யு. பிக்கான் மண்வெட்டி யோடு ட இன்றும் வீதிகள் அமைப்பவர் நாங்களே ஐயோ! - பிக்கான்.
உரைஞர் முன் இடதுபுறத்தில் ஒதுங்கி நிற்க, வீதி அமைத்
தவர்க
-9}6)iti:
அவன்:
ள் உரிய அசைவுகள் நடிப்புக்களுடன் பாடுகின்றனர்.
ஊருக்கு வீதிகள் போட்டோமே நாங்கள் நாட்டுக்கு ருேட்டுக்கள் போட்டோமே நாங்கள் வீட்டுக்கு நாம்போக ருேட்டுக்கள் இல்லை வளவுக்கு நாம்போக ஒழுங்கையும் இல்ஜல.
சின்னவன்: வீதிக்கு நாம்வர வழிகளும் இல்லை.
அப்பு:
ஆச்சி:
வீட்டுக்கு வாகனம் வானத்தால் 6UGGuDir? ஆசுப்பத்திரிக்கு நோயாளி போக வீட்டுக்கு வாகனம் வரவோ வழிஇல்ஜல! செத்தவரை பாடையிலே சுமந்து செல்லுமாப்போல் சுகவீன காரரை நாம் தோளிலே SrLDL Glittlh |
சிறியவன்; இந்தநிலை இன்றுங்கூட எங்களுக் குண்டு
இருபதாம் நூற்ருண்டின் இறுதியிலு முண்டு!
ஒவ்வொருவரும் தத்தம் மனநிலைக்கேற்ப பல்வேறு உணர்வு களை வெளிப்படுத்தியவாறு உறைநிலையில், மேடையில் பரவி நிற்க -
உரைஞர்
2:
42
இப்ப காணிவிலை ஏணியிலை ஏறுது ருேட்டுக் காணியெல்லாம் ருெக்கட்டிலை ஏறுது. அதைக் கண்டிட்டு எங்கடை பெரிய வளவுக்காரர் அந்த நாளையிலை நாட்டாண்மை வேளையிலை பார்வைக் கெட்டிய தூரமெண்டும் கூப்பிடு துலையெண்டும் ' கல்லெறிஞ்சு எல்லை வச்சும் களவிலை முடிச்ச பளமுறுதித் தோம்புக&.

2. பச்சைக் கற்பூரம் மணக்க
கிண்டி வெளியாலை கிளறி எடுக்கின. 3; நாலு தலைமுறையா தலைவச்சுப் படுக்காத
திசை திரும்பி வருகினை காணியளைத்தேடி. 1. அந்தக் காலத்தில் அந்தக் காணிகள்.
என்று நிறுத்தி, உரைஞர் அங்கு உறைநிலையில் நிற்கும் அவர் களைப் பார்க்க, அவர்கள் விடுபட்டு96.jri ஒழுங்கை காணுத கலட்டுக் காணி,
ஒரு விதையும் முளைக்காத மலட்டுக் காணி. அவன்: இந்த வனந்தரத்திலை,
பாறை நிலத்திலை, அப்பு: சுண்ணும்புக்கல்லு காலை இடற
நெருஞ்சி முள்ளு பாதத்தைத் தைக்க ஈச்சம் முள்ளுப் பழுவறையிலை கீற நாயுண்ணிப் பத்தை முதுகைத் தடவ சின்னவன். அந்த ஆறுதல்லை
கொட்டில் கட்டிக் குடியிருந்து குட்டிச்சுவரிலை சாஞ்சிருந்து சிறியவன்! மூண்டு தலைமுறை முடிஞ்சு போச்சு!
96htti; தலைமுறை மூண்டும் தலையிலை சுமந்தே
- தெருவைக் கண்டம் வாகனம் ஏறினம். இதன் முடிவில் இவர்களில் அவர்”, “அவன்”, “சின்னவன்", "சிறியவன்' ஆகியோர் ஏதோவொரு தீர்மானமான தீர்வுக்குரிய உணர்வுடனும், "ஆச்சி", "அப்பு" ஆகியோர் ஆற்றமை உணர் வோடும் உறைநிலையில் நிற்க, உரைஞர், "ஒரு தட்டு மண்ணெ டுத்து" என்ற பாடலை, "ஏலேலோ", "ஐலசா" இல்லாமல் வெறு மனே கேலித் தொனியில் பாடியபடி, உறை நிலையில் நிற்பவர் களுக்கு மத்தியில் உலாவி வருகின்றனர். பாடியபின் உரைஞர் மீண்டும் முன் இடத்தில் நிற்க, உறைநிலையிலிருந்தவர்கள் விடு பட்டுத் தம்முள் உரையாடுகின்றனர். அவன்: நாலு தலைமுறையா இருக்கிறம்
நாங்கள் இந்தக் காணியிலை. அவர்: ஒழுங்கா வந்து போக
வீடுகளுக் கொழுங்கை இல்லை. சிறியவன்: வண்டில் இழுக்கேக்கை நாம்பன்
ஒண்டுக் கிருந்தால் விழும் ஒழுக்கைப்போல். சின்னவள்: வளைஞ்சு நெளிஞ்சு போற ஒற்றையடிப் பாதையில்,
43

Page 25
அப்பு: காலாதி காலமா நடந்து திரியிறம். அவர் வழியொண்டு விடச் சொல்லி வளவுக் காரரைக் கேட்டியள் முடிவா அவர் சொன்ன தென்ன!! வளவுக்காரரைச் சந்தித்துக் கதைப்பதுபோல் இவர்கள் உரை யாடுகின்றனர். மூன்று உரைஞரும் உடனே தலைப்பாகை அணிந்து கையில் பிரம்புடன் வளவுக்காரராக நிற்க, இவர்கள் பணிவுடன் சென்று அவர்களிடம் உரையாடுகின்றனர். உரை 2: ஏது எல்லாரும் கூட்டமா வந்தாச்சு?
, 3: ஏதும் கலியாணம் செத்தவீடு சாமத்தியத்துக்கு,
வெத்திலை வைக்க வந்திட்டியளோ? 1: வெறுங்கையோடை நிக்கிறியள்? அவர் எப்ப எங்கடை கை நிறைஞ்சிருந்தது?! சிவன் வெறுஞ் சிரட்டைதானே எப்பவும் எங்களுக்கு உரை 2 உறுட்டும் பிரட்டும் சிரட்டையும் கையும் அப்பு: எங்கடை குடியிருப்புகளுக்குப் போக ஒரு பாதை வேணும் ஐயா. உரை3: பாதையோ? இப்ப பெருத்திட்டியளோ?!
, 1: இவ்வளவு காலமும் வீடுகளுக்குப்
போகாமலே இருந்த நீங்கள்? ஆச்சி ஒற்றையடிப் பாதை ஐயா, கல்லும் கலடுமையா! உரை 2 பொத்தடி வாயை காணிவிக்கிற விலையிலை, எங்கடை
செம்பாடுகளுக்காலை பாதைவிடப் போறியளோ?1. Litró65?!!... , 31 சேட்டை விட்டியளோ கொட்டிலெல்லாம் கொழுத் தித் தெருவிலை விடுவம், குடியிருக்க உங்களை!! அப்பு: நோய் நொடி வந்து பாடாய்க் கிடக்க
பாடையாய்க் கட்டில்லை ஆளைக் கிடத்தி. சின்னt நாலுபேர் தோள்ளை சுமந்து நடந்து கால் மைல் கடந்து தெருவைக் கண்டு சிறிய காரிலை ஆளைக் கிடத்திக் கொண்டு
ஆசுப்பத்திரிக் கோடுறம் ஐயா ! உரை 1: காரிலை ஏன்ரு கொண்டுபோறியள்?
கால்நடையாகச் சுமந்து போங்கோ. , 2: காசும் மிச்சம், காலுக்கும் நல்லது.
44

esař:
பகிடியை விடுங்கோ: பாதைக்கு வழியைச் சொல்லுங்கோ கேப்பம்.
உரை 1: பாதைக்கு வழியோ!!??
பாடைக்கு வழிதான் தேடுருய் இப்ப 2 கணக்கக் கதைச்சால் கலட்டியை அடைப்பம்! 3; பறந்துதான் பேந்து வீட்டை போவியள்.
அப்பு: தயவுபண்ணி உதவுங்கோ ஐயா. உரை1: போடா வெளியாலை!! உதைவேண்டாமல்!!
2.: Gштiћ (3asrt-п"! I Gити - т!! 3 அகண்ட பாதை கேட்டு வருகின!
ஊர்வலம் நடத்தப்போகினையாக்கும்!
-அவர்கள் அனைவாரும் தத்தம் மனப் பாதிப்புக்கேற்ற உணர்வு களுடன் மேடையின் வலதுபுறத்தால் வெளியேறுகின்றனர். வள வுக்காரர் மூவரும் முன் இடத்தில் ஒன்ருக நெருக்கமாகக் கூடி நிற்கின்றனர். அவர்கள்மீது ஒரு ஒளிப்பொட்டுப் படர மேடை ஒளி அணைகிறது
உரைஞர்
1 :
உவங்கள் இப்ப முன்னப்போல இல்லை.
2. சேட்டை விடப் பாக்கின. 3. நாளைக்கே எங்கடை கலட்டுக் காணியளை அடைச்சுப்
போடவேணும். 1: எதாலை போவினை வருவினை எண்டு பாப்பம். 2. ஒண்டு சொல்லுறன். நாங்கள் இப்ப நூலிலை நிண்டு புடியாமல் ஆளுக்காள் விட்டுக்குடுத்து, அங்காலை இங் காலை வேலிபோட்டு அறுக்கை பண்ணிப்போடவேணும். உரைஞர்:
3: கூடிக்குறையிறதுகளைப் பேந்து பாப்பம். 1: ஒம், உதில் நிண்டு நூல் பிடிச்சு மினக்கெட்டால் எல்லாம்
கெட்டுப்போம். 2; சரி, வெளிக்கிடுங்கோ., வேலிபோட வேண்டியதுகளைக்
கவனிப்பம், 3: என்னட்டைக் கிளுவை நிக்கிது.
நான் "டக்டரைப் பெட்டியோடை அனுப்பிறன். 2. நான் ஆள் கொண்டுவாறன்.
வளவுக்காரரான உரைஞர் இடது புறத்தால் வெளியேற, மேடையில் இருள் படர்கிறது. பின் திரையில் நீல ஒளி படர்
கிறது
இடது புறத்தால் பலர் மேடைக்கு வந்து வேலி போடும்
45.

Page 26
தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பது அங்கிருந்து கேட்கும் உரை யாடல்களாலும், நடைபெறும் செயல்களாலும் புலப்படுகிறது. உரைஞரும் தலைப்பாகை பிரம்புடன் நிற்பது தெரிகிறது. எல் லாம் இருளுருவங்களாகத்தான் புலப்படும். இடை இடையே "எதையோ? போத்தலிலிருந்து "கிளாசில்? வார்த்துக் கொடுப் பதும் தெரியத்தானே செய்யும் -
3: "டேப்' பெட்டியைக் கொண்டாடா. பிடியடா மேற்
குக் கிழக்கா. * ஆ, அதிலே கயித்தை இழுத்துப் புடி. 2; நீ கட்டையை அடியடா. 3. கிடங்கைப் பாத்தியை வெட்டுங்கோடா, கிண்டுங்கோடா! ஆரோ: கிழுவை வைச்சு மண்ணைப் போடவே.? உரைஞர்
1: மண்போடத்தானே வந்தனி, அதுக்கு முன்னம் இந்த
வாய்க்கரிசியை வாயிலை ஊத்து. 2. ஒ. அதை விழுங்கிப்போட்டுக் கதியாலை விழுத்தாமல்
ஒழுங்காப் போடு. *ே நாக்கு வறளுது, எனக்கும் தா. அகண்ட. பாதை
அவைக்கு வேணுமாம்.
ஆரோ: ஏன் பிறதட்டேலை பயணம் போகப்போயினேயோ?
1: இப்ப பாடையிலை போகினம்,. இனிப் பிளேனிலை
போகட்டும்? 2. பத்தடிக்கொரு கட்டை நடுங்கோ. ஆறு நிரையிலை
அடியுங்கோ கம்பி. ஆரோ: கம்பி அடிக்கக் குடிக்கவேணும்! உரை 3: கண்டால் விடா, இந்தா இதையும் ஊத்து.. !
* நாலு போத்தல் அதுக்கை முடிஞ்சுது. வேலையும் கச்சி
திமா முடிய வேணும். ஆரோ: எல்லாம் முடியும், பயப்பிடாதையுங்கோ!
மேடையில் இருள் படர்கிறது. மீண்டும் மேடையில் மங்க லான ஒளி படரும்போது வலது புறத்தால், பாதை தேவைப் படுவோர் கைகளில் அலவாங்கு, பிக்கான், மண்வெட்டி கடகங் கள் ஆகியவற்றுடன் வருவது போல ஊமம் நிகழ்த்தி வருகின் றனர்அவர் பணிஞ்சு போனல் பண்ணிக்காட்டுகின! அவன்: வெட்டுங்கோ வேலியை, விழுத்துங்கோ கதியாலை,
46

சிறியவன்; இந்தா விழுகுது ஓங்கி அடிக்கிருன்!!
- சொல்லுக்கேற்பச் செயல்களும் நடைபெறுகிறது. அவர்: வெட்டுங்கோ பத்தையை; விழுத்துங்கோ பனேயளை! அவன்: பறியுங்கோ மக்கியை, பரவுங்கோ வடிவா! சின்ன. அப்பு, தூக்கி விடணை தலையிலை கடகத்தை. அப்பு: வளவுக்காரர் வந்தால் என்ன கொடுமை நடக்குமோ? அவர்: இவளவு காலமும் நடக்காத கொடுமையே? வரட்டன்
ւմունւսւհ. சிறிய இவற்றை வேலியை உடைக்கிறதிலை எனக்கொரு திறுத்தி அவன்: ஏன்ருப்பா, அவரிலை மட்டும் அவ்வளவு காய்வனவு? சிறிய அண்டைக்கொரு நாள், தண்ணி கட்டேக்கை இவற்றை வத்தகக் கொடியிலே ஒரு பழத்தைப் பிடுங்கித்திண்டுபோட் டன் எண்டு. "வாடா வளவுக்கு’ எண்டு போட்டு. சிறிய அங்கை போக, சின்ன: "குடடா கையை, எண்டு சொல்ல, சிறி: நான் போய் மரத்தைக் கட்டிப்பிடிக்க சின்ன நாலு சாத்துப் பிரம்பாலை சாத்தினர். சிறிய சாத்திப்போட்டுச் "சாப்பிடடா" எண்டார். சின்ன; 'நாய்க்குப் போடுங்கோ உங்கடை சோத்தை!? எண்டு
போட்டு இவன் வந்திட்டான். ● அப்பு: இப்பத்தேப் பெடியள் சொல்வழி கேளாங்கள் ஆச்சி: பின்ன என்ன?! அப்ப நீங்கள் அடியும் வேண்டித் "தின்னடா" என்னத் திண்டும் போட்டு வந்ததுபோலவே வரவுஞ் சொல்லுறியள்?! அப்பு: எங்கடை காலம் முடிஞ்சு போச்சு. அவர்: ஊருக்கு ருேட்டுப் போடேக்கை. பாட்டுப் பாடினம்; அவன் இப்ப எங்களுக்கெண்டு போடேக்கை. வாயை மூடிக்
கொண்டு போடுறதே?! '. அவர் பாடுங்கோ பாட்டை
அவர்கள் ஒரு தட்டு மண்ணெடுத்து" என்ற பாடலை, "ஏலே லோ”, “ஜலசா" வுடன் பாடுகின்றனர். பாடல் முடிவடையும் கட் டத்தில் வளவுக்காரராக உரைஞர், மேடையின் முன் இடது புறத்தில் வந்து நின்று, இங்கு நடப்பதைக் கண்டு திகைப்பர். பாடல் முடிவடைய, வழி அமைப்பவர், உறைநிலையில் நிற்பர். மண்வெட்டி, அலவாங்கு, பிக்கான், கடகம் ஆகிய கருவிகள் யாவும் உயர்ந்த நிலையில் நிற்கவே இவர்கள் உறைநிலை அடை வர். அப்போ.
47.

Page 27
உரைஞர்:
2. பாத்தியளே அங்கை கைக்கடங்கிக் கைகட்டி நிண்டவங்
கள் வெளிக்கிட்டு நிக்கிற கோலத்தை! 3; காரியம் முத்திப்போச்சு காலமும் மாறிப்போச்சு, 1: இவைக்கு நல்ல பாடம் படிப்பிக்கவேணும்! 2; கொஞ்சம் பொறும் அரிவாள் சம்மட்டி தூக்கிற சாதி, அவசரப்பட்டு வேலை இல்லை; அனுசரிச்சுப் போகவேணும். 3; அதுகும் சரிதான் வாருங்கோ ஏதும் கதைச்சுப்பாப்பம்.
இவர்கள் அவர்கள் பால் சென்று கதைக்க அவர்கள் உறை நிலையிலிருந்து விடுபட்டு வேலைகளைச் செய்தபடி உரிய விடைகளை இவர்களுக்கு அளிக்கின்றனர்.
உரைஞர்; 2: என்னடா மோனே, ருேட்டுப் போடுறியளே? syairfassir. ... ... . . . . . . . ... -- உரைஞர். எங்களுக்கொரு சொல்லுச் சொல்லியிருக்க, உலாந்தா
வோடை வந்து ஒழுங்கா அளந்து விட்டிருப்பம் , உரைஞர்: 2. அங்கை பார். அவடத்திலை ருேட்டு வளைஞ்சு
நெளியுது. அவன்: அது அப்புவும் ஆச்சியும் போட்ட இடம். அப்பிடித்
தான் இருக்கும். உரைஞர்: 3. ஏன்ரு மோனே அப்படிச் சொல்லுரு? அவன்: காலாதி காலமா வளைஞ்சு நெளிஞ்சவை, திடீரெண்டு
நேரா நிக்க முடியுமே? உரைஞர்: 2. கொப்பரும் கோச்சியுமெண்டாலும் வந்து ஒரு
சொல்லுச் சொல்லியிருக்கலாம். அப்பு: எத்தினை நடை வளவுக்கு நடந்தமாக்கும். ஆச்சி: நாங்களாப் போட்டால் வழிக்கு வருவியள் எண்டு
பொடியள் சொன்னங்கள். உரைஞர்: 1. பின்னைப் போடத் துவங்கிட்டியள்?! அவர் துவங்கின வேலையை இனி விட ஏலாது! உரைஞர்: 3. அது சரி. உங்களுக்கும் வழியொண்டு வேணும்
தானே?! & 2. அல்லச் சொல்லிப்போட்டு செய்திருக்கலாம். சிறியவன்: இப்ப நீங்களர் வந்து பாத்திட்டியள் தானே இனி
என்ன போங்கோவுன் உரைஞர் 3, ஏன் மோனே கோவிக்கிரு?!
sailifsei: . . . . . . . . ......s...
48

அவர்: அங்கை, அடுத்த லோட் மக்கியும் வந்து பறியுது. அவன்: ஓமோம், கெதியா அள்ளுங்கோ, ருேட்டைப்
போடுங்கோ. உரைஞர், "டிரக்டர் ஒசைவரும் திசையைம் பார்த்துவிட்டு, உரைஞர்: 1. அங்கை பாருங்கோவன் அநியாயத்தை! 2. எங்கை? என்ன நடக்கிறது. 1. *டிரக்டர்லை! மக்கி ஏத்திப் பறிக்கிறவன் ஆரெண்டு
பாத்தியளே?! 3. ஆரப்பா அது? 1. எங்கடை வேலாயுதத்தாற்றை இளையவனல்லே? அந்த நாயும் இதுகளோடை சேந்து எங்களுக்குக் குளிபறிக்குது!! 2. இதுகளைப்போல உள்ள எங்களிட சனியன்களாலை தானே, இதுகள் கொம்பு முளைச்சுக் கூத்தாடுதுகள்! அவர் இஞ்ச பாருங்கோ, எங்கடை உங்கடை எண்ட கதைய
ளெல்லாம் இனி அரங்கேருது. உரைஞர் 3: ஒ, இனி அவர், உங்களுக்கைதான் சம்பந்தமும்
செய்யவேணும்! அவன்; சம்பந்தத்துக்கைதானே உங்கடை உறவுகள் தொடர்பு
களெல்லாம் தங்கி நிக்கிது. . . . . சிறியவன் ரத்தத்தை வச்சு உறவுகள் பாக்கிறவைதானே இவை, சிறியவன் உப்பிடிப் பாக்கப்போனல் மூட்டையும் நுளம்பும்தான்
இவையின்றை நெருங்கின உறவுக்காறர். அதுகள் தான் இவையின்றை ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்குது. அவன்: அப்பிடியெண்டால் இவையும் ஒரு வகையிலை எங்கடை
உறவுக்காரர்தான். எத்தினை சந்ததியா எங்கடை ரத் தத்தை உறிஞ்சி வருகின.
-9|ւնւյ: வேலையை விட்டிட்டு உங்கை என்னடா கதைச்சுக்
கொண்டு நிக்கிறியள். هر.
அவன்: தங்கடை ஆள் எங்களோடை நிண்டு வேலை செய்யிரு
ரெண்டு வாயைப் பிளக்கினை!
ஆச்சி: ஆரைப் பாத்து? எங்கடை சோதியைப் பாத்தோ? உரைஞர்; 1. பாத்தியே அவனை! எங்கடை சோதியாம்!!
2. நாசமறுந்திது!! * அப்பு ஒண்டும் அற இல்லை, எல்லாம் பொருந்தி இருக்கு, நீங்
கள் போட்டு வாங்கோ. அவர் வாருங்கோ துவங்குவம் வேலையை:
சிறியவன் பாட மற்றவர்கள் உரிய இடத்தில் ஏலேலோ", "ஐலசா" சொல்லியபடி வேலையில் ஈடுபடுகின்றனர். வளவுக் காரர் மூவரும் தலையைக் குனிந்தபடி தளர்நடை போட்டு முன் னிடதில் சென்று உறை நிலையில் நிற்கின்றனர்.
49

Page 28
சிறியவன்;
ஒரு கடகம் - ஏலேலோ! மக்கி அள்ளி - ஐலசா!
நாங்கள் போடும் - ஏலேலோ! மக்கி ருேட்டு - ஜலசா! எங்களுக்காய் - ஏலேலோ நாங்கள் போடும் - ஐலசா! புதிய வழி - ஏலேலோ! புதிய வழி - ஐலசா! எங்கள் வழி - ஏலேலோ! புதிய வழி - ஐலசா! புதிய வழி - ஏலேலோ! புதிய வழி - ஐலசா "புதிய வழியும்’, ‘ஏலேலோ", "ஐலசா'வும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட மேடையின் முன்திரை மூடப்படுகிறது. -
சொற்பாதம் O
யோ. பெனடிக்பாலன்
நினை த்துப் பார்க்கிேறன்.
சிங்கள மக்கள் மத்தியில் ஒரு நேச உறவுச் சூழலில் அவர்களின் .. ငဲ့ '့် உதவி ஒத்தாசைகளுடன் நீண்ட காலம் குடும்பமாய் கொழும்பில் வாழ்ந்த நான் Bgr)חמé(6) "חמו யூலை இனக் கலவரத்தில் தாக்குண்டு வீடும் மன நிம்மதியும் பறிகொடுத்து
னி ப்பதற்கு 鸚燃駕 நிலையில் மனைவி பிள்ளைகளோடு உயிர் தப்பி ஓடிவந்து
50
யாழ்ப்பாணத்தில்
அண்ணன் வீட்டு
தாவாரத்தில் அகதியாக ஒதுங்கியிருக்கும் நான் மன வதைப்புகளினூடே நடந்தவற்றை
னைத்துப் பார்க்கிறேன்
அகிம்சை வடிவான
புத்த பெருமானின் புனித பாதங்களில் அாய மலர் தூவி நிதம் கும்பிட்டுச் சரணம் கூறும் கெளதம தாசா வா நான் குடியிருந்த வீட்டுக்கு பெற்ருேல் ஊற்றி தீவைத்து மகிழ்ந்தான்

நான் நம்பமாட்டேன்
gl - அவனுகச் செய்திருக்கமாட் Lrrsö7
சிற்றெறும்பைத் தானும் தன் காலால் மிதித்துக் கொல்ல விரும்பாது எட்டிக் கால் வைக்கும் பிரேமசிங்காவா எங்களைக் கொல்ல கோடரி தூக்கித் துரத்தி வந்தான்
நான் நம்பமாட்டேன்
இது
அவனுகச் செய்திருக்கமாட்டான்
அடுத்தவர் மேலில் தன் கால் பட்டதுமே பட்ட இடத்தைத் தொட்டுக் கும்பிட்டு மன்னிப்புக் கோரும் அத்துலத் முதலியும் அணில் முனசிங்காவும் குணவர்த்தனவுமா தமிழர் இரத்தம் குடிக்க்வென்று அரிவாள் கத்தியுடன் வீதியெல்லாம் வெறிநாய்களாய்
நான் நம்பமாட்டேன் இது அவர்களாகச் செய்திருக்கமாட்டார்கள்
யேசுவே இரக்கமாயிருமென்று என்னேடு
சிலுவை சுமந்து ஊர்வலம் வந்த சில்வாவும்
அன்றுாவும் போல் பெரேராவுமா? இரக்கமின்றி எரியும் ரயர்களில் W தமிழ் உயிர்களைப் போட்டு துடி துடிக்கக் கொன்றனர்
அலைந்தனர்
நான் நம்பமாட்டேன் இது அவர்களாகச் செய்திருக்கமாட்டார்கள்
தலைப்பேசாயே கொல்லாது பாவமென உயிரோடு வீசும் பொடிமெனிக்கா வளர்த்த புத்திரர்களா?
எங்கள் குழந்தைகளைக் கொல்ல விடிய விடிய
மூலை முடுக்கெல்லாம் சுற்றிச் சுற்றி வந்தனர் என்னல் நம்ப முடியவில்லை. இது அவர்களாகச் செய்திருக்கமாட்டார்கள்
அவர்களோடு உண்டு குடித்து வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டு
சிந்தித்துப் பார்க்கிறேன்
அத்துணை கருணையுள்ளம் கொண்ட அந்த மக்களா இத்துணை கொடிய காட்டுமிராண்டிகளாய்க் கோர வுருவெடுத்தனர்?
பேய் அரசு செய்தாய் பினத்தின்னும் சாஸ்திரங்கள் என்ருன் பாரதி
ஆம் ,
ஆமாம் அதுதான் உண்மை மக்கள் குருதியில் கூழ் காய்ச்சி மகிழும் ப்ேரின வெறி கொண்ட சுரண்டற் பேய்க் கூட்டம் உச்சியிலிருந்து அரசோச்சும்போது ஆச்சரியமில்லை மக்களே பேயாவார் மக்களே பிணந் தின்பர்.

Page 29
சகாதேவன் --- 0
2 எனக்கும்
S உறவு உண்டு
வழக்கமாக இந்த நேரம் பஸ் கண்டியில் நிற்கவேண்டும். அது ஆமை வேகத்தில் வரப்பே இப்படி முழுச் சிங்கள இடம் ஒன்றில், அதுவும் காடாகப் LITrfžg நிற்பாட்டியிருப்பது வணிகள் எல்லோரிடமும் எரிச்சஆ உண்டுபண்ணியது. அதற்குச் éFLDT. g576b சொல்வதுபோல றைவர், கொண்டக்ரருக்கு அவர் செய்யவேண்டியதுைச் சொல்வி விட்டுத் தனக்குள்ளாகவே Jr லாபித்துக் கொண்டார்
ஒருநாளும் இந்தமாதிரி நடக்கேல்லை. Up60plugħ Go r மல் ஆாறிக்கொண்டிருக்கு. இண் டைக்கெண்டு பிறேக்குமில்லை."
<976).Jცნub கொண்டக்டரும் அந்தப் பழைய மினி பஸ்ஸுக்குச் *Այծեմ)յւնւյրd;ց: சிகிச்சையளித் துக் கொண்டிருந்தார்கள்.
நாங்கள் யணிகள் எல்லோரும் கண்டி போய்ச் Grp இன்னும் மூன்று
Ln6 of நேரமாவது எடுக்கும் என் தால் தனித்திருந்த இரவு-பகல் சேவை போர்ட்டைத் தாங்கி யிருந்த கடையில் மத்தியானச் ாப்பாட்டையெடுக்க நுழைந் தோம். ட்றைவர் கடையி
52
அள்ளே வருவதும் கடைக்காரர் களிடம் வேண்டியதைப் பெற் றுக்கொண்டு போவதுமாய் இருந் தார். அவருக்கு அந்தக் கடையில் வைத்தே பிறேக்கைத் திருத்தி விடலாம் என்ற நம்பிக்கை இருப் பதாகத் தெரியவில்லை. அந்தச் சாப்பாட்டுக் கடை தவிர வேறு கடை ஒன்றும் அங்கில்லை; கடையிலுள்ளவர்களுக்கு பிறேக்கைத் திருத்தத் தெரியாதென்பதைக் காணக்கூடியதாயிருந்தாலும் தங் களுக்குத் தெரிந்ததைக் கொச் சைத் தமிழில் சொல்லி, உதவக் கூடிய அளவில் சகலதையும் செய்ய
வேண்டுமென்று ஆர்வங்காட்டி
ஞர்கள் என்பதை உணரமுடிந் தது.
அந்தக்கடைக்காரர்கள் காட் டிய அக்கறை உள்ளூர எனக் சிருந்த சிறு அச்சத்தைத் தணிக் கவே, சாப்பாட்டுக் காசைக் கொடுத்துவிட்டு வெளியே வந்து கூப்பிடு தூரம் நடந்து திரும்பினேன். அங்கே, கடைக் குப்பின்னல் ஒன்றிரண்டு வீடுகள் தவிரக் குடிசனம் அதிகம் இருப்ப தாய்த் தெரியவில்லை, இருந்தா இலும் காட்டு மரங்கள் வெட்டி
 

வீழ்த்தப்பட்ட நிலையில், கருணை கூர்ந்து இருப்பதற்கு அனுமதிக் கப்பட்ட மரங்களும், சிறுகச்சிறுக நாடிவரும் குடி யிருப்புகளை எண்ணி அச்சத்தோடு காற்றி லாடிக்கொண்டிருப்பது போலவே ஒரு தோற்றத்தை என் மனத் தில் ஏற்படுத்தியது. இதை நான் மலையகமெங்கும் பரவலாக அவ தானித்திருக்கிறேன். அங்குங்கூட காட்டு நிலங்கள் களனிகளாக வும் குடியிருப்பு களாக வும் மாறும் வேகம் வெளிப்படையா கவே உணரக்கூடிய அளவில் இருக்கிறது இந்த நினைவோட் டங்களில் மிதந்து, திரும்பி வந்து கொண்டிருக்கும்போதே ட்றை வரும் பஸ்ஸுக்கு அடியிலிருந்து வெளியே வந்தார்.
அவரைப் பார்த்தவுடனேயே பிறேக் திருத்தப்படவில்லை என் பதை உணர்ந்துவிட்டேன். அவர் கடையில் வாங்கியவற்றைக் கொடுத்துவிட்டு பஸ்ஸில் ஏறி, அலுத்துக்கொண்டே பஸ்ஸை ஸ்ராட் பண்ணிஞர். எல்லோரும் ஒரு சிங்களப் பகுதியில் பயமின் றிச் சாப்பிட்ட திருப்தியோடு பஸ்ஸில் ஏறிக்கொண்டோம்.அந் தக் கடையிலிருந்தும் இரண்டு இளைஞர்கள் புதிதாக ஏறினர்கள்.
அவர்கள் சிங்கள வாலிபர்கள் என்பதையோ, ஏன் ஏறுகிமுர்கள் என்பதையோ யாருமே கவனத் தில் கொள்ளவில்லை. இருந்தா லும் எல்லோர் மனதிலும் நில விய பீதியை பஸ்ஸினுள் குடி கொண்டிருந்த மயான அமைதி எடுத்துக்காட்டிக் கொண் டி ரு ந்
தது. இந்தப் பயம் "ஜூலைச் சம்ப வம்" என்று வரலாற்றுக்குறிபொ ருளாகிக் கொண்டிருந்த அட்டூழி ய்ங்கள் நடந்துமுடிந்து ஐந்து மாதங்களானபின்னுங்கூட இருப் பதற்கு, வேறும்பல வதந்திகள், யாழ்ப்பாணத்தில் நடந் து கொண்டிருக்கிற போஸ்ற் ஒவ் விஸ் கொள்ளைகள் - முந்த நாள் மட்டக்களப்பில் நடந்த பொலிஸ் காரர் கொலை போன்றவற்றுக் குப் பதிலாகச் சிங்கள இடங்களி லும் பதட்டம் இருந்துகொண் டிருக்கிறது என்பதாக இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பது ம் ஒரு காரணம்.
இந்த நிலையில் ஆசிரியர் சங் கம் வேலைக்குத் திரும்புவதுபற்றி முடிவெடுத்ததுதான் ஆச்சரியமா யிருந்தது. அதைப்பற்றிக் கூட் டம்போட்டு அறிவித்த உடன் ஆசிரியர்கள் எல்லோரி டமு மி ருந்த உளக்கொதிப்பைக் காண முடிந்தாலும் அந்த முடிவை எதிர்த்து யாரும் பேச முடியாத வாறுமண்டபத்திலிருந்த நாமெல் லோரும் மேடையிலிருந்து சீனப் பெருஞ்சுவர்கொண்டு பிரிக்கப் பட்டவர்களாயிருந்துவிட்டோம். அந்த மேடையிலிருந்து வந்தத அறிவிப்பை ஆட்டு மந்தை கள் போல் ஏற்பதைத் தவிர வேறு வழியற்றிருந்தோம். என் ருலும் கூட்டம் கலைந்து வெளியே வந்ததும் எல்லோரும் திட்டித் தீர்ப்பதில் திருப்திகொண்டோம் நான் சண்வெள்ளத்திடை சுழி யோடிப் பல குரலிடை மிதந் தேன்
53

Page 30
*பத்து வருஷத்துக்குப்பிறகு கல்விமந்திரியோடை கதைச்ச முதல் சங்கமெண்ட உடனை போ ராடின கோரிக்கையள் நிறை வேருட்டிலும் பற வா யி ல் லை யெண்டு, சொல்லுறதுக்கெல் லாம் அடிபணிஞ்சு போறதோ" -இது ஒரு குரல்.
வேருெரு குரல்: ஏன் இவை போராட்டத்தைக் கை விட்டவை? வடக்கு-கிழக்கு ஆசி ரியர்கள் போராட்டத்துக்கு அர சாங்கம் செவிசாய்க்கேல்லையெண் டா முழுஇலங்கையளவில் போரா டுவோமெண்டு சிங்கள ஆசிரியர் சங்கங்களின்ரை அறிக்கை போன கிழமை பேப்பருகள்ளை வந்த தெல்லே; அதாலைதான்போலை மினிஸ்ரர் எங்கடை ரீச்சேர்ஸ் யூனியனைக் கூப்பிட்டுக் கதைச் சிருக்கிருர். இந்தச்சாட்டிலை சிங் கள ரீச்சேர்ஸின்ரை கோரிக்கை யளும் சேர்ந்துவிடுமெண்டு பயந் திருப்பினம். இப்படியான நிலை யிலை போராட்டத்தைக் காட்டிக் குடுக்கிறதெண்டா, எங்கட சங் கத் தலைமை போராடுற சாதா ரன வாத்திமார் பக்கமோ அதி கார வெறிபிடிச்சவையின்ரை பக் sGlpit?' '
இன்னும். இன்னும் பல குரல்கள்: "நாங்கள் எப்பிடிப் போகேலும்?"
米 *
திடீரென்று அமைதி. பஸ் நின்றுவிட்டதைக்கண்டேன்.அது என் சிந்தனையின் மூன்று நாளுக்கு முந்தின இரைமீட்டலையும் துண் டிக்க, வெளியே நோட்டம் விட் டேன். நின்ற இடம் ஒரு கருஜ். 54
பஸ்ஸில் இருந்து, முன்னே சாப்பிட்ட கடையில் ஏறிய சிங் கள இளைஞர்கள் கூப்பிட்ட குர லுக்கு கருஜ்ஜிலிருந்து ஒரு தொழி லாளி வந்துகொண்டிருக்க, இவரி கள் பிறேக்கைத் திருத்தி உதவும் படி கேட்டார்கள். அந்தத் தொழிலாளி இவர்களுக்குத் தெரிந்தவராயிருக்க வேண் டும்; அவர் உபகரணங்களை எடுக் கப்போக, நான் கடை போர்டு களில் ஊரைத் தேடுகிறேன்: நா-உல,
இந்த நேரம் பஸ்ஸுக்குள் ளிருந்து ஒரு குரல், "எங்கை கொண்டுவந்து நிப் பாட் டி க் கிடக்கு: கண்டிக்குப் போற் வேற
பஸ்ஸிலை எங்களை அனுப்பிப் போட்டு உம்மடை அலுவலைப் பாரும்" என்று எரிச்சலோடு வெடித்தது.
பதில் ட்றைவரிடமிருந்து, பஸ் வெளிக்கிடுகிற இரைச் ச லோடு சேர்ந்து வந்தது:
"நான் எல்லாற்றை நன்மை யையும் நினைச்சுத்தான் பிறேக் கைத் திருத்திப் போ டு வோ மெண்டு நிப்பாட்டின்னுன். விரும் பாட்டி எடுக்கிறன்."
இது ஒரு குரலுக்கு வந்த பதி லென்ருலும் வேறெந்தக் குரலும் "நின்று திருத்து" என்று சொல்ல முன்வரவில்லை. உதவ விரும்பிய சிங்கள இளைஞர்கள் முகத்தில் அசடு வழிந்தது. எனக்கும் ஐந்து மாசங்களுக்கு முன் வெறிபிடிச்ச நரிக்கூட்டம் குடல்பிடுங்க எத்த னித்த கொடிய நினைவு வரத் தான் செய்தது. இருந்தாலும்

உதவி செய்யும் மணிதர்களையும் கொலைவெறியர்களையும் வேறு படு த்திப்பார்க்கக்கூடாதா?
இந்த நினைப்பால் கோபங்
கொண்ட நான் எதையும் சொல் லவில்லையென்ருலும், அந்தக் குரலுக்குரியவனைப் பார்க்க விரும் பித் திரும்பினேன். அவன். அவனே தான்! இப்போது பக்கத் திலிருந்தவனுக்குக் கொடிய சிங் கள இடத்திலிருந்து" மீட்ட திறமைபற்றிப் பெருமையடித்துக் கொண்டிருக்கிற அவன்.
எனக்கு இரத்தம் கொதித்
துக் குமுறினலும், என்னை நிதா னப்படுத்திக்கொண்டேன். அவன் கண்டிக் கடை வீதிகளில் இனப் பாகுபாடில்லாமல் "சிங்க ளக் காடையரோடு கைகோர்த்துத் திரிகிற நாடோடி வியாபாரி; குறுக்குவழி வியாபாரத்தில் கிடைப்பதோடு, அடிக்கடி உரு வாக்கப்படுகிற "கலவரங்களின்" போதும் லாபந்தேடிக்கொள்கிற உலுத்தன். இப்போது ஏனே அவ னுககு தமிழின உணர்வுமேலோங் ப்ெ பொங்கி வழிந்திருக்கிறது.
t ** ஒடிக்கொண்டிருக்கிற பஸ் எதிரே வருகிற வாகனங்களுக்கு வழிவிடுவதில் சிரமப்பட்டதால் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தலைக் கறுப்புத் தெரியாத காட் டோரமாய் பஸ்ஸை நிறுத்தி விட்டு,உறைவர் மீண்டும் திருத்த வேலையில் இறங்கினர். -
இப்போது அவன் பக்கத்திலி
ருந்தவனிடம், "நாங்கள் tóðará.
கெடேலாது, பெட்டியை எடுத் துக்கொண்டு இறங்கு. பஸ் ஏதும் வந்தா மாறுவோம்" என்று காதோடு காதாகச் சொல்லிக் கொண்டே பார்சல் ஒன்ருேடு இறங்கினன்.
நான் அந்தப் பார்சலை நன் ருக உத்துப்பார்த்தேன். அதன் கனஅடக்கத்துக்கு மிஞ்சிய கன தியை அறியமுடிந்தது. அது கடத் தல் அபின் என்டதிலை எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அதை வைச்சிருக்கிறதாலைதான், மடி யிலை நெருப்பைக் கட்டினவன் மாதிரி அவன் அந்தரிக்கிருன் என்பதை என்னல் உணரமுடித் தது. இவரைச் சும்மாவிடக்கூடா தென்ற நினைப்போடு நானும் இறங்கிக் கேட்டேன்:
நீேர் மாறவேணுமெண்டால் அப்போதையே தனியப்போயி ருக்கலாமே; ஏன் கருஜ்ஜிலை பஸ் ஸைத் திருத்தவிடாமல் குழப் பினனிர்?"
* அதை என்னட்டைக் கேக்க வேண்டாம்; நான் சொன்னதுக் காக ஏன் பஸ்ஸை எடுக்கவேணு மெண்டு ட்றை வரி ட்டை ச் கேளும்’.
என்ற அவனுடைய விருப் பான பதிலுக்கு நானும் விடாமல் கதைக்க, அவனும் கத் த கி கொஞ்ச நேரம் ஒரே அல்லோல கல்லோலமாகிவிட்டது. கடைசி யில் ட்றைவரும் கொண்டக்ரரும் தான் ஒரு நிலைக்குக் கொண்டு வந்து பஸ்ஸில் அவனையும், எங் களெல்லோரையும் ஏறவைத்தார்
assif.
55

Page 31
ஏறிஞலும் எனக்குக் கோபம்
இறங்கவில்லை; அவனை முறையா கக் கேட்டிருக்கவேணும் -அவ 391-L '85-556i turriga பிரித்து அவன் முகத்தில் கரி Ա8 யிருக்கவேணும் என்ற கொ 8ւյւյ. அது அடங்குவதற்கு முன்பே பஸ் ஒடத்தொடங்கிவிட்டது: என் மனம் பின்னேக்கி விரைந்தது.
அவன் தான், போனவருசம் சர்வசன வாக்கெடுப்புக் கலவரத் தில் சிறிலுக்கு அடிப்பதில் முன் னுக்கு நின்றவன். பிறகு, கண் டிக்கு வந்தபோது சிறில் அவ னைக் காட்டியதிலிருந்து அவனை நான் அவதானித்துவந்திரு க் கி றேன். அவனுக்கும் 'இனக்கல வரத்தில் பிணந்தின்னி நரிக ளாய் என்னைச்சுற்றிக் கோரத் தாண்டவமாடிய தெல்தெனியக் காடையர்களுக்குமிடையில் கூட
நல்ல உறவு இருப்பதை நான் அறிவேன்.
அந்தக் கொலைவெறி நாட கம். அவன். சிறில் எல்லாம் மாறி மாறி என் நினைவில் நிழ லாடிக்கொண்டிருந்தன.
ஐந்து மாதங்களுக்கு முன், ஜூலை மாதம், நாடே ஒரு
உலுக்கு உலுக்கப்பட்ட வேளை, நானும் பலரையும் போல் மறை விடம் காணவேண்டியதாயிற்று. அப்போது, "ஒரேயுணர்வுடைய வர்கள் நாம்" என்று பெருமை
யோடு சொல்லிக்கொள்கிற சிறில்
தான் எனக்கு உறைவிடம் தத் தான்; நான்கு நாட்கள் பரணில் பாதுகாத்துச் சாப்பாடும் சகல
தேவையும் உணர்ந்து நிறைவேற்.
றிக் காடையர் கண்ணில் படா
56.
மல் பாதுகாத்தான். அவன் ஒரு சாதாரண கூலி விவசாயி என்
தோல் ஏற்பட்டிருக்கக் &aqiu "ஒரே உணர்வா என்று நான் புளகாங்கிதமடைந்தேன்.
இ7இ நாட்களுக்குப் பிறகு, அகதி பஸ்ஸில் கண்டி போகலாம் என்ற ஏற்பாட்டைச் சிறில் கவ
னிக்க, நோட்டம் பிடித்த காடை
யர் கூட்டம் என்னைக் கண்டு தாக்க வந்துவிட்டது. அவர்களில் ஒருவன் ஓங்கிய "கிறிஸ்" கத்தி என்னில் பாயாமல் சிறில் என் னைத் தள்ள, வாழை மரத்தில் கத்தி ஊடுருவ, அதை எடுப்ப தற்குள் வேகமாகத் தாவிய சிறில் வாழைமரத்திலிருந்து உருவி எடுக் கப்பட்ட கிறிஸ் கத்தியின் கர் முனையை இறுகப்பற்றி உரக்கக் கத்தினன், ‘என் கையை வெட்டி யிழுக்கமுடிந்தால், இழுத்தபிறகு அவனைக் குத்து, " T
அதைச் செய்ய முடியாமல் அந்தக் காடையன் தடுமாற, சுற்றி நின்ற மற்றக் காடையர் கற்களால் என்னைப் பதம்பார்க்க ஒரு சில வினடிகளுக்குள் வீட்டின் உள்ளிருந்து சிறிலின் தாய் கவ் வாத்துக் கத்தி ஒன்றேடு பாய்ந்து வந்து, "அவனைத் தொட்டா. தெட்டவனை இந்த இடத்திலை வெட்டியெறிவன்? என்ற விர வார்த்தைகளைச் சொல்லி ஆவேச மாக நிற்க, ஒருகணம் காடையர் கூட்டம் திக்பிரமை பிடித்து நின் றது. இதற்குள், மெல்லக் கூடிய அயலவரும் சொல்லக் கூடிய கூரானவார்த்தைகளால் காடை யரைஅசந்துபோகச் செய்துவிட் L-6Bini.

அந்தக்கணம் விரைந்து வந்து கொண்டிருந்த அகதி பஸ்ஸைக் கண்ட சிறிலும் தாயும் வேகமா asé செயற்பட்டு வியூகம் அமைத்து என்னை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறியபோது நான் பட்ட நன்றிக்கடன் ஈடு "செய்யக்கூடியதா? கண்ணிர்த் திரை மறைக்கவும் விடாமல் கை யசைத்து மலைச்சிகரத்தில் அகதி பஸ் திரும்பும்வரை அந்த நல்ல உள்ளங்களிடமிருந்து fu unr விடை பெற்று வந்த அந்த நாளை : ԼճՈ)&&(Մ)ւգԱյտո?
இந்த நினைவலைகள் பஸ் கண்டியை அடைந்தபோது கரை யை முட்டி மோதிச் சிதறியது
போல் அடங்கியது. எல்லோரும்
இறங்க ஆயத்தமானேம்: "அவன்" என்னை, ஒரு வில்லன் பார்வை யோடு விலத்திக்கொண்டு, தனது கையாளோடு இறங்கிப் போனன். நானும் முண்டியடித்து இறங்கும் சனங்களோடு சேர்ந்து இறங்கித் தெல்தெனிய பஸ் ஸ்ராண்டை நோக்கிநடந்துகொண்டே, அவன் போவதைப் பார்த்தேன்.
அதோ, அதே காடையர் சிலரோடு தனது "பார்சலை ஒரு வனிடம் பரிமாறிக் கொண்டே அவன் சேர்ந்து சிரித்து. என்னேசி காட்டிக் கதைக்கும் கோலம். அவர்களுக்குள் இன உணர்வு கடந்து நிலவும் அன்யோன்யம்.
அவர்கள் பேர்ண் வருஷம் சிறி
லுக்கு அடித்தது. ஐந்து மாசங் களுக்கு முன் என்னைக் கொல்ல முற்பட்டது.*
எனக்குப் போன வருசம் சர்வஜன வாக்கெடுப்புக்குப்பிறகு
அறிமுகம் அவசியமில்லை!
தங்களது ஆக்கங்கள் சிறுகதை, கட்டுரை, கவிதை, விமர்சனம் எதுவாக இருந்தாலும் அநுப்பிவைக்கவும். தர மானவை பிரசுரிக்கப் படும்.
* புத்தாண்டிலிருந்து
*தாயகம்" மாதந்தோறும் தவருது தொடர்ந்து அவரும். தவருது சந்தாதாரராகுங்கள்.
சந்தா விபரம்
6 lost 5th 301
ஊரிலிருந்து திரும்பியவுடன் சிறில் என்னைத்தேடி ஆர்வமிகுதி யோடு ஓடிவந்து "யாப்பனே சகோதரய." என்று வார்த்தை வராமல் தடுமாறியது.
நாங்கள் ஒரே உணர் வுடையவர்கள்" என்று யாழ்ப் பாணம் சர்வஜன வாக்கெடுப் பில் குடத்தை நிரப்பியதை மன நிறைவோடு சொல்லி குதூகலித் தது ஞாபகத்துக்கு வந்தது.
புதிய நம்பிக்கை ஊற்ருகப் பெருகிவரமிடுக்காக நான் நடத் தேன்" எனக்கும் உறவு உண்டு.
基7

Page 32
O செய்திப் பத்திரிகையாக
Registered as a news papi
സ്തി. | RSA's
ଐରାii) (, , | SAVAM
சகல விதமான
0 காஸ் வெல்
| a எலெக்றி
بينهيان/: 17:7 * கு நவீன
சகல வாகனங்களி
ஒட்டிக் கொடுக்கப்ப
370,
(வெலிங்
L
இப் பத்திரிகை தேசிய கே பானம், II, மின்சார நி: அவர்களால் யாழ்ப்பானம் கே. அச்சகத்தில் அச்சிட்டு வெளியி
 

இலங்கையில் பதிவுசெய்யப்பட்டது: Er in Sri Lanka.
WELDERS
டிங்
起源 வெல்டிங்
கேற், கிறில்
ன் உதிரிப்பாகங்களும்
படும்.
ܕܒ
, LIET மணிக்கூட்டு வீதி, டன் சந்திக்கு அருகாமை) ாழ்ப்பாணம். '
- -
ਜ :
இசுக்கியப் பேரவைக்காக யாழ்ப் ய விதிவிந்துள்ள் சேர் தனிதராகம் கே. எஸ். வீதியிலுள்ள பூரீ காந்தா டப்பட்டது.