கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாற்றம்

Page 1
*。
உங்களுடன் . . . .
எனது கதைகள் பற்றி நானே ஏதாவது சொன் லவேண்டும் போலிருக்கிறது. விஸ் தாரமாக அல்ல சுருக்கமாக,
எந்தப்புற நிகழ்வுமே என்னைப் பாதிக் கிறது. மனதைத் தொட்டு நெருடுகிறது. சில சமயங்களிற் காயப்படுத்துகிறது. இந்த அனுபவங்களே யெல்லாம் சிறைப்பிடிக்கும் எத்தனந்தான் எனது கதைகள்.
இறுக்கமான குடும்ப உறவு களி ல் , ஆணின் அதிகாரமுனே பழுங்க, பெண் தன் *னச் சுற்றிப் பினேந்து கிடக்கும் தளேகளேத் தகர்த்து விட்டு விடுதலேயாவது எனது கதைகளில் இயல்பாகவே சாத்தியமாகிறது.
ஆண் பெண் உறவு-உணர்வு விவகாரங் களேக் கடந்து, சமூகத்துடனுன மனித உறவு களின் சித்திரம்தான் பிச்சைப் பெட்டிகளும், அந்தக் கிராமத்துச் சிறுமியும். இக் கதைக எளிலும், ஏனேய கதைகளிலும் வருபவர்கள் நமது சினேகத்திற்கும் நேசத்திற்கும் உரிய வர்கள்.
மனித நேசம் சாஸ்வதமானது.
 


Page 2

மாற்றம்
க. சட்டிநாதன்

Page 3
Mattam a collection of short stories by K Saddanathan
7/7 Point Pedro Road Nallur Jaffna Copyrights reserved
Printed at Thirukkanitha Press Chavakachcheri
Jacket design by G Kailasanathan first edition June 1980
Price rupees six,
நன்றி கைலாசநாதன் சண்முகன்
மல்லிகை அஞ்சலி
էֆp"653
શ્રઢાં
திருக்கணிதம்

மாற்றம்
அந்தக் கிராமத்துச் சிறுமி
தாம்பத்தியம்
பிச்சைப் பெட்டிகள்
இப்படியும் காதல் வரும்
உறவுகள்
20
32
6s

Page 4
என்ரை ஐயாவுக்கும் அம்மாவுக்கும்

மாற்றம்
நின் பஸ்ஸைவிட்டு இறங்கியபொழுது அவன் சிரித் தபடி என் எதிரில் வந்தான். இணக்கமான சிரிப்பு. என்னல் அவனை மட்டுக்கட்ட முடியவில்லை. தெரிந்து பழகிய து போன்ற முகத்தோற்றம் சடை "பொசு பொசு" என நன்முக வளர்ந்து தோள்களைத் தழுவியபடி அலைந் த து. நீண்ட உடலை ஒட்டிய சேட்டும் நிலத்தைக் கூட்டுவதுபோல பெல் ஸ"சம் அணிந்திருந்தான். மீசை முளைகொண்டிருந்தாலும் பெண்மையின் சோபிதமும் நளினமும் அவனில் இழைந்தன.
அவன் என்னைக் கடந்து, விலகித் தூரத்தே போ ன பொழுது, அவனை நெருங்கி மிகுந்த சொந்தமுடன் தொட் டுக் 'கு சலம் விசாரிக்கவேண்டும் போலிருந்தது. ஆல்ை அவன் நிற்காமல் போய்க்கொண்டிருந்தான். மனசு அவனைத் தொடர, நான் ஆலடி ஒழுங்கையில் இறங்கி நடந்தேன்.
ஒழுங்கையை மேவிப்பாயும் மாரிவெள்ளம். அதில் பிரி யத்துடன் காலைவைத்து நடந்தேன். வேட்டித் தலைப்பு நீரில் தோயத் தோய நடப்பதில் ஒரு திருப்தி. ம்னசு திடீரென லேசாகி, பரவசம்கொண்டு இறக்கை விரித்தது. -
1

Page 5
8
படலையடியில் நீர் கணுக்காலைத் தழுவிஓடியது. வளவி குசினிக்குப் பின்புறமாக வயல்வெள்ளம் ஏறியிருந்தது. கு னியின் தெற்குச் சுவர் நீர்க் கசிவுடன் பளபளத்தது.
அம்மா, வீட்டுத் தாவாரத்தில் உரலில் ஏதோ போட்( இடித்துக்கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் ஓடிவந்து
அனைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.
pop
“என்ன இருந்தாப்பிலை. லீவிலை வந்தனியே . .
'லீவிலைதான். வந்து ஒரு கிழமையாச்சு. உன்னை யு ட ஐயாவையும் பார்க்கவேணும்போலை இருந்தது அதுதான்."
“மருமகளைக் கூட்டிக்கொண்டு வரேல்லையே..? 'அவவுக்குச் சுகமில்லை" "'என்ன! ஏதென் வித்தியாசமே...?*
இல்லை’ நான் சிரிக்கின்றேன். அம்மாவுக்குக் கண் கலங்கிவிடுகிறது. எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிவிட் டன. இன்னும் ஒரு குழந்தையுமில்லை. அது அ வ வுக்கு மிகுந்த கவலை.
'ஐயா தோட்டத்தாலை வாழுர்போலை . ரசம் கொஞ் சம் வைச்சுத் தரச்சொன்னவர்"
அம்மா உரலில் இருந்ததை அவசர அவசரமாக இடிக் கத்தொடங்கினுள்.
'தம்பியா. . எப்ப வந்தது?" 'இப்பதாணய்யா" உதடுகள் லேசாகப் பிரிய - புகையிலைக் காவி படர்ந்த மிகவும் சிறியதான அந்த வேட்டைப்பற்கள் தெரிய, ஐயா நெகிழ்ந்து சிரிக்கிருர்,

3
"ஆர்ப்பாட்டமில்லாமல் எவ்வளவு இதமாக, நெஞ்சைத் தொடுமாப்போலை இவரால் சிரிக்கமுடிகிறது’
"ஐயா தளர்ந்துதான் போய்விட்டார், வயதாகி விட வில்லை!"
மண்வெட்டியை முற்றத்தில் வைத்தவர், கிணற்றடிப் பக்கம் போனர். அப்பொழுது நான் அம்மாவைப் பார்த்துக் கேட்டேன்: - . .འ་
**ஆரந்தப் பொடியன்? ஹிப்பிமாதிரி தலையிலை சடை வளர்த்தபடி நீண்ட தொள தொள கழிசானும் போட்டுக்
கொண்டு . . ஊருக்குப் புதிசா . . 9
'அவஞ? அவனுகத்தான் இருக்கவேணும்!” * * 6т6һЈ6йт???
'அவன்தான், முத்தன்ரை மருமோன். மாமனேடை வந்து நிக்கிருன்போலை'
"வள்ளிப்பிள்ளேன்ரை மகனு?’’
அவன் யாரென்பது எனக்கு விளங்கிவிடுகின்றது. அந்த நினைவுகளை என்னல் எப்படி மறந்துவிடமுடியும். பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் நடந்தவை என்ருலும் அவை எனது இளமையோடு பாடம் போடப்பட்ட விஷயங்களா யிற்றே. அம்மாவைப் பார்த்தேன். அவள் முகம் கருமை கொண்டு எங்கோ எதிலோ ஒருமுகப்பட்டு நிலைத்துவிடுகி றது. அவளும் அந்த நினைவுகளில் அமிழ்ந்துவிட்டாளோ!
Ꭴ Ꭴ Ꭴ Ꭴ OO O
காசிப்பிள்ளை மாமாவும், சந்திக் கடைச் சிவத்தாரும், வினுசியரும் வீட்டுக்கு வந்தபொழுது, அவர்கள் முகத்தில் நெருப்பாய்ப் படர்ந்து சுடர்விட்ட உக்கிரத்தை அவதானித் தவளாய் அம்மா கேட்டாள்

Page 6
荃
"என்ன . . என்னண்ணை நடந்தது??
'என்ன நடந்ததா? குடிமுழுகிப்போச்சுது தங்கச்சி குடிமுழுகிப்போச்சுது. இவன் சருகு இராசையன் காசிை ஆரெண்டு நினைச்சிட்டான். கெட்ட ராஸ்க்கல். கெஞ்சி தின்னி. என்ரை புதறணுக்குக் கிழக்காலை, ஆலடிப் பக்க இரண்டு பரப்பு மேட்டுத்துண்டு கிடந்ததெல்லே? அை விக்கப்போறனெண்டு ஒரு வார்த்தை எனக்குச் சொன் வனே . சரி என்னைவிடு. இவர் சிவத்தாரிட்டை. இல்2 இவன் வினசியிட்டை ஒரு வார்த் தை கேட்டிருக்கலாயே போயும் போயும் இவனுக்கு நாமுத்தன்ரை பேரன்தாலே கிடைச்சான். அந்த நளவனும் லேசுப்பட்டவனில்லை. தாவ டிக்கை. அதுவும் வெள்ளாளக் குடியளுக்கு நடுவிலை. . நாட்டாண்மைகாட்ட வ்ந்திட்டான்"
**ஆரவன் முத்தனே? பெத்ததுகளை சிறிசிலை இழந்தவன் ஆனைக்கோட்டையிலைதான் பேரனே டை இருந்தவன். கிழ வனும் செத்துப்போச்சுது. தலையெடுத்ததும் உழைப்பு ! பிழைப்புக்கு இது வசதியாய் இருக்குமெண்டு இஞ்சை வந் வணுக்கும்'
அங்குவந்த ஐயா இதைச் சொன்னபொழுது, அவை இடைமறித்து வினுசியர் சொன்னுர்:
"அதுக்காக அவனை நாம இஞ்சை நடு வீட்டுக் ை வைக்கேலுமே. அவன்ரை இனசனம் இலந்தையடிப் பக்க இருக்குதுகள் அங்கைபோய் அவனிருக்கட்டன்'
**நான் ருேட்டுக்கரையெண்டு புதறணுக்கை புது வீட் டுக்கு அத்திவாரம்வேறை வெட்டிறன். அவன்ரை கோடி கையே நான்போய்க் கிடக்கிறது'
LDruprraí26ár கூச்சத்தைப் புரிந்து கொண்டவராய் சிவத் தாரும்

**அதுசரி காசி! அவன் இஞ்சையிருந்தால் நம் ம  ைட
பெண்புரசுகள் அக்கம் பக்கத்திலை புழங்கேலுமே"
'ஒகோ! உங்களுக்கு அந்தப் பயமே. சரி சரி. நீங்க போய் செய்யிறதைச் செய்யுங்க. அவ்னும் பொலிஸ் அது இதெண்டு போகத்தான் போவான். அந்தக் காலம் போலை நாம அவங்களை ஏறிமிதிக்கேலுமே - ஐயா.
ஐயா எப்பொழுதுமே நிதானந்தான். நிதானம் தப்பிப் பேசியதை நான் பார்த்ததில்லை.
மாம்ாவுக்கு ஐயாவின் உபதேசம் பேய்த்தனமாய்ப் பட்டது. அவர் மிகுந்த கோபங்கொண்டவராய் தன் பருத்த உடல் குலுங்க, வினுசியரும் சிவத்தாரும் துணைவர, ஆலடித் துண்டை நோக்கி விரைந்தார். அம்மா மாமாவைத் தொடர, நான் அவளைப் பின்தொடர்ந்து ஓடினேன். எங்களைத் தொடர்ந்து ஊரே வந்தது. ஐயா மட்டும் வரவில்லை.
"ஐயாவிற்கு மாமாவின் வேலை பேய்த்தனமாய்ப் பட்டி ருக்கும்’
ஆலடித்துண்டை அடைந்த மாமா இரைந்து கூவினர்:
“ஆரடா அவன், வெளியிலவா. சாதிகெட்டதுகளெல் லாம் இஞ்சை இந்தத் தாவாடி மண்ணிலை கால் வைக்கே லுமே!’ −
மாமாவின் குரல் கேட்டு வெளியே வந்தவன் இளமை யோடு இருந்தான். தசை திரட்சிகொள்ள மிகத் திடமாகவு மிருந்தான். அவ ன் அங்கு நின்றவர்களை எதிர்கொண்டு பார்த்த பார்வை "என்ன? குடியிருந்தால் என்னசெய்வியள்?" என்பதுபோல் இருந்தது.
'அட அவற்றை பார்வையைப்பார் பார்வையை, மசிர்!
மட்டு மரியாதையில்லாத எளியநாய் .."

Page 7
سے 6
மாமா பாய்ந்துசென்று முத்தனைத் தனது பலங்கொண் மட்டும் தாக்கினர். அவன் இதனை எதிர்பார்க்கவில்லை. நி தவறி விழப்போனவன் சற்று நிதானமுற்று மாமா  ைவ பார்த்துச் சொன்னன்:
'கமக்காரர், இப்பிடி நடவாதையும். நாங்களும் ம சர்தான். நான் இந்தத் துண்டை, குடியிருக்க நிலமில்லாம அந்தரிச்சுத்தான் வாங்கினனன்' "
'ஒகோ...! வாங்கினனிரோ. காசுகொடுத்தோ. வாங்கின உடனை உமக்கு இஞ்சை ஆட்சியோ?*
அவர் மீண்டும் ஆவேசம்கொண்டு அவனது விலாவி உதைத்தார்.
அவர் மட்டுமல்ல; சிவத்தார், வினசியர் என்று மூவரு முறைவைத்துக்கொண்டு மாறிமாறி அவனை அடித்தார்கள்
இத்தனைக்கும் அவன் பொறுமையாக இருந்தான். அ னது இந்த அசாத்தியமான பொறுமை எனக்கு ஆச்சரியமா இருந்தது. இந்த மூவரையுமே தனித்து அவன் ஒருவனுகே சமாளிக்கமுடியும். இருந்தும் அவன் கரங்கள் தழையுண் கிடப்பதுபோல அவர்களுக்கு எதிராக உயராமல் இருப் தென்றல்! அவன் உண்மையில் ஓர் பணிவான குடிமைதான் அவர்களுக்குக் கைகட்டிச் சேவகம் செய்யத்தான் அவனுக்கு தெரியும். அதற்கு மட்டுமே அவனது கரங்கள் பழக்கப்ப டவை. அவனைப் பொறுத்தவரை இது ஒரு வழிவழி வந் சம்பிரதாயமாகி, அவனுள் ஒன்றிவிட்ட விஷயமாகிவிட்ட
என்மனம் அவனுக்காகப் பரிவுகொண்டு தவித்தது.
‘இந்தப் பரிவுதான் ஐயாவை இதில் பங்குகொள்ளாம தொலைவுகொள்ள வைத்ததோ?

ல்
7
ஆனல், அம்மா! அவளுக்கு வைத்தியர் சிதம்பரனரின் பேத்தி என்பதில் பெருமை. தாவாடிக்காரர்கள் சாதிவெள் ளாளர் என்பதில் பெருமை. அந்தப் பெருமைதான் அவளை இங்கு இழுத்துவந்திருக்க வேண்டும். இங்கு வந்த அவள் திகைப்பூண்டில் மிதித்தது போலல்லவா நிற்கிருள். அவளது திகைப்பு அங்கு கூடிய ஊராருக்கு இருந்ததாகத் தெரிய வில்லை. அவர்கள் தங்களுக்குத் தோன்றிய விதமாக ஏதேதோ சொன்னர்கள். ܓܫ -
"சாதிகெட்ட நாயஸ் . இஞ்சை எங்களுக்கு நடுவிலை எப்படி இருக்கேலும். . p's
'கொழுத்துங்கடா அவன்ரை குடிசையை, அடிச் சுக் கொல்லுங்கடா அவனை உசிரோடை . இந்த எளியதுகளை சும்மாவிட்டால் எல்லாருக்கும் அதோகதிதான்'
*"இஞ்சை குடியிருக்க வந்திட்டார். . இனிப் பெண் கேட்டாலும் கேட்பார்போலை”
அவர்களுடைய பேச்சு அவ்விடத்தில் ஒரு குழு வெறி யையே ஏற்படுத்தி விடுகிறது.
அதன் வசப்பட்ட மாம்ா ருத்திரதாண்டவராய் அருகில் கிடந்த மண்வெட்டியைத் தூக்கியபடி முத்தனை நோ க் கி ஓடினர்.
அப்பொழுது, அங்கு பாய்ந்து வந்த அவள் அந்தப் பெண் மாமாவின் கரங்களைத் தடுத்துத் தளர்ச்சியில்லாமல் இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். -
அவள்பால் எல்லாருடைய பார்வையும் முட்டிமோதின. அவள் அழகாக இருந்தாள். முற் றிய செவ்வாழைப் பழத்தின் நிறம். ஒடியும் சொகுசு. மழையளைந்த மலரின் தெளிவு. அவளில் இளமை வழிந்தது.
அவள் அங்குநின்ற எல்லாரையும் வசீகரித்தாள்.

Page 8
8
அவளது பார்வை சுழன்று என்னில் ஒருகணம் தரி தது. மாமாவில் நிலைத்தபொழுது, மாமா ஏதோ அம்ம சிலையைப் பார்ப்பதுபோல் பார்த்துப் பரவசமுற்ருர். அவ கரத்தில் இருந்த மண்வெட்டி தானகத் தளர்ந்து கீே விழுந்தது. அவள் அங்கு அடிபட்டு விழுந்து கிடந்த முத் னைத் தூக்கி அணைத்தபடி குடிசையினுள் சென்ருள். அங் நின்றவர்கள் அவள் போவதையே பார்த்தபடி நின்றர்கள் நான் அவளையும் அந்த உணர்ச்சிவசப்பட்ட மனிதர்களையு மாறிமாறிப் பார்த்து நின்றேன்.
அவளது நினைவுகள் என்னுள் நிலைத்தன.
"Oo Oo Ο O O
அவள்தான் வள்ளிப்பிள்ளை. முத்தனின் தங்கை. இ. பின்னல் அம்மா கூறித் தெரிந்தது. தடித்த சாதிமான6 மாமாவினதும் ஊரவர்களினதும் முயற்சி அன்று தோல் யுற்றதென்னவோ வள்ளிப்பிள்ளையால்தான். மாமா அல் றைய நிகழ்ச்சியின் பின் முத்தனை ஊரைவிட்டுக் கலைப்பதி எதுவித தீவிரமும் காட்டவில்லை. இது ஒருவகையில் அதி யந்தான்! மாமாவைத் தனது இயல்புகளையே மீறி நடந்: கொள்ள வைத்தது எது? வள்ளிப்பிள்ளையா? அல்லது அ ளது அழக்ா?
முத்தன் அடிபட்ட நாளிலிருந்து படுத்த படுக்கைதான் இடதுகால் மூட்டெலும்பில் வெடிப்பு ஏற்பட்டு விட்டது அவனுக்கு வள்ளிப்பிள்ளைதான் எல்லாம்ென்ற நிலை. இரத் உரித் தென்று யாரும் வந்து அவர்களுக்கு உதவியதாக தெரியவில்லை. அவர்கள் ஏதோ ஒரு காரணம்பற்றியே அ தச் சொந்தங்களைத் துறந்து இங்கு குடி வந்திருக்கவேண்டும் கையில் இருந்த சொற்ப பணமும் முத்தனின் வைத்திய செலவு அது இதென்று கரைந்த நிலையில், ஒருநாள் - அவள் வள்ளிப்பிள்ளை எங்கள் வீடுதேடி வந்தாள்.

ዛff
:
b
:
:
i
9
நான் மிகுந்த ஆர்வத்துடன் அவளைப் பார்த்தேன். அவள் முன்னைக்கு இப்பொழுது சற்று இளைத்து - வாடிப்போயிருந் தாள். இருந்தும், அவளது அந்த அழகு! எ ன் னை நடுங்க வைத்தது. -
"மனசின் இனிய ரகசியங்களுடன் அவளது நினைவுக ளும் ரகசியமாயின.
“என்ன தம்பி அப்பிடிப் பாக்கிறை. ஐயா இல்லையே??
கனிவும், காதலா - அது எதுவோ, அதுவும் நிரம்பித்
தளம்பும் குரலில் அவள் குழைந்தாள்.
எதை அவள் உணர்த்த விரும்பினுளோ, அதைப் புரிந்து
கொண்டு நானும் ஏதோ சொல்லமுயன்றபொழுது அங்கு வந்த ஐயா கேட்டார்:
'ஆர்தம்பி அங்கை வந்தது?’’
ஐயாவைக் கண்ட வள்ளிப்பிள்ளை சொன்னஸ்:
"அது நான்தானப்யா ...! உங்களை நம்பித்தான் வந்தி ருக்கிறன். அண்ணனும் மூன்று மாசமாய்ப் பாய்க்குப் பார மாய்க் கிடக்குது . கையிலை மடியிலை இருந்ததும் கரைஞ்சு வழிஞ்சு போச்சுது’’
"பாய்க்கு மட்டுமே பாரம் . . உனக்கும்தானே. . அதுசரி. . அதுக்கு நான் என்னசெய்யேலும் பிள்ளை?’’
ஐயாவிடம் இந்தப் பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் கண்கள் கலங்கிவிடுகின்றன.
*தோட்டத்திலை ஏதென் புல்லுக்கில்லுப் புடுங்கிறதெண் டாலும் பறவாயில்லை ஐயா ...'
அவள் குரலில் இழைந்த பணிவு-இவளா அன்று நான் கண்ட வள்ளிப்பிள்ளை? இல்லையே! என நினைக்கவைத்தது.
"அதுக்கென்னவள்ளி வாவன்' - ஐயா.

Page 9
O
அன்றைய தினமே அவள் "அஞ்ஞா’வில் எரு அடித்து பரவினுள். தாவாடித் தறை யில் வெங்காயத்திற்குப் பிடுங்கினுள். அம்மாவுக்கும் விழுந்து விழுந்து வேலைச்ெ தாள். நெல்லோ மாவோ குத் து வது இடிப்பதெல்ல அவள்தான்.
ஒருசமயம் அவளைப் பார்த்துக் கேட்டேன்:
'ஏன் வள்ளி நீ இப்பிடி மாயிறை . உன்ரை அண் ருக்கும் சுகமில்லை. உன்ரை இனசனம் ஏ தென் உதவா களே . .'
'உதவும். உதவும் ." அவள் பீறிட்ட துயரத்துட வெடித்து விம்மினள். அவளிடம் ஏதோ நிரம் பிய மன குறை இருப்பது எனக்குப் புரிந்தது. நான் அவளிட தொடர்ந்து எதுவும் கேட்கவில்லை.
பெற்ருேரை இளமையில் இழந்த அந்த இருவரும், அவ களது உதவியை ஏதோ காரணம் பற்றியே விரும்பவில்லை போலும்.
இது நடந்து ஒரு கிழமையிருக்கும். வள்ளிப்பிள்ளை ப இடித்துவிட்டு, அம்மா கொடுத்த சாப்பாட்டையும் எடுத்து கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டாள். அவள் போவதைே பார்த்தபடி கிணத்தடியில் நின்ற நான் - ஓர் அதிசயத்ை அவதானித்தேன். மாமாவும் அவளே வெறித்து வெறித்து பார்த்தபடி வளவில், வேலியோரத்தில் நின்றர். மாமாவி அந்தப் பார்வை எனக்கு எத்தனையோ அ ர்த் தங்க ே உணர்த்தின. ۔۔۔۔-~-عہ
‘மாமா வள்ளியை விரும்புகிருரா?" லேசாக, மிகமிக லேசாக ஆணுக்கே உரிய பொருமை ணர்வின் உறுத்தலோடு வள்ளிப்பிள்ளை என் எல்லைகளை மீ
வதை உணர்ந்து வருத்தமுற்றேன். வருந்துவதைத்தவிர எ ஞல் அப்பொழுது என்ன செய்யமுடியும்.

17
அடுத்த நாள் மாமாவின் தோட்டத்திலும் வள்ளிப்பிள்ளை புல்லுப் பிடுங்கினள். இது எனக்கு ஆச்சரியத்தைத் தர வில்லை; நான் எதிர்பார்த்த ஒன்றுதான். மாமாவை என்னல் புரிந்துகொள்ள முடிந்தது. மாமா கொஞ்சம் மாறித்தான் போஞர்.
வள்ளிப்பிள்ளை தோட்டத்தில் மட்டுமல்ல; வீட் டில் மாமிக்கும் துணையானள். மாமிக்கு மட்டும்தான? மாமா விற்கு . ..! -
OO OO OO
o ()
மாமா, ம்ாமி இருவரது தாம்பத்தியமும் நிறைவான தொன்றல்ல. அவர்களது பதினைந்து வருட திருமண வாழ்க் கையில் அவர்கள் எப்பொழுதுமே சந்தோஷமாக இருந்த தில்லை. நிரம்பிய சொத்து சுகம் இருந்தும் வாரிசு இல்லை. இது அவர்களுக்குப் பெருங்குறை. மாமா தெய்வத்தின்மேல் பாரத்தைப் போட்டுப் பேசாமல் இருந்தார். ஆனல் மாமி, மாமாவுக்குத் தெரியாமல், ஊர் வைத்தியனிடம் போய்வந் தாள். அந்த வைத்தியனும் பெண் மலடல்ல ஆண் தா ன் மலடு என்று ஏதோசொல்லி மாமியின் மனதைக் கெடுத்துவிட் டிருக்கிருன் மாமாவால் தனக்கொரு குழந்தையைத் தரமு டியாதென்ற வேதனை அவளை ஒரு பிசாசாகவே ஆக்கிவிட் டிருந்தது. எப்பொழுதும் எதையோ பறிகொடுத்தவள் மாதி ரிப் பரிதவிப்பதும் எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதுமாக அவள் காலம்தள்ளி வந்தாள். அவர்களிருவருக்குமிடையே ஒரு சிறு சச்சரவு போதும். மாமி விசர்நாயாக மாறி மாமா வைக் குதறி எடுத்துவிடுவாள். அவளது "கூக்குரலை’க் கேட்டு ஊர் சொல்லும்:
**ஆரது. காசி பெண்டிலே? உவவின்ரை அமர் எப்ப தான் அடங்குமோ?*

Page 10
2
மாமி அடிக்கடி அம்மாவிடம் சொல்வதை நான் கேட் ருக்கிறேன்:
"இந்த மலடனேடை நான் மல்லுக்கட்டேலுமே. இவனை எனக்குப் பேசமுந்தி உவர் கொழும்புக்கடை மன யத்தாரைத்தான் எனக்குப் பேசினவை. . . அவருக்கென் குறை. பால்வத்தாக் குடும்பம். பிள்ளையளோ கிளை கால போன சித்திரையிலதான் அவற்றை கடைக்குட்டி பிறந்தது
அவள் அதைச் சொல்லும்போது வெளிப்படும் அவ உணர்வு மிகவும் பரிதாபமாக இருக்கும். V ‘மணியத்தாரைப்பற்றிப் பேசத்தொடங்கிவிட்டால் ஒ மாட்டாள். அவரைப்பற்றி, அவரது குடும்பத்தைப் பற்றி பேசுவது அவளைப் பொறுத்தவரை ஒருவகைச் சந்தோஷ தைக் கொடுத்திருக்கவேண்டும். ஒருசமயம் இவளுக்கு இ மையிலிருந்தே அவர் பால் ஒரு ச பலம் இருந்திருக்குமோ அவரைப்பற்றிப் பேசும்பொழுது பூரித்து, கள்ளத்தனமா உருகுவது இவளுக்குச் சுகம் தருகிறதோ?” 'மனசால் சோரம்போகும் பிறவிகள்" அம்மாவுக்கு இவளது பேச்சு என்னமோ போலிருக்குப் அவள் சொல்வாள்:
*எழுந்துபோ மச்சாள்.! உனக்கு வரவர புத்தி மந்தி சுப்போச்சுது. பே சி ற தெ து பேசாததெது எண்டு தெ யேல்லை ? ?
* என்ன உன்ரை அண்ணரைப்பற்றிப் பேசட்டே. அந்த மலடனைப் பற்றிப் பேச என்ன இருக் குது. அதுச பிள்ளை, உங்கடை குடும்பத்திலை ஆரன் முன்னைபின்னை மல கள் இருந்தவையே இவனைத் தவிர **
அம்மாவால் இதைத் தாளமுடியாது:
**விசரி, விசரி . பேசாமை எழுந்துபோ!' என்று கூறியபடி தானும் எழுந்துவிடுவாள்.

லt
安
9
13
மாமி- மாமாவை, அம்மாவை, ஏன் இந்த உலகத்தில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எல்லாரையுமே மிகுந்த கைப்பு டன் கொச்சைத் தனமாகத் தி ட் டிக் கொண்டு எழுந்து Gurt 6)mor.
‘இந்த உரசல் எத்தனை மடங்கு அதிகமாக, உணர்ச்சிபூர் வமாக, கொந்தளிப்புடன் அவர்களது தாம்பத்திய வாழ்வில் விரவிநின்றிருக்கும். இந்த விரிசல்தான் மாமாவை வள்ளிப் பிள்ளைபால் அவரது தடித்த சாதித்தோலையும் மீறி மையல் கொள்ள வைத்ததோ? அல்லது அவர் பொய்யாகக்கொண்ட வேஷங்கள் அந்த வசீகரத்தின்முன் தோல் உரித்துக் கொண் டனவோ??
மா மா வள்ளிப்பிள்ளை பால் மயங்கித்தான் விட்டார். எதிர்ப்பே இல்லாத, சுலபமான இடமென்று அவர் நினைத் திருக்கலாம். பாவம் வள்ளிப்பிள்ளை. இந்த உறவை அவள் ஒருவகையான பலமென்றே நினைத்தாள். அவளினதும் அவ ளது அண்ணனினதும் அமைதியான வாழ்வுக்கு இந்தத்துணை அவளுக்கு வேண்டியிருந்தது. எந்த மனிதன் ஊரைக் கூட்டி அவளது அண்ணனை அடித்துத் துரத்த வந்தானே அவனே அவள் பின்னல் ஒரு வகை யாசகனக வருவதில் அவளுக்கு மிகுந்த திருப்தி. V−
மாமாவின் நிலை!
"மாமி சொன்னது உண்மையா? அவர் மலடன்தான?* அந்த மனக்குறை அவரைச் சிறுகச்சிறுக அரித்தது. அவரது புருஷத்தனம் அவருக்குத் தெரிந்த ஒன்று. ஆனல், அதற்கு அத்தாட்சி வேண்டுமே! அவர் குரூரமாக மனைவியைப் பழி வாங்க நினைத்துக்கொண்டார்போலும். அவர் கட்டிக்காத்த வைகளெல்லாம் பொய்மைகளென உணர்ந்தவராய் வேஷங் களைக் களைந்தெறிந்து உண்மையாக நடந்துகொள்ள முயற் சித்தார். -
அதன் விழைவுகள் . ...!
纷0 o

Page 11
14
அன்று சித்திரா பெளர்ணமி ஊரே திரண்டு வேம்ப யில் பொங்கியது. பெரியவயிரவர் மடை வேம்பையும் அ சையும் சுற்றிப் பொங்கற் பானைகளும், பழவகைகளும், ட காரவகைகளும் மலையாய்க் குவிந்தன. படையலுக்குப் பி தான் சித்திரபுத்திரனர் கதை வாசிப்பு நடக்கும். வாசி பெண்டால் மாமா வாசித்தால்தான் வாசிப்பு என்பது ஊ அபிப்பிராயம்.
மாமா என்ன அலுவலிருந்தாலும் எந்த இடத்திலிரு தாலும் வாசிப்புக்கு வந்திடுவார். அன்று ஏனே வரவில்ல்ை
அம்மா சொன்னுள், 'தம்பி ராசா. மாமாவைக் கூ டிக்கொண்டாவன்! எல்லாம் ஆயத்தமெண்டு சொல்லு.
நான் மாமா வீட்டுக் குப் போன பொழுது, மா யைப் பத்திரகாளியாகத்தான். பார்த்தேன். வள்ளிப்பிள்ை தாவாரத்தில் விசும்பியபடி கிடந்தாள். மாமா அங்குமிங்கு நிலைகொள்ளாமல் நெடுமூச்செறிந்தபடி நடந்தார். என்னை கண்டதும் மாமிக்கு வெப்பியாரம் தாளமுடியவில்லை. அவ விம்மியபடி சொன்னுள்:
"கேட்டியா கதையை. உவன் உன்ரை மாமன் செ யிறதை, உவனுக்கு மானம் ரோசமிருக்கே. உவளிட்ை இந்த ஊத்தை நளத்தியிட்டை என்னத்தைக் கண்டு சொ கிப்போயிட்டான். இண்டைக்குக் கையும் களவுமால்லே பி பட்டிட்டான். கோயில் மணிகேட்டுத் திடுக்கிட்டு முழிச்சு பாத்தா இவனைக் காணேல்லை. . மனிசன் கோயிலடிக்கு போயிட்டுதாக்குமெண்டு கிணத்தடிக்குப் போய் த் திரு. பேக்கை "மாட்டு மாலு’க்கை ஏதோ ஆளரவம் கேட்டுது எட்டிப்பாத்தா உவனும் உந்தச் சிறுக்கியும் . . இ ை உனக்கு எப்படியடா சொல்லேலும் .'
எனக்கு மாமி சொல்லாமலே எல்லாம் விளங்கியது.

1g"
r宁
ت:
É) sy
空。
15
மாமி என்ன நினைத்தாளோ திடீரெனப் பாய்ந்துசென்று வள்ளிப்பிள்ளையின் தலைமயிரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்தாள். மாமா மாமியின் பிடியிலிருந்து வள்ளிப்பிள் ளேயை விடுவித்தபடி சொன்னார்:
'அவளை ஒண்டும் செய்யாதை அவள் கர்ப்பமாயிருக் கிருள்'
‘'என்ன! உனக்கே . .?*
'ஏன் எனக்குத்தான். இந்த மலடனுக்குத்தான்' இதனை மாமியால் தாங்கமுடியவில்லை. அவளுக்கு, எவன் மலடன் என நம்பியிருந்தாளோ அவனுல் வள்ளிப் பிள்ளை கர்ப்பமுற்றது நம்பமுடியாத சங்கதியாக இருந்தது. மாமி மீண்டும் கேட்டாள்
'என்ன. உனக்கா?"
'ஓம் எனக்குத்தான்!'
மாமாவினது பதில் அவளை வெறிகொள்ள வைத்தது. அவள் தனது தலையை வீட்டுச் சுவருடன் மோதி மயங்கிக் கீழே சாய்ந்தாள்.
மாமா அவளை வாரியணைத்துத் தூக்கியபடி வள்ளிப்பிள் ளேயைப் பார்த்தார்.
வள்ளிப்பிள்ளை ஒருகணம் தயங்கி மாமாவையும் என்னை யும் மாறிமாறிப் பார்த்தாள். பின், அங்கு நிற்கவில்லை. கண் களில் நீர்படர அங்கிருந்து நடந்தாள்.
அவளுக்கு நேர்ந்துவிட்ட துயர் என்நெஞ்சில் கனத்தது. அந்த நிகழ்ச்சியின்பின், ஓர் ஆறேழு மாதங்கள்தான் மாமி உயிரோடிருந்தாள். ஏமாற்றமும், துயரமும், மாமா வின் பழிவாங்கலும் அவளைப் படுத்தபடுக்கையாக்கிவிட்டன. ஒரு கனத்த மழை நாள் விடியற் பொழுதில் மாமி இறந்துபோனள்

Page 12
16
மாமா குலுங்கிக் குலுங்கி குழந்தைபோல அழு தா அதைக்கண்ட நான், மாமா மாமிபால் அன்பில்லாதவரல் என நினைத்துக்கொண்டேன்.
வள்ளிப்பிள்ளை அன்று போனவள்தான். அதன் பி ஊர்ப் பக்கமே தலைகாட்டவில்லை. அவள் வன்னிப் பக்க போய்விட்டதாக ஊரில் பேசிக்கொண்டார்கள். அது எவ் ளவுதூரம் உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை.
முத்தன் உயிரோடுதான் இருந்தான். அவனிட மு அவள் வருவதில்லை.
"அவள் வரவே மாட்டாளா? அவள் வரா விட்ட லென்ன . தொளதொள கழிசானும் ஹிப்பிம்ாதிரிச் சை யும் வளர்த்தபடி அவளது மகன் வந்திருக்கிருனே . .!"
Ο Ο OO Ꭴ Ꭴ Ο O O
5Tன்ன தம்பி பெலத்த யோசனையிலை ஆழ்ந்திட்ட. போய் உடுப்பை மாத்து; ஐயான்ரை துண்டுகிண்டு கிட கும். முகத்தையும் கழுவீற்றுவா ..! நீயும் ஒருபிடி பிட்டு சாப்பிடு; முட்டை பொரிச்சுத் தாறன்"
நான் கிணத்தடிக்குப் போய் முகம் அலம்பிவிட்டுத் திரு பிய பொழுது -
அவன் முற்றத்தில் ஐயாவுடன் ஏதோ கதைத்தப நின்ருன். நான் அவர்களை நெருங்கியதும் அவன் என்னை பார்த்துக் கேட்டான்:
'அத்தான் எப்பிடி. இப்பவும் இன்கம்ராக்ஸ்தானே
"நான் ஒருநிமிடம் எதுவுமே பேசவில்லை. இவனைப்பற் எதுவுமே தெரியாமலிருக்க, இவன் என்னைப்பற்றி . எங் ளைப்பற்றியெல்லாமே தெரிந்து வைத்திருக்கிருனே ...!"

ιο
fr
17
பேச்சுக் குரல்கேட்டு அம்மாவும் குசினிக்கு வெளியே வந்துவிடுகின்ருள். -
அவள் மிகுந்த ஆர்வத்துடன் அவனைப் பார்த்தபொழுது ஐயா சொன்னுர்:
‘உன்ரை, அண்ணற்ரை மகன்தான் . ..!"
அம்மா ஒரு கணம் பரிதவித்து, ‘வாவன் உள்ளுக்கு என்று சொல்லுவதற்குக் கூடத் தயங்கியதுபோல் ஒரு தோற் றம் காட்டி நின்ருள்.
ஐயா அவனை அழைத்துக் கொண்டு வீட்டினுள் போக, நானும் அம்மாவும் அவர்களைப் பின்தொடர்ந்தோம். வீட் டுப்படி ஏறியதும் அவனது பார்வை அங்கே கதவின் இடப் புறமாகச் சுவரில் மாட்டியிருந்த படத் தைப் பார்த்து நிலைத்துவிடுகிறது.
அது எனது தங்கை ரஞ்சியின் படம். அவள் அற்ப ஆயு ளில் தவறிப்போய்விட்டவள். அவளைப் பார்த்ததும் அவன் கண்கள் பனித்துவிடுகின்றன.
م
‘ரஞ்சி உயிருடன் இருந்தால் இவ ன்  ைர வயசுதான் இருக்கும். இன்னும் ஓர் இரு வயசு குறைவாகக்கூட இருக் கலாம்."
அம்மாவும் கலங்கிவிடுகிருள்.
'மாமி மச்சாளைப் பாக்கே க் கை என்ரை தங்கச்சி யின்ரை நினைவு வருகுது. அவளை உரிச்சுவைச்சாப்பிலை இருக் குது. அதுதான் . .'
அவன் கண்களைத் துடைத்துக்கொள்கிருன்.
‘என்ன..! என்ன . ...! உனக்கொரு தங்கச்சியா?" மூவரும் ஆச்சரியப்பட்டுப்போய் ஒரேசமயத்தில் கேட்கிருேம்.
2

Page 13
i8
'ஏன் இருக்கக்கூடாதா : ...! அப்பு சாகமுந்தி எா ளிட்டை அடிக்கடி வந்துபோறவர். அவற்றை புண்ணிய திலேதான் நானும் படிக்கமுடிஞ்சுது. பாங்கிலை ஒரு பத்தி யிரம்வரையிலை அம்மாவின்ரை பேரிலை போட்டவர். அம்ப வுக்கு அவர் துரோகம் செய்யேல்ஃல’’
'தம்பி இப்ப என்னசெய்யிற ராசா..!"
"அம்மா தன்னை மாற்றிக்கொண்டு விட்டாளா? தாஸ் டிக்காரி. வைத்தியர் சிதம்பரனரின் பேத்தி . இவ்வள சுலபமாக இவளால் எப்படி முடிந்தது".
‘நான் ஏ. எல். எடுத்தனன். இப்பதான் மறுமொ, வந்தது. ஒரு பியும் மூண்டு சீயும். மெடிசின் கிடைக் மெண்டு நினைக்கிறன்'
"உனக்குக் கிடைக்குமடா கட்டாயம் கிடைக்கும்'
ஐயா திருப்தியுடன் மனம்திறந்து சொன்னர். 'தம்பி நீயும் ஒருபிடி பிட்டுச் சாப்பிட்ன்: முட்டை பொரியலுமிருக்கு'
'இல்லை மாமி! நான் காலையில் சா ப்பிட்ட ஞன் தண்ணி தாருங்க போதும்"
அவன் எதுவித தயக்கமுமின்றி, மாமி மாமி என். வாய்க்கு நூறுதரம் சொல்வது எனக்கு ஆச்சரியமாயிருந்த
தேநீரும் கையுமாக வந்த அம்மா கேட்டாள்:
"முத்து உன்னை இஞ்சை போகச் சொன்னவனே?*
'இல்லை, நான்தான் வந்தனன். அவருக்கு இதிலே விரு பமா இல்லையா எண்டு எனக்குத் தெரியாது. ஏன் மா. நான் இஞ்சை வாறதுக்கு அவரை இவரைக் கிேக்கவேணுமே

க த் bs fr
Off"
தேநீரை அருந்தியபடி அவன் தொடர்ந்து சொன்னன்
'மாமி நான் இண்டைக்கு வவனியா போகவேணும் . அதுக்குமுந்தி உங்களையெல்லாம் ஒருக்காப் பாக்கவேணும், பேசவேணுமெண்ட ஆசை, அதுதான் வந்தனன்'
அவன் போவதற்கு எழுந்த பொழுது, அம்மா ஒடிச் சென்று அவனை உச்சிமுகர்ந்து முத்தமிட்டாள்.
‘அம்மா மாறித்தான் போய்விட்டாள்!"
'தம்பி! அடுத்தமுறை வரேக்கை உன்ரை தங்கச்சியை யும் கட்டாயம் கூட்டிக்கொண்டுவா ராசா'
"சரிமாமி கூட்டியாறன்"
கூறியகையோடு அவன் இறங்கிநடந்தான். போவ தையே பார்த்தபடி நின்ற எங்களது கணகள் பன்த்தன.
ແDThaຮມ 77

Page 14
- அந்த கிராமத்துச் சிறுப்
பங்குனியின் கடைக்கூறு. வெய்யில் மணலை வறுத்ெ டுத்துக் கொண்டிருந்தது. அந்த வெய்யிலையும் பொருட் டுத்தாமல் அவள் - அந்தச் சிறுமி 'சொர்ணம்மகள்? - டெ யபுலம் வெளிமுழுவதும் பம்பரமாய்ச் சுழன்று வந்தா ள் அவளது தலையில் ஒரு பெரிய நார் க் கடகம். கடக நிறைந்து வரும் எரு. அவள் இப்பொழுது செல்லமுத்தா சிக்கு எருப் பொறுக்குகின்ருள்.
ஆச்சிக்கு ஆயிரங்கண்டுத்தறை, புகையிலைச் செய்ை அதற்கு ஆச்சி எரு அது இதென்று அலைவதில்லை. சொ ணம் மகளே அவளுக்குத் தேவையான எருவைச் சேர்த்து கொடுத்து விடுகின்ருள்.
எருவை 'அம்பாரமாய்"க் குவிந்து கிடக்கும் ‘கும்பியில் கொட்டிவிட்டு "ஆச்சி எணேய்.”, என்று குரல் கொடு தால் போதும், ஆச்சி வடித்த கட்டரிசிக் கஞ்சியில் இர6 டவிள்' சோ று போட்டுக் கலக்கி ஊற்று வாள். அை "மண்டி விட்டு நேரே நாகுக்குஞ்சி வீட்டிற்கு ஓடுவாள் குஞ்சி வயிருறச் சோறு போடுவாள்,

:
குஞ்சி தனிக் கட்டை. இளம்ையிலேயே விதவையாகி விட்டவள். வாழ்க்கையில் பற்றுதலற்ற ஒரு யோகிபோல வாழ்ந்து வந்தாலும் சொர்ணம் மகளில் அவளுக்குப் பற்று தல், பிரியம்.
அது எதனுல்? சொர்ணம் இவளது இளம் பராயத்துத் தோழி என்பத லைா? இருக்கும்.
அந்தத் தோழமை இப்பொழுது அவளது மகள்பால் ஓர் இயல்பான அன்பாகிவிட்டிருக்கிறது. -
சொர்ணம் மகளுக்கு நாகுக்குஞ்சிதான் எல்லாம்! "சரசு சரசு . என்னடியிது. தலை ஒரே பிசாணுய்க்கிடக்குது...!" என்று கேட்டபடி அவளைக் குளிப்பாட்டி, தலைவகிடெடுத்து, சடைபோட்டு விடுவதெல்லாம்கூட நாகுக்குஞ்சிதான்! குஞ்சி இல்லாத வாழ்வை. அந்தப் பிஞ்சுஉள்ளம் கற்பனைபண்ணிப் பார்ப்பதில்லை. அது அவளால் முடியாதஓன்று.
மதிய உணவை முடித்ததுதான் தாமதம் 'கனகும்ாமி வரச்சொன்னவ குஞ்சி.", என்று கிளம்பிவிடுவாள்.
ஒருமணி தொடக்கம் மாலை ஆறு மணிவரை ம்ாமிக்கு, "மேட்டுத்தறையில் மிளகாய்ப் பழமாய்வாள். பின் கிளாக் கர் பெண்சாதிக்குப் பால்வாங்கச் சாட்டிவரை ஓடவேண்டும். பால் வாங்கிவந்தகையோடு மீண்டும் மாமி வீடுதான் அவ ளுக்குத் தஞ்சம்.
கனகுமாமி வீட்டில் ஒரு பெரிய கேப்பை மாடு உண்டு. கொம்பன் மாடு, பார்ப்பதற்குப் பயமாயிருக்கும். ஆனல், மாமி பயப்படாமல் பால் கறப்பாள், வாளி வைத்துத் தான் கறப்பாள். W
மிளகாய் தெரியும்பொழுது, மாமி எல்லாருக்கும் தேத் தண்ணி ஊத்திக்கொடுப்பாள். பால்தேத்தண்ணி! சொர்ணம்

Page 15
22
மகளுக்கும் தருவாள். ஆனல், வெறுந் தேத்தண்ணி. சீ. கூடப் போடாமல் 'கையிலை தொட்டுக் குடியடி .' என் தருவ்ாள்.
சரசுவுக்கு அந்தக் கேப்பை மாட்டுப் பால் குடிக்கச் ச யான ஆசை. ஒரு சமயம் நாகுக்குஞ்சியைக் கேட்டா ஸ் ""குஞ்சி அந்தக் கனகுமாமி வீட்டுக் கேப்பை மாட்டுப் பா எப்படியிருக்கும்?" ܫ
“என்ரை நாச்சியாருக்கு வேணுமே.”, என்று உருகி குஞ்சி அன்றிலிருந்து ஒர் அரைப்போத்தல் வாங்கி, வற்ற காய்ச்சித் தானும் கொஞ்சம் குடித்துவிட்டு இவளுக்கும் த கின்ருள். سر
இவள் மிளகாய் தெரியும்பொழுதெல்லாம் கனகுமாப "சரியாய் இருண்டிப்போச்சுது. . இங்கை இண்டைக்கு படு. படடி .' என்று நச்சரிப்பாள். இந்த நச்சரிப்பெ லாம் ஓர் லாபம் கருதித்தானென்பது இவளுக்குத் தெரியுப்
காலையில் பாட்டம் பாட்டமாய் மிளகாயில் வந்துவிழு கிளிகளை ஒட்டுவதற்குத் "தில்லையர் பெண்டிலுக்கு நாளா தம் அளக்கும் இரண்டு ரூபாயை ஒரு வெறுந் தேத்தண்ண யுடன் சரிக்கட்டிவிடலாமே என்ற கணிப்பு மாமிக்கு. மாட யின் கள்ளத்தனத்துக்கெல்லாம் மசிந்துகொடுக்காமல் இவ6 மிளகாய் தெரிந்தகையோடு குஞ்சிவீட்டிற்கு ஒடிப்போய் படுத்துக்கொள்கின்ருள்.
நாள்முழுவதும் அடித்துக்கொடுத்த அலுப்பில் இவள் அயர்ந்து தூங்கினலும் குஞ்சி விடுவதில்லை. **சரசு. சரசு. நாச்சியார் . எழும்பு . எழும்படி ..! ' என்று நீரூற்றி சோற்றைப் பிழிந்து, மீன்குழம்புடன் பிசைந்து தருவாள்
இவள் பசிதீரஉண்பாள்.
இவையனைத்தும் சொர்ணம் மகள் சரசுவின் வாழ்வி: அன்ருடம் நடக்கும் நிகழ்ச்சிகள்.

2岛
இன்றும், இதோ அவளது நித்திய கருமத்தில் ஒன்று முடிவடையும் நிலை. எருவை ஆச்சி வீட்டில் கொட்டியதும் நாகுக்குஞ்சி வீடு, கனகுமாமி வீடு, கிளாக்கர் பெண்சாதி வீடு, மீண்டும் கனகும்ாமி வீடு என்று அவள் அடித்து க் கொடுத்து ஒயவேண்டும்.
ஆலடித்துண்டைக் கடந்து வந்தவள், வெட்டுக் குளப் பக்கம் நடந்தாள். குளத்தின் வடகரையில் ஆலமரம், அதன் விழுதுகள் நீரைத் தழுவிக்கிடந்தன.
எருக்கடகத்தை ஆலின் அடியில் வைத்தவளுக்கு, அந்த ஆலமரத்தின் விழுதுகளில் ஊஞ்சலாடவேண்டும் போலிருந் தது. தளிர்விழுதுகளைப் பற்றித் தொங்கி ஆடிப்பார்த்தாள். அடிவயிற்றில் யாரோ கீச்சமூட்டுவது போலிருந்தது. கூசிக் கிளுகிளுத்துச் சிரித் தவ ள், ஊஞ்சலாடுவதை விடுத்துத் தனது சட்டையை உருவி எருக்கடகத்தின் பக்கத்திலே எறிந் துவிட்டு, மெதுவாகக் குளத்தினுள் இறங்கி நீந்தி ன ள். வெய்யிலின் வெம்மைக்கு அந்தக் குளிப்பு அவளுக்கு இதம்ா யிருந்தது.
சிறிதுநேரம் மீன்குஞ்சுபோல நெளிந்து வளைந்து நீரா டியவள், அதிலும் சலிப்புற்றுக் கரையேறி தனது ஆடைகளை உடுத்திக்கொண்டு, எருக்கடகத்தைத் தலையில் வைத்தபடி, ஆச்சிவீட்டை நோக்கி நடந்தாள்.
தாவாடிப் பள்ளத்துள் இறங்கியவளுக்கு ஆச் ச ரிய ம் தாளவில்லை. அவள் முன் இரண்டு வாலாட்டிக் குருவிகள். அவற்றுடன் ஒரு சிறிய குஞ்சு. அது கோழிக் குஞ்சுபோல - ஆனல், சற்றுச் சிறிய உருவ அமைப்புக் கொண்டிருந்தது. சாம்பலும் வெண்மையும் கலந்த நிறம்.
ஒரு வினுடி அக் குருவிகளையே வைத்தகண் வாங்காமல் பார்த்தவள், அடுத்த வினடிகளில் அவற்றை நெருங்கினள். இவளைக் கண்டதும் "பெற்றதுகள்' பயத்துடன் விர்ரென்று

Page 16
24
பறந்துபோய் அடுத்த வயல் வரம்பின் எல்லைக் கல்லின்ப ருந்து அபயக்குரலில் அரற்றின. ஆனல், அந்தக் குஞ்ே அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் ஒருகணம் அசையாம்ல் நீ றது. பின் அங்குமிங்கும் அலமந்து ஓடியது.
மின்வெட்டும் நேரந்தான்! அதற்குள் அது எங்கே மாயமாய் மறைந்துவிட்டது.
ஆச்சரியமுற்று நிமிர்ந்தவள் ஒருசிறு புதரின் பக்க தில் அது வீழ்ந்துகிடப்பது கண்டு, நெருங்கிச்சென்று கைய எடுத்துப் பார்த்தாள். அசைவில்லை, அது ஜடப்பொ ளாய்த் தவமியற்றியது.
“உண்மையிலை இது இறந்துவிட்டுதே? அவளது உ மனம் பரிதவித்துப் பதைத்தது.
கண்களில் அதனை ஒற்றி, உடலைத் தடவி ஆசுவாசட டுத்தியவள், மீண்டும் அதை அந்தப் புதரின் அடியிலே( கிடத்திவிட்டுச் சற்றுத் தூரத்தே நின்று பார்த்தாள்.
சில வினடிக்ளில் அது சிலிர்த்தெழுந்து "பெரியதுகை நோக்கி ஓடியது. அந்த அற்புதத்தில் ஒருகணம் லயித்தவ மீண்டும் கைகளைக் கொட்டி ஆரவாரப் பெருங்குரலில் ‘கூ சு. என்று கூச்சலிட்டு அதனைத் துரத்தினுள். அது மீ டும் ஓர் உழவுசாலின் மடிப்பில் மரணித்து வித்தைகாட்டிய
உயிர்ப்பும் இறப்பும் ஒரே சமயத்தில்! அவளுக்கு அ வேடிக்கையான அனுபவம்.
அந்த அனுபவத்தினடியாக இழையும் ஒருவகையுணர் அவளை ஆட்கொள்கிறது.
‘ஓ! இத்தினுேண்டு குஞ்சு . அது . அது என்னமா ரித் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளுது'
அந்த வியப்பின் மிதப்புடன் கடகத்தைத் தூக்கியவா நடந்தாள்,

கத் பில்
2历
சிறிது தூரம்தான் நடந்திருப்பாள், அப்பொழுது "யானை வெடி வெடித்ததுபோல் "பட்டென்று ஒர் ஒசை. "டக்" கெனத் தலையைத் திருப்பியவளுக்குக் கழுத்துச் சுழுக்கிவிடு கிறது.
சரவணை மாஸ்டருடைய மூத்த மகன் துவக்கும் கையு மாக நின்றன். அவனுக்குப் பக்கத்தில், இலுப்பை வளவு வினசி. அவர்களுக்கு நேரெதிரே அந்த “வாலாட்டியள்’ இரத்த வெள்ளத்தில் - வயல் வரம்பின் எல்லைக் கல்லடியில் - சுருண்டு கிடந்து துடித்தன. அவற்றின் காலடியில் அந்தச் சின்னஞ்சிறிசும் பிணமாய்க் கிடந்தது.
பிணமாகிவிட்ட பெற்றதுகளைத் தூக்கிய மா ஸ்ட ரு டைய மகனும், அவனுடன் வந்தவனும், "மச்சான் நல்ல இறைச்சியிருக்கும்போலை . முழுக்கும் அதுவுமா . . நல்ல வேட்டை .' என்றுகூறிக் குதூகலித்தபடி நடந்தார்கள். சொர்ணம்மகள் ஓடிப்போய் அந்த் அனதையாகிவிட்டபிணமாய்ச் சரிந்துகிடக்கும்-குஞ்சைப் பார்த்தாள். அதிலும் இரத்தக்கறை. அவளுக்குக் கண்ணிர் துளிர்த்துவிடுகிறது.
'இது. இது உண்மையிலை இறந்துவிட்டதே...?, என்ற ‘சமுசயத்துடன் கையிலெடுத்துப் பார்த்து, அதன் மெத்தென்ற மிருதுவான அனிச்சம்லர்த் தூவிகளைக் கண்க ளில் ஒற்றி, உதட்டில் வைத்து முத்தமிட்டாள். பின் அதனை நிலத்தில் கிடத்திவிட்டு, தூரத்தில் விலகிநின்று பார்த்தாள். சில வினடிகளில் அது அசைவு காட்டித் தெளிவுபெற்று எழுந்தோடியது. w \
"இது தானக. தானுக இரைதேடி . இனி உயிர் வாழேலுமே? அந்தச் பிஞ்சு உள்ளம் முதல்முதலாக விழிப் புக் கொண்டது. al
அவளைப்போல அதுவும் இப்பொழுது ஒர் அனதை. ஒரு ஜீவிதப் பிணைப்பு, சடுதியில் விழைந்த விதியால் துண்டிக்கப் பட்டிருக்கிறது.

Page 17
26
அவளும் அப்படித்தானே ஒரு சந்தர்ப்பத்தில் அனுை யாக்கப்பட்டாள்!
அந்தச் சம்பவம் நடக்கும்பொழுது சொர்ணம்ம்களுக் விருத்தெரியாப் பருவம். நாலு வயதுகூட நிரம்பவில்லை. அ நடந்து இப்பொழுது ஆறேழு வருடங்களாகிவிட்டது.
நாகுக்குஞ்சிதான் அடிக்க்டி 'சொர்ணத்தாள் ஏ ன உனக்கிந்தப் புத்தி இப்பிடிப் போச்சுது . . நீ போயிட் இந்தக் குஞ்சை விட்டிட்டு . ஆனல் அது படுகிறபாடு . . ஊருக்கு உழைச்சுக் குடுத்து ஓடாய்ப்போகுதே.’’ என். புலம்புவாள்.
குஞ் சி புலம்பிப் புலம்பிச் சொன்னவைகள் இவளுக் மனதில் பதிந்துவிட்ட விஷயங்களாகிவிட்டன.
Ο Ο Ο Ο Ο Ο O O o
சொர்ணத்திற்கு அப்பொழுது பதினைந்து அல்ல : பதினறு வயதுதான் இருக்கும். பருவத்தின் தலைவாசலி அவளுக்கும் சண்முகத்திற்கும் அந்த இளம்ைப் பரிச்சய ஏற்பட்டிருக்கக் கூடாது. அது, காதலாக மலர்ந்திருக்கவு கூடாது. அவர்களது அந்தக் காதல் எவ்வளவு அநர்த்தங்கை ஏற்படுத்திவிட்டது.
"வெள்ளாளப் பெட்டை அந்தச் சாதிகெட்டதோை ஓடிவிட்டது", என்ற இளக்காரம் - ஊரில் ஒரு கொந்தளி பையே ஏற்படுத்தியது. −
சண்முகத்தின் குடியினர் - மரம் ஏறும் தொழிலாளிகள் ஓர் இருபத்தெட்டுக் குடும்பம் அந்தக் கிராமத்தின் ஒதுக்கு புறத்தில், உயர் சாதியினரான வெள்ளாளக் குடிகளுக்கு ழ்ழமாக உள்ள ஊர்ச் சிவன் கோயிலுக்கு வடக்கேயிரு 500 т,

i
h
27
இந்த இரு குடியிருப்புகளுக்கும் இடைப்பட்ட நிலப்பரப் புத்தான் கோயிற் புலமும், குளத்துக் காணியும். குளத்துக் காணி எப்பொழுதும் பச்சைப் பசேலென்றிருக்கும். நெல் அறுவடையானதும் வயல் நிலத்தில் எள்ளு, மிளகாய், கத் தரி, வெள்ளரி, பூசினி என்று ஏதாவது பயிர் பச்சையிருக் கும். தோட்டக் காணிகளில் புகையிலைச் செய்கை நடைபெ றும். புகையிலை வெட்டியதும் நிலக்கடலை போடுவார்கள். மளரின் மேற்குப் பக்கம் முழுவதுமே பனங்கூடல்கள். இந்தப் பனங் காணிகளில் வேலைசெய்யும் குடிமைகள்தான் சண்மு கத்தின் குடியினர்.
இந்த, பெரிய நிலப்பரப்பின் சரிபாதிக்குமேல் கோயில் முதலாளி மணியத்திற்கும் பழைய விதானையார் தருமர், என்ற தர்மலிங்கத்திற்கும் சொந்தம். இரு வரும் ஊரின் நாட்டாண்மைக்காரர்கள். சண்முகத்துடன் சொர்ணம் தலை மறைவானது இந்த இரு நாட்டாண்மைக்கும் ஏதோ தங்கள் பெண்டுபிள்ளைகள் சாதிகெட்டதுகளுடன் சோரம்போனது போன்ற வெக்கறை. அவர்கள் தங்கள் அடி ஆட்களுடன் அந்த "எளியதுகளின்ரை இருபத்தெட்டுக் குடிசைகளையும் தீக்கிரையாக்கினர். திரண்ட சாதிவெறியர்களின் அராஜகத் தில் சண்முகத்தின் தாயும் தகப்பனும் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.
சட்டத்தின் பெயரால் மேல் சாதியினர் கைதுசெய்யப் பட்டபோதிலும்-பணம், தேர்ந்த வக்கீல் என்ற அனுசரணை களால் தப்பித்துக்கொண்டார்கள், பழி அத்துடன் தீர்ந் ததா என்ன? அதுதான் இல்லை. சாம்பல் பூத்த தணலாய் அது கனன்றுகொண்டேயிருந்தது.
தலைமறைவான சண்முகமும், சொர்ணமும் தலைமறை வாகவே இருந்திருக்கலாம். ஒர் ஏழாண்டு இடைவெளிக்குப் பின் ஊர்ப்பக்கம் தலைகாட்டியபொழுது, தணலாய்க் கனன்ற

Page 18
28
நெருப்பு சுவாலைகக்கி எரியத் தொடங்கியது. அவர்களுட சொர்ணம்மகளும் வந்திருந்தாள். இவர்கள் ஊர்வந்த செய் அறிந்த சாதி வெள்ளாளர் - குத்துவாள், கோ ட ரி, து பாக்கி சகிதம் குடிசைகளைநோக்கிப் படைஎடுத்தனர். அந் எளியதுகள் சளைத்தவர்களா என்ன? கையில் அகப்பட் ஆயுதங்களுடன் அலைபோல் வந்த பகையைத் தடுத்து வெ யுடன் தாக்கினர்கள்.
“எளியதுகள் . எங்கடை எச்சிலிலை ஏந்தியளுக்கு என் திமிர் எங்களுக்கு எதிராய்க் கை ஓங்க. .' என்று மிடு குடன் கூறிய தருமர் அடுத்த நிமிடங்களில் அடித்துக் கொ லப்பட்டார். மற்றச் "சாதிமான்களும் முறையாகப் பெ வேண்டியதைப் பெற்றுக்கொண்டார்கள். அந்தக் கலவர தில் சொர்ணம்மகள் தனது பெற்ருேரை ஒருங்கே இழந்தாள்
அப்பொழுது அநாதையான வளைத் தூக்கியவள் நாகு குஞ்சிதான். அவளது அந்தச் செய்கைக்கு ஊர் ஒன்று செய்யவில்லை. அப்படியொரு நல்ல ஜீவியின் செயலில் த யிட ஊரிலுள்ள எந்த நாட்டாண்மைக்கும் தைரியம் பிறச் வில்லை. அந்தச் சாதித் "தடியர்களின்’ தைரியமின்மைக் நாகுக்குஞ்சியின் நல்லதனம் மட்டும்தான் காரணமா? இல்ை இல்லை. இந்த ஏழுவருட இடைவெளி அந்த எளியதுகளிட ஏற்படுத்திய மாற்றமும் உணர்வுகளும் ஒருவகையில் கா ணமாய் அமைந்துவிட்டன.
વૃ૦ o
பழைய நினைவுகளில் மிதந்தபடி வந்த சரசுவுக்கு-நேரா எருவுடன் ஆச்சி வீட்டுக்குப் போகாமல் - நாகுக்குஞ்சியிட போகவேண்டும் போலிருந்தது. குஞ்சியின் கழுத்தைக் க டிப் பிடித்துக்கொண்டு அழவேண்டும் போலிருந்தது.

&岛
அந்தச் சின்ன உள்ளத்திற்கு எல்லாமே புரிந்தது. "இந்த நாகுக்குஞ்சி இல்லை எண்டால் . . ', ஓ! அதை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஊருக்கு உழைத்துக் கொடுத்து ஓடாய்ப்போன அந்த சின்ன மனசில்கூட ஓர் சிந் தனத் தெளிவு.
அவளது மனக்கண்முன் கள்ளத்தனம்மிக்க கனகுமாமி, கட்டரிசிக்கஞ்சி செல்லமுத்து, காரியக் கெட்டி கிளாக்கர் பெண்சாதி என்று எல்லாருமே நிழல்போல தோன்றினர்கள்.
அவர்களைப் பற்றிய அந்த நினைப்பே அவளுக்குக் கசப் பைத் தருகிறது. கைப்புடன் காறித் துப்பினுள். -
அவ்ஸ் எருவைக் கொண்டுபோய் நாகுக்குஞ்சி வீட்டுத் தோட்டத்தில்தான் கொட்டினள். இனிமேலும் நாகுக் குஞ்சி வீட்டில்தான் கொட்டுவாள். அவளதை 'சங்கற்பம்’ செய்துகொண்டாள்.
"ஏன் சும்மா எருப் பொறுக்கிக் கோடுக்கவேணும் . . இனிச் சும்மா ஒருத்தருக்கும் வேலைசெய்யமாட்டன். கனகு மாமிக்கு மிளகாய் பிடுங்கிறதெண்டாலும் இனிக் காசுக்குத் தான் பிடுங்குவன். பேய்மாதிரி அடிச்சுக் குடுத்ததெல்லாம் கட்டரிசிக் கஞ்சிக்கும் வெறுந் தேத்தண்ணிக்கும்தானே ..? இந்த நாகுக்குஞ்சிக்கு நான் என்னசெய்தன் . . இதேன் என்னிலை இவ்வளவு அன்பாய் இருக்குது . ...!"
அவள் குஞ்சியின் மடியில் தலைவைத்துப் படுத்தபடியே நினைவில் ஆழ்ந்துபோகிருள்.
அப்பொழுதுதான் செல்லமுத்து ஆச்சிவந்து: "அந்தச் சாதி கெட்ட சதிர்த் தேவடியாள் எங்கை நாகமுத்து?', என்ருள். ܚܙ

Page 19
30
அதைக் கேட்டதும் சொர்ணம் மகளுக்குக் கோபம் "சுரு கென்று வந்தது. வாரிச் சுருட்டிக்கொண்டு ஆக்ரோசத் டன் எழுந்தவள், நாகுக் குஞ்சியைப் பார்த்தாள்! அவள மனக் கொதிப்பைப் புரிந்துகொண்ட குஞ்சி வெளியேவந்:
"ஆச்சி அப்பிடிப் பேசாதை . உனக்கவள் இனி எழு பொறுக்கம்ாட்டாள்"
*அப்படியே சங்கதி. . சின்னச் சிறுக்கிக்கு ஆள்பை வேறையே. எல்லாம் நீ கொடுக்கிற தைரியமடி .'
என்றுகூறிய ஆச்சி, முற்றத்தில் கிடந்த கடகத் ை எடுத்து, கொட்டிய எருவை அள்ளத் தொடங்கினுள்.
இவற்றையெல்லாம் உள்ளிருந்தபடி கவனித்த சொ ணம்மகள் திடீரென வெளியே ஓடிவந்து, "எ ரு  ைவ தொடாதை . நான் குவிச்சுவைக்கப் போறன். கடக தைக் கொண்டுபோ...", என்று கத்தினுள்.
அவளது தீர்க்கமான குரல் ஒருகணம் ஆச்சி யை திகைக்கவைத்தது. ஆச்சரியத்துடன் அந்தச் சிறுமியைே பார்த்தபடி எருவிலிருந்து கடகத்தை எடுத்தவள், அங் நிற்பதற்கே சற்று நடுக்கமுற்றவளாய் மெதுவாக வெ யேறினள்,
குஞ்சிக்குக் கண்களில் நீர் துளிர்த்து விடு கி ன் ற து "சரசு . நீ. நீ நானில்லாக் காலத்திலையும் பிழைச்சிடுை யடி பிழைச்சிடுவை'
அவளுக்குத் தொண்டை கரகரத்தது. அவள் வாஞ்ை யுடன் சொர்ணம்மகளை அள்ளி அணைத்து உச்சிமுகர்ந்தாள்
ᏅᏅ Ο Ο Ο Ο O O O

rri”
31
இப்பொழு தும் சொர்ணம் மகள் முன்போல் கனகுமாமிக் கும் கிளாக்கர் பெண்சாதிக்கும் வேலை செய்கிருள்தான். ஆனல் ஊதியமில்லாமலில்லை. அவளது வேலைக்கேற்ப ஏதோ am 6luth பெற்றுத்தான் உழைக்கிருள். அவள் இனியும் கட் டரிசிக் கஞ்சிக்கும், வெறுந் தேத்தண்ணிக்கும் வேலை செய் orfsmrt GT6ör6OTP
\
அவள் எருக்கூடப் பொறுக்கப் போவதுண்டு. அப்பொ ழுதெல்லாம் அந்தக் குருவிக்குஞ்சைப் பார்க்கவே செய் கின்ருள். مبي
அது இப்பொழுது குஞ்சல்ல - குருவி!
udriñas.jp *72.

Page 20
தாம்பத்திய
வேலாயுதருக்கு அந்தச் செய்தியைக் கேட்டதிலிருந் ஒரே தவிப்பு. என்ன செய்வது, ஏது செய்வதென்று தெ யாத குழப்பம். அவரால் எந்தவொரு மு டி வுக்கு ம் வ முடியவில்லை.
தெற்குப் புதறணில் புதுத்துண்டில், கண்டு கிண் டி கொண்டிருந்த பொழுதுதான், லட்சுமி வந்து அந்த வி யத்தை அவரிடம் சொன்னுள். தோட்டக்கூலிகளும், பங்கு காரரும் போய்விட்ட பின்னரும் அந்தச் செக்கலில் இன்னு மொரு நிரையாவது கிண்டிவிட்டுப் போகலாமே என நினை தவருக்கு, அந்தச் செய்தி சற்று அதிர்ச்சியாகத்தானிருந்தது அவர் கேட்டார்:
"அப்படியா சங்கதி. ஆராம் மாப்பிளை???
"கந்தப்புராண வீதியிலே இருக்கிறவராம், மத்தளக்க இரத்தினம் வீட்டுக்குப் பக்கத்து வீடாம் . அவர் முந்திே சடங்கு முடிச்சுப் பெண்சாதியைத் தள்ளிவைச்சிட்டு-அவ

f
க்
:
33
மல்லுக்கு நிண்டதாலை இப்ப சீவனம்சம் வேறை கட்டிருர் கண்டு சொல்லுகினம்’’ M
“அடிசக்கை பிடிச்சாலும் பிடிச்சினை நல்ல புளியங்கொம் பெண்டு சொல்லு. . எல்லாம் உன்ரை அண்ணற்றை ஏற் ۶ مه . هه سlm (L |
'இல்லை, அந்த வினசிக் கிழவன்ரை நச்சரிப்பெண்டு நினைக்கிறன். அதை அண்ணராலை தட்ட முடியேல்லை"
'ஆர் அவன் புரோக்கன் வினசியின்ரை வேலைதானே ம.தெல்லாம். அதுசரி லட்சுமி. நீ. நீ கர்ப்பமாயிருக்கிற விஷயம் குணத்துக்குத் தெரியாதே? தெரிஞ்சுமா இந்த ஏற் பாடெல்லாம் நடக்குது' ,
"வீட்டிலை ஒருத்தருக்கும் தெரியாது. ஆச்சிக்குக்கூட சொல்ல முடியேல்லை . இதை . இந்த அசிங்கத்தையெல் லாம் எப்படிச் சொல்லிறது. அவமானமாயிருக்குதே'
*அசிங்கமா? இதிலை என்ன லட்சுமி அசிங்கமும் அவமா னமும்! இது நமக்கு முதல் குழந்தையா என்ன? நம்ம உறவு கான் ஊரறிஞ்ச விஷயமாச்சே! இதிலை ஏன்பிள்ளை ஒழிப்பு மறைப்பு . . பட்டென்று பிட்டு வைச்சிட வேண்டியது
bir G360T !ʼʻʼ
"'உங்களுக்கென்ன செல்லப்பிள்ளை எதையுமே சொல்ல முடியுது. ஆனல் எனக்கு . . எனக்கப்படியெல்லாம் பேச, முடியேல்லையே. . அப்பனிருந்தும் அப்பன் பேரை தலை நிமிர்ந்து சொல்லமுடியாத இளக்காரம் அவன் . . அவன் ாாசனுக்கு. எனக்குப் புருஷன் இருந்தும் இல்லையெண்ட நிலமை", அவள் மேலும் ஏதேதோ சொல்லத் துடித்தாள். ஆனல், முடியாத நிலையில் இதயமே விரிசலிட்டது போல வேதனை தாளாமல் ஓவென்று அழத்தொடங்கி விட்டாள். அவள் அழுவதைக் கண்டதும், அவரது "மனசு கூடக் கரை
கிறது. -

Page 21
34
'ஏய் லட்சுமி. . அழாதை, அழாதை பிள்ளை . கவலைப்படாம வீட்டுக்குப்போ . சும்மா கவலைப்படா பொறுப்பைத் தட்டிக்கழிச்சு இந்த வேலாயுதத்துக்குப் கமில்லை. விசர்ப் பெட்டை. . பேசாம்ப்போ . . இ டொரு நாளிலை ஒருமுடிவு சொல்லிறன்"
'அந்த முடிவு நல்லமுடிவா இருக்கட்டு . இல்லா ஒருசொட்டு பொலிடோலிலை இந்த உசிரை மாய்க்க எ குத் தெரியும். அதோடை (அவன் இ ரா ச னு க்கும் சொட்டு . அவனை இந்த நரலுக்கை விட்டிட்டு என் ( போகமுடியாது . .'
*சரி சரி திரும்பத் திரும்ப அ சட்டுப் பிசட்டெ6 பேசாதை உதென்ன மடியிலே . . ஏதோ பம்பல இருக்கு?"
"அதே கொட்டு தோட்டத்துக்கை கொஞ்சம் அ கீரை கிடந்தது. அது தான் கடையலாமெண்டு கொன போறன்"
'லட்சுமி நல்ல சத்துள்ளதாய்ச் சாப்பிடு வாயும் றுமாயிருக்கேக்கை கவனமாயிருக்க வேண்டாமே. >னதுக் நல்லாய்ச் சாப்பிடு. உதுவும் பொடியணுய்த்தானிருக் போலை. சிறுப்பமாயிருக்கு. இப்ப எத்தனை மாசம் . நாலே . ...!" W
அவர் தனது இடுப்பு வேட்டியின் மடிப்பில் இ ரு, கசங்கிய பத்து ரூபாய் நோட்டொன்றை எடுத்து அ கையில் தந்தார். அதை அவள் மகிழ்ச்சியுடன் வாங் கொண்டாள்.
அவரது உழைப்பு. அதில் அவளுக்கும் பங்குண்டுதாே
அந்த நினைப்பே அவளுக்குப் பெருமையாக இருந்த
محی

ன்று }rrain
றக் or (B)
வயி கும் கும்
ந்த வள்
கிக்
3s
'லட்சுமி, அவன் ராசன் நல்லாயிருக்கிருனே? நான் அவனை இப்ப காணுறேல்லை'
"“அவனுக்கு இரண்டு மூண்டு நாளாய்ச் சரியான காய்ச் சல், பிள்ளை கீரைத்தண்டா வதங்கிப் போஞன். நேற்றுத் கான் பத்தியம் குடுத்தனன். இன்னும் இரண்டொருநாளிலை பள்ளிக்கனுப்பவேணும். அவன்ரை படிப்புவேறை கெட்டுப் போகுது'
**ஆ. . அவன் படிக்கிருனே? பள்ளிக்குப் போருனே? நல்லாப் படிக்கட்டும். நான்தான் படிக்காத தற்குறி. அவன். அவனுவது நாலெழுத்துப் படிச்சு முன்னுக்கு வரட்டுமே . என்னைப்போல மண்ணைக் கிளறி எதைக் காணப்போருன்?" அவர் குரலில் லேசான பெருமிதம், அதை அவளால் உணர முடிந்தது,
அவள் வாஞ்சையுடன் அவரைப் பார்த்தாள். அவர் பேசிய விதம் அவள் இதயத்தைத் தொட்டிருக்க வேண்டும்.
அவரையே வைத்தகண் வாங்காமல் பார்த்தவள் பதை பதைப்புடன்: 'இதென்ன நெத்தியிலை வீங்கிக் கழலை கட்டி நீலம் பேந்துபோய்க் கிடக்குது' என்று அவருடைய நெற் றியை அன்புடன் வருடிக்கொடுத்தாள்.
"அதுவா லட்சுமி அது, போயிலைக் குடில் பறண் கம் பொண்டு இடிச்சுப் போட்டுது'
"குருட்டு மனிசனப்பா இது. கண் தப்பினது அருந் தப்பு: அதுக்கேதாவது மாட்டுச் சாணத்தைச் சுட்டு ஒத்த ணம் குடுக்கிறதுதானே? குடுத்தா நல்லது!"
‘எல்லாம் குடுத்ததுதான் லட்சுமி. அவள் பெரியவள் சுட்டுத்தர, சின்னவள் அப்பு இரண இரண எண்டு ஒத்த மணம் குடுத்தாள்"

Page 22
36
'அந்தக் குஞ்சுகள் எப்படி இருக்குதுகள்? அதுகளின்ை முகத்திலை முளிக்கக்கூட எனக்கு விதியில்லை" அவள் குரலி இழைந்த வாஞ்சை அவரை மெய்சிலிர்க்க வைத்தது.
"அதுகளுக்கு என்னகுறை லட்சுமி, சிவனே எண்டு அ பனும் ஆத்தாளுமாய் நானிருக்கேக்கை. அவள் . . அவ புண்ணியவதி போயிட்டாள். அவள் போயிட்டாளே எண் அதுகள் குறைப்பட்டுப்போச்சா என்ன? அந்தக் குறை தெ யாமத்தானே நான் அடிச்சுக் குடுக்கிறன். போதாதே! அ. சரி லட்சுமி நீ உந்தக் கந்தர்மடத்துச் சடங்கு வேண்ட மெண்டு சொன்னபோது உங்க அண்ணர் கோபப்படே &tabGu?””
*கோபப் படாமல் இருக்குமே? அதுதான் எதையுே வெளிக்காட்டாதே. மனசுக்கை போட்டுக்கொண்டு வே ணைப்படும். அப்படியிருந்தும் பொறுமையிழந்து. . சரிச சனியன் உன்ரை தலையெழுத்துப்படி நட எண்டு சொல்லி சுது. அதோ ட சரி. இரண்டு நாளாய் முகங் குடுத்து பேசேல் லை. இந்த மன உழைச்சலிலே, தோட்டப் பக்க கூடப் போகாமை வீடே சதமெண்டு படுத்தெழும்புது .'
'ஆரவன் ராமன்ரை மோனே பங்கு? அவன் எல்லா தையும் பாத்துச் செய்வான், நீ அந்தக் கவலையைவிடு. செ கலாய்ப் போச்சு, நீ போ . . நாவலடிப் பக்கத்தா ? போகாதை. பாம்பு பூச்சி கிடக்கும். நேற்றுக்கூட, தாயு குட்டியுமாய் ஒரு ‘கிளைகாலி அடிச்சாங்கள். நீ. நீயுந் மடத்தடி வளவாலை போ'
'அப்ப நான் வாறன். எனக்கொரு முடிவு சொன்ன தான் என்னுலை வீட்டிலை நிம்மதியாயிருக்கேலும், அ ை
9
மறந்திடர்தேங்க . ."

ல்
37
என்று கூறியபடி, அவள் விடைபெற்றுப் போவதையே பார்த்தபடி நின்றவர், தன்னுணர்வடைந்து கிணற்றடியை நோக்கி நடந்தார்.
Ο Ο OO OO O Ο O
"இப்ப நடந்ததுபோலையிருக்கு, அவள் பர்வதம் போய் ஆண்டுத் திவசமும் தையிலே வரப்போகுது . . அவள் சின்னவள் க ம லம் கர்ப்பத்திலை ஆறு மாசமாயிருக்கேக்கை கிணத்தடியிலை சறுக்கினதுதான் சாட்டு . கரைச்சு வடிச்சு ஏழு மாசத்திலை பெத்தெடுத்து, உ டஞ்சு போன உடம் போடை ஒரு ஆறேழு வருஷம் மூச்சை இழுத்துப் பிடிச்ச வள், பொட்டெண்டு போன தைப்பூசத்திலை போயிட்டாள். அண்டைக்குத்தான் சின்னவளுக்கு ஏடு துவக்கினது . . எண்டைக்குப் பர்வதம் கிணத்தடியிலை விழுந்தாளோ . . அண்டைக்கு ஒரு ஊண்டுகோலாய் வந்தவள்தான் லட்சுமி. அண்டுதொட்டு . . ம் . . இத்தனைக்கும் அவள் அப்படி என்ன தூரமே! உவள் ப்ர்வதத்தின்ரை சீனியப் பற் றை மோள்தான்! அக்கா அக்கா எண்டு அவள் பர்வதத்தையும், குழந்தைகளையும் பார்த்த விதம், அ தி லொ ரு அலுப்புச் சலிப்பு. தெற்குச்சீமால் சிதம்பரத்தை பூக்கேக்கை வந்தா, முத்தத்துப் பிச்சி மொட்டவுக்கேக்கைதான் போவாள். அப் படியொரு சீவன் . . இப்ப என்னமாதிரி மனமுடைஞ்சு ஒதுங்கிப்போனள்!?
அவருக்கு அதை நினைத்துப் பார்க்கச் சங்கடமாயிருந்தது.
அவருக்கு நல்ல நினைவாயிருக்கிறது, அவராலை அதை எப்படி மறக்க முடியும்!
இலந்தைக்காட்டு வினயகர் சப்பறத் திருவிழா.
ம்ேளக் கச்சேரி முடிந்து, சதிர்க் கச்சேரி ஆரம்பமாகியி ருந்தது. அவர் சதிராடும் குமரியின் லாவண்யத்தில் லயித்தி

Page 23
38
ருந்தபோதுதான் - அவள், லட்சுமி அங்கு வந்து கேட்டா "அத்தான். அத்தான் என்னைக் கொஞ்சம் மடத்தடி ஒழு கையிலை விடுங்களேன். குஞ்சியாச்சியோடை வந்தனன் அவசதிர் முடிஞ்சுதான் வருவாவாம், எனக்குக் கண்னை சுழட்டுது .'
கச்சேரியை இடைநடுவில் விட்டுவிட்டு அவளைக் கூட்ட கொண்டு போளுர்,
கோவில் சந்தண மணம்; அவ ளது நெருக்கம்; அவ கட்டியிருந்த பட்டுப் புடவையின் சரசரப்பு; எல்லாே அவர் நெஞ்சத்தில் ஒருவகைக் கிளர்ச்சியை - கிளுகிளுப்ை ஏற்படுத்தின. ஆலடித் துண்டைத் தாண்டும்போது, அவர கரம் அவரை அறியாமலே அவளது கைகளைப் பற்றியது பற்றிய கரத்தை அவளும் இறுக்கமாகப் பற்றுவது போ ஓர் உணர்வு அவருக்கு.
'லட்சுமி என்ன இது?", என்று வாஞ்சையுடன் குழை தவர் அ வ ள் புருவத்திலும், நெற்றியிலும், கண்களிலு மாறிமாறி முத்தமிட்டார். *
அந்தக் கண்கள். அதில் அவருக்கோர் ஆழ்ந்த கவர்ச்
அதில் கண்ணிர்!
"அது ஏன்? ஏன்? என்று குழம்பியவர் 'லட்சு மி என்று உணர்ச்சியுடன் அழைத்தார்.
"அது. அது அவளுக்குக் கேக்கேல்லையோ!"
சே. செய்யக்கூடாததைச் செய்திட்டனே." என் மனம் பதறியவர், அவளைத் தனது அணைப்பிலிருந்து உத யபடி **லட்சுமி. லட்சுமி. . என்னை மன்னிச்சிடு. மன்னிச்சிடம்மா." என்று அரற்றியபடி அவளை மடத்:ெ ழுங்கையிலே விட்டுவிட்டு, அவளைப் பார்ப்வதற்கே அஞ்சி வராய் - வீடுதிரும்பினர். ۔۔۔۔

s
so
இரவு முழுவதும் மன உழைச்சலில் கிடந்து உழன்றவர் காலையில்தான் சற்றுக் கண்ணயர்ந்தார். தூக்கத்திலும் அத் தான் அத்தான்? என்று யாரோ ஹீனஸ்வரத்தில் அழைப்பது போன்ற உறுத்தல். 'லட்சுமிதானுே!’ என்று விழித் துப் பார்த்தார். அவர் கண்களையே அவரால் நம்பமுடியவில்லை. லட்சுமியேதான்!
ஒரு கையில் செம்பும் தண்ணிரும். மறுகையில் பால் Gstli. -
"வாயைக் கொப்புளிச்சிட்டுக் கோப்பியைக் குடியுங்க" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
அவளை நிமிர்ந்து பார்க்கவே அவருக்கு வெட்கமாக இருந்தது. ஆனல், அவள்மட்டும் அவரை ஆதரவுடன் நிமிர்ந்து பார்த்திருக்க வேண்டுமென்று ஏதோவோர் உள்ளு ணர்வு அவருக்கு உணர்த்தியது. அன்று பகல் முழுவதுமே அவளது கண்ணில் படாமல் ஒதுங்கி ஒதுங்கி இருந்தவர்:
"முத்தத்திலை பிச்சி பூத்திட்டுது. . என்ன இன்னும் இவள் லட்சுமி போகேல்லை?" என்று வீட்டினுள் எட் டி ப் பார்த்தபொழுது - அவள் பர்வதத்துடன் ஏதோ குசுகுசுப் பதைக் கண்டு கலங்கியே விட்டார்.
'இராத்திரி விஷயத்தைத்தான் சொல்கிருளோ?’, அவ ருக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது. சதிரமெல்லாம் கூசியது. "இஞ்சேருங்கோ. . இஞ்சேருங்கோ . . உங்களைத் தானே!”, பர்வதம் கூப்பிடுகிருள்.
"விசாரணை வைக்கப்போருளோ? அவர் "அனுங்கலாக" "என்ன" என்ருர்,
**சரியா இருண்டுபோச்சப்பா. லட்சுமியை உந்த மடத் தொழுங்கையிலை ஒருக்கா விடுங்கோவன்!"
என்றுமில்லாத புதிய ஏற்பாடு, அவருக்கு ஆச்சரியம் தாளமுடியவில்லை. புரிந்தும் புரியாத குழப்பநிலையின் இழுபறி.

Page 24
40
வடக்கு வயலுக்குள் இறங்கி தம்பர் வளவைக் கடக்கு வரை மெளனமாக வந்தவள், திடீரென அவர்பக்கம் திரும் "அத்தான் . அத்தான் உங்களுக்கு என்னிலை. அவ்வள ஆசையே. .?’ என்று கேட்டாள்.
அவரது கள்ளத்தனம்ான காம்சுகத்திற்கு, ஆசையென் பெரிதாய் மகுடமிட்டு அவள் மயங்குவது அவருக்கு எ னமோ செய்கிறது!
அவர் ஒருகணம் சிலிர்த்துப்போய் உறைந்துவிட்டா அவரால் எது வுமே பேசமுடியவில்லை. உணர்ச்சி வசத் t-Gir so. ... 9) 305 ... ... அந்தப் பொலிவை! வாஞ்சையுட வாரி எடுத்துத் தனது மார்பினுள் அடக்கிக் கனிந்து கரைந் போகிருர், வாய் மட்டும், ‘விசர்ப் பெட்டை, விசர் பெட்டை” என்று முணுமுணுத்துக் கொள்கிறது.
அன்று அந்த விசர்ப் பெட்டையும் அவரும், மடத்த வளவில் - புளியமரத்தின் தெற்குப் புறத்திலுள்ள மாட்டு தொழுவத்தில், வெகுநேரம் வரை தங்கிவிட்டார்கள். அன் மட்டுமா..? இல்லை, அடுத்தநாள், அதற்கடுத்தநாள் . என்று அடிக்கடி சந்திக்கத் தலைப்பட்டார்கள். அதன் விளை லட்சுமிக்கு ராசன் பிறந்தான். அவன் பிறந்தபோது ஊே *சிரித்தது”. ஊர் சிரித்ததென்று அவர்கள் உறவு முறிந்தத என்ன? அது தொடரவே செய்தது. அதன் பயன் இதே இன்னுெரு 'சீவன்' அவரது அன்புச் சுமையாக அவளது க வில் புரள்கிறது.
என்ன வேலாயுதர், அவள் லட்சுமி உன்ரை காலு கையே சுத்திருள், அங்கை அவளுக்குச் சடங்குவேறை பே கினம். பிழை விட்டதுதான் விட்டாள்; அதைத் தொட வேணுமே! நீராவது ஏதென் புத்திகித்தி சொல் லி ற தானே. அதுசரி உம்மாலே எப்படிக்காணும் சொல்லமு

தம்
து
41 'y.ن
யும். நான் என்னவோ விசர்த்தனத்திலை பிசத்திறன் .' சுந்தரத்தின் பெண்டில் தங்கம் எப்பவும் வாய்த்துடுக்கான வள். அவள் இதுமட்டுமா பேசுவாள்? 'லட்சுமியைக் கரிச் சுக்கொட்டிறFலை அவளை வெல்ல யாரிருக்கினம் ஊரிலை."
oo OO do o Ο Ο
பர்வதத்தின் சாவீடு.
பெண்கள் ஒப்பாரி, 'வைச்சு? ஒய்ந்துபோய் மூலை க்கு மூலை குந்தியிருக்கிருர்கள். அப்பொழு தயங்கித் தயங்கி லட் சுமி அங்கு வருகிருள். அவள் முற்றத்தில் கால்வைத்ததும் - உரிமைக்காரி, உருத்துக்கிட்டென்று - பறை பலமாக முழங் குகின்றது.
ராசன் பிறந்தபிறகு "சொந்த பந்த"மென்று நெருங்க
முடியாமல் -தூரநின்றே உருகியவளுக்கு, "அக்கா செத்துப் போனுள்" என்றதும் தாங்கமுடியவில்லை. ஒடோடி வந்தாள்.
வந்தவளுக்கு அடிபெயர்க்க முடியாத தவிப்பு. தலைக்குணிவு.
சுந்தரம் பெண்டில் லட்சுமியைக் கண்டதும் ஒரு கண் வெட்டிலேயே பெண்களிடம் எதையோ பரிமாறிக்கொண் டாள்.
‘ம் . . அந்தப் பெண்கள் அசையவேண்டுமே பார்க் கலாம். வினடிகளின் வளர்ச்சி நிமிஷத் துளிகளாகி மடி கின்றன. ஆனல் லட்சுமிக்கு யுக யுகாந்திர அவஸ்தை.
வெளியே பறை மீண்டும் ஒலிக்கிறது.
யாரோ வருகினம்!
அழுதாற்ரை பகுதியோ அம்மஞ்சி துரையன்ரை பகு தியோ அவள் முன்பின் கண்டிராத, அவளுக்கோ பர்வதத் திற்கோ ஒட்டு உறவில்லாத தொலை தூரத்ததுகள். அவர்க

Page 25
48
ஆளக் கண்டதும் அங்கிருந்த பெண்கன் எல்லாரும் எழுந்து கைகோர்த்து, சக்கர வியூகமிட்டு, மார்பிலும் வயிற்றிலும் அடித்து ஏதோ ஒப்புச்சொல்லி, ஒப்புக்கு அழுதார்கள்.
லட்சுமிக்கு முகத்தில் அறைந்ததுபோலிருந்தது. "எல்லாம் இந்தச் சுந்தரம் பெண்டிலின்ரை வேலைதான்" என்று குமுறித் துடித்தவள் - பர்வதத்தின் சடலத்தின் மீது வீழ்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
அப்பொழுது எதிர்பாராத வகையில் அவள் நெஞ்சத் தையே தீய்க்கும் அந்த நிகழ்ச்சி நடந்தது.
முரட்டுத்தனமாக அவளைப் பற்றியிழுத்த தங்கம்: “பத் தினி வேஷம் போடுருள் படுபாவி . . ! பங்கு போட்டது போதாதே ? கொண்டுபோக வந்திட்டியே . .?’’
அந்த ஒற்றைக்குரலின் பிரலாபம் ஊரெல்லாம் கேட்டது.
"அந்தப் பிஞ்சு உள்ளத்தைக் குத்திக் கிழிப்பதிலை அவ ளுக்கு எ ன் ன வந்துவிட்டது? அங்கிருந்த நல்லவர்களின் மனம் அந்த நினைவின் சுமையில் நசிந்தது.
லட்சுமி சோர்ந்து துவண்டு, பெண்கள் மத்தியில் மயங்கி விழுந்தாள். அக்கா என்றும், பிள்ளைகளென்றும், அத் தா னென்றும் அடித்துக் கொடுத்த அந்தச் செளந்தரியத்திற்கு இப்படியொரு தண்டனையா?
முற்றத்தில் இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டி ருந்த வேலாயுதருக்கு நெஞ்சம் அனலாய்த் தகித்தது. அவர் விம்மிப் பொருமியபடி, அதைத் தாளமுடியாமல் அங்கு வந்து, அவளை அப்படியே வாரியெடுத்து. காற்றுப் படும்படி முற்றத்தில் போட்டார்.
அதைத்தான் அவரால் அன்று செய்யமுடிந்தது. அதற் குமேல் எதுவுமே செய்யமுடியவில்லே. அப்படியொரு மானக்

43
குலைவும், இளக்காரமும் அவளுக்கு ஏனென்று அவர் உள்மனம் அன்றும் கேட்டது. இன்றும் கேட்கிறது. அதற்கு விடை அகப்படாமலே நழுவிவிடுகிறதே!
அவர் படலையை விடும் சத்தம் கேட்டதும் சின்னவ்ஸ் ஓடிவந்து அவரது காலைக் கட்டிக்கொள்கிருள். 'அப்பு. . அப்பு. வடக்கு வயலுக்கை சுள்ளி பொறுக்கேக்கை சின் னம்மா வந்தது. வந்து என்னைத் தூக்கி இரண்டு கன்னத்தி லையும் மாறிமாறிக் கொஞ்சினப்பு. அவ இப்ப ஏன் இஞ்சை வாறேல்லை? அவவைக் காட்டுவமெண்டு இளைக்க இளைக்க ஒடிப்போய் அக்காவைக் கூட்டிக்கொண்டு வந்தா, அவ பன வளவுக்கை மறைஞ்சிட்டாப்பு .'
அந்தப் பிஞ்சுக் குவியலின் அன்பை, தவிப்பை அவரால் உணர முடிந்தது. இந்த அன்புள்ளங்கள் ஏன் பிரிந்திருக்க வேண்டும்? அந்த உணர்வின் அழுத்தத்தால் அவர் பரித வித்தார்.
"சித்திரம். . சித்திரம்..!', வீட்டுத் தலைவாசலில் சுரைக் குடுவையில் கிடந்த விபூதியைக் கையில் எடுத்து - *சிவ சிவா. . *’ என்று நெற்றியில் பூசியபடி, பெரிய மக ளைக் கூப்பிடுகிறர்.
"என்னப்பு.?, கொஞ்சம் ஆட்டுப்பாலிருக்கு கோப்பி ஊத்தட்டும்ே!" W−
சித்திரம் கோப்பியும் கையுமாய் அவரிடம் வருகின்ருள். குழந்தை சுடு கோப்பியைப் பிடிக்கமுடியாமல் கை மாற்றி, மாற்றிக் கொண்டுவருவதைக் கண்டதும், அவர் நெஞ்சம் பதைக்கிறது.
‘இந்தக் குஞ்சனுக்கு பிஞ்சிலேயே இந்த விதியே”. அவர் ஒடிப்போய் அதை வாங்கிப் பருகியபடி, அயர்வுடன் அங்கி ருந்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்துகொள்ளுகிருர்,

Page 26
44
அது பழைய கதிரை. ஒரு பக்கக் கைச் சட்டம் கழன்று ‘ஓ’வென்று கிடக்கிறது. அதற்கு மட்டுமா பர்வதம் போன பின் அவருக்கும் கையுடைஞ்சுபோனது போலத்தான்!
நிமிர்ந்து பார்த்தபடியே கிடந்தவருடைய l_tr i Goo Ghu கிழக்கு மூலைக்கை மரங்கள் பொருந்துமிடத்தில் தொங்கும் பழைய "பீலிப் பட்டையில் தரித்து நிலைக்கிறது.
(ð
'இரண்டாம் வருஷத்திய "பட்டையது. பர்வதம்தான் இழைச்சவள்’. அதற்கு மட்டை வச்சுத் தலைக்கட்டுக் கட் டேக்கைதான். அவன் ராசன், தத்துப்பித்தென்று தளர் தடை நடந்துவந்தான். அவனுக்கு நாலு வயசுகூட நிரம் பேல்லை . . அவனைக் கண்ட பர்வதம்:
"இஞ்சை பாருங்க! ஆரு வருகினமெண்டு. ராசா. . ராசா என்னடா என்ன வேணும்.? உன்னை ஆரனுப்பினது அவளே. அந்த விசரியே. உச்சி வெய்யில் பச்சை மண் ணேப் பொசுக்கிப் போட்டுது?’, என்றவள் தன் முந்தானைச் சேலையை எடுத்து அவன் தலையில் போட்டு, அணைத்து த் தூக்கிக் கொள்கிருள்.
அந்தக் காட்சியைக் கண்டதும் வேலாயுதருக்குக் கண் கலங்கிவிடுகிறது.
அவள் பர்வதம் ராசனை மார்பிலும் தோளிலும் மாறி
மாறிப் போட்டு 'உச்சிமோந்து' மெய்மறந்துபோவது அவ ருக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது.
"பெரியம்மா. பெரியம்மா..! அம்மா கத்தரிக்காய் வாங்கிக்கொண்டு வாச்சொன்ன. இந்தா. இந்தா பெரி

45
யம்மா காசு.' ராசன் கையிலிருந்த சில்லறைகளைப் பர்வ வதத்தின் கைகளில் தருகிருன்.
"இஞ்சைபாருங்க. அவள் காசுவேறை குடுத்துவிட் டிருக்கிருள்'
‘ராசா காசை அம்மாட்டைக் கொண்டுபோய்க் குடு. நான் பிள்ளைக்குக் கத்தரிக்காய் தாறன். ராசு அப்பம் தின் னிறையாடா', என்றவள் குசினிக்குள் ஒடிப் போய், அப் பமிரண்டை ஒரு தட்டில் போட்டுக்கொண்டுவந்து, அவனை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு "தீத்த ஆரம்பித்துவிடுகி ருள். அவனுக்குப் புரைக்கேறிவிடுகிறது. ‘என்ரை ராசா என்னடி..?", என்று பதைபதைத்தவள், உச்சியில் ஊது கிருள். நீர் எடுத்துப் பருக்குகிருள்.
பர்வதத்திற்கு ராச னில் மட்டுமல்ல, லட்சுமியிலும் உயிர் - "அந்தப் பெட்டையை இந்த முத்தம் மிதிக்காமைப் பண்ணினது நீங்கதானே. என்று அடிக்கடி அவரிடம் குறைபட்டுக் கொள்வாள். ராசன் பிறந்தபொழுது ஏதோ தனக்குத்தான் பிறந்துவிட்டது போலப் பர்வதம் பூரித்துப் போய்க் கிடந்ததையெல்லாம் நினைத்தபொழுது அவரது நெஞ்சம் புஷ்பிக்கிறது.
கத்தரிக்காய்க்களை ஒரு சிறுபையில் போட்டுக் கொடுத் தவள், ராசனின் தலையிலும் ஒரு துண்டைக் கட்டிவிட்டு, அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள், இடைக் கிடை அவரையும் பார்த்துக்கொள்ளவும் செய்தாள்.
அவரது உணர்ச்சிகளை எடைபோடுகின்ருளோ . .? இருக்கலாம்.
"ஒ இவள். . இவள் என்ன பிறவி இவளாலை எப்பிடி இவ்வளவு அன்பாயிருக்க முடியுது. தனக்குக் குழந்தை. . ஆண்குழந்தை இல்லையெண்ட குறையை . இவள் ராசனைக் காணுறதிலை மறந்திடுருளே!

Page 27
46
நினைவுகளின் அழுத்தத்தில் "பர்வதம். பர்வதம் .' என்று வாய்விட்டு அரற்றுகிருர்,
"என்னப்பு பினத்திறியள். நீங்க சாப்பிடேல்லையே’ சித்திரம்தான் கேட்கிருள். - .
'இல்லைப்பிள்ளை அந்த ரோச்சை எடம்மா, தைலாப் பெட்டிக் காலோடை கிடக்குது. நான் ஒருக்கா குளத்தடிப் பக்கம் போகவேணும்' ரோச்சை வாங்கிக் கொண்டவர் குளத்தடிகுப் போகாமல், வடக்காலைதான் நடந்தார். அவர் மனம் ஒரு முடிவுக்கு வந்தது. ஏதோவொரு பெரிய லட்சி யத்தையே சாதிக்கப் புறப்பட்டவர்போல, அவர் எட்டி நடைபோடுகிறர்.
அவருக்கு அந்த விசர்ப் பெட்டை இப்படி அவஸ்தைப் பட்டுத் தவிக்க வேண்டாமே என்ற கவலை, கரிசனை. அதுமட் டுமா? உதடுகள் லேசான சிரிப்பின் மலர்ச்சியில் விகCக்கின் றின. அவர் அக்கப்பக்கம் கள்ளத்தனமாகப் பார்த்து க் கொள்கிருர். எங்கே அவரது மனக்குகையில் அடைந்து கிடந்து கண்ணுமூஞ்சி காட்டும், அந்த "செளகரிக தாம்பத் தியம்' பற்றிய சிந்தனைகள் யாருக்கேனும் தெரிந்துவிட்டால் ஓ! அது தெரிய வேண்டாம்ே . . “ என்று மனங் கூசிச் சிணுங்கிக்கொண்டார். . . . . ..
அந்த எண்ணங்களின் லயிப்பில் மிதந்தவர், லட்சுமியின் வீடுவந்ததை உணர்ந்து கொள்கிருர். . . . **லட்சுமி. லட்சுமி.' அவர் வளவுக்குள் போகாமல் படலையில் நின்று அவளைக் கூப்பிடுகிருர்,
"யாரது' குணத்தின் குரல். **அவர்தானண்ணை . . அவர்தான்!' நாணச் சிவப்பில் அவள் முகம் குழப்பியிருக்கவேண்டும். அவளது குரலில் அது தெரிந்தது.

47
“லட்சுமி. லட்சுமி. இஞ்சை வாபிள்ளை. நாளைக்கு வெள்ளிக்கிழமை. நல்லநாள். அதோட சித்த அமிர்தயோக சங்கமதசை. நல்ல நாளும் கிழமையுமாயிருக்கு. நான் அவன் கோபுரத்தடிக் கறுவல் ஐயனிட்டைச் சொல்லிறன். ஒருக்கா நீ நாளைக்கு காலமை ஆலடி வயிர கோயிலடிக்கு வந்திடு. உன்ரை கழுத்திலையொரு மஞ்சள் கொடி வேணும்தானே! பிள்ளை என்ன நான் சொல்லிறது சரிதானே. உனக்குச் சந் தோஷம்தானே?"
அவர் அதைச் சொல் லி வி ட் டு விசுக் விசுக்கென்று
திரும்பி நடக்கின்ருர்,
அப்பொழுது, அவர் எதிர்பாராத வகையில் அவரது
பாதங்களில் அவள் மலராகக் குவிந்துவிடுகிருள். ,
அந்த அர்ப்பணம் அவரை என்னமோ செய்கிறது. அவர் *விசர்ப் பெட்டை விசர்ப் பெட்டை' என்றுகூறித் திரண்ட தோள்களைக் குலுக்கி, ஆணுக்கே உரிய ஒருவகை அலட்சியத் துடன் சிரித்தபடி, அவளை அணைத்துத் தூக்குகின்ருர்,
அதை, அந்தக் காட்சியை - அவளது ஆச்சியும், அண்ண
ரும் பார்க்கிருரர்கள். அது அவளுக்குத் தெரிகிறது. அவள்
அவர்களை ஒருவகைத் துணிவுடன் நிமிர்ந்து பார்க்கிருள்.
அவளுக்குப் பெருமை பிடிபடவில்லை. அவள் இனி . .
இனி . அவர்களை மட்டும்தான நிமிர்ந்து பார்ப்பாள்?
இல்லை, இல்லை . . நாலுபேரையும்தான்!
அந்த நினைப்பில் அவள் திழைத்துப்போகின்ருள்.
தை '71.

Page 28
பிச்சைப் பெட்டிகள்
Dழை வரும்போலிருந்தது. மார்கழியின் பிற்பகுதியில் பெய்ததற்குப்பின், இன்று எப்படியும் இறங்கிவிடுவதென்ற அதனது அவஸ்தையை, தென்மேற்கு வானம் குறிகாட்டி யது. காற்றுக் குளிர்ந்து சிலுசிலுத்தது.
சே. குடை கொண்டு வராதது எவ்வளவு மடத் த னம்." என்னையே நான் நொந்துகொள்ளும் அவலம்.
அரைமணி நேரம் பஸ் தரிப்பில் தவமியற்றியும் பஸ் வந்து சேரவில்லை.
‘இன்னும் ஏன் பஸ் வரேல்லை. இண்டைக்கு பஸ்ஸே
வராதோ..? நினைப்பே அலுப்பைத் தருகிறது.
'சடசட' எனக் கோடை மழையின் பெருந்துளிகள் ஆல மரத்தின் இலைகளில் விழுகின்றன. இலைகளில் படிந்திருந்த தூசி கரைந்து வடிகிறது. அழுக்குநீர் ஆடையில் தெறித்து விடுமோ என்ற பயம் என்னை அருகே இருந்த தேநீர்க் கடைக் குள் விர ட் டு கிறது. கடையினுேரமாய் ஒதுங்கிக் கொள் கிறேன்.

49
கடும் வரட்சிக்குப்பின் மழை ஒருவாறு வந்துவிட்டது. புழுதியில் நீர் பட்டதும் மண்ணின் மணம் நாசித் துவாரங் களை முற்றுகையிட்டு, நெஞ்சை நிறைக்கிறது.
தூரத்தில், ஒரு வெள்ளாடு இடைவிடாமல் அழுது கொண்டேயிருந்தது.
ஆலடிச் சந்தியிலிருந்து தெற்கே பிரியும் ஒழுங்கையில் இரண்டு குழந்தைகள்! பிறந்தமேனியாய் மழையில் நனைந்த படி, ஒடி ஒடி மழை த் தாரையைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
"எ ன் ன விளையாட்டோ . .? அலுப்பில்லாத விளை யாட்டு . ...!"
**மழை பெலக்கமுந்தி பஸ்வந்திட்டா நல்லம்' குரல் வந்த திசையைப் பார்த்தேன். ஈசன் சந்தணப் பொட்டோடு நின்று கொண்டிருந்தார். அவரது பறங்கி? உடையும், சந்தணப் பொட்டும் அவருக்கே உரித்தான சின் னங்கள். அவரது வழுக்கைத் தலையிலிருந்து நீர்வழிந்துகொண் டிருந்தது. முகத்திலும் நீர்த்துளிகள்.
'ம்ாஸ்ரர். துலைக்கே பயணம்.?*
"யாழ்ப்பாணம் .” s 'நானும் யாழ்ப்பாணம் வரைதான்." கேள்வி இல்லா மலே அவரது பதில்.
"இப்ப இஞ்சை என்ன நடக்குது . . தாவாடியில இல்லையே..???
**அவதான் அங்கை. . நான்இஞ்சை கண்ணகை அம்
மன்ரை தேரோடை வந்தாப்பிலை, பெரியாச்சியோடை நிக்கி றன். அதுசரி மாஸ்ரர் .! உங்களுக்கு நவத்தாரைத் தெரி யுமே...? அவர்தான். அவரைத் தெரியாதே. .? பெரிய வளவு முகத்தாற்றை ம ரு ம க ன். அவர் இப்ப ஜே. பி.
4

Page 29
50
எல்லே. நான்தான் நீதி மந்திரியைப் பிடிச்சு ஒருமாதிரிச் சொல்லிக்கில்லி அவரை ஜே. பி. ஆக்கினனன்'
ஈசன் தொடங்கிவிட்டார். அவருடன் பே சுவது ஓர் இதமான பொழுதுபோக்கு
"ஏன் ஈசன்...? நீங்கள் அந்த மந்திரியைப் பிடிச்சு உங்களுக்கு ஒரு உத்தியோகம் எடுத்தாலென்ன..??
'அவரைப் பிடிக்கலாம்தான். ஆனல் அவர் "டிகிறி" இருந்தால்தான் ஏதாவது ‘கோப்பரேசனிலை செயர்மனப் போடலாம் எண்டவர். அதுதான் இப்ப டிகிறி" எக்ஸ்ரே னலா எடுத்தனன். மறு மொழி வந்திட்டுது. பாஸ்தான். கிட்டடியிலை ஒருக்கா இதுவிஷயமாய் அவரைப் போய் ப் பார்க்கவேணும். அதுக்கிடையிலை, இஞ்சை சித்தாந்தப் புலவர் பரீட்சைக்குப் பேப்பர் செற்" பண்ணச் சொல்லீற்றங்கள். நானெல்லே இப்ப தீவுப்பகுதி இந்து வாலிபர்சங்கத் தலைவர் அதோடை இரண்டாம் தீட்சைவேறை கேட்டிட்டன். ஒரு வேளைதான் சாப்பாடு. மற்ற நேரம் பாலும் பழமும். ஒரு சைவப் பழமெண்டு பேப்பர் செற் பண்ணச் சொல்லேக்கை தட்டேலுமே..? எல்லாம் பெரிய தொந்தர்வா இருக்கு மாஸ்ரர். மூச்சுவிட நேரமில்லை"
ஈசனைத் தட்டிவிட்டால் போதும். நேரம்போவது தெரி யாமல் ஏதாவது 'அளந்து கொண்டிருப்பார். அலுப்பே தெரியாத ஒர் அரிய அனுபவமது. அந்த அனுபவத்தையே கெடுப்பதுபோல அந்த பஸ் - இடையிடையே ஒரு வகைக் குலுக்கலுடன் - அசைந்து வந்து எங்களது காலடியில் சரிவது போல் நின்றது.
நானும் ஈசனும் ஏறிக்கொண்டோம். பஸ் புறப்பட்டது. ஈசனைப் பார்த்தேன். அவர் அவசர அவசரமாக எ ன் னை ப் பிடித்துத் தள்ளியபடி, பஸ்ஸினுள் விரைந்தார். ஏன் அவ ருக்கு இவ்வளவு அவசரம்?
அவரது அவசரம் எனக்குப் புரிந்தது:

51
பஸ்ஸின் இடது பக்கத்தில், கடை சி "சீற்றுக்கு முன் உள்ள "சீற்'தான் அவரை இழுத்திருக்கவேண்டும்.
அங்கு குளிர்ச்சியாக, மாங்குருத்துப்போல ஒரு பெண் கண்ணுக்குச் சொகுசாக இருந்தாள்.
திடீரெனத் திரும்பியபொழுது அவளது கண் களி ல் தெறித்த வசீகரம் என்னையே ஒருகணம் நடுக்கமுறச் செய் தது. இவ்விஷயத்தில் மிகவும் பலவீனமான ஈசன் அவள்பால் இழுபட்டதில் வியப்பில்லை. அவளுக்குப் பக்கத்தில் அவர் நெருக்கமாக உட்கார்ந்துகொண்டார்.
நான் கொண்டக்டரிடம் ஒர் ஐந்து ரூபாயைக் கொடுத்து, ஆாழ்ப்பாணத்திற்கு இர ண் டு "ரிக்கற்” வாங்கிக் கொண்
GROTs
கொண்டக்டர் சரியான "இளமட்டம்'. மீசை அடர்த்தி கொள்ளாமல் பூனைமயிர்போல் பிசிருயிருந்தது. மெலிந்து உயரமாய் வளர்ந்திருத்தான். ஏதோ தீவிரமாகக் கணக்குப் பார்த்தான். இருந்தும் "ரிக்கற் தந்தான். மீதம் தரவில்லை. இரண்டு ரூபாயும் சில்லறையும். பின்பு வாங்கிக்கொள்ளலா மென நினைத்தபடி அவனைக் கடந்து - ஈசனிருந்த இடத்திற் குச் சிறிது முன்பாக உட்கார்ந்துகொண்டேன்.
பஸ் அசைந்து அசைந்து அதனது இயல்பான குலுக்கலு டன் போய்க்கொண்டிருந்தது. -
பஸ்ஸில், அதிக பயணிகள் இல்லை.
ஈசனைப் பார்த்தேன். அவர் அந்தப் பெண்ணுடன் நெருக் கமாக இருந்து, தனது அரைகுறை ஆங்கி ல ஞானத்தைக் கூர்மைப்படுத்திக்கொண்டிருந்தார்.
*யார் இந்தப் பெண். ! சிங்களம்ா..? தமிழா ? நயினு தீவுக்குப் போய்த் திரும்புகிருளோ..! தனியாகவா? ஏன் தனியாகப் போய்வரக் கூடாதா!"

Page 30
52
ஈசன் ஏதோ சொல்ல, அவள் சற்று அவர்பால் சரிந்து குலுங்கிச் சிரித்தாள். அது சிரிப்பா என்ன ஜலதரங்கித்தின் இசைமுறுக்கேறிய அதிர்வுகள்.
அவர்களை அந்த நிலயில் பார்த்ததும் எனக்கு லேசான பொருமையின் உறுத்தல். ஆணுக்கே உரித்தான அந்த அற் பத்தனமான சபலம்". கூச்சத்துடன் என்னைச் சுதாரித்துக் கொண்டேன். பயணிகள் பக்கம் என் பார்வை படர்ந்தது. அவர்களும் இப்பொழுது தங்கள் முறைக்கு அந்த இரு வ ரையும் மூர்க்கமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்களது பார்வையில் இழையும் அந்த உணர்வு - பொருமையா, ஏமாற்றமா, வெறுப்பா அல்லது எல்லாவற் றினதும் கலவையா?
இந்த உணர்வுச் சுழிப்பெதிலும் சிக்காமல் ஈசனும் அவ ளும் - தம்சுயத்தையே இழந்தவர்களாய், சுற்றுச் சார்பின் பாதிப்புக்களையே லேசாக ஒதுக்கித் தள்ளிவிட்டு - கனிந்து போய் இருந்தார்கள்.
அது ஒர் அற்புத சாதகம்தான்!
ஈசன் ஏதோ கிசு கிசு’ப்பதும், அதற்கு அவளது பெண் மைச் சிணுங்கலும், லேசாக எனது காதில் விழுந்தன
"ஓ . யூ ஆர் இன் த ரையர் கோர்பரேசன் . ம்.
Go)gfurfiu o 6ôr!”
**யேஸ் , யேஸ் , 9
* ஸ்ரில் ஏ பாச்சிலர் .??
“ “uuuLur...''
அவள் நெளிந்து, கிளுகிளுத்து அவரது காதில் உதடுகள் உரச ஏதோ சொன்னுள். அதற்கு ஈசன் செம்மைப் பூரிப் ւյւ-6ծr:
*ஒவ்கோர்ஸ் P Q R வைநாட் • 3 வில் டு Litti ۰۰۰ طلا

53 . .
அவரது கரங்கள் அவளது இடையைத் தழுவத் துடிப் பதைக் கண்ணுற்ற நான் - "எப்ப இருந்து இவர் ரையர் கோப்பரேசனிலை செயர்மன் ஆனர்!" என்ற வியப்புடன் - அவர்கள்பால் இருந்த எனது பார்வையைப் பலவந்தமாகப் "பிடுங்கி பஸ்ஸின் கண்ணுடி ஊடாக வெளியே பார்த்தேன்
பஸ் பாலத்தைக் கடந்து, வேலணைத் துறையில் போய்க் கொண்டிருந்தது.
வானம்ே "பொத்துக் கொண்டதுபோல ம்ழை பொழிந் துகொண்டிருந்தது.
மழை நீரைக் குடித்த பூமி, புளகமுற்றுப் பூ ரித்து க் கிடந்தது.
கெ (ா ண் டக் டர் கணக்குப் பார்த்து முடிச்சாச்சு போலை.", அவன் எனக்குப் பின்னலிருப்பதைக்கண்டு அவ னைப் பார்த்துக் கேட்டேன்:
'தம்பி. . மிச்சக்கரசு’’
'மிச்சம்?" கொண்டக்டரின் உதட்டில் நெளிந் த ஏளனம் என்னைச் சிறுமைப்படுத்தியது.
அவன் எழுந்து பஸ்ஸின் முன்பக்கம் விரைந்தான்.
இது எனக்குப் புது அனுபவம். எல்லாரும் இப்பொழுது என்னையே பார்த்தார்கள். அதை எ ன் ஞ ல்- தாளமுடிய வில்லை. அனல்மீதிருப்பதுபோல ஒரு பதைப்பு.
திடீரென எழுந்த நான், மீண்டும் அவனைப் பார்த்துக் கேட்டேன்: i
"என்ரை மிச்சக்காக?"
! "என்ன? என்னகாணும். சும்மா இரும். மிச்சம் தந் தாச்சு. ஒருக்கா வடிவாய்க் கணக்கைப் பாரும்."

Page 31
54
அவன் கத்தினன். தொடர்ந்து அவன் பஸ்ஸில் இரு பவர்களையெல்லாம் தன் கட்சிக்கு அழைத்து:
"இந்த ஆளைப் பாருங்க. படிச்சதாட்டமிருக்குது. . கொடுத்தகாசை இல்லையெண்டு எ ன் னை ப் பேய்க்காட் றதை”
'நீங்க. எதுக்கும் உங்கடை பொக்கற்றை ஒருக்கா! பாருங்க. ஏன் வீண் சண்டை. ஒருக்காப் பாருங்க .'
அங்கிருந்த அனைவரும் என்னைக் குற்றக்கூண்டில் ஏற்ற விட்டு, அவன்பால்-அந்தக் கொண்டக்டர்பால் பரிவுகொண் டது எனக்கு மிகுந்த எரிச்சலூட்டியது.
"நானும் அவனைப்போலை . அங்கிருந்த எல்லாரையுட திட்டிவிடலாம். ஆனல், இந்தப் பாழும் மனசு சமயத்தின் என்னை மெளனியாக்கி விடுகிறதே. ம ன சு மட்டும்தான இந்த ஆசிரியத்தனமும்தான்."
உடலும் உள்ளமும் குறுகிய - எல்லாருடைய பார்வை யின் லட்சியமாகிவிட்ட - அந்த நிலையிலும், என்னல் லேசr கச் சிரிக்க முடிந்தது.
சுந்தர ராமசாமியின்ரை பிரசாதம் கதையிலைவாற அ தப் பொலீஸ்காரனுக்குத் தேவைப்பட்டதுபோல. . இவ னுக்கும். இந்தக் கொண்டக்டருக்கும். . அப்பிடி ஒரு தேவையே? குழந்தையின்ரை பிறந்ததினத்துக்கு அர்ச்சனை செய்ய மனைவி ஐஞ்சு ரூபாய் கேட்டிருப்பாளோ..? இல்லை சதா படுக்கையே கதியெண்டு கிடக்கும் தாய்க்கு மருந்து வாங்க. பட்டகடனை அடைக்க. மனைவிக்குத் தெரியாமல் கள்ள மாக உறவு வைச்சிருக்கிற பெண்ணுக்கு ஐஞ்சோ பத்தோ கொடுக்க . . இதிலே எது? என்ன இருந்தாலும் இவன் இப்படி நடந்திருக்கக்கூடாது .'
அந்த நினைப்புத் தந்த அவசரத்தில் நான் அவனிடம் சொன்னேன்

むむ
'தம்பி. நீ இப்பிடி நடக்கலாமே. என்ரை உணர்ச் சியளையே கிளறி வேடிக்கை பாக்கிறை. . நான் ஒரு ஆசி ரியன். ஏன் பொய் சொல்ல வேணும். நீ மறந்திருப்பை நினைச்சுப் பார்" سحہ ,
"இல்லை மாஸ்ரர். நான் தந்திட்டன்” 'சரி பறுவாயில்லை, இது எனக்கொரு பாடம். பட்டுத் தானே படிக்கவேண்டியிருக்கு."
'நீங்க பேசிறதைப் பார்த்தா நான்தான் ஏதோ எடுத்த மாதிரி..! அப்ப தரட்டுமே. மிச்சத்தைத் தரட்டுமே..?"
'உனக்குப் படுமாப்போலை செய்யன்’ அவன் தயங்கியபடி, இரண்டு ரூபாய் நோட்டொன்றை விரல்களின் இடுக்கிலிருந்து உருவி எடுத்தான்.
அப்பொழுது பஸ் வங்களாவடியில் தரித்தது. ஒரு சிறு "பையுடன்’ ஓர் இளைஞன் ஏறினன். கருங்கா லிக் கட்டையின் பொலிவு. கொண்டக் டர் திடீரெனக் கையில் வைத்திருந்த இரண்டு ரூபாய்த் தாளை மீண்டும் விரல் களிடையே திணித்தபடி, அந்த இளைஞனை அணுகினன்:
V **யாழ்ப்பாணம்??
அவனது பையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அதற்கும் சேர்த்துக் கொண்டக்டர் ரிக்கற் எழுதினன்.
6ரிக்கற்?ரை வாங்கிய அந்த இளைஞன் சற்றுச் சினமுற் றவணுய்:
‘என்ன? என்னப்பாஇது.? ஒரு பத்துருத்தல் செத்த லுக்கும் ஐஞ்சாறு பிஞ்சுக் கத்தரிக்காய்க்கும் ஐம்பது சதம் போடிறை. ஏதோ ஐஞ்சுபணம் கிடைக்குமெண்டுதானே
இஞ்சையிருந்து பட்டணத்துக்கு நாணிதைக் காவிறன். * உனக்கு இரக்கமிருக்கே..? என்னைப்போல நீயுமொரு பிச்

Page 32
፵6
சைப் பெட்டிதானே..! அங்கை ஒண்டும் கொடிகட்டிப் பறக் கேல்லையே. ஏதோ உன்ரை புண்ணியம். அரசாங்கம் மாதா மாதம் பிச்சை போடுது. அதுக்கு என்ரை வயித்தி லையே அடிக்கிறது"
அவன் கொண்டக்டரை இடித்துத் தள்ளியபடி, பஸ்ஸி னுள் வந்து எனக்குப் பின்னல் உட்கார்ந்துகொண்டான்.
அவன், ‘என்னைப்போல நீயும் ஒரு பிச்சைப் பெட் டி தானே", என்று கூறிய கூற்று என்மனதில் திரும்பத் திரும்ப மிதப்புக் கொண்டது.
"இஞ்சை பாரும் தம்பி. . நீ சொல்லும்ாப்போலை. எல்லாருமே பிச்சைப் பெட்டிகள்தான்; ஒருசிலரைத் தவிர. அந்தப் பிச்சைப் பெட்டிகளுக்கிடையிலையும் எவ்வளவு "பிக் கல் பிடுங்கல்"கள். நாங்களிதை உணர்ந்து நேசப்பட்டால் போதும். அதுதான் உண்மையான நேசம். அந்த நேசம் உல கத்தையே எங்கடை காலடியிலை கிடத்தும்'
** என்ன. மாஸ்ரர் பாடம் நடத்திருர், வகுப்பறை எண்டு நினைச்சிற்ருர்போலை!"
பஸ்ஸில் இருந்த இளசுகள் சிலதின் வெடிச் சிரிப்பு.
*இல்லை. , மாஸ்ரர் மார்க்சிஸம் பேசிருர்’. விஷயந் தெரிந்த ஒருவரின் விளக்கம்.
“என்ரை இயல்புகளுக்கு ம்ாருய்ச் சற்று உரக்கத்தான் பேசிப்போட்டனே?"
மனதில் திரளும் எண்ணங்களோடு அந்த இளைஞனைப் பார்த்தேன். அவன் முகத்தில் தெறித்த கொதிப்பு கொண் டக்டரை நடுங்க வைத்தது. அவன் ரிக்கற்றுக்குரிய பணத்தை வேண்டா வெறுப்பாகக் கொடுத்தான். கொடுத்த கையோடு மனம் கூசும் வகையில், கொண்டக்டரைத் திட்டவும் செய் தான்.

57
கொண்டக்டர் என்னைப் பார்த்தான். பின் சுற்றுமுற்றும் பார்த்துக் குறுகிப்போய் நின்றன்.
அவனை இப்பொழுது எல்லாரும் எரித்துவிடுவதுபோலப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த இறுக்கத்திலிருந்து - எனது பார்வையை விலக்கி, ஈசனையும் அந்த அழகியையும் பார்த்தேன்.
அவர்கள் இப்பொழுது தனிமைநாடி கடைசிச் சீற்றில் இருந்தார்கள். அந்த அழகி, ஈசனின் தோளில் ஒய்யாரமா கச் சாய்ந்து துயின்றுகொண்டிருந்தாள்.
துயிலும்போதும் அவள் அழகிதான்! பஸ் மண்கும்பான் பிள்ளையார் கோவிலடியை அடைந்த பொழுது, நாலைந்துபேர் ஏறிக்கொண்டார்கள்.
அவர்கள் - ரிக்கற் பரிசோதகர்கள் அவர்களில் ஒருவர் பயணிகளை எண்ணிச் சரிபார்த்தார். மற்ற இருவர் பயணிகளின் "ரிக்கற்றை வாங்கிச் சரிபார்த் தபடி வந்தார்கள்.
எனக்கு இரண்டு சீற் தள்ளி, முதியவர் ஒருவர் அயர்ந்து பொய்த் தூக்கம் போட்டுக்கொண்டிருந்தார்! அவரை அணு கிய பரிசோதகரொருவர் அவரது முதுகில் தட்டி, "பெரிய வர். ரிக்கற்’, என்ருர்,
** என்ன. என்ன தம்பி ரிக்கற்றே? யாழ்ப்பானத்துக்கு ஒரு துண்டு குடனே அப்பு.’
அவர் ஐந்து ரூபாய் நோட்டொன்றை பதட்டமேது மின்றி நீட்டினர். ܫ
* ‘எங்கையிருந்து வாறை?"
'குறிகட்டுவான்'

Page 33
{ኝ8
'குறிகட்டுவானிலை பஸ்சேறி. மண்கும்பானுக்கையே 'ரிக்கற் கேக்கிறை. நல்லாயிருக்குது உன்ரை வேலை. "ரிச் கற்" இல்லாமைப் பிரயாணம் செய்யக்கூடாதெண்டு தெரி யாதே??
பரிசோதகர்கள் அனைவரும் உசாராணுர்கள். அவர்கள் அப்பு வை ச் சூழ்ந்து கொண்டார்கள். கொண்டக்டருக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலை.
பிரயாணிகளின் பார்வை அப்புவின்பால் மொய்த்தது. அவர்கள் ஏதோ சத்தியவசப் பட்டவர்களாய், கொண்டக் டர்பால் பரிவுகொண்டு:
'ஏனப்பு? கொண்டக்டர் எத்தனைதரம் “ரிக்கற்” எண்டு கேட்டவர் . . நீ என்ன செவிட்டலியனே? பேசாமையிருந் திட்டு இப்ப திருட்டுமுழி முழிக்கிறை'
‘இவர் இப்பிடித்தான்போலை. பழக்கப்பட்ட கட்டை. இண்டைக்கு வசமாச் சிக்கீற்றர்'
**இந்த வயசிலை ஏனப்பு உனக்கு இந்தப் புத்தி. கள் ளுக்கு மிச்சம் பிடிச்சனியே. . அது தான் மடக்கீற்றர் போலை .??
சொற்கணைகளின் சொடுக்கல்கள். ஒரு பரிசோதகர் அப்புவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கேட்டார்:
"அப்பு உண்மையைச் சொல்லு. ஒண்டையும் மறைக் காதை. பஸ்ஸிலே முன்பக்கத்தாலைதானே ஏறினனி.?’
"ஓம் தம்பி. பின்பக்க வழியைக் கவனிக்கேல்லை’ * ஏறினதும் ஏன் "ரிக்கற்? எடுக்கேல்லை?" ‘கேட்டனன். கொண்டக்டர்ப் பொ டி யன் தா ன் தரேல்லை'

59
பஸ்ஸே குலுங்கிச் சிரித்தது.
அப்பு அசடுவழிய, இருப்பிடத்தை விட்டெழுந்து எல் லோரையும் பார்த்தபடி ஏதோ பேசமுயற்சித்தார், அவரால் முடியவில்லை. குரல் மிகவும் சன்னமாக ஒலித்தது. குரலில் லேசான கரகரப்பு. வெப்பியாரத்துடன் கண்கலங்க, அவர் மிகுந்த சிரமத்துடன் சொன்னர்.
'தம்பி என்னை மன்னிச்சிடு ராசா. இ ைத ப் பெரிசு படுத்தாமை ரிக்கற்றைத் தந்திடு'
**அப்பு. நானென்ன செய்ய, குற்றப் பணத்தோடை இருபத்திநாலு ரூபாய் நாப்பதுசதம் வரும். அதைக் கட்டும்"
"'என்ன , ! ஒருபிள்ளை சீதனம் கேக்கிறை. நானெங்கை போறது. உண்ணுணைத் தம்பி இந்த ஐஞ் சு ரூபாயைவிட ஒருசதமும் என்னட்டை இல்லை. இஞ்சை மடியைப் பாரும். இந்தாரும் இதைப் பிடியும்; ரிக்கற் காசை எடும். உன்ரை புள்ளைகுட்டி நல்லாயிருக்கும் ராசா என்னை விட்டிடு. இந் தக் கிழவனை உலையாதை'
"உது சரிவராது. றைவர் நீர் பொலீஸ்ரேசனுக்கு விடும்' பொலிஸ் என்றதும் கிழவருக்கு உதறல் எடுத்தது. வைத்திருந்த ஐந்து ரூபாயுடன் இன்னுமோர் ஐந்து ரூபாயைச் சேர்த்துப் பத்து ரூபாயாகப் பரிசோதகரிடம் கொடுத்தார்.
**இந்தா பத்து ரூபாய் வைச்சிருக்கிறீர். மிச்சத்தையும் தாரும். இல்லையெண்டா இருக்கிற பிரயாணியளிட்டையா வது வாங்கித் தாரும்' - அவரால் இதைத் தாளமுடியவில்லை. அ  ைத த் தவிர வேறு வழியிருப்பதாகவும் தெரியவில்லை. அவர் எழுந்து நின் முர், அவரது உடல் நடுங்கிப் பதறியது. உடலும் மனமும் சுசியவராய்;

Page 34
60
**இஞ்சை தம்பி, நான். நான் பிச்சை எடுத்ததில்லை. பிச்சை எடுக்கச் சொல்லிறையே . . உழைச்சுப் பழகின கையிது, பிச்சை எடுக்குமே..?'
அவரது மெலிந்த குரலில் பரிதாபம் இழைந்தது.
சற்று முன்வரை அவரை ஏசியவர்களெல்லாம், அவர் பால் இப்பொழுது இரக்கங்கொண்டு
'ஏதோ இருக்கிருக்கள் அப்புவுக்குக் குடுங்கோ . . பாவம் அப்பு. இந்தா இதுதான் என்னட்டைக் கிடக்குது’’
ஒரு பயணி ஒரு ரூபாயைக் கொடுத்து ஆரம்பித்து வைத் தார். நல்ல ஆரம்பம். என் பங்காக நானும் ஒரு ரூபாய் கொடுத்தேன். சிலர் தங்களால் முடிந்ததைக் கொடுத்தார் கள். சிலர் கிழவரைப் பார்ப்பதையே தவிர்த்தவர்களாய், வானத்தையும் பூமியையும் கொட்டும் மழையையும் பார்த் தபடி இருந்தார்கள். கிழவர் அவர்கள் முன் நின்றுவிட்டு, அடுத்தவர் தயவை நாடுவது உண்மையில் ஒர் "பஞ்சை' பிச்சையேந்துவது போலவே இருந்தது.
அவர், ஈசனும் அந்த அழகியும் இருந்த இடத்தை அணு கியதும், அந்தப் பெண் அவசர அவசரமாக எழுந்து பெல்லை அடித் து - அவரிடம் கையிலிருந்த சில்லறைகளைக் கொடுத் துவிட்டு - பஸ்ஸிலிருந்து இறங்கினுள்.
"இந்தக் கொட்டும் மழையிலை, கையிலை குடையுமில்லா மல் இவள் ஏன் இறங்கிருள். . அல்லைப்பிட்டியிலை ஆரை யேன் பாக்கப் போருளோ.. ??
ஈசனைப் பார்த்தேன். அவர், கிழவனை அசட்டையாக ஒதுக்கியபடி, அவள் இறங்கிப் போவதையே வெறித் துப் பார்த்தபடி இருந்தார். அப்பு அசையாமல் அவர் முன்நிற்ப தைக் கண்டு எரிச்சலுடன் தனது 'பொக்கற்றைத் துழா

6.
வினர். பின் பதட்டமுற்றுத் திடீரென எழுந்து வந்து எனக் குப் பக்கத்தில் 'ஒடுங்கிப்போய்' உட்கார்ந்துகொண்டார்.
அவரை, "என்ன?’ என்பதுபோல் பார்த்தேன்.
'இல்லை. சொல்ல வெக்கமாயிருக்குது தம்பி. அவள் என்ரை பேர்சை" அடிச்சிற்ருள். நாப்பது ரூபாயும் சில்ல றையும் இருந்தது.'
‘‘பஸ்ஸை நிற்பாட்டட்டுமே?'
"வேண்டாம் தம்பி, நிப்பாட்டியும் பிரயோசனமில்லை. பஸ் காக்கட்டை கடந்திட்டுது. மழைவேறை ச ரி யா ப் பெய்யிது’
நான் எதிர்பார்த்ததைத்தான் அவர் சொன்னர். வைத் தியர் தாமோதரத்தாற்ரை பேரன். சேர் துரை குமாரசாமி யின் தம்பி பிள்ளை. (எல்லாம் அவர் சொன்னதுதான்) ஊரில் நாலுபேர் மதிக்கிற சிவப்பழம். ஒரு கனவான். இப்படி ப தானே நடந்துகொள்ள முடியும்.
அவரது பொய் முகங்களைக் கழைந்து பார்த்தால் எஞ்சு வது ஒரு பரிதாபத்துக்குரிய மனிதரென்பது தெரியும். சொந்த மனைவியே அவரது பலவீனங்களைப் பொறுத்திருந் தும், பொருளெனும் பசை இல்லாததால் பிரிந்து - பிறந்த வீட்டோடு போய்விட்ட நிலையில் இன்று ஓர் இடமும், நாளை மறு இடமும், மறுநாள் வேருெரு இடமுமாய்ச் சொந்தங் கொண்டாடிக்கொண்டு, ஒருவகை ஒட்டுண்ணி வாழ்க்கை வாழும் இந்த ஜீவியின் கையில் இன்று சொற்பபணம் புழங் கிறதென்றல், அது ஏதோ காணித்துண்டொன்றை விற்ற பணம் என்பது கேள்வி. அதுவும் இன்று சுளையாகப் போவ தென்ருல்!
'பாவம் ஈசன்! உண்மையில் அவர் இரக்கத்திற்குரிய ஒரு “கனவான்'தான்!”

Page 35
台2
அப்பு ஒருமாதிரித் தனது பிச்சைவாங்கும் சுற்றுலாவை முடித்துக்கொண்டார்.
பரிசோதகர்கள் பணத்தை எண்ணிப் பார்த்தார்கள். பதின்மூன்று ரூபாய் இருந்தது. பற்ருக்குறை ஒரு ரூபாய் நாப்பது சதம்.
"அப்புவின்ரை மடியை ஒருக்கா வடிவாப்பாரும் ஏதென் இருக்கும்’ '.
இது பஸ் சாரதி.
ஒரு பரிசோதகர் அப்புவை நெருங்கி அவரது மடியைப் பிடித்தார். வெற்றிலைப் பொட்டலம் கீழே விழுந்தது. அத் துடன் சில்லறைகளும் குலுங்கிச் சிதறின.
சரியாக ஒரு ரூபாய் நாப்பது சதத்தை எடுத்துக்கொண்டு, மீதத்தை அப்புவிடம் கொடுத்த பரிசோதகர்கள், பஸ் சத்தி ரத்தடியில் திரும்பியபொழுது, குதித்து இறங்கிக்கொண் LinTrissør. -
பஸ் சாரதி அப்புவைப் பார்த்து, அடக்கமுடியாமல் குயீ ரிட்டு விழுந்து விழுந்து சிரித்தார். அப்புவினது செயல் அவ ரது ரசனைக்கு விருந்தானது எனக்குப் பிடிக்கவில்லை. எரிச்ச லாக இருந்தது.
"ஏன் இவர் இப்படிச் சிரிக்கிருர். இதிலை என்ன ரசிப்பு இருக்கிறது. பாவம் அப்பு. ஏதோ மறைத்து வைத்ததையே கொட்டிக் கொடுப்பதற்குக் காரணமாய்விட்ட இந்த மனிதர் சிறிதும் இந்தக் கிழவரிடம் இரக்கம் கொள்ளாமல், கண் னில் நீர் முட்டும்வரை சிரிப்பது. சே. . என்ன மனிதர் கள்! என்ன ரசனைகள்! . .
பஸ் நிலையத்தினுள் நுழைந்து தரித்தபொழுது, எல் லாரும் முண்டியடித்துக்கொண்டு இறங்கினர்கள்.

63
மழை வேகம் குறைந்து பிசுபிசுத்துக்கொண்டிருந்தது. சாரதியைப் பார்த்தேன். அவர் அப்புவை அணு கி "அப்பு என்ன? ஏதும் இருக்கே வீட்டை போய்ச் சேர ...”* என்றவர், தனது மடியிலிருந்து ஒர் ஐந்து ரூ பாய் நோட் டொன்றை எடுத்துக் கிழவரிடம் கொடுத்தார்.
எதிர்பாராத நிகழ்ச்சி! நான் பிரமிப்புடன் அவரையே பார்த்தேன். அவர் சிரித் தபடி அவசரமாக இறங்கி எங்கோ போய்க்கொண்டிருந்தார். அந்த மனிதரை என்னுல் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவ ரது அந்தச் சிரிப்பு காதில் திரும்பத் திரும்ப ஒலித் து க் கொண்டே இருந்தது.
நானும் ஈசனும் பஸ்ஸைவிட்டிறங்கியபொழுது யாரோ முதுகில் தொடுவதுபோன்ற உணர்வு. திரும்பிப் பார்த்தேன்
கொண்டக்டர்
"மாஸ்ரர் என்னை மன்னிச்சிடுங்க . இந்தாருங்க உங் கடை மிச்சம். இரண்டு ரூபாயும் சில்லறையும்!”
ஓ! இந்த மனிதர்கள் தேவர்கள்தான். எ ன் ம ன ம் ரோமான்ரி"க்காக அலட்டிக்கொள்கிறது.
'தம்பிக்கு ஏதாவது நெருக்கடியே?” 'இல்லை. நெருக்கடி எண்டாலும் இனிஇப்பிடி வேண் nrub Drr6ňrriřo” - -
நான் அவனை மிகுந்த கனிவுடன் பார்த்து விடைபெற்ற பொழுது, அப்பு ஏதோ பிதற்றியபடி இறங்கினர்:
"அந்தப் பொடிச்சீற்ரை தட்டிப் பறிச்சதுக்கு செம்மை யாப் பட்டிட்டன். இது நல்லதுக்குத்தான்.'

Page 36
64
‘ஆரந்தப் பொடிச்சி, அவளிற்ரை எதைத் த ட் டி ப் பறிச்சவர்?
அந்த நினைப்பில் மிதந்த என்னை ஈசன் இடைமறித்தார்:
'தம்பி! ஒரு பத்து ரூப்ாய் தாரும் பிறகு தாறன்'
"ஈசன் வாரும் சுபாஸிலை சூடா ஒரு கோப்பி குடி ச் சிட்டு அதைப்பற்றி யோசிப்பம்"
நானும் ஈசனும் இப்பொழுது கோப்பிகுடிக்கப் போகின் ளுேம்.
ஈசன் இன்று எனது விருந்தாளி. நாளை யாராவது அவ ருக்கு நிச்சயமாக இருப்பார்கள். அது அவரிடம் நாப்பது ரூபாய் திருடிய அந்த அழகியாகக்கூட இருக்கலாம். யார் கண்டது. அவர் திறமை அப்படிப்பட்டது. அவர் ஒர் ஆச்ச ரியமான மனிதர்!
இல்லை, அவரும் நொடிந்துபோன ஒரு பிச்சைப்பெட்டி.
.டிந்து L 5( است .
di “ 77

இப்படியும் காதல் வரும்
அந்த அவசரத் தந்தியைக் கண்டதும் அவள் ஊருக் குப் புறப்பட்டாள். தனது "ஃப்லாற்றுக்குக் கூட அவள் போகவில்லை. கந்தோரிலிருந்து நேரடியாகவே கோட்டை புகையிரத நிலையத்தை அடைந்தவள், 11-50 - உத்தரதேவி யைப் பிடித்துக்கொண்டாள். W
சிவா - அவளுக்குக் கீழ் வேலைசெய்யும் உதவி அதிகாரிதுணைக்கு வருவதாக முதலில் ஏற்பாடு. ஆணுல், நாளை மறு நாள் "லேபர் மினிஸ்றியில் உயர் அதிகாரிகள் கூட்டமொன் றில் அவளும் அவனும் கலந்துகொள்ள வேண்டும். அவள் இல்லாதவிடத்து அவனுவது கலந்துகொள்ள வேண்டாமா?. சிவாவுக்கும் யாழ்ப்பாணத்தில் ஏதோ அலுவல். அதனுல் அவளுடன் போக விரும்பினன், முடியவில்லை. அவள் தனி யாகவே புறப்பட்டாள். "ஸ்ரேசன் வரை வந்து இ வளை அவன் வழியனுப்பினன்.
“எயர் கொண்டிசன்" இல்லாததால் இரண்டாம் வகுப்பில் பிரயாணம். அலுப்பாக இருந்தது, அலுப்பைப் பார்த்தால் முடியுமா? தந்தி, அதுவும் அவசரம்
5

Page 37
66
‘என்ன அவசரம் இந்த அப்பாவுக்கு? அப்பாவுக்கு எப் பவும் அவசரம்தான்!” -- -
அப்பாதான் தந்தி கொடுத்திருந்தார். ஏறக்குறைய எட்டு மாதங்களுக்குப் பின், இன்றுதான் அவள் ஊருக்குப் போகின்ருள். அங்குபோய் அந்தக் குடும்பச் சுமைகளுள் அழுந்தி, கவலை கொள்வதிலும் பார்க்க, இங்கு கொழும்பில் - தனித்து அந்தச் சொந் தங்களில் இருந்து தொலைவுபட்டு, அந்நியமாக இருப்பது அவளுக்கு நிறைவு தந்தது.
இந்தத் தனிமையிலும் சிவா - அவ்னுடன் கொண்டுள்ள தொடர்புகள், அந்த அழுத்தமான அறிவுமிக்க இளைஞனின் தோழமை, அவளுக்கு வாழ்க்கையில் ஒர் அர்த்தத்தைக் கொடுக்கவே செய்கின்றன.
அவனது அறிவுக் கூர்மையில் இவள் லயித்துப்போய் விடுகின்ருள். ஒரே ரசனைகள், ஒரே எண்ணங்கள். சுலபத்தில் கிடைக்குமா? ۔۔۔۔
*ரேயின் படங்களில் இவளுக்கு ஈடுபாடு. அவனுக்கு *ரேயில் மட்டுமா? உலக சினிமா உயர் கலைஞர்களைப்பற்றி அவன் அடுக்கிக் கொண்டு போகும் பொழுது, இவளுக்குப் பிரமிப்பாக இருக்கும்.
"சினிமா ஒரு அருமையான மீடியம். அதனை எவ்வளவு "எஃப்க்ரிவ்" ஆகப் பயன்படுத்தலாம். பார்வையாளனை நேர் நிறுத்தி, அவனுடன் பகிர்ந்துகொள்ள எவ்வளவு விஷயங்கள்
இருக்கின்றன’ mw. Y_M_\,
அவன் தன்னை மறந்து பேசுவான். அப்பொழுது இவ்ன், "நீ ஒரு படம் எடேன்', என்பாள். "எடுக்கலாம்தான். 'ஃபினன்ஸ்’ Sut?', என்று வேடிக் கையாகக் கேட்டுச் சிரிப்பான். - - - -

67
கலை, இலக்கியம் என்று வந்துவிட்டால் அவன் ம்ணிக் கணக்காகப் பேசுவான். தன்னை ம்றந்த லயிப்பில் பேசுவான். நவீன ஓவியமா, புனைகதையா, புதுக் கவிதையா எதுபற்றி யும் அவனல் பேசமுடிந்தது. ஹென்றி ஜேம்ஸையும், ஜொய் ஸையும், மாக்ஸிம் கோர்க்கியையும் இவளுக்கு அறிமுகப்ப டுத்தியது அவன்தான்
இவளுக்கு கோர்க்கியை மிகவும் பிடித் துப்போய்விட்டது.
தமிழ் என்று வந்தால் மெளனியைப் பற்றியே அவன் அதிகம் பேசுவான். இவள் மெளனியை ஒருமுறைதான் படித்தாள். மீண்டும் படிக்க வேண்டுமென்று ஆர்வங் கொள் ளவில்லை. ஆனல், ஜானகிராமனை, புதுமைப்பித்தனை, சுந்தர ராமசாமியை திரும்பத் திரும்பப் படித்திருக்கிருள். 蛇尾
இவைபற்றியெல்லாம் அவர்கள் இரு வரும் பேசும் பொழுது ஒத்து, முரண்பட்டு, மீண்டும் இணைந்து, தம் கருத் துக்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.
இது ஒருவகையில் ரசனையில் ஏற்பட்ட உறவுதான். அதற்குமேல்? எதுவுமே சொல்ல முடியாத நிலை! அவளைப் பொறுத்தவரை அவ ன் சின்னப்பிள்ளை. இருபத்திரெண்டு வயசுகூட நிரம்பவில்லை. அதற்குள் இவ்வளவொரு முதிர்ந்த ஞானமும் செருக்குமா? வியந்துபோவாள்.
அவ னு க்கு அவள் முப்பதைத் தொட்டவள். என்ற நினைப்பே இல்லை. அவளது நீள்வட்ட முகம் அந்த அகன்ற கண்கள், அவற்றில் சுரந்துநிற்கும் கனிவு - அத்துடன் ஒரு கவர்ச்சி. கூந்தலா அது! அலை அலேயாக காலைத் தொடுவது போல . அந்த நிறம். அப்பா என்ன கலவை! மெலிதாய் உயரம்ாய் அவள் எவ்வளவு அழகு. கண்ணில் எப்பொழுதுமே வைத்துக்கொண்டிருக்க வேண்டும் போலிருக்கும்.
சிவா ஒருசமயம் அவளைக் கேட்டான்:

Page 38
68
'விமலா நீ எவ்வளவு வடிவு இன்னுமேன் கலியாணம் செய்யேல்லை?"
"ஒ. கலியாணம் அதுக்கு வடிவுமட்டும் போதுமே?', அவள் வரட்சியான சிரிப்புடன் எங்கோ எதனையோ வெறித் துப் பார்த்தபடி இருந்தாள். அவள் கண்க ள் கலங்கிவிடு கின்றன.
அந்த நிகழ்ச்சியின் பின், அவன் அவளிடம் அதுபற்றி எதுவுமே பேசுவதில்லை. அப்படிப் பேசுவதே அவளுக்குத் துன்பம் தருமோ என அஞ்சினன்.
do O) oo
புகையிரதம் யாழ்ப்பாணத்தை அடைந்த பொழுது, நிலையத்தில் யாரும் அவளை அழைத்துப் போவதற்கு வர வில்லை. அவளுக்கு அது ஏமாற்றமாயிருந்தது. அவள் வரு வதை அறிவிக்கவில்லைத்தான். இருந்தும், அவள் வரவை எதிர்பார்த்து "சும்மா" நிலையம் வரை வந்துபோகக்கூடாதா
அவள் தனியாக "ராக்சி"யில் வீடுபோய்ச் சேர்ந்தாள்.
வீடு அமைதியாக இருந்தது. இடைக்கிடை அம்மாவின் விசும்பல் ஒலி. இவள் படியேறியதும் ரஞ்சிதான் ஓடி வந் தாள். அன்புடன் தழுவிக்கொண்டாள். ரஞ்சி இவளை அடுத்துப் பிறந்தவள். 'அம்மா! அக்கா வந்திற்ரு' ரஞ்சியை இவள் பார்த்தாள். அவளது கண்கள் அழுது சிவந்து கிடந்தன. •
அப்பாவைக் காணவில்லை! நடுக்கூடத்தைக் கடந்து அதற்கு அப்பாலிருந்த அறை யினுள் நுழைந்தவள்

69
'ரஞ்சி உன்ரை ரெஸ்ஸிங்கவுணைக் கொடு . . நான் கந்தோரிலை இருந்து நேரவாறன்"
சேலையை உருவி எறிந்தவள், கவுணை வாங்கிக் கொண் L-IT6ir.
அறையின் மூலையில் கிடந்த கட்டிலில் சுசி ரா னி, சக்தி - ஒருவர்மேல் ஒருவர் கால்களைப் போட்டுக்கொண்டு, அயர்ந்துபோய்க் கிடந்தார்கள்.
மூவரும் இந்துவை அடுத்து வரிசையாகப் பிறந்தவர்கள்.
'ரஞ்சி, குழந்தையள் ஏன் தாறும்ாருக் கிடக்குதுகள். ஒழுங்கா வளத்தக் கூடாதா?"
"இஞ்சை எதக்கா ஒழுங்கா இருக்குது . . எல்லாம் தாறுமாறுதான்'
"என்ன, என்னடி சொல்லுறை?? அப்பா காறித்துப்புவது கேட்டது. 'அப்பா வந்திற்ருர்போலை. . பெரியமாமா வீட்டை G3 unraoTouri'
அவள் உடை மாற்றிக்கொண்டு வெளிவிருந்தைக்கு வந் தபொழுது - அம்மா, அப்பா, இந்து, சரஸ் எ ல் லாரும் அங்கே இருந்தார்கள். V
சரஸ் இந்துவுக்கு முன் பிறந்தவள். அவளது இரண்டாவது தங்கை சித்திராவை மட்டும் அங்கு காணவில்லை!
இவள் கேட்டாள்: 'அம்மா சித் திரா எங்  ைக் கானோல்லே??? -
'சித்திரா.?' அம்மா விம்மத் தொடங்கிவிட்டாள். அவள் குலுங்கிக் குலுங்கி அழுவது பரிதாபமாக இருந்தது.

Page 39
70
அப்பா சொன்னர் "அந்தப் பாதகி தில்லையர் வீட்டிலை வேலை செய்து
கொண்டிருந்த தோட்டக்காட்டுப் பொடியன் வேலாயுதத் தோடை ஒடீற்ருள் பிள்ளை'
அவரும் விம்மினர். இந்த இடியை அவளால் நம்ப முடியவில்லை. எப்படி அவளால் நம்ப முடியும்? அவள் நிமிர்ந்து இந்து வையும் சரசுவையும் பார்த்தாள்.
அவர்கள் இருவரும் எழுந்து உள்ளே போனர்கள். அப் பொழுது படலை விடும் சத்தம் கேட்டது.
அப்பா கேட்டார், 'யாரது?’ "நான்தான் அத்தான்! " பெரிய மாமாவும், அவற்றை மூத்தமகன் சண்முகம் அத்தானும் வந்தார்கள்.
ரஞ்சி கதிரை ஒன்றை இழுத்துப் போட்டாள். மாமா உட்கார்ந்துகொண்டு ஒரு கனைப்புடன் பேச ஆரம்பித்தார்.
"இஞ்சை பிள்ளை. இது குடும்பத்திலை பெரிய தலைக் குணிவு. நானும் பொம்பிளைப் பிள்ளையளை வச்சிருக்கிறன் உன்ரை சின்ன மாமா, உவன் தம்பி பசுபதிக்கும் இரண்டு குஞ்சுகள். உன்ரை அப்பன் தப்பாமை வரிசையா பெட் டையளையே பெத்து வச்சிருக்கிறன். இனி இதுகளுக்கு கலியாணம் காத்திகை எண்டு ஏதேனும் செய்யேலுமே..? பெரிய தலைக்குனிவை ஏற்படுத்திப் போட்டாள் அந்த ஒடுகாலி. இப்பிடி அமரிலை தோட்டக் காட்டானுேடை ஓடுவாள் எண்டு நான் நினக்கேல்லை. எங்கடை குடும் ப மென்ன லேசுப்பட்டதே. தாவாடிக்காரர் எண்டா எவன் மாப்பிளை கொடுக்க மாட்டான். விழுந்தடிச்சுக் கொடுப்பாங் களே. இவள் ஹி சரி, அவசரப்பட்டிட்டாள். என்ன

71
பிள்ளை..? இந்தா முப்பது வயசாச்சு. நீ சிவ (3 60T யெண்டு இருக்கேல்லையே! நடக்கிறதெல்லாம் விதிச்சபடி நடக்கும். அதுக்கு அவசரப்படுகிறதே? அது வும் இப்பிடி மானக்கேடாய். இதுக்கு என்ன செய்யப் போறை பிள்ளை? இதை இப்பிடியே விடேலுமே? பொலி சுக்கு அறிவிப்ப மெண்டால் அவள் மேஜர்’ ஒண்டும் செய்யேலாது எண்டு இவன் சண்முகம் சொல்லுருன். அதுவும் சரிதான்.” "பொலிசு கிலிசு" எண்டு போறதும் சரியான திரிசைகேடு"
சண்முகம் குறுக்கிட்டுச் சொன்னன்:
"பொலிசுக்குப் போகேலாது. எதுக்கும் ஒருக்கா பெரிய கமத்துக்குப் போய்ப் பாக்கலாம். பெரிய கமத்திலைதான். வேலாயுதத்தின்ரை தாய் தகப்பன் இருக்குதுகள். பெரிய கமம் கிளிநொச்சியிலைதான். கரடிப் போக்கிலை இருந்து கிழக்கை ஒருகட்டை தூரம் இருக்கும்'
"அப்பிடியே? அப்ப நாளைக் காலமை முதல் வேலையா அதைப் பாருங்க. அவள் அங்கை இருந்தா அவளை இழுத்துக் கொண்டு வாருங்க. அதை முதலிலை செய்யுங்க. விஷயம் காதும் காதும் வைச்சாப்பிலை, நடக்கவேணும். ஊருக்கை சங்கதி தெரியாது. சந்தி சிரிக்கமுந்தி விஷயத்தை மு டி ச் சிட்டா நல்லம். இல்லை, எல்லாரும் தலையிலை சீலையைப் போடவேண்டியதுதான்' ら
மாமாவும் சண்முகம் அத்தானும் விருந்தையை விட்டு இறங்கினர்கள்.
அப்பா கேட்டார்: 'விமலா நீ எத்தனை நாள் லீவிலை வந்தனி?' r
"நான் இஞ்சை கனநாள் நிக்கேலாதப்பா. நாளையிண் டைக்கு மினிஸ்ரரின்ரை கூட்டம் இருக்குது. நாளைக்கே நான் போகவேணும்'
vms
"நாளைக்கா..? இதுக்கொரு முடிவு கானமலே?"

Page 40
72
'அதுதான் அவள் தீர்க்கமாய் முடிவெடுத்திற்ருளே. நாமென்ன செய்யேலும்"
வெடுக்கெனச் சொல்லிய விமலா ரஞ்சியைப் பார்த்து:
"அந்தச் சோப்பை எடம்மா. லாம்பையும் எடுத்துக் கொண்டு கிணத்தடிவரைக்கும் வா’’
தங்கை தண்ணிர் அள்ளிக் கொடுக்க, இவள் தலையில் ஊற்றிக்கொண்டாள்.
"என்னக்கா இது. குளிரிலை நேரம்கெட்ட நேரத்திலை, தலையிலை ஊத்திறை'
"இந்தக் குடும்பத்தையே தலைமுழுகப் பாக்கிறன். முடி யேல்லை. இதையாவது செய்யக்கூடாதா?’’
ரஞ்சி விக்கித்துப்போய் நின்ருள். அவள் கண்களில் நீர் முட்டி மோதித் திரண்டு உதிர்ந்தது.
"ரஞ்சி அழாதை. நான் இஞ்சை வராமல் கொழும்
பிலை நிக்கிறது இதுக்குத்தான். இந்தச் சுமையளை என்னுலை தாளமுடியாதடி, எடுக்கிறதிலை என்ரை செலவுபோக மிஞ்சி றதை அப்பிடியே அனுப்பிப்போட்டு அங்கை சிவனே எண் டிருக்கிறது எனக்கு எவ்வளவு நிம்மதி தெரியுமே? பிள்ளைய ளைப் பெத்தாமட்டும் போதுமே. அதுகளுக்கு உரிய வயதிலை செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டாமே. செய்யாவிட் டால் சித்திரா என்னடி, நானும் ஆரையாவது இழுத்துக் கொண்டு ஒடத்தான் ஒடுவன். கண்டறியாத குலப் பெருமை பேசுகினை. அவர் பெரியமாமா, கொம்பு முளைச்ச சாதி வெள் ளாளர். அட, அவற்றை பெருமை! என்ன பெருமையோ. பீத்தல் பெருமை! தாவாடிக்காரரெண்டா மாப்பிளை கொடுக் கப் போட்டி போடுவினையாமே? எங்களுக்கு அப்பிடி ஒரு மாப் பிளை குதிரேல்லையே. தாவாடிக்காரியின்ரை மூத்த பேத்திஎனக்கு எத்தனை வயசு, உனக்கெத்தனை வயசடி, எங்கடை

7
மூத்த மச்சாளுக்கு எத்தனை வயசு, நாங்களெல்லாம், கிழடு தட்டிப் போகேல்லை???
ஆவேசம் வந்தவளாக அவள் கத்தினள். ரஞ்சிக்கு இது புதுமையாக இருந்தது. அக்கா இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதை அவள் கண்டதில்லை. எதையுமே அநாயாசமாக ஒதுக் கித் தள்ளிவிட்டுப் போகும் அவள் "இன்று. இப்படி .’!
ரஞ்சி அவளை உட்காரவைத்துத் தானகவே அவளது தலையில் தண்ணீரை ஊற்றினுள். இந்தத் தண்ணீராவது 7 அக்காவின் மனதைக் குளிர வைக்காதா? என்ற ஆதங்கம் அவளுக்கு. へ
விமலா இப்பொழுது சற்றுத் தணிந்தவளாய்க் கேட் டாள்: .
‘ரஞ்சி அம்மாவைப் பாத் தன் அவ் ஒரு மாதி ரி இருக்கிரு. ஏதென் சுகமில்லையே?’
“ஓம் அக்கா. அவவுக்கு இதுதான் பெறுமாசம்!”
'என்ன, என்னடி சொல்லுறை .? இன்னுமா அப்பா வுக்கும் அம்மாவுக்கும் ஆசை அவியேல்லை. அவள் சித்திரா சிறிசு. பாவம். ஒடின என்னவாம். நான் நாளைக்கே கிளி நொச்சிக்குப் போய், நீ செய்ததுதான் சரி எண்டு சொல் லீற்று, கொழும்புக்கு ஒரேயடியாய்ப் போகப்போறன்"
**இந்தக் குழந்தை ஆண் குழந்தையாய்த்தான் இருக்கு மாம்! கந்தசாமிச் சாத்திரியார் சொன்னவர்"
"ஓ! ஆண்வாரிசே. பெத்த எட்டுப் பெட்டையளுக்கும் உழைச்சுச் சீதனம் கொடுக்க தம்பி வரப்போருனே?"
** அக்கா சத்தம்போடாதை'
'ஏன் ஏனடி?" அவள் மீண்டும் கத்தினுள்.

Page 41
74
'இதுக்குச் சரியான கிஸ்ரீரியாதான்'
விமலா உடை மாற்றிக்கொண்டு, விருந்தையை ஒட்டி இருந்த, கீழ்ப்புற அறையில் நுழைந்து, கதவை அடித்துச் சாத்தினுள். m
- அவள் கொழும்பிலிருந்து வந்தால், அந்த அறையில்தான் தங்குவது வழக்கம்.
ரஞ்சி பலமாக இரண்டுமுறை கதவைத் தட்டிப் பார்த் தாள். பதில் இல்லை.
"அக் கா பாவம். கொழும்பாலை வந்து தண்ணிகூடக் குடிக்கேல்லை."
அவள் பேசாமல் போய்க் கூடத்துக்குள், அம்மாவுக்குப் பக்கத்தில் படுத்துக்கொண்டாள்.
எப்பொழுது விழித்தாள் என்று தெரியாது, “ரஞ்சி. ரஞ்சி.1 லேசாகக் கூப்பிடுவது கேட்டது. வெளியே வந்து பார்த்தாள்.
பிச்சிமர நிழலில் சண்முகம் அத்தான்! 娥
அவள் அவனது மார்பினுள் புதைந்து விம்மினுள்.
அவளை சண்முகம் ஆ த ர வாக அணைத்துக்கொண்டு கேட்டான்:
*மரவள்ளித் தோட்டத்துக்கை போவம்ே'
"ஊஹூம் . . வேண்டாம்”, ரஞ்சியின் போ லிச் சிணுங்கல்.

75
முல்லைத்தீவு பஸ்ஸில்தான் அவர்கள் பிரயாணம் செய் தார்கள். 'விமலா போனுல்தான் அவள் பயப்படுவாள். அவ ளும் சண்முகமும் பெரியகமத்துக்குப் போய்வரட்டும் இது வீட்டுப் பெரியவர்களுடைய முடிவு.
பஸ் கரடிப்போக்கில் தரித்தபொழுது, சண்முகமும் விமலாவும் இறங்கிக்கொண்டார்கள்.
சண்முகம் கேட்டான்
**கார் பிடிச்சுக்கொண்டு பெரியகமத்துக்குப் போவமே?”
“வேண்டாம் அத்தான் ஒரு கட்டைதானே நடந்து Guntaub” ” a
இருவரும் நடந்தே போனர்கள். வீதி சற்றுக் குறுகலானது. குன்றும் குழியுமாக இருந்தது.
**இந்த ருேட்டுக்கு வடக்காலை இருக் கிற கமம்தான் சதாசிவத்தாற்றை. ஐம்பதோ அறுபதோ ஏக்கர். பயிரைப் பார் என்னமாதிரிப் பச்சைப் பசேலென்று . ...!"
‘நம்ம நொச்சிக்காட்டுச் சுறுக்கற்றை கம்மே. நல்லாத் தான் இருக்குது. அவருக்கு என்னகுறை. இரண்டு பெ ட் டையள். நம்ம சித்திராவின்ரை வயசுதான் மூத்த பெட் டைக்கு. மற்றவளுக்கு இருபதுகூட நிரம்பேல்லை. இரண்டு பெட்டையஞம் முடிச்சு நல்லா இருக்குதுகள்'
*உனக்கொண்டு சொல்லட்டுமே. உனக்குத்தான் முத லிலை சொல்லவேணுமெண்டு நினைச்சனன்'
அத்தானின் கறுத்த முகத்தில் செம்மைப் பூரிப்பு. அவள் அவரை அதிசயமாகப் பார்த்தாள்.
* 'இல்லை விமலா எனக்கு ரஞ்சியிலை சரியான விரும்பம். அவளுக்கும்தான். நீதான் இதை உங்க அப்பா ட்  ைட ச் சொல்லவ்ேணும்'

Page 42
76
irrigg) IT?''
'இல்லை, அப்பிடி ஒண்டுமில்லை. ஒரு விருப்பம். அவள் தான் உங்களிலே ஒரு பெரிய சொத்து மாதிரி'
" அப்ப நான்?
. LLLLLS SLLLLLS SLLLLLS SLLLLLS S SLLL SLLLLLLL
"என்னத்தான் பேசாமல். ..."
'நீ என்ன விமலா! எங்கடை குடும்பத்திலை பெரிய படிப்பெல்லாம் படிச்சு, உதவிக் கொமிஷனராவேறை இருக் கிறை, உனக்கென்ன குறை, உனக்கொரு மாப்பிளை கிடைச் சிட்டா எங்களுக்கெல்லாம் எவ்வளவு சந்தோஷம் தெரியுமே. அவள் ரஞ்சி சொல்லுருள் அக்காவுக்குச் சடங்கு நடந்து தான் எதுவுமெண்டு'
'ஓ! எனக்கு நடந்து முடிஞ்சபிறகுதான் உங்கட கலி யாணமே? அத்தான்! எனக்கொரு தம்பி பிறக்கப்போருன். அவன் உழைச்சு எனக்குச் சீதனம் தருவான். அப்ப என்ரை கலியாணம் நடக்கும். அதுவரைக்கும் பொறுமையா உங்க ளாலை இருக்க முடியுமே? அவள் ரஞ்சி வலுகெட்டி இருந்தா லும் இருப்பாள்!"
"சீ . . என்ன மாமி கர்ப்பமே இந்த வயசிலையே? சும்மா பேய்க்கதை பேசிறை'
"உண்மை அத்தான். உங்களுக்கொரு குட்டி மச்சான் பிறக்கப் போருன்! உங்களுக்கு மாப்பிளைத் தோழன் வேண் டாமே!" அவள் சிரித்தாள். ஜீவனற்ற சிரிப்பு.
"அதோ ஒரு பெரிய கல்வீடு ருேட்டுக்குத் தெற்குப்பக் கம் தெரியுதே அதுதான் பெரியகமம்"
இருவரும் மெளனமாக நடந்தார்கள்,

77
அந்தக் கல்வீடு பூட்டிக்கிடந்தது. வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு குடிசை. குடிசையின்முன் ஒரு கிழவன் இளவெய்யிலில் சுருட்டுப் புகைத்துக்கொண்டிருந்தான். அவனை அணுகிய சண்முகம்:
"அப்பு இதுதானே வேலாயுதத்தின்ரை வீடு. வே லா யுதம் இருக்கிருனே?" w
'ஏய் பிள்ள! இஞ்ச யாரோ வேலாயுதத்த தேடிக்கிட்டு வந்திருக்காங்க வ்ந்து பாரு'
மெலிந்த, சற்று வயதுபோன ஒர் உருவம் குடிசையிலி ருந்து வெளியே வந்தது. வேலாயுதத்தின் தாயாக இருக்க வேண்டும். அவளைத் தொடர்ந்து ஒரு சிறுபெண், பதினைந்து பதினறு வயதுதான் இருக்கும். ஊர் அம்மன் கோயில் சிலை மாதிரி மூக்கும் முளியுமாய், செதுக்கியெடுத்த வடிவம்.
"ஓ! இளமை எவ்வளவு வடிவு', விமலா புல்லரித்துச் சிலிர்த்தாள்.
* வேலாயுதம் இருக்கிருனே?" **இல்லைங்க தம்பி. அவன் வேலணயில. பாவம், இந்தப் பிள்ள இவளக்கூட இஞ்ச வந்து ரெண்டு கிழமையா பாக் கல்லேங்க”*
'இவள்!' -- ਅ *அவன் சம்சாரமுங்க. எங்க அண்ணன் பொண்ணுங்க" *"அவரு அங்க இல்லிங்களா?" கண்கலங்க அந்தப்பெண் சண்முகத்தை விசாரித்தாள். அவள் உடல் லேசாக நடுங்குவதைப் பார்த்த விமலா
*இல்லைத் தங்கச்சி. நாங்க சும்மா இஞ்சை ஒரு அலு வலா வந்தனுங்க, வேலாயுதத்தைக் கூட்டிக் கொண்டுபோன சுலபமா இருக்குமெண்டு நினைச்சம். அதுதான் அவனைப் பாக்கவந்தம்'

Page 43
曾岛
"என்னுங்கம்மா.. என்ன காரியமாகணும்? நாங்க உதவி பண்ணேலுங்களா?' வேலாயுதத்தின் தாய்.
'இல்லையாச்சி வேண்டாம்"
அந்தச் சிறுபெண் கண்களை அகல விரித்து இ  ைம க ள் பட்டாம்பூச்சிபோலப் படபடக்கச் சொன்னுள்
*மச்சானைக் கண்டாக்க . . ஒருக்கா இங்கிட்ட வந்து போகச் சொல்லுங்க"
- அதில் தொனித்த ஆர்வமும், தாபமும் விமலா  ைவ என்னமோ செய்தது.
அவர்களிடம் இருந்து விடைபெற்று, வெளியே வந்த பொழுது விமலா சண்முகத்தைப் பார்த்துச் சொன்னுள்:
"அத்தான் அந்தப் பெட்டையைப் பாத்தியளா. எவ்வ ளவு ஆர்வத்தோட, ஏக்கத்தோட வேலாயுதத்துக்காக காத் திருக்கிருள். இவளுக்குத் துரோகம்செய்ய அவ ன லை முடி யுமா? அந்த த் துரோகத்துக்குச் சித்திரா உடந்தையா? இருக்காது'
'இருக்கக்கூடாதென்பதுதானே விமலா எங்கடை எல் லாற்றை விருப்பமும்’ -
"அத் தான்! நான் இஞ்சையிருந்தே கொழும்புக்குப் போகலாமெண்டு நினைக்கிறன். வந்த காரியமும் முடியேல்லை எதுக்கும் இரண்டொருநாள் பொறுப்பம். விஷயம் வெளிச் சத்துக்கு வராமலே போகும். முக்கியமான கொன்ஃபிரன்ஸ், நான் கொழும்பிலை நிக்கவேணும். நான் போயிற்று உடனை திரும்பிறனே"
“ “ Fifi 6Loaprr””
"இஞ்சை ஒரு "லேபர் டிஸ்பியூட் விஷயமா வில் சன் ருேட்வரை போக வேண்டியிருக்குது. நீங்களும் ரவுணுக்கு

.79
வ்ாருங்க. நான் ஒண் டரை மணியளவிலதான் றெயின்" எடுக்கேலும் . நீங்க அதுவரைக்கும் சுணங்காம் ஊருக்குப் போங்க??
அவர்கள் இருவரும் கிளிநொச்சி ரவுனை நோக்கி நடந் தார்கள்.
s વૃ૦ o વૃ૦
சிவா ஸ்ரேசனுக்கு வந்திருந்தான். அவள் எதிர்பார்க் காத ஒன்று. - ༣་ . . . . . . . .
‘நான் நாளை யாழ்தேவியிலை வந்தாலும் வ்ருவன். எதுக் கும் ஒருக்கா வந்து பாரேன்." என்றதற்கு இவ் வள வு மதிப்பா
அவ்ஸ் வண்டியைவிட்டு இறங்கியதும் அவன் கேட்டான்: "என்ன தந்தி?" "அதுவா? அம்மாவுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கப் போகுது! அதுதான். அப்பா தந்தி அடிச்சவர்' - -
"என்ன! அப்பிடிச் சரியா ஆண்குழந்தை என்கிருய், பிறக்கமுந்தியே?* く
*எட்டுப் பெட்டையஞக்குச் சீதனம்தேட ஆண்வாரிசு வேண்டாம்ே அதுதான்" . . . . . .
'ஓகோ அதுக்கா? சரிதான்' . . . . .-- அவன் சிரித்தான். அவளும் கலகலவென்று சிரித்தாள். மனம் மிகவும் லேசானதுபோன்ற உணர்வு. ஸ்ரேசன விட்டு வெளியே வந்தவர்கள், ராக்சியொன்றில் ஏறிக்கொண்டார்கள். ராக்சி றைவரிடம் அவன் சொன்னன்:
"பம்பலப்பிட்டியா. பிப்பின்லேன்." -

Page 44
80
வழமைக்கு விரோதமாக, அவன் பின்சீற்றில் - அதுவும் அவளுக்குப் பக்கத்தில், நெருக்கமாக உட்கார்ந்து கொண்
டான்.
அவளுக்கு அதிசயமாக இருந்தது.
"'என்ன, குடிச்சனியா? மணக்குது”
*நோ..? அவனது அசட்டுச் சிரிப்பு.
"விம்ல், உன்னட்டை ஒரு விஷயம் கதைக்க வேணும். சும்மா கதைக்க முடியுமா? குடிச்சாத்தான் முடியும்போலை இருந்தது. அதுதான்."
'டோன்பி சில்லி
“6?! • மறந்துபோனனே. உனக்கு இரண்டு "பேர்சனல் லெட்டர்ஸ்" கந்தோருக்கு வந்தது கொண்டு வந்தனன்'
அவன் கடிதங்களை எடுத்து இவளிடம் கொடுத்தான்.
ஒரு கடிதம் அவளது சிநேகிதி எழுதியது. மற்றக் கடி தத்தைப் பார்த்தாள். சித்திரா எழுதியிருந்தாள். அவள் பதட்டத்துடன் கவரை உடைத்து, ராக்சியின், "ஹ"ட்"லேற் வெளிச்சத்தில் படித்தாள். -- m
'அக்கா! நான் இதைத் துணிஞ்கதான் செய்யிறன். அவரை உனக்குத் தெரியும். சரவணை மாஸ்ரரின்ரை மகன் குணம்தான். ஸ"கர் கோப்பரேசனிலை வேலை செய்யிருர், வேலாயுதம்தான் என்னை க் கூட்டிக்கொண்டு வந்து அவ ரிட்டை ஒப்படைச்சவன். இது அவற்ரை ஏற்பாடு. அவன்ரை உதவி இல்லாட்டி நான் அந்த நரலுக்கையிருந்து தப்பேலா மப் போயிருக்கும். இரண்டொரு நாளிலை பதிவுத் திரும ணம், முடிஞ்சா நீயும் வாவன். அறிவிப்பன், எனக்கொருத் தற்றை ஆசியும் வேண்டாம். உன்ரைஆசி வேணுமக்கா.*
சுருக்கமான கடிதம். விமலாவுக்கு எல்லாமே விளங்கியது.

8.
இவன் குணம்தானே. . கோவியப் பொடியனெண்டு அப்பா அம்மா துக்கப்படுவின. கண்டறியாத சாதி. இப்ப ஆர் சாதி பாக்கின. எல்லாம் ஒண்டு தான். ஏதோ உத்தி யோகம் பாக்கிற பொடியன்தானே. சாதி அந்தத் தகுதீக்கை மறைஞ்சு போகாதே. சின்ன வயதிலை கண்டது. இப்ப அவன் எப்பிடி இருக் கி ரு னே? இவள் சித்திரா அவனை எங்கை கண்டுபிடிச்சாள். ஒ! இவளும் அவனும் ஒருவகுப்பிலைதானே படிச்சவை. அப்பதொட்டே. சித்திரா துணிஞ்ச பெட் டைதான்."
அவள் நிம்மதிப் பெருமூச்செறிந்தாள்.
என்ன விமலாP"
p. 0 00 08pe 98 0 0-er 800 pwe sa •
'விமலா ஒரு நிமிஷம் ராக்சியை நிறுத்தட்டுமே, உனக் கொரு 3டினர் பாக்கெற்”
'நோ. ப்றொயிலர் வாங்கு, உனக்குச் சாப்பாடு இண் டைக்கு என்னுேடைதான்'
"சரி உன்ரை விருப்பம்"
ஷராஸுக்கு அண்மையில் ராக்சியை நிறுத் தி யவன், ப்றொயிலரோடும் இரண்டு போத்தலோடும் வந்தான்.
'என்ன போத்திலது?'
ஸ்ரவுட் •
'பூ ஸ்ரவுட் குடிகாரன்தான நீ நான் என்னமோ ஏதோண்டு பயந்திட்டன்" ་་་་་་་་་་་་་་
'எனக்கு இதுதான் பிடிக்கும் அதுவும் இருந்திட்டுத் தான்' s
ராக்சி பிப்பின் லேனில் நுழைந்து, இடது பக்கமாக மூன்ருவது வீட்டின்முன் நின்றது.
அது மாடிவீடு. விமலா மாடியில்தான். குடியிருந்தாள். மாடி முழுவதுமே அவளுக்குத்தான்.
6

Page 45
82.
அவளது வரவேற்பறை கச்சிதமாக இருந்தது. அழகா கவும், அவளது ரசனைக்கேற்பவும் இருந்தது. வரவேற்ப றையை ஒட்டி மேற்கே இரு அறைகள். கிழக்குப் பக்கமாகக் சிகிச்சன்", "அற்ராச்பாத்” எல்லாம் இருந்தன.
*சிவா! 'ரேக் ரெஸ்ற், ஒரு நிமிஷத்திலை குளிச்சிட்டு வாறன், வத்து உனக்குச் சமைச்சுப் போடிறன்'
"சமையல் எனக்கு இண்டைக்கு மட்டும்தான?" அவள்-அவனை என்ன? என்பதுபோல் பார்த்துநின்முள். 'விமல். டியர். . நான் உன்னை. . நீ எனக்கு வேணும்” சொற்கள் தடுமாற, அவளை அவன் நெருங்கினன். *சிவா டோன்பி சென்ரிமென்ரல். இதைச் சொல்லத் தான் நீ இண்டைக்குக் குடிச்சனியா?"
Gua) '' அவள், தன்னை நோக்கி வாஞ்சையோடு நெருங்கிவரும் அவனையே பார்த்தபடி நின்றள். அவள் கண்கள் பனித்து விடுகின்றன.
**விமலா டோன்பி சென்ரிமென்ரல்" விமலா உணர்ச்சிவசப்பட்டவளாய் அவனை அணைத்து, அவனது கண்கள், கன்னங்கள், உதடுகள் என்று மாறிமாறி முத்தமிட்டாள். பின்பு சொன்னுள்:
**பிளிஸ் சிவா ஸ்ரே வித் மீ ரு நைற்’ "நோ.நோ. அந்த சேயிங் என்ன? ஆக்கப் பொறுத் தவன் . ."
fs e G UA - 8 ps ஆறப் பொறுக்கக் கூடாதா! “ “GsFrr......** இருவரும் குலுங்கிச் சிரித்தார்கள். இறுக்கம் குலைந்த அந்தச் சிரிப்பில் எவ்வளவு நிறைவு.
தை "77

உறவுகள்
கொட்டாஞ்சேன மாரியம்மன் கோவில் அடுத்து, வடக்கே கிளை பிரியும் சந்தில் - பள்ளத்தில், ஒரு மாடி வீட் டின் கீழ்ப்பகுதியில், ஒதுக்குப்புறமாக உள்ள ஓர் அறிையில் அவனும் அவளும் குடியிருக்கிருர்கள்.
இருவருமே வேலை செய்வதால் மாலை ஐந்து மணிக்கு மேல்தான் அவர்களை அந்த அறையில் காணலாம்.
பகற்பொழுதெல்லாம் அவர்களது அந்த அறை பூட்டியே கிடக்கும். அப்பொழுது அவர்கள் எங்காவது "அவுட்டிங்" அல்லது நண்பர்களது வீடுகளுக்குப் போயிருப்பார்கள். சில சமயங்களில் இலக்கியக் கூட்டம் அது இதென்று அவள். போக - பிடிக்காத, பிடிபடாத விஷயமானலும் கூட - அவ னும் போவான். அந்த நடைமுறைகூட இப்பொழுது சிறுகச் சிறுகக் குறைந்துவிட்டிருக்கிறது.
அவள் அரசுத்துறையில் எழுதுவினைஞராகப் பணியாற் றுகிருள். அவன் தனியார் கொம்பனியொன்றில் சொற்ப ஊதியத்தில் ஏதோ உத்தியோகம் என்று பேர்" பண்ணுகி

Page 46
84
முன். இருவரது ஊதியமும் "அப்படி இப்படித்'தான். இருந் தும் அவளுக்குச் சம்பளம், சலுகைகள் சற்று அதிகம். பட் டதாரியான அவன் இருநூறுக்கு "மட்டையடிக்க அவள் முந்நூற்றைம்பதுவரை எடுத்தாள்.
இருவருடைய மாத வருமானமும் கழிவு கள் போக ஐந்நூறு ரூபாயைத் தாண்டாத நிலை. அதில், அவர்கள் குடி யிருக்கும் அறை “சுளையாக' நூறை வாடகையாக விழுங்கி விடுகிறது, மீதத்தில்தான் குடித்தனம் நடைபெறுகிறது.
இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணம் நடந்தபின் நாலைந்து மாதங்கள் இவர்களிடையே எவ்வளவு நெருக்கமும் நெகிழ்வும். அதன்பின், அவர்களது தாம்பத்திய உறவில் விழுந்துவிட்ட சிறுவிரிசல், நிரவுபடா மற் பெரிதாகி, இப்பொழுதெல்லாம் ஒரு வருஷ காலமாக இருவரும் எப்பொழுது பிரிந்துபோவது என்ற அபாயத்து டன் இருக்கிருர்கள்.
இதற்கெல்லாம் அவளைக் காரணம் சொல்ல முடியாது. அவன்தான் காரணம். பிரிந்து போவதிற்கூட அவள் ஆர்வங் காட்டவில்லை. அவன்தான் திடீரென இப்பொழுது "அது பற்றி மிகுந்த ஆர்வங் கொண்டவணுப் பேசுகிருன், அது பேச்சளவில்தான் என்பது அவளுக்குத் தெரியும்.
அவளில்லாமல் அவனல் இருக்க முடியாதென்பது அவ ளுக்குத் தெரியும் அவன்மீது அவளுக்கு அனுதாபம் உண்டு. ஆணுல், வரவர அவனது முரட்டுத்தனங்களால் வாழ்வில் - அவனுடன் வாழ்வதில், ஒரு கசப்பு லேசாக அவளுக்கு ஏற். பட்டிருக்கிறது. இருந்தும் அவனுடன்தான் அவள் வாழ்கின் ருள். இறுதிவரைக்கும் அவனுடன்தான் வாழ்ந்துவிடுவது என்றும் உறுதிபூண்டுள்ளாள். ஆனல், எதற்குமே அவசரப் படும் அவன் இவளுடன் இறுதிவரை வாழ்ந்துவிடுவான? லேசான ஒரு பயம் அவளை அலைக்கழிக்கவே செய்கிறது,

s
இந்த வாழ்க்கையிலும், அவளுக்கு ஓர் இனிமையான பகுதி உண்டென்ருல் அதுதான் அவளது எழுத்தும் இலக்கிய மும், அதில் அவள் தன்னை ஈடுபடுத்தும்போது-தனது வாழ் வின் அவலங்களையே மறந்துவிடுகின்ருள். r ---
அவள் அதிகம் எழுதுவதில்லை. எழுதியதெல்லாம் அற் புதமாக வந்திருக்கின்றன. அவள் எழுதுவதற்கு ஒருவகையில் தூண்டுகோலாய், துணையாயிருப்பவன் “அருண்" என் கிற அருணசலம்தான். அந்த அ ற் பு த மா ன எழுத்தாளனது தொடர்புகள் அவளது படைப்புக்களில் எத்தகைய மா ற் றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆரம்பகாலத்தில், சதா முக்கோணக் காதல் க  ைத க ளேயே எழுதிக் குவித்துவந்த அவள், இப்பொழுதெல்லாம் மனிதன்பால் அதீத நேயம் பூண்டு, வர்க்கநலம் பேணும் எழுத்தை வடிப்பதென்றல்! அந்த மாற்றம் மகத்தான ஒன்றுதான்.
வேலை முடிந்து, கந்தோரிலிருந்து நேராக வீட்டுக்கு வந் தவள் அறைக்கு முன் னு ல் பாற்காரன் வைத்துவிட்டுச் சென்ற பால்போத்தல் சரிந்து உடைந்து கிடப்பதை க் கண்டு, சிறிதும் பதட்டமில்லாமல் - உடைந்த போத்தலை அகற்றிவிட்டு, அறைக்கதவைத் திறந்தாள்.
அறை இருட்டாகவே இருந்தது. ஜன்னலைத் திறக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. அலுப்புடன் கையில் இருந்தவற்றை அங்கு கிடந்த மேசையில் போட்டு விட்டு, சோபாவில் சோர்வுடன் சாய்ந்துகொண்டாள்.
சற்று அசதியாக இருக்கவே, அயர்ந்து தூங்கிவிடுகிருள். அவள் விழித்தபொழுது "லயிற்’ எரிந்துகொண்டிருந்தது.
மணியைப் பார்த்தாள். ஆறுக்குப் பத்து நிமிடங்கள். யார் லயிற் போட்டது. அவன் வந்துவிட்டானே?

Page 47
86
மனம் பதைத்தவளாய் எழுந்துகொண்டாள்.
அவன் வந்ததும் அவனுக்குக் கோப்பி கொடுக்க வேண் டும். அல்லது அவன் கோபமுற்று, அதையே சா ட் டாக வைத்து ஒரு பாட்டம் நாகரிகமில்லாமல் திட்டித்தீர்த்துவிடு வான். இது இப்பொழுது ஒருசில நாட்களாய் நடைபெற்று வருகிறது. சிறு உரசலே அவனுக்குப் போதுமானதாய்விடு கிறது. அவன் நெருப்பாய் மாறிவிடுகிறன். அப்படியொரு நிலை இப்போது வேண்டாமென அவள் பயந்து "சுற்று முற் றும்" பார்த்தாள்.
அவன் வந்த சிலம்னில்லை.
அவளே "லயிற்ரை", நித்திரைச் சோம்பலுடன் எழுந்து போட்டுவிட்டு, மீண்டும் படுத்திருக்கவேண்டும்.
சோம்பலையும் கோழித்தூக்கத்தையும் உதறியபடி எழுந் தவள். சேலையை உருவி எறிந்துவிட்டு, குளியலறைக்கு - பழைய சாக்கால் மறைப்புக்கட்டிய-குழாயடிக்குச் சென்ருள்.
குளித்துவிட்டு வந்தவள், "கவுண? போட்டபடி கண் ணுடியில் தன் முகத்தைப் பார்த்தாள். தலையைக்கூட வார வேண்டுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. கூந்தலை ஈரம் சொட்டச் சொட்ட வாரி முடித்தபடி நிமிர்ந்தபோது அவ ளது பார்  ைவ, அவனும் அவளும் திருமணத்தின்போது எடுத்த படத்தின்மீது தரித்தது. கசப்பான ஓர் உணர்வின் நெருடலுடன் அவள் லேசாகச் சிரித்துக்கொண்டாள்.
OO Ο Ο Ο Ο d o i o
அவர்களது திருமணம் ஓர் அவசரத்துடன்தான் நடந் தது. அந்த அவசரத்துக்குக் காரணமே அவன்தான். இவள்
எவ்வளவு 'நிதானமாயிருக்கிருளோ அதற்கு எதிரிடையாக அவன் எதற்குமே அவசரப்படுவான்,

87
அவள், அவனை முதன்முதலில் கொழும்பில் சந்தித்தது, கொட்டாஞ்சேனை பஸ்ஸில்தான். வெள்ளவத்தை பஸ்தரிப் பில் ஏறியவன் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண் டான். : .فت. ش அவளை, இவன் யாரோ ஒரு பெண் என நினைத்து, இயல் பான யாழ்ப்பாணத்துக் கூச்சத்துடன் ஒதுங்கியே இருந்து கொண்டான். r
எதேச்சையாக இவனது பக்கம் திரும்பிய அவள்:
"யாரது சந்திரன?' என்று புன்னகைத்தாள்.
அவனுக்கு அவளை உடன் யாரென அறிந்துகொள்ள முடியவில்லை. பின் ஒருவாறு அனுமானித்துக்கொண்டான்.
‘ஓ ..! எத்தனை வருஷங்களுக்கு முந்திக் கண்டது.! ஒல்லியாய் கறுப்பாய் உடம்பிலே சதைப்பிடிப்பே இல்லாமல், அழுக்குப் பாவாடையும் கிழிஞ்ச சட்டையுமாய் . மூக்கில் சதா சளிவழிஞ்ச தடம் புண்ணுயிருக்கும் கோலத்துடன் திரிந்த கமலாவா இவள். வினுசியின்ரை மகளுக்கு இவ் வளவு எழுப்பமே ...!"
கோவியப் பெட்டை என்ற நினைப்பு வந்ததும் இன்னும் சற்று ஒதுங்கியே உட்கார்ந்துகொண்டான்.
அவளை அவன் பொருட்படுத்தியதர்கத் தெரியவில்லை. அவளாகவே மீண்டும்? "மட்டுக்கட்டேல்லைப்போல்ை...?? என்ருள்.
'தடிவினசியின்ரை மகள்தானே. தெரியுது. நல் லாத் தெரியுது”*
"எங்கை இந்தப் பக்கம்' 'நானே. நான் கிளறிக்கல் சேர்விஸிலே எடுபட்டு . இன்கம்ராக்ஸிலை வேலை செய்யிறன்"
இேன்கம்ராக்ஸோ,..???

Page 48
፩8
அவன் பொழுமையால் வெந்துபோகிறன் என்பது அவ ஞக்குத் தெரிகிறது.
ஏதோ தனியார் கொம்பனியொன்றில் "அரைகுறை" ஊதியம் பெறுபவனுக்கு, அவள் அரசாங்க உத்தியோகத்தி லிருப்பது பொருமையை ஊட்டியதில் வியப்பில்லைத்தான்.
“சேர்விஸிலே சேர்ந்தது பென்சன் ஸ்கீம் இருக்கேக் கையோ? இல்லைப் பிந்தியோ?"
"இருக்கேக்கைதான். அதுசரி இப்ப இந்த வரவு செல வோட்ை எல்லாருக்கும் திரும்பவும் பென் சன்’ எண்டு தானே நிதிமந்திரி அறிவிச்சிருக்கிருர்."
"ஓ, நான் அதை மறந்திட்டன். அதுசரி நீ சிவ்ானந்த வீதியிலேயே இருக்கிறது??? w
"ஓம். ஓம். உங்களுக்கு எப்பிடித் தெரியும்." "அங்கையொரு "கேள்ஸ் ஹொஸ்ரல் இருக்கு அது தான் கேட்டனன்" ,
'நீங்களும் கொட்டாஞ்சேனையிலைதானே இருக்கிறது?" "ஒம். மாரியம்மன் கோயிலுக்குப் பக்கத்திலை" அவர்கள் இருவரும் அதன்பின் எதுவும் பேசிக்கொள்ள வில்லை. ஆனல் அவன் அடிக்கடி அவளை ஒரக்கண்ணுல் பார்த் துக்கொண்டான்.
"இவள். இவள் கமலா. இவ்வளவு அழகாக எப்பிடி இருக்கமுடியும் கறுப்பி-இளஞ்சிவப்பாய் இருக்கிருள். . எலும்பாய்க் கிடந்தவள் ஹாம் . . என்னமாதிரி. ஒ. எல்லாமே பூரிச்சுக் கிடக்குது."
அவள் பஸ்ஸைவிட்டு இறங்கி நடந்தாள். இவனும் தன் னுணர்வு இழந்தவனுய் அவளுடன் அவளது விடுதிவரைக் கும் வந்து விடுகிருன், பின் ஒருவாறு தன்னைச் சுதாரித்துக் கொண்டு அவளிடம் விடைபெற்றுக்கொண்டான்.

89
அன்றிலிருந்து அவ ன் அவளை அடிக்கடி சந்தித்தான். சந்திக்காவிடில் அவனுக்கு எதுவுமே ஓடாது. தலைவெடித்து விடும்போலிருக்கும்.
"கோவியப் பெட்டைதானே த ட் டிப் பாத்தால் எடு பட்டிடுவாள்' என்ற கெட்ட எண்ணம்தான் அவனுக்கு முதலில் இருந்தது. ஆனல், அவளது அறிவு, அவள் நடந்து கொள்ளும் விதம், அவள் கைநிறையச் சம்பாதிக்கும் பணம் அவள் எடுக்கவிருக்கும் பென்சன்? என்ற எதிர்காலப் பாது காப்பு என்று, எல்லாம் சேர்ந்து அவளை மணந்துகொண்டால் தான் என்ன? என்ற உணர்வை அவனுக்கு ஏற்படுத்தும் திடீரென தனது குடும்பத்திற்குப் பரம்பரை பரம்பரையாக 'குடிமையாக இருந்த வம்சத்தின் வித்து அவளென்பது நினைவு வந்ததும் அவன் அருவருப்புடன் உடம்புகூசி 'தூ." என்று காறித் துப்புவான்.
என்ன இருந்தென்ன. அவளது இளமையிலும், இனிமை யான வசீகரத்திலும் இவனது ஆண்மை கரையவே, அவன் அவளைத் தீவிரமாகக் காதலிக்கத் தலைப்பட்டான்.
தனது எண்ணத்தை, காதலை இவன் ஒருசமயம் அவளு டன் விகாரமாதேவிப்பூங்காவில் இருந்தபொழுது வெளியிட் டான். அப்பொழுது அவள் எதுவித உணர்ச்சிப் பாதிப்புக் கும் உட்படாதவளாய், விழுந்து விழுந்து சிரித்த சிரிப்பு இவனது உடலையே குறுக வைத்துவிட்டது.
"இவள் என்னை. . , எனது காதலை ஏற்க மறுத்துவிடு வாளோ..!" என்று உணர்ச்சி வேகத்துடன் திடுக்குற்று, அவளை - அவளது காதலை யாசிப்பதுபோல் அவளையே பார்த் தான.
"சாதியிலை குறைஞ்ச பெட்டை . அதுவும் தாவாடிக் காரருக்குக் குடிமை வேலைசெய்த சின்னன்ரை பூட்டி . . முத்தன்ரை பேத்தி. தடிவினுசியின்ரை மகள் . இந்தப் பெட்டையை முடிச்சிட்டு உங்களாலை ஊர்ப் பக்கம் தலை காட்டேலுமே”

Page 49
90
அவள் பேசி முடிக்கவில்லை, அவன் திடீரெனஉன்மத்தம் கொண்டவனுய், தான் தீவிரமாக் அன்புசெலுத்தியும் அவள் தன்மீது அன்பில்லாமல் நடந்துகொள்கின்ருளே என்று எண் ணியவனய், அவளது கன்னத்தில் அறைந்துவிட்டு, அவ்வி டத்தை விட்டுச் சென்றன்.
,அந்த அடி அவளுக்கு வலிக்கவில்லை. அவனது அன்பு ۔۔۔۔۔۔ அவன் தீவிரமான ஒரு லட்சிய வெறியுடன் காதலிப்பது அவளுக்குப் புரிந்தது.
காதல், இலட்சியம் என்ற தங்கக் கோபுர நினைவுகள னைத்தும் அர்த்தமற்றவை என்பது அவளது முடிவு. இருந் தும், எவனே ஒருவனை மணக்கவேண்டும், அவன் இவனுகவே இருந்துவிட்டுப் போகட்டுமே, என்று நினைத்தபடி விடுதிக்குத் திரும்பினள். -
அன்றைய சம்பவங்களின் பின் ஒருவார காலமாக அவன் அவளைச் சந்திக்கவில்லை. இந்த ஒருவாரமும், அவனை இவள் அடிக்கடி நினைத்துக் கொண்டாள். அவனது குழந்தைத்தன மான முகம், அதில் விஷமத்தனமாகக் குறுகுறுக்கும் கண்கள், சிவந்த உதடுகளுக்கு மேலாய் படர்ந்துகிடக்கும் அடர்த்தி யான மீசை. அனைத்தும் அவளை, அவன்பால் ஆர்வங்கொள் ளவே வைத்தன. அவனுக்காக அவள் லேசாக ஏங்குவது போன்ற உணர்வின் உறுத்தல் வேறு. அவளால் தன்னையே நம்பமுடியவில்லை.
"அவனது கொம் பனிக்கு ப் போன்பண்ணிப் பார்ப் போமா?’ என்று நினைத்தவள் அந்த எண்ணத்தையே மாற் றிக்கொண்டாள்.
அவனே தன்னிடம் பேசக்கூடும் என்று எதிர்பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே இரண்டு நாள் கழித்து, அவள் கந்தோரில் இருந்த சமயம் அவன் இவளுடன் போனில் தொடர்புகொண்டு, மாலை கந்தோர் முடிந்ததும் விடுதிக்கு வருவதாகச் சொன்னன். அப்பொழுது அவளும் ஏதோ பேச

9.
முயன்ருள். அவள் பேசுவதற்கு முன்பாகவே அவன் போனை மறுமுனையில் வைத்தது, அவளுக்கு ஏமாற்றமாய்ப் போய் விட்டது.
மாலை அவள் விடுதியில் இருந்தபொழுது, அவளைத் தேடிக்கொண்டு முதலில் வந்தவன் அருண்தான். தான் புதி தாக எழுதிய கதையினைக்காட்டி அவளது கருத்தினை அறிய வந்திருந்தான். பிரசுரத்திற்குப் போகுமுன் பரஸ்பரம் அவர் கள் கருத்துப் பரிம்ாறிக்கொள்வதுண்டு.
அவர்கள் கதையின் உள்ளடக்கத்தைப் பற்றித் தீவிர மாக அலசிக்கொண்டிருந்த பொழுதுதான் இவன் அங்கே வந்தான்.
அவனை வாருங்கள் என்று கூறியதுடன் "அருணையும்? அவனுக்கு அறிமுகம் செய்துவைத்தாள். பின் கதையைப் பற்றியே அதிகம் பேசியது இவனுக்கு மிகுந்த எ ரிச் சலை ஊட்டியது.
“என்ன எழுத்தோ. என்ன நட்போ ...!", அவளது
ஈடுபாடு தன்னில் முழுமையாக லயிக்காமல், எழுத்தென்றும்
தோழமை என்றும் சிதறுவதை அவன் விரும்ப @l)ól)。 W
இருந்தும் பொறுமையாக இருந்தான்.
அருண் ஒருமாதிரி விடை பெற்றபொழுது -இவன் அவ ளைப் பார்க்க, அவள் பரபரப்புடன் வீதிவரை சென்று அரு ணுக்கு விடைகொடுத்தது, இவனுக்கு ஏனே பிடிக்கவில்லை.
அருணை அனுப்பிவிட்டுத் திரும்பியவள் இவனைப்பார்த்து *கோப்பி சாப்பிடுங்கள்’’ என்று உபசரித்து, ஃப்ளாஸ்கில் இருந்த கோப்பியை வார்த்துக் கொடுத்துவிட்டு, "இதோ இருங்கள் ஒரு நிமிஷத்திலை வாறன்’’, என்று உள்ளே சென்ருள். د’

Page 50
92 -
தன்னை ஓரளவு அலங்கரித்துக்கொண்டு வெளியே வந்த வள்: "நூல் நிலையம் வரைக்கும் போய்வருவமே?' என்று அவனை அழைத்தாள்.
அவன் ஏதும் பேசாம்ல் அவளைப் பின்தொடர்ந்தான். அவள்தான் முதலில் பேசினுள்: "என்ன கோபமே??
A ‘'எதுக்கு.???
'இல்லை. அண்டைக்கு என்னமாதிரி கோபத்திலை உங் களே மறந்து என்னை அடிச்சிங்க ...”*
"ஓ..! அது. அது . என்னை மன்னிச்சிடு. உனக்கு. உனக்கு . என்ரை அன்பு விளங்கேல்லை."
'விளங்காமலா உங்களுடன் வெள்ளிக்கிட்டிருக்கிறன்"
'வெளிக்கிட்டது சரி. ஆனல் இது இடைநடுவிலை.?"
"நிக்காதெண்டுதான் நான் நினைக்கிறன்'
"சரி. சரி. அதிருக்கட்டும் கமலி, உன்ரை அன்பு. எனக்கு. . எனக்கு மட்டும்தான் வேணும். நீ பிறருடன், அதிலும் ஆண்களுடன் பேசுவதை என்னலை பொறுக்க முடி யேல்லே. ஆரிந்த அருண்...? சரியான எழுத்துப் பயித்தியம். இவன் உன்னேடை எவ்வளவு நெருக்கமாப் பழகமுடியுது"
"போதும் போது ம் அசட்டுப் பிசட்டென்று உளரு தேங்க. அவர் எனது நண்பர். எழுத்துலகத் தொடர்பு - தோழமை, இதைவிட ஒண்டுமில்லை. உங்கடை, மனசுதான் வீணுக் குழம்பிக் கிடக்குது' -
அன்று அவர்களிருவரும் வெகுநேரம் வரையில் நூலகத் தில் - வாசிப்போர் பகுதியில், அமைதியாக-தங்களைப்பற்றி, தங்கள் எதிர்க்ாலம்பற்றியெல்லாம் தர்க்கித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

93
"இன்னும் சில தினங்களிலை பதிவுத் திருமணத்தை வைத் துக்கொள்வமே? அவன் நச்சரித்தான்.
அதற்கு அவள் மெளனமாகப் புன் ன கை பூத்தாள். அந்த மெளனம், புன்னகை எல்லாம் அவனுக்கு அவளது காதலை உணர்த்தியிருக்க வேண்டும்.
அவன் சூழ்நிலையையே மறந்தவஞய் அவளது காதின் கீழ்ப்புறத்தில், கழுத்தில் முத்தமிட்டான்.
அவள் சிலிர்த்து, இவனைப் பார்த்து மீண்டும் சிரித்தாள். அந்த இனிமையான சந்திப்பின் ஒருவார காலத்தின் பின்பு, அவர்களிருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண் L-Tria56ir.
அவர்களது திருமணத்திற்கு அவனது நெருங்கிய நண் பர்கள் சிலரும், இவளது தோழிகளும், அருணும் வந்திருந்து வாழ்த்தினர்.
இவர்களது பெற்றேர்களுக்கு "இது விஷயம்" உடனே எதுவும் தெரியாது. தெரிந்தபொழுது இவர்கள் எதிர்பார்த் ததுபோல் எதுவித பூகம்பமும் வெடித்துவிடவில்லை.
அவளது பெற்றேர்கள்: "யாரது நம்மடை தாவாடிப் பெரிய வீட்டுத் தம்பியே. சந்திரனு?" என்று மகிழ்ச்சி தெரி வித்துக் கடிதம் எழுதியிருந்தார்கள். ஆனல், அவனது தகப் பஞர் கொஞ்சம் இரத்த அழுத்தப் பேர்வழி. ஏதோ ஆவுே சத்துடன் கிறுக்கியிருந்தார். எல்லாம் வழமையான பல்ல விதான்.
"உனக்கு, இந்த வேலை செய்ததுக்கு செப்பாலடிச்ச சல் லிக்காசு கிடையாது. நீ இந்தப்பக்கம் அந்தச் சாதிகெட்ட தோடை வருவியா பாப்பம் ." என்று ஏதேதோ அற்பத் தனம்ான பிரலாபங்கள்.
அவன் கடிதத்தைப் படித்துவிட்டு இவளிடம் கொடுத் தான். அதைப் படித்த இவள் -

Page 51
94.
"இந்தக் கிழவரிடம் என்ன இருக்கிறது. வரட்டுச் சாதிப் பெருமையைத் தவிர. . இருந்த நிலபுலத்தையும் சும்மா இருந்தே சீட்டாடியும், குடித்தும் குலைத்துவிட்ட இவரை எந்த நிலையிலும் ஒரு பாதுகாப்பாக சந்துரு நினைச் சிருப் பாரா..? இல்லை. இருக்காது. இவரது தனவந்தத்தனமெல் லாம் உண்மைக்குப் புறம்பான வெறும் கற்பனைகள்தான். சும்மா இருந்து சுகித்த பேர்வழி - உள்ள தை யெ ல் லாம் சிதைத்து சாதி வெள்ளாளர் என்ற பட்டயம் மட்டும் எஞ்சி நிற்கும் இவர் மிகவும் இரக்கத்திற்குரியவர்" என்றெல்லாம் நினைத்துக்கொண்டாள்.
அவர்களிருவரையும் இவை எந்த விதத்திலும் அன் று பாதித்துவிடவில்லை. ۔۔۔۔۔۔۔
Od OO Ο Ο o Ο Ο
பழைய நினைவுகளில் மனதை அலையவிட்டவள், "பட பட" எனக் கதவு தட்டப்படும் ஓசைகேட்டு எழுந்து திறந் தாள். ...
அவன்தான் வந்திருந்தான்.
வழமைபோல அவனது முகம் சுரத்தற்று - ஆனல் சற் றுக் கடுகடுப்புடன் இருந்தது. அவள், அவர்கள் மணவாழ்வில் ஈடுபட்ட ஆரம்ப நாட்களில் அவன் முகம் இருந்த மலர்ச் சியை ஏனே அப்பொழுது நினைவு கூர்ந்தாள்.
அவன் வந்ததுமே கோப்பி குடிப்பான். எனவே, அதனைத் தயாரிப்பதற்காக உள்ளே போனவள், மீண்டும் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவனது முகத்தோற்றம் ஏனே அவ ளுக்கு மிகுந்த பயத்தை ஊட்டியது.
அவன் இப்பொழுது சில நாட்களாக, சீதனம் என்று ஏதோ பிதற்றி சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம்

95.
இவளை அநாகரிகமாக ஒன்றுக்கும் வக்கில்லாத - வகையில் லாத தரித்திரம் பிடித்தவளென்றெல்லாம் திட்டித்தீர்ப்பது வழக்கமாகிவிட்டிருக்கிறது. s
ஊரில் ஏதோ சொற்ப காணி இவளது பேருக்கு உண்டு. அதனையே விற்று, அவன் இவளைச் சீதனம் தரும்படி நச்சரித் தபொழுது இவள் அவன்பால் முதன்முறையாக வெறுப்புக் கொண்டாள். அந்த வெறுப்பு அவன் அந்தப் பிரச்சனைபற் றிப் பேசும்பொழுதெல்லாம் அதிகரிக்கவே செய்தது.
அதைப்பற்றித்தான் இன்றும் ஏதாவது அவ ன் பேச விரும்புகிருனே, அந்த அநாகரிகம்ான வார்த்தைகளை, வசை களே அவளும் கேட்கத் தயாராக வேண்டுமோ?
வேண்டியதில்லை. அந்த நினைப்பே அவளுக்கு நிம்ம தியைத் தருகிறது.
இன்றுதான் அவளது தகப்பனர் காணியை விற்று அவ னது பெயருக்கு வங்கியில் பத்தாயிரம் வரையில் போட்டிருப் பதாக எழுதியிருக்கிருர். அந்த விஷயத்தை அவள் அவனுக்குச் சொன்னபொழுது அவனது முகத்தில் லேசான மலர்ச்சி. அந்த மலர்ச்சியும் ஏனே கணநேரம்தான் நிலைத்தது. மீண்டும் அவனது முகம் இறுக்கமுற்றுக் கடுமையானதை அவள் அவ தானித்தாள். ۔۔۔۔
'இது ஏன்? அவள் சஞ்சலமுற்ருள். − சிநேகிதி ஒருத்திக்கு சம்பளம் எடுத்த கையோடு அவள் கொடுத்த கைமாற்றுப் பணம்பற்றித்தான் இவன் கேட்கப் போகிருனே? கேட்டு அந்தச் சிநேகிதி இன்னும் தரவில்லை ' என்று இவள் சொல்ல, அவன் அர்த்தமில்லாமல் இவளை ஏசுவதற்குத் தயாராக இருக்கின்ருனே? அல்லது ஏதாவது புதிதாகக் கற்பிதம் பண்ணித் திட்டித் தீர்க்கத் தன்னை த் தயார்ப் படுத்துகின்றனே?
ஒன்றுமே புரியாமல் அவள் குழம்பினுள்.

Page 52
9.
அவள் சம்பளம் எடுத்ததும் பணம் முழுவதையுமே இவன் வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். பின் அவளது தேவைகளுக்குக்கூட இவனிடம்தான் அவள் பணம் வாங்க வேண்டும்.
எதற்குமே அவனை எதிர்பார்ப்பது இவளுக்கு என்னமோ போலிருந்தது. எந்த விஷயத்திலும் அவன் சொல்வதையே இவள் கேட்டு நடக்கவேண்டுமாம். அதுதான் மனைவி க்கு லட்சணமாம். அப்பொழுதுதான் குடும்பம் குடும்பமாக இருக் குமாம். அல்லது சீரழிந்து விடுமாம். சீரழிந்துவிட்டால் இவள்
தெருவில்தான் நிற்கவேண்டுமாம்.
இதெல்லாம் அவளுக்கு அர்த்தமாகவில்லை. மிகவும் கட் டுப்பெட்டித் தனமான அந்த ஆணின் அதிகார வரம்பை அவள் ஒரோர் சமயம் உடைத்தெறிய விரும்புவதுண்டு விரும்பும் அளவிற்கு அவள் துணிவதில்லை.
அவள் மிகவும் பொறுமையாகவே இருந்தாள். அப்பொ ழுதெல்லாம் அவளது மனம் அவளது பெற்றேர்களை அவர்க ளது வாழ்க்கையை நினைத்துப் பிரமித்துப்போகும்.
"ஆச்சியும் அப்புவும் ஏழைகள்தான். எளியதுகள்தான். இருந்தும், என்னகுறை அவையின்ரை வாழ்க்கையிலை! ஆச்சி கல்லுடைக்கப் போனல், அப்பு உழவுக்குப் போவார். அவ அரிவுவெட்டப் போனல் இவர் குடுவைக்கப் போவார். இரு வரும்ே உழைத்தார்கள். இருவருமே குடும்பம் அதுஇதென்று ஒருமித்துச் செயற்பட்டார்கள். அப்புவின் அபிப்பிராயங்களை ஆச்சி கேட்பதும், ஆச்சியின் அபிப்பிராயங்க%ள அவர் கேட் பதும் ., ஓ! அவர்களது அந்த வாழ்க்கை எவ்வளவு அர்த் தமும் மகத்துவமும் நிரம்பியது."
அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்து, வாழ்ந்து பழகிய -
அத்துடன் அறிவுக்கூர்மையும் மிக்க இவளுக்கு, தங்கள் இரு வருடைய வாழ்க்கையிலுமுள்ள வெறுமை புரியவே செய்தது.

97
அவனது போக்கு இவளுக்கு ஒரு சம்யம் பிடிபட்டும், பிடிபட மறுத்தும் அலேக்கழித்தது. இந்த முரண் சிறுகச்சிறுக அவர் களது குடும்ப வாழ்வின் அ மை தி  ையக் குலைத்துவிடுமோ வென்று அவள் பயந்தாள். அதுமட்டுமல்ல, அவள் மிகுந்த பயத்துடன் எது நடக்கக் கூடாதென்று எதிர்பார்த்திருந் தாளோ அது அவனது வாயாலேயே அவள் எதிர்பாராத வகையில் வெளிப்ப்ட்டபொழுது அவள் மிகுந்த வேதனை யுற்ருள்.
அவன் இப்பொழுது அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை கள் சாதி சனத்துக்கை சடங்கு முடிச்சிருக்கலாம், எளியது களை முடிச்சால் இப் படி த் தான் கிரிசைகெட்டு அலைய வேணும்."
அவள், இந்த வார்த்தைகளால் ம ன ம் தளர்ந்துதான் போனள். −
தன்னை மறந்த நிலையில் பழையதையும், புதியதையும் அசைபோட்டவளுக்கு "ஐயோ அவன் கோப்பி கேட்பானே" என்ற நினைப்பு வந்ததும், பாலில்லாமல் கோப்பியைத் தயா ரித்து எடுத்துச் சென்ருள்.
அவன் கோப்பியை வாங்கி, திடீரென அவளை நோக்கி வீசினன். அவள் சற்று ஒதுங்கவே அது அவளது இடது தோளில் பட்டுச் சிதறியது. சுடுகோப்பி பட்டதும் துடித்த வள்: 'சீ. என்ன பைத்தியம்மாதிரி . .' என்று முணு முணுத்தாள். - W−
"ஒமோம். பைத்தியம்தான். உன்னேடை இருந்தால் பைத்தியம்தான் வந்திடும்."
"சத்தம் போட்டுப் பேசாதையுங்க. வெக்கமாயிருக்கு"
‘'எது. எதடி வெக்கம். ஊரெல்லாம் அவன் அந்த அருணுேடை சுத்திறது வெக்கமில்லை. நா. நான் பேசி றதுதான் அவவுக்கு வெக்கமாயிருக்கு...”*

Page 53
98.
அவன் புதிய பிரச்சனையொன்றில் சிக்கித் தவிக்கின்றன் சான்பது அவளுக்குப் புரிந்தது. இதுவரையில்லாத பிரச்சனை, அதுபற்றி இன்று பேச ஆரம்பித்திருக்கிருன்.
இன்று காலை பத்து மணியளவில் அவள் தனது கதைத் தொகுதிக்குக் கோட்டேசன்’ எடுப்பதற்கு ஆட்டுப்பட்டித் தெருவரைக்கும் போக வேண்டியிருந்தது. “சோட் லீவில் போயிருந்தாள். வழியில் அருணைக் கண்டு அவனுடன் அச்ச கம்வரை போனதைப் பார்த்துவிட்டு "இவன். இப்படி நடந்து கொள்கிருனே' என நினைத்தவள்
"அதா. அது. நான் .'
‘போதும் . போதும் உன்ரை பசப்பல். அவன் சச்சி இதைச் சொல்லேக்கை. எனக்கு இடுப்பிலை சீலை இல்லை."
**அவன் சொல்லிறதை நம்பிறயள் . நா. . நான் சொல்லிறதை. ." -
'ஓ .! நீ சொல்லிறறை நம்பிறன். . நல்லவடிவா நம்பிறன். உனக்கு. கதை. கதையெண்டு அவனேடை சுத்திறது இப்ப சாட்டாய்ப் போச்சில்லை.?"
gr*
LLLLLL LLSS S0L0LLLS SLLLL S SLLLLLLLzSLLLLLLSLLLLLL
அவளது மெளனம் அவனைக் கோபமூட்டியது. அவன் அவளை மேலும் வம்புக்கு இழுத்தான்.
அவளுக்கும் அருணுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அந்தத் தொடர்புகளுக்கு இடைஞ்சலாகத் தான் இருப்ப தாக அவள் நினைப்பதாகவும், கையும் மெய்யுமாக இருவரை யும் பிடித்து மானபங்கப்படுத்தப் போவதாகவும், ஏதேதோ கூறி அவன் மேன்மேலும் தன்னைச் சிறுமைப்படுத்திக்கொண்ட
6. - ܐ
அவளால் என்ன செய்யமுடியும். அவனுக்கு இந்த நிலை யில் என்ன சமாதானம் சொல்லமுடியும். அவள் தனது

99
தூய்மைபற்றி அவனுக்குச் சொல்வதையே அப்பொழுது அவ மானமாகக் கருதி ன ள். அப்படி அவள் சொன்னலும், "இவன் நம்புவான? நம்பமாட்டான்", என நினைத்தவளாய் பொறுமையாக இருந்தாள்.
இவள் பொறும்ையாக ஏதும் பேசாமல் இருக்கரே அவ னுக்கு மிகுந்த எரிச்சலூட்டியது. அவன் ஆ.ே171) கொண் டவணுய், அவள்மேல் பாய்ந்து தனது பலம் முழுவதையுமே சேர்த்து அடித்தான். இப்படிப்பட்ட நிலை களி ல் அவன் அடிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, ஒரு குரூரமான "சாடிஸ்ற்’ராகவே மாறிவிடுவான். குழம்பிய சிந்தையுடன் இருக்கும் அவளுடன் இவன் ஒரு வகை மிருகபலத்துடன் தாம்பத்திய உறவுகூட வைத்துக்கொள்வான்.
ஆனல், இன்று அதற்கு முற்றிலும் மாறன முறையில் அவன் செயற்படுவதை அவள் உணர்ந்தாள்.
அவனது கரங்கள் அவளை - அவளது உடல்ை புதுவிதம்ா கப் பரிசீலித்தன. அவள் எதையோ இழந்துவிட்டது போல வும், அதை இவன் கண்டு பிடித்து நிரூபிப்பது போலவும் முயற்சிகள்.
அவள் முதன்முறையாக அவன்மீது இது விஷயத்தில்" வெறுப்புற்று அவனைப் பிடித்துத் தள்ளினள்.
அவன் மிகவும் வெட்கம் கெட்டத்னம்ாக: "நீ . . இன்று. இன்று அவனுடன்.. ?"
அவன் சொல்லி முடிக்கவில்லை, அவள் "தூ. . நீயும் ஒரு மனிசன?’ என்று விம்மினுள்.
அவளுக்கு எல்லாம்ே அர்த்தம்ற்றதாகத் தோன்றியது. பின், ஏதோ நினைத்துக் கொண்டவளாய், தன் இயல்புக ளுக்கு மாறக அவனை மேலும் எரிச்சலூட்ட விரும்பியவ ளாய் “ஓம் இன்று. இன்று அருணுேடை அவன்ரை அறை யிலைதான் இருந்தனன்' என்று பொய் சொன்னள்

Page 54
100
ஏதோ எச்சிற் பழத்தை, அழுகிய பண்டத்தை தொட் டதுபோன்ற அருவருப்புடன் முகம் சுழித்து அவன் அவுள் முகத்தில் காறி உமிழ்ந்தான்.
அவனது அந்த அநாகரிகமான செயல் அவளை மிகவும் பாதித்தது. உ  ைடபட்ட நெஞ்சுடன் அவள் விக்கித்து நின்ருள். s
அப்பொழுது, அவன் தீடீரெனக் குலுங்கிக் குலுங்கிப் பெரிதாகச் சத்தம்வைத்து அழுதான்.
ஆண்மகன் ஒருவன் அழுவதை அவள் கண்டதில்லை. அந்த நிலையிலும் ஆண்மை அழுவது அவளுக்கு வேடிக்கை யாகவே இருந்தது. அவள் தனது துயரங்களை ஒரு கணம் மறந்தவளாய் லேசாகச் சிரித்துக் கொண்டாள்.
அவன் ஏன் அழுகின்ருன் என்பது அவளுக்குப் புரிந்தது. அர்த்தமில்லாமல் ஏதேதோ கற்பனைகளைக் கற்பிதம்பண்ணி அழுவதற்கு அவள் என்ன செய்ய முடியும் அவனது பல ஹினம் அவளுக்கு அதிசயமாக இருந்தது. அத்துடன் அருவ ருப்பாகவும் இருந்தது. அவனது செயல்கள் யாவும் அவன் மீது அவள்கொண்ட அன்பை, அனுதாபத்தைக் குலைத்தன.
அவள், இவன் ஏன் இப்படி நடந்துகொள்கிருன், என்று ஆய்வதிலும் பார்க்க - இவன் தன்னுடன் இனியும் ஒட்டி உறவாடத்தான் முடியுமா? என்று தன்னையே ஒருமுறை கேட்டுக்கொண்டாள்.
"இப்படி என் உணர்ச்சிகளை யே சீண்டி வே டிக் கை பார்க்க இவனுக்கு என்ன உரி ைஇருக்கிறது? அந்த உரிமை, இதற்கெல்லாம் இடம் கொடுக்கிறதா? சீ. இவன் மனிதனே அல்ல. இந்தத் திருமணம் என்ற பந்தமே இவர்களால் எவ் வளவு கட்டுப்பெட்டித்தனமாக அர்த்தப்படுத்தப்பட்டு மலி னப்படுத்தப்பட்டு விடுகிறது."

101
அவளுக்கு ஏளுே அழவேண்டும்போல் இருந்தது. அவளும் அழுதாள். அப்பொழுது அவனும் மீண்டும் ஒருமுறை குலுங்கிக் குலுங்கி அழுதான்!
அவளுக்கு அவன்பால் எவ்வித பரிவும் ஏற்படவில்லை. மனதில் இருந்த துயர் அனைத்தையுமே உதறி எறிந்தவள், எழுந்து உள்ளே போய் குழாயடியில் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து, சமைப்பதற்காக வெட்டிவைத்துச் சமைக் காமலே கிடக்கும் காய்கறிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவ னது கட்டிலுக்குப் பக்கத்தில், நிலத்தில் பாயை விரித்து ஒன்றுமே நடவாதது போலப் படுத்துக்கொண்டாள்.
அவனது அழுகை அப்பொழுது சிறு விசும்பலாக மாறி, பின் ஒய்ந்தது.
இருவரும் துயரங்களால் அலைபட்ட களைப்பால் அயர்ந்து தூங்கினுர்கள் -
இல்லை! அவள் மட்டும்தான் உறங்கினுள். உறக்கத்தில் புரண்டவள் விழிப்புற்றுக் கட்டிலைப் பார்த்தாள். அவனைக் காணவில்லை.
அவன் எங்கே? குழாயடியில் "லயிற்’ எரிந்து கொண்டிருந்தது. பரபரப் புடன் எழுந்தவள் போய்ப் பார்த்தாள்; அங்கு அவனில்லை. மீண்டும் வந்து அறை லயிற்றைப் போட்டுப் பார்த்தாள். அவனது பெட்டி படுக்கை உடமைகளென்று எதுவுமே அங்கி ருக்கவில்லை. அவளுக்கு அதிர்ச்சியும் அதிசயமும் கலந்த ஓர் உணர்வு நிலை.
அவள் வழம்ையாகக் கந்தோரில் இருந்து வந்த தும் கழற்றி வைக்கும் தாலிக்கொடியைப் புத்தக அலுமாரியின் இடது பக்கத்து மூலையில் தேடினள். அது அங்கு இல்லை. "அவன் அதனை . அதனையும் ...!"

Page 55
0.
அவளது மனம், அதை நம்ப மறுத்தது.
“சீ... இப்படியுமா நிமிடக்கணக்கில் வாழ்வின் கட்டுக ளைத் துண்டித்துக்கொள்ள முடியும், எதிலுமே அவசரப்படும் அவன் இதிலும் அவசரப்பட்டுவிட்டானே..?
அவளுக்கு அவன் திருமணத்தன்று வாங்கித் தந்த கூறை யும் இரண்டாம் பட்டும் நினைவுக்கு வருகிறது. தனது பெட் டியைத் திறந்து பார்த்தாள். அவற்றையும் காணவில்லை. அவன் அவசரக்காரன் மட்டுமல்ல அற்பத்தனமானவனுங்கூட என் நினைத்தாள். -
அவளது பார்வை எதேச்சையாக கண்ணடிப் பீடத்தில் தரித்தது. அதில் குங்குமச் சிமிழ் இதையும் அவன்தானே பரிசாக வாங்கித் தந்தான் . இதனையும் அவன் கொண்டு
போயிருக்கலாமே !’ என நினைத்தவள், ஒ. நா. நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுகிறேன் . . இல்லை.?" என அரற்றினுள்.
அவளுக்கு அப்பொழுது ஏனே, லூஸ்"னின் கதையொன் றில் வரும் ஷ"சுன் என்ற பெண்ணும், இப்சனின் நோரா வும் நினைவுக்கு வந்தார்கள். حسبربر
அவர்களைப்போல இவளால் தாம்பத்திய உறவை வெட் டிக்கொள்ள முடியவில்லைத்தான். ஆனல், அவர்களைப்போல வும் நடந்துகொள்ளாமல் இவள் இருப்பதற்கு அவனே வழி செய்திருப்பது இவளுக்கு ஒருவகையில் நிம்மதியாக இருந்தது.
அந்த நிம்மதியே அவளுக்கு இப்போதைக்குப் போது மானது. அவள் நிம்மதியாகப் பெருமூச்செறிந்தாள்.
சித்திரை 476,