கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வேளாண்மை

Page 1
நீலாவணன்
1931ற் பிறந்த நீலாங்ணன் 1932ல் 'பிராயச்சித்தம் iਈ। எழுத்துங்கிற் பிரவேசித்தார். -S['#...'); ஆண்டே ஒபடவிருெைதன்ன்ே ாே என்ற கவிதை E FIT-TAJ EFIT சிற்று அன்று தொடக்கம் 5 இாற்கை எய்தும் பென் விருருகவே ਨੂੰi பல்வேறு இந்ாேத் ஆவிதி
களிற் கை வைத்திருப்பினும் கவிஞனுக அவரது பங்க்ரிப்பு
- மிசித்தாவது வழி இது ரது முதலாவது கவிதை நூல்
சங்கத்தே தாபித்து அதன் தஃரைா ஆப் LEயாற்றிய நீாவான், ஆங்கு தன்கேற்றி ஓர் கவிதா பண்டத்தையே சிருட்டித்தார் ஈழத்தின் எந்தப்
பிராந்திபதி நரம் நத்த: விஞர் இனக் கீல் ஆஃன்பிற் போது
காணமுடியாது. அதன் காரணகர்த்தா நீங்ாவின்ன்ே.
பிறந்து ஊரிற்கொண்ட பாசித்தால், டெரி ரீனா ஃாயிற் பிறந்தவரன் சின்னத்துரை நீள் வான் ஆனுர், தந்தையாரும் இலக்கிய ஆர்வலர் சித்த வைத்தியர்
ஆஒல் இன்று கோப்பிள்:ா சின்னத்துரை என்ற நீலாவணன் கிழக்கிலங்கையின் தலைமகன் சிந்து கவிதைபு 鼩品品 அவருக்கு நிரந்தரமான இடம் உண்டு.
FFUPHT36
அமுத அச்சகம், |-
 


Page 2

வேளாண்மை
(குறுங்காவியம் )
நீலாவணன்

Page 3
வேளாண்மை
(குறுங்காவியம் )
ஆசிரியர்:-
நீலாவணன்
முதற்பதிப்பு:-
1982 GlsúLiouí
af2): 15/-
அச்சுப்பதிவு:-
அமுதா அச்சகம் மூதூர்.
வெளியீடு:- தங்கம் வெளியீடு : மூதூர்.
அட்டைப்படம்:-
நிர்மல்
உரிமை :-
திருமதி, நீலாவணன்

பதி -
மகாகவி இக்பாலின் நூற்ருண்டு விழாவை யொட்டி பூவரசம் பூ என்ற அவரது காவியத்தின் மொழி பெயர்ப்பு எமது முதல் விெளியீடாக வந்தது.
புத்தகம் போடுவதற்கான பொருட்களின் விலையேற் றம், இறக்குமதியாகும் நூல்க ளேடு போட்டி போட முடி யாத நிலை, கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழ் நூல்கிளுக் கான சாஹித்ய மண்டலப் பரிசைத்தானும் கொடுக்காத அர சின் உதாசீனம் ஆகிய காரணங்களால் எமது அடுத்த வெளி யீடு இது வரை வெளி வரவேயில்லை. பெரிய நிறுவனங்களே தயங்கும் போது நாம் எம்மாத்திரம்?
ஆயினும் மகாகவி பாரதியின் நூற்ருண்டு விழாவுக் காவது ஒரு நூலை வெளியிட வேண்டும் என விழைந்தோம். பாரதியின் வழி நின்று பழகு தமிழிற் கவிதை எழுதிய நீலா வணனின் வேளாண்மையை வெளியிடும் வாய்ப்புக் கிடைத்தி ருக்கிறது. இதற்கான வாய்ப்பை எமக்களித்த திருமதி நீலா வணன் அவர்களுக்கு எம் நன்றி.
தொடர்ந்து வருடம் இரு நூல்களையாவது வெளிக் கொணர உத்தேசித்துள்ளோம். இலக்கிய சுவைஞர்கள் எமக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேம்.
வணக்கம்.
நிர்வாகி, தங்கம் வெளியீடு, &pgin ữ. 1 - 9 - 82.

Page 4
முன்னுரை
நீலாவணனின் வேளாண்மை யைக் கையெழுத்துப் பிரதியாகப் படித்து, நான் பெற்ற இன்பத்தைச் சிந்தாமணி" மூலம் சுவைஞர்களோடு பங்கிட்டுக் கொண்டது Uலி*ே9 நினைவிருக்கலாம்.
* ஆபிரம் முக ந் தான் அகன்ற " அப்பனுவலுக்குப் பாயிரம் எழுத வேண்டிய சுமையும் தற்போது என் தலையில் விடிந்திருக்கிறது.
அச்சுமையின் அழுத்தத்தில் நீலாவணன் இன்றிருந் தால் தனது "வேளாண்மைக்கு எப்படி முன்னுரை எழுதுவார்? என்று என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன். புனித ஆாக்கா தன் நற்செய்திக்கு எழுதிய முன்னுரைதான் என் நினைவில் வருகிறது.
"மாண்புமிக்க தெயோப்பிலுவே! நம்மிடையே நிறை வேறிய நிகழ்ச்சிகளைத் தொடக்க முதற் கண் கூடா கக் கண்டவர்கள், தேவ வார்த்தையின் பணியாள ராகி நம்மிடம் ஒப்படைத்துள்ளனர். ஒப்படைத்த வாறே அவற்றைப்பலர் நிரல்பட் எழுத முயன்றுள்ளனர்.
அப்படியே நானும் யாவற்றையும் நுணுகி ஆய்ந்தறி ந்து, நீர் கேட்டு அறிந்தது உறுதியெனத் தெளியும் பொரு ட்டு முறையாக வரைவது நலமெனக் கண்டேன்."
தனது மாண்புமிக்க வாசகர்களுக்கும், நீலாவணன் இப்படித் தான் முன்னுரை எழுதுவார் என்று எனக்குத் தோன்றுகிறது.
ஏனென்ருற் பொறிகாணலவனெடு மீனமுங்குறை யாச் செறிமாண் கழிசூழ் புளியந்துருத்தி மட்டக்களிப்பை யும், " காவும் பொழிலும் கழிமுகமும் புள்ளனிந்த ஏரியும் மல்கி"ய அதன் வனப்பையும் நிரல் பட எழுத பலர் முயன்றுள் ளனர்!

ஆனற் கவிஞர் நீலாவணனே யாவற்றையும் நுணுகி ஆய்ந்தறிந்து முறையாக வரைந்திருக்கிருர்’ என்று துணிந்து கூறுவதற்கு எந்தத் தயக்கமுமே எனக்கில்லை.
fo கவிஞர் நீலாவணன் 1975 வரை நம்மோடு வாழ்ந்த வர். அவர் வாழ்ந்த காலத்திலேயே வேளாண்மைச் செய்கை இயந்திர மயமாகி, முதலிட்டு இலாபம் பெறும் வியாபாரமா கவும் மாறியிருந்தது.
ஆனற் கவிஞரது "வேளாண்மை யில் இயந்திரக்கலப் பைகள் இல்லை. ஏன்? துவிசச்சர வண்டி கூடக் கிடையாது சூட்டுக்களத்திலே வேலை செய்தவர்களுக்கும், மற்றைய குடிமக் களுக்கும் நெல்லே கூலியாகக் கொடுக்கக்படுகின்றது. கதை யிலே, விதானையார், உடையைர் போன்ற பழையவர்களே” வருகிருர்கள்.
இப்பண்புகளைப் பார்க்கும் போது, தமது சமகாலத்து க்கு முன்னுல் நடைபெற்ற சம்பவங்களைப் புனித லூக்காவைப் போலத் திட்டமாக விசாரித் தறிந்து தான், இக்காவியத்தை நீலாவணன் பாடியிருக்கிருர் என்பது தெளிவாகிறது.
ஆகவே இக்காவியத்தின் மூலம், இபந்திர நாகரீகத் தrற் "கற்பழிந்துவிடாத" மட்டச் களப்பின் குமரியழகையும், மட் டக்களப்பாரின் "விருந்திருக்க உண்ணுத வேளாண்மைத் தன த்தை " யும், வெளியுலகிற்குக் காட்டத்தான் நீலாவணன் ஆசைப்பட்டிருக்கிருர் என்பதும் துலாம்பரமாகிறது.
தான் "ஆசை பற்றி அறைய வந்ததை, நீலாவணன் கம்ப காம்பீர்யத்தோடு விருத்தப்பாக்களாற் பாடியிருக்கிறர். மட்டக்களப்பின் பழகு தமிழ்ச் சொற்கள் அவரின் கவிதா காம்பீர்யத்துக்குக் கைகட்டிச் சேவகம் புரிந்து, இலக்கிய அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன ஏடறியாப் பெண்களும் கவி இசைக்கும் தெற்கு மட்டக்களப்பின் கவிவளம், இக்காவியத் தில் இலக்கணக் கரைகளுக்குளடங்கிச் சான் ருேர் கவியெனக்

Page 5
கிடந்த கோதாவரி யாகப் பாய்கிறது?
இக்காவியத்தின் கதை ஓட்டத்தைப் பற்றியோ காவிய அமைப்புபற்றியோ, கடுக்கனிற் பிடித்த சால்வையைக் கழற்றி எடுப்பது போன்ற சின்னஞ்சிறு சம்பவங்களை க்கூட்டக் கலாநேர்த்தியுடன் சொல்லும் திறமையையோ, கரவியத்துக்கு அழகூட்ட அவர் கையாளும், உவமை, உருவகம், தற்குறிப் பேற்றம் போன்ற அணிநலன்களையோ விரித்துஎழுத இம்முன் னுரையில் இடம் இல்லை. நீலாவணன் கவிதைகளை ஆய்ந்து கலாநிதியாகும் அந்த வாய்ப்பைத் தமிழ் செய்யும் மாண வன் ஒருவனுக்கு விட்டு வைக்கிறேன்.
ஆனலும் ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். சூடு மிதிப்பதும், சூட்டிலே பொலிந்த தானியமணிகளை வீட் டுக்குக் கொண்டுவருவதும் எல்லா விவசாய நாடுகிளிலும் நட ப்பவைதாம். பல்வேறு நாட்டு இலக்கியங்களில் அவைகளைப் படித்து அந்தந்த நாட்டு விவசாயிகளின் உலகப்பொதுவான மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் கண்டு இரசித்திருக்கிறேன்.
மேலைநாட்டு இசைமேதையான பெத்தோவனின் இசை ஒன்றைக் கேட்கையில் அந்த ஜெர்மானியச் சாஹித்ய கர்த்தா வின் மொழியைப் புரிந்துகொள்ளா விட்டாலும் அந் நாட்டு விவசாயிகளின் களிப்பையும் பெருமிதத்தையும் என்னல்உணரி அதுமுடிகின்ற.
இக்காவியத்திலே சூடுமிதிக்கையிற் பாடப் படும்
வாரிக்காலா ஓ . ஒ , ஒ, வளைந்த கொம்பா ஒ . ஒ. ஒ,
ஏறிப்போ ஏறிப்போ ஓ, எந்தாயே பூமித்தாயே, ஊரிலே பஞ்சமோட, உன்மடி பொலியோ ஒ , ஓ, சாரிலே நடம்மா தாயே, சந்தானம் பொலியோ ஒ . ஒ.
என்று தொடங்கும் பாடல்களை இசையோடு பாடினுல், தமிழ் மொழியை அறியாதவர்கள் கூட மட்டக்களப்பு விவசாயிகளின்

பெருமிதத்தையும் டெருந்தன்மையையும் புரிந்து கொள்வார்கள் என்பதில் ஜயமேயில்லை. இறுதியாக,
“எளிய பதங்கள், எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந் தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையு டைய காவியமொன்று தற்காலத்திற் செய்து தருவோன் தமிழ்மொழிக்குப் புதிய உயிர் தருவோணுகிருன், ஒரிரண்டு வருடத்து நூற்பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக் குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும். *
என்பது பாரதியின் கட்டளை. அதனை ஏற்று. தமிழ் மொழிக்கு அழியாத உயிரும், ஒளியும் இயலுமாறும், நூறு நூறு ஆண்டுகளுக்கும் பின்னல் வரும் நம் சந்ததியினர் மட் டக்களப்பை த் தரிசிக்குமாறும் அழகான காவியத்தைத் தந் திருக்கிருர் கவிஞர் நீலாவணன். பாரதி நூற்ருண்டிலே இக் காவியம் வெளிவருவது சாலப் பொருத்தமே.
இக்காவியத்திற்கு முன்னுரை எழுதும் பேற்றை என க்களித்த கல்முனை இலக்கிய ஆர்வலர்களுக்கு - குறிப்பாக மரு தூர்க் கொத்தன், சடாட்சரன், டக்ரர் முருகேசபிள்ளை - ஆகி யோருக்கு என் நன்றி.
வணக்கம்.
வ. அ. இராசரத்தினம் திரிகூடம். மூதூர், 10- 9- 82,

Page 6
வேளாண்மை
பொருளடக்கம்
1. குடலை Läs 9
2. கதிர் Luis 59
す

குடலை
உணவுண்டார் கந்தப்போடி
ஆரங்கே? பொன்னம்மா உன் அடுப்படி அலுவல் ஆச்சா? நேரமும் கடந்து போச்சே! நீ என்ன செய்கின்ருய்? போய் சோறெடு, சிவசிவா ... ஏய் சுரைக் காயை என்ன செய்தாய்? நீறினை நெற்றி யிட்டு நெஞ்சினை வயலில் விட்டு சோருெடும் மீனைப்பிட்டுச் சுவைக்கின்றர் கந்தப்போடி
சோக்கான கறிகா! தோலி சுண்டலில் வை; முன் னுல் நான் கேட்காமல் அள்ளி வைப்பாய், கிழவனுய்ப் போனேன் பாரு! காக்கையேன் பகல் முழுக்கக் கறுபுறுக்கிறதோ? சேதி கேட்கவோ, வீட்டுக் காரும் கிளை வழி வருகின் ருரோ?.
அள்ளிவைத்தாலும் சண்டை அளவுக்கு வைத்தால் கேலி துள்ளுவீர் குமரன் போல! தோளுக்கு மூத்த பிள்ளை செல்லையா பசியில் மாய் வான் செல்லங் கொஞ்சுதற்கா நேரம்? சொல்லுங்கள்; குழம்பா? வெள்ளைச் சொதியிலா? தயிரும் உண்டு.

Page 7
கோடிக்குள் இதரை வாழைக் குலையிலே பழங்கள் ஆய்ந்து சாடியில் தேனைக் குஞ்சுச் சட்டியுள் வார்த்து, பாலும் ஒடியே கொண்டு வைத்து உட்கார்ந்து, நமது கந்தப் போடியார் மனைவியான பொன்னம்மா புழங்கு கின்ருள்
பொன்னம்மா வியளம் சொன்னுள்
அண்ணனின் இளைய பெட்டை அன்னம்மா சமைந்த தாக வண்ணுர வயிரன் பெண்டில் வழியிலே சொன்னுள் என்று பொன்னம்மா சொல்ல, கந்தப் போடியார் விசள மேதும் கொண்ணன் வீட் டார்களிங்கு கொண்டுவந் தாரோ? என்ருர்
வயல்வழக் காடித்தோற்ற வயிரம் போல் அவர்க்கு நம்மேல்! அயலெல்லாம் சொல்லிப் போனுர் ஆயினும் இங்கே யொன்றும் வியளங்கள் இல்லை, என்ருள்: வேறென்ன செய்வார் நம்மை? பயறிலே கல்லாய்ப் போனுேம்! பதறினர் கந்தப்போடி.
O

கையினை வட்டிக் குள்ளே கழுவி, ஒர் செம்பு நீரைப் பெய்து வாய் தீட்டி, ஈர்க்கில் பிய்த்த வா றேப்பம் விட்டு செய்கிறேன் அவர்களுக்குச் தீக்கிரம் வேலை என் சொல் பொய்யில்லை! என்று கந்தப் போடியார் புளுங்கிச் சொன்னர்,
மண்டபத் துள்ளே வந்தார், மாடத்திலிருந்த வட்டா கொண்டுமுன் வைத்து, ஒலைக் , குட்டானில் வயலுக்குள்ளே கொண்டுசெல் வதற்காய், பாக்கு, வெற்றிலை சுண்ணும் போடு
உண்டென வைத்து மூடி அவர் கையில் தந்தாள் பொன்னு,
நமக்கென்ன நட்டம்?. இல்லை நாமங்கு போவதாலே சுமக்கின்ற பெருமை யென்ன? சுண்ணும்பை விரலில் தொட்டு கம கமக் கின்ற கைப்பும் கலந்து கை கசக்கித் தந்து, சமன் செய்து போடியாரைச் சாந்தமாக் கிஞள்பொன் னம்மா
11

Page 8
கறுப்பன் சீனட்டி நெல், நம் கையினல் வடித்த எண்ணெய் கருப்பட்டி, உழுந்து முட்டை கடையிலே மஞ்சள் மட்டும்! * பொருப்பத்தி வாங்கி வைத்தேன் பொடிச்சிக்குக் கொண்டு போக விருப்பில்லை அவர்களுக்கு;
விட்டுத்தள் ஞங்கள் என்ருள்.
அன்னம்மா அழகிதான்; இங் கார்வந்து முடிப்பான் பார்ப்போம்! * பொன்னம்மா, Lingp/695 Trói) • • • • • • கொண்ணன், பொடியனைக் கேட்டுக் கீட்டு என் வீட்டுப் படியில் வந்து ஏறட்டும்? எழிய நாய்கள்! " சன்னதம் எழுந்தாற் போலக் கறுவினர் கந்தப்போடி,
வண்டி டிறப்பட்டது
கொண்டையென் றிருந்த, குஞ்சுக் குடுமியை உதறிக் கட்ட வண்டியும் வாசலுக்கு வந்தது: வண்டிக் காரச் சண்டியன் சாமித்தம்பி, * சரி இனிப் புறப்பட் டாற்ருன் கண்ணுக்குள் இருட்டும் வீழக் களத்துக்குப் போவோம் " என்ருரன்
2

கடுக்சனில் பிடித்த சால்வைக் கரையினைக் கவன மாக எடுத்துப்பின், சோற்றுப்பெட்டி ஏனங்கள் ஏற்றச் சொல்லி எடுத்தடி வைத்தார் கந்தப் போடியார்; எதிர்பாராமல் கடப்படி மாவில் நின்ற காக்கையோ, சனியன் சிச்சீ
போச்சுது சால்வை என்று போடியார் உத்ற, "என்ன ஆச்சுது? வெள்ளைப் பீதான் அது நல்ல சகுனம்? என்ற கூய்ச்சலைக் கேட்டுத் தண்ணீர்ச் செம்பொடும் பொன்னு வந்தாள் சாச்சச்சா பொழுதும் நல்லாய்ச் சாய்ந்ததே! என்ருன் சாமி.
தொந்தியை முன்னே தள்ளி, தொடர்ந்து தம் முடம்பை வைத்துக் கந்தப்போடியாரும் வண்டிக் கடைசியில் ஏறிக் கொண்டு குந்தினர் வைக்கோல் மெத்தை குனிந்தது; காத்து நின்ற சந்தனக் காளைச் சோடி சதங்கையைக் கிலுக்கும் ஆட்டி
13

Page 9
ஏறினன் சாமி கேட்டி எடுத்தவை முதுகில் நாலு சாறினன். மூக்கணத்தைச் சரி செய்து, நடங்கோ; சொல்லை மீறிருல் முதுகுத் தோலை மிச்சமாய் வையேன் என்ருன் பாறுகால் எருதிரண்டும் பாய்ந்தன வயலை நோக்கி
மச்சாள் வந்தாள்
வண்டிபோய் கோயிற்பாதை வளைவிலே மறையுமட்டும் நின்று பார்த் தலுவல் எண்ணி நேரமாச் சென்று பொன்னு மண்டபத்துள்ளே போன மறுகணம் நாய்குரைக்கக் கண்டனள் எட்டிப்பார்த்தாள் கனகம்மா நான்தா னென்ருள்.
வாமச்சாள், வாகா உள்ளே! வழியிலே நாங்கள், கள்ளி ஊமத்தை நட்டா வைத்தோம் உறவெல்லாம் போச்சே மச்சாள் சேமத்தை விசாரிக் காதே சிணுங்கினுள் பொன்னு; "சும்மா போமச்சாள் கனகம் மாதன் புன்னகை மொழியால் சொன்னுள்
14

என்னவோ.. கனகம்! வா வா இப்படி வந்து உட்கார் என்று கற் பன்னில் பாயை எடுத்தங்கு விரித்துப் பொன்னு சென்றனள் உள்ளே வட்டா செப்பமாய்க் கொண்டு வைத்து ஒன்றுண்டு அலுல லென்றே ஓடினுள் அடுப்படிக்கு.
கோப்பையில் பழம், பண்டங்கள் கொண்டு செம்போடு வைத்து
சாப்பிடு மச்சி யென்று சந்தோஷம் பொங்கக் கூறி, கோப்பியும் கொண்டுவந்து கொடுத்த பொன் னம்மா நிற்கக் கூப்பிட்டு அருகில் வைத்தே கூறுவாள் கணகம் செய்தி.
மருமகள் அன்னம் புத்தி அறிந்தனள் மற்றவர்க் கெம் கருமங்கள் செய்யும் பெத்தா கண்ணியை விட்டுச் சொன்னுேம் உரிமைக் காரருக்கு மட்டும் ஒருத்தி நான் சொல்ல வந்தேன் சரி மச்சி வருகிறேன் போய், தலைக்குமேல் அலுவல் உண்டு,

Page 10
வெற்றிலை போட்ட பாதி வெளிக்கிட்டாள் கனகம், கொண்ணர் சற்றுமுன் தானே போனர் சரியான கோபத்தோடு எத்தனைக் கென்று நீயும்.? என்று பொன் னம்மா சொல்லக் குற்றத்தைப் பொறுப்பீர் என்று கூறியே கனகம் போனுள்.
பொழுது போனது:
படுவானில் குருதிச் சேற்றில் பரிதி போய் விழவும், கண்டு கடுகேனும் கவலை யின்றி கதைபல பேசி " இன்ப மடுவில் தேன் வாழ்க்கை " யென்றே மகிழ்ச்சியில் கூவி, நீண்ட தொடுவான இலக்கில் நீந்தும் தூயவெண் பறவைக் கூட்டம்.
* குடுபோ டுதற்காய் நேற்றுச் சொல்லிய ஆட்கள் வந்தார் மாடுகள் தொடுக்க வேண்டும் மகிழடிக் குளத்துக் குட்போய்! காடு பற்றியது போலக் கதிரவன் மேற்கே சாய்ந்தான் வீடுபோ யிருக்கும் அப்பன் விசர்! இன்னும் திரும்ப வில்லை!
16

பரணிலே ஏறி நின்று பார்த்த செல்லையா, துரத் துறையடி வழிப்பா டன்றி துள்ளிப் பாய்ந்தோடி யோடி வருகிற வரத்தில், காய்ந்த வழியிலே புழுதிக் குன்றில் மறையுமோர் வண்டி கண்டு மனதிலே தெம்பு கொண்டான்)
தூரத்தே சதங்கை நாதம் தூறுதல் கேட்டு, மீண்டும் பார்வையைச் செலுத்த, வண்டி * பாவங்கை " வழியில் கண்டான் ஆரது அப்பன் தானு? ஆம்; கூட, சாமி! வண்டிக் காரன்தான் அரக்கு மாட்டைக் கட்டவும் ஏற்ற ஆள்தான்,
இறங்கினுன் பரஃண விட்டு ஏய்தம்பீர் செல்3ல யா. டேய் பறந்து வா இங்கே, வண்டி பாவங்கைச் சுரியில் நல்லாய் இறங்கிற்று! கந்தப்போடி இப்படிக் கத்த, கொஞ்சம் இறங்கித்தான் நடந்தாலென்ன? என்றங்கு விரைந்தான் செல்லன்.
7

Page 11
போன போக்கினிலே கந்தப் போடியார் கையைப் பற்றி, ஏனப்பா சுணக்கம்? என்று இறக்கி நேர் வரம்பில் விட்டான். கூனிப்போய் நின்ற வண்டி, * கொள கொள வென்று சேற்றில் தானுக நடக்கச், சாமி தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்.
வண்டியை விட்டுப் பாதை வரம்பிலே குதித்தான் சாமி கொண்டு வந் துள்ள சாக்குக் குஞ்சுவாய் மரக்கால் லாம்பு வெண்கலக் குடம் நீ ரோடு, வெற்றிலை உமல், சாராயம் இன்னின்ன பொருளி தென்று இறக்கியும் கீழே வைத்தான்.
இறக்கிய பொருளொவ் வொன்முய் எடுத்துப் போய்க் குடிலுக் குள்ளே முறைப்படி வைத்தான்; சோற்று மூட்டையை எடுத்த செல்லன் அரக்கனைப் பிணைக்கப் போனேன். அடங்காத பிடாரி மாடு துரத்தப் பார்த் தது; போய் நீதான் தொடுத்துவா சாமி என்ருன்,
18

மாட்டினை உருவிக் கொண்டு மடுவில் நீர் காட்டி, வைக்கோல் போட்ட பின் கணுவில் கட்டி, புகையிலை கிள்ளி, பல்லைத் தீட்டி உள் திணித்த சாமி செல்லனைப் பார்த்துத் தம்பி கேட்டியா சேதி உன்றன் கிளியல்லோ சமைந்த தென்றன்
ஆரைடா சாமி நீ போய் அவனது கிளியாள் என்ருய் பேரையே மாற்றி வைப்பேன். பெருங்கொலை நடக்கும்; இந்த ஊரெலாம் சொன்னுர்; நானும் ஒருவனங் கிருந்தேன்; என்று பீரங்கிக் கந்தப்போடி, பெருங்குர லெடுத்துச் சொன்னர்.
விட்டுத்தள் போடியாரே. விசளம், நாம் வந்த பின்னல் கிட்டியும் இருக்கக் கூடும் கேவலம்! இதற்காய்ச் சொந்த ஒட்டுற வறுத்துக் கொண்டால் ஊரெல்லாம் என்ன சொல்லும்! பெட்டையும் கிளிதான்; சொத்துப் பெருஞ் சொத்தே யென்றன் சாமி.
جید
19

Page 12
வலியவந் தெனக்கு மாருய் வழக்காடித் தோற்ற கோபம் அழகிப் போடிக்கும் பெண்டில் அவளுக்கும்! பழி யார் மேலே? எழியவன் எனக்கும் சொன்னுல் என்னவாம்? செல்லனுக்கு கலியாணம் பாண்டி யூரில் கணபதிப் போடி வீட்டில்!
செய்யாது போனல் என்னைச் செருப்பெடுத் தடிடா சாமி பொய்யில்லை யென்று கந்தப் போடியார் செருமக் கண்டு, கையிலே கயிறும், மற்றக் கமுக்கட்டில் கேட்டி யோடும் ஐயையோ என்ற சாமி அரக்கனைப் பிணைக்கப் போனன்,
என்னடா யோசிக்கின்ருய்? எழுந்து போய்ச் சோற்றைத்தின்னு பின்னலே தெரியும்! கூடப் பிறந்தவள் இவளா? சொந்த அண்ணணை மதிக்க வில்லை. அறிவு கெட்டதுகள்! இந்: அன்னத்தை போலே ஊரில் ஆயிரம் பெண்க ளுள்ளார்,
20

தயிரில் அன்னம்
அப்பனின் கோபம் வீட்டில் அம்மைக்கும் அடியோ? செல்லன், இப்படி நினைத்துக் கொண்டு எழுந்துப் போய்க்குடிலுக்குள்ளே செப்பிச் சட்டிக்குட் சோற்றைத் திறந்ததும், தயிர்ச் சட்டிக்குள் * எப்படி மச்சான் என்றே இளித்தனள் அன்னம் நின்று.
ஊருக்குள் மேட்டு வட்டை உழுதுகொண் டிருந்த போது ஆருக்குச் சோற்றுப் பெட்டி அடியன்னம்? என்று கேட்க ஆருக்கென் அப்பனுக்கு! அதுந் தெரி யாதா? என்று போருக்கு வந்தென் னுள்ளே புகுந்தவள் நீயா அன்னம்!
மார்புக்குள் இருக்கும் பிஞ்சு மாதுளங் காய்கள் ரண்டும் ஆருக்கு? என்னக் கோபித் தையையோ வம்பூ! என்று நேருக்குப் பார்த்த கண்ணை நிலத்திலே புதைத்து விட்டு மேலுக்கு விரலால் சீய்த்து மிரண்டவள் நீயா அன்னம்?
21

Page 13
குருவிக்குத் தகரம் கட்டி கூய்யெனத் துரத்து மென்றன் அருகிலே, மடியை மெல்ல அவிழ்த்தவல் அள்ளி என்முன் தருகையில் கையைப் பற்றத் தடுக்கியே வரம்பில் சாய்ந்தாள்! இருகையால் துக்கிக் கொஞ்ச, இடித்தவள் நீயா அன்னம்
கோபமா மச்சான்? என்று குறுநகை புரிந்து, என்ன ஆவலோ டுற்றுப் பார்த்து அதோ அந்த விரிந்த அல்லிப் பூவினைப் பறித்துத் தா; நான் போகவும் வேண்டும், என்ற பூவர சீன்ற கன்னி பூத்ததாம் மெய்யா அன்னம்,
போட்டாவின் வரம்பால் வெள்ளைப் புருவொன்று நடந்தாற்போல நாட்டிய மாடி வந்த தளினத்தைக் கண்டு, சத்தம் , போட்டொரு வரால்மீன் துள்ளிப் *பொக் கென நீரில் பாய்ந்து ஓட்டமாய் ஒட அஞ்சி ஒடிய அன்னம் நீயா!
22

மனதுக்குள் இவ்வாறெல்லாம் மறுகிய செல்லன், அப்பர் சினத்தினை எண்ணி மேலும் சிந்தனை வசத் தனய், இக் குணத்தினை மாற்ற என்னுல் கூடுமா என்ரு ராய்ந்து கணத்திலே வெளியே வந்து கை வாயை அலம்பு கின்றன்.
களம் பொலிந்தது
சாப்பிட்டா யிற்ரு? எங்கே சாமிபோய்த் தொலைந்தான்? நீ போய்க் கூப்பிட்டுப் பாரரக்கைக் கூட்டியும் புதைக்க லேண்டும். ராப்பட்டுப் போச்சு லாம்பை "டக் கென்று கொளுத்து; அங்கோர் பூப்போட்ட கைப்பெட் டிக்குள் பொருட்களை எடுத்துவா; போ!
என்றப்பா சொல்ல, செல்லன் எழுந்து போய்க் குடிலுக்குள்ளே, பொன், வெள்ளி, தங்கம், ஐம்பொன் பூசனச் செல்லாக் காசு, மின்னுமஞ் சாடிக் கொட்டை, மேம்படு பவளம், சங்கு தென்னங்கள் சாராயத்தோ டிடம் புரி வலம் புரிக் காய்.
23

Page 14
அறுமுகக் காயும் வைக்க அளவான தூக்குச் செம்பும் பொறுமையாய்த் தேடிக் கண்டு *பொலிகளம்' வைத்தான்; சூட்டின் அருகுநின் றலுவ லாளர், அரக்கினைப் புதைப்பீர் என்ருர் கருமமே கண்ணுய், செம்பைக் களத்திலே புதைத்தார் கந்தர்,
பூதங்கள் பொலியை அள்ளிப் போகாதவாறு காத்து ஆதர வளிக்க வேண்டும் ஐயனே! என்று வேண்டி சேதமில் லாத வண்டிச் சில்லள வுறட்டி வைத்து மேதகு மடைபரப்பி வயிரவ வணக்கஞ் செய்தார்,
காரியகாரர் சூட்டைக் காவல்பின் களத்தில் தள்ள வாரிக்காலனையும் கொண்டு வந்தனன் சாமித்தம்பி நேரிய கேட்டி யோடு நின்ற ஆள் ஒலியைக் கேட்டு ஏறின வாரிக்காலன் ஏழெட்டுப் பிணையில் மேலே!
24

வாரிக்காலா ஒ. ஒஒ வளைந்த கொம் பா ஒ . ஒஓ . . ஏறிப்போ ஏறிப் போ ஒ . எந்தாயே பூமித் தாயே ஊரிலே பஞ்ச மோட உன்மடி பொலி ஒ ஓஓ..! சாரிலே நடம்மா தாயே சந்தானம் பொலியே ஒ . ஒ!
கோயில்கள் கொடியேறட்டும் குரவையும், கூத்தும், பாட்டும் வாயில்கள் தோறும் ஊரில் வளரட்டும் பொலியே ஓ! ஒ! தாயில்லாக் குமர்க ளுக்கும் தாலிகள் களுத்திலேறி தாய்மையால் உலகில் இன்பம்
தழைத்திடப் பொலியே ஒ, ஓ .
ஆறில்லை, மாரியில்லை அறமில்லை என்ற வார்த்தைத் தூறலில் லாமல் வாழ்வில் தொய்வுகள் என்று மில்லை சோறில்லை என்று யாரும் சொல்லாமல், உழுவார் வாழ்வோர்! பேறேன்று பெரியார் சொன்ன பெற்றியில் பொலி ஓ! ஒ ஓ .
2

Page 15
சற்றமும் விருந்தும் பேணி சுகங்கண்டு, வாழ்வில் என்றும் மற்றவர் துயரம் எண்ணி மனத்தினுல் உருகி, அன்பைக் கற்பிப்போராக வாழும் காட்சி கண் டுவந்து, விட்ட நற்றவத் தவர்கள் கூட நமைநத்தப் பொலி ஒ ஓ . . ஒ .
வசைப்பாட்டுப் போலல் லாது வாய்மையில் கனிந்து வந்த இசைப்பாட்டில் மயங்கித் தங்கள் இதயத்தை ஈந்து, சாய்ப் போன் வசைப்பட்ட வாரிக் காலன் வளைந்தது கதிர்கள் வாயில் அசைப்பிடும் ஒசை பாட்டுக் கமைந்ததோர் தாளம் ஒக்கும்!
மண்ணுகி, உழுதோர் வேர்வை மழையினல் பொதும்பி சேருய் பண்ணுகி, புலவர் உள்ளப்
பசுமையாய் வளர்ந்து, நாணும் பெண்ணுகி, மணியாய், வைக்கோல் பேழையில் நிறைந்த முத்தம் பொன்னகி எருமைக் காலில் பொலிந்தது களம் பூரிக்க,
26

வெள்ளம் வேண்டு மென்று கேட்டால் வேறென்ன கருத்து? தென்னங் கள்ளுஞ் சாராயமுந் தாம் களத்திலே சோற்றில் குந்தி * கள்ளனே இல்லை யென்ற காரிய கார ருக் கென் னுள்ளம் போல் 1 என்ருர் கந்தப் போடியார் உவகை பொங்க.
அண்டங் காகத்தை வென்ற அகண்டவாய் திறந்து வைத்து வண்டென இரைந்து நீண்ட வாயுவும் தெரியா னகி, வண்டியில் சாமித் தம்பி வசதியாய்த் துரங்கு கின்றன் என்ருெரு பணியாள் சொல்ல எல்லோரும் சிரித்துக் கொண்டார்
உண்டபின் வாயில் போட ஒருகணம் உட்கார்ந் தார்கள், அண்டையக் களங்கள் காட்டும் அமளியைக் கேட்டு, மீண்டும் முண்டாசு தலையில் கட்டி முன்போல வேலை மீது கொண்டார்கள் கவனம்; செல்லன் கொட்டாவி யொன்று விட்டான்.
27

Page 16
கையிலே வேலைக் காரன் கம்பினை எடுத்தார்; சூழப் பொய்ப்பதர் அன்றி, உண்மைப் பொலி உதிர் வைக்கோல் கோலி வைத்தனர் வட்டமாக வாட்டினர் போடியாரோ செய்யுங் காரியத்தை நல்ல செப்பமாய்ச் செய்யு மென்ருர்,
வாட்டிப்பின் வைக்கோல் கட்டி வரிசையில் அடுக்கி, ஒரச் சூட்டினைக் கூட்டி, வாரிக் காலனை மறுகால் ஏற்றிப் போட்டதும் பாதிச் சூடே பொலிந்ததோ, வானின் தாரைக் கூட்டத்தை யெல்லாம் கூட்டிக் குவித்தது போலத் தோன்றும்,
கூழனைப் போக்கி, நெல்லைக் கூட்டியொன்ருக்கி, பார ஆலத்தி வட்டி போல அமைந்திடும் பொலிக்கும் பத்தில் வேலையாட் கம்பு, வில், பொல் வெட்டுவா யனையும் வைக்க காலைப்பெண் எழுச்சி பாடக் காக்கையார் எழுந்து விட்டார்
28

வாழ்வாரைப் யார்த்து நெஞ்சு வதைவார்போல் அல்லி கூம்ப தாழ்வுற்றும் கலங்கா வாய்மைத் தாமரைக் குலத்து மாதர் கீழ்வானச் சிவப்பி லுள்ளங் கிறங்கித் தம் இதழ் கசிந்தார் நீள்வானத் தெருவில் தேரை நிறுத்தினன் பரிதிக் குஞ்சன்!
அன்னம்மா கனவின் கோவை அறிந்திட்ட அலுப்பி லூாறி என்னப்பா விடிந்தா போச்சு? எங்குற்ருர் வேலையாட்கள்? என்றெழுகின்ருன் செல்லன் *எருமைகள் கறந் தாயிற்று பொன்ன னுார் போனுன் பாலேப் போக்காட்டி விட்டேன்; போ பேர்;
கண்ணை முன் கழுவு நம்மூர் காத்தியர் கைம்பெண் சாதி சின்னியின் புளிச்ச அப்பம் தின்னு: நான் இங்கே சற்றுக் கண்களை மூட வேண்டும் களத்திலே பொலி, ஊர்க்காலி தின்னவுங் கூடும்!" என்றே போடியார் உறங்க லானர்.

Page 17
எட்டுநாள், களத்தில் ஒயா
எடுபிடி அமளி ஓய்ந்து பட்டடைப் பொலி மதிக்கப் பட்டது. கணக்கன் சின்னன் எட்டுநாட் பொலியும், மொத்தம் எண்பத்தைந் தவணம் என்ன தட்டினன் வயிற்றில் சாமி தனக்கும்மூன் றவணம் ஏர்வை!
கணக்குகள் தீர்த்தார்
சூடுபோட்டவர்க்குக் கூலி சொல்லிய படியே தந்து, மாடுமேய்ப்பவர்க்கும், கோயில் மடங்கள் மேய்ப்பவர்க்கும், என்றும் பாடுபட் டுழையா துண்டு பஞ்சம் மேய்ப்பவர்க்கும், கொத்தாய் கூடி நெற் குலைகள் கோதும் குருவிமேய்ப் பவர்க்கும், கந்தப் போடியார் விருப்பம் போலப், பொலியிலே பங்கு செய்தார்
வட்டைக்கு விதானை யான வடிவேலின் பங்கி தென்று எட்டளந் திடவும், எங்கே என்பங்கை இதற்குள் என்று நெட்டைமா மரமாய் நின்ற மாசிலான் அதிகாரிக்கும் கொட்டினர் அளந்து பின்னல் கூப்பிட்டார் நின்ற பேரை,
30

ஐயர்க்கு மரக்கால் மூன்று, அம்பட்ட முல்லைக் காரன், பொய் மூட்டை சுமக்கும் தண்டல் காரனம் வண்ணு னுக்கும் ஐவைந்து மரக்கால், போன ஆண்டொன்றின் கூலி தந்து கைம்பெண்கள், சிறுகு லத்துக்
கன்னியர் கணக்கும் தீர்த்தார்.
களவட்டிப் பொங்கல் வைத்தார்
அந்திப்பால் கறந்து வந்த ஆளிடம் அடுப்பு என்ருர் கந்தப்பர்; குறிப்புணர்ந்து
களி மண்ணுல் அடுப்பு மூட்டிக் குந்தினன் அரிசரிக்க; கொசுகி நீர் களையப், பாலும் பொந்தினுள் சினந்த நாகம் போலெழுந் தடுப்பைத் தீண்டும்
பொங்கிய பாலில் அள்ளிப் போய்ப்புதை அரக்கி ருந்து தங்கமே பொலிய வைத்த *தாய் மடி குளிர்க வென்றே தங்கையால் ஊற்றி, மூடித் தலையிலே குட்டிக் கொண்டு மங்களம் பாடி, பொங்கல்
வழங்கினர் கந்தப்போடி,
3.

Page 18
வில்லங்க மின்றித் தங்கள் வினை யிலே மறைந்து, காக்கும் பிள்ளையார்ப் பெருமானுக்கும் பெரு நன்றிப் படைய லாக, வெள்ளையாய் எருமைப் பாலில் விளைந்த தீம் பொங்கல், வேண்டிப் பிள்ளை வெண் ணிலவு வானில்
பிறந்து கை நீட்டி நிற்கும்,
ஊருக்குப் புறப்பட்டார்கள்
வட்டையில் குன்று குன்ருய் வளர்ந்துயர் வான உச்சி முட்டிய சூடு யாவும் முடிந்தன; காளை கொண்டு கட்டப் பொன் மூட்டை கொண்டு கரத்தைகள், ஊரை நோக்கி மட்டிலா மகிழ்ச்சி யோடு மணியினைக் கிலுக்கிச் செல்லும்,
அணிமுகைச் செழுமை அல்லி அவிழவும் ஆண்டார் நீண்ட பிணி நீங்கி உடம்பு தேறும் பிள்ளை போல் தவழ வானில் அணியாக ஊரும் வண்டி அணியத்தில் உழவர் கூட்டம் *கணிரெ* னும் குரலில் நெஞ்சின் கனவினேக் கவிதை செய்தார்,
ssa
32

சின்னப் போடியாரே தம்பி செல்லையா என்ன தூக்கம்? உன்னெத்த பொடியனெல்லாம் ஊரிலே மச்சி மார், தம் கன்னத்தைக் கொஞ்சு மாப்போல் கவி கட்டிப் பாடுகின்ருர்! அன்னத்தைப் பற்றி நீயும் அதிலென்ன வெட்கம் பாடு!
சண்டியன் சாமி சொல்ல சலிப்புற்று மூச்சு விட்டு கண்டாயே சாமி, அப்பன் காளியாய் எடுத்த கோலம்! நொண்டிநான் கொம்புத் தேனை நோக்குவ தாலே ஏதும் உண்டா மோ லாபம்? என்ருன் ஊமையா யிருந்த செல்லன்
அப்பன விடுசெல்லா; நீ ஆண்பிள்ளை அன்னம் மட்டும் ஒப்புதல் தந்தால் போதும், ஊரெலாம் எதிர்த்து வந்து தப்புத்தண்டா செய் தாலும் தகர்த்துங்கள் கலியாணத்தைச் செப்பமாய் முடிப்பேன் என்று தீர்மானம் சொன்னன் சாமி.
33

Page 19
சாமியின் திருக்கல்யாணம்
?எப்படி ? யென்ற செல்வன் எழுச்சியைக் கண்டு, கேள் கேள், கற்பகம் என்ருல் பார்க்கக் கண்களா யிரங்கள் வேண்டும்! அப்படி அழகி; என்றன் அவளைத் தான் சொல்லு கின்றேன்;
இப்பொழுது திளைத்துப் போனுள் இளமையில் பார்க்க வேண்டும்!
வன்னிய கோத்திரத்தில் வந்தவள்; எனக்கும் மீசை, அன்னேரம் அரும்பு; வேலி அளப்பதும் தொழில்! ஓர் நாளில் பின்னேரம் ஒழுங்கைக் குள்ளே பெட்டையைக் கண்டு, சும்மா கண்ணை அப்படி யென்றேன காருப்பித் துப்பி விட்டாள்!
கற்பகம் இரு நான் உன்னைக் கட்டாது போனல், என்றன்
"அப்பனின் பெயரை மாற்றி அழை யென்று சபதம் கூறி முப்பனைப் பறையன், கண்ணி மூப்பனைப் பிடித்தேன்; சேத்தி முப்பது பவுனுக் குள்ளும் முடிக்கலாம்" என்று சொன்னன்
34

பட்டோலை போட்டான், பச்சைப் பாம்போடு கன்னிக் கோழி முட்டை தென் னையிலே ஆக முதல் முதல் பிடித்த தேங்காய் கொட்டைகள், கோழி ரத்தம் கொடிவகை, பித்து, மூலி எட்டுரும் போத்தல் மூன்று இப்படி ஒன்ரு? ரண்டா? ,
பூசாரி போட்டுத் தந்த பொருளெலாம் தேடிக் கான மாச மொன்ருச்சு மற்ற மாசமும் முடியக் கிட்ட வாசமாய் வசிய எண்ணெய் வார்பண்ணி, ஈர்க்கில் தொட்டுப் பூசினல் போது மென்று புழங்குமோர் முறையும் சொன்ஞன்,
மடைவைத்து மந்திரித்து, மனைக்கப்பால் தீட்டாகாத இடமாக மடுவில் வைத்து, ஏற்றதோர் சமையம் பார்த்து வலதுகால் விரலில் ரத்தம் வடித்தெண்ணெ யோடு கூட்டி, கடவலில் நின்ருள் ஒர் நாள் கற்பகம் பூசி விட்டேன்.
35

Page 20
கண்ணியின் வசிய மென்ருல்
கடவுளே வந்து மாற்றுப் பண்ணினல் கூட, ஒன்றும் பலன்வரப் போவதில்லை! எண்ணிநாள் மூன்ருகும் முன் எனக் கண்ட கற்ப கத்தின் கண்ணுக்குள் என்னைக் கண்டேன். கருத்தையும் அறிந்து கொண்டேன்
* கூத்துப்பார்ப் பதற்காய் அப்பன் கோயில் வெட்டைக்குப் போனுர்; மூத்தம்மை மாலைக் கண்ணி; மூன்றுபேர் தாமே நாங்கள்; ராத்திரி முழுவதும் நான், ஓர் ரகசியம் உனக்குச் சொல்லக் காத்துக்காத் திருந்தேன் எங்கள் கடப்படி மூலைக்குள்ளே! "
கற்பகம் சொன்ன இந்தக் கதையினைக் கேட்ட பின்னும் எப்படித் தரிப்பேன்! இன்றைக் கிரவங்கு வருவேன் என்றேன் அப்பனில் லாத நேரம்! அவசியம் என்ருள்; மூப்பன் செப்பிய படியே சேத்தி சீக்கிரம் பலிக்கக் கண்டேன்!
36

கருக்கலில் கூத்துக் காரர். களரி மத் தளத்தைத் தட்ட பொருக்கர், கற் பகத்தை, பெத்தா பொறுப்பிலே விட்டு, விட்டு ‘விருட் டென்று வெளியே போவார் வேலிக்குள் நின்ற நானே அசுப்பின்றி நுழைவேன் வைக்கோற் போருக்குள் அவளும் நிற்பாள்.
கூத்தெல்லாம் முடியச் சாமக் கோழியும் கூவும்; உள்ளே சாத்துவாள் கதவை நான் போய்ச் சறுகுவேன் ஒழுங்கைக் குள்ளே! காத்திருந் தலுத்த அம்மை கண்டதும் சோறு போட்டு, * கூத்தென்ன பருவம் ? என்பாள் குறையில்லை அம்மா என்பேன்,
வண்டி புதைந்தது
வண்டிகள் ஏனே சற்று வழியினில் சுணங்க, மாடு முண்டியும் இழுத்துச் சோர்ந்து மூச்செறி வதனைக் கண்டு, சண்டியன் சாமி கீழே சரேலெனக் குதித்துத் தோளால் முண்டியல் கொடுத்து மாட்டை
முடுக்கினன் சில்லைச் சுற்றி.
37

Page 21
புல்லிலே போகு மட்டும் பொறுப் புத்தான் பொதும்பற் சேறு செல்லனும் கீழே துள்ளி சில்லினைப் போட்டான்; வண்டி மெல்லவாய் அசைய, மீண்டும் மேலுக்கே ஏறிக் கொண்டு நல்லது சாமி, மேலே நடந்தவை சொல்வாய் என்ருன்,
கதை தொடர்ந்தது.
பிறகென்ன. ஊரார் வாயில் பேச்சுக்கா பஞ்சம் ராவில் அறையிலே நடந்த தெல்லாம். அம்பல மாக, அப்பன் முறுகினர் பொருக்கருக்கோ மூக்குக்கு மேலே கோபம், கறுவினர்; கற்பக த்தைக் கண்டித்தார்; 'வசிய மென்ருர்,
காய் வெட்டிக் கழிக்க, மூப்பன் கண்ணியே வந்து போனர். சீயிந்தக் கஞ்சாங் கொற்றிச் சாமிக்குக் கொடுக்கும் பெண்ணை நாய் வரும் கடப்பில் கட்டி கூயென்ருர்; வன்னியர் தம்
கோத்திர வரிசை சொன்னர்;
38

பொருக்கர் பொன் னம்ப லத்தார் பொக்கைவாய் அடைக்க ஏற்ற இருத்தையும் மழையும் சேர்ந்த இருட் டொரு முட்டிக் கள்ளை இறுக்கிவிட் டெதுவந் தாலும் இரண்டிலே ஒன்றின் றைக்கு! புறப்பட்டேன், வில்லுக்கத்தி பொக்குழில் செருகிக் கொண்டேன்.
வேலியால் ஏறி, வீட்கு விருந்தையில் காலை வைத்தால் பாலிப் பெத் தாவும் எங்கோ பாய் தூக்கி யிருக்கக் கண்டேன் காலினுல் குறிப்புக் காட்டக் கற்பகம் கத விடந்தாள் நூலூசிக் குள்ளே போகும் நுண்மையாய் நுழைந்தேன் உள்ளே!
ஏன் பெட்டை கதவிந் நேரம் எதற்காகத் திறந்தர்ய்? என்று கூன் மாமன் பொருக்கர் கேட்டார். குடிவெறி எனக்கும், துள்ளி "நான் வந்தேன் மாமா' என்றேன் நாய் கெட்ட கேட்டுக் கிங்கே "ஏன் வந்தாய் ? என்ருர், இன்று "என் கத்திக் கிரைநீ என்ருர்,
3.

Page 22
கற்பகம் அடியேய் அந்தக் கதவினைத் திறடி வேசை இப்பொழு துன்னை வெட்டி எறிகிறேன் ஆற்றுக் குள்ளே! இப்படிக் கூறி மாமன் இடிக்சிருர் கதவை; கேட்டு சுற்றவும் இருந்தோர் வந்து சூழ்ந்தனர்; சொல்லு கின்ருர்,
அவரவி.ர் தலையெழுத்தை ஆராலும் மாற்ற ஒண்ணு! அவளுக்கும் விருப்பம்; சாமி அவனுக்கும் விருப்பம் நீயேன் கவலைகொள் கின்ருய்? இன்றே ஆசாதின எழுதிப் போடு! சிவ சம்புத் தோம்பு தோரைச் சீக்கிரம் அழை யென்றர்கள்
வண்ணக்கு, தோம்பு தோரும் வந்தார்கள் விதான யோடு; திண்ணையில் நின்று, பிள்ளை திற வடி கதவை யென்று என்னையும் கூப்பிட் டார்கள் இருவரும் இணக்கம் சொன்னுேம் மண்ணிலே அள்ளி, மாமன் மண்டையில் போட்டுக் கொண்டார்
40

பூமியை பொருளை யெல்லாம் பொதுவிலே எழுதி வைத்துச் சாமியாய்ப் போனுர் மாமன்! சரிக்கட்ட விலையா நானும்? மாமனு மாகி மூத்த மகளுக்கு மகனும் கண்டேன் ஓமம்பி என்ருன் சாமி ஒப்பினன் செல்லை யாவும்.
அம்பலத்தடியில் இளைப்பாறினர்
கதையினை நிறுத்தி, மாடு களைத்துப் போய் விட்ட தம்பி மதகடி அம்பலத்தில் மாட்டினை அவிழ்த்துத் தண்ணீர்ப் பதை பதைப் பாற்றி, நாமும் கால் கையை நீமிர்த்திக் கொண்டு உதயத்தில் ஊர் டோய்ச் சேர உருட்டலாம் வண்டி என்முன்
அம்பலத் தடியில் வண்டி அதிகமோ? வயலோரத்தில் வம்மியின் அருகே எங்கள்? வண்டியை நிறுத்தச் சொல்லு: இம்மட்டும் கதைத்தோ மா நாம் இலுப்படிச் சேனை வட்டை, கம்மாளன் வெளியும் போச்சு கதை நல்ல கதைதான் சாமி
4球

Page 23
செல்லையா சொல்லச் சாமி செருமினுள், ஆண் பிள்ளைக்கு இல்லையா ரோசம் என்று இடைக்கிடை நரைத்த, கோரைப் புல்லைப்போல் மீசை பற்றிப் புரியாக உருட்டிக் கொண்டே செல்லனைப் பார்த்து வீம்புச் சிரிப்பொன்று, சிரித்துக் கொண்டான்
அம்பலத் தடியில் வண்டி அவிழ்த்தனர்; களவெட்டிக்கு பொங்கிய புக்கைப் பெட்டி போனது வயிற்றில், அள்ளி அம்பலப் பூவல் நீரை அருந்தித் தம் கொட்டைப் பெட்டித் தம்பலம் போட்டார், மாடு
த விடுண்ணும் வரையில் விட்டு:
நிலவு மறைந்தது
உலை மூடி மலையி லுள்ள உல்லாச மாளிகைக்குள் நிலவு போய் உறங்கி விட்ட நிசி, பிறர் மாடு பூட்டும் கலவரம் கேட்டு, சாமி கால்களைக் கிள்ளி என்ன உலகத்தை மறந்த தூக்கம் உனக்கென் சொன்னு ன்று செல்லன்
صبسسسسسسسسسس
42

வண்டி போட்டார்
கோழித் தூக் கத்தை விட்டுக் கொடுகிய படிபோய், grrr L6) காளைகள் சாய்த்து வண்டி கட்டினன், வண்டிச் சில்லில் காலைவைத் தேறிக் கொண்டு, கவனமாய் ஏறு னக்கோ பாழான துக்கம்! என்று பகுடியாய்ச் சொன்னுன் செல்லன்.
மாடுகள் முதுகைக் கேட்டிக் கம்பினுல் தடவி, இம் இம் . . ஒடுங்கள் ஊருக் கென்றே ஒரே தாவில் மேலே ஏறி பாடு செல்லையா கூத்துப் பாட்டிலே, கேட்டோம் என்று மூடினன் தலையைச் சால் வை துண்டினுற் சாமித் தம்பி.
தொண்டையைத் திறந்தான் செல்லன், துறையடி வரையும் போன வண்டியிற் பொடிய னெல்லாம் வாயினை மூடிக் கொண்டு உண்டார்கள் செல்லன் பாட்டை ஊருக்கும் கேட்கும் உன்றன் *கண்டமே கண்டம்’ என்று கைத் தாளம் போட்டான் சாமி.
4引

Page 24
புளியடி வட்டை தாண்டி, பூ நாகஞ் சோலை தாண்டி களிமடு மானுரித்த கல் வயல், ஆலா வட்டை குளவெளி மூங்கி லாறு கொறுக்கச்சிக் குடாவும் தாண்டி குளக்கட்டின் மேலே வண்டி குமர் நடை பழகிச் செல்லும்
துறையினைக் கடந்தார்
முட மரு தடியில் வந்து, முடக்கிலே கிறுகி, வண்டி இடதுகை வழிப்பாட்டில் போய் இறங்கிற்று. இது வரைக்கும் *கட கட" வென்று போன கரத்தைகள் நிறுத்தச் செல்லன் அட! துறையடியா வென்று அத் துடன் பாட்டை விட்டான்
துறைக்கார முருகன் செய்யும் தொண்டுக்குக் கூலியாக இறக்கினர் களத்தில் வைத்தே எடுத்துவைத் திருந்த நெல்லை, "சுறுக் கென்ருன் சாமி, வண்டித் தொடுவையை எற்றிக் கொண்டு புறப்பட்ட தாற்றிற் பாதை போடுவார் கம்பை ஊன்றி.
-44

கொக்கரக் கொக்கோ? வென்று கோழிகள் குழல்வா சிக்கப் பக்கத்தூர் நாய்கள் பாட்டுப் பாடின! அதற்கு நாணி வெட்கப்பட் டதுபோல் வானில் விடி வெள்ளி முளைக்க, பாதை அக்கரை தட்டி நின்ற; "தரோகரா’ என்முன் சாமி.
துறையூரை விட்டு வண்டி தொடங்கிற்று நடையை சில்போய் அறை கையில் அழிப் பெட்டி அலுறும்பே ரோசை ஊரில் உறைகிற வறுமைப் பேயை
ஒட்டுமோர் முரசமாகி நிறையவும், ஊரின் நெஞ்சில் நினைவுகள் பூத்துக் காய்க்கும் !
பார்வதிப் பெத்தா எழுந்தாள்
ஊர் நெருங்கியதே யென்ற உவகையால் உந்தப்பட்டு, ஏருழும் இளைஞர் செய்த இலக்கிய பாடல் கேட்டு ஊர் எழுந்ததுவோ? இல்லை உறங்கிற்ருே? எதுவென்முலும் பார்வதிப் பெத்தவுக்கோ டடுக்கையே பிடிக்கவில்லை.

Page 25
நினைவுகள் குதிர்ந்தன
சித்திரை பிறந்தால் நல்ல செஞ்செழிப் புலக மெங்கும் எத்தனை கூத்து ஊரில் இரவெல்லாய் தாளக்கட்டுச் சத்தந்தான் வயல்களெல்லாம் சாக்குச் சாக் காக வாரி
முத்தினை இறைத்தார் எல்லார் முகத்திலும் சந்தோஷந்தான்!
வெற்றிலே உரலுக் குள்ளே விரல்நுனி விட்டுத் தோண்டி, 'பக் கென உள்ளங் கையின் பள்ளத்தில் கொட்டி, நீண்ட பொக்கை வாய்க் குள்ளே தள்ளிப் புகையிலை திருகிப் போட்டு கக்குவாள் இரத்தம்! வாசக் கயிப்பு மோர் கலாதிதான் போ!
அன்னமும் சமைந்தாள் பெட்டை அவன் செல்லன் விடவா செய்வான். முன்னரே சாணைக் கூறை முடிந்தவன்; சொந்த மச்சான்! கண்ணமுத் துடையான் பெற்ற கணபதிப் பிள்ளைக் கும், ஒர் எண்ணமாம்! அதற்கும் அன்னம் இனங்கவா செய்வாள்? சீச்சீ!
- - - - 46

செல்லனுக் கென்ன, நல்ல
செஞ்செழிப் பான தோற்றம் பல் லெல்லாம் முருங்கை மொட்டு, பரு விழி; காதில் வெள்ளைக் கல்வைத்த கடுக்கன்; மூக்கு வீச்சுவாள் சார்த்தினுற் போல் கல்லைப்போல் உடம்பு, உள்ளங் கையிரண்டகலம் நெற்றி
வைக்கலில் விளைந்த நெல்லை வைக்கலில் வைத்துக் கட்டி இக்குலம் தழைக்க வைத்தல் எல்லோர்க்கும் கடமை. அந்தக் கைக்குநான் இணங்கேன்! என்னேக் கண்ணமுத் துடையான் கொண்டு செக்கிலிட் டாட்டி ஞலும் சீ! இது நடக்கா துண்மை
வண்டிகள் துறையூருக்கு வந்தன போலும்; சத்தம் உண்டாயிற் முமாம்; கந்தப் போடிக்கு விளைச்ச லென்ன கண்டதோ? செல்லன் அந்தக் கரத்தையில் வருகின்ருனே? என்றெலாம் தனக்குட் பேசி இருந்தாள் அன் னத்தின் பெத்தா
全7

Page 26
பொன்னம்மா எழுந்தாள்
வண்டியுள் வருதற் காக வாசஸ் , உழலைக் கம்பை முண்டியும் இழுத்து விட்டு முற்றத்தைக் கூட்டி, வந்து மண்டபத் துள்ளே நெல்லைச் சொரிவதற் கொழுங்கு பண்ணிக் குண்டானை அடுப்பி லேற்றி கொதிக்க நீர் போட்டாள் பொன்னு
களத்திலே யிருந்து செல்லன் களைத்துப் போய் வருவான், ஏனே இளைத்துப்போ கின்றன் என்றன் இளத்தாரிப் பிள்ளை பாவம்! கொழுக்கட்டை போல நன்கு கொழு கொளென் றிருந்தான்; இன்று குழந்தை போல் ஏதோ குந்தி குருவி போல் கொறிப்பான் சோற்றை
பொன்னம்மா நினைக்க கந்தப் போடிக்கு புரைக் கேறிற்று! இந்நேரம் நெல்லை, வீட்டில் இறக்கியும் இருப்பான் சாமி இன்னுமோர் ஏற்றுத் தானே இரவைக்கு நாமும் ஊரில், கண்களைக் கசக்கிக் கந்தப் போடியார் கிழக்கே பார்த்தார்,
龛8

பொழுது காலித்தது
ஆழிப்பெண் கரு மாரிக்கு அருகிருந் தலுவல் பார்த்த ஏழைப் பெண் ணிருட்டு, பிள்ளை இரவியைக் கழுவி, வானத் துளியில் வளர்த்தி, ஊத்தைத் துணி யோடும் துறையை நோக்கி தாளியாய் விட்ட தென்றே நடந்தன ள் விடிய லாச்சு
அனேயூர் அடைந்தனர்
வண்டிகள் அணையூருக்கு வந்தன; அம்மன் கோவில் சந்தியால் கிறுகி ஊரின் சாலையில் நடந்து மாறிப் பந்தியிற் பிரிந்து தத்தம் படலையில் நுழைய, ஊரார் வந்தன வண்டி முன்னுல் வரும்பின்னல் வருஷம் என்பார்:
கடப்படி மாவின் கீழே கரத்தைகள் நிறுத்தி சாமி இடுப்பினை நிமிர்த்திக் கொண்டே இறங்கினுன் முட்டுக் கம்பைக் கொடுத்ததும் மாட விழ்த்துக் கொண்டுபோய் மரத்திற் கட்ட சுடு தண்ணிர் அம்மா என்ருன் சோர்ந்து போ யிருந்த செல்லன்.
49

Page 27
கேட்டியைக் கீழே போட்டுக் கிணற்றில்வாய் கழுவ ஒமம் போட்டிடித் தெடுத்த கோப்பி பொன்னம்மா தந்தாள் வாங்கிப் போட்ட பின், வயலுக்குள்ளே போடியார், பொலியும் உண்டோர் பாட்டம் கண் தூங்கி விட்டு பகற்சோறு கொண்டு வண்டி
போடுவேன்" என்று சாமி பொலியினை மண்டபத் துள் சூடுபோல் சொரிந்தான்; கூடச் சுமக்குமோர் வண்டிக்காரன், "வீடு கொள்ளாது, நெல்லை வெளியிலும் அட்டுவத்தில் போடத்தான் வேண்டும்" என்று பொன்னம்மா கேட்கச் சொன்னன்,
சுரை புன்னைப் பூவைப் போல சுடச் சுடப் பிட்டும், காய்ந்த மரையிறைச் சியிலே செல்லன் மனதுக்குப் பிடித்த மாகக் குறைவாக மிளகாய் சேர்த்த குழம்பும், நீர் வடித்த கட்டித் தயிரும் பால் பழமு மெல்லாம் தயார் செய்து வைத்து வந்து
50

"எல்லோரும் சாப்பிடுங்கள்" என்று பொன் னம்மா சொல்ல, இல்லைநாம் போகின்றே மென் றெழுந்தனர் வண்டிக்காரர் செல்லன் போய்க் குளித்து வந்து திருநீறு பூசிப் பிட்டுக் கல்லையி லிருந்து கொண்டு கறியினைத் திறந்து பார்த்தான்
அன்னம்மா சமைந்த சேதி அப்பன் சொன் னுராதம்பி? பொன்னம்மா கேட்டுக் கொண்டே புழங்கினள்; உண்ட செல்லன் என்னம்மா இதையெல்லாம் போய் என்னிடம் தெரியா தங்கே என்னவோ நமக்குச் சொல்ல இல்லையாம்! ஏசிக் கொண்டார்.
என்றனன்; கனகம் வந்து என்னிடம் நேரில் சொன்னுள் இன்னமும் தெரியா தாமா? இவர் போன பின்னல் வந்து சொன்னதை, இளையான் கொண்டு சொல்லவும் இலையா? அப்பன் என்னதான் சொன்னர்? நாளைக் கிவ்விடம் வருவார் தானே.?
5.

Page 28
அம்மை சொன் னவற்றைக் கேட்டு ஆனந்தப்பட்ட செல்லன் கும்மினன் மேலும் மூன்று குழற் பிட்டை கல்லை விட்டு செம்பினைத் தூக்கிப் போய், வாய் தீட்டியும் அலம்பி வந்து, இம்முறை விளைச்சல் மொத்தம் "எண்பத்தைந் தவணம்" என்ருன்,
பிடி மச்சி நாயை, என்னைக் பிடுங்கத்தான் பார்க்கு தென்ருள். கடப்புக்கள் செல்லன் மாமி கனகம்மா ஒடிச் சென்று அடிமச்சி நீயா என்று அமர்க்களப் பட்டாள் பொன்னு, *கொடுவாய் மீன் பங்கு போட்டார் கொண்டு வந்துள்ளேன்' என்ருள்
மாமியைக் கண்டு, செல்ல்ன் மறைந்தான் உள் வீட்டுக்குள்ளே, சாமியும் திரும்பி வந்தான் தவறணப் பக்கத் தாலே! பூமியில் குந்தி, அங்கே, போடியார் களத்தில் . . இந்தச் சாமியைத் தெரியுமா? .. நான் சண்டியன்! வண்டிக்காரன்!"
52

படையாண்ட குடியான் நான்! நீ பணிக் கொணு குடியாள் மச்சி உடையாண்ட மகன, நானு உயர்ந்தவன்? சிப்பி சுட்ட கடையர்கள் அவர்கள் செத்தல் காலிங்கா குடியான்! ஏதோ மடையணு நாங்க ளெல்லாம் மண்டையை. உடைப்பேன் நாய்கள்:
முட்னட.போல் விழிகள், கண்மேல் மூடிக்குள் கிறுகி நிற்க, ஒட்டிய நாக்கை நீட்டி உதட்டினை தடவி, நாயை எட்டியும் உதைத்துக் கையைப் பூமியில் அறைந்த சாமி, "கட்டாயம் செல்லன், அன்னம் கலியாணம் நடக்கும்’ என்ருன்:
கனகத்தைப் பார்த்துப் பல்லைக் கடித்தபின், வெளியே சென்று தனகினுன் தெருவிற் போன தட்டாரக் கொட்டா னேடும்! "சணியன் போய்த் தொலைவாய்' என்று சபித்த பின் பொன்னம்மா, "நீ இனி இரு மச்சி யென்ருள், இருந்தனள் கனகம்மா போய்,
53

Page 29
செல்லனும் எட்டிப் பார்த்துச் சிரிப்பினை அடக்கிக் கொண்டான் மெல்லவாய் கனகும் பொன்னும் மிழற்றுகின் ருர்கள் கூடி! நல்லது; கொடுவாய் மீனும்! நமக்கின்று வேட்டை, சோற்றுக் கல்லையை நினைத்துக் கொண்டே கட்டிலிற் சரிந்தான் செல்லன்,
மதியமானது
மாமி போனதுவும், நேரம் மதிய மா னதுவும், மீண்டும் சாமி சோற் ருேடு வண்டி சாய்த்துப் போனதுவு மெல்லாம் தானென்றும் அறியான் செல்லன், தாயினைப் பார்த்துக் கொண்டேட் ஏனம்மா, கறிகள் இன்று எல்லாமே எழுப்பம்! என்ருன்,
உப்பில்லைப் புளியுமில்லை; உறைப்பெல்லாம்; உலுவா நாற்றம்! இப்படித்தானே செல்லன் இயம்பு வான் முன்ன ரெல்லாம் எப்படிச் சொன்னன்? மாமி இங்கு மீன் கொண்டு வந்தாள். அப்படிச் சுண்டு என்று அவளுக்குட் சிரித்தாள் பொன்னு:
54

அந்தியாயிற்று: வண்ணுள் அலசிய சாய வேட்டி மூன்மடி விட்டுக் கட்டி நார்மடிச் சால்வை போர்த்து “வந்திடுகின்றேன் எங்கள் வடிவேலைப் பார்த்து விட்டு" என்றுதன் தாய்க்குக் கூறி ஏகினன் வெளியே செல்லன்.
சந்தியில் வம்பியின் கீழ் சப்பாணி கொட்டிக் கொண்டும் குந்தியும் தாயமாடும் குமரர்கள், செல்லா! நீயும் வந்தாயா! வாவா! என்ருர்; "வடிவேலைப் பார்த்து விட்டு வந்திடு கின்றேன்" என்று வழியோடும் போனுன் செல்லன்.
வடிவேலைப் பார்க்கும் சாட்டில் மச்சாளைப் பார்க்கப் போகும் பொடியனைக் கூப்பிடாதே, போடொரு சோணுல் வீணுல்! தடியனும் தருமன் கூறித் தாயத்தை உருட்ட ஆங்கே கடையடி யிருந்த தோழர் கண்களைக் சிமிட்டிச் கொண்டார்!
55

Page 30
கண்ணமுத் துடையார் செல்வ கணபதிப்பிள்ளை மட்டும் எண்ணம் வே றுடையானக இருப்பதைப் பார்த்து விட்டு என்னடா தோழே? என்ருன் இளையான், நான் தோற்றேன். ஆட்டம் இன்றைக்குப் போது மென்று கணபதி எழுந்து போனன்,
உழையாமல் உண்டு, வெள்னை உடுத் துலாத் துடையான் பிள்ளை களையாமல் களைத்தான்! என்ன காரணம்? என்ற பல்லன் இளையானைப் பார்த்து, தம்பீ எனக்கது தெரியு மென்று விளையாடிக் கொண்டே, வீமன் - விநயமாய்ச் சிரித்துச் சொன்னன்,
செல்லையா என்ருற் சிம்ம சொப்பனம் கணபதிக்கு பொல்லாத போட்டி, அந்தப் பொடிச்சி அன்னம்மா வாலே! செல்லனை விட்டு வேறு செய்வாரா அழகிப் போடி நல்லொரு ஞாயம்! கம்பை நகர்த்தினன் துடியன் வீமன்:
56 --was--mas

வடிவேலின் விட்டில்
வாசல் மா துளையின் கீழே வடிவேல் தன் மனைவி யோடு பேசிக் கொண்டிருந்தான்; யாரோ பெரிதாகச் செருமக் கேட்டு, வாசெல்லா வயலிருந்து வந்த தெப் போதோ? என்று ஆசையாய் வரவேற்றுப் பாய் அளித்தனன் திண்ணைக் குள்ளே
திண்ணையி லமர்ந்து பேசித் தீர்த்தனர்; அவர்களுக்கு கண்ணகை சுவைநீர் தந்தாள், கதையிலும் கலந்து கொண்டு அன்னத்தைப் பற்றி ஏதோ அடித் தொண்டைக் குள்ளே சொன்னுள் என்னவோ நடக்கட்டும் நான் எழுகிறேன் என்ருன் செல்லன்.
கொத்தாகப் பூனை மேகம் குவிந்ததால் அழகு கெட்டு சித்திரம் சிதைந்தாற் போல சிறுநிலா, அடியே அன்னம் புத்திதான் அறிந்து விட்டாய்! போக்கிரி வடிவேல் வீட்டில் சத்தத்தை மதித்தும் போலிச் சாமிபோல் இருந்தாய் உள்ளே,
57

Page 31
வடிவேலின் சாட்டில் அன்னம் வடிவினை மறைந்து காண முடியாது போன தெண்ணி முணு முணுக் கின்ற செல்லன், அடிமணம் போலக் கூத்து மத்தளம் அலறக் கோயி லடியிலே சிறிது குந்திக் கூத்துப் பார்த்திருந்தான் செல்லன்!
A.
3.
A

கதிர் ஊருக்குச் சொன்ஞர்.
"பங்குனிக்குப் பதினேழு புதன்கிழமை பகல்நேரம் பரணி சேர்ந்த மங்கலசீர் முகூர்த்தத்தில் மகள் அன்னம் சமைந்ததண்ணிர் வார்ப்ப தாக எங்களது பெரியார்செய் தீர்மானம்" என்றுாரின் எல்லா வீடும் சங்கைசெய்து கனகம்மா வெளியிட்ட தாம்பூல வட்டா தந்தாள்!
* ஊராரோ ஒருநாள்முன் வந்து விட்டார்? என்ருல், உள் உரித்துக் காரர் ஆறேழு நாட்களுக்கும்முன் வந்தார். அலுவலக்கு அன்னம் மாவோ, பேரான குடும்பத்தின் கடைக்கொழுந்து: சமைந்த தண்ணிர்ச் செலவை எண்ணி ஆராருக் கோவெல்லாம் ஆனந்தம் பொன்னுவுக்கு அதற்கும் மேலே
இருகரையும் நெல்குவித்து
நிறைமுட்டி கூரை முடி விளக்கும் வைத்து கிரிகை; மஞ்சுவீட்டுக்குமுன் வாசல் பந்தலிலே தொடங்கும். பெண்கள் குரவையிடப் பீரங்கிவெடி முழங்க அன்னத்தின் மச்சிமார் போய் அருகிருந்து மஞ்சளிலே அள்ளி அவள் முகமெல்லாம் அப்புகின்ருர்!
59

Page 32
பாலறுகு மஞ்சளோடு வேளாண்மை வேர்அரைத்து பாலில் கூட்டி வாலைஅன்னம் சிரசினிலே வாழ்வாட்டி மார் அரப்பு வைத்து, வெள்ளைச் சேலை புதிதாயுடுத்தி வெள்ளை மேற்கட்டி எழக் குரவையிட் தாலியொடும் விளங்குகிற தாய்மார்கள், குடம் கொண்டு தண்ணிர் மொண்டார்!
மச்சிமுறைக் காரரெல்லாம் மஞ்சளிலே சுண்ணும்பும் கலந்து கொண்டு கச்சைகட்டக் கண்டு, மனம் கலங்குகிருர் மச்சான் மார்! காரைதீவுப் பிச்சையண்ணர் இறுக்கிவைத்த பீரங்கி வெடிகாதைப் பிளந்து தள்ள, எச்சிலின்றித் தண்ணிரும் எடுத்துவந்தார். கிணற்றடியில் எங்கும் பெண்கள்!
தண்ணீர் வார்த்தார்
அரிசியோடும். மரக்கறிகள் ܚܖ தயிர்ப்பான பணியாரப் பெட்டிகொண்டு
குரவை, வெடி கொளுத்தி கால் கொலுசு தண்டை குலுக்கிடவும் கூட்டம் கூடி வரிசைதர வந்தது ஊர் வாசலிலே பந்தலெலாம் வழிந்து நிற்க சொரிகின்ருர் அன்னம்மா தலையினிலே மூன்றுகுடம் சமைந்த தண்ணிர்1
ܧܝܢܝܦܣܣܬܘܚܺܝܚ ܥܢܟܣܝܚܶܒܶܝܬ
Ꮾ0

ஊராரும் உடையாரின் மனையவளும், உற்ருரும், ஒன்று கூடி: சீரோடும் தம்செல்வப் பெருமையினை வெளிக்காட்டும் செருக்கி னேடும். ஊருக்குள் இதுவரையில் யாருக்கும் திறவாத உரிமையோடும் பேராக அன்னம்மா ܪf 4 ܐ ܕ܃ சமைந்ததண்ணிர்ச் செலவுக்கு வருகை தந்தர்ர்
பந்தலின்கீழ் மிதிபலகைபரப்பி, அதில் பாவாடை விரித்து, செய்ய சந்தனத்தைக் கடைந்து சிற்பி சமைந்தெடுத்த மாரியம்மன் சிலைபோல் அன்னிம் வந்து நின்ருள் அவள் மீது வைத்தவிழி வாங்காது செல்லன் நின்ருன். ஐந்தாறு பெண்பிளைகள் அன்னத்தைத் திரைகட்டி மறைத்துநின்ஞர்
ஆலாத்தி
குன்றிமணி குயிற்றிஎழிற் s கோலமுற அமைத்தெடுத்த சோற்ருலாத்தி: குன்றிமணி பதித்தெடுத்த மாவுருண்டை ஆலாத்தி; கொழுந்து விட்டு நின்றெரியும் திரியேந்தி, மஞ்சணநீர் ஆலாத்தி என்றன்னத்தை ஒன்றன்பின் ஒன்ருக ஒழுங்காக ஆலாத்தி எடுத்து நின்ருர்!
6 :

Page 33
வண்ணுன் கடன் தந்தார்
வண்ணுனின் கடன்கழிக்க வடிவாக மூட்டுவைத்த சோற்றுப் பெட்டி வண்டுகட்டி அவித்தெடுத்த பிட்டோடு களியுருண்டை வாங்கி வாங்கி அன்னத்தின் தலைசுற்றிக் கம்மாஞ்சி கையினிலே அளித்த பின்னர், கண்ணுாற்றுக் காலாத்தி காட்டியபின் அறைக்குள்ளே கடத்திப் போனுர்,
மஞ்சள் குளித்தார்!
செம்புவந்து பந்தலுக்குள் சேருமுன்னே பலமாகச் செருமிக்கொண்டு "வம்பு வந்ததென் றெழுந்து வாய்ச்குளெதோ முணுமுணுத்தார் கந்தப் போடி நம்புமச்சான் மஞ்சளில்லை சோறுண்ண எழுமென்ருர் அழகிப் போடி, கொம்பலொன்று தொடங்சிற்று பெண்களுக்குள் எல்லோரும் குவிந்தார் ஓடி.
கனகம்மா மேனியெலாம் மஞ்சள். ஒருகையினிலே சட்டி யோடு இனியென்ன செய்வாயோ? என்றுசொல்லி இளிக்கின்ருர் உடையார் பெண்டில், மனதுக்குள், "இவளென்ன மச்சிமுறை கொண்டாட மஞ்சள் ஊற்றித் தனகவந்தாள் போலும்? “ எனப் பொன்னம்மா முகமோடிக் கறுக்க லாச்சு,
62

பொன்னம்ம்ா முகம்போன போக்கறிந்து கனகம்மா, பொறுதி மச்சி ? என்னுதற்குள் மஞ்சள் மழை
எங்கிருந்து பொழிந்ததுவோ? so. Gol-Lumpribupr6r கண்மூக்கு முகமெல்லாம் கண்டபடி வார்த்துவிட்டாள் கனகின் தங்கை என்னேடி துணிச்சல்? என இரண்டொருவர் கண் ணகையை எரிக்கப் பார்த்தர்ர்
கண்ணகைக்கும் மஞ்சளிலே அபிஷ்ேகம் செய்தாள் ஒர் கறுப்பு மாமி என்னடியேய்! அபிராபி என்ருெருத்தி செம்போடு இடையில் பாய்ந்தான்! பொன்னுவெங்கே? என்ருெருத்தி • புழக்கடையில் தேடுகிருள். ஒளித்து நின்ற அன்னத்தின் மூத்த அண்ணன் ஆறுமுகம் ஒருத்தியிடம் அவதிப்பட்டான்!
செல்லனும் பட்டான்
பந்தலுக்குள் மூலையிற்போய்ப் பதுங்கிக்கொண் டிருக்கின்ற செல்லையா "நாம் எந்தவிதம் இங்சிருத்து தப்புவதோ?’ என்றெண்ணி ஏங்கும் போது வந்தாள் பார்வதிப் பெத்தா, மஞ்சளொரு சட்டியிலே வார்த்துக் கொண்டு தந்திரமாய் அதைத்தடுத்தல் முடியாது செல்லையா தவித்துப் போஞன்
63

Page 34
° பட்டாரென் குஞ்சுமச்சான் படுவையிலே " என்று பெத்தா பாட்டுப்பாட கொட்டாதே என்று சொல்லி கும்பிட்டான் செல்லையா பெண்கள் கூடிக் கொட்டுகொட்டு மாப்பிள்ளையைக் குளிப்பாட்டு, என்ருர்கள் குறுக்கிே பாய்ந்து தட்டி விட்டான் சட்டியைத்தான் சால்வையினுல் அங்குவந்த சாமித்தம்பி
வண்ணுரக் கம்மாஞ்சி வாசலிலே நின்றபடி "போடியாரே என் தலையில் மஞ்சளினை இப்படியா ஊற்றுவதும்?? என்று கூவ "என்னடா கம்மாஞ்சி? ? என்றங்கே போய்ப்பார்த்த அழகிப்போடி கண்கெடுவான் தலைமுழுக்கக் கறியென்றர் வெறியிந்தக் கழுதைக் கென்ரூர்
தலைச் சோற்றுச் சுமையோடும் தலைகெட்ட வெறியோடும் தள்ளம்பாறி நிலைதவறக் குழம்பெல்லாம் நெற்றியினல் வழிந்தோட நின்ற வண்ணுன் தலைதாழ்த்திக் கும்பிட்டுத் தவறுக்கு மன்ருட்டம் பண்ணி "ஏதும் இலையாநான் போவதற்கு? இன்னுமொரு துள்ளியென்றன் ஹீ. ஹீ. என்ருசன்
v. 64

சம்மமாஞ்சி நின்றநிலை கண்டவர், கைதட்டிச் சிரித்துக் கொண்டு அம்மாடி இவனுக்கோர் அளவில்லை என்றபடி அலுத்துக் கொண்டார் "சும்மா போ; வீட்டுக்குச் சேசற்றேடு போய்ச் சேர்ந்தால் போதும்! என்று தம்மாலே ஆனமட்டும் சொன்னூர்கள், முடியாமல் தந்தார் கொஞ்சம்!
வண்ணவண்ணச் சேலைகட்டி வந்திருந்த பெண்களெல்லாம் மஞ்சள் ஆடி வண்ணனின் மாற்றுடுத்து
வந்தமாந்தர் பந்தலிலே வரிசையாக அன்னத்தைக் கேலி பண்ணி அமுதுண்டு அடைகாயும் அருந்திக்கொண்டு பின்னேரம் "கனகம்மா! பிரியா விடை தாவென்முர்? பிறத்தியார்கள்.
வந்தது வசந்தம் அன்னம் சமைந்த செயல்கண்டு நாணி, அவளுக்கு நாங்கள் குறைவா என்னத் தளிர்ந்து ருதுவாகி ரத்தம் இலையாகி நின்ற இணரின் கொன்ன பருத்து முலையாய் விளைந்து குயிலோடு காதல் பழக எண் ணித் துடிக்கு மிளமா மரங்கள் இளவே னில் வந்த தினிமேல்
65

Page 35
குயில் தோற்றது
படியாத மாதர் கவிபாடல் கண்டு பகைகொண்டு வெல்ல நினைவாய் படையோடும் எங்கள் தமிழ் வித்து வான்கள் கவிபாட வந்த அழகில் குடைகின்ற மாவின் குயில் தந்த பாவில் குணமில்லை என்று சிறுவர். உடைவார்கள் கைகள். குயிலோடு கூவி உடைவார்கள் தங்கள் குரலும்
வெறிக்கு விழா
மறுகாலும் வந்து குயில் தோற்றநான
வழமைப் படிக்கு முறையாய் திருநாள் எடுத்து மகிழாமல் யாரும் விடுவார்கள் போலும் அதனுல், மறுவாரம் ஊரில் வருடப் பிறப்பு மனதோறு மிந்த விழாவைத் திறமா யெடுக்கும் வினையால் நிறைந்த
அணையூரில் எங்கும் அமளி
பூம்பந்தல் வாகை புளிவம்மி போடும் புதுவேலி எங்கும் எழவும் மாம்பூ பரந்த மனைவாசல் கூட்டி மழையாய்த் துமித்த கமுகின் பூம்பாளை வாரி புதிதாய் உதிர்ந்த சருகோடு புற்கள் மறையைச் சாம்பல் ஒழிந்து வளவெங்கும் வெள்ளை மணல் தூவுவார்கள் மகளிர்
حمحمجھےصحیح عطصصم
66

விறகோசை, தெங்குகுலையாய் உதிர்ந்து விழுமோசை மாவின் நிழலில் உரலோசை, செம்பு சருவம் பொருட்கள் உருளோசை ஊரில் அயலார் சிறுதானியங்கள் விலை கூறுமோசை விடியும் வரைக்கும் இரவில் இரைகின்ற எண்ணெய்ப் பணியார ஓசை இவையோடு கூட எழுமே!
குடியாய் வளர்ந்த புளிஆல் நீர் வம்மி நிழல் தேங்கு கோயில் வெளியில் பொடியன்கள் கிட்டி அடியோடு வட்டக் கவடி பிடிக்கு மொலியில், குடிகாரர் கூட மிரள்வார்கள் கோயில் இடியாமல் நிற்றல் அருமை வடிவான வேட்டி பலகாரம் ஊஞ்சல் இவைபற்றி நூறு கதைகள்.
தவறண யடியில் தகராறு
போடொரு முட்டி நல்ல புளிப்பிலே என்ருன் சாமி தாடியைத் தடவி நின்ற தம்பானைப் பார்த்து, தம்பீ ஆடோன்று கட்டியுள்ளேன் ஆரார்க்குப் பங்கு தேளை? வேடிக்கை இல்லை என்ருன் வெடிக்கும் போய்ப் பார்ப்போய் என்றன்.
G?

Page 36
தலையினை எனக்கு” என்ற தம்பனை நோக்கி; தோழே; குலையீரல் வேண்டுமானுல் கொண்டுபோ! ஆணுல் ஆட்டுத் தலையிலே வரrதே! தங்கம் தந்தாலும் தாரேன். என்று விலையென்ன ஆட்டுக் கென்னும் வேலனைப் பார்த்தான் சாமி,
அரைப் பவுண் ஆளே! . என்று கைவிரல் ஐந்தைக் காட்ட "குறைத்துக் கிேட்டிருக்க லாமே" குட்டியா கொம்பன் ஆடா? விறையன் நீ என்ருன் வேலன், வீட்டுக்கு வந்து பார்த்து பிறகுசொல் வேலா என்றன் பேரத்தை என்ருன் சாமி
சம்பலைத் தடவி நாக்கின் சலிப்பினை வழித்து கள்ளில் பம்பலாய் வயிறு மூட்டப் பருகி, ஓர் பூச்சுத் தள்ளி, கொம்பு மீசைச்குள் சென்று வடிபட்ட நுரைதேன் பூச்சி தும்பையும் விரலால் நீவித் தொடர்கின்றன் சாமித் தம்பி.
افستاتسوم هینتس
65

புத்தாண்டு பிறக்குமுன்பே போக்கிரிப் பயல்கள் கள்ளால் செத்துப் போவான்கள் போலும் சிவசிவா என்று வந்த பெத்தப்பா விதானேப் போடி பெரிதாகச் செருமக் கேட்டுக் குத்துப்பட்டவர்கள் கூட்டம்
குருவிபோல் கலைந்து போனர்.
உடையாரின் தெருவார் இந்த ஊரிலே யாரும் முன்னர் படையாத வண்ணமாகப் பண்ணுகின் ருராம் ஓர் தேர் . கடைகெட்ட தெருவார் கூத்துக் காட்டினும் கண்ணைமூடிப் படையாண்டகுடியான் நானும் படுக்கவோ? பார்ப்போம் ஒர்னத
உடனடியாக நாமும் ஒருபெரும் தேர்செய்வோம் போய். விடமுடியாது மச்சான் வெளிக்சிடு வேலா தம்பான் வடமொன்றும் தேவையில்லை. வண்டியில் தேரைக்கட்டி உடையாரின் தெருவரைக்கும் ஒட்டி ட்போய்த் திரும்பாவிட்டால்
வன்னிய தெருவார் நாங்கள். வாழ்ந்துதான் மானம் என்ன? "உன்னெண்ணமென்ன” என்று உசுப்பினுன் சாமி, வேலன் பின்னென்ன பின்னே என்றன் பெத்தப்பா காளிக்குட்டி முன்னெருமுறை நம்மூரில் மூண்டதோர் வாரம் சொன்னர்,
ஊரெலாம் திரண்டதாம். நம் உடையாரின் தெருவார் செய்த தேரினைக்காண என்று தெரிந்ததும் பெத்தப்பா போய் மாரியம் மாளின் கோயில் முடக்கிலே உடையில்லாமல் தேரினைப் பாருமென்றே தெம்தெய்என் முடக்கண்டு
69

Page 37
தேரோடும் போன ஊரார் திரும்பியே ஒடிஞராம். சூரர்கள் அவர்கள்! என்று தொடையிலே தட்டிக்கொண்டான்! ஒரக்கண் ணலே கள்ளை ஒருமுறை பார்த்த தம்பான் நேரமானுலும் நல்ல நிலவுதான் செய்வோம். என்ருன்,
மண்டியை வடித்து ஊற்றி மடக்கென்று குடித்து முட்டி கொண்டுபோ வேலாமூன்று கொண்டுவா என்ருன் சாமி. சந்தைக்குப் போஞயாமே? சகலதும் வாங்கிக்கொண்டு
வந்தாயா? என்ருன் தம்பான் வாங்கினேன் வழக்கம்போல
போடியார் போனர்; கூடப் போய்வந்தேன் வண்டிகொண்டு. வீடுகொள்ளாத மட்டும் வேண்டினர் புடவைசீலை பாடுபட்டவனும் தான். யாழ்ப்பாணத்துச் சாயவேட்டி போடெங்கள் சாமிக்கென்று பொடிச்சிக்கும் வாங்கித் தந்தார்.
தலைக்காயாய் வழுதுலங்காய் தக்காளி வெண்டைக்காயும் பலாக்காயும் வாழைக்காயும் பாகற்காய் அவரைக் காயும்
உலக்கைபோல் புடலங்கிசயும் ஊர்ப்பட்ட சுரைக்காய் மற்றும்
எலுமிச்சை கருவேப்போடு வல்லாமே வாங்சினுர். சா.
முன்னங்கைப் பருப்பம் தோழே "மாப்பிள்ளைக் கீரிச்சூடை, இன்னேரம் பொரியலாசி இருக்கும்; அத்தோடு சீனி, சுன்ஞகம் சுருட்டு வெள்ளச் சாராயப் போத்தல் ஆறு. என்னென்ன இழவோ எல்லாம் எற்றினுர் வாங்கி வாங்கி
தேருக்கும் பொருட்கள் உண்டு. "தெருவுக்கு மானம் காக்கும் போர்" என்ருர் கந்தப்போடி, புறப்பட வேண்டும் தோழே: வார் இதற் குள்ளே யென்று வாங்கினுன் நிறைய ஊற்றி ஊறிய வாயில் நீரை உமிழ்ந்துகள் உறிஞ்சுகின்றன்.
-سیستاد
70

அண்ணுந்து பார்த்தான் சாமி. ஆகாயவெளியை ஆங்கே தென்னையின் குருத்தில் தொங்கும் தேன்கூடு போல நின்று அண்ணுவி யின்றி ஆடும் அழகிய நிலவு கண்டு இன்னுமேன் சுணக்கமென்று எழுகிருன் சாமித்தம்பி.
போகையில் எதிரே வந்த பொன்னனை மறித்த தம்பான் சோகையா உமது தேரின் சோடினை முடிந்த தாடா? வாகைசூடுபவர் இந்த வன்னிய தெருவார்தாம்; எம் பாதையில் உம் தேர் வந்தாற் பார்க்கிருேம் ஒருகை என்ருன்
என்னடா தம்பான் மெத்த இளக்காரம் பேசுகின்ருய்? என்ன தான் நினைத்துக் கொண்டாய் எங்களின் தெருவை என்றே கொன்னையன் நல்லதம்பி குறுக்கிலே ஒடி வந்து பொன்னனுக் கருகில் நின்று போடாநாய்ப் பயலே என்ருன்,
நாயென்ற வார்த்தை கேட்டு நாகம்போற்சீறி வேலன் போயோரு குத்து விட்டான் பொக்கென்று சாய்ந்தான் நல்லான்; ஏய்ஓடி வாரீர் இங்கே எங்களின் இடையார் என்று கூயென்ருன் பொன்னன் நின்று கூனடிர் இரண்டுகிையும்.
சுகத்திலே மிதந்தான் செல்லன்
இழந்த தன்னிளமை மண்ணுள் இருக்கலாம் என்றும் தேடி வளைந்த கூன் உடம்பு, வாழ்வை, வாழ்ந்தொளி குறைந்த கண்கள் இழைந்த புன் சிரிப்பு, மூப்பின் இனியதோர் சாட்சி! மண்ணை அளைந்தாங்கு வாசல் மாக்கீழ் அமர்ந்த பார் வதியைக் காண்போம்!
m" ــــــــــــ۔۔۔۔۔۔۔۔۔۔ l-ewwwar
71

Page 38
*இழந்ததாய் ஏங்கு கின்முய் இல்லவே இல்லை என்றே வளர்ந்தெளில் குலுங்கும் வாசல் கிணற்றடிக் கதலியாக இளந்தென்னைக் கீற்றில் பேசும் இணைக்கிளி கண்டு நெஞ்சை இழந்து நின் றிருந்தாள் அன்னம் எலுமிச்சை ஒரமாக
ஒளிந்து பார்த்திருந்த அன்னம் உள்ளத்தை வசனமாக்கி எழுந்து பாரடியே செல்லன் எங்குபோகின்ருன் என்று ஒழுங்கையைப் பார்த்த வாறே, உரைத்த பார்வதியை நோக்கி தொழும்புனக் கிதுவே கம்மா தொணதொணக் காதே பெத்தா
அனுங்கினன் அன்னம் ஒகோ! அப்படிச் சொன்னேர் உன்போல் அனந்தம்பேர் அன்னம்! தாலி அவர்கட்டி முடிந்த பின்னல் சனங்களும் நானும் ஈதைச் சந்தியில் பேசிக் கொள்வோம்! சினத்தைப்பார் சினத்தை என்று சிணுங்கியும் சிரித்தாள் பெத்தா
ஈரோடு பேனும் ஏறி இரத்தத்தை உறிஞ்கினுலும். ஊர்வது பொறுக்கவில்லை ஒடிவா மகளே அன்னம் பாரிந்தத் தலையை என்று பார்வதிப் பாட்டி சொல்ல ஈர்கோலி கொண்டு வார இருந்தனள் அருகே அன்னம்,
வாரினுள் ஈரொன்றேனும் வாராதா? வந்தால் வாயை ஊறியும் நகத்தில் வைத்து உறிஞ்சியும் குற்ற ஆசை. தூறியும் பார்த்தாள் சோர்ந்தாள் சொடுகு தாள் தலைமுற்ருக, ஏறிப்போய்க் கிடக்குதம்மா! ஈரில்லை என்ருள் அன்னம்,
ஆரது கடப்புக்குள்ளே? ஆண்பிள்ளை பார் அன்னம்மா! பார்வதிப் பாட்டிகூறப் பறந்துபோய் மறைந்தாள் அன்னம். "பேரன் நான்" என்ருன் செல்லன். 'பிள்ளை பாய்' என்று தன் கண் தூரத்துப் பார்வை தூர்ந்த ஆயரத்தை அழுதாள் பாட்டி.
72

பாய்பாதி விரித்துத் தன்னைப் பாதுகாத் தோட்டைக்குள்ளே பாய்கிற வேங்கை கண்டு பதுங்கும் வேடனைப்போல், மண்ணில் தோயாத அடியில் பாதசரங் கிடந்தழவும் - பாவை வீசினுள்; விரைந்தாள், ஒடி வீட்டுக்குள் மறைந்தாள் அன்னம்
பாண்டிருப்பூரில் தட்டான் பண்ணிய பூஞரங்கள் வேண்டஉன் மாமன் மாமி வெளிக்கிட்டார் வெள்ளாப் போடு பாண்டம் பாத்திரமும் வாங்கப் பகலெல்லாம் அலைவார் போலும் ஆண்டி, தம் வண்டிக்காரன் அவனுந்தான் போனன் காணுேம்
எப்படி வருஷம்? சீலை "துணிமணி எடுத்தான? உன் ή அப்பனைப் பார்க்கச் சோட்டை! அவனுக்கென் நினைப்பே இல்லை எப்படிக் கிடக்கிறேனென்று எட்டியும் பார்க்க மாட்டான் அப்படி என்னவேலை அவனுக்கென் றலுத்தாள் பாட்டி,
எல்லார்க்கும் எடுத்தாயிற்று. இதோ உனக்கெடுத்த சேலை. நல்லதா? பார்பின்னுலே. நானூறு குறை சொல் வாயாம்! செல்லன் சொன்னவற்றைக் கேட்டு சிரித்தனள் பாட்டி உள்ளே செல்லமாய். பெத்தா என்றே அழைத்தனள் அன்னம் கேட்டு
என்னடா . எனக்கேன் சேலை எடுத்தாய்? உன்பெண்டில் எங்கள் அன்னத்துக் கெங்கே? பின்னல் அவள் எனக் கொளுவ வந்தால் என்னத்தைச் சொல்லித்தப்ப இயலும் நான். என்று பாட்டி , சொன்னதில் இருந்த, அந்தச் சுகத்திலே மிதந்தான் செல்லன்
மண்டபத்துள்ளே வாடாமகனே என்றழைத்துச் சென்று கொண்டுபோய் வைத்தாள் பிட்டுக் கொழுக்கட்டை பணியாரங்க்ள் கண்டதும் திகைத்தான் செல்லன். காரியம் இல்ஃலகொஞ்சம் தின்றுபார் என்று தண்ணீர்ச் செம்பையும் கொணர்ந்து வைத்தாள்
73

Page 39
என்னம்மா இ?ளக்கின்ருய்நீ எனக்காக ஏனித்தொல்லை? என்கிற செல்லன் முன்னுல் இருந்த பார்வதியும் பின்னே எண்பதும் முடிந்தாயிற்று. இனியென்ன? எல்லாம் கண்டேன்! இன்னும் நான் இருப்பதெல்லாம் எத்தனை நாளோ? என்ருள்
அன்னத்தின் அருகே நீயும் அவள் மடி தனிலோர் பிஞ்சும் என்னிரு கண்கள் கண்டால். எனக்கொருகுறை வேறுண்டோ? மண்ணுக்குள் மகிழ்ச்சியோடென் மணவாளர் போன ஊர்க்கே கண்களை மூடிக்கொண்டூர்க் கால்களில் நடந்து வோவேன்.
இன்பமும் அதற்கூடாக இழைந்திடும் துயரும் - செல்லன் அன்பினை உருக்க, அம்மா அதையெல்லாம் பேசி வீணுய் துன்பத்தை விலைக்கு வாங்கத் தொடங்கினை, இனும் நூருண்டு மங்கலம் பொங்க வாழ்வாய்! வரட்டுமா? என்ருன் செல்லன்.
மேட்டுவட்டைக்குள் பூமி விதைக்கிருர் வரம்பு வைக்க ஆட்களும் இல்லை. அந்த அலுவலில் ஒடி அப்பன் வீட்டிலும் சுணக்கமில்லை! வெள்ளாப்பில்எழுந்து போனுல் ராத்திரி நடுச்சாமத்தில் சோர்ந்துபோய் வந்து சேர்வார்!
போய்வருகின்றேன் என்று புறப்பட்டான் செல்லன், வீட்டு வாயிலில் வண்டிகண்டு வாழையில் மறைந்து, மாமி போயபின் ஒழுங்கை புச்கான். போம்வழி யெங்கும் பொங்கும் தூய வெண்நிலவு வையத் துரைத்தனம் செய்தல் கண்டான்!
பூமணக்கின்ற மாலை புதுப்புதுக் கனவு கோக்க மாமரக் குயிலிராவின் குறியிடை மகிழ்ந்து பாட ஆமைசள் முதுகில், வைரம் அம்புலி அணிதல் கண்டே ஊமையாய் நடந்தான் செல்லன் ஊரெங்கும் வெடியின் ஓசை
7.

அன்னத்தின் நினைவு நெஞ்கில் அலர்ந்தது செல்லிையாவின் பின்னலே அவள்தன் கூடப் பிரயாணம் பண்ணல் போன்றேர் எண்ணந்தோன்றிடவும் வெட்கி இதுவென்ன எண்ண மென்று பின்னலே திரும்பிப் பார்க்கப் பிரமையே சிரிக்கும் நின்று.
முன்னூற்று அறுபத்மூன்று; முழுநாட்கள் பொறுத்துவிட்டு இன்னுமோர் இரவு மட்டும் இருந்திட மாட்டாராகிச் சின்னப்பையன்கன் சுட்ட சீனுவின் வெடிகள் போன்று என்னென்ன நினைவோ வெல்லாம் எழுந்தன செல்லன் நெஞ்சில்,
ஆரடி வெடியை உன்றன் அருகிலே போட்டான்? என்று பார்வதிப் பாட்டி கேட்கப் பயந்துபோய் நின்ற அன்னம் கூராக என்னை நோக்கி, குற்றத்தை யாரோ எங்கள்
ஊரிலே ஒருவன் பேரில் உரைத்ததும். உயிரைக்கொண்டு
தப்பினேன் பிழைத்தேன் அன்னம் தங்கந்தான் வீட்டில் எங்கள், அப்பன் காதினிலே கேட்டால் அடிஉதை கிடைக்கும். ஆமாம் எப்படி இதெல்லாம் நெஞ்சில் இருக்கும்? ஓர் வருஷ நாளில் அப்படி நடந்த தென்று அதிசயப்பட்டான் செல்லன்,
பொழுது புலர்ந்தது
வெடியோசை கேட்டு, "தூங்க விடாரிந்த வருஷ்க் காரப் பொடியன்கள்? என்று சேவல் புறுட றுத் தொழுந்து கூவ அடிவானக் கடலில், தங்க அத்தாங்கால் விண்மீன் எல்லாம் வடித்தாக்கக் கொடுத்தான்; தேய்ந்து வந்தான் செம்படவன்பானு
75

Page 40
வருஷம் பிறந்தது
"இப்பொழுதேனும் எம்மேல் இரக்கம் வந்ததுவே" என்று செப்புவார் சிறுவர் கேட்டுச் சிரித்தனர் கமலமாதர். *எப்படி வருஷம்?" என்ற இரவியின் கிண்டல் கேட்டுத் துப்பட்டி எடுத்துவீசித் துள்ளினர் கிழவரெல்லாம்!
விட்டுவிட் டொலித்து நின்ற வெடியோசை தொடராய் நீண்டு பட்டுப் பட்டென்றே காதைப் பாடாகப் படுத்தித்தள்ள தட்டுக்கெட்டெழுந்து தங்கள் கனவினைப் பாதியோடு விட்டதை நினைந்து, மூச்சு விட்டார்கள் குமரிப் பெண்கள்
அன்னம் அரம்பு வைத்தாள்
இன்னுமா தூக்கம்? அன்னம் எழுந்திரு குளிக்க" என்ற அன்னையின் ஆணை கேட்டு, அடிபட்ட கன்றே போல அன்னமும் எழுந்தாள். கோயில் அரப்பொரு செம்பில் கொண்டு முன்னலே கனகிம் போனுள். முறைப்படி நிற்கச்செய்தான்,
ஆல் இலை காலுக்கிட்டு, அரசிலை தலையில் தொட்டு * பால்பொங்கி, குடும்பம் நல்ல பண்ணையாய்ப்பெருக ஈசன் கால்பற்றி இறைஞ்சி, அன்னம், தலையிலே அரப்பு வைத்தாள். வேல் சிக்கும் விழிக்குள், சிக்கி விழுந்ததோர் அரப்பின் துள்ளி!
கண்களைக் கசக்கும் அன்னம், கையினைப் பற்றிச் சென்று இன்னும் நீ குழந்தை யாட்டம் இருக்கிருய் கிண்ணற்றில் ஈயத் தண்ணீரை அள்ளி அன்னம் தலையிலே சொரியும் போது "அண்ணே யென் றுள்ளே வந்த ஆளினக் கண்டாள் அன்ன;
76

சின்னணு வாடா வாவா சித்திரை வருஷத்துக்கு என்னப்பா சுமந்து வந்தாய் என்றனள் கனகம் செல்லன் சொன்னதைச் சொல்லி, தந்த சுமையையும் கொடுத்தான் சின்னுன் என்னது இறைச்சி போலும் என்றனர் அழகிப் போடி,
அரப்பிட்டு முழுதி உள்விட் டறையிலே விளக்கினேடு நிறைமுட்டி வைத்தார் மாதர் நீறிட்ட நெற்றி வேர்க்கச் சருவத்தில் பால் பிழிந்தார். சண்டிய ரான ஆண்கள் பரிதிக்குப் படைத்தார் டொங்கல் பாடினர் தெய்வப்யாடல்
தங்களுக் கென்றுவாங்கித் தந்த தம் உடுப்பை ஊரில் எங்கினும் சென்று காட்ட , ஏக்கத்தில் தூங்கா * தையோ எங்கடா விடியும்?" என்றே இருந்தவர், தாயார் தந்த பொங்கலா உண்பார்! இந்தப் பொடியன்கள் பொடிச்சிமார்கள்
பிட்டோடு தயிரும் சேர்த்துப் பிசைந்து சக்கரை தேன் கொட்டி விட்டார்கள் வட்டிலோடு வெளிக்கிட்டார், அம்மைகையால் முட்டாசி வாங்கக், கையில் முழுத்தமும் வாங்கி ஒலைக் குட்டானில் வைத்து வண்ணக் குருவிகள் பறந்து போகும்.
வீதியின் மருங்கு, நீண்ட விருட்சங்கள் தோறும், ஊஞ்சல் வாதினில் பறக்கும், பாடல் வகைவகை யாக நூறு, காதினில் கலந்து, , "கன்னித் தமிழென்றும் வாழும்" என்ற நீதியை நிலைநாட்டும் நம் நெஞ்சேலாம் அவையே ஈட்டும்
வண்ணுத்திப் பூச்சிக் கூட்டம் வான்வெளிப் படகில் மொய்த்து தென்னவன் தமிழை இந்தத் தேசத்தின் உருண்டை எல்லாம் பண்ணுெடு பாடிப்பாடி பரப்பிடப் புறப்பட்டாற் போல் கண்கொளாக் காட்சி ஊஞ்சல், கவிதையில் பறந்த காட்கி
77

Page 41
கந்தப் போடியார் வீட்டில்
அருமையாய்ப் பெற்றெடுத்த அப்பனும் அம்மை நீயும் *கருகரு வென்று நெஞ்சு காய்கிருேம். வடிவேல் சாமி ஒருவனும் இல்லை. வேட்டை ஒன்றுதான் குறைச்சல் காட்டில் எருமைகள் வெட்டிக் கிட்டி எறிந்ததோ தொலைக நாய்கள் !
மடையனும் போகான். உன்றன் மகன் செல்லன் மதியைப் பார்பார் வடிவேலைக் கண்டு நாலு வார்த்தைசொல் லாமலுக்குக் குடியேன் நான் தண்ணிர், அந்தக் கூட்டத்தால் வந்ததெல்லாம் கடவுளே என்ருர் கந்தப் போடியார் கவலை யோடு,
வருஷமும் அதுவுமாய் உம் வாயிலே நல்ல வார்த்தை வருவதற்கென்ன? கொண்ட வழக்கத்தை விடவா கூடும் முருகன்தான் துணை, வில்லங்கம் மூளாது: செல்லன் சாமி வருகிருர் அங்கேஎன்று வாசலைப் பார்த்தாள் பொன்னு!
வேட்டைக்குப் போனவர் திரும்பினர்
மான்மூன்றும் கலையன்; பெட்டை மரையொன்றும் சுட்டோம்” என்று
தான்சுட்டாற் போல, சாமி தலையினை நிமிர்ந்தான். "ஆட்டை ஏன்வாங்கிக் கட்டி யுள்ளேன்? எங்கே உம் வடிவேல்? தேடி நானிங்கே செத்தேன் என்று நடுங்கினர் கந்தப் போடி,
புருஷனைப் பார்த்துக் கண்ணைப் புரட்டினள் பொன்னம்மா போய் அரப்புவை மகனே என்று அன்பினுல் ஆஞ்ஞாபித்தாள். கிறுகினன் சாமி வாசல் கிணற்றடிப் பக்கமாக வருஷமும் அதுவுமாய்நல் வாழ்த்துத்தான் என்ருன் செல்லன்!
7s

கண்விழித் திரவு முற்றும், காட்டிலே அலைந்து மேனி புண்ணென்று சொல்லிப் பொய்யாய்ப் புலம்பினன் சாமி. கேட்டு தண்ணிக்கு வளைகின்ரு யா? தரமாட்டேன்! வருஷம் ஒர்நாள் என்னடா காட்டில் வேலை இரவெல்லாம்? என்ருர் கந்தர்,
முழுகிவிட் டீர்கள் போல? முகத்திலே உஷாரைக் காணுேம், அழுபவன் போல சாமி அரட்டினன் போடியாரை. புழுகாதே சாமி அந்தப் போத்தலை உடைத்துக்; கொஞ்சம் முழுகுமுன் போடேன் என்று மொழிந்தனர் கந்தப்போடி,
பனைப்பழ முகிழைக் கையில் பற்றியும் திருகினற்போல் கணத்திலே போத்தல் மூடிக் கடதாசைக் கழற்றி நல்ல கணக்காக ஊற்றி மூக்கில் காட்டினன் முகத்தைக் கோணி அணுக்கினன்; கண்ணைமூடி அடித்தபின் ஹஹ் ஹா என்ருன்,
வெற்றிலை போட்டுக்கொண்டு வெளிக்கிட்டான் சாமி. அங்கே முற்றத்தில் நின்ற செல்லன் முழுத்தம்எப்படியோ என்றன். பற்களை இழித்தசாமி, பலாப்பழ வாசம் வெள்ளே! மற்ருெரு முறைபோடப் போய் வருகிறேன் என்று போனன்.
மாமியார் வீட்டில் அந்த மரைச்சந்தைக் கொடுப்பேன் என்று சாமியன் நடந்தான் செல்லன் சருவத்தில் வெந்நீர் வார்த்தான். சோயிலில் கொட்டுமேளம் குரவையின் இனிய ஓசை தோயவும் காதில், தோய்ந்து துரிதமாய் உள்ளே வந்தான்.
வீட்டுக்குள் ளிருந்து பொன்னு வெளியேறி மண்டபத்துள் வேட்டியைக் கொடுத்தாள். வாங்கி வினயமாய்ச் சிரித்தசெல்லன் சோட்டைப்பட்டதுபோல் நல்ல சோக்கான வேட்டி என்று நீட்டினன் கரங்கள். சாமிகும்பிடக் கோயில் போனன்.
79

Page 42
கோயிலுக்குள்ளே பெண்கள் கூட்டங்கள் பலவாய் நின்று வாயிலோர் கையை வைத்து மற்றக்கிை இடையிற்சேர்த்து கூயென்று குரவையிட்டார். குழம்பல சேர்ந்தும் ஆங்கு பாய்கின்ற இனிய ஒசை பண்ணுமா? பகர்தல் எங்கன்?
பூசைகண் டார்கள் மக்கள் புற்றுக்குள் ஈசல் போன்று வாசலில் வந்தார் வேர்வை வடிக்கின்ற மேனி யோடு. பேசினர் இரைந்து சந்தைப் பெருங்கூச்சல் தொடங்க யாரோ பேசாதீர் என்றர். ஐயர் பிரசாதம் வாங்கிப் போனுர்,
செல்லனும் கோயிலாலே திரும்பினுன் கந்தப்போடி செல்லமாய்த் தம்பிஎன்ருர். சீக்கிரம் பொன்னு என்ருர், எல்லாம் ஆயத்தம் நீங்கள் எழும்புங்கள் என்ருள் பொன்னு, செல்லனும் போடியாரும் சேர்வைக்கால் வட்டில் கண்டார்.
அழகு சம் பாவைக்குற்றி கமுகம் பூப்போல தீட்டி இளகவைத் திடித்து தேங்காய் இணக்கமாய்க் கலந்து மூங்கில் குழலிலே அவித்த வம்பிப் பூய்போல் பிட்டு மேலே நெழிகிறஆவி செல்லன் பசியினை நெருடி நிற்கும்
தேரும் திமிரும்
தேரைப்பார் தேரை என்று தெருவினில் திரண்டார் ஊரார் பாரதன் அழகையென்று பல்லினை இழிப்பார்! டேய் டேப் ஆரது தேர் முன் கேட்டி அடிவேணு மாக்கும்! போ போ தேர்வண்டி ஒட்டும் சாமி திமிருடன் எழுந்து சொன்னன்.
80

வன்னிய தெருவார் தேரை வந்துபார் காசு வேண்டாம்! அன்னத்தின் மீதில் அம்மன் அமர்ந்திருப்பதனைச் செய்த வண்ணத்தை யெல்லாம் ஈங்கே வாய்விட்டுச் சொல்லப்போனுல் முன்னுாற்றி அறுபத்தைந்து நாட்களும் முழுதாய் வேண்டும்,
மாசிலாமணி யோடாவி மன்னன்தான் மனுஷன் கையை கூசும்மண் தின்பதற்கு குலவித்தை! அவனுக்கெல்லாம் காசெல்லாம் செலவு எங்கள் கந்தப்பர் கணக்காம்! ஊரார் பேசிக்கொண்டார்கள் தேரை பின்பற்றி வண்டி பத்து!
ஏர்சுமந்தெடுத்த தோளில் இறுமாப்பைச் சுமந்து வந்தால் போரையும் வெல்வோம் என்று புறப்பட்ட இளைஞர் கூட்டம் ஆர்ஆர்தம் மச்சிமார்கள் அவரவர் வேலிக்குள்ளே, பார்க்கின்ருர் என்று பார்த்து, பார்தேரைப் பார்பார் என்பார்!
பார்வதிப் பெத்தா கூடப் பாதையில் ஒதுங்கி நின்று கூர்மையாய்த் தேரைப் பார்த்துக் கும்பிட்டாள் இதனைச்கண்டு பார் இந்தக் கிழவிக்குள்ள பக்தியை என்று செல்லன் சாரிலே இருந்த வேலன் சரவணை இடத்தே சொன்னுன்
"அன்னமும் வேலிக்குள்ளே அதோ " என்ருன் இளையான் உன்றன் கன்னத்தில் தருவார் பெத்தா கவனமாய்ப் பேசு! வேலன் சொன்னதைக் கேட்ட செல்லன் சொக்கிலோர் சுணையுள் நீத்தும்; அன்னத்தைக் கண்டார், வண்டி அமர்ந்துள்ள தோழரெல்லாம்!
கோயிலின் வீதியெங்கும் குரவைபும் வெடியும் கும்பல் பாய்கிற வண்டி தேரும் பயத்தொடு பணிந்த தங்கு. ஆயிரம் சிறுவர் வந்து அழகான தேர்தான் என்று வாயூறி நின்றர்; சாமி வன்மத் தோடவரைப் பார்த்தான்!
8 .

Page 43
கோயிலைத் தாண்டித் தேரைக் கொண்டிப்பால் வந்தீரோ உம் வாயிலே மண்தான் என்று, வம்மியின் கீழேநின்று கூயென்று கொள்ளை நல்லான் கொடுக்கினை இழுத்துக் கட்டி சாயடா மாட்டை என்றன். சண்டியன் சாமித்தம்பி,
தேர்வந்த வண்டி போகத் தெருவிலே இடமில்லாமல் ஆராரோ குவிந்தார். வண்டி அசையாமல் நின்றதங்கே! பாரிப்போ புதினம் என்று பல்லினல் வில்லுக் கத்திக் கூரினை இடுக்கிக் கொண்டு குதிப்பதற் கெழுந்தான் சாமி!
உண்டோடா வீரம் உங்கள் உடையாரின் தெருவாருக்கும்? வண்டியை விடடா என்று வன்னிய தெருவார் கத்த பெண்டுகள் பின்ளைகுட்டி பெரிவவர் விலகீர் என்றே வண்டியில் ஏறிவந்த வாலிபர் குதித்தார் கீழே!
உடையாரின் தெருவிலுள்ள உறுப்பான ஆண்கள் எல்லாம் படையாகத் திரண்டு கொண்டு பாதையை மறித்து வண்டிக் கடை யாணி கழற்றும் கையைக் கால்களால் மிதித்த வாறே விடுமண்ணே வழியை என்று விருட்டென எழுந்தான் செல்லன்.
சச்சரவெதற்கு? நாம் யார்? சந்தோஷ தினத்தில் இந்த பொச்சாப்பேன்; நண்பர்கள் நீர் போகலாம் என்ற வாறே உச்சத்தில் கூவிக்கொண்டு உடையாரின் மைந்தன் வந்தான் கச்சடாப் பயல்கள் என்று கத்தினன் சாமித்தம்பி,
கணபதிப் பிள்ளை சொன்ன கட்டளை காதில் கேட்டுச் சனம் ஒரு பக்கமாகச் சரிந்தது. சாமி வண்டி
கணகண சதங்கை நாதம் காளைகள் குதித்துப் பாயும் மனமடி வுற்ற பேர்கள் மறைந்தனர் மானம் போர்த்து
99.

கூத்துக்களரியில் இன்பம்
பிள்ளையார் கோயில் கிழக்கு வீதியிலே பெருமணல் செறிந்திடு வெளியில் சள்ளைகள் விரிந்து சதைமடிப்பேறிச் சளிந்திடும் வயிற்ருேடு கொடிய வல்லசுரர் போல் வளர்ந்துள ஆலும் வம்மியும் புளிகளும் அதன்கீழ்ப் புல்தலை காட்டிச் சிரித்திடும் பரந்த பூமியில் எழுந்ததோர் மேடை.
பன்னிரு கால்கள் நாட்டிய வட்டம் பந்தலின் மீதுமேற் கட்டி, பன்னிரண் டிதழ்ச்செம் பருத்தியின் பூ, நிலம் பார்த்தது போற்பல நிறத்தில்; தென்னையின் குருத்தில் கிளிகளும் விளங்கும் தொங்கிடும் குஞ்சமும் கட்டி, மண்குவித் தமைந்த மேடையை அரங்கு மண்டபம் ஆக்கினர். ஆங்கு.
பந்தலில் கால்களுக் கிடையிடை எண்ணெய் பந்தக்கால் வரிசையாய் நட்டார்1 சந்தணம் நீறு குங்குமிச் செப்பும் சால்வைகள் சல்லரி மேளம் வந்தான் பிறவூர்ச் சனங்களும் மொய்யென வந்தனர் ஊரெலாம் மக்கள்! சந்தையே டோலக் கூத்தினைப் பற்றிச் சர்ச்சைகள் மலிந்தன பாரீர்!
83

Page 44
ஊரெலா மிருந்து உறவெலாம் வந்த உவகையால் ஊரெலாம் கள்ளே! ஆரெவர் என்ற பேதமில்லாமல் அன்பிலே நடந்தது விருந்தே! * ஒரிரு கூத்தா ஒன்பது கூத்தும் ஆடினேன் அது ஒரு காலம்! " காரைதீவிருந்து வந்த ஓர் கிழவர் கதையினை அவிழ்ப்பதும் கேளீர்?
மண்முனை மட்டக் களப்பொடு மகிழுர் மாவடிப் பள்ளி மண்டூரும் கிண்ணையூர், துறையூர், நிந்தவூர் ஒல்லிக் கேணியூர் சேனையூர் யாவும் சொன்னது போலே சொரிந்தன; வந்து சூரியன் மறைவதற்குள்ளே! அண்ணுவி மார்கள் அவர்ஒரு குழுவாய் அமர்கிருர் ஆல்களின் கீழே!
முறுக்கிய மீசை முகத்திலே சிரிப்பு மோகன மாகிய நடைசேர் விறுக்கன் அண்ணுவி வெள்ளையன் நெற்றியில் விளங்கிய சந்தனப் பொட்டை . நிறுத்தி வைத்தாற் போற் சித்திரை மாத நிறைவுபோல் , நிலவு மென் மடந்தை ஒருத்தியும் கூத்தே கருத்துடையவள் போல் ஊர்வருமுன் கிழக் கிருந்தாள்!
84

வெள்ளையன் தோழன் வேலன் அண்ணுவி வேட்டியை இடுப்பிலே செருக்கி அள்ளிய சால்வை உதறியும் வேட்டி அவிழ்ந்திடா வாறிடுப் பிறுக்கி, பிள்ளையார் இருந்த திசையினை வணங்கி பேர்பேறு மத்தளம் எடுத்தான் * சல் சல சல்சல் சல்" லெனக் சதங்கைச் சமுத்திரம் போல் ஒலி எழுமே!
உடுப்புகள் கட்டி மாற்றுகள் புனைந்து ஒவ்வொரு கொலுவிலுள் ளாரும் எடுத்தடி வைத்த சதங்கையின் ஒசை எங்கணும் நிறைந்திடல் கேட்டு அடிக்குரல் எடுத்து நாக்கினை அசைத்து அரிவையர் குரவையிட்டார்கள் வெடித்தன வெடிகள். கோயிலின் முன்னே விருத்தமொன் றெழுந்தது கேளீர்,
வெள்ளையன் குரலில் சதங்கையும் குரவையும் வீழ்ந்தன மக்களின் குரலும் பிள்ளையார் மகிழ ஆடினர். தேங்காய் பிளந்தனர் ஆடிய அவர்கள் மெல்லென நடந்தார் களரியில் மேளம் மிதந்தது சல்லரியோடு எள் விழுந்தால்விழ இடமில நிலத்தில் எங்கணும் மக்களின் வெள்ளம்
85

Page 45
கட்டியக் காரன் கணபதிப் பிள்ளை களரியில் தோன்றினன்; வெள்ளை கட்டியால் மறைத்தார், வெடியொடு குரவை விண்ணெலாம் நடுங்கின! பயந்து! எட்டடித் தாளக் கட்டிலே ஆட்டம். பட்டது களரியில் பாடாய் தட்டினுர் கிழங்கள் தொடைகளில் தாளம் ததிங்கிணத் தாதெய்யத் தோம் தோம்!
அன்னமும் கூத்துப் பார்ப்பதற் காசை கொண்டனள் ஆயினும் அப்பன் சொன்னசொல் கடவாச் சுதந்திரம் உடையான் சோகமே உருவமாய் நின்ருள். கண்ணிலே கனிந்த கனிகளைச் கையால் கொய் திடும் கன்னியின் நெஞ்சில் என்னவோ புதிய எண்ணமொன் றெழலும் எண்ணினுள் செல்லமச்சானை,
கணபதிப் பிள்ளை களரியில் வரவு கட்டியம் சொல்லவும் தொடங்க உனதென தென்று ஒடிஞர் உரிமை உள்ளவர் அத்தனை பேரும்! சனசமுத் திரத்தின் சந்தடி - குரவை சடசட வெடிகளின் ஒசை கணபதிப் பிள்ளை இடையிலே சால்வை கட்டினர் மோதிரம் அணிந்தார்!
86

அடுத்தவூர் இருந்து வந்த அண்ணுவி மார்கள் கூட எடுத்தவாய் மூடா வண்ணம் இருந்தனர்
இளைஞரெல்லாம் குடித்தகள் வாயில் நாற கூத்தினை நயந்தார். வீட்டில் படுத்தவர் பாட்டுக் கேற்ற பாவனை பண்ணிக் கொண்டார்!
"அன்னமே .. அணங்கே . . தெய்வ அரம்பையே. -- அல்லி மானே.." என்ன ஓர் பாடல் கூத்தில் இணைகிையில் வடிவேல் - சாமி, என்னப்பா செல்லா. பாட்டு எப்படி இருக்குதென்று கண்களைப் பணிந்து மேலே காட்டி ஓர் மோடி செய்தார்
அன்னமும் விழுத்திருந்து பாடலைக் கேட்டாள். செல்லன் முன்னெரு நாளில்: தன்னை முறைகேடு பண்ணவந்த எண்ணமும்; வயலும், யாவும் எழுந்தன மனதில் நாணி இன்னமும் பயிராய் நெஞ்சுள் இருக்கிறதென்னே என்ருள்!
sara aal
ァ
' & 7

Page 46
செல்ல%ன எண்ணிப் பார்க்கச்.
சிரிப்பொன்று
சிறையை விட்டு கொல்லென வெளியே பாய கொடுப்புக்குள் அடக்கிக் கொண்டாள்! வெல்லம் போல் இனித்த அந்த விருத்தத்தைக் கேட்ட செல்லன் உள்ளத்தை ஒருவாறு அன்னம் ஊகித்தாள் உறங்கிப்போனுள்!
களரியின் அருகில் செல்லன் கலியாணப் பேச்சு வார்த்தை! கிழவனைப் பாரேன்! என்று கிள்ளிஞன் வடிவேல்! சாமி களவாக எட்டிப்பார்த்தான்! கந்தப்பர் . அழகிப்போடி தலையினை அசைத்து தாளம் தகர்ப்பதும் கண்டான் செல்வன்
88