கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாலி

Page 1
வாலி பற்றி.
திரு. எஸ். இராமகிருஸ்னனுடைய சிறியன சிந்தியா தான் நூலுக்குப் பின்னர், வாசிவன் த பற்றி இன்ஒெரு நூல் எழுவதற்கு இடமில்வே என்று பாண்ணியிருந்தி வேளேயில் அங்வெண்னம் தவறு என்று சுறுவதுபோல் அகளங்களின் இந்நூர் வெளிவருகின்றது."
"இவர் தமிழ் இலக்கியம் ஒன்றினே ஆழமாக நோக்கிப் புதுமையான கருத்துக்களேயும், நுணுக்கமான விளக் கங்களேயும், பொருத்தமான வாதங்ாாேயும் முன் பைந்து இந்நூலே எழுதியிருப்பது மிகவும் தக்க ஒரு விடயம்'
"ஆசிரியருடைய திறமை, இந்நூலிலே பல்வேறு வகைகளிலே வெளிப்படுத்தப் படுகின்றது. ஒன்று எாவிாதைப் பகுதியிலே புள்ள சில பாடல்களுக்கு ஆசிரியர் கொடுக்கும் பொருத்தமான நுணுக்க வின் கங்கள் ஆகும்"
பொத்தத்தில், தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு இந்நூல் அரிய விருத்து புதிய கருத்துக்னேயும் புதிய விளக்கங்களேயும் தரிசிக்கும் வாய்ப்பு அவர் களுக்கு இந்நூலிலே உண்டு "
॥ யதுறை சார்ந்த ஒருவர் ஆழமான இங்கிய
அறிவுடனும் உளர்வுடனும் இந்நூவே எழுதித் தமிழகத்தின் பாராட்டைப் பெறுகிரு."
மதிப்புரையிங்
பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ்
 


Page 2

வாலி
(ஆய்வு நூல்)
அகளங்கன்
அகில இலங்கைக் கம்பன் கழக வெளியீடு, யாழ்ப்பாணம்,
நா. தர்மராஜா பம்பைமடு.
வவுனியா.

Page 3
i
(6)ւյսյո :
6u阿6ö
எழுதியவர் :
அகளங்கள்
வெளியீடு :
அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணம்.
பதிப்புரிமை :
அகளங்கன் (நா. தர்மராஜா)
அச்சுப்பதிவு
ஆசிர்வாதம் அச்சகம் 50, கண்டி வீதி, யாழ்ப்பாணம்.
முதற்பதிப்பு :
ஆவணி 87
விலை :
e5ur 20-00

பதிப்புரை
வாலி-கம்பன் கைவண்ணத்தில் மிளிரும் ஒரு பாத் திரம். நூல் பிறந்த காலந் தொட்டு, இன்றுவரை சாத்தனையோ அறிஞர்களால் அலசி ஆராயப்படும் விடயமாக வாலிவதை விளங்கி வந்திருக்கிறது. தீட்டத் தீட்டக் கூர்மை பெறும் கத்திபோல், வாலி வதையும் பலபேரால் விவாதிக்கப்பட்டும், ஆராயப்பட்டும் வரவர வாலிவதை நியாயமானதா என்ற கேள்வி கூர்மை அடைந்ததே தவிர, அதுபற்றித் தெளிவான ஒரு முடிவு பிறந்து விட்டதாய்ச் சொல்ல முடியாது.
தெய்வீசும் மானுடம் என்னும் இரு எல்லைகளைக் கொண்டு காப்பியம் முழுதும் நடைபயிலும் இராமனைக் கம்பன் தனி மானுடனகச் செல்ல விட்ட பகுதி, வாலி வதைப் படலம் எனலாம். விமர்சனத்திற்கு அப்பாற் பட்டலஞன இராமனை, ஒரு குரங்குப் பாத்திரத்தைக் கொண்டு கேள்விமேல் கேள்வி கேட்கச் செய்து இன றடித்து விடுகிருன் கம்பன். இறுதியில் தெய்வீகத்தை அகற்றிஞல் இராமன் பாத்திரம் காப்பியத் தலைவன் என்ற அந்தஸ்திலிருந்து விழுந்துவிடும் என்பதை உணர்ந்து, மீண்டும் தெய்வீகத்தை அவனுள் புகுத்தி இராமனைக் காப்பாற்றி விடுகிருன், பதில் சொல்ல முடியாத கேள் விகள் கேட்ட வாலி, திடீரென இராமனைத் தெய்வமாய் ஏற்று ‘வெற்றரசு எய்தி எம்பி வீட்டரசு எனக்கு விட்டான்' என்று கூறுவது கம்பனின் இந்த மனமாற்றத் துக்குத் தகுந்த சாட்சி.

Page 4
1ν
ஆராய ஆராயச் சுவைபிறக்கும் இப் பகுதியை, தன் ஆராய்ச்சி மூலம் மீண்டும் சுவைபடுத்தி இருப்பவர், அகளங்கன் எனப்படும் திரு. நா. தர்மராஜா அவர்கள். கணிதத்தைப் பயின்ற அவர் வாலிவதையை இவ்வளவு சுவைபட ஆராய்ந்திருப்பது தமிழை இன்ன துறையினர் தான் கற்கவேண்டும் என்று இல்லை, எல்லாத் துறையினரும் கற்கலாம் என்பதற்கு ஒரு நல்ல சாட்சி. ஈழநாடு பத்தி ரிசகையில் 'வாலி கொலைச்சரமும், கேள்விச்சரமும்' என்ற தலைப்பில் தொடர்ந்து வெளிவந்த இக் கட்டுரைத் தொடர் சில திருத்தங்களுடன் நூலுருப் பெறுகிறது. வாலிவதை பல்கலைக் கழக மாணவர்களுக்குப் பாடநூலாயிருக்கும் இக் கால கட்டத்தில், இவ்வெளியீடு பொருத்தமானதாயும், மாணவர்க்குப் பயனுள்ளதாயும் அமையும் என்பது வெளிப்படை.
அகில இலங்கைக் கம்பன் கழகம், தனது ஐந்தாவது வெளியீடாக, வாலி எனும் இந்நூலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறது. அகளங்கனின் இலக்கியப்பணி தொடர மனமார வாழ்த்துகிருேம்.
க. குமாரதாசன் செயலர், அ. இ. கம்பன் கழகம் அகில இலங்கைக் கம்பன் கழகம், கம்பன் தமிழ்க் கோட்டம், 300, கோயில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். I 5-8-87.

மதிப்புரை
பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் (தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்)
கம்பராமாயணத்தில் வாலி வதை ஒரு சர்ச்சைக்குரிய சுவையான பகுதியாகும், இது தொடர்பாகப் பல கட்டுரை களும் நூல்களும் வெளிவந்துள்ளன. இப்பகுதியினைப் புதிய கோணத்தில் நின்று டார்ப்பதாக "அகளங்கன்' அவர் களுடைய வாலி என்னும் இந்நூல் அமைகின்றது. இந் நூலாசிரியர் கணிதத்துறையிலே பயிற்சி பெற்றவர். இவர் தமிழ் இலக்கியம் ஒன்றினை ஆழமாக நோக்கிப் புதுமை யான கருத்துக்களையும் நுணுக்கமான விளக்கங்களையும் பொருத்தமான வாதங்களையும் முன்வைத்து இந்நூலை எழுதியிருப்பது மிகவும் பாராட்டத்தக்க ஒரு விடயம். இரு வேறுபட்ட துறைகளின் சேர்க்கை புதிய பரிமாணங் சுளைத் தோற்றுவிக்கலாம் என்பதற்கு இந்நூலாசிரியரின் முயற்சி நல்ல எடுத்துக்காட்டு.
கம்பனிலும் இராமபிரானிலும் பக்தி கொண்டவர் களுடைய சரம் தன்னைத் தாக்கா வண்ணம் ஓர் இலக்கிய 3. சத்தினை ஆசிரியர் முதற்கண் அணிந்து கொள்கிழுர், 'இப்படி ஆராய்வது கட்வுட்கொள்கையோடு மாறுபட்ட தாகக் கருதப்பட்க்கூடாது. காப்பியக் கருவோடு சம்பந்தப் பட்ட ஒரு இலக்கியப் பிரச்சினையாக இதனைக் கருது வதையே நான் விரும்புகிறேன்' என்பது ஆசிரியருடைய கூற்று. கம்பனை ஒர் இலக்கியப் புலவளுகவும், கம்ப

Page 5
vi
ராமாயணத்தை ஒர் இலக்கியமாகவும், அதில் இடம்பெறும் பாத்திரங்கள் வெறும் இலக்கியப் பாத்திரங்களாகவும் ஆசிரியருடைய விமரிசன நோக்கிலே தென்படுகின்றன.
ஆசிரியருடைய திறமை இந்நூலிலே பல்வேறு வகை களிலே வெளிப்படுத்தப்படுகின்றது. ஒன்று, வாலி வதைப் பகுதியிலேயுள்ள சில பாடல்களுக்கு ஆசிரியர் கொடுக்கும் பொருத்தமான நுணுக்க விளக்கங்கள் ஆகும்.
"அரக்கர் ஒரழிவு செய்து கழிவரேல், அதற்கு வேறேர்
குரக்கினத் தரசைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ?" என்னும் பாடலடிகளுக்குக் கொடுக்கப்படும் விளக்கம் பின் வருமாறு: "இங்கே அரக்கர் செய்தது அழிவு என்பதை வாலி ஒப்புக்கொள்கிருன். அரக்கஞன இராவணன் சீதையைச் சிறையெடுத்தது குற்றமானது என்றும், அவனைக் கொல்வது மனுதர்ம நெறிப்படி சரியானது என்றும் வாலி ஒப்புக்கொள்கிருன். இராவணன் செய்த கொடுமைக்கு, அதாவது அரக்கர்தம் தலைவன் செய்த கொடுமைக்கு, குரக்குஇனத்துத் தலைவனைக் கொல்லும்படியா மனுநெறி கூறுகிறது, என்ற வாலியின் கூற்றிலிருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம். இராவணன் செய்ததைப் பிழை என்றும், அதற்குத் தண்டனை கொலை என்றும் ஏற்றுக்கொள்ளும் வாலி, தான் செய்தது மட்டும் சரி என்று சாதிப்பது எப்படிச் சாத்தியமாகும் என்பதும் சிந்திக்க வேண்டியதே. ' இது போன்ற நுணுக்கமான, திருனய்வுத் தரமுடைய, சுவை பயக்கும் விளக்கங்கள் இலக்கிய ரசிகர்களைப் பரவசப்படுத்துமென்பதில் ஐயமில்லை.
ஆசிரியருடைய வாதத்திறமையினை வா சக ர் க ள் இலகுவிலே இனங்கண்டு கொள்வர். பல உதாரணங்களைக் காட்டலாம். ஒரு சிறிய உதாரணம் மட்டும் இங்கு தருகிறேன். தேவர் குலத்தைச் சேர்ந்த இந்திரனுக்கு மகனுக வாலியும், சூரியனுக்கு மகனுகச் சுக்கிரீவனும் தோன்றிய காரணத்தால், வாலி சுக்கிரீவரை விலங்குகள் என்று கொள்ளமுடியாது என்று இராமர் வாதிடுகின்றர்.

vii
இவ்வாதம் பொருத்த மற்றதாக இருக்கின்றது என வாலி நூலாசிரியர், 6:ாதிடுகின்ருர்: "மகாபாரதக் கதையிலே, சூரியனின் மகளுகக்கர்ணனும், தருமன், இந்திரன், வாயு, அசுவினி தேவர்களுக்கு, குந்தி, மாத்திரி, வயிற்றுப் பிள்ளைகளாக பஞ்சபாண்டவர்களும் பிறந்தார்கள். இவர் கள் எல்லோரும், மனிதர்களாக மதிக்கப்பட்டவர்களே யன்றித் தேவர்களாக மதித்துப் பூஜிக்கப்பட்டவர்களில்லை. எனவே, லாலி, சுக்கிரீன் முதலியோர் இந்திரன், சூரியன் முதலிய தேவர்களுக்குப் பிள்ளைகளாக இருந்தாலும், ஒரு குரங்கின் வயிற்றில் பிறந்ததால் அவர்கள் குரங்குகளாகவே மதிக்கப்பட்டனர்." இத்க கைய வாதத் திறமை நூல் முழுவதுமே இல்ழையோ டி நிற்கின்றது.
'இல்லறந் துறந்த நம்பி. " என்னும் வாலிவதைப் பாடலிலே இடம்பெறும் 'இல்லறம்' என்னுந் தொடருக் குப் பொதுவாக 'மனைவி' என்ற பொருள் கூறுவதே வழக்கம். ஆனல், ஆசிரியர் இதற்கு வேறு பொருள் கூறு கின்ருர், "இங்கு இல் - அறம் என்பது உயர்ந்த குலத்துக் குரிய அறம் என்றே பொருள் கொள்ளப்படல் வேண்டும், இகஃன இகே படலத்தின் 99ம் பாடலில் வரும் "ஈரமா வதும் இற் பிறப்பாதுைம்' என்ற வரிக்கு உரிய பொருளில் இற்பிறப்பு, இல்-பிறப்பு எனப் பிரித்து, உயர்குலத்திற் பிறந்த பிறப்பு எனப் பொருள் கொண்டுள்ளதால் காணலாம். ' தான் கொண்ட பொருளுக்கு ஆதாரமாகச் சுந்தரகாண்டம், திருக்குறள் ஆகியவற்றிலிருந்து மேற் கோள்கள் காட்டிப் பொருத்தப்பாட்டினை நிறுவுவது நயத்தற்குரியதாயுள்ளது.
எஸ். இராமகிருஷ்ணனுடைய சிறியன சிந்தியாதான் நாலுக்குப் பின்னர் வாலிவதை பற்றி இன்னெரு நூல் எழுவதற்கு இடமில்லை என்று எண்ணியிருந்த வேளையில், அவ்வெண்ணம் தவறு என்று கூறுவதுபோல ‘அகளங்க'னின் இந்நூல் வெளிவருகின்றது. இராமகிருஷ்ணன் அகண்ட பாரதத்தின் தத்துவப் பண்பாட்டுப் பின்னணியிலே வாலி வதையை நோக்குகின்ருர். ஆனல், அகளங்களுே இலக்கியச்

Page 6
  

Page 7
இவை எனது இராமாயணம் பற்றிய அபிப்பிரா யங்கள். போர்க்கனத்தில் நிராயுதணுக, அவமான உணர் வோடு தலேகவிழ்ந்து, விரலால் நிலத்தைக் கீறிக் கொண்டு நின்ற இராவண&ன "இன்று போய்ப் போர்க்கு நாளேவா" என்று இராமன் வழியனுப்பி வைத்தது, போர்க்களங்கள் எதிலும் காணமுடியாத மிகஉயர்ந்த புத்த தர்மம் என்றே கூறலாம்.
இராமன் இப்படி நடத்து கொண்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, வாலியின் அறிவுரைதான் என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது. தன்ணுேடு போர் செய்யாத வாளிக்கு மறைந்திருந்து அம்பெய்கிருள் இராமன். அப்படி அம்பெய்தது யுத்த நெறிக்கு இழுக் கானது எனக்கூறி யுத்ததர்மம் உரைக்கிருன் வாலி.
வாலியின் யுத்ததர்ம போதஃனதான், இராமன் இரா வணனுக்கு 'இன்றுபோய் நாளேவா," என்று கூறக் காரண மாக இருந்திருக்கலாம் என்று எண்ணினுல் அது தவழுகுமா.
அதனுள், வாலி என்ற கதாபாத்திரத்திண்யும், லாலிக் கும் இராமனுக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தையும் செம்மையாக ஆராய முற்பட்டேன். அதன் விளேவுதான் இப்போது உங்கள் சைகளில் தவழும் இந்நூல்.
கம்பராமாயணத்துக் கதாபாத்திரங்களுக்கு கம்பன் நற்றுப் அல்ல. செவிலித்தாயே. வான்மீகி முனிவர் வட மொழியில் செய்த இராமாயண காவியம், தமிழில் மெருகு படுத்தப்பட்டது உண்மை. அதனுல் இராமாயணக் கதா பாத்திரங்களுக்கும், சம்பவங்களுக்கும், கம்பன் உரிமைக் காரனல்ல. ஆனூல் கம்பன் தனது இராமாயணத்தில் கதாபாத்திரங்களே முடிந்தனாரை மெருகுபடுத்த முயன் றிருக்கிருன் என்பது மறுக்க முடியாதது.
சுவியிற் பெரியவன் கம்பன், கல்வியிற் பெரியவன் கம்பன். "கம்பன் பிறந்த தமிழினத்தில் நானும் பிறந்தேன்" என்று பெருமைப் படுபவருள் நானும் ஒருவன். அப்படி இருத்தும் இந்நூலில் நான் கம்பண் விமர்சித்திருக்கிறேன் என்ருல் அது ஒரு காரணங்கருதியே.

x |
வான்மீகியின் இராமனுே மனிதர்களுக்குள்ளே ஒரு உத்தம புருஷன், கம்பனின் இராமனுே அவதார புருஷன். பாத்திரங்களுக்கு மெருகூட்டும்போதும், அதற்கு ஒரு எல்லேயுண்டு. அதற்குமேல் செல்ல முடியாது. அதனுள் தான் வனவாசத்தின்போது இலக்குவனேச் சீதை "நின்ற நின் நிலையிது நெறியிற்று அன்று' என்ற சம்பவத்தை கம்பணுல் சரிப்படுத்த முடியாமல் சீதையின் பாத்திரத்தில் ஒரு மறு ஏற்பட ஏதுவாயிற்று. இதே போன்றதுதான் வாலி வதையும்.
வான்மீகியின் இராமாயணத்தில் ஒரு சிறிய பாத் திரமான வாலியை, கம்பன் வலிமையான பெரிய பாத்திர மாசு மாற்றி, பல நூல்களே பலரும் எழுதும் அளவுக்கு வளர்த்து விட்டிருக்கிருன் கம்பராமாயணத்தில் கம்பனின் பாத்திரம் என்று சொல்லுமளவுக்கு பலவகையிலும் மெருகு படுத்தப்பட்ட பாத்திரம் வாலியே.
வாளிவதையில் இராமனுக்கு ஏற்பட்ட இகழ்ச்சி, வாலியின் பாத்திரத்துக்குக் கிடைத்த புகழ்ச்சியாகவே கொள்ளப்படவேண்டியது. எனவே வாளி மூலமாக அது கம்பனின் திறமைக்குக் கிடைத்த வெற்றியே. கம்பன் தனது பாத்திரத்தை வலிமைப்படுத்தும்போது, வான்மீகியின் பாத்திரமான இராமன் மெளிவடைவது தவிர்க்க முடியாத தாயிற்றுப் போலும். அத்தோடு இராமன் வாலிக்கு மறைந்திருந்து அம்பெய்த சம்பவத்தை கம்பனுஸ் விட்டுச் செல்லுலோ அன்றி, பூசிமெழுகவோ முடியவில்லை. அதனுல் வாவியை, வான்மீகரின் வாலியாக இல்லாமல், தனது வாவியாகவே வளர்த்து, சிறப்புச் செய்து விட்டான் கம்பன் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இனி.
எனது பத்திரிகை உலகப் பிரவேசம் 1978 ஆவணி மாதத்தில் ஈழநாடு பத்திரிகை மூலமாகத் தொடங்கியது. *வாலி-கொலேச்சரமும் - கேள்விச்சரமும்' என்ற தொடர் சுட்டுரை ஈழநாடு வாரமலர்களில் எட்டுக் கிழமைகள்

Page 8
xii
வெளிவந்தது. எனது முதல்ப் பத்திரிகைப் பிரவேசம் தொடர் சுட்டுரை மூலமே, தொடங்கியது. அது இப்போது சற்று மெருகோடு "வாலி' நூலாகி இருக்கிறது. ஈழநாடு நிறுவனத்திற்கு என் நன்றிகள்.
இந்த நேரத்தில் இவர்களே எல்லாம் நான் நினேத்துப் பார்க்கிறேன்.
ஈழநாடு பத்திரிகையில் எனது கட்டுரைகள் வெளி வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே சிரித்திரன் சஞ்சிகையில் எனது சுட்டுரைகள் லெ விவரத் தொடங்கி விட்டன. இப்பொழுது மாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக இருக்கும் திரு. எஸ். ஒவலிங்கராஜா அவர்கள், சிவித்திரன் சஞ்சிகையில் என்னே எழுதும்படி தூண்டி, சிரித்திரன் ஆசிரியர் திரு. சி. சிவஞான சுந்தரம் அவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, நேர்டி யான அறிமுகத்தையும் ஏற்படுத்தித் தந்தார். கம்பனின் தமிழில் சொல்வதாயின், சிரித்திரனே என் எழுத்துத் துறை வளர்ச்சிக்குத் "தாய்முலே அன்னது" என்றே கூறலாம்.
1982-ல் எனது "சேரர் 3ழியில் வீரர் காவியம்" என்ற குறுங்காவியத்தை எனது நண்பன் திரு. செ. சண்முக நாதன் அவர்கள் வெளியிட்டு உற்சாகப்படுத்தினூர். பின்னுல் 1985-ல் என்து நண்பன் திரு. சு. முரளிதரன் அவர்கள் என்னுடன் இணைந்து "சமவெளி மலேகள்' என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு மேலும் ஊக்கங் கொடுத்தார்.
இப்போது யாழ்ப்பாணப் பல்சிஃபிக் கிழகத் தமிழ்த்துறை விரிவுரையாளராக இருக்கும் திரு. க. நாகேஸ்வரன் நண்பன் திரு. எஸ். முத்து சிவலிங்கம் ஆகியோர் எனது எழுத்துப் பணிக்கு உதவியவர்களில் முக்கியமானவர்கள்.
எழுத்துத் துறையில் நான் சோர்வுற்ற வேண்களில், எனக்கு கடிதமூலமாகவும், நேரடியாகவும் ஊக்கமும் உற்சாகமும் ஊட்டியவர்களில், யாழ்ப்பாணப் பல்சு&லக் கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி நா. சுப்பிர மணியன் அவர்கள் முதன்மையானவர்.

|
மற்றும்.
எனது மெல்விசைப் பாடல்கள், பேச்சு, நாடகம், என்ப வற்றை ஒளிபரப்பிய இலங்கை வானுெலி நிலயத்திற்கும். எனது ஆக்கங்களே அவ்வப்போது வெளியிட்ட வீரகேசரி, தினகரன், ஈழமுரசு முரசொலி பத்திரிகைகள், சுடர், சோதிடமலர், கிருதயுகம் பூபாளம், கதிரொளி-மற்றும் சஞ்சிகைகளுக்கும் என் நன்றிகள்
இந்நூலே அச்சிட்டு வெளிக் கொணரும் சும்பன் பிழகத் தார்க்கும், சிறப்பாக அதன் அமைப்பாளர் திரு. இ: ஜெயராஜ் அவர்களுக்கும் தனது எத்தனையோ பணிகளுக்கு மத்தியிலும், இந்நூலே ஒவளிக்கொணர்வதில் அதிக அக்கறை காட்டி, இந்நூலிற்கு ஓர் மதிப்புரை வழங்கிய எனது பெரு விருப்புக்கும், பெருமதிப்புக்கும் உரிய பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுக்கும்.
இந்நூல் வெளியிடுவது சம்பந்தமாக ஆலோசனைகளும், ஆக்கபூர்விமான உதவிகளும் செய்த, வவுனியா தெ. த. பிரிவு உதவி அரசாங்க அதிபர் திரு. க. ஐயம்பிள்ளே, புலவர் ஈழத்துச் சிவானந்தன், யாழ் பல்கலைக்கழக வர 3ாற்றுத்துறை விரிவுரையாளர் திரு. மு. திருநாவுக்கரசு, திரு. இ. ஓங்கார மூர்த்தி அவர்களுக்கும் என் இதயபூர்வ நன்றிகள்.
** بی سی
மறறுமி உதவிகள் வழங்கிய எனது சகோதராவிட கும,
இந்நூலே வாசித்து என்ஜன உற்சாகப் படுத்தப்போகின்ற எல்லா இலக்கிய உள்ளங்களுக்கும், சான் நன்றிகள்.
இந்நூலே அழகாக அச்சிட்டுத் தந்த ஆசீர்வாதம் அச்சகத்தினர் ஊழியர்கள் அ&னவர்க்கும் என் நன்றிகள். அட்டைப்படத்தை அழகாள் வரைந்து தந்த, பாழ்ப்பானப் பல்கலைக் கழக மாணவன் திரு. க ரகுபரன் அவர்களுக்கும்
ான் நன்றிகள்.

Page 9
χνί
நானகி என்னுள் கலந்துவிட்ட என் இல்லாளின் தூண்டுதலே இந்நூலே நான் எழுத முழுமுதற் காரணம். இதனை இவ்வகையில் வெளியிடுவதற்கு முழுமுதற் காரணம் எனது தம்பி திரு க" குமாரகுலசிங்கம் அவர்களே. இவர் களுக்கு நான் நன்றி சொல்வது எனக்கே சொல்லிக் கொள்வது போன்றதே"
உங்கள்
w அன்பு நா. தர்மராஜா அகளங்கன்
Lilbaot li D(b) வவுனியா 30-8-1987

வாழ்த்துகிறேம்
அகளங்கன் அவர்களின் பல ஆக்கங்கள் ாமது ஈழநாடு வாரமலர்களில் பிரசுரிக்கப் ' (ந:ன்ெறன, அவற்றுள் ஒன்றுதான் இன்று நூலுருவாகியிருக்கும். "வாலி' பாகும்.
வாலி (கொலைச் சரமும் கேள்விச்சரமும்)
ான்ற தலைப்பில் 1979ல், எமது ஈழநாடு பத்திரிகையின் வாரமலர்களில், எட்டுக் சிழமைகள் லெளிவந்த இவ் ஆய்வுக் ,'ኳ 1I.(ኳóሸ)ዐr பலரதும் பாராட்டுக்களைப் .ெ1ற்றது.
அக்கட்டுரை 'வாலி' என்ற பெயரில்
இன்று நூலாக வெளிவருவதைக் கண்டு
மகிழ்ச்சியடைகின்ருேம், அவரது பணிசிறக்க
வாழ்த்துகின்ருேம்.
ஈழநாடு பத்திரிகை நிறுவனத்தினர்.
XV

Page 10

முந்தைத் தமிழ்க்கவியை முற்றயச் சுவைத்தறிந்த
6Tir
தந்தைக்கு (சே. நாகலிங்கம்)
காணிக்கை bGUIDC வவுனியா,

Page 11

குற்றச்சாட்டு
இராமன் வாலியைக் கொல்வதற்குக் காரணங்களாக அமைந்தவை இரண்டு குற்றச்சாட்டுகளே! ஒன்று வலிமை குறைந்த குற்றமற்றவனுன சுக்கிரீவனே, அடித்துத் துன்புறுத்திக் கொடுமைப் படுத்திக் கொஃப்செய்ய முனேந்தது, மற்றையது தம்பியின் தாரத்தை தனதாக்கிக் கொண்டது. இந்த இரு காரணங்களேயே இராமன் தான் வாலியைக் கொல்வதற்காக அம்பெய்ததற்கு, அதாவது கொலேச்சரத் தொடுத்ததற்குக் காரணங்களாகக் கூறுகிருன்.
தன்னுேடு விற்போர் புரியாது, மறைந்திருந்து அம்பெய்த இராமனுடன் சொற்போர் புரியும் வாவி, நெருக்கு நேராகவே அக் குற்றச்சாட்டுகளேத் தகுந்த ஆதாரங்களோடு மறுக்கிருன், அவன் அப்படி மறுத்துக் கூறுபவை நியாயமானவையா? அவன் காட்டும் கார ணங்கள் தர்மத்தின்பாற் பட்டனவா? வாளி குற்றவாளியா? இஸ்லேயா? என்பது ஆராய்ச்சிக்கிடமான விடயம்.
தான் நிரபராதி என வாதிடும் வாலி, இராமன் ழைத்ததாகக் கூறும் குற்றங்களும், இரண்டே. ஒன்று குற்றமேதுமற்ற தன்ஃனக் சொல்வதற்காய் சரந்தொடுத்தது. மற்றையது போர்முறையில் அல்லாத வகையில், யுத்த தர்மத்துக்கு மாறுன முறையில், மறைந்திருத்து அம் பெய்தது. வாளி எப்படித் தன்மேல் சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகளே மறுத்தாருே, அதே வகையில் இராமனும் தன்மேல் சாட்டிய குற்றங்களே மறுக்கிறன்.

Page 12
வாளி
இராமன் அவதாரம் என்றும், மகாவிஷ்ணுவின் வடிவம் என்றும், எண்ணும் பக்தி மிக்க மனிதர்கள், இராமன் குற்றவாளி என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட் டார்கள். வாலி குற்றமற்றவன் என்று கூறும் பகுத்தறிவுப் புத்தி மிக்கவர்கள், இராமன் குற்றமற்றவன் என்பதையும் ஒருபோதுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
வைணவ குலத்துப் பிறந்து, திருமாலுக் சுேவல் செய்யும் சம்ப நாடாழ்வார், இராமனின் பெருமைன்ஃளப் பாரெல் லாம் பறைசாற்றப் பாடிய இராமாயணத்தில், இராமனின் புகழுக்குப் பங்கம் ஏற்படும்படி பாடியிருக்க முடியுமா? இராமனின் சத்திய ஒழுக்கத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் சம்பர் பாடியிருக்கவே மாட்டார். எனவே இராமன் குற்றமற்றவன் என்பவர்களே பலர். இராமன் கூறும் கூற்றுக்சுஃாத் தெய்வவாக்காகக் கொள்ளும் மக்கள், அவை அத்தனேயும், இராமனின் சார்பில் கம்பர் கூறியது என்பதனே மறக்கவே கூடாது.
எனவே கம்பர் பாடியதைக் கொண்டு, பகுத்துத் தொகுத்துப் பார்க்கும் என்போன்ருேர், குற்றவாளி, யார் என்பதை ஒருதஃலப் பட்சமாக அன்றி, காய்தல், உவத்தல் இன்றி, நியாயபூர்வமான், ஆதாரபூர்வமாக ஆராய்வது அவசியமாகின்றது. இப்படி ஆராய்வது சடவுட் கொள்கை யோடு மாறுபட்டதாகக் கருதப்படக் கூடாது. விாப்பியக் சுருவோடு சம்பந்தப்பட்ட ஒரு இலக்கியப் பிரச்சினையாக இதனைக் கருதுவதையே நான் விரும்புகிறேன்.
இராமாயணத்தில் சில இடங்கள் இராமனின் பெருமைக்கு இழுக்குத் தேடும் வகையில் அமைந்து, இன்றும் ஒரு முடிவு காணப்பெருது, சர்ச்சைக்குரிய விடயமாகவே இருக்கின்றன. எனினும் எமது நோக்கு வாலிவதை சம்பந்தப் பட்டது மட்டுமே. எனவே ஏனேய இடங்களே 'தேவைக் சுேற்பப் பயன் படுத்துவது அன்றி சம்பவங்களே வாசகர் சாளுக்கு விளக்கிக் கொண்டிருத்தஃவத் தவிர்த்துக் கொள் கிறேன்.

WANGITIMINGT
பிரச்சனைக்குரிய விடயம்
இராமன்மேல் ஆழ்ந்த பக்தியும், மதிப்பும் கொண்டு: அவனே திருமால், பிரம்மா, சிவன், என்னும் மூவரினதும் மொத்த வடிவமாகவும் சில சந்தர்ப்பங்களில் இவர்களே விட இராமனே உயர்ந்தவன் என்றும், பூஜிக்கும் சுவியிற் பெரிய, கல்வியிற் பெரிய, சம்பன்: காப்பியத்தில் இராமனின் புகழ்பாடவேண்டிய இடங்களில் மட்டுமன்றி, ஏனைய இடங்களிலுங்கூட இராமனின் புகழ்பாடிப் பரவும், பக்தனுன கம்பன் வாலிவதையில் இராமனுல், உலகெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலைத் தரமுடியாத கேள்விகளே, வாளி வாயால் ஏன் கேட்க வைத்தான் என்பதுதான் புரியவில்லே.
வாலியின் உருவில் கேள்வி கேட்பதும் அக்கேள்வி சாளுக்கு இராமனின் உருவில் பதில் சொல்வதும், ஆகிய இருதொழில்களேயும் கம்பரே செய்கிறர். இராமஞன் மாறித் தான் பதில் சொல்லி இராமனின் புகழை உயர்த்து வதற்கு ஏற்ற கேள்விகளே வாலி உருவில் கேட்பதன்றி, செல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதி&லச் சொல்ல முடியாத கேள்வியை ஏன் டேட்கவைத்தார் என்பது ஆராய வேண்டியது.
தனது புலமையைக் காட்டப் புகுந்த கம்பர். "இப்படி யார் கேள்விகளையெல்லாம் வாலி சுேட்டிருக்கலாமே' என்று யாராவது கேட்டுவிடக் கூடாதே, அது தின் புலமைக்கு இழுக்கா குமே என்று சுருதிப்போலும், வாளி கேக் டிேயதான மக்கள் கருதும் அத்தனே ே ன்விகஃாயும் வாலியால் கேட்சுவைத்து விட்டார் என்றே எண்னத் தோன்றுகிறது. அதனுற்ருன் போலும் பதில் சொல்ல முடியாத கேள்விகளும் அதற்குள் அடங்கின.
வான்மீகரின் முதல் நூலாகிய இராமாயணத்தில், இராமன் அம்பெய்ய வாலி மடிகிருனேயன்றி இராமனுடன் ாக்குவாதஞ் செய்யவில்&ல. அப்படி இருக்க, தமது தமிழ் இராமாயணத்தில் வாலி கேள்வி கேட்பதாகவும், இராமன் பதில் சொல்வதாகவும், ஏன் ஒரு காட்சியைக் காட்டுகிறன்.

Page 13
s δι, τεί
இப்படித் தோல்வி காணும் நோக்கம் இருந்திருந்தால் வான்மீகி முனிவர் போலவே இதனேயும் பெரிது படுத் தாமல் விட்டுச் சென்றிருக்கலாமே என்று எண்னத் தோன்றுகிறது. இனி இதன் உண்மை நிஃபபை ஆராய்வோம்.
இராமரில் குற்றச்சாட்டு
சுக்கிரீவனுடன் மல்யுத்தம் செய்துகொண்டிருந்த வாலியின் மார்பிலே, இராமனின் அம்பு பாய்கிறது. அந்த அம்பை தனது கைகளால் பிடித்து, தனது மார்பை ஊடுருவிச் செல்லவிடாது தடுத்துக்கொண்டு, அது என்ன ஆயுதமாக இருக்கும் என்று எண்ணமிட்ட வாலி இறுதியாக
சரமெ ஆறும்படி தெரிந்தது; பலபடச் சலித்தென் உரமெ றும்பத முயிரொடு முருவிய வொன்றைக் கரமி ரண்டினும், வாலினுங், காலினுங் கழற்றிப்; பரம வின்னவன் பெயரறி குவனெனப் பறிப்பான்.
(கிட் - வாலி - t8)
"சரம்' என்னும் வண்ணம் தனது மார்பிலே தைத்து, உசம் உருவிய இராம பானத்தைத் தன் இரு சுரங்களாலும், காலினுலும், காவினுலும் பற்றிப்பிடித்து இழுத்துக் கழற்றி எய்தவனது பெயரை அறிவேன் என முயலுகிருன், அந்த அம்பிலே எழுதப்பட்டிருந்த "இராம" என்னும் செம்மை சேர் நாமத்தைக் காண்கிறன். இன்று பொருட்களிலே, செய்யப்பட்ட நாட்டின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது போல, அன்று ஆயுதங்களில் அதன் சொந்தக்காரனின் பேயர் பொறிக்கப்பட்டிருந்திருக்கிறது என்பதை இதி விருந்து நாம் அறிந்துகொள்ளலாம். அந்த அம்பிலே பொறிக் கப்பட்டிருந்த 'இராம" என்ற பெயரைப் பார்த்தவுடனே, வாலிக்கு அளவுகடந்த ஆத்திரம் வருகிறது. இராமனின் முறையற்ற செயலுக்காக வெட்கப்படுகிருன். 'வில்றைத் துறந்துவிட்டாய்' என்று ஏசுகின்ற வாவியின் முன்ன்ே, இராமன் வந்து தோன்றுகிறன்.

VAN ETT ni 47 går
ாநநிறம் பின லென்னே யிழிந்துளோ ரியங்கை
D阿四 கு நந்து 闻
யென்வின் முறைதிறம் பினணு வென்று மொழிகின்ற முகத்தான்
முன்னர் மறைநிறம் பாத வாய்மை மன்னர்க்கு மனுவிற்
சொல்லும் துறைதிறம் பாமற் காக்கத் தோன்றிறன் வந்து
தோன்ற,
(கிட் - வாவி - 74)
'இறைவனே தவறு செய்துவிட்டால், மற்றவர்கள் எல்லாம் இனி என்னதான் செய்யமாட்டார்கள். என் பொருட்டாக இப்படி போர்முறை தவறிவிட்டாயே' என்று ஏசுகின்ற வாலியின் முன்னே, இராமன் வந்து நிற்க, வாவி தனது கேள்விக் அஃணகளேத் தொடுக்கிறன். "அரக்கர் ரழிவு செய்ய குரக்கினத்து இறைவனுன என்னே ஏன் சொல்ல முயன்றுப். என்மேலே நீ என்ன பிழையைக் கண்டு இக்காரியத்தைச் செய்தாய்?' என்று தான் குற்ற மற்றவன் என்ற துணிவில் கேட்கிருன், வாலி.
தான் குற்றமற்றவன் என்பது மட்டுமல்ல, இராமன் தவறு செய்யான் என்றும் அவனது உள்மனம் கூறுகிறது. ஆளுல் தவறு நிகழ்ந்தே விட்டது. அப்படியானுல் இராமன் இப்போது சுயநினைவில் இல்ஃப். புத்தி பேதலித்த நிலையில் தான் இருக்கிருன் போலும். என்று நினைக்கிருன் வாலி. இராமனுக்கு புத்தி பேதலித்து நல்லது கெட்டதை அறிந்து கொள்ளாமல் விடுவதற்குச் சந்தர்ப்பமும் இருக்கிறது, என்று நி&னத்த வாலி, அதையே இராமனிடம் சொல்லுகிருன்.
ஆவியைச் சனகன்பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்தபின்னர் திகைத்தனே செய்கை போலும்,
(கிட் - வாலி - 78)
'உயிருக்கு உயிராகப் பழகி வாழ்ந்த மண்வியைப்
பிரிந்ததனுல் ஏற்பட்ட மனக் குழப்பத்தால், சிந்தை தடுமாறி, நீ செய்ததே இச் செயலன்றி, வேறு காரணம்

Page 14
曹 வாலி
எதுவுமே இருக்க முடியாது' என்று கூறுகிறன். இங்கும் தனது நிஜலயில் மிகவும் உறுதியாக எாலி நிற்பது தெரிகிறது. குற்றமில்லாத என்னேயே நீ இங்ங்ணம் அழித்து விட்டு அதனுல் நீயே குற்றவாளியாகிருய். குற்றமற்ற எனக்கு வாளி எய்து, குற்றவாளியாக இருக்கும் நீ இனி ாப்படி இராவணன் குற்றமிழைத்து விட்டான் என்று கூறப்போகின்ருய்." என்று கேட்கிருன்,
...தொன்மையின் நாள்னுற் கெல்லாம். இறைவன்நீ; என்னேச் செய்த தீதெனி விலங்கை வேந்தன் முறையல செய்தா னென்று முனிதியோ; முனிவிலாதாய்.
(கிட் - வரவி - 82)
என்று வாலி கேட்கும் கேள்வி அர்த்தமுள்ளதாகவே தென்படுகிறது. ஒரு குற்றவாளி எப்படி நீதிபதியாகி, இராவணன் முறையற்ற காரியஞ் செய்தான் என்று கூறமுடியும் ,
வாலியைப் படுத்தாயலே மன்அற வேலியைப் படுத்தாய் விறல்விரனே!
(கிட் - வரவி - 82)
அதனுல் "வலிமை மிகுந்த வீரனே! நீ இன்று வாலியைக் கொல்லவில்ஃ. மனுதர்ம வேளியைக் கொன்று விட்டாப்" என்று, தர்மத்தை தன் வாழ்க்ள்ை மூலம் போதித்துக் காட்ட வந்த மன்ழக்குன்றம் அனேய வள்ளல் இராமனுக்கு, வாலி அறம் புகட்டுகிருன்.
இவை இராமன் குற்றமேதுமற்ற தன்னேக் கொலே செய்யக் கஃன எய்து குற்றவாளியாகிருன் என்று வாலி இராமன்மேல் சாட்டும் முதலாவது குற்றச்சாட்டு.
靡 率

காங்கன் T
இராமனின் பதிலும் வாலிசெய்த
முதலாவது குற்றமும்
ாபி தனது தம்பியாகிய சுக்ரீவனே அடித்துத் துன் புறுதிறன். துரத்தினுன் கொடுமை செய்தான். குற்ற மமற்றவஞன சுக்கிரீவனக் கொல்வதற்காக, அடித்துத் ாபுறுத்தினுன் வாலி என்ற இராமனின் முதலாவது குற்றச்சாட்டுக்கு, வாலியின் மாயாவிப் போரை இங்கே Iரவு கூரவேண்டியிருக்கிறது.
மாயாவி என்பான், எாலியோடு போர் செய்வதற்காக ஷ்ெகிந்தைக்கு எந்து சேர்ந்தான். வாலி அவனுேடு போர் புரிந்து அவனேக் கஃபத்துச் சென்ருன். மாயாவி ஒரு குசுயினுள். அதாவது ஒரு பிலத்தினுள் இறங்கிச் செல்ல ாவியும் அவனுேடு அந்தப் பிலத்தினுள் இறங்கினுன். சுகிரீவனேயும், ஏனேயோரையும், அப்பிலத் துவாரத்தி ராடாக மாயாவி தப்பிச் செல்லாவண்ணம் காவல் வைத்து விட்டுச் செல்கிறன் வாலி.
இதன்பின் நடந்ததை, இராமன் வாலிக்குச் சொல்லதி மிருந்து முதலில் பார்ப்போம். நீண்ட நாட்களாக வாலி திரும்பி வராததனுல், வாலி இறந்து விட்டான் என்றும்; மாயாவி திரும்பி வந்து விடுவான் என்றும் எண்ணிய சுகிரீவன் முதலானவர், பெரிய அல்லு மலேசுளேக் கொண்டு வந்து பிலத் துவாரத்தை அடைத்து வைத்து விட்டு, வெளியேறினர். சுக்ரீவனே அரசாளும்படி அவனது குலத்துச் சான்ருேர் கட்டளேயிட்டனர்.
பிலம்புக்காய் நெடுநாள் பெயராய்; எருப், புலம்புற்று உள்வழிப் போதலுற்றன் தனக் குலம்புக்கு ஆன்ற முதியவர் குறிக்கொள்நீர் அலம்பொற் றரவனே அரசு என்றலும்
(கிட் - வாலி - 92)
'பிலத்தினுள் சென்ற நீ, நீண்ட நாட்களாக வெளி ாததால், புலம்பிக் கொண்டு நீ சென்ற வழியிலே பொக இருந்த சுக்கிரீவனே. உனது குலத்துச் சான்றேர்

Page 15
罩当 arts
சுக்கிரீவனின் கபட நாடகம்
மாயாவியுடன் போர்புரிந்து அவனேக் கொன்றுவிட்டுக் திரும்பிவந்த வாவி, பிலவாயில் பெரிய மஃகளால் மூடப் பட்டிருந்ததைக் கண்டு, தனது தம்பியைக் கூப்பிடுகிறன். தம்பியின் குரல் கேட்கிாததால் அவனுக்குக் கோபம் வருகிறது.
பொன்னின் மால்வரை பொருப்பொழித்து; வேறு உன்னு குன்றெலாம் உடனடுக்கி குேம்.
(கிட் - நட் - 57)
"மகாமேரு மலேயைத்தவிர, வேறுமலே எல்லாவற் றையும்; மலே என்று தாம் கருதிய அனேத்தையும், கொண்டு வந்து பிலத்துவாரத்தை அடைத்ததாக அனுமான் இராம சிடம் கூறுகிருன். வாலியை மாயாவி சொன்றுவிட்டானுசு இருந்தால், பிலத்துவாரத்தின் வழியே வெளியே வந்து, தங்களேயும் கொன்றுவிடுவான் என்று பயந்த குரங்குக் கூட்டங்கள், பெரும் பெரும் மலேசள் எல்லாவற்றையும் கொண்டுவந்து பிலத்துவாரத்தை அடைத்தன.
அவர்கள் செய்தது. அவர்களது தற்பாதுகாப்பிற்காகத் தான். இருந்தாலும், அத்தனே பெரிய மலைகளுள்ளும் அடை பட்டுக் கிடந்த வாலிக்கு எவ்வளவு ஆத்திரம் வந்திருக்கும். தனது சொல்லே மதிக்காமல் காவ3லக் கைவிட்டுச் சென்ற தம்பி, தானும் வெளிவர முடியாதபடி மலேயெல்லாம் கொண்டுவந்து பிலத்துவாரத்தையும் அடைத்து விட்டான். என்று நினைத்து பெரிதும் கோபங் கொண்டான். காவ&லக் சுைவிட்டுக் கடமை தவறியது மட்டுமன்றி, தான் வெளி வர முடியாத படியும் தனது தம்பி செய்து விட்டானே! என்று எண்ணி ஆத்திரங் கொண்டான்.
போரிலே மாயாவியைக் கொலேசெய்துவிட்டு, அந்தக் கொல் வெறிபில் போர்க் கஃளப் பில் வெற்றிக் அளிப்பில் தனது நாட்டுக்கு வந்தவன் வாளி.

- If ITIsruhr
ரளித்த வன்னுயிர்க் கள்ள உண்டுளங் காத்த வாவியுங் கூடிதின் எய்திருன், விளித்து நின்றுவே றுரைபெ ருன்இருந்து
| labas வாறுநன் றிளவலார் எரு.
(கிட் - நட் -59)
மாயாவியின் உயிர்க்கள்ளே உண்டு, உளங்களித்து, பெற்றிப் போதையிலே, வெறியிலே வந்த வாவி, வாசல் மூடப்பட்டும், தம்பி முதலியோர் காவலில் இல்லாமலும் இருந்ததைக்கண்டு ஆத்திரப்பட்டு, தம்பி காவல் செய்த விதம் நன்ருக இருக்கிறது என நகைத்து மஃகளே உதைத்துத் கள்ளி வெளியே வருகிருன்,
அத்தனே கோபத்தோடு தனது அரசுக்கு வந்த விாவி, ாமான் அரசாள்வதைக் சுண்டிருந்தாலாவது மனம் ஆறி யிருப்பான். தம்பியை மன்னித்திருப்பான். ஆணுல் தனது கட்டளேயை நிறைவேற்ருமல் பிலத்துவாரக் காவலேக் ாவிட்டு, துவாரத்தையும் பெரிய பெரிய மஃகளினூல் அண்டத்துவிட்டு, நாட்டுக்கு வந்து அரசாட்சியையும் ாடாத்திக் கொண்டிருந்த தம்பியைப் பார்க்கும்போது, பாலிக்கு அதிக கோபம் உண்டானது வியப்பில்வேத்தான். ாம்பி தன்னே வஞ்சித்து விட்டான் என்ற எண்ணம் அவ றுள்ளத்தில் ஓங்க தம்பியைப் பிடித்து அடித்தான். முறை பிலாக் காரியஞ் செய்த தம்பியை மூத்தவன் அடிப்பது
புதுமையான காரியம் இல்ஃயே!
அந்த நேரத்தில் சுக்கிரீவன் சொல்லும் காரணங்களே, வெறும் சுண்துடைப்பாக, தனக்குப் பயந்து செய்யும் செய்கைகளாகவே அவன் சுருதியிருக்கலாம். அதனுல் நெறி பிறழ்ந்த தம்பியின் அழுகையும், பணிவும், சமாதானமும் ாமியை உண்மை நிஃயை உணரவிடாது செய்திருக் ாம். அதாவது உண்மையில் சுக்கிரீவன் குற்றமற்றவனுக
ருந்தால்.

Page 16
சுக்கிரீவன் குற்றமற்றவணு?
இங்கு நாம் நோக்க வேண்டியது, சுக்கிரீவன் குற்ற மற்றவஞ? என்பதே. சுக்கிரீவன் குற்றமற்றவனக இருந் திருந்தால்; குற்றமற்ற தம்பியைக் கொடுமைப் படுத்திய வாலி குற்றவாளியாவது தவிர்க்க முடியாதது. எனவே சுக்கிரீவன் குற்றமற்றவணு என ஆராய்வது முக்கியமானது.
வாலிக்குப் பின் சுக்கிரீவன் எப்படி அரசாள்வான். வாலிக்குப் பின் சுக்கிரீவன் அரசாண்டது முறையான செயலா. சுக்கிரீவனுக்கு அரசாட்சி எப்படி உரித்தானது; என்பதை எண்ணிப் பார்ப்பது நல்லது. சுக்கிரீவன்) வாலிக்கு ஒரு தாய் வயிற்றுச் சகோதரன் மட்டுமே. பிறப்பால் சூரியனின் புதல்வனக சுக்கிரீவனையும், இந்தி ரனின் புதல்வனுக வாலியையும் இராமாயண காவியம் கூறுகிறது. அதனுல் வாலிக்குப்பின் சுக்கிரீவன் அரசாள்தல் முறையானதுதான். ஆளுல் வாலிக்கு ஒரு மகன் இருக்கும் பொழுது இது சாத்தியமானதா. சத்தியமானதா,
அங்கதன், வாலிக்கும் தாரைக்கும் மகளுகப் பிறந்தவன். அப்படி இருக்க அரசு அங்கதனுக்கன்றி சுக்கிரீவனுக்கு எப்படி உடைத்தானது. தந்தையின் பின் தனயன் அர சாள்வதுதானே முறைமை. இங்கு மட்டும் ஏன் இந்த முறைமை பொய்க்க வேண்டும். அங்கதன் இளையவன் என்பதாலா? அங்கதன் சிறுவனுக இருந்தால் அவனை இளவரசாகப் பட்டஞ் சூட்டி சுக்கிரீவன் அரசைப் பாது

அகளங்கன் A .
காத்திருக்கலாமே, அல்லது அங்கதனை அரசனுகக் கொண்டு சுக்கிரீவன் அரசாட்சியை நடாத்தியிருக்கலாமே. இந்த வகையில் பார்க்கும்போது அங்கதனுக்குரிய அரசை தன தாக்கிக் கொண்டு அரசாண்டதால் சுக்கிரீவன் குற்றவாளி யாகிருன்.
அங்கதன் சிறுவன் என்று எண்ண முடியாதபடி அடுத்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இராம இராவண யுத்தத் திற்குத் தூதுபோக, அங்கதனையே தேர்ந்தெடுத்து, அவனது வலிமையையும், அறிவாற்றலையும், புகழ்ந்து பேசுகிருர் இாாமர். அனுமான் இல்லாத இடத்து ஒரு காரியத்தை அங்கதன் ஒருவன் மட்டுமே செய்யத் தகுதி வாய்ந்தவன். அனுமன் மட்டுமல்ல அனுமனைவிட வேறும் அத்தனை பாாக்கிரமம் படைத்தவர்கள் உண்டு, என்பதைக் காட்டு வதற்காகவே இராவணனிடம் அங்கதனைத் தூதாக அனுப்புகிருர் இராமர். எனவே சுக்கிரீலனைவிட பலத்தில் அறிவில் உயர்ந்தவனக மதிக்கப்படும் அங்கதன், சிறுவஞ ான்பது கேட்கப்படவேண்டிய கேள்வியே!
வாலி இறந்து விட்டதாகக் கருதி படைத்தலை வீரரும் முற்றுணர்ந்த முதியரும், சுக்கிரீவனை அரசாளும்படி வேண்டியபோது, அ:ென்மறுத்து அங்கதனை அரசஞக்கி யிருந்தால்; அல்லது அங்கதனது வாரிசு உரிமைபற்றிப் பேசியிருந்தால்; அரசாட்சி பற்றிய எந்தப் பழியும் சுக்கிரீைைன அணுகியிருக்கவே முடியாது. இராமரின் பாது :ைகளே வைத்துப் பதினன்கு வருடம் அரசாண்ட பரதனின் நிகழ்ச்சியோடு, அங்கதனை அரசனசு வைத்து சுக்கிரீவன் டின் அரசாண்டிருக்கக் கூடாது என்பது, ஒப்பிடப்பட வேண்டியதே.
குரங்கினத்துக் குலமுறையில் அரசாட்சி வேறு முறையில் அமைந்திருக்கலாம் என்று வாதிட்டால் வாலியையும், வாலி கூறுவதுபோல "விழைத்திறத் தொழில்' செய்யும் குரங் பு:ாகவே கருத வேண்டும். விரும்பியபடி தொழில் செய்து வாழுகின்ற, மரபுகள், வாழ்க்கை முறைகள், இல்லாத

Page 17
H 23 வாலி
குரங்காக வாலியையும் ஏற்றுக்கொண்டால், வாலி வதையில் அர்த்தமில்லை என்று காரணம் காட்டுவதற்குக் கஷ்டம் எதுவும் இல்லை.
தமையன் சொற் கடந்த தம்பி
வாலி, தன்னேடு போர்புரிபவரின் பலத்தில் பாதிப் பலத்தைப் பெற்று, இலகுவாக அவரை ஜெயித்துக் கொல்லும் வரத்தைப் பெற்றிருந்தான். இராவணன் ஒரு முறை அரங்கிலாடுவார்க்கு அன்பு பூண்ட வாலியின் வரத்தை அறியாது, வாலியோடு போர்செய்து, வாலியினல் ஜெயிக்கப்பட்டு, மானபங்கப் படுத்தப்பட்டு, பின் நண்ப ஞனவன்.
கிட்டுவார் பொரக் கிடைக்கின், அன்னவர்
பட்ட தல்வலம் பாகம் எய்துவான்
(கிட் - நட் - 40)
எதிராளியின் பலத்தில் பாதிப்பலத்தையும் பெற்றுப் போர்புரியும் வாலியைப்பற்றி, சுக்கிரீவனும், ஏனைக் குல முறை ஆன்ருேரும் அறிந்தே இருந்தனர். இதனை புலவர் கு. திருமேனி அவர்கள் தமது 'வாலி ஒரு திறஞய்வு' என்னும் நூலில் "கிட்டுவார் பொரக் கிடைக்கின்’ என்பதை 'பொரக் கிட்டுவார் கிடைக்கின்' எனக் கொண்டு, வாலியோடு யாராவது போர்செய்ய வந்தால் மட்டுமே அவரின் பாதிப்பலம் வாலிக்குச் சேரும் என்று கூறுகிருர், இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லா விட்டாலும், மாயாவிச் சண்டையைப் பொறுத்தவரை, மாயாவி வலியவந்து போரிட்டவனே. அதாவது பொரக் கிட்டியவனே. அதனல் மாயாவியின் பலத்தில் பாதி வாலிக்குச் சேருவது தவிர்க்க முடியாததாகிறது. எனவே: வாலி மாயாவியை வெல்வான். தேவையாயின் கொல்வான். என்பதை சுக்கிரீவன் முதலியோர் ஏன் சிந்திக்கவில்லை.
தன்னைத் தோல்வியடைந்தவனக, இறந்தவனுக, தனது வீரத்தைக் குறைத்து மதிப்பிட்ட இந்த நிகழ்ச்சியை, வாலி நி3னத்துப் பார்த்திருந்தால் அவன் எவவளவு கோபங்

அகளங்கன் 13
கொண்டிருப்பான். முற்காலத்தில் சுத்த வீரர்கள், தமது வீரத்தை எவரும் குறைத்து மதிப்பிடுவதையோ அன்றி பரிகாசஞ் செய்வதையோ, கண்டு பொறுத்துக் கொள்வதே இல்லை. வாலியையும் இந்த வகையிலேயுள்ள ஒருவனுகக் கொள்ளலாம். வாலி இறந்து விட்டான் என எண்ணி வாலியின் சொல்லை மீறுகிருன் சுக்கிரீவன்.
எய்து காலேயப் பிலனு ளேய்தியான், நோய்தி னங்கவற் கொணர்வெ ஞேன்மையால்;
செய்தி காவல்நீ சிறிது போழ்தெஞ வெய்தி னெய்தினுன் வெகுளி மேயிஞன்
(கிட் எ நட் - 52
"மாயாவியைச், சிறிது நேரத்திலே, பிடித்து இழுத்து வருவேன். அதுவரை அவன் இவ்வாயில் வழியாகத் தப்பிப் போா வண்ணம் காவல்கார்" . என்று தன் தம்பிக்குக் கட்டஃாயிட்டுச் சென்ற வாலியின் கட்டளைக்கு, சுக்கிரீவன் மதிப்பளிக்கவில்லை. பதிஞன்கு ருதுக்கள், அதாவது இருபத்தி யெட்டு மாதங்கள், வாலி வெளிவரவில்லை, என்பதால் வாலி இறந்துவிட்டான், என்று எண்ணியது, சுக்கிரீவனுக்கும் அவனது ஆன்ருேருக்கும் சரியாக இருந்தாலும், தனது ஆணையாக, அரச ஆணையாக மட்டுமன்றி ஒரு சகோதரனின், மூத்தோனின் கட்டளையாகவும் மதிக்காமல், குறையிலே காவலை விட்டுச்சென்ற சுக்கிரீவனின் செயல் வாலிக்குக் கோபமளித்தது, வாலியின் நிலையில் நியாயமாகவே படுகிறது. அதுவுமன்றி, பதின் நான்கு ருதுக்கள், இராம ருக்கு நெடுநாள் ஆக இருக்கலாம். ஆனல் மாயாவியுடன் போர் புரிந்த வாலிக்கு அது பெரிய காலமாக இருக்கவில்லை, வாலிக்கு நீண்டகாலமாக இல்லாத இந்தக்காலம், சுக்கிரீ வனுக்கும் ஏனைக் குரங்கினத்தாருக்கும் நீண்ட காலமாக மாறியது எப்படி
率 率 来

Page 18
thЈптgöl
சுக்கிரீவனின் கபட நாடகம்
மாயாவியுடன் போர்புரிந்து அவனோக் கொன்றுவிட்டுத் திரும்பிவந்த வாலி, பிலவாயில் பெரிய மலேகளால் மூடப் பட்டிருந்ததைக் கண்டு, தனது தம்பியைக் கூப்பிடுகிருன். தம்பியின் குரல் கேட்ராததால் அவனுக்குக் கோபம் வருகிறது.
பொன்னின் மால்வரை பொருப்பொழித்து; வேறு உன்னு குன்றெலாம் உடனடுக்கி குேம்.
(கிட் -நட் - 57)
"மகாமேரு மஃயைத்தவிர, வேறும& எல்லாவற் றையும் மலே என்று தாம் சுருதிய அனேத்தையும், கொண்டு வந்து பிலத்துவாரத்தை அடைத்ததாக அனுமான் இராம ரிடம் கூறுகிருன். வாலியை மாயாவி சொன்றுவிட்டாளுக இருந்தால், பிலத்துவாரத்தின் வழியே வெளியே இந்து, தங்களேயும் கொன்றுவிடுவான் என்று பயந்த குரங்குக் கூட்டங்கள், பெரும் பெரும் ம&கள் எல்லாற்றையும் கொண்டுந்ேது பிலத்துவாரத்தை அடைத்தன.
அவர்கள் செய்தது. அவர்களது தற்பாதுகாப்பிற்காசுத் தான். இருந்தாலும், அத்தனே பெரிய மலைகளுள்ளும் அடை பட்டுக் கிடந்த வாளிக்கு எவ்வளவு ஆத்திரம் வந்திருக்கும். தனது சொல்லே மதிக்காமல் சாவுலேக் கைவிட்டுச் சென்ற தம்பி, தானும் வெளிவர முடியாதபடி மலேயெல்லாம் கொண்டுவந்து பிலத்துவாரத்தையும் அடைத்து விட்டான். என்று நினைத்து பெரிதும் கோபங் கொண்டான். காவஐக் கைவிட்டுக் கடமை தவறியது மட்டுமன்றி, தான் வெளி வர முடியாத படியும் தனது தம்பி செய்து விட்டானே! என்று எண்ணி ஆத்திரங் கொண்டான்.
போரிலே மாயாவியைக் கொலேசெய்துவிட்டு, அந்தக் கொல் வெறியில் போர்க் கஃளப்பில் வெற்றிக் களிப்பில் தனது நாட்டுக்கு வந்தவன் வாவி,

அகளங்கன் I5
ஒளித்த வன்னுயிர்க் கன்னே உண்டுளங் களித்த வாவியுங் கடிதின் எய்திருன். விளித்து நின்றுவே றுரைபெ ருன்இருந்து அளித்த வாறுநன் றிளவலார் எரு.
(கிட் - தட் - 59)
மாயாவியின் உயிர்க்கள்ஃள உண்டு, உளங்களித்து, வெற்றிப் போதையிலே, வெறியிலே வந்த வாவி, வாசல் மூடப்பட்டும், தம்பி முதலியோர் காஸ்வில் இல்லாமலும் இருந்ததைக்கண்டு ஆத்திரப்பட்டு, தம்பி காவல் செய்த விதம் நன்றுக இருக்கிறது என நகைத்து மலேகளே உதைத்துத் தள்ளி வெளியே வருகிருன்,
அத்தனே கோபத்தோடு தனது அரசுக்கு விந்த விசாவி, தன்மசன் அரசாள்வதைக் கண்டிருந்தாலாவது மனம் ஆறி யிருப்பான். தம்பியை மன்னித்திருப்பான். ஆணுல் தனது கட்டஃபை நிறைவேற்ருமர் பிலத்துள்ாரக் காவஃக் கைவிட்டு, துவாரத்தையும் பெரிய பெரிய மஃகளிரூல் அடைத்துவிட்டு, நாட்டுக்கு வந்து அரசாட்சியையும் நடாத்திக் கொண்டிருந்த தம்பியைப் பார்க்கும்போது, வாவிக்கு அதிக கோபம் உண்டானது வியப்பில்லேத்தான். தம்பி தன்னே வஞ்சித்து விட்டான் என்ற எண்ணம் அவ னுள்ளத்தில் ஒங்கி தம்பியைப் பிடித்து அடித்தான். முறை யில்லாக் காரியஞ் செய்த தம்பினய மூத்தவன் அடிப்பது புதுமையான காரியம் இல்ஃபே
அந்த நேரத்தில் சுக்கிரீவன் சொல்லும் காரணங்களே, வெறும் கண்துடைப்பாக, தனக்குப் பயந்து செய்யும் செய்கைகளாகவே அவன் கருதியிருக்கலாம். அதனுங் நெறி பிறழ்ந்த தம்பியின் அழுகையும், பணிவும் சமாதானமும் பாலியை, உண்மை நிலேயை உணரவிடாது செய்திகுக் ாலாம். அதாவது உண்மையில் சுக்கிரீவன் குற்றமற்றவனுக இருந்தால்.

Page 19
直齿 வாளி
சுக்கிரீவன் அரசை விரும்பினுன்
சுக்கிரீவனுக்கு அரசாட்சியில் பெரும் விருப்பம் இருந் திருக்கிறது. அரசில் அவனுக்கு ஆசையிருந்தது உண்மை; என நாம் உணர்ந்தால் சுக்கிரீவனின் செய்கைகள் கபட நாடகமாகத்தான் தென்படும். அனுமான் இராமனிடம் தமது பிரச்சண்யைக் கூறும்போது
உருமை என்றிவற்கு உரிய தாரமாம், அரு மருந்தையும்; அவன் விரும்பினுள். இருமையுந் துறந்து இவன் இருந்தனன், கருமம் இங்துேளங் கடவுள் என்றனன்.
(கிட் - நட் - 71)
உருமையையும் வாலி விரும்பினுன் என்றதிலிருந்து ஒன்றை நாம் விளங்கிக் கொள்ளலாம். "உருமை என்றிவற்கு உரிய தாரமாம் அருமருந்தையும்' என்பதில் உள்ள 'ம்'; ஒன்றை உள்பொருளாக உணர்த்துகிறது. ஆதானது உருமையை மட்டுமல்ல இன்னுென்றையும் விரும்பினுன் என்பதே அது. அதுதான் அரசாட்சி. இங்கே உள்ள 'ம்' என்ற சொல் உருமையையும் வாவி விரும்பினுன், அர சாட்சியையும் வாலி விரும்பினுன் என்பதையே விளக்கி நிற்கின்றது. உருமை என்பவள் சுக்கிரீவனின் மனேவியாகும்.
வாலி அரசாட்சியை மீளப் பெற்றது, குற்றமான காரியம் இல்&லயே. சுக்கிரீவனுக்குரிய அரசை வாலி பெறவில்லையே. அது மட்டுமின்றி "இருமையுந் துறந்து இவனிருந்தனன்" என்பதில் இருமையும் என்பதில் அடங் குவது, ஒன்று அரசு. மற்றையது மனேவி. இருமையுந் துறந்து இவன் இருந்தனன் என்றல், மனேவியையும், அரசாட்சியையும் ஆகிய இருமையுந் துறந்து இருந்தான் என்றுதான் பொருள். அரசாட்சிக்கும் சுக்கிரீவனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. வாலி உயிரோடிருக்க எந்தக் காரணம் கொண்டும் சுக்கிரீவன் அரசுக்குரியவனுசு முடியாதே! அரசாட்சியில் சுக்கிரீவனின் உரிமை பற்றிய

கிளங்கன்
மற்றையவர்கள் கூற்றுக்கு சுக்கிரீவன் எந்தச் சந்தர்ப்பத் நிலும், மறுப்புச் சொல்லவே இல்லே. அதாவது அமைதி ஆம் என்பதற்கு அறிகுறியல்லவா.
இராமர் தனது விடயத்தில் ஒவ்வொரு தடவையும் மனேவியை முதலில், அதற்குப் பிறகே விபீடணனுக்கு அரசும், என்று சொல்லி வருகிறர். அங்கதன் தூது போகும்போது இராவணனிடம் என்ன விடயத்தை இறுதியாக, உறுதியாகக் கூறுவது என்று சேட்சு, இராமர் இப்படிக் கூறி அனுப்பிவைக்கிருர்,
"என்னவற் குரைப்பதென்ன. ஏந்திழையாளே ոhւ 5’ ”
(grč - ćТš! - II)
சீதையை விட்டு விட்டு, என்றே முதற் கோரிக்கையை விடுக்கிருர் இராமர், பின்னும், இராவணனுடன் இராமன் செய்த முதல்நாட் போரில், இராவணன் தோல்வி படைந்து நிராயுதனுக வலியழிந்து நிற்க அவனிடம்
சிறையில் வைத்தவள் தன்னேவிட்டு: உலகினில்தேவர் முறையில் வைத்து நின்தம்பியை இராக்கதம்முதற்பேர் இறையில் வைத்து; அவற்கேவல் செய்திருத்தியேல்,
இன்னும் தறையில் வைக்கிலேன்; நின்தலே வாளியிற் தடிந்து,
(புத - முதற் - 254)
என்றே கூறுகிறர். 'சிறையில் வைத்த தேவியை சிறையிலிருந்தும் விடுதலே செய்து தேவர்களே அவர்களது முறையிலே இருக்கவிட்டு இராக்கதருக்கு விபீடணனே அரசன் ஆக்கி, அவனுக்கு நீ ஏவல் செய்திருந்தால், இன்னமும் உன் தலேயை என் அம்பினுல் அறுக்காமல் விடக் காத்திருக்கிறேன்" என்பது இதன் பொருள். முதலில் சீதையும் பின்புதான் ஏனைய பிரச்சனேகள் எல்லாம், என்பது இதிலிருந்து தேரிகிறது. ஆனூல் சுக்கிரீவனிடம் இராமர் கூறும்போது

Page 20
8 ” வாலி
'தலைமையோடு நின் தாரமும் உனக்கின்று தருவன்'
(கிட் - நட் - 75)
என்று கூறுகிருர். எனவே சுக்கிரீவனுக்கு தலைமைதான் பெரியவிடயம் என்பதை அனுமானும், இராமரும் தெரிந்து வைத்திருந்தனர். இவர்களின் கூற்றுக்கு சுக்கிரீவன் மறுப்பு தெரிவிக்காததால் சுக்கிரீவனுக்கு அரசாட்சியில் அவா இருந்தது என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்த வகையிலே பார்க்கும்போது, மேலே நடந்தவை: எல்லாம். சுக்கிரீவன் அரசாட்சியை அபகரிப்பதற்காக ஆடிய கபட நாடகம், என்றே என்ணத் தோன்றுகிறது. இதுபற்றி இன்னெரு இடத்தில் ஆராய்வோம்.
எனவே அரசாட்சி சம்பந்தமான விடயத்தில் வாலிக்கு சுக்கிரீவன் குற்றம் இழைத்திருக்க, அக்குற்றத்திற்கு வாலி தண்டனை அளிக்க, அது கொடுமையானது என்று இராமன் கூறுவது, எங்கனம் நியாயமானதாகும். குற்றவாளியாக சுக்கிரீவன் இருக்க, அவனுக்கு வாலி தண்டனை அளித்ததை வலியோர், மெலியோரை வதை செய்யும் செயல் என்று இராமன் சீறிப்பாய்ந்ததில் எந்த நியாயமும் இருக்க முடியாது. .

இரண்டாவது குற்றம்
வாலிமேல் இராமன் சாட்டிய இரண்டாவது குற்றச் சாட்டு, தம்பி சுக்கிரீவனின் தாரத்தை அபகரித்துத் தன தாக்கிக் கொண்டான் என்பது. இதுவே, இராமர் வாலி மேற்சாட்டும் மிகப்பெரிய வலிமையான குற்றச்சாட்டு.
வாலி, சுக்கிரீவனை அடித்துத் துன்புறுத்திய கதையை அனுமான் கூற, இராமன் கேட்டுக் கொண்டிருக்கிருஜன்" 'வாலி அடித்துத் துரத்த தப்பி ஓடிய சுக்கிரீவன் "ரிசிய மூ:கிரி' எனப்படும். இரலையம் குன்றில் சென்று ஒளிந்து கொண்டான். இம்மலைக்கு வாலி ந்ைதால், வாலியின் தலை வெடித்துவிடும் என்ற மதங்க முனிவரின் சாபம் இருந்ததால் வாலி இரலையம் குன்றில் சென்று சுக்கிரீவனைத் தாக்கவில்லை' என்று அனுமான் கூறிய கதையை மிகவும் ரசனையோடு ரசித்துக் கொண்டு, 'வாலி துரத்த, ஒடித் கப்பக்கூடிய வல்லமை அன்று சுக்கிரீவனிடம் இருந்ததோ' சான கேலியாக வினவுகிருர் இராமர்.
என்று கான்மகன் இயம்ப, ஈசனும் நன்று நன்றெணு; நணி தொடர்ந்துயின் சென்ற வாலிமுன் சென்ற செம்மல்தான்; அன்று வாவுதற்கு அறிந்தனன் கொலாம்.
(கிட் - நட் - 66)

Page 21
20 வாலி
ான நன்று நன்றென கதைகேட்டு, பரிகாசமுஞ் செய்து கொண்டிருந்த இராமர், வாலி, சுக்கிரீவனின் மனைவி யையும் கவர்ந்து தனதாக்கிக் கொண்டான்; என்ற வார்த்தைகளைக் கேட்டதும்; துடித்தெழுந்து, கோபக் சுனல் பறக்கசபதஞ் செய்கிருர்.
உருமை என்றிவற்கு உரிய தாரமாம்
,மருந்தையும் அவன் விரும்பினுன் 5])[2هـ
இருமையுந் துறந்து இவன் இருந்தனன்.
கருமம் இங்கிது, எங் கடவுள் என்றனன்,
(கிட் - நட் - 71)
உருமை என்ற பெயர் கொண்ட சுக்கிரீவனின் மனைவி யையும், வாலி கவர்ந்து கொண்டான். ; என்ற சொல்லைக் கேட்ட இராமபிரானின் வாயிதழ் துடித்தது. மலர்க்கண் சிவந்தது. கோபாக்கினி பறக்கச் சபதஞ் செய்கிரூர்.
உலகம் ஏழினுேகி ஏழும்வந்து; அவனுயிர்க்கு உதவி விலகும் என்னினும்; வில்லிடை வாளியின் வீட்டித் தலமையோடு நின் தாரமும் உனக்கின்று தருவேன். புலமையோய் அவன் உறைவிடங் காட்டென்று புகன்றன். (கிட் - நட் - 75)
இதிலிருந்து தம்பியின் தாரத்தைத் தனது தாரமாகக் கொண்ட வாலியின் செயலே, வாலியிடத்து இராமருக்கு கோபத்தை உண்டுபண்ணியது என்பது தெரிகிறது. உலகம் ஏழிளுேடு ஏழும், அதாவது பதின் நான்கு உலகும், வந்து வாலிக்கு உதவி நல்கிஞலும், வில்லில் Աւգա அம்பினுல் அவையெல்லாம் வென்று, குரங்கினத்துத் "தலைமையோடு, தாரமும் தருவேன்' என்று சூளுரைத்துச் சபதஞ் செய்து, அப்பொழுதே வாலியைக் கொல்ல முனைகிருர் இராமர். எனவே மாற்ருன் மனைவியை தன் மனையாளாக்கிய வாலியின் மாட்சியற்ற செயலே மன்பதை காக்கும் இராமனுக்கு, குற்றமாகப் பட்டிருக்கிறது. எனவே இவ்விடயம் நன்கு நுணுகி ஆராயவேண்டிய விடயமே.

களங்கன் 21
இராமர் வாலியிடம் வாலி செய்த தீங்குகளைக் கூறும் போதும், இந்தக் குற்றத்தையே வலியுறுத்திக் கூறுகிறர்.
ஈரம் ஆவதும்; இற்பிறப்பு ஆவதும், வீரம் ஆவதும்; கல்வியின் மெய்ந்நெறி வாரம் ஆவதும் மற்ருெருவன் புணர், தாரம் ஆவது; தாங்குந் தருக்கரோ.
(கிட் - வாலி - 99) ஈரம் என்று கூறுவதும், இற்பிறப்பு என்று கூறுவதும், வீரம் என்று கூறுவதும், கல்வியினல் ஒழுகும் மெய்ந்நெறி வாரம், என்று கூறுவதும், எல்லாம் மாற்ருன் தாரத்தை, கற்பில் வழுவாது காக்குந் தன்மையே ஆகும். மாற்ருன் காரத்தைத் தனதாக்கிக் கொண்டு, தான் இரக்கமுள்ளவன் என்றும், உயர்குடிப் பிறந்தவன் என்றும், சுத்தவீரன் என்றும், கல்வியின் உண்மை நெறியிலே ஒழுகுபவன் என்றும் கூறிக்கொள்வது அர்த்தமாகாது. என்பது இதன் பொருள்.
இங்கே' 'இற்பிறப்பாவதும்' என்று இராமர் கூறுவது வாலிக்குப் பொருந்துமா? அவன் குரங்கினத்தில் பிறந்தவ (ணுயிற்றே! குரங்கினமும் 'இற்பிறப்பு' என்பதில் அடங்குமா? இற்பிறப்பு என்பது இல்-பிறப்பு, அதாவது வீட்டிலே பிறந்து வளரும் பிறப்பு என்று பொருள் கொள்ளக் கூடியது. இற்பிறப்பு என்பதனை 'உயர் குடிப் பிறப்பு' என்றும் பொருள்கொள்வர். எந்த வகையில் பார்த்தாலும் வாலி 'இற்பிறப்பு" என்பதனுள் அடங்கவே
மாட்டான்.
அறந் திறம்பல்; அருங் stą மங்கையர் திறந் திறம்பல்; தெளிவுடை யோர்க்கெலாம்.
)108 - கிட் - வாலி( تبصرہ۔ ?
சுற்பைப் பெரிதாக மதித்துக் காவல் காக்கும் பெண் களின் கற்பை அழித்தலானது தெளிவுடையவர்க்கெல்லாம். அறந் திறம்பிய செயலாகும். என்று அறன் வலியுறுத்து கிருர் இராமர்.

Page 22
வாலி
தருமம் இன்னது எனுந்தகைத் தன்மையும்
இருமையுந் தெரிந்து எண்ணலே எண்ணிஞல்
அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப்,
பெருமை நீங்கினே எய்தப் பெறுதியோ,
(கிட் - வாசி - 101)
'தருமம் இன்னது என்ற தன்மையும் இம்மை மறுமை என்ற இருமையும் தெரிந்த நீ, அவைபற்றி எண்ணவில்லே. எண்ணினுள் உனது தம்பியின் மனேவியை அடைந்து பெருமையெல்லாம் நீங்கப் பெறுவாயோ!" என இன்னுெ ருத்தன் மனேவியை, அதிலும் தம்பியின் மண்வியை, வாளி அபகரித்த செயலேயே வாவிமேல் மின் வலிமையான குற்றச் சாட்டாக இராமர் சுமத்துகிறார்.
事
வாலி விலங்கே
எாவி, சுக்கிரீவனின் மனேவியான உருமை என்பாளே தனது மனேவியாக வைத்திருந்தான் என்பதை ஒப்புக் கொள்கிருன், இராமரும், வாலி சுக்கிரீவனின் மனேவியை தாரமாக வைத்திருந்தான் என்பதை மேலேயுள்ள பாடலில் அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியை எய்தப் பெறுதியோ" எனக் கூறுவதிலிருந்தும் ஏனேய சில விடயங் களிலிருந்தும் புலணுகின்றது.
வாலி செய்தது சரியா? தவறு? இன்னுெருத்தன் ம8ாவியை தன் மனேவியாக்கிக் கொண்டது குற்றமில்லேயா? என்பது கேட்கப்பட வேண்டிய கேள்வியே! வாவி குற்ற வாளி என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம் என்று சிலர் சாதிப்பர்.
தற்பொழுக்கத்தில் உறுதியாக இருந்து, மனத்திண்மை வழுவாத ஒரு பெண்ணை, இன்ஞெருவன் பலாத்காரப் படுத்துதல் நிச்சயமாகக் குற்றமானதே! இதற்கு இரு சுருத்து இருக்கவே முடியாது. இதுவே இராமரின் விருத்து

அகளங்கன் ፥፭ 8
மாகும். இதனேயே "அறந்திறம்பல், அருங்கடி மங்கையர் நிறம் திறம்பல்' என்ற வரிகளால் இராமர் உணர்த்து விருர் அரிய கற்பைப் பெரிதாக மதித்துப் பேணிக் காத்து வரும் பெண்களின் சுற்ணப அழித்தல் குற்றமாகும்: ான்ற கூற்ருேடு சுக்கிரீவனின் மனேவியான உருமை GTIGT பாளைப் பற்றி இவள் இத்திறத்தாளா எனப் பார்ப்போம்: இவளின் ஒழுக்கத்தைப் பொறுத்ததே ஆாவியின் தவறு என்பதனுல் அதனே நோக்குவோம்.
உருமை என்பாளுக்கும் சுற்பொழுக்கத்துக்கும் TiiT gTTTT வேனும் சம்பந்தம் இருக்க முடியாது. ஏனெனில் சுற் பொழுக்கத்தில் வாழும் பத்தினிப் பெண்டிர்போல அவள் வாழ்ந்திருந்தால் வாலி அவளேக் கூடியிருக்க முடியாது.
சீதையை இராவணன் சிறைவைத்தானே தவிர மனேவியாக வைத்திருக்கவில்லை. யாரும் அப்படிப் பேசு வதும் இல்லை. "விரும்பாத பெண்ணே நீ . பலாத்காரப் படுத்தினுல், உன்தலை வெடிக்கும்' என்ற சாபம் இரா வணனுக்கு இல்லாமல் இருந்திருந்தாலும் கூட, இராவணன் சீதையைத் தொட முயன்றிருந்தால், கற்பின் கனலியான சீதை இராவணஃனயும், இலங்கையையும் மட்டுமன்றி உலகம் முழுவதையும் தன் சுற்புத் தீயால் கருசு எரித் திருப்பாள். உலகம் முழுவதையும் தன் ஒரு சொல்லினுற் சுட முடியும்; ஆளுல் அது நீன் கணவனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்பதால் அப்படிச் செய்யவில்லே" ான்று சீதை கூறுகிருள். இராவணனின் மூச்சுக்கூடப் படாமல், இலக்குவள் அமைத்துக் கொடுத்த புல்விஞற் தொடுத்த பர்ண சாலேயில்" அசோக வனத்தில், சோசு வணமாக இருந்து. இராமனேயே பூஜித்து வந்த சீதையை இராமன் தீக்குளிக்கச் செய்து, உலகெல்லாம் அவளது ாற்பின் திண்மையை வெளிக்காட்டிய பின்னரே சைக் கொள்கிருன்.
பாம்பின் வாயிலிருந்து தன்சீனக் காத்த வேடனின்
ாமப்பார்வைக்கு ஆற்ருது, சீறி விழித்து சான் வேடனேக் ரியாக்கிய சுற்பின் வடிவம் தமயந்தியையும் காவியத்தில்
படித்திருக்கிருேம்.

Page 23
விாக
கணவன் குற்றவாளி எனக் கூறி அரசன் குற்றமிழைக்க: ஆதருல் கோபங் கொண்டு மதுரை மாநகரையே தீக்கிரை பாக்கிய சுற்புத் தெய்வம் கண்ணகியையும் இளங்கோவின் காவியத்தில் கண்டிருக்கிறுேம். அறந் திறம்பி உயிரிழந்த அரசஜேடு அவனது அடிப்ஃளத் தொழுதவண்ணம் வீழ்ந் திறந்த மடமயில் பாண்டிமாதேவியையும் சிலப்பதிகா ரத்திலே படித்திருக்கிறுேம்.
பொழுது மறைந்தால் கணவன் இறந்துவிடுவான் என்பதால்; ஆதலாஃன அப்படியே நிற்கச் செய்த நளா யினியையும்; வினவன் உயிர் கொண்டு சென்ற காலளூேடு எாதிட்டுத் தன் கணவன் உயிரை மீட்டெடுத்த சாவித்தி ரியையும், பாடங்களிலே படித்துள்ளோம். அரக்கரூரா இராவணன் இறந்ததும் அவணுேடு தானும் மாண்ட மண்டோதரியையும் தெரிந்து கொண்ட நாம்; மற்றவணுல் அனுபவிக்கப்பட்டளைான உருமை என்பவளே சுற்பொழுக் சித்தினள் என்று வாய் கூசாமல் கூறமுடியுமா ?
கற்பொழுக்கத்திற்கும் தனக்கும் ஒரு சிறிதும் சம்பந்த மில்லாத உருமையை, லாலி மனேவியாக்கியது எப்படிக் குற்றமாகும். சிற்பொழுக்கமென்ற ஒன்று இல்லாத குரங்கு இனத்தில் சுற்பொழுக்கம் பற்றிப் பேசுவதும், ஒருவன் மனேவியை ஒருவன் வைத்திருந்தான் என்று குற்றஞ் சாட்டுவதும், தருமத்தின் பாற்படுமா. மனம் என்றும், மனேவி என்றும் இல்லாத மிருகங்களிடையே சுற்பொழுக்கம் பற்றிப் பிரஸ்தாபிப்பதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்.
率 : 蚌
நகைத்தான் வாலி
அதனுங் வாவி செய்த வலிமையான குற்றம், இன்
னுெருத்தன் தாரத்தை வைத்திருந்தது என இராமன் கூறியதைக் கேட்டு நகைக்கிருன் வாலி.

களங்கன்
பிழைத்த தன்மை இதுவெனப் பேரெழில் தழைத்த விரன் உரைசெயத் தக்கிலாது இழைத்த வாலி இயல்பல. இத்துனே விழைத் திறத்தொழில் என்ன விளம்புவான்.
(கிட் - காலி - 103)
பிழைத்த தன்மை இதுவெனப் பேரெழில் தழைத்தி வீரன் உரைசெய்ய" வாலி கூறுகிருன். இவ்வளவும் எமக்கு இயல்பு அல்லாதன அல்ல. நாம் குரங்கு இனத்திலே பிறந்ததால் இது எமக்கு ஒத்துவராக தத்துவம், எமது தொழில் விழைத்திறத் தொழில் என்று கூறுகிருன்விரும்பியபடி தொழில் செய்து, விரும்பியபடி வாழ்வதே ாமது வாழ்க்கை, எனத் தமது குல வழக்கத்தைக் கூறி, பின்னரும் கூறுகிறன்,
ஐய நுங்கள் அருங்குலக் கற்பினப் பொய்யில் மங்கையர்க்கு ஏப்ந்த புணர்ச்சியோல்; செய்திலன், எண்மத் தேமலர் மேலவன். சுய்தின் எய்திய தாக வியற்றிருன்.
(கிட் - வாலி - 104.
உங்கள் அருமையான குலத்திலேயுள்ள as Abt (3G) வழுவாத மங்கையர், தமது நனn&ன மட்டுமே புணர்த்தி வாழ்வது போல Tமது குலத்தி:ே இல்லே. asrLfb 67)L r) அப்படிப் பிரமன் படைக்கவில்லை, என்று வாவி கூறுகிருன், இதிலிருந்து குல வழக்கப்படியே வாழ்வு அமைகிறது என்பதை முதலில் கூறுகிருன் வாலி.
சுற்பு நெறியினின்றும் வழுவாதிருக்க வேண்டிய முதற் சுடமை, பெண்களுக்கே உரியது என்பதை Gurrlsruflek மங்னையர்க்கே அது ஏய்த்தது, என்று கூறுகிறன். அதணுல் உருமை எனப்படும் சுக்கிரீவனின் இாவி பொய்யில் மங்கையருள் அடங்காள் என்றும், சுற்பொழுக்கம் தமது மூலத்துக்கு ஒள்வாதது என்றும் கூறுகிருன் வாலி.
莺

Page 24
ዷ6 · . 61 Myra)
இதிலிருந்து 'கற்பீனப் பொய்யில் மங்கையாக' உருமை இல்லாதிருப்பதால், அவளுக்கு ஏய்ந்த புணர்ச்சி யாக தன்னை அவளே வலிந்து சேர்ந்திருக்கலாம் என்று அவன் கூறுவதுபோல இப்பாடல் நோக்க வேண்டி இருள் கிறது. தங்கள் குலத்துக்கு கற்பொழுக்கம் என்று ஒன்று இல்லை என்று கூறுவதற்குப் பதிலாக வாலி, உங்கள் குலத்துப் பொய்மை இல்லாத மங்கையர், தமது கணவனே மட்டுமே கூடி இன்புறுவது போல, எமது குலத்துப் பெண்கள் இல்லை. அவர்கள் தாம் விரும்பியபடி விரும்பிய ஆணுேடு புணரும் தன்மையைக், குலமுறைப்படி கொண் டவர்கள், என்று கூறி, பிரமன் எமது மங்கையரை தாம் தமது விருப்பப்படி எவரையும் புணர்ந்து இன்பம் அனுப விக்கும்படி படைத்துள்ளான் என்று கூறுகிருன்.
எனவே ஆண்கள், இன்ஞெருத்தன் மனைவியைத், தனது மனைவியாக்குவது குற்றமில்லையா என்ற இராமனின் கேள்விக்குப் பதிலாக, பெண்கள், விரும்பிய ஆணைப் புணரலாம் என்பதே எமது குலவழக்கு என்று கூறுகின்ருன் வாலி. இதிலிருந்து சுக்கிரீவனின் மனைவியான உருமை என்பவள், தாளுக விரும்பியே வாலியைக் கூடி வாழ்ந்தவள் என வாலியின் பதில் புலப்படுத்துவதை அறியலாம்.
அதுமட்டுமில்லாமல் தமது குலவழக்கத்தையும் அவன் இராமனுக்குத் தெளிவாகக் கூறுகிருன்.
மணமும் இல்லை, மறைநெறி வந்தன. குணமூம் இல்லை, குலமுதற்கு ஒத்தன. உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கலால், தினமும் நெய்யும் 'இணங்கிய நேமியாய்.
(கிட் - வாலி - 105)
இதிலே சுக்கிரீவனின் மனைவியை தானே வலிந்து மனைவியாக்கியிருந்தாலும் அது தவறல்ல என்று கூறுகிருன் வாலி. மறைநெறி வந்த திருமணம் என்பதே எமக்கு இல்லை. அதனுல் இன்ஞருக்கு இன்னர் மனைவி என்ற பந்தமும் இல்லை. அப்படி இருக்க சுக்கிரீவனின் மனைவியை

அகளங்கன் 27
வாலி தூக்கினுன் என்ற கதை எப்படி வரமுடியும். மணமும் மனைவி கணவன் என்ற உறவும் இல்லாத சமுதாயத்தில், இன்னரின் மனைவியை, இன்னர் பிடித்திழுத்தான், என்ற கதைக்கே இடமில்லையே.
குலமுதலாக வந்த கற்புநெறி என்ற குணமும், எமது பெண்களிடம் இல்லை. அதற்கும் குரங்கு இனத்துக்கும் சம்பந்தமே இல்லை. அவர்களது பொதுமையான ஒழுக்கமோ, உணர்வு சென்ற வழியிலே செல்லும் ஒழுக்கமாகும். யாரும் யாரையும் உணர்வு சென்ற வழியில் எய்திய எய்தியாங்கு இன்பிப்பர்.
இதே வழக்கம் குரங்குக்குலம் முழுவதற்கும் பொது வான வழக்கமே. அத்தனை குரங்குகளும் அந்த வழக்கப் படியேதான் வாழ்ந்து வருகின்றன. சுக்கிரீவனும் இந்த ஒழுக்கத்தில்தான் வாழ்ந்திருப்பான். ஒரு குலத்தில் அனை சுரும் செய்யும் செயல், அக்குலத்துக்குக் குற்றமான செயல் என்று தோன்றது. அது தவறணதும் அல்ல.
பன்றி பகரவி உண்ணுவது பன்றியின் குலவழக்கம், பகர வி உண்டு விட்டதே பன்றி என்று பதை பதைத்து, பன்றியைக் கொல்ல முனையும் மனிதர் பண்பில்லாத வர்களே. இதோடுதான் இராமரின் செய்கையையும் ஒப்பிட வேண்டி இருக்கிறது.
எனவே ஒருவனுக்கு இவள் மனைவி; என்ற திரு மணமோ, பந்தமோ இல்லாத நிலையில், உணர்வு சென்ற வழியில் சென்று வாழும். ஒழுக்கம் கொண்ட குரக்கினத்தில் மாற்றன் மனைவி என்ற பந்தமும் இல்லே. அதனைக் கவர்தல் என்ற நிகழ்ச்சியுமில்லை.
வாலி இறக்கும் நேரத்தில் சுக்கிரீவன அழைத்து புத்தி சொல்லும் இடத்தில்
மதவியல் குரக்குச் செய்கை மயர்வோடு மாற்றி வள்ளல்
asíîlavnu 2-dört soî... ..
(கிட் - வாலி - 136)

Page 25
28 வாலி
எனக் கூறுவதால், இனியாவது குரங்குச் செய்கையை நீ மாற்றி வாழ், என சுக்கிரீவனுக்குச் சொல்லுவதால், சுக்கிரீவன் உட்பட, குரங்கின் குலத்துக்கு இயைந்த புணர்ச்சியில், குலமுறைப்படி வாழ்ந்தவர்கள். என்பது தெளிவு.
தனக்கு அம்பெய்தவன் இராமன் என்று தெரிந்த வுடனே வாலி இராம்னை ஏசும்போது இராவணனின் செய்கைபற்றிச் சொல்லியே ஏசுகிருன்.
அரக்கர் ஒரழிவு செய்து கழிவரேல், அதற்கு வேறேர்
குரக்கினத்து அரசைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ (கிட் - வாலி 79)
இங்கே அரக்கர் செய்தது அழிவு என்பதை வாலி ஒப்புக் கொள் கிருன். அரக்கனன இராவணன் சீதையைச் சிறையெடுத்தது குற்றமானது என்றும், அவனைக் கொல்வது மனுதர்ம நெறிப்படி சரியானது என்றும் வாலி ஒப்புக் கொள்கிருன். இராவணன் செய்த கொடுமைக்கு, அதாவது அரக்கர்தம் தலைவன் செய்த கொடுமைக்கு, குரக்கு இனத்துத் தலைவனைக் கொல்லும்படியா மனுந்ெறி கூறுகிறது, என்ற வாலியின் கூற்றிலிருந்து இதனைப் புரிந்து கொள்ள 6) IT b .
இராவணன் செய்ததைப் பிழை என்றும், அதற்குத் தண்டனை கொலை என்றும் ஏற்றுக்கொள்ளும் வாலி, தான் செய்தது மட்டும் சரி என்று சாதிப்பது எப்படிச் சாத்திய மாகும் என்பதும் சிந்திக்க வேண்டியதே.
இராமன் மனிதன். சீதை தமது குலமரபுப்படி தற்பொழுக்கத்தில் வாழ்ந்தவள். சுற்பொழுக்கத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணை, அரக்கரோ அன்றி யாரோ சிறையெடுத்துச் சென்று கெடுக்க முயல்வது மகத்தான பாபச் செயல், என்று வாலி கருதுகிறன். அதனுல் தனது பிரச்சனைக்கு வரும்போது தமது பெண்களுக்கு கற்பொழுக்கமில்லை, மனமில்லை, என பெண்கள் பற்றியே பிரஸ்தாபிக்கிருன், என்று எண்ணவேண்டி இருக்கிறது.

அகளங்கன் 29
ஆனல் வாலிக்கு தாரை என்று ஒரு மனைவி இருப்ப தாகவும், அவள், வாலி சுக்கிரீவனுடன், போருக்குச் செல்லும் போது அறிவுரை கூறித் தடுப்பதாகவும் இருக் கும் காட்சியைப் பார்க்கும் போது, வாலி கூறும் நியாயம், தளம்பல் நிலையை அடைவதை அவதானிக்கலாம். இருப்பினும் அதுவும் மணம் என்ற நிலையிலில்லாமல் கூடி வாழ்ந்த வாழ்க்கையாகவும் இருக்கலாம். இது பற்றி பிறிதோர் இடத்தில் ஆராய்வோம்.
米 率 率
வாலி விலங்கல்ல என்கிறர் இராமர்
குரங்கு இனத்திலே திருமணம் என்பதும் இல்லை. மனைவி என்ற பந்தமுமில்லை. உணர்வு சென்ற வழியிலே செல்லும் ஒழுக்கமே தமது ஒழுக்கம், என்று கூறி சுக்கிரீ வனின் மனைவியான உருமை என்பவளை தான் தனது மனைவியாக வைத்திருந்ததை, குற்றமான செயல் என்று கூறமுடியாது; என்று இராமரின் கேள்விக்குப் பதில் சொல்கிருன் வாலி.
ஆனல் வாலிக்கு ஒரு மனைவியாக தாரை என்பவளையும், அவள் வாலி, சுக்கிரீவனுடன் போருக்குச் செல்வதைத் தடுத்து அறிவுரை கூறுவதையும் காட்டுகிறர் கம்பர். வாலிக்கு ஒரு மனைவி, ஒரு குடும்பம் என்ற வகையிலே உறவுகள் இருக்கின்றன, என்று பார்க்கும்போது, வாலியின் வாதம் வெறும் விதண்டாவாதமாகவே தென்படுகிறது.
ஆனல் இராமரோ இதைப்பற்றிக் கூருமல். வாலியை விலங்கு அல்ல என்று நிரூபிப்பதிலேயே முயல்கிருர், அதாவது, வாலி குரங்காக இருந்தால் அவனது செயல் பிழை இல்லை, என்பதை இராமரும் ஒப்புக் கொள்வது போல இருக்கிறது, வாலியை அவர் குரங்கு அல்ல என்று நிரூபிக்க முயல்வது

Page 26
էլՄՈ էլ:
நலங்கொள் தேவரித் தோன்றி, நவையறக் கலங் கலாதன நன்னெறி காண்டலின், விலங்கு அலாமை விளங்கியது. ஆதலால் அலங்கல் ஆர்க்குஇது அடுப்பது அன்ருமரோ,
(கிட் - வாலி - 107)
தேவர்களான இந்திரன் வழியில், இந்திரனின் மசுரூசு வாலியும், சூரியனின் மகனுக சுக்கிரீவனும் பிறந்தவர்கள், அதாவது பிறப்பால் தேவர்களிலிருந்து தோன்றியவர்கள். இத்தன்மையினுலும், ஐயந்திரிபற நன்னெறிசுளே அறிந் திருந்தமையிஞலும், வாளி சுக்கிரீவர்க்கு விலங்கு என்ற தன்மை இல்லாமற் போய்விட்டது. அதனுல் விலங்கு சுளுக்கு ஏற்ற ஒழுக்கத்திலேயே, உணர்வு சென்றுறிச் சென்ற ஒழுக்கம் தவறுனது. மன்னிக்க முடியாதது என்கிருர் இராமர்.
மகாபாரதக் கதையிலே, சூரியனின் மண்ணுகக் கீர்ணனும், தருமன், இந்திரன், வாயு; அசுவினிதேவர்களுக்கு குந்து வயிற்றுப் பிள்ளேஅரைாக பஞ்சபாண்டவர்களும் பிறர் தார்கள். இவர்கள் எல்லோரும் மனிதர்களாக மதிக்கப் பட்டார்களேயன்றித் தேவர்களாக மதித்துப் பூஜிக்கப் பட்டவர்களில்ஃ.
எனவே வாவி, சுக்கிரீவன், முதலியோர் இந்திரன், சூரியன், முதலிய தேவர்களுக்குப் பிள்ஃளகளாக இருந் தாலும், ஒரு குரங்கின் வயிற்றிற் பிறந்ததால், அவர்கள்
ஒரங்குகளாகவே மதிக்கப்பட்டனர்.
வாலி, சுக்கிபீவர்களே விலங்கில்ஃப் என்று நிரூபித்து பின்னும் இப்படி முயல்கிறர் இராமர்.
தக்கது இன்னது, தகாதது இன்னவென்று, ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள மக்களும் விலங்கே மனுவின் நெறி புக்கவேல் அவ் விலங்கும் புத்தேளிரே,
(கிட் - வாணி - 112)

ாளங்கன் |8|| I ს.
இது தகுதி வாய்ந்தது. இது தகாதது. என்று இரண்டு பக்கமும் எண்ணிப் பார்க்காதவர்கள், உயர்ந்த மக்களின் வெத்தில், அதாவது, மானிடராக இருந்தாலும், அவர்கள் விலங்காகவே எண்ணப்பட வேண்டியர். மனுநெறியில் தமது வாழ்வை நடத்துபவர்கள், விலங்காகப் பிறந்தாலும் Wவர்கள் தேவர்களாக மதிக்கப்பட வேண்டியலர்களே!
என விலங்கியல் கூறி, வாலி விலங்கில்லே என வாதாடு விருர் இராமர். அதனுல் வானி விலங்கு இல்லை என்ப நஞல், மற்றவன் மனேயின் மாட்சியை அழித்தது குற்றமே ான்பது இராமரின் வாதமாக இருக்கின்றது.
நன்று தீதொன்று 1 ல்தெரி நல்லறிவு இன்றி வாழ்வது அன்ருே விலங்கின்னியல்.
(கிட்- வாலி - 111)
நல்லது தீயது என்ற பேதம் தெரியாமல் வாழ்வது தான் விலங்கின் இயல். ஆனுஸ் கிஷ்கிந்தையிலே வாழ்ந்த வாலி சுக்கிரீவன் முதலிய வானரக் கூட்டத்தினர் நல்லது, பேது, தெரிந்து வாழ்கின்றர்கள். அதனுல் அவர்கள் விலங்கின் இயல்பைக் கடந்தவர்கள் என்று உறுதியாக இறுதி வார்த்தைகள் இயம்புகிருர் இராமர்.
இந்த வார்த்தைகளோடு, வாதங்களோடு, இராமரின் ான்னிப் போரை, அதாவது தாடரை வதத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமானது.
கொடுமைகள் பல செய்தவளும், அரக்கியுமான ாடகை விசுவாமித்திரனின் யாகத்தை அழிக்க வரும் பொது, பாசுங் காக்க நின்ற இராமன், அவளேப் பெண் மறுசுக் காண்கிருன், தக்கிாது இன்னது, தகாதது இன்னது ான ஒக்க உணராத உயர்ந்த மக்களும் விலங்காகும், என வதம் உரைத்த இராமர், நல்வதையே அறியாத கொடிய துரக்கி தண்டனையை மட்டும், பெண்ணுகக் கண்டு மனம்
பதவிப்பானேன்.

Page 27
32 GJIT só
குரங்காகப் பிறந்தும், அறிவு பெற்றதால் வாலி விலங்கல்ல, என விலங்கியல் கூறும் இராமர், அரக்கியாகப் பிறத்து மிருக குணங்கொண்ட தாடகையை எப்படிப் பெண்ணென்று கூறமுடியும்.
தாடகையைப் பெண்ணென்று பேதுற்று வில்லெடுத்து நாணேற்ருது நின்ற இராமருக்கு, விசுவாமித்திரர் அறிவுரை வழங்கி அம்பெய்யப் பணிக்கிருர், விசுவாமித்திரரோடு மாறுபட்டுரைத்து, இறுதியில் அதனல் வரும் பாவம் பழி எல்லாம் அவருக்கே உரியது என்றும், அவரது சொல்லை மீறுவது தர்மமாகாது என்றும் எண்ணி, வேண்டா வெறுப் பாக, அம்பெய்து தாடகையைக் கொல்கிருர் இராமர்.
தாடகையின்மேல் தனது 'சொல்லொக்கு கடிய வேகச் கடுசரம்' துரந்த இராமரின் மனநிலையையும், வாலியிடம் விலங்கியல் கூறி நிற்பதையும் பார்க்கும் போது, இராமரின் போலிச் சாட்டு புலனுகின்றது.
දං 岑 米
இராமர் வாலியை விலங்கென ஒப்புக் கொண்டார்
இராமர் வாலியைக் குரங்கு எனக் கூறும் இடம் ஒரு முக்கியமான இடமாக அமைகிறது. இராமரே வாலியைக் குரங்காக ஒப்புக் கொண்டுவிட்டால், முழுக் குற்றமும் இராமர் தலையிலேயே விழுந்துவிடும். எனவே அந்த இடத்தை சற்று நோக்குவோம்.
சுக்கிரீவன் வாலியை வலியப் போருக்கழைக்கிருன். இராமரின் திட்டப்படி, வாலியும் சுக்கிரீவனும் போர்புரியும் போது இராமன் ஒளித்திருந்து அம்பு தொடுக்கும் நாடகம் நிகழப் போகிறது. இந்தக் கையாலாகாத்தனமான, கபட மிான நாடகத்தைச், சுத்தவீரஞண இலக்குவன் சிறிதும் விரும்பவில்லை. ܫ

p:ளங்கன் − 33
சுக்கிரீவனின் அழைப்பையும், ஆர்ப்பரிப்பையும் கேட்டு, போருக்கு ஒடி வருகிருன் வாலி. வாலியின் அழகான தோற்றத்தை இலக்குவனுக்குக் காட்டி, அவனைப் பற்றிக் கூறுகிருர் இராமர். அதற்குப் பதிலாக இலக்குவன், இராமர் செய்யப் போகும் அந்த அறந்தவறிய போருக் காக மனங்கலங்கிக் கூறுகிருன்;
வள்ளற்கு இணையான் பகர்வான்; இவன்தன்முன் வாணுள் கொள்ளக் கொடுங் கூற்றுவனேக் கொணர்ந்தான்.
குரங்கின் எள்ளற்கு அரும் போரதுசெய்கலன் என்னும் இன்னல் உள்ளத்தில் ஊன்ற உணர்வுற்றிலன ஒன்றும் என்றன். (கிட் - வாலி - 32)
தமையனது உயிரைக் கொள்வதற்காக, கூற்றுவனிலும் கொடியவனுக, இராமனைக் கொண்டுவந்த சுக்கிரீவனை நினைக்க இலக்குவன் மனம் கொதிக்கிறது. கூற்றுவனும் லாலியினைக் கொல்ல அஞ்சுவான் என்பதால் வாலியைக் கொல்ல அஞ்சாத இராமனை, கொடுங் கூற்றுவன் என்ருன் இலக்குவன்.
தன் தமையனுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து நிற்கும் இலக்குவனுல், தமையனை அழிக்க வந்து நிற்கும் சுக்கிரீவனை மதிக்க முடியவில்லை. மன்னிக்க முடியவில்லை.
அதுமட்டுமல்லாது இராமரின் பேரறம் பிறழ்ந்த தன்மையையும் சுக்கிரீவன்மேல் ஏற்றிச் சொல்கிருன். **குரங்கின் எள்ளற்கு அரும் போரது செய்கலன்’ என்று கவலைப்படுகிருன். குரங்குகளுக்கே இயல்பாயமைந்த கேலி செய்யத் தக்கபோரையே செய்கிருன். ஏனெனில் இருவர் பொருதும் போது இன்னுெருவர் இடையே சுணை தொடுத் கலும். தன்னேடு போர் செய்யாத ஒருவனுக்கு மறைந் திருந்து அம்பெய்வதும், குரங்கின் எள்ளற்கு உரிய போராகும் என்பதை எண்ணிய இலக்குவன், சுக்கிரீவன்; குரங்கு என்று எள்ளி நகையாடாமலிருக்கும் படியான முறையில் போர் செய்வானில்லை என்று பழித்துக் கூறுகிறன்.

Page 28
34 - வாலி
இலக்குவனது இந்தக் கூற்றுக்குப் பதிலாக இராமன் கூறுவது சுக்கிரீவன விலங்கு என்று ஒப்புக்கொள்வதாக இருக்கிறது.
அத்தா! இதுகேள்என ஆரியன் கூறுவான், இப் பித்தாய விலங்கின் ஒழுக்கினைப் பேசலாமோ! எத்தாயர் வயிற்றினும் பின்பிறந் தோர்கள்எல்லாம்: ஒத்தாற்; பரதன் பெரிதுத்தம ஞதலுண்டோ.
(கிட் - வாலி - 84)
இப்பித்துப் பிடித்த விலங்கின் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசலாமோ, என்று இராமர் கூறுவதிலிருந்து இராமர் சுக்கிரீவனை விலங்கு என்று ஒப்புக்கொள்கிருர் என்பது தெளிவாகிறது. இலக்குவன் சுக்கிரீவனை குரங்கு என இகழ்ந்ததைவிட, ஒருபடி மேலாக இகழ்கிருர் இராமர். விலங்கினத்திலே பித்துப் பிடித்த, பித்தாய விலங்குதான் குரங்கு என்பதை "இப்பித்தாய விலங்கு" எனக் கூறுகிருர் இராமர்.
சுக்கிரீவனின் செயல் சம்பந்தமாக, அதாவது அண் ணனைக் கொன்று அரசாள நிற்கும் ஒழுக்கத்தைக் கூறும் போது மட்டும் 'இப்பித்தாய விலங்கின் ஒழுக்கினைப் பேசலாமோ " எனக் கேட்ட இராமர், வாலியின் விடயத் தில் மட்டும் ஏன் மானுடம் பற்றிப் பேசுகிறர் என்பது சிந்தனைக்குரியதே!
எல்லாத் தாயின் வயிற்றில் பிறந்தவர்களும், பின் பிறந்தோர்கள், முன் பிறந்தோரைக் கடவுளாக எண்ணி மதித்து வழிபட்டு வாழ்ந்தரல், பரதன்தான் உலகிலே சகோதர வாஞ்சையிலே பெரிதும் உத்தமமானவன் என்று கூறமுடியுமோ. அதனல் இந்தக் குரங்குகளின் இடத்திலே சகோதர பாசம், மூத்தவன் இளையவன் என்ற முறைமை பற்றியெல்லாம் பேசுவது தகுதியானதோ இல்லை என்று கூறுகிருன் இராமன்,

அகளங்கன் 35
இராமரால் நல்லவன் என்று நம்பப்பட்டவன் சுக்கி ரீவன். சபரியும், கவந்தனும் சுக்கிரீவனைப் பற்றிச் சொல்லி, அவனைத் துணைக்கொள்; என இராமரிடம் கூறி இருக் கிருர்கள். . . .
ஆயது செய்கை என்பது அறத்துறை நெறியின் எண்ணித் தீயவர் சேர்க்கிலாது, செவ்வியோர் சேர்த்துச் செய்தல்.
(ஆரணி - சுவந் - 56)
என, நல்லதைச் செய்யப் போகும் போது, நல்லவர் களைத் துணைக்கொள்ள வேண்டும், என்று, கவந்தன். இராமனுக்கு அறிவுரை கூறி 'சுக்கிரீவனைத் துணைக்கொள்' என்று கூறுகிருன்.
அறிவு நிரம்பியவனுக, தக்கது இன்னது, தகாதது இன்னது என ஒக்க அறிந்தவனுக, இருமையுந் தெரிந்தs: ஞக, இருந்த சுக்கிரீவனை, வாலியிலும், நல்லவஞக இராமர் கருதிய சுக்கிரீவனை, பித்தாய விலங்கினத்தில் சேர்த்துச் சொல்கிருர் இராமர் அப்படி இருக்க வாலி மட்டும் குரங்கில்லை எனக் கூறுவது என்ன நியாயம்.
எனவே வாலியை இராமர் குரங்குஎன்று ஒப்புக் கொள்ளும் போது, இராமர் வாலி செய்ததாகக் கூறும் குற்றங்கள் அனைத்தும் பொய்யாகின்றன, என்பது மிகவும் தெளிவாகத் தெரிகின்றது.

Page 29
இராமன்மேல் இரண்டாவது குற்றச்சாட்டு
சுக்கிரீவனின் மனைவியை 'வாலி கவர்ந்து தனதாக்கிக் கொண்டான், என்ற சொல் இராமனுக்கு எவ்வளவு கொடுமையானதாக, அறந்திறம்பிய செய்கையாகப் பட்ட தோ, அதே அளவு மறம் திறம்பிய செயலாக, (மறம் - வீரம்), இராமன் ஒளிந்திருந்து அம்பு செலுத்திய செயல், வாலிக்குத் தோன்றுகிறது. அதனுல் “வில்லறந்துறந்த வீரன்' என இகழ்ச்சியாக ஏசுகிருன் வாலி. இராமன் வில் அறந்துறந்ததால், வேத நூலிற் சொல்லப்பட்ட அறந்தவருத சூரியன் மரபும், நீண்ட நெடுங்காலமாகக் கட்டிக் காத்து வந்த நல்ல அறத்தைத் துறந்து விட்டது; என ஆத்திரத்தோடு கேலியாக இகழ்ச்சியாக ஏசுகிறன் வாலி.
இல்லறந் துறந்த நம்பி, எம்மஞேர்க்காகத் தங்கள் வில்லறந் துறந்த வீரன் தோன்றலால்; வேதநூலிற் சொல்லறந் துறந்திலாத சூரியன்மரபுந்: தொல்லை நல்லறந் துறந்ததென்னு நகைவர நாணுட்கொண்டான்.
(கிட் - வாலி - 72)
இராமனின் வில்லறந்துறந்த செய்கைக்காக வெட்கப் படுகிருன் வாலி. இங்கு “இல்லறந் துறந்த நம்பி' என்பதை, பொருத்தமான இன்னெரு சந்தர்ப்பத்தில்

அகளங்கன் ያ7
விளக்குவோம். இராமனின் செய்கையைப் பார்த்த வாலி, வினந்ததை விட, கேலியாகவும், நிகழ முடியாத அதிசயம் நிகழ்ந்துவிட்டதாகவும், ஆச்சரியப் படுவதுமே அதிகமாக இருக்கின்றது.
வீரன் என்று சொல்லக் கூடிய எவனுமே, வில் லெடுத்துப் புகழ்ச் சொல்லெடுக்கும் வீரமரபினர் எவருமே, இத்தகைய இழிவான செயலைச் செய்யவே மாட்டார்கள், என்பதை வில்லறம் அறிந்த வாலி நன்கு அறிந்திருந் தான். அப்படி இருக்க, வேதநூலிற் சொல்லறந் துறந் திலாத சூரியன் மரபில் தோன்றிய இராமன், வில்லறந் துறந்து பசுழி தொடுத்துப் பழிபெற்ருன், என்பதை வாலி யால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
வாலி சுக்கிரீவன் முதலிய குரங்குக் கூட்டங்கள் வில் லெடுத்துப் போர் புரிபவை அல்ல, கல்லெடுத்தும், மரம் முதலியவற்ருலும், கையாலுமே போர் புரிபவர்கள். கல் லெடுத்துப் போர்புரியும் குரங்கினத்துத் தலைவனன வாலி, வில்லெடுத்துப் போர்புரியும் இனத்திலே தோன்றி, சிறு வயதிலேயே தாடகைவதம், சிவதனுசை முறித்தது, பரசு ராமரின் செருக்கை அடக்கியது முதலாக, அரிய பெரிய வீரச் செயல்களைச் செய்த இராமன்; விற்தருமத்துக்கு மாருக, யுத்த தர்மத்துக்கு மாருக, ஒளிந்திருந்து அம்பெய்த செயலை எண்ணி மிகவும் வெட்கமடைகிமுன். இராமன் முறை திறம்பிவிட்டான் என்று கூறுகின்ற வாலிக்கு முன் இராமன் வந்து நிற்கிருன். -
முறை திறம்பினனல் என்று மொழிகின்ற முகத்தான் முன்னர்,
மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவிற் சொல்லுந் துறை திறம்பாமற் காக்கத் தோன்றிருன் வந்து தோன்ற (கிட் - வாலி - 74)
கம்பர் சொற்படி, மனுநீதித்துறை திறம்பாத இராமன் வாலிக்கு முன்னே வந்து தோன்ற, கண்ணுற்ற காலி, எண்ணுற்றப் என் செய்தாய்," என்று ஏசுகிருன், எதை நினைத்து இதைச் செய்தாய் என்று ஏசுகிருன்.

Page 30
88 ፥ 5* ممه& வாலி
தீமையிலிருந்து மற்றிவரைக் காப்பதற்காயின், அதற் குத் தீமையையே வழியாகக் கொள்வது தருமமாகுமோ, என வாலி கேட்பதிலிருந்து, கவந்தன் இராமருக்குக் கூறும் அதே அறிவுரையை வாலியும் கூறுவதைக் கண்டு கொள்ள லாம். பிறரைத் தீமையிலிருந்து காப்பதற்காக, அந்தத் தீமையைத் தீயவழியிலே தீய்க்கக் கூடாது என்கிறன் வாலி.
இராமரின் கூற்றுப்படி, வாலி குற்றவாளியாக இருந் தால், அவனை அழிக்க வேண்டியது, கடமையாக இருந்தால், அந்த அழிப்பு வேலையை நேர்மையான முறையில், சத்தியத்தின் பாதையில், தருமத்தின் வழியில், அல்லவோ செய்திருக்க வேண்டும். அதற்குமாருக அதர்ம வழியில், மறைந்திருந்து கொல்வது என்ன மாண்பு; என்பது வாலி யின் கேள்வியாகவும், கேலியாகவும் இருக்கின்றது.
வாய்மையும் மரபுங்காத்து மன்னுயிர் துறந்தவள்ளல் தூயவன் மைந்தனே, நீபரதன்முன் தோன்றினுயே! தீமைதான் பிறரைக் காத்துத் தான்செய்தாற் தீங்கன்றமோ தாய்மையும் அன்றி நட்புந் தருமமுந் தழுவி நின்றேய், (கிட் - வாலி - 76)
தனது வாய்மையையும் குலமரபின் புகழையும் காத்துத் தனது உயிர் துறந்தவன் தசரதன். :ொய்மைக்காகவும், மரபுவழிவந்த புகழைக் காப்பதற்காகவுமே தான் தசரதன் இறந்தான். அத்தகையவனுக்கு மகளுகப் பிறந்தவன் இராமன். ஆரூல் இராமனே மரபு ஒழுக்கத்துக்கு மாரு 3 மறைந்திருந்து அம்பெய்துவிட்டான் என் ஏசுகிருன் வாலி.
தசரதன் மட்டுமல்ல, இராமனுக்குப் பின் பிறந்த பரதன்கூட, நேர்மையின் உறைவிடமாக, நியாயத்தின் பிறப்பிடமாக, தியாகத்தின் மொத்தவடிவமாக, உலகம் புகழும் ஒருவனக வாழ்ந்து கொண்டிருப்பவன். அந்தப் பரதனுக்கு முன் வந்து நீ பிறந்து, பரதனது புகழுக்கும் மாசு உண்டாக்கி விட்டாயே. என்று ஏசுகிருன் வாலி.

அகளங்கன் 39
வெற்றி பெறுவதற்கு கூட்டாக எவரையும் வேண்டாத 8ொற்றவன் இராமன். அத்தகைய இராமனது வீரம் மறைந்து நின்று அம்பெய்ததனல் பழுதுபட்டு விட்டது, 10ன்பதை வாலி அழகாகக் கூறுகிருன். யுத்த தர்மம் பற்றி வாலி கூறும் கூற்றும், இராமன்மேல் அவன் சாட்டும் குற்றச்சாட்டும், மிகவும் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும், இருக்கின்றது.
இராமன் கூற்றுப்படியோ, அல்லது வேறு பக்தி மான்கள் பகர்ந்த படியோ, வாலி குற்றமிழைத்தவளுக இருந்தாலும் கூட, அவன் தன் வீரத்தைக் காத்தலை கடமையாகக் கொண்டவன். போரறம் தவிருதவன். புறமுதுகிட்டறியாதவன். புகழ் பூத்த வீரன். இராவணனை வென்று தனது வாலினல் கட்டி மலைக்கு மலை தாவிச் சென்றவன். அவன், இராமன் தன்மேல் அம்பெய்ததை விட, வில்லறத் துறந்ததையே பெரிதாக நினைக்கிருன்.
இருவர் போரெதிருங்காலை இருவரும் நல்லுற்றரே! ஒருவர்மேல் கருணைதூண்டி, ஒருவர்மேல் ஒளித்துநின்று வரிசிலே குழையவாங்கி வாயரும்பு மருமத்தெய்தல், தருமமோ பிறிதொன்றமோ!, தகுகிலது என்னும் பக் ம் (கிட் - வாலி - 83)
இருவர் போர் செய்யும்போது இடையிலே மூன்ரு மவன் புகுதல் மூறையல்ல. அது வீரத்துக்கு ஊறு விழைப்பதே. வீரத்தை மதிப்பவனுக இருந்தால், இருவர் போர் செய்யும் போது, இருவர்மேலும் ஒருமை பாராட் டுதல் அன்றி, ஒருவரை மட்டும் தனக்குச் சார்பானவளுகக் கொள்ளுதல் தர்மமாகாது.
அதிலும் இங்கே சுக்கிரீவனே வாலியை வலியப் போருக்கு அறைகூவி அழைத்திருந்தான். இந்த நிலையில் வலியப் போருக்கு அழைத்த சுக்கிரீவன், வாலியால் அடி படுதல் நியாயமானதே!, வாலி சுக்கிரீவனை விடப் பலசாலி என்பதால், வாலி வலிந்து சுக்கிரீவனை போருக்கு அழைத்துப்

Page 31
40 6( חוrgb{
போர் செய்திருந்தாலும், வலியோர் மெலியோரை வலிந்து வதை செய்யும் நேரமாகக் கொள்ளலாம். ஆனல் அந்த நிலை கூட இல்லையே. -
இந்த நிலைமையில் சமன் செய்து சீர்தூக்கும் கோல் போலமைந்திராது, ஒருபக்கம் கோடிய இராமனின் செய்கையை, அறம் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
米 冰 ※
இராமன் மறைந்திருந்து அம்பெய்த காரணம்:
இராமன் தனக்கு அம்பெய்த செய்கையை வாலி
எண்ணிப் பார்க்கிருன். எந்த வகையில் எண்ணிப் பார்த்
தாலும், இராமனின் செயல் அவனுக்கு நியாயமானப் படவே இல்லை.
வீரமன்று; விதியன்று; மெய்ம்மையின் வாரமன்று; நின்மண்ணினுக்கு என்உடல் பாரமன்று; பகையன்று; பண்பழிந்து ஈரமன்றி யிதென்செய்த வாறரோ .
(கிட் - வாலி - 84)
மறைந்திருந்து அம்பெய்த இச்செயல் வீரச் செயல் அன்று! வேத N சாஸ்திரங்களிலே விதிக்கப்பட்ட விதியு மன்று, மெய்ம்மையின் வழியுமில்லை, அத்தோடு இன்னென் றையும் கூறுகிருன் வாலி. பாவச் செயலைச் செய்பவர்கள் பூமிக்குப் பாரமாக இருக்கிருர்கள். அதனுல் துஷ்ட நிக்கிரளஞ் செய்வது மகாவிஷ்ணுவின் அவதார நோக்கங் எளில் ஒன்று. இராமனை சாதாரண மனிதனகப் பார்த் தால், அவ்ன் அயோத்திக்கு அரசன். அவனது பாதுகை தான் அரசாள்கிறது. வாலி அயோத்திப் பிரஜை இல்லை" அயோத்தியிலுள்ள ஒருவளுக, பாபியாக இருந்தால், இராமன் கொல்வதில் நியாயம் இருக்க முடியும். இதையே “நின் மண்ணினுக்கு என் உடல் பாரமன்று' என்று கூறுகிருன் வாலி.

அளங்கன் . − 4.
அப்படி இல்லாமல் பார்த்தாலும், வாலியின் மார்பைத் து?ளக்கக் கூடிய வல்லமையுள்ள அம்பை எய்பவன் முழு முதற் கடவுளாகவேதான் இருக்க முடியும். அப்படியாயின் இந்த மண் முழுவதற்கும் அவனே சொந்தக்காரன். அதனல்
'நின் மண்ணினுக்கு' என்று சொன்னதாகக் கோண் டாலும் தகும்.
வாலி, தான் பாபி அல்லாததால் 'நின் மண்ணினுக்கு என் உடல் பாரமன்று' என்று கூறுகிருன். அதுமட்டு
மில்லாமல், இராமனுக்கும் வாலிக்கும் பகையுமில்லை. அப்படியிருக்க பண்பு அழிந்து, மறைந்திருந்து இச்செயலைச் செய்யக் காரணந்தான் என்ன என்று சிந்திக்கிருன் வாலி. இதற்குரிய காரணத்தை அடுத்த வரி விளக்குகிறது. வழமையாக இதற்குக் கருத்துரை வழங்கியோர், 'மனதிலே கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் இப்படிச் செய்து (விட்டாயே" என்று தான், பொருள் கொள்கின்றனர். "ஈரம் அன்றி' என்பதை "ஈரம் இன்றி' என மாற்றி, ஈரம் இல்லாமல், என்றுதான் பொருள் கொண்டனர், ஆஞல் உண்மையில் கம்பன் பாடிய எந்தச் சொல்லையும், எழுத்தையும் மாற்ருமல், அதற்கு உரிய, உயரிய, கருத்தைச் சொல்லக் கூடியதாக இருக்கின்றது.
பண்பழிந்து இச்செயலைச் செய்வதற்கு வீரம், விதி மெய்மையின் வாரம், மண்ணினுக்கு உடற்பாரம், பசை, என்ற எதுவித காரணமும் இல்லாததால், இருக்கக்கூடிய ஒரே காரணத்தைக் கண்டுபிடித்து வாலி கூறுகிருன். 'ஈரம் அன்றி' என்பது, இராமன் சுக்கிரீவன்மேல் வைத்த இரக்கம், அந்த இரக்கம் ஒன்றுதான் இத்தகைய இழி செயலைச் செய்யக் காரணமாக இருந்திருக்கிறது. அதாவது 'இரக்கம் இல்லாமல் இப்படிச் செய்து விட்டாயே' என்று வாலி கேட்கவில்லை. அதற்கு மாருக 'சுக்கிரீவன் மேலுள்ள இரக்கத்தினுல்தான் இப்படிச் செய்திருக்கிருய்' என்று கூறுகிருன் வாலி. ys
வாலியின் கையினல் சுக்கிரீவன் வதைபடுவதைப்
1ார்த்துக் கொண்டிருக்க முடியாத இரக்கத்தால், இச்
.6 ܥ

Page 32
率岛 வாலி
செயலே இராமன் செய்திருக்க வேண்டும். அல்லது இன்னுெரு காரணமும் உண்டு. இராமருக்கு எப்பொழுதும் தம்பிகளில் இரக்கம் அதிகம், எல்லோரையும் தம்பியாகச் சேர்த்துக் கொள்ளும் பண்பு இராமாயணத்தில் Ll čll இடங்களிலும் உண்டு. வேடன் குசனும், குரங்கினத்துச் சுக்கிரீவனும், பின்னுல் அரக்சுஜன விபீடணனும், இராமருக் குத் தம்பியாக உறவாக்கப்பட்டதைக் கானாம். இதனுல் இராமருக்கு தம்பிகளில் அதிகம் விருப்பம்.
அதுமட்டுமல்லாது, அயோத்தியிலே தனது ராச்சியத்தை மிகமிக மகிழ்ச்சியாகத் தம்பி பரதனிடம் ஒப்படைத்து "நாட்டொரு அருமம்' செய்தவன் இராமன். கிஷ்கிந்தை யிலும், வாலியைக் கொன்று தம்பியான சுக்கிரீவனுக்கே இராச்சியம் கொடுக்கிருன். அங்கதன் இருக்க, அவனுக் நன்றி, சுக்கிரீவனுக்கே முடிசூட்டு நடைபெறுகிறது. பின்னூல் இலங்கை ராச்சியத்தையும் இராவணஃனக் சொன்று விபீடணனுக்ள்ே கொடுக்கிருன் இராமன்.
இந்த வகையிலே இராமருக்கு தம்பிகளிலே அதிக இரக்கம். அந்த இரக்கம்தான், சிக்கிரீனுக்காக, வாலியைக் கொல்லக் காரணமாக இருக்கிறது என்கிருன் வாஸ், ஆரம்பத்திலும் இராமரின் செய்கை பற்றி இதே கருத்தை வாளி கூறுவதை அவதானிக்கலாம். 'கூட்டொருவரையும் வேண்டாக் கொற்ற 1ெ1 பெற்றதாதை பூட்டிய செல்ல ஆங்கோர் நம்பிக்குக் கொடுத்துப் ப்ோந்து நாட்டொரு கருமஞ் செய்தாய்,' என இராமர், பரதனுக்கு அரசாட் சியைக் கொடுத்ததைக் கூறி " எம்பிக்கு இன்!ைரசை நல்வி காட்டொரு கருஞ் செய்தாப்' என தனது தம்பியாவின் சுக்கிரீவனுக்கு அரசைக் கொடுக்க இராமர் முயல்வன : வாளி குறிப்பிடுகிருன்.
அதனுல் இராமன் இரக்கமில்லாமல் வானியை கொவ்லவில்ஃப். இரக்கம் இருப்பதால்தான் கொன்றன் என்ற வகையிலே வTளிகூறி, இராமன் செய்த குற்றத்தை எந்தச் சமாதானமும் கூறித் தட்டிமீ ஆழிக்க முடியாதபட "நிaே:நிறுத்துகிருன்
赴 * 事

அகளங்கன் 星凸 யுத்த தர்மம் உரைக்கிருன் வாலி.
மற்றெருத்தன் வலிந்து அறைகூவ வந்து உற்றனன்ளே ஒளித்து உயிருண்ட நீ
)88 - கிட் - வாணி( ܓܠܐ
சுக்கிரீவன் வலிந்து அறைகூவிப் போருக்கழைக்க, வந்து போர் செய்த என்னே, ஒளித்திருந்து உயிருண்ணுப் வண்ண்ம் அம்பெய்த நீ! நூல்களிலே சொல்லப்பட்ட புத்த முறை பற்றியோ, அல்லது உங்கள் குலத்து முந்திய வீரர்களின் போர் முறைகளேயோ, அல்லது, தர்மத்தையோ எண்ணிப் பார்க்கவில்ஃப்
நூலியற்கையும், நுங்குலத்து உந்தையர் போர்பியற்கையும், சிலமும், போற்றலே r வாலியைப் படுத்தாயலே மன்அற
வேலியைப் படுத்தாய் மீறல் வீரனே!
(கிட் - வாட் - 89)
'நீ வாலியைக் கொன்றதாக ரினேத்துக் கொள்ளாதே! நீ கொன்றது மனுதர்ம வேளியை என்று தெரிந்து கொள்' என்று வாவி இராமனே ஏசுகிருன்,
தாரம் மற்றுெருவன் கொளத் தள்கையில், பார வெஞ்சிலே விரம் பழிப்பதே: நேரும் அன்று மறைந்து நிராயுதன் மார்பில் எய்யவோ வில்இகல் வல்லதே!
- - ।
தாரத்தை இன்குெருவன் கொண்டுபோக, அவனுேடு போரிட்டுத் தாரத்தை மீட்க வலிமையற்றவணுக இருந்தும், - விரனென்று விணுகச் சொல்லிக் கொண்டு, கையில் வில்லும் கொண்டு திரிதல், வீரத்துக்கே இழுக்கு தனது வீரத்தைச் காட்டப் பயன்படாத வில்ஃப் வீணே தூக்கிச் செல்லல்
பழியைச் சுமந்து செல்வது மட்டுமல்லாமல், வீண் பாரத்

Page 33
44 - - 6չյո ճճ)
தையுஞ் சுமந்து செல்வதாகும் என்று, இராமன் வில்லோடு திரிவதைப் பரிகாசஞ் செய்கிருன் வாலி. இங்கே "பார வெஞ்சிலை' எனக் குறிப்பிடுவது இதனையே.
'வீணுகப் பார வெஞ்சிலையைச் சுமப்பதே பழியாக இருக்க, அதுவும் போதாதென்று நேருக்கு நேராகவும் இல்லாமல், அதற்கும் மேலாக, நிராயுதன் மேல் அம்பு விட்டு பழிக்குமேல் பழியைத் தேடிவிட்டாயே" இதற்குத் தான் உன் வில் ஆற்றல் வலிமை போதுமானதோ' என்று மன் அற வேலியைக் கொன்ற இராமனை, வாலி ஏசுகிருஜன். வாலியும் சுக்கிரீவனும் ஆயுதம் ஏந்திப் போர் புரியவில்லை. நிராயுதராக மல்யுத்தமே செய்தனர். அதனல் வாலி, *நிராயுதன்மேல்” அம்பெய்யவோ நீ வில்வித்தையில் வீரம் பெற்ருய்' என்று கேட்கிருன்.
அதிசூரன் என்ற வீரனுக்கும், சிவதொன்டரான ஏனுதிநாத நாயனருக்கும் இடையில் ஏற்பட்ட போர்பற்றி பெரிய புராணத்திலே தெய்வமாக்கவி சேக்கிழார் பாடு கிருர் . திருநீறு பூசியவர்களை சிவனடியார் என்று கொண்டு அவர்க்குத் தொண்டு செய்யும் வழக்கம் கொண்டர்ை ஏணுதிநாதநாயனர் . ஏனுதிநாதநாயனருடன் தனது பரிவா ரங்களோடு சென்று போரிட்டுத் தோல்வியுற்ற அதிசூரன் அவரை வெல்லக், கொல்ல ஒர் தந்திரஞ் செய்தான்.
தனியாக அவரைப் போருக்கழைத்தான். தனது நெற்றியிலே திருநீறு பூசிஞன். தன்னை எதிர்பார்த்துத் தனியே காத்திருக்கும் சிவனடியார் முன்னே கைவாள் கொண்டு சென்ருன். அ3:னது நெற்றியிலே இருந்த திருநீறை தனது கேடயத்தினுல் மறைத்துக் கொண்டு, அஜரருகில் சென்றன். போருக்குத் தயாராக நின்ருர் ஏஞதிநாத நாயனர் . அவரருகில் சென்றதும் தனது கேடயத்தைத் தாழ்த்தினன்.
நெற்றியிலே திருநீற்றைக் கண்டார் நாயனுர், மெய் மறந்தார். திருநீற்றை ஒருபோதும் அணியாத வஞ்சஞன அதிசூரன், சிவபக்தனுக மாறிவிட்டானே! யார் அணிந் தாலும் திருநீறு சிவச்சின்னந்தானே!, திருநீறணிந்த இவன்

அகளங்கன் 45
சிவனடியாரே!, அதனல் சிவனடியாரின் கருத்துக்கு இடை யூறு செய்யக் கூடாது, என்று சுருதினர். சிவனடியாரோடு
போர் செய்வது தகாது என்று கருதி கைவாளையும் பலகை
என்னும் கேடயத்தையும் கீழே போடக் கருதினர்.
ஆனல் தன் கையில் வாளில்லாதபோது தன்னை அதி சூரன் கொன்ருல், நிராயுதனைக் கொன்ற பாவம் அவனைச் சூழும். சிவனடியாருக்கு பாவம் சூழ, தான் காரணமாக இருக்கக் கூடாது, என்று நினைத்து தனது வாளையும், பலகையையும் நீக்காமல் போர் செய்ய நிற்பவர்போல நின்றர் நாயனுர், கொன்ருன் பாதகன்.
கைவா ளுடன் பலகை நீக்கக் கருதியது செய்யார், "நிராயுதரைக் கொன்றர் எனுந்தீமை எய்தாமை வேண்டும்.இவர்க்’கென் றிரும்பலகை
நெய்வா ளுடன் அடர்த்து நேர்வார்போல் நேர்நின்ருர்:
நிராயுதன்மேல் 1ொள் செலுத்துதல் எவ்வளவு பாபமான செயல் என்பதை இக்கதை மூலம் மிகநன்றக உணர்ந்து கொள்ளலாம். பக்திக் கவி சேக்கிழாரே, தமது பக்தி இலக்கியத்தில் இத்தகைய மெய்யான வீரக் காட்சியைக் காட்டும்போது, ம்ேடன் வீரச் சுவைகாட்டும் அரசியல் இலக்கியத்தில் ஏன் இந்த அவசரக் கோலத்தைக் காட்டு கிருன் என்று எண்னத் தோன்றுகிறது. இராமர் ஷாலி
மேல், அதாவது நிராயுதன் மேல் அம்பெய்ததை இதனுடன்
ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமானது.
தன்னேடு போர்புரிந்து ஆயுதம் அனைத்தும் இழந்து நின்ற இராவணனை, நிராயுதன்மேல் பாணம் தொடுப்பது யுத்த தர்மமாகாது என்று விருதி 'இன்று போய்ப் போர்க்கு நாளைவா' என அனுப்பி அவனுக்கு ஆவிவழங்கி **வள்ளல்" ஆகிருன் இராமன். தன்ளுேடு நேரடியாகப் போர் செய்து ஆயுதம் இழந்து நிராயுதனுக நின்ற இராவணனை சகல ஆயுதங்களோடும், ஆயத்தங்களோடும் நாளை வா என்று அனுப்பிவைக்கி ஒன் இராமன்.

Page 34
46 04 ο Πτού)
ஆண்யா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளையாயின கண்டனை, இன்றுபோய்ப், போர்க்கு நாளைவாகிவன, நல்கினுன், நாகிளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.
(யுத் - முதற் - 257)
ஆனல் வாலியின் விட்யத்திலோ, நிராயுதன் மேல் அம் பெய்து வீழ்த்துகிருன். இதில் எது அறம், இராவணனிடம் நிராயுதன் மேல் வாளி தொடுக்காது, யுத்த தர்மம் காத்த இராமன், வாலியின் மேல் மட்டும், நிராயுதன் என்ற பின்னும், தன்னேடு போர் புரியாத நேரத்திலும், நேருக்கு நேராகவும் இல்லாமல், மறைந்திருந்து அம்பெய்தது யுத்த தர்மத்தின்பால் படுமா..?
இத்தனை தவறுகளைச் செய்த இராமன், விணுக தான் வீரன் என்று காட்டுவதற்காக வாலியின் மார்பிலே அம் பெய்கிருன், முதுகில் காயம்படுதல் வீரனுக்கு அழகல்ல. ச்ேரமான் பெருஞ் சேரலாதனின் மார்பிலே பட்ட வேல் துளைத்து முதுகிலும் புண்ணுண்டாக்கி விடுகிறது. முதுகுக் காயத்துக்கு மருந்து இட்டு உயிர்வாழ்தல் பழியென்று கூறி அவன் வடக்கிருந்து உயிர் நீத்த சுதை புறநானூற்றிலே காணப்படுகிறது. 'புறப்புண் நாண் வடக்கிருந்தோனே?" எனப் புலவர்கள் அவனது புகழைப் பாடுகிருர்கள்.
சோழன் குலோத்துங்கனுக்கு, பெண்பார்க்கப் பாண்டிய நாட்டுக்குச் சென்ற அவரது குருவும், ஆஸ்தான புலவரு மான ஒட்டக் கூத்தர், பாண்டியமன்னனிடம் தனது அரசனின் வீரத்தைப் பற்றி விளம்புகையில்.
வென்றி வளவன், விறல்வேந்தன், தம்பிரான் ான்றும் முதுகுக்கு இடான்கவசம்
என்று கூறுகிருர், அதாவது சோழ அரசன் தனது ' முதுகுக்கு கவசம் இடுவதில்லை. 1றமுதுகு காட்டி ஒடும் கோழைகளுக்குத்தான் முதுகுக் கவசம் தேவை, எமது அரசனே புறங்காட்டா மறவிரன். அதனல் முதுகுக்குக் கவசம் இடுவதில்லை. என்று கூறுகிமுர்,

அகளங்:ன் 47
புறங்காட்டி ஒடுதல் மட்டுமல்ல, புறங்காட்டி ஒடு பவனுக்கு முதுகிலே காயத்தை உண்டு பண்ணுவதும் பெருத்த அலமானமான செயலாகும். இதனைக் கருத்தில் கொண்டு பாண்டியனின் அவைக் களப் புலவரான புகழேந்திப் புலவர். −
துன்றும் வெறியார் தொடைகமழும் மீனவர்கோன், கைவேல்
எறியான் புறங்கோடுக்கில் என்று,
எனக் கூறி, தனது அரசஞன பாண்டியன், புறங் கொடுப்பவனுக்கு வேல் எறிவதில்லை என வீரமுரைக் கின்றர். வீரர்கள் புறங்காட்டார்கள் என்பது மட்டுமல்ல, வீரர்கள் புறங்காட்டுபவர்களுக்கு அம்பெய்யார் என்பதும் தெளிவு. முதுகிலே காயம் படுதல் மட்டுமல்ல பழி. முதுகிலே காயம் ஏற்படுத்துவதும் பழியான செயலே.
எனவே, வீரர்கள் மார்புக்கே குறிவைப்பார்கள் என்பதை நினைவில் கொண்டு, வாலியின் வார்த்தையை நோக்கினுல் மறைந்திருந்து அம்பெய்து வீரத்தை இழந்த இராமன், நிராயுதன்மேல் அம்பெய்து பழி பூண்ட இராமன், தன்னேடு போர் செய்யாதவனுக்கு அம்பெய்து வீரன் என்ற சொல்லை இழந்த இராமன், வாலிக்கு மார் பிலே அம்பு எய்வதன் மூலம் வீரனுக முயல்கிருன்.
அதனையே வாலி, இவ்வளவையும் செய்த பின்னும் **ஒரு வீரன்" என்ற நினைப்பில், எனது மார்பில் அம்பை எய்து, உனது வீரத்தைக் காட்டி விட்டாய், என்று ஏளனஞ் செய்கிறன். இராமன் வீரனே இல்லாத பின்னும், வீர்னுக் குரிய அறமான மார்பிலே அம்பெய்தலேக் கடைப்பிடித் திருக்கத் தேவையில்லை என்பதை வலியுறுத்துகிமுன். இதையே 'மார்பில் எய்யவோ வில்இகல் வல்லதே' எனக் கூறுகிருன் வாலி.
宋 米 次

Page 35
48 வாலி
இலக்குவனின் போலிச் சமாதானம்
இராமன் தன்மேல் மறைந்திருந்து அம்பெய்ததற்கு என்ன காரணம் எனக் கேட்கும் வாலியின் கேள்விக்கு" இராமன் பதில் கூருமல், இலக்குவனே பதில் கூறுகிருன்.
அவ்வுரை அமையக்கேட்ட அரிகுலத் தரசு மாண்ட செவ்வியோய் அனயதாக செருக்களத்து உருத்துளய்யாதே வெவ்விய புளிஞரென்ன விலங்கியே மறைந்து வில்லால் எவ்வியது என்னளன்றன்; இலக்குவன் இயம்பலுற்றன் . (கிட் - வாலி - 116)
போர்க் களத்திலே போர் செய்து அம்பெய்யாது, கொடிய வேடர்கள், மறைந்திருந்து அம்பெய்து மிருகங்களை வீழ்த்துவது போல, நீயும் மறைந்திருந்து அம்பெய்த காரணம் என்ன, என்ற வாலியின் கேள்விக்கு இராமன் பதில் சொல்லவில்லை. இலக்குவன் தான் பதில் சொல் கிருன், இலக்குவன் சொல்கின்ற அதே பதிலை இராமன் சொன்னல் இராமன் தற்புகழ்ச்சி செய்வதாக அமைந்து விடுமென்று எண்ணிப் போலும் கம்பன் பதிலே இலக்குவன் வாயிலாகத் தருகிறன்.
சில சமயம், இராமன் இலக்கு:னுக்குக் கூறியதுபோல, போலிச் சமாதானம் ஏதாவது சொல்லி விடுவானுே என்று அஞ்சி, அண்ணனின் பழியை தம்பி தன் தலையில் ஏற்று தானே பதில் சொல்கிருன் என்றும் கொள்ளலாம்.
*குரங்கின் எள்ளற்கு அரும்போரது செய்கலன்' என்று சுக்கிரீவனைப் பற்றி இழி:ாகக் கூறிய இலக்குவ னுக்கு இராமன், தான் மறைந்திருந்து அம்பெய்ய வேண்டிய காரணத்தைக் கூறவே இல்லை. ‘இப்பித்தாய விலங்கின் ஒழுக்கினைப் பேசலாமோ ! என்று விலங்கியல் பற்றிக் கூறி சமாளிக்கிருர் .
எங்களுக்குக் கிடைத்தவர்களிடம், கிடைக்கக்கூடிய பயனைப் பற்றிப் பார்ப்பதன்றி, நன்மை தீமை பற்றிப் பார்க்கவேண்டிய தேவை எமக்கில்லை என்று ஏதேதோ

அகளங்கன் 49
கூறுகிறர். 'பெற்ருருழைப் பெற்ற பயன் பெறும் பெற்றி யல்லால்' என்ற தொடரால் இது தெளிவாகிறது. தான் மறைந்திருந்து அம்பெய்ய வேண்டிய காரணத்தை இராமர் எவருக்குமே சொல்லவில்லை. இங்கே வாலியின் கேள்விக்கும், இராமன் பதில் சொல்லவில்லை. இலக்குவனே காரணங் கூறுகிறன். சிலசமயம் இராமன் ஏதாவது ப்ொருத்த மில்லாத பதிலை, தனக்குச் சொன்னது போன்ற பதிலைச் சொல்லி விடுவானே என்று எண்ணிப் போலும், இலக்குவனே பதிலிறுக்கிருன். ܫ
முன்புநின் தம்பிவந்து சரண்புக முறையிலோயைத் தென்புலத் துய்ப்பென் என்று செப்பினன்; செருவில்நீயும் அன்பினே உயிருக்காகி, அடைக்கலம் யானும் என்றி, என்பது கருதி அண்ணன், மறைந்துநின்று எய்ததென்றன். (கிட் - வாசி - 117)
முன்பு உனது தம்பி சுக்கிரீவன் வந்து சர்ண் அடைந்த போது; முறை செய்யாத உன்னைக் கொல்வேனென்று அண்ணன் வாக்குக் கொடுத்தான். உன்னேடு நேராகப் போர் செய்தால் நீயும் உன் உயிர்மேல் 'அன்பு செலுத்தி, அண்ணனிடம் அடைக்கலம் புகுந்தால்; அவன் உன் தம்பிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும். அதனல்தான் நீ காணு வண்ணம், மறைந் திருந்து அம்பெய்தான். எலக் கூறுகிருன் இலக்குவன்.
வாலி அடைக்கலம் புகுந்து விட்டால் 'வாலியைக் கொல்வே னென்று" செய்த சபதப்படி, இராமரால் வாலி யைக் கொல்ல முடியாமற் போய்விடும், என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதே!, இராமன் வாலியின் முன்னல் வந்து நின்றிருந்தால் வாலியும் நிச்சயமாக 'அன்பினை உயிருக் காகி அடைக்கலம்" பெற்றிருப்பான். என்பது உண்மையே! இதற்குரிய காரணங்களை பின் விளக்குவோம்.
வாலி கொல்லப்பட வேண்டியவனுக இருந்தால், அதாவது குற்றவாளியாக இருந்தால், அவனைக் கொல்ல வேறு வழியில்லை என்பதை உணர முடிகிறது. ஆனல் வாலி'
7

Page 36
50
கொல்லப்பட வேண்டியவன? இராமன் 'கொல்வேன்' எனச் செய்த சபதமன்றி வேறு என்ன காரணத்தினல் கொல்லப்பட வேண்டியவளுகிருன்.
வாலி செய்தது குற்றமில்லை, என்பதை ஏற்கனவே விபரித்திருக்கிறேன். மீண்டும், வாலியின் வாழ்க்கை அவனது குலமரபுக் கொத்ததே என்பதையும், ஒவ்வொருவரும் தத்தமது குலமுறையில் வாழவேண்டுமென்று விரும்பினன் என்பதையும், வலியுறுத்திக்கூறி, அதற்கடுத்ததாக வாலி கொல்லப்பட வேண்டியவணு என்பதை நோக்குவோம்.

குலமுறை வாழ்ந்தான் வாலி:
முன்பு, வாலியின் ஒழுக்கம் குலமுறைக்கு ஏற்றது எனவும், அவன் மனைவி என்ற திருமணப் பந்தம் இல்லாத 'எய்தின் எய்தியதாக" வாழுகின்ற இனத்திலே ‘உணர்வு சென்றுNச் செல்லும்" ஒழுக்கத்திலே **விழைதிறத் தொழில்' செய்து வாழ்பவன் என்றும் நிரூபித்தோம்.
இனி குலமுறை பற்றிய வாலியின் கருத்தும், குல முறையில் எல்லோரும் வாழவேண்டும் என்றும், அவன். கூறுவதையும் கவனிப்போம். இதற்குப் பின்வரும் ஒரு பாடலுக்கு சரியான சுருத்துரையை வழங்குவது முக்கிய மாகின்றது. தனக்கு அம்பெய்தவன் இராமன் என்று அறிந்த வாலி, தனது மனதிலே இப்படி நினைக்கிருன்,
இல்லறந் துறந்த நம்பி. எம்மனேர்க்கு ஆகத் தங்கள் வில்லறந் துறந்த வீரன் தோன்றலால்; வேதநூலில் சொல்லறந் துறந்திலாத சூரியன் மரபுந்; தொல்லை நல்லறந் துறந்தது என்னு நகைவர நாணுட்கொண்டான். )72 - கிட் - வாலி( ܕܟܼܝ ܀
வில்லறந் துறந்தவன் இராமன். மறைந்திருந்து; தன்னேடு போர் செய்யாத, நிராயுதன் மேல் அம்பெய் ததால், வில்லெடுத்துப் போரிடுபவர்களுக்குரிய தருமத்தை இராமன் கைவிட்டு விட்டான். அதனல் வில்லறந்துறந்தான்.

Page 37
52 வாலி
இதனை வாலி 'வில்லறந் துறந்த வீரன்' என இகழ்ச்சி யாகக் குறிப்பிடுகிருன். வில்லறந் துறந்தவன் வீரனேயல்ல. அப்படி இருக்க 'வில்லறந் துறந்த வீரன்' என வாலி கூறுவது இகழ்ச்சியான பொருளிலேயே ஆகும். ஏ
‘வேத நூலிற் சொல்லறந் துறந்திலாத சூரியன் மரபு'
என்பதை வாலி கூறுவது, மரபு ஒழுக்கத்தின் இன்றியமை யாமையையும், மரபுக்கேற்ற ஒழுக்கம் இருக்கவேண்டும் என்று அவன் கருதுவதையும் குறிக்கின்றது. வேதநூலிலே சொல்லப்பட்ட அறங்களில் நின்றும் தவருத சூரியன் மரபு, இராமன் வில்லறத் துறந்ததால், தனக்கே உரிய நல்லறத்தை, நீண்டகாலமாகக் கட்டிக் காத்துப் பாதுகாத்து வந்த நல்ல தர்மத்தைத், துறந்துவிட்டது. என குலமரபைக் கூறுகிருன் வாலி.
ck 米 。 §
இல்லறந் துறந்த நம்பி
இராமன் தான் அம்பெய்தவன், என்று அறிந்ததும், முதன் முதலில் 'இல்லறந் துறந்த நம்பி’ என்றே தனது எண்ணத்தைத் தொடக்குகிருன் வாலி. அதனல் இந்த 'இல்லறந் துறந்த நம்பி’ என்பது என்ன என்பதை நன்கு ஆராய வேண்டியிருக்கின்றது. வழமையாக ஆன்ருே ரும் அறிஞரும் 'இல்லறந் துறந்த நம்பி’ என்பதற்கு இருவகையான கருத்துக்களைக் கூறியிருக்கிருர்கள்
இல்லறத்தைத் துறந்தவன் என்று கூறுவதை வழமை யாக இல்லறம் என்பதற்கு மனைவி என்ற கருத்தில், மனைவியைத் துறந்தவன் என்று வாலி இகழ்கிருன் என்றே பொருள் கொள்வர்.
இந்தப் பாடலில் ஏனைய அத்தனை அறங்களையுழி ஒவ்வொரு பண்பு கருதி கருத்தெடுத்த ஆன்ருேர், இல்லறித் துக்கு மட்டும், மனைவி என்ற பொருள்கொள்ள வேண்டி வந்தது என்ன, வில்லறம் என விற்தருமத்தையும், சொல்

அகளங்கன் 53
அறம், என சொல்லப்பட்ட தருமத்தையுப், நல்லறம் என நல்ல தருமத்தையும், கூறிய வாலி இல்லறம், என்ப தற்கு மட்டும் மனைவி என்று கூறியிருப்பான?
இல்லறத்தை இல்- அறம் எனப்பிரித்துப் பொருள். கொண்ட சிலர், இல் என்ருல் இல்லம். வீடு, கிருகத்தி லிருந்து தருமஞ் செய்தலே கிருகஸ்தனுக்கு ஏற்ற அறம். அதை விடுத்து மனைவியையும் கூட்டிக்கொண்டு வனவாசம் செய்வதை வாலி பரிகாசமாக 'இல்லறந் துறந்த நம்பி" என்று குறிப்பிடுகிருன் என்பர்.
ஆனல் வாலி சுக்கிரீவனுடன் போர் செய்ய வரும் 'டோது, அவனது மனைவியான தாரை என்பவளோடு, செய்யும் சம்பாஷணை இதனை ஏற்றுக்கொள்ளக் கூடியதாகச் செய்யவில்லை.
சுக்கிரீவனின் அறை கூவலைக்கேட்டு, டோருக்குப் புறப் படுகிருன் வாலி. அப்போது அவனது மனைவியான தாரை தடுக்கிருள். இவ்வளவு காலமும் பயந்து ஒளிந்திருந்த சுக்கிரீவன், இன்று வலியப் போருக்கு அழைப்பது விசித் திரமானது. அப்படி என்ன திடீர்பலம் அவனுக்கு வந்தது என்று பலவாருகக் கூறி, இறுதியாக, இராமன் என்பவன் சுக்கிரீவனுக்குத் துணையாக வந்திருக்கிறன். ஏதோ சூழ்ச்சி நடைபெறுகிறது என்று கூறித் தடுக்கிருள். W
இராமனைப் பற்றி இழிவான வார்த்தைகளைக் கூறினய் என்று தன் மனைவியை ஏசுகிருன் வாலி. உனது பெண் மைக்கே யுரிய பேதமைக் குணத்தினல் பிழை செய்து விட்டாய். என்று ஏசுகிருன், இராமனுக்கு ஏற்காத வார்த்தையைச் சொன்னய் பாவி. என்று கொதிக்கிருன். பின் அவளுக்கு இராமனின் புகழைக் கூறுகிருன்.
ஏற்றபேர் உலகெலாம் எய்தி ஈன்றவள் மாற்றவள், ஏவமற்று அவள்தன் மைந்தனுக்கு ஆற்றகும் உவகையால் அளித்த ஐயனைப்
போற்றலே, இன்னன, புகல்தற் பாலையோ,
(கிட் - வாலி - 24)

Page 38
54 6.trigiúil
ஈன்றவளின் சக்களத்தியான கைகேயியின் ஏவலால்; தனக்குக் கிடைத்த இராச்சியத்தை, அவளின் மைந்தனை பரதனுக்கு; அளவிட முடியாத உவகையால் கொடுத்த ஐயன் இராமன். அந்த ஐயனைப் போற்ருமல் இப்படிக் கூறுகிருயே!, என்று தனது மனைவியை ஏசுகிருன். இப்படி இராமனின் செய்கையைப் புகழ்ந்த வாலி, அதே செய்கை யின் காரணமாக இல் - அறம் துறந்து காட்டில் வசிப்பதை இல்லறந் துறந்த தன்மையாக இகழவேண்டிய அவசியம் இல்லை. •
அப்படியாயின் இந்த இருகருத்தைவிட ஏற்ற வேருெரு கருத்து இருக்க வேண்டுமே. சரி. அந்தக் கருத்தை அடுத்து நோக்குவோம். .
இங்கு இல் - அறம் என்பது உயர்ந்த குலத்துக்குரிய அறம். என்றே பொருள் கொள்ளப்படவேண்டும். இதனை இதே படலத்தின் 99-ம் பாடலில் வரும் "ஈரமாவதும் இற்பிறப்பாவதும்' என்ற வரிக்கு உரிய பொருளில் இற் பிறப்பு - இல் பிறப்பு எனப் பிரித்து, உயர் குலத்திற் பிறந்த பிறப்பு எனப் டொருள் கொண்டுள்ளதால் காணலாம்.
அதுமட்டுமன்றி சுந்தர காண்டத்தில் அனுமான் சீதையைக் கண்டு மீண்டு வந்து இராமனிடம் கூறுகையில் *விற்பெருந் தடந்தோள் வீர ' எனத் தொடங்கி 'இற்பிறப் பென்ட தொன்றும்" எனக் கூறும் வரிக்கு இற்பிறப்பு - இல் பிறப்பு. உயர்ந்த குலத்தில் பிறந்த பிறப்பு, என்று பொருள் கொண்டு பெருமை சேர்ப்பதை யும் ஆதாரமாகக் கொள்ளலாம்.
இற்பிறந்தார் கண்ணல்லது இல்லை; இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
(குறள் 951)
என்ற திருக்குறளுக்கு கருத்துரை வழங்கியவர்கள், இற்பிறந்தார் என்பதை, நல்லகுடியிற் பிறந்தவர்கள் என் றும், உயர்ந்த குடியிற் பிறந்தவர்கள் என்றும் பொருள் கொண்டிருப்பதையும் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

அவிளங்கன் 55
உயர்ந்த குடியில் பிறந்தவர்களுக்கு மட்டுமேதான் இயற்கையாகவே செம்மையும், நாணமும் ஒருங்கே தோன் றும். ஏனையவர்களில் அது இயல்பாக இருப்பதில்லை என்பது இக்குறளின் கருத்து.
桑 எனவே இங்கும் 'இல்லறந் துறந்த” என்பதன் பொருள் உயர் குடிப் பிறந்தும், அந்தப் பிறப்பிற்குரிய அறத்தைத் துறந்த, என்பதே மிகவும் பொருத்தமானதாக அமைகிறது .
இராமன் செய்த பிழையை வாலி கூறும் இடங்களில் எல்லாம், இராமனின் குலத்தை முன்னிலைப்படுத்திக் கூறி, குலத்துக்கு ஏற்காததைச் செய்தாய் என்றே கூதுவதைக் «5#5FT 63ör g)FTL b.
'வாய்மையும் மரபுங் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் தூயவன் மைந்தனே' தசரதனது பெருமையைக் கூறி, அவருக்கு மைந்தணுகப் பிறந்தும் இப்படிச் செய்தாயே எனக் கூறுவதையும், ‘குலமிது கல்வியிது' எனத் தொடங் கும் பாடலில், உயர்ந்த குலம் உன்னுடையது, அப்படி இருந்தும் பிழை செய்தாயே எனக் கூறுவதையும், கோவியற் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்' என அரச தருமம் உங்கள் குலத்துக்கே உரித்தானது, அப்படி இருந்தும் குல ஒழக்கத்தைக் கடைப்பிடிக்காமல் விட்டு விட்டாயே எனக் கூறுவதையும், "சூரியன் மரபுக்கும் ஒர் தொன்மறு ஆரியன் பிறந்து ஆக்கினை' என சூரியன் மர' பில் பிறந்தும், அந்த மரபுக்கு மறு உண்டாகும் வ்ண்ணம் நடந்து கொண்டாயே எனக் கூறுவதையும், 'நுங்குலத்து உத்தையர் போல் இயற்கையும் சீலமும் போற்றலை" என உண்குலத்து மூதாதையரின் ஒழுக்கத்தைப் பேணுது விட் டாயே என்று கூறுவதையும் காணலாம்.
இதனுல் குல ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தலின் இன்றி யமையாமையை வாலி வலியுறுத்துகிருன். அதனுல் இரா மனைப் பற்றி கோபமாக முதன் முதல் எண்ணும் போதே 'இல்லறம் துறந்த நம்பி" என குலத்து வழக்கத்தை ஒழுக்கத்தைத் துறந்தவன் என்றே கோபிக்கிருன் வாலி,

Page 39
56
எனவே மற்றவன் குல ஒழுக்கப்படி, வாழவேண்டு மென்று விரும்பும்வாலி, தானும் தனது குலஒழுக்கத்திலேயே வாழ்ந்தவன். அதனல் அவன் குரங்குக் கூட்டத்தின் செயலுக்கேற்ப, எய்தின் எய்தியதாக, விழைத்திறத் தொழில் செய்து வாழ்ந்த குரங்கே! அங்கே மணமுமில்லை, தனி ஒருவனுக்குச் சொந்தமான மனைவியும் இல்லை. என்பது வாலி சார்பான வாதமாகிறது.
வாலி கொல்லப்பட வேண்டியவனு?
வாலி குற்றமற்றவன் என இதுவரை நிரூபித்தாயிற்று. இராமன் கூறுவதுபோல், வாலி குற்றமிழைத்தவனுக ஏற்றுக்கொண்டாலும் கூட, வாலி கொல்லப்பட வேண் டியவன் தானு என்பதை எண்ணிப் பார்ப்பது நல்லது. இராமன் தன்னைக் கொல்வதற்கு, சுக்கிரீவன்மேல் இராமனுக்கு இருந்த இரக்கம் தான். காரணம், அன்றி வேறு காரணம் இல்லை, என்று வாலி கூறுகிருன். முன்பு சுக்கிரீவன் வந்து சரணடைய, வாலியைக் கொல்வதாக சுக்கிரீவனிடம் இராமன் கூறினன், அதனுல்தான் வாலிக்கு அம்பு எய்ய வேண்டி வந்தது என்று இலக்குவன், வாலியின் கொலைபற்றிக் கூறுகிறன்.
வாக்கில் பொய்யாத பரம்பரையில் வந்த இராமன், சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவே வாலியைக் கொன்ருன், என்று எண்ணவேண்டியிருக்கிறது
இராமன், சரியான போதுமான ஆய்வு இல்லாமல், ஆத்திரத்தில், அவசரத்தில், வாலியைக் கொல்வேனென்று சபதஞ் செய்தது, மிகப்பெரிய பிழையான காரியம் தனக்கு நேர்ந்த அதே துயரம், சுக்கிரீவனுக்கு தேர்ந திருக்கிறது என்ற எண்ணமே, இராமரின் இந்த அவச முடிவுக்குக் காரணமாக இருக்கலாம்.

அகளங்கன் 57
ஆஞல், தனது மனைவிய்ைக் கவர்ந்த இராவணனுக்கு மன்னிப்பளிக்கத் தயாராக இருக்கிருன் g) TITLDGör, என்பதை எண்ணும்போது, வாலியின் வதம் நியாயப் படுத்தப் படமுடியாத கட்டத்துக்குச் செல்கிறது.
அங்கதனை இராவணனிடம் தூதனுப்பும்போது? இராவணன் சீதையை விட்டு விட்டால், அவனைக் கொல்லாது விடுவதாகக் கூறிவிட்டு வரும்படி இராமர் கூறுகிருர், இராவணனைக் கொல்லாது மன்னிக்கும் பக்குவ மனங்கொண்ட இராமன், வாலி விடயத்தில் ஏன் பரபரப்போடு செயல்படுகிருன். அங்கதன் இராவணனிடம் தூதுசெல்லும்போது, 'இராவணனிடம் என்ன சொல்ல வேண்டும்' என்று கேட்க, இராமன் கூறுகிருன்.
என்னவர்க்கு உரைப்பதென்ன, ஏந்திழையான்ே விட்டுத்
தன்னுயிர் பெறுகை நன்றே; அன்றெனிற் தலைகள் பத்தும்
சின்ன பின்னங்கள் செய்யச் செருக்களஞ் சேர்தல் நன்றே, சொன்னவை இரண்டில் ஒன்றே துணிகென்ச் சொல்லி
யென்றன்.
(யுத் - அங் - 11)
*தேவியை விடப் போகிருயா? அன்றேல் செருக்களத் தில் பத்துத் தலைகளும் சிந்தும் வண்ணம் ஆவியை விடப் போகிருயா? இரண்டில் ஒன்றை முடிவு செய்!” என்று இராவணனிடம் கோரிக்கை விடுக்கிருர் இராமர். இரா வணன் சீதையைச் சிறையிலிருந்து விடுதலை செய்திருந்தால், தனது உயிரை இழந்திருக்க மாட்டான். அதாவது இரா வணன் இராமரின் தேவியை சிறையினின்றும் விடுவித் திருந்தால், இராமர் இராவணனைக் கொன்றிருக்க மாட்டார். அந்தப் பாவியையும் மன்னிக்கித் தயாராயிருந்த ஒவியத் தெழுத வொண்ணு உருவித்தான் இராமன். :ோலியைக் கொன்றது மட்டும் எங்ங்ணம் நீதியாகும்.
அதுமட்டு மில்லாது, இராவணனுடன் முதல் நாட் போர் புரியும் போது, ஆயுதம் இழந்து, நிராயுதகுய்
8

Page 40
58 வாலி
நின்ற இராவணனுக்கு, பலபுத்திமதிகளையும் கூறி, இறுதி யாக, அவன் உயிர் தப்புவதற்கு ஒரு சந்தர்ப்பமும் கொடுக்கிருர்,
சிறையில் வைத்தவள் தன்னைவிட்டு, உலகினில் தேவர் முறையில் வைத்து, நின்தம்பியை இராக்கதர் முதற்பேர் இறையில் வைத்து; அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் இன்னுத் தறையில் வைக்கிலன் நின்தலை; வாளியிற் தடிந்து
(யுத் - முதற் - 254)
அங்கதனைத் தூதனுப்பும் போது, இராமரின் கோரிக்கை ஒன்று மட்டுமே. சீதையை விடுதல் மட்டுமே தான் பிரச்சனை. ஆனல் யுத்த களத்தின் முதல் நாள் கோரிக்கை நான்காக அதிகரித்து விட்டது. விபீஷணன் இராமரிடம் அடைக்கலம் புகுந்து காட்டிக் கொடுக்கத் தொடங்கி விட்டான். அதனுல் அவனுக்கே இலங்கை இராச்சியம் என்று இராமர் முடிவெடுத்து வாக்களித்திருந்தார். அதஞல் இப்போது இராவணன் சீதையை விட்டால் மட்டும் போதாது. தேவர்களே அவர்கள் முறையில் செல்லவிட்டு, விபீஷணனை இராக்சுதர்களுக்கு அரசனுக்கி, அவனுக்கு ஏவல் செய்ய வேண்டும்.
இத்தகைய நான்கு கோரிக்கைகளையும் நிறைவேற்ற இராவணன் சம்மதித்தால் 'இன்னும் உன் தலையை அறுத் துத் தரையில் வைக்காமல் மன்னிக்கக் காத்திருக்கிறேன்."" என அறங் கூறும் இராமர், இப்படி ஒரு சந்தர்ப்பத்தைக் கூட ஏன் வாலிக்குக் கொடுக்க வில்லை.
தன் மனையாளைக் கவர்ந்தவஞகவும், தந்தைக்கு
ஒப்பானவனுன ‘எருவைக் கிறைவன்' சடாயுவைக்
கொன்றவணுகவும், தேவர்கள், முனிவர்களை இம்சை செய்த வணுகவும், இப்படி எத்தனையோ கொடுமைகளைச் செய்த வணுகவும், இருக்கும் இராவணனைக் கொல்லாது (விட விரும்பும் இராமன், இலைகளில் எதையுமே செய்யாத வாலியை ஏன் கொல்லவேண்டும். தண்டகாரணியத்து

அகளங்கன் 59
முனிவர்களிடம், இராவணனைத் தான் அழிப்பதாக வாக் குக் கொடுத்த இராமன், இராவணனை மன்னித் திருந்தால் வாக்கு என்குவது. என்று சிந்திக்க இடமுண்டு. வாலியின் விடயத்தில் சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கு இதனுேடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டியதே.
ஏதிலாரும் 6Tຄfluff என்றரையும் தீது தீர்ப்பதுஎன் சிந்தைக் கருத்தரோ.
(கிட் - வாலி ; 102)
குற்றமில்லாதவரையும் வலிமை அற்றவரையும், தீங்கினின்று காப்பதே என் சிந்தைக் கருத்து, என்று இராமன் கூறுகிறன். அப்படியென்முல், தீது தீர்க்க வேறு நல்ல வழி இருக்க, ஏன் கொலை வழியை மேற்கொள்ள வேண்டும். சுக்கிரீவனுக்கு வேண்டியது மனைவி. சரி அரசுந்தான் வேண்டும், என்ருலும் வாலியிடம் இராமன் கூறினுல் வாலியே தாரத்தோடு, தலைமையையும் கொடுத் திருப்பானே.
எனவே சமரசத் தீர்வுக்கு வழி இருக்கும்போது, அழிவு முறையில் தீர்க்க அவசரப்படவேண்டியதில்லையே எனவே வாலி அழிக்கப்பட வேண்டியவனே அல்ல.
染 来 料
இராமனின் வார்த்தைக்கு வாலி கட்டுப்படுவான்
இராமனின் நற்குண நற்செய்கைகள் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தான் வாலி. இராமனின் தியாகத் தன்மையை பெரிதும் மதித்தான். இராமனை தெய்வம் என்றே நம்பியிருந்தான் வாலி.
சுக்கிரீவன் வலிந்து வாலியைப் போருக்கு அறைகூவி
அழைக்கிறன். வாலி "இதோ வந்தேன். இதோ வந்தேன்'; எனக் கூறிக்கொண்டு, வேகமாகப் புறப்படு

Page 41
6 0 ܝ வாலி
கிருன். அவனை வழிமறித்துத் தடுக்கிருள் அவனது மனைவி யான தாரை என்பவள். பின் வாலிக்கு நிலையை விளக்கிப் புத்திசொல்கிருள்.
கொற்றவ நின்பெருங் குவவுத் தோள்வலிக்கு இற்றையன் அல்லணுல், ஈடுண்டு ஏகுவான்.
(கிட் - வாலி - 15) **வெற்றியைப் பெற்று வரும் தலைவனே! உனது பிரம் மாண்டமான வலிமை பொருந்திய தோளின் ஆற்றலுக்கு சுக்கிரீவன் ஏற்றவனே. ஆனல் இன்று திடீரென அவன் வலிந்து போருக் கழைக்கிருனே! அதனுல் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. அவனுடலுக்கு அப்படி என்ன புது வலிமை வந்து சேர்ந்தது. அதனுல் போருக்குச் செல்ல வேண்டாம்' என்று தடுக்கிருள் தாரை.
வாலியோ, எந்த நிலையிலும் அறைகூவலை அலட்சியப் படுத்துவது வீரனுக்கு அழகல்ல, என்று மறுத்துரைக்கிறன். அதனல் இறுதியாக அவள் தான் கேள்விப்பட்ட ஒரு உண்மையை வாலியிடம் கூறுகிருள்.
அன்னது கேட்டவள் அரச; ஆயவற்கு இன்னுயிர் நட்பமைந்து; இராமன் என்பவன் உன்னுயிர் கோடலுக்கு உடன் வந்தான்; எனத் துன்னிய அன்பினர் சொல்லிஞர். என்ருள்.
V− (கிட் - வாலி - 21)
சுக்கிரீவனுக்கு உயிர் நட்பாக, இராமன் என்பவன், உனது உயிரைக் கொல்வதற்கு வந்திருக்கிருன். 6 ᎢᎧᏈᎢ எம்மேல் அன்புள்ள சிலர் கூறினர்கள். என்று தாரை உரைக்க, வாலிக்கு கோபம் வருகிறது. உத்தமன் இராமனுக்கு மாசுகற்பிக்கும் வார்த்தையைக் கூறிவிட்டாய் என்று சினந்து விழுகிருன். ܫ
உழைத்த வல்இருவினைக் கூறு காண்கலாது அழைத்து அயருலகினுக்கு அறத்தின் ஆறெலாம் இழைத்தவற்கு இயல்பல இயம்பி என்செய்தாய் பிழைத்தனே பாவி! உன் பெண்மையால் என்றன்
(கிட் - வாலி - 22)

அகளங்கன் 61
வருந்துகின்ற உலகத்துக்கெல்லாம் இருவினைகளையும் கூறி வழிகாட்டும் இராமனுக்கு, இயல்பல்லாத வார்த்தை களைக் கூறினயே. பாவி! உனது இயல்பான பெண்மைக் குணமென்னும் பேதமையால் பிழை செய்து விட்டாயே! என்று ஏசுகிருன் வாலி.
இதிலே “பெண்மையால்" என்பது, பெண்மைக் குண மான பேதைமையைக் குறிக்கிறது. ஆராய்ச்சி அறிவு இல்லாத, சொன்னதை அப்படியே நம்பும் தன்மையே பேதமை எனப்படும். தாரையும் யாரோ சொன்னதை அப்படியே நம்பி தனக்குச் சொல்லிவிட்டாள், என்ப தனேயே 'பிழைத்தனை பாவி உன் பெண்மையால்" என்று வாலி ஏசுகிருன்.
இராமனைப் பற்றி இழிவாகப் பேசுபவன் எவஞயிருந் தாலும் கொன்றே விடுவேன். ஆனல் நீயோ பெண்ணுக இருக்கின்ருய். பெண்ணைக் கொல்தல் பாபம். அதனல் உன்னைக் கொல்லாது விடுகிறேன். பிழைத்துக் கொள், என்று வாலி கூறுவதாக 'பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்ருன்' என்ற வரிக்கு திரு. எஸ். இராமகிருஷ்ணன் தனது 'சிறியன சிந்தியாதான்' என்ற நூலிலே குறிப்பிடுகிருர்.
எப்படி இருப்பினும், வாலி இராமன் மேல் வைத்திருந்த மதிப்பையே இவை காட்டுகின்றன. அதுமட்டுமின்றி, 'இருமையும் நோக்குறும் இயல்பினர்க்கு இது பெருமை யோ' என்று கேட்கிருன் வாலி. அதாவது சுக்கிரீவனுடன் சேர்த்து தன்னைக் கொல்ல வரும் நியாயமற்ற, தர்மமற்ற செயலைக், காருண்யமூர்த்தியான இராமன் செய்ய மாட் டான். என்று கருதுகிருன் வாலி.
இருமையும் நோக்குறும் இயல்பி ஞர்க்கிது பெருமையோ!, இங்கிதிற் பெறுவது என்கொல்ோ அருமையின் நின்று உயிரளிக்கும் ஆறுடைத் தருமமே தவிர்க்குமோ தன்னைத் தானரோ
(கிட் - வாலி - 23)

Page 42
63 வாலி
சுக்கிரீவனுடன் சேர்ந்து, என்னைக்கொன்று, இராமன் பெறக்கூடிய பாக்கியந்தான் என்ன இருக்கிறது. தருமம் தருமித்தைத் தவிர்க்குமோ, இராமனே தருமம். அந்தத் தருமம் அதர்ம வழியிலே என்னைக் கொல்லுமோ, என்று உறுதியாகத் தெரிவிக்கிருன் வாலி. 'தருமமே தவிர்க் குமோ, தன்னைத் தானரோ" என்ற வரி, வாலி இராமன் மேல் வைத்திருத்த பெரும் மதிப்பைக் காட்டுகிறது. தர்மம், அதர்மம், நியாயம், அநியாயம், இம்மை, மறுமை, போன்ற இருமையும் நோக்கும் இயல்புள்ளவன் இராமன். அவன் அநியாயத்துக்குத் துணை போகான், என்பது வாலி யின் நம்பிக்கை,
ஏற்ற பேதுலகெலாம் எய்தி ஈன்றவள் மாற்றவள் ஏவ, மற்றுஅவள்தன் மைந்தனுக்கு ஆற்றரும் உவகையால் அளித்த மெய்யனேப் போற்றலை; இன்னன புகல்தற் பாலேயோ
(கிட் - வாலி - 24
தசரதனின் விருப்பப்படி, உலகெலாம் ஆளும் பாக்கியம் இராமனுக்குக் கிடைத்தது. அந்த அரசை, தனது தாயின் சக்களத்தியான கைகேயி பெற்ற மகளுன பரதனுக்கு, அளவிடமுடியாத மகிழ்ச்சியோடு கொடுத்த வள்ளல் இராமன். அந்த ஐயனைப் போற்றமல் அவனுக்கு ஏற்காத செயலோடு சம்பந்தப் படுத்திப் பேசுகிறயே என்று கோபிக் கிருன் வாலி.
அத்தோடு வாலி இராமனின் வீரத்தையும் புகழ்கிருன். இராவணன் போலன்றி, இராமனின் வீரத்தைப் பெரிதும் மதித்துப் போற்றும் இயல்பு வாலிக்கு இருந்திருக்கிறது. தனது வீரத்திலும் மேலாக இராமனின் வீரத்தை மதித்துப் பேசுகிருன் வாலி.
நின்ற பேருலகெலாம் நெருக்கி நேரினும்
வென்றி வெஞ் சிலேயலால் பிறிதும் வேண்டுமோ,
(கிட் - வாலி - 25)

அகளங்கன் 63
உலகம் முழுவதும் நெருக்கி வந்து போர் செய்தாலும், தனது வெற்றிபொருந்திய வில்லைத்தவிர வேறு துணை இராமனுக்கு வேண்டியதில்லை, என்று கூறுகிருன் வாலி. ஆரம்பத்திலே ‘கூட்டொரு வரையும் வேண்டாக் கொற்றவ” என்றே விளிக்கிருன். கூட்டாக எவருமே தேவையில்லாமல், எவரது துணையுமின்றித் தனித்தே பகை முடிக்கும் ஆற்றல் படைத்தவன் இராமன் என்கிருன் வாலி.
*அசகாய சூரன்", என்ற சொல்லின் தமிழ் வடிவமே *கூட்டொரு வரையும் வேண்டாக் கொற்றவன்' என்பது. சகாயமாக எவரும் தேவையில்லாதவன் அசகாயன். *
இப்படி இராமன் தனது பகையை முடிக்கத் தகுந்த துணேதேடி சுக்கிரீவனுடன் நட்புக்கொண்டிருப்பான் என்று வாலி நம்பவே இல்லை. அதிலும் தன்னைக் கொல்லும் அதர்ம்ச் செயலைச் செய்வான். என்று எள்ளளவும் அவன் நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்படி இராமனின் பெருமை களையும், வீரத்தையும் மெச்சிப் பேசும் வாலி, இராமனின் வாக்குக்குக் கட்டுப்படுவான் என்பதில் ஐயமில்லை.
சுக்கிரீவனுடன் போர் செய்துகொண்டிருந்த வாலியின் மார்பிலே இராமபாணம் பாய்கிறது. அப்போதும் அது இராமனின் வேலையாக இருக்கும் என்று அவன் எள்ளளவும் எண்ணவே இல்லை. போருக்கு வரும்போது மனைவி
கூறியிருந்தும், இராமன் இந்த இழிசெயலைச் செய்திருப்பான்,
என்று அவளுல் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. இராமரின் புகழுக்கு இயல்பல்லாதன சொன்னுள், என்று கோபித்து பாவி! என்று ஏசிய வாலி, இராமன் இப்படிச் செய்திருப்பானென்று எண்ணி தானும் பாபியாக விரும்ப வில்லை. அதனல் இந்தச் செயலை யார் செய்திருப்பார்கள் என்று எண்ணுகிருன்.
தேவரோ என அயிர்க்கும்; அத்தேவர் இச்செயலுக்கு ஆவரோ: அவர்க்கு ஆற்றலுண்டோ எனும்; அயலோர் ஏலரோ என நகைசெயும். ஒருவனே இறைவர் மூவரோடும் ஒப்பான் செயலாம் என மொழியும்.
(கிட் - வாலி - 68)

Page 43
64 வாலி
‘தேவர்யாராவது இப்படி அம்பெய்திருப்பார்களோ', என்று முதலில் நினைக்கிருன் வாலி. தேவர்கள் இப்படி ஒரு செயலுக்கு வருவார்களோ! வந்தாலும் எனது மார்பைத் துளைக்கும் வண்ணம் அம்பெய்ய ஆற்ற லுண்டோ' என்று நினைக்கிருன். 'வேறு யாராவது செய்திருப்பார்களோ' என்று நினைத்து 'அது முடியாத காரியம்" என சிரிப்பான். 'மார்பைத் துளைக்கும் வண்ணம் அம்பெய்தவனது வலிமையை நினைத்தால், இவன் ஒருவனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சேர்ந்த வடிவத்துக்கு ஒப்பாவான்போல் இருக்கிறதே." என்று கூறுகிருன் வாலி.
இராமன் செய்திருப்பானே என்ற சந்தேகம் வாலிக்குத் துளிகூடக் கிடையாது. பின்பு தனது மார்பிலே துளைத்த ஆயுதம் என்ன ஆயுதமாக இருக்கும் என்று எண்ணுகிறன் வாலி: ܖ
நேமிதான் கொலோ, நீலகண்டன் நெடுஞ்சூலம்
ஆமிதான் கொலோ: அன்றெனிற் குன்றுருவுஅயிலும்,
நாம இந்திரன் வச்சிரப் படையும், என்னடுவண்
போக் எனுந்துணை போதுமோ, யாதெனப் புழுங்கும்.
(கிட் வாலி - 64)
மகாவிஷ்ணுவின் சக்கிராயுதமோ! அன்றி சிவபெரு மானது சூலமோ!, அல்லது கிரெளஞ்ச மலையை உருவும் வண்ணம் முருகன் எறிந்த வேலாயுதமோ, அல்லது இந்திரனின் வச்சிராயுதமோ, வேறு எந்தப் படைக்கலன் இப்படி என் உரம் உருவிச் செல்லும் வல்லமையுடையது என்று யோசிக்கிருன் வாலி.
இப்படியெல்லாம் சிந்திக்கும் வாலி, "நின்ற பேருல சுேலாம் நெருக்கி நேரினும், வென்றி வெஞ்சிலை'யிலிருந்து இராமன் விடுத்த இராமபாணம் என்று எண்ணவே இல்லை. இவைகளிலிருந்து, வாலி இராமன் மேல் வைத்திருந்த மதிப்பு தெரிகிறது. இராமன்மேல் பேரன்பும், பெரும் பக்தியும், இராமனது செய்கைகளில் பெரு விருப்பும் கொண்டிருந்தவன் வாலி.

அகளங்கன் 65.
வாலி இறந்தபின் அவனது மார்பிலே புர்ண்டு அழும் அவனது மனைவியான தாரை, இராம்ன் ஒளிந்து நின்று அம்பெய்ததைப் பழித்தும், இராமன் கேட்டிருந்தால் சொலி தன் வாழ்வையே கொடுத்திருப்பான், என இராமன் மேல் வாலி வைத்திருந்த மதிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிருள்.
ஒயா வாளி ஒளித்து நின்றெய்வான், ஏயா வந்த இராமன் என்றுளான். வாயால் ஏயினன் என்னின் வாழ்வெலாம் ஈயாயோ, அமிழ்தேயும் ஈகுவாய். . . .
(கிட் - தாரைபுலம் -12) ஒளிந்து நின்று அம்பெய்த இராமன், உன்னிடம் வந்து வாயால் ஏவிஞன் என்றல் உன் வாழ்வையே, அவனுக்குக் கொடுக்கக் கூடியவன் அல்லவா நீ. அப்படியிருக்க சுக்கிரீ வனுக்கு அரசாட்சியையும், மனைவியையும் கொடு என்று கேட்டிருந்தால், நீ கொடுத்திருக்க மாட்டாயோ! நீதான் அமிழ்தத்தைக் கூட நீயுண்ணுமல் தேவர்களுக்குக் கொடுத் தவனுயிற்றே;
என்று சொல்லி, தாரை புலம்பும் விடயத்தைப் பார்க்கும்போது, எப்படியும் இராமன் சொல்லும் வார்த் தைக்கு வாலி செவிசாய்ப்பான். மதிப்பளிப்பான். கட்டுப் படுவான். என்றே எண்ணத் தோன்றுகிறது.
இராமனின் சொல்லுக்கு வாலி கட்டுப்படு:ான், என்பது
இராமனுக்குத் தெரியுமா? தெரிந்தால்தானே இராமன்
வாலியிடம் அரசையும், சுக்கிரீவனின் தாரத்தையும் கேட் கலாம். என்று யாரும் கூறலாம். உண்மையில் இராமனுக்கு அந்த உண்மை தெரிந்தே இருந்தது.
"மறைந்திருந்து என்மேல் அம்பு செலுத்திய காரணம் என்ன' என்று வாலி இராமனிடம் கேட்க, இலக்குவன் பதில் கூறுகிறன். "நீயும் அன்பினை உயிருக்காகி, அடைக் கலம் யானும்' என்று கூறிவிடுவாய், என்பதால்தான். மறைந்திருந்து அம்பெய்தான் அண்ணன், என்கிருன். எனவே தனது சொல்லுக்கு வாலி கட்டுப்படுவான் என்பதை இராமர் அறியாமல் இருந்தார் என்ற சொல்லுக்கே இடமில்ல. 9

Page 44
சமரசமுயற்சியில் இராமர் முனையவில்லை.
குற்றம் புரிந்த இராவணனேடு போர்செய்ய முனையும் போது இராமர், முதலில் அங்க்தினைத் தூதனுப்புகிறர் இராவணன் அழிக்கப்பட வேண்டியவன். அதனல் தூது சமரசமாக முடிந்து விட்டால், இராவணனை அழிக் முடியாது. இராமன் தண்டக வனத்து முனிவர்களிடம், இராவணனை அழிப்பதாக சபதஞ் செய்தது பொய்த்துவிடும் என்று கருதிய இலக்குவன், சமரசப் பேச்சுவார்த்தையை மறுக்கிருன், வெறுக்கிருன்.
வாலியைக் கொல்வேனென்று, இராமன் சுக்கிரீவனிட: சபதஞ் செய்ததையும் இதையும் ஒப்புநோக்குவது நல்லது
அப்படி இருந்தும், இராமன் இராவணனுக்குத் தூத னுப்பி சமரச முறையில் பிரச்சினையைத் தீர்க்க முயல்கிருன். அதனைக் கேட்டு சுக்கிரீவனும், விபீடணனும், தகுந்த செயல் அதுவே என்று கூறுகின்றனர். வாலியைக் கொல்ல மட்டும், தூது, சமரசம் பற்றி யாருமே எண்ணவில்லை. ஆஞ்ல் இராவணனின் விடயத்தில் மட்டும், துதுதான் சரியான வழி என்று சுக்கிரீவன் கூடக் கூறுகிருன்.
ஆஞல் இலக்குவனுக்கோ இப்போது தூது, சமரசம் பற்றிப் பேசுவதெல்லாம்' பிடிக்கவில்லை. இராக்கதஞை இராவணனுக்கு இரக்கம் காட்டுவது இழுக்காக முடியு: என்கிருன் இலக்குவன். M

அகளங்கன் 67
அரக்கர்கோன் அதனைக் கேட்டான்,
அழகிற்றே யாகும் என்றன், குரக்கினத்து இறைவன் கேட்டுக்
கொற்றவற்கு உற்றது என்றன். இரக்கமது இழுக்க மென்றன்
இளையவன், இனிநாம் அம்பு துரக்குவது அல்லால் வேறேர்
சொல்லுண்டோ என்னச் சொன்னுன்.
(யுத்-அங் - தூது - 3)
வாலியின் விடயத்தில் நேரடிநடவடிக்கையில், மறைந்து நின்று தாக்க முயன்ற இராமன், இராவணனின் விடயத் தில் தூது, சமரசம் என்று ஏதேதோ கூறுவது இலக்குவ னுக்குப் பிடிக்கவில்லை. அதனல் இராவணன்மேல் அம் பெய்து கொல்வது தவிர, வேறு ஏதும் சொல்வதும் உண்டோ என்று கூறுகிருன்.
ஆனல் இராமர் சமரசப் பேச்சுவார்த்தைக்கு தூத னுப்புதலே கருமம், அதுவே தருமம், அதுவே நீதி, நெறி என்றும் கூறுகிருர், தூது தோல்வியில் முடிவடைந்தால் அவனைக் கொல்லுதல் கடன் என்று, சத்திய வழியில், முன்' ஞேர்கள் வகுத்த முறைமையில், இராவணனை அழிக்க " முயல்கிருர் இராமர். தமையனைக் கொல்வித்த சுக்கிரீவனும், தமையனைக் கொல்விக்க வந்து நிற்பவனன விபீஷணனும், அதுவே சரி என்று ஏற்றுக் கொள்கின்றனர்.
துாதுவன் ஒருவன் தன்னை இவ்வழி விரைவில் தூண்டி, மாதினை விடுதியோ, என்று உணர்த்தவே மறுக்குமாகில், காதுதல் கடன் என்று உள்ளங் கருதியது; அறனும்
m அஃதே. நீதியும், அஃதே, என்றன். கருனையின் நிலையம்
(யுத் - அங் - 2)

Page 45
68 வாலி
கருணையின் நிலையமான இராமன்; போர்முறையில் தவருது, நீதியின் வழியில் இராவணனேடு போர்புரிய விரும்பும் இராமன், வாலியோடு மட்டும் ஏன் தூதின்றி, வாலி திருந்தச் சந்தர்ப்பம் கொடுக்காமல், அழிக்க வேண்டும். இராவணனுக்கு ஆரம்பத்தில் அங்கதன் தூது மூலமாகவும், முதல்நாட் போரிலுமாக, இரு சந்தர்ப்பங்கள் கொடுத்த இராமன், வாலிக்கு ஏன் ஒரு சந்தர்ப்பமாவது கொடுத்திருக்கக் கூடாது.
இராவணனுக்கு எத்தனை சந்தர்ப்பம் கொடுத்தாலும் தவறை ஏற்றுக் கொள்ளவே மாட்டான். அவனைக் கொல்லத் தீர்மானித்த இராமன் இதனை மனதில் கொண்டே இராவணனுக்குத் திருந்தச் சந்தர்ப்பம் கொடுக்கிறர். ஆளுல் வாலி இராமனைக் கண்டாலே இராமரின் வார்த் தைக்கு மதிப்பளித்து சொற்படி நடப்பான். அப்ப்டி நடந்தால் வாலியைக் கொல்ல முடியாது. ஆணுல் வாலியை **கொல்வேனென்று', சபதஞ் செய்த இராமர், கொல் லாமல் விட விரும்பார். இராமரது அவசரமான, ஆராயாத, சபதத்தின் விளைவுதான் வாலியின் கொலை முயற்சி என எண்ண வேண்டி இருக்கிறது. グ
இந்தக் கருத்து, அதாவது இராவணன் திருந்தவே மாட்டான் என்பதும்; இராமனின் சபதம் பொய்க்காது என்பதும் இராமனின் இந்தப் பதிலில் தெரிகிறது.
அயர்த்திலன் முடிவும்.அஃதே. அறிஞர் ஆய்ந்த நயத்துறை நூலின்நீதி நாந்துறந்து அமைதல்நன்றே, புவத்துறை வலியரேனும், பொறையொடும் பொருந்தி
'ኡ வாழ்தல், சயத்துறை, அறனும் அஃதே, என்றிவை அமையச்
சொன்னுன். (8 - Iraقیه - ژی lull) அறிஞர் ஆய்ந்த, நயத்துறை நூலின் நீதியைத் துறந்து தாம் :ாழக் கூடாதென்றும், பலத்திலே வலியவராக இருந்தாலும், பொறுமையோடு பொருந்தி வாழ்தலே

அகளங்கன் 69
வெற்றிக்கு வழி, தர்மமும் அதுவே. என்றும், கூறும் இராமன், வாலியின் விடயத்தில் மட்டும், பொறுமையை யும், அறத்தையும் அறிஞர் ஆய்ந்த நூலின் நீதியையும் துறந்துவிட்டு, மறைந்திருந்து அம்பெய்கிருர், இதில் எது நீதியானது.
இந்தப் பாடலில் வரும் "அயர்த்திலன் முடிவும் அஃதே" என்ற விரி, இராவணனைக் கொல்லக் கட்டாயம் சந்தர்ப்பம் விரும் என்ற இராமனின் அசைக்க முடியாத நம்பிக்கையையே காட்டுகிறது. அதனல்தான் இராவண னுக்கு திருந்து தெற்கு, துணிந்து சந்தர்ப்பம் கொடுக் கிருர், என்று கூறக் கூடியதாக இருக்கிறது.
வாலியின் மனைவி தாரை, வாலி இறந்தபின், வாலி யின் மார்பிலே விழுந்து அழும்போது, இராமனின் செய்கை பற்றி அருவருப்பான வார்த்தைகளைச் சொல்லி அழுகிருள்.
அருமந் தற்றம் அகற்றும் வில்லியார்
ஒருமைந் தற்கும் அடாதது உன்னிஞர்.
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம்,
கருமங், கட்டளை, என்றல் கட்டதோ,
(கிட் - தாரை - 16)
ஆபத்தை நீக்குகின்ற அருமருந்தைப் போன்ற, வில்லில் வல்லவரான இராமர், ஒரு மைந்தற்கும் அடாதது உன்னி ஞர். மைந்தன் - என்ருல் :ெலிமையுடையவன் என்று பொருள். ஒரு வீரனுக்கும் ஏற்காத செய்கையைச் செய்து விட்டார். என்று ஏசுகிருள் தாரை.
சாதாரணமாக, மைந்தன் ஏன்பதை மகன் என்றே பொருள் கொள்வர். அப்படிப் பார்த்தால், இராமன்; ஆண்மகன் ஒருவனுக்குமே ஏற்காத செய்கையைச் செய்து விட்டார் என்று அவள் ஏசுவதாகக் ரெகள்ளலாம்
தருமம் பற்றிய விடயங்கள், தகுதிவாய்ந்த பெரியோர்
களுக்கு, ஒரு வகையாகவும், மற்ருேருக்கு வேறு வகையாக வும் இருக்கின்றதோ, தருமம் பற்றிப் பேசுபவர்கள், தமது

Page 46
70
கருமம் வேருகவும், உலகுக்கு இடும் கட்டளை வேருகவும் இருக்கிறதோ, என இராமனின் செய்கையை ஏசுகிருள் தாரை.
குரங்குக் கூட்டத்திலே பிறந்த ஒரு பெண், தருமம் பற்றிக் கூறும் தகுதியான வார்த்தைகளை, இராமனின் செய்கையோடு ஒப்பிடும்போது, இராமனின் தவறு பெரிதாகவே தெரிகிறது. இராமன் தருமவானக இருந்தால், எதையும் தீர ஆலோசனை செய்து, யுத்த தர்மப்படி நேர்நின்று போர்புரிந்திருக்க வேண்டும், என்று யுத்த தர்மத்தை அவள் கூறுவது ரசமான கட்டமே. இராமனின் செய்கையில் மிகவும் அருவருப்படைந்த அவள், இராமனைப் பற்றி மிகவும் அருவருப்பான வார்த்தையையே சொல்லி ஏசுகிருள். 'ஒரு மைந்தற்கும் அடாதது உண்ணினர். ' என்ற வார்த்தைகள், அவளின் அருவருப்பின் உச்ச வெளிப் பாடேயாகும்.
இராமன் ஏன் வாலியைத் துணைக் கொள்ளவில்லை?
சீதையைப் பிரிந்த இராமன் சீதையைத் தேடி வரு மிடத்தில், கவந்தனேடு போர்புரிய நேரிடுகிறது. சாபம் நீங்கிய க்வந்தன், துணேயோடு சேர்ந்து சீதையைத் தேடு வதே நல்லது என்று கூறி, சுக்கிரீவனைச் சேர்த்துக் கொள்ளும்படி கூறுகிருன்.
ஆயது செய்கை என்பது அறத்துறை தெறியில் எண்ணித் தீயவர் சேர்க்கிலாது, செவ்வியோர் சேர்த்துச் செய்தல்,
w (ஆரணி - கவந் - 56)
"அறத்துறையில் W நின்று, தீயவரைச் சேர்க்காது,
செவ்வியோரைச் சேர்த்து, சீதையைத் தேடிப் பெறு', என கவந்தன் கூறியதால், சுக்கிரீவன் நல்லவன்' என்றே

ஆகளங்கின் 71
கொள்ளவேண்டும். ஏனெனில் மேலே கூறிய கருத்தைச் சொன்ன கவந்தனே தான், சுக்கிரீவனைச் சேர்த்துக் கொள்ளும் படியும் கூறுகிருன்.
எனவே வாலியை விடுத்து, இராமன் சுக்கிரீவனைத் துணையாகக் கொண்டதற்கு கவத்தன் கூற்றினையே காரண மாகக் கூறலாம். வாலி தீயவன் என்று இராமன் நம்பும் படியான அனுமானின் ஒருபக்க நியாயத்தின் காரணமாகவும் இராமன் அவனைச் சேர்த்துக் கொள்ளவில்லை என்று நாம் எண்ணிக் கொள்ளலாம்.
ஆனல் சுக்கிரீவன் தனக்குமுன் பிறந்த தமையனண 6:ாலியைக் கொல்வதற்கு, கூற்றுவனிலும் கொடியவஞக இராமனைக் கொணர்ந்திருக்கிருன். தமையனையே கொல் அலும் தம்பியை நாம் எப்படி நம்புவது. அவனை நல்லவன் என்று எப்படி நாம் கூறமுடியும், என்று இலக்குவன் இராமனைக் கேட்க, அதற்கு இராமன் பதிலிறுப்பது; க:ந்தனின் கூற்றுக்கு மாருக இருக்கிறது. அத்தோடு சுக்கிரீவன் நல்லவன் என்பதை இராமனும், ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும், காட்டுகிறது.
விற்றங்கு வெற்பன்ன விலங்கெழிற்தோள1, மெய்மை உற்றர் சிலர், அல்லவரே பலரென்பது உண்மை. பெற்றர் உழைப்பெற்ற பயன் பெறும் பெற்றியல்லால் அற்றர் நவையென்றலுக்கு ஆகுநர் ஆர்கொல் என்றன். (கிட் - வாலி - 35) தவருத நல்லொழுக்கம் உள்ளவர் சிலராகவும், அப்படி அல்லாதவர் பலராகவும் இவ்வுலகில் இருப்பது உண்மை. அதனல், நண்பராகப் பெற்றவரிடத்தில் நேர்ந்த பயன் பெறும் தன்மையில்லாமல், அவரின் குற்றம் பற்றிக் கதைப்பது பயனுடையதாகாது.
எனக் கூறும் இராமர் கூற்று மிகவும் வியப்பானதே!, இராமரின் தோக்கம் சீதையைத் தேடிப் பெறுவதும், இராவணனை அழிப்பதுமாக இருந்தால், அதற்குச் சுக்கிரீவன விட வாலியல்லவோ அதிகம் பொருத்தமானவன். அவனே நண்பனுகப் பெற்று, அவன்மூலம் பயன் பெற்றிருக்கலாமே.

Page 47
72 வாலி
நல்லவர் கூடாதவர் என்ற ஆராய்ச்சியை விட்டு விட்டு, பெற்ருருழைப் பயன் பெறுவதே இராமரின் நோக்கமாக இருந்தால், வாலி கேட்பதுபோல , வாலிசயை அன்ருே நண்பனுகப், பெற்றிருக்கவேண்டும்.
செயலேச் சேற்ற பகைதெறுவான் தெரிந்து அயலைப் பற்றித் துணையமைந்தாய் எனின், புயலைப் பற்றும் அப்பொங்கரி போக்கியோர், முயலப் பற்றுவது என்ன முயற்சியோ!, -
(5) - Oλιπού - 86)
சீதையைச்சிறையெடுத்த செயலைச் செய்த இராவணனை அழித்தற்பொருட்டு எனது தம்பியான சுக்கிரீவனைத் துணையாகக் கொள்வதற்கு நீ முயன்றிருக்கிருய். அப்படி யாயின், புயலையே பிடித்து அடக்கக்கூடிய சிங்கம் போன்ற என்னைத் துணைக்கொள்ளாமல், சிறுமுயல் போன்ற சுக்கிரீ வனைத் துணையாகச் சேர்த்துக் கொண்டாயே!, |தி தகுதியான, பொருத்தமான காரியமோ!, வெறும் வீண் முயற்சியல்லவா!, என்று வாலி கூறுவதில் நியாயம் இருக்கவே செய்கிறது.
※ 米 岑
ாலி இராமனுக்கே உதவுவான்.
வாலி இராவணனுக்கு நண்பனென்றும், வாலி இராமனுக்கு உதவி செய்ய மாட்டான் என்றும் சிலர் வாதிப்பர். சாதிக்க முனைவர். வாலி இராமன் மேல் வைத்திருந்த மதிப்பைப் பார்க்கும் போது, வாலி இராம னுக்கு உதவி செய்ய மாட்டான், என்று கூறுவது சிறிதும் பொருந்தாது.
வாலிக்கும் இராவணனுக்கும் ஏற்பட்ட நட்பு ஒரு வலிமைமிகுந்த நட்பல்ல. அரங்கிலாடும் சிவபெருமானுக்கு அன்பு செய்து, வாலி பெற்றவரத்தை அறியாத இராவ

அகளங்கன் 73
ணன் வாலியோடு போர் செய்ய வந்தான். வாலியின் வரம், எதிர்த்து வந்தவர்களின் பாதிப்பலமும் தனக்குச் சேரும் என்பது, "கிட்டு வார் பொரக் கிடைக்கின். அன்னவர் பட்ட நல்வலம் பாதி எய்துவான்." இதுவே வரம். வாலி இராவணனைத் தனது வாலால் கட்டித் தூக்கிக் கொண்டு மலைக்கு மலை தாவிச் சென்றன்.
வாலியின் வல்லமைக்குப் பயந்த இராவணன், வாலி யோடு நட்புப் பூண்டான். எனவே வாலிமேலுள்ள பயத்தின் காரணமாக, இராவணனுக்கு வாலியோடு நட்பு ஏற்பட்டதேயன்றி, உண்மை நட்பாய், உயிர்நட்பாய் முகிழ்த்ததில்லை. இந்த நிகழ்ச்சியின்பின் இராவணன் வாலியைத் தனக்கு நட்பாகவும், துணையாகவும் சேர்த்துக் கொண்டான்.
வாலியின் வலிமை இல்லையேல், இராவணனுக்கு இராச்சியமே இல்லை. என்ற அளவுக்கு இராவணன் வாலிக்கு கட்டுப்பட்டவன். М V
கால் செலாது அவன் முன்னர்க், கந்தவேள் வேல் செலாது அவன் மார்பில்; வெற்றியான், வால் செலாதவாய், அலது இராவணன் கோல் செலாது, அவன் குடை செலாதரோ,
(கிட் - வாலி - 41)
வாலியின் முன்னே, காற்றுக் கூட முத்திச் செல்லாது. அத்தனை வேகமாகச் செல்லக் கூடியவன் வாலி, அவனது மார்பிலே முருகப் பெருமானின் வேல் கூடத் துளைக்காது என அவனது உடல் வலிமையைக் குறிப்பிடுகிருர் கம்பர், கந்தவேள் தனது கைவேலால் கிரெளஞ்ச மலையையே பிளந்தவர். அத்தகைய வேல் கூட வாலியின் மார்பிலே ஊடுருவாதாம்,
எனக்கூறி இறுதியாக, வாலியின் வால் செல்லாத இடத்தில், இராவணனின் கோல் செல்லாது. குடை செல் லாது. என்று கூறுகிருர், அதாவது வாலியின் வால்தான்
O

Page 48
74 வாலி
இராவணனது அரசுக்கே காவல். வாலியின், வால் செல்லாத இடத்தில் இராவணனின் அரசாட்சி செல்லாது எனக் கூறுகிருர், V
இத்தகைய வாலி, இராவணன் செய்தது குற்றம் என்பதை ஏற்றுக் கொள்கிருன்.
அரக்கர் ஒரழிவுசெய்து கழிவரேல்; அதற்கு வேறேர் குரக்கினத்து அரசைக் கொல்ல மனுதெறி கூறிற்றுண்டோ! (கிட் — әшпт65) - 79)
அரக்கர் செய்தது அழிவு என்பதை ஒப்புக் கொள்ளும் வாலி, அந்த அழிவுக்குத் தண்டனையாக, அரக்களுன இராவணன் கொல்லப்பட வேண்டியவன், என்பதையும் ஒப்புக் கொள்கிருன்.
‘அரக்கர் அழிவு செய்தால், குரக்கினத்து அரசோ கொல்லப்படுவது", என்ற கூற்றின் படியும், மனுநெறி இப்படி, யாரோ செய்த அழிவுக்கு, யாரையோ கொல்லும் படியோ கூறுகிறது என்றும், வாலி கூறுவதிலிருந்து, இராவணன் கொல்லப்பட வேண்டியவன் என்பதை வாலி ஒப்புக்கொள்கிருன் எனக் கொள்ளலாம்.
அதுமட்டுமில்லாமல் இறக்கும்போது வாலி கூறுகிறன்.
மற்றிலென்; எனினும் மாயஅரக்கனை வாலிற்பற்றிக்
கொற்றவ நீன்கட் தந்து குரக்கியற் தொழிலுங் காட்டப்
பெற்றிலன்:
(கிட் - வாலி - 129)
அரக்கனை வாலிலே பற்றிக் கொணர்ந்து, இராம பிரானின் துயர் தீர்க்க வழியில்லாமல், சந்தர்ப்பம் இல் லாமல் போய்விட்டதே என்று வருந்துகிறன்.

அகளங்கன் 75
எனவே வாலி இராமனுக்கே உதவுவான். அதனல் இராமன் வாலியோடு கதைத்து, சுக்கிரீவனுக்கும் வாலிக்கும் இடையேயுள்ள பிணக்கைத் தீர்த்து, இருவரையும் தனக்குத் துணையாகக் கொண்டு இலகுவாக சீதையைச் சிறை மீட்டிருக்கலாம்.
அப்படி இல்லாமல் இராமர், அநியாயமான அழிவை யும், அதற்கு அதர்மமான வழியையும், தேர்ந்தெடுத்து, அளவிடமுடியாத பழியையே பரிசாகப் பெற்றுக் கொண்டார்.

Page 49
வாலி குற்றத்தை ஒப்புக் கொண்டானு?
அனுமான் முதன் முதல் இராமரைச் சந்தித்து சுக்கிரீ வனப் பற்றிச் சொல்லிய இடத்தில், அனுமானின் சொல் ஆற்றலைப் பாராட்டி **சொல்லின் செல்வன்' எனப் பாராட்டிய கம்பர். இராமர் வாலியைக் கொல்ல, கொலைச் சரம் எய்த காரணத்தைக் கூற, அவைகளைக் கேட்டுக் கொண்டு கிடந்த வாலியை "கேள்விச் செல்வன்' எனப் பாராட்டுகிருர்,
வழக்கமாக, வாலிவதை சம்பந்தமான பிரச்சனையில், வாலியே தான் செய்தது குற்றம் என ஒப்புக்கொண்டு விட்டான். மற்றவர்களுக்கு என்ன வந்தது எனப் பலர் கூறுவதையும், எழுதுவதையும் அறிந்திருக்கிறேம்.
வாலி தான் செய்தது குற்றம் என ஒப்புக்கொண்டான, என்று ஆராய்ந்தால், அவன் எந்தச் சந்தர்ப்பத்திலும் தான் குற்றவாளி என்பதை ஒப்புக்கொள்ளவே இல்லை, என் பதையே காணலாம். இராமன் தெய்வாம்சம் பெற்றவன் என்பதை, ஐயந்திரிபற அறிந்து கொண்ட வாலி, அந்தத் தெய்வத்தின் பாதத்தைப் பற்றி, இவ்வுலக பந்தத்தைப் பிரிய வேண்டி, தனது இறுதி நேரத்தில் கூறும் கூற்றுக் களையே, நாம் அவனது இறுதிக்கால வார்த்தைகளில் காணக் கூடியதாக இருக்கின்றது. V−

அகளங்கன் 77
தாயென உயிர்க்கு நல்கித் தருமமும் தகவும் சால்பும் நீயென நின்ற நம்பி. நெறியின் நோக்கு, நேர்மை, நாயென நின்ற எம்மால் நவையற உணரலாமோ; தீயன பொறுத்தி என்றன். சிறியன் சிந்தியாதான்.
(கிட் - வாலி - 119)
தாய்போல உயிர்களுக்குக் கருணை பொழிந்து, தருமமும், நடுவு நிலைமையும், நற்குண நிறைவும் நீயே என்று சொல்லும் படியாக நின்ற, ஆண்களில் சிறப்புப் பெற்றவனே! சன் மார்க்கப்படி பார்க்கும் நேரான பார்வையை, நாய் என்று கூறும்படியாக நின்ற இழிபிறப்புக் குரங்குகளான எம்மால் குற்றங்கள் இல்லாமல் அறிந்துகொள்ள முடியுமோ. அதனல் தீயவற்றை எல்லாம் பொறுத்துக்கொள் என்று கூறுகிருன்
வாலி.
இராமன் கூறிய காரணங்கள் எதுவும் தனக்கு விளங்கவில்லை என்பதை இதன்மூலம் ஒப்புக்கொள்கிருன் வாலி. ஆனல் இராமன் கடவுள் என்ற ஒரு நிலையை மட்டும் வாலி உணர்ந்து கொள்கிறன். அதனுல் 'ஏதோ செய்து விட்டேன். அவை உனது மனத்திலே குற்றமாகப் பட்டால் பொறுத்துக்கொள்" என்றே கூறுகிருன் வாலி. அப்படி இல்லாமல் தான் செய்தது குற்றம் என்று அவன் ஒப்புக்கெள்ளவே இல்லை.
எனவே அவன் செய்தது, இராமர் போன்ற மானி டர்க்கோ, அன்றி தெய்வங்களுக்கோ பிழையாக இருந் தாலும், அவனுக்கு அது பிழையாகத் தெரியவில்லை. அது அவனது குலமரபு. அது மட்டுமல்லாது, இராமர் வாலி செய்ததாகக் கூறுங் குற்றங்கள், தனக்குக் குற்றமாகத் தெரியவில்லை என்பதையே அவன் ‘நாயென நின்ற எம்மால் நன்வயற உணரலாமோ' என்று கூறுகிருன். இறுதியாக தீயன பொறுத்தி என்ருன் சிறியன சிந்தியாதான்' என்ற வரிகளும், வாலியின் குற்றமற்ற தன்மையையும், அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளாத தன்மையையுமே காட்டுகிறது.

Page 50
78 வாலி
இராமன் செய்த சின்னத்தனமான காரியத்தைப்பற்றிச் சிந்திக்காதவளுக, இராமனிட்டம் தீயன பொறுத்தி என்று கேட்கிருன் வாலி. 'சிறியன சிந்தியாதான்' என்ற சொல்லை கம்பர் சேர்த்த காரணமாக வாலியின் உயர்ந்த தன்மையே தெரிகின்றது.
அதுமட்டுமின்றி நீ குரங்கில்லை. அதனல் குரங்கின் ஒழுக்கம் உனக்கு ஏற்றதல்ல, என இராமன் வாதிட்டான். வாலி இராமனின் அந்த வாதத்தை ஏற்றுக்கொண்டிருந்தால், வாலி குற்றவாளி என்று நாமும் ஒப்புக் கொள்ளலாம். ஆனல் வாலி தான் குரங்கில்லை என்பதை எந்தச் சந்தர்ப் பத்திலும் ஒப்புக்கொள்ளவே இல்லை.
தனது உயிர்போகும் நேரத்திலும், இராமன் கூறும் காரணங்கள் தனக்கு விளங்கவில்லை என்று கூறுவதோடு, தான் குரங்குதான் என்று மீண்டும் மீண்டும் கூறுகிருன்.
குரங்கெனக் கருதி நாயேன் கூறிய மனத்துக் கொள்ளேல் (கிட் - வாலி - 120)
எதையும் ஆராய்ந்து அறியாத குரங்காக இருக்கும் தான் கூறிய வார்த்தைகளை மனதில் கொள்ளவேண்டாம். எனக் கூறுகிருன் வாலி. அதாவது தான் குரங்கென்பதையே கூறுகிருன் வாலி.
மற்றினி உதவியுண்டோ வானினும் உயர்ந்தமானக் கொற்றவ! நின்னை என்னைக் கொல்லிய கொணர்ந்து தொல்லைச் சிற்றினர் குரங்கினுேடும் தெரிவுறச் செய்த செய்கை; V வெற்றரசு எய்தி எம்பி, வீட்டரசு எனக்கு விட்டான்.
(கிட் - வாலி - 126)
சிற்றினக் குரங்குகளோடு ஆராய்ந்து எனது தம்பியான சுக்கிரீவன், என்னைக் கொல்வதற்காக உன்னைக் கொண்டு வந்த செய்கையைப் போல நல்ல செய்கையும், பேருதவியும், வேறில்லை. ஒரு தம்பி தமையனுக்கு இதைவிடப் பெரிய

அகளங்கன் 79
உதவிய்ைச் செய்யவே முடியாது. எனது தம்பி வெறும் பூமி ராச்சியத்தைத் தான் எடுத்துக் கொண்டு, மேலுலக இராச் சியத்தை எனக்குக் கொடுத்திருக்கிருன். என்று மகிழ்கிருன் வாலி. இங்கே வாலியின் பரலோக வாழ்வின் பற்றையே காணக்கூடியதாக இருக்கிறது. அன்றியும் “சிற்றினக் குரங்கு' என மீண்டும் தனது இனத்தைக் குறிப்பிடு வதையும் காணலாம்.
அதுமட்டுமன்றி, இறக்கும் நேரத்தில்; தம்பியின் வாழ்க்கைக்கு நல்லதைச் செய்யவேண்டும் என்ற நோக்கம் அவனுக்கு வருவதால், மீண்டும் வாதிட்டுக் கொண்டு நேரத்தை வீணுக்க அவன் விரும்பவில்லை. தனது பரலோக வாழ்வுக்கும், தம்பி சுக்கிரீவனின் இசுலோக வாழ்வுக்குமாக, இராமனிடம் வேண்டுகிருன் வாலி,
பூவியல் நறவம் மாந்திப் புந்தி வேறுற்றபோது தீவினை இயற்றுமேனும்; எம்பிமேற் சீறி, என்மேல் ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் - என்றன்,
w (கிட் - வாலி - 127)
வாலி குற்றமிழைக்காமல் இருக்கவே இராமன் அம் பெய்தவன். என்பதை வலியுறுத்துகிருன் வாலி. தேனைக் குடித்து மயக்கத்தில், வெறியில், தம்பி சுக்கிரீவன் தீவினை செய்தாலும், தம்பிமேல் கோபம் கொண்டு, என்மேல் ஏவிய பசுழி என்னும் கூற்றினை ஏவவேண்டாம், என்கிருன் வாலி.
குற்றமிழைக்காமல் இருக்கவே இராமன் அம்பெய்தவன். அதனல்குற்றமிழைத்தால் நிச்சயம் அம்பு எய்து கொல்வான் என்பதை நன்ருக உணர்ந்த வாலி, தீவினை செய்தாலும் தம்பிமேல் அம்பெய்ய வேண்டாம் என்று கேட்கிருன். எனவே வாலி தான் செய்தது குற்றமென்றே, தாம் விலங்கில்லை என்றே கூறவே இல்லை.

Page 51
80 வாலி
மற்றிலென், எனினும் மாய அரக்கனை வாலிற் பற்றிக்
கொற்றவ நின்கட் தந்து குரக்கியற் தொழிலும் காட்டப்
பெற்றிலன். (கிட் - வாலி - 129)
என இறுதி நேரத்திலும் கூறுகிருன் வாலி. தான் குரங்கு என்றும் இராவணனை வாலினல் பற்றிக் குரக்கியற் தொழில் காட்டக் கூடிய சந்தர்ப்பம் இல்லாமற் போய் விட்டதே என்றும் வருந்துகிறன். அதுமட்டுமில்லாமல் தம்பி சுக்கிரீவனை அழைத்து அவனுக்குப் புத்திமதி சொல்லும் போதும்,
மதவியல் குரக்குச் செய்கை மயர்வொடும் மாற்றி வள்ளல் உதவியை உன்னி.
(கிட் - வாலி - 136)
தம்பி சுக்கிரீவனிடம், 'இனி நீ குரங்கின் குலத்துக்குரிய செய்கையை மாற்றி வாழு! என்று கூறுவதிலிருந்து அவர் கள் எல்லோரும் குரங்குகளின் வாழ்க்கை முறையிலேயே வாழ்ந்து வந்தவர்கள், என்பது புலணுகிறது. எனவே வாலி தான் விலங்கில்லை என்பதையோ, தான் செய்தது குற்றம் என்பதையோ இறுதிவரை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

கம்பரின் முயற்சி
வான்மீகி இராமாயணத்தில், இராமர் தாம் மறைந் திருந்து அம்பெய்ததற்குக் காரணத்தை மிகவும் சுருக்கமாகக் கூறுகிருர், வாலி குற்றவாளி என்றும், அவன் கொல்லப்பட வேண்டியவன் என்றும், கூறிவிட்டு, குற்றவாளிகள் எவ் வழியிலும் தண்டிக்கப்படலாம் என்று கூறுகிருர் மன் னர்கள் விலங்குகளை வேட்டையாடுவது இயல்பே என்றும் விலங்கை மறைந்திருந்து கொல்வது தவருண காரியம் இல்லை என்றும் கூறுகிருர்,
ஆணுல் கம்பரோ, வாலியைக் குரங்கு அல்ல என்றும் விலங்கியல் வாலிக்கு ஏற்புடைத்தாகாது என்றும் கூறிய தோடு; இராமன் நேர் நின்று போர் செய்ய நேர்ந்தால் வாலி இராமனைச் சரணடைந்து விடுவான் என்பதாலேயே மறைந்திருந்து கொல்லப்பட வேண்டி வந்தது என்றும் கூறுகிருர்,
இப்படி இராமாயணத்தை மாற்றிய கம்பரின் நோக்கம் என்னவாக இருக்கலாம். சாதாரண குரங்குக்கு அம் பெய்வது இராமரின் வில் வீரத்துக்கு இழுக்காகும் என நினைத்து, வாலியை வலிமையுள்ளவளுக, அரங்கில் ஆடு வார்க்கு அன்பு பூண்டு "கிட்டுவார் பொரக் கிடைக்கின் அன்னவர் பட்ட நல்வலம் பாதி" எய்தும் வரம் பெற்ற வஞக, அறம் அறிந்தும் அறியாததுபோல் பிழை செய்த வணுகக் காட்டியிருக்கிருர் என்று எண்ண இடமிருக்கிறது.
1

Page 52
82 வாலி
வான்மீகரின் கூற்றுப்படி வாலி குரங்காக இருந்தால், நான் ஆரம்பத்தில் விளக்கியவாறு, குரங்குகளுக்கு ஏற்ற "விழைதிறத் தொழில்" செய்து; 'எய்தின் எய்தியதாக" "ப் பெற்று வாழும் வாலி, குற்றமிழைத்தவன் ஆகமாட்டான். எனவேதான் கம்பர் வாலியைக் குற்றமிழைத்தவளுகைக் காட்டுவதற்காக அவனைத் 'தக்கது இன்னது தகாதது இன்னது என ஒக்க" அறிந்தவளுக 'இருமையும்" தெரிந் தவனசு, சிவபக்தி பூண்டல்னசு, போர் அறந் தெரித்தவ இகை, இப்படிப் பலவகையிலும் மனித குலத்தின் மேலான தன்மையைக் கொண்டவனுக நிரூபிக்க முயன்று, அவனுக்கு சில தகைமைகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிருர் என்று எண்ண இடமுண்டு.
அப்படி அவனை விலங்கு இல்லாதவாறு மாற்றி, அவனைக் குற்றமிழைத்தவளுகக் காட்டி விட்டால், மறைந் திருந்து அம்பெய்ததற்கு வான்மீகத்தில் கூறப்படுவது போல, விலங்கை மறைந்திருந்து வேட்டையாடுதல் மன்னர்க்கு வழக்கம் என்று கூறமுடியாததால் வேறு காரணம் தேடுகிறர் கம்பர். -
தீமையை எவ்வழியிலும் அழிக்கலாம் என்ற கருத்தை யும் கம்பர் ஏற்றுக்கொள்ளவில்லை. அது தெய்வ ராமனின் புகழுக்கு இழுக்காகும் என எண்ணுகிருர், தீமையை தீயவழியிலும் அழிக்கலாம் என்ருல், வாலியின் துணை கொண்டு இராவணனை அழித்திருக்கலாம். அதனுல் இராம இராவண யுத்தத்தில் இராமனுக்குக் கிடைத்த பலவகையான புகழ்களையும் இழந்திருக்க வேண்டி வத்தி ருக்கும். குறிப்பாக 'இன்று போய்ப் போர்க்கு நாளை வா' என நல்கிய நல்லறமும் வெளிவந்திருக்காது.
இதனல் இந்தக் காரணங்களை நீக்கி, வாலி இராமன் மேல் பெரும் மதிப்பும் பக்தியும் கொண்டவஞகவும், இராமன் வாலியின் முன்ஞல் தோன்றினல் மன்னிப்புக் கேட்டுத் தஞ்சமடைந்து விடுவான் என்றும் கூறி அந்தத் தஞ்சமடைதல் நிகழ்ச்சியைத் தவிர்ப்பதற்காகவே தான், இராமர் மறைந்திருந்து அம்பெய்தார் எனக் காரணம் காட்டுகிருர் கம்பர்.

அகளங்கன் 88.
வாலி, தன் முன்னல் நின்று போர் செய்பவரின் பலத்தில் பாதியைப் பெற்று விடுவான், அதஞல் இராமர் வாலியின் முன்னுல் வந்து போர் செய்தாலும், வாலிக்கு இராமனின் பலத்தில் பாதி கிடைத்துவிடும். பின்பு இராமரால் வாலியை வெல்லவோ, கொல்லவோ முடியாது. அதனுல்தான் போலியை இராமர் மறைந்திருந்து கொன்ருர் என்று கூறுவாரும் உண்டு.
இராமபாணம் எதையும் அழிக்கக் கூடிய வல்லமை யுடையது. வாலியின் முன்னுல் வந்து நின்று இராமர் தனது அம்பைச் செலுத்திஞலும், அந்த அம்பு வாலியின் மார்பைத் துளைத்தே தீரும். அப்படி நடந்தால் சிவ பெருமான் வாலிக்குக் கொடுத்த வரம் பொய்த்து விடும். எனவே சிவபெருமானின் வரத்துக்கு மதிப்பளிக்சுவேதான், இராமன் மறைந்திருத்து அம்பெய்ய வேண்டி வந்தது என்றும் சிலர் கூறுவர். இதற்கு வலிமை சேர்ப்பதற்காக இன்னெரு நிகழ்ச்சியையும் கூறுவர். இராம இராவண யுத்தத்தில் இராவணன், எதிரிகள் எவரையும் அழிக்கும் ஆற்றல் கொண்டதும், சிவபெருமானுல் கொடுக்கப்பட்டது. மான 'சந்திரகாசம்’ என்ற வாளே எடுத்துப் போர் புரியவே இல்லை என்றும் கூறுவர். அதாவது வாளெடுத்து இராவணன் போர் செய்திருந்தால், இராமனல் இராவணனை வெல்ல முடியாது. ஆளுல் இராமனே எவரையும் அழிக்கும் ஆற்றல் பெற்றவன். அதனுல் சிவபெருமானின் வரத்துக்கு மதிப்பளிப்பதற்காகத்தான், இராவணன் வாளெடுத்துப் போர் செய்யவே இல்லை என்று காவியத்தில் வருவதாகக் கூறுவர்.
வான்மீகத்திலும் பார்க்க; கம்பர், தமது இராமாயணத் தில் வாலி வதையை விரிவாக்கி, இராமனுக்கு பெரும்புகழ் சேர்க்கவே பெரிதும் முயன்றிருக்கின்றர். வாலி குரங்கல்ல என்பதை வலிமையாக நிரூபித்து; அவன் எந்தக் காரணங். கொண்டும் மன்னிக்கப்படக் கூடியவன் அல்ல என்றும் நிரூபித்திருந்தால், வாலிவதையில் நியாயம் இருந்திருக்கும். இராமனும் "மனுவிற் சொல்லும் துறை திறம்பாமற் காக்கத் தோன்றியவளுக இருந்திருப்பான். இதனைச்
2,

Page 53
84 66% ח! ה
சரியாகச் செய்திருந்தாலும், தன்னூேடு போர் செய்யாதவணை மறைந்திருந்து அம்பெய்த நிகழ்ச்சியை கம்பர் நியாயப் படுத்துதல் இயலாத காரியமே. -
வாலி வதை சம்பந்தமான கம்பரின் முயற்சி, மிகவும் அருமையானதாக, விரும்பத்தக்கதாக இருந்த போதிலும், அவர் தனது முயற்சியில் பூரண வெற்றியை அடைய வில்லை என்றே தோன்றுகிறது.
米 来源 来源
வலிமையான கேள்விகள்
வாலியை விலங்கல்ல என இராமர் கூறுவதால், வாலி இராமனிடம் கேட்கும் கேள்விகளும் நல்ல அறிவின்பாற் பட்டனவாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இப்படி இப்படி எல்லாம் வாலி கேட்டிருக்கலாமே, ஏன் கேட்கவில்லை என இக்காவியக் காட்சியைப் படிப்பவர்கள் கேட்டுவிடக் கூடாதே என எண்ணிய கம்பர், கேட்கக் கூடிய வலிமையான கேள்விகள் அனைத்தையும் வாலி வாயால் கேட்க வைக்கிழுர்,
அவனது கேள்விகளுக்கு இராமரைப் பதில் கூறவிட்டு, அந்தப் பதில்களை அவன் ஏற்றுக் கொள்வதாக பாடல்களை அமைக்கிருர் கம்பர். மிகுந்த கல்வி அறிவு நிரம்பிய வாலியே, இராமன் சொன்ன காரணங்களை ஏற்றுக் கொண்டு விட்டான். அதனுல் இராமர் கூறிய காரணங்கள் சரியானவை என மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் கதையை ஒட்டிச் செல்கிருர் கம்பர்.
வாலியின் கேள்விகளில் இவ்வுலக வாழ்வுபற்றியவை மிகுந்திருக்க, இராமரின் பதிலில் மேலுலக காழ்வும் பொதுமையான நீதியும் இழையோடி நிற்கிறது. ஆத்மீகத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் ஆராய்ச்சி செய்யாமலே, ஆராய விரும்பாமலே, இராமனின் பதில்களை

அகளங்கன் 85°
சரியாக இருக்கும் என ஏற்றுக் கொள்கின்றனர். இராமன் கடவுள் என்பது வாலிக்குத் தெரியும். வாசிக்கும் மக்க ளுக்கும் தெரியும், என்பதால் இராமனின் பதில்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இராமரின், உரையாடலை நீட்டியிருக்கிருர் கம்பர் என்று எண்ணலாம்.
வாலியின் கேள்விகளையும், அவனது தன்மைகளையும் பார்க்கும் போது, அவன் ஒரு குரங்குதான் என்று நம்ப முடியாமல் இருக்கிறது. அத்தனை தூரம் அறிவுள்ளவனுகக் காட்சி தருகிறன் வாலி. ஆனல் அவனது செயலோ குரங்குச் செயலாக இருக்கிறது. தனக்கு அறிவு இருந்தும் தான் குலத்துக்கு ஏற்றபடி வாழ்வதாகக் கூறுகிருன் வாலி. அதாவது வாலி அறிவில் மனிதனுகவும், உணர்வில் குரங் காகவும், இருக்கும் வண்ணமாக கம்பரால் சித்தரிக்கப் பட்டிருக்கிருன்.
எது எப்படி இருப்பினும், கம்பரின் நல்ல முயற்சி, முன்னுக்குப்பின் முரணுன சில பாடல்க்ளால் பங்கமடைந்து விட்டது. இாாமனின் கடவுட்தன்மைக்கு மாசு கற்பிப்ப தாக அமைந்திருந்தாலும், யதார்த்தமான மனித இயல்பைப் புலப்படுத்தும் நல்ல இலக்கியக் காட்சியாக இது அமைத் இருக்கிறது என்ற கருத்துக்கு எந்தவித பங்கமும் இல்லை.

Page 54
அகளங்கனின் பிற நூல்கள்
1. "செல்' வா’ என்று ஆணையிடாய்
(அஞ்சலிக் கவிதை'
2 சேரர் வழியில் வீரர் காவியம்
'குறுங் காவியம்}
3. சமவெளி மலைகள்
(அகளங்கன்-சு. முரளிதரன் கவிதைகள்)
கம்பன் கழகத்தினுல் வெளியிடப்பட்ட நூல்கள்
1. திருக்கேதீஸ்வரநாதர் வண்டுவிடுதூது வித்துவான் சி. ஆறுமுகம்
2. நல்லூரான் வெண்பா நாற்பது
வித்துவான் சி. ஆறுமுகம்
3. கந்தர் அனுபூதி
4. வாலிவதைப் படலம்