கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மதமாற்றம்

Page 1
)
 

LÓ
கூட்டுறவுப் பதிப்பகம்

Page 2

IN 5 LDT ) p û
(நாடகம் )
- அ. ந. கந்தசாமி -
வெளியீடு :
எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்

Page 3
எ. கூ, ப. ன் 13ஆவது வெளியீடு
மதமாற்றம்
* First Edition
Price
Publishers
Printers
(நாடகம்)
5Tavnr6)ílu tř அ. ந. கந்தசாமி
முதற்பதிப்பு செப்டம்பர் 1989
பதிப்புரிமையும் Y வெளியீடும் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்
விலை es. 30/-
அச்சகம் குமரன் அச்சகம், கொழும்பு-12.
MATHIAMAATAM (Drama)
Author ; A. N. KANDASAMY
Sept. 1989
Rs. 30
Writers' Co-operative Publishing Society Ltd, 215, G 1/1 Park Road, Colombo-5
Sri Lanka
Kumaran Press 201. Dam Street, Colombo - 2 Sri Lanka

பதிப்புரை
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளமை நம் நாட்டின் இலக்கிய வளர்ச்சியின் கரிசனையுள்ளவர்களுக்கு மகிழ்ச்சி யளிக்குமென்பதில் சந்தேகமில்லை.
1960-70 தசாப்தத்தின் முற்பகுதியில் ஆரம்பிக்கப் பெற்ற எழுத்தாளர் கூட்டுறவுப பதிப்பகம் அக் காலப் பகுதியில் அடுத் தடுத்து ஐந்து நூல்களை வெளியிட்ட போதிலும் வெற்றிகரமான வர்த்த கTநிறுவனமாக நிலை கொள்ள முடியவில்லை. 1975இல் இப் பதிப்பகம் புத்துயிர் பெற்று, கூட்டுறவு ஆணையாளரின் அங்கீகாரத் துடன் மீண்டும் இயங்கத் தொடங்கியது. காவலூர் இராசதுரையின் *ஒரு வகை உறவு’ செ. யோகநாதனின் ‘காவியத்தின் மறு பக்கம் மேமன்கவியின் “யுக ராகங்கள்" போன்ற மேலும் சில நூல்கள் வெளியிடப்பட்டன. ஆயினும் இம் முறையும் வர்த்தக அடிப்படையி லான ஒர் அமைப்பாக இப் பதிப்பகத்தை வேரூன்றச் செய்ய முடி யாது போயிற்று.
இப்பொழுது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மூன்ரும் முறையாக இப்பதிப்பகத்துக்கு உயிரூட்ட முன் வந்திருக்கிறது. இலங் கைத் தமிழ்ச் சமுதாயத்தின் இருள் சூழ்ந்த இக் காலப் பகுதியிலே இது ஒர் அக்கினிப் பரீட்சை என்பதை நாம் உணராமலில்லை. எனினும் அவசியம் மேற்கொள்ள வேண்டிய பணி என்பதனல் துணிந்து இறங்குகிருேம்.
இந் நூலின் ஆசிரியரான அமரர் அ. ந. கந்தசாமி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகால வழிகாட்டிகளில் ஒருவராக விளங்கியவர். பத்திரிகைத் துறை, கவிதை, சிறுகதை, தொடர்கதை, நாடகம், இலக்கிய ஆராய்ச்சி, ஒலிபரப்புத் துறை போன்ற நவீன கருத்து வெளிப்பாட்டு முயற்சிகளிலெல்லாம் தெளிந்த சிந்தனையோடும் தீவிர துணிச்சலோடும் முன் நின்று உழைத்து நம் நாட்டின் தற்கால இலக்கிய வளர்ச்சிக்கு உரமூட் டியவர். இலக்கியம் சாதாரண மக்களையும் சென்றடைதல் அவசியம் என்னும் கொள்கையுடன் மிக இலகுவான தமிழ் வசன நடையைக் கையாண்டு இந்நாட்டில் விரிவான வாசகர் தொகையைச் சம்பாதித்த விற்பன்னர். இத்தகைய ஆற்றல்கள் இருந்தும் "வெற்றியின் இரகசி யங்கள்’ ஒன்றைத் தவிர அவரது ஏனைய படைப்புக்களில் வேருென்றும் இது வரை நூலூருப் பெருமை விசனத்துக்குரியதாகும்.
இப்பொழுது உங்கள் கையில் இருக்கும் இந் நூல் இக் குறையை
நீக்கு முகமாக மேற்கொள்ளப்பட்ட முதல்முயற்சியே. இதன் வெற்றி
யைப் பொறுத்து அவரது ஏனைய ஆக்கங்களையும் பிரசுரிக்க எண்ணி யுள்ளோம்.
. iii ...

Page 4
இருபதாம் நூற்ருண்டின் ஆங்கில நாடக மேதைகளில் ஒருவராக விளங்கிய பேனட் ஷோவின் அடியொற்றி இலங்கையில் எழுதப் பெற்ற ஒரே நாடக நூல் இதுவாகும். அ. ந. க. உயிருடனிருந்த காலத்தில் இந் நூல் வெளிவந்திருக்குமானல் பேனுட் ஷோவைப் போலவே நீண்டதொரு முன்னுரையினை அவர் எழுதியிருப்பார். ஏனென்ருல் பேணுட் ஷோவின் நாடகங்களைப் போலவே மதமாற்ற மும் பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கும் உள்ளான ஒரு நாடக மாகும். குறிப்பாக 1967ஆம் ஆண்டில் கொழும்பு, லும்பினி அரங்கில் நான்காவது தடவையாக மேடையேற்றப்பட்டபோது தமிழ்த் தேசியப் பத்திரிகைகள் மட்டுமல்லாமல் ஆங்கிலப் பத்திரிகைகள் கூட அதனை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகக் கருதி விமரிசித்தன. அன்றைய காலப் பகுதியில் தமிழ்க் கலாசார நடவடிக்கைகளில் முதன்மை பெற்று விளங்கியவர்கள் “மதமாற்ற" அரங்கேற்றத்துடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய தொன்று.
இந் நூல் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பக வெளியீடாக வந்திருக் கின்ற போதிலும் இதன் அச்சுச் செலவை ஏற்க முன்வந்தவர் அ. ந. க.வின் சகோதரியின் மகன் திரு. கிரிகரன் ஆவர். அ. ந. க. வின் இறுதிக் காலத்தில் அவரை பராமரித்த முற்போக்கு எழுத்தாளர் செ. கணேசலிங்கன் அவர்களும் இந் நூலின் பிரசுரத்துக்குக் கணிச மான பங்களிப்புச் செய்துள்ளார். “மத மாற்ற' நாடகப் பிரதியைக் கால் நூற்ருண்டு காலமாகப் பேணிக் காத்து வைத்த பெருமை அ.ந.க.வின் ஆப்த நண்பர் சில்லையூர் செல்வராசனுக்குரியதாகும். இவர்கள் அனைவருக்கும் அட்டைப் படத்தினை அமைத்துத் தந்த வசீகர அட்வேர்டைசிங் நிறுவன உரிமையாளர் காவலூர் இராச துரைக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிருேம்.
ஆங்கிலம் பயிலும் உயர் வகுப்பு மாணக்கர்களுக்கு பேனுட் ஷோவின் நாடகங்கள் பாட நூலாக அமைவது போல, நம் நாட்டிலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு “மதமாற்றம்" ஒரு துணை நூலாக அமையுமானல் அ.ந.க.வின் மேதா விலாசம் கலைமுறை தலைமுறை யாக நிலைபெற்று விளங்கும். பிரான்சிஸ் கிங்ஸ்பரி அவர்களின் *மனேன்மணியம்’ பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களின் நாடக நூல்கள் போல, அ.ந.க.வின் மதமாற்றமும் நமது நாடக இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதில் ஐயமில்லை.
எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்

சிறப்புரை
விழாக்களிலும் சடங்குகளிலும் ஆடலும் பாடலும் இயல்பாக ஏற்பட்டன; பின்னர் மதச் சார்பான கதைகளும் கிராமியக் கதை களும் ஆடியும் நடித்தும் காட்டப்பட்டன.
இதுவே இந்திய நாடகத்தின் தோற்றவாயில் என ஆய்வார் கூறுவர்.
கூத்து என்ற கலைவடிவம் தமிழரிடை இதே தோற்றுவாயுடன் ஏற்பட்டது எனக் கூறின் தவரு காது. கூத்து, ஆடல் பாடல் சார்ந் தது; நீண்டகாலமாக நிலைபெற்று வந்துள்ளது. 'கூத்தாட்டவைக் குழாத்தற்றே" என்ருர் வள்ளுவர்.
சிலப்பதிகாரமும் கிராமியக் கூத்துவடிவில் பிரபல்யமடைந் திருந்த கதையையே இளங்கோ காவியமாக்கினர் என்பர். "பாட் டிடையிட்ட உரைநடையாக" காவியம் அமைத்திருப் பதும் இக் கருத்தை நிரூபிக்கிறது. புலவர்களாலேயே நாடகம் போன்ற கலை வடிவங்களும் உலகெங்கும் எழுதப்பட்டன என்பர். இளங்கோ, காளி தாசன், சேக்ஸ்பியர் யாவரும் கவிஞர்களே.
இன்றைய நாடகம் என்ற கலைவடிவம் எமக்குப் புதிதே.
கலைவடிவங்கள் நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி வேறுபட லாம், உற்பத்தி உறவுக்கேற்ப இவை மாற்றமடையும். உதாரண மாக நவீன காலத்தில் பிரபல்யமடைந்துள்ள நாவல், சிறுகதை என்ற கலை வடிவங்கள் முதலாளித்துவத்தில் - கலி உழைப்பு உற்பத்தி உறவுக்காலத்தில் எழுந்தவையே.
எமது சிறுகதை, நாவல் போன்று இன்றைய நாடகமும் மேல் நாட்டிலிருந்து நாம் பெற்ற கலைவடிவமே. ஆங்கிலத்தின் மூலம் இங்கு நாம் பெற்றபோதும் இன்றைய மேடை நாடகம் ஆங்கிலே யர் ஆரம்பித்ததல்ல. ஹென்றிக் இப்சன் (1826-1906) என்ற நோர்வே நாடகாசிரியர் ஐரோப்பாவிற்குத் தந்த வடிவமே இன்று உலகெங்கும் மேடை நாடக வடிவமாகப் பரவியது; பல்வேறு பரீட் சார்த்தங்களுடன் வளர்ச்சி பெற்று வருகிறது.
இங்கிலாந்தில் இப்சனுக்கு முன்னர் நாடக மரபு இருக்கவில்லை என நான் கூறவரவில்லை. சேக்ஸ்பியர் (1564 - 1616) மார்லோ (1564-93) அன்றிருந்த நாடக மரபிற்கு வலுவூட்டியவரே. இன்று வரை நிலை பெற்றுள்ளனர்.
. . . W. . . . .

Page 5
அன்றைய நாடக அமைப்பு முறையும் இப்சனின் பின் ஏற் பட்ட மாற்றமும் வேறு. மேடைக் காட்சிகள் தொடர்ந்து மாறும் முறை, நடைமுறைச் சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை கையாளும் போக்கு ஆகியவற்றையே குறிப்பிடுகிறேன்.
நாடகமாக எழுதப்படுவது, மேடையில் பேசுவதற்காக கூறப் படும் உரையாடல், காட்சி அமைப்புப் பற்றியவை முதலான விப ரங்களே. இவற்றை நாம் மேடையில் பார்க்காது படிப்பதென்பது இரண்டாந்தரமானது. நாடகங்கள் நூல் வடிவில் தமிழில் வெளி யிடப்படுவதில்லை என்ற குறைபாடும் உள்ளது; அவர்கள், 'நாடகம் மேடைக்காக" என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
சேக்ஸ்பியரின் நாடகங்கள் நூலுருப் பெற்று உலகெங்கும் படிக் கப்படுகிறது உண்மையே. நடிப்பதிலும் பார்க்க தாராளமாகப் படிக் கப்படுகிறது. அவை நாடகம் என்பதிலும் பார்க்க இலக்கிய நயம் செறிந்த எழுத்தாக இருப்பதுவே காரணம். இந்த அடிப்படை உண்மையை நாம் மறந்து விடப்படாது.
தனிமனிதன் மேடையில் நின்று தன் துன்பங்களைக் கொட்டு வதை, நாம் தனிமையில் படித்துச் சுவைக்கலாம். அவை இன்றைய நாடக மரபுக்கு ஒவ்வாதவை. சேக்ஸ்பியரின் பல நாடகங்களில் தனிப்பேச்சு (Soliloquy) இடம் பெறுவதைக் காணலாம். சேக்ஸ் பியரின் சிறப்பிற்கும் அவை உதாரணமாகக் கூறப்படுவதைக் காண orth. (d. -- b To be or not to be - splboal)
பர்னட் ஷாவின் நாடகங்களும் படித்துச் சுவைக்கக் கூடிய வையே. காரணம் கருத்துகள் செறிந்தவை. முரண்பாடுகளைச் சொற் களால் சாடுவார். அவர் ஆக்கிய பாத்திரங்கள் அனைவர் மூலமும் ஷாவே உரையாடுவார்.
இன்று பிரபலமாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவ லாக ரசிக்கப்படும் டி. வி.தொடர் நாடகங்களிலும் நகைத்திறம் மிக்க உரையாடல்களே முதன்மை பெறுவதைக் காணலாம். டி. வி. என்ற கருவிக்குரிய வடிவம் இதுவாகலாம்.
இப்சனின் பின் நாடகத்திற்கு என்றேர் புதிய வடிவமும் கலை களுக்கெனத் தனிச் சித்தாந்தமும் தந்த பெருமை பெர்னல்ட் பிரெட்ச் (1898 - 1956) என்ற ஜெர்மன் நாடகாசிரியருக்கே உரிய தாகும். அவர் ஒரு மார்க்சிய நாடகாசிரியராக இருந்தபோதும் முதலாளித்துவ நாடுகளிலும் அவர் போற்றப்பட்டார்.
न्धक Yi •'

அவரது நாடகங்கள் நடிக்கப்பட்டன. இவ்வாறு பரவலாக்கி அவரது புரட்சிக் கருத்துச்களை மழுப்பி விட்டனர் என்றே கூற வேண்டும்.
நாடகத்தின் கரு, உட்பொருள் மட்டுமல்ல அதன் அமைப்பு, வடிவத்திலும் அவர் புரட்சிகரம! Aற்றம் ஏற்படுத்தினர். அத்தோடு மேடை, நடிகர்கள் ப்ற்றி மட்டுமல்ல பார்வையாளனைப் பற்றியும் அவர் சிரத்தை எடுத்தார்.
பார்வையாளனை கலை உணர்வுத் தூரத்தில் (Aesthetic Distance) வைக்க வேண்டும் எனவும் சொன்ஞர். பார்வையாளன், கலைகளே நுகர்வோன் கலை வடிவத்தினூடாக வாழ்க்கையின் முரண்பாடுகளை, சம்பவங்களை, கதா மாந்தர்களைக் காண்பதாக நினைவு பூர்வமாக எண்ணிக் கொள்ளவேண்டும். தவருக பாத்திரங்களுடன் ஐக்கியப் பட்டு ஒன்றிவிடப்படாது என சிக்சரித்தார்.
சுருங்கக் கூறின் கலையை நுகர்வோர் அதனிலிருந்து அந்நியப் பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்ருர்,
மக்களே வரலாற்றை ஆக்குபவர், வீரபுருஷர்களல்ல என்ற மார்க்சின் கோட்பாட்டை முன் வைத்து வீர புருஷர்களை நாடகத் தில் நுழைப்பதையும் தவிர்த்தார். கிராமியக் கதைகளை, நடை முறைச் சம்பவங்களை நாடகமாக்கினர்.
மேடையில் 'செட் டுகள், மின் ஒளி விளையாட்டுகள் மூலம் மக்களைக் கவர்வதையும் தவிர்த்தார். பார்வையாளரை மயக்க மூட்டி கனவு நிலைக்கு ஈர்த்துச் செல்லாது விழிப்பு நிலையில் வைக்க வேண்டும்; மேலும் சிந்தனையூட்ட வேண்டும் என்ருர், தீவிர நடிப்பு களையும் தவிர்த்தார். அதாவது மேடையில் தோன்றி தமிழ் நாட கங்களில் நடிப்பது போல, மிகை உணர்ச்சிகளைக் காட்டி உரத்துக் கத்தும் போக்கையும் தடுத்தார்.
மேல்நாட்டு நாடக வடிவம் சிங் கள மேடை யி ல் ஏற் படுத்திய மாற்றம் போல தமிழ் நாட்டில் ஆக்கவில்லை. சினிமா வின் தாக்கம் மேடை நாடகத்திலும் நாடக முறைகள் சினிமா விலும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன. அதற்குக் காரணம் சினிமா வின் பரவலான அறிமுகமும் ஆதிக்கமும் ஒன்று. மற்றது சினிமா உலகிற்கு நுழைய நாடக மேடை முதல் வாய்ப்பாக அமைந்துள் ளதுமாகும். இன்றைய பிரபல இந்திய நடிகர், டைரக்டர்கள் நாடக மேடையிலிருந்து திரையுலகுக்கு வந்திருப்பதைக் காணலாம்.
... Wii ...

Page 6
அ. ந. கந்தசாமி ஈழத்து மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீளா நோய் வாய்ப்பட்டு இறந்தவேளை அன்ஞரது ஆக்கங்கள் சிலவற்றையாவது வெளியிட வேண்டும் என முயன்றவர்களில் நானும் ஒருவன். அம்முயற்சிகள் யாவும் பல காரணங்களால் பய னற்றுப் போயின.
1, 16 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் அன்னுரை நினைவு கூரத் தக் கிதாக நூல் வெளியிட வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டது. நாட்டில் கலை, இலக்கிய விழிப்பின் ஒர் அம்சம் என்றே கொள்ள வேண்டும்.
இச் சந்தர்ப்பத்தில் "மதமாற்றம்" என்ற இந் நாடகத்தை நானே முதலில் நினைவுபடுத்தினேன். அதற்குப் பல காரணங்கள் allott C).
கந்தசாமியைப் பற்றி அறிந்திருந்து, ஒரு சிலவற்றை மட்டும் படித்த காலத்தில் இந்நாடகத்தை மேடையில் ஒரு தடவை பார்க் கும் வாய்ப்பு எனக்கு ஏற் பட்டது.
அவ்வேளையே கந்தசாமியின் அறிவையும் திறமையையும் என் ஞல் காண முடிந்தது. ஆயினும் அன்னருடன் நெருங்கிப் பழகும் காலம் அவரது வாழ்வின் கடைசி 2 ஆண்டுகளிலேயே எனக்கு ஏற்பட்டது.
அவரது அறிவும் திறமையும் பலதுறைகளில் ஈடுபட்டிருந்ததைக் கண்டேன். முதலாளித்துவ சமூக அமைப்பில் பேசுவது, பிறருடன் பழகி வெற்றி கொள்வது, பண்டங்களை விற்பனை செய்யும் விவேகம் ஆகியவை பற்றி மேல்நாடுகளில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அத்தகைய நூல் ஒன்றையும் கந்தசாமி எழுதி என்னிடம் தந்தார். அவரின் சிறப்பான வெளியீடாக ‘வெற்றியின் இரகசியங்கள்" என்ற அந்நூலை தமிழ் நாட்டில் வெளியிட்டேன். ஆயினும் விற்பனையில் வெற்றி கிட்டவில்லை. இன்னும் எமது சமூகம் முதலாளித்துவ நிலையை அடையவில்லை என ஆறுதலடைந்தேன்.
இலங்கையில் பல மேடை நாடகங்களைப் பார்த்துள்ளேன். ஆயி னும் "மத மாற்றம்" என்ற இந் நாடகம் என்னுள் ஏற்படுத்திய மதிப்பை வேறு எந்த நாடகமும் ஏற்படுத்தவில்லை.
மேடை நாடகக் காட்சிகளை அமைக்கும் திறமையை அவர் எங்கு பெற்ருர் என்று தெரியவில்லை. இம் முதல் நாடகத்திலேயே அச் சிறப்பைக் காணக் கூடியதாக இருந்தது.
... viii . .

உரையாடல்களையும் கதையையும் நகர்த்திச் செல்லும் முறையில் பார்வையாளரை ஈர்த்துச் செல்லக்கூடிய உத்தியைக் கையாண்டுள் ளார். அற்புதங்களை வைத்தே மதம் வலுப்பெற முயல்கிறது. எதிர் பாராத நிகழ்ச்சிகளையும் மதவாதிகள் அற்புதமாக்கிவிடுவர். கதா நாயகி தோழியிடம் செல்லும்வேளை பத்திரிகையில் தன் தோழி பற் றிய செய்தியைப் பார்த்துவிட்டு தோழியும் கணவரும் வழிபடுகின் றனர். அவ்வேளை தோழியைக் கண்டதும் 'தேவனின் அற்புதம்" எனக்கூறி அவளையும் நம்பவைக்கின்றனர்.
சைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னரின் அறிவையும் இந் நாடகத்தில் காணலாம்.
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் மேலாதிக்கம் செலுத்தும் கருத் தியல் (Ideology) மதம் என்றும் முதலாளித்துவத்தில் கல்வி என்றும் நவ மார்க்சிய அறிஞர் அல்துரசர் கூறுவார். கலை, இலக்கி யத்தில் கருத்தியல்கள் உடைக்கப்பட்டு விஞ்ஞான ரீதியான சிந்த னையைக் கொணர வேண்டும் என்பதும் அன்ஞரின் கோட்பாடாகும். அத்தோடு இத்தகைய போக்கு பண்டைய நாடகங்கள், இலக்கியங் களில் காணமுடியாதது அவற்றின் பயனற்ற தன்மையைக் காட்டு கிறது என்பதும் அவரது கூற்றகும்.
கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந் நாடகத்தில் சாடி இருப் பது இந் நாடகத்தின் தனிச் சிறப்பாகும். அது வும் நேரடியாகத்
தாக்கவில்லை.
பார்வையாளர் எம் மதத்தவராயினும் நகைச் சுவையுடன் நாட கத்தைப் பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தண்மூலம் அறிவர்.
இராமலிங்கம் என்றேர் பாத்திரத்தை ஆசிரியர் தன் பகுத்தறி வுக் கருத்துக்களையும் தருக்க நியாயங்களையும் கூறுவதற்காக நாட கத்தில் கொண்டு வந்துள்ளார். இராமலிங்கம் என்ற பாத்திரம் கந்தசாமியே.
கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப் பழம். காத லுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத் தழுவி காதலைக் கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவான போதும் "மதம், காதல்" என்ற பொய்மைகளை கந்தசாமி சாடும் திறமை அபாரம்.
іх ...

Page 7
'மதமே பொய். இருவரும் பொய்களை நம்புகிறர்கள். ஆனல் வெவ்வேறு பொய்கள் - கந்தசாமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகிருர்,
நல்ல நாடகம் சமூக முரண்பாடுகளைக் கையாள வேண்டும். சிந்தனையில் மோதலை ஏற்படுத்துவதோடு தன்னை உணர்ந்து கொள்ள உதவ வேண்டும். நாடகம் பார்க்கும் வேளை நடிகனக இருந்தவன் நாடகம் முடிந்ததும் புது நடிகனக வேண்டும், வாழ்க்கையில்,
இந் நாடகம் மேடையில் நடிப்பதற்காக எழுதப்பட்டபோதும் படித்துச் சுவைப்பதற்குமாக அமைந்திருப்பது அதன் தனிச் சிறப் பாகும். புதிதாக நாடகம் எழுதுவோருக்கும் காட்சி அமைப்பையும் கருத்தின் ஆழத்தைக் கையாளும் முறையையும் கற்பிக்கத் தக்கதாக இந் நாடகம் உள்ளது. இத்தகை! நாடகங்கள் அரிதே. அதனலேயே இந் நாடகத்தை வெளியிட வேண்டும் எனவும் நான் விரும்பினேன்.
இந் நாடகத்தை வெளியிட முன்வந்த எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், அதற்கு உதவியவர்களும் பாராட்டுக்குரியவர்.
கொழும்பு. செ. கணேசலிங்கன். I. 9. 89

*மதமாற்றம்” 1967இல் அரங்கேறியபோது . . .
**மதமாற்றம்" தமிழ் நாடகத்துறையில் புதியதொரு திருப்பம்,
* தினகரனில்" த. ச
ஈழத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய "மதமாற்றம்’ புரட்சி கரமான கதாம்சத்தைக் கொண்ட ஒரு சிறந்த நாடகம். ம60க பலவீனங்களை, மூட நம்பிக்கைகளைக் கிண்டல் செய்து குத்திக் காட்டு கையில் சிரிப்புடன் சிந்தனையையும் கிளறிவிடும் வகையில் கதை மிக நுணுக்கமாகப் பின்னப்பட்டிருக்கிறது.
え **வீரகேசரி'யில் எஸ். எஸ்.
*மதமாற்றம்’ புதியதோர் நிலையைத் தமிழ் நாடக உலகில்
தோற்றுவித்திருக்கிறது. மத சம்பந்தமான பிரச்சினைகள் நகைச் சுவையோடு மேடைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
**டைம்ஸ் ஒப் சிலோனில்" டி. ஆர்.
திரு. கந்தசாமியை எவ்வித தயக்கமுமின்றி அவரது நாடகப் புலனுக்காக மெச்சுகிறேன். கடைசிக் காட்சிக்கு முன்னைய காட்சி ஒரு இப்சன் அல்லது ஒரு ஷாவின் வாத விவாத நாடகக் காட்சியை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. கடைசிக் காட்சியில் மிகச் சிறந்த நாடகப் பண்புகள் அமைந்துள்ளன.
"டெய்லி மிரரில்' அர்ஜணு
கதையைக் கட்டி எழுப்பி நடாத்திச் செல்லும் விதத்தில் ஆசிரியரின் கலை நுணுக்கமும் சாதுரியமும் பளிச்சிடுகின்றன. ஒன்றின் மீதொன்ருக முறுகி இறுகும் கட்டங்கள் சுவைஞர்களைப் பிணித்து வசப்படுத்துவதுடன் அமையாது மதச்சார்பு பற்றிய உளவியல் அடிப்படைகளைக் குறிப்பாக உணர்த்திச் செல்லுகின்றன.
'வசந்தத்தில்’ கவிஞர் முருகையன்
அ. ந. கந்தசாமியின் ‘மதமாற்றத்தின்" கதா நிகழ்ச்சி திடீர்த் திருப்பங்களும் மாற்றங்களும் கொண்டது. ஓ ஹென்றிச் சுழல்கள் நிறைந்தது. பேர்னட்ஷோவின் "டெவில்ஸ் டிசைப்பிள், அன்ட்ரோக் கில்ஸ் அன்ட் த லயன் போன்றவற்றின் பின்னல் ஷாவின் நகை யொலி கேட்பது போல “மதமாற்றத்தின்" கதாநிகழ்ச்சிக்குப் பின்னலும் கதாசிரியரின் நகையொலி கேட்கிறது. இலங்கையில்
... xi ...

Page 8
சொந்தமாக எழுதித் தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த நாடகம் இதுவே.
அ. ந. கந்தசாமியின் மதமாற்றத்தோடு ஒப்பிடக்கூடிய எந்நாடகத்
தையும் இந்திய எழுத்தாளர் படைப்புகளிடையேகூட இவ்விமர்சகன்
ஒரு போதும் கண்டது கிடையாது.
‘ரிபியூனில்" சில்லையூர் செல்வராசன்
f
கதையில், மொழியில், கருத்தில் உயர்ந்த தரத்தை எட்டிப் பிடிக்கும் நண்பர் அ. ந. கந்தசாமியின் இந் நாடகம் ஈழத்து நாடக கர்த்தாக்களுக்கு ஒரு தீபஸ் தம்பமாக, விடிவெள்ளியாகத் திகழ் கிறது.
* தேசாபிமானி'யில் எச். எம். பி.
அ. ந. கந்தசாமியின் "மதமாற்றம்” கதை திடீர்த்திருப்பங்கள் பல கொண்ட நெஞ்சைப் பிணிக்கும் சுவையான கதை. நையாண்டிக் கதையானலும் நவரசங்களும் பொதிந்து படித்தவர், பாமரர் யாவ ரையும் கவரவல்லனவாக அமைந்திருக்கின்றன. உரையாடல்கள், உலகப்பெரும் நாடகாசிரியர்களான பேர்னட்ஷா, இப்சென், சாட்டர் போன்றேரின் படைப்புகள் சுவைஞர்களால் கொண்டாடப்படு வதற்கு இவ்வம்சங்கள் யாவும் ஒரு சேர அவற்றில் அமைந் திருப்பதே காரணம். மதமாற்றம் நாடகத்திலும் இப்பண்புகள்
குறைவில்லாது அமைந்திருக்கின்றன.
**ராதா"வில் 'கலாயோகி"
தற்கால இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் கை வைத்துத் தாம் தொட்ட துறை எல்லாம் வெற்றி பெற்ற திரு. கந்தசாமி *மதமாற்றத்"தில் ஈழத்தில் மிகச் சிறந்த மேடை நாடகாசிரியர் என்று வர்ணிக்கும் அளவுக்குப் பெரும் வெற்றி ஈட்டியிருக்கிருர், சுருக்கமாய்ச் சொன்னல் மதமாற்றம் ஒரு உயர்ந்த அனுபவம். தமிழுக்கு வாய்த்த நாடகச் செல்வம், புதுமைக் கருத்தோவியம்:
இன்றைய சமுதாயத்தின் தத்துவச்சிக்கல்களின் கண்ணுடி.
தேசபக்தனில் எஸ். ஸ்ரனிஸ்
... xii ...

மத மாற்றம்
காட்சி 1
யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமம். மானிப்பாய் என்று ைவத் துக் கொள்வோம். ஒரு பெரிய அரசாங்க உத்தியோகத்தர் வீடு. சைவ மணமும், கொழும்பின் நவநாகரீக மணமும் வீசும் ட்ருயிங் றுாம். சுவரிலே தலைப்பாகை கட்டிய ஒருவரின் படம். வீட்டுச் சொந் தக்க்ாரரின் தகப்பனயிருக்கலாம். ஆனல் அந்தத் தலைப்பாகைக்கார ரிலும் பார்க்கச் சபையைக் கவர்வது பெரிய பிள்ளையார் படமும், அதற்குப் பக்கத்தில் விடையேறிய சிவபிரானின் படமுமாகும். சரசுவதி படமும், இலட்சுமி படமும் கூடக் காணப்படுகின்றன.
சிறிது முன்னே மேடையின் முன்புறத்தில் ஒரு “டருயின் ரூம் செட்". ரேடியோவில் மெல்லிய வாத்திய சங்கீதம் இசைக்கிறது. "ட்றேங் ரூம் செட்டிற்கு அருகாமையில் சிறிய எழுதும் மேசை, அதற்கு முன் ஒரு நாற்காலி. இவை தவிர பெரிய பித்தளைப் பூச்சட்டி களைத் தாங்கிய இரு உயர்ந்த ஸ்ராண்டுகள் பொருத்தமான இடங் களில் இருக்கின்றன.
திரை நீங்கும் போது மேடை வெறிச்சென்றிருக்கிறது. ஒரு வினடி கழிய மீன எனும் 18 வயதுப் பெண் மேடையில் பிரவேசிக் கிருள். பாவாடையும் சட்டையும் அணிந்திருக்கிருள். ஒரளவு அழகி தான். அப்பொழுதுதான் குளித்துவிட்டு தலையிலுள்ள நீரைத்தட் டியவண்ணம் பிரவேசிக்கிருள். பிள்ளையார் படத்தின் முன் திருநீறும், குங்குமமும் இருக்கிறது. அவற்றை அணிந்து கொண்டு ரேடியோவை நிறுத்துகிருள். பின்னர் "பித்தாப்பிறை சூடி" என்ற தேவாரத்தை மெல்ல முணுமுணுக்கிருள். ரேடியோச் சத்தத்தில் கடவுளுக்குத் தேவாரம் கேட்காது என்ற அச்சத்தினுல் அவள் அப்படிச் செய் திருக்க வேண்டும்.
(பாட்டை முணுமுணுத்த பின் மே  ைட யி ன் முற்புறத்துக்கு வருகிருள்.)
மீனு: (மெல்லிய குரலில், நாக்கை நீட்டிப் பற்களால் ஒரு தரம் நாக் கைக் கடித்து உள்மூச்சு இழுத்தவண்ணம் - மறந்துபோன ஒரு

Page 9
விஷயம் ஞாபகத்திற்கு வந்த மெய்ப்பாடு) மறந்தே போயிட்டுது. ஜோவுக்கு இன்டைக்கு எப்படியாவது கடிதம் எழுதவேணும். ஆணுல் இந்த வீட்டிலை இருக்கிற சனியன்கள் அதற்குவிட்டால் தானே. எழுதிறத்திற்கு உட்கார்ந்தால் அம்மாவோ, அப் பாவோ சிவபூசையிக்கை கரடி வந்தமாதிரி வந்திடுதுகள் நான் கடிதம் எழுதாவிட்டால் அந்த ஜோ என்ன நினைப்பாரோ? சில வேளை வேறை பெட்டையளிலை கண்போட்டாலும் போட்டிடு வார். சீ சீ. இன்டைக்கு எப்பிடியும் கடிதம் எழுதிப் போடவேணும். (மேசையை விட்டு உள்ளேபோய், ஒரு பெரிய புத்தகத்துடன் மீளுகிருள். புத்தகத்தின் பெயர் "மெய்கண்ட சாஸ்திரம்', 'சைவசித்தாந்த தீபம்’, ‘அருணந்தி சிவாச்சாரி யார் அருள் மொழிகள்' போன்ற ஏதாவது ஒன்ருக இருக்க லாம். அதற்குள் இருந்து ஒரு தபால் உறையை திறந்து ஒரு கடிதத்தை எடுக்கிருள். அதைத் தன் இரு அதரங்களாலும் முத்தமிட்டுத் தன் நெஞ்சோடு அணை க் கி ரு ள். பின் அதை வாசிக்க ஆரம்பிக்கிருள்.) என் அ ன் புக் கனி யே! ஆசைக் கிளியே. காதல் தெய்வமே மீன. ஆஹா. ஜோவுக்கு என் மீது எவ்வளவு காதல். எவ்வளவு அழகாக எழுதுகிருர். நான் இதுக்கு என்ன பதில் எழுதுவது. (இந்நேரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிரவேசிக்கிருள். அவளைக் கண்டதும் மீன மிரண்டுபோய், கடிதத்தை இரவுக்கைக்குள் திணிப்பதில் இருந்து, அந்தப் பெண் மீனவின் தாயாகத்தான் இருக்க வேண்டுமென்று தெரிகிறது. நரை மயிர் எட்டிப்பார்க்கும் தலை, திருநீறு பூசி பொட்டிட்டிருந்த நெற்றி).
செல்லாச்சி: மீனு, மீனு. என்னடி செ ய் யி ரு ய்?. பிறகும் படிக்கத் துவங்கியிட்டியோ? லீவு நாளையிலே கொஞ்சம் ஒய்ந்து இருக்காமல் படித்துக் கொண்டிருந்தால் உடம்பு என்னத்துக் காகும்? அதுதான் என்ன சாப்பிட்டாலும் உடம்பு தேறிதில்லை, எலும்புந் தோலுமாய்ப் போய்க்கொண்டிருக்கிருய். அதிருக் கட்டும், இதென்னடி பென்னம்பெரிய புத்தகம்?
மீன: உங்களுக்கென்ன கண்தெரியாதே?. இதுதான் “சைவசித்
தாந்த தீபம்’. عر’’
செல்: நல்ல சைவமும் சித்தாந்தமும் . நீயும், உன்ரை செல்ல அப்புவும், இந்தச் சித்தாந்தத்தைப் படிச்சதுதான் இந்த உலகத்திலை கண்ட மிச்சம். எண்டாலும். உன்ரை அப்பா
என்னைக் கலியாணம் பண்ணின காலத்திலை உந்தச் சித்தாந்தம் ஒண்டும் பேசியில்லை, நீ பிறந்த பிறகுதான் ராமையாச் சாமியார்
. 2 ...

என்று ஒரு சாமியார் இந்தியாவிலை இருந்து வந்தார். அவர் தான் உன்ரை அப்பாவுக்குச் சைவசித்தாந்தம் சொல்லிக் குடுத்தவர். அப்ட. நீ. ஒரு மாதக் குழந்தையடி.
வேலாயுதம்: அப்பிடிச் சொல்லுங்கோ அம்மா இப்பெல்லோ
எனக்கு விசியம் விளங்குது.
செல்: என்ன விசியம்.
வேலா: இல்லை. மீனத் தங்கச்சிக்கு ஏன் சகோதர பலன் இல்லா மல் போனதென்டு. இப்பெல்லே தெரியிது. அந்தச் சாமியார் ஒரு அஞ்சாறு வரியம் சென்டு வந்து சைவசித்தாந்தம் படிப் பிச்சிருக்கக் கூடாதே? அப்படி என்டால், மீனு தங்கச்சிக்கு இரண்டு மூண்டு தம்பி தங்கச்சிமார் பிறந்திருப்பினமெல்லே. செல்: போடா மடையா, உன்னட்டை எத்தனை தரம் சொல்லிறது குறுக்கை பேசாதே என்டு. நீ என்ன நினைத்தாய்? இப்ப ஊரிலை பேசினமே குடும்பக் கட்டுப்பாடேன்று சைவசித்தாந்தத்தை என்ன அந்த மருந்தென்டு நினைச்சியே? (மீன விழுந்து விழுந்து சிரிக்கிருள்) செல்; அவ சிரிக்கிறதைப் பார். நீ பெரிய கிழடியாயிட்டாய் என்ன?
எல்லாம் விளங்குதுபோல. மீன: சும்மா போங்க (செல்லக் கோபம்) அம்மா. இசல்: அது இருக்கட்டும் மீன. இந்த சைவசித்தாந்தத்திலை.
உனக்கும் அப்பாவுக்கும் என்ன அவ்வளவு ருசி? மீன: உங்களுக்குச் சொன்னல் விளங்கப்போகுதேயம்மா. சைவசித் தாந்தத்திலை மூண்டு விசியங்களைப் பற்றிச் சொல்லியிருக்குது. பதி. பசு, பாசம். அதை விட மூண்டு மலங்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறது. செல்: இதிலை பசு ஒன்டுமட்டுந் தான் எனக்கு விளங்குது. வேலா : ஒமம்மா, எனக்கும் அது தான் விளங்குது. மீனு: என்ன விளங்குது?
வேலா பசு
மீன: பசு எண்டால் என்ன?
வேலா: மாடு. நாம்பன் மாடுடில்லை. மற்ற மாடு. பசு மாடு
(மீனு விழுந்து விழுந்து சிரிக்கிருள்)
. . . . .

Page 10
செல்: என்ன சிரிக்கிருய்? அவன் சொல்லிறது சரிதானே?
மீன: (மேலும் விழுந்து விழுந்து சிரித்தபடி) சைவசித்தாந்த கேசரி சிவப்பிரகாசம் பிள்ளையைக் கலியாணம் செய்திருக்கிற உங் களுக்கே பதி, பசு, பாசம் என்ருல் விளங்கவில்லையே? பசு என்ருல் ஆத்மா.
வேலா: ஆத்மா என்டால்..?
மீஞ: ம். பசு.
வேலா: பசுமாடு····· அதுதான் நான் அப்பவே சொல்லிப்போட்டனே.
செல்: என்னவோ எனக்கு ஒன்டும் விளங்கயில்லை. உங்கஅப்பாயிட்டை யும் முந்தி நான் உப்பிடிக் கேள்வியள் கேட்கிறனன், அவரும் உப்பிடித்தான். சொல்லித்தரத் தெரியாமல் புலுடாப் பண்ணு வார். சிவசீட்சை கேட்காதவைக்கு இதுகளைச் சொல்லிக் கொடுக் க்க கூடாதாம். சரி இனி என்ன செய்கிறது? நானும் கிழவி யாய்ப் போனேன். நீ படி நான் போய்ச் சமைக்கிறன். வேலா யுதம் அந்த விறகைக் கொத்து உலை வைக்க வேணும்.
(செல்லாச்சி போகிருள், வேலாயுதம் தயங்குகிருன்)
மீன: என்ன வேலாயுதம் மசங்கிருய்? அம்மா சொன்னது காதிலை விளையிலையோ? உனக்குச் சொன்னல் காது கேட்காது அப்பிடித் தானே..?
வேலா இல்லைத் தங்கச்சி, எனக்குத் தீட்சை கேட்கவேண்டும் என்று ஆசை. ஐயா போன மாதம் கொழும்பு சைவ வாலிப சங்கத்திலை நூறு பேருக்கு தீட்சை செய்விச்சு வைச்சவை. அப்பாவிட்டைச் சொல்லி எனக்குந் தீட்சை வைப்பிச்சு விடுங்கோ தங்கச்சி.
மீன: அதை பிறகு பாப்பம், நீ இப்ப போய் விறகைக் கொத்து. நான் படிக்கப் போறன். ஒரு மணித்தியாலத்துக்கு ஒருத்தரும் இந்தப் பக்கம் வந்து குழப்பக்கூடாது. சொல்லிப்போட்டன். அம்மாவிட்டையும் போய்ச் சொல் லு, போ. (வேலாயுதம் வெளியேறுதல்)
மீன: (தனி மொழி) என்ன சங்கடமப்பா இது? இந்த வீடு ஒன்டுக் கும் சரியில்லை. (ஜோவுக்கு ஒரு சின்னக் காதல் கடிதம் எழுத நான் படுகிறபாடு. அதுக்கிடையிலை எனக்குத் தம்பி தங்கச்சி இல்லையென்டு அழுகுது வேலாயுதம்.) அதுதான் இப்ப குறை. அது களும் இருந்தால் நான் ஜோவுக்குக் கடிதம் எழுதினமாதிரித்
... 4 ...

தான். சரி, ஒரு மணித்தியாலயத்துக்கு ஒரு சனியனும் வராது. இனிக் காகிதத்தை எழுதுவம். (ஜோவின் கடிதத்தை றவுக்கைக் குள் இருந்து எடுத்து இன்னுேரு தடவை முத்தமிட்டு, விட்டு எழுதும் மேசையில் உக்கார்ந்து காகிதம் எழுத ஆரம்பிக்கிருள்.) எப்பிடித் தொடங்கிறது?. பாட்டாய் எழுதுவமோ?. ஓ, அது தான் சரி. எப்பிடி?..
அன்பே. எந்தன் ஆருயிரே! அழகா, தினமும் உன்னுடைய பொன்னர் உருவம் உள்ளத்தினிலே புதிதுபுதிதாய்த் தீட்டல் அலால் என்னே, வேறு பணி யெனக்கே, எந்தன் இன்பக் காதலரே, மன்னும் ஜோசப் எனும் பெயரோய் மங்கை மீணு கடிதமிதே. (யோசித்து, யோசித்து, வெட்டி வெட்டி எழுதி உரக்க வாசிக் கிருள்)
(இப்பொழுது சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு யுவதி அங்கு பிரவேசிக்கிருள். நெத்தியில் பொட்டில்லை. ஒரு குருசுடன் கூடிய சங்கிலி ஊசலாடுகிறது. அவளைக் கண்டதும் மீனு ஜோவின் கடிதத்தையும், தனது கடிதத்தையும் சைவசித்தாந்த தீபத்துள் அடக்கம் செய்கிருள்.) V− மீன: ஒ. தெரேசாவா? என்ன திடீரெண்டு என்னைத் தே டி ப்
புறப்பட்டு வந்திட்டாய், வா, வா. இரு. தேரேசா : ஒ ஓ அது இருக்கட்டும், என்ன என்னைக் கண்டதும் ஒரு மாதிரிக் கலங்கிப் போனுப்?. உதென்ன பெரிய புத்தகம்?
(புத்தகத்தில் கையை வைக்கிருள்) மீன: (புத்தகத்தைத் தன் பக்கம் இழுத்து) இது தெரியா தே? V எங்கடை சைவப் புத்தகம். உனக்கெதுக்கு? தெரே: இல்லை. ஒருக்கால் பார்த்தால் என்ன? தாவன். மீஞ; இப்ப, புத்தகத்தை நீ கையிலை எடுத்தாயோ நாங்கள் கதைக்க
முடியாது தெரேஸ், சரி. வந்த விசயத்தைச் சொல்லன். தெரே புத்தகத்தை ஒருக்கால் தந்தால்தான் வந்த விசயத்தைச் சொல்லுவன். ஆரை ஏமாத்தப் பார்க்கிருய் மீன. எனக்கு
... ...

Page 11
விளங்காதென்டு நினைக்கிறியோ?. புத்த க த் துக் கு ஸ் ளை என்னத்தை ஒழிச்சனி? எனக்குத் தெரி யும். லவ்லெற்றர் போல கிடக்குது.
மீன: லவ்வாவது, மண்ணுங்கட்டியாவது. என்னை ஆர் லவ் பண்ணப்
போகினம்? சும்மா கிட.
தெரே (இராகத்துடன்). மீன. மீன உப்பிடிச் சொல்லி என்னை ஏமாத்தலாம் எண்டு நினைக்கிறியோ?. நீ சொல்லுறது உண்மை யாயிருந்தால் புத்தகத்தைத் தருவிவோ (புத்தகத்தை எடுக்க முயலுகிருள். இருவரும் இழு பறிப்படுகிருர்கள், முடிவில் தெரேசா கடிதத்தை எடுத்துக் கொண்டு மேசையின் முன்புறத் துக்கு ஓடிவருகிருள்.)
தெரே (கடிதத்தை விரித்து வாசிக்கிருள்) என் அன்புக் கணியே.
ஆசைக் கிளியே காதற் தெய்வமே மீன. ‘அடி சக்கை. உன்ர காதலன் சரியான ஆளாய்த் தான் இருப்பான் போலைக் கிடக்குது. (கடிதத்தின் அடிப்பக்கத்தைப் பார்க்கிருள்) "இப் படிக்கு, உன்னையே நினைத்து வாடும் காதலன் ஜோசெப்."
மீனு: (பற்களைக் கடிப்பதும் நாணிச் சுமப்பதுமாய் நிற்கிருள்)
தெரேஸ் . நான் உன்னேடு கோபம். கடிதத்தைத் தா.
தெரே! நான் கடிதத்தைத் தாறன் மீன. ஆணுல் நீ உன் காதல் விசயத்தை எல்லாம் எனக்கு விபரமாய்ச் சொல்லுற்னென்டு வாக்களி. அப்படி என்ருல் தான் தருவன்.
மீனு: ம். (என்று ஒப்புக் கொள்ளுகிருள்) புன்சிரிப்புடன்
தெரே: இந்தா டி அம்மா உன்ரை காதல் கடிதம், (சிரித்துக் கொண்டே கொடுக்கிருள்) சரி. இந்த ஜோசப்பை எங்கேயடி சந்திச்சாய்?
மீன: என்னலை சொல்ல முடியாது, வெட்கமாய் இருக்கு. தெரே: ஓமோம், வெட்கம் வரும். அது காதல் நோய்க்குள்ள
குணங்களிலை ஒன்டெல்லேய்,
மீனு: " காதல் நோய் போடி. திரேஸ் நான் எந்த நோயுமில் லாமல் நல்ல சுகமாய்த் தான் இருந்தன் கிட்டடியிலை தான்
எனக்கு இந்த நோய் தொத்தி இருக்குது. பொல்லாத தொத்து நோய்.

தெரே: என்ன, காதல் தொத்துநோயா? ஆரிட்டையிருந்து உனக்குத்
தொத்தினது..?
மீனு: எல்லாம். இதே என்னைக் குறுக்குக் கேள்விகளாலை குடை கிருளே இந்தத் திரேஸா சவரிமுத்து தேவியாரிடம் இருந்து தான். அது கிடக்கட்டும் தெரேஸ். உன்னுடைய காதலர் தேவசகாயம், சுவமாய் இருக்கிருரோ?
தெரே: ம்..ம். கதையை மாத்தப் பார்கிறியோ தேவசகாயம் விசயத்தை நான் உனக்கு ஒருக்காலும் ஒளிக்கையில்லையே. சரி வா விசயத்துக்கு. நீ உன் ரை ஜோசப்பை எங்கை முதலிலை சந்திச்சனி?
மீனு: நீ தான் விடமாட்டியே சரி சொல்லுறன். எங்கடை ஸ்கூலிலை பெரிய காணிவல், மூண்டு மாதத்துக்கு முந்தி நடந்திது தெரியும் எல்லா? அதிலே கூல்றிங் ஸ்டால் ஒன்றுக்கு என்னைத்த ண் ஸ்ட ல் கேர்ள் ஆகப் போட்டினை அங்கை அவர் அடிக்கடி வந்துபோனர். பிறகு என்னுடைய கிளாஸ் மேட் டின்ரை அண்ணை ஒருத்தர் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிறகு. ஒமெங்கிறன். எங்கை கண்டாலும் என்னுேட்ை பேசத் துவங்கியிட்டார்.
தெரே: ஓகோ அப்படி என்டால் உன்னுடைய காதல், கானிவல் காதல் எண்டு சொல்லு சரி மீனு, உன்ரை ஜோசப் இப்ப என்ன செய்யிருர் வாசிற்ரி பி. எஸ். சி. எடுத்திட்டு, றிசல்டை பார்த்துக் கொண்டு இருக்கிருர்,
தெரே: மீன உன்ரை காதல் நிறைவேறி உன் மனம் போல வாழ்வு உனக்குக் கிடைக்கவேனும் அது தான் என் ஆசை. அது போகட்டும், நான் ஏன் இஞ்சை இப்ப வந்தனுன் தெரியு மோ? அடுத்த வெள்ளிக்கிழமை கொழும்பிலை எனக்கும் அவருக்கும் கலியாணம். அது முடிஞ்சதும் நாங்கள் இரண்டு பேரும் மட்டக்களப்பு போறம், அவருக்கு அங்கே ஒரு பள்ளிக் கூடத்திலே வாத்தியார் வேலை கிடைச்சிருக்குது. அது சரி அடுத்த வெள்ளிக்கிழமை, காலம்பிற சென்லூசியஸ் கதிட்ரலிலே கலியாணம், பின்னேரம் பாம் கோட்டிலே ரிசெப்சன் இரண்டி டத்திற்கும் நீ கட்டாயம் வரவேணும்.
மீன; அதை நீ சொல்லவேணுமே? கட்டாயம் வருவன். ஆனல் ஒன்டு, மட்டக்களப்பு போனதும் எனக்கு ஒழுங்காய்க் கடிதம் எழுதவேணும், மறந்து போகக் கூடாது தெரேஸ்.
... " -

Page 12
தெரே! அது எப்பிடி மீனு உன்னை மறக்கிறது?. சரி நான் வரட்
GBLIT?
(GB unr 6.g6ir)
மீன: சரி போய் வா, சேரியோ. (மீண்டும் மேசையில் உட்கார்ந்து) "காதற்பாதை கரடுமுரடானது' என்பார்கள். எவ்வளவு பொருத்தமான வசனம். ஒரு சின்னக் காகிதத்தை எழுத இவ்வளவு கஸ்டமெண்டால் இந்தக் காதல் நிறைவேறி நாங்கள் கணவன் மனைவி ஆவதற்குள் இன்னும் எவ்வனவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமோ?. ஆனல் எப்போ நாங்கள் காதலிக்கத் தொடங்கினேமோ, அப்போ நாங்கள் கஸ்டப் படவும் தயாராய்த்தானே இருக்க வேணும். அது மட்டுமில்லை. உப்பிடிப்பட்ட கஷ்டங்கள் தானே காதற் கதையை விறுவிறுப் பாக்குகின்றன. எந்தக் கதாநாயகிக்குத்தான் கஸ்டமில்லை. இஞ்சை கதாநாயகிக்கு இவ்வளவு கஸ்டமென்டால் அங்கை கதாநாயகன் என்ன பாடுபடுகிருரோ? என்னென்ன கஸ்டங் களோ? அதை நினைச்சால் என் மனம் எவ்வளவு வருத்தப்படு கிறது. மீண்டும் (கடிதம் எழுதத் தொடங்குகிருள்).
“எங்கு பிறந்தோம் எவன் நாமே எவ்வாறிங்கு சந்தித்தோம்?
பொங்கும் காதலெனும் பூட்டில்
பொருந்திவிட்டோம் காதலரே
தங்கக்குவையலே கடமார்பா!
யோசித்து யோசித்து, வெட்டி வெட்டி எழுதுகிருள். உரக்க வாசிக்கிருள். அப்பொழுது வீட்டில் உட்புறத்திலிருந்து "மீன மீனு இஞ்சை ஒடிவா பிள்ளை" என்று தாய் கூவும் சத்தம் கேட் கிறது. மீன அதிர்ச்சி உற்று எழும்புகிருள். என்னம்மா என்று குரல் கொடுத்தபடி ஒடுகிருள். மேடை வெறிச்சென்று கிடக் கிறது. திரைக்குப் பின்னலிருந்து கீழ்க்கண்ட பேச்சொலி கேட்கிறது.
(திரைக்குப் பின்னல்) செல்: ஐயோ! மெல்லமாய்த் தடவு பிள்ளை, நோகுது, நோகுது.
எரியுது.
(மேடையில் தலைப்பாகை கட்டிய தமிழர் சிவப்பிரகாசம் மூக்குக் கண்ணுடியுடன் நெற்றியில் திருநீறு பிரகாசிக்கப் பிரவேசம்).
மீனு: என்னம்மா.

செல்; உன. ஊ. கையிலை சுடுதண்ணி ஊத் தி  ைக ய விஞ் க
போச்சுது.
மீன: இரம்மா. இதே ஒடிப்போய் மருந்தெடுத்துவாறன்.
செல்: (வலியால்). ஐயோ. அய்யோ. உயிர்போகுது. ஐயோ.
ஐயோ. உயிர் போகுது. ஐயோ. அய்யோ.
மீனுவின் குரல்: இந்தானை மருந்து கொண்டந்திட்டன். வேலா யுதம், வேலாயுதம். பளஞ்சீலை எடுத்துக்கொண்டோடி வா, கெதியாய்க் கையை நீட்டம்மா.
சிவப்பிரகாசர், சிவ சிவா என்ன வெய்யில், என்ன வெய்யில். என்ன வெய்யில். வேலாயுதம்! வேலாயுதம் (வேலாயுதம் வரு கிருன், சிவப்பிரகாசர் தலைப்பாகையைக் கழற்றிக் கொடுக்கிருர்) என்னடா வேலாயுதம், எல்லா இடமும் புத்தகங்கள்?
வேலா மீனத் தங்கச்சி படித்துக்கொண்டு இருந்தவ. (தலைப்பாகை
யுடன் வேலாயுதம் வெளியேறல்).
சிவ: ஒ1 (சைவசித்தாந்த தீபத்தை எடுத்துப் பார்த்துவிட்டு வைக் கிருர், பனையோலை விசிறி ஒன்றுமேசையில் கிடக்கிறது. அதால் எடுத்து விசிறிக் கொள்கிருர்) மீனு சரியாய் என்னைப் போலை, சைவசித்தாந்தம் தான் அவளுக்கு உயிர். அவளை அண்ணுமலைக்கு அனுப்பிச் சைவப்புலவருக்குப் படிப்பிக்க வேணும். போன வருச மும் அவள் விவேகானந்த சபைச் சோதினையிலை முதலாம் பிறைஸ் அடிச்சவளெல்லே. எப்பிடியும் புலி க் குப் பிறந்ததெல்லே, எப்படிப் பூனையாகும்? ஆனல் என்ன படிச்சென்ன, இன்னும் விளையாட்டுப் புத்திதான். கண்டபடி புத்தகங்களை அங்கும் இங் கும் போட்டிட்டுப் போயிருக்கிருள். (மேசையண்டை போய் புத்தகங்களை அடுக்கி வைக்கிருர், அவர் கையில் மீன எழுதிய கடிதம் சிக்குகிறது. எடுத்து வாசிக்கிருர்) இதென்ன பாட்டுகள்?. நல்ல கையெழுத்து. தேவாரமோ?
"அன்பே எந்தன் ஆருயிரே!
9 p5n ... என்ன உருக்கமான பாட்டு திருவாசகமோ?
அன்பே எந்தன் ஆருயிரோ அழகா, தினமும் உன்னுடைய பொன்னுர் உருவம் உளத்தினிலே
புதிது புதிதாய்த் தீட்டலல்லால் என்னே வேறு பணியெனக்கே.

Page 13
சாய் சாய் என்ன அருமையான விருத்தம் வாசிக்க வாசிக்க உருகுது இது மணிவாசகராய்த்தான் இருக்க வேணும். வேறை ஆராலை இப்பிடி உருக்கமாய்ப் பாடமுடியும்?
*" என்னே வேறு பணி எனக்கே எந்தன் இன்பக் காதலரே'
காதலர். கடவுளைக் காதலராய் பாவிக்கிறது சிறந்த பத்தித் துறை, ‘காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி." எ ன் றும் தேவாரமும் இருக்கெல்லே.
"எந்தன் இன்பக் காதலரே, மன்னும் ஜோசப் எனும் பேரோய் மங்கை மீனுள் கடிதமிதே!"
(நெருப்பில் மிதித்தவர் போல் துள்ளுகிருர்) சிச்சிச்சிச்சிச்சிச் சீ நான் ஒரு மடையன். இது தேவாரம் இல்லை. காதற் கடிதம், பாட்டாய் எழுதியிருக்கிருள் பெட்டை (அங்கும் இங்கும் ஆத் திரத்துடன் நடக்கிருர்). இன்னும் என்ன எழுதுகிற பார்ப்பம். செய்யிறன்,
“எங்கு பிறந்தோம் எவன் நாமே எவ்வாறிங்கு சந்தித்தோம்!
பொங்கும் காதலெனும் பூட்டில்
பொருந்திவிட்டோம் காதலரே
தங்கக் குவையே கடமார்பா !”
தங்கக்குவையே கடமார்பா! 'தாலியக் கட் டி ன மார்பா.
யார் இந்த களிசறைப் பொடியன். அவவடை துணிவு. சீ.
இப்ப நான் என்ன செய்யிறது?. (அங்கும் இங்கும் பார்த்து
உறுமுகிருர்) சைவசித்தாந்தம் படிச்சதாலே காதல் கடிதத்தை
யும் தேவாரமொடலிலை எல்லே எழுதுகிமுள்.
(வேலாயுதம் பிரவேசம்)
வேலா! ஐயா.
சிவ; என்னடா?.
வேலா, உங்களை நான் ஒன் டு கேட்கவேண்டுமென்டிருந்தனன். ஆனல் நான் உங்களைக் காண வருகிற நேரத்திலே ஒன்று நீங்கள் வேலையாய் இருப்பியள் அல்லது கோபமாய் இருப்பியள், அல்லது
... 10 ...

சைவசித்தாந்தம் வாசித்துக்கொண்டிருப்பியள். அப்ப குழப்புறது சரியில்லை என்று கேட்கிறயில்லை. இன்டைக்குக் கொஞ்சம் சந்தோசமாய்ப் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தியள். ஆறுதலாயும் இருக்கிறியள் போலைக் கிடக்குது, அதுதான் கேட்க வந்தனன்.
சிவ: என்னடா ? சந்தோஷமாய் இருக்குறேன?
வேலா, ஒமையா. நான் கேட்க நினைச்சது என்னென்டால் இந்தக் கட்டைக்கு சிவதீட்சை கேட்டுப் போடவேணும் என்டொரு ஆசை அடுத்தமுறை நீங்கள் சைவ வாலிப சங்கத்திலை சிவ தீட்சை வைப்பிக்கையிக்கை எனக்கும் செய்து வைக்க வேணும்
ஐயா .
சிவ; (கோபமாக) அது அந்த நேரம் பார்ப்பம் போடா. ,
வேலா, ஐயா பேசிறதைப் பார்த்தால் அவ்வளவு சந்தோசமாய் ல்லைப்போலை ருக்க. வமக்கமான கோபம் போலைக்கான்
ருககு Ք 占应 இருக்குது. சரி நான் போறன். (போகிருன்)
சிவ: ம். இந்த மீனுவை நான் இப்ப என்ன செய்ய?. (திடீரென ஒரு முடிவுக்கு வந்தவர்போல) செல்லாச்சி, செல்லாச்சி (u6) மாகக் கத்துகிருர்). (பதிலில்லை) செல்லாச்சி செல்லாச்சி? உனக்கென்ன காது செவிடே? இங்கை வா. செல்லாச்சி.
(திரைக்குப் பின்னல்)
செல்: ஏன் உப்பிடிக் கத்திறியள்? பொறுங்களேன் வாறன். இஞ்சை
நான் படுகிற கஸ்டம் உங்களுக்கு எங்கை தெரியுது?
சிவ: என்ன கஸ்டம் உனக்கு?. என்ரை மனம் இப்ப படுகிறபாடு உனக்குத் தெரியுமே? இஞ்சை வா செல்லாச்சி. உன்ரை மேள் செய்து வைச்சிருக்கிற வேலையைப் பார். வெக்கங் கெட்ட வேலை யெல்லாம் செய்து வைச்சிருக்கிருள். (கையில் பெரிய கட்டுடன் மேடையில் செல்லாச்சி பிரவேசம்)
செல்: என்ன என்ரை மோள் எ ன் று அவ்வளவு குறிப்பாகச் சொல்லிறியள்?.ஏன் அவள் உங்கடை மேளில்லையோ?. இஞ்சை பாருங்கோ நான் படுகிற வேதனையை, உலைத் தண்ணி ஊத்தி
கைமுழுதும் அவிஞ்சு போய்ச்சு. என்ரை மகள் தானே மருந்து போட்டவள்?
... l l ...

Page 14
சிவ: ஓமோம் மருந்து போடுவாள் இப்ப அவளுக்கெல்லே ஆரே ஒரு களிசரை மருந்து பொட்டிட்டான். (மீனு பதுங்கிப் பதுங்கி வந் தவள் பூச்சாடிக்குப் பின்னல் மறைந்துநின்று கேட்கிருள்)
செல் கோபத்துடன் என்ன கதைக்கிறியள்? என்ரை கை அவிஞ்சு போய்க்கிடக்குது. அதைப்பற்றி ஒன்றும் பேசாமல் கம்மா ஏதோ குதிக்கிறியள்? w
சிவ: ஒமடி. நான் குதிக்கிறேனுே? அதுக்கு மே லை குதித்தால்
போதாது பாயவே வேணும்.
செல்: சரி பாயுங்கோ, என்டாலும். விசயம் என்னென்டு சொல்லிப்
போட்டுப் பாயுங்கோவென்.
சிவ: உன்ரை செல்ல மகள் மீன இருக்கிருள் எல்லே மீன.
செல்: ஒம், இருக்கிருள் அவளுக்கு இப்ப என்ன?
சிவ; நீ என்ன குறுக்கை பேசிக்கொண்டு? பேசிவிட்டால் எல்லோ
என்னை?
செல் சரி சொல்லுங்கோவன்.
சிவ: உன்ரை மீன. கொழும்பிலை ஆரையோ காதலிக்கிருளாம்.
எப்படி இருக்குது கதை?
செல்: அட இதுக்குத்தானே இவ்வளவு துள்ளிறியள்?. இந்த காலத் திலை படிச்ச பெட்டையள் காதலிச்சுத்தானே கலியாணம் பண் ணுதுகள். அப்பிடி வாற இடத்திலை சீதனமும் கணக்கக் கேட்கா யினம். ஏன் உங்களுக்குத் தெரியாதே, நாகமுத்துவின்ரை மேள்?. அந்தப் பொடிச்சி செல்லமணி மீனவின் ரை சிநேகிதி தான். போன மாதம் தானே அந்தக் கிழறிக்கல் பொடியன் ஒரு வனைக் கட்டினவள். பொடிச்சியடை தாய் சொன்னு பொடியனும் பொடிச்சியும் கொஞ்சக்காலம் சினேகிதமாம், தாங்களாய்க் குடும்பம் ஏத்துக்கொண்டானும் பொடியன்.
சிவ: (பல்லைக்கடித்துக் கொண்டு பொறுமையாய்க் கேக்க முயற்சிக் கிருர், முடியவில்லை) வாயைப் பொத்து செல்லாச்சி நீ சொல்லுறதை என்னுலை கேக்க முடியாது. மேள் ஒருத்த னுேடை காதல் என்ட உடனை அது சரிதானே எண்டு பேச வந்திட்டாய் நீ. உனக்குத் தெரியாது இந்த விசயங்கள். மீன ஒரு கத்தோலிக்கப் பொடியனை எல்லோ பிடிச்சிருக்கிருள்?
... 12 ...

(தலையிலடிக்கிருர்) ஐய்யய்யோ, சித்தாந்த கேசரி சிவப்பிர காசத்தின்ரை மகள் ஒரு கத்தோலிக்கப் பொடியனையே போய்ப் பிடிக்கிறது. சீச்சீ! நான் தூக்குப்போட்டுச் சாகவேண்டியது தான். அவன் என்ன சாதியோ நளமோ? பள்ளோ?. என்னுல் இதைத் தாங்க முடியாது?
செல்: (அனுதாபத்தோடு) அதுக்கேன் உங்களை நீங்களே அடிச்சுக்
சிவ:
கிவ:
கொள்ளுறியள். மீன என்ன விஷயம் தெரியாதவளே? சொல்
லித்திருத்திறது தானே?
மீன கெட்டது உன்னலை. நீ அவளைச் சினேகிதியளோடை படம் பார்க்க எண்டும் விளையாட்டெண்டும் அனுப்புறது, காணிவலிலை கூட வேலை செய்யவிட்டனி எல்லே. அங்கினைதான் ஆரோ ஒரு யோசப்போ. சூசையப்பனே. அவளுக்குச் கொத்துப்பொடி போட்டிருக்கிருன். அது போகட்டும் நான் சொல்லிப் போட்டன், மோளும் தாயும் உடனே திருந்த வேண்டும் அப்படித் தானே? திருந்தாட்டால் நான் ஊரை விட்டிட்டுக் காசிக்கோ சிதம்பரத்துக்கோ பரதேசியாய்ப் போயிடுவேன். தெரியிதே. ஐயய்யோ நினைக்கவும் வெக்க மாய் இருக்கு. சிவப்பிரகாசத்தின் ரை மேள் சூசயப்பனேடை ஒடுறதோ?. உலகம் அழிஞ்சாலும் இதை விடமாட்டன். முளையி லேயே கிள்ளி எறியவேனும், முத்தின பிறகு முறிக்கேலாது. (மீனு சிறிது எட்டிப்பார்த்தவள் தவறிப் பூச்சாடியைத் தட்டி விடுகிருள். தடதடவென்று பூச்சாடி கீழே விழுந்து உருளுகிறது. பயந்து கள்ள முழி முளித்த வண்ணம் நிற்கிருள் மீனு)
என்னது மீனவே. நல்ல பழக்கங்களெல்லாம் பழகிருப்போலை கிடக்குது. உதுகளுக்குத் தான் இவ்வளவு படிச்சனியே?. இதென்ன கடிதம் எழுதி வைச்சிருக்கிருய்?. உதெல்லாம் கொம்மா தந்த இடம். ஆனல் நான் ஒன்டு சொல்லிப் போட்டன், இந்த மாதிரிக் காதல் எல்லாம் எனக்குப் பிடிக் காது. இதுகளை உடனடியாக நிற்பாட்டவேண்டும். அல்லது தாயும் மோளும் பட்டது பாடென்டு நான் பரதேசியாய்ப் போயிடுவன். உனக்கு அப்பாவிடை குணம் தெரியுமெல்லே. சீ, என்ன பிள்ளை நீ. இப்படி எல்லாம் நடக்கலாமே? படிச்ச தெல்லாம் காதல் கடிதமெழுது தற்கே? இவ்வளவு கெட்டித்தன மாய்ச் சைவசித்தாந்தமெல்லாம் படிக்கிறியே, உனக்கு இந்தப்
புத்தி இல்லையே?. சரி இனிமேல் சூசயப்பனை மறந்திடவேணும்
தெரியிதே? (மீன நிலத்தை நோக்கி மெளனமாய் நிற்கிருள்)
... . ...

Page 15
என்ன பேசாமல் நிற்கிருய்?. நான் சொன்னதெல்லாம் கேட்டுதே. காது செவிடோ?
செல்: நீங்கள் வாயைழுடிக்கொண்டு சும்மா இருங்கோ நான்
மீனுவோடை பேசிறன், நீங்கள் போங்கோ.
சிவ சரி, நான் போறன், ஆனுல் கடைசியாய்ச் சொல்லிறன் இந்தக் காதலும் கத்தரிக்காயும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. (சீறிக்கொண்டு வெளியேறுகிருர்).
செல்: (அன்புடன்) அப்பா சொன்னதெல்லாம் கேட்டுதெல்லே, இதெல்லாம் கொஞ்சம் யோசித்து நடக்கவேண்டாமே? (மகளை அணைத்துக் கொள்முள் மீனு அழுகிருள்)
செல் ஏன் அழுகிருய்? நீ படிச்ச பிள்ளை, கொஞ்சம் யோசித்து நடக்க வேணும் உனக்குத் தான் அப்பாவின்ரை குணம் தெரியுமே.
மீனு: சரியம்மா அப்படியே செய்கிறன்.
செல்: மீன. நல்ல பிள்ளை என்ரை குஞ்செல்லே! போ துக்கப் படாதை, நாளைக்கு அப்பாவிட்டைச் சொல்லிப் படத்துக்குப் போவம் (மீனு போகிருள். செல்லாச்சி பிள்ளையார் படத்துக்கு முன் போய்த் திருநீறு நெற்றியில் போட்டுக் கொள்கிருள்)
செல்: விணுயகா! விக்கினேசுவரா என்ரை மகளுக்கு நீதான் நல்ல
புத்தியைக் கொடுக்க வேணும் (வெளியேறுகிருள்)
(சிவப்பிரகாசர் பிரவேசம்)
சிவ: வேலாயுதம் வேலாயுதம் அந்தத் தலைப்பாகையைக் கொண்டு வா. திரைக்குப் பின்னலிருந்து வேலாயுதம், வந்திட்டேனயா. (சிவப்பிரகாசர் பிள்ளையார் முன்) ஆண்டவா என் மகளை சூசயப்பனிடமிருந்து நீ தான் காப்பாற்ற வேணும். என் மகளுக்கு நல்ல புத்தியைக் கொடு.
"தேவநாயகனே போற்றி விண்ணவர் தலைவா போற்றி மாதொருபாகா \eபாற்றி மறு சமயங்கள் மாழப் பேதகம் செய்வாய் போற்றி பிஞ்சகாபோற்றி யாம்செய் பாதகம் அனைத்தும் தீர்க்கும் பராபரா போற்றி போற்றி"
(வேலாயுதம் தலைப்பாகையைக் கொண்டு வந்து கொடுத்தல். சிவப்பிரகாசர் அதைத் தலையில் வைத்துக் கொண்டு கிளம்பு கிருர்).
14 ...

(மீனு பிரவேசம் பிள்ளையார் முன் சென்று)
மீனு: வினயகா நீதான் துணை அப்பாவுக்கும் அம்மாவுக்கும். நீ தான் நல்ல புத்தியைக் கொடுக்கவேணும். என்ரை ஆசையை நிறைவேற்றி வைக்க வேணும் ஆண்டவா (நெற்றியிலும் வாயிலும் திருநீற்றைப் போட்டுக் கொண்டு வெளியேறுகிருள்) (வேலாயுதம் பிரவேசம்)
வேலா : (பிள்ளையாரை அணுகி) அம்மா, அப்பா, மகள் எல்லோரும் பிள்ளையாரைக் கும்பிடினம். ஒவ்வொருத்தரும் மற்றவருக்கு எதிராய்த்தான் வேண்டியிருப்பினும் (பிள்ளையார் பக்கம் திரும்பி) விணுயகா! உன்பாடுதான் பெரிய கஷ்டம். யாருக்கு அருள் செய்யப் போ கிறியோ?
திரை
காட்சி - 2
(கொழும்பில் ஒரு நடுத்தர வாலிபனின் அறை. சுவரில் ஒரு மாதா படம். அதற்குச் சற்றுத் தள்ளி ஒரு சினிமா நடிகையின் படம். ஒரு பக்கத்தில் புத்தக அலுமாரி அல்லது புக் கேஸ். திரை விலகும் போது ஒரு வாலிபன் அதுதான் நமது கதாநாயகன் ஜோசப் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டு இருக்கிருன்.)
ஜோசப்: (உடம்பை வளைத்துக் கொட்டாவி விடுகிருன். பின்னர் புத்தகத்தை விரித்தபடி மடியில் குப்புற வைக்கினன்.) . புத்த கத்தில ஒரு பத்துப் பக்கம் கூட வாசிக்க முடியவில்லை. மனம் ஒரு நிலையில் இருந்தால் தானே (எழுகிருன்) மீனவுக்கு வீணுய் நான் ஒரு கடிதம் எழுதினதுதான் மிச்சம். ஒரு பதிலையும் காணுேம். சீ. இந்தப் பெட்டைகளை நம்பவே கூடாது. நான் மீனுவோடை இப்பொழுது 6 மாதமாய்ப் பழகிறன். ஆனல் இப்பத்தான் முதன் முதலாய் அவளுக்கு ஒரு காகிதம் எழுத முடிஞ்சு து. இவ்வளவு காலமும் அவளும் கொழும்பிலை ,நானும் கொழும்பிலை என்னைச்சந் தித்த பிறகு இப்பதான் முதன்முறையாய் யாழ்ப்பாணம் போயி ருக்கிருள். கட்டாயம் கடிதம் எழுதுங்கோ, பதில் போடிறன் என்று சொன்னுள். ஆனல் இன்னும் ஒரு பதிலையும் காணவில்லை. இது என்ன காதல் காதல் கடிதம் பரிமாரு த காதலும் ஒரு காதலே? ஆளுல் இந்த விஷயத்திலை மீனு ஒத்துழைக்கிருளில்லையே. (மாதா படத்தைப் பார்த்து) தேவ மாதாவே. மீனு என்னை மறந்து போனுளோ தெரியாது. நீதான் அவளை எனக்குக் கடிதம் எழுதச் செய்யவேணும். (மேலும் கீழும் நடக்கிருன். பின் திடீ
... 15 ...

Page 16
ரென) மீனுவின்ரை போட்டோவை எங்கே வைச்சனன்?. ஒகோ மாதா படத்துக்குப் பின்னலைதான் வைச்சனன். That is right. நேற்றைக்கு என்ரை மச்சான் வாறதைக் கண்டு அங்கைதான் ஒழிச்சு வைச்சனன். (படத்துக்குப் பின் இருந்து ஒரு கவறை எடுக் கிருன். அதைப் பிரித்துப் போட்டோவை வெளியே எடுக்கிருன், படத்தைப் பார்த்து) மீன உண்மையிலேயே ஒரு அழகிதான். என்னுடைய காதற் கிளியெல்லே?. (படத்தை முத்தமிடுகிருன்.)
(அப்பொழுது ஒரு இளைஞன் - இராமலிங்கம் - அங்கு பிரவே சிக்கிருன்).
இராமலிங்கம்: என்னடா ஒரு மாதிரி இருக்கிருய்? கையிலை என்ன
படம்? ரிப்பிக்கல் காதலன் மாதிரி எல்லே காட்சியளிக்கிருய் மீனவின்ரை படம்தானே அது? என்ன?. நீ எதிர்பார்த்து தவம் கிடந்த காதற் கடிதம் வரவில்லையோ? ஒ அதுதான் போலை தம்பி வாடிப்போய் இருக்கிருன்.
ஜோ: உனக்கெல்லாம் பகிடிதான். நீயும் காதலிச்சால் தான் உனக்குத் தெரியும் என் மனம் படும் பாடு. மீனவை ஒரு பதினைஞ்சி நாளாய்க் காணுதது எனக்கு ஒரு பதினைஞ்சு மாதம் போலக் கிடக்கு.
இரா; இருக்கும், இருக்கும் ஏன் பதினஞ்சு யுகமாய் இருக்கெண்டு சொல்லன். உதுகளுக்காகத் தான் நான் இந்தக் காதல் என்ற விஷயத்திலேயே சிக்காமல் இருக்கிறன். இன்னென்டு . காதலிச் சால். காதலன் போலப் பெருமூச்சு விடவும் தெரியவேணும் அதுவும் எனக்குத் தெரியாது. எனக்கும் காதலுக்கும் வெகு
தூரம்.
ஜோ: பகிடியை விட்டிட்டு இராமலிங்கம், உனக்கு ஒரு பெண்ணைக் காதலிக்க வேணுமெண்ட ஆசை ஒருக்காலும் தோன்ற யில்லையே. ஒரு பெட்டையைப் பிடிச்சு காதலித்துப் பாரன்.
இரா: பெட்டையைப் பிடிச்சுக் காதலிக்கிறதோ? பெட்டையை
எங்கேயடா பிடிக்கிறது.
ஜோ: ஏன் அப்படிச் சொல்லுரு ய்? மீசையும் ஆளுமா நீ நல்ல
ஸ்ரையிலான ஆம்பிளைதானே. பெட்டையஞக்கு உன்னை நல்லாப் பிடிக்கும். ஆனல் ஆம்பிளை கொஞ்சம் முன்னுக்குப் போனல் தானே பெட்டையள் வெக்கத்தை விட்டு வருங்கள்?
... 16...

இரா: ஒகோ. நீ இப்ப எனக்குக் காதல் கலை சொல்லித்தரு கிருயோ? காதலிப்பது எப்படி? - என்று புத்தகம் கூட எழுதி விடுவாய் போல் இருக்கிறது. போடு புத்தகத்தை யூனிவே சிட்டியிலே நல்லாய் விற்கும். ஆனல் ஜோசப்பென்ற பெயரிலை புத்தகத்தை வெளியிடாதே- காதல் வாணன், வாசிற்றி வாணன்,. விதிசு வாணன் என்று அப்பிடி ஏதாவது போடு.
ஜோ சீ. அந்தப் பேர்கள் ஒன்டும் சரியில்லை. வேறு பேர் ஏதாவது
போட வேணும். காமபாணன். எப்படி?
இரா: ஓ! அப்ப புத்தகம் போடத்தான் போறை போல் இருக்குது சரி சரி போடு. முன்னுரையை நான் எழுதிறன் சமர்ப்பணம் உன் காதலிமீனவுக்கு. எப்படி என் ஆலோசனை?
ஜோ: அதுசரி மச்சான். நீ ஏன் காதலிக்கமாட்டன் என்கிருய்?
இரா. ஜோசப் காதல் என்பது வெறும் பொய்! எனக்கு அதிலை
நம்பிக்கையே கிடையாது.
ஜோ: ஓ! அது எனக்குத் தெரிந்த விஷயம் தான். உனக்குக் காதலிலை நம்பிக்கை இல்லை. ஆனல் சீதனத்தினை நல்ல நம்பிக்கை அப்படித்தானே?
இரா: நீ ஒரு கெட்டிக்காறன் தான், சரியான விசயத்திலை, எனக்குச் சீதனம் என்ட ஒன்டிலைதான்ரா நம்பிக்கை. அது போகட்டும், உனக்குத் தெரியுமே. பல காதலர்களுக்குச் காதலிலை நம் பிக்கை, ஆனல் கலியாணத்திலை நம்பிக்கையில்லை.
ஜோ அதேனப்படி? எனக்கு நீ சொல்லிறது விளங்கையில்லையே?
இரா: "காதல் என்பது கலியாணம் வரை,” அது அவர்களின் முடிவு. கலியாணம் முடிஞ்சால் காதலும் முடிஞ்சுபோமோ என்டது அவையின்ரை அச்சம், இப்படிப்பட்ட காதலர்கள் காதலிப்பார்கள், காந்தர்வம் கூடச் செய்வார்கள், ஆனல் கலியாணம் என்றதும் ஊரை, வீட்டை விட்டே ஓடியிடுவார்கள்,
ஜோ அப்படியென்டால். கலியாணம் என்டது காதலுக்கு
வைக்கிற முற்றுப் புள்ளி எண்டு சொல்லுகிருய்.?
இரா: இதிலை கூடச் ச்ந்தேகமா? கொஞ்சம் யோசித்துப்பார். உன்னை
யும் மீனவையும் இன்று காதலர்கள் என்ற மனேரம்பியமான அழகிய காவிய நயம் செறிந்த சொற்களால் அழைக்கும் இதே
•r, 17 munum

Page 17
உலகம் நாளைக்கு நீங்கள் கலியாணம் செய்து கொண்டதும் வெறுமனே கணவன் மனைவி புருசன்-பெண்டாட்டி என்ட சப் பென்ற வார்த்தைகளாலை தானே அழைக்கப் போகிறது.
ஜோ! ம்..ம். அது என்னவோ உண்மைதான். அதை நினைச்சால்
கொஞ்சம் மனவருத்தமாய்த் தான் இருக்குது; ஆனல் அதுக் காக என்ன செய்கிறது?
இரா: என்ன செய்கிறதோ?. கலியாணத்தோடு காதல் தீர்ந்து விடுவதுதான் காதலர் என்ற வார்த்தை விடப்படுவதற்குக் காரணம். இதிலை இருந்து தப்புறதற்கு ஒரே ஒரு வழி காதலிச் சாலும் கலியாணம் செய்யக்கூடாது. அவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரையிலை ஒரே ஒரு உண்மைக்காதலனைத்தான் நான் என்ரை வாழ்க்கையிலை கண்டிருக்கிறன்.
ஜோ யாரது?
இரா பேரைச் சொன்னலும் ஊரைச்சொல்லக்கூடாது. அவனை நான் உண்மைக் காதலென்டு சொல்லுறதுக்குக் காரணம், அவன் தன்ரை காதலுக்குக் கலியாணம் என்ட முற்றுப்புள்ளியை வைக்கக் கனவிலைகூடக் கருதியது கிடையாது என்பதுதான். இவன் என்னுேடை வாசிற்றியிலை படிச்சவன், படிப்பு முடிஞ்சு வாசிற்றியை விட்டுட்டுப் போகையிக்கை இவன் தன்ரை காத லிக்கு எழுதின கடிதத்திலை, ‘கண்ணே! கவலைப்படாதே. கல் லூரியில் தோன்றிய நமது காதல் கல்லூரியோடையே செத்துச் சாம்பலாகி மடியட்டும், எண்டு எழுதியிருந்தான். இவன்தான்ரா உண்மைக்காதலன் கலியாணத்தின் மூலம் காதலை உருக்குலைக்க விரும்பாத காதலன்.
ஜோ: சரிதான், இந்தக் காதலன் இப்ப என்ன செய்து கொண்டு
இருக்கிருன்?
இரா: அவன் சீ.சி.எஸ். பாசுபண்ணிப் பெரிய பதவியிலை இருக்கிருன். கல்யாணமும் செய்து, இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பணுகியும் கூட இன்னும் அவன் என்ரை மனசிலை உண்மைக் காதலனுய்த் தான் காட்சியளிக்கிறன். இரண்டு மாதங்களுக்கு முந்தி நான் அவனைச் சந்திச்சன். அப்ப "மச்சான் நான் வாசிற்றயிலை ஒரு பெண்ணைக் காதலிச்சது உனக்குத் தெரியும் தானே" என்டான். 'ஓம்' என்டன், சோகம் நிறைஞ்ச குரலிலை உடனை அவன் என்ன சொன்னன் தெரியுமா? "இண்டைக்கும் நான் அவளை எண்ணிப் பெருமூச்சு விடுகிறன் மச்சான்’ என்டான். அவன் சொன்ன வார்த்
... 18 ...

தைகள் என்ரை காதிலை இன்னும் ரீங்காரம் இடுகிறது. இதுதான் அப்பா உண்மையான காதல்.
ஜோ. போடா போ, இதெப்படி உண்மைக் காதலாகும்?
இரா: எப்பிடியோ? அவன் காதலிச்ச பெண்ணைக் கட்டியிருந்தால், ஒருவேளை அவர்கள் விவாகரத்துக்கூடச் செய்திருக்கலாம். அப்ப, காதல் என்ட மோகனக் கனவு, உருக்குலைஞ்சு தீர்ந்து போயிருக் கும். இனிமேல் அவையின்ரை காதலுக்கு அந்த விபத்துக் கிடை யாதே. ஆனபடியால் தான் அதை உண்மையான தெய்வீகக் காதல் என்று வாழ்த்துகிறன்.
ஜோ: அப்படுயென்டால் லைலா மஜ்னு, ரோ மியோ - யூலியட் போன்ற இலட்சியக் காதலர்களைப் பற்றி நீ என்னடா நினைக் Gugulu?
இரா: அவர்கள் உண்மையான காதலர்கள் தான். சந்தேகமேயில்லை. அதனல் தான் கலியாணம் செய்யாமலே அவர்கள் இந்த உலகை விட்டுப் போய்விட்டார்கள். லைலாவை மஜ்னு திருமணம் செய் திருந்தால் அதன் பிறகு என்னென்ன நடந்திருக்குமோ, ஆருக்குத் தெரியும்? காதி கோட்டுக்குப் போய் மகசர் குடுத்து, விவாகரத்து செய்து கொண்டிருக்கவும் கூடும். ரோமியோ யூலியட்டைக் கலியாணம் செய்திருந்தால், அவளது நச்சரிப்பைத் தாங்காமல், ஒருவேளை அவளுடைய கழுத்தைத் திருகிக் கொன்றிருக்கும் நிலை கூட அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். இந்தக் காரணங்களினல் தான் இக்கதைகளைப் படைத்த ஆசிரியர்கள், அவர்களைக் கணவன் மனைவியாக உலாவவிடவில்லை. தெரியுதா விஷயம்?
ஜோ இராமலிங்கம் இது சாதுரியமாய்த்தான் பேசுகிருய். ஆளுல் உண்மையைச் சொல்லு, உனக்கு ஒருக்காலும் காதலுணர்ச்சி ஏற்பட்டதில்லையா?
இரா: ஏனில்லை. ஆனல் சீதனத்திலை கண்ணுள்ள என்போன்றவர் களுக்கு நல்ல பென்ஸ் காரிலை வருகிற கலியாணம் ஆகாத பெண் களைக் கண்டால் அடக்கமுடியாத காதலேற்படத்தான் செய் கிறது. ஆனல் பஸ்ஸிலே வ ர ற பெண்களைப் பார்த்தால் என்னவோ காதல் ஏற்படவே மாட்டேன் என்கிறதே.
ஜோ: அப்படியென்டால் அது உண்மையான காதலில்லை. இரா: மெய்தான். அதுதான் சொன்னேனே உண்மையான காத
லுக்கு கலியானம் என்ட முற்றுப்புள்ளி கிடையாதென்று. என்
. 19.

Page 18
னுடைய க்ாதல் உன்னுடைய காதலைப் போல அதாவது கலி யாணத்தை விரும்பும் பொய்யான காதல். என்னுேடை படிச்ச மாணிக்கவேலு, இப்பிடித்தான் ஒரு பென்ஸ் காரிலை வந்த பெண்ணைக்கண்டு காதலிச்சான். கலியானமும் முடிஞ்கிட்டுது இரண்டு இலட்சம் ரூபா சீதனமும் கிடைச்சிருக்குது. ஆனல் இதிலையும் கவனமாய் இருக்கவேணும் கார் பெரிய பென்ஸ் காரா யும், கடிலாக்காயும் இருக்கும். ஆனல் உள்ளே ஒட்டை. கையிலை துட்டிருக்காது. ஆனபடியால் நல்ல கவனமாய்க் காதலிக்க வேண்டும்.
ஜோ சிச்சீ! நீ சொல்லுறதும் ஒரு காதலோ? நான் மீனவை இப்பிடி
யான காரணங்களுக்காகக் காதலிக்கவில்லை.
இரா: ஜோசப் ஆம்பிளையள் மட்டுந்தான் காரிலை வருகிற பெண் களைத் தேடுகிருர்கள் என்டு எண்ணிவிடாதே பெண்கள் கூட அப்படித்தான். சொந்தக் கார் வைத்திருக்கிற இளைஞனைப் பார்த் ததும் இந்தக் காலத்துப் பெண்களுக்கு உடனே காதலூற்றெடுத்து விடுகிறது. அதனுலை, காதலிப்பதற்காக வெண்டே காரைக் கட்டுக் காசுக்கு வாங்கி, காதலுக்கு கலியாணம் கலியாணம் என்ற முற்றுப்புள்ளி வைச்ச உடனை காரையே விக்கிற காதலர்களும் இருக்கினம்..ம். காதலிப்பதற்குத் தானே கார்.
ஜோ: இராமலிங்கம் என்ருலும் உன்னைப் போல ஆக்கள் சீதனத்துக் காகக் கலியாணம் செய்யிறதை நான் மனதார வெறுக்கிறன்.
இரா: ஏன்?
ஜோ: என்ன கேள்வி?. நீ பெண்ணை மணக்கிருயா? பணத்தை
மணக்கிருயா? அதைச் சொல்லு.
இரா: அதுக்கு முந்தி நான் கேட்கிற கேள்விக்கு நீ பதில் சொல்லு. பெண் என்னை மணக்கிருளா? என் உத்தியோகத்தை மணக் கிருளா? அந்தஸ்திலே உத்தியோகம் இல்லாவிடில் என்னை நல்ல மாப்பிள்ளை என்று யாராவது நினைப்பார்களோ? என்ரை உத்தி யோகத்திற்காக என்னைக் கலியாணம் செய்யவாற பெண்னிட் டைய், நான் பொருளாதார நிபந்தனைகளை விதிப்பதில் என்னடா தப்பு? பெண்ணைப் பெத்தவை விரும்புற இந்த உத்தியோகத்தை நான் பெறுகிறதற்கு என்னைப் பெத்தவர்கள் எவ்வளவு பணம் செலவு செய்திருக்கிருர்கள் என்பதை யோசித்துப் பார்.நான் இந்த டாக்டர் பட்டத்தைப் பெறுவதற்கிடையில் என்ரை தகப்பன
20. 0 p.

ரின்ரை பணத்திலை மொத்தம் 10,000 ரூபா கரைஞ்சு போயிருக்குது. இதாலை ஏற்பட்ட பொருளாதாரப் பள்ளத்தை நிரப்பச் சீதனம் என்ட குப்பை தேவை. நான் சொல்லுவது நியாயமா இல்லையா எண்டு யோசித்துப் பார். சும்மா புத்தகங் களிலே எழுதிவைத்திருக்கிறதை நம்பாதே!
ஜோ: அப்பிடி என்டால் ஏழைப் பெண்களின்ரை நிலை என்ன
ஆவது?
இரா: அவை ஏழை மாப்பிளைகளைக் கட்டவேண்டியதுதான். ஏழை மாப்பிளைகள் சீதனமும் கேட்காயினை ஆணுல், உன்ரை ஏழைப் பெண்களும் அவையின்ரை தாய் தேப்பன்மாரும், தங்கடை சக்திக்கு எட்டாதவையைத்தானே மாப்பிளையாய் எடுக்க விரும்புகினம்?. இதாலை இன்டைக்கு ஏழை மாப்பிளை யமுக்குப் பெம்பிளையளே கிடைக்குதில்லை. இது அநியாயம் இல்லையே?
ஜோ அதுவும் மெய்தான், ஆனல் இதைத் தீர்க்க வழியென்ன?
இரா: வழியா? சொல்லுறன் கேள், என்னையும் உன்னையும் போன்ற
வர்கள் ஏழைப் பெண்களை எமது கண்களால் ஏறெடுத்துப் பார்ப்பதே கூடாது. எங்கள் டிமாண்டை அதிகரித்துக்கொண்டே போகவேண்டும். அப்பொழுது தான் நாங்கள் கோரும் சீதனத் தைக் கொடுக்க முடியாத பெற்றேர்களாவது தங்கள் பெண்களை ஏழை மாப்பிளையஞக்குக் கலியாணம் செய்து கொடுக்க முன்வரு Gaunt sf ssir.
ஜோ அப்ப நீ சீதனம் கேட்கிறது இந்த நோக்கத்தோடை தானே?
இரா: சந்தேகம் என்ன. பொதுநலத்துக்காய்த்தான் நான் இரண்டு லட்சத்துக்குக் குறையாத சீதனம் வாங்குறத்துக்கு முயற்சி செய்யிறன் அவ்வளவு காசு கொடுக்க முடியாதவை ஏழை மாப்பிளை மாரைத் தேடிப்போவினை,
(தபால்காரன் மணிஅடிக்கிருன்)
ஜோ: தபால்காரன் மணியடிக்கிருன் இன்னடக்கெண்டாலும் மீணு காகிதம் எழுதியிருப்பாளோ? என்னவோ (போடிங் மாஸ்டர் பிரவேசம்)
கந்தையா: தம்பி தபால் (தபாலைக் கொடுக்கிருன்) தபாலில் முத்திரை ஒட்டயில்லை தபால்காரனிட்டை இருபதுசதம் காசு கொடுத்து வாங்கினனன்.
21

Page 19
ஜோ (தபாலைப் பார்த்து) மீனவின்ரை காகிதம் தான் இராம லிங்கம் சில்லறை இருந்தால் ஒரு ருவன்ரிசென்ஸ். கந்தையா அண்ணனிட்டைக் கொடு.
இரா. நல்ல கதை. உனக்குக் காகிதம் நான் காசு குடுக்குறது! (சொல்லிக் கொண்டே காசைக் கொடுக்கிருன். போடிங் மாஸ்டரி போகிருர்)
(ஜோசப் பரபரப்புடன் தபாலைக்கிழித்து வாசிக்கிருள்)
நான் இரண்டுலட்சம் ரூபா சீதனம் எதிர்பார்க்கிறன், நீ எண் டால் தியாகி காதலி எழுதுகிற காகிதத்துக்கே டபிள்ச் சாச் குடுத்து எடுக்க வேண்டியிருக்குது ஜோசப். நீ உண்மையிலை போடிங் மாஸ்டரிடமிருந்து ஒரு காதல் கடிதத்தை அதனல் உனக்கேற்படுகிற சுதியைப் பார்த்தால் விலை அவ்வளவு அதிகம் இல்லைத்தான்.
ஜோ சுதியோ, போடா மடையா, பகிடி பன்ருய்? மீனு எழுதி யிருக்கிறதை வாசிக்க என்ரை நெஞ்சு பிளந்துவிடும் போலைக் கிடக்குது.
இரா: என்ன அவ்வளவு விசேஷம்?
ஜோ: வாசிக்கிறன் கேள். என் உள்ளக் கோயிலில் குடிகொண்ட
காதற் தெய்வமே.
இரா. அரோகரா.
ஜோ: பகிடியை விட்டிட்டுக் கேளடா.
இரா. சரி வாசி.
ஜோ: (வாசிக்கிருன்) 'என்ன செய்யலாம்? நாம் நினைத்தபடி உலகில் ஒன்றும் நடப்பதில்லையே. என் தந்தையாருக்கு எமது காதல் விஷயம் தெரிஞ்சுவிட்டது. அவர் பாம்புபோல் சீறுகிருர். நான் உங்களைச் சந்திப்பதை நிறுத்துவதற்காகத் தானே மன்னுர்க் கச்சேரிக்கு வேலை மாறிச் செங்லத் தீர்மானித்துவிட் டார். என் அருமைக் காதலா இனி நான் உங்களைக்காண அதிக வாய்ப்பில்லை. கடிதம் எழுதும் வாய்ப்பும் கிடையாது. இருப்பினும் என் இதய சுத்தியாக நான் ஒன்று கூறுவேன்: எனது வாழ்நாளில் உங்களை அன்றி வேருெருவரையும் நான் ஒருபோதும் மணக்கமாட்டேன். அதைவிட மரணம் எனக்கு மகிழ்ச்சியைத் தரும். மதவெறி பிடித்த என் தந்தையார்
, 22 .

நாங்கள் அந்நிய மதத்தினர் என்பதால் தான் அதிக சீற்றம் கொண்டுள்ளார். ஆனல் எது எப்படியாயினும் நான் உங்களுக் காக காத்திருப்பேன். நீங்களும் காத்திருங்கள். கடிதம் எழுத வேண்டாம். அவசியம் நேர்கையில் நான் உங்களுடன் கடிதத் தொடர்பு கொள்வேன். இப்படிக்கு உங்கள் காதலி மீனு.
ஜோ: இராமலிங்கம், நான் ஒரு காலும் மீனுவை விடமாட்டன் எந்த வில்லனும் எங்கடை காதலை முறியடிக்க முடியாது. என்னு டைய காதல் என்றும் சாகாத காதல்.
இரா. ஆனல், உன்ரை காதலியின்ரை தேப்பனுக்கும் எனக்கும்
ஒரு விதத்திலை கருத்துடன்பாடு இருக்குது.
ஜோ :- அந்தக் கொடியவனுக்கும் உனக்கும் கருத்துடன்பாடா?
எந்த விதத்திலை?
3)Tir: நீயோ கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவன், அவளோ சுத்த சைவம். நீங்கள் கலிபாணம் செய்கிறதாலை பல சிக்கல்கள்
ஏற்படும் அப்பா.
ஜோ: எந்தச் சிக்கல்களையும் எதிர்கொள்ள நாங்கள் துணிஞ்சிட்டம்
மச்சான்.
இரா. ஆனல் இண்டைக்கு அண்டும் இரு உள்ளங்களை அண்டாது
செய்வது எது, மதமல்லோ?
ஜோ: ஓம், அதிலென்ன சந்தேகம்?
இரா. ஆனல் நீ மதம் மாறினல்?. மதம் மாறினல்.?
ஜோ: மதத்திலேயே நம்பிக்கையில்லாத நீ மதம்மாறச் சொல்லுறது
ஆச்சரியமாய் இருக்குது.
இரா: இதிலை என்ன ஆச்சரியம்? மதத்தில் நம்பிக்கையில்லாதபடி யால் தான் நான் இந்த ஆலோசனையைத் துணிஞ்சு சொல்லுறன். என்னைப் பொறுத்த வரையிலை மதம் மக்களின் அபினி. சுத்த கம் பக், ஒரே புரட்டு, பொய். ஆகவே, ஒரு பொய்யிலிருந்து இன் னெரு பொய்க்கு மாறுவதில் என்ன நட்டம்? ஆனல் அப்படி மாறு வதில் ஒரு இலாபம் இருக்கிறது. அது தான் உன்ரை மீனு! உன்ரை காதல் நிறைவேற இதை நீ செய்தால் என்ன? எந்த மத மாவது மெய்யாய்பிருந்து, அதிலையிருந்து பொய்யான மதத்துக்கு மாறினல் அதிலை நட்டமிருக்கு, அதேமாதிரிப் பொய்யான மதத் திலை இருந்து மெய்யான மதத்துக்குத் தாவினல் இலாபம் இருக்கு.
. . 23 .....

Page 20
ஆனல், எல்லா மதமுமே பொய்யென்டு கருதுகிற என்தரவளிக்கு இந்தப் பிரச்சினையே கிடையாது. உந்த நிலையிலை நான் இருந் தால் கட்டாயம் மதம் மாறி மீனுவைக் கட்டிக்கொள்ளுவேன்.
ஜோ எனக்கென்னவோ அது சரியாய்ப் படவில்லை இராமலிங்கம், அது கிடக்கட்டும் மீனுவை இனி நான் காணமுடியாது. அவ ளின் ரை தகப்பன் மன்னுருக்கு மாறிப் போகிருர். மீனவும் அங்கை போயிடுவாள். இனி நான் அவளை எப்போ காணமுடியுமோ?
இரா, என்ன மன்னருக்கா? உனக்கொன்டு சொல்ல மறந்திட்டன், என்ரை அப்பொயின்மென்ரைப் பற்றி நேற்றுத்தான் காகிதம் வந்தது. என்னை மன்னர் ஆசுபத்திரியிலை ஹவுஸ் ஒபீசராக நியமித்திருக்கிருர்கள்,
ஜோ: என்ன நீயும் மன்னருக்குப்போறியே? சரிதான் காதலி என்னை விட்டு மன்னருக்குப் போகிருள், நண்பனும் மன்னருக்குப் போகி ருன். நான் இங்கை மிச்சம் கஷ்டப்படுவன் மச்சான்.
இரா: கவலைப்படாதை ஜோசப், மன்னுரிலை மீளுவின்ரை தகப்பனை நான் எப்படியும் பழக்கம் பிடித்து உன்ரை காரியத்தை கட்டா யம் நிறைவேற்றி வைக்கிறன்.
ஜோ அது அவ்வளவு லேசான விஷயமா?
இரா: இலேசோ, இலேசில்லையோ எடுத்த உடனை இதுக்கெல்லாம் இப்படிக் கவலைப்படலாமா? இலேசான விசயத்தை இலேசாகச் செய்யலாம். கடினமான விசயத்தைக் கஷ்டப்பட்டுச் செய்ய யேணும், அவ்வளவுதான் வித்தியாசம். நீ கவலைப்படாதை. நிச் சயம் சிவப்பிரகாசம் பிள்ளையை நான் உனக்கு மாமனுராக்கி வைப்பன்டு சரி எனக்கு நேரமாகுது. வரட்டே? நாளைக்கு நான் மன்னருக்குப் போறன், ஸ்டேசனுக்கு வருவாய்தானே.
ஜோ: என்னடா கேள்வி கேட்கிருய்? கட்டாயம் வருவன்.
இரா. அப்ப சரி நான் வாரன். (இராமலிங்கம் போகிருன்).
ஜோ (அங்கும் இங்கும் நடந்து கொண்டு) இராமலிங்கம் என்னை மதம்மாறச் சொல்லுகிறன். ஆனல் அது சரியான பாதையா? கத்தோலிக்களுகப் பிறந்த நான், மதம் மாறினல் அதைப் பற்றிக் கர்த்தர் என்ன நினைப்பார்?. ஆணுல் எப்பிடியும் என்ரை காதல் நிறைவேறவேண்டும்./ காதல் தெய்வீகமானது. அதற் காக எதையும் செய்யலாம். ஏன், மதம் மாறினுல் என்ன?
... శీ4 . . .

ஆனல் இராமலிங்கம் சொன்னது போல மதம் ஒகு பொய் என் பதை நான் ஏற்கவே மாட்டேன்./ காதலுக்காக மஜ்னு உயிர் துறந்தான், ரோமியோ உயிர் துறந்தான்,/ காதலுக்காக உயி ரையே விடுகிருர்கள், கதாநாயகர்கள். நான் மதத்தைவிட்டால் என்ன? "மீளுவின் காதல்" என்ட இந்தக் கதையிலை நான்தானே கதாநாயகன். கதாநாயகன் தன்ரை கடமையைச் செய்ய வேண்டாமா? தியாகம் செய்யிறதுதானே என்போன்ற காதலர் களுக்கு அழகு./ எட்டாவது எட்வேட் மன்னன் காதலுக்காக மணிமுடியைத் துறந்தான். ஏன் உள்ளூரிலேயே துட்டகைமுனு வின் மகளுன சாலியகுமாரன், அசோகமாலா என்ப. பஞ்சமப் பெண்ணுக்காக மணிமுடியைத் துறக்கயில்லையா?. ஆளுல் சைவ மதத்தைப் பற்றி எனக்கொண்டும் தெரியாதே. அதுக்கென்ன? தெரிஞ்சு கொள்கிறது. அதிலை சிறப்பிருந்தால் அந்த மதத் திலேயே சேர்ந்துவிடுகிறது. ஆனல் கேவலம் ஒரு பெண்ணுக்காக மதம் மாறக்கூடாது. சைவ மதத்தின்ரை சிறப்பை அறிந்து அதிலை புகவேணும். அதுதான் சரியான வழி. (மாதா படத்தைப் பார்த்து) தேவமாதாவே! எனக்கொன்றும் தெரியவில்லை, என்ரை மனம் ஒரு நிலையிலை இல்லாமல் அவதிப்படுகுது. இதிலிருந்த தப்ப நீதான் எனக்கு வழிகாட்டவேணும்.
(மேலும் கீழும் நடக்கிருன். பின்பு ஒரு ஆசனத்தில் அமருகிருன்.)
ஒகு குரல், அன்பே சிவம். அன்பே சிவம்.
ஜோ: அது என்ன சத்தம்?
மீண்டும் குரல். அன்பே சிவம். அன்பே சிவம்
(ஒரு காவி உடுத்த சாமியார் உள்ளே நுழைகிருர்)
சாமியார். (மாதா படத்தைக் கண்டதும் ஜோசப்பைப் பார்த்து)
ஓ! நீங்கள் கிறிஸ்தவரா? தெரியாமல் வந்துவிட்டன். போய் வருகிறேன்.
ஜோ: வேண்டாம், வேண்டாம். வாருங்கோ. இருங்கோ. சாமி (பதட்டத்துடன்) இல்லை இல்லை நான் வாறன்.
ஜோ: இல்லை பறுவாயில்லை வாருங்கோ, இருங்கோ இருங்கோ. சாமி: .முருகா. அன்பே சிவம் அன்பே சிவம் (உட்காருகிருர்) ஜோ சாமி, நீங்கள் இந்தப் பக்கம் வந்தது.
9 a

Page 21
s
சாமி. ஒன்டுமில்லை சும்மா கதிரமலையானிட்டைப் போறவழியிலை
தண்ணிர்ப்பந்தல் தருமத்துக்கு ஏதாவது வசூலிக்க வந்தன்.
ஜோ: நீங்கள் இங்கை வந்தது எனக்கு மிச்சம் சந்தோஷம். காக,
எடுத்துக் கொண்டு வாரன், (உள்ளே போகுருன்)
சாமி (எழுந்து சென்று தேவமாதாவின் படத்தைப் பார்த்த வண்ணம்) சம்போ மகாதேவா. பொடியன் வேதக்காறப் பொடியன் போல இருக்குது நல்ல பத்திமான் போலையும் தெரியிது. ஏன்? எனக்குக் கூடப் பக்திமானுய் இருக்க விருப்பம் தான். என்ன செய்கிறது? இந்த மாதிரிக் கள்ள வேடம் போட்டு பிழைக்கவைச்சிட்டான் கதிர்காமக் கந்தன்பிெழைக்கமுடிகிறதே அதுக்காகவாவது அவனைப் பாராட்டத்தான் வேணும். பிழைப்பும் இல்லாட்டி எப்படித்தான் என்ரை பிள்ளைகுட்டிகளையும் பெண் டாட்டியையும் நான் காப்பாத்திறது? முருகா. முருகா. சம் போ மகாதேவா. அன்பே சிவம்.
ஜோ (ஒரு ஐஞ்சு ரூபாவை அவரிடம் நீட்டி) இந்தாருங்கோ சாமி.
சாமி சம்போ மகாதேவா (என்று சொல்லிக்கொண்டே வாங்கு கிருர்) முருகன் உன்னை ஆசீர்வதிப்பான் உன்மனத்திலுள்ள கவலைகள் எல்லாவற்றையும் போக்கிவைப்பான்.
ஜோ: உண்மையாகவா?
சாமி. அதிலையும் சந்தேகமா? (திருநீற்றை எடுத்து அவன் நெற்றியிலை
பூசிவிடுகிருர்)
ஜோ சாமி. எனக்கு உங்கடை சைவமதத்தைப் பற்றி அறிய
ஆவலாய் இருக்குது. அதைப்பற்றி எனக்குச் சொல்லித்தருவிய Garr?
(
சாமி (உட்காருகிருர்) சைவம் வேறு கிறிஸ்தவம் வேறில்லைத் தம்பி. எல்லாம் ஒன்றே எல்லாம் ஒன்றே சமரச சன்மார்க்கம் தான் சைவமார்க்கம் தம்பி!
"யாதொரு தெய்வம் கண்டீர்
அத்தெய்வம் ஆகியாங்கே
மாதொரு பாகனுர் தான்
வருவர் மற்றத் தெய்வங்கள் எல்லாம்
வேதனைப்படும் இறக்கும் இறந்துபின்
மீளும்.

நீர் மேரி மாதாவை வணங்கினலும் யேசுக்கிறிஸ்துவை வணங்
கினலும், அந்தோனியாரை வணங்கினலும் ஆரை வணங்கினலும் சிவபெருமான் தான் அங்கை அருள் செய்ய வருவார். ஆனபடி யால் நீ சைவமதத்தைப் பற்றி அறிய வேண்டியதில்லை. எல் லாம் ஒன்றுதான்.
ஜோ: இல்லைச் சாமி, நான் சைவனுக விரும்பிறன். நீங்கள் தான்
உதவி செய்ய வேணும்.
சாமி. புறமதத்திலளுந்திய அப்பரை ஆட்கொண்ட அப்பெருமான்
இப்ப தம்பியையும் ஆட்கொள்ள நினைச்சிட்டார் போலை.
ஜோ: அப்பரை? எங்கடை அப்பரைப் பற்றி சொல்லுகிறீர்கள்
அவர் சாகும் வரை கத்தோலிக்கராகவே இருந்தார்.
சா: அப்பரென்ருல் உம்முடைய அப்பரும் அல்ல, என்னுடைய
அப்பரும் அல்ல வாகீசப்பெருமான் - திருநாவுக்கரசர்.
ஜோ அவரும் என்னைப் போல் கத்தோலிக்கராயிருந்து பின் இந்து
மதத்துக்கு மாறினவரோ?
சா: இல்லை வாசீகப்பெருமான் கத்தோலிக்கராய் இருக்கவில்லை. இந்துவாகப் பிறந்த அவர் சமணமதத்தில் சேர்ந்தார். ஆணுல் எம்பிரான் அதற்கு விடவில்லை. கருணைக்கடலான அவர் அப்பரைத் தடுத்தாட் கொண்டார்.
ஜோ: எப்படி?
சா: சூலை என்னும் கொடிய நோயை அனுப்பி அவர் வயிற்றைத் துடக்கி முடக்கியிட்டார். என்னே அவர் அன்பு, என்னே அவர் அன்பு சூலையால் பீடிக்கப்பட்ட வாசீகர் உடனே இந்துமதத்தின் பெருமையை நன்குணர்ந்து பழையபடி இந்துவாக மாறிவிட் டார். அன்பே சிவம்
Gegnr: SyLiulgum?
சா: ஆம் தம்பி, அப்பருக்கு அருள் செய்த மாதிரி உனக்கும் அருள் செய்ய நினைச்சிட்டார் போல அந்தப் பெருமான் சரி, சரி தம்பி நாளைக்குக் கொழும்பு சச்சிதானந்த சபையில் சித் தாந்த சரபம் சின்னையாபிள்ளை அவர்கள் சமரச சன்மார்க்கமும், புத்தசமயிகளை கழுவிலேற்றியமையும் என்ட பொருள் பற்றிப் பேசுகிருர், போய்க் கேளும் தம்பி, அங்கை பல புத்தகங்களையும்
ܚܚܘ܂ 27

Page 22
நீர் விலைக்கு வாங்கிப்படிக்கலாம். வாசிகசாலையும் இருக்குது. போய்ப் பாரும். சம்போ மகாதேவா. நான் வரட்டே தம்பி?. அன்பே சிவம். தம்பி ஒரு விஷயம்.
ஜோ என்ன சாமி அடுத்த வீட்டுக்காரருடைய பெயர் என்ன தம்பி Ggт: சோமசுந்தரம்
சாமி நாய் இருக்குதோ..? ஜோ வீட்டுக்காரர் தான் இருக்கினை சாமி. அப்ப போயிட்டு வரட்டே?
கொ: போயிட்டு வாங்கோ சாமி. நீங்கள் சொன்ன மாதிரி நாளைக்குச் சித்தாந்த சபைக்குப் போகிறேன், அப்ப வாருங்கோ சாமி. (சாமியார் போனபின் மேரியின் படத்தைப் பார்க் கிருன். குருசு அடையாளம் இட்டுக் கொள்ளுகிருன்) மேரி மாதா! உன் கருணையே கருணை. நான் சைவமதத்தைப் பற்றி நினைச்சதுதான் தாமதம், நீ கருணைகொண்டு ஒரு சைவச்சாமி யையே என்ரை வாசலுக்கு அனுப்பி வைச்சாய். நான் சைவன கிறதே உன்னுடைய விருப்பம் போலை. உன் விருப்பத்தை எதிர்க்க நான் ஆர்? நான் சைவமதத்தைப் படித்துச் சைவன வேன். சைவனுவதோடு மீனுவையும் கைப்பிடிப்பேன்.
(திரை)
æftig 3
(இரண்டாம் காட்சியில் வந்த அதே சீன், ஆளுல் மேரியம்மன் படத்துக்குப் பதிலாக மாரியம்மன் படம். ஒரு விவேகானந்தர் படமும் காட்சியளிக்கிறது. திரை விலகும் போது மேடை வெறிச் சென்றிருக்கிறது. போர்டிங்மாஸ்டர் கந்தையா பிரவேசம்)
கந்தையா ஐயா. ஐயா. (பதிலில்லை, மீண்டும்) ஐயா. என்ன ஒரு தரையும் காணவில்லை. (சுவரைப் பார்க்கிருன்) என்ன இது. ஜோசப் ஐயா இஞ்சை இல்லையோ? இதென்ன புதுப் படங்கள்? போன முறை நான் வரயிக்கை மேரியம்மன் படமெல் லோ இருந்தது. இதே தடா அதிசயம். இப்ப மாரியம்மன் படமிருக்கு. ஒருவேளை ஜோசப் ஐயா அறையை விட்டிட்டுப்
28

போயிட்டாரோ? அப்படி ஆள் சொல்லாமற் கொள்ளாமல் ஓடிப்போக போர்டிங்கிற்குக் கடன்கிடன் ஆள் வைக்கயில்லையே? அதிலை ஆள் சரியான நேர்மையான ஆளெல்லே?. இன்னும் தளவாடங்கள் ரேடியோ எல்லாம் அப்படியே கிடக்குது. எல்லாம் சிதம்பர சக்கரமாய்த்தான் இருக்குது. எதுக்கும் இன்னெருகாற் கூப்பிட்டுப் பார்ப்போம். ஐயா ஐயா, ஜோசப் ஐயா !
ஜோ, (கையில் தேவாரப்புத்தகத்துடன், வாய் “தோடுடைய செவியன்’ தேவாரத்தைப் புறுபுறுக்க வெறும் மேலுடன் திரு நீற்றுப் பொட்டு வைத்த நெற்றியுடன் பிரவேசம்) என்ன கந்தையா சத்தம் வைக்கிருய்? காயிதமே? கொண்டா.
கந்: ஓ, ஒரு காயிதம் இருக்குது, இந்தாருங்கோ. (கடிதத்தைக் கொடுக்கிருன்) அது சரி இதென்னெல்லாம் புதுவிதமாயிருக்குது? சிவரிலை மாதா படம் கிடந்த இடத்திலை மாரியம்மன் படம், அதோடை உங்கடை நெத்தியிலே திருநீறு பொட்டு. நல்லாய்த் தான் இருக்குது - பார்க்க எண்டாலும் எனக்கு ஒண்டுமாய் விளங்கயில்லை. ஏன் நீங்கள் வேதத்தை விட்டிட்டியளே?
ஜோ (கடிதத்தைப் பிரித்து வாசித்துவிட்டுச் சிரித்த முகத்தோடு) என்ன கந்தையா கேட்டணி? ஒ! வேதத்தை விட்டிட்டனே எண்டு கேட்டணியோ? வந்து, எனக்குக் கொஞ்சக்காலமாய்ச் சைவத்திலை கொஞ்சம் ஆசையாய்க் கிடந்திது. இனித்தெரி யாதே சச்சிதானந்த சபைக்குப் போய் அங்கை கிடந்த புத்த கங்களையும் வாசிக்கத் துவங்கினன்; அதோடை, அங்கை நடக்கிற பிரசங்கங்களையும் கேட்டன். அதுக்குப் பிறகு தான், கந்தையாண்ணை சைவத்தை அழிக்க ஒருமதமும் இந்த உலகத்திலை இல்லையெண்டு தெரியவந்திது. அதுதான் தெரி யாதே. படிப்படியாய்ச் சைவத்துக்கு வந்திட்டன்.
கந் ஒ. அப்பிடியே சங்கதி? அதுதான பாத்தன். எண்டாலும் நீங்கள் சொல்லிறது உண்மைதான் எண்டு. பாட்டுக்கூடக் கிடக்குது. மற்ற தெல்லாம் வெறும் கத்தரிக்காய்!
ஜோ கந்தையா, அப்ப உனக்கும் இந்த விஷயங்கள் கொஞ்சம்
ஆழமாய்த் தெரியுமெண்டு சொல்லு.
கந்: சிச்சீ, அவ்வளவு தெரியாது. ஏதோ கொஞ்சம் தெரியும். அதிருக்கட்டும் ஐயா நீங்கள் சைவ சமயத்துக்கு வந்தது எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமே!
.., 29 ء

Page 23
ஜோ சரி கந்தையா, உதுகளைப் பிறகு பேசுவம், இப்ப எனக்குக் கொஞ்சம் வேலைகள் கணக்குக் கிடக்குது. அப்ப நீ போட்டு வாறியே?
கந்: சரி ஐயா நான் அப்ப போயிட்டு வாறன். (போகிருன்)
ஜோ: (அவன் தூரத்தில் போக உரத்த குரலில்) கந்தையா! கந்
தையா? இஞ்சை வா, ஒரு முக்கியமான விஷயம்.
கந் என்னையா, போகையிக்கை பிறத்தாலை கூப்பிடுறியள், இன்னும்
அந்த வேதக்காறப் பழக்கம் போகயில்லை.
ஜோ என்ன கந்தையா பகிடியே பண்ணிருய்...? அதிருக்கட்டும் என்ரை பேரையுமெல்லோ நான் மாத்திப்போட்டன். இனி மேல், பாலச்சந்திரன் எண்டு ஏதாலும் காயிதம் வந்தால் அதுகளையும் கொண்டுவந்துதா. மறந்து போகாதை, என்ன தெரியுதா? பாலச்சந்திரன். இது சொல்லத்தான் கூப்பிட்டனன்.
கந்: சரி ஐயா, ஆனல் ஒன்று இனிமேல் எதைச் சொல்லுறத் துக்கும் ஒருத்தரையும் புறத்தாலை கூப்பிட வேண்டாம் அது போகட்டும் ஐயா நீங்கள் நல்ல போரைத்தான் தெரிஞ்சு வைச் சிருக்கிறியள். பாலச்சந்திரன். நான் நினைவு வைச்சுக் கொள்ளுறன். சரி அப்ப நான் வாறன் (போகிருன்)
ஜோ (கடிதத்தை மீண்டும் கையில் எடுத்தபடியே) இராமலிங்கத்
தின்ரை காயிதம். நல்ல செய்தி தான் எழுதியிருக்கிருன்.
அன்புள்ள நண்பன் அறிவது:-
உன்னுடைய மீனவை நான் கண்டு கொண்டேன். சிவப்பி
இராசம்பிள்ளை மீனவுக்கு மாப்பிளை தேடுகிருர். நான் அவரிடம் நல்ல மாப்பிள்ளை என்கைவசம் இருப்பதாகக் கூறியிருக்கிறேன். யாரிந்த மாப்பிளை என்று அதிசயப்பட வேண்டாம். நீ தான்ரா, வேறு யார்? நீ ஒரு சைவன். உன் பெயர் பாலச்சந்திரன். ஞாபகம் வைத்துக்கொள், நாளை அதாவது கடிதம் கிடைக்கும் அதே தினம் நானும் சிவப்பிரகாசரும் உன்னைக் காணக் கொழும்புக்கு வருகிருேம். மற்றவை நேரில்,
இப்படிக்கு,
இராமலிங்கம். (சிந்தனையுடன்) இராமலிங்கம் எப்பிடியும் ஒரு கெட்டிக்காறன் தான். அது மட்டுமில்லை, அவனுக்கு ஒரு தனி அன்பு (சிந்தனை யுடன் வீற்றிருக்கிருன்)
... 30 ...

இரா. ஜோசப் (இராமலிங்கம் பிரவேசம்) காயிதம் கிடைச்சுதே?
இரா: ஜோசப்போ? அப்பிடிக் கூப்பிடாதை. என்ரை பேர் பாலச்
சந்திரன்.
இாா; அடிசக்கை. அது சரி. நீ உண்மையிலை ஒரு சைவஞய் மாறி விட்டாய் போலை கிடக்குது. இதென்ன மாரியம்மா படம்?. ம்..ம். நெற்றியிலையும் திருநீத்துப் பூச்சு?
ஜோ போடா, உப்பிடிப் பேசா தை. நான் இன் டைக்கு மெய்யாவே
உண்மையை உணர்ந்த சைவன். சாப்பாடு கூடச் சைவம்.
இரா: வெள்ளிக்கிழமைகளிலே தானே? ஜோ: இல்லை கிழமை முழுக்க - வருசம் முழுக்க, எந்தநாளும்!
இரா. முட்டை? அதடிக்கலாம்
ஜோ அது கூடக்கிடையாது மச்சான்
இரா: ஓ! அப்படியா. அப்ப நீ என்னைவிடப் பெரிய சைவம்
எண்டு சொல்லு.
ஜோ நீ சைவமோ? அசல் நாத்திகம்.
இரா: ஓகோ, நீ அவ்வளவு தூரத்துக்கு வந்திட்டியே? நீ, சைவத் துக்கு மாற வேணுமெண்டு சொன்ன என்னையே இப்ப இவ்வளவு ஏளனமாய்ப் பேசுமுய்?. சரி. சரி.
ஜோ: அதெல்லாம் கிடக்கட்டும் இராமலிங்கம். மீனுவையும் சிவப்
பிரகாசரையும் நீ எப்பிடிச் சந்திச்சாய்?
இரா: தேடின பூண்டு காலிலை வந்து சிக்கினதுபோலை அவை என்னட்டை வந்து சிக்கிச்சினம். மீனவின்ரை தாய் சுகமில் லாமல் ஆஸ்பத்திரிக்கு வந்தா. அதிலையிருந்து அவையின் ரை குடும்பமே எனக்குப் பழக்க்கமாய்ப் போச்சுது. சிவப்பிரகாசர் என்னட்டை அடிக்கடி வருவார் நானும் அவற்றை வீட்டை அடிக்கடி போவன். உன்ரை மீனு, அன்னநடை நடந்து எனக்குக் கோப்பி கொண்டுவந்து தரும் . ஆஞலும், நான் உன்ளேப் பாராட்டத்தான்டா வேணும்.
ஜோ: என்னத்துக்கு?

Page 24
இரா; உன்ரை மீளு நல்ல அழகி, ஆள் நல்ல கெட்டிக்காரி போலை யும் தெரியுது. உன்ரை ரசிகத்தன்மையை நான் மெச்சுகிறேன்.
ஜோ போது மெடா உன்ரை பாராட்டு.
இரா. அதிருக்கட்டும், இன்னும் கொஞ்ச நேரத்திலை, சிவப்பிர
காசர் இங்கை வந்திடுவார். அவரிட்டை என்ன பேசுறது . எப்பிடிப் பேசுறது எண்டு நல்லாய் யோசிச்சுத் தயாராயிரு. ஆனல் ஒண்டு., ஆள் உன்னைப் பாத்தாலே போதும் உடனேயே மயங்கிவிடுவார். திருநீத்துப் பூச்சென்ன சந்தனப்பூச்சென்ன. (கதவைத் தட்டும் சத்தம்) சிவப்பிரகாசத்தாரடா (உரக்க) மிஸ்ரர் சிவப்பிரகாசம் வாருங்கோ, வாருங்கோ: (சிவப்பிர காசர் பிரவேசம்)
ஜோ இப்பத்தான் உங்களைப்பற்றி டொக்ரர் சொல்லிக் கொண் டிருந்தார், வாருங்கோ, வாருங்கோ (சிவப்பிரகாசம் உட்காரு கிருர்)
சிவ: டொக்ரர் இவர்தான பாலச்சந்திரன்? இரா: ஓம், இவர்தான் நான் சொன்ன ஆள்.
சிவ: தம்பி பாலச்சந்திரன் உம்மைப்போலை இல்லை, நல்ல பத்தி
மானுய்த் தெரியுது.
ஜோ: அப்பிடியெல்லாம் இல்லை, ஏதோ எங்களைப்படைச்ச கடவுளை நாங்கள் கும் பிடத்தானே வேணும். அது எங்கள் கடமைதானே
சிவ ஓமோ மோம். ஆனல் அந்த நினைவு இந்தக் காலத்திலை
எத்தினை பேருக்கு இருக்குது?
V ஜோ (எழுந்து) அப்ப நீங்கள் கதைச்சுக்கொண்டிருங்கோ, நான்
கொஞ்சம் தேத்தண்ணி வாங்கிக்கொண்டு வாறன், சிவ: சீச்சீ. அதெல்லாம் வேண்டாம்.
ஜோ: இல்லை, கட்டாயம் குடிக்கத்தான் வேணும். நீங்கள் கதைத்துக்
கொண்டிருங்கோ, நான் இப்ப வந்திடுறன். (போகிருன்)
இாா: மிஸ்ரர் சிவப்பிரகாசம், பொடியன் எப்பிடி? சிவ: நல்ல குணம். நல்ல அழகு. உங்களுக்குச் சொன்னல் என்ன, என்ரை சைவசித்தாந்த வேலைகளைத் தொடர்ந்து நடத்
... 32 ..

திறத்துக்கு ஏற்ற ஆள் போலை தெரியுது. டொக்ரர் நீங்கள் ஆளிட்டை நாங்கள் வந்த விஷயத்தைச் சொன்னியளோ?
இரா: அதென்னெண்டு நான் அதை எடுத்தாப்போலை சொல்லுறது? நீங்கள் பார்த்துச் சரியெண்டு சொன்ன பிறகுதான் பேச வேணுமெண்டிருந்தனன்.
சிவ: நீங்கள் பாத்துச் சொன்னபிறகு எனக்கு எல்லாம் ஒண்டு தான் நான் ஒரு தேத்தண்ணியைக் குடிச்சுப்போட்டு போறன். நீங்கள் எல்லாத்தையும் பேசி ஒரு முற்றெடுத்துக்கொண்டு வாருங்கோ. சீதனம் எவ்வளவு வேணுமோ அவ்வளவும் தாறன். எனக்கு இருக்கிறதோ ஒரே ஒரு பெட்டை, வீடு, வயல், காக, நகை எல்லாம் தரலாமெண்டு சொல்லுங்கோ. (இரகசியமாக) காதிலும் ஏதோ முணுமுணுக்கிருர்). (ஜோசப் இரண்டு பித்தளைப் பேணியில் தேநீர் கொண்டு வந் இருவரிடமும் கொடுக்கிறன்) சிவ: (குடித்துவிட்டு) சரி தம்பி, எனக்கு இஞ்சை கொஞ்சம் வேலை கிடக்குது, செட்டித்தெருவிலை ஒராளைக் காணவேணும், நான் போட்டு வாறன், டொக்டர், நீங்கள் இருந்து கதைச்சுப் போட்டு வாருங்கோ, நான் போறன். (போகிருர்)
இரா : ஜோசப் ஆளுக்கு உன்னை நல்லாய்ப் பிடிச்சிக் கொண்டுது,
இனிக் கல்யாணம் நடந்த மாதிரித்தான்.
ஜோ அது சரி, என்ன சொன்னர்.
இரா: சீதனம் எவ்வளவு வேணுமோ அவ்வளவும் குடுக்கலாம்.
விஷயத்தை உடனை முடி எண்டு சொல்லி இருக்கிருர்.
ஜோ, சீதனமாவது மண்ணுங்கட்டியாவது எனக்கு வேண்டியது
மீளு. அவள் கிடைச்சால்போதும்.
இரா: அசல் கதாநாயகன் மாதிரிப் பேசுகிருய்? அது போகட்டும்
கலியாணம் அடுத்த கிழமை.
ஜிோ. என்ன?
இரா: ஓ! அடுத்த கிழமை.
ஜோ, உண்மையாய்த்தானுே?
இரா: ஓ உண்மையாகவே தான்.

Page 25
ஜோ (இராமலிங்கத்தின் கையைப் பிடித்து) இராமலிங்கம்! உன் னைப் போல ஒரு சினேகிதன் கிடைச்சது என்ரை அதிர்ஷ்டம் தான் நீ எனக்குச் செய்யும் உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறன்,
இரா நீ சந்தோஷமாயிருந்தால் அது ஒண்டே எனக்குப் போதும். நான் போய்வரட்டா? நான் போன உடனை உனக்கு விவரமாய்க் காயிதம் எழுதுறன்.
ஜோ போய்வா. சேரியோ. (இராமலிங்கம் போகிருன்.)
ஜோ (மாரியம்மன் படத்தின் முன் சென்று) தாயே கருணையே கருணை. உன்னருள் கிடைக்காட்டில் இந்த ஏழையின் கனவுகள் நிறைவேறியிருக்குமா? (திருநீறை எடுத்துப் பூசுகிருன். வாய்க் குள் போடுகிருன். மீனுவின் படத்தை எடுத்து) மீனு! நீ ஒரே ஆச்சரியப்படப் போகிருய். பாலச்சந்திரன் எண்டு ஆரோ ஒருத் தன் உனக்குத் தாலி கட்டப்போருனெண்டு நீ எண்ணியிருப்பாய், ஆளுல் அந்தப் பாலச்தந்திரன்தான் உன்ரை ஜோசப் எண்டு கண்டவுடனே நீ எவ்வளவு சந்தோஷப்படுவாய்? அதுகும், ஜோசப் பேருக்கு மதம் மாறவில்லை, உண்மையாகவே சைவனுகிவிட்டான் எண்டு தெரிஞ்ச உடனை எவ்வளவு சந்தோஷப்படுவாய்? மீன! இனி என்னையும் உன்னையும் ஆராலையும் பிரிக்க முடியாது. எங் களைப் போலை அதிர்ஸ்டசாலிகள் இந்த உலகத்திலை வேறை யாருமே கிடையாது.
திரை
ærtog 4
(ஒரு படுக்கை அறை. மேடைக்கு நடுவாக அதன் யன்னல் அமைந் திருக்கிறது. ஒரு கட்டில், அதன் பக்கத்தில் ஒரு மேசை, அதில் ஒரு லாம்பு. சுவரில் ஒரு கலண்டர் தொங்குகிறது. கிருஷ்ணன் குழலூதும் படம். மேசையில் புதிய பட்டுச் சேலை ஒன்றும் வேறு
சில துணிகளும் இருக்கின்றன. மீன அறையில் ஆத்திரத்துடன் நடந்து கொண்டிருக்கிருள். பட்டுச் சேலையைத் தூக்கிப் பார்க் கிருள். அப்புறம் 'சீ' என்று விட்டெறிகிருள். பின்னணியில் பிறைச்சந்திரன்)
மீன: கலியாணமாம்! கலியாணம் காதலில்லாமலும் ஒரு கவி யாணம் முடியாது! இதுக்கு நான் ஒருக்காலும் ஒத்துக்கொள்ள மாட்டன். ம். அம்மாவின்ரை கெட்டித்தனத்தைப் பார்
y 譬鹦

நாளைக்குக் கலியாணம் இன்டைக்குத் தான் மகளிட்டை "உனக்கு நாளைக்கு கலியாணம்" எண்டு சொல்லுரு. அது சரி. சரி. இவைக் கெல்லாம் நான் செய்யிறன் வேலை. காதலிலை வெற்றிகாணவேணு மெண்டால், இந்தக் கர்நாடகங்களுக்குப் பயந்து சரிவராது. (யோசிக்கிருள்) என்ன செய்கிறது? தற்கொலை செய்யலாமோ?. (காலடிச் சத்தம் கேட்கிறது). அம்மா வாரு போலை. (கட்டிலில் போய்ப் பொத்தென்று விழுகிருள்.)
செல்: தங்கச்சி! மீன. மீன! உன்னைத்தான். நித் தி  ைர யே
கொள்ளுருய்?
(மீனு மெளனமாய்க் கிடக்கிருள்.)
(செல்லாச்சி மகளை எழுப்புகிருள். மீனு எழும்புகிருள்)
மீன: போங்கோ எல்லாருமாய்ச் சேர்ந்து எனக்கேன் கரைச்சல்
குடுக்கிறியள்? (என்று சீறுகிருள்)
செல்: என்ன மீன! நாளைக்கு கலியாணம், என்ன கோலத்திலை இருக்
கிருய் நீ.
மீன; எனக்கு இந்தக் கலியாணம் வேண்டாம்.
செல்: மாப்பிள்ளை பீ. எஸ்.சிக்காறன். இப்ப சம்பளமும் அலவன்சு
மாய் 450 கிடைக்குதாம்.
மீனு: அதுக்கெனக்கென்ன? அவனுக்கு 450 கிடைச்சாலும் எனக்கு ஒண்டுதான், 45 ரூபா கிடைச்சாலும் எனக்கொண்டுதான்.
செல்: அதோடை கொப்பர் சீதனக் காசிலை மகளுக்கும் மாப்பிள்ளைக்
கும் ஒரு புதுக்காருமெல்லே வேண்டித்தரப் போருர்,
மீனு: கார் ஒண்டு தான் இப்ப குறை எனக்கு கார் வேண்டாம்.
ஒரு ஹேர்ஸ் வேண்டித்தரச் சொல்லுங்கள்.
செல்; அதென்ன புதுவிதமான காரே? சொன்ஞல் தன்ரை செல்லப் பெண்ணுக்கு அதையும்வேண்டித் தருவார் உன்ரை செல்ல
9 TiLInr.
மீன: ஹேர்ஸ் என்டால் சும்மா காரில்லை, செத்தாற் பிறகு
சுடலைக்கு ஏந்திக்கொண்டு போற பிரேத வண்டில். சவ வண்டில்! பாடை,
争歌唱 3 5 ...مس

Page 26
ச்ெல்: நல்ல நாளிலே எண்டி பிரேத ரண்டிலைப் பற்றிப் பேசுருய்?
வாயிலை ஒரு மொத்து மொத்தினனெண்டால்.
மீனு: பின்னை என்ன? எனக்கு இப்ப நடக்கிறது என்ன சடங்
கெண்டு நினைச்சியள்?
செல்: கலியாணச் சடங்கு
மீனு: இல்லைப் பிரேதச் சடங்கு. (சிரிக்கிருள்) செல்: சீ. வாயைப் பொத்து. பேய் பிடிச்சவள் மாதிரிச் சிரிக்கிருய்? உனக்குப் புத்தியிருக்கே? மாப்பிளை மாம்பழம் போலை அழகா யிருக்கிருன்.
மீஞ: (கேலியாக)ம் . அப்பிடியெண்டால் அவரைச் சினிமாவிலை
போய் நடிக்கச் சொல்லு; அல்லது அப்பாவும் அம்மாவு:மாய் வெட்டிச் சாப்பிடுங்கோ,
செல்: படிச்சவன்.
மீன: ஓ. அப்பிடியெண்டால் அவனை ஒரு பள்ளிக்கூடம் நடத்தச்
சொல்லுங்கோ.
செல் என்னடி உது? அவன் சைவசித்தாந்தத்திலை ஒரு புலியாம்.
மீன: ம். அப்பிடியெண்டால் அவருக்கேன் கலியாணம்? பாசத்தை அறுத்துப் போட்டு மும்மலத்துக்கும் முழுக்குப் போட்டிட்டு எங்கையாவது துறவியாய்ப் போகச் சொல்லுங்கோ
செல்; உன்னுேடை என்ன?ல கதைக்க முடியாது. இந்த வீண் குழப்படியை விட்டுப் போட்டு வெள்ளனப்படுத்து நாளைக்குக் காலம்பற வெள்ளன அஞ்சு மணிக்கு எழும்பி விடவேணும் தெரிஞ்சுதே.
மீன: சரி நீங்கள் போய் முதல் படுங்கோ:
செல்: (மகளைத் தொட்டு உச்சி மோந்து) என்ரை செல்ல மகளெல்லே படுத்து நித்திரையைக் கொள். பால் கொஞ்சம் அனுப்புறன் குடிச்சிட்டுப்படு. (செல்லாச்சி போகிருள்)
மீன: (எழுந்து உட்கார்ந்த வண்ணம்) விடிஞ்சால் கலியாணம்.
ஆரோ ஒரு பாலச்சந்திரன் வருவான். பாவம் அப்பாவி! ஏமாந்து போவான். அதுக்கு, ஆர் என்ன செய்கிறது? என்ரை
مه ه 6 .

ஜோசப் அவர் எங்கை இருக்கிருர், என்ன செய்து கொண் டிருக்கிருர்?. ஆருக்குக் தெரியும்? மதமாம் மதம் கேடு கெட்ட மதம்! அதுதானை எங்களைப் பிரிச்சு வைச்சிருக்குது. மதங்கள் எல்லாமே ஒழியட்டும் (மேசை யில் உட்காந்து ஒரு கடிதமெழுதுகிருள்).
(வேலைக்காரன் வேலாயுதம் ஒரு தம்ளரில் பால் கொண்டு வந்து மேசையில் வைக்கிருன்)
வேலா: மீனுத் தங்கச்சி!
மீன: என்னது?
வேலா: பால் கொண்டந்தனன் தங்கச்சி.
மீனு: சரி போ
மீனு: (பால் தம்ளரைக் கையில் எடுத்து) இந்த வீட்டிலை கடைதி யாய் நான் குடிக்கிற பால். இது விஷமாயிருக்கக் கூடாதோ? (பாலைக் குடிக்கிருள். கடிதத்தை மடித்து ஒரு கவருக்குள் வைக் கிருள். என் நல்வாழ்வை விரும்பிய தாய் தந்தையருக்கு என்று கவரில் எழுதி அதையே உரக்க வாசிக்கிருள். அதை மேசையில் நன்கு தெரியும் ஓர் இடத்தில் வைக்கிருள். அதன்பின் கட்டிலில் சென்று படுக்கிருள். விளக்கை குறைக்கிருள், அந்த இருள் பின்னணியில்
*நாடகத்தில் காவியத்தில் காதல் என்ருல் நாட்டினர் தாம் வியப்பெய்தி நன்ருமென்பார் வீடகத்தே கிணற்ருேரத்தே.
என்று பாரதியார் பாட்டு மெல்லொலியாக இரு தடவைகள் கேட்கின்றன. அது ஓய்ந்ததும், ஒரிருவினடிகள் மெளனம் நிலவு கிறது. நாய் தூரத்தில் ஊளையிடுகிறது, மெளனம், கோட் டானின் குரல், வேளை தெரியாமல் ஒரு மன்னர்க் கழுதையும் கனைக்கிறது. இருளோடு இருளாய், மீன கட்டிலில் நித்திரை வராது புரள்வது தெரிகிறது. பின் திடீரென எழுகிருள். மேடை நடுவில் ஒரு இருள் உருவாக அவள் வந்து நிற்கிருள்).
மீன: (மெல்லிய ஓசையில்) ஆம், இதை விட எனக்கு வேறு வழி யில்லை. பெற்ற தாய் தேப்பனுக்கு மகள் காட்டுற நன்றி இதுதான், முன் வைக்கும் கால்கள் பின் வாங்குகின்றன. பின்
ماهه... 7 ق . . .

Page 27
திடசங்கல்பம் கொண்டவள் போல் போய்விடுகிருள். மீண்டும் மெளனம். கழுதையின் ஒலி. பிறைச்சந்திரன் மங்குகிறது. தாய் பிரவேசம். விளக்கைத் தூண்டுகிருள். வெளிச்சத்தில் மகளைக் காணுமல் தவிப்புடன்).
செல்; மீனு எங்கை? எழும்பிவிட்டாளோ? இவ்வளவு வெள்ளன வோ?. வேலாயுதம்! வேலாயுதம்!! (சத்தம் வைக்கிருள்) (கண்களைக் கசக்கியபடி வேலாயுதம் பிரவேசம்). -
வேலா என்னம்மா? நித்திரை கொள்ள விடமாட்டியள் போலை கிடக்கு5 மூட்டைக்கடி ஒருபக்கம், உங்கடைகரைச்சல் ஒருபக்கம்.
செல்: போய் ஐயாவைக் கூப்பிடு. மீனவைக் காணவில்லை.
வேலா! என்ன அதிசயம்? இப்ப ஒரு கொஞ்சநேரத்துக்குமுந்தித் தான நான் வந்து தங்கச்சிக்குப் பால் குடுத்தனன். வெளிக்குப் போய்விட்டாளோ?
செல்; அப்படியெண்டால் லாம்பை எடுத்துக்கொண்டெல்லோ
போயிருப்பாள்?
வேலா: ஓமம்மா அது சரிதான். இஞ்சை விடுங்கோ ஐயாவைக்
கூப்பிடுறன் (போகிருன்) W (சிவப்பிரகாசர் பிரவேசம். வெறு மேனியுடன் காட்சி தருகிருர்) என்ன செல்லாச்சி? என்ன நடந்தது?
செல்: மீனவைக் சாணயில்லை. சிவ: என்ன மீனவைக் காணயில்லையோ? செல்: ஒமெண்ணுறன் சிவ: (சுற்றும் முற்றும் பார்த்து கடிதத்தை எடுத்து)
“என் நல் வாழ்வை விரும்பும் தாய், தந்தையருக்கும் வணக் கம். நீங்கள் பார்த்த மாப்பிள்ளை அந்த மன்மதனேயானலும் எனக்கு அவன் ஏற்ற மாப்பிள்ளையாக மாட்டான். எனக்ற்ேற மாப்பிள்ளை ஒருவன் தான் இந்த உலகில் இருக்கிறன். அவன் பெயர் ஜோசப். ஆனல் நீங்கள் அவனை ஏற்க மாட்டீர்கள்: ஆகவே நான் போகிறேன். தேடிப் பயன் கிடையாது’
இப்படிக்கு,
மீன:
... 38 ...

(வாசித்து விட்டுப் பிரமை பிடித்து நிற்கிருர். பின்னர் திடீரென்று) பார்த்தியோ உன்ரை மோ ள் செய்திருக்கிற வேலையை?
செல்: இப்ப பேச்சைவிட்டிட்டு அவளைப் போய்த் தேடுங்கோவன்.
சிவ: அவள் உவ்வளவு பிடிவாதக்காரி எண்டு தெரிஞ்சிருந்தால் இந்தக் கலியாணத்தை ஏற்பாடு செய்திருக்க மாட்டன். அவள் இஷ்டப்படியே அந்த வேதக்காறனைக் கட்டவிட்டிருப்பன். ஒரே மகள், அவளையும் பறிகுடுத்து இப்பிடி நான் தவிக்க என்ன கன்மவினை செய்தனே? தெரியவில்லை. முருகா! நீதான் என்ரை பிள்ளையை என்னட்டை கொண்டுவந்து சேர்க்க வேணும்.
செல்: "கண்ணை இழந்த பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய நினைச்ச மாதிரி" என்டது போலை இருக்கு உங்கடை கதை. என்ரை மோளுக்கு என்ன நடந்திதோ? என்னயானுளோ? ஐயோ மகளே! ஆசை மகளே.
(பெரிய குழப்பம் செய்கிருள் செல்லாச்சி)
சிவ: அழாதை செல்லாச்சி. அந்த கடவுளுக்கும் எங்களுக்கு மீன மாதிரி ஒரு செல்லக்குஞ்சு இருந்தது பொறுக்கயில்லைப் போலே கிடக்கு. அவளில்லாமல் இந்த உலகத்திலை நாங்கள் இருந்தென்ன, இறந்தென்ன? செல்லாச்சி! மனத்தைத் தேற் றிக் கொள் ஞ. நான் பொலிஸ் ஸ்டேசனுக்குப் போட்டு வாறன். (எல்லோரும் வெளியேறல்)
வேலாயுதம் மட்டும் மேடையில் காணப்படுகிருன். அவன் பின்னல் யன்னலூடாகச் சூரியோதயமாகிக் கொண்டிருக்கிறது.
வேலா! இதன்னப்பா நேரமெண்டால் விடியப்போகுது. கலியான கெடுபிடி இருக்க வேண்டிய நேரத்திலை மீனத் தங்கச்சியைக் காணயில்லை. எங்கடை ஐயா எவ்வளவு பக்திமான். போன மாதம் தானை திருக்கேதீச்சரத்திலை கூட்டுப் பிரார்த்தனை கூட ஆரம்பிச்சார். அந்தப் பிரார்த்தனைக்கு எதுவும் கேதீஸ்வர நாதனுக்குக் கேட்டதாய்த்தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு காது கேக்கிறது கொஞ்சம் மட்டமோ என்னவோ இருக்கும்.இருக்கும். அதுதானே பார்த்தனன் இப்ப கோயில் வழியை லவுட்ஸ்பீக்கர் போட்டு எல்லே கத்துருங்க தேவாரங்கள் திருவாசகங்களை ஆன லும் இந்த விஷயம் பாவம் எங்கடை ஐயாவுக்குத் துப்பரவுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் அவரும் லவுட் ஸ்பீக்கர் போட்டுக் கத்தியிருப்பர், கடவுளுக்கும் கேட்டிருக்கும் இந்த மாதிரிச் சங்
... 39 , , ,

Page 28
கடங்களும் வந்திராது. ஆனல் ஆர் கண்டது, கடவுள் இருக் கிருரோ இல்லையோ? உண்மைதான் , சைவ வினவிடையிலே கடவுள் இருக்கிருர் என்று தான் சொல்லியிருக்குது. ஆனல் இப்போ வாற புதிய வினவிடைகளிலே வேறை விதமாகவல்லவோ சொல்லி இருக்குது! நானும் முந்தி கடவுள் இருக்கிருரென்று தான் நம்பினனுன். அதுதானே சிவ தீட்சை வேண்டுமென்று அலைந்தனுன்? ஆனல் இப்ப எல்லாம் சந்தேகமாக இருக்குது. புராண காலத்திலே சிவபெருமான் அடிக்கடி பூலோகம் முழுவ தும் சுத்தித்திரிந்ததாய்ச் சொல்லி இருக்கு! அப்படித் திரியேயுக்கே தானே சிறுத்தொண்டற்றை மகன் சீாாளனை கறி வைச்சுச் சாப் பிட்டவர். இப்ப அந்த மாதிரிச் சேட்டை - இல்லை. தில்லைத் திருவிளையாடல்கள் ஒன்றையும் காணுேம். ஏனே அவ்ர் முந்தி மாதிரி வாறFல்லை. ஒருவேளை ஆள் செத்துப்போனுரோ?. இருந் தாலும் இருக்கும். ஆருக்குத் தெரியும்?.
(பகல் வெளிச்சம் நிறைகிறது. வேலாயுதம் விளக்கை அணைக் கிருன். கதவு தட்டும் சத்தம். தொடர்ந்து பூட் சத்தம்)
. இதாரடா? ஒருவேளை கடவுள் தானே?
(பொலிஸ் இன்ஸ்பெக்டர் பிரவேசம்.)
பொலிஸ் இன்ஸ்பெக்டர்: நீர் ஆர்?
வேலா! நீங்கள் ஆர்?
பொ. இ. தெரிய இல்லையோ?
வேலா: இல்லைத் தெரியுது, எண்டாலும்.
பொ. இ. என்ன? எண்டாலும் .? நீ யார்.?
வேலா! நான். ஓ, நான் வேலாயுதம்,
பொ. இ. வேலாயுதம் எண்டால்?
வேலா (தலையைச் சொறிந்து கொண்டு) எனக்கு உங்கடை கேள்வி
விளங்கவில்லை. வேலாயுதம் என்ற வசனத்துக்குக் கருத்துக் கேட் கிறியளோ? அதுவந்து பரமசிவன் ரை மகன் கந்தசாமியார் தன் ர்ை கையிலை வைத்திருக்கிற ஒரு கூர்மையான ஆயுதம்,
பொ. இ. நீ என்ன இங்கை கதாப்பிரசங்கம் செய்யப்போகிறியோ?
நிறுத்து உன்ரை அதிகப்பிரசங்கத்தை. நீ இங்கை என்ன வேலை செய்கிருய்? அதைத்தான் கேட்டேன். தெரியுதே?
. 40 ..

வேலா; அதுவோ? நான் இந்த வீட்டு போய். பொ. இ. அப்படியா? சரி உங்கடை ஐயாவைக் கூப்பிடு.
வேலா: அவர் வெளியிலை பொலிசுடேசனுக்கு போனவர் இன்னும்
வரயில்லையே.
பொ. இ. அப்ப அம்மாவைக் கூப்பிடு.
வேலா: அம்மாவையோ? (தலையை ஆட்டி) சரி. (வேலாயுதம் உள்ளே
ஒடுகிருன்)
(செல்லாச்சி பிரவேசம்)
செல் என்ன விஷயம்?
பொ. இ ! உங்கடை ம க ளை ப் பற்றி ஐயா கொம்பிளெயின்ட் கொடுத்த உடனை, நான் லகூன் பக்கமாய்ப் போய்ப் பார்த்தன். அங்கை இந்தக் ஹன் பார்க்கும் சையிலேஞ்சியும் கிடந்திது. இது உங்கடை மகளுடையது தானே?
செல்: (வேண்டிப் பார்த்துவிட்டு) ஒம். இது மீனுவுடையதுதான்.
(சிவப்பிரகாசர் பிரவேசம்)
பொ. இ. அப்ப, உங்கடை மகள் தற்கொலை செய்திட்டா எண்டு தான் நினைக்கிறன். ஆனல் நிச்சயமாய் அப்பிடிச் சொல்லவும் முடியாது ஏனென்ருல் இன்னும் பிணம் கிடைக்கயில்லை. பிணத் தைத் தேட உத்தரவு போட்டிருக்கிறன்.
செல்: ஐயோ மகள்ே (ஒப்பாரி வைக்கிருள்)
பொ. இ. (சிவப்பிரகா சரிடம்) ஏன் அவ அப்படிக்கத்திரு? மீன செத்துப்போனதாக நான் சொல்லவில்லையே? நாங்கள் பிணத் தைத் தேடிக்கொண்டிருக்கிறம்.
செல்: (அழுதுகொண்டே) நீங்கள் பினத்தைத் தேடவேண்டாம்.
மீனுவைத் தேடுங்கோ. (கதறுகிருள்)
சிவ: இன்ஸ்பெக்டர் நீங்கள் இதில் கொஞ்சம் முயற்சி எடுக்கவேண் டும். மீனவை எப்படியும் கண்டுபிடிக்கப்பாருங்கள். அதை நீங் கள் செய்தால் அந்த நன்றியை நான் ஒருநாளும் மறக்கமாட் டன். ஜி. ஏ.யிடம் சொல்லி உங்களுக்கு ஒரு நல்ல ரெக்கெமென் டேஷனும் வாங்கிக்கொடுப்பன்.
· · o 41 ge 9

Page 29
பொ. இ.: அதெல்லாம் நீங்கள் ஒன்றும் செய்ய வேண் டா ம். ஜீ.ஏ.யுடைய மகளைக் கட்டின மாப்பிள்ளை நான் என்பது உங் களுக்குத் தெரியாதுபோலை?
சிவ: ஓ! அப்பிடியே? அப்ப ரெக்கமென்டேஷன் தானுய்க் கிடைக்கும்.
பொ. இ. அது தானில்லை நானும் அவர் மகளும் டைவோஸ்
செய்து கொண்டோம்.
சிவ: உண்மையாகவா?
பொ. இ. ஓம் (தலையை அசைக்கிருர்)
செல்: அப்ப நீங்கள் மீனுவைத் தேடமாட்டியோ (மேலும்
அழுகிருள்)
பொ. இ. இதென்ன கேள்வி? செல்: (மெளனம்)
சிவ: இல்லை. ஜீ. ஏ.யுடைய ரெக்கமென்டேஷன் உங்களுக்குத் தேவைவில்லை என்டஉடனே நீங்கள் இதைப்பற்றிக் கவனிக்க மாட்டியள் என்று அவநினைச்சிட்டா.
பொ. இ. இந்த ரெக்கொமென்டேஷனுக்காகவும் பகாவுக்காகவும்
வேலை செய்யுற ஆளல்ல நான்.
செல்: அப்ப நீங்கள் எதுக்காக வேலை செய்யுறதென்று சொன்னல் நாங்கள் அதைக் கவனிக்கிறம். ரெக்கோமென்டேஷனும் வேண் டாம், பகாவும் வேண்டாம். அப்ப என்ன வேணுமெண்டு சொன்னல்..?
பொ. இ. (கோபமாக) என்ன மிஸ்டர் சிவப்பிரகாசம்! அம்மா வுக்கு மரியாதையாகப் பேச நீங்கள் சொல்லிக்கொடுக்க இல்லைப் போலையிருக்கு,
சிவ: இல்லை இன்ஸ்பெக்டர், வஞ்சகமில்லாத மனுசி, தெரியாமல்
பேசிப் போட்டா மன்னியுங்க.
பொ. இ. சரி நான் வாறன், (இன் ஸ்பெக்டர் வெளியேறுகிருர்)
(செல்லாச்சி அழுகிருள்)
சிவ செல்லாச்சி அழாதை . என்ன செய்யிறது? திருக்கேதீச்சரத் தான் மீனவைக் காப்பாத்துவான் எண்டுதான் நான் நினைக்கிறன்,
42 ༡ ཉ

(இராமலிங்கம் பிரவேசம். அவனுடன் பாலச்சந்திரனும் வரு கிருன் கையில் ஒரு பெரிய குட்கேஸ்).
இரா: மிஸ்டர் சிவப்பிரகாசம் இது என்ன உங்கடை வேலை? காலம்பற ரயிலிலே வந்து நீங்கள் காரனுப்பியிருப்பியள் எண்டு தேடினுல், காரையும் காணயில்லை, ஒரு மண்ணுங்கட்டியையும் காணயில்லை, இப்பிடித் தானே மாப்பிள்ளைக்குநீங்கள் மரியாதை குடுக்கிறது?. எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலை இருந்தது.
(பாலச்சந்திரன் சூட்கேஸைக் கட்டிலில் வைக்கிருன்.)
செல்: எங்களிலை பிழைதான் டொக்ரர், இஞ்சை எதிர்பாராத
களேபரம் நடந்து போயிட்டது.
சிவ: ஒம் டாக்டர் எங்கடை மீன வெல்லே காணுமல் பேர்யிட்
டாள்.
இரா என்ன மீன காணுமல் போயிட்டாளோ? எப்பிடி?
சிவ: என்ன செய்யிறது? எல்லாம் எங்கடை பிழை. இல்லாவிட் டால் கண்ணுக்குக் கண்ணுன என்ரை மகள் எங்களைவிட்டுப் போயிருக்க மாட்டாள். ஓம் டொக்ரர், மாப்பிளை இருக்கிரு ரெண்டும் பாராமல் நான் உள்ளதைச் சொல்லுறன். கேளுங் கோ. மீனு நல்ல புத்திசாலி; எண்டாலும் அவளுக்கும் யாரோ ஜோசப் எண்டொருதனுக்கும் காதல். (டாக்டரும் பாலச்சந்திரனும் ஒருவரை ஒருவர் அர்த்த புஷ்டியுடன் பார்க்கின்றனர்.)
இதை நான் முறியடிக்க முயற்சித்தேன். அந்த முயற்சியில் நான் எடுத்த கடைசி நடவடிக்கைதான் இந்தக் கலியாணம். அதனல்தான் இவ்வளவு அவசரமாய் இந்தக் கலியாணத்தை முடிச்சுவைக்க முயற்சித்தேன். ஆனல் திருக்கேதீஸ்வரத்தான் வேறுவிதமாக நினைத்துவிட்டான். மீன இரவோடிரவாய் ஒரு கடிதமெழுதி வைத்துவிட்டு ஓடிவிட்டாள்; செத்தாளோ? உயி ரோடிருக்கிருளோ எண்டுகூடத் தெரியவில்லை, டொக்டர் களேபரம். இல்லை.
O அது தான் மாப்பிளையைக் கூட்டிவரக் கூட வர
இரா: பாலச்சந்திரன் பாத்தியா, நாங்கள் செய்த தவறை? அந்தத் தவறை மட்டும் நாம் செய்திராவிட்டால் மீன இப்போ ஓடிப் Guntu.coli Lintantit?
... 43 ... .

Page 30
பாலா: ஓம் டொக்டர், உண்மை தான். எல்லாம் எங்கள் பிழை. இல்லை எனது பிழையேதான். நாங்கள் அதை மறைத்திருக்கக் கூடாது (விம்முகிருன்)
சிவ: (ஒன்றுமே விளங்காமல்) எதை?. செல்: எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்லையே?
பால: சொல்லுறன் கேளும் சிவப்பிரகாசரே! இதோ உம்முன் நிற்கும் பாலச்சந்திரனை நீங்கள் அறிவீர்கள். அவர்தான் உங்கள் அருமை மாப்பிள்ளை. உங்கள் மகளுக்கு ஆசையாய் நீங்கள் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை. நீங்கள் இண்டைக்கு விரும்புற இதே பாலச்சந்திரன் தான் ஒருவருஷத்துக்கு முந்தி நீங்கள் வெறுத்த அந்த ஜோசப் என்ற வேதக்காறன்.
சிவ: ஆ, இது உண்மைதானே? செல்: உண்மையைத் தான் சொல்லுறியளோ?
இாா: உண்மையைத் தான் பேசிறம். ஆனல் காலம் மாறிற்று. மக்களும் மாறுகிருர்கள். நேற்றைய கொள்கைகள் தவிடுபொடி யாகிப் புதிய கொள்கைகள் முளைக்கின்றன. ஜோசப் பாலச் சத்திரனனன். வெறும் வெளி வேஷமல்ல, உள்ளும், புறமும் சைவனனன். மீனவை மணக்க உறுதிபூண்டான். நான் அதுக்கு ஒத்தாசை செய்தேன். ஆனல் மீனு தன் காதலில் இவ்வளவு உறுதிபூண்டவள் எண்டதை நாங்கள் உண்மையில் அறியயில்லை. அப்பிடி அறிந்திருந்தால், இந்த விபத்தைத் தடுத்திருக்கலாம்.
சிவ: எப்பிடி?
இரா: இரகசியமாய் உங்களிரண்டு பேருக்கும் தெரியாமல், பாலச் சந்திரன் தான் ஜோசப் எண்டு மீனவுக்கு ஜோசப்பாலை முடி
யாவிட்டாலும், என்னுலை அறிவிச்சிருக்க முடியும். நான்தான் உள்வீட்டுப் பிள்ளையாச்சே, சிவ; நீங்கள் அப்விடிச் செய்திருந்தால் எவ்வளவு நல்லாயிருந் திருக்கும். நாங்கள் மீனுவின்ரை கல்யாணக் கோலத்தைக் கண்டு களித்திருப்போமே. இரா (கேலியாக) ஆஞல் அவள் ஜோசப் மீது இவ்வளவுதூரம்
உண்மையா காதல் கொண்டிருந்தா ள் என்பது பாலச்சந்திர னுக்குத் தெரியாது. இண்டைக்கு நீங்கள் ஜோசப்புக்கு உங்கடை
... 44 ...

βου:
மகளைத் தரச் சம்மதிக்கிறீர்கள். அவனுடன் திருமணக் கோலத் திலே உங்கடை மகளைப் பாக்கவும் நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். ஆனல் அவனையே உங்கள் சைவசித்தாந்தக் கண்ணுடியால் முன்னர் பார்த்தபோது உங்களுக்குக் கொதிப்பு ஏற்பட்டது. ஒரே மனிதன், ஆணுல் அவனுக்கு இரு சந்தர்ப்பங்களில் இருவித மான வரவேற்புகள். மனிதனை, கிறிஸ்தவனுகவும், இந்துவாகவும் காண்பதில் ஏற்படும் கோளாறு இது, இவ்வாறு பார்க்காமல் மனிதனை மனிதனுக நீங்கள் கண்டிருந்தால், இந்த விபத்து ஏற்பட்டிருக்குமா? மீனு காணுமல் போயிருப்பாளா? நாங்களும் இந்த மதமாற்ற நாடகத்தை ஆடவேண்டி இருந்திருக்குமா? யோசித்துப் பாருங்கள்.
டொக்டர் நீங்கள் சொல்லுறது முற்றிலும் உண்மை. நான் செய்த தவறுக்கு என்னை எப்படியும் தண்டியுங்கோ .
இரா: பாலச்சந்திரன், நீ உன் மீனவை உண்மையிலேயே அறிந்
திருக்கவில்லை அவள் ஜோசப்பை ஒழிய வேருெருவரையும் கட்டுவதில்லை என்று தீர்மானித்துவிட்டாள். பின் அதில் மாற் றத்துக்கே இடமில்லே. இதுவே உண்மையான காதல் போலும் ஆனல் அவள் இத்தகைய அசையாத காதலின் இருப்பிடம் என்பதே நீ அறியவில்லை. பாலச்சந்திரன் என்ற பெயரில் அவள் முன்னர் நீ போயிறங்கியதும் அவள் ‘ஒ இது என் ஜோசபல்லவா? என்று மகிழ்ச்சி அடைவாள் என்று நினைத்தாய். அதனல்தான் என்னிடமும் விஷயத்தை வெளியிடவேண்டா மென்று கேட்டுக் கொண்டாய். ஆனல் ஜோசப்பைக் காதலித்த அவள் கண்கள் பாலச்சந்திரன் என்ற புதுமனிதனை ஏறிட்டுப்பார்க்கக் கூட விரும்பவில்லை. அப்படி அவள் தன் காதலன் ஜோசப்பை வேருெருவனைப்பார்க்கவாவது சம்மதித்திருந்தாலல்லவா pë நினைத்தமாதிரி நடந்திருக்கும்? அதனல் தான் இவை எல்லாம் நிகழ்ந்துவிட்டன, மீன உன் மதிப்புக்கும் மேற்பட்டவள் என்ப தைக் காட்டிவிட்டாளடா!
பால: இராமலிங்கம்! நீ சொல்லிறது மெய். முற்றிலும் மெய் மீஞ
என்னை உண்மையாய் நேசித்தாள் என்பதை கண்டுகொண்டேன். இராமலிங்கம், என்னல் அவள் இல்லாமல் இருக்க முடியாது. எப்படியும் நான் அவளை அடையவேண்டும். அவள் எங்கே போனளோ என்ன கஸ்டப்படுகிருளோ? சொல்லு நண்பா, மீனு எனக்கு மீண்டும் கிடைப்பாளா?
இரா: என்னைக் கேட்டால்? நீ வணங்கும் முருகனின் கருணையும் உன்
மாமனர் வணங்கும் திருக்கேதீஸ்வரநாதனின் கருணையுமிருந்தால்
45 0 pp

Page 31
அது சாத்தியமாகக் கூடும். என் னை ப் பொறுத்தவரையில் சந்தர்ப்ப சூழல்களால் சிலவேளை உன்ரை எண்ணம் நிறைவேற வும் இடமிருக்கிறது எதுக்கும் நா ங் க ள் சும்மாயிருந்தால் (plg. u LDT ?
சிவ: அதுக்கு நாங்கள் இப்ப என்ன செய்யவேணும் டொக்டர்?
இரா: எங்களால் இயன்றவரை மறைந்த மீனுவைத் தேடிப் பார்க்க
வேணும்.
செல்: ஏதோ அந்தக் கதிர்காமத்தான் தான் என் ரை மகளைக்
கண்டு பிடிச்சுத் தரவேணும்.
(திரை)
இ  ைட வேளை
乐TLG - 5
(மட்டக்களப்பில் ஒரு வீடு. மேரி மாதாவின் சொரூபமும் குருசும் சுவரில் காட்சிதருகின்றன. தெரேசா நெஞ்சில் குருசுடன் கூடிய சங்கிலி ஊச லாட, வீட்டுச் சாமான்களைக் துடைத்து அழகுபடுக்திக் கொண் டிருக்கிருள். “அன்னையே மாமரித் தாயே" என்ற பாடலை அவளது வாய் முணுமுணுக்கிறது. அவள் கணவன் வெளியே இருந்து வரு கிருன் :)
தெரேசா: (கைக் கடிகாரத்தைப் பார்த்தவண்ணம்) என்ன? இன் டைக்கு இவ்வளவு நேரமாய் விட்டுது. எங்கை போயிருந்தியள்? (அவனை அணுகி அவள் கொண்டு வந்த புத்தகங்களையும் பத்திரி கைகளையும் வேண்டி வைக்கிருள்)
தேவசகாயம்; நான் ஓரிடமும் போகவில்லைத் தெரேசா, வழியிலை வரயிக்கை கட்டளைக் குரவரைச் சந்திச்சன். வ றகிழமை நடக்க இருக்கிற அப்போஸ்தவர் தினப் பூசையின் போது நடக்க இருக் கிற ஊர்வலத்தைப் பற்றிப் பேசினர். நீயும் நானும் கலந்து கொள்வதாகச் சொல்லிவிட்டு வந்தன்.
தெரே: கட்டாயம் கலந்து கொள்ளத்தான் வேணும் . (மேசையில் இருந்த சுடுதண்ணீர் போத்தலில் இருந்து ஒரு கிளாசில் கோப் பியை வார்த்துக் கொடுக்கிருள். அவன் குடித்துக்கொண்டே நாற்காலியில் உட்கார தெரேசா அவன் கொண்டு வந்த பத்திரி கையைப் பிரிக்கிருள். அது ஒரு 'தினகரன்’ பத்திரிகை)
, 46 ...

தெரே! (வாசித்துக் கொண்டிருந்தாள் திடீரென) இங்சை பாருங்கோ இந்தப் புதினத்தை, என்ரை சினேகிதி மீனவைப் பற்றி ஒரு பயங்கரமான செய்தி வந்திருக்கு.
தேவ யாரது மீனு? எனக்குத் தெரியவில்லையே.
தேரே. அவள் தான் சிவப்பிரகாசம்பிள்ளையின்ரை மகள் , என்னேடை படிச்சவள், சிவப்பாய் ஒல்லியாயிருப்பாள். எங்கட கல்யாணத் திற்குக் கூட வந்த வள்.
தேவ: ஒகோ! அபிளோ? இப்பொழுது நினைவு வருகுது. அதுபோக
அதென்ன பயங்கரமான புதினம்? வாசி கேட்பம்.
தெரே! 'திருமணத்துக்கு முதல் தினம் மாயமாய் மறைந்தாள்
மணமகள்'
மன்னரில் பரபரப்பான சம்பவம் ,
மன்னர் செப் 1 மன்னரில் மணப்பெண் ஒருத்தி திருமணத்துக்கு முன்தினம் மாயமாய் மறைந்தாள். இங்குள்ள கச்சேரியில் வேலை பார்க்கும் உயர்தர உத்தியோகஸ்தர் ஒருவரின் மகளான இந்த மணப் பெண்ணின் பெயர் மீனு என்று தெரிகிறது. தாய் தந்தையர் ஏற்பாடு செய்திருந்த திருமணம் மனதுக்குப் பிடிக்காததாலேயே குறித்த இளம்பெண் வீட்டைவிட்டு மாயமாக மறைந்ததாகக் கூறப்படுகிறது.
இதுவரை பொலிஸ் புலன்விசாரிப்பின் பயனுக ஒன்றும் தெளிவாகவில்லை. மணப்பெண் மீன தற்கொலை செய்து கொண் டிருக்கலாமென்று பேசிக் கொள்ளப்படுகிறது. மன்னர்க் குடாக் கடலுக்கு அருகாமையில் மீனுவின் ஹான்ட் பாக்கும் கைக் குட்டையும் கண்டெடுக்கப்பட்டதே இதற்குக் காரணம். பொலி சார் மீனுவைத் தேடும் விஷயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர்.
(நமது நிருபர்)
தெரே: அய்யோ. தேவன் தான் காப்பாற்ற வேணும் எனது உயிருக்குயிரான தோழி மீன எப்படியாவது உயிரோடை இருக்கவேணும்.
தேவ: தெரேசா, இரவுப் பிரார்த்தனையின் போது நாங்கள்
தேவனிடம் அவளுக்காக மன்ரு டுவோம்.
. 47, ...

Page 32
தெரே! நல்ல யோசனை! அஞ்ஞானிகளுக்காக நாம் தேவனிடம் மன்ருடுவது சரியில்லை என்ருலும், மீனு நல்ல குணம் படைத் தவள், எனது உண்மைச் சினேகிதி என்பதற்காக மன்ருடத்
தான் வேண்டும்.
தேவ: தெரேசா , அஞ்ஞானிகளுக்காக நாம் மன்ருடக் கூடாது என்று நீ சொல்வது பிழை. அவர்களுக்கு மெஞ்ஞானத்தைக் காட்டும்படி நாம் தேவமாதாவையும் கிறிஸ்து நாதரையும் இடைவிடாமல் வேண்டிக்கொண்டுதா னிருக்க வேணும். நாம் மட்டும் மோட்ச சாம்பிராச்சியத்தை அடைந்தால் போதுமா? எல்லோரும் எமது இரட்சகர் சாட்டிய வழியிலே போய் மோட்ச சாம்பிராஜ்யத்தை அடையவேண்டுமென்பதுதான் உண்மைக் கிறிஸ்தவனது மனதில் இருக்க வேண்டிய எண்ண மாகும்.
தெரே! நீங்கள் சொல்லுறது சரிதான். ஆணுல் உங்களுக்கிருக்கிற இந்தப் பரந்த மனுேபாவம் எனக்கேணுே வரமாட்டேன் என் கிறதே. நமது ஆண்டவனின் உண்மையான போதனைகளை உணராத அஞ்ஞானிகளிடம் எனக்கு அளவுமீறிய வெறுப்புத் தான் உண்டாகிறது.
தேவ: சீ. தெரேசா. அப்படி நாம் வெறுப்படையக்கூடாது. அவர் களிடம் நாம் இரக்கம் காட்ட வேணும். கிறிஸ்துவானவர் எங்களுக்குக் காட்டிய வழி அதுதான். அது போகட்டும், தெரேசா. இந்த மீன ஏன் திருமணத்துக்கு இசையவில்லை. வேறு யாரையும் காதலித்திருந்தாளோ அல்லது..?
தெரே: ஓ அது பெரிய கதை. மீனு கொழும்பிலை எங்கடை கொன் வென்றிலை தான் படிச்சவள். நல்ல கெட்டிக்காரி. கொன்வென்ற் காணிவலிலை ஜோசப் எண்ட கத்தோலிக்க இளைஞனைக் கண் டாள், இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலித்தார்கள். ஆனல் இது பெரிய இடைஞ்சலிலை தான் வந்து முடியுமெண்டு எனக்கு முந்தியே தெரியும். ஏனெண்டால் மீனவின் ரை தகப்பன சிவப்பிரகாசம்பிள்ளை ஒரு " டுமையான அஞ்ஞானப்பிண்டம் - கடுஞ் சைவர் எண்டு எனக்குத் தெரியும். நான் நினைச்சபடியே நடந்தும் போச்சு!
தேவ: ஆனல் தேவமாதாவின் கருணை இருந்தால் இன்டைக்குக்
கூடச் சிவப்பிரகாசர் இருளிலிருந்து ஒளிக்கு வரலாம்.
... 48 ...

தெரே! எனக்கென்னவோ அதிலை நம்பிக்கையில்லை, பிசாசைக் கும்பிட்டுப் பழகியவைக்கு ஆண்டவரைக் கும்பிட ஒருக்காலும் மனம் வராது.
தேவ; சி. அப்படிச் சொல்லா தை. எத்தினை இந்துக்கள் இன்று உண் மையான கத்தோலிக்கர்களாய் மாறியிருக்கிறர்கள்? ஏன்? எங்கடை மூதாதையரும் அஞ்ஞானத்திலை கிடந்து உழன்ற இந்துக்கள்தானே? அவர்கள் எப்படி யேசுநாதரால் ஆட்கொள் ளப்பட்டுக் தங்கடை ஆத்மாக்களுக்கு ரட்சிப்புத் தேடிச் கொண் டார்களோ, அப்படியே இவர்களுமேன் கத்தோலிக்கர்களாய் மாறக் கூடாது? அதுக்காகத்தான் நாம் இவர்களுக்காக இடை விடாது தேவனிடமும், தேவமாதாவிடமும், கிறிஸ்து நாதரிடமும் அவ்ச்சய சிஸ்டர்களிடமும் எப்போதும் மன்ருட வேண்டும்.
தெரே! சரி இப்ப எழும்புங்கோ என்ரை சினேகிதி மீனவுக்காய்
மன்ருடுவோம். ふ
தேவ: கொஞ்சம் பொறு பத்திரிகை வாசித்துப் போட்டுவாறன்
பிறகு மன்ருடலாம்.
தெரே! இதுதான் எனக்கு உங்களிலை பிடிக்கிறயில்லை. எப்ப பிரார்த்தனைக்குக் கூப்பிட்டாலும் கொஞ்சம் பொறு, கொஞ்சம் பொறு எண்டு சொல்லுறது உங்களுக்குப் பழக்கமாய்ப் போச்சு. தேவமாதா வைத் தோத்தரிப்பது எங்களுக்குக் கிடைக்கும் பெரிய பாக்கியம் எண்டதை நீங்கள் கொஞ்சம்கூட நினைக்கிற யில்லை.
தேவ: ஒகோ அம்மாவுக்குக் கோபம் வருகுது போலை,
தெரே: கோபமில்லை உண்மையைத்தானை சொன்னன் ? வாங்க
ளேன் பிரார்த்தனைக்கு (தேவசகாயம் எழுகிறர்)
தேவா கரும்பு தின் னக் கைக்கூலியே வேணும்? எங்களுடைய ஆண்டவனைத் தோத்தரிப்பதுதானை இன்பத்துள் இன்பம். (இரு வரும் தேவமாதாவின் சொரூபத்தின் முன் மண்டியிடுகின்றனர்.)
தேவ: பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் மாதாவே எமது ரட்சக ராகிய கிறிஸ்துநாதரை எங்களுக்கு வழங்கி, மோட்ச சாப்பி ராஜ்யத்துக்கு வழிகாட்டிய எங்கள் அன்புள்ள தாயே. உமது நாமம் பரிசுத்தமடைவதாக! W
... 49 . . .

Page 33
தெரே: எனது அன்புச்சிநேகிதி மீனு இன்று இன்னலில் சிக்கியிருக் கிருள். அவளை அச்சிக்கலிலிருந்து விடுவித்து, அவளுக்கு மோட்ச சாம்பிராஜ்யத்துக்கான கிறிஸ்துவின் நேரான வழியைக் காட்டி யருளும்படி விண்ணப்பித்துக்கொள்ளுகிருேம்.
இருவரும்: மேரி மாதாவே உம் அன்புக்கு நாம் உம்மை ஸ்தோத் திரிக்கிருேம். தேவசுதனை நமக்களித்த மரியாயே! எங்கள் வேண்டு
கோளை நிறைவேற்றியருளும். எங்களைப் பாவங்களிலிருந்து ரட்சியும்,
தெரே: மீளுவின் இன்னலைத் தீர்த்து இருளில் கிடக்கும் அவளுக்கு
ஒளியைக் காண்பிக்க வேண்டும் தாயே ஆ மென் கிறிஸ்து.
தேவ: ஆமென் (இருவரும் எழுகின்றனர்)
தேவ: தெரேசா, நீ அன்போ டு செய்த வேண்டு1ோள் சட்டாயம்
நிறைவேறுமெண்டு தான் நம்புறன்.
தெரே! அதிலை யென்ன சந்தேகம்? . வாருங்கள். சாப்பிடுவோம் (உள்ளே போகிருள்). (கதவில் யாரோ தட்டும் சத்தம் கேட் கிறது)
தேவ: ஆரது? உள்ளே வரலாமே!
(மீன உள்ளே பிரேவேசம். பிரயாணப் பை தோளில் ஊசலாடு கிறது.)
மீன: மிஸ்சிஸ் தெரேசா தேவசகாயம் வீடு இதுதான?
தேவ: ஆம். நீங்கள் யார்?
மீஞ: தெரேசா இருக்கிருவா?
தேவ: ஒம் (கத்துகிருன்) தெரேஸ் தெரேஸ்!
தெரே: என்ன சத்தம் போடிறியள். (என்று கொண்டே வந்தவள்).
ஆ இது மீனுவல்லவா?. வா. வா.
தேவ என்ன மீனவா?. இப்ப நாங்கள் பிரார்த்தனை செய்தது இந்த
மீனுவுக்குத்தாளு?
தெரே: ஆமாம்! இதே மீனவுக்காய்த்தான்.
. , 50 m

மீன: என்ன தெரேசா! எனக்காகப் பிரார்த்தனை செய்தீர்களா?
ஏன்.?
தொே: ஏனே? எங்களுக்கெல்லாம் தெரியும். உன்னை உனக்கு ஏற் பட்டிருக்கும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றும்படி இப்பதான் பரிசுத்தமரியாயிடம் மன்ருடினேம். பிரார்த்தனை முடிஞ்சு நான் அவருக்கு சாப்பாடு அடுக்குப்பன்னிறதற்குள்ளை நீ வந்திட்டாய்! எல்லாம் அந்த மரியாயி அருள்! கிறிஸ்துநாதரின் கருணை
தேவ: தெரேசா இது பெரிய அற்புதம்! கிறிஸ்துநாதர் தமது வாழ் நாளில் மட்டுமே அற்புதங்கள் செய்து காட்டவில்லை. என்றைக் கும் விசுவாசிகளுக்கு அற்புதம் செய்துகொண்டேயிருக்கிருர்!
மீளு. தெரேசா நீங்கள் கதைக்கிறதொன்டும் எனக்கு விளங்க
வில்லையே விசயத்தை விளக்கமாய்ச் சொல்லு தெரேசா.
தெரே இன் டைக்குப் பின்னேரம் ஆசுப்பத்திரியாலை வரயிக்கை தினகரன் பத்திரிகையைக் கொண்டுவந்தார். அதிலை நீ கலியாணத் துக்கு முதல் நாள் வீட்டைவிட்டு ஓடிய புராணம் நல்ல விரிவாய் இருந்தது.
மீன; அப்படியோ? எங்கே?
(தெரேசா பத்திரிகையை எடுத்து விரித்து காட்டுகிருள், மீன வாசிக்கிருள்).
தெரே! அதைக் கண்டதும் எனக்கு ரொம்பத் துக்கமாய்ப் போச்சு. அவரிட்டைச் சொல்லி உனக்காய்ப் பரிசுத்த மாதாவிடம் மன்ருடி னுேம். உன்னை எந்தவிதமான இன்னல்களும் இல்லாமல் காப் பாற்ற வேணும் என்ற எங்கடை கோரிக்கையை மாதா கிறிஸ்துநாதரின் அருளால் நிவைவேற்றி வைத்துவிட்டா. அது தான் நீ இஞ்சை இப்ப வந்து நிக்கிருய். இதைத்தான் அற்புதம் என்டு அவர் சொல்லுகிறர். இது அற்புதம் இல்லாமல் வேறை என்ன? கிறிஸ்துநாதர் தன் விசுவாசிகளை எப்போதும் கைவிடுவது கிடையாது.
மீன: நீங்கள் சொல்லுறது அதிசயமாகத்தான் இருக்கிறது. தெரேசா எனக்கு இதைக் கேட்க மிகவும் சந்தோஷமாயிருக்குது. எங்கை நீ என்னை மறந்திருப்பியோ என்டு அச்சத்தோடை மட்டக்களப் புக்கு வந்து என்னை, நீ இவ்வளவு அன்போடை வரவேற்கிறது ானக்குப் பெரிய ஆனந்தமாய் இருக்குது.
40 A 4

Page 34
தெரே: என்ன மீன, உன்னை நான் அப்படி மறப்பேன? கொள்
வென்றிலேயே நீ தானே என்ரை பிராண சிநேகிதி. அது இருக்
கட்டும் இந்த பாக்கை கீழை வைச்சுட்டு இரன். (பிளாஸ்கில் இருந்து கோப்பியை ஒரு தம்ளரில் ஊ த்தி) இந்தா இதைக்குடி!
(மீன உட்கார்ந்து கோப்பியைத் பருகிருள். ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் பிரவேசிக்கிருர்)
தேவா வாருங்கள் சாமி, வாருங்கள். உட்காருங்கள்! (சுவாமி
உட்காருகிருர்)
தெ:ே சுவாமி, கிறிஸ்துநாதர் இப்ப இஞ்சை ஒரு அற்புதத்தை நடத்தினர். அதைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் நீங்கள் வந்ததும் நல்லதாய்ப் போய்ச்சு:
பாதிரியார்; மகனே, கிறிஸ்துவின் அற்புதங்களுக்கும் அளவுண்டோ?
இங்கே இப்போ நடந்த அற்புதமென்ன?
தெரே! பத்திரிகையில் மன்னரிலுள்ள என்னுடைய பால்ய சினேகிதி மீனுவுக்கு ஒரு பெரிய இன்னல் நேர்ந்திருப்பதாகப் பார்த் தோம். உடனே பரிசுத்த மாதாவிடம் முறையிட்டு மன்ருடி னுேம். மன்ருடி வாய்மூடமுன்பே அந்த மீனுவைப் பரிசுத்த . மாதா என்னிடமே ஒப்படைத்துவிட்டாள் (மீனவைக் காட்டி)
இதோ இவதான் அந்தக் சினேகிதி மீனு. • ` .፩
பாதி: ஓ அப்படியோ? ஆனல் இதில் ஆச்சரியப்படுவதற்கென்ன இருக்கிறது? இறந்தவர்களை எழுப்பியவருக்கு - குஷ்டரோகி களின் குஷ்டத்தை ஒரே வினடியில் நீக்கியவருக்கு - ஐந்து அப்பங் களால் ஐயாயிரம் பேரை அமுது செய்வித்தவருக்கு கண்ணற்ற வர்களுக்குக் கண்பார்வையை அளித்தவருக்கு இது என்ன பெரிய கஷ்டம்? விசுவாசிப்பவர்களை யேசு கைவிடுவதில்லையே மகனே!
தேவ: சுவாமி சொல்லுறது முற்றிலும் உண்மை.
பாதி பிள்ளைகளே இன்றுசிலர் யேசுநாதர் தமது அற்புதங்களை தமது பூவுலக வாழ்க்கைக் காலத்தில் மட்டுமே நிகழ்த்தினர் என்று நினைக்கிருர்கன். அது பிழை. யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டுக் கல்லறைக்குள் தள்ளப்பட்ட போதிலும் மீண்டும் உயிர்த்தெழுந்தவர். தேவசுதன் இன்றும் என்றும் மோட்சராச்சி யத்தில் சீவந்தராய் அழியாதிருக்கிருர். ஆகவே அவரது அற்புதங்
... 52 ...

களும் இன்றும் அவர் என்றும் நமக்கு அருள்புரிவராயில்லாவிட் டால் நாம் ஏன் அவரை வணங்கவேண்டும்?. இது சிலருக்கு விளங்குவதில்லை. அவர்களுக்கு விளக்கத்தை ஏற்படுத்த இந்த அற்புதத்தை நாங்கள் இப்பகுதியிலுள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்லவேணும், நாளை மாதா கோயிலின் பூசையின் போது இதைச் சுருக்கமாக நான் எடுத்துச் சொல்லுகிறேன். மகளே! நீ உனது சினேகிதியையும் அங்கே அழைத்து வா. அப்பொழுது அவ அந்த அற்புதத்துக்குச் சாட்சியாயிருப்பா.
தெரே! அப்படியே செய்கிறேன் சுவாமி. மீன நீ என்னுடன்
நாளைக்குப் பூசைக்கு வருவாயா?
மீன: இது என்ன கேள்வி தெரேசா? நீ அழைத்தால் நான் மறுக்க
(ւpւգ պւDrr?
பாதி; அந்தக் குழந்தையும் நல்ல அறிவு படைத்த குழந்தையாகத் தான் தெரிகிறது. அப்போ நாளை கோயிலில் சந்திப்போம். நான் போய் வருகிறேன் தேவசகாயம்,
தேவ: சரி சுவாமி. (சுவாமி போகிருர்)
魁
தேவ சரி தெரேசா உன்ரை சினேகிதி வந்ததுக்கு மகிழ்ச்சி கொண் டா டட்டும் இவ்வேளையில் நாம் கர்த்தருக்கு வந்து நன்றியைத் தெரிவிக்க வேண்டாமா? (மீண்டும் இருவரும் மண்டியிட்டுப் பிரார்த்திக்கிருர்கள். “ஹேயில் மேரி” என்ற பிரார்த்தனையை மூன்றுதரம் செய்கிறர்கள்: மீனவோ இந்து முறைப்படி மேரி மாதாவை கை கூப்பி நமஸ்கரித்தபடி நிற்கிருள்).
தெரே: (பிரார்த்தனை முடிந்தபின்). சரி, சாப்பிட வாருங்கள்
மூன்று பேருமாய் இருப்பதைப் பகிர்ந்து சாப்பிடுவோம்!
தேவ: ஐந்து அப்பம் ஐயாயிரம் பேருக்குப் பெருகியது போல இரண்டு பேர் சாப்பாடு மூவருக்குக் காணக்கூடியதாய்ப் பெரு காமலா போய்விடும்?
தெரே! (செல்லமாக) பெருகும், பெருகும், நல்லாய்ப் பெருகும்! (கண்டிப்பாக) சரி வாருங்கள் சாப்பிட (தேவசகாயமும் மீனவும் போகிருர்கள்)
மீன: எல்லாம் அதிசயமாய்த்தான் இருக்குது. (மாதாவின் செர்ரூ
பத்தைப் பார்க்கிரு.ர்கள். சொரூபத்துக்குமுன் சென்று இந்து முறைப்படி பஞ்சாங்க நமஸ்காரம் செய்கிருர்கள். உள்ளே
53 e

Page 35
யிருந்து "மீன, வா சாப்பிட' என்ற தெரேசாவின் குரல் கேட்கிறது).
மீன: இதோ வருகிறேன் (என்று கொண்டே போகிருள்):
திரை
காட்சி 6
(ஐந்தாம் காட்சியில் வந்த அதேசீன். மீன மாதாவின் படத்தின் முன் நின்றவண்ணம் ‘ஆவே மரியா" என்ற கீதத்தை மெல்லப் பாடுகிருள். அவள் முகத்தில் வழக்கமாகக் காணப்படும் பொட் டைக் காணவில்லை. தெரேசா பிரவேசம்).
தெரே! என்ன பாட்டு? ஒரே அமர்க்களமாய்க் கிடக்கு? உண்மை யிலை நீ என்னைவிட எவ்வளவோ அழகாய் 'ஆவே மரியா’ப் பாட்டுப் பாடுகிருய்.கொன்வென்றிலைகூட எப்போதும் நீ என்னை விடக் கெட்டிக்காரியாய்த்தான் இருந்தாய். ஆனல் இப்பதான் நீ முதன்முதலாய் வேதப் பாட்டுகளைப் பாடுகிறதைக் கேட் கிறன்.
மீன: ஒம் தெரேசா! நீ சொல்லுறது உண்மை தான். அப்பொழு தெல்லாம் நான் வேதக்காரரை முட்டாள்கள் எண்டுதான் நினைச்சன். வேதப்பாட்டுகளைக் கேட்டாலே எனக்கு அருவருப் பாய் இருக்கும். ஆனல் இப்ப நீ என் கண் +ளைத் திறந்துவிட் டாய். இப்பதான் எனக்கு என்னடை சைவமதம் எவ்வளவு அர்த்தமற்றது எண்டு விளங்குது.
தெரே: மீன, அதற்காக நீ என்னைப் பாராட்டக்கூடாது. கர்த்தர் மனது வைத்தார். உன் கண்முன்பே அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினர். உனக்குக் கஷ்டம் நேர்ந்த நேரத்திலை உணர் குத் தெளிவான வழியைக் காட்டினர். அதன் மூலம் உன் ரை மனத் திருளை நீக்கினர். ஆகவே அவரையெல்லோ நீ பாராட்ட வேணும்.
மீன: உண்மைதான். எண்டாலும் 3 மாதமாய் உன்னேடை சேர்ந்து சேர்ச்சுக்கும் சண்டே ஸ்கூலுக்கும் போய் வந்திரா விட்டால் எனக்கு இவ்வளவு அறிவுத் தெளிவு ஏற்பட்டிருக்குமா? அதுக்காகக் கர்த்தரையும் யேசுக்கிறிஸ்துநாதரையும் தேவமாதா வையும் பாராட்டும் அதே நேரத்தில் உன்னையும் பாராட்டத் தானே வேணும்?
... 54 ...

தெரே! சரிதான், அது கிடக்கட்டும், உனக்குக் 'கட்டக்கிஸம்"
முழுவதும் வடிவாய்த் தெரியுமோ?
மீன: ஒம் சந்தேகமில்லாமல், உன்னைக்கூட வென்றுவிடுவேன். தெரே : அப்படியெண்டால், நான் சில கேள்விகள் கேட்கட்டுமா?
மீன: கேள், நான் எல்லாத்துக்கும் சரியாய்ப் பதில் சொல்லாவிட்
sT6 untri?
தெரே! (புத் ககத்தை எடுத்துப் பிரித்துக் கேள்வி கேட்டல்)
மீனு: பதில். தெரே (கேள்வி) மீனு: (பதில்) தெரே! (ரே ஸ்வி) மீனு (பதில்) தெரே! (கேள்வி) மீனு: (பதில்) தெரே! (கேள்வி) மீனு: (பதில்)
தெரே! நீ கெட்டிக்காரிதான், டக், டக்கெண்டு பதில் சொல்லு கிருய்? இவ்வளவு கெதியாய் நீ எப்படிப் பாடம் பண்ணினுய் மீஞ6
மீன: ஏன்? " " கட்டக்கிஸம்" சரியாய் எங்கடை சைவ வினவிடை மாதிரி தானே? ஏன் கேள்விகள் கூட அதிகமாய் ஒண்டுதான். பதிலில்தான் கொஞ்சம் மாற்றம்.
மீனு: தெரேசா, நீ எனக்கு எவ்வளவோ உதவியள் எல்லாம் செய்
திருக்கிருய் ஆனல் எல்லாத்திலும் பெரிய உதவி இதுதான். எனக்கு ரட்சகரின் வழியைக் காட்டியதை நான் என்றைக்கும் உயிருள்ள வரையும் நான் மறக்கமாட்டன்.
தெரே! நீ கத்தோலிக்கப் பெண்ணுகிச் சில காலத்துக்குப் பிறகு, உன் ஜோசப்பைச் சந்திக்கக்கூடும். அப்போ அவன் மனம் எவ்வளவு சந்தோஷப்படும்? நீ கத்தோலிக்க மதத்தைத் தழுவியது அவ ணுக்கு எவ்வளவு இன்பத்தைத் தரும் என்டு எண்ணிப்பார். அப் பொழுது உங்கள் திருமணத்தை யேசுகிறிஸ்து முன்னிலையில் நின்று நானே செய்து வைப்பன். கர்த்தர் நினைச்சால் இது ஒரு பெரிய காரியமல்ல.
. 5 ...

Page 36
மீனு: அவ்வாறு நடக்க வேண்டுமென்பதுதான் எனது பிரார்த்தன. ஒவ்வொரு நாளும் தேவமாதாவை நான் அதற்காக மன்ருடி வரு கிறேன். ஆம் , தெரேசா நீ சொல்லுறது எவ்வளவு உண்மை! ஜோசப் என்னைக் கண்டதும் என் கழுத்தில் ஊசலாடும் குருசைப் பார்ப்பார். 'என்ன மீனு, நீ எப்பொழுது கத்தோலிக்கத்தில் சேர்ந்தாய்?' என்று கேட்பார். நான் மீனவல்ல என் ரை பெயர் சீலா, அதுதான் நான் சூடிக்கொண்ட கிறிஸ்தவப் பெயர் என் பேன். அப்ப அவற்றை அழகிய முகம் மகிழ்ச்சியால் மலரும் அதைப்பார்த்து நான் மகிழ்வேன்.
தெரே: ஓ, எல்லாம் பெரிய எண்ணம் தான்! ஆனல் தேவமாதா மனம் வைத்தால் நடக்கக்கூடாத காரியம் அல்ல. நெடிப்பொழுதிலேயே நடந்துவிடும்.
(அப்பொழுது ஒரு இளைஞன், பெயர் மரியதாஸ் பிரவேசிக்கிருன்)
தெரே! ...மரியதாஸ், நீ எப்ப திருகோணமலையிலிருந்து வந்தாய்?. கண்டு எவ்வளவு காலம்?. ஆள் இப்ப நல்லா மாறிப்போய் - விட்டியே.
மரி: நேற்றுத்தான் திருகோணமலையிலிருந்து வந்தனன். அது சரி
எங்கை மிஸ்டர் தேவசகாயம்?
தெரே; அவரைத் தெரியாதே உனக்கு? திருச்சபை விஷயமாய் அலேஞ்சு கொண்டிருப்பார் அதுதான் அவற்றை வளக்கமாய்ச்சே,
மரி: அது சரி தெரேசா, இது யார். இது?
(மீனு நானுகிருள்)
தெரே! அவவும் உங்கடை ஊர்தான். யாழ்ப்பாணத்திலை ஒ. ஏ.
சிவப்பிரகாசம்பிள்ளையின் ரை மகள் மீனு என்டு பெயர் வீட்டை விட்டு ஓடியந்திடா.
மரி: ஏன்?
தெரே! அது பெரிய கதை கர்நாடகத்தாய் தேப்பன் மார் இந்தக் சாலத்துப் பெண்களின் றை மனதைப் புரிஞ்சு கொள்ளாமல் நடந்துவிடுகிருர்கள். மீன ஜோசப்பெண்டு ஒரு வ  ைர க் காதலிச்சா. தகப்பன் சைவம். அவசர அவசரமாய் வேறை கலியாணம் செய்து வைக்கப்பார்த்தார். அவ என்ன செய்வா, அதிலே இருந்து தப்ப வீட்டைவிட்டு ஓடிவந்திட்டா,
... 56 ...

ஆர் அந்த ஜோகப்? அவர் ஒரு கிருஸ்சுவேற்ரோ?
மீனு ஒ பி. எஸ் சி. படிச்சிருக்கிருர், ஏன் உங்களுக்கு அவரைத்
தெரியுமோ?
தெரியுமென்டுதான் நினைக்கிறன். ஆள் ஒரு சிவ?ல, சில்லாலைப் பகுதி ஆள். அப்படித்தானே?
மீன: ஓம் அவர்தான். அப்ப உங்களுக்கு அவரை நல்லாய்த்
தெரியும்?
மரி என்னேடை சீனியர் வரைக்கும் ஒன்டாய்ப் படிச்சவர். இப்ப கொழும்பிலை கவுண்மேந்துப் பள்ளிக்கூடமொன்றிலை படிப்பிச்கக் கொண்டிருக்கிருர்,
தெரே: மீனு பார்த்தியா? தேடின பூண்டு காலிலை சிக்கினது மாதிரி
நல்ல நேரத்திலை மரியதாஸ் வந்திருக்கிருர்,
மீஞ: அவருடைய விலாசம் உங்களுக்குத் தெரியுமே?
தெரே! பார், பார் அவசரத்தை?
மரி தெரியும். நாளைக்கே வேணுமெண்டால் நான் அவருக்குத்
காகிதம் எழுதிறன் .
மீனு: எப்பிடி எழுதுவியள்?
மரி: இப்பிடி, உனது காணுமல் போன காதலி மீனு, மட்டக்களப் பிலே மிஸ்டர் தேவசகாயம் குடும்பத்தினரோடை இருக்கிரு. உடனே வாவென்டு எழுதுதிறன் சரிதானே?
மீனு: சரி கட்டாயம் எழுதவேணும்.
தெரே: மீன, நீ அதிஷ்டக்காரி. கர்த்தருடைய அருள் நிறைய இருக் குது. ஆணுல் நீ உன்ரை காதலனைக் கண்டதும் வாங்களை எல். லாம் மறந்திடுவாய் என்ன? அப்பிடித்தானே,
மீன: ஒரு போதும் இல்லை. நீதான இதுக்கெல்லாம் உதவி செய் கிருய். என்றைக்கும் நான் உன்னுடைய உதவியை மறக்க மாட்டன்.
மரி: சரி தெரேசா, கதலிக் சென்றருக்கு' ஒருக்காப் போக
வேணும். நாளைக்கு இங்கை வருவதாக மிஸ்டர் தேவசகாயத் திட்டைச் சொல்லிவிடு, சரியாய் ஐந்து மணிக்கு வருவன்.
... 57 ...

Page 37
வரட்டுமா? மீன. ஜோசப்புக்கு இன்டைக்கு ஒரு காகிதம் எழுதிவிடுகிறேன். சரி நான் செய்யும் உதவிக்கு நீ என்ன பதில்
செய்யப்போ கிருய்? மீனு: எந்தப் பதிலும் இந்த உதவிக்கு ஈடாகுமா?
தெரே! (சிரித்து) மீன. பேச்சிலை கெட்டிக்காரி அதுதான ஜோசப்
அப்படி மயங்கினன்! −
மரி: நான வருகிறேன் சேரியோ (போ கிருன்)
(சிறு நேரம் இருவரும் மெளனமாய் இருக்கிருர்கள்)
மீ:ை (திடீரென) என்னல் நம்ப முடியவில்லையே எல்லாம் ஒரே
அற்புதமாய் இருக்கு.
தெரே; அதைத் தான் நானும் யோசித்துக்கொண்டிருக்கிறன். இது
உன் வாழ்வில் கர்த்தர் செய்யும் இரண்டாவது அற்புதம்.
மீனு: ஆம். நீ சொல்லுறது முற்றிலும் உண்மை, கத்தோலிக்க மகத்தின் உண்மையை என்மூலம் கிறிஸ்துநாதர் வலியுறுத்த எண்ணிவிட்டார் போலும் . நான் பாக்கியசாலிதான் .
கெரே அது சரி, எனக்கு வேலை இருக்குது. உன்னுேடை கதைத்துக் கொண்டிருக்க முடியாது. நான் வாறன். நாளைக்குச் சாமியார் உன்னேடை பேச இங்கை வருவர். அவர் கேட்கிற கேள்வி யளுக்கு டக் டக் என்டு பதில் சொல்லவேணும . அப்பதான் ஞானஸ்ணுனத்தை அவர் சீக்கிரம் செய்து வைப்பார் ஆனபடி யால் எல்ல த்தையும் வடிவாய்ப் பாடமாக்கி வைச்சிரு.
மீனு: அப்படியே செய்யிறன் தெரேசா. (தெரேசா போகிருள்)
மீன: (சொரூபத்தின் முன் கத்தோலிக்க முறையில் வணக்கம் செலுத்திய வண்ணம்) தேவமாதா! உன் கருணையே கருணை. நீ என்மீது எவ்வளவு அன்பு காட்டுகிருய்? கத்தோலிக்க மதமே உலகின் உத்தம மதம் என்பதை எனக்கு துலாம்பரமாய் காட் + விட்டாய். இத்தகைய நல்ல மார்க்கம் உலகில் இருக்க எத்தனை பேர் போலி மதங்களில் உளல்கிரு "கள். அவர்களை எல்லாம் கடுத் தாள் தேவி தேவமாதாவே, எனது ஜோசப்பை என்னிடம் ஒப்படைத்துவிடு. அவளுக்காகவே நான் வாழ்கிறேன். உனது
58 ...

முன்னிலையில் அவரை எனது கணவராகக் கைப்பிடிக்க அருள் புரிவாய், அம்மா, ஆமென் யேசு .
(சிலுவை அடையாளம் இட்டுக் கொள்கிருள்),
திரை
காட்சி 7
(கொழும்ப, பாலச்சந்திரன் வீடு, பாலச்சந்திரன் தியானத்தில் அமர்ந்திருக்கிருன். தியானம் முடிந்ததும்)
"தென்னடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.”
(என்று பாடிக்கொண்டே எழும்புகிமுன். கையில் ஒரு மணியை எடுத்துக் கிலுக்குகிறன். கற்பூரத்தட்டில் கற்பூரத்தை வைத்துக் கொளுத்தி. சிவபெருமான் படத்துக்குக் காட்டுகிருன். அதே நேரத்தில் டாக்டர் இராமலிங்கம் பிரவேசிக்கிருர். அவர் எவ்வித சலனமு மின்றி யாவற்றையும் சாவதானமாக அவதானித்துக் கொண்டு நிற்கிருர். அவர் வருகையைப் பாலச்சந்திரன் கவனிக்கவில்லை).
பாலச் நமப்பார்வதி பதியே, அரகரமாதேவா. சங்கரா ,பரமசிவா. நமச்சிவாயா. இறைவா நீதான் துணை, மாணிக்கவாசகனைத் தடுத்தாட் கொண்ட நீ. என்னையும் தடுத் தாட் கொண்டாய்: அன்று மாணிக்கவாசகருக்காக நரியைப் பரியாக்கிய்ை, இன்றும் நீ நினைச்சால் எது தான் நடவாது?. பரமேஸ்வரா பார்வதி நாதா. எனது காதலி மீன எங்கு போனளோ என்ன நடந்த தோ. இந்தப் பிறவியிலை நான் அவளை அடைய முடியாது போயிட்டுது. பரவாயில்லை பரமேஸ்வரா. அடுத்த பிmவியிலாவது அவளை அடைய அருள்புரிவாய். 'நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க, “இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க. அப்பனே, 'சிவபெருமானே,"
"சமணமுதலாம் போலி மதம் சாய்த்தாய் போற்றி" "தென்னுடுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
நமப்பார்வதி வதியே. அரஹரமகாதேவா.
இரா: அரகரமகாதேவா.
, 59 ...

Page 38
பாலா: {திடுக்கிட்டுத் திரும்பி) யாரது? அட நீயா? நல்லது அவன் புகழை நீயும் பாட ஆரம்பிச்சிட்டியா? இராமலிங்கம், உன்டை நாஸ்திக உள்ளத்திலையும் எம்பெருமானுடைய ஈருணைக் கதிர்கள் நுளைந்து விட்டனவோ?. நல்லது. அவன் புகழை இராமலிங்கம் இன்னெருக்கால் சொல்லு, நமப் பார்வதி வதியே.
இரா: அரகரமகா தேவா.
(பாலச்சந்திரன் திருநீறு தர இராமலிங்கம் நெற்றியிலிட்டு வாயிலும் போடுகிருன்)
பால: என்ன? இராமலிங்கம். ஒரே ஆச்சரியமாயிரு குது 'நீறில்லா நெற்றி பாழ்” எண்டமாதிரிப் பாழாய்க் கிடந்த நெற்றி நீறு பட்டதும் எப்பிடிப் பிரகாசிக்குது பார். ஆகா. என்ன களை. என்ன களை. அது போகட்டும் எப்பிடி நீ இப்படித் திடீரெண்டு மாறிஞய்?
இரா: எல்லாம் நீ பாடின பாட்டைக் கேட்டுத்தான்.
பால; எந்தப் பாட்டு?
இரா: "தென்னடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
என்ற பாட்டு என்னைக் கொள்ளை கொள்ளுதப்பா.
பால: அதிலேயுள்ள சிவரகஷ்யம் உனக்கு விளங்கியிட்டுதுபோல, உன்னைப் போலை புத்திசாலிகளுக்கு எப்போதாவது உணமை புலப்படத்தானே செய்யும்?
இரா: அதிலுள்ள சிவரகஷ்யமாவதுமண்ணுங்கட்டியாவது, எனக்குப் பிடிச்சது அதிலையுள்ள இன்றர் நாஷனலிச - ஸர்வதேசியம் தான்ரு, தென்ட்ைடுக்கு உரியவன் . ஆனல் என்னுட்டுக்கும் பெரியவன், சர்வதேசங்களுக்கும் பெரியவன் என்ற இந்த இடத் திலை பொதுவுடமை வாதிகளின் சருவதேசத்தையும் மிஞ்சிவிட் டாரே அந்தத் தேவாரக்காறர்.
பால: சந்தேகம் என்ன? அருட்கவிகள், கார்ல்மாக்ஸ்சையும், லெனினையும் மிஞ்சினல் அதில் ஆச்சரியம் என்ன? உண்மையிலை இராமலிங்கம், சைவம் தான் உலகத்திலேயே சிறந்த சர்வதேசிய உணர்ச்சி கொண்ட மதமென்டு நான் முடிவு கட்டி வைச்சிருக் கிறன்.
... 60 ...

இரா. இதை நான் ஒத்துக் கெ" ள்ளத்தான் வேணும். இல்லாட்டில்
இந்தியாவில் செய்த குத்து விளக்கிலை இலங்கைத் தேங்காய் எண்ணெய்யை ஊத்தி இலங்கையர் மல் பீஸ் சீத்தைத் துணியிலை திரி போட்டுத் திருவிளக்கேற்றி. ப்பானிலிருந்தும், சீனவி லிருந்தும் வாங்கிற கற்பூரத் தூளை கற்பூரத் தீபம் காட்டுவா பா பக்தா?. சைச்சைச்சை. சந்தேகம் என்ன சைவத்திலை சர்வ தேசியம் அப்பிடியே தவழுது!
பாலா; போடா மடையா பேசிறபேச்சைப்பார்.
இரா: ஆனல் எனக்கு ஒரே ஒரு கவலை
பால: என்ன இராமலிங்கம்?
இரா: இந்தக் கோயில்களுக்கெல்லாம் எத்தினை தொன் கற்பூரம் இலங்கைக்கு வந்து புகையாய்ப் போகு து? எங்கடை நாட்டுக் காசெல்லாம் யப்பான் காறன் கைக்குப் போகவேண்டுமென்டு தான் கடவுள் இப்படி கற்பூரம் கேட்கிருரோ என்னவோ? பால: நாம் கற்பூரம் கொளுத்துகிருேம். மற்ற மதத்தவை என்ன పి. மாவோ இருக்கினம்? கத்தோலிக்கர் மெழுகுதிரி கொளுத்து
607 Lib
இரா. அதுவும் சரிதான் அவை ஒன்டைக் கொளுத்தினுல் ந க்
களும் ஒன்டைக் கொளுத்தத்தானே வேணும் அது மெத்த சரி மறுக்கமுடியாத வாதம்
பால: சரி ஒத்துக்கொண்டாயா? இரா (கேலியாக) ஆம் ஒத்துக்கொண்டேன்
பால; (கோபமாக) போடா மடையா
இரா: ஒத்துக்கொண்டால் உனக்குக் கோபம் வருகுது. அப்ப நான் என்ன செய்கிறது. போகட்டும் பாலச்சந்திரன். என்னடா இன்டைக்குப் பூசை இவ்வளவு பிரமாதம் என்ன விசேஷம் ?
பால: நேற்றுச் சிவராத்திரி இன்று காலை வரைக்கும் உபவாசம். இப்பத்தான் உபவாசம் தீர்த்தினேன். (ஒருலோட்டாவில் இருந்து பாலை எடுத்து அருந்துகிருன்)
இரா: ஓகோ அப்படியா, சமாச்சாரம் (தந்திக்காரன் மணியடிக்
கிருன்)
\
61 ...

Page 39
தந்: தந்தி. தந்தி பால உள்ளை கொண்டுவா (தந்திக்காரன் பிரவேசம்)
தந்: ஜோசப் ஐயா இருக்கிருரே?
இரா.: ஆமாம். (தந்திக்காரன் தந்தியைக் கொடுக்கிருன். இராமலிங்
கம் தந்தியை வாங்கிப் பாலச்சந்திரனிடம் கொடுக்கிருன்)
பால: (பிரித்து வாசித்துவிட்டு). பரமசிவம் அருள் பாலித்துவிட்
டான். பாரடா தந்தியை
இரா (உரத்து வாசிக்கிருன்) 'மீனு சேவ் இன் பற்றிக்கலோ, எவெயிற் லெற்றர் பிபோர் சம்மிங்" அல்பிரட் மரிதாஸ். அடி சக்கை கடைசியில் உன் ரை காரியம் சரியாய்ப் போ கப் போகுது
போலை கிடக்கு.
பால: சந்தேகமென்ன இராமலிங்கம். சிவனை நம்பினேன். சைமேல் பலன் அதுமட்டுமா?. இப்பொழுது தான் நான் அவனிடம் இந்தப் பிறவில் முடியாவிட்டாலும் அடுத்த பிறவியிலையாவது என்டை காதலியை என்னிடம் ஒப்படைக்கச் சொல்லிக் கேட் டுக் கொண்டேன். ஆனல் அவனே கருணைக் கடல், அடுத்த பிறவிவரை காக்க வைக்கவில்லை. இந்தப் பிறவியிலேயே மீனவை என்னிடம் தருகிருள். “வேண்டுவார் வேண்டுவதை கண்டீர் ஈவான்’ என்பதை மெய்ப்பித்துவிட்டான் என் அப்பன். என்னே அவன் திருவிளையாடல்! என்னே அவன் நிகழ்த்திய அற்புதம்! சைவ மதத்தின் உண்மையை இப்போதாவது ஒத்துக்கொள் கிருயா இராமலிங்கம்.
இரா: ஒத்துக்கொள்கிறேன். ஆனல் நீ வந்து எனக்குச் சைவ போதனை செய்வது கான் பிடிக்கவில்லை. மறந்துவிடாதே உன்னைச் சைவத்தில் சேரும்படி தூண்டி உன்னைத் தடுத்தாட்கொண்டது நான் தான் என்பதை மறந்துவிடாதே. .ق. م
பால: அது என்னவோ உண்மைதான், சிவனது திருவிளையாடல
அப்படி. நாஸ்திகன் ஒருவன் மூலம் என்னை தடுத்தாட்கொண்ட அவரது வீலையே லீலை. v
இரா: அது போகட்டும், உனக்குத் தந்தியடித்த இந்த அல்பிரட்
மரியதாஸ் யார்?
பால: என்ஞேடை அந்த பேருள்ள ஒருத்தன் இளவாலையிலை படிச்ச
х 62

வன். அவன்தான் தந்தி அடிச்சிருக்கிருன். இனிக் காகிதம் வந் தால்தான் விவரம் தெரியும்.
இரn : சரி, இப்ப உன் ரை திட்டம் என்ன?
பால; உடனை மட்டக்களப்புக்குப் புறப்படவேண்டிய ஆயித்தங்களைச் செய்ய வேண்டியதுதான் , காகிதம் வாறதுதான் தாமதம். மீனு, இப்ப -ாப்பிடியிருப்பாளோ, சந்தனப் பொட்டோடை நான் அவளுக்கு முன்னலை தோன்றியதுதான் தாமதம். அவள் அப் பிடியே திகைத்துப் போவாள். ஆனந்தத்தாலே பூரிப்பாள். அப்படியே என்னைக் கட்டி அணைச்சுக் கொள்வாள்.
இரா: தந்தியைக் கண்டதும் தம்பி ஒரு நிலையிலை இல்லை. பாலச்சந் திரன் உன்னுடைய சந்தோஷத்தைப் பார்க்க எனக்கும் சந்தோஷ மாய்த்தான் கிடக்குது. காதல் கதை இப்ப சுபம் என்ட கட் ட த்தை அடைஞ்சிட்டுது. உன்னேடை மட்டக்களப்புக்கு வர எனக்கும் ஆசைதான். ஆனல்.
பால: என்ன, ஆனல்? கட்டாயம் வரவேணும்.
இரா: ஏதோ பார்க்கிறன் லீவு கிடைச்சால் கட்டாயம் வருவன். சரி இப்ப நான் போறன். கடிதம் கிடைச்சதும் ஓடி வந்து விஷயங் களைச் சொல்லவேணும் தெரிஞ்சுதே?. சிவப்பிரகாசம் பிள்ளைக் கும் மீனவின்ரை விவகாரத்தைத் தபால் மூலம் தெரியப்படுத்த வேணும்.
பால: இம்போதைக்கு வேண்டாம் இராமலிங்கம். மீனுவை நான் கூட்டிவந்து தம்பதிகளாய் அவற்றை ஆசீர்வாதத்தைப் பெறப் போகவேணும். அதுவரைக்கும் விஷயம் மூடு மந்திரமாயே இருக்கட்டும்
இரா. சரி. உன் விருப்பம். நான் வருகிறன்.
பால: போய் வா.
(இராமலிங்கம் போகிருன் போனபின்)
பால; (படத்தின் முன் நின்று இரு கன்னங்களிலும் போடுகிருன், தோப்புக்கரணம் போடுகிறன், தலையில் குட்டுகிறன்.) முழுமுதற் கடவுளே! உன் கருணையே கருணை! என்றும் நான் உனது அடிமை உண்மை மார்க்கத்தின் உத்தமத் தலைவா! நீ இன்றி நான் ஏது?
... 63 ...

Page 40
தென்னடுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
(அட்டாங்க நமஸ்காரம் செய்கிருன்.)
திரை
asr 9à 8
(மட்டக்களப்பு தேவசகாயம் வீடு. மீன கழுத்தில் குருசு ஊசலாட கவுண் அணிந்து காணப்படுகிருள். அவள் * கன்னியே!” மாரித்தாயே" என்ற பாட்டை- முணுமுணுத்த வண்ணம் மேடைக்கு நடுவில் வருகிருள். வெளியில் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட் கிறது. தொடர்ந்து * மிஸ்டர் தேவசகாயம் வீடு இது தான?" என்ற குரல்.)
மீனு: யேஸ், கம் இன்பிளிஸ்
(பாலச்சந்திரன் தேசிய உடை அணிந்து நெற்றியில் சந்தனப்
பொட்டும் அதன் மீது குங்குமப் பொட்டும் ஒளிவீசப் பிரவேசிக் இராமலிங்கம் காற்சட்டை அணிந்து வரு آ66 سا[9چ 671 yضوے . g}(tr?6är
கிருன் :)
மீனு: யாரது?. ஜோசப்பா?. (ஏற இறங்கப் பார்க்கிருள்.). என்ன புது விதமாய்க் காட்சியளிக்கிறியள்?. இது யார்?. டாக்டர் இராமலிங்கமல்லவா?
ப ல: ஆம் இவர் என் நண்பன் இராமலிங்கம். ஆனல் மீன. இதென்ன? புதுவிதமாய்க் காட்சியளிக்கிருய்?. W
மீன: வந்தவர்கள் முதலில் உட்காருங்கள் சிறிது நேரம் மெளனம்) நான் புதுவிதமாய்க் காட்சியளிக்கிறேன? ஆம் உண்மைதான். நான் புதிய ஜன்மம் எடுத்துவிட்டேன். காரிருளிலிருந்து பகலொளிக்கு வந்துவிட்டேன். அர்த்தமற்ற மூட நம்பிக்கை களும் சடங்குகளும் நிறைந்த காட்டுமிராண்டிச் சைவமதத்தி லிருந்து புனித க தோலிக்க மதத்துக்கு வந்துவிட்டேன். தேவ க தன் காட்டும் ரட்சண்ய ம'ர்க்கத்தை விரும்பி வரவேற்றுப் பின்'ற்றும் கத்தோலிக்கப் பெண்ணுகிவிட்டேன். ஆம் என் பேரைக்கூட மாற்றிவிட்டேன். என் ப்ெயர் ஷீலா என்ன ஷிலா
என்று கூப்பிடுங்கள்.
... 6尘

(நண்பர் திகைத்து நிற்கின்றனர். பாலச்சந்திரன் ஒன்றும் பேசாது மெளனியாய் நிற்கிருன். பின்னர் சமாளித்துக்கொண்டு)
பால: . சீ. மீனு, நீ என்ன பேசுகிருய்? விளையாடுகிறியா?. தெத்திலை பொட்டில்லை தலையிலே பூவில்லை இன்னும் உன் கழுத்திலை ஊசலாடுற அந்தக் குருசைக்காண எனக்குச் சகிக்க முடியவில்லை. அத்தோடு நீ கவுண் அணிந்திருப்பதும் எனக்குப் பிடிக்கவில்லை- சீ. இதெல்லாம் என்ன?
மீஞ: இதென்ன பேச்சு? காட்டுமிராண்டித்தனமாய்ப் பேசாதீர்கள். உங்கடை தோற்றம்தான் பார்க்கச் சகிக்க முடியாமலிருக்கிறது. நெத்தியிலை சாணிப்பூச்சு, அதுக்கு மேலை நெத்திக்கண் வைச்சது போலை குங்குமச் சோடின. இதெல்லாம் என்ன? உடனே அவற்றை அழித்து விடுங்கோ பார்க்க ஒரே வெறுப்பாயிருக்கு
IIT 6). என்ன மீன? மீளுற: மீனவாவது, நண்டாவது, விலா என்று கூப்பிடுங்கள்.
பால: ஷிலாவா? என்ன அர்த்தமற்ற பெயர்? சீதா என்ருவது மாற்றியிருக்கக் கூடாதா? ';
மீஞ: ஏன்? உங்கடை ராமன் சீதாவை நெருப்பில் தள்ளினது
போலை என்னையும் தள்ளவோ?
பால இதெல்லாம் என்ன விதண்டவாதம், வந்ததும் வராதது மாய்?. இதையெல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம். முதலில் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவம்.
மீரு: எந்த மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது? முதலிலே உண்மையைச் சொல்லுங்கோ, எதற்காக இந்தப் பசப்பு வேஷம் போட்டு வந்திருக்கிறியள்?
பால : அப்படிக் கேட்டால் சொல்லுறன் கத்தோலிக்கம் என்னும் காரிருளில் கதி கலங்கி அலைந்த என்னைச் சைவம் தடுத்தாண்டு கொண்டது. அன்று அப்பர் சுவாமிகளைச் சூலை நோயினல் தடுத் தாண்டு கொண்ட அந்தக் கருணைவள்ளல், என்ன எந்த விதமான நோயாலும் வாட்டாமல்ே தடுத்தாண்டுகொண்டு விட்டார். இன்று என் பேர் ஜோசப் அல்ல, பாலச்சந்திரன்.
மீன: (திடுக்கிட்டு) என்ன பாலச்சந்திரனு? அப்போ நீங்கள் தான என்னை மணமுடிக்க வந்த அந்த மாப்பிள்ளை? உங்களை மனக்க
... 6.5 , , ,

Page 41
மறுத்தா நான் வீட்டைவிட்டு ஓடிவந்தேன். (சிரிக்கிருள்) இது நல்ல வேடிக்கையாக வல்லா இருக்கிறது? அப்படி பாஞல காதலனை மணமுடிக்கமறுத்து வீட்டைவிட்டு ஓட்டம்பிடித்த காதலி நான் . உலகிலே இப்படிப்பட்ட ஒருசம்பவம் நிகழ்ந்திருக்கும் என்று நான் நம்பவில்லை.
பால: ஆம் மீன, நானேதான் உன்னை மணக்க வந்த பாலச்சந்திரன்.
இராமலிங்கம்தான் என் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தான்.
மீன: அதுதான் நான் யோசித்தேன் எப்படி நீங்கள் டாக்டரைப்
பிடித்தீர்கள் என்று.
பால; அப்படியென்ருல் மீனு நீ என்னைத் திருமணம் செய்யச் சம்மதம்
தானே?
மீன: அதெப்படி முடியும்? நீங்கள் தான் பெரிய சைவராகிவிட்டீர் களே! சைவருக்குச் சைவப்பொம்பிளேயல்லோ பார்க்கவேணும்.
பால: மீன, பகிடிபண்ணுதே. ஆனல் நீ சொல்வது என்னவோ உண் மைத்தான். நான் சுத்த சைவன் மீன் இறைச்சி ஒன்றுமே தின்ப தில்லை
மீஞ. ஆனல் கோயில்களில் மட்டும் கோழிகளையும் ஆடுகளையும் வெட் டித்தள்ளத் தயங்கமாட்டீர்கள், அப்படித்தானே? அது போகட் டும் என்ருலும் சற்று முன்பு நீங்கள் சிவபெருமான் எந்த நோயும் தராமலே உங்களைத் தடுத்தாட் கொண்டதாகச் சொன்னீர்கள், அதை மட்டும் என்னுல் நம்ப முடியவில்லை. உங்களைப் பயங்கர மான நோயல்லவா பிடித்திருக்கிறது?
பால; (தன் உடம்பை உற்றுப் பார்த்து) நோயா? எனக்கா? அப்படி
யொன்றும் கிடையாதே.
மீனு: உடம்பிலல்ல மனத்தில். உங்களுக்குக் கடுமையான பைத்தி யம் அல்லவா பிடிச்சிருக்கு. இல்லாவிட்டால் இப்படியெல்லாம் பேசுவீர்களா? (வெறுப்புடன்) சீ .
பால; எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கிறதா மீனு
மீன: (எரிச்சலுடன்) மீனவது ஆமையாவது மீனு செத்துவிட்டாள், நான் ஷிலா, எத்தினைதரம் சொல்லுறது? கேக்கமாட்டியள் போலை கிடக்கு, இதென்னடா தொல்லை? அஞ்ஞான இருளிலை விழுந்து கிடந்துகொண்டு ஏதேதோ பிதற்றுறியள்?. ஆமாம் உங்களுக் குக் கடுமையான பைத்தியம் தான் பிடிச்சிருச்கு.
... 66 , , ,

(இராமலிங்கம் ஒரு பத்திரிகையைப் பார்க்கும் பாவனை யில் எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டிருக்கிறன்.)
பால; ஆம்! எனக்குப்பைத்தியம்தான். சிவப்பைத்தியம். அந்தப்பைத் தியம் தெளிய என்ன செய்யவேணும் தெரியுமா?. “பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது பேரின்ப மன்றினுள்ளே"
மீஞ: இதென்ன இது தந்தனர் நாடகம் எண்டு நினைக்கிறீர்களா?
பால; இல்லை மீஞ!
மீன: (கண்ணில் அனல் கக்க) என்ன?
பால: இல்லை ஷிலா!
மீன: (திருப்தியுடன்) ம்.
பால: நான் என்ன அரிய கனவுகளுடன் உன்னைத்தேடி வந்தேன், தெரியுமா? உன்னைச் சந்திச்சு நீ சொன்ன அந்த நந்தன் எங்கே சோதியில் கலந்தானே அந்தத் தில்லைத் திருப்பதிக்கே உன்னுேடை போய் அந்தச் சிதம்பர நடராஜன் முன்னிலையில், உனக்குத் தாலி கட்டி, உன்னை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டுபோய், உன் தத்தை யின் காலடியில் வணங்கி, அவற்றை ஆசீர்வாதத்தைப் பெற்று இல்லறம் நடத்த எண்ணி வந்தேன். ஆஞல் என் கனவுகள் இரண் டாவது முறையும் இடிந்து விழுவது போல அல்லா தெரிகிறது நீயோ ஒளியிலிருந்து இருளுக்குப் போய்விட்டாய்.
மீன: என்ன எதை இருள் என்கிறீர்கள்? புனித கத்தோலிக்க மதமா இருள்? நீங்கள் தான் ஐப்பசி மாதத்து அமாவாசை இருளில் கிடக்கிறீர்கள். நீங்கள்தான் கிறிஸ்துவின் ஒளியிலிருந்து நீங்கி கண் தெரியாத காரிருளில் தஞ்சமடைந்திருக்கிறீர்கள்.
பால: சைவம் இருளல்ல.
மீன: அப்போ கத்தோலிக்கம் தான் இருளோ?
இரா: இதென்ன சண்டை? நான் சமாதானம் செய்து வைக்கட்டுமா?
மீளு: டாக்டர் சரியாயான ஆள், சாடிக்கேற்ற மூடிபோல உங்க
ளோடை வந்திருக்கிருர்,
இரா: என்ஞலை இந்த விஷயத்தில் சமாதானம் செய்து வைக்க
(Մ)ւգԱյւն.
... 67 .

Page 42
மீன: எப்படி? நான் சைவமத்த்தைக் காரிருள் என்கிறேன். நீங்கள்
என்ன சொல்லுகிறீர்கள் டாக்டர்?
இரா. முற்றிலும் உண்மை சைவம் காரிருள்தான்.
மீன: அப்பிடிச் சொல்லுங்கள் உங்களுக்குக் கொஞ்சம் மூளை இருக்
கிறது. நீங்கள் அவரைப்போல் அவ்வளவு அசடல்ல.
பால என்ன இராமலிங்கம் என்னுடைய கருத்தில் கத்தோலிக் கம்
தான் பயங்கரமான இருள்.
இரா. சந்தேகமென்ன அதுவும் உண்மைதான்,
மீன: என்ன, சைவமும் இருள், கத்தோலிக்கமும் இருள் அப்பிடியா
சொல்லுகிறீர்கள்.
இரா.: ஆமாம். இரண்டும் இருள்தான். மதத்திலேயே நம்பிக்கை
யில்லாத எனக்கு மதங்கள் எல்லாம் இருள்தான். பகுத்தறிவுப் பாதை ஒன்று தான் உண்மையான ஒளி.
Läෙම: அப்படியெண்டால் நீங்கள் ஒரு நாஸ்திகர். உங்கள் கருத்தை
நான் ஏற்க மாட்டேன்.
பால: மீன. இல்லை ஷிலா, உனது கருத்தை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்ளுகிறேன். நாஸ்திகத்தை என்னுலும் ஒப்புக் கொள்ளமுடியாது. இருவரும் சேர்ந்து நாஸ்திகத்தை எதிர்ப் GunToT?
மீனு: நாஸ்திகத்தை எதிர்க்க நான் மூடநம்பிக்கைக்காரர்களுடன் பிசாசுகளை வணங்குபவர்களுடன் சேரமாட்டேன். அதுமட்டும் நினைவிருக்கட்டும்.
பால: என்ன? யாரைப் பிசாசை வணங்குவதென்கிருய்?
மீனு: உங்களைத்தான்
பால: யாரைப் பிசா சென் கிருய்? முழுமுதற் கடவுளாகிய சிவபெரு மானையா? அல்லது அவர் மூத்த குமாரர் கணபதியையா? அன்றேல் வீரபத்திரன் முருகன் முதலியோர்களில் யாரைப் பிசாசு என்கிருய்
மீன: ஏன் உங்கடை சிவபெருமானும் அவற்றை மிஸிஸ் பார்வதியும்
பிள்ளைகுட்டி குடும்பம் எல்லோருமே பிசாசு தான்.
. 68 ...
 

பால உங்கள் பரிசுத்த ஆவி பிசாசில்லையா? நீங்களே ஹோலி கோஸ்ட் (GHOST) எண்டு தானே சொல்லுகிறீர்கள்? GHOST எண்டால் பிசாசு தானே.
மீன: (காதைப் பொத்தி) ஒ1 ஜீசஸ் தேவ நிந்தையாய்ப் பேசா தீர்கள். உங்கள் கணபதி கணங்களின் தலைவன், கணங்களெல் Burrub uurtrf? 1974. Tór 561757 (3607?
பால: சிவசிவா! பிரணவரூபனன கணபதியை நிந்திக்காதே;
மீன: இன்னும் கணபதி என்பது யார்? யானை ஒரு மிருகம். நீங்கள்
மிருகத்தை வணங்கும் காட்டுமிராண்டிகள்?
பால: மீனு . இல்லை ஷிலா, நிறுத்து உன் பேச்சை,
மீன: ஏன் பேசினல் என்னவாம்? உங்கடை யானை தும்பிக்கையாலை
தூக்கி அடிச்சுப் போடுமோ?
பால: அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும். பிள்ளையார்
உன்னைப் பழிவாங்காமல் விடமாட்டார்.
மீன: நான் அதுக்கெல்லாம் பயந்தவள் எண்டு நினைக்கவேண்டாம். எந்த மிருகமும் என்னைத் தாக்கிவிட முடியாது. தேவமாதாவும் அர்ச்சியசிஸ்டர் அந்தோனியாரும் கிறிஸ்துநாதரும் எனக்கு எப் போதும் துணை இருக்கிருர்கள். இன்னும் யானையை மட்டுமா நீங்கள் வணங்குறீர்கள்? எத்தினை மிருகங்களை வணங்குகிறீர்கள்? நிஜனத்தாலே சிரிப்புத்தான் வருகிறது. பாம்பு கூட உங்கள் தெய்வம், மாடு தெய்வம், குரங்கு தெய்வம், சிச்சீ. r
பால; என்ன பிதற்றுகிருய்? இந்துக்கள் பாம்பை வணங்குவதில்லை
மீனு: என்ன யாரை எமாற்றுகிறீர்கள்? நான் பிறவிச் சைவம். உங் களைப் போல இடையிலை சைவமாகியவர் எண்டு நினைக்க Cavalrlinth.
பால: அது மெய்தான். நீ இடையிலை கிறீஸ்தவளாகினனி
மீன: ஏன் கதையை மாத்துகிறீர்கள்? நச்சுப் பாம்புக்கு நாகதம் பிரான் எண்டு பேர் வைச்சுக் கும்பிடுபவர்கள் நீங்கள். நாம்பன் மாட்டுக்கு நந்தி எண்டு பெயர் வைத்து நாள்தோறும் பூசை செய்பவர்கள் நீங்கள் (காங்குக்குக் கோயில் கட்டி ‘அனுமாரே அமாரே' எண்டு அதாவி செய்பவர்கள் நீங்கள். சிச்சி சொன்னலே வெட்கக்கேடு.

Page 43
பால: இதே ரீதியில் எனக்கும் உன் ரை மதத்தைப் பற்றிப் பதில்
சொல்ல முடியும்.
மீனு: மீளுவா?
unt 6). Giant
மீனு: எங்கே உங்கள் பதிலைச் சொல்லிப் பாருங்களேன் அப்ப
தெரியும்.
பாலா! நான் உன்னுடன் விவாதம் நடத்த இஞ்சை வரயில்லை. இதென்ன் பாடசாலை விவாத மேடையா விவாதம் செய்யிறத் துக்கு?. நான் உன்னைத் திருமணம் செய்யிறதுக்காக ஒடோடி வந்தேன். இந்த வீண் பேச்செல்லாம் எங்களுக்கெதுக்கு? சீக்கிரமே திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய வேணும். என்ன சொல்லுகிருய்?
மீனு: திருமணமா? உங்களுடன? (சிரித்து) ஒரு உண்மைக் கத்தோ லிக்கப்பெண் ஒருபோதும் ஒரு அஞ்ஞானியைக் கலியாணம் செய்ய மாட்டாள்.
பால; நீ இப்படிச் சொல்லலாமா? நீ உன்ரை மதத்தைப் பின் பற்று, நான் என்ரை மதத்தைப் பின்பற்றுறன்! ஆனல் திருமணம் செய்துகொள்வோம். ரிஜிஸ்டர் கந்தோரிலை போய்த் திருமணம் செய்துகொள்ளுவோம்.
மீன: (ஏளனமாக) ரிஜிஸ்டர் கந்தோர் இந்தப் பூவுலகத்து ரிஜிஸ் டர்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது. தேவன்தான் எல்லா ரிஜிஸ்டர்களிலும் பெரிய ரிஜிஸ்டார். அவனது இல்லமான திருக் கோயிலில்தான்-புனித சேர்ச்சில் தான் ஒரு கத்தோலிக்கப் பெண் தன் நாயகனைக் கைப்பிடிப்பாள் சம்மதமா?
பால, நான் என் மதத்தை மாற்ற முடியாது வீலா! அற்புதங்கள் பல காட்டிய என் இந்து மதத்தை விட்டு நான் பிரிவது எங்ஙனம்?
மீன: என்ன அப்படிப்பட்ட பெரிய அற்புதம் எங்கள் கத்தோலிக்
கத்தில் இல்லாத அற்புதம்!
பால; (வெற்றி நகையோடு) சொல்லுகிறேன் ஷிலா, சொல்லு கிறேன் கேள் எனது கடவுள் எம்பெருமான் பரமசிவன் அருளை என்னென்பேன்! நான் என் மீனவை என்னுேடை சேர்த்து
70 ...,

வைக்கும்படி டேன்டினேன். அந்தப் பிரார்த்தனை முடிந்து ஒரு நிமிடமாகவில்லை, மரியதாசின் தந்தி வந்தது. இது அந்த அற்புதமில்லாமல் வேறென்ன?
மீஞ: பொய் பேசாதீர்கள் நீங்கள் இங்கே வந்தது மாதா செய்த
அற்புதம் தான்.
பால; (ஆத்திரத்துடன்) எப்படி?
மீனு, எப்படியா? சொல்லுறன் கேளுங்கள். நான் ஞானஸ்ஞனம் பெற்றுச் சிறிது நேரத்தில் மாதாவிடம் என் ஜோசப்பை எனக்குத் தா எண்டு கேட்டன். அப்பொழுது மரியதாஸ் அங்கு வந்தார். அவர்தான் உங்கடை விலாசத்தைச் சொன்னர். தந்தி அடித்தார். இது மாதாவின் அற்புதம். அதைப் பரமசிவனின் அற்புதமாக்க வேண்டாம்.
பால:இல்லை அது என் ரை பரமசிவனின் அற்புதம்தான். முதலைவாய் உண்ட பிள்ளையை மீட்ட முதல்வனின் அற்புதம்தான். எலும் பைப் பெண்ணுக்கிய எம்பெருமானின் அற்புதம்தான். கற்றுாணைக் கடலிலே மிதத்தச் செய்த கருணுகரனின் அற்புதம்தான். திரி புரம் எரித்த விரிசடைக் கடவுளின் அற்புதம் தான். புட்டுக்கு மண்சுமந்த புனிதனின் அற்புதம் தான்.
மீனு: அடுக்கு மொழியால் துடுக்காகப் பேசிவிட்டால் அது எடுக்கு மெண்டு நம்பி விடாதீர்கள். குருடனுக்குப் பார்வை தந்த குருநாதர், குஷ்டரோகிகளின் குஷ்டம் போக்கிய குணக்குன்று செய்த அற்புதம் தான் இது. அவர் தான் எங்களைச் சந்திக்கச் செய்திருக்கிருர்.
இரா (பத்திசிகையை மடித்த வண்ணம்) எனக்கென்னவோ, சிவ பெருமானும் சரி யேசுநாதரும் சரி, சரியான காரியத்தை செய்திருப்பதாய்த் தெரியவில்லை.
மீன. ஏன் அப்பிடிச் சொல்லுறியள்?
பால; ஏனடா அப்பிடிச் சொல்லுருய்?
இரா. வீலா. பாலா சந்திக்க விரும்பியது ஆரைத் தெரியுமா?
மீனு: என்ன!
இரா: அதுதானில்லை. மீனவை! மீளு தான் இறந்துபோயிட்டாளே.
இப்போதிருக்கிறது ஷிலோ வல்லவா?
. 71 ...

Page 44
மீன: (பாலாவைப் பார்த்து) முற்றிலும் சரி ஹன்றட்பேர்சன் ற் சரி. சிவபெருமான் மீனுவைச் சேர்த்து வைக்கவில்லை விளங்கச்சுதா? உங்கள் கோரிக்கை நிறைவேறயில்லை.
இரா, ஆம் பாலா அது உண்மை. ஆனல் இன்னென்டு, மீன சந்திக்க விரும்பியது யாரைத் தெரியுமா? ஜோசப். ஆனல் ஜோசப்தான் செத்துவிட்டானே! இங்கே இருப்பது பாலச்சந்திரன் அல்லவா ? ஆகவே யேசுநாதரும் வெற்றி பெறவில்லை.
மீனு (கடுமையாக) என்ன?
பால: போதும் உன் ரை நாத்திகப் பிரச்சாரம். நிறுத்து.
மீனு: அப்படிச் சொல்லுங்கள். பால: நாத்திகர்களை எனக்குப் பிடிக்காது.
மீனு: அப்பிடிச் சொல்லுங்கள். எனக்கும் நாத்திகரைத் துப்புரவுக்
குப் பிடிக்காது.
பால: இப்ப நான் திருமணம் செய்து கொள்வதற்கு என்ன தடை? நாங்கள் இரண்டு பேரும் இராமலிங்கத்தை, இராமலிங்கத்தின் நாத்திகவாதத்தை எதிர்ப்பவர்களாய் இருக்கிருேம்.
மீன: நீங்கள் பிசாசுகளை வணங்குவதும் சாணியை நெத்தியிலே பூசுறதும் மிருகங்களுக்கு முன்னல் முண்டியிடுவதுதான் தடை. நான் எப்படி உங்களை மணக்க முடியும்?
இரா (சிரித்தபடியே). பார்க்கப் போனல், எவ்வளவு விசித்திர மாயிருக்ரு? இருவரும் ஆஸ்திகர்கள் நாத்திகத்தை எதிர்ப்பவர் கள். கடவுளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். ஆனல் இரு வரிடையேயும் கடும் சண்டை. மதமே பொய். இருவரும் பொய் களை நம்புகிருர்கள். ஆனல் வெவ்வேறு பொய்கள். இருவரும் ஒரே பொய்யை நம்பினுல்தான் உங்களுக்கிடையே சமரசமேற் படும்போலும்.
பால: இராமலிங்கம் நீ கண்ணிருந்தும் காணுதவன். காதிருந்தும்
கேளாதவன். உன் முன்னிலையில் தானே மரியதாஸின் தந்
கிடைத்தது? அந்த அற்புதத்தைப் பரமசிவன்தானே நடத் தினர். அதைக் கண்ட பிறகும் நீ கடவுளை நம்புருயில்லை?
மீன: சுத்தப் பொய். தந்தி கிடைத்தபோதா அற்புதம் நிகழ்ந்தது? தந்தி அனுப்பினல் கிடைக்கத்தானே செய்யும், தேவமாதாவின்
... 72 . . .

அற்புதத்தால்தானே தந்தி அனுப்பப்பட் து என்பதை மறக்க
வேண்டாம் மிஸ்டர்.
இரா. நோ. நோ. அடிக்கிற தந்தி கிடைக்கிறதிலையும் அற்புத
மில்லை. அடியாத தந்தி கிடைத்திருந்தால். அது அற்புதம்!
பால; போடா போ.
இரா (மீண்டும் பத்திரிகையில் முழுகிவிடுகிருன். சிறிது நேரம்
மெளனம்)
பால: ஷிலா!
மீன; என்ன?
பால: (உணர்சிசி நிறைந்து குரலில்). நீ பள்ளிக்கூடம் செல்லும் நாட்களில், நாம் காணிவல் திடலில் சந்திக்க உல்லாசமாக மெரி கோரவுண்டில் சுழன்றதை ஒருதரம் நினைச்சுப்பார்! நீ வரும் பஸ் சுக்காகக் காத்திருந்து, உன்னைக் கண்டு உன் அழகிய புன்முறு வலைப் பெறுவதற்காக, நான் முண் டியடித்துப் பளில் ஏறி, உன்னை நோக்கி வந்ததெல்லாம் உனக்கு ஞாபகமில்லையா? நான் எவ்வளவு தூரம் உன்னை நேசிக்கிறேன்? உன் காதல் மட்டு மென்ன, செத்துவிட்டதா?
மீனு: சாகவில்லை. இண்டைக்கும் நான் ஜோசப்பை நேசிக்கிறன். ஆணுல நீங்களோ பாலச்சந்திரன்! உங்களை என்னல் நேசிக்க முடி யாது. ஜோசப்பை தேசித்துப்போட்டு பாலச்சந்திரனை மணம் செய்ய என்ரை மனம் ஒருபோதும் இடம்தராது.
பால; ஆனல் ஜோசப்பும் பாலச்சந்திரனும் ஒரே ஆள்தானே ஷிலா?
மீன; அப்படியானல் மீண்டும் ஜோசப் ஆகுங்கள். மீண்டும் புனித கத்தோலிக்கராகுங்கள். ஓட்டமாய் ஒடித் தேவாலயத்தில் போய்க் கைப்பிடிப்போம். கர்த்தர் முன்னிலையில் கணவன் மனைவி ஆவோம்,
பால: இது என்னுல் முடி (ாத காரியம். நான் வெறுக்கும் கத்தோலிக்
கத்தில் என்னுல் மீண்டும் புகமுடியாது.
மீனு; அப்படியெண்டிால் முடிவாகச் சொல்லுகிறேன். என்னுல் உங்
களைத் திருமணம் செய்ய முடியாது.
. 73 ...

Page 45
பால; (கெஞ்சும் குரலில்) வீலா நாங்கள் ரிஜிஸ்டார் கந்தோருக்குப் போய்த் திருமணம் செய்துகொன்ரூவோம். மீண்டும் நான் வாக் களிக்கிறேன். நீ கத்தோலிக்கத்திலேயே இரு. நான் கந்தனை வழிப்படுபவளுகவே இருக்கிறேன்.
மீனு: என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். தொணதொணவென்று பேசி என்ன பிரயோசனம்? இதுமட்டும் என் வாழ்நாளில் ஒருக் காலும் நடவாத காரியம்,
இரா. (பத்திரிகையை மடித்து வைத்துவிட்டுப் பெருமூச்சு விடு கிருன். பின் பாலச்சந்திரனைப் பார்த்து) ம். ம் (மீண்டும் பெருமூச்சு)
பால: ஷிலா இதுதான உன்ரை கடைசி முடிவு? மீன: (திடமா ச) ஆம்.
பால: இராமலிங்கம் வா போவோம். வீலா நான் போய்வரு
கிறேன்.
மீன: போங்கள் வரவேண்டாம். அப்படி வருவதானல் மனம் மாறி கத்தோலிக்கராய் வாருங்கள். அப்போதுதான் என் இதயக்கதவு திறக்கும்.
பால: மீன! இந்த ஜென்மத்தில் எங்களால் சேர முடியவில்லை. அடுத்த ஜென்மத்தில் நான் உன்னையடையச் செல்வச் சந்நிதி யான் அருள் புரியட்டும்!
மீனு: அடுத்த ஜன்மமாவது? இந்தக் கதையை நீங்கள் யாராவது
சைவப் பெண்ணிடம் போய்க் கூறுங்கள்
பால: வருகிறேன்.
மீன: போங்கள்!
(பாலச்சந்திரனும் இராமலிங்கமும் வெளியேறுகிருர்கள்.)
மீன. (தேவ மாதாவுக்கு முன் நின்றுகொண்டு பிரார்த்திக்கிருள்.)
பரிசுத்த மாதாவே!
இருளிலிருந்து எனக்கு ஒளியைக் காட்டினய், ஆனல் ஒளியி லிருந்து ஜோசப்பை ஏனே இருளில் தள்ளிவிட்டாய். கருணைக் கடலே! அவருக்குச் சரியான வழியைக் காட்டு. பாவப் பாதையி லிருந்து அவரை விடுதலை செய் பிசாசு வணக்கத்திலிருந்து அவரை இரட்சிக்கவேணும் தாயே. மீண்டும் நமது புனித கத்
74 ...

தோலிக்க மதத்தின் ஒளிக்கிரணங்களில் அவரை முழுகுவிப்
IITt JITs பரிசுத்த மரியாயே! நீயே அடைக்கலம்
ஆமேன் யேசு. (தெரேசா பிரவேசம்)
தெரே: ஷிலா!என்ன நடந்தது? ஜோசப் வந்திருந்தாராமே.
மீன: ஆம், வந்திருந்தார்டு ஆனல் அந்தக் கதையை ஏன் கிளறு
கிருய்?
தெரே ஏன் என்ன நடந்தது?
மீனு: அவர் பிடிவாதமான சைவராக மாறிவிட்டார். தெரே! என்ன?
மீனு: என்னை ரிஜிஸ்டார் முன்னிலையில் சீர்திருத்ததிருமணம் செய்ய அழைத்தார். நான் மறுத்துவிட்டேன். அவரோ கத்தோலிக்க ராக மறுத்துவிட்டார். அவர் பெயர் பாலச்சந்திரனம்.
தெரே என்ன அப்படியானுல் இவர்தான உன்னைத் திருமணம் செய்ய
வந்தவர்? மீன; ஆம். அந்த நேரத்திலை நான் வீட்டை விட்டு ஓடி வந்திருக்கா விட்டால், ஒரு ஹிந்துவின் மனைவியாய்த்தானே இருந்திருப் பேன். கர்த்தர் என்னைக் காப்பாற்றினர்! தெரே! அது போகட்டும் ஷிலா இப்போ உன் எதிர்காலத்திட்டம்
என்ன?
மீனு: நான் நித்திய கன்னியாகக் காலம் கழிக்கப் போகிறேன். கர்த்தரின் உத்தம கன்னியாஸ்திரிகளில் ஒருத்தியாக என் வாழ் நாளை நான் கடத்துவேன். இந்த உலக இன்பங்களெல்லாவற் றையும்விட அதுதான் நிரந்தர இன்பமாய் எனக்குத் தெரியுது. தெரேசா, எனக்கு ஞானஸ்ஞானம் செய்துவித்து நேரிய வழியைக் காட்டு நீ, நான் கன்னியாஸ்திரியாவதற்குக் கட்டாயம் ஒத்துழைக்க வேண்டும். ஒத்துழைப்பாயா?
தெரே; நிச்சயம் ஒத்துழைப்பேன்.
தெரேசா மீனுவை அணைக்கிருள்.)
திரை
... 75 -.

Page 46
Srg 9
(கொழும்பு பாலச்சந்திரன் வீடு)
பால: எல்லாம் அந்தச் செல்வச் சன்னதியான்ரை திருவிளையாடல்,
நான் என்ன செய்யலாம்?
சிவ: அப்படித்தான் தம்பி நானும் மனதைத் தேற்றிக்கொண்
டிருக்கிறேன்.
இரா: பாலச்சந்திரன். மிஸ்டர் சிவப்பிரகாசம் பிள்ளை, மீனவின் வாழ்க்கைச் சிக்கலிலே ஒரு ஆச்சரியமான அம்சத்தைப் பார்த்
Bri*a56ITnt?
பால: ஒரு அம்சமா? மீனுவின் வாழ்க்கை முழுவதுமே ஒரே விசித் திரமான கதைபோலல்லவா இருக்கிறது. நீ எதைக் குறிப்பிடு கிருய்?
இரா: .பார், மீன எதற்காக வீட்டை விட்டு ஓடினுள்? தந்தை பார்த்த மாப்பிள்ளைதான் முடிக்கமாட்டேன் என்று ஓடினுள். ஆனல் கடைசியில் அதே மாப்பிள்ளையைத்தான் தானகவே திரு மணம் செய்ய மறுத்துவிட்டாள். இதற்கு வீட்டை விட்டு ஓடி யிருக்க வேண்டாமல்லவா?
பால: நீ சொல்லுகிறதிலும் ஞாயம் இருக்கத்தான் செய்யுது.
இரா. இன்னென்று, சிவப்பிரகாசம்பிள்ளை எதற்காகத் திரு
மணத்தை எதிர்த்தார்?
'பால மாப்பிள்ளையும் மீனுவும் வெவ்வேறு மதத்தினராயிருந்ததால், அவர்கள் திருமணம் செய்வதால் சிக்கல் விளையும் என்ற நினை வில் எதிர்த்தார்.
சிவ: உண்மைதான் தம்பி.
இரn ஆனல் அந்த முடிவு தவறென்று எண்ணினுள் மீன. அதற் காகப் புரட்சிப் பெண்ணுய்க்கூட மாறினுள். வீட்டை விட்டே ஒடிஞள். எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்தாள். தியாகங் களைச் செய்தாள். ஆனல் இறுதியில் தந்தை திருமணம் செய் வதால் சிக்கல்கள் ஏற்படுமென்பதுதான் அந்த முடிவு. பார்க் கப்போனல் தந்தையும் மகளும் ஒரே முடிவுக்குத்தான் வந் திருக்கிருர்கள்.
... 76 ...

பால: (சிரித்து) இராமலிங்கம் நீ அகடவிகடமாய்ப் ப்ேசினலும் அதில் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறதப்பா. புரட்சிக்காரியும் பிற் போக்குவாதியும் கடைசியில் ஒரே முடிவுக்கே வந்திருக்கிருர்கள் என்கிருய், அப்படித்தானே? !
இரா: அந்த வேடிக்கையைத் தான் என்னல் சகிக்கமுடியவில்லை. ஆனல் உன்ரை திருமணம் முதலில் தடைப்பட்டதுக்கும், பின்னல் தடைப்பட்டதுக்கும் ஒரே ஆள்தான் குற்றவாளி எண்டு நான் நினைக்கிறன். ή.
சிவ: எப்படி? முதல் தடவைக்கு நான் காரணம்? இரண்ட்ாவது
தடவைக்கு மீனு காரணம்.
பால: ஆமாம்.
இரா: இல்லை. கிடையவே கிடையாது. மூன்ரும் நபர் ஒருவர் தான்
இதற்கெல்லாம் தடையாயிருக்கிருர்.
பால: நீ சொல்லுறது புதிராயிருக்கே. ஆரப்பா அது? இரா: கடவுள்
பால: உனக்குத்தான் கடவுள் நம்பிக்கை கிடையாதே.
இரா: அதெப்படி இருந்தாலும் கடவுள்தான் இந்தக் கலியாணத்தை இரண்டு முறையும் தடை செய்தவர். இந்த வாழ்க்கை நாடகத் தின் வில்லனே கடவுள் தான். சிவப்பிரகாசம்பிள்ளையுமல்ல மீனுவுமல்ல.
பால; என்னப்பா கடவுளின்ரை தலையிலை இப்படிப்பெரிய பாருங்
கல்லைத் தூக்கிப் போடுகிருய்?
இரா: ஏஞ? கடவுள் பெயராலேதான் வெவ்வேறு மதங்கள் தோன்றி யிருக்கின்றன? இம்மத வேற்றுமைகள் இல்லாவிட்டால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றிருந்தால் சிவப்பிரகாசம்பிள்ளை யைத்தான் இந்தத் திருமணத்துக்கு உலை வைத்திருப்பாரா? அல்லது மீளுதான் தன் திருமணத்தை தானே தடுத்திருப்பாளா?
சிவ: டாக்டருக்கு எப்பொழுதுமே விகடந்தான், உண்மையிலேயே விகடராமன் தான். சரி அது போகட்டும் (பாலச்சந்திரனைப்
பார்த்து) உன் எதிர்காலத்திட்டம் என்ன தம்பி?
... 77 . . .

Page 47
பால: என் எதிர்காலத்திட்டமா?, என் எதிர்காலத்திட்டம் ஒன்று தான். மீனுவுக்காகக் காத்திருப்பது எனக்கென்னவோ மீனு எங்களை விட்டுப் போய்விட்டாளென்ற எண்ணமே வருவதில்லை. மீண்டும் அவள் எங்களிடம் வருவாள். இந்தப் பிறவியிலே இல்லாவிட்டாலும் அடுத்த பிறவியிலையாவது
(திரை மூடித் திறக்கிறது)
மேடையின் பின் பாகத்தில் இடது மூலையில் பெரிய திருச் சிலுவை ஒன்று சற்று உயரமாகக் காட்சியளிக்கிறது. அதே போல் வலது மூலையில் பெரிய சிவபெருமான் சித்திரமோ சிலையோ காணப் படுகிறது. இமயமலை உச்சியில் அவர் அமர்ந்திருப்பது போன்ற காட்சி. மேடையின் முன்பாகத்தில் வலது கோணத்தில் மீஞ கன்னி யாஸ்திரி வேடத்தில் சிலுவையை நோக்கி முழந்தாள் மடித்து வணக்கமாக இருக்கிருள். அதே போல் சந்நியாசி உடையில் பாலா உச்சி மீது இரு கரம்குவித்து சிவனை நோக்கிப் பிரார்த்தனைக் கோலத்தில் நிற்கிருன். சபைக்கு முதுகு காட்டியிருக்கும் இருவர் மீதும், சிலுவை அடியிலும் சிவன் முடியிலும் இருந்து இரண்டு ஒளிக் கற்றைகள் புறப்பட்டு வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக் கின்றன. கிறிஸ்தவ கீதமும் ஓம் சிவாயநம ஒலியும் இணைந்து இசைக்கின்றன. மெதுவாக இசையும் ஒலியும் தேய்ந்துவர திரை சிறிது சிறிதாய் மூடுகிறது.
(முற்றும்)
CCs

பக்: 55ல் வரும் கேள்வி பதில்கள்
தெரேசா பாவங்கள் எத்தனை வகைப்படும்? மீனு: ஜென்ம பாவம், கன்ம பாவம் என இரு வகைப்படும்.
தெரேசா : சென்ம பாவம் என்ன?
மீனு: ஆதித்தாய் தகப்பன் கட்டிக் கொண்ட பயணுகச் சென்மத்தின்
வழியாய் மனிதருக்கு வருகிற குறையே சென்ம பாவம்.
தெரேசா கன்ம பாவம் ஆவது என்ன?
மீன: அவரவர் புத்தி விபரம் அறிந்த பின் மனம் பொருந்திக்
கட்டிக் கொள்ளும் பாவமே கன்ம பாவமாம்.
தெரேசா பாவங்களைப் பொறுக்க யாருக்கு அதிகாரம் உண்டு?
மீனு: இவ்வதிகாரம் சர்வேஸ்வரனுக்கே உண்டு. யேசுகிறீஸ்து நாதர் தேவஞனபடியால் அவருக்கும் இவ்வதிகாரம் உண்டு.
தெரேசா. யேசு கிறீஸ்துநாதர் பாவங்களை ம ன் னி க்கு ம் அதி
காரத்தை யாருக்கு கொடுத்தருளினர்?
மீன: தமது திருச்சபைக்கு மாத்திரமே அவ்வ தி கா ரத் தை க்
கொடுத்தருளினர்.
... 79 ...

Page 48
மத மாற்றம்
(1967-ல் அரங்கேறியவேளை நடித்தவர்கள்)
சிவப்பிரகாசம் செல்லாச்சி
மீனு,
ஜோசப் இராமலிங்கம் தெரேசா வேலாயுதம் தேவசகாயம் கந்தையா போலீஸ் இன்ஸ்பெக்டர் சைவச் சாமியார்
கத்தோலிக்கப் பாதிரியார்
சங்கர வேலுப்பிள்ளை
ஆனந்தி சூரியப்பிரகாசம் பத்மநாதன் சில்லையூர் செல்வராசன் மஞ்சுளாதேவி வீ. எஸ். இரத்தினம் சிவபாதசுந்தரம் சங்கரசிகாமணி
கிறிஸ்டி இரத்தினம்
முத்தையா இரத்தினம்
முத்தையா இரத்தினம்
மரியதாஸ் சுரேஷ் சுவாமிநாதன் தந்திச் சேவகன் லடிஸ் வீரமணி
நெறியாள்கை: நடிகவேள்
லடிஸ் வீரமணி
தயாரிப்பு:
காவலூர் இராசதுரை


Page 49
அ. ந. கந்தசாமி தாளர்களில் ஒருவர். நாடகம், இலக்கிய ஆகிய துறைகளிலெல் ஆற்றலும் 凸、f。 கேசரி, பூரில்ங்கா, ! லாம் ஆசிரிய பிட புதுமை இலக்கியத்தின் வராக இருந்தவர், !
தாளர் சங்கத்தின் திகழ்ந்தவர் எழுத்தி சிலும் விவாதத்திலும் ஆங்கிலமும் அவர் பெற்றிருந்தார்.
மதமாற்றம் என்ற இலக்கிய உணர்வுக்கு லுக்கும் சிறந்ததோர்
1967 ஆம் ஆண்ட் கில் 4 வது தடவ்ைய பட்டது. அன்று நாட நி3 தமிழ்ப் பத்திரி பும் இந்நாடகம் பெ. நாடகம் நிலத்திருக்கு தவருது உணர்ந்து
rail.
குமரன் அச்சகம், 20
 

இலங்கையின் மூத்த எழுத்
கவிதை, சிறுகதை, நாவல்,
விமர்சனம், அரசியல் ஆய்வு
லாம் புலமையும் திறமையும் தேசாபிமானி, சுதந்திரன், வீர பியூன் ஆகிய இதழ்களிலெல் ங்களில் இருந்தவர். ஈழத்துப் 量 ஆரம்ப கர்த்தாக்களுள் ஒரு இலங்கை முற்போக்கு எழுத் முன்னுேடிகளில் ஒருவராகத் ல் மட்டுமல்ல மேடைப் பேச் வல்லவர் தமிழ் மட்டுமல்ல எழுதவும் பேசவும் ஆற்றல்
இந் நாடகம் அன்ஞரது கலே, ம் அறிவுக்கும் படைப்பாற்ற எடுத்துக்காட்டாக அமையும்,
ல் கொழும்பு லும்பினி அரங் இந்நாடகம் அரங்கேற்றப் டக விமர்சகர்கள், தேசிய ஆங் கைகள் அனேவரது பாராட்டை ற்றது. இன்றும் என்றும் இந் ம் என்பதைப் படிப்பவர்கூட கொள்வர் என்பதில் சந்தேக
1, டாம் வீதி, கொழும்பு-18