கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிறைவைத் தேடி

Page 1
ஆசிரியரைப்பற்றி
ஜனுப் சுபைர் இளங் கீரன் ஈழத்தின்முதுபெரும் எழுத்தாளர், நாவலாசிரி யர். 1948 எழுத்துலகில் பிரவேசித்த இவர் அன்றி லிருந்து முழு நேர எழுத் தாளரானார். இவரது பல படைப்புக்கள், நூல்களாக வெளிவந்தன. நாற்பது வருடங்களாக இயங்கி வரும் இலங்கை முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவ ரான இவர் ஈழத்துப் பத்திரிகைகளில் பல நாவல்கள்
எழுதிப் புகழ் பெற்றதால் நாவலாசிரியர் இளங்கீரன்" என அழைக்கப்படலானார். இன்றுவரை அவ்வாமே அழைக்கப்படுகிறார்.
1948 ல் இவர் மலேசியாவில் இருந்தபோது"தினமணி என்னும் பத்திரிகைக்கு ஆசிரியரானார். இலங்கையில் சில கால" தேசாபிமானி" தொழிலாளி' ஜனவேகம் முஸ்லிம் அபேதவாதி ஆகிய வார இதழ்களுக்கும் ஆசிரி யராக இருந்துள்ளார். 80'களின் முற்பகுதியில், தனது சொந்தப் பத்திரிகையான மரகதம்" என்னும் கலை இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டார்.
பாரதி நூற்றாண்டையொட்டி இவர் எழுதித் தயா ரித்த மகாகவி பாரதி' என்னும் நாடகம் 1982 டிசம்ப ரிலும், 1988 மார்ச்சிலும் கொழும்பில் மேடையேறியது.
1992 ம் ஆண்டில் இலங்கை முஸ்லிம் சமய, கலாசார ராஜாங்க அமைச்சு இவருக்கு விருதும், தாஜுல் அதீப் (இலக்கிய வேந்தர்) என்னும் பட்டமும் வழங்கி கெளர வித்தது. இந்து சமய, கலாசார ராஜாங்க அமைச்சும் நடத்திய சாகித்ய விழாவில் விருதும், இலக்கியச் செம் மல்" என்னும் பட்டமும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 2

இ ள ங் கீ ர ன்
சிறு க  ைத க ள்
நிறைவைத் தேடி.

Page 3
NIRAVAITH THEAD
( Ilankeeran's Short Stories)
by Zubair lankeeran
Copyright reserved
Sixty Seventh Publioation of: THAMIL MANRAM, Galhinna, Kandy.
Office Address : Thamil Manram, No. 10, Fourth Lane, Koswatha Road, Rajagiriya,
Sri Lanka,
s
Printed at : Bushra Agencies, Ms-1, India. Ph: 517893

முன்னுரை
வானொலிச் சிறுகதைகள் கட்புலனுக்கு (படிப்பதற்கு) உரியனவல்ல. செவிப் புலனுக்கு (கேட்பதற்கு) உரியன. இவற்றில் மூன்று விஷயங்கள் கவனிக்கப்படவேண்டும்.
1. வானொலிச் சிறுகதை ஒருவரால் வாசிக்கப் படுவது. எனவே, வாசிப்பவரின் குரல் நயம் மிக முக்கியம் அதுபோலவே கதையில் வசன அமைப்பும் சிக்கல் முக்கல்" இல்லாது எளிமையாகவும் ஒலிநயத்துட னும் இருக்க வேண்டும்.
2. படைப்பிலக்கியங்களைப் படிப்போர் குறிப்பிட்ட ஒரு பகுதியினர்தான். ஆனால், வானொலி கேட்போர் பெரும்பாலும் சாதாரண சனங்கள்தான் வானொலியில் சிறுகதை சொல்லப்படுகிறது. அதனால் கேட்போருக்கு விளங்க முடியாத சொல் வித்தைகள்-வார்த்தை ஜாலங் கள் வானொலியின் கதையில் இடம் பெறக் கூடாது.
3. நேரக் கட்டுப்பாடு-படிப்பதற்கான கதைகளுக்கு தேரக் கட்டுப்பாடு இல்லை. வானொலி கதைகளுக்கு நேரம் திட்டவட்டமாக வரையறுக்கப்படுகிறது. அதற் குள் கதை சொல்பவர் அதனை முடித்துவிட வேண்டும். அதற்கேற்ப கதையை அமைக்க வேண்டும்.
70-களிலும், 80-களின் முற்கூறிலும் எனது வானொலிச் சிறுகதைகள் நிறைய ஒலிபரப்பாயின. அவற் றுள் சில இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இதனைப் பிரசு ரிப்பதற்கு அனுமதி தந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தினருக்கு எனது நன்றி. இதனை வெளி பிட்ட கல்ஹின்னை தமிழ் மன்ற நிறுவனர் அல்ஹாஜ் S.M. ஹனிபா அவர்களுக்கும் என் நன்றி!
86, சேர் ராசீக் பரீத் மாவத்த
பெரியமுல்ல, சுபைர் இளங்கீரன் நீர்கொழும்பு,
நீலங்கா,

Page 4
உள்ளே.
நிறைவைத் தேடி S சிந்தையைத் தெளிவாக்கிய சிரிப்பு 13
கதாநாயகன் 19
புது மனிதன் 24 பெரிய இடத்துக்கு வந்தபோது 30
தலைப்பிறை 35
வெறும் பேச்சு 44
aanodo as išaoS SO
திருத்த வேண்டிய பிழை 57
மூடிக் கொண்ட இதயம் 64

நிறைவைத் தேடி. . .
செற்படலை திறக்கப்படும் ஒசையோடு **காதர் நானா ..!" என்ற குரலைக் கேட்டதும், நைந்துபோன வேலிக்கு முட்டுத்தடி போட்டுக் கட்டிக்கொண்டிருந்த காதர்பாவா சரேலெனத் திரும்பினார். முற்றத்தில் அசீஸ் முதலாளி நிற்பதைக் கண்டதும், சில விநாடிகள் மலைப் போடு அவரைப் பார்த்தபடி தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு 66வாங்க? என்று மரியாதையோடு வரவேற்றார்.
6என்னைக் கண்டதும் திகைப்பாய்ப் போயிடுச்சா? என்ற கேள்வியோடு அவரைப் பார்த்தார் அசீஸ் முதலாளி. -
64ஆம், திகைப்பாய்த்தான் போயிடுச்சு’ என்று லேசாய்ச் சிரித்த காதர்பாவா நீங்கதான்’ வளவுக்கு வாற தில்லையே..? கடைசியா வந்து மூணு வருசமிருக்கும்?? என்றார்.
கடைகண்ணியையும் வியாபாரத்தையும் பார்க்கிற துக்கே நேரம் பத்தாம இருக்கு. இதுகளை வந்து பார்க் கிறதுக்கு எங்க நேரம்’ என்று ஒருவித சலிப்போடு கூறி விட்டு, வளவில் மையத்திலிருக்கும் காதர்பாவாவின் சிறிய குடிலைப் பார்த்தார். . . . .
இதே சமயம், காதர்நானா குடிசைக்குள்ளிருந்து ஒரு பாயைக் கொண்டு வந்து திண்ணையில் விரித்துவிட்டு, 'நிக்கிறீங்களே, வந்து இருங்க” என்று அழைத்தார்.
அசீஸ் முதலாளி குடிசையையும் திண்ணையையும்
விரித்த பாயையும் பார்த்தார். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி கதிரைகளிலும் சோபாக்களிலுமே இருந்து பழக்கப்

Page 5
பட்ட அவர் தன் தகுதிக்கு அக் குடிசைத் திண்ணையில்அந்தப் பாயில் இருக்க வேண்டுமா என்று ஒரு கணம் யோசித்தார். மறுகணம், அதில் இருந்து பார்க்கவேண்டு மென்று தோன்றியது. உடனே திண்ணைக்கு வந்து செருப்பைக் கழற்றிவிட்டுப் பாயில் அமர்ந்துவிட்டார். அவருக்கு அது ஒரு புது அனுபவமாகவும், சுகமாகவும் இருப்பதுபோல் பட்டது.
'திடீரெண்டு வளவுப் பக்கம் வந்திருக்கீங்க. என்ன விசேஷம் ? என்று விசாரிக்கத் தொடங்கினார் காதர் தானா.
“நம்ம வளவை வந்து பார்க்கோணும், பார்க்கோணும் எண்டு கொஞ்ச நாளா நினைத்துக்கொண்டே இருந்தேன் இன்னிக்கு எப்படி? அசீஸ் முதலாளி திண்ணையில் இருந்தபடியே விழிகளைச் சுழற்றி பார்த்தார். தெரு өшптағө665 வேப்ப மரம், வளாவின் முன்பக்கம் நிற்கும் தென்னைகளில் தேங்காய்களுக்கும் குறைவில்லை. வடக்கிலும் தெற்கிலும் உள்ள மாமரங்கள் இரண்டும் பூக்கத் தொடங்கியிருந்தன. முருங்கையும் பிஞ்சு பிடித் திருந்தது. வளர்ந்து நிற்கும் இரண்டொரு வாழையும் குலைதள்ளியிருந்தது. வேலியில் பூவரசும் முருங்கையும் தழுத்துச் செழித்து அடர்த்தியாய் எல்லைகட்டியிருந்தன. முற்றம் நன்றாகக் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாகப் பளிச் சென்றிருந்தது. காலைச் சூரியனின் பொற்கிரணங்கள் தென்னோலைகளினூடாக முற்றத்தில் நிழற்கோலம் போட்டுக் கொண்டிருந்தன. மென்காற்றும் மெல்லத் தவழ்ந்து கொண்டிருந்தது.
வளவுக்குள் தெரிந்த இக் காட்சியை ஏதோ ஒரு புதுமையைப் பார்ப்பதுபோல் பார்த்தார் அசீஸ் முதலாளி.
நகரில் தெருவோரமாக மதில்போட்டுக் கட்டப்பட்ட அவரது பெரிய வீட்டில் முற்றமில்லை. வீட்டின் பின்
6

பக்கம் உள்ள றம்பைச் செடியைத் தவிர தென்ன்ையோ மாவோ, முருங்கையோ அல்லது வாழையோ கிடையாது ஜன்னலால் வெளிச்சம் வந்தாலும் வெளியில்லாமல் அக்கம் பக்கம் வீடுகள் அடைப்பாக இருந்ததால் இது போன்ற சுத்தமான காற்று தவழ்ந்து வந்து தழுவுவதில்லை மின் விசிறி சுழன்று வரும் வீட்டுக் காற்றுத்தான். பெரிய ஹோல், அறைகள், கதிரைகள், சோபாக்கள் காற்றாடி உள்ள தமது பெரிய வீட்டில் இல்லாத ஓர் அமைதி, ஒரு சுகம் அந்த வளவில் அந்தக் குடிசையின் திண்ணையில் இருப்பதுபோல் அவருக்குப் பட்டது. வளவு நல்லாத்தான் இருக்கு. காதர்பாவா அழகாயும் சுத்தமாயும் வைச்சிருக் கார், வளவுக்குள்ள காய்க்கிற தேங்கா, மாங்கா, முருங் கக்கா, வாழைக்குலை; மட்டைகள், கட்டைகள் எல்லாத் தையும் நம்ம வீட்டில் கொண்டுவந்து குவிச்சுடுவார் மனுசன். அவர் வாடகை தராம சும்மா இருந்தாலும் இந்த வளவை இப்பிடிப் பராமரிச்சு நல்லபடியா பாத்துக் கொண்டிருக்கிறதே நமக்குப் பெரிய லாபம்தான்” என்ற எண்ணங்களும் சுழன்றன. அதே சமயம் தன்னுடைய அந்த வளவுக்கு விஜயம் செய்த நோக்கத்தையும் சிந் திக்கலானார்.
அந்த வளவு நகருக்குள் ஒருபுறமாக இருந்தாலும் இப்போது வீடுகளுக்குப் பெரும் கிராக்கியிருப்பதால், வெறுமனே கிடக்கும் இந்தக் காணியில் இரண்டு வீடு களைக் கட்டிப்போட்டால், கூடிய காசுக்கு ஒத்திக்குக் கொடுக்கலாம். அந்தக் காசு இன்னுமொரு வருமானத் தைக் கொண்டுவரும் என்ற ஒரு திட்டம் மனதில் முளைத்து எழும்பியது. அதற்காகத்தான் தனது அந்த வளவைப் பார்க்க அன்று வந்தார் கேள்வியும் பிறந்தது. 66எப்படி இருக்கிறீங்க ???
*அல்லாட கிருபையால ஒரு குறையுமில்லே’ என்று மனதில் உள்ள வெளிச்சம் முகத்தில் பளிச்சிடச் சொன் னார் காதர் நானா,
7

Page 6
அசீஸ் முதலாளி ஒரு கேள்விக் குறியுடன் அவரைப் பார்த்தார். காதர் நானா தன்னைப்போல் அல்ல. ஏழைப் பாட்டாளி, புகையிலைச் சிப்பம் கட்டி அந்தக் கூலியில் ஜிவிக்கிறவர். குடியிருக்கக்கூட ஒரு துண்டுக் காணி யில்லாமல் தன்னுடைய இந்த வளவில் - இந்தக் குடிசை யில் வாடகைக்கு இருக்கிறார். இருப்பதற்கு கதிரையோ? படுப்பதற்குக் கட்டில் மெத்தையோ இல்லாமல் பாயிலும் நிலத்திலும் இருந்து, படுத்து எழும்புகிற வாழ்க்கை. பெண்சாதிக்கு நகைநட்டு, உடுத்துறதுக்கு தாராளமான துணிமணிகள் என்றெல்லாம் இருக்காது. புழங்கிறதுக்கு சில பண்டபாத்திரங்கள்தான் இருக்கும். அதுவும் மண் சட்டி பானைகள்தான். இந்த நிலையிலும் இவர் ஒரு குறையுமில்லை;என்று சொல்கிறாரே?
6ஏன் ஒரு மாதிரியாப்பார்க்கிறீங்க??? என்றார் காதர் நானா,
நீங்க ஒப்புக்காகத்தான் சொல்றீங்களா, அல் லது.??? என்று இழுத்தார் அசீஸ் முதலாளி.
*இல்லை, நான் மனநிறைவோட உண்மையாத்தான் சொல்றேன்” என்று அழுத்தமான தொனியில் கூறி விட்டு, நறுக்கிய பாக்குத் துண்டுகளை வாயில் போட்டு வெற்றிலையையும் சுண்ணாம்பு தடவி வாயில் நுழைத்துச் சப்பத் தொடங்கினார் காதர் நானா, ஒரு துண்டுப் போயிலையையும் ருசிக்குச் சேர்க்கத் தவறவில்லை.
அவர் உற்சாகமாக வெற்றிலை போட்டுச் சப்பு வதைப் பார்த்த அசீஸ் முதலாளி திடீரென்று கோதர் நானா, உங்களுக்கு எத்தனை வயசு ?” என்று கேட்டார்.
6ம்.வயசா. 65ஐயும் தாண்டிடுச்சு.??
*அப்படியா..? என்று ஆச்சரியத்துடன் பார்த்தார் அசீஸ். வஞ்சனையில்லாமல் வயசு 05 தாண்டினாலும் தலை நரைத்ததைத் தவிர, 55க்கு மேல் மதிக்க முடியாத
8

தோற்றம். உடம்பு அந்த வாக்கில் இருந்தது. முகத் திலும் வயசுக்குரிய முதுமை கோலம் போடவில்லை.
உங்களுக்குப் பல்லெல்லாம் ஆடாம, விழாம அப் படியே இருக்கா ???
*கொடுப்புப் பல் ரெண்டு போனது தவிர, மற்றப்படி ஒண்ணும் சேதமில்லே.? 66கண் எப்பிடி ???
அது ஒண்ணும் மங்கேல்ல. கண்ணாடியில்லாமப் பார்க்க படிக்க முடியுது.”
நோய்நொடி எண்டு. ??? *அதெல்லாம் ஆண்டவன் வைக்கேல்ல.??
அப்போ. விரும்பினதைச் சாப்பிடலாம்.? 6ஒ. அதில பிரச்சினையில்லே.??
காதர் நானா இதைச் சொன்னதும், அசீஸ் முதலாளி கேள்விகளை இத்துடன் நிறுத்திவிட்டுத் தன்னைப் பற்றி நினைத்தார். தனக்குப் பணத்துக்குப் பஞ்சமில்லை. நிறையச் சொத்துப்பத்துக்கள் உள்ளவன். எதுவும் இல்லையென்றில்லாமல், அனுபவிக்கிறதுக்கு எல்லா வசதிகளும் உண்டு. இருந்தும், காதர் நானா சொல்லுவது போல் தனக்கு ஒரு குறையுமில்லை என்று சொல்ல முடியுமா? தனக்கு 55 வயதுகூட ஆகவில்லை. ஆனால் 65 வயதுக்கான தோற்றம், பற்களும் விழுந்து, கட்டி யிருக்கு. கண்ணாடியில்லாமல் எழுதவோ படிக்கவோ முடியாது. நீரிழிவு நோய் வேறு, விரும்பியதை - ருசி யானதைச் சாப்பிட முடியாது. தேனீர்கூட காலையிலும் பின்னேரமும்தான் - அதுவும் சீனியில்லாமல்.
அசீஸ் முதலாளி ஒரு பெருமூச்சுடன் காதர் நானா வைப் பார்த்தார். ஒரு குறையுமில்லையெண்டு சொல்றீங் களே, ஒரு கவலைகூட இல்லாமலா இருக்கும் ??? என்று அவரையும் அறியாத பொறாமையோடு கேட்டார்,
9

Page 7
காதர் நானா பக்கத்தில் இருந்த படிக்கத்தில் வெற் றிலைச் சாற்றைத் துப்பிவிட்டுச் சொல்லத் தொடங் கினார். 8:கவலையெண்டு சொல்றதுக்கு அப்படி ஒண்ணு மில்லே. காலையில எழும்பி சுபுஹ" தொழுதுவிட்டுத் தொழிலுக்குப் போனா ஆண்டவன் ஒஜிபனம் தாறான். பின்னேரம் சாப்பிட்டுத் தேவையான சாமான்களோடு வந்ததும் சமையல் நடக்கும். குளிச்சுட்டு வந்து தேசத் தண்ணியைக் குடிச்சுட்டுப் பள்ளிக்குப் போய் மஹ்ரிபை யும் இஷாவையும் தொழுதுப்டு வந்தா சாப்பாடு. அது முடிஞ்சதும் நானும் பெஞ்சாதியும் சந்தோஷமாக கதைச் சுக்கொண்டிருப்போம். நிலவு காலங்கள்ள முற்றத்தில் இருந்து நிலவையும் காத்தையும் அனுபவிச்சபடி பக்கத்து வளவுப் பையன்கள் புள்ளங்களுக்கு கதை சொல்லுவோம். நேரமானதும் நிம்மதியாப் படுத்துடுவோம். என்னோட சீவியம் பெரும்பாலும் இப்படித்தான் கழியுது. அல்லா இந்த அளவுக்கு என்னை வைச்சிருக்கிறபோது எனக் கென்ன கவலை.?
காதர் நானா அமைதியாகவும் ஆறுதலாகவும் இதைச் சொன்னதும், அசீஸ் முதலாளி திரும்பவும் விடாமல் கேட் டார் : "உங்க புள்ளைகள் பற்றியாவது ஏதும் கவலை யில்லியா ???
எனக்கு ரெண்டு பொண்புள்ளைங்க. அதுகளைக் கட்டிக்கொடுத்து தங்கபாட்டில இருக்குதுகள் ? அது களைப் பத்தியும் கவலைப்படறதுக்கில்லை” இந்த வயசிலையும் உழைக்க வேண்டியதாயிருக்கிறதே, ஒய்வா யிருந்து வாழ முடியேல்லியே எண்டு கவலைப்படற தில்லையா ???
காதர் நானா மெல்லச் சிரித்தபடி 'உழைக்கிறதுக்குத் தான் உடம்பில் இன்னும் வலு இருக்கிறதே. ஏன் ஒயோணும் ? என்றார்.
Q

அசீஸ் முதலாளி அப்போதும் விடவில்லை, வேலு குறைஞ்சு முடியாமப் போனா என்ன செய்வீங்க? அப்போ சீவியம் போக்கறதுக்கு ஏதாவது காசுகீசு மிச்சம் புடிச்சு வைச்சிருக்கீங்களா ? என்று தொடர்ந்து கேட்டார்.
'மிச்சமா..? என்று கேட்டபடி திரும்பவும் மெல்லச் சிரித்தார், காதர் நானா. சுடலிக்கு உழைக்கிற எனக்கு மிச்சம் எப்படித் தேறும் ? அன்றாடம் சீவியம் போறதோடு சரி. மிச்சமா அப்படிக் கொஞ்சம் நஞ்சம் வைச்சிருந்தா, தொழிலுக்குப் போகாத நாள்ள அது வயித்தை நிரப்பும்.”
*எண்டாலும் உழைக்கவே முடியாத நிலை வர்ர போது என்ன செய்வீங்க???
- *நான் அதைப்பத்தி யோசிக்கிறதுமில்லை, கவலைப் படறதுமில்லை அப்படி வர்றபோது ஆண்டவன் பாத்துக் கொள்வான். அந்தப் பொறுப்பு எனக்கில்ல. அது
அவன்பாடு.??
க்ாதர் நானா இப்படி நம்பிக்கை தொனிக்கக் கூறிய தும், அசீஸ் முதலாளிக்கு பிரமிப்பாயிருந்தது. தன்னைப் பற்றித் திரும்பவும் சிந்திக்கலானார். பணம் சம்பாதிப்ப திலேயே குறியான அவர் காலையில் கடைக்குப் போனால் இரவு 10 - 11 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவார். ஞாயிற்றுக்கிழமையிலும் லீவு எடுப்பதில்லை. இப்படி இரவு பகல் என்று பாராமல் வியாபாரம், கடைச் சம்பாத் தியம் என்று வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவழித் தார். பணமும் குவிந்தது. சொத்துக்களும் சேர்ந்தன. இருந்தும் நிறைவோ நிம்மதியோ இல்லை. காதர் நானா வைப்போல் மனைவியோடு நிம்மதியாகவும் ச ந்தோஷ மாகவும் ஒரு பொழுதைத் தானும் வீட்டில் கழித்ததில்லை. இரவில் கடையிலிருந்து வீட்டுக்கு வந்த பிறகும் பணம்: காசு, வியாபாரம், கொடுக்கல் வாங்கல், இன்கம்டாக்ஸ் பிரச்சினை, வீடு வளவுகள் வாங்குவது - இவற்றில்தான்

Page 8
அவரது கவனமும் சிந்தனையும் ஒடும். அத்தோடு டயபிட்டிஸ்” பிரசர் வரக்கூடாது; கவனமாயிருக்க வேண்டும்; சாப்பாட்டு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம் என்ற டாக்டரின் எச்சரிக்கை, மாரடைப்பால் திடீரென மெளத்தாகிவிடுமோ என்ற பயம் - இந்த யோசனைகளா லும் மனம் அல்லாடிக் கொண்டிருக்கும்.
இப்படி எண்ணியதும் காதர் நானாவைப் போல், தான் வாழ்க்கையை அனுபவிக்கவில்லையே என்ற ஏக் கம் அசீஸ் முதலாளியின் மனதில் புகுந்து கொண்டது. பணக்காரனான தன்னையும்விட, ஏழை மனுசன் காதர் நானா பாக்கியசாலி என்று நினைத்துக்கொண்டார்.
இந்தச் சிந்தனையில் இருந்த அசீஸ் முதலாளியைப் பார்த்து 6என்ன யோசிக்கிறீங்க ? என்று கேட்டார் காதர் நானா,
*நானும் இந்தக் காணியில் ஒரு கொட்டிலைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நாளைக்கு இருந்தா என்ன எண்டு யோசிக்கிறேன். அப்படித்தான் செய்யப் போறன். நான் வரட்டுமா ?? என்று கூறிவிட்டு வெளியேறினார். காதர் நானா ஒன்றும் புரியாமல் அவர் போவதை ஆச்சர்யத் தோடு பார்த்தார்.

சிந்தையைத் தெளிவாக்கிய சிரிப்பு
ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டு, அரேபியாவிலும் மத்தியாசியாவிலும் இஸ்லாமியப் பேராட்சி ஓங்கி உயர்ந்து, உலகில் புகழ்பரப்பிக் கொண்டிருந்த கால்ம்
பல்கு ராஜ்யத்தின் அரண்மனை - விழிகளுக்கு விருந் தளிக்கும் கலைவண்ணம் பிரகாசிக்கும் அந்த மாபெரும் பளிங்கு மாளிகை கதிரவனின் பொற் கிரணங்களால் பளபளத்துக் கொண்டிருந்தது. W
உள்ளே அரண்மனை தர்பாரில் அமைச்சர்களும் பிரதம நீதிபதியும், படைத் தளபதிகளும், அரசனுக்கு ஆலோசனை கூறும் அறிஞர்கள், மற்றும் பிரமுகர்கள், தமது குறை தீர்க்க வந்த குடிமக்கள் முதலியோரும் தத்தம் ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். அலங்காரம் நிறைந்த தர்பார் மண்டபத்தில் குளுமையும் இனிமையும் இணைந்த வாசனை மணம் பரப்பிக் கொண்டிருந்தது.
தலைப்பாகை" வடிவமுள்ள மணிமுடி தலையை அலங்கரிக்க அரச பீடத்தில் அமர்த்திருக்கிறார் வலிவும் வனப்புமுள்ள ஓர் இளைஞர். இருபத்தைந்தே வயது நிரம்பிய அந்த இளைஞர்தான் பல்கு ராஜ்யத்தின் பாதுஷா இப்றாஹீம் இப்னு அத்ஹம்.
தர்பாரில் குடிமக்களின் (குறைகள் பரிசீலிக்கப்பட்டு அவைகளுக்கு பரிகாரம் காணும் உத் தரவுகள் பிறப்பிக்கப் படுகின்றன. வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. குடிமக்களும் வழக்குரைக்க வந்த வர்களும் திருப்தியோடு தர்பாரை விட்டுச் செல்கின்றனர். தொடர்ந்து அரசியல் நிலைமைகளும் அரசு dihLuigbloT6or பிரச்சினைகளும் ஆராயப்பட்டு தக்க முடிவுகள் எடுக்கப் படுகின்றன.

Page 9
பல்கு ராஜ்யத்தின் பாதுஷா இப்னு அத்ஹம் இளை ஞராக இருந்தாலும் அவரது நல்லாட்சி இவ்வாறு சீரும் சிறப்பும் பெற்று செழித்துக் கொண்டிருந்தது.
இரவு உணவை முடித்துக் கொண்டு அந்தப் புரத்தில் ஆறுதலாக இருந்த மன்னர் இப்னு அத்ஹம், தர்பாரின் அன்றைய நிகழ்ச்சிகளையும் ராஜ்ய விவகாரங்களையும் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறை யும் தர்பார் கூடிய பிறகு, வழங்கப்பட்ட உத்தரவுகளும், அளிக்கப்பட்ட தீர்ப்புகளும், ராஜ்ய விவகாரங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளும் சரியானவைதானா என்று ஒரு தடவை தனக்குத்தானே பரிசீலனை செய்து பார்த்து விட்டு, தான் படுக்கைக்குச் செல்வது அவரது வழக்கம் அன்றிரவும் இவ்வாறு பரிசீலனை செய்து விட்டுத் தனக்குள் திருப்திப் பட்டவராக படுக்கைக்காக எழுந்தார் Luigj64ff.
பள்ளியறைக்குள் சென்றதும் திடுக்கிட்டு நின்று விட்டார் அரசர் இப்னு அத்ஹம், பள்ளியறையில் அவர் படுத்துறங்கும் மஞ்சத்தில் பணிப் பெண் மசீனா அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.
பாதுஷாவின் பள்ளியறையில், அவரது மஞ்சத்தை தினமும் ஒழுங்கு செய்வது பணிப்பெண் மசீனாதான். வழமைபோல் அந்த இரவும் மன்னரின் மஞ்சத்தை பட்டாலும் அணிகலாலும் அழகு படுத்தி சுகந்தமான வாசனையை ஊட்டிவிட்டு, எல்லாவற்றையும் சரிவரச் செய்து விட்டேனா என்று மஞ்சத்தை மீண்டும் ஒரு தடவை பார்த்தாள். அவளுக்குத் திருப்தியாக இருந்தது. அதே வேளையில், என்றுமில்லாத ஒர் எண்ணமும் தலையெடுத்தது.
பாதுஷாவின் மஞ்சத்தைத் தினமும் அலங்கரித்து அழகுபடுத்தும் நான், ஒரேயொரு தடவை -சிறிது தேரம்
14

இதில் படுத்துப் பார்த்தால் என்ன? அந்தச் சுகத்தைச் சொற்ப நேரம் அனுபவித்துப் பார்ப்போமே என்ற எண்ணம் எறும்பைப்போல் இதயத்தில் ஊர்ந்தது. ஆனால், அது எவ்வளவு ஆபத்தானது; தற்செயலாய் பாதுஷா பார்த்துவிட்டால் தலையே போய்விடும். வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்று அறிவு தடுத்தது ஆனால் இதயத்தில் எழுந்த ஆசை அறிவை மடக்கி, பாதுஷா படுக்கைக்கு வரநேரமிருக்கிறது அதற்குள் சில நிமிடங்களாவது இந்த மஞ்சத்தில் படுத்துவிட்டு எழுந்து விடலாம். அந்தச் சுகத்தை அனுபவித்துப் பார்த்துவிட வேண்டும் என்று குழந்தைத்தனமாய் அலட்டியது
சிறிது நேரம் அவளின் அறிவுக்கும், ஆசைக்கும் நடந்த இப்போராட்டத்தில் இறுதியில் ஆசையே வென்றது மசீனா பள்ளியறையையும் அதன் வாசலை யும் விழிகளைச் சுழற்றிப் பார்த்துவிட்டுச் சட்டென மஞ்சத்தில் சாய்ந்தாள்.
இதற்குமுன் அவள் என்றுமே அனுபவித்தறியாத கற்பனையில் கூட எண்ணிப் பார்க்காத ஒரு மான சுகம் அந்த மஞ்சத்தில் இருந்தது. அதன் மென் மையும், அதனைத் தழுவிக் கொண்டிருந்த இனிமையான மணமும் பள்ளியறையின் சன்னல்களால் உள்ளே தவழ்ந்து கொண்டிருந்த தென்றலும் ஒர் இன்பமயமான மயக்கத்தை-எங்கேயோ மிதந்து செல்வது போன்ற ஒரு குறுகுறுப்பை உண்டாக்கி விட்டன. சில நிமிடங்கள் மட்டுமே இந்தச் சுகத்தை அனுபவித்து விடலாம் என்று அந்த மஞ்சத்தில் சாய்ந்த அந்தப் பேதைப் பெண் தன்னையுமறியாமல் அப்படியே உறங்கி விட்டாள்.
தனக்கே உரிய மஞ்சத்தில் படுத்திருக்கும் தனது பணிப் பெண்ணைப் பார்த்தார் பாதுஷா. அந்தப் பாவை யின் அழகும் அவள் படுத்திருந்த ஒயிலும், அவரது உள்ளத்தைக் கவர்ந்தது. இன்ப உணர்ச்சியைத் தூண்டு
5

Page 10
வதற்குப் பதிலாக, இவளுக்கு இவ்வளவு துணிச்சலா என்ற கோபந்தான், பாம்பைப்போல் சீறிக்கொண்டு எழுந்தது. சில விநாடிகளே அவளை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்த பாதுஷா மசீனா..? என்று ஆத்திரம் மேலிடக் கூவினார்.
பள்ளியறை எங்கும் பயங்கரமாக ஒலித்த பாதுஷாவின் அந்தக் குரல், மயங்கிய நிலையில் உறங்கிக் கொண்டிருந்த மசீனாவைத் திடுக்கிட்டு எழ வைத்தது. அவள் சரேலென்று மஞ்சத்திலிருந்து இறங்கி நடுக்கத் துடன் மன்னரைப் பார்த்தாள்.
மன்னரின் விழிகளில் அனல் பறந்து கொண்டிருந்தது. முகம் செம்பருத்தியைப் போல் சிவந்திருந்தது. பணிப் பெண் மசீனா பீதியில் பணியாய் உறைந்துவிட்டாள்.
அவளை அங்கேயே நிற்க வைத்துவிட்டு வேகமுடன் வெளியே போன மன்னர் அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் பள்ளியறைக்குள் நுழைந்தார். மறுகணம் அவர் கையிலிருந்த சவுக்கு, பணிப்பெண் மசீனாவின் மலர் மேனியைச் சீற்றத்துடன் கொத்தத் தொடங்கியது.
வேகமாய்ப் பாய்ந்த சவுக்கடியினால் ஒரு கணம் அலறினாள், அந்த அணங்கு. மறுகணம் ஒவ்வொரு அடிக்கும் சிரிக்கத் தொடங்கினாள்.
அவளின் சிரிப்பு அரசனை மேலும் அக்கினியாக் கியது, அவரது சவுக்கு அந்தப் பெண்ணின் பொன் னுடலை ரத்தத்தால் மெழுகியது. அப்போதும் அவள் சிரித்தாள். மேனியைக் கிழிக்கும் ஒவ்வொரு சவுக்கடி யையும் மறந்து அவள் சிரித்துக் கொண்டே இருந்தாள்.
மன்னருக்குத் திகைப்பாய்ப் போய் விட்டது. உட லைக் கொத்திக் குதறும் சவுக்கடிகளைப் பொருட்படுத்
16

தாமல் அவள் சிரிப்பது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. சவுக்கடியை நிறுத்திவிட்டு ஏன் சிரிக்கிறாய்? என்று உறுமினார், இப்னு ஹதம்.
போதுஷா அவர்களே, என்னையும் மீறி எழுந்த ஒரு ஆசையால், உங்கள் மஞ்சத்தில் சொற்ப நேரம் நான் படுத்துறங்கியதற்காக எனக்கு இந்தத் தண்டனை யென்றால், ஆயுள் முழுவதும் இதில் படுத்துறங்கும் தங்க ளுக்கு என்ன தண்டனையோ? அதனை எண்ணித்தான் சிரித்தேன்’ என்றாள் பணிப்பெண் மசீனா.
இதைக் கேட்டதும் பாதுஷா மலைத்துவிட்டார். அவளின் சிரிப்புக்குரிய காரணம், அவள் கூறிய அந்த வார்த்தைகள், மின்னலைப்போல் அவரது உள்ளத்தில் ஓர் ஒளியை உண்டாக்கித் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. கையிலிருந்த சவுக்குத் தானாகவே நழுவி தரையில் விழுந்தது.
மசீனா அதை எடுத்து மன்னரிடம் நீட்டினாள். அவர் வேண்டாம்” என்று தலையசைத்து மறுத்து விட்டு, அரண்மனை ஹகீமை உடனே வரவழைத்து உன் காயங்களுக்கு மருந்திடு. காயங்கள் ஆறும்வரை ஒய்வெடு போ” என்று பணித்துவிட்டு, அந்தப் புரத்தின் உப்பரிகையை நோக்கி நடந்தார். உப் பரிகையில் வந்து நின்று வானத்தைப் பார்த்தார் இப்னு அத்ஹாம். வெண் ணிலவை மறைத்திருந்த மேகக் கூட்டங்கள் விலகி, நிலவின் குளுமையான ஒளி விண்ணையும் மண்ணையும் குளிப்பாட்டத் தொடங்கியது. அந்த மேகத்தைப் போன்று தன் இதயத்திலும் அதுவரை மூடுன்டு கிடந்த அறியாமை இருள் அகன்றதுபோல் இருந்தது அவருக்கு. தான் பணிப் பெண்ணுக்கு வழங்கிய தண்டனைக்காக வெட்கினார், வருந்தினார். இறைவா என்னை மன் னித்துவிடு என்று இறைவனை இறைஞ்சினார். அந்தப் பெண்ணின் சிரிப்பையும், அவளின் கேள்வியையும்
17

Page 11
திரும்பவும் எண்ணிப் பார்த்தார். ஆம். அவள் கேட்ட நியாயமான கேள்வி. என் மஞ்சத்தில் சிறிது நேரம் படுத் துறங்கியதற்காக அந்தப் பெண்ணுக்குச் சவுக்கடித் தண் டனையை வழங்கிய எனக்கு, வருசக் கணக்காக ஒவ் வொரு இரவும் அந்த மஞ்சத்தில் படுத்துச் சுகம் அனுபவித்தமைக்கு இறைவன் என்ன தண்டனையை வழங்க இருக்கிறானோ என்று மனம் துடித்தது. அரசன் என்ற கர்வத்திலும் அதிகாரத்திலும் இதுபோன்ற தவறு களையும் குற்றங்களையும் எத்தனை செய்திருப்பேனோ?
அதற்கெல்லாம் இறைவன் என்ன தண்டனை அளிக்கப் போகிறானோ? என்றும் மனம் பதைத்தது, அழுதது அவரது விழிகளிலிருந்து, கண்ணிர் கொட்டத் தொடங் கியது. அக்கண்ணிரோடு இறைவா, நான் இழைத்த குற்றங்களுக்காகவும் தவறுகளுக்காகவும் என்னை மன் னித்துவிடு” என்று மீண்டும் அவரது உள்ளம் இறைஞ் சியது. தான் அரசராயினும் அகந்தையால் இதயத்தில் மூடுண்டிருந்த அறியாமை இருளைப் போக்கி, ஞானம் எனும் ஒளியைத் தந்த பணிப்பெண் மசீனாதான் தனது எஞ்சிய வாழ்வுக்கு வழி காட்டிய கலங்கரை விளக்கம் என்றும் உணர்ந்தது.
இந்தச் சம்பவமும் இந்தச் சிந்தனையும் ஏற்பட்ட சில நாட்களில் பல்கு ராஜ்யத்தின் மன்னரான இபுறாஹீம் இப்னு அத்ஹம் அரசைத் துறந்தார். சுக போகங்களை மறந்தார். எளிமையையும் தூய்மையையும் கொண்டு இஸ்லாமிய ஞானியானார். நாடெங்கும் இறைவழியை எடுத்துரைக்கலானார்.

கதாநாயகன்
அதோ மாலைமரியாதையோடு பலர் புடைசூழ புன்னகையுடன் கை கூப்பியவாறு வருகிறாரே, அவர் தான் இந்நாட்டுப் பொதுவாழ்வின் கதாநாயகன். ஆம் அவர் ஓர் அரசியல்வாதி.
அவருக்குப் பதவிகள் உண்டு. இவை தந்த பல சலுகைகளும் வசதிகளும் உண்டு முன்னணி பின்னணி ஆட்கள் உண்டு விருந்துகளும் வெளி நாட்டுக்கு விமானப் பயணங்களும், அங்கே பெரிய உல்லாச ஹோட்டல்களில் சுகபோக தரிப்புகளும் உண்டு சொல்லப் போனால், அவருக்கு எல்லாமே உண்டு.
ஆமாம். அதற்கென்ன இப்போ? நமது கதாநாய கனுக்கு இவையெல்லாம் இல்லாவிட்டால் அவர் அரசியல் வாதியாக இருப்பதில் அர்த்தந்தான் என்ன? அவர் இதற் காகவே அரசியல் அரங்கில் பிரவேசித்தவர். இந்த வசதி வாய்ப்பையெல்லாம் பெறாமல் இருப்பாரா?
அவர் பொதுமேடைகளில் உயர்ந்த இலட்சியங்களை முழக்கமிட்டார். இப்போதெல்லாம் அதைப்பற்றி அதிகம் பேசுவதில்லை. பேச நேர்ந்தாலும், அந்த இலட்சியங் களை நிறைவேற்ற இன்னும் காலம் வரவில்லை என்று சமாதானம் சொல்கிறார்.
அதனால் என்ன? அவர் பதவி என்னும் தனது இலட்சியத்தை அடைந்து விட்டாரே. அது போதாதா? அரசியல்வாதியின் சிறப்புமிகு தலையாய இலட்சணம் இதுதான் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், அதற்கு நமது கதாநாயகன் என்ன செய்வார்?
அவர் Goufuu F ந்தர்ப்பவாதி கொள்கைக்காக நிற்பதாய்ச் சொல்லிவிட்டு, இப்போது கட்சி மாறிவிட்டார்

Page 12
என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் புரியாமல் தான் இந்தப் புகாரைத் தெரிவிக்கிறீர்கள் கட்சி மாறு வதும் அரசியல்வாதியின் இலட்சணங்களில் ஒன்றுதான் தவிரவும், மக்களுக்குச் சேவை செய்யத்தான் கட்சி மாறி யதாய் அவர் சொல்வதையும் புறக்கணிக்க முடியாது.
மக்களுக்கு அவர் என்ன சேவையைத்தான் செய்து கிழித்து விட்டார்? சே, அப்படியெல்லாம் வினவுவது சரி யல்ல. அவரும் அவரது உறவினர்களும், அவருக்கு உதவக்கூடிய நெருங்கிய நண்பர்களும் கூட, மக்கள் தானே. அந்த வகையில் நமது கதாநாயகன் தனக்கும் அவர்களுக்கும் சேவை செய்யாமலா இருக்கிறார்?
தேர்தலின்போது அவர் நம்மையெல்லாம் தம்பி என்றும், அண்ணன் என்றும், தோழர் என்றும், மாமா என்றும், மச்சான் என்றும் அன்பொழுக அழைத்தார்.
எந்த நேரமாயிருந்தாலும் அடையா நெடுங்கதவாய் தன் வாசல் கதவை திறந்து வைத்து, போகும் போதெல்லாம் இன்முகம் காட்டி, வரவேற்று, உபசரித்து, பானம் வழங்கி சிகரட் தந்து பரிவோடு பழகினார். நாங் களும் பசிநோக்காது, கண்துஞ்சாது இரவென்றும் பக லென்றும் அவருடைய வெற்றிக்காகப் பாடுபட்டோம். ஆனால் இப்போது எங்களைப் பார்த்தும் பாராததுபோல் கால் ஏறிச் செல்கிறார். அல்லது நின்ற நிலையில் ஒரு பார்வையை மட்டும் எங்கள்மீது வீசிவிட்டுப் போகிறார். அல்லது 'இப்போது நேரமில்லை பிறகு வாரும்?? என்றோ கொழும்பில் வந்து சந்தியும்’ என்றோ கூறி விட்டு நகர்கிறார் அவருடைய வீட்டுக்கு நாயாய் அலைந்து கால் கடுத்ததும், கொழும்புக்குச் சென்று காசு செலவழித்ததும்தான் மிச்சம். அவர் என் விஷயத்தைக் கவனிக்கவே இல்லை.
தெரியும். ஆனால் அதற்காக நீங்கள் பொருமக் கூடாது அவருக்கு எத்தனையோ வேலைகள். பார்லி
20

மெண்டுக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் கருத்தரங்குகள், திறப்பு விழாக்கள்,மற்றும் எத்தனையோ விழாக்கள், அடிக்கல் நாட்டுதல், விருந்துகள், பார்ட்டிகள் பெரிய இடத்துக் கல்யாணங்கள், சமூக வைபவங்கள் வெளிநாட்டுப் பயணங்கள், கட்சிக் கூட்டங்கள் அப்பப்பா எத்தனை வேலைகள்! இவற்றுக்கே நேரம் போதாமல் இருக்கிறது. உங்களுடைய தேவைகளைப் பார்க்க எங்கே நேரமும் பொழுதும்? இதைப் புரிந்து கொண்டு நீங்கள் பொறுமையாய் இருக்க வேண்டுமே ஒழிய பொருமக்கூடாது. இப்போது இல்லாவிட்டாலும் அடுத்த தடவை அவர் திரும்பவும் பதவிக்கு வரும்போது உங்கள் காரியத்தைச் செய்து தருவார் நம்புங்கள்.
அவர் பெரியார்களின் விழாக்களிலே அவர்களின் சாதனைகளையும் போதனைகளையும் அழகாக ஆணித் தரமாகப் பேசுகிறார். அவர்களின் எளிமை, நேர்மை, தியாகம், ஒழுக்கம், தூய்மை-இவை பற்றியெல்லாம் சொல்லி புகழ் பாடுகிறார். நாடும் சமூகமும் உய்ய அப் பெரியார்களின் வாழ்க்கையைப் பின்பற்றவேண்டும் என்றும் கூறுகிறார். ஆனால் அவர் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றையெல்லாம் கடைப்பிடிப்பதாய் இல்லையே?
உங்கள் அறியாமையை என்னென்று வர்ணிப்பது. உனக்கல்லடி கண்ணே, ஊருக்கு என்ற ஒருவரின் பிரசித்தமான வாக்கியத்தை நமது கதாநாயகன் பின் பற்றுகிறார், அந்த வாக்கியத்தை அவரும் மெய்ப்பிக்க வேண்டியிருக்கிறது.
ஒ.அதுதான் அவர் மது அருந்துகிறார் போலும்,
அதை நீங்கள் ஒரு குற்றமாகச் சொல்லக்கூடாது. நமது கதாநாயகன் பெரிய,பெரிய பார்ட்டிகளுக்கெல்லாம் போக வேண்டியிருக்கிறது அங்கே மது அருந்தாமல் இருந்தால், அது நாகரிகமாக இருக்காது. மேலும்
2.

Page 13
அவருக்கு அது ஒரு டொனிக்". டொனிக் குடிப்பது (ögöp Lor?
அவர் இங்கே உள்நாட்டில் கூட பெரிய ஹோட்ட லில் அரசாங்க விடுதிகளிலும் உல்லாசமாய் பொழுது
போக்குவதும் உண்டு இது தா ன் தியாகமா? 6 T6f6oo nuur?
இதையும் நீங்கள் புரியாமல்தான் சொல்கிறீர்கள், நமது கதாநாயகன் ஓய்வில்லாமல் இரவும் பகலும் சேவை செய்வதால் வாரத்தில் ஒரு நாளோ, அல்லது மாதத்தில் இரண்டு மூன்று நாட்களோ ஒய்வெடுக்க வேண்டியிருக் கிறது. வீட்டில் அதற்கு வாய்ப்பில்லை. ஆட்கள் வந்து கொண்டிருப்பார்கள். தமது வேலையாக பெரிய டுரிஸ்ட் ஹோட்டல்கள் அரசாங்க விடுதிகள் சென்றால், ஆட் களின் கரைச்சல் இருக்காது. அதற்காகத்தான் அங்கே போகிறார்கள். அங்கே ஆர அமர இருந்து மதுவோடும், விரும்பினால் மங்கையோடும் சல்லாபிக்கலாம். அப் போதுதான் களைப்பு நீங்கி, புதிய உற்சாகமும் தெம்பும் பிறக்கும். மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதற்கு இந்த ஓய்வு, உறக்கம், தெம்பு அவசியமில்லையா? இதை நீங்கள் உல்லாசப் பொழுதுபோக்கு என்று சொன் னால் அதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?
படித்த வாலிபர்கள உத்தியோகத்திற்குப் பறக்கக் கூடாது. உடல் உழைப்பில் ஈடுபட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டும், நாட்டின் அபிவிருத்திக்குப் பாடுபட வேண்டும் என்று மேடைகளில் போதனை செய்தவர், தனது மகனை மேல்படிப்புக்காக லண்டனுக்கு அனுப்பி யுள்ளாரே..?
ஆமாம், அனுப்பியிருக்கிறார். எல்லாரும் உடல் உழைப்பில் ஈடுபட்டால் அரசாங்க அலுவல்களை நிர்வகிக்க அதிகாரிகளும், ஊழியர்களும் இல்லாமல் போய் விடுவார்கள். ஆதலால்தான், நமது கதாநாயகன் தனது
23

மகனை மேல்படிப்புக்காக லண்டனுக்கு அனுப்பி யிருக்கிறார்.
தூய்மையைப் பற்றி பேசியவர், லஞ்சம் வாங்கலாமோ?
லஞ்சமா..? நீங்கள் இதிலும் குழம்புகிறீர்கள். நமது கதாநாயகன் உங்களுக்குச் செய்கிற வேலைக்குக் கூலி கேட்கிறார். கூலியை எப்படி லஞ்சம் என்று சொல்ல முடியும்? மறுபக்கத்தில் பார்த்தால் அது கூலியுமல்ல - அன்பளிப்பு. செய்த உதவிக்கு நன்றி செலுத்துவது கடமையல்லவா? அந்தக் கடமையைச் செய்யுமாறு கதா நாயகன் கேட்கிறார். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்-உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு என்று திருவள்ளுவர் திருக்குறளிலே கூறியிருக்கிறார். எனவே, தன்னிடம் உதவி பெறுகிறவர்கள் உய்யாமல் போய்விடுவார்களே என்ற அச்சத்தினாலும், இரக்கத்தி னாலுமே பிரதி உபகரத்தை நமது கதாநாயகன் எதிர் பார்க்கிறார். இதை லஞ்சம் என்று சொல்வதா? தவிரவும் பழைய காலத்தில் புலவர்களுக்கு மன்னர்கள் பரிசில் கொடுத்ததையும் இங்கே நினைவு கூரவேண்டும். முன்னர் ஒருவர்தான் ஒரு நாட்டின் மன்னர். இப்போது பாரதியார் கூறியதுபோல், எல்லாரும் இந்நாட்டு மன்னர், எனவே, மன்னர்களாகிய மக்கள் கொடுக்கும் பரிசை லஞ்சம் என்று கூறுவது தகாது. மேலும், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை யையும் நமது கதாநாயகன் மறக்கக் கூடாதென்று சபதம் செய்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவர் தேர்தலுக்கு இலட்சக் கணக்கில் செலவு செய்வார். அந்தச் செலவை எடுக்க வேண்டாமா? அடுத்த தேர்த லுக்கு வேறு செலவு இருக்கிறது. இதையெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும். எனவே லஞ்சம், ஊழல் என்றெல்லாம் சொல்லி நமது கதா நாயகனைச் சிறுமைப் படுத்தக் கூடாது.
3: 3: BK

Page 14
புது மனிதன்
நடுநிசி. வானத்தில் நட்சத்திரங்கள் பூத்திருந் ததைத் தவிர, வெண்ணிலவு பிரகாசிக்கவில்லை. ஊரை இருள் மூடிக்கிடந்தது. தெருவில் ஜன சந்தடியில்லை. எல்லோரும் வீட்டிற்குள் அடைந்து நித்திரையில் ஆழ்ந் திருந்தனர்.
அமைதி சூழ்ந்த அந்த வேளையில் ஒருவன் கறுப்புப் போர்வையால் தன்னை மூடிக் கொண்டு தெருவில் நடந்து கொண்டிருந்தான். அவனுடைய விழிகள் அங் கிருந்த வீடுகள் ஒவ்வொன்றையும் அவதானிக்கத் தவறவில்லை. சில வீடுகளுக்கு முன்னால் நின்று அவற்றை மேலும் கீழும் பார்த்தான். பிறகு தலையை ஆட்டி உதட்டைப் பிதுக்கிக் கொண்டு மேலும் நடந் தான்.
இவ்வாறு நடந்து கொண்டிருந்தவன், ஒரு வீட்டின் முன்னால் நின்று ஒரு கணம் ஏதோ யோசித்தான். மறு கணம் வீதியின் இருபக்கமும் கூர்மையாகச் செலுத்தி விட்டு வீட்டை நெருங்கி வெளிக் கதவை உற்றுப் பார்த் தான். அது உள்ளெ பூட்டப்படாமல் சும்மா சாத்தி யிருப்பதுபோல் தெரிந்தது. மெல்லத் தள்ளினான். கதவு திறந்து கொண்டது. சந்தடி செய்யாமல் சரேலென உள்ளே நுழைந்து கதவைச் சாத்திவிட்டு, உட்பக்கம் திரும்பினான். ஆனால் அங்கே இருள் இல்லை. முன் கூட்டத்தின் ஒரு மூலையில் ஒரு சிறு விளக்கொன்று மங்கலாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அந்தக் கூடம் சற்றுப் பெரியதாகத் தெரிந்ததோடு, தரையில் பழைய விரிப்புகள் போடப்பட்டிருந்தன. வேறு எந்தப் பொருளும் அங்கே காணப்படவில்லை.

அவன் கூடத்தைக் கடந்து, உள்ளே போனான் அங்கே இரண்டு அறைகள் இருந்தன. அவற்றின் கதவுகள் திறந்திருந்தன. ஒன்று இருட்டாயிருந்தது. மற்றதில் லேசாய் வெளிச்சம் தெரிந்தது. இருண்டிருந்த அறைக்குள் புகுந்து தன்னிடமிருந்த மெழுகு வர்த்தியை காடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, அதன் வெளிச்சத்தில் விழிகளால் அறையைத் துளாவினான். சுவர் ஒரமாக, தொழுகைக்குரிய ஒரு முஸல்லா மட்டும் சுருட்டி வைக்கப் பட்டிருந்தது. அது தவிர, வேறு எந்தப் பொருளும் கண்ணில் படாமல் அறை வெறுமனே காலியாகவே காட்சி யளித்தது. தன் கையிலிருந்த மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்த அவன். வெளிச்சம் தெரிந்த அடுத்த அறையை நெருங்கி உள்ளே நுழைந்து அந்த அறையைப் பார்வையால் மேய்ந்தான். தரையில் தலையணையுடன் ஒரு படுக்கை விரிக்கப் பட்டிருந்தது. ஒரு தண்ணிர் கூஜாவும் குவலையும் உணவு சாப்பிடும் இரண்டொரு தட்டுக்களும், அங்கே கட்டியிருந்த கொடியில் சில துணிகளையும் தவிர வேறு எந்தப் பொருளும் காணப்படவில்லை. அவனது முகம் ஏமாற்றத்தால் வாடியது. தனக்குள் எதையோ முணு முணுத்தவாறு அங்கிருந்து திரும்பி முன் கூடத்துக்கு வந்து, அந்த வீட்டிலிருந்து வெளியேவருவதற்காக வாசல் கதவை நோக்கி நடந்தான். யாரோ நடந்து வந்க சந்தடி கேட்டது. தொடர்ந்து “ஏன் போகிறாய்? நில்" என்று ஒரு பெண்ணின் குரலும் சேர்ந்து ஒலித்தது.
அவன் திடுக்கிட்டுத் திரும்பினான், உடல் தெரி யாமல் முழு அங்கியும் பர்தாவும் அணிந்து முகம் மட்டும் பாதி தெரிய நடுத்தர வயதையும் தாண்டிய ஒரு பெண் நின்றிருந்தாள்.
அவன் அஞ்சாமல் அவளைப் பார்த்தான்.
அப்பெண்மணியும் அவனைப் பார்வையால் எடை போட்டார். முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபு
35

Page 15
னாக அவன் காணப்பட்டான். 66 நி யார்? எதற்காக இங்கே வந்தாய்? என்ற கேள்விக்கணைகளை அவள் தொடுத்தாள். ஆனால் குரலில் கோபமோ, பதட்டமோ இல்லை. சாந்தமாகவே ஒலித்தது. அதே சாந்தம் பார் வையிலும் ஒளிர்ந்தது.
அவன் ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தான். அந்த நடுநிலையில் திடீரென்று வீட்டுக்குள் நுழைந் துள்ள அந்நியனான தன்னைக் கண்டு பயப்படாமல் - பயந்து கூச்சல் போடாமல், மிக அமைதியாக, விழிகளில் சாந்தம் தவழப் பேசிய அப்பெண்ணின் மீது எழுந்த ஆச் சர்யத்தோடு, அவனையும் அறியாமல் மரியாதையும் ஏற் பட்டது. ஆனால் அவன் தன்னை நோக்கி வந்த கேள்வி களுக்குப் பதில் அளிக்காமல் நீங்கள் ஒரு பெண் • இரவில் நீங்கள் மட்டும் தன்னந்தனியாக இருக்கிறீர்களே, உங்களுக்குப் பயமில்லையா?” என்று தன்னுடைய கேள்விகளைப் போட்டான்.
*நான் தனியாக இல்லை. துணைக்கு இறைவன் இருக்கிறான். நான் ஏன் பயப்பட வேண்டும்???-அப் பெண்மணியிடமிருந்து நம்பிக்கை தொனிக்க, சாந்த மாகவே இந்தப் பதிலும் வந்தது.
அவன் துணுக்குற்றான். இப்படி ஒரு பதிலை எதிர் பார்க்கவில்லை. அவன் முகம் லேசாய் வியர்த்தது. அப்பெண்மணியை மீண்டும் வியப்புடன் நோக்கிவிட்டு மெளனமாக ஏதோ சிந்தித்தவன் 'வெளிக் கதவு பூட்டப் படவில்லை. உங்களையும் காணவில்லை. எங்கே போயிருந்தீர்கள்?’ என்று திரும்பவும் கேள்வியை வீசினான்.
நான் சலம் கழிப்பதற்காக பின்பக்கம் போயிருந் தேன். ஏதோ ஞாபகத்தில் கதவைப் பூட்ட மறந்து விட்டேன். சில இரவுகளில் இப்படி நேர்வதுமுண்டு. இதற்காக நான் கவலைப் படுவதில்லை’ என்று பதில்
26

கூறிய அந்தப் பெண்மணி ஆேமாம். என்னுடைய கேள்விகளுக்கு உன்னிடமிருந்து இன்னும் பதில் வர வில்லையே? என்றார்.
அவன் சற்று பரப்பரப்புடன் என்ன கேட்டீர்கள்?* என்றான்.
*அதற்குள் மறந்து விட்டதா?? என்றார் அப் பெண்மணி.
“என் கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் என் சிந்த னையைக் கிளறி விட்டது. உங்கள் கேள்விகளை மறக்கச் செய்து விட்டது.** என்றான்.
ஒ.அப்படியா?நீ யார் எதற்காக இங்கே வந்தாய்?" என்று கேட்டேன். திரும்பவும் ஞாபக மூட்டினாள்
9thLOTg5
அவன் தலையைக் குனிந்து கொண்டு 'நான் ஒரு திருடன். திருடுவதற்காக வந்தேன். ஆனால் இங்கே திருடுவதற்குரிய பொருள் எதுவுமில்லாததால் வெறுங் கையுடன் வெளியேறுகிறேன்” என்று கரகரத்த குரலில் ஏமாற்றம் தொனிக்கக் கூறிவிட்டு வாசலை நோக்கி நகர்ந்தான்.
அப்பெண்மணியின் குரல் பின்னாலிருந்து அமைதி யாக ஒலித்தது. ‘என்னுடைய வீட்டிற்குள் வந்துவிட்டு, வெறுமனே போகாமல் ஏதாவது கொண்டு போ’
அவன் இதனையும் எதிர்பார்க்கவில்லை அவ னுக்குத் திகைப்பாயிருந்தது. சரேலெனத் திரும்பி அப் பெண்மணியை மேலும் வியப்புடன் பார்த்துவிட்டு, எடுத்துச் செல்வதற்கு இங்கே என்னதான் இருக்கிறது? எனக்குத் தேவையான பொருள் ஒன்றுமில்லையே? என சலிப்புடன் கூறினான்.
அப்பெண்மணி அவனை அனுதாபத்துடன் பார்த்து விட்டு நீங்கள் முஸ்லிம்தானே? என்று கேட்டார்,
27

Page 16
*ஆம்” என்று அவன் தலையை ஆட்டினான்.
சரி நில் இதோ வருகிறேன்? என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றார் அப்பெண்மணி. அவனோ தனக்கு ஏதோ பெறுமதியான ஒரு பொருள் கிடைக்கப் போகிறது என்று எண்ணி அங்கேயே நின்றான்.
ஆனால் அப்பெண்மணி பற்ற வைத்த ஒரு விளக்கைக் கொண்டு வந்து அங்கே வைத்துவிட்டு **பின் பக்கம் தண்ணிர்ப் பானையும் குவலையும் இருக்கிறது. போய் ஒளுச் செய்து கொண்டு வா. அந்த விளக்கையும் எடுத்துக் கொண்டு போ” என்றான்.
அவனுக்குத் திரும்பவும் ஏமாற்றமாகி விட்டது. இப் போது தொழுகைக்குரிய நேரமுமல்ல. எதற்காக இந்த அகால நேரத்தில் ஒளுச் செய்து கொண்டு வரச் சொன் னார் என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். ஆனால் அப்பெண்மணியின் வார்த்தையை அவனால் மீற முடிய வில்லை. கட்டுண்டவன்போல் விளக்கை எடுத்துக் கொண்டு பின்பக்கம் சென்றான்.
அவன் ஒளுச் செய்து கொண்டு திரும்பியதும், அங்கே இரண்டு முஸல்லாக்கள் தனித் தனியே விரிக்கப்பட்டிருப் பதைக் கண்டான். அப்பெண்மணி ஒரு முஸல்லாவைச் சுட்டிக் காட்டி **அதில் நீ தொழு’ என்று கூறினாள். அவன் தக்பீர் கட்டிக் கொண்டு நின்றான். அதே சமயம் மற்ற முஸல்லாவில் அப்பெண்மணியும் நின்று தொழத் தொடங்கினார்.
தொழுகை முடிந்ததும் அப்பெண்மணி பின்வருமாறு துஆ கேட்டார் 6யா அல்லாஹ் உனது அடியானை உனக்கு முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தி விட்டேன். எனக்கு இவ்வளவுதான் செய்ய முடியும். இதற்குமேல் எனக்கு ஒன்றும் செய்ய இயலாது. எனவே, இவனுக்கு நீதான் நேர்வழி காட்ட வேண்டும்” என்று உருக்கமாக கண்ணீர் சிந்தியப்படி பிரார்த்தித்தார்.
28:

இந்த பிரார்த்தனையை அவன் செவிமடுத்ததும் மெய் சிலிர்த்தது. திருடவந்த தன்னைத் திட்டி ஏசித் துரத் தாமல், பரிவுடன் தன்னைத் திரும்பவும் உள்ளே அழைத்து, தொழச் செய்து, தன்மீது அக்கறை செலுத்தி, தனக்காக இறைவனிடம் து ஆச் செய்ததைக் கண்ட அவனுக்கு, மெய்சிலிர்த்ததோடு உள்ளமும் கரைந்தது. கண்ணிர் பெருகத் தொடங்கியது. உடனே அவனும் கையேந்தியபடி 'யா அல்லாஹ்! நேர்வழி இருக்க நான் தவறான வழி நடந்து விட்டேன். இன்று இந்த அன் னையின் மூலம் என் கண்ணைத் திறந்து விட்டாய், இந்த விநாடியிலிருந்து நான் புதுமனிதன். இன்றிலிருந்து திருட்டுத் தொழில் உட்பட எந்தவொரு பாவமான காரி யத்தையும் நான் செய்ய மாட்டேன். நீ காட்டியுள்ள நேர்வழியிலேயே நடப்பேன். நான் இதுவரை செய்த பாவங்களையெல்லாம் மன்னித்தருள்? என்று இறை வனிடம் மன்றாடினான்.
அந்தப் பெண்மணியின் முகம் திருப்தியுடன் லேசாய் மலர்ந்தது அல்ஹம்து லில்லாஹ்” என்று கூறி கலங்கி யிருந்த தன் கண்களையும் துடைத்துவிட்டு அவனைப் பார்த்து 'இன்றிரவு நீ இங்கேயே தங்கிக் கொள். நாளைக் காலையில் போகலாம்’ என்று கூறிவிட்டு தனது முஸல்லாவைச் சுருட்டி எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.
(அம்மாது சிரோண்மணிதான் மாபெரும் இஸ்லாமிய ஞானிகளில் ஒருவரான ராபியத்துல் பஸரியா (ரஹ்) அவர்கள். அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இக்கதைக்குக் கருவாக அமைந்தது.)

Page 17
பெரிய இடத்துக்கு வந்தபோது . . .
னெக்கு அப்படி ஒரு குருட்டு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. நாங்கள் ஏழைகள். பள்ளியிலே மோதினாயிருக்கிற வாப்பாவைக் கொண்ட குடும்பம் என்ன செல்வமும் செழிப்புமாகவா இருக்கும்? ஆனா, நான், உம்மா வாப்பா மூணுபேர்தான், பிரச் சினைகள் அதிகமில்லை. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்துன்னு அல்லாஹ் தாறதை வைச்சி சீரா சீவியம் நடந்துக்கிட்டிருந்தது. ஆனா உம்மா வாப்பா வுக்கு என்னைப் பத்தி யோசனை இருக்கத்தான், செய்தது. நம்ம மகளுக்கு அழகும் குணமும் இருந்தாலும் சீதனம் சீர்செனத்தின்னு கொடுக்க வசதியில்லா நம்ம பொண்ணை எப்படிக் கரை சேர்க்கிறதுன்னு கவலைப் படுவாங்க. இந்த நிலைமையில்தான் அந்த அதிஷ்டம் வீடு தேடி வந்தது
அது ரமழான் மாதம், நான் உம்மாவோட தராவீஹ் தொழுகைக்குப் போவேன். அப்போ தராவீஹ"க்கு வந்து போன ஒரு வயசான மனுசி என்னை அடிக்கடி பார்த்திட்டு இருப்பா. எப்படியோ, உம்மாவிடம் பேச்சுக் கொடுத்து எங்களைப் பத்தி விசாரிச்சு அறிந்து கொண்டா. அவங்க பெரிய இடம். அவங்க வீட்டு காரங்க மாணிக்க வியாபாரம்னு நாங்களும் தெரிஞ்சு கொண்டோம்.
ரமழான் முடிஞ்சுது. பெருநாள் மாசம் ஒருநாள் திடீர்னு அவகாரில் வந்து இறங்கினா. நாங்க திகைச்சுப் போனோம். சீதனம் எதுவுமில்லாமல் தங்க மகனுக்கு என்னைப் பொண் கேட்டபோது மேலும் அதிர்ச்சியாயும் நம்ப முடியாமலும் இருந்தது. அது உண்மைதான்னு
80

தெரிஞ்சதும் ஆச்சர்யம் ஒரு பக்கம், சொல்லி முடியாத ஆனந்தம் ஒரு பக்கம் . அல்லாஹ்வுக்கு நன் றி கூறினுேம்,
சுருக்கமாக சொன்னு கல்யாணம் வெகு சிறப்பா நட ந் தேறியது. ஊரெல்லாம் எனக்கு அடித்த அதிஷ்டத்தப் பத்திதான் பேச்சு. இதைத் தாங்க முடியாம இதயம் வெடிச்சுப் போயிடுமோன்னு கூடப் பயமாயிருந்தது.
கல்யாணம் முடிஞ்சு நானும் அவரும் பேசிக் கொண்ட போதுதான் விஷயம் தெரிஞ்சுது. ஒருநாள் என் அழகை பத்தி தன் உம்மா வீட்டில சொல்லி நம்ம தகுதிக்கு ஏற்ற யிடமாயிருந்தா அந்தப் பொண்ணையே.என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைப்பேன்* என்று சொன்னாளாம். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவர் பொருட்படுத்தாம என்னையே கல்யாணம் செய்யிற துன்னு தீர்மானிச்சாராம். நான் அழகாயில்லாட்டி இந்த அதிஷ்டம் எனக்கு வந்திருக்காதுன்னு அப்பதான் தெரிஞ்சுது
சகலவிதமான நவீன வசதிகளும் உள்ள மாளிகை போன்ற அவங்க வீட்டில என் கணவரும் அவருடைய உம்மாவும் தலாக் சொல்லப்பட்ட ஒரு சகோதரியும், மற் றொரு குமாரரும் இருக்காங்க. நான் வீட்டு மருமகளா வந்ததும் அந்த பெரிய பங்களாவுக்கும் அங்கேயுள்ள பொருள் பண்டங்களுக்கும் நானும் சொ ந்தக்காரி. அவங்க (துடும்பத்தில நானும் ஒருத்தியாயிட்டேன்னு மனசுக் (குள்ள பெரிய புண்ணியமா இருந்திச்சு. ஆணு எனக்குக் கிடைச்ச இந்த அதிர்ஷ்டம், ஊமை அதிர்ஷ்டம், அது என்ன ஏமாத்திப் போட்டுதுன்னு போக போகத் தெரிஞ்ச தும், எனக்குள்ளேயே பெரிய பிரளயமாப் போச்சு.
அவங்க பங்களாவில மாமியும் அவமகள்மார் இ ரண்டு பேரும்தான் முழு அதிகாரம் செலுத்தினாங்க, 6ugš
81

Page 18
கும், வீட்டு வேலைகளுக்கும் தனியாக ஆட்கள் இருந்த தாலே, என் கணவரை உபசரிக்கிறதைவிட எனக்கு வேற வேலை எதுவும் இருக்கவில்லை. சும்மாஇருக்கிறதே எனக்குப் அலுப்பா இருந்தது. அதுமட்டுமல்ல மாமியும் இவரோட ரெண்டு சகோதரிகளும்என்னைத் தங்கள் குடும் பத்தில் ஒருத்தியா மதிச்சிநடக்கிறதில்ல.கலகலப்பா பேசு றதில்ல. வீட்டு விஷயங்கள் எதுவாயிருந்தாலும் மாமியும் மகள் மாரும்தான் ஒண்ணா யோசிப்பாங்க. பேசிக்கொள் வாங்க. தீர்மானிப்பாங்க. அவங்க மூன்று பேர் விருப்பு வெறுப்புப்படி தான் வீட்டுக் காரியங்கள்ளாம் நடக்கும். என்னைக் கணக்கில் எடுக்கிறதே இல்ல. அவங்க சொந் தக்காரங்க, தெரிஞ்ச மக்க மணிசர் வந்தா என்ன உபசரிக் கவிடாம தாங்களே முந்திக்குவாங்க. தங்களோட நானும் சமமாக இருந்து வந்தவங்களோட பேசுறதுக்கும் அதிக இடமளிக்க மாட்டாங்க. நான் என்னதான் அழகாயும் குணசாலியாயும் இருந்தாலும் அவங்க தகுதிக்கு நான் ரொம்பவும் குறைஞ்சவ என்கிற நினைப்பாலதான் என்னைத் தாழ்வா நடத்தறாங்கன்னு புரிஞ்சு போச்சு
என்னை மட்டுமல்ல, என்னைப் பெத்தவங்க9ளயும்கூட அப்படித்தான் நடத்தினாங்க. கல்யாணத்துக்குப் பிறகு இவங்க யாரும் எங்க வீட்டுக்கும் போனதில்ல. உம்மாவும் வாப்பாவும் இதை மனசிலவச்சிக்காம என்னையும், அவங் களையும் பார்க்க வந்த சம்பந்தியாச்சேன்னு மதிக்கிற தில்ல. அலட்சியமா நடந்துக்குவாங்க. அதனால அவு களும் இங்க வாரதை நிறுத்திட்டாங்க. அவங்க இப்படி நடந்து கொண்டது என் மனசைக் குத்தி வேதனைப் படுத் திச்சு. இதை என் கணவர்கிட்ட சொல்லவும் முடியல்ல. கணவர் என்கிற முறையில அவர் என்னோட நெருக்கமா யிருந்தாலும் அவர்கிட்டேயும் இந்தப் பணக்காரத்தனம் இருந்தது. அழகுக்காக என்னை விரும்பிக் கல்யாணம் செய்து கொண்டாலும் தான் ஏதோ பெரிய மனசு பண்ணி என்னை ஏத்துகிட்டமாதிரியும்,அதுக்குத்தக்கபடி
82

நான் நடந்து கொள்ள வேணும்கிற மாதியும்தான் அவர் போக்கும் இருந்தது. அதனாலே இந்த விஷயத்தை அவர் கிட்டச் சொன்னாலும் பிரயோசனம் இருக்காதுன்னு தெரிஞ்சு போச்சு. இடையிடையே எங்க அம்மா வீட் டுக்கு போவேன். ஆனா இதை உம்மா வாப்பாவுக்குச் சொல்லி அவுக மனசையும் துன்படுத்த விரும்பல.
ஒட்டுமொத்தமாக சொல்லப்போனா அவங்க வீட்டு மருமகளான நான் அந்தப் பங்களாவிலே எந்தவித உரிமையுமில்லாம தனிமையா இருக்க வேண்டி வந்தது. இவர் இரவுப் பொழுதைவிட பெரும்பாலும் பகல் பொழு தெல்லாம் வியாபாரம், அவரோட ஜோலிகள்னு வெளியே போயிடுவாரு. நான் மட்டும் ஒரு வேலையுமில்லாம, பேசு றதுக்கோ, பழகிறதுக்கோ ஆட்கள் இல்லாம பொழுது போறதே கஷ்டமாக இருந்தது. என் அறைக்குள்ள இருந்து ரேடியோ கேட்பேன். அது ஒண்ணுதான் 6ான்னோட பொழுதுபோக்கு. ஆனா என் மனநிலையில் அதுகூட அலுத்துப் போச்சு. என் நில ை'யை நினச்சு எனக்குள்ளே பொங்கிப் பொங்கி அழுவேன். நாள் ஆக ஆக அப்படி அழுகிறதும் அலுத்துப் போச்சு
கல்யாணத்துக்கு முந்தி எங்க வீட்ல எப்படி இருந் தேன்? அங்க எல்லா உரிமைகளும் எனக்கு இருந்தது. வீட்டு வேலையெல்லாம் நானே செய்துகிட்டிருந்தேன். 6T606).T விஷயங்களையும் உம்மா, வாப்பா, நான் மூன்று பேரும் கலந்து பேசிக்குவோம், சந்தோஷமோ துக்கமோ மூன்று பேரும் பங்கெடுத்துக்குவோம். வீட்டுக்கு வாற மனிச, மக்களோட பேசுவேன், பழகுவேன், உபசரிப்பேன் ஏழையானாலும் இப்படி மனமொடிஞ்சி போகல.மனநிறை வோடு வாழ்ந்தேன். ஆனா பணக்கார வீட்டு மருமகளாக வந்தபிறகு, பங்களா, கார், பொருள், பண்டம்,நகை, நட்டு பணம், காசுன்னு எல்லாம் இருந்தும் எனக்கு மனசு நிறை யல்ல, கல்யாணத்துக்கு முந்தி எங்க வீட்ல நான் அனு பவிச்ச அந்த வாழ்க்கையை, அதில கிடைச்ச மனநிம்மதி
S8.

Page 19
சந்தோஷம், இதையெல்லாங்கூட இழந்துட்டு மனச்சும்ை யோடு-விரக்தியோடு இயந்திரம்போல் வாழ்ந்துகிட்டு இருந்தேன். தொடர்ந்து இப்படியே அவங்க வீட்ல இருக் கிறதுக்கு என்னால் முடியல. வழக்கம்போல் இப்ப உம்மா வீட்டுக்கு வந்திருக்கிற நான் இந்த முறை என் நிலமையை உம்மாவுக்கும் வாப்பாவுக்கும் சொல்லி என் எதிர்காலத்தைப் பற்றி திட்டமாக ஒரு முடிவு எடுக்கப் போறேன்.
缀

தலைப் பிறை
நஜலந்து நாட்களாக வானம் பிளந்து கொட்டிக் கொண்டிருந்தது. மழையோடு காற்றும் சேர்ந்து சாடிய போது கடலும் குமுறிக் கொந்தளித்தது. அலைகளை வானுயர எழுப்பிக்கொண்டிருந்தது. கரையில் ஈ, காக்கை கூட இருக்கவில்லை, தோணிகள் மட்டும் ஆங்காங்கே மணல் மேட்டில் தள்ளப்பட்டிருந்தன. மீனவர்களும், தோணிக்காரர்களும் கடற்கரைப்பக்கம் தலைகாட்டாமல் இருந்தனர், தொழிலுக்குப் போகவிடாமல் மழையும், காற்றும் தடை செய்ததால் அவர்கள் கையில் புரளும் காசுக்கும் நாலைந்து நாட்களாகப் பெரும் தட்டுப்பாடு.
ஆதம் தண்டேலும் இந்த நாலைந்து நாட்களும் வீட் டுக்குள்தான் முடங்கிக் கிடந்தார். 8 மழையும், காத்தும் இப்படிச் சோதிக்கிதே.! இது எப்ப நிக்கப் போகுது ? நம்ம பொழப்பு எப்ப திரும்பப் போகுது?’ என்று அடிக்கடி புலம்பவும் செய்தார். ஐந்தாம் நாளிரவு அவரால் பொறுக்க முடியவில்லை. 'ஆண்டவனே என் பொழப்பையும் கெடுத் திட்டியே” என்று இறைவனையும் நொந்து கொண்டார். பிறகு இறைவனை நொந்து கொண்டதற்காகத் தன்னை யும் நொந்து கொண்டார். ஆண்டவனிடம் ஏன் பழி யைப் போடனும், படைச்சவன் நமக்கு இரணம் தராமல் விடுவாஞ. நாம் செய்தபாவம் யார் யாருக்கு என்னென்ன செய்தோமோ.அதோட பலன்தான் இது; நம்ம விதி. அதுதான் காத்தும், மழையும் நம்மை இப்படிச் சோதிக்குது” என்று பழியைத் தன்மேல் போட் டுக்கொண்டு, முன் விறாந்தையில் நின்றபடியே வெளியே பார்த்தார். இரவின் இருளாட்சிக்குள் மழையும் காற்றும், கூட்டுச்சேர்ந்து காடைத்தனம்செய்துக்கொண்டிருந்தன. cabg5th தண்டேல் அலுத்துப்போய் ஒரு பெரு மூச்சுடன் உள்ளேபோய்ப் படுத்துவிட்டார்.
S5

Page 20
மறுநாள் கால சுப்ஹ" நேரம் ஆதம் தண்டேல் விழிந்தெழுந்தபேகதுகாலநிலைசீராகவில்லை. ஆதம்தண் டேல் அதைக் கவனிக்காமல் கிணற்றுக்குச்சென்று ஒளுச் செய்துகொண்டு வந்து சுபுஹ"த் தொழுகையை முடித்து விட்டு, ‘ இந்தக் காத்திலும் மழையிலும் எங்கதான் போகிறது? வீட்டுக்குள்ள முழிச்சு முழிச்சுக்கொண்டிருந்து தான் என்ன செய்யறது? என்றுதனக்குள் முணுமுணுத்த வாறு திரும்பவும் தனது கயிற்றுக் கட்டிலில் படுத்து நித்திரையாகிவிட்டார்.
அவர் கண் விழித்தபோது காற்றும் மழையும் சேர்ந்து அடித்த கும்மாளத்தின் இரைச்சல் காதில் விழவில்லை. பரபரப்புடன் எழுந்து வெளியே வந்து பார்த்தபோது; வானம் பளிச்சென்று வெளிவாங்கியிருந்தது. மேகத்தின் கறுப்புச்சுருள் ஒன்றுகூடக் காணப்படாமல் அந்தப் பரந்த விண்வெளியில் கதிரவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
நாலைந்து நாட்களாக இருண்டு கிடந்த ஆதம் தண் டேலில் நெஞ்சிலும் ஒரு சிலிர்ப்பு உண்டாகி, சிரிப்பும் தோன்றியது. மனை வியிடம் பரக்க பரக்க ஒரு கிளாஸ் பாலில்லாத வெறும் தேநீரை வாங்கிக் குடித்துவிட்டு ஒரு வித புதுக் குதூகலிப்புடன் ஓட்டமும் நடையுமாக கடற் கரையை நோக்கி விரைந்தார். கடற்கரையை அடைந் ததும் நேர்க்குத்தாகக் கடலைப் பார்த்தார். நீலம்பாரித் திருந்த வானத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்த கடல் சாந்தமாகத் தன் அலைக்கரங்களை ஆட்டிப் புன்னகை யுடன் அவரை வரவேற்பது போலிருந்தது. இனித் தோணியைத் தள்ளலாம்” என்று எண்ணியவாறு திரும்பி நின்று பார்வையை அக்கம் பக்கம் பாயவிட்டார். ஆங் காங்கே மணல்மேட்டில் விட்டிருந்த தோணிகளை பலர் கீழே இழுத்துக்கொண்டும் தள்ளிக்கொண்டும் இருந் தனர். கரைவலை இழுக்கும் தனது ஆட்களில் ஐந்தாறு பேர் தனது தோணியையும் தள்ளிக்கொண்டிருப்பது தெரிந்தது. ஆதம் தண்டேல் மேலும் நின்ற இடத்தல்
86

தரிக்கவில்லை. சிறுவாலுக்கு மேல் கட்டியிருந்த சாரத்த்ை அவிழ்த்துத் திரும்பவும் மடித்து இறுக்கமாகக் கட்டிக் கொண்டு, தனது தோணியின் இடத்திற்கு வேகமாக .ந்தார். அவரது ஆட்கள் 6தண்டேல் வாறார்?? என்று உரக்கக் கூறியது காதில் விழுந்தது.
ஆதம் தண்டேல் தோணிக்கு வந்ததும் தனது ஆட் களிடம் எதுவும் கேட்கவில்லை-சொல்லவுமில்லை. அவர் களுடன் சேர்ந்து தானும் மூச்சுப் பிடித்து முழுப் பலத் துடன் தோணியைத் தள்ளத் தொடங்கினர்.
ஒருவகையாகத் தோணியைக் கரையை நெருங்கிக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, எல்லோரும் தம்மைச் சிறிது ஆசுவாசப் படுத்திக்கொண்டு நின்றனர். ஆதம் தம் டேல், தலையில் கட்டியிருந்த பெரிய துண்டை காடுத்து முகத்தைத் துடைத்துவிட்டு "தோணியைக் கட லுக்குள் கொண்டுபோவமா ?? என்று கேள்வியைப் போட்டார்.
‘இன்னைக்கு ஏலாது தண்டேல் வலையெல்லாம் போட்டது போட்டபடி கிடக்கு. இப்ப வானத்தை
பாருங்க வெயி ல் ஏறிப்போச்சு. வலையெல்லாம் செம்பம் செய்து தேணியைத் தள்றதுக்குள்ள மத்யா னமாய்ப் போயிடும். இன்னைக்கு எல்லாத்தையும்
ஒழுங்குசெய்து வைச்சிட்டு நாளைக்கு விடியத் தள்ளும்” என்றான் தோணி கொண்டுபோகிற காசிம்.
தண்டேல் வானத்தைஅண்ணாந்துபார்த்தார். காசிம் சொன்னதும் சரியென்றே பட்டது. அப்ப நீங்க வலை விஷயத்தைப் பாருங்க. அந்த அலுவலை முடிச்சிட்டு தான் மத்தியானச் சாப்பாட்டுக்குப் போகணும்’ என்று உத்தரவு போட்டுவிட்டு, சற்றுத் தூரத்திலிருந்த தன் வாடியை நோக்கி நடந்தார். தண்டேல் அன்று அவரு டைய தோணி மட்டுமல்ல, எவருடைய தோணியும் கட லுக்குள் போகவில்லை.
87

Page 21
ஆதம் தண்டேலின் ஆட்கள் அவர் கூறியபடி மத்தி யானம் இரண்டு மணிக்கெல்லாம் வே8லயை முடித்து விட்டுப் போய்விட்டார்கள், ஆதம் தண்டேலும் திருப்தி யுடன் வீட்டுக்குச் சென்றார். ஆனால் அவர் வேறு எந்த வேலைக்காகவும் வெளியே போகாமல், அஸர் தொழுது விட்டுத் திரும்பவும் கடற்கரைக்குப் போய் கடலைப் பார்த் தார். கடலின் அமைதியைக் கண்டு மனம் ஆறுதல டைந்தது. நாளைக்குத் தலைப் பிறை. நோன்பு தொடங் குது. நாளைக்குத் தோணி தள்ளியதும் பரக்கத்தா மீனும் படோணும்’ என்று தனக்குள் சொல்லியவாறு மறுநாள் தலைப்பிறைக்குத் தேவையான காசை பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, பளிச்சென்றிருந்த வானம் திடீ ரென்று கறுத்தது. சற்று நேரத்துக்கெல்லாம் கருமேகங்கள் சுருள் சுருளாய்ச் சூழ்ந்து கொண்டு வானம் மூட்டம் போட்டுவிட்டது. காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. எங்கேயோ இடி முழக்கம் எழுந்து செவியைத் தாக்கியது கடலும் கறுத்து குமுறிக் கொந்தளித்து அலைகளும் கோர மாய் எழுந்தன.
சற்றுமுன் பளிச்சென்றிருந்த வானத்தைப் போலவே இருந்த ஆதம் தண்டேலின் இதயத்திலும் திகில் இருளாக ஒடியது. மலைத்துப்போய் அப்படியே நிலைகுலைந்து நின்று சீறி எழும்பும் கடலையே பார்த்துக் கொண்டிருந்தார்.
பதினாறு வயதிலேயே கடலின் மைந்தனாகிவிட்ட ஆதம் தண்டேல், இப்போது அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்தார், கடந்த நாற்பத்தைந்து வருடங்களாக அவருக்கு கடலில்தான் தொழில். அதிலிருந்து கொண்டு தான் கல்யாணம், குட்டி குழந்தைகள் எல்லாம் கண்டார். அவரது குடும்பம் நேரக் கஞ்சியையும் குடித்து வந்தது. இடையில் கஷ்டப்பட்டுக் கடுமையாக உழைத்து ஒரு தோணி-வலைக்கும் சொந்தக்காரராகி இரண்டு குமாரர் களையும் கட்டிக்கொடுத்துவிட்டார். அந்த இரண்டு திரு மணங்களும் தோணி-வலையை மட்டும் மிச்சம் வைத்து
88

விட்டு இருந்த சேமிப்புக்களையெல்லாம் விழுங்கிவிட்டன. ஆண் வாரிசு இல்லாத நிலையில் கடைசியாக ஒரு குமர் விட்டில் வலம் வந்து கொண்டிருந்தது. தன் கண்ணுக்குள் அந்தப் புள்ளயையும் ஒருவன் கையில் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற துடிப்பு வேறு. அதற்கும் பணம் காசு வேணுமே. அவரின் ஊரின் கடலுக்குள் இருந்த மீன் கும்பல்கள் எல்லாம் மனிதர்கள் வேறு ஊர்களுக்கு குடி யேறுவதுபோல் வேறு இடங்களுக்கு வாசம் செய்யப்போய் விட்டனவோ என்னவோ. கடந்த இரண்டு வருடங்க ளாக ஒழுங்காக மீன்படுவதில்லை. இதனால் அந்த ஊரில் கடற்றொழில் செய்துவந்த பலர் வேறு தொழில் - வியா பாரம் என்று இறங்கிவிட்டனர். ஆனால் ஆதம் தண்டே யினால் அதிலிருந்துவிடுபடமுடியவில்லை. விடுபட்டு வேறு ஏதாவது தொழில் செய்ய விரும்பவுமில்லை. அவர் கடற் றொழிலை வருமானத்திற்காக மட்டும் செய்யாமல் அத் தொழிலேயும் தோணி,வலையையும் நேசித்து, ஆத்மபூர்வ பாக அதில் ஒன்றித்து நின்றதுதான் அதற்குக் காரணம் என்று சொல்லலாம். இதனுல்தான் கடல்மீன் படுவது குறைந்து, வருமானமும் தேய்ந்து கொண்டிருந்தாலும், வானம் வெளுத்து, கடல் அமைதியாக இருக்கும்போதெல் லாம் அவர் தோணி விடுவதற்குத் தவறுவதில்லை மீன் அறவே படாத நாட்களில் அவரும் மனைவியுமாய்ச் சேர்ந்து வீட்டில் பாய் இழைத்து, தறிக்குத் தார் சுற்றிச் சிறிது வருமானத்தைத் தேடிக் கொள்வார்கள்; இதனால் வயிற்றுப்பாட்டை ஓரளவு சமாளிக்க முடிந்ததே தவிர மற்றும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பெரும் சிரமம் இருந்தது.
இப்போது நாலைந்து நாட்களாகப் பெய்த மழைக்கு முன் தினம்தான் ஓரளவு மீன் பட்டது. அதில் கிடைத்த காசை தோணியில் போனவர்களுக்கும் வலை இழுத்தவர் களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டுத் தனக்குரியதை யும் எடுத்துக் கொண்டார். அந்தக் காசுதான் நாலைந்து நாட்களாகப் பெய்த மாரிக்குப் பசியாற்ற உதவியது.
89

Page 22
நாளைக்குத் தலைப்பிறை நோன்புக்கான சாமான்கள் வாங்க வேண்டும். அவரை விட்டுப் பிரியாமல் அவரது தோணியிலேயே பிழைப்பை நடத்தும் சிலரும் தலைப் பிறைக் கென்று காசு கேட்டு வாசலில் வந்து நிற்பார்கள். தன்னை எஜமானனாகவும் அந்தப் பாட்டாளிகளை வெறும் கூலியாட்களாகவும் கருதாமலும் தன்னைப்போல் ஒருவராக நினைத்து நடந்து கொள்ளும் ஆதம் தண்டேல் அவர்களையும் கவனிக்க வேண்டும். நாளைக்குத் தோணி தள்ளிப் பரக்கத்தாக மீன்பட்டு, இந்தப் பிரச்சி னைகளையெல்லாம் ஓரளவு சமாளிக்கலாம் என்று நம்பி யிருக்கும்போது வானம் இப்படிக் கறுத்தால் என்ன நடக் கும்? திரும்பவும் மழையும், காற்றும் புறப்பட்டு ஆட்டம் போடத் தொடங்கினால் தலைப் பிறைத் திட்டம் நோன்பு எல்லாம் என்னாவது ?
அது நிறைவாயிருக்குமா ?
ஆதம் தண்டேலுக்கு அன்று ஏற்பட்டிருந்த உற்சாக மெல்லாம் மறைந்து ஏமாற்றத்தால் மனம் அல்லாடியது. அதற்கு மேலும் கடலை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நிற்காமல், மனதில் துயரமும் கவலையும் அப்பிக் கொள்ள தளர் நடையுடன் வீட்டுக்குத் திரும்பினார்.
ஆனால் அன்றிரவு வானம் தோணிக்காரர்களை துயர் கொள்ள வைக்கவில்லை. மூட்டம் மmைந்து, காற்றும் ஒய்ந்து மறுநாள் காலை சூரியன் பளிச் சென்று சிரித்தான். நாலைந்து நாட்களாக வெறிச்சோடிக்கிடந்த கடற்கரை கரைவலைக்காரர்களால் கலகலத்தது. தோணிகள் கடலில் தள்ளப்பட்டன. ஆதம் தண்டேலின் தோணியும் கடலில் வலை போடக் கிளம்பியது.
நேரம் போய்க் கொண்டிருந்தது. கரையில் நின்ற வர்கள் வலையை இழுக்கத் தொடங்கினார்கள். அவர்
களுக்கே-அந்த கடற்கரைக்கே சொந்தமான பிரத்தி
40

யேகப் பாஷைகளும் பாட்டும் அவர்களை அயர விடாமல், களைக்க விடாமல் இயங்கச் செய்தன.
ஆதம் தண்டேலின் வலையின் மீன் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது அது கரைக்கு வந்ததும், ஆதம் தண்டேலும் வலை இழுத்தவர்களும் ஆவல் கொப்பளிக்க மீன் மடியைச் சூழ்ந்தார்கள். அன்று கடல் அவர்களை முற்றாக ஏமாற்றி விடவில்லை. மடி ஒரள வுக்குப் பெருத்துக் காணப்பட்டது. சிறிது மன ஆறுத லுடன் மடியை அவிழ்த்து மீனை அள்ளத் தொடங்கி sory fassir.
ஆதம் தண்டேல்" என்று குரல் கேட்டதும் அவர் திரும்பினார். 'மீன் பட்டிருக்கும்போல??? என்ற கேள்வி யுடன் மீரா அங்கே வந்தார்.
வாங்க, ஏழெட்டு நாளுக்குப் பிறகு இன்னைக்குத் தான் இந்தளவாவது மீன் கண்டம்” என்று வார்த் தையை நிறுத்திவிட்டு, திரும்பவும் மடியிலிருந்து அள்ளப் படும் மீன்களிலும் கண்ணைப் பதித்தார், ஆதம் தண்டேல்.
ஒம், தோணி தள்ளுறதுக்கு மழையும் காத்தும் விடேல்லியே” என்று கூறிய மீரா முதலாளி, கூடைகளில் நிரம்பியிருந்த மீன்களையும் மடியிலிருந்து அள்ளப்படும் மீன்களையும் பார்த்து அப்போதே மனதுக்குள் கணக்குப் போட ஆரம்பித்து விட்டார். w
நாலைந்து வருடங்களாக படுகிற மீனை ஆதம் தண்டேல் மீன் வியாபாரி மீரா முதலாளிக்குத்தான் கொடுத்து வந்தார். அவரும் தண்டேலுக்குப் பணத் தட்டுப்பாடான நேரங்களில் முன்பணமாக ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்து தன்னைத் தவிர மற்ற வியா பாரிகளுக்கு மீனைக் கொடுக்காதவாறு தண்டேலைத்
4.

Page 23
தனக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார். அன்று *ஆதம் தண்டேலின் தோணி தள்ளப்படுது? என்ற செய்தி அவருக்குப் போனதும் லொறியையும் எடுத்துக் கொண்டு, கடற்கரைக்கு வந்து விட்டார்.
மடியிலிருந்த மீன்கள் எல்லாம் அள்ளப்பட்டதும் என்ன தண்டேல், விலையை மதிப்பமா? என்று கேட்டார் மீரா முதலாளி. “சரி” என்று ஒரு வசனத்தில் பதில் கூறி விட்டு, தானும் ஒரு கணக்கைப் போட ஆரம் பித்தார் தண்டேல்.
சிறிது நேரம் ஏலம் கூறுவது போல் பேரம் நடந்தது. இறுதியில் இரண்டாயிரத்து இருநூறு ரூபாய்க்கு தீர்ந்தது. கடற்கரையை ஒட்டியுள்ள ரோட்டில் நின்றிருந்த மீரா முதலாளியின் லொறியில், மீன்கள் ஏற்றப்பட்டு விட்டன. அவர் புறப்பட ஆயத்தமானபோது காசு...?? என்று இழுத்தாார். ஆதம் தண்டேல்.
66என் காசு ரெ ண் டா யி ர ம் உங்களிட்ட நீக்குதில்லை அதில் சுழிச்சுக் கொள்ளுங்க” என்று சொல்லிவிட்டு நகர ஆரம்பித்தார் மீரா முதலாளி.
ஆதம் தண்டேல் ஒரு கணம் திகைத்து நின்றவர் உங்க காசை நான் எடுத்துப் போறனா..இன்னைக்கு தலைப்பிறையும் நாளுமா இப்படிச் சொல்லிவிட்டுப் போறிங்களே..?? என்று ஏக்கத்துடன் கூறியவாறு அவர் அருகில் நடக்கத் தொடங்கினார்.
மீரா முதலாளி டக்கென்று நின்றார். இந்தா பாருங்க, என் காசு ரெண்டாயிரம் உங்களிட்ட ஆறு மாசமா நிக்குது? இது எப்ப திரும்பி வாறது? மீன் படுறதும் இப்ப நல்லாக் குறைஞ்சு போச்சு, இன்னைக்கு விட்டா இனி எப்ப திரும்பிக் கிடைக்குமோ சொல்ல, முடியாது. கிடைக்காமலும் போகலாம்” என்று சொல்லி விட்டு லொறிக்கு நடந்தார்.
4歌

எப்படியாவது அந்தக் காசைத் தந்தி டுவேன். ஆனா இ ன்  ைன க் குத் தலைப்பிறை நோன்பு தொடங்குது. என்னிட ஆட்களுக்கும் காசு கொடுக் கோணும் ** என்றுக் கூறிக் கொண்டே ஆதம் தண் டேலும் பின் தொடர்ந்தார்.
தலைப் பிறை யெண்டா உங்களுக்கு மட்டுமா எனக்குந்தான் எனக்கும் செலவு சித்தாயம் இருக்கு” என்று சொல்லியவாறு லொறியை அண்மித்ததும் கிளின ரிடம் எல்லாம் சரியா?? என்று கேட்டார். அவன் தலையை ஆட்டினான்.
ஆதம் தண்டேலுக்கு நெஞ்செல்லாம் அடைப்பது போலிருந்தது. லொறிக்குப் பக்கத்தில் நிற்கும் மீரா முதலாளியை ஏக்கத்துடன் பார்த்தார். மீரா என்ன நினைத்தாரோ, சேட் பொக்கட்டிலிருந்து, மூன்று நூறு ரூபாய்த் தாள்களை எடுத்து 'என் கணக்கில் நான் இரு நூறு தரோனும் கூட இதில் நூறு இருக்கு. இத நீங்க திருப்பித் தர வேணாம்” என்று தண்டேலின் கையில் திணித்து விட்டு லொறியில் ஏறினார்.
முன்னூறு எந்த மூலைக்கு காணும்??? இக்கேள்வி யைக் கேட்பதற்குள், லொறி புறப்பட்டு விட்டது. இதே கேள்வி மனதில் திரும்பவும் ஒலிக்க, போய்க் கொண்டே இருக்கும் லொறியை வெறித்துப் பார்த்தபடி நின்றார் ஆதம் தண்டேல்
* 7ହୁଝ

Page 24
வெ றும் பேச்சு
மிஜித் வைத்தியரின் ஜனாஸா வீட்டின் நடுக் கட் டத்தில் வைக்கப்பட்டிருந்தது. வெளி விறாந்தையிலும் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியோரங்களிலும் போடப் பட்டிருந்த கதிரைகளிலும் வாங்குகளிலும் அமர்ந்திருந் தவர்களும், அங்கும் இங்கும் சிறு சிறு கூட்டமாக நின்றிருந்தவர்களும் ட்ரேயிலிருந்த வெற்றிலை பாக்கை வாயில் போட்டு சப்பிச் சுவைத்த வண்ணம் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சென்றால் சும்மா பேச்சல்ல. எல்லாம் மஜீத் வைத்தியரைப் பற்றிய புகழ் மொழிகள், பாராட்டுரைகள். அதே வேளையில் ஊருக்கு உபகாரி யாகவும் இனியவராகவும் இருந்து வந்தவர் மெளத்தாகி விட்டதைப் பற்றியும் துயரப்பட்டார்கள்.
அவர்களின் இந்த உரையாடல்களைக் காதில் விழுத் திக் கொண்டிருந்த மஜித் வைத்தியரின் நண்பரான அபூ பக்கருக்கு ஆத்திரத்தால் மனம் குமுறியது. அவரால் தொடர்ந்தும் அவர்களின் அப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. முகத்தைச் சுளித் து **வெறும் பேச்சுப் பேசுகின்றான்கள்” என்று முணுமுணுத் தபடி திருட்டென்று எழுந்து சற்றுத் தூரத்தில்போய் தனியாக நின்று கொண்டார். உள்ளத்தில் குமுறிய ஆத் திரத்தோடு கண்களும் கலங்கத் தொடங்கின.
இந்தக் காலத்தில், இங்கிலீஷ் வைத்தியத்திற்குதான் கிராக்கி அதிகம். நாட்டு வைத்தியத்திற்கு மவுசு குறைவு. இருந்தாலும் நாட்டு வைத்தியத்தையும் செய்து பார்ப் போம் என்று எண்ணிய நோயாளிகள் ஆயுர்வேத வைத் தியர்ான மஜீத்திடம் வரத்தான் செய்தார்கள்.
44

வைத்தியத்தை வருமானம் தரும் ஒரு தொழிலாக அவர் செய்யவில்லை. அதை மக்களுக்குச் செய்யும் ஒரு தொண்டாகவே கருதி வந்தார். ஆகையால், தன்னிடம் வரும் நோயாளிகளைக் கண்ணியமாக வரவேற்று அக்கறையுடன் விசாரித்து, அன்பாய், ஆதரவாய்ப் பேசி மருந்து கொடுப்பார். காசு கேட்க மாட்டார், கொடுப் பதை வாங்கிக் கொள்வார். அது எவ்வளவு என்று பார்க் கவும் மாட்டார். மேசையில் இருக்கும் ஒரு மரப் பெட்டி குள் அப்படியே போட்டு விடுவார். காசு கொடுக்காமல் போனாலும் முகம் சுளிக்க மாட்டார். மறுமுறை அவர்கள் வந்தாலும் அதே புன்னகையோடும், கனிவோடும் வைத் தியம் பார்ப்பார். அப்போதும் காசு கொடுக்காவிட்டாலும் அவர் மனதில் ஒரு தூசோ துரும்போ விழாது. எத்தனை முறை அவர்கள் காசில்லாமல் வந்தாலும் அவரிடம் மாற்ற மிராது. ஏழைகள் சிலர் மருந்துக்கு காசு கொடுத்தால் இருக்கட்டும் வைத்துக் கொள்ளும்’ என்று மரியாதை யாகச் சொல்லி வாங்கிக் கொள்ள மாட்டார்.
இங்கிலீஷ் வைத்தியத்தை விரும்பி வேறு டாக்டர் களிடம் போவோரில் சிலர், காசு இல்லாத நிலையில்,அந்த ரம் அவசியம் என்று அவரிடம் வருவதுண்டு. மஜித் வைத்தியர் அவர்களிடம் எவ்வித வேற்றுமையும் காட்டா மல் நடந்து கொள்வார். ஏமம் சாமம் என்று யாராவது வந்து கூப்பிட்டாலும் சடையாமல் சளைக்காமல் நோயா ளிகளின் வீட்டுக்கு போய் மருந்து கொடுத்துவிட்டு வருவார்.
மஜீத் வைத்தியர் இவ்வாறு மருத்துவத் தொண்டு செய்வதோடு மட்டும் நிற்கவில்லை. ஊர்த் தொண்டு களிலும் ஈடுபட்டு வந்தார். பள்ளிவாசல் விஷயம், பாட சா8ல விஷயம்,கந்தூரி மார்க்க நிகழ்ச்சிகள் என்றுபொதுக் காரியங்கள் எதுவாயிருந்தாலும்சரி,அங்கே மஜித் வைத்தி பரைக் காணலாம். ஊர்ப் பிரச்சினைகள், கல்யாண விவகாரங்கள், குடும்பத் தகராறுகளையெல்லாம் சுமுக
45

Page 25
மாகத் தீர்த்து வைப்பதில் முழு அக்கறையுடன் செயல் படுவார். சண்டை சச்சரவுகள் நட்டத்தைத் தரும், சமாதானம் நன்மையைத் தரும்” என்று அப்போது சம்பந் தப்பட்டவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப் பார், அவரைப் பொறுத்தவரை ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டும், இஷாத் தொழுகையின் போது இதற் காக அவர் துஆ கேட்பதுண்டு.
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை முகம் மலர வர வேற்று உபசரிப்பார். ஏழைபாழைகள் ஏதாவது கேட்டு வெறுங்கையோடு திரும்பியதில்லை. பெரியவர்கள், சிறிய வர்கள்என்று வித்தியாசம் பாராட்டாமல் எல்லோருடனும் இனிமையாகவும் கனிவாகவும் பேசுவார்.
இத்தகைய குணநலன்களும் சேவை உணர்வும் உள்ள மஜித் வைத்தியருக்குத் தன் காரியங்களில் மன நிறைவு இருந்தாலும் பொருள் நிறைவு இருக்கவில்லை. மருத்துவப் பணியிலும், சமூக சேவையிலும் பெரும்பகுதி நேரத்தையும் பொழுதையும் செலவழித்து வந்ததால் வரு மானம் குறைந்த நிலையில் குடும்ப வளமும் நாளுக்கு நாள் வற்றிக் கொண்டு வந்தது.
இந்த நிலைமை வைத்தியரின் மனைவி ஜொஹரு வுக்குக் கவலையைத் தர ஆரம்பித்தது ஒரு நாள் கணவ ரிடம் இப்படி உங்க போக்கிலேயே போய்க் கொண்டி ருந்தா என்ன ஆகிறது? நமக்குக் குமர் கொத்தைகள் இருக்குதில்லையா? இதுகளை ஒப்பேத்த வேணாமா? இருக்கிற ஒரேயொரு மகனும் இன்னும் வயசுக்கு வரேல்லை. அவன் வளர்ந்து தலையெடுத்து இதுகளை கட்டிக் கொடுக்கிற வரைக்கும் குமர்களின் வயசும் வாலிப மும் காத்திருக்குமா? என்று மனம் தாளாது கேட்டாள்.
மஜித் வைத்தியருக்கும் சில நாட்களாக குமர்களின் பிரச்சிஜன உருத்தத் தொடங்கியிருந்ததால், மனைவியின்
48

இந்தக் கேள்வியை அலட்சியப்படுத்த முடியவில்லை. 'உன் கேள்வி சரி. முதலில் மூத்த குமரையாவது ஒப் பேத்தறத்துக்கு வழி பண்ண வேணும்’ என்று சொல்லி விட்டு. அதீத முயற்சியிலும் இறங்கினார். ஆனால் விஷயம் சுலபமாக முடியவில்லை.
மஜித் வைத்தியரிடம் மூன்று குமர்களுக்கும் பொது வாய் சுமாரான ஒரு வீடும்,மனைவி ஜொஹரு பாதுகாத்து வந்த கொஞ்சம் நகையுந்தான் இருந்தது. வீட்டில் ஒரு பங்கையும் இருக்கும் நகைகளையும் போட்டு, மூத்த பெண்ணின் கல்யாணத்தை முடிக்கலாமென்று எண்ணி னார். ஆனால் அவரது எண்ணத்துக்கு இசையக் கூடிய சம்பந்தம் கிடைக்கவில்லை மாப்பிள்ளை பேசிப் போன இடங்களில்லெல்லாம் அவர்கள் வைத்தியரை மரியாதை யோடு வரவேற்று உபசரித்து 6%உங்களிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ள யாருக்குத்தான் விருப்பமிருக்காது?* என்றும் நீங்கள் மாப்பிள்ளை கேட்டு வரும்போது எப்படி மறுக்கிறது? என்றும் வாய் இனிக்கப் பேசினார்கள். ஆனால் சீதன விஷயத்தில் மட்டும் தங்கள் நிபந்தனை யைக் கூறத் தவறவில்லை. கொஞ்சமும் தயக்கமோ, தாட்சண்யமோ இல்லாமல் ஆயிரக் கணக்கில் காசும் கேட்டார்கள். வைத்தியர் அவர்களின் நிபந்தனைக்குச் சம்மதிக்க முடியவில்லை. தன் தகுதிக்கும் நிலைமைக்கும் ஒத்து வரக்கூடிய ஒரு மாப்பிள்ளையை ஒழுங்கு செய்ய எவ்வளவோ முயன்றும் விஷயம் கைகூடவில்லை. மஜித் வைத்தியருக்கு இடி விழுந்தது போலாகிவிட்டது.
மனைவி ஜொஹருவுக்கும் மனதை வாட்டத் தொடங் கியது. 'பாத்தீங்களா, ஊருக்கு எவ்வளவோ தொண்டு செய்தீங்க. எத்தனையோ குமர்களைக்கூட கரை சேக்க றதுக்கு உதவி செய்தீங்க. இப்ப நம்ம குமரைக் கையேற் கிறதுக்கு ஒருத்தரும் முன் வரல்லேயே. சீதனத்தில் தானே குறியா இருக்கிறாங்க என்று கலக்கத்துடன் alapsorprair
47

Page 26
சமூகத்தில் சீதனத்துக்கு இருக்கும் ஆதிக்கத்தையும் மாப்பிள்ளைமாருக்கு அதன் மீதுள்ள மோகத்தையும் மஜீத் வைத்தியர் நன்கு அறிந்திருந்தாலும், ஊருக்கு உப காரியான சமூகத் தொண்டரான தன்மீது சனங்களுக்கு அபிமானம் இருப்பதால் தன் விஷயத்தில் சீதனத்தை அதிகம் பாராட்டமாட்டார்கள் என்று நம்பியிருந்தார். இப்போது அந்த நம்பிக்கை தகர்ந்ததும் அவரது நெஞ்சம் புண்ணாகி நொந்தது. மெளனக் கண்ணிர் வடித்தார். எனினும் அல்லாஹ் நான் அறிய எவருக்கும் ஒரு பிழை யும், தீங்கும் செய்ததில்லே. நல்லதுதான் செய்திருக் கிறேன். அப்படியிருந்தும் என் குமர்களில் ஒன்றாவது ஒப்பேறுகிறத்துக்கு வழி திறக்கலையே என்று இறைவனி டம் முறையிட்டாரே தவிர யாரையும் நோகவில்லை. ஊர்ப் பணியையும் நிறுத்தவில்லை. உன் நாட்டம் எப்ப டியோ அதன்படி நடக்கட்டும்” என்று அல்லாஹ்விடம் குமர்ப்பாரத்தைப் போட்டுவிட்டு, தன் சுபாவப்படி உப காரியாகவும் இனியவராகவுமே தொடர்ந்தும் இருந்து வந்தார்.
மெளத்து என்பது தவிர்க்க முடியாத விதி. அது எந்த நேரத்திலும், எந்த ரூபத்திலும் வரும். ஒருநாள் அது மாரடைப்பு ரூபத்தில் வந்து, மஜீத் வைத்தியரையும் தன்னிடம் இழுத்துக் கொண்டது.
தனது நண்பரான மஜித் வைத்தியரின் இந்த விஷயங் களெல்லாம் அபூபக்கருக்குத் தெரியும். இதையெல்லாம் எண்ணி, ஒரு குமரின் கல்யாணத்தைக்கூட கண்டு களிக் காமல் மனிசன் கண்மூடி விட்டாரே என்று நினைத்து துயரத்தினால் க ன் னிர் விட்டுக் கொண்டிருந்த அபூபக்கர் கண்களைத் துடைத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தார்.
மையத்துக்கு வந்திருந்தவர்கள், அப்போதும் பேசிக் கொண்டிருந்தார்கள் அங்கிருந்தவர்களில், சீதனத்தை
48

முதன்மைப்படுத்தி கல்யாணத்துக்கு மறுத்தவர்களும் மற்றவர்களுடன் வைத்தியரைப் பற்றித்தான் கதையளக் கிறார்கள் என்று அபூபக்கர் ஊகித்துக் கொண்டார். ஏற் கனவே இதை எண்ணி ஆத்திரத்தால் நெஞ்சு குமுறிய அவர், இப்போது அவர்களை வெறுப்புடன் பார்த்து;
*மஜீத் வைத்தியரைப் பற்றிப் பெரிசாத்தான் பேச நீங்க. அபிமானம் எண்டு காட்டுறிங்க, ஆணு, உங்க அபிமானம், புகழ்ச்சி, பாராட்டு, துயரமெல்லாம் போலி. அவ்வளவும் பொய். ஹ0 அந்த மனிசனின் குமரை ஏத்துக் கொள்றதுக்கு, நீங்க ஒருத்தனாவது சம்மதிச் சீங்களா? அந்த மனிசன் ஊருக்கும் உங்களுக்கும் செய்த சேவையை நினைச்சுப் பார்க்காம, நன்றி கெட்டுப் போய் சீதனத்தைத்தானே பெரிசா மதிச்சீங்க? உங்க சீதனப் பேராசையையும் நன்றி கெட்டத் தன்மையையும் கூட, அந்த மனிசன் பெரிசுபடுத்தாம தொடர்ந்தும் உங்க மால்லோருக்கும் உகந்த ஆளாகத்தான் இருந்தார். அவர் எவ்வளவு பெரிய மனிசன் 1 இருந்தாலும் குமர் காரியம் நிறைவேறலையே எண்ட கவலையும், ஏக்கமும் அவர் மனசில இல்லாம இருந்திருக்குமா ? அந்த ஏக்கமும் கவலையும் அவர் மனசை அரித்துத் தின்றிருக்குமே! இப் போதாவது இதை நினைச்சுப் பாத்தீங்களா ? இப்ப என்னமோ டெரிசா அளக்கறிங்க. உங்க பேச்செல்லாம் வெறும் பேச்சு என்று வெஞ்சினத்தோடும் வெறுப்போடும் கடுமையாகக் கூறிவிட்டு "தூ” என்று நிலத்தில் துப்பி விட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்.
அந்த வெறும் பேச்சு தொடர்ந்து நடந்து கொண் டிருந்தது.
女
49

Page 27
கடைசி வார்த்தை
மரணம் மனிதனின் மீற முடியாத விதி. அந்த விதிக்கு சுலைமானும் தப்பவில்லை. அதுவும் அவருக்கு ஏற்பட்டது திடீர் மரணமுமல்ல. ஆகவே சுலைமானின் மெளத்தைக் குறித்து யாரும் ஆச்சரியப்படவில்லை. அவர்கள் ஆச்சரியப்பட்டதெல்லாம் அவருடைய மனைவி றஹ்மத்தும்மா கணவரின் மையத்துக்குப் போகாமல் இருந் ததைப் பற்றித்தான். சுலைமானுக்கும் றஹ்மத்தும்மா வுக்கும் பதினைந்து வருஷங்களாக உறவில்லை. இது சொந்தம், பந்தம், ஊர் உலகம் எல்லாம் அறிந்த செய்தி தான், எனினும், கட்டிய புருஷன் காலமாகிவிட்டதால் றஹ்மத்தும்மா மையத்துக்குப் போவாள் என்றே எல்லா ரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவள் அந்தப் பக்கம் தலை காட்டவே இல்லை. யாரோ ஒருத்தர் மெளத்தான செய்தி தன் காதில் விழுந்ததைப் போல, ஒருவித சலன மும் ஏற்படாமல் எதிரொலியும் காட்டாமல் தன் வீட்டி லேயே இருந்து விட்டாள்.
றஹமத்தும்மாவின் இந்தப் போக்கு, மற்றவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்ததோடு அவர்களுக்கு அது பிடிக்க வுமில்லை. அவர்களில் பலர் வந்து இதைப் பற்றிப் பிரஸ் தாபித்தார்கள். “நீ இப்பிடிப் படிவாதமாக இருக்கப் படாது. பதினைந்து வருஷமா உனக்கும் அவருக்கும் உறவத்துப் போனாலும், தலாக் சொல்லிப் பிரிஞ்சுபோன புருஷன் பெண்சாதியல்ல. அவருக்குப் பெத்த பிள்ளை கள் வேற உனக்கு இருக்கு, இன்னைக்கும் மனைவி என்கிற உரிமை இருக்கு, அந்த உரிமை, உனக்கு இந்த இறுதிக் கடமையையும் விதிச்சிருக்கு. கடைசியாக அவர் மையத்திலயாவது நீ முழிக்கத்தான் வேணும். மறுக் காதே, எழும்பு போ. ம். புள்ளைகளையும்
5O

கூட்டிக் கொண்டு போ. என்று பலவாறும் எடுத்துச் சொன்னார்கள். வற்புறுத்தினார்கள்.
றஹ்மத்தும்மா பதிலாக ஒரு வார்த்தையும் சொல்ல வில்லை. அவர்கள் கூறியதைக் காதில் விழுத்திக் கொண் டதாகவும் தெரியவில்லை. சுவரோடு சாய்ந்தபடி மரக் கட்டைபோல் அவள் குந்தியிருந்தாள்.
சுலைமான் கொழும்பு பஜாரில் ஒரு புரோக்கர். கடை களுக்குச் சாமான்கள் வாங்கியும் விற்றுக் கொடுத்து கொமிஷன் பெறும் ஓர் உதிரி புரோக்கராயிருந்தாலும், பற்றாக்குறை என்றில்லாமல் அன்றாடவருமானம் தாராள மாயிருந்தது. ஆனால் தினம் சம்பாதிக்கும் காசு வீட்டுச் செலவுக்கென்று மட்டுமல்லாமல் கூட்டாளிகன் சிநேகிதம் ரேஸ், காட்ஸ் விளையாட்டு மற்றும் சில கூடாத பழக்க வழக்கங்களில் கரைந்து விடும் மறுநாள் பஜாருக்குப் போகும்போது, கைச் செலவுக்கு மனைவியிடம்தான் வாங்கிக் கொண்டு போவார்
ரஹ்மத்தும்மா கணவருக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். **சம்பாதிக்கிறதையெல்லாம் இப்படி அநியா யமாய்க் கொட்டிச் செலவழிக்கிறது உங்களுக்குச் சரியா ய்த் தெரியுதா? நமக்கு ஒரு புள்ள இருக்கிறது. பின் இறுக்கு அதுவும் குமராகி, கல்யாணம் காட்சின்னு இருக்கு தில்ல்ை யா? அதுக்கு தேடி வைச்சாத்தானே அதுவும் நடக்கும்? மனிதனுக்கு வியாதிகியாதி வந்தா அதுக்குக் கூடச் செலவு பண்றதுக்கு பணம் இல்லாட்டி கஷ்டமாப் போயிடும்; இப்படிச் செலவு பண்ணினா திங்கிறது. உங் கிறதுக்குக்கூடத் திண்டாடனும் ரெண்டு புள்ளங்களுக் குத் தகப்பணுயிருக்கிற உங்களுக்குப் பொறுப்பு வேணும்”* என்றெல்லாம் சொல்லுவாள். இப்படி மனைவி சொல்வது எதுவும் சுலைமானின் மனதிலும் தரிக்காது; மூளையிலும் ஏறாது. 'நீ எனக்கென்ன புத்தி சொல்றது? சும்மா
61

Page 28
புலம்பாமல் இரு’ என்று முறைப்புடன் சொல்லிவிட்டுப் போய்விடுவார்.
கணவரின் இந்தப் போக்கு றஹ்மத்தும்மாவுக்குச் சலிப்பை ஏற்படுத்தினாலும், அவரைச் சரியான பாதைக் குத் திசை திருப்பலாம் என்ற நம்பிக்கை இருந்து அதுவும் போய், இதைப் பற்றிப் பேசுவதையே நாளடைவில் நிறுத் திக் கொண்டாள். அதேசமயம், தானாவது நாலுகாசு சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில், வீட்டுக்கென்று கணவர் கொடுக்கும் காசில் முடிகிறவரை மிச்சம்பிடித்து, சீட்டுப்போட்டு அக்காசில் நகைநட்டென்று வாங்கி வைத்துக்கொள்வாள். சில சமயங்களில், அதற்கும் ஆபத்து வந்துவிடும். சுலைமானின் வழக்கமான ரேஸ், காட்ஸ் மற்றும் அவருடன் ஒட்டிக்கொண்ட பழக்கத் தோஷம். செலவுக்கும் காசு போதாமல், அல்லது அதற் காக வாங்கிய கடனை அடைக்க அந்த நகைகள் அடவுக் கடைகளில் கைதியாகிவிடும். இம்மாதிரியான சந்தர்ப் பங்களில் றஹ்மத்தும்மா வாய் திறப்பதை தவிர்த்துக் கொண்டாள்.
சுலைமானுக்கு கட்டுப்பாடு என்று எதுவுமே இல்லை. இரவில் வெகுநேரம் சென்றுதான் வருவார். இடையில் இதில் ஒrா மாற்றமும் உண்டாயிற்று. இரவில் அகால நேரங்களில் வரும் அவர், சில வேளைகளில் அப்படியும் வராமல் மறுநாள், அதற்கு அடுத்த நாள் வரத் தொடங் கினார். முதல் தடவை இப்படி நடந்தபோது, எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்குவருட0 தன் கணவர், அன்றிரவு வராமல்போனதால், விளங்காமல் கலங்கியபடி விடியும் வரை விழித்திருந்த ரஹ்மத்தும்மாவுக்கு, அடுத்த நாள் வீட்டுக்கு வந்த தன் கணவரைக் கண்டதும் கலக்கமும் தவிப்பும் தீர்ந்து ‘ராவு ஏன் வீட்டுக்கு வரேல்ல? எங்கே போனிங்க ? என்று துடித்தபடி கேட்டாள், சுலைமான் ஏதோ சமாதானம் சொல்லி மழுப்பிவிட்டார். ஆனால் அன்றிரவுமட்டுமல்லாமல் தொடர்ந்து பல தடவை அவர்
52

இரவில் வீட்டுக்கு வராமல்போகவே றஹ்மத்தும்மாவுக்கு யோசனையாகிவிட்டது. ஒருநாள் 66 இப்பல்லாம் இர வுக்கு வராம, எங்கேயோ போயிரிநீங்க ? நான் ஒருத்தி இருக்கேன், பிள்ளைகள் இருக்கு எண்ட நினைப்பே அத்துப்போச்சு” என்று கண்ணிரும் கம்பலையுமா சொன்னபோது புலிமாதிரிப் பாய்ந்தார் சுலைமான்.
68இந்தாப்பாரு. நான் ஆண்பிள்ளை. எதையும் செய்வேன், எங்கேயும் போவேன். என்னைப்பத்திப் பேசப்படாது. கேட்கப்படாது. ஏதாவது பேசினா பல் கொட்டிடும்” என்று கர்ஜித்தார். றஹ்மத்தும்மா அதற்குப் பிறகு எதைப்பற்றியும் பேசுவதில்லை, ஆனால் தன் கணவர், ரகசியமாக இன்னொரு பெண்ணையும் தனக்கு மனைவியாக்கிக் கொண்டதுதான், இந்த இரவு மாற்றத் துக்குக் காரணம் என்ற உண்மை அவளுக்கு அம்பலமாக நெடுநாள் எடுக்கவில்லை. றஹ்மத்தும்மாவுக்கு அதிர்ச்சி யாக இருந்தது. றஹ்மத்தும்மா ஒன்றும் அழகில் குறைந் தவளல்ல. கணவரிடம் முழுமை அன்பு செலுத்தாதவளு மல்ல. அவள் அவரை ஆழமாக நேசித்து கணவரின் தவறான நடத்தைகளைச் சுட்டிக்காட்டித்தந்த போதெல் லாம் மென்மையாகவும், அன்பாகவும் எடுத்துச் சொன் னாள்: பின்னர் அதையும் விட்டுவிட்டாள். அது மட்டு மல்ல, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோபப்பட்டுச் சீறி வார்த்தைகளைச் சூடாக வீசியதில்லை. வெறுப்புடன் முகத்தைச் சுளித்ததில்லை. கணவருடைய குற்றங்குறை கள், பலவீனங்கள், பொறுப்பின்மை எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். ஆனால் இன்னொருத்தியை யும் கட்டிக் கொண்டதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உள்ளம் உடைந்து நொறுங்கிவிட்டது. கணவரிடம் எந்தளவுக்கு அன்பு செலித்தினாளோ அந் தளவுக்கு வெறுப்பு தியாக மூண்டு, செலுத்திய அன்பை எரித்து விட்டது. கணவர் தனக்குத் துரோகம் செய்து விட்டார் என்ற வஞ்சினம் குமுறிப்புடைத்து, உள்ளத்
58

Page 29
தைச் சிவப்பாக்கிவிட்டது. கண்ணிருக்குப்பதிலாக கண் ணில் தணலை எரிய வைத்தது. இந்தச் செய்தி அம்பல மான அன்று சுலைமான் வீட்டுக்கு வந்தபோது, கனல் எரியுல் கண்களால்தான் அரைப் பார்த்தாள். ஆனால் கொந்தளித்துச் குமுறிய வார்த்தைகளால் கணவரைச் சுடவுமில்லே. மாறாக, **இன்னையிலிருந்து நா சாகும் வரைக்கும் உங்கள் கண்ணில் நா முழிக்க மாட்டேன்? என்று ஒரே சொல்லோடு, வார்த்தையைத் தெளித்து விட்டு அந்தக்கணமே விருட்டென்று உள்ளே போய் விட்டாள். s
சுலைமானுக்கு விஷயம் உடனே புரிந்துவிட்டது. என்றைக்காவது ஒருநாள், தன் குட்டு அவளுக்கு வெளிப் பட்டுவிடும்; அவன் தன்மீது பொங்குவாள்; சீறி வெடிப் பாள் என்று சுலைமானும் எதிர்பார்க்காமலும் இல்ைைல. எனினும், அவளைச் சமாதானப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆனால் இப்போது அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக அவள் தன் ஆத்திரத் தையும் வெறுப்பையும் ஒரே வார்த்தையால் அம்பைப் போல் எய்துவிட்டு, சரேலென்று உள்ளே போனதும் அவ ருக்கும் ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது’* ஊர் உல கத்தில் யாரும் செய்யாததை நா செய்துட்டனா ? ரெண்டு பெண்டாட்டிக்காரங்க எத்தனையோ பேர் இல்லையா ? நா இன்னொரு பெண்ணைக் கட்டிக்கிட் டாலும் உன்னையோபிள்ளைகளையோ கைவிட்டேனா? நீ இதை நினைச்சுப் பார்க்காம, இனிமே கண்ணிலே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டியே ஒரு பொம்பளைக்கு இவ்வளவு ஆங்காரமிருந்தா, ஆம்பிளை யான எனக்கு எவ்வளவு இருக்கும்? நீ என் கண்ணில முழிக்காட்டி இந்த வீட்டில எனக்கென்ன வேலை, நா ஏன் இங்கே வரோனும் ; இருக்கோணும் ??’ என்று உள்னே பார்த்தபடி இரைந்தார். ஆனால், உள்ளே இருந்த றஹ்மத்தும்மாவிடமிருந்து எந்தவிதமான எதிரொ லியும் வரவில்லை. சுலைமான் அதற்குமேல் அங்கே
54

இருக்காமல், றஹ்மத் தும்மிா ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டு எந்த வேகத்துடன் உள்ளே போனாளோ, அதே வேகத்தில், அவரும் வெளியே போய் விட்டார்.
சுலைமான் இப்படிப் போட்டிக்குச் சவால் விட்டது போலச் சொல்லி விட்டுப்போன பிறகு, திரும்பி வரவே இல்லை. "கழுதை எத்தனை நாளைக்கு இந்தச் சபதத் தோட இருக்கப் போறான்னு நா பார்க்கத்தான் போறேன் சல்லிக் காசு அவவுக்கு அனுப்ப மாட்டேன். தனக்கும் புள்ளைகளுக்கும் வயிறு காய ஆரம்பிச்சதும் சபதத்தை விட்டு என்னை வரச்சொல்லி ஆள் அனுப்பத்தான். போறா ?? என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். ஆனால் அவர் நினைத்த மாதிரி நடக்கவில்லை மஹ்மத்தும்மா அடுப்பில் பலகாரச் சட்டியை ஏற்றித் தின மும் நேர்க் கடைக்குப்போய் பலகாரம் கொடுத்தாள். அந்தத் தெருவில் இருந்த பிற ஊரைச்சேர்ந்த உத்தியோ கத்தர் சிலருக்கும் பகல் (ரவுச் சாப்பாடும் வழங்கினாள். இந்தத் தொழில் அவல ளயும் காப்பாற்றியது. அதோடு பிள்ளைகளிடம் 'இந்தா பாருங்க. ரோட்டில கீட்டில வாப்பா கண்டுட்டு காசு கொடுத்தா வாங்கக் கூடாது. அவரோடு பேசவும் படாது. உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்துடனும்? என்று கட்டளையும் போட்டிருந் தாள். இதை அறிந்ததும் சுலைமானுக்கு மனம் குமைந் தது, ஒ. இந்தளவுக்குத் துணிஞ்சுட்டாளா ! சரி எதையாவது செய்து தொலையட்டும் என்று அலட்சிய மாக இருந்துவிட்டார்.
பதினைந்து வருடங்கள் ஓடி மறைந்து விட்டன. றதஷ்ற மத்தும்மா தன் கணவருக்கு கூறிய அந்த ஒரேயொரு வார்த்தையின்படி, அவரது கண்ணில் முழிக்கவேஇல்லை. ட்ெளத்தானதும் அவருடைய மையத்தில் முழிக்கச் சொல் கிறார்கள்.
ஒன்றுமே பேசாமல் சுவரில் சாய்ந்தபடி குந்தியிருந்த உம்மாவுக்கு, கோப்பி கொண்டுவந்து கொடுத் தாள் மகள்
○5

Page 30
ற்ஹ்மத்தும்மா அவளை நிமிர்ந்து பார்த்தாள். அவளு டைய முகத்தில் ஒரு மாற்றமும் இல்லை. குடிப்பதற்காகக் கோப்பியைக் கையில் றஹ்மத்தும்மா எடுக்கும்போது, தன் தொழிலுக்காக வெளியே போயிருந்த மன்சூர் வீட் டுக்கு வந்தான். வரும்போதே “வாப்பா மெளத்தாயிட் டாராமே ?? என்று கேட்டவாறே வந்தான்.
றஹ்மத்தும்மா பதில் ஒன்றும் சொல்லாமல் கோப்பி யைக் குடித்துவிட்டு, மகனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் சேட்டைக் கழற்றி ஸ்டாண்டில் மாட்டிக் கொண்டி ருந்தான். அதற்குமேல் அவனிடமிருந்தும் தகப்பனாரைப் பற்றிய பேச்சு வரவில்லை.
ரஹ்மத்தும்மா எழுந்தாள். மேசைமேல் இருந்த கூடையை எடுத்துக்கொண்டு "புள்ளே, நான் மார்கெட் டுக்குப் போய்ட்டு வாறேன்” என்று கூறியபடி வெளியே LADLull-fir.

திருத்த வேண்டிய பிழை
இருபது வருஷங்களுக்கு முன் அந்தக் குரல் ஒலித்தது.
நகரத்தின் மத்தியில் உள்ள அந்த முஸ்லிம் வட்டா ரத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய றகுலின் குரல்தான் அது
6 நமது முஸ்லிம் வட்டாரத்தில் சனப் பெருக்கம் அதி கரித்துக்கொண்டு வருகிறது. இப்போதே நாம் முன் யோசனையுடன் நடந்துகொள்ளாவிட்டால் இன்னும் சில வருஷங்களில் இங்குள்ள மக்கள் குடியிருக்க காணியோ. வீடோ இல்லாமல் பெரும் பிரச்சினையை எதிர்நோக்க வேண்டிவரும். சனம் பெருகுவதுபோல நிலம் பெருகாது. இதனைச் சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தைப் பற்றிய எச்சரிக்கையும், முன்னறிவுமில்லாத எந்தவொரு சமுதாய மும் பின் தங்கிவிடும். அல்லற்படும். பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் அவதிப்படும். இதனைச் சிந் தித்து, இங்குள்ள முஸ்லிம்கள் இதே வட்டாரத்துக்குள் அடைந்து கிடக்காமல், வெளியேயும் பல இடங்களில் பரந்து வாழ முற்பட வேண்டும்.*
றகுலின் இந்த அறிவுரையை அநேகமாய் எல்லாரும் ஒத்துக்கொண்டனர். என்றாலும், அப்போது காணிப் பிரச்சினை அவர்களின் வீட்டுக் கதவை உட னடியாகத் தட்டாததால், பழகிப்போன அலட்சியத் தோடு வழக்கமான தங்கள் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர், “றசூல் சொன்னது சரி தான், ஆனால் அவன் இந்த வட்டாரத்தை விட்டுப் போகத் தயாரா? என்று சவால்போல் தங்களுக்குள் பேசியும் கொண்டனர்.
57

Page 31
ஒரு நாள் றசூலின் நண்பனான றஹீமும் இதனையே பகிடியாகக் கேட்டான், 66 மச்சான், நீ உபதேசம் பண் ணினது சரி. அதன்படி, நீ எந்த ஊரில் குடியேறப் போறா. நீ போறதுக்கு முந்திச் சொல்லிப்போடு. விருந் துச் சாப்பாடோடு உன்னை அனுப்பி வைக்கிறேன்."
நண்பனின் இந்தப் பகிடிக்கு றசூல் பதில் ஒன்றும் சொல்லவில்லை. புன்னகை மட்டும்தான் செய்தான். அவனின் புன்னகையின் பொருளை அப்போது றஹீம் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் றசூல் தான் கூறியதைச் செயலில் காட்ட முனைந்து, யாழ்பா ணத்திலிருந்த 90 மைல்களுக்கப்பால் உள்ள வவுனியா வுக்கு குடியேற ஆயத்தமானதும் றஹீம் சற்றுத் திகைத்து விட்டான். 'என்னடாப்பா, நான் பகிடியாகக் கேட்டதை நீ வெற்றியாகண்டுத்துக்கொண்டு யாழ்ப்பணத்தைவிட்டுப் போகத் துணிஞ்சிட்டியே ?? என்று வியப்போடு கேட்
6T.
*உன் பகிடிக்காக நான் இந்த முடிவுக்கு வரேல்ல. நான் ஏற்கனவே போட்ட திட்டம்தான். இதை உறுதி செய்து கொண்டுதான் அந்தக் கூட்டத்திலும் இதைப் பற்றிச் சொன்னேன். ஒரு நல்ல காரியத்தைச் செய்யும்படி மற்றவர்களுக்கு உபதேசிக்கும்போது, அத்த உபதேசம் ஊருக்குத்தான், நமக்கல்ல என்று கருதக்கூடாது. சொல் கிறவன் முதலில் தானே அதைச் செய்து காட்டவேண் டும்? என்றான் றகுல் அமைதியாக.
அப்போ, நீசொன்னதோடு நிக்காம,மற்றவர்களுக்கு வழிகாட்டவும் துணிஞ்சிட்டாலாம. உன் தைரியத்தை மெச்சத்தான் வேண்டும்” என்று இப்போதும் நையாண்டி யாகச் சொன்னான் றஹீம்;
றகுல் அை தப்பொருட்படுத்தாமல், மற்றவர்கள் 66i யோசனையை ஏற்று நடந்தாலும், அல்லது அலட்சியப் படுத்தினாலும் அது அவர்களைப் பொறுத்தது. ஆனால்
த8

நண்பன் என்ற முறையில் உனக்குச் சொல்கிறேன். நீயும் என்னைப்போல் இந்த முடிவுக்கு வருவதுதான் புத்திசாலி த்தனம்" என்று திரும்பவும் தன் ஆலோசனையைக் கூறினான்.
றஹீம் லேசாய்ச் சிரித்தான். மூேணுமாசம் அல்லது ஆறு மாசத்துக்குள் போனமச்சான் திரும்பி வந்தான் பூ மனத்தோட” என்கிற மாதிரி நீ திரும்பி வாறது நிச்சயம். உன் யோசனையைக் கேட்டு நானும் வந்து, பிறகு நீ திரும்பி வரும்போது நானும் உனக்குப் பின்னால் வரும் புத்திசாலித்தனம் எனக்குத் தேவையில்லை."
றஹீம் இப்படிச் சொன்னதும், றசூல் அதற்குமேல் இதைப்.ற்றி ஒன்றும் பேசவில்லை. ஆனால் றஹீம் இப் படிப் பகிடி பண்ணினாலும், றகுல் யாழ்பாணத்தைவிட்டு மனைவி மக்களுடன் புறப்படுவதற்கு முதல் நாள் தான் கூறியபடி அவர்களுக்கு விருந்துபோடத் தவறவில்லை.
இருபது வருஷங்கள் ஓடி மறைந்தன. இந்தக் காலச் சுழற்சிக்குள், ஏற்கனவே சனநெருக்கம் மிகுந்த முஸ்லிம் வட்டாரத்தில் சனத்தொகை மாரிகால வெள்ளம்போல் பெருகத் தொடங்கியதால், இடப் பிரச்சினை உக்கிர மடைந்து விட்டது. காணித் தட்டுப்பாடும், வீட்டுத் தட்டுப்பாடும் கடுமையாக ஏற்படவே சாதாரண மக்கள் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு அவற்றின் விலையும் எக்கச்சக்கமாக ஏறிவிட்டது. தமது குமாரர்களுக்குச் சீதனம் கொடுக்க வீடுவளவு தேவைப்பட்டவர்களுக்கும், சொந்தத்தில் வீடில்லாதவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ரக்கத்தையும் பயத்தையும் உண்டாக்கிவிட்டது.
இந்த ஏக்கமும் பயமும் இப்போது றஹீமையும் பிடித் தாட்டத் தொடங்கிவிட்டது.
றஹீமுக்கு இப்போது வயது ஐம்பதை எட்டிவிட்ட தால், இனி மரியாதையுடன், அவர் என்றே சொல்ல
59

Page 32
வேண்டும். றஹீமுக்குச் சீதனமாக ஒரு சிறு வீடு கிடைத் தது. அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் அவருக்கு
இடையில் பல கஷ்டங்கள் குறிக்கிட்டதால் அந்த வீட்டை ஈடு வைக்க வேண்டி வந்துவிட்டது. முதலை, யின் வாய்க்குள் அகப்பட்ட பிராணிபோல் ஈடுவைக்கப் பட்ட வீடு வளவுகள் பெரும்பாலும் மீறுவதில்லை, ரஹீ மின் வீட்டுக்கும் அந்தக் கதிதான் ஏற்பட்டது. ஈட்டை மீள முடியாமல் அதை விற்றுவிட்டு ஈட்டுத் தொகையும் வட்டியும் போக மிஞ்சியதை, பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு வீட்டை ஒத்திக்கு எடுத்து, அதில் குடித்தனத்தை ஆரம் பித்தார். பத்து வருஷங்களாக இப்படிப் பல வீடுகளுக்கு ஒத்தி மாறியிருந்து, கடைசியாக இப்போது இருக்கும் வீட் டில் குடியமர்ந்தார். இந்த வீட்டு ஒத்தியும் இன்னும் மூன்று மாதங்களுக்குள் முடிந்துவிடும். அதற்குப் பிறகு ?
இந்தக் கேள்வி அவருடைய மனதில் அமைதியைக் குலைத்து விட்டது. இப்போது இருக்கும் காணியையே இன்னும் நாலைந்து வருஷங்களுக்கு ஒத்தினழுத எண்ணி அதன் சொந்தக்காரரிடம் போய்க் கேட்டார். அவர் அதை மறுக்கவே, வெள்ளம் காலுக்கு வந்து விட்டது என்று உணர்ந்து கொண்டார். அது கழுத்துக்கு வருவ தற்குள் தப்பி விடவேண்டும் என்று பரபரப்புடன், வட்டாரம் முழுக்க இடம் (தேடினார். ஐயாயிரம் பத்தா யிரத்துக்கெல்லாம் ஒத்திக்குப்போன காணிகளும், வீடு களும் இப்போது நாற்பதாயிரம், ஐம்பதாயிரத்துக்கும் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலையில், பத்தாயிரத்துக்கு எங்கே கிடைக்கப் போகிறது ? வாடகைக்காவது ஒரு இடம் பிடிக்கலாமென்றால், ஒத்திக்கே கிடைக்காதபோது வாடகைக்கு யார் தரப்போகிறார்கள் ? அவர் வீணாய் அலைந்ததுதான் மிச்சம். காரியம் நடக்கவில்லை. இப் பிரச்சினை இப்போது கழுத்துக்கு வந்துவிட்டது.
இதனையொட்டி அவருக்கும் மனைவி றஹீமானா வுக்குமிடையே சண்டையும் சச்சரவும்கூட தலை காட்டத்
0ز

தொடங்கிவிட்டன. “வீட்டை ஈடுவைக்கத் துணிந்த போது, வேண்டாம் என்று தடுத்தேன். நான் எவ் வளவோ சொல்லியும் நீங்கள் கேட்கல்ல. ஒத்தைக் காலில் நிண்டு, அதைப் பறிபோக வைச்சிட்டீங்க’ என்று பொருமுவாள் அவள்.
68 நான் வேணுமெண்டா செய்தேன் ? உனக்கு வந்த வருத்தத்துக்கும், மூன்டுவயசில மகன் முஸாதிக்குக்கு வந்தநோய்க்கும் செலவழிக்கக் காசில்லாமல்தான் அதை செய்தேன்” என்று சமாதானம் கூறுவார் ரஹீம்.
6ஏன் காசில்லாமல் போச்சு? உழைச்சுச் சேர்த்து வைக்க வேணும். நீங்க அதைச் செய்யேல்ல,” என்று றஹாமானா அவரை விமர்சிப்பாள்.
நான் உழைக்காமல் சோம்பேறியா பராக்குப்பார்த்துக் கொண்டா இருந்தேன்? உழைச்சதையெல்லாம் உனக் கும் பிள்ளைகளுக்கும்தான் கொட்டினேன்’ என்று சிறு வார் றஹீம்.
ரஹ"மானாவுக்கும் சீற்றம் எழும் உங்க உழைப் பின் லட்சணந்தான் இந்த நிலைமையில் இருக்குது. உம்மா வாப்பா தந்த வீட்டையும் வித்து போட்டு, ஒவ் வொரு இடமாய்க் குந்தி எழும்ப வேண்டியிருக்குது? என்று அவளும் கடுகடுப்பாள்.
*ஒமடி, உண்ர உம்மாவும் வாப்பாவும் லட்சம் பெறு மதியான பெரிய மாளிகையைத்தான் சீதனமாத் தந் தாங்க. வாயைப்பார் வாயை’ என்று ரஹீம் கொம்புவார்.
*மாளிகையோ, மண்குடிசையோ, அதை நமக்காகத் தந்தாங்க. அதைக் காப்பாத்தி வைச்சிருந்தா, இப்படி அந்தரப்பட வேண்டியிருக்காதே ???
6.

Page 33
இப்படித் தர்க்கங்களும் நீளும் வார்த்தைகள் சூடாகி நெருப்புப் பொறிகளும் பறக்கும். மனதையும் சுட்டுப் புண் ணாக்கும்.
அன்றிரவும் அப்படித்தான். இதே பிரச்சினையில் வார்த்தைகள் தடித்து இருவர் மனதையும் வழக்கம்போல் காயப்படுத்தி விட்டன. ரஹ"மானா அழுதுகொண்டு அடுப்படியில் அமர்ந்து விட்டாள். றஹீம் சாப்பாட்டையும் பகிஷ்கரித்து, மனப் புழுக்கத்துடன் வீட்டுத் திண்ணை யில் அமர்ந்தவாறு, பீடிகளை ஒன்றுக்குப்பின் ஒன்றாகப் புகைத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். தனக்கும் மனை விக்குமிடையே நடந்த சச்சரவை எண்ணி, இப்போது அவர் வருந்திக் கொண்டிக்கவில்லை. றகுல் இருபது வரு ஷங்களுக்கு முன் கூறிய ஆலோசனையைத்தான் புறக் கணித்ததை எண்ணியே வருந்திக்கொண்டிருந்தார்.
நகர வாழ்க்கையிலும், முஸ்லிம் வட்டாரச் சூழலிலும் பழகிப்போய், அவற்றில் மனதையும் உணர்வு களையும் தரிக்கவிட்டு அவற்றுக் கே உரிய ஆசாபாசங்களிலும், பழக்க வழக்கக்களிலும் மூழ்கி, அவற்றைச் சுவைத்துக் கொண்டிருந்தார். இந்தப் பிணைப்பிலிருந்து பிய்த்துக்கொண்டுபோக அவர் விரும்பவில்லை. அவர் மட்டுமென்ன, மற்றவர்களும் இதே காரணத்துக்காகவே றசூல் கூறிய அறிவுரையை அலட்சியப்படுத்தினர். இப்போது, காணிப் பிரச்சினை முஸ்லிம் வட்டாரத்தில் ஒவ்வொருதரின் தனிப்பட்ட விவ காரமாயில்லாமல், ஒரு சமூகப் பிரச்சினையாக உரு வெடுத்துள்ளதைப் பார்க்கும்போதுதான், தான் உட்பட மற்றவர்களும் பிழை செய்துவிட்டதாக உணர்ந்து வேத னைப் பட்டார். அதுவும், தான் றகுலைப் பகிடி பண்ணி யதை நினைத்தும் அவருக்கே வெட்கமாயிருந்தது. அவர் சொன்னபடி, றசூல் திரும்பி வரவில்லை. வவுனியாவி லேயே நிரந்தரமாக நிலைத்து விட்டான். அவனுக்குக் காணிப் பிரச்சினையோ, சீவியப் பிரச்சினையோ இல்லை.
63

விவசாயமும் சிறு தொழிலும் செய்துகொண்டு ஓரளவுசெழி ப்பாகவும் சந்தோஷமாகவும் வாழ்கிறான். றகுல் இடை யிடையே யாழ்பாணம் வரும்போது, றஹீமுக்கு வவுனியா வாழ்க்கையை விவரிப்பான். இதைக் கேட்டு றஹீமுக்கும் சந்தோஷமாயிருக்கும் அப்போது கூட. நண்பனைப் போல் தானும் வவுனியாவிலோ வேறு ஊரிலோ குடியேறு வதைப் பற்றி நினைக்கவேயில்லை. இப்போது -
முஸ்லிம் வட்டாரத்தில் ஒரு துண்டுக் காணியோ, வீடோ எடுக்க முடியாத நிலை வந்து விட்டது. ஒத்தி முடியும் நாளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது முடிந்ததும் மனைவி மக்களோடு, தெருவில் நிற்க முடி யுமா? இருக்கிற ஒத்திக்காசோடு வவுனியாவுக்குப் போனால் அந்தக் காசில் சொந்தமாகக் காணியே வாங்கி விடலாம், ஆனால் சீவியத்துக்கு வழி? யாழ்பாணத் துக்கு வெளியே எத்தனையோ ஊர்களிலும் கிராமங்களி லும் உள்ள மக்கள் சீவிக்கமலா இருக்கிறார்கள் ? நமக் கும் ஆண்டவன் ஒரு வழியைக் காட்டுவான். காலம் கொஞ்சம் பிந்தித்தான் போச்சுது, எண்டாலும் உடம் பில் கொஞ்சம் தெம்பிருக்குது. நம்ம பொடியன்கள் ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தொழிலைச் செய்து, பாடு பட்டு உழைக்க முடியும் றகுலும் நமக்கு உதவியா யிருப்பான். இருபது வருசத்துக்கு முந்தி விட்ட பிழையை காலம் பிந்திப் போச்சுதெண்டு இப்பவும் விடப்படாது. பிழையைத் திருத்த வேணும். நம்ம பிள்ளைகளும், அது களின்ற சந்ததியும் காணி வீடு எண். பிரச்சினையில்லா மல் வாழ வேணுமெண்டால், றகுல் சொன்னது போல பல ஊர்களிலும் குடியேறி பரந்து வாழ்வதுதான் புத்தி சாலித்தனம்,
இவ்வாறான சிந்தனையில் மூழ்கிக் கிடந்த றஹீம் கடைசியாக இந்த முடிவுக்கு வந்ததும் மனதில் பாரமா யிருந்து பயமுறுத்திக் கொண்டிருந்த வீட்டுப் பிரச்சினை யும் அத்தோடு இறங்கி விட்டது. மன நிம்மதியோடு எழுந்து உள்ளே போனார்.
68

Page 34
மூடிக்கொண்ட இதயம்
மோல் தன் சகோதரி சலீமாவிடம் அந்தச் செய்தி யைத் தெரிவித்த போது அவளுடைய கரிய பெரிய விழிகள் வியப்பால் விரிந்தன. அவன் சிரித்துவிட்டு வெளியே போனதைக்கூடக் கவனிக்காமல் சிறிதுநேரம் வரை திகைப்பாலும் மகிழ்ச்சியாலும் அப்படியே ம8லத் திருந்து விட்டாள்.
சலீமா ஆசிரியர் வேலைக்கு எடுபட்டதும், அவளுக்கு கிடைத்த அதிர்ஷ்டமோ என்னவோ அவனுடைய ஊர்ப் பாடசாலையிலேயே வேலை கிடைத்தது. மூன்று வருடங் களுக்குப் பிறகு அவனுடைய ஊரைச் சேர்ந்த இஸ்மத் வேறு ஊரில் ஆசிரியராக இருந்துவிட்டு சலீமாவின் பாட சாஜலக்கு மாற்றலாகி வந்தான். பார்வைக்கு அழகானவ ணுகவும், சகஜமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள் ளும் அவன்மீது சலீமாவுக்கும் நல்ல மதிப்பும் மரியாதை யும் இருந்தது. தன் வீட்டில் கூட இரண்டொரு சந்தர்ப் பங்களில் அவனைப் பாராட்டிப் பேசியிருக்கிருள். ஆணுல் இவர் நமக்கு மாப்பிள்ளையாகக் கிடைத்தால் எவ்வளவு நல்லது; வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாக மனநிறை வாக இருக்கும்? என்று தன்மனம் சலனப்பட்டதை மட்டும் அவள் வெளியிடவில்லை. இது எங்க நடக்கப் போவுது ? நமக்கு வேறு யாரோடு பிணைப்பு இருக்கப் போவுதோ? என்று, தான் இஸ்மத்தின்மீது சலனப்படுவதையும் விட்டு விட்டாள்.
ஆஞல் சலீமா தன் வீட்டில் இஸ்மத்தைப் பாராட்டிப் பேசிய சந்தர்ப்பங்களில் அவன்மீது தன் தங்கைக்கு ஒரு நாட்டம் இருக்கிறது என்பதை கமால் புரிந்து கொண்
64

டான். இஸ்மத்தை அவனுக்கும் நன்கு தெரியுமாதலால் சலீமாவுக்கு அவன் பொருத்தமானவன் என்றே கமாலுக் கும் தோன்றியது. தகப்பன் இல்லாத நிலையில் சகோதரி க3ளக் காப்பாற்றிக் கரை சேக்கும் கடமையிலுள்ள தான் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமும் இருந் ததால், இஸ்மத்துடனும் அவனுடைய பெற்றேரிடமும் கலந்து பேசி, சலீமாவின் மல்யாணத்தை நிச்சயமாக்கி விட்டான். இந்தச் செய்தியைத் தெரிவித்தபோதுதான் சலீமா அப்படி ஆச்சரியப்பட்டதோடு, மகிழ்ச்சியால் மலர்ந்தும் போனுள்.
கல்யாணமும் தாமதமாகவில்லை. அதுவும் விரைவாக
நடந்து முடிந்தது தான் நம்பி எதிர்பார்க்காமலேயே தன் மனதில் ஆரம்பத்தில் தோன்றிய எண்ணம் நிறைவேறி விட்டதைக் கண்டு பூரித்துப் போன சலீமா அதற்காக ஆண்டவனுக்கும் தன் சகோதரனுக்கும் நன்றி கூறிய தோடு, இதைப் பற்றி தன் மணாளனிடமும் மனம் திறந்து சொன்னாள். இஸ்மத்தும் லேசாய்ச் சிரித்தபடி 66 நான் இந்தக் கல்யாணத்துக்கு உடனே சம்மதித்ததுக்குக் காரணம் என் மனசில நீயும் இருந்ததுதான்’ என்று கூறியபோது சலீமா மகிழ்ச்சியின் சிகரத்துக்கே போய் விட்டாள். வாழ்க்கை இனி வசந்தந்தான் என்று இன்ப வாரியில் திளைத்தாள்.
கல்யாணமாகி நாட்களும் குறுகுறுப்புடன் ஒடி ஒரு மாதத்தையும் காண்டிவிட்டது. ஒரு நாளிரவு சாப்பா டெல்லாம் முடிந்ததும், சலீமா அலுமாரியைத் திறந்து ஒரு பார்சலை எடுத்து ‘இது என் அன்பளிப்பு” என்று அகமும் முகமும் மலரக் கணவனிடம் கொடுத்தாள்
அன்பளிப்பா..??? என்று அவளை விநோதமாகப் பார்த்தான் இஸ்மத்
ARA

Page 35
சலீமா புன்னகையுடன் 4ஆம் நமக்குக் கல்யாணமாகி, இன்னைக்கு முதலாவது கிடைச்ச சம்பளம். இந்தச் சம்ப ளத்தில் எனக்கு விருப்பமானதை உங்களுக்கு வாங்கித் தரோணும்னு ஆசையாயிருந்தது. அதுதான் இது” என்று உற்சாகம் பொங்கக் குதூகலத்துடன் கூறினாள்.
இஸ்மத் பார்சலைப் பிரித்துப் பார்த்தான். லோங் ஸ9க்குரிய ஒரு துணியும், தரமான ஒரு சேட்டும் இருந் தன. இஸ்மத் அதை அலட்சியமாகப் பார்த்துவிட்டு எழுந்துபோய் மேசையில் கிடந்த சிகரட் பைக்கட்டில் ஒன்றை உருவிப் பற்ற வைத்தான்.
அவனுடைய அலட்சியத்தை சலீமா அவதானிக்கா மல் இன்னைக்குச் சம்பளம் கிடைச்சதும் காக்காட்டக் காசைக் கொடுத்து இதை வாங்கிவரச் சொன்னேன். லோங்கம், சேட்டும் எப்படி? என்று வெள்ளை மனதோடு கேட்டாள்.
சிகரட்டை ஊதிக் கொண்டிருந்த இஸ்மத் அதைக் காலில் போட்டு நசுக்கிவிட்டு சலீமாவை வெடுவெடுப்பு டன் பார்த்தான். எனக்கு போதிய டிரஸ் இல்லேன்னு நினைச்சுத்தான் இதை எடுத்தீங்களா ? இதுக்குப் பேர் அன்பளிப்பா ? இல்லே அவமானம்’ என்று படபடப் புடன் பொரிந்தான்.
சலீமா திடுக்கிட்டு விட்டாள் வார்த்தைகள் வெளி வராமல் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். இஸ்மத் மேலும் கோபத்துடன் 'குறைந்தபட்சம் ஒரு அரைப் பவுண் மோதிரத்தை வாங்கித் தந்தாலாவது அதை ஏத்துக் கொள்ளலாம். போயும் போயும் இந்தப் பிச்சைக் காரப் புத்தியைத்தான் காட்டோனுமா ? இதைத் தராம விட்டிருக்கலாமே?” என்று சாடினான்.
66

சலீமா அடைத்துப்போன வாயைச் சிரமத்துடன் திறந்து இல்லே பாருங்க. மோதிரம் இதையும் விடக் கூடிய பெறுமதியுள்ளதா இருக்கலாம். ஆளு அது கண் ணுக்கு முழுமையா இருக்காது. நா விரும்பி வாங்கின ட்ரஸ்ஸில உங்களை முழுமையாப் பார்த்துப் பரவசப் படோணும்னு ஆசையாயிருந்தது. அதானாலதான் இதை வாங்கினேன். உங்களை நான் அவமானப்படுத் தோணும்னு நினைப்பனா ? அது என்னையே அவ மானப்படுத்துற மாதிரியல்லா ஆயிடும்” என்று சொல்லும் போது சலீமாவின் விழிகள் நீர்கோர்த்துவிட்டன. குரல் தழுதழுத்தது.
அவள் கூறியதை இஸ்மத் காதில் வாங்கியும் வாங்காத வனாக இதுக்குச் செலவானதுபோக உங்க சம்பளத்தில் மிச்சம் எங்கே? என்று கேட்டான்,
6%உம்மாட்ட கொடுத்துட்டேன்? 6ஏன் அங்க கொடுக்னுேம்???
*என் சம்பளததை அவட்டத்தான் கொடுக்கிறது வழக்கம் எனக்குக் காசு தேவைப்பட்டா வாங்கிக் கொள்வேன்.??
இனிமே இந்த வழக்கம் இருக்கப்படாது. உங்க சம்பளம் முழுசா என் கைக்கு வந்துடோணும். உங்களுக் குத் தேவைப்பட்டதை நான் கவனிச்சுக் கொள்வேன்? என்று அதிகாரத் தொனியில் உத்தரவு போட்டுவிட்டு விருட்டென்று கட்டிலில் போய்ப் படுத்துவிட்டான் இஸ்மத்,
அவனுடைய கேள்விகளும், உத்தரவும் இதயத்தில் முட்களாகத் தைக்க அப்படியே மலைத்து நின்று விட்டாள் af sönnr.
67

Page 36
"ஏன் அப்படி நிக்கிறீங்க? லைட்டை ஒஃப் பண் ணிட்டுப் படுங்க” என்று இஸ்மத்திடமிருந்து மறுஉத்தரவு வந்தது.
கணவன் மீதிருந்த பற்றுதலில் ஆசையோடு வாங்கித் தந்த துணிகளைத் தன் கணவரும் விரும்பி ஏற்றுச் சந் தோஷப்படுவார், கொஞ்சி மொழி பேசி பாராட்டுவார் என்று மனக்கோட்டை கட்டியிருந்த சலீமாவுக்கு அவன் நடந்து கொண்ட விதமும்,கூறிய வார்த்தைகளும் அதிர்ச் சிக்குள்ளாக்கி அம் மனக்கோட்டையைத் தகர்த்து விட் டன. தன் ஆசையை, அன்பை, உணர்வைப் புரிந்து கொள்ளாமல் சிகரட்டக்ை காலில் போட்டு நசுக்கியதைப் போல் நசுக்கிவிட்டு மோதிரம் வாங்கித் தந்திருக்கலாமே என்று கேட்டதும், சம்பளத்தைத் தன்னிடமே தர வேண் டும் என்று கேட்டதும் அவள் உள்ளத்தைச் சுக்கு நூருக்கி 6 L-60T.
சலீமாவின் வாப்பா மெளத்தான பிறகு குடும்பத்தின் முழு பொறுப்பையும் ஒரேயொரு சகோதரனான சுலைமான் தான் கவனித்து வந்தான். ஒரு சிறிய தையல் கடையை வைத்து நடத்தும் அவனுடைய வருமானத்தைக்கொண்டு குடும்ப சீவியமும் குமர்களுக்கென்று சிறிது சேமிக்கவும் முடிந்தது. சலீமா ஆசிரியரானதும் தானும் இப்பொறுப் பில் பங்கெடுக்க வேண்டும் என்று எண்ணி சம்பளத்தை உம்மாவிடம் கொடுத்து வந்தாள். இப்போது இதற்கும் தடை வந்துவிட்டது. இதை எப்படிச் சகிப்பது? இருக் கும் ஒரேயொரு வீடு, நகை, கைரொக்கம் என்று எல்லா வற்றையும் சீதனமாகத் தந்தாயிற்று. மற்றும் இரு சகோ தரிகளுக்கும் கல்யாணம் காட்சி என்று இருக்கிறதே. காக்கா தனியே சமாளிக்க முடியுமா ? சகோதரிகளின் காரியம் நடக்கும் வரை தன்னுடைய சம்பளக் காசைத் தொடர்ந்து கொடுத்து வரத்தான் வேண்டும் என்று எண் ணியிருந்தாள். இது எப்படித் தவறாகும்? இதைத்
68

தடுக்க இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? என்ற கேள்வியும் சீறிட்டு எழுந்தன.
இதை நினைக்க, நினைக்க ஆத்திரமும் சலிப்பும் பொங்கிப் பொங்கி வந்தன! இது நாள் வரை இஸ்மத் தன் னுடன் கண்ணியமாகப் பழகிய விதமும்,கனிவானபேச்சும் வெளிவேஷம் எனத் தோன்றியது. அவனுடைய வெளித் தோற்றத்துக்குள்ளே கடின சித்தமும், அன்பு, ஆசை, பந்தம், பாசம் எல்லாவற்றையும்விட பணத்தையே பிரதா னமாகக் கருதும் குரூரத் தன்மையும் பதுங்கி இருப்பதைக் கண்டு அவளுக்கு உடம்பும் உள்ளமும் நடுங்கின. கல்யாணமாகி ஒன்றரை மாதத்திற்குள் இப்படி ஒரு ஏமாற் றத்தை-குடும்ப வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே அசைக்கக் கூடிய இந்தக்கொடிய அனுபவத்தைச்சந்திக்க நேரிடும் என்று சிறிதும் எண்ணியிராத சலீமாவுக்கு வாழ்க்கையையே பறிகொடுத்து விட்டதுபோன்ற உணர்வு உண்டாகிவிட்டது. இஸ்மத்தைப் பற்றி அவள் இதயத்தில் தீட்டியிருந்த மேன்மையான சித்திரம் அப்படியே சிதைந்து கொண்டிருந்தது. ஏக்கத்தாலும், துயரத்தாலும், கண்ணிரைக் கசக்கிக் கொண்டிருந்த அவ. ளது விழிகள் அன்றிரவு பூராவும் மூடவில்லை.
இந்த சம்பவத்துக்குப் பிறகு இதை மறந்துவிட்டவன் போல் இஸ்மத் நடந்து கொண்டான். ஆணுல் சலீமா பரிசாகக் கொடுத்த லெங்தையும் சேட்டையும் தனக்குப் பாவித்துக் கொள்ளவுமில்லை, அவை அலுமாரிக்குள் அப்படியே சிறைபட்டுக் கிடந்தன. ஆளுல் சலீமாவுக்கு முன்போல் அவனுடன் இணைந்து பிணைந்து பழக முடிய வில்லை. ஓர் இயந்திரம்போல் அவனுடன் நடந்து கொண்டாளே தவிர மனம் கலந்து உணர்வுபூர்வமாக வாழவில்லை. அவள் மனதில் சுவர் எழுந்துவிட்டது. அதில் ஒரு தீர்மானத்தையும் எழுதிக் கொண்டாள். ஆனால் இதையெல்லாம் வீட்டில் மற்றவர் எவரும் தெரிந்
69

Page 37
துகொள்ளாமல் எ ச் ச ரி க் கை யாக வும் இருந்து Gassroot LITsir.
சலீமா அடுத்த மாதம் சம்பளம் எடுத்ததும் அதை அவள் தன்னிடம் தருவாள் என்று இஸ்மத் எதிர்பார்த் தான். இரண்டு நாட்களாகியும் அது வராமல் இருக்கவே சேம்பளம் எடுத்திருப்பியே, ஏன் தரல்லே??? என்று கேட்டான்.
*வழக்கம்போல் அதை வீட்டிலேயே கொடுத்திட் டேன்’ அமைதியாகவும் தைரியமாகவும் சொன்னாள் FGunT.
இஸ்மத்தின் முகம் மாறியது. நான் சொல்லியிருந் தும் ஏன் அங்க கொடுத்தீங்க??? என்று படபடப்புடன் கேட்டான்.
சலீமா தனக்குள் எழுந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பேசலானாள் :
**என்னைப் பெத்து வளத்து, பராமரிச்சுப் படிக்க வைச்சு, நீங்க கேட்டபடி சீதனமும் தந்து என்னை உங்களுக்குக் கல்யாணம் செய்து வைச்சாங்க. நா சம்பாதிக்கிறப்போ அவங்களுக்கும் என் கடமையைச் செய்யோணுமில்லியா? அதுவும் இன்னும் ரெண்டு சகோதரிங்க இருக்காங்க. அவங்க கல்யாணமும் வேற இருக்கு. அதையெல்லாம் யோசிக்க வேண்டாமா?? என்ற கேள்விகளோடு நிறுத்தினாள்.
'நீங்க கல்யாணத்துக்கு முந்தி அந்தக் கடமையைச் செய்ததைப் பற்றிப் பிரச்சினையில்ல. ஆனா எனக்கு மனைவியானதுக்கப்புறம் அதைச் செய்யத் தேவை யில்லே. சகோதரிகள் விஷயத்தைக் கவனிக்க உங்க காக்கா இருக்கார்” என்று மேலும் படபடத்தான் இஸ்மத்;
70

கல்யாணத்துக்கப்புறம் ஒரு பொண், அதுவும் வேலை பார்த்துச் சம்பாதிக்கிறவ தன் தாய் சகோதரங்களுக்கு உதவி செய்யக்கூடாது. அது ஆண் சகோதரங்களின் கடமைதான்னு நம்ம மார்க்கம் சொல்லுதா...அல்லது அரசாங்கம் சட்டம் போட்டிருக்குதா?’ என்றாள் சலீமா ஆத்திரத்தோடு,
இஸ்மத்தும் கோபத்தோடு 'உங்களோடு விவாதிக்க நான் விரும்பல்லே, தீர்மானமாய்க் கேட்கிறேன். இனிமே உங்க சம்பளம் என் கைக்கு வராதா?’ என்று கேட்டான்.
'என் சகோதரிகளுக்குக் கல்யாணம் ஆகும் வரை வராது. புருசன் என்கிற முறையிலே என்னைப் பரா மரிக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. என் கையை எதிர்பார்க்க வேண்டியதில்லே. ஆனா, நமக்கு எதுக்காகவாவது அவசியம் காசு தேவைப்பட்டா என் சம்பளத்தை நானே தருவேன்? உறுதியோடு சொன்னுள் JF65 DIT .
இதற்குமேல் இஸ்மத் ஒன்றும் பேசவில்லை. விருட் டென்று தன் உடுப்புகள் சாமான்களையெல்லாம் எடுத்து சூட்கேஸ்களிலும் பெட்டிகளிலும் வைத்துவிட்டு வேக மாக வெளியே போனான். ஒரு டாக்ஸியுடன் திரும்பி வந்து சூட்கேஸ்களையும் எடுத்தான்.
அதுவரை மெளனமாக இருந்த சலீமா என்னை விட்டுப் போறிங்களா?’ என்றும் சிறிதும் பதட்டப்படாமல் கேட்டாள்.
*ஓம் உங்க சம்பளத்தை முழுசா என்னிட்ட தர்ரதா நீங்க எப்போ தீர்மானிக்கிறீங்களோ அப்போ சொல்லி
அனுப்புங்க வர்றேன்" என்று குரூரமாகச் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினான்.
71

Page 38
நீேங்க திரும்பவும் இங்க வர வேண்டியிருக்காது. கணவன் - மனைவி பந்தத்தை - அந்த மகிமையான உறவை வெறும் பணத்தால் தீர்மானிக்கிற உங்களோட நான் வாழ விரும்பல்லே’.
சலீமாவின் குரல் கணிரென தெளிவாகவும் உறுதியா கவும் ஒலித்தது. இஸ்மத் நடையை நிறுத்திவிட்டு முகம் வெறுக்க அவளைப் பார்த்தபடி சில விநாடிகள் அப்படியே நின்றான். பின்னர் தலையைக் குனிந்தபடி இரண்டொரு கணம் நின்றுவிட்டு சூட்கேஸ்களுடன் வெளியேறினான்.
சலீமா கதவைப் படீரென்று மூடினாள்-தன் இதயக் கதவை மூடியதைப் போல.
முற்றும்
73