கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1983.06

Page 1
O
O
O
O
பொருளியல் சிந்த - அ. ஜெயரத்தின
அவனது அதிசயங்க
- சேகர்
மண்ணின் மைந்தர் - குமுதன் ஆட்சி ட யோ, பெனடிக் புதிய கடன் - சி. இராஜேந்திர ஐம்பத்திருவருக்கு ட சேகர் மு. தளேயசிங்கமும்
- சி. சிவசேகரம்
ஹிற்லரின் நாட்குறி
ட மாலிை
நாளேய வாழ்வு யா - அழ, பகீரன்
漿凝繫繫繫繫繫
 

இலக்கியமாத இதழ்,
எகளும் பாரதியும் ம்
5ள்
கள்
பாலன்
1983
மாக்வியமும்
iப்பு - 1983
ரின் கையிலோ
ෆ්% හී%ණ්%ණ්ෂ ක්ෂු. ,භීෂු. ,භික්‍ෂණ්ෂ, 崇崇葵祭崇攀翠棠

Page 2

Ds)fr; 1983 இதழ்: 3
G சுதந்திரம்
5 அச்சுறுத்தல்
up தேசிய இனப்பிரச்சao
'தாயகம்" இரண்டாவது இதழ் ஆசிரியத் தலையங் கத்தில் நாம் பிரஸ்தாபித்திருந்தவாறன வட்டமேசை மாநாடு துரதிர்ஷ்ட வசமாக நடைபெருது போய், சம்பவங்கள் வேறுவிதமாக நடந்து முடிந்துவிட்டன. தேசநலனில் அக்கறையுள்ள சகலதரப்பு மக்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மாநாடு அவசியம் என்று குரல் எழுப்பிய வேளை, நாட்டின் முதுபெருந்தலைவர் ‘கூட்டப்படவுள்ள வட்டமேசை மாநாடு பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்தே ஆரா யும்’ என்ருர்,
இவ்வாறு விடயம் தடம் புரண்டு போனதன் விளை வாக, அழைக்கப்பட்டிருந்த பாரளுமன்றக் கட்சிகளுங் கூட பங்குபற்ற மறுத்துவிட்டன. முடிவில் அரசுதரப் பினர் மட்டுமே கலந்துகொண்ட ஒரு 'நீள. மேசை மாநாடு' நடந்து முடிந்தது.
இதைத் தொடர்ந்து, நாம் சென்ற இதழில் எத் தகைய சூழ்நிலைகள் அநுமார் அவதாரம் எடுப்போர்க்கு நல்ல சாட்டாக அமையும் எனத் தெரிவித்திருந்தோமோ அத்தகைய சூழ்நிலையொன்று நாடளாவிய தீயிடலுக்கு
1.

Page 3
வழிவகுத்துவிட்டது. வெறுந் தீயிடல் மட்டுமல்ல; சிங்கள மக்களின் விருப்பத்தை மீறி, கொடிய இனப் படுகொலைகள் உள்ளிட்ட, தமிழ் மக்களின் கல்வி -- கலாச்சார - பொருளாதார முன்னேற்றத்தை சீரழித்து விடவேண்டும் என்ற மிக மோசமான ஒரு சிலரின் விருப்பை வெளிப்படுத்தும் வகையிலான, வரலாற்றில் மிகப்பெரிய இனக் கலவரம் ஒன்று நடந்து முடிந் துள்ளது.
*மீண்டும் நடந்த இனக்கலவரம் என்பதன் மூலம் 58, 77 (77 இற்குப்பின் இரண்டு வருடங்களுக்கு ஒன் முகச் சிறு சிறு அளவுகளில் நடந்தவை), ஆகியவற் றுடன் 83 இன் "இனக்கலவரத்தையும் பொதுமைப் படுத்திப் பார்ப்பதில் தவறுண்டு; வரலாற்றில் எந்த ஒரு நிகழ்வும் மீண்டும் ஒருமுறை பிரதியெடுத்ததுபோல், முதல் நிகழ்ந்ததை முற்றிலும் ஒத்த சம்பவமாக நிகழ் வதில்லை. அது தனக்கேயுரித்தான பரிணுமத்தைப் பெற்றிருக்கும். இங்கும் அப்படியே!
1958இன் கலவரம் எத்தகையது? பண்டாரநாயக்க இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடன் முன்முயற்சி யெடுத்து மல்லாடிக்கொண்டிருந்த வேளை, இன்று நாட் டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள முதுபெருந் தலை வர் அன்று கண்டி யாத்திரை புறப்பட்டார் - அது முளையில் கருகும் வகையில் முறியடிக்கப்பட்டது; தொடர்ந்தும் அரசுக்கெதிராக ஒரிரு சிங்கள இனவெறி யர்கள் இயக்கம் நடத்துவதும், அரசு முறியடிப்பதாக வும் இருந்தவேளை, பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்த தமிழரசுக் கட்சி பொறுமையாக நல்ல சந்தர்ப்ப சூழ்நிலையை அமைத்துக் கொடுப்ப தற்கு மாருக, தாமே 'பூgரீ எதிர்ப்புப் போரில் குதித் தனர். இறுதியாக நாடளாவிய இனக்கலவரம் வெடித் தது. உடன் அரசு நடவடிக்கையில் இறங்கியது. அர சின் உத்தரவின் பேரில் பாதுகாப்புப் படைகள் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியதன் விளைவாக ஒரிரு நாட் களில் கலவரம் அடக்கப்பட்டது.
2

இதற்கு மாறன ஒரு அம்சம் இரண்டாவது இனக் கலவரத்தில் இடம்பெற்றிருந்ததை அவதானிக்கலாம் 1977 இல் கலவரம் தொடங்கிவிட்டபோது, நாட்டின் முதுபெருந் தலைவரின் "யுத்தமென்ருல் யுத்தம்; சமா தானம் என்ருல் சமாதானம்’ என்ற பிரசித்தி பெற்ற பேச்சு, கலவரத்தை உக்கிரப்படுத்தியது என்ற கருத்து கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதே. அக் கலவரத்தை அடக்குவதற்கு உருப்படியான நடவடிக்கை எதுவும் உடன் எடுக்கப்படவுமில்லை.
இன்று, 1983 இல் நடந்து முடிந்த இனக்கலவரம் பற்றி அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தொண்டமான் வலியுறுத்திய கருத்து மேலும் ஆழமாக ஆராயப்படவேண்டிய ஒன்று. அவர் குறிப்பிட்டிருந் தது: "இது சிங்கள மக்கள் கோபங்கொண்டு உருவா கிய கலவரம் அல்ல. ஒருசில விஷமிகளால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒன்று. பாதுகாப்புப் படையினர் தடுக்கத் தவறினர், பல இடங்களில் தாமே ஈடுபட் டனர்.”*
இவ்வாறு 58, 77, 83 இற் கிடையே ஏற்பட்டு வந்த பரிணுமம் இவ்வாறே அமைதியாகத் தொட ரப்போவதில்லை. இனியொரு கலவர்நிலை ஏற்படுமா யின் நாட்டின் சுதந்திரத்தை இழக்கும்படியான பண்பு ரீதியான மாற்றத்தையே காண்போம்; இரு மேலாதிக்க வல்லரசுகளின் போட்டிக் களமாக இலங்கை மாறும். இதை அரசு உணரத்தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளுக்கு நாடும், மக்களும் முகங்கொடுக்க வேண்டிய நிலை வரும்.
இதை, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சொந்தப் பலத்தில் தங்கிநின்று போராடுவதைப் பிரதா னப்படுத்தும் நல்ல சக்திகளும் விளங்கிக்கொள்ள வேண்டும். இதை மறந்து ஒரு சூழ்நிலை உருவாக்கப் படுமேயாயின் அழையா விருந்தாளிகள் உத்தரவின்றி நுளைவதை தடுக்கமுடியாதிருக்கும். அப்போது கையறு நிலைக்குள்ளாவதை விட வருமுன் காப்பது மேல்.

Page 4
இது மக்களில் மட்டும் தங்கியுள்ள விடயமல்ல நாட்டுத் தலைவரின் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் பெருமளவில் தங்கியுள்ள விடயம். நாட்டின் முது பெருந் தலைவரின் ஒவ்வொரு வார்த்தையும் பெறுமதி மிக்கதாகக் கருதப்படுவன.
முதுபெருந் தலைவர் கலவரம் நிகழ்ந்துகொண்டி ருந்தபோது தமது உரையில் ‘சிங்கள மக்களின் அபி லாசைகளைப் பூர்த்தி செய்யப்போவதாகத் திடசங்கற் பம் பூண்டிருந்த வேளை , தான் நாட்டின் தலைவர் என் பதை மறந்திருந்தாரா?
இப்போதுங்கூட நாட்டின் சுதந்திரத்தைப் பேணு வதற்குரிய நடவடிக்கையில் இறங்கக்கூடியதாகக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள்தே, இதை அவர் பயன் படுத்துவாரா? -
இனப்பிரச்சினை தீர்க்கப்படாதவரை இலங்கையின் சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல் தவிர்க்கப்பட முடியாது. ஆதலால் வெற்றுப்பேச்சுக்களை விடுத்து செயலில் இறங்கியாகவேண்டும். நாம் ஏற்கனவே வலியுறுத்தியது போல சகல கட்சிகளும், தேசாபிமானி களும், அறிஞர்களும், கலந்துகொள்ளும் வட்டமேசை மாநாடு உடனடியாகத் தேவையாகும்
இதைக் கூட்டும் முயற்சிகட்கு எவரது கெளரவப் பிரச்சினையும் குறுக்கீடாக இருக்கக்கூடாது.
தாயகம் வருந்துகிறது.
நடந்து முடிந்த துயரச் சம்பவங்களுக்கு 'தாயகம் மனம் வருந்துவதுடன், தாயகத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்தும் தங்களது ஆக்கங் களை, விமர்சனங்களை, ஊக்கங்களை, உதவிகளை
உங்களிடமிருந்து எதிர்பார்க்கிருேம்.
- ஆசிரியர் குழு

பாரதி ஆய்வரங்குக் கட்டுரை - 3.
தேசிய கலை இலக்கியப் பேரவையினுல் கடந்த வருடம் மாதந் தோறும் நடாத்தப்பெற்ற பாரதி நூற்றண்டு ஆய்வுரைகளை தொடர்ச் சியாக கட்டுரை வடிவில் தருகிறேம்.
- ஆசிரியர் குழு
பொருளியல் சிந்தனைகளும் பாரதியும்
அ. ஜெயரத்தினம்
யுகக் கவிஞனன பாரதி தனது சமகாலப் பிரச்சனைகள் குறித்து கவிதைகள் கட்டுரைகள் வாயிலாக பல்வேறு கருத்துக் களை வெளியிட்டுள்ளான். அக்காலத்து அரசியல், தமிழ்இலக் கியம், பெண்விடுதலை, சாதியொழிப்பு, போன்ற பிரதானமான விஷயங்களில் தீர்க்கமான கருத்துக்கள் பல பாரதியிடமிருந்து வெளிவந்தன. கவிஞனகவும், பத்திரிகையாசிரியனுகவும், அரசியல் வாதியாகவும் சமூகசீர்திருத்த வாதியாகவும் பன்முகப்பட்ட ஆளுமை பெற்றிருந்தவன் பாரதி. இதன் காரணமாக சமுதாயத் தின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்தும் நடைமுறைப் பிரச் சனைகள் குறித்தும் கருத்துக்களை இடையருது வெளியிட்டான்.
இவ்வாறு பாரதியால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அவன்
வாழ்ந்த காலச் சூழலில் மிகுந்த முற்போக்கானவையும் தெளிந்த
சிந்தனை கொண்டவையாயும் காலமாற்றததோடு இயைந்தவை
யாயும் ஒப்புக்கொள்ளப்படுகின்றன; போற்றப்படுகின்றன. இதே வகையில் பொருளியல் சிந்தனைகள், கருத்துக்கள் எதையும்
பாரதி வெளியிட்டுள்ளான என்று சிந்திப்பதும் பயனுடையதா கும். இன்று வாழ்க்கைச் செலவு, விலைவாசி உயர்வு பற்றி
எவருமே கருத்துத் தெரிவிப்பதுபோல அக்காலத்திய நடை முறைப் பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றிப் பாரதி கருத்துக்
கள் தெரிவித்திருக்கலாம். அதோடு அமையாது அடிப்படை பிரச்சனைகள் பற்றிப் பொருளாதாரக் கருத்துக்களையும் வெளி யிட்டிருக்கலாம்.
இப்படி ஏதாவது கருத்துக்களை பாரதி வெளியிட்டிருப்பின் அக்கருத்துக்கள் அன்றைய காலச் சூழ்நிலையில் முற்போக்கான வையா? அவனுடைய ஏனையதுறைக் கருத்துக்களோடு ஒத்திசை கொண்டனவா? என்பதையும் காலத்துக்கு காலம் அவனிடமிருந்து வெளிவந்த இத்தகைய கருத்துக்கள் வளர்ச்சியில் பாங்கானவை
5

Page 5
யா? அல்லது முரண்பாடுடையவையா? என்பதையும் அவனது கருத்துக்களை உருவாக்கிய சக்திகள் சூழ்நிலைகள் யாவை? தேசிய சர்வதேசிய இயக்கங்களின் பாதிப்பு எத்தகையது என்பதையும், சமகால இந்தியப் பெரும் தலைவர்களின் கருத்துக்களோடு பாரதியின் கருத்துக்கள் மாறுபடுகின்றனவா அல்லது உடன்படு கின்றனவா? என்பதையும் உள்வாங்கியதாகவே எனது கட்டுரை அமையும்.
இந்தியநாட்டு வறுமைபற்றி
இந்திய நாட்டு வறுமை, பஞ்சம் என்பனபற்றி பாரதி ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார். இந்தியாவில் வறுமையும் பஞ்சமும் பாரதி பிறந்த காலத்தும் வாழ்ந்த காலத்தும் மிகச்சர்வசாதாரண நிகழ்ச்சிகளாக இருந்தன. முருகையன் அவர்கள் தமது "கால மாற்றங்களும் பாரதியும்” என்ற ஆய்வுரையில் (பாரதி ஆய்வரங்க உரை) இந்திய நாட்டு வறுமை நிலைபற்றி பாரதி கொண்டிருந்த கருத்துகளை மிகத் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்து கூறினர்.
இந்தியர்கள் தமது வறுமை நிலைக்கு காரணம் யாது என்பதை அறியாதவர்களாய் இருப்பது கண்டு பச்சாத்தாபப்படும் பாரதி, அந்த வறுமையைப் போக்க குரல் கொடுப்பதையும் முப்பது கோடி மக்களின் சங்கம் முழுவதும் பொதுவுடமையாவதாலே தான் அது சாத்தியமாகும், என்று கூறுவதையும் விளக்கி இருந் தார். இது இந்திய வறுமையைத் தீர்க்க பாரதி கொண்டிருந்த அடிப்படைத்தத்துவ கண்ணுேட்டமாகும்.
பாரதி வறுமையை நேடியாக அனுபவித்தவர். ஓரளவு வசதியுள்ள குடும்பத்திலே அவர் பிறந்திருந்தாலும், தந்தையா ரின் தொழில் முறிவும் மரணமும் இளமையிலிருந்தே பாரதியை வறுமையின் பிடிக்குள் தள்ளின. பாரதியார் இறக்கும் வரை வறுமையின் பிடியிலிருந்து மீளவில்லை. ஓர் அன்பர் உதவிய ஐம்பது ரூபா பணத்தில் தான் பாரதியின் இறுதிக் காரியங்களே நடை பெற்றன.
பாரதி தனது ஸ்வசரிதையில் தனது தந்தை தீய வறுமை யால் பெரும்துயர் எய்தி நின்றதைக் கூறுகிருர், 'ஆர்ப்பு மிஞ்சப் பலபல வாணிகம் ஆற்றிமிக்க பொருள் செய்து வாழ்ந்த' சின்னச் சாமிஜயர், ஓங்கிநின்ற பெருஞ்செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன் என்று விவரிக்கிருர்,
அந்நியராகிய ஆங்கிலேயர் செய்த சதியினலே தந்தை பொரு ளிழந்து வறுமை எய்தியதையும் அதன் விளைவுகளையும் பாரதி நேரே அனுபவிக்கிருர்,
6

'பாங்கினின்று புகழ்ச்சிகள் பேசிய
பண்டை நண்பர்கள் கைநெகிழ்தே கினர் வாங்கியுய்ந்த கிளைஞரும் தாதரும்
வாழ்ந்த தேய்ந்தபின் யாது மதிப்பரோ?
என்ப்து பாரதியின் அனுபவ வாக்கு. இத்துயரினல் தந்தை இறக்க, பாரதி சிந்தை கலங்கினர். இளமையில் வறுமை கொடிது என்பர். வறுமையின் தாக்கம் பாரதிக்கு இளமை யிலேயே அதுவும் திருமணமாகிச் சில நாட்களிலேயே ஏற்பட்டு விட்டது. அப்போது அவனுக்கு வயது பதினறு; திருமணமாகி ஒரு வருடம். இதனலே தான்,
"பொருளிலார்க்கினமில்லை, துணையில்லை
பொழுதெல்லாம் இடர் வெள்ளம் வந்
w தெற்றுமால்." என்று வள்ளுவர் குறளை மேற்கோள் காட்டி,
**பொருளிலார் பொருள் செய்தல் முதற்கடன்." என்று தீர்மானமாக பாரதி கூறுகிருர்,
இவ்வாறு பாரதியின் சொந்த வறுமையனுபவம் இந்திய நாட்டின் வறுமைப் பிரச்சினையை ஒழிக்கவேண்டும் என்பதில் அவருக்கு ஒர் ஆவேசமான தூண்டுகோலாயிருந்திருக்கலாம். அதில் சந்தேகமேயில்லை. ஆனல் இந்திய நாட்டின் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளில் மனம் ஈடுபாடு கொண்ட கவிஞன் பாரதி, பிராமணனுகப் பிறந்தும் சாதியொழிப்பை வேண்டி நின்ற பாரதி சொந்த அநுபவம் இருக்காது விட்டால் கூட, வறுமையை ஒழிக்க குரல் கொடுத்திருப்பான் என்பதில் ஐய மில்லை. ஏனெனில்,
"தாழ்வுற்று வறுமை மிஞ்சி,
விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்றதாமோர்
பாரத தேசந்தன்னை."
மிடிமைப் பிணியும் அடிமைத்தளையும் பூண்டிருந்த பாரதத் தையே பாரதி அன்று தரிசிக்கிருன். ஆகவே வறுமையொழிப் புக்காகவும் சுதந்திர மீட்சிக்காகவும் பாரதி குரல் கொடுப்பது இயல்பே.
பாரத தேசத்தின் நிலைபற்றி 1881ல் கார்ல்மாக்ஸ் பின் வருமாறு எழுதினர் (மாக்ஸ் எங்கல்ஸ் நூல் திரட்டு தொகுதி 35 பக்கம் 129/130) “பலவித வடிவங்களில் ஆங்கிலேயர்
7

Page 6
ஆண்டுதோறும் இந்தியர்களிடமிருந்து பறித்துச் செல்லும் பணம் எந்தவித ஈடும் இன்றி அவர்கள் இந்தியர்களிடமிருந்து எடுத்துச் செல்லும் பணம் அவர்கள் இந்தியாவின் உள்ளே தங்களுக்கு உரிமைப்படுத்திக்கொள்வதை கணக்கில் சேர்க் காமலேயே அதாவது இந்தியர்கள் பிரிட்டனுக்கு ஆண்டு தோறும் இலவசமாக அனுப்பவேண்டியிருக்கும் சரக்குகளின் மதிப்பை மட்டும் எடுத்துக்கொண்டால் இந்தியாவின் 6 கோடி விவசாய இயந்திரத் தொழில் உழைப்பாளிகளுடைய வருவாயில் மொத்தத் தொகையைவிட அதிகம் ஆகும். இது மெய்யான இரத்தப் பெருக்கு. இது சகிக்க முடியாத கோரம்; பஞ்ச ஆண்டு கள் அங்கே ஒன்றன் பின் ஒன்முக தொடர்கின்றன. அதிலும் பஞ்சம் ஐரோப்பியர் இதுவரை கற்பனைகூடச் செய்யாத அளவு களை எட்டிவிடுகிறது." (இந்தியாவின் வரலாறு நூலில் மேற் கோள் காட்டப்பட்டது. முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ).
கார்ல்மாக்ஸ் இவ் வசனங்களை எழுதிய அடுத்த ஆண்டில் 1882ல் இத்தகைய பஞ்ச சூழ்நிலையில்தான் பாரதி பிறந்தான்.
கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்துக்கும் பட்டினிக்கும் வருடாவருடம் பலியாகின்றனர் என்ற விபரம் மேற்படி நூலில் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளது.
1896 - 97 - 6 கோடி 20 லட்சம் 1899 - 1900 - 2 கோடி 80 லட்சம் 1905 - 1907 - 1 கோடி 30 லட்சம் 1907 - 1908 ட 4 கோடி 96 லட்சம்
1896-1908 பஞ்ச காலத்தில் பிளேக் நோயினல் மட்டும் 60 லட்சம் பேருக்கு மேல் மடிந்தனர். -பாரதியின் நெஞ்சு பொறுக்கவில்லை. அவனது ஏக்கம் கவிதையாக உருப்பெறு கிறது.
"கஞ்சி குடிப்பதற் இல்லார் - அதன்
காரணங்கள் இவையெனும் அறிவுமிலார் பஞ்சமோ பஞ்சமென்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்து துஞ்சி மடிகின்ருரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே'.
கஞ்சி குடிப்பதற்கு இல்லாத காரணத்தை மக்கள் அறியாமல் இருக்கின்றர்களே என்ற பரிதவிப்பும் இம் மக்களுடைய துய ரைத் தீர்ப்பதற்கு ஒரு வழியும் இல்லையே என்ற பாரதியின் ஏக்கமும் கவிதையிலே வெளியாகின்றன.
8

அவுஸ்ரேலிய பாடசாலை ஒன்றில் இந்தியர்களின் நாளாந்த உணவு எது என்று கல்வியதிகாரி கேட்ட வினவுக்கு, "பட் டினி' என்று ஒரு சிறுமி பதிலளித்ததாகப் பாரதி கட்டுரை யொன்றில் குறிப்பிட்டதையும் இங்கு மனங்கொள்ளவேண்டும். இது எவ்வளவு தூரம் இந்தியாவின் பட்டினி, வறுமை என்பன பற்றி பாரதி ஈடுபாடு கொண்டிருந்தான் என்பதை விளக்கும்.
கஞ்சி குடிப்பதற்கில்லாதாருடைய துயரைத் தீர்ப்பதற் கான வழியை பிற்காலத்தில் பாரதி திட்டமாகக் கூறுகிருர்,
'வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.' என்ற கவிதையிலே எல்லோருக்கும் வயிற்றுக்குச் சோறிடும் வழியைக் கூறுகிருர், பிறர் பங்கைத் திருடுதலாகிய சுரண்டலைத் தவிர்ப்பதால் எல்லோருக்கும் சோறுண்டு, பஞ்சமில்லை என்பது அவனது கருத்து. சுரண்டலே பசி பட்டினியின் மூலகாரண மாவதை பாரதி தெளிவாக குறிப்பிடுகிருர். இதனுல்தான் மணி தர் அத்தனை பேருக்கும் போதுமான ஆகாரம் பூமாதேவி கொடுக்கும் என்று திடமான உறுதியுடன் பாரதி தனது கட் டுரையொன்றில் கூறியுள்ளார்.
பிறர்பங்கைத் திருடாமல் விதி செய்து நடைமுறைப்படுத் தல் அடிப்படையான, ஆனல் மிக நீண்டகால வழிமுறை யாகும். ஆகவே உடனிகழ்கால வழிமுறையாக பாரதி இன் னெரு கருத்தையும் சொல்கிருர். இந்தியாவில் பஞ்சம் என்ற தமது கட்டுரையில் பின்வருமாறு பாரதி குறிப்பிடுகின்றன். (பாரதியின் கட்டுரைகள் பக்கம் 213/214).
"பஞ்சம் பஞ்சம் என்ற சப்தம் நமது சமூகத்தில் தற் காலம் மலிந்துவிட்டது. நாட்டில் உண்டாகும் பஞ்சமெல்லாம் பணப் பஞ்சமேயன்றி தானியப் பஞ்சமன்று. *’ என எழுது கிருர், அதாவது பூமி விளைகிறது. ஆனல் அவ் விளைச்சலை அநுபவிக்க மக்களுக்கு வாய்ப்பில்லை. அவர்களது கையில் தானி யங்களை வாங்குவதற்கு பணம் இல்லை. செயற்கையாக ஏற்பட் டிருக்கும் பஞ்சத்தை குறிப்பிட்டு, இதை நீக்குவதற்கு பின் வரும் அபிப்பிராயங்களை தனது கட்டுரையிலே குறிப்பிட் டுள்ளார்.
1. மக்களின் வருவாய்த்துறைகளை அதிகரிப்பதற்கான நட வடிக்கைகளில் அரசு ஈடுபட்டுப் பணப் பஞ்சத்தை நிவர்த்திக்க
வேண்டும். -
9

Page 7
2. அதிக விளைச்சல் உள்ள மலிவான காலத்தில் தானி யங்களை வாங்கி சேமித்து வைத்து பஞ்ச காலத்தில் அரசாங் கமே மலிந்த விலையில் மக்களுக்கு விற்கவேண்டும். (இதை Buffer stock Policy என தற்காலத்தில் அழைக்கின்றனர். இன்று பல நாடுகளில் அரசாங்கங்கள் இத்தகைய கொள்கை களை நடைமுறைப்படுத்தி, தானிய விலைத் தளம்பல்களை ஒரளவு கட்டுப்படுத்துகின்றன. சர்வதேச ரீதியான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் இக் கொள்கை இன்று மிகவும் முக்கியம்வாய்ந்த தொன்ருகும்.)
3. விளைச்சல் இல்லாத நிலத்துக்கு வரிகளை ரத்துச் செய் தல் வேண்டும்.
4. விவசாயிகளுக்கு வட்டியின்றிக் கடன் தரவேண்டும்.
இத்தகு நடவடிக்கைகளால் பஞ்சத்தை ஓரளவு தவிர்க் கலாம் என்கிருர், பாரதியின் இக் கருத்துக்களிலே ஒரு முக் கிய அம்சத்தை அவதானிக்கலாம். அதாவது அரசாங்கம் ஏனேதானேவென்று பார்த்துக் கொண்டிராமல் மக்களின் பொருளாதார சேமங்களில் தலையீடு செய்யவேண்டும் என்பது தான். இது வழிமுறையாக வந்த பிரிட்டிஷாரின் தலையிடா மைக் கொள்கைக்கு மாருன கருத்தாகும். சந்தைச் சக்திகளை எவ்வித கட்டுப்பாடுமின்றி இயங்க அனுமதித்தால் தன்னியக்க மாகவே பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு பொருளாதார சேமம் நாட்டு மக்கள் எல்லோருக்கும் கிடைக்கும் என்பதே தலையிடாமைக் கொள்கையின் சாராம்சமாகும். இக் கொள்கை 1930ஆம் ஆண்டுகள் வரையும் உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதார சித்தாந்தமாகும். 1929.gif (Great Crash) என வருணிக்கப்படும் மாபெரும் உலக பொருளா தார மந்தமும் அதனையடுத்து வெளிவந்த J. M. கீன்ஸ் எழுதிய தொழில், பணம், வட்டி பற்றிய பொதுக் கொள்கை என்ற நூலுமே இக் கொள்கை கைவிடப்படவும், அரசாங்கம் நேரடி பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவும் காரணங்களாயின. பாரதி இதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்னரே அரசின் பொரு ளாதார நடவடிக்கைகளின் அவசியம் பற்றி வற்புறுத்தியுள்ளார்.
**ராஜ்ய சாஸ்திரம்' என்ற தமது கட்டுரையிலே பாரதி மிகத் தெளிவாக குறிப்பிடுகிருர் (பக்கம் 302).
**ஜனங்களுக்குள்ளே சமாதானத்தைப் பாதுகாப்பதும் வெளி நாடுகளிலிருந்து படையெடுதது வருவோரைத் தடுப் பதும் மாத்திரமே ராஜாங்கத்தின் காரியங்கள் என்று நினைத்து
10

விடக் கூடாது. ஜனங்களுக்குள்ளே செல்வமும் உணவும் வாசம் முதலிய செளகர்யங்களும் கல்வியும் தெய்வபக்தியும் ஆரோக்கியமும் நல்லொழுக்கமும் பொது சந்தோஷமும் மென் மேலும் விருத்தியடைவதற்குரிய உபாயங்களை இடைவிடாமல் அனுஷ்டித்துக் கொண்டிருப்பதே ராஜாங்கத்தின் கடமை யாவது.'' - அக்காலத்தே இது மிகவும் முன்னேறிய கருத்து,
ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரக் கொள்கை காரண மாக 19ம் நூற்ருண்டின் முழுமையும் இந்தியப் பொருளாதார அமைப்பில் பாரதூரமான பாதிப்பு ஏற்பட்டது.
(1) இந்தியா ஆங்கில கைத்தொழில் உற்பத்திச் சரக்கு களின் விற்பனைச் சந்தையாக மாற்றப்பட்டது.
(2) ஆங்கில கைத்தொழில்களுக்கான மூலப் பொருட்களை மலிவான விலையில் உற்பத்தி செய்து அனுப்பும் மூலப் பொருள் விவசாய விளை நிலமாக இந்தியா மாற்றப்பட்டது.
(3) உள்நாட்டில் ஆங்கில முதலீடுகள் அதிகரித்தன.
இதன் விளைவாக உள் நாட்டுச் சுதேசக் கைத்தொழில்கள் அழிந்தன. குடிசைக் கைத்தொழில்கள் ஒழிந்தன. உள்நாட்டு உணவு விவசாயம் சீர்குலைந்தது. இதன் காரணமாக வேலையற் ருேர் பட்டாளம் ஒன்று தோன்றி பஞ்சத்தால் வாடுகையில், தரகு வர்த்தகம் செய்த இந்திய வர்த்தகர்களிடம் மூலதனம் குவிந்து வந்தது. பெரிய மூலதனத்துக்கும் சிறிய மூலதனத்துக் கும் இடையே போட்டி ஏற்பட்ட்து. இத்தகைய ஒரு சூழ் நிலையில்தான் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர் தொடங்கி நடத்திய பஞ்சாலை முறிவடைந்தது. ஆங்கிலேய முதலீடுகளின் போட்டியை தாங்க இந்திய சிறிய முதலீடுகளால் முடியவில்லை. இந்தச் சதிதான் ஊணர் செய்த சதி என்று பாரதியாரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே பாரதியின் ஆங்கிலேய வெறுப் புக்கும் அவனது சுதேசிய நோக்குக்கும் இளமையில் வித்தூன் றியதாக ரகுநாதன் தனது கட்டுரையொன்றிலே குறிப்பிடுகிறர். (தாமரை செப்ரம்பர் 67.
ஆகவேதான் பாரதி கூறுகிருர்:
'பாரத தேசம் சுதந்திரம் அடைந்தால்தான் அந்நியர் களின் அடங்காப் போட்டியாலும் அடங்காச் செருக்காலும் வரியாலும் கொல்லப்பட்டிருக்கும் கைத்தொழில்கள் நன்கு தழைத்தோங்கும்.' (பாரதி மும்மணிகள் - பக்கம் 4 – 1909/10 ஆண்டுகளில் இந்தியா பத்திரிகையில் எழுதப்பட்ட கட்டுரைகள்).

Page 8
மேலும்,
"எவ்வளவு நல்ல பூமியானுலும எவவளவு நல்ல மரமான லும் அடக்கியாளும் அந்நிய மரத்து நிழலில் தழைத்தோங்கி வளர முடியாது." (அதே நூல்) . மிகத் தெளிந்த சிந்தனையோடு பாரதி மேற்கண்ட வரிகளை எழுதியுள்ளார். مح۔ـــــــ۔
அடக்கியாளும் ஏகாதிபத்தியத்தை தூக்கியெறியாமல் இந் தியாவில் பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை என்பதையும் பொருளாதார விடுதலைக்கு அரசியல் தேச விடுதலை ஒரு முன் தேவை என்பதையும் பாரதி வற்புறுத்தியிருக்கிருர். இது பல ராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை.
வங்காளப் பிரிவினையும் சுதேசியமும்
இந்திய சுதேசி இயக்கத்தை வீறுகொண்டெழச் செய்த பெரும் சக்தியாக வங்காளப் பிரிவினை கருதப்படுகிறது. 1905ம் ஆண்டில் இந்தியர்களுடைய கடும் எதிர்ப்புக்கும் மத்தியில் வைஸ்ராய் கர்ஸாள் என்பவனல் வங்காளம் பிரிவினை செய்யப் பட்டது. இச் செய்கை தேசபக்திக் கனலை கொழுந்து விட்டெரி யச் செய்தது. கல்கத்தாவில் கூடிய இந்திய காங்கிரஸ் மாநாடு வங்காளப் பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக தீர் மானங்களை நிறைவேற்றியது.
தாதாபாய் நவுரோஜியின் தலைமையில் இந்தியர்கள் அந் நியப் பொருட்களைப் பகஷ்கரிக்க வேண்டும் என்றும் சுதேசியப் பொருள்களையே வாங்கவேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முதன் முதலாக சுயராஜ்ய கோரிக்கைத் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. இம் மூன்றின் வெளிப்பாடும் பொதுவாக சுதேசி இயக்கம் என அழைக்கப்படலாயிற்று இந்த இயக்கம் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்த வகையில் ஒரு அரசியல் இயக்கமாகவும் இந்திய தொழில் வளர்ச்சியின் மீட் சிக்கு அடியெடுத்துக் கொடுதத வகையில் ஒரு பொருளாதார இயக்கமாகவும் உருவெடுத்தது.
தீவிரவாதிகளாகிய திலகர் அணியினரே மேற்கண்ட தீர் மானங்களுக்கு முக்கிய கர்த்தர்கள் என்பதும் தாதாபாய் நவு ரோஜியும் திலகரும் வளர்ந்து வரும் இந்திய முதலாளித்துவத் தின் பிரதிநிதிகள் என்பதும் அறிந்ததொன்றே. பாரதி தீவிர திலகர் அபிமானி என்பதும் கல்கத்தா காங்கிரஸில் கலந்து கொண்டவர் என்பதும் புதிய செய்திகள் அல்ல.
12

திலகர் இப் புதிய சுதேசிய கொள்கையை தமது "கேசரி' பத்திரிகை மூலமாக மராத்தியில் பிரசாரம் செய்து வந்தார். பாரதி இதே கொள்கையை தமது "இந்தியா’ பத்திரிகை மூலமாக செய்து வந்தார்.
பாரதி இச் சுதேசி இயக்க நடவடிக்கைகளில் பல விதமாக ஈடுபட்டார். இந்தியா பத்திரிகையில் அந்நிய பொருள் பகிஷ் காரத்தை விளக்கி பல கட்டுரைகள் எழுதினர். பகிஷ்காரத்தை எதிர்த்தவர்களுக்கு மறுமொழி பகன்றர். சென்னையில் பிபின் சந்திரபாலரை அழைத்து பிரசங்கங்கள் செய்வித்தார். சுதேசி யத்தை கருவாக கொண்ட கவிதைகளைப் பொழிந்தார்.
'பத்தாம் அவதாரம்’ என்ற பாரதியின் கட்டுரை பின் வருமாறு அமைகிறது. (பாரதி தரிசனம் - இரண்டாம் பாகம்பக்கம் 68.)
'வருஷந்தோறும் 60 கோடி ரூபாய்கள் இங்கிருந்து பெற் றடிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடந்து கொண்டிருந்தால் இந்த பாரத தேசம் நாளுக்கு நாள் சொல்ல முடியாத தரித் திரத்திலும் பிணியிலும் மூழ்கி வருவது ஆச்சரியமாகுமா? இப் போது நடைபெற்று வரும் பிரிட்டிஷ் ராஜாங்க முறைமையிலே மேலே கூறியது போன்ற அநீதிகள் எத்தனையோ இருக்கின்றன. இந்த அநீதிகளை நாசம் செய்யும் பொருட்டாக நமக்கிடையே கடவுள் பத்தாம் அவதாரம் செய்திருக்கிருர். இப்போது மனித ரூபமாக அவதாரம் செய்யவில்லை. அவருடைய அவதாரத்தின் பெயர் சுதேசியம்; அவருடைய ஆயுதம் (Boycot) அதாவது அந் நிய சப்பந்த விலக்கு அல்லது பகிஷ்காரம். அவருடைய மந் திரம் வந்தே மாதரம்.'" -
சுதேசிய இயக்கத்தின் தோற்றத்தை ஒரு அவதாரம் என குறிப்பிடுவதிலிருந்தே பாரதி இந்த இயக்கத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். அந்நியப் பொருட் களை பகிஷ்கரிப்பதால் உள்நாட்டுப் பொருள்களுக்கு கிராக்கி ஏற்பட்டு, அவற்றின் விலை உயர்ந்து உள்நாட்டுக் கைத்தொழில் கள் வளர்ச்சியடையும் என்பதே இதில் பொதிந்துள்ள பொரு ளாதார சித்தாந்தம். வேறு வகையில் கூறினுல் உள்நாட்டுச் சந்தை உள்நாட்டுக் கைத்தொழில்களுக்காகப் பாதுகாக்கப்படு கிறது என்பதாம்.
சுதேசியத்தை மிகப் பரந்த பொருளில் காணும் பாரதி, கைத்தொழில் விருத்தி முதலான பொருளாதார விசேஷங்களை அதன் முதலாவது அம்சமாகக் கொள்கிருர். இந்திய நாட்டுக் கைத்தொழில்களை ஏன் இந்திய மக்கள் ஆதரிக்கவேண்டும்?
13

Page 9
ஆரம்பகால கைத்தொழில் உற்பத்தி எதிர்நோக்கும் பிரச்சினை க்ள் எவை? அவற்றை எவ்வாறு இந்திய்` ஜனங்களின் ஆதர வுடன் நிவர்த்திக்கலாம் என்பதையெல்லாம் வெகு விஸ்தார மாகவே பாரதி எழுதுகிறர்.
(பாரதி மும்மணிகள் - பக்கம் 57, 58, 59) ஆரம்ப நிலை யிலுள்ள தொழில்களுக்கு வரிவிதிப்பு, இறக்குமதிக் கட்டுப்பாடு போன்ற கருவிகளால் அரசாங்கம் பாதுகாப்பு அளிப்பது பொருளியல் கொள்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று. பாரதியார் காலத்தில் ஆரம்பத் தொழில்களைப் பாதுகாக்க அந்நிய அரசு முன்வராது என்பதால் பாரதி மக்களே இத் தொழில்களை முன் வந்து பாதுகாக்கவேண்டும் என்கிருர், ஆரம்பத் தொழில்களின் உற்பத்தித் தரக்குறைவைப் பொருட் படுத்தாமல் மக்கள் ஆதரிக்கவேண்டும் என்று தனது கட்டுரை யிலே வேண்டுகோள் விடுக்கிருர்,
சென்னையைச் சேர்ந்த சட்டசபை மெம்பர்களும் காங்கிரஸ் பிரமுகர்களும் அந்நியப் பொருள் பகிஷ்காரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்நிய பொருள்களிடம் வெறுப்பை ஏற் படுத்துவதால் பகிஷ்காரம் ஹிந்து தர்மத்துக்கு விரோதமானது என்றும் எல்லோரிடமும் கருணை காட்டுவதே ஹிந்து தர்மம் என்றும் கூறினர்கள். பாரதி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார். பாரதி எழுதுகின்ருர் :-
‘எங்கள் நாட்டு சாமான்களையே நாங்கள் வாங்குவோம் என்ருல் இதில் அந்நியர்களிடம் விரோதமிருப்பதாக ஏன் கொள்ள வேண்டும்? ஒருவன் தன் பத்தினியிடத்தில் அன்பு கொண்டு அவளுக்கு உண்மையாக நடக்கும் பட்சத்தில், அவன் அந்நிய ஸ்திரீகளை விரோதிக்கிருன் என்று அர்த்தமா? ஆதலால் இந்த சட்ட சபை வேதாந்திகள் அந்நியரிடம் காட்டும் தயவை யும் கருணையையும் சிறிது சுதேசிகளிடமும் செலுத்தும்படி கேட் டுக்கொள்கிருேம்.’’ இவ்வாறு பாரதியின் பேணு மிக வலிமை யுடன் எழுதுகிறது. இச் சுதேசி இயக்கத்தில் பாரதி மிகத் தீவிரமாகவே ஈடுபட்டார். இதன் காரணமாகவே பாரதி அரசின் பார்வைக்குள்ளாகி புதுச்சேரி செல்ல நேர்ந்தது. இதே காரணத்துக்காகவே திலகர் கைது செய்யப்பட்டார் என்பது மனம் கொள்ளத் தக்கது.
இந்திய தொழில் வளர்ச்சியை மையப் பொருளாகக் கொண்டு பாரதி பாடிய பாடல்கள் வெகு பிரசித்தம். அவ ருடைய பாரத தேசம் என்ற கவிதையில் "உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்’ என்கிருர், கப்பல் தொழில்,
14

பயிர்த் தொழில், சுரங்கத் தொழில், கடல் தொழில், புட வைத் தொழில், ஆயுதத் தொழில், காகிதத் தொழில் என் றிவ்வாறு பற்பல நவீன தொழில்கள் எல்லாம் செய்வோம் என்று அறிவிக்கிருர். இவரது இக் கவிதை ஒரு 5 ஆண்டுத் திட்டம்போல் இருப்பதாக பிரபல விமர்சகர் ரகுநாதன் அபிப் பிராயம் தெரிவித்துள்ளார்.
பிற கைத்தொழில்கள் வளர்வதற்கு ஆதாரமான எந்திரத் தொழில்கள், நுகர் பொருட்களை ஆக்குகின்ற கைத்தொழில் கள், மூலப்பொருட்களை உருவாக்குகின்ற கைத்தொழில்கள் என்று ஆயிரமாயிரம் தொழில்களை கனவு காண்கிருர், விவ சாயத்துக்கும் கைத்தொழிலுக்கும் போதிய அழுத்தத்தை பாரதி கொடுத்திருப்பது அவரது பல பாடல்களிலிருந்து தெளி வாகும். சகல தொழில் துறைகளிலும் இந்தியா முன்னேற வேண்டும். தனது சொந்த பலத்திலே நிற்கவேண்டும் என்பதே பாரதியின் ஆவல். இதனல்தான் அந்நாளில் ஆசிய நாடுகளுக்கு ஆதர்சமாயிருந்த ஜப்பான் நாட்டிடமிருந்து தொழில் நுணுக் கங்களை கற்று வரும்படி இளைஞர்களை பார்த்து பாரதி தனது கட்டுரை ஒன்றிலே வேண்டுகோள் விடுக்கிருர், வளர்ச்சியடைந்த ஒரு நாட்டிடமிருந்து தொழில் நுணுக்கங்களைப் பெற்றுக் கொள்ளுதலின் இன்றியமையாமையை பாரதி நன்கு புரிந் திருந்தார்.
பூன நகரத்திலே 1905 அக்டோபர் 8ம் திகதி 5000 மக் கள் முன்னிலையில் திலகர் அந்நிய பொருள் குவியலுக்கு தீ மூட்டினர். கூடியிருந்த மக்கள் தீயை வலம் வந்து, விபூதி பூசி, உடையில்லாமல் திரிய நேர்ந்தால் கூட இனியொரு போதும் ஆங்கிலத் துணிகளை வாங்குவதில் என சபதம் ஏற்றனர்.
சென்னையில் பாரதியின் அழைப்பின் பேரில் திருவல்லிக் கேணி கடற்கரையில் பிபின் சந்திரபாலர் அந்நிய துணிமணி களுக்கு தீ மூட்டினர். காந்திக்கு முன்னரே அந்நியத் துணி பகிஷ்கரிப்பில் பாரதி ஈடுபட்டுவிட்டார் என்று வ. ரா. எழுது கிருர், சுதேசி இயக்கத்தின் வீச்சையும் வேகத்தையும் கணிப் பதற்கு பின்வரும் நிகழ்ச்சியை உதாரணமாகக் கூறுவர். 75 விலைமாதர் NASIK என்ற இடத்தில் கூடி இனி அந்நியப் பொருட்களை உபயோகிப்பதில்லை என்று தீர்மானம் எடுத்தார் g5 GMT TT fo. *
* The Myth of lokamanya, Telak and Mass Politics in Maharastra By Richard I cushman.
15

Page 10
இவ்வாறு நாடு முழுவதும் சுதேசி இயக்கத்தால் கவரப் பட்டபோது, உணர்ச்சி வேகம் கொண்ட கவிஞனன பாரதி யின் மனேநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று கூறவேண்டுவ தில்லை.
தமிழ் நாட்டில் 1906ல் தூத்துக்குடியில் வ. உ. சியின் சுதேசி கப்பல் கம்பனி இத்தகைய சூழ்நிலையில்தான் ஆரம்ப மாகியது. ஆனல் அதற்கும் சின்னச்சாமி ஐயரின் பஞ்சாலைக்கு நேர்ந்த கதியே ஏற்பட்டது.
தேசிய முதலாளித்துவத்தின் சுதேசிய பொருளாதார இயக் கத்தை அன்றைய நிலையில் பாரதி ஆதரித்தது மிகவும் சரி யானதும் முற்போக்கான நிலைப்பாடு கொண்டதும் ஆகும்.
ருஷ்யப் புரட்சியின் பாதிப்பு
பிரெஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரமாகிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சுலோகத்தை தனது இலட் சியமாக “இந்தியா’ பத்திரிகையில் பொறித்து வெளியிட்ட பாரதி, பத்திரிகை ஆசிரியணுக (Journalist) இருந்தமையால் சம கால வெளியுலகத் தொடர்புகளை உடனுக்குடன் பெற்று அவற் றின் தாக்கங்களுக்கும் செல்வாக்குக்கும் ஆட்பட்டான்.
1917ன் ருஷ்ய அக்டோபர் புரட்சியை வாழ்த்தி வரவேற்ற முதலாவது இந்தியக் கவிஞனன பாரதி அப் புரட்சியின் இலட் சியத்திலும் உடன்பாடு கொண்டிருந்தான் என்பதையும் இந் தியாவில் ஒரு பொதுவுடமை சமுதாய அமைப்பு தோன்ற வேண்டுமென்று விரும்பினன் என்பதையும் அவனது பல கவிதை களும் கட்டுரைகளும் எடுத்துக் காட்டுகின்றன.
வெறுமனே புரட்சிக் கோஷங்களால் பாரதி கவரப்பட்டான் அல்ல. புரட்சிக்குப் பிந்திய ருஷ்ய நிகழ்ச்சிகளை அவன் நன்கு அவதானித்து வந்துள்ளான் என்று அவனது கட்டுரைகள் புலப் படுத்துகின்றன.
1917ல் புரட்சி நடந்து முடிந்த சில நாட்களுக்குள் “செல் வம்’ என்ற கட்டுரையில் பாரதி பின்வருமாறு எழுதுகிருர்.
'ருஷ்யாவில் சோஷலிஸ்டுக் கட்சியார் ஏறக்குறைய தம் முடைய நோக்கத்தை நிறைவேற்றி விடக்கூடுமென்று தோன்று கிறது. இக் கொள்கை மென்மேலும் பலமடைந்து வருகிறது. ஏற்கெனவே பூரீமான் லெனின் முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிறசெல் வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொது
16

வுடமையாகிவிட்டது. ருஷ்யாவிலிருந்து இது ஆசியாவில் தாண்டிவிட்டது. sy
"இச் சித்தாந்தம் பரிபூரண ஜெயமடைந்து மனிதருக் குள்ளே ஸகஜதர்மமாக ஏற்பட்ட பிறகுதான் மானிடர் உண்மை யான நாகரிகம் உடையோர் ஆவர்.'
பாரதியின் இக் கருத்துகளுக்கு வேறு விளக்கம் தேவையில்லை. 'கலைகள்" என்ற கட்டுரையிலே பாரதியார் பின்வருமாறு எழுதுகிருர்,
"ஸ்மத்துவக் கொள்கையிலே இரண்டு செய்திகளைப் பற்றிய விசாரணையுண்டாகிறது. முதலாவது செல்வத்தை உண்டாக்கு தல், இரண்டாவது அதைப் பங்கிட்டுக் கொடுத்தல்.முதல் விஷயம் திறமையின் உபயோகத்தை பற்றியது. இரண்டாவது விஷயம் இன்பங்களைப் பங்கிட்டுக் கொள்வது பற்றியது.இன் பங்களை நேரே வகுத்தால் ஒவ்வ்ொருவனுக்கும் இன்பம் உண்டா கிறது. நேரே வகுத்தல் என்பது ஒன்றுபோல் வகுத்தல் என்று அர்த்தமல்ல. நியாயமாக வகுத்தல் என்று அர்த்தம். நியா யமே சமத்துவத்தின் பெயர். நியாயமே முதலாவது சமத்து வம்.’’ இதனல் "மனிதன் செல்வனுவான், குடிகள் விடுதலை பெற்றிருப்பர், நாடு உயர்வு பெற்றிருக்கும்.'
இக் கருத்துக்களில் நவீன சோஷலிசத்தின் உள்ளடக்கம் முழுமையாக அடங்கியுள்ளது. ஆகவே பாரதி ஒரு சமதர்ம பொருளாதார அமைப்பை வரவேற்கிறபோது அதை நன்கு புரிந்துகொண்டுதான் கூறியுள்ளான் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டும்.
இவ்வாறே பாலகங்காதரதிலகர், பிபின் சந்திரபாலர் ஆகி யோர் சோவியத் புரட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை தமது கட்டுரைகளிலும் சொற்பொழிவுகளிலும் ஆதரித்தனர்.
சமத்துவ பொருளாதார சமூக அமைப்பை தனது இலட் சியமாக ஏற்றுக்கொண்ட பாரதி, லெனின் வழிமுறையை ஏற் றுக் கொண்டவர் அல்ல. லெனின் போன்றவர்களது பலாத் கார வழி இந்தியாவில் ஏற்படுவதற்கு முன்னரே சமாதான மான வேறு வழிகளில் ஒரு சமத்துவ சமுதாயத்தை அடை வதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று பாரதி கூறுகிருர்,
இந்து சனசமூக அமைப்பில் ஐரோப்பாவில் இருப்பது போல அவ்வளவு தார தம்மியம் இல்லையென்றும் முதலாளி, தொழிலாளி வி ராதம் ஐரோப்பாவில் இருப்பதுபோல் இந் தியாவில் இல்லை என்றும் ஏழைகளை அங்குள்ள செல்வர் அவ
17

Page 11
மதிப்பது போல் இந்திய நாட்டுச் செல்வர் அவமதிப்பதில்லை என்றும் ஏழைகளுக்குத் தானம் கொடுக்கும் வழக்கம் இந்தியா வில் உள்ளதென்றும் இதன் காரணமாக ஒரு வன்முறை இயக் கம் தேவைப்படாது என்ற ரீதியிலும் பாரதியார் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார். இந்திய மதத் தத்துவங்களில் பாரதிக்கு இருந்த ஈடுபாடும் இந்திய நிலப்பிரபுத்துவ முறையும் சாதி அமைப்பும் வர்க்க முரண்பாடுகளை கூர்மையடைய விடாமல் தடுத்து வந்தமையும் பாரதியின் மேற்போந்த அபிப்பிராயத் துக்கு அடிப்படையாக இருந்திருக்கக் கூடும்.
ஆனல் ஒன்றைக் கவனிக்வேண்டும். சமாதானமாக மாற் றங்கள் ஏற்படாவிட்டால் வன்முறையில் அவை ஏற்படுவது தவிர்க்க முடியாததாய் விடும் என்பதை பாரதி அங்கீகரித்திருக் கிருர். அவர் எழுதினர்:-
**ஒவ்வொரு கிராமத்திலும் பொருளாளிகள் ஒரு சபை கூடி அந்தக் கிராமத்திலுள்ள ஏழைகளின் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய யோசனைகள் பண்ணி நிறைவேற்ற வேண்டும். அன் பினல் உலகத்தின் துயரங்களை எளிதாக மாற்றிவிடலாம். அங் நுனம் செய்யாமல் அஜாக்கிரதையாய் இருந்தால் ஐரோப்பா வைப் போல் இங்கும் ஏழை செல்வர் என்ற பிரிவு பலமடைந்து விரோதம் முற்றி அங்கு ஜனக்கட்டு சிதறும் நிலைமையிலிருப்பது போல் இங்கும் ஜனசமூகம் சிதறி, மகத்தான விபத்துக்கள் நேரிட இடமுண்டாகும் " (பக்கம் 74 பாரதியார் கட்டுரை).
இது ஒர் எச்சரிக்கை. அன்பினல் செய்யத் தவறின் வன் முறை விபத்துக்கள் ஏற்படும் என்கிருர் பாரதி. அதாவது வரலாற்றின் தவிர்க்கமுடியாத தன்மையை புரிந்தவர் போல பாரதி பேசுகிருர்,
எனினும் பாரதி தன்னளவிலே ஒரு கற்பனவாத வழி முறையை தனது கட்டுரைகளிலே எழுதியுள்ளமையை கவனிக் காமல் விடமுடியாது. கிராமங்களில் நிலச்சுவான்களும் பண்ணை யடிமைகளும் கூடி “தொழில் நிர்வாக சங்கம்’ என்ருெரு சங் கம் அமைத்து கிராமத் தொழில் கல்வி, சுகாதாரம், துணி, உணவு என்று இன்னுேரன்ன எல்லாவற்றையும் கவனித்தால் வறுமையற்றுப் போய்விடும். இதனைப் பார்த்து மெச்சி எல் லாரும் கைக்கொள்வர் என்றெல்லாம் எழுதுகிருர். (பக்கம் 388, 389 பாரதியார் கட்டுரைகள்.)
பாரதியின் பொருளாதார சிந்தனைகளிலே காலத்தின் போச் கை அவன் புரிந்து கொண்டுள்ளமை தெளிவாகத் தெரி கிறது. சுதேசிய இயக்க போராட்ட கால கட்டத்திலே அவன்
18

உள்நாட்டு முதலாளித்துவத்தை ஆதரித்தான். பிற்காலத்திலே சமத்துவ பொருளாதாரத்தை ஆதரித்தான். இது பாரதியில் காணப்படும் வளர்ச்சி; சாலத்தின் தேவை.
பாரதியும் காந்தியும்
இந்திய தேசப் பிதாவான மகாத்மா காந்தியின் பொருளா தாரக் கொள்கைகளை பாரதியின் கொள்கைகளுடன் ஒப்பிடுதல் பொருத்தமாயிருக்கும் என நம்புகிறேன்.
நவீன முதலாளித்துவ நாகரிகத்தையும் பெரிய இயந்திரத் தொழில் துறையையும் முதலாளித்துவ நகரப் பண்பாக்கத்தை யும் காந்தி விமர்சித்து வந்தார். கைத் தொழில், குடிசைக் கைத்தொழில் உற்பத்தியை மீண்டும் உயிர்ப்பித்து வளர்ப்பது, பொருளாதார நோக்கில் தனித்து இயங்கும் கிராம சமுதாயங் களை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதார வாழ்க்கையை கட்டுப்பாடின்றி இயங்கச் செய்வது ஆகியன காந்தியின் செயல் திட்டத்தில் அடங்கி இருந்தன.
இந்திய விவசாயி, கம்மியன், குடிசைத் தொழிலாளி, சிறு வியாபாரி ஆகியோரின் குட்டி பூர்ஷவா தன்மை கொண்ட கற்பன சோஷலிச ஆதர்ஷம் காந்தியின் இந்த விமர்சனத்திலும் செயல் திட்டத்திலும் வடிவு பெற்றது. (இந்திய வரலாறுமாஸ்கோ.) м,
காந்தி நவீனத் தொழில் மயத்தை எதிர்த்தார். ‘யந்திர சாலை, ஆலை இவற்ருல் என்ஜின் புகையேறிய நாட்டிலே தேவர்கள் இரார். நவீன யந்திர தந்திரங்களினலும் அவற்றினுல் விளையும் செல்வத்தினுலும் இன்பமுண்டாகா' என்று காந்தி கூறுகிறர். மேற்கோள் பாரதியினுடையது. (பக்கம் 64 பாரதி கட்டுரைகள்). ஆனல் பாரதியோ நேர்மாருன கருத்துக் கொண்டவன். வரப்போவது இயந்திரயுகம் என்பதைத் தெரிந்துகொண்டு, அதை அங்கீகரித்து வரவேற்றவன். பாரிய இயந்திர கைத்தொ ழிலாக்கத்தினல் தான் இந்தியா முன்னேற முடியும் என மனமார நம்பியவன்.
'இரும்புத் தொழில் உலகத்திலே வலிமையும் செல்வமும் கொடுப்பது. எல்லா விதமான கைத் தொழில்களும் தற்காலத் திலே இரும்பு யந்திரங்களாலே செய்யப்படுகின்றன. ஆதலால் நமது தேசத்து கொல்லருக்கு நாம் பலவிதங்களில் அறிவு விருத் தியும் ஜீவன செளகர்யங்களும் ஏற்பாடு செய்து கொடுத்து இடத்துக்கிடம் இயன்றவரை இரும்புத் தொழில்களை வளர்க்க வேண்டும்', என்று பாரதி எழுதுகிருர்,
19

Page 12
காந்தி உற்பத்திச் சாதனங்கள் பொதுவுடமை ஆக்கப்படு வதை ஏற்றுக் கொண்டவர் அல்லர். உற்பத்திச் சாதனங்களை யும் பெரும் செல்வங்களையும் வைத்திருப்போர் அவற்றை நம் பிக்கைச் சாதனமாக, தர்ம சாதனமாக ஒரு தர்மகர்த்தா முறையில் ஏனைய மக்களுக்காக நிர்வகித்து வரவேண்டும் என்று விரும்பினர். பாரதி சகல உற்பத்திச் சாதனங்களும் நாட்டு மக் களுக்கு உரிமையளிக்கப்படவேண்டும் என்று விரும்பினர். கைத் தொழில் வியாபாரம் எதுவும் கூட்டுத் தொழிலாகவே நடை பெற வேண்டும் என்ருர், 'வியாபாரத்தில் கூட்டுவியாபாரம் எங்ங்ணம் சிறந்ததோ அதுபோலவே கைத்தொழிலிலும் கூட் டுத் தொழிலே சிறப்பு வாய்ந்தது. முதலாளியொருவர் கீழே பல தொழிலாளிகள் கூடி நடத்தும் தொழிலைக் காட்டிலும் தொழிலாளிகள் பலர் கூடிச் செய்யும் தொழிலே அதிக நன்மை யைத் தருவதாகும்’ (பக்கம் 304) என்று எழுதியுள்ளார். இதனல்தான் அவர் கூடித் தொழில் செய் என்று தமது ஆத்தி சூடியில் அறிவுறுத்துகிருர். கூடி வினை செய்வோர் கோடி வினை செய்வார் என்பது அவர் வாக்கு. காந்தி தமது ஒத் துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக அந்நிய துணி பகிஷ் காரத்தை முன்னின்று நடத்தினர். பாரதி காந்திக்கு முன்பே சுதேசி இயக்கத்தில் திலகரின் தலைமையில் இதை ஆதரித்தார்.
"தொழிலாளியை கஞ்சிக்குப் பறக்க விட்டு விட்டு தனது பணப் பெட்டிகளை நிரப்பிக் கொள்ளும் ஒவ்வொரு முதலாளியும் கொள்ளைக்காரரே ஒழிய வேறில்லை' என்று பாரதியும், **தனது தேவைக்கு மேலதிகமாக பொருள் சேர்ப்பவன் திரு டன்’ என்று காந்தியும் கூறுவதில் ஒற்றுமையிருக்கிறது.
ரொட்டிக்கு வழியில்லாதவனிடம் கடவுளைப் பற்றி பேசக் கூடாதென காந்தி சொன்னர். "ஜனங்களுடைய வயிற்றுக்கு கஞ்சி காட்ட முடியாவிட்டால் அந்த தேசத்தில் எவ்வளவு பெரிய வித்வான் இருந்தும் பிரயோசனம் என்ன?’ என்று கேட் கிருன் பாரதி.
தொடர்ந்து அவர் சொல்கிருர், "சகல ஜனங்களுக்கும் வயிறு நிறைய உணவு கிடைக்காத ஊரில் வாழும் செல்வர் களெல்லாம் திருடர். அங்கே குருக்கள் எல்லாம் பொய்யர், பண்டிதர் எல்லாம் மூடர், மேன்மை நிலைபெற வேண்டுமானல் கைத்தொழில்கள் பெருகும்படி செய்யவேண்டும். சாத்தியமில்லை என்று சொல்லி ஏங்குவதில் பயனில்லை. எப்படியேனும், எப்படி யேனும் எப்படியேனும் செல்வத்தை வளர்க்கவேண்டும்.'
20

இ அவனது அதிசயங்கள்
அவனது கிராமத்துப் பட்டிக்காட்டுக்குத் தார்வீதி வரவில்லை, ஆணுலும் ஒருநாள், வாசலில் மாடு இழுக்காத வண்டி வந்து நின்றது. அம்மாக்கும் சொல்லாமல், பையன்களோடு போய் வாய்க்காலில் குளித்துவிட்டு கொல்லைவழி வந்து இரையாமல் கிணற்றில் இருவாளி அள்ளித் தலையில் ஊற்றியபின் அம்மாக்குக் குரல் கொடுத்துக் கொடியில் காயக் கிடந்ததொரு சீலையால் தலையைத் துவட்டுகையில் வண்டி தெரிந்தது. அதுஅவனுக்கு அதிசயமாக இருந்தது. பக்கத்துப் பட்டணத்து ஒன்றுவிட்ட சிற்றப்பா வந்திருந்தார். அடுத்த வருஷம், படிக்கவென அப்பா துணையோடு வண்டில் அமர்த்தி அடுத்த ஊர்ப் பட்டணத்துச் சிற்றப்பா வீட்டில் அடிவைத்த பின்பு தெருவில் குழாய்த் தண்ணீர், புகையிரதம், ஸ்டேஷன் மாஸ்ற்றர் ஊற்றுப்பேன, டைப்ரைற்றர், தபாற்கந்தோர், கச்சேரி, பொலிஸ் ஸ்ற்றேஷன், ஆஸ்பத்திரி பாண், பணிஸ், மாவுமில், தள்ளுவண்டில் ஐஸ்சர்பத், ஐஸ்கிறீம், லீட்டில் எரிந்த இருபதுவாட் மின்விளக்கு, எல்லாமே வியப்பாக இருந்தன;
கால்கள், வேட்டியில் விடுபட்டுக், காற்சட்டை நீண்டு, செருப்பு வளர்ந்து சப்பாத்தாய், நாட்போக்கில் அவன் ஒருநாள் புகையிரதமேறிக் கொழும்புநகர் வந்தடையஅடுக்கடுக்காய்க் கட்டிடங்கள், ஆலைகளின், புகைக் கூண்டில் மழைபொழியாக் கருமேகம், மேகம் கிழித்த சிறகடியா வானூர்தி மேர்க்கூரித் தெருவிளக்கு,
21

Page 13
22
கண்ணுடிச் சன்னலின் பின் வண்ண விளக்கொளிகள், ரெடிமேட்ஷேட், மின்விசிறி, கூலிங்கிளாஸ், வாளியிலாக்கக்கூசு, மழைபொழியும் குளியலறை, வாகனங்கள் பேரிரைச்சல், இவையும் பிறவும் பெருவியப்பாய் இருந்தன.
தோளில், கோட்டின்மேல் கோட்டணிந்து விமானத்தளத்தில் கையசைத்த அந்நேரம் அம்மா கண்களுடன் அவனுடைய கண்களும் கொஞ்சம் கசிந்தன தான்.
லண்டன் பூமியில் ஊர்ந்தோடும் படிக்கட்டும், தரையின்கீழ் மின்ரயிலும் வெண்பனியும் சென்றல்ஹிட் சூடேறும் வீடும் திடீர்கோப்பி, சூப்வகைகள்,
டெலிவிஷனும் ஹிப்பி, மொட், ஸ்கின்ஹெட் எல்லாமும் வியப்பாய் இருந்த து பழகிப்போய்.
நாட்பெயர்வில் ஊர் நினைவுவந்து, ஒருமாதலிவெடுத்து வந்தசமயத்தில் அவனுடைய பட்டிக்காட்டுக்கு சைக்கிள்பல வந்து, தார்ரோட்டும் வந்து நாளுக்கு மூன்றுபஸ், அப்பாவின் வீட்டில் மின்விளக்கு. (அவர் தலைவர் கிராமசபைக்கு) அவர் வயலில் ட்ரக்ற்றர் மேய்ந்தது. ஆணுலும் ஊர்வயலில் எருமைகளும் உழுதன. அடுப்புகளில் விறகு, புகை, கரியும் மண்பானையுள் வேகும் சோறும், ஆகும் மணிநேரம். கிணற்றில் நீர்மொண்ட பெண்கள் சிலர்சேர்ந்து வாய்க்காலில் குளித்தார்கள். ஆண்களும்தான்ஆனலும் கொஞ்சம் அப்பாலாய்க், கண்மறைவாய். இவர்கள் இன்னமும் தான் உற்சாகமாக உயிரோடு இருக்கிறதை " நினைக்க நினைக்க இன்றும் அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
- சேகர்

சிறுகதை
ܠ ܨܰܬ݂ܐܘ su
மண்ணின் மைந்தர்கள்
- குமுதன்
சவூதியிலிருந்து புறப்பட்டு கரnச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட ஆறு மணித்தியாலத் தாமதமே அவனைப் படாதபாடு படுத்திவிட்டது.
நள்ளிரவுக்கு முன்னர்தான் கராச்சி வந்தடைந்த மூர்த்தி எஞ்சிய இராப் பொழுதையும் விமான நிலையத்திற்குச் சற்று தொலைவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அரைத் தூக்கத்துடன் கழித்துவிட்டு அதிகாலையிலேயே விமான நிலையத்திற்குப் புறப் பட்டுவிட்டான்.
அந்த அதிகாலையிலும் கராச்சி விமான் நிலையம் களைகட்டி நிற் கிறது. பெரும்பாலும் கண்ணுடி களையே கதவுகளாகவும், ஜன்னல் களாகவும் கொண்டிருக்கும் அந்த விமான நிலையம் மின்விளக்கின் ஒளியில் கண்ணுடி மாளிகை யாகவே காட்சி தருகிறது. பய னிகளை வரவேற்போரும் வழிய னுப்புவோரும் அந்த நீண்ட கட் டிடத்தின் வெளிமண்டபங்களில் நிறைந்துவிடுகின்றனர்.
வெளிநாடு செல்பவர்கள், சென்று வருபவர்களுக்கே "பா ஷன்' ஆகிவிட்ட நரைத்த நீல நிற "ரெனிம்" நீளக்காற்சட்டை, அதற்குப் பொருத்தமான நீல நிற சேட், சப்பாத்துகள். கை யிலே தொங்கும் பாஸ்போட், பயணக் காசோலைகளை பாதுகாப் பாக வைக்கும் தோற்பை. இத்தகைய தோற்றத்துக்குள் முப்பது வயதைத் தாண்டிவிட்ட மூர்த்தியின் உழைப்பால் மெலி ந்து இறுகிய தோற்றம் மறைந் திருந்தாலும். அதற்குள்ளிருந்து விடுபடவேண்டும் என்ற அவ னது உணர்வுகள் அதற்கு மாறு பாடாகவே இருந்தது.
மூன்று வருடங்களுக்கு மேல் தனது மண்ணின் உறவுகளைப் பிரிந்து அந்நிய நாட்டில் பல அவலங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்தபோது இல்லாத ஒரு ஆவல் இந்தப் பயணத்துக்கு ஏற் பாடு செய்த நாளிலிருந்தே அவ னுள் எழுந்திருந்தது.
அந்த ஆவல். மூன்று வரு டங்களாக அவன் சம்பாதித்த பணத்தோடு, சேர்த்த பொரு ளோடு தனது உற்ருர் உறவின ரைச் சென்று காணவேண்டும் என்பதால் அவனுள் எழுந்த தல்ல.
மூன்று வருட வெளிநாட்டு வாழ்க்கையில் அவன் பெற்ற அநுபவங்களையும், அவனைப் போன்ற சக தொழிலாளர்கள் படுகின்ற இன்னல்களையும் மன திற் கொண்டு அத்தகைய இயந் திர வாழ்வுக்கு, தான் முற்றுப்
23

Page 14
புள்ளி வைக்கவேண்டும். உயி ரோட்டமுள்ள ஒரு வாழ்வுக்கு அத்திவாரமிடவேண்டும். என்ற ஆவலே அவன் மனதில் எழுந் திருந்தது.
பத்தாம் வகுப்புவரை படித் திருந்த மூர்த்தி மத்திய கிழக் கிற்கு செல்லும் முன் ஒரு சவர்க் காரத் தொழிற்சாலையில் வேலைக் கமர்ந்திருந்தான். கூலிப் பிரச் சினைகளுக்காக அங்கு உருவாகிய தொழிற்சங்கத்தில் அங்கத்தவ ஞக இருந்தபோது அவன் பெற்ற புதிய அநுபவங்களும் பாடங்க ளும் வாழ்க்கையின் உண்மைகளை மேலோட்டமாகவாவது அவனை அறியவைத்திருந்தது.
அவன் விரும்பாத நிலையி லும் கூட மூத்த சகோதரியின் திருமணத்திற்காக அவன் பெற்ற கடனும், வட்டிகளும், இளைய சகோதரியின் எதிர்கால வாழ் வுக்கான தேவையும், உற்ருர் உறவினர்களின் உந்துதலும். மத்தியகிழக்கை நோக்கித் தள் ளியபோது அவன் தனது நிலைக் காக வருந்தினன்.
அவன் சென்ற மூன்று நாலு
மாதங்களுக்கிடையே அவனது தாயார் இறந்தாள்: வந்து போகும் பயணச் செலவுகள்,
ஏஜென்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம். இவைகளால் அவன் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத பரிதாப நிலை . அதை உற்ருர் உறவினரே உணர்ந்து தீர்மானித்து அங்கீகரித்து அவ னது பதிலையே எதிர்பாராமல். **தாயார் காலமாகிவிட்டார்
24
ஈமக்கிரிகைகள் நாளை நடைபெ
றும்' என்று தந்தி அனுப்பி வைத்தபோது.
பொருள் - மனித உறவு களை. உணர்வுகளை. அற்ப் மாக்கும் அந்தக் கொடிய நிகழ்ச்
சியின் ஆழமான துயரத்தின்
அநுபவத்தை நேரடியாவே அந பவிக்க நேர்ந்தபோது. இத் தகைய அமைப்பின்மீது அவ னுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பு மேலும் ஆழமாகியது.
அந்த வெறுப்புடனும் வை ராக்கியத்துடனும் தான் மூன்று வருட காலம் எத்தனையோ அழைப்புகள் ஊரிலிருந்து வந்த போதும் ஊர் திரும்பவில்லை. அவன் பணிபுரியும் நிறுவனத் தால் கொடுக்கப்பட்ட. இலவச விமான ரிக்கற்றுகளைக்கூட உப யோகிக்காது அதற்கான பணத் தின் ஒரு பகுதியை பெற்று அனுப்பியிருந்தான். வெளிநாட்டு உழைப்புக்கு ஒரு முடிவுகட்டிக் கொண்டு ஊர் திரும்பிவிடவேண் டும் என்ற பிடிவாதத்துடன் அவன் இருந்தான்.
மூத்த சகோதரி அறியாமல் அவனது தங்கையிடமிருந்து இறு தியாக வந்த கடிதம் அவனுக் குள் ஓர் உறுதியான முடிவை எடுப்பதற்கு தூண்டுகோலாக அமைய பயணத்துக்கான ஏற் பாடுகளை செய்தான்.
ஹோட்டல் வானிலிருந்து இறங்கியதும் பயணப் பொதிக ளைத் துரக்கவந்த பாரம் சுமக்கும் தொழிலாளியை தயவாகச்சொல்

லித் தடுத்துவிட்டு முதுகிலும் கைகளிலுமாகப் பொதிகளைச் சுமந்தபடி விமான நிலையத்தி னுள் மூர்த்தி நுளைகிறன். அதி காலையின் குளிர்ந்த உடலை இத மாகத் தழுவி உற்சாகமூட்டு கிறது. அப்பொழுதுதான் கொழும்பு செல்லும் விமானத் துக்கான போடிங்காட் கவுண் டர் திறக்கப்படுகிறது. பயணப் பொதிகளுடன் அங்குமிங்குமாக நின்ற பயணிகள் வரிசையாக நீளு
கின்றனர். மூர்த்தியும் அதற் குள் ஒருவனுக ஐக்கியப்படு கிருன்.
நத்தைபோல நகர்ந்த அந்த வரிசையின் நீளம் சுருங்க மூர்த் தியும் கவுண்டரை நெருங்கிவிடு கிருன். மூர்த்தியின் பாஸ்போட் டையும் ரிக்கற்றையும் தனது பயணிகளுக்கான பட்டியலுடன் ஒப்பிட்டுப்பார்த்த அந்த பாகிஸ் தான் அதிகாரி, பட்டியலில் அவ னது பெயர் இல்லை என்பதைத் தெரிவிக்க மூர்த்தியின் முகத்தை நிமிர்ந்து பார்த்து வாயைச் சுழித்தபடி தலையை ஆட்டிவிட்டு பின்னல் உள்ளவனின் பாஸ் போட்டுக்காகக் கையை நீட்டு
எதிர்பாராத நிகழ்வினல் ஏன்? எதற்கு? என்று கேட்கும் துணிவை இழந்த அவன் கவுண் டரின் முன் ஒருகணம் திகைத்து நின்றன். பின்னல் வரிசையில் வந்த பயணியின் கை அவனைச்
சுரண்டியபோதுதான் குற்ற உணர்வுடன் "வருந்துகிறேன்’ என்று ஆங்கிலத்தில் சொன்ன
படி சற்று தள்ளி நிற்கிருன்.
கவுண்டரிலுள்ள அந்த அதி காரிகளின் சுறுசுறுப்பான செயல் களை அவதானித்துக் கொண்டு வரிசை முடியும் வரை காத்து நின்ற மூர்த்தியின் முன்னுல் ஒரு இளைஞன் வந்து நிற்கிருன்.
“உங்களுக்கும் போடிங்காட் gó65urt
கட்டையான சிவந்த மேனி யுடைய அந்த முஸ்லிம் இளை ஞன் தமிழில்தான் கேட்கிருன், மேலும் இருவர் பயணப்பொதி களுடன் அவனை நெருங்கிவந்து நிற்கின்றனர்.
* ஓம். ஓம். கிடைக்கேல்லை உங்களுக்கும்..”*
* "எங்கள் மூணுபேருக்கும் இல்லே. இந்தா பாருங்க. எங் கடை கம்பெனியாலை புல்பேமன் கட்டி. ஓ.கே. பண்ணின ரிக்கற். இதுக்கு இவங்க கட்டா யம் சீற் தரவேணும். இவங்க சுத்த மோசம். எவங்களிட் டையோ காசை வாங்கிக் கொண்டு எங்கடை சீற்றைக் குடுத்திட்டாங்க.."
ஆத்திரத்துடனும் அவசரத் துடனும் கடகடவென்று பேசிய அந்த முஸ்லிம் இளைஞனின் வார்த்தைகளிலிருந்து மூர்த்தி தனது ரிக்ற்றுக்கும் நடந்திருக் கக்கூடியதை ஒரளவு உணர்ந்து கொள்கிருன்.
தான் தனித்தவனில்லை; தன் னைப்போலப் பாதிக்கப்பட்டவர் கள் பலர் இருக்கிருர்கள் என் பதை அறிந்தபோது மூர்த்தியி டம் முதலில் இருந்த அச்ச
25

Page 15
உணர்வு மாறி ஒரு துணிச்சலும் நம்பிக்கையும் அவனிடம் எழு கிறது.
மூர்த்தி தனது விமான ரிக் கற்றையும் ஒருமுறை விரித்துப் பார்த்துக் கொள்கிருன். அவ னும் சவூதியில் பிரபல்யமான அமெரிக்க நிறுவனத்தில்தான் பணி புரிந்தான். முன்னுல் நின்ற மற்ற இருவரில் ஒருவர் நடுத்தர வயதுடையவர்; மற்றவர் இளை ஞர். அவர்களும் ஒரு புன்சிரிப்
போடு தமது ரிக்கற்றுக்களையும்
மூர்த்திடம் நீட்டுகின்றனர். அவைகளும் சரியாகாவே இருக் கின்றன. ரிக்கற்றிலுள்ள பெயர் களின் மூலம். அவர்கள் இருவ ரும் சிங்களவர்கள் என்பதைப் புரிந்துகொள்கிருன்.
நால்வரும் என்னசெய்யலாம் என்பதுபோல ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.
"மிடில்ஈஸ்ருக்கு வர்றவங் களெல்லாம் வெறுங் கூலியள். எங்களை எப்படியும் ஏமாத்தலா மெண்டு நினைக்கிருங்கள்போலை. அதுதான் ஏஜென்சிக்காரன் முதல் கம்பனிக்காரன் வரை. ஒரே ஏமாத்தும் மோசடியுமா இருக்கு."
பாதிக்கப்பட்டவர் நால்வர். அதுவும் ஒரே நாட்டினர் என்ற போது நியாயம்கேட்கும் உணர்வு மூர்த்தியிடம் எழுகிறது.
விமானப் போக்குவரத்து நேரங்களை உடனுக்குடன் அறி விப்பதற்காக அங்குமிங்குமாக
தூண்களில் பொருத்தப்பட்டிருக் கும் தொலைக் காட்சிப் பெட்டி
26
களில் ஒன்றை நிமிர்ந்து பார்க் கிருன்.
கொழும்பு செல்லும் விமா னம் புறப்பட பத்து நிமிடமே இருந்தது. அவர்களது பாஸ் போட்டுகளையும் ரிக்கற்றுகளையும் வாங்கி அடுக்கிக் கொண்டு அந்த போடிங்காட் கவுண்டரை மீண் டும் நெருங்குகிருன். வரிசையில் நின்ற கடைசிப் பயணிக்கும் காட் வழங்கப்பட்டுவிட்டது.
ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரியாவிட்டாலும் சிக்கலான சந்தர்ப்பங்களில் சமாளித்துக் கொள்ளும் அளவிற்கு அவனுக்கு ஆங்கில அறிவு இருந்தது.
'இது ஒ. கே. பண்ணிய பிரச்சினை இல்லாத ரிக்கற்றுகள். குறிப்பிட்ட நேரத்திற்கும் நாங் கள் வந்துவிட்டோம். எப்படி எங்களுக்கு போடிங்காட் இல் லாமல் போகும்.'
கவுண்டரில் இருந்த அந்த பாகிஸ்தான் அதிகாரியிடம் ரிக் கற்றுகளை நீட்டியபடி குற்றம் சுமத்தும் தோரணையில்த்தான் கேட்கிருன்.
அந்த அதிகாரியும் நடந்தி ருக்கக் கூடிய மோசடியை அறிந் தவன்தான். ஆனலும் தன்னி டம் தவறில்லை என்பதை உறு திப்படுத்துவது போல பயணிக ளுக்கான பெயர்ப் பட்டியலையே மூர்த்திக்கு முன்னல் கவுண்ட ரில் எடுத்து வைக்கிருன். மூர்த்தி நால்வரது பெயர்களையும் அதில் தேடுகிருன். ஒருவரது பெயரும் பட்டியலில் இல்லை. பதிலாக
இன்னும் இரண்டு போடிங்காட்

டுகள் கொடுபடாமல் இருப்பதை அவதானித்துக் கொள்கிருன்.
முயற்சித்தால் அதில் ஒன் றைத் தான் பெறமுடியும் என்ற எண்ணம் அவனுள் எழுந்தாலும் தன்னேடு சேர்ந்துவிட்ட அந்த மூவரையும் விட்டு விட்டுச் செல்வதில்லை என்று தனக்குள் முடிவெடுத்துக் கொள்கிருன்.
**ஆம். லிஸ்ரில் பெயர் இல்லை. எப்படி விடுபட்டிருக் கும். தயவு செய்து சொல்ல முடியுமா?’ سی
நேரமாகிக் கொண்டிருக் கிறது. விரும்பினல் அந்தக் காரியாலயத்தில் சென்று விசா ரியும்’
'நன்றி?
மூர்த்தி அந்த அறையை நோக்கி நடக்கிருன். அங்குள்ள வர்களும் நேரத்தைச் சாட்டாக வைத்து தலைமைக் காரியாலத் தில்தான் இதுபற்றி விசாரிக்க வேண்டும். மறுநாள்த்தான் பய ணத்தை தொடரலாம்’ என்று முடிவாகக் கூறிவிடுகின்றனர்.
‘என்ன சொன்னங்க'
ஆவலோடு கூடிநின்ற மூவ ரும் வந்து கொண்டிருந்த மூர்த் தியின் முகத்திலிருந்தே முடிவை தெரிந்து கொண்டாலும் நடந்
ததை அறிவதற்காக அந்த முஸ்
லிம் இளைஞன் கேட்கிருன்.
*ஒருதற்றை பேரும் லிஸ் ரிலை இல்லை. இரண்டு காட். கொடுபடாமல் இருக்கு’’
இரண்டிருக்கா..?’’
"நாங்கள் நாலுபேர் இருக்கிறம்” மூர்த்தி சொல்லிக் கொண்டே அந்தக் கவுண்டரை நோக்கி மீண்டும் செல்கிருன்.
அந்த சிங்கள இளைஞர்கள் மூர்த்தி என்னசொல்கிருன் என் பதை அறிய விரும்புகின்றனர். "நாங்கள் நாலுபேர் இருக்கிறம்" என்று மூர்த்தி சொன்ன வார்த்
தைகளை முஸ்லிம் இளைஞன் அவர்
களுக்குச் சொன்னபோது அவர் களது முகம் மலர்கிறது.
எஞ்சியிருந்த அந்த இரண்டு காட்டுகளுக்கும் அமெரிக்க உல் லாசப் பயணிகள் ஒரு ஆணும் பெண்ணும் அரைகுறை ஆடை களுடன். அவசர அவசரமாக
வந்து சேருகின்றனர்.
** இனி அடுத்த பிளையிற் தான். அதுக்கும் புக்பண்ணிக் கொண்டு போகவேணும். அவர் சாமான்களுக்குப் பொறுப்பா நிக் கட்டு ரெண்டுபேரும் வாங்கோ'
மூவரும் ரிக்கற் வழங்கிய விமானக் கம்பனி பல காரியா லய அறைகளுக்குள் புகுந்து வெளிவருகின்றனர். இறுதியாக விமான நிலைய மேலதிகாரி -- ஒரு நடுத்தர வயதுடைய பாகிஸ் தானியப் பெண்மணி - தவறு நடந்திருப்பதை ஒப்புக்கொண்டு அதற்குப் பொறுப்பானவர்களை தொலைபேசியில் கண்டிக்கிருள் மறுநாட் காலை பயணத்துக்கான ஒழுங்குகளையும் செய்து கொடுக் கிருள்.
பயணம் தடைப்பட்டதால் ஏற்பட்ட மனச்சோர்வு நால்வ ரிடமும் காணப்பட்டாலும் நால்
27

Page 16
வரும் ஒன்ருக இருப்பது ஒருவ வருக்கொருவர் ஆறுதலாக இருந் ტჭეl•
பெனியனுக்கு உட்புறமாக கழுத்தில் போட்டிருந்த சங்கிலி யைக் கழற்றி வைப்பதற்கு மூர்த்தி மிகவும் சிரமப்பட்டான். பார்த்துவிட்டால் அவர்கள் தங் களில் நம்பிக்கையற்று பாதுகாப் பாக கழற்றிவைப்பதாக எண்ணி விடுவார்களோ என்ற அச்சம் அவனிடம் இருந்தது. அவர்க ளில் கூட இருவர் சங்கிலி போட் டிருந்தனர். இளைய சகோதரிக் காக அவன் அதை வாங்கியிருந் தாலும் சுங்க அதிகாரிகளுக்காக
கழுத்தில் மாட்டுவதும் வெளியே
வந்ததும் கழற்றுவதும். அதுவும் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் எவருமற்ற அந்நிய நாட்டிலும். வேண்டாத பெருஞ்சுமையாகவே
படுகிறது. மூன்று வருட வெளி
நாட்டு உழைப்பும் வாழ்வும் எளி மையை விரும்பும் தனது உணர் வுகளை பாதிக்கவில்லை என்பதற் காக மகிழ்ச்சியடைந்தான்.
ஹோட்டலில் தங்கச்சென்ற போது நால்வரும் ஒன்ருகவே
தங்கவேண்டும் என்று அந்தச்
சிங்கள நண்பர்கள் வலியுறுத்து கின்றனர். ஹோட்டல்காரரும் சிரமப்பட்டு படுக்கைகளைப் போட்டு ஒரு அறையை ஒதுக்கு கின்றனர்.
நான்கு படுக்கைகளையுடைய அந்த பெரிய ஹோட்டல் மாடி
அறையில் "திறீ இன் வண் கசற்
றேடியோ மேலைநாட்டு துள்ளல் இசையுடன் அவர்களுக்குப் புரி
28
யாத ஆங்கிலத் தொனியில் அலறு கிறது. அவர்கள் அதை ரசிக் கின்றனர். மூர்த்தி அவர்களது உற்சாகமான உரையாடல்களை அவதானித்தபடி தனது கட்டி லில் உட்கார்ந்திருக்கிருன்.
அவன் ஊரை விட்டு வந்த மூன்று ஆண்டுகளுக்குள் நூலகம் எரிந்தது போன்ற பல சம்பவங் கள் நடந்ததை அவன் கடிதங் கள் மூலம் அறிந்திருந்தான். அந்த அறையின் சூழல் அவனுக்கு அதுபற்றிய நினைவுகளை கொண்டு வந்தாலும். அவனேடு சவூதி யில் வேலைசெய்த பேணுட் அந் தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற போது ஹிட்லரின் செய்கை யோடு ஒப்பிட்டு ஆத்திரத்துடன் பேசிய வார்த்தைகள். எதிர் காலத்துக்கான நம்பிக்கையை யும் தந்து நின்றன.
நடுத்தர வயதுள்ள அந்த சிங்கள நண்பர் தட்டினல் தான கவே திறந்துகொள்ளும் சிகரெட் பெட்டியை லேற்றருடன் நீட்டு கிருர்.
*நோ. தாங்ஸ்’’
அந்த உபசரிப்பை மறுக்க முடியாமல் மூர்த்தி மிகவும் மரி யாதையாக மறுக்கிருன். "நல்ல பழக்கம்’ என்று சிங்களத்தில் கூறிச்சென்ற அவர் "கன்டோஸ்’ பக்கற்றை எடுத்து வந்து நீட்டு கிருர்,
* தாங்ஸ் ??
அவனிடம் இருந்தபோதும் மறுப்பில்லாமல் பெற்றுக்கொள் கிருன். அவர்கள் மூவரும் விடும் சிகரெட்டின் புகை மின்விசிறியின்

வேகத்தையும் மீறி அந்த அறை யில் பரவுகிறது.
'நீங்க ஒண்ணும் பாவிக்கிற
இல்லியா..? மனுசன இருந்தா எல்லாம் அநுபவிக்கவேணும்'
"ஓ. அநுபவிக்கத்தான் வேணும். ஆனல். எதுக்கும் ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் தேவை'
முஸ்லிம் இளைஞனின் வார்த்
தைகள் மூர்த்தியின் இயல்பை தாக்குவதாக அமைய சற்று இறுக்கமாகவே கூறுகிருன்.
சிங்கள நண்பர்களும் விவா தத்தில் கலந்துகொள்கின்றனர். அந்த நடுத்தரவயதுடையவர் மூர்த்தி சொல்வதையே ஆமோ திக்கிருர்,
"என்ஜோய் பண்ணுறதிலை என்ன கட்டுப்பாடு. ஒழுக்கம்”* அவர்களது உரையாடல் வேறு திசையை நோக்கித் திரும்புகின் றன. பணமும் அதனுல் பெறு கின்ற நேரடிப் பயனுமன்றி வாழ்வின் பண்பாட்டையே மறந்துவிடும் அவர்களது நிலை அவனுக்கு ஒரு பாடமாகவே அமைகிறது.
ஹோட்டல் சிப்பந்தி மதிய உணவுக்காக அழைக்கிருர்,
பாலிஸ் செய்யப்பட்ட மா' பிள் தரை வழுக்கி விழுந்து விடாமல் குறுக்கும் நெடுக்குமாக போடப்பட்டிருக்கும் கால் விரிப் புக்கள்; வட்டவடிவமான சாப் பாட்டு மேசைகள்; சீருடையில் காணப்படும் ஹோட்டல் சிப்பந்
நாகரிகம்
ஒருவருடைய நகரிகத் தின் அளவை அவர் ஒரு பெண்ணை எவ்வாறு நடத் துகிருர் என்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
-- LontrišGrb G3smrtifiká)
திகளும், பயணிகளும் நிறைந் திருக்கும் அந்த நீண்ட அறை கலகலப்பாக இருக்கிறது.
காலியாகவே இருக்கும் அவர் களது அறையின் இலக்கத்துக் குரிய மேசையில் அவர்கள் அமர் கின்றனர். மூர்த்தி அமர்ந்திருந்த திசைக்கு எதிரேயிருந்த மேசை யில் இரண்டு இளைஞர்களும் ஒரு இளம் பெண்ணும் அமர்ந்திருக் கின்றனர். கண்கள் குளமாகி கன்னங்களில் வழிந்தோடும் கண் னிரோடு. அவளைப் பொருட் படுத்தாமல் உற்சாகமாக சிரித் துப்பேசி உண்ணும் அவளோடு கூடவந்த இளைஞர்களையும் திரும் பிப்பாராது. மூர்த்தி இருந்த திசையில் எங்கோ வெறித்துப் பார்க்கும் அந்தப்பெண்ணின்மீது அவனது கவனம் திரும்புகிறது. அவளது ஆடை அலங்காரங்களி லிருந்து அவள் ஒரு கிராமப் புறத்துச் சிங்களப்பெண் என் பதை அவன் புரிந்துகொள்கிருன். அவளுக்கு முன்னுல் வைக்கப்
பட்ட உணவுக் கோப்பைகளை
அவள் தொடவே இல்லை. கன் னங்களில் வழிகின்ற கண்ணிரை அடிக்கடி கைக்குட்டையால்
29

Page 17
துடைப்பதும் வெறித்துப் பார்ப் பதுமாகவே அவள் இருக்கிருள்.
அவள் மத்திய கிழக்குக்கு பணிப்பெண்ணுகப் போகிருள். அவளது கண்ணிர்க் கதையின் முதல் அத்தியாயம் ஆரம்பித்து விட்டதாக மூர்த்தி உணர்ந் தான். இந்தக் கதையின் முடிவு. சவூதியில் ஒரு நண்பனை அவன் வழியனுப்பச்சென்றபோது விமா னத்தில் ஏற்பட்ட ஒரு பெண் ணின் பிரேதம். அங்கு பேசப் பட்ட சவுக்கடிகள் பெற்ற, தற் கொலை செய்து கொண்ட பெண் களின் சோகக் கதைகள் அவன்து நினைவில் வந்தன.
அவனது இளைய சகோதரி கூட தனது இறுதிக் கடிதத்தில் அவன் அனுப்பும் பணத்தில் பெரும்பகுதியை தமக்கையார் தனது வசதிகளைப் பெருக்கிக் கொள்ளப் பாவிப்பதாகவும், தனது எதிர்காலத்துக்கான தே வைகளுக்காக தான் மத்தியகிழக் கிற்குப் பணிப்பெண்ணுக செல்ல விரும்புவதாகவும் எழுதியிருந்
தாள். அந்தப் பெண்ணை தனது
சகோதரியாகவே அவன் நினைத்த போது.
ஒரு கோப்பை உணவையே ஒருவருக்காக ஒருவர் மீதம் வைத்து எஞ்சியிருக்கும் சுயநலம் குறைந்த அன்பும் தியாகமும் நிறைந்த வாழ்க்கை தனது குடும் பத்திலும் நாட்டிலும் அற்றுப் போவதாக அவன் உணர்கிருன். **மூர்த்தி சப்பிடுங்க' எதிரே இருந்த முஸ்லிம் நண் பர் கையைக் காட்டிக் கூறிய
30
போதுதான் மூர்த்தி தானும் உண்ணுமல் இருப்பதை உணர் கிருன். உணவை முடித்துக் கொண்டு அறைக்குச் சென்ற போதும் அங்கு கண்ட காட்சி யும் அவைபற்றிய சிந்தனைகளும் அன்று முழுவதும் அவன் மன தை விட்டு அகலவில்லை.
மறுநாள் பயணம் தடை யின்றி அமைந்து விடுகின்றது. பயணத் தடையினல் நண்பர்க ளாகிவிட்ட நால்வரும், "கடிதம் போட வேணும்,” “வீட்டுக்கு வரவேணும்' என்ற கோரிக்கை யுடன் முகவரிகளைப் பரிமாறிக் கொண்டு விடைபெறுகின்றனர்.
மூர்த்தியைத் தேடி விமான நிலையம் வந்த மைத்துனர் குறிப் பிட்டபடி விமான நிலையத்தில் பார்த்துவிட்டு வீடு திரும்பிவிட் டார். மூர்த்தி தனியாக வீடு வந்து சேர்ந்தான்.
மூன்று வருடங்களில் ஊரில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட தாக அவனுக்குத் தெரியவில்லை. பயிர்செய்த நிலங்கள் காய்ந்து கருகி புழுதி படர்ந்திருந்தன. ஊருக்கு நடுவேயுள்ள வாசிக சாலை, விளையாட்டிடங்கள் சன நடமாட்டம் குறைந்த இடங்க ளாகக் காட்சி தந்தன. ஆங் காங்காங்கு சில வீடுகள் புதிதாக கட்டப்பட்டிருந்தன. அவனது சகோதரிகூட தனது பழைய வீட்டை இடித்து புதியபாஷனில் கட்டத் தொடங்கியிருந்தாள்.
வாடகைக்கார் வீட்டு வாச
லில் வந்து நின்றதும் சகோதரி

கள் இருவரும் வந்து வரவேற் கின்றனர். வீட்டு வாசலில் கால் வைத்ததும் எதிரே புதிதாக சாந்து பூசப்பட்ட சுவரில் மாட் டப்பட்டிருந்த தாயாரின் உரு வப் படத்தைக் கண்டதும். மூர்த்தி விம்முகிருன். சகோதரி களும் சேர்ந்து அழுகின்றனர்.
'தம்பி எங்கை, தம்பி வரேல்லையா. எண்டுதான் சாகேக்கைகூடக் கேட்டவ’
"லச்சக் கணக்கா உழைச்
சென்ன. ஒருத்தருக்கும் ஒரு ஆறுதலும் இல்லாத அவல வாழ்க்கை'
மூர்த்தி அலுத்துக் கொள் கிருன்.
தெரு வேலிக்குப் பதிலாக
மதில் எழும்பியிருக்கிறது. விருந்
தை ஹோலாக மாறி இருக்கி றது. குசினி, சாப்பாட்டறை
எல்லாம் விரிவடைந்திருக்கிறது.
“கட்டிடச் சாமான்கள் எல் லாம் விலையேறுது தம்பி. அது தான் கொஞ்சம் குறைவா இருக் கேக்கை முடிச்சுப் போடுவம் எண்டு தொடங்கினனன்'
மூர்த்தி வீட்டைச் சுற்றிப் பார்க்கிருன். சகோதரியும் பின் தொடர்கிருள்.
**காணியளும் நல்லவிலை. தங்கச்சிக்கு ஒரு காணித்துண்டு வாங்கி விடுவம் எண்டுதான் கொத்தானும் ஒடித் திரிஞ்சவர் ஒண்டும் சரிவரேல்லை’
殿 剑
* இனி என்ன உனக்கும் வயது வந்திட்டுது. நீ எங்கை
யாவது போய்க் கொண்டுதான் தங்கச்சியை எங்கையேன் சேர்க்க வேணும்'
'அக்கா. என்னைப் பற்றி இப்ப யோசிக்காதையுங்கோ. தங்கச்சியின்ரை அலுவலை கெதி யாப் பாருங்கோ'
இதுவரை மெளனமாக இருந்த மூர்த்தி சொல்கிருன்.
'இடங்கள் இல்லாமலில்லை எல்லாம். வீடு வளவு நகைய ளோடை எழுவத்தைஞ்சு ஒண் டெண்டெல்லே நிக்கிருங்கள். அது சரி தம்பி. லீவிலைதான்
வந்தனியோ. இல்ல.’’
“ஒப்பந்தம் முடிஞ்சுதான்' சகோதரியின் கேள்வியின் அர்த்தம் மூர்த்தியின் மனதுக்கு சங்கடமாக இருக்கிறது. வளர் ந்து வரும் தேவைகள் தீர்க்க முடியாத பெருஞ் சுமைகளாக தன்னையும். தன்னைப் போன்ற இளைஞர்களையும் அமுக்குவதை உணர்கிருன்.
சுதந்திரமான சுகவாழ்வுக்கு அது அத்திபாரமாக அமையுமா னல் அந்தச் சுமைகளையும் அவ ஞல் சுமக்கமுடியும். வெறும் போலித்தனமும் பகட்டுகளும் சீரழிவுகளுமே அதனல் எஞ்சுகி றது என்பதை அநுபவத்தில் உணர்ந்தபோது அவன் எடுத்த முடிவு அவனுக்குச் சரியாகவே படுகிறது.
அவனது வரவை அறிந்து சில நண்பர்கள் அயலவர்கள் வந்து சென்றபோதும் அவன் சந்திக்க விரும்பிய நண்பன் மாலையாகியும் வரவில்லை.
3.

Page 18
அவனேடு சவர்க்காரத் தொழிற்சாலையில் தொழிற்சங் கத்தை உருவாக்குவதில் தீவிர மாக உழைத்த சயந்தன் மூர்த்தி யின் வீட்டிலிருந்து சிறிது தொலை வில்தான் இருந்தான்.
மாலையானதும் மூர்த்தி சயந்தனின் வீட்டை நோக்கி நடந்தான். அவனுக்குத் திரு மணமாகி ஒரு குழந்தையும்
இருப்பதாக சகோதரி கூறியிருந்
தாள்.
ஒலையால் வேயப்பட்ட மண் வீடு. அருகே செழித்து வளந் திருக்கும் வாழை மரங்கள், முற் றத்தின் எதிரே பல வண்ண நிறங்களில் அமைந்த பூங்கன்று கள். அதன் ஒரத்தில் வண்டில் உருட்டி நடை பழகும் அழகான குழந்தை. புதிய மாமா வருகி ருர் என்பதுபோல மூர்த்தி வரு வதைக் கண்டு மிரளாமல் நிமிர்ந்து பார்க்கிறது.
குழந்தையின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளிவிட்டு ஒரு *கன்டோஸ் பக்கற்றை அதன் கையில் கொடுத்து அன்பாக அணைத்துத் தூக்கிக்கொண்டே வீட்டின் முன்புறத்தை நோக்கிச் செல்கிருன் மூர்த்தி,
** சயந்தன்' *மூர்த்தியா வாரும். வா ரும். இரவைக்கு வருவமெண்டு இருந்தனன்"
திண்ணையில் இருந்த மேசை யின் அருகே போடப்பட்டிருந்த அந்த நீள வாங்கில் மூன்று இளை ஞர்கள் அமர்ந்திருக்கின்றனர். மேசைமீது புத்தகங்கள் பத்திரி கைகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்
32.
கின்றன. ஏதோ பிரச்சனைபற்றி விவாதித்துக் கொண்டிருந்தவர் கள் மூர்த்தியின் வருகையால் அமைதியாகின்றனர்.
“நான். உங்களைக் குழப்பிப்
போட்டன் Gurra)’’
“சீ. சீ. நீர் இரும். சாரு...'
அடுப்படிக்கு வெளியே வந்து எட்டிப் பார்க்கிருள் சயந்தனின் மனைவி சாரு.
"இவர்தான் பாக்கியக்கா வின்ரை தம்பி மூர்த்தி. சவூதி யாலை வந்திருக்கிருர்,
‘ஓ. அடிக்கடி இவரைப் பற்றிக் கதைக்கிறவ'
தேனீர் போடுவதற்காக மீண்டும் அடுப்படிக்குள் நுளைகி முள் சாரு,
“எப்படி சவூதி அநுபவங்கள்' எதிர்காலத்துக்கான நம்பிக் கையோடு ஒழுங்குபடுத்தி எழுப் பப்பட்ட சயந்தனின் வாழ்க்கை கஷ்டங்கள் நிறைந்ததானுலும் ஒரு புதிய நாகரீகத்திற்கே கரு வாக வளர்வதை மூர்த்தி உணர் கிருன் ,
'சவூதி என்ன. வெளி நாட்டு உழைப்புகளே கானல் நீர்தான். இந்த மண் திருந்தா மல். நாங்கள் மணிசரா வழே லாது'
தலையை நிமிர்த்தி யுடன் தெளிவாகக் மூர்த்தி,
சயந்தன் தீக்குச்சியை தட்டி மேசைமீதிருந்த குப்பி விளக்கை ஏற்றி வைக்கிருன்.
சயந்தனின் முகத்தில் மட்டு மல்ல அந்த இளைஞர்களது முகங் களும் பிரகாசிக்கின்றன.
உறுதி கூறுகிருன்

குட்டிக்கதை
ஆ ஆட்சி
யோ. பெனடிக்ற்பாலன்
ஒரு கிழட்டுச் சிங்கம் தன் குகையிலிருந்து புறப்பட்டு காட்டில் உலாப்போனது. -
அதற்கு அண்மைக் காலத்தில் ஒரு சந்தேகமும் பயமும் மனதில் வளர்ந்து கொண்டிருந்தது. M
வழியில் ஒரு நரி வந்தது. ‘என்னை யார் என்று சொல் பார்க்கலாம்?" சிங்கம் நரியிடம் கேட்டது. 'நீங்கதான் இக்காட்டின் இராசா!' நரிகூறியதில் அதற்கு மகிழ்ச்சி.
lairCat girl'
நரி அதன் பின்னல் போனது. w சிறிது தூரம் போனதும் ஒரு கரடி நின்றது. ‘என்னை யார் என்று கூறு பார்க்கலாம்?" 'நீங்களே எமது அரசன்!’’
சிங்கத்துக்கு மிக மகிழ்ச்சி.
பின்னே வா!' கரடியும் அதன் பின்னல் நடந்தது. இன்னும் கொஞ்சத் தூரம் சென்றதும் புலியொன்று படுத்துக் கிடந்தது.
“என்னை யார் என்று தெரியுமா?" 'நீங்களே விலங்குகளின் இராசா' புலி உடனே கூறிற்று. சிங்கத்துக்கு கட்டற்ற மசிழ்ச்சி. புலியும் சிங்கத்தின் பின்னல் போனது. சிங்கம் ஒரு மரத்தின் கீழ் வந்து படுத்துக் கொண்டது. பின்னல் வந்த மிருகங்கள் சற்றுத் தூரத்தில் மரியாதை செலுத்தி நின்றன. சிங்கத்தின் ஒரு முன்னங்கால் பாதத்தில் கடியெறும் பொன்று கடித்துவிட்டது, சிங்கத்துக்குச் சினம் ஏறியது. . ‘அற்பபயலே! என்னை யார் என்று தெரியுமா? 'நீ யாராக இருந்தால் எனக்கென்ன என்னை மிதிப்பவனை நான் கடித்தே தீருவேன்' என்று எறும்பு வெட்டெனக் கூறியது.
33

Page 19
சிங்கம் அதைக் கேட்டுத் திகைத்துப் போய் நிமிர்ந்து சுற்றி நிற்கும் மிருகங்களை நோட்டம் விட்டது. அவ்ைகளுக்கு எறும்பு கூறியது கேட்கவில்லை. உடனே அது அவ்வெறும்பைக் கோரமாய் நசித்துக் கொன்றது. அதைப்பார்த்துக் கொண்டு நின்ற மிருகங்களுக்கு ஆச்சரியம். *சிங்கராசாவே அந்த அற்ப பிராணியை ஏன் கொன்றீர்கள்?’’ நரி தயங்கியபடி கேட்டது. சுற்றி நின்ற மிருகங்களைக் - கம்பீரமாக நிமிர்ந்து பார்த்த சிங்கம் கூறியது. ‘அது உயிரோடிருந்தால் இந்தக் காட்டின் அமைதி கெட்டுப் போகும்! "
சீனக்குடடிக்கதை
0 போகும் வழி
பெட்டைக் குதிரை தன் குட்டிக் குதிரையோடு சென்று கொண்டிருந்தது. வழியிலே சேறு நிறைந்த குளமொன்று எதிர்ப்பட்டது. தாய், குட்டிக்குச் சொன்னது:
'இவ்விடத்திலே நீ ஆறுதலாகப் போக வேண்டும், உனது முதல் அடி சரியாக இருந்தாலே நீ இரண்டாவது அடியை வைக்க வேண்டும் .அவதானம்.’’ அவ்விடத்தைத் தாண்டி சோவெனப்பாயும் மலையருவி ஒரமாக அவைவந்து விட்டன. குட்டிக்கு ஒரே பயமாயிருந்தது. தாயோ நிதான மாகச் சொன்னது:
‘பயப்பிடாதே.முன்னேறிச்செல்.இவ்விடத்தில் நீ வேகமாகச் செல்லலாம்.’’ குட்டிக்கோ அதிசயம். தாயைக் கேட்டது: --ܐ
‘அம்மா, அமைதியான குளத்தை நாம் தாண்டியபோது நீ மிகவும் கவனமாக இருந்தாய்.இவ்விடத்திலோ சுழிகள் உள்ளன. ஆனல் இவ்விடத்தில் வேகமாகச் செல்வது பாது காப்பு என்று நீ எப்படிக் கூறுவாய்?"
தாய், குட்டிக்கு விளக்கிக் கூறியது.
**தெளிந்த நீரோடையால் நடப்பதற்கு ஒரு போதும் பயப்படத் தேவையில்லை. ஏனெனில் நீ அதன் தளத்தை
நன்கு அறியமுடியும். ஆனல் சேறு நிறைந்த குளத்தையிட்டு நீ கவனமாயிருக்க வேண்டும். ஏனெனில் உன்னுல் அதன்
ஆழத்தைப் பற்றி எதையும் தெரிந்து கொள்ள முடியாது'
34

சிறுகதை
இன்றைய பாண் வியாபா ரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்ப இருண்டு போய்விட்டது.
டிங். டிங். டிங்.
வாடிக்கையாளர் வீட்டுப் படலைகளின் முன்னுல் மணியைக் குலுக்கும் அதே பழக்கம் எனது
வீட்டுக்கு முன்னலும் வந்து விடுகிறது.
அதோ கமலம். பக்கத்தில்
மகன் சுருண்டு படுத்துக்கிடக் கிருன். அப்பாவைப்போல என்று சிலர் சொல்வார்கள்.
தாழ்வாரத்தில் தலையைக் குனிந்து, முதுகை வளைத்து உள்ளே போகிறேன். வீட்டில்
விளக்கு இருக்கவேண்டும் என்ப தற்காக விளக்கு மின்னுகிறது.
'தம்பி சாப்பிட்டான.”*
'பகல் வைத்த கஞ்சியில் கொஞ்சம் குடிச்சிட்டு அப்பவே படுத்திட்டான். நீங்களும் மோத்தைக் கழுவியிட்டுச் சாப் பிடுங்கோவன்.”*
"கொஞ்சம் பொறுத்துச் சாப்பிடுகிறனப்பா. கொஞ்சத் தண்ணி கொண்டு வாரும்’
நாலு மிடறு குடித்துவிட்டு -
பாயில் சாய்கிறேன்.
புதிய கடன்
மூலேயில் ஒரு குப்பி
-— --—
- S. இராஜேந்திரன்
4ங். டிங். டிங். வாழ்க்கைச் சுமையின் நிலையை எடுத்துக் காட்டும்பாண் வண்டியைத் தள்ளிக் கொண்டு போகிறேன் இன்று பிஸ்னஸ் ஒடவில்லை, மூன்றுமைல் வந்து சேர்ந்தும் நாலுருத்தல் கூட் விற்கவில்லை.
"அம்மா பாண்" "சும்மா வாயை மூடியிட்டு of
வண்டியைக் கடந்துசெல் அலும் ஒரு அம்மாவும் பிள்ளையும். றெயில்வே கேற்றுகள் மூடிக் கொள்கின்றன.அதோ யாழ்தேவி
ஆயிரக்கணக்கான மனித உடல் களை இழுத்துக் கொண்டு ஒடு
கின்றது. அது என்ன...இரும்பு கள். எண்ணெய் இல்லாவிட் டால் நின்று விடும்.
ஆனல் நான் முப்பதுவருடங் களுக்கு மேல் இதே பாண்வண் டியைத் தள்ளிக்கொண்டு 9ვს ან நாளைக்கு எத்தனை மைல்கள். எவளவு பாண் சுமைகள்.
வலது காலில் ஒரு நிறமா கவும், இடது காலில் இன்னெரு நிறமாகவும் இருக்கும் சிலிப்பர் கள். அவை அறுந்துபோனலும் பாசத்துடன் ஊசி குத்திவைத் திருக்கிறேனே அதுகளுக்குத் தெரியும். எனது நிலை.
35

Page 20
உச்சி வெய்யில்.
நேற்றையில் விட இண் டைக்கு சரியான வெய்யில்’’
ஒவ்வொரு நாளும் கூறும் வார்த்தைகள்தான்.
இன்னும் நூறு இருத்தலுக் குக் கிட்ட இருக்கிறது. GBonus மாகத் தள்ளுகிறேன்.
இதோ நாதர் வீடு வந்து
விட்டது. S.
டிங். டிங். டிங். * தம்பி'
ஐயா இண்டைக்கு விரதம்
இண்டைக்கு வேண்டாம்'
வேலைக்காரப் பையன் வயிற் றிலிருந்து வழுகும் சட்டையை இழுத்து விட்டப்டி கூறுகிருன்.
இந்த வண்டிலுக்கு எண்பது வயதுக்குமேல் இருக்கும். எனக்கு முன் எனது அப்பா. நல்ல உழைப்பாளி. ஒரு நாளைக்கு நாநூறு ஐநூறு ருத்தல் விற்பனை செய்வார். இங்கிருந்து ஆனை விழுந்தான் மடம் வரை போய் வருவார். அடேயப்பா. வண்டி யில்லாமல் கால் நடையாகப் போய்வருவதென்ருலே எவ்வளவு கஷ்டம். ஆனைவிழுந்தான் சந் திக்கு அருகில் அப்பா விழுந்து.
நல்ல ஞாபகம் அன்றைக்கு .
ஆமாம். யாரோ தொடர்ந்து நடந்து சாதனை நிலைநாட்டிக் கொண்டிருந்தார். எத்தனை
ாஜலகள். விசில்கள்.
எங்கள் அப்பாவிடம்இருந்த இகட்ட புத்தி இந்தக் கள்ளுக்குடி
36
தான். மாடுமாதிரி உழைக் கின்ருர், குடித்துவிட்டுப் GB. T. கட்டன்' என்று எங்களுக்குள் ளே சொல்லிக் கொண்ட சமா தானங்கள். நல்லவேளை நானும் எனது அக்காவும்தான் அவருக் குப் பிள்ளைகள். அக்காவை ஒரு
பெடியன் காதலித் கூட்டிக்கொண்டு G3urů சும்மா சொல்லக் கூடTது. மச்சானும் நல்ல உழைப்பாளி. மிகப் பெரிய பில்டிங் கொன்ராக்ரரிடம் வேலை ஆனல் அவர்களது வீடு குடிசை தான்.
மேசன்
துக் விட்டான்.
மத்தியானப் பொழுது. உச்சி வெய்யில் வேளை. தண் ணிர் குடிக்கலாம் என்ற எண் ணத்துடன் வண்டியை வீட்டுப் பக்கம் திருப்பினேன்.
அதோ வீடு வந்து விட்டது.
கறையான் பிடித்துக் காற்றில் பறக்கும் கஞ்சல்த் துணிகள் மேலே கிடக்கும் பதுங்கிப் போதல் போல நுளைந்து நெருங்கிப் பார்த்தால் ஒட்டை தெரியும் மழையும் வந்தால் வெள்ளம் ஓடும் நெருப்புப் பட்டால் சாம்பல் மிஞ்சும் "அதுகள்" வாழும் இடங்கள்" என்னும் இதுதான் எங்கள் ஒலைக்குடிசை"
போனகிழமை நடந்த மே தினக் கூட்டத்தில் யாரோ ஒரு பெடியன் படித்த கவிதை ஞாப கம் வருகிறது. அதோ அந்தக் குடிசைதான் எனது வீடு.
எதிர்ப்புறத்தில் “ராஜபுரம் வீட்டுக்கு யாரோ பச்சைப் பெயின்ற் அடித்துக்கொண்டிருக் கிருர்கள்.

‘என்னப்பா இன்டைக்கு ஏழியா வந்திட்டா'
பெட்டிக் கடைக்காரச் சுந் தரம் கேட்கிருன்.
**இண்டைக்கு பிஸினஸ் ஒடேல்லை.
வாசலில் வண்டியை நிறுத்தி
விட்டு வீட்டிற்குள் நுளை கிறேன். *கமலம் கொஞ்சம் தண்ணி கொண்டுவா. "'
நெளிந்த ஈயக் குவளையை கையில் தந்துவிட்டு எனது மகன் வெளியே போகிருன். பாண் வண்டி திறக்கும் சத்தம் கேட் கிறது.
** டேய் தம்பி தொடாதை யடா. டேய். தம்பி’’
எடுத்த பாணை திரும்பவும் வைத்துவிட்டு முகத்தைச் சுருக் கியபடி உள்ளே வருகிருன். வெளிறிய எனது கண்களால் அவனை நான் விழித்துப் பார்க் கிறேன்.
** அப்பா நாங்க பசியிலை இருக்கிறம். இவளவு பாணிலை ஒண்டெடுத்தா குறைஞ்சா போ யிடும்**
சிணுங்கியபடி சற்று கோப மாகத்தான் கேட்கிருன். எனக் குத் தலையெல்லாம் சுற்றித் தொண்டையை அடைத்துக் கொண்டு வருகிறது. ஒரே மாதிரி இரண்டுமுறை நடப்ப g|GiorLT... ?
ஆம் . இவனைப்போல சிறிய
வனுக இருந்தபோது. அப்பா இப்படித்தான் வண்டியை விட்டு
விட்டு வீட்டுக்குள் வந்தபோது நான் ஒரு பணிஸ் எடுத்ததற் காக அப்பா எனக்குச் சூடே போட்டார்.
இவளவு பணிஸ் இருக்கு. ஒண்டெடுத்தா என்னப்பா?
“எடுத்ததும் இல்லாமை. வாய்க்கு வாய் கதைக்கிரு என்ன.
s
நான் கேட்ட கேள்விக்கு அப்பா கொடுத்த தீர்ப்பு வ்லது கையில் போடப்பட்ட இரு சூடு கள்தான்.
அவரது முடிவுகள் எனக்குக் தெரியும்.
"வறுமை நீங்க வழியேயில் லையா’’ என அப்பா நல்லூர்க் கோயிலில் வெளியே நின்று அழுத முகத்துடன் தலையில் குட் டிக்கொள்வார். யாரும் பிரச்சி னைகள் பற்றிக் கோட்டால்,
‘அதெல்லாம் தலையிலை எழு தின எழுத்தப்பா’
இதுதான் அவரது களும் முடிவுகளும்,
பதில்
இவனுக்கும் நான் இன்று சூடு போடவா..? அவனுடைய கேள்வியில் பிழையில்லையே. தலை யில் எழுதின எழுத்தில்லையே.
வண்டியின் கைப்பிடியைப் பிடித்தபடி திரும்பிப் பார்க்கி றேன்.
*நான் கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையே. ஏனப்பா?" என்று கேட்பதுபோல இருந்தது அவனது பார்வை.
37

Page 21
" "அதெல்லாம் பெரிய விட யம், போகப் போகப் புரிந்து கொள்வாய் எங்களுக்கும் காலம் வராதா என்ன’’ என்று எனக்குள் ஒரு முத்தல் பாணை எடுத்து சமா ளித்துக் கொண்டு அவனிடம் நீட்டுகிறேன். வாடியிருந்த அவ னது முகத்தில் ஏற்பட்ட மாற்
எண்ணிக்கொண்டு '
றத்தால் எனது மனம் நிறை கிறது.
பட்ட கடனேடு ஒரு புதிய கடனும் தொடர்ந்து வளர்ந்து வருவதை உணர்கிறேன்.
வண்டி உருள்கிறது.
O Ο O
ஐம்பத்திருவருக்கு.
38
சற்றே வழி விலகி நந்தி வழி விட்டாற்போல்
வெலிக்கடையின் சிறைக்கூட
இரும்பு நெடுங்கதவு தானே திறக்கும்
அங்கு, காவலர்கள் அறியாமல், கற்சுவர்கள் சூழ்ந்திருக்கும் அறைக்குட் கொலை நடக்கும்.
பகுத்தறிவு ஆளுகிற யுகமதனில் அற்புதங்கள் ஒருக்கால் நிகழுமெனின் ஒப்பார்கள் என்பதனல் மறுகால் நிகழும் கண்டு விறைத்த சிறைச் சுவர்கள் மெளனிக்கும்.
- சேகர்
 

(p. 5?TIIffilÖdplî
| IDT356tlipsi
- சி. சிவசேகரம்
முன்னுரை
காலஞ் சென்ற மு. தளையசிங்கத்தை விமர்சித்து எழுதும் எண்ணம் ஏறத்தாழ மூன்று வருஷங்கள் முன்பு ஏற்பட்டது. ஆயினும் மு. த. வுக்கு உள்ள முக்கியத்துவமே ஒரு குறுகிய வட் டத்துக்குட்பட்டது என்பதால் அந்த எண்ணத்தைச் செயற்படுத் தாமல் விட்டுவிட்டேன். பின்பு அலை - 19 இல் ( 1981 ஐப்பசிகார்த்திகை ) மு. பொன்னம்பலம், மு. த. பற்றி கைலாசபதி எழுதிய கட்டுரைக்கு மிகவும் ஆக்ரோஷமாகவும் சிறிது நாகரிகக் குறைவாகவும் எழுதிய பதிலை (யாருக்கு இரண்டக நிலை மு. த விற்கா? கா. கை. க்கா? ) வாசித்த போதும் அந்த எண்ணம் மனதில் எழுந்தது. ஆயினும் எழுதவேண்டிய அவசியம் இல்லா மையால் மீண்டும் விட்டுவிட்டேன். அண்மையில் தென்னிந்தியா வில் சில மாக்ஸிய எதிர்ப்பாளர் மத்தியில் மு. த. பற்றிய புதிய அக்கறை எழுந்துள்ளதும் அது அந்த வட்டத்துக்கு வெளியே யும் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதால், மு. த. வின் கருத்துக்கள்பற்றி எழுத முற்படுகிறேன். இதன் நோக்கம் தனியே மு. த. பற்றி விமர்சிப்பது அல்ல. மாக்ஸியத்தைத் தாண்டிப் போவது, மாக்ஸியத்துக்கும் இந்திய சிந்தனை மரபுக்கும் முடிச் சுப் போடுவது போன்ற சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சில ருக்கும் பதில் கூறும் தேவையையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.
மு. த. பற்றி விமர்சித்த கைலாசபதி தன் விமர்சனத்தில், முக்கியமாகச் சில வாதங்களைக் கையாண்டதில், கவனயீனமாக இருந்திருக்கிருர் என்ருலும் அவரது முக்கியமான முடிபுகள் பற்றி நான் அவருடன் உடன்படுகிறேன். கைலாசபதி மு. த வின் சிந்தனைகளில் உள்ள மேலும் பல குறைகளையும் குழப்பங் களையும் சுட்டிக்காட்டவில்லை என்பதுவே என் பிரதான முறைப் பாடாக இருக்கிறது. கைலாசபதி மு. த. வைக் கொஞ்சம் மிகையாகவே மதிப்பிட்டு விட்டாரோ என்று கூடத் தோன்று
கிறது.
39

Page 22
மு: த. மாக்ஸியத்தைப் புரிந்துகொள்ளாமல் அதைக் கடந்து செல்வதாகக் கூறி மாக்ஸியத்தை எதிர்த்தவர் என்ற மதிப்பீடு மிகவும் சரியான ஒன்று. மு. த. வின் தத்துவத்துக்கு ஆதாரமாக இருந்த பலவீனங்கள் பல. பொருள்முதல் வாதத் தைப் போதாது என்று கூறிக் கருத்து முதல் வாதத்தை ஏற்ப தாகக் கூறத் தயங்கி இரண்டையும் ஒருமைப்படுத்துவதாகக் கூறும் மு. த. வின் சிந்தனைக் குழப்பம் என்னை வியப்படையச் செய்யவில்லை. அதையெல்லாம் தத்துவ முத்துக்களாக்கிப் போற் றும் போக்கும் என்னை அதிசயிக்கவில்லை. மு. த. வின் தத்து வத்துக்கு ஆதாரமாக உள்ள சிந்தனைகளையும் ஊகங்களையும் விமர்சிக்கும் போது எத்தகைய கருத்துத் தெளிவீனங்கள் அவ ரது சிந்தனைக்கு ஆதாரமாக இருந்தன என்பதைக் காணவும் சிலரால் அவை குருட்டுத்தனமாக விமர்சனமின்றி, ஏற்றுக் கொள்ளப்படும்போது அவை அவர்கட்கு மாபெரும் சிந்தனைப் போக்குகளாகத் தென்படுகின்றன என்பதை உணரவும் உதவக் கூடும்.
மு. த. வும் மாக்வமியமும்
மாக்ஸியம் நல்லதுதான் என்கிற விதமாக இடத்துக்கிடம் மு. த. குறிப்பிட்டாலும் அவரது முக்கிய நோக்கு மாக்ஸியத் தின் போதாமையை வலியுறுத்துவதும் அதைத் தாண்டிப் போக வேண்டிய அவசியத்தை விளக்குவதுமே. மு. த. மாக்ஸியம் பற் றியும் அதன் அடிப்படைகள் பற்றியும் கொண்டுள்ள தெளிவீ னமான கருத்துக்களை முதலில் எடுத்துக்கொள்கிறேன்.
(1) “சரித்திரத்துக்கு மார்க்ளியவாதிகள் கொடுத்த வளர்ச் சியானது மாக்ஸியவாதிகளையே தோற்கடித்து வளரும் காலம் வந்துவிட்டது. ஆனல் அதை மாக்ஸியவாதிகளாலேயே உணர முடியாமல் இருக்கிறது. அதனல் அவர்கள் புதுப்புது வியாக்கி யானங்களைத் திரிக்க வேண்டியவர்களாய் இருக்கிறர்கள். தங் களுக்குள்ளேயே பிளவுபட்டுச் சண்டைபோட வேண்டியவர் களாய் இருக்கிருர்கள். இன்னும் தர்மம் அவர்கள் பக்கந்தான் அதிகம் இருக்கிறது. ஆனல் அதன் தொடர் வளர்ச்சிக்கு அவர்களின் தத்துவப் பார்வை விட்டுக்கொடுக்கக் கூடியதாய் இல்லை". ( போர்ப்பறை, ப. 75 )
(2) ‘எப்படி ரஸ்ஸியா, சீனு, போன்ற நாடுகளில் முதலா வித்துவ அம்ைப்பு பூரணமாக வளருவதற்கு முன்னமே பொது வுடமை அமைப்பின் ஆரம்பமும் தொழிலாளர் சர்வாதிகாரமும் ஏற்பட்டுவிட்டனவோ அதே வகையில் இனிமேல் பூரணமான முதலாளித்துவ அமைப்பு அல்லது அதற்குப் பின்னர் வரக்
40

கூடிய தொழிலாளர் சர்வாதிகாரம் எதுவுமில்லாமலேயே அவற் றுக்கும் அப்பாற்பட்ட ஒரு சகாப்தத்தையும் சமூக அமைப்பை யும் தோற்றுவிக்கக் கூடிய சூழல் உருவாகிவிட்டது'. ( போ. 90 ).
(3) “மாக்ஸின் சிந்தனைகள் இன்று பல நாடுகளில் செயல் படத் தொடங்கிய பிறகுதான் அதன் குறைகளும் நடைமுறை யில் நம்பக்கூடிய வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளன. பொருளா தாரப் பொதுவுடமை மிக அவசியம் என்பதை உலகம் உணர் கிறது. ஆனல் அதைக் கொண்டுவருவதற்குரிய காரணங்களை யும் விளக்கங்களையும் மார்க்ஸ் காட்டிய கோணத்தில் முற்ருக ஏற்றுக்கொள்வதும் சரியல்ல என்பதை மார்க்சீய சித்தாந்தம் நடைமுறையில் அனுட்டிக்கப்பட்ட பின்தான் உலகம் பூரண மாக நம்பத் தொடங்கியிருக்கிறது". ( போ. 93 ).
(4) 'வர்க்கப்பிரிவினை என்பதே அறியாமைக்கு உட்பட்ட, பழைய அறியாமைக்குட்பட்ட, காலத்தின் மனத் தோற்றமே தான். அதனல் ஆயுதமேந்திய வர்க்கப்போராட்டம் சரித்திரம் தன்னை உணராத வரைக்கும், உலகாத்மா தன் சுயத்தை அறிவு பூர்வமாகக் கண்டுபிடிக்காத வரைக்கும் நடை பெறும் அறியாமைக்குட்பட்ட போராட்டமாகவே இருக்கிறது. ஏகல் (Hegel) கூறியது போல் தானே எல்லாமாக இருக்கிறது என்பதை உணரும் உலகாத்மா அதற்குப்பின் வர்க்கப் பிரிவினை களையும் (அதே போல் சாதி, இன, மொழி, தேசப் பிரிவினை களையும் ) பலாத்காரத்தையும் அடிப்படையாகக் கொண்டு போராடாது. . . . ஏகலே தன் முடிவைச் சரியாக வளர்க் காததுபோல் மாக்ஸும் அந்த முடிவைப் பிழையாகவே, தலை கீழாகவே வளர்த்துள்ளார். காந்தி, வினேபா போன்ருேரே மனிதகுல அன்பையும் அகிம்சையையும் சத்தியத்தையும் அடிப் படையாய்க் கொண்டு சரித்திரத்தை வளர்க்க முயல்வதால் எகல் கண்டுபிடித்த இடத்திலிருந்து சரித்திரத்தை உண்மையாக வளர்ப்பவர்கள் அவர்களாகவே இருக்கின்றனர்.' போ. 99)
(5) பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற பாகுபாடு இன்று விஞ்ஞான ரீதியாகத் தன்னை நிறுவமுடியாத குருட்டுப் பார்வையாகி விட்டது. ( மெய்யுள் ப. 42 )
(6) லோகாயத வாதத்தின் இறுதிக்கோலமாக (அது) ( மாக்ஸியம்) இருக்கிறதேயொழிய, மனத்தளத்தின் அடுத்த பார்வைப் போக்கான சமய சித்தாந்தப் பார்வையின் முடிவாக வும் அது இல்லை. (மெ. 36 )
4.

Page 23
(7) 'மாக்ஸ் விட்ட தவறுகட்குப் பல காரணங்கள் இருக் கின்றன. அவர் விஞ்ஞானமாகக் கருதியவை பூரண விஞ்ஞான மல்ல. அவர் அறிவுப் பிறழ்வாக ஒதுக்கிய ஞான அனுபூதி நிலையும் - நிர்வாண நிலை - உண்மையான அகவிஞ்ஞானத் தின் கண்டுபிடிப்பேயாகும். மேற்கத்தைய விஞ்ஞானம் அதை இனிமேல்தான் பூரணமாக உணர வேண்டியிருக்கிறது.'
போ. 94 ).
மேற் குறிப்பிட்ட சில மேற்கோள்களில் மு. த. வின் மாக்ஸிய விரோதம் தெளிவாகியிருக்கும். முதலாளித்துவ முறையை எதிர்ப்பதில் அவர் மாக்ஸியவாதிகளுடன் உடன்பாடு காட்டலாம். அவர் இடையிடையே எவ்வளவுதான் மாசுஸியத் தின் நற்பண்புகளைப் போற்றிக் கூறினலும், அவர் கூறுமாறு மாக்ஸியத்தை தாண்டிப் போவது, இன்றைய சூழலில், மாக் ஸியத்தை நிராகரிப்பது என்பதைவிட வேறெதையுமே குறிக் காது. இதை மூடிக்கட்டச் சிலர் எடுக்கும் முயற்சிகள் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.
* மாக்ஸிய முகாமுக்குள் பிளவுகள் (1) பற்றி மு. த. பேசு கிருர். இந்தப் பிளவுகள், கருத்து முரண்பாடுகள் ஆகியனவும் வேறுபட்ட வியாக்கியானங்களும் மாக்ஸின் காலத்திலிருந்தே இருந்து வந்தவைதான். மாக்ஸிய இயக்கம் ஒரு விறைப்பான தத்துவ நிலைப்பாட்டின் மேல் கட்டியெழுப்பப்பட்ட திருச்சபை அல்ல. செயற்பாட்டினுாடு வளர்ச்சிபெறும் இயக்கம் ஒன்றில் தவறுகளும், தோல்விகளும் இயல்பானவை மட்டுமல்ல அதன் வளர்ச்சிக்கும் பங்களிப்பவையுங் கூட. கருத்து முரண்பாடு களின்மூலம் மாக்ஸியம் சிதைந்து போகவில்லை. மாக்ஸியம் மாக்ஸிய - லெனிஸமாகவும், சீனவில் மாஒ சேதுங் சிந்தனையாக வளரவும் தொடர்ந்து விருத்தியடையவும் மாக்ஸிய இயக்கத்தி லுள்ளான பிளவுகள் கூடத் தம் பங்கைச் செலுத்தியுள்ளன.
ரஷ்யாவிலும் சீனுவிலும் முதலாளித்துவம் வளருமுன்னமே புரட்சி ஏற்பட்டதை ஆதாரமாக வைத்து சோசலிஸ் சமுதாயம் ஏற்பட முன்னரே அதற்கு 'அப்பாற்பட்ட" ஆத்மீக அடிப் படையிலான சமுதாயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிவிட்டது (2) என்று வாதிக்கும் மு. த. முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ந்ததஞலேயே அதன் முரண்பாடுகள் விருத்திபெற்ற முத லாளித்துவத்தின் தேசிய எல்லைகட்கப்பால் விஸ்தரிக்கப்பட்ட சூழ்நிலை பற்றியும் அதனலேயே சர்வதேசரீதியாக ஏகாதிபத்தி யத்துக்கு எதிரான புரட்சி வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளின் எல்லைக்கு வெளியே நடத்தப்படும் சூழல் உருவா
42

னது என்று அறியமாட்டாரா? அந்தப் புரட்சிகள் ஏன் சாத்தி யம் என்பதை முன் கூட்டியே மாக்ஸியவாதிகளால் ஆதார பூர்வமாக விளக்கமுடிந்தது. மு. த. என்ன ஆதாரங்களைத் தன் னுடைய "புதுயுகத்தின் வருகைக்கு ஆதரவாகக் காட்டுகிருர்? இரண்டு விஷயங்களை ஒப்பிட்டு முடிபுகட்கு வருமிடத்திலோ, ஒன்றை வைத்து மற்றவற்றை விளக்குமிடத்திலோ, சில தர்க்க ரீதியான அடிப்படைகளை அவதானிக்க வேண்டாமா? மு. த. இந்த விஷயத்தில் தவறிவிட்டார்.
பொருளாதாரப் பொதுவுடமைக்கான அவசியத்தை உல கம் உணரும் அதே சமயம் புரட்சிக்கான மாக்ஸிய காரணத் தையும் விளக்கத்தையும் ஏற்காததாலா (3) புரட்சி ஏற்பட வில்லை? முழு உலகமும் இவ்வளவு எளிதாக இந்த விஷயத்தில் தெளிவு காணக்கூடுமாயின் ஏகாதிபத்தியத்தை முறியடிப்பதில் நமக்கு இவளவு சிரமம் ஏனென்று புரியவில்லை. "சரியான காரணத்தையும் விளக்கத்தையும் தரவல்ல மஹான்கள் எத் தனையோபேர்தான் மாக்ஸ்"க்குப் பிறகு வந்துபோய்விட்டார் களே!
வர்க்கப் பிரிவினை விஷத்தில் (4) அறியாமை என்ற ஒரு வார்த்தையால் முழுப்பிரச்சனையையும் மூடிவிட்ட மு. த. வின் தெளிவீனமான வரலாற்றுக் கண்ணுேட்டம் வர்ண அமைப்புப் பற்றிப் பேசும் இடத்தில் அப்பட்டமாகவே தெரிகிறது. ( அதற் குப் பின்னர் வருகிறேன். ) ஆனல், வர்ண பேதத்துக்கு ஆழ மான தத்துவ விளக்கம் காணமுற்பட்ட மு. த. வுக்கு வர்க்க பேதத்துக்கும் ஏதாவது அகப்படாமல் போய்விட்டதா?
பொருள்முதல் வாதம் கருத்துமுதல்வாதம் என்ற வேறு பாடு விஞ்ஞானரீதியாகத் தன்னை நிறுவமுடியாத குருட்டுப் பார் வையாகி விட்டது (5) என்று வாதிக்கும் மு. த. வின் விஞ்ஞான ரீதியான விளக்கத்தைக் கேட்டால் அசந்தே போய்விடுவீர்கள். சடமானது சடத்தின் உருவத்தைக் கடந்த சக்தி ஒளி அலையாக வும் அவற்றிற்கு அப்பாற்பட்டதாகவும் மாறுகிறது. (மெ. ப. 42 அப்பாற்பட்டது என்ன என்று மு. த. விளக்கவில்லை.) எனவே சடம் என்பது நிலையான ஓர் அடித்தளமல்ல; எனவே பொருளை முதலாகக் கொள்ள முடியாது. இதற்கு ஆதாரமாக ஆதர் சி. கிளாக் என்கிற விஞ்ஞானப் புனைகதையாளரையும் மேற் கோள் காட்டி அதிலும் தன்னுடைய அர்த்தம் எதையோ திணித் துள்ள மு. த. வுக்கு பொருள் முதல்வாதம் என்ருல் சடப் பொருளை மாற்றமுடியாத முதன்மைப் பொருளாகக் கொண்ட ஒன்று என்ற வரட்டு வியாக்கியானம் தான அகப்பட்டது? ஏதா
43

Page 24
வது வார்த்தைக்கு அகப்பட்ட அகராதியில் அர்த்தம் பாாதது விட்டு அதையே வரைவிலக்கணமாக்கும் குருட்டுத்தனம் கருத்து முதல்வாதம் என்கிற விஷயத்திலும் தென்படுகிறது. (அதற்கும் பின்னர் வருவோம்.)
லோகாயத வாதத்தின் இறுதிக் கோலமாக மாக்ஸியம் இருக்கிறது (6) என வாதிக்கும் மு. த. லோகாயதம் என்கிற பழைய பொருள் முதல்வாதம் இயங்கியல் சாராதது என்பதால் அது மாருநிலையியல் (Metaphysical) தன்மையுடையது என்பதை அறிய மாட்டாதவரா? சமய சிந்தாந்தப் பார்வை என்று மு.த. குறிப்பிடும் Metaphysical (மாருநிலையியல்) மார்க்ஸியத்தில் இயங் கியல் பார்வைக்கு முரண்பாடானதாகவே இருக்கிறது. பொருள் முதல்வாதம் கருத்துமுதல் வாதம் இரண்டையும் இணைப்பதும் அதன் மூலம் முழுமையான கோலம் ஒன்றைப் பெறுவதும் என் றெல்லாம் வாதித்துவிட்டு மனத்தளத்திலிருந்து பேரறிவுத்தளத் துக்குத் தாவுவது பற்றிப் பேசும் மு. த. இந்த இணைப்புக்கான அடிப்படைபற்றித் தெளிவாக எதையுமே முன்வைக்கவில்லை. அந்த இரு தத்துவப்போக்குகளதும் அழிவை அவர் விரும்புகிருர் என்ருலும் அவரது இறுதிநிலை கருத்து முதல்வாதமே. இதை அவரால் உணர முடியவில்லை
மாக்ஸியம் விஞ்ஞானமாகக் கருதுவது பூரண விஞ்ஞா னம் அல்ல என்று வாதிக்கும் மு. த . (7), தான் கூறும் "பூரண விஞ்ஞானம்" என்றைக்காவது மாக்ஸியத்தின் இலக்காக இருந் ததா என்று கவனித்தாரா? மாக்ஸியம் தன் "பூரணமற்ற தன் மையையும் தான் சார்ந்து நிற்கும் விஞ்ஞானத்தின் பூரணமற்ற தன்மையையும் நன்கு உணர்ந்தே உள்ளது. பூரண உண்மை பற்றிய பாசாங்கு மாக்ஸியத்துக்கு உரிய ஒன்றல்ல. விளங்காத விஷயம் பற்றி மாக்ஸியவாதியின் பதில் 'இப்போதைக்கு என் னல் விளக்கமுடியாது’ என்பதே. எல்லாவற்றையுமே விளக்கும் நிர்ப்பந்தம் சமயவாதிகட்குத்தான் இருந்துவந்துள்ளது. எனவே தான் மோட்ச நரகங்களும் பாப புண்ணியங்களும் ஜன்மவினை யும் பிறவிச்சுழலும் அவர்களை மூழ்கடித்து விடுகின்றன.
மாக்ஸியம் பற்றிய அறிவில் எவ்வளவு தெளிவுடன் மு. த. மாக்ஸியத்தைக் கடந்து செல்ல முற்பட்டார் என்பதற்கு மேலும் மேலும் மேற்கோள்களைக் காட்ட வேண்டிய அவசியம் எனக்கில்லை. இனி மு. த. வின் வரலாற்று அறிவுக்கு வருவோம்.
பழைய இந்துமரபின் சாதிப் பிரிவுகள் எந்த அடிப்படை யில் நிறுவப்பட்டன என்பதற்குரிய பூரண விளக்கங்கள் இது வரை காட்டப்படவில்லை. ஆனல் உண்மையில் பழைய நான்கு
44

வர்ணங்களும் சமூகத்தின் அளவில் மனிதன் இலகுவாகக் குணங் களைக் கடந்து வளர்வதற்கு வகுக்கப்பட்ட பிரிவுகள்தான். தனிப் பட்ட மனிதன் தன்னளவில் குணங்களைக் கடந்து வாழ்வதற்கு நான்கு ஆச்சிரமங்கள் இருந்தன. பிரமச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், சந்நியாசம். அதேபோல் சமூகளவில் பரிணும முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட பிரிவுகள் தான் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணங்களாம்.
** முழு உயிரினங்களதும் வளர்சசியை விஞ்ஞானரீதியாகக் கணக்கெடுத்து அந்தக் கணக்கெடுப்புக்கு ஏற்ப மனித பரிணுமத் தைச் சத்திய உச்சத்தை நோக்கித் துரிதப்படுத்தி வளர்ப்பதற் காக உருவாக்கப்பட்டவையே அந்த ஆச்சிரம - வர்ணப் பாகு பாடுகளாகும். மறுபிறப்புக் கொள்கையோடு அவை பொருத்தப் பட்டு 'தத்துவம் அசி " என்கிற இலட்சிய நிலையைச் சதா முன் வைத்து சமூக இயக்கமே பிரமிக்கும் வகையில் ஆற்றுப்படுத்தப் பட்டிருக்கிறது" (மெ. 46-47) .
(பண்டைய இந்திய வரலாற்றைப் புரிந்துகொள்ள எத் தனையோ இந்திய வரலாற்றியல் ஆய்வாளர்கள் தம் காலத்தை விரயமாக்கி விட்டார்கள். தளையசிங்கம் பாய்ச்சும் ஒளியில் 6000 வருஷ வரலாறு நம் கண் முன் ஒளிர்கிறது! மூடர்களே உங்கள் புத்தகங்களை எல்லாம் தூரப்போடுங்கள்! இதோ, வரலாறுகட் கெல்லாம் முடிவுகட்டும் வரலாறு வந்து விட்டது! )
அடியேனுக்கு ஒரு சிறு சந்தேகம்: இந்தத் தத்துவ விளக் கங்கள் மூலம் தீர்க்கமுடியாத சிக்கல்கள் பல மகாபாரதம் போன்ற நூல்களிலும் உள்ளனவே! பிராமணப் பர்சுராமர் அரச குலத்தவர் மீது கொண்ட சினமும் கர்ணனை அவர் சபித்ததும் ஏன்? கர்ணன் அர்ஜ"னனை எதிர்த்துப் போட்டியில் கலந்து கொள்ள முனைந்தபோது கர்ணன் மன்னர் குலத்தவன என்ற கேள்வி எழுந்தது ஏன்?
மகா மேதையான பிராமணர் உதங்கர் புலையணுக வந்த இந்திரனை அடையாளங் காணமுடியாமல் அவன் வழங்கிய நீரை மறுத்தது ஏன்? என்றுமே சாதிகள் பிறப்பாலானவை என்பதை மூடிமறைக்க முனைந்த எத்தனையோ பேரின் வரிசை யில் மு. த. வும் முடங்கிவிட்டார் என்றே தோன்றுகிறது. வர லாற்றை நேர்மையாகப் பார்க்கத் தைரியமில்லாதவர்களால் அதை உருவாக்கி வழிகாட்ட முடியாது. இந்த வகையான கோழைத்தனம் எப்படிச் சத்திய யுகத்துக்கு வழி காட்டுமோ தெரியவில்லை. ズ
வர்ணுசிரம தர்மத்தை அதன் வரலாற்றுச் சூழலில் மிக அனுதாபமாகவே நோக்க முடியும்; அதற்கான மார்க்கம் சாதி
45

Page 25
முறைக்கும் உற்பத்தி உறவுகட்கும் சமுதாயத் தொழிற் பிரிவு கட்கும் உள்ள தொடர்பை அறிவதேயொழியத் தத்துவக் குழப் பத்தில் உண்மைகளை அமுக்கி மறைப்பதல்ல.
(வியற்ணும்) *யுத்தத்தில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டும் கூட அதனுல் வெல்ல முடியவில்லை என்பது எவ்வளவு முக்கிய மானதோ அவ்வளவு தூரம் கொறியா யுத்தத்தில்போல் சீன அதில் நேரடியாக ஈடுபடவில்லை என்பதும் முக்கியமானதாகும். சீனுவும் ரஷ்யாவும் அதில் நேரடியாகத் தம் படைகளை இறக்கி விட்டால் அதன்மூலம் தமக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதின என்பது அதன்மூலம் புலணுகிறது. " " இது ஒரு ஸ்தம்பித நிலை யாகும், (மெ. 117).
எனவே, ரஷ்யாவும் சரி, சீனுவும்சரி, முதலாளித்துவ நாடுக ளுடன் உடனிருந்து வாழும் சமாதானத்தை இன்றைய தேவைக் குரிய தந்திரமாக ஏற்றுக்கொள்கின்றன. அதன்மூலம் அதற் குரிய ஸ்தம்பிதத்தையும் நேரடியாகப் போர்தொடுக்க முடியாத பலவீனத்தையும் ஒப்புக்கொள்கின்றன.' (மெ. , ப. 118)
சீன கொரிய யுத்தத்தில் ஈடுபட சீனுமீது அமெரிக்க அத்து மீறல்களே காரணமாயிருந்தன. மற்றப்படி லெனின் முதல் மாஓ வரை எந்த மாக்ஸியவாதியுமே (ட்ரொட்ஸ்கியவாதிகள் போக) நாடுகள்மீதான யுத்தத்தின்மூலம் சோஷலிஸத்தைப் பரப்பும் கருத்தை முன்வைத்ததில்லை. மு. த. வின் விளக்கங்களெல்லாம் எங்கேயிருந்து வருகின்றன என்று வாசகர்களே ஊகித்துக்கொள் GranTub.
*எல்லைச் சண்டை காரணமாக (யுசிறிநதி எல்லை) சீன வுக்கும் ரஷ்யாவுக்குமிடையே எழுந்துள்ள பிரசாரப் போரில் திரும்பவும் அந்த இன, மொழிப் பற்றுக்கள் இருபக்கங்களிலும் படையாகத் திரட்டப்படுவதைப் பார்க்கக் கூடியதாக இருக் கிறது.’’ (போ., ப. 77)
இனப்பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்பன அப் படியே கெட்ட விஷயங்களல்ல. அவற்றுக்கும் ஒரு முற்போக் கான பங்குள்ளது. அது வரலாற்று வளர்ச்சியின் போக்கில் நிர் ணயமாவது. இவற்றை இனவெறி, மொழிவெறி, தேசியவெறி என்பனவற்றுடன் குழப்பிக்கொண்ட மு. த. எந்த அடிப்படை யில் சீனமீது மேற்கூறிய குற்றச்சாட்டை வைக்கிருர்? வுஸஅலி நதி எல்லைப் பிரச்சனை மட்டுமன்றி முழு சீன - ரஷ்ய எல்லைப் பிரச்சனை தொடர்பாகவும் சீனுவின் நிலைப்பாட்டை மு. த. எப் போதாவது படித்திருக்கிருரா? மு. த. வின் தகவல்கள் கைலாசபதி கூறியதுபோல என்கெளண்ட்டர் போன்ற பத்திரிகைகளி
46

னின்றுதான் (பெருமளவுக்கேனும்) கிடைத்ததாகச் சந்தேகிக்க இடமில்லையா ?
“எகலின் தத்துவத்தை வெல்வதற்கு எங்கல்ஸ் எப்படி வழி கூறினரோ அப்படித்தான் மாக்ஸியத்தையும் வெல்லவேண்டும் அதன் நன்மைகளைக் கறந்துகொண்டு அதன் உருவத்தை அழிக்க வேண்டும். இன்னுமொரு பெருந் தத்துவத்தால் அதைச்சிதைக்க வேண்டும். சங்கரரின் அத்துவைத வேதாந்தமும் அந்த வகை யிலேயே பெளத்தத்ததை இந்தியாவில் வென்றிற்று.’’ (போ.79)
இவர் மாக்ஸியத்தை வெல்கிறதும் சிதைக்கிறதும் ஒருபுறம் கிடக்கட்டும். பெளத்தம் இந்தியாவில் தோற்றது ஒருவெறும் தத் துவப் போராட்டத்தின் தோல்வியா ? தேருவாத பெளத்தம் தன்னை ஜனரஞ்சகப்படுத்தியதன்மூலம் இலங்கையிலும் வேறுஞ் சில நாடுகளிலும் பிழைத்திருக்கிறதே! அதுஎந்தத் தத்துவவளர்ச்சி யின் வெற்றி? அத்வைதம் ஏன் இந்தியா முழுவதும் ஆதிக்கத் திற்கு வரமுடியவில்லை. ஏன் அதனல் இந்திய எல்லைக்கு வெளியே போக முடியவில்லை. இந்த மாதிரி ஒற்றை வசன விளக்கங்களும் வியாக்கியானங்களும் வரலாறுபற்றி மு. த. வின் கருத்துக்குழப் பத்துக்குப் பல இடங்களிலும் சான்று கூறுகின்றன.
மு. த. வும் மெய்யியலும் விஞ்ஞானமும்
ஹெகலை மாக்ஸ் தலை கீழாக்கினர், மாக்ஸைத் தலை கீழாக்கி மீண்டும் ஹெகலிடம் கொண்டுபோகலாம் என்கிற மாதிரி இந்த தலைகீழாக்கும் விஷயத்தை இயந்திர ரீதியாகப் பயன்படுத்துகிருர் மு. த.
கருத்துமுதல்வாதம் என்ருல் கலை, இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகட்கு முதலிடம் கொடுத்தலும் சிந்தனையைச் செயல் தொடர்வதாகக் கூறுவதும் (போ. 89) என்று விளங் கிக் கொண்டிருக்கும் மு. த. வை நினைத்துச் சிரிக்கவும் முடியாம லிருக்கிறது. இவ்வளவுக்கும் சிந்தனைக்கும் செயலுக்கும்மிடை லான உறவு, கொள்கைக்கும் நடைமுறைக்கும் உள்ள உறவு போன்ற விஷயங்களை எவ்வளவு எளிமையாக எவருமே விளங் கிக்கொள்ளக்கூடிய முறையில் மாக்ஸியவாதிகள் எத்தனையோ பேர் எழுதியிருக்கிருர்கள்!
விஞ்ஞானம் பற்றிய முடிபுகட்கு முக்கியமாக ஆதர் க்ளாக் (Arthur Clark) என்கிற விஞ்ஞானப் புனைகதை ஆசிரியரை ஆதாரம் காட்டுமளவுக்கு மு. த. வின் விஞ்ஞானம் இருக்கிறது. சடத்துக்கும் உயிருக்கும் நினைவுக்கும் அப்பாற்பட்ட பேர்ஞான நிலையைக் கண்ட அநுபூதி மகான்களை மாபெரும்
47

Page 26
விஞ்ஞானிகள் என்று வர்ணித்துவிட்டு விஞ்ஞானிகள் அந்த நிலையை இன்னும் தொடவில்லை என்று கூறும் மு. த. வுக்கு அந்தப் பேர்ஞான விஞ்ஞானமும் இந்த "அஞ்ஞான விஞ்ஞான மும் ஒரே அடிப்படையினவா ஒத்த நோக்குடையனவா என்பதை யெல்லாம் கவனிக்கமுடியவில்லை. சைவ சித்தாந்தமா எலும்பு முறிவு வைத்தியமா சிறந்தது என்கிறமாதிரி எப்படித்தான் சம்பந்தமற்ற விஷயங்களை ஒப்பிட முடிகிறதோ தெரியவில்லை.
மு. த. அத்வைதத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை, காந்தி, வினுேபா, போன்றேர் காட்டும் அரசியல் - சமுதாய மார்க்கம், ராமகிருஷ்ணர் முதலாக அரவிந்தர் வரையிலானே ரின் ஆத்மீகக் கருத்துக்கள் மீதான பிடிப்பு என்பன சர்வமத ஒற்றுமை, பொருள்முதல்வாதத்துக்கும் கருத்துமுதல்வாதத்துக் கும் முடிச்சுப்போடும் மெய்முதல்வாதம் ஆகிய நிலைப்பாடுகட்கு அவரை இழுத்து வந்துள்ளது. ஆனல் ‘புதிய யுகம் வந்துவிட் டது” என்று ஆர்ப்பரிக்கும் அளவுக்கு அவரால் சூழலின் யதார்த் தத்தை உணரவோ தன் சிந்தனையை முழுமைப் படுத்திக்கொள் ளவோ முடியாமல், சர்வோதயம் என்ற மொட்டைச்சந்துக்குள் முடங்கி விடுகிருர்.
மு. த. வின் இலக்கியப் பார்வை
தரமற்ற இலக்கியம் பற்றி மு. த. வின் கோபம் நான் அவருடன் பெருமளவும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒன்று. ஆனல் அவருடைய இலக்கியக் கருத்துக்களுடன் உடன்பாடு காணுவது எனக்கு மிகவும் சிரமமானது.
பூரண இலக்கியம் என்று சகல துறைகளையும் சகல இலக் கிய வகைகளையும் மட்டுமன்றிச் சகலவிதமான சிந்தனைப்போக்கு களையும் இணைக்கும் எழுத்தாளர் இயக்கம் பற்றிப் பேசும் மு.த. இத்தகைய ஒன்று வர்க்கபேதமற்ற சமுதாய மொன்றில் அல் லது அதை அணுகும் சமுதாய அமைப்பிலேயே சாத்தியம் என் பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
சமுதாய மாற்றங்களையொட்டிக் கலை இலக்கியத்தில் மாற்றங்கள் ஏற்படுவது பற்றிய மாக்ஸிய நிலைப்பாட்டை வைத்தே சோஷலிசம் வெற்றிபெற்ற சமுதாயங்களில் இன்னும் முதலாளித்துவ சமுதாயத்தில் உருவான பழைய கலை வடிவங் கள்தானே உள்ளன என்று கேள்வியெழுப்புகிருர் மு. த. இது நியாயமான கேள்வி. ஆனல் பதில் மு. த. விரும்புவதுபோல சோஷலிச சமுதாயத்திலுள்ள சிந்தனைத் தேக்கமல்ல, முதலா ளித்துவ சமுதாயத்தில் கலைக்கும் இலக்கியத்துக்கும் என்ன
48.

நடக்கிறது என்பதைப் பார்த்தால் சோஷலிச சமுதாயத்தில் நடப்பது என்னவென்று விளங்கும். மு. த. வுக்கு சீனவைக் *கலாச்சாரப் புரட்சி வரையும் தான் காணமுடிந்தது. இன்று அந்தக் கலாச்சாரத் தேக்கத்தை உடைத்துக்கொண்டு சீனக் கலைஞர்கள் கண்டுள்ள எழுச்சியை மு. த. எதிர்பார்த்திருக்க மாட்டார். புதிய கலை வடிவங்கள் பற்றிப் பேசுமுன் புதிய கலை வடிவங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்று அறிய வேண் டாமா? சோஷலிச சமுதாயத்தால் பழைய கலைவடிவங்கள் மூலமே தன் தேவைகளை நிறைவுசெய்யவும் அவ் வடிவங்களூடு செய்யக்கூடியவை யாவும் நிறையவே இருக்கும் போது புதியவடி வங்கட்கான தேடல் பற்றி அதிகம் ஊக்கம் இருக்காது. ஆயினும் சீன ஓவியத் துறையில் புதிய பரிணுமங்கள் காணப்பட்டுள்ளன. மரபை நவீனத்துடன் இணைப்பதில் சீனக்கலைஞர்கள் சாதனை களைச் செய்துவருகிருர்கள். "புதுமை புதுமைக்காகவே” என்ற மாதிரி நிலை அங்கே இல்லை. மற்றுமொரு விஷயம்: சீனவில் சமுதாயம் பின்தங்கிய அரை நிலமான்ய சமுதாயமாக இருந்து முன்னலே பாய்கிற ஒன்று. அங்கே நிரப்பவேண்டிய இடை வெளிகள் பல உள்ளன. இதுபற்றி அவர்கள் வெட்கப்படவும் இல்லை, தளர்ந்துவிடவும் இல்லை. கலை - இலக்கியம் பற்றிய கேள்வியை உற்பத்தி முறைகள் விஷயத்திலும் எழுப்பலாமே! மேற்கில் அடிமைச் சமுதாயம் நிலமான்ய சமுதாயமான போது உற்பத்தி உறவுகளில் ஏற்பட்ட மாற்றம் எத்தன்மையது? அதை யொத்த மாற்றம் உற்பத்தி முறைகளில் நேர்ந்ததா? ஆனல் நிலமான்யம் முதலாளித்துவமானபோது உற்பத்தி உறவுகளில் மட்டுமன்றி உற்பத்தி முறைகளிலும் மாபெரும் மாற்றங்கள் நேரவில்லையா? சோஷலிச மாற்றம் முக்கியமாக உற்பத்தி உற வுகள் தொடர்பான ஒன்று. நவீன விஞ்ஞானம் ( அதாவது முதலாளித்துவ வளர்ச்சியை யொட்டி ஏற்பட்ட அறிவு வளர்ச்சி) இதுவரை தந்த தகவல்களையே மனிதன் பூரணமாகப் பயன் படுத்தவில்லை. முதலாளித்துவம் சுற்ருடல் பற்றிய விஞ்ஞான ரீதியான அறிவை முறையாகப் பயன்படுத்த மறுக்கிறது. அதன் குறிக்கோள் இலாப வேட்கை. எனவே மேலும் மேலும் லாபம் குவிக்குமுகமாகவே புதிய விஞ்ஞான அறிவு, புதிய தொழில் நுட்பம் என்று அலைகிறது. இங்கே சோஷலிஸ் சமுதாயம் குறைந்த தொழில் நுட்பத்தின் உதவியுடனேயே கூடிய சாதனை களைப் புரியும் வேறுபாடு தெரியவில்லையா? எனவே புதிய அறி வுக்கான தேடலில் முதலாளித்துவம் நிறையத் தகவல்களையும் கருவிகளையும் குவிக்கலாம். மனித சமுதாயத்துக்குப் பயன்படும் தகவல்கள், கருவிகள் என்று பார்த்தால் சோஷலிச சீனமே உயர்ந்த விளைபயனைக் (efficiency) காட்டுகிறது.
49

Page 27
மு. த. வின் மெய்யுள், உருவத்தில் தமிழுக்குச் சற்றே புதுமையாக இருக்கலாம். ஆனல் இவ்வகையான எழுத்துக்கும் அது பிரகடனம் செய்யும் "மெய் இயல்பு ஒரு மிகையான அடை மொழியே. (ஹென்றி மிலர் (Henry Miller) எழுதிய நடை யும் இத்தகைய ஒன்று தான். மிலரின் புத்தகங்களின் ஆபாசம் காரணமாக அவை பெற்ற செல்வாக்குத்தான் அதிகம் என்று நினைக்கிறேன்.) செய்யுள் உரை நடை என்ற வித்தியாசங்களை யும் மதிக்காதது இந்த மெய்யுள் என்று மு. த. கூறுகிருர். ஆனல் புதுக்கவிதை என்ற பேரில் வருபவை அந்த வித்தியாசங்களை மட்டுமன்றி அர்த்தம் அனர்த்தம் என்ற பேதத்தையும்கூட சில சமயம் "கடந்து விடுகின்றன. மு. த. இலக்கியத்தின் உருவப் பிரச்சனைக்குள் தடுமாறுகிருர் என்றே அவரது மெய்யுள் பற்றிய கருத்தும் எழுத்துக்களும் என்னை எண்ண வைக்கின்றன.
மோசஸ், புத்தர், கிருஷ்ணர், யேசு, முகம்மது, ராம கிருஷ்ணர், சங்கரர் ஆகியோரை உண்மைக் கலைஞர்கள், பெருங் கலைஞானிகள் (மெ. 268) என்று கொண்டாடும் மு. த. கலை என்று கருதுவதும் என்னளவில் கலையென்று என் சிற்றறிவுக்கு எட்டியதும் மிகவும் வேறுபட்ட விஷயங்கள். -
மாக்ஸியக் கலைக் கண்ணுேட்டம்பற்றிப் பேசும் மு. த. கலைச் சிருஷ்டிகளின் தரம் அந்தந்தக் காலத்துப் பொருளாதாரப் போக்கின் செல்வாக்கிலேயே தங்கியிருக்கிறது என்பது மாக்ஸிய நிலைப்பாடு என்ற விதமாகக் ( போ. 215) கருத்தை முன்வைக் கிருர். இது மாக்ஸிய நிலைப்பாட்டை அவர் புரிந்து கொண்ட விதமா அல்லது மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் விதமா?
**பீட்னிக்ஸ் (Beatniks), ஹிப்பிகள் (Hippies ), என்ற போக்குகளை எல்லாம் இனி வரவிருக்கும் ஒரு பெருந் தத்துவத் தின் வருகையைக் குறிக்கும் சமிக்ஞைகள்' என்று கருதும் அள வுக்கு, ( போ. 221) ஜன்னியில் ஒருவன் உளறுவதற்கும் ஒரு கவிஞனின் கவிதை வீச்சுக்குமிடையிலான வேறுபாடு தெரியாத நிலையிலா மு. த. இருக்கிருர்?
அறுபதுகளில், ஆனந்த விகடன் காட்டிய பணமுடிச்சைப் பார்த்து மயங்கிய இலக்கிய வியாபாரஞ் செய்ய ஆரம்பித்த ஜெய காந்தனிடம் சத்தியத் தேடலைத் தரிசிக்கிருர் மு.த. (போ. 235) . ஜெயகாந்தனுடன் மு. த. தன்னையும் மு. பொன்னம்பலத்தையும் சேர்த்துக் காணுகிருர், ஆனல் என்னல் கலையென்ற வகையில், மு. த. வின் எழுத்துக்களை உயர்வாகக் கருதமுடியவில்லை. மு. பொ. என்றுமே என் அபிமான எழுத்தாளரல்ல;
50.

மு. த. வும் அதிருப்தியும்
கைலாசபதி மு. த. அதிருப்தியை முக்கியப்படுத்துவதைச் சுட்டிக்காட்டியதையிட்டு மிகவும் கோபித்துக்கொண்ட மு.பொ.
தன் கட்டுரையில் (அலை - 19) **அப்படியானுல் மாக்ஸ்ை ஹெகலிய எதிர்ப்பாளர், etc." என்று கூறமுடியாதா என்று விளாசியிருக்கிருர், ஒரு கொள்கை இன்னென்றன்
எதிர்ப்பாக அமைவது ஒரு விஷயம் அது அதிருப்தியையே தன்
ஆதாரமாக வைத்திருப்பது இன்னெரு விஷயம். மாக்ஸின்
முதலாளித்துவ எதிர்ப்பு, கருத்துமுதல்வாத எதிர்ப்பு என்பன அவரது சமுதாய உணர்வு அவதானங்கள் ஆகியவற்றில் தங்கி
யிருந்தது. முதலாளித்துவத்தையோ, கருத்து முதல் வாதத்
தையோ, மாருநிலையியலையோ எதிர்ப்பதாகச் சொல்லும் எல்லா
வற்றையும் மாக்ஸ் தனக்கு ஆதரவாகக் கொள்ளவில்லை. மு. த.
வின் பலவீனமே முன்பு சொன்னதுபோல பீட்னிக்குகளையும் ஹிப் பிகளையும் முறையாக ஆராயாமலே தன் சத்திய யுக வஸந்தத்தின்
வருகை கூறும் பறவைகளாகக் கண்டதில் தெரியவில்லையா?
மு. த. வெறுமே ஹிப்பி, பீட்னிக் வகையருக்களுடன் நிற்கவில்லை. 'அதிருப்தி - எல்லாருக்கும் பொதுவான பொதுக் காரணமாக அதை மட்டும்தான் சொல்லலாம்' என்று வலி யுறுத்துவதுடன் கலாச்சாரப் புரட்சியும் அதிருப்தியின் வெளிப் பாடு என்ற வகையில் அதை வரவேற்கிருர், சமயத்தை மறுக் கும் பொருள்முதல்வாதமும் 'ஆன்மீக’’ அடிப்படையில் கலக்கும் காலகட்டம் வந்துவிட்டதற்கு ஆதாரமாக ல. ச. ச. கட்சியில் இளம் வட்டத்தினர் (இன்றைய நவசமசமாஜிகள்) தோன்றி யமை, கருணநிதிக்கு எதிராக அ.தி. மு. க. தோற்றம் (இந்திரா அம்மையார் இதை மிகவும் வரவேற்பார்) , ஆகியன கூடத் தென்படுகின்றன (மெ. 155-156).
ஒரு விஷயத்தை ஆழமாக அவதானிக்காமல் மேலோட்ட மாகப் பார்த்து முடிவுகட்கு வரும்போது பனிப்புகைகூட காட்டுத் தீயின் வருகையை அறிவிப்பதாகவே தெரியும்.
முடிவுரை
மு. த. வின் குழப்பமான முடிவுகள் பல. அவர் மாக் ஸியத்தை விமர்சிக்க முற்பட்டது மாக்ஸிய அறிவின் அடிப்படை யில் அல்ல. பூரீ ல. சு. க. ஆட்சியை சோஷலிஸம் என்று அழைக்குமளவுக்கு அவரது மாக்ஸிய அறிவு உள்ளது. 6մՄ லாற்றை அவர் புரிந்துகொண்ட முறையும் விளக்கிய முறையும் பலவீனமானவை. அவரது தவழுன விளக்கங்களை வரிசைப்
51

Page 28
படுத்திக்கொண்டு போனுல் அதற்கு முடிவே இராது. ஒரு வேளை என் மாக்ஸிய சார்பின் காரணமாக இருக்கலாம்; அவ ரது எழுத்தில் மாக்ஸியத்தை எதிர்க்கும் நோக்கம் அவரது உலகப் பார்வையைப் பெரிதும் பலவீனப்படுத்திவிட்டது. மாக் ஸியத்தைத் தவிர்த்து சோஷலிச உலக அமைப்பைக் கொண்டுவர ஆன்மீக மார்க்கத்தைத் தேடுகிருர். ஆனல் அவரால் திசைகாண முடியாமல் சர்வோதயம் என்ற பழைய சூத்திரத்துக்குள் (ஒரிரு புதிய கோஷங்களுடன் ) முடங்கிவிடுகிருர், மாக்ஸியவாதிகள் கூறும் சோஷலிச உலகம் பற்றிய கருத்தை அவர் ஏற்ருலும் உலகின் யதார்த்தத்தை அவரால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆன்மீகத்தைத் துணைக்கழைத்து ஒரே தாவலில் சோஷலிசத்துக் கும் மோட்சத்துக்கும் தாவ முனைகிருர், முடியவில்லை.
மு. த வின் நோக்கங்களைக் கேள்விக்குட்படுத்த நான் விரும்பவில்லை. ஆனல் அவரது நோக்கங்கள் என்னவாயிருப் பினும் அவர் காட்டமுனையும் பாதை நிச்சயமாக சோஷலிசத் துககு அல்ல. மோட்சம், முக்திபற்றி எனக்கு அக்கறை இல்லை. மண்ணுக்கும் காற்றுக்கும் கடலுக்கும் உரியது என் தேகம். அதோடு "நான் முடிந்துவிடும். இந்த உயிருக்கு ஆத்மா என்று நிரந்தரத் தன்மை வழங்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. என் கண்முன் தெரிகிற விஷயங்கள் முழுமையல்லவாயினும் என்னல் உணரவும் அனுபவிக்க முடிகின்றவையே மனித இனம்பற்றி ஒரு சகோதரத்துவத்தை நியாயப்படுத்தப் போதுமானவை. எனக்குத் தெரியமுடியாத விஷயங்கள் பற்றிய பாசாங்கு அவசியமற்றது.
ஆன்மீக தொடர்பான விஷயங்களை விரும்பி வாசிக்கவும் செய்கிறேன். அவை சமுதாய ரீதியாகத் தரும் விளக்கங்கள் என் னைத் திருத்தி செய்யவில்லை. என்னல் அவற்றின் ஆழத்தையும் கட்டுக்கோப்பையுங்கண்டு வியக்காமல் இருக்கமுடியாது எனினும் என்தேடல் ஆன்மீக ஈடேற்றம் தொடர்பான ஒன்றல்ல. உடனடி யாக அதை விட முக்கியமான காரியங்கள் கண்முன் இருக்கின் றன. எனக்குள் முடிவற்ற ஆன்மா என்று ஒன்றிருந்தால் அது தானே தன்வழியைக் கண்டுபிடித்துக் கொள்ளட்டும். முதலில் சக மனிதனுக்கு நடக்கிற கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம். ஆன்மா முடிவற்றது என்ருல் அது சில காலம் பொறுத்திருக் கலாம். அது இந்த உடலோடேயே முடிகிற ஒன்ருனல் அத் தோடே முடியட்டுமே. என்ன நஷ்டம் ?
நல்ல விஞ்ஞானிகள் பலர் இறை நம்பிக்கையாளர்களாக இருந்திருக்கிருர்கள். அவர்கள் தம் சமயச் சார்பை விஞ்ஞான அறிவுத் தேடலில் பயன்படுத்தியே விஞ்ஞானத்தை விருத்திசெய்ய வில்லை. விஞ்ஞானத்துக்குச் சமய விளக்கங்கள் கொடுக்கமுயலும்
52

போலித்தனம் கிழக்கிலும் மேற்கிலும் நடக்கிறது. அதேபோல் சமய நம்பிக்கைகளை விஞ்ஞான ரீதியாக நியாயப்படுத்தும் முயற் சிகளும் நடந்து வருகின்றன. இறை நம்பிக்கையுள்ள விஞ்ஞானி நேர்மையாளனக இருக்கலாம். ஆனல் விஞ்ஞானத்தையும் சம யத்தையும் போட்டுக் குழப்புங் காரியங்களில் நேரான சிந்த இருப்பதாகத் தெரியவில்லை.
மு. த. மாக்ஸியம் சாகும் நாள் வந்துவிட்டது என்று
பிரகடனம் செய்து பல காலமாகிவிட்டது. அவர் இதோ வந்து விட்டது என்ற சத்திய யுகம் இன்னும் வந்தபாடில்லை. கிறிஸ்து வுக்கு முன்பு இரண்டாயிரம் வருஷம் முன்பிருந்தே எதிர்பார்த்து வரும் தேவராச்சியம் கூடத் தான் இன்னும் வரவில்லை. என்ன செய்வது !
தவறிப்போன தேடல் மு. த. வினது. ஆனல் மு. த. வை முதன்மைப்படுத்த முனையும் சிலரது போக்கு மாக்ஸிய எதிர்ப் புக்குப் பயன்படும் வலுவான சிந்தனைக் கழி எது என்று உக்கிப் போன சிந்தனைகளுள் உருப்படியாகத் தெரியும் ஒன்றைத் தூக் கும் காரியம்தான்,
பண்டைய சீனத் து நீதிக்கதைகள்
ஆடுகள் தொலைந்த விதம்
கூ, ஸாங் என்போர் இரண்டு இடைப் பையன்கள். அவர்கள் தங்கள் மந்தைகளுடன் புறப்பட்டனர். இரு வருமே தம் மந்தைகளை இழந்தனர். எவ்வாறு என்று இருவரையும் அவர்களது எஜமான் கேட்டார். தான் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்ததாக ஸாங் சொன் ஞன், கூ, தான் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்த தாகச் சொன்னன். இருவரும் வேறுபட்ட காரியங்களைச் செய்தபோதும் இறுதி விளைவு ஒன்ருகவே இருந்தது.
பூதக்கறி சமைக்கும் கலை
செல்வந்தன் ஒருவன் பூதங்களைச் சமைத்துப் பரிமா றும் கலையைக் கற்க விரும்பினன். மூன்று வருடங்களும் மிகுந்த செலவும் போனபிறகு அக் கலையை நன்ருகவே பயின்றன். ஆயினும் தன் திறமையைப் பரீட்சிக்க ஒரு பூதமேனும் அகப்படவில்லை.
53

Page 29
(t) கெக்குலே ராஜா கை
s*سمسی
விசித்திரமான தீர்ப்புக்கட் குப் பெயர்பெற்றவன் கெக்குலே என்ற அரசன். கெக்குலே தீர்ப் புக்கள் பற்றிய கதைகள் பல சிங் களக் கதை மரபில் உள்ளன.
ஒருதடவை வீடு ஒன்று மழை யில் இடிந்து விழுந்து தன் மனை
வியை இழந்த ஒருவன் அரசனி
டம் நீதிகேட்டு வந்தான். வீடு சரியாகக் கட்டப்படாததால் வீட் டைக் கட்டிய மேசன்மீது முறைப் பாடு செய்தான். அரசன் வீட் டைக் கட்டிய மேசனை அழைத்து விசாரித்தான். அவனே செங்கல் அறுக்க மண்ணுக்குத் தண்ணிர் கலந்தவன் தண்ணிரைச் சரியாக அளந்து ஊற்ருததாலேயே அவ் வாறு நடந்தது என்ருன். அரசன் தண்ணிர் கொண்டு வந்தவனை அழைத்து விசாரிக்க அவன் தண் ணிர்ப்பானையில் கோளாறு இருந் ததால்தான் தண்ணிர் அளவு பிழையாயிற்று என்று குயவன் மேல் பழிசுமத்தினன். குயவனை அழைத்தால் அவனுக்கு வேறு வழி அகப்படாமல் குற்றத்தை ஒப்புக்கொண்டான். குயவனை அரச யானையின் காலில் இடற வைத்துக் கொல்வது என்று தீர்ப் பாயிற்று. குயவன் அரசனிடம் **ராஜாவே நான் முழுமனதுடன் தண்டனையை ஒப்புக்க்ொள் கிறேன். ஆனலும் நான் மிகவும் ஒல்லியான ஆள். றிக்கொல்ல உங்கள் யானையைப் பிரயோகிப்பது அதன் வலிமை யை அவமதிப்பதாகும். என் அடுத்த வீட்டுக்காரன் குண்டாக இருப்பான். அவனை இடறுவது தான் பொருத்தமாக இருக்கும்’ என்று விண்ணப்பித்தான். அர சனும் அவ்வாறே அடுத்த வீட் டுக்காரனை யானையின் காலில் இடறவைத்துக் கொன்று நீதி வழங்கினன்.
مییس
-*^^%.
تعیی
இக்கதையை நினைவூட்டும் சம்பவம் எது என்று கேட்கிறீர் களா? எதைச் சொல்வது?
என்னை இட
நாளைய வாழ்வு யாரின் கையில் ?
விதம் விதமாய்
வகை வகைபTப் நாகரிக ஆடைகள் நம்மை அலங்கரிக்க - எம் வீட்டில் வகைவகையாய் எத்தனையோ பொருட்கள் ஆடம்பர தேவைகளிற்காய் ஆம், இன்றைய வாழ்வு இனிமைதான் எங்கள் உழைப்பு வெளிநாட்டிற்காய் வெளிநாட்டுப் பொருட்கள் எங்களிற்காய்! எத்தனை நாள் தானே இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு கனவுலகக் கட்டிடங்கள் கண் எதிரே! " நம்நாடு அபிவிருத்தியில் நன்ருக உயருகிறது ஆயினும் எங்கள் நாடு ஏழை நாடு கடனளி - இன்றைய இன்பம் எத்தனை நாளோ நாளைய வாழ்வு பாரின் கையிலோ?
அழ. பகிரதன்

ஹிற்லரின் நாட்குறிப்பு - 1983
ஹறிற்லர் டயறிகள் - அண்மையில் வந்தவை போலிகள். உண்மை. ஹிற்லர் மரித்ததும் உண்மை. ஆனல் ஹிற்லர் டயறிகள் இன்றும் தொடர்ந்து எழுதப் படுவன செயலாய், நிசமாய்.
இன்று இந்த இலங்கை மண்ணில் ஹறிற்லரின் சொற்கள் உயிர்த்துத் தங்கள் நிழலுரு நீங்கி நிசங்களாவன. அக்கினி தோய்த்து எழுதிய சொல்லாய் எரியும் கடைகள், வீடுகள், மனிதர்.
வெட்டு வாள்களும் வெடித்துவக்குகளும் வரிக்குவரி கீழ்ச் செங்கோடிடுவன.
இந்த மண்ணில் தமிழர் வாழும் ஒவ்வொரு தெருவிலும் வீடு, தோட்டம், பள்ளிக்கூடம் பல்கலைக்கழகம், பணிமனை, கோவில், பெருஞ்சிறைக்கூடம் - ஒவ்வோரிடத்தும் குருதியும் தசையும் நிணமும் எலும்பும் தோலும் மயிரும் தாளாய் விரியும். வாளும் துவக்கும் தீவட்டிகளும் இனவெறி உந்தும் ஆயிரங் கைகள் ஏந்த, அழுத்தி எழுதிச் செல்லும்.
திரையின் மறைவில் இருந்து இயக்கி எரிகிற வீட்டில் விறகு பொறுக்கும் அரசு முதலைக் கண்ணிர் உகுக்கும். அல்லது புண்ணில் முள்ளாற் செதுக்கும்.
- மாவலி
55

Page 30
இ முல்லா கதைகள்
 ைஇரண்டு நாள் முன்னதாக
ஒரு தடவை முல்லா நஸ்ருத்தின் பாதுஷாவின் முன்னல் பாதுஷாவின் பிரியத்துக்குரிய அமைச்சரிடம் வேடிக்கையாகப் பேசும்போது "நீர் நாளைக்கு இருக்கமாட்டீர் என்ருர், தற்செய லாக, அந்த அமைச்சர் அடுத்த நாளே இறந்து விட்டார். பாதுஷாவுக்குக் கோபம் வந்துவிட்ட்து. நஸ்ருத்தின் சிறையி லடைக்கப்பட்டார்.
நஸ்ருத்தினை விசாரணைக்கு அழைத்த பாதுஷா “உனக்கு அமைச்சர் எப்போது இறப்பார் என்றுதான் தெரியுமே நீ எப் போது இறப்பாய் என்று தெரியாதா? சொல், இல்லையென்றல் உன் தலையைச் சீவி விடுவேன்' என்று வாளை உருவினர்.
நஸ்ருத்தின் நிதானமாக "நீங்கள் சாக இரண்டு நாள் முன்பே நான் சாவேன். இதுவே அல்லாவின் எண்ணம்.' என்ருர்,
பாதுஷாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இவன் இறந்தால் இரண்டு நாளில் தானும் இறந்துவிடுவேன் என்று
பயந்து அவரை விடுவித்துவிட்டான்
O துணிக்கு சாயம் போடுதல்
நஸ்ருத்தின் துணிக்குச் சாயம் போடும் கடை ஒன்று தொடங்கினர். அவர் அயல்வீட்டு பணக்காரன் ஒருநாள் அங்கே ஒரு துணியுடன் அங்குவந்தான்.
“என்ன நிறச்சாயம் போடுவது? என்ருர் நஸ்ருத்தின், வேண்டுமென்றே தொல்லைதர எண்ணிய பணக்காரன் அவரிடம்" இல்லாத ஒரு நிறத்தில்' என்ருன்.
"அப்படியானல்?* 'நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு, கறுப்பு, வெள்ளை இப்படிப் பட்ட ஒன்ருகவும் இருக்கக் கூடாது.
*அதற்கென்ன, தாராளமாகச் செய்யலாமே! எப்போது தரமுடியும்? "இல்லாத ஒரு நாளில்" "அப்படியானல்?’’ "திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு இப்படியில்லாத ஒரு நாளில் வரலாம்' என்ருர் நஸ்
冲”冲


Page 31
புதிய வசந்தம் புத்
O சீன சஞ்சிகை
சிறுவர் புத்தக
0 அரசியல், ெ
இலக்கியம், ! ஆகிய பல்து வெளியீடுகளே லாம்.
1984 - ம் ஆண் களுக்கு சந்தா விண்ண ஏற்றுக் கொள்ளப் விபரங்களுக்கு தொட
வசந்தம் புத்
374-A., Los
(வெலிங்டன் சந்
யாழ்ப்
இப் பத்திரிகை தேசிய கஃ பானம், 15/1, மின்சாரநிஃtய வி
களால் யாழ்ப்பாணம் கே. கே. சுத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்

இடித்தில்
555 52ault
1ங்கள்
பாருளாதாரம், கலை மாக்ஸியத் தத்துவம் துறை சார்ந்த சீன ப் பெற்றுக்கொள்ள
டிற்கான சீன சஞ்சிகை னப்பங்கள் இப்பொழுது படுகின்றன. மேலதிக
டர்பு கொள்ளவும்.
த்தக நிலையம்
ஈரிக்கூட்டு வீதி, திக்கு அருகாமை)
பாணம்,
1) இலக்கியப் பேரவைக்காக யாழ்ப் ரீதியிலுள்ள க, தணிகாசலம் அவர் எஸ். வீதியிலுள்ள பூரீ காந்தா அச்ச
= الأقتـــا