கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2006.08

Page 1
髮
sae
20 OG
ஆகஸ்
 

m
விலை - 25/
No. |×
\\
!
: WTM
|
|-||- |

Page 2
இலங்கையில் நூல்கள் விநியோகம் விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி பதிப்புத் துறையில் புதியதோர் சகாப்தம்
அன்புடன் அழைக்கிறது
(35LDLDG
பொத்தகசாலை 49,50,52 பீப்பிள்ஸ் பார்க், கொழும்பு 11. தொலைபேசி : 011 - 2472362
தொலைநகல் : 011 - 2448624 L666T60T6556) : Chemamadu(a)yahoo.com
UG50, 52, People's Park Colombo - 11. Sri Lanka
 
 
 

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவர்
ຂຶrffip .supst) ங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம்தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாராட்டப்பட்ட பெறுமதி மிக்க சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ்சிகை மல்லிகை, YYz ZSYLLLLLLSL LLLLLL le llLlLSSeSLT0L LLLL LOLS ஹன்ஜார்ட் பதிவு செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தியமுள்ளது
5O - வது ஆண்டை நோக்கி.
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் 1 வெளிவரும் தொடர் சிற்றேடு 1
மாத்திரமல்ல - அது ஒர் ஆரோக்கிய 1 மான இலக்கிய இயக்கம்
2O 1/4, Sri KCfhireSOn
Street Colombo - 13. Te:232O721
இளம்
படைப்பாளிகளுக்கான இலக்கியத் திண்னை
பல்வேறு வகைப்பட்ட சிந்தனை யோட்டங்களைக் கொண்ட பல இளம் எழுத்தாளர்கள் தமது படைப்புகள் மூலமும் சிலர் நேரடியாகவும் எம்முடன் தொடர்பு கொள்ளுகின்றனர்.
அவர்களது கருத்தோட்டங்களை யும் சிந்தனை வழித் தடங்களையும் உற்று நோக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. அதேசமயம் தகுந்த வழி காட்டல் இல்லாத தொய்வுநிலையையும் அவதானிக்க முடிகிறது.
எனவே, மாதா மாதம் இவர்களை ஓரிடத்தில் சந்தித்துக் குறை நிறை களைப் பகிர்ந்து கொள்ள மல்லிகை விரும்புகின்றது. தொடர்பு கொள் ளுங்கள். அடுத்த கட்ட நகர்வுக்குக் காத்திருக்கின்றோம்.
இந்த மண்ணில் ஒரு முன்மாதிரி மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என மெய்யாகவே இதயப்பூர்வமாக விரும்பும் இளசுகள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம். ஒருங்கு சேரத் துடிக்கும் இளம் சந்ததியினரின் இதய ஆர்வத்தை வடிகட்டிய பின்னரே எமது அடுத்த கட்ட நகர்வை வெளிப்படுத்துவோம். 9
- ஆசிரியர்

Page 3
៣២៣ uffiញចាប៉ាងបិ Tpពិffffff
- டொமினிக் ஜீவா
ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த மல்லிகை இதழ்கள் கையால் அச்சுக் கோத்து ¥! அச்சிட்டு வெளிவந்ததை நீங்கள் அறிவீர்கள். எனக்கு உதவி திருமதி றோசி ஸ்ரீபன் வந்தவர்களில் சகோதரர் சந்திரசேகரம் குறிப்பிடத் தகுந்தவர்.
கொழும்பிற்கு மல்லிகை வந்ததன் பின்னர் இந்த வெளியீட்டு முறை முற்றாக மாறி விட்டது. கணினி யுகத்திற்குள் அது பிரவேசிக்கத் தொடங்கி விட்டது. ஆரம்பத்தில் வெள்ள வத்தையிலுள்ள ஓர் அமைப்பின் (ஆத்மானந்தன்) மூலம் கணினி வேலைகளை ஒருவாறு செய்து ஒப்பேற்றி வந்தோம். தூரம் தோதுப்படவில்லை. போக்குவரத்துச் சிரமம் வேறு. இவைகள் சங்கடங்கள்.
சுயமாக இயங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. மல்லிகைக்கான கணினி அச்சக அமைப்பை உருவாக்கிய சமயம் நம்முடன் இணைந்தவர்தான் செல்வி, றோசி இம்மானுவல். இடையே செல்வி சித்திராங்கனி வந்து போனார்.
சில மாதங்களில் இவர் திருமதி. றோசி ஸ்ரீபனாகி விட்டார். இன்று இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு.
என்னமோ தெரியவில்லை, மல்லிகைக்குக் கிடைக்கும் அச்சக ஊழியர்கள் மிக மிக விசுவாசமானவர்கள். அதில் ஒருவர் சந்திரசேகரம். அடுத்தவர் இந்த றோசி ஸ்ரீபன்.
'மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் நூல் வடிவில் இன்று பல வெளிவந்துள்ளன. அவைகள் அனைத்திலும் இவரது கை முத்திரைகள் பதிந்து போயுள்ளன. தானே சுயமாகச் சிந்தித்து நூல்களையும் மல்லிகை மலர்களையும் வடிவமைப்பதில் இவர் தனித்திறமை கொண்டவர். தனது சுயவாழ்க்கையை அமைப்பதில் இவர் பல போராட்டங்களை நடத்தியவர். அதில் வெற்றியும் கண்டவர். இவர்மீது நான் தனி அபிமானம் கொள்ள வைத்ததே இவரது இந்தப் போராட்டக் குணாம்சம்தான்.
எனது மனக் கணிப்பையும் இதழ்த் திட்டத்தையும் இவரிடம் வாய்மொழியாகச் சொல்லி விட்டு வேறு வேலைகளைக் கவனிப்பதில் நான் ஈடுபட்டு விடுவேன். எனது மன ஊகத்தைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு, வெகு கச்சிதமாக எழுத்தில் வடித்து வைத்து விடுவார். இது இவரது தனிப்பெரும் ஆற்றல்களில் ஒன்று.
"ஒரு சிற்றிலக்கிய ஏடு இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகின்றது எனப் பலரும் என்னைப் பற்றியே புகழ்ந்து மகிழ்கிறார்கள். இதற்குப் பின்னால் நின்று உழைத்த வர்கள் நண்பர் சந்திரசேகரமும், சகோதரி றோசியும்தான் என்பதை எதிர்காலம் கவனத்தில் கொள்ள வேண்டும். 9
 

மட்டுப்படுத்த வேண்டும் அல்லது தடைசெய்து, கட்டுப்படுத்த வேண்டும்!
முன்னர் ஒரு காலத்தில் கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஒருங்கு சேர்ந்து இயக்கம் நடத்தி, அன்றைய அரசாங்க மட்டத்தினரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு இணங்கத் தமிழ்நாட்டிலிருந்து இங்கு இறக்குமதியாகி வரும் குப்பைகளை ஒரளவு கட்டுப் படுத்த முடிந்தது. அது பெரிய சாதனை.
ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாகி விட்டது!
திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாகத் தமிழ் நாட்டிலிருந்து அச்சடித்த கடதாசிக் குப்பைகளும், தொலைக்காட்சித் தொல்லைகளும் வந்து வந்து குவிந்து, நமது-கலை, கலாசாரத்தையே நாசமடித்து விடுகின்றன.
ஆரோக்கியமான திசை வழியில் நமது மண் சார்ந்த கலை இலக்கிய முயற்சிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் ஒன்றில் இவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். அல்லது தடை செய்யப்பட வேண்டும்! தற்காலிகமாகச் சுவைஞர்கள் பாதிக்கப் பட்டாலும் பரவாயில்லை.
நமது தரமான நாடகக் கலைஞன் வழிதுறை தெரியாமல் "பிளேன் டீ" குடித்துக் கொண்டு தெருத் தெருவாக அலைகிறான். அரை இலட்சங்களுக்கு மேல் முதலிடு செய்து தனது படைப்பை நூலாக்கி விட்டு மூலையில் கட்டுக் கட்டாக அடுக்கி வைத்துவிட்டு, படைப்பாளி வீட்டு முகட்டைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறான்.
சிங்கள் எழுத்தாளர்களுக்கு இந்த அந்நிய ஊடுருவல் பிரச்சினை இல்லை. எங்களது இந்தப் பிரச்சினை அவர்களுக்குப் புரியாது. விளங்காது.
பழைய கட்டுப்பாட்டுக் காலத்தில் தான் வீரகேசரிப் பிரசுரம் ஏராளமான படைப்பு நூல்களை வெளியிட்டு வரலாறு படைத்து வந்தது. பல நூல்கள் வெளி யிடப்பட்டன. சினிமாக்கள் தயாரிக்கப்பட்டன. தொலைக்காட்சிப் படங்கள், குறும் படங்கள் தயாரிப்பதில் நமது கலைஞர்கள் முயற்சியெடுத்தனர். இன்றோ சகல முயற்சிகளுமே ஸ்தம்பித்துப் போய்விட்டன. இளந்தலைமுறை பிழையாக வழி நடத்தப்படுகிறது.
எனவே அமைச்சர் குமாரசூரியர் காலத்தில் அமுல் நடத்தியது போல, தமிழகத்தி லிருந்து இறக்குமதியாகும் சஞ்சிகைகள், நூல்கள், சினிமாக்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மட்டுப்படுத்த வேண்டும். மீறினால் தடைசெய்யப்பட வேண்டும் எனக் கலாசார அமைச்சகத்தை வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளுகின்றோம்!

Page 4
Snuu siümn நமது வாழும் காலத்து நம்பிக்கை நட்சத்திரம்
- ஒட்டமாவடி அரபாத்
எனக்கும் இளைய அப்துல்லாவற்வுக்குமான தொடர்பு அஞ்சலில்தான் முகிழ்ந்தது. 1994ஆம் ஆண்டு சித்திரை மாதம் கண்டியில்தான் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. முதல் சந்திப்பின் மலர்ச்சி இறுக்கமான நட்பாய் வளர்ந்தது. அவர் லண்டன், ஜேர்மனி, பிரான்ஸ் என அலைந்த காலத்தில் தொலைபேசி, மின்னஞ்சல் ஊடாக இந்த நட்பு நீடித்தது.
செயல் கவர்ச்சியும், பேச்சுத் திறனும், உள்ளன்பு செலுத்தும் பண்பும், மனதுள் மறைத்துப் பழகாத உணர்வும் சிரிப்பும் எனக்கு இளைய அப்துல்லாவற் மீது அபிமானம் வளர வித்திட்டது. அவரை முதலில் சந்திக்கும் மனிதர்களை பத்தாண்டுகள் பழகியது போல் உணர வைக்கும் இயல்பு இளைய அப்துல்லாவற்வின் சிறப்பியல்பு எனில் மிகையல்ல.
1986ஆம் ஆண்டில் சிந்தாமணியில் எழுதத் தொடங்கியவர் இளைய அப்துல்லாவற். முதலாவது சிறுகதை பவளமலையில் ஒரு பசுந்தளிர். முதலாவது கதையின் கதை மாந்தர்களே மலையக மக்கள்தான். மாத்தளையில் இருந்தபோது இந்தக் கதையை இளைய அப்துல்லாவற் எழுதினார். 1996 - 1997 காலப்பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 'விடியலை நோக்கி என்ற சமாதானக் கருப்பொருளைக் கொண்ட நிகழ்ச்சியை நடத்தினார். இது தேசிய சேவையில் தரமான ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.
இலங்கை வானொலித் தொடர்புக்கு உந்துதலாக இருந்தவர்களாக பி.எச்.அப்துல் ஹமீட், வி.என்.மதியழகன், உருத்திராபதி, ஹாரிஸ் ஹாஜி, பெளசுல் ஹஸன் ஆகியோரை நினைவு கூருகின்றார். இளைய அப்துல்லாவற்வின் ஆன்மாவில் உறைந்து போனது அறிவிப்புத்துறைதான்.

ஆரம்ப கல்வியை ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் பயிலும் போதே மாணவர் அரங்குகளிலும், பேச்சுப் போட்டி களிலும் தனது திறமையைத் துல்லியமாக வெளிப்படுத்தியவர். இலங்கையின் பல இடங்களில் இனப்பிரச்சினையின் தாக்கம் காரணமாக வசிக்க நேர்ந்ததினால் அனுபவச் செறிவு அவரின் பேச்சுக் களிலும், எழுத்துக்களிலும் வெளிப்படும் அலாதியே தனி.
*டி. பல தொழில்களையும் பல்வேறுபட்ட காலங்களிலும் செய்து அனுபவம் பெற்றி ருக்கிறார்.
சொற் பிறழாத உச்சரிப்பு இளைய அப்துல்லாவற்வுக்கு வாலாயப்பட்டிருக் கின்றது. இதற்குப் பிரதான காரணம் வாசிப்பறிவில்லாத அனுபவ அறிவு மிகுந்த தனது பாட்டன் (தாயின் தந்தை) தினமும் காலையில் வாங்கிக் கொண்டுவரும் தினபதி பேப்பரை முழுவதும் அவருக்கு உரத்து வாசித்துக் காட்ட வேண்டிய தினப் பணி அவருடையது. அந்த வாசிப்புப் பயிற்சியும் பரிச்சயமும் தமிழையும், கவர்ச்சியான குரலினையும் இவருக்குப் பரிசாக அளித்ததென்றால் மிகையல்ல.
சிறந்த பிசிறில்லாத குரல் வளத் தாலும் உச்சரிப்புச் சுத்தத்தாலும் 1992, 1993, 1996 ஆகிய மூன்று வருடங்களும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்திய அகில இலங்கை அறிவிப்பாளர் போட்டிகளில் முதலாம் இடத்தையும், 1991, 1992ம் வருடங்களில் இலங்கை இஸ்லாமிய கலாசார அமைச்சு நடாத்திய
அகில இலங்கை ரீதியிலான பேச்சுப் போட்டிகளில் முதலாம் இடங்களையும் பெற்றிருக்கிறார். இளைஞர் சேவைகள் மன்றத்தில் அப்துல்லாவற் முதலாம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பிற்காலங்களில் ஏற்கனவே
தொடர்ந்து இளைய
முதலாம் இடம் பெற்றவர்கள் போட்டியில் பங்குபற்ற முடியாது என்ற விதி ஒன்றை அம்மன்றம் கொண்டு வந்ததைச் சொல்லித்தானாக வேண்டும்.
1987ம் ஆண்டு தொடக்கம் 1991ம் ஆண்டு வரை நாவலப்பிட்டி தாருல் உலுர்மில் ஹாவழிமிய்யவுற் கல்லூரியில் பயின்றதன் காரணமாக உருது மொழிப் பரிச்சயம் பெற்றார்.
75இற்கும் மேற்பட்ட சிறுகதைகளும் 300இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியிருக்கிறார். இன்னும் எழுதிக் கொண்டே இருக்கிறார்.
"பிணம் செய்யும் தேசம்’ கவிதைத்
தொகுதி (2004), துப்பாக்கிகளின் காலம்
சிறுகதைத் தொகுதி (2004) ஆகிய இரண்டு தொகுதிகள் வெளிவந்திருக் கின்றன.
2003ம் ஆண்டு ஐ.ஆர்.ஒ. (லண்டன்) இங்கிலாந்தில் சிறந்த தமிழ் அறிவிப் பாளருக்கான விருதை வழங்கிக் கெளரவித்தது.
2005ம் ஆண்டுக்கான சாஹித்திய மண்டலப் பரிசு "பிணம் செய்யும் தேசம்' கவிதைத் தொகுதிக்குக் கிடைத்திருக் கிறது.

Page 5
1990களில் இருந்து புலம் பெயர் தமிழ் சஞ்சிகைகளுடன் இறுக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்
இளைய அப்துல்லாவற்.
பெரும்பாலான இவரது படைப்புகள் புலம் பெயர் சஞ்சிகைகளில்தான் வெளி வந்திருக்கின்றன. புலம் பெயர் நாடுகளில் பெரிதும் அறியப்பட்ட இளைய அப்துல் லாவற் 1998ல் ஜேர்மனியில் இடம்பெற்ற இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டார். அதே வருடம் லண்டன் 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கம் இன்றுவரை லண்டன் தீபம் தொலைக் காட்சியில் புகழ்பெற்ற அறிவிப்பாளராகக் கடமையாற்றி வருகிறார்.
20 இலக்கியப் பரிச்சியம் கொண்ட இளைய அப்துல்லாவற்வின் இயற்பெயர் அனஸ். ஹரீரா அனஸ், மானுட புத்ரன் ஆகிய பெயர்களில் இலங்கையின் இலக்கியத் தொகுதிக்கு கனதி சேர்த்தவர் இவர்.
வருடகால ஊடகத்துறை
"எங்கள் தாயகமும் வடக்கே' (1997) என்ற இவரது ஒலிப்பதிவுக் கவிதை 1990 களில் இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம் களின் வரலாறு சொல்லும் ஓர் ஆவண மாகும்.
இது (ஒலிப்பேழை) ஈழத்து கவிதை உலகிலும், அரசியல் உலகிலும் இவர் மீதான கவன ஈர்ப்பைத் தேடிக்கொடுத் திருக்கிறது.
இவருடைய பத்தி எழுத்துக்கள் அங்கதச் சுவை மிகுந்தவை. 1997, 1998 காலப்பகுதியில் நவமணி பத்திரிகையில் *கன்னா திட்டி சிவத்தாருக்கு கண்டி அப்துல்லாவற் வாத்தியார் எழுதுவது' 6τσόπ μο பத்தியும், 1994களில் அவுஸ்திரேலியா தமிழ் உலகம் பத்திரிகையில் "கொழும்பில் இருந்து அப்துல்லாவற் வாத்தியார் எழுதுவது என்ற கொழும்புக் கடிதமும், 2005இல் சுடரொளி பத்திரிகையில் எழுதிய "சுவடுகள் பத்தியும், இப்பொழுது தினக் குரல் ஞாயிறு இதழில் எழுதிவரும் ஆழ்மனத் தூறல்" பத்தியும் அதிகமான வாசகர்களினால் விரும்பிப் படிக்கப் படுகிறது.
இளைய அப்துல்லாவற்வின் கட்டுரை களும், சிறுகதைகளும் மிகவும் சுவை
fesses.
உழைப்பால் உயர்ந்த மல்லிகை ஜீவாவை தினமும் மனதிருத்தி அன்பு செலுத்தி வருபவர்.
பத்திரிகை, அறிவிப்பு, எழுத்தாக்கம் என்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கும் இளைய அப்துல்லாவற்வின் தகுதி கண்டு மல்லிகை தனது அட்டைப் படத்தில் அலங்கரித்திருப்பது சாலப் பொருத்தமானது.
ஜீவா தரம் காண்பதிலும், அவர் களைக் கெளரவிப்பதிலும் மிகத் துல்லிய
LDIT60T6...fr. o.

இன்றைய தமிழ்ச் சினிமாச் சூழல் மிகவும் வித்தியாசமான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை எம்மால் அவதானிக்க முடியாமல் இல்லை. வழமையாக கதையின் அடிப்படையில் சுழன்று கொண்டிருந்த தமிழ்த் திரையுலகு இன்று வெறும் நிகழ்வுக் கோவைகளாக இறுதியில் கிளைமைக்ஸ் என்று வந்து முடிவடைகின்றது. இடையிடையே பாடல்கள், சண்டைக் காட்சிகள் என இன்பமளிப்பது என்ற போர்வையைப் போர்த்தியபடி தமிழ்ச் சினிமா உலகு வலம் வருகின்றது. உண்மையில் இன்றைய தமிழ் சினிமா வெறுமனே பிம்பங்களின் நகர்வாலேயே நடாத்திச் செல்லப்படு கின்றது. பிம்பங்களின் நகர்வானது மூன்று முறைகளின் அடிப்படையாக உலா வருகின்றது.
நகரும் பிம்பங்கள்
- இன்கா
1. திரைப்படத்தில் தொடர்புடைய மனிதர்களின் தனிப்பட்ட அம்சம் குறித்த பிம்பம்.
உ+ம் : ரஜனி படம், ஏ.ஆர்.ரகுமான் இசை,
2. திரைப்படத்தில் உலாவரும் பாத்திரங்கள் குறித்த முன்னேற்பாடாக ஏற்படுத்தப்
பட்டுள்ள பிம்பம். உ+ம் : சஞ்சய் ராமசாமி - கஜனி.
3. பல பிம்பங்களின் தொகுப்பாக நடாத்திச் செல்லப்படும் திரைக்கதை.
பிம்பங்களின் நகர்வு என்ற புதிய பாணியில் மிக முக்கியமான அம்சம் என்னவெனில் பாட்டு, இசை, நாடகம், சண்டைக் காட்சிகள், நகைச்சுவை போன்ற ஒன்றாகவே கதைக்கருவும் கருதப்படும். இங்கே எல்லாமே பிம்பங்கள் பிம்பங்கள் எனத் தொடரும், இவை Ritual Narrative என்னும் அடிப்படையையே பின்பற்றுவதைக் காணலாம். காட்சி மகிழ்ச்சிக்காகவே திரைப்படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்குக் காட்சி இன்பத்தை (Visual Pleasure) அளிப்பதில் இவ்வகையான திரைப்படங்கள் வெற்றியடைந்து விடுகின்றன. உண்மையில் பிம்பங்களின் நகர்வு மனதுக்கு கிளர்ச்சியூட்டுகின்றது.
அந்தக் கிளர்ச்சி மகிழ்ச்சியைத் தருவதுடன் வரவேற்பையும் பெறுகிறது. பிம்பங்களின் நகர்வாலேயே கதாமாந்தர் உருவகப்படுத்தப்படுவதால் அப்பிம்பங்களின் செயல்களில் தம்மைக் குறித்த பற்றற்றே அதை ரசிக்க ரசிக்கப் பழகிக் கொள்கின்றான் ரசிகன். வன்முறைக் காட்சிகள் கூட வெகுவாக ரசிக்கப்படுவதற்குப் பிம்ப நகர்வு அடிப்படையிலான கதாநாயகன் பாத்திரப் படைப்புக்களே காரணம். அண்மையில் வெளியான ஆறு, ஆதி படங்கள் இதற்கு நல்ல உதாரணம்.

Page 6
பிம்பங்களின் நகர்வு என்ற கதை சொல்லும் பாணி ஒரு யதார்த்தம் குறித்த சிந்தனையையும் தேவையையும் வெற்றி கரமாக இல்லாமல் செய்ய முடிகிறது. இத னால் பாத்திரப் படைப்புக் குறித்த கேள்விகள் மிகக் குறைவாகவே ரசகர் மனதில் எழுகின்றன. மாறாகப் பாத்திரச் சித்தரிப்பில் பிம்பங்களின் நகர்வால் ரசிகர் மகிழ்ந்து போகிறார். அந்நியன் திரைப்படத் தில் காட்டப் படும் ரெமோ என்ற பாத்திரம் குறித்த கேள்வி எதுவும் சராசரி மனிதனிடம் எழவில்லை. மாறாக அப்படத்திலேயே மிக வும் விரும்பப்பட்ட ஒரு பாத்திரமாக அந்தப் பாத்திரமே திகழ்ந்தது. அதைப் போல தங்கள் நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்டவர்கள் ஏராளம். இது போலவே ஒரு காதலன் அமைய வேண்டும் என கனவு கண்டவர்களும் ஏராளம். பிம்பங் களின் நகர்வே இதைச் சாத்தியமாக்கியது. படத்தைப் பார்க்கின்ற ஒரு ரசிகன் சாத்தி யப்பாடு குறித்துச் சிந்திக்கத் தொடங்கும் போதே சொல்ல வந்தது என்ன? என்று யோசிக்கத் தொடங்கும் போதே அவனுக் குப் படம் குறித்த புரிதல்களில் மாற்றம் ஏற்படும்.
பிம்பங்களின் நகர்வு ஒரு மாயையை மனதில் ஏற்படுத்தி விடுகிறது. இதனால் பார்வையாளர்கள் எவருமே நடைமுறைச் சாத்தியங்களைத் தள்ளிவைத்துவிட்டு பிம் பங்கள் ஊடே படம் பார்க்க அமர்கிறார்கள். பிம்பங்களின் தொகுப்பாகப் படங்கள் அமை வதால் கதைக்கருவோ சொல்லவரும் செய்தியோ முக்கியமற்றுப் போகிறது. பிம் பங்களின் வெற்றிகரமான தொகுப்பைப் பிர மாண்டமான அரங்க மற்றும் கலை அமைப் புகள், ஒளிப்பதிவுகள், திறமையான எடிட்
영
s
டிங் என்பன கச்சிதமாகச் செய்து முடிக் கின்றன. பிரமாண்டத்துடன் தொடங்கி பிர மாண்டத்துடன் முடியும்போது அது குறித்த கனவுகளோடேயே வெளியே வருகின்றான் ரசிகன். இதனால் தான் சினிமாவை ஒரு கனவுத் தொழிற்சாலை என்று சொன் 6OTT set.
குறியீட்டு வடிவிலான காட்சியமைவு கள், ஒருங்கிணைத்தல் பாணி என்பன எது வுமே இல்லாத, ஒரு விடயத்தைக்கூட பெரியதொரு விடயமாகக் காட்சிப்படுத்தி விடுகிறது சினிமா. தொடர்பே இல்லாத சண்டைக் காட்சிகளும் பாடல்களும் வெகு வாக ரசிக்கப்படுவதன் காரணம் இந்த பிம்பப் பாணியிலான காட்சி அமைப்பு முறைகளே. இதேவேளை பிம்ப நகர்வு என்ற பாணியை முற்றாக உடைத்தெறிந்து உருவாக்கப்பட்ட நல்ல திரைப்படங்கள் மா பெரும் தோல்விகளைச் சந்தித்திருக் கின்றன என்பதற்கு ஹேராமும், அன்பே சிவமும் சாட்சி. அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஆட்டோகிராப் படம்கூட ஒரு வகையிலான பிம்ப நகர்வு உத்தியே. இது ரசிகனது உள்மனது பிம்பங்கள் நிழ லாடலை காட்சிப்படுத்தியது.
சினிமா என்ற கலையை முழுவதுமாக நம்பி அதிலே காணப்படும் காட்சிகளையும், சொல்லப்படும் விடயங்களையும், பாத்திரப் படைப்புக்களையும் அப்படியே உள்வாங்கி அதைப் போலவே வாழ்க்கையும் இருக்கும் என நினைத்துக் கொண்டிருப்பவர்கள், நம்பிக்கொண்டிருப்பவர்கள் ஏராளம், ஆனால் ‘வாழ்க்கை சினிமாவாகலாம். சினிமா வாழ்க்கையாக முடியாது' என்பது தான் நாம் விரும்பாவிடினும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கசப்பான உண்மை.

இலக்கிய உலகில் மொழிபெயர்ப்பு ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட தாகும். தாய்மொழியில்லாத இதர மொழி வடிவங்களைத் தம் தாய்மொழிக்குப் பெயர்த்து மொழிபெயர்ப்பு என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மொழி பெயர்ப்பு தொல்காப்பியர் காலத்திலிருந்து அணுகப்பட்டதற்கான சான்றுகள் முன்மொழியப்பட்டுள்ளன.
لحقوقك نك – لدm16 وG** കുമ് அமிழ்தம்” - தமிழில் ஹென்றி இப்சன் கவிதைகள் -
- எல்.வளிம் அக்ரம்
அறிவின் விசாலம் நீண்டு, மனிதத் தொடர்பை மாற்றியிருக்கும் இன்றைய உலகமயமாக்கல் (Globalaization) நிலையில், இலக்கியத்தின் கூறுகளும் பல்வேறு கோணங்களில் முகிழ்ந்த வண்ணமிருக்கின்றன. மனிதப் பண்பாடு செழித்து நிற்கும் போதே, மானுடம் நிறைந்த பூரண வாழ்வை எம்மால் அநுபவிக்கலாம். இதே இன்றைய தேவை.
இந்த வகையில் நோர்வே நாட்டு அறிஞர் ஹென்றி இப்சனின் கவிதைகளை நோர்வே - ல் இருந்து கவிதை அமிழ்தம்” எனத் தமிழில் திரு. அநு.வை.நாகராஜன் அவர்களும், கலாநிதி கணேசலிங்கம் அவர்களும் தொகுத்திருக்கின்றனர். இவ்விரு வரும் நாடறிந்த எழுத்தாளர்கள். இதில் அநு. வை.நாகராஜன் அவர்கள் இதுவரை 16 நூல்கள் வரை வெளியிட்டிருப்பவர். தேசியளவில் பல விருதுகளையும், பாராட்டுதல்களையும் பெற்றவர். மும்மொழி ஆளுமை நிறைந்தவர். இவ்வாறே, கலாநிதி கணேசலிங்கமும், பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர். ஆதீனப் புலவர். இவர்களின் ஆளுமைகளின் ஆளுகையில் இந்நூல் புலர்ந்திருக் கிறது. இதனைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தவர்கள் மரபிலக்கியமாகவே (Classical) தந்திருக்கின்றனர்.
இந்நூலானது ரோயல் நோர்வே அரசாங்கத்தின் நிதியுதவியால் (Founded by
Royal Norwegian Government) gavši GM55 LuGăTLJITLG) gCM LONGDGOT GLDGIDL யரங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

Page 7
ஹென்றி இப்சன்
இவர் 1828ஆம் ஆண்டு முதல் 1906ஆம் ஆண்டு வரை நோர்வேயில் வாழ்ந்தவர். இவர் பன்முக ஆளுமை மிக்கவர். இப்சன் கவிதையுலகில் மிக முக்கியமானவராக இருக்கிறார். இவ ரது படைப்புகள் தனித்துவ மானவை. தான் வாழ் சமூக, கலாசார விழுமியங் களை (நோர்வே) இவரது படைப்பு களில் அதிகம் நுகரலாம். மொழி வளம் பொங்கும் யதார்த்தமான படைப்பு களாக ஒவ்வொன்றும் இருக்கின்றன. இவர் 1875ஆம் ஆண்டிற்குப் பின்னரே தனது நாடகவியலுக்கான தனித்துவ மான உரைநடையைக் கொண்டு தடம் பதித்தார். அத்தோடு ஹென்றி இப்சன் ஓர் ஓவியராகவும் விளங்கினார். ஆனால் இவர் என்றும் கவிதை உலகி லேயே தொடர்ந்து பேசப்பட்டவ ரானார்.
ஹென்றி இப்சனின் ஆரம்பகால கவிதைகள் அங்கதச் சுவையானதாகவே இருந்ததாயினும், பிற்பட்ட காலங்களில் அக்கவிதைகளில் காத்திரம் விரவியி ருந்தது. இதனை இவரின் 1848, 49, 50களில் பல்வேறு கவிதைகள்’ எனும் நூல் பறைசாற்றி நிற்கிறது. இவரின் கவிதை வளம் 'நோர்வே - ல் இருந்து கவிதை அமிழ்தம்" கவிதைகளுக் கூடாகவும் புலனாகிறது. மொழிபெயர்ப்பில் கவிதை மொழி பெயர்ப்புச் சற்றுச் சிக்கலானதாயினும்,
என்ற நூலின்
தொகுப்பாளர்கள் தமதான பணியில் மிக நுணுக்கமாகப் பேணி நிற்கின்றனர்.
10
g
இப்சனின் கவிதை ஆளுமையை
இந்நூலில் இருந்து நோக்கலாம். அதற்கு யான் பின்வரும் கவிதையை உதாரணமாக அடிக்கோடிடுகிறேன்.
Gflau5ci) - (Resignation) உயிரின் ஒளிக்கீற்று ஆழியிருளில் கனன்று
தோன்றிச் சினந்து சின்னாபின்னமாகி
மின்னல் ஒளியாய் முன்னெடுத்து ஒளிர்ந்து நினைவுக்கெட்டா நிகழ்வின் பிறப்பா? எல்லாம் வீணாகி என்னெதிர் பார்ப்புகளும் புலராக் கனவின் புகையின் பூச்சியமாயின. உயிரின் ஊக்கியாக உருவாக வில்லை, குளிரென் னுளடங்கிக் குறுகிட வைத்ததே என்னால் அதனை ஏற்காது விடின் தேசங்களில் யானே சுருண்டு நினைவில் மறந்து நீள் முடிவிலடைவேனே
இக்கவிதை தவிர, இன்னும் பல கருத்தாழ, கவிதை வீச்சான கவிதை களும் இந்நூலில் உள்வாங்கப்பட்டிருக் கின்றமை குறிப்பிடத்தக்கது. அதில் gal)augi staggai (In Autumn), இடுக்கணில் உதவும் சகோதரன் (A Brother in need), gli gLi stra (A Leg pul), அழிவுகளுக் கிடையில் (Mid the Ruins). Graf Lualapapé சுட்டலாம்.

அம்மன் கோபம் அருணகிரிக்குப் பிடிக்கவே பிடிக்காது. மழையோ பனியோ குளிரோ விடிந்து வெளிச்சக் கீறல் பரவுமுன் குளிச்சுத் தோய்ஞ்சு கறுத்து நீளும் முடியின் நீரையும் வடித்து அநுட்டானம் பார்த்து ஈசான திசையை நோக்கி சிரசே நமவென்று உச்சரிக்காமல் விட்டதேயில்லை. பள்ளிப் படிப்பை விட்டு விட்டு சமஸ்கிருத தேவ - பாஷையில் மந்திரங்களை மனப்பாடமாக்கி குலத்தொழில் விருத்தியில் இலயித்துப் போனான். ஒரே மூச்சில் பல்வகைப் பூசைகளுக்குத் தக்க மந்திர வகை பிசகாது சொல்கிற வித்தை கண்ட கிழடு தட்டிய பிராமணர் மூக்கில் விரலை வைத்து வியப்பதுண்டு. கட்டித் தயிரில் சுத்தமான பசு நெய்யில் புலால் மறுத்த தேகமும் தேஜஸஅம் பக்திமான்களை ஏகோபித்த புரோகித வல்லவன் நிலைப்பாட்டில் நிலை நிறுத்தத் தக்கவன் என்ற முடிவுக்கும் இட்டு வைத்து கண்சிமிட்டிக் காட்டியது.
சரிகைப் பட்டு வேட்டி ஐந்தாறு
தவிர உடுப்பு உருப்படிகள் என்று
அவன் சொல்லிக் கொள்ளுவதற்கு
வேறு ஒன்றுமில்லை. பித்தளைப் பாத்தி
ரங்கள் செம்புகள் எல்லாமே கோவில்
பூசைக்கானவை. தட்டங்களும் குத்து للاوامل
விளக்குகளும் சிலவேளைகளில் மூலஸ்
தானம் நாடி வருகிறதும் மீண்டும்
போகிறதும் மாறி மாறியே நடந்தேறு
ரரீஸ்வரி கிறது. அருணகிரியோடு ஒட்டிப்
பிறந்தவை இவை மாத்திரமேதான்.
உடன்பிறப்புகளின் பாசம் பற்றி அவன்
அறிந்ததே கிடையாது. உலைக்கால
சுதந்திரராஜா பூசை வேளையில் கோவிலுள் கால்
பதித்தால் சுறுசுறுப்புக்குக் குறையாது.
பூட்டும் வரையுமே சுழன்றடிப்பான். வேறு குறுகலான விவகாரங்களோ விரிசலான
உலகமோ அவனறியான். வெற்றிலைத் தட்டத்திலே உபயகாரர் வைக்கிற தட்சணை
எதுவாயிருந்தாலும் பயபக்தி பரவிட மடியில் செருகி வைக்கிறதே அன்றாடச்
செயல். வைது முணுமுணுப்பது கிடையாது. போதாது என்று பேரம் அபச்சாரம் காட்டியதும் கிடையாது.
அருச்சனை செய்திட வந்தவர் நட்சத்திரங்களை மறந்தாலும் அருணகிரி
அறிவான். வந்தவர் விசனப்பட்டதேயில்லை. நட்சத்திரத்தைச் சிக்கலின்றியே
அவனே சொல்லி ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போகச் செய்வான். சிறுகுடுமி
அவனுக்கான கொள்ளையழகு. தேக்குமரத்து ஜொலிப்பில் தேகமிருக்கிறது 11

Page 8
அருணகிரிக்கு. பூநூல் ஒட்டியபடி தோளுமிருக்கிறது.
வீட்டிலே அருணகிரிக்கு உதவியும் ஒத்தாசையும் அவனைப் பெற்றவள் ஒருத்தியேதான். அன்னபூரணியம்மா என்றால் அக்கம் பக்கத்தவர் ஏதோ அமுதசுரபி என்ற சொல்லைக் கேட்டது மாதிரியும் அமுதப் பொங்கலை சுடச்சுட
விழுங்கியது மாதிரியும் வியப்பார்கள்.
மஞ்சள் - மிளகாய் - உப்புப் பொடி, மிளகுத்தூள் இப்படி அவர்கள் கேட் கின்ற போதெல்லாம் சளைக்காமலேயே திருப்பி வருகிறதோ வராதோ தெரி யாமலே தாயின் பரிவுடன் கொடுத் திடுவாள். தட்சணைச் சில்லறை சேரு
கின்றதோ இல்லையோ அருணகிரிக்கு .
நிறைவான பண்டங்கள், மடப்பள்ளிக் குப் பொரியல். மோதகம். மிகச் சிறுத்த கடலை வடைகள் போட்டுத் தருவதி லேயே வல்லவளாயுமிருந்தாள். மதகு ஒரத்தில் மாலைகளில் அவளைக் காணக் கூடும். உருவத்திலும் உள்ளகத்திலும் அருணகிரியை விட்டு மாற்றிடலாம்.
அட்டுழிய நிஷ்ட்டுரத்தின் நீட்சியில் ஐ.பி.கே.எப். அல்லாடி உப்புமடத்து அய்யரின் வீட்டைச் சிதிலமடையச் செய்து தரைமட்ட அளவில் இடித்தும் அத்திவாரமே வெளித்தெரியாதபடியும் செய்திருந்தால் அன்னபூரணி அம்மாள் மதகு வரை வந்து அருணகிரி கோயி லால் வருவதைப் பார்த்தபடி இருப் பாள். அருணகிரி வெளியே தனது சயிக் கிளை எடுத்துச் சென்றாலும் கூட வந்து
மதகு விளிம்போடு நின்றபடியே போய்
அவன் மறைகின்றதையே பார்த்திருப்
பாள். உயிர் அப்படி ஒட்டி ஊசலாடி
அவளைப் புடம் போட்டிருந்தது.
நெருப்பை நெஞ்சோடு புதைத்தே வைத்
திருந்தது.
கோயிலை ஒட்டிய குளத்து வெளி
யில் புற்றரை தெரிகின்ற காண்டைச்
செடிகளிடை மறைந்திருந்தவாறே ரோட்
டோர மதகுப் பக்கத்திலே மண் சுவி ரெழுப்பிய ஐ.பி.கே.எப். முகாம் எறி கணைகள் கொண்டே பலமாகத் தகர்க் கப்பட்டிருந்தது. இரவோடிரவாக இடி விழுந்த அதிர்வில் சுற்றாடலே அல் லோலகல்லோலப்பட்டது. முகாமுக்குள் பல சடலங்கள் நாதியற்றுக் கிடந்தன. எவருமே தப்பியிருக்கிற படையினராகத் தெரியவேயில்லை.
வேற்று முகாம்களுக்கு இது பற்றிய சேதி பரவி ஏழெட்டு டிரக்கு களில் படையினர் வந்து சேர்ந்து முழுச் சுற்றாடலையும் சல்லடை போட்டபடி இல்லாத எதனையோ தேடிச் சலித்துக் கொண்டனர். உத்தியோக பூர்வமற்ற ஊரடங்குச் சட்டமே பிறப்பிக்கப் பட்டது. ஈ, காக்கை கூடத் தெருவில் தென்படுவதாயில்லை. மயான அமைதி யில் அம்மன் கோயில் கோபுரவாசல் வரை நீட்டிய ரைபிளோடு மராத்திக்கார ராணுவத்தினர் மூவர் வந்தனர்.
கோபுரத்தோடு சாத்தப்பட்டபடி ஒரேயொரு பழஞ் சயிக்கிள் அவர்கள் கவனத்தை ஈர்த்தெடுத்தது. வேறு ஆள
ரவம் கிடையாது. கோபுரத்துக்கும் கதவு
கள் ஏதும் கிடையாது. திறந்தேயிருந்தது பாதை. மூவரின் சந்தேகம் வலுத்து எறிகணை எய்த வரைப் பிடித்துக்

கொண்ட களிப்பில் முகம் மலர்ந்தது. முகாமைத் தாக்கியவன் தான் கோயி லுக்குள் மறைந்திருப்பதாக யூகித்தனர். போட்டிருந்த பூட்ஸுஜூகளோடும் தடிப் பான யூனிபோமோடும் நுழைந்தனர்.
இந்துக்கள் அல்லாதவர் உள்ளே நுழையக்கூடாது என்கின்ற வாசகத்தை பார்த்துப் பழகிப் போன மராத்திக்காரர் மூவருமே தத்தமது பூட்ஸ9களோடு
கர்ப்பக் கிரகம் வரை நீட்டிய றைபி
ளோடு நோட்டமடித்துத் தேடினர். அமைதி ஆட்கொண்டது. தரை மண்ணில் பூட்ஸுஜூகள் ஒலியெழுப்பக் கூடுமான தாயில்லை. வேறு எவருமே பிரகாரத்தில் தென்படுவதாயில்லை.
சண்டேஸ்வரப் பெருமானின் மஞ்சள் நிறத்துச் சால்வையை விலக்கி குடத்துத் தண்ணீரால் குளிப்பாட்டி அருணகிரி நித்திய கரும விதியை முடிக்க முனைந்த போது மராத்திக்காரன் கண்டு பிடித்தே விட்டான். ஆளகப் பட்டான். அருணகிரி திரும்பவில்லை.
வருந்துகின்றோம். நெருக்கடியான காலகட்டங்களில் எல்லாம் எம்மைப் புரிந்து கொண்டு மல்லிகையின் வளர்ச்சிக்கு மனமார உதவி வருபவரான WAHLS கே.எஸ்.மணியம் அவர் களினது தந்தையார் இளவாலையூர் கதிரேசு அவர்கள் சமீபத்தில் காலமாகி விட்டார்கள். அவரது இழப்பால் கடும் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும் இன - சன மக்கள் அனைவருக்கும் மல்லிகை தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றது.
13
- ஆசிரியர்
ஆசிரியர்)
சன்னம் முதுகுப்புறத்தால் துளை யிட்டது.
அம்மன் நிஜவுருவம் எடுத்துக் கண் ணிலே பெருங்கோபம் கொப்பளிக்கச் சாய்வது போலவே அருணகிரி சண்டேஸ் வரப் பெருமான் மேல் சரிந்து குனிந்து விழுந்தான். கையிலிருந்த குடம் கோர ஒலியெழுப்பி அவனோடு விழுந்து உருண்டு சிதறியது.
குங்குமத்தைத் தட்டத்திலிருந்து எடுத்து நெற்றியில் இட்டபடியே கோயி லுள் பிண - வாடையே பரவிட முன் வெளிவந்தனர். அனாதரவான சயிக் கிளைத் தாண்டிச் சென்றனர். சர்வரோக நிவாரணியே போல் அவர்கள் கைகளில் ஆட்கொல்லிச் சாதனம் அப்படியே தெரிந்தது.
ஊரடங்குச் சட்டம் அந்த மணித்தி யாலத்தில் விலக்கப்படலாம் என்பதறிய கிழட்டு நாய் வேலி தாண்டி வந்து அவர் களைப் பார்த்துக் குரைத்துத் தீர்த்தது.

Page 9
6
என் பாகங்களை வெட்டி குருதி சேர்த்து குடிக்கத் தருகிறேன் பார்வையால் பருகு.
ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் முண்டங்களையும் தலைகளையும் ஒன்றாகக் குவித்துக் கொற்றவைக்கு கூழ் காய்ச்சு
இரத்த வாடையை அனுபவித்து நுகர்ந்து பார்
இடறிவிழுந்த மனிதத்தை ஆழப்புதைத்து விடு இடையிடையே தலைகாட்டி நீதி கேட்கும் ஆத்மாவை அழுந்த மிதித்துத் தூக்கிலிடு
அகிம்சை அர்த்தமற்றுப் போகட்டும்.
விவிலியத்தை வீசிவிடு குர்ஆனுடன் பகவத்கீதையைத் தலைகீழாய்த் திருப்பிப் பிடி மழலைகளின் குரல்வளை நெரித்து குதுாகலப்படு.
ஆறாவது அறிவு
14
- பிரமிளா செல்வராஜா
፲O O
Y
 

ஆயுத இறக்குமதியை அதிகரித்து ஆளுக்கொன்றாய் விநியோகம் செய்
வெட்டிக் கொள்வோம்.
என்னை நீயும் உன்னை நானுமாய் வெட்டிக் கொல்வோம்
கொத்திக் குதறிப் போடுவோம் சுட்டுத் துளையிடுவோம்
ஒரு விந்துவேனும் மிஞ்சி விடாமல் தேடித் தேடித் துவம்சம் செய்
வேதனைகளின் வெளிக்கிளம்பல்களைச் சாமர்த்தியமாய்த் தணிக்கை செய்
விட்டு விட்டு
உயிர் வதைக்கும் இடைவெளிகள் வேண்டாம் மொத்தமாய் மானுடத்தை அழித்துப் பஸ்பமாக்கித் தின்றுவிடு
p — 6бт நீச வேட்கை நிறைவேறட்டும்.
i
15
மாட்சியுடன் புன்னகை செய்
மூன்றாம் உலக யுத்தத்தின் முதல் வீரன் நானென்று மார்தட்டி முழக்கமிடு
கலியுகம் கதிகலங்கிப் போகட்டும் முழுவதுமாய் அழிந்து வீழட்டும்
ஒ மானிடனே.
ஒரு பிரளயத்தின் அத்திவாரமாகிப் பஞ்சபூதங்களையே மிஞ்சி விட்டாய்
சந்தேகமேயில்லை - நீ சாதனையாளன்தான்
ஆனால்.
உன் வரலாற்று வடுக்களையும் " ரணத் தழும்புகளையும் தயவுசெய்து அழைத்துப் போ தடமேயின்றி அழித்துப் போ
அடுத்த யுகத்திலாவது ஆறாவதறிவு அரசாட்சி செய்யட்டும்.

Page 10
நான் சயிக்கிலில் ஏறி வெளியே புறப்பட்ட போது அம்மா சொன்னா, “ராத்திரி உன்ர பெரியய்யா அக்கா வீட்டிற்கு வந்து விட்டாராம்."
"sysom b?”
அம்மா என்னை வியப்புடன் பார்த்தாள். பார்வையில் ஏளனமும் தொனித்தது.
"இனி அங்கதான் இருக்கப் போறாராம். கடைசி காலத்தில இருக்க இடமில்லாமல் அங்க வந்திருக்கிறார். பிள்ளை குட்டியில்லாத மனிசன். வேறை எங்கை போறது?"
"ஏன் இங்க வந்திருக்கலாந்தானே? தம்பியிட்ட வராமல் ஏன் அங்கை போனவர்?
எனது கேள்வி அம்மாவைச் சங்கடப்படுத்தியிருக்க வேண்டும். முற்றத்தை விளக்குமாறால் கூட்டியவாறு தலையைக் குனிந்து கொண்டா. பின்னர் தடி விளக்குமாறைக் கிளுவையில் சார்த்திவிட்டுச் சொன்னா,
"ராத்திரி இங்க தான் முதலில் வந்தார். நீ அப்ப நித்திரை. தனது பழைய றங்குப்பெட்டியைத் தலையில் சுமந்து கொண்டு. ஐயா கடையால திரும்புற நேரம் பார்த்து வந்து நின்றார். அவரை ஐயா எதிர்பார்க்கவில்லை. ஏன் இங்க வந்தியள்? கைதடி வயோதிபர் மடத்திற்குப் போக வேண்டியதுதானே? என்று முகத்தில் அடிச்ச மாதிரி சொல்லிவிட்டுக் கிணற்றடிக்குப் போய்விட்டார். ‘அப்ப நான் பெரியவளிடம் போறன்" என்றபடி வெளியே சென்றார். போகேக்க விழிகளில் கண்ணிர் சொரிந்ததைப் பார்த்தன். ஐயாவிற்கு மாறாக நான் எப்படி அவரை மறிக்கிறது?
ஐயாவிடம் காரணம் கேட்க வேணும். கூடப்பிறந்த தமையனை ஈவிரக்கமின்றி இராத்திரியில் திருப்பி அனுப்ப எப்படி மனம் வந்ததென்று? ஐயா அப்படியொன்றும் இரக்கமில்லாதவராக எனக்குப் படவில்லை. அவருடைய தங்கச்சி பாக்கியத்திடம் மிக அன்பாக இருப்பது எனக்குத் தெரியாததல்ல. அடிக்கடி அளவெட்டிக்குச் சென்று மாமியைப் பார்த்து வருவதும் எனக்குத் தெரியும்.
O பெரியய்யா மெலிந்த உயர்ந்த uெfஸ்ய்யாவின் தேகவாகு கொண்டவர். முன் நெற்றி முன் தலை வழுக்கை வரை ஏறியிருக்கும்.
பிடரியில் பிறை வடிவில் கிடக்கும் நரை
(ss) (ծÙ6)Usգ י% , மயிர் தோள் வரை தொங்கும். அவருடைய
மனைவி காலமாகிய பின்னர்
- செங்கை ஆழியான் சுண்டுக்குழியில் தனியனாக வாழ்ந்து வந்தார். சின்னக்கடையில் அவருக்கு ஒரு
வியாபார இடம் இருந்தது. நிலத்தில் சாக்கு
16

விரித்து அதில் அமர்ந்து, சாக்கில் சுருட்டி வைத்திருக்கும் தீன் புகையிலை, சுருட்டுப் புகையிலை வியாபாரம் செய்து வந்தார். அதில் வருகின்ற வருமானம் அவருக்குப் போதுமானதாக இருந்தது. பெரும்பாலும் தேநீர்க் கடைகளில் இரண்டு நேரம் அவர் சாப்பிட்டு வந்ததைக் கண்டிருக்கிறேன்.
என்னிடம் அவருக்கு மிகுந்த வாரப் பாடு இருந்தது. தின் அரங்குகளில் ஏதா வது பழைய திரைப்படம் திரையிடப் பட்டால் கலரியில் அமர்ந்து பார்ப்பதற்கு முப்பத்தைந்து சதங்கள் வாங்குவதற்காகச் சிலவேளைகளில் அவரிடம் சென்றிருக் கிறேன். முகம் சுழிக்காமல் சாக்கின் மடிப் பிலிருந்து எடுத்துத் தருவார். அத்துடன் கூடவே ஐந்து சதம் செல்லையா கடைப் பொரிகடலையில் வாங்குவதற்காகத் தருவார்.
வாடிக்கையாளருக்கு அவர் புகை யிலை விற்பது ஒரு தனி அழகு. அவர் அருகில் அமர்ந்து அவர் புகையிலை விற் பதை அவதானிப்பேன். ஒவ்வொரு விலை யில் புகையிலை சாக்கில் முடிச்சுடன் இருக்கும். வாடிக்கையாளர் விரும்பும் புகையிலையை விரித்துக் காட்டி முடிச் சினை அவிழ்த்து நீக்கி அல்லது முடிச்சி லிருந்து கிள்ளி எடுத்து பின்னர் மடித்து, புகையிலை நுனியால் மடித்த புகையிலை யின் வண்டியில் சுற்றி ஒரு கட்டிட்டு வழங்குவார். பத்துச் சதப் பெறுமானத்தி லிருந்து மூன்று ரூபா வரை அவரிடம் புகையிலைகள் இருந்தன.
பெரியய்யாவின் மடியில் சுருட்டி வைத்திருக்கும் புகையிலை நடுத்தரத்
17
தெரிவாக இருக்கும், காப்பிலை வார்ந்து உள்ளிலை வைத்துத் தானே தனது கை யால் சுருட்டிய சுருட்டைத் தான் பற்ற வைப்பார். ஐயாவிடமும் இந்தப் பழக்கம் இருந்தது.
சின்னக்கடையில் அமர்ந்து வியா பாரம் செய்ய முடியாது என்ற உடல் நிலை தளர்ந்து வந்ததும் தன் றங்குப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு பெரியக்காவிடம் அடைக்கலந் தேடி வந்துவிட்டார்.
“பெரியய்யாவைப் பார்த்திட்டு வாறன்
9lbuDrt.”
அக்காவின் வீட்டிற்கு நான் வந்த போது முன் விறாந்தைத் திண்ணையில் பெரியய்யா கவலையுடன் அமர்ந்திருந்தார். ஒரு பக்கத்தில் அவருடைய கறள் பிடித்த றங்குப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் என்ன இருக்கும்?
என்னைப் பார்த்ததும் சிரித்தார். அச் சிரிப்பில் ஏராளமான சங்கதிகள் அடங்கியி ருந்தன. உலகத்தின் துயரங்கள் அனைத் தையும் தேக்கி வைத்திருப்பது போன்று அவர் கண்கள் எனக்குப்பட்டன. எதிரியால் துரத்தப்பட்டு அடைக்கலம் புகுந்த புறாக் குஞ்சு போல அவர் அமர்ந்திருந்தார். தன் எதிர்காலம் குறித்து அவர் கவல்வது போலப்பட்டது. கடைசி காலத்தில் அவரைப் பராமரிக்க மனைவி, மக்கள் என்று எவரும் இல்லை. உறவென்று நம்பி வந்த தம்பியும் அவரை ஏற்கவில்லை.
ஐயாவிடம் கேட்க
வேண்டும். அப்படி மன்னிக்க முடியாத ஒரு
காரணம்

Page 11
காரியத்தையும் இந்த அப்பாவி மனிதன் செய்திருக்க மாட்டார். s
அக்கா தட்டொன்றில் தோசைகளை ஏந்தி வந்து பெரியய்யாவிடம் நீட்டினா. அதனைக் கை நீட்டி வாங்கிக் கொண்ட பெரியய்யா, 'எனக்கிந்த திண்ணை போதும் பிள்ளை. இந்த றங்குப் பெட்டியை மட்டும் உள்ள கவனமாக அறைக்குள்ள எடுத்து வை’ என்றார். பெரியக்கா றங்குப் பெட்டியைத் தூக்கிய போது அப்பெட்டி பலமான ஆமப் பூட்டொன்றால் பூட்டப் பட்டிருந்ததைக் கவனித்தேன். என்ன அப்படி இரகசியங்களைப் பூட்டி வைத் திருக்கிறாரோ?
'பெரியய்யா, நீங்க ஒண்டுக்கும் கவலைப்பட இருக்கிறம்."
வேண்டாம். நாங்க
என் வார்த்தைகளால் அவர் விழி களும் முகமும் பிரகாசித்தன.
“ஏதோ அவன் தம்பியைக் கொண்டு கொள்ளி போடுவித்து அனுப்பி வைச்சால் இந்த நெஞ்சு வேகும், ராசா." என் மனதில் வலி எடுத்தது நினைவு வருகிறது.
6Trease நாளாந்தப் பேச்சில் பெரி யய்யாவின் றங்குப் பெட்டி அடிக்கடி அகப் பட்டுக் கொண்டது.
"அதில் என்ன இருக்கப் போகிறது?
ஒன்றிரண்டு வேட்டி சால்வை இருக்கும்." இது கடைசி அக்கா.
"பெரியம்மா பணக்கார இடத்துப் பெண்ணாம். அளவெட்டி மாமி சொன்னவ.
அவவின்ர நகை நட்டுகள் றங்குப் பெட்டி யில இருக்கும்." இது சின்னக்கா.
"இவ்வளவு காலமும் உழைச்சதில மிச்சம் இல்லாதிருக்குமே? கடைசி காலத் தில உதவுமெனக் கொண்டு வந்திருப்பார். அவரின்ர செத்த வீட்டிற்கென வைச்சிருப் பார். ஒருத்தரையும் கடமைப்பட வைக்க LOmul-srff." SPg StibLDT.
'உதுகளுக்காகத்தான் பெரியக்க அவரை வாரப்பாடாகப் பார்க்கிற போல." என்றா சின்னக்கா. அப்பொழுது பெரியக் காவிற்கு வந்த கோபத்தைப் போல நான் எப்பொழுதும் கண்டதில்லை.
"நீங்கள் என்ன வேணுமென்றாலும் கதையுங்கோ. உதுக்கெல்லாம் ஆசைப் பட்டு பெரியய்யாவை நான் ஏற்கவில்லை. அந்த மனிசன் என்ர கலியாணத்தில எங்களை வாழ்த்தி ஒரு பத்து ரூபாதானும் தந்தது கிடையாது" என்றா பெரியக்கா கோபத்துடன்.
"அப்ப ஐயாவின்ர அண்ணை என்றதுக்காக பாக்கிறியாக்கும்.”
"அதுக்குமில்லை. கடைசி காலத்தில எங்களைத் தேடி அடைக்கலம் புகுந்த ஒரு வயது போன மனிசன் என்றதுக்காகத் தான் நானும் அவரும் பெரியய்யாவை ஏற்றம். அவர் றங்குப் பெட்டியில ஏதோ அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் என்றால் சொல்லுங்கோ. சிவசத்தியமாச் சொல்லுறன். அவர் செத்த பிறகு அந்த றங்குப் பெட்டியை அப்படியே உங்களிட்ட தூக்கித் தந்து விடுகிறன். அதில ஒரு சதம் கூட எங்களுக்கு வேண்டாம்."
ия

அக்கா சென்றுவிட்டா.
கோபத்துடன் எழுந்து
றங்குப் பெட்டி இரகசியத்தை அறிவ தில் எனக்கும் ஆசையிருந்தது. அக்கா விடம் கேட்டும் பார்த்தேன்.
"குளித்துவிட்டு வேட்டி மாத்துவ தெண்டால் அதைத் திறப்பார். பிறகு பூட்டி விடுவார். அதுக்குள்ள என்ன இருக் கெண்டு ஆருக்குத் தெரியும். அதில ஆருக்குக் கவலை?"
அத்தானுடைய குறைந்த வருமானத் தில் மேலதிகமாக இன்னொருவருக்குச் சாப்பாடு வழங்குவது அக்காவைப் பொறுத் தளவில் சிரமமான காரியம். ஆனால் அதற்காக அக்கா முகம் சுழித்ததை நான் காணவில்லை.
ஒருநாள். சனிக்கிழமை. ஆசை அண் னரைக் கடையைப் பார்த்துக் கொள்ள விட்டுவிட்டு, எண்ணெய் முழுக்கிற்காக ஐயா வீட்டிலிருந்தார். என்னை அழைத் தார். ஏதாவது தினசரி வாங்கி வந்திருப் பார். அதனை என்னை வாசிக்கச் சொல்லி விட்டு, அப்படியே கண்களை மூடிப்படுத் திருப்பார்.
நான் அவரிடம் சென்றபோது பேப் பரில் சுருட்டிக் கட்டிய புகையிலைச் சரையை என்னிடம் கொடுத்தார். தாவடிச் சுருட்ருப் புகையிலைக் காம்புகள் வெளித் தெரிந்தன.
"இதைக் கொண்டுபோய் பெரியய்யா விடம் கொடுத்துவிட்டு வா. ரெண்டு நாளா அந்த மனிசன் சுருட்டுக் குடிக்கவில்லை யாம்." ஐயாவை எனக்குப் புரியவில்லை.
19
"ஏன் அவருக்குக் கொடுக்கிறியள்? உங்களுக்குத்தான் அவரைக் கண்டாலே பிடிக்காதே?
ஐயா என்னை ஆழமாகப் பார்த்தார்.
"உனக்கிதை ஆர் சொன்னது?"
'ஆர் சொல்ல வேணும் ஐயா. நீங்க தான் பெரியய்யா இங்கு இருக்க வந்ததும் துரத்தி விட்டியளாம். ஏன் அப்படிச் செய் தியள்? அண்ணன் என்று ஒரு இரக்கம் இருக்க வேண்டாமே? பாவம் ஒருத்தரு மில்லாத அனாதை."
ஐயா மெளனமாக இருந்தார். விழிகள் எங்கோ தூரத்தில் நிலைத்தன.
'அந்த மனிசன் அவற்றை ஆரம் பத்தில் யோசித்து நடந்திருக்க வேணும். உனக்குத் தெரியாது. விளங்காது. நீ சின்னப்பிள்ளை. எங்க குடும்பத்தைப் பார்க்க வேண்டிய அவர் சின்ன வயதில வலு சோக்காளி. ஆச்சி அப்புவின்ர சொல் வழி கேக்க மாட்டார். அப்பு தடுக்கத் தடுக் கக் கொண்டையை வெட்டி சிலுப்பா வைச்சுக் கொண்டார். கொண்டையை
G6JL'usomrG3L omr?”
ஐயா கொண்டை வைத்திருந்தார். நீண்ட தலைமயிர்.
"நாங்க சீவிக்கிறதுக்குக் கஷ்டப்பட் டோம். அப்புவின்ர உழைப்புப் போத வில்லை. படிப்பை இடை நடுவில் குழப்பிக் கொண்டு நானும் அப்புவுடன் வால் சுத்துக் கட்டப் போனன். படிப்பு எவ்வளவு முக் கியம் தெரியுமே? நீ நல்லாப் படிக்க வேணும். பெரிய உத்தியோகம் பார்க்க வேணும்."

Page 12
'சரி சொல்லுங்கோ."
"அவர் ஊதாரியாகத் திரிந்தார். உழைக்கிறதில ஒரு சதம் வீட்டிற்குக் கொடுக்கிறதில்லை. தங்கச்சி கலியாணம் கட்டாமல் இருக்கத் தக்கதாக ஒருநாள் அம்மாவின்ர கழுத்துச் சங்கிலியைக் களவா எடுத்துக் கொண்டோடியதோடு, தன் எண்ணப்படி ஒருத்தியைத் தொடுத் துக் கொண்டார். அம்மா அவர்களைச் சேர்க்கவில்லை."
"பெரியம்மா நல்ல பணக்காரியாமே?”
"ஒமோம். அவவின்ர வீட்டுக்காரரும் அவர்களை முதலில ஏற்கவில்லை, பின்னர் ஏற்றுக் கொண்டினம். பெரியய்யா விற்குக் கடையும் போட்டுக் கொடுத்தினம். நல்ல வசதியாக வாழ்ந்தார். ஆச்சி கடும் சுகயினமுற்றா. அவவை ஒருக்காக்கூட வந்து பார்க்கவில்லை. சாகேக்கையும் பெரியாம்பி. பெரியாம்பி என்று பிசத்திய படி அவ செத்துப் போனா, உன் பெரியய்யா அவ செத்த வீட்டிற்கும் வரவில்லை. ‘எங்களை வீட்டை விட்டுத் துரத்திவிட்ட அவவின் சவத்திலும் முழிக்க மாட்டன்’ என்று சொல்லி அனுப்பினார். இரண்டு வரியத்துக்குப் பின்னர் அப்பு செத்த போதும் வந்து உரிமைக் கொள்ளி போட வில்லை. என்ன மனிசன்? ரெண்டு காசு சேர்ந்து வசதிகள் வந்ததும் சொந்த பந்தங்களை மறந்திட்டார். இப்ப எல்லாம் அடங்கினதும் இங்க வந்திருக்கிறார்." ஐயாவின் கண்கள் கலங்கியதை அன்று தான் கண்டேன்.
'நீங்கள் அந்தாளோட கொண்
டாடுங்கோ. நான் தடுக்கவில்லை.
20
என்னால அந்த மனிசனை மன்னிக்க முடியவில்லை."
ஐயா கூறியவற்றினைக் கேட்ட எனக்கும் பெரியய்யா மீது கோபமாகத் தான் இருந்தது. தாய் தந்தையின் இறுதிச் சடங்கிலும் கலந்து கொள்ளவில்லை என்பதைக் கேட்கக் கோபமாக வந்தது. ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பதற்கு விடை எனக்குக் கிடைக்கவில்லை. இப் படியும் இருக்கிறார்கள் என்ற எண்ணமே வந்தது.
ஐயா ஆரம்பத்தில் பெரியய்யா மீது காட்டிய வெறுப்பு பின்னர் இருக்கவில்லை. அவருக்குத் தேவையானவற்றினை வாங்கி என் மூலம் அனுப்பி வைத்தார். காலத்திற்குக் காலம் புகையிலை, வெற் றிலை எனக் கொண்டு சென்று கொடுப் பேன். இப்போதெல்லாம் சில வேளை களில் பெரியய்யாவே தம்பியிடம் தனக்கு வேண்டியவற்றினை என் மூலம் சொல்லி வாங்கி வரும்படி கேட்கின்ற நிலை வந்தது.
ஒருநாள் இரவு மாரிமழை கடுமையாகப் பெய்து கொண்டிருந்த வேளையில் பெரி யய்யா காலமானதாகச் செய்தி வந்தது. நாங்கள் அக்கா வீட்டிற்கு ஓடிச் சென்றோம். வளர்த்தி
பெரியய்யாவை வாங்கில்
யிருந்தார்கள்.
இறுதிச் சடங்குகள் நிறைவேறிச் சடலப் பெட்டியை மூடுந் தருணத்தில் பெரி யக்கா ஐயாவிடம் சொன்னா, “றங்குப் பெட்டிக் குள்ள பெரியம்மாவிற்கு தான் முதன் முதல் வாங்கிக் கொடுத்த கூறைச் சேலை இருக்கு தாம். அதையும் தன் சிதையோடு வைத்து எரித்து விடட்டாம்." 9

பல வருடங்களுக்கு முன்பு - நானும் மல்லிகை ஜீவாவும் - பாமன்கடையில் அப்பொழுது வசித்துக் கொண்டிருந்த "சுந்தா சுந்தரலிங்கம் அவர்களைப் பார்க்க ஒரு மாலை வேளையில் சென்றோம்.
அங்கு சுந்தா எம்மிடம் காண்பித்த சில ஒளிப்படங்களில் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. சற்று வித்தியாசமான படம். சுந்தா தவில் வித்துவானாகவும், பரராஜசிங்கம் நாதஸ்வரக் கலைஞராகவும், இருவருக்கும் மத்தியில் தீட்சண்யமான கண்களுடன் ஒருவர் தாளம் தட்டியவாறும் காணப்பட்டனர்.
சுந்தாவிடம் கேட்டேன். "யார் இவர்? அவருடைய கண்களில் தீட்சண்யம் ஒளிர்கிறதே."
சுந்தாவை முந்திக்கொண்டு ஜீவா சொன்னார், "அவர்தான் சிட்டி. சிறந்த இலக்கிய விமர்சகர். சிட்டி புனைபெயர். இயற்பெயர் சுந்தரராஜன்."
பல ஆண்டுகாலமாக அயராமல் எழுதிக்கொண்டும், இலக்கியம் பேசிக் கொண்டு மிருந்த "சிட்டி தமது 95ஆவது வயதில் இறந்துவிட்டதாகத் தமக்கு 'மின்னஞ்சல்” கிடைத்துள்ளதாக - சிட்னியில் வதியும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் தொலை பேசியூடாக எனக்குத் தகவல் சொன்னார்.
எப்பொழுதுமே நகைச்சுவையுணர்வுடன் எழுதியும் பேசியும் வந்துள்ள சிட்டி, சில மாதங்களுக்கு முன்பு பராசக்திக்கு எழுதிய கடிதம் ஒன்றில், "க்யூவில் தம்முடன் நின்ற பலர் தமக்கு முன்பே போய்விட்டதாகவும், தான் இன்னமும் க்யூவிலேயே நின்றுகொண்டிருப்பதாகவும்” குறிப்பிட்டிருக்கிறார். வரவிருக்கும் மரணத்தையும் நகைச்சுவையுடன் நயக்கும் சிட்டி, தன்னை' am a Chronicler of Literature" என்றே அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பியவர்.
எனது வாழ்நாளில் "சிட்டி அவர் களை மூன்று தடவைதான் சந்தித்து உரை "சிட்டி’ சில நினைவுகள் யாடியிருக்கிறேன். 1984இல் சென்னை யில் 'தீபம்" காரியாலயத்தில் நடந்த இலக் O (6 O கியச் சந்திப்பிலும், அதே ஆண்டு மயி 95 Ց,6001 556 லாப்பூர் ராஜேஸ்வரி கல்யாண மண்ட பத்தில் இடம்பெற்ற "இலக்கிய வி சிந்தனை விழாவிலும் - பின்னர், 1990 d5U, 6) ஆம் ஆண்டு, அடையாறில் நண்பர் ரங்க நாதன் இல்லத்தின் மொட்டைமாடி நின்றவர் கீற்றுக் கொட்ட கையில் நடந்த "மல்லிகை 25வது ஆண்டு மலர் அறிமுக நிகழ்வுக் கூட்டத்திலும் சிட்டியுடன் பேசி - முருகபூபதி யிருக்கிறேன்.
21

Page 13
பச்சையப்பன் கல்லூரியில் சி.என். அண்ணாத்துரையின் சக மாணவ நண்ப னாகத் திகழ்ந்த சிட்டி, இலக்கிய உலகில் - வ.ரா., கு.ப.ரா., புதுமைப்பித்தன், சி. சு.செல்லப்பா, தி.ஜானகிராமன் உட்பட பல முன்னணிப் படைப்பாளிகளுடனும் இலங்கையர்களான சோ.சிவபாதசுந்தரம், "சுந்தா சுந்தரலிங்கம் ஆகியோருடன் நெருக்கமான நட்பை வளர்த்துக்
கொண்டவர்.
சுந்தா அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்த பின்பும் தமது தொடர்பை கடிதங்கள் மூலம் பேணியவர்.
மேலே குறிப்பிடப்பட்ட அனை வரும் சிட்டியுடன் "க்யூவில் நின்றவர்கள் தான். அனைவரும் முன்பே போய்விட,
இவர் சற்றுத்தாமதமாக 95 வயதில் அவர்
களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
சிட்டி குறிப்பிடும் ‘Chronicler'
என்ற ஆங்கிலப் பதத்திற்கு தமிழில் .
நிகழ்ச்சித் தொகுப்பாளர், வரலாற்றுப் பதிவாளர் என அர்த்தம் கொள்ளலாம்.
பல சிறுகதைகளும், நாடகங்களும், இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும், ஆய்வுகளும் எழுதியிருக்கும் சிட்டி தன்னை ஏன் அவ்வாறு அறிமுகப் படுத்திக் கொண்டார் என்பதை ஆராயப் புகும்பொழுது, கு.ப.ரா.வுடன் இணைந்து எழுதிய - பாரதியை ‘மகாகவி'யாக நிரூபிக்க முயலும் கட்டுரைகள் கொண்ட 'கண்ணன் என் கவி', தி.ஞானகிராம னுடன் இணைந்து எழுதிய நடந்தாய் வாழி காவேரி, சோ.சிவபாதசுந்தரத் துடன் இணைந்து, எழுதிய தமிழில் சிறு கதை, நாவல் வரலாற்று நூல்கள், பெ.சு. மணியுடன் இணைந்து எழுதிய அதிசயப்
22
பிறவி வ.ரா." என்பன நினைவுக்கு வரு கின்றன. அந்திமந்தாரை (சிறுகதைகள்) சில விஷயங்கள் (நகைச்சுவைக் கட்டுரை கள்) என்பனவும் எழுதியுள்ள சிட்டி தமது பலத்தையும் பலவீனத்தையும் வெளிப்படையாகச் சொன்னவர்.
"ஏன் இவ்வாறு, மற்றொருவருடன் இணைந்து சில முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறீர்கள்?’ என்று நாடகக் கலைஞரும், பொதுசன ஊடகவியலாளரு மான ஞாநி, சிட்டியிடம் கேட்ட பொழுது, “அதற்குக் காரணம் என் சோம் பல்தான். என்னால் பொறுமையாக உட் கார்ந்து நிறைய எழுத முடியாது. ஆனால் தகவல்களைத் திரட்டுவது, ஒழுங்கு படுத்திப் பிரிப்பது, பிறகு கோர்வைப் படுத்தி அதன் அடிப்படையில் "டிக்டேட்" செய்வது எல்லாம் எனக்குச் சுலபம்" எனச் சொல்லியிருக்கிறார். (ஆதாரம் சுப மங்களா நேர்காணல் - மே - 1992)
புதுமைப்பித்தனின் சில கதைகள் குறித்து இவர் சொன்ன கருத்துக்களி னால் வெகுண்டெழுந்த - புதுமைப்பித் தனின் நெருங்கிய நண்பரும் - புதுமைப் பித்தன் வரலாறு எழுதியவருமான தொ. மு.சி.ரகுநாதன், மிகவும் காட்டமான குர லில் சுபமங்களாவில் எழுதி சிட்டியைக் கடுமையாக விமர்சித்தார். அத்துடன் நின்றுவிடாமல், புதுமைப்பித்தன் விமர் சனமும் விஷமத்தனங்களும் என்ற விரி வான நூலும் எழுதி வெளியிட்டார்.
இவ்வாறு, கண்டனங்களுக்குள் ளான சிட்டி, சோ.சிவபாதசுந்தரத்துடன் இணைந்து தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் (1989) எழுதி வெளியிட்ட பின்பு ஈழத்து எழுத்தாளர்களின் கடும்
சீற்றத்திற்கும் ஆளானார்.

தெளிவத்தை ஜோஸப் - எழுதிய மலையகச் சிறுகதை வரலாறு நூலிலும் சிட்டி விமர்சிக்கப்பட்டார்.
இலங்கை எழுத்தாளர்களை மிகவும் நேசித்தவர் சிட்டி. ஈழத்து இலக்கியப் படைப்புகளைத் தேடிப்பெற்று வாசிக் கும் இயல்பு கொண்டவர். எனினும் சரியான தகவல்கள் அவருக்கு உரிய வேளைகளில் கிட்டாமல் போனதனால் - அந்தப் பதிவுகளில் பல விடயங்கள் விடுபட்டுப் போயிருக்கக் கூடும்.
1984இல் தீபம் காரியாலயத்தில் நடந்த இலக்கியச் சந்திப்பில், நண்பர் தி.க.சிவசப்கரன் (தி.க.சி.) என்னை அறி முகப்படுத்திப் பேசும் போது - எனது முதலாவது கதைத் தொகுதியான "சுமை யின் பங்காளிகள் தொகுப்பைக் கையில் வைத்துக் கொண்டே, வந்திருந்தவர் களுக்கு காண்பித்துப் பேசினார்.
அச்சந்தர்ப்பத்தில் தொ.மு.சி.ரகு நாதன், ராஜம்கிருஷ்ணன், அசோக மித்திரன், சிட்டி, சோ.சிவபாதசுந்தரம், ஜெயந்தன், எழுத்தாளர்களான மு.கனகராஜன், காவ லூர் ஜெகநாதன், கணபதி கணேசன், க.நவம் (தெணியானின் தம்பி) உட்பட பலர் கலந்து கொண்டனர். சிட்டியும், சோ.சி.யும் எழுதிய நூலில் எனது கதை கள் குறித்தும் அவர்கள் எதுவும் சொல்ல வில்லை என்ற ஆதங்கம் எனக்கும் இருந்தது. இதுபற்றிச் "சுமையின் பங்காளிகள்" இரண்டாவது பதிப்பில் குறிப்பிடவுள்ளேன்.
சிட்டியின் எழுத்துலக வாழ்வையும், தனிப்பட்ட வாழ்வையும் விரிவாக எழுதி யுள்ளார் நரசய்யா. 2002இல் வெளியான
சா.கந்தசாமி, இலங்கை
23
"சாதாரண மனிதன்" என்ற இந்நூலை சென்னை கலைஞன் பதிப்பகம் வெளி யிட்டது.
இந்நூலையும் பெ. சு. மணியுடன் சிட்டி இணைந்து எழுதிய அதிசயப்பிறவி வ.ரா. என்னும் நூலையும், சிட்டி தனது குடும்ப நண்பரான - அவுஸ்திரேலியா வில் சிட்னியில் வசித்த சுந்தா சுந்தரலிங் கத்தின் மனைவிக்குச் சில வருடங் களுக்கு முன்பு அனுப்பியிருந்தார். திருமதி. பராசக்தி சுந்தரலிங்கம் குறிப் பிட்ட இந்த இரண்டு நூல்களையும் எனக்குப் படிக்கத் தந்திருந்தார். இரண்டுமே அருமையான தகவல் சுரங்கங்கள்.
பத்திரிகையாளர் எஸ்.எம்.கார்மேகம் எழுதிய வீரகேசரி பத்திரிகை தொடர் பான வரலாற்று நூலான "ஒரு நாளிதழின் நெடும் பயணம்" என்ற நூலில் - விர கேசரியின் முன்னாள் ஆசிரியரான வ.ரா. பற்றிக் குறிப்பிடும்பொழுது, சிட்டி - பெ.க.மணி இணைந்து எழுதிய நூலை யும் ஆதாரமாகப் பதிவு செய்துள்ளார்.
பல இலக்கிய ஆய்வாளர்களுக்கு ஆதாரமாகத் திகழ்ந்த சிட்டி, பல பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். அகில இந்திய வானொலியில் பல வரு டங்கள் சேவை புரிந்தவர். நிறைய வாசித் தவர். யாத்ரீகனாக அலைந்து தகவல்கள் திரட்டி எழுதியவர்.
நூறு வயதை எட்டுவதற்கு ஐந்து ஆண்டுகள் இருக்கும் வேளையில், தமக்கு முந்திக் கொண்டு ஓடியவர்களைத் தேடி நிதானமாக நடந்து சென்றுள்ளார். எழுத்திலும் பேச்சிலும் நிதானமாகத் திகழ்ந்த சிட்டியின் மறைவும் நிதான மானதே. e

Page 14
ஆபிரிக்காவில் அமெரிக்காவின் ஆத்ம தரிசனம். 'மழை அரசன் கைண்டர்சன்? - சோல் பெலொக் -
- ஆ.கந்தையா
அமெரிக்க எழுத்தாளன் சோல் பெலொக் மழை அரசன் கெண்டர்சன் புதினத்துக்கு 1976ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்த போது கூறிய வார்த்தைகள் அர்த்தமுடையவை.
“என்னுள் இருக்கும் குழந்தை குதூகலிக்கின்றது. எனது வாலிபம் அவநம்பிக்கை யில் திளைக்கின்றது."
பெலொக்கின் வார்த்தைகளைக் கூர்ந்து பார்ப்பவர்கள் அவர் தனது இருப்பை, தன் ஆத்மாவை இன்னும் கூறுவதாயின் தன்னையே தேடும் ஏக்கம் விரவி இருப்பதைக் காண்பர். அவரின் ஆக்கங்களிலும் இப்பண்பு காணக்கூடியதாக இருக்கின்றது.
அமெரிக்கா என்ற செல்வந்த நாடு புற வாழ்வுக்கான அத்தனை வசதிகளைக் கொண்டிருந்தும், அக வாழ்வுக்கு அத்தியாவசியமான மன அமைதி அறவே இல்லா வறுமையில் வாடுகின்றது. சமய ரீதியில் கூறுவதாயின் அமெரிக்க மக்கள் சிற்றின்ப வேட்கையில் மூழ்கிப் பேரின்ப வாழ்வைத் தொலைத்து விட்டனர். சிற்றின்பம் ஒரு எல்லைக்கப்பால் தெவிட்டத் தொடங்க மனம் உண்மை ஞானத்தை அல்லது தனது உள் மனதின் உள்ளே உறங்கும் ஆத்மாவைத் தேடத் தலைப்படுகின்றது.
புற உலக இன்பத்தில் சிக்கித் தன்னை மெச்சிக்கொண்டவன், நாளாக, நாளாக அதுவே நரகமாக மாறும் போது, இத்துன்பம் ஏன் தோன்றியது? எவ்வாறு தோன்றியது? எவ்வாறு போக்கலாம் எனும் விசாரணையில் ஈடுபடத் தலைப்படுகின்ற்ான். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான் கெண்டர்சன்.
அமெரிக்காவின் பெரிய பணக்காரன் - வயது 55 - பெரிய உருவம் - 6 அடி உயரம்
- அழகான மனைவி - அன்பு மகன் - எல்லாமே பெரிது. ஆனால் இவ்வளவு சுகபோகங்கள் அவனுக்கு மன அமைதியைத் தரவில்லை. அவனுள் ஏதோவொன்று "Iwant. 1Want.
24

1Want' எனச் சதா ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. முடிவு எல்லாவற்றையும் விட்டெறிந்து ஆபிரிக்காவுக்குச் செல் கின்றான்.
சில விமர்சகர்கள் இது அமெரிக்கா வின் தேடல் எனக்கொண்டு, கெண்டர்சன் அமெரிக்காவின் குறியீடு என்றும், இது அமெரிக்கன் ஒருவனின் தேடலெனக் கொண்டு, கெண்டர்சன் ஒரு தனிமனிதக் குறியீடு என்றும் கூறுவர். இவ்வகையில் இது ஒரு கூறிட்டு நாவல்.
நல்ல இலக்கியம் அறிவுக்கு மட்டும் விருந்தாக அமைவதில்லை. மனதையும் அதற்கு அப்பால் ஆத்மாவையும் சுண்டி
இழுப்பதாக அமையும். 'மழை அரசன் ,
கெண்டர்சன் புதினத்தை வாசித்த பின் இப்படியான ஒரு அபூர்வ உணர்வு எம்முன் நிறைவதைக் காண்கின்றோம். அன்றியும் நாங்கள் அமெரிக்காவுக்குக் கிடைக்காத மன அமைதியையும், நிம்மதியையும், ஆத்ம பலத்தையும் எமது மதங்களி னுாடாகப் பெற்றிருக்கின்றோம் என எண்ணிப் பெருமிதமும் அடைகின்றோம்.
அமெரிக்காவில் 5 நிமிடங்களுக் கொரு பாலியல் கொலை நடைபெறுகின்ற தென எங்கோ வாசித்த ஞாபகம். ஆனால் எமது நாட்டிலோ நாளுக்கொரு கொலை நடப்பதேயில்லை. போரின் உச்சக்கட்டத் தில் கூட இவ்வளவு சாவு வருவதென்பது இயலாத காரியம். காரணம் இன்றும் ஆத்மா எம்முள் விழித்துக் கொண்டே இருக்கின்றது.
சோல் பெலொக் கியூபெக் மாநிலத் தில் லச்சீன்' எனும் இடத்தில் 10.07.1915
25
பிறந்தார். பெற்றோர் யூத - ருசிய பழைமை வாதிகள். சிறப்புப் பட்டதாரியாக 1937ல் வெளிவருகின்றார். கலைக் களஞ்சிய ஆசிரியர் குழுவில் சில வருடங்கள் அங்கத்தவராக இருந்ததைத் தவிர அதிக காலத்தைப் பல்கலைக் கழக ஆசிரிய ராகவே கழிக்கின்றார்.
'மழை அரசன் கெண்டர்சன் நவீனத் தில் கெண்டர்சன் தன் ஆத்மாவைத் தேடுவதில் ஈடுபடுகின்றான். இத்தேடலுக் கான பக்குவ நிலை பக்குவப்பட்ட ஆன்மா வுக்கே கிட்டுமென நம்புவர் இந்துக்கள். கெண்டர்சன் உண்மையிலேயே இப் பக்குவ நிலை எய்திய ஒருவனே.
மேலைத் தேசத்தவர்களுக்கில்லாத மன அமைதியும். பக்குவமும் கீழைத் தேசத்தவர்களுக்கு உண்டு எனப் பலரும் கூறுவர். வெறுமையுடன் வாழும் இவர்கள் என்னவோ நிறை வாழ்வு வாழ்ந்து விடு கின்றனர். பொறுமையுடன் கோவண ஆண்டியாகக் கல்லுக்கு மேல் அமர்ந் திருந்த ரமண மகரிஷி அவர்களால் கவரப் பட்ட ஆதர் ஒஸ்போர்ன் கண்டதுதான் 'மலைப் பாதை. இவ்வாறே கெண்டர்சனும் அமைதி நாடி ஆபிரிக்கா செல்கின்றான்.
இருண்ட கண்டமென்றும், அறி யாமை, வறுமை, நோய் நிறைந்த நாடு என வெள்ளையர்களால் ஒதுக்கப்பட்ட இடத் தின் மிகவும் பழைமை வாய்ந்த இடமொன் றுக்குக் கெண்டர்சன் செல்கின்றான். அவனது ஞானக்கண் அங்கேதான் திறந்து கொள்கின்றது.
இங்கு அவனுக்கு நம்பிக்கை வாய்ந்த, என்றும் அவனை விட்டகலாத் துணையாக

Page 15
*றொமல்டியா கிடைக் கின்றான். அன்பின் உருவாக, எதையும் எதிர்பாராமல் வழங்கும் அன்பின் அற்புத ஊற்றாக விளங்கும் "றொமல்டியா கிடைத்தமை கெண்டர்சன் வாழ்வின் முதல் திருப்பு முனை எனலாம். இராணி 'வலட்ரெலே’ அவனது ஆத்மாவை, அவனது grun - tO - malant (மனிதன் வாழ்வில் பற்று வைத்தல்) மூலம் சிலிர்க்க வைக்கின்றான். பின் மன்னன் 'டாக்பியூ தரும் விளக்கம் மேலும் ஆத்ம பலத்தைத் தருகின்றது.
வாழ்வின் தத்துவம் 'அவன் அதுவாக மாறுதல் அல்ல; அவன், அதுவாக இருத் தல்' என்பதை அறிந்து கொள்கின்றான். அதுவாக மாற வேண்டும் என்ற ஆவல் வாழ வேண்டுமென்ற ஆசையை அவ னிடத்தில் ஏற்படுத்தி விடுகின்றது. இப்படி *யான பற்று அறும் போதுதான் அதுவாக இருத்தல் முடியும்.
அதுவாக மாறுதல் நிகழ் காலத்தைப் புறக்கணித்து ஒரு எதிர் காலத்தைக் குறிக் கின்றது. 'டாக்பியூ', 'வலட்ரெலே அதுவாக இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் நிகழ் காலத்தில் இருக்கின்றார்கள்."
மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் வாசகன் அமெரிக்காவில் வாழும் கோடீஸ் வரன் ஒருவன் மன அமைதி, மகிழ்வு என் பவைகளைத் தேடி அலைந்த கதையென இலகுவில் கூறி விடுவான். ஆனால் அமெரிக்காவில் இல்லாத மகிழ்வை, தேட முடியாத சுகத்தை, காண முடியாத அமை தியை எவ்வாறு ஆபிரிக்காவில் காண முடியுமென்ற கேள்வி எழும் போது 'பெலோ தனது கதாபாத்திரமான கெண்டர்சன்
26
மூலம் வேறு கதையைச் சொல்ல விளை கின்றார் என்பது புலனாகும்.
உலகில் இன்று மிகுதியாகக் காணப் படுகின்ற மருத்துவ, விஞ்ஞான தொழில் நுட்ப விந்தைகள் தருகின்ற சுகபோகங்கள் வாழ்வில் அமைதியைத் தரவல்லவை என மனிதன் நம்புகின்றான். எல்லாச் செயற் பாட்டுக்கும் மூலவேர் தான் என மார் தட்டு கின்றான். தன்னால் தான் எல்லாம் நிகழ் கின்றன என்று பெருமை பேசுகின்றான். ஆக அவன் நிகழ் காலத்தை விட்டு விட்டு எதிர்காலத்தை நோக்கிய நகர்வுகளில் ஈடு படுகின்றான். இந்நிலையில் அவன் நிம்மதி இழந்து மன அழுத்தத்திற்கு ஆளாகின் றான். அவன் தனது திறமையின் மட்டுப் படுத்தப்பட்ட தன்மையை நன்றாக உணரு கின்றான். அவன் சாவை வெல்ல நினைக் கின்றான்; சாவு அவனை வெற்றி கொள்ளு கின்றது.
பிறப்பு, இறப்பு என்பன என்றும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. பிறப்பு எப்படியோ நிகழ்ந்து விடுகிறது. அது முன் செய்த நன்மை, தீமையென எண்ணுவதில் அர்த்தமே இல்லை. ஏனெனில் பிறப்பென்ற நிகழ்வு நடந்து முடிந்த பின்பே இதைப் பற்றி எண்ணத் தொடங்குகின்றோம். ஆகவே நதி மூலம், ரிஷி மூலம் ஆய்வதில் கெண் டர்சன் நம்பிக்கை வைப்பதில்லை. கெண் டர்சனின் முழுப் பிரச்சினையுமே இறப்பைப் பற்றியதுதான்; மரணபயம் பற்றியதுதான். சிலர் நிலையாமை பற்றி அதிகம் கதைப் பது கூட நிலைபேறு வேண்டி நிற்கும் மனோபாவம் தான். வேதாந்தத்தில் இது இல்லை, இது இல்லையென உண்மை யை நாடிச் செல்வது போன்று, ‘I want. 1

Want. என அங்கலாய்த்துக் கெண்டர் சன் ஆத்மாவை நாடி ஒடுகின்றான்.
மனைவி, பிள்ளை, செல்வம், சுகம் கிடைத்தவுடன் இவைகளே உண்மையா னவை, உயர்ந்தவை, இவைகளுக்கப்பால் வேறொன்றும் இல்லை எனக் கெண்டர்சன் எண்ணினாலும் காலஞ் செல்ல இவைகள் அவனுக்குச் சுமையாகப் படுகின்றன. அவன் மனம் மீண்டும் விசாரணையில் ஈடு படுகின்றது. அவன் தான் பொறுப்பேற்க முடியாத, தன்னால் கட்டுப்படுத்த முடியாத மரணத்தை எதிர்கொள்வது எவ்வாறு என்பதுவே அவனது உடன் பிரச்சினை.
இதற்கான விடையைக் கெண்டர்சன் ஆபிரிக்காவில் காண்கின்றான். மரணம் பயங்கரமானதல்ல; அதைச் சந்தோஷத் துடன் எதிர்கொள்வதை, அவன் ஆபிரிக்கா வில் அனுபவ ரீதியாகக் காண்கின்றான். சாவை எதிர்கொள்ளும் மனப்பக்குவம்
பெற்ற கெண்டர்சன் சிங்கத்துடன் போராடி
அதை வெல்கின்றார். சிங்கக் குட்டியை எடுத்துக் கொள்கின்றான். சிங்கக் குட்டி இங்கு சாவின் குறியீடு. கெண்டர்சன் தவளைகளைக் கொல்வதென்பது கூட தனது மன ஒலங்களை வெல்லுதல் என்பதைக் குறிக்கும்.
இது காறும் தன்னில் நம்பிக்கை வைத்த கெண்டர்சன் இப்பொழுது தன்னை அறியத் தலைப்படுகின்றான். ஞானம் தோன்ற ஆத்ம தரிசனம் ஒருவனுக்கு ஏற்படுகின்றது. மனிதன் விடும் பெரிய தவறு தான் ஒரு பெரிய சக்தி என எண்ணுவது தான். மனிதனால் தன்னை வெல்லும் சாவை வெல்ல முடிவதில்லை. எனவே சாவை எவன் சந்தோஷத்துடன் எதிர்கொள்
27
கின்றானோ அப்பொழுது அவன் வாழ்வை வென்று விடுகின்றான்.
"அதுவாதல், அதுவாக இருத்தல்" இவை இரண்டையும் பற்றிய டாவ்யூ மன் னனது கருத்துக்கள் கெண்டர்சனை ஆத்ம தரிசனம் காண வைக்கின்றன. சிங்கக் குட்டியுடன் அமெரிக்கா திரும்புகின்றான். "I Want... I Want..." 61solub LD60T D-556) இப்பொழுது அவனிடத்தில் இல்லை.
இவ்வளவு காலமும் அவனை அழுத் திக் கொண்டிருந்த 'எனது பெற்றோர், எனது பொருட்கள், எனது பெண்கள், எனது பிள்ளைகள், எனது பண்ணை, எனது மிருகங்கள், எனது பழக்க வழக்கங்கள், எனது குடிபோதை, எனது விருப்பு வெறுப் புக்கள், எனது முரட்டுத்தனம், எனது பற் கள், எனது முகம், எனது ஆத்மா என்ற குழம்பிப் போன எண்ணங்கள் போன்ற வற்றைப் பார்த்துச் "சென்று விடுங்கள் பாவி களே, என்னைத் தனியே விட்டு விடுங்கள்" என உரக்கக் கத்த வைக்கின்றன.
கெண்டர்சன் ஆபிரிக்காவில் தன்னைக் கண்டு கொண்டமை அவனது மறுபிறப் பாகும். பழைமை அவனுக்கு இப்பொழுது புதிய பரிமாணங்களைத் தருகின்றது. அவனது இந்தப் புதிய ஆத்ம தரிசனம் உலக தரிசனம் பெறுவதற்கான முயற்சி யெனில் தவறாகாது.
'பெலொ தனது நாவலினுடாக எம்மை இருண்ட கண்டத்துக்கு அழைத் துச் சென்று அமெரிக்காவை, அதன் வெறுமையை வெளிக்கொண்டு வரு கின்றார். கெண்டர்சன் தனது ஆத்மத் தேடலை முடிவு செய்கின்றான். 9

Page 16
செப்டெம்பர் நினைவுகள் பற்றி.
- எஸ்.சத்யன்
ஜூன் மல்லிகை இதழில் செப்டெம்பர் நினைவுகள் என்ற கட்டுரையை வாசித்தேன். அதில் குறிப்பிடப்பட்ட ஆவணப் படத்தைத் தமிழ்ச் சங்கத்தில் பார்த்தவன் என்ற ரீதியில் கோபோவின் கட்டுரை தொடர்பாகவும் அவ்வாவணப் படம் தொடர்பாகவும் சில ஆரோக்கியமான மாற்றுக் கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன்.
கோபோ, எம்மவர்கள் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையீனம் காரணமாக அந்நிகழ்வுக்குப் போகத் தேவையில்லை எனும் நிலைப்பாட்டை கொண்டிருந்ததாகப் பொறுப்பற்ற ரீதியில் கருத்தை முன்வைத்திருந்தார். கோபோ அவர்களே உங்களிடம் ஒரு தாழ்மையான கேள்வி. அதே நம்மவர்கள் ஆகிய இலங்கைத் தமிழர்கள்ன் மல்லிகையில் எழுதுவதற்கு எந்தவொரு நம்பிக்கையீனமும் குறுக்கிடவில்லையா? சரி போகட்டும். இலவசம் என்ற காரணத்தால் படம் பார்த்தவராகிய கோபோ நம்மவர்களின் நம்பிக்கையீனமான படைப்புகளை விமர்சிக்க வலிதான காரணங்கள்
எதுவுமில்லை.
அடுத்ததாகப் பல குரல்களை Narration செய்வதற்கு பாவித்ததை ஆவணப் படத்தின் குறைபாடாக இனங்கண்டார். முறைசாரா, பாரம்பரியத் திரைப்படவியலில் பல குரல்களைப் பாவிக்க கூடாது என்று ஒரு சட்டம் இல்லவே இல்லை. மாறாகத் தொகுப்புச் செயன்முறையில் வசனங்கள் எவ் வெவ் காட்சிகளுக்குப் பொருத்தமானவை என இனங்காட்டும் உத்தியாக இச்செயன் முறை பயன்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பின் னணியில் பேசுபவர்களை ஆவணப் படங்களின் கதை நகர்த்தும் நாயகர் களாகப் பாவனை செய்வதுண்டு. இவ்வாறான செயன்முறைகளே ஆவணப் படங்களில் உள்ள இயல்பான விளக்கமின்மையைத் தீர்க்க உதவுகின்றன என்பது பொதுவான விடயம்.
செப்டெம்பர் நினைவுகள் திரைப்படம் EAX தொழில்நுட்பத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும். DTXதொழில்நுட்பத்தில் இயங்கும் திரையரங்கு ஒன்றில் குறைந்தது ஒரு திரைப்படத்தையாவது பார்த்திருந்தால் சில இடங்களில் பின்னணி இசை அளவுக்கு அதிகமாக ஒலிக்கிறது எனத் தவறாகக் குறைப்பட்டிருக்க மாட்டார். அடுத்ததாகக் காட்சித் தொகுப்பில் தொடர்ச்சி காணப்படவில்லை என்பதும் ஒரு தவறான குற்றச்சாட்டு. இது
28

தொடர்பாக விவாதிக்க முன் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது 21ம் நூற்றாண்டு என்பதை ஞாபகத்தில் வைத்திருப்போமானால், ஒரு ஆவ ணத் தொகுப்பை ஒரு வருடத்துக்கு நீண்டு செல்லும் சின்னத்திரைத் தொடராகத் தொகுக்க முடியாது என்ற பேருண்மை விளங்கும். அவ் வாறான சந்தர்ப்பங்களில் பரி மாணங்களுக்கு இடையே, தாவல் என்பது சம எறியத்தில் இருக்க வேண்டும் என்பது திரைப்படவியல் பொதுவிதி. இவ்விதியைப் பின்பற் றும் எந்தவொரு திரைப்படத் தொகுப்பாளரும் கோபோவின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வலி தான காரணங்கள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். ஒட்டு மொத்தமாகப் பார்க்கின்றபோது கடந்த வருடம் வெளிவந்த நம்மை அடையாளப்படுத்துகின்ற ஆவணத் திரைப்படங்களில் தொழில்நுட்ப ரீதியில் மிகப் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகச் செப்டெம்பர் திரைப்படத்தைத் துணிந்து கூறலாம்!
நினைவுகள்
ஆனால் இந்த ஆவண அடை யாளத்தின் பின்னால் பல குறை பாடுகள் உள்ளன என்பதை புறந் தள்ளும் விமர்சனத்தை என்னால் எழுத முடியாது. நாம் செப்டெம்பர் நினைவுகள் எனும் படைப்பை ஆவணத் தொகுப்புள் அடக்க முயன் றாலும் அது ஒருவகையான பிரச் சார தொகுப்பு என்பதே வெளிப் படையான உண்மையாகும். இத னால் இப்படைப்பைச் சர்வதேச ரீதி
29
யில் ஆவணத் தொகுப்பாக அடை யாளப்படுத்த முடியாது. இதற்குச் சில சிக்கலான சலனவியல் கோட் பாடுகள் முட்டுக்கட்டைகளைப் போடுகிறது. அது தவிர வசனகர்த்தா வின் அனுபவமின்மையும் பிறி தொரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வல்லாதிக்கம் தொடர் பான வேறுபட்ட பரிமாணப் பிரச் சினைகளை செப்டெம்பர் நினைவு கள் என்ற பதத்தால் தொடர்புபடுத்த முயன்றதால் சாதாரண பார்வை யாளர்கள் பெருங் குழப்பமடைந் தனர் என்பதே உண்மை. கோபோ குறிப்பிட்ட திரைத் தொகுப்பில் தொடர்ச்சி இல்லை என்பது கூட இதனைத்தான். இந்தக் குறை பாட்டை நீக்க வசனகர்த்தா தனது ஏற்றுகை தானமாக செப்டெம்பர் நினைவுகளை எடுத்துக் கொள்ளா மல் இலகுவாக அமெரிக்க வல்லா திக்கம் எனும் தலைப்பை எடுத்திருக் கலாம். இல்லையெனின் அதே ஏற்று கைத் தனத்தோடு வேறு வேறான ஆவணத் திரைப் படைப்புகளைத் தயாரித்திருக்கலாம். எது எவ்வாறி ருந்தாலும் இன்று வேறுபட்ட பரி மாணங்களைச் செப்டெம்பர் நினை வுகள் எனும் தலைப்புடன் நினைவு கூரத் திரைப்படத் தொகுப்பே கார ணமாகும். இதற்காகப் பாரம்பரியம் சாரா சங்கிலித் தொடர் பால இணைப்புத் தொழில்நுட்பத்தைப் படத் தொகுப்பாளர்கள் துணிந்து பாவித்தமை காரணமெனலாம். அப் பாலத்திற்கான கருதுகோள், செப்ப னிடல் நேர்த்தி என்பன தமிழ்

Page 17
திரைப்பட தொகுப்பாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாகும். ஆனால் இதே பால நுட்பம் பார்வையாளர் களின் நடப்புப் பரிமாணத்தை நினைவூட்டும் முகமாக மீள பயன் படுத்தப்பட்டதால் சலிப்பூட்டுவ தாகக் கூடத் தோன்றியது. ஆனால் இதனை செப்பனிட வேறு வேறான பாலங்களைப் பயன்படுத்தினால் கதையின் பரிமான உயிரோட்டம் எரியுண்டிருக்கும்.
மேலும் வசன கர்த்தா தனது மொழியாற்றலை வெளிப்படுத்தவே பெரிதும் முயன்றுள்ளார். இதனால் சீரான நடை பேணப்படவேயில்லை. இதன் காரணமாகப் பின்னணியில் பேசுபவர்கள் வசன கர்த்தாவின் வரி களுக்கு உயிர் கொடுக்கும் முயற்சி யில் பெரிதும் திணறியிருக்கிறார்கள். இருந்தாலும் தொனிகளை மாற்று வதில் பெரிதும் பாடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
இவ்வாறான படைப்புகள் இயன்ற வரை தமது தனித்துவத்தைப் பாது காக்க முயல வேண்டும். அந்த வகை யில் எந்தவொரு ஆரோக்கியமான ஆவணப்பட விமர்சகராலும் ‘எந்த ஒன்றைப் பற்றிப் பேசும் போதும் இன்னொன்றைப் பற்றியும் ஏன் எல்லாவற்றைப் பற்றியும் கூட பேச முடிகிறது' என்ற வரிகளை இன் னொன்றைப் பற்றி என்ற புத்தகத் தின் 41 பக்கத்தில் இருந்து பார்த்து எழுதியதாகவே விமர்சிக்க முடி கிறது. அதே போலவே பினோஷே தொடர்பான கவிதைக்காக வசன கர்த்தா மனிதாபிமானத்தின் பெய
30
ரால் கவிதையை (பக்கம் 42) பார்த் தெழுதியுள்ளார். முன்னை இட்ட தீ (இன்னொன்றைப் பற்றி பக்கம் 46) கவிதை திறப்பு வாசகமாகப் பயன் படுத்தப்பட்டுள்ளது. படைப்பின் தனித்துவம் தொடர்பாகப் பேசும் எந்த ஒருவராலும் இவ்வகையான வேலைகள் அனுசரிக்கப்பட மாட் டாது என்பதை வசனகர்த்தா புரிந்து கொள்ள வேண்டும்.
நிகழ்வை அவதானித்தவன் என்ற ரீதியில் பார்வையாளர்கள் பற் றாக்குறை என்பதற்கு ஏற்பாட்டாளர் களே காரணம் என்பதைத் தவிர நமது தமிழர்களின் உள்ளூர்ப் படைப்புக் குறித்த சர்ச்சை காரண மில்லை என்பேன். ஏற்பாட்டாளர் கள் நிகழ்வு குறித்துப் பொது மக் களுக்கு அறிவித்தலைச் சரியான விதத்தில் விடுக்காமை ஒரு காரண மாக இருக்கலாம்.
சரி எல்லாவற்றையும் மறந்து விட்டு ஒரு கணம் செப்டெம்பர் நினைவுகள் பற்றி யோசித்தால் இலங்கைத் தமிழர்கள் என்னென்ன வெல்லாம் செய்கிறார்கள் எனத் திகைக்க வைக்கிறது! சும்மா சொல் லக் கூடாது. வயிற்றுப் பிழைப்புக்கு மாரடிக்கும் நாட்களில் ஒரு ஆவ னத் திரைப்படத்தை எடுத்ததோடு அதனை இலவசமாகவும் திரை யிட்ட மரணக் கிணறு முயற்சியை என்னவென்பது? விமர்சனங்களில் சிக்காத படைப்புகளே இல்லை என்ற நிதர்சனமான உண்மையுடன் செப்டெம்பர் நினைவுகள் என்ற தொகுப்பில் கண்ட நல்ல முன்னு தாரணங்களைத் தவிர மற்ற எல்லா வற்றையும் விட்டு விடுவோம். ம

பிரபல கவிஓர் சுரதா കnഓonOnി.
- வி.பி.சந்திரம்
தமிழ்நாடு, திருவாரூர் அருகிலுள்ள பழையனூரில் 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி அவதரித்தார். ராஜகோபால் என்ற இயற்பெயருடன் இருந்த இவர் பாரதிதாசன் மீது கொண்ட அளவற்ற பற்றுறுதி காரணமாகத் தனது பெயரைச் சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். சுப்புரத்தினதாசன் என்ற பெயர் நாளடைவில் சுரதா என்றாகி விட்டது. அதிலிருந்து இவர் சுரதா என்றே அறியப்பட்டு பிரபலமானார். இளம் வயதி லிருந்தே கவிதைகளை எழுதி வந்தவர். அவரது கவிதைகளில் வரிக்கு வரி உவமை இருக்கும். உவமைகளைக் கையாண்டு சிறந்த முறையில் கவிதைகளை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தமையால் இவரைப் பாராட்டி 1958ம் ஆண்டு உவமைக் கவிஞர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. தனது 19வது வயதில் மங்கையர்க்கரசி என்ற படத்திற்கு வசனம் எழுதினார். வசனம் எழுத வந்த சுரதா திரைப்படப் பாடல்கள் எழுதுவதிலும் கால் பதிக்கத் தொடங்கினார். சிறப்பான அர்த்தமுள்ள பாடல்களை எழுதினார்.
தைபிறந்தால் வழி பிறக்கும்" என்ற படத்தில் இடம்பெற்ற 'அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு. என்ற பாடலைத் தெரியாத தமிழ்ச் சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது. நீர்க்குமுழி படத்தில் வரும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ மற்றும் 'ஆசையே அலை போலே, நாமெல்லாம் அதன் மேலே.', 'கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே. போன்ற காலத்தால் அழியாத புகழ் பெற்ற இந்தப் பாடல்களைச் சுவை சொட்ட யாத்தவர் கவிஞர் சுரதா தான்.
இலக்கியம், சினிமா ஆகிய துறைகளில் முத்திரை பதித்த சுரதா 25 கவிதைத் தொகுப்பு நூல்களையும், 10 உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். 1973ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்றார். மேலும் தமிழக அரசின் ராஜராயன் விருது, பாரதிதாசன் விருது, ஆதித்தனார் விருது, கேரள அரசின் குமரன் ஆசான் விருது எனப்
31

Page 18
பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். தேன் மழை என்ற இவரது கவிதை நூல் தமிழக அரசின் சிறந்த நூல் பரிசைப் பெற்றதாகும். இவர் 250 சினிமாப் படங்களுக்கு மொத்தம் 400 பாடல்களை எழுதியிருக்கின்றார். பி.யூ.சின்னப்பா நடித்த மங்கையர்க்கரசி, மற்றும் 'அமர கவி உள்ளிட்ட ஏழு திரைப்படங்களுக் குக் கதை, வசனம் எழுதியிருக்கின்றார். மலேசியாவிலும், தமிழகத்திலும் செயல் பட்டு வரும் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையின் தமிழகத் தலைவராகச் செயற்பட்டு வந்தார். முதுபெரும் கவிஞர் சுரதா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், கடந்த சில நாட்களாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவந்தும், தனது 85வது வயதில் காலமானார் அன்னாரின் குடும்பத்தினருக்கு இலங்கை எழுத்தாளர்கள் சார்பில் இதய அஞ்சலி யைச் செலுத்துகிறோம்.
கவிஞர் சுரதாவும், முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியும் இளம் பிராயத்துப் பாலிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'சுகமான இராகம் இசைத்து ஓய்ந்தது' என்று கலைஞர் இரங்கல் கவிதை பாடியுள்ளார்.
இசைத்து ஓய்ந்தது! கவிதையாய்த் தழைத்து விரிந்த தரு காலத்தால் அழிக்க முடியாத திரு உண்மையில் அவர் மறையவில்லை; உவமைகள் உள்ளவரையில் 6IIType IITsirl
சிறந்த அதிபர் - 2005
கலை, இலக்கிய அபிமானியும், சிறந்த கல்விமானுமாகிய கொழும்பு, விபுலாநந்த மகாவித்தியாலய அதிபர் மேதகு தில்லைநாதன் கணேசராஜா அவர்கள், கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் 2005ஆம் ஆண்டின் சிறந்த அதிபராகத் தெரிவு செய்யப் 'வித்தியா விஜயபூரீ” என்னும் பட்டமும் அவருக்கு வழங்கிக்
பட்டுள்ளார்.
கெளரவிக்கப்பட்டுள்ளது.
கல்வி பணிக்கு அவர் மேலும் உழைத்து மானுடத்தை மேன்மைப் |
படுத்த மல்லிகை மனதார வாழ்த்து கின்றது. ஆசிரியர் - ܢܬ
அத்துடன் முதல்வர் கருணாநிதி கவிஞர் சுரதாவின் இல்லத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
*சுரதாவின் மறைவு இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும் என்கிறார் திருமாவளவன். 'எளிமையான மரபுக் கவிதைகள் பாடுவதில் அவருக்கு இணை அவரே. என்னைப் போன்ற பலரைத் தமது கவிதை வரிகளால் ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டியவர் சுரதா, அவரது மறைவு தமிழ் இலக்கியத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்' என்று மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கூறினார். 8
'ஆடி அடங்கும் வாழ்க்கையடா’
32

இரசனைக் குறிப்பு :
՞6)ԺՍtbծ {06ծ՞
(மறுமலர்ச்சி எழுத்தாளர் இராஜநாயகன் கதைத் தொகுப்பு)
- LT6)
சொந்த மண்" என்ற தொகுப்பை வாசித்த பொழுது கதைகளுக்குக் கொடுக்கப் பட்ட உரு மனதைக் கொள்ளை கொண்டது. இது இன்றைய பெரும்பாலான படைப்புகளில் காண முடியாதது! பக்கங்களைத் திறந்தவுடன் வலை விரிப்புச் செய்து வாசிப்பை இலகுபடுத்துகிறது. கருத்தைச் சிந்திக் கதையைப் புகட்டும் குறுகுறு வசனங்கள், ஒன்றன் பின்னொன்றாக அடுக்கப்பட்டு வாசகரைப் படைப்பின் இறுதிவரை அழைத்துச் சென்று, தெளிவு கொண்ட மனதோடு வாசிப்பை நிறைவு செய்ய வைக்கும் வீரியத்தைக் கொண்டிருக்கின்றன.
இந்த உரு அமைப்புத் தொகுப்பி லுள்ள ஒன்பது படைப்புகளுக்கும் ஒரே வகைப்பட்டதா? அதுதான் இல்லையே! கதைக்குக் கதை வடிவம் மாறுபடுகின்றது. காலத்தால் மூத்த கதைகளோடு, பிந்திய கதைகளை ஒத்து நோக்கும் பொழுதும் இந்த வனைவுப் போக்கில் எந்தவிதமான பிறழ்வும் தென்படுவதாயில்லை.
ஒன்பது படைப்புகளில் ஒன்று மட்டும் குறுநாவல். எனவே இத்திரட்டைச் "சிறுகதைத் தொகுப்பு" என விழிக்காமல் கதைத் தொகுப்பென்போம்.
"காவியானான் ஒரு பாவி’ என்ற இக் குறுநாவல் - இன்று சர்வதேச வைத்தியத் துறைக்கு - சவாலாக நிற்கும் - எயிட்ஸ் வியாதியைப் பின்புலமாக்கிப் புனையப் பட்டதாகும். சீமைக்கு (லண்டன்) போவது இப்போதெல்லாம் “சின்னக் காரியமாகி விட்டது! ஆனால் சிறிது
33

Page 19
காலத்திற்கு முன்னர் உரிய பரீட்சைகளில் தகுதி பெறுபவர்களே அங்கு சென்று வாழ முடியும்.
இப்படியாகச் சீமைக்குப் படிக்கச் சென்ற பாஸ்கரனுக்கு நண்பனின் விளை 'தண்ணி வெந்நி” பாவிக்காத அவனை நண்பன் போதையாக்கும் இச்சையோடு போதையை ஏற்படுத்தும் ஊசி மருந்தைப் பாஸ்கரனுக்குத் தெரியாமல் அவன் உடலில் குத்தகிறான். ஊசியில் காத்தி ருந்த HIV எயிட்ஸ் வைரஸ் அவன் உட லில் பரவுகின்றது. ஊருக்குத் திரும்பிய பாஸ்கரன், பிள்ளையொன்றுக்குத் தந்தை யாகிக் குடியும் குடித்தனமு"மாக வாழ்ந்து கொண்டிருந்த பொழுது வைரஸ் தன் சொந்தப் புத்தி’யைக் காட்டுகின்றது. அவன் தீண்டப்படாத வனாகிறான். விஞ்ஞானத்தின் அபார சாதனையால் - சிகிச்சையின் உன்னதத்
யாட்டு வினையாகின்றது!
தால் அதிர்ஷ்டவசத்தால் எயிட்ஸ் பின் வாங்குகின்றது. இதுதான் குறுநாவலில் புனைவு பெற்ற கதை.
இன்றைய சமூகத்தின் கவனம் எந்தளவிற்கு எயிட்ஸில் குவிந்துள்ளதோ அதே வீச்சில் இக்கதையிலும் எயிட்ஸ் சம்பந்தமான தகவலும், வழிகாட்டல் களும் கதைத் தன்மையோடு சொல்லப் பட்டுள்ளன.
இப்புனை கதையைப் படித்துக் கொண்டிருந்த பொழுது சுழல் பந்து வீச்சாளர் முரளிதரனும், விக்கெட் காப் பாளர் குமார் சங்ககாரவும் தோன்றும் எயிட்ஸ் விளம்பரமொன்றைச் சக்தி தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இக் கதையின் சமூக அக்கறையை இவ்
s
34
விளம்பரம் வாசகனுக்குப் பரப்புவதாக அமைந்திருந்தது.
ஈழகேசரி, செல்வி ஆகிய பழம்பெரும் ஈழத்து இலக்கிய ஏடுகளில் பிரசுரமாகிய ஏழு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. ஒரு கதை மட்டும் இத்தொகுப்பிற்காக எழுதப்பட்டதாக நினைக்க வைக் கின்றது! ஏற்கனவே பிரசுரமாகியதற்கான குறிப்பு இல்லை!
மறுமலர்ச்சியில் வெளியான அவன்” என்ற கதை இளைஞனொரு வன் மீது வாஞ்சை கொண்ட யுவதி யொருத்தியின் மனவோசைச் சித்தரிப்பு. "உலகக் கண்கள் இதையும் மறுமலர்ச் சியே வெளியிட்டிருக்கிறது. ஆசிரிய, மாணவ விழுமியத்தைப் புகட்டுவதோடு சில விஷயங்களில் உலகின் பார்வை இன்னமும் காலத்தால் கழுவப்பட வில்லையென்பதைச் சுட்டுகின்றது. ஆண், பெண் உறவுகளை மலினப் படுத்தும் போக்கு இந்த விஞ்ஞான யுகத் திலும் செயலிழக்கவில்லை. உலகம் ஒரே பக்கத்திலேயே நிற்கிறது. மறுபக்கங்கள் இன்னமும் கண்டுகொள்ளப்படவில்லை! ஆசிரியர் உலகம் எதிர்கொள்ளும் அபாண்டச் சுமைகளிலொன்றை இக் கதையில் தத்ரூபமாகத் தரிசிக்க வைக்கிறார்.
மறுமலர்ச்சி, கலைக
"வேதனைச் சுடர் ஈழகேசரிக் கதை. பஞ்சம சமூகத்தின் கல்வியைப் பறித்து, அவர்களைக் கல்வி வெளிச்சமற்ற நிரந் தரப் பாமரராக்கும் தளத்தில் நின்று, செயற்படும் மேல் குலத்தோரின் மணி தாபிமானமற்ற அடாவடித்தனங்களை அம்பலத்திற்கு இழுக்கின்றது. தமிழ்ச்

சமூகத்தை நிரந்தரப் புற்று நோயாளியாக வைத்திருக்கும் சாதீயத்தை மிகக் குறுகிய பக்கங்களில் உணர்த்துகின்றது இக்கதை.
கலைச்செல்வி சஞ்சிகையின்
கதைகள் இரண்டு உள்ளன.
நான்" என்ற பிசாசு ம்னிதத்துள் விருத்தியாகும் போது, அது மனிதத்தை மேம்படுத்தும் அனைத்தையும் முழுங்கி விடுமென பொத்தல்" அறிவுறுத்துகிறது. ரியூப்பின் பொத்தல்களை அறிய எடுக் கும் நடவடிக்கை அத்தொழிலைச் சாராத தோரை ஆச்சரியப்படுத்தும். வாசகனை ரியூப் ஒட்டும் தொழிலாளி முன் நிறுத்து கின்றது. அடுத்தது, நாகதோஷம் சம காலத்திலும் இந்துக் குடும்பங்களில் நிலவுமொரு (மூட) நம்பிக்கை! அந்த நம்பிக்கைக்குத் தலை முழுக்கிடும்" வாக்கில் அதே சிந்தனையில் தனது வாழ் கடத்திய பெண்ணைச் 'சாகடித்து கதாசிரியர் தனது பகுத் தறிவுப் போக்கை நிறுவுகிறார்.
பரோபகாரியொருவரின் கதை 'ஒடமும் வண்டியும்". வீரகேசரி களம மைத்தது. தன்னை உருவாக்கிச் சமூகத் தில் அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்த பொதுநலமியொருவரைத் தன்னுள் அடக்க எத்தனிக்கும் நன்றி கொன்ற ஒருவனின் கதை.
நாளைக்
"சொந்த மண்' தினக்குரல் கதை. தொகுப்பிலுள்ள கதைகளில் 'ஆக இளையது” எனலாம்! 1996இன் பாரிய இடப்பெயர்வு ஈழத் தமிழனது வரலாற் றில் மறக்க முடியாத அத்தியாயம்! அதன் உந்துகையில் துளிர்த்ததுதான் “சொந்த மண்". நீறில்லாத நெற்றி பாழ்' எனச் சைவநெறி விபூதியை அருட் சாதன
35
மாகக் சங்கை செய்தது. அதேயே தனது காவல் தெய்வமாகக் கொண்டு திரிந்த முருகேசரின் திருநீற்றுப் பைக்குள் சொந்தமண்! அந்தளவுக்குத் தன்னை வாழ்வித்த செம்மண்ணை நேசிக்கிறார். தனது வாய்க்கரிசிக்கென, சனவெள்ளத் துள் சுழியோடி அள்ளிக்கொண்டு வரு கிறார்! யுவதியான பூமணி எங்கே சென் றிருப்பாள். வாசகனின் முடிவிற்காக இதைக் கதாசிரியர் பூடகமாக்கி விட்டார். தமிழ்த் தாயகப் பிரச்சினையில் மூத் தோருக்கும் இளையோருக்கும் இடை வெளி இல்லையென்பதைக் கதை சித்திரிக்கிறது.
யதார்த்தம்’ இத்தொகுப்புக்கென விசேடமாக எழுதப்பட்டதா? ஏற்கனவே பிரசுரமானதற்கான குறிப்பு இல்லை! எமது நாட்டின் இலக்கிய சஞ்சிகை வெளியீட்டுச் சூழலை நகல்படுத்தியுள் ளது. விளம்பர எஜமானர்களின் ஏவல் களுக்கு ஈழத்துச் சஞ்சிகைகள் குரல் கொடுக்கின்றதென்பதே கதை சொல்லி யின் சமூக அறிவிப்பு. அத்தகைய அல்லி சஞ்சிகையாளர்கள் இம்மண் ணில் உண்டா? என்ற தேடலில் மனதைப் பதை பதைக்க வைக்கிறது. எமது சஞ் சிகைச் சூழலை நன்கு அறிந்த வாச கர்களுக்குத் தெரியும் இது சாத்தியப்படா தொன்றென. விரல்களெல்லாம் ஒரு மாதிரியா? மாறாக அப்படி இருக்கு மாகில் அதற்குப் பதில் சொல்ல வேண்டி யவன் வாசகன்தான்! சந்தைப்படுத்தும் சிக்கல் இலக்கிய சஞ்சிகை வெளியீட் டார்களுக்குப் பெருந் தலையிடி! இதற் காகவே விளம்பரங்கள் தேவை. நாயாக அலைந்தாலும் இந்த விடயத்தில் வியா பாரிகள் காஞ்சுரங் காய்கள்தான் எமது

Page 20
வாசகர்கள் இதை பாராமுகமாக விட்டு விட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் முன்வந்து இச்சஞ்சிகைகளின் சந்தா எண்ணிக்கையைப் பெருக்கி, விற் பனையை ஏற்றமுறச் செய்தால் நிச்சய மாக இந்த யதார்த்தத்தைக் கற்பனை யாக்கி விடலாம்! மதிப்பார்ந்த வாசகனே
இனியொரு புது விதி செய்வாயாக!
தான் வாழ்ந்த காலத்தில் சமூக அசைவியக்கத்தில் தான் கண்ட முரண் பாடுகளைக் கதை சொல்லி மனிதாபி மானத்தோடு இக்கதைகளில் சித்திரிக் கிறார். சமூக நீதிக்கான கூவல் இக் கதைகளில் கேட்கின்றது. பிறந்த காலங்களில் புழக்கத்திலிருந்த சொற்கள் யதார்த்தத்தை இழக்காத வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால்
கதைகள்
சமஸ்கிருத சொற்களின் விதைப்பு மிகை! நமது எழுத்துகளில் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் ‘ன”வுக்குப் பதிலாக 'ந' பட்டுள்ளது. நத்தான் முந்தி வந்ததென் கின்றனர்!
A. பாவிக்கப்
நீண்ட முகவுரையொன்றை பிரபல எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதி இருக்கின்றார். பெறுமானம் மிக்க இலக் கியத் தகவல்கள் இந்நூலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்து கின்றன.
படைப்புகளைப் பற்றித்தான் பேசப் படுகிறது. படைப்பாளி யார்? எங்கே என்ற வாசகனின் சிணுங்கல் கேட் கின்றது. படைப்பாளிகளுக்குக் கொடுக் கும் பிரசித்தத்தை இன்றைய இலக்கிய உலகு படைப்புகளுக்குக் கொடுப்ப தில்லையென ஒரு கன்னை எரிசரந்
36
தொடுக்கின்றது. அதற்காகவே இப்புதிய திருப்பம்!
தொகுப்பின் புனைகதைகளைப் படைத்தவர், 1946இல் மறுமலர்ச்சி நடத் திய சிறுகதைப் போட்டியில் 'விழிப்பு" என்ற தனது சிறுகதைக்கு முதற் பரிசைப் பெற்றவர். பிரசுர அந்தஸ்தைப் பெற்ற இவரது முதற் சிறுகதையும் இதுவென் கின்றனர். பன்னிரு எழுத்தாளர்களது படைப்புகளை அடக்கி, சிற்பி தொகுத்த "ஈழத்துச் சிறுகதைகள் தொகுப்பில் இவ ரது அவன்” என்ற சிறுகதையுமுண்டு. மகாத்மா காந்தி நூற்றாண்டையொட்டி இளம்பிறை ரஹ்மானும், எஸ்.பொன்னுத் துரையும் இணைந்து வெளியிட்ட ‘காந் தீயக் கீதைகள்' தொகுதியில் இவரது "ஓ நாய்கள் கவனம்" என்ற படைப்பும் உள் ளது. “பொற் பதக்கத்தில் மணிகள் பதிக் கும் கலை வண்ணத்தோடு பொரு ம்ே பொருத்தமும் தேடிச் சொற்களைக் கேrர் த்து எழுதிய சிறுகதைகள்” எனத் தான் படைத்த பாத்திரமொன்றினூடாகத் த சிறுகதைகளுக்கு வரைவிலக்கணம் கூறு இந்தப் பிரம்மா மறுமலர்ச்சிக் குழுவைச் சேர்ந்த (சு.) இராஜநாயகன். இவரே இத்தொகுப்பின் கதாசிரியர்.
ஈழத்தின் இலக்கிய முன்னோடியான சு.இராஜநாயகனின் மகன் பாரதி (தினக் குரல்) இத் தொகுப்பை வெளிக் கொணர்ந்து "அவையத்து முந்தி இருக் கச் செய்த தந்தைக்குச் செய்த இச் சங்கை ஈழத்து இலக்கிய உலகிற்குச் செய்த காலத்தால் மறக்கப்படாத அரும் பணியாகும்.
இதுவொரு மீரா பதிப்பகம், கொழும்பு 6 இன், வெளியீடாகும். 9

கழகுங்கள்
மல்லிகை இதழ்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். எம்போன்ற இளம் இலக்கியச் சுவைஞர்களின் இலக்கியத் தேடலைப் பூர்த்தி செய்ய மல்லிகை முன் நிற்கின்றமை வரவேற்கத்தக்கது. எதிர்காலத்திலும் மேலும் இந்தப் பணி தொடர வேண்டும். இளம் படைப்பாளிகளுக்கும் தொடர்ந்து களம் தரவேண்டும்.
அ.முஹம்மது சமீம் அவர்களின் நினைவுகளும், திக்குவல்லை கமால் அவர்களின் கதையும், கோகிலா மகேந்திரனின் விமர்சனப் பார்வையும், மேமன்கவி அவர்களின் கவிதையும் ஜூன் இதழில் அற்புதமாக இருந்தன. தவிரவும் தெணியானின் குறிப்பும், லெ.முருகபூபதியின் கட்டுரையும் மிக நீண்டு இருப்பது எம்மை நெருடுகின்றது.
மேற்படி படைப்புகளுக்கூடாக எமது எழுத்துக்களையும் நெறிப்படுத்த முடிகிறது. கட்டுரை, கதை, கவிதை, விமர்சனம் என மல்லிகையின் பரப்பு நீண்டு செல்லும் போது எமது எழுத்துக்களும் காத்திரப்படும் என எதிர்பார்க்கிறோம்.
- சமான்
அநுராதபுரம்
தினமும் தபாற்காரனை எதிர்பார்த்திருப்பது வழக்கமாகி விட்டது. சிலவேளைகளில் ஏமாற்றம், அதற்காகத் தபாற்காரனைக் கோபிக்க முடியுமா?
10.30 மணியளவில் மல்லிகை தபாலில் வந்தது. மேலோட்டமாகத் தலைப்புகளை நோட்டமிட்டுக் கொண்டேன்.
பின்னர், ஆறுதலாக எனக்குப் பிடித்தமான தெணியானின் ‘பூச்சியம் பூச்சியமல்ல' தொடரை வாசிக்கத் தொடங்கினேன்.
45 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் எனக்கேற்பட்ட அநுபவங்களை மீட்டுவதற்கு தெணியானின் குறிப்பு உதவியது.
37

Page 21
பண்டிதர்கள், வித்வான்கள் தங் களுடைய கெட்டித்தனத்தைக் காட்டி ஆசிரிய மாணவர்களை அலைக்கழிக்கும் போக்குச் சர்வ சாதாரணம். அஃது அவர் களுக்கு ஒரு பெருமை. தங்களை விடவும் மாணவன் உயர்ந்து விடக்கூடாதென்ற தாழ்வு மனப்பான்மை.
நயங் காணலில், "அவள் என்று கம்பன் ஏன் சொன்னான் என்பதற்கு, இலக்குமணன் கண் விழித்துக் காத்துக் கொண்டிருக்கும் பொழுது, துரங்கிக் கொண்டிருக்கும் சீதையின் தோற்றப் பொலிவை வர்ணிப்பது ஒழுக்க விழுமியத் திற்குப் பொருந்தாது எனக் கருதியே "அவள்’ என்று மாத்திரம் சொன்னான்' என்று தெணியான் சொன்னதும் அதைச் சீரணிக்க முடியாத பண்டித ஞானத்திற்குச் சவாலாகி விட்டது. அதை மறைக்கவே, 'சீதை என்ன பெற்றிக்கோட்டோடையா படுத்திருந்தாள்" என்ற அசிங்கமான கிண்டல் எழுந்தது.
தெணியானின் ஆசிரிய பயிற்சி
அணுகுமுறை ஒரு மெளனப் புரட்சி 660Tsurub.
ரகுநாதனின் சில நினைவுகள்' தினகரனில் 18.06.06இல் வெளிவந்தது. திரும்ப ஏன் பிரசுரித்தீர்கள்?
திக்குவல்லை கமாலின் அரங் கேறும் அரைகுறைகள்' ரசிக்கக் கூடிய தாகவிருந்தது. இன்றைய யதார்த்தத்தைச் சுவைபடக் காட்டியுள்ளார்.
38
லெ. முருகபூபதியின் "வாழ்வின் தரிசனங்கள் மூலம் பல சுவையான
தகவல்களைத் தந்துள்ளார்.
சிங்கப்பூர் தேசிய சேவையின் முன் மாதிரி, மக்கள் பண்பு முதலியன நல்ல உதாரணங்களாகும்.
தூண்டிலில் இலக்கியம், மொழி, வரலாறு சம்பந்தமான கேள்விகள் இடம்பெறுமானால் பொதுவாக எல்லோ ருக்கும் பிரயோசனமாகவிருக்கும்.
- StjøIII கையூம்
பதுளை.
பூச்சியம் பூச்சியம் அல்ல?
தெணியானின் ‘பூச்சியம் பூச்சியம் அல்ல" என்ற தொடர் அவரது வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. அத் தொடரில் ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ் வொரு நகர்விலும் 'சாதி என்ற அம்சம் மேலோங்கியிருப்பதைக் காணலாம். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகு பாட்டினால் அன்றைய மக்கள் எவ்வளவு துயரங்களை அனுபவித்தார்கள் என்பனை பூச்சியம் பூச்சியமல்ல உணர்த்துகின்றது.
இன்றும் நம் மக்கள் மத்தியில் சாதிப் பாகுபாடு நீங்கியிருப்பதாகத் தெரிய வில்லை. சிங்கள மக்களிடையேயும் இந்த சாதீயம் பிரதான பங்கு வகிக்கின்றது. ஒரே இனமாக வாழ்ந்து கொண்டு தங்களுக்குள் தொழிலை மையமாக வைத்து வேற்றுமை பாராட்டுவதென்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம். எல்லோரும் டாக்டர்

களாக, என்ஜினியர்களாக இருக்க முடி யாது. மனிதனாகப் பிறந்தவர்கள் எத் தொழிலையாவது செய்து பிழைக்கத்தான் வேண்டும். உயர்ந்தவர்கள் இழிவான தொழிலைச் செய்தாலும் அதாவது சட்ட விரோதமான தொழில்களைச் செய்தாலும் அவர்கள் உயர்வானவர்களே. ஆனால் பிழைப்புக்காக அற்பத் தொழிலைச் செய்ய வர்கள் தாழ்ந்தவர்கள். என்ன சமுதாயம்
இது
மனிதன் என்ற வகையில் உலகி லுள்ள அனைத்து மனிதர்களும் சம அந்தஸ்துடையவர்களே. இதற்கு சாதி, மத, இன, மொழி வேறுபாடில்லை. அனை
வரும் மனிதர்களே. இதனை யாவரும்
உணர வேண்டும்.
மனிதர்கள், மனிதர்களாலேயே இழிவானவர்களாக நோக்கப்படுவதானது பகுத்தறிவு படைத்த மனித இனத்தையே தாழ்த்தி விடுகின்றது என்பதில் ஐய மில்லை.
ஒரு இனம் தங்களுக்குள் உயர்வு, தாழ்வை நீக்கி, வேறுபாடுகளைக் களைந்த பின்புதான் ஏனைய இனத்த வருடன் சுமுகமாக வாழ்வதைப் பற்றி நம் நாட்டு மக்கள் யோசிக்க வேண்டும்.
எனது சமூகத்தில் சாதிப் பாகுபாடு இல்லா விட்டாலும் இந்த சாதிப் பாகு UsTillms) JibuClib Gasn'G60) DassiT 6Tip60LD ஏன் மனித சமூகத்தையே வெகுவாகப் பாதித்து விடுகின்றது.
- எஸ்.ஜெம்ஸி மடிகே மிதியால
39
51
ஆண்டுகள்
10 ல் லி  ைக
ფto 60) 6ა 2006ub இதழில் தூண்டில் கேள்வி பதில் பகுதியில் கொழும்பு செல்வி சுபமாலாவின் கேள்வி இது - "ஆரம்பகாலத்தில் மல்லிகையுடன் தொடர்பு கொண்டவர்களுடன் இன்னமும் தொடர்பைப் பேணி வருகிறீர்களா?" என்பது. டொமினிக் ஜீவா அவர்களின் பதில் - "ஆரம்பகால மல்லிகை அபிமானி களில் பலர் இன்று மறைந்து விட்டார்கள். இருப்பவர்களுக்குத் தொடர்ந்து மல்லிகை
திரு. தனபாலசிங்கம்
அனுப்பி வருகிறேன்."
மேற் குறிப்பிட்டவற்றைப் படித்த வுடன் என்னைச் சிறிது நேரம் பின்னோக் கிச் சிந்திக்க வைக்கிறது.
அப்போது 1955ம் ஆண்டு, நான் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் S.S.C. வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். தமிழ் படிப்பிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு M.A. பட்டதாரி ஆசிரியர் பெயர் எஸ்.பொன்னுத் துரை என்பவர் வருவார் என்று கேள்விப் பட்டு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டி ருந்தோம். தமிழ்ப் பாட நேரம் வந்தது. வகுப்பறைக்கு நல்ல வளர்த்தியான கம்பீர வெட்டு மீசையுடன் வெள்ளை உடை அணிந்து வந்தவர் "எல்லோருக்கும் வணக்கம்" என்றார்.

Page 22
நாங்களும் எழுந்து நின்று "வணக்கம் சேர்’ என்றோம்.
தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு எங்களையும் ஒவ்வொருவராக விசாரித்துப் பின்பு பாடத்தை ஆரம்பித்தார். எனக்கு அருகில் இருந்தவர் காரை சுந்தரம்பிள்ளையாகும். கிழமைகள் ஓடின. காரையும் நானும் அவருக்குப் பிடித்த மாணவர்களானோம். ஆனால் அவரைத் தொடர்ந்து படிப்பிக்க இங்குள்ள சில மூத்த ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையால் பாடசாலையை விட்டு விலகிப் போக நேர்ந்தது. போவதற்கு முன்பு 'உங்களை மீண்டும் எங்கு சேர் சந்திக்கலாம்?" என்று நானும் காரையும் கேட்டு வைத்துக் கொண்டோம்.
ஆசிரியர் எஸ்.பொ. கொடுத்த விபரப் படி நானும் காரை சுந்தரம்பிள்ளையும் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள 60ஆம் எண் கடை ஒன்றுக்குள் போனோம். அது ஒரு சலூன். ஒருவர் மட்டுந்தான் முடி திருத்தும் வேலை செய்து கொண்டு நின்றார். அவருக்கு வயது அப்போது 27, 28 மட்டில் இருக்கும். வேட்டி யுடன் சேட் முழுக்கையைச் சிறிது மடித்து விட்டுக்கொண்டு, தனது முடியையும் நன்கு சீவி இழுத்து மிக அழகான வாலிபனாக நின்ற அவரிடம் "ஜீவா நிற்கிறாரா?" என்று கேட்டோம். புன்சிரிப்புடன் "நான்தான் ஜீவா. என்ன வேண்டும் உங்களுக்கு" என்று ஒரு கேள்வியையும் கேட்டார். நாங்கள் எங்களை அவருக்கு அறிமுகம் செய்து கொண்டு "பொன்னுத்துரை மாஸ்டரைச் சந்திக்க வேண்டும். விலாசம்
40
உங்களிடம் கேட்கச் சொன்னவர்" என்றோம். அவர் சொன்ன விபரப்படி எஸ்.பொ. அவர்களைச் சந்தித்தோம்.
அன்று 1955ல் அறிமுகமான ஜீவா தான் பத்து வருடங்களுக்குப் பின்பு வெளி வந்த "மல்லிகை"யின் ஆசிரியர் என்பதைத் தெரிந்து கொண்டோம். சந்தர்ப்பம் வரும் போது யாழ்ப்பாணத்திலும் பின்பு கொழும் பிலும் சந்தித்துக் கொள்வோம். தனி மனிதனின் துணிவாலும், அறிவாற்ற லாலும் ஆரம்பித்த மல்லிகை மாத இதழ் இடைப்பட்ட காலத்தில் நாட்டில் ஏற்பட்ட சீர்கெட்ட நில்ைமையால் தொடர்ந்து வெளி வர ஆசிரியர் பட்ட கஷ்டங்கள் கணக்கி லடங்காதவை. இன்னல்கள் பல வந்துற்ற போதும் துவண்டு விடாமல் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக மல்லிகை வளர்ந்து வருகிறது என்றால் பெருமைப் படாதார் - போற்றாதார் யாருமிலர். எல்லா வற்றுக்கும் துணிவே துணை.
பதிலில் குறிப்பிட்டதற்கமைய இன்று எனது நண்பர் கலாநிதி காரை செ.சுந்தரம் பிள்ளை அவர்கள் இல்லை. மறைந்து விட்டார்.
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய டொமினிக் ஜீவா அவர்கள் தனது எண்ப தாவது அகவையைத் தொடங்கும் வேளை யில் மல்லிகைப் பந்தலின் கொடிக்கால் களுக்கு என்றும் குறைவே வராதிருக்க இறைவனை வேண்டுகிறேன்.
- எஸ்.ஐ.தனபாலசிங்கம் வவுனியா.

மீன் பாடும் தேனகமான கிழக்கிலங்கை, தமிழ்க் கவிதா உலகிற்கு ஆற்றல் மிகுந்த பல கவிஞர்களை அளித்திருப்பதை இலக்கிய வரலாற்றாசிரியர்கள் மறுக்கார். புலவர் மணி.ஏ.பெரியதம்பிப்பிள்ளை, தமிழ்மணி ஆ.மு.ஷெரிபுதீன், திமிலைத் துமிலன், காசி.ஆனந்தன், அன்பு முஹையிதீன், நீலாவணன், அண்ணல், சுபத்திரன், சோலைக்கிளி இப்படி அதன் பட்டியல் நீளும். இந்த வரிசையில் சேர்க்கக்கூடிய இன்னொரு கவிஞரே எம்.ஏ.நுஃமான். இவரொரு பேராசிரியரென்பது இலக்கிய உலகிற்குத் தெரியும். கல்முனையில் 1944இல் பிறந்தார். ஆசிரியத் தொழிலில் பயணிக்கத் தொடங்கி பல்கலைக் கழக பேராசிரியராகத் தன்னை உயர்த்தியவர்.
ஈழத்து இலக்கியத்தின் முற்போக்கு கவிஞர் முகத்தை வெளிக் கொணருமுகமாக விபவி + முற்போக்குக் கலை இலக்கியப் O O பேரவை என்பன இணைந்து நடத்தி 6ILs).6. cos ானின் வரும் கருத்தரங்குத் தொடரின் மற்றொரு நிகழ்வு கடந்த 16.07.2006இல் வெள்ள வத்தை பெண்கள் ஆய்வு நிறவனத்தில் கவிதா நடைபெற்றது. இந்நிகழ்விற்குச் செல்வி திருச்சந்திரன் தலைமை வகித்தார். 6) GiGUGOhio கவிஞர் எம்.ஏ.நுஃமானின் கவிதைகள் O ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆய்வுரையை கலாநிதி. செ.யோகராசா
- ஆய்வுக் நிகழ்த்தினார்.
O O திறனாய்வுரை - வாழ்க்கை அறி கிருததரங்கு முகம், பொதுவான அறிமுகம், பொது is வான கவிதை மதிப்பீடு, முற்போக்கு, மா.பாலசிங்கம் ஈழத்துக் கவிஞர் என்ற ஒப்பீட்டு மதிப்பீடு என்ற கூறுகளில் கவிஞர் எம்.ஏ.நுஃமானின் கவிதைப் பரப்பை பகுத்துப் பார்ப்பதாக அமைந்திருந்தது. அது மட்டுமன்றி அவைகளின் விரிவையும் ஆழத்தையும் தேடல் செய்வதாகவும் இருந்தது.
கலை, இலக்கியத் துறையில் தற்பொழுது பேசப்பட்டு வரும் பலருக்கு அவைகளோடொண்றித்த பன்முக அலகுகளைக் காணமுடிவதில்லை. அவர்கள் ஒரு துறைக்குள்ளேயும், ஒர் அலகுக்குள்ளேயுமே நின்று தமது அசைவியக்கத்தைக் காட்டுவர். இதற்கு உதாரணமாக இன்றைய தென்னிந்திய கர்நாடக சங்கீத விமர்சகர் சுப்புடுவைச் சுட்டலாம். இவர் சங்கீதத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசிக் காட்டுவார். ஆனால் சங்கீதத்தைச் சாதகம் பண்ணிப் பாடமாட்டார். பேராசிரியர் க.கைலாசபதி கூடத் தமிழ் இலக்கியத்தின் ஆதிமூலமான கவிதையைக் கண்டுகொள்ள
41

Page 23
வில்லையே! கவிஞர் எம்.ஏ.நுஃமான் இப்போக்கை மாற்றி அமைத்துச் சாதனை
படைத்தவர். அவர் கவிஞர், சிறுகதைப்
படைப்பாளி, விமர்சகர்!
ஈழத்தின் நவீன கவிதைக்கு உந்து விசை நுஃமான் என்றால் கவிதா உலகு அதை மறுக்காது!
ஈழத்தின் நவீன கவிதையை எடுத்துக் கொண்டால் அதன் முதல் தலைமுறை 1940இல் இனங்காணப் படுகிறது. இதற்கு நாயகனாக மஹாகவி (து. ருத்திரமூர்த்தி) விளங்குகிறார். சாதாரண வாழ்க்கை, கிராமியம், மீனவ வாழ்க்கை, காதல், எரியும் சமூகப் பிரச்சினைகள் ஆகியன இக்கவிதைகளில் தொனித்தன.
இலக்கியத் திறனாய்வாளர்கள் 1940இல் வெளியாள மறுமலர்ச்சிச் சஞ் சிகைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, மலையக இலக்கியவாதி கே.கணேசஸ் வெளியிட்ட கொடுக்காதது வருத்தத்திற்குரியதே!
'பாரதி சஞ்சிகைக்குக்
நவீன கவிதைக்கு முழுமைத் தன்மையைக் கொடுத்தவர் நீலாவணன். இது ஐம்பதுகளிலேதான் நடந்தது. இக் குழுமத்தவர்கள், சமூகப் பிரச்சினைகளை ஆன்மீக நோக்கோடு பார்க்கும் மரபை ஏற்படுத்தி, அடிகளை மாற்றிப் புதுமை களைச் செய்தனர். பேச்சோசைக்கு முதன்மை காட்டி யாப்பை மாற்றினர். மனோரதியத்தை நவீன கவிதைகளில் ஏற்றி இரசித்தனர். யதார்த்தவாதத்தைப் பெய்தனர்.
42
சிறுகதைகளுக்குரிய பண்புகளைக் கவிதைக்குள் கட்டவிழ்த்து விட்டவர் மஹாகவி!
மஹாகவி, நீலாவணன் ஆகியோரது பெரும்பாதிப்பைப் பெற்றவர் கவிஞர் எம்.ஏ.நுஃமான். இவரது கவிதா வல்ல பத்திற்கு மஹாகவியே ஊற்றென்பர். நுஃமானது சமகாலக் கவிஞர்களாக மு.இராமலிங்கம், சுபத்திரன், பசுபதி ஆகியோர் இருந்தனர். ஈழத்துக் கவிதா மண்டலத்தை 1960இலேயே முற் போக்குச் சிந்தனைக் கவிதைகள் ஆக்கிர மித்தன. ஆட்சி” கொண்டன. அதற்குக் கவிஞர் பசுபதி தலைமை தாங்கினார்.
தமிழகக் கவிஞர்கள் 1960களில் பிரச்சினை பூர்வமான கவிதைகளைப் படைத்தனர். இந்த முற்போக்கான கவிதைகளை சி. செல்லப்பாவை ஆசிரியராகக் கொண்ட புத்திலக்கிய ஏடான "எழுத்துக் குழுமத்தினர் நிரா கரித்தனர்.
காதல், தொனிப் பொருட்களையுடைய கவிதைக
இயற்கை சம்பந்தமான
ளோடேயே நுஃமான் தனது கவிதைப் படையலைத் தொடங்கினார் மடை மாற்றம் கண்டு அவரது கவிதைகள் புதிய தளத்திற்குப் பாய்ந்த பின்னர் அவை தன் உணர்வு, சாதாரண அநுபவங்கள் என் பவைகளைச் சொல்பவையாகக் காணப் பட்டன. பேரினவாதத்தின் ஒடுக்குமுறை, முஸ்லிம் மத ஆதிக்கம் என்பன வற்றையும் அவரது கவிதைகள் பேசின. போராளிகளின் மீது இவர் கொண்டிருந்த அநுதாபமே பலஸ்தீனக் கவிதைகளை மொழிபெயர்க்க இவரை உந்தியதாகவும் அறியப்படுகிறது.

மஹாகவியும் நீலாவணனும் விரக தாபத்தை ஓசை ஊடாக வெளிப்படுத் தினர். இந்த உத்தி கவிதைப் பிரியர்கள் மத்தியில் எடுபடவில்லை! இதற்கு மாறாக நுஃமான் யாத்த கவிதைகள் மென்மையையும், அநுபவ வெளிப் பாட்டையும் கொண்டிருந்தன. இந்த வகையில் நுஃமானைத் தென்னகக் கவிஞர் கு.ப.ராவின் கவிதைகளுக்குள் காணமுடிகின்றது.
பாட்டாளிகள் தினம் குறித்து "மே தினம்" என்ற தலைப்பில் கவிஞர் க.பசுபதி (யாழ்ப்பாணத்துக் கவிராயர்) பாடினார். இதே நிகழ்வை மையப்படுத்தி நுஃமான் “மே 1 திகதி’ என்ற மகுடத் திலும் பாடியுள்ளார். இவ்விரு முற் போக்குக் கவிதைகளையும் ஒப்பு நோக்கு கையில் பாரிய வித்தியாசங்கள் தென்படு கின்றன. ஒரே அணியைச் சேர்ந்திருந்த இருவர் ஒரே தொனிப் பொருளை கை
யாண்ட நுட்பத்தில் வேறுபடுகின்றனர்! "
இரு வேறு போக்குடையவை நுஃ மான் கவிதைகள். ஒன்று மரபு வழி, மற்றது சம்பவங்கள் மூலமாகத் தொனிப் பொருளை உணர வைத்தல், தனது கவிதை யாப்பைக் காட்சிப்படுத்தி ஆற்றுகை செய்யும் பொழுது நுஃமான் ஒன்றுக்கு மேற்பட்ட உணர்வுகளைச் சிதற வைக்கிறார்.
"அவர்களும் பூனைகளும் நாய் களும்', ‘நில மெனும் நல்லாள்", 'கோயிலின் வெளியே” ஆகிய கவிதை கள் சாதாரண கவிதைகளிலிருந்து வேறு படுகின்றன. அவர்களும் பூனைகளும் நாய்களும் தொனிப் பொருளை நிகழ்ச்சி களில் படர வைத்து வாசகனின் மனதில்
43
இலகுவாகப் பதிய வைக்கின்றன. நில மெனும் நல்லாள்" நாடகப் பாணியானது. 'கோயிலின் வெளியே” சாதிப் பிரச்சினை குறித்த புதிய பார்வை! நாட்டார் பாட லைப் போல அடிகள் மீண்டும் மீண்டும் வரும். இது நவீன கவிதையின் புதிய வெளிப்பாட்டு முறை வர்க்க முரண்பாடு களைத் தழுவிய நுஃமான் கவிதைகள் பல்வேறுபட்ட உணர்வலைகளை வாச கனின் மனதில் பெயர்த்தக் கூடியவை. வான்பாடிக் கவிதைகளைப் போல் அலங்கார வார்த்தைகளால் சோடிக்கப்பட் டவையல்ல! பிரசாரமற்றவை. ஏலவே தற் காலத் தலித்தியப் பாணிக் கவிதை களையும் யாத்துள்ளார். ஈழத்துக் கவிதை யின் மூன்றாம் தலைமுறையில் வந்தவர் நுஃமான். அதன் நான்காவது தலைமுறை யினரான சேரன் போன்ற கவிஞர்கள் நுஃமான் கவிதைகளின் காத்திரத் தன்மை களை உணர்ந்து அவைகளுக்கு உரிய வழிபாட்டைச் செய்தனர்.
மிக ஆரோக்கியமான முறையில் சமூக, அரசியல் மாற்றம் என்பவற்றை நுஃமான் கவிதைகள் புலப்படுத்துகின் றன. இந்த வகையில் "ஹோசிமின் நினை வாக', 'பாலஸ்தீனக் கவிதைகள்' என்பன கவனத்தைப் பெறுகின்றன. தொடர்ந்த அடுத்த தலைமுறையில் இவைகள் பாதிப்பை ஏற்படுத்தின!
கவிதை அரங்குகள் ‘அலங்கார இருந்தன. இப் போக்கைத் தகர்த்துக் கவிதை அரங்கு களை புதிய தளத்திற்குத் திசை மாற்றிய பெருமை மு.இராமலிங்கம், மஹாகவி ஆகியோரோடு கவிஞர் நுஃமானையும்
மாலை”களாகவே
சாரும்.

Page 24
“கவிஞன்” என்ற கவிதைக்கான சஞ்சிகையை நடத்தி ஈழத்துக் கவிதைக்கு மேடையமைத்துக் கொடுத்தவர் நுஃமான். கவிதை சார்ந்த விமர்சனங்களைச் செழுமைப்படுத்தி, வளர்த்தெடுத்து கவிதா விமர்சனத்திற்கு ஒரு விமர்சகர் குழாத்தை இனங்காட்டினார்.
ஈழத்துக் கவிதைத் தொகுப்பு, மரணத்துள் வாழ்வோர் ஆகிய கவிதைத் தொகுப்புகளுக்குத் தானுமொரு தொகுப் பாசிரியராக இருந்து ஊழியம் செய்தார். கலாநிதி. செ.யோகராசாவின் ஆய்வுரையி னுாடாகக் கவிஞர் நுஃமானின் கவிதா உலகை மட்டுமன்றி ஆய்வாளரின் கவிதை ஈடுபாட்டையும் கவிதா உள்ளத்
தையும் காண முடிந்தது. அத்தோடு ஈழத்
தின் கவிதா உலகின் ஒரு பகுதியையும் பார்த்த திருப்தி ஏற்பட்டது. தென்னிந் தியச் சிறு சஞ்சிகைகள் தரும் கவிதா விளக்கத்திற்கு ஒட்டியதாக இருக்காது
புதுக் கவிதையின் ஆத்மாவை கலாநிதி
செ.யோ. தரிசிக்க வைக்கிறார். அந்த வகையில் இதற்காக கழிக்கப்பட்ட காலம் பயனுடையதாக இருந்தது.
கருத்தாடல் நீளமானதாக இருக்க வில்லை!
பேராசிரியர் சி.மெளனகுரு, கவிஞர் நுஃமான் கவிதைகளை இரு வேறாகப் பிரித்துப் பார்த்தார். அக உணர்ச்சிப் பாடல், புறம் சார்ந்த பாடல். தொனிப் பொருளை நேரடியாகப் புலப்படுத்த வில்லை. மிக ஆழமானவை. யாழ் பல் கலைக் கழகத்தில் நுஃமான் இருந்த பொழுது அங்கு பெண்களுக்கான பொருட்காட்சியொன்று நடைபெற்றது. அதற்கு அவர் செய்த பங்களிப்பை
44
என்னால் இன்னும் மறக்க முடிய வில்லை! இருந்தும் அவரது பார்வை பெண்ணிலைவாதத்திற்குப் பாயாமல் போனது துரதிர்ஷமானதே! ஆச்சரியமாக இருக்கின்றது எனவும் பேராசிரியர் கேள்வி எழுப்பினார்.
- பெண்ணியத்தைப் பாட நுஃமான் சார்ந்த இஸ்லாமிய சூழல் தடையாக இருந்திருக்கலாம். காலாதி காலமாக இருந்து வரும் நிலையை குழப்ப விரும்பாதிருக்கலாம். பெரும் போராட் டத்தின் பின்னர் சைவ சமயக் கோயில் கள் சகலருக்கும் திறந்துவிட்ட பின்னரும் சில பஞ்சமர்கள் உள் சென்று வழிபாடு செய்ய விரும்பாமல் வெளியே நின்று வழிபடுவது போல் இந்த வகையில் கிழக்கு மாகாணம் மாற்றத்திற்கு வழி கொடுக்காது ‘கட்டுப் பெட்டித் தனங் களை வளர்ப்பது போல் தெரிகின்றது!
மஹாகவியின் நூல்களை வெளிப் படுத்திய பெருமை கவிஞர் நுஃ மானையே சென்றடைகின்றது. அவர் ஊக்கமெடுக்காவிட்டால் மஹாகவி ஒரங் கட்டப்பட்டிருப்பார். ஈழத்து கவிதையின் முதல் கட்டத்தைப் பிரதிபலிப்பவராகவே கவிஞர் பசுபதி கணிப்பைப் பெறுகிறார். அவரது கவிதைகளின் உதைப்பை அவை பிறந்த காலகட்டத்தோடு இணைத்துப் பார்ப்பதுதான் உகந்தது. - தேசிய கலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்த சோ.தேவராசா இப்படியாக தனது கருத்து களை வெளிப்படுத்தினார்.
கவிஞர் ஏ.இக்பாலின் கருத்துப் படி, நுஃமானின் குடும்பம் ஆத்மீகத் தைக் கடைபிடித்தது. அவரது தந்தை

யார் ஒர் ஆலிம். இஸ்லாம் மதத்திற்கு ஆலிம் என்பவர்கள் மிக முக்கியமான வர்களாக இருந்தும் தந்தையார் பாரிய தொரு கட்டுடைப்புக்கு வித்திட்டார். அக்காலத்து இஸ்லாமியப் பெண்கள் பேருந்துகளில் பயணிப்பதில்லை. நுஃ மானின் தந்தையார் தனது மனைவியை முதன் முதலாகப் பேருந்தில் பயணிக்க வைத்துப் பாரம்பரியப் பழக்கமொன் றைக் கட்டுடைப்புச் செய்தார். அத் தகைய முன்னேற்றப் பார்வை கொண்ட குடும்பத்தவரான நுஃமான் பெண் விடுதலையைக் கண்டு கொள்ளாது விட்டது புதிராகவே இருக்கின்றது. கவிஞர் ஏ.இக்பாலின் பார்வை இப்படி யாக இருந்தது.
இதை நுஃமான் தெளிவுபடுத்த வேண்டுமெனக் கூட்டத்தினர் வேண்டு கோள் விடுத்தனர். ஆனால், கவிஞர் நுஃமான் கூட்டத்திலிருக்கவில்லை!
ஒசை மரபு சார்ந்த கவிதைகள் நிலைப்பதில்லை எனக் கூறுவது பொருத்தமில்லையெனக் கூறிய கவிஞர் மாவை வரோதயன், கவிஞர் பசுபதி சமதர்ம (சோசலிச) நோக்கில் எழுதி யவர் நுஃமான் கிண்டல் பாணியில் எழுதியுள்ளார். எனவே இருவரையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது தவறென்றார்.
இக்கருத்தரங்கின் தாக்கம் அடுத்த கருத்தரங்கிற்கான திகதியை விசாரிக் கவும் வைத்தது!
鞭藻
SNR XNS
ဖဲ့ဖဲ့၊ S
NŞIN NŞ
Š
N ခဲဲ့နွိုဖဲ့
RRMANN NNSNS)
NIKS
NWY-Jed'SINS
NS NANN

Page 25
18. 61. அஇராசரெத்தினம்
fழத்துச் சிறுகதைத் துறைக்கும், நாவல் துறைக்கும் கனதியான பங்களிப்புச் செய்த பெருமை வ.அ.இராச ரெத்தினத்திற்குரியது. ஈழகேசரி வெளிவரத் தொடங்கிய இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் 1950 ஒக்டோபர் 1ஆம் திகதி இவரின் முதலாவது சிறுகதையான "இதய தாகம்’ என்ற ஈழகேசரிச் சிறுகதையுடன் சிறுகதை உலகில் கால் பதித்தார். கிழங்கிலங்கை மூதூர் தந்த படைப்பாளி இராசரெத்தினத்தின் 29 சிறுகதைகள் ஈழ கேசரியில் வெளிவந்துள்ளன. 1953ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் அவரின் உன்னதமான சிறுகதையான ‘தோணி’ ஈழகேசரியில் வெளிவந்தது. அச்சிறுகதையுடன் ஈழத்துச் சிறுகதை உலகம் தன்னை ஒருகணம் சிலிர்த்துக் கொண்டது. தோணி சிறுகதையின் பின்னர் வெகுவாகப் பேசப்படும் இராசரெத்தினம் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இராசரெத்தினத்தின் இன்னொரு சிறந்த சிறுகதையாக "அறுவடை கொள்ளப்படுகின்றது.
ஈழத்தின் புனைகதைப் படைப்பாளிகள்
- செங்கை ஆழியான்
சொந்தமாக ஒரு தோணியைத் தனதாக்கித் தொழில் செய்ய ஆசைப்படும் ஒருவனின் கனவுகளைத் தோணி சித்திரிக்கின்றது. ‘கலையழகுடன் யதார்த்த வாழ்வைச் சித்திரிக்கும் நல்ல கதை தோணி. இப்படிப்பட்ட வாழ்க்கைச் சித்திரங்கள் பலவற்றைத் தரமான கதைகளாக உருவாக்கியிருக்கிறார் இராசரெத்தினம்’ என்ற வல்லிக்கண்ணனின் கணிப்பீடு கவனிக்கத்தக்கது. “சிறுகதைகளை இவர் சிருஷ்டித் திருப்பது போல மற்றவர்கள் செய்யவே முடியாது’ என்ற கணகசெந்திநாதனின் கூற்றும் இவ்விடத்தில் நோக்கத்தக்கது.
1950 - 1954 காலகட்டத்தில் வ.அ.இராசரெத்தினத்தினால்"எழுதப்பட்ட பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பாக “தோணி’ என்ற தொகுதியை அரசு வெளியீட்டினர் வெளியிட்டனர். அவ்வாண்டு சிறுகதைத் துறைக்கான சாகித்ய மண்டலப் பரிசினை அது பெற்றுக் கொண்டது. அதன் பின்னர் அவரின் ஐம்பது சிறுகதைகளைத் தொகுத்து ‘ஒரு காவியம் நிறைவுறுகிறது’ என்ற பெருந் தொகுதியை மித்ரா வெளியீட்டினர் சென்னையில் வெளியிட்டனர். “கொட்டியாரக் கதைகள்’ என்றொரு
46
 

சிறுகதைத் தொகுதியும் வெளிவந்தள்ளது. வ.அ.இராசரெத்தினத்திற்கு புத்திலக்கியம் பற்றிய தெளிவும், நவீன இலக்கிய வகைகளின் செல் நெறிகளும் தெரிந்திருக்கின்றன. அவர் இலக்கியத்தை ஒரு சமுக சக்தியாகக் கருதிச் செயற்பட்டுள்ளார். அவரின் சிறுகதைகள் அவர் வாழும் மண்ணின் மக்களைத்தான் பேசுகின்றன. மக்களின் மானிட நேயத்தையும், அடக்கியொடுக்கப்பட்ட நிலையையும், இடர்ப்பாடுகளையும் தான் சித்திரிக்கின்றன. பாசாங்கற்ற சகசமான மொழியில் சமூக முரண்பாடுகளையும், சமூக அவலங்களையும் அவர் தன் கதைகளில் தந்துள்ளார்.
வ.அ.இராசரெத்தினம் ஒரு நாவலாசிரியராகவும் தன் பங்களிப்பினை இலக்கியத் துறைக்கு வழங்கியுள்ளார். இராசரெத்தினத்தின் முதலாவது நாவல் "கொழுகொம்பு’ ஆகும். ஈழத்தின் நவீன நாவல் துறையை ஆரம்பித்து வைத்த அன்னபூரணி, (சச்சிதானந்தன்), பாசம் (சம்பந்தன்), கண்டதும் கேட்டதும் (தேவன்- யாழ்ப்பாணம்) எனும் நாவல்களின் வரிசையில் இராசரெத்தினத்தின் கொழுகொம்பு முக்கியம் பெறு கின்றது. கொழுகொம்பு ஈழகேசரியில் தொடராக வெளிவந்தது. பின்னர் நூலுருவில் வெளியிடப்பட்டது. அவரின் இன்னொரு நாவல் ஈழநாட்டில் வெளிவந்த துறைக்காரன்’ என்பதாகும். இது மித்ரா வெளியீடாக நூலுருப் பெறும்போது இராசரெத்தினத்தின் படைப்பாற்றல் விதந்து பேசப்படும். 'விவேகி'யில் அவர் இரண்டு குறுநாவல்கள் படைத்துள்ளார். 'கிரெளஞ்சப் பறவைகள்’ என்றொரு வரலாற்று நாவலையும் அவர் எழுதியுள்ளார். ஈழத்தில் வெளிவந்த வித்தியாசமான வரலாற்று நாவல் இதுவாகும்.
ஈழத்தின் மூத்த படைப்பாளி, தான் வாழ்ந்த கொட்டியார மண்ணையும் மக்களையும் இலக்கியத்தில் முதன்மைப்படுத்திப் பதிவு செய்த புனைகதையாளன் என்ற வகையில் வ.அ.இராசரெத்தினம் என்றும் தமிழ் இலக்கியத்தில் பேசப்படுவார்.
19. தேவன் - யாழ்ப்பாணம்
ரிழத்தின் புனைகதைப்படைப்பாளிகளில் தேவன் - யாழ்ப் பாணம் என்ற புனைப்பெயரில் எழுத்துலகில் கணிசமான பங்களிப்புச் செய்தவர் இளையப்பா மகாதேவா ஆவார். 1924இல் பிறந்த தேவன் என்ற படைப்பாளி முப்பத்தெட்டு நீண்ட ஆண்டுகள் இலக்கியப் பணி புரிந்தவர். இலக்கியத் துறையில் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், நாடகா சிரியர், விஞ்ஞானக் கட்டுரையாளர் எனப் பல பரிமாணங்கள் இருப்பது போல, சமூக மட்டத்தில் பேச்சாளர், நாடக இயக்குநர், நாடகத் தயாரிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், அறிவிப்பாளர், ஆசிரியர் எனப் பல பரிமாணங்கள் தேவனுக்குரியவை. படைப்புச் செருக்கு அவரிடம் நிறையவே இருந்ததால் ஆய்வாளர்களுடன் அனுசரித்துப் டோக அவரால் முடியவில்லை. இலக்கியத்தில் பிரச்சினைக்குரியவராகக் கருதப்பட்டார்.
47

Page 26
தேவனின் எழுத்துலக வாழ்க்கை 1944இல் ஆரம்பமானது. அவர் ஆசிரியத் தொழிலில் புகுந்ததும் ஒரு நாவலையும் ஒரு மொழிபெயர்ப்பு நாவலையும் எழுதி முடித்தார். தேவனின் எழுத்துலக நுழைவு நாவலாக அமைந்தது. அவர் எழுதிய முதல் நாவல் ‘வாடிய மலர்கள்’ என்பதாகும். மகாதேவா என்ற தனது பெயரின் இறுதிப் பெயரைத் தன் புனைப் பெயராக்கிய போது, அதே பெயரில் தமிழகத்தில் ஆனந்த விகடன் ஆசிரியர் தேவன் விளங்கினார். அதனால் தன் புனைப்பெயருடன் யாழ்ப்பாணம் என்ற ஊர்ப் பெயரையும் சேர்த்துக் கொண்டார். ஆனந்த விகடன் தேவனின் எழுத்துக்களில் இவருக்கு அடங்காப் பற்றிருந்தது. அதனால் தனது நாவலான ‘கேட்டதும் நடந்ததும்’ எனும் நூலிற்கு ஆனந்த விகடன் தேவனிடம் முன்னுரை பெற்றுள்ளார்.
தேவனின் நாவல்களாக வாடிய மலர்கள், கேட்டதும் நடந்ததும் எனபனவுள்ளன. அவர் எழுதிய ஒரு குறுநாவல் அவன் சுற்றவாளி என்பதாகும். ஸ்ரீவன்சனின் “றெசர் ஐலண்ட்’ என்ற நாவலை மணிபல்லவம் என மொழி பெயர்த்துள்ளார். கேட்டதும் நடந்ததும் என்ற நாவல் ஈழகேசரியில் தொடராக வெளிவந்தது. அக்கால கட்டத்தில் இந்த நாவல் மிகவும் விதந்துரைக்கப்பட்டது. ஈழத்தின் முன்னோடி நாவல்களை நவீனத்துவத்திற்கு இழுத்து விட்ட பெருமையும் இந்த நாவலுக்குரியது. இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனித் தனிச் சிறுகதையாகவும் கணிக்க முடிகின்றது. தேவனின் நாடக நூல் ‘தென்னவன் பிரமராஜன்’ என்பதாகும். இதனை விவேகி சஞ்சிகையின் ஸ்தாபகர் ஆசீர்வாதம் அச்சு வாகனமேற்றி வெளியிட்டார். அவன் சுற்றவாளி எனும் குறுநாவலும் நூலுருப் பெற்றது. ‘வானவெளியிலே’ என்ற அறிவியல் நூலொன்றினையும் அவர் எழுதியுள்ளார்.
தேவன் - யாழ்ப்பாணம் அவர்களின் சிறுகதைகள் சிலவற்றினைத் தொகுத்து யாழ் இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ளது. அவர் எழுதிய சிறுகதைகள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, பிரசண்டவிகடன், கலைச்செல்வி முதலான சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. மனச்சாடசியின் தண்டனை, பேரில் என்ன கிடக்கு?, நேர்வழி, மாமி, இருதார மணம், கொடுத்து வைக்காதவன், சத்திய சோதனை என்பன அவர் ஆக்கிய சிறுகதைகளில் சிலவாகும். காந்தியச் சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள் என்ற தொகுதிகளில் இவரது சிறுகதைகள் இடம் பிடித்துள்ளன. தேவனின் சிறுகதைகளில் மொழிநடை மிக எளிமையும் இனிமையும் வாய்ந்தவை. பேச்சு வழக்கினை அவ்வாறே பயன்படுத்த விரும்பாதவர். அவற்றினைச் சீர்செய்தே எழுதுவார். பாத்திரங்களின் உரையாடலில் ஓரளவு பேச்சு வழக்கிருந்தாலும் எழுத் தா6ான் என்ற வகையில் கூற்றுக்களில் பேச்சு வழக்குப் புகாது.
தேடலும் ஆளுமையும் கொண்ட படைப்பாளியாக விளங்கிய தேவன், தான் கருத்தில் வரித்துக் கொண்ட கருத்துக்ளை நெகிழ்த்தும் இயல்புடையவரல்லர்.
48

1963இல் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாகக் காரணராக விளங்கினார். அதன் செயலாளராகவும் இருந்தார். புனைகதைத்துறையில் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாளியாக விளங்கினார்.
20. தாழையடி சபாரத்தினம்
fழத்தின் சிறுகதை இலக்கியத்திற்குப் பங்களிப்புச் செய்த படைப்பாளிகளில் தாழையடி சபாரத்தினம் குறிப் பிடத்தக்கவள். தரமான சிறுகதைகளைப் படைத்த தாழை யடி சபாரத்தினத்தின் சிறுகதைகள் ‘புதுவாழ்வு' என்ற தொகுதியாக வெளிவந்துள்ளது. கல்கிப் பத்திரிகை நடாத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசினைப் பெற்றதன் மூலம் பிரபல்யம் அடைந்து அசுரகதியில் பல சிறுகதைகளைப் படைத்துத் தன்னை ஒரு சிறுகதை எழுத்தாளராக அடையாளம் காட்டிக் கொண்டார். v ஈழத்துச் சிறுகதைத் தொகுதியில் வெளியான ‘குருவின் சதி பழைய ஏகலைவன் கதையாயினும், அதன் நடையும் ஏகலைவன் கதையைக் கதாசிரியர் நோக்கிய புதிய பார்வையும், அதனை ஈழத்தின் தரமான சிறுகதைகளில் ஒன்றாகச் சேர்த்து விட்டுள்ளது. ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் சுட்டிக் காட்டப்படும் "மறுமலர்ச்சி' சஞ்சிகையில் தெருக்கிதம், ஆலமரம் ஆகிய அவரின் இரு சிறந்த சிறுகதைகள் வெளிவந்துள்ளன. செங்கை ஆழியானால் தொகுத்து வெளியிடப்பட்ட மறுமலர்ச்சிச் சிறுகதைகள்’ என்ற தொகுதியில் இவை இடம் பிடித்துள்ளன. பிரபல எழுத்தாளர் வரதர் நடாத்திய புதினம் பத்திரிகையில் எனக்கும் உனக்கும், சிந்திக்கத் தொடங்கினான், தெரிந்தால் போதும், தாய் ஆகிய சிறுகதைகள் வெளிவந்துள்ளன. அதே வரதரின் இன்னொரு சஞ்சிகையான 'ஆனந்தன்” என்ற ஏட்டில் வெளிவந்த சிறுகதைதான் தாழையடி சபாரத்தினத்தின் உன்னதமான ‘குருவின் சதி” என்ற படைப்பாகும். இவற்றைவிட ஊமை நாடகம், ஓடமும் வண்டியும், வண்டிக்காரன், நினைவு முகம், வற்றாத ஊற்று, ஷேர்ட், சைக்கிள் சக்கரம் முதலான சிறுகதை களையும் படைத்துள்ளார்.
தாழையடி சபாரத்தினத்தின் சிறுகதைகளில் குருவின் சதி, தெருக்கிதம், ஆலமரம் ஆகிய மூன்று சிறுகதைகளும் மிகச் சிறந்தவை. குருவின் சதி கல்கிப் பத்திரிகையில் பிரசுரமானதாக அறியப்படுகின்றது. வரதரின் ஆனந்தன் பத்திரிகையிலும் 1954eليb ஆண்டு டிசம்பரில் வெளிவந்துள்ளது. குருவின் சதி ஓர் அற்புதமான இலக்கியக் கற்பனை. துரோணாச்சாரியாரைத் தன் மானசீகக் குருவாகக் கொண்ட ஏகலைவன் குருவின் சிலை ஒன்றினைச் செய்து அதன் முன்னிலையில் வில் வித்தை பயின்று தேறுகிறான். அந்த வேடன் ஏகலைவன் அருச்சுனனுக்குப் போட்டியாக வந்து விடு
49

Page 27
வானோ என்ற அச்சத்தில் துரோணர் ஏகலைவனிடம் அவன் கைப் பெருவிரலைக் குருதட்சணையாகக் கேட்கிறார். அவன் மகிழ்வோடு பெருவிரலைத் துண்டித்து வழங்குகிறான். ‘வானத்தில் இடி இடித்தது. புயல் வீசி காட்டு மரங்களை வேரோடு பெயர்த்துப் பிரளய காலமோவென்று ஐயுறும்படி செய்தது. காது செவிடு படும் படியாக ஏற்பட்ட ஏதோ சத்தத்தைக் கேட்டுச் சிலையைப் பார்த்தான் ஏகலைவன். சிலையின் மார்பு வெடித்துத் துண்டு துண்டாகக் கீழே சொரிந்தது. வெடித்த மார்புக் குள்ளே இதயத்தைக் கண்டான். இதயத்திலிருந்து பெருகும் இரத்தத்தைக் கண்டான் ஏகலைவன்’ என இச்சிறுகதை நிறைவு பெறுகிறது. இச்சிறுகதையைக் கலாபூர்வமாகத் தாழையடி சபாரத்தினம் படைத்துள்ளார்.
நவீன சிறுகதையின் இயல்பினைப் புரிந்து கொண்டு தன் சிறுகதைகளைப் படைத்துள்ளார் என எண்ண முடிகிறது.
21. கு.பெரியதம்பி
fழத்துச் சிறுகதை எழுத்தாளர்களில் - முன்னோடிகளில் ஒருவராக வைத்து எண்ணப்பட வேண்டிய கு.பெரியதம்பியை, செங்கை ஆழியான் தொகுத்து வெளியிட்ட ‘மறுமலர்ச்சிச் சிறுகதைகள்’ என்ற தொகுதியின் பின்னரே இலக்கிய உலகு தெரிந்து கொண்டது. புலோலியூரைச் சேர்ந்த கு.பெரியதம்பி ஒரு தமிழாசிரியர். மணி மணியான சிறுகதைகள் சிலவற் றினைப் படைத்துள்ளார். இவருடைய சிறுகதைகள் மறு மலர்ச்சியிலேயே பெரிதும் வெளிவந்துள்ளன. அவ்வகையில் மறுமலர்ச்சிப் பண்ணையில் முகிழ்ந்தவராக இவரைக் கருதலாம்.
மறுமலர்ச்சிச் சஞ்சிகை நடாத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்றதன் மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமான கு.பெரியதம்பி, அதனைத் தொடர்ந்து மறுமலர்ச்சியில் அம்மான் மகள், குழந்தை எப்படிப் பிறக்கிறது?, காதலோ காதல், எட்டாப்பழம், மனமாற்றம், வீண்வதந்தி ஆகிய ஆறு சிறுகதைகளை எழுதியுள்ளார். மறுமலர்ச்சியில் அதிக சிறுகதைகளை எழுதிய பெருமை இவருக்கேயுரியது. விமர்சகள் கணிப்பில் இவர் அகப்படவில்லை என்பது விசனத்திற்குரியது. இந்த ஆறு மறுமலர்ச்சிச் சிறுகதைகளை விட, பொங்கல் வாழ்த்து என்றொரு சிறுகதையை "வரதர் புது வருஷ மலர்’ என்ற ஆண்டுச் சஞ்சிகையில் படைத்துள்ளார். ப்ெரியதம்பி 3of GOLDUIT60T அவதானிப்புடன் யதார்த்த பூர்வமாகக் கதை கூறத் தெரிந்துள்ளார். நவீன சிறுகதையின் இயல்பினைப் புரிந்து கொண்டு தன் சிறுகதைகளைப் படைத்துள்ளார் என எண்ண முடிகிறது.
50
 

கு.பெரியதம்பியின் சிறுகதைகளில் எட்டாப்பழம், அம்மான் மகள் ஆகிய இரு சிறுகதைகளும் மிகச் சிறப்பானவை. பெரியதம்பியின் சிறுகதைக் கருப்பொருளாகக் காதல் விளங்கினாலும் அதனை அவர் வெவ்வேறு நிலைகளில் சித்திரிக்கும் போது சம்பவங்களை மீறி உணர்வு நிலை மேலோங்கியிருப்பதைக் காணலாம். நல்ல சிறுகதையின் பண்பு அதுதான். முதலாளியின் கார்ச் சாரதி அவன். முதலாளியின் மகள் கமலாஷினி சில நாட்களாக அவனைக் கரிசனையோடு விசாரிக்கிறாள். அதனை அவன் தவறாக எடை போடுகிறான். முடிவு எட்டாப் பழமாகிறது. சொல்லிய, வற்றிலும் சொல்லாது விட்டவை இச்சிறுகதையைக் கலைத்துவச் சிருஷ்டியாக்கி; யுள்ளன. அம்மான் மகள் பெரியதம்பியின் இன்னொரு நல்ல கதை. அம்மான் மகளுக்கு வேறிடத்தில் கலியாணம் நிகழவிருந்த போது மச்சான்காரன் அவளைக் கடத்தி வந்துவிடுகிறான். முதலில் அழுது ஆர்ப்பாட்டம் செய்தவள் இறுதியில் பொலிசார் அவனைக் கைது செய்ய வந்தபோது தானாகத்தான் அவனோடு வந்ததாகக் கூறு கின்றாள். ஒரு மிகச் சிறிய கரு. ஆனால் அதனைக் கூறிய பாங்கு நல்லதொரு சிறுகதை எவ்வாறு அமைய வேண்டுமென்பதற்கு உதாரணமாகவுள்ளது. ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் கு.பெரியதம்பியும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர்.
22 செ.சி.பரமேஸ்வரன் (பரணி)
1945 - களிலிருந்து ஈழத்துப் பத்திரிகைகளில் எழுதி வந்த புனைகதைப் படைப்பாளி அராலி செ.சி.பரமேஸ்வர சர்மாவை செங்கை ஆழியான் தொகுத்து வெளியிட்ட மாபெரும் சிறுகதைத் தொகுதியான ‘ஈழகேசரிச் சிறு கதைகள்’ மீண்டும் நினைவு கூரவைத்துள்ளது. அத் தொகுதியில் இந்த ஆசிரியர் "பரணி’ என்ற புனைப்பெயரில் எழுதியிருந்த 'அமர இரவு' என்ற சிறுகதையொன்று வெளி யாகியிருந்தது. அதன் பின்னர் அவர் குறித்து எழுத்துலகம் கவனிக்கத் தொடங்கியது. செ.சி.பரதேஸ்வரன், சி.எஸ்.பரமேஸ்வரன், செ.சி.ப, அராலி பரமேஸ்வரசர்மா, பரணி என்ற பெயர்களில் ஆசிரியர் தன் எழுத்துக்களை வெளி யிட்டுள்ளார். பரணி என்ற புனைப்பெயரில் ஈழகேசரி, வீரகேசரி, சுதந்திரன் ஆகியவற்றில் இவருடைய சிறுகதைகள் வெளிவந்துள்ளன. 'அவன் நெஞ்சம்’ என்ற சிறுகதைக்காகச் சுதந்திரன் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றுள்ளார். செ.சி.பரமேஸ்வரனின் சிறுகதைகளை முழுமையாக மதிப்பீடு செய்வதற்கு அனைத்துச் சிறுகதைகளையும் தேடிச் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
அராலி செ.சி.பரமேஸ்வர சர்மா இரண்டு நாவல்களை ஈழகேசரியிலும் ஒரு நாவலைத் தமிழகச் சஞ்சிகை ஒன்றிலும் எழுதியுள்ளார். ஈழகேசரியில் "அஸ்தமன வேளை’, ‘கொந்தளிப்பு’ ஆகிய இரண்டு நாவல்கள் தொடர் கதைகளாக ஈழகேசரியில்
51

Page 28
42-வது ஆண்டுமலர் தயாராகின்றது!
இந்த ஆண்டு மலர் சிறப்பாகவும், நேர்த்தி யாகவும் மலர உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை.
மலருக்கு விளம்பரங்கள் தந்துதவுவோர் தமது கவனத்தை நமது பக்கம் திருப்புவது இலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது.
படைப்பாளிகள் தொடர்ந்து எழுதிவர வேண்டுகின்றோம். தமது ஆகச் சிறந்த ஆக்கத்தை எமக்கு முன்கூட்டியே அனுப்பி உதவி னால் எமது உழைப்புப் பாரத்தைப் பகிர்ந்து கொண்டவராவீர்கள்.
42-வது ஆண்டுமலர் தேவையானோர் முன்கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்வது நல்லது.
- ஆசிரியர்
ܦܚ ܢܠ
வெளிவந்துள்ளன. இவை அக்கால கட்டத்தில் ஈழத்து நாவலிலக்கியத்திலை
முன்னோக்கி நகர்த்திய பெருமைக்குரியன. இந்த நாவல்களைப் படிக்கும்போது
பரமேஸ்வரனின் சமூக அவதானிப்பினை உணர முடிகின்றது. அக்காலச் சமூக நிலையை ஆசிரியர் தன் நாவல்களில் சித்திரித்துள்ளார். கொந்தளிப்பு என்ற நாவல் சுதந்திரன் ஆசிரியர் எஸ்.டி.சிவநாயகத்தின் முன்னுரையுடன் தனி நூலாக வெளி வந்துள்ளது. “பெண் பைத்தியம்’ என்றொரு நாவல் தமிழகச் சஞ்சிகை ஒன்றில் தொடர் கதையாக வெளிவந்துள்ளது. அதன் பின்னர் கொழும்பு எம்.எஸ்.லிங்கம் வெளியீடாக நூலுருப் பெற்றது.
அராலி செ.சி.பரமேஸ்வர சர்மா என்ற பரணி கூறுகிறார்: “ஏறக்குறைய 55 ஆண்டுகளாக நான் எழுதி வந்த போதிலும் நானொரு எழுத்தாளன் என எந்தக் கூட்டத்திலும் பங்கு பற்றியதில்லை. நான் பட்டங்கள், பதக்கங்கள், பாராட்டுகள் என்பனவற்றினை எதிர்பார்த்தவனல்லன். ஏதோ கற்பனைகள் தோன்றும்போது நாலு பேர் படிக்கட்டும் என்பதற்காக பத்திரிகைகளுக்குக் கொடுத்து வருகிறேன். ஒரு வகையில் நமக்குள் நாமே நல்ல பாட்டுக்களைப் பாடி மகிழ்வது போல ஒர் ஆத்ம
திருப்தி’
52
 

ஜோன்ஸ்சை நண்பனாகப் பெற்றது என்னுடைய பாக்கியம்தான், "பலரோடும் நட்பு பாராட்டுபவன், ஒருத்தனுக்கும் உண்மையான நண்பனாய் இருக்கமாட்டான்!” என ஜோன்ஸ் அடிக்கடி சொல்லுவான். அதனால் என்னுடைய பலரையும் சிலராக்கி, ஜோன்ஸ்சை மட்டும் உண்மையான நண்பன் ஆக்கிக் கொண்டேன். எங்களுக்கிடையே ஒளிவு மறைவு எதுவுமே இல்லை. அவன் ஒரு நல்ல மந்திரியாகவும் செயற்படுவான். அவனுடைய மதியூகத்தைக் கண்டு பலதடவை நான் வியந்ததுண்டு.
என்னுடைய அம்மா, அப்பா, தங்கையைக் கூட அவனுக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய தங்கையுடன் மணிக்கணக்காய் பேசிக்கொள்வான். இன்றுவரை யாருமே அவனை சந்தேகக் கண் கொண்டு பார்த்ததே இல்லை. "மச்சான் உங்களின்ரை குடும்பம் பல்கலைக் கழகம்” என்பான்.
"மனித உறவுகள் வெங்காயம் போன்றது" என்கின்றார் 'களின்ஸ்மித் என்ற சிந்தனையாளர். ஆபத்தில்லாதவரை மனித உறவுகளில் நட்பு கூடப் புனிதமானதுதான். ஒரு பிரச்சினை வரும்போதுதான் நட்பின் தன்மையும் குறைந்து கொண்டே போகும். வெங்காயம் அழகாய் இருக்கும். தோலை உரிக்க உரிக்கத்தான் கண்ணிரும் வரும், உள்ளேயும் ஒன்றும் இருக்காது. ஆனால் 'எங்கள் உறவு அப்படியானதல்ல" என நான் சொல்லுவேன். ஏனென்றால் எனக்கு அவனை மிகவும் பிடிக்கும். அவனுக்காக ஏதாவது செய்து விசுவாசத்தைக் காண்பித்து விடவேண்டும் என நினைத்துக் கொண்டேன். ஆகவே நான் சக அவன் சமன் நட்பு என ஒரு சமன் பாட்டையே உருவாக்கி இருந்தேன்.
ஜோன்ஸ் இப்போது கொஞ்ச நாளாகவே சரியில்லை. அவனுடைய முகத்தில் ஒரு மாறுதல். பல தடவை நான் கேட்டும் பதில் சொல்லவே இல்லை. அவனுடைய
g ஜோன்ஸ் பிரச்சினையை அறிந்து, அவற்றைத்
தீர்த்து, என்னுடைய நட்பைப்
என்றொரு புனிதமாக்கிக் கொள்ள வேண்டும்
என்ற நினைப்போடு என்னுடைய
நண UGT
- இணுவையூர் உத்திரன்
53

Page 29
கடைசி அஸ்திரத்தைப் பிரயோ கித்தேன்.
"ஜோன்ஸ் நீ என்னட்டை மறைக்கின்ற ஒரு விடயமும் இருக் குத்தானே! பரவாயில்லை. உனக்கு என்னிலை நம்பிக்கை இல்லைப் போலை” என்று கூறியபோது அவன் துடித்துப் போனான்.
"இல்லை மச்சான். இதை உன் னட்டை எப்படிச் சொல்லுறது?"
"பரவாயில்லை. ஒரு நண்ப னிட்டை எதையுமே சொல்லலாம் சொல்லு. நான் தீர்க்கிறேன்’ என்றேன்.
சொன்னான்.
ஏன் கேட்டேன் என்று இருந் தது! நான் வற்புறுத்தி இரா விட்டால் அவனும் சொல்லி இருக்க மாட்டான். நட்பையே பண யம் வைத்து மனதிலே உள்ளதை சொல்லுமாறு கேட்டது என் தவறு தான். ஆனால் அவனுடைய இந்த விருப்பத்தை என்னிடமே சொல் வதற்கு அவன்தான் மிகவும் சங் கடப்பட்டு இருப்பான். மொத்தத் தில் நானும் கேட்டு இருக்கக் கூடாது. ஆனால் இரண்டுமே நடந்துவிட்டது.
'கடும் கூர். கடும் மொட்டை
என்பார்கள். யார் கண் பட்டதோ?
எங்கள் நட்பும் அந்த நிலைக்குப் போய்க்கொண்டு இருந்தது. எங்க ளால் முன்னை மாதிரி வெளிப்
படையாகப் பேசிக் கொள்ளவோ, பழகிக் (ԼՔ Լգ-ա வில்லை. மனதுக்குள் ஒர் இடைஞ் சல். மிகவும் கவனடிாகவே வார்த் தையைப் பிரயோகிக்க வேண்டி இருந்தது. என்னுடைய வார்த்தை கள் எங்கே அவனைக் காயப்படுத்தி விடுமோ! என்ற பயம் எனக்கு.
கொள்ளவோ
"மச்ச1ான் நீ உங்களுடைய
குடும்பம், நான் என்னுடைய
குடும்பம், எங்களுக்கை நிறைய
வேறுபாடுகள் இருக்கு. நீங்கள் எல்லா வகையிலும் மிக மிக உயரத் திலை இருக்கிறீர்கள். ஆனால் நான்? நாங்கள் அப்படி இல்லை. உங்களை விட எல்லா வகை யிலுமே பின்தங்கித்தான் இருக் கிறோம். நான்தான் என்னுடைய மனசைக் கட்டுப்பாட்டிலை வைத் திருக்க வேணும். முடியேல்லை. உன்னுடைய வீட்டுக்காரர் இப்படி யான ஒரு புதிய உறவை விரும்ப மாட்டினம். அதனாலை உன் னட்டை நான் இதைப் பற்றிக் கதைத்து இருக்கக்கூடாது தான். எனக்காக உன்ரை உறவுக்கார ரோடை முரண்படுகின்ற ஒரு சங் கடமான நிலையை நான் எப்ப வுமே உனக்குத் தரமாட்டன்" என்று வருத்தப்பட்டான்.
எனக்குள் ஒரு சுயநலம். நான்
சொல்வதற்கே சங்கடப்பட்ட
ஆனால் சொல்ல வேண்டியவற்றை அவனே சொல்லிவிட்டான். "நட்புக்கு மட்டும் எந்தத் தடையுமே
54

சொல்லாதவர்கள்; "உறவு’ என்று வரும்போது மட்டும் எப்படி தடை யாய் இருக்க முடியும்?” என்று அவன் கேட்டுவிடக் கூடாது என நினைத்தேன்.
எனக்கும் ஜோன்ஸ்சுக்குமான
உறவுக்கு ஒரு புது வடிவத்தைக் கொடுக்க எனக்கு விருப்பம் என்
பதைவிட இதற்காக மற்றவர்க
ளோடு கருத்து முரண்படத்தான்
நான் தயாரில்லை. இதை ஒரு சுய
நலம் என்றுகூடச் சொல்லலாம். ஆனாலும் இல்லை. ஏனென்றால் அவனுக்கு என் மேல் எப்போதும் போல் மதிப்பும் மரியாதையும் நிறையவே உண்டு. அதுபோலத்தான் எனக்கும். பாவம் அவன் மனம் மிகவும் பாதிக் கப்பட்டு இருந்தது. என்னை விட் டால் அவனுக்கு வேறு இடம் இல்லை. அவனுடைய விருப்பத்தை
எனக்குக் கவலை
நிறைவேற்றி வைக்க முடியுமா?
என்பது பற்றி இன்றைக்கு வரை யுமே என்னால் விடை காண முடிய வில்லை.
அன்றுதான் ஜோன்ஸ்சைக் கடைசியாகச் சந்தித்தேன். என் னோடு பேச வேண்டும் என்றான். "மச்சான் இப்பெல்லாம் என்மேலை நீயும், உன்மேலை நானும் ஏதோ ஒருவித சந்தேக மனதோடைதான் பழகிறம். இது நட்பு என்ற உறவுக்கே நல்லதல்ல. என்னைப் பொறுத்தவரை நூறு வீதமும் ஒருத்
55
Lu T GiồT
தருக்கு ஒருத்தர் விசுவாசமாய் இருக்கிறதுதான் நட்பு. நாங்கள் தான் அப்படி இல்லையே! அத னாலை அந்தப் புனிதமான உறவை நாங்கள் மாசுப்படுத்த வேண்டாம். நாங்கள் சந்தோசமாகவே விலகிடு வோம்' என்ற போது எனக்கு
அதிர்ச்சியாக இருந்தது.
ஆனால் என்னால் எதையுமே சொல்ல முடியவில்லை. அவன் எடுத்த அந்த முடிவு எனக்கு வருத்த மாக இருந்தது. அவன் என் கை களைக் குலுக்கிவிட்டுப் போய்க் கொண்டிருந்தான். அதை மறுக் கவோ அவனை மீண்டும் கூப் பிடவோ என் மனம் ஏனோ தயா ராக இல்லை. இப்போதைக்கு இந்த நட்பு வேண்டாம்' என்று மட்டும் நினைத்தேன். ஆனாலும் என் மன தில் அவன் மேலும் ஒருபடி உயர்ந்தே நின்றான். பாவம் பரி தாபத்துக்குரியவன் ஜோன்ஸ். சங் கடமான நிலை என்று வரும்போது எங்கள் நட்பும் ஒரு வெங்காயம்
ஆக ஆகிக் கொண்டு இருந்தது.
ஜோன்ஸ்சைப் பற்றி என் வீட்டுக்காரர் கேட்டால் சொல்வதற் கென்றே ஒரு பொய்யைத் தயார்ப் படுத்திக் கொண்டேன். இறுதியாக ஒன்று, அவன் என்னிடம் எந்த விடயத்தைப் பற்றிப் பேசி இருப் என்பது உங்களுக்குத்
தெரிந்ததுதானே?

Page 30
牵 事 முதலில் எனது தகப்பனார் பற்றிய 11. பூச்சியம் தகவலைச் சொல்ல வேண்டி இருக்கிறது. பாரிசவாத நோயில் இருந்து ஓரளவு ச்சியமல்ல் சுகப்பட்டு நடமாடித் திரிந்த தகப்பனார்
lb மீண்டும் படுக்கையில் விழுந்தார் என்ற
அந்தத் தந்திச் செய்தி கிடைத்து மலை
தெணியான் யகத்தில் இருந்து நான் உடனே புறப் பட்டுச் சென்றேன். இடதுபக்கம் முற்றாகச் செயற்படாத நிலையில் அவர் படுக்கையில் கிடந்தார். ஒரு வார்த்தை தானும் அவரால் வாய் திறந்து பேசுவதற்கு இயலவில்லை. பிள்ளைகளாகிய எங்களைப் பற்றிய - திருமணமாகத மூன்று பெண்பிள்ளைகள் பற்றி எண்ணம் கடைசி காலத்தில் மனதில் பெரும் சுமையாக அவரை வாட்டிக் கொண்டிருந்ததை நான் அறிவேன். அது மாத்திரமல்லாது அவரது வாலிபப் பருவ வாழ்வு நினைவு களும் அவரைத் துன்புறுத்தி இருக்க வேண்டும். “காயா மரத்தின் கனி பிஞ் சறுத்தனோ, கன்னியர்கள் பெரும்பழி கொண்டனோ!" எனத் தன்னை மறந்து சிலவேளையில் இடையிடையே அவர் பாடுவார். “பிள்ளை கஷ்டப்படப் போகிறான்” என என்னை நினைத்து அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் என்பதும் எனக்குத் தெரியும்.
ஒருநாள் நடுஇரவு தாண்டிய நேரம். வீட்டிலுள்ளவர் எல்லோரும் படுத்து உறங்கிப் போய்விட்டார்கள். அவர் படுக்கை அருகே அமர்ந்திருந்த அம்மா, சில நாட்கள் தொடர்ந்த கண் விழிப்பினால் உடல் சோர்ந்து தன்னை மறந்து சரிந்து உறங்கிப் போனார். தகப்பனார் படும் கஷ்டங்களைப் பார்க்க, எனக்கோ உறக்கம் வரவில்லை. நான் கன்வேஸ் கட்டில் ஒன்றில் சாய்ந்து இருந்த வண்ணம் தகப்ப னாரையே பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அவர் தொடர்ந்து ஓயாமல் விக்கல் எடுத்து மூச்சு விடுவதற்கு இயலாது அவஸ்தைப்பட்டுக் கொண்டு கிடக்கின்றார். இந்தச் சமயங்களில் குளுக்கோஸ் கொஞ்சம் எடுத்து நீரில் கரைத்துக் கரண்டியினால் கொஞ்சங் கொஞ்சமாகப் பருக வைத்தால், அவர் விக்கல் சற்றுத் தணிந்து போகும் என நான் அவதானித்து வைத்திருந்தேன். தந்தை படும் அவஸ்தை கண்டு துயரப் பெருமூச்சுடன் மெல்ல எழுந்து குளுக்கோஸ் கரைத்து அவர் வாயில் மெல்ல மெல்லப் புகட்டுகின்றேன். விக்கல் சற்றும் தணிகிறது. தனது வலது கரத்தைத் தூக்கி அருகில் அமர்ந்திருக்கும் என்னை வாஞ்சையுடன் மிெல்லத் தடவி விடு கின்றார். எனது கையைப் பிடித்து முத்தமிடுகிறார். பின்னர் அந்தக் கரத்தை எடுத்துத் தலைக்கு வைப்பது போல மடித்துப் பாவனை காட்டி, என்னைப் போய்ப் படுத்துத் தூங்குமாறு தெரிவிக்கின்றார். அவரது வலது கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருக்கின்றது. நான் அந்தக் கண்ணிரைத் துடைத்துவிட்டுக் கொண்டு,
56

கலங்கும் விழிகளுடன் எழுந்து சென்று திரும்பவும் கட்டிலில் அமர்ந்து கொள்ளுகின்றேன்.
மறுநாள் 18.18.1965 மாலை எனது தந்தையார் காலமானார்.
நோயின் கொடுமையினால் தான் கிடந்து தவித்துத் துடிதுடித்துக் கொண் டிருந்த சமயத்திலும் தனது பிள்ளை கண் விழித்துக் கஷ்டப்படக் கூடாது என நெஞ்சில் நினைத்த தந்தையின் உணர்வினைச் சொல்வதற்காகவே அதனை இங்கு தெளிவாகக் குறிப்பிடு கின்றேன்.
தந்தையார் மறைவுடன் பெரிய ஒரு
குடும்பப் பொறுப்பை இளவயதில் நான் சுமக்க வேண்டிய நிலைக்கு ஆளா னேன்.
குடும்பப் பொறுப்புகள் அதிகரித்த போதும் இலக்கியத்தின் மீது நான் கொண்ட ஆர்வம் கொஞ்சமும் குறைய வில்லை. முதற் சிறுகதை வெளிவந்த உற்சாகத்தில் வீரகேசரி, தினகரன் பத்திரி கைகளில் இலக்கியக் கட்டுரைகள் சில எழுதினேன். விவேகி, கலைவாணி, கலைச்செல்வி சஞ்சிகைகளில் எனது சிறுகதைகள் வெளிவந்தன. கலை வாணி 1965 பொங்கல் மலரில் எனது சிறுகதையைப் பிரசுரித்தது. "கலைச் செல்வி ஆசிரியர் "சிற்பி அறிமுகத் துடன் எனது சிறுகதையை வெளியிட்டு வைத்தார். பதுளை சரஸ்வதி வித்தியால யத்தில் நடைபெற்ற மா.பொ.சிவஞான கிராமணியாரின் அருமையான இலக்
57
i
கியச் சொற்பொழிவினை (30.07.1966) அங்கு சென்று கேட்டு மகிழ்ந்தேன்.
கல்லூரி மாணவர்கள் மத்தியில் இலங்கை சாஹித்திய மண்டலம் அகில இலங்கை மட்டத்தில் நடத்திய சிறு கதைப் போட்டியில் பங்கு கொண்டு தாயுள்ளம் சிறுகதைக்கு இரண்டாவது பரிசாக வெள்ளிப் பதக்கம் தம்பி பெற்றுக் கொண்டதன் மூலம் எனது குடும்பத்தில் இன்னொரு எழுத்தாளன் இலக்கிய உலகில் முதல் அடி எடுத்து வைத்த சம்பவம் நிகழ்ந்தது.
தனியாரினால் நிருவாகிக்கப் பெற்ற ஆசிரியர்கள் விடுதி ஒன்று அட்டம்பிட்டியவில் இயங்கி வந்தது. அந்த விடுதியில் தங்கியிருப்பதற்கான இடம் கிடைத்ததும் நானும் என்னுடன் இருந்த ஆசிரியரும் சேலைக்கடையில் இருந்து அந்த விடுதிக்குச் சென்றோம். அந்த விடுதி அறை எனக்கு வெகு வசதி . யாக அமைந்திருந்தது. நான் அமர்ந் திருந்து வாசிப்பதற்கு, எழுதுவதற்கு வசதியான மேசை கதிரைகள் அறையில் இருந்தன. ஒய்வுநேரங்களில், விடுமுறை நாட்களில் சக ஆசிரிய நண்பர்கள் சீட்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். அந்தச் சமயங்களில் நான் எனது அறைக் கதவை உள்ளே பூட்டிக்கொண்டு அறைக்குள் இருந்து நூல்களை வாசித்துக் கொண்டிருப்பேன்.
பாடசாலை இரண்டாந் தவணை விடுமுறையில் வீட்டுக்கு வந்து தங்கி நின்ற போது 20.08.1966ந் திகதி யாழ்ப்
பாணம் சென்று கஸ்தூரியார் விதி

Page 31
ஜோசப் சலூன் உள்ளே அதன் பின் பகுதியில் இருந்த மல்லிகைக் காரியால யத்தில் டொமினிக் ஜீவாவைச் சந்தித் தேன். அந்தச் சந்திப்பு எனது இலக் கியப் பயணத்தில் எவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்தது என்பதனை நான் அப்பொழுது உணர்ந்து கொள்ள வில்லை. அப்பொழுது ஜீவா எனக்குப் புதிய முகமல்ல. மகாசபைக் கூட்டங் களில் ஜீவாவை நான் பார்த்திருக் கின்றேன். இலக்கியக் கூட்டங்களிலும் கண்டிருக்கின்றேன். 'தண்ணீரும் கண்ணீரும் தொகுதி ஒன்றை வாங்கிப் படித்திருக்கின்றேன். "சரஸ்வதி'யிலும், 'தினகரன்’ வாரப் பதிப்புகளிலும் வெளி வந்த ஜீவாவின் சிறுகதைகளை வாசித் திருக்கின்றேன். ஆனால் தனிப்பட்ட முறையில் நேருக்கு நேர் சந்தித்து அன்றுதான் முதன்முறையாக நெருக்க மாக உரையாடினேன். அந்தச் சந்திப்பு முடிந்து நான் அவரிடமிருந்து விடை பெறுகையில், "எழுதுங்கோ மாஸ்டர்’ என்று சொல்லி என்னை அன்று அனுப்பி வைத்தார். இன்று நாற்பது ஆண்டுகள் கடந்த பின்னரும் ஜீவாவின் அந்தக் குரல் எனது செவிகளில் வந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இன்றும் மல்லிகைக்கு என்னைத் தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டி ருக்கின்றது.
நான் சென்று ஜீவாவைச் சந்தித்த சமயம் எனது சிறுகதைகள் சுமார் பத்து வரை சஞ்சிகைகளில் வெளிவந்து விட்டன. ஆனால் எனது மனதில் பட்ட காயங்கள் என் எழுத்துக்களாக
靈
58
ஒன்றுதானும் அதுவரை வெளிவர வில்லை. ஆரம்பகால இளம் எழுத்தாள னாகிய நான் எழுதும் அத்தகைய எழுத் துக்களை பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஏற்றுக்கொள்ள மாட்டா என்ற தயக்கம் எனக்குள் மனதில் இருந்து வந்தது. ஜீவாவின் சந்திப்பு மனதில் இருந்து வந்த அந்தத் தயக்கத்தை முற்றாகப் போக்கியது. அதன் பிறகு துணிந்து சிறுகதை ஒன்றை எழுதி மல்லிகைக்கு அனுப்பி வைத்தேன். நான் எதிர் பார்த்தது போல அந்தச் சிறுகதை 1967 ஜனவரி மல்லிகை இதழில் வெளி வந்தது. ஆனால் பிரசுரமான எனது எழுத்தைப் படித்து முடித்தபோது நான் பெரும் ஏமாற்றமே அடைந்தேன்.
கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த ஆரம்ப காலத்தில் நான் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தையே ஒரு சிறுகதையாக எழுதி அனுப்பினேன்.
நான் ஒரு தினம் யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்றிருந்தேன். தட்டி வான்கள் பயணிகளை ஏற்றி இறக்கிய காலமது. யாழ்ப்பாணத்தில் இருந்து வல்வெட்டித்துறை ஊடாகப் பருத்தித் துறை சென்றடையும் தட்டி வான் ஒன்றில் ஏறி நான் பிரயாணஞ் செய்து கொண்டிருந்தேன். வல்வெட்டித்துறை தாண்டினால் நரீன் பிறந்த கிராமம் பொலிகண்டியில் இறங்கலாம். நான் பிரயாணஞ் செய்த தட்டிவானுக்கும் பஸ் வண்டிக்கும் பிரயாணிகளைக் கொத்திக் கொண்டு போவதில் அடங் காத போட்டி. ஒன்றை ஒன்று முந்தி,

போட்டி போட்டு ஒடிக்கொண்டிருந்தன. அந்த வான் நீர்வேலி வரை தளம்பித் தளம்பி வந்து ஒரு முடக்கிலே திரும்பு கின்ற சமயம், சடுதியாக "பிறேக்' போட்டு நிறுத்த முயன்றும் அது முடிய ாமல் சில யார் தூரம் இழுத்துக் கொண் டோடி, பின்னர் தரித்து நின்றது. வானில் இருந்த பெண்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் துடித்துப் பதைத்து ஐயோ. ஐயோ. எனக் குரல் எழுப் பினார்கள். ஆண்கள் பலர் வானை விட்டுக் கீழே குதித்து இறங்கி ஓடிப்
போனார்கள்.
விதி திருத்துவதற்காகக் குவிக்கப் பெற்றிருந்த கற்குவியல் அருகே வயது முதிர்ந்த கிழவன் ஒருவனை திடகாத்திர மான வாலிபன் ஒருவன் போட்டு அடித்துக் கொண்டு நின்றான். அவனுக்கு அந்த முதியவன் தந்தை போல இருக்கும். அவன் அடிப்பதும், கிழவன் கற்குவியல் மேல் விழுந்து பின்னர் எழுந்து கை கும் பிட்ட வண்ணம் நிற்பதும், மீண்டும் அவன் அடிப்பதும், கிழவன் திரும்பவும் விழு வதும் தொடர்ந்து நடந்து கொண்டி ருந்தது. கிழவன் முகத்தில், உடலில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டி ருந்தது. அப்பொழுதும் அவன் தாக்கிக் கொண்டு நின்றான்.
கோரமான அந்தக் காட்சி கண்டு மனம் பொறுக்கவே எல்லோரும் ஒடிப் போனார்கள். போனவர்கள் எதுவும் செய்யாமல், போன வேகத்தில் மெல்லத் திரும்பி வந்தார்கள். அவன் முதிய வனுக்கு அப்பொழுதும் அடித்துக்
59
கொண்டு நின்றான். திரும்பி வந்த வர்கள், "அவற்ரை வண்ணானாம். அது தான் அடிக்கிறார்” என அலட்சியமாகச் சொல்லிக்கொண்டு வானில் ஏறினார் கள். அது கேட்டு நான் மனம் கொதித் தேன். அந்த முதியவனைப் போட் டடித்த அவன் மாத்திரமல்ல, இவர் களும் மனிதாபிமானம் இல்லாத மிரு கங்களாக எனக்குத் தோன்றினார்கள். சாதி வெறி இவர்களை எப்படி மிருகங் களாக மாற்றுகிறது என்பதனை நேரில் கண்டேன். 16.09.1960இல் நடந்த அந்தச் சம்பவத்தையே சிறுகதையாக எழுதி மல்லிகைக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் கதை பிரசுரமானபோது பசுக் கன்றொன்றை அந்த வான் மோதி, வீதியில் அது விழுந்து கிடக்க, பிர யாணிகள் இறங்கி ஓடிப் போனதாக கதை மாற்றப்பட்டிருந்தது. நான் இட்ட தலைப்பை மாற்றி வேறொரு தலைப்பு இடப்பெற்றிருந்தது. அந்த மாற்றங்கள்
எனக்கு ஏமாற்றத்தை அளித்தன.
இன்று காலத்துக்கேற்ற தந்திரோ பாயத்துடன் கூர்மையாக நவீனப் படுத்தப்பட்டுத் தாக்கும் சாதிவெறியை முடிந்தவரை வெளியே தெரியாமல் மூடி மறைத்துப் பேசுகின்றவர்கள் மத்தியில், அதன் பல பரிமாணங்களையும் இலக்கி யத்தில் நான் புட்டு வைப்பதற்குக் களம் அமைத்துத் தந்திருக்கும் மல்லிகை அன்று சாதியம் பற்றிய எனது முதற் சிறுகதையை வெட்டி மாற்றி வெளி யிட்டது என்பது ஒரு புதுமைதான்!
மல்லிகையில் எனது முதற் சிறு கதை வெளிவந்த காலத்தில் எனது

Page 32
வாழ்க்கையில் நான் ஒரு தவறு செய் தேன். நான் செய்த காரியம் இன்றுவரை சமூகத்தினால் அங்கீகரிக்கப் பெற்ற ஒன்றுதான்! சமூகம் அதனைத் தவ றென்று கருதுவதில்லை. ஆனால் நான் அதனைத் தவறான நடத்தையாகவே கருதினேன். தவறெனக் கருதிய போதும் நிர்ப்பந்தம் காரணமாக நான் அந்தத் தவறைச் செய்ய வேண்டி நேர்ந்தது.
அந்தத் தவறு வேறொன்றுமல்ல; நான் பெண் பார்க்கப் போனேன்.
எனது தாயாரின் உறவினர் ஒருவர் அல்வாய் வடக்கு, வயலைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணத்தில் திருமணஞ் செய்து வாழ்ந்து வந்தார். அவர் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை எனக்குத் திருமணம் பேசி, பெண்களின் உறவினர்களுடன் ஒரு தினம் எங்கள் வீடு வந்து சேர்ந்தார். மார்கழி விடு முறையில் வீட்டில் நின்ற நான் அன்று பண்டாரவளை அட்டம்பிட்டிய புறப் பட்டுச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு வந்திருந்த உறவுக்காரன் எனக்கு அண்ணன் முறை யானவர். என்னை அன்றே அழைத்து வந்து பெண் பார்க்கச் செய்கின்றேன் என, பெண்ணின் உறவினர்களுக்கு அவர் வாக்குறுதி அளித்து அவர்களை அழைத்து வந்திருக்க வேண்டும். எனது தங்கைகளுக்கு முதலில் திருமணம் செய்து வைக்க வேண்டும். பின்னர் அவர்கள் நன்மை கருதி எங்கள் விட்டுக்கு அண்மையில் வாழும் யாரா வது ஒரு பெண்ணை நான் திருமணஞ் செய்து கொள்ள வேண்டும் என்னும்
砷
比例
영
6 9
60
எண்ணம் என் மனதில் இருந்து வந்தது. அத்துடன் எந்த ஒரு பெண்ணையாவது போய்ப் பார்த்து, பிறகு அந்தப் பெண்ணை வேண்டாம் என்று சொல்லி ஒதுக்கி விடுவதை வெறுக்கின்றவன் நான். அப்படிச் செய்வதன் மூலம்
பெண்ணை அவமதிக்கின்றோம் என்பது
தான் எனது மனக்கருத்து.
யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆடவன் தன்னை விலை பேசி விற்று, தனது சகோதரிகளுக்கு வாழ்வு தேடிக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை யில்தான் இன்றும் இருக்கின்றான். எனது குடும்பம், "தந்தை போயினன்; பாழ்மிடி சூழ்ந்தது” என பாரதி தனது சுயசரிதையில் சொன்னது போன்ற நிலையில் அப்போது இருந்தது.
எனக்குத் திருமணம் பேசிவந்த அந்தப் பெண் குடும்பத்தில் ஏக புத்திரி. அவளுக்குச் சொந்தமாக இரண்டு வீடு கள் இருந்தன. அவள் தந்தை அப் பொழுது சிங்கப்பூரில் இருந்து பணம் சம்பாதித்து அனுப்பிக் கொண்டிருந்தார். அந்தப் பெண்ணை எனக்குத் திரு மணஞ் செய்து வைத்துவிட்டால், எனது குடும்பத்துக்குத் தாங்கள் உதவி புரிந்த வர்களாகி விடுவோம் என மனதில் திட்டமிட்டிருந்த உறவினர்கள் சிலர் இந்த திருமணப் பேச்சுவார்த்தைக்குப் பின்னணியில் இருந்தார்கள்.
பெண் பார்க்கப் போவதில் எனக் குக் கொஞ்சமும் உடன்பாடில்லை. வீட்டுக்கு வந்திருந்த அண்ணன் உறவானவர் என்னை விட்டுவிடுவதாக
濠

இல்லை. அவர் விடாப்பிடியாக, சிறிய தாயாராகிய எனது அம்மாவைச் சிக் கனப் பிடித்துக் கொண்டார். பெண் ணின் உறவினர்களிடம் இந்தக் காரியத் துக்காக அவர் பணம் வாங்கி இருக்க வேண்டுமென நான் உணர்ந்து கொண் டேன். நான் மலையகத்துக்குப் புறப் பட்டுக் கொண்டு நிற்கும் சமயம் அவர் குறுக்கே வந்து நின்றது அம்மா மனதில் ஒரு சிக்கலைத் தோற்றுவித்து விட்டது. அபசகுனமாக அம்மா அதைக் கருதி னார். அன்று என் பயணத்தை அனு மதிப்பதில் அம்மாவுக்கு உடன் பாடில்லை. அன்று புறப்பட்டு மலை யகம் செல்ல வேண்டாம் என முடி வாகச் சொல்லி விட்டார். அத்துடன் வீட்டுக்கு வந்திருந்த பெறாமகனின் அரியண்டம் அவரால் தாங்க இயலாமல், அவரோடு ஒரு தடவை போய் வருமாறு
தாயார் என்னிடம் கேட்டுக் கொண்டார். ஜ்
நான் எனது தாயின் சொல்லைத் தட்டா மல், அவருடன் யாழ்ப்பாணம் சென்று (03.01.1967) பெண் பார்த்தேன். பெண் வீட்டார் உடனே எனது முடிவைச் சொல்ல வேண்டுமென ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். நான் முடிவைப் பின்னர் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து வீடு திரும்பினேன்.
மறுநாள் பண்டாரவளை புறப் பட்டுப் பாடசாலை வந்து சேர்ந்த பின் னர், இரண்டொரு தினங்கள் தாமதித்து, அந்தப் பெண் மதம் மாறி வந்தால் நான் திருமணஞ் செய்து கொள்ளுகின்றேன் எனத் தெரிவித்துக் கடிதம் எழுதி நோகாமல் தட்டிக் கழித்தேன். கத்
ل
8 硫
S g
61
தோலிக்க மதத்தைச் சார்ந்த அந்தப் பெண் ஒரு போதும் மதம் மாற மாட் டாள் என்பதனை உணர்ந்து கொண்டே
நான் அப்படித் தெரிவித்தேன். அதனைத் தவிர அந்தச் சிக்கலில்
இருந்து நான் விடுபட்டு தப்பித்துக் கொள்ள, எனக்கு வேறு மார்க்கம் எதுவும் இருக்கவில்லை.
நான் தீவிரமான மதவாதியாக
இல்லாது இருப்பதனால், கத்தோலிக்க னாக மதம் மாறி அந்தப் பெண்ணைத்
திருமணஞ் செய்து கொள்வேன் என அவர்கள் அப்பாவித்தனமாக எதிர் பார்த்தார்கள்.
அந்தச் சம்பவம் எனது உள்ளத் தைப் பெரிதும் பாதித்தது. எனது மனதில் ஒரு உறுத்தலாக அது என்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. அந்த மனப்பாரத்தின் வடிகாலாக, “பெண் பாவை’ என்ற சிறுகதையை எழுதி, யாழ். இலக்கிய நண்பர் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு அனுப்பி வைத் தேன். அந்தச் சிறுகதை, போட்டியில் முதல் பரிசு பெற்று, மல்லாகம் அ.மி. பாடசாலையில் இடம்பெற்ற விழாவில் இரசிகமணி கனக செந்திநாதன் அவர்கள் கையினால் 02.01.1968இல் அதற்குரிய பரிசினைப் பெற்றுக் கொண்டேன்.
எனது வாழ்வு அனுபவங்கள், நான் வாசித்த நூல்கள் என்பவற்றோடு மிக இளம் வயதில் ஆசிரியரானதும், தந்தையை இழந்ததும், திருமணமாகா திருந்த மூன்று தங்கைகளுக்குப்

Page 33
பொறுப்புள்ள அண்ணனாக இருந்தும் என்னை நிதானப்படுத்தி நெறிப்படுத் தின. பண் டாரவளையில் நான் வாழ்ந்த ஆறாண்டுகளும் சமூக விடயங்களில் முழுவீச்சுடன் ஈடுபாடு கொள்வதற்கு இடையூறாக இருந்த ஒருகாலம். ஆனால் அந்த ஆறாண்டு காலம் எனது இலக்கிய ஆர்வத்தினை மேலும் வளர்த் துக் கொள்வதற்கு மிக வாய்ப்பான ஒரு காலமாக அமைந்தது. அந்தக் கால கட்டத்தில் இலங்கை, இந்திய எழுத் தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் சிலர் பதுளைக்கு வந்து போனார்கள். அவர் களுள் அ.ந.கந்தசாமி, நவசோதி (28.07.1967) கு.அழகிரிசாமி, விஜயபாரதி (13.09.67) அ.அமிர்தலிங்கம் ஆகியோர் குறிப் பிட்டுச் சொல்லத் தகுந்தவர்கள். அவர் கள் அனைவரும் பங்கு பற்றிய இலக் கியக் கூட்டங்களுக்கு அட்டம்பிட்டிய வில் இருந்து பதுளைக்குச் சென்று கலந்து கொண்டேன். எனக்குத் துணை யாக என்னோடிருந்த ஆசிரியர் எஸ்.இராசலிங்கம் சில தினங்கள் பதுளைக் கூட்டங்களுக்கு வந்திருக் கின்றார்.
இந்தக் காலத்தில்தான் எம்.ஜி.இரா மச்சந்திரன், சரோஜாதேவியுடன் ஒரு சமயம் நுவரெலியா வந்திருந்தார். நண்பர் இராசலிங்கம், நான் எங்கள் இருவரையும் தவிர எங்களோடிருந்த சக ஆசிரியர்கள் அனைவரும் அவர்களைப் பார்ப்பதற்கு நுவரெலியா சென்று வந் தார்கள். சென்று வந்ததல்லப் புதுமை! அவர்களுள் ஒர் ஆசிரிய நண்பர் சில காலம் தனது கை ஒன்றைக் கீழே
வீ. பொன்னம்பலம், !
62
தொங்க விடாது, கையை மடித்து தூக்கிக் கொண்டு திரிந்தார். அந்தக் கையைத் தான் கழுவுவதில்லை என்றும் சொல்லிக் கொண்டார். ஏனெனில் சரோஜாதேவியின் முந்தானைச் சேலை அவருடைய அந்தக் கை மீது பட்டு விட்டதாம்! அவர் கற்பனையாகத்தான் அப்படிக் கூறித் திரிந்தார் என்பது வேறு விடயம்! ஆனால் இப்படியும் ஆசிரி யர்கள் இருக்கின்றார்கள் என்பதுதான்.
இந்த ஆசிரியர்கள் மத்தியில் வேலணையைச் சேர்ந்த எஸ்.இராச லிங்கம், ஆரையம்பதியைச் சேர்ந்த ந.பாக்கியராசா ஆகிய இருவரும் என் னோடு மிக நெருக்கமாக வாழ்ந்ததுடன், எனது வளர்ச்சியில் அக்கறை உள்ளவர் களாகவும் இருந்தார்கள். இராசலிங்கம் ஒரு காண்டேகரின் எழுத்தில் அவருக்கொரு மோகம். காண் டேகரின் நாவல்களைக் கொண்டு வந்து படிக்கும்படி எனக்குத் தந்து கொண்டி ருந்தார். எனது எழுத்துக்களைப் படித்து, என்னைப் பாராட்டி உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார். அவர் தனது சொந்தச் சகோதரன் போலப் பாவித்து, காலை வேளையில் நாங்கள் இருவரும்
நல்ல வாசகர்.
வாங்கும் பசுப்பாலைத் தினமும் எனக் குக் காய்ச்சித் தந்தார்; தேநீர் தயாரித்துத் தந்தார்; பிரயாணத்தின் போது எனது "பாய்க்"கைத் தானே தூக்கிச் சுமந்தார். இவ்வாறெல்லாம்"என்னைப் போஷித் தார். யாழ்ப்பாணத்துச் சாதிய அடை யாளங்கள் எதுவுமில்லாத ஒரு மனித னாக என்னோடு நடந்து கொண்டார்.

மட்டக்களப்பு ஆரையம் பதி நண்பர் பாக்கியராசா அதிகம் வாய் திறந்து பேசாத ஒருவர். என்று என்னை அழைப்பார். இதயத்தில் நட்புடன் உறவாடினார். ஆரையம் பதியில் இருந்து அப்பொழுது வெளி வந்த கையெழுத்துச் சஞ்சிகைக்கு எனது படைப்புகளைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். அவரைத் தேடி மலையகத்துக்கு வந்த எழுத்தாளர் ஆரையம்பதி தங்கராசாவை அங்குதான் முதன் முதலாக நான் சந்தித்தேன். நண்பர் பாக்கியராசா யாழ்ப்பாணம்
"ஆனே"
வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம்
என்னைத் தேடிவந்து, என்னோடு இரண் டொரு தினங்கள் தங்கிப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
மலையகத்தில் வாழ்ந்த காலத்தில் கிழக்கு மாகாணத்து ஆசிரியர்கள், முஸ்லிம் ஆசிரியர்கள், சிங்கள ஆசிரி யர்கள் எனப் பலரையும் சந்திக்க, பழக எனக்குச் சந்தர்ப்பம் கிட்டியது.
அந்தக் காலத்தில் பதுளை ஊவாக் கல்லூரி உயர்தர மாணவர் மன்றத்தின்" அழைப்பினை ஏற்று, அங்கு சென்று அவர்கள் மத்தியில் ஒரு தினம், (18.09.1966) உரையாற்றினேன். அப் பொழுது அந்த உயர்தர வகுப்பில் அங்குப் படித்துக் கொண்டிருந்த பதுளை மு.நித்தியானந்தன், எஸ்.கணே சன் ஆகியோர் என்னைக் கண்டு பேசிப் பின்னர் நெருக்கமாகப் பழகி வந்தார்கள்.
'மெளனி கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு அந்தக்காலகட்டத்திலேயே வெளிவந்திருந்தது. அந்தச் சமயம் தருமுசிவராமுடன் நான் தொடர்பு கொண்டு, பணம் அனுப்பி வைத்த பிற்பாடு, அந்த நூலின் ஒரு பிரதியைத் திருகோணமலையில் இருந்து அவர் எனக்கு அனுப்பி வைத்தார். நல்ல நூல் களைத் தேடி வாசிக்கும் இலக்கிய ஆர்வம் காரணமாகவே அந்தத் தொகுதியை அப்பொழுது நான் முயன்று பெற்றேன்.
u་
S
as f
Y
אא&אא
63

Page 34
நாம் எப்படி இருந்தோம்? இனி எப்படி வாழ விரும்புகின்றோம்?
ஆங்கில மூலம் : ரெவிஸ் ரஞ்சன் பெரேரா Source : Pahana March 2006
தமிழாக்கம் : கந்தையா குமாரசாமி (Nallaikumaran - Melbourne)
2500 வருடகாலப் பழைமை வாய்ந்த கலாசார விழுமியங்கள் எம்மிடம் உண்டு - அதேசமயம் கடந்த காலத்தில் - விரும்பத்தகாத நினைவுகள், அச்சம் தரக்கூடிய தப்புக்கள், கைவிடப்பட வேண்டிய துர்க்குணங்கள் - அவற்றிலிருந்து பாடம் படித்தறிய வேண்டிய பலவாறான மோசமான தவறுகள் - வெட்கித் தலைகுனியக் கூடிய கடந்த கால வரலாற்றுச் சம்பவங்கள் ஆகிய பலவும் எங்களிடம் நிறைய உள்ளன.
மனித வரலாற்றை அசைபோடும் பொழுது அவனது சுதந்திரப் போக்கையும், சந்தோஷங்களையும் வரையறுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் பல்வேறு சூழ்நிலைகளை அவனது இருக்கைக்குள் காலத்துக்குக் காலம் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் வரத்தான் செய்கின்றது. உதாரணமாக இனக்குழுமம், நிறவேற்றுமை, செல்வந்த நிலை, வறுமை வாழ் தாழ்நிலை, கல்வி உயர் தராதர நிலை, மொழி - மத வேறுபாடு அல்லது முன்பின் முரணான மோசமான சாதிக் கட்டமைப்பு போன்றவையூடாகக் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளால் அடிமையாகக் கட்டுண்ட நிலையுடன் வாழ்ந்தவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் பிற மனிதர்கள்ாலேயே இழைக்கப் பட்டன. அத்தகைய பயங்கரச் செயற்பாடுகள் வார்த்தைகளால் சொல்ல முடியாத துன்பங்களையும் - துயரங்களையும் பல்வேறு காலகட்டங்களில் உலகில் பல இடங் களில் நிகழ்ந்து மக்களை வாட்டி வதைத்துள்ளன. அந்தக் காரணிகள் இரையாக்கப் பட்டவர்களின் வாழ்வாதாரங்களைப் பாரதூரமாகப் பாதித்ததோடல்லாமல் அவர்கள் சார்ந்த சமுதாயங்களின் அமைதியான சகவாழ்வுக்கு சீர்ப்படுத்த முடியாத ஊறு
64

பாட்டினை ஏற்படுத்தியுள்ளதைக் காணக் கூடியதாயுள்ளது.
கடந்த நூற்றாண்டில் சிலோன் என்று அழைக்கப்பட்ட காலத்தில் நிலவிய பண்ணை நிலவுரிமை முறையில் சாதிகளை மையப்படுத்திய சமுதாய கட்டமைப்பில் சிக்குண்டு தம்மை அலங் கரித்தவர்கள் மத்தியில் - இன்றைய பூரீ லங்காவில் உள்ளவர்களிடம் சில பழைமையான பாதிப்பு நிறைவெண் ணங்கள் அண்மைக்காலம் வரை காணக் கிடைக்கின்றன. குடியேற்ற நாட்டுக் கொள்கையுடன் ஆட்சி செய்த முறைமையை தங்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தி எமது நாட்டின் வளங் களைச் சுரண்டிப் பிழைத்தார்கள்.
பிரித்தானியர்கள் வெவ்வேறு சாதி யைச் சேர்ந்த ஊர்மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி மோத வைப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள் என்பதை சரித்திரச் சான்றுகள் தெளி வாகப் பகர்கின்றன. சமுதாய மட்டத்தில் அத்தகைய அமைதியற்ற சூழல் இருந்த தால் தங்கள் விருப்பத்துக்கமைய நாட்டை அவர்கள் இலகுவாக ஆட்சி செய்யக் கூடியதாக இருந்தது.
கடந்த காலத்தில் நிலவிய சாதி யமைப்பு முறைமையின் கீழ் ஒரு குறிப் பிட்ட சாதியினரின் பரம்பரை வாரிசுகள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி அதே குலத்தொழிலைக் கைக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக் கப்பட்டதால் அவர்களுடைய திறமைகள் யாவும் வீணாகின. தங்களுடைய பாரம் பரியத் தொழிலில் அதீத திறமையைக் காண்பித்தவர்கள் மற்றவர்களிலும்
65
பார்க்க அதிர்ஷ்டசாலிகளானார்கள். அத னால் இந்த நியாயமற்ற சூழ்நிலை தாங் கள் செய்யும் தொழிலில் கெட்டித்தன மின்மை காரணமாகப் பாதிக்கப்பட்டவர் களின் மனங்களில் விரக்தியை ஏற்படுத்தி எமது நாடு பொருளாதார ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்தது.
பண்டைய சிலோனில் சாதிமுறை ஆரம்பமாவதற்கு குடியேற்ற நாட்டுக் கொள்கைதான் பிரதான காரணம் என்று சிலர் வாதிடுகின்றனர். சாதிமுறை எனப் படுவது ஒருவரின் தொழிலை (அல்லது வர்த்தகம்), வ்ெவேறு சாதியினருக்கு வகுத்து வழங்கப்பட்ட ஏற்றத்தாழ்வு மதிப்பீடுகளை முக்கிய அடிப்படையாகக் கொண்டதாகும். உதாரணமாக விவசாயத் தில் ஈடுபட்டவர்களை வேளாண்மை (கொவிகம) செய்பவர்கள் என்றும், பல பரம்பரைகள் காலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் கரை யார் (கரவே) என்றும், பாரம்பரிய வழக் கப்படி சட்டி பானை வனைபவர்கள் குயவர்கள் (கும்பல்) என்றும் இன்னோ ரன்ன பலவாறாக வகைப்படுத்தப் பட்டனர். இந்த வகைப்படுத்தலுள் சில சாதியினர் மற்றைய சாதி வகுப்பினரிலும் பார்க்கத் தாங்கள் மேன்மையானவர்கள் என்று உரிமை கோரினார்கள். இந்த உயர் தகுதி நிலைமை படிப்படியாக மற்றைய சாதி மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மை யையும், அமைதியின்மையையும் உண் டாக்கிக் குறைந்த சாதியினழிரன முத்திரை குத்தப்பட்ட சாதிகளில் வீழும் இளைஞர்கள் மத்தியில் விரோதத்தையும், கசப்புணர்வையும் ஏற்படுத்தின.

Page 35
சாதியில் குறைவானவர்கள் என்று வகுக்கப்பட்ட சாதியினருடன் சாதியில் உயர்வானவர்கள் என்று உரிமை கோரிய வர்கள் எவ்வித தொடர்புகளும் வைத்துக் கொள்ள விரும்பாததோடு சமுதாய மட்டத்தில் அவர்களைக் குறைவாக மதிப் பிடப்பட்டது. அத்தகைய சூழ்நிலைகளில் மதக் கலப்புத் திருமணங்கள் போன்று, சாதிக் கலப்புத் திருமணங்கள் தடை செய்யப்பட்டு விலக்கப்பட்டது. இலங்கைத் தினசரிகளில் காணப்படும் 'மணமகன் - மணமகள் தேவை" விளம் பரங்களிலிருந்து தத்தம் பெற்றோரின் ஆணைக்குட்பட்டு இன்றுகூட தங்கள் சாதியைத் சேர்ந்த அல்லது தங்கள் சாதிக்கு ஒப்பான சாதியிலுள்ள துணை யையே தேர்ந்தெடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்கின்றார்கள். கடந்த நூற்றாண்டில் எமது நாட்டைப் படுகுழியில் தள்ளிய சாதிய முறை அமைப்பிற்கு இன்னும் புலம்பெயர்ந்த எங்கள் மத்தியில் வாழும் சிலர் புத்துயிர் அளிக்க விரும்பு Scörpsrum?
4 தசாப்தங்களுக்கு முன்னதாக நான் ஒரு சிறுவனாக இருந்த சமயம், எனது பாட்டி, பாட்டனார் காலத்தில் பல சந்தர்ப்பங்களில் சமுத்ாயத்தில் காணப் படும் 'சாதிமுறையும் அதன் தாக்கங் களும்" என்னும் விடயம் பற்றி மக்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டதை என்னால் நினைவுகூரக்கூடியதாக உள்ளது. எமது நாடு சுதந்திரமடைந்த தற்குப் பின்னர் இத்தகைய சமூகக் கேடான சிந்தனை எப்படி எங்கள் மக்கள் மனங்களில் அண்மைக்காலங் களில் உள்வாங்கப்பட்டுள்ளது என் பதனை நான் கேள்விப்பட்ட சிலரிட
ل
器
영
*g
9.
66
மிருந்து வாய் மூலமாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட கீழ்க்காணும் சமர்ப்
பணங்களிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.
* எமது மாளிகை வீட்டுக்குள்
அவர்கள் முன்பக்க வாசல் வழியாக, நுழையாமல் இருப்பது அவர்களின் வழமையான குணாதிசயமாகும்.
o அதற்குப் பதிலாக, அவர்கள் இரக சியமாகப் பின் விறாந்தைக்குச் சென்று அங்குள்ள உயரமில்லாத வாங்கொன்றில் அமர்வார்கள். அந்த ஸ்தானம்தான் அவர் களுக்கு உரித்துடையது என்பது அவர் களுக்கு நன்கு தெரியும்.
அத்தகைய ஒரு மனிதர் எனது பாட்டனார் தனது அலங்கரிக்கப்பட்ட ஒற்றைக்குதிரை சவாரி வண்டியில் கம்பீரமாகப் பிரயாணம் செய்யும் சமயம் எதிர்ப்பட நேரிட்டால், அந்த மனிதன் பாதையிலிருந்து பணிவாக பின்வாங்கி, அங்கேயே நின்றபடி கெளரவமான எனது பாட்டனார் என்ற நாமத்தின் அறி குறியாகத் தனது தோளிலிருந்த கை லேஞ்சியை எடுத்து எனது பாட்டனார் தூர இடம் செல்லும்வரை கையில் வைத்திருக்க வேண்டும்.
* அந்தக் கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ கோவிலில் உள்ள திருக்கோயில் இருக் கைகளின் முன் வரிசைகள் உயர்சாதி யினரின் குடும்பங்களுக்காக ஒதுக்கப் பட்டிருக்கும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் நடை பெறும் ஆராதனையின் போது அவ்விருக்

கைகள் எதிலும் (காலியாக இருந்தாற் கூட) வேறு எவரும் அமர்வதற்கு எண்ணிப் பார்க்கவே துணியமாட் டார்கள்.
* இத்தகைய பிற்படுத்தப்பட்ட குடும் பத்தினரின் பிள்ளைகள் இளம் வயதி லேயே பாடசாலையை விட்டு நீங்கி விடுவார்கள். அம்மாணவர்கள் தங்கள் குடும்பத் தொழில்களான விவசாயம், கள்ளிறக்குதல், ஆடை சுத்தப்படுத்தல் போன்றவற்றில் பெற்றோருக்கு உதவி யாக இருப்பது வழமையாகும். ஆனால் காலம் இன்று தலைகீழாக மாறித் தேங்காய் பிடுங்குவதற்குக்கூட ஒரு வரைக் கிராமத்தில் காண்பது கஸ்டமாக உள்ளது.
அப்படியான சட்டப்படி உரிமை யற்ற நிலைமைகள் இப்பொழுது அனேக மாக மாற்றம் அடைந்துவிட்டன. இன்றைய பரந்த நோக்கம் கொண்டவர்களாக, முழு வளர்ச்சியடைந்த ஆற்றல்களுடன் உள்ளார்கள். நானும் நீங்களும் வாழும் இன்றைய சமுதாயத்தில் ஊழியமானி யத்துக்குரிய நிலப்பண்ணை முறை விசித்திர மனப்பான்மையை மக்களி டையே ஊக்குவிக்காமல் சகல மக்களி டையேயும் வெளிப்படையாகவே சமத்து வம் பேணப்பட வேண்டும் என்று கற்பிக் கப்படுகின்றது. ஆனால், நாம் தேர்ந் தெடுத்து வாழும் நாட்டில் வழங்கப் பட்டுள்ள அந்தச் சமத்துவ விழுமியங் களுக்கமைய நாம் உண்மையில் நடந்து கொள்கின்றோமா?
இங்கு வாழும் இளம் சந்ததியினர் தங்கள் எதிர்கால வாழ்வைத் தாங்க
மக்கள் புத்திசாலிகளாக, .
67
ளாகவே தீர்மானிக்கும் சுதந்திரம் உள்ள வர்களாதலின் (அவர்களுடைய பெற் றோர் நேர்மையற்ற விதத்தில் மாறாக நடக்கும்படி தங்கள் செல்வாக்கை பிரயோகிக்கும் சந்தர்ப்பங்கள் தவிர்த்து) தங்களுக்கான பலதரப்பட்ட நல்வாய்ப்பு களைத் தேர்வு செய்கின்றார்கள். அதே சமயம் மற்றவர்களின் தலையீடின்றித் தங்கள் வாழ்வை எந்த மக்களாயினும் சுயமாகவே கொண்டு செல்ல அவர் களால் முடியும். இந்தா: தேர்ந்தெடுக்கப் பட்ட நாட்டில் நாமனைவரும் இறக்குமதி செய்யப்பட்டவர்களாதலால் மற்றவரது ஆர்ப்பாட்டமான வரலாற்றைப் பற்றியோ அல்லது பரம்பரை உடைமையொட்டிய பெருமை பற்றியோ எவரும் கவலைப் படமாட்டார்கள்.
புலம்பெயர்ந்த சகல மக்களிடமும் எந்தக் காலகட்டத்திலும் பாதுகாப்போடு - வந்த இடத்தில் வசதியோடு, மனமகிழ் வோடு வாழ்வில் (சில சமயங்களில் அவ்வப்போது தீங்கில்லாத சுயமான தனிச் சிறப்புரிமையுடன்) தூய இன்பங் களை அனுபவித்து வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதே அவர்களின் நம்பிக் கையும் நாட்டங்களுமாகும். அதேசமயம் எம் எதிர்காலச் சந்ததியினருக்கு மகிழ்ச்சி யான எதிர்காலம் அமைவதற்கேற்ற காப்புறுதி வழங்க வேண்டிய கடப்பாடும் எமக்கு நிச்சயம் உண்டு. அதன் காரண மாகவே எம்மில் அநேகர் இங்கு புலம் பெயர்ந்து வந்து வாழ்கின்றோம். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டில் இங்கு வசிப்பவர்கள் தங்கள் சொந்த நாட்டி னரது பார்வையில் தகுதி குறைந்தவராகக் கருதப்படுவதையோ அல்லது நியாயமற்ற விதத்தில் ஒரம்கட்டப்படுவதையோ,

Page 36
தங்கள் அடையாளத்தை இழக்கவோ அன்றி அன்னியப்படுத்தப்படுவதையோ ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
மென்மையானதொரு சமுதாயமாக நாம் மிளிர வேண்டுமாயின் இன்று காணப்படும் நடுநிலைதனை - கற்பிதம் செய்யும் சுயமுக்கியத்துவம், தன் முனைப்பு என்பனவற்றினைக் காண் பித்து எமது அன்றாட வாழ்வில் மேலி டான தன்மையை உட்சொரிந்து கெடுதியை ஏற்படுத்திக் கொள்ளாமல் - பரந்துபட்ட சமூகத்திற்கு எம்மை வெளிக் காண்பிக்க வேண்டும்.
நாங்கள் எங்களுக்குள் நேர்மையாக இருந்து கொண்டு, எம்மிடையே இயற்கையாக உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கவனத்தில் எடுத்துப் பேதம் Lምiክ வினையை வளர்க்காமல் எப்பொழுதும்
ஐக்கியம் - ஒருமைப்பாடு என்பவற்றில் நாட்டம் கொண்டு எமது அன்றாட வாழ்வுகளில் பிறரின் எண்ணக்கருவூலங் களுக்கு மதிப்பளித்து இணங்கி நடந்து கொள்வதனால் அத்தகைய மகிழ்ச்சி கரமான சூழலை ஏற்படுத்தலாம்.
நாங்கள் இங்கு புலம்பெயர்ந்து வந்த நோக்கம் பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்க வேண்டும் என்பது உண்மையானால் இத்தகைய சாதகமான வாழ்க்கைச் சூழல் பண்பு களை எம்மத்தியில் தடங்கலின்றி அமைக்க வேண்டிய கடமை எமக்குண் டல்லவா?
ஒருவருடைய முக்கியத்துவத்தைக் கணிப்பிடுவதற்கு இனம், சாதி, மதம், செல்வம், மேல்படிப்பறிவு அல்லது கல்வித் தராதரம் ஆகியவற்றை அளவு
68
கோலாகக் கொண்டு மதிப்பிடாமல் ஒரு புதிய சமுதாயத்தை அமைக்க முன்வர வேண்டும். (தாங்கள் பெற்ற சிறப் புரிமைகள் அல்லது சாதனைகள் தத்தம் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது குடும்ப காட்சிப் பரப்புக்குள் அமைந்த செயல் வடிவங்களாகக் கருதி மகிழ்ச்சிய்ல் திளைக்கலாம்.) -எங்கள் சமுதாயத்தில் வாழும் ஒரு சிலரிடம் காணப்படும் மேலி டான நினைவு அல்லது தலைக்கன ஊக எண்ணங்கள் ஒப்பீட்டு நோக்கிற்கும், மனக்கசப்பிற்கும், டிற்கும் வழிவகுத்தன என்பது எமது கடந்தகாலப் பட்டறிவுகளாகும். அத் தகைய நிலைமைகள் சமுதாய கட்ட
ஒற்றுமைக் கேட்
மைப்பைச் சிதைப்பதற்கு வழிகோலி நாங்கள் கொண்டுள்ள மானிடப் பிணைப்பிற்குச் சீர்ப்படுத்த முடியாத ஊறு உண்டாக்கி தீங்கு விளைவிக்கும். 2500 வருடகால பழைமை வாய்ந்த கலாசார விழுமியங்கள் எம்மிடம் உண்டு என்று பறைசாற்றும் அதேசமயம் கடந்த காலத்தில் விரும்பத்தகாத நினைவுகள் பலவும், அச்சம் தரக்கூடிய தப்புகள், கைவிடப்பட வேண்டிய துர்க்குணங்கள், அவற்றிலிருந்து பாடம் படித்தறிய வேண்டிய பலவாறான மோசமான தவறுகள், வெட்கித் தலைகுனியக் கூடிய கடந்த கால வரலாற்றுச் சம்பவங்கள் எங்களிடம் நிறைய உள்ளன.
நாம் எங்கு வ்ாழ்ந்தாலும் நாங்கள் நேற்று எப்படியிருந்தோம் என்பதிலும் பார்க்க, நாம் இன்று எங்ஙனம் இயங்கு கின்றோம் - நாளை எப்படி இருக்கப் போகின்றோம் என்பதே மிகவும் முக்கிய
IDITGolgi.

- டொமினிக் ஜீவா
‘பொன்னாடை போர்த்துவதை இனிமேல் ஏற்றுக்கொள்ள மாட்டேன்!” எனப் பகிரங்கப்படுத்தியிருந்தீர்களே, உங்களது பிறந்தநாள் விழாவில் பொன்னாடையை ஏற்றுக்
கொண்டது உங்களது பிரகடனத்தையே நீங்களே மீறியது போல் ஆகாதா?
மருதானை. எஸ்.குணாளன்.
ロ அந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்திவிட்டது. எங்கள்
மகிழ்ச்சியை இந்தக் கட்டத்தில் நீங்கள் தடைசெய்யக்கூடாது. இது எமது அன்புக் கட்டளை
என் எனது வாயைச் சம்பந்தப்பட்டவர்கள் அடைத்து விட்டார்கள். நானும் அவர்களது
அன்பாணைக்குக் கட்டுப்பட வேண்டி வந்துவிட்டது. நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டை
மனமார ஏற்றுக்கொள்ளுகின்றேன். சூழ்நிலை என்னை நெருக்கடிக்குள் தள்ளிவிட்டது:
0 - 0 - 0 - 0
சமீபத்தில் நானும் பார்க்கிறேன், ஊடகத்துறையினர் ഖേന്ത്രഖ്യ பார்க்க உங்களுக்கு
அதிமுக்கியத்துவம் தொடுப்பதாக எனக்குப் படுகிறது. என்ன காரணம்?
புத்தளம். ஆர். நல்லைநாதன்
0 இலக்கிய உலகில் நானோர் எதிர்கால நோக்குள்ளவன். தனி ஓர்மம் கொண்டவன். அர்ப்பணிப்பு உணர்வுடன் மற்றும் ஏனையோரையும் அரவணைத்துக் கொண்டு போகத் தெரிந்தவன். எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கிய உலகில் ஓர் இலக்கியச் சஞ்சிகையை நாற்பது ஆண்டு களுக்கு மேலாகத் தொடர்ந்து நடத்தி வரும் பிடிவாதக்காரன், மறைந்த பின்னரும் நாளைய வரலாற்றுக்கு உரியவன். எதிர்காலத் தலைமுறையினர் தமது ஞாபகத்தில் என்றுமே வைத்து நினைத்துப் பார்க்கத் தக்கவன் போன்ற காரணங்கள் அடிப்படையானதாக இருக்கலாம். உழைப்பு பயனைப் பெற்றே தீரும்
0 - 0 - 0 - 0
69

Page 37
உங்களது பிறந்தநாள் செய்தியாக இந்த மண்ணுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
யாழ்ப்பாணம்.
0 இந்த மண்ணும் மக்களும் அடியோடு இழந்துவிட்ட சமாதானம் மீண்டும் கட்டி யெழுப்பப்பட வேண்டும். இங்கு வாழும் மூவின மக்களும் எதிர்காலத்தில் சபீட்ச மாகவும் மகிழ்ச்சியாகவும் வாழத்தக்க சூழ்நிலை கூடிய விரைவில் இந்த நாட்டில் ஏற்பட வேண்டும். இந்த அடிப்படைத் தேவையை நெஞ்சாரப் புரிந்துகொண்ட மக்கள் கூட்டம் ஒன்றுபட்டுச் செயலாற்ற
வேண்டும். இதுவே எனது உளமார்ந்த
பிரார்த்தனையாகும்.
0 - 4 - 0 - 0
இன்று நீங்கள் வயோதிபத்தை உணரு isgraatm?
மன்னார். எம்.எம்.மன்சூர்
0 உணருகிறேன். அதற்காக எனது வேலைத் திட்டங்களில் சோர்வு காட்டுவ தில்லை. அதை நினைத்து மனஅதைரி யம் அடைந்து போவதில்லை. அது வரு கிறபடி வரட்டும். நான் மன இளமையோடு இயங்கிவர முயற்சிக்கிறேன்.
உங்களது மகள் நடிகை எனில் நீங்கள்
ஆலோசனை என்ன?
அவளுக்குச்
திக்வெல்லை. எம்.ஏ.இனாயத்துல்லா
கே.சரவணன்
சொல்லும்
70
0 சினிமா வெறும் பொழுதுபோக்கு வணிசக் சாதனமல்ல. அது மகத்தான விஞ்ஞானக் கண்டுபிடிப்பு. இதில் உனது அப்பனைப் போல, தனித்துவத்துடன் மிளிர்ந்து காட்டு. இங்கிரிட் பெர்க்மேன் போல, நர்கிஸ் போல, நமது பத்மினி, சாவித்திரி போல உது பெயரையும் புகழையும் நிலைநாட்ட உழை. நீ தேடிக் கொண்ட இந்தத் துறையில் இன்னும் இன்னும் புதுமைகளையும் தனித்தன்ம்ை களையும் நிலைநாட்ட உறுதியாகப்
| பாடுபடு. மக்களை மறந்து விடாதே!
0 - 0 - 0 - 0
ஏராளமான புதிய புதிய நூல்கள் மாதா மாதம் வெளிவருகின்றனவே, இவற்றில் தரமானவைகளை எப்படிக்கண்டு பிடிக்
கிறீர்கள்?
ஆனைக்கோட்டை. ஆர்.சுகந்தன்
D தரமான வாசகனுக்கு ஒரு நூலின் இரண்டொரு பாராக்களைப் படித்தவுட னேயே அந்நூலின் தரம் புரிந்துவிடும். முழுப் புத்தகத்திலும் அவன் மினைக்கெட வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த உள்ளுணர்வை வளர்த்துக் கொண்டாலே நாம் தரமானவைகளைத் தெரிந்து கொள்ளலாம். .
0 - 0 - 0 - 0
உண்மையைச்சொல்லுங்கள். அதை உண்மையாகச் சொல்லுங்கள். ஆரம்ப காலங்களில் மல்oைெகக்கும் உங்களுக்கும்

இயக்கங்களால் பயமுறுத்தல்கள் ஏற்பட gIGéTLIT?
நீர்கொழும்பு. ஆர்.மனோகரன்
உழைப்பைப் பரிபூரணமாகத் தெரிந்து வைத்திருந்தனர். அத்துடன் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து எத்தனையோ கஷ்ட நிஷ்டுரங்களுக்கு மத்தியில் இருந்து பல பல போராட்டங்களுக்கு ஊடாக நான் போராடி முகிழ்ந்து வந்துள்ளேன் என்பதும் அவர்களுக்கு நன்கு புரியும். அதனால் என்மீது ஒரு கெளரவமும் மரியாதையும் காட்டி வந்துள்ளனர். நான் எனது இளம்
இயக்கத்தினர் எனது அர்ப்பணிப்பு
பராயத்திலேயே ஒரு இடதுசாரியாகப்
பிரகடனப்படுத்திக் கொண்டவன். இயங்கி வந்தவன். பரம்பரை ஆண்டி! - பஞ்சத் துக்கு ஆண்டியல்ல! இதுவும் அவர் களுக்கு நன்கு விளங்கும். எனவே எனது இலக்கியச் செயற்பாடுகள் மீது எந்த விதமான இடைஞ்சல்களையும் என்மீது திணிக்கவில்லை.
மூத்திர ஒழுங்கைக்குள் மல்லிகை வெளிவந்து கொண்டிருந்த சமயம், ஒரு நாள் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து குதித்தனர். ஐம்பது ஐம்பது மல்லிகைகள் உடனடியாகக் கட்டித் தரவேண்டும். அவசரம்! இது மேலி டத்து உத்தரவு!’ என எனக்கு உத்தரவு போட்டனர். அவர்களது தொனியில் ஒரு வகை மிரட்டல் இருந்தது.
71
நான் அவர்களது கோரிக்கையை முற்றாக நிராகரித்து விட்டேன். கவிஞர் புதுவை இரத்தினத்துரையின் கடிதத் துடன் வாருங்கள். நான் சந்தோஷமாக அள்ளித் தருகிறேன்’ என்றேன். அன்று போனவர்கள் போனவர்கள்தான்!
0 - 0 - 0 - 0
ரஷ்யாவுக்குச் சென்றிருந்தீர்களே, மாஸ்கோவில் லெனினரின் பாடம் செய்யப்
பeடிருந்த உடலைப் பார்த்தீர்களா?
வவுனியா. எம்.வேலும்மயிலும்.
போனேன். பார்த்தேன். மாஸ்கோ பல் கலைக் கழகப் பேராசிரியரும் தமிழபிமானி யுமான அலக்ஸாண்டர் துபி னான்ஸ்கி என் பவர் என்னை அழைத்துச் சென்றிருந்தார். விவரமாகச் சொன்னார். நான் மாபெரும் தலைவர் லெனினினது உடலை அந்தச் சூழ்நிலையில் பார்த்ததும் அப்படியே மெய்
சிலிர்த்துப் போய்விட்டேன். என் நெஞ்சுக்
கூட்டிற்குள் ஏதோ செய்தது. மெளனமாக அவரது தோற்றத்தைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தேன். என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத காட்சி, அந்தக் காட்சி.
இன்று பாடம் செய்யப்பட்ட லெனினது
உடலை அங்கிருந்து அகற்றி விட்டார்கள்.
பல தலைவர்களைச் சிலைகளாகத்தான்
பார்த்திருக்கிறேன். உடல் பேணப்பட்டுப்
பார்த்த தலைவர் லெனினுடையதேயாகும். 0 - 0 - 0 - 0

Page 38
நீங்கள் வடபுலத்தைச் சேர்ந்தவர். உங்களிடம் பிரதேசவாதம் இருக்கின்றதா?
கல்முனை. ஆர்.சூடாமணி
0 என் செயற்பாடுகளை வைத்து என்னைக் கணியுங்கள். நான் யாழ்ப் பாணத்தில் பிறந்தவன். தமிழன். இலங் கையன், அதேநேரம் நான் மனுக்குலத் தைச் சேர்ந்தவன். மனிதன்! உலகமெல் லாம் எனக்குச் சொந்தக்காரர் உண்டு. நானொரு இடதுசாரி படைப்பாளி 0-0-0-0 ܗܝ
ா சமீபத்தில் நீங்கள் படித்த அதிசயச்
செய்தி என்ன?
வத்தளை. கே.நடேசலிங்கன்
0 அரியானாவில் ஹல்தேரி மாவட்டத்
தில் 60 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் 6 -
வயதுச் சிறுவன் தவறிப்போய் விழுந்து விட்டான். பையன் விழுந்து 3 நாட்களாகி விட்டன.
இந்தியப் பிரதமர், மாகாண ஆளுநர் போன்றோர் விசேஷ கவனமெடுத்து அவசர அவசரமாக இயங்கினர். மத வேறுபாடற்றுச் சகல வழிபாட்டு இடங்களிலும் பையன் பிரின்ஸ் உயிரோடு மீட்கப்பட வேண்டு மெனப் பிரார்த்தனை செய்தனர். முடிவில் விஞ்ஞான, தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்டு சிறுவன் பிரின்ஸ் இராணுவத்தின ரால் உயிரோடு மீட்கப்பட்டு விட்டான்!
ஒரு சிறு உயிரின் மீட்புக்காக நாடே பரிதவித்துக் காத்திருந்தது. மாறாக நமது நாட்டில் மணிக்கொரு உயிர் பறிக்கப்பட்டு வருகின்றதே. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். நெஞ்சில் எங்கோ வலிக் கின்றது! நாடு எங்கே போகிறது?
0 - 0 - 0 - 0
அன்று 60களில் பேராதனைப் பல் கலைக் கழகத்திலிருந்து யோகநாதன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், கதிர்காமநாதன் போன்ற இளந்தலைமுறை யினர் துடித்துக்கொண்டு ஈழுத்து இலக்கிய உலகில் உள் நுழைந்தார்கள். இன்றைய இளந் தலைமுறைப் இலக்கிய உலகில் அவர்களைப் போல உதய
படைப்பாளிகள்
மாதவில்லையே என்ன காரணம்?
நெல்லியடி. எம்.அருந்தவன்
0 முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மிக வும் வீரியத்துடனும், கட்டுக்கோப்புடனும் இயங்கிவந்த காலமது. நாடு பூராவும் ஓர் இலக்கியத் துடிப்பு மிளிர்நது கொண்டிருந் தது. புதுப் புது இளையதலைமுறையினர் இலக்கிய உலகில் காலடி பதித்தனர். இன் றைய இளந்தலைமுறையினரின் நோக்கும் போக்கும் அரசியல் மயப்பட்டு விட்டது. அந்த வீரிய உணர்வு திசை மாறிவிட்டது. இன்றைக்கு ஒருவன் இளைஞனாக இருப்ப தென்பதே ஒரு போராட்டம்தானே!
201 - 1/4, முரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
72

POOBALASNIGHAM BOOK DEPOT
IMPORTERS EXPORTERS, SELLERS 8. PUBLISHERS OF BOOKS, STATIONERS AND NEWS AGENTS.
Head office: w Branches : 340, 202 Sea Street, 309A-2/3, Galle Road, Colombo 11. Sri Lanka. Colombo 06, Sri Lanka. Te: 2422321 Tel.: 4-515775, 2504266 Fax. 2337313 4A, Hospital Road, E-mail : pbdhoG)sitnet. Ik Bus Stand, Jaffna.
, LT CodfråJaHuib Lišsões esFrr cun Guo
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி இறக்குமதியாளர்கள், நூல் வெளியீடeடாளர்கள்
56OD6D6OLD 3 கிளை : இல, 202, 340 செபeடியார் தெரு, இல. 309 A-23. காலி வீதி, கொழும்பு II, இலங்கை, கொழும்பு 05, இலங்கை தொ. பே. 242232 65IT. G8L. 4-5 5775
தொ. நகல் 23373|3 Lóasraoré5565 pbdhoCDsltnet. Ik S6o. 4A. Seou56rf 6figß.
பஸ் நிலையம், யாழ்ப்பானம்,

Page 39
Malikai @ർഗ്ഗ Z
Digital Colou
AMAAN E
(as Automatic dust 8.
(CE
sk Maximum Size: I' * Output Resolution: * Film lnput Formats * Film Types: Colourt
negative
* Compatible lnput o Floppy Disk, CD-Rom, CD-R, DVD-R, DVD-ROM, PCC
sk Print to Print * Conduct sheet 88 lir
* lemplates: Greetins C Album Prin
HEAD OFFICE
HAppy DIGITAL CENTRE
Die-a TAL COLOJ, LA
TuLO
Ne. 64 Sri Sumanatissa Mw, Colombo - I2. Te :-o74-бгоб62.

August 2006
% (ീe w (lad & Studio ATUR2S
scratch correction
x 18"Digital Print
: 4oodpi : I.35, Ix24o, Izo, APS legative & positive, B&W
5epia megative
Output Media:
WRW, MO, ZIP DVD-RAM, rd, CompactFlash, 5TmartMedia,)
ndex print
ards, Frame Prints, Calandar Prints, | 5.
BE ANCH
HAppy PHOTO
TIL FI FJELICAL FILITxFIFI l'ILLR-LFHL
No. 3oo, Modera Street, Colombo - 15. Tel-O11-25.6345.