கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1986.04

Page 1
존 S S S
를
寻
 

27
சித்திரை - 1986
ரூபா 7/-
ஒவியம்: கோ. கைலாசநாதன்

Page 2
27-as "அலைக்கு
வாழ்த்துக்கள்
it. ܟ݂
யாழ். புனித வளன் கத்தோலி வட்டத்தினுல் (48, சுய உதவி வெளியிடப்பட்டது,
 

பர்
நீக அச்சகத்தில் அச்சிடப்பட்டு, 'அலை இலக்கிய வீடமைப்புத் திட்டம், குருநகர், யாழ்ப்பாணம்.)

Page 3
அலே - 24-ல் வெளிவந்த கலை என்ருல் என்ன? வெளிவந்த "மார்க்சும் இலக்கியமும்" ஆகிய றெஜி வின் கட்டுரைகளுக்குரிய மு. பொன்னம்பலத்தினது எ இவ்விருவரது கட்டுரைகளிற்குரிய தமிழவனினது எ இங்கு வெளியிடப்படுகின்றன,
LSLSGSGSLSLSLSLSLSLSL
1. கருப்பொருளும் ஒர உணர்வுக
ஒரு சமூக, பொருளாதார காலப்பின்ன ணியில் படைக்கப்பட்ட கலை, இலக்கியம் அக்காலகட்டம் நீங்கியபின்பும் சுவைக்கப் படக்கூடியதாய் இருப்பதன் கார ண ம் என்ன?
இக்கேள்வி மார்க்சீயவாதிகளுக்கு பெரும் பிரச்சனையை அளித்த ஒன்று. மார்க்சே இதற்கு பதில்காண முயன்று தோற்றிருக் கிருர்.
இந்தக் கேள்விக்கு றெஜி சிறிவர்த்தணு அவர்கள் பதில் அளிக்கும் முகமாகவே "மார்க்சீயமும் இலக்கியமும் என்ற கட்டு ரையை எழுதியுள்ளார். தனக்குத்துணையாக பேர்ணுட் சரட்டினதும் ரொனி பெனற்றி னதும் கூற்றையும் முன்வைக்கிருர். அவ்விரு வரினது கூற்றுக்களின் சாராம்சம் இதுதான்: "ஒரு நூலுக்கு ஒற்றையான, நிலையான கருத்து இருப்பதெனக் கூறுதல் வெறுங் கற்பிதம். இலக்கிய அர்த்தமோ தவிர்க்க முடியாத வகையின் பன்முகப்பட்டதாகவே உள்ளது." (இதற்குரிய காரணம்) "ஒரு படைப்பு எந்த ஒரு சமுதாயத்திலும் நீண்ட கால பண்பாட்டுத்தாக்கம் கொண்டிருக்க வேண்டுமானல் அது புதிய படைப்புகளுடன் மீண்டும் மீண்டும் தொடர்பு படுத்தப்பட்டு வெவ்வேறு வழிகளில் வெள் வேறு வர்க்க, சமூக, அரசியல் ரீதியாக திரட்டப்பட்டு, புழக்கத்துக்கு விடப்பட்டு செயல்படவேண் ம்ெ." என்று மேற்கோள் தரப்படுகிறது.

-£-§
சிறிவர்த்தணு திர்வினையும், திர்வினையும்,
LSLLGLLLSLLLSqqSqS கலை என்றல் என்ன?
ளும்
இக்கருத்தின்மூலம் பூர்ஷாவா விமர்சர்களின் "மாற்றமுரு மனித உணர்வு நிலைப்பாடுகள் என்ற கருத்து பொய்யாக்கப் படுகிறது என்று றெஜி கூறுவது விவாதத்துக்குரியது எனினும் அதுபற்றி நாம் இங்கு எடுத்துக் கொள்ளவில்லை,
உண்மை. றெஜி அவர்கள் கூறுவதுபோல் எல்லாமே ஒரு தொடர்மாற்றத்திற்குட்படு கின்றன; கலை இலக்கியம் உட்பட. ஆனல் கலை இலக்கியங்கள் என்ன ரீதியில் மாற்றம் உறுகின்றன என்பதே கேள்வி. கஜல இலக் கியங்கள் உள்ளடக்கியுள்ள "ஆரம்ப கருப் பொருள் மாற்றமுறுவதில்லை என்பதே எமது கருத்து. ஆனல் அவ் ஆரம்ப கருப் பொருளால் ஏவப்படும் ஒர உணர்வுகளே நேரத்துக்கு நேரம், காலத்துக்குக் காலம் ஆளுக்காள் மாற்றமுறுகின்றன. இந்த ஒர உணர்வு" என்னும் சொல் பலவித அர்த் தங்கள் கொண்டது. இது ஒரு படைப்பின் மையக்கருத்தை அழகுபடுத்துவதோடு, அப் படைப்பின் உபமையக் கருவாகவும் சில வேளைகளில் அதுவே மையமாகவும், இன் னும் ஒரு படைப்பை வாசிப்பவனின் மன தில் அதற்கு சம்பந்தப்பட்ட சம்பந்தப்படாத நினைவுத் தொடர்வின எழுப்புவதாகவும் அமையும் ஆகவே ஒரு படைப்பின் கருத்து பன்மைத் தன்மையுடையதாகவும், மாற்ற முறுவதாகவும் தோற்றுகிறதெனின் அந்த மாற்றமும் பன்மைத்தன்மையும் அப்படை பின் பிரதான கிருப்பொருளுக்கு நேர்வ

Page 4
864.
தல்ல. அதைச் சுற்றி வலைப்பின்னலாய்ப் படரும் ஓர் உணர்வுக்கே நேர்கிறது. ஆளுக் காள், காலத்துக்குக்காலம் மாறுபடும் இந்த ஓர உணர்வுகளின் மாற்றமே மாற்றமுருத கருப்பொருளையும் பல கோணங்களில் காட் டுவதாய் உள்ளது. இதற்கு உதாரணமாக சனிக்கிரகத்தையும் அதைச்சுற்றியுள்ள சனி வளையங்களையும் எடுக்கலாம். பிரதான கருப் பொருளாக சனிக்கிரகத்தை எடுத்தால் ஒர உணர்வைக் காட்டுவனவாய் அதன் வளை யங்கள் நிற்கின்றன. இரண்டும் ஒத்துநிகழ் வனவெனினும் முன்னதின்றி பின்னதிருப்ப தில்லை. சனிக்கிரகம் மாற்றமுருதிருக்க அதன் வளையங்கள், ஆளுக்காள் அதைப் பார்ப் பவனின் மனநிலைக்கேற்ப வெள்ளித்தகடுக ளாய், புகைச்சுருளாய், தீக்கோளங்களாய் மாறுபட்டுத் தெரியலாம். இன்னும் சிலர் சனிக்கிரகம் என்ற ஒன்றே இல்லை, இருப்ப தெல்லாம் சனிவளையங்களே என்று ஒற்றைத் தீவிரத்துக்கு ஓடவும் செய்வர். இவர்க ளெல்லாம் ஒரு படைப்புக்கு நிலையாக ஒன்றில்லை, எல்லாமே மாற்றமுறுபவை என்று கூறும் றெஜியின் போக்கோடு இனங் காணத்தக்கவர்.
ஆகவே, மாற்றமுறுவதும் பன் மை த் தன்மை பெறுவதும் ஒருபடைப்பின் பிர தான கருப்பொருள் அல்ல, அதன் ஒர உணர்வுகளே. பிரதான கருப்பொருளோடு தொடர்பு கொண்டே நாம் அதன் 'எல்லை ஓர விஷயங்களுக்கு' வருகிழுேம்.
உதாரணமாக ருேமியோ ஜூலியட்நாட கத்தை எடுத்துக்கொண்டால் அதன் பிர தான கருப்பொருளாக அவர்களின் கெட் டித்த காதலையும் அதை அடைய அவர்கள் கையாண்ட வழிமுறைகளையும் கொள்ள 6a)FTLib, இராமாயணக்கதை இன்னும் இதுபற்றிய விளக்கத்துக்கு உதவக்கூடியது. அதன் மூலக்கருப்பொருளை யாரும் நன்கு அறிவர். அதன் மூ ல க் க ரு தன்னை மாற்றிக்கொள்ளாமலே இன்றும் பல வித வியாக்கியானங்களுக்கு பகைப் புல மாய்

இருக்கிறது. அதாவது திருட்டுத்தனமாக கவரப்பட்ட ஜனநாயகமெனும் சீதை egu வர்த்தனக் கோட்டையில் அழுதுகொண்டி ருக்க பத்துத்தலை இராவணன்தான் இன் னும் இலங்கையை ஆண்டுகொண்டிருக்கி முன் என்று அதை அழகாக இன்றும் வியாக்கியானப்படுத்தலாம். இந்த வியாக்கி யானத்தால் இராமாயணத்தின் மூலக்கதை அழிந்துபோய்விடவில்லை. மாமுக அது அழி யாமல், மாருமல் இருப்பதுதான் நமக்கு இத்தகைய வியாக்கியானங்களுக்கு அழகுற வழியமைக்கிறது. ܚ ܝ
இதை விளக்கி, றெஜி அவர்களின் "பன் முகத்தன்மையுறல்" கொள்கையின் தீவிரப் போக்கை சமப்படுத்தவே நாம் T.S.Eliot gair's Tegolia) (FRINGE THOUGHTS) கோட்பாட்டை ஞாபசமூட்டினுேம், ஆனல் றெஜி அவர்கள் இவற்றை உள்வாங்காது மறுப்பது இலக்கியத்தின் சரித்திர ரீதியான பங்களிப்பையும் அவரையறியாமலே மறுக் கச் செய்கிறது. உதாரணமாக றெஜி அவர் கள் 1956ல் மேடை ஏற்றப்பட்ட "மனமே" நாடகத்தையும், இன்று மேடையேற்றப்படும் அதே நாடகத்தையும் ஒப்பிடுகிறர். றெஜி யின் மாற்றமுறும் கொள்கை உண்மையென் ருல் 1956 "மனமே"யை எப்படி இன்றைய அதன் கருப்பொருளோடு ஒப்பிடலாம்? 1956 "மனமே தன் கருப்பொருளை இழந் திருக்குமாகையால் அதை எதனேடு இன்று ஒப்பிடுகிறர்? மாறக அவர் 1956 "மனமே" யோடு ஒப்பிடலாம் என்ருல் இன்னும் அதன் பழைய கருப்பொருள் மாற்றமுருது நிற் கிறது என்பதை றெஜி அவர்கள் தன்னையறி யாமலே ஒப்புக்கொள்கிருர்? போல்சாக்கின் நாவல்களில் அன்றைய பிரஞ்சு மக்களின் சமூகசித்தரிப்பை மார்க்ஸ் புகழ்கிருர் என் ருல் அது றெஜியின் மாற்றமுறும் கொள் கைப்படி சாத்தியமாகக்கூடிய விஷயமா? கடைசியில் இந்த ரீதியில் எல்லாவற்றையும் அணுக முயன்ருல் இன்று நாம் காணும் மார்க்சீயம் என்ற ஒன்றே இருந்திருக்க முடி Աnֆl, m

Page 5
மேலும் நாம் முன்வைக்கும் இந்த ஒர உணர்வுக் கொள்கை றெஜி தான் கூறும் இலக்கியத்தின் மாற்றமுறும் பன்மைத்தன் மையைத்தான் வலியுறுத்துவதாக நினைப்ப தும் பேதமை. காரணம் ஓர உணர்வுகள் ஒரே நேரத்தில் ஆளுக்காள் மாறுபடும் பல் வகை எண்ணச் சிதறல்களை பிரதிபலிப்பவை அத்தகைய ஒன்று இலக்கியத்தின் மாறுபடும் பன்மைத்தன்மையோடு ஒப்பிடப்படுமானல் ஏககாலத்தில் ஓர் படைப்பைப்பற்றி பல் வகைப்பட்ட கருத்துக்கள் நிலவலாம். ஆளுக் காள் மாறுபட்ட கருத்துக்கள், நிலைகள் என்று குழம்பி, கடைசியில் இலக்கியத்துறை யில் ஒர் பாழாட்சிக்கே (ANARCHY) இட் டுச் செல்லும். இதனல் எவ்வித ஸ்திரமான கருத்துப்பரம்பலுக்கே ஈற்றில் இடமில்லா மல் போய்விடும். அத்தோடு றெஜி மேற் Ga5nT6irsmrl Guh Bernard Sharrat 6ör (Wuthering Heights தொடர்பாக) "நேற்றுநான் “வதறிங் ஹைற்ஸ்" வாசித்தேன். நேற்று. ஆனல் எப்பொழுதும் நான் அப்படைப்பினை இப்பொழுதே வாசிக்கிறேன். நான் அந் நாவலை நேற்று அல்லது பத்தாண்டுகளின் முன்னர் வாசித்திருந்தால் அது எனக்கொரு நினைவு என்றே அர்த்தப்படும்." என்ற கற்று மார்க்சீயத்தைவிட வேதா ந் த, பெளத்த தத்துவ சிந்தனைகளையே ஒத்துள் ளது. "நீ இப்பொழுது இறங்கும் ஆற்றில் அடுத்த நிமிடம் இறங்கமுடியாது (ஏனெனில் அது மாற்றமுற்றுவிடும்)' என்று கூறும் பெளத்த சிந்தனையோடுதான் சரட்டின் கற்றும் அதிகம் ஒத்துப்போவதுபோல் தெரி கிறது. கருத்து, எதிர்கருத்து ஆகிய இரண் டையும் கணக்கிலெடுக்காது வெறும் 'சிந்த சிஸிசை" மட்டுமே தன்னிச்சையாக சுழல விடும் போக்கு இது. i
இந்தத்தவறுகள் ஏற்படக் காரணம்என்ன?
ఈడి), இலக்கியம் என்பவை அவை தோன் றியகாலம், சூழல் முடிந்த பின்பும் பாதிப்புத்

865
தரக்கூடியனவாய் ஏன் இருக்கின்றன? என்ற கேள்விக்கு விடையாக, றெஜி அவர்கள் கலைஇலக்கியத்தின் மாற்றமுறும் பன்மைத் தன்மையை சீரான சிந்தனையின்றி முன் வைத்ததே இதற்குக் காரணம்.
அப்படியானல் உண்மையான காரணம் என்ன?
எல்லா கலை இலக்கியங்களும் மனிதனின் ஒவ்வொரு மனத்தளங்க்ளோடு தொடர்பு கொள்ளும் முயற்சிகளே. அதாவது மேல் மனம் (அறிவுத்தளம்) அடிமணம், பேர் மனம் என்கின்ற தளங்கள்.
ஒருபடைப்4 அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அறிவின் விசாரணைக்கு தாக்குப் பிடிக்கக்கூடியதாய் இருக்குமானுல் அது வாசகனின் அறிவோடு தொடர்பு கொள் வதோடு அதன் ஒர உணர்வுகளாக பற்பல உபசிந்தனை வளையங்களை எழுப்பியவாறு நிற்கிறது. இதற்கு உதாரணமாக பற்பல தத்துவ சிந்தனைகள், சோஷலிஸ் யதார்த்த இலக்கியங்களைக் காட்டலாம்.
இவ்வாறே ஒரு படைப்பு இன்னதென்று பிரித்தறிய முடியாத மூட்டச் செறிவை? பகைப்புலமாக கொள்ளும்போது, அது நம் அடிமனங்களோடு தொடர்பு கொண்டு, அது பற்றிய ஓர உணர்வுகளான பல்வித வியாக் கியானங்களுக்கு இடமளிக்கிறது. சிம்பொ லிசம், எக்ஸ்பிறஷனிஸம், இம்பிறஷனிஸம், காவ்கா (Kafka) வகைக்கதைகள் இத்தளத் திற்குரியவை.
இதேபோல் பேர்மனத்தளத்தை ஒரு படைப்பு தொட முடிந்தால் அது தனது இலக்கை எய்தியதாகவே கொள்ளலாம். ஏனெனில் இது மனிதனின் உண்மை இயல். போடு சம்பந்தப்படுகிறது. அவனதுஉண்மை இயல்பு இன்புற்றிருத்தல்; அந்த இன்புறல் இந்தத்தளத்தில் அவனுக்கு ஊற்றுக்கண் கொண்டுள்ளது, இத்தளத்துக்குரிய us

Page 6
886
புகளை ஒருவன் வாசிக்கும்போது, "நான் மெய்மறந்து போனேன்' என்று சொல்வ துண்டு. சிறந்த இசை இத்தளத்தோடு தொடர்பு கொள்ளும். சிறந்த ஊடகமாக நிற்கிறது.
எல்லா கலைஇலக்கியங்களும் ஓர்விதத்தில் மனிதனுக்கு இன்பந்தரும் ஊ ற்றுக்கண் ணுள்ள இத்தளத்தோடு தொடர்பு கொள் ளத்தான் முயல்கின்றன. ஆனல் இவற்றில் அநேகமானவை தாம் வரும் அரைவழியி லேயே இடைத்தரிப்புற்று அவ்வழிகளில் தாம் ‘கண்டுபிடித்த சிற்சிறு கோட்பாடுக
11. கலையும் அதன் இயக்கமும்
எனது ஒர உணர்வுக் கட்டுரையின் தூண்டுதலோ என்னவோ, றெஜி அவர்கள் அதன் பின்னர் ‘தொடர்பு கொள்ளுதலும் தொடர்பு சாதனங்களும்’ என்ற தல்ப் பில் "கஜல என்ருல் என்ன?’ என்ற கேள் விக்குப் பதிலளிப்பதாக ஒரு கட்டுரை எழு ஞர். இக்கட்டுரை திரும்பவும் ஏற்படுத்திய சந்தேகங்களுக்கு நான் "கல் என்ருல் என்ன?" என்ற தலைப்பில் எனது "ஆரம்பக் கட்டுரையின் பின்னணியில் விரித்து எழுதி னேன். அதன் சுருககத்தை இங்கே தருகி றேன்.
றெஜி அவர்களின் கட்டுரை, கலைக்கு இருந்த மேம்பட்ட நிலையை அகற்றி, ஏனைய மனித வேலைகளில் ஒன்ருகவே கலையையும் பார்க்க வைப்பது பாராட்டிற்குரியது. இந்த நிலையில் இக்கட்டுரை sint Gâvuonrriä ஒன் எதிர்கால சமூக அமைப்புக்கு கோடி காட்டுவது போல் தெரியும் அதே வேளை யில் அது ஆதிகால ரிஷிகள், ஞானிகளின் பார்வைக்கு அருகே வருகிறது என்றே சொல்ல வேண்டும். ஞானிகள் எல்லாத் தொழிலையும் பொருளையும் கலையாகவே காண்பவர். அவர்களிடம் இந்த கலை, கலை யற்றவை என்ற பிரிவு எழாததோடு கலை

ளிலும், உணர்வுகளிலும் திருப்தியுற்று தம் பயணத்தை நிறுத்திக் கொள்கின்றன.
அறிவு, அடிமணம், பேர்மனம் போன்ற தளங்களுள் எதற்குள்ளும் நுழைய முடியாது வெறும் கற்பனைகளிலும் புனைவுகளிலும் முளைத்தெழும் குப்பைகள் பிறக்கும்போதே மரித்துவிடுகின்றன. ஆகவே தாம் பிறந்த காலத்தையும் மீறி கலை இலக்கியங்கள் வாழ்கின்றனவென்றல் அதற்குக் காரணம் அவை தொடர்பு கொள்ளும் தளங்களும் அத்தளங்களின் ‘வெட்பதட்ப நிலைகளுக்குத் தாக்குப்பிடிக்கக் கூடிய வலுவுமேயாகும்.
இலக்கியத்தை மட்டுமல்ல எல்லாவற்றை யுமே வேறென்ருேடு தொடர்பு கொள்ள வைக்கும் சாதனமாகவே கண்டனர்.
றெஜியின் மார்க்சீய நோக்கில் மனித
னின் ஒவ்வொரு செயலும் முயற்சியும் அவ்
வக்கால சமூகப்பழக்க வழக்கங்களோடும், கோட்பாட்டு தொழிற் பாடுகளோடும், தொடர்புகொள்ள முயல்கின்றன எனலாம்.
இக் கருத்தில் ஓரளவு உண்மை இந்த லும் றெஜி அவர்களாலேயே எழுப்பப் படும் ஆழமான கேள்விகளுக்கு இது பதில் தராது போகிறது.
றெஜியின் கேள்விகள் பின்வரும"று அமைகின்றன:
சிறுகுழுக் கலையும் ஜனரஞ்சக கலையும் ஒன்றென மதிப்பிடலாகாதா? சிறுகுழுக் கல பிற்போக்குக் கருத்துக்களின் வாகன மாக ருப்பதால் அதுவும் ஜனரஞ்சக் கலை மாதிரியே பயனற்றது என்று கூற லாகாதா?
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத் தின் அலைவரிசை இரண்டினையும் தொலைக் காட்சியின் ஜனரஞ்சக நிகழ்ச்சிகளையும்

Page 7
ரசிப்பவர் மனிதாபிமானத்தோடும் வீரத் தோடும் நடத்துகொள்ளும் போது, அவர் களைவிட உயர் கலைப்பயிற்சி கொண்டவர் கள் அதற்கு எதிர்மாருக நடந்து கொள் வது எதைககாட்டுகிறது?
இப்படி வேறு கேள்விகள் மூலமும் உயர்ந்த கலை இலக்கியம் எனப்படுபவற் றில் நிகழும் விழுக்காடுகளைக் காட்டுவதன் மூலம் எல்லாவற்றையும் ஒன்றெனச் சமன் படுத்தலாம் என்ருே அல்லது சமனன பய னற்றவை என்று ஒதுக்கிவிடலாம் என்ருே அவர் நினைத்தால் அது வெறும் மேல் போக்கான ஆய்வாகவே முடியும்.
கலை, கலையற்றவை என்ற பிரிவு ஏன் ஏற்படுகிறது?
இதற்கு றெஜி கூறும் "தொடர்பு கொள் elsh peopassir' (MODES OF COM MUNICATIONS) usá) ggú Gupta தில்லை.
இனி ஞானிகள் கூறும் அடுத்த பக்கத் துக்கு வருவோம்.
அவர்கள் என்ன கூறுகிறர்கள்? அவர்க ளும் தங்கள் நினைவுகளையும் செயலகளையும் தொடர்பு கொள்ளும் ஓர் ஊடகமாகத தான் பாவிக்கின்றனர். ஆனல் எதனெடு தொடர்பு கொளஞம் ஊடகம்? அதுதான முக்கியம். றெஜி கூறுகின்ற சமூக கோட் பாட்டு பழக்க வழக்கங்களோடு, தொழிற் பாடுகளோடு என்ற மேல்படையான விஷ பங்களோடு நில்லாமல் இது ஆழமாகப் போகிறது. இது அவனது இருப்பை நோக் கிச் செல்கிறது. மனிதன் சந்தோசத்தை தேடுபவனய் இருப்பதால் அவன முழு முயற்சியாகவே இருக்கிறது. ஆளுல் துர திர்ஷ்டவசமாக எமது எல்லா முயறசிகளும எம்மை அந்த ஆனந்த நிலையோடு தொடர்புபடுத்துவன அல்ல. இங்கே நாம் *ஓயும் க்லையற்றவ்ையும்.என்ற பிவு நேர்ந் ததின் கர்ரண்த்தை அறிகிருேம், 6 WᎧᎧᎧ] ர்ெவை எம்மை எமது ஆனந்தமான இருப்

867.
புக்கு இட்டுச் செல்கின்றனவோ அவை யவை எல்லாம் கலையாகவும் ஏனையவை கலையற்றவையாகவும் எம்மை அவை இட்டுச் சென்று தரிசிக்கும் மனத்தவங்களுக்கேற்ற பெயரைத் தாங்கிக் கொள்கின்றன என்ப தோடு பின்னர் அவை எம்மை எமது உய ரிய ஆனந்த இருப்புக்கு இட்டுச் செல்ல தயார் படுத்தும் இடைநிலைப்படிகளாகவும் நிற்கின்றன.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். நாய கூறும் 'ஆனந்தமான இருப்பு" என் பது வெறும் மனப் பிரமையாகாதா?
மனிதன் வெறும் ஜடத்திலிருந்தா அல் லது ஆன்மீகப் பொருளிலிருந்தா தோன்றி ன்ை என்பதல்ல முக்கியம். முககியமானது எதுவெனில் மனிதன் சந்தோசத்தை தேடு கிருன் என்பதே எமது எல்லா முயற்சிக ளும், கோட்பாடுகளும், மார்க்சீயம் உட்பட மனிதனுக்கு ஆனந்தத்தை தரவே முயற்சிக் கின்றன. ஆனந்தத்தை தேடும் மனிதனின் இத்தன்மையானது, மணி னது பரிணம வளர்ச்சி ஆனந்தத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளதைக காடடுகிறது. நாம பரி ளுமத்தை ஏற்றுக் கொண்டால் எமது இருப்பில ஆனநதமான ஒருகூறு ஏறகனவே உள் நிலயாய அமைந்து வடடது எனமே r pانی (oilo «ات ریه «یا 6ji I IT ساله فی ه ظL و 00Tه اهoقف D همان வதானல் பரிணுமம் எனபது பரிஅமமுறும உளநிலையோடுதான ஒதது நிகழ்கியது. ஆகவே மனதான தேடும ஆனந்த இருபபா னது அந்நியமானதா வெறும கற்பனவியா அல்ல, எமமோடு ஒன்றறக கலந்தியக்கும் எம் உளநிலை இயல்பே.
ஆரம்பத்தில் இவ் உள்நிலை இயல்போடு தொடர்பு கொள்ளும பணியை, அநுபூது Ln. 60 56rilabi 6us 5lootu Los alholi void uloodi. இந்து மதித்தின ஞானயோகம், Lusgä? யோகம், கர்மயோகம், போனறவை இதறகு நலல உதாரணம். நாளாந்த வேலைகள் மூலமே எப்படி அந்த ஆனந்த இருப்போடு தொடர்பு கிொள்ளலாம எனபதை கர்ம யோகமும் ஒருவன் தனது ೭67fಣ್ಣ5&T

Page 8
868
சிறப்பாக ஆற்றுப்படுத்துதல் மூலம் எப்படி அந்த நிலையை அடையலாம் என்பதை பக்தி யோகமும் தீட்சண்யமான அறிவின் சுய விசாரணை மூலம் எப்படி அந்த நிலையோடு தொடர்பு கொள்ளலாம் என்பதை ஞான, யோகமும் காட்டுகின்றன. இக் காலங்க ளில் கூட கலை இலக்கியங்கள் மதத்திற்கு அடுத்தபடியாக, ஆத்மீக உச்சங்கள் தொட்ட நிலைகளை விளங்கிக் கொள்ள முடியாத சாதாரண மக்களுக்கு விளக்கந் தரும், தொடர்பு படுத்தும் சாதனமாகவே இயங்கின. ஆனல் மதங்களின் ஆத்மீகத் தொழிற்பாடு சீரழிந்த பின் ஜூலியன் ஹக்ஸ்லி கூறியது போல், மதங்களின் இடத்தை கலை இலக்கியங்களே கைப்பற் றிக் கொண்டன.
இனி நாம் றெஜி எழுப்பும் கேள்விக ளுக்கு வருவோம்.
முதலாவதாக கலை, கலையற்றவை என்ற பிரிவு ஏன் ஏற்படுகிறது? மதத்திற்கு அடுத்த படியாக மனிதனது ஆனந்த (இயல் போடு) இருப்போடு தொடர்பு கொள்ளச் செய்யும் நுண்ணுணர்வுகளின் ஊடகமாக கலை, இலக்கியங்களே நிற்கின்றன. கால னித்துவ கால கண்டிய அகப்பைக்கு ஒரு கணமேனும் மனிதனது உள்ளாழங்களை தரி சிக்கச் செய்யும் கலைச் சக்தி இருக்குமானல் நிச்சயமாக அது வெறும் குசினிப் பொரு ளான நிலையிலிருந்து வேறுபடவ்ே செய்யும். இத்தன்மையே கலைக்கும் கலையற்றவைக் கும் பிரிவை ஏற்படுத்துகிறது.
இரண்டாவது உயர்ந்த அழகியல், கலைப் பண்பாடுடையவர்கள் ஏன் மனிதாபிமான மற்றவர்களாக அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். ? இதற்குரிய விடையை இன்னுேர் எதிர்க் கேள்வி மூலம் அறிந்து கொள்ளலாம். சிறந்த சமூக சேவையா வார்களாகவும் மனிதர்பிமானிகளாகவும்பெய ரெடுத்த பலர் வீட்டில் ஏன் கொடுங் கோலராய் சர்வாதிகாரிகளாய் நடந்து கொள்கின்றனர்? காரணம் அவர்கள் விட்

டையும் வெளியையும் வெவ்வேறு துறை களாய் காண்கின்றனர். இதனுல் தான் உயர்ந்த தத்துவங்களை உள்வாங்கும் அறி குன் ஒருவன் தனது சமூகப் பார்வையில் படுபிற்போக்காளனய் இயங்கலாம். இதே காரணத்தால் தான் அலைவரிசை இரண் டிலும் T.V. ஜனரஞ்சக நிகழ்ச்சிகளிலும் உற்சாகமுறும் பலர் சிறந்த மனிதாபிமானி களாகவும், வீரர்களாகவும் உள்ளனர் இவர் களுக்கு தோன்ருதது என்னவெனில் தமது மனிதாபிமானத்தையும் வீ ர த்  ைத யும் உயர்ந்த அழகியல் கலைப்பண்பாட்டில் தோய்த்தெடுத்தால் அவற்றை இன்னும் சிறந்த முறையில், தோக்கில் ஆற்றுப்படுத் தலாம் என்பதை அறியாததே! இச்சந் தர்ப்பத்தில்தான் நாங்கள் மதரீதியான அபத்தங்களுக்குரிய காரணங்களையும் அறிய லாம். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று ஆத்மீகப் போதனை செய்யும் மதத் தலைவர்கள் பலர், சாதாரண வாழ்க்கைக்கு வரும் போது அவர்களது போதனைக்கு முற் றிலும் மாருக இயங்குவதும் இதனல்தான். இத்தகைய ஒரு போக்கைத்தான் நமது தமிழ் உயர்சாதி மார்க்சீய முற்போக்கு எழுத்தாளர்களிலும் காணக் கூடியதாக இருக்கிறது. சாதிப் பிரச்சனைக்கு எதிராக எழுதும் இவர்கள் தமது தனிப்பட்ட விவ காரங்களுக்கு வரும் போது வெறும் சாதித் தடிப்புள்ளவர்களாகவும் தாம் எழுதுவதற்கு முரணுகவும் நடந்து கொள் கின்றனர்.
இவைக்கெல்லாம் காரணம் என்ன?. இங்கு நாம் இவை மூலம் மனிதனிடம் உள்ள ஒவ்வொரு துறையையும் "பிரித்தா ளும் தன்மையைத் தான் பார்க்கிருேம் மனித சமூகம் வேலைப்பிரிவில் இயங்குவது போல் நாம் நமது ஆற்றல்களையும் துறைக ளையும் பிரித்துப் பிரித்து இயங்குகிருேம். அறிவை உணர்விலிருந்தும் கற்பனையை, சிந்தனையை, செயலிருந்தும் இப்படியே ஒவ் வொன்றையும் பிரித்து வைத்து விடுகி ருேம். ஒன்றில் பேறும் தரிசனத்தை மீற்

Page 9
ருென்றுக்குப் பாய்ச்சவோ, அதன் துணை யோடு இன்னென்றை வெளிச்சத்தில் விழுத் தவோ நாம் முயன்றதில்லை. ஆகவே இன் றுள்ள எமது உடனடித் தேவை இத்துறை முறைப் பிரிவை அகற்றி, எமது வாழ்க் கையை முழு நோக்கின் வார்ப்பாக்க முயல்வதே. இதுவே எமது உண்மையான இருப்புக்கு - இயல்புக்கு எம்மை இட்டுச் செல்லும் இதையே மு. த. மெய்யுள் மூலம் செய்து காட்ட விரும்பினுர்,
இதன் பின்னணியில் பார்த்தால் றெஜி யின் கட்டுரையின் போதாத்தன்மைகள் புலப்படும்.
அழகியல் சார்ந்த அநுபவம்” என்ற தொரு துறையின் உருவாக்கம் ஒரு வேளை 19-ம் நூற்றண்டின் உருவாக்கமாக இருக் கலாம். ஆனல் மனிதனின் கலைபற்றிய எழுச்சிகள் அனுதியானவை. அவன் என் றைக்குச் சிந்திக்கத் தொடங்கினுனே அன் றிலிருந்தே அந்தக் கலை எத்தனிப்புகள் ஆரம்பித்துள்ளன. அன்றைய மலைக்குகை ஒவியங்களிலிருந்து இன்றைய 'மனக் குகை ஓவியங்கள் வரை அதன் வியாபிப்புத் தான். அன்றிலிருந்து இன்று வரை கலை இலக்கியங்கள் என்பவை வாழ்வின் மர்ம இருப்பை உரஞ்சி உரஞ்சி சிறு சிறு வெளிச்சங்கள் ஏற்றும் எத்தனங்களாகவே வந்துள்ளன.
"இலக்கியம் வழிகாட்டும் தெருப்பலகைகள் அ அது உண்மை. ஆனல் நம் முற்போக்கு எழுத்தாளர்க் டுக்கொண்டு நிற்கிருர்கள் ட 44 முற்போக்கு இலக்கியம். கும் பாதை பழையதாகி விட்டதென்பது. பஸ் அந்: புதிய பாதையில் ஒடுகிறது. அதைப் புரியாமல் அ6 அதாவது, அதன் பீத்தல்களுக்கும் சொந்தமான குறை அவை புரிந்துகொள்வதில்லை. அதனுல்தான் காலத்தை கத்துகின்றன. அதனல்தான் பெரும்பாலும் கட்சிப் செத்துவிடுகிறன். காலத்தின் போக்கை உணர்ந்து சூரியனின் ஒளியை முற்ருகப் பயன்படுத்திப் பெரும் எ

869
மகாபாரதமும் இலியத்தும் அக்கால அரசசபைகளில் கலைக்குரியவையாக எடுக் கப்படாமல் வேறு நோக்கிற்காகப் பயன் பட்டிருக்கலாம். ஆளுல் அதற் கா க அவற்றை அன்று எழுதியோர் கலைfதியாக அவற்றை அன்று எழுதினர் என்ருே கலை ரீதியான வெளிப்பாடாக அவற்றை கருத வில்லை என்றே பெறப்பட மாட்டாது. மேலும் அக்காலத்தில் அவற்றை கலைfதி யாக ஒருவரும் சுவைக்கவில்லை என்றும் பெறப்படமாட்டாது. மாறக இன்று வரை அவை கலைfதியாக சுவைக்கப்படுகின்றன என்பது அவற்றை எழுதியோர் அவற்றில் பதித்துச் சென்ற கலை ஆளுமையைத்தான் காட்டுகிறது.
உண்மையில் ஒரு படைப்பு காலங் கடந் தும் ரசிக்கப் படுகிறதெனின், அதைச் சிருஷ்டித்தவன் அப்படைப்பின் மூலம் மனித இருப்போடு தான், தொடர்பு கொள்ள எடுத்த முறைதான், அந்தக் கலை ஆளுமைதான் பாஷையின் குறுக்கீடற்ற இசை, நாடு, மொழி, காலம் எல்லாவற் றையும் கடப்பது போன்ற கலைப்பாய்ச்சல் தான் இது.
ஞானிக்கோ இத்தகைய "கலை" என்ற தனி ஊடகம் தேவைப்படுவதில்லை. அவன் தன் மூல இருப்போடு தன்னை சகஜப்படுத் திக் கொள்வதால் எல்லா வேலையும் முயற் சியும் அவன் இருப்பின் கலை விழுதுகளா கவே எங்கும் இறங்குகின்றன.
ல்ல" என்று எஸ். பொன்னுத்துரை கூறியதாக ஞாபகம். கள் அப்படி ஒரு நினைவில்தான் ஒரு பலகையைப் போட் * பாவம், அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் நிற் தப்பக்கம் இப்போ போவதில்லை. அது புதிய திசையில், வர்கள் கத்துகிருர்கள். கூட்டுக்கும் விளம்பரத்துக்கும், அது. காலத்தின் வளர்ச்சியையும், மாற்றத்தையும் த் தங்களோடேயே சதா நிற்கவேண்டுமென்று அவை பெட்டிக்குள் வளரும் எழுத்தாளன் வாடி வெளிறிச் வேண்டியதிசையில் விரும்பியமாதிரி வேரை ஓடவிட்டு விருட்சமாக வளர அவனுல் முடிவதில்லை.
- மு. தளையசிங்கம்

Page 10
ஆன்மா ஒரு கணித நிபு சிக்கிவிடும் சமாசாரம்
ஆங்கிலத்தில் எழுதிவரும் சிங்கள இலக் கிய விமர்சகரான ரெஜிசிரி வர்த்தனவுக்கும் மு. பொன்னம்பலத்துக்கும் நடந்த விவா தத்தை லங்கா கார்டியன் பத்திரிகையின் சில இதழ்கள் (1983 ஜூலை 15, ஆகஸ்ட் 15, அக்டோபர் 15, நவம்பர் 5) தாங்கி வந்துள்ளன. அவ்விவாதம் தமிழ் இலக்கிய விமர்சன அரங்கில் "மையமற்ற எழுத்து" பற்றிய பேச்சு எழுந்துள்ள சூழலில் தமக்கு மிகவும் முக்கியமானது.
அந்த விவாதத்தில் "நித்தியத்துக்குமான spg” (eternal charim g)a)š5)u š5ibgb கலைக்கும் உண்டு என்ற கட்சியைப் பொன் னம்பலமும், அப்படி ஒன்று இல்லை, குறிப் பிட்ட காலத்துக்கான அர்த்தம் அடுத்த கால கட்டத்தில் மறைந்து அக்கால கட் டத்திற்கான அர்த்தம் உருப்பெறுகிறது: இப்படிப் பல அர்த்தங்களுக்கான இடத் தைத் தன்னுள் கொண்டிருக்கும் ஒருவித தொடர்பு சாதனமே (Communication medium) கலையும் இலக்கியமும் என்ற பார் வையை ரெஜி சிரிவர்த்தனவும் வைத்தி ருந்தனர். இது சம்பந்தமான இவரது ஒரு கட்டுரை தமிழில் "அலை"யில் வந்திருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தில் ரோலான் பார்த் (Roland Barthes) SGör, Lurr Fires66ör, நாவலான சராஸின் மீதான அணுகல் பற்றி ஞாபகம் கொள்ளுவது நல்லது. அந்த நாவலை அவர் சில Code-கள் கொண்ட எழுத்து என்று, அந்த Code களை ஒவ் வொன்முக எடுத்து வைத்துக் காண்பித்து விட்டு, நாவல் என்பது இவ்வளவு தான் என்றர். (இது பற்றிய விரிவான தகவல் களுக்குத் தமிழில் வந்துள்ள "ஸ்ட்ரக்சுரலி

ணனின் கைக்குள்
- தமிழவன்
சம் நூல் பார்க்கவும்) அந்த நாவலின் உளவியல் சம்பந்தப்பட்ட Code-களை ஒரு பிரிவாகவும் கதை கூறு முறைமை பற்றிய செய்திகளே இன்ஞெரு Code என்றும் பிரித்தார். இது போல் இன்னும் சில Codeகளைக் காண்பித்து நாவல் இவற்றின் ஒரு மிப்பால் தோன்றும் எழுத்து என்றர். பிரக் ஞையின் வெளிப்பாடு என்ருே, எழுத்தாள னின் உருவாக்கம் என்ருே விளக்கவில்லை.
இதுபோல் ஓவியத்தை விளக்க வந்த அல்துஸ்ஸர் கலை, இலக்கிய ஆக்கங்கள் ஒரு வகை செயல்பாடு என்ருர் ஒரு பொருள் மீது சில முறைகளைப் (Methods) பயன் படுத்தி மனித ஆற்றல் செயல்படுவதே செயல்பாடு என்ற எண்ணம் கொண்ட அல் துஸ்ஸர் உலக இயக்கத்தைச் சில செயல் பாடுகளாய்ப் பார்ப்பார். அரசியல் செயல் பாடு, கருத்துக்களின் செயல்பாடு, சமூக எண்ணங்கள் பற்றிய விஞ்ஞானபரமான கோட்பாட்டுச் செயல்பாடு, பொருள11 தா ரச் செயல்பாடு, என்று பிரித்துப் பார்க்க முடியும் என்று மார்க்சிய அடிப்படையிலி ருந்து விளக்குவார். அழகியல் செயல்பாடு என்பது செயல்களின் விளக்கத்தக்க பல பொருள்களின் செயல்களின் தள விரிவே (space) 6тайтштії. V .
இவர் வழி வந்த பியர் மாஷெரி (Pierre Machery) கூட இலக்கியத்தை ஓர் உற் u G (Production) 6T6ör gou efalo Sarprř. தமிழ்ச் சூழலில் ஒரு விமர்சகர், இலக்கி யத்தையும் இலக்கியமல்லாததையும் பிரித் துக்காட்ட இலக்கியம் சிருஷ்டி என்றும், இலக்கியமல்லாதது வெறும் உற்பத்தி என் றும் கேலி செய்திருக்கிருர், ஆனல் மாஷெரி, உன்னதமானதென்றும், விளக்க முடியாத

Page 11
காரணங்களால் வெளிப்படும் மர்மமான நிகழ்வு என்றும் இதுவரை கருதப்பட்ட இலக்கியத்தை விளக்கக் கூடிய ஓர் உற் பத்தியே என்கிறர். அந்த உற்பத்தியில் செயல்படும் மொழி, சரித்திரம் போன்ற உறுப்புக்களைச் சுட்டுகிருர். இவ்வுறுப்புக் களுக்கிடையில் ஒளிந்திருக்கும் பேசாத மொழியான மெளனம் பற்றியும் எடுத்துச் சொல்கிருர்,
இந்த வரிசையில் இன்னெரு முக்கியமான இலக்கிய விமர்சகராக டெர்ரி ஈகிள்டனைச் சுட்ட விரும்புகிறேன். இங்குச் சொல்லப் பட்டவர்களின் பாதையில் இன்னும் மேலே செல்லும் டெர்ரி ஈகிள்டன் பல உறுப்புக் கள் எப்படி இணைந்து ஒர் எழுத்தாக, நாவ லாக, கவிதையாக உருவாக்கம் பெறுகிறது என்பதை அல்துஸ்ஸரின் ஃபிராய்ட் சம்பந் தப்பட்ட சில விளக்கங்களின் மூலம் விளக்கு θάηrt.
லெவிஸ்ட்ராஸின் ஒரு கருத்தாக்கம் கூட இலக்கியத்தின் பல உறுப்புக்களின் இணைவு பற்றி விளக்கப் பயன்படு ப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, லெவிஸ்ட்ராஸின் பிரிக் கோலேஜ்’ (Bricolage) பற்றிய சிந்தன. இது தட்டு முட்டுச் சாமான் செய்பவனின் கருவி பற்றிய விளக்கம். அவன் கையில் இருக்கும் ஏதோவொரு கம்பியை வைத்து எப்படி எப்படியோ வளைத்து நெளித்துப் பாத்திரத்தை அல்லது பூட்டைச் சரி செய்து தந்து விடுவான். அவனது கருவி போன்று, பல உறுப்புக்களும் ஏதோவொரு வகையில், ஆனல் தக்க விளைவு உருவாகும் விதத்தில் இணைந்து, வடிவம் பெற்று, இலக்கிய எழுத்து ஏற்படுகிறது என்பது லெவிஸ்ட் ராஸ் பாதையில் வரும் இவர்களின் கருத்து. ஆக மொத்தம் இந்த விமர்சகர்கள் அத்தனை பேரும் இலக்கிய உருவாக்கம் என் னும் தொழிற்சாலையில் நித்தியத்துக்கு மான அழகோ, உள்ளொளியோ எங்கும் ஒளித்திருப்பதைக் காணவில்லை. படைப் பாளியின் அந்தராத்மாவின் அழுகுரலோ, அவனது தலையைச் சுற்றிய ஒளிவட்டமோ
-થ્રોટો-2

37
கூட கேட்டதாகவோ, கண்டதாகவோ சொல்லவேயில்லை. கோட்பாடு ரீதியாக; ஜார்ஜ் லூக்காக்ஸோ, தமிழகத்தின் ஞானியோ குறிப்பிடும் மனித மேன்மை என்ற பல்லி கூட அந்தந்தத் தொழிற் சாலை சுவர்களில் ஒலி எழுப்பிய 'ாட்சி யம் இல்லை.
பின் என்னது அந்தப் படைப்பு? எப்படி நடக்கிறது அதன் உருவமைப்பு? என்ற கேள்விகள் பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஒரு கலை, மற்றும் கலாசாரப் படைப்பு பல பகுதிகளாலானது. (இங்கு ஒர் எச் சரிக்கை: பகுதிகள் என்றவுடன் அகிலன் நாவல்களில் எத்தனை உயிர் எழுத்து, எத் தன மெய்யெழுத்து என்ற அஞ்சறைப் பெட்டி ஆராய்ச்சி அல்ல, நான் பிரஸ் தாபிப்பது) சேக்ஸ்பியரின் ஒதெல்லோ, காதல் பற்றிய அமர காவியத் தன்மை கொண்டிருப்பது போல், வெள்ளேயர்கறுப்பர் பற்றிய பார்வையுைம் கொண்டி ருக்கிறது. ஜே. ஜே. சில குறிப்புக்கள் எ ன்ற நா வ ல் ஒரு எழு தீ த வா னின் ஜீவிய சரித்திரமாய் இருந்தாலும் தத்துவத்தில் ஒரு பார்வை கொண்டிருக் கிறது. முழுமைக்கும் முழுமையின்மைக்கு மான ஒரு போராட்டத்தில், முழுமையின் பக்கம் நாவல் கட்சிசேர்கிறது. இதன லேயே க. நா. சு. போன்றவர்களுக்கு இந்த நாவலை அணுகவே முடியவில்லை) வானம் பாடி கவிஞர்களுக்கு ஒருவித ரொ9ான்டி சிசம் பிரதான வெளிப்பாடாக இருந்தாலும் இவர்கள் பொருளை வார்த்தையாக தம்பி யதைப் பார்க்கையில் மந்திரவாதத்தில் நம்பிக்கையிருந்திருப்பது விளங் கு கிற து. இதில் இன்குலாபின் ஆரம்பகாலப் பெரும் பான்மை கவிதைகளும் சேரும். ஆனல் வானம்பாடிக் கவிஞர்கள் மொழியியல் பிரக்ஞையுடன் சமீபத்திய போக்கான புரா தன. ஒலி சேர்க்கைகளை நோக்கிய பயணத் தில் அதனை வெடி வைத்துத் தகர்க்கும் சமஸ்கிருத பதச் சேர்க்கைகளை முன் வைத்த கார்யமும் உன்னிப்பாய் கவனிக்

Page 12
872
கத் தக்கது. இது போல் குமுதம் பத்தி ரிகையில் அது பரப்பும் இலக்கிய மொண் ணைத்தனத்துக்கிடையில், அதன் நவீன செயலான (ஒற்றைப் பரிமாணம்) தொடர் புறுத்தல் என்னும் ஏகச் செயலுக்குப் பொறுப்பாக அதன் மொழி மாற்றப் பட்டுள்ளதைக் கவனிக்கலாம். கமலஹாச னைச் சட்டையில்லாத உடலுடன் படம் போடுகையில் அவருடைய நடிப்பு, அவரது படிமம் இவற்றுடன் பால் சார்ந்த ஆண் உடல் கவர்ச்சி (ஆண் மேன்மை) என்னும் கருத்துப் பரப்பப்படுகிறது. இது போலவே Cezanne ஓவியங்களில் மரம், செடி, கொடி களில் காட்டப்படும் காட்சிரூபத்திற்கும் அவைவழிச் செயல்படும் நிச்சயமற்ற தன் மைக்கும் தொடர்புண்டு. முதல் தன்மை ஒவியத்தன்மை. இரண்டாவது தன்மை, இன்றைய மனிதனின் ஒரு தத்துவார்த்த சிக்கல் அது போல் க்யுபிச பாணி அடிப் படையில் வரையப்பட்ட ஒவியங்களை சோவியத் ரஷ்யாவுக்கும் அதன் இலக்கி யக் கொள்கையை இன்று வரை சுமந்து கொண்டு திரியும் சில மார்க்சியவாதிகளுக் கும் ஜான் பெர்ஜர் சொல்வது போல் Dialectical Materialism 676i, p 6Jibold கொள்ள முடியாவிட்டாலும் பெர்ஜர் பார் வையில் அப்படைப்புக்களின் ஓவிய எல்லை அகன்று தத்துவத்தில் போய் நிற்பது நமக் குப் புரிகிறது. இது போல் நம்மில் அடிக் கடி சர்ச்சைக்குள்ளான கர்நாடக சங்கீத மும் தெருக்கூத்தும் நிலப்பிரபுத்துவ குணங் களைக் கொண்டிருக்கின்றன. சந்தேகம் இல்லை ஆஞலும் அவை இன்றுள்ளவர்களுக்கும் ஒரு வித அசைவுகள் மூலம், சப்தங்களின் இணைவுகள் மூலம் புதிய அர்த்தத்தைத் தர முடியும் அல்லது பழைய அசைவும் சப்த மும் கூட குறியீடாக அர்த்தம் தரலாம். அதுபோலவே அதன் உள்ளடக்கம் மாறும் போது இந்தக் குறியீட்டுக் குணம் அழி யாமல் இருந்தால்த்தான் இக்கலைகள் ஜீவித நியாயம் பெறும். கட்டிடக் கலையை எடுத்துக் கொண்டால் பிரிட்டிஷ் கட்டிடங்களின் வளைகோடுகள் ஆங்கில

f
ஏகாதிபத்தியத்தின் நினைவுகளாய் இருந்தா லும் அவற்றின் கட்டிடவியல் சார்ந்த ஞாபகப் படிமங்கள் புதிய கட்டிடக்கலைக்கு
உதவும் வகையில் புதுச்செய்தி தாங்கி
நிற்பவையே. இவ்வகையில் கலாச்சாரத் தின் அங்கங்கள் ஒவ்வொன்றும் ஓர் அர்த் தமும் அந்தக் கலைப்படைப்பின் அல்லது கலாச்சாரப் படைப்பின் பகுதிகளாய் காணப்பட வேண்டும். இந்த முறையில் காலத்துக்கு காலம் அவற்றின் பகுதிகள் மாற்றமுற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த அர்த்தங்கள் என்னும் பல பகுதிகள் பிர சன்னமாயிருக்கும் பொருளை ஒற்  ைற அர்த்தமென்னும் மாயைக்கு உட்படுத்து கிறது எது என்று அறிவது மிக முக்கியம். (இது பிறகு). இந்த மாயைக்கு ஆட்பட்ட வர்களைக் கேளுங்கள். சிலப்பதிகாரம், அவர் களுக்குத் தமிழர்களுக்கும் வடவர்களுக்கும் நடந்த போர் பற்றிய தகவல் நூல்; க்யுபிசம், சர்ரியலிசம் போன்ற கலை இயக் கங்கள், பூர்ஷ்வா சீரழிவுகள் மனித உருவ siyŞı'ül-ji (De-humanised arts) 53,56ir. ஜி. நாகராஜனின் "நாளை மற்றுமொரு நாளே” ஒரு வெறும் எதார்த்த நாவல். (இது எதார்த்த நாவல் அல்ல என்ற நாகார்
ஜானனின் ஒரு கட்டுரை. கவனிக்க-படிகள்
20) ontrigo QuáG56ôlait (Georges Bataille) போர்னேகிராபி எழுத்தான The Story , of the Eye-ன் அடியில் இலக்கிய கோலங் களின் வடிவங்கள் அமைந்திருப்பதைத் தத் தம் பாணியில் Susan Sontage-ம் ரோலான் பார்த்தும் விளக்கும் போது பல்முக அர்த் தம் பற்றிய சித்தாந்தமே பலம் பெறு கிறது.
இனி ஏகமும் கொண்டதாக எழுத் தைக் கருதும் மாயை பற்றி. ஒரே ஒரு அர்த்தம் தான் எழுத்தில் வரும் என்ற எண்ணம் ஏன் எப்படி வருகிறது என்று பார்க்கையில் ஆச்சர்யம் தான் எஞ்சுகி றது. காரணம், நம் தமிழக, இந்திய மரபு வேறுபட்டதாக இருந்திருக்கிறது.
பாஷ்யக்காரர்கள் சம ஸ் கிருதத்திலும்,

Page 13
உரைகாரர்கள் தமிழிலும் இருந்திருக்கி ரூர்கள். ஓர் எழுத்துக்குப் பல உரைகாரர் கள் தமிழிலும் இருந்திருக்கிருர்கள். ஓர் எழுத்துக்குப் பல உரைகாரர்கள் இருந்ததே பல அர்த்தங்கள் ஓர் எழுத்துக்கு உண்டு என்பதை விளக்குகிறது. பல தெய்வ வணக்கம் என்ற ஆரோக்கியமான பார்வை ஏக தெய்வ வணக்கம் என்ற கட்டத்தை அடைவதை ஸ்கந்தன், முருகன், சண் முகன் போன்றேர் இணைவதில் தெரிகிறது என்று வரலாற்று ரீதியாக பேராசிரியர் நா. வானமாமலை விளக்குவார். ஏகமுக போக் கைத் தொடும் நிலையின் உச்ச எல்லே அத்வைத தத்துவக் காலம் என்று கூறலாம். இதற்கொத்த ஜெர்மன் சிந்தனை ஹெகலில் உச்சத்தைத் தொடுகி றது. மார்க்ஸ் இந்தப் போக்கைச் சிதறடிக் கிருர் . இச் சிந்தனை அமைப்பை நேர் எதி ராக (தலையை மேலும் காலைத் தரையி லும் வைத்தல்) மாற்றுகிறர். இந்திய கருத்துமுதல் தத்துவ பாரத்திலிருந்து மீளா தோர் இந்தியாவில் மார்க்சீயத்தை ஏகமுகி bUnrésil பார்க்கிருர்கள். மேற்கில் ஹெகலிய வாதத்திலிருந்து மீளாதோர் மார்க்சீர்த்தை ஒற்றை அர்த்தத்தைக் காணத் தூண்டு பார்வையாகக் கண்டு தங்களைக் தாங்கே
தட்டிக் கொடுக்கிருர்கள்.
திருக்குறளில் பல அர்த்தங்கள் இருக் கின்றன என்பதை அதன் பல்வித உரைக்கான சாத்யப்பாடுகள் காட்டுகின் றன. இத்தனை உரைகளின் தோற்றத்துக் கான வீர்யத்தைத் திருக்குறள் கொண்டி ருக்கிறது. இவ்வீர்யத்தின் பல தளங்களைத் தான் அதன் பல தள அர்த்தங்கள் என் கிறேன். இன்றைய தமிழ் சமூகத்தில் திருக்குறளை, புழுக்கள் மல உருண்டைகளைத் தாங்கிச் செல்வது போல் தாங்கிச் செல்லும் தமிழ்ப் பண்டித, செத்த கலாச்சார சக்தி களும், திருக்குறளில் இலக்கிய ரத்தினக் கற்களை மட்டும் எடுக்க கிண்டித்தேடும் க.நா. சு போன்றவர்களும் ஒரு வகையில்

875
இந்த ஒற்றை முக அர்த்தத்தைத் தேடுபவர். கள் தான். திருக்குறளில் என்ன மையம் இருக்கிறது? ஏதும் இல்லை. (மு. பொன்னம் பலம், ஒவ்வொரு எழுத்திலும் பல அர்த் தங்கள் இருப்பதற்கான காரணம் எழுத்தின் ஓரங்கள் மாறுகின்றன; அதனல் தான் என் றும், எழுத்தின் மையம் மாறுவதில்லை என் றும் கூறுகிறர்.) ஏதேனும் ஒன்றைப் பண்டி தர்கள் கூறுவது போல், ஒழுக்கத்தையும் சமூக நீதிகளையும் அல்லது இலக்கிய ஏக முகிகள் கருதுவது போல் இலக்கிய குணத்தை மட்டும்-திருக்குறள் கொண்டி, ருக்கவில்லை. சமண சமயத்தவனுக்கும். பெளத்தனுக்கும்,  ைவ ஷ் ண வணு க்கும், கிறிஸ்தவனுக்கும், நாத்திகனுக்கும் ஏககா லத்தில் அது தன் பல்வித முகங்களைக் காட்டுகிறது. அறம், பொருள், இன்பம் என்ற தளங்கள் கூட ஒருவித code-கள் தான். இவற்றை விஸ்தரித்துச் செல்லுகை யில் பல அர்த்தங்கள் தோல் உரித்துக் காட் டிக் கொண்டே செல்லும். சங்க இலக்கியத் தில் அவற்றிற்கடியில் ஒடும் code-களான அகம், புறம் மற்றும் குறிஞ்சி, முல்லை. பாலை, மருதம், நெய்தல் போன்ற பாகு பாடுகள், மையமற்ற எழுத்தின் பல் தளங் களைச் சூசனையாகக் காட்டும் குறிகள்" சிலப்பதிகாரத்தின் அடிப்படைகளான பத் திணிப் பெண்களை உயர்ந்தோர் ஏத்துவது, அரசியலில் பிழை செய்தவனை அறம் தண் டிப்பது, ஊழ்வினை எப்படியும் வந்து சேர்ந்து விடுவது போன்றவை எல்லாம் ஒற்றை அர்த்தம் உள்ளவையாய் படைப்பைப் பார்ப்பதற்கு எதிரான சாட்சியங்களே. இந்தப் படைப்புக்களின் ஓரங்களே மையங் கள்; மையங்களே ஒரங்கள். マ
பெரியபுராணம், பார்வைக்குச், சிவபக்தி என்ற ஒற்றை அர்த்தத்தை மையமாக் கொண்டிருப்பது போல் தோற்றம் தர “லாம். ஆனல் பெரிய புராண நாயன்ஷ் களின் கதைகளைப் படிப்பவர்களான முஸ் லீம்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு, வளைத் ளுக்கு, பெளத்தர்களுக்குப் பெரிய புராணத்

Page 14
B74
தின் கதைகளுக்கடியில் செல்லும் சாதி மரபின் இயங்கும் தன்மை, கதைகளின் சுவாரஸ்யம், ஆதிவாசிக் கலாசாரமும் நக ரக் கலாசாரமும் (கண்ணப்ப நாயனர் புரா ணம்) இணையும் விதம் இவை வேறுவேறு அர்த்தத் தளங்களைக் காட்டுகின்றன. இவ் வர்த்த தளங்களுக்குச் செவிசாய்க்கும் வாச கர்களுக்கும் சிவபக்தி என்ற ஊடுசரடு ஒரு Symbolic connecting link (gasu? -G) அளவிலான பொருத்தும் சங்கிலி) மட்டுமே தான் ஒர் மேம்போக்கான அத்வைதிக்கு இது பல்வித விகCப்புக்களையும், கிளைகளையும் இணைக்கும் உள் ஆன்மாவாய்ப் படலாம். அதுபோல் ஓர் கருத்து முதல்வாத அத்வை திக்குப் பாரதியின் புரட்சியை ஆதரிக்கும் பாடலுக்கும் கண்ணன் பாட்டுக்கும் உள்ள தொடர்பு, உள் ஆன்மா ஒன்று, வேறு வேருய் வெளிப்பாடு கொள்கிறது என்ப தாய் விவாதிக்க இடம் கொடுக்கலாம். ஆனல் பாரதியின் புரட்சிப் பாடலுக்கும் மத க் கருத்து க்கு ம் பொருத்துசங்கிலி (connecting link) sai 2.6ita LL5ub GT6ür னும் குறியீடு ஆகும். உள் ஆன்மாவுக்கும் உள் ஈட்டகத்துக்கும் என்ன வேறுபாடு என்று ஒருவர் கேட்கலாம். உள் ஆன்மா புள்ளியாய், மையமாய் செயல்படுவது. உள் சட்டகம் மையம் அற்றது. மையம் இலக் கண்ம், விளக்கம் கடந்தது. மையமற்ற உள் சட்டகம் விளக்கத்துக்கு முற்ருக உட் பட்டது. (பாரதி பற்றிய விரிவான, இத் தகைய விளக்கத்துக்கு அகரம் வெளியிட்ட பாரதியம் தொகுப்பின் தமிழவன் கட்டு ரையைப் பார்க்க). மையம் இறுதியாய் Guido Suá6065 (Super Consciousness) யில் கொண்டு விட்டுவிடும் என்பதை பிரஸ் தாப கட்டுரையில் திரு. மு. பொன்னம் பலம் விவாதத் தொடர்ச்சி காட்டுகிறது.
இனி பகுதிகள் பல (அர்த்தங்கள் பல) இணைகையில் அவை எப்படி மையம் என்ற மாயையைத் தருகிறதென்று umř5ia, வேண்டும். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்ருண்டுகளுக்கு முன் இலக்கிய ம் என்ற கருத்தாக்கம் எங்கும் இல்லை. பிரக்ஞை

மனம், அதன் குணங்கள் என்ற கருத்தாக் கம்தான் இருந்தது. பதினெட்டாம் நூற் ருண்டில் அச்சகமும் ஜனநாயக மரபுகளும் நாத்திகமும் சேர்ந்து பிரக்ஞை மனம், கட வுள் என்ற பதங்களை மாற்றி இலக்கியம் என்ற புதுப்பெயரால் அவற்றை அழைக்க லாயின. இலக்கியம் பிறந்த கதை இது தான். சமஸ்கிருதத்தில் தொனியும், தமி
ழில் இறைச்சி, குறிப்பு மொழி போன்ற
வார்த்தை கடந்த தளங்களும் பிற்காலத்
தில் "அருள்," "தெய்வீகம் போன்றவற் ருல் இடமாற்றம் பெற்று இருபதாம் நூற் முண்டில் மீண்டும் "இலக்கியமாய் ஆகியுள்
ளன. ஆனல் இன்றும் இலக்கியச் சர்ச்சை களிலிருந்து மதம் சார்ந்த, கடவுள் சார்ந்த
ஞாபகங்கள் முழுதாய்ப் போய்விடவில்லை.
மணிக்கொடி சார்ந்த படைப்பாளிகள் பலர் கடவுள் அருளால்தான் சிறுகதை எழுதியிருப் பதாக நினைத்திருக்கிருர்கள் : கவிதை எழு தியதாகக் கருதுகிருர்கள். சமீபத்தில் எழு தும் தமிழ் விமர்சகர் ஒருவர் கூட, கலையும் இலக்கியமும் “பெயரில்லா உண்மையைத் தேடும் முயற்சி தான் என்கிருர். இப்படிப் பார்க்கையில் தமிழ் இலக்கியத்தில் முழு மையான மதச்சார்பற்ற (secular) விமர்ச னப் பார்வை இன்னும் தோன்றவில்லை என் கலாம். கைலாசபதி, ஜாாஜ் லூக்காக்ஜ்
பார்வைகளில் கூட இந்த மனித முதன் மைப் பார்வைதான் காட்சி தருகின்றது. மனிதன் என்பவன் கடவுள் சாயலில்
படைக்கப்பட்டவன் தானே.
எனவே உண்மையான "செக்குலார்’ இலக்கியப் பார்வை எதை வலியுறுத்தும் என்று பார்க்க வேண்டியுள்ளது. இந்தியா, மற்றும் மூன்ரும் உலக நாடுகளில் மதம் மாறிமாறி மனிதர்களைக் கொலைகாரர்களாக மாற்றவும், எதேச்சாதிகார ஆட்சிக ளுக்கு நியாயம் கற்பிக்கவும் சேவகம் புரி யும் சூழல் இன்று தெளிவாகத் தெரிகிறது . இச்சூழலில் என்றுமில்லாத அளவில் ஒரு செக்குலார்' இலக்கியப் பார்வையை உரு வாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கி ழுேம்.

Page 15
பல அர்த்தங்களின் தேவை எப்படி ஓர் இலக்கிய எழுத்தில் உருவாகிறது என்ற கேள்வி முக்கியமானது. எழுத்து எழுத்தா ளனின் உருவாக்கமல்ல, வாசகனின் உரு வாக்கம் என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் பல விஷயங்கள் எளிதில் விளங்கி விடும். வாசகர்கள் சார்பில் ஒரு நபர் படைக்கிருன், படைப்பு அந்த நபரின் அடிமனதின் (இதில் மனித குலம் திரண்டு பிரதிநிதித்துவப் படுத்துவதாக உளவியல் நிபுணர்கள் கூறி வருவதை ஞாபகப்படுத் தலாம்) மற்றும் மேல் மனதின் செயல். இப்போது திருக்குறள் சைனர்களின், பெளத் தர்களின், வைஷ்ணவர்களின் நாத்திகர்க ளின் (ஒரு வகையில் முகம்மதியரின், கிறிஸ் தவரின்) அர்த்தங்களைக் காணும் படைப் பாக எப்படி அமைந்தது என்பது எளிதில் புரிகிறது. படைத்த நபர், இத்தகைய வாச கர் (அல்லது சபையோர்) களை உள்ளேற்று அவர்களின் கருவியாகத் தன்னை ஆக்கி எழுதியிருக்கிருன் என்று அறிகிருேம். இப் படி ஒவ்வொரு படைப்பும் பல்வேறு குரல் களைக் கொண்டிருப்பதால் பல்வேறு சாதி களின், சமயங்களின் அல்லது இன்றைய குழவில் வர்க்கங்களின் தொனிப்பைக் கொண்டிருக்கும் அடையாளமாய் அமை கிறது. 'ஜே. ஜே. சில குறிப்புக்கள் ஆகட்டும், ஞானக்கூத்தன் கவிதைகள் ஆகட்டும், செசானின் ஓவியம் ஆகட்டும், இவை ஒவ்வொன்றும் பல வர்க்கங்களின் குரல்களைக் கொண்டிருக்கின்றன, பால்சாக் எழுத்தும் டால்ஸ்டாய் எழுத்தும் அப்படிப் பல வர்க்கங்களின் அடையாளங்களைக் கொண்டிருப்பதை அவற்றைக் கண்டித்தும் அதே நேரத்தில் பாராட்டியும் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றேர் கூறுவதி லிருந்து அறியலாம். இப்போது கலையும் இலக்கியமும் வர்க்க அடிப்படையில் எழுத் துள்ளன என்பதை அறிகிருேம். காரணம், ஒவ்வொரு வர்க்கத்தின் குரலும் படைப் பில் காணப்பட்டே தீரும். ஒவ்வொரு கால கட்ட கருத்து வடிமும் (கருத்துருவம்) அக்கால ஆளும் வர்க்கத்தால்தான் பெரி

875.
தும் நிர்ணயிக்கப்படுகிறது. என்ருலும் ஆளப்படும் வர்க்கங்களின் கருத்துக்களும் கூட நவீன அரசு இயந்திரங்களின் வர்க்க நடுநிலைப்படுத்தும் செயல் மூலம் அக்கால
கட்ட பொதுஜன கருத்துருவத்தில் புகுந்து விடுகின்றன.
ஒரு வர்க்கம் அப்படியே கலப்படமற்ற தூய்மையான எழுத்தைப் பிரதிபலித்து வழங்க முடியாது. காரணம், சமூக எதார்த் தம் அப்படியே அவ்வர்க்க மனிதனை நிர்ண யிப்பதில்லை. உழைக்கும் வர்க்கமும் சுரண் டும் வர்க்கமும் கருத்துக்கள் (கருத்துருவம்) என்ற பிரிசம் கண்ணுடி மூலம்தான் உலகை அறியமுடியும். பிரிசம் கண்ணுடி நேரடியாய் அப்படியே பிரதிபலிக்காது பார்வைக்குரிய பொருளைச் சிதைத்தே காட்டும். இப்போது தெரிந்து விடுகிறது, பூர்ஷ்வா இலக்கியத் தில் தொழிலாளிக்கான உண்மை இருக்கும், தொழிலாளியின் இலக்கியத்தில் பூர்ஷ்வாக் களுக்கான விஷயம் இருக்கும். (நகரங்களில் பிரக்டின் நாடகத்தைக் கண்டு களிக்க, கார் களில் மாக்ஸ்முல்லர் பவனுக்கு வரும் மேட்டுக்குடி நவ நா க ரி க நாரிமணிகள் மற்றும் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் பற்றி இப்போது ஒரளவு விளங்கும். இந்த முறை யில் ஒரு படிைப்பில் பல வர்க்கங்களின் கட் டுப்படைப்பான கருத்துருவம், சரித்திரம், பொருளாதாரக் குணம், அரசியல் குணம் போன்றன இருந்தாலும் அது படைப்பு என்கிற ரீதியில் அதில் கலை, இலக்கியத்திற் கான விசேஷ தன்மையும் இருந்துதான் தீரும்.
ஆங்கிலக் கலாசாரத்திலிருந்து பாதிப் பும் தொடர்பும் பெற்ற நம் கலாசாரம் இலக்கியத்தை, கலையை முற்றுமுழுதாக அவர்கள் பார்வையிலே ஏற்றுக் கொள்ள வில்லை; முழுதாய் விட்டுவிடவுமில்லை. இலக் கியத்துவம், கலைத்துவம், இன்று ஒர் உலக உண்மை. இன்றைய உலக, இந்திய, தமி ழகச் சூழலில் இலக்கிய, கலை, சுயத்துவம் சரித்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் (ரெஜி சிரிவர்த்தன இதன் சுயத்துவத்தை மறுப்

Page 16
876
ダ
பது தவறு) ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். ஆனல் இலக்கியம் கலாசாரம் மட் டுமே அல்ல. கலாசாரம் பற்றிக் கவலைப் படுவோர் இலக்கியம்பற்றி அக்கறைப்படத் தேவையில்லை என்ற வாதம் மனித குலத்தின் மொத்த செயல்பாடுகளின் விவித சூக்குமங் களைப் புரியாத, அவற்றை அங்கீகரிக்காத பாசிசக் குணமாகிவிடும். மேற்களவு நம் கலாசாரச் சூழலில் இலக்கியம் சுயத்துவம் கொண்டதா என்பது கேட்கப்பட வேண்டிய கேள்வி. கலாசாரச் சாயல் மேற்கைவிட அதிகளவு ஏறிய இலக்கியமே நம்மிடம் இருப் பது. இவ்வகையில் நம் கலையும் இலக்கிய மும் ஒரே சமயத்தில் சுயத்துவம் உள்ள தாயும் சுயத்துவம் இல்லாததாயும் இருக் கின்ற,ை இருதலை உள்ள கிரேக்கக் கடவு ளாக இது அமைகின்றது.
அரசு எந்திரம் என்பது இதுவரை ஒரு வர்க்கம் இன்னெரு வர்க்கத்தை அணுகுவ தற்காக உருவான கருவி என்று தெரிந்து விட்டது. அரசு எந்திரம், ஆளும் வர்க்கத் தையும் நேரடி மோதலில் ஈடுபடுத்தாமல் இரண்டையும் சமப்படுத்தும் இயங்குமுறை (Dalancing process) GT6ðir o gÜGuntgl 9 dó கிருேம். இந்நேரத்தில் தான் இலக்கியம், கலை, இசை, நாட்டியம் போன்றவற்றையும் பார்க்கவேண்டும். பல வர்க்கங்களுக்கான குணங்களையும் அவ்வக் கலை மத்தியமங்களுக் கான (medium) குணங்களையும் மற்றும் பிற பல குணங்களையும் கலையும் இலக்கியமும் எப்படித் தத்தம் பகுதிகளாய் சேர்த்து வைத்துள்ளன என்ற கேள்வி முக்கியமா னது. திருக்குறளில் சமணருக்கான அர்த்த தளமும், பெளத்தருக்கான அர்த்த தளமும் சைவருக்கான அர்த்த தளமும் இருந்தாலும் சமணர்கள் அவர்களது படைப்புத்தான் (ஒரு மையம்) திருக்குறள் என்று வாதிடு கின்றனர். பெளத்தர்கள் அவர்களின் படைப்பு (அவர்களுக்கான மையம்) என் கின்றனர். அரசு எப்படிப் பல வர்க்கங்க ளுக்கு நடுவில் ஒரு 'ஷாக் உறிஞ்சி" (shock absorber) Ga8vSMué செய்கிறதோ, அது

போல் படைப்பு, பல வர்க்கங்களின் உணர் வுகளின் மற்றும் உணர்வு வேறுபாடுகளின் இடையில் தன்னை வைக்கிறது. இதே நேரத் தில் ஒரு சாராருக்கு உரிய சொந்தப் பட் டதாய் அப்படைப்பு ஒரு மாயையை வழங் குவதைக் கவனிக்க வேண்டும். அல்லது பிரக் 196ir Three Penny Opera'-Goir 'd 65 லியோ?-வோ உழைப்போர்க்கு மட்டுமான படைப்பு என்ற மாயையை ஏன் தருகிறது?
எம்.ஜி.ஆர் படங்களில் வெளிப்படும் கருத்துக்களுடன் தமிழக ஏழை மக்கள் பெரும்பாலும் இணைந்துள்ளனர். ஆனல் அப்படங்களின் கருத்துக்கள் அம்மக்களுக் குத் தேவையான சமூக மாற்றத்துக்கு எதி ராக அம்மக்களைத் தயார்ப்படுத்துகின்றன. எனவே எதார்த்தம் ஒன்ருகவும் (ஏழ்மை, சுரண்டல்) அந்த எதார்த்தத்திலிருந்து உரு வாகும் கருத்துக்கள் ஏழையின் கருத்தாய் இல்லாமல் ஏழையைச் சுரண்டுபவனுடைய கருத்தாயும் அமைகின்றன. ஆக ஏழை வாழ் நிலையில் ஏழையாகவும், சிந்தனையளவில் பணக் காரனைப் போலவும் வாழ்கிருன். எதார்த்தத்துக்கும் கருத்துக்கும் வாசக னுடைய வாழ்நிலக்கும் இடையில் ஓர் இடைவெளி இருக்கிறதென்று ஏற்றுக்கொள் வது சுலபம். இந்த இடைவெளிதான் மிக மிக முக்கியமான ஸ்தானம். இந்த இடை வெளியால்தான் பெளத்தன், திருக்குறளைத் தனது என்கிருன் . . சமணன் இல்லை, இல்லை, தனதுதான் என்கிருன், வைஷ்ணவன் இவ் விருவரையும் மறுத்துத் திருவள்ளுவருக்குப் பூணுரல் மாட்டுகிறன். சைவன் இம்மூவரை யும் மறுத்து, அது தன் சொத்து என்கி முன், சீமான்களுக்கும், சீமாட்டிகளுக்கும் உரிய படைப்பாக பிர க் டி ன் படைப் புக்கள் மாக்ஸ்முல்லர் பவன்களில் மாயைத் தோற்றம் தருகின்றன. பிக்காஸோவின் கம்யூனிச ஓவியங்கள் உலகில் மிகப் பெரிய கோடீஸ்வரனின் வரவேற்பறையை அலங் கரிக்கிறது. இதே மாதிரி ஒவ்வொரு வர்க் கத்தின் மனமும் தனது தனது என்று ஒரு கலையைக் கூற முனைகிறது. அந்தக் கூற்றின்

Page 17
அடி அழுத்தம் தான் மையமாக எழுகிறது. இந்த வர்க்கங்களின், மதங்களின் சாதி களின், குழுவின் மனதில் இருக்கும் மையம் இடம்மாறிப் படைப்பின் மையமாக உரு வாகிறது. சினிமாவென்முல் தனது மையத்தை ஒரு வர்க்கம் அம்மீடியத்தில் கண்டுவிட்டு, அந்த ouنديم 000 نيسنا نسا சிருஷ் டிக்க உதவியவனத் தனது வாழ்வின் ஆதாரமாக ஆக்குகிறது. அவன் வாழ்வு தன் வாழ்வாகவும் அவன் சாவு தனது சாவாகவும் கருதுகிறது.
அரசியலைப் பிரியும் ஆயுதங்கள்
குண்டுகளை நான் விரு ஆனல், குண்டுகளைமட்டும் அல்
மூளைளன ஒன்று இரு அது வெறுமே உடலில் இ
இறந்த காலத்தையும் நான், நிகழ் காலத்திற் கா:
சேரிடத்தைச் சேரும் பாதை வளைவுகளைத் துல்லியமாய்க் கணிக்க
குண்டுகளிற்கு மூளை என்பது, ܫ நிச்சயமாகி விட்டது
ஆகவே, குண்டுகளை நான் வி ஆனல், குண்டுகளைமட்டும் அல்

877
கடைசியாக, ஒன்றைச் சொல்லி முடிக் கலாம். மேல் பிரக்ளுை என்றும் பெயரற்ற உண்மை என்றும் மையம் என்றும் மீண் டும் மீண்டும் ஒரு "செக்குலார் பார்வைக்கு எதிரான அழுத்தங்களே வலியுறுத்தப்படும் நம் சூழலில் பிளாட்டோ சொன்னபடி, ஆன்மா ஒரு கணித நிபுணனின் கைகளுக் குள் சிக்கிவிடும் சமாசாரம் என்ற செய்தியை ஞாபகப்படுத்தத்தான் வேண் டும்.
நம்ப கிறேன்
ரல; அவர்களைப்போல்.
}க்கிறதே !
இருப்பதுவா ?
எதிர் காலத்தையும்
ண்கிறேன்.
பாதைகளைப்
முயல்கிறேன்.
கிடையாது
இப்போது.
ரும்புகிறேன்.
pல அவர்களைப்போல் !
நா. அமுதசாகரன்
"-

Page 18
ஆபிரிக்கக் கவிதைகள்
பத்தொன்பதாம் நூற்றண்டில் நாடுகாண் விஜயத் ஸ்டான்லி. புகன்டா நாட்டு அரசன் மியூடெஸா, இ. இக் கவிதை. மியூடெஸா ஸ்டான்லியை வரவேற்க
கிருர் கவிஞர்.
சந்திப்பு
பட்ட பாடோ சொ பகலெலாம் கொடும் கொட்டும் வெம்பனிக் கூட்டமாகத் தொட
இரவு பகலாக அவர்க் இராச தானியை நாடி
ஓய்ந்து போனது ‘கா உடைகள் நைந்தழுக் சாய்ந்திடும் மொட்.ை தாம்புழுங்கும், கனன்
காய்ந்தது கொடும் ே கலகலத்தெழும் உள் வீழ்ந்ததங்கு நம்பிக்ை வியர்வையின் மணம்;
அணிவகுத்தங் கவர்க அரிய கோடையில் அ
ஒவ்வோர் நாளும் குதி ஊன உண்ணும் கழு ஒவ்வோர் மானிடக் சு உவக்க அங்கது கிடக்கு காக்கி பூண்டவன் தை காணும் நம்பிக்கை ெ
அந்த மாலையும் வந்து அனல் பறக்கும் நடை வந்தன நைல், நியான் வண்ண நீல இரட்டை

தை மேற்கொண்டு ஆபிரிக்கா சென்ற ஆங்கிலேயன் வ்விருவருக்கும் இடையில் நடந்த சந்திப்பைக் கூறுகிறது ப் போப் வினையைத் தேடிக்கொண்டதைக் குறிப்பிடு
ல்லுந் தரமன்று;
வெப்பம், இரவிலோ & குளிர்; நுளம்புகள் ர நடந்தனர்!
5ள் நடந்தனர் ட நடந்தனர்!
அணி; அவர்
விகள்
காகின: அடிக்கடி டத் தலைகள்; நெஞ்சங்களோ
று குமுறுமாம்!
வெய்யில்; உதயத்தில் ளம்; அந்திமாலையில் கை; முதுகெலாம்
மொய்க்கும் ஈக் கூட்டமே!
r நடந்தனர் வர்கள் நடந்தனர்!
ரையொன்று விழும்; குகள்; மாலையில் உடு விழும்; மஸாய் தம் சமவெளி லமையில் மெய்ப்பொருள் காண்டு நடந்தனர்!
சேர்ந்தது; டயின் முடிவிலே ாஸா எனப்படும் . நதிகளாம்!

Page 19
išri நிலைக்கு விரைகின்ற நெஞ்சு போலிவர் நெஞ்ச சோர்வு போனது, சுமை தொட்டது கொப்புளித்த
பசியினேடு தொடரும் ஒ பயமில்லை வீர சாகஸக் க நிசியில் மியூடெஸா மன் நிகழ்த்தலாம் சூழ் விளக்
வெம்பகல் நெருப்பேதும் வேண்டுமட்டும் பாடலா
வாழைத் தோட்டங்கள்
வாயை மூடியிருந்தது! ந வேலியால் எட்டிப் பார் விழிமலர் விடுப்பாலே வி
விறலியர்தம் வரவேற்புட் வெள்ளைத் துதுவர்க்காக அதிரவில்லை; வயோதிபர் அசைத்தனர்; நாடு ஐயுற
அவையைக் கூட்டவோர் அங்கு நாணற் கதவு திற எவரும் ஏதும் பேசவில்லை இறுகி மெல்ல அமைதி உ
ஆளை ஆள் எடைபோடும் அந்தவேளை-ஓர் கணந்தா
மெலிந்த வெள்ளே மனித மேலெழுந்தனன் கறுப்பர் நலிந்த வெள்ளைக் கைகை 'நண்ப, வெள்ளைய! நல்
நாணற் தட்டிகள் மூடி நழுவிப் போக அனுமதி
1.ஸ்டான்ல. குழுவினரின் பொதிகளைச் சுமக்கும் ஆபிரி 2. கிழக்கு ஆபிரிக்காவில் வாழ்ந்த போரூக்கம் மிக்க, ப
ఆడిత

879
மான் இள ம் துடித்தன கள் லேசாயின; நீர்
பாதங்களை!
நாய்களால் ாதைகள் னன் சபையிலே கின் ஒளியிலே!
செய்யா (து), இனி ம், ஆடலாம்!
பின்னல் கிராமமே iாணலின் க்கும் சிறுவர்கள் ரிந்தன!
| Linrohái), க முரசுகள்
* சிலர் தலை )லாயிற்று!
பறையை அறைந்தனர்; ந்தது; ; கனம் றைந்தது!
மெளனமே ன்-நிலைத்தது!
னை விஞ்சியே தம் வேந்தன், பின் ளப் பற்றினன்: வரவாகுக!"
ன மேற்கு உள்ளே
வாய்த்தது!!
மலாவி நாட்டுக்கவி டேவிட் ருபாதிரி
தமிழில்: சோ. பத்மநாதன்
க்கக் கூலிகள் அடிமைகள்)
மத்தைமேய்க்கும், ஓரினம்,

Page 20
பிணந்தின்னிகள்
நாகரிகம் எங்கள் முகத்தி அந்நாட்களில், ஆசிநீர் எங்கள் கூனிய பு அந்நாட்களில் பிணந்தின்னிகள், தம் நகங்களின் நிழலில், நம் "பாதுகாவலுக்காக" இரத்தம் தோய்ந்த சின் அந்நாட்களில், கல்லடுக்கிய தெருநரகங் வேதனைச் சிரிப்பே விளை
பரமண்டலத்திலிருக்கும் தோத்திரிக்கும் தொண பெருந்தோட்ட்ங்களிலிரு அழுகுரல் அமிழ்த்தியது
ஓ, வலிந்து பெற்ற முத் கசந்த நினைவுகள்! துப்பாக்கி முனையில் பெ கசந்த நினைவுகள், மனிதராகத் தென்படா கசந்த நினைவுகள்! எல்லா நூல்களும் தெரி நீங்கள்! பூமியைச் சூல்கொள்ளச் வேரிலேயே புரட்சி வீறு அறியாத நீங்கள்! இடுகாடுகளிடை நீங்கள் பரணிகளுக்கு மத்தியி: குலைந்து வெறிச்சோடிட் ஆபிரிக்கக் கிராமங்களு குலையாத கோட்டை ே நம் நெஞ்சில், நம்பிக்கை வாழ்ந்தது!
சுவாசிலாந்தின் சுரங்க புழுங்கி வியர்க்கும் ஐே ஒளிமிக்க எங்கள் கால வசந்தம் மீண்டும் மலர

ல் அறைந்த
ருவங்களில் மோதிய
னங்களை எழுப்பிய
கள் தோறும் ந்தது
பிதாவைத் தொணப்பு தந்து கிளம்பிய
ந்தங்களின்
ாய்யாகிய வாக்குறுதிகளின்
த அந்நியர்கள் பற்றிய
ந்தும் அன்பு தெரியாத
# செய்யும் நம் கைகளைபடைத்த நம் கைகளை
ர் பாடும் லும்,
! Gunrଭାr க்கு நடுவிலும், போன்று,
ங்கள் தொடக்கம் ராப்பிய தொழிற்சாலைகள் வரை, டிகளின் கீழ், ாத்தான் போகிறது!
--செனகல் நாட்டுக்கவிடேவிட் டியொப் தமிழில்: சோ. 'பத்மநாதன்

Page 21
தியாகி
தந்தையைக் கொன்ருன் விெ ஏன்? என் தந்தை தன்மானி ஆதலி அன்னையைக் கெடுத்தான் 6ெ ஏன்? என் அன்னை பேரழகி ஆதலி அண்ணனை வெய்யில்தனில் அவன் உடல் வலியன் ஆதலி என்னையும் எஜமான் நோக்கி * பையா எடு மது, கதிரை
மகிழ்ச்சிச் சிரிப்பு
எங்கள் பெண்கள் முலைகள் ெ இனிய, பெரிய இல்லாவிட்டால், பயின்று, பயின்று கானியர் வாய்கள் எந்த நேரமும்
அற்புதமாகப் பேசும் ஆற்றலை எங்கு பெற்ற
இல்லாவிட்டால், குரலே எடாது கூனிப்போன கடந்த காலத்துக் கசந்த நினை வாட்டும் போதும் அழுதல் இன்றி சிரிக்கும் ஆற்றலை எங்குபெற்.

88
usir bituair
பினுல்! வள்ளையன்
ல்ை!
வறுத்தெடுத்தான்
ணுல்!
ஞன்
போடு!" என்றன்!
மூலம்: டேவிட் டியொப் (செனகல்) தமிழில்: சோ. பத்மநாதன்
பரியவை
திருக்கலாம்?
றிருக்கலாம்?
மூலம்: குவெவR ப்று (கான) தமிழில்: சோ. பத்மநாதன்

Page 22
882.
நான் முதிர்கையி
இது ஒரு நெடுங்காலத் நான் கிட்டத் தட்ட
என் கனவை ஆணுல் அது அப்போ எனக்கு முன்னல், சூரியனைப் போலப் என் கனவு. பிறகு வந்து கவர் எ மெள்ள உயர்ந்தது, மெள்ள, எனக்கும் என் கனவு மெள்ள மெள்ள உய என் கனவின் ஒளிை மங்கலாக்கி,
மறைத்து,
நிழல். நான் கறுப்பு. நான் நிழலிலே கிட எனக்கு முன்னும் எனக்கு மேலும் என் கனவின் ஒளி இ தடித்த சுவர் மாத்தி நிழல் மாத்திரம்.
எனது கைகள்
எனது கருங்கைகள் பிளக்கின்றன சுவல் காண்கின்றன என் உதவுங்கள் எனக்கு இந்த இருளைத் தக இந்த இரவை நொ இந்த நிழலை உடை சூரியனின் ஓராயிர சூரியனின் ஓராயிர இந்த நிழலை உடை

ல்
5துக்கு முன்பு மறந்திட்டன்
து இருந்தது,
Gr5rFDrei
ழுந்தது,
புக்கும் இடையில். ர்ந்தது, till
க்கிறேன்.
இப்போது இல்லை. திரம்,
appy
கனவை
ர்க்க,
றுக்க,
க்க
ம் வெளிச்சங்களாக
rம் சுழலும் கனவுகளாக
-த்திட்
மூலம்: லாங்ஸ்ரன் ஹ்யூக்ஸ் தமிழில்: க.முருகவேல்

Page 23
மார்க்சியமும் கருத்து நிலையும்-2 LSLS SLSLSLSLSLSLSLSLSL
கருத்து நிலைபற்றி அல்தூ9
கந்தையா சண்முகலிங்கம்
மார்க்சின் பின்னர் கருத்து நிலைபற்றி எழுதியோருள் லெனின், லூகக்ஸ், கிராம்சி, அல்தூசர் ஆகியோர் முக்கியமாகக் குறிப் பிடப்பட வேண்டியோர். மார்க்ஸ் முதல் 1960 க்களில் எழுதிய அல்தூசர் வரையுள்ள நூறு ஆண்டு காலத்தில் கருத்து நிலைபற்றி மாறுபட்ட விளக்கங்கள் வெளி வந்துள்ள போதும் மார்க்சீயத்திற்குப் பொதுவான அடிப்படைக் கருத்துக்கள் இவையூடே இழை யோடி வந்துள்ளன.
அல்தூசரின் சிந்தனைகள் ஸ்டக்சுரலிஸ்ட் மார்க்சீயம் எனப்படும். பிரான்ஸ் நாட்டில் ஸ்டக்சுரலிசம் என்னும் சிந்தனை மரபு வளர்ந் தது. ஸஸுர் (Sussure) என்னும் மொழியிய லாளர், லெவி ஸ்ட்ராஸ் (Levi-Strauss) எ ன் னு ம் மானிடவியலாளர், லெக்கன் (Lacan) என்னும் உளவியலாளர் ஸ்டக்கர லிஸ்ட் சிந்தனைக்கு வழிகோலிய சமூக விஞ் ஞானிகளாவார். மனிதனின் உணர்வு பூர்வ மான நடவடிக்கைகள் அல்லாது அந்த நட வடிக்கைகளின் ஆதாரமாக இருக் கும் அமைப்புக்கள் தான் சமூகம் பற்றிய ஆய்விற் கும் விளக்கத்திற்கும் உதவும் என்பது இச் சிந்தனையின் அடிப்படையான கருத்து. ஸ்டக்சுரலிஸ்ட் சிந்தனையின் ஒரு கிளைதான் அல்தூசரின் ஸ்டக்சுரலிஸ்ட் மார்க்சீயம். பலிபார் (Balibar) நிக்கோஸ் பெளலண்ட் 6MT 6iv (Nicos Poulantzas) GAGuLurt(5 i அல்தூசரின் கருத்துக்களை வளர்த்துள்ளனர்.
அல்தூசரின் மார்க்சீயம், லூகக்ஸ், - FTå தர்,கிராம்சி ஆகியோருடனும் பிராங்பேர்ட் usirefusarCL-glib (Frankfurt School

அடிப்படையான வேறுபாடுகளைக் கொண் டது. இச் சிந்தனையாளர்களின் மனிதாய LDTrifáš8Fuulub (Humanist marxism) GT6örgpuh கருத்தை அல்துாசர் நிராகரிக்கின்றர். எனி னும் இயக்கவியல் பொருள்முதல் வாதிகள் சிலரின் யாந்திரீகமான விளக்க்ங்களையும் அவர்களின் பொருளியல் தீர்மான வாதத் Googsuqub (Economic determinism) sal- gydio தூசர் ஏற்றுக் கொண்டவரல்லர். மேற்கட்டு மானத்திற்கு ஒரு சுய இயக்கம் உண்டென் பதை இவரது ஆய்வுகள் வெளிப்படுத்தி யுள்ளன. கருத்து நிலை பற்றிய இவரது விளக்கங்கள் அரசு, கலை இலக்கியம், கல்வி யியல் ஆகிய துறைகளில் பல கோட்பாட் டுப் பிரச்சினைகளுக்கு இடம் அளித்துள்ளன.
உற்பத்தியும் மறு உற்பத்தியும்
''...... . . . மூலத்திற்கும் மூல மாய் வர லாற்றை நிர்ணயிக்கும் அம்சம் யதார்த்த வாழ்க்கையின் பொருள் உற்பத்தியும் அதன் மறு உற்பத்தியும் தான்' என்று எங்கல்ஸ் கூறியுள்ளார். இக் கூற்றில் வரும் "உற்பத்தி என்பதன் பொருள் தெளிவானது. ஆனல் Logo posibl & G) (Reproduction) GT6ör(?6v என்ன? 'ஒரு சமூக உருவாக்கம் தன் உற் பத்திக்குரிய நிலைமைகளை மறு உற்பத்தி செய்யாவிடின் சொற்.காலம் கூட நிலைக்க முடியாது’ என்பது மார்க்சின் கூற்று. இக் கூற்றை மேற்கோள் காட்டி உற்பத்தி இரு வகைப்படும் என அல்தூசர் விளக்கியுள் ளார் அவையாவன.
1 2 pusga (Production) 2 upgradsbuig (Reproduction)

Page 24
884.
பொருள் விளக்கப்படாமல் வெறும் வார்த் தையாகவே உச்சரிக்கப்பட்டு வந்த மறு உற்பத்தி’ என்னும் சொல்லின் விளக்கத்தில் தான் அல்தூசரின் கருத்துநிலை பற்றிய கோட்பாட்டிற்கான திறவுகோல் உள்ளது.
எகை மறு உற்பத்தி செய்ய வேண்டும்?
ஒவ்வொரு சமூகமும் நிலைத்திருப்பத ற்கு அவசியமான மறு உற்பத்திகள் எவை? அவை இருவகையின.
அ) உற்பத்தி சக்திகள் (Forces of pro
duction)
ஆ) இருந்து வரும் உற்பத்தி உறவுகள் (Relations of production) இவ்விரண்டினதும்கூட்டுமொத்த அமைப்பே dibu.55 (yp600 (Mode of production) எனப்படும் எனவே முதலாளித்துவ உற் பத்தி தொடரும் அதேவேளை முதலாளித்துவ உற்பத்தி தொடர்ந்து நடைபெற அவசிய மான உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவு களும் மறு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதே தென் பொருள். பொருள் உற் பத்தி மட்டுமல்ல அதற்குத் தேவையான சமூக நிலைமைகளும் படைக்கப்பட வேண்
டும்.
உற்பத்தி சக்திகளின் மறு உற்பத்தி
உற்பத்தி சக்திகள் மூன்று அம்சங்களைக் கொண்டவை.
* உற்பத்திக் கருவிகள் - யந்திரம் (p5. வியன. V. * மூலப் பொருட்கள் - நிலக் க ரி
பருத்தி, ரப்பர் போன்றவை. 3. மனித உழைப்புச் சக்தி. இம் மூன்றையும் மறு உற்பத்தி செய்வது எப்படி நிகழ்கிறது? ஒரு சிமெந்து தொழிற் சாலையை எடுப்போம். அது சீமெந்தை உற் பத்தி செய்கிறது. ஆனல் அதற்கு தேவை யான யந்திரங்களும் உதிரிப்பாகங்களும் அத்

தொழிற்சாலைச்கு வெளியே உற்பத்தியாகா விடின் சிமெந்து ஆலை நீண்டகாலம் செயற் பட முடியாது. இதே போன்று அதற்கு வேண்டிய மூலப்பொருட்கள் வேறு இடங் களில் இருந்து உற்பத்தியாகி வருகின்றன. களி, கல் எனைய இரசாயனங்களின் உற்பத்தி யின்றி அது செயற்பட முடியாது. தனித்த ஒரு தொழிற்சாலை உதாரணத்தை விரி வு படுத்தி முழுச்சமூகத்தையும் நோக்கின் கருவி களி ன தும், மூலப் பொருட்களினதும் உற்பத்கி இன்றி உற்பத்தி தொடருதல் முடி யாது. உற்பத்தி சக்திகளின் மற்ருெரு அம்ச மான மனித உழைப்பு சக்தியை யார் எவ்வி தம் மறு உற்பத்தி செய்கிருர்கள்? உண்டு, குடித்து, உறங்கிச் சீவன ம் செய்வதால் தான் உழைப்பாளி நாளைய உற்பத்திக்கு தயாராக வருகிறன். இந்த உழைப்பு சக் தியை உருவாக்குவதற்கு அவனும் அவன் குடும்பமும் சீவிக்க வேண்டும். அந்தச் சீவ னம் கூலியின்றிச் சாத்தியமாகாது. கூலி (Wage) கொடுக்கப்படுவதால் உழைப்புச் சக்தி மறு உற்பத்தியாவதை சமூகம் உறுதி செய்கிறது.
கூலி மட்டும் போதுமா?
கூலியை மட்டும் கொடுப்பதால் உழைப் பின் (Labour) மறு உற்பத்தியை நிகழ்த்து தல் முடியாது. உழைப்பாளி உழைக்கும் g5(55 (Competence) a GOLuasir ஆதல் வேண்டும். சமூகம் பல்வேறு திறமைகளை (Skils) கற்றுத் தருகிறது. பலவித தொழில் 565á(5th Lig67565ś(3 b (Jobs and posts) ஏற்றவர்களாக மக்களைத் தயார்செய்வனவே கல்விக்கூடங்கள். உழைப்பாளி செயல் glidine), (Know how) உடையவகை மட்டு மல்ல பொருத்தமான ஒழுக்க விதிகளையும் (Rules of good behaviour) s söp G á s வேண்டும், கல்வி நிறுவனங்களும், குடும்ப மும், மத நிறுவனங்களும் இந்த ஒழுக்க விதி களை போதிப்பதால் உழைப்பாளியைத் தகு தியுடையவனுய் அவை உருவாக்குகின்றன. இந்த ஒழுக்க விதிகளின் மறுபெயர் தான் ஐடியோலஜி அல்லது கருத்து நிலை. இந்தக்

Page 25
கருத்து நிலை கட்டிக்காக்கப்படாமல், பேணப் படாமல் முதலாளித்துவ சமூகம் நிலை பெற முடியாது. உழைப்பாளிகளை அடிபணிந்து போகவைக்கும் இந்தக் கருத்துநிலை தான் அறிவாக ஆராய்ச்சியாக, விஞ்ஞானமாக வேஷம் போடுவதும் உண்டு, தமிழவன் பின் வருமாறு எழுதுகிருர்:
குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் என்ன படிக்கின்றன? எழுத்து, கணிதம் போன்றன கற்றபின்பு, விஞ்ஞானம் போன்றவற்றைத் தொழிற்சாலைகளுக்கு ஏற்றவிதமாகக் கற்கின் றன. சிலர் கிளார்க்குகளாய் போவதற்கும், சிலர் டெக்னிஷியன்களாய் போவதற்கும், சிலர் நிர்வாகிகளாய் போவதற்கும் கற்கின் வனர். ஆகமொத்தம் அவர்களின் தொழிலை (Know how) di)3airpá0Tit.
இந்த மாதிரியாய் "தொழிலைக் கற்கும் போதே அவர்கள் பள்ளிகளிலும் கல்லூரி களிலும் கீழ்பப்டிந்து நடப்பதற்கும் 'நல் லொழுக்க விதிகளையும், அதாவது பின்னல தொழியசாலைகளின் விதிகளுககுக கட்டுப் படும் பயிற்சிகள் அத்தனையையும் தருகின் றனர். ஆசிரியருக்கு-அவர் எனண தப்புச் செய்தாலும் அடிபணிந்து நடத்தல், குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருதல போனற ஆரம் பப் பயிற்சிகள், பின்னர் தொழிலகத்தின் செக்ஷன நிர்வாகிக்கு அவர் என்ன தபடச் செய்தாலும் அடிபணிந்து நடததலாகவும், குறித்தநேரத்தில் வந்து தொழிற்சாலையின் கொள்ளையடிக்கும லாபம குறைவுபடா விகி தத்தில் வேலை செய்வதாகவும் மாறுகின்றன. மேலும் கல்லூரிகளில் நல்ல தமிழ்,ஆங்கிலம் ஆகியவை தொழிலகங்களின் படிப்பறிவற்ற கொச்சைத்தமிழ் பேசும் தொழிலாளா காலி ருந்து தாம மேம்பட்டவர்களாயக் கட்ட சொல்லித்தரப்படுகின்றன. மொத்தத்தில் கிராமப் பள்ளிகள் நகரக் கலாச்சாரங்களைப் புகுத்துவனவாகவும், நகர க் கல்லூரிகள் மேற்தட்டு வாசிகளாய மாணவர்களை அடி மனரீதியில் மாற்றுவனவாகவும பணியாற்று கின்றன. பூர்ஷ்வா அமைப்பு அழியாமல இருக்க் ஏற்படுத்தப்பட்ட பயிற்சி நிலையங்

885
களே - பள்ளிகள், கல்லூரிகள் பிற ஆய்வு நிறுவனங்கள் அத்தனையும். சமீபகாலங்களில் நாட்டில் நடக்கும் தேர்தல்களின் முன்மாதி ரிப் பயிற்சி, கல்லூரிகளிலும் பள்ளிகளி லும் கொடுக்கப்படுகிறது. பொய்யான வாக்குறு திகள், ஜாதி உணர்வு அடிப்படையில் ஒட் டுப் போடுதல், தேர்தல்களால் மாற்றங்கள் நடக்கும் என்று நம்பாவிட்டாலும் அப்படி யொன்று வேண்டும் என்பதான மனநிலை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உருவாக்கப் படுகிறது. (ஸ்டக்சுரலிசம் பக் 197.198) இவ்விதம் உழைப்பு சக்தியின் மறு உற்பத்தி யில் கருத்துநிலையின் பெரும்பங்கு வெளியா கிறது. இது அல்தூசரின் கருத்து நிலைக் கோட்பாட்டின் ஒரு அம்சம் தான். உற் பத்தி உறவுகளின் மறு உற்பத்தியில் மீண் டும் கருத்து நிலையின் விஷ்வரூபம் வெளிப் படும்.
உற்பத்தி உறவுகளின் மறு உற்பததி
உற்பத்தி உறவுகளின் மறு உற்பத்தி என் ருல் என்ன இக்கேளவி சமூகததின் அமை ப்பு பற்றியும் அடித்தளம் (Base) மேற்கட்டு மானம் (Super-Structure) என்னும் பிரபல மான கருத்துக்கள் பற்றியு பரிசீலிக்கும் அவசியத்தை உண்டாக்குகின்றது. சமூக அமைப்பு பற்றி ய மார்க்சின் கீழ்வரும் கூற்று பிரசித்தி பெற்றது.
•சமூகரீதியான உற்பத்தியில் மனிதர்கள் ஈடுபட்டுவரும் போது சில திட்டவட்டமான உறவுகளிலே அவர்கள் சம்பந்தப்படுகிறர் கள். சமூக உற்பத்தி நடக்கவேணடுமானுல்
இந்த உறவுகள் இருந்து தீரவேண்டும் மேலும் இந்த உறவுகள் அவர்களின் சித்தப் படி ஏற்படுபவையல்ல, அந்த உறவுகள் அவர்களின் சித்தத்திற்கு அப்பாற் பட்டவை யாகும். பெளதீக உற்பத்தி சக்திகள் எந்த எந்தக் குறிப்பிட்டமட்டத்திறகு வளர்ந்துள் ளனவோ அந்த மட்டத்திற்குப் பொருத்த மாகவே இநத உறவுகள் அமைகின்றன.

Page 26
886
இந்த உற்பத் தி உறவுகளின் மொத்தத் தொகை தான் சமூகத்தின் பொருளியல் அமைப்பாகும். இந்த உண்மையான அடித் தளத்தின் மேல்தான் சட்டம், அர சிய ல் என்ற மேல்தளங்கள் எழுகின்றன: இந்த உண்மையான அடித்தளத்திற்குப் பொருத்த மாகத்தான் சமூக உணர்வின் திட்டவட்ட மான வடிவங்கள் (அதாவது தத்துவ வடிவங் கள்) அமைந்துள்ளன." ("அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய விமர்சனம்’ என்னும் நூல்) சமூகத்தின் மேற்கட்டுமானத்தின் இயல்புக ளையும், சமூக உருவாக்கத்தில் அதன் பங்கி னையும் மறு உற்பத்தி என்னும் நோக்கில் தான் புரிந்து கொள்ளல் முடியும் என்பது அல்தூசரின் கருத்தாகும்.
கட்டிடம் என்னும் உருவகம்
"அடித்தளம்" "மேற்கட்டுமானம்' என்பன சமூகம் பற்றிய வருணணையை கட்டிடம் என் னும் உருவகத்தால் தருகின்றன. இந்த உரு வகம் முக்கியமானதும் பொருத்தமானது மான மூன்று அனுமானங்களைத் தருகின்றன என்று சொல்கிறர் அல்தூசர். இவை:-
1. இறுதியாகத் தீர்மானிப்பது எது? 2. மேற்கட்டுமானத்தின் சுயத்துவமான்
இயக்கம். 3. அடித்தளத்திற்கும் மேற்கட்டுமானத் திற்கும் இடையிலான பரஸ்பரவினை (Reciprocal action) மேற்கட்டுமானத்தின் பகுதிகளான அரசு, சட்டம், கருத்துநிலை என்பனபற்றி அடுத்து ஆராயப்புகும் அல்தூசர், அரசுபற்றி ஆராய் கிறர். நிலவிவரும் உற்பத்தி உறவுகளை மறு உற்பத்தி செய்யும் பணியில் அரசு பெரும் பங்கை வகிக்கிறது. சுரண்டல் அடிப்படை யான உற்பத்தி நடைபெற அரசின் ஒடுக்கு முறை அமைப்புகள் மட்டும் போதாது. அல்தூசரின் அரசுக்கோடபாட்டில் கருத்து i2h) yu is uiguth - ISA (Ideological State Apparatus) ligalpur of PCD Obà

தாக்கமாகும். கருத்துநிலை அரசுயந்திரத்தை RSA என்னும் ஒடுக்குமுறை அரசு யந்தி ரத்தில் இருந்து வேறுபடுத்தி நோக்கும் போது தான் அல்தூசரின் கருத்துநிலை பற் றிய கோட்பாடு விளக்கமுறுகிறது,
கருத்துநிலை அரசு யந்திரம் - ISA மார்க்சும், லெனினும் அரசு பற்றிச் சில அடிப்படைக் கருத்துக்களை விளக்கிச் சென்ற
gest -
1. அரசு'ஒரு ஒடுக்கும் யந்திரம். 2. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் வர்க் கம் இந்த ஒடுக்குமுறை யத்திரத்தைப் பயன்படுத்தும் 3. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுதலே
வர்க்கப் போரின் நோக்கம். அரசுயந்திரம், படை பொலிஸ், நீதிமன்று கள், சிறைகள் என்பனவற்றையும் பாராளு மன்றம் போன்ற அரசு உறுப்புக்களையும் கொண்டமைவது எனக் கருதப்பட்டது. இவற்றை அல்தூசர் ஒடுக்குமுறை அரசு யந் திரம் என்னும் பெயரால் அழைக்கிருர், RSA யில் இருந்து வேறுபட்ட கருத்துநிலை அரசுயத்திரம் பல நிறுவன வடிவங்கள் ஊடாகச் செயற்படும். அத்தகைய எட்டு நிறுவனங்களை அல்தூசர் குறிக்கின்ருர், 1. மதக் கருத்துநிலை அரசுயந்திரம்
கல்விக் கருத்துநிலை அரசுயந்திரம் குடும்பக் கருத்துநிலை அரசுயந்திரம் சட்டக் கருத்துநிலை அரசுயந்திரம் அரசியல் கருத்துநிலை அரசுயந்திரம் தொழிற்சங்க கருத்துநிலை அரசுயந்திரம் தொடர்புசாதனக் கருத்துநிலை அரசு யந்திரம் பண்பாட்டுக் கருத்துநிலை அரசுயந்திரம் (கலை, இவக்கியம், விளையாட்டு)
8
ஒடுக்குமுறை மட்டுமல்ல ஐடியோலஜியும் ஆட்சிமுறையின் ஒரு கருவி என்பதை விளக் கும் அல்தூசர் இருக்கும் உறவுமுறைகள்

Page 27
நிலைப்பதற்கான கருத்துநிலைகளை மத ம் , கல்வி நிலையங்கள், குடும்பம், சட்டம், அரசி யல், தொழிற்சங்கம், தொடர்புசாதனங் கள், பண்பாடு ஆகியன படைத்தளிக்கின் றன எனக்காட்டுகிருர். அல்துரசரிற்கு முந் திய கால மார்க்சிஸ்டுகளின் அரசுக் கோட் பாட்டில் உள்ள இடைவெளியை அல்துரச ரின் கருத்துநிலைக் கோட்பாடு நீக்கிவிடுகி 0து.
வேறுபாடுகள்
கருத்துநிலை அரசுயந்திரம், ஒடுக்கும் அரசு யந்திரத்தில் இருந்து எவ்விதம் வேறுபடுகி றது என்பதையும் கவனிப்போம்.
1) ஒடுக்கும் அரசுயந்திரம் ஒன்று தான். அது ஒரு  ைம யில் குறிப்பிடப்படும். கருத்துநிலை அரசுயந்திரங்கள் பல. அவை பன்மையில், குறிப்பிடப்படும். 2) ஒடுக்குமுறையந்திரம் "பொதுத்துறை"
என்பதில் அடங்கும். அதாவது படை, பொலிஸ், சிறைக்கூடம் முதலியன பொதுத்துறை சார்ந்தவை. குடும்பம், மதம், கல்வி போன்ற நிறுவனங்கள் முழுமையாக பொதுத்துறை சார்ந்தன
வல்ல :
3) இருவகை யந்திரங்களிலும் ஒடுக்கும் அம்சமும் கருத்துநிலை அம்சமும் உண்டு, பொலிஸ், ப  ைட என்பனவற்றில் கருத்துநிலையும் உண்டு. எனினும் அவற் றின் பிரதான அம்சம் ஒடுக்கு முறை தான். இதேபோல் குடும்பம், கல்வி என்னும் கருத்துநிலை யந்திரங்களில் மறைமுகமானதும் சிலவேளை வெளிப் படையானதுமான ஒடுக்குமுறையும் உண்டு. எந்த அம்சம் பிரதானமானது என்பதே கவனிக்கப்பட வேண்டும்,
4) பலவாக இருக்கும் கருத்துநிலை யந்திரங் களிடையே ஒரு ஒற்றுமையும் இணைவும் உண்டு. தலைமைத்துவம் பெற்றுள்ள -2.65th Gigglia) (Ruling ideology) இந்த ஒருமையைப் பேண உதவுகிறது.
அலை-4

887
5. வர்க்கப்போராட்டம் ஒடுக்கும் அரசு யந்திரத்தின் எல்லைக்குள் அக்கருவி களைக் கைப்பற்றுவதற்கான போராக அமைகிறது எனக் கூறுதல் தவறு. ஒடுக் கும் அரசு யந்திரம் மீதுள்ள அதிகாரம் மட்டும் போதாது. கருத்துநிலை யந்தி ரங்களின் மீதான அதிகாரத்திற்காக வும் வர்க்கப் போராட்டம் நிகழும். சிலவேளைகளில் அதன் உக்கிரமும் தீவி ரமும் கருத்துநிலை என்னும் தளத்தில் தான் வெளிப்படும்.
6. தலைமைத்துவம் பெற்றுள்ள கருத்து நிலை, RSAக்கும் ISAக்கும் இடையி லான இணைவுபடுத்தும் (Intermediation) பணியையும் செய்கிறது.
மேற்கட்டுமானம் கருத்துநிலைகள் மூலம் உற்பத்தி உறவுகளின் மறு உற்பத்தியை
நிகழ்த்துவதை விளக்கும் அல்தூசர் கருத்து நிலைபற்றிய முழுமையான கோட்பாட்டை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறுகிருர், அத்தகைய கோட் பாட்டை ஆழ்ந்த ஆய்வுக்கும், விவாதத் திற்கும் பின்னரே ஏற்கவோ நிராகரிக்கவோ முடியும். அல்தூசர் தெரிவிக்கும் பின்வரும் கருத்தேற்றங்கள் (Thesis) தனிக்கட்டுரை யாக விரித்து எழுதப்பட வேண்டியவை,
1. தனிமனிதன் சமூகத்துடன் கொள்ளும் கற்பனைத் தொடr பின் பிரதிநிதித்து வமே கருத்துநிலை,
2. கருத்துநிலைக்கு,பொருண்மைத்தன்மை (Materiality) 2.6olu ay t p is ay (Existence) daio G).
3. கருத்துநிலை தனிமனிதனைத் தானுய்
udntibp6Ap5). (Ideology interpellates individuals as subjects)
அல்துரசரின் பிறஆய்வுகள் பற்றி அபிப் பிராய பேதம் கொண்டவர்கள் கூட அவ ரின் கருத்துநிலை பற்றிய கோட்பாட்டின் சிறப்பியல்புகளை வரவேற்றுள்ளனர்,

Page 28
பரீசில் இந்தியத் திரைப்ப சில குறிப்புகள்
கிருஷ்ணகுமார்
“இந்தியா தனக்குள் பல நல்ல திரைப் படங்களுக்கான கதைக் கருக்களை (Themes) கொண்டிருக்கிறது’ என கல்கத்தாவில் சத் தியஜித்ரேயுடன் உரையாடும்போது பிரபல இயக்குனர் Remoir குறிப்பிட்டார். இந்தக் கூற்றின் முழுமையை அண்மையில் பரீசில் நடைபெற்ற நடிகர்கள் அமைவில் இந்திய Sail DIT' (Indian cinema through its Stars) என்ற திரைப்பட விழாவில் காணமுடிந்தது. 1937ம் ஆண்டு தொடக்கம் 1984ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட படங்களில் 100 படங்கள் திரையிடப்பட்டன. இந்திய சினி மாவின் வளர்ச்சிப் போக்கையும் தரத்தை யும் ஐரோப்பியர்கள் மதிப்பீடு செய்ய இந்த நிகழ்ச்சி மிகவும் பயன்பட்டது. "புதிய சனி மா'வின் நடிகர்கள்; இந் தி ய பாரம்பரிய ஜனரஞ்சக சினிமாவின் நடிகர்கள்; "புதிய சினிமாவின் வருகையும் வளர்ச்சியும்; இந் திய சினிமா முன்னுேடிகள்; தென் இந்திய ஜனரஞ்சக சினிமா என ஐந்து பெரும் பிரிவு களுக்குள் இந்த நூறு படங்களும் வகுக்கப் பட்டு காண்பிக்கப்பட்டன. m
சபானு ஆஸ்மி, சுமித்திரா சட்டர்ஜி, கோபி, சசிகபூர், சிமிதா படேல், ஓம் பூரி, நஸாருதீன் ஷா, சுஹாசினி ஆகியோர் நடித்த இருபத்தைந்துக்கு மேற்பட்ட படங்கள் *புதிய சினிமாவின் நடிகர்கள் என்ற அமை வில் காண்பிக்கப்பட்டது. பிருதிவிராஜ்கபூர், அமிதாபச்சன், திலீப்குமார், உத்தம் குமார், மீனுகுமாரி, நர்கீஸ், வஹீ தா ரஹ்மான், பால்ராஜ் சஹானி ஆகியோரின் படங்கள் ஜனரஞ்சக சினிமா நடிகர்கள் வரி சையில் வந்தன. இவற்றுக்குள் சத்யஜித்ரே, மிருணுள் சென், சியாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், கீதன் மேத்தா தருன்

மஜும்தார், கெளதம் கோஷ்,கோவிந் நிஹா லினி, பிரேமகரந், அபர்ணு சென், கே. சி. ஜோர்ஜ், வஸ்மி, கசரவல்லி, பத்மராஜன், ஜேம்ஸ் கிப்U, கிரிஷ் கர்ணுட், சசிதரன், பசீல், சாந்தாராம், குரு தத் ஆகிய திறமை யான இயக்குனர்கள் இயக்கிய பல படங் களும் அடங்குகின்றன.
இந்தியாவின் "புதிய சினிமா' படங்கள் பார்  ைவ ய |ா ள ர் கள் மத்தியில் நல்ல பாதிப்பை ஏற்படுத்தின முன்பு குறிப்ட் டதுபோல் மொத்தமாக இந்த விழாவில் காண்பிக்கப்பட்ட படங்களின் நடிகர்கள, இயக்குனர்களின் திறமைகளிலும் பார்க்க கவனத்தை ஈர்த்த விஷயம் படங்களுக்கான கருக்களே. பல்வேறு வித்தியாசமான சமூ கப் பார்வைக , ம், கருத்தாழமும் மிக்க கருக்கள் அவை. காலனிய இந்தியாவில் இந் திய, ஆங்கிலேய சமூகங்களுக்கிடையே ஏற் பட்ட மானிட உணர்சசி, தேசிய விழிப் புணர்வு, தனி மனிதர்களின் உள முரண் பாடுகளும் விசாரணைகளும் இந்தியாவின் சமூக பிரச்சினைகள், பெண்களின் பிரச்சினை கள், காதல், வர்க்கப் போராட்டம், இதிகா சங்கள் என பல்வேறு வித்தியாசமான கதைக் கருக்களைக் கொண்டிருந்தன.
மற்ருெரு முக்கிய அம்சம், எழுபதுகளிலி ருந்து இந்திய சினிமாப் பரப்பில் "புதிய சினிமா ஆரோக்கியமான வளர்ச்சிப் போக் கைக் கொண்டிருப்பதை காணமுடிந்தது. குறிப்பாக 80 இலிருந்து 84 வரை அதிக அளவில் தரமான "புதிய சினிமாப் படங்கள் வெளிவந்திருந்தன. மொழி வரிசை யில் இவைகள் ஹிந்தி, வங்காளம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலே இடம் பெற்

Page 29
றன். ஏற்கெனவே புதிய சினிமாவின் தோற்றம் வங்காள மொழியில் இருந்தாலும் சத்தியஜித்ரே, மிருனள் சென்° போன்றேர் தமது புதிய படங்கள் அனேகமானவற்றை ஹிந்தியில் எடுத்து வருவது குறிப்பிடத்தக் கது. இந்த மொத்தி வளர்ச்சியில் தமிழ் இனிமா ஐந்து சதவீத வளர் ச்சியை கூட அடையாதது மனதை கவலை கொள்ளச் செய்கிறது. ‘காந்தார்’ (Ruins) UL. - (pILவின் போது படத்தைப் பற்றிய கலந்துரை பாடலுக்கு வந்திருந்த மிருனுள் சென் பிரெஞ்சுக் கலைஞர்களுடன் சேர்ந்து ஒரு படம் எடுக்கப் போவதாகத் தெரிவித்தார். அதில் ஓம் பூரி நடிப்பார் என்றும் ஓம் பூரி உலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் என்றும் கூறி யது எம்மை சற்று நிமிர்ந்து உட்கார வைத்
தது
GypsT GINGAJ BIL'4 “Les Stars du Cinema Indian”, “Cinema Indian Taord 305 aoo! ரண நூல்கள் பிரெஞ்சு மொழியில் வெளி வந்தன. மொத்தத்தில் ஐரோப்பாவின் கலைக்கூடமான பிரான்சு இந்தியக் கலைகளை யும் இந்திய சினிமாவையும் நன்முக மதித்து வருவதைக் காணக்கூடியதாக இருந்தது.
அடூர் கேபாலகிருஷ்ணனின் இரு படங்கள் கொடியேற்றம் (1978); வயதுக்கு ஏற்ற மனேவளர்ச்சியற்ற ஒருவன் எப்படி வாழ்க் கையை புரிந்து கொள்கிருன் என்பதை பற் றியது இப்படம். சங்கரன் குட்டிக்கு (கோபி) வயது இருபத்தைந்துக்கு மேல் இருக்கும்; சூதுவாதற்றவன். ஆனல் வாழ்க்கையை அவனுடைய வயதை ஒட்டி அவனல் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த வயதிலும் அவனுடைய நண்பர்கள் சிறு குழந்தைகள் தான் அவர்களுடன் சேர்ந்து பட்டம் விடு வது அல்லது அயலூர்களில் நடக்கு ம் கோயில் திருவிழாக்களுக்கு சென்று நாட் கணக்கில் தங்கி விடுவது; எங்காவது வேடிக் கை நிகழ்ச்சிகளில் அப்படியே ஒன் ք) մ போய் விடுவது சங்கடங்கள் ஏற்படும்

889
போது எல்லோரும் தப்பிவிட அப்பாவியான இவன் மட்டும் மாட்டிக் கொள்வது இப்படி யான குணும்சங்களைக் கொண்டவன். இவ னுக்கு மிகப் பிடித்த விடயம் சாப்பாடு. இவ னுக்குப் பொறுப்புவரும் என்று எண்ணி ஒரு கல்யாணம் செய்து வைக்கிருர்கள். அதிலி ருந்து தான் படம் வளர்ந்து செல்கிறது.
சங்கரன் குட்டியைச் சுற்றி நான்கு பாத் திரங்கள்; அவனுக்கு உணவு, உடை, பாது காப்பு தந்து வரும் ஒரு சகோதரி, அவனு டைய நல்ல குணத்தை, பிறருக்கு உதவும் மனப்பான்மையை புரிந்த ஒரு இளம் விதவை; அவனுடைய மனைவி; இவனை தன் னுடன் உதவியாளனக வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடைமுறையால் புரியவைக் கும் ஒரு லொறி சாரதி ஆகியோராகும்.
சங்கரன் குட்டி மீது அன்பு செலுத்தும் விதவை ஒரு ஆணுடன் உண்டான உற வால் கர்ப்பிணியாகி சமூகத்திற்கு பயந்து தற்கொலை செய்து கொள்கிருள். இவனுக்கு பாதுகாப்பளித்த சகோதரியும் திருமணம் செய்து தனியாகப் போய்விடுகிருள். வேலையு மில்லாமல் வீட்டுக்கும் ஒழுங்காக வராமல் திருவிழா வேடிக்கைகளில் காலத்தைக் கடத் திவந்த சங்கரன் குட்டியின் பொறுப்பற்ற தன்மையால் அவன் மனைவியும் குழந்தையு டன் தன் தாய்வீடு சென்றுவிடுகிருள். இந் தச் சம்பவங்கள் சங்கரன் குட்டியின் மன தை நிறையவே பாதித்துவிடுகிறது. இதன் பின்பு தான் வாழ்க்கையை கொ ஞ் சம் கொஞ்சமாக புரிய ஆரம்பிக்கிறன்.
தனக்கு ஒரு வேலை வேண்டும். தானும் மற்றவர்களைப் போல வாழ வேண்டும என முயற்சிக்கிருன். பல தோல்விகளின் பின் அவன் சந்திக்கும் ஒரு லொறிச்சாரதி அவனை தனது லொறியில் உதவியாளனுக சேர்க்கிறன். லொறிச் சாரதியின் கடுமை யான உ  ைழ ப்பும், தனது குடும்பத்தில் கொண்டுள்ள அக்கறையும், தன் குழந்தை களில் காட்டும் பரிவும் கண்டிப்பும், அவனது வெளிநடவடிக்கைகளும் சங்கரன் குட்டியை

Page 30
890
உற்றுநோக்க வைக்கின்றன. இவைகள் அவ னது மனதில் ஆழமான பாதிப்புகளை ஏற் படுத்தி விடுகிறது.
நீண்ட நாட்களின் பின் தன் மனைவியைப் பார்க்கச் செல்கிறன். முதல்முறை அவ னுக்கு வரவேற்பு இருக்கவில்லை. மீண்டும் தன் குழந்தைக்கு உடுப்பு வாங்கிக் கொண்டு போகிறன் இப்போது அவன் தங்கவுமில்லை சாப்பிடவுமில்லை. பார்சலேக் கொடுத்துவிட்டு உடனே லொறிக்கு திரும்பி விடுகிமுன் இப் போது மனைவிக்கு அவன் மீது நம்பிக்கையும் அன்பும் பிறக்கிறது. அவன் வரவுக்காக ஏங் குகிருள்.
ஊரில் கோவில் கொடியேற்றம். வீட்டில் தாய் கோவிலுக்குப் போய்விட அவள் தனி யாக தனது குழந்தையை த ர ல |ா ட் டி க் கொண்டிருக்கிருள். பின்னணியில் கோவிலில் நடக்கும் கதகளிக் கூத்து பாடலின் வரிகள் இவள் காதில் கேட்கிறது. ‘இந்த இரவு சந் திரனல் ஒளியேற்றப்பட்டு விட்டது எங்கே என் அன்புக்குரியவனை இன்னும் காணவில் லையே?’ என்ற அந்த வரிகளில் லயித்துக் கொண்டிருக்கிருள். மனதுக்குள் சோகமும் சந்தோஷமும் கலந்த ஒரு ஏக்கம். அந்த வேளையில் கையில் அவளுக்கான ஒரு புதுச் சேலையுடன் சங்கரன்குட்டி வீடடுக்குள் நுழைகிருன், அந்த ஒரு கணத்தில் அவளுக்கு ஏற்படும் சந்தோஷத்தையும், நிறைவையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. சந்தோ ஷத்தால் அழுதுகொண்டே அவனை இறுகக் கட்டிக் கொள்கிருள். பின்னணியில் கொடி யேற்ற விழாவின் வாண வேடிக்கைகளின் வெடிச்சத்தம் பலமாக ஒவிக்கிறது. ஆம், அவனது வாழ்க்கைக்கும் கொடியேற்றம் அன்று தானே.
அடூர் கோபாலகிருஷ்ணனின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. நாம் சாதாரண மாக தெருவோரங்களில் காணும் ஒரு பாத் திரத்தின் உள்மன உணர்வுகளை மிக நன் முக வெளிக்கொணர்ந்திருக்கிருர், கே வில் திருவிழாவைக் காண்பிக்கும் போதும், மரத்

தில் தொங்கிவிட்ட பட்டத்தை காண்பிக் கும் போதும் ஒளிப்பதிவின் சிறப்பைக் காண முடிகிறது.
லொ றி யும் லொறிப்பயணமும்; அது கிராமத்திலிருந்து நகருக்கு வரும்போது, மலைகளுக்கிடையால் வந்து சேரும் நவீன பாடல் இசைகளும் வாழ்க்கையை ஒரு பய ணமாக குறியிட்டு காட்ட முயல்வதைக் காண முடிகிறது. சங்கரன் குட்டியின் சாதா ரண செய்கைகள் எமக்கு நகைச் சுவையாக இருக்கும் அதே வேளையில் பட முடிவில் அனைத்து செயல்களும், வயதுக்கேற்ற மனே வளர்ச்சியற்ற ஒருவனைப்பற்றி ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது. உதாரணத்திற்கு ஒரு சிறு சம்பவம்: சங்கரன்குட்டி திருமணமான புதிதில் மனைவியுடன் வெள்ளே வேட் டி, சட்டை அணிந்து உறவினர் வீட்டுக்குச் செல் கிழுன். (வழக்கமாக அவன் சேட் அணிவ தில்லை தோளில் மட்டுமே போடுவான்) வழி யில் அவனது நண்பர்கள்-இளம் சிறுவர்கள் மரத்தின் உச்சியில் தொங்கிவிட்ட பட்டத் தை எடுத்துத் தரும்படி கேட்கின்றனர். மனை விக்கு கோபம் வருகிறது. சிறுவர்களைப் பேசிக்கலைத்துவிடுகிருள்,சங்கரன்குட்டிக்கோ மனது சங்கடப்படுகிறது. மெது .ாக சிறு வர்களிடம் சென்று பிறகு வந்து எடுத்துத் தருவதாக இரகசியமாகக் கூறுகிறன். சிறுவர் களுக்கு சந்தோஷம். மனைவியை கேலிபண்ணு கின்றனர். அடுத்த காட்சியில் வேகமாக வந்து கொண்டிருந்த லொறியொன்று அவ னது உடையெல்லாம் சேற்றை வாரிக் கொட்டிவிட்டுப்போக, அதைப் பற்றி சிறி தும் கூட வருத்தப்படாமல் எந்தா ஸ்பீடு என லாறியின் வேகத்தில் மலைத்துப்போய் நிற்கிருன், மனைவிக்கு இவனை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. தென் இந்தியாவில், குறிப்பாகக் கேரளாவில் கோபி ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதை இதில் நிரூபித்துள்ளார். தன்னைப் பிரியமுடன் கவனிக்கும் அந்த இளம் வித வை இறந்தபோது மதிலோரம் நின்று அழும். போதும் சரி மற்  ைற ய நடவடிக்கை

Page 31
களின்போதும் சரி, கோபி தனது பாத்திரத் தை மிக நுண்மையாகப் புரிந்து தனது கலைத் திறமையை வெளிக்கொணர்ந்துள்ளார். மிகைப்படுத்தலோ, Melodramatic காகவோ இல்லாது மிக இயல்பான வெளிப்பாடுகளை தருகிறர். ஒரு தாவரவியல் பட்டதாரியான இவர், அமெச்சூர் நாடகக் கலைஞனுக 1957-ல் தொடங்கி 1972-ல் அடூர் கோபால கிருஷ்ணனின் 'சுயம்வரத்'துடன் "புதிய சினிமா'வுக்கு அறிமுகமாகினுர். மிக வித்தி யாசமான பல பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்யும் ஆற்றல் கொண்டவர். 'யவனி கா’வில் (K.C. ஜோர்ச்-1982) மிகமோச மான நடத்தையுள்ள போக்கிரியாகவும், ** அக்கரை'யில் (K.N. சசிதரன்-1984) ஒரு மத்தியதர வர்க்க தாசில்தாராகவும் வந்து பல மாறுபட்டி பாத்திரங்களை மிக இயல்பாகச் செய்துள்ளார்.
முகமுகம் (1984):
ஐம்பதுகளில் கேரளாவில் ஆதிக்கம்பெற் றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பின்பு தனது புரட்சிகர குணும்சங்களை இழந்து இந்திய மாக்ஸிஸ்ட் கட்சியாக மாறியது. அதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்துள் பல்வேறு போக்குகள் தொடர்ந் தன. இந்தக் காலகட்டத்தில் இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் தீவிர தொழிற்சங்க 9uiggot U ITas (Militant Cadre) 6/Tybj54 ஒருவரின் முற்பகுதி, பிற்பகுதி வாழ்க்கை யினைச் சித்திரிக்கிறது இப்படம்.
ஒரு ஒட்டுத் தொழிற்சாலையின் வேலை நிறுத்தத்துடன் கதை ஆரம்பிக்கிறது. தொ ழிற்சாலை நிர்வாகம் தொழிலாளரின் கோரிக் கையைப் புறக்கணித்து வேலைநிறுத்தத் திற்கு முக்கிய காரணரான இந்தக் கம்யூ னிஸ்ட் இயக்குனரை அடியாட்கள் வைத் துத் தாக்குகிறது. பதிலுக்கு இவர் தொழிற் சாலை முதலாளியைக் கொலைசெய்துவிட்டுத் தலைமறைவாகிவிடுகிறர். இதுவே படத்தின் முற்பகுதி. தலைமறைவாகிய இவர், சுமார் பத்து வருடங்களின் பின் தனது வீட்டுக்கு

891
வருகிறார். இப்போது இவர் நல்ல குடிகா ரர்; எப்போதும் வெறி. வாழ்க்கையில் எது வித பற்றும் இல்லாமல் ஒருவகை சுய அழிவு (self-destructive) குணும்சத்தைக் கொண்ட வராக மாறியுள்ளார். இந்த நிலையில் இந் திய கம்யூனிஸ்ட் கட்சி தன் புரட்சி க ர குணும் சங்களை இழந்து திரிபுவாதக்கட்சியாக மாற ஆயத்தங்கள் செய்துகொண்டிருக்கி றது. ஒரு நீண்டகால தலைமை இயக்குநர் என்ற வகையில் இவரும் அவர்களது தீர்மா னத்திற்குக் கையெழுத்திடும்படி கேட்கப் படுகிஞர். இவருக்குத்தான் இப்போ எதி லுமே பற்றில்லையே. குடிக்காக இவர் தீர்மா னத்திற்குக் கையெழுத்திட்டுவிட்டு வருகி முர். அப்போது இவரிடமே சிறுவனக அரசி யல் பயின்ற, இவரிடம் மிக நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருந்த அந்த புதிய, இளைய தலைமுறை இளைஞனுல் கொல்லப்படுகிறர். கட்சி உடனே இவரைத் தியாகியாக்கி ஊர் வலம் வைத்துத் தன்னை வளர்த்துக்கொள் கிறது.
அடுர் கோபாலகிருஷ்ணனின் படங்கள் அநேகமாக தனி மனிதனின் உள்மன உணர் வை விசாரணை செய்வதாகவுே (Psycho analysis) அமைகின்றன. இப்படமும் அந்தக் கருத்தைக் கொண்டதாக அமைந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட விடயமும் பாத்திர மும் சற்று வித்தியாசமானதும் மிக ஆழமா னதுமாகும்.
இப்படத்தில் இருவிடயங்கள் ஆராயப் படுகின்றன. கட்சியை முழுமையாக நம்பித் தனது சுயநல வாழ்வைத் துறந்து சமூக மாற் றத்திற்காகப் புறப்பட்டவர் கட்சி திரிபு வாதப் போக்கிற்குத் திரும்பும்போது எது வுமே இல்லாமல் வெறுமைக்குத் தள்ளப்படு கிருர், பின்பு அவருக்கே அவருடைய மிகுதி வாழ்க்கை பிரச்சினையாகி விடுகிறது. அடுத் தது மனதுள் இயல்பாக எழும் உணர்வுகளை கட்சியிடமும் மக்களிடமும் நன்மதிப்புடன் இருக்கவேண்டும் என்பதற்காகக் கட்டுப் படுத்திக் கொள்கிருர், இந்தப் பலவந்தமான

Page 32
899
கட்டுப்பாடு மனது சோர்வடையும்போது, தள்ளாடும்போது எல்லாவற்றையும் உடைத் துக்கொண்டு கிளம்புகிறது. இதற்கான ಶರ! வுகள் படத்தில் காட்டப்படுகின்றன. இவ ருக்கு ஏற்கெனவே குடிப்பழக்கம் இலேசாக உண்டு. இதை வெளியுலகக்கு மறைக்கிறர். அதேபோல் இவருக்கு விருப்பமிருந்தும் இவ ரைக் காதலித்த, அரசியல் ஈடுபாடுள்ள அந் தப் பெண்ணை உரம்பத்தில் புறக்கணிக்கி றர். ஆனல் வேருெரு இடத்தில் இவர் காயப்பட்டிருக்கும்போது உதவிசெய்யும் ஒரு சாதாரண பெண்ணை அவள் உடலில் விரும்பி மணந்து கொள்கிருர். அதன்பின்பு இந்தப் பெண்ணையும் கர்ப்பிணியான நிலை யில் விட்டு தலைமறைவாகிவிட்ட நிலையில் வேருெரு பெண்ணின் சிநேகமும் உருவாகி விடுகிறது. மூன்று பெண்களுடன் தொடர் பிருந்தும் ஒரு பெண்ணுடனும் ஒழுங்கான குடும்பவாழ்வு இருக்கவில்லை. தந்தையின் அன்புக்காக அவர் மகன் ஏங்கும்போது இவ ரோ அதுபற்றிய எந்தச் சலனமும் இல் லாமல் குடியிலேயே மூழ்கிவிடுகிறர்.
1956-ல் இருந்து இன்றுவரை அநேகமாக ஒள் டிருக்கும் அந்த மொழிப்பிரச்சினையை, பிரதேச நீ யஸாக அணுகியிருக்கிறர்கள் ? ஒருவருமில்லை. கொள்பவர்களுக்கு அது சிறிய விஷயம். தன் கால கள் எல்லாம் இவர்களுக்குப் பிற்போக்கான பாட இனத் தேசியம். ஐக்கியம் என்ருல் இங்கு ஒர் இ மொழியுரிமை, சமஷ்டி ஆட்சி எல்லாம் என் ஆ வளர்ச்சிக்கும் தேவையான அடிப்படைத் தேவைக அதற்காக அடிமைத்தனத்தை ஆதரிப்பவனுமல்ல,
an a தேசியம் பேசியவர்கள், ஓர் இனம் நா கொண்டுதான் இருந்தார்கள். தேசியம் என்ருல் திக் கடத்தி அதிலிருந்து தப்ப முயல்பவர்களின் ஆ தேசியத்தை எதிர்ப்பதல்ல. அதை அறிந்தும் மறு வர்கள்தான், அந்தத் துணிவற்ற தன்மையைத்தா டிருக்கிறர்கள்.

இப்படத்தை எடுத்த எடுப்பிலேயே ஒரு கம்யூனிஸ எதிர்ப்புப் படம் என்று சிலர் றிவிடக்கூடும். ஆனல் அப்படியல்ல. கம்யூ எனிசம் பற்றிய கொள்கைகள் எதுவுமே இங்கு விமர்சிக்கப்படவில்லை. இந்த இயக் குநர் போன்ற பாத்திரங்கள் இன்றும் நம் மத்தியில் வாழ்கின்றன. அரசியல் இயக்கங் களில் ஈடுபாடுள்ளவர்கள் பலர் இத்தகைய பாத்திரங்களை நிச்சயம் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். ஆனல் அவர்களின் மன உணர்வுகளையும் போக்குகளையும் பற்றி ஆழமாகச் சிந்தித்திருக்க மாட்டார்கள். இப்படம் அத்தகைய ஒரு நபரின் உளவியல் போக்கை விசாரணை செய்கிற்து.
படம் கலையம்சத்துடன் எடுக்கப்பட்டிருக் கிறது. கம்யூனிஸ்ட் இயக்குனராக (கங்கா) நடித்தவர் பாத்திரத்தின் தன்மையை நன்ற கப் புரிந்து நடித்திருக்கிறர். உரையாடல் களுக்கு முக்கியத்துவம் இல்லாமல், சம்பவங் களினுல் கதை நன்முகக் கொண்டுசெல்லப் படுகிறது. அடூர் கோபாலகிருஷ்ணனின் திற மைபற்றி அதிகமாக வியக்கவைக்கிறது இப் tull-lb. 大
hans
வொரு தமிழனது மனத்தையும் அரித்துக்கொண் ர்ணயப் பிரச்சினையை எத்தனை எழுத்தாளர்கள் சீரி இங்கு பெரிய எழுத்தாளர்கள் என்று நினைத்துக் த்துக்கேற்ப பாரதியார் பாடிய சுதந்திரப் பாடல் ல்களாகப் படலாம். தேசியம் என்ருல் இங்கு ஒர் இனத்தின் ஆதிக்கம். என்னைப் பொறுத்தவரையில் பூன்மீக வளர்ச்சிக்கும், என் இனத்தின் ஆன்மீக ள். எனக்கு வகுப்புவாதம் பிடிப்பதில்லை. ஆணுல்
டற்ற பிரசைகளாக ஆக்கப்பட்டபோது பார்த்துக் இன்று. இன்றைய நிலையில் பிரச்சினையைக் கடத் பூயுத Pாக ஆகிவிட்டிருக்கிறது. சமஷ்டி கேட்பது ப்பவர்கள், அதை ஒப்புக்கொள்ளத் துணிவற்ற ன் இன்று இங்கு சிலர் முற்போக்குவாதமாக்கி விட்
மு, தளையசிங்கம் 1963, ஜனவரி

Page 33
உள்ளத்தில் உண்மையொள
அ. யேசுராசா
*யேசுராசா என்னேடு மினக்கெடுகிற அளவுக்கு அவருடன் நான் "மினக்கெட" விரும்பியதில்லை. விரும்பப் போவதுமில்லை" என்று தான் சொல்லியதற்கு முரண்பா டாக, டானியல் "மினக்கெட்டு" எனக்கு எழுதிய பதிலில், உருப்படியானதாக ஒன் றுமே இல்லை.
1. அ) "கிட்டத்தட்ட" என்ற தனது சொற் பிரயோகத்துக்கு அவர் தரும் விளக்கம் குழந்தைத்தனமானது. அந்தச் சொல் திட்டவட்டமாக ஒன்றைக் குறிக்காது எனினும், பெரிய வித்தியாசத்தையும் கொண்டிருக்க முடியாது. உதாரண மாக, “கிட்டத்தட்ட யாழ். பஸ் நிலை யத்திலிருந்து வின்ஸர் தியேட்டரடியள வான தூரம் ஆஸ்பத்திரி வீ தி யா ல் கிழக்கு நோக்கிச் சென்ருல், கச்சேரியை அடையலாம்" என்று ஒருவர் சொல்ல முடியாது. ஏனெனில் தூரத்தில் பெரிய வித்தியாசமுண்டு. இதைப்போலத்தான் *" கிட்டத்தட்டப் பதினைந்து வருடங்க ளுக்கு முன்னர் ..."என்று அவர் சொல் வதையும் பார்க்கவேண்டும். மிகவும் விட்டுக் கொடுத்துப் பார்த்தாலும் - ஒருவருடம் கூட்டிப் பதினறு வருடங்க ளெனப் பார்த்தால், 1969-ம் ஆண்டெ னவும், ஒரு வருடம் குறைத்துப் பதி ணுன்கு வருடங்களெனப் பார்த்தால் 1971-ம் ஆண்டெனவும்தான் கொள்ள வேண்டும். எப்படிப் பார்த்தாலும் எனது வாதம் பலவீனப் படாது. ஏனெ னில் 1974 மார்கழிவரை பதினுெரு கதைகளை மட்டுமே எழுதியுள்ளேன் என்பதற்கு 1974-ல் வெளிவந்த எனது நூலின் என்னுரையே சான்று பகர் கிறது. டானியல் சொல்வதுபோல் பதி னேந்து கதைகளை அக்காலத்தில் நான் காட்டியிருக்க முடியாது. அதன்மூலம், அவர் சொல்வது பொய் என்ருகிறது

ரி உண்டாயின்.
ஆ) "கிட்டத்தட்ட பதினைந்து வருடங் களுக்கு முன்னர் ' என முதலில் குறிப் பிட்ட அவர் பிறிதோ ரிடத்தில், "...இது நடந்து பதினைந்து வருடத் துக்குப் பிறகு.’என்று திட்டவட்ட மாகத்தான் குறிப்பிடுகிருர் ! அது எப் աւգ ?
இ) என்னிடமிருந்து தனது கதைகளை எடுத்துச்சென்ற காலம், ஏறக்குறைய இவருடைய அலேயின் பிறப்புக் காலத் தோடு ஒட்டி வருமெனில் அவைகளில் வெளியான கேலியும், கிண்டலுமான விமர்சனத் துணுக்குகளிலிருந்து பார்த் கால், இவரது உண்மை மனப்போக் கைக் காணமுடியும் " என்றும் ஓரிடத் தில் எழுதுகிருர், இதன்படி நான் அவரி டம் கதைகளைக் காட்டிவிட்டு எடுத்துச் சென்றதாக அவர் கூறும் காலததை, “அலை வரத்வதாடங்கிய காலத்தை யொட்டியதாகச் சொல்கிருர், "அலை" யின் முதலிதழ் 1975 காாத்திகையில் வெளிவந்தது. இங்கு மறுபடியும் ஒரு முரணபாடு. 1974 மாகழியிலேயே எனது சிறுகதைத் தொகுப்பு வெளி வந்துவிட்டது. அபபடியானல் 1975 கார்த்திகையை ஒட்டிய காலங்களில் நான் எவ்வாறு அவரிடமிருநது எனது கதைகளை எடுத்துச் செல்ல முடியும்? ஒரு பொய்யை நிரூபிக்கப் பிறிதொன்றைச் சொல்லப்போய், டானியல் மேலும் பரி தாபமாகக் குழம்புகிருர் !
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்ட கும் " என்ற "பாரதி'யின் வரிகளை இங்கு நினை வூட்ட விரும்புகிறேன்.

Page 34
894
ஈழமுரசின் நேர்மையீனம்
கே. டானியலின் அவதூறுகள் பல நிறைந்த பேச்சொன்று, மிகுந்த முக் கியத்துவத்துடன் 1-12-85 ஈழமுரசு வாரமலரில் வெளியிடப்பட்டிருந்தது. அதன் அடியில், சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அனுப்பினுல் பிரசுரிக்கப்படு மென்று ஆசிரியர் குறிப்பும் காணப் பட்டது. என்னுடையவும், என். கே. ரகுநாதனுடையவும் ப தி ல் க ள் 15-12-85லும், டானியலுக்குச் சார் பான ‘முக்கண்ணனின்" கட்டுரை 22. 12-85லும், டானியலின் பதில் 29-12-85லும், டானியலிற்குச் சார் பான கே. ஆர். சிவலிங்கத்தின் கட் டுரை 5-1-86லும் பிரசுரிக்கப்பட் டன. இறுதியில் வந்த இரு கட்டுரை களிற்குமுரிய எனது விரிவான - பதி லொன்று, "உள்ளத்தில் உண்மை யொளி உண்டாயின் ." என்ற தலைப்பில் 7-1-86ல் ‘ஈழமுரசு’ ஆசி ரியரிடம் சேர்ப்பிக்கப்பட்டது.
இரண்டு கிழமைகளின் பின்னரும் அது வெளியிடப்படாததில் விசா ரித்தபோது, வெளிவருமென ஆசிரி
osa
2. முதலில் தனது வீட்டிற்கு வந்து நான் கதைகளைக் காட்டியதாகச்சொன்னவர், இப்போது "புதுக்கதை யொன்றைப் பேராதனைக் களத்தில் சொல்கிறர். இதில் அரைவாசிதான் உண் ைம. தொலைபேசி அழைப்பொன்றை எடுப்ப தற்காக அவர் பேராதனைத் தபாற்கந் தோருக்கு வந்தது உண்மை; அங்கு நான்கைந்து கையெழுத்துப் பிரதிகளை நான் படிக்கக்கொடுத்ததாகச் சொல் வது பொய். அவர் வந்ததோ திடீ ரென்று. ஆனல் அவர் வருவாரெனக் கதைகளைத் தயாராகக் கந்தோரில், நான் வைத்திருந்தது மாதிரியல்லவா

யர் கூறினர். ஆனல், அடுத்தடுத்த கிழமைகளிலும் அது வெளிவரவில்லை. இது தொடர்பாக விசாரித்தபோதும் அது வெளியிடப்படுமெனவே ஆசிரி யர் மீண்டும் கூறியிருக்கிருர், ஆணுல், சுமார் இரண்டு மாதங்களாகியும் அது வெளியிடப்படவேயில்லை.
"ஈழமுரசின்"- பத்திரிகா தர்மத் துக்கு மாருன-நேர்மையீனம்'இங்கு வெளிப்படுகின்றது. "ஈழமுரசு’ ஆசி ரியர் எஸ். திருச்செல்வத்தின் கடந்த காலக் "குத்துக்கரணங்களை'ப் பலரும் அறிவர். அலை-22வது இதழிலும், இவரது "குளறுபடிகள்' பற்றிக் குறிப் பிடப்பட்டிருக்கின்றது. 'தினகரன்' பத்திரிகையில் எழுத்தாளர்கள் பல ரைப் பற்றிய அவதூறுகளை, இவர் முன்பு எழுதியிருக்கிருர், தனக்கு வேண்டியவர்களிற்குப் பரந்த விளம் பரம் கொடுப்பதும், வேறு சிலரை அவமானப்படுத்த முயல்வதும்தான் இவரது எழுத்தின் தர்மம் !
- அ. யேசுராசா
இவர் கதைவிடுகிறர் 1 சாதாரணமாக, கையெழுத்துப் பிரதிகளைக் கந்தோரில் கொண்டுவந்து வைக்கவேண்டிய தேவை யென்ன ? புத்தகம், சஞ்சிகையென்ருல் சொல்லலாம், ஒய்வுநேரத்தில் வாசிக் கக் கொண்டுவந்திருக்கலதுமென.
'' . . . . . . யேசுராசா, நான் எப்போதா வது என்னுடைய கதைகளைத் திருத்தித் தரும்படியோ, பார்வையிடும்படியோ டானியலிடம் கொடுத்ததே கிடை. யாது ' என்று ஒரு இடத்திலேனும் குறிப்பிடாதது ஏன் ? தவறுதலாக விடப்பட்டிருக்கிறதா அல்லது வேண்டு

Page 35
மென்றே இது தவிர்க்கப்பட்டிருக்கிற தா?’ எனக் கே. ஆர். சிவலிங்கம் கேட் கிருர்.
தனது வீட்டிற்கு வந்து கதைகளைக் காட்டிப் பத்துக் கதைகளைத் தெரிந்து, திருத்தியும் தரவேண்டுமென நான் கேட்டதாக டானியல் சொல்கிருர், அவரது வீட்டிற்கு ஒரு தடவைகூட நான் சென்றிராததைத் தெரியப்படுத்தி யுள்ளேன். வீட்டிற்கே நான் சென்றி ராதபோது, கதைகளை எப்படிக் காட்டி யிருக்க முடியும்? டானியல் பொய் சொல்கிருர் என்பது அதில் தொக்கி நிற்பதைப் புரிந்துகொள்ளவும் திறமை யில்லாதவரா, சிவலிங்கம் ? வாழைப் பழத்தை உரித்துத் தந்தால்தான் இவ ருக்குச் சாப்பிடத் தெரியும்போலும் !
:னது படைப்புகளைப் போயும் போ யும் டானியலிடம் காட்டித் திருத்த வேண்டிய நிலையில், நான் இல்லை; பிற ருடைய படைப்புகளைத் திரு த் தி க் கொடுக்கும் தகுதியைக் கொண்டவரா கவும், டானியல் இல்லை. உண்மையில், வேருெருவரைக்கொண்டு தனது எழுத் துச்களின் பலவீனங்களைத் திருத்தவேண் டிய அவலநிலையில், அவர்தான் இருந் திருக்கிருர் என்பதை, எழுத்தாளர் என் கே. ரகுநாதனின் கட்டுரை அம் பலப் படுத்துகிறது. அன்றுமட்டுமல்ல இன்றும் அதே நிலையிற்ருன் இருக்கி முர் என்பதற்கு, தற்போது வந்துள்ள அவரது அடிமைகள் நாவலே சான்று. ஏராளமான உதாரணங்களைக் காட்ட லாம். வகைமாதிரிக்குச் சில :
வீட்டின் பின்புறமிருந்து பசுமாட் டின் கணேப்பு கேட்டது. அது தன் கன்றுக்குட்டிக்கு இருட்டில் இனங் காட்டிக் கொள்ளவே கனேக்கிறது,
I-ւյ*. 31
(பசு கனைக்கிறதாம் ) 5 مس-(ghی

895
மலட்டுக் குடும்பத்தை வேலுப்பிள் ளைக்கு வரிசைப் பொருளாக அனுப் புவதில் முதலித்தம்பியின் மனைவி யானவளும், சீதேவிஅம் மாளின் அ ன் னை யா னவளுமானவளுக்குத் துளியளவும் சம்மதம் இல்லை.
- பக்கம் - 10 大
வானம் நன்ருக வெளித்திருந்தது. சூரிய ஒளிக் கதிர்கள் உலகத்தில் பர விச் சிரித்தன.
- Lešćih if - i bј
(பிறிதொரு கிரகத்தில் அல்லது அண்டவெளியில் நின்ற, டானியல் இதைச் சொல்கிறர் ?)
大
இரண்டாண்டுகள் வாழ்ந்துகொண் டிருக்கும்போது அந்த எல்லுவன் விஷம் தீண்டி இறந்துவிட்டது.
- பக்கம் - 291 (பாம்பு தீண்டும்; விஷமும் தீண்டுமா?)
大
ல்லன் வீட்டுக்கு வந்தபோது செல்லி அப்போதுதான் உலைப் பானையைச் சரித்து கஞ்சியை வடிய விட்டிருந்தாள். தினை அரிசிக் கஞ்சி. அதனல் அது வடிய மறுத்து அடம் பிடித்தது.
- (பக்கம் மண 96
கேணித் தீர்த்தம் முடியவும், பொ ழுது புதைகுழிக்குள் சரிந்துகொள் ளவும் பொருத்தமாக இருக்கும்.
- (பக்கம் - 148
大
கந்தனின் உடம்பு மாற்றங்களின் தோற்றுவாயோடு ஒருநாள் இத்தினி செத்துப்போனள்,
 ை(பக்கம் க 1541

Page 36
: 896
4.
மற்றப் பையன்களுடன் சேர்ந்து இளநீர்பிடுங்கி உண்ணுதல்.
- பக்கம் = 1568 ★
அந்த மனளண்ணம் கந்தனுக்கு ஒருவித நோயாகிவிட்டது.
- (பக்கம் - 214
எண்ணம், மனதைவிட உடலின் வேறுபாகங்களி லும் தோன்றும் போலும்!
ஒருவரை "நல்ல எழுத்தாளர் அல்ல' வெனச் சொல்வது "அவதூருனது எனச் சிவலிங்கம் கருதுவது, வேடிக்கை கையானது வெவ்வேறு இ லக் கிய நோக்குகள், “ ஈடுபாடுகள், விமர்சன முதிர்ச்சி போன்ற காரணிகளினல் மதிப்பீடுகள் மாறுபடலாம். அவை தக்க ஆதாரங்களைக் கொண்டிருக்கு மானுல் கவனத்திற் கொள்ளத்தக்கன வே. ஆதாரங்களையோ, தர்க்க ஒழுங்கு களையோ கொண்டிராமல் கொச்சை யான முடிவுகளை மட்டும் சுமத்துவதே தவருனது. டானியலின் எழுத்துக் களின் பலவீனங்கள் பற்றிய எனது பார்வை பல இடங்களில் வெளிப்படுத் தப்பட்டுள்ளதை, முன்பே நான் குறிப் பிட்டுள்ளேன்.
*" தன்னுேடு முரண்பட்ட கருத்து டைய எழுத்தாளர்களையெல்லாம் அவ தூறு செய்வதையே முக்கிய குறிக்கோ ளாகக்கொண்டு செயற்பட்டு வருவது ஏனே இவருக்குத் தெரியவில்லை. "அலை" யில் இவருடைய கருத்துக்களிற்கு முரண் பாடானவர்களின் கருத்துக்களை வர
வேற்று எப்போதாவது பிரசுரித்துள்
ளாரா ? மற்றவர்களை அவதூறு செய் வதே இவருடைய முக்கிய இலக்கியச் செயற்பாடு` என்றெல்லாம் இவ லிங்கம் குற்றம் சாட்டுகிருர், நான் ஏற் றுக்கொள்ளாத கருத்துக்களைக்கொண்ட கட்டுரைகள் 'அலை"யில் ஏற்கனவே வந் துள்ளன. தவிர, அந்த அவதூறுகளே’

ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டும் கட் டுரை ஒன்றையாவது, அவர் "அலை’க்கு அனுப்பிவைத்திருக்கலாமே? 26 "அலை இதழ்கள் வெளிவந்துள்ளபோதும் இது வரை, ஏன் அவர் மெளனம் சாதித்துள் ளார்? நீண்டகாலமாய் எனது நண் பராயிருந்த இவருடன் ச மீ பத் தி ல் எனக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர்தான, "அவதூறு செய்வதே எனது முக்கிய செயற்பாடு" என்பது இவரிற்குத் தெரிந்தது! நல்லது. இனி மேலாவது அத்தகைய கட்டுரையை அனுப்பிவைப்பாராளுல் அதைப் பிர சுரித்துவிட்டு எனது விளக்கத்தினைத்
தரத் தயாராய் உள்ளேன்.
எனது கருத்துக்களைச் சிவலிங்கமும், டானியலும் இரண்டிடங்களில் திரித் துக் காட்டியுள்ளனர். இது நேர்மை யீனமானது.
அ) யாழ். பொன்ட் கல்வி நிறுவனத் தில் நடந்த கூட்டமொன்றில் " நான் ஈழமுரசு வாசிப்பதில்லையாதலால்." என, நான் சொன்னதாகச் சிவலிங்கம் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் நான் சொன்னது, “ ஈழமுரசில் வரும் பல விடயங்களை நான் படிப்பதில்லை ' என் பதே. எந்தப் பத்திரிகை, புத்தகங் களைப் படிப்பது ? அவற்றிலும் எத் தகைய விடயங்களைப் படிப்பதென்பது படிப்பவனின் தேவையினையோ, விருப் பத்தையோ சார்ந்த விடயம். இதில் என்ன தவறு இருக்கிறது ?
ஆ) 'டானியலை இன்னும் நாங்கள் எழுத்தாளராகக்கூட அங்கீகரிக்காத நிலையில் இவர் எப்படிச் சான்றேர் வரி சைக்குட்படுத்தப்பட்டார் ?" என நான் * அலையில் கே ள் வி கேட்டிருப்பதாக டானியல் சொல்கிருர், கொச்சையான வடிவத்தில் எனது கருத்துத் தரப்பட் டுள்ளது. உண்மையில் 'அலை"யில் நான் எழுதியிருப்பது பின்வருமாறு :

Page 37
(1984 வரை இலங்கையில் வந்த தமிழ் நூல்களில் சிறந்தவற்றைத் தீர் மானிக்கும் சான்றேர் குழுவில்) 'கே. டானியல் இடம் பெற்றதற்கு ஒரு "வர லாற்று நிகழ்வு' காரணமெனத் தெரி
கிறது. பரிசளிப்பு நோக்குடன் கூடிய இலக்கியப் பேரவை போன்ற அமைப்
பொன்றை டானியலே முதலில் அமைத் திருந்ததாகவும், யாழ் இலக்கியவட் டம் இப்பொழுது தன்னுடையதுபோல் இந்த முயற்சியில் ஈடுபடுவதாகவும், பத் திரிகை ஒன்றில் வெளியான கண்ட னத்தைச் சமாளிப்பதற்காகவே டானி யலும் சான்றேர் குழுவில் சேர்க்கப்பட் டிருக்கின் ருராம். இங்கும் "விமர்சனத் தகைமையல்ல உறுப்புரிமையைத் தீர் மானித்தது. "படைப்பாளர்" என்ற தளத்தில் அவரது தகுதிபற்றிப் பல சந்தேகங்கள் ஏற்கனவே உண்டு. அது தான் போகட்டும், விமர்சனத் தளத் தில் திறனை அவரிடம் யாரும் எதிர் பார்க்கலாமா ? கவிஞர் சு. வில்வரத்தி னத்தின் விமர்சக விகடங்கள்’ கவிதை யை வாசிக் கும்படி, அவர்களிற்குச் சிபார்சுசெய்ய விரும்புகிறேன்."
இதில் இரண்டு குறிப்புகள் இடம் பெறுகின்றன. ஒன்று, டானியல் ஒரு நல்ல எழுத்தாளரா என இலக்கிய உல கில் நிலவும் கேள்விகள்; இரண்டாவது, அவரது விமர்சனத் தகுதிபற்றியது.
தனித்தனியான இவ்விரு கருத்துக்களை
யும் ஒன்ருேடொன்று தொடர்புடைய தாக இணைத்துள்ளதன்மூலம், எனது கருத்து திரிபுபடுத்தப்பட்டு - அதுவும் கொச்சையான தாக்குதல் வடிவத்தில் - டானியலால் வேண்டுமென்றே தரப் பட்டுள்ளது. உண்மையில் எனது வாதத் தின் மையம் வேறனது. டானியல் ஒரு
நல்ல எழுத்தாளரா, திறமையற்ற
எழுத்தாளரா என்பதற்கும் அப்பால்,

897.
"சான்றேர் குழுவில் இடம்பெறத்தக்க.
விமர்சனத் தைைம உடையவரா" என் பதுபற்றிய சந்தேகமே!
சர்ச்சையொன்றில் ஈடுபடும்போது, மறு ரப்பைச் சேர்ந்தவரின் கருத்தினைத் திரித் துக்காட்ட முயல்வது, பலவீனமானவர் iளின் நேர்மையீனமான செயலல்லவா?
★
எனது முகவரி
இன்று, எனது வீட்டின் இலக்கத்தை, நான் வசிக்கின்ற தெருவின் பெயரை நான் அழித்து விட்டேன், காலை ஒவ்வொன்றும் காட்டுகின்ற பாதையையும் மாற்றிவிட்டேன் நீங்கள் என்னை இப்போது காணவேண்டுமென்றல் உலகின் எந்த இடத்திலும் எந்த நகரிலும் எந்தத் தெருவிலும் எந்தக் கதவையும் தட்டுங்கள் இதுதான் என் சாபம், இதுதான் என் பிரார்த்தனை. எங்கெல்லாம் நீங்கள் சுதந்திரத்தைக் காண்கிறீர்களோ அதுதான் என் இல்லம்.
மூலம் : அம்ரிதா ப்ரிதம் தமிழில் : தெ னி
நன்றி : "யூனெஸ்கோ கூரியர்".
(ஜனவரி - 83)
Kapanggggggg- * :

Page 38
ரஷ்ய இலக்கியத்தின் அருண்
ngan
w
என். வாலந்தினுேவ்
மிக்கேல் ஸ்படினேவிச் ஒல்மின்ஸ்கி, லெனினிடம் கூறியதாவது :
16 விளாதிமிர் இலிச், நீங்கள் சாம்சனே வின் கருத்துகளை அறிந்தால் அவற்றை அரு வெறுப்பது நிச்சயம். நிலப்பிரபுவின் மக ஞன அவர் தன்னை யறியாது தன் சுயரூபம் வெளிப்படுமாறு பேசத் துவங்கியதும் குட்டு வெளிப்பட்டு விடுகிறது. தன் கிராமத்துப் பண்ணைகளைப்பற்றி அவர் பிதற்றுவதைப் பாருங்கள். பூக்களைப்பற்றியும், அவை பதி ஞறு வயதுப் பருவப் பெண்களைப்போல் மணப்பது பற்றியும் அவர் பேசுகிருர், எலு மிச்சை, பிரப்ப மரங்களின் அழகைப்பற்றிப் பேசும்போது மனிதன் அப்படியே சொக்கிப் போகிருர், அந்த அழகிய எலுமிச்சை மர வரிசைகளாகக் கொண்ட நிழற்பாதைகளில் பண்ணையார்கள் தம் குடியாளிகளையும் படி யாள்களையும் பிரப்பங்குச்சிகளால் விளாசு வது வழக்கம், இதை மறந்துவிட ஒரு புரட் சிக்காரனுக்கு உரிமையில்லை. சாம்சனுேள் கதைக்கும்போது, தன் பிள்ளைப்பருவச் சூழ லுக்குத் திரும்பிப்போக அவருக்குக் கொள்ளை ஆசை என்பதை என்னல் காண முடிகிறது. இத்தகைய உணர்ச்சிகளுக்கு ஆட்படுவது புரட்சிக்காரனைப் பொறுத்தவரையில் அபாய
கரமானதாகும். முதலில் நீங்கள் அதற்கு
ஏங்குவீர்கள். விரைவில் நாமும் ஒரு சின்ன பண்ணையை வாங்கிவிட்டால் என்ன என நினைப்பீர்கள். பின் மிக விரைவில் நீங்கள் உங்கள் குடியாள்கள் விடாமல் ஒழுங்காக சேவை செய்யவேண்டும் என எதிர்பார்ப் பீர்கள். அவர்கள் உழைத்துக்கொண்டிருக் கும்போது நீங்கள் எலுமிச்சைமர நிழற் பாதையில் ஒரு தூளியில் செளகரியமாகச் சாய்ந்துகொண்டு கையில் ஒரு பிரெஞ்சு நாவலுடன் அரைத்தூக்கம்போட விரும்பு வீர்கள்.”*

மயான பகுதிகள்
லெனின். தன் அரைக்கோட்டின் சட் டைக் கைகளில் தன் பெருவிரல்களை நுழைத் துக்கொண்டார். பதில் சொல்லத் துவங்கி ஞர். சுருக்கெனத் தைக்குமாறு, வெளிப் படையான எரிச்சலுடன் அவர் பேசினர்:-
'சரிதான் மிக்கேல் ஸ்டீபணுேவிச், நீங் கள் கூறியது எனக்கு வியப்பூட்டுகிறது. நீங் கள் சொல்வதைக் கவனித்தால் ரஷ்ய இலக் கியத்தின் பல அருமையான பகுதிகளையும் தீங்கு பயப்பவை எனக் கருதவேண்டும் எனத் தோன்றும். எனவே அவற்றைப் பிய்த்தெடுத்து எரித்துவிடத் தோன்றும். நீங்கள் கூறுவது, துர்கனேவ், டால்ஸ்டாய், செக்கோள் போன்ருேசின் படைப்புகளின் மிகச்சிறந்த பகுதிகளைத் தாக்குவதாக உள் ளது. இதுகாறும் நமது இலக்கியத்துக்கு நிலஉடமைப் பிரபுத்துவம்தான் பிரதான பங்களிப்பைச் செய்திருக்கிறது. அவர்களின் நிதிவசதியும் வாழ்க்கை முறையும் தான் (இதில் எலுமிச்சைமர நிழற்பாதைகளும், பூம்பாத்திகளும் அடங்கும்) அவர்கள் கலைப் படைப்புகளை உருவாக்குவதைச் சாத்திய மாக்கின. இப்படைப்புகள் ரசனையின் ஊற் முய் விளங்குகின்றன. ரஷ்யராகிய நமக்கு மட்டுமல்ல, கலாரசனையுள்ள எவருக்கும். அப்பழைய எலுமிச்சைமர வரிசைகள் பண் ணையடிமைகளின் கைகளால் நடப்பட்ட தாலோ அல்லது குடியாட்கள் அவற்றில் கட்டிவைத்து அடிக்கப்பட்டதாலோ அவை ரம்மியமானவை அல்லவென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். இது நரோத்ணிக்குகளைப் பிடித்துள்ள ஒருவகை மிகவும் எளிமைப் படுத்தும் போக்காகும். மார்க்சியராகிய நாம் இப்போக்கை வென்றுவந்துள்ளோம். நீங்கள் சொல்லும் கருத்துச் சரியானல், புராதனக் கோயில்களின் அழகைப் பாரா மல், அவற்றைப் புறக்கணித்திருக்க வேண்டி

Page 39
வரும். ஏனெனில் அடிமை மக்களைக் காட்டு மிராண்டித் தனமாகவும் குரூரமாகவும் சுரண்டித்தானே ஆண்டைகள் அவற்றைக் கட்டுவித்தனர். பண்டைப் பெரும் நாகரிக மானது, முழுக்கவும் அடிமைச் சமூகத்தின் அடிப்படையிலிருந்தே வளர்ந்தது. நீங்கள் இப்படிக் கோபித்துக்கொள்ளும் அளவுக்கு சாம்சனேவின் உணர்ச்சிகளிலோ சொற்களி லோ எதுவும் தவருனதாக எனக்குப் பட வில்லை. அந்த ஆள் ஹெர்சனப் படித்திருக் கிருர், தான்பிறந்த இடத்தை நினைவூட்டு வது போலமைந்த பகுதிகளால் கவரப்பட் டிருக்கிருர் . எனவே ரஷ்யாவுக்குத் திரும்ப வேண்டும் என்ற தாயக நாட்டம் அவரை வருத்தியிருக்கிறது. எந்த அளவுக்கென்முல், கூடிய சீக்கிரம் இந்த நச்சுப்பிடித்த ஜெனி வாவை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று அவர் விரும்புகிருரர். சரி, இந்த விருப் பத்தில் என்ன துர் எண்ணம், புதிர் அல்லது வினேதத்தைக் கண்டுவிட்டீர்கள் ? ஒன்றும் கிடையாது. உங்கள் நினைப்புத்தான் குழப்ப சரமாய் இருக்கிறதே தவிர, அவரதல்ல. சாம்சனேவ் கிராமப் பண்ணைகளின் எலு மிச்சை, பிரப்பமர வரிசைகளைக் கொண்ட நிழற்பாதைகளையும் பூம் பா த் திகளையும் விரும்புவதைக் கொண்டு, அவர் நில உடை மை மனப்பாங்கால் பீடிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே அவர் விவசாயிகளைச் சுரண்டுவதில் போய் வீழ்வது நிச்சயம் என நீங்களாகக் கற்பனைசெய்து கொள்கிறீர்கள்.
* கவர்ச்சியான, ஆர்வத்துக்குரிய பலர் இவ்வுலகில் இரு கம் முழுவதும் இப்படி ஒரு அன்புக்குரிய மனிதராக இ ஆண்களும் பெண்களும் அவரிடத்தில் அர்த்தம் நிறைந் ரிடத்திலும் இருக்கக்கூடிய ர்கசிய உணர்வு, துடிப்பு, e சப்ளினின் தனித்தன்மை, தன்னுடைய கவர்ச்சி மற்று படுத்தியிருக்கவேண்டும், சப்ளினின் தங்கமான மனதை தந்திரப் புத்திகொண்ட நாடோடி உருவம் முதலாளித் மளிக்கிருர். அந்த உலகை அவர் தன்னுடைய விநோ னுடைய சோகம் நிறைந்த நம்பிக்கையில், இந்த ம6 ரின் எதிர்ப்பையும் காட்டுகிரு."

899
அப்படியானல் என்னைப்பற்றி என்ன சொல் கிறீர்கள் ? நானும் என் தாத்தாவுக்குச் சொந்தமான கிராமத்துப் பண்ணை ஒன்றில் வசித்திருக்கிறேன். ஒருவிதத்தில் நானும் நில உடைமை மேல்குடியின் வழிவந்தவன் தான், இதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு. இருந்தும் நான் எங்கள் பண்ணையில் வாழ்ந்தபோது பெற்ற இனிய அனுபவங்களை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். அதன் எலுமிச்சை மரங்களையோ, பூக்களையோ நான் மறக்கவில்லை. அப்படியானல் என்னை நீங்கள் என்ன செய்வீர்கள் ? சின்ன வயதில் நான் வைக்கோல் போர்களுக்குள் இருந்து கொண்டு பொழுதுபோக்குவது வழக்கம் - ஆனல் அது நான் அடுக்கிய போர்களல்ல. ஸ்டிராபெர்ரி, ராஸ்டெர்ரிப் பழங்களைப் பறித்துச் சாப்பிடுவது வழக்கம் - அவை நான் நட்ட செடிகளல்ல. கறந்த பாலை அப் படியே குடிப்பது வழக்கம் - அது நான் கறந்த பாலல்ல, இவற்றையெல்லாம் இன்று நினைத்துப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. சாம்சனேவைப்பற்றி நீங்கள் சற்றுமுன் சொன்னதில் இருந்து இத்தகைய நினைவுகள் எல்லாம் ஒரு புரட்சிக்காரனுக் குத் தகாதவை என நீங்கள் கருதுவதாய்த் தெரிகிறது - அப்படியா ? நீங்கள் மிகவும் மிகைப்படுத்துகிறீர்கள் அல்லவா ? இதுபற் றிக் கவனமாகச் சிந்தித்துப் பார்க்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் மிக்கேல் ஸ்டீபணுேவிச்.’ Y
- நன்றி : பரிமாணம்-14
க்கத்தான் செய்கிறர்கள். சார்லி சப்ளின் இன்று உல }ருப்பாரெனில், அதற்குக் காரணம் லட்சக்கணக்கான த ஒன்றைப் பார்த்திருக்கவேண்டும். அவர்கள் எல்லோ ஆர்வம், மறைமுகமான கருத்து போன்றவற்றை சார்லி தும் கலாபூர்வமான நடிப்புக்கு அப்பாற்பட்டு வெளிப் தக்கொண்ட, அலைந்துதிரியும், குழப்பம் மிகுந்த அந்தத் துவத்தின், இயந்திர உலகின் பலியுருவமாகத் தோற்ற தமான சேஷ் டைகளின்மூலம் எதிர்க்கிருர், சார்லி தன் விதத்துவமற்ற சமூக அமைப்பிற்கெதிரான நம் அனைவ
 ைபேல பெலாஸ்

Page 40
புதிய இடதுசாரிகளும் கம்
Tഖr நாட்டிலும் உள்ள எல்லாக் கம் யூனிஸ்டுகளும் புரட்சிக்காரர்கள் அல்லர் மேலை நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவ ஜனநாயகத்தில் தேர்தல் மூலம் சோசலிச சமுதாயத்தைக் கொண்டு வந்துவிடலாம் என நம்புகின்றனர். மூன் ரும் உலகநாடுகளில் உள்ள கம்யூனிஸ்டு களும் அதே நிலையை எடுக்கின்றனர். கியூ பாவில் காஸ்ட்ரோ புரட்சியை நடத்திய போது அதை விமர்சித்தபடி, காஸ்ட்ரோ வைத் தாக்கியபடி இருந்தனர். இந்த அனு பவங்களிலிருந்துதான் காஸ்ட்ரோ, "யார் புரட்சி செய்வது ? மக்கள்; புரட்சியாளர் கள். கட்சியுடனே அல்லது கட்சி இல்லா மலோ ' என்று கூறினர். ஆஞல் புரட்சி முடிந்தபின்பு கம்யூனிஸ்டுகள் காஸ்ட்ரோ வுடன் ஐக்கியப்படுகின்றனர். கொலம்பியா கம்யூனிஸ்டுகளைப் பற்றி கெரில்லாப் போர்ப் படைத் (E.L.N.) தலைவர் ஃபேபியோ கூறி ஞர். ' கம்யூனிஸ்ட் கட்சியினர் முதலாளித் துவ ஜனநாயக விதிகளின்படி செயல்படுகி முர்கள்."
இப்போது நடைபெறும் தமிழீழ விடு தலைப் போராட்டத்தில் இலங்கைக் கம் யூனிஸ்டுகளின் நிலையும் இதுபோன்றதே. ஆயுதந்தாங்கிப் போராடும் விடுதலைப் புலி கள், மற்ற குழுக்களும் கம்யூனிஸ்டுகள் அல் லர். அங்கு நடப்பது வர்க்கப் போராட்ட மல்லவென்றலும், அடக்கி ஒடுக்கி அழிக்க விரும்பும் இனத்தை எதிர்த்து ஆயுதந்தாங் கிய போரை நடத்தியே தீரவேண்டிய நிலை யில் அங்கும் இங்குமுள்ள கம்யூனிஸ்டுகள், மார்க்சிய-லெனினிய அடிப்படையில் நிதா னமாக யோசித்தும், விவாதித்துக்கொண்டு மிருக்கின்றனர். இறுதியில் பேச்சுவார்த் தைகள் மூலம் தீர்த்துக்கொள்வது பற்றி வசதியாகச் சொல்லிவிடுகின்றனர். வர்க்கப் போராட்டத்தைத் தவிர, வேறு வகையி

யூனிஸ்டுகளும்
லான தவிர்க்க முடியாத நிலையில் ஒடுக்கப் பட்ட இனம் நடாத்தும் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை இவர்களால் ஆதரிக்க முடியவில்லை. அதில் பங்கெடுக்க முடிய வில்லை. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினை என்னும்போது, தீர் வைத் திரும்பத் திரும்ப லெனின் - ஸ்டாலி னியத்துக்குள் தேடிக்கொண்டிருப்பதிலும், விளக்கம் கொடுப்பதிலும் திருப்தியுறுகின்ற னர். இன்றைய இலங்கைத் தமிழினப் பிரச் சினைக்கு லெனின், ஸ்டாலின் கடந்த காலத் தில் தீர்வு சொல்லியிருக்க முடியாது. இது போன்ற நிலைப்பாட்டை எடுக்கும்போது தான் கம்யூனிஸ்ட்டுகளுக்கும், மூன்றும் உல கப் புதிய இடதுசாரிகளுக்கும் உள்ள வேறு பாடு புரிகிறது. லெனினும் ஸ்டாலினும் சந்திக்காத சிக்கலான பிரச்சினைகளை இன் றையப் போராட்ட வீரர்கள் சந்திக்கின்ற னர். இப்போது அவர்கள் வழியிலே அதை வெற்றிகொள்ளப் போராடுகின்றனர். இது தான் இன்றைய புதிய இடதுசாரிகளின் புரட்சியின் உள்ளடக்கம் என்பதைச் "செந் தூரன்" புரிந்துகொள்ளட்டும். இதேபோல 1968-ல் பிரான்சில் இளம் தொழிலாளர்மாணவர் புரட்சி வெடித்தபோது அதை ஆதரித்தவர்கள் புதிய இடதுகள் : எதிர்த்த - வர்களோ ஸ்தாபனக் கம்யூனிஸ்டுகள்.
= j Tu
('செந்தூரன்" என்பவரின் கருத்துக்களிற்குப் பதி
லாக எழுதப்பட்டுள்ள 'தேவையை நோக்கிய பய ணம்" என்ற கட்டுரையில். நன்றி பரிமாணம்-14)
★
863-ம் பக்கத்தில் உள்ள 'கலை என்ருல் என்ன ??
என்ற கட்டுரையை எழுதியவர்- மு. பொன்னம்
Lugob. 876-1b Luá5556), Dalancing process
at airp5oil 163.5 balancing process 676 as goig
வாசிக்கவும். தவறிற்கு வருந்துகிருேம். s
- a

Page 41
"இவ்வளவு எளிதாக லாம் என்ற தைரியப் கிறது!" என்ருள் அ
"அவமதிக்கக்கூடிய ச டென்றல், யோக்கிய லது பெண்களுடன் சாத்தியம் ஏற்படலாம் டனைப் பார்த்துத் "தி கூறுவது அலமதிப்பா யத்தை அப்படியே ெ றன் கரீனின்.
அங்குமிங்குமாய் நடக்கும் இலக்கியக் கூட்டங்களிற்கெல்லாம் போகிறேன். எழுத் தாளர்களிற் பலர் வாயில் வந்தவற்றையெல் லாம் பேசுகின்றனர் ; சிலர் "வீர வஜனங் களை’ முழக்குகின்றனர். அதிலும் சோர்வு, விரக்தி, மரணம், புலம்பல்களிற்கெதிராக வும் ; இலக்கியத்தின் சமூகப் பெறுமானம் பற்றியதுமாக So Caled "முற்போக்கு வாதி'களின் போர்க்குரல்கள் நீண்ட - மிக நீண்டகால மெளனத்தின் பின்னர் மேடை களில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. வார்த் தைகளில் போராட்டமும், நம்பிக்கையும் இருக்கின்றனதான்! ஆனல் நடைமுறையில், உண்மை-பொய் என வரும்போது இவர் களிற் பலரின் நிலைப்பாடு எப்படியிருக்கிறது? குறைந்தபட்சம், வாய்திறந்து பேசவேண்டி ஏற்படும்போதுகூட மெளனம் சாதிக்கின்ற னர்; அல்லது பூசி மெழுகுகின்றனர். இலகு வான பிரபலத்திற்காகப் பத்திரிகைகளுட னும், சஞ்சிகைகளுடனு ம் நல்லுறவைப் பேணுவதற்காய் "அதிருப்தி தருவனவற்றை? வசதியாகக் கணக்கிலெடுக்காது விடுகின்ற னர். குத்துக்கரணங்கள் அடிக்கும் சந்தர்ப்ப வாதப் பத்திரிகையாளனக இருந்தாலும், *விழுந்தடித்தபடி மரியாதையான உறவு வைத்துக் கொள்கின்றனர். சாதாரண எழுத்தாளரிலிருந்து இலக்கியத்துறையில் சம்பந்தங்கொண்டுள்ள பல்கலைக்கழக விரி வுரையாளர், பேராசிரியர்வரை இச் சீரழிவு

என்ன அவமதிக்க ம் உங்களுக்கு இருக்
ாத்தியம் எங்கு உண் மான ஆண்கள் அல் பேசுகையில் அந்தச்
3. ஆணுல், ஒரு திரு ருட்டுப் பயலே’ என்று காது; காண்கிற விஷ சொல்லுவதாகும்' என்
ரோல்ஸ்ரோயின் ன்னு கரீனினு நாவல்
பக்கம்-315
களில் பங்குகொண்டுள்ளனர். உண்மை, சரி என்பவற்றுக்கான போராட்டம் வெறும் வார்த்தைகளில் மட்டுந்தான ? எழுதுவ தற்கான களமும், பிரபலமும் மட்டுந்தான் இவர்களை இயக்கும் ஆதார சக்திகளா ? மனந்திறந்து துணிவுடன் கருத்துக்களை முன் வைக்கும் சிலரை, ஏன் முகச்சுழிப்புடன் இவர் கள் நோக்கவேண்டும் ? உண்மை கசப்பானதுதான் போலும் !
சுமார் மூன்று மாதங்களின் முன்னர் யாழ்.'பொன்ட் சல்வி நிலையத்தில்’, சாந்த னின் இரு நூல்கள் பற்றிய விமர்சனக் கூட் டமொன்று நடந்தது. படைப்புக்களின் பலவீனங்கள்பற்றிப் பேச்சாளர் சிலர் தெரிவித்த கருத்துக்களினல், எழுத்தாளர் சாந்தன் சங்கடப்பட்டார் ; அது அவரது பேச்சில் வெளிப்பட்டது. "சொந்தக்காரர், ஊரவர்கள், அலுவலக நண்பர்கள் எல்லாம் வந்துள்ளபோது தெரிவிக்கப்பட்ட கருத் துக்கள் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டதா கச் சொன்னர், ஏன் சங்கடபபடவேண் டும் ? விமர்சனக் கூட்டமென்ருல் பாராட் டுக்களும் குறைபாடுகளுந்தானே வெளி வரும்? பாராட்டை மட்டுமா சாந்தன் விமர்சனத்தில் எதிர்பார்க்கிருர் ? கருத்துக் கள் சங்கடத்தை ஏற்படுத்துமென்ருல், இலக் கியத்தில் அவ்வளவு அக்கறையில்லாத “ஊரவர்களையும், சொந்தக்காரர்களையும், அலுவலக நண்பர்களையும் அழைக்காமல்

Page 42
902
விட்டுவிடலாமே! இச் சங்க டத் தி ன் தொடர்ச்சியாக ** பத்துப் பதினைந்து வரு டங்கள் சென்றபின்னர்தான் ஒரு படைப் பிற்குச் சரியான விமர்சனம் வரும்' என்ற கருத்தையும் சொன்னர், அப்படியானல் அன்று வைத்த விமர்சனக் கூட்டமே அர்த்த மற்றதாகிவிடுமே ! 'பத்துப் பதினைந்து வரு டங்களின் பின்னர் அல்லவா கூட்டம் வைக்கவேண்டும்? பத்துப் பதினைந்து வரு டங்களின் பின்னர்தான் சரியான விமர்ச னம் வெளிவந்து பயன் தருமானல், "இன் றைய பிரச்சினைகளை இலக்கியத்தில் எழுதி என்ன பிரயோசனம் ?
இக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த கலாநிதி சபா. ஜெயராசா, 1970லேயே தேசிய இனப் பிரச்சினையைக் கையாண்ட "முற்போக்கு - கொம்யூனிஸ்ற் எழுத்தாள ராகச் சாந்தனைக் குறிப்பிட்டுப் பெருமிதப் பட்டார். இது, ஒருவரது பேச்சில் கேள்விக் கிடமாக்கப்பட்டது. உண்மையில் 1975-ல் சாந்தன் எழுதிய குறித்த சிறு கதையின் பலவீனங்கள் பற்றி, அவர் விளக்கினர் : அது "மல்லிகை"யில் வெளிவந்த பின்னர் "சாந்தனை அம்பலப்படுத்தவே அதை வெளி யிட்டதாக"அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவா குறிப்பிட்டுள்ளதையும் தெரிவித்தார். வெறு மனே அடைமொழி சூட்டும் சபா. ஜெய ராசா இதைச் சரியாக எதிர்கொள்ள வில்லை. அது அவரது வழக்கமுங்கூட. ஆனல் பல்வேறு கண்ணுேட்டங்கொண்ட பார்வையாளர்கள் சமுகம் தந்திருந்தும், இரண்டொருவரைத் தவிர யாரும் கலந் துரையாடலிற் பங்குகொள்ளாத குறையை அதே நபர் சுட்டிக் காட்டியபோது, "அது ஒரு குறையே அல்ல. உடனடித் துலங்கல், பிந்திய துலங்கல் என இருவகையுண்டு என்று, கல்வி உளவியற் கருத்தைப் போட் டுத் தன் மேதைமையை'க் (!) காட்டமட் டும், அவர் தவறவில்லை! இது அசட்டுத்தன மான சமாளிப்பு. வந்திருந்த இலக்கியகார ருக்குத் தத்தம் நிலைப்பாடு சார்ந்து ஒரு கருத்து நிச்சயம் இருக்கும். கூட்ட அமைப்

பாளர்கள், இலக்கியம் சார்ந்த எக் கருத் தையும் தெரிவிக்கலாம்; இது ஒரு வழமை யான கூட்டம் அல்ல என்றும் தெரிவித் திருந்தனர். இந்த நிலையில், வந்திருந்தவர் கள் பேசப்பட்டவற்றுக்குச் சார்பாகவோ மாறுபாடாகவோ, அல்லது பொதுவான இலக்கியப் பிரச்சினைகள் பற்றியதாகவோ இருக்கக்கூடிய தமது கருத்துக்களை வெளிப் படையாகச் சொல்லத் தவறுவார்களானல், தமது கருத்துக்களை உறுதியாக முன்வைக் கும் திறனின்மை, மாற்றுக் கருத்துகளிற்கு முகங்கொடுப்பதில் தயக்கம், பிரச்சினை களிற்குள் மாட்டுப்படாது எல்லோரிற்கும் நல்லபிள்ளையாக நடிக்கும் மனுேபாவம் எனக் காரணங்கள் ஏதோ இருக்கும். எப் படியாக இருந்தாலும், அது எமது இலக் கிய சமூகத்தின் நோய்க்கூருன நிலைமை யையே வெளிக்காட்டுவதாக அமையும். இதைச் சரியாகப் பார்க்காமல், "சோதனைக் குப் படித்த" ஏதோ ஒன்றைச் சொல்லித் திகைக்கவைக்க முயல்வது, "அதிர்ச்சி தரும் பான்மையில் விளக்கமின்றி அவர் கட்டுரை எழுதுவது போலத்தான், உள்ளது!
26.12.85இல் சோ. கிருஷ்ணராஜா சிறப் புரையாற்றிய மு. எ. சங்கக் கூட்டத்தின் இறுதியில், சாந்தன் நன்றியுரை ஆற்றுகை யில் " ... எழுத்தாளன் என்னத்தை எழுதவேண்டுமென்று இங்டு கேட்கப்பட் டது. எது செலாவணியாகுமென்று பார்த் து எழுத்தாளன் எழுதுவான் " எ ன் று சொன்னபோது, பின்னுலிருந்து ஒரு சிரிப்பு எழுந்தது. சாந்தன் (ஓர் அசட்டுச் Fuort ளிப்புடன்) ** நான் வியாபாரரீதியாகச் சொல்லவில்லை. ஒரு நல்ல எழுத்தாளன் ஆத்ம திருப்திக்காகத்தான் எழுதுவான் ' என்ருர், ஆத்ம திருப்திக்காகத்தான் எழு துவான் என்ற வரி கவனத்திற்குரியது ! கைலாசபதி, சிவத்தம்பி, சபா. ஜெய்ராசா ஆகிய "முற்போக்கு'வாதிகளிற்கு இதைச் சமர்ப்பிக்கிறேன்.
கூட்டங்களில் நிகழ்த்தப்படும் பேச்சுக் கள் பிழையான முறையில் பத்திரிகைகளில்

Page 43
பிரசுரிக்கப்படுதல், சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இக் கூட்டம்பற்றிச் சாந்தன் sorry “av GiorGOOTGör”, 5-1-86 FF pupT6A6iv GT(!pg) யிருப்பதிலும் இது நிகழ்ந்துள்ளது. தனது கருத்துகளிற்கு முக்கியத்துவம் கொடுப்ப தில் அவர் "மிகவும் அக்கறை காட்டியிருப் பதைப் பரவாய் பண்ணுமல் விட்டுவிட லாம்தான். ஆணுல், மற்றையவர்களின் கருத்துகளைச் சரியாகக் கொடுப்பதில் அக் கறை காட்டாததை, விட்டுவிடலாமா?
1 மார்க்சிஸ் விளக்கம் தோற்றப்பாட்டு வாதம் போன்றதே ' என்று யேசுராசா கூறியதாக வந்திருப்பது, “கிருஷ்ணராஜா வின் விளக்கத்தின்படி பார்த்தால், மார்க்சி ஸம் தோற்றப்பாட்டு வாதம் போன்றதே" என்றிருக்கவேண்டும். * புதிய தலைமுறைக் கவிஞர்களிடமுள்ள "ஆன்மவலு எமக் கில்லை" எனத் தந்திருப்பதும், தவருனது. அது " போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளை ஞர்களிற் பலர் தற்போது கவிதை எழுது கின்றனர். அவர்களது ஆன்ம வலுவின் முன்னுல் எழுத்தாளர்களாகிய நாம் குறைந் தவர்களே. என்னேயும் சேர்த்துத்தான் சொல்கிறேன்" என்றிருத்தலே சரியானது. அக்கறையினத்தினலோ அல்லது வேண்டு மென்ருே, கருத்துக்கள் இவ்வாறு பிழையா கத் தரப்படுவது தேவையற்ற சிக்கல்களை யும், சக்தி விரயத்தையுமே ஏற்படுத்துகின் (D5l.
இதே கூட்டத்தில் பேசுகையில், கலாநிதி சபா. ஜெயராசாவும் இவ்வாருன தவறைச் செய்தார். சிறப்புரையாற்றிய சோ. கிருஷ் ணராஜா தனது பேச்சில், " எ ல் லா ப் படைப்புகளிலும் ஒரு வர்க்கநோக்கு இருக் கும் ' என்று கூறியது தொடர்பாக யேசு ராசா கருத்துரைக்கையில், ** எல்லாப் படைப்புகளிலும் கருராக அதைப் பார்க்க முடியாது. அவ்வாருஞல், கிரேக்க துன்பி யல் நாடகங்களையும், ஷேக்ஸ்பியரின் நாட கங்களையும் மார்க்ஸ் எவ்வாறு இரசித்தார்? மாயாகோவ்ஸ்கியை விடவும் நிலப்பிரபுத்து வக் காலகட்ட, புஷ்கினையும்; ரோல்ஸ்ரோ
6 عسليةو

· ፬08
யையும் லெனின் எவ்வாறு இரசித்தார் எனக் கேட்டார். பின்னர் கருத்துத் தெரி வித்த சபா. ஜெயராசா " புஷ் கினை லெனின் இரசித்ததற்காக அவரை முதலா வித்துவவாதி என்று யேசுராசா சொன் ஞர். மார்க்ஸ் கிரேக்க துன்பியல் நாடகங் களை இரசித்ததற்காக அவரை மார்க்சிய விரோதி என்று சொன்னர் ** என்று "தலை கீழாகக் குறிப்பிட்டார். ஒருவர் கூறுவ தைச் சரியாகக் கிரகிக்கக்கூட முடியாத இந்தக் 'கலாநிதியால், எப்படி ஒழுங்காகக் கருத்துகளைத் தெரிவிக்க முடியும்?
இவ்விரு கூட்டங்கள் தொடர்பாகத்தான் ஜனவரி 1986 'மல்லிகை’ தலையங்கத்தில், டொமினிக் ஜீவா பின்வருமாறு எழுதியுள்
ariri
"இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள் ளும் ஒருசிலர் வேண்டுமென்றே - திட்ட மிட்டே - அக்கூட்டத்தை ஒழுங்குசெய்த நோக்கத்தைத் திசைதிருப்பி, தமது சொந்த மனக்குரோதங்களையும், மன முறிவுகளையும் கருத்து என்ற போர்வையைப் போர்த்திக் குழப்பியடிக்கப் பார்க்கின்றனர் . கருத்து என்ற கேடயத்தைத் தாங்கிப் பிடித்த சிலர் இலக்கியக் காடைத்தனம் புரியவும் முனைகின் றணர் . இப்படியானவர்களைச் சரிவர இனங் கண்டு பொதுவாழ்விலிருந்து இவர் களை ஒதுக்கிவைக்க வேண்டியது தரமான இலக்கி யச் சுவைஞர்களின் பாரிய கடமையாகும்." (அழுத்தம் என்னுடையது).
*சிலர்' என்று அவர் குறிப்பிட்டாலும் அவர் கருதுவது, ஒருவரைத்தான். "ஜே. ஜே. சில குறிப்புகள்’ நாவலில் ஜே. ஜே. சொல்வது எனது நினைவுக்கு வருகிறது : *. நீ லெனின் இல்லை : கருநாகப்பள்ளி பாச்சுபிள்ளைதான்’ என்று சொன்னேன். அன்றிலிருந்து அவன் என்னுடைய ஜென்ம விரோதியாகிவிட்டான். இப்போது அவன் எழுத்திலும் பேச்சிலும் "சிலர் "சிலர்’ என்று சொல்லி (சிலர் இவ்வாறு சொல்லி வருகிருர்கள்; சிலர் இவ்வாறு எழுதி வருகி

Page 44
904
முர்கள் என்றவாறு) திட்டுவதெல்லாம் என் னைத்தான். திருச்சூர் ஓரியன்ட் புத்தகக் கடையில் நான் அவனை அகஸ்மாத்தாகச் சந் தித்தபோது "ஒருமைக்கு எதற்குப் பன்மை யைப் பயன்படுத்துகிருய்?" என்று கேட் டேன். அவனுக்கு மிதமிஞ்சிய கோபம் வந்துவிட்டது. "ஆறு மாதங்களுக்குள் சரித் இரத்தில் உன் பெயர் இல்லாமல் ஆக்கிவிடு வேன்" என்று சவால்விட்டுச் சென்றன்.
 ை(பக்கம் 95)
டொமினிக் ஜீவா "நம்ம ஊரு பாச்சு பிள்ஆள’தான் கூட்டத்தை யாரோ குழப்பி யடித்திருந்தும் (?), அதுபற்றிய விபரத்தை, வெளிப்படையாக எழுதாமலிருப்பதற்குக் காரணம், அவரது நோஞ்சான்தனமாய்த் தான் இருக்கவேண்டும். உண்மையில், இத் தகைய கூட்டங்களிற் பேசப்படும் 'சிரிய ஸான விடயங்கள்' ஜீவாவுக்குப் புரிவதே பில்ஜல. அதனுல்தான் அவர் வாயை மூடிக் கொண்டிருப்பதும் வழக்கம். தான் சம்பந் தப்பட்ட விடயங்களைப்பற்றி வரும்போது கூட மெளனம். வாயைத் தி மந்தால் *மேலும் வண்டவாளங்கள்" வெளிவந்து விடுமோ என்றும் பயம். இதல்ைதான் திறந்த மனதுடன் சிலர் கருத்துகளை முன் வைப்பது, அவருக்கு இலச கியக் காடைத்தன மாகப் படுகிறது. ('ஜீவா குழுவினர்’ முன் செய்ததுபோல் அந்தச் ‘சிலர்' 'கூழ்முட் டை எறிந்ததாகவும் தெரியவில்லை!).பொது வாழ்விலிருந்து அவர்களை ஒதுககிவைக்குமா றும் சொல்கிருர், சமுதாயததில் "தீண் LT6) p' al-Tigil . இலக்கியத்துறையில் மட்டும் தீண்டாமை' கடைப்பிடிக்கப்பட வேண்டுமென, இவர் சொல்கிரா ? "துப் பாக்கிப் பயிற்சியை ஆறு மாதங்களில் பெற்றுவிடலாம். ஆனல், பேணு பிடிப்பது கடினம்’(இத்தனை வருடங்களாகியும் இவர், பேனவை "ஒழுங்காகப் பிடிக்கிறதாகத் தெரியவில்லைத்தான்) என்று சமீபத்திய கூட்டமொன்றில் கூறியிருக்கிருர், கடந்த மல்லிகை ஆண்டுமலர்’க் கூட்டத்தில் வெடிச்சத்தங் கேட்டதும் சனங்களும், வாக னங்களும் பெரியகடைப் பக்கமிருந்து வடக்

துப் பக்கமாக மல்லிகைக் கந்தோரைத் தாண்டி ஒட, தான்மட்டும் பெரியகடையை நோக்கிச் செல்லுவதாகவும், ஏனென்ருல் இந்த மண் படுகிற துன்பங்களைத் தானும் படவேண்டுமென்பதற்காக" என்றும் சொன் ஞர். இத்தகைய *கோமாளித்தனங்களிற்கு" ஓர் எல்லையே இல்லையா ? மல்லிகையின் வாசகர்கள், எழுத்தாளர்கள் எவ்வாறு இவற்றைச் சகித்துக்கொள்கிருர்கள் ?
சமீபத்தில் "யாழ். இலக்கிய வட்டம்" நடாத் தி ய கூட்டமொன்றில் கவிஞர் இ. முருகையன், சிறப்பு ரையாற்றினர். தலைப்பு 'இன்றைய இலக்கியம். ஒன்றரை மணித்தியாலங்களாக "இலக்கியம்' பற்றிப் பேசினர், ஆல்ை அதில் இ றைய இலக்கி யம்,- அதன் தன்மைகள், முக்கிய போக்கு கள், சிறப்பான ஆளுமைகள், பிரச்சினை கள் - என ஒன்றும் வரவேயில்லை. வெறும் இலக்கியத்தைப் பற்றியதாக மட்டும் அது இருந்தது. "செ. யோகராசா” இதுபற்றிக் கேள்வி எழுப்பினர். வேறு ஒருவரும் Qëllë சின் ஏமாற்றம் பற்றியும், இன்றைய பிரச் சிஜனகளை வெளிப்படுத்தும் படைப்புகளை வெளிக்கொண்டு வருவதிலுள்ள சிக்கல்களை 'உரியவர்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் நீக்கலாம் என்பது பறறியும, குறிப் பிட்டார். 'தாயகம்" சஞ்சிகையைச் சேர்ந்த சோ. தேவராசா' என்பவர், " இன்றைய இலக்கியம் என்ருல் அது 'ஒன்றைத் தான்' சொல்லவேண்டுமென்று யாரும் கட்டளை போடமுடியாது. இத்தகைய சவாதிகாரம் நீடிக்காது. "உரியவர்களை’ அணுகவேண்டு மாம் ! உரியவர்களிற்குப் பக்கத்தில் தாங் கள் நிற்கிறர்கள் என்ற நினைப்பில் சி சொல்லலாம் 'என, "எதைஎதையோ யor தில் வைத்துக் கிண்டலாகவே பேசினர். இன்றைய இலக்கியத்திலிருந்து ‘இன்றைய முக்கிய பிரச்சினைகளைத் தவிர்த்துவிடும் முயற்சியே, அவரது பேச்சின் அடிப்படை இவர்களது அரசியற் பின்னணிகளைத் தெரிந் தவர்களிற்கு, இது ஆச்சரியமூட்டாது. அவ ரது பேச்சின தவறன தன்மைகள் பற்றியும், *தாயகம்", “செம்பதாகை போன்றவற்

Page 45
றில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான *பிற்போக்குப் படைப்புகள் பல வருவது பற்றியும், குறிப்பாசப் போராளிகளைக் கிண் டல் பண்ணும் ‘முனைப்பும் முதிர்ச்சியும்’ (தாயகம்-12) என்ற கவிை யின் பிற்போக் குத் தன்மைபற்றியும் முன்னையவரினல், உடன் சபையோரிற்குச் சுட்டிக்காட்டப்பட் டது. தாயகம், செம்பதாகை, புதிய பூமி போன்றவற்றில் "எமது போராட்டங்கள் தொடர்பாக பிற்போக்கான விடயங்கள் பல வந்துகொண்டுள்ளன. சீனவுக்கும், சிறீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் வால் பிடிப்பது தான், இவர்களின் முக்கிய செயற்பாடு. எமது மக்களின் போராட்டத்தில் சீனவின் துரோகத்தனமான நிலைப்பாடுபற்றி-ஒடுக் கும் இனவெறி அரசைப் பலப்படுத்த ஆயு தங்கள் வழங்கவதுபற்றி, மனித உரிமை மீறல்கள் பற்றிய 3. நா. சபைக் குழு விவா தங்களில் இலங்கையை ஆ ரிப்பது பற்றி யெல்லாம் - அக்கறைப்படாதவர்கள்தான் இந்தக் குபபலைச் சேர்ந்தவர்கள். அதனல் தான் இவைபற்றி ஒரு கண்டனமுமில்லை. இந்தச் சீனப் புத்தகவியாபாரிகள் -கலா சாரப் புரட்சியின்போது "கோமாளித் தொப்பி போட்டு, "டெங் ஷியாவோ பிங்' பரிகசிக்கப்பட்ட செய்திகளைத் தாங்கிவந்த சஞ்சிகைசளையும் விற்று. இன் று அதே டெங் ஷியாவோ பிங்கை மகத்தான தலைவ ராகத் துதிபாடும் சஞ்சிகைகளையும் விற்றுப், பணம் பண்ணும் இந்த வியாபாரிகள்- உண் மையின் பக்கம் எப்படி வருவார்கள்?
இக் கும்பலைச் சேர்ந்த "சிறிமாவோயிஸ்ற் றுகளில் ஒருவரான சி. சிவசேகரம், ஈழமுர சில் எழுதியுள்ள "மரணத்துள் வாழ்வோம்? நூலைப்பற்றிய கட்டுரையிலும், இ ைத க் காணலாம். அந்த நூல்பேசும் அரசியல் உள்ளடக்கத்தைக் கவனமாக மறைத்து விட்டு, வெறும் உருவவாதியைப்போல் சில கவிதைகளின் அமைப்பு, சொற்பிரயோகங் கள் என்பவற்றில் பலவனங்களைக் காண அவர் "அந்தரப்பட்டு" இருக்கிருர் : fత్రాrt கரை எனத் தோற்றந்தந்தபோதும் அது

905
மண்ணுங்கட்டி தான்' என்றும் பிரச்சாரப் படுத்தப் பார்க்கிருர், ஆஞல், அரசியல் சார்ந்து அதுபெறும் முக்கியத்துவத்தையும், இலக்கிய நிலை சார்ந்து அது தமிழிற்கு வழங்கும் "புதுப் பரிமாணத்தினையும்" (ஆபி ரிக்க, லத்தீன் அமெரிக்கப் போராட்டப் படைப்புகள் போன்று) சமநிலை நோக்குடை Gurti, Fifu 16si sfT6o Trf656r.
"ஈழமுரசு’ நிறுவனம் வெளியிடும் "அமிர்த கங்கை"யின் இரண்டாவது இதழின் 17-ம் பக்கத்தில் ஒரு துணுக்கும், கடைசிப் பக் கத்தில் அரைப்பக்கக் குறிப்பொன்றும் காணப்படுகின்றன. இரண்டுமே "பாலியல் வக்கரிப்புகளை நியாயப்படுத்துகின்றன! குமு தம், ஆனந்தவிகடன் போன்றவற்றில் கூட இத்தகைய கீழ்த்தரமான குறிப்புகள் வரு மோ தெரியவில்லை 1 வேடிக்கை என்னவென் ருல் போராட்ட இலக்கியங்களை" அவா வித்தான், இந்த இதழின் தலையங்கம் எழு தப்பட்டுள்ளது. போராட்டத்தையும், Sex ஐயும் காசாக்கப் பார்க்கும் "யாவாரப் புத்தியல்லவா இங்கு வெளிப்டட்டுவிட் டது "யாவார நிறுவனங்கள்’ ‘யாவாரத் தில்" கண்ணுங் கருத்துமாய்த்தான் இருக் கின்றன!
- Luth.
★
"...செய்தி அடங்கிய திரைப்படங்களை நான் படைக் காது இருக்கலாம். ஆனல், அவற்றை ஒரு நம்பிக்கை யோடுதான் படைக்கிறேன் நல்ல படங்களைப் பார்த் தல், நல்ல இசையைக் கேட்டல், நல்ல இலக்கியங்களை வாசித்தல் மனிதனை உயர்ந்தவனுக்கும் ஆனல், ஒரு செய்தியை மட்டுமே கொடுப்பதற்கு நீங்கள் விழைகின் நீர்களென்ருல், ஏன் ஒரு திரைப்படத்தைப் பயன்படுத் தவேண்டும்?; துண்டறிக்கைகளை (pamphets) அச்சிட்டு விநியோகிக்கலாமே ! அவை கூடிய பயனைத் தரும்."
- அரவிந்தன் (புகழ்பெற்ற மலையாள நெறியாளர்.)

Page 46
நிறம் மாறும் மனிதர்கள் மேலும் ஒரு வீதி நாடகம்
தேசிய விடுதலைப் போராட்டத்தோ டிணைந்ததாக வெளிப்படும் கலை நிகழ்வுக ளாக மேலும் சிலவற்றைப் பார்க்க முடிந் தது. முற்போக்குக் கலாமன்றம் நிகழ்த்தி வரும் " நிறம்மாறும் மனிதர்கள்' எனும் வீதி நாடகம் இவற்றுள் குறிப்பிடத்தகுந்த தாகும். முற்போக்குக் கலா மன்றம் ஏற்கெ னவே 'மலரும் புதுயுகம்’ எனும் நாட்கத் தையும் பல தடவைகள் மேடையேற்றியுள் ளது.
“நிறம் மாறும் மனிதர்கள் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்ட 1000 மீற்றர் பாது காப்புவலயச் சட்டத்தின் பகைப்புலத்தில் தமிழ் மக்களுடைய நிலை, பிரச்சினை, போ ராட்டத்தின் திசைவழி என்பவற்றைப் பற் றிப் பேசுகிறது. ஆயுதப் போராட்டத்துடன் சமாந்தரமாக மக்கள் திரளின் எழுச்சியும் அவசியம் என்பது வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய வலியுறுத்தல்கள் எ வ் வளவு தூரம் மக்களைச் சென்றடையக் கூடியதாக இருக்கிறது என்பது, குறித்த கலையூடகத்தை எவ்வளவுதூரம் வலுவாகக் கையாள்கிருேம் என்பதைப் பொறுத்தது. " நிறம் மாறும் மனிதர்கள் அந்தவகையில் வெற்றிபெறுகி றது. அமிர்தலிங்கம், ஜே. ஆர். ஜயவர்த் தன, லலித் போன்றவர்களையும் பாத்திரங்க ளாகக் கொண்டுவருகிறது. குறிப்பாக, அமிர்தலிங்கத்தின் பாத்திரத்தின் பொருத் தப்பாடும், கருத்துநிலை அடிப்படையில் அவர்கள் மீதான விமர்சனமும் நளினமாக வெளிப்படுத்தப்பட்டது.
பறை, டொல்கி போன்ற பின்னணி வாத்தியங்கள் தாளக் கட்டை வழங்கியிருந் தாலும், பாடல்கள் மேலும் சிறப்பாகவும், இசைவுடனும் நாடகத்தில் இணையவேண் டும்.
எமது வீதி நாடகங்களின் பிரதான இயல்பு அதன் சமகாலத்தன்மை என்ற

LSLSLSLSLSLSLS
போதும், சமகாலத்தன்மை, பயன்பாட்டிற் கும் அப்பால் செல்லக்கூடிய வகையில் இத் தகைய நிகழ்வுகள் ஆழம் பெறவேண்டும் என்பதை இன்று குறிப்பிட்டாகவேண்டும்.
நிறம் மாறும் மனிதர்கள் - இத் தலைப்
பின் சராசரித்தன்மைக்கு அப்பால் அந்நாட கத்தின் மையத்தைக் குறிப்பிட்டுக் காட்டு கிறது. பிரச்சினைகளை நிகழ்த்திக் காட்டுத லும் அதனூடாக வளர் த்தெடுத்தலும் என்ற அம்சத்தில் இவ்வீதி நாடகம் பலத் தைக் கொண்டிருக்கிறது. எனினும் நாடகம் முழுவதிலும் இப் பலமான அம்சம் ஒரே சீராக வெளிப்படுத்தப்படவில்லை. குறுகிய காலத்தில் தயாரிக்கப்படவேண்டிய நிர்ப்பந் தத்தில் உள்ள இத்தகைய வீதி நாடகங்கள் ஏராளமான தடவைகள் நிகழ்த்தப்படவேண் டிய தேவை உள்ளது. நிறம் மாறும் மணி தர்களும் ஐம்பது இடங்களில் நிகழ்த்தப் பட்டுவிட்டது. பின்னைய நிகழ்த்திக் காட்டு தல்களில் நாடகம் ஒரு சீராகவும், மேலும் ஒழுங்கமைக்கப் பட்டதாகவும் அமைந்திருக் கும் என்று கருத இடமுண்டு.
நாடகம் முடிந்தபிற்பாடு, ஏறத்தாழ நாடகம் சொன்ன விஷயங்களையே வலியுறுத் தும் கிளர்ச்சியுரை ஒன்று சொற் பொழிவாளர் ஒருவரால் நிகழ்த்தப்படுகி றது. இது நாடகத்தை அது"ஒரு கலையூட கம் என்ற வகையில் பாதிக்கிறது. சொற் பொழிவு முதலில் இடம்பெறுவதாணுல் பர வாயில்லை. நாடகத்தைவிட சொற்பொழி வுக்கு அதிக முக்கியத்துவம் தருவது சம்பந் தப்பட்டவர்களுக்குத் தமது நாடகத்தில் நம்பிக்கை குறைவா என்று எண்ணவைக் கிறது.
அச் சொற்பொழிவு வெறும் பிரசாரம் தான். கண்களை மூடிக்கொண்டு கேட்கிற போது தமிழர் கூட்டணியின் பழைய தேர் தல் பேச்சுக்கள்தான் ஞாபகம் வருகிறது.
- ஆ. தி.

Page 47
பதிவுகள்
கொழும்பிலுள்ள யேர்மன் கலாசார நிலையம் மாதாந்தம் கலைநிகழ்ச்சிகள் பல வற்றை நடாத்திவருகிறது. அதில் குறிப் பாகத் திரைப்படங்கள் முக்கியஇடம் பெறு கின்றன. இதைத்தவிர, வ ரு டத் தி ல் இரண்டு மூன்று திரைப்பட விழாக்களையும் ஒழுங்குசெய்கிறது. சென்ற மாசிமாதம் ஃபாஸ்பின்டர் - மீள் நோக்கு(FassbinderRetrospective) என்ற தலைப்பிலான திரைப் பட விழாவினையும், அத் திரைப்படங்கள் பற்றிய இரண்டுநாட் கலந்துரையாடலினை யும் நடாத்தியது. ஃபாஸ்பின்டர், நவீன யேர்மன் சினிமாவின் மிக முக்கிய நெறியா ளர்களில் ஒருவர். 1982 ஜூனில் 37-வது வயதில் காலமாகிவிட்ட இவர், ஐம்பது படங்களை நெறியாள்கை செய்துள்ளார்; சில வற்றில் நடித்தும் உள்ளார். மேற்குறித்த திரைப்பட விழாவில் பதினெரு முழு நீளப் படங்களையும், இரண்டு குறும்படங்களையும் AuntrigGsair. The Merchant of Four Seasons; Fear Eats the Soul; Effi Briest; I Only want you to Love me; The Gods of the Plaque ஆகிய முழுநீளப் படங்க ளும், City Tramp என்ற குறும்படமும் என்னை மிகவும் கவர்ந்தன. இவற்றைப் பற்றி, பிறிதொரு சமயம் எழுதும் எண் ணம் உண்டு. நல்ல திரைப்படங்களைப் பார்க் கக் கொழும்பில் உள்ள வாய்ப்பு, யாழ்ப்பா ணத்தில் இல்லை. ஒரளவேனும் இவ் வாய்ப் பினை 1979/80-ம் ஆண்டுகளில் ஏற்படுத் தித் தந்த யாழ். திரைப்பட வட்டம், அகப்புறக் காரணிகளினுல் தற்போது இயங்க முடியாமலிருப்பது, துரதிர்ஷ்டமானதே.
சர்வதேச பெண்கள் தினத்தை முன் னிட்டு சக்தி பிறக்குது என்ற நாடகத்தை யும், வாருங்கள் தோழியரே வையகத்தை வென்றெடுக்க என்ற கவிதா நிகழ்வினையும் "யாழ். பெண்கள் ஆய்வு வட்டம்" ஒழுங்கு செய்திருந்தது.

அ. யேசுராசா
சி. மெளனகுரு எழுதி நெறியாள்கை செய்த ‘சக்தி பிறக்குது’ நாடகம் தமிழ்ச் சமூகச் சூழலில் பெண்களிற்குரிய பிரச்சினை களையும், அவற்றுக் கெதிராகப் பெண்களே போராட முனைவதையும் சொல்ல முயல்கி றது. ஆனல் இந் நோக்கத்தினைச் செம்மை யாக அது வெளிப்படுத்துகிறதா என்பது, ஐயத்திற்குரியது. பிரச்சினைகளை வெளிப் படுத்தக் கையாளப்பட்ட பாத்திரங்களும் காட்சிகளும், வலிமையான வகைமாதிரித் தன்மை கொண்டமையவில்லை. உதாரண மாய், குடிகாரக் கணவனுல் பாதிக்கப்படும் பெண்ணின் நிலைமை புதியதொன்றல்ல. கணவன் மட்டுமல்ல மனைவியும் வேல்களைச் செய்கிருள் என உணர்த்தப்படுவது மட்டுந் தான், அதில் சாதகமான அம்சம். மின் தறி அதிபர் - தொழிலாளிப் பெண் சித்தி ரிப்பு நம்பகத் தன்மையைக் கொண்டிருக்க வில்லை. மலையகப் பெண்களின் நிலைமை களும் சரியாகச் சித்திரிக்கப்படவில்லை. தனி மையிற் செல்லும் பெண்களிற்குச் செய்யப் படும் சேஷ்டைகளும் கூட, இன்றைய நிலை யில் மிகைப்படுத்தப் பட்டதாகவே தெரிகி றது. இவற்றைத் தவிர, இன்று முக்கிய மாக அரச வன்முறையாளர்களினுல் பெண் கள்மேல் நிகழ்த்தப்படும் கற்பழிப்புகள், துன்புறுத்தல்கள்; குடும்பத் தலைவர்களைத் திடீரென இழந்துவிடுவதிற் சுமத்தப்படும் பாரிய குடும்பப் பொறுப்புகளின் சுமைகள், அவலங்கள் போன்றவை சித்திரிக்கப்பட்டி ருக்கவேண்டும். இவை தொடப்படாததும், நாடகத்தின் "அரைகுறைத் தன்மைக்கு"க் காரணமாகிறது.
எந்த விடயமும் இயல்பான முறையில் பார்வையாளர்களிடம் தொற்றக் கூடிய தாக வெளிப்படுத்தப் படவேண்டும் உத் திகள் ‘தணியாகப் பிதுங்கி நிற்குமாளுல் அதைப் பாதிக்கவே செய்யும். இங்கும் அதுதான் நிகழ்கிறது. குறிப்பாகக் கொட் டகைக் கூத்துப் பாணி" கையாளப்படும்,

Page 48
908
இடங்களில், அப்போது பேசப்படும் விட யங்களின் காத்திரத்தன்மை இழக்கப்பட்டு வெறும் கேலிக்கூத்தாகும் உணர்வே, ஏற் பட்டது. பெண்களிற்குச் சார்பாகவும் ஆண் களிற்குச் சார்பாகவும் ச  ைபயிலிருந்து இரண்டு குழுவினர், மாறி மாறிக் கையொ லிகளையும் வாயொலிகளையும் எழுப்பியமை யும், இதை உறுதிப்படுத்துகிறது. சில குறி யீட்டுச் செய்கைகள் தெளிவீனமாய் இருப்ப தோடு, பல கட்டங்கள் வெறும் பிரச்சார மாகவும் இருக்கின்றன; உ+ம் பெண்கள் அமைப்புகளின் பட்டியல் வாசிக்சுப்படுவது.
குடிகாரக் கணவகை வரும் ஜெனம், பெண்ணைக் கேலிசெய்யும் இளைஞனுக வரும் கே. பூரீ கணேசன் ஆகியோரின் நடிப்பும்; *சக்தி'யாக வந்த நிமலினியின் உத்வேகம் நிறைந்த ஆட்டமும் பாவனைகளும், என்ன மிகக் கவர்ந்தன. :
இறுதியில் கொடுமைகளிற்கெதிராகக் கிளரும் உத்வேகத்தைப் பெண்கள், சக்தி" யென்ற தெய்வீக வடிவத்திலிருந்த பெற் றுக்கொள்வதாகக் காட்டுவது பிற்டோக்கில் லையா என, வரட்டுவாதிசளில்" யாராவது கேட்கலாம். ஆனல், மரபார்ந்ததொரு நம்பிக்சையுடன் தொடர்பறுத்திப் போராட் டக் குணும்சத்தைப் பிறப்பித்து வலிமைப் படுத்த முயல்வது, இயல்பானதாயும், தாக் கத்தைத் தருவதாயுமே இருக்கிறது. இதற்கு மெளனகுருவைப் பாராட்டவேண்டும்.
ஏராளமானேர் கலந்துகொண்ட சிரமம் நிறைந்த முயற்சி; ஆல்ை, செம்மையான தாக அ மைய வில்லையென்பதே எனது ஆதங்கம்.
கவிதை வாசிப்பு, கவிதா நிகழ்வு என்பன கருத்துக்களை அழுத்தமாக வெளிப்படுத்துவ தையே நோக்கமாகக் கொண்டவை. தெர லைக்காட்சியில் காட்டப்படும் "ஒலி யும் ஒளியும்’ நிகழ்ச்சிபோல் அவற்றைக் காட்சி ரூபப் படுத்தும்போது, கருத்துக்களின் அழுத்தங்கள் இழக்கப்படும் சாத்தியப்பாடு

உண்டு. சிதம்பரநாதனின் நெறியாள்கை யில் காட்சிரூபப்படுத்தப்பட்ட "வாருங்கள் தோழியரே வையகத்தை வென்றெடுக்க” என்ற கவிதா நிகழ்விலும், இதைக் காண முடிந்தது. ஆண்கள் சுகமாகத் துயிலுகை யில் பெண்கள் விழித்திருந்து பல்வேறு வேலை களைச் செய்யவேண்டியிருக்கிறது என்பதும், பெரியபிள்ளையாகு முன்னுள்ள பருவத்தில் சுதந்திரமாய் விளையாடித் திரிந்ததன் உல் லாச உணர்வும் மட்டுமே, மிக நன்ருகத் தொற்றவைக்கப்பட்டன.
ஈழமுரசில் (9-2-86) சிறுகதை க ஆள விமர்சிக்கவந்த "அம்பலத்தரசன் ? "ஈழத்து இலக்கிய விமர்சனத்தில் சமநிலை நோக்கு இல்லை என்ற கரு த் தினை இன்று சிலர் முன்வைத்துப் பிரசாரப்படுத்த எத்தனிக்கி ரு?ர்கள்" என்று சொல்லி அ) குறிப்பிட்ட விமர்சகர்சளிடம் தமது படைப்புகளிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற அதங் கத்திலேயே, இப் படிச் சொல்கிறர்கள். அ) விமர்சகர்கள் தாம் எற்றுக்கொண்ட இலக்கியக் கோட்பாட்டை ஒத்த படைப்புக் களைச் சிலாகித்தும், முரணுன இலக்கியங் களைச் சிறந்தவையல்ல எனவும் சொல்வார் கள். இதைச் சமநிலை அற்ற நோக்கு என எவ்வாறு சொல்லலாம்? என்று எழுதுகிருர்.
அலை - 26-ல் வந்துள்ள "மூவர் பார் வைகள்" பகுதியிலுள்ள பதில்களையொட் டியே, மேற்குறித்த கருத்துக்கள் எழுதப் பட்டிருக்கவேண்டும்.
1. அதில் பதில்கூறியுள்ள நந்தினி சேவி யர், செ. யோகராசா, சு. வில்வரத்தினம் ஆகியோர் அல்லது 'அலையைச் சேர்ந்தவர் களிற்கு, அத்தகைய ஆத ங் கம் ஏதும் இருந்ததில்லை. தவிர, நமது பிரபல விமர்ச கர்களிடம் பாராட்டைப் பெறுவது அப்படி யொன்றும் கஷ்டமான விடயமில்லையே 1. சுலபமான வழிகள்பல உண்டல்லவா ?

Page 49
2. ஒத்த இலக்கியக் கோட்பாடுகளைக் கொண்ட படைப்புக்கள், கட்டா யம் பாராட்டத் தக்கவையாய்த்தான் இருக்கு மா ? அதில் குறைகள் இருக்காதா? முரண் படும் இலக்கியப் படைப்புகளில் வேறு பாராட்டத்தக்க அம்சங்கள் இருக்காவா ? ஒத்த இலக்கிய நோக்கு உள்ளவர்களையே பாராட்டினர்கள் என்ருல், "தீர்வு சொல்ல வில்லை" என்பதற்காக ஒருகாலத்தில் புது மைப்பித்தனையே "கொலரில் பிடித்துத் தூக்கிவீசிய விமர்சகப் பெருந்தகைகள் காவலூர் ஜெகநாதன், சாந்தன் போன்றே ரைப் பாராட்டியது எப்படி ? இவர்கள் பாராட்டப்படலாமென்ருல் எஸ். பொ., வ. அ. இராசரத்தினம், மு. தளையசிங்கம் போன்றேரின் படைப்புக்கள் ஏன் உரிய முறையில் பாராட்டப்படவில்லை ? பட்டியல் போடுகையில், பேச்சோசைப் பண்பைக் கை யாண்டவர்களில் ஒருவராக "மஹாகவி' யைக் குறிப்பிடவும் முன்பு தயங்கியதேன்? வி தேசிய எதிர்ப்பை வெளிக்காட்டிய *கோடை போன்றனசுட முக்கியம் பெருத தேன் ?
அரசியல், சமூக உள்ளடக்கங்கொண்ட பிறமொழி நாடகங்களைப் பாலேநதிரா மிகச் சிறப்பாகத் தயாரித்திருந்தபோதும், அவரிற்கு உரிய இடத்தை வழங்காததேன் ? முரண்பாடுகள் நிறைந்த முனறுரைகள் என, இப்படி இன்னும் பலவறறைக் கேட் கலாம். இவையெலலாம் நயது "வமர்சகப பெருந்த்கைகளின் சம நிலை நோக்கைக் கேலிக்கூத்தாக்கவில்லையா ? தற்போது பல் வேறு சமரசங்களிற்குட்பட்டுப் புனைபெயரில் மறைந்துள்ள இந்த "அம்பலத்தரசன்° தனது
* சமூகத்தில் பெண்ணினத்துக்கு நியாயமாகத் தரப்ப யத்தில் ஆண்களின் அதிகமான ஆதிக்கத்தினல் பெண் தேவி" என்று சொல்லி வணங்குகிரும் ; வழிபடுகிறே கிருேம் அவர்களது உணர்வுகள நாம் மதிப்பதில்லை 'பராமா'வை இயக்கியிருக்கிறேன். என் சொந்த வாழ் அடிப்படையில்தான் கதாபாத்திரங்களை அமைத்திருக்கி வுரை கூறவுமில்லை; பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுகிே
SG GLLLLSSL S SLLLSSS SS SS SS -~۔۔سحصےسےسیستتشست سسسس-ستمقدس"سب

909
முற்காலக் கட்டுரைகளையும் பேச்சுக்களையும், நினைவுகூர்வது நல்லது !
! :V.
மதிப்பீடுகளோ பாராட்டுகளோ நிதா னங்கொண்டனவாயும், அர்த்தம் நிறைந் தனவாயும் இருத்தல் வேண்டு-ென எதிர் பார்ப்பதில் தவறில்லை. நமது கலை, இலக்கி யச் சூழலில் இவை எவ்வாறிருக்கிறது எனப் பரிசீலிப்பதற்கு, சமீபத்தில் படிக்கநேர்ந்த மூன்று உதாரணங்களைத் தருகிறேன்; அழுத் தம் மட்டும் என்னுடையது.
நமது தலைமுறையில் உலகின் அனைத் துக் கவிஞர்களுக்குள்ளும், தன் கவிதா வீச்சால் முன்நிற்கும் மகோன்னத கவி ஞன் புதுவை இரத்தினதுரையின்." -(மாற்று -6. பக் 13)
O ܝ
சமீபத்தில் மரணமான ஒரு தமிழ் எழுத் தாளரைப்பற்றி, இலக்கிய அமைப்பொன்று வெளியிட்ட அறிக்கையில் :
இவரின் படைப்புககள் உலகுள்ள வரை இலக்கிய மதிப்பில் சுடர்விடக் கூடிய ஆற்றலுள்ளவை."
- (ஈழமுரசு - 25-3-86) பத்திரிகையொன்றின் ஆசிரியத் தலையங் கததல் 3 *
"...அவரது எழுத்துக்கள் சாகாவரம் பெற்றவை; கடைசித் "மிழன் உள வரை அவை நிலைத்துநிற்கும’
- ஈழமுரசு - 28-3-86) முடிவினைப் பகுத்தறிவுமிக்க வாசகர்க ளிறகே விட்டுவடுகிறேன, 大
டவேண்டிய நீதி, உரிமை வழங்கப்படுவதில்லை. சமுதா களுக்குச் சுதந்திரம் மறுக்கபபடுகிறது. ஒரு பெண்ணை 4. ஆணுல் வாழ்க்கையில் அவர்கள ஆயந், மாகக் கருது , ஒரு பெண்ணின் பிரசசிண்களை மையமாகவைத்து டிக்கையில் நேரில்-சந்தித்தட் அனுபவப்பட்ட நிகழ்ச்சிகளின் றேன் . நான் வாதா- வரவில்லை; சமூகத்துக்கு அறி pళr a அர்னு சென் (வங்காளத்தைச்சேர்ந்த பெண், நெறியாளர்.)
se

Page 50
பண்டிதமணி
"பழுத்த வெள்ளரிப்பழம் ெ இறுதிநாளில் கட்டுகளிலிருந்து
"விளக்கில் எண்ணெய் முடிந்து எங்கும் ஒளிநல்கிய தீபம் மெ
பண்டிதமணி என்ற குன்றின்மேலிட்ட தீபம் அனேந்துவிட்டது. மூப்பு, பிளி, சாக் காடு என்பன இப்பூமியில் பெரியவர், சிறிய வர் என்ற பேதமின்றி அனைவரையும் அணைத் துக்கொள்ளும், அவற்றின் இறுகிய அணைப்பு நெருங்குமுன், விடுதலைபற்றி யோசிப்பது நல்லது என்றும், அழியும் பொருட்களின் அழகில் இருந்து அழியாப் பொருளின் அழகு ஒளிக்கு எம்மை இட்டுச் செல்வதே உண்மை யான இலக்கியம் என்றும் பேசிய குரல், மெளனத்துள் கரைந்துவிட்டது. வெறும் முகமன் உரைகளை, அஞ்சலிகளை விடுத்து அன்னர் மனிதவாழ்வுக்குப் பயனுள்ள எதனை முதுசொமாக விட்டுச் சென்ருர் என இரத்தினப் பரீட்சை செய்வது, நல்லது.
ஐரோப்பிய சிந்தனையின் உயர்சிகரம் சோக் கிரற்றீஸ், அவர் உண்மை எது என உசாவி ஞர். அதனைக் காணும் முயற்சியில் சிந்தித் துக்கழித்தவற்றை எழுத்துருவில் பாது காத்துவைக்கச், சிறிதும் அவகாசம் தேடி ஞர் அல்லர். அவற்றை உரையாடல் என் D இலக்கிய வடிவில் உருவாக்கித் தந்தார் பிளேற்றே. அவ்விருவரையும் பாராட்டும் பண்டிதமணி, தாமும் அதே பணியைச் செய்தார். " எம்மிடையே ஒரு சோக்கிரற் ரீஸ் வாழ்கிருர் ' என்று ஆசிரிய கலாசாலை உப அதிபரை உச்சி மேற் கொண்டார். வெறும் நூலறி புலமையும், இயற்கையில் ஈடுபாடும் உள்ளொளி பெற்ருேருக்கு அடி பணிய வேண்டும் என வற்புறுத்தினர். "இலக்கிய கலாநிதியானபின் யாழ். பல் கலைக் கழகத்தின் பாராட்டு விழாவில் இது னையே முழுக்க முழுக்கப் பேசினர்.
இலக்கியத்தில் புறஅழகை, சொற்செழிப்
பை, முதல், கருப்பொருள்களைப் போற்ற ழல் உரிப்பொருளைப் போற்றுவேண்டும் என

காடியிலிருந்து விடுபடுவதுபோல விடுவிப்பீராக."
- வேதரிஷியின் கவிதை.
விட்டது. ஒருகாலத்தில் சுடர்விட்டு ல்ல மெல்லக் குறைந்து அணைந்தது." - யாரோ ஒரு நவீன கவிஞன்.
அறுதியிட்டு உரைத்தார். "சினிக்கலாக, அங்கதச்சுவையாக, பிறருக்கு அம்புபோல் தைக்கும், ஆருத வடுவை ஆக்கும் நாவைப் பயிற்றி இதமொழி பேசவைத்தார். 'பன்னி ரண்டு வருஷம் நாவை முறையாகப் பயன் படுத்தினல், "வாக்குச் சுத்தம் பிறக்கும். அப்போது உண்மைக் கவிதை எது; "அசத்' தை விலக்கிச் "சத்'தைக் கண்ட கவிஞனின் ஆக்கம் எது என உணரலாம்" என்ற உப அதிபர் கைலாசபதியின் கூற்றைப் பொன் னேபோல் போற்றினர். இதனல் இலக்கி யத்தின் உடலையும் உயிரையும் பகுப்பாய்வு செய்ய உந்நத உரைகல்லை ஆக்கித்தந்தார். மு. வரதராசனுருக்குக் கலாநிதிப் பட்டம் பெற்றுத்தந்த "சங்க இலக்கியத்தில் இயற் கை'யைப் பார்த்துவிட்டு, ' இதென்ன முதலும், கருவும், உரியைச் உரிய இடத்தில் வைத்துக் காட்டுவதற்கு அல்லவோ? விலை மதிக்க முடியாத வைரத்தை அற்ப விலை யுள்ள பொன் ஆபரணத்திற் பதித்துவிட்டு, பார் பார் என் பொன் நகையின் வேலைச் சிறப்பை" என்று காட்டுவதுபோலல்லவோ இருக்கிறது?" என்று காட்டி எமக்கெல்லாம் ஒரு இறுக்கமான பார்வையைத் தந்தார்" டால்ஸ்டாயின் "அன்னகரீனின’ முகவுரை யில் ரா. பூரீ. தேசிகன் எடுத்துக்காட்டிய ஈ. வி. லூக்காஸின் விமர்சன உரையைச் சுட்டி,
"லெவினின் மனதில் ஒடும் மரணம், நித் திய வாழ்வுபற்றிய சிந்தனை ஓட்டத்தை டால்ஸ்டாய் விபரிக்கும் இவ்விடத்தில் அவ ரது இலக்கிய ஊற்று வற்றிவிட்டது என் றிருப்பது தவறு; அதுதான் மேலைத்தேச சிந்தனை ; நாங்கள் சொல்வோம்: இங்கே தான் உண்மையான இலக்கியம் முளைகொள்

Page 51
கிறது என்று ??; இவ்வாறு கூறி எ ங் கள் இலக்கியப் பார்வையில் இருந்த காகப்பார் வையை - வாக்குக்கண்ணை - நேரிதாக்கி விட்டார்.
பண்டிதர் ஐயாவின் இலக்கிய சஞ்சாரத் தின் உச்சஸ்தாயி 1951-ம் ஆண்டுதமிழ் விழா வில் - இன்றைய யாழ், பல்கலைக்கழகத்தில் ரா. பி. சேதுப்பிள்ளை தலைமையில் ஆற்றிய உரையாகும். "தலைமை விசேடத்தால் விக சிக்காத அந்தப் பொன்னுரை, பின் இந் துக்கல்லூரியில் நல்லார் தலைமையில் மலர்ந் து மணம் கமழ்ந்த கதை, ஈழத் தமிழ் இலக் கிய வரலாற்றில் முக்கிய இடம்பெறும். தோலிருக்கச் சுளைபோகாமல், மோதகத் தின் "உள்ளுடன் அற்றுவிடாமல், தமிழ் வேழம் உண்ட விளாங்கனி ஆகாமல் தடுத் துவிட முயன்ற ஆவேசக்குரல், அழுத்தம் திருத்தமாக அக்காலத்தில் ஒலித்தது. பலரு டைய சேவியில் அது படாதிருந்தாலும், அப்போது 'தினகரன்' ஆசிரியராயிருந்த வே. க. ப. நாதனுக்கு அது தெளிவாகக் கேட்டது. அத் தனித்து பம், இலக்கிய வனந்தரத்தில் அது ஒரு பேரொலி என்ற நிச்சயபுத்தி அவருக்குப் பிறந்தது. பண்டித ரையாவைப் பகிரங்க உலகுக்கு  ைதமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகம் செய்துவைக் கத் தூண்டியது. "கம்பராமாயணக் காட்சி கள் முதல் சமயசிந்தனைக் கட்டுரைகள் வரை, அனைத்துக்கும் கால்வாய் அமைத்துக் கொடுக்கச் செய்தது.
"மேல்காற்று மூலம் வந்த புதிய இலக்கி யக் கோட்பாடுகளால் கவரப்பட்டவர்கள் நவீன கல்விகற்றவர்களைக் கவரும் புதுமை யை - புது ை0 என்றதற்காகத் தழுவும் போக்கை-விருத்திசெய்தவர்கள்கூடத் திரும் பிப்பார்க்கும் வகையில் பண்டிதமணி தம் கருத்துகளைப் பிளேற்ருேபோல இலக்கிய வடிவில் தந்தார். பொருள்முதல் வாதத் தைத் தளமாகக் கொண்டவர்களும் கருத்து முதல்வாதத்தை வற்புறுத்துகின்றவர்களுக்கு அவர்தம் கோணத்திலிருந்து இலக்கியத்
7 مسیرهای ayی

9.
தைப் பார்க்கும் உரிமையை விட்டுக்கொடுக் கலாம் (concede) என்று நினைக்கும் அள வுக்கு உறுதியாகத், தைரியமாகத் தம் இலக் கியக் கோட்பாட்டை வாழ்க்கைத் தத்து வத்தை, வரையறையுடன் வரைந்தார், இந்தக் குடுமிப்பண்டிதர். ஆனந்தகுமார சுவாமி, றெனே கெனேன் போன்ற மரபு வாதிகளைப்போலத் தமிழ்மரபு தப்பாமல் பழமையை வற்புறுத்தி, அது புதுமையின் போக்கில் உள்ள கோணல்களைத் திருப்பிவிட வழிசமைத்தார். அவர் வழி இலக்கிய வழி; சமய வழி; மனிதன் அதி மனிதனுக உயர்வ தற்குத் தமிழ்ச்சிந்தனை - பாரத சிந்தனை காட்டிய அருவழி. 'அது மறைவழி; எமக் கொன்றும் விளங்காது' என்று பேசுபவர்க ளுடன் எமக்குப் பேச்சில்லை. சோக்கிரற் நீஸை அறிவு உலகம் வியக்கச் செய்தவர் பிளேற்ருே. எனினும் அவரது எழுதா மறை வழியை - சத்திய வேட்கையை முழுக்கப் பெற்ற பிற சீடர்கள், அதிகம் இலக்கிய உல கம் வியக்க எழுதிவைக்காமல் வாழ்ந்து காணமுயன்றவர்களின் மரபு ஒன்று மேற்கு உலகில் இருந்ததாம். கங்கையும் யமுனையும் போலப் பிளேற்ருேவும். அரிஸ்டோட்டலும் இரு கிளைகளாகச் சோக்கிரத சிந்தனைகளை அறிவுலகிற் பாய்ச்சியபோது, ஸெனஃபோன் போன்ற சீடர்கள் பாதாளகங்கை போல அறிவுலகின் அடிப்படையில் மறைந்திருந்து சிந்தனைத்திரிவேணி சங்கமம் செய்தார்க ளாம். பண்டிதமணியியல் பற்றிப் பேசும் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், கங்கையும் யமுனேயும் என மேற்பரப்பில் ஒடும் பகிரங்க உலகம் கண்ட் நதிகளைமட்டும்அைச்சில்வந்த, வராமல் எழுத்துருவில் கிடக்கின்றவற்றை மட்டும்  ைஆராயாமல், அன்னரது சிந்தனை ஓட்டத்தின் மூலஊற்றையும், அதிலிருந்து அமிர்தநீர் பெற்றுத் தம் ஆத்மதாகத்தைச் சாந்திசெய்தவர்கள் அன்னரது சிந்தனைக ளின் உயிரியல் மாற்றத்துக்கு (Metamorph" osis), உதவிய வகையையும், ஆராய்வார்க ளாயின் அறிவுலகம் வியக்கும். சாதாரண உலகமட்டத்தில் பண்டிதமணியை வினேத ரசமஞ்சரி இயற்றிய வீராசாமிச் செட்டியா

Page 52
ருடன் ஒப்பிடுவாராம், காலம்சென்ற பர மேசுவரக் கல்லூரி சு. நடேசபிள்ளை. நம் பண்டிதர் 19-ம் நூற்றண்டு ஈழத்து, தமி ழகத்து "வினேதரச மஞ்சரி ஒன்றை இயற் றினல் என்ன என்று வற்புறுத்துவாராம். நாவலர் பரம்பரை அறிஞர் பற்றிய இந்த உலகியற் செய்திகளை ஒருபோதும் எழுத்தில் வடிப்பதைப் பொருள் செய்யாது ; சுளை யிருக்கத் தோல்தின்னச் செய்யும் முயற்சி என இ கழு ம் என்பார் பண்டிதரையா. ஆனல் இன்று மேலைத்தேசத்தார் டால்ஸ் டாய் முதல் ஜோய்ஸ்வரை, டாவின்ஸி முதல் கணிதமேதை ராமானுஜம்வரை கடி தங்கள், வெட்டித்திருத்திய மூலப் பிரதிக ளைக்கூட ஒரு கீறுவிடாமல் பிரசுரித்து ஆய்வு நிகழ்த்துவதைப் பார்ப்போர், பண்டிதமணி கைப்பட எழுதிய கடிதங்கள், அவர் கட்டு ரைகள் உருமாறிய, திருத்தம் பெற்றவகை, சிந்தனைகள் முதிர்ந்த பாங்கு ஆகியவற்றை அறிந்தவர்கள் தரும் செய்தி என்பவற்றைக் கட ஒன்றுவிடாமல் சேகரிக்கலாம். இப் போது நடைபெறும் முயற்சிகள் தனித்தனி யே நிகழ்வன. அவை அனைத்தும் ஒரு கூரை யின்கீழ் இணைதல் நலம்.
இன்றைய அரசியல் மயப்படுத்தப்பட்ட யாழ்ப்பாணமும் - தமிழகமும்கூட - இந்த
உங்கள் குடும்பத்தின் பொங்கும் மகிழ்வுடன் எ
“Gulbs
(யாழ். கனகரத்தினம் ே 425 (793) நாவலர்
இணை ஸ்தாபனம்;
பெமிலி
13 A, குருநகர் நவீன

ரீதியில் செயல்படுமா? ஆனந்தகுமாரசுவா மிக்கு வந்த மூன்றுபாகம் மாபெரும் பதிப்பு GöLi Tav , “GUpfbalp GypGup GBəy&vas Gir” (complete Works) பண்டிதமணிக்கும் வருமா? ஜேம்ஸ் ஜோய்ஸின் நூற்றணடு விழாவுடன் அவரது கிறுக்கிய படைப்புகள் எழுபது பாகங்களில் ஆய்வாளருக்காக அச் ச டி க் கப்படுகின் றனவாம். அ ப் படி ப் பண்டிதமணியின் "கிறுக்கல்கள்’ சேகரிக்கப்படுமா? (வெளிவரு மா என்ற வினுவைப் பின்னுக்கு வைப் போம்.) ஐயா அவர்களின் இறுதிச்சடங்கு அன்று ஒரு மாவட்ட நீதிபதி ஹாஸ்யமா கச் சொன்னுர்: "ஐயா எழுதிய முகவுரை மூலப்பிரதி நீங்க ள் தந்தது என்னிடம் இருக்கிறது; இன்று அதற்குப் பெறுமதி பத் தாயிரம் ரூபா; தந்தால் திருப்பித்தரு வேன்.' விலை தெரிந்தவர்கள் சொல்கிருர் கள். ஆனல் இவைகளை எல்லாம் யார் செய் யப்போகிருர்கள்? ஐயா ஒருமுறை எழுதி யதுபோல தசமுகன் வழிவந்த தமிழர்கள் பத்துத்திசை நோக்கிப் பார்ப்பார்களேஒழிய ஒரு தலையின்கீழ் ஒன்றுபடமாட்டார்கள் என்ற அச்சம்தான் மிகுகிறது. கலாநிதி சிவத்தம்பி எழுதிய கட்டுரை (ஈழமுரசு) நம் பிக்கை ஒளிதருமோ ?
- ஆ. சபாரத்தினம்
அன்றடத் தேவைகளை ன்றும் நிறைவு செய்வது
சொப்”
iல்லூரிக்கருகாமையில் ) வீதி, யாழ்ப்பாணம்.
காடின்ஸ்
சந்தை, யாழ்ப்பாணம்

Page 53
நிகழ்காலமும் மக்களின் கை
தமிழ்பேசும் மக்களின் தேசிய விடு னடைவுகளைச் சந்திக்க நேர்ந்துள்ளது என்ப யாகும்.
சமகால நிகழ்வுகளில் குழப்பமும்,
* முழுப் புரட்சி பற்றிய முணுமுணுப்புகளும் களுக்கிடையிலான மோதல்கள், உள் மோதல் கள் என்பவற்றுடன் இவை தொடர்புபட்டு யுற்ற அரசியற் சக்திசளும் தமக்குச் சாத "பறதிப் படுவதை"யும் காண்கிருேம், வெகு குள்ள சிறு ஸ்தாபனங்களின் மூலமும் இ6ை
தேசிய விடுதலை’க்கு விரோதமான இந்த அவதானங்கொள்ள வேண்டும்.
தமக்காக வேறு யாரோ எல்லாவற்ை கொண்டு மக்கள் விலகியிருப்பது, மிகவும் மோசமாய்ப் பெருக இடந்தருவது. வாக்கு கிற காக நம்பி ஓய்ந்திருக்கும்படியே, கட முறைகள் இருந்திருக்கின்றன. இன்றைய நி மானுல், அழிவுகள்தான் மேலும் தலைமீது
மக்கள் சக்தியே வரலாற்றை இயக்கு யும். எனவே சிறுசிறு உதவிகளை வழங்கில துக்களை உருவாக்குபவர்களாகவும், தீர்மானர் படவேண்டும். தம்மைப் பாதித்துக்கொன கள், எதிர்காலம் பற்றிய முன்னுேக்குகள் ெ வெளிப்படுத்தவேண்டும். தாம் வசிக்கும் ஊ மாய்க்கூடும் பொதுச்சந்தர்ப்பங்களில் எல் லாம். சிறுசிறு அமைப்புக்களூடாக, குறிப் னங்களை நிறைவேற்றிப் பகிரங்கப்படுத்து
 

எதிர்காலமும் களில் 1
தெலைப் போராட்டம் தற்போது சில பின் து. வருத்தந்தரும் கசப்பானதோர் உண்மை
எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனங்களும், ம் மெல்ல எழத் தொடங்கியுள்ளன. 'குழுக் *கள், மக்களை மதிக்காத வன்முறைச் செயல் டுள்ளன. ஒடுக்குமுறை அரசும், தோல்வி கமாய் இச் சூழலைப் பயன்படுத்துவதற்குப் ஜன தொடர்பு சாதனங்கள் மூலமும், தமக் வ தந்திரமாகச் செயற்படப் பார்க்கின்றன. நிலைமைகள் பற்றியெல்லாம், மக்கள் மிகவும்
றையும் செய்து தருவார்கள் என்று நம்பிக்
தவருனது; இன்றைய நிலையில், தீங்குகள்
ச் சீட்டை அளிப்பதுடன் தமது கடமை முடி
ந்தகாலப் பாராளுமன்ற அரசியல் நடை
லைமையிலும் அந்த மனேநிலைதான் தொடரு
வீழும்.
நம் தீர்மானகரமான சக்தியாக இருக்கமுடி விட்டு ஒதுங்கியிருப்பதற்குப் பதிலாகக் கருத் களை எடுக்க நிர்ப்பந்திப்பவர்களாகவும் செயற் ண்டுள்ள அரசியற் கருத்துக்கள், நடைமுறை தாடர்பான தமது கருத்துக்களை உடனுக்குடன் ார்களில், வேலை செய்யும் இடங்களில், கூட்ட ரலாம் எப்போதும் இவற்றை வெளிப்படுத்த பாக சனசமூக நிலையங்களிற்கூடாகத் தீர்மா வது, வலிமை பொருந்தியதாக அமையும்.

Page 54
914
சிங்களமும், தமிழும் அரச மொழிகளாக
அரச மொழியாக்குமாறு அப்போதைய 岛 தில், சிங்களப் பகுதிகளின் சனசமூக நிலை கள் ஆற்றிய பங்கை, நாம் நினைவுகூரல்
நமது விடுதலைக்கான போராட்டத்தி முறைகளை உருவாக்குவதற்கும், நம்பிக்கை தற்கும்; போராட்டக் குழுக்களை நெறிப்ப சக்தியாகச் செயற்பட வேண்டியதே, தமிழ் லாற்றுக் கடமை. இந்த வரலாற்றுக் கடை களைப் பற்றிய அவதானமும், முக்கியமாக { கருத்தாக்கத்தை ஏற்றுக் கொள்கின்ருரா தைச் செழுமைப் படுத்துவதை நோக்கமா னங்களை முன் வைக்கிருரா இல்ஃ யா என் யநல சக்திகளைத் தெளிவாக இனங்காண பட்டால் மட்டுமே, முன்னுேக்கிய நகர்வு
萄 vn -
நவீன மலையாள இலக்கியத்தைச் சுெ தகழி சிவசங்கரப்பிள்ளேயும்; புதுமையு ஆழமாய்க் காலூன்றி நின்றபடி தமி களும், சாதி ஒடுக்குமுறைகளிற்காளா அந்த ஒடுக்குமுறைகள்பற்றி எழுதிய சமீபத்தில் மறைந்துவிட்டனர். இவர் தெரிவிக்கின்றது.
"எனக்குப் பொதுமக்களைப் பிடிக்காது என்பதல் யம் வேறு என்பதுதான் உண்மை. மக்களைத் தனித் வில்லை. அப்படி ஒரு மக்கள் திரள் தத்துவம், கட்சியும் வழியில் மக்களை ஓட விடுவதில்லை. மக்களில் எனக்கு லும் எனக்கு நம்பிக்கை இருக்கிறதென்பதுதான் அர்: யல்ல, மற்றவர்களோடு கலந்து சேர்ந்து தன் தனி ஏற்படுத்தாவிட்டால் காய்ந்து ஆவியாய்ச் செத்துவிடு படுத்தக்கூடியது! முழு ஒட்டத்தையுமே மாற்றக்கூடிய நான் பொதுத்தன்மையை, பொது முன்னேற்றத்தை முன்னேற்றமும் வளர்வதினுல் ஏற்படும் பொது மு விழுங்கி அடக்கிவளரும் ஒருதனித்தன்மை எப்படி சர்வ தன்மையையும் விழுங்கி வளரும் பொதுத்தன்மையு கூடாது என்று கருதுவது அதனுல்தான். மக்களின் முழத் துணிக்கேற்ப வாழ்க்கையையே வெட்டி ஒதுக்கி கையின் ஒரு சிறு பின்னத்தின் பிரதிபலிப்பாகவே ஆ பாடு யந்திரப்பிடியாக விழுந்துவிடுகிறது."
 

இருந்த காலகட்டத்தில், தனிச் சிங்களத்தை 1. தே. கட்சி அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பு யங்கள் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானங் நல்லது.
ல் சரியான - மக்கள் நலன் சார்ந்த நடை நிறைந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்வ டுத்துவதிலும் வலுப்படுத்துவதிலும் அழுத்த பேசும் மக்களின் முன்னுள்ள உடனடி வர மயை ஆற்றும்போது குழப்பகார - தீய சக்தி இருத்தல்வேண்டும். தேசிய விடுத% என்ற இல்லையா என்பதனையும்; அப் போராட்டத் கக் கொண்டு, நேசபூர்வ நோக்கில் விமர்ச ாபதனையும் பரிசீலிப்பதன்மூலம், குழப்பகார லாம். மக்கள் விழிப்புடன் இருந்து செயற் சாத்தியமாகும் ! ★
umui
Fழுமைப்படுத்தியவர்களில் ஒருவரான டன் தொடர்புற்றவாறு பழைமையில் ழ்ப்பணி ஆற்றிய, பண்டிதமணி அவர் 'ன சமூகப் பிரிவிலிருந்து தோன்றி, வர்களில் ஒருவரான கே. டானியலும் *களின் மறைவிற்கு "அலை" வருத்தந்
ܝܵܬܼܵܐ܃ ܃ ܘ̇
ல அர்த்தம். பொதுமக்களைப்பற்றிய என் அபிப்பிரா துக் கோடுகள் தெரியாத நீர்த்திரளாக நான் நினைக்க சர்வாதிகாரியும் வெட்டும் வாய்க்காலைத்தவிர வேறு நம்பிக்கை இருக்கிறதென்றல் ஒவ்வொரு மனிதனி தம். ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறு நீர்த்துளி ந்தன்மையை இழந்து ஓட்டத்தையும் வேசத்தையும் வதற்கு ! ஒவ்வொரு துளியும் ஓர் ஓட்டத்தை ஏற் து அந்த அதிசயத்துளி, தனி மனிதன் ! எனவே, விரும்புகிறேன் என்ருல் அது தனித்தன்மையும் தனி ன்னேற்றமே. மற்றவர்களின் தனித்தன்மையை ாதிகாரமாகிவிடுமோ அப்படி ஒவ்வொருவரின் தனித் ) சர்வாதிகாரமாகிவிடுகிறது. கட்சி இலக்கியம் ரந்த வாழ்க்கைக்குக் கட்சி தன்னிடமிருக்கும் ஒரு விடுகிறது. அதற்குப்பின் இலக்கியம் என்பது வாழ்க் கிவிடுகிறது. அதோடு இலக்கியப்போக்கில் ஒருமைப்
- மு. தளையசிங்கம்,

Page 55
அவர்கள் காத்து நி
இலை ஓலையாலே வழிகின் தெருவெல்லாம் சிந்திக் அவர்கள் மகன் இன்னு வீடுவந்து சேரவில்லை, அந்தத் தாயும் தந்தையு தெருவில் காத்து நிற்கிருர்கன் மூன்ரும் பிறைகண்டு முகம் மலர்ந்து நின்றவ நிலவுபட்டுப் போனகண முகம் இருண்டு போனரி பதை இயக்கம் பாய்ந்து படுகொலை செய்ததுவோ அரச படையாலே அநியாயம் நேர்ந்ததுவே! அவர்கள் மகன் இன்னு வீடுவந்து சேரவில்லை; அந்தத், தாயும்தந்தையு தெருவில் காத்து நிற்கி யாரையார் தேற்றுவது? முழிபிதுங்கியபடி ஒருவர்மாறி ஒருவர் பெருமூச்சு விட்டபடி, காதடைத்துக் கண்இருை நா வறண்டபடி அவர்கள் காத்துநிற்கிருர் அவர்கள் மகன் இன்னு வந்து சேரவில்லை.
மிளகாய் வெங்கா
உள்ளூர் உற்பத்திட்
கொள்வனவும் விற்
நித்தியகல்ய ஆஸ்பத்
பெரி
யாழ்ப்

ற்கிறர்கள் ாற பனிநீர் குளிர் கூரும்வேளை
f
th
ர்கள்
*கள்.
-ரகுபதிதாஸ்
(டிசம்பர். 85)
աւb
பொருட்களின்
பனையும்
ாணி ஸ்ரோர்ஸ் திரி வீதி
G.
Lu T6Tb

Page 56
திருநெல்வேலி சந்தியில்
நம்பிக்கையும் நாணயமும்
ஒரு விற்பனை நிலையம்
* தரமான உபஉணவு உற்ப * உயர் ரக இரசாயனப் ெ * வீடு கட்டுபவர்களுக்கு தரமான மூலப் பொ ஆ& மின்சார உபகரண
இவை யாவற்றையும் மிகக் குை
அபிராமி
பலாலி வீதி, திருநெல்வேலி சந்தி, யாழ்ப்பாணம்,
சைவ உணவுப் பிரியர்களி
விசாலமான இடவசதி: விருந்தோம்பும் இனிய உபசாரம் விருப்பமான உணவு வகைகள்;
முற்றிலும் தென்னிந்திய பாணியி சிற்றுண்டி வகைகள். குளிர் பானங்கள்
குடும்பத்தோடு வருகைதந்து 5
யாழ்ப்பாணச் சூழ்நிலை தென்னகத்தில் இருப்பதுபோ ஒரேயொரு ை
ராஜ் மஹால் எ
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாண

திக்கான விதைகள் ாருட்கள்
தேவையான
நட்கள்
96T
றந்தவிலையில் பெற்றுக்கொள்ள
ஸ்ரோர்ஸ்
ற்கு ஒர் அட்சய பாத்திரம்
ல் தயாரிக்கப்பட்ட
ருமுறை சுவைத்துப் பாருங்கள் யை முற்றிலும் மறந்து ன்ற ஓர் உணர்வை ஊட்டும்
ஈவ உணவகம்
சவ ஹோட்டல்

Page 57
- 3. l/our
"யூரிைே
கந்தர்மடம் சந்தி
TELECT U

cSelection
வர்சல்"
-யாழ்ப்பாணம்
NIVERTAL

Page 58
இலங்கை பல்க
(வெளி நிலை பேராதனை, கொழும் பல்கலைக் கழகங்க x கலைமாணி * விஞ் x சட்டமாணி * வை க. பொ. த. (உயர்தரம்) 3 பாடங் ஆசிரியர்கள் ஆகியோர் பயிற்சி நெறின நாட்டின் தற்போதைய நிலைமை கார ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உதவிப் ட பட்டப்படிப்பு 148/1, ஸ்ரான்லி வி உயர்தர வகுப்பு மாணவர்களு **வர்த்தக மாற்று விகிதம்' ந. பேரின்பநாதன் M. A. விரிவுரையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் **குறியீட்டு அளவையியல்'
Gal. us Li Ts)Silas B. A. (Hons)
உதவி விரிவுரையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் "விமானப்பட விளக்கங்களுக்கான ( G. A. Q; B, A மாணவருக்குரியது
S. T. B, JITGgsiva JsiT M. A.
விரிவுரையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் **கேள்வியும் நிரம்பலும்"
ந. பேரின்பநாதன் M. A,
ப. சிவநாதன் M. A,
விரிவுரையாளர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழம் ??வங்கியியல்??
G5. Giguiy TLDsiT B. Com (Hons)
உதவி விரிவுரையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பாடசாலை மாணவர்களுக்கு
r* WAR : · * ܫܫ

லக்கழகங்களின் ) விரிவுரைகள் பு, யூனிஜெயவர்த்தனபுர ரின் பாடநெறிகள்
நஞானமாணி (புள்ளிவிபரவியல்) Eகமாணி
கள் சித்தியடைந்தவர்கள், பயிற்றப்பட்ட ய மேற்கொள்ளலாம்,
ணமாக பயிற்சிநெறிகள் தபால் மூலம்
திவாளர், க் கல்லூரி, பீதி, யாழ்ப்பாணம், நக்கான எமது வெளியீடுகள்
- விலை ரூபா : 11/50
விலை ரூபா : 12/50
ன மூலாதாரங்கள் விலை ரூபா ! 25/-
விலை ரூபா : 18/-
விலை ரூபா ; 10/-
விசேட கழிவு வழங்கப்படும்
ylässig ت ... در ۹: مینی

Page 59
P

TH BEST COMPLIMENTS OF
L. SV. SIEVUGAN CETTAR
No. 140, ARMOUR STREET,
COLOMBO - 12.
DEALERS IN:
TMBER CHIP BOARD
PLYWOOD
WALL PANELLING
PLYWOOD DOORS
ETC.
T. Grams: “WISDOM"
Phone: 2 4 6 29

Page 60
~~~~
SS MSMSMSL MSMSkeASMLSSS SLL SSLS qSM SAAeSASeASALSLSS
குடும்ப முதலுதவி வைத்திய கலாநிதி க. சுகுமார் கட்டைவேலி- நெல்லியடி ப.நோ. கரவெட்டி.
விலே ரூபா tே|50
~ہسپانسہرصہبا
TAMIL SOCIAL FORMATION P. RAGUPATHY M.A., Ph.D.
The Institute of Research and Development,
Madrais.
Price in Sri Lanka. : Rs. 5-0)
III
II I I I I II
""""" TE
ICI ICC II
வ. ஐ. ச ஜெயபாலனின்
கவிதைத் தொகுதி சூரியனுேடு பேசுதல்
யாழ் பதிப்பகம் கோவை,
தாகம்
இருதிங்கள் ஏடு
செல்வி எஸ். ரங்கா பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், தனி இதழ் ரூபா 4-00
==Fళా-జ=#F=L=Fళా శాఖ=#FFF

LSSMLLLLLLLL SAS A SAAeSLSLMeAeeSASASSSLS SSS SSAS SSqSSqSLe eeAASSSAAS S TMA SeL S iSS SLLLSSSAS SSSqSSALAMMMMSMTML ན་ཚ་ཐང་ལག་ལག་
IN SRI LANKA
மரணம் செழியனின் கவிதைத் தொகுதி
சிவா பதிப்பகம்
சென்ன் - 80009 ! இலங்கையில் வில: ரூபா 10/-
மக்களே எழுக!
சூரியனின்
கவிதைத் தொகுதி
சிவா பதிப்பகம் சென்ஃன - 94
இலங்கையில் விலே ரூபா .ே