கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1981.10-11

Page 1
i
கேட்டிருப்பாய் காற்றே!-துன்பக்
கேணியில்ே எங்கள் பெண்க எழுதசொல்."
-பாரதி
 

ஓவியர்
கோ. சகலாசநாதன்
I9
ஐப்பசி - கார்த்திகை
EE 1
॥

Page 2
Commonweallwn wahanias
Asbestos Corrugated Sheets Asbestos Plain Sheets 4 X
Sanitary Wares Building Materials
Carpentary Tools
ASU) A NALABAŠ
BARBED WIRE *
泰
WIRE NALS
BATH ROOM FITTINGS
哆
For Al Your
Requirements Please Contact
35, Stanl
JAF
Telephone: 8221
eeeSiHqeSq SeA Aq i SSSMSSSiqqSAiiAiAAAA AASS SAA qASMqq SM SASiSSiSiSSiSSSAAS AASSAAAA ASSSAAS SqqSAML SS Meee LSiiSSiMSSHSSeLTMAS

LIMITED
ey Road,
FINA.

Page 3
மு. தளையசிங்கம் பற்றிய க. கைலாச வின் மறுமொழி, இங்கு வெளியிடப்படுகிற
ஆற்றல் பொருந்திய படைப்பாளிய றையுடன் நேர்மையான வாழ்க்கையை வ ளார். இவரைப் பற்றி ஆழமானதும், நேர்ை டன் இருக்கையிலும், இப்போதும் வெளிவ வும் வெறுமையினே இது சுட்டி நிற்கிறது. மார்க்சீய நோக்கிலான மதிப்பீடுகளை வெளி டுள்ளது. யாரும் இதற்குரிய தளமாக "அலை காத்திரமான "சர்ச்சை"யினை ஆரம்பிக்கும் வெளியிடுகிருேம்.
யாருக்கு இரண்டக நிலை மு. த.விற்கா? க. கை.க்க
மு. பொன்னம்பலம்
க. கைலாசபதியின் அண்மை க் கால வெளியீடான நவீன இலக்கியத்தின் அடிப் படைகள் என்ற நூலில் மு. தளையசிங்கம் பற்றியும் அவரது ஆக்கங்கள் பற்றியும் ஒரு சவிமர்சனம் சே ர் க் கப் பட் டு ஸ் ள துஅதற்கு இடப்பட்ட தலைப்பு " இலக்கியத் தில் மார்க்சீய் எதிர்ப்பு -ஒரு புத்திசிவியின் இரண்டக நிலை.
இவ் விமர்சனக்” a, Goog 97.3 g) மு, த.வின் மறைவுக்குப்பின் பூரணி இதழ் ஆசிரியர் குழு, மு. த . பற்றியொரு விமர்சன மலர் வெளியிடுவதற்காக இவரிடம் ஒரு கட்டுரை கேட்டபோது ஒரு புத்திசிவியின் இரண்டக நிலை என்ற தலைப்பில் எழுதிக் கொடுக்கப்பட்டது. ஆனல் கட்டுரை பூரணி யில் வெளியிடப்படாமல் எழுதியவரிடமே திருப்பிச் சேர்க்கப்பட்டது. காரணம், க. கை. கூறுவதுபோல் அவரது விமர்சனத்திற்கு அஞ்சியல்ல. விமர்சனம் என்ற பெயரில் அவர் தந்திருந்த ஆதாரமற்ற கருத்துகளுக் கும், திந்தனைகளுக்கும், மட்டந்தட். ல்களுக் கும் பூரணி களமாகக் கூடாதென்பதற்கா கவே, க. கை"யின் மு. த. பற்றிய கண்மூடித்

பதியின் கட்டுரையொன்றுக்குரிய மு. பொ.
St. பாகவும், சிந்தனையாளராகவும், சமூக அக்க ாழ்ந்து காட்டியவராகவும், "மு. த* உள் மயானதுமான மதிப்பீடுகள் அவர் உயிரு ரவில்லை. எமது விமர்சனத் துறையில் தில: மு. த. பற்றிய மதிப்பீடுகளைக், குறிப்பாக க்கொணர்வதில் 'அலை அக்கறை கொண் *யைப் பயன்படுத்தலாம். மு. த. பற்றிய முதற் படியாக இக் கட்டுரையை இங்கு இணையாசிரியர்
தனமான தாக்குதலை விமர்சனம் 6Tairy பிரசுரித்துவிட்டு அதற்குப் ப தி ல ளிக் கும் வியர்த்தமான பொறுப்பைப் பூரணிக்கு அவர்கள் கொடுக்க விரும்பவில்லை. இதே காலத்தில் எஸ். பொ. ஒரு கட்டுரையைப் பூரணிக்கு அனுப்பியிருந்தார். நிராகரிக்கப் பட்ட க. கையின் கட்டுரைக்குச் சோடை போகாத வகையில் க. கை.யையும் கா. சிவத் தம்பியையும் தாக்கியிருந்தார் 676iv. Gurr. அதையும் பூரணியினர் பிரசுரிக்கவில்லை என்பது இச் சந்தர்ப்பத்தில் கவனிக்கத்தக் கது.இது பூரணியினரின் தன்மையை விளக்க உதவும். அவர்கள் விமர்சனத்துக்கு அஞ்சி வில்லை, விமர்சனம் என்ற பெயரில் கக்கப் பட்ட விஷங்களுக்கே அஞ்சினர்.
இது நடந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு, இப்போதுதான் க.கை. மீண்டும் பல வெட்டுக்கொத்துச் சரிக்கட்டல்களோடு ஓர் அசாத்தியத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு பூரணியால் மறுபட்ட மு.த. பற் றிய தனது "விமர்சனத்’தை அச்சேற்றியுள் ளார். எவ்வளவோ பிரசு ர வசதிகள் படைத்த கலாநிதி, நிராகரிக்கப்பட்ட கட்
507

Page 4
டுரையை வேறிடத்தில் பிரசுரிக்க எட்டு வருடங்களாக ஏன் தான் அஞ்சினரோ (1) என்பது ஒருபுறமிருக்க, மு. த. இருந்த போது எந்தவித மூச்சும் காட்டாதவர் அவர் இறந்து எட்டு வருடங்களுக்குப் பிற காவது இந்தத் துணிச்சலைக் காட்டினரே என்பதற்காக அவரை நாம் பாராட்ட வேண்டும். ஏனெனில் அவரது இந்த விமர் சனம் மூலம் அவருக்கு எஞ்சிய பயன், இந் தத் துணிச்சலே,
க. கை.யின் மு.த. பற்றிய கட்டுரையை விமர்சிப்பதற்குமுன் அவரது இலக்கிய Gs குணவியல்புகளை நாம் முன் வைக்க வேண்டும். அப்படிச் செய்வது எமது விமர்சனத்தை வேறேர் கோணத்தில் நின்று பலப்படுத்தும் தரவுகளைத் தர உதவும்.
க. கை. மு.த. வைப் பற்றி மட்டுமல்ல வேறு எதைப்பற்றித்தான் எழுதினலும், அவற்றின் ஒட்டை உடைசல்களையும் முரண் பாட்டுக் குப்பைகளையும். நாம் புட்டுக்காட் டுவதால், எந்தவித பிரயோசனமும் ஏற் படப்போவதில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி அவரையும் அவரது சீடர்களை யும் பாதிக்காமலேயே அவை போய்விடும். அவர், தான் நின்ற இடத்தை விட்டு அசையமாட்டார். முத. சொன்னதுபோல் இரண்டொரு றெடிமேட் மார்க்சீய சுலோ கங்களைக் கிளிப்பிள்ளை மாதிரித் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு நின்ற இடத்தி லேயே நிற்பார். அல்லாவிட்டால் வெ.சாமி நாதன் இவரது "தமிழ் நாவல் இலக்கி யத்தை அக்குவேறு ஆணிவேருகப் பிரித் தெறிந்த போது கூட அ ைசந் தாரா? ஹ"க்கும். வெகுநாளைக்குப்பிறகு இவரது சீடப்பிள்ளை ஒருவரை ஏவிவிட்டுத் தன் கலா நிதி இருப்புக்கு எதுவித அசெளகரியமும் , ஏற்படாமல் பார்த்துக் கொண்டு பதிலளிக்க முனைந்தார். சீடரின் பதிலின் பொத்தல் களைச் சுட்டிக்காட்டி வேருெரு கோணத்திலி ருந்து கலாநிதியின் நாவல் இலக்கியக் கொள் கைகளில் இன்னும் விரிசல்களை நாம் ஏற் படுத்தியபோதும் (மல்லிகை, மார்ச் 1976) அசைந்தாரா? ஹ"க்கும். மல்லிகை ஆசிரி யர் எவ்வளவு கூவியழைத்தும் இவரோ, இவ
508

ரது சகாக்களோ அசையவில்லை. இதற்கு முன்னரும் ஒருமுறை இவர் செ. யோகநா தனின் புத்தகமொன்றுக்குக் கொடுத்த முன் னுரையில் மு. த.வின் "தேடல்’ கதையை ஒழுங்காகப் படிக்காமல் அதில் வரும் கையா லாகாத கதா நா யக ன் நல்லதம்பியின் கொள்கைகளே மு. த.வின் கொள்கைகள் என்று தெரியாத்தனமாக எழுதி விட அதற்கு அவர் இ. ஜீவகாருண்யத்திடம் சாட்டை அடி (பூரணி, தை, 1973) வாள்கிக் கொண்டபோது கூட அசைந்தாரா? ஏன், இன்னும் சொல்லலாம். கலைச்செல்வி பத் திரிகை (1963) முற்போக்கு இலக்கியம் பற்றி ஒழுங்கு செய்த விவாத அரங்கின் பங்கு கொள்வதாக ஒப்புக்கொண்டுவிட்டு மு. த. அதில் எழுதத் தொடங்கி விஷயம் சீரியஸ்ஸாக விசிய ஆரம்பித்ததுமே சொல் லாமல் கொள்ளாமல் இவர் பின்வாங்க வில்லையா? இதன் பின்னரும் "ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் இவரையும வ ரது சகாக்களையும் மு. த. எந்தக் கோட்பாட் டிலுமே தக்க அறிவில்லாத ‘சாம்பாறு இலக்கியகாரர்’ என்று எள்ளி தகைத்த போதுகூட இவரோ இவரது சகாக்களோ அசைந்தனரா? இல்லை. ஏன், அவ்வளவு தூரம் போவான்? அண்மைக் காலத்தில் இவரது அழகியல் கோட்பாட்டை விமர் சித்து அலேயில் வந்த கட்டுரைக்கு தான் நேரடியாகப் பதிலளிக்கத் திரானியற்று, எங்கோ கிடந்த சமுத்திரனைத்’ தூண்டி விட்டு, அவர் இவருக்காக தளத்தையும் களத்தையும் மாற்றி ஆங்கிலப் பத்திரிகை யொன்றில் பதிலெழுதி தமிழ் இலக்கிய உல கில் சரிந்து கொண் டி குக் கும் இவரது பெயரை வேருேர் களத்தில் முண்டு கொடுக் கப்ப்ோய் குட்டுப்பட்டும் "மீசையில் மண் படவில்லை' என்ற பரிதாபங்கள் நேர்ந்த தும் இவரது இந்த நழுவலால் தான்! 1956ல புனருத்தாரணம் செய்யப்பட்டதா கக் கூறப்படும் முற்போக்கு இயக்கம் 1960 களிலிருந்து 1970 வரை மு.த. போன்ருே ரின் விமர்சனக் கணைகளால் சல்லடையாக் கப்பட்டு ஊசலாடியபோது, அதைக் காப் பாற்ற எவருமே இருக்கவில்லை. (இந்த வர லாற்றை அறியாது 1960ல் இருந்து முற் போக்கு இயக்கம் முன்னணிப் பாய்ச்சல்

Page 5
போட்டதென்று 'கரையில் நின்று மீன் பிடிக்கும் சமுத்திர ஞானங்கள் பற்றி என்ன சொல்வது!) மானம் ரோசம் உள்ள எந்தச் சராசரியும் ஏதாவது பதிலளிக்க எத்தனித்திருக்கும். முற்போக்கு இலக்கியத் தின் பிதாமகர்களில் ஒருவரெனச் சொல் லப்படும் க. கை,யோ தனது கலாநிதி என்ற சுயத்தில் எந்தத் தூசும் படியாமல் பார்த் துக் கொண்டு அசையாதிருந்தார், இதனுல் தான் இவரை மு. த. "நழுவல் விமர்சகர்’ 'நிழல் போராட்டக்காரர்’ என்றெல்லாம் அழைத்தார். ஒரு வேளை க.கை.க்கும் எதி ரிகளைச் சாடித் தகர்த்தெறிய ஆசை இருக் கக் கூடும். ஆணுல் அதற்குரிய அறிவும் துணி வம் வேண்டுமே! இவை இல்லாத காரணத் தால் தனது கலாநிதி மேடையைச் சுற்றிக் கோடு கீறி காவல் செய்துகொண்டு (விஷ யங்கள் அத்துமீறிப் ப்ோகும் காலங்களில்) தனது ஏவல் பிசாசுகளை எதிரிகள் மீது ஏவி விடுவார். பாவம் அவை. எதிரியின் இரண் டொரு தேசிக்காய் உருட்டலையே தாங்க முடியாதவை. இந் நிலையில் க.கை.யின் நிலை பரிதாபத்திற்குரியதுதான். இந்த நிலை இவரை, இவரையறியாமலேயே ஒரு மன நோயாளியாக்கியிருக்கிறது. அதாவது தனது குறைகளை பிறரில் (எதிரிகளில்) ஏற் றிக்காணும் பிறழ்வுற்ற மனுேநிலை-மனுே வியாதி. அதனுல் இவர் இரண்டக நிலை, மார்க்சீய அறிவின்மை, மேலோட்ட நூல் பயிற்சி, அமெரிக்க உளவு நிறுவனத்தின் கையாட்கள், மார்க்சீய எதிர்ப்பாளர்கள் என்று பிறரில் ஏற்றிக்காணும் குற்றங்களை இவரே அடைகாத்துக் கொண்டிருப்பதை, இவரது விமர்சனங்களை விமர்சிப்பதன்
மூலமே கண்டு கொள்ளலாம்.
*
மு.த.வின் நூல்கள் பற்றி ஒட்டுமொத் தமாக ஆராய்ந்த க. கை அவை பற்றி பின்வரும் முடிவுகளை முன் வைக்கிருர்,
1. மு.த. ஒரு மார்க்சீய எதிர்ப்பாளன்.

2. அவரது எழுத்துக்கள் யாவும் Encounter பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் தழுவல்கள்.
3. மு.த.வுக்கு மார்க்சீயம் தெரியாது.
4. அதிருப்தி என்ற ஒன்றை தனது தத்து
வத்துக்கு ஆதாரமாக்கினர்.
மு. த.வின் இரண்டக நிலை.
5
இவற்றேடு இன்னும் சில அவருக்கே விளங்காத ஆத்மீக, குரு சிஷ்ய குற்றச்சாட் டுகளிலும் விழுந்தெழும்பிச் செல்கிருர்,
க. கை.
முதலாவதாக மு.த. வை ஒரு மார்க்சீய எதிர்ப்பாளனுகக் கண்டுபிடித்துப் பிரகடனப் படுத்தும் க.கை.யின் செயல், விமர்சனத் துக்கும் எதிர்ப்புக்கும் வித்தியாசம் தெரி யாத தத்துவார்த்த அறிவின்மையால் ஏற் படுகிறது. ஆதாரங்களோடு தர்க்க ரீதியாக ஒன்றை விமர்சிப்பதற்கும் ஆதாரங்கள் அற்று கண்மூடித்தனமாக ஒன்றைத் தாக் குவதற்கும் எவ்வளவோ வித்தியாசம் உண்டு. ஆதாரச் செறிவோடு தர்க்க ரீதி யாகச் செயற்ப்படும் விமர்சனத்தால் ஒரு பொருள் நொய்தல் அடையுமாயின் பிறப் பிலேயே நேர்ந்த அப்பொருளின் இருப்பின் வலுவின்மையையே அது சுட்டுகிறது. விமர் சனத்தால் அப்பொருள் அழிவுறுமாயின் அப்பொருளுக்கு அழிவைக் கொணர்ந்த விம ர்சனம் எதிர்ப்பாகாது. ஒவ்வொரு கால கட் டத்தின் முன்னணிப்பாய்ச்சலின் சரிதமும் இந்த விமர்சனத்திலேயே தங்கியுள்ளது. இதையே மு. த. செய்தார். அவர் மார்க் சீயத்தை விமர்சித்தார். இதை இன்னும் விளக்குவதாயின் புதிய தத்துவமொன் றையோ, அரசியல் கோட்பாட்டையோ, இலக்கியக்கொள்கையையோ, விஞ்ஞானக் கண்டுபிடிப்பையோ நிறுவமுயலும் ஒரு சிந் தனையாளன், அக்காலங்களில் தனக்குமுன் நில வும் அதையொட்டிய பிறCந்தனைக் கோட்பாடுகளைத் தவிர்க்கமுடியாத வகையில் விமர்சிக்க வேண்டியவனுகிருன். இவ்விமர் சனத்தின்மூலம் அவற்றின் நல்லவற்றைக்
509

Page 6
கொண்டு தன்னைப் போஷித்தும், அல்லாத வற்றைத் தள்ளியும் விடுகிருன். இதுதான் கிரேக்கநாட்டுத் தேல்ஸ் (Thales) சிலிருந்து இன்றைய சித்தாந்திகள் வரை நடந்து வரு கிறது. ஏன், க.கை. தனது குருநாதர்களில் ஒருவரெனப் பாவனைபண்ணும் ஏங்கல்சையே இத்தகைய குருட்டுப்பார்வைகளைத் தகர்ப் பதற்காகத்தான் மு. த. மேற்கோள் காட் டுகிருர், "ஹெகலிய தத்துவம் போன்ற ஒன்றைச் சும்மாஒதுக்கிவிடமுடியாது. திற ஞய்வின்மூலம் புதிய உள்ளடக்கத்தைப் பேணியவாறு அதன் உருவத்தை அழிப்பதன் மூ லமே அது வெல்லப்படவேண்டும்’ (போர்ப்பறை), என்ற ஏங்கல்சின் கூற்றை க. கை. எங்காவது தேடிப்படித்துப் பார்க் கட்டும். மு. த. பற்றிய க. கை.யின் அளவு கோல்படி பார்த்தால் கால்மார்க்ஸ் ஒரு ஹெ கலி ய எதிர்ப்பாளன்? போர்பாச் 6T sà fi u Lu nt GMT siv? புறுரடன் எதிர்ப் பாளன்? அப்படியானல் உலகத்துச் சிந்தனை யாளர்கள் எவரும் ஒவ்வொரு முன்னுேடி களின் எதிர்ப்பாளர்கள்! இந்த விஷயங் களையும் புரிவது க.கை.க்குக் கொஞ்சம் கஷ் டந்தான். ஆணுல் பிரச்சினையின் முக்கிய மான பகுதி இதுதான்: மு. த. மார்க்சீ யத்தை எதிர்க்கிருர் என்று கூக்குரல் வைக் கும் க கை, அவர் மார்க்சீயத்தை விமர்சிக் கும் இடங்கள் அர்த்தமற்றவையாக, ஆதார மற்றவையாக, கண்மூடிததனமானவையாக இருந்தால் அவற்றை எடுத்துக்காட்டி அம் பலப்படுத்தியிருக்கவேண்டும். மு. த.வின் எழுத்துக்களை விமர்சிக்க வந்த மார்க்சீய விமர்சகர் க. கை. அதைத்தான் செய்திருக்க வேண்டும். செய்தாரா?
இதோ மு த. கேட்கிருர். "ஐரோப்பிய அறிவு வாதத்தின் இறு தி உருவந்தான் மார்க்சீய சித்தாந்தம், 15ம் 16ம் நூற்ருண் டுகளில் ஐரோப்பாவில் பெளதிசு, சமூக, வி ஞ் ஞா ன அறிவைக்கொண்டு வளரத் தொடங்கிய சிந்தனை மாற்றத்தின் இறுதி வளர்ச்சியாகவே மா ரீ க் சீய சித்தாந்தம் இருக்கிறது. அந்த சித்தாந்தம் இலக்கியத்
துறையிலும் அதேகாலகட்டத்தோடு வளரத்
தொடங்கிய நாவல், சிறுகதை இலக்கியங்
50

களை உள்ளடக்கரீதியாக மாற்ற முயல்கிற தேயொழிய உருவரீதியாக மாற்ற முயல வில்லை. மாற்றவேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை. அடிப்படையான சிந்தனை மாற்றம் ஏற்படும்போதே அப்படியான இலக்கிய உருவமாற்றங்களின் அவசியம் ஏற்படுகிறது. மார்க்சிய சித்தாந்தம் ஓர் அடிப்படையான சிந்த னை மாற்றத்தைப் பிரதிபலிக்காமல் அத்தகைய மாற்றத்தின் இறுதிக்கட்டத்தையே பிரதிபலிப்பதால், அதேகாலகட்டத்துக்குரிய பழைய இலக்கிய உருவங்களையே தொடர்ந்து அதன் இறுதி நிலைவரை வளர்க்க முயல்வதாய்த்தெரிகிறது. உருவமாற்றங்களோடு கூடிய உள்ளடக்க மாற்றம் இலக்கியங்களில் ஏற்படுவதற்கு மனித சிந்தனை வளர்ச்சியில் இன்னேர் அடிப்படை மாற்றம் ஏற்படவேண்டும்”* (போர்ப்பறை).
இதற்கு க. கை. என்ன பதில் சொல் கிருர்? அவரது ஆய்வில் இதுபற்றிய பேச்சே இல்லை.
இன்னும் மு.த. சொல்கிருர், “ஐரோப் பிய அறிவு வாதத்திற்கு முந்திய இலக்கியப் படைப்புகள் உள்ளுணர்வு செறிந்த கற்ப னைக் காவியங்களாக இருந்ததுபோல் அறிவு வாதத்திற்குப் பிந்திய படைப்புகள் ஐம்புலன் உணர்வும் அறிவும் செறிந்த யதார்த்த இலக்கியங்களாக இருக்கின்றன. முந்திய வற்றில் பிரபஞ்ச உணர்வு இருந்தது. பிந்தியவற்றில் இந்த உலகத்து உணர்வும் குறிப்பாகப் பிரதேச, சமூக, பொருளாதார நிலைகளுக்குரிய உணர்வும் அதிகமாக இருக் கின்றன. இவையே பொதுப்பண்பும் பொது வித்தியாசங்களுமென்ருல் இனிவரும் இலக் இயப்படைப்புகளில் திரும்பவும் பிரபஞ்ச உணர்வு தலைதூக்கும். ஆனல் அறிவுவாதத் தாலும் விஞ்ஞானத்தாலும் பெறப்பட்ட யதார்த்த உணர்வும் கூடவே நிற்கும். இனி வரவேண்டிய கோட்பாட்டைப் *பிரபஞ்ச யதார்த்தம்” எனலாம்’.
இதற்குக் க. கை. ஏதும் பதில் சொன் ஞரா? கிடையாது.

Page 7
அடிப்படைச் சமூக மாற்றங்களோடு சிறுகதையின் செல்வாக்குக் குறைந்து நாவல் கள் தோன்றுகின்றன என்று கிளிப்பிள்ளை மாதிரிச் சுலோகம் சொல்லும் க.கை.யைப் பார்த்து, அடிப்படைச் சமூக மாற்றம் ஏற் படுமுன் தோன்றிய ரஷ்ஷிய நாவல்க ளோடு-தோஸ்தவஸ்கி, ரோல்ஸ்ரோய், துர் கனேவ் ஆகியோர்களின் நாவல்களோடு -நிற்கவல்ல நாவல்கள் அடிப்படைச் சமூக மாற்றம் ஏற்பட்ட ரஷ்ஷியாவில் தோன்ற வில்லையே, ஏன்? என்று மு. த. கேட்கிருர்,
க. கை.யின் பதிலையே காணுேம்,
கலை இலக்கியங்களும் காலத்துக்குக் கட்டுப்பட்டவையே என்ற மார் க் சீயக் கோட்பாட்டை நிராகரித்து ஒரு இலக்கிய சிருஷ்டி தோன்றிய சமூக, பொருளாதார, அரசியல், தத்துவ காலம் கடந்தபின்னரும அந்தப்படைப்பு நமக்கு இன்பந்தருவதாயும், எம்மால் ரசிக்கக்கூடியதாயும் இருப் பதன் காரணம் என்ன? என்பதை 'மு. த தனது கலை, இலக்கியம் பற்றிய கோட்பாட் டில் விளக்குகிருரே, இதற்கு க. கை, ஏதும் பதில் சொன்னுரா? மூச்.
இயக்கவியலே மார்க்சீயத்தின் உயிர் நாடி மனதினதும் புறப்பொருள்களினதும் இடையருத ஒனறையொன்றின் பாதிப்பே குனரீதியான மனித வளர்ச்சிக்கெல்லாம் காரணம் என்கிறது மார்க்சீயம். ஆனல் இந்த மனந்தோன்றமுன் ஜடத்திலிருந்து உயிரையும், உயிரிலிருந்து மனத்தையும் குனரீதியாக வளர்த்தது எந்த இயக்கவியல்? என்று மு. த. கேட்கிருர்,
க. கை.யோ மெளனமாய் இருக்கிருர். அவர் இந்தத் தத்துவார்த்த விஷயங்களுக் குள்ளேயே பிரவேசிக்கவில்லை. மார்க்சீயத் தின் அடிப்பட்ைக் கோளாறுகள் என்று மு. த. காட்டுபவற்றையோ அர்த்தமற்று க. கை. அடிக்கடி ஜபிக்கும் மார்க்சீய சுலோ கங்களுக்கு மு. த கொடுக்கும் விமர்சன உதைகளையோ, சந்திக்கவோ அவற்றைத் துணிந்து தனது ஆய்வில் ஆராயவோ அவா முயலவில்லை. இதைச் செய்யத் துணிவோ, வக்கோ இல்லாத க. கை. ஆத்திரமும்

காழ்ப்பும் மேலோங்க வேறேர் உபாயத்
தைக் கையாள்கிருர், "இதோ பாருங்கள் தளையசிங்கம் மார்க்சீயத்தை எதிர்க்கிருன், மார்க்சீயத்தை எதிர்க்கிருன்!" என்று
மாரில் அடிக்காக் குறையாகக் கத்துகிருர், இந்தக் கத்தலின்மூலம் தனக்கு ஆதரவாக ஆள்திரட்டப்பார்க்கிறர். தன்னை அநியாய் மாகத் தாக்கிய சிங்கள வகுப்புவிாதியை எதிர்த்து ஒரு தமிழன் நியாயமாக எதிர்த் தாக்குதல் செய்யும்போது, அதற்குத் தாக் குப்பிடிக்கமுடியாத சிங்கள வகுப்புவாதி உடனேயே தனது தந்திரத்தை மாற்றி "ஐயோ இங்கே பாருங்கள் ஒரு தமிழன் சிங்களவனை அடிக்கிருன், தமிழன் சிங்கள வனை அடிக்கிருன்’ என்று கும்பலுக்கேற்ற கோஷத்தைக் கிளப்பி எதிர்ப்பைக் கிளறி விடும் செயலுக்கொப்பானதுதான் க. கை. யின் மு. த. பற்றிய விமர்சனம். அது விமர்சனமல்ல விஷங் கக்கல்.
இந்த விஷங் கக்கலே மு. த பற்றிய அடுத்துவரும் குற்றச்சாட்டுகளிலும் பரவு கிறது. மு. த. வின் எழுத்துக்கள் யாவும் Encounter பத்திரிகையில் வந்த விஷயங் களின் தழுவலே என்று அடுத்த கண்டு பிடிப்பை அவிழ்க்கிருர் க. கை. ஏதோ Eucounter இதழ்களையெல்லாம் ஒழுங்காகப் படித்துத் தெரிந்தவர் மாதிரி வெகு அன யசமாகச சொல்லிக்கொண்டு போகும் இந்த மெத்தப் படித்த பேராசிரியர், Enco unter எந்தெந்த இதழ்களில் எவரெவரால் எழுதப்பட்ட விஷயங்களையெல்லாம் மு. த. தழுவி எழுதினுர் என்று உதாரணம் காட் டிஞரா? கடைசி ஒரு உதாரணம்? இந்த லட்சணத்தில் தனக்கே யாரென்று தெரியாத . Karl PopperguJub Eric Voegelingujup Gapaj துவிட்டிருக்கிருர். இவர்களின் ஒரு புத்தகத் தோடுகூட இநதக் கலாநிதிக்கு நேரடிப் பரிச் சயம் இருக்கிறதா? அவர்கள் என்னென்ன எழுதினர்கள்? அவர்களுக்கும் மு. த. வுக்கும் என்ன சம்பந்தப? மதம், விஞ்ஞானம் மார்க் சீயத்ாத மறிதலிப்பதாக இவர்கள் கூறினர் களாம். இவர்கள் மட்டும்தான, இன்னும் அப்ப்டிக் கூறிய ஆயிரக்கணக்கான எழுத் தாளர்களின் பட்டியல்களைத் தரலாமே! அதற்கும் மு. த.வுக்கும் என்ன சம்பந்தம்?
57. I

Page 8
இத் தோடு க.கை, நிறுத்தவில்லை. தொடர்ந்து முன்னேறி இன்னும் பல அரிய கண்டுபிடிப்புகளைத் தனது விமாசனம் மூலம் முன்வைக்கின்றர். அதாவது மு. த. படித்த நூல்கள் யாவும் கொம்யூனிச எதிர்ப்பு நூல்களாம். அவரைப பாதித்த எழுத்தா ளர்கள் யாவரும் கொம்யூனிச எதிர்ப்பாளர் களாம்.
**ஹேபட் மாக்குஸ்ே , Q as ft ଜମି ଜଙ୍ଘ வில்சன், ஜின்போல்சாத்ரே, நோ ம ன் ம்ெயிலர், போன்ற ஐரோப்பிய அமெரிக்க எழுத்தாளர்களையும் பஸ்ரனெக், சொல் சனிற்சின் முதலிய ரஷ்ஷிய எழுத்தாளர் களையும் தளையசிங்கம் ஆங்காங்கு குறிப்பிடும் பெக்கற், அயனெஸ்கோ, அலன்கின்ஸ்பேர்க் முதலியோரையும் சேர்த்துக்கொண்டால் விதிவிலக்கற்ற முறையில் அனைவரும் கொம் யூனிச எதிர்ப்பாளர்கள் அல்லது திரித்துக் கூறுபவர்கள்’’ என்கிருர் க. கை.
இந்த எழுத்தாளர்களும், நாடகாசிரியர் 'களும், கவிஞர்களும் எழுதியவற்றைப் படித் ததால் மு.த. மார்க்சீய எதிர்ப்பாளரானர் என்ற வேடிக்கை ஒருபுறமிருக்க, இவர்களை விட மு. த. தனது நூலில் ஜன்ஸ்டீன், ஹக்ஸ்லி, ரேஹான் டீ சாடின், ஆர்தர் சி. கிளாக், அரவித்தர், வைற்ஹெட் என்று பெரும் பெரும் சிந்தனையாளாகளையெல் லாம் தனது கொள்கைக்கு முக்கிய ஆதார மாகக் காட்டிச் செல்கிருரே, அவர்களை யேன் கலாநிதி குறிப்பிடாமல் போகிருர்? இன்னும் மேலே போய் மு. த. லெனின் ஏங்கல்ஸ், மாவோ, மயக்கோவ்ஸ்கி, என்று பழுத்த மார்க்சீயவாதிகளையே த ன க் கு ஆதாரமர்கப் பாவிக்கிருரே, அவர்களையேன் தனது பட்டியலிலிருநது விலக்கிககொள் கிருர்? இதன் அர்த்தம என்ன? தனது வாதம் சரிந்துவிடும் என்பதற்காக இவற்றை மறைத்தாரா? இன்னும் க. கை. தனது கண்டுபிடிப்புகளில் சறுக்குண்டு இன்னெரு திருத்தமும் செய்கிறர். ** தளையசிங்கம் ஆங்காங்கே குறிப்பிடும் (மார்க்சீய எதிர்ப்பு) எழுத்தாளர்களை அப்படியே ஏற்றுக்கொள் கிருர் என்று ம் நான சொல்லவில்லை’ நல்லது. அப்படியானுல் மு. த. எப்படி
512

இவர்களை ஏற்றுக் கொள்கிருஜர்? என்ன ரீதியில் ஏற்றுக்கொள்கிருர்? விளக்குவாரா? டி. எஸ் எலியட்டைப் படுபிற்போக்குவாதி என்று தூற்றிக்கொண்டே க. கை. அவரது இலக்கிய விமர்சன முறையை "ஆஊ’ என்று பாராட்டுகிறரே (திறனுய்வுப் பிரச் சினைகள்) இது என்ன ரீதியில் நடக்கிறது? டி. எஸ். எலியட்டின் பாஸிஸ பிற்போக்குக் கொள்  ைக, அவன் இலக்கியத்தில் கையாண்ட விமர்சன முறையை க. கை. பாராட்டுவதைத் தடுக்கவில்லையே, ஏன் என் பதை அவர் விளக்குவாரா? அந்த விளக்கத் தில் அவரது மு. த. பற்றிய அரிய கண்டு பிடிப்புகள் திண்டாடிப்போகும் என்பதை உணரும் கூர்மை, இவரிடம் இருக்கிறதா?
இதுகாலவரை எந்த மார்க்சீயவாதி மார்க்சீயத்தைத் திரித்துக் கூழுமல் விட் டவன்? என்று தொழிற்புரட்சி நடவாத ரஷ்ஷியாவில் மார்க்சீயப்புரட்சி எற்பட் டதோ அன்றிலிருந்தே இந்தத் திரிபுவாதம் " விவசாய நாட்டிலும் கொம்யூனிசப் புரட்சி ஏற்படலாம். அது படிமுறை ரீதி யில் தான் (மார்க்சீய வரலாறு சொல்வது போல்) வரவேண்டுமென்றில்லை" என்ற திருத்தங்களோடு லெனின் தலைமையில் ஆரம்பித்துவிட்டதென்றல், க. கை, அதை மறுப்பாரா? இன்று மாபெரும் தலைவர் மாவோவின் சுலோகங்கள் காற்றில் விடப் படுகின்றனவே அதன் தாற்பரியம் என்ன? கலாநிதி கூறுவாரா? கலாநிதி அவர்கள் சமுதாய ஏகாதிபத்திய ரஷ் ஷியா பக்கமா? அல்லது அமெரிக்காவை இப்போ அடிவ ருடும் சீன பக்கமா? அல்லது அல்பேனி யாவின் " அதி உண்மை' மார்க்சீயவா தியா? அல்லது கியூபா, லத்தீன் அமெரிக்கக் கொரில்லாக்களோடு துப்பாக்கி சுமந்து அமைப்புக்கு அடிமையாகிவிட்ட தொழி ல ளர்களையே எதிர்த்துப் போராடும் நவீன பார்க்சீயக் கொரில்லாவா? இவரது மூலம் தனி.
ஆனல் மு. த? மேலோட்ட நோக்கில் தனித்தனியாகவும், மாறுபட்டும், முரண்டு கொண்டும் நிற்கும் எழுத்தாளர்களும் சிந் தனையாளர்களும் விஞ்ஞானிகளும் மு. த.

Page 9
வின் பார்வையில், நேர்கோட்டில் வந்தமர் கின்றனர். எப்படி? ரமனரை மேற்கோள் காட்டும் மு.த. அதேவீதியில் மயக்கோவ்ஸ் கியையும் அமர்த்திவிட்டு செ ல் கி ரு ர். மார்க்சை விமர்சிகக ஏங்கல்சையும் லெனி னையும் பயன்படுத்துகிறர். அர விந் த  ைர விளக்க ஆர்தர் சி. கிளார்க்கையும் அருகி ழுக்கிறர்.
இது எதனுல் முடிகிறது? மீண்டும் நாம் க. கை.க்குப் பரிச்சயமில்லாத தத்து வார்த்த விஷயங்களுக்கு வருகிறேம். பிர LuģF G Tģš65Gu Historical Process ஆகவும் ஒவ்வொரு, நிகழ்வு முகிழ்ப்புகளை யும் ஒன்றை நோக்கிய தொடர்நிலைப் Lifold LDrtsoyb (Convergent Evolution) அவர் காண்கின்ற தரிசனப் பார்வையால்
ஒரு தரிசன நோக்கையோ நிறுவ முயலும் ஒருவன் ஒவ்வொரு துறையின் ஒவ்வொரு கண்டுபிடிப்பையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிருன். மாறுபட்டும் மு ர ண் டு ம் நிற்கும் தனித்தனி உண்மைகள் அவன் நேர்க்கில் அமைதியுற, மாலையொன்றில் கோக்கப்பட்ட பன்னிறப் பூக்கள்போல் புதுநோக்கொன்று எம்முன்விரிய எம் சிந் தையிலும் செயலி லும் சாற்றுகிருன், இவனே உலகை வளர்ப்பவன், புரட்சிக்கு வித்திடுபவன்.
மு. த.வின் இப்பார்வைக்கும், அர்த்த மற்று ஆத்மீகத்துக்கும் கொம்யூனிசத்துக்கும் முடிச்சுப்போடும் வேலைக்கும் என்ன சம்பந் தம்? இன்றைய ஜனநாயகம் மாதிரி தமிழ னுக்கொரு மந்திரிப்பதவி, முஸ்லிம்களுக் கொரு மந்திரிப்பதவி, பறங்கிக்கொரு மந் திரிப்பதவி என்று எல்லோரையும் “தேற்றி? அடிப்படை ஒருமையின்றி "ஐக்கியப் படுத்தும் போக்குத்தான் மார்க்ஸ்முனிவ ருக்கும் காந்தியடிகளுக்கும் வள்ளுவநாயன ருக்கும் முடிச்சுப்போடும் விவகாரம் என் பதை க. கை. தெரிந்துகொள்வாரா?
மு.த.வைத் தாக்குவதிலேயே க. கை. கண்ணுயிருக்கிருர், அதனல் அவர் எண்ணம் முற்றும் அதிலேயே குவிவதால் பின்னர்

அதன்முலம் வரும் சரிபிழைகள் பற்றி அவர் அக்கறைப்படுவதாய் இல்லை.
Encounter பத்திரிகை சம்பந்தமாக எட் டுவருடங்களுக்கு முன்னர் பூரணிக்கு எழு திய இதே கட்டுரையில் Encounter பத்திரி கை C.I.A. காரரின் ஸ்தாபனம் என்றும் அதன் ஆசிரியராக இருந்த ஸ்ரீ பன் ஸ்பென்டர் தனது பத்திரிகை C.I.A. கார ரின் கையில் இருப்பதை அண்மையில் அறிந்துகொண்டதும் அதிலிருந்து விலகிக் கொண்டார் என்றும், ஸ்ரீபன் ஸ்பென்டரை ஒரு முற்போக்கு வாதியாகக் காட்டிய க. கை, எட்டு வருடங்களுக்குப்பின்னர் ஸ்ரீ பன் ஸ்பென்டரும் "பொய்த்துவிட்ட தெய்வம்" நூலின் தொகுப்பில் விஷயதானம் செய் துள்ளார் என்பதைக் கண்டுகொண்டதும், இல்லை, கேள்விப்பட்டதும் (நான் சொன் னேன், இவருக்கு எப்பவுமே தான் சொல் லவரும் விஷயங்களோடு நேரடித் தொடர்பு இல்லை என்று. கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் கதைதான்) அவரது திருந்திய இப்பதிப்பில் ஸ்ரீபன் ஸ்பென்டரையும் ஒரு மார் க் சீய எதிர்ப்பாளராக கோஸ்லர், சைலோன், லூயி பிஷர், அன்றி ஜீத் போன் ருேரோடு சேர்க்கிருர்,
God That Failed 676i spibiTadi Top Su அத்தனை எழுத்தாளர்களும் கொம்யூனிச கட்சியின் அங்கத்தவர்களாகவும் அநுதாபி களாகவும் மட்டும் இருக்கவில்லை. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களாகவும் சிந்தனை யாளர்களாகவும இருந்ததோடு, 1930 களில் வளரத்தொடங்கியிருந்த பாஸிச சக்திகளை எதிர்த்துப்போராடவும் உலகெங்கும் பொது வுடைமையை நிலைநாட்டும் தீவிர வேட்கை யுடையவர்களாகவும், இருந்தனர். ஜேர்ம னியில் அக்காலத்தில் வெடிப்பதற்குத் தயாராய்இருந்த பொதுவுடைமைப் புரட்சிக் காய்க் காத்திருந்தனர். சோவியத் யூனிய னும், ஸ்ராலினும் இதற்குப் பக்கபலமாய் நிற்பார்கள் என எதிர்பார்த்திருந்தனர். ஆனல் நடந்ததோ, எந்தப் பாஸிச சக்திகளை ஒழிக்க ரஷ்ஷியா தலைமை தாங்கும் என்று நினைத்தார்களோ அந்தச் சக்திகளோடேயே ஸ்ராலின் சமாதான உடன்படிக்கை செய்து
, 513

Page 10
கொண்ட வெட்கக்கேடு, மேற்கூறிய எழுத் தாளர்களை மட்டுமல்ல உலகின் சிந்திக்கத் தெரிந்த எல்லோரையுமே திகைக்கவைத் தது. ஜேர்மனியிலும் அதைச்சுற்றிய நாடு களிலும ஹிட்லரின் குண்ட ர்களால் கொம் யூனிஸ்ட்டுகள் வேட் டையா ட ப் பட்டுக் கொண்டிருக்கையில் இங்கே ஸ்ராலின் ஹிட்லரோடு சம ர சக்  ைக நீட் டல்! (சிறிது காலத்திற்குப் பின்னர் இதே பாஸிச சக்திகள் ரஷ்ஷியாவின் குரல்வளையை நெரித்தபோது "உலகத் தொழிலாளரே ஒன்றுபடுங்கள்,** கோஷத்தைக் காற்றிலே பறக்கவிட்டு ஸ்லாவ் இனவாதத்தையும் தேசிய வாதத்தையும் கூவியழைத்து போரில் குதித்த பரிதாபம் இ ன் னெ ரு பலத்த ஏமாற்றம்) இந்த ஏமாற்றமே முதல அடி. அதன் பின்னர் ஸ்ராலினையும் சோவியத் யூனியனையும் நுணுகி ஆராய்ந் தனர் இவர் கள். ஏமாறறத்துக்குமேல் ஏமாற்றம. ஏமாற்றமுற்ற இந்த எழுத்தா ளர்கள் எதிர்த்தது மார்க்சீயத்தை அலெ ஸ்ரா லினையும் அவனது:கால சோவியத் நிர் வாகத்தையுமே. (இதற்கு நல்ல உதாரணம் க. கை. குறிப்பிடத் தவறிய அல்லது அறி யாயல் விட்ட ஜோர்ஜ் ஓவெல்லின் Animal Farm-மிருகப்பண்ணை). அதனுல்தான் அவர் களில் பலர் இன்றும் இடதுசாரிகளாய் இருக்கின்றனர்.
இந்த விஷயங்கள் க. கை.க்குத் தெரிந்தி ருக்க நியாயமில் லை. காரணம் அவருக்கு இவற்றேடு நேரடித் தொடர்பு கிடை யாதே. அதனுல் அன்றி ஜீத். கோஸ்லர், இாயி பிஷர், சைலோன், ஸ் ரீப ன் ஸ்பென்டர் போன்ற எழுத்தாளர்கள் எல் லாம் இவருக்கு மார்க்சீய எதிர்ப்பாளர்கள்" அமெரிக்க C.I.A. யின் கையாட்கள். தளைய சிங்கத்துச்கும் இதில் பாத்தியதை உண்டு! க.கையின் கண்டுபிடிப்புகள் அ பா ர ம். கடைசியில் க.கை, கூறுகிற நியாயப்படி தாையசிங்கம் குறிப்பிடும் அத்தனை எழுத் தா ள ர் களை யும் சிந்தனையாளர்களையும் மார்க்சீய எதிர்ப்பாளர்கள் திரிபுவாதிகள் என்று தள்ளிவிட்டால், உலகின் முன்னேற் றம் வளர்ச்சி யாவும் திடீரென்று மார்க்ஸ் வாழ்ந்த 19ம் நூற்றண்டுக்குப் பின்னடிப்புச்
514

செய்வதோடு, உலகத்தில் மிஞ்சப்போவதும் க. கை. போன்ற எழுத் தா ளர் களும் சாமான்யர்களுமே! கோஸ்லர் ஒர் இடத் தில் எவை எவை எதிர்காலத்தில் நிலைத் திருக்கப் போகின்றன என்று ஆரூடம் கூறி யபோது அதில் ஒன் ரு க "சாமான்யத் தன்மை” நிச்சயம் அதிககாலம் அரசாளும் 6T 6ör69.gif?ri (Mediocrity will reign). s. 60 as. போன்றவர்கள் இன்னும் விமர்சகர்களாகக் கணிக்கப்பட்டு அவர்களது. விமர்சனங்களும் நூலுருப் பெறுகின்றனவே என்பதைப் பார்க்கும்போது, அந்த ஆரூடம் சரியான தாகவே படுகிறது.
இந்த ஆரூடத்  ைத மெய்ப்பிப்பது போலவே அவரது விமர்சனம் தொடர்ந்து செல்கிறது. மு. த.வின் எழுத்துக்களில் காணப்படும் திருப்தியின்மை என்ற வார்த் தைப் பிரயோகத்தைச் சாடுகிருர், க. கை மு. த எத்தனை இடங்களில் இந்தத் திருப் தியின்மை என்ற சொல்லைப் பாவிக்கின்ருர் என்று கணக்கெடுத்து பல மேற்கோள்கள் காட்டி கட்டுரையின் கால்வாசிப் பக்கத்தை நிரப்பியுள்ளார். இதைப்படித்த எழுத் தாள நண்பரொருவர், பல்கலைக்கழகங் களில் தமிழ்த்துறையிலுள்ள டடிப்பாளிகள் பலர் தாம் எழுதும் சங்க காலத்தில் நரி, சங்க காலத்தில் காக்கை என்பன போன்ற தமது ஆய்வுகளில் எத்தனை தரம் சங்கப் பாடல்களில் நரி கூறப்பட்டுள்ளது, காகம் சொல்லப்பட்டுள்ளது என்று கணக்கிடும் வாடை வீசுகிறது என்று நகைச்சுவை யாகச் சொன்னதுதான் நினைவுக்கு வரு கிறது. மு.த. திருப்தியின்மையை ஏன் பாவிக் கிருர்? அதன் நோக்கம் என்ன? என்பன போன்ற - கேள்விக்குரிய பதிலை வழமை Guita) க. கை. பிடம் காணமுடியாது. மாறக "..எனவே திருப்தியின்மை என்ற உணர்வு அல்லது கருத்துப் படிவம் தளைய சிங்கத்தின் வாழ்க்கைத் தத்துவத்தில் முக் கிய பாத்திரம் வகிக்கிறது. ** இது தான் க. கை.யின் விமர்சனம்! க. கை. போன்றவர்களுக்கு மு த லா வித் து வ அமைப்பைத் தகர்த்தெறியவேண்டும் என்று க்ால்மார்க்ஸ் அவாவியது அதன்மேல் ஏற்

Page 11
பட்ட திருப்தியின்மையாலன்றி, ஆசையா லும் பற்றுதலாலும் போலும் ! எல்லா மாற்றங்களுக்கும் புரட்சிகளுக்கும் கார னமே அவ்வக்காலங்களில் அந்தந்த அமைப் புகளின் மேல் ஏற்படும் அதிருப்தியே என் பது க. கை. போன்றவர்களுக்கு விளங்கு வதற்கு நியாயமில்லை, காரணம், இவர்கள் மார் க் சீய விமர்சகர்களாகக் காட்டிக் கொள்வது முதலாளித்துவ அமைப்பில் ஏற்பட்ட அதிருப்தியினலல்ல. தாங்களும் முற்போக்குவாதிகள் என்று காட்டிக் கொள் ளவும், அதனல் விஷயம் தெரியாதவர்கள் முன் தாம் பேணவிரும்பும் அந்தஸ்துக்காக வுமே. இதன்காரணத்தால்தான் மு.த. 'கலை ஞர்கள் சிந்தனையாளர்களிடமே இன்று முழு மனித குலத்துக்கும் வழிகாட்டும் பொறுப்பு இருககிறது." என்று எழுதியதை வெறும் பகற்கனவு என்று க. கை. கேலிபண்ணு கிருர். இது தன்னைப்பற்றிய சந்தேகத்தின் வெளிக்காட்டலே. நல்ல காலம், இவர் போன்ற எழுத்தாளப் போலிகளையும் விமர் சகர்களையும் குறித்தல்ல மு. த. கூறியது என்பதை நாம் அறிவோம்.
க. கை.க்கு தாம் சொல்லவருபவற் ருேடு நேரடித் தொடர்பு அதிகம் இருப் பதிலலை. அப்படி இருந்துவிட்டால் அது நுனிப்புல் மேய்ச்சலாகவே இருக்கும். அத ஞல் தான் " மு. த. சார்ந்த அநுபூதி நெறி துறவையும், அவரது எழுத்தாள தர்மம் பங்குபற்றலையும்’ தூண்டுகிறதாம் இதற்கிடையில மு. த. ‘அதுவா இதுவா’’ என்று தெரியாமல் இரண்டகப்பட்டு நிற் கிருேம். பாவம் க. கை. துறவே எல்லாச செயலுக்கும் அடியோடி நிற்க அதன் அடிப் படையிலேயே அனைத்தையும் செய்யத் தூண்டும் கீதையின் கர்மயோகத்தையே மு. த. அடிப்படையாகக் கொண்டார். அதனுல் தான் "வாழ்க்கையில் எந்தவொரு செயலையும் நான் ஒதுக்கவோ துறக்கவோ போவதில்லை. சமூகம், அரசியல், வர்த்த கம், கவிதை, இலக்கியம் சிற்பம்." என்று அரவிந்தர் அழகாகக் கூறியதை போர்ப்பறையில் மேற்கோள் க்ாட்டுகிருர். மு. த.வின் பிரச்சனை அதுவல்ல. இப்படி

கல்விச் சமூக சீர்திருத்தம், அரசியல், அபிவி ருத்தித் திட்டங்கள் என்று பல இயக்க வேலைகளில் ஈடுபட்டிருந்த மு. த வுக்கு எழுத எங்கே நேரம்? அதனல் இவற்றை யெல்லாம் இலக்கியமாக எழுதுவதா, எழு துவதைப் பிறரிடம் விட்டுவிடுவதா என்று நேரமின்மையால் மு. த தவித்தாரே யொழிய க. கை, கூறுவதுபோல் துறவுக் கும், எழுத்தாளனின் பங்குபற்றலுக்கும் இடையில் இரண்டகப்பட்ட நிலையிலல்ல. துறவின் அடிப்படையில் க  ைட சிவ  ைர அவர் இயக்கவேலைகளில் பங்குகொண்டிருந் தார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
இன்னும் மார்க்சீயத்தை மு. த. வெறும் ஜடவாதம் என்று சொல்கிற ரென்றும், அதனுல் அவருக்கு மார்க்சீயத் தின் அரிச்சுவடிகூடத் தெரியாதென்றும் மார்க்சைத் துறைபோகக் கற்ற க. கை. சொல்கிருர், மு. த. எப்பவும் மார்க்சீ யத்தை வெறும் ஜடவாதம் என்று அழைக் கவில்லை. ஆனல் பொருள்தான் (Matter) அதன் நோக்கின், ஊற்றின் ஆரம்பம் (Involution) என்று அது கரிக்கோடிடும் போது ஏற்படும் பிரச்சனைகளையே மு. த. விபரிக்கிருர் அது அரசியல், சட்டவியல், மெய்யியல், சமயம், கலை, இலக்கியம் என்று சகலவற்றேடும் பின் னி ப பிணைந்திருந் தாலும் ஆரம்ப பொருள் நோக்கு கீறிய கோட்டுக்குள்ளேயே தனது வெளிச்சத்தை விழுத்துகிறது. அதனல் உண்மை அதன் வெளிச்சத்துக்குள் விழாது வேறு எல்லைக ளைத் தொடுமாயின் அ  ைத விளங்கிக் கொள்ளமுடியாதது. உதாரணமாக இதனல் grair g6ôr Gïolo Gofleir Matter-Energy &56ŵ7 டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ள அன்றைய பொதுவுடைமை ரஷ்ஷியா கலங்கியது.
சமய உண்மைகளை சமய ஸ்தாபனங் களோடு அதனுல்தான் மாருட்டம் செய் கிறது. அதனுல் அது மார்க்ஸ் காலத்து விஞ்ஞான இயக்கவியல் பொருள்முதல் என்கிருர் மு. த. இந்த நுணுக்க வேற்று மைகளை, கற்றுத்தரவரும் க. கை. தெரிந் திருக்க வேண்டும். ஆனல் இவரோ கிளிப்
515

Page 12
பிள்ளைபோல் அவ்வப்போது தனக்கேற்ற விதத்தில் சுலோகங்களைக்கொண்டு ரொட்டி சுடுகிருரேயொழிய, உ $ள் வி சி யும் தத்து வார்த்த விஷயங்களை விளங்கிக்கொண்ட வராய் இருப்பதில்லை. இதன் காரணத்தால் தான் இவர் எழுதிய நூல் முழுதும் சுலோ கங்களை வாசிக்கும் சர்பினு பெட்டியாக மட்டுமல்ல, ஒன்றுக்கொன்று முரண்பட்ட (மார்க்சீய நிலமானிய, முதலாளித்துவ) அபசுர அலறல் பெட்டியாகவும் இருக்கிறது.
இதுவரை நாம் பார்த்தவை கலாநிதி க. கை. தன்னையோர் உண்மையான மார்க் சீயவாதியாகவும், ஏனைய வேறுபார்வையு டையோரை மார்க்சீயம் அறியாத பிற் போக்கு வாதிகளாகவும் காட்டமுயன்றதன், விழுந்தெழும்பல்களே.
ஆணுல் இவற்றுள் நம்மைக் கவரும் முக் கியமான, வேடிக்கையான விஷயம் என் னவெனில் இவர் பிறரில் காணும் குற்றங் கள் யாவும், இவருடையவையாக இருப்பதே. இது பிளவுபட்ட நோய்க்கூறு கொண்ட மன தி ன் வெளிக்காட்டல்கள். அதை மறைக்க மார்க்சீயம் ஒரு போர்வை. எனவே அவற்றை ஆராய்ந்து வரிசைப்ப டுத்துவோம். முதலில் க. நா. சு. பற்றி இவர் கூறுவதிலிருந்து இவரை ஒப்பிடு
வாம்.
முதலாவதாக இவர் க. நா. சு. பற்றிக் குறிப்பிடும்போது அவர், அமெரிக்க கலாசார சுதந்திர காங்கிரசின் கையாள் என்று கடு மையாகக் குரல் எழுப்புகிருர்.ஆனல் S. 6935. பற்றிச் சிலர் கடுமையாக ஆராய்ந்தபோது, இவர் ஒருவருடகாலம் அமெரிக்காவில் தங் கியிருந்ததும் இதே போன்ற அமைப்பொன் றின் ஆதரவில்தான் என்று "ஆராய்ச்சிப் பேராசிரியர் சொன்னதாக, இலங்யிைல் பல மட்டங்களில் கதை அடிபட்டதாம். இதை இன்னும் உறுதிப்படுத்துவதாக உள்ளதாம் இவரின் நடத்தைகள். அதாவது இலங்கை யிலுள்ள அமெரிக்க தகவல் திணைக்களத் துக்கு இவர் அடிக்கடி கொழும்பு செல்லும்
516

போது போகின்ருராம். அதே திணைக்களம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஓவியக் கண்கா ட்சியில் கலந்துகொண்டதும் அதுவெளியிட்ட ஆனந்தக்குமாரசுவாமி நூற்றண்டு விழா மலரில் (1977) அவர் கட்டுரை வரைந் ததும் இவரை யார் என்று இனங்காட்டு கிறது அல்லவா? என்றும் அவர்கள் கேட் கிருரர்கள். இவரும் அமெரிக்காவின் அதே கையாளா?
க. நா. சு. பார்ப்பன சாதி வெறி
கொண்டவர் என்று க. கை. குற்றஞ் சாட்டுகிறர். சாதிவெறியில் க. கை. என்ன குறைவா? இவர் வீட்டில் நடைபெற்ற ஒரு அயல்நாட்டு எழுத்தாளருக்கு அளிக்கப் பட்ட விருந்துபசாரத்தின்போது, இவர் நிற்கும் முற்போக்குஅணியின் பத்திரிகா சிரியர் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்த்தவர் என்பதற்காக இவரால் அழைக் கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட கதை, நாடறிந்ததே. அது எதைக் காட்டுகிறது?
க. நா. சு.வுக்கு ஜே ம் ஸ் ஜொ ய் ஸ் எலியட் போன்ற பிற்போக்குவாதிகள்தான் குருநாதர்கள் என்று கேலி பண்ணுகிருர் க. கை, ஆனல் இவரும் அவர்கள் பிடியி லிருந்து தப்பியதற்கான சான்றுகள் இல் லையே? இவர் முற்போக்கு இயக்கத்தைச் சேவிப்பவராக தினகரனில் இருந்தகாலத்தில் தனக்குப் பிடித்த நாவலாசிரியர் ஜேம்ஸ் ஜொய்ஸ் என்று தானே, கட்டுரை எழுதித் துதிபாடினர். அது எந்தவகையைச் சார்ந் தது?
க. நா. சு. போன்ருேரை (மு.தவையும்) நுனிப்புல் மேய்ச்சல்காரர் என்று குற்றஞ் சாட்டும் இவர் மட்டும் என்னவாம்? தாம் சொல்ல வருபவற்ருேடேயே இவருக்கு நேரடித் தொடர்பில்லாமல் இருப்பதைப் பார்க்கிருேமே! இல்லையெனில் 1968ல் இவர் எழுதிய 'தமிழ்நாவல் இலக்கியத்தில் அப்போது உயிரோடிருந்த "எஸ்ரா பவுண் டை’ செத்துப்போனவராகக் காட்டி வெ. சாமிநாதனிடம் குட்டுப்படுவாரா? (1980ல் வெளிவந்த திறனய்வுப் பிரச்சனைகளில்

Page 13
தான் “சென்ற வருடம் இறந்துபோன எஸ்ரா பவுண்ட' என்று பரிதாபகரமாகத்
திருத்தம் செய்கிருர் .)
இவை மட்டுமா? இன்னும் பட்டியல் நீளும். மு. த. பற்றி இரண்டகப்பட்டுள் ளார் என்று அவரிடம் இல்லாத ஒன்றை (நுனிப்புல் மேய்ச்சலால்) இருப்பதாகக் கூறும் இவர்தான், உண்மையில் இரண்ட கப்பட்டுள்ளார். ஒருபுறம் சமூக அந்தஸ் துக்காக முற்போக்காளர் அணியில் நின்று பெரிய மார்க்சீயவாதியாகக் காட்டிக் கொள்வதும், மறுபுறம் உயர்சாதி சைவமர பிலிருந்து விடுபடமுடியாமல் அவர்களுக் காகக் காவடி எடுக்கின்ற அலங்கோலமும். பாம்புக்குத் த லை யும் மீனுக்கு வாலும் காட்டும் விலாங்கு வாழ்க்கை. இந்தப் போலி வேஷங்களால்தான் "தளையசிங்கம் மார்க்சீய எதிர்ப்பாளன்’ என்று கத்திக் கொண்டே "கெளரியம்மன் பிள்ளைத் தமிழுக்கு முன்னுரையும் ‘ஈழத்துச் சித் தர்களை’ விழுந்துபோற்றி நல்லுரையும் வழங்குவதோடு, தங்கம்மா அப்பாக்குட் டிக்கு கோயில் அர்ச்சகராக நின்று "கோயில் தத்துவம்' பற்றிப் பேசுவதும் சுபமே நடந் தேறுகிறது. இதோ கோயில் தத்துவத்தில் க. கை, நட ரா ஐ தாண்டவம்பற்றிக் கூறும் அழகு, “பிரபஞ்சரீதியில் இயக்கத் துக்கு தூல வடிவம் கொடுப்பதாகவே அது விளங்குகிறது. அது சக்தியின் சந்நிதியில் மனிதன் பெற்ற அனுபவத்தின் எதிரொலி என்றும் கூறலாம். எனவேதான் அத் தகைய அற்புதமான உருவத்தைக் கண் டதால் "மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தில். என்று.” 4.Jлт цg (60rf நாவுக்கரசர்’ அது என்ன சக்தி? மார்க் சீய சக்தியா அல்லது சிவசக்தியா? ஆகா, என்ன நுட்பமாக கலாநிதி பாம்புக்கும் மீனுக்குமாக மாறி மாறிக் கட்சி கட்டுகிருர், இவை மட்டுமல்ல வெகு அண்மையில் நாவல ரின் கந்தபுரான வசன வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு ‘ஆன்மீக ஈடேற்றத்துக்கு இந்நூல் சிறந்தது’’ என்று ஆன்மீகம் பேசினரே, இந்தக் கந்தபுராணத்துக்கும்இவர் நம்புவதாகக் கூறும் கால்மாக்ஸ்-சக் கும் என்ன தொடர்பு? இத்தோடு முடிந்

ததா இந்த ‘மார்க்சீயவாதியின் தகிடு தத்தங்கள்? தெ. பொ. மீ. நடாத்திய ஆழ் நிலைத்தியான வகுப்பில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினரே, இதன் நோக்கம் என்னவாம்? இது இவர்சாடும் எதிரிகளைவிட இன்னும் ஒருபடி மேலே போய் சந்தப் புரானத்துக்கும் கால்மாக்ஸ்"க்கும் ஆழ் நிலைத் தியானத்துக்கும் முடிச்சுப்போடும் அர்த்தமற்ற கேவலமான நிலையாக இல் au it?
இந்தப் பற்றுதலால்தான் நாவலர் பற்றி க. கை. பக்கம் பக்கமாக எழுதிய போதும், அவரது சமூகக் கோளாறுக்குரிய கொள்கைகள் பற்றி ஆராய்ந்ததே இல்லை.
இவை எதைக் காட்டுகின்றன? பகலில் மார்க்சீய ஆய்வு செய்யும் டாக்டர் ஜேர்க் கில் க. கை. இரவில், அதாவது மறை வான பாஷைகளில் மறைவான இடங்க ளில் மிஸ்டர் ஹைட்டாக மாறி, தான் வக் காலத்து வாங்கும் கொள்கைக்கே ஆப்பு வைப்பவராக நிற்கிருர்.
ஏன் இந்த இரண்டக அல்லது இரண் டுங்கெட்ட வாழ்க்கை? ஒருபக்கம் தன்னைப் பெரிய முற்போக்கு வாதியாகக் காட்டிக் கொள்ளும் ஆசை. மறுபக்கம்wபழைய ஆசா ரங்களிலிருந்து விடுபடமுடியாமல் அவர்க ளுக்கும் தலைமை தாங்க வேண்டும் என்ற பேராசை, ஆசை வெட்கமறியாதது என் பது சாலவும் தனக்கே பொருந்த அவர்க ளுக்கும் இவர்களுக்குமாக மாறிமாறி முகம் மாற்றும் இர ண் ட கப் போலி வாழ்க்கை.
இந்தப் போலிகளுக்கு கலையைப்பற்றி என்ன தெரியும்? புதுமையானவைபற்றி, தத்துவார்த்தமானவைபற்றி என்ன தெரி யும்? அதனுல்தான் புதிய கலை இலக்கிய உருவமான மெய்யுள் இவருக்கு "கலம்பக" மாகத் தெரிகிறது. அண்மைக்காலம்வரை மரபுக் கவிதைக்கு மேலாக ஒரடிகூட நகர முடியாமல் கிடந்த க. கை. தமிழ்நாட்டு வானம்பாடிக் கூட்டத்தின் இரைச்சலால் விழிப்புற்று, அவர்களில் யாரோ ஒருவர் தொகுதிக்கு முன்னுரை வழங்கப் போனதில்
57

Page 14
இருந்து புதுக்கவிதை பூப்பு நீராட்டு விழா இவரைப் பொறுத்தவரை தொடங்குகிறது என்ருல் இவரது இலக்கிய ஆழம், அறிவு பற்றியோ, ஆய்வு அங்கீகாரம் பற்றியோ யார் பொருட்படுத்துவார்கள்? இவர்கள் காலப்பிரவாகத்தின் உதைப்பால் பிடுங் குண்டு அள்ளுண்டு ஓடப்போகும் வெறும் பழம் வேலியின் எல்லைக் கட்டைகள்.
அதனுல்தான் தொடக்கத்திலிருந்திே இந்த முற்போக்கு விமர்சகர்களின் அங்கீ காரத்தையோ பாராட்டுதல்களையோ மு. த. வேண்டி நிற்கவில்லை. தனது தரிசனத் தையோ அதனுல் வரும் கலை இலக்கியத் தின் புதுத்தேவைகளையோ இவர்களால் புரிந்துகொள்ள முடியாதென்பதால் அதற் குரிய புதிய சூழலை ஏற்படுத்தவும் அதற் குரிய புதிய பாதையை அமைக்கவுமே மு.த. த மது விமர்சனங்களைக் கையாண்டார் என்று ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடுகின்றர். அதனல் சகலரும் சகல சகல போக்குகளும் பாரபட்சமற்ற முறை யில் இவரது விமர்சன ஆய்வுக்குட்படுத் தப்பட்டன.
இவர்களது அங்கீகாரத்தைப் பொருட் படுத்தாது மு, த. தனியணுய் நின்று தனது பணியைத் தொடர்ந்தபோதும் க. கை. நின்ற அதே முற்போக்கு அணியைச் சேர்ந் தவர்களுள் ஒரு வ ரா ன கா. சிவத்தம்பி அவர்கள் மு. த.வின் போர்ப்பறை பற்றிக் குறிப்பிடுகையில் "1966க்குப்பின் ஈழத்து இலக்கியத்துறையில ஏற்பட்ட தேக்கத்தை உடைத்தது இந்நூல்' என்ற வகையில் பாராட்டுகிருர். ஆணுல் க. கை. போன்ற aria,6igyb giba56II ay Intellectual honesty யையோ பெருந்தன்மையையோ எதிர் பார்ப்பது மடைமை. இத்தகையோர் விமர் சனத்துள் இறங்கினல் அதன்நிலை அந்தகா ரம்தான். இவர்களைப் போன்றவர்களைப் பார்த்து அமெரிக்க எழுத்தாளர் நோர்மன் மெயிலர் குறிப்பிடுவதை அடிக்கடி மு. த, கேலியாகக் கூறுவதை - இங்கு குறிப்பிடு வது நல்லது.
Oh! these shits are killing. ※
518

இலையுதிர்கால அரசியல்
நினைவுகள்
உலர்ந்த காற்று மரங்களே உலுப்பும். மெலிந்த கிளைகளில் முளைத்துப் பழுத்த இலைகள் மெல்ல மரத்தின் நீங்கி வலிய காற்றின் வழியில் ஒடும். பிரிந்த இலைகள் தரைமேல் வீழ மரங்கள் மேலும் செழும்ை நீங்க விழுந்த இலைகள் சருகாய் மாறப்பூங்கா மெல்ல இடுகாடாகும். பறவைகள் போவன. அணில்கள் அகல்வன. இரவில் மரங்கள் பேய்கள் கையில் ஏந்தி நிற்கும் துடைப்பம் போல. இலையுதிர் கரிலம் இத்தனை கொடிதோ?
நாட்கள் குளிர்மிக, மரங்கள் மீதும் மண்ணின் மீதும் வெண்பனி வீழ, வெண்பனிப் படலம் பூமியை மூட, பறவைகள் இன்றி - அணில்கள் இன்றிமரங்கள் மட்டும் நேராய் நிற்க, கம்பளி உடைக்குள் மேனி நடுங்கினும் வெண்பனி அழகை மறுத்தற் கில்லை.
மீண்டும் மலர்கள் மண்ணைப் பெயர்க்கப் பறவைகள் மெல்லப் பாடத் தொடங்க அணில்கள் தாவ வஸந்தம் வந்தது. மரங்கள் மீது இலைகள் போர்த்தன.
இளையுதிர் காலம் கொடியது தானே?
மணி.

Page 15
அய் ஜிங் நிலப்பிரபுக் குடும்பமொ 1910ம் ஆண்டு பிறந்தவர். இவரினுல் பெ டன் கூறியதால், வளர்க்கப்படுவதற்காகத் ருத்தியிடம் சேர்க்கப்பட்டார். அவளிற்கு தனது கிராமத்தின் பெயராலேயே அழை 'அய் ஜிங் கிரும்பவும் வீட்டிற்குக் கொண்
தமது பாதுகாப்புக் கருதி ஐயா’, ‘அம்ம அவர் அனுமதிக்சப்படவில்லை. ஆனல், பதில நேர்ந்தது.
g 1957-58களில் வலதுசாரிகளிற்கெ! யென லேபலிடப்பட்டு இவரும், இவரது னுெதுக்கப்பட்டன. 1978ல் குற்றங்களி பொதுவாழ்விலும், இலக்கியத் துறையிலும்
தயானெ - எனது செவி
சீன மொழியில் : الذي نقد ஆங்கிலம் வழியாகத் தமிழில் : அ. யேசுராசா
தயானெ, எனதுசெவிலி பிறந்த ஊரின் பெயரையே சூடினுள்; தயானெ எனது செவிவி குழந்தைமணம் புரிந்தாள்.
நிலப் பிரபுவின் மசன் நான்,
ஆணுல், தயானெயின் பாலில் வளர்ந்தநான் அவளது மகனுங் கூட. என்னை வளர்ப்பதால்
தயானெ தன் குடும்பத்திற்கு உணவூட்டினள். ஓ! தயானெ, எனது செவிலி உனதுமார்பின் பாலினல் நான் வளர்ந்தேன்."
தயானெ, இன்று பனிமழை பெய்கிறது நான், உன்னை நினைக்கிறேன்;

ாறில் சீனவிலுள்ள ஜியாங் ஹைச்செங்கில் }ருேருக்குத் தீங்கு விளையுமென ஒரு சோதி தொலைவிலுள்ள விவசாயப் பெண்ணுெ ப் பெயரேதும் இருக்கவில்லை; அதனல் க்கப்பட்டாள். ஐந்து வயதானபோது வரப்பட்டார். "விதி'யிலிருந்து மேலும் ா'வென அழைக்கத் தனது பெற்றேரால் ாக மாமா, மாமி என அழைக்க வேண்டி
ரான இயக்கத்தின்போது "வலதுசாரி கவிதைகளும் பொதுவ்ாழ்விலிருந்து பின் மிருந்து விடுவிக்கப்பட்டவராய் மீண்டும்
தோன்றியுள்ளார்.
v
M
nó
புல்மூடிய உனது புதைகுழி, பனிமழையில் பூட்டிய உனது குடிசையின் தாழ்வாரம் உலர்ந்த களைகள் படர்ந்தபடி, உனது சிறுதோட்டம ஈட்டில், அதன் வாசலின் முன்னுல் உள்ள கல் வாங்கு பாசி படிந்து பச்சையாய் உள்ளது, ஓ! தயானெ, இன்று பனிமழை பெய்கிறது நான், உன்னை நினைக்கிறேன். உனதுயுஜங்களில் என்னை உன் நெஞ்சோடு அணைத்தாய், வலுவான உன் கரங்கள் என்னை வருடின. அடுப்பில் நெருப்பைநீ மூட்டிய பிறகு, உனதுபணித்துறை ஆடையின் சாம்ப்லைத் தட்டிய பிறகு, ، ؛ : சோற்றுப் பருக்கையைப் பதம் பார்த்து
X பிறகு, ஒருகிண்ணம் கறுப்பு அவரையை கறுத்தமேசைமேல் வைத்த பிறகு, மலை முட்களால் கிழிந்தஉனது
519

Page 16
புதல்வரின் சட்டைகளைத் தைத்த பிறகு, வெட்டுக்கத்தியால் காயமடைந்த உன் இளையமகனின் சுரத்தில் துணிகட்டிய பிறகு, உனது குழந்தைகளின் சட்டைப் பேனை நசித்த பிறகு, m நாளின் முதல்முட்டையைச் சேர்த்த பிறகு, உனதுபஜங்களில் என்னை எடுத்து நெஞ்சோடு அணைத்தாய், வலுவான உன் கரங்கள் என்னை வருடின.
நிலப்பிரபுவின் மகளுய் தான் இருந்தேன், உனது பாலின் கடைசித் துளியையும் குடித்தேன். பெற்றேரால் திரும்ப நான் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டபொழுது தயானெ w நீயேன் அழுதாய்? பெற்றேரின்விட்டில்நான் புதிய
விருந்தாளி யானேன்! மினுக்கிய சிவப்புத் தளபாடங்களை, பெற்றேரின் கட்டில் மீதிருந்த பொன்முலாமிட்ட வடிவங்களை நான்
தொட்டேன். வாயிலின் மேலுள்ள குடும்ப மகிழ்ச்சி" என்றசொற்களில் கன் மேய்ந்தேன்: அவற்றை என்னல் வாசிக்க முடியவில்லை. எனது புதிய பட்டுடைகளையும் முத்துத் தெறிகளையும் தடவினேன், எனக்குத் தெரியாத சிறியதங்கையை அம்மாவின் கரங்களில் கண்டேன், தனல்தட்டினுல் உஷ்ணமாக்கப்பட்ட
கட்டிலில் வர்ண முக்காலியில் அமர்ந்தேன், நல்ல வெள்ளையரிசிச் சோற்றை மூன்று வேளையும் உண்டேன், ஆனல் 2. சொகுசிலும் நிறைவற்றே உணர்ந்தேன்எனதுபெற்றேரின் வீட்டில் நான், புதிய விருந்தாளியானேன்,
520

தனது பால் முழுதும் வற்றியபிறகு, வாழ்வதற்காய் என்னைச் சுமந்தஅக் கரங்களால் தயானெ, உழைக்கத் தொடங்கினுள்; புன்னகையோடு எம் உடைகளைக் கழுவினுள், கிராமக்குளத்தின் குளிர்ந்த நீரில் புன்னகையோடு மரக் கறிகளைக் கழுவினுள் புன்னகையோடு கிழங்குச் சுருள்களை
வெட்டினள், புன்னகையோடு, புளித்த தானியங்களைப் பன்றிகளுக் காய். அவள் கலந்தாள், இறைச்சி கொதிக்கும் பாத்திரத்தி னடியில் புன்னகையோடு நெருப்பினை விசிறிஞள், அவரைகளையும், கோதுமையினையும் வெயிலுக்காய்ச் சதுக்கத்திற்கு, தூற்றுக்கூடையில் சுமந்து சென்ருள்புன்னகையோடு. வாழ்வதற்காய், தனது பால்முழுதும் வற்றியபிறகு என்னைச் சுமந்தஅக் கரங்களால் தயானெ, உழைக்கத் தொடங்கிஞள்.
தயானெ இந்த வளர்ப்பு மகனை நேசித்தாள்; தனது பாலையும் ஊட்டினள், புதுவருட விழாவின் போது வெல்லப்பொங்கலை அவனுக்காய் வெட்டி
ஞள் அடிக்கடி அவள் தன் கிராமத்து வீட்டிற்குச் சென்று திரும்புகையில், 'அம்மா"வென்றழைத்து அவன் ஓடி
w வருவான் : அவன் கிறுக்கியசித்திரத்தை அடுப்பிற்கு நேரே அவள் ஒட்டியிருந்தாள். வளர்ப்புக் குழந்தைபற்றி அயலாரிடம் தயானெ, எவ்வாறு புகழ்ந்தாள்! ஒருதடவை அவள் கனவொன்று கண்டாள், பாருக்குமே அதைச் சொல்லமுடியவில்லை: கனவில் அவள்
தனதுகுழந்தையின் திருமணத்தைக்
கொண்டாடச் சென்ருள்

Page 17
ஒளிவிடும் மண்டபத்தில் நிறப்பட்டால அலங்கரிக்கப்பட்டு அவள் . . . . . . அமர்ந்திருந்தாள்? அழகிய இளம் மணப்பெண்
‘மாமி "யென அன்போடு அவளை அழைத் p தாள். . எவ்வளவு அன்போடு இக் குழந்தையை
நேசித்தாள், தனது பாலையும் ஊட்டினுள்!
கனவிலிருந்து மீளுமுன் தயானெ இறந்தாள். அவளின் மரணவேளை
அல் எது குழந்தை அருகில் இருச்சவில்லை : அடித்துத் துன்புறுத்திய கணவன் அவள் இறந்தபோது கண்ணீர் விட்டான், ஐந்து புதல்வரும் சேர்ந்து அழுதனர்; இறக்கும் வேளையும் அவள் வளாப்புக் குழந்தையின் பெயரை
முணுமுணுத்தாள்.
தயானெ இறந்தாள்: அவளது மரணவேளை
அவளதுகுழந்தை அருகில் இருக்கவில்லை.
தயானெ பிரிந்து சென்ருள்,
கண்களில்,
கண்ணிர்த் துளிசளுடன்.
நாற்ப தாண்டுகள் பாரமாய் அழுத்திய
உலகமனிதரின் இழிவு படுத்தல் களோடும்,
அடிமையின் எண்ணற்ற துயர்களோடும்.
நான்குடொலர்ச் சவப் பெட்டியோடும்
சில கட்டு வைக்கோலோடும்
தன் சடலம்புதைக்க சிலஅடி மண்ணேடும்.
எரிந்த கடதாசிக்காசின் கைபிடிச் சாம்ப லோடும்
தயானெ பிரிந்து சென்ருள்
கண்களில்,
கண்ணீர்த் துளிகளுடன்.
ஆனல்
தயானெ அறியாத விஷயங்களும் இருந்தன அவளது குடிகாரக் கணவன் இறந்தான் மூத்த மகன் கொள்ளைக் காரணுணுன்கு
g

யுத்தநெருப்பில் இரண்டாம் மகன் இறந்
தான் மூன்ருவது, நான்காவது, ஐந்தாவது
புதல்வர் எஜமான்களதும் நிலப்பிரபுக்களதும் w
வெறுப்புடன் வாழ்ந்தனர். நான்இல்வுலகின் நீதியின்மையைச் சபித்து எழுதுகிறேன். நீண்ட அலைதலின் பிறகு என் கிராமத்திற்குத் திரும்பிய பொழுது வயல்களிலும், மலைகளிலும் என் சேர்தரரைச் சந்தித்தேன்; முந்திய ஆண்டுகளைக் காட்டிலும் ஒருவருக்கொருவர் நாங்கள் நெருங்கினுேம், அமைதியாய், 1 உறங்கும் தயானெ நீ அறியாதவை, இவை தான்.
தயானெ, நீ முலையூட்டிய உனதுகுழந்தை இன்று சிறையில். w உனக்கு அர்ப்பணிக்கப்பட்ட கவிதையை, அவன் எழுதுகிருன், மஞ்சள் மண்ணின் அடியிலுள்ள உனது ஆவி உருவிற்கு, என்னைச்சுமந்த அந்த நீட்டிய கரங்களுக்கு, என்னை முத்தமிட்ட உதடு களிற்கு, நேசம் நிறைந்தஉன் கறுப்பு முகத்திற்கு, எனக்கு வளமூட்டிய உனது மார்பிற்கு, ! உனது புதல்வர்க்கு - எனது சோதரற்கு, பூமியின்மீதுள்ள ஸ்ல் லா வளர்ப்புத் தாயருக்கு, அவர்தம் புதல்வர்க்கு, எனது தயானெ போன்ற எல்லோர்க்கும், சொந்தமகன்போல் என்னை நேசித்த என் தயானெக்கும்.
தயானெ.
தான் உன்னுடைய மகன்." உனதுமார்பு எனக்கு உணவூட்டியது. உன்னைதான் மிக மதிக்கிறேன்; உன்னை தேசிக்கிரேன். ※
-பணிநிறைந்த காலை, ஜனவரி 14, 1933. (சீன இலக்கிவம். இலக்:6, 1979

Page 18
ஏப்ரல் எட்டு ஒன்பது
எம். எல். எம். மன்சூர்
ஏப்ரல் s வெள்ளி
இன்று பெரிய வெள்ளிக்கிமமை விடு முறை. ஆறு மணிக்கு கண் விழித்தேன். ஜயதிஸ்ஸ அவனுடைய கட்டிலுக்கடியால் குனிந்து சூட்கேசில் எதையோ தேடிக் கொண்டிருந்தான். இன்று ஊருக்குப் போவ தில்லையென்று சொன்னன். நொச்சியாகம வுக்குப் போவதாகச் செர்ல்லிக் கண் சிமிட் டிச் சிரித்தான்.கண்களைத் தாழ்த்திச் சிரித்து விட்டு உ த ட்  ைட ப் பிதுக்கிக்கொண்டு முகத்தை இடமிருந்து வலமாக அசைக்கிற ஹேமல்தா என்ற அந்தப்டேண்ணின் உரு வத்தை ஒரு கணத்துக்கு நினைத்துப்பார்த் தேன். பாங்கில் ஈடு பிடிக்கும் பகுதிக்குத் தான் நிறையப் பெண்கள் வருகிறார்கள். வேறு பிரிவுகளுக்கு மாறுவதில் எந்த் வித மான நாட்டமுமில்லாமல் இப்பொழுது ஒன்றரை வருடங்களாக ஜயதிஸ்ஸ அந்தப் பிரிவில்தான் வேலை செய்து வருகிருன், தங்கத்தைக் கையாள்வதில் ‘ரிஸ்க் அதிகம் என்பதால் யாரும் அந்தப் பிரிவை விரும்பிக் கேட்பதுமில்லை.
அவனைப் பார் த் துக் கிண்டலாகச் சிரித்து, 'ஒல் த பெஸ்ட்" என்று சொல்லி விட்டு ஆறரை மணிக்கு சூட்கேசை எடுத் துக்கொண்டு அறையிலிருந்து வெளியேறி னேன். கமகேயின் கடையில் டீ குடித்து, ஐந்து சிகரட்டுகள் வாங்கி சூட்கேசுக்குள்  ைவத் துக் கொண்டேன். தங்கச்செயினை விரல்களுக்கு மேலாக இழுத்துவைத்து, கழுத்தை இடது உள்ளங்கையால் தடவிக்

த்து
f -கொண்டே, 'ஊருக்குப் போகவா?’ என்று
கமகே சிங்களத்தில் கேட்டான். நான் சிங் கள ஆள் என்றுதான் அவன் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறன் .
டாஸ் ஸ்டான்டில் புதுவருட விடுமுற்ை யில் ஊருக்குச் செல்பவர்களின் கூட்டம் , ஏராளமான சூட்கேஸ்களும், பொதிகளும், முகங்களும். கண்டி "கியூ"வின் தொடக்கத் தையும் முடிவையும் தேடிச் சலிப்புற வேண் டியிருந்தது. ஒழுங்கீனமாகத் தெரிந்த கியூ விலிருந்து விலகி, ஒதுங்கிநின்று சிகரட் பற்றிக்கொண்டேன். “கோணர் சீட்"டில் சாவகாசமாக உட்கார்ந்து கண்ணுடி யன் னலைத் திறந்துவிட்டுக்கொண்டு சுகமாகப் பிரயாணம் செய்கிற வசதி இன்று கிடைக் கப் போவதில்லை.
மாத்தளை வரும் வரையில் சீட் கிடைக் கவில்லை. சூட்கேசை கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு முன் சீட்டுக்கு அடுத் ததாக இருந்த சீட்டுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். தம்புள்ள தாண்டியதும் குமட்டல் தொடங்கி வா ந் தி வருவது போலிருந்தது. பக்கத்திலிருந்த சீட் டி ல் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். கோணர் சீட்டில் இருந்த பெண் மாநிற முடையவளாக இருந்தாள். காற்றில் அலை கிற மயிர்க்கற்றைகளை மென்மையான ஒரு வித அலட்சியத்துடன் குறும்பு செய்கின்ற குழந்தையை அதட்டுகிற தோரணையுடன் அவள் கட்டுப்படுத்திக்கொள்ள முயன்ருள். அடிக்கடி கால்களை அசைத்து முழங்காலுக்கு அடிப்பகுதியில் கையை விட்டு, க வுன
522

Page 19
இழுத்து சரி செய்து உட்ஃார்த்து கொண் டாள். முன் சீட் டி ல் உட்கார்ந்திருந்த ஹாமதுறுவின் பளபளக்கும் மொட்டைக் தலையை அடிக்கடி ஒரக்கண்ணுல் பார்த்துக் கொண்டாள். அவளுக்கு இடதுபுறத்தில், உட்கார்ந்திருந்த டெண் வெளிர் நீலத்தில் "சாரி அணிந்திருந்தாள். கைப்பையை மடி யில் வைத்து இடது கையால் அணைத்துக் கொண்டிருந்தாள். வி ர ல் மோதிரத்தில் ஆங்கில "ஆர்" எழுத்து தெரிந்தது. கைப் பைக்குக் கீழே பெண்களுக்கான சிங்கள வாரப்பத்திரிகையொன்று மடிந்திருந்தது. என்னுடைய சூட்கேஸ் நழுவிச்சென்று அடிக் கடி முழங்காலுக்கு கீழே இருக்கிற அவளு டைய கால் பகுதியில் மோதிக்கொண்டது. அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் கோபமு மில்லாத, இரக்கமுமில்லாத விசித்திரமான முறையில் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு கால்களைத் தூக்கி வைத்துக்கொண்டாள். அதற்குப்பின்னுல் இருந்த சீட்டில் உட்கார்ந் திருந்த கணவனும் மனைவியும் மாத்தளையில் இறங்கினர்கள். கோணர் சீட் டி ல் உட் கார்ந்து யன்னலை நன்ருகத் திறந்து விட் டேன். சப்பாத்துக்களைக் கழற்றி கால்களைத் தூக்கி முன் சீட்டின் முதுகில் சேர்த்துக் கொண்டேன். குளிர்ந்த காற்று முகத்தில் பட்டவுடன் குமட்டல் மறைந்து அலாதி யான ஒரு சுகம் வருடத்தொடங்கியது. /
கண்டியில் இறங்குகிறபோது மணிக்கூட் டுக் கோபுரம் 12.20ஐக் காட்டிய்து. இன்று ஜும்மாவுக்குப் போகமுடியாது. இப்போது அடிக்கடி , ஜும்மா தவறிப் போ கி றது. வெள்ளிக்கிழமைகளில் ஊரில் இருந்தால் மட்டுந்தான் ஒழுங்காகப் பள்ளிக்குப் போக முடிகிறது. அதிலும் கூட நிறையச் சிநேகி தர்களைச் சந்திக்க முடியும் என்கிற விஷயம் தான் முன்னுக்கு நிற்கிறது. "மனிதர்களே! நீங்கள் இந்த உலகத்துக்கு வந்த போது உங்களுடன் மெளத்தை மட்டுமே எடுத்து வந்தீர்கள். ஒரு நாளில் இங்கிருந்து பிரிந்து செல்கிறபோது நீங்கள் இந்த உலகத்தில் செய்த நன்மைகளையும், தீமைகளையும் மட் டுமே உங்களுடன் எடுத்துச் செல்லப்போ கிறீர்கள்" என்று கதீப் குத்பா பிரசங்கம்

செய்வதை பாயில் துருத்திக் கொண்டிருக் கிற நார் இழையை விரல்களால் விட்டு விட்டு இழுத்துக்கொண்டு, வெளிஹவுதில் நீர் இறைபட்டு, தகர டின்கள் சிமென்டில் மோதி எழுகிற ஒசையின் பின்னணியில் கேட்டுக்கொண்டிருக்கிறபோது ஒரு "த்ரில்" வரத்தான் செய்கிறது.
இன்று பகலுணவை முடித்துக்கொண்டு தான் வீட்டுக்குப்போக வேண்டும். இப் பொழுதே பஸ் ஏறினல் சந்தியில் இறங்கு கிறபோது ஜும்மா கலைந்து வருகிற கூட் டத்தைச்சந்திக்க வேண்டியிருக்கும். அது சங்கடம், -
பஸ் நிலையத்துக்கூடாக தலதா வீதிப் பக்கம் நடக்கத் தொடங்கினேன். கபரகலை, லூல்வத்தை, மடுல்கலை, ஸ்கோலமுதுன. என்று நெற்றியில் ஒட்டிக் கொண்டு ஏரா ளமான பஸ்கள் காத்திருந்தன. வாழ்க்கை யில் ஒருபோதுமே போயிராத ஊராக இருந் தாலும் பெயரைப் படிக்கிறபோது அந்த ஊரின் கற்பனைப் பிம்பமொன்று மனசில் பதிந்து போய் விடுகிறது. "கிரின்ட் லேய்ஸ் பாங்கில் வேலை செய்கிற மனேகரனத் தெரி யுமா?" என்று யாராவது கேட்டால், அந்த மனேகரனக் கண்டும், சந்தித்தும் இராத போதும் அவருடைய உருவம் கற்பனையி லேயே வரையப்பட்டுப் படிந்து விடுகிறது.
சூட்டிகேசை இடது கையில் எடுத்துக் கொண்டு தலதா வீதி நடைபாதையில் மெதுவாக நடந்தேன். குனிந்து சணல் கயிற் றில் சிகரட் பற்ற வைத்துக் கொண்டேன். வழமையாகச் செல்லும் ஹோட்டலுக்குள் நுழைந்து மேல் மாடிக்கு ஏறினேன். மாடி வழித்திருப்பத்தில் பதிக்கப்பட்டிருக்கிற ஆளுயரக்கண்ணுடி பிரயாணக்களை படிந்தி ருக்கும் முகத்தைப் பிரதிபலித்தது. வெளி அரைச்சுவருக்கருகிலிருக்கிற மேசையொன் றுக்கெதிரில் அமர்ந்து இடது பக்கக் கதிரை யில் சூட்கேசை வைத்தேன்." v
எனக்கு வலது புறத்திலிருந்த மேசை யில் குள்ளமான ஒரு தாடி இளைஞனும்,
523

Page 20
சிவப்பில் "டீ சேர்ட் அணிந்த ஒரு யுவதி யும் இருந்தார்கள். அந்த இளைஞன் பற்கள் வெளித் தெரியாமலேயே இரகசியம் பேசும் தொனியில் எதையோ அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான். மேசையில் கு னிந்து கைகளுக்கு மேல் மோவாயைப்பதித்து கண் களைச் செயற்கையான ஒரு தோரணையில் மூடித்திறந்தவாறு அவள் கேட்டுக்கொண் டிருந்தாள். மேசையில் இருந்த சிகரட் பெட் டியை பெருவிரலாலும் ஆள் காட்டி விர லாலும் மேலே தூக்குவதும், கீழே விடுவது மார்க அவன் பேசிக்கொண்டே போனன். யுவதியின் கழுத்திலும், முகத்தின் பெரும் பகுதியிலும் படர்ந்திருந்த ஒருவகையான வெள்ளைத் தே ம ல் அவளிடம் இருக்கிற சாதாரண அழகையும் அசிங்கப்படுத்தியது.
இடது புறமாகத் திரும்பிக் கீழே தலதா வீதியைப் பார்த்தேன். மூன்று மாணவிகள் பைல்களை ஏந்திக் கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ச் சிரித்தவர்று பஸ் ஸ்டான்ட் பக்கம் மெதுவாக நடந்தார்கள். "அவர்கள் முஸ்லிம்கள் என்பது உடையைப் பார்க்கிறபோது தெரிகிறது. அட்வான்ஸ் லெவல் படிக்கிறவர்களாக இருக்கும். டியூ சன் வகுப்புக்கு வந்துவிட்டுப் போகிருாகள் போலிருக்கிறது.
வெள்ளை யூனிபோம் வெயிட்டர் பெரிய தட்டில் சோற்றையும் கறிகளையும் எடுத்து வந்து வைத்துவிட்டு வெற்றுத்தட்டை நீட்டு வாக்கில் கவிழ்த்துப் பிடித்துக் கொண்டு போனன். இந்தப் பகல்நேரத்து மந்தத்தை யும் சலிப்பையும் நினைத்துப் பார்க்கிறபோது முருங்கைக்காய்க் குழம்பு, சோறு, இறைச்சி ஒன்றுமே ருசிக்கவில்லை. அவசர அவசர மாகக் கையலம்பி, சிகரட் பற்ற வைத்துக் கொண்டேன். எதிர் மேசை இளைஞனும் யுவதியும் இன்னமும் பழைய மாதிரியே இருந்தார்கள். ஹோட்டலிலிருந்து கீழே இறங்கி வருகிறபோது வெயில் இன்னும் உக்கிரமாக அடிக்கத் தொடங்கியிருந்தது. இன்று நகரில் சனமில்லை. மாணவர்களும், மாணவிகளும், பைல்களையும், புத்தகங்களை யும் காவிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்து
524

திரிந்தார்கள். பஸ்கள் வரும் வரையில் காத் திருந்தார்கள். கண்களை இடுக்கிக்கொண்டு தலைகளை மேலே நிமிர் த் தி பஸ்களின் பெயர்ப்பலகைகளைப் பா ர் த் தா ர் க ள் . *புருஷர் மட்டும்" என்று எழுதியிருக்கிற கழி வறைக்கு வெளியே தரையில் இர ண் டு காகங்கள் தத்தித் திரிந்தன. சாக்கு மூட் டையொன்றுக்கு முன்னுல் ஒரு கிழவன் குந்தி நின்று சுருட்டை வாயின் ஒருகோணத் தி லிருந்து மறுகோணத்துக்குத் தள் O புகையை வெளியில் ஊதிக்கொண்டும், சுற் றுவட்டத்தில் எச்சில் துப்பிக்கொண்டும் இருந்தான். பொத்தான்களைக் கழட்டி, சட் டையின் நெஞ்சுப்பகுதியை அவன் அகல மாகத் திறந்துவிட்டிருந்தான். சுருங்கிய மார்புத்தோலில் பச்சை குத்தியிருந்த நாக பாம்பு செத்து காய்ந்து கருகிப்போனது போலத் தெரிந்தது. வெயிலில் இ தந்து தப் புவதற்காக நிறுத்தியிருந்த பஸ்ஸொன்றுக் பகுப் பின்புறமாகப் போய் நின்றுகொண் டேன். தூசு படிந்து டோயிருந்த பஸ்ஸின் பின்பகுதியில் "நிமல் என்று விரல் எழுதி யிருந்தது. அதற்குச் சற்றுக் கீழே பெரிய சிங்கள எழுத்தில் பெண்களின் பிறப்புறுப் பைக் குறிக்கிற சொல் இருந்தது. யாரும் கவனிக்கிறர்களா என்று சுற்றுமுற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு இடது கை ஆள் காட்டி விரலால் எட்டாம் இலக்கத்தை எழுதினேன். பிறகு “7” ஐ எழுதினேன். சிரிப்பாக வந்தது. சூட்கேசை எடுத்துக் கொண்டு முன்னுல் வந்து மேலுதட்டை பற்களால் கடித்துக்கொண்டு பஸ்ஸைத்தே டினேன். இடது காலைத்துக்கி சப்பாத்து டன் ஒட்டி இழுபட்டு வந்த காகிதத்துண் டைப்பிய்த்து எறிந்தேன்.
ஹட்டனிலிருந்து வருகிற பஸ் நின்று ஆட்களை இறக்கிக்கொண்டிருந்தது. டிரை வர் ஸ்ரியரிங்கில் கைகளை வைத்துப்படுத் துக் கொண்டு கண்ணுடிக்கூடாக மணிக் கூட்டுக் கோபுரத்தை எட்டிப் பார்த்தான். இறங்கும் ஆட்கள் ஒவ்வொருவரது முகங் களையும் உன்னிப்பாகப் பார்த்தேன். அவர் களுடைய உதடுகள் லேசாகப் பிரிந்திருந் தன. ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைக

Page 21
ளில் காலை வைத்துக் கீழே இறங்கினர்கள். தரையில் இறங்கி ஒரு கணத்துக்கு அப் படியே தயங்கி நின்ருர்கள். பிறகு வெவ் வேறு திசைகளில் பிரிந்து போனர்கள். மணிக்கூட்டுக் கோபுரத்தை நிமிர்ந்து பார்த் தேன். இரண்டு மணி, பஸ் வருவதற்கு இன்னும் இருபது நிமிசமிருக்கிறது. "ரொபி' யொன்றை வாங்கி வாயில் போட்டுக் குதப் பிக்கொண்டு பஸ் நிலையத்தின் ஒரு முனை யிலிருந்து மறுமுனைவரை மெதுவாக நடந் தேன். ரொபி உறையை விரல்களால் கசக்கி, சுண்டி எறிந்தேன். முதன்முதலாகக் கண் டிக்கு வந்த நாளை நினைவு படுத்த முயன் றேன். சந்தனக்கூடு பார்ப்பதற்கு ராசீக் தானு' என்னைக் கூட்டிவந்தார். மீரா மக் கம் பள்ளியில் போய் நாங்கள் காணிக்கை வைத்தோம். சந்தனக்கூட்டைப் பார்த்துப் பார்த்து நான் பிரமிப்புற்றேன். ராசீக் நாணு எனக்கு ஜிலேபி வாங்கித்தந்தார். கடைசிவரையில் நான் அவருடைய இடது கையில் தொங்கிக் கொண்டிருந்தேன். என் னிடமிருந்த இரண்டு ரூபாவையும் அவர் செலவுசெய்ய விடவேயில்லை.
வீட்டுக்கு வருகிறபோது நேரம் மூன்று மணி யை த் தாண்டியிருந்தது. சூட்கேசை வைத்துவிட்டு உடுப்புக்களை மாற்ருமல் அப் படியே போய்க் கதிரையில் அமர்ந்து கொண் \டேன். அணைந்து போயிருந்த சுருட்டைக் கையில் எடுத்துக்கொண்டு வாப்பா வெளி யில் வந்தார். எனது முகத்தைப் பார்க்கா மலேயே "இப்பயோ வந்த' என்று கேட் டார். இனி நான் மீண்டும் அநுராதபுரத் துக்குப் புறப்படுகிறவரையில் ஒன்றும் பேச மாட்டார். சூட்கேசை எடுத்து, "நான் பெய்ட்டு வாரன்’ என்று சொல்கிற போது **அல்லாட காவல்" என்பார்.
உடை மாற்றி முகம் கழுவிக்கொண்டு ܖ வந்து டீ குடித்தேன். உம்மாவிடம் ஊர்ப் புதினங்களை விசாரித்தேன். வாப்பா பள் ளிக்குப்போயிருந்தார். சுதந்திரமாக சிகரட் புகைக்கத் தொடங்கினேன். பிரயாணக் களைப்பில் தூக்கக்கிறக்கமாக இருந்தது. அறைக்குள் போய், கதவைச் சாத்திவிட்டுப் படுத்துக் கொண்டேன்.

தூக்கம் கலைந்தபோது ஐந்து மணியாகி இருந்தது. முகத்தைக் கழுவிக்கொண்டு கடைத்தெருப்பக்கம் நடந்துவிட்டு வரலாம் என்று நினைத்தேன். நண்பர்கள் யாராவது இருப்பார்கள். கரீம் நானவின் கடையில் பிளேன் டீ குடித்துக்கொண்டே வம்பளக் கலாம். அமீனின் கா த ல் விவகாரங்கள் பற்றிப் பேசலாம். Bank Life வினே தங் களைச் சொல்லலாம். சுபைர், அமீன், நசீர் எல்லோருடனும் சேர்ந்து பாலத்தடியில் அமர்ந்து, சிக ர ட் புகைத்துக் கொண்டு வாழ்க்கையில் ஒருபோதுமே நடக்கமுடியாத விஷயங்கள் பற்றிப் பேசிப்பொழுதைக் கழிக் கலாம், நசீர் சார்ந்திருக்கிற அரசியல் கட்சி யின் ஊழல்களைப்பற்றிப் பேசி அவனைச் சீண்டிவிடலாம். கிணறுகளிலிருந்து குடங் களை ஏந்திச்செல்கிற பெண்கள் மீது பார் வையைப் பதித்துக்கொண்டு அடுத் வரு கிற பொதுத்தேர்தல் பற்றிய ஊகங்களை அலசலாம். தேவையில்லை, இன்று வீட்டி லேயே இருக்க வேண்டும். இந்த மாலை நேரத்தை என்னுல் தனிமையாக இருந்து கழிக்க முடியும்.
கூடத்தில் வந்து கதிரையில் உட்கார்ந்து கால்களை நீட் டி விைத்துக்கொண்டேன். இடது கையால் நெற்றியைத் தடவிவிட்டு அப்படியே கண்களையும் மூக்கையும் அழுத் திப் பிடித்துக் கையை மெதுவாக கழுத்து வரை கொண்டு வந்தேன். கழுத்தைச் சுற் றிலும் தடவிப் பார்த்தேன். கதிரையின் பிரம்புப் பின்னலில் இருக்கும் வட்டமான இடைவெளிகளில் ஆள் காட்டி விரலைத் திணித்துத் திணித்து வெளியில் எடுத்தேன். கால் விரல்களை ஆயாசத்துடன் வளைத்து நிமிர்த்தினேன். காது மடல்களை மூடித்தி றந்து பார்த்தேன்.
மெஹ்ரூனின் காதுகள் எப்படியிருக் கும்? அடர்த்தியான தலைமயிரால் அவள் எப்போதும் காதுகளை மூடிக்கொண்டிருப் பாள். அவளுடன் தொடர்பு கொண்டிருந்த ஒரு வருட காலத்திலும் அவளுடைய காது களைப் பார்க்கவே முடியவில்லை. அவளுடைய கண்களை, மூக்கை, இதழ்களை, நெற்றியை, கழுத்தை, கை விரல்களை ஒன்றையுமே அவற்
525

Page 22
றின் அமைப்பு நுணுக்கங்களுடன் உன்னிப் பாகப் பார்த்துக்கொள்ள முடியாமல் போய் விட்டது. உதட்டைப் பிதுக்கி பற் கள் வெளித்தெரியாமலேயே சிரித்து, கண்களால் வரவேற்கிற அவளுடைய மொத்த உருவந் தான் ஞாபமிருக்கிறது. ஒவ்வொரு சந்திப் பிலும் மெளனத்தில் கழிகிற முதல் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களின் இன்ன தென்று புரியாத குறுகுறுப்பு ஞாபகமிருக் கிறது. ஒரு விகமான தனி லயத்துடன் உதட்டைப் பிரிக்காமலேயே "அ. 9 என்று இழுத்து முகத்தைக் கொஞ்சம் முன் னுக்கு நீட்டி நான் சொல்கிற விஷயங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிற நளினம். சிக ரட் பெட்டியைப் பறித்து வைத்துக்கொண்டு வலிந்து முகத்தில் வரவழைத்துக் கொள்கிற ஒரு கோபத்துடன் சிணுங்கியது. இடது கைச்சின்னி விர ல் நகத்தைக் கடித்துக் கொண்டே கண்களை மூடிச்சிரித்தது. எல் லாமே ஞாபகமிருக்கிறது. இன்னமும்இடையில் எத்தனையோ ஆண்டுகள் ஓடி விட்ட பின்னரும்-நன்ருகவே ஞாபகமிருக் கிறது. -
வாசலில் நிழலாட்டம் தெரிந் த து.
எழுந்து செல்லச் சோம்பலாகவும் எரிச்சலாக வும் இருந்தது. ஒரு வெள்ளைக்கை உள்ளால்
நீண்டு, திறந்திருந்த கதவில் இரண்டு முறை
தட்டிற்று. ஒரு சுயநலத்துடன், நான் எனக்
காக மட்டுமே சுவீகரித்துக் கொண்டிருக்கிற இந்த மாலை நேரத்தில் பங்கு கேட்டு வந் திருப்பவர்கள் யாராக இருக்கக்கூடும்? சோம்
பல் முறித்துவிட்டு எழுந்து வாசலண்டை போனேன்.
"அஸ்ஸலாமு அலைக்கும்*
சற்றுநேர தயக்கத்துக்குப் பிறகு சத் தம் வெளியில் வராத வகையில் வாய்க்குள் ளால் பதில் சொன்னேன். பதில் சொல்வ தில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது, மன சுக்கு உறுத்தலாக இருந்தது. வெள்ளைத் தொப்பியும் கறுப்புத் தாடியுமாக நான்கு பேர் வாசலுக்கு வெளியில் நின்றிருந் தார்கள். வழிகாட்டி வந்த ஹனிபா சாச்
526

சிாவின் இரண்டாவது மகன் ஒதுங்கி நின்று ஒருவித வெட்கம்கலந்த புன்னகையுடன் என்னைப் பார்த்தான். வெள்ளை ஜிப்பா அணிந்திருந்த உயரமான ஆள் ஸலாம் சொல்வதற்கு எனக்கு முன்னல் கைகளை உயர்த்தி நீட்டினர். தாடிமயிர் முளைத் திராத அவருடைய கன்னப்பகுதி வெள்ளை யும் சிவப்பும் கலந்த ஒரு விசித்திரமான நிறத்தில் பளபளத்தது. ஸலாம் சொல்கிற போது அவருடைய கையில் ஓர் அலாதி யான குளிர்மையையும், மென்மையையும் ஸ்பரிசித்தேன்.
பின்னுல் நின்று கொண்டிருந்த ஜெமீல் மாஸ்ரர் ஒரடி முன்னுக்கு எடுத் து வைத்து எ ன் னை யும், ஜிப்பா ஆளையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே பேசத் தொடங்கினர்.
**இவர் பங்களாதேஷிலிருந்து வந்திருக் கிருர். இவரால் சரியாக உண்ணவோ உறங்கவோ முடிவதில்லை. இஸ்லாம் மார்க் கத்தின் இன்றைய நிலையை நினைத்துப் பார்த்து எந்நேரமும் அழுகிருர், முஸ்லிங் களை தீனின் வழியில் இழுப்பதற்காக தன்னுடைய முழு வாழ்நாளையும் தப்லீஃ சேவையில் அர்ப்பணம் செய்து வந்திருக் கிருர்.'
சிரிப்பு வருவது போலிருந்தது. உதடு களைக் கடித்துக்கொண்டு நான் பங்களா தேஷ் ஜிப்பாக்காரரை ஒ ர க் கண் ஞ ல் பார்த்தேன். "பொன் வங்காளமே! உன்னு டைய வீட்டுக் கூட த் தி ல் தா ன் நான் குழந்தையாக வளர்ந்தேன். உன்னுடைய உழவர் க ஞ ம் மாட்டுக்காரர்களும் என் தோழர்கள்." என்ற தாகூரின் கவிவரிகள் நினைவுக்கு வந்தன. டாக்கா நகரின் புழுதி படிந்துபோன வீதியோரங்களில் படுத்துறங் குகிற ஆயிரக் கணக்கான குடும்பங்கள் பற்றி ஞாபகம் வந்தது. டாக்காவின் முஸ் லிம் விலை மாதர்கள். ஐம்பது சதத் துக்கும் இரு பத் தை ந் து சதத்துக்கும் கூட. அது அவர்களுடைய நளிபு. அல்லாவுடைய கலத்தால் எழுதப்பட்ட

Page 23
விதி. "வறுமையையும், துன்பத்தையும், பிணியையும் கொடுத்து நான் அவர்களைச்
சோதிக்கவில்லையா?*
ஜிப்பா,ஆள் கருணை ததும்பும் பார்வை யில் என்னைப்பார்த்தார். நான் ஒன்றையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை என்பது தெரியாமலேயே ஜெமீல் மாஸ்ரர் சொல் லிக்கொண்டு போ ன ர். அவர்களுடன் சேர்ந்து பள்ளிவாசலுக்கு வருமாறு என்னை யும் கூப்பிட்டார். இஷாவுக்குப் பிறகு பயான் இருக்கிறது என்றும் சொன்னர், இப்பொழுது வருவதற்கு வசதியில்லை என்றும், பிறகு வருகிறேன் என்றும் சுருக் கமாகச் சொன்னேன். கூடிய வினயத்து டன் அவர்கள் விடைபெற்றுக்கொண்டு போனர்கள். கொஞ்ச நேரத்துக்கு நான் வாசலிலேயே நின்றிருந்தேன். அந்தி மயங்கி வந்தது. அறைக்குள் போய் விளக்கைப் போ ட் டு விட் டு படுத்துக்கொண்டேன். இடது கை ஆள் காட்டி விரலால் சுவரில் என்னவென்றில்லாமல் எழுதினேன். இனி மேல் சந்தித்து அறிமுகமாக இரு க் கும் புதிய மனிதர்களைப் பற்றி நினைத் துப் பார்த்தேன். அவர்களுடைய உருவங்களைக் கற்பனை செய்ய முயன்றேன்.
இன்னும் இருபது வருடங்களுக்குப் பிறகு வருகிற இதே தேதி யி ல், இதே நேரத்தில், நான் என்ன செய்து கொண் டிருப்பேன்? அப்பொழுது எனக்கு 47 வய தாகியிருக்கும். நினைத்துப்பார்க்கிறபோது கவலையும் சிரிப்பும் வருகின்றன. சாப்பிடு கிற நேரம் வரையில் கட்டிலில் உட்கார்ந்து வெறுமனே சுவரையும், யன்னல்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஏப்ரல் 9, சனி.
இன்று காலையில் பாயிஸ் எங்கள் வீட் டுக்கு வந்திருந்தான். கல்முனையில் கழித்த நாட்களை நினைவுபடுத்தி நிறையப் பேசி னுேம். பாயிஸ் சிரிக்கிறவிதம் எனக்கு நிறையப் பிடித்திருக்கிறது. த லை யில் நிறைய மயிர் கொட்டுவதாக சொல்லி

அவன் கவலைப்பட்டான், அநுராதபுரத் தைப் பற்றி அவன் ஒன்றுமே கேட்காதது எனக்கு ஒரு வகையில் கவலையளித்தது. நானும் அதைப்பற்றி ஒன்று ம் சொல்வ தற்கு முயற்சிக்கவில்லை. அவனுடைய அலு வலகத்தில் வேலை செய்கிற சித்ரா என்ற டைப்பிஸ்டைப் பற்றி விசாரித்தேன். நீலக் கண்களை உருட்டி அவன் குலுங்கிக் குலுங் கிச் சிரித்தான். காரியாலய நண்பர்களுடன் திருகோணமலைக்கு உல்லாசப்பயணம் போய் நடந்த சுவாரஸ்யங்களை விவரிக்கத் தொடங்கினன். சித்ராவின் தலை உருண் டது. "நடத்தை சரியில்லை" என்று பொது வாகக் கருதப்படுகிற பெண்களை எனக்கு நிறையப் பிடிக்கும் என்று நான் சொன் னேன். கண்களை அகல விரித்து அவன் என்னை வியப்புடன் பார்த்தான். சேர்ட் பொத்தானைத் தடவிக்கொண்டு சில வின டிகளுக்கு நான் மெளனமாக இருந்தேன். "மட்டக்களப்பு நைட் மெயிலில் குருணு கலில் ஏறி, பொலனறுவை வரை நின்று கொண்டே பிரயாணம் செய்த மறக்கமுடி யாத அந்தஇரவு உனக்கு நினைவிருக் கிறதா?’ என்று அவனிடம் கேட்டேன்.
'அருகம் குடா வி ல் நீராடிவிட்டு பொத்துவிலிலிருந்து கல்முனைக்கு பஸ்ஸில் வந்த மாலை நீேரமும் நினைவிருக்கிறது" என்று பாயிஸ் அர்த்தபுஷ்டியுடன் சொன் னன், பிறகு இருவரும் கொஞ்ச நேரத் துக்குச் சிரித்தோம். கல்முன்ைக் கடற்கரை யிலும், அம்பாறை சினிமாத் தியேட்டர் களிலும், கழிந்த எங்கள் விடுமுறை நாட் களை நினைவுபடுத்திக்கொண்டோம். கடற் கரைப் பள்ளி கொடியேற்ற விைேதங்கள் பற்றிப்பேசினுேம் கொத்து ரொட்டி சாப்பிட்டுவிட்டு சங்கிலித் தொடராக சிகரட் ஊதிக்கொண்டு ஓவர்ரைம் செய்த இரவுகளும் என் ஞாபகத்துக்கு வந்தன. கொத்துரொட்டி அடிக்கிற காத்தான்குடி ஆளின் முகத்தில் ஒழுங்கின்றி மீசைமுளைத் திருப்பதும், அழுக்கு பனியனில் புகை படி, வதும், வெயிட்டர்கள் அவசரப்படுத்துகிற எரிச்சலில் தலையைத்தூக்கிக் கண்களை பாதி மூடி இறைவனிடம் இறைஞ்சுகிற தோரணை
527

Page 24
யில் கடுமையாக தூஷணம் சொல்லிக் கொண்டு போகிற அவரது இயல்பும் ஒரு கனத்துக்கு என் கண்முன்னே தோன்றி மறைந்தது. ‘என் பிரியமுள்ள நண்பனே! இன்னமும் கூட விடுதி அறைகளின் துயர் களில்தான் என்னுடைய நாட்கள் விடிகின் றன’’ என்று பாயிசின் மென்மையான கரங்களை வருடிக்கொண்டு சொல்ல வேண் டும் போலிருந்தது.
கண்டி ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளி யைப் பாாக்க இருப்பதாகச் சொல்லி பாயிஸ் பதினுெரு மணி பஸ்ஸில் போனன். அவனை அனுப்பிவிட்டு, நான் திரும்பவும் அறைக் குள் வந்தேன். நினைந்து சந்தோசப்படவும், வருந்தவும். முடிகிற நினைவுகளை அவன் கிளறி விட்டுப் போயிருக்கிருன். ** எமக்கென்று விரி யும் ஒரு வானவெளி. எல்லையிலாப் பெருவெளியின் ஏகாந்தம் காத்திருக்கும். வாழ்வின் மது பருக வண்ணுத்திப்பூச்சிக ளாய்ச் சிறகடிப்போம். சிறகில் சிறகில் கட்டிப்பறப்போம்" என்றெல்லாம் டயரி யில் கிறுக்குவதற்கு தூண்டுதல் தந்த நாட் கள் அவை. கட்ந்து போன நான்கு வருடங் களிலும் மெஹ்ரூனைப் பார்க்க முடியவில்லை.
வெளியில் போய் வாசலில் நின்று வீதி யைப் பார்த்தேன். இரண்டு பையன்கள் ஒலைப்பெட்டிகளைமேலேவிசி"காட்ச்"பிடித்துக் கொண்டு கடைத்தெருப்பக்கம் போனர் கள். “எலவலூய்’ தூரத்தில் கேட்டது. "கிணிங் கிணிங்" என்று மணியைக் குலுக் கிக்கொண்டு வந்த மிட்டர்ய்க்காரன், பெட் டைக்கோழியைத் துரத்தி வந்த சேவல் பாதையைக் கடந்ததால் நின்று சற்றுத்தா மதித்துவிட்டு நடந்தான். செங்கல் சூளை யில் வேலை செய்கிற இரண்டு ஆட்கள், "நாய் வேலை செஞ்சிட்டான்' என்று சிங் களத் தி ல் யாரையோ திட்டிக்கொண்டு நடந்து போனர்கள். பெட்டியைக் கொடுத் துவிட்டு டிக்கட்டை எடுத்துக்கொண்டு தம்பி வீட்டுக்குள்வந்தான். "கோழியப் புடிச் சிவை’ என்று உம்மா வீட்டுக்குள்ளிருந்து சொல்வது கேட்டது. "இத முற பள்ளிக் கந்திரீல என்ன விஷேசம்’ என்று தம்பி யிடம் கேட்டேன். “பெண்கள் காணிக்கை
528

போட வருவது முற்ருகத் தடைசெய்யப் பட்டுள்ளது" என்று நேற்று ஜும்மாவில் அறிவிக்கப்பட்டதாகச் சொன்னுன் "ஏஞம்" என்றேன். *தெரிய’ என்று சொல்லிக் கொண்டு ஒரு விதமான கூச்சத்துடன் அவன் சிரித்தான்.
அப்பொழுதெல்லாம் பள்ளிக்கந்தூரி. வந்தால் நாங்கள் எவ்வளவு சந்தோசப்படு வோம். எங்கள் வீட்டுக்கோழியை நான் தான் பள்ளிக்கு எடுத்துப்போவேன். நியா சும் கோழி எடுத்து வருவான். நாங்கள் கோழிகளை அருகருகே பிடித்து அவற்றின் முகங்களை மோத விடுவோம். இறகுகளைத் தடவி, கழுத்தைப்பிடித்து உசுப்புவோம். மேலே வீசி "காட்ச்" பிடித்து கோழி தொண் டைக்குள்ளால் முனகுவதைக் கேட்டுச்சிரிப் போம். களுசான் பொக்கட்டில் இருக்கும் சில்லறைகளைக் குலுக்கிக்கொண்டு S வக் கடைகளில் தேங்கியிருக்கும் நீரைக் கலக்கிச் சேருக்கிக்கொண்டு வரம் பில் நடந்து போவோம். களத்து மேட்டுப் புளியமரத் துக்கு அப்பால் பள்ளிவாசல் மினுராக்கள் நிமிர்ந்து தெரியும். லவுட்ஸ்பீக்கரில் இஸ்லா மிய கீதங்களுக்கிடையில் அறிவிப்புகள் கேட் (35 LÊ).
பள்ளிவாசலை அரைவட்டமாக சுற்றி ஒடுகிற மண்பாதையில் ஒலைக்கடைகள் வரிசையாகத் தெரியும். பம்பாய் மிட்டாய், சீனிக்கடலை, ஜிலேபி என்று வாயில் எச்சில் ஊறும். அழுக்கு அரைக்காற்சட்டையுடன் இருக்கும் பையன் படிக்கட்டுக்குக் கீழே உட்கார்ந்து “கரும்பூ.’’ என்று கூவுவான். தென்னை மரத்துக்குக்கீழே பேப் ப ைர மடித்து உட்கார்த்து கிதாபு யாவாரி தாடி யைத் தடவிக்கொண்டிருப்பார். “தொழு கையின் சிறப்பு," *இல்லறச்சோலையிலே இஸ்லாமியப்பெண்',"மூட்டைசுமந்த முடி மன்னர்', "இஸ்லாம் காட்டும் இலட்சிய வாழ்வு' என்று ஏராளமான புத்தகங் களும், அரபுக் கிதாபுகளும் அவருக்கு முன்னுல் பரந்து கிடக்கும். தொப்பிகளும் தஸ்பீகுகளும் கூட அவர் விற்பார்.
S சாக்கடை

Page 25
பள்ளி முற்றத்தின் ஒரு மூ லை யில் டெஸ்கொன்னுக்கு முன்னுல் ஒருவர் உட் கார்ந்திருப்பார். "ஆடு கோழி நேர்ச்சை' என்று வெள்ளைத்தாளில் எழுதி ஒட்டியிருக் கும். அங்கு பெயர்களைப் பதிந்துவிட்டு கோழியை ஏந்திக்கொண்டு நாங்கள் பள்ளி
யின் பின் பக்கத்துக்குப்போவோம்.
சுற்றிலும் கம்புகள் நாட்டி பெரிய அளவில் கோழிக்கூடு கட்டப்பட்டிருக்கும். மூங்கில் கதவு வாசலில் நிற்கிற முரட்டு ஆள் பீடியை பற்க ளா ல் கடித்துக் கொண்டே கோழியை வாங்கி உள்ளே விடுவான். சிவப்பில், வெள்ளையில்,கறுப்பில், சாம்பல் நிறத்தில் என்று கூட்டுக்குள்ளே "கொக்கொக்" என்று இரைந்து காற்றில் மிதப்பதைப்போன்று அசைந்து கொண் டிருக்கிற ஏராளமான கோழிகளை தடுப்புக் கம்புகளில் கைவைத்து நாங்கள் எட்டிப் பார்ப்போம். பீடிகுடிப்பவன் எச்சில்துப்பி விட்டு ஒதுங்கி நிற்குமாறு எங்களை மிரட்டு வான். கோழி அறுக்கிற இடத் துக் கு நானும் நியாசும் நடப்போம். புல்லில் புதிதாய்ச் சுவடுகள் பதிந்து தெரியும்.
பெரிய குழியைச்சுற்றி நிறையப்பேர் நின்றிருப்பார்கள். பெரியவர்களுக்கிடை யால் நுழைந்து குழியோரத்துக்குச் சென்று நாங்கள் குனிந்து பார்ப்போம். புது மண் ணில் செங்கோடுகளாக ரத்தம் உறையும், குற்றுயிரில் சிறகடிக்கிற கோழிகள் தலைகீ ழாகப் படுத்துக்கிடக்கும். அறுத்துக் குழி யில் வீசப்படுகிற சில சேவல்கள் சூரிய நமஸ்காரம் செய்வதுபோல வானத்தை நோக்கி ஒருமுறை தலையை உயர்த்திப் பார்த்துவிட்டுச் செத்துப்போகும்.
கோழி அறுக்கிற வெள்ளை பணியன் கிழவர் ரத்தம் கசிகிற கத்தியை மெது வாக வலது புறமாக நீட்டி"தண்ணிய எடு" என்று உரக்கக் கத்துவார். தண்ணீர்க் கேத்தலை வைத்திருக்கிற பையன் தூரத்தில் ஒதுங்கி நின்று கையை நீட்டி கத்தியைக் குளிப்பாட்டுவான். சில கோழிகளை அறுத் துப் பேர்ட்டவுடன் அவை தலையை

நிமிர்த்திக்கொண்டு ஒடத்தொடங்கும். நாங்கள் வா  ையப் பொத்திக்கொண்டு சிரிப்போம். அதை உம்மாவிடம் வந்து சொல்லுவேன். "இதய சுத்தி இல்லாத நேர்ச்சைக்கார்ர்கள் கொடுக்கிற கோழிகள் தான் அப்படி ஒடும்" என்று உம்மா சொல் லுவார்.
ஈரப்பலா மரத்தடியில்தான் நிறையக் கூட்டம் இருக்கும். நியாஸ் மிக அருகில் சென்று மாடு வெட்டுவதைப் பார்த்துக் கொண்டிருப்பான். எனக்கென்றல் ஒரே பயமாக இருக்கும். கால்களைக் கயிற்ருல் கட்டி மாட்டைக்கீழே வீழ்த்துகிறபோது அந்த ஆட்கள் எவ்வளவு பயங்கரமாக உள் தொண்டையால் சத்தம் போடுவார்கள், மாட்டின் கழுத்துத்தோலே நீவிக் கத்தியை வைக்கிறபோது நான் கண்களை மூடிக் கொள்வேன். நியாசின் தோளில் கையைப் போட்டு, ‘இனிப் போம்’ என்பேன். "இன்னம் நாலு மாடு ஈக்கு, பாத்துட்டு போம்?" என்டான் அவன்.
இரவு உம்மா, ஹபுசா மாமி, லீனியா தாத்தா சின்ன மாமி எல்லோரும் சேர்ந்து பள்ளிக்கு காணிக்கை வைக்கப்போவார் கள். நானும் நியாசும் ஆண் துணையாகப் டோவோம். வழியெல்லாம் சனம். இருட் டில் பெண்கள், கூட்டம் கூட்டமாக எங் களைக்கடத்து போவார்கள். ஸியாரத்தைச் சுற்றிப் பெண்களும் சிறுவர்களும் குழுமி இருப்பார்கள். மேலே பச்சை பல்புகள் வரிசையாகத் தொங்கும். லவுட்ஸ்பீக்கரில் ராத்தீபு ஒதுவது தெளிவில்லாமல் கேட்கும். லைட் மிசினின் 'கொர்ர்ரீ” இ  ைர ச் சல் லவுட்ஸ்பீக்கரையும் மீறிக் கேட்கும். பச் சைத்துணியால் மூடியிருக்கிற ஸியாரத்துக்கு முன்னுல் காணிக்கைப் பெட்டிகள் இருக்கும். ஊதுவத்தி, சாம்பராணிப் புகைகள் அடங்கி எழுந்து அழியும். வெள்ளைத் தலைப்பாகைக் கிழவர் பாயில் உட்கார்ந்து முழங்கால் மடிப்பில் கைகளைக் கோர்த்து வைத்துக் கொண்டு யாரையும் நிமிர்ந்து tumfi jips (TLDGiv ஒதிக்கொண்டு போவார். மஞ்சள் தொப்பி அணிந்த குறுந்தாடி இளைஞர் காணிக்கை
539

Page 26
போடுபவர்களுக்குச் சிறு பொட்டலத்தில் நார்சாவைச் சுற்றி நீட்டுவார். பிடரி மயிரை இடதுகை விரல்களால் நீவி, தொப்பியைச் சரிசெய்துகொண்டு பெண் கள் பக்கம் ஒரக்கண்ணுல் பார்ப்பார்.
காணிக்கை போட்டுவிட்டு ஸியாரத் துக்கு வெளியே ஒதுங்கி நின்று ஸினியா தாத்தா என்னைக் கூப்பிடுவாள். லேஞ்சி முடிப்பை அவிழ்த்துக் காசை என்னிடம் நீட்டுவாள். நான் மிட்டாய்க்கடைக்கு ஆட்சஞக்கிடையில் நுழைந்து ஒடுவேன். கடைக்காரர் மி ட் டா  ையச் சுற்றிக் கொண்டே பெட்ரேமாக்ஸ்" தலையில் படும் என்று முன்னுல் நிற்பவர்களுக்கு எச்சரிக்கை செய்வார். பள்ளிக்கும் ஸ்கூலுக்கும் இடை யில் இருக்கிற வெற்றிடத்தில் வட்டமாக ஆட்கள் நிறைந்து முண்டியடித்துக் கொண் டிருப்பார்கள். குடம் போன்ற வயிற்றை doll தடி ஆள், ஆட்களைப் பிடித்துப் பின்னுக்குத் தள்ளுவார். கூச்சலிடுகிற சிறுபையன்களின் காதுகளைப் பிடித் துத் திருகுவார். சீனடி, சிலம்படி என்று மெய் சிலிர்க்கும். கம்புகள் வானில் பறந்து, மிதந்து "டிக்டக்" என்று. . விளையாடுப வர்களின் வியர்வைத்துளிகள் நிலத்தில் சிந் தும். தீப்பந்தங்கள் மேலே சுழன்று செல் வதைப் பார்க்கப் பயமாகவும் இருக்கும்.
இதுவெல்லாம் பதினைந்து வருடங்க ளுக்கு முந்திய சங்கதிகள். இந்தப் பதி னைந்து வருடங்களிலும் எத்தனை மாறுதல் களைப் பார்த்திருக்கிருேம். ஒருநாள் ஹபுசா மாமியைப் பச்சைத்துணி போர்த்திய சந் தூக்கில் சுமந்து சென்ருர்கள். ஸினியா தாத்தா க ல் ய | ண ம் செய்து கொண்டு போய்விட்டாள். போகும் போது உம்மா விடம் வந்து, 'டெய்ட்டு வாரன் மாமி.' என்று அழுதாள். என் தலையைத் தடவி, தோளை நீவி விட்டாள்.
பகல் சாப்பிட்டுவிட்டு ஒரு மணி நேரம் தூங்கினேன். மூன்றரை மணிக்கு கண் விழித்து இந்த மாலை நேரத்தை எப் படிக் கழிப்பது என்று கொஞ்சநேரம்
530

யோசித்தேன். முகங்கழுவிக்கொண்டு வந்த போது அமீன் வந்திருந்தான். பரஸ்பரம் சுக செய்திகளை விசாரித்துக்கொண்டோம். பிறகு படிக்கட்டில் இறங்கி வந்து வீதியில் மெதுவாக நடக்க த் தொடங்கினுேம், கோழிகளை ஏந்திச்செல்கிற பையன்கள் எங்களைக்கடந்து போனுர்கள். பஞ்சு மரத் தின் உச்சிக்கிளையில் கிளிக்கூட்டமொன்று தென்பட்டது. மூங்கில் மரங்கள் சோம் பலில் அசைந்தன. வயல் வரம்பில் கீரை தேடிக்கொண்டிருக்கிற கிழ வர் இடது கையை நெற்றிக்கு மேலால் பிடித்து, கண் களை இடுக்கிக்கொண்டு வீதிப்பக்கம் பார்த் தார். நாலரை மணி கண்டி பஸ் எங்களைத் தாண்டிச்சென்றது.
அமீன் சொல்வதொன்றையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் நான் மெளனமாக நடந்தேன், கடைவீதிக்குச் சென்று டீ குடித்து, சிகரட்பற்ற வைத்துக்கொண் டோம், பிறகு பாலம் வரையில் நடந்தோம். இருட்டும் வரையில் பாலத்தில் அமர்ந்திருந்தோம். பாயிஸ் வந்துவிட்டுப் போனதை அமீனிடம் சொன்னேன். அவன் எந்த சுவாரஷ்யமும் காட்டாமல் கேட்டுக் கொண்டான். நான் சிறு கற் களைப் பொறுக்கி ஒடையில் எறிந்தேன். சுற்றி லும் எச்சில் துப்பினேன். பாலத்துக்கூடாக நடந்து போகும் ஒரு சிங்கள ஆளி ட ம் சிகரட்டுக்கு நெரு ப் பு வாங்கிக்கொண் டேன். f : .
இருட்டிய பிறகு எழுந்து பள்ளிப் பக்கம் நடந்தோம். கடை வீதியில் நின்ற நளிரும் எங்களுடன் சேர்ந்துகொண்டான். அமீனும், நசீரும் கதைக்கத் தொடங்கி ஞர்கள். எனக்கு திரும்பி வீட்டுக்குப் போகலாம் போலிருந்தது. பள்ளிக்குப் போய் சில நிமிசங்களில் திரும்பி வர வேண் டும் என்று நினைத்துக்கொண்டேன். நாளைப் பகல் கந்தூரிக்கு வர முடியாமல் போகும் என்று அமீன் சொன்னன். நாங்கள் ஏன்? என்று கேட்கவில்லை. சாச்சியின் மகளுக்கு கல்யாணப்பதிவு இருக்கிறதென்று அவனே சொன்னன்,

Page 27
பள்ளிவாசல் படி களி ல் மெதுவாக ஏறிச் சென்ருேம். தும்புக்கயிற்ருல் வழிகள் பிரிக்கப்பட்டுத் தெரிந்தன. "கார்ட்போட்' அட்டைகளில் அறிவிப்புக்கள் தொங்கின. ராத்தீபு மஜ்லிஸ் ஆரம்பிக்கப்படப்போவ தாக ஒலிபெருக்கி சொல்லிற்று. நாங்கள் பள்ளி முற்றத்தில் நின்று கொண்டோம். பள்ளிக்குள்ளும், வெளி யிலும், கீழே பாதைகளிலும் எங்கும் சனம். மெல்லிய இருட்டில் வெள்ளைத் தொப்பிகள் அசைந் தன. பச்சை பல்பின் வெளிச்சத் தில் நீண்டு போயிருக்கிற எங்கள் நிழல் களைப் பார்த்தேன்.
"எங்கள் பிழைப்பில் LD 6ööT &ö507 uli
போட்டுவிட்டார்கள் இல்லையா?*
ஆங்காங்கே சில ஆண்களும் சிறுவர் களும் சூழ்ந்திருக்கிற ஸியாரப் பக்கத்தைக் காட்டி நசீர் சொன்னன். நானும் அமீனும் சிரித்தோம். உவைஸ் மாஸ்ரர் எங்களரு கில் வந்து என்னுடைய கையைப் பற்றிக் கொண்டு, 'கந்திரிக்கு வந்தா" என்று புன்சிரிப்புடன் கேட்டார். பிறகு வெளி வாரிப் பட்டப் பரீட்சை பற்றிப் பேசத் தொடங்கினர், நசீரும், அமீனும் எரிச்சலு டன் அவரைப் பார்த்தார்கள். கறுத்துப் போய் தெரிகிற அவருடைய கால் நக்ங் களை நான் பார்த்தேன். மாதுள மரததுக் குக்கீழேயும், பள்ளி முகப்புக்கெதிரிலும், தற்காலிக காரியாலயக் கொட்டிலுக்கு முன் ஞலும் கோஷ்டி கோஷ்டியாக இளைஞர்கள் குழுமி நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
உன்வஸ் மாஸ்ரர் போனதும் நசீர், *அப்பாடா எல்லாப்புகழும் அல்லாவுக்கே!” என்று சொல்லிச் செயற்கையாகப் பெரு
மூச்சு விட்டான்.
"நான் வீட்டுக்குப் போகவேண்டும்.’’
அமீனும் நசீரும் வியப்புடன் என்னைப் பார்த்தார்கள். நசீர் க டி கா ரத்  ைத ப் பார்த்துவிட்டு "இன்னும் எட்டரை கூட ஆகவில்லையே' என்ருன். "நீங்கள் தாம தித்து வாருங்கள்" என்று அவர்களுடைய

முகங்களைப்பார்க்காமலேயே சொல்லிவிட்டு நான் படிகளில் இறங்கினேன். சிகரட் Lifi) றிக்கொண்டு இருட்டில் வீதியில் இறங்கி நடந்தேன்.
முற்றத்தில் நின்று நட்சத்திரங்களை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தேன். "சோறு தின்ற இல்லையோ’ என்று உம்மா வந்து கேட்டார். முட்டைப் பொரியலையும், பருப் புக்கறியையும் கொஞ்ச நேரம் அளைந்து விட்டு அறைக்குள் வந்தேன். சுவர்க்கலண் டரில் சிரித்துக்கொண்டிருக்கிற பெண்ணின் முகத்தில் சிகரட் புகையை ஊதினேன். கலண்டர் ஆணிக்கு மேலே சுவரில் ஒரு பல்லி அசையாமல் நின்றிருந்தது. மேசைப் பக்கத்திலிருந்து வந்த ஒரு கரப்பான் பூச்சி கட்டிலுக்கடியால் ஓடி மறைந்தது. விளக்கை அணைத்துவிட் டு ப் படுத்துக் கொண்டேன்.
ஏப்ரல் 10, ஞாயிறு.
காலையில் தம்பியைக் கூப்பிட்டு உடுப் புக்களை ஸ்திரி செய்து வைக்குமாறு சொன்” னேன். பள்ளிக்கந்தூரியில் ஏதாவது வாங்கிக் கொள்ளச்' சொல்லி அவனிடம் ஐந்து ரூபா கொடுத்தேன். பிறகு ஆர்தர் கோயிஸ்ட்ல fair Confessions of a Tight - rope walker" புத்தகத்தை எடுத்து நிறுத்திய இடத் திலிருந்து படிக்கத்தொடங்கினேன். 1932ல் ஜேர்மனியில் கம்யூனிஸ்டுகளுக்கும், நாஜிக ளுக்கும் இடையில் நடைபெற்ற போராட் டங்களில் கம்யூனிஸ்டுகள் சார்பான தனது பங்களிப்பை அவர் விவரித்திருந்தார். தான் பணிபுரிகின்ற பத்திரிகை ஸ்தாபனத்துக்குத் தெரியாமல் அவர் இரகசியமாக கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்திருந்தார். கட்சித் தலைமைப்பீடத்துக்கு முக்கியமான சில தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருந் தார். *ぐ
நாற்பத்தைந்து வருடங்களுக்கு முந்திய ஜேர்மனியில் நான் நிற்கிறபோது நசீர் சிரித்துக்கொண்டே அறைக்குள் வந்தான். நான் சிரிக்க முயற்சி செய்து புத்தகத்தை மடித்து வைத்தேன். அவன் புத்தகத்தை
531

Page 28
ள்டுத்து அக்கறையில்லாமல் புரட்டிப்பார்த்து விட்டுமேசையில்எறிந்தான். நேற்றிரவு நான் பள்ளியிலிருந்து வந்த பிறகு நடந்த முஸ் பாத்திகளை சொல்லத்தொடங்கினன். கடி காரத்தைப் பார்த்துவிட்டு “போமா' என்ருன்.
தார் ரோட்டைத் தவிர்த்து குறுக்கு வழியால் பள்ளிக்கு நடந்தோம். ஸ்கூல் முற் றத்து மர நிழலில் ஏராளமான தெரிந்த முகங்கள் நின்றன. ஸ்கூல் மதிற்கவருக்கரு கில் நிழலில் நானும் நசீரும் ஒதுங்கினுேம். பள்ளி வெளிமண்டபத்தில் சோறு பரிமாறு பவர்கள் பதட்டத்துடன் அலைந்தார்கள். தண்ணீர்க் கோப்பைகள் கைமாறிச் செல் கிற நளினத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது, ஸ்கூல் மதிலுக் கும் பள்ளிவாசலுக்குமிடையில் இருக்கிற வாழைத் தோட்டத்தில் அழுக்குச்சாரமும் சட்டையுமனிந்த பத்துப் பதினைந்து ஆட் கள் குந்தி பள்ளிப்பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் “காபிர்க ளாக இருக்க வேண்டும். அடுத்த பந்தியில் சாப்பிட இருப்பவர்கள் மூங்கில் தடுப்பு கியூ வுக்குள் முண்டியடித்துக்கொண்டு நின்ருர் கள். வெயில் அவர்களது மண்டைகளில் மோதி வியர்வையாகக் கரைந்து கழுத்துக் களிலும் முதுகுகளிலும் இறங்கியது.
ஸ்கூல் மண்டபத்துக்கு வெளியே நின் றிருந்த சாயம் வெளுத்த சேலைகளை அணிந் திருந்த பெண்களையும், சிறுவர்களையும் மதி லுக்கு மேலால் எ ட் டி ப் பார்த்தேன். வெளியூர் ஆட்கள்" என்ருன் நசீர். சங்கை பொருந்திய ஷெய்கு நாயகம் முஹியித்தீன் ஆண்டகை அவர்களது பெயரால் நடை பெறுகிற 69வது வருட காதிரிய்யா கந்தூரி மஜ்லிஸ் சிறப்பாக நிறைவுற்றுவருகிற சுப செய்தி ஒலிபெருக்கியில் அடிக்கடி முழங்கி ஒய்ந்தது.
திறந்திருந்த கேட்டுக்குள்ளால் ஸ்கூல் வளவுக்குள் நுழைந்தோம். உவைஸ் மாஸ் ரரும் இன்னும் நாலேந்து பேரும் சூழ்ந்து ஜூலைத் தேர்தல் பற்றி விவாதித்துக் கொண் டிருந்தார்கள். சம்பாஷணை முடிந்து போகிற
532

நிலையில் அதன் ஏதாவது இழையொன்றில் தொற்றிக்கொண்டு தொடர்ந்தார்கள். நானும் நசீரும் ஸ்கூல் மண்டப அரைச்சுவ ருக்கருகில் மெளனமாக ஒதுங்கி நின்ருேம், "சாப்பிட ஆறுதலாக போவோம்’ என் முன் நசீர். கையில் அழுக்குப் பைகளை வைத் துக்கொண்டு கூச்சல் போட்டுக் கொண்டிருக் கிற பையன்களையும், பெண்களையும் மீண்டும்
விேடிக்கை பார்க்கத்தொடங்கினேன்.
பள்ளிப் பக்கத்திலிருந்து ஒரு மாஸ்ரர் அவசர அவசரமாக நாங்கள் இருக்கும் பக்கத் துக்கு வந்தார். கூச்சல் போட்டுக் கொண் W டிருந்த ஆட்களுக்கருகில் போய் நின்று, காலியாக இருந்த ஸ்கூல் மண்டபத்தைக் காட்டி ஏதோ உரக்கச்சொன்னுர். பெண் களும் சிறுவர்களும் வேகமாக மண்டபத் துக்குள் ஓடி ஐந்தைந்து பேர் கொண்ட வட்டங்களாக உட்கார்ந்து கொண்டார்கள். மாஸ்ரர் மண்டபத்துக்குள் போய் அரையில் கைகளை வைத்துக் கம்பீரமாக ஒரு முறை பார்த்துவிட்டு, ‘சத்தம் போட்டால் சோறு தரமாட்டோம்' என்று உரக்கச்சொன்னர். நசீா என்னை லேசாகக் கிள்ளிவிட்டு உட் கார்ந்திருக்கிற ஆட்கள் பக்கம் பார்த்துச் சிரித்தான்.
சத்தம் படிப்படியாகக் குறைந்து நின்று போயிற்று, வெளியில் போய்த் தண்ணீர் குடித்து, சிகரட் வாங்கிக்கொண்டு மீண்டும் நின்ற இடத்துக்கே வந்தேன். பொலித்தீன் பைகளைக் கையில் ம  ைற த் துவைத்துக் கொண்டு சில பையன்கள் திருட்டுமுழி முழித்தார்கள். புறங்கையை மூக்கின் மேல் இழுத்து து  ைடத் துக் கொண்ட ஒகு பையன் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த் தான். நான் பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்டேன். சிவப்பு ரவிக்கைப் பெண்ணைப்பார்த்தேன். பெண்கள் பகுதிக்கு அவள் தன்னைத் தலைவியாக்கிக்கொண்டு அ வர் க ளே க் கட்டுப்படுத்துவது போல் தெரிந்தது. "ஷெய்கு நாயகத்தின் மகிமை சோற்றுக்கு அடுத்த பட்சந்தான்’ என்ருன் நசீர், &

Page 29
பள்ளிக்கும் ஸ்கூலுக்கும் இ ைடயி ல் நீள் வரிசை யில் விட்டு விட்டு ஆட்கள் நின்று கொண்டார்கள். நசீரும் பரிமாறு கிற வர்களுடன் சேர்த்துகொண்டான். என்னை யாரும் கூப்பிடவில்லை. சோற்றுத் தட்டுகள் கைமாறி வந்து கோண்டே இருந் தன. மண்டபத்துக்குள் சோற்றுத்தட்டுகள் வருவதைக்கண்ட பையன்களிடையில் லேசா கப் பரபரப்பு எழுந்தது. ஆவலுடன் கூடிய பார்வைகள் அரைச்சுவருக்கு மேலே துழாவி நின்றன. பரிமாறுகிறவர்களுக்கு இடம்விட்டு நான் அரைச் சுவருடன் சாய்ந்து நின்று கொண்டேன். லேஞ்சியால் முகத் தை துடைத்துவிட்டுக்கொண்டு தூ ர த் தி ல் நின்ற நசீரைப்பார்த்துச் சிரித்தேன்.
கைகளால் பையன்களைச் சற்றுப் பின் னுல் இழுத்து வட்டங்களைப் பெரிதுபடுத்தி, சோற்றுத்தட்டுகளை கீழே இறக்கினர்கள். பசியால் களைத்துப் போயிருந்தவர்களின் பார்வைகள் திடீரென்று கிழே இறங்கின. கால்களைச் சிரமப்பட்டு மடித்து சோற்றுத் தட்டுகளுக்கருகில் பையன்களும் பெண்க ளும் குனிந்தார்கள். தலையிலிருந்த அழுக்கு லேஞ்சிகளை அவிழ்த் து வியர்வையைத்
துடைத்துக்கொண்டார்கள்.
",யாரும் சோற்றை அள்ளிப் பைகளில்
போடக்கூடாது.”
பரிமாறுகிறவர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த மாஸ்ரர் சற்றுக் கடுமை யான குரலில் சொன்னுர். பெண்கள் பக் கத்துக்குத் திரும்பி, குரலின் கடுமையைக் குறைத்துக்கொண்டு மீண்டும் அதையே சொன்னூர். W
அரைச்சுவருக்குக்கிழே சற்றுக் குனிந்து சோற்றுத்தட்டுகளைப்பார்த்தேன். இறைச் சித்துண்டுகள் சிறு கூட்டமான சோற்றில் இறுகிப்படிந்து தெரிந்தன. சோ ற்  ைற அரைவட்டமாக மூடி பருப்புக்கறி படர்ந் திருந்தது. மெலிந்து போன கறுப்பு நிற விரலொன்று பருப்புக்கறியை அளை ந் து சோற்றுக்குள் நுழைந்து நிறம்மாறி மேலே எழுந்தது.

மாஸ்ரர் சுற்று முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு உரத்த குரலில் "பிஸ்மில் லாஹிர் ரஹ்மானுர்ரகீம்' என்று சொன் னர். எல்லாத் தலைகளும் சோற்றுத்தட்டுக் களில் குனிந்தன. பருப்பும் இறைச்சியும் சோறும் கலந்து உரு மா றி நிறம் மாறி பிசையப்பட்டு அழுக்கு உள்ளங்கைகளில் மேலே எழுந்தன. குமட்டலை கொண்டு வருகிற சத்தங்கள் மெல்லிதாகக் கேட்டன.
நசீர் கடலைச்சுருளை எடுத்து வந்து என்னிடம் நீட் டி னு ன். "இப்பொழுது சாப்பிட முடியாது' என்றேன்.
"இத வேல செய்யப்படாது' என்று மாஸ்ரர் சத்தத்துடன் சொல்வது கேட்டது. முகத்தை நசீரிடமிருந்து திருப்பி, சாப்பிடு கிறவர்கள் பக்கம் பார்த்தேன். கட்டைக் காற்சட்டையும் அழுக்குப்புடிந்து நிறம் மாறிப்போயிருந்த வெள்ளை பனிய னு ம் அணிந்திருந்த ஒல்லியான ஒரு  ைப யன் அழுவதற்குத் தயாரானவன்போல மாஸ்ர ரின் முக த்  ைத ப் பார்த்துக்கொண்டிருந் தான். பொலித்தீன் பை யில் அள்ளிய சோற்றை இடது கையில் அவன் வைத்துக் கொண்டிருந்தான். ஐந்து கைகளால் பிசை யப்பட்ட சோறு பொலித்தீன் பையில் சிவப்பு நிறத்தில் இழுபட்டுத் தெரிந்தது. சோற்றை அள்ளுவதற்குத் தயாராக இருந்த மற்றவர்கள் பைகளை ஒளித்து ஜாக்கிரதை யானுர்கள்.
లో a
சாறு வைக்கிறது சாப்பிடுறதுக்கு,
வீட்டுக்கு கொண்டு போரதுக்கில்ல." s
மாஸ்ரர் எல்லோரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு மிகவும் கடுமையான குரலில் சொல்லிக்கொண்டு போனர்.
"சாப்பிடப் போமா' என்று நசீர் தோளில் கை  ையப் போட்டுக்கொண்டு கேட்டான். அவனுடைய கையை மெது வாகத் தட்டிவிட்டு, “சிகரட் வாங்கிவரு கிறேன்" என்று சொல் லி மெதுவாகக் கட்டுக்கு வெ ரிபே வ ந் தேன், ஸ்கூல்
53.3

Page 30
மைதானத்துக்கும் மையவாடிக்கும் இடை யில் ஒடுகிற வழிப்பாதையில் வீட்டுக்கு நடந்தேன். "சோறு திண்டோ" என்று உம்மா கேட்டார். ‘ஓ’ என்றேன்.
f
சூட்கேசில் உடுப்புகளைத் திணித்து வைத்துவிட்டு முகங்கழுவிக்கொண்டு வந் தேன். "சிங்களப் பெருநாளுக்கு லீவு இல் லையோ' என்று உம்மா அறை வாசலில் நின்று எட்டிப்பார்த்துக் கே ட் டார். 'பாங்கில் பதிமூணுபேர் லீவு. நான் போகோணும்’ என்றேன்.
கண்டியிலிருந்து புறப்படுகிற மூன்றரை மணி எக்ஸ்பிரசில் கோனர் சீட்டில் வசதி யாக இடம் கிடைத்தது. எனக்குப்பக்கத் தில் உட்கார்ந்திருந்த பெண் சிங்க ள வாரப்பத்திரிகையொன்றைப் ப டி க் கத் தொடங்கினள். பஸ் குலுக்கலில் எங்கள் முழங்கைகள் உரசிக்கொண்டன. பாதை யில நடந்து போகிற மனிதர்கள் ஒரு கனத்துக்குத் தோன்றி மறைந்தார்கள். வீட்டுத்திண்ணைகளில் பெண்களும் பிள்ளை களும் உட்கார்ந்திருந்தார்கள். மரங்கள் எங்களை வேகமாகத்தாண்டிப்போயின. ஒரு தடியன் வீதியோரத்தில் குந்தி நின்று சிறு நீர் கழித்தான். புளியமரமெனறுக்குக் கீழே படுத்திருந்த நாய் அலட்சியமாக தலையைத் தூககப் பார்த்துவிட்டு மீண்டும் முன்னங் கா ல் களு க் குள் முகத்தைப்புதைத்துக் கொண்டது.
பஞ்சு மரக்கிளையில் கிளிக்கூட்டம் மொய்ககும். மூங்கில் மரங்கள் காற்றில் சாய்ந்து அசையும். பஸ்கள் வரும், போகும். சேவல் பெட்டைக்கோழியை வீதியைக் கடந்து துரத்தும். பனிமூட்டம் படர்ந்து கலையும். தெருவில் புணர்கிற நாய்கள் கல் லெறி வாங்கும். தூக்கத்தில் கனவும், விழிப் பில் நினைவும் உறுத்தும். லெஜர் மெஷின் களும், டைப்ரைட்டர்களும் உயிர்ப்புற, விசி றிகள் மேலே சுழலும். வவுச்சர்கள் "சீல்’, வாங்கி நகரும், கவுண்டரில் காசுத்தாள்கள் கைமாறும். வெளியில் முகங்கள் அசைந்து மறையும். பூனை மயிரும், புண் ஆறிய தழும்புமாக மேசைக்குக் கீழே வெள்ளைக்
534

காலொன்று ஆடும், லஞ்ச்ரூமில் யாபா தூஷ ணம் சொல்ல, நிர்மலி  ைக யில் முகம் பதித்து, காலகற்றி **ச்சீ" என்பாள். கிள் ளுண்ட தொடையில் செம்மை படரும். கைப்பையில் பவுடரும், சீசன் டிக்கட்டும், சில்லறைகளும், த டை மாத் தி ரை களும் சிதறுண்டு கிடக்கும். சிவப்பு போல் பொயின்டை வா யில் கவ்வி களுசான் பொத்தான்களைத் துழாவி ஹேமசிரி ரொய் லட்டிலிருந்து வந்து மீதி சொல்லுவான். பாஸ் புத்தகங்கள் குவிய நந்தசேன லெஜ ரில் முகம் புதைப்பான் ‘இல்லத்திலிருந்து ஏகாந்த இரவில்" என்று தொடங்குகிற நீண்ட கடிதம் கவர் கிழியாமல் மேஜை இழுப்பறையில் காத்திருக்கும். பிபிலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஏ. எல். செய்த நாட்களும், என்ஜினியரிங் பிரிவில் மேற் படிப்பைத்தொடரும் கனவின் நொருங்கிய துகள்களும் விட்டு விட்டு நெஞ்சில் குத்தும் காட்டிலாகா அதிகாரி லஞ்சம் வாங்கி, கண்ட பெண்ணுடன் புணர்ந்து, பியர் குடித்து, தலை சாய்த்துப் புன்னகைத்து ஜீப்
பில் மறைவான்.
தெருவிளக்கில் விட்டில் பூச்சிகள் சுற்ற
நகரம் ஓய்வில் சலித்துக்கிடந்தது. கமகே யின் கடையில் பனிஸ் தின்று, பிளேன் டீ குடித்து, சிகரட் வாங்கிக்கொண்டு அறைக்கு நடந்தேன். அறைக்குள் சென்று இருட்டில் துழாவிலைற் சுவிட்சைத்தட்டினேன். மேசை யில் வெற்று சிகரட் பெட்டிகளும், கடதாசி களும் இரைந்து கிடந்தன. 'கரமாசோவ் சகோதரர்களின் வயிற்றில் "Banking Law ath, ''Accounts For Bankers' is சுகமாய் உட்கார்நதிருந்தன. ஜயதிஸ்ஸ் வின் கட்டிலுக்கு மேலே சுவரில் நிர்வான அழகி கொங்கைகளைக் காட்டிச்சிரித்தாள். "நான் சந்தோசமாக இருக்கிற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?’ என்ற ஆங்கில விளம்பர வாசகம் அவளுடைய் மொட்டைக் கால்களுக்கு மேல் நீல எழுத்தில் மின்னின. தலையணை உறை "சுவீட் ட்ரீம்ஸ்’ என்று இளித்தது. உடைகளைக் களையாமல் சப்பாத் துடன் அப்படியே கட்டிவில் சரிந்தேன். கண்களை மூடிக்கொண்டேன். ※
く |09 = 0 9 198 سےI

Page 31
இலங்கை இலக்கியச் சூழ சில குறிப்புகள்.
ஈழத்து இலக்கியம்பற்றி அதிக அக் கறை காட்டிவரும் தமிழகச் சஞ்கிகையான படிகள் த  ைது ஒன்பதாவது இதழில் இலங்கை இலக்கியச் சூழலும் விவாதமும் என்ற கட்டுரையை வெளியிட்டது. அலை பற்றிய பல கருத்துக்கள் அதி ல் இடம் பெற்றதனல், அதுபற்றிய தனது கருத் துக்களை அலை நட்புரீதியாகப் படிகள் முன் வைக்க விரும்புகிறது.
** கைலாசபதியின் விமர்சனங்கள் 70 வாக்கில், தமிழகத்து இளைஞர் கள் ஓர் தேடலை மேற்கொண்ட சூழலில் மார்க் சியத்தை அறிமுகப்படுத்தின. வெறும் அபிப்பிராயங்கள் தமிழகத்தில் விமர்சன மாக இருந்த சூழலில் ஓர் உலுக்கு உலுக்கி விமர்சனத்தை விஞ்ஞான அடிப்படைகளில் செய்யப்படவேண்டுமென்றும், அபிப்பிரா பங்களாகவும் அரட்டைப் பேச்சுக்களாகவும் இருந்த விமர்சனம் சமூகவியல் குணங்கள் கொள்ள்வேண்டுமென்று மிக வலிமையாக ஓங்கிப் பேசிய கவர்ச்சியான குரல் கைலாச பதியனுடையது. மறுப்பதற்கில்லை." என் கிறது படி கள். "அலை" இக்கருத்துடன் மாறுபடுகின்றது. 70க்கு முன்னர் தமிழக இ லக் கி ய விமர்சனத்துறை மார்க்கியப் பார்வையற்று வரண்டிருக்கவில்லை; மெசி பாவிற்காகக் காத்திருந்த இஸ்ரயேல் மக் களைப் போல், கைலாசபதிக்காகக் காத்திருக் கவில்லை. மாருக ப. ஜீவானந்தம், ஆர். கே. கண்ணன், ரகுநாதன், வானமாமலை போன்றவர்கள் விமர்சனத்துறைக்குத் தமது பங்களிப்பைக் கணிசமாகச செலுத்தியுள் ளார்கள். இலக்கியத்திற்கு அப்பால் சமூகம், வரலாறு, பொருளாதாரம் ஆகிய துறை களில் வளமான மார்க்சிய ஆய்வு க ள் இடம்பெற்றிருக்கின்றன. கோ சாம்பி, ராகுல சாங்கிருத்தியாயன், ரஜினி பாமி தத் போன்றவர்களின் கருத்துக்கள் முக்கியத் துவத்துடன் தமிழில் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளன.

லும், விவாதமும்:
ஈழத்திற்கூட க. கை.யின் குரல் திடீ ரென்று ஒலிக்கவில்லை. ஒலிக்கவும் முடியாது. அ. ந. கந்தசாமி, கே. கணேஷ் போன்ற வர்களால் கட்டி எழுப்பப்பட்ட முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின், வரலாற்று ரீதியான வளர்ச்சிப்போக்கின் ஒரு வெளிப் பாடே க.கை.யினுடையது.
எனவே படிகளின் இக்கருத்து தமிழக முற்போக்கு இலக்கியப் பாரம்பரியத்தை யும், ஈழத்து முற்போக்கு இலக்கியப் பாரம் பரியத்தையும் கணக்கிலெடுக்காமையினல் எழுந்ததாக, 'அலை" கருதுகிறது,
ஈழத்தில் க. கை.யின் விமர்சனத்திற்கு எதிரான கருத்துக்கள் "படிகள்" கருதுவது போல், புதுக் கவிதைத் துறையிலிருந்து எழுந்ததல்ல. அதற்குமுன் அறுபது களின் பின்னர் குறிப்பாது 1964ல் பலமாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது. கலைச் செல்வி, செய்தி ஆகியனவற்றில் இடம்பெற்ற கட் டுரைகள் இதற்கு முக்கியசான்றுகளாகும்.
இனிச் ‘சமுத்திரன்’பற்றிய கருத்துக் களுக்கு வருவோம். க. கை.யின் விமர்சன முறைக்கு இன்று எதிர்க்கருத்துக்கள் வைப் பவர்களிற்கு "எதிர் மார்க்சியவாதிகள்’
வடிவவியல் வாதிகள்" என்று நாமகரணம் குட்டுகிருர் சமுத்திரன். மார்க்சியத்தை எதிர்ப்பவர்களையே எதிர்மார்க்சியவாதிகள் என்பது வழக்கம். ஆணு ல் சமுத்திரன் இ  ைதச் சிந்திப்பவராக இல்லை; அவர் க. கை.யின் கருத்துக்களை எதிர்ப்பவர்களையே எதிர்மார்க்சிய வாதிகள்’ என்கிருர். இவரது தனிமனித வழிபாடு, குருபக்தி என்பன எவ்வளவு முட்டாள்த்தனமான கருத்தைச்
சொல்ல வைத்திருக்கிறது!
சமுத்திரன் மார்க்சிய எதிரிகளை விளிக் கும் "வடிவவியல் வாதிகள்’ என்ற சொற்
535

Page 32
பிரயோகமே பிழையானதாகும். மார்க்சிய எதிரிகள் பழைமைவாத, சநாதனக் கண் ணுேட்டத்தைக் கொண்டிருந்தனர். இவர் கள் நவீன அம்சங்களை மட்டுமல்ல சிறுகதை, நாவல்,நவீன கவிதைகள் போன்ற புதிய இலக்கிய வடிவங்களையும், "மக்களின் உயிர்ப் பான பேச்சு மொழியைக் கையாள்வதை யும் கூட எதிர்த்தவர்கள். அக்காலங்களில் இவற்றின் ‘இலக்கிய’ ஏற்புடைமைக்காக வாதாடியவர்கள்-வடிவவியல் வாதிகளாயி ருந்தவர்கள் சமுத்திரன் கூறும் "முற்போக் குவாதிகளே. முற்போக்கான இவ் வர லாற்று நிலைபாடு பற்றியெல்லாம் சமுத்திர னுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனல் ஈழத்து இலக்கியத்தில் அக்கறையுள்ள வாச கர்களுக்கு, இவை தெரியும்,
சமுத்திரன் குறிப்பிடுபவர்கள் தமது கருத்தாக்கங்களை “வளர்த்தவர்கள்" அல்ல; தமது "அன்றைய கருத்துக்களுடனேயே தேங்கிப்போனவர்கள். தமது முன்னைய கருத்துக்களைவிட்டு அசைய மறுக்கும் இவர் களே இயக்கவியலுக்கு எதிரானவர்களாயி ருக்கிருர்கள். 60க்குப்பின் எஸ்.பொ. (சிலர் சொல்வதுபோல் எஸ். பொ. வை முற்று முழுதாகப் புறக்கணித்துவிட முடியாது.) மு. த. போன்றவர்களினல் இவர்களது அதிகாரபீடங்கள் உலுக்கப்பட்டபொழுது, அவை தமக்குரியவை அல்ல என்றமாதிரி அவற்றுக்கு எவ்வித மறுப்பும் தெரிவிக் காது மெளனமாக இருந்தே, தங்கள் இருப் பைக் காத்துக்கொண்டார்கள். இதனுல் தான் "அலை” இவர்களைத் தேங்கிப்போன, வர்கள் என்கிறது. இவர்கள் முற்போக்குக் கருத்தாக்கங்களை வள் ர் க் கும் முறையே நகைப்பிற்கிடமானது. அலை, 13-வது இத, ழில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மூலம், ஓர் இலக்கிய சர்ச்சையை எதிர்பார்த்தது. இந்த எதிர்பார்ப்பு மேலும் தி குந் தி ய, தெளிவான கண்ணுேட்டத்தைப் பெறுவ தற்காகவே. அதற்காக அலை எப்போதும் தயாராக இருந்தது. ஆனல் த ட ந் த து என்ன? அக் கட்டுரைகளுக்குரிய பதிலைத் தமிழ் இலக்கியம்பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாத வாசகர்களைக் கொண் ட "லங்கா கார்டியனில்" நடத்திய லட்சணமே
535

(அதிற்கூட கைலாசபதி கலந்துகொள்ள
வில்லை.) போதும். அதனுல்தான் இந்த
விவாதம் தமிழில் நடைபெறவேண்டுமென ஏ. ஜே. கனகரட்ணு தமது கடிதத்தில் மிகச் சரியாகவே குறிப்பிட்டார். இவர்களது தேக்கத்தினுல்தான், இவர்களால் நவீனப் போக்காளரின் படைப்புக்களை மதிப்பிட முடியாமலிருக்கிறது. பூமணி, அஸ்வகோஷ், வண்ணநிலவன் போன்றர்ைகளை மட்டு மல்ல, ஈழத்தின புதுப்போக்காளர்களையும் மதிப்பிட முடியாமலிருப்பதும் இ த ல் தான். சமீபத்தில் வெளிவந்த க. கை.யின் ‘நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்" என்ற நூலே இதற்கு அசல் உதாரணம். நவீன இலக்கியம் பற்றி அந்த நு சில் ஏதாவது இருக்கிறதா என்பது, அதைப் படித்தவர்களுக்குப் புரியும். "அமெரிக்கா" விலிருந்து வந்தபின்னர் அண்மைக்காலப் படைப்புக்களைப் படிக்கவில்லையென அவரே ஒருமுறை கூறியுள்ளார். -
*"கைலாசபதியைத் தாண்டிய புதிய மார்க்சிய விமர்சனத்திற்குத் தமிழகத்தை எதிர்நோக்கும் நிலை இன்று இலங்கையில் உருவாகியுள்ளது" எனப் படிகள் கருது கிறது. ஆனல் அலை அப்படிக் கருதவில்லை. கே. எஸ். சிவகுமாரனின் *லங்கா கார்டி யன்’ கருத்துக்களினல் படிகள் இம்முடிவிற்கு வந்திருக்கலாம். சிவகும்ாரனின் மேலோட்ட நோக்கிற்கு அப்படித் தெரிந்திருக்கலாம். கைலாசபதியைத் தாண்டிய வளமான புதிய மார்க்சிய விமர்சனத்தை மேற்கொள் ளும் ஆற்றலும், அக்கறையும் உள்ளவர் கள் ஈழத்தில் இருக்கிருர்கள். இவர்களில் ஏ. ஜே. கனகரட்ணு சண்முகம் சிவலிங்கம், எம். ஏ. நுஃமான், மு. நித்தியானந்தன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர் கள் மார்க்சியக் கலை, இலக்கியக்கருத்தாக்கங் களை வளர்ப்பவர்களாகவுள்ளார்கள். இவர் கள் இவற்றை மேலுமொரு பரிமாணத்தில் மேற்கொள்ளுவார்களென "அலை" கருதுகி றது. ம்ேலும், புதியதும் வளமானதுமான
மார்க்சியக் கலை, இலக்கியக் கருத்தாக்கள்
களை வளர்த்தெடுப்பதற்கு, ஈழமும், தமிழக மும் பரஸ்பரம் இணைந்து செயற்படுவதே பயன்மிக்கதெனவும் "அலை" கருதுகிறது.

Page 33
"அல்ை சொல்லும் இனக்கியம் என்று வந்தால் அழகு வேண்டும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஆனல் இதனை "அலை’ மார்க்சியத்திற்கு வெளியிலுள்ள தமிழக விமர்சகர்களின் ப்ா தி ப் பி ன ல் (இது அலைபில் லேசாக உள்ளது) மட்டும் வெளிப்படுத்தினுல் தன்னைப் பல மா ன தளத்தில் வைக்கத் தவறிவிட நேரலாம் என்றும் படிகள் கருதுகிறது.
பதிவுகள்
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடை பெற்ற லூ சுன் நூற்ருண்டு தின விழாக் கூட்டத்தில் கலந்து கொண்ட எம். ஏ. நுஃ மானின் பேச்சிலிருந்து, இன்றைய இலககி யச் சூழலிற்குப் பொருத்தமானதும், பயன் மிக்கதுமான கருத்துக்கள் பலவற்றைப் பெற்றுக்கொள்ள முடித்தது.
(அ) புரட்சிக்கு முந்திய காலகட்டங் களில் விமர்சன யதார்த்தவாதம் இருக்கும்; புரட்சிக்குப் பிறகே சோசலிச யதார்த்த வாதம் முக்கியத்துவம் பெறும்.
இருக்கின்ற நிலைமைகளை, மக்களின்தனிமனிதனின், நசுக்குண்ட - வெறுப்புக் குரிய அவல வாழ்வு அதன் சகல பரிமா னங்களுடனும் அப்படியே சித்திரிக்கப்படுவ தன்மூலம், அந்நிலைகளிலிருந்து விடுபட மறைமுகமாக அவாவுறுவது விமர்சன யதார்த்தத்தில் நிகழும். கலைக்குரிய உள்ள டங்கிய, குறிப்பாலுணர்த்தும் (நேரடிப் பிரச்சாரமற்ற) தன்மை ' இதில் இருக்கும். லூசுன்னின் எழுத்துகளில் இது சிறப்பாக வெளிப்படுகிறது.
(ஆ) லூசுன்னின் படைப்புகளில் நேர டிப்பிரச்சாரம் இல்லை. பிரச்சினைகளிலும் அவலங்களிலிருந்தும் விடுபடுவதற்குரிய தீர்வு (மார்க்கம்) தேரே சொல்லப்படுவ தில்லை. ஆனல் அங்கதம் மிளிர வெளிப்படுத் தப்படும் இயல்பான சித்திரிப்புகள், அத்த கைய விடுபடலையே மறைமுகமாகக் கோரு சின்றன. இதற்கு நல்ல உதாரணமாக நுஃ மான் சுட்டிய கதைகள் சிலவற்றை "நேர டித் தீர்வு சொல்ல வேண்டுமெனச் சட்டம்

இதில் "மார்க்சியத்திற்கு வெளியிலுள் ளவர்களின் தாக்கம்" என எவரைக் கருது கிறது என்பது தெளிவற்றுக் கலங்கலா னதாக இருக்கிறது. இதனல் "அலையும்" தெளிவாக இதுபற்றித் தன் கருத் தை முன்வைக்க முடியா த நிலையிலுள்ளது. இவை தெளிவுபடுத்தப்படும் பட்சத்தில், "அலை" அவைபற்றிய தனது கருத்தையும் முன்வைக்கும்.
போட்டுக் கொண்டிருக்கும் எமது வரட்டு விமர்சகர்களின் நோக்கில் பார்த்தால், *பிற்போக்குக் கதைகளாகவும்" முத்திரை குத்த நேரும்; "வழிப்போக்கன்’ என்ற நாடகத்தில் செய்தி பூடகமாக உணர்த்தப் பதிவது, "விளங்க முடியாமை" என்ற குற் றத்துக்கும் ஆளாகலாம்.
(இ) லூசுன்னின் படைப்புமுயற்சிக ளில் அரைவாசிக்கு மேற்பட்டவை மொழி பெயர்ப்புக்களாயிருந்தன. Lעש נג6 3) (6 נ ஐரோப்பிய மொழிகளின் இலக்கியப் படைப்புகளைச் சீன மொழிக்குக் கொண்டு வந்ததன் மூலம் தானும் பயன்பெற்ற தோடு, நவீன சீன இலக்கியத்தைச் செழு மைப்படுத்தவும் முக்கிய பங்களிப்பினைச் செய்தமை.
(ஈ) "இன்று சில எழுத்தாளர்கள் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் தங் களுடைய நாவல்களுக்கும், கவிதைகளுக் கும் உரிய மாந்தர்களாகப் படைக்கிருர், கள். இவை மக்கள் இலக்கியமென்றும் அழைக்கப்படுகின்றன. உண்மையில் இவை அவ்வாறில்லை. மக்கள் தங்கள் வாயைத் திறந்து இன்னும் ஒன்றையும் வெளியிட வில்லை. இவ்வகைப் படைப்புகள் பார்வை யாளர்களது உணர்வு நிலையையே சித்திரிக் கின்றன. எங்களுடைய எழுத்தாளர்களிற் சிலர் ஏழைகளாக இருந்தபோதிலும் அவர் கள் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் விட வசத படைத்தவர்களாகவே இருக்கி ருர்கள். அவர்களுடைய படைப்புகள் மக்
களிடமிருந்து வருவதுபோல் தோற்றின
537

Page 34
லும் உண்மையில் அவை அவ்வாறில்லை. அவை சாமானியர்களது உண்மையான கதைகளல்ல" என்ற லூசுன்னின் மேற் கோளை வாசித்து, எமது எழுத்தாளர்கள் பலருக்கும் இது பொருந்துமெனச் சொல் லியவை,
"முற்போக்கு’ என்ற பெயரில் சிலரால் வைக்கப்பட்டுவரும் வரட்டுக் கருத்துகள் பலவற்றை உலுக்குபவையாக, நுஃமானின் மேற்படி கருத்துகள் அமைந்துள்ளன. நுஃ மானின் இத்தகைய கருத்துகளையே வற் புறுத்தி வரும் வேறு சிலரை "நாடகத்தால் மெய்யடியார் போல் நடிப்பவர்கள்” என் றும், "சந்தேகமான மார்க்சிய நிலைபாட்டி னைக் கொண்டவர்கள்’ என்றும் சஞ்சிகை மலரொன்றில், எமது வரட்டு விமர்சகளி லொருவர் சமீபத்தில் எழுதியுள்ளார் என்ப தும் இங்கு நினைவுகூரத்தக்கது.
※ ※
படைப்புக்களையும் படைப்பாளர்களை பும்பற்றிய மதிப்பீடுகள் அவரவர் நோக்குக் கோணங்களிற்கேற்ப வேறுபடலாம். முரண் பாடின்றியும் தக்க ஆதாரங்களினடியாக வும் ஒருவர் வருகின்ற முடிவினை நமக்கு உடன்பாடில்லாதபோதும் மதிக்கலாம். இத ஞல், வேறுபட்ட எல்லா முடிவுகளையுமே அங்கீகரிக்கவேண்டுமென்பதில்லை. பல்வேறு உள்நோக்கங்களினல் தவருண முடிவுகளிற் குச் சிலர் வந்திருக்கலாம். அத்தகையவை சுட்டப்படவே வேண்டும்.
சமூகத் தொண் டன் சஞ்சிகையில் (இலக் 3, 1981) கவிஞர் இ. முருகையனைப் பற்றிய கட்டுரையில் ".. உணர்ச்சி வெள் ளத்தில் அடிபட்டுப் போகாமல் நிதானித்து விஷயங்களை ஆழமாக நோக்கிக் கவிபாடும் நோக்கும் போககும் அவரின் (முருகைய னின்) சிறப்பியல்புகள். காலஞ்சென்ற அ. சீனிவாசராகவன், ரா. பூரீ. தேசிகன், வா. செ. குழந்தைசாமி (குலோத்துங்கன்), சிதம்பர ரகுநாதன், த. ஏகாம்பரம், சிவ சேகரம், நுஃமான், ஆதவன், சேந்தன் முதலியோரின் கவிதைகளிலும் மேற்கூறிய ஆய்வறிவுப் பண்பினையும், தத்துவ வீசசை யும் காணலாம்.’’ என விமர்சகர் கைலா சபதி எழுதியுள்ளார். அகன்ற தமிழக, இலங்கைக கவிதைப் பரப்பில உணர்ச்சி வுெள்ளத்தில் அடிபட்டுப் போகாமல் நிதா னித்து விஷயங்களை ஆழமாக நோக்கிக் கவிபாடும் நோக்கும், போக்கும் உள்ள கவிஞர்கள் இவர்கள்தானும்! தமிழகத்தில்
538

பலரும், ஈழத்தில் மஹாகவி, தா. இராம லிங்கம், சண்முகம் சிவலிங்கம், மு. பொன் னம்பலம் போன்ற முககிய கவிஞர்களும் விலக்கப்பட்டிருக்கிருர்கள் என்பது ஒருபுறம் இருக்க, இலக்கிய அக்கறைமிக்க வாசகர்க ளிற்கே அதிகம் தெரியவராத - விரல்விட் டெண்ணக்கூடிய கவிதைகளே வெளிவந் துள்ள ஆதவன், சேந்தன் போன்ருேரை சீனிவாசராகவன், சிதம்பர ரகுநாதன், நுஃ மான் வரிசையில் புகுத்த (இதற்கு ஆதாரங் களேதும் தரப்படவில்லை.) அந்தரப்பட்டுள் ௗதன் நோக்கமென்ன?
இது வெறுமனே நோக்குக்கோன வேறு பாடா? ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கும் பான்மையா? அலலது நேர்மை யீனமா என்பதைப் பகுத்தறிவுமிகக வாச கர்களிற்கே விட்டுவிடுகிறேன்.
இனியும் அழாதே
அவர்கள் இறந்து போயினர், இனியும் அவர்களைக் கொல்வதை நிறுத்து. அழுதது போதும், இனியும் அழாதேஅவர்கள் குரல்கள் கேட்பதற்காய்நீயும் இறவாமல் இருப்பதற்காய்,
ஒசையில்லா வார்த்தைகள் அவர்களுடையEl s பச்சைப் புற்கள் துளிர்க்கும் ஓசைபோல் மெல்லிய ரகசியம் பேசி, மகிழ்வுடன் வாழ்வ்ர்.
அங்கு, மனிதனின் , கால்கள் பதிவதேயில்லை.
-glucosi) உங்கரெட்டி
(Giuseppe Ungaretti)
இத்தாலிய மொழிக் கவிதையை றெஜி சிறிவர்த்தணுவின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் தருபவர்; ராகேல். 15Giris: 'Many Voices.’
-அ. யேசுராசா ,

Page 35
*a
அன்பளிப்பு
சுவைமிக்க
6)3F6 9D 6
அமுத
யாழ்ப்பான
குறிப்பு: பண்டிகைகளா, விே ஒடர்கள் குறித்த ே
சகலவித
அழகுசாதனப் பொருட்கள் விளையாட்டுப் பொருட்கள் சாய்ப்புச் சாமான்கள் அன்பளிப்புப் பொருட்கள் நூல் வகைகள்
மொத்தமாகவும், சில்லை
பெற்றுக்கொள்
அம்பிகாபதி 66, பெரியகடை,
தொலைபேசி: 7437

தரமான
ாவுக்கு தசுரபி
த்திரி வீதி,
சட நிகழ்ச்சிகளா எதுவானுலும் நரத்தில் வழங்கப்படும்
றயாகவும், மலிவாகவும் ா நாடுங்கள்.
ரெக்ஸ்ரைல்ஸ்
U ழ்ப்பாணம்.

Page 36
சகலவிதமான
ஒலிப்பதிவு வேலைகளு
கல்முனையில்
தரமான ஸ்தாப
ஜஸ்மின் றெ
11- 12, பிரதி கல்முை
“l-ożolo' d5(g5
வாழ்த்துக்கள்!
செட்டியார்
காங்கேசன்து
யாழ்ப்ப

க்கும்
னம்
கோடிங் பார்
நான வீதி,
5T
அச்சகம்
துறை வீதி,
ாணம்.

Page 37
துள்ளும் பருவத்தினரும்,
விரும்பி வாங்கி உல்
HONDA ஹொண்டா விரும்பிய நிறங்களில்
Gamp is Lim C 90; C 50; CD 125
பழைய விலைகளில் ய்ாழ்ப்
வட இலங்கையில் மற்று
மகாராஜா இன்வெ
122, கே. கே. எஸ். வீதி,
போன்: 8267
ܝ̈
6
அலை’க்கு
எமது வாழ்த்துக்கள்
தேவராஜன் கராஜ்
நாவாந்துறை,
யாழ்ப்பாணம்.

துவளும் பருவத்தினரும்
லாசச் சவாரி செய்வது
மோட்டார் சைக்கிள்கள்
புதிய மொடல்களில்
T; CB 125 JX; CD 90; CD 50 பாணத்தில் கிடைக்கிறது.
றுமொரு வியாபாரிகள் tஸ்ட்மென்ட் லிமிட்.
யாழ்ப்பாணம்.
சாத்தம்
சுவை மிகு
சைவ உணவுக்கு
மலாயன் கபே
,பெரிய கடை வீதி ,36 بر
யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 8074

Page 38
பிரவுண்சன் பே பிரவுண்சன் கள் பிரவுண்சன் துெ
பிரவுண்சன் சுே
। பிரவுண்சன் கே
பிரவுண்சன் குது
ਜ
나 __ ஆண்டுகளுக் தரச் சிற மக்களுக்
வருகிே
பிரவுண்சன்
| 80 1/4, பின
கொழு
தொலேபேசி எண் 271 37
" இனிக்கிய التي يق *தினருக்காக யாழ் பட்டு இல், , மத்திய மேற்குத்தெரு, குரு
- 11-7" an t__ "آلیسا

க்கிங் பவுடர் பராட் பவுடர் ரவி கிறிஸ்டல் Fண் பிளவர் ஒலற்றின் 3.
ரோறுTட் மா
ருக்கோள் பு
ம்
Tப் பத்து
| L ட்புடன்
வழங்கி
மும்.
இன்டஸ்ட்ரீஸ்
றஸ் பிளேஸ்,
ம்பு-12
தந்தி: "குறள்"
ஒனம் சித்திரா அச்சகத்தில் அச்சிடப் நகரில் வசிக்கும் கி. எமிலியூஸ் என்பஃரான்
ரியூர் மு. புள்பராஜன், அயேசுராசா