கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையகத் தமிழ் இலக்கியம்

Page 1

அருணாசலம்

Page 2

இலங்கையின் மலையகத்தமிழ் இலக்கியம்
é5. ga560UTITorovLi, M.A., Ph.D. தமிழ்த் துறை பேராதனைப் பல்கலைக்கழகம் பேராதனை.

Page 3
MALAYAKA THAMEL LAKKIYAM (Upcountry Thamil Literature)
by Dr. K. ARUNACHALAM, Senior Lecturer, Grade - University of Peradeniya, Peradeniya, Sri Lanka.
(C) Copyright reserved. First published in December, 1994.
Wrapper Design-JEEVA.
Price : 125.00
Seventy third publication of:
THAMIL MANRAM, No. 10, Fourth Lane, Koswatta Road, Rajagiriya, Sri Lanka.
அச்சும் அமைப்பும்! வே கருணாநிதி, இளவழகன் பதிப்பகம், 4, இரண்டாவது தெரு
ஆண்டவர் நகர், கோடம்பாக்கம், சென்னை - 600024.

ܓܠ
காணிக்கை
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலைதவறிக் கெட்டுப் பாழ்பட்டுநிற்கின்ற தோட்டத் தொழிலாளர்களின்
விமோசனத்துக்காகத்திரத்துடன் போராடித்தமதின்னுயிர்களைத்
தியாகஞ் செய்த கோவிந்தன், வெள்ளையன், செல்வநாயகம் சிவனுலெட்சுமணன் முதல் ஏபிரகாம் சிங்கோ வரையிலான தொழிலாளச் செம்மல்களுக்கு,
イク

Page 4

பதிப்புரை
பல்லாண்டு காலமாக முயற்சி செய்து பல்லாயிரக் கணக்கான பக்கங்களைப் பழத்து அரும்பாடுபட்டு எழுதிய மலையகத் தமிழ் இலக்கிய வரலாறு கூறும் நூல், இன்று பொது மக்கள் சொத்தாகி விட்டது. இப்படியான ஒரு நூல், நாலைந்து தசாப்தங்களுக்கு முன்பு வெளிவந்திருத்தல் வேண்டும். அப்பொழுது, ஒருவரும் இத்தகைய பெருமுயற்சியில் ஈடுபடவில்லை. அப்பொழுது எவரேனும் எழுதியிருந்தால், தற்பொழுது கிடைப்பதற்கரிதாகியுள்ள பல நூல்களைப் பற்றி மேலும் விரிவான தகவல்களை நூலில் சேர்த்திருக்கலாம் சரியான தருணத்தில், மேலும் காலம் பிந்திவிடாமல் இந்நூலைச் சிரமப்பட்டு எழுதியுள்ள பேராதனைப் பல்கலைக் கழக மூத்த விரிவுரையாளர் கலாநிதி க. அருணாசலம் அவர்களுக்கு, மலையகம் மட்டுமல்ல, தமிழ் இலக்கிய உலகமே கடமைப் பட்டுள்ளது. இந்நூல் வெளிவருவதால், தமிழ் இலக்கியத்தின் மதிப்பு ஒரு படி உயர்ந்துள்ளது. மேலும் வளர்ந்து தமிழ்மொழி மணம் எங்கும் கமழ வேண்டும். அரிய இந்நூலை வெளியிட வாய்ப்புத் தந்த கலாநிதி க. அருணாசலம் அவர்களுக்கு எமது நன்றி
10 நாலாவது லேன், எஸ். எம். ஹனிபா கொஸ்வத்த ரோட், • நிறுவனர் ராஜகிரிய இலங்கை தமிழ் மன்றம்

Page 5
நூலாசிரியர் பற்றி .
இலங்கைப் பல்கலைக் கழகங்களில் தாய்மொழி போதனா மொழியாக்கப் பட்டமையினைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களும் பல்கலைக் கழகங்களுள் புகுந்தனர்.இதன் விளைவாக எழுத்துத் துறையிலும் ஆய்வுத்துறையிலும் முனைப்புக் கொண்ட ஒரு பரம்பரையினர் உருவாயினர். இப்பரம்பரையில் ஒருவரான, கலாநிதி க. அருணாசலம் அறுபதுகளின் பிற்கூறில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றிலிருந்து பல்கலைக் கழகத்துள் நுழைந்தார். தமிழ் மொழியைச் சிறப்புப் பாடமாகப் பயின்று பட்டம் பெற்றார். 1972 -லிருந்து இன்றுவரை இருபத்திரண்டு வருடகாலம் பல்கலைக் கழகக் கற்பித்தலில் முதிர்ந்த அனுபவம் பெற்றவர். பண்டைய இலக்கியங்களிலும் நவீன இலக்கியங்களிலும் ஒருசேர நிறைந்த பரிச்சயம் உடையவர்.
இலங்கைப் பல்கலைக் கழகங்களிலே ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய தேடுகை நிகழ்ந்தபோது இவர் "ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள்" தொடர்பாக ஆராய்ந்து 1974 ல் முதுகலைமாணிப் பட்டம் பெற்றுக் கொண்டார் தொடர்ந்து 1979ல் தமிழில் வரலாற்று நாவல்கள்" என்ற ஆய்வேட்டிற்காகக் கலாநிதிப் பட்டமும் பெற்றார். இதற்காக இவருக்குப் "பொன்னம்பல முதலியார் ஞாபகார்த்தப் பரிசும்" வழங்கப்பட்டது. இற்றைவரை, இப்பரிசினை வேறெவரும் பெறவில்லை ான்பதும் குறிப்பிடத்தக்கது.

கலாநிதிக அருணாசலம் 7
பல்கலைக் கழக விரிவுரையாளர் ஒருவர் சிறந்த விரிவுரையாளர் என்ற தொழில் நிலைக்கு அப்பால் ஆய்வாளன் என்று வெளியுலக அங்கீகாரமும் பெறவேண்டியது அவசியம். இந்த வகையில், நவீன இலக்கிய வரலாறு, விமர்சனம் ஆகிய துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கலாநிதிக அருணாசலம் இற்றைவரை நான்கு நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 1984ல் தமிழ்நாட்டில் சோமு பதிப்பக வெளியீடாக வந்த 'பாரதியார் சிந்தனைகள்" என்ற ஆய்வு நூல் தமிழ் கூறும் நல்லுலகில் அவருக்கொரு அங்கீகாரத்தை வழங்கியது. 1992ல் "சுவாமி விபுலாநந்தரின் சமயச்சிந்தனைகள்' 1994ல் "காலக் கண்ணாடி - இளங்கதிர்', 'இலங்கையின் மலையகத் தமிழர்" ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளன. இவை மூன்றும் கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் வெளியீடுகளாகும்
கலாநிதி க. அருணாசலம் அவர்தள் தேசிய கல்வி சார்ந்த நிகழ்ச்சித்திட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றார். மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் தொலைக்கல்விப் பிரிவின் தமிழ்ப்பாடப் பதிப்பாசிரியர் குழுவின் அங்கத்தவர் தமிழ் மொழித்துறையின் ஆலோசகர்; க.பொ.த. சாதாரணதர, உயர்தர தமிழ்மொழிப் பாடத்திட்ட மீளாய்வுக் குழுவின் அங்கத்தவர். பேராதனைப் பல்கலைக்கழக நூலகக் குழுவின் அங்கத்தவர் பட்ட மேற்படிப்பு மாணவர்களை ஆற்றுப்படுத்தும் பரீட்சகர் இவ்வாறான புறநிலை நிகழ்ச்சித் திட்டங்களிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார்.
நவீன இலக்கியங்களிலும் விமர்சனத்திலும் அதிகளவு ஆர்வம் கொண்ட கலாநிதி அவர்கள், கடந்த இருபத்தெட்டு ஆண்டுகாலமாகத் தான் வாழுகின்ற மலையக மண்ணின் மீதும் தோட்டத் தொழிலாளர் மீதும்மிகுந்த ஈடுபாடுகொண்டவர். இயல்பாகவுே சமூகத்தின் அடித்தள

Page 6
8 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் ஈடுபாடு மலையகத்தின் மீது ஆழப்பதிந்தது. இதனால், மலையகத் தொழிலாளர் குறித்த வரலாறும் அதனூடு அவர்களது அல்லது அவர்கள் தொடர்பான இலக்கிய வரலாறும் எழுதப்பட வேண்டும் என்பது வெறும் கோஷமாக மட்டும் அமையாது அது எழுதப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தவர். இதனால், கடந்த ஒரு தசாப்த காலமாக மலையக இலக்கியம் பற்றியே அவர் கூடுதலாகச் சிந்தித்தும் எழுதியும் வந்துள்ளார். அவற்றின் அறுவடையே இந்த நூலாகும். இன்றும் மலையகப் புனைகதைகள், மலையகச் சஞ்சிகைகள், மலையகத் தொழிலாளர் பற்றிய ஆய்வுகள், மலையக நாடகங்கள் முதலியன தொடர்பாக விரிவாக ஆராய்ந்து வருகின்றார். இவை தொடர்பான நூல்கள் விரைவில் வெளிவரவுள்ளன.
தனிப்பட்ட வாழ்வில் பெருஞ் சவால்களையும் பொறுப்புக்களையும் எதிர்கொண்டு சோதனைகளைச் சாதனைகளாக்கிய, இரண் பிள்ளைகளின் தந்தையான இவ் ஆய்வாளரிடமிருந்து, தமிழுலகம் இன்னும் பெறவேண்டியன நிறைய உள.
afflipopurami, வ, மகேஸ்வரன் தமிழ்த்துறை
பேராதனைப் பல்கலைக் கழகம்
பேராதனை, இலங்கை

பொருளடக்கம்
பக்கம்
முகவுரை 17
1 மலையகத் தோட்டத் தொழிலாளர் - ஓர் அறிமுகம் 77 2. மலையகத் தமிழ் இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் 75
3 நாட்டாரியல் f45
4. கவிதை f69
5. புதுக்கவிதை 233

Page 7

முகவுரை
மலையகத் தொழிலாளரின்பால், எனது கவனத்தை முதலில் திசை திருப்பியது புதுமைப்பித்தனின் "துன்பக்கேணி" என்னும் சிறு கதையேயாகும். அக்கதையினைக் கருத்தூன்றிப் படித்தபோது, என்னையுமறியாமலே என் கண்கள் பனித்துவிட்டன. பலவருடகாலம் மலையகத் தொழிலாளர் பற்றிய சிந்தனை அடிமனதில் கருக் கொண்டிருந்தது. மலையகத் தொழிலாளர் பற்றிய ஆக்கங்களில் பலவற்றையும், அவ்வப்போது பழத்து வந்தேன். அவ்வப்போது, மலையகத் தமிழ் இலக்கியம் தொடர்பாகச் சில கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். எனினும் மலையகத் தமிழ் இலக்கியத்தை முழுமையாக நோக்கி நூலாக வெளியிட அவகாசமில்லாது போய்விட்டது.
நீண்டநாள் கனவு. இப்பொழுது நனவாகத் தொடங்கியுள்ளது. ஆவல் மீதூரப் பெற்ற நிலையில் இந்நூலை எழுத முற்பட்ட போதுதான், இதிலுள்ள சிரமங்கள் பலவற்றை உள்ளபடி உணர முடிந்தது. இந்நூலை எழுதிக் கொண்டிருக்கும்போது திக்குத் தெரியாத காட்டுக்குள் நின்று தத்தளிப்பது போன்ற ஒரு உணர்வே எனக்கு ஏற்பட்டது. மலையகத்தமிழ் இலக்கியம் பற்றிப் பலர் "சிதறல்களாகப்" பல கட்டுரைகளை எழுதியுள்ளனர் என்பது உண்மையே. எனினும், இதுவரை எவரும் மலையகத் தமிழ் இலக்கியத்தை முழுமையாகவும் வரலாற்று அடிப்படையிலும் நோக்கி எழுதியுள்ளதாகத் தெரியவில்லை.
அவ்வாறான ஆய்வுகளை முழுமையாக மேற்கொள்வதற்குப் பெரும் இடையூறாக அமைவது, மலையகத் தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பெறுவதிலுள்ள சிரமங்களே. மலையகத் தோட்டத் தொழிலாளர் பற்றி வெளிவந்த ஆக்கங்களுள் ஒரு சிறு பகுதியே, நூல்களாக வெளி வந்துள்ளன. பெருந்தொகையான ஆக்கங்கள் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் ஆண்டு மலர்களிலும் துயின்று கொண்டிருக்கின்றன;

Page 8
12 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
கணிசமானவை, பிரசுர வசதிக் குறைவுகளால் கையெழுத்துப் பிரதிகளாகவே உள்ளன. 1982ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற் பயின்று கொண்டிருந்தவரும் மலையகத்தைச் சேர்ந்தவரும் எனது மாணவருமான வீ. பாலச்சந்திரன், தாம் இயற்றிய ஒரு கட்டுக் கவிதைகளைக் கையெழுத்துப்பிரதிகளாகவே என்னிடம் காட்டினார். அவை இன்றுவரை நூலுருப் பெற்றதாகத் தெரியவில்லை. இதே நிலையில், இன்னும் பலரது ஆக்கங்கள் உள்ளதை அறிய முடிகிறது. காலத்தால் முற்பட வெளிவந்த சஞ்சிகைகள் சில மறைந்துவிட்டன; பல மறையும் நிலையில் உள்ளன. இவ்விடத்தே சிவை தாமோதரம் பிள்ளையின் இரங்கற் கூற்றே, ஞாபகத்திற்கு வருகின்றது. இவற்றுக்கான உட்னடி நிவாரணம்!
நாட்டார்பாடல்கள், கவிதைகள், தனிப்பாடல்கள், புதுக் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நடைச்சித்திரங்கள், ஒரங்க நாடகங்கள், நாடகங்கள் என வெளிவந்துள்ள ஆக்கங்களைத் தேடித் தொகுத்து நூலுருப் பெறச் செய்தல் மிக அவசியமானதாகும் மலையகக் கல்வி நிலையங்களிலும் பேராதனைப்பல்கலைக்கழகத்திலும் பிற இடங்களிலும் கடந்த பல ஆண்டுகளாக மேடையேற்றப்பட்ட தரமான நாடகங்கள் பல "கையெழுத்துப்பிரதிகள்"என்றநிலையிலேயே உள்ளன. கணிசமானவை அழிந்துமிருக்கலாம். இவை யாவற்றையும் தேடிக் கால ஒழுங்கில் தொகுத்து நூலுருப்பெறச் செய்தல் வேண்டும். அதேசமயம் "மலையகத் தொழிலாளரியல்" தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள், சிறு நூல்கள் முதலியன கால ஒழுங்கில் தொகுக்கப்படல் வேண்டும். நண்பர் சாரல்நாடன் கூறியுள்ளதுபோல், மலையகத் தமிழ் இலக்கிய உலகம் "கொட்டிக் கிடக்கும் தங்கச் சுரங்கம்" என்பதை இந்நூலை எழுதிக் கொண்டிருந்த வேளை என்னால் முழுமையாக உணரமுடிந்தது. மலையக ஆக்க இலக்கியங்கள் பலவற்றை சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் ஆண்டு மலர்களிலுமிருந்து அரிதில் முயன்று தேடிப்பெற்றே, இந் நூலாக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

கலாநிதிக அருணாசலம் 13
மலையகத் தமிழ் இலக்கியம் பற்றிய தேடுதல் முயற்சியிலும், ஆய்வறிவுத் துறையிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் சாரல் நாடன். அவரது கட்டுரைகளும், நூல்களும், தகவல் வெளியீடுகளும் இந்நூலாக்கத்திற்குப் பெருமளவு ஆதர்ஷனமாக அமைந்துள்ளன என்பதை நன்றியுடன் நினைவு கூருகிறேன். இதே போன்று, சிவி வேலுப்பிள்ளை, எல். சாந்திகுமார் தெளிவத்தை ஜோஸப் அன்ரனி ஜீவா, இர. சிவலிங்கம் என்.எஸ்.எம். இராமையா, மாத்தளை கார்த்திகேசு சுமுரளிதரன் ஆகியோரது சில கட்டுரைகளும் "நேர் காணல்" மூலம் பெற்றுக் கொண்ட தகவல்களும் இந் நூலாக்கத்திற்கு உதவியாக அமைந்தன.
மலையகத் தோட்டத் தொழிலாளர் - ஓர் அறிமுகம் மலையகத் தமிழ் இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும் நாட்டாரியல், கவிதை புதுக்கவிதை என்னும் ஐந்து இயல்களைக் கொண்டுள்ள இந்நூல், மலையகத் தமிழ் இலக்கியத்தின் முதலாம் பாகமாக அமைந்துள்ளது. இரண்டாம்பாகமாக அமையும் "மலையகப் புனைகதைகள்"என்றும் நூல் விரைவில் வெளிவரவுள்ளது. மலையகத் தமிழ் நாடகம் சஞ்சிகைகள், ஆய்வறிவு முயற்சிகள் ஆகியன பற்றிய ஆய்வாக மூன்றாம் பாகம் அமையும்
"இலக்கிய விமர்சனம் மகப்பேற்று மருத்துவிச்சியாக இருக்க வேண்டுமே தவிர, மரண விசாரணை அதிகாரியாக இருத்தல் கூடாது." என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளவன் என்ற அடிப்படையிலேயே, மலையகப் படைப்பிலக்கியங்களை இந்நூலில் நோக்கியுள்ளேன். இந்நூல், மலையகத் தமிழ் இலக்கியம் பற்றிய முன்னோடி முயற்சியாகவே அமைந்துள்ளது.

Page 9
14 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
இந்நூலின் ஒரு சில பகுதிகள் ஏற்கனவே கொழுந்து, குன்றின்குரல், வயல் ஆகிய சஞ்சிகைகளில் கடந்த நான்கு ஆண்டுகளுள் கட்டுரைகளாக வெளிவந்துள்ளன. அவற்றை இந்நூலிற் சேர்ப்பதற்கு அனுமதியளித்த அச் சஞ்சிகைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி ஏனைய பகுதிகள் இந்நூலுக்கென்றே எழுதப்பட்டவை இந்நூலில் முக்கியமான ஆக்கங்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெறாதிருப்பின், அதற்குக் காரணம் அவற்றைப் பெற முடியாமற் போனமையேயாகும்
இந்நூலாக்கத்தின் போது என்னிடமில்லாத கிடைத்தற்கரியநூல் களையும், சஞ்சிகைகளையும் தந்து உதவியவர்கள் பலர் அவர்களுள் முதலிடம் வகிப்பவர் நண்பரும் கவிஞருமான சு. முரளிதரனே, "எள் என்றால் எண்ணெயாக" உதவியவர் அவர் தன்னிடமில்லாதபோது, வேறுயாரிடமாவது விரைந்து தேடிப்பெற்று உதவினார். அவரது பேருதவிகளுக்கு, முதற்கண் எனது இதயங் கனிந்த நன்றி நண்பர்கள் சாரல்நாடன், அன்ரனி ஜீவா, மாத்தளை கார்த்திகேசு அ. இராமன், வெள்ளைச்சாமி, கலாநிதி துரை. மனோகரன், மாணவன் வீரா. பாலச்சந்திரன் ஆகியோரும் இவ்வகையில் உதவினர். அவர்களுக்கும் எனது மனப்பூர்வமானநன்றிகள்.
இந்நூலை எழுதுவதற்கு உற்சாகமூட்டியவர் எனது மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருந்தகையும் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவருமான பேராசிரியர்சிதில்லைநாதன் அவர்கள். அவருக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்.
"சுவாமி விபுலாநந்தரின் சமயச் சிந்தனைகள்" என்னும் நூலை எழுதத் தூண்டுதல் அளித்தும் வெளியிட்டும் உதவிய பெருந்தகை, இலக்கிய மாமணி தமிழ்மணி சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்கள். அவரே, இந்நூலையும் எழுதத் தூண்டுதல் அளித்தும், வெளியிட்டும் உதவியுள்ளார். அன்னாருக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்

கலாநிதிக அருணாசலம் 15
எனது முதல் நூலான "பாரதியார் சிந்தனைகள்" (1984) என்னும் நூலாக்கத்தின் போது எனது அன்புத் துணைவியும் அன்பு மைத்துணியும் உடனிருந்து உதவினர். ஆயின், 1992ம் ஆண்டு வெளிவந்த "சுவாமி விபுலாநந்தரின் சமயச் சிந்தனைகள்" என்றும் நூலாக்கத்தின் போதும் இந் நூலாக்கத்தின் போதும் அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. இன்றைய நெருக்கடிமிக்க குழ்நிலைகளே, அதற்குக் காரணமாகும்
தட்டச்சுப் பிரதியையும் கையெழுத்துப் பிரதியையும் ஒப்புநோக்கித்
திருத்தம் செய்வதற்குதவியவர் எனது அன்புக்குரிய மாணவனும்
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளருமாகிய திரு. வ. மகேஸ்வரன் அவர்கள். அவருக்கு எனது உளங்கனிந்த நன்றி
இந்நூலின் கையெழுத்துப் பிரதியைப் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குறுகிய காலத்திற் சிறந்த முறையில் தட்டச்சேற்றித் தந்த திருமதி கிருபா நல்லரத்தினம் அவர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள். நூலை நேர்த்தியான முறையில் அச்சிட்டு உதவிய சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் கலாநிதிப் பட்ட ஆய்வாளர் திரு. வே. கருணாநிதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
தமிழ்த்துறை a5. gagawamaFavuió பேராதனைப் பல்கலைககழகம பேராதனை, இலங்கை
2012 1994.

Page 10

மலையகத் தோட்டத் தொழிலாளர்
- ஓர் அறிமுகம்
தமிழக வரலாற்றிலும் தமிழ் இன வரலாற்றிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டினைக் கறைபடிந்த ஒரு காலகட்டமாகக் குறிப்பிடுதல் இன்று பலர் மத்தியிலும் வழக்கமாகிவிட்டது. தமிழகத்தின் அரசியல், சமூக பொருளாதார வரலாற்றினைச் சற்று ஊன்றி நோக்கினால் சில உண்மைகள் புலப்படும் கறை' படிந்த காலகட்டமும் கொடுமைகள், வேதனைகள், அவலங்கள் முதலியன நிறைந்த அதன் இயல்புகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே விஷ்வரூபம் பெற்றுக் காணப்படினும் அவற்றின் தோற்றப்பாட்டினையும் வளர்ச்சியையும் பல நூற்றாண்டுகள் முன்னதாகவே தமிழக வரலாற்றிலும் தமிழகத்தை உள்ளடக்கிய இந்திய வரலாற்றிலும் காணமுடிகின்றது. அதே போன்று, கறை'யின் எச்ச சொச்சங்களை இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டமான இன்றுங்கூடத் தமிழகத்திலும் இலங்கையிலும் கண்கூடாகக் காணலாம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு.
"காகம் இல்லாத ஊரும் கிடையாது தமிழன் இல்லாத நாடும் கிடையாது" என்பது பழமொழியாகவோ, அன்றிப் புதுமொழியாகவோ வழங்கப்படுகின்றது. சிலர் இதனைப் பெருமையுடனும் கூறிக்கொள்வர். எவரும் இதில் பெருமைப்படுவதற்கு எதுவுமேயில்லை. மாறாக, வேதனையும் சோகமுமே மேலோங்கிக் காணப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் சென்று அங்கு அரசியல் பொருளாதாரத் துறைகளில் ஆதிக்கம் செலுத்திய பிரித்தானியரைப் போன்று தமிழர்களும் செய்திருந்தாலாவது, ஏகாதிபத்தியப் பெருமை பேசிக்கொள்பவர்கள் பெருமிதப்படலாம். ஆயின், தமிழ்த் தொழிலாளர்களோபலநூற்றாண்டுகளாகத்தமது தாயகத்திலேயே தமது இனத்தவராலேயே சாதி குலம் சமயம் சாத்திரம் தெய்வம் முதலியவற்றின் பெயராலே தயை தாட்சண்யமின்றிச் சுரண்டப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும்

Page 11
18 visaufki த் தமிழ் இலக்கியம்
கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டும் வாழ்வு பறிக்கப்பட்ட நிலையில் வேறு வழியின்றித் தமது வயிற்றுத் தீயைத் தணித்தற் பொருட்டு, இதயக் குமுறலுடனும் கலங்கிய கண்களுடனும் தாயகத்தை விட்டு வெளியேறினர் வெளியேற்றப்பட்டனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பூரண அடிமைகளாகவும் அரை அடிமைகளாகவும் கூலிகளாகவும் தமிழ்த் தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து பண்டங்களைப் போன்றோ, மந்தைகளைப் போன்றோ கப்பல்களில் ஏற்றப்பட்டும், கொண்டு செல்லப்பட்டும் குடியமர்த்தப்பட்டனர். அக்காலப்பகுதியில் உலக அரங்கில் ஆதிக்கப் போட்டியிலே தீவிரமாக ஈடுபட்ட பிரித்தானியரதும் பிரான்சியரதும் ஆதிக்கத்திலிருந்த நாடுகளிலும் தீவுகளிலுமே, தமிழ்த் தொழிலாளர்கள் அதிக அளவிற் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு குடியமர்த்தப்புட்ட நாடுகளும் தீவுகளும் நாற்பதுக்கும் மேற்பட்டவை எனக் கூறுவர். ' எனினும் இதுவரை யாரும் சரியான முறையில் கணக்கிட்டுள்ளதாகத் தெரியவில்லை. இவ்விடங்களிலே குடியமர்த்தப்பட்ட தமிழ்த் தொழிலாளர்களின் அன்றைய அவலங்கள் இன்றைய நிலை முதலியன பற்றி வரலாற்று ரீதியாகவும் விரிவாகவும் இதுவரை ஆராயப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. எனினும் இவ்வகையிலே தமிழ்த் தூதர் தனிநாயக அழகளார், உலகத் தமிழ்ப் பண்பாட்டுஇயக்கப் பொதுச் செயலாளர்குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் முதலியோர் இனப்பற்றுதலினால் உந்தப்பெற்று மேற்கொண்ட பணிகள் பாராட்டத்தக்கவை.
தமிழக வரலாற்றின் முன்னைய காலகட்டங்களிற் காணப்படாத அாவிற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலட்சோயலட்சம் தமிழ்த் தொழிலாளர்கள் தமிழகத்திற்கு மிக அண்மையிலுள்ள இலங்கையில் மட்டுமன்றி, நூற்றுக் கணக்கான பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பாலுள்ளநாடுகளுக்கும் தீவுகளுக்கும் கொண்டு சென்று குடியமர்த்தப்பட்டனர். அவற்றுள் முக்கியமான இடங்கள் சில வருமாறு:- நேவிஸ், அன்ரில்ஸ், தாஹித்த, நியூ கலிடோனியா, கிரனிடா,

மலையகத் தோட்டத் தொழிலாளர் 葛列
சென்ட்குறோக்ஸ், பிஜி டேமாறா, மொரீசியஸ் ரிறினிடாட், றியூனியன், தென் ஆப்பிரிக்கா, வியட்னாம், அந்தமான், சுமாத்திரா, சிசெல்ஸ், ஜமெய்க்கா, சுரினாம் பிரிட்டிஷ் கயானா, பிரெஞ்சுக் கயானா, குவாட்லோப் மாட்னிக், சென்ட் வின்சன்ற் சென்ட் கிறஸ், சென்ற் லூசியா, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, அவர்கள் அங்கு அனுபவித்த கொடுமைகள் அளப்பில. அவர்களது வரலாறு சோகம் மிகுந்து, துயரங் கவிந்து, இருள்படிந்து குருதிநிறைந்து வேதனைகள் மலிந்து காணப்படுகிறது.
கொடுரமான சுரண்டல்
அரசியல் பொருளாதார, சமூக ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு முதலில் பிரித்தானிய பிரான்சிய ஆட்சியாளர்களாலும் பின்பு சுதேச ஆட்சியாளர்களாலும் அந்தந்த நாடுகளையும் தீவுகளையும் சேர்ந்த சுதேச இனத்தவர்களாலும் தொழிலாளர்களல்லாத ஏனைய தமிழர்களாலும் ஏனைய இந்தியர்களாலும் - வணிகர்கள், அதிகாரிகள், தோட்ட உத்தியோகத்தர்கள், பிற அலுவலர்கள் - கொடூரமாகச் சுரண்டப்பட்டனர் சுரண்டப்படுகின்றனர். மேற் கூறப்பட்ட நாடுகள், தீவுகள் பலவற்றிலே வாழும் தமிழ்த் தொழிலாளரிற் பெரும் பகுதியினர் இன்று தமிழ் பேசவோ எழுதவோ வாசிக்கவோ தெரியாத நிலையிலேயே காணப்படுகின்றனர் என்பதும் அதிக அளவிற் சுதேச இனத்தவர்களுடன் கலப்புற்று விட்டனர் என்பதும், அவ்வாறு கலப்புற்ற நிலையில் அவர்கள் பெருமளவு உரிமைகளுடனும் சலுகைகளுடனும் ஓரளவு வளத்துடனும் வாழ்ந்து வருகின்றனர் என்பதும், தொழிலாளர்களில் கணிசமானவர்களின் இளந்தலைமுறையினர் கல்வி கற்றுப் பிற வேலைவாய்ப்புகளைப் பெற்று முன்னேறத் தொடங்கியுள்ளனர் என்பதும் இங்கு நோக்கப்பட வேண்டியனவாகும்.
இன்று இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய சிலநாடுகளிலேயே தமிழ்த் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலாளர்களாகவும் அதேசமயம்
தமிழர்களாகவும் வாழ்ந்து வருகின்றமையும் அத்தகைய சில நாடுகளுள் இலங்கையே முதன்மையானதாகவும் இலட்சோபலட்சம் தமிழ்த்

Page 12
20 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
தொழிலாளர்களைக் கொண்டுள்ளதாகவும் விளங்குகின்றமை கவனத்திற் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும். இலங்கை தமிழகத்திற்கு மிக அண்மையில் இருப்பதாலும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழகம் பல்வேறு துறைகளிலும் இலங்கையுடன் உறவு பூண்டிருப்பதாலும் வரலாற்றின் ஆரம்பகாலந்தொட்டே, இலங்கையிலே தமிழர்கள் கணிசமான தொகையினராக வாழ்ந்து வருவதாலும், இந்நிலைமை சாத்தியமாயிற்று எனலாம். எனினும் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலே காலம் காலமாக வாழ்ந்துவரும் தமிழர்களின் வாழ்க்கை நிலைமைகளிலிருந்தும் பிரச்சினைகளிலிருந்தும் வேறுபட்ட வாழ்க்கை நிலைமைகளையும் பிரச்சினைகளையும் கொண்டவர்களாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டிற் குடியேற்றப்பட்ட தமிழ்த் தொழிலாளர்கள் விளங்குகின்றனர்.
இவ்வாறு தமிழகத்திலிருந்து கடந்த நூற்றாண்டிலே இலங்கையின் மலையகப் பகுதிகளிற் குடியேறிய - அல்லது குடியேற்றப்பட்ட, தமிழ்த் தொழிலாளர்கள் மிக அண்மைக் காலம் வரை, சூழ்நிலை நிர்ப்பந்தங்களால் இலங்கையிற் காலம் காலமாக வாழ்ந்துவந்த சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களது அலட்சியத்திற்காளானவர்களாக விளங்கினர் கூலிகள் என்றும் கள்ளத் தோணிகள் என்றும் வடக்கத்தையார் தோட்டக்காட்டார். இந்தியாக்காரர் என்றும் அழைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டனர்; இம்சிக்கப்பட்டனர். ஆயின், இன்று நிலைமைகள் மிக வேகமாக மாறிக்கொண்டு வருகின்றன. தமிழ்த் தொழிலாளர்களின் துயரங்களும் இன்னல்களும் சுரண்டற் கொடுமைகளும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்ற போதிலும் கூட, தோட்டத் தொழிலாளர் மத்தியில் நாம் இதுகாலவரை கண்டிராத அளவிற்கு, விழிப்பும் எழுச்சியும் உரிமை வேட்கையும் முன்னேற்றமும் அதிகரித்து வருதல் கவனிக்கத்தக்கதாகும்
இந்நிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கேற்ப தமிழ்த் தொழிலாளர்களையும் அவர்களைச் சார்ந்து வாழும் சிறுதொகையினரையும் குறிப்பிடுவதற்கு மலையகத் தமிழர் மலையகத்

மலையகத் தோட்டத் தொழிலாளர் 2f
தோட்டத் தொழிலாளர்' என்னும் சொல்லாட்சிகளையும் பயன்படுத்தும் வழக்கு இன்று பரவலாக அதிகரித்து வருவதைக் காணலாம்" இன்றைய நிலையில், மலையகத் தமிழர் என்னும் பதம் மலையகத்தில் நிரந்தரமாக வாழும் தொழிலாளர்களல்லாத பிற தமிழ் மக்களையும் வர்த்தகர்கள், பிற அலுவலர்கள்முதலியோரையும் உள்ளடக்கிநிறகும. மலையகத் தோட்டத் தொழிலாளர்' என்னும் போது தமிழ்த் தொழிலாளர்களை மட்டுமன்றித் தோட்டங்களிலே தொழிலாளர்களாகப் பணிபுரியும் சிறு தொகையினரான சிங்கள, முஸ்லிம் மக்களையும் உள்ளடக்கிநிற்கும். எனினும் இந்நூலில் மலையகத் தோட்டத் தொழிலாளர்' என்பது தவிர்க்க முடியாத காரணங்களினால், தமிழ்பேசும் தொழிலாளர்களையே குறித்துநிற்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் தமிழகத்திலிருந்து சென்று குடியேறிய - குழயேற்றப்பட்ட தமிழ்த் தொழிலாளர்களின் வரலாறு, இதுகாலவரை எங்குமே செம்மையாகவும் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. இலங்கை தவிர்ந்த பிற நாடுகளிற் குழயேறிய தமிழ்த் தொழிலாளர்களின் இன்றைய நிலைபற்றி மேலெழுந்தவாரியான சில தகவல்களை மட்டுமே, ஒருசிலர் வெளிப்படுத்தியுள்ளனர். "இலங்கையின் மலையகத் தமிழ்த் தொழிலாளர் பற்றிய வரலாறு, இதுவரை செம்மையாக எழுதப்படவில்லையாயினும் சிலர் இத்துறையிற் குறிப்பிடத்தக்த பயனுள்ள முயற்சிகளைச் செய்துள்ளனர் செய்து வருகின்றனர். ’ மலையகப் பகுதியில் குடியேறிய தொழிலாளர்கள், கடந்த ஒன்றரை நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தமக்கே பிரத்தியேகமாகவுரிய பல பிரச்சினைகளையும் இலங்கையில் வாழும்பல்வேறு சமூகத்தினருக்கும் பொதுவாகவுரிய பிரச்சினைகளையும் கொண்டவர்களாக, இன்றுவரை வாழ்க்கைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மலையகத் தொழிலாளர் பற்றிய நோக்கு இருவகையில் அமைந்து வருவதை அவதானிக்கலாம். அவையாவன:-(அ)இனரீதியான நோக்கு (ஆ) வர்க்க ரீதியான நோக்கு. அவைதவிர, மூன்றாவது நோக்கும் காணப்படுகிறது. அதாவது இனம் என்ற எல்லைக்குள் அமைந்த வர்க்க

Page 13
22 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
ரீதியான நோக்கே அதுவாகும் 6 இவற்றுள் எது சரியானது? எது தவறானது? என்ற விவாதம் ஒருபுறமிருக்க, ஒவ்வொரு சாராரும்தத்தமது நிலைப்பாட்டில் நின்று நோக்குவதை அவதானிக்க முடிகின்றது. இணுவபற்றி 'இந்நூலிற் பின்னர் விரிவாக ஆராயப்படும்.மலையகத் தொழிலார்வரலாற்றினைச் செம்மையாக அறிந்து கொள்வதற்கு உதவும் வகையில், போதிய அளவிற்கு முதன்மைச் சான்றாதாரங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. முதன்மைச் சான்றாதாரங்கள்தரும் தகவல்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் விரிவாக விளக்கும் வகையிலும் போதிய அளவு துணைச் சான்றாதாரங்களும் காணப்படுகின்றன. அவற்றுள் விதந்து கூறத்தக்கவைமலையகத் தொழிலாளர்மத்தியிலே பெருவழக்குப் பெற்று விளங்கும் மலையக நாட்டுப்பாடல்களும்'மலையகத் தொழிலாளர் பற்றி இதுவரை எழுந்துள்ள கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், புதுக் கவிதைகள், உரைநடைச் சித்திரங்கள் முதலியனவுமாகும்
"தொழிலாளர்கள்"
பத்தொன்பதாம் நூற்றாண்டிலே இலட்சோபலட்சம் தமிழ் மக்கள் தொழிலாளர்கள்’ என்னும் பெயரில் அடிமைக் கூலிகளாகத் தமது தாயகத்தை - தமிழகத்தை விட்டு நீங்கியமைக்கான காரணங்கள் யாவை? பலர்இதற்கான காரணங்களைக் கூறுகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழகத்திலே ஏற்பட்ட கொடிய பஞ்சங்களும் பிரான்சியர் பிரித்தானியர் ஆகியோரது ஆட்சியும் அவர்கள் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கையுமே காரணங்கள் என மிக நாகுக்காகவும் மேம்போக்காவும் கூறித் தப்பிவிடுகின்றனர். உண்மையில், இவை துணைக் காரணிகளாகவோ, உடனடிக் காரணிகளாகவோ அமைந்துள்ளதை அவதானிக்கலாம்.
பிரித்தானியரின் மோகவலையிற் சிக்கித் தமது தாயகத்தில் ஏற் பட்ட பஞ்சத்தின் கொடுமையைப் போக்கவும், அதற்கும் மேலாகப் பண்ணையார்களின் கொடுமைகளிலிருந்து தப்பி விமோசனம் தேடவும்

மலையகத் தோட்டத் தொழிலாளர் 23
புறப்பட்ட இலட்சோபலட்சம் தமிழ்த் தொழிலாளர்கள், இலங்கையிலோ பிற இடங்களிலோ தொடர்ந்தும் பட்டினியினாலும் வறுமையினாலும் கொடூரமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். தொழிலாளர்கள் குடியேறியூஇடங்களில் எல்லாம் சிறு தொகையினராகக் குருவிச்சை வாழ்க்கை நடத்தும் தொழிலாளர்களல்லாத தமிழர்களும் பிற இனத்தவர்களும் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ குடியேறினர். அவர்கள் சிறிய வர்த்தகர்களாகவோ பெரும் வர்த்தகர்களாகவோ, தோட்ட உடைமையாளராகவோ, அதிகாரிகளாகவோ, அரசாங்க ஊழியர்களாகவோ பிற அலுவலர்களாகவோ விளங்கினர்; விளங்குகின்றனர். அவர்கள் வளமாக வாழ்வதையும், வறுமையும் பட்டினியும் பஞ்சமும் அவர்களை நெருங்க அஞ்சுவதையும் அவதானிக்க முடிகின்றது.
தமிழகத்தில் இன்றுங்கூடக் கோடிக்கணக்கான உடலுழைப்பாளிகள், நாள் முழுதும் மாடாக உழைத்தும் வறுமையினாலும் பட்டினியினாலும் வாடி வதங்கிக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் சமூகத்தின் மேல்மட்டத்திலுள்ளோர் செல்வச் செழிப்பிலும் ஆடம்பர வாழ்விலும் திளைப்பதை அவதானிக்கலாம். இந்நிலைமை தமிழகத்தில் மட்டுமன்றித் தமிழகத்தை உள்ளடக்கிய இந்தியா முழுமையிலும், இலங்கையிலும் கூடக் காணத்தக்க ஒன்றாகும்
இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டமான இன்றுங்கூட, இலங்கையின் ஏனைய சமூகத்தினருடனோ சமூகப் பிரிவினருடனோ ஒப்பிடுகையில் மலையகத் தோட்டத் தொழிலாளரின் சமூக, பொருளாதார நிலைமைகள், கல்வி வசதி வாழ்க்கைத் தரம் முதலியன மிகவும் இரங்கத்தக்க நிலையிலேயே காணப்படுகின்றன. மிதமிஞ்சிய உழைப்பும் மிகக் குறைந்த வருவாயும் அறியாமையும் வறுமையும் சொல்லொணாத் துயரங்களும் அவலங்களும் அவர்களது சொத்துக்களாக விளங்குகின்றன. ஆரம்பத்திற் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தாலும், பின்னர் இலங்கைச் சுதேசிகளான சிங்கள, முஸ்லிம், தமிழ்ச் சமூகத்தினராலும் பல்வேறு துறைகளிலும் பல்வேறு வழிகளிலும்

Page 14
24 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகிறார்கள் ஒதுக்கப்படுகிறார்கள்; சுரண்டப்படுகிறார்கள்.
இலங்கையில் மட்டுந்தானா அவர்களுக்கு இத்தகைய பரிதாபகரமான நிலைமை? தமிழகத்திலும் - அவர்களது தாயகத்திலும் ஏறத்தாழ இதே நிலைமையே காணப்பட்டது. அதுவும் பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மட்டுமல்லாது அவற்றுக்கும் முன்னதாகப் பல நூற்றாண்டுகளாக இத்தகைய பரிதாபகரமானநிலைமை முடிவற்ற சோக நாடகமாகவும் தொடர்கதையாகவும் விளங்கி வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இந்தியாவினதும் அதன் ஒரு கூறானதமிழகத்தினதும் சமூக, பொருளாதார வரலாறுகளைக் கூர்ந்து கவனிக்கும் எவரும் இவ்வுண்மையை ஏற்றுக்கொள்வர்.
மலையகத் தொழிலாளர்களினதும் அவர்களது முன்னோர்களதும் இரங்கத்தக்க நிலைமைகளுக்கும் சொல்லொணாத் துயரங்களுக்குமான ஆதிமூலம் பல நூற்றாண்டுகள் முன்னதாகவே தமிழகத்தில் உரம்பெறத் தொடங்கிற்று பல நூற்றாண்டுகளாக உரம்பெற்றிருந்த அத்தகைய சமூக பொருளாதார அமைப்புகள் தமிழகத்தில் இன்றுங்கூடப் பெருமாற்றங்கள் எவற்றுக்கும் உட்படவில்லை. நிலவுடைமை ஆதிக்கமும் பண்ணை அடிமை அமைப்புமுறையும் தொடர்கதையாகவே விளங்குகின்றது. அதன் மேற்கட்டுமானங்கள் சில, சிற்சில மாற்றங்களுக்குட்பட்டிருக்கலாம் அவ்வளவே! இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு இலங்கை - இந்திய அரசுகளினால் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகளின்நிமித்தம் மலையகத் தோட்டத் தொழிலாளர்களிற் கணிசமான தொகையினர்தாயகம் திரும்ப வேண்டியேற்பட்டது. அவ்வாறு தாயகம் திரும்பியோரின் இன்றைய நிலைமை எத்தகையது? "நரியூருக்குப் பயந்து புலியூருக்குப் போன" கதைபோலவே, தாயகம்திரும்பியோர் தமது தாயகத்தில் இன்றுதவித்துக் கொண்டிருக்கின்றனர்.
மிக நீண்ட காலமாக இருளில் மூழ்கடிக்கப்பட்டிருந்த
இந்தியாவினதும் அதன் ஒரு கூறான தமிழகத்தினதும் சமூக பொருளாதார வரலாறுகள் கடந்த சில தசாப்தங்களாக வெளிச்சத்திற்கு

மலையகத் தோட்டத் தொழிலாளர் 25
வந்துகொண்டிருக்கின்றன. அதன் பிரதிபலிப்பாக இதுகாலவரை திட்டமிட்டு மறைக்கப்பட்டிருந்த பல உண்மைகள் அம்பலமாகத் தொடங்கியுள்ளன." இக் கட்டத்திலே, புதுமைப்பித்தன் கதைகளே ஞாபகத்திற்கு வருகின்றன.
புதுமைப்பித்தன் கதைகளைப் பற்றி ஆய்வாளர் ஒருவர்
குறிப்பிடுகையில் ஒரிடத்தில் ".அவரது கதைகள், அதுகாலவரை வெளிச்சத்திலே பகட்டித்திரிந்தவற்றை இருளிற்குள் ஒட்டின. இருளிலே மறைக்கப்பட்டிருந்தவற்றை வெளிச்சத்திற்கு இழுத்துவந்தன." எனக் குறிப்பிட்டுள்ளமை கூர்ந்து கவனிக்கத்தக்கது.
துன்பக் கேணி
புதுமைப்பித்தன் தமது துன்பக் கேணி’ என்னும் கதையில், இன்றைய மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் மூதாதையர்களைப் பற்றியும் அவர்கள் தமிழகத்திலே - தமது தாயகத்திலே சமூக பொருளாதார ரீதியாக எத்தகைய கொடூரமான முறையில் அடக்கி ஒடுக்கி ஒதுக்கப்பட்டிருந்தனர் என்பதையும் மிக நாகுக்காகவும் அதேசமயம் மிகத் துல்லியமாகவும் காட்டியுள்ளார். இதுபற்றி, இவ்வாசிரியராற் பிறிதோரிடத்தில் விரிவாக நோக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு எடுத்தாளுதல் பொருந்தும் ". துன்பக்கேணி என்னும் கதையிலே தமிழர் சமூகத்தின் தாழ்ந்த படித்தரங்களிலுள்ள ஒரு பகுதி மக்களின் அவல வாழ்வையும் வாழ்க்கைப் போராட்டத்திற் சிக்கித்தவித்து அவஸ்தைகளுக்குள்ளாகி அவர்கள் இடும் ஒலங்களையும் பண்ணையாளர்கள் - தேயிலைத் தோட்ட அதிகாரிகள் போன்ற பெரிய மனிதர்களின் சிறுமைத் தனங்களையும் மனப்பொருமலுடனும் ஆத்திரத்துடனும் எரிச்சலுடனும் வேதனைச் சிரிப்புடனும் எலும்பின் குருத்துக்களையே சிலிர்க்க வைக்கும் சோகக் குரலுடனும் திரைப்படக் காட்சிபோற் காட்டியுள்ளார்.

Page 15
26 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
"ஆசிரியர், கதையின் தொடக்கத்தில் எடுத்த எடுப்பிலேயே தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் அமைந்த ஒதுக்குப்புறமான வாசவன்பட்டிக் கிராமப் பகுதியையும் அதன் சூழலையும் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். ஏறத்தாழ கதையின் முதல் ஒன்பது பக்கங்களில், பின்னால் நிகழவிருக்கும் அவலங்களுக்கு அத்திவாரமாக அமையும் வகையிற் காணப்பட்ட வாசவன் பட்டிக்கிராமத்தின் சமூக அமைப்பையும் சமூக உறவுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் தாழ்த்தப்பட்ட மக்களின் இரங்கத்தக்க வாழ்க்கைநிலை, நம்பிக்கைகள், வாழ்வியற் சிந்தனைகள், ஆசைநிராசைகள், ஏக்கங்கள் வாழ்க்கைப் போராட்டங்கள் முதலியவற்றையும் கச்சிதமாகக் கதைப்போக்கோடு ஒட்டி விளக்கியுள்ளார்.
"வாசவன்பட்டிக் கிராமம் பற்றித் திருநெல்வெலி ஜில்லா வாசிகளுக்குக் கூடத் தெரியாது. ஜில்லாப் படத்திலும் அந்தப் பெயர் கிடையாது. காரணம், அது ஜில்லாப் படத்தின் மதிப்புக்குக்கூடக் குறைந்த கிராமம் பெற்றோல் நாகரிகத்தின் சின்னமான தாாபூசிய விதிகள்கூடத் தங்கள் மதிப்பிற் குறைந்தது என எண்ணி அக்கிராமத்திலிருந்து ஒன்றரை மைலுக்கப்பாலேயே செல்கின்றன. ஊரைச் சுற்றிலும் பனங்கூடலும் முள்ளும் சோற்றுக் கத்தாழையும்; வாசவன் பட்டிக் கிராமத்திற்குரிய பெருவீதி ஒற்றையடிப்பாதையே’என வாசவன்பட்டிக் கிராமத்தின் மதிப்பினை - மதிப்பின்மையை தமக்கேயுரிய நையாண்டி வார்த்தைகளில் விளக்கிச் சொல்லும் ஆசிரியர் படம் பிடித்துக் காட்டுவது போன்று கோவில், அர்ச்சகர் வீடு அக்கிரகாரம் பிள்ளையார் விதி, பண்ணையார் நல்ல குற்றாலம் பிள்ளையின் பெரிய விடு பண்ணையாரின் வயல்களை வாரமாகவோ குத்தகையாகவோ எடுத்துப் பயிர் செய்து வாழ்பவர்களின் குடிசை வீடுகள், ஊர்காவல் தெய்வமாகிய சுடலைமாடப் பெருமானின் பீடம் அதனையடுத்து அமைந்திருந்த மறவர் குடிசைகள், அதனைத்தாண்டி அமைந்திருந்த பறையர் சேரி என அச்சமுதாய அமைப்பையே தத்ரூபமாக, கண்முன் நிறுத்திக் காட்டுகிறார்.'

மலையகத் தோட்டத் தொழிலாளர் 27
மேற்கண்ட விளக்கம் புதுமைப்பித்தனின் வெறுங்கற்பனையல்ல. அவர்தம் வாழ்நாளில் நேரிற்கண்டும் கேட்டும், கற்றும் அறிந்த உண்மைகளையே வேதனையுடன் காட்டியுள்ளார்.
புதுமைப்பித்தன் காலத்தில் மட்டுமல்ல, அவருக்கு முன்பும் இதே நிலைதான். இன்றுங்கூடத் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வாசவன் பட்டிக் கிராமங்களையும் பள்ளர், மறவர் குடிசைகளையும் பறையர், சக்கிலியர், சண்டாளர் சேரிகளையும் நாம் நேரிற்காண முடிகின்றது. புதுமைப்பித்தன் காட்டிய வாசவன்பட்டிக் கிராம அமைப்பு குடிசைவீடுகள், சேரிகள், பண்ணையாரின் பெரியவீடு முதலியனவும் மலையகத் தொழிலாளர்கள் குடியேற்றப்பட்ட தோட்டங்களில் அவர்களுக்கு இருப்பிடமாக அளிக்கப்பட்ட ஸ்யன்கள் தோட்ட அதிகாரிகளின் வீடுகள், தோட்டத்துரையின் பங்களா’ முதலியனவும் பெருமளவிற்கு ஒற்றுமையுடையனவாக இருத்தல் கவனிக்கத்தக்கது.
புதுமைப்பித்தன் காட்டும் வாசவன்பட்டிக் கிராமங்களும் பள்ளர், பறையர்களும் அவருக்கும் முன்னதாகக் கோபாலகிருஷ்ண பாரதியார் காட்டும் புலைப்பாடிகளும் நந்தன்களும் அவருக்கும் முன்னதாகப் பள்ளு இலக்கிய ஆசிரியர்கள் காட்டும் பள்ளர் சேரிகளும் பள்ளர்களும், குறவஞ்சி ஆசிரியர்கள் காட்டும் குறவர்களும் அவர்களுக்கும் முன்னதாகப் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பெரியபுராணம் பாடியருளிய சேக்கிழார் காட்டும் ஊருக்குப் புறத்தே அமைந்த புற்குரம்பைக் குடில்கள் பல நிறைந்த புலையர் பாடிகளும் அவருக்கும் பல நூற்றாண்டுகள் முன்னதாகச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவும் மணிமேகலை ஆசிரியர் சாத்தனாரும் காட்டும் புறஞ்சேரிகளும் அறக்கோட்டங்களும் மனித நேயம் பூண்ட எவரது உள்ளத்தையும் உறுத்துவனவாக அமைந்துள்ளன. -
இன்றைய மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் மூதாதையர்கள், மேலே காட்டப்பட்டவர்களே என்பதிற் சிறிதும் ஐயமில்லை. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழக வரலாற்றைக் கூர்ந்து நோக்குமிடத்து, தமிழர்களே தம்முள் ஒரு பெரும் பகுதியினரைச்

Page 16
28 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
சமயம், சாதி, சாத்திரம், பாவபுண்ணியம் முதலியவற்றின் துணைக் கொண்டு மீளா அடிமைகளாக்கி, அவர்களது உழைப்பினைக் கொடுரமாகச் சுரண்டிச்சுகபோகமனுபவித்து வந்தனர் என்பது புலப்படும்
தமிழக வரலாற்றிற் கிறிஸ்தாப்த காலத்துக்குச் சற்று முன்னும் பின்னுமாக மெல்லமெல்ல அரும்பத் தொடங்கிய நிலவுடைமை - நிலப்பிரபுத்துவ ஆதிக்கமானது கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, அதாவது பல்லவப் பேரரசர்காலத்தில் ஆழ அகலமாக வேரூன்றி சோழப் பேரரசர் காலத்தில் உச்சநிலையை அடையலாயிற்று விசயநகர நாயக்கர் காலப்பகுதியிலே தொடர்ந்தும் நிலவுடைமை ஆதிக்கம் பெருவலிமையுடன் திகழ்ந்ததாயினும் பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் குறிப்பாக, பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியின் போதும் அதனைத் தொடர்ந்தும் சிறிது சிறிதாகத் தளரத் தொடங்கியது
பிரித்தானியராட்சிக் காலப்பகுதியில் வரவேற்கத்தக்க நல்ல பல மாற்றங்கள் ஏற்பட்டபோதும் நிலவுடைமை ஆதிக்கமும், அதனுடன் பின்னிப்பிணைந்திருந்த பண்ணை அடிமைமுறை சாதி, சமயாசாரங்கள், வழமைகள், நம்பிக்கைகள் முதலியனவும் அழயோடு அழியவில்லை. மாறாக நிலவுடைமை ஆதிக்கமானது காலத்துக்கேற்பத்தன்னை மாற்றிக் கொண்டு புது வடிவம் பெறலாயிற்று
விதிமுறைகளின் இறுக்கம்
நிலவுடைமை ஆதிக்கத்தின் பிரிக்க முடியாத அம்சங்களாகப் பண்ணை அடிமை முறை சாதி சமயாசாரங்கள், அவற்றின் அமைப்பு முறைகள் முதலியன அமைந்திருந்தன. காலத்துக்குக் காலம், நிலவுடைமை ஆதிக்கமானது வலிமைபெற்று வளர்ந்து வந்தபோது பண்ணை அழமை முறை சாதி சமயாசாரங்கள், நெறிமுறைகள், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் முதலியனவும் அவற்றைக் கட்டிக் காப்பதற்கான விதிமுறைகளும் மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டன

மலையகத் தோட்டத் தொழிலாளர் 29
சமூகத்தின் பெரும் பகுதியினர் குறிப்பாக உடலுழைப்பாளிகள், குத்திரர் என முத்திரை குத்தப்பட்டு உடலுழைப்புக்கு மட்டும் தகுதியாக்கப்பட்டனர். ஆரம்பத்திற் சூத்திரர் ஒரு பிரிவினராகக் கணிக்கப்பட்டாலும், காலப்போக்கில் சூத்திரருள்ளும் நூற்றுக் கணக்கான உபசாதியினர்-தாழ்த்தப்பட்டவர்களாக உருவாக்கப்பட்டனர். அவர்கள் எவ்வகையிலும் தலையெடுக்காவண்ணம் சுகபோக வர்க்கத்தினர் அரசியல், சமூகம் பொருளாதாரம் கல்வி சமயம் முதலிய துறைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். குத்திரர்களது உழைப்பினாற் கிடைக்கும் வருவாயின் பெரும் பகுதியைத் தமதாக்கிக் கொள்வதில் சுகபோக வர்க்கத்தினர் கண்ணுங்கருத்துமாக இருந்தனர். உடலுழைப்பாளிகளைத் துஞ்சவும் விடாது, விஞ்சவும் விடாது கவனித்துக்கொண்டனர்.
சமூகத்தின் தாழ்ந்த படித்தரங்களில் நசுங்குண்டு வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த உழைக்கும் வர்க்கத்தினர் என்றுமே தலைநிமிராவண்ணம், அவர்களது அகமும் புறமும் கட்டுப்படுத்தப் பட்டிருந்தன. உழைக்கும் வர்க்கத்தினர்தமது தாழ்வுற்றநிலைமைக்கான உண்மைக் காரணங்களை என்றும் அறிந்துகொள்ளாத வகையில் அவர்களுக்குக் கல்வி விருத்திமறுக்கப்பட்டிருந்தது. கூடவே உழைக்கும் வர்க்கத்தினரின் தாழ்வுற்ற நிலைமைக்கும், துன்ப துயரங்களுக்கும் அவர்கள் செய்த கன்மவினைகளும் பிறவுமே காரணங்கள் எனச் சமயம் சமய சாஸ்திரங்கள், தெய்வங்கள் முதலியவற்றின் பெயரால் வெவ்வேறு வழிகளிலும் வெவ்வேறு வகையிலும் போதிக்கப்பட்டன.
உழைக்கும் வர்க்கத்தினர், தமது அறியாமை இருளிலிருந்து வெளியேறாவண்ணம் பாதுகாத்துக் கொள்வதில் சுகபோக வர்க்கத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இவ்வாறு உழைக்கும் வர்க்கத்தினரின் அகத்தைக் கட்டிவைத்த சுகபோக வர்க்கத்தினர், அவற்றையும் மீறி உழைக்கும் வர்க்கத்தினர் கிளர்ந்தெழுந்த போதெல்லாம்.தமது அரசியல் பொருளாதார பலத்தினால் அவர்களை இலகுவாக அடக்கி ஆளவும் முடிந்தது.

Page 17
30 இலங்கையின் த்தமிழ் இலக்கியம்
மேற்கண்ட தமிழ் நாட்டுத் தொழிலாளர் நிலைமைகளையும், அவர்களை அத்தகைய நிலையில் வைத்திருப்பதற்குச் சமூக பொருளாதார மேலாதிக்கம் செலுத்தியோர் கையாண்ட உபாயங்களையும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் வழித்தோன்றல்களான f4 இலங்கையின் மலையகத் தொழிலாளர்களின்நிலைமைகளையும் அவர்களை அத்தகைய நிலையில் வைத்திருப்பதற்குத் தோட்ட உடைமையாளர்களும் அதிகாரிகளும் கையாளும் உபாயங்களையும் ஒப்பு நோக்குமிடத்து அவற்றுக்கிடையே உள்ள நெருங்கிய ஒற்றுமைகள் புலப்படும்
சுருங்கக் கூறின், பண்டைய மேலைநாடுகள் சிலவற்றிலும் மத்திய ஆசியாவிலும் இடம் பெற்றிருந்ததைப் போன்றதொரு அடிமை முறை தொடக்கத்தில் வட இந்தியாவிலும் காலப்போக்கில் தென்இந்தியாவிலும் இடம் பெறலாயிற்று மேலை நாடுகளில் வெளிப்படையாகவே அடிமை முறையும் சுரண்டலும் இடம் பெற்றன. ஆயின் இந்தியாவில் வருணம் சாதி குலம் கோத்திரம் சமயம் சாத்திரம் கன்மவினைக் கோட்பாடு மறு பிறப்புக் கொள்கை முதலிய திரைகளுக்குப் பின்னால், மிகச் சாமர்த்தியமானமுறையில் அடிமைமுறையும் சுரண்டலும் இடம்பெற்றன. இதுபற்றி வரலாற்றாசிரியர் ஒருவர் ". புராதன கிரீஸ், ரோம் சில மேற்காசிய நாடுகள் ஆகியவைகளில் உருவான அழமை முறை அமைப்புக்கும், இந்தியாவில் உருவான இந்த வருண ஜாதி அமைப்புக்குமிடையில் அடிப்படையான வேற்றுமைகள் ஒன்றுமில்லை. அடிமை முறையைப் போலவே வருண ஜாதி முறையினுடையவும் முக்கியமான அம்சம் சுரண்டுவோர் - சுரண்டப்படுவோரிடையேயுள்ள முரண்பாடுதான். ஒன்றில் அடிமைகள்ான்று பகிரங்கமாக அழைக்கப்பட்ட பெரும்பான்மையான மக்கள் சுரண்டலுக்கு இரையாக்கப்படுகின்றார்கள். மற்றொன்றில் ஜாதி என்ற திரையைப் பிடித்துக் கொண்டுள்ளார்கள் இந்த வித்தியாசம்தான் உள்ளது." * எனக் கூறியுள்ளமை மனங்கொளத்தக்கது.

மலையகத் தோட்டத் தொழிலாளர் 31
தமிழகத்தின் புகழ்பூத்த வரலாற்றுக் காலகட்டமாகக் கொள்ளப்படும் செல்வச் செழிப்புமிக்க சோழப் பேரரசர் காலத்திற்கூட, மேற்கண்ட நிலைமைகள் மிக இறுக்கமாக இடம் பெற்றிருந்தமையையும் மனுதர்ம சாஸ்திர விதிகளைப் பின்பற்றித்ரசதர்மமும் சாதிதங்மமும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டமையையும் அவற்றை மீறும் உழைக்கும் வர்க்கத்தினர் கொடூரமாகத்தண்டிக்கப்பட்டமையையும் அக்கால வரலாற்றுச்சான்றுகள் நிரூபித்து நிற்கின்றன.
எடுத்துக்காட்டாக : புகழ்பூத்த முதலாம் இராஜராஜன் ஆட்சிக் காலத்தில் வளிப்பளுவினைத்தாங்கமாட்டாத குத்திரர்கள் -தாழ்த்தப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினர், வரி எதிர்ப்புப் போராட்டம் நடத்திய மையினையும் அப்போராட்டம் கொடூரமாக நசுக்கப்பட்டமையினையும் அதே சமயம் விசேட சலுகைகள் - வரி நீக்கம் முதலியன கோரிக் கிளர்ந்தெழுந்த பிராமணர்களுக்கு கொடுந் தண்டனை வழங்கப்படாதது மட்டுமின்றிச் சலுகைகள் வழங்கப்பட்டமையினையும் அக்காலச் சாசனங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. f6
பல்லவ, சோழப் பேரரசர் காலப்பகுதிகளிலும் அடுத்துவரும் காலப்பகுதிகளிலும், மனுதர்ம சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டதற்கமைய, ஏனையோருக்கு அடங்கி அழுக்காறு கொள்ளாது இரவு பகல் ஓயாது பணிபுரிதல் ஒன்றே குத்திரர்களின் தலையாய கடமை என்பதும் பணிபுரிய வேண்டுமே தவிரப் பலனை எதிர்பார்க்கக்கூடாது என்பதும் முக்கிய நியதிகளாகக் கொள்ளப்பட்டன. இந்நியதிகளை மீறும் குத்திரன் நாத்திகனாகவும் சமூகத்துரோகியாகவும் சமூகப் பிரஷ்டம் செய்யப்பட வேண்டியவனாகவும் கருதப்பட்டுக் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டான். இதே விதிமுறைகள் சிற்சில வேறுபாடுகளுடன் இன்றைய மலையகத் தோட்ட நிர்வாக முறைக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பொருந்துமாற்றை ஒப்பு நோக்கி அறியலாம் f

Page 18
32 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
செல்வச் செழிப்பு
சோழப் பேரரசர்காலப்பகுதியில், பல்வேறு வழிகளிலும் ஈட்டப்பட்ட செல்வமிகுதியினாற் பேரரசு செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது. ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக, நாட்டிலே அமைதி நிலவியது பல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டது; கிராம சமூக அமைப்பும், உள்ளுராட்சி முறையும் வலிமை பெற்றுத் திகழ்ந்தன. இத்தகைய சூழ்நிலைகள் காரணமாகச் சமூகத்தின் தாழ்ந்த படித்தரங்களில் வாழ்ந்த உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கைநிலை, போற்றத்தகுந்ததாக இருக்காவிடினும் மகாபரிதாபத்திற்குரிய நிலைக்குத் தள்ளப் படவில்லையெனலாம்
சோழப் பேரரசர் காலப் பகுதியிலே, தாழ்த்தப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினர் எவ்வளவுதான் கேவலமாக நடத்தப்பட்டபோதும் துயரங்களுக்குள்ளாகிய போதும் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்த போதும் அவர்களுக்கெனச் சில உரிமைகளும் சலுகைகளும் அறத்தின் பெயரால் வழங்கப்பட்டிருந்தன. தாழ்த்தப்பட்ட மக்கள், அயலூர்களுக்கும் கோயில்களுக்கும் சென்றுவரமுடிந்தது. தாம் விரும்பாதவிடத்து தத்தமது குலத்தொழிலை விடுத்து வேறு தொழில்களில் ஈடுபட உரிமை இருந்தது. அதேபோன்று, தமது உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப்பெற முடியாதவிடத்தும் அக்கால மானிய அடிப்படையில் உணவு உரிமை'- சீவனம் - இருந்தது. பசிக் கொடுமையைத் தீர்க்க வழியின்றித் தவித்தவர்களுக்கும் அக்காலத்திற் பெருஞ் செல்வச் செழிப்புமிக்க நிறுவனங்களாக விளங்கிய பிரமாண்டமான பல கோயில்கள் புகலிடமளித்து வயிற்றுத் தீயைத் தணித்தன. ஆயின், இஜையாவும் அடுத்துவரும் காலப்பகுதிகளில் அவர்களுக்கு மறுக்கப்பட்டன.
சோழப் பேரரசின் வீழ்ச்சியை அடுத்துவரும் காலகட்டங்களில் நிலைமைகள் மெல்லமெல்லத் தலைகீழாக மாறத் தொடங்கின. சோழப் பேரரசர் காலப்பகுதியில் உன்னத சிறப்புடன் விளங்கிய கிராம சமூக அமைப்பு முறை சீரழியத் தொடங்கிற்று நாட்டில் அமைதியின்மையும்

மலையகத் தோட்டத் தொழிலாளர் 33
கொந்தளிப்பும் அதிகரிக்கலாயின. நாட்டின் பொருளாதாரநிலை சீர்கேடடையலாயிற்று. இத்தகைய நிலைமைகள், சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அன்றாடம் காய்ச்சிகளான உழைக்கும் வர்க்கத்தினரையே படுபயங்கரமாகப் பாதிக்கலாயின. அவலங்களில் அதல பாதாளத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டனர். அடிக்கடி ஏற்பட்ட பஞ்சங்கள் கூட சமூகத்தின் மேல் மட்டத்தினரைப் பாதித்ததில்லை; சமூகத்தின் அடிமட்டத்து மக்களையே வெகுவாகப் பாதித்து அவர்களது உயிர்களைக் குழத்து ஏப்பம் விட்டன.
மிகப் பாரதூரமான முறையிலே சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் சுரண்டல் முறைகளும் அதிகரித்தன. கொடுமைகளும் அக்கிரமங்களும் கொள்ளையடிப்புகளும் சுரண்டலும் எல்லையற்று இடம் பெற்றன.
சோழப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து சிலகாலம் இரண்டாம் பாண்டியப் பேரரசு சிறப்புடன் விளங்கிற்று. ஆயின், அதனைத் தொடர்ந்து குறிப்பாக கிபி பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே தமிழகத்தை உள்ளடக்கிய தென்னிந்தியா முழுவதிலும் பெருங் குழப்பங்களும் கொந்தழிப்புகளும் அந்நியரின் படையெடுப்புகள், கொள்ளையடிப்புகள் முதலியனவும் தொடர்ச்சியாக இடம்பெற்றமையால் நாடு அமைதி இழந்து தவித்தது. மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்குள்ளாகினர். நாட்டின் அரசியல் சமூக, பொருளாதார நிலைமைகள் சீர்கேடுற்றன.
இந்திய வரலாற்றாசிரியர்களிடையே வேறுவேறு விடயங்களிற் கருத்து முரண்பாடுகள் நிலவினாலும் மேற்கண்ட உண்மைகளை ஒரே குரலில் ஏகமனதாகவே தெரிவித்துள்ளனர். தென்னிந்திய வரலாற்றறிஞர் எனப் போற்றப்படும் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி முதல் டி.வி மகாலிங்கம் கிருஷ்ணசுவாமிதிநா. சுப்பிரமணியன், கோசாம்பி முகர்ஜி முதலியோர் தெரிவித்துள்ள கருத்துகள் இவ்வகையிலே நோக்கத் தக்கவை.

Page 19
34 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
சோழப் பேரரசின் வீழ்ச்சியையடுத்துத் தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார அமைப்பு முறையின் அடிப்படை அம்சங்களாக விளங்கிய நிலமானிய அமைப்புமுறையும் அதனுடன் பின்னிப்பிணைந்திருந்த சாதி அமைப்பு முறை சாதி, சமயாசாரங்கள் முதலியன மேன்மேலும் இறுக்கம் பெறலாயின. சோழரின் பின், தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய பாண்டியர் இஸ்லாமியர், விசயநகர நாயக்கர் மராட்டியர் பிரித்தானியர் தவிர்ந்த ஏனைய ஐரோப்பியர் ஆகியோரது ஆட்சிக் காலப்பகுதிகளிற் கூட, மேற்கண்ட அம்சங்களிற் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை. ஆயின், பிரித்தானியர் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்படலாயின.
கிபி பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியளவில் விசயநகரப் பேரரசு தோற்றம் பெற்று வலிமையுறத் தொடங்கியதும் படிப்படியாக நாட்டின் சீர்கேடான நிலைமைகள் மாறத் தொடங்கின. ஆரம்பத்தில் விசயநகரப் பேரரசின் நேரடி ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த தமிழ்நாடு காலப்போக்கில் விசயநகரப் பேரரசின் பிரதிநிதிகளான நாயக்க மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டது.
விசயநகர-நாயக்க மன்னர்கள் (கிபி பதினான்காம் நூற்றாண்டு தொடக்கம் பதினேழாம் நூற்றாண்டு இறுதிவரை) சமயத்தின் காவலர்களாக மட்டுமின்றிச் சாதியின் காவலர்களாகவும், தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டு செயற்பட்டனர். அவர்களது ஆட்சிக் காலப்பகுதியில், முன்னர் என்றும் இல்லாத அளவிற்குச் சாதி அமைப்பு முறைகளும் சாதிசமயாசாரங்களும் ஒன்றுடன் ஒன்று மிக இறுக்கமான முறையிற் பின்னிப் பிணைக்கப்பட்டன. அதுகாலவரை தமிழகத்தில் நிலவிய சாதிப் பிரிவினைகள் போதாவென, மேன்மேலும் புதிய புதிய சாதிகள் தமிழகத்திற்கு வடக்கேயிருந்து வந்து சேர்ந்தன. ஒவ்வொரு சாதிக்குள்ளும் பல உபசாதிகள் தோற்றுவிக்கப்பட்டன. எடுத்துக் காட்டாகப் பாஞ்சாலருள் எழுபத்து நான்கு பிரிவுகள் காணப்பட்டன. கம்மாளருள் கொல்லர் பொற்கொல்லர் தச்சர் விக்கிரம் செய்வோர் பித்தளை வேலை செய்வோர்ானப் பல பிரிவினர் காணப்பட்டனர்.

மலையகத் தோட்டத் தொழிலாளர் 35
ஆயிரம் சாதிகள்
தொம்பரர், கைக்கோளர், தோட்டியர், தனக்காரர், சிவியார், சேணியர், பாஞ்சாலர், சாயக்காரர், நூல் நூற்போர், செளராஷ்டிரர், ரெட்டிகள், மயிர்வினைஞர், வண்ணார், இடங்கை-வலங்கையினர், நுளைஞர் பள்ளர், பறையர், குறவர், சக்கிலியர் சண்டாளர் கம்மாளர் எனச் சாதி வகைகளில் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இந்துக்களுள் 2370க்கும் (இரண்டாயிரத்து முந்நூற்று எழுபது) மேற்பட்ட சாதிகள் காணப்பட்டமையை, இந்திய சமுதாய வரலாறு சுட்டிக்காட்டுகின்றது.
இத்தகைய நிலைமைகள் இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்வதைக் கண்ணுற்ற பாரதியார் மனப் பொருமலுடன்,
நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த
நிலைகெட்ட மனிதரைநினைத்துவிட்டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
கோடி என்றால் அது பெரிதாமோ?
எனப் பாடியுள்ளதுடன் அமையாது ஜாதிக் குழப்பம்’ என்னும் கட்டுரையில் மிகுந்த கவலையுடன் பின்வருமாறு கூறியுள்ளார்:
இங்ஙனம் ஜாதிக்கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில் மனுஷ்ய ஸ்வதந்திரம் எuமத்துவம் சகோதரத்துவம் என்னும் கொள்கைகளை நிலைநிறுத்துவதென்றால் அது சாதாரண வேலையா? கொஞ்ச ஜாதியா? அவற்றில் உட்பிரிவுகள் கொஞ்சமா? பறை பதினெட்டாம் நுளை நூற்றெட்டாம்! அதாவது பறையர்களுக்குள்ளே 18 பகுதிகளும், நுளையர்களுள் 108 பகுதிகளும் இருக்கின்றனவாம். மேலும் பறையன், பள்ளன், சக்கிலியன், எல்லோரும் வெவ்வேறு ஜாதிகள். ஒன்றுக்கொன்று பந்தி போஜனம் கிடையாது. பெண்கொடுக்கல் வாங்கல் கிடையாது. கேலி கேலி/

Page 20
36 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
பெருங்கேலி இங்ஙனம் ஏற்கனவே மலிந்து கிடக்கும் பிரிவுகள் போதாவென்று புதிய புதிய பிரிவுகள் நாள்தோறும் ஏற்பட்டு வருகின்றன." 2 ஒவ்வொரு பகுதியினரும் தத்தமக்கென் ஒதுக்கப்பட்ட தொழில் முறைகள், ஆசார அனுஷ்டானங்கள் முதலியவற்றை எக்காரணம் கொண்டும் மீறமுடியாது மீறுவோர் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தமக் கோ தமது பிள்ளைகளுக்கோ நாமகரணஞ் சூட்டுதல், உடை-அணிவகைகள், வழிபடுதெய்வங்கள், குடியிருப்புகள் முதலியவற்றிலும் கூட, அவர்களுக்கென விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறக்கூடாது. தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் ஊரின் ஒதுக்குப்புறத்தேயமைந்த சேரிப்புறங்களாக விளங்கின. முன்னைய காலப்பகுதிகளில் மட்டுமின்றி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கூட, இவ்வாறு பலவகையிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒதுக்கப்பட்டிருந்தமையைப் புதுமைப்பித்தன் தமது துன்பக் கேணி’ என்னும் சிறுகதையிலே திறம்படத் தத்ரூபமாக சித்தரித்துள்ளார். அக்கதையிலே அவர் காட்டும் வாசவன்பட்டிக் கிராமமும், அதன் சுற்றுப்புறங்களும் அவர்களது பெயர்களும் அவர்களுக்கும் எஜமானர்களுக்குமிடையிலான உறவுகளும் உன்னிப்பாக நோக்கத்தக்கவை
புதுமைப்பித்தன் காலத்தில் மட்டுமல்ல, மிக அண்மைக்காலம் வரையிலும் தமிழகத்திலும் இலங்கையின் வடக்கு கிழக்குப்பகுதிகளிலும் இத்தகைய நிலைமைகளிற் பெருமாற்றங்கள் எவையும் ஏற்பட்டதில்லை. இலங்கையின் வடபகுதியில் கடந்த நான்கு ஐந்து தசாப்தங்களிலும் அதற்கு முன்பும் இடம்பெற்ற சாதிக் கொடுமைகளை மிகச் சிறந்த முறையில் டானியல் டொமினிக் ஜீவா, கணேசலிங்கன், கதிர்காமநாதன், ரகுநாதன், தெணியான், அகஸ்தியர் யோகநாதன், எஸ். பொன்றுத்துரை, சோமகாந்தன்முதலியோர் தமது ஆக்கங்களில் வெளிப்படுத்தியுள்ளமை அவதானிக்கத்தக்கது.

மலையகத் தோட்டத் தொழிலாளர் 37
மேற்கூறப்பட்ட நிலைமைகள், மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பொருந்தக்கூடியதே. தோட்டத் தொழிலாளர்களின் பெயர்கள், தோட்டத்து அதிகாரிகள் அவர்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள், அடக்குமுறைகள், அலட்சிய மனோபாவம், தொழிலாளர்களை நடாத்தும் பாங்கு, குடியிருப்புகள், தொழிலாளரின் வழிபடுதெய்வங்கள், வழிபாட்டு முறைகள், சமயாசாரங்கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் முதலியயாவும் மேற்கூறப்பட்டவற்றுடன் பெருமளவு ஒத்திருப்பதை அவதானிக்கலாம் ஏலவே கூறியுள்ளதுபோல் நாம் மேலேகண்ட தாழ்த்தப்பட்ட மக்கள், உடலுழைப்பாளிகள் முதலியோரின் சந்ததியினரே இன்றைய மலையகத் தோட்டத் தொழிலாளர்களுள் மிகப் பெரும்பாலோராவர். அதேபோன்று பர்மா, நியூனியன், மொரீசியஸ், ரிறினிடாட் முதலிய தீவுகளிலும் நாடுகளிலும் கொண்டு சென்று குடியேற்றப்பட்ட தொழிலாளர்களுள் மிகப் பெரும் பகுதியினர் தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் சந்ததியினரேயாவர். இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களும் இத்தகையோரே என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விசயநகர - நாயக்கர் காலப் பகுதியிலேயே முன்னர் என்றும்இல்லாத அளவிற்குத் தமிழகத்திலே பிராமணர்களின் ஆதிக்கம் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது. பிராமணர்கள் பெரும் நிலப்பிரபுக்களாகவும் அமைச்சர்களாகவும் படைத்தலைவர்களாகவும் பிரதானிகளாகவும், இராயசங்களாகவும் விளங்கினர். இவை தமிழகத்திலே பிற்காலத்தில் எத்தகைய விளைவுகளைத் தோற்றுவித்தன என்பதை இங்கு விளக்கிக் கூறத்தேவையில்லை.
விசயநகர - நாயக்கர் காலப் பகுதியிலிருந்தே முன்னர் என்றும் இல்லாத அளவிற்குத் தமிழகத்தின் தாழ்ந்த பழத்தரங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலை ஆதலபாதாளத்தை எட்டத் தொடங்கிற்று. தமிழகத்தின் வளம் மிகுந்த நிலப்பரப்பிற் பெரும்பகுதி பிராமணர்களின் உடைமையாயிற்று மிகுதிநிலங்கள் சமூகத்தின் மேல்மட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த வணிகர் உழுவித்துண்ணும் வேளாளர் முதலியோரிடம்

Page 21
38 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
சிக்கிக்கொண்டது. இந்நிலையில், சமூகத்தின் தாழ்ந்த பழத்தரங்களில் வாழ்ந்து கொண்டிருந்த கோடிக்கணக்கான உடலுழைப்பாளிகள் சொந்த நிலமின்றி, சுதந்திரமின்றி நிலப்பிரபுக்களின் நிலங்களிற் பண்ணை அடிமைகளாகவும் விவசாயம் தவிர்ந்த பிற தொழில்களில் ஈடுபட்டோர், நிலப்பிரபுக்களின் தயவிலும் வாழ வேண்டியநிர்ப்பந்தம் ஏற்படலாயிற்று.
பண்ணை அடிமைகளாக வாழ்ந்த உடலுழைப்பாளிகளுக்கு எவ்வித உரிமைகளோ சுதந்திரமோ சொத்துரிமையோ கிடையாது அவர்கள் நிலப்பிரபுக்களுக்கு வாழ்நாளெல்லாம் பணிவிடை செய்வதொன்றையே குறிக்கோளாகக் கொள்ளவேண்டும் பணிவிடை செய்ய மறுத்தாலோ, உரிமை கோரினாலோ, நிலப்பிரபுக்களின் கட்டளைகளை மீறினாலோ மனிதாபிமானமற்ற முறையிற் குரூரமாகத் தண்டிக்கப்பட்டனர்.
கடனாதிக்கம்
இதுபற்றி வரலாற்றறிஞர் ராதா கமால் முகர்ஜிதமது இந்தியாவின் நிலப் பிரச்சினைகள்’ என்னும் நூலில், "இந்தியாவின் பொருளாதார ஏணியின் அடித்தட்டில் நிரந்தர விவசாயத் தொழிலாளர் நிற்கின்றனர். இவர்கள் கூலிப்பணம் பெறுவது அபூர்வம். இவர்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள். தேசத்தின் பல பாகங்களிலுமுள்ள சம்பிரதாயப்படி ஜமீன்தார் அல்லது மிராசுதார் தங்கள் வேலைக்காரனை கடன் வாங்கும்படி செய்து அதன் மூலம் அவன் மீது ஆதிக்கம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவன் சந்ததி மீதே இதன் மூலம் அவர்களுக்கு ஆதிக்கம் ஏற்படுகிறது.
"பம்பாய் இராஜதானியில் துப்ளாக்களும், கோலிகளும் இருக்கின்றனர். இவர்கள் ஏறத்தாழ அழமைகளே. தங்கள் எஜமானர்களிடம் இவர்களிற் பல குடும்பங்கள் பல தலைமுறைகளாக வேலை செய்து வந்திருக்கின்றனர். தென்மேற்குச் சென்னையில் ஈழவர்கள், புலையர்கள், செருமன்கள், கோவியர்கள் முதலியவர் களெல்லோரும் நடைமுறையில் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். கிழக்குக் கடற்கரைப் பிரதேசத்தில் நிலத்தின் மீது பிராமணருடைய

மலையகத் தோட்டத் தொழிலாளர் 39
ஆதிக்கம் பலமானது விவசாயத் தொழிலாளருள் பெரும்பான்மையோர் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர். அவர்களிற் பலர் பண்ணையடிமைகள். கடன் கொடுத்தவன் இறந்தாலும் நிலத்தை விற்றாலும் பண்ணையடிமைகள் நிலச்சுவான்தாருக்குக் கைமாற்றிக் கொடுக்கப்படுகிறார்கள். m." எனக் கூறியுள்ளமை ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.
இத்தகைய நிலைமைகள் விசயநகர - நாயக்கர் காலப் பகுதியிலிருந்து சிற்சில மாறுதல்களுக்கும் நெளிவு சுழிவுகளுக்கும் உட்பட்டு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம்
மேற்கூறப்பட்ட அம்சங்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் எத்துணைப் பொருத்தமுடையன என்பதை அவதானிக்கலாம் உண்மையில், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் மூதாதையர்களே தமிழகத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக மீளா அடிமைகளாக்கப்பட்டிருந்தனர். கடந்த இரண்டாயிரமாண்டுக் காலத் தமிழகச் சமூக வரலாற்றை மனிதாபிமானத்துடன் மிக உன்னிப்பாக அவதானிக்கும் போது, பஞ்சப்பட்ட அந்த அப்பாவி மக்களின் இன்னல்களும் பரிதாபகரமான நிலையும் காலத்துக்கு காலம் அதிகரித்து வந்தமையினையும் அவர்களது அவலக்குரல் ஈனஸ்வரமாகவும் உள்ளத்தை உருக்கும் சோக கீதமாகவும் ஆழமான கிணற்றின் அழஆழத்திலிருந்து கேட்பது போல் ஒலிப்பதையும் உணரமுடிகின்றது.
இவ் அப்பாவி மக்கள், அங்கு தமிழகப் பண்ணைகளில் தமிழர்களாலேயே அடிமைகளாக்கப்பட்டிருந்தனர். அவர்களது சந்ததியினர் இங்கு மலையகத் தோட்டங்களில் அந்நியராலும் தம் இனத்தவராலும் அடிமைகளாக்கப்பட்டனர். மேற்கண்ட உண்மைகளை அறிந்தோ அறியாமலோ துன்பக்கேணி தூரத்துப் பச்சை முதலிய சிறுகதைகளும் நாவல்களும் விரிவாகச் சித்திரித்துள்ளன. இவை பற்றிப் பின்னர் விரிவாக நோக்கப்படும்

Page 22
40 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
பிரித்தானியர் ஆட்சி இந்தியாவில் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளிற் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. எனினும், அத்தகைய மாற்றங்களால் சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தினரும், புதிதாக உருவாகிய மத்தியதர வர்க்கததினரும் பெருநன்மைகளையும் சிறப்புச் சலுகைகளையும் பெற்று முன்னேறும் வாய்ப்புக் கிடைத்தது. ஆரம்பகாலத் தமிழ் நாவல்களில் இத்தகைய நிலைமைகள் துல்லியமாகப் பிரதிபலிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். ஆயின் சமூகத்தின் அடித்தளத்தில் நசுக்குண்டு உழன்று கொண்டிருந்த ஏழைகளின் நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எவையும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, அவர்களதுநிலைமை மேன்மேலும் மோசமாகியது
பிரித்தானியர் ஆட்சியின் விளைவாக நிலப்பிரபுத்துவத்தின் வலிமை சற்றே தளர்ந்ததேயொழிய, அழியவில்லை. மாறாக, புதிதாக உருவாகிய முதலாளித்துவம், மத்தியதர வர்க்கம் ஆகியவற்றுடன் சாமார்த்தியமான முறையில் நிலப் பிரபுத்துவம் இணைந்து கொண்டமையினை அவதானிக்கலாம். இதன் காரணமாக, சமூக பொருளாதார மேலாதிக்கம் என்றும் போல நிலப்பிரபுக்களிடமும் புதிதாக உருவாகிய முதலாளித்துவ வர்க்கத்திடமும் சிக்கிக் கொள்ளலாயிற்று இது பற்றி வரலாற்றாசிரியர் ஒருவர், ". ஆனால் இந்தியாவில் வளர்ந்துவந்த பூர்ஷ்வாக்கள்’ கலப்பற்ற ஒரு வர்க்கமல்ல. அதில், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் மிச்ச சொச்சங்களை ஏராளமாகக் காணலாம் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைச் சேர்ந்த நபர்கள்தான், பின்னர் பூர்ஷ்வா'அறிவாளிகளாகவும் அதன்பின் தொழில் முதலாளிகளாகவும் மாறினர். தங்களுக்கு ஏற்பட்ட இந்தப் பூர்ஷ்வாமாறுதலுக்குப் பிறகும் முன்போலவே நிலவுடைமை அமைப்புடன் இருந்த உறவை நீடித்து வந்தவர்கள்தான் அவர்களிற் பெரும்பாலானோர்.
'இது மட்டுமன்றி வருண-ஜாதி முறையினுடையவும், மதச்
சமுதாயங்களுடையவும் அடிப்படையில் உருவான ஒரு சமூக வாழ்க்கையை அவர்கள் பின்பற்றினர். ஜாதி மதம் முதலிய முதலாளித்துவத்திற்கு

மலையகத் தோட்டத் தொழிலாளர் 4f
முந்திய சமூக அமைப்பினுடையதான உணர்வும் சிந்தனையும் அவர்களிடையே அலைமோதிக் கொண்டிருக்கவும் செய்தன. இவ்வாறு முதலாளித்துவ அமைப்பிற்கு ஏற்றதான பொருளாதார உறவுகளோ, சமூக வாழ்க்கையோ, கலாச்சார முன்னேற்றமோ பூரணமாக உட்கொள்ள,
தலைமையில் இந்திய தேசிய இயக்கம் வளரத் தொடங்கிய போது அதற்குள் பலமானநிலப்பிரபுத்துவச் செல்வாக்கு ஏற்பட இந்தச் சூழ்நிலை வழிவகுத்தது. பிரான்ஸ் முதலிய நாடுகளில் ஏற்பட்டதைப் போன்ற ஒரு முழுமையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் புரட்சி நடத்தி கிராமப்புற ஏழைகளைநிலப்பிரபுத்துவ-நிலவுடைமை ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பூர்ஷ்வா தலைமையிலான இந்திய தேசிய இயக்கம் எக்காலத்திலும் முன்வரவில்லை. தேசியப் போராட்ட வரலாற்றில் மிக அதிகமான அளவில் மக்களை அணிதிரட்டிய காந்தி-நேரு காலத்தில் கூட சமஸ்தான மன்னர்கள், ஜமீன்தார்கள், மற்றும் பிரபுத்துவ நிலவுடைமையாளர்கள் ஆகியோரின் அதிகாரங்களையும் உடைமைகளையும் நஷ்ட ஈடின்றி ஒழிப்பது என்ற ஆழ்வா கண்ணோட்டத்துடன் பிரச்சினையை அணுகவில்லை." *எனக் கூறியுள்ளமை கூர்ந்து கவனிக்கத்தக்கது.
சாதகமான குழ்நிலை
இதன் காரணமாக பிரித்தானியராட்சி ஏற்படுவதற்கு முன்பு இந்தியாவிலும் அதன் ஒரு கூறான தமிழகத்திலும் சமூக, பொருளாதார ரீதியாக மேலாதிக்கம் பெற்றிருந்தவர்களே தொடர்ந்தும் பிரித்தானியராட்சிக் காலத்திலும் அதற்குப் பின்பும் கூடத் தமது மேலாதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டவும் பிரித்தானியர் ஆட்சி நிலைபெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட பலதுறை முன்னேற்றங்களால் விளைந்த பயன்களை அனுபவிக்கவும்-ஆங்கில மொழி அறிவு விருத்தி நவீன கல்வி வளர்ச்சி தொழில்நுட்ப முன்னேற்றங்கள் - அரசியல், பொருளாதார, சமூக நடவடிக்கைகளிலும் நிர்வாகத் துறையிலும் முன்னணியில் நிற்கவும் ஏற்ற சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. இவ்வகையிலே தமிழகத்தைப் பொறுத்த வரையில் பிராமணர்களே எல்லா

Page 23
42 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
வகையிலும் முதலிடம் வகிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகக் கல்வித் துறையையும் சமயத்தையும் பொருளாதாரத்தையும் தமது முதுசங்களாக ஆக்கிக் கொண்ட பிராமண சமூகத்தினருக்கு புதிதாக வந்து சேர்ந்த நவீன கல்விமுறை, ஆங்கிலக் கல்வி விருத்தி முதலியவற்றில் முன்னேறவும் அரசாங்க நீதி நிர்வாகத் துறைகளில் முன்னணி வகிக்கவும் தமது சமூக, பொருளாதார மேலாதிக்கத்தை மேலும் வலுப்பெறச் செய்யவும் ஏற்ற வசதிகளும் வாய்ப்பும் கிடைத்தன.
இந்தியாவிலேயே அன்று மிகக்கொடூரமானமுறையில் சாதி ஆசார இறுக்கமும் சாதித் திமிரும் சாதிக் கொடுமைகளும் தமிழகத்திலேயே காணப்பட்டது. ஏனையோரைக் காட்டிலும் வறுமையும் பஞ்சமும் தாழ்த்தப்பட்ட மக்களையே மிக மோசமாகத் தாக்கின. இது பற்றிப் பாரதியார் கூறியுள்ள கருத்துகள் சில வருமாறு:
"பெரும்பாலும் தாழ்ந்த ஜாதியார்களே அதிக ஏழைகளாக இருக்கிறார்களென்பது மறுக்க முடியாத விசயம் உழைப்பும் அவர்களுக்குத்தான் அதிகம் அதிக உழைப்பு நடத்திவரும் வகுப்பினருக்குள்ளே அதிக வலுவு ஏற்படும் அநீதி உலக முழுவதிலும் இருக்கிறது. எனினும் நம்முடைய தேசத்தைப் போல இத்தனை மோசமான நிலைமை வேறெங்கும் இல்லை."
" ........... பசித்துன்பம் எல்லோருக்கும் பொதுவாக
இருந்தாலும் கீழ் வகுப்பினரை அதிகமாகப் பாதிக்கிறது. நாட்டில் பஞ்சம் நேரிட்டால் பஞ்சமர் முதலிய தாழ்ந்த வகுப்பினர் அதிகமாகச் சாகிறார்கள். பறையரும் புலையரும் பள்ளரும் சக்கிலியரும் நம்மைப்போல் ஹிந்துக்கள் என்பதையும் விபூதி நாமம் போட்டுக் கொண்டு நமது தெய்வங்களையே வணங்குவோரென்பதையும் மடாதிபதி புரோகிதர் குருக்கள், முதலியவர்கள் சற்றே மறந்துபோய் விட்டதாகத் தோன்றுகிறது."

மலையகத் தோட்டத் தொழிலாளர் 43
7.ա. இத்தனை கொடிய ஏழ்மை நிலையில் பெரும்பாலும்
பள்ளர்பறையர்களும் குத்திரர்களில் தாழ்ந்த வகுப்பினருமே இருக்கிறார்கள். ஆனால் இந்தத் தேசத்தில் மற்ற ஜாதி ஏழைகளைக் காட்டிலும்பிரமண ஏழைகளுக்கு முக்கியமாக வைதிகப் பிராமணர்களுக்கு இனாம் சாப்பாடு அதிகமாகக் கிடைக்கும் வழியேற்பட்டிருக்கிறது. . ff
பிராமண சமூகத்தினருக்கு அடுத்தநிலையில் பிரித்தானியராட்சிக் காலத்தின்போது கிறிஸ்தவ மதத்தை தழுவிக்கொண்ட சுதேசக் கிறிஸ்தவர்களும், குலம் கோத்திரம் அடிப்படையிற் பிராமணருக்கு அடுத்த நிலையில் விளங்கியவர்களும் ஓரளவாயினும் பொருளாதார வசதியுடைவர்களும் பலதுறைகளிலும் முன்னேறும் வாய்ப்புக்கள் கிடைத்தன. எனினும் ஏலவே பெருவாய்ப்புகளையும் வசதிகளையும் பெற்றிருந்த பிராமண சமூகத்தினருடன் அவர்களாற் சமதையாக முன்னேறவோ அரசியல், சமூக, சமய பொருளாதார நடவடிக்கைகளிற் பிராமண சமூகத்தினருடன் போட்டியிட்டு வலுவான ஆதிக்கம் செலுத்தவோ பெரும் நன்மைகளைப் பெறவோ முடியவில்லை. இந்நிலைமை, பிராமணரல்லாதவர்களுக்கு அடக்க முடியாத ஆத்திரத்தையும் மனக்குமுறலையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது.
இந்நிலையிலே, குமுறிவெடித்துக் கிளம்பியதே பிராமணர்பிராமணரல்லாதார் வேறுபாட்டுணர்வும், ஆரியத் துவேஷமும் அவற்றின் அடிப்படையிலே தோற்றுவிக்கப்பட்ட சங்கங்களும் இயக்கங்களும் எனலாம். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஆரிய-பிராமண, எதிர்ப்பு இயக்கம் ஆரம்பத்திலே தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாகவும், நீதிக்கட்சியாகவும் காலப்போக்கில் சுயமரியாதை இயக்கம் பகுத்தறிவு இயக்கம் தனித்தமிழ் இயக்கம் திராவிடக் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழரசுக் கழகம் தமிழிசை இயக்கம் தமிழ் வளர்ச்சிக் கழகம் எனப் பல கிளைகளாகப் பெருகலாயிற்று.

Page 24
44 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
இவை காரணமாக இருபதாம் நூற்றாண்டின், ஏறத்தாழ மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் தசாப்தங்களிலே தமிழகத்திற் பெரும் அமளி துமளிகள்' நடைபெற்றுக் கொண்டிருந்தன; சொற்போர்களும் விவாதங்களும் கிளர்ச்சிகளும் ஆர்ப்பாட்டி ஊர்வலங்களும் மறியற் போராட்டங்களும் தமிழ்நாட்டையே கலச்கி அடித்துக் கொண்டிருந்தன. முடிவில், 1960 -களின் பிற்பகுதியில், அறிஞர் அண்ணாதுரையின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது பிராமண ஆதிக்கம் சரியத் தொடங்கிற்று பிராமணரல்லாத நிலவுடைமையாளர்கள், வணிகர்கள், சைவ வேளாளர்கள், அறிவாளிகள் முதலியோரின் ஆதிக்கம் வலுக்கத் தொடங்கியது. அதே சமயம் காலம் காலமாக அடக்கி ஒடுக்கி அமுக்கி வைக்கப்பட்டிருந்த உடலுழைப்பாளிகள் மத்தியிலும் சிறிது சிறிதாக விழிப்புணர்வு ஏற்படலாயிற்று. அதுகாலவரை அவர்களிடம் குடிகொண்டிருந்த தாழ்வுச் சிக்கலும் அகலுவதற்கேற்ற அறிகுறிகள்
திராவிட இயக்கங்களைச் சேர்ந்த பிரதம தளகர்த்தர்களான பெரியார், அண்ணாதுரை முதலியோரின் தீவிர நடவடிக்கைகளில் சமூக கலாச்சார அம்சங்கள் முக்கியம் பெற்றிருந்தன. தீண்டாமை ஒழிப்பு பிறப்பினடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றுதல், சாதிப் பெயர்களை நீக்குதல், சகலருக்கும் கோயிற் பிரவேச உரிமை கோயிற் சொத்துக்களைச் சமூக நலத்திற்காகப் பயன்படுத்தல், பெண் அடிமை ஒழிப்பு பிராமண மேலாதிக்க எதிர்ப்பு முதலியன பற்றித் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டபோது, அதுகாலவரை சமூக, பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டிருந்த மக்கள் அவற்றாற் கவரப்பட்டுத் திராவிட இயக்கங்களின் தலைவர்களுக்குப் பின்னால் அணி திரண்டனர்; அதேசமயம் உலக அரங்கில் ஏற்பட்டுக் கொண்டிருந்த பெருமாற்றங்களும் கிளர்ச்சிகளும் புரட்சிகளும், இந்தியாவிலே சிறிது சிறிதாகப் பரவத் தொடங்கிய பொதுவுடைமைக் கருத்துகளும், முற்போக்குச் சிந்தனைகளும் தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட மக்களது விழிப்புணர்வுக்கும் எழுச்சிக்கும் ஏற்ற உந்து சக்திகளாக அமையலாயின.

மலையகத் தோட்டத் தொழிலாளர் 45
மேற்கூறப்பட்ட நிலைமைகள் - திராவிட இயக்கச் செயற்பாடுகள் முதலியவை - தமிழகத்துடன் மட்டும் நில்லாது இலங்கையிலும் குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும் மலையகத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கங்கஜள ஏற்படுத்தலாயின.
மனித நேயத்தினர் குமுறல்
பிரித்தானியராட்சிக் காலப் பகுதியிலும் அதன்பின் 1960-களின் பிற்பகுதி வரையிலும் பிராமணர்கள் பெற்றிருந்த மேலாதிக்கத்தையும் எதேச்சதிகாரத்தையும் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த உடலுழைப்பாளிகளின் பரிதாபகரமான நிலைமையும் அவர்கள் அடிமைகளினும் கேவலமாக நடத்தப்பட்டதையும் கண்டு மனித நேயம்பூண்ட சில பிராமணர்களும் பிறரும் பிரித்தானிய அதிகாரிகள் சிலரும் குமுறினர் கண்டனம் செய்தனர் அடிமைகளாக நடத்தப்பட்ட கோடிக் கணக்கான மக்களின் இரங்கத்தக்க நிலைமையை எண்ணி அனுதாபப்பட்டனர்; குறிப்புகள் எழுதினர் அறிக்கைகள் வெளியிட்டனர். அதற்குமேல் அவர்களால் எதுவும் செய்ய முடியாது போயிற்று. இதற்கு மாறாக, பிராமணர்களன பாரதியார், கோ. நடேசய்யர் போன்றோர் ஆற்றிய பணிகள் மனங்கொளத்தக்கவை
தமிழகத்திலே - தாயகத்திலே - பாவப்பட்ட மக்களின் நிலை இவ்வாறிருக்க, அதே காலப்பகுதியில் இலங்கையின் மலையகத் தோட்டங்களிலும் பிஜி மொரீசியஸ், பர்மா, தென்ஆப்பிரிக்கா, ரீயூனியன் முதலிய - உலகின் ஏனைய பகுதிகளிலும் தொழிலாளர்களாக - அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழகத்தினதும் இந்தியாவின் ஏனைய பகுதிகளினதும் பாவப்பட்ட மக்களின் சந்ததியினரது நிலைமையும் மேற்கூறப்பட்டது போன்றே காணப்பட்டது.
தமிழகத்துப் பண்ணைகளில் அடிமைகளாக வேலைசெய்த உடலுழைப்பாளிகளின் நிலை கண்டு மனம் வெதும்பிய பட்டாபி சீத்தாராமையர் என்பவர் 1940 -ம் ஆண்டிலே, "சேற்றிலும் சகதியிலும் உழன்று பயிரிடும் பண்ணையடிமை அரைவயிற்றுக் கஞ்சியுடனோ முழுப்

Page 25
46 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
பட்டினியாகவோ வேலை செய்கின்றான். அவனுக்குப்புயல், மழை வெயில் எதுவும் ஒய்வு தருவதாக இல்லை. மரணம் ஒன்றே ஓய்வு தருகிறது நமக்காக நெல் விளைவித்து அவன் வறுமையில் வாடுகிறான்நம்பசுவை வளர்த்து நமக்குப் பால் தருகிறான். ஆனால் அவனோ கஞ்சியையும் தண்ணிரையும் தவிர வேறறியான், அவன் நமக்காகக் கிணறு தோண்டுகிறான்; ஆனால் அதில் நீர் ஊறும்போது, அவனை அதிலிருந்து விலக்கிவிடுகின்றோம் அவன் பரிதாபநிலைநம் நெஞ்சைத் தொடுவதாக உள்ளது." 7 எனக் கூறியுள்ளமை ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. சிற்சில வேறுபாடுகளைத் தவிர தமிழகத்துப் பண்ணை அடிமைகளின் நிலைமையும் அவர்களது பரம்பரையைச் சேர்ந்த, மலையகத் தோட்டத் தொழிலாளர்களது நிலையும் எத்துணை ஒற்றுமையுடையன என்பதை இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை.
தமிழின் தரமான நாவல்களுட் சிலவாகக் கருதப்படும் டி. செல்வராஜின் மலரும் சருகும், சின்னப்ப பாரதியின் தாகம், பொன்னீலனின் கரிசல், இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் முதலிய நாவல்களைப் பற்றி விரிவாக ஆராயப் புகுந்த விமர்சகர் கேசவன், தாகம்’ என்னும் நாவல் சித்திரிக்கும் பண்ணையார் - பண்ணையடிமை உறவு நிலையை விளக்குமிடத்துப் பின்வருமாறு கூறியுள்ளார் ". ஒரு பக்கம் பண்ணையார், அவனுக்குக் கைகட்டிச் சேவகஞ் செய்யும் குண்டர்படை காணப்படுகிறது. மறுபக்கம் காலம் காலமாக அவனது குடும்பத்துக்குக் கட்டுண்ட விவசாயிகளும் அவர்களது தோழர்களும் காணப்படுகின்றனர். தாகம் நாவலில் வரும் குஞ்சுண்டி, காத்தான் போன்றோர் பண்ணையடிமைகளே. இவர்கள் வாழ்க்கையின் அவலம் சொல்லுந்தரமன்று. இவர்கள் தம் குடும்பச் செலவுக்காகப் பண்ணையாரிடம் கடன் வாங்கித் திரும்பிச் செலுத்த முடியாமற் போனதால், அவரிடமே கட்டுண்டு விடுகிறார்கள். பாறைக் கல் வலசு சேனாபதிக்கவுண்டரின் நிலப் பிரபுத்துவ கோபுரத்தைத் தாங்கும் அடித்தளங்களாகிறார்கள். உடைமையில்லாத இவர்களின் உயிருக்கும் மாணத்துக்கும் காப்பேயில்லை. அரைஞாண் கயிறு வாங்குவதிலிருந்து திருமணம் செய்து கொள்வது வரை பண்ணையாரிடமிருந்து அனுமதி

மலையகத் தோட்டத் தொழிலாளர் 47
பெற்றாக வேண்டும் காத்தான், பண்ணையிடம் அனுமதி பெற்று வள்ளியை மனக்கிறான். பண்ணையிடம் ஆசீர்வாதம் வாங்கவரும் போது பண்ணையார் வள்ளியைப் பார்த்துக் கூறுகின்றான்;
"டேய், அவளெ சாணியெடுக்க அனுப்பிவெய்"
இது ஒரு சமுதாயக் குழுஉக்குறி காலங்காலமாக விவசாயக் கூலிகளின் உழைப்பைச் சுரண்டியது மட்டுமின்றி அவர்களது வீட்டுப் பெண்களின் இளமையை சுரண்டும் நிலப்பிரபுத்துவத்தின் கட்டளைக் குறி இதற்கு அவன், யாரிடமும் இசைவு பெற்றாக வேண்டியதில்லை. அவனைப் பொறுத்தமட்டில் வள்ளி போன்ற விவசாயக் கூலிகள் போகப் பொருள்களே. பண்ணையடிமைகள் தவறு செய்தாலோ, சாணிப்பால் குடிக்கச் செய்தல், சவுக்கடி கொடுத்தல் போன்ற தண்டனைகள் கிடைக்கின்றன. . இவர்கள் முழுவதும் பண்ணையாரின் கருணையிலே வாழ்க்கையை நடத்தியாகவேண்டும். இவர்களைக் as Gaoirl 625 lettucian, 6.55air (Attached agricultural labourer), 2d6-L16i fliefsrud n.65sair (Casual agricultural labourer) Tor grotirlsrall பிரிப்பர். தாகம் நாவலிற் காணப்படுவோர், கட்டுண்ட பண்னையழமைகளே. இவர்கள் பண்ணையாரின் குடும்ப சேவகர்களாகவும் கருதப்படுவர். பண்ணையாரிடம் சிறிதளவு கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்த முடியாமற் போனதால், குறிப்பிட்ட காலம் உழைக்கிறேன் என ஒப்பந்தம் எழுதி வாங்கப்பட்டவர்கள். இதனையே, வலுக்கட்டாயமான உழைப்பு அல்லது வெட்டி என்று மத்தியகாலக் கல்வெட்டுகள் கூறும் அம்முறையின் இக்கால வடிவங்களே கட்டுண்ட பண்ணையடிமைகள் ஆவார்கள். . இந்திய வேளாண்மைத்துறையின் சுமைதாங்கிகளான இவர்கள் நிலைமையில் வேறுபாடோ வளர்ச்சியோ காணப்படவில்லை . ff
சற்றுநீளமாக அமைந்துள்ள இப்பகுதி நுணித்து நோக்கத்தக்கது. பண்ணையடிமைகள் தனது கட்டளையை மீறினாலோ, தமக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தாலோ அவர்களை அடக்கி ஒடுக்கப் பண்ணையாரிடம் குண்டர் படை இருந்தது. பண்ணையாருக்குக் காமப்பசி ஏற்படும்

Page 26
48 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
போதெல்லாம் பசியாறுவதற்கு விவசாயக் கூலிகளான இளம் பெண்கள் இரையாக்கப்பட்டனர். பண்ணையாரின் மீளாக் கடனாளிகளாக வாழவேண்டிய நிர்ப்பந்தம், நாட்டினது பொருளாதாரத்துறையின் சுமைதாங்கிகளான இவர்களது வாழ்வின் அவலங்கள் முதலியவை ஏறத்தாழ ஒரே அச்சில் வார்த்தது போலவே மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பொருந்துவதைக் காணலாம்.
பண்டைய வழக்கம்
பண்ணைகளில் வேலை செய்யும் இளம் பெண்களைப் பண்ணையார்கள் தமது காமப்பசிக்கு இரையாக்கும் கொடுமை, தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் ஏனைய மாநிலங்கரிலும் இடம் பெறுவதை ஆய்வாளர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். 2. "கெளடன், பரம்பரை நிலப்பிரபு அவனிடம் பண்ணையடிமைகளாக வேலை செய்த உழவுக் கூலிகளுக்கு மணமானவுடன், முதல் நாளிரவு அவர்களது மணப்பெண்களைக் கெளடனிடம் அனுப்பிவிட வேண்டும். இது நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் பண்டைய வழக்கம் நிலத்தின் சொந்தக்காரன், நிலத்தில் உழைக்கும் பெண்களின் பெண்மைக்கும் சொந்தம் பாராட்டினான். இந்த மூக்கத்தை எதிர்த்தால், எதிர்ப்பவன் 2ւնմոռIntք (pքաnéէ աաաաաա m30 هrsor வரும் கூற்றும் நோக்கத்தக்கது. இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும்கூட இத்தகைய கொடூரமான வழமை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை நிலவி வந்தமையினைச் சிலர் கட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக டானியலின் அடிமைகள்'என்னும் நாவல் இவ்வகையில் நோக்கத்தக்கது. வடபகுதியில் குட்டி நிலப்பிரபுக்களாகத் திகழ்ந்தவர்களின் காமக்களியாட்டங்களைப் புலப்படுத்தும் பழமொழிகள் சில இன்று வரையிலும் பாமர மக்களிடையே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சமூக பொருளாதாரரீதியாகப்பிற்படுத்தப்பட்ட உடலுழைப்பாளிகள், சாதிவெறியர்களாலும் நிலவுடைமையாளர்களாலும் எவ்வாறு நடத்தப்படுகின்றனர்ான்பதற்கும் உரிமைகள் கோருவோருக்கு எத்தகைய

மலையகத் தோட்டத் தொழிலாளர் 49
கொடூரங்கள் இழைக்கப்படுகின்றன என்பதற்கும் கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாகத் தமிழகத்திலும் இந்தியாவின் பிறமாநிலங்களிலும் ஈழத்திலும் இடம் பெற்று வந்த கொடிய நிகழ்ச்சிகளே தக்க சான்றுகளாகும். தமிழகத்துக் கீழ்வெண்மணியிலும், மீனாட்சிபுரத்திலும் சில ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெற்ற குரூரச் செயல்ஆரும் மதமாற்ற நிகழ்ச்சிகளும் யாராலும் இலகுவில் மறக்க முடியாதவை
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், பண்ணையார்களின் கொடுமைகளைத் தாங்கமாட்டாது பண்ணைகளை விட்டு ஒழய அடிமைகளைத் தேடிப் பிடிப்பதற்குப் பகிரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காரணம் : அடிமைகள் இல்லாவிடில் தானிய உற்பத்தியும் கிடையாது பண்ணையாருக்கான சேவகமும் கிடையாது. அவற்றின் மூலம் பண்ணையாருக்கும் பண்ணையாரூடாக ஆட்சியாளருக்கும் நட்டம் ஏற்பட்டுவிடும் என்பதனாலேயாம்
பிரித்தானியராட்சிக் காலத்தில் முக்கியத்துவம் பெற்ற ஜமீன்தார் முறை கூலிமுறை வட்டிக்குக் கடன் கொடுக்கும் முறை முதலியவற்றால், ஏற்கனவே ஒரு சிறு பகுதியினரிடம் குவிந்திருந்த விளைநிலங்கள் மேன்மேலும் அச்சிறு பகுதியினரிடமே குவிவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன. அதே சமயம் அன்றைய சூழ்நிலைகள் காரணமாக சிறுசிறு துண்டு நிலங்களையுடைய ஏழை மக்கள் அதனையுமிழக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 1979 -ம் ஆண்டு இடம் பெற்ற மதிப்பீட்டின்படி, இந்தியக் கிராமங்களில் வாழும் ஐம்பத்தொரு (5) கோடி மக்களில் நான்கு சதவீதத்தினர் அறுபத்து நான்கு (64) சதவீத நிலத்தை உடையவர்களாகவும், 6.5 கோடி மக்கள் நிலமற்றவர்களாகவும் விளங்கினர். * குறிப்பாகத் தமிழகத்தைப் பொறுத்தவரை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், தஞ்சை மாவட்டத்தின் மன்னார்குடி என்னும் பகுதியில் வேளாளர் குலத்தைச் சேர்ந்த மிராசுதார்கள் சிலர் பெரும் நிலவுடைமையாளர்களாக - ஒவ்வொருவரும் இரண்டாயிரம் ரக்கர்களுக்கும் மேற்பட்ட நிலப்பகுதியை உடையவர்களாக விளங்கினர் எனவும் சீர்காழியைச் சேர்ந்த பெரும் நிலவுடைமையாளர் ஒருவருக்கு

Page 27
50 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
நாற்பதினாயிரம் ஏக்கர் நிலப்பகுதி சொந்தமாக இருந்தது எனவும் இது போன்றே திருச்சி திருநெல்வேலி முதலிய மாவட்டங்களைச் சேர்ந்த பிராமணர், சைவவேளாளர் முதலிய பெருநிலக்கிழார்கள் பெரும் நிலவுடைமையாளர்களாக விளங்கினர் எனவும் கூறப்படுகிறது.
இதுவரை நோக்கியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க பல உண்மைகள் புலப்படும். இன்றைய மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் மூதாதையர் தமது தாயகத்திலே - தமிழகத்திலே, நிலவுடைமை அமைப்பின் கீழ் அவ்வமைப்பினைத்தாங்கிநிற்கும் தூண்களாக விளங்கி வந்தபோதும் பல நூற்றாண்டுகளாகச் சமூக பொருளாதார ரீதியாக மேலாதிக்கம் பெற்றிருந்த தமது இனத்தவருள் ஒரு பகுதியினரால் காலம் காலமாகச் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அடக்கி ஒடுக்கப்பட்டு அழமைகளாக நடத்தப்பட்டனர். சமூக பொருளாதார ரீதியாக மேலாதிக்கம் பெற்றிருந்தோர் அத்தகைய தமது கொடுஞ் செயல்களை மூடி மறைக்கச் சமயம் சாத்திரம் தெய்வம் முதலியவற்றைத் தக்கவாறு பயன்படுத்தினர். சும்மா இருந்து சுகம் காண முயன்ற சுகபோகவர்க்கம் தனது சுகபோக வாழ்வுக்குத் தேவையான அளவில் உழைக்கும் வர்க்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை விஞ்சவும் விடாது துஞ்சவும் விடாது'- அதாவது வாழவும் விடாது சாகவும் விடாது - கவனித்துக் கொண்டது. பல்லவ, சோழ விசயநகர பேரரசுகளின் காலம் முதற்கொண்டு காந்தியுகம்’ *வரை நாம் இதனையே காண்கிறோம். இடையில் ஏற்பட்ட பிரித்தானிய ஏகாதிபத்தியமும் நிலவுடைமை ஆதிக்கத்தைப் பொறுத்தவரை, அடிப்படை மாற்றங்கள் சிலவற்றை ஏற்படுத்தினாலும், நீண்டகாலமாக வஞ்சிக்கப்பட்ட உடலுழைப்பாளிகளின் வாழ்கை நிலையிற் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ாவையும் ஏற்பட்டதில்லை.
அவர்கள் தமது தாயகத்தில் வாழ்ந்தால் என்ன இலங்கையின் மலையகத்தில் வாழ்ந்தால் என்ன அவர்களைப் பொறுத்தவரை, எல்லாம் ஒன்றுதான். புதுமைப்பித்தன் கூறியது போன்று அவர்களுக்கு "வாசவன் பட்டியானால் என்ன வாட்டர் பாலமானால் என்ன/எல்லாம் ஒன்றுதான்"

மலையகத் தோட்டத் தொழிலாளர் 51
"ஒணம் வந்தாலும் உண்ணி பிறந்தாலும் கோரனுக்குக் கஞ்சி தொன்னையிலே"என்ற பழமொழியும் இவ்விடத்தே நினைவுகூரத்தக்கது. அன்றும்இன்றும் தமிழகத்திலும் மலையகத்திலும் பழைய ஒடுக்குமுறைச் அதனங்களுக்கும் நவீன ஒடுக்குமுறைச் சாதனங்களுக்குமிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றனவே தவிர அவர்களது இரங்கத்தக்க நிலையில் அதிகம் வேறுபாடுகள் காணப்படவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, இலங்கை-இந்திய அரசுகள் மேற்கொண்ட இருட்டடிப்பு முறைகளும் மனங்கொளத்தக்கவை
ஆயிரக்கணக்கான ஆண்டுகள்.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களை இருபதாம் நூற்றாண்டு அடிமைகள்’ எனக் கூறினாலும், உண்மையில் அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் மட்டுமல்ல, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தமிழகத்திலே அடிமைகளாகவே நடத்தப்பட்டு வந்தனர். இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் கடந்தகால வரலாறும் இத்தகையதே என்பது மனங்கொளத்தக்கது. பிரித்தானியராட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கொடும் பஞ்சங்களும் அவர்களது நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்யவே, பல்வேறு நிர்ப்பந்தங்களால் இலட்சக்கணக்கில் அவர்கள் தமது தாயகத்தை விட்டு வெளியேற வேண்டியேற்பட்டது. அவ்வாறு, தாயகத்தை விட்டு வெளியேறாத இலட்சோயலட்சம் தொழிலாளர்கள், தமிழகத்திலே கடந்த சில தசாப்தங்கள் வரை மிக மோசமானநிலையில் வாழ்க்கைப் போராட்டம் நடத்திவந்துள்ளனர் பண்ணை உஆமையாளர்களும் பிறரும் அவர்களை அடிமைகளாகவே நடாத்தினர். A தமிழகத்திலே வெளிவந்துள்ள தரமான சிறுகதைகள் பலவும் பிரதேச நாவல்கள் பலவும் அவர்களது இரங்கத்தக்க நிலைமைகளைத் துல்லியமாகப் புலப்படுத்தியுள்ளன.
மேற்கண்ட உண்மைகளை, இன்றுங்கூட இன்னொருவகையில் நம்பகமாக அறிய முடிகிறது. T . ” ”* போது
தென்னிந்தியாவிலிருந்து மலைய சந்ததியினர் தோட்டங்களில் ெ

Page 28
52 இலங்கையின் மலையகத்தமிழ் இலக்கியம்
அதிகாரிகளாலும் சொல்லொணாத்துயரங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாக்கப்பட்ட பின்னர், இலங்கை - இந்திய ஆட்சியாளர்களால் அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் காரணமாகப் பல இலட்சக் கணக்கான தொழிலாளர்கள், ஏறத்தாழ 1960-களிலிருந்து, தாயகம் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவ்வாறு அவர்கள் தாயகம் திரும்பும்போது அனுபவித்த வேதனைகள், துயரங்கள், ஏற்பட்ட சோதனைகள், பிரிவுத் துயரங்கள், போக்குவரத்து வசதியீனங்கள் முதலியன ஏறத்தாழ 160 (நூற்றியறுபது) ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களின் மூதாதையர் தென்னிந்தியாவிலிருந்து மலையகத்திற்குப்பயணம் மேற்கொண்டபோது அனுபவித்த வேதனைகள், துயரங்கள், ஏற்பட்ட உயிர், உடைமை இழப்புகள் முதலியவற்றிலிருந்து அதிகம் வேறுபடவில்லை என்பதை அண்மைக்காலச் சான்றுகள் “ பல நிரூபிக்கின்றன.
இதே போன்று தாயகம் திரும்பிய தொழிலாளர்களுக்கு அங்கு எத்தகைய வரவேற்புக் காணப்பட்டது! அங்கு அவர்களின் நிலை எத்தகையது! என்பவற்றை நோக்கின், அவர்களது மூதாதையர் 160 ஆண்டுகளுக்கு முன் அங்கு எத்தகைய நிலையிற் காணப்பட்டனரோ எவ்வாறு நடத்தப்பட்டனரோ அவற்றுக்கு நிகராக அல்லது அவற்றிலும் கேவலமாக அந்நியர்களாகவும் அநாதைகளாகவும் அடிமைகளாகவும் தீண்டத் தகாதவர்களாகவும் நடாத்தப்படுவதுடன், இலங்கைப் பெருந்தோட்டங்களில் இனக்கலவரம் என்ற பெயரில் இனவாதக் குண்டர்களால் அடிக்கடி நடாத்தப்படும் மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கும் கொலை கொள்ளைச் சம்பவங்களுக்கும் அடிக்கடி தொழிலாளர்கள் எவ்வாறு ஆளானார்களோ - ஆளாகின்றார்களோ, அதே போன்று அல்லது அதனிலும் மோசமாகத் தமிழகத்திலே - தாயகத்திலே, தாயகம் திரும்பியோர் தமிழகத்துக் குண்டர்களாலேயே கொடூரமான தாக்குதல்களுக்கும் கொலை, கொள்ளைச் சம்பவங்களுக்கும் அடிக்கடி ஆளாவதையும் பண்ணைகளதும் தமிழகத்தின் மலையகப் பெருந்தோட்டங்களதும் உடைமையாளர்களே தமது கட்டளைகளையும் அடக்குமுறைகளையும் அவர்கள் மீறும்போது குண்டர்களை ஏவி இவற்றைச் செய்விப்பதையும் தமிழக ஆட்சியாளரும்

மலையகத் தோட்டத் தொழிலாளர் 33
பாதுகாவலர்களும் இவற்றைக் கண்டும் பாராமுகமாக இருப்பதையும் அங்கு அடிக்கடி இடம் பெறும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. எடுத்துக்காட்டாகச் சில சம்பங்கள் வருமாறு:
குன்றின் குரல் (ஜூலை-ஆகஸ்ட் 1990) சஞ்சிகையில், அக்கரை அட்டூழியங்கள், தாயகம் திரும்பிய மக்களின் குடிசைகளுக்கு தீவைப்பு அக்கரைக் கிராமத்தில் பாதிப்புற்றோர் உளம் நொந்து பேசுகிறார்கள்" "எங்கு சென்றாலும் இதே கதிதானா?" (குன்றின் குரல், தை 1986) "கொடைக்கானல் கொத்தடிமைகளின் உரிமைப் போராட்டம்" (குன்றின் குரல், ஆனி 1986 மலர் - 6 இதழ் - 6) 'தாயகம் திரும்பியோருக்கு ஒரு தர்மசங்கடம்" முதலிய தலைப்புகளில் விரிவான முறையிற் காட்டப்பட்டுள்ள விடயங்கள் உள்ளத்தை உலுக்குபவை. "உச்சிக்கவுடர் (தோட்ட உடைமையாளர்) சொல்லும் பச்சைப் பொய்யெல்லாம் உண்மை என்று ஒத்துக் கொள்ள அதிகாரிகள் தயங்குவதில்லை. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம்’ என்று சொல்லிக் கொண்டு ஏழைகளைக் கதறியழச் செய்த கபோதிகளைக் கண்டிக்காத கைது செய்யாத நிர்வாகத்தின் இலட்சனத்தை எப்படித்தான் அளவிட முடியும்? இன்றும் பணமும் படாடோபமும்தான் ஆட்சிப் பீடங்களை ஆட்டிக் கொண்டிருக்கின்றன எனவும் ". 21-ம் திகதி பகல் 315 மணியளவில் சில லொரிகளிலும் ஜிப் வண்டிகளிலும் குண்டர்கள் 400 - 500 பேருக்கு மேல் உச்சிக்கவுடர், பெள்ளிராஜ் ஆகியோர் தலைமையில் நாங்கள் குடியிருந்த இடத்திற்கு வந்து துப்பாக்கியால் சுட்டு எங்களை மிரட்டி, குடிசைகளுக்குத் தீ வைத்து, அடித்து நொறுக்கி எங்கள் எல்லோரையும் மிருகத்தனமாகத் தாக்கிக் காயப்படுத்தி விரட்டியடித்தனர். இந்தக் காரணத்தினால் எனக்குத் தலையில் 18 தையலும் நெற்றியில் ஒரு தையலும், வலது காலில் 2 தையலும் இடது காலில் ஒரு தையலுமாக மொத்தம் 22 தையல்கள் போடப்பட்டன. குண்டர்கள் தாக்கியபோது எனக்கு ஏற்பட்ட காயத்துடன் உயிரைப் Lungjasmégisé கொள்வதற்காக நான் ஒடிச் சென்று காட்டில் பதுங்கிக் கொண்டேன். . ா? என வரும் பகுதிகள் நோக்கத்தக்கவை.

Page 29
ஏறத்தாழ 1820-களிலிருந்து, மலையகத் தோட்டங்களிற் குடியேறத் தொடங்கிய தொழிலாளர்கள் கோப்பிப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப் பட்ட ஆரம்ப காலப்பகுதியில் மலையகத்தில் நிரந்தரமாகக் குடியிருக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. அடிக்கடி, இந்தியா சென்று வந்தனர். குறிப்பிட்டளவு செல்வம் திரட்டியதும் தாயகம் திரும்பிச் சிறு துண்டு நிலத்துக்காவது சொந்தக்காரராகிப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தலாம் என்ற மனப்பாங்குடையோராகவே செயற்பட்டனர். இலங்கையில் மட்டுமின்றி பர்மா, மலாயா முதலிய நாடுகளில் வாழ்ந்த தொழிலாளரும் இதே எண்ணத்தைக் கொண்டிருந்தனர். ஒரு சிறு தொகையினரின் எண்ணம் இவ்வகையில் ஈடேறியிருக்கலாம். ஆயின், பெருந்தொகையான தொழிலாளரின் எண்ணம் கானல் நீராகவே' மாறியது. பல்வேறு காரணங்களால், ஏறத்தாழ இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே இலங்கையில் இவர்கள் நிரந்தரமாகக் குடியேறத் தொடங்கினர்.
முழுமை அர்ப்பணம்
அறியாமை இருளிலும் வறுமையிலும் மூழ்கித் துயரங்களின் மொத்த உருவமாக விளங்கிய தொழிலாளர்களின் விடிவுக்காக பிரேஸ்கடில் சேர் பொன். அருணாசலம் போன்ற ஒரு சிலர் குரல் எழுப்பியபோதும் தேசபக்தன்'கோ. நடேசய்யர் அவர்களே விதந்து கூறத்தக்க வகையில், தம்மை முழுமையாக அர்ப்பணித்துத் தொழிலாளர்களின் விழவுக்கும் எழுச்சிக்குமாக 1920 களிலிருந்து, 1940 களின் பிற்பகுதிவரை அயராதுழைத்தார். சிலகாலம் சட்டசபை அங்கத்தவராக விளங்கியபோது தொழிலாளர் நலனுக்காகவே தமது பதவியைப் பயன்படுத்தினார். இந்திய தேசிய இயக்கத்தினால் கவரப்பட்டிருந்த அவர், சிறந்த பத்திரிகை யாளனாகவும் பேச்சாளனாகவும் செயல் வீரனாகவும் விளங்கினார் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பரம வைரியாகவும் தொழிலாளர்களின் ஆப்த நண்பனாகவும் செயற்பட்டார். 1926 -ம் ஆண்டிலிருந்து 1928 -ம் ஆண்டுவரை ஏ.ஈ. குணசிங்காவுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர் தோட்டத் தொழிலாளர் மீது அக்கறை

மலையகத் தோட்டத் தொழிலாளர் 55
காட்டாதிருந்த குணசிங்காவின் செயல்களால் அவருடன் மனஸ்தாபப்பட்டு அவரை விட்டுப் பிரிந்து தோட்டத் தொழிலாளரின் நன்மையின் பொருட்டு 1931 ம் ஆண்டு அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம்'என்னும் சங்கத்தை அமைத்துச் செயற்பட்டார்.
அவர்மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகளினாலும் செயற்பாடுகளினாலும் தோட்டத் துரைமார்களதும் கங்காணிமார்களதும் பெரும்பகைமையைச் சம்பாதித்துக் கொண்ட போதிலும் இறுதிவரைதமது முயற்சிகளில் தளராது ஈடுபட்டார். உண்மையில் நடேசய்யர் காலப்பகுதியிலிருந்தே, மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரளவு விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. நடேசய்யர் ஆரம்பித்த தொழிற்சங்க சம்மேளனத்தைத் தொடர்ந்து பல தொழிற் சங்கங்கள் உருவாகின. தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்கள் தமது அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காகப் போராட்டங்களிலும் வேலை நிறுத்தங்களிலும் ஈடுபடத் தொடங்கியதும் இலங்கையின் ஆட்சியாளர்களும் தோட்டத்துரைமார்களும் பேரினவாதிகளும் விழித்துக் கொண்டதுடன், தோட்டத் தொழிலாளரை அரசியல் அநாதைகளாக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபடலாயினர்
அரசியல் ரீதியாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஒரளவு பெற்றிருந்த உரிமைகளும் சலுகைகளும் 1931 ம் ஆண்டு டொனமூர்ச் சட்டம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து பறிபோகலாயின. 1935 ம் ஆண்டில் இயற்றப்பட்ட காணி அபிவிருத்திச்சட்டம் 1948 -ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம், 1949-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் திருத்தச் சட்டம் முதலியஆறால் தோட்டத் தொழிலாளர்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டனர் *மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர்.
இலங்கை சுதந்திரம் அடைந்தபோது தோட்டத் தொழிலாளரின் எண்ணிக்கை பத்து இலட்சத்துக்கும் அதிகமாகக் காணப்பட்டது அரசியல் அநாதைகளாக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களை இந்தியாவிற்குத்

Page 30
56 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
தீவிரமாக ஈடுபட்டனர். 1970 களின் முற்பகுதிவரை இலங்கை - இந்திய அரசுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களினால் பல இலட்சம் தொழிலாளர்கள்,இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். 43
1970 களின் முற்பகுதியில் பதவியில் இருந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றியநிலச்சீர்த்திருத்தச் சட்டங்களினாலும் பெருந்தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டமையினாலும் தோட்டத் தொழிலாளர்களின் இன்னல்கள் மேன்மேலும் அதிகரிக்கலாயின. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் தோட்டங்களிலிருந்து விரட்டப்பட்டுத் தெரு ஓரங்களில் அலையலாயினர் நூற்றுக்கணக்கானோர் பட்டினிச் சாவை எய்தினர்.
அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவை போதாவென, 1956 -ம் ஆண்டு தொடக்கம் 1983 -ம் ஆண்டுவரை (அதன் பின்னரும் பரந்த அளவில் இல்லாவிடினும் ஆங்காங்கே அடிக்கடி தாக்குதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை மனங்கொளத்தக்கது) அடிக்கடி இனக்கலவரம்’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் காரணமாகப் பெருந்தொகையான உயிரிழப்புகளும் பொருட் சேதங்களும் ஏற்பட்டதுடன், இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் அகதிகளாக்கப் பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கும் இந்தியாவிற்கும் புலம்பெயரலாயினர்
மேற்கண்ட நெருக்கடியான நிலைமைகளுக்கு மத்தியிலும், 1950-களின் பிற்பகுதியிலிருந்து தோட்டத் தொழிலாளரின் உரிமைப் பேராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியதுடன் முன்னர் என்றும்இல்லாத அளவிற்கு அவர்களிடையே விழிப்புணர்வும் எழுச்சியும் ஏற்பட்டு வருவதை அவதானிக்கலாம். இன்று அவர்களது பிரஜா உரிமைப் பிரச்சினையும் ஓரளவிற்குத் தீர்க்கப்பட்டுள்ளது எனலாம்.

மலையகத் தோட்டத் தொழிலாளர் 37
மலையகத்தில் மட்டுமன்றி இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் உலக அரங்கிலும் - குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலும் - காலம் காலமாகச் சமூக, பொருளாதார, அரசியல் ரிதியாக வஞ்சிக்கப்பட்ட மக்கள் இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு காரணங்களால் விழிப்புற்று எழுச்சியடைந்து வருவதை அவதானிக்கலாம். இத்தகைய ஒரு போக்கிற்குத் தோட்டத் தொழிலாளர்களும் விதிவிலக்காக இருக்க முடியாது
1917ம் ஆண்டு ரஷ்யாவில் ஏற்பட்ட மாபெரும் அக்டோபர் புரட்சிஇன்றைய அதன் வீழ்ச்சிதற்காலிகமானதே என்பது மனங்கொளத்தக்கது - அதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் பொதுவுடைமைச் சிந்தனைகளும் முற்போக்குக் கருத்துகளும் வேகமாகப் பரவத்தொடங்கியமை, இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து உலக அரங்கில் மிக வேகமாக ஏற்படத் தொடங்கிய மாற்றங்கள், உலகத் தொழிலாளிவாக்கம் விழிப்புற்று எழுச்சியுறத் தொடங்கியமை முதலியவை உலகின் ஏனைய நாடுகளைப் பாதித்தது போலவே இந்தியாவையும் அதன் ஒருகூறான தமிழகத்தையும் இலங்கையையும் வெகுவாகப் பாதிக்கலாயின.
விழிப்பும் எழுச்சியும்
1940 களிலிருந்து தமிழகத்தில் உக்கிரம் பெறத் தொடங்கிய பிராமணிய எதிர்ப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகள், அறிஞர் அண்ணாதுரையின் உணர்ச்சிமிக்க சொற்பொழிவுகள், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் செயற்பாடுகள் முதலியனபிராமண ஆதிக்கம் வீழ்ச்சியுறவழிவகுத்த அதேசமயம் தமிழகத்தில் காலம் காலமாகச் சமூக பொருளாதார ரீதியாகப் பின்தள்ளப்பட்டிருந்த மக்களை விழிப்புற்று எழுச்சியுறவும் செய்தன. மேற்கண்ட நிலைமைகளும் இலங்கை சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து அரசியல், சமூக பொருளாதாரத் துறைகளில் ஏற்படத் தொடங்கிய மாற்றங்களும் இலவசக் கல்வி விருத்தியும் பல்கலைக்கழக மட்டம் வரையிலான தாய் மொழிக்கல்வி வளர்ச்சியும்

Page 31
s இலங்கையின் ந்தமிழ் இலக்கியம்
பிறவும், இலங்கையிலும் காலம் காலமாகப் பின்தள்ளப்பட்டிருந்த மக்களதும் தொழிலாளர், விவசாயிகள் முதலியோரினதும் விழிப்புணர்வுக்கும் எழுச்சிக்கும் வழிவகுத்தன.
தமிழர் சமூகத்தைப் பொறுத்தவரை, தமிழகத்திலும் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும் சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தள்ளப்பட்டிருந்த தாழ்த்தப்பட்டவர்களும் பிறரும் தமது அடிப்படை உரிமைகளைப் பெறவும் முன்னேற்றம் காணவும் வேண்டிக் கொடூரமான அடக்கு முறைகளுக்கு அடிபணியாது, கிளர்ச்சிகளிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு எழுச்சியுறலாயினர். இதேபோன்று, பேரினவாதத்திற்கெதிரான சிறுபான்மையினரின் போராட்டமும் உக்கிரம் புெறத் தொடங்கியமை மனங்கொளத்தக்கது.
மேற்கண்ட நிலைமைகள் தோட்டத் தொழிலாளர் மத்தியிலும் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தலாயின. இலங்கை, இந்தியா ஆகியன உட்பட உலகின் பலநாடுகளிலும் காலம் காலமாக அடக்கப்பட்டிருந்த மக்களின் எழுச்சிக்காற்று' தோட்டத்து அதிகாரிகளினதும் ஆட்சியாளர்களினதும் வலுவான தடைகளையும் மீறித் தோட்டங்களுட் புகுந்து தொழிலாளர்களுக்கு உற்சாகத்தையும் மன உறுதியையும் அளிக்கலாயிற்று. 1940களிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கும் இடதுசாரிச் சிந்தனைகளும் தோட்டப்புற மக்களிடையே எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தின என்பதை இங்கு விளக்கிக் கூறக் தேவையில்லை. பெருந்தோட்டங்களில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள், தோட்டத் தொழிலாளரின் நலனினும் முன்னேற்றத்திலும் ஆர்வம் கொண்டுள்ள பல்வேறு அமைப்புகள் - கலை - இலக்கிய மன்றங்கள் சஞ்சிகைகள் முதலியவற்றின் செயற்பாடுகள் நடேசய்யர் முதல் கலை - இலக்கிய கர்த்தாக்கள், கல்விமான்கள் முதலியோரது பங்களிப்புகள் ஆகியனவும் தோட்டத் தொழிலாளரது விழிப்புணர்வுக்கும் எழுச்சிக்கும் உறுதுணையாக அமைகின்றன.

மலையகத் தோட்டத் தொழிலாளர் ச9
அடிக்கடி இடம்பெறும் இனரீதியான வன்செயல்களையும் கொடூரமான அடக்கு முறைகளையும் மீறித் தோட்டத் தொழிலாளர்கள், குறிப்பாக இளந்தலைமுறையினர் முன்றேற்றப் படிகளில் கால் வைக்கத் தொடங்கியுள்ளனர். ஆண்டாண்டு காலமாக இருட்டினில் வாழ்ந்த அவர்கள் மத்தியில் கல்வி அறிவின் ஒளிக்கிறுகள் தென்படத் தொடங்கியுள்ளன. தோட்டத் தொழிலாளராவது படிப்பாவது! உத்தியோகமாவது" என்றநிலை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியுள்ளது தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலேயே பிறந்து வளர்ந்த பலர் இன்று கல்வித்றையிலும் பிற துறைகளிலும் முன்னேறத் தொடங்கியுள்ளனர். அவர்களிடம் குடிகொண்டிருந்த தாழ்வுச் சிக்கல், அகன்று வருகின்றது.
இதனாலெல்லாம் தொழிலாளர் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டன என்றோ தீர்ந்துவிடும் என்றோ கொள்ள முடியாது. ஆயினும், தொழிலாளர்களின் எழுச்சிக்கான அழத்தளமாகவும் உந்து சக்தியாகவும் இவை அமையும் என்பதில் ஐயமில்லை.

Page 32
60 இலங்கையின் மலையகத்தமிழ் இலக்கியம்
சான்றாதாரம்
1. இது தொடர்பாக உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கப் பொதுச் செயலாளராகப் பல ஆண்டுகள் கடமையாற்றிவரும் குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்கள் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்த் தொழிலாளர்கள் குடியேற்றப்பட்ட நாடுகள் பலவற்றுக்கும் தீவுகள் பலவற்றுக்கும் நேரிற் சென்று அவர்களது கடந்த கால நிலை, இன்றைய நிலை முதலியன பற்றி உசாவி அறிந்து அவற்றுள் முக்கியமானவற்றைச் சிறுசிறு நூல்களாகவும் கட்டுரைகளாகவும் எழுதி வெளியிட்டுள்ளார். அத்தோடு அமையாது அந்நாடுகளிலும் தீவுகளிலும் வெளிவந்த - வெளிவருகின்ற சஞ்சிகைகள், ஆண்டுமலர்கள், கையெழுத்துப் பிரதிகள், அந்நாடுகளின் இன்றைய மொழி பண்பாட்டு நிலைமைகளைப் பிரதிபலிக்கும் புகைப்படப் பிரதிகள், ஒலிப்பதிவு நாடாக்கள் முதலிய பல பயன்மிக்க தகவல்களை அரும்பாடுபட்டுச் சேகரித்து வைத்திருந்தார். அவை, இப்பொழுது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூலிகள்’ என்ற பெயரில் கடல்கடந்த தமிழ்த் தொழிலாளர்களின் அன்றைய நிலை, இன்றைய நிலை முதலியன பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் ஆய்வு செய்ய முயல்வோருக்கும் அவர் சேகரித்துள்ள தகவல்கள் அதிகம் உதவும் என்பதில் ஐயமில்லை. அவரது அரும்பணிகள் பாராட்டப்பட வேண்டியவை இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றுட் சில வருமாறு:
குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் நூல்கள்
அலைகடல்களுக்கு அப்பால் தமிழர் (1973) (தொடர்வெளியீடு-1) உலகத்தமிழர்களின் ஐக்கியத்தை நோக்கி (1974) (தொடர்வெளியீடு-2) றியூனியன் தீவில் எங்கள் தமிழர் (1979) (தொடர்வெளியீடு-3)
மொறிசியஸ் தீவில் எங்கள் தமிழர் (1980) (தொடர்வெளியீடு-4)

மலையகத் தோட்டத் தொழிலாளர் - 87
கட்டுரை
"உலகத் தமிழர் ஒருமைப்பாடு - சில நற்கூறுகளும் அணுகுமுறைகளும்" உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஐந்தாவது (மதுரை) மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை, 1981
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் உரிமைக்குரலாகத் திரு.இரா. கனகரத்தினம் அவர்களாற் சில ஆண்டுகள் வெளியிடப்பட்ட உலகத்தமிழர் குரல்"என்னும்பத்திரிகை இதழ்களிலும் மேற்கண்ட விடயம் தொடர்பாகப் பயன்மிக்க செய்திகளும் மொறிசியஸ், நியூனியன், பர்மா, தென்னாபிரிக்கா, பீஜி, முதலிய நாடுகளைச் சேர்ந்தோர் எழுதிய கட்டுரைகளும் வெளிவந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. திரு. இரா.கனகரத்தினம் தம்பதிகளின் ஒப்பற்ற பணிகளைப் பாராட்டி, 1970களில் சுதந்திரன், ஈழநாடு தமிழ்நேசன்'முதலிய பத்திரிகைகளிற் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கங்குலி கொண்டாபி ரிங்கர்ஹக் அன்ட்றுாஸ், சக்கரவர்த்தி, ராஜ்குமார் முதலியோர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூல்களும் இவ்வகையில் பயன்மிக்கவை
2. இவைபற்றிய விளக்கத்துக்குப் பின்வரும் நூல்களைப் பார்க்கவும்
கனகரத்தினம், இரா. குரும்பசிட்டி அலைகடல்களுக்கு அப்பால் தமிழர் - 1973 உலகத் தமிழர்களின் ஐக்கியத்தை நோக்கி - 1974 ரீயூனியன் தீவில் எங்கள் தமிழர் - 1979 மொறிசியஸ் தீவில் எங்கள் தமிழர் - 1980
3. இதுபற்றித்தமது கட்டுரை ஒன்றில் திரு. சாந்திகுமார்தகுந்த விளக்கம் கொடுத்துள்ளார். "மலையகத்தின் வரலாறும் சமூக உருவாக்கமும்"திர்த்தக்கரை, அலை 34 - 1984

Page 33
62 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
4 முதலாவது அடிக்குறிப்பிற் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் இவ்வகையில் நோக்கத்தக்கவை. அத்துடன் வண. பிதா. தனிநாயக அடிகள், தென்னிந்திய வரலாற்றறிஞர் நீலகண்ட சாஸ்திரி வாஸ், குஷ்வான் சிங், இராமநாராயணன், இராமதாஸ், முதலியோர்இவ்விடயம் தொடர்பாகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுள்ள நூல்களும் கட்டுரைகளும் கவனத்திற் கொள்ளத்தக்கவை.
5。 மலையகத் தொழிலாளர் வரலாறு, அவர்களது அரசியல் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள், வாழ்வியல் அம்சங்கள் முதலியன பற்றிப் பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே பல்கலைக்கழக மட்டத்தில் பட்டப் பின்படிப்புக்கான ஆய்வு முயற்சிகளாக மேற்கொள்ளப்பட்டன. இலங்கை, இந்தியா முதலிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழக ஆய்வாளர்களும், ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டுள்ளனர். பல்கலைக் கழகங்களைச் சாராத தனிப்பட்டவர்களும் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளனர். ஆங்கிலத்திலேயே அதிகமான நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. கடந்த சில தசாப்தங்களிலேயே தமிழிற் கணிசமான அளவு கட்டுரைகளும் நூல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனினும் இவ்ஆக்கங்களுள் கணிசமானவை தொழிலாளர்களின் உண்மையான வரலாற்றினையும் சோகம் மிகுந்த அவர்களது வாழ்க்கை நிலையையும் செம்மையாகப் புலப்படுத்துவதற்குப் பதில், அவர்கள் மீதான அறியாத்தனம்மிக்க குரோத உணர்வையும் வெறுப்பினையுமே வெளிப்படுத்துவனவாக உள்ளன. ஒருசில நூல்களும் கட்டுரைகளுமே உண்மை நிலையைப் புலப்படுத்த முயன்றுள்ளன. மலையகத் தொழிலாளர்களின் விடிவுக்காகத் தம்மை அர்ப்பணித்த சிவி வேலுப்பிள்ளை அவர்கள் இது பற்றிக் கூறியுள்ள சில வாசகங்கள் வருமாறு: ". தமிழ் நாட்டிலிருந்து நம் மக்களைக் கூலிகளாகக் கொண்டுவந்து, இப்பொழுது பலகோணங்களிலிருந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக ஒருசில ஆராய்ச்சிநூல்களும் வெளிவந்திருக்கின்றன. இவைகளெல்லாம் அந்தக்காலத்து உண்மைச்

மலையகத் தோட்டத் தொழிலாளர் 63
சரித்திரத்தையோ அல்லது அம்மக்களின் அனுபவங்களையோ ஈடுசெய்யக்கூடிய முறையில் எழுதப்படவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். எனினும், தொன்றுதொட்டு வழக்கம்போல் தங்கள் அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் அவர்கள் பாடிய பாடல்களில் நமக்குத்தந்திருக்கிறார்கள். அந்தப்பாடல்கள் அவர்களது சரித்திரத்தை மண்மணத்தோடும் உயிர்த்துடிப்போடும் தருகின்றன. "நாடற்றவர் கதை, 1987 பக் 23)
குறிப்பிடத்தகுந்த சில நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் வருமாறு:
Dhamapriya Wesumperuma,
Indian immigrant Plantation Workers in Sri Lanka: A Historical Perspective: 1880 - 1910, Colombo.
Hariprasad Chattopadhyaya,
Indians in Sri Lanka: A Historical Study, Calcutta, 1979.
Gangulee, N,
Indians in the Empire Overseas, A Survey, London, 1947.
Gupta, Babulal,
Political and Civic Status of Indians in Ceylon; Agra-India, 1963.
Kodikara, S, U,
Indo-Ceylon Relations Since independence, Colombo, 1965. t
Kondapi, C,
Indians Overseas : 1838 - 1949, London, Calcutta, Bombay, Madras, 1951.

Page 34
64 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
Pandian, S,
The Cooly Life in Ceylon. Palam Cottah, 1917.
Rao, P.R. Ramachandra,
India and Ceylon : A Study. Bombay, Madras, 1954.
De Silva, K.M.
"Indian immigration to Ceylon: The First Phase, C. 1840 - 1855". The Ceylon Journal of Historical and Social Studies, Vol.4, No.2, 1961.
Naguleswaran, P.,
"A History of the Working Class Movement in Ceylon. ii, The Problem of Indian Immigrant Labour in the Nineteenth Century." The Ceylon Historical Journal, Vol. , No.3, 1952.
Visaka Kumari, Jayawardana,
The Rise of the Labour Movement in Ceylon. Durham - North Carolina, 1972.
Rathakrishnan, N.,
"The Stateless in Ceylon", The Indian Year Book of International Affairs, Madras, 1963.
Jayawardana, L.R., o
The Supply of Sinhalese Labour to Ceylon Plantations 1830 - 1930. A Study of Imperial Policy in a Peasant Society: (Ph.D. Economics) Cambridge, 1963.

மலையகத் தோட்டத் தொழிலாளி 65
Rajaratnam. S.,
History of Plantation Agriculture of Ceylon. 1886-1931, with Special Reference to Tea and Rubber. (M.Sc. Economics), London, 1961.
சந்திரசேகரன், சோ,
இலங்கை இந்தியர் வரலாறு மதுரை, 1989
வேலுப்பிள்ளை, ஸி.வி,
நாடற்றவர்கதை, சென்னை, 1987
சாரல்நாடன்,
மலையகத் தமிழர் சென்னை, கொழும்பு 1990 மலையக வாய்மொழி இலக்கியம் சவுத் ஏசியன் புக்ஸ், 1993
சிவராஜா,அ,
மலையகத்தமிழரின் அரசியல் வரலாறும் இலக்கியங்களும் கண்டி,
992.
வேல்முருகு ந,
இலங்கைப் பெருந்தோட்டங்களில் வாழும் இந்திய வம்சா வழியினரின் சமூகப்புவியியல் (கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரை), 1990
மலையக மக்களின் சமய நம்பிக்கைகளும் சடங்கு முறைகளும் யாழ்ப்பாணம் 1993
மாத்தனை வடிவேலன்,
மலையக பாரம்பரியக் கலைகள், கொழும்பு 1992

Page 35
66 இலங்கையின் மலையகத்தமிழ் இலக்கியம்
நித்தியானந்தன், வி,
இலங்கை அரசியல் பொருளாதார அபிவிருத்தி 1948-1956 வர்க்க இனத்துவநிலைப்பாடுகள், 1989
6. இதுவரை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்துள்ள நூல்களிலும் கட்டுரைகளிலும் இம்மூவகையான நோக்கினையும் காண முடிகின்றது.
7. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட கொடிய பஞ்சங்களே தொழிலாளர்கள் தாயகத்தைவிட்டு வெளியேறுவதற்குக் காரணம் எனப்பலரும் வாய்ப்பாடாகக் கூறிவருவதை அவதானிக்கலாம்.
8. தாயகம் திரும்பியோரது இன்னல்களையும் அவலங்களையும் அவர்களுக்கு இழைக்கப்படும் அக்கிரமங்களையும் சுட்டிக் காட்டுவனவாகப் பின்வரும் அறிக்கைகளும் கட்டுரைகளும் ஒருசில நாவல்களும் காணப்படுகின்றன.
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்கள்' தோட்டப் பிரதேசங்களுக்கான கூட்டுச் செயலகம் கண்டி, 1976
எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள் : இலங்கையிலிருந்து
இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த மக்கள் மத்தியில் ஓர் ஆய்வு மதுரை,
1982.
வழிகாட்டி இலங்கையிலிருந்துதாயகம் திரும்புவோருக்கு முக்கிய தகவல்கள், எச்சரிக்கைகள், தாயகம் திரும்புவோர் ஐக்கிய முன்னணிசம்மேளனம் மதுரை, 1975
இலங்கையில் நாடற்றவர் வீடற்றவர் பிரச்சனை: அனைத்துலக மக்களின் கவனத்திற்கு "தொழிலாளர் தேசிய சங்கம் கொழும்பு ராஜம் கிருஷ்ணன் மாணிக்க கங்கை (நாவல்) குன்றின் குரல் ஜூலை - ஆகஸ்ட், 1990

மலையகத் தோட்டத் தொழிலாளர் 67
9. இந்தியச் சமூக வரலாறு, தமிழகச் சமூக வரலாறு ஆகியன தொடர்பாகக் கடந்த ஒரு சில தசாப்தங்களிற் குறிப்பிடத்தகுந்த வரலாற்று நூல்கள் சில வெளிவந்துள்ளன. கோசாம்பி, கே.கே. பிள்ளை, ந. சுப்பிரமணியன் முதலியோரது நூல்கள் இவ்வகையிலே விதந்து கூறத்தக்கவை. தமிழகத்திலே காலங்காலமாக இடம்பெற்றுவந்த கொடூரமான அடிமைமுறைபற்றித் தகுந்த வரலாற்று ஆதாரங்களுடன், சிவசுப்பிரமணியன் எழுதியுள்ள நூலும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது.
சிவசுப்பிரமணியன், ஆ,
அடிமைமுறையும் தமிழகமும் சென்னை, 1984
10. தண்டாயுதம் இரா,
தமிழ்ச்சிறுகதை முன்னோடிகள், சென்னை, 1972 பக். 77
1 அருணாசலம் க,
புதுமைப்பித்தன் கண்ட துன்பக்கேணி இளங்கதிர்’பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் 1981
12 இன்றைய மலையகத் தோட்டத் தொழிலாளர், தமிழகத்துச் சேரிப் புறங்களில் வாழ்க்கைப் போராட்டம் நடத்தும் பாவப்பட்ட'மக்கள் ஆகியோரது இருப்பிடங்களையும் அவலங்களையும் பண்டைய, இடைக்கால இலக்கியங்கள் காட்டும் அடிநிலை மக்களது
நிலைமைகளையும் ஆதாரங்களுடன், விரிவாக ஒப்புநோக்கிஆராய்ந்தால், மறைக்கப்பட்டிருக்கும் பல உண்மைகள் அம்பலமாகும்
f3. இதுபற்றி விரிவாக அறிவதற்குப் பின்வரும் நூலைப் Littfaiasati,
நம்பூதிரிபாட், இஎம்எஸ்,
இந்திய வரலாறு ஒரு மார்க்சிய கண்ணோட்டம் (தமிழில் பி.ஆர். பரமேஸ்வரன்) 1978

Page 36
68 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
f4. இது பற்றி இந்நூலாசிரியர் பிறிதோரிடத்தில் விரிவாக நோக்கியுள்ளார். அருணாசலம் க,
பாரதியார் சிந்தனைகள், 1984 பக். 26-215, 38-393
15. நம்பூதிரிபாட், இஎம்எஸ்,
இந்திய வரலாறு ஒரு மார்க்சியக் கண்ணோட்டம் 1978 பக்.75
f6. இது பற்றிப் பல ஆதாரங்கள் உளவேனும் பின்வரும் ஆய்வுக் கட்டுரை இவ்வகையில் விதந்து கூறத்தக்கது:
ராசுகுமார், மேது,
"சோழர் காலத்தில் வரி எதிர்ப்பு இயக்கம்"ஆராய்ச்சி ஒக்டோபர் 1973, Lé. 67-77
17. மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நீண்ட காலமாகக் கல்வி வசதி மறுக்கப்பட்டமையும் பொருளாதார ரீதியாக > என்றுமே தலையெடுக்காவண்ணம் தோட்ட நிர்வாகிகள் கையாண்டு
வந்த தந்திரோபாயங்களும் மனங்கொளத்தக்கவை.
18 சுப்பிரமணியன், திநா, 懒
கல்வெட்டுகளிற் கண்ட நாடு, ஊர் ஆட்சிமுறை கையேடு
இரண்டாவது உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு சென்னை,
953.
19 Kumar, Dharan,
Land and Caste in South India, Cambridge, 1965.
இந்தியச் சமுதாய வரலாறு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன 6նշյ6/fիմ6),
20 பாரதியார் கட்டுரைகள், சமூகம் பக். 124-25

மலையகத் தோட்டத் தொழிலாளர் 9ே
21 இலங்கையில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து உக்கிரமடையத் தொடங்கிய சாதீயத்திற்கெதிரான போராட்டங்கள், தாழ்த்தப்பட்ட மக்களது நிலைமைகள் முதலியவற்றை விரிவாக நோக்குவதாகப் பின்வரும் நூல் அமைந்துள்ளது.
வெகுஜனன் இராவணா - சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும், யாழ்ப்பாணம் 1989
22 முகர்ஜி ஆர்.கே,
இந்தியாவின் நிலப்பிரச்சனைகள், (தமிழாக்கம் பாம்தத் ரஜனி) சென்னை 1947 பக். 222
23. நம்பூதிரிபாட், இஎம்எஸ்,
இந்திய வரலாறு ஒரு மார்க்சியக் கண்ணோட்டம் 1978 பக். 130-731
24. பாரதியார் கட்டுரைகள், சமூகம் பக் 13-14
25 மேலது நூல் பக்.96-97
26. பாரதியார் கதைகள், 1977 பக். 454-455
27. மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது.
கேசவன், கோ,
இயக்கமும் இலக்கியப் போக்குகளும் சென்னை, 1982 பக். 152-153 (திரு. கேசவனுக்கு நன்றி)
28. கேசவன், கோ,
இயக்கமும் இலக்கியப் போக்குகளும் சென்னை, 1982, Lë, 150-153.

Page 37
70 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னரும் சில ஆண்டுகள் நிகழ்ந்து வந்த இக்கொடுமைகளுக்கெதிராக இந்திய பொதுவுடைமைக் கட்சியால் நடாத்தப்பட்ட விவசாய தொழிலாளர் போராட்டங்களும் கடுமையான அடக்குமுறையை உறுதியுடன் எதிர்கொண்டு நின்றமையுமே இக் கொடுமைகள் குறைவதற்குக் காரணமாகின. சாணிப்பால் கொடுக்காதே! சவுக்கடி அடிக்காதே! கொக்குத் தண்டனை வழங்காதே! கிட்டித் தண்டனை வழங்காதே! என்ற முழக்கங்களுடன் இப்போராட்டங்கள் நடாத்தப்பட்டதாகச் சிவசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.
மிக நீண்ட காலமாகத் தமிழகத்தில் நிலவிவந்த அடிமை முறை அடிமைகளாக விளங்கிய தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த கொடூரமான தண்டனைகள், அவர்களது இன்றைய எழுச்சி முதலியன பற்றிப் பின்வரும் நூலிற் சான்றுகளுடன் விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிவசுப்பிரமணியன், ےgوه
அடிமைமுறையும் தமிழகமும் சென்னை, 1984
தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மனிதாபிமானமற்ற கொடூரமான தண்டனைகள் குறித்து இந்நூலில் இடம் பெறும் விளக்கங்களுள் ஒரு சில வருமாறு : ". பண்ணையார் வீடுகளின் முகப்பில் எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் திரிக்கைவால் சவுக்கை எடுத்து மயக்கம் வரும் அளவிற்கு அடிப்பார்கள். மயங்கிக் கீழே விழுந்தபிறகும் அவர்கள் விடுவதில்லை. மாட்டுச் சாணத்தைக் கரைத்து மாட்டுக்கு மருந்து புகட்டும் மூங்கில் கொட்டத்தில் நிரப்பிச் சாணிப்பாலை பருகிடச் செய்வார்கள். உழைக்கும் வர்க்கத்தை உருவாக்கிடும் பெண்ணினத்தை, பண்ணையடிமைகளான தாழ்த்தப்பட்ட குலத்தின் தாயை எவ்வளவு மோசமாக நடத்தினார்கள். எத்தகைய கொடூரமான தண்டனை அளித்தார்கள் என்பதைச் சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. அந்த தாயின் மார்பகத்தை கிட்டியால் முறுக்கிக் கசக்கிப் பிழிந்து இரத்தச் சேறாக்கி வேதனையில் அலறித்துடிக்கச் செய்யும் அலங்கோலத்தைக் கண்டு இரசிப்பார்கள். "(பக்.41-42)

upamvučaj Gora č Gomułkviramo 77
தமிழில் எழுந்துள்ள பள்ளு இலக்கியங்களிலும் இத்தகைய தண்டனை முறைகள் சில விபரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
29. வானமாமலை, நா,
ஆராய்ச்சி காலாண்டிதழ் மலர்4 இதழ்1 அக்டோபர் 1973 பக் 94.س-623
வானமாமலை, நா,
தாமரை, ஜனவரி 1977 மலர்.18 இதழ்/ பக்.55-64
30 or 60TLOTLn606). Asir,
தாமரை, ஜனவரி 1977 மலர்.18 இதழ் 7 பக். 58
31 இவை குறித்துப் பின்வரும் நூலில் விரிவாகக் காணலாம்
வெகுஜனன் இராவணா - சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் புதிய வெளியீடு, யாழ்ப்பாணம் 1989
32. இவை பற்றி இந்நூலாசிரியரால் எழுதப்பட்ட பாரதியார் சிந்தனைகள்’ என்னும் நூலில் விரிவாகச் சான்றாதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. பாரதியார் சிந்தனைகள், 1984 பக். 127-179
33. இதுபற்றித் திரு. கோ. கேசவன் தமது நூலொன்றில் ஆதாரங்களுடன் விரிவாக நோக்கியுள்ளார்.
கேசவன், கோ,
இலக்கியமும் இலக்கியப் போக்குகளும் சென்னை, 1982 பக். 135-138
34 மேலது நூல்
35. காந்திஜி வினோபாஜிமுதலியோரின் பணிகள் உண்மையில் நிலவுடைமையாளர்களின் செயல்களுக்கும் அவர்களது அதிகார

Page 38
வெறிக்கும் சப்பைக்கட்டுக் கட்டுவதாகவே அமைந்தன. திராவிட முன்னேற்றக் கழகத்தினது செயற்பாடுகள் கூட பிராமண ஆதிக்கத்தைத் தகர்க்க உதவியதே தவிர நிலவுடைமை ஆதிக்கத்தை அடியோடு அகற்றியதில்லை. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிற் கொண்டுவரப்பட்ட நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் கூட வெறுமனே கண்துடைப்பு முயற்சிகளாகவே அமைந்தன.
36. இவ்வகையிலே புதுமைப்பித்தனின் துன்பக்கேணி, பொன்னகரம் மகாமசானம் தெருவிளக்கு, நாசகாரக்கும்பல், சிதம்பர ரகுநாதனின் பஞ்சும் பசியும் டி. செல்வராஜின் மலரும் சருகும் சின்னப்ப பாரதியின் தாகம் பொன்னிலனின் கரிசல், இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் ஹெப்சிபா யேசுதாஸனின் டாக்டர் செல்லப்பா முதலிய ஆக்கங்கள் கவனிக்கத்தக்கவை
36A. சிவசுப்பிரமணியன். ஆ.
அடிமைமுறையும் தமிழகமும் சென்னை, 1984 பக் 40-45
3 Z. இது தொடர்பாக இலங்கையிலும் இந்தியாவிலும் வெளிவந்துள்ள அறிக்கைகளும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளும் மனங்கொளத்தக்கவை அடிக்குறிப்பு எட்டினை (8) பார்க்கவும்
38. குன்றின் குரல் ஜுலை - ஆகஸ்ட், 1990 பக்.2
39. குன்றின் குரல் ஜுலை - ஆகஸ்ட் 1990 பக்4-5
இவ்வகையிலே 1960களிலும் 1970 களிலும் தஞ்சாவூர் - கீழ்வெண்மணியிலும் இலங்கையின் வடபகுதியிலும் இடம் பெற்றுள்ள கொடுமைகளும் ஒப்பு நோக்கத்தக்கவை.
حمتيبستكي
40. இவ்விடயம் பற்றிச் சோ. சந்திரசேகரன் விரிவாக நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

மலையகத் தோட்டத் தொழிலாளர் 73
சந்திரசேகரன், சோ,
இலங்கை இந்தியர் வரலாறு, 1989 பக் 54-64
சிலர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்திலேயே இந்தியத் தொழிலாளர் கறுவாப்பட்டை சேகரிப்பிற்காக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர் எனக் கூறுவர். ஆயின், அவர்கள் பெரியதொரு தொழிலாளர் சமூகமாக விளங்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
4t நடேசய்யரின் மேற்கண்ட பணிகள் பற்றிச் சாரல் நாடன் தமது நூலில் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் விளக்கியுள்ளார். சாரல்நாடன்,
தேசபக்தன், கோ. நடேசய்யர் 1988 ViSaka Kumari Jayawardana, w
The Rise of the Labour Movement in Ceylon, 1972.
42 Rathakrishnan, N.,
"The Stateless in Ceylon', The Indian Year Book of
International Affairs, Madras, 1963.
43. சந்திரசேகரன், சோ,
இலங்கை இந்தியர் வரலாறு, மதுரை, 1989 பக். 220-249 நித்தியானந்தன். வி.
இலங்கை அரசியற் பொருளாதார அபிவிருத்தி 1948-1956 வர்க்க
இனத்துவநிலைப்பாடுகள், 1989 பக் 97-136 44 இவை பற்றிய விரிவான விளக்கம் அடுத்து வரும் இயலில் இடம் பெறும் 45. இவை பற்றிய விரிவான விளக்கம் அடுத்து வரும் இயலில் இடம் பெறும்
44 இவை பற்றிய விரிவான விளக்கம் அடுத்து வரும் இயலில் இடம் பெறும்
45. இவை பற்றிய விரிவான விளக்கம் அடுத்து வரும் இயலில் இடம் பெறும்

Page 39

2. மலையகத் தமிழ் இலக்கியம்
- தோற்றமும் வளர்ச்சியும்
தமிழ் இலக்கியத்தையும் அதன் வரலாற்றையும் பிரதேச வேறுபாடுகளைக் கடந்த நிலையிற் பொதுப்படையாக வைத்து நோக்க வேண்டுமேயொழிய தமிழகத்து இலக்கியம் ஈழத்து இலக்கியம் சைவு வைணவ சமண, பெளத்த, கிறிஸ்துவ இஸ்லாமிய இலக்கியங்கள், மலேசிய இலக்கியம் என்றெல்லாம் கூறுபோட்டு நோக்குதல் பொருத்தமற்றது என சில தசாப்தங்களுக்கு முன்னரும் ஒரு சாரார் வாதிட்டனர். அதே சமயம், ஏறத்தாழ 1960 -களிலிருந்து தேசிய இலக்கியம் ஈழத்து இலக்கியம், அதன் தனித்துவம் முதலியன பற்றி முனைப்புடன் வற்புறுத்தும் போக்கும் அவை பற்றிய ஆய்வு முயற்சிகளும் வளர்ந்து வருவதை அவதானிக்கலாம். இத்தகைய கருத்துக்கள் ஆறுமுக நாவலர் தொடக்கம், பண்டிதமணி கணபதிப்பிள்ளை வரை வற்புறுத்தப்பட்டு 1950-களிலிருந்து இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினாலும், தனிப்பட்டவர்களாலும் முன்னெடுத்துச் செல்லப்படலாயின. இன்று தமிழகத்து இலக்கியம் ஈழத்து இலக்கியம் மலேசிய இலக்கியம் என்பன தமிழ் இலக்கியம் என்னும் வகையில் பொதுப்படையாகவும் தனித்துவ அம்சங்கள், சிறப்பியல்புகள் முதலியவற்றின் அடிப்படையில் தனித்தனியே ஆழமாகவும் நோக்கப்படுகின்றன. கடந்த ஓரிரு தசாப்தங்களில், "புலம் பெயர்ந்தோர்" அல்லது "புகலிடத் தமிழ் இலக்கியம் எனக் கூறத்தக்க வகையில் தனித்துவம் மிக்க இலக்கியங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.
தமிழ் இலக்கியம் என்ற பொதுமைப்பாட்டினுள் வைத்து நோக்கும் போது ஈழம், மலேசியா, புகலிடங்கள், ஆகியவற்றுக்குரிய தனித்துவ பண்புகளும், சிறப்பியல்புகளும் போதிய அளவு கவனத்திற் கொள்ளப்படாமற் போகலாம் இருபது நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட காலப் பகுதியைக் கொண்டுள்ள தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈழத்தைப்

Page 40
78 இலங்ண்கயின் மலையகத் தமிழ் இலக்கியம்
பொறுத்தவரை, முன்னைய காலப் பகுதிகள் அதிகம் முக்கியத்துவமும் தனித்துவமும் பெறாவிடினும், பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து, இற்றைவரை அது மிக முக்கியமான இடத்தை வகித்து வருகின்றது பல துறைகளிலும் பல வழிகளிலும் தமிழகத்துக்கே முன்னோடியாகத்திகழ்ந்து வருகின்றமையை ஆறுமுக நாவலர் சிவை தாமோதரம் பிள்ளை, வி கனகசபைப்பிள்ளை முதலியோர் தொடக்கம் பேராசிரியர்கள் சுவாமி விபுலானந்தர், கணபதிப்பிள்ளை, செல்வநாயகம் வித்தியானந்தன், கைலாசபதி முதலியோரூடாக இன்றைய அறிஞர்கள், ஆய்வாளர்கள் முதலியோர்வரை அவதானிக்கலாம்.
ஏறத்தாழ 1960 - களின் இறுதிவரை தமிழ்க் கவிதைகள், தமிழ்ச் சிறுகதைகள், தமிழ் நாவல்கள், தமிழ் நாடகங்கள், தமிழ் உரைநடை வளர்ச்சி தமிழ் ஆராய்ச்சிமுயற்சிகள் முதலியன பற்றி விரிவாக நோக்கிய தமிழக, ஈழத்து அறிஞர்கள் எவரும் தமிழகத்து இலக்கிய முயற்சிகளை விரிவாக நோக்கிய அளவிற்கு, ஈழத்து இலக்கிய முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. தமிழ் இலக்கிய வரலாறு, உரைநடை வரலாறு, தமிழ் நாவல் இலக்கியம் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் முதலிய நூல்களை எழுதிய பேராசிரியர்கள் செல்வநாயகம் கைலாசபதி சிவத்தம்பி முதலியோர் ஈழத்து இலக்கிய முயற்சிகள் பற்றி மிகச்சுருக்கமாகவே நோக்கியுள்ளனர்.
இதற்குப்புறநடையாக கணக. செந்தில்நாதனின் "ஈழத்துஇலக்கிய வளர்ச்சி" சில்லையூர் செல்வராசனின் 'ஈழத்துத் தமிழ்நாவல் வளர்ச்சி' மு. கணபதிப்பிள்ளையின் "ஈழநாட்டின் தமிழ்ச்சுடர்மணிகள்" பொ. பூலோகசிங்கத்தின் 'தமிழிலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள்" முதலிய சில நூல்களும் முன்னோடியாகச் சில கட்டுரைகளும் அமைந்துள்ளன எனலாம்
1960 -கள் வரையிலான ஈழத்து இலக்கிய ஆய்வு முயற்சிகளின் pിമ வேறு. ஆயின், 1970 - களிலிருந்து ஈழத்து இலக்கியங்கள், இலக்கிய வரலாறு, கவிதை நாவல், சிறுகதை நாடகம் திறனாய்வு

தோற்றமும் வளர்ச்சியும் 77
முயற்சிகள் முதலியன பற்றிப் பல்கலைக்கழக மட்டத்திலும் பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் குறிப்பிடத்தக்க ஆய்வு முயற்சிகள் பல வெளிவந்துள்ளன; வெளிவந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய முயற்சிகளினாலேயே ஈழத்து இலக்கியங்கள், ஆய்வறிவு முயற்சிகள், முதலியவற்றின் தனித்துவப் பண்புகளும் சிறப்பியல்புகளும், தமிழ் இலக்கிய உலகில் பலராலும் அறியப்படத்தக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 1970-களிலிருந்து பல்கலைக்கழகங்களிளும்தமிழைச் சிறப்புப்பாடமாகப் பயில்வோருக்கான பாடவிதானத்தில் 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு" தனிப் பகுதியாக அமைந்துள்ளமையும் க. பொ. த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடவிதானத்திலும் ஈழத்து இலக்கியம், இலக்கிய வரலாறு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள மையும் மனங்கொளத்தக்கது.
இதே போன்று ஈழத்துஇலக்கியம் என்று பொதுவாகக் கூறப்படினும் ஈழத்து இலக்கியத்தின் பிரதான ஒரு கூறாக இன்று மலையக இலக்கியம் தனித்துவ அம்சங்களுடன் துரிதமாக வளர்ந்து வருகின்றமையும் ஈழத்து இலக்கியம் என்ற வகையில் மலையக இலக்கியம் தணியாகவும் ஈழத்து இலக்கியத்துடன் ஒன்றிணைத்தும் நோக்கப்படவேண்டிய அவசியம் அதிகரித்து வருவதையும் யாரும் அலட்சியப்படுத்த முடியாது
ஈழத்துதமிழ் இலக்கிய வரலாறு என்றநிலையில் வைத்து நோக்கும் போது மலையக இலக்கிய வணர்ச்சி மிகக் குறுகிய காலகட்டத்தினைக் கொண்டுள்ளபோதும் கடந்த மூன்று தசாப்த காலத்துள் மலையக இலக்கியத்தில் ஏற்பட்டுள்ளதுரித வளர்ச்சி சிறப்பாக ஈழத்து இலக்கிய உலகுக்கும் பொதுவாகத் தமிழ் இலக்கிய உலகுக்கும் வளம் சேர்ப்பதாகவும் புதிய பரிமாணத்தை அளிப்பதாகவும் அமையலாயிற்று இந்நிலையில் தமிழ் இலக்கியம் அல்லது ஈழத்துத்தமிழ் இலக்கியம் என்ற பொதுமைப்பாட்டினுள் வைத்து மலையக இலக்கியம் நோக்கப்படும் அதே வேளை தவிர்க்க முடியாதவாறு மலையக இலக்கியத்தைத் தனியாகவும். நோக்க வேண்டிய நிர்பந்தத்தை மலையக இலக்கியத்தின் இன்றைய துரித வளர்ச்சிநிலை ஏற்படுத்தியுள்ளது.

Page 41
78 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
பத்தோடு பதினொன்றாக’ என்ற நிலையில் வைத்து மலையக இலக்கியம் நோக்கப்படுமிடத்து மலையக இலக்கியத்தின் பிரத்தியேக இயல்புகள், சிறப்புப் பண்புகள் முதலியன செம்மையான முறையில் வெளிக்கொணரப் படுவதற்கு வாய்ப்பில்லாமற் போய்விடும் மலையக இலக்கியத்தின் துரித வளர்ச்சி அதன் பிரத்தியேக இயல்புகள், சிறப்புப் பண்புகள், தமிழ் இலக்கிய உலகுக்கான அதன் முக்கிய பங்களிப்புகள் முதலியன பற்றியெல்லாம் விரிவாகவும் செம்மையாகவும் நோக்கப்படுவதற்கு, மலையகத் தமிழ் இலக்கியம்’ என்ற நிலையில் தனியாகவும் வேண்டியவிடத்து ஏனைய தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கியும் ஆராயப்பட வேண்டியது மிக மிக இன்றியமை யாததொன்றாகும்.
தமிழ் இலக்கிய உலகில், மலையகத் தமிழ் இலக்கியம்’ எனத் தனித்து நோக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் எனப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரையோ, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரையோ எவரும் கற்பனை கூடச் செய்திருக்க முடியாது. ஆயின், இன்று அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று, எதிர்காலத்தில் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் அமெரிக்கத் தமிழ் இலக்கியம் கனடாத் தமிழ் இலக்கியம் ஜேர்மனித் தமிழ் இலக்கியம் பிரித்தானியத் தமிழ் இலக்கியம் என்றெல்லாம் பெருகக்கூடும் அவை ஒவ்வொன்றும், தனித்துவம் மிக்கனவாக விளங்கலாம். அவை பற்றியெல்லாம் இப்பொழுதே ஆரூடம் சொல்வதற்கில்லை.
மலையகம் மலையகத் தமிழர் மலையகத் தமிழ் இலக்கியம் ஆகிய பதங்களின் பிரயோகம் 1960 களிலிருந்தே அரசியல் சமூக, இலக்கிய பண்பாட்டுத்துறைகளில் முக்கியத்துவம் பெற்றுவருகின்றது.நீண்ட காலம் பயிலப்பட்டுவந்த இந்தியத் தமிழர், இந்திய வம்சாவழியினர் முதலிய சொற்பிரயோகங்கள் இன்று வேகமாக அருகிவருகின்றன. மலையகம் மலையகத் தமிழர் மலையகத் தமிழ் இலக்கியம் ஆகிய சொல்லாட்சிகள் வெறுமனே பிரதேச அடிப்படையில் வழங்கப்படுவனவல்ல. அவ்வாறு பிரதேச அடிப்படையில் கொள்ளப்படின் மலையகத் தமிழ் இலக்கியத்தின்

தோற்றமும் வளர்ச்சியும் 79
தனித்துவப் பண்புகளும் சிறப்பியல்களும் உரிய முறையில் இனங்காணப்பட வாய்ப்பில்லாது போவதுடன், அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்த முடியாது. ஈழத்து இலக்கியம் என்ற பெருவட்டத்துள் யாழ்ப்பாண இலக்கியம், வன்னி இலக்கியம், திருகோணமலை இலக்கியம் மட்டக்களப்பு இலக்கியம் தென்னிலங்கை இலக்கியம் என நுண்பகுப்பாய்வு(Micro-Analysice) முறையிலும் பிரதேச அடிப்படையிலும் அவ்வப் பிரதேச இலக்கிய முயற்சிகளை ஆய்வு செய்யும் முறையும் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் முதல் பிரதேசத் தமிழாராய்ச்சி மாநாடுகள், சாகித்திய விழாக்கள், பிரதேச சாகித்திய விழாக்கள் முதலியன வரை இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. பிரதேசத்துக்குப் பிரதேசம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படினும் பொதுப் பண்புகளும் பலவுள. "மலையகத் தமிழ் இலக்கியம்"என்னும்போது மேற்கண்ட பிரதேசஅடிப்படையில் அதனைக் கொள்ள முடியாது. சிலர் இவ்வாறு நோக்க முயல்வதாலேயே மலையகத் தமிழ் இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சிமுதலியன பற்றிக் குழப்பநிலை ஏற்படுகின்றது. அத்தகையோர் மலையகத் தமிழ் இலக்கியம் என்ற பதத்தை விடுத்துக் கண்டித் தமிழ் இலக்கியம் மாத்தளைத் தமிழ் இலக்கியம் பதுளைத் தமிழ் இலக்கியம் நுவரெலியாத் தமிழ் இலக்கியம் ான நோக்குவது பெருமளவு பொருத்தமானதாக இருக்கலாம்
ஆயின், மலையகத் தமிழ் இலக்கியம் என்பது இங்கு குறிப்பிட்ட பிரதேசத்தில் தோன்றியது - தோன்றுவது என்ற அடிப்படையிற் கொள்ளப்படவில்லை. மாறாக குறிப்பிட்ட ஒரு தொழில் உற்பத்திமுறையில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்ற சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் சமூகத்தையும் அதன் தனித்துவமான வாழ்வியல் அம்சங்களையும், அச்சமூகத்துக்கே பிரத்தியேகமாகவுரிய அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளையும் பிரச்சினைகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பிரதிபலிக்கும் இலக்கியங்களே மலையகத் தமிழ் இலக்கியம்’ என இங்கு கொள்ளப்படுகின்றது.

Page 42
80 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
மலையகத்திலும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் உடலுழைப்பாளிகள் தொழிலாளர்கள் என்ற வகையில் விவசாயிகள், மீனவர்கள், சிறியனவும் பெரியனவுமான தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள், கைத்தொழிலாளர்கள் என விளங்கும் பல திறத்தாரும் காணப்படினும் இலங்கையின் எந்த ஒரு இடத்திலோ பிரதேசத்திலோ குறிப்பிட்ட ஒரு தொழில் உற்பத்தி முறையில் பல இலட்சம் தொழிலாளர்கள் தனியொரு சமூகமாக விளங்கவில்லை. அத்துடன் இலங்கையின் ஏனைய தொழிலாளர்களின் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் அதிக வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. சுருங்கக்கூறின், இலங்கையின் ஏனைய தொழிலாளர்களின் பிரச்சினைகளோடு தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஒப்பிடுமிடத்து "பாலுக்குச் சீனி இல்லையே" என்று முறையிடுவதற்கும் பசித் தீயைத் தணிப்பதற்கு "உப்பில்லாக் கஞ்சி"கூட இல்லையே எனக் கதறுவதற்கும் இடையிலான வேறுபாடு போன்றதே எனலாம்.
இலங்கையின் சமூக வர்க்கங்கள் பற்றி ஆராய்ந்துள்ள சமூகவியலாளர் ஒருவர் தோட்டத் தொழிலாளர் பற்றி ".இவர்கள் தனித்துவ குணம் படைத்த பாட்டாளிகள் வழமையான கூலிமார்க்கெட் - தொழில்களை மாற்றுவது - மார்க்கெட் தேவையின்படி கூடிய கூலிக்கு உழைப்பை விற்பது ஆகியன இவரிடையே கிடையா. முதலாளித்துவ கூலி உழைப்பு உறவு முறையில் இது தனியானது." 2A எனக் கூறியுள்ளமையும் மனங்கொளத்தக்கது.
சொந்தக் குடிசையோ, சொந்தமாகச் சிறுதுண்டுநிலமோ இன்றியும் பிரஜா உரிமை உட்பட அடிப்படை மனித உரிமைகளின்றியும் (இன்று இப்பிரச்சினைகளுக்கான தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றபோதும் இன்னும் முழுமையாக வெற்றி அளிக்கவில்லை) மிகக்குறைந்த கூலிக்கு மிகக் கூடிய உழைப்பினை மேற்கொண்டு அநாதைகளாகவும் அடிமைகளாகவும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒருங்கே வாழும் பரிதாப நிலையினை இலங்கையில் வேறெங்குமே காணமுடியாது.

தோற்றமும் வளர்ச்சியும் 81
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சமூக உருவாக்கம் பற்றிச் சமூகவியல் அடிப்படையிலும் வரலாற்று அடிப்படையிலும் நோக்கியுள்ள திரு. சாந்திகுமார் கூறியுள்ள கருத்துகள் சில வருமாறு; ". எங்கிருந்தோ வந்து தயாராக இருந்த பொருளாதார வாய்ப்புகளை அபகரித்துக் கொண்ட மக்கள் அல்லர் மலையக மக்கள். இவர்கள் எந்த ஒருநாகரீகச் சமுதாயத்தினதும் மூலத்தைப் போலவே காடுகளை அழித்து வளமாக்கிப் புதியதொரு பொருளாதாரத் துறையை அடைந்தவர்கள். இவர்கள் அமைத்த இந்தப் பொருளாதாரத் துறையும் அதைச் சார்ந்த அமைப்புகளும் இன்னும் இந்நாட்டின் ஆதாரமாக இருக்கின்றன. இந்த மக்களின் வரலாறும் உருவாக்கமும் யாரையும் போலவே இவர்களும் இந்த மண்ணின் மக்களே என்பதை ஆதாரப்படுத்துகின்றன. நமது வரலாறு குறித்த கண்ணோட்டம் நம்மிடை யே தன்னம்பிக்கையையும் உறுதியினையும் வளர்க்க உதவும்."
" . சமூக உருவாக்கம் ஒருபுறமும் இனக்காலனித்துவத்தின் செயற்பாடு மறுபுறமுமாகத் தாம் ஒரு தனித்துவமான இனம் என்ற உணர்வைப் பலப்படுத்தி வந்திருக்கிறது. இந்தச் சமூக உணர்வின் பிரக்ஞையின் பிரதிபலிப்பாகவே மலையகம் என்ற பதம் அண்மைக்காலத்தில் ஆதிக்கம் பெற்று வருகின்றது. மலையகம் என்பதில் தொனிக்கின்ற புவியியல் அர்த்தத்தை மாத்திரம் நோக்கும்போது, அது பிராந்திய வாதமாகப் படலாம். ஆனால், மலையகம் என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் எல்லையை அன்றி, குறிப்பிட்ட உற்பத்தி முறையை (பெருந்தோட்டத் துறையை)ச் சார்ந்து வாழ்கின்ற ஒரு சமூகத்தின் இருத்தலை, ஒரு தேசிய சிறுபான்மை இனத்தின் எழுச்சியைக் குறிக்கின்றது. நாம் இப்படிக் கூறுவது இதுவரை இருந்துவந்திருக்கின்ற பல ஸ்தாபனங்களுக்கு, கோட்பாடுகளுக்கு ரொம்பவும் அசெளகரியத்தை ஏற்படுத்தியே திரும் மலையக மக்களை, ஒரு தொழிலாளர் கூட்டமாகவே கருதுவது பலருக்கு வசதியாக இருந்திருக்கிறது."

Page 43
82 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
இதேபோன்று, இன்னோர் அறிஞர் பெருந்தோட்டத் தொழிலாளர் பற்றிக் குறிப்பிடுமிடத்து ". மக்கள் என்று நாம் யாரைச் சொல்கிறோம் என்று தெளிவாக விளங்கிக் கொள்வது மிக அவசியம் வசதிகள் படைத்தோரையும் சமூகத்தில் அதிகார வர்க்கத்திலிருப் போரையும் தவிர்ந்த ஏனையோரையே நாம் மக்கள் என்று குறிப்பிடுகிறோம். இந்தச் சமூகத்தில் அதிகாரமில்லாத அவர்களே பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். அதிகார வசதிபடைத்தவர்கள் அவர்களைப் பற்றி அடிக்கடி பேசுகிறார்கள். ஆனால், அவர்களிடம் சென்று பேசமாட்டேன் என்கிறார்கள். ஆட்டு மந்தையைப் போல அந்த மக்களை வழிநடத்தவும், அந்த மக்களைப் பற்றித் தாங்களே முடிவெடுக்கவும் வசதிபடைத்தவர்கள் முயற்சிக்கின்றார்கள் சாதாரண மக்கள் முழ வெடுக்குமளவுக்கு அறிவு படைத்தவர்களாகக் கருதப்படுவதில்லை. அதிகார வர்க்கத்தினர் அனைவரும் மக்களைப் பற்றி ஒரே மனப்பாங்கு உடையவர்களே. மக்களின் நன்மை என்பது அவர்களைப் பொறுத்தமட்டில், இரண்டாம் பட்சமே. பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் 97.5 வீதமானோர் மக்கள் என்ற பிரிவில் அடங்குவர் அவர்கள் உடல் உழைப்பை நல்குபவர்கள்." 4 roné கூறியுள்ளமை சிந்திக்கத்தக்கது.
மலையகப் பெருந்தோட்டங்களிலிருந்து பல்வேறு காரணங்களினால் நிர்ப்பந்தமாக வெளியேற்றப்பட்டவர்களும் வெளியேறியவர்களும் எனக் கணிசமான தொகையினர் வடக்கு, கிழக்குப் பகுதிகள் உட்பட இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழ்க்கைப் போராட்டம் நடத்துகின்றனர்; நகரசுத்தித் தொழிலாளர்களாகவும், மூட்டை தூக்கிகளாகவும், விளம்பரம் காவிகளாகவும் கடைசிசிப்பந்திகளாகவும் சிற்றுமியர்களாகவும் மலிவு விபச்சாரிகளாகவும், எச்சில் இலைக்காக நாய்களுடன் போராடும் பிச்சைக்காரரிசாகவும் சேரிவாழ் மக்களாகவும், இரத்தினக்கல் சேகரிக்கும் முயற்சியில் மலிவுக் கூலிகளாகவும், நடைபாதை LTLtttLELTLL T TTLLtLLtLLtLTLTTTTTLL LTS TLCE

தோற்றமும் வளர்ச்சியும் 83
வாழாது, மாய்ந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு உதிரிகளாக வாழ்பவர்களின் பரிதாபநிலைபற்றியும் இவர்கள் பிற மத இனத்தினராக மாறிக்கொண்டிருப்பது பற்றியும் மானுட நேயம் பூண்ட தமிழ் சிங்கள, முஸ்லிம் இலக்கிய கர்த்தாக்கள் சிலர் தமது ஆக்கங்களில் பிரதிபலித்துள்ளனர். .
மலையகத் தோட்டத் தொழிலாளர் என்ற வகையில் மிகப்பெரும் எண்ணிக்கையினர் தமிழர்களே எனினும் சிறுதொகையினராக மலையாளிகள், ஆந்திரர், முஸ்லிம்கள், சிங்களவர் எனப் பல இனத்தினரும் தொழில் புரிகின்றனர். இன்று ஏறக்குறைய ஒரு இலட்சம் சிங்களமக்கள் தோட்டத் தொழிலாளர்களக வாழ்க்கை நடத்துகின்றனர். எனினும் தமிழ்த் தொழிலாளர்களுக்கு இல்லாத அடிப்படை உரிமைகள் பல, இவர்களுக்குள்ளன என்பது மனங்கொளத்தக்கது
கடந்த நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வந்த "இந்திய வம்சாவழித் தமிழர்" என்ற வகையிலிமலையகத் தோட்டப்புறங்களிலும் நகரப் புறங்களிலும் சிறிய பெரிய வியாபார முயற்சிகளில் ஈடுபடுவோர் ஆலயங்களிற் பணிபுரிவோர், அரச துறைகள், தனியார் துறைகள், மலையகத் தோட்டங்கள் முதலியவற்றில் ஊழியர்களாகக் கடமை புரிவோர், புத்திஜீவிகள் எனப் பல திறப்பட்டோர் காணப்படுகின்றனர். தோட்டத் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் மிக மிகச்சிறிய தொகையினரேயாவர். இவர்களும் இன்று மலையகத் தமிழர்' என்ற வரையறைக்குள் அடக்கப்படுகின்றனர்.
மலையகத் தமிழினம் இலங்கையின் தேசிய இனங்களுள் ஒன்று ான்றும் கருத்து இன்று மலையகத் தமிழர்மத்தியில் வேகமாக வளர்ந்து வருவதை அவதானிக்கலாம் ரறத்தாழ 1960 -களிலிருந்து மலையகத் தொழிலாளர் மத்தியிற் குறிப்பாக இாந்தலைமுறையினர் மத்தியில் TLTL LLTLT TL0LTLTTET LLTLTLLLLLT TLTCL LTTTL அரும்பிமலர்ந்துகொண்டிருப்பதை இன்று பலதுறைகளிலும் கானலாம் மலையகத் தொழிலாளர்களை இதய சுத்தியோடு தேசிப்பவரிகள்

Page 44
84 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
அவர்களது எழுச்சியைக்கண்டு இறும்பூதெய்துகின்றனர். அவர்களை என்றும் கூலிகளாகவும் அடிமைகளாகவும் வைத்திருக்க விரும்புவோர் அவ்வெழுச்சியைக் கண்டு அச்சமடைகின்றனர்; பொறாமை கொள்கின்றனர்.
அவர்களது எழுச்சியை எவரெவர் எப்படி எப்படி நோக்குகின்றனர் என்பதை உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டு கதையல்ல; அவன் நடந்துகொண்டிருக்கிறான்.'என்ற தலைப்பில், கதை வடிவில் ஏ.பி.வி. கோமஸ் ஓரிடத்தில், 1981 ம் ஆண்டு சுவைபட விளக்கியுள்ளார். அதன் ஒரு சிறு பகுதி வருமாறு:
'நீங்கள் மலையகப்பக்கம் போகலாமே, இப்போதுதான் அங்கு வாழ்கின்றவர்கள் நல்ல விழிப்புணர்ச்சி பெற்று பிள்ளைகளை எப்படியாவது பழக்க வைக்க வேண்டும் என்று துடிக்கிறார்களே. ..இப்போ அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் ஒரு முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால் ஒன்று நல்ல கய்டன்ஸ்'அதாவது வழிநடத்தல் வேண்டும். தொழிற் சங்கங்கள் பாடுபடுகின்றனதாம். ஆனால், அதைவிட நடுநிலைமையில் நின்று வழி நடத்த அவர்கள் மத்தியிலிருந்தே ஆட்கள் தேவை." 6
arv சார் இன்றைக்குத் தோட்டத்தில் உள்ள இளைஞர்கள் நல்லா வாழ்கிறார்கள். நல்லா வேலையிருக்கு. நல்லாப்பழக்கிறார்கள். நகர்ப்புறத்துக்குப்போய்ப் படிக்கிறார்கள். நல்லா உடுத்துகிறார்கள். ரிஸ்ட்வார்ச் எல்லாம் கட்டிக்கொண்டு, கெசட் எல்லாம் தூக்கிக் கொண்டு போகிறார்கள். .அவர்களைத் (தெமலு) தமிழர் என்றே சொல்லமுடியாது." "ஆனால், ஒன்று மட்டும் உண்மை வெளியரங்கமான ஒரு பெரிய மாற்றம் தோட்டப்பகுதி மக்களிடம் விசேடமாக, இளைஞர் மத்தியில் காணப்படுகிறது." 7வெளியரங்கமான மாற்றங்கள் மட்டுமன்று உள்ளரங்கமான மாற்றங்களும் கடந்த பத்துப்பதினைந்து வருடங்களுள் வேகமாக இடம் பெற்று வருவதை அவதானிக்கலாம்.

தோற்றமும் வளர்ச்சியும் 85
இதேபோன்று, மலையக ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ள சிலவிடயங்களும் இங்கு கவனிக்கத்தக்கவை. " . மோசமான சுரண்டலுக்கு மத்தியில், தன்னலமற்று இந்நாட்டுக்கு உழைத்த மலையக மக்களுக்கு இன்று இழைக்கப்பட்டிருக்கின்ற நன்றியற்ற துரோகச் செயலால் அவர்களுக்குள் ஏற்பட்டிருப்பது அச்சமல்ல. மாறாக வஞ்சிக்கப்பட்டுவிட்டோம் என்ற விரக்தியும் ஆவேசமுமாகும். மலையகத் தலைமைகளும் மலையகத்தின் எதிர்காலத்தில் அக்கறையுள்ளவர்களும் ஒன்றுபட்டு நிதாரித்து முடிவெடுக்கவேண்டிய கடமையை வரலாறு வேண்டி நிற்கிறது.
இத்தகைய மாற்றங்களையும் வேகமான எழுச்சியையும் 1987 ம் 1983 ம் ஆண்டுகளில் இடம்பெற்ற "கொடூரமாக வன்முறைகள்" மிக மோசமாகப் பாதித்தமை உண்மையே வன்முறைகளையடுத்து ஓரிரு வருடங்கள் எல்லாமே ஸ்தம்பித நிலையை அடைந்தன. சகல நம்பிக்கைகளும் சற்றே தொய்ந்து காணப்பட்டன. ஆயின், அதிஸ்டவசமாக இந்நிலைமை நீடிக்கவில்லை. "அணைகடந்த வெள்ளம் போல்" மீண்டும் மலையகம் சகல துறைகளிலும் வேகமான எழுச்சியைப் பெற்றுவருவதை இன்று கண்கூடாகக் காணலாம். இதற்கு இலக்கிய உலகும் விதிவிலக்காக அமைய முடியாது மலையக இலக்கிய உலகிலும் வியக்கத்தக்க வகையில் இன்று பலதுறைகளிலும் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இவை பற்றிச் சிறிது விரிவாக இங்கு நோக்குதல் அவசியமானதாகும்
மலையகம் தவிர்ந்த ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகினைச் சற்றுக் கூர்ந்து நோக்குமிடத்து, 1950 -களின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை ஏற்பட்டு வந்துள்ள மாற்றங்கள், முன்னேற்றங்கள் முதலியவற்றை மலையகத் தமிழ் இலக்கிய உலகிலும் காணமுடிகின்றது.
1950 -களின் பிற்பகுதியிலிருந்து "தேசிய இலக்கியம்" எனக் கூறத்தக்க வகையில் ஈழத்துக்கேயுரிய சிறப்பியல்புகளுடன் பலதுறை இலக்கியங்களும் பரிணமிக்கத் தொடங்கின. ஆக்க இலக்கியத் துறையில்

Page 45
88 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
மட்டுமன்றி ஆய்வறிவுத் துறையிலும் இத்தகைய வளர்ச்சிப் போக்கு 1960-களிலிருந்து வேகம் பெற்று வருவதை அவதானிக்கலாம் முன்னர் என்றுமே இல்லாத அளவிற்கு, ஈழத்துப் பண்டைய தமிழ் இலக்கிய முயற்சிகள், இடைக்காலத் தமிழ் இலக்கிய முயற்சிகள், நவீன இலக்கியங்கள், ஆறுமுக நாவலர் சிவை தாமோதரம்பிள்ளை, பாவலர் துரையப்பாபிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர், சோமசுந்தரப்புலவர் சுவாமி விபுலானந்தர் முதலியோரது ஆக்கங்கள், அவர்களது பணிகள் முதலியன பற்றிய ஆய்வுகள், தேசியப்பண்புகளை வெளிப்படுத்தும் வகையில் முனைப்புப்பெற்று வருவதும் இவ்வகை ஆய்வுகளுக்கு உறுதுணையாக அமையும் வகையில் ஏனைய துறைகளான மொழியியல், தொல் பொருளியல் சாசனவியல் வரலாறு, மானிடவியல், வாழ்க்கை வரலாறு சமூகவியல், நுண்கலைகள், கல்வியியல் முதலிய துறைகள் சார்ந்த ஆய்வு முயற்சிகள் பெருகி வருவதும் இவைகாரணமாக ஈழத்துத் தமிழியல்’ துறை வளர்ச்சியும்துலக்கமும் பெற்றுவருவதும் அவதானிக்கக்கூடியவை
பலதுறைகள் சார்ந்த ஆய்வு முயற்சிகள் வெளிவருவது, ஆக்க இலக்கிய கர்த்தாவுக்கும் இலக்கிய ஆய்வாளர்களுக்கும் ஒருங்கே பயனளிக்க வல்லதாகும்
இதுபோன்றே 1960 -களிலிருந்து மலையகத்திலும் சிறுகதை நாவல் நாடகம் கவிதை புதுக்கவிதை முதலியன வேகமான வளர்ச்சி பெற்று வருகின்றன. அவற்றின் வளர்ச்சிக்கும் அவற்றை ஆய்வோருக்கும் அதிகம் உதவும் வகையில் மலையகத்தின் மாணிக்கங்களாகக் கருதப்படும் கோ. நடேசய்யர், சிவி வேலுப்பிள்ளை, இராஜலிங்கம் முதலியோரைப் பற்றிய விரிவான ஆய்வு முயற்சிகளும் மலையகத் தமிழ் இலக்கியம் மலையகத் தோட்டத் தொழிலாளரின் வரலாறு, அரசியல் பொருளாதார, சமூக நிலைமைகள், சமய பண்பாட்டம்சங்கள் முதலியன பற்றிய ஆய்வு முயற்சிகளும் முன்னர் ஒருபோதும் இல்லாதவகையில் கடந்த ஓரிரு தசாப்தங்களில் மிக வேகமான வளர்ச்சி பெற்று வருதல் மனங்கொளத்தக்கது. தமிழியல், பாரதியியல், நாவலரியல், விவேகானந்தரியல் விபுலானந்தரியல் * என்பன போல "மலையகத்

தோற்றமும் வளர்ச்சியும் 87
தோட்டத் தொழிலாளரியல்" என்று கூறத்தக்க வகையில் இன்று மலையகத் தோட்டத் தொழிலாளர் தொடர்பான சகல துறைகளும் பற்றிய பன்முகப்பட்ட ஆய்வு முயற்சிகள் பெருகிவருதல் மகிழ்ச்சிக்குரியதொன்றாகும் r
1960 -களுக்கு முன்பே மலையகத் தோட்டத் தொழிலாளர் தொடர்பாகக் குறிப்பிடத்தக்க ஆய்வுமுயற்சிகள் பல வெளிவந்துள்ள போதும் அவற்றுக்கும் 1960 -களிலிருந்து இன்றுவரை வெளிவந்துகொண்டிருக்கும் ஆய்வு முயற்சிகளுக்குமிடையில் ஆய்வாளர்களின் நிலைப்பாடு, பிரச்சினைகளை அறுகும் இயல்பு பிரச்சினைகளுக்கானதிர்வு மார்க்கங்கள் முதலியவற்றிற்குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன.
1960 -களுக்கு முன்னர் மலையகத் தொழிலாளர்கள் பற்றி வெளிவந்த ஆய்வுகளுள் அதிகமானவை, ஆங்கிலத்திலேயே வெளிவந்துள்ளன. அவை பெரும்பாலும் மலையகத்தைச் சாராதவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன. அவற்றுட் பெரும்பாலானவுை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் உண்மை நிலையையும் அவலங்களும் வேதனைகளும் சோகமும் கப்பிய பரிதாபத்திற்குரிய அவர்களது வாழ்க்கைப் போராட்டங்களையும் கையறு நிலையையும் உள்ளபடி எடுத்துக்காட்டுவனவாக அமையவில்லை. இந்தியக் கூலிகள்" என்ற அலட்சிய நோக்கிலும் தங்களது வாழ்வையும் வளத்தையும் கெடுக்க வந்த 'கள்ளத்தோணிகள்"என்று துவேஷப்பாங்கிலும் "மலிவுக் கூலிகள்' "விசுவாசமும் கீழ்ப்படிவுமுள்ள அடிமைகள்" என்னும் போக்கிலுமே, மலையகத் தோட்டத் தொழிலாளர் அதிகமாக நோக்கப்பட்டுள்ளனர். இதற்குப்புறநடையாகக் குறிப்பிடத்தக்க ஒருசில ஆய்வுகளே அமைந்தன. ஆய்வாளர்கள் ஒருபுறமிருக்க, அன்றைய சமயத் தலைவர்கள் சிலர் தோட்டத் தொழிலாளர்களைத் "தென்னிந்தியக் கீழ்சாதியினர்" எனவும் பிரபல அரசியல் தலைவர்கள் சிலர் "இந்தியக் கூலிகள்" எனவும் இழிவுபடுத்திக் கூறியுள்ளமை கவனித்தற்குரியது ?

Page 46
88 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
1960 -களிலிருந்து மலையகத் தமிழ் இலக்கியம் வேகமான வளர்ச்சியைப் பெற்று வருவது போலவே, மலையகத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளும் விமர்சனங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அதுபோலவே, மலையகத் தோட்டத் தொழிலாளரியல் சார்ந்த பலதுறைகள் பற்றிய ஆய்வு முயற்சிகள், பல்கலைக்கழக மட்டத்திலும் பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் இடம்பெற்று வருதல் குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, சி.வி. வேலுப்பிள்ளையின் நாடாற்றவர்கதை, சாரல்நாடளின் சிவி சில சிந்தனைகள், தேசபக்தன் கோ. நடேசய்யரின் மலையகத் தமிழர் மலையக வாய்மொழி இலக்கியம் சோ. சந்திரசேகரனின் இலங்கை இந்தியர் வரலாறு, கல்வியியல் கட்டுரைகள், மா. கருணாநிதியின் இந்திய வம்சாவழித் தமிழரின் கல்வி நிலை (முதுமானிப்பட்டத்துக்கான ஆய்வுக்கட்டுரை) சோ. சந்திரசேகரனும் மா. கருணாநிதியும் இணைந்து எழுதி வெளியிட்ட இலங்கையின் கல்வி வளர்ச்சி இலங்கையிற் கல்வி (இவற்றில் மலையகக் கல்வி நிலையும் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது) ந. வேல்முருகுவின், இலங்கைப் பெருந்தோட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளியினரின் சமூகப் புவியியல் (கலாநிதி பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரை), எஸ்.சந்திரபோஸின் நுவரெலியா மாவட்டப் பெருந்தோட்டத் தொழிலாளரின் வருமானமும் செலவுடமையும் பற்றிய பொருளாதாரப் ւյ6չհահայ6ծ (முதுமானிப்பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரை), ம. மூக்கையாவின் இன்றைய மலையகம் அ. சிவராஜாவின் மலையகத் தமிழரின் அரசியல் வரலாறும் இலக்கியங்களும், ந. வேல்முருகுவின் மலையக மக்களின் சமயநம்பிக்கைகளும், சடங்கு முறைகளும் மாத்தளை வடிவேலனின் மலையகப் பாரம்பரியக் கலைகள் இரா. சிவசந்திரன், குமாரி ஜயவர்த்தனா ஆகியோர் இணைந்து எழுதிய மலையகத் தமிழ் மக்கள் முதலியவை குறிப்பிடத்தக்கவை
இவைதவிரக் கடந்த ஒரிரு தசாப்தங்களில் "மலையகத் தோட்டத்
தொழிலாளரியல்" தொடர்பாகக் காத்திரம்மிக்க நூற்றுக்கணக்கான கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மலையகத்திலும் பிற இடங்களிலுமிருந்து

தோற்றமும் வளர்ச்சியும் 89
வெளிவரும் சஞ்சிகைகளில் மட்டுமன்றி, "மலையகத் தோட்டத் தொழிலாளரியல்" தொடர்பாக நிறுவன ரீதியாக ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களின் வெளியீடுகளும் கடந்த மூன்று வருடங்களாக இடம்பெற்று வரும் சாகித்திய விழாக்களில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் சாகித்திய விழா மலர்களில் வெளிவந்த கட்டுரைகளும் கவனத்திற்குரியவை பல்கலைக் கழகங்களிலும் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயிலும் இறுதியாண்டு மாணவர் பலர், கடந்த சில ஆண்டுகளாகத் தமது ஆய்வுக்குரிய விடயங்களாக மலையக இலக்கியங்களையும் மலையக இலக்கிய கர்த்தாக்களையும் கொள்ளுவதும் மலையக இலக்கிய வளர்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைகின்றது.
இத்தகையதொரு பின்னணியில் ஏறத்தாழ கடந்த நூற்றி அறுபது வருடகால மலையக இலக்கிய வளர்ச்சியை வசதியும் தெளிவும் கருதிப் பின்வரும் காலகட்டங்களாக வகுத்து நோக்குதல் பொருத்தமான தெனலாம்;
(1) ஆரம்ப காலம் (ஏறத்தாழ 1825 ம் ஆண்டு முதல் 1920ம்
ஆண்டு வரை)
(2) விழிப்புணச்சிக் காலம் (ஏறத்தாழ 1921 ம் ஆண்டு முதல்
1950-களின் இறுதிவரை)
(3) எழுச்சிக் காலம் (1960கள் முதல் இற்றை வரை)
ஆரம்ப காலம்
மலையக இலக்கிய வகைகளுள், காலத்தால் முற்பட்டது மலையக நாட்டார் பாடல்களே என்பதில் ஐயமில்லை. உலகின் எந்த ஒரு பண்பட்ட, பண்படாத சமூகத்தினதும் காலத்தால் முற்பட்ட இலக்கியமாகத் திகழ்வதும் அதுவேயாகும். இன்றைய மலையகத் தொழிலாளர்களின் மூதாதையர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி தொடக்கம்

Page 47
90 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
தென்னிந்தியாவிலிருந்து மலையகத்திற்குப்புலம்பெயர்ந்த போது தமக்கே விசேடமாக உரிய வாய்மொழி இலக்கியத்தையும் கொண்டு வந்தனர். (அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத வாய்மொழி இலக்கியமும் அவர்களுடன் வந்து சேர்ந்து) அவ்வாறு அவர்கள் புலம் பெயர்ந்த போது அவர்கள் அடைந்த இன்னல்கள், வேதனைகள், ஏற்பட்ட உயிர் உடைமை இழப்புகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் முதலியவற்றை உயிர்த் துடிப்புடன் சித்தரிப்பதும் வரலாற்று ஆவணமாக விளங்குவதுமான மலையக வாய்மொழி இலக்கியம் அல்லது நாட்டார் பாடல்கள் பற்றி அடுத்துவரும் இயலிலே தனியாக நோக்கப்படும்.
மலையத்தமிழ் இலக்கியத்தின் தோற்றக்காலம் யாது? மலையக இலக்கிய முன்னோடிகள் யாவர்? இவையற்றி, இன்றுவரை மலையகத் தமிழ் இலக்கிய உலகில் கருத்து வேற்றுமைகளும் சிக்கல்களும் நிலவிவருகின்றன. இவற்றுக்கான அடிப்படைக்காரணம் "மலையகத்தமிழ் இலக்கியம்"பற்றிய தெளிவின்மையே எனலாம். இதனாலேயே மலையகத் தமிழ் இலக்கியம் மாத்தளை அருணேசருடன் ஆரம்பமாவதாகச் சிலரும் அருள்வாக்கி அப்துல் காதர்புலவருடன் ஆரம்பமாவதாகச் சிலரும், அறிஞர் சித்தி லெவ்வையுடன் ஆரம்பமாவதாக வேறு சிலரும் கண்டி அரசர் காலத்துடன் ஆரம்பமாவதாக இன்னும் சிலரும் வாதிடுவர். இவ்வாறு நோக்குகையில், நாம் மேலும் பின்னோக்கிச் சென்றால், கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பொறிக்கப்பட்டனவும் மலையகத்தில் ஆங்காங்கே கண்டெடுக்கப் பட்டனவுமான கல்வெட்டுகளிற் காணப்படும் தமிழ்ச் செய்யுட்களையே மலையகத் தமிழ் இலக்கியத்தின் ஆரம்பம் எனக் கொள்ள வேண்டி வரும் 71
"மலையகத் தமிழ் இலக்கியம்" என்னும் பதம் குறித்து நிற்கும் பொருள் பற்றி மேலே விளக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நோக்குகையில், மலையக இலக்கியத்தின் தோற்றுவாயாக மலையக நாட்டார் பாடல்களே விளங்குவதை அவதானிக்கலாம். நாட்டார் பாடல்களைத் தவிர்த்து நோக்குகையில் மலையகத்தமிழ் இலக்கியத்தின்

தோற்றமும் வளர்ச்சியும் 91
தோற்றத்திற்கு முதலில் வித்திட்டவர்கள் யுகப்பெருங் கவிஞன் பாரதியும் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனுமேயாவர் என்பது புலப்படும்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலட்சோபலட்சம்
தென்னிந்தியத் தொழிலாளர்கள் அடிமைக் கூலிகளாகக் கடல்கடந்து
எண்ணற்ற தீவுகளிலும் நாடுகளிலும் குடியேற்றப்பட்டனர். அம்மக்களின்
பரிதாப நிலையை நீக்க மகாத்மா காந்தி போன்ற ஒரு சிலரே, சிரத்தை
கொண்டனர். அம்மக்களது பரிதாப நிலையை எண்ணி முதன் முதற்
சிரத்தைகொண்ட தமிழ் இலக்கிய கர்த்தா மகாகவி பாரதியாரேயாவர். "தமிழ்ச் சாதி" என்ற தலைப்பிலே இதயக் குமுறலுடன் அவர் பாடியுள்ள
பாடல்களின் ஒரு பகுதிஇவ்வகையிலே கருத்தூன்றி நோக்கத்தக்கது.
". ஆப்பிரிக்கத்துக் காப்பிரிநாட்டிலும் தென்முனை யடுத்த தீவுகள் பலவினும் பூமிப்பந்தின் கீழ்ப்புறத்துள்ள பற்பல தீவினும் பரவியில் வெளிய தமிழ்ச் சாதி தடியடி யுண்டும் காலுதையுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும் பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும் பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம் நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்." t2
எனவரும் பகுதி பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே தமிழ்த் தொழிலாளர்கள் கடல் கடந்து இலங்கையுட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலும் தீவுகளிலும் குடியேற்றப்பட்டு சொல்லொணாத் துன்பங்களுக்கும் இம்சைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதைச் சுட்டிநிற்கும்
"கரும்புத் தோட்டத்திலே" என்னும் தலைப்பிலே, பாரதியார் பிஜித் தீவுக் கரும்புத் தோட்டத்திலே தென்னிந்தியத் தொழிலாளப் பெண்கள் அனுபவித்த கொடுமைகளையும் துன்பங்களையும் வேதனைகளையும்

Page 48
92 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
கல்நெஞ்சையும் உருகவைக்கும் வகையிற் சோகச் சித்திரமாகத் திட்டியுள்ளார்.
". ஏழைகள் அங்கு சொரியுங்கண்ணிர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ?"
என வினவும் பாரதியார்,
'. கண்னற்ற தீவினிலே . அவர் விம்மிவிம்மி விம்மி விம்மியழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே! - துன்பக் கேணியிலே எங்கள் பெண்களழுதசொல் மீட்டும் உரையாயோ?."
எனக் காற்றிடமே கேட்பதும் நோக்கத்தக்கது.
"... . அவர் விம்மியழுவுந் திறங்கெட்டுப் போயினர் நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே அந்தப் பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப் பட்டு மழந்து மடிந்து மடிந்தொரு தஞ்சமுமில்லாதே - அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் மிஞ்ச விடலாமோ? ஹே! வீரகராளி சாமுண்டி காளீ f3
என அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை எண்ணி நெஞ்சுகுமுறும் பாரதியார் இறுதியிலே அவர்களது அவலங்களையும் அழிவுகளையும் தடுத்துநிறுத்தக் காளியை உதவிக்கழைப்பதைக் காணலாம்.
இப்பாடற் பகுதியில் இடம்பெற்றுள்ள கருத்துகள் பிஜித் தீவுக் 'கரும்புத் தோட்டத்திலே" என்ற தலைப்பிற்குப் பதிலாக, இலங்கைத்

Giggsmiðumpuh austifớafhupuh S3
தீவுத் "தேயிலைத் தோட்டத்திலே" என்ற தலைப்பில் வைத்து நோக்கினாலும் முற்று முழுக்கப் பொருந்தக்கூடியதே. (இவ்வகையிலே சுந்தர வாத்தியார், சிவி வேலுப்பிள்ளை ஆகியோர் "தேயிலைத் தோட்டத்திலே" என்ற தலைப்பிற் பாடல்களைப் பாடியுள்ளமை மனங்கொளத்தக்கது) மேற்கண்ட விடயங்கள் தொடர்பாகக் கவிதைகளை மட்டுமன்றி 'நம்பிவிடாதே" "திரான்ஸ்வால் இந்தியர்களின் கஷ்டம்" பூநிமான் காந்தி" முதலிய கட்டுரைகளையும் பாரதியார் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரதியை அடுத்து புகழ்பூத்த சிறுகதை எழுத்தாளரான புதுமைப் பித்தன் தமது "துன்பக்கேணி" என்னும் நீண்ட சிறுகதையில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்திலிருந்து மலையகத்திற்குப் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவலங்களையும் அவர்களது பரிதாப நிலைக்கு மூலகாரணமாயிருந்த தமிழ்நாட்டின் நிலைமையையும் அங்கும் அடக்கி ஒடுக்கப்பட்டு அவர்களது வாழ்வு பறிக்கப்பட்டிருந்த நிலையையும் தமிழ்கத்தின் மிகப் பின்தங்கிய வாசவன்பட்டிக் கிராமத்தையும் மலையகத்தையும் முக்கிய களங்களாகக் கொண்டு உரைநடையிலே கச்சிதமாகவும் சோகச் சித்திரமாகவும் திட்டியுள்ளார். 74 பாரதியார் கையாண்ட "துன்பக் கேணி" என்னும் சொல்லாட்சியையே புதுமைப்பித்தன் தமது சிறுகதையின் தலைப்பாகக் கொண்டுள்ளார். மலையகத் தொழிலாளர்களின் இருள் குழ்ந்ததும் அவலங்கள் நிறைந்ததுமான வாழ்க்கைப் போராட்டத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் தலையாயதும் காத்திரம் மிக்கதுமான முதற் படைப்பு (தமிழில்) துன்பக்கேணியேயாகும்
1950 -களின் இறுதிவரை மலையகத்திலே அதிக அளவிலான ஆக்க இலக்கியங்கள் தோன்றாவிடினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து மலையகத்தில் தொழிலாளர் குடியேறத் தொடங்கிய காலத்திலிருந்தே தொழிலாளர் மத்தியில் கலை-இலக்கிய ஈடுபாடு மிகுதியாக இருந்து வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. பாரம்பளியமாக இலங்கையின் வடக்கு கிழக்குப்பகுதிகளில் தமிழ்மக்கள்

Page 49
94 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
வாழ்ந்து வருகின்றமையும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தென்னிலங்கையிலும் கண்டி முதலிய நகரப்புறங்களிலும் கணிசமான தொகையினராகத் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றமையும், இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் தமிழ்பேசும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றமையும் இலங்கையின் மிக அயலில் இந்தியா அமைந்துள்ளமையும் ஏறத்தாழ 1940ம் ஆண்டு வரை இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பிரயாணம் செய்வதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாதிருந்தமையும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கும் அடிக்கடி இலக்கிய அறிஞர்களும் இறை அடியார்களும், சமயப் பிரசங்கிகளும் யாத்திரை மேற்கொண்டமையும் மலையகத் தொழிலாளர் மத்தியில் நிலவிவந்த கலை-இலக்கிய ஈடுபாடு அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன எனலாம் ?
"தோட்டக்காடு, 1921 -க்கு முன்னும் பின்றும் சட்டத்தாலும் இந்நாட்டுச் சமூகத்தாலும் ஒதுக்கப்பட்ட இடமாகும் அங்கு நாகரிகம் போவதற்கு முட்டுக்கட்டைகள் பல இருந்தன. எல்லைத் தெய்வங்களாகிய முனியாண்டியும் செண்டாகட்டியும் தங்கள் தோட்டத்திற்குள் வேற்றுக்காற்று அடிக்காதபடி எப்படிச் காவல் செய்தார்களோ, அதேபோல் தோட்ட அதிகாரமும் அரசும் கூலிக்காரர்களை வெளியார் தீண்டாதபடி வெகுஜாக்கிரதையாகக் கண்கானித்தார்கள். அந்த அகன்ற சிறைக்குள் வாழ்க்கை நடத்திய தொழிலாளர்கள் மிலேச்சர்கள் அல்லர் அதற்குக் காரணம் அவர்களது பழைமையான நாகரிகமேயாகும்."?ான மக்கள் CLTLLLLLT TLLT TTTTTLL TLLTCL LTCTTTTTTLLLLSS
காலம்காலமாகத் தொழிலாளர்மத்தியிம் செல்வாக்குடன் விளங்கி வரும்பலவகை நாட்டுப்பாடல்களுடன் ஆரவல்லி குரவல்லிகதை பாரத இராமாயணக் கதைகள், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவிளையாடற் புராணம் சித்தனங்கள் முதலியவையும் காமன்கூத்து பொன்னர்-சங்கர் கூத்து அருச்சுனன் தபசு அரிச்சந்திர விலாசம் மதுர்ைவீரன், நந்தன் சரித்திரம் முதலியவையும் மாரியம்மன் தாலாட்டு

தோற்றமும் வளர்ச்சியும் 95
நளமகாராஜன் கதை தேசிங்குராஜன் கதை, விக்கிரமாதித்தன் கதை மதனகாமராசன் கதை ஆயிரந்தலைவாங்கிய அபூர்வசிந்தாமணிமுதலிய கதைகளும் 7 அதிகம் பயிலப்பட்டு வந்தமையும் அவர்களது கலைஇலக்கிய ஈடுபாட்டினை அதிகரிக்கச் செய்தன.
அடிப்படை வாழ்க்கை வசதிகள் எவையுற்றநிலையில் மிகக்கடின உழைப்பும் அவலங்களும் துயரங்களும் மிகுந்த தொழிலாளர்களது வாழ்க்கையில் அமைதியையும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் ஓரளவாவது அளிப்பனவாகக் கலை-இலக்கியங்களே
" ..... இவைகள் எல்லாம்
விளங்கி வருவதை அவதானிக்கலாம். (கலை-இலக்கியங்கள்) தோட்ட மக்கள் உள்ளத்திற்குத் தண்ணிர்
பாய்ச்சின." 18 என்பர்
மேலும் இலங்கையில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் முதலியன பெருகாதிருந்த 1920கள் வரையிலான காலகட்டத்தில் நவசக்தி ஆனந்த போதினி அமிர்தகுண போதினி லோக்ோபகாரி விகடதூதன் முதலிய தமிழகத்துச் சஞ்சிகைகளும்பத்திரிகைகளும் மலையகத்திற் கணிசமான செல்வாக்கைப் பெற்றிருந்தன. மகாகவிகள் பாரதி தாகூர், சரோஜினி தேவி, அண்ணாமலை ரெட்டியார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை, கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, உடுமலை முத்துசாமிக்கவிராயர் மதுரைபாஸ்கரதாஸ் முதலியோரின் பாடல்களும் மலையகத்திற் செல்வாக்குப் பெற்றிருந்தன.
1920 -களுக்கு முன்பும் பின்பும், மலையகத்தில் இலக்கிய கர்த்தாக்கள் பலர் வாழ்ந்துள்ளனரெளிலும் அவர்களது ஆக்கங்களில் தோட்டத் தொழிலாளரின் பல்வேறுபட்ட பிரச்சினைகளும் வாழ்வியல் அம்சங்களும் முக்கியம் பெறாமை துரதிஷ்டமே
சமயச் சார்பான பாடல்களையே அதிகம் பாடியுள்ள அருள்வாக்கி அப்துல்காதர் புலவர் (1868 முதல் 1918 வரை) மலையகத்திலேயே (தெல்ரோட்டையில்) வளர்ந்ததனாற்போலும், மலையகச் குழலைப்

Page 50
S6 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
பிரதிபலிக்கும் வகையில் கும்மிப் பாடல்களையும் நொண்டிச் சிந்து முதலியவற்றையும் இயற்றியுள்ளார். எனினும் தொழிலாளர் பற்றிய அம்சங்கள் அவற்றில் முக்கியத்துவம் பெறவில்லை. இதேபோன்று கா. பெரியசாமிப்பிள்ளை, வி.எஸ். கோவிந்தசாமி தேவர், எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை, பிஆர் பெரியசாமி காசி ரெங்கநாதன், தொண்டன் எஸ்.எஸ். நாதன், பதுளை வ. ஞானபண்டிதன், சிதம்பரநாதபாவலர், சீனிவாசகம் எஸ்.எம். ராஜப்பா முதலியோரது இலக்கிய முயற்சிகளும் அமைந்துள்ளன. இவர்களுள் அதிகமானோரின் ஆக்கங்கள், சமயச் சார்புடையனவாகவும் நாட்டுவளத்தினையும் இயற்கை அழகினையும் வருணிப்பவையாகவும் ஒரோவிடத்துத் தொழிற்சங்கம், அரசியல், சமூகம் முதலியன தொடர்பான விடயங்களைச் சுட்டி நிற்பனவாகவும் அமைந்துள்ளன ? எனினும் இத்தகைய இலக்கிய முயற்சிகளும் மலையகத் தமிழ் இலக்கியம் ஆரோக்கியமாக வளர்வதற்கேற்ற பலமான அத்திவாரத்தையிட்டன; அத்துடன் மலையக மக்களிடையே கலை-இலக்கிய ஆர்வம் பெருகவும் வழிவகுத்தன என்பதை மறுப்பதற்கில்லை.
விழிப்புணர்ச்சிக் காலம்
ஏறத்தாழ நூறாண்டுகாலம் அடிமையிருளில் மூழ்கியிருந்த தோட்டத் தொழிலாளர் மத்தியில் 1920 -களிலிருந்து மெல்ல மெல்ல விழிப்புணர்ச்சி ஏற்படலாயிற்று முதலாம் உலக மகாயுத்த காலத்திலும் அதனைத் தொடர்ந்தும், உலக அரங்கிலும் இந்தியாவிலும் ஏற்பட்டுக்கொண்டிருந்த மாற்றங்கள் எவ்வாறு இலங்கையையும் அதன் ஒரு கூறான மலையகத்தையும்பாதித்தன என்பது பற்றிமுதலாம் இயலின் இறுதியிற் சுருக்கமாகக் காட்டப்பட்டுள்ளது. இத்தகையதொரு குழ்நிலையில் மலையகத் தொழிலாளர் மத்தியிலும் மலையகத் தமிழ் இலக்கிய உலகிலும் சிறிது சிறிதாக ஏற்பட்டுக் கொண்டிருந்த விழிப்புணர்வை மேலோங்கச் செய்வதில் முன்னின்றுழைத்தவர்களுள்

தோற்றமும் வளர்ச்சியும் 97
கோ. நடேசய்யர், சி.வி. வேலுப்பிள்ளை ஆகியோர் விதந்து கூறத்தக்கவர்கள். இவர்களது பணிகளையும் ஆக்கங்களையும் பற்றிச் சுருக்கமாக நோக்கு முன்பு இங்கு இரு விடயங்களைச் சுட்டிக்காட்டுதல் அவசியமாகும்
முதலாவதாக மலையகத்திற்கு வெளியே குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்தோர் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின்பாற் கவனம் செலுத்தத் தொடங்கியமை இதே காலகட்டப் பகுதியிலேயேயாகும்.
இரண்டாவதாக, மலையக இலக்கிய முன்னோடிகள் என்ற வகையில் மாத்தளை அருணேசர், கே. கணேஷ் ஆகிய இருவரையும் பற்றிச் சுருக்கமாக நோக்குதல் வேண்டும்
மலையகத்தில் 1960 களிலிருந்து ஏற்பட்ட எழுச்சியைப் பற்றிக் கூறவந்த சிலர் மலையகத்தைப் பற்றியாருமே எதுவுமே கூறவில்லை." எனக் குறைப்பட்டுள்ளனர். 20 ஆயின் உண்மையில் இது அறியாமையே இலங்கையின் வடக்கு கிழக்குப்பகுதிகளைச் சேர்ந்த மானுடநேயம்மிக்க பலர்இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்து வந்துள்ளதனை அவதானிக்கலாம் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் அரசியல் உலகில் ஓங்கு புகழுடன் விளங்கியவர்களுள் சேர் பொள்.இராமநாதன். சேர் பொன். அருணாசலம் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இருவரும் உடன் பிறப்புகள். ஆயின் தோட்டத் தொழிலாளர்கள், சர்வசன வாக்குரிமை பெண்ணடிமைத்தனம் முதலியன பற்றி முரண்பட்ட கருத்துகளைக் கொண்டவர்கள்.
இராமநாதன், தோட்டத் தொழிலாளர்களை இந்தியக் கூலிகள்" என்ற அலட்சியப் போக்குடனேயே நோக்கினார். இதனால் மலையகத்தைச் சேர்ந்த பலரின் கண்டனத்துக்கு ஆளானார். 2f

Page 51
98 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
அருணாசலம் என்றுமே தோட்டத் தொழிலாளர்களைப் பரிவுடனேயே நோக்கினார் எழுத்தாலும் பேச்சாலும் செயலாலும் அவர்களது அவலங்களைப் போக்க இறுதிவரை உழைத்தார். இதனால் மலையகத்தைச் சேர்ந்த பலரதும் புகழுரைகளுக்கு ஆளானார். 22 எடுத்துக்காட்டாக "மக்கள் கவிமணி" எனப்புகழ்பெற்ற சி.வி. வேலுப்பிள்ளை, அருணாசலம் அவர்களைப் பற்றிக் கூறியுள்ளவற்றுள் ஒரு விடயம் வருமாறு
"தொழிலாளர்களைக் காலை 5.30 மணி முதல் 630 மணி வரை வேலை வாங்கினார்கள். சவுக்கடி சர்வசாதாரணமான விசயம் கஷ்டம் பொறுக்காது ஒடிப் போகும் தொழிலாளர்களைப்பிடித்துக்கொண்டுவந்து மரத்தில் கட்டிவைத்துக் கங்காணிகள் அடிக்கவும் செய்தார்கள்.
இந்த அக்கிரமம் உலகம் தெரிந்த விசயம் பெரியார் பொன்னம் பலம் அருணாசலம் சட்டசபையில் இதை வன்மையாகக் கண்டித்தார். கடன் ஆள் அல்லது துண்டு முறையை ஒழித்துக்கட்ட அவர் காரணமாயிருந்தார். இந்தச் சட்டம் 1921 ல் பிரகடனப்படுத்தப்பட்டது. தொழிலாளர் பெரிய கங்காணியின் பிடியிலிருந்து சற்று விடுபட்டனர். பெரிய கங்காணி ஆட்சிக்கு இது முதல் தாக்குதலாகும்." 23
தமிழகத்திலிருந்து மலையகத்திற்குத் தொழிலாளர் புலம்பெயர்ந்த போது, ஒரு சிறுதொகையினர் உதிரிகளாக கொழும்பு முதலிய நகரப்புறங்களில் தங்கினர். அதேசமயம் மலையகத் தோட்டங்களிலிருந்து காலத்துக்குக் காலம் நிர்ப்பந்தமாக வெளியேற்றப்பட்டவர்களும் வெளியேறியவர்களும் கண்டி, கொழும்பு முதலிய நகர்ப் புறங்களிலும் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் வாழ்க்கைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு உதிரிகளாக உள்ளோரையும் மலையகத் தொழிலாளர்களையும் அவர்களது வாழ்க்கைப் போராட்டங்களையும் முக்கியமாகக் கொண்டு 1930 -களிலிருந்தே இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த இலக்கிய கர்த்தாக்கள் பலர் சிறுகதைகள், கவிதைகள், புதுக்கவிதைகள்

தோற்றமும் வளர்ச்சியும் 99
முதலியவற்றைப் படைத்துள்ளனர் என்பதும் பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோருக்கு அடுத்த நிலையில் மலையகத்திற்கு வெளியே வாழ்ந்த இலக்கிய கர்த்தாக்களே தோட்டத் தொழிலாளர்கள் மீது அதிக கவனம் செலுத்தியுள்ளனர் என்பதும் மனங்கொளத்தக்கவை. இவ்வகையிலே முக்கியமான சிலரை இங்கு குறிப்பிட்டுக் கூறலாம்
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையுலகின் முன்னோடிகளுள் ஒருவராக விளங்கும் சிவைத்தியலிங்கம் தமது சிறுகதைகள் சிலவற்றைக் கொழும்பு மாநகரை ஆண்டியுள்ள களனிப்பிரதேசம், களனி கங்கைக் கரையோரம் ஆகியவற்றைக் களங்களாகக் கொண்டு அங்கு வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த இந்திய வம்சாவழித் தொழிலாளர்களின் பரிதாப நிலையை 1930 -களிலேயே மிக்க உருக்கத்தோடு வெளிப்படுத்தி யுள்ளமை கவனித்தற்குரியது. இவ்வகையிலே அவரது கதைகளுள் "களனி கங்கைக் கரையில்", "பார்வதி" முதலிய கதைகள் குறிப்பிடத்தக்கவை 24
1940-களில் சிறுகதையுலகிற்பிரவேசித்த அசெமுருகானந்தனின் "காளிமுத்துவின் பிரஜா உரிமை" அந. கந்தசாமியின் 'நாயிலும் கடையர்' "காளிமுத்து இலங்கை வந்த கதை" வ.ஆ.இராசரத்தினத்தின் "அன்னை" "வீடு' இ நாகராஜனின் "சுமை"23முதலிய கதைகள் மலையகத் தோட்டத் தொழிலாளர் பற்றியவை
ஏறத்தாழ 1950 -களிற் சிறுகதையுலகிற் பிரவேசித்த செ. கணேசலிங்கனின் சாயம் மரக்கட்டை, முந்திவிட்டான், விளம்பரம் காவிகள், ஒரே இனம் நல்லவன், போராட்டம் வேதனையும் விளையாட்டும் டானியலின் 'அகரபரம்பரை'அகஸ்தியரின் "கள்ளத்தோணி" "நேர்த்திக் கடன்", "மேய்ப்பர்கள்', 'பிரசாதம்', செல்வி நாகேஸ்வரியின் "இங்குமா ஒளி இல்லை" 28 முதலிய கதைகள் மலையகத் தோட்டத் தொழிலாளர்களையும் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும் கொழும்பு, கண்டி, காலி முதலிய நகரங்களிலும் வாழ்க்கைப் போராட்டம் நடத்தும் அவர்களது பரம்பரையினரையும் பற்றியவை

Page 52
100 இலங்கையின் மலையகத்தமிழ் இலக்கியம்
இதேபோன்று மலையகத்திற் குறுகிய காலமோ நீண்ட காலமோ வாழ்ந்த - வாழ்ந்துகொண்டிருக்கின்ற நந்தி சதாசிவம் ஞானசேகரன், பெனடிக்ற் பாலன், ஆதவன், பார்த்திபன் முதலியோர் மலையகத் தொழிலாளர் பற்றித் தரமான சிறுகதைகளையும் நாவல்களையும் கவிதைகளையும், புதுக்கவிதைகளையும் படைத்துள்ளமை பலரும் அறிந்ததே. வஐ.ச. ஜெயபாலனின் புதுக்கவிதைகளும் இவ்வகையில் நோக்கத்தக்கவை
1961 ம் ஆண்டிலும் 1962 ம் ஆண்டிலும் முறையே இராஜபாரதி செ. யோகநாதன் ஆகியோரால் "கல்லுமலைத் தோட்டத்திலே " "மலைக்குள் மாண்டிடவோ - அவரிங்கு மனிதராகி வந்தார்" என்ற தலைப்புகளில் இயற்றப்பட்டு வெளிவந்துள்ள சுமார்ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் 27 மலையகத் தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பவை என்ற வகையில் மிகவும் முக்கியமானவையாகும்
மேலும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களையும் நகர்ப் புறங்களில் வாழும் உதிரிகளையும் முக்கியமாகக் கொண்டு மனித நேயம் மிக்க சிங்கள இலக்கிய கர்த்தாக்கள் சிலரும் சிறுகதைகளையும் கவிதைகளையும் படைத்துள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கது. இவ்வகையிலே, குணசேன வித்தானவின் "தெய்யனே" (சிறுகதை), ஜயவடுவித்தானவின் முளியாண்டி அண்ணறுக்கு"(கவிதை), காமினி தாநாயக்காவின் "தோட்டத் தொழிலாளரின் சீவியம்" சினந்தா குமாரி சந்திரசேகரவின் "ஒன்று சேர்வோம் அருந்ததி' பராக்கிரம கொடித்துவக்குவின் "அன்று இறந்தவன் நம்மில் ஒருவன்" முதலிய ஆக்கங்கள் குறிப்பிடத்தக்கவை?
மலையக இலக்கிய வளர்ச்சிக்கு வழிசமைத்தவர்கள் என்ற வகையில் மலையகத் தமிழ் இலக்கிய உலகில் மாத்தளை அருணேசர், கே. கணேஷ் ஆகிய இருவரும் விதந்து கூறத்தக்கவர்கள்.

தோற்றமும் வளர்ச்சியும் 101
மலையக இலக்கிய உலகில் அதிகம் பிரபல்யம் பெறாவிடினும் - பிரபல்யத்தை விரும்பாதவர் மெளனம் சாதிப்பவர் - இந்து மதம், வரலாறு, மருத்துவம் தமிழ் மொழி இலக்கியம் அரசியல், விஞ்ஞானம் முதலிய துறைகள் தொடர்பாக நூற்றுக் கணக்கான கட்டுரைகளையும் சில சிறுகதைகளையும்'விஞ்ஞானம் பிறந்த கதை பண நாணயங்களின் வரலாறு, தமிழ் மொழியும் தமிழ் நூற்களும் தோன்றிய வரலாறு, தபால் முத்திரையின் வரலாறு முதலிய நூல்களையும் எழுதியுள்ள மாத்தளை அருணேசரின் ஆக்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் பிரச்சினைகளையும் முனைப்பாகப் பிரதிபலிக்காமை துரதிஷ்டமே. எனினும், அவரது ஆக்கங்கள் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு உரம் சேர்ப்பனவாகவே விளங்குகின்றன எனலாம்
இவரது ஆக்கங்களும் அதிகமானவை இரஞ்சிதபோதினி அமிர்தகுணபோதினி ஆனந்தபோதினி திங்கள், மஞ்சரி கலைக்கதிர் கலைமகள் முதலிய தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. கணிசமானவை தேசபக்தன், வீரகேசரி தினகரன் முதலிய இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவரது எழுத்துப் பணிகளைச் சிறப்பிக்கும் வகையில் மாத்தளை இலக்கிய வட்டம் மாத்தளை வள்ளுவர் மன்றம், இலங்கை கலாசாரப் பேரவை ஆகியன பொன்னாடை போர்த்தியும் பண முடிப்புக் கொடுத்தும் கெளரவித்துள்ளன. 1985 ம் ஆண்டு பெப்ரவரிமாதம் இலங்கையின் புகழ்பூத்த கலை இலக்கிய ஏடான மல்லிகையும் இவரைக் கெளரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது ?
மாத்தளை அருணேசரைப் போன்றே பிரபல்யத்தை விரும்பாத அமைதியான சுபாவம் மிக்க இன்னொரு இலக்கிய கர்த்தா கே. கணேஷ் அவர்களாவர். மலையகத் தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரை மாத்தளை அருணேசரின் பங்களிப்பிலும் பார்க்க கே. கணேஷ் அவர்களின் பங்களிப்புக் கூடுதலானது என்பதில் ஐயம் இல்லை. மலையகத் தோட்டத் தொழிலாளர் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட ஆக்கங்களை அவர் குறைவாகவே படைத்துள்ளாரெனினும் முற்போக்குச் சிந்தனைகள் நிரம்பியனவும் தொழிலாளர் வர்க்கத்தைப் பற்றியனவுமான அவரது

Page 53
102 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
ஆக்கங்களும் பெருந்தொகையான மொழிபெயர்ப்பு ஆக்கங்களும் மலையகத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உரமிட்டதுடன், மலையக இலக்கிய உலகின் இளைய தலைமுறையினருக்கு ஆதர்ஷமாக இருந்துவருதலும் விதந்து கூறத்தக்க ஒன்றாகும்
இவரது எழுத்துப் பணிகளைத் தொடர்ந்தே மலையகத்தில் புதிய சிந்தனைகள் வேகமாகப் பரவத் தொடங்கினவெனலாம். தரமான கவிஞரும், தலைசிறந்த மொழிபெயர்ப்பாளரும் சிறந்த பத்திரிகையாளருமான இவர், பிறமொழிகளைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர்கள் பலரது ஆக்கங்களைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்துள்ளார். இவரது மொழிபெயர்ப்புத் திறமையை அறிஞர் பலர் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ. அப்பாஸ், கிருஷ்ண சந்தர், ஹோசிமின், அல்தாய் முகம்மதோவ் லூசுன்முதலியோரது ஆக்கங்கள் சில முறையே திண்டாதான், குங்குமப்பூ, அஜந்தா, சிறைக் குறிப்புகள், அந்த கானம், போர்க்குரல் என்னும் பெயர்களில் இவரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று வி. குப்ரியானோவ் தாராஷ்செவ் சென்கோ, பெட்டோஃபி இவன் ஃபிராங்கோ முதலியோரதும், பல்கேரியக் கவிஞர்கள் பலரதும் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். 1940 -களில் வெளிவந்த இவரது சிறுகதைகளுள் "சத்திய போதிமரம்", "ஆகஸ்ட் தியாகி ஆறுமுகம்", "ஆசாநாசம்", "சட்டமும் சந்தர்ப்பமும்" என்பவ்ை குறிப்பிடத்தக்கவை
இலங்கையின் காலத்தால் முற்பட்ட முற்போக்குச் சஞ்சிகைகளுள் ஒன்றான பாரதி'என்னும் சஞ்சிகையின் ஆசிரியர்களுள் ஒருவராகவும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் பிதாமகர்களில் ஒருவராகவும் விளங்கி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் பரம்பரை வளர்ச்சியடைய வித்திட்டார். இவரது பணிகளால் மலையக இலக்கிய உலகம் மட்டுமன்றி ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகும் குறிப்பிடத்தக்க பயனைப் பெற்றுக் கொண்டமை மனங்கொளத்தக்கது. 30

தோற்றமும் வளர்ச்சியும் 103
இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர்களுள் ஒருவர். 1971 ம் ஆண்டே இவரது எழுத்துப் பணிகளைக் குறிப்பிடுமிடத்து, " . மலையகத்தில் இன்று மாபெரிய மாற்றங்கள் நடைபெறுகின்றன. இலக்கிய மலர்ச்சி பெற்று வருகின்றது மலைநாடு, புதிய தலை முறைகளைச் சேர்ந்த பல வாலிபர்கள் கலை இலக்கியத் துறையில் சாதனைகளைச் செய்து வருகின்றனர். இலக்கிய மாநாடுகளையும் கலை இலக்கிய கருத்துப்பரிவர்த்தனைக் கூட்டங்களையும் முன்நின்று நடத்துகின்றனர். இதற்கான அடித்தளத்தைக் கடந்த ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் இட்டு வைத்தவர்களுள் திரு. கே. கணேஷரம் ஒருவர் என்ற உண்மை இன்றைய வாலிபர்கள் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. மலையகத்துப் பாட்டாளி மக்கள் ஓரணியில் திரண்டு ஒரேயமைப்பில் இயங்கிப் போராடினால்தான் தமது வார்க்க உரிமைகளை வென்றெடுக்கலாம் என்பதைத் தனது வாழ்க்கை முறையிலேயே வகுத்துக்கொண்டு உழைத்து வருகிறார்." எனக் கூறியுள்ளமை மனங்கொளத்தக்கது. இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சு கே. கணேஷின் அரும்பணிகளைக் கெளரவித்துப் பட்டமளித்துப் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகக் கவிதை விழாவில் பங்கு பற்றிய இவரது ஆங்கிலக் கவிதைக்கு யப்பானியச் சக்கரவர்த்தியின் விருதும் கிடைத்தது.
மலையகத் தோட்டத் தொழிலாளர் வரலாற்றிலும் மலையகத் தமிழ் இலக்கிய வரலாற்றிலும்நடேசய்யர்காலத்தை நடேசய்யர் யுகம் "அல்லது நடேசய்யர்சகாப்தம்"என விதந்து கூறலாம். அந்த அளவிற்கு மலையகத் தொழிலாளரின் விழிப்புணர்வு, எழுச்சி ஆகியவற்றிலும் அவர்களது அரசியல் வரலாறு தொழிற்சங்க வரலாறு ஆக்க இலக்கியத் துறை பத்திரிகைத் துறைமுதலிய பல துறைகளிலும் அவரது ஒப்பற்ற பணிகளும் பங்களிப்புகளும் தனிமுத்திரையைப் பொறித்துள்ளன. மலையகத் தொழிலாளரின் வரலாற்றை ஆராயப் புகுவோர்நடேசய்யரின் பணிகளை மறந்தோ, மறைத்தோ தமது ஆய்வை முழுமையாக்க முடியாது. மலையகத் தொழிலாளர் வரலாற்றில் ஏறத்தாழ 1920ம் ஆண்டு முதல் 1947ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியை நடேசய்யர் சகாப்தம்" எனலாம்?

Page 54
104. இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
'தஞ்சையிற் பிறந்து, களத்தையில் தகனமான"
கோ. நடேசய்யரது வாழ்க்கையின் பெரும்பகுதி, மலையக, தொழிலாளர்களின் விழவுக்காக அயராது உழைப்பதிலேயே கழிந்தy மலையகத் தொழிற்சங்க முன்னோடியாகவும் ஆங்கிலத்திலும் தமிழிலு. பரிச்சயமிக்க எழுத்தாளராகவும் சிறந்த பேச்சாளராகவும் செய: வீரராகவும இலங்கைச் சட்டசபை அங்கத்தவராகவும் மலையக ஆக். இலக்கியத் துறையின் முன்னோடிகளுள் ஒருவராகவும் விளங்கியவ நடேசய்யரின் "காரியம் யாவிலும் கைகொடுத்து" நின்றவர், அவரது அன்புத் துணைவியாரான மீனாட்சி அம்மையார்.
மலையகத் தொழிலாளர் வரலாற்றிலேயே முதன்முதல் மலையகத் தொழிலாளர்களின் அறியாமையையும் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற அவர்களது இரங்கத்தக்க அடிமை நிலையையும் அதற்கான காரணங்களையும் எளிமையான முறையில் தமது பேச்சாலும் எழுத்தாலும் செயலாலும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டி, அவர்களை விழிப்புற்றுச் சிலிர்த்தெழச்செய்வதில் அயராது பாடுபட்டவரும் கலை-இலக்கியத்தை அதற்கேற்ற ஆயுதமாகப் பயன்படுத்தியவரும் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கொடுமைகள் இழைத்து அநீதிகள் புரிந்து தொழிலாளப் பெண்களின் கற்பினைச் குறையாடிச் சுரண்டி கொழுத்துக் கொண்டிருந்த தோட்ட அதிகாரிகளையும் ஆட்சியாளர்களையும் அவர்களுக்குத் துணை போனவர்களையும் துணிகர ஆண்மையுடன், மூர்க்காவேசமாகச் சாடியவரும் நடேசய்யரே என்பதில் ஐயமில்லை. அவர் துணிகரமாகச் செயற்பட்ட அளவிற்கு, அதற்கு முன்னர் மலையகத்தில் யாரும் செயல்பட்டதாகத் தெரியவில்லை. இவ்வகையில் பரந்த அளவில் மலையகத் தொழிலாளர்களின் விழிப்புணர்வுக்கும் எழுச்சிக்கும் முதலில் வித்திட்டவர் அவரேயாவர். 34
தோட்டத் தொழிலாளர்களின் விழவினை நோக்காகக் கொண்டே அவர் பல பத்திரிகைகளை வெளியிட்டார் கட்டுரைகளை எழுதினார் கவிதைகளை யாத்தார் புனைகதைகளைப் புனைந்தார். சட்ட சபை

தோற்றமும் வளர்ச்சியும் 105
அங்கத்தவர்பதவியினைப் பயன்படுத்தினார்.தமது உடல் பொருள், ஆவி அத்தனையையும் அர்ப்பணித்தார். "பத்திரிகைகள் அய்யரைப் பொறுத்தவரை அச்சில் வார்த்த ஆயுதங்கள். கூனிக் குறுகிக் கிடந்த மக்களை - ஏணிப்படிகளாகப் பிறர் ஏறி மிதிக்கப் பயன்பட்ட மக்களை - நாடி பிடித்து அழைத்துவர, அவைகளை அவர் பயன்படுத்தினார்." ?
тinuti
தேசநேசன், தேசபக்தன், தொழிலாளி தோட்டத் தொழிலாளி, உரிமைப்போர், சுதந்திரப்போர், வீரன், சுதந்திரன் முதலிய தமிழ்ப் பத்திரிகைகளையும் இந்தியன் எஸ்டேட் லேபர், சிட்டிஷன், ஃபோர்வர்ட், இந்தியன் ஒப்பீனியன் முதலிய ஆங்கிலப் பத்திரிகைகளையும் வெளியிட்டார். "மூலையில் குந்தியமுதியோன் அல்லது துப்பறியும் திறம்" என்ற நாவலையும் வெற்றியுனதே,நீமயங்குவதேன், தொழிலாளர்அந்தரப் பிழைப்புநாடகம் தொழிலாளர் சட்டப்புத்தகம் அழகிய இலங்கை, இந்திய - இலங்கை ஒப்பந்தம் முதலிய நூல்களையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
தோட்டத் தொழிலாளரின் விமோசனத்தையே முக்கிய நோக்காகக் கொண்டு செயற்பட்ட நடேசய்யர், பத்திரிகைகளில் எழுதியுள்ள ஆசிரியத்தலையங்கங்களுள் சிலவற்றை இங்கு நோக்கலாம் இந்தியத் தொழிலாளர் துயர் இந்தியத் தொழிலாளர் சட்டம் பெரிய கங்காணிமார்களுக்கு ஒர் எச்சரிக்கை, பற்றுச்சீட்டுத் தொலைய வேண்டும் பொக்கைவாயனும் பொரிமாவும் அவிவிவேக குருவும் அவரது பரமானந்த சீடர்களும்" 36
வசனமும் பாடலும் கலந்து நாடக உருவில் வெளிவந்த அவரது "தொழிலாளர்அந்தரப்பிழைப்புநாடகம்"என்னும் நூலும்பத்திரிகைகளில் வெளிவந்த அவரது கவிதைகளும் மலையக ஆக்க இலக்கிய வளர்ச்சிக்கு முன்மாதிரியாக விளங்கின. நடேசய்யரைப் பொறுத்தவரை, அவர் "எங்கோ ஒரு மூலையில் ஆற அமர இருந்து" இலக்கியம் படைத்துக் கொண்டிருந்தவரல்லர். தோட்டத் தொழிலாளர்களை விழிப்புற்று

Page 55
108 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
எழுச்சியுறச் செய்ய வேண்டும் அவர்களது உழைப்பைக் கொடூரமாகச் சுரண்டி ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருப்போரைப் புறங்கானச் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் பலவகை உபாயங்களைக் கையாண்டு உக்கிரமாகப் போராடிக் கொண்டிருந்த வேளையில் போராட்டத்திற்கேற்ற கருவிகளுள் ஒன்றாகவே கலை- இலக்கியத் துறைகளைப் பயன்படுத்தினார் அவற்றைப் படைத்தார். இதே இயல்பினை, மக்கள் கவிமணி சிவி வேலுப்பிள்ளையிடமும் நாம் காணலாம்
தோட்டத் தொழிலாளர்களை விழிப்புற்று எழுச்சியுறச் செய்வதற்காக நடேசய்யர் தமது துணைவியாருடன் தோட்டங்களுக்குச் சென்று கூட்டங்கள் நடத்தும்போது, சுதந்திரக் கணல் தெறிக்கும் வீரமும் கவித்துவமும் செறிந்த பாரதியாரது பாடல்களையும் சுந்தர வாத்தியாரின் "தேயிலைத் தோட்டத்திலே. "எனத் தொடங்கும் பாடல்களையும் பாடிக் காட்டியதோடு அமையாது, தாமும் தொழிலாளர்களை விழிப்புற்றெழச் செய்வதற்குப் பொருத்தமான கவிதைகளை இயற்றினார்; பாடியும் காட்டினார்.
தொழிற்சங்கவாதியான குணசிங்காவோடு இணைந்து செயற்பட்ட காலத்தில் அவரால் தோட்டத் தொழிலாளருக்குப் பயனேதுமில்லை என்பதை உனர்ந்த நடேசய்யர் குணசிங்காவை வன்மையாகச் சாடினார் அவரைவிட்டுப் பிரிந்து தாமாகவே தொழிற்சங்கம் அமைக்கும் நடவடிக்கையில் இறங்கினார். தொழிலாளர்களை விழிப்புற்றெழச் செய்ய முயன்றார். தமது பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் மட்டுமன்றிக் கவித்துவ ஆற்றலையும் அதற்குப் பயன்படுத்தினார். அவரது கவிதைகளுட் சில வருமாறு:
குணசிங்கம் துரையே - எங்கள்
பணியெங்கே உரையே
ஏழை பிழைப்பதற்கு
ஏற்பாடு செய்வேனென்று
ஆளைவிட்டு மிரட்டச் சொல்லி
அஞ்சுசதம் வாங்கினிரே.

தோற்றமும் வளர்ச்சியும் 107
இந்த மக்கள்
சிந்தும் வேர்வை ரெத்தக் காசுதானே - அடா இரவுபகல்
உறக்க மின்றி
ஏய்த்துப் பறிக்கலாமா?
ஒற்றுமை யில்லாமை -உங்கள் நிலை ஊழலாய்ப் போகுதையோ சற்று யோசித்துத் தானே இந்தியரே சங்கம் நிறுவுங்கள்
காட்டிக் கொடுத்துவிட்டு - பின்வாங்கி காலம் கழிப்பதிலும் நாட்டைவிட் டோடுவதே -இனிமேல் நலமென்று கூறுவமே!
சாண் வயிறுதானே - நமக்கு சரிர மெல்லாம் வயிறோ ஊண் உண்டு வாழ்வதிலும் -நாம் உயிர்துறக்கலாமே!37
தமது அழமை நிலையையும் மறந்து, தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களைத் தட்டியெழுப்புவதற்கு இடைவிடாது முயன்ற நடேசய்யா, தாம் எழுதிய "வெற்றியுனதே", "நீ மயங்குவதேன்" ஆகிய நூல்களைப் பற்றி "சோம்பேறிகளையும் விழிப்புற்று ஊக்கம் கொண்டு உழைக்கத் தூண்ட வேண்டுமென்ற விருப்பத்தால் எழுந்தது "வெற்றியுனதே" என்னும் நூல் மக்களை மயக்க நிலையிலிருந்து தட்டி எழுப்பிமுன்னேறும் வழியைக் காட்டுவதாக எழுந்தது நீமயங்குவதேன்" என்னும் நூல்."38 என அவரே கூறியுள்ளமை சிந்திக்கத்தக்கது.
தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நாடகம், வெற்றியுனதே, நீ மயங்குவதேன், தொழிலாளர் சட்டப் புத்தகம் முதலிய நடேசய்யரது நூல்களும் அறிக்கைகளும் துண்டுப் பிரசுரங்களும் உழைத்து உழைத்து

Page 56
108 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
உருக்குலைந்து போயிருந்த தோட்டத் தொழிலாளர்களை விழிப்புறறெழச் செய்யும் வகையில் அவர்களுக்கு வேண்டிய அறிவுரைகளை வழங்கின; தொழிலாளர்களின் கடமைகள் எவை என்பதை உணர்த்தின. அதே சமயம் தோட்ட அதிகாரிகள் தொழிலாளர்களின் உழைப்பினை ஈவு இரக்கமின்றி உறிஞ்சும் கொடுமையினையும் அவர்கள் தொழிலாளர்களுக்கு இழைத்த இம்சைகளையும் அவர்களது ஊழல்களையும் தந்திரோபாயங்களையும் அம்பலப்படுத்தின. இதன் காரணமாகவே நடேசய்யரது நூல்கள் பலவற்றைத் தோட்டச் சொந்தக்காரர்களும், பெரிய கங்காணிகளும் விலைக்கு வாங்கித் தீயிட்டுக் கொளுத்தினர். அந்த அளவிற்கு நடேசய்யரின் எழுத்துக்களும் நடவடிக்கைகளும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.
மலையகத் தமிழ் இலக்கிய உலகில் பத்திரிகைத்துறை வளர்ச்சியடைவதற்குப் பலமான அத்திவாரமிட்ட நடேசய்யர், தொழிலாளர்களை விழிப்புறச் செய்வதற்குப் பத்திரிகைத் துறையையும் சிறந்த சாதனமாகப் பயன்படுத்தினார் என்பதை, "எனக்கு சட்டசபை பெரிதல்ல பத்திரிகைதான் பெரிது சட்டசபைக்குப் போய்ச் செய்யக்கூடிய நன்மையைவிடப் பன்மடங்கு நன்மையைப் பத்திரிகையால் ஏற்படுத்தக்கூடும்"?என வரும் அவரது கூற்றே புலப்படுத்தும்
நடேசய்யரின் பலதுறைப் பணிகளையும் ஆதாரங்களுடன் விரிவாக ஆராய்ந்துள்ள திரு. சாரல்நாடன், 'தஞ்சையிற் பிறந்து கனத்தையில் தகனமான நடேசய்யர் பஞ்சையாய் வாழ்ந்து பாழும் வறுமையில் மாய்ந்த இந்திய மக்களை, இலங்கைவாழ் மக்களை ஈடேற்றும் வழிமுறை ஆய்ந்த முதல்வர்." 49 என இரத்தினச் சுருக்கமாகக் கூறியுள்ளமை மனங்கொளத்தக்கதாகும்
மலையக கலை இலக்கியப் பேரவை, நடேசய்யரின் ஒப்பற்ற பணிகளை நினைவுகூருமுகமாக அவரது நூற்றாண்டு விழாவையொட்டி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் நினைவுப் பேருரைகளை நடத்தியுள்ளமை பாராட்டத்தக்கது.

தோற்றமும் வளர்ச்சியும் 109
நடேசய்யளின் அடிச்சுவட்டைப்பின்பற்றித் தோட்டத் தொழிலாளின் விழிப்புக்கும் எழுச்சிக்குமாகத் தமது செயற்பாடுகளாலும் எழுத்துக்களாலும் இறுதி மூச்சுவரை அயராதுழைத்த பெருமகன் சிவி வேலுப்பிள்ளை அவர்களாவர். மலையகத் தமிழ் இலக்கிய உலகில் "கொடுமுடி"யாகத் திகழ்பவர் அவர்
தோட்டத் தொழிலாளர்களை மந்தைக் கூட்டங்களாகக் கருதி அவர்களை ஆட்டிப்படைத்த பெரிய கங்காணிமார்களுள் ஒருவரின் பேரனாகப் பிறந்து, அவரது அரவணைப்பிலேயே வளர்ந்த சிவி வேலுப்பிள்ளை, கங்கானிமார்களின் மனோபாவம் படைத்தவராக அன்றித் தொழிலாளரின் விமோசனத்திற்காகப் பாடுபடத் தோன்றிய தொழிலாளரின் புத்திரனாகவும் தொழிலாளர்களின் கவிமணியாகவும் வாழ்ந்தார் செயற்பட்டார் பணிகளாற்றினார்.
" . கூடை தலை மேலே குழ வாழ்க்கை காணகத்தில்" என்ற நிலையில் அவர்கள் பிறந்த பொன்னாடும் வளர்ந்த திருநாடும் வெறுத்து ஒதுக்க அடிமைகளாய் 150 வருட நீண்ட கொடிய ஆண்டுகள் வாழும் வாழ்க்கை, கண்ணரால் எழுதப்பட்ட ஒரு பெருங்காப்பியமாகும்"47எனக் கூறியுள்ள வேலுப்பிள்ளை, தொழிலாளர்களின் கண்ணிரைத் துடைக்கவே இறுதி மூச்சுவரை பாடுபட்டார்.
தோட்டத் தொழிலாளர்களை இதய சுத்தியோடு நேசித்த அவர் தொழிலாளர்களின் அன்பனாகவும் நண்பனாகவும் வழிகாட்டியாகவும் ஆசிரியனாகவும், தொழிற் சங்கவாதியாகவும், பாராளுமன்ற அங்கத்தவராகவும், பத்திரிகை எழுத்தாளனாகவும், அரசியற் பிரமுகராகவும் மக்கள் கவிமணியாகவும் நாவலாசிரியராகவும் நாட்டுப் பாடல்களின் தொகுப்பாசிரியராகவும், பன்னூலாசிரியராகவும் இவை யாவற்றுக்கும் மேலாக மிகவுயர்ந்த மானுட நேசனாகவும் வாழ்ந்தார்
மலையகத் தமிழ் இலக்கியத்தின் பல துறைகளிலும் அவர் தமது
கைவண்ணத்தைக் காட்டியுள்ளார். ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அலுப்புச் சலிப்பின்றி எழுதிக் குவித்த அவர் மலையகக்

Page 57
110 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
கவிதையுலகிலும் நாவல் இலக்கியத் துறையிலும், நாட்டாரியல் துறையிலும் தமக்கென்றொரு தனி முத்திரையைப் பொறித்துள்ளார். மலையகத் தோட்டத் தொழிலாளர் பற்றி நாவல்கள் எழுதியவர்களுள், அவர் ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட பல நாவல்களை எழுதியவர். மலையகத் தொழிலாளர் பற்றிய முதல் நாவல் அவர் ஏழுதிய "வாழ்வற்ற வாழ்வு" (1960) என்பதாகும் அத்துடனமையாது எல்லைப்புறம் பார்வதி காதல் சித்திரம் வீடற்றவன், இனிப்பட மாட்டேன் ஆகிய நாவல்களையும் அவர் எழுதியுள்ளார்.
மலையக இலக்கிய உலகில் சிவி வேலுப்பிள்ளைக்குத் தனிப் பெருமையைத் தேடிக் கொடுத்தவற்றுள், அவரது கவிதைகள் ggiramulufi lă alcâăélipur. În Ceylon's Tea Garden" (1952) Teigh அவரது புகழ்பூத்த கவிதை நூல் முதலில் ஆங்கிலத்தில் இயற்றப்பட்டுப் பின்னர் மலையான், சக்தி அ. பாலையா ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது ?
மலையகத் தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கையும் வரலாறும் ஒரு சோக காவியமாகும். அச்சோக காவியமே அவரது கைவண்ணத்தில் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் நாவல்களாகவும், பேனாச் சித்திரங்களாகவும், நாடகங்களாகவும், நாடற்றவர் கதைகளாகவும், விவரணக் கட்டுரைகளாகவும், வசன கவிதைகளாகவும் பரிணமித்துள்ளன. அவரது "Vismajant" பாடல் சார்ந்த நாடகமாகும் இது முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின்னர் தமிழாக்கம் செய்யப்பட்டது. இதுபோன்றே The Border Land (நாவல்) Wayfarer (Ussores6oflosé 6öffGü1), Born to Labour (62flasséoré st 6lsmö தொகுப்பு) முதலியனவும் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின்னர் முறையே எல்லைப்புறம் வழிப்போக்கன், உழைக்கப் பிறந்தவர்கள் எனத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. *
சிவி வேலுப்பிள்ளையின் ஆக்கங்களுள் அதிகமானவை, முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பின்னர் அவராலும் பிறராலும் தமிழாக்கம் செய்யப்பட்டன. கணிசமானவை அவராலேயே தமிழில் எழுதப்பட்டன.

aanibaga artisakah 111
ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒருசேரப் பரிச்சயம் மிக்கவராக அவர் விளங்கியமையாலேயே அவரால் அவ்வாறு எழுத முடிந்தது. அவர் ஆங்கிலத்தில் எழுதியதால் ஆங்கிலமொழி அறிவில்லாதவர்கள் படித்தறியும் வாய்ப்புக் கிடைக்கும் வண்ணம், அவரது அதிகமான ஆக்கங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டன. அதே சமயம் ஆங்கிலத்தில் அவை வெளிவந்ததாலேயே தோட்டத் தொழிலாளர்களின் அவலங்களை வெளியுலகும் அறியும் வாய்ப்புக் கிடைத்தது. அத்துடன், அத்தகைய ஆக்கங்கள் பல ஆங்கிலம் தெரிந்த சிங்கள அறிஞர்கள் முதல் வெளிநாட்டவர் வரை பலரதும் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன. அவ்வாறு வெளிவந்த பாராட்டுரைகளுள் முக்கியமானவற்றைச் சாரல்நாடன் தமது சிவிசில சிந்தனைகள்'என்னும் நூலில் ஆங்காங்கே காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
மலையகத் தோட்டத் தொழிலாளரின் வரலாறு பற்றி ஆங்கிலத்திற் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றிலுள்ள முக்கிய குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி, தொழிலாளர்கள் பற்றிய சீரிய வரலாற்று நூலை விரிவாக எழுத விழைவோருக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது அவரது நாடற்றவர் கதை" என்னும் நூலாகும் அளவிற் சிறியதாக இந்நூல் அமைந்திருப்பினும், தொழிலாளர் வரலாறு பற்றிய அரிய தகவல்கள் பலவற்றைக் கொண்டுள்ளது.
இந்நூலில் அவர் சுட்டிக் காட்டியுள்ள பல விடயங்களுள் ஒன்று வருமாறு ". வந்ததும் வராததுமாக இவர்கள் காடுகளை அழிப்பதில் ஈடுபடுத்தப்பட்டனர். விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களில் தான் குடியமர்த்தப்பட்டனர் என்று சிலர் கூறுவர். எவ்வளவோ நன்செய்நிலம் கேட்பார் கேள்வியின்றிக் கிடந்த அந்த நாளில் சிங்கள விவசாயி மலை உச்சிகளில் ஏறி என்ன செய்து கொண்டிருந்தான் என்பதுதான் எமக்குப்புரியவில்லை. ஆனால், மலையக வரலாறுகுறித்தும் மலையகத்தைச் சிருஷ்டிப்பதில் மலையக மக்கள் அடைந்த துன்பங்கள், துயரங்கள் குறித்தும் ஒரளவேனும் இந்த விமர்சகர்கள் அறிந்திருப்பார் களேயானால், சிங்கள விவசாயிகளை மலைமேல் ஏற்றும் தமது செய்கை குறித்து வெட்கம் அடைந்திருப்பார்கள்.14

Page 58
112 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
சி.வி. வேலுப்பிள்ளையின் ஆக்கங்களுள், முதன்முதல் நூலுருப்பெற்றது 'முதற் படி "என்னும் நூலாகும் தோட்டத் தொழிலாளர் பற்றிய கட்டுரைத் தொகுப்பாக இந்நூல் விளங்குகின்றது. *கதை என்ற சஞ்சிகையையும் இவர் நடத்தினார். அவரது சிறுகதை ஒன்றும் வெளிவந்ததாகக் கூறுவர். அவர் எழுதிய கட்டுரைகள் ஏராளம் அவற்றுள் 'பேனாச்சித்திரங்களாக"அமைந்துள்ள கட்டுரைகளின் முக்கியத்துவம் சிறப்பு முதலியன பற்றிச் சாரல் நாடன் தமது நூலில் ஒரளவு விரிவாக ஆராய்ந்துள்ளார். இக்கட்டுரைகள் "மலைநாட்டுத் தமிழ் மக்கள் தலைவர்கள்', "மலைநாட்டுத் தமிழ் மக்களின் உரிமைப் போர்த் தளபதிகள்" என்னும் தலைப்புகளில் அமைந்துள்ளன.
சி.வி. வேலுப்பிள்ளையின் இலக்கியப் பணிகளுள் சிகரம் வைத்தாற்போற் காணப்படுவது, மலையக நாட்டார் பாடல்களைத் தொகுப்பதில் அவர் மேற்கொண்ட முயற்சியே எனலாம் மலையகத்தில் இத்தகையதொரு முயற்சியை அவரே முதன்முதல் மேற்கொண்டார். அவரது தொகுப்பு முயற்சி முழுமைபெறாவிடினும், மிக வேகமாக மறைந்துகொண்டு வரும் நாட்டார் பாடல்களைத் தேடித் தொகுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் அவரது "மலைநாட்டு மக்கள் பாடல்கள்"என்னும் தொகுதி அமைந்துள்ளது எனலாம் ?
சிவி வேலுப்பிள்ளை அவர்கள் வெறுமனே இலக்கிய கர்த்தாவாக மட்டும் விளங்காது, மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் விமோசனத்தின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் பலவற்றிலும் நேரடிப்பங்கு கொண்டுதியாகங்கள் பலவற்றைச் செய்தவர் உண்மையில் அவர் அகிம்சை வழியிலான போராட்டக் களத்திற்பீறிட்டுக் கிளம்பிய உன்னதமான ஓர் இலக்கியகர்த்தாவேயாவர் முக்கியமான போராட்டங்கள் பலவற்றில் அவர் நேரடிப் பங்கேற்ற போதே அவரது சிறந்த ஆக்கங்கள் பல தோன்றின என்பதை சாரல் நாடன் தமது நூலில் ஆங்காங்கே பொருத்தமான முறையிற் சுட்டிக்காட்டியுள்ளமை உன்னித்து நோக்கத்தக்கது 47

தோற்றமும் வளர்ச்சியும் 113
நடேசய்யர் காலத்து இலங்கையின் அரசியற் சூழ்நிலை வேறு அவருக்குப் பிற்பட்ட (1947) இலங்கையின் சூழ்நிலை வேறு. ரிச்சூழ்நிலை மாற்றத்திற் சிக்கித் தவித்த வேலுப்பிள்ளை, அவற்றால் துவண்டுவிடாது இறுதிவரை மன உறுதியுடன் நம்பிக்கையோடும் செயற்பட்ட அவரைப் போற்றாமல் இருக்க முடியாது இனிப்படமாட்டேன்" ான்னும் அவரது நாவல் அவரது வரலாறாகவே குறிப்பாக இறுதிக்கால வரலாறாகவே அமைந்துள்ளது எனலாம்
அவரது ஆக்கங்களின் முக்கிய பண்புகள் பற்றியும், அவரது முற்போக்குச் சிந்தனைகள் பற்றியும் ". மலைநாட்டில் தொழிற் சங்கம் நடத்துவதென்பது குறாவளியோடு மோதுவதற்கு ஒப்பாகும். சிங்கள இனவாதம் துரைமார்களின் ஆணவம், அரசாங்கத்தின் அலட்சியம் மக்களின் ஆத்திரம் போட்டித் தொழிற் சங்கங்களின் பொறாமை, சதி ஆகிய அனைத்துச் சக்திகளுக்கும் ஈடுகொடுத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் தீர்க்க முடியாவிட்டால் போராட்டம் தொடங்க வேண்டும். இந்தப் போராட்ட வாழ்வில் தம்மை வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டார். எனினும் அவர் ாழுத்துக்களைப் போலவே அவரது தோற்றத்திலும் ஒரு சாந்தியே ாப்பொழுதும் நிலவியது. புரட்சிக் குரலையோ போர் முழக்கத்தையோ அவர்கவிதைகளிற் காணமுடியாது. 1950ம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ாழுத்துக்களில் மாற்றம் காணப்பட்டது. 1930 -களில் ஆழ்ந்த இரக்கம் தழுவிய கவிதைகள், 1950-களில் ஆத்திரம் கலந்த சோகக் கவிதைகள் - எங்குமே பாரதியின் எரிமலைக் குமுறல்களைக் காண முடியாது. ஆகவே மக்களின் அவலங்களைக் கண்டு வுெந்து தொந்து பாடிய கவிரனாக இருந்தாரேயொழிய பொங்கிக் குமுறிய வங்கக் கடலின் குறாவளியை எழுத்தில் புகுத்திய புரட்சிக் கவிரனாக அவரைக் கான முடியவில்லை."சி
".90-களில் புதியதோர்.ஆத்திரப்பரம்பரைதலைதூக்கியது ாழுத்திலும் பேச்சிறும் கவிதையிலும் சிற்றம்மிகுந்ததிாந்தலைமுறையின் துடிப்பும் விழிப்பும் மலையகத்தை இனங்காட்டியது. பழந்தலைவர்கள்

Page 59
114 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
அருவருப்போடும் அலட்சியத்தோடும் இப்புதிய போக்கினை நோக்கினர். சிவி அவர்கள் இப்போக்கினை ஆதரித்தார். இதன் வளர்ச்சியை விரும்பினார். இக்கால இலக்கியக் கூட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டார்கள். இளந்தலைமுறையினரை உற்சாகப்படுத்தினார்கள். முற்போக்கு இலக்கிய வாதிகளோடு இணைந்துநின்றார்கள்."?
1960 -களிலிருந்து, மலையகத்தில் ஏற்பட்ட வியக்கத்தக்க எழுச்சிக்கும் மலையகத்தமிழ் இலக்கியத்தின் காத்திரமான வளர்ச்சிக்கும் பலவகை இலக்கியங்களின் பெருக்கத்திற்கும் அழுகுரலாக ஒலித்த இலக்கியங்கள், போர்ப்பரணிகளக மாறுவதற்கும் தோட்டத் தொழிலாளர் பற்றிய நோக்கு ஆழமும் அகலமும் பெறுவதற்கும் பலவகையிலும் வழிசமைத்தவர்களுள், சி.வி. வேறுப்பிள்ளை முக்கியமானதோரி இடத்தைப் பெறுகிறார் என்பதில் ஐயமில்லை.
மலையகத்தின் முன்னோடிக் கவிருர்களுள் குறிப்பிடத்தகுந்த இன்னொருவர் சக்தி அ பாலையா ஆவர். "தேயிலைத் தோட்டத்திலே" ான்றும் கவிதைத் தொகுதியைப் பார்க்கும் போதெல்லாம் ஒரே நேரத்தில் இருவர் குராபகத்துக்கு வருவர் அக்கவிதைப் பகுதியை அற்புதமாக ஆங்கிலத்தில் வழத்துள்ள சிவி வேறுப்பிள்ளை ஒருவர். அவற்றை "சிந்தாமல் சிதறாமல்" கவித்துவ விறு குன்றாமல் அழகும் எளிமையும் கொண்ட உயிரித்துழப்புமிக்க நடையில் தமிழாக்கம் செய்த சக்தி அ. பாலையா மற்றையவர். ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புலமை மிக்கவராகவும் தரமான ஒரு கவிஞராகவும் SLLLLCLLLCLL TTTTTTLTLLLLLTTTTT LLTLLLLLTTTLL TTLTLTT TLTLS முடிந்தது கவிராக மட்டுமன்றி மலையகம் பெற்றெடுத்த தலைசிறந்த ஓவியக் கலைஞராகவும் விளங்கும்(வரது கவிதைகளும் கட்டுரைகளும் ஒவியங்கள் கூறும் தத்துவங்கள் பற்றிய ஆய்வுகளும் 1940 -களின் இறுதியிலிருந்து இலங்கையின் தினசரிப் பத்திரிகைகளில் மட்டுமன்றி தமிழகத்தின்திராவிடதாடுமுதலிய சர்சிகைகளிலும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோற்றமும் வளர்ச்சியும் 115
டீ.எம். பீர் முகம்மது எம்.ஏ. அப்பாஸ் ஆகியோரும் இவ்வகையிலே மனங்கொளத்தக்கவர்கள், தி.மு.க. பாணியிலான மேடைப் பேச்சாளர்களாகவும்பத்திரிகையாளர்களாகவும் பிரசுரகர்த்தாக்களாகவும் விளங்கிய இவர்களுள், பீர் முகம்மது சதியில் சிக்கிய சலீமா, கங்காணி மகள் ஆகிய நாவல்களையும் "சிறுகதைகள் 6" என்ற சிறுகதைத் தொகுதியையும், அப்பாஸ் கள்ளத்தோணி என்ற நாவலையும் வெளியிட்டுள்ளனர்.
எழுச்சிக் காலம்
எழுச்சிக்காலப் பகுதியை அதன் முக்கிய பண்புகள் சிலவற்றைக் கவனத்திற்கொண்டு, () 1960 -களிலிருந்து 1983 ம் ஆண்டின் முற்பகுதிவரையிலான காலகட்டம், (2) 1983 ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரையிலான காலகட்டம், என இரு காலகட்டங்களாகப் பகுத்து நோக்கலாம்
1960-களின் ஆரம்பத்திலிருந்துதுரிதமாக ஏற்பட்டுவந்த இலக்கிய வளர்ச்சி 1971 ம் ஆண்டு (ஏப்பிரல் மாதம்) இடம்பெற்ற கிளர்ச்சி 1970 -களில் பெருந்தோட்டங்களைத் தேசியமயமாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள், அதனால் ரற்பட்ட பாதிப்புகள், 1977, 1987, 1983 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற கொடூரமான வன்செயல்கள் முதலியனவற்றால் பெரிதும் பாதிப்புறலாயிற்று. எனிறும், இவையாவற்றுக்கும் ஈடுகொடுத்துச் TLTaS OL00 SLTLTLLL LTTTTTTLTTtTTTTLCTTTTTLLLLLLL LLLLLLLT தனது வார்ச்சிப் பாதையில் மீண்டும் மிக வேகமாக முன்னேறின்
கொண்டிருப்பது மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருவனவாகும்
ரறத்தாழ 1960 -களின் ஆரம்பத்திலிருந்து மலையகத் தோட்டர் TLTtLLTTTTLLLL LLTLLTTTLLLLLTLTTT LTLTLLTTLTTTLLLLLLS TTLLT LCLTTLTS aaCTLLT LTTTLLaaLaLTLSS S LTTTTLLLLL Tydfilamulujuh, urdhapnia awamTuyub numriffafilawuluyuh 1980 -dUmfahr TLLLLLTLTTTTLTS CCLCLCLC TCTLLT LSETTTLL TTLSLLLL கானமுடிகின்றது

Page 60
s இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
1960-களிலிருந்த இலங்கையின் சகல இனங்களினதும் அடிநிலை மக்கள் மத்தியில் ஏற்படத்தொடங்கிய எழுச்சி, பின்தங்கிய கிராமப்புறங்களிலும் பின்தங்கிய பிரதேசங்களிலும் எழுச்சிக்காற்று நுழையத் தொடங்கியமை இலவசக் கல்வி விருத்தி பல்கலைக்கழகம் வரையிலானதாய்மொழிக் கல்வி விருத்தி உலக அரங்கில் மிக வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த மாற்றங்கள், முற்போக்குச் சிந்தனைகளதும் பொதுவுடைமைக் கருத்துகளினதும் காத்திரமான வீச்சு, ஈழத்து முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் வீற1ார்ந்த செயற்பாடுகள், தமிழகத்தில் ஏற்பட்டுக்கொண்டிருந்த மாற்றங்களின் தாக்கம் ஈழத்து இலக்கிய உலகில் 'இலக்கியச் செல்நெறி"பற்றிஇடம்பெற்ற சர்ச்சைகள், வாதப்பிரதிவாதங்கள், விமர்சன உலகின் நெறிப்படுத்தல் முதலியவுை ஈழத்து இலக்கிய உலகிலும் அதன் ஒரு கூறான மலையக இலக்கிய உலகிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தின.
1950-கள் வரை, பொதுவாகத்தமிழ் இலக்கிய உலகிலும் குறிப்பாக ஈழத்து இலக்கிய உலகிலும் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தியோர் ஆங்கிலக் கல்விகற்ற மத்தியதர வர்க்கத்தினரேயாவர். இவர்களுள் மிகப் பெரும்பாலானோர் - பட்டதாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் உட்பட, வசதிகளும் வாய்ப்புகளும்மிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்களே. அவர்களது பெரும்பாலான படைப்புகளில் மத்தியதர வர்க்கக் கண்ணோட்டமே மேலோங்கியிருப்பதை அவதாளிக்கலாம். அத்தகையோருள் பேராசிரியர் கைலாசபதி போன்ற ஒருசிலரே தாம் பிறந்து வளர்ந்த குடும்பச் குழ்நிலைகளுக்கப்பால் சமூகத்தின் அடிநிலை மக்களை தேசபாவத்துடனும் வரிக்கக் கண்ணோட்டத்துடனும் நோக்கின. அதற்கு அவர்கள் வரித்துக் கொண்ட மார்ச்சிய தத்துவமும் உரமாக விளங்கிற்று-அத்தகையோரே, 1960 -களிலிருந்து ரற்பட்ட இலக்கியச் செல் நெறிக்குத் தலைமை தாங்கும் தகுதியையும் பெற்றிருந்தனர்.
uydagor outh 1960 -as affledir y ffubuildaflafasidig Ddirgryanawr உருவாகிக் கொண்டிருக்கும் மத்தியதர வரிக்கத்தினருள் மிகப் பெரும்பாலோரி சமூகத்தின் அடிநிலையிலிருந்து வந்தோரேயாவரி

தோற்றமும் வளர்ச்சியும் 117
தாய்மொழி மூலம் கல்வி பயின்றோராவர் புதிய பார்வையும் கருத்து வீச்சும் உடையவர்கள் செ கதிர்காமநாதன், செ. யோகநாதன், சுபத்திரன், பசுபதி மெளனகுரு, பெனடிக்ற் பாலன், என்.கே. ரகுநாதன், தெணியான், நீர்வை பொன்னையன் என இப்பட்டியல் நீண்டு செல்லும்
தமது கல்வியைத் தொடரவசதியில்லாத நிலையில், மிகக் குறைந்த கல்வி அறிவையும் அதேசமயம் சமூகத்தின் அடிமட்டத்திற் பிறந்து வளர்ந்து அவர்களது இன்பதுன்பங்களிலும் வாழ்க்கைப் போராட்டங்களிலும் தோய்ந்து திளைத்து நேரடி அனுபவத்தையும் பெற்றவர்கள், ஈழத்து இலக்கிய உலகில்நுழைவதை 1950-களிலிருந்தே காணலாம். மலையகத்தைப் பொறுத்தவரை 1960 -களிலிருந்து இப்போக்கினைத் தெளிவாகக் காணமுடிகின்றது. அசெமுருகானந்தன், டொமினிக் ஜீவா, டானியல், இளங்கீரன், பித்தன்முதலியோர் தொடக்கம் குறிஞ்சித் தென்னவன், வேல்சாமிதாசன், - மலையகத்தின் இன்றைய இளந்தலைமுறையைச் சேர்ந்த 'பலர் - முதலியோர் வரை இத்தகையவர்களே என்பது மனங்கொளத்தக்கது.
1960 -களிலிருந்து இலங்கையின் சகல பாகங்களிலும் சகல சமூகங்களிலும் இலக்கியம், அரசியல் முதலியன உட்படப் பல்வேறு துறைகளிலும் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்திவந்த "உயர்குடி மேட்டிமைத்தனம்" தகரத் தொடங்கிற்று. மலையகமும் இதற்கு விதிவிலக்கல்ல. இலங்கையின் ஏனைய சமூகங்களில் ஏற்பட்டதைப்போன்றே - உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் மிகக் குறைவாக இருந்தபோதும், 1960 -களிலிருந்து மலையகத்திலும் கல்விகற்றோரின் தொகை படிப்படியாக அதிகரிக்கலாயிற்று 1970-களிலிருந்து கணிசமான அளவில் தோட்டத் தொழிலாளர்மத்தியிலிருந்தே புதியதொரு மத்தியதர வர்க்கம் உருவாகத் தொடங்கியது. இவர்களுள் ஒரு பகுதியினர் மத்தியதர வர்க்கமாக மாறியதும் மலையகத்தை மறந்து போனாலும்? பெரும்பாலானவர்கள் புதிய சிந்தனைகளுடனும் கருத்துவீச்சுடனும் எதிர்கால நம்பிக்கையுடனும் மலையக இலக்கிய உலகில் நுழைந்தனர்; மலையக சமூகத்தைப்

Page 61
118 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
புதியதொரு பாதையில் இட்டுச் செல்ல முயல்கின்றனர். அதேசமயம் தமிழகத்திலே விந்தன்முதலியோரைப் போன்றும் ஈழத்தின் வடபுலத்திலே டொமினிக் ஜீவா, டானியல் முதலியோரைப் போன்றும் மலையகத்திலும் ஆரம்பக்கல்வி அறிவுடனே தொழிலாளியாக வாழ்ந்துகொண்டே குறிஞ்சித் தென்னவன் முதலியோர் இலக்கிய உலகில் பிரவேசித்தனர். மேற்கண்டவர்களுள் பெரும்பாலோர், சமூகத்தின் அடிமட்டத்திலிருந்தும் வஞ்சிக்கப்பட்ட சமூகப் பிரிவினரிடையேயிருந்தும் பீறிட்டுக் கிளம்பியவர்கள்; தத்தமது சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் அவலங்களையும் கொடுமைகளையும் துயரங்களையும் அணுஅனுவாக அனுபவித்தவர்கள்; அவைபற்றி அதிகம் சிந்தித்தவர்கள், அடக்கு முறைகளுக்கும் இன்னல்களுக்குமாளாகிப் புடமிட்ட பொன்போல் ஒளிவிட்டுப் பிரகாசிப்பவர்கள்; வாய்ப்புகளும் வசதிகளுமற்ற நிலையில் திறமையும் ஆற்றலுமிருந்தும் படிப்பினைத் தொடர முடியாது ஆரம்பக் கல்வியோடு நிறுத்திக்கொண்டு தாம்பெற்ற அனுபவங்களை எழுத்தாக வழக்கத் தொடங்கியவர்கள்.
தமிழ் இலக்கிய உலகில் ஏற்படத்தொடங்கிய மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். இத்தகைய மாற்றத்திற்கான கால்கோள் பாரதியாருடனோ அல்லது அவருக்கும் முன்னதாகக் கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாசலக் கவிராயர், பள்ளு, குறவஞ்சி ஆசிரியர்கள் முதலியோருடனோ ஆரம்பித்திருந்தாலும் இப் போக்கு 1950 -களின் இறுதியிலிருந்தே ஆழ அகலம் பெற்றுத் தீவிரமடையத் தொடங்கியது எனலாம்
கசடறக் கற்றறிந்தவர்கள் சமூகத்தின் உயர்த்தப்பட்டோர் குழாத்துக்காக இலக்கியம் படைக்கும் போக்கு மாறி, அல்லற்பட்டு ஆற்றாது அழுது கண்ணிர் வழக்கும் மக்களிடையேயிருந்து பிறிட்டு வெடித்துக் கிளம்பி ஓரளவு எழுதவும் வாசிக்கவும் அதேசமயம் தமது சமூகம் பற்றி ஆழ்ந்து சிந்திக்கவும் அவற்றை எழுத்தில் வழக்கவும் தெரிந்தவர்கள் இலக்கிய கர்த்தாக்களாக உருப்பெற்றபோது, தமிழ் இலக்கிய உலகம் அதுகாலவரை கண்டறியாதவற்றைக்கான நேரிட்டது.

தோற்றமும் வளர்ச்சியும் 119
அல்லற்பட்டு ஆற்றாது அழுது கண்ணிர்வழக்கும் மக்களின் பிரச்சினைகளையும் அவலங்களையும் எவ்வளவுதான் மானுட நேயத்துடனும் கலைத்துவத்துடனும் வெளிப்படுத்தினாலும், பிரச்சினைகளால் நேரடியாகப் பாதிக்கப்படாதவர்கள் படைக்கும் ஆக்கங்களிலும் பார்க்கப் பிரச்சினைகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு அவற்றில் ஊறித் தோய்ந்து அவற்றை உள்வாங்கிக் கொண்டவர்கள் படைக்கும் ஆக்கங்களில், உயிர்த்துடிப்பும் வேகமும் கருத்தாழமும் யதார்த்தச் சித்திரிப்பும் மேலோங்கி நிற்றலை அவதானிக்கலாம். இளங்கோ, கம்பன், பாரதி புதுமைப்பித்தன் முதலிய அசாதாரண ஆற்றல் படைத்தவர்கள் - மேதைகள், இதற்கு விதிவிலக்கானவர்களே.
தொழிலாளர் மத்தியில் பிறந்து வளர்ந்து உழைத்துப் பண்பட்ட விந்தனது 'முல்லைக் கொடியாள்" என்ற சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதியுள்ள கல்கி "பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் துயரத்தைப் பற்றியும் சேற்றில் இறங்கி அறியாதவன் குழயானவனுடைய கஷ்டத்தைப் பற்றியும் என்னதான் கண்ணில் பேனாவைத் தோய்த்துக் கொண்டு எழுதினாலும் அந்தக் கதைகளில் மற்ற எல்லாச் சிறுகதை இலட்சணங்களும்இருக்கலாம் உள்ளத்தை ஊடுருவித்தைக்கும்படியான இதயம் ஒன்றிய ஈடுபாடு இருப்பதில்லை.
"அப்படிப்பட்ட உண்மை ஒளிவீசும் ஏழை எளியவர்களிடையே இருந்தும் உழைப்பாளி மக்களிடையேயிருந்தும் ஆசிரியர்கள் தோன்ற வேண்டும் அவர்களுடைய எழுத்தில் இலக்கியப்பண்பும் பொருந்தியிருக்க வேண்டும் . சீ7 எனவும் ". விந்தன் கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு எப்போதும் மனதிலே பயம் உண்டாகும் படித்தால் மனதிலே என்னென்ன விதமான சங்கடங்கள் உண்டாகுமோ, எப்படிப்பட்ட வேதனைகளுக்கு ஆளாக நேருமோ என்றுதான் பயம்." 52 எனவும் அவர் கூறியுள்ளமை மலையக இலக்கியத்திற்கும் பொருந்துவதே. விந்தனைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஈழத்திலும் அதன் ஒரு கூறான மலையகத்திலும் எத்தனையோ விந்தன்கள் இலக்கிய உலகில் தோன்றிக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்

Page 62
120 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரது ஆக்கங்களுக்குப் பின், சிவி வேலுப்பிள்ளையின் ஆக்கங்கள் வெளிவரும் வரை இடைப்பட்ட காலத்தில் மலையகத் தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கணிசமான அளவு சிறுகதைகளும் கவிதைகளும் வெளிவந்துள்ளபோதும் அவற்றுள் பெரும்பாலானவற்றில் தூரப்பார்வையே அதிகம் பிரச்சினைகளோடு ஒன்றித்த ஈடுபாடோ, உயிர்த்துடிப்போ மேலோங்கிக் காணப்படவில்லை. ஆயின், சிவி வேலுப்பிள்ளையின் ஆக்கங்களில் மனதை நெருடும் வகையில் பிரச்சினைகளோடு ஒன்றித்த ஈடுபாடும், வேகமும், உயிர்த்துடிப்பும் கருத்தழுத்தமும் மேலோங்கிநிற்பதைக் காணலாம்
'. குமுறத் தொடங்காத எரிமலையும் கொதிநிலை எட்டாத நீரும் அவரது படைப்புகளின் பாணியாய் அமைந்துள்ளன. . " 53 என்பர் சி.வி. வேலுப்பிள்ளையின் ஆக்கங்களைப் பொறுத்தவரை இது உண்மையே. ஆயின், அதேசமயம் 1960 -களிலிருந்து ஏற்பட்ட மாற்றங்களுக்குக் கட்டியம் கூறுவதுபோல் அவை அமைந்துள்ளதையும் மலையக வரலாற்று வளர்ச்சியின் ஒருகட்டத்தை அவை பிரதிபலித்து நிற்பதையும் வளர்ச்சியின் மறுகட்டத்தினை 1960 -களிலிருந்து எழுந்த ஆக்கங்கள் பிரதிபலித்து நிற்பதையும் காணலாம். 1960 -களிலிருந்து மலையக இலக்கிய உலகிற் பிரகாசிக்கத் தொடங்கியோரின் அதிகமான ஆக்கங்களில் பொறுத்துப் பொறுத்துப் பொறுக்க முடியாத நிலையில், வெடித்துக் கிளம்பும் "எரிமலைக் குமுறல்" படிப்படியாக அதிகரித்துச் செல்வதனையும் 'நீரின் கொதிநிலை" உச்சம் பெறுவதனையும் "மலையகம்" என்ற பிரக்ஞை பூர்வமான கருத்துகள் மேலோங்குவதையும் மலையக மண்ணின் மனம் அழுத்தம் பெறுவதையும் முற்போக்குச் சிந்தனைகளும் வர்க்க உணர்வும் முனைப்புப் பெறுவதையும் காணலாம்
மலையகத் தோட்டத் தொழிலாளரின் எழுச்சியிலும் மலையக இலக்கிய வளர்ச்சியிலும் தீவிர ஆர்வம் கொண்டவரும் இந்தியாவில் தாயகம் திரும்பியோரின் "மக்கள் மறுவாழ்வுக் கழகப்" பொறுப்பாளரும் கல்விமான் எனவும் சொல்லின் செல்வர் எனவும் புகழப்படுபவருமான

தோற்றமும் வளர்ச்சியும் 12
இர. சிவலிங்கம் 1960 -களில் மலையக இலக்கிய உலகிற் புகுந்த இப் பரம்பரையினரை மிகப் பொருத்தமாக "ஆத்திரப் பரம்பரை" 94 எனவும், அவர்களது "எழுத்திலும் பேச்சிலும் கவிதையிலும் சிற்றம் மிகுந்த இளந்தலைமுறையின் துடிப்பும் விழிப்பும் மலையகத்தை இனங்காட்டியது"* எனவும் குறிப்பிட்டுள்ளமை மனங்கொளத்தக்கது.
இவ் ஆத்திரப் பரம்பரையின் முதல் அலையாகத் தோன்றியவர்கள் திருச்செந்தூரன், என்.எஸ்.எம். இராமையா, தெளிவத்தை ஜோஸப் சாரல்நாடன், எம். வாமதேவன், குறிஞ்சித் தென்னவன், குன்றவன் (கே. முருகேசு), மு.க. நல்லையா முதலியோராவர். இவர்களுள் அதிகமானோர்முதலில் சிறுகதை உலகிலேயே கால் பதித்தனர் குறிஞ்சித் தென்னவனோ விறார்ந்த கவிஞனாகப் பரிணமிக்கத் தொடங்கினார். இவர்களோடு சிறுகதை, நாவல் கவிதை முதலியவற்றை எழுதுவதில் ஆர்வம் காட்டியோராக யோ, பெனடிக்ற் பாலன், நந்தி ஞானசேகரன், இராஜபாரதி, சதாசிவம், கோகிலம் சுப்பையா, தொ. சிக்கணராஜ கே.ஆர் டேவிட், செ. யோகநாதன், சிவபாக்கியம் குமாரவேல் முதலியோர் விளங்கினர்.
இவர்களுக்குச் சற்றுப்பிற்பட்டு எழுதத் தொடங்கியவர்களுள் மாத்தளை வடிவேலன், மு.சிவலிங்கம் பரிபூரணன், ஜெயசிங் சி பன்னீர்ச் செல்வன், சொலமன்ராஜ் மலரன்பன்,த ரஃபேல், மாத்தளை கார்த்திகேசு கே. கணேஷ்குமார், மல்லிகை, சி குமார், வனராஜன், நூரளை சண்முகநாதன், ராம சுப்பிரமணியம் ஏ.பி.வி கோமஸ் ஆர்.எஸ். மணி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேற்கண்டவர்களுள் ஒரு பகுதியினர், காலப்போக்கில் தமது எழுத்து முயற்சிகளுக்கு முழுக்குப் போட்டுவிட்டு எழுத்துலகிலிருந்து விலகிக் கொண்டனர். சாரல் நாடன் முதலிய இன்னொரு பகுதியினர் ஆய்வறிவுத் துறையில் தீவிரமாகப் பங்கு கொள்ளலாயினர். தெளிவத்தை ஜோஸப் மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், நந்தி

Page 63
122 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
சதாசிவம் பெனடிக்ற்பாலன், ஞானசேகரன் முதலியோர் தொடர்ந்து சிறுகதைகளைப் படைத்த அதேசமயம், நாவலாசிரியர்களாகவும் பரிணமிக்கத் தொடங்கினர்.
ஏறத்தாழ 1970 -களிலும் அதற்குப் பின்பும் மலையக இலக்கிய உலகிற் புகுந்தோருள் மு. நித்தியானந்தன், ப. ஆப்டீன், கேகாலை கைலைநாதன், எஸ்.எஸ். தேவசிகாமணி மொழிவரதன், ஆனந்த ராகவன், மாத்தளை சோமு, பூரணி நயிமா ஏ. பஷீர், பி. மரியதாஸ், ந.அ. தியாகராஜன், மல்லிகைக்காதலன், இரா. நித்தியானந்தன், ஏ.எஸ். சந்திரபோஸ் ஏ. செல்வராஜ் இனியன், புப்புரஸ்ஸ முனியாண்டி, எழிலமுதன், இப்னு அஸ்மத், புசல்லாவை இஸ்மாலிகா, சரஸ்வதி மகேஸ்வரி, திலகா பழனிவேல், மாத்தளை ரோகிணி, கங்குலன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
1980 -களில், மலையக இலக்கிய உலகில் முக்கிய மாற்றங்கள் இடம்பெறத் தொடங்குவதை அவதானிக்கலாம். இலக்கிய உலகிற்காலழ எடுத்துவைத்த புதியவர்களுள் அதிகமானோர் புதுக்கவிதைத் துறையிலேயே அதிக ஈடுபாடுகாட்டி வருதல், மலையக இலக்கிய உலகில் முன்னர் என்றுமே இல்லாத அளவிற்கு இளம் பெண்கள் பலரும் உயர்கல்விகற்ற - கற்கின்ற பலரும் இஸ்லாமிய இளந்தலைமுறையினர் பலரும் தீவிர ஆர்வம் காட்டுதல், மலையகத்திலிருந்தும் இலங்கையின் ஏனைய பாகங்களிலிருந்தும் வெளிவரும் சஞ்சிகைகள் பலவும் மலையகப் புதுக்கவிதைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கல் முதலியன முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை. இம்மாற்றங்கள், மலையகத்தில் மட்டுமன்றிப் பொதுவாக ஈழத்து இலக்கிய உலகிலும் காணத்தக்கவையே மலையகப் புதுக் கவிதைத் தொகுதிகள் பல கடந்த பத்தாண்டுகளுள் வெளிவந்துள்ளமையும் மனங்கொளத்தக்கது. மலையகத்தின் பிரபல கவிஞர்கள் சிலரும் பிரபல சிறுகதை எழுத்தாளர்கள் சிலரும்புதுக்கவிதை முயற்சிகளில் ஆர்வம் காட்டுதல் குறிப்பிடத்தக்கதாகும். எடுத்துக்காட்டாகக் குறிஞ்சித் தென்னவன், மாத்தளை வடிவேலன் முதலியோர்இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவர்கள்.

தோற்றமும் வளர்ச்சியும் 123
1960-களிலும் அதற்குப்பின்பும் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூக் கவிதை முதலியவற்றை இயற்றி வருவோருள் குறிஞ்சித் தென்னவன், எம்பி வேல்சாமிதாசன், பண்ணர்மத்துக் கவிராயர், வீரா. பாலச்சந்திரன், வெள்ளைச்சாமி கப லிங்கதாசன், மலைத்தம்பி எம்.எச்எம் ஹலீம்தீன், ஏ.பி.வி கோமஸ், எம். ராமச்சந்திரன், முத்து சம்பந்தர் வண்ணச் சிறகு (அரு. சிவானந்தன்) மாத்தளை வடிவேலன், பூரணி எஸ்.பி தங்கவேல் சிஎஸ் காந்தி மல்லிகை, சி குமார் எஸ். கிருஷ்ணன், சு முரளிதரன், இரா.நித்தியானந்தன், ஆதவன், அல் அளUமத் இஸ்மாலிகா, வெலிமடை ரபீக் உஸ்மான் மரிக்கார் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கடந்த பத்துவருட காலத்துள், நூற்றுக்கணக்கானோர் புதுக்கவிதைத் துறையில் தீவிர ஆர்வம் காட்டி வருதலை அவதானிக்கலாம். இவர்களுள் எத்தனைபேர் தரமான கவிஞர்களாகத் தேறுவர் என்பதனைக் காலம்தான் நிர்ண்யிக்கும். அத்தகையோருள் குறிப்பிடத்தக்க சிலர் வருமாறு பூண்டுலோயா என். சுப்பிரமணியம் பிரமிளா கந்தையா, நட தாரணி (கவிதா) நாகபூஷணி கருப்பையா, ச. பன்னீர், ரஷீத் எம் ரியாழ் ஜீவகன், மலைமகன், பூரீதேவிப்பிரியா, இராஜலட்சுமி குமாரவேல், ரம்பொட எஸ். பரமேஸ், எஸ். விஜயா, இர.அ. இராமன், மடுல்கெல லாசரஸ் மதிவாணன், பன்னீர்ச் செல்வம் பீதிருச்செல்வம் மன்னனூர் மதுரன், இறாகலை அடன்னிர் கலைமகள் ஹிதாயா, சுப்ராமைந்தன், சி சார்ளஸ், சோ. பூரீதரன், உனைஸ் ஆரிப் செ. மகேந்திரன், பாலா சர்மா, பீஷ்மா,நீலா. குழந்தைவேல் ஜனப்பிரியன், ஜோ. பரஞ்சோதி நீலாபாலன், பாலரஞ்சளி சர்மா, மனுவேல் ஆசீர்வாதம் பன்விலையூர் குறிஞ்சிநாடன். இவர்களுட் கணிசமானோர், இலக்கிய உலகிற் புதுமுகங்கள் என்பதும் ஆண்டில் இளைஞர் என்பதும் அவதானித்தற்குரியது.
1960 -களிலிருந்து மலையக இலக்கிய உலகில் ஏற்படத் தொடங்கிய வீறார்ந்த எழுச்சியையும் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்த 'ஆத்திரப் பரம்பரை"யினரின் இலக்கிய வேட்கையை நிறைவேற்றவும் அவர்களுக்கு

Page 64
124 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
ஊக்கம் அளிக்கும் வண்ணமும் மலையகத்திலே சில நிறுவன்ங்களும் பல இலக்கிய மன்றங்களும் உருவாகிச் செயற்பட்டமையும் செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்
இர. சிவலிங்கம் அவர்களைத் தலைவராகவும் திரு.வி வேலாயுதம் அவர்களைச் செயலாளராகவும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட "மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம்" ஓரளவு எழுதப்பழக்கத் தெரிந்த இளைஞர்களைச் சேர்த்து அவர்களுக்கு எழுத்தார்வத்தை ஊட்டியும் கல்வி இலக்கியக் கருத்தரங்குகளை நடாத்தியும் கலை விழாக்கள் எடுத்தும் மலையகத்தில் இலக்கிய வேட்கையினை ஊட்டிவிட முயன்றது. மலையகத் தொழிலாளர்களினதும் மலையக இலக்கியத்தினதும் எழுச்சியின் பொருட்டுக் குறிப்பிடத்தகுந்த பணிகளையாற்றிய பத்திரிகைகளுள் ஒன்றாகவும் மலையகத்தின் "மணிக்கொடி" என்ற புகழைப் பெற்றதுமான மலை முரசு'இச் சங்கத்தின் உத்தியோகபூர்வ சஞ்சிகையாக கப சிவம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்தது மணிக்கொடிப்பத்திரிகையைப் போன்றே அற்ப ஆயுளில் மலை முரசும் மடிந்து விட்டபோதும் மலையக இலக்கிய வளர்ச்சியில் அதன் பங்களிப்புக் காத்திரமானதாகும். அது இளம் எழுத்தாளருக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்ததோடு சிறுகதைப் போட்டிகளையும் நடத்தியது.
இதேபோன்று, திருச்செந்தூரனைத் தலைவராகவும் கார்மேகத்தைச் செயலாளராகவும் கொண்டு 1963ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட "மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்"முக்கிய பணிகளை ஆற்றியது. அவற்றுள், விதந்து கூறத்தக்கது மலையகச் சிறுகதை வளர்ச்சிக்கு அது ஆற்றிய அரிய பங்களிப்பு எனலாம் மலையக இலக்கிய உலகில் 1960-களிலிருந்து ஏற்பட்ட எழுச்சியிலும் வளர்ச்சியிலும் ஏனைய இலக்கிய வகைகளிலும் பார்க்கச் சிறுகதைத் துறையே முக்கியத்துவம் பெற்றது. அதற்கடுத்த நிலையிலேயே நாவல், கவிதை, புதுக்கவிதை நாடகம் முதலியன வளர்ச்சியடையலாயின. இப்போக்கு மலையகத்தில் மட்டுமன்றிப் பொதுவாக நவீனதமிழ் இலக்கிய உலகிலும் காணக்கூடிய ஒன்றாகும்.

தோற்றமும் வளர்ச்சியும் 125
இவற்றைத் தொடர்ந்து, மலையகத்தில் பிரதேசவாரியாக, "மாத்தளை இலக்கிய வட்டம்" "ஹற்றன் இலக்கிய வட்டம்" முதலிய அமைப்புகள் பலதோன்றி, மலையகத்தின் இலக்கிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லப் பலவகையிலும் முன்னின்றுழைத்தன.
1960 -களிலிருந்து மல்ையக இலக்கிய உலகில் ஏற்பட்ட துரித வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்தவற்றுள் தினசரிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் முதலியன முக்கிய இடம் வகிக்கின்றன. மலையகத்தில் 1960 -களுக்கு முன்பு வெளிவந்த தேசபக்தன், சுதந்திரம் தோட்டத் தொழிலாளி சமூக முன்னேற்றம் முதலியவை தோட்டத் தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றன. இலங்கையில் நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தினசரிப் பத்திரிகையான வீரகேசரி, ஆரம்பம் முதலே மலையக இலக்கிய வளர்ச்சிக்கு ஊக்கமளித்து வந்துள்ளது.
颅
வீரகேசளிப்பத்திரிகையில் மலையகத்துக்கென "தோட்ட வட்டாரம் என்ற பெயரில் தனிப்பகுதியே ஒதுக்கப்பட்டது. இதுவே பின்பு "தோட்ட மஞ்சரி" எனவும் 'குறிஞ்சிக் குரல்" எனவும் பெயர் மாற்றங்களைப் பெற்றது. தற்பொழுது ஞாயிறு வாரமலரில் 'குறிஞ்சிப் பரல்கள்" என்ற பெயரில் இடம்பெறுகிறது
"தோட்ட மஞ்சரி"க்குப் பொறுப்பாக இருந்த கார்மேகமும் பொ. கருப்பையா, இர. சிவலிங்கம் பெரி கந்தசாமி ஆகியோரும் ஒன்று சேர்ந்து தோட்ட மஞ்சரிமூலமாக 1962ம் ஆண்டு முதல் அடுத்தடுத்து நடாத்தியநான்கு சிறுகதைப் போட்டிகள், மலையக இலக்கிய வரலாற்றில் முக்கியமான ஒரு மைல்கல் எனலாம் இதனைத் தொடர்ந்தே இலக்கிய மன்றங்களும் சஞ்சிகைகளும் பல சிறுகதைப் போட்டிகளை நடாத்தின. இவை, மலையக ஆக்க இலக்கிய சரித்தாக்களுக்குப் பெருந் தூண்டுதலையளித்தன. மேற்கண்ட சிறுகதைப் போட்டிகளின் அறுவடையாக வெளிவந்ததே 'கதைக் கணிகள்"ான்றும் சிறுகதைத்

Page 65
126 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
தொகுதி இத்தொகுதி 1971 ம் ஆண்டில் வெளிவந்தது. கச்சாயில் இரத்தினம் என்பவரது சிறுகதைகள் அடங்கிய தொகுதியொன்று எட்டியாந்தோட்டை - பகுத்தறிவுப் புத்தகப் பண்ணை வெளியீடாக 1959 ம் ஆண்டு "பாட்டாளி வாழ்க்கையிலே" என்ற பெயரில் வெளிவந்துள்ளதாக அறிய முடிகின்றது. எவ்வளவோ முயன்றும் இந்நூலைப் பெறவோ, பார்வையிடவோ முடியவில்லை. இவ்வகையில் நோக்குமிடத்து "கதைக் கணிகள்" மலையகத்தின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியெனலாம்
வீரகேசரிப் பத்திரிகையைப் போன்றே தினகரன், தினபதி, சிந்தாமணி, சுதந்திரன் முதலிய பத்திரிகைகளும் மலையக ஆக்கங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தன; கொடுத்து வருகின்றன. அமரர் பேராசிரியர் கைலாசபதி தினகரன் ஆசிரியராக இருந்தபோது மலையகப் படைப்புகளுக்குக் களம் அமைத்துக் கொடுப்பதில் தீவிர கவனம் செலுத்தினார் சிவி வேலுப்பிள்ளை, ான்ாஸ்ாம் இராமையா முதலிய மலையக இலக்கிய முள்னோடிகளை ாழுதத் தூண்டினார். மலையகத்தை இனம் காட்டும் வகையில், அவகாது படைப்புகள் தினகரணில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. வீரகேசரியில் "தோட்டமர்சரி" இடம்பெற்றது போன்று தினகரனில் L TLTLL TLLLLS LLLTTTLCLL SLTLLTLTL LTTHLTaS LL0S இடம்பெற்றன.
Mas dagu.MohamaruMooTTai ruhsadasúlu'L "asas" Tadhgpuh சர்சிகையும் சிறுகதைகள் சிவற்றை வெளியிட்டபோதும் துரதிஷ்டவசமாக அது தன் முதலாவது இதழுடனேயே நின்றுவிட்டது மலையகத்திற்கு TLTTTTLTLLLCLLLLCLCLLLHHH LHHLTLLTTTTLLLLLT TLTT TTTtLLS முதலிய நாடுகளிலிருந்தும் வெளிவந்த வெளிவந்து கொண்டிருக்கின்ற மல்லிகை தாயகம் குமரன், பாரதி தமிழமுது அலை, அக்கினிச் முற்க பூரணி இனங்ாதிரி (ஆண்டுமலர்) களம் விழவு, தாமரை, ஆனந்த LTTLLTTS LCLTMLL LTLTL TLLL TLTLLLLLT LLTTLL aTTTTL

Gantapi atffafah 127
சஞ்சிகைகளும் மலையக ஆக்கங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த போதும் மலையக இளந்தலைமுறையினரின் இலக்கிய வேட்கைக்கு அவை போதுமானவையாக அமையவில்லை. இந்நிலையில் மலையகத்திலிருந்தே சஞ்சிகைகள் பல தோன்ற வேண்டியநிர்ப்பந்தம் ஏற்படலாயிற்று
"மலை முரசு" வெளிவந்ததைத் தொடர்ந்து மலையகத்தில் சஞ்சிகைகள் பெருகத் தொடங்கின. பொதுவாக ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் அன்றுதொட்டு இன்றுவரை பிரசுர வசதிகள் மிகக் குறைவாகக் காணப்படும் நிலையில் படைப்பாளிகள் தமது படைப்புகளை நூலுருவிற் கொண்டுவருவது மிகுந்த சிரமமான காரியம் வசதிபடைத்த ஒருசிலரே, தமது படைப்புகளை நூலுருவிற் காண்பது சாத்தியமாகிறது. இந்நிலையிற் சஞ்சிகைகளே படைப்பாளிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாக விளங்குகின்றன. மலையகத்தைப் பொறுத்தவரை, இந்நிலை இன்றும் அதிகம் எனலாம்
இதுகாலவரை வெளிவந்த மலையகப் படைப்புகளில் ஒரு சிறு பகுதியே நூலுருப் பெற்றுள்ளன. பெரும்பகுதி சஞ்சிகைகளிலேயே உறங்கிக்கிடக்கின்றனான்பதும்தரமான படைப்புகள் சில கையெழுத்துப் பிரதிகளாகவே ச9 உறங்கிக் கொண்டிருக்கின்றன என்பதும், மலையகத்தின் பிரபலாமுத்தாளர்களும் கவிராகருமான தெளிவற்தை ஜோஸப் மாத்தனை வடிவேலன், குறிர்சித் தென்னவன், க முரளிதரன் முதலியோரது படைப்புகளுள் அதிகமானவைகூட சர்சிகைகளிலேயே உறங்கிக் கொண்டிருக்கின்ான என்பதும் வெளிவந்த சர்சிகைகளுட் பல இன்று பெறுவதற்கரிதானநிலையிலுள்ளாாண்பதும் இந்நிலையில் மலையகத் தமிழ் இலக்கியம் பற்றி ஆராயப் புகுவோர் எத்தகைய சிரமங்களுக்காக வேண்டியுள்ளது.ாண்பதும்இலக்கிய நெஞ்சங்களைர்
Jagdgardé avullaMaraureguh
மலையக இலக்கியம் புற்றி ஆராயப் புகுவோர் முதலில் அமி LaTTLTLLLLLTTTtaTLS0O TLLTLTTLTLTTTLTTTLTTTLLLLLLLLS TTL TTLLLLLLL LLLLGL TTLLLLLLL LTTTTLLLLLLL LLTLCLTLTCL

Page 66
128 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
பெறமுடியுமா முதலியன பற்றிப் பரந்த அளவிலான ஆராய்ச்சி முயற்சிகளையும் தேடுதல் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்குள்ளாக வேண்டியுள்ளது. மலையக இலக்கியம் பற்றிய தகவல்களை அரும்பாடுபட்டுச் சேகரிக்க முயன்று கொண்டிருக்கும் திரு. சாரல்நாடன் போன்றவர்களே இச்சிரமங்களை உள்ளபடி உணரமுடியும்?
பொதுவாகத் தமிழ் இலக்கிய உலகிலும், குறிப்பாக ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலும் ஜனரஞ்சகமற்றதும் இலக்கிய வேள்வி நடத்துவதுமான சிறுசஞ்சிகைகளுக்கு நேருங் கதியே மலையகத்தில் தோன்றிய பல சஞ்சிகைகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு விதிவிலக்காக, ஒருசில சஞ்சிகைகளே சில ஆண்டுகளோ பல ஆண்டுகளோ தொடர்ந்து வெளிவந்தன; வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல சஞ்சிகைகள் அற்ப ஆயுளில் மடிந்துவிட்ட போதும் குறுகிய காலத்தில் அவை மலையக இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள முக்கியமான பங்களிப்புகளைத்தட்டிக்கழிக்க முடியாது. இச் சிறு சஞ்சிகைகள் தோன்றியிராவிடின், நாம் இன்று காறும் மலையகப் படைப்புகளுள் அதிகமானவை தோன்றியிருக்க முடியுமா என்பது கேள்விக் குறியாகவே அமையும்
இவ்வகையில் முத்தமிழ் முழக்கம், தொண்டன், மலைமடல், மலைக்குருவி மலைப்பொறி உதயம் நவ உதயம் மலைச்சாரல் குறிஞ்சிக் குரல் வெண்னிலா, குருதிமலர் நதி இயக்கம் மறுமலர்ச்சி பகுத்தறிவு காங்கிரஸ், மலை ஓசை கொந்தளிப்பு ஆக்கம் திரள், ஈழமணி செய்தி கலைக்குயில் எழுச்சி விழிப்பு சாரல் தமிழமுதம் அல்லி பூங்குன்றம் அர்சலி தீர்த்தக்கரை, கொழுந்து செனமியம் மாவலி குன்றின் குரல் நந்தலாலா, தோழன், ப்ரியநிலா முதலியவை குறிப்பிடத்தக்கவை. இவைதவிரமலையகச் கல்லூரிகள் மகாவித்தியாலங்கள், பாடசாலைகள் முதலியவற்றின் விழாமலர்களும் கணிசமான அளவு மலையகப் LuaLuaJawamfélagsstaaf? Glaumflaggotammer,

தோற்றமும் வளர்ச்சியும் 129
அதேசமயம் கடந்த ஒரிரு தசாப்தங்களுள் பல்வேறு காரணங்களால் தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்தோருள் இலக்கிய ஆர்வம் படைத்தோரால் வெளியிடப்படும் சஞ்சிகைகள் பலவற்றிலும் மலையகப் படைப்புகள் ஓரளவு வெளிவருகின்றன மறுபிரசுரம் செய்யப்படுகின்றன. இவ்வகையில் தூண்டில் வெகுஜனம் சிந்தனை, தேனி, தேடல் அக்கினி முதலிய சஞ்சிகைகள் குறிப்பிடத்தக்கவை. கோ. நடேசய்யரின் நூற்றாண்டு விழா இலங்கையிற் கொண்டாடப்பட்டதிலும் பார்க்க மேலைநாடுகளில், குறிப்பாக ஜேர்மனியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டமை மனங்கொளத் தக்கத?
மலையகச் சஞ்சிகைகளுட் பல வெறுமனே சிறுகதைகள், கவிதைகள், புதுக்கவிதைகள் முதலியவற்றை மட்டும் பிரசுரிப்பதோடு அமையாது, மலையகத்து இளந்தலைமுறையினரிடம் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் எழுத்தார்வத்தை மேன்மேலும் தூண்டிவிடவும் மலையகத் தொழிலாளரின் வாழ்வியல் அம்சங்களையும் போராட்டங்களையும் பிரச்சினைகளையும் பற்றிய சீரிய அறிவையும் ஆழமான சமூகப் பார்வையையும் தெளிவான வர்க்கக் கண்ணோட்டத்தையும் அவர்கள் பெறவும் மலையகத்தின் விழிப்புணர்ச்சிக்காகப் பணியாற்றிய முன்னோர்களையும் அவர்களது தியாகங்களையும் அறிந்து கொள்ளவும் ஏற்றவகையில் "மலையக மாணிக்கங்களை"அறிமுகப்படுத்தியும் அவர்களது பணிகளை விபரித்தும் "மலையகத் தோட்டத் தொழிலாளரியல்" தொடர்பான பல அரிய ஆய்வுக் கட்டுரைகளையும், உரைச் சித்திரங்களையும் வெளியிட்டும் அரும்பணிகளாற்றியுள்ளன என்பது மனங்கொளத்தக்கது.இவ்வகையிலே தீர்த்தக்கரை, கொழுந்து குன்றின் குரல் முதலிய சஞ்சிகைகளின் பணிகள் விதந்து கூறத்தக்கவை
1983ம் ஆண்டு ஜூலை மாதம் நாடு முழுவதும் இடம்பெற்ற பாரிய வன்செயல்கள் மலையகத்தையும் வெகுவாகப் பாதித்தது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் வடக்கு கிழக்குப்பகுதிகளில் தொடர்ச்சியான அமைதியின்மை ஏற்படலாயிற்று:இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேச

Page 67
130 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
மட்டத்தை எட்டிற்று அதேசமயம் கொடூரமான வன்செயல்களையடுத்து ஓரிரு வருடங்கள் ஸ்தம்பித்துப் போயிருந்த மலையகத்தில் மீண்டும் புதியதொரு எழுச்சி தீவிரம் பெற்று வருவதை அவதானிக்கலாம். "வாழ்ந்தாலும் மழந்தாலும், இந்த மண்ணிலேதான்" என்ற மணவைராக்கியம் இளைய தலைமுறையினர் மத்தியில் வளர்ந்து வருகிறது. இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிற் கடந்த பல தசாப்தங்களாக இடம்பெற்று வரும் ஒடுக்குமுறைகளுக்கும் அவற்றுக்கெதிரான மக்களின் கிளர்ந்தெழுகையும் படிப்படியாக அதிகரித்துப் பலவடிவங்களில் வெளிப்பட்டு வருதல்போல, மலையகத்திலும் ஒடுக்குமுறைகளுக்கெதிரான கிளர்ந்தெழுகை அதிகரித்து வருவதை அவதானிக்கலாம்.
நீண்ட காலமர்கத் தொழிற்சங்க நடவடிக்கைகளோடு அமைதி கண்டு வந்த மலையகம் 1970 -களின் இறுதியிலிருந்து அரசியலில் நேரடியாகப் பங்கேற்கும் போக்குப் படிப்படியாக அதிகரித்து வருதலும் பாராளுமன்ற உறுப்பினர்களகவும் மத்திய மாகாண அமைச்சர்களாகவும் பதவிகளை வகிப்பதன் மூலம் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாதிருந்த அடிப்படை உரிமைப் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுதலும் கவனிக்கத்தக்கவை
இலங்கையின் óFö税片 சமூகங்களையும் சேர்ந்த இளந்தலைமுறையினர் மத்தியில் அரசியல் உணர்வு முனைப்புப்பெற்று வருதல் போலவே, மலையக இளந்தலைமுறையினர் மத்தியிலும் பல்வேறு வடிவங்களில் முனைப்புப்பெற்று வருவதையும் பிரச்சினைகள் யாவற்றையும் அரசியல் தோய்ந்த பிரச்சினைகளாகக் காணும்போக்கு வளர்ந்து வருவதையும், நீண்டகாலமாக இருட்டில் உழன்றுகொண்டிருந்த மலையகத்தின் விடிவுக்கும் எழுச்சிக்கும் தம்மாலானதைச் செய்ய வேண்டும் என்ற உணர்வும் உந்துதலும் படிப்படியாக அவர்கள் மத்தியில் அதிகரித்து வருவதையும், இத்தகைய போக்குகள் மலையக இலக்கியங்களிலும் அதிக அளவில் இடம்பெறுவதையும் அவதானிக்கலாம்

தோற்றமும் வளர்ச்சியும் 13
1970 -களின் இறுதியிலிருந்து இலங்கையின் பொருளாதாரத் துறையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் குறிப்பாக, திறந்த பொருளாதாரக் கொள்கை பொருளாதார நெருக்கடிகள், பணவீக்கம் வாழ்க்கைச் சேலவு உயர்வு, மூளை உழைப்பாளிகள் மட்டுமன்றி உடலுழைப்பாளிகளும் பல்வேறு நிர்ப்பந்தங்களால் பிறநாடுகளுக்குச் செல்லுதல் முதலியன இலங்கையின் ஏனைய சமூகங்களைப் போலவே, மலையகத்திலும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. மலையகத்து வாலிபர்கள், இளம் பெண்கள் என கணிசமான தொகையினர் வேலைவாய்ப்புப் பெற்று வெளிநாடுகளில் பணிபுரிவதால் கொடிய வறுமையிலிருந்து மீளவும் வெளியுலக அனுபவங்களைப் பெறவும் உலக நடப்புகளை அறியவும் ஏற்ற வாய்ப்பினைப் பெறுகின்றனர்?
முன்னர் என்றுமே இல்லாத அளவிற்கு, 1980 -களின் பிற்பகுதியிலிருந்து மலையகத்தில் கல்வி விளர்ச்சி ஏற்பட்டு வருவதையும் இளந்தலைமுறையினர் கல்வி கற்பதில் கூடுதலான அக்கறை செலுத்தி வருதலையும் எழுதவும் படிக்கவும் தெரிந்தோர் தொகை வேகமாக அதிகரித்து வருதலையும், இதற்கேற்ப ஜி.டி. இஸெட், நோராட், சிடா முதலிய சர்வதேச நிறுவனங்களின் உதவியும் தோட்டப் பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டமை, பாடசாலைகளில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் இலவச மதிய உணவுத் திட்டம் இலவச பாடநூல் விநியோகம் ஜனசவிய பயிலுனர் ஆசிரியநியமனம் பூரீபாத கல்வியியல் கல்லூரியின் தோற்றம் முதலியனவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது?
சர்வதேச அரங்கில் "பெண்நிலை வாதம்"நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வருவதையும் அதன் தாக்கம் மலையகப் பெண்கள், குறிப்பாகக் கற்றறிந்த பெண்கள் மத்தியிலும் அதிகரித்து வருவதையும் சிமலையகத் தமிழ் இலக்கிய உலகில் முன்னர் என்றுமே காணப்படாத அளவிற்குக் கடந்த சில ஆண்டுகளில் அதிக அளவில் அவர்கள் பங்கேற்று வருதலையும் அவதானிக்கலாம்

Page 68
132 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
இன்றைய மலையக இலக்கிய வளர்ச்சியில் இலக்கிய மன்றங்கள் சிலவும் சஞ்சிகைகள் சிலவும் தீவிர கவனம் செலுத்திவருகின்றன. அந்தணி ஜீவா, க.ப. சிவம், கவிஞர் மலைத்தம்பி ஏ.பி.வி. கோமஸ் ஆகியோரின் முயற்சிகளினால், 1980 ம் ஆண்டின் இறுதியில் உருவாகி இன்று வரை மலையக இலக்கிய வளர்ச்சிக்குச்சீரிய பணிகள் பலவற்றை உற்சாகத்துடன் ஆற்றிவரும் "மலையக கலை இலக்கியப் பேரவை" மலையக இலக்கிய உலகிலே தனக்கெனத் தனியானதோர் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது. இப்பேரவை 1981 1983 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற கொடூரமான வன்செயல்களினால் அதிகம் செயல்பட முடியாதிருந்தபோதும் 1980-களின் நடுப்பகுதியிலிருந்து முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.
தமிழக அறிஞர்கள் பலரை வருவித்துச் சொற்பொழிவுகள் நடத்தியும், அவர்களைக் கெளரவித்தும், நூலுருப்பெற்ற மலையகப் படைப்புகள் பலவற்றை இலக்கியக் கருத்தரங்குகள் பலவற்றில் விமர்சனம் செய்வித்தும் கலை-இலக்கியக் கருத்தரங்குகள் பலவற்றை நடாத்தியும் மலையக மாணிக்கங்களான நடேசய்யர், சி.வி. வேலுப்பிள்ளை முதலியோருக்கு விழா எடுத்தும் நினைவுப் பேருரைகளை நடத்துவித்தும் பாரதி நூற்றாண்டு விழாக் கொண்டாடியும் கலை-இலக்கியப் பணிகள் புரிந்த பலரைக் கெளரவித்தும் எழுத்துலகிலிருந்து ஒதுங்கியிருந்த பலரை மீண்டும் எழுதத் தூண்டியும் புதிய எழுத்தாளர் பலருக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தும் மலையகப் படைப்புகள் பலவற்றை வெளியிட்டும் ஆற்றிவரும் பணிகள் பலவாகும்.
1986 ம் ஆண்டிலிருந்து இற்றைவரை, சிவி சில சிந்தனைகள், தியாக யந்திரங்கள், குறிஞ்சித் தென்னவன் கவிதைகள், யௌவனம் கூடைக்குள் தேசம் தேசபக்தன், கோ. நடேசய்யர் இருளைத்துழாவும் மின்மினிகள், மேகமலை ராகங்கள், ஓவியம், லாவண்யம் முதலிய பலநூல்களை வெளியிட்டுள்ளது. இப்பேரவையினால் வெளியிடப்பட்ட "கொழுந்து" சஞ்சிகையின் ஏழு இதழ்களே வெளிவந்தபோதும் அவை காத்திரமான படைப்புகள் பலவற்றைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோற்றமும் artifahrth 133
நூல் வெளியீட்டுத் துறையில் நீண்டகாலமாகப் பின்தங்கியிருந்த மலையகம் 1960 -களிலிருந்து சிறிது சிறிதாக முன்னேற்றம் காணத் தொடங்கியது. 1980 -களிலிருந்து இந்நிலைமை மேலும் அதிகரித்து வருதல், மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருவதாகும். கடந்த பத்துப் பன்னிரண்டு வருடங்களுள் கண்ணிசமான அளவுநாவல்களும் சிறுகதைத் தொகுதிகளும் கவிதை-புதுக்கவிதைத் தொகுதிகளும் நூலுருப் பெற்றுள்ளன. மலையகம் தொடர்பான சில வரலாற்று நூல்களும், ஆய்வறிவு நூல்களும் வெளிவந்துள்ளன.
சமூக, அரசியற் போராட்டங்களுக்கும் கலை இலக்கியத்திற்கும் எத்தகைய நெருங்கிய தொடர்புநிலவுகின்றது என்பதனைத்துல்லியமாக எடுத்துக்காட்டும் வகையில் இலங்கையின் ஏனைய பகுதிகளில் தோன்றும் இலக்கியங்கள் விளங்குவது போலவே, மலையகத்திலும் கடந்த ஒரிரு தசாப்தங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் சிறுகதைகள் தொடக்கம் புதுக்கவிதைகள் வரை அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
மலையகத் தொழிலாளர் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு இதுவரை தமிழில் தரமான நாடகங்கள் பல வெளிவந்துள்ளன. 1 960 -களிலிருந்து இன்றுவரை தரமான நாடகங்கள் பல பேராதனைப் பல்கல்ைக் கழகத்திலும், மலையகக் கல்லூரிகளிலும் மகா வித்தியாலயங்களிலும் பிற இடங்களிலும் மேடையேற்றப்பட்டுள்ளன. வானொலி நாடகங்களாகப் பல வெளிவந்துள்ளன. மலையகத்தின் புகழ்பூத்த எழுத்தாளர்கள் பலரால் எழுதப்பட்ட நாடகங்கள் பலவாகும் துரதிஷ்டவசமாக இவை நூலுருப் பெறாமையினால், ஆய்வறிஞர்களின் கவனத்துக்குட்படவில்லை.
1960-களிலிருந்து வெளிவந்த மலையகப் படைப்புகள் பலவற்றில் "போர்ப்பறை கொட்டும் பிரச்சாரத்தொணிமிகுந்து காணப்படுகிறது" என சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.? நீண்ட காலமாக அமுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தின் உளக் குமுறல் வெடித்துக் கிளம்பும் போது காலத்தின் நிர்ப்பந்தத்தினாலும் தீவிரப் போக்கினாலும் தவிர்க்க

Page 69
134 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
முடியாதவாறு போர்ப்பறையாகவும் கருத்து வீச்சாகவும் ஆவேசக் குமுறல்களாகவும் முழுவீரியத்துடன் வெளிப்படுவதையும் ஒரோவிடத்துக் கலைத்துவம் புறக்கணிக்கப்படுவதையும் மலையகப் படைப்புகள் பலவற்றில் அவதானிக்க முடிகின்றது.
தமிழகத்திலும் ஈழத்திலும் நீண்ட காலமாகச் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தள்ளப்பட்டிருந்த சமூகப்பிரிவுகளிலிருந்து தோன்றிய எழுத்தாளர்கள் பலர் பொதுவுடைமைக் கருத்துகளினாலும் முற்போக்குச் சிந்தனைகளினாலும் மிகுதியாக ஈர்க்கப்பட்ட நிலையில், 1950 -களிலிருந்து எழுத ஆரம்பித்தனர். அவர்களது படைப்புகளிலும் மேற்கண்ட குறைபாடு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. எனினும் காலப்போக்கில் அவர்களது படைப்புகள் பலவற்றில் பிரச்சாரவேகம் தணிந்து, கருத்துகள் கலைத்துவத்துடன் வெளிப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. மலையகப் படைப்புகள் பலவற்றிலும் இதே வளர்ச்சிநிலையை நாம் காணமுடிகின்றது.
மலையகத்தின் சிறுகதைச் சிற்பி எனப் புகழப்படும் என்.எஸ்.எம். இராமையாவின் கதைகளில் கலைத்துவம் மேலோங்கியுள்ள அதேசமயம் ஆழமான சமூகப் பார்வையோ கருத்துவீச்சோ வீறுடன் வெளிப் படவில்லை எனக் கூறப்படுவதும் இக்குறைபாடு ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளான இலங்கையர்கோன், சி வைத்தியலிங்கம் சம்பந்தன் ஆகியோரது கதைகளிலும் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுவதும் மனங்கொளத்தக்கவை கலைத்துவமற்ற சமூகப் பார்வையோ, சமூகப்பார்வையற்ற கலைத்துவமோ கொண்ட படைப்புச் சிறந்து விளங்க முடியாது சமூகப் பார்வையும் கலைத்துவமும் இரண்டறக் கலந்துநிற்கும் போதே சிறந்த படைப்பாக விளங்கமுடியும்
மலையக இலக்கியகர்த்தாக்கள் பலர் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் அவலங்களையும் அவற்றுக்கான அரசியல் சமூக பொருளாதாரப் பின்னணியில் வைத்து நோக்குவதையும் அலசுவதையும் அவற்றுக்கான தீர்வு மார்க்கங்களை விண்டுகாட்ட முயல்வதையும் அவதானிக்கலாம்

தோற்றமும் வளர்ச்சியும் 135
மலையக இலக்கிய உலகம்இன்று புதியதொரு கட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறது. மலையத்தில் இன்று ஏற்பட்டுக்கொண்டிருக்கும் புத்தெழுச்சி பலதுறை முன்னேற்றங்கள் முதலியன ஒருபுறம் அரசியல், பொருளாதார நெருக்கழகள், ஒடுக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், சவால்கள், சமகால எதிர்பார்ப்புகள் முதலியன மறுபுறம் இவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் மலையகத்தின் இன்றைய இலக்கியகர்த்தாக்கள் உள்ளனர்.
இன்றைய மலையகத்தின் இலக்கிய கர்த்தாக்களுட் பெரும்பாலோர் மிக்க இளமையிலேயே வாழ்க்கையின் கொடுமைகளையும் அவலங்களையும் வக்கிரங்களையும் சவால்களையும் எதிர் கொண்டவர்கள். அதனாலேயே தொழிலாளர்களின் அவலங்களையும் பிரச்சினைகளையும் தீர்க்கமாகவும்.தீட்சண்யத்துடனும் நோக்கி அவற்றைப் பல்வேறு படைப்புக்களாக்க அவர்களால் முடிகின்றது.
பொதுவாக நோக்குமிடத்து, இன்றைய இளந்தலைமுறையினர் உட்பட மலையகத்து இலக்கிய கர்த்தாக்களுள் அதிகமானோர், தொழிலாளர் பற்றிய தமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்த வேண்டும் தொழிலாளரின் விமோசனப் போராட்டத்திற்கான காத்திரம்மிக்க கருவிகளுள் ஒன்றாகக் கலை-இலக்கியத்தையும் பயன்படுத்த வேண்டும் என்ற புனித நோக்குடனேயே செயற்படுவதை அவதானிக்கலாம்
அடிக்கடி இடம்பெற்றுவரும் கொடூரமான வன்செயல்களையும் ஒடுக்கு முறைகளையும் ஊடறுத்துக்கொண்டு, 1960 -களிலிருந்து முன்னர் என்றும் இல்லாத அளவிற்குக் கூர்மையடைந்துவரும் தொழிலாளர்களின் கிளர்ச்சிகள், வேலை நிறுத்தப் போராட்டங்கள், மலையக மாணவர்களது கிளர்ச்சிகள், போராட்டங்கள், அவர்களது எழுச்சி அவற்றுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகள்,

Page 70
136 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
நம்பிக்கைத் துரோகங்கள் முதலியன மலையக இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கினைப் புதிய தடத்திற்கொண்டு செல்கின்றன. மலையகத்தின் துடிப்புமிக்க இன்றைய இலக்கிய கர்த்தாக்கள் பலர் சகல ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் புறங்கான முயல்வதோடு மானுடத்தின் மகோன்னதத்தை நிலைநிறுத்தவும் தாம் காண விழையும் புதிய வாழ்வை விண்டு காட்டவும் முயற்சிப்பதை அவதானிக்கலாம்.
சான்றாதாரம்
Z இதுவரை நடைபெற்ற அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள், மாநாட்டு மலர்களில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் முதலியன பொதுவாகவும், இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது அனைத்துலகத்தமிழாராய்ச்சி மாநாடு, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மட்டக்களப்பு வன்னிப் பிரதேசங்களுக்கான பிரதேச மாநாடுகள், கடந்த மூன்று வருடங்களாக இடம்பெற்று வரும் சாகித்திய விழாக்கள், இவ் வருடம் (1993ல்) இடம்பெற்ற பிரதேச சாகித்திய விழாக்கள்முதலியவற்றில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், மலர்களில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் முதலியன சிறப்பாகவும் இவ்வகையில் நோக்கத்தக்கவை
2 கொழுந்து குன்றின் குரல் மல்லிகை முதலிய சஞ்சிகைகளில் மலையக இலக்கியம் தொடர்பாக வெளிவந்துள்ள கட்டுரைகள் சிலவற்றில் இத்தகைய அம்சங்களைக் கவனிக்கலாம்

தோற்றமும் வளர்ச்சியும் 37
2A லலிதா இலங்கையின் சமூகவர்க்கங்கள்.
3 தீர்த்தக்கரைஜனவரி-மார்க் 1984 பக்27
4. தீர்த்தக்கரை ஜூன்-ஆகஸ்ட், 1980 பக் 36
44. குன்றின்குரல் மலர்-7 இதழ்-8 ஆகஸ்ட், 1987, பக்1
5. இலங்கையின் வடபகுதியில் உதிரிகளாக வாழும் தென் இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் பற்றி 'இலங்கையின் வடபகுதியில் வாழும் தென் இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள்" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை இவ்வகையிற் குறிப்பிடத்தக்கது
பொதிகை அக்டோபர் 1980 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பக் 78-33.
54. தீர்த்தக்கரை, அலை 3 பெப்ரவரி-மே 1984 பக் 27-33
6 மல்லிகை மே-ஜூன்,மலையகச் சிறப்பு இதழ் 1984 பக்31 7 மல்லிகை, மே-ஜூன் மலையகச் சிறப்பு இதழ் 1984 பக்32
8 தீர்த்தக்கரை, ஜனவரி-மார்ச் 1982 பக்33
9. பேராசிரியர்கள் வண.பிதா, தனிநாயக அடிகள், வித்தியானந்தன், கைலாசபதி முதலியோர் தெரிவித்துள்ள கருத்துகள் இவ்வகையில் நோக்கத்தக்கவை
வித்தியானந்தன், சு (பதிப்பாசிரியர்) நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டு நிகழ்ச்சிகள், யாழ்ப்பாணம் 1974

Page 71
138 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
பேராசிரியர் கைலாசபதி தமது இலக்கியச் சிந்தனைகள், பாரதி ஆய்வுகள் முதலிய நூல்களில் இதுபற்றி விரிவாக நோக்கியுள்ளார்.
10. எடுத்துக்காட்டாக அநகாரிக தர்மபால தேரர், சேர் பொன்னம்பலம் இராமநாதன் முதலியோர் தெரிவித்துள்ள கருத்துகள் இவ்வகையில் நோக்கத்தக்கவை
力 இவை பற்றிய விரிவான விளக்கத்திற்குப் பின்வரும் நூலைப் பார்க்கவும், வேலுப்பிள்ளை, ஆ, தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும். (தொடக்கப்
பேருரை-யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்) - 1986
2 மகாகவிபாரதியார்கவிதைகள், தேசீய கீதங்கள், தமிழ்ச்சாதி
13 மகாகவிபாரதியார்கவிதைகள், தேசிய கிதங்கள்; பிறநாடுகள்
14. இச்சிறுகதை பற்றிஇந்நூலசிரியர் பிறிதோரிடத்தில் விரிவாக நோக்கியுள்ளார்.இளங்கதிர், பேராதனைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கம்
98.
15. இவையற்றி சிவி வேலுப்பிள்ளைதமது நாடாற்றவர்கதை" என்னும் நூலில் விரிவாக நோக்கியுள்ளார்.
16 வேலுப்பிள்ளை, சிவி, நாடற்றவர்கதை 1987, பக்47
17 வேலுப்பிள்ளை, சிவி, நாடற்றவர்கதை 1987 பக். 46-51
18. வேலுப்பிள்ளை, சிவி, நாடற்றவர்கதை 1987, பக்49

தோற்றமும் வளர்ச்சியும் 139
19. இவ்வகையிலே பின்வரும் நூல்கள் அவதானிக்கத்தக்கவை
கா. பெரியசாமிப்பிள்ளை, கதிரமலை பூரீ முருகன் அருள்கீதம் முன்னேஸ்வரம்பூரீவடிவாம்பாள் கும்மி
விஎஸ் கோவிந்தசாமி தேவர் பூரீ கதிர்காமப்பாமாலை
எஸ்.எம். ராஜப்பா, சோதிவேல் விருத்தம்
எஸ்.ஆர். பெரியாம்பிள்ளை, பாட்டாளியின் பயணம் 1968
இந்நூல் பார்வைக்குக் கிடைக்கவில்லை. 20 மல்லிகை மே-ஜுன், மலையகச் சிறப்பு இதழ் 1997, Luci. 20
தமிழமுது, அமுது 7 1972 பக் 33.
21 திருவாளர்கள்சாரல்நாடன், அன்ரனிஜிவா, நித்தியானந்தன் ஆகியோர் எழுதியுள்ள சில கட்டுரைகள் இவ்வகையில் நோக்கத்தக்கவை
22 மேற்கண்டோரது கட்டுரைகளும் சிவி வேலுப்பிள்ளையின் நாடற்றவர் கதை சாரல்நாடனரின் தேசபக்தன் கோ. நடேசய்யர் ஆகிய நூல்களும் அவதானிக்கத்தக்கவை
23 சிவி வேலுப்பிள்ளை, நாடற்றவர்கதை 1987, பக். 46-47
24. இக் கதைகள் முதலில் கலைமகள் முதலிய தமிழகச் சஞ்சிகைகளில் வெளிவந்தன. பின்னர் வெளிவந்த அவரது "கங்கா கீதம்" என்னும் சிறுகதைத் தொகுதியிலும் இடம்பெற்றுள்ளன.

Page 72
140 இலங்கையின் த் தமிழ் இலக்கியம்
25. இக்கதைகள் ஈழகேசரி வீரகேசரி மறுமலர்ச்சி தாமரை, தேசாபிமானி முதலிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளி வந்துள்ளன.
26 அகஸ்தியரின் இக்கதைகள் பற்றி இந்நூலாசிரியர் விரிவாக நோக்கியுள்ளார். தினகரன்; வாரமஞ்சரி 11.08.1997 இங்குமா ஒளி இல்லை"என்னும் சிறுகதை, அக்கினிக் குஞ்சு (ஆவணிபுரட்டாதிஐப்பசி - 1980) சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.
27. இளங்கதிர் பதின்மூன்றாவது இதழ் - 1960 - 1961 இளங்கதிர், பதினான்காவது இதழ் 1961-1962 தமிழ்ச் சங்கம், பேராதனைப்பல்கலைக்கழகம்
28. இவை பின்வரும் சஞ்சிகைகளில் இடம்பெற்றுள்ளன.
மல்லிகை, ஏப்பிரல் 1986 பெப்ரவரி 1976 குன்றின் குரல் 1986 LaTafé, 1992
29 மல்லிகை, பெப்ரவரி 1985இவ்விதழில் "மலையக முன்னோடி எழுத்தாளருள் ஒருவர் மெளனம் சாதிப்பவர்"என்ற தலைப்பில் மெளனி" யான இவரது பணிகளைப் பற்றி மாத்தளை கார்த்திகேசு எழுதியுள்ள காத்திரமான கட்டுரை பலருக்கும் பயன்தரத்தக்கதொன்றாகும்
30 தலைசிறந்த மொழிபெயர்ப்பாளரான திரு. கணேஷ், மொழி பெயர்ப்புக் கலை பற்றிக் காத்திரமான கட்டுரைகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது எடுத்துக்காட்டாக, தேசியதமிழ் சாகித்திய விழா 1994 சிறப்புமலரில் வெளிவந்துள்ள "மொழிபெயர்ப்புக் கலை - சில அனுபவங்கள்"என்னும் கட்டுரை விதந்து கூறத்தக்கது
31 மல்லிகை, ஏப்பிரல் - 1971 பக். 8

தோற்றமும் வளர்ச்சியும் 141
32.
சாரல்நாடன், தேசபக்தன் கோ. நடேசய்யர் என்னும் தமது நூலில் இதுபற்றி விரிவாக நோக்கியுள்ளார்.
33. சாரல்நாடன், தேசபக்தன் கோ. நடே சய்யர் 1988, Luci. 178.
34.
அடிக்குறிப்பு 32ஐப் பார்க்கவும்
35. சாரல்நாடன், தேசபக்தன், கோ, நடேசய்யர், 1988 பக். 16
36.
37.
38.
3.
40
4.
42.
4,
4.
46
f
". Luai. 1292
լյն 117-118
t Llei, 135.
t uá,15.
Lä.178.
விவி வேலுப்பிள்ளை, நாடற்றவர்கதை 1987, பக் 51
சாரல்நாடன், சிவி சிலசிந்தனைகள், 1986 பக்.19-29
fy
f ", suai. 10.
ஸி.வி வேலுப்பிள்ளை, நாடற்றவர்கதை 1987, பக்க
சாரல்நாடன், சிவி சில சிந்தனைகள், 1986 பக்10
மலையக நாட்டார் வழக்கியல் தொடர்பான ஆய்வுமுயற்சிகள் தீவிரம் பெற்றுவரும் இன்றுகூட, சிவி வேலுப்பிள்ளையின் நூல் ஒன்றே தொகுதியாக வெளிவந்துள்ளது. உண்மையில் மலையக நாட்டுப் பாடல்களில் ஒருசிறு பகுதியே இது எனலாம். இதுவரை

Page 73
42 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
தொகுக்கப்படாதிருக்கும் நாட்டுப் பாடல்களே அதிகமாகும். சிவி வேலுப்பிள்ளையின் தொகுதியில் அடங்காத நாட்டுப் பாடல்கள் பல சாரல்நாடனின் வாய்மொழி இலக்கியம், ஏ.பி.வி. கோமலின் அங்கமெல்லாம் நெறஞ்ச மச்சான் முதலிய நூல்களிலும் தீர்த்தக்கரை, குன்றின் குரல் முதலிய சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
47 சாரல்நாடன் மட்டுமன்றி இர. சிவலிங்கமும் நாடற்றவர் கதை"என்னும் நூலிற்கான நீண்ட முன்னுரையில் இதுபற்றிவிபரமாகச் சுட்டிக்காட்டியுள்ளமை நோக்கத்தக்கது
48. வேலுப்பிள்ளை, சிவி நாடற்றவர் கதை 1987 முன்னுரை, பக்.10
49. t . n முன்னுரை Luai. 13
50 இந்நிலைமையை மிகச் சிறந்த முறையிற் சித்திரிப்பதாக நூரளை சண்முகநாதனின் "பெரியசாமி பிர, ஆகிவிட்டான்" என்னும் சிறுகதை அமைந்துள்ளது குன்றின் குரல் செப்டம்பர் 1992 பக்.23-24
54 விந்தன், முல்லைக்கொடியாள், 1960 முன்னுரை.
52 萨
53. சாரல்நாடன், சிவி சிந்தனைகள், 1986 பக்70
54. வேலுப்பிள்ளை, சிவி நாடற்றவர் கதை 1987 முன்னுரை, uš,13.

தோற்றமும் வளர்ச்சியும் 443
56. எடுத்துக்காட்டாக விறார்ந்த கவிஞனும் எனது அன்புக்குரிய மாணவனுமான வீரா. பலச்சந்திரன் 1983 ம் ஆண்டு ஜுலை மாதக் கலவரத்தையடுத்து மலையகத்தை விடுத்து இந்தியா செல்லுமுன் இது பற்றி என்னிடம் நேரிற் கூறியதுடனமையாது, கையெழுத்துப் பிரதியாகவிருந்த கவிதைப் பகுதிகள் சிலவற்றை என்னிடம் தந்தமையும் குறிப்பிடத்தக்கது.
57 கொழுந்து குன்றின் குரல் மல்லிகை ஆகியவற்றில் அழக்கழ வெளிவந்துகொண்டிருக்கும் அவரது கட்டுரைகளுள் அதிகமானவை மலையகம் பற்றிய மறைந்திருக்கும் தகவல்களை வெளிகொணருவதாக அமைந்துள்ளன.
58 குன்றின்குரல் மார்ச் 1992 பக்.10
59. இது தொடர்பாக புசல்லாவ இஸ்மாலிகா இயற்றியுள்ள 'அஞ்சலை செல்கிறாள்" (குன்றின்குரல் மார்ச் 1992 பக்.2) என்னும் கவிதைப் பகுதி குறிப்பிடத்தக்கது.
60. இக்கல்லூரி கூட, வெளிநாட்டு உதவியுடன் நிர்மாணிக்கப் பட்டது. அங்கும்கூட, பேரினவாத சக்திகள் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதும் கவனித்தற்குரியது.
-64 குன்றின்குரல் மார்ச் 1992 இதழ் மாதர் சிறப்பிதழ் எனக் கூறக்கூடிய அளவிற்கு மலர்ந்துள்ளதும் மலையகப் பெண்கள் பற்றிய தரமான கட்டுரைகள் பல வெளிவந்துள்ளதும் தீர்த்தக்கரை சஞ்சிகையில் "மாதர் பகுதி" எனத் தனிப்பகுதி ஒதுக்கப்பட்டமையும் அப்பகுதியில் இடம்பெற்றுள்ள பலவகைப் படைப்புகள், கட்டுரைகள் ஆகியனவும் நோக்கத்தக்கவை
62 தமிழமுது அமுது - 7 1972 பக் 34
மல்லிகை மே-ஜூன் 1984 மலையகச் சிறப்பு இதழ் பக்19

Page 74
3. நாட்
நவீன தமிழ் இலக்கிய உலகி நாட்டாரியல் பற்றிய ஆய்வுயுகம்" கூறும் நல்லுலகெங்கும் நாட்டாரிய6 முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலு அவதானிக்கலாம். தமிழகத்தி கவனிப்பாரற்றுக் கிடந்த நாட்டாரிய கதைப்பாடல்கள், பழமொழிகள், கூ புராணக் கதைகள், வழிபடு ( 62flbm5musstL 65éü, B/TL 6) u5ög/62, தேடித் தொகுக்கும் முயற்சிகள் கட வரினும் அறிவியல் பூர்வமான தசாப்தங்களிலேயே தீவிரம் பெற் நிகழ்வன்று காரணகாரியத் தொட
பொதுவாகத் தமிழ் கூறும் : சொற் பிரயோகம் மிகப் பரந்த பொரு சமூகத்தில் மேலாண்மை செலுத்து படித்தரங்களைக் கொண்ட மத்தி அடித்தளத்தில் உள்ளோர் எனச் வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் குறிப்பிடுவது பொருத்தமுடையத சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் க இங்கு சிந்திக்கத்தக்கது.
இருபதாம் நூற்றாண்டின் காரணங்களால் முன்னர் என்றும் அழத்தளத்தில் வாழ்ந்து கொண்டி ஏற்பட்ட விழிப்புணர்வும் எழுச்சி கொண்டுவரலாயின. சமூகத்தி

Lntrfluoi
ல் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக் கூறத்தக்க அளவிற்குத் தமிழ் பற்றிய அறிவியல்பூர்வமான ஆய்வு ம் தீவிரமடையத் தொடங்கியுள்ளதை லும், ஈழத்திலும் நீண்டகாலம் ல் தொடர்பான பாடல்கள், கதைகள், த்துமுதலிய கலைகள், விடுகதைகள், தெய்வங்கள் பற்றிய விபரங்கள், ர் பற்றிய விபரங்கள் முதலியவற்றைத் ந்த பலதசாப்தங்களாக இடம் பெற்று ஆய்வு முயற்சிகள் கடந்த ஓரிரு று வருதல் வெறுமனே தற்செயல் ர்பானவையே.
உலகிற் "பொது மக்கள்" என்னும் நளிலேயே வழங்கப்பட்டு வருகின்றது. ம் மேல் மட்டத்திலுள்ளேர் பல்வேறு தியதர வர்க்கத்தினர், சமூகத்தின் சமூகத்தின் பல்வேறு தளங்களில் "பொது மக்கள்"என்னும் சொல்லாற் ா? சில தசாப்தங்களுக்கு முன்பு, ாப்பியம் எனச் சிலர் வாதிட்டமையும்
நடுப்பகுதியிலிருந்து, பல்வேறு இல்லாத அளவிற்குச் சமூகத்தின் ருப்பவர்கள் மத்தியில் படிப்படியாக யும் அவர்களை முன்னணிக்குக் ல் மேலாதிக்கம் செலுத்துவோர்,

Page 75
146 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
சமூகத்தில் அடித்தளத்தில் உழன்று கொண்டிருப்போர் ஆகியோருக்கிடையிலான உறவுகள் என்றுமில்லாதவாறு முட்டிமோதி விரிசல் பெறலாயின. இவற்றின் விளைவாகத்துறைபோகக் கற்றவர்களும் கருவிலே திருவுடையவர்களும்தான் இலக்கியம் படைக்க முடியும் என நிலவிவந்த மரபு உடைத்தெறியப்பட்டு ஏட்டுக்கல்வியை அதிகம் பெறாது அதேசமயம் "வாழ்க்கை அனுபவம்" என்னும் கல்வியை நிறையப் பெற்ற சமூகத்தின் அடித்தளத்தைச் சேர்ந்த பலர் ஆக்க இலக்கிய கர்த்தாக்களாகப் பரிணமிக்கலாயினர். அதன் உடனடி விளைவாக அதுகால வரையில் இல்லாத அளவிற்குச் சமூகத்தின் அடித்தளத்தில் வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகளும் அவலங்களும் சுரண்டற் கொடுமைகளும் துயரங்களும் அவற்றின் தீர்வுக்கான மார்க்கங்களும் இலக்கியங்களாக உருவெடுத்தன.
சமூகத்தின் அடித்தள மக்கள் முன்னணிக்கு வரத் தொடங்கவுே
அவர்களது வாழ்க்கைப் போராட்டங்கள் வாழ்வியலம்சங்கள் முதலியன பற்றி அறியும் ஆவல் தீவிரமடையத் தொடங்கிற்று. கலையியல், சமூகவியல், கல்வியியல், மானிடவியல், இலக்கிய வரலாற்றியல், மொழியியல் முதலிய பல்வேறு துறைகளின் வளர்ச்சியும் இவற்றுக்கு உதவியாக அமையலாயின.இந்நிலையிலேயே நீண்டகாலமாக "மேலோர் இலக்கியத்தை" மட்டுமே கற்றும் சுவைத்தும் ஆய்வுகள் செய்தும் வந்த இலக்கிய உலகம் தவிர்க்க முடியாதவாறு நாட்டாரியலின்பாற் கவனம் செலுத்தத் தொடங்கியது சமூகத்தின் அடித்தள மக்களது வாழ்வியலையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பிரதிபலித்து நிற்கும் நாட்டாரியல் தொடர்பான பாடல்களையும் கதைகளையும் கதைப்பாடல்களையும் பிற கூறுகளையும் தேடித் தொகுக்கும் முயற்சியும் ஆய்வுப் பணிகளும் ğó2flyuo60DLu/6v)17uflóor.
சமூகத்தின் அடித்தள மக்களது வரலாற்றை உள்ளபடி அறிய விரும்புவோர். தவிர்க்கவியலாதவாறு நாட்டாரியலையும் கவனத்திற் கொள்ள வேண்டியநிர்ப்பந்தம் அதிகரிக்கலாயிற்று சமூக வரலாறுபற்றிய

நாட்டாரியல் 147
ஆய்வில் நாட்டாரியல் கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்ற நிலை மாறி நாட்டாரியலைக் கவனத்திற்கொள்ளாத எந்த ஒரு சமூக வரலாற்று ஆய்வும் முழுமை பெறமுடியாது என்ற கருத்து இன்று முனைப்புப் பெற்று வருவதை அவதானிக்கலாம் நாட்டாளியல் உண்மையிற் சமூகத்தின் அடித்தள மக்கள் பற்றிய இயலேயாகும்.
நாட்டாரியல் என்பது சிறுகதை,நாவல், கவிதை முதலியன போன்று இலக்கியத்தின் ஒரு கூறல்ல. அது ஒரு தனித் துறையாகும் அதன் சில கூறுகளான நாட்டார் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள் முதலியன இலக்கியத்தின் பாற்படும். தமிழகத்தின் கல்லூரிகள் சிலவற்றிலும், பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் நாட்டாரியல் இன்று தனித்துறையாக விளங்குவதை அவதானிக்கலாம் ஆரம்பத்தில் நாட்டாரியல் பற்றிய ஆய்வு முயற்சிகளுக்குத் தீவிர எதிர்ப்பினைக் காட்டிய பல்கலைக்கழகங்களே, இன்று அவைபற்றித் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. தமிழகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில், பட்டப்பின்படிப்பை மேற்கொள்ளும் பலர் தமது ஆய்வுப் பொருளாக நாட்டாரியலின் பல்வேறு கூறுகளைத் தேர்ந்தெடுப்பதும் ஈழத்துப் பல்கலைக்கழகங்களிலும் இந்நிலை வேகமாக வளர்ந்து வருவதும் மனங்கொளத்தக்கவை.
முன்னர் சுட்டிக்காட்டியது போல மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகமானது இலங்கையின் ஏனைய சமூகங்களிலிருந்து வேறுபட்ட தனித்துவமான பிரச்சினைகள் பலவற்றையும் பண்புகளையும் கொண்டு விளங்குவது போலவே அச்சமூகத்தைச் சீரிய முறையிற் பிரதிபலித்து நிற்கும் நாட்டாரியற் கூறுகளும் பெருமளவு தனித்துவமானவை; அவர்களது பண்பாட்டுக் கருவூலமாகவும் அபிலாஷைகளை வெளிப்படுத்துவனவாகவும் தொழிலாளர்களது அறுபதி வெளிப்பாடுகளாகவும் அவர்களைப் பற்றிய சிறந்த வரலாற்று ஆவணங்களாகவும் விளங்குபவை மலையக நாட்டாரியல், ஒரு தனித் துறையாகும் அதுபற்றி விரிவாகவும் ஆழமாகவும் ஆராயப்படவேண்டும் இச்சிறு நூலில் அவ்வாறு விரிவாகவோ ஆழமாகவோ ஆராயமுடியாது. எனவுே மலையக நாட்டாரியலின் முக்கிய கூறுகள் தொடர்பான சில அம்சங்கள் மட்டுமே இங்கு நோக்கப்படும்

Page 76
148 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
வாய்மொழி இலக்கியம் நாட்டுப்பாடல்கள், நாட்டடர் பாடல்கள், கிராமிய இலக்கியம், நாடோடிப் பாடல்கள், எழுதாக்கவிதைகள், கட்டில்லாக் கவிதைகள், பாமரர் பாடல்கள் எனப் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டுவரும் நாட்டார் பாடல்கள் பொதுவாக ஏட்டுக்கல்விஅறிவு குறைந்த பாமர மக்களால் இயற்றப்பட்டவை இயற்றப்படுபவை அவர்கள் மத்தியிலேயே செல்வாக்குடன் திகழ்பவை அவர்களின் பண்பாட்டுக் கருவூலங்களாக விளங்குபவை நாகரிகத்தின் பாதிப்புக்குட்படாத ஆதிக் குடிமக்கள் மத்தியில் வழங்கிவரும் நாட்டார் பாடல்கள், பெரும்பாலும் அதிக மாற்றங்களுக்குட்படாமல் விளங்கி வருகின்றன. நாகரிகத்தின் பாதிப்புக்குட்பட்ட பாமர மக்களிடையே வழங்கிவரும் நாட்டுப்பாடல்கள், காலத்துக்குக் காலம் மாற்றங்களுக்குள்ளாகின்றன.
உலகின் எந்த ஒரு மொழியினதும் காலத்தால் முற்பட்ட இலக்கியம் நாட்டார் பாடல்களே என்பதையும் அவற்றிலிருந்தே ஏட்டிலக்கியம் எனக் கொள்ளப்படும் ஏனைய வகை இலக்கியங்கள் தோன்றின என்பதையும் அறிஞருலகம் இன்று ஏற்றுக் கொண்டுள்ளது. மலையகத்தோட்டத் தொழிலாளர் பற்றிய இலக்கியங்களுள்ளும் காலத்தால் முற்பட்டது, நாட்டார் பாடல்களே என்பதில் ஐயமில்லை. "உலக வரலாற்றிலே மனுக்குலத்தின் பெரும்பகுதி அறிந்த இலக்கிய வகையும் இதுவேயாகும் இவ்விலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டே ஏனைய இலக்கியங்கள் எழுந்தன" என்பர்
மலையகச் சிறுகதை, நாவல், கவிதை, புதுக்கவிதை முதலியவற்றிலும் பார்க்க, மலையக நாட்டாரியல் தொடர்பாகக் குறிப்பிடத்தக்க அளவு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. சி.வி வேலுப்பிள்ளை, சாரல்நாடன், சிவே. ராமையா, ஏ.பி.வி கோமஸ் அன்ரனி ஜீவா, மு.க. நல்லையா, டி.எஸ். ராஜு மாத்தளை வடிவேலன், பேராசிரியர் சிதில்லைநாதன், கலாநிதி ந. வேல்முருகு முரளிதரன், சி அழகுப்பிள்ளை, க. சுப்பிரமணியம் முதலியோரின் நூல்களும் கட்டுரைகளும் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவை. இதே போன்று இவ்வருடம் இடம் பெற்ற சாகித்திய விழா, பிரதேச சாகித்திய விழாக்கள்

நாட்டாரியல் 149
முதலியவற்றில் மலையக நாட்டாரியல் தொடர்பாகப் பயன்மிக்க ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகின. அண்மையிற் கண்டி - சத்தியோதய மண்டபத்தில் இடம் பெற்ற மலையக நாட்டாரியல் கருத்தரங்கும் பயன்மிக்க ஒன்றாக அமைந்தது. எனினும், இவையாவும் மலையக நாட்டாரியல் தொடர்பான . முன்னோடி முயற்சிகளே தவிர, முழுமையானவையல்ல.
மலையக நாட்டாரியற் கூறுகளின் அடிப்படைப்பண்புகள் நுட்பமான முறையிலும் அறிவியல் பூர்வமாகவும் பகுத்தாராயப்பட வேண்டும்; நாட்டாரியலுக்கேயுரிய முறையியல் அடிப்படையில் முழுமையாக நோக்கப்படல் வேண்டும் நாட்டார்பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், சடங்குகள், மொழிவழக்குகள் முதலியவை நுண்ணாய்வு செய்யப்பட வேண்டும்
நாட்டாரியலானது வரலாறு, சமூகவியல், மானிடவியல் உளவியல், தத்துவவியல் மொழியியல் முதலிய பல்வேறு துறைகளோடும்இணைந்தும் பிணைந்தும் காணப்படுவதால், தவிர்க்கவியலாதவாறு வெவ்வேறு ஆய்வு முடிகளின் (அமைப்பியல் முறை, சமூகவியல் முறை மொழியியல்முறை குறிப்பிட்ட காலமுறை, கருத்துப் பரிமாற்றமுறை, உளவியல்முறை, பலவகைக் கோட்பாடுகளின் அடிப்படையிலான ஆய்வுமுறை முதலியன) அடிப்படையில் இன்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்கலாம் மலையக நாட்டாரியல் தொடர்பாகவும் இத்தகைய ஆய்வுமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
இவை யாவற்றுக்கும் முன்னோடியாக, மலையக நாட்டாரியற் கூறுகளை இயன்றவரை முழுமையாகத் தேடித் தொகுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது சேகரிப்பிற்கான நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படல் வேண்டும் சமூக சந்தர்ப்பங்கள், தொழில் முறைகள், பாடலின் வகைகள், மாவட்ட அல்லது வட்டார ரீதியான வேறுபாடுகள், மொழிவழக்குகள் முதலியவை

Page 77
150 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
நுட்பமாகக் கவனிக்கப்பட வேண்டும் கள ஆய்வு முறைகளின்படி கள ஆய்வுகள் செய்யப்பட்டுத் தரவுகள் சேகரிக்கப்பட வேண்டும்; நெறிமுறைப்படி வகைப்படுத்தப்படல் வேண்டும் பாடல்களைப் பதிப்பிக்கும் போது பேச்சு மொழிப் பிரயோகம் தொனி விஷேசங்கள் முதலியன நுட்பமாகக் கவனிக்கப்படல் வேண்டும் பாடல்களுக்கு ஏற்ற இடங்களில் விளக்கங்கள் கொடுக்கப்படுதல் அவசியமானதே.
மலையக நாட்டாரியற் கூறுகளை முழுமையாக ஆய்வு செய்யப் புகுவோர், மலையகத் தொழிலாளர்களின் பேச்சு வழக்குப்பிரயோகங்கள், தொனி விசேஷங்கள், பழமொழிகள், குழுஉக்குறிச் சொற்கள், அருஞ்சொற்கள், சொற்றொடர்கள், வாழ்வியல் அம்சங்கள், ஆசார அனுட்டானங்கள், சடங்கு முறைகள், தொழில் முறைகள் முதலியவற்றிற் போதிய பரிச்சயமுள்ளவர்களாக இருத்தல் அவசியம் இல்லையாயின், தவறான விளக்கம் கொள்ள நேரிடும் சாரல் நாடன் தமது வாய்மொழி இலக்கியம் என்னும் நூலில், ஆங்காங்கே மலையக நாட்டார் பாடல்கள் தொடர்பாகச் சில அருஞ்சொற் பிரயோகங்களுக்கும், தொனி விசேடங்களுக்கம் குழுஉக்குறிச் சொற்களுக்கும் கொடுத்துள்ள விளக்கம் இவ்வகையிலே சுட்டிக் காட்டத்தக்கது. சிவி வேலுப்பிள்ளை அவர்களும் மலைநாட்டு மக்கள் பாடல்கள் எனும் நூலின் இறுதியில் இத்தகைய விளக்கங்கள் கொடுத்துள்ளமை கவனிக்கத்தக்கது. மலையக நாட்டுப் பாடல்களுள் ஒரு பகுதியே சிவி வேலுப்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு "மலைநாட்டு மக்கள் பாடல்கள்" என நூலுருப் பெற்றுள்ளது. அவரது முன்முயற்சிபாராட்டப்பட வேண்டியதே. இதுதவிர, வேறுசில தொகுதிகளும் வெளிவந்துள்ளன என அறிய முடிகின்றது. எனினும் பார்வைக்குக் கிடைக்கவில்லை. ஏ.பி.வி கோமஸ் அவர்களின் "அங்கமெல்லாம் நெறஞ்ச மச்சான்" என்னும் குறுநாவலில், கதைப் போக்கினூடே கணிசமான அளவு நாட்டார் பாடல்கள் கையாளப்பட்டுள்ளன. ஆயின், அது நாட்டார் பாடல்களின் தொகுதி
அன்று அதிற் சமூக சந்தர்ப்பங்களும் கவனிக்கப்படவில்லை.

நாட்டாரியல் 151
சி.வி. வேலுப்பிள்ளை தமது தொகுப்பின் இறுதியிற் பின்னுரைக்கான சில குறிப்புகள் என்ற தலைப்பின் கீழ்க் குறிப்பிட்டுள்ள விடயங்கள் சில மனங்கொளத்தக்கவை ". மலைநாட்டு மக்கள் பாடிய அனைத்துப் பாடல்களையுமே எம்மால் தேடித் திரட்டித் தரமுடியவில்லை. இக்கருமத்தை ஆற்ற முன்வரும் நண்பர்களுக்கு மலைநாட்டு மக்கள் வாழ்த்துக் கூறுவார்கள்.
இத்தொகுதியிலுள்ள எல்லாப்பாடல்களும் முற்றுப்பெற்றன என்று நாம் கூறமாட்டோம் ஒரு சில பாடல்களுக்குத் தொடக்கம் முடிவு கிடையாது. இருந்தும் நானே அவற்றைச் சரியென எண்ணிய சில பாடல்களுடன் பொறுத்திவிட்டேன். ஏனெனில், எனது நோக்கம் தெரிந்தவற்றை எப்படியாயினும் தமிழ் கூறும் நல்லோர் முன்வைத்தலே. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து என்ேைனவிடத் தீவிரமாய் அவர்கள் இப்பாடல்களைச் சேகரிக்க முனைந்து தமிழை அணிசெய்வார்கள் என்ற நம்பிக்கையே." 3.
மலையக நாட்டாரியற் கூறுகளுக்கும் அவர்கள் புலம் பெயர்ந்து வந்த தமிழகத்தின்நாட்டாரியற் கூறுகளுக்குமிடையில் மிக நெருக்கமான தொடர்புகள் காணப்படுகின்றன. இவை நுட்பமான முறையில் ஒப்பு நோக்கப்பட வேண்டும். இவ்வகையிலே சாரல்நாடன் தமது "வாய்மொழி இலக்கியம்" என்னும் நூலிலும் சி அழகுப்பிள்ளை "மலையகக் கலை இலக்கியம்" "மலையக நாட்டார் பாடல்கள் - ஒரு கவன:ஈர்ப்பு"முதலிய கட்டுரைகளிலும் முன்முயற்சியாக ஒரளவு ஒப்பு நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலையக நாட்டுப் பாடல்கள் முழுவதையும் சேகரித்துத் தொகுப்புகளாக நூல்வடிவம் பெறச் செய்ய வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்த வந்த ஒருவர் ".மலையகத் தோட்டப் புறங்களில் வழங்கும் நாட்டார் பாடல்களின் தொகுப்புகள் முன்பே சில வெளிவந்துள்ளன. இந்த முயற்சிகளைப் பாராட்டும் அதே வேளையில் இன்னும் நூற்றுக் கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான இனிய பாடல்கள் எழுத்துவடிவம்

Page 78
152 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
பெறாமல் இருக்கின்றன என்பதையும் குறிப்பிடல் வேண்டும் மலையக நாட்டார் பாடல்களிலே மனதைப் பறிகொடுத்த பல எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் நிறையப் பாடல்கள் சேகரித்து வைத்துள்ளார்கள். இந்தப் பாடல்கள் எல்லாம் பிரசுரமாகி அவை பற்றிய ஆய்வுகளும் விமர்சனங்களும் மேற்கொள்ளப்படும் வேளை மலையக மக்களைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டம் உருவாகும். அவர்தம் வாழ்வுமுறை அழகியல் உணர்வு என்பன பற்றிய சிந்தனையும் மேலோங்கும்." எனக் கூறியுள்ளமை சிந்திக்கத்தக்கது.
இதேபோன்று, சிவி வேலுப்பிள்ளையும் தமது நாடற்றவர் கதை' என்னும் நூலில் ஆங்காங்கே தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றை மண்ணின் மனத்தோடும் உயிர்த்துடிப்போடும் வெளிப்படுத்து நாட்டார் பாடல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தத் தவறவில்லை.
மேலும் "மலைநாட்டு மக்கள் பாடல்கள்"என்னும் தொகுப்புநூலின் இறுதியில் பின்னுரைக்கான சிலகுறிப்புகள் என்னும் தலைப்பின் கீழ் ----- ஆனால், தாலாட்டுப் பாடல்கள், பக்திப்பாடல்கள், ஒப்பாரி இவற்றைத் தவிர்ந்த ஏனைய மலைநாட்டார் பாடல்கள் பெரும்பாலும் - உண்மையில் முற்றாக என்றும் சொல்லாம் - தமக்கே உரிய தனித்துவத்தைக் கொண்டுள்ளன. இப்பாடல்கள் வெறுமனே ஓர் அந்நிய மூலதனத்தின் விளைபொருள் என்ற ரீதியிலும் ஒரு வித்தியாசமான உற்பத்தி முறையின் விளைவு என்ற ரீதியிலும் மாத்திரம் மேற்கூறிய கிராமிய நாட்டார் பாடலிலிருந்து வேறுபட்டு அதனூடாக தனது முக்கியத்துவத்தைநிலைநாட்டிக் கொள்ளவில்லை. அல்லது எளிமையான உனர்ச்சிவடிப்புகள், இயல்பான உவமான உவமேயங்கள், சமூகக் கூட்டு வாழ்க்கையின் உற்பத்தி வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கை, அல்லது வாழ்க்கையைத் தீரத்துடன் எதிர்கொண்டு நிற்கும்போது இயல்பாய், அதன் பிரவாகத்தில் பொங்கியெழுந்த உன்னதங்கள் என்ற வகையில் மாத்திரம் இதன் முக்கியத்துவம் போற்றத்தக்கது என்பதும் அல்ல.

நாட்டாளியல் 153
முக்கியமானது யாதெனில், இப்பாடல்கள் ஒரு சமூகத்தின் உருவாக்கத்தையும் இலங்கையின் வரைபடத்தின் மத்தியப் பிரதேசத்தில் இருந்திருக்கக் கூடிய வெறும் வனாந்தரத்துக்குப் பதிலாக, ஓர் யெளவனமிக்க நந்தவனத்தை ரத்தப் பிரதேசத்தை உருவாக்கி இந்தப் பிரமாண்டமான மனித உழைப்பின் மகோன்னத வெற்றியைப் பெருமளவு பிரதிபலிக்கும் வரலாற்றுச் சாட்சிகளாகவும் இவை விளங்குகின்றன என்பதாகும்" 5 சற்றே நீளமாக அமைந்துள்ள இக்கூற்று மலையக நாட்டார் பாடல்களின் தனித்துவம் வரலாற்று முக்கியத்துவம் பயன்பாடு முதலியவற்றை உணர்த்துவதாக அமைந்துள்ளது . ஏறத்தாழ இதே கருத்தினை சாரல்நாடனும் தமது வாய்மொழிஇலக்கியம் என்னும் நூலில் வலியுறுத்தியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
சுருங்கக்கூறின் மலையக நாட்டாரியல் பற்றிய முழுமையான ஆய்வுகளின் உதவியின்றி மலையகத் தோட்டத் தொழிலாளர் பற்றிய முழுமையான வரலாற்றை எவராலும் எழுத முடியாது எனக்கூறும் அளவிற்கு மலையக நாட்டாரியற் கூறுகள் அவர்களது வரலாற்றையும் வாழ்வையும் பிரதிபலித்துநிற்பதை அவதானிக்கலாம்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மலையக நாட்டார் பாடல்கள் முழுவதும்முறைப்படி தேடி, வகைப்படுத்தித் தொகுக்கப்படின் பெரும்பயன் ஏற்படும் பொதுவாக நாட்டார் பாடல்களைத் தொழில்முறைப் பாடல்கள், பொதுப்பாடல்கள், காதற்பாடல்கள், வாழ்த்துப்பாடல்கள், வேடிக்கைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், நாடகப் பாடல்கள், கதைப்பாடல்கள், சமய வழிபாட்டுப் பாடல்கள் என வகைப்படுத்துவர் மேற்கண்ட ஒவ்வொரு வகையிலும் Lf6 2 If பிரிவுகள் உள்ளன.
வேறுபட்ட குழ்நிலைகள், வேறுபட்ட வரலாறு முதலியவற்றுக்கேற்ப சமூகத்துக்குச் சமூகம் பிரதேசத்துக்குப்பிரதேசம்நாட்டார் பாடல்களும் வேறுபடுவது போலவே அவற்றின் வகைப்படுத்தலும் அமையும். மலைநாட்டு மக்கள் பாடல்கள் என்னும் தொகுப்பில் சிவி வேலுப்பிள்ளை மலையக நாட்டார் பாடல்களை, கோப்பிக்காலம் பயணம் கண்டிச்சீமை

Page 79
154 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
வந்தபின், பழம் துரை, துரை பங்களா, இஸ்டோரு பெரிய கங்காணி கண்டாக்கு, கணக்குப்பிள்ளை, கங்காணி தோட்டக் காதல் பாடல், பொதுக் காதல் பாடல், தர்க்கம் சாடை, தாலாட்டுப் பாடல், ஒப்பாளி ஒயிலாட்டப்பாட்டு ஒயில்கும்மி கோடாங்கி சமயவழிபாட்டுப் பாடல்கள், காமன் பாட்டு என வகைப்படுத்தியுள்ளார்.
மலையக நாட்டார் பாடல்களுள் மிக முக்கியமான்வை தொழிலாளரின் புலப்பெயர்ச்சி பற்றியவை துரதிஷ்டவசமாக, அத்தகைய பாடல்கள் மேற்கண்ட தொகுதியில் மிகக் குறைவாகவே இடம் பெற்றுள்ளன. சாரல்நாடன், தமது வாய்மொழிஇலக்கியம் என்னும் நூலில் இத்தகைய பாடல்கள் பலவற்றைக் கையாண்டுள்ளார். கோப்பிக் காலம், பழம், இஸ்டோரு முதலியன தொழில்முறைப் பாடல்களின் உப பிரிவுகளாக அமைய வேண்டியன. அதுபோன்றே தோட்ட அதிகாரிகள் பற்றிய பாடல்கள் என்ற வகையுள் உப பிரிவுகளாக துரை, துரை பங்களா, பங்களாக் கோழி பெரிய கங்காணி , கண்டாக்கு, கணக்குப்பிள்ளை, கங்காணி என்னும் தலைப்புகள் அமைதல் பொருத்தமானதாகும்
சாரல் நாடன் தமது வாய்மொழி இலக்கியம் என்னும் நூலில் குழலில் பிறக்கும் பாடல்கள், தொழிற் பாடல்கள், கங்காணிப் பாடல்கள், கும்மியும் கோலாட்டமும் வாழ்வளித்த வாய்மொழிப் பாடல்கள், ஒப்பு நோக்கு மயக்கும் இன்பம் உணர்வுகளுக்கு வாய்க்கால், அவலக்குரல் என வகைப்படுத்தி ஆராய்ந்துள்ளார்.
தாலாட்டுப் பாடல்கள் போலவே மலையக நாட்டார் பாடல்களும் சுவைமிகுந்த சிறுவர் விளையாட்டுப் பாடல்களும் கணிசமாக உள்ளன. இத்தகைய பாடல்கள் சிலவற்றை ஏ.பி.வி கோமஸ் தமது குறுநாவலிற் பொருத்தமான முறையிற்கையாண்டுள்ளார். அவற்றுட்சில வருமாறு:
அத்தக்யா புத்தக்யா
தவளஞ் சோறு
எட்டு எருமை

நாட்டாரியல் 155
எருமைப்பாலு பாண்டி வந்து பரபரக்க ஒங்கப்பன் பேரென்னா?
முருங்கப்பு - (என்றது ஒரு குழந்தை)
முருங்கப்பு தின்னாதே முள்ளந்தண்ணியும் குடிக்காதே பாம்பு கைய பரக்கென்னெடு (என்றது ஒரு குழந்தை)
எடுக்க மாட்டேன்’
முதல் ஆசாமி.
எடுக்காட்டி கோழி கொடுக்க தார்தார் வாழக்காய் தையமுத்து வாழக்காய் ஒத்த சாமி புள்ள பெத்த ஒத்த கைய எடுத்துக்க 6
இத்தகைய சிறுவர் விளையாட்டுப் பாடல்கள் சில தீர்த்தக்கரை, குன்றின் குரல் முதலிய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.
பொதுவாக நாட்டார் பாடல்களுள் அதிகமானவை, பெண்களைப் பற்றியதாகவும் பெண்கள் கூற்றாகவும் அமைந்துள்ளதைக் காணலாம் தொழில்முறைப் பாடல்கள், காதற்பாடல்கள், தாலாட்டுப்பாடல்கள், ஒப்பாளிப்பாடல்கள், சமயவழிபாட்டுப்பாடல்கள் முதலியன இவ்வகையில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கவை. மலையக நாட்டார் பாடல்களுள் இதற்கு விதிவிலக்கல்ல. பெண்ணியல்வாதம் மேலோங்கிவரும்இன்றைய நிலையில், மலையகப் பெண்களின் நிலை பற்றி நாட்டரியற் கூறுகள் பிரதிபலித்துநிற்கும் கருத்துக்களை நுட்பமாக ஆராயின் மறைந்திருக்கும் உண்மைகள் பல வெளியாவது திண்ணம்

Page 80
156 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
தமிழ்ச் சமூகத்தின் அடித்தள மக்கள் பற்றிய ஆய்வில் தீவிர ஈடுபாடு காட்டிவரும் ஆ. சிவசுப்பிரமணியன் தமது "அடிமைமுறையும் தமிழகமும்" என்னும் நூலிலும் "அடித்தள மக்கள் மீதான பாலியல் வன்முறையும் நாட்டார் வழக்காறுகளும்" என்னும் ஆய்வுக் கட்டுரையிலும் அடித்தள மக்கள், குறிப்பாகப் பெண்கள் பற்றி நீண்ட காலம் மறைக்கப்பட்டிருந்த அரிய உண்மைகளை ஆதாரங்களுடன் அம்பலமாக்கியுள்ளமை பயன்மிக்க ஒன்றாகும்
"... அதே நேரத்தில் பாலியல் வன்முறைகுறித்த சான்றுகளைத் திரட்டி ஆராய்வது மட்டும் அடித்தள மக்கள் ஆய்வின் நோக்கமாகி விடக்கூடாது. பாலியல் வன்முறைக் கெதிராகக் கிளர்ந்தெழுந்து பழிவாங்கியது தொடர்பான வழக்காறுகளை முயன்று சேகரிக்க வேண்டும் நம் காலத்திய பாலியல் வன்முறைக்கெதிரான இத்தகைய வழக்காறுகளை நிகழ்கால சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பயன்படுத்தும்போதுதான் ரசனைக்கும் ஆய்வுக்கும் மட்டுமே நாட்டார் வழக்காறுகள் உரியன என்ற கருத்துநிலையிலிருந்து விடுபடமுடியும் என அவர் ஓரிடத்திற் கூறியுள்ளமை உற்று நோக்கத்தக்கது.
தமிழகத்து அடித்தளப் பெண்கள், கொடூரமான பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். அத்தகைய சந்தர்ப்பங்களில் கொலை செய்யப்பட்டோ, தற்கொலை செய்துகொண்டோ பாலியல் வன்முறையிலிருந்துதப்பிய பெண்கள் பலர் தெய்வமாக வழிபடப்பட்டதை நாட்டாரியற் கூறுகளின் துணைகொண்டு அவர் நிறுவியுள்ளார். "பொன்னுமாரியம்மன்' 'போத்திஅம்மன்', 'புதுப்பட்டி அம்மன்"முதலிய தெய்வவழிபாடுகளை இவ்வகையில் எடுத்துக் காட்டாகக் குறிப்பிட்டுள்ளார்?
மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தைப் பொறுத்தவரை, ஆதிக்க சக்திகளால் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுவது சர்வ சாதாரணம். நீண்டகாலமாக இடம்பெற்று வந்த இக்கொடுமை பற்றி பலவகைச் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது.

நாட்டாரியல் 157
பாரதி புதுமைப்பித்தன், சிவி வேலுப்பிள்ளை, கோகிலம் சுப்பையா முதலியோர் முதல் மலையகத்தின் இன்றைய சிறுகதை, நாவலாசிரியர்கள் வரை தமது ஆக்கங்களில் இக்கொடுமைக்கு முக்கியத்துவம் வழங்கி அதனைக் கண்டித்துள்ளனர். டேவிட்டின், "வரலாறு அவளைத் தோற்றுவிட்டது" என்னும் நாவல் இக்கொடுமையையே கருப்பொருளாகக் கொண்டு படிப்போரின் கண்களைப் பணிக்கவைக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்நாவலில் இடம் பெறும் குருவம்மா, தோட்டத் துரையின் பாலியல் வன்முறைக்கு ஆளானபின், அவனைக் கொடூரமாகத் தீ மூட்டிக் கொன்றுவிட்டு, ஒழக்கொண்டிருக்கும் புகையிரதத்தின் முன்பாய்ந்துதற்கொலை செய்து கொள்கிறாள். இப்படி எத்தனையோ குருவம்மாக்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இத்தகையவர்களுள் ஒரு சிலராவது தெய்வங்களாக வழிபடப்பட்டிருக்கலாம் மலையக நாட்டரியற் கூறுகளை, குறிப்பாகச் சிறுதெய்வங்கள் அல்லது நாட்டுப்புறத் தெய்வங்களாகக் கருதப்படுபவற்றுள் பெண்தெய்வ வழிபாடுகள் பற்றித் துருவித்துருவி ஆராயின் உண்மைகள் துலங்கும்.
கொடுமைகளைச் சகிக்கமுடியாத நிலையில் அவற்றுக்கெதிராகத் திரத்துடன் போராடி வீரமரணம் அடைந்த பலர் சிறு தெய்வங்களாக வழிபடப்பட்டனர்; வழிபடப்படுகின்றனர். மலையகத்து, மதுரைவிரன் வழிபாடு இதற்குத் தகுந்ததோர் எடுத்துக்காட்டாகும். இதுபோன்றே மலையகப் பெண் தெய்வ வழிபாட்டினைக் கூர்ந்து ஆராயின் குருவம்மாக்கள் பலரைக் காணமுடியும்
இலங்கையின் மலையகத்தைப் போன்றே தமிழகத்துப் பண்ணைகளிலும் நீலகிரி முதலிய மலைப் பிரதேசங்களின் பெருந்தோட்டங்களிலும் பர்மா, மலேயா முதலிய நாடுகளிலும் உடலுழைப்பாளிகளான அடித்தளத்துத் தமிழ்ப் பெண்கள் எத்தகைய கொடூரமான பாலியல் வன்முறைகளுக்கு ஆளானார்கள் என்பதை விளக்கும் நாட்டுப்பாடல்கள் பல உள. எடுத்துக்காட்டாக,

Page 81
158 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
'மானு வேட்டையை ஆடிக்கொண்டு மயிலு வேட்டையை ஆழக்கொண்டு கொக்கு வேட்டையை ஆடிக்கொண்டு குமரி வேட்டையும் ஆடுவாராம்"
"வெள்ளக் காரன் பனம் வெள்ளிப்பணம் வேடிக்க செய்யுரசின்னப்பணம் வெள்ளிப் பணத்துக்கு ஆசப்பட்டு வேசங் கொலஞ்சாளே வீராயி "
"ராத்திரி வேலைக்கு ராச்சம் பளம்வேறே ராசானன் டங்கன்துரை சேத்துக் கொடுத்தாலும் சேட்டைபண்ணுவாரே சின்னப்பொன் னைக்கண்டுவிட்டால்."
"காடுண்ணுமில்லை மேடுண்ணு மில்லை வீடுண்ணும் இல்லையம்மா கண்ட இடமெல்லாம் கண்டகண்ட பொண்னைக் கையைப் பிடிச்சிழுப்பார்."
"ஆனைமேஞ்ச இடங்களெல்லாம் அடுக்குமெத்த விடாச்சு போலீசு டேசனாச்சு டேசனாச்சு பொண்ணுகள சிறையெடுக்க சிறையெடுக்க
- எனவரும் பாடல்கள் இவ்வகையில் நோக்கத்தக்கவை
தமிழகத்தில் வழங்கிவரும் தோட்டுக்காரி அம்மன் கதை, மாகாளி அம்மன் கதை, சுடலைமாடகவாமிகதை, வள்ளியம்மன் கதை, பழையனூர் நீலிக்கதை, முத்துப்பட்டன் கதை, பிரமசக்தி அம்மன் கதை, புலைமாடன் கதைப்பாடல் பொன்னிறத்தாள் கதைப்பாடல் பூச்சியம்மன் வில்லுப்பாட்டு முதலியவற்றை மலையகத்தின் மதுரைவிரன்கதை, தேசிங்குராஜன் கதை பொன்னர்சங்கர் கூத்து, காமன் கூத்து, அருச்சுனன் தபசு,

நாட்டாரியல் 159
சிறுதெய்வங்கள் அல்லது நாட்டுப்புறத் தெய்வங்கள் எனக் கருதப்படும் மாடசாமி, முனியாண்டி, ரோதைமுனி வனத்துச் சின்னப்பர், செண்டாக்கட்டி, கவ்வாத்துசாமிமுதலியவற்றுடன் தொடர்பான கதைகள் முதலியவற்றை ஒப்புநோக்கி ஆராயும்போது பல உண்மைகள் துலக்கம் பெறும் என்பதில் ஐயமில்லை.
மலையக நாட்டார் பாடல்கள் முழுவதும் தேடித் தொகுக்கப்படின் மலையத் தோட்டத் தொழிலாளப் பெண்கள் காலம் காலமாக எத்தகைய கொடூரமான பாலியல் வன்முறைகளுக்காளானார்கள் என்பது முழுமையாகத் தெரியவரும் சிவி வேலுப்பிள்ளையின் மலைநாட்டு மக்கள் பாடல்கள் என்ற தொகுப்பிலமைந்துள்ள சில பாடல்கள் இவ்வகையில்
நோக்கத்தக்கவை. அவை வருமாறு:
"செம்புச் சிலை போலே பெண்ணே - அவர் சிம்மாசனத்திலே வச்சுப்பிட்டு வேலைக் கிறங்கிய நம்மையாகங்காணிக்கி ஏழெட்டுப் பேராம் வப்பாட்டி,"
'முருங்கெல போலே கோலமிட்டு - அவர் முன்னஞ்சு பின்னஞ்சு கூத்தியராம் சரிகை துப்பட்டி மேல்போட்டு - அவர் தங்கப்பல்லாக்கு மேல்வாறாராம் O
அதேசமயம், நாட்டார் பாடல்கள் மட்டுமன்றி மலையகத் தனிப்பாடல்கள் பலவும் இக்கொடுமைகளைத் துல்லியமாகக் காட்டி நிற்கின்றன. "ஒண்டியான சின்னத்துரை பெண்களை கற்புமேயழிப்பார்." எனவும் "கனிவாகப் பேசுறதும் கற்பைச் குறையாடுவதும்" எனவும், "கங்காணிமாருடன் மலையிலே கரச்ச" எனவும் வரும் பகுதிகள் இவ்வகையிலே எடுத்துக்காட்டாகக் குறிப்பிடத்தக்கவை

Page 82
160 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
இலங்கையின் மலையகத்திற் பெருந்தோட்டங்களை ஏற்படுத்த முயன்ற பிரித்தானியர், அதற்குத் தேவையான கூலியாட்களைத் திரட்டுவதிற் பல சிரமங்களை எதிர்நோக்கினர். எவ்வளவுதான் பசிபட்டினியும் கொடுமைகளும் ஆட்டிப்படைத்தாலும், சமூகத்தின் அடித்தள மக்கள் தாம் பரப்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பிரதேசங்களையோ கிராமங்களையோ உறவினர்களையோ விடுத்துக் கடல்கடந்து, கண்காணாத் தேசங்களுக்குச் செல்வதை இலகுவில் விரும்புவதில்லை. இந்நிலையில், ஆசைவலை விரித்தே அவர்களை அகப்படுத்த வேண்டியிருந்தது. அதிலும் ஆண்கள் இதற்கு ஓரளவு சம்மதித்தாலும், பெண்கள் இறுதிவரையிலும் தயங்கவே செய்வர். தமிழகத்து நாட்டார் பாடல்கள் பல இவ்வுண்மையைத் துல்லியமாக
வெளிப்படுத்துகின்றன.
இவற்றையும் மீறி மலையகத்திற்குப்புலம்பெயர்ந்த பெண்கள் பலர் கோப்பிக்காலம் எனக்கூறப்படும் ஆரம்பக்கட்டத்தில் இலங்கையில் நிரந்தரமாகத் தங்க விரும்பாது, தாயகம் திரும்பத் துடித்துக் கொண்டிருந்ததை மலையக நாட்டுப்பாடல்கள் புலப்படுத்தி நிற்கின்றன. எடுத்துக்காட்டாக
"பாதையிலே வீடிருக்க பழனிச் சம்பா சோறிருக்க எருமே தயிரிருக்க ஏன்டி வந்தே கண்டிச்சீமை?"
"ஊரான ஊரிழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன் பேரான கண்டி եւՈ660 பெத்த தாயே நாமறந்தேன்."

"காறுதடி கம்பரிசி கசக்குதடி காறுத்தண்ணி இனிக்குதடி நம்மசீமை இனிப்பயணம்தப்பாது"
"ஊருக்குப் போறமினு ஒருமனசாதாணிருந்தேன் தேசிக்காயே போட்டல்லோ தேத்திட்டாரு எம்மனசே'
"அடிஅளந்து வீடுகட்டும் நம்ம ஆண்டமனை அங்கிருக்க பஞ்சம் பொழைப்பதற்கு பாற்கடலைத் தாண்டி வந்தோம் பஞ்சம் பொழைச்சு நம்ம Lullanti Guittie Giraflou கப்பல் கடந்து கடல் தாண்டி இங்கவந்தோம் காலம் செழிச்சு நம்ம காணி போய்ச்சேரலியே"?
என வரும் பாடல்களில் அவர்களது ஏமாற்றம் ஏக்கம் தவிப்பு சோகம் முதலியவற்றை ஒருங்கே காணலாம்
தோட்டத்து மேலாதிக்க சக்திகளின் காம இச்சைக்கு இடம்கொடுக்க மறுத்த பெண்களைக் கொழுந்து நிறைகுறைப்பு வேலைநேரக் குறைப்பு, நாட்குறைப்பு, வேலைநீக்கம், குடும்பத் தலைவர்களை வேலை நீக்கம் செய்து தோட்டத்தையே விட்டுத் துரத்தல் எனப்பல வழிகளிலும் பழிவாங்கியதை மலையக நாட்டார் பாடல்கள் பல வெளிப்படுத்திநிற்பதை அவதானிக்கலாம்

Page 83
162 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
"கல்லாறு தோட்டத்திலே கண்டாக்கையா பொல்லாதவன் மொட்டே புடுங்குதின்று மூனாள விரட்டி விட்டான்."
'ஒழ நெரே புடிச்சு ஒரு கூடே கொழுந்தெடுக்க பாவிகணக்குப் புள்ளே பத்து ராத்த போடுறானே."
"பொழுதும் எறங்கிருச்சி பூமரமும் சாஞ்சிருச்சி இன்னமும் இரங்கலையோ எசமானே உங்கமனம் அவசரமாநான்போறேன் அரபேரு போடாதீங்க."
- எனவரும் பாடல்கள் இங்கு அவதானிக்கத்தவை
தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கூலியோ மிகவும் சொற்பமானது. ஆயின் தொழிலாளர்களுக்குப் போதுமான சம்பளம் வழங்கப்பட்டதாகத் தோட்ட அதிகாரிகளும் ஆட்சியாளரும் தமது அறிக்கைகளிலும் ஆவணங்களிலும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு மாறாக சேர் பொன்னம்பலம் அருணாசலம் முதலியோர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கூலியோ மிகவும் குறைவானது என்பதையும் அவர்கள்து பொருளாதார நிலை மிகவும் இரங்கத்தக்கதாக இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். "1870 -களிற் பயிற்சியற்ற தொழிலாளிக்கு, மூன்று நாட்களுக்கு ஒரு ரூபா சம்பளமே வழங்கப்பட்டது. முதலாம் உலகப் போரின் ஆரம்பம் வரை இந்நிலையே நீடித்தது. நிலமற்ற இந்தியத் தொழிலாளர்களைக் கூட, இந்தச் சம்பளம் கவர்ந்ததாகக் கூறமுடியாது" எனவரும் கூற்றும் அவதானிக்கத்தக்கது. இக் கூலிகூட ஒழுங்காக வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. அரைப்பேர் போடுதல்

Aso Lutfius 163
தண்டம்' என்ற பெயரில் கழிக்கப்படுதல், "கடன் கழிப்பு" "வெட்டுக் கொத்து"முதலியவற்றின் பெயரில் இச்சொற்பக் கூலியும் சுரண்டப்பட்டது ஆண் தொழிலாளரிலும் பார்க்கப் பெண் தொழிலாளர்களே இவ்வகையில் மிக மோசமாகப் பழிவாங்கப்பட்டனர் என்பதை நாட்டார் பாடல்கள் பலவும்
தனிப்பாடல்களும் நிரூபிக்கின்றன. f5
1921 ம் ஆண்டு வரை, மலையகத் தோட்டங்களில் பெரிய கங்காணிகளின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. "பெரியகங்காணியின் ஆதிக்கம் தோட்டங்களில் ஆலமரம்போல் உயர்ந்து படர்ந்து விழுது இறங்கியிருந்தது" ? தொழிலாளர்களைக் கொண்ட பெரிய கங்காணிகள் இருந்தார்கள். இவர்கள் சக்தி வாய்ந்தவர்கள். தோட்டங்களில் ஜமீன் அல்லது ரட்ட மாத்தியா போலச் சுகபோக வாழ்க்கை நடித்தினார்கள். பட்டினங்களில் வட்டிக்கடை, தாய்நாட்டில் நிலம், வீடு, சிறுதோட்டங்களை வாங்கினார்கள்" 7 எனவும் பெரிய கங்காணிமார்கள் பற்றி நிறைந்த அனுபவம் வாய்க்கப் பெற்ற சிவி வேலுப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
எனவும் "150 தொழிலாளர்கள் முதல் 1500
மலையக நாட்டுப்பாடல்கள் பல இத்தகைய பெரிய கங்காணிமார்கள், கங்காணிமார்கள் முதலியோரின் சுகபோக வாழ்க்கை, சர்வாதிகாரம், காமக்களியாட்டம், குரூரசிந்தை, அடாவடித்தனங்கள் முதலியவற்றை வெளிப்படுத்துகின்றன. தொழிலாளர்கள் அச்சத்தின் நிமித்தம் இவர்களைப் புகழ்ந்தும் மதித்தும் பாடியுள்ளபோதும் தமது மனக்குமுறல்களையும் இவர்கள் மீதான கோபத்தையும் நேரடியாக வெளிப்படுத்துவதற்குப் பதில் கேலியும் கிண்டலும் தொனிக்கப் பாடியுள்ள பாடல்கள் பல காணப்படுகின்றன.
ff ff.
'ஏழெட்டுப் பேராம் வப்பாட்டி' 'பாகை விதைபோல நம்மையாகங்காணி
Af ff
பல்லுவரிசை." "முன்னஞ்சு பின்னஞ்சு கூத்தியராம்" எனவரும் தொடர்கள் கவனிக்கத்தக்கவை

Page 84
184 Aglaianafia ர் தமிழ் இலக்கியம்
"தெய்வத்துக்குச் சமானமான நிலையில் கங்காணியை வைத்து இந்த மக்கள் பாவித்தார்கள் - பாடினார்கள் - பரதவித்தார்கள்." அதேசமயம்
"தோட்டம் பிரளியில்லே தொரே மேலே குத்தமில்லே கங்காணிமாராலே கனயிரளியாகுதையா"
"எண்ணிக் குழிவெட்டி இடுப்பொடிஞ்சிநிக்கயிலே வெட்டு வெட்டு எங்கிறானே வேலையத்தகங்காணி"
'அஞ்சு மணியாச்சு ஐயா வர நேரமாச்சு கொஞ்சிவிளையாடாதீங்க கோளுக்காரன் கங்காணி
- என வசைபாடவும் அவர்கள் தயங்கவில்லை.
இந்தியாவில் நிலவிவருவதைப் போன்றே, இந்தியாவிலிருந்து மலையகத்திற்குப் புலம் பெயர்ந்த தோட்டத் தொழிலாளர் மத்தியிலும் சாதியமைப்பு, அதன்காரணமான ஏற்றத் தாழ்வுகள், ஆசாரங்கள் முதலியன நிலவிவருகின்றன. பிராமணர் வெள்ளாளர், அகமுடியான், கோனான், கள்ளர். தட்டார் கொல்லர், தச்சர் கொண்டர் அம்பலக்காரர் நாவிதர் வண்ணார், சக்கிலியர் எனப் பல்வேறு சாதிப் பிரிவுகளை இம்மக்களிடையே காணலாம். மலையக நாட்டாரியற் கூறுகள் பலவும் இவ்வம்சத்தைப் பிரதிபலித்துநிற்பதைக் காணலாம்
இலங்கையின் வடபிரதேசத்தோடு ஒப்பிடுகையில், மலையகத்தின் சாதி ஆசாரம் அதிக இறுக்கம் பெற்றுக் காணப்படவில்லையெனலாம் இலங்கையின் வடபுலத்துநாட்டார்பாடல்கள் பல, அங்கு காலம் காலமாக

நாட்டாரியல் 165
நிலவிவரும் சாதியாசாரங்களைப் பிரதிபலித்து நிற்பதை அவதானிக்கலாம் எடுத்துக் காட்டாக ஒரு பாடலை இங்கு நோக்கலாம்
"காரை கிடைக்காத காந்தாரப் பஞ்சத்தில் கீரை கொடுப்பானோ கிழ்சாதி வெள்ளாளன்'
மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் நிலவிரும் சாதி
ஆசாரங்களைப் பிரதிபலித்து நிற்கும் நாட்டார் பாடல்களும்
பழமொழிகளும் பலவுள. நாட்டர் பாடல்கள் பலவற்றில் இடம்பெறும்
பிராமணத்தி சக்கிலியன் கங்காணி சக்கிலியக்குட்டி, துலுக்கக்குட்டி,
வண்ணாரக்குட்டி, வண்ணாரப்புள்ளே, அம்பட்டப்புள்ளே, வடுகப்புள்ளே
முதலிய சொற்பிரயோகங்களும் "எவன் பெண்டாட்டி எவனோடு போனால்
off fy
என்ன, லெப்பைக்கு வேண்டியது மூணுயணம்தான்" "மூளிக் கொரங்கா இருந்தாலும் ஜாதிக் கொரங்காயிருக்கணும்" எனவரும் பழமொழிகளும்
"கண்டி கண்டி எங்காதீங்க கண்டி பேச்சு பேசாதீங்க சாதி கெட்ட கண்டியிலே சக்கிலியன் கங்காணி?
எனவரும் நாட்டார் பாடலும் எடுத்துக்காட்டாகக குறிப்பிடத்தக்கவை. எழுத்தாளர்கள் பலரும் சிறுகதைகளிலும் நாவல்களிலும் இத்தகைய சாதிப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்குமிடத்துப் பொருத்தமான முறையில் நாட்டார் பாடல்ளையும் பழமொழிகளையும் கையாண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, என்.எஸ்.எம். இராமையாவின் "கோவில்" தெளிவத்தை ஜோஸப்பின் திட்டுரொட்டி" கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப் பச்சை"முதலியன மனங்கொளத்தக்கவை.

Page 85
166 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
பொதுவாக நோக்கும்போது மலையக நாட்டார் பாடல்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய கொடிய பஞ்சம் நிலவுடைமை ஆதிக்கக் குரூரங்கள், தொழிலாளர்கள் ஏகாதிபத்திய அடிவருடிகளின் ஆசைவார்த்தைகளில் மயங்கித் தாயகத்தைவிட்டு மலையகத்துக்கு இடம் பெயர்ந்தமை அவ்வாறு இடம்பெயர்ந்தபோது அவர்கள் கட்டியிருந்த மனக்கோட்டைகள், எதிர்பார்ப்புகள், வழிப் பயணங்களின் போது அவர்கள் அனுபவித்த வேதனைகள், அவலங்கள், இழப்புகள், கொடிய நோய்களினாலும் காட்டுவிலங்குகளினாலும் ஏற்பட்ட பேரழிவுகள் முதலியன முதல் தோட்ட நிர்வாகக் கெடுபிடிகள், தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், தொழிலாளர்களது வாழ்க்கைப் போராட்டங்கள் முதலியன வரை தொழிலாளர்களது வரலாறு பற்றிய அரிய உண்மைகளைப் பிரதிபலித்துநிற்பதை அவதானிக்கலாம்.
¿FTaipngmurió
1 வேலுப்பிள்ளை, சிவி, மலைநாட்டு மக்கள் பாடல்கள், 1983 முன்னுரை.
2 மேற்படி நூலின் இறுதியில் பின்னுரைக்கான சிலகுறிப்புகள்: என்ற தலைப்பில் மலையக நாட்டார் பாடல்கள் பற்றிச் சிறந்ததொரு விளக்கத்தைப் பதினைந்து பக்கங்களில் அளித்துள்ளார்.
3 மேற்படிநூல் பக் 94
4 அழகுப்பிள்ளை, சி, மலையக நாட்டார் பாடல்கள் - ஒரு கவனஈர்ப்பு தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1993 பக் 43

நாட்டாரியல் 167
5. வேலுப்பிள்ளை, சிவி, மலைநாட்டுமக்கள் பாடல்கள்பக் 93
6. கோமஸ் ஏ.பி.வி, அங்கமெல்லாம் நெறஞ்சமச்சான், 1988 ud. 52-53.
7 சிவசுப்பிரமணியன், ஆ, அடித்தளமக்கள் மீதான பாலியல் வன்முறையும் நாட்டார் வழக்காறுகளும் இலங்கை - சாகித்திய விழா, 1993 நாட்டாளியற் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை, பக் 36
8 மேற்படி கட்டுரை, பக் 20-25
9 மேற்படி கட்டுரையில் இப்பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. அன்னாருக்கு எனது நன்றி மேலும் பெண் (தலித்) எழுத்தாளர் ஒருவரின் கூற்றும் இக்கட்டுரையில் மேற்கோளாக எடுத்தாளப் பட்டுள்ளது. பொருத்தம் நோக்கி அதனை இங்கு தருகிறேன். "என் போன்ற பறைச்சிகளுக்கு, நாங்கள் பறைச்சிகளாகவும் கறுப்பிகளாகவும் இருப்பது என்பதே ‘ஒரு பய உணர்வையும் பாதுகாப்பின்மையையும் தருவதாக இருக்கிறது எந்த நேரமும் நாங்கள் பொலிஸ் ஸ்டேசனில் வைக்கப்பட்டு எங்களின் பிறப்புறுப்பில் தடிகள் நுழைக்கப்படலாம். நான்கைந்துபேர் எங்கள் பிறப்புறுப்பைத் தங்கள் பிறப்புறுப்பால் கிழித்துப் போடலாம்."(பக். 14)
10 வேலுப்பிள்ளை, சிவி,மலைநாட்டு மக்கள் பாடல்கள், 1983 Lä. 23.-24.
11 வேலுப்பிள்ளை, சிவி, மலைநாட்டு மக்கள் பாடல்கள், 1983 ud. 17, 91
12. சாரல்நாடன், வாய்மொழிஇலக்கியம் 1993 பக் 25
13. சாரல்நாடன், வாய்மொழிஇலக்கியம் 1993 பக் 33
வேலுப்பிள்ளை, சிவி, மேலது நூல் பக் 25-26

Page 86
188 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
f. Young Socialist. Vol. I/July 1961/June 1962/pp. 110- 113.
15 1974 ம் ஆண்டே, "தோட்டத் தொழிலாளர் வரலாறு கூறும் மலையகத் தனிப்பாடல்கள்" என்ற தலைப்பில் க. நவசோதி அவர்கள் விரிவான ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இக்கட்டுரையில், மலையக நாட்டார் பாடல்களும் தனிப்பாடல்களும் தொழிலாளர் பற்றிய அரிய உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்துமாற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நிகழ்ச்சிகள், யாழ்ப்பாணம் 1974
ல் வேறுப்பிள்ளை, சிவிநாடற்றவர்கதை 1987 பக் 43
17. வேலுப்பிள்ளை, சிவி, நாடற்றவர்கதை 1987, பக். 44
18 சாரல்நாடன், வாய்மொழி இலக்கியம் 1993 பக் 43
9 வேலுப்பிள்ளை, சிவி, மலைநாட்டு மக்கள் பாடல்கள், 1983, Ludi. 27.
20 வேலுப்பிள்ளை, சிவி, மலைநாட்டு மக்கள் பாடல்கள், 1983 Lledi. 15.

4. கவிதை
மலையக இலக்கிய முன்னோடிகள் என்ற வகையில் பாரதி முதல் நடேசய்யர் வரை அவர்களது கவிதைகளும் ஏனைய ஆக்கங்களும் பற்றி முன்பு நோக்கப்பட்டுள்ளது. சிவி வேலுப்பிள்ளை முதல் இன்றைய கவிஞர்கள் வரை அவர்களது க்விதைகள் இங்கு நோக்கப்படும் மலையக இலக்கிய முன்னோடிகளுள் முதன்மையானவர் மலையக இலக்கிய உலகிற் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் என்ற வகையில் சிவி வேலுப்பிள்ளையின் பலதுறைப் பங்களிப்புகள் பற்றி முன்னர் தொட்டுக்காட்டப்பட்டுள்ளது. மலையகத்தின் தலைசிறந்த கவிஞர்களுள் முதன்மையானவர் என்ற வகையில் அவரது கவிதைகள் பற்றி இங்கு முதலில் நோக்கப்படும்
LO6zp6zpuéz5 LITVAś7
மலையக இலக்கிய உலகில் "இமயம்"என உயர்ந்துநிற்கும் சிவி வேலுப்பிள்ளை அவர்களை மலையகத்துப்பாரதி எனலாம் மானுடம்பாடும் வானம்பாடியாகத் திகழ்ந்தவர் அவர் என்னும் அவரிடம் எத்தகைய தன்னடக்கம் குடிகொண்டிருந்தது என்பதைப் பின்வரும் அவரது கூற்றுகள் புலப்படுத்தும் "கலை இலக்கியத்திற்கான எனது பங்களிப்பு மகாவலி கங்கைக்கு இரண்டு வாளி தன்னிர் ஊற்றியது போலாகும் "நான் ஒரு கவிஞன் அல்ல. எழுத்தாளன்கூட இல்லை எனலாம். எழுதுவதற்கு நான் தெரிந்தெடுத்த கருப்பொருட்களே இன்றைய எனது பெருமைக்குக் காரணமாகும்.'
ஆரம்ப காலத்தில் தாகூரின் ரோமாண்டிஸ் வயப்பட்டிருந்த சிவி, தனது பிற்பட்ட கவிதைகளில் இவ்வயப்பாட்டிலிருந்து எப்படியோ விடுபட்டுப் புதுமைக்கவிருராக மிளிரலானார். 3. 'ஐம்பதுகளின் முற்பகுதியில்தான்நான்திரு. ஜோர்ஜ் கிட்ஸைச் சந்தித்தேன். சாம்ராஜ்ய நாடுகளில் முதன்மையிடம் வகிக்கும் ஒரு ஓவியரும் கவிஞருமாவார் அவர் மலைநாட்டு மண்வளத்துக்கு எனது கவனத்தைத் திருப்ப அவரது

Page 87
170 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
ஆலோசனைகள்தான் காரணமாயிருந்தன. மலைநாட்டு மக்கள், அவர்களது சுகதுக்கம், பழக்க வழக்கம், நாடோடிப் பாடல்கள் போன்றவற்றில் நான் ஈடுபாடு கொண்டேன். 4என அவர் கூறியுள்ளமை அவரது வளர்ச்சி நிலையைச் சுட்டுவதாக அமைந்துள்ளது. பாரதியின் கவிதைகளிலும், இதே வளர்ச்சி நிலையினையும் மாற்றங்களையும் அவதானிக்கலாம்
சிவி வேலுப்பிள்ளையின் போராட்ட அனுபவங்களை விபரித்துச் செல்லும் சாரல்நாடன், ஓரிடத்திற் பின்வருமாறு கூறியுள்ளார்; "பெரும்பான்மையான இந்திய வம்சாவழி மக்கள் மலைநாட்டுத்தமிழர்கள் பிரஜாவுரிமையோ - வாக்குரிமையோ அற்றவர்களாக நட்டாற்றில் விடப்பட்டனர். இந்தத் தோல்வியின் பாரதூரத்தன்மையை இடதுசாரிகள் விளக்காமலிருந்த வேளை - எதிர்ப்போராட்டத்தின் முதற்படியாக நூறுநாள் சத்தியாக்கிரத்தை முன்வைத்தது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற பெயர் மாற்றம் பெற்ற இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியன். இதன் பொதுச் செயலாளராக அப்போது கடமையாற்றியவர், சிவி வேலுப்பிள்ளையாவார். சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்துச் செல்லும் பெரும்பொறுப்பும் சிவியின் உடையதாகவே இருந்தது. பிரதம மந்திரியின் வாசஸ்தலத்தின் எதிரே, ஐந்துநாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டும் சனப் பிரதிநிதிகள் சபைக்கருகே சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டும் சிவி நேரடிப் பங்கேற்றார். மக்கள் நடாத்தும் வாழ்க்கைப் போராட்டங்களில் பார்வையாளனாக மாத்திரம் அமையாது பங்கேற்பவனாகவும் வழிநடாத்துபவனாகவும் சி.வி. இருந்திருக்கிறார்?
மேற்கண்ட கூற்று உன்னிப்பாக நோக்கத்தக்கது. சி.வி. வேலுப்பிள்ளையின் கவிதைகள் "வெங்கொடுமைச் சாக்காட்டில்" வெடித்துக் கிளம்பியவை தோட்டத் தொழிலாளர் மத்தியில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் ஒருபுறம் அவர்களது விமோசனத்துக்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் பலவற்றில் நேரடியாகப் பங்கேற்றும் தலைமை தாங்கியும் அடைபட்டும்

கவிதை 171
அடியுதைபட்டும் சித்திரவதைக்குள்ளாகியும், மனம் வெதும்பியும் பெற்றுக்கொண்ட கசப்பானதும் கொடுமைகள் மிக்கதுமான அனுபவங்கள் மறுபுறம் இவ்விருவகை அனுபவங்களும் ஒன்றாகக் கலந்த நிலையில் கவிதைகளாகப் பரிணமித்துள்ளதை அவதானிக்கலாம்
"சிவி வேலுப்பிள்ளையின் ஆக்கங்கள் ஒருபுறம் சுதேசிய - மேற்கத்திய வீச்சுகளின் சேர்வையாகவும் மறுபுறம் யதார்த்தத்தினதும் இலட்சிய வாதத்தினதும் சேர்வையாகவும் விளங்குகின்றன சி எனப் பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டுள்ளமை சிந்திக்கத்தக்கது.
"ஜோர்ஜ் கிட்ஸிடின் சந்திப்பு சிவி யின் எழுத்துகளைத் திசை திருப்பியது. தனது ஆரம்பகால எழுத்துகளை, 1935-1940 காலப்பகுதியில், வீரகேசரியில் எச். நெல்லையா அவர்களின் கண்காணிப்பில் வெளியிட்டபோது காட்டாத ஆழப்பார்வையை 1950க்குப் பின்னர் தினகரனில் எழுதும்போது காட்ட ஆரம்பித்தார். '1940 களின் இறுதியில் இடம்பெற்ற தொழிலாளர்களின் பிரஜா உரிமைப் பறிப்பும் தொடர்ந்து இடம்பெற்ற போராட்டங்களும் அவற்றின் விளைவுகளும் அவரை வெகுவாகப் பாதித்திருந்தன. சி.வி. வேலுப்பிள்ளையின் கவிதைகளுட் சிகரமாக விளங்குவனவும் அவருக்கு அழியாப்புகழைத் தேடித் கொடுத்தனவும் "தேயிலைத் தோட்டத்திலே" (In Ceylon's Tea Garden) என்னும் தலைப்பிலமைந்த கவிதைப் பகுதிகளாகும். இக்கவிதைகள் பிறந்த வரலாற்றைச் சாரல்நாடன் மிகப் பொருத்தமான முறையிற் குறிப்பிட் டுள்ளார்?
"கட்டுரைகளையும் கதைகளையும் தமிழில் எழுத முடிந்த இவர், ஒரு போதும் தனது கவிதைகளைச் சுயமாகத் தமிழில் எழுதவில்லை. இது தமிழ் இலக்கியத்துக்கும் இலங்கைத் தமிழ் எழுத்துத் துறைக்கும் மலையக இலக்கியத் துறைக்கும் ஏற்பட்ட மகத்தானதோர்இழப்பாகும் என்பர். எனினும் அதிஷ்டவசமாகச் சக்தி அ பாலையாவின் அற்புதமான தமிழாக்கம், இப்பேரிழப்பினை ஓரளவிற்கு ஈடுசெய்யும் வகையில் அமைந்துள்ளமை மனங்கொளத்தக்கது. சிவி வேலுப்பிள்ளை தமது

Page 88
172 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
கவிதை முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுமிடத்து, "காந்திஜி" என்ற தலைப்பிலான பதினான்கு வரிகள் கொண்ட கவிதையை எழுதிமுடிக்க ஆறுமாதகாலம் சென்றதாகவும் நூறு நாட்கள் நீடித்த சத்தியாக்கிரகப் போராட்டத்திற்பங்குகொண்டபின் நூறாவது நாள்" என்ற தலைப்பிலான கவிதைப் பகுதியை ஒரே இரவிலேயே எழுதி முடித்ததாகவும் n10 கூறியுள்ளமை கவிஞனது அனுபவங்களுக்கும் கவிதைகளுக்குமுள்ள நெருங்கிய தொடர்பினைப் புலப்படுத்துகின்றதெனலாம்.
தோட்டத் தொழிலாளர் மீதும் அவர்களது விமோசனத்திலும் தீவிர ஆர்வமும் இதயசுத்தியுடன் கூடிய ஈடுபாடும் கொண்டவர் சிவி வேலுப்பிள்ளை. தொழிலாளர்களை இதய சுத்தியுடன் நேசித்த தன்மையை அவரது ஆக்கங்கள் துல்லியமாகப் புலப்படுத்திநிற்கின்றன. பெற்றதாய் தனது அன்புக் குழந்தைகள் படும் வேதனைகளையும் துன்பங்களையும் வதைகளையும் கண்டு வெம்பிவெம்பி வெதும்பி ஆற்றாது அரற்றி அழும் பாங்கும், தனது உள்ளக் குமுறல்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள எத்தனிக்கும்முயற்சியும் மற்றவர்களின் பாராமுகம் கண்டு சீற்றங்கொள்ளும் இயல்பும், உள்ளத்தை உலுக்கியெடுக்கும் சோகக் குமுறலும் அவரது கவிதைகளில் மேலோங்கிக் காணப்படுகின்றன.
அவரது கவிதைகளின் பெரும்பகுதி தோட்டத் தொழிலாளர்களின் சோக வரலாற்றையும் துன்பியலான வாழ்க்கைப் போராட்டங்களையும் சித்திரிப்பதாகவும் கவிஞரது உட்குமுறலாகவும் விளங்குகின்றது. "தேயிலைத் தோட்டத்திலே" என்னும் தொகுதியின் இறுதியில் அமைந்துள்ள பாடல்கள் கவிஞரது வெளிக் குமுறல்களாகவும் எதிர்காலத்தை நம்பிக்கையோடும் தீரத்தோடும் நோக்குபவையாகவும் தூங்கிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களைத் தட்டியெழுப்பி அவர்களுடன் தாமும் ஒருவராக நின்று எழுச்சி காண முனைவதாகவும் அமைந்துள்ளமை, கவனிக்கத்தக்கது. இவற்றின் பரிணாமத்தை "ஆத்திரப் பரம்பரை"யினரின் கவிதைகளில் தெளிவாகக் காணலாம்

கவிதை 173
சி.வி. வேலுப்பிள்ளை தமது கவிதைகளில் ஆத்திரத்தையோ எரிமலைக் குமுறலையோ, புரட்சிக்கனலையோ அதிகம் வெளிப்படுத்தா விடினும் தொழிலாளர்களின் அவலங்களையும் கையறு நிலையையும் அவற்றுக்குக் காரணமானவர்களின் அரக்கத்தனத்தையும் வெளியிடும் பாங்கினால் படிப்போரது உள்ளங்களில் தொழிலாளரின் மீது பரிவையும் அவர்களது இரங்கத்தக்க நிலைக்குக் காரணமானவர்கள் மீது வெறுப்பையும் அடங்காச்சினத்தையும் புரட்சிக் கனலையும் மூட்டியுள்ளார் என்பதில் ஐயமில்லை. படிப்பவர் கண்களில் நீரைத் தேக்கிடும் சோக கீதமே அவரது அதிகமான பாடல்களில் மேலோங்கிக் காணப்படுகிறது.
பாவப்பட்ட மக்களாகிய தோட்டத் தொழிலாளர் வாழ்வு இருள் மயமானது துன்பம் நிறைந்தது வேதனை மிக்கது அவலம் சூழ்ந்தது சோதனைகள் நிறைந்தது. ஆயினும், அவர்களிடம் வாழ்க்கை பற்றிய அவநம்பிக்கை கிடையாது எத்துணைர் கேடுகள் மலியினும் வாழ்ந்தே திருவோம் என்ற துடிப்பும், எதனையும் எதிர்கொள்ளும் தீரமும் மேலோங்கிக் காணப்படுகின்றன.
மேற்கண்ட அவர்களதுநிலைமைகளையும் அவர்களுக்குத் தோட்ட அதிகாரிகள் இழைக்கும் கொடுமைகளையும் தோட்டங்களில் வாழ்க்கைப் போராட்டம் நடாத்தும் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் முதலியோரது நிலையையும் அடுக்கடுக்காகத் "தேயிலைத் தோட்டத்திலே" என்னும் நூலின் முற்பகுதியில் வெளிப்படுத்தியுள்ள கவிஞர், நூலின் பிற்பகுதியில் இருள்மயமான அவர்களது வாழ்வில் நம்பிக்கையையும் இடையிடையே ஒளியையும் நல்கும் இறை நம்பிக்கையையும், சமயச் சடங்குகளையும் அவர்கள் போற்றும் அருங்கலைகளையும் அற்புதமான முறையில் ஒருசில பாடல்களில் இரத்தினச் சுருக்கமாகக் காட்டியுள்ள திறன் போற்றத்தக்கதாகும் அறுபத்துநான்கு பக்கங்கள் கொண்ட "தேயிலைத் தோட்டத்திலே" என்னும் இச்சிறு நூலில், "அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திக் குறுகத்தறித்த" பாடல்களாக அவை அமைந்துள்ளமை விண்டுரைக்கத்
தககது

Page 89
174 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
இப்பாடல்களின் மூலம் இலங்கையில் தனியொரு உலகமாகத் திகழும் தோட்டப் புறங்களையும் அவற்றின் இயக்கங்களையும் அதன் சமூக அமைப்பினையும் ஏற்றத் தாழ்வுகளையும் நன்மைதீமைகளையும் அராஜகத்தையும் அற்புதமான முறையிற் கண்முன் நிறுத்திக் காட்டுகின்றார். தொழிலாளர்களின் குடியிருப்புகளாக விளங்கும் "லயன்கள்" அதற்கு எதிரிடையாக விளங்கும் துரைமாரின் "குட்டி இங்கிலாந்து" எனத்தகும் மாளிகைகள், அவற்றைச் சூழ்ந்துள்ள பூந்தோட்டங்கள், தோட்ட அதிகாரிகளின் வதிவிடங்கள் முதலியவற்றை யெல்லாம் ஒருசில சொற்களிலோ சொற்றொடர்களிலோ கச்சிதமாக வருணித்துள்ளார். m
"மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிதே" என்பது போல தேயிலைத் தோட்டத்திலே என்னும் நூல் அளவிலே சிறிதாயினும் கருத்தாழம் மிக்கது. இதில் அமைந்துள்ள கவிதைகள் கவிஞனின் வெறுமனே கற்பனைக் களஞ்சியமல்ல, தோட்டத் தொழிலாளர் பற்றிய கவிதைகளாக வழத்தெடுக்கப்பட்ட சிறந்ததொரு வரலாற்றுக் களஞ்சியமாகும். இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு கவிதைப் பகுதியும், தோட்டத் தொழிலாளரினது வரலாற்றின் ஒவ்வொரு அத்தியாயமாக விரியத்தக்கவை. ஆயினும் இச்சிறு நூலில் அவ்வாறு விரிவாகவும் சான்றாதாரங்களுடனும் ஆராய்வதற்கு இடமில்லை.
சிவி வேலுப்பிள்ளை தோட்டத் தொழிலாளர்மீது கொண்டிருந்த தீவிர பாசத்தினால் அவரையும் அறியாமலே அவரது கவிதைகளின் பல இடங்களில் தொழிலாளர்களை விளிக்குமிடத்து என் மக்கள், எனது உறவுகாண்மனிதர் சத்தியமனிதர், உத்தமர் என் தமிழ் ஆடவர் என் தமிழ் மக்கள், எந்தையர் என்முந்தையர் என் இனத்தார், எம்மவர் என் இனக்காதலர் என் இன மணிதர் என் மனிதர் எனக் குறிப்பிட்டுச் செல்லுதல் சிந்திக்கத்தக்கது.
இலங்கையின் ஏனைய சமூகங்களது குழந்தைகள் - சிறுவரின் நிலையைத் தொழிலாளர்களது குழந்தைகள் - சிறுவரின் நிலையோடு ஒப்பிடும்போது அவர்களது இரங்கத்தக்க நிலை மனித நேயம்பூண்ட

கவிதை 175
ாவரையும் உறுத்துவதாகவே, அன்று தொட்டு இன்றுவரை காணப்படுகிறது. அக் குழந்தைகள் - சிறுவர், ஏடறியார் எழுத்தறியார் பிறந்தநாள் வாழ்த்தறியார் "கேக்" அறியார் எண்ணெய் காணாத்
தலையினர் என்றோ குளித்த அழுக்கு உடம்பினர் காட்டெலி கோழிகள் போன்று சேற்றிற் புரள்பவர். யார்தான் இவர்களது நலன் பற்றிச் சிந்திப்பவர் என அக்குழந்தைகளது பரிதாபநிலையை அடுக்கிச் செல்லும் கவிஞர் இறுதியில் அவர்களது குழந்தைப்பருவம் கடந்ததும் எத்தகைய நிலையை அடைகின்றனர் என்பதை மனக் குமுறலுடன்,
"எழுத்தறிவில்லா இத்தகை வளர்ச்சியால் இவர் எதிர்காலம் கனவென ஆயினும்
அழித்தெழுதாதவோர் ஆக்கினை போல அலவாங்கு முள்ளு மண்வெட்டி, கைரந்தியே
வியர்வை வழத்து கூலியாய் உழைத்து வெறுமையுள் நலிந்து வீழ்வ தெல்லாம்
துயரக் கதையிலும் துன்பக்கதை, அதைத் தொனிக்குதே பேரிகைத் துடிஒலிக் குமுறல்"
என வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு நெஞ்சத்தைத் துணுக்குறச் செய்வதாகும்

Page 90
176 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
ஆணாதிக்கம் மேலோங்கியுள்ள எந்த ஒரு சமுதாயத்திலும், பெண்கள் நிலை அனுதாபத்துக்குரியதாகவே காணப்படுகிறது. வசதிகளும் வாய்ப்புகளுமற்ற ஏழைப் பெண்களது நிலை பரிதாபத்திற்குரியதே. ஆயின், தோட்டத் தொழிலாளப் பெண்களின் பரிதாப நிலையோ இவற்றிலும் பலமடங்காகும் தோட்டங்களில் நாள் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய கடின உழைப்பு வறுமைக் கொடுமை குடும்பச் சுமை, பொறுப்பற்ற கணவன்மாரின் ஊதாரித்தனம், இத்தனைக்கும் ஈடுகொடுத்தாலும் தோட்ட அதிகாரிகளின் இம்சைகளிலிருந்து தப்ப முடியாத பரிதாபநிலை, தமது இச்சைக்கு இடம்கொடாத பெண்களைப் பல்வேறு வழிகளிலும் பழிவாங்க முயலும் தோட்ட அதிகாரிகளின் கொடுமைகள் முதலியவற்றால் உள்ளம் வெதும்பிக்குமுறும் பெண்களின்நிலை மலையகத்தின் ஏனைய இலக்கிய கர்த்தாக்களை ஈர்த்தது போல்வே சிவ் வேலுப்பிள்ளை அவர்களையும் மிகுதியாக ஈர்த்துள்ளதைக் கவனிக்கலாம்
அவரது கவிதைகளில் தொழிலாளப் பெண்களின் பரிதாபநிலை கணிசமான இடத்தைப் பெற்றுள்ளது.
"umompsivuuestió es6mflešas
62 167Tmipigil6llió Glasnygriaus
மயக்கிக் கவர
மாட்சிசேர்கரங்களும்
கலைநடம் பயிலக்
கைவிரல் பத்தும்
கண்ணிமைப்பதனுள்
கைகொளக் கொய்வதும்
இலைகள் இரண்டும்
மொட்டொன்றாமே
இலைகள் இரண்டும்
மொட்டொன்றாமே i2

ãወih።m 177
என அவர்களது தொழில் திறமையையும் நுணுக்கத்தையும்
அதனால் ஏற்படும் மலையகத்தின் வளத்தையும் புகழுங் கவிஞர் தொடர்ந்து,
"பளுவைத்தாளாது பட்டுடல் நொந்து பாவையர் முகமெலாம் வியர்வையே சிந்த
உளமும் ஏங்கி ஒருவர் பின் ஒருவராய் ஒடுங்கியே நிறுவை முறையினை மேவும்
நேரம் நோக்கி நின்று நின்று நினைப்பும் சோர்ந்து நலிவரே, இவர்தம்
பாரம் உள்ளப் பார மோ!உலகப் பார மேr - பாரே பகரவும் கூடும் i
என அவர்கள் படும் வேதனைகளை எண்ணி ரங்கிம் குமுறுகின்றார்.
கொழுந்தெடுக்கச் செல்லும் போது சரியான நேரத்துக்குச் சமூகமளிக்க வேண்டும் பெற்றெடுத்த குழந்தைக்குப்பாலூட்டித்துயிலச் செய்வதாலோ ஒட்டமும் நடையுமாகச் செல்லும் போது இடையிலே கால் இடறி வீழ்ந்தாலோ சிறிது நேரம் தாமதித்துச் சென்றாலும் தப்பித்தவறி ஓரிரு முற்றிய இலைகளைப் பறித்திருந்தாலும் அதிகாரிகளின் காம இச்சைக்குப் பலியாக மறுத்தாலும் அவர்களுக்கு ஏற்படும் கதியைப் பின்வருமாறு குமுறலுடன் வெளிப்படுத்துகின்றார்

Page 91
178 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
இப்பழ என்றில்லா இழிந்த வார்த்தையால் எத்தனை வசவுகள் எத்தனை அந்தநாள் -
வேலைத்தளத்திலே Ga/6D60 gliost 6760r வீட்டை நோக்கி
விரட்டப்படுவரே 4.
தோட்ட அதிகாரிகளின் வசைமொழிகளாலும், மனிதாபிமானமேயற்ற நடத்தைகளாலும், வேலைத்தளத்திலிருந்து திரும்புகையில் வெட்கமும் துயரமும் வேதனையும் கூரிய முட்களாக உள்ளத்தைத் துளைத்த போதும் குடும்பப் பணிகளினால் அவற்றை மறந்து நித்தமும் வாட்டியெடுக்கும் வறுமைக் கொடுமையிலும் கணவன், குழந்தைகள், பெற்றுவ்ளர்த்த முதியவர்கள் முதலியோர் மீது கொண்ட பாசத்தினால் இரவோடிரவாகச் சமையல் வேலையையும் பிற கருமங்களையும் செய்தபின் 'இவளுடல் சோர்வால் தரையிலே பழம்பாய் தனில் விழுந்தயருமே" எனத் தொழிலாளப் பெண்களின் நாளாந்தக் கடமைகளையும் அவர்களது இரங்கத்தக்க நிலையையும் உள்ளத்தை உருக்கும் வகையில் வெளிப்படுத்தும் கவிஞர், அத்துடனமையாது அவர்களது அவலங்களின் உச்சநிலையைப் பின்வருமாறு ஏக்கத்துடனும் விம்முதலுடனும் புலப்படுத்தியுள்ளமை ஊன்றி நோக்கத்தக்கது.
'. மனம் விரும்பாத
மங்கையர்தம்மை அற்பர்களான அதிகாரிகளே
கற்பைக் கெடுக்கும் காமப் பேய்களாய்."

o saflewog 179
எழில்மிகு குமரியர் வாழ்வைக் கெடுப்பதை இங்கவர்சீவியம் பாழ்படச் செய்வதை
பொழியும் வானமும் அன்னைபூமியும் பொறுக்குமோ உள்ளம் பொறுக்குமோ - அந்தோ!
கற்பிழந்து கண்ணிர்வடித்துச் சொற்ப கைமதிப்புச் சுகமெலாம் இழந்து
அற்பப் பரத்தை என்று அவச் சொற் கேட்டு அழிந்த பெண்மையும் போயதே நூறாண்டும் -
போயதே கொடியதாய்ப் போயதே! அந்தநாள் போயினும் அத்துயர்க் குமுறலும் இந்தநாள்
ஓயா முரசத்து ஒலித் துடிப்புள்ளே மாயா உணர்வெனக் குறித்திடல் கேண்மினோ! ச5
சோகச் சித்திரமாக அமைந்துள்ள இப்பாடற் பகுதிகள், பாரதியின் "கரும்புத் தோட்டத்திலே" என்னும் பாடற் பகுதிகளை நினைவூட்டுவ தாகவும் சிவி வேலுப்பிள்ளையின் கவித்துவ ஆற்றலைப் புலப்படுத்து வதாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Page 92
180 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
குத்துளி கோடரி சுத்தியல் அலவாங்கு மண்வெட்டி முதலியன கொண்டு காட்டிலும் மேட்டிலும் மலையிலும் மடுவிலும் வஞ்சகமின்றி வாழ்நாள் முழுவதும் கடின உழைப்பை மேற்கொண்டு நாட்டை வளம்படுத்தியும் பிறரை வாழவைத்தும் பணிகள் புரிந்த தொழிலாளர்களுக்குக் குடியிருக்கச் சொந்த வீடில்லை; அடிப்படை உரிமைகளுமில்லை என ஏங்கும் கவிஞர் வியர்வையைக் கொட்டி இரத்தம் சிந்தித் தொழிலாளர்கள் மேற்கொண்ட கடின உழைப்பினால்,
'யாரோ சிலரின்
மோட்ச வாசமாய்
ஆச்சுதே இந்த
அழகிய பூமி
யாரோ சிலரின்
சுவர்க்க இன்பமாய்
ஆச்சுதே என்மக்கள்
ஆக்கிய பூமி" 花
எனக் குமுறுகிறார். அத்துடனமையாது
"கூலிகள் என்னும் கொடியதோர் கொடுமையைக் குலத்தின் பரம்பரைச் சொத்தென இங்கே பாலிப் பாரைப் பரவசப்படுத்தும் பகட்டு மனிதர்க்கும் பகட்டு மனிதர்க்கும்
விடுதலைப் பேச்சோ" 7ל
எனச் சிறியெழுவதையும் காணலாம்

கவிதை 181
தோட்டத் தொழிலாளர்களுக்குள்ளேயே மிகப்பமிகப் பரிதாபத்திற் குரியவர்கள் முதியவர்கள் வாழ்நாள் எல்லாம் மாடாக உழைத்து உடல் நலம் குன்றிய நிலையில் அவர்களுக்கு வேலை வழங்கப்படமாட்டாது ஓய்வூதியமும் கிடையாது பெரிய துரையோ சின்னத் துரையோ சிறிதேனும் இரக்கம் காட்டார் யாரிடமும் உதவி ஏதும் கேட்க முடியாது இந்நிலையில் வெதும்பிய உள்ளத்துடனும் வேதனைத் தீயுடனும் நாதியற்றுத் தெருத்தெருவாகப் பிச்சையேற்றும் வீதிகளில் உறங்கியும் இறுதியில் தேயிலைச் செடிகளுக்கே உரமாவர் என்பதை
"பழுத்த வயதுடைப் பொக்கை வாய்க்கிழவரின் பாழ்பட்டிருக்கும்
நிலையை நோக்கிலோ
எனத் தொடங்கிச் சோகச் சித்திரமாகத் திட்டியுள்ளார். இப்பாடற்
பகுதிகள், இடையிடையே பட்டினத்தாரின் "உடற்கூற்று வண்ணம் என்றும் பாடற்பகுதிகளை நினைவூட்டும் வகையிலும் அமைந்துள்ளன.
இன்றைய தோட்டத் தொழிலாளர்களின் மூதாதையர் தென்னிந்தியாவிலிருந்து மலையகத்திற்குப் புலம்பெயர்ந்தபோது அறுபவித்த சொல்லொணாத் துயரங்கள், கொடுமைகள், ஏற்பட்ட உயிர் உடைமை இழப்புகள், ஆள் சேர்க்கும் கங்காணிமாரும் பிறரும் அவர்களுக்கு ஆசைகாட்டி மோசம் செய்தமை, மலையகத்தைச் சேர்ந்தபின் அவர்கள் அனுபவித்த கொடுமைகள், இன்னல்கள், சோதனைகள், வேதனைகள் முதலியவற்றுக்கு மத்தியிலும் அடர் காணகமும் கொடிய வனவிலங்குகளும் நிறைந்த மலையகத்தைச் செல்வச்செழிப்புமிக்க பெருந்தோட்டங்களாக மாற்றியமை நகரங்களையும் கிராமங்களையும் உருவாக்கிப் பிரதான போக்குவரத்துப் பாதைகளை அமைத்தமை என அவர்களது மகத்தான பணிகள் நீண்டுசெல்லும் இவற்றுக்காக அவர்கள் செய்த தியாகங்கள் அளப்பில. இத்தனைக்குப் பின்பும், அடிப்படை வசதிகளேதுமற்ற வாழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டமை, அவர்களது பிரஜா உரிமை மறுக்கப்பட்டு நாடற்ற

Page 93
182 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
அநாதை நிலைக்குள்ளாக்கப்பட்டமை முதலியவற்றைத் திரைப்படக் காட்சிபோல் அற்புதமான முறையில் சோகச் சித்திரமாகத் தீட்டியுள்ளார்.
தொழிலாளர்களின் இருள் குழ்ந்த வாழ்வில் இடையிடையே ஒளியேற்றுபவையாகவும் அமைதியும் இன்பமும் சாந்தியும் அளிப்பவையாகவும் தைப்பொங்கல் புத்தாண்டு கோயில் திருவிழாக்கள் முதலியன விளங்குமாற்றையும் நாடற்ற அநாதைகளாக்கப்பட்ட போதும் அவர்கள் வளர்த்துவந்த பல்வேறு கலைகளையும் வஞ்சகமும் குதுவதும் அற்ற அவர்களது இறைநம்பிக்கையையும் அவர்கள் மத்தியில் இடம்பெற்ற சமயாசாரங்கள், சடங்கு முறைகள் முதலியவற்றையும் மிகவும் கச்சிதமாகத் தமது கவிதைகளிலே சிறைப்படுத்தியுள்ள திறன் வியப்பினையூட்டுவதாகும்
தொழிலாளர் மத்தியில் இடம்பெறும் பல்வேறு வகையான கொண்டாட்டங்கள், பல்வேறு வகையான இசைக்கருவிகள், கூத்து வகைகள், கலை நிகழ்ச்சிகள் முதலியவற்றை ஒன்று விடாமல் காட்டியிருக்கும் திறன், குறிப்பிடத் தக்கது. அதேசமயம் அவற்றின் மீதான கவிஞரின் மிகுதியான பரிச்சயத்தையும் அக்கவிதைகள் புலப்படுத்துவதாக விளங்குகின்றன. மேற்கண்டவாறெல்லாம் கூறிச் செல்லும் கவிஞர், சாந்தியும் மகிழ்ச்சியும் தரும் இத்தகைய கொண்டாட்டங்களின் பின் ஏற்படும் யதார்த்த நிலையை
"போலி மகிழ்ச்சிக்
கனவெனஇவைகள்
கேலிக் கூத்தாய்ச்
சென்றபின் இங்கே
மனதும் நொடிப்பர்
மகிழ்வும் இழப்பர்
கனவோ இவை எனக்
கண்ணிர் உகுப்பர் 19
என இரத்தினச் சுருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

கவிதை 183
தோட்டத் தொழிலாளர்களை மாட்டு மந்தைகளாக நடத்தி, அவர்களது உழைப்பினைக் கொடூரமாகச் சுரண்டிக் கொழுத்த தோட்டத்துப் பெரிய துரைமார், சின்னத் துரைமார், பிற அதிகாரிகள் முதலியோரது ஆடம்பர வாழ்வு தோட்டங்களில் அவர்கள் வைத்ததே சட்டம் செய்வதே நீதி என்ற நிலையில் அவர்களது சர்வாதிகாரப்போக்கு அவர்களது ஆடம்பரமிக்க குடியிருப்புகள் முதலியவற்றைக் கச்சிதமாக வழத்துச் செல்லும் கவிஞர், இறுதியில் இவ்வாறெல்லாம் தோட்டி அதிகாரிகளும் பிறரும் சிறந்து விளங்கத் தமது வாழ்வை நூறாண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணித்த தோட்டத் தொழிலாளரின் மாற்றமடையா வாழ்க்கை நிலையை
"பெருமூச்சுடனும் சிறுநகை யுடனும் பெருஉழைப்புடனும் சிறு ஓய்வுடனும்
ஒரு முகமாக பலப்பல மாற்றம் உவந்தும் தவழ்ந்தும் ஒழ மறைநதன.
என உளம் சாம்புகின்றார்.
"தேயிலைத் தோட்டத்திலே " என்னும் தலைப்பிலமைந்த கவிதைகளின் பெரும்பகுதியில் நாம் காணும் சிவி வேலுப்பிள்ளையை அதன் இறுதிப் பதினெட்டுப் பாடல்களிற் காணமுடியவில்லை. அப்பாடல்களில் நாம் கானும் சிவி வேலுப்பிள்ளை பெருமளவிற்கு வேறானவராகத் தோற்றம் தருகின்றார். நாம் முதலிற் காணும் சிவி வேலுப்பிள்ளை, சாந்த மூர்த்தி அன்பும் அருளும் அழகும் இரக்கமும் ஊற்றெடுத்தோடும் மெல்லுள்ளம் படைத்த கவிஞன் பொறுமையின் சிகரம் ஆயின், இறுதியிற் காணும் சிவி வேலுப்பிள்ளை இவற்றுக்கு மறுதலையானவர். பொறுத்துப் பொறுத்துப் பொறுக்க முடியாத நிலையில்

Page 94
184 Alaimir máj záludšákutá
வெடித்துக் குமுறத் தொடங்கும் எரிமலையையும் கொடுமைகளுக்கும் அதிகளுக்கும் எதிராகச் சிறியெழும் வெஞ்சினக் கவிஞனையுமே நாம் காள்கிறோம்
இறுதிப் பதினெட்டுப் பாடல்களிலும், தொழிலாளர்களின் எழுச்சிமிக்க எதிர்காலம்பற்றிய கவிருனின் அசைக்க முடியாத நம்பிக்கை என்றும் பிரகாசம் முதலில் மெல்லிய ஒளிக்கிறாகத் தொடங்கி பாடல்கள் தோறும் படிப்படியாக அதிகரித்துச் சென்று இறுதியில்
"கட்டி வதைக்கிலும்
சுதந்திரத்தீச்சுடர்
கனலின் எழுச்சியை
அழிக்கவும் போமோ?
ஆம்பினைச் சம்மட்டி
அறைய எழுந்தி
ஆப்பின் அறைக்கும்
அடங்குவதாமோ?
garnú A.
தெறிக்கும் தீப்பொறி
தொடராது போமா?-ஆனால்

கூறுவர் சிகர உச்சியில் ஏறிக் கூறுவர் திடல்கள் ursilög (06)ä66u
விடுதலைக் குரலது வெற்றிக் குரலது வீரக் குரலது விரைந்தெழும் கேட்பீர்!
அடிமை நிலையை அகற்றவும் அழைக்கும் அன்புக் குரலது அன்பரீர் கேட்பீர்
வாக்குரிமையோடு வளநாட் டுரிமையும் ஊக்கமும் வெற்றி ஒம்பிடும் காலம்
பூக்குமேயந்தப் புண்ணிய நாள்தனில் ஆக்கம் புரிந்தவர் அமைதி இழந்தவர்
மூச்சிலே சுதந்திரத் திருக் கலந்திடுமே மூச்சிலே விடுதலைச் சுகம் மலர்ந்திடுமே
பேச்சிலே வீரமும்
உறுதியும் மாட்சியும் பிறந்திடும் வெற்றிப் பெருவாழ்வாமே. 2
என நம்பிக்கைப் பேரொளியாக மாறுவதை அவதானிக்கலாம்

Page 95
188 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
இப்பாடல்களில் சிவி வேலுப்பிள்ளையின் விடுதலைக்கிதத்தை மட்டுமன்றி எதிர்காலம் பற்றிய தீர்க்கதரிசனத்தையும் நம்பிக்கையையும் காணலாம். 1952ம் ஆண்டு கவிஞன் கண்ட கனவு இன்று படிப்படியாக நனவாகிக் கொண்டிருக்கிறது எம்மையுமறியாமலே இப்பாடல்கள் பாரதியின் கவிதைகளை ஞாபகப்படுத்துகின்றன. பாரதியின் தீர்க்க தரிசனங்களும் நம்பிக்கைகளும்நிறைவேறிக் கொண்டிருப்பது போலவே சிவி வேலுப்பிள்ளை என்ற கவிஞரின்நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் எத்தனையோ இடையூறுகளின் மத்தியிலும் நிறைவேறிக் கொண்டிருப்பது அமரராகிவிட்ட அன்னாரது ஆத்மாவுக்குச் சாந்தியளிப்பதாகும். மேலும் இப்பாடல்கள், 1960 -களிலிருந்து மலையக இலக்கிய உலகில் ஏற்பட்ட வீறார்ந்த புதிய வளர்ச்சிப் போக்குகளுக்குக் கட்டியம் கூறுவனவாகவும் அமைந்துள்ளதைக் காணலாம்.
"தேயிலைத் தோட்டத்திலே" என்றும் தலைப்பிலமைந்துள்ள இப்பாடற் பகுதியின் அமைப்பினைக் க்ர்ந்து நோக்கும்போது கவிஞர் எவ்வாறு திட்டமிட்டு அமைத்துள்ளார்என்பது புலப்படும் 1952ம் ஆண்டே இப்பாடல்கள் வெளிவந்து விட்டமையால் அதன்பின் மலையகத்தில் இடம்பெற்ற மாற்றங்கள், முக்கிய சம்பவங்கள் ஆகியன இவற்றில் இடம் பெறவில்லையென்பது மனங்கொளத்தக்கது
சிவி வேலுப்பிள்ளையின் ஏனைய கவிதைப் பகுதிகள் என்ற வகையில் விஸ்மாஜனி'என்னும் பாநாடகமும் வழிப்போக்கன்’ என்னும் வசன கவிதைத் தொகுப்பும் குறிப்பிடத்தக்கவை. இவையற்றிப் பின்னர் நோக்கப்படும்
குறிஞ்சித் தென்னவன்
மலையகக் கவிதை உலகிற் சிவி வேலுப்பிள்ளைக்கு அடுத்த நிலையில் விளங்குபவர் குறிஞ்சித் தென்னவன். மலையகத்தில் தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து வளர்ந்து ஒருபுறம் தொழிலாளியாகவே வாழ்ந்துகொண்டு மறுபுறம் இலக்கிய கர்த்தாவாகப் பரிணமித்துக் கொண்டும் விளங்கும் மிகச் சிலருள் குறிஞ்சித் தென்னவன்

கவிதை 187
முதன்மையிடம் வகிக்கின்றார். சிவி வேலுப்பிள்ளையின் கவிதைகளது தொடர்ச்சியையும் வளர்ச்சியையும், இவரது கவிதைகளில் மிகத் தெளிவாகக் காண முடிகின்றது. இவர் மரபுக் கவிதை உலகிலேயே கூடுதலான பங்களிப்புச் செய்துள்ள போதும் புதுக் கவிதை, குறும்பா முதலியவற்றிலும் பரிசோதன்ை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். வில்லுப்பாட்டுகளையும் கும்மி, கோலாட்டப் பாடல்களையும் சில நாடகங்களையும் இயற்றியுள்ளார். இவர் எழுதியுள்ள நாடகங்களுள்
"ஒருநாள் கூத்து" "வீடோ வீடு"ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
நுவரெலியா லபுக்கலைத் தோட்டத்தின் மேற்பிரிவிற் பிறந்து வளர்ந்து, தொழிலாளியாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இவரது இயற்பெயர் விஎஸ் வேலு என்பதாகும் "துயரம் தோய்ந்த குடும்பச் சூழலிற் பிறந்து அச் சூழலிலேயே இன்றுவரை வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறேன். * Tar அவரே கூறுவார். இதனையே
அவா,
f
--- பாலும் பழமுமா உண்டு வளர்ந்தேன்? பஞ்சனையிலா உறங்கி எழுந்தேன்? கூழும் இன்றி பசியில் துடித்தேன்! கிழிந்த படங்கில் உறங்கி வளர்ந்தேன்?
எனக் கவிதையாகவும் வழத்துள்ளார்.
இவர் தோட்டப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புவரையே கற்றவர். 1934ம் ஆம் ஆண்டுபிறந்த இவர்1946ம் ஆண்டில் வறுமை காரணமாகக் கல்வியைத் தொடர முடியாத நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுத் தோட்டத் தொழிலாளியாகவே தமது வாழ்வை மேற்கொண்டு, இன்றுவரை முதுமையடைந்த நிலையிலும் தொழிலாளியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Page 96
188 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
"உழுதுண்டு வாழ வழியில்லை; தொழுதுண்டு பின்செல்லவும் மனமில்லை. தோட்டத் தொழிலாளியானேன்." 24 என்கிறார். தோட்டப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரையே படித்த இவரை, மலையக கலை-இலக்கியச் சூழலும் அவரிடம் இயல்பாகவே குடிகொண்டிருந்த கவித்துவ உள்ளமும், ஆர்வமும் இலக்கிய உலகில் நுழைய வைத்தன. தமது இருபத்தாறு வயதிற்குள் சுமார் நூறு கவிதைகள் வரை இயற்றியுள்ளார். எனினும், 1960 -களில் மலையகத்தில் ஏற்படத் தொடங்கிய மாற்றங்களே, இவரை ஆழமான சமூகப் பார்வை கொண்ட விறார்ந்த கவிஞனாகப் பரிணமிக்கச் செய்தது எனலாம். இவரது விறார்ந்த கவிதைகளால் பலமுறை தோட்ட அதிகாரிகளின் அடக்குமுறைக்கு ஆளாகித் தொழிலையும் இழந்து தோட்டத்தைவிட்டு வெளியேற்றப் பட்டார்; பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார். இவரைக் கொலை செய்வதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது
ஏறத்தாழ எழுபது கவியரங்குகளில் பங்கு பற்றியுள்ள இவருக்கு 1987ம் ஆண்டில் "கவிச்சுடர்" பட்டமும் 1991ம் ஆண்டில் தமிழ்மணி" பட்டமும் இந்து சமய கலாசார அமைச்சினால் வழங்கப்பட்டன.
தமிழ் இலக்கிய உலகிலேயே குறிஞ்சித் தென்னவனைப் போன்றோர் மிக அரிதாகவே உள்ளனர் என்பதை நாம் மனங்கொளல் வேண்டும். பாரதி, புதுமைப்பித்தன் முதலியோரும் வறுமையில் வாடியவர்களே. எனினும் அவர்கள் பிறந்து வளர்ந்த குழ்நிலையும் கற்ற கல்வியும் நகரப்புற வாழ்வும் மேன் மக்களது தொடர்புகளும் நண்பர்களது உதவிகளும் அவர்களது உன்னத முயற்சிகளுக்குப் பக்க பலமாக விளங்கின. இலங்கையின் வடபுலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்பிறந்து வளர்ந்து ஆரம்பக்கல்வியுடன் படிப்பை முடித்துக்கொண்டு இலக்கிய உலகில் நுழைந்த டொமினிக் ஜீவா, டானியல் முதலியோரும் யாழ்ப்பான நகரிலேயே நீண்டகாலம் வாழ்ந்தனர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பெற்றோரின் தொழிலையும் இடையிலே கைவிட்டனர். கற்றறிந்தவர்கள், பல்கலைக் கழகங்களைச் சேர்ந்தோர், பிரபல எழுத்தாளர்கள் காணப் பலதரப்பட்டவர்களது தொடர்புகளும் உற்சாகமும் உதவிகளும்

கவிதை 189
அவர்களுக்கு எப்பொழுதும் தூண்டுதலாக விளங்குகின்றன. தாம் வாழ்ந்து கொண்டிருக்கும் குழலுக்கப்பால் வெளியுலகத் தொடர்புகளும் அதிகம்
இதுபோன்றே மலையக இலக்கிய உலகிற் பிரகாசிக்கும் கோ.
நடேசய்யர், சி.வி வேலுப்பிள்ளை, தெளிவத்தை ஜோஸப் மாத்தளை வடிவேலன், சாரல்நாடன், மலரன்பன் முதலியோர் தொடக்கம் இன்றைய இளைய தலைமுறையினரான முரளிதரன், நித்தியானந்தன் முதலியோர் வரை, பலரும் ஓரளவாவது வசதிவாய்ப்புகளும் நண்பர்களது உதவிகளும் வாய்க்கப் பெற்றவர்கள். மேற்கண்ட யாவரதும் வாழ்க்கைச் சூழலிலிருந்து வேறுபட்ட குடும்பச் சூழலையும் வாழ்க்கைச் சூழலையும் கொண்டவர்,
குறிஞ்சித் தென்னவன். எத்தகைய வசதிவாய்ப்புமற்ற குடும்பச் சூழலிற் பிறந்து வளர்ந்து வறுமையில் உழன்று அருமை மகளையும் பறிகொடுத்து மாய்ந்து கொண்டிருப்பவர். வசதி படைத்தோரின் ஆதரவோ,
தூண்டுதலோ கிடையாது. அன்றாடம் அடுப்பெரிக்கத் திண்டாடுபவர்.
பிறரை ஏமாற்றத் தெரியாது. பலராலும் ஏமாற்றப்பட்டவர்.
புனைகதை இலக்கியம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ள இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் கூட, கவிதை இலக்கியம் வடிவமாற்றங்கள் சிலவற்றைப் பெற்று மீண்டும் மீண்டும் புத்துயிர்ப்புப் பெறுவதை அவதானிக்கலாம். கடந்த இரு தசாப்த காலத்துள் இலங்கையின் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் அதிக முனைப்புப் பெற்றுள்ள நிலையில், கவிதை இலக்கியம் மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பாகக் கடந்த இருபது ஆண்டுகளுள் ஈழத்துக் கவிதை இலக்கியம் புதிய பரிமாணங்களையும் பரிணாமத்தையும் பெற்று வருவதையும் கணிசமான அளவு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளமையையும் பெண் கவிஞர்கள் பலர் அதிக பங்களிப்புச் செய்வதையும் அவதானிக்கலாம். இவ்வகையில் 1985 ம் ஆண்டு வெளிவந்த "மரணத்துள் வாழ்வோம்" என்னும் கவிதைத் தொகுதி விதந்து கூறத்தக்க தொன்றாகும் குறிஞ்சித் தென்னவனின் கவிதைகளுள் ஒரு பகுதி 'குறிஞ்சித் தென்னவன் கவிதைகள்" என்ற

Page 97
190 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
தொகுப்பாக 1987 ம் ஆண்டு வெளிவந்துள்ளது. இத் தொகுதியுள் அடங்காத அவரது தரமான கவிதைகள் பல சஞ்சிகைகளிலேயே உறங்கிக் கொண்டிருக்கின்றன.
"நான் ஒரு தோட்டத் தொழிலாளி நான் படித்தது தோட்டப் பாடசாலையில், அதுவும் ஐந்தாம் வகுப்புவரைதான். பதினொரு வயதில் தோட்டத் தொழிலாளியாக வேலை செய்யத் தொடங்கினேன். இருபது வயதில் கவிதை எழுதத் தொடங்கினேன். இன்றுவரை, எழுதிக் கொண்டிருக்கிறேன்." 25 எனவரும் அவரது கூற்று ஆழமாகச் சிந்திக்கத்தக்கது.
நமக்குத் தொழில் கவிதை" என்றார் யுகக்கவிபாரதியார் ஆயின், குறிஞ்சித் தென்னவனோ கவிதையைத் தொழிலாகக் கொள்ளாது, சமூகக் கொடுமைகளைக் கண்டு கொதித்தெழும் உணர்வின்
வழகாம்லாகக் கொண்டார்.
"கவிதை புனைதலைப் பலர் தொழிலாகக் கொண்டிருக்கலாம். ஆனால், எனக்குக் கவிதை தொழில் அல்ல. எனது இரத்த நாளங்களில் ஒடும் உயிர்த்துடிப்பு - தீமையைக் கண்டு கொதித்தெழும் உணர்வின் வடிகால். பொழுது போக்காக மனக்கிளர்ச்சிகளின் உந்துதலால் எழுதப்பட்டவையல்லது மலைகள் அவைகளில் ஓய்வுகொள்ளும் முகில்கள்; அதன் மேனியெங்கும் பட்டொளி வீசிப் பரிமளிக்கும் தேயிலைப் பசுமைகள் அம்மண்ணின் அடியிற் புதைக்கப்பட்ட இம்மக்களின் அவலம் நிறைந்த வாழ்க்கைச் சரிதங்கள். இவை யாவும் எனது கவிதைகளின் "கருக்கள்' இவர்கள் கொட்டிய கண்ணிரும் செந்நீரும் வேதனைக் குமுறல்களும் விட்டிடும் ஏக்கப் பெருமூச்சுகளும் எதிர்காலக் கனவுத் தரிசனங்களுக்காக நிகழ்கால வாழ்வின் சுகங்களை எவரெவர்களுக்கோ அர்ப்பணித்துவிட்டு வெறுமையை அரவணைத்து ஏங்கும் நெஞ்சங்களும் எனது கவிதையின் ஜிவத்துடிப்புகள்" 29 எனக் குறிஞ்சித் தென்னவன் தமது கவிதைகள் பற்றிக் கூறியுள்ளமை இங்கு மனங்கொளத்தக்கது.

கவிதை 191
குறிஞ்சித் தென்னவனின் மேற்கண்ட கருத்துகள், அவரது கவிதைகள் முழுவதிலும் சுவறிக் காணப்படுகின்றன. மேலும் இக்கூற்று எம்மையுமறியாமல் வடபுலத்து டொமினிக் ஜீவாவையும் டானியலையும் நினைவுறுத்துவதாக அமைந்துள்ளது. வடபுலத்துச் சூழ்நிலை வேறு; மலையகச் சூழ்நிலை வேறு. எனினும் இரு பகுதியினருமே தத்தமது சமூகத்தின் ஈனநிலை கண்டு, குமுறிக் கொந்தளிக்கின்றனர்.
மலையக மக்களின் வேதனைகளையும் அவற்றின் உள்ளார்ந்த இயல்புகளையும் புரிந்து கொள்வது குறிஞ்சித் தென்னவனுக்கு அப்படியொன்றும் சிரமமானதல்ல. அவரே ஒரு தொழிலாளியின் மகனாகப் பிறந்து வளர்ந்து தொழிலாளியாகவே தொழிலாளர் மத்தியில் வாழ்ந்து அவர்களது வாழ்க்கைப் போராட்டங்களிலும் இன்ப துன்பங்களிலும் வேதனைகள், சோதனைகளிலும் ஊறித்திளைத்தவர். அத்தகைய தென்னவன், மலையகத் தொழிலாளர்களின் வேதனைகளையும் அவலங்களையும் ஏக்கப் பெருமூச்சுகளையும் இதய சுத்தியோடு பகிர்ந்து கொள்வதை அவரது கவிதைகள் புலப்படுத்துகின்றன.
கவிஞள் தென்னவன் தமது சமுதாயத்தின் எரியும் பிரச்சினைகளையோ அவலங்களையோ மக்கள் அனுபவிக்கும் சொல்லொணாக் கொடுமைகளையோ, அவஸ்தைகளையோ மறந்து வெறுமனே மன உளைச்சல்களையும், காதல் லீலைகளையும் காம விகாரங்களையும் கவிதைகளாக்கிக் கொண்டிருக்கவில்லை.
மானுட நேயம்மிக்க எந்தக் கவிஞனும் தான் வாழும் குழலில், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் திச் சுவாலையாகக் கொழுந்து விட்டு எரியும்போது, அவற்றின் வெம்மை தாங்காமல் வெந்து மடிந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் அவலங்களைப் போக்குவதிலேயே தீவிர கவனம் செலுத்துவான்;தனது முழுமையான கவிதா ஆற்றலைப்பிரயோகிப்பான். இத்தகைய பண்புகளை நாம் தென்னவனின் கவிதைகளில் ஒருங்கே காணமுடிகின்றது.

Page 98
192 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளில் ஈழத்தில் வெளியாகிய பெரும்பாலார கவிதைகளிலும் புதுக்கவிதைகளிலும் அரசியல் நோக்கு முனைப்புப் பெற்று வந்துள்ளதை நாம் அவதானிக்கலாம். கவிதைகளில் மட்டுமன்றி ஏனைய இலக்கிய வகைகளாம் நாவல் சிறுகதை, நாடகம் முதலியவற்றிலும் இப்பண்பு மேலோங்கிக் காணப்படுகிறது. பேரினவாதத்தின் வளர்ச்சி சிறுபான்மையினர் மீதான கொடுரமான இன ஒடுக்கு முறைகள், இனக்கலவரம் என்ற பெயரில் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வெறியாட்டங்கள், ஏற்பட்ட பேரிழப்புகள், ஆட்சியாளர்கள் - சிறுபான்மை இனத்தலைவர்கள் ஆகியோரின் ஏமாற்றுத்தனங்கள், ஆயுதப் போராட்டங்கள், கண்முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரழிவுகள்முதலியன இவற்றுக்கு முக்கிய காரணங்கள் எனலாம். மேற்கண்ட அம்சங்கள் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மட்டுமல்லாது, மலையகத்துக்கும் சிற்சில வேறுபாடுகளுடன் பொருந்தக் கூடியதே.
தென்னவனின் பெரும்பாலான கவிதைகள் மேற்கண்ட அம்சங்களை மிக நுணுக்கமாகப் பிரதிபலிப்பதையும் அலசி அலசிச் செல்வதையும் "குடு சொரணை"யற்றுச் "சேற்றெருமை"களாக மாய்ந்து கொண்டிருக்கும் மலையகத் தொழிலாளர்களைத்தட்டி எழுப்பி விழிப்புறச் செய்து, உண்மை நிலையை உணர்த்தி, தொழிலாளர்கள் ஒற்றுமைப்பட்டுக் கொடுமைகளுக்கெதிராகப் போராடத் தூண்டுவதையும் பிரச்சினைகளுக்கான தீர்வு மார்க்கங்களைப் புலப்படுத்துவதுடன் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க வைப்பதையும் அவதானிக்கலாம். எடுத்துக்காட்டாக "விழிதிறந்தெழுவாய்' 'பொங்கி எழுந்திடுவோம்" "புத்துலகம் படைத்திடுவோம்', 'புதுயுகம் காண எழடா" "6ի մInia org சிங்கமென" முதலிய தலைப்புகளில் அமைத்துள்ள கவிதைகள் இவ்வகையில் விதந்தோதத்தக்கவை வகை மாதிரிக்குச் சில பாடல்கள் வருமாறு:

கவிதை 193
"தேயிலை ரப்பரும் நட்டு வச்சோம் - இந்த தேசம் வளம்பெற நாமுழைச்சோம் - ஒரு நாயும் மறக்காது நன்றிமச்சான்-இந்த நாட்டு மனுசர் மறந்து விட்டார்"
'உச்சிமலையிலே வேலைசெஞ்சோம்!-அங்கு ஊத்தும் மழையிலே நனைஞ்சிருந்தோம் - சிறு குச்சி குடிசையில் வாழ்ந்திருந்தோம் - நம்ப கூட்டம் இந்நாட்டிற்குப் பாரமானோம்." 27
எனத் தொழிலாளர்களது உரைக்கொனா அவலநிலையை ஆவேசத்தோடு வெளிப்படுத்தும் கவிஞர்,
'ஒற்றுமை என்னும் வேள்விக் களத்தில் உரிமை வேட்கைக் கனலது மூட்டி; கொட்டும் குருதி நெய்யினை வார்த்து குறிக்கோள் புதுமலையகமது காணர வெற்றி முரசங் கொட்டிப் பகைமேல் வீழும் அரிமாப் போல் தொழிலாளர் கொற்றத் தவிசுகள் தூள்தூளாக கொதித்தே எழுவோம் புதுயுகம் காண்போம்" 29
எனப் போர்முரசு கொட்டி புதுயுகம் காணத்துடிக்கிறார்.
தோட்டத் தொழிலாளர்களின் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் மறுக்கப்பட்டும் அவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டும் சொல்லொணாக் கொடுமைகளுக்கும் அளவிறந்த துயரங்களுக்கும் உள்ளாகின்ற நிலையில், ஆட்சியாளரின் சர்வாதிகாரப் போக்கும் பாரபட்சமான செயற்பாடுகளும் தலைவர்களது ஏமாற்றுத்தனங்களும் அவர்களைப் பொறுமையிழக்கச் செய்து அவற்றுக்கெதிராகக் கிளர்ந்தெழச் செய்கின்றன. அத்தகைய அவர்களது கிளர்ந்தெழுகைக்கு எவ்வளவுதான் இனமுலாம் பூசப்பட்டாலும் உண்மையில் அது வெறும்

Page 99
194 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
பாசாங்கே. இத்தகைய கிளர்ந்தெழுகை மலையகத்தில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாகத் தீவிரமடைந்து கொண்டிருப்பதை நாம் நாளாந்தம் கவனிக்க முடிகின்றது.
இந்நிலையில், இப்புதிய போக்குகளை, இலக்கிய கர்த்தாக்கள் அலட்சியப்படுத்த முடியாது. இது ஒருவகையில் வரலாற்று நிர்ப்பந்தமும் கூட, இத்தகைய நிலையில் எழும் இலக்கிய ஆக்கங்களிலே தவிர்க்க முடியாதவாறு அடக்குமுறையாளர்களதும் தலைவர்களாக நடித்துத் திரிபவர்களதும் போலித்தனங்களையும் ஏமாற்று வித்தைகளையும் இரட்டை வேட வாய்ச்சவடால்களையும் முகமூடிகளையும் அம்பலப் படுத்துவதும் கண்டனம் செய்வதும் கொடுமைகளுக்கெதிராக மக்களைக் கிளர்ந்தெழத் தூண்டுவதும் அவர்களது விடிவுக்கான வழிவகைகளைப் புலப்படுத்துவதும் இடம்பெறுதல் தவிர்க்க முடியாதவையாகின்றன. 1956, 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளிலும், பிற சந்தர்ப்பங்களிலும் இடம்பெற்ற சம்பவங்களும் அவற்றினால் மலையகத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் இன்னல்களும் இழப்புகளும் இங்கு நினைவுகூரத்தக்கவை.
இவை காரணமாகப் புதிய அரசியல், பொருளாதார, சமூக நெருக்கழகளும் வெடித்துக் கிளம்பலாயின.இவற்றை மனிதநேயம்பூண்ட எந்த ஒரு இலக்கிய கர்த்தாவும் அலட்சியப்படுத்த முடியாத நிலை தோன்றலாயிற்று
மேற்கண்ட நிலைமைகளைக் குறிஞ்சித் தென்னவன், தமது கவிதைகளில் துல்லியமாக வெளிப்படுத்துவதையும் நுணுக்கமாக அலசிச் செல்வதையும் அவதானிக்கலாம். தொழிலாளர்களின் அசமந்தப் போக்கைக் கண்டு மனம் வெதும்பிய கவிஞர், 'மதியினில் மனிதன் தன்னடி பதித்து மதியினில்வல்லோன் தானெனக் காட்டிய காட்சியைக் கண்டும் கருங்கல் சிலையாய்க் காலம் தள்ளுவதழகோ?." ?எனவும் தலைவர்களினதும் ஆட்சியாளர்களினதும் ஏமாற்றுத்தனங்களைக் கண்டு ஆத்திரத்துடனும் வேதனையுடனும்

கவிதை 495
சோசலிஸ் மெனும் மோசலிசத்தினால் சோற்றுக்குப் பஞ்சமடா! - இங்கு பேசும் இஸ்மெல்லாம் பாட்டாளி வாயில்மண் போடும் இஸங் களடா!
எனவும் பிற்போக்குக் காரர்களால் பின்தள்ளப்பட்டீர்கள் முற்போக்குக் காரர்நாம் முறியடிப்போம் இன்னல் என்றார்.
எப்போக்குக் காரர்வந்தும் இன்னல் களையவில்லை - துன்பம் தொலையவில்லை துயர்க்கதையோ முடியவில்லை. 3f
எனவும் எத்தனையோ பேர்கள் வந்தார்கள் எதையெதையோ சொன்னார்கள் மெத்தையிலே உன்னை வைத்து மேன்மையுறச் செய்வோமென்று அத்தனையும் நம்பியுள்ளம்
ஆசையுடன் தொலையவில்லை. 32
எனவும் மண்ணதிர விண்ணதிர வாய்ச்சிலம்ப மாடி மாண்டொழிந்த பழமையினை இன்றுமிங்கு கூறி கண்ணெதிரே கொடுமை கண்டும் கற்சிலையாய் மாறி காரேறிப்பவனிவரும் கனவான்கள் கூட்டம் உன்னுதிரம் உறிஞ்சியுடல் உப்புகின்றதை நீ ஒர்நிமிடம் சிந்தித்தால் உள்வாழ்வு மலரும் புண்ணதனில் வேல்பாய்ச்சப் பொறுத்திருப்பதோடா? பொங்கியெழு சிங்கமெனாந்தன் மலைத்தோழா
எனவும் கவிருர் கொதித்தெழுவதைக் காணலாம்

Page 100
496 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
போலிகளின் ஏமாற்றுத்தனங்களினால், முற்போக்குக் கருத்துகள் மீதோ, சோஷலிஸத்தின் மீதோ கவிஞர் வெறுப்புக் கொள்ளவில்லை. மாறாகத் தொழிலாளர்களின் துயரங்களெல்லாம் அகன்று வாழ்வு வளம் பெறுவதற்குப் பொதுவுடைமை மலரவேண்டும் என இதய சுத்தியுடன் அவாவுகின்றார். அவர் காண விழையும் புதிய சமூகம் சமதர்ம சமூகமே "சமத்துவம் பேணும் திருநிறை பொதுமை", "புதுயுக தர்மம்" "புனிதமாம் பொதுமைத்துவம்", "சமத்துவப் பூங்கா" என்றெல்லாம் பொதுவுடைமையைப் போற்றுகின்றார்.
மலையகத் தொழிலாளர்களின் அவலங்களையும், ஆசை நிராசைகளையும் ஏக்கப் பெருமூச்சுகளையும் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களையும் குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் பேரிடர்ப்பாடுகளையும் வெளிப்படுத்தும் இடங்களிலும், அவர்களை விழிப்புறச் செய்து கொடுமைகளுக்கும் அநீதிகளுக்குமெதிராகப் போராடத்தூண்டும் இடங்களிலும், கவிஞர் தம்மை மூன்றாம் நபராக வைத்து நோக்காது, பெரும்பாலும் தொழிலாளர்களுடன் தாமும் ஒருவராக நின்றே குரல் கொடுப்பதும் பெரும்பாலான கவிதைகள் தொழிலாளர் கூற்றாகவே அமைந்திருப்பதும் மனங்கொளத்தக்கவை.
குறிஞ்சித் தென்னவனது கவிதைகளுட் பெரும்பாலானவை தொழிலாளர்களது சமகால வரலாறாகவே விளங்குகின்றன. மலையகத் தொழிலாளருள்ளும் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளும் துயரங்களும் கவிஞரது உள்ளத்தினை அதிகம் ஈர்த்துள்ளதை அவதானிக்கலாம். ஒருபுறம் தோட்டத்து அதிகாரிகள் தமது காமப் பசிக்குத் தொழிலாளப் பெண்களை இரையாக்க முயலும் கொடுமை அதனடிப்படையில் ஏற்படும் பல்வேறுபட்ட அவஸ்தைகள் மறுபுறம் மிகச் சிறிய வருவாயைக் கொண்டுள்ள கணவன்மார் அச்சிறிய வருவாயையும் குழப்பழக்கத்திற்கு அடிமையாகிச் செலவிட்டுப் போதாக்குறைக்குத்தமது குடும்பத்தினரையும் துன்புறுத்தல்; இன்னொருபுறம் தொழிலாளப் பெண்கள் தோட்டத்து அதிகாரிகளின் யதேச்சாதிகாரம் பிள்ளைகளின்

கவிதை 197
தொல்லைகள், குடும்பப் பராமரிப்புகள், பொறுப்புகள் ஆகியவற்றின் மத்தியில் பகல் நேரம் முழுவதும் ஒய்வு ஒழிச்சலின்றித் தொழிலாளியாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம்
இத்தனை தொல்லைகளையும் ஒருங்குசேர அவர்கள் அனுபவிக்கும்போது அவர்களுக்கு வாழ்க்கையென்பது தாங்கொனாச் சுமையாகவும் இவ்வுலக நரகமாகவும் மாறுவதில் வியப்பெதுவுமில்லை. ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, புதுமைப்பித்தன் தமது "துன்பக் கேணி" என்னும் தலையாய சிறுகதையின் முகப்பில் "புண்பூத்தமேனி புகைமூண்ட உள்ளமடா - அவள் மண்பூண்ட பாவம் நம்மதிபூத்த கோரமடா" எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் காட்டிய மருதி இன்றைய முத்தம்மா, செந்தாமரை, குப்பாயி அஞ்சலை, ருக்குமணி காமாட்சி மீனாட்சி வெள்ளாச்சி, கறுப்பாயி, வள்ளி, பாப்பாத்தி முதலியோரின் மூதாதை ஆவார்
அன்றைய மருதிக்கும் இன்றைய முத்தம்மா முதல் பாப்பாத்தி வரையிலானோருக்குமிடையில் மிகப்பெரிய வேறுபாடுகள் எவையுமில்லாவிடினும், காலமாறுதல்களினாலும் இன்றைய முத்தம்மாக்களும் ஏனையோரும் சற்றே விழிப்புணர்ச்சி கொண்டவர்களாகவும் ஓரளவு சிந்திக்கத் தெரிந்தவர்களாகவும் கொடுமைகளை எதிர்க்கத் துணிந்தவர்களாகவும் விளங்குவதும் கண்கூடு.
மேற்குறிப்பிட்ட விடயங்களையெல்லாம் மிகத் துல்லியமாகவும் மிக மிக அநாயாசமாகவும் எளிமையாகவும் தொழிலாளப் பெண்களின் கூற்றாகவே வெளிப்படுத்திச் செல்லும் தென்னவனின் கவிதா ஆற்றலையும் ஆளுமையையும் அப்பாடல்களில் ஒருங்கே காணலாம் "சம்பள நாள்' 'பெண் தெய்வம்', "மலையகப் பெண்னாள்' 'ஆசை மச்சானுக்கு" "கவி பாடு மச்சான்', "அழகொன்று சிரிக்குமிங்கே" "புதுமைப்பெண்" முதலிய தலைப்புகளிலமைந்ததுள்ள கவிதைகளும் தென்னவனின் குறும்பாக்கள் பலவும் இவ்வகையில் விதந்தோதத் தக்கவைதமிழ்க்கவிதை வரலாற்றில் நிரந்தர இடம்பெறுபவை

Page 101
196 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
மேற்குறிப்பிட கவிதைத் தலைப்புகளுள், "சம்பள நாள்' 'ஆசை மச்சானுக்கு" என்னும் தலைப்புகளில் அமைந்துள்ள கவிதைகள் மிக மிக உன்னிப்பாக நோக்கத்தக்கவை. தென்னவனின் கவித்துவ ஆற்றல் மானுட நேயம் இரக்க சுபாவம் நிதர்சன உண்மைகளை வெளிப்படுத்தும் துணிச்சல், இதயகத்தி முதலியவற்றை ஒருங்கே வெளிப்படுத்துவனவாக அக் கவிதைகள் அமைந்துள்ளன. அவை கல்நெஞ்சையும் உருக்கும் தகையவை ". ஒரு நாயும் மறக்காது நன்றி மச்சான்! இந்த நாட்டு மனுசர் மறந்து விட்டார்!" "கொழும்புத் தண்ணிக்குப் பருப்புமில்லை - கஞ்சி கொதிக்க வைக்கவும் அரிசியில்லை - இன்று செலவுக்கும் கையிலே காகமில்லை" அன்றாடம் காய்ச்சிக் குடிப்பதற்கே நாங்கள் ஆலாய்ப் பறக்குறநாளையிலே. "எனவரும் பகுதிகளும்
சம்பள நாளிது வீட்டிலிருக்கிற சந்தோச மெல்லாம் பறந்திடும் நாள்! வம்புதும்புகளும் பேசிடும் நாள்/இவர் மண்டை யுடைந்திடும் நாளிதடா! கம்புத் தடிகளைத் தூக்கிடும் நாள் பொலிஸ் கச்சேரி கோட்டுக்குப் போயிடும்நாள்! வெம்பியழுதிடும் பெண்களின் குரல்கள் வீடுகளில் கேட்கும் நாளிதடா 34
- என்னும் பாடலும் இங்கு நோக்கத்தக்கது. இதே போன்று தோட்ட அதிகாரிகள் தொழிலாளப் பெண்களைப் பழிவாங்கும் சந்தர்ப்பங்களுள், சம்பள நாளும் ஒன்றாகும் என்பதை
சீவி முடிச்சு சிரிக்கலைன்னா? - நல்லா சிங்காரம் பண்ணித்தளுக்கலைன்னா? பாவிப்பய அரைப்பேரு போட்டாள் - அவன் பாடையிலேபோக, மாடாக என் ஆவிதுடிக்கச் சுமந்துவந்தும் தினம் அரைப் பேரு போட்டுல்ல வச்சிருக்கான்! 35
- என வரும் பகுதி புலப்படுத்திநிற்பதை அவதானிக்கலாம்.

கவிதை 199
கடந்த இரு தசாப்தங்களாகத் தீவிரம் பெற்றுவரும் பேரினவாத
மேலாண்மைப் போக்கும் அதன் விளைவுகளும் இலக்கிய கர்த்தாக்கள்
பலரையும் வெகுவாகப் பாதித்துள்ளதை அவதானிக்கலாம். ஒருபுறம் புத்த
நாமார்ச்சனை, மறுபுறம் அதற்கு நேர்மாறான செயற்பாடுகள் "பேசுவது
மானம் இடை பேணுவது காமம்" என்பது போல தார்மீகம், அஹிம்சா தர்மம், சோஷலிஸம் என்பனவெல்லாம் வெறுமனே உதட்டளவிலும்
நடைமுறை வேறாகவும் அமையலாயின. இந்நிலையில், மேற்கண்ட
நிலைமைகளை அலசப் புகுந்த கவிஞர்கள் சிலர் தமது
மனக்குமுறல்களைப் புத்த பெருமானிடமே முறையிடும் பாங்கிலும் புத்தர் பெருமானே நேரிற் கூறும் பாங்கிலும் அடக்குமுறையாளர்கள் புத்தர்
பெருமானையே படுகொலை செய்கின்றனர் என்னும் பாங்கிலும் பல
கவிதைகளை யாத்துள்ளனர். எடுத்துக்காட்டாக "புத்தரின் மெளனம்
எடுத்த பேச்சுக் குரல்"(1985), ஹம்சத்துவனியின் "புத்தனின் நிர்வாணம்"
எம்.ஏ. நுஃமானின் "புத்தரின் படுகொலை" (1981), என்னும்
தலைப்புகளிலமைந்ததுள்ள பாடல்கள் இங்கு மனங்கொளத்தக்கவை
இவ்வகையில் மலையகத்தின் பங்களிப்பாகத் தென்னவனும் "புத்தலுக்கோர் விண்ணப்பம்", "போதிமாதவன் பொன்னடி வனங்குவோம்" 37 என்னும் தலைப்புகளில் பல பாடல்களை இயற்றியுள்ளார். இலங்கையில் அடுத்தடுத்து இடம்பெற்ற கொடூரமான வன்செயல்களின் போதும் பிற சந்தர்ப்பங்களிலும் மலையகத் தொழிலாளர் அனுபவித்த தாங்கொணக் கொடுமைகளையும் இன்னல்களையும் அவர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புகளையும் அவர்களது உள்ளக் குமுறல்களையும் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளையும் புத்தரிடம் கூறும் பாங்கில் அமைந்துள்ள இப்பாடல்கள் சோக கிதங்களாக அமைந்துள்ளன.
இனப்பற்று வேறு இனவெறி வேறு இன, மத, மொழி பிரதேச உணர்வுகள் வெறியாக முனைப்புப் பெறுமிடத்து, அவை ஆபத்தானவையாக மாறும்; உண்மைகள் மறைக்கப்படும்; வர்க்க உணர்வு மழுங்கடிக்கப்படும் பாரதி பாரதிதாசன் ஆகியோரது

Page 102
200 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
பாடல்களில் நாம் இத்தகைய வேறுபாடுகளை அவதானிக்கலாம். தனிப்பட்டவர்களின் மனோபாவம் மட்டுமன்றிக் காலச் சூழ்நிலையும் இவற்றுக்கு முக்கிய தூண்டுதலாக அமைகின்றன. இத்தகைய கட்டங்களில் இலக்கிய கர்த்தா - குறிப்பாகத் தொழிலாளி வர்க்க இலக்கிய கர்த்தா மிக மிக நிதானமாகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. எத்தகைய சிறந்த இலக்கிய கர்த்தாவையும் திணறடித்துச் சறுக்க வைக்கும் கட்டம் இது எனலாம் சமகால வாழ்வியற் சிந்தனைகள், உணர்வோட்டங்கள், சூழ்நிலை முதலியவற்றிலிருந்து இலக்கிய கர்த்தா அறவே விலகிநிற்றல் இயலாது. கால வேறுபாடுகளும், பிரதேச குழல் வேறுபாடுகளும் நிதர்சன நிலைமைகளும் இலக்கிய கர்த்தாவை வெகுவாகப் பாதிக்கின்றன. மகாகவி சேரன், புதுவைஇரத்தினதுரை, சிவி வேலுப்பிள்ளை, குறிஞ்சித் தென்னவன், ஞானசேகரன், டொமினிக் ஜிவா, டானியல், தெளிவத்தை ஜோஸப் என்.எஸ்.எம். இராமையா, நந்தி முதலியோரின் ஆக்கங்களை நுணுகி நோக்குமிடத்து இவற்றின் உள்ளார்ந்த வேறுபாடுகளை அவதானிக்கலாம். வடபுலத்துச் சாதிப்பிரச்சினையும் வர்க்கப் பிரச்சினையும் ஜீவா, டானியல், என்.கே. ரகுநாதன், தெணியான் முதலியோரை ஒரோவிடத்துத் திணறடிக்கச் செய்வதும் மனங்கொளத்தக்கது.
இன ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் வாழ்நிலை அடிப்படையிலும் இலங்கையின் ஏனைய சமூகத்தினராலும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாலும் ஆட்சியாளர்களாலும் மலையகத் தொழிலாளர்கள் நீண்ட காலமாகப் பரிதாபகரமான முறையிற் புறக்கணிக்கப்பட்டும், நசுக்கப்பட்டு , அலட்சியப்படுத்தப்பட்டும் வந்துள்ளனர். இவற்றின் தாக்கங்களை தனது சொந்த வாழ்க்கையிலேயே வேண்டிய மட்டும் அனுபவித்தவர் தென்னவன். இதனாற்போலும் இன உணர்வும் வர்க்க உணர்வும் பிரதேச உணர்வும் சங்கமிக்கும் இடங்களிலும் இனக்குரோதம் தனது கொடுமுடியை எட்டிப் பிடித்த வேளையிலும் குழ்நிலைகள் சிற்சில சந்தர்ப்பங்களில் அவரைத்

கவிதை 201
திணற வைக்க முயன்றபோதும் அவர் மிக மிக நிதானமாகவே நடந்து கொள்கிறார்.
"கண்ணிர் அஞ்சலி" என்னும் தலைப்பிலமைந்துள்ள அவரது பாடல்கள் நெஞ்சை உருக்குந் தகையன. தனது அருமை மகள் மணிமேகலை இளவயதில் காலமாகியபோது பாடப்பட்டவை அப்பாடல்கள் அவற்றுள் ஒருசில அழகள் வருமாறு
மல்லிகையின் மலர்தூவி வாழ்த்த நினைத்திருந்தேன்! எள்ளுப் பொரிதூவி இறைக்கும் நாள் வந்ததையோ முல்லைப்பூச்சூழ முகமலரநாள்பார்த்தேன் அல்லிவிழிமூடி அமுத இதழ்மூழ வெள்ளைத் துகில்மூழ மேனியிலே மலர்மூழ
சொல்லாது நீ போகும் துயரநாள் வந்ததையோ, 33
குறிஞ்சித் தென்னவனின் கவிதைப் பகுதிகளுள் தனிச்சிறப்பு வாய்ந்தது, "ஒரு கவிஞனின் கண்ணிர்க் கதை" என்னும் தலைப்பிலமைந்துள்ள பாடல்கள் எனலாம். சோதனைகளும் வேதனைகளும் மிழமைக் கொடுமையும் மிக்க தமது சோகமயமான வாழ்க்கை வரலாற்றையே - அதனூடே மலைகத் தொழிலாளரின் வரலாற்றையும் - இதயத்தைப் பிழிந்தெடுக்கும் வகையிற் கண்ணிர்க் காவியமாக இப்பாடல்களில் வழத்துக் காட்டியுள்ளார்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் யுகப்பெருங் கவிஞன் பாரதியின் சோதனைகளும் வேதனைகளும் மிக்க வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் அவரது "சுயசரிதை"என்னும் கவிதைப் பகுதி அவரது "சின்ன சங்கரன் கதை" ஆகியவற்றுக்குத் தனியிடமுண்டு. அதே போன்று சிவி வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாறாக விளங்கும் அவரது 'இனிப்படமாட்டேன்" என்ற நாவல் குறிஞ்சித் தென்னவனின் "ஒரு கவிருனின் கண்ணிர்க் கதை" என்னும் கவிதைப்பகுதி ஆகியவற்றுக்கு மலையக இலக்கிய வரலாற்றில் தனியிடமுண்டு என்பதில் ஐயமில்லை.

Page 103
202 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
அடிப்படை வசதிகளேதுமற்ற நிலையில், சொற்பக் கூலிபெறும் தோட்டத் தொழிலாளியாக வாழ்ந்து கொண்டே தனது மிடிமையையும் பொருட்படுத்தாது ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், தமது சொந்த முயற்சியினாலே அறிவு நூல்களைத் தேடிப்படித்தும், தமது வேதனைகளையும் அனுபவங்களையும் கவிதைளாக வழத்தும் மன அமைதி பெற முயன்ற அவரைச் சமூகத்திற்குப் பெரியவர்களாக நடித்துத் திரிந்தவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ தான்மட்டும் அவர்களால் ஏமாற்றப்பட்டு இளமையில் மட்டுமன்றி, முதுமையிலும் வறுமைச் சேற்றில் உழலும் படியாச்சுதே என்னும் ஏக்கமும் தவிப்பும் கழிவிரக்கமும் அதிகமான பாடல்களில் மேலோங்கிக் காணப்படுகின்றன.
".குட்டிச் சுவராம் தோட்டப் பள்ளியில் கூடிய ஐந்தாம் வகுப்புடன் கல்வி முற்றுப் பெற்றதால் பெற்றவரைப்போல் மீளாச் சிறைலயக் கைதியாய் ஆனேன்! 39
பெற்றவர் தொழிலையே பிள்ளைமேற்கொண்டேன் பேய்மழைக் காற்றில் மலைகளில் ஏறி நித்தமும் தேயிலைத்தளினைப் பறித்து நெஞ்சிலாக் கொடியருக் கஞ்சிநடுங்கியும்
திட்டும்வசையும் தினம்தினம் கேட்டும் தொழில்புரிந் தேன்பல ஆண்டுகள் ஆயினும் பத்திரிகைகளைப் படிக்கும் ஆர்வமோ
பற்றிக் கொண்டதே பாவியேனெனை! 40
என வெளிப்படும் கவிஞரது வரலாறும் அனுபவங்களும்அவருக்கு மட்டுமன்றித் தோட்டத் தொழிலாளருக்கும் பொருந்துவதே. ஐந்தாம் வகுப்பு வரை கூடக் கற்காத தொழிலாளர்களும் இலட்சக் கணக்கில் உள்ளனர். அதே சமயம் ஏனைய தொழிலாளர்களிலிருந்து கவிஞர் வேறுபட்டுச் சிறந்து விளங்குவதற்கான காரணங்களுள் ஒன்றாகப்

கவிதை 203
"பத்திரிகைகளைப் பழக்கும்" அவரது ஆர்வம் விளங்கியமையும்
குறிப்பிடத்தக்கது.
தென்னவன் தமது நெஞ்சிற் கவிதையூற்றுச் சுரந்ததற்கான
காரணத்தைப் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்.
". இன்று எம்மவர்இங்கு மலைகளில் எண்ணிலாவிடர்ப்பட்டு மடிவதைத் தின்று உமிழும் எச்சிற் பொருளென தி. மனத்தவர் எம்மை வெறுப்பதும் கண்டு கண்டு களன்ற நெஞ்சினில் கவிதை யூற்றுச் சுரக்க லாயின/ 4t
தொழிற்சங்கவாதிகளாலும், அரசியல்வாதிகளாலும் பலமுறை ஏமாற்றப்பட்டு அவமதிப்புக்குள்ளாகி முதுமையடைந்த நிலையிற் கவிஞரின் உள்ளம் வெம்பியது வேதனைப்பட்டது வெயிலிற் புழுவாகத் துடித்தது. அவை பின்வரும் பாடல்களாகப் பரிணமித்துள்ளன.
"சங்கத்தாலே வாழ்வு வளம்பெறும்"
தனியா ஆவல் இதயம்துற இங்கென் வாழ்வை உரமாய் ஆக்கினேன் இடர்களுந்றுச் சிறையில் வாடினேன்! பங்க முற்றதென் வாழ்வு சுயநலப்
பதர்களாம் தொழிற் சங்கத்திருடரால் எங்கு நோக்கினும் எம்பெயர் கூறி
ஏய்த்து வாழ்ந்திடும் வேடதாரிகள்.
கன்னக் கோலர்கள் எங்கள் வளத்தினைக்
கவரும் வஞ்சகக் கொடிய மனத்தினர் தன்னலப்பதர்கள் தம்மைப் போற்றிச் செந்
தமிழிற் கவிதைகள் பாடினேனந்தோ

Page 104
204 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
என்னை, எந்தன் கவிதை, மலர்களை
எருவாய் ஆக்கி உயர்ந்த பேர்களே மன்னர் போலும் வாழ இங்கிவன்
வறுமைச் சேற்றில் வதைய லாகினேன்! 42 குறிஞ்சி தென்னவனின் கவிதைகளைக் கருத்தூன்றிப் பழக்குமிடத்து, அடிக்கடி பாரதியின் பாடலடிகளும், கவிதைத் தலைப்புகளும் கவித்துவ வீறும் ஞாபகத்திற்கு வருகின்றன. பாரதியிடம் தென்னவன் கொண்டிருந்த மிக ஆழ்ந்த ஈடுபாடு காரணமாக, அவரது கவிதைகளின் பல இடங்களிலும் பல்வேறு வடிவிலும் வகையிலும் பாரதியின் செல்வாக்கைக் காணமுடிகிறது. இது தென்னவனின் கவிதா ஆற்றலுக்கு எவ்வகையிலும் ஊறு விளைவிக்கவில்லை. மாறாக, அவரது கவிதைகளைச் செழுமைப்படுத்த உதவியுள்ளது எனலாம்
திருத்தக்கதேவரின் சீவகசிந்தாமணியில் அதற்குமுற்பட்ட தமிழ் இலக்கியங்களின் செல்வாக்கினையும், கம்பனிடத்துத் திருத்தக்க தேவரின் செல்வாக்கினையும் பாரதியிடத்துச் ஷெல்லி தாயுமானவர், கோபாலகிருஷ்ணபாரதியார், அருணாசலக் கவிராயர், சித்தர்கள், கம்பர் முதலானோரின் செல்வாக்கினையும் கண்ணதாசனிடத்து மேற்குறிப்பிட்ட அனைவரினது செல்வாக்கினையும் நாம் காண முடிகின்றது.
பாரதியிடம் காணப்பட்ட இயல்புகள் சில, தென்னவனிடமும் காணப்படுகின்றன. சிறுமைகண்டு பொங்கியெழுவதும் கொடுமைகளை அழிக்க ஆவேசம் கொண்டெழுவதும் நிகழ்காலத் தாழ்வுற்ற நிலைமைகளைச் சுட்டிக் காட்டி நம்பிக்கையுடன் எதிர்கால விடிவுக்கு வழிகோலுதலும் குறிப்பிடத்தக்கவை. சிறுமைகள், அவலங்கள் தொழிலாளரின் அறியாமை முதலியவற்றைக் கண்டு மனங்குமுறுதல் வேதனைக்குரல் எழுப்புதல் அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பிச் சிந்திக்க வைத்தல், சில சந்தர்ப்பங்களில் வினாக்களை எழுப்பி அவற்றுக்குத் தாமே பதிலும் அளித்தல் ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை.

கவிதை 205
மலையகத் தொழிலாளரின் பேச்சுவழக்குப் பிரயோகத்தை உயிர்த் துடிப்புடன் அதிக அளவிற் கையாண்டு செல்லும் தென்னவனின் கவிதைகளில், செயற்கைத் தன்மையைக் காண்டலரிது. அவரது கவிதைகள் கருத்தாழமும் எளிமையும் சொல்லாட்சித் திறனும் மிக்கவை; படிப்பறிவற்ற பாமர மக்களும் இலகுவிற் புரிந்து கொள்ளக் கூடியவை
"கவிதைத் துறையில் மகத்தான சாதனை எதையும் நான் செய்யவில்லை. என்னால் எனது சமுதாயத்திற்கு இயன்ற பணிகளைக் கவிதை மூலமாவது செய்கிறேன் என்ற ஆத்ம திருப்தியுண்டு" என மிக அடக்கத்தோடு கவிஞர் கூறியுள்ளபோதும், பொதுவாக ஈமத்துக் கவிதையுலகிற்கும் கூடவே தமிழகக் கவிதையுலகிற்கும் சிறப்பாக மலையகக் கவிதையுலகிற்கும் வளம் சேர்ப்பனவாக அவரது கவிதைகள் அமைந்துள்ளன எனின் அது மிகையாகாது
மலைக்குயில்
மலையகக் கவிதையுலகில் சி.வி வேலுப்பிள்ளை, குறிஞ்சித் தென்னவன் முதலியோர் தமக்கெனத் தனியிடத்தைப் பிடித்துக் கொண்டது போலவே தனியிடம் வகிக்கும் இன்னொரு சிறந்த கவிஞர் அல் அஸ்மத் எனப் புனைபெயர்பூண்ட அப்துல் அஸிஸ் ஆவர்.
மலையத்தின் முன்னோடிக் கவிஞர் எனப் பலராலும் போற்றப்படும் அப்துல் காதிறுப் புலவர் சிறந்த கவிஞராக விளங்கியபோதும் அவரது பாடல்களில் மலையகத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் முளைப்புப் பெறவில்லை என்பது இரண்டாம் இயலிற் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அக்குறைபாட்டினைப் பெருமளவு நிவர்த்தி செய்யத் தோன்றியவரே அல் அஸ்மத் என்னும் கவிஞர் என்பதில் ஐயமில்லை. கவித்துவ ஆற்றல்மிக்க இவர் மரபுக் கவிதைகளையே அதிகம் இயற்றியுள்ளபோதும், புதுக்கவிதைகளையும் நேசிப்பவர் அதனால் பரிசோதனை முயற்சியாகப் புதுக்கவிதைகள் சிலவற்றையும் இயற்றியுள்ளார்.

Page 105
206 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
இவரது கவிதைகளுள் அதிகமானவை "அல் அஸ்மத் கவிதைகள் - மலைக் குயில்" (1987) என்னும் தொகுதியாக வெளிவந்துள்ளது. மலையகத் தொழிலாளர் வாழ்வையும் பிரச்சனைகளையும் இயன்றவரை முழுமையாகக் காட்ட முயலும் கவிதைத் தொகுதிகள் என்ற வகையில் சிவி வேலுப்பிள்ளையின் "தேயிலைத் தோட்டத்திலே' ஈழக்குமார் தொகுத்தளித்த 'குறிஞ்சிப் பூ' குறிஞ்சித் தென்னவனின் "குறிஞ்சித் தென்னவன் கவிதைகள்" ஆகியனபோல், அல் அளUமத்தின் கவிதைத் தொகுதியும் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
"எனது சமூகத்துக்காக எவராவது ஒரு சொட்டுக் கண்ணிர் விட்டிருந்தால், அவருக்கே இந்நூல் சமர்பணம்" எனச் சமர்ப்பணத்திற் கூறியுள்ள கவிஞர் நசுக்கப்படும் ஒரு சமூகத்திலிருந்து நாகுக்காக முன்னேறி அந்த சமூகத்துக்காக (நானும் உட்பட)க் கண்ணிரை மட்டுமே கவிதைகளாக்கத் தெரிந்த பிறவி நான் என் கவிதைகள், சமூக முன்னேற்றத்துக்காக உதவுமென்பதைவிடப் பிறருக்கோ, பிறகொருகால கட்டத்துக்கோ மலையகத்தின் கண்ணாடியாக விளங்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை அதிகம்." 3گه cTor மிகுந்த தன்னடக்கத்துடன் தெரிவித்துள்ளார். அவரது நம்பிக்கை ஒரு போதும் வீண்போகாது என்பதனை அவரது கவிதைகளே உறுதிப்படுத்துகின்றன.
மலையகத் தொழிலாளரின் வாழ்வியல் அம்சங்கள், அவர்களது பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஆகியன சிவி வேலுப்பிள்ளை, குறிஞ்சித் தென்னவன் முதலியோரது கவிதைகளில் எவ்வாறு பிரதிபலிக்கப் பட்டுள்ளன; அலசப்பட்டுள்ளன என்பன பற்றி மேலே நோக்கப்பட்டுள்ளது. அதே விடயங்கள் அல் அனஸுமத்தின் கவிதைகளிலும் பிரதிபலிக்கப் பட்டுள்ளமையையும் அலசப்பட்டுள்ளமையும் அவதானிக்கலாம் அவை தவிர்ந்த ஏனைய விடயங்கள், அவரது கவிதைகளிற் காணத்தக்க தனித்துவ அம்சங்கள்முதலியனபற்றிச்சுருக்கமாக இங்கு நோக்கப்படும்

கவிதை 207
இன்றைய மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் மூதாதையர்கள் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மலையகத்திற்குப் புலம் பெயருமுன் தென் இந்தியக் கிராமங்களில் எத்தகைய நிலைமையில் வாழ்ந்தார்கள்; அடுத்தடுத்து ஏற்பட்ட கொடிய பஞ்சங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிரித்தானியர்கள் பெரிய கங்காணிமூலம் 'மாய மானைக்" காட்டி அவர்களை அடிமைக் கூலிகளாக இலங்கைக்குக் கொண்டு வர எவ்வாறு முயன்றார்கள்; ஆரம்பத்தில் முற்றாக மறுத்த அவர்கள் பின்னர் பெரியகங்காணிமாரின் ஆசை வார்த்தைகளில் மயங்கி மலையகத்திற்குப்புலம்பெயரத் தொடங்கியமை முதல் அவர்கள் அடைந்த ஏமாற்றங்கள், அனுபவித்த இன்னல்கள், வேதனைகள் முதலியன பற்றியெல்லாம் கவிஞர்களும் சிறுகதை-நாவலாசிரியர்களும் தமது ஆக்கங்களில் விரிவாகக் காட்டியுள்ளனர். மேற்கண்ட விடயங்களைக் கவிஞர் அல் அஸாமத்தும் தமது கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். ஆயின், அவற்றை அவர் வெளிப்படுத்தியுள்ள முறைமை புதுமையானது; வேறு எந்த ஒரு கவிஞனாலோ எழுத்தாளனாலோ கைக்கொள்ளப்படாதது படிப்போரது உள்ளத்தில் ஆழமாகப் பதியும் தன்மையது பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது.
பாரதியின் குயிற்பாட்டை ஒருமுறை படித்தவர், பின்னர் அதனை மறத்தல் அரிது. பாரதியின் குயிற்பாட்டை அடியொற்றி அதே அமைப்பு முறையிலும் சாயலிலும் நடையிலும் உள்ளத்தைப் பிணிக்கும் வகையில் படைக்கப்பட்டதே கவிஞர் அல் அஸாமத்தின் 'மலைக்குயில்" என்னும் அற்புதமான படைப்பாகும் உருவக நெடுங்கவிதையாக அமைந்துள்ள இப்படைப்பு ஆவிப் பெண், ஆவிப்பெண்ணின் பிறப்பு பெருங்காணிவரவு பெருங்காணியின் சதி வெள்ளையனின் சதி சதியின் முடிவு ஆகிய உபதலைப்புகளைக் கொண்டமைத்துள்ளது. ஆவிப் பெண்ணின் கூற்றாகவே மலையகத் தொழிலாளர்களின் ஆரம்ப கட்ட வரலாற்றை உள்ளத்தைப் பிணிக்கும் வகையில் வெளிப்படுத்தியுள்ளார். அல் அனUமத்தின் கவித்துவ ஆற்றலை அறிவதற்கு இப்படைப்பொன்றே போதுமெனலாம்

Page 106
208
இலங்கையின் மலையகத்தமிழ் இலக்கியம்
'ஒழப்போ யென்தந்தை கோடி வணக்கமிட்டுக் கொள்ளைப் பணக்காரச் சீமைத் துரையடியின் சீழ்துடைக்கும் கிழானைச் சாமியரே! எந்தன் சகதிக் குழலுக்கு வந்ததுமேன்?"
"காட்டை யழித்துள்ளேன்; காணேன் பணித்தங்கம் வீட்டுக் கறுப்புதற்கு வேண்டும் பொருளென்றேன் தூருக்குக் கிழன்றோ தூயமணித் தங்கமுண்டு! வேருக்குக் கீழே வெகுதூரந் தோண்டென்றார்
ஓயாது பின்னருமே ஓங்கிக் குழிபறித்துப் பேயாகத் தேடியுமோர் பேச்சுக்குந் தங்கமின்றி ஓடாகத் தேய்ந்தேன்."
இங்கிலிசுக் காதலனு மென்றன் குலங்கெடுத்த கங்காணிக் காதலனுங் காலின்மேற் காலிட்டுப் புட்டி மதுவும் புலையும் விழவருந்தி வெட்டிப் பொருள்பேசிவிற்றிருந்தா ரென்னுழைப்பில்" 46
"வாய்ச் சொற்களின்றி வளமின்றி வாழ்வின்றி நாடு நகரின்றி நற்றங்கம் மாசியின்றிக் கூடு முறவின்றிக் கொள்கை, குறியின்றி மண்மேலே சாய்ந்தேன்; மலைக்கன்னியானழிந்தேன்!" 47
"பின்னால் நடந்த பெருங்கதையையாவியளாய்க் கண்டேன்; களிதந்த காதலனென் சிங்கமுகன் கொண்ட குறிநின்று கூளத் துரையினையும் கண்காணிப் பேயனையுங் கானா தொழித்தனனே மண்ணைத் தனதாக்கி மன்னவனுமாகினனே! ஆவியளாயன்றுமுதலங்காந் தலைந்தலைந்து
பாவியளாய்க் காவியமாய்ப் பார்மீதிவர்கின்றேன்!" 48
எனவரும் பகுதிகள் கருத்தாழம் மிக்கனவாகவும் உள்ளத்தை
நெருடுவனவாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கவிதை 209
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான மலையகத் தொழிலாளரின் வரலாற்றைத் தெளிவுபடுத்த கவிஞர் கையாண்டுள்ள சிறந்த உத்தியே மலைக்குயிலாகும் மலையகத் தொழிலாளரின் ஆரம்ப காலகட்ட வரலாற்றை வேறு யாரும் இந்த அளவிற்கு ஆழமாக நோக்கி உருவக நெடுங்கதையாக வடித்ததில்லை. மலையகக் கவிதை வரலாற்றில் மலைக் குயிலுக்குத் தளியிடமுண்டு என்பதில் ஐயமில்லை.
இதுபோன்றே மலையகத்தின் ஏனைய கவிஞர்கள் கையாளாத புதிய முறைகளைக் கையாண்டு சுவையாகவும் உள்ளத்தில் ஆழமாகவும் பதியுமாறும், தொழிலாளர்களின் இன்றைய நிலைமைகளையும் பல்வேறுபட்ட பிரச்சனைகளையும் அவற்றுக்கான தீர்வு மார்க்கங்களையும் கவிதைகளாக வடித்துள்ளமை மனங்கொளத்தக்கது.
தோட்டத் தொழிலாளர், அதிகாரிகள் ஆகியோருள் முதிய தலை முறையினருக்கும் இளைய தலைமுறையினருக்குமிடையிலான வேறுபாடுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் இளைய தலைமுறையினர் கொண்டுள்ள வாஞ்சை, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெறுவதிலுள்ள இடையூறுகள், ஏமாற்றங்கள், குழப்பழக்கம் முதலியவற்றை முழுக்க முழுக்க மலையகப் பேச்சுத் தமிழை உயிரூட்டும் வகையிற் செவ்வனே கையாண்டு உரையாடற் பாங்கிலும் பாநாடக வடிவிலும் "போறினுக்குப் போறானாம்" என்னும் தலைப்பில் வெளிப்படுத்தியுள்ளார். *
பெருந்தோட்ட சமூக அமைப்பில் மேலதிகாரிகள், கிழதிகாரிகள், தொழிலாளர்கள் என முக்கியமான மூன்று பிரிவினர் உளர். தொழிலாளர்களின் நிலையோ இரங்கத்தக்கது. தொழிலாளர்கள் நிலையிலும் பார்க்கச் சற்று மேம்பட்ட நிலையில் கீழதிகாரிகள் விளங்குகின்ற போதும், மொத்தத்தில் தொழிலாளர்களாகவோ அதிகாரிகளாகவோ இல்லாது, இரண்டும் கெட்டான் நிலையில் பரிதாபகரமான வாழ்க்கையை நடாத்துபவர்கள் "கணக்குப்பிள்ளை' "சுப்பவைசர்"முதலிய நிலையிலுள்ளவர்களே. தொழிலாளர் விழிப்புற்று

Page 107
210 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
எழுச்சியுற்றுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் தொழிலாளர்களின் முதல் எதிர்ப்புக்கு ஆளாகுபவர்கள் மேற்கண்ட கிழதிகாரிகளே. அதே சமயம், மேலதிகாரிகளின் அதிகாரவெறி அச்சுறுத்தல், திட்டுக்கள், வசைமொழிகள் முதலியவற்றுக்கு அதிகம் ஆளாவதும் கிழதிகாரிகளே. தொழிலாளர்களையும், மேலதிகாரிகளையும் இணைத்து நிற்கும் கிழதிகாரிகளின் பரிதாப நிலையை மலையக இலக்கிய கர்த்தாக்கள் பலர் சுட்டிக்காட்டியதில்லை. ஆயின், அல் அஸ்மத், அவர்களது பரிதாப நிலையை "கணக்குப்பிள்ளை புலம்புகிறார்" "சுப்பவைஸர் புலம்புகிறார்" என்னும் தலைப்புகளில் அவர்களது கூற்றாகவே புலப்படுத்தியுள்ள திறன் குறிப்பிடத்தக்கது ?
கணக்குப்பிள்ளை, சுப்பவைசர் ஆகியோர்தமது பரிதாபநிலையைத் தாமே வெளிப்படுத்தும் பாங்கில் அமைந்துள்ள சில பாடற் பகுதிகள் 6նց5մոցի
"கணக்குப்பிள்ளை நீதானோ காணென்று தொழிலாளர்
கத்தியொடு முன்வந்தென் கழுத்தைத் தேட
எனக்குப்பிள்ளையாகினவர் என்மனைவி சுற்றத்தார்
ஏனிந்த வேலை சீ'என்பர்"
"கடுகடுக்கும் பிடி எஸ்டீஸ், கட்டியனுப்பும் டிஎம்எஸ் ஆஃபீஸ் கிடுகிடுக்கும் ஸிஸிஸ் மற்றும் லேபரர்ஸ்
குடுகுடுக்கும் கணக்கனெனைக் குத்தியுயிர் கொல்வர். "
(பிடி - பெரியதுரை எஸ்.டி - சிறிய துரை, டி.எம்- ரீமேக்கர் எமீலி - பெரிய கிளார்க்)
"கரட்டிலைக் கட்டும்பெற்றுக் கண்ணிரும் கணக்குப்பிள்ளை
மருட்டலும் சேர்த்துப்பெற்று மிஞ்சிடும் பொழுதிற் செக்றோல் பத்தியாய் முழத்துப்பின்னர் பாழுடைக் குடிலைநாடிக்
வெட்டுவோம் கொல்வோமென்று வெருட்டிடும் தொழிலாளர்தம் திட்டுறும் புகழின்மாலை திகைப்புடன் ஏற்றும் - ஆஹா!

கவிதை 211
ஆளையே மாற்றிக் காட்டும் ஆபத்தாம் கப்பவைஸர் வேலையே வேண்டாமையா! வெட்கமும் வெடவெடப்பும்! சுப்ப வைஸ்ரென்று சுகமாகச் சொல்கின்றாரே!
சொற்ப வயதென்றாலும் சொல்லொணாத் துயரமையா" 52
எழுச்சியுற்றுவரும் மலையகத் தொழிலாளரின் இன்றைய நிலையைப் பிரதிபலிப்பதோடமையாது, அவர்களுக்கு மேலும் தூண்டுதலளிக்கும் வகையில் "மலையகத்தின் எரிமலை" என்றும் தலைப்பிலமைந்துள்ள அவரது பாடல்கள் விளங்குகின்றன. பொறுப்புணர்வின்றிக் கெட்டலையும் தோட்டத்து விடலைகளுக்கு
ff #f
அறிவுரை புகட்டும்பாங்கில் "எங்க போற' 'தம்பிமலையாண்டி "என்னும்
3.
தலைப்பிலமைந்துள்ள பாடல்கள் விளங்குகின்றன.
இலங்கை - இந்தியத் தலைவர்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களால் தொழிலாளர்கள் அனுபவித்த வேதனைகள், துயரங்கள், ஒப்பந்தங்கள் காரணமாகவும், அடுத்த டுத்து இடம் பெற்ற வன்செயல்களாலும் தாயகம் திரும்பிய தொழிலாளர்கள் அங்கும் பரிதாப' நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை முதலியவற்றைத் துல்லியமாக வெளிப்படுத்தும் பாங்கில் "புனர் வாழ்வு" நண்பன் புலம்புகிறான்' "பிரஜாவுரிமைத் தூது" முதலிய தலைப்புகளிலமைந்துள்ள பாடல்கள் விளங்குகின்றன.*
மலையகப் பேச்சு வழக்கைத் தமது கவிதைகளில் உயிர்த் துடிப்புடன் கையாண்டுள்ள அல் அரைமத் சில கவிதைகளில் ஆங்கிலச் சொற்களையும் சொற்றொடர்களையும் மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளார். அவரது கவிதைகளின் ஆத்மாவையே அமுக்கிக் கொல்லுமளவிற்குக் கவிதைத் தொகுதியில் அச்சுப்பிழைகள் மலிந்து காணப்படுதல் கவலைக்குரியதே.

Page 108
212 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
குறிஞ்சிப்பூ
மலையகத் தமிழ் இலக்கிய உலகில் 1960 -களில் ஏற்படத் தொடங்கிய எழுச்சியின் உடனடி விளைவாக 1965 ம் ஆண்டு வெளிவந்த 'குறிஞ்சிப்பூ"என்னும் கவிதைத் தொகுதியே மலையகத்தின் முதலாவது கவிதைத் தொகுதி என்ற புகழையும் பெற்றுக் கொண்டது. தொகுப்பாசிரியராகிய ஈழக்குமார் உட்பட, நாற்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கியுள்ளது இத்தொகுதி சிவி வேலுப்பிள்ளை போன்ற முதுபெருங் கவிஞர்களதும் சாரல் நாடன், குறிஞ்சித் தென்னவன் முதலிய அன்றைய இளங்கவிருர்களதும் ஈழவாணன், வி. கந்தவனம், நவாலியூர் செல்லத்துரை முதலிய மலையகத்தைச் சாராத கவிஞர்களதும் கவிதைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகளுட் கணிசமானவை, மலையகத் தொழிலாளரின் வாழ்க்கைப் போராட்டங்களையோ பல்வேறுபட்ட பிரச்சினைகளையோ முனைப்புடன் வெளிப்படுத்தாது தமிழின் சிறப்பு, பெருமை, தமிழ்ப்பற்று, தமிழர் வீரம், காதல், மன அவலங்கள் முதலிய பொது விடயங்களையே முனைப்புடன் சித்தரிப்பவனாக விளங்குகின்றன என்பது மனங்கொளத்தக்கது. பொ. பூபாலன், சாரல் நாடன், வழுத்தூர் ஒளிஏந்தி, முத்துராசன், தோப்பூரான், ஜோரு, ப. வடிவழகன், குறிஞ்சித் தென்னவன், பண்ணாமத்துக்கவிராயர், கு. இராமச்சந்திரன் (தமிழாக்கம்) உடுதெனிய ஒளிவண்டு, வெண்சங்குவேள், முத்துராசன், மலைத்தம்பி, ஆர். வரதராஜன், புலவர் மலை நூர் புரட்சிக் கமால், சிந்தாகோ, எபிஎஸ், காந்தி எபி சுப்பிரமணியம் தமிழோவியன், பரமஹம்ச தாசன் முதலியோரது கவிதைகள் இத்தகையனவே
இத்தொகுதியிலமைந்துள்ள சிவி வேலுப்பிள்ளையின் "தேயிலைத்
தோட்டத்திலே"(ஒரு சில பாடல்கள்) அ. சிதம்பரநாத பாவலரின் இதயமா தேவியே பிஆர் பெரியசாமியின் யார் பிரஜைகள், எஸ்.எஸ் நாகனின்

கவிதை 213
பாராண்ட தமிழால் பாடு, சி. நடேசனின் எவரின் மூச்சு அமரனின் நம் திருநாள், ஜயந்தனின் கம்பளிக் காரிகையர், வி. கந்தவனத்தின் தாழ்வு தகர்த்தெறிவாய், கண்டி எ.ம. இராமச்சந்திரனின் மந்தநிலை போகவில்லை, பூண்டுலோயா தர்முவின் பேரின்பம் ஈழவாணனின் ஏன் பிறந்தாய், நவாலியூர் நா. செல்லத்துரையின் என்னென்று சொல்லலாமோ, தமிழ்ப் பித்தனின் அடிமையாய்ப் பணியமாட்டோம் நூரளை இரா. மலைச்செல்வனின் விந்தை, கல்ஹின்னை எம்எக்எம் ஹலீம்தீனின் புல்லரினைப் பொசுக்கிடாதே, பிஎஸ் ராகவனின் அன்னையின் ஆசி, பி.கே. செல்லையாவின் உணருவாரா? மரியதாசனின் சபதமெடுப்போம் அன்பனின் நலம் பெற இணைந்தே வாரி பவை கன்னையாவின் இரக்கம் தோன்றுமா? ஈழக்குமாரின் அன்னைபூமி ஆகிய தலைப்புகளிலமைந்துள்ள பாடற் பகுதிகள், மலையத்தை முனைப்புடன் காட்டுபவை என்ற வகையிற் குறிப்பிடத்தக்கவை.
மலையத்தில் 1940 - களின் பிற்பகுதியிலிருந்து 1960 -களின் முற்பகுதி வரை ஏற்பட்டுக் கொண்டிருந்த குழ்நிலைகளையும் மாற்றங்களையுமே அதிக அளவில் மேற்கண்ட கவிதைகள் பிரதிபலித்து நிற்பதை அவதானிக்கலாம் 1940 - களின் இறுதியிலும் அதனைத் தொடர்ந்தும் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்ட சட்டங்களால் தோட்டத் தொழிலாளர்களின் நாடற்ற அநாதைகளாக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அகிம்சை வழியில் மேற்கொள்ளப்பட்ட போரட்டங்கள் பெரு வெற்றியளிக்காவிட்டாலும், தொழிலாளர்கள் விழிப்புற்று எழுச்சியுறத் தூண்டின. இந்நிலையில் அடிமேல் அடியாக 1960-களில் இடம்பெற்ற பூரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தினால் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தாயகம் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர். மேற்கண்ட தலைப்புகளிலமைந்துள்ள கவிதைகள் பலவும், இவ் அம்சங்களையே முனைப்புடன் வெளிப்படுத்துவதோடமையாது, தொழிலாளர்களுக்கு அநீதி விளைவித்த ஆட்சியாளர்களையும் அதற்குத் துணை

Page 109
214 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
போனவர்களையும் தாயகம் திரும்ப நிர்ப்பந்தித்த இலங்கை - இந்தியப் பிரதமர்களையும் வன்மையாகச் சாடுவதையும் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்குமெதிராகத் தொழிலாளர்களை ஒன்றுபட் டுப் போராடுமாறு தூண்டுவதையும் அவதானிக்கலாம்.
அரை அடிமைகளாக வாழ்ந்து காலமெல்லாம் கடின உழைப்பினை மேற்கொண்டு இந்நாட்டின் செழிப்பிற்காகத் தமது வாழ்வையும் சுகபோகங்களையும் தியாகம் செய்த தொழிலாளர்கள், நாடற்ற அநாதைகளாக்கப்பட்ட கொடுமை கண்டு பொங்கியெழும் கவிஞர் ஹலீம்தீன், மகாவலி கங்கையின் நீரெல்லாம் பேதுரு (பீதுறு) தலாகல மலையின் ஊற்றல்ல, நாடு செழிக்க நிதம் மாடாயுழைத்த தொழிலாளர்களை "அலைகடலில் வீழ்ந்தேனும், ஈழம் விட்டு அகன்றிடுவீர் என்கின்ற பேரிடியால் குலை நடுங்கும் உழைப்பாளர்" சிந்திய வியர்வையும் குருதியுமே எனவும், அடைக்கலம் தேடி அபலைகளாக இங்கு வந்து நூறாண்டுகளுக்கும் மேல், நாட்டின் முதுகெலும்பாக அல்லும் பகலும் உழைத்த தொழிலாளர்களுக்கு "அணுவளவு உரிமையும்" கிடையாது எனச் சட்டங்கள் செய்யப்பட்டதையறிந்து அவர்கள் சிந்திய கண்ணிரே, மலையத்தில் 'அடைமாரி" யாகப் பொழிகின்றது எனவும் வெறுங் காடாகக் கிடந்த மலையகத்தைப் பொன் கொழிக்கச் செய்த தொழிலாளர்களை "வெற்றிடத்தே ஏகிடுவீர்"எனக் கட்டளையிட்டபோது ஏற்பட்ட அவர்களது நெஞ்சக் குமுறலே மாறி வீசியது எனவும் கூறிச் செல்வது உள்ளத்தைத் தொடும் வகையில் அமைந்துள்ளன.
தொழிலாளர்கள், தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் அநீதிகளும்அகலும் வழியைச் சிந்திக்காவிட்டாலும் அவற்றுக்கெதிராகப் போராடாவிட்டாலும் அவர்களது நெஞ்சக் குமுறல்களும் ஏக்கப் பெருமூச்சுகளும் ஆத்திரமும் பூகம்பமாகி வெடிக்கும்போது விரைவினிலே அவர்களுக்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையையூட்டும் வகையில்

கவிதை 215
துஞ்சுகின்ற உன்மக்களின்னுமின்னும் துயரணைத்தே வாழ்ந்திடார் என்ற உண்மை இஞ்சியுண்ட குரங்கதாய் இழிந்தியங்கும் இளைஞர்களுக்கிக்கணமே உணரச் செய்வாய்!
வஞ்சமர்செய் தேனுமிக் கொடுமை நீங்க வகையெண்ணார், எனினுமண தெரிந்து நிற்கும் வெஞ்சினப்பூ கம்பமது வெடித்துவிட! விரைவினிலே நீள்வடிவும் பிறக்கு மிங்கு!?
என அவரது இப்பாடல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாழ மேற்கண்ட கருத்துகளையே தமது பாடல்களில் வெளிப்படுத்தும் நவாலியூர் நா. செல்லத்துரை தாமும் தோட்டத் தொழிலாளர்களுள் ஒருவராகி நின்று, ஆவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விண்டு காட்டுவதுடன் அமையாது, குமுறிக் கொந்தளிக்கும் இளைய தலைமுறையினரின் செயற்பாடுகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும்
கார்மேகம் திரண்டு விட்டால் காட்டாறு வெள்ளம் மீறும் மதவேழம் கட்டறுத்தால் மட்டிலா உயிரைக் கிறும் எரிமலை குமுறிவிட்டால் எல்லையின் வரையில் ஏறும் எரிகின்ற உளங்கொதித்தால் என்னென்று சொல்லலாமோ!
- என வெளிப்படுத்தியுள்ளார்.
வஞ்சிக்கப்பட்ட தொழிலாளர்கள் கல்வியறிவின்மை வறுமைக் கொடுமை, குடிப்பழக்கத்திற்கு அடிமையாதல் தொழிற் சங்கப் பிளவுகள், செம்மையான தலைமைத்துவமின்மை, ஆட்சியாளரின் அராஜகம்

Page 110
216 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
முதலியவற்றால் உரிமையற்ற இழிசனராகவும் உருளையிடை அகப்பட்ட ரப்பரைப் போலவும் கனலில் அகப்பட்ட தேயிலைக் கொழுந்தாகவும் நோய்கண்ட ரப்பர் மரம் போலவும் கவ்வாத்து வெட்டப்பட்ட தேயிலைச் செடி போலவும் ஆகிவிட்டார்களே என்னும் ஏக்கம் ஈழக்குமாரின் பாடல்களில் மேலோங்கிக் காணப்படும் அதேவேளை, தொழிலாளர் மத்தியில் 1960 - களில் ஏற்படத் தொடங்கிய எழுச்சியைப் பிரதிபலிப்பனவாகவும் அமைந்துள்ளமை கவனித்தற்குரியது.
கத்திபட்ட ரப்பர்மரச் சுரப்பைப்போல கருத்தினிலே புத்துணர்வு கனல்பறக்க நித்திரைக்கு விடைகொடுத்து இந்த நாடே நிலையான நாடென்ற உணர்வு கொண்டார்!
முத்திரையைப் பதித்துவிடும் உறுதியோடு மூண்டிட்ட உரிமையின் சுடர்துடி ப்பால் எத்தர்களின் வலையறுத்து ஈழமண்ணை எம்.அன்னைபூமியென வாழ்த்திநிற்பர் 5/
- எனவரும் பாடல் இவ்வகையில் நோக்கத்தக்கது.
பிஆர் பெரியசாமி தமது கவிதைகளில், மலையகத் தொழிலாளர் களின் நாடற்றோர்" பிரச்சினைகளையும், தோட்டங்களிலிருந்து விரட்டப்பட்ட தொழிலாளர்கள் பிச்சைக்காரர்களாக வீதியோரங்களில் வாழ்க்கை நடத்துவதையும், தொழிலாளப் பெண்கள் தமது பசிக்கொடுமையை அகற்ற மலிவு விபச்சாரிகளாக மாறிச் சீரழிவதையும் சுட்டிக்காட்டுவதுடன், இந்நிலைமைகளுக்கு அவர்களை ஆளாக்கி யவர்களும் தம்மை நிரந்தரப் பிரஜைகளாக எண்ணிக் கொண்டாலும் இவ்வுலகில் நிரந்தரமாக வாழ்ந்தனரா? யார் நிரந்தரப்பிரஜைகள்? எனக் கேள்விக் கனைகளையும் தொடுத்துள்ளார்.

கவிதை 217
பூண்டுலோயா தாமுவின் கவிதைகள் "பேரின்பம்" என்னும் தலைப்பில் அமைந்துள்ளன. தலைப்பினைப் பார்த்ததுமே சற்றுமலைப்பாக இருக்கலாம். தொழிலாளருக்காவது பேரின்பமாவது என எண்ணத் தோன்றும். ஆயின், தொழிலாளர்கள், குறிப்பாகப் பெண் தொழிலாளர்களைப் பொறுத்தவரை எது பேரின்பமாக விளங்குகின்றது என்பதை ஆசிரியர் மிக்க வேதனையுடனும் துல்லியமாகவும் பாடல்கள் தோறும் வெளிப்படுத்திச் செல்வதை அவதானிக்கலாம்
தொழிலாளப் பெண்களைப் பொறுத்தவரை, தாம்பெற்ற குழந்தைகளைக்கூடத்தாலாட்டிச்சீராட்டி ஆசைதிர் அன்புமழை பொழிந்து வளர்க்க முடியாத உழைப்புக் கொடுமை அதிகாலையிலேயே எழுந்து வீட்டுக் கடமைகளை அவசர அவசரமாக முடித்துவிட்டுத் தன் அன்புச் செல்வத்தைப் பிள்ளை மடுவத்தில் ஒப்படைத்துவிட்டு நாளெல்லாம் தேயிலைச் செடியுடன் மாரடிக்கும் அவளது.தாய்மையுள்ளம் எத்தகைய ஏக்கங்குக்குள்ளாகும்? எத்தகைய வேதனைகளை அனுபவிக்கும்? தன் குழந்தையைப் பற்றிய நினைவுடனேயே அவள் தொழில் செய்வதால் தேயிலைச் செடியில் ஒளிரும் பனி நீர் முத்துக்கள் அவளது அன்புச் செல்வத்தின் கண்ணிராகத் தெரியும் செழித்து வளர்ந்த தேயிலையின் இளந்தளில் தனது செல்வத்தின் செங்கை விரல்கள் தெரியும் காற்றில் அசைந்தாடும் தளிர்களைத் தன்மகவு என மனதில் எண்ணி அணைப்பாள். குருத்திலையின் நிழற்கோட்டிற் குழந்தையின் புருவ எழிலைக் காண்பாள். விரிந்த இலையின் பளபளப்பில், குழந்தையின் அழகுக் கண்களைக் காண்பாள். அத்தகைய தொழிலாளப் பெண் தனது இருப்பிடம் தன் குழந்தை பரிதவித்துக் கொண்டிருக்கும் பிள்ளை மடுவம் ஆகியவற்றுக்கும், தான் வேலை செய்து கொண்டிருக்கும் தேயிலை மலைக்குமிடையிலுள்ள தூரத்தை எண்ணி ஏங்குவாள் என விளக்கிச் செல்லும் கவிஞர்,

Page 111
218 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
மாலைப் பொழுதின் தூர மெண்ணி மயங்கிச் சோர்வாள் தேறிடுவாள்! வேலை முடிந்து மடம் நோக்கி விரைவாள் நடப்பாள் பறப்பாளே!
தொல்லை ஒருநாள் கடந்த தென்று துயரம் மறப்பாள் மக வெடுத்து அள்ளி அணைப்பாள் முத்திடுவாள் அதுவே அவளின் பேரின் பம்?
எனக் கூறியுள்ளமை சிந்திக்கத்தக்கது. இப்பாடற் பகுதியைக் கருத்தூன்றிப் படிக்கும்போது இதே கருத்துகளையும் தாய்மையையும் அற்புதமாக வெளிப்படுத்தும் வ.அ. இராசரத்தினத்தின் "அன்னை" என்னும் சிறுகதை ஞாபகத்திற்கு வருகின்றது.
தோட்டத் தொழிலாளப் பெண்களின் துயரங்களையும் ஏக்கங்களையும் அவர்களது தாய்மை உணர்வையும், கவிஞர் தமது பாடல்களில் அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். பாடலின் இனிமையும் சந்தலயமும் எளிமையும் சொல்வளமும் ஆசிரியர் கூறவந்த கருத்தை உள்ளத்தில் ஆழமாகப் பதியுமாறு செய்வதற்குதவுகின்றன.
மேற்கண்ட கருத்தினையே வேறொரு வகையில் ஈழவாணன் 'ஏன் பிறந்தாய்" என்னும் தலைப்பிலமைந்த பாடல்களில் தத்ரூபமாகப் புலப்படுத்தியுள்ளார்.
கவிஞர் தாமே ஒரு பெண் தொழிலாளியாக மாறி நின்று தன் குழந்தையை நோக்கி வாய்ப்பும் வசதிகளும் நிறைந்த எத்தனையோ தாய்மாரின்மடிகளிலிருக்க என்மடியில் ஏன் பிறந்தாய் என அழுகையுடன் கேட்பதாகப் பாடல்களை அமைத்துள்ளார்.
பாயோ கிழிந்தது பஞ்சனை மெத்தையோ கிடையாது நோய் நொடிகள் நூறு வரும் நீ விரும்பும் தின்பண்டங்கள் கிடையா உன்னை மடியில் வைத்து விளையாடச் செய்வதற்கு எனக்கு நேரமெங்கே/குளிரால்

கவிதை 219
நடுங்கிக் கண் துயிலவோ பிறந்தாய்! என்றெல்லாம் தாய் தன் மகவை நோக்கிக் கேட்கின்றாள்.
உன்னையந்தப் பிள்ளைமடுவத்தில் புரண்டுருளப் போட்டுவிட்டே
கல்லாய் மனதாக்கிக் கண்மணியே போய்விடுவேன்! 59
- எனவும்
மாதம் முழுவதுமே, மலையேறிக் களை யெடுத்தும் ஏதும் சிலகாசு இங்கிருக்கா இவ்வுலகில் எத்தனையோ தாய்மடிகள் இங்கிருக்க என் மடியில் முத்தாய், பவளமதாய், முழுமதியே ஏன் பிறந்தாய்? 60
எனவும் வரும் பகுதிகள் பெண் தொழிலாளர்களின் துயரங்களையுL தாய்மையுணர்வையும் ஒருங்கே வெளிப்படுத்துவனவாகும். ஜயந்தனின் "கம்பளிக் காரிகையர்" என்னும் தலைப்பிலமைந்துள்ள பாடல்களும் மேற்கண்ட கருத்துகளையே இன்னொருவகையிற் புலப்படுத்துகின்றன.
பாதாதி கேசமாகவும் கேசாதி பாதமாகவும் பெண்களின் அழகை வருணித்துக் கொண்டிருக்கும் கவிஞர்கள் மலையகப் பெண் தொழிலாளர்களின் அவலநிலையைக் கண்டால், எவ்விதம் வருணிப்பர் என மறைமுகமாகக் கேட்கின்றார் கவிஞர் மரியதாசன். மலையகத்தின் இயற்கை எழிலும் அதற்கு மாறாகத் துயரத்தை அனைத்துக் கொள்ளும் தொழிலாளப் பெண்களின் நிலையும் கவிஞரது உள்ளத்தை எந்த அளவிற்கு உறுத்தியுள்ளன என்பதை அவரது பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

Page 112
20 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
የሃ
"மலைக்குள் மாண்டிடவோ.
பிரபல எழுத்தாளராகத் திகழும் செ. யோகநாதன் 1960 -களின் ஆரம்பத்திற் பல்கலைக்கழக மாணவனாகப் பயின்று கொண்டிருந்த போது, "மலைக்குள் மாண்டிடவோ - அவரிங்கு மணிதராகி வந்தார்." என்னும் தலைப்பில் முப்பத்திரண்டு பாடல்களை இயற்றியுள்ளார். பல்கலைக்கழகத்தால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் இப்பாடற் பகுதி, இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இப்பாடல்களில் துயரம்தோய்ந்த தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வாழ்க்கைப் போராட்டங்களையும் கையறு நிலையையும் சோகச் சித்திரமாகத் திட்டியுள்ளார்.
கண்களின் பாதையெல்லாம் - துன்பக்
கண்ணிர்ச் சுவடெழுதும்
புண்களின் வேதனைபோல் - நெஞ்சு
புழுங்கி மண்ணாகும் 61
- எனவும்
பெண்களின் வாழ்வினில் தாழ்வாம் - பெரும் போராட்டம் போராட்டம் வாழ்வெலாமங்கு கண்ணகிக் கூட்டம்அங்கே -தம் கற்பெனும் பொற்பிற்குக் கண்ணீர் வடிக்கும்?
தாம்பெற்ற செல்வங்கள்தன்னை -தாய் தழுவி அணையாள் குமுறி
காம்பறை'தன்னிலுள் விட்டு - பனிக் காவினில் தேயிலை கொய்வாள். 63
- எனவும் வரும்பாடல்கள் இவ்வகையில் மனங்கொளத்தக்கவை

கவிதை 221
ഞെബTIബ
செ. யோகநாதலுடன் பல்கலைக்கழகத்திற் பயின்றுகொண்டிருந்த போதே இராஜபாரதி "கல்லுமலைத் தோட்டத்திலே" என்றும் தலைப்பில் இருபத்து மூன்று பாடல்களைப் பாடியுள்ளார். ஏனையோரின் பாடல்களிலிருந்து பெருமளவுக்கு வேறுபட்ட பண்புகளை இப்பாடல்கள் கொண்டுள்ளன. தொழிலாளர்கூற்றாகவே அமைந்துள்ள இப்பாடல்களில் நாடற்ற அநாதைகளாக்கப்பட்டு அடிப்படை உரிமைகளோ அடிப்படை வசதிகளோ இல்லாத போதும் கொடுமைகள், அக்கிரமங்கள் முதலியவற்றுக்கு மத்தியிலும் அவர்கள் வறுமையிலும் செம்மையாகவும் அமைதியாகவும் குடித்தளம் செய்வதாகக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எடுத்துக் காட்டாக ஒருபாடல் வருமாறு
காற்றும் வெளிச்சமும் காணாத காம்பரா
ஊற்றும் மழைக்கும் ஒழுகிழ்லும் - ೩ಿ
நாற்ற மெடுக்கினும் நாங்க்ள் சகித்ததில்
நல்ல குடித்தனம் செய்திடுவோம். *
மலையகத்தைச் சேர்ந்த விறார்ந்த இளங்கவிஞர்களுள் ஒருவர் வீரா. பாலச்சந்திரன். 1980 -களின் ஆரம்பத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்திற் பயின்றுகொண்டிருந்தபோதே பன்முகப்பட்ட தமது ஆற்றலைப்புலப்படுத்தியுள்ளார். பல்கலைக்கழகத்தால் நடாத்தப்பட்ட பல போட்டிகளிலும் கலந்து கொண்ட அவர், கவிதைப் போட்டியிலும் சிறுகதைப் போட்டியிலும் முதலாம்.இடத்தைப் பெற்றுக்கொண்டார் பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். நாடகப் போட்டியிலும் தரமான நடிகர்களுள் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இளமைத்துடிப்பும் கவித்துவ வீறும் விடுதலை வேட்கையும் மிக்க இவரது கவிதைகள் "எங்களை ஏணின்று ஏங்கவே வைக்கின்றீர்' "பங்களா எமக்கு வேண்டும்', 'ஒட வேண்டாம்', 'குன்றில் குரல் கேட்கிறது", "இரத்தினபுரித் தமிழறுக்கு ஓர் இதயத்தின் ஒலி"

Page 113
22 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
"மலையகத்திலிருந்து ஒர் ஆறுதல் முடங்கல்" முதலிய தலைப்புகளில் வெளிவந்துள்ளன. அவரது கவிதைகள் மலையகக் கவிதை உலகிற்கு வலுவும் வளமும் சேர்ப்பனவாக விளங்குகின்றன என்பதில் ஐயமில்லை. அவரது கவிதைகள் நூலுருப்பெறாமை பெருங்குறையே 1983ம் ஆண்டில் இடம்பெற்ற கொடூரமான வன்செயலையடுத்து, பிறந்த மண்ணை விட்டு வெளியேறிய மலையக இலக்கிய கர்த்தாக்களுள் வீரா. பாலச்சந்திரனும் ஒருவராவர். இத்தகையோரின் வெளியேற்றம் மலையக இலக்கிய உலகுக்கும் பேரிழப்பேயாகும்
வீரா. பாலச்சந்திரனின் கவிதைகளுள் முதலில் வைத்து நோக்கத்தக்கது "எங்களை ரனின்று ஏங்கவே வைக்கின்றீர்" என்றும் தலைப்பிலமைந்துள்ள நூற்றி இருபத்தைந்து வரிகளைக் கொண்ட நெடும்பாடலாகும். எழுச்சியுற்று வரும் மலையகத் தொழிலாளர்களின் எரிமலைக் குமுறலைத் தத்துரூபமாக இவற்றில் வழத்துக்காட்டியுள்ளார். கவிஞரின் கவித்துவ ஆற்றலுக்கும் கருத்து வீச்சுக்கும் விறுமிக்க கவிதை நடைக்கும் எடுத்துக்காட்டாகச் சில பகுதிகள் வருமாறு
"வாக்குரிமைப் பொன்விழா - விறார்ந்த கொண்டாட்டம் ஏக்கமுறச் செய்வதற்கோ? - எம்மை ஏக்கமுறச் செய்வதற்கோ? 'ஹரிஹ்ஹிஹற்ஹறி./இங்குமக்கு உரிமையில்லை; பெருமையில்லை ஹ ஹ்ஹஹ்ஹா. எம்பெருமை பார்த்திரோ" என்றெம்மை இளக்காரம்பண்ணி ஏக்கமுறச் செய்வதற்கோ? வாக்குரிமைப் பொன்விழா - விறார்ந்த கொண்டாட்டம்
ஒன்றா, இரண்டா, பத்தா நூறா ஆயிரமா? பத்து லட்சம் மக்களடா-அட பத்து லட்சம் மக்களிங்கு பிரசாவுரிமையின்றிச் சொத்துசுகம் ஏதுமின்றிச் சொந்தமென யாதுமின்றி மந்தைகளாய் வாழ்ந்திருக்க மகத்தான பொன்விழா

கவிதை 223
"உழைப்போர்க்கே மாநிலத்தின் ஒவ்வோர்.அடிநிலமும் உரித்தாகும்" என்று ஓங்கிய உரைவீச்சுச் செம்படைச் சிங்கங்கள்’சிங்கார முழக்கமிடும் இங்குதான்நாமெல்லாம்நாடற்றோர்."
'. பந்தப் பிணைப்பினிலே பரிதவித்துநாமிருக்க பார்த்து ரசிக்கின்ற சிறுகூட்டம் ஒன்றங்கு கள்ளத்தோணி யிதன் கரைச்சல்'எனக் கத்துகிறார். நாமென்ன கள்ளத் தோணிகளா? -இல்லை, இந்நாட்டைப் பொல்லாப் பொருளியற் கழிக்குச் செல்லாமற் தாங்கிக் கரைசேர்க்கும் நல்லதோணிகள்'நாம்
உங்கள் குழந்தையெலாம் ஒய்யாரமாய் ஒடிப்பள்ளிக்குப் போகையிலே, எம்பிள்ளை - குசினிக்கக்கூசுக் கொல்லைப் புறங்களிலே வேலைக் காரனென வெதும்பி மிக øyniøseansGuard
ஆனாலும் சொல்லுகிறேன்; எங்களது ரக்கங்கள் இப்படியே உறங்காது இன்றல்ல, என்றேலும் ஏக்கத்தின் விளிம்பினிலே எம்பி வெடித்துமிக எரிமலையைத் தான் கக்கும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் - எம்பி வெடித்துமிக எரிமலையைத்தான் கக்கும் ஸ்யத்துப்பட்டாளம்’சரஞ்சரமாய்ப் பொங்கியெழும் - அதில் பலத்த இளைஞர் அணி படைபடையாய் முன்னேறும் - அது விழித்துஉடன் எழுந்துமிகத் துடித்துமணங் கொதித்து உமை ضای فیلمی و

Page 114
224 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
மலையகக் கவிஞர்களுள் ஒருவராக விளங்கும் வேலக்குறிச்சி அசெ வெள்ளைச்சாமியின் பாடல்களுள் அதிகமானவை "துயரத்தின் துக்க முரசு" என்னும் தொகுதியாக 1967ம் ஆண்டு வெளிவந்துள்ளது. இதிலமைந்துள்ள பாடல்களுள் அதிகமானவற்றில் தோட்டத் தொழிலாளர் மத்தியில் இடம் பெறும் குடும்பச் சச்சரவுகள், காதற் பிரச்சினைகள், சண்டித்தனங்கள் முதலியனவே மேலோங்கிக் காணப்படுகின்றன.
ஏ.கே. பெரியசாமியினால் தொகுத்து வெளியிடப்பட்ட "உருளவல்லி தொழிலாளர் துயரப்பாடல் உரிமைப் போர்க்கிதம்" (1946) என்னும் கவிதைத் தொகுதியில் அமைந்துள்ள பாடல்கள் 1940-களின் முற்பகுதி வரையிலான மலையகத்தைப் பிரதிபலித்து நிற்கின்றன. நீண்டகாலம் அடிமைகளாக வதைபட்ட மலையகத் தொழிலாளர், 1920 -களிலிருந்து விழிப்புணர்வு கொள்ளத் தொடங்கியமை, இரண்டாம் உலக மகாயுத்த காலநிலைமை, அவற்றினால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் முதலியன இப்பாடல்களில் மேலோங்கிக் காணப்படுகின்றன.
மலையகத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முக்கியமாகக் கெ (ாண்டு இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் கவனம் செலுத்திவரும் முத்து சம்பந்தரின் கவிதைகள், புதுக்கவிதைகள் ஆகியவற்றுட் கணிசமானவை "முத்துத் துளிகள்" என்ற தொகுப்பாக 1986ம் ஆண்டு வெளிவந்துள்ளன. "மலையகத் தோட்டப் பாட்டாளி
வர்க்கத்தில் பிறந்த நான், எனது சொந்த வாழ்க்கை அறுபவத்தில்
பெற்ற விசித்திர அனுபவங்களையும் உணர்வுகளையும் இப்படைப்பின் மூலம் வெளியிட முனைகின்றேன்." 66 எனவும்
இங்கே
பாட்டாளி வயிறு
பற்றி எரிகின்றது
தணிக்கும்தன்மை கூறும்
நேர்மைக் கவிஞர்களே
தேவை நம்மவர்க்கு 67

கவிதை 225
எனவும் கூறும் அவரது கவிதைகளில், தொழிலாளர்களின் அறியாமையையும் வறுமையையும் பயன்படுத்தித் தோட்ட அதிகாரிகளும் தொழிற்சங்கவாதிகளும், அரசியல்வாதிகளும் பிறரும் அவர்களது உழைப்பைச் சுரண்டியும் ஏமாற்றியும் பெண் தொழிலாளர்களைக் கெடுத்தும் "பொறுக்கி வாழ்க்கை" நடத்துவதையும் தொழிலாளர்கள் ஏமாளிகளாக வெந்து மடிவதையும் கண்டு கொதித்துக்குமுறும் இயல்பும் தொழிலாளர்களை அறியாமை - வறுமை ஆகிய இருட்டிலிருந்து எழுச்சியுறச் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் மேலோங்கியுள்ளதைக் காணலாம்
மலையகக் கவிதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ள "புதிய
மொட்டுகள்" (1990), "அரும்புகள்" (1990), இருளைத் துழாவும் மின்மினிகள்" (1992) என்பவற்றில் இடம் பெற்றுள்ள சில கவிதைகளும் புதுக் கவிதைகள் சிலவும் மலையகத் தொழிலாளர்களின் வாழ்வையும் பிரச்சினைகளையும் பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வகையிற் கலைமகள் ஹிதாயாவின் 'அந்தநாள் ான்று வரும்" செல்வி அரபா உம்மா (இஸ்லாமியச் செல்வி)யின் "தோட்டத்துறையிர் தொழிற் பெண்ணானாள்' சோ. பூரீதரனின் 'நிலையில்லா வாழ்வு' என்னும் தலைப்புகளிலமைந்துள்ள பாடல்கள் மனங்கொளத்தக்கவை. இளங்கவிஞர்களான இவர்களது பாடல்கள், எதிர்கால வளர்ச்சிக்கு நம்பிக்கையூட்டுவனவாகவே காணப்படுகின்றன erebrouTıh
மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் போராட்டங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துச் சிறுகதை, நடைச் சித்திரம் கவிதை, புதுக் கவிதை எனப் படைப்பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தமதுகைவண்ணத்தைக் காட்டி வருபவர் க.ப. லிங்கதாசன். இவரது கவிதைகள் பல மலையகச் சஞ்சிகைளில் வெளிவந்துள்ளன. அவை நூலுருப் பெறாமை துரதிஷ்டமே. எஸ். எஸ். தேவசிகாமணி ஆர்.நளினி ஜே. பிரான்சிஸ், பசுமலை யோகன், ராம்ஜியூரீதேவகாந்தன், செல்வி க. நாகபூஷணி, நீலா பாலன், பிரமிளா கந்தையா,

Page 115
26 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
பி. திருச்செல்வம் முதலியோரும் மலையகக் கவிதை உலகில் நம்பிக்கையூட்டும் இளங் கவிஞர்களாக விளங்குகின்றனர். 68
ஆற்றல் மிக்க இளங்கவிஞனாகப் பரிணமித்துக் கொண்டிருக்கும் ந. பார்த்திபன் மலையகத்தைப் பிரதிபலிக்கும் கவிதைகள் பலவற்றைப் படைத்து வருகின்றார். இலங்கையின் தமிழ்த் தினசரிகளில் இவரது கவிதைகள் சில வெளிவந்துள்ளன. கவியரங்குகளில் அரங்கேறிய கவிதைகள் பலவாகும். இவ்வகையிலே "சிந்தனை செய்வாய் மலைமகனே', 'நாளை நமதென்று நம்பிக்கை கொண்டிருப்பாய்" "மலையகத்தின் இளந்தென்றலே"முதலிய தலைப்புகளில் அமைந்துள்ள பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.
கிழக்கிலங்கையின் புகழ்பூத்த கவிஞர்களுள் ஒருவரான ஏ.ஜே. செரிப்தீன் மலையகக் கவிதையுலகிற்கும் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் "விடிவைக் காண்போம்" என்ற தலைப்பிலமைந்துள்ள Լյու6ծ&hli விண்டுரைக்கத்தக்கன. குன்றின் குரல் 1987 ம் ஆண்டு நடத்திய கவிதைப் போட்டியில் மரபுக் கவிதைப் பிரிவில் இவரது மேற்கண்ட கவிதைப் பகுதி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Ffraigypirprwyth
1 инisima, da teže udi,6.
2 சாரல்நாடன், சிவி சில சிந்தனைகள், 96 பக்கிற்ேகோளாக ாடுத்தாளப்பட்டுள்ளது. அவருக்கு எனது நன்றி
3. மேலது 岸 W u/adi. 72
4 மேலது ff us, 74

9.
龙
ft.
மேலது 阙 १ १ láš. 17 - 18.
மல்லிகை மே 1979 பக். 6
சாரல்நாடன், மேலது பக்14
மேலது " Lež. 16-19.
" ией. 2
மேலது
மல்லிகை மே 1979 பக்.7
வேலுப்பிள்ளை, சுவிவி தேயிலைத் தோட்டத்திலே (தமிழாக்க
ம் சக்தீஅ பாலையா) 1969 பக்47
12 மேலது t 莎 Lá. 17
கொழுந்து பறித்தலின் நூறுக்கமாக அமைவது 'இலைகள் இரண்டும் மொட்டு ஒன்றாகவும்" எடுத்தலேயாகும். இதுபற்றிச் சாரல்நாடன் எழுதியுள்ள இலையும் திரியும்"ான்ற தலைப்பிலான கட்டுரையில் விரிவாக விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழுந்து இதழ் 4 மே - ஜின், 1989
13 வேறுப்பிள்ளை, விவி, தேயிலைத் தோட்டத்திலே, 1969 பக்3
f4, மேலது u2-2.
15 மேலது # udi, 24-23.
ேேமலது * Li2.
17 மேலது 羚 Lld, 28

Page 116
28 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
18. மேலது y( * பக்42
19. மேலது ዘ fy Lai. 56.
20 மேலது fv - ክ፡ μά 60
27 மேலது A. {ዞ Lé. 62-64
22 நேர்காணல் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டவை
23. "ஒரு கவிருளின் கண்ணிர்க்கதை" கொழுந்து, இதழ்-4 மே - ஜின், 1989 பக் 15
24 நேர்காணல் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டவை
25. குறிஞ்சித் தென்னவன் கவிதை - பின் அட்டை,
26. குறிஞ்சித் தென்னவன் கவிதை - ஒரு கனவுநிலையா அறது.
27. " ህ - ué, 28.
28, ፵፱ " - பக் 1
29. " – LIë, &
3. # - பக்16
3. 舞 - பக்கி
32. " ” ー Leó.Z
33. 霹 - பக்.28

கவிதை 29
34. ሆፆ Ap7 - பக்.14
35 Af - Lä. 13.
36. இப்பாடல்கள் "மரணத்துள் வாழ்வோம்" என்னும் கவிதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. தொகுப்பாளர் சேரன்.உ, யேசுராசா,அ, பத்மநாப ஐயர்.இ, நடராசன்.பி, யாழ்ப்பாணம் 1985
37. குன்றின் குரல் மே-ஜின், 1989 பக்16
38. குறிஞ்சித் தென்னவன் கவிதைகள், பக்39
39 கொழுந்து, இதழ் - 4 மே - ஜூன், 1989 பக் 14
40 ፱፻ ff ፶፪ A க் f5.
4t. ፆዖ ፵/ $፱ பக்16
42. Wy P7 பக்16
43 அல் அஸ்மத் கவிதைகள் - மலைக்குயில் 1987 பக்6
44. மேலது t , '. Llei. 79 45. மேலது in ዘ፪ பக்990
46. மேலது የዖ Fy பக்95
47 மேலது ff ፱፻ Ludi. 99.
48. மேலது ክ† fy Liáš. 99.
49. மேலது W Lii.62-67.

Page 117
230 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
50 மேலது
51. மேலது
52. மேலது
53. மேலது
54. மேலது.
F/ " Lé 35.
ff մd:27,
AF ,菁 Lii.35.
Leži 1920.2425
uеј, 43-48, 54-55, 17-18.
55. ஈழக்குமார்(தொகுப்பாசிரியர்) குறிஞ்சிப்பூ 1965 பக்.59
56. மேலது
57. மேலது
58. மேலது
59. மேலது
60. மேலது
Wy ud. 50.
77 t Luleå. 79.
ff Lii.47.
Fy Llei. 48.
fy f பக் 48
61இளங்கதிர் 1961- 1962 ஆண்டுமலர் பேராதனைப்பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம் பக். 81
62. மேலது
63. மேலது
Py Ludi. 81
Ay Wo பக்&l
64. இளங்கதிர் 1960-1961ஆண்டுமலர் பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்கம் பக்52

கவிதை 231
65. இளங்கதிர் 1981- 1982 ஆண்டுமலர் பக். 1-3
66 முத்து சம்பந்தர், முத்துத் துளிகள், 1986 ஆசிரியர் உரை.
67. மேலது f கவிதை. 5
68. இவர்களது கவிதைகள் பல தீர்த்தக்கரை, குன்றின் குரல், மல்லிகை முதலிய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.

Page 118
5. ւյծ/ճ
ஈழத்துத் தமிழ் இலக்கி பங்களிப்பினை நல்கிவரும் மலை இலக்கிய வகைகளாம் சிறுகதை திறனாய்வுத் துறையிலும் விதந்து வளர்ச்சியடைந்து வருகின்றது. இ உலகில் இன்று வேகமாக வளர்ந் மலையகம் குறிப்பிடத்தக்க கொண்டிருக்கின்றது.
மலையகப் புதுக்கவிதைகை அல்லது யாப்பு நெறிப்பட்ட கவிதை, பற்றி மிகச் சுருக்கமாக இங்கு நோ
மரபுக் கவிதை அல்லது ய/ அழைக்கும்போது குறிப்பாக எத சிக்கல்கள் காணப்படுகின்றன. இ நோக்கில் மலையகத்தின் மக்கள் வேலுப்பிள்ளை, குறிஞ்சித் தெ6 நீலாவணன், சுபத்திரன், கண்ண கவிமணி தேசிக விநாயகம்பி கல்யாணசுந்தரம் ஜிவானந்தம் ே புதுமைப்பித்தன் முதலியோரது கவி - யாப்பு நெறிப்பட்ட கவிதைகளே.
சங்கச் சான்றோர் இலக்கிய வான்மறையாம் திருக்குறள், க திருவாசகம் கம்பன் என்றொரு பொதுமக்கட் சார்பான இலக் கீர்த்தனைகள், கண்ணிகள் முதல்

கவிதை
ய வளர்ச்சிக்குக் காத்திரமான யகம், 1960 -களிலிருந்தே நவீன
நாவல், நாடகம் முதலியவற்றிலும் எ கூறத்தக்க வகையில் வேகமாக து போன்றே நவீன தமிழ் இலக்கிய துவரும் புதுக்கவிதைத் துறையிலும்
வளர்ச்சி நிலையை எட்டிக்
ள நோக்கு முன்பு, மரபுக் கவிதை வசனகவிதை, புதுக்கவிதை ஆகியன க்குதல் அவசியமாகும்.
ாப்பு நெறிப்பட்ட கவிதை என நாம் னைக் கருதுகிறோம் என்பதிற் பல ன்றையkபுதுக் கவிதையாளர் பலரது கவிமணி எனப் போற்றப்படும் சிவி ள்ளவன், மஹாகவி, முருகையன், தாசன், வாணிதாசன், பாரதிதாசன், ள்ளை, பாரதி, பட்டுக்கோட்டை க.சி.எஸ். அருணாசலம் ரகுநாதன், தைகள் எல்லாம் மரபுக் கவிதைகளே
ம் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் ல் நெஞ்சையும் உருக வைக்கும் மானிடம் இயற்றிய கம்பராமாயணம் கியங்களாகிய குறவஞ்சி, பள்ளு, ய யாவுமே மரபுக் கவிதைகள் என்ற

Page 119
234 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம் பொதுவரையறைக்குள் அடக்கப்பட்டுவிடுகின்றன. தமிழில் எழுந்துள்ள யாப்பிலக்கண நூல்கள் கூறியுள்ள வரையறைகளை உடைத்தெறிந்து கொண்டு கடந்த மூன்று நூற்றாண்டுகளாகத் தலைசிறந்த இலக்கியங்கள் வெளிவந்துள்ளன என்பதும், அதற்கு முன்னரும் காலத்துக்குக் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் யாப்பு மரபுகள் மீறப்பட்டுள்ளன என்பதும் கவனத்திற் கொள்ளப்படவேண்டியவை
யுகப்பெருங் கவிஞரான பாரதி, தன்னைப் பற்றியும் தனது கவிதைகளைப் பற்றியும்,
புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர்தமிழ்நாட்டுக் கில்லையெனும் வசையென்னாற் கழிந்த தன்றே! சுவைபுதிது பொருள்புதிது வளம்புதிது சொற்புதிது சோதி மிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை என்று நன்கு.
என அளவுகடந்த தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார். பாரதியின் நவ கவிதையும் சிலரது நோக்கிற் பழங்கவிதையே
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகாலத்தமிழ்க் கவிதை வரலாற்றினை நோக்கும்போது கவிதையுலகில் எத்தனை எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன! எத்தனை வகையான யாப்புகள், யாப்பு வகைகள், பாவினங்கள் யாப்பிலக்கண நூல்களில் இடம்பெறாத நவீன யாப்பு வகைகள், பாவினங்கள், வசனத்தின் சாயல் கொண்ட யாப்புகள், நாட்டார் பாடல்களின் சாயல்கள் என விரிந்து செல்லும் சங்கச் சான்றோர் பாடலும் மரபுக் கவிதையே ஆசானும் அகராதியுமின்றி உட்புக முடியாத இரும்புக் கோட்டை' என வர்ணிக்கப்படும் நாயக்கர் கால இலக்கியங்களும் தகர ககர வர்க்கப் பாடல்களும் மரபுக் கவிதையே

புதுக்கவிதை 235
'இன்னவைதாம் கவிதை எழுத ஏற்ற பொருள் என்று, பிறர் சொன்னவற்றை நீர்திருப்பிச் சொல்லாதீர்" எனவும்
'இன்றைய காலத்திருக்கும் மணிதர்கள் இன்றைய காலத்தியங்கும் நோக்குகள்
இன்றைய காலத்திழப்புகள் எதிர்ப்புகள் இன்றைய காலத்திக்கட்டுகள். 2
எனவும் கூறிய மஹாகவியின் கவிதைகள் இன்று மரபுக் கவிதைகள் - பழங்கவிதைகள் - யாப்பு நெறிப்பட்ட கவிதைகளாகவே கொள்ளப்படுகின்றன.
கூர்த்த மதியும் கால உணர்வும் வரலாற்று நோக்கும் மானுட நேயமும் கொண்ட ஒரு இலக்கியகர்த்தா நிச்சயமாக இவை யெல்லாவற்றையும் ஒரே ரகமாகக் கொள்ளமாட்டான்.
காலத்திற்கேற்ற வகைகள் - அவ்வக் காலத்திற்கேற்ற ஒழுக்கமும் நூலும் ஞால முழுமைக்கும் ஒன்றாய் - எந்த
நாளும்நிலைத்திடும் நூலொன்றுமில்லை. 3.
என்பது யுகப்பெருங் கவிஞனான பாரதியின் அருள்வாக்கு
இன்னும் சில தசாப்தங்களில், இன்றைய புதுக்கவிதைகளும் மரபுக் கவிதைகளாகவே - பழங்கவிதைகளாகவே கொள்ளப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
மரபுக் கவிதையை - யாப்பு நெறிப்பட்ட கவிதையை உதைத்துத் தள்ளிவிட்டு முன்னேற முயலும் புதுக்கவிதையை இப்பொழுதே இழுத்துப் பிடித்துக் கொண்டு ஹைக்கூ கவிதை அதிவேகத்தில் முன்னேற முயல்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டில் இன்னும் எத்தனை வகைக் கவிதைகள் தோன்றவுள்ளனவோ என்பதனைக் காலத்தின் போக்கும் காலத்தின் தேவைகளுமே நிர்ணயிக்கும்

Page 120
236 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழிலக்கிய வரலாற்றை மட்டுமல்லாது தமிழகத்தின் சமூக, சமய, பண்பாட்டு வரலாறுகளைக் கூர்ந்து நோக்கும்போது தென்படுவன யாவை?
மரபு என்பது எவ்வித மாற்றமுமின்றித் தேங்கி நிற்கும் குட்டை நீரா? காலந்தோறும் புத்தம் புதிய அம்சங்கள் இடம் பெறவில்லையா?
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத் தமிழ் இலக்கண இலக்கிய மரபுகள் எத்தனை எத்தனை மரபுகளை உடைத்துத் தள்ளிவிட்டு காலத்துக்குக் காலம் புத்தம் புதிய மரபுகளை ஏற்படுத்தி வந்திருக்கிறது. புத்தம் புதிய மரபுகள் கால வெள்ளத்திலே பழமை கொள்ள மீண்டும் புதிய மரபுகள் தோன்றிக் கொண்டே வந்திருக்கின்றன.
கடந்த காலப்பகுதிகளை விட இன்றைய இருபதாம் நூற்றாண்டு வேகம்மிகுந்த மாற்றங்களைக் கொண்ட ஒரு நூற்றாண்டாகும் இன்றைய இருபதாம் நூற்றாண்டில் அனைத்துத் துறைகளிலும் மாற்றங்கள் மிக வேகமாகவே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அவற்றுக்கேற்ப இலக்கிய வளர்ச்சிப் போக்குகளிலும் அவற்றின் வடிவங்களிலும் மாற்றங்கள் வெகு வேகமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் உண்மையைத் தக்கபடி உணர்ந்து கொண்டால் இன்றைய மரபுக் கவிதை - புதுக்கவிதைப் போராட்டம் தோன்றவே இடமிருந்திருக்காது.
"ஒரு கூட்ட மக்களின் வரலாற்றினை அடிப்படையாகக் கொண்ட, அவர்களின் அரசியல் - சமூக, பொருளாதார அபிலாஷைகளின் ஆன்மீக - தார்மீக வெளிப்பாடும் வடிவமுமே கலைகள்" என்பர். ஒவ்வொரு காலகட்டத்தையும் சேர்ந்த சமூகம், தனது அறிவுத் தேட்டத்திலும் அனுபவத் திளைப்பிலும் உணர்ந்து அறிந்து தெளிந்து உருவாக்கிய முடிவுகளே மரபு எனப்படுகிறது

புதுக்கவிதை 237
"ஒவ்வொரு மனிதனும் தனக்கு முந்திய தலைமுறையினரின் ஒழுகலாற்றினைப் பெருமளவிற்குப் பின்பற்றிச் செல்கின்றான். நமது வாழ்க்கை, காரணகாரியத் தொடர்புடன் அமைந்திருப்பதனால், இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நெருங்கிய பிணைப்புண்டு. ஆகையால், இன்றைய மனிதன் நேற்ைைறய மனிதனது ஒழுகலாற்றைப் பின்பற்றி வாழ்வதில் வியப்பேதுமில்லை. நேற்றைய மனிதனது அனுபவ உண்மைகள் சிலவற்றையே மரபு'என்றும் உணர்வில் அடக்கிக் கொள்கிறான். அதுவரையும் சரி. ஆனால், நேற்றைய ம6ளிதனுக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்கும் இன்றைய மனிதனுக்கு ஏற்படும் அனுபவங்களுக்கும் வேறுபாடு காணப்படும் பொழுது, நேற்றைய மனிதனது அனுபவ விளைவுகள் இன்றைய மனிதனது அனுபவத்திற்கும் ஏற்ப இருக்குமென்று எவ்வாறு எதிர்பார்க்கலாம்" என்பர் பேராசிரியர் கைலாசபதி
ஒவ்வொரு காலப்பகுதியிலும் அவ்வக் கால வாழ்க்கை முறைகள், வாழ்க்கைப் போக்குகள் முதலியவற்றுக் கேற்பப் புதிய அறிவுத் தேட்டமும் அனுபவங்களும் அனுபவமுடிவுகளும் ஏற்படும் போது, பழைய மரபில் ஒவ்வாதனவற்றை விடுத்துப் புதிய மரபினைத் தோற்றுவிக்கிறது. இதனால், மரபு என்பது எவ்வித மாற்றமுமின்றித் தேங்கிநிற்கும் குட்டை நீராகவன்றி மாற்றங்களுக்குள்ளாகிக் கொண்டே வந்திருப்பதை அவதாளிக்கலாம்
காலத்தின் போக்கையும் தேவையையும் மரபையும் நன்குனர்ந்து தெளிந்து கொண்ட யுகப் பெருங்கவிருள் பாரதி, பழமையையும் புதுமையையும் தக்கவாறு இணைத்துக் கொண்டார். நவீன கவிதைகளைப்படைத்தளித்த பாரதிதன்முன்னோர்களையும் அவர்களது படைப்புகளையும் இகழ்ந்தொதுக்கவில்லை. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் எனவும் தெய்வ வள்ளுவன் வான்மறை செப்பினான் எனவும் கம்பன் என்றொரு மாளிடன் எனவும் பலவாறெல்லாம் போற்றும் பாரதிதான் போற்றிய இலக்கிய கர்த்தாக்களையும் அவர்கள் கையாண்ட பாடுபொருளையும் வடிவங்களையும் யாப்பு வகைகளையும்

Page 121
238 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
பாவினங்களையும் உள்ளவாறே பின்பற்றாது, காலத்தின் போக்கையுணர்ந்து காலத்தின் தேவையை நிறைவேற்றும் நவீன கவிதைகளைப் படைத்தளித்தான். அதே சமயம் கூர்த்தமதியுடன் எதிர் காலச் செல்நெறிக்குக் கட்டியம் கூறுவது போல், அன்றே வசன கவிதை' களைப் படைக்கும் பரீட்சார்த்த முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார் என்பதை நாம் மனத்திருத்துதல் வேண்டும்
பாரதியார் காலம் வரைக்கும் கவிதை' என்பது செய்யுள் என்ற தளத்தையே பிரதானமாகக் கொண்டு வெளிவந்திருப்பதை அவதானிக்கலாம். அதே சமயம் சிலப்பதிகாரம் மணிமேகலை, பக்தி இலக்கியங்கள் முதலியவற்றிலும் குறவஞ்சி பள்ளு, கீர்த்தனைகள் முதலியவற்றிலும் சித்தர் பாடல்களிலும் ஆங்காங்கே வசனத்தின் சாயலும் நாட்டுப் பாடல்களின் செல்வாக்கும் எளிமைப் பண்பும் இடம் பெறுவது மனங்கொளத்தக்கது.
பாரதியார் செய்யுள், வசனம் என்ற இரு தளங்களிலும் நின்று கொண்டே நவீன கவிதைகளைப் படைத்தார் முழுக்க முழுக்க வசனம் என்ற தளத்தில் நின்று உயிர்த்துடிப்பு மிக்க வசன கவிதையைப் படைத்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டியிருந்தே செய்யுளிலும் பார்க்க வசனத்தின் செல்வாக்கு மேலோங்கலாயிற்று இருபதாம் நூற்றாண்டு வசன யுகமாகவே விளங்குகின்றது. இந்நிலையில், இருபதாம் நூற்றாண்டின்விடியலிலிருந்தே கவிதைகளில் வசனத்தின் செல்வாக்குப் படிப்படியாக அதிகரித்து வந்திருப்பதைப் பாரதியார், கவிமணி TTTLTTTTLaHLTLC LtLLLCLS TLLTT TLatTTT LLLLLLLCS கண்ணதாசன், முடியரசன், சுரதா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கேசிால், அருணாசலம், புதுமைப் பித்தன், ரகுநாதன், பாவலர் துரையப்பாபிள்ளை, சோமசுந்தரப்புலவர் முருகையன், நீலாவணன், சுபத்திரன், புதுவை ரத்தினதுரை முதலியோரது கவிதைகளில் மிகத் GigafauraJaw arawiryaguasairaga

புதுக்கவிதை 239
அதேசமயம், பாரதியார் காலத்திலிருந்தே வசனகவிதையும் புதுக்கவிதை, உரைவீச்சு புதிர் விடுகவிதை எனப்பல்வேறு பெயர்களில் முளைவிட்டு வளரத் தொடங்கி இன்றைய தமிழ் இலக்கிய உலகில் ஆழமாக வேர் பாய்ச்சிக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். புதுக்கவிதைக்குப் போட்டியாகக் கடந்த ஓரிரு தசாப்தங்களாக ஹைக்கூ என்னும் புதிய ரகக் கவிதையும் முளைவிடத் தொடங்கியுள்ளமை உதாசீனப்படுத்த முடியாததொன்றாகும்
பாரதியார் படைத்தளித்த நவீன கவிதைகள் முதல் இன்றைய புதுக்கவிதைகள் ஈறாக இடைப்பட்ட காலத்தில் தமிழ்க் கவிதைத் துறை உருவிலும் பொருளிலும் எத்தனையோ மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது. கவிதையின் உரு அல்லது வடிவ மாற்றங்கள் யாவும் புதுக்கவிதை வடிவத்தை நெருங்கி வந்திருப்பதை அவதானிக்கலாம். நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை, பெ தூரன், அ. சீனரிவாச ராகவன், கம்பதாசன், சாலை இளந்திரையன், மஹாகவி முருகையன், புதுவை இரத்தினதுரை, சுபத்திரன் முதலியோரது கவிதைகள் இவ்வகையில் நோக்கத்தக்கவை
ாந்த ஒரு துறையிலும்புதிய அம்சங்கள் இடம்பெற்றுவளரும்போது ஒரு பகுதியினர் ஆதரிப்பதும் மறு பகுதியினர் வன்மையாக எதிர்ப்பதும் இன்னொரு பகுதியினரி சந்தேகக் கண்கொண்டு நோக்குவதும் TTLTTTTLLTTT TTTLHHLLLLLLL TTTTLLLL LHtHLTTTtLS LTLTT TLCTTTLLLLL முதலியோர் கவிதைத் துறையிற் புதுமைகளைக் கையாண்டபோது அளிகளுக்கு நேர்தஇன்னல்களும்வசைமொழிகரும் சிறுகதை,நாவல் முதலிய நவீன இலக்கியத் துறைகள் தோன்றி உரம்பெற்று வாரத் தொடங்கிய போது, தமிழ் இலக்கிய உலகில் 1950 - களிலும் 1960 -களிலும் ஏற்பட்ட எதிரிப்புகளும், நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களும்ஆய்வறிவுத்துறையிற் பேராசிரியர்வையாபுரிப்பிள்ளை, கைலாசபதி முதலியோர் புதுநெறிகளை மேற்கொண்டபோது ஏற்பட்ட எதிர்ப்புகளும் இங்கு நினைவுகூரத்தக்கவை

Page 122
40 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
மேலை நாடுகளில், வால்ட் விட்மன் (1819-1892), எஸ்ரா பவுண்ட், ஸ்டீவன் கிரேன் லின்ட்ளே, அமிலோவல் முதலியோரது முயற்சியால் புதுக்கவிதை தோன்றிவளரத் தொடங்கிய போது வன்மையான எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியேற்பட்டது. பாரதியார் காலத்திலேயே தமிழில் முளைவிடத் தொடங்கிய புதுக்கவிதை முயற்சி பாரதிதாசன், கண்ணதாசன், ந.பிச்சமூர்த்தி கு.ப.ரா, வல்லிக்கண்ணன் முதலியோரது முயற்சிகளைத் தொடர்ந்து எழுத்து, வானம்பாடி முதலிய சஞ்சிகைகளில் அதிக அளவில் வெளிவரத் தொடங்கியபோதே அதற்கெதிரான தாக்குதல்களும் உக்கிரம் பெற்றன.
பிச்சமூர்த்தி கவிதைகள்' என்னும் நூலின் முன்னுரையில், ந.பிச்சமூர்த்திதமது புதுக்கவிதை முயற்சிகள் பற்றி, "என் புதுக்கவிதை முயற்சிக்கு, யாப்பு மரபே காணாத அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் எழுதிய புல்லின் இலைகள்'என்ற கவிதைத் தொகுப்புதான் வித்திட்டது. அதைப் பழத்த போது கவிதையின் ஊற்றுக்கண் தெரிந்தது. தொடர்ந்து பாரதியின் வசனக்கவிதையைப் படிக்க நேர்ந்தது. என் கருத்து வலுவடைந்தது. இவற்றின் விளைவாக 1934 முதல் சோதனை ரீதியான கவிதைகளை எழுதத் தொடங்கினேன். நண்பர் கு.ப.ராவும் பின்னர் நண்பர் வல்லிக் கண்ணனும் இப்பாதையிற் சேர்ந்து கொண்டனர்." எனக்குறிப்பிட்டுள்ளார். மேத்தா, நா. காமராசன், இன்குலாப் அப்துல் ரகுமான், மீரா, சிற்பி தருமு சிவராமு சக்திக் கணல் தணிகைச் செல்வன், கந்தர்வன், புவியரசு தமிழ்நாடன், சார்வாகன், பாலகுமாரன், மேமன்கவி, வஜச ஜெயபாலன், சேரன், வில்வரத்தினம் முரளிதரன், நித்தியானந்தன், சாருமதி தா. ராமலிங்கம் மு. பொன்னம்பலம் அ. ஜேசு ராசா, சிவசேகரம் மு. கனகராசன், திக்குவல்லை கமால், ஜவகர்சா முதலியோரது படைப்புகள், தமிழ் புதுக்கவிதை உலகுக்கு வளம் சேர்ப்பனவாக விளங்குகின்றன.
தமிழகத்தில் 1950-களிலிருந்து புதுக்கவிதை வேகமாக வளர்ச்சி பெறத் தொடங்கியதும், மரபுக் கவிதை-புதுக்கவிதைப் போராட்டமும் உக்கிரம் பெற்று, 1970 களில் தணியலாயிற்று. இலங்கையில்

புதுக்கவிதை 241
1960 -களின் இறுதியிலிருந்து புதுக்கவிதை வேகமான வளர்ச்சியைப் பெறத் தொடங்கியதும் தமிழகத்தைப் போன்று, இலங்கையில் மரபுக் கவிதை - புதுக்கவிதைப் போராட்டம் உக்கிரம் பெறாவிடினும் சில எதிர்ப்புக் குரல்களும், முனு முனுப்புகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. நவீன தமிழ் இலக்கிய உலகில் முற்போக்கு அணியின் மூத்த முன்னோடிகளாகத் திகழும்பேராசிரியர் கைலாசபதி முருகையன், சிதம்பர ரகுநாதன், அழகிரிசாமி முதலியோர் புதுக்கவிதைக்கெதிராகத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வந்துள்ளனர். புதுக் கவிதையை வரவேற்கத் தயங்குகின்றனர்.
எனினும் காலம் யாருக்காகவும் காத்து நிற்பதில்லை. அது தன் கடமையைச் செய்து கொண்டே இருக்கும் காலத்தின் தேவையாகப் பரிணமித்துள்ள புதுக்கவிதை, கடந்த கால் நூற்றாண்டுகாலத்துள்தனது இலக்கிய அந்தஸ்தை உரம்பெறச் செய்துள்ளது. அதேசமயம், படைப்பதற்கு மிக இலகுவானது என்ற தப்பபிப்பிராயத்தால் புதுக்கவிதை' என்ற பெயரில் குறும்புத் தனங்களையும் கோமாளி வித்தைகளையும் வித்துவச் செருக்கினைப் புலப்படுத்தும் புரிந்து கொள்ள முடியாமை யையும் பலர் மேற்கொண்டு புதுக்கவிதையை மலினப்படுத்தியுள்ளமை துரதிஷ்டமே, புதுக் கவிதையை வன்மையாக எதிர்க்கின்ற பலர் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகள் பல, இன்றைய இளம் புதுக்கவிதையாளர்களும் புதுக்கவிதை ஆதரவாளர்களும் ஊன்றிக் கவனிக்க வேண்டியவை
பேராசிரியர் கைலாசபதி 1969 ம் ஆண்டு எழுதிய கட்டுரையொன்றில் ".தற்காலத்தமிழ்க் கவிதையிலே இருமுரணான போக்குகள் தென்படுகின்றன. இவை இரண்டும் ஒன்றற்கொன்று எதிர் விளைவானவை. ஒருபுறம் அதீத ஆங்கிலச் செல்வாக்கு புதுக்கவிதை ான்ற பொதுத் தலைப்பில் எத்தனையோ பிறவிகள், ந, பிச்சமூர்த்தி போன்ற சிலர், தமது இலக்கிய வாழ்வின் முற்பகுதியிலிருந்தே இப்போக்கிற்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றனர். ஆயிறும் இலக்கிய உலகிலே குறிப்பிடத்தக்க செய்தியாக இப்போக்கு

Page 123
242 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
இக்காலத்திலேதான் காணப்படுகிறது . ஆனால், இப்போக்கினால் தமிழ்க் கவிதை பெருவளம் பெறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அதீத ஆங்கில இலக்கியச் செல்வாக்கு தமிழின் ஆத்மாவையே அமுக்கிக் கொன்றுவிடுகிறது என்பது என் கருத்து
இப்போக்கிற்கு எதிரிடையாகச் சில கவிஞர்கள், சான்றோர் செய்யுட்களின் ஒரு பகுதியாம் அகத்தினைப் பாக்களை வெட்டியும் கொத்தியும் புதிதாக்கி வருகின்றனர். இது மரபு உணர்வு அன்று. தன்னுணர்வான படியெடுத்தலாகும் பாரதிதாசன் வழிவரும் கவிஞரிடத்து இப்புதிய போக்கினைக் காணலாம். இன்றைய நிலையிலே இத்தகைய மீட்டுயிர்ப்பு முயற்சிகளுக்கு வாழ்த்தும் வரவேற்பும் கிடைத்தாலும், இவற்றால்நிலையான நீடிக்கும் பலன் கிடைப்பது ஐயமே. இப்போக்குகள் இரண்டுமே வெவ்வேறு வகையில் பாரதியை மறுதலிப்பன. புதுமையையும் பழமையையும் அளவறிந்து கூட்டிச் சுருதிசேர்த்த அப்பெருங் கவிஞனது கவிதாநெறி போதிய அளவு கைக்கொள்ளப்படாமையே இன்றைய கவிதையின் பொதுவான மந்த நிலைக்குக் காரணம் எனல் வேண்டும் "எனக் கூறியுள்ளமையும் பிறிதோர்.இடத்தில் "கடந்த சில தசாப்தங்களாகத் தத்துவ வீச்சும்தமிழ்த் திறனும் தனித்துவமும் பொருட் தெளிவும் கருத்து ஆழமும் கலைநயமும் வாய்க்கப்பெற்ற புதுக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. சிறப்பாக வானம்பாடி இதழை மையமாகக் கொண்டு வளர்ந்த கவிஞர்கள், மொத்தத்தில் செழுமையான கவிதைகளைப் படைத்தளித்தனர் என்பதை எவரும் மறுக்கமுடியாது 'சி எனக் கூறியுள்ளமையும் கூர்மையாக அவதானிக்கத்தக்கவை
1985 ம் ஆண்டு இலங்கையின் முதுபெருங் கவிஞர்களுள் ஒருவரானமுருகையன்,"கடுங்கோபத்துடன்’எழுதிய கட்டுரை ஒன்றில், ". புதுக் கவிதைகளில் எனக்கு வலுவான நம்பிக்கை இன்றும் தோன்றவில்லை. இதைச் சொல்வதில் எனக்கு வெட்கமில்லை. அந்த நம்பிக்கை தோன்றாமைக்கு இப்படிப்பட்ட சப்புச்சவர்கள்தான் காரணம் .தனிப்பட்ட கொள்கையளவிலே, பழைய யாப்பு வடிவங்களில் எனக்குத் தணிப்பட்ட பற்று எதுவும் கிடையாது. புதுவகையான வடிவங்களை

புதுக்கவிதை 243
வளர்த்தெடுக்கும் நோக்குடன் பரிசீலனைகள் பலவற்றைச் செய்து பார்த்துள்ளேன். போலித்தனமான திகைப்பூட்டல்களையும் சாகசங்களையும் செப்படி வித்தைகளையும் எம்மை விட்டுப் போன பாடில்லை" 7 எனப் புதுக்கவிதைகளில் இடம்பெறும் மிகையான குறைபாடுகளைச் சாடுகின்றார். மரபுக் கவிதைகளிலும் குறைபாடுகள் பல உண்டென்பது மனங்கொளத்தக்கது.
ஆயின், புதுக்கவிதை படைப்பவர்களிற் பலர் எதுவித சிரமமுமின்றியும் ஆழ்ந்தகன்ற சமூக நோக்கின்றியும் விரைவில் கவிஞன் என்ற புகழைப் பெற்றுவிட வேண்டும் என்ற அவசரத்திற் புதுக்கவிதை என்ற பெயரில் வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளாதவாறு அல்லது முரண்பாடாகப் புரிந்துகொள்ளுமாறு சொற் சிலம்பமாடுகின்றனர் வெறும் ஆரவாரப் பகட்டுகளைச் செய்கின்றனர் மிதமிஞ்சிய குறியீடுகளையும் படிமங்களையும் அடுக்கடுக்காகக் கையாண்டு படிப்பவர்களுக்குக் கருத்து மயக்கங்களையும் தலைச் சுற்றலையும் ஏற்படுத்துகின்றனர். வெறுமனே குறும்புத் தனங்களையும் அருவருப்பான படிமங்களையும் விரசங்களையும் அசிங்கமான கற்பனைகளையும் கையாண்டு கலை இலக்கியப் பண்பினைக் கொச்சைப்படுத்துகின்றனர். சிலரது புதுக்கவிதைப் படைப்புகளை நோக்கும் போது, நாயக்கர்காலச் செப்படிவித்தைப் பாடல்களும் வித்துவச் செருக்கைப் புலப்படுத்தும் பாடல்களுமே உடன் ஞாபகத்திற்கு வருகின்றன. புதுக்கவிதையைச் சிலர், தவறாக எடை போடுவதற்கு இவையே வழிவகுக்கின்றன.
வசன வடிவத்தில் அமையும் புதுக்கவிதைகளில் வெளிப்படையாகக் கூறமுடியாதவற்றைக் குறிப்பாக அல்லது தொணிப்பொருளாகப் புலப்படுத்துவதற்கும்-சங்கச் சான்றோர்கள் கையாண்டுள்ள உள்ளுறை உவமை இறைச்சி முதலிய அணிகள் போன்று-வாசகர் மனதிற் படியும் வண்ணம் கலைத்துவத்துடன் வெளிப்படுத்துவதற்கும் பழமங்களும் குறியீடுகளும் அளவாக இடம்பெறும்போது அவை கவிதைகளுக்குத் தனிச் சோபையையும் உயிர்த்துடிப்பையும் அளிக்கின்றன. ஆயின், அவையே அளவுக்கதிகமாகவும் புரிந்துகொள்ள முடியாமலும்

Page 124
244 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
இடம்பெறும்போது தரமான கவிதையையும் பாழாக்கி விடுகின்றன. புதுக்கவிதைகளிற் சொற்செட்டும் மிக அவசியமானதே. அநாவசியமான எந்த ஒரு வெற்றுச் சொல்லும் இடம்பெறுதல் ஆகாது. வெறும் சொல் அலங்காரங்கள் தவிர்க்கப்பட வேண்டும் இன்றைய மக்களது வாழ்வின் அவலங்கள், போலித்தனங்கள், சிக்கல்கள், முரண்பாடுகள், நவீன சிந்தனைகள் முதலியவற்றை நறுக்காக வெளியிடுவதில் புதுக்கவிதைகள் பல சிறந்து விளங்குவதை அவதானிக்கலாம்?
இவ்வகையில் ஒருசில கவிதைகளையோ கவிதையின் சில அடிகளையோ இங்கு நோக்குதல் பொருத்தமானது சாருமதியின் "சுனி' ஒரு கலகக்காரி" என்ற தலைப்பிலமைந்த கவிதைப்பகுதி வருமாறு:
சீதையைப் பாயச் சொன்னான் தியுக்குள் இராமன் தனக்கும் அந்த நியாயத்தைப் பிரயோகிக்காமல்
இந்திரனுக்கு ஏமாந்தவள் அகலிகை மட்டும்தானா? இல்லையே! தபோமுனியும் தவறிழைத்தான்தானே? ஆனால் தண்டிக்கப்பட அகலிகை தண்டிக்கக் கௌதமன் இது சான்ன நியாயம்?
uangaushuqui மனிதப்பிறவிதானே! sfforsö auflute
gyasalem' வேசை யென்று சொல்லி

புதுக்கவிதை 248
விட்டு விலகிப் போன கோவலன் மட்டு மென்ன
கற்புக்கு அரசனா?
பண்டைய இந்தியாவின் பல கதைகள் இப்பழத்தான் பண்டைய இந்தியா என்ன இன்றைய இந்தியாவிலும் இவைதான் கதைகள்
"சுனி கொத்தால்" அந்தக் கதைகளின் இன்றையநாயகி
இந்தியாவின்
இந்து சனாதனம் அசிங்கங்களின் குப்பைத் தொட்டி சுனி அதையே கண்டனம் செய்தாள் தன்னைத் தானே கொன்று போட்டதால்
தற்கொலைகள் அப்படி யொன்றும் முட்டாள்தனமானது மல்ல கோழைத்தனமானதுமல்ல அது ஒரு கலகம் அநீதிகளுக்கு எதிரான கண்டனப் பிரகடனம்
கனி கலகக்காரி கலகம் செய்வது

Page 125
248 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
நியாயம் ஆனது அதையே அவள் செய்தாள்
சுனி
அவளுக்காக செய்ய வேண்டிய தெல்லாம் அஞ்சலிகள் அல்ல ஆத்திரம் உறலே?
இதே போன்று காலம் காலமாகப் பெண்இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைச் சாட வந்த வானம்பாடிக் கவிஞர் சுந்தரம் அகப்பட்டுக் கொண்டாயா'என்ற தலைப்பில்,
"அகப்பட்டுக் கொண்டாயா? என்னிடம் வகையாக அகப்பட்டுக் கொண்டாயா? அறிவுக் கனியைத்தின்றதும் என்னையே அழமையாக்கினாயே
நினைவிருக்கிறதா?
*Avivos y நிறைமாதக் கர்ப்பிணியான
என்னை மறுபடியும்
காணகம் துரத்தினாயே.. ------ மதுரைத் தெருக்களில் என்னைத் தலைவிரிகோலமாக அலைய வைத்தாயே
r r இன்று சிவப்பு முக்கோணத்தில் என்னிடம் வகையாக அகப்பட்டுக் கொண்டாயா?
இதேபோன்று சுப்பிரமண்ய ராஜுவின் வெறும் மனைவி' என்ற தலைப்பிலமைந்த கவிதை வருமாறு,

புதுக்கவிதை 247
'அம்மாவும் ஆபீஸ் போகிறாள் அப்பாவின் ஸ்கூட்டரின் பின்னே விட்டிலே பாட்டி உண்டு கட்டிலில் படுத்திருப்பாள் ஊட்டிவிட ஆளில்லை உடல் முழுக்கச் சோறாச்சு மாலையில் திரும்பிவருவாள் ஆபீஸின் அலுப்பை ஊட்ட நாக்கின் ருசியெல்லாம்
ஞாயிறில் மட்டுமே உண்டு நாளைக்கு நானும் போவேன் நான் மட்டும் ஆபீஸ் போவேன் வேலைக்குப் போகாத வெறும் மனைவி எனக்குப் போதும் ff
என மத்திய தர வர்க்கத்தின் பரிதாப நிலையையும் குழந்தையின் அங்கலாய்ப்பினையும் வெளியிடுகிறது.
வேலை தேடி அலையும் ஓர் இளம் பெண்ணின் மன உணர்வுகளை வேளை வரலை’ என்றும் தலைப்பில் பாலகுமாரன் பின்வருமாறு வழத்துள்ளார்.
"கொத்திக் கொண்டு போவாண்டி
ஆப்பிள் சிவப்பு என் பேத்தி
பாட்டி சொல்வாள்திடத்தோடே
அம்மா விடுவாள் பெருமூச்சு
வெட்டிப் பொழுது கழிப்பானேன்
வேலை தேடேன் எங்கேனும்
அப்பா சொல்வார்தரைநோக்கி
அண்ணன்முறைப்பான் எனைப் பார்த்து

Page 126
248
இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம் கொத்திக் கொண்டு போவதற்கு ஜாதகப் பட்சி வரவில்லை வெட்டிப் பொழுதின் விடிவுக்கும் வேளை வரலை இதுநாளாய் வேலை தேடி கால்தேய வெளியே நடக்கத் தலைப்பட்டால் ஈயாய் கண்கள் பலமொய்க்க என்னை உணர்ந்தேன் தெருமலமாய்."
குறைந்த சம்பளத்தை மட்டும் நம்பி வாழ்க்கையுடன் போராடும்
சராசரி மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பொறுப்புகள் மிக்க ஒருவனின் மன ஆதங்கத்தை மு. மேத்தா முதல் தேதி'என்ற தலைப்பில்,
"என்னுடைய சம்பளநாளில் எண்ணிவாங்குகிற பளபளக்கும் நோட்டுகளில்
எவரெவர்முகமோ தெரியும் என் முகம்தவிர."
என வழத்துள்ளார்.
"நாங்கள் நிர்வானத்தை விற்பனை செய்கிறோம் ஆடை வாங்குவதற்காக"
என நா. காமராசனும் "நாங்கள் சேற்றில் கால் வைக்கா விட்டால் நீங்கள் சோற்றில் கைவைக்க முடியாது."
எனக் கவிசோதியும் கூறுவது, உள்ளத்தை உலுக்குவதாக அமைந்துள்ளன.

புதுக்கவிதை 249
தமிழில் எழுந்துள்ள தரமான புதுக்கவிதைகளை நோக்கும் போது புதுமைப்பித்தனின் பின்வரும் கூற்றே எமக்கு ஞாபகத்தில் வருகிறது.
"உண்மையிலேயே சக்திபெற்ற இலக்கிய கர்த்தாக்களைச் சாகடித்து விட முடியாது. இதற்குப் பாரதியார் சிறந்த உதாரணம் நல்ல
இலக்கியமென்றால், எத்தனை நந்திகள் வழிமறித்துப் படுத்துக்
கொண்டாலும் அவை உரிய ஸ்தானத்தை அடைந்தேதீரும்."
pairspraflufili...
இத்தகையதொரு பின்னணியில் மலையகத்தின் குறுகிய காலப் புதுக்கவிதை வளர்ச்சியை நோக்கும் போது, அது நம்பிக்கை யூட்டுவதாகவே காணப்படுகிறது. மலையகப் புதுக்கவிதையாளருள், ஆண்டில் இளைஞனான சு. முரளிதரன், முன்னணியில் திகழ்வதை அவதானிக்கலாம் புதுக்கவிதைத் துறையில் முன்னணியில் நிற்கும் அவர் மலையகத்தைப் பொறுத்தவரை ஹைக்கூ கவிதைத் துறையிலும் முன்னோடியாகத் திகழ்கிறார். அவர்து ஹைக்கூ கவிதைகளின் ஒரு பகுதி கூடைக்குள் தேசம்'என்ற தொகுதியாக வெளிவந்துள்ளது. அவர் படைத்துள்ள புதுக்கவிதைகளுள் ஒரு சில சமவெளி மலைகள்'என்னும் தொகுதியின் ஒரு பகுதியாகவும் கணிசமானவை தியாக யந்திரங்கள்’ என்னும் தொகுதியாகவும் (1986 ம் ஆண்டு) வெளிவந்துள்ளன. தமது பதினைந்தாவது வயதில் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்த அவர், இருபத்து மூன்றாவது வயதில் தியாக யந்திரங்கள்'என்னும் தொகுதியை வெளியிட்டுள்ளார். இத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகளிலும் பார்க்க, 1986 ம் ஆண்டின் பின் இதுவரை வெளிவந்த அவரது கவிதைகளுட் பல தரம் மிக்கனவாக அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்கது
தியாக யந்திரங்கள்’ தொகுதியிலமைந்துள்ள "நான் பேசுகிறேன். " என்னும் பகுதியில், ". இத்தொகுப்பில் சிறுவயதிலிருந்து எழுதிய கவிதைகள் காணப்படுவதால், ஒரு கவிஞரின் பரிணாமத்தைப் பார்வையிட்டுக் கொள்வதும் உங்கள் பணியாகின்றது

Page 127
250 இலங்கையின் மலையகத்தமிழ் இலக்கியம்
வெறுமனே காதல் ஒப்பாரிகளையும் புத்தி ஜீவிகளுக்கான கவிப்பிரகடனத்தையும் விட்டு மக்களுக்காக இதில் புதுக்கவிதைகளால் ஊசிகளைத் தயாரித்திருக்கின்றேன் என நினைக்கிறேன்.
"புதுக்கவிதைப் புத்திரனைத் தேரேற்றி இப்போது அழைத்து வந்தாலும், மரபு மாதாவின் மடியில் சாய்ந்து எதுகை மோனைச் சோலைக்குள் சந்தக் கவிகளால் சிறகடிப்பது எனது ஜீவனுள்ள சந்தோசம் ஆனால், சமூகத்தின் விரிசலைக் காட்டவும் உறங்கிய மக்களைப் பாட்டால் தாலாட்டாமல் குட்டால் எழுப்பவும் புதுக்கவிதை ஒரு வரப்பிரசாதம் என்பதால் காலத்தின் தேவையறிந்து பயன்படுத்த வேண்டியுள்ளது."எனக் கூறியுள்ள விடயங்கள் சில அவதானிக்கத்தக்கவை மரபுக் கவிதைகள் எல்லாம் தாலாட்டுப் பாடல்கள் அல்ல. அதே சமயம் புதுக்கவிதை, காலத்தின் தேவையென்பதையும் ஆசிரியர் உணர்ந்துள்ளார்.
மானுட நேயம் கொண்ட எந்த ஒரு இலக்கிய கர்த்தாவும், தாழ்வுற்று வறுமை மிஞ்சிச் சுதந்திரம் தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நிற்கும் தனது சமுதாயத்தை மறந்து, பொழுது போக்குக்காகவோ கலைக்காகவோ இலக்கியம் படைத்துக் கொண்டிருக்க மாட்டான். மாறாக பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடவே முயல்வான். இளங்கவிருறும் விஞ்ஞானப் பட்டதாரியுமான முரளிதரனிடமும் ஐயத்திற்கிடமின்றி இப்பண்பினைக் காணலாம்
மலையகத் தொழிலாளர் மத்தியிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் முரளிதரன், அவர்களது இன்ப துன்பங்களிலும் போராட்டங்களிலும் பங்குகொண்டவர் சோகமும் வேதனையும் மிக்க அவர்களது கடந்தகால வரலாற்றினையும் நிகழ்காலநிதர்சனங்களையும் அறிந்து உணர்ந்து தெளிந்து கொண்டவர்; மலையகத் தொழிலாளர்களைப் பகடைக் காய்களாக்கி அவர்களது வறுமையையும் அறியாமையையும் ஏற்றவாறு பயன்படுத்தி, அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் தலைவர்களும் பிறரும் காலம்காலமாக அவர்களை ஏமாற்றித் தமதுநலன்களைப் பெருக்கிக் கொண்டமையைக்

புதுக்கவிதை 251
கண்டு நெஞ்சம் குமுறுபவர் இயல்பாகவே மானுட நேயமும் உழைக்கும் வர்க்கத்திடம் பரிவும் கொண்ட முரளிதரன் தோட்டத் தொழிலாளர்களுக்காக மட்டுமல்ல, உலகில் அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகி அல்லற்பட்டு ஆற்றாது கண்ணி விடும் அப்பாவி மக்களுக்காகவும் குரல் கொடுப்பவர் கொடியவர்களின் கொடூரங்களைக் கண்டு, குமுறியெழுபவர் என்பதை அவரது கவிதைகள் புலப்படுத்தி நிற்கின்றன. இளைஞனுக்கேயுரிய துடிப்பும் வேகமும் உறுதியும் போலிகளைக் கண்டு பொங்கியெழுதலும் சிறுமை கண்டு சினத்தலும் அவரது கவிதைகளில் விண்டு காணப்படுகின்றன.
தாம் பிறந்து வளர்ந்து நன்கு பரிச்சயமான மலையகத் தோட்டத் தொழிலாளரின் சோகமும் வேதனைகளும் சோதனைகளும் அவலங்களும் மிக்க வாழ்க்கைப் போராட்டங்களும் தோட்டத்து அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் தொழிற்சங்கவாதிகளாலும் பிறராலும் காலம் காலமாக அவர்கள் ஏமாற்றப்பட்டும் சுரண்டப்பட்டும் கொடுமைகளுக்கு ஆளாகும் பரிதாப நிலையும் நூற்றாண்டுகளாக அழமை வாழ்வு வாழ்ந்த தொழிலாளர்கள் தமது விடிவுக்காகவும் எழுச்சிக்காகவும் மேற்கொண்ட போராட்டங்களும், அவர்கள் செய்த எண்ணற்ற தியாகங்களும் தாயகத்திற்குத் திருப்பியனுப்பப்பட்ட பொழுது அவர்கள் அடைந்த சொல்லொனாத் துயரங்களும், இளந்தலைமுறையினரின் விழிப்பும், அவரது கவிதைகளின் பெரும்பகுதியை நிறைத்து நிற்பதை அவதானிக்கலாம்
1986 ம் ஆண்டில் வெளிவந்த தியாக யந்திரங்கள்’ என்னும் தொகுதியிலமைந்துள்ள கவிதைப் பகுதிகள் சிலவற்றிலும் அதன்பின் இன்று வரை வெளிவந்த கவிதைகள் பலவற்றிலும் ஆசிரியரின் பரிணாம வளர்ச்சியையும் அவரது ஆழந்தகன்ற சமுதாயப் பார்வையையும் உலகளாவிய பரந்த நோக்கும் முற்போக்குச் சிந்தனைகளும் கருத்து வீச்சும் கவித்துவ வீறும் வியாபித்து நிற்பதை அவதானிக்கலாம்

Page 128
252 இலங்கையின் மலையகத்தமிழ் இலக்கியம்
இவ்வகையில் 1988 ம் ஆண்டில் கொழுந்து முதலாம் இதழில் வெளிவந்த திரும்பிப் பார்க்கவேண்டிய தியாகங்கள் 1989-ம் ஆண்டு கொழுந்து இரண்டாம் இதழில் வெளிவந்த வைர இருதயத்து கறுப்பு இமயம், 1989 ம் ஆண்டு கொழுந்து ஐந்தாம் இதழில் வெளிவந்த மெளனத்துக்கு வயது 160, 1990 ம் ஆண்டு கொழுந்து ஏழாம் இதழில் வெளிவந்த அளவில் நீண்டதும் பன்னிரண்டு பக்கங்களைக் கொண்டதுமான புனிதப் புதைகுழிகள் 1990ம் ஆண்டு குன்றின் குரல் இதழில் (மே-ஜூன்) வெளிவந்த பிரியத்தான் வேண்டுமா உரிய பூமியை’ முதலிய தலைப்புகளில் அமைந்துள்ள கவிதைகள், விசேட கவனத்திற்குரியவை
1986 ம் ஆண்டிலிருந்து இற்றைவரை வெளிவந்த முரளிதரனின் கவிதைகள், இன்னுமொரு தொகுதிக்குப் போதுமானவை. துரதிஷ்டவசமாக அவை இன்னும் தொகுதியாக வெளிவரவில்லை. அவ்வாறு வெளிவந்திருந்தால், முரளிதரனின் துரித வளர்ச்சியைச் செம்மையாக எடைபோடப் பேருதவியாக அமைந்திருக்கும். 1986 ம் ஆண்டுக்கு முன்பு வெளிவந்த கவிதைகளையும் அதன்பின்பு வெளிவந்த கவிதைகளையும் ஒப்புநோக்கும் போது முப்பது வயதே நிறைந்த முரளிதரனிடமிருந்து எதிர்காலத்தில் காத்திரம்மிக்க தரமான கவிதைகளை இன்னும் அதிகம் எதிர்பார்க்கலாம் என்பதில் எவ்வித guụLâkủ06u.
முரளிதரனின் தரமான கவிதைகளுக்கு எடுத்துக்காட்டாகச் சில வருமாறு ஒன்றரை நூற்றாண்டு காலமாக இந்நாட்டின் முதுகெலும்பாக விளங்கிமாடாக உழைத்துஒடாகத் தேய்ந்த மலையகத் தொழிலாளர்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக இந்தியாவிற்கு அனுப்புதற் பொருட்டு பலமுறை இலங்கை-இந்தியப் பிரதமர்களுக்கிடையில் இடம்பெற்ற ஒப்பந்தங்களால், தொழிலாளர்கள் அனுபவித்த அனுபவிக்கிற வேதனைகளையும், அவலங்களையும் கவிஞர் வெளிப்படுத்த முனையுமிடத்துத் தாமும் தொழிலாளர்களுள் ஒருவராக நின்று, "பிரியத்தான் வேண்டுமா உரியபூமியை?" என்ற தலைப்பிலமைந்துள்ள

புதுக்கவிதை 253
பாடல்களில் நெஞ்சக் குமுறலுடனும் சத்திய ஆவேசத்துடனும் குரல் கொடுத்து அடுக்கடுக்காக வினாக்களைக் தொடுத்துப் படிப்போரைச் சிந்திக்க வைத்துள்ளார்.
"வரும் போதிருந்த
வறுமையை மட்டும்
ஒன்றரை நூற்றாண்டு
உடைமையாகக் கொண்டு
தேசத்துக்குத் தேயிலையும்
தேயிலைக்கு நாமுமென
ஆகிப்போன பந்தத்துக்கு
காகித ஒப்பந்த
நிர்ப்பந்தம் ஏன்?
இங்கே
மண் குவியல்கள
tasapsulassir?--gysopa/
தேசஅன்னையின் முலைகள்
பால் சுரக்கச் செய்தன
இந்தக் கரங்கள்."
ானவரும் பகுதிகளும்,
மூன்றுக்கு மேலான
தலைமுறைகள்
விட்ட மூச்சு -
svanuitariosiov
askuvaurash/
uwawavasóir தேயிலை மரங்களே Aistir (lyrairnsi

Page 129
254 இலங்கையின் மலையகத்தமிழ் இலக்கியம்
போதும் பிரியத்தான் வேண்டுமா -
உரிய பூமியை? iff
எனவரும் பகுதிகளும் மனங்கொளத்தக்கவை
மலையகத் தொழிலாளர்கள் இதுகாலவரை தமது விடிவுக்காக மேற்கொண்ட தியாகங்களையும் அவர்களுக்கு ஏற்பட்ட உயிர் உடைமை இழப்புகளையும் உருக்கத்தோடு வெளிப்படுத்தும் திரும்பிப் பார்க்க வேண்டிய தியாகங்கள்' என்னும் தலைப்பிலமைந்த பாடல்களுள் ஒரு சிறு பகுதி வருமாறு:
முள்ளோயா - உருளவள்ளி நாளந்த - கினாக்கொல்லை டெவன். நண்பர்களே - முடியவில்லை பட்டியல், இப்போதுதான் தொடங்கியுள்ளது!
கோவிந்தன் - லெட்சுமணன் LuammřediasszióróGuufersomflaidomov/
புதிய
மார்க்கம் கண்டவர்கள் ஆனால் - இந்தத் தியாகத் தங்கங்களுக்கு தயவு செய்து இனவாத முலாம்பூசி பிரகாசத்தை நம் ால்லைக்குள் முடக்க வேண்டாம்!

புதுக்கவிதை 255
இவைகள் உலக வெளியில் அடக்குமுறை வெடிப்பின் குறியீடுகளாய் அதிகார ஆணவத்து சிம்ம சொப்பனங்களாய்
விளங்கிட
மானுடத்திடம் ஒப்படைப்போம்!
மேற்கண்ட தலைப்பிலமைந்துள்ள பாடல்களின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக 1990 ம் ஆண்டில் வெளிவந்த அவரது "புனிதப் புதைகுழிகள்" என்னுந் தலைப்பிலமைந்த நீண்ட பாடற்பகுதி அமைந்துள்ளது. மலையகத் தொழிலாளர்களின் விழவுக்காக இதுகாலவரை தம் இன்னுயிரைத் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலிகொடுத்த தொழிலாளர்திலகங்களையும் அவர்கள் பலியாகிய ஆண்டு விபரங்களையும் பலியாகியதற்கான காரணங்களையும், வரலாற்று ரீதியாகவும் கலைச்சுவை குன்றாமலும் உள்ளக் குமுறலுடனும் இப்பாடற் பகுதியில் வெளிப்படுத்தும் கவிஞர் கூடவே தமது சுயலாபம் கருதிச் செயற்பட்ட தொழிற்சங்க வாதிகளாலும், காட்டிக் கொடுக்கும் கயவர்களாலும் காலம் காலமாகத் தொழிலாளர்கள் ஏமாற்றப் பட்டமையையும் விரிவாகக் காட்டியுள்ளார். இவ்வகையிலே முக்கியமான பாடற்பகுதிகள் சில வருமாறு:
நடேசய்யர் எனும் வீரவியூகம் விதைத்த விதையை விருட்சமாக்க வேரழந்து போன நாதங்களைப் பற்றி

Page 130
256
இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
வயிற்றுப்பிழைப்பு வாதிகளுக்குத் தெரிந்திருக்கவே தேவையில்லைத்தான்
தொழிற் சங்கங்கள் புகுந்ததும் துயர் மூச்சுப்போனதா? சில சமயங்களில் இவைகள் துரைச் சங்கங்களாகும் அப்போது மறுசங்கம் போடவும் முதலாளிமார் சங்கம் மரணதட்சனை கேட்டிருக்கின்றது ?
எனவரும்பகுதிகளும்
... Linapapa Latalaangjah
பாட்டாளியே நாமென
பொலிஸ் குண்டுபட்டு
இரத்த சாசனமெழுதி
இறந்து போனான்
ஏப்ரகாம் சிங்கோ
சிங்களத் தொழிலாளி
சங்கத்துக்கான
காவுகள் தொடர்ந்தன
சங்கங்களுக்காகச்
செத்தது போதும் -இனி
ாங்களுக்காய்ச்
சாவோமென எழுதப்பட்ட

புதுக்கவிதை 257
முதல் அத்தியாயம் சிவனு லெட்சுமணன்
LLLLGLLLLSLLLLLLLLLLLLLLLSLLLSLLLLLLLL
சாகும் போது அவன் காற்றுக்குச் சொன்ன சங்கதி தனியொருவனால் இவ்வளவு சாதிக்க முடியுமென்றால் உங்கள் அனைவராலும்*
என வரும்பகுதிகளும்
வயிற்று வலியால் இறந்தவர்களுக்கு வானுயரச் சிலையமைத்து ஆளுயர மாலைபோடுவதை நிறுத்துங்கள்
அங்கே
புதைந்திருப்பது மரணங்கள் மட்டுமல்ல - உங்கள் மனச்சாட்சிகளும்
தான். 15
என வரும்பகுதிகளும் கவிஞரின் கற்பனையல்ல. கடந்தகால, நிகழ்கால நிதர்சனங்களே.
தோட்ட அதிகாரிகள், ஆட்சியாளர்கள், பேரினவாதிகள், நடுநிலை ஆய்வாளர்கள், தொழிலாளர் மத்தியிலேயே பிறந்து வளர்ந்த புத்தி ஜீவிகள் எனப்பல திறத்தினரும் தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்துப் பலவிதமாகக் கருத்துகள் தெரிவிக்கின்றனர். ஆயின், கவிஞர்

Page 131
258 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
முரளிதரனின் பார்வை வெறுமனே புறப்பார்வையாகவோ தொலைப் பார்வையாகவோ அன்றி, உணர்ச்சிமிக்க அனுபவம் சார்ந்த புறப்பார்வையாக விளங்குவதையும் தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளை அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் அணுகிக் கலைத்துவம் குன்றாமல் வெளியிடுவதையும் அவரது கவிதைகளிற் காணலாம்
அவரது கவிதைகளில் இடம்பெறும் தோட்டத் தொழிலாளர்களது வேதனைகளும் அவலங்களும் உள்ளக்குமுறல்களும் போராட்டங்களும் மரணங்களும்தியாகங்களும் உயிர்ப்புள்ளவுை உண்மையானவை அவுை சத்தியத்தின் தரிசனங்களே. அவரது கவிதைகளிற் பாசாங்கையோ போலித்தனங்களையோ செயற்கைப் பாங்கையோ காண்டலரிது
தோட்டத் தொழிலாளர்களுக்கெதிராகக் கொடூரமான அடக்கு முறைகளைக் கையாளுவோரையும் தொழிலாளர்களை ஏமாற்றித்தம்மை வளர்த்துக் கொள்வோரையும் வன்மையாகச் சாடும் கவிஞர் தமது காத்திரம்மிக்க சொல்லாட்சிகள் என்ற குத்தீட்டி கொண்டு புன்மையாளரைக்குத்திக் கிளறியுள்ளார்.
எத்தகைய கொடுமைகளும் ஒடுக்குமுறைகளும் அநீதிகளும் இழைக்கப்பட்டாலும் உயிர் உடைமை இழப்புகளையும் வேதனைகளையும் துயரங்களையும் தோல்விகளையும் சகித்துக்கொண்டு எதிர்கால நம்பிக்கையுடன் தொழிலாளர்களைத் துடிப்புடன் செயற்பட வைக்கும் தார்மீக வலுவை, அவரது கவிதைகள் ஊட்டுவனவாக விளங்குகின்றன.
வெறுமனே ஆலாபனங்களோ, வருணனைகளோ, சொற் சிலம்பங்களோ இன்றிக் கச்சிதமாகவும் மிகப்பொருத்தமான முறையிலும் குறியீடுகளையும் படிமங்களையும் விறார்ந்த சொல்லாட்சிகளையும் கையாண்டு சமூகநிலைமைகளையும் பிரச்சினைகளையும் உற்றுநோக்கி அவற்றை யதார்த்த பூர்வமாக அணுகி சொற்சுருக்கத்துக்கும் பொருட் செறிவுக்கும் உணர்வுபூர்வமான வெளிப்பாட்டுக்கும் முக்கியத்துவமளித்து படிப்போரை ஆழமாகச் சிந்திக்க வைப்பது புதுக் கவிதையின் முக்கிய

புதுக்கவிதை 259
பண்புகளுட் சிலவாகும் இப்பண்புகளை, முரளிதரனின் கவிதைகளிலும் குறிப்பிடத்தக்க அளவிற்குக் காண முடிகின்றது. மனோதிடமும் தர்மாவேசமும் சிறுமை கண்டு சிறியெழும் இயல்பும் வேகமும் விரவியதாக அவரது கவிதைகளின் மொழிநடை அமைந்துள்ளது மேற்கண்ட பண்புகள் அவரது கவிதைகளுக்குத் தனிச்சோபை அளிப்பனவாக அமைந்துள்ளன.
முரளிதரனது கவிதைகளின் தனித்துவப் பண்புகளுள் குறிப்பிடத்தக்கது, அவர் தம்மைத் தொழிலாளர்களிலிருந்து வேறாக நோக்காது தாமும் தொழிலாளர்களுள் ஒருவராக நின்று, அவலங்களும் துன்பங்களும் தியாகங்களும் மலிந்த அவர்களது சோக வரலாற்றை உள்ளக்குமுறலுடனும் யதார்த்த பூர்வமாகவும் வெளிப்படுத்துவதேயாகும் இப்பண்பு அவரது அதிகமான கவிதைகளில் நிரம்பிக் காணப்படுகின்றது.
நித்தியானந்தன்
மலையகப்புதுக்கவிதையாளருள்முரளிதரனையடுத்துநம்பிக்கைச் சுடராக விளங்குபவர்களுள் ஒருவர்.இளைஞனான இரா.நித்தியானந்தன் ஆவார். கவிஞனாகவும் சிறுகதை ஆசிரியராகவும் விளங்கும் இவர் ஓர் அரசறிவியல் சிறப்புப் பட்டதாரியாக விளங்குவதனாற் போலும், மலையகத் தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகள் பற்றிய கவிதைகளில் அரசியற் பிரச்சினைகள், அரசியல் ரீதியான கருத்துகள் முதலியவை முனைப்புப் பெற்றுள்ளதையும் அரசியல் தளத்தில் நின்று மார்க்கியச் சிந்தனைகளின் ஒளித்துணைகொண்டு பிரச்சினைகளை அணுகுவதையும் அலசுவதையும்திர்வு காணமுயல்வதையும் அவதானிக்க முடிகின்றது
'டுக்காலத்து மனிதனின் தலைவிதி அரசியல் மொழியிலேயே ாழுதப்படுகிறது." எனப் பிரபல நாவலாசிரியர் தோமஸ் மான் கூறியுள்ளமைநிங்கு மனங்கொளத்தக்கது கடந்த ஓரிருதசாப்தங்களச் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வெளிவந்துகொண்டிருக்கும் கவிதைகள் உள்ளிட்ட அநேகமான ஆக்கங்கள் அரசியற் கவிதைகள்

Page 132
260 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
அரசியற் சிறுகதைகள்'அரசியல்நாவல்கள்’எனக் கூறத்தக்க அளவிற்கு அவை அரசியல் சார்பு பெற்றுள்ளமையும் சிந்திக்கத்தக்கது. நித்தியானந்தத்தின் கவிதைகளுள் கணிசமானவை முகவரியைத் தொலைத்தவர்கள்’ என்ற பெயரில் 1993 ம் ஆண்டு தொகுதியாக வெளிவந்துள்ளன.
"கவிதை என்னும் போது அது வெறும் சொற் சிலம்பங்களின் பிணைவு அதேசமயம் களிப்பூட்டுவதுதான் அதன் நோக்கமென்பதை எந்த முற்போக்குக் கவிஞனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். ஒரு கலைஞன் அல்லது கவிஞன் சமூகப் பிரக்ஞைகளை வெளிக்கொணர முயல்வது மட்டுமல்லாது, அவற்றை மாற்றவும் புதிய ஒன்றைச் சமைக்கவும் முற்படுகின்ற பரிணாம வடிவங்களுள் ஒன்றாகத் தன் படைப்புகளை வெளித்கொணர்கிறான்.
"அங்குதான் பொருள்முதல்வாதிகள், ஒரு கலைஞன் சமூக மாற்றத்தின் பங்காளி என்று அடையாளம் கண்டனர். எனவே, இன்று சமுதாய இலக்கியப் படைப்பாளியிடம் தவிர்க்க முடியாதவாறு பொருள்முதல்வாதத்தடயங்கள் பதிந்து கிடக்கின்றன. இன்று, மார்க்சிசம் வீழ்ச்சிகண்டு விட்டதாக அல்லது தோல்வி கண்டுவிட்டதாகப் பலர் கனவு காணலாம். அது மார்க்சிசம் அல்லது வரலாற்றுப் பொருள் முதல்வாதம் பற்றிய தெளிவான ஆழமான சிந்தனையற்ற பிற்போக்குச் சந்தர்ப்பவாதக்கும்பல்களின் கனவாக மட்டுமே அமையும் மார்க்சியத்தை வெறுக்கின்றவனும் விமர்சிக்கின்றவறும் கூடத் தவிர்க்க முடியாமல் அதன் இயக்கவியல் தத்துவங்களுள் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான். மாக்சியத்தின் நோக்கம், முதலாளித்துவ அரசை அழித்தொழிப்பது மாத்திரமல்ல, சமூக பரிணாமத்தை எடுத்து விளக்குவதும் அதன் பாரித்த நோக்கங்களுள் ஒன்றாகும் அது ஒரு சமூகவியல். அதன் சமூகப் பெறுமானங்கள் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுவரை வாழ்ந்த முற்போக்குக் கவிஞர்கள் அதற்கென்றே பணியாற்றி வந்தனர். அந்த நிலையில் இப்போது ஏற்பட்டுள்ள தொய்வு ஒருவிதத்தில் கவலையைத் தந்தாலும்,

புதுக்கவிதை 261
இன்றும் அந்தப்பணி அவர்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாகும். எனவே, எல்லா முற்போக்குக் கவிஞர்களும் சோர்ந்துவிடாது தமது பங்கினைத் தொடர்ந்து ஆற்றவேண்டும் என்ற வேண்டுகோள்தான், படைப்பாளன் என்ற தளத்தில் இருந்துகொண்டு நான் இங்கு கூற விரும்பும் செய்தியாகும். இங்கே, எனது கவிதைகள் அவ்வாறான தளத்தின் திசையை நோக்கிக் கொண்டிருக்குமேயானால், நான் அதற்காக மகிழ்ச்சியடைந்தே தீருவேன். n16 எனவரும் கவிஞரது கூற்று அவரது நோக்கத்தைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அவரது கவிதைத் தொகுதியிலமைந்துள்ள கவிதைகள் முழுவதையும் ஒருங்குசேர உற்று நோக்கும் பொழுது அவை முகவரியைத் தொலைத்துவிட்ட மலையகத் தொழிலாளர்கள் மீது அவர் கொண்டுள்ள பற்றுதலையும் பரிவையும் அவர்களது விடிவிலும் எழுச்சியிலும் அவர் கொண்டுள்ள அவாவையும் அக்கறையையும் அவர்களது விடிவுக்கும் எழுச்சிக்கும் தொழிலாளிவர்க்க எழுச்சியூைத் தூண்டும் பொதுவுடைமைச் சிந்தனைகளே உதவ முடியும் என்ற நம்பிக்கையையும் பொதுவுடைமைப் புரட்சிமுதலில் எந்த நாட்டில் தோன்றியதோ அதேநாட்டில் தற்காலிமாகத் தோல்வி கண்டதையிட்டு அவர்கொண்டுள்ள வேதனையையும் ஆதங்கத்தையும், அதேசமயம் எதிர் காலத்தில் அது மீண்டும் வீறுகொண்டு எழுச்சியுறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருப்பதையும், இரட்டைவாதிகள் மீது அவர் கொண்டுள்ள அருவருப்பையும் ஆத்திரத்தையும் ஒருங்குசேர வெளிப்படுத்துவதை அவதானிக்கலாம்.
அவரது கவிதைத் தொகுதியின் பெயராகிய "முகவரியைத் தொலைத்தவர்கள்" என்னும் தலைப்பும், அத்தலைப்பிலமைந்த பாடல்களும் ஆழமான கருத்துகளைக் கொண்டுள்ளன. பிறரது வாழ்க்கை நலன்களுக்காவும் சுகபோகங்களுக்காவும் காலம் காலமாகத் தமது வாழ்க்கையைப் பரித்தியாகம் செய்துகொண்டிருக்கும் மலையகத் தோட்டத் தொழிலாளரின் முகவரியைத் தொலைத்தவர்கள் யார்? தோட்டத் தொழிலாளர்கள் படிப்படியாகத் தமது முகவரியைத் தாமே

Page 133
262 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
தொலைத்தார்களா? அல்லது அவர்களது முகவரியைக் காலத்துக்குக் காலம் ஆட்சிப் பீடமேறியவர்கள் படிப்படியாகத் திட்டமிட்டே தொலைத்தார்களா? இந்நாட்டில் தோட்டத் தொழிலாளர்களின் முகவரியைத் தொலைத்தவர்கள் அத்துடனமையாது, கபட நாடகங்களாலும் போலித்தனங்களாலும் சுயநல வெறியாலும் நாட்டின் முகவரியையும் தமது முகவரிகளையும் ஏனையோரது முகவரிகளையும் படிப்படியாகத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஆசிரியர் வெளிப்படையாகக் காட்டாது பல்வேறு உத்திகள் மூலம் குசகமாகப் புலப்படுத்தியுள்ள திறன் விதந்து கூறத்தக்கது.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களது முகவரியைக் காலத்துக்குக் காலம் பறித்துக்கொண்ட செயற்பாடுகளைக் கச்சிதமாகவும் வரலாற்று ரீதியாகவும் (1948, 49, 64, 71, 74, 77, 81, 83) சோகத்துடனும் உள்ளக்குமுறலுடனும் குறிப்பிடத்தக்க அளவு கலைத்துவத்துடனும் "முகவரியைத் தொலைத்தவர்கள்"என்ற தலைப்பிலமைந்துள்ள கவிதைப் பகுதிகளிலே வெளிப்படுத்தியுள்ளார்.
அன்று முகவரியைத் தேடி முகாரியை இசைத்தோம் இன்று!
முகாரியையும்
தொலைத்து முகவரியைத் தேடுகின்றோம்
இந்தத்
தேசம் முகவரியைத் தொலைத்திருந்தபோது எமக்கென்னவோ ஏதோ ஒரு முகவரி இருந்தது. 7
எனவரும்பகுதியும்

புதுக்கவிதை 263
இன்று
அந்நிய
பதாகைகளில் ஆயிரம் முகவரிகள் மக்கள் மயமாக்கத்தில் மயங்கிக் கிடக்கும் இந்த மந்தைகளுக்குத் தம் சொந்த முகவரியைத் தொலைக்கப் போவது இனிமேல்
எங்கே தெரியப் போகிறது? i8
என வரும் பகுதியும் சிந்தனையைத் தூண்டுவனவாக அமைந்துள்ளன.
பொதுவுடைமைத் தத்துவத்தின் மீதும் அதன் வளர்ச்சியின் மீதும் கவிஞருக்குள்ள இதயசுத்தி நிறைந்த ஆத்மார்த்த ஈடுபாட்டினைப் பிரதிபலிப்பதாக முட்களும் கழுதைகளும்'என்னும்தலைப்பிலமைந்துள்ள பாடல்கள் விளங்குகின்றன. பேசுவது மானம் இடைபேணுவது காமம்’ என்பது போலக் கபட நாடகமாடும் சந்தர்ப்பவாத இடதுசாரிகளை,
சோவியத் வீழ்ச்சியில்
நாம்
முட்களைச்
சுமக்கின்றோம்
இடையில்
எம்மோடு இருந்த இடதுசாரிகள் இரண்டுதலைகளைக் கொண்ட கழுதைகளாயினர் 9

Page 134
284 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம் எனச் சாடும் அதேசமயம் ரஷ்யப் புரட்சியின் போதும் அதன் பின்னரும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்தும் பூக்களையும் புது யுகத்தையும் சுமந்த உண்மைப் பொதுவுடைமையாளர்களின் தளராத் தன்மையை
நரம்பில்லாத நாக்குகளுக்கும் முதுகெலும்பில்லாத முண்டங்களுக்கும் மத்தியில் இன்னும் நாம் நிமிர்ந்தே நிற்கின்றோம்?
என வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுவுடைமையின் உண்மையான வளர்ச்சி இனிமேல்தான் ஆரம்பமாகும் என்பதை
'இது
அவர்களுக்கு அறுவடைக் காலம்
நமக்கு விதைப்பே இனித்தான்."
என நம்பிக்கையோடு வெளிப்படுத்துகின்றார். இப்பாடற் பகுதியின் விரிவாக, 'இடைநடுவில் ஒரு இளம் கம்யூனிஸ்ட்" என்னும் தலைப்பிலமைந்த கவிதைப் பகுதிகள் விளங்குகின்றன. சோவியத் வீழ்ச்சியினால் தோட்டத் தொழிலாளரின் எழுச்சி தொடர்பாகக் கவிஞர் கொண்டிருந்த ஆசைகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் தவிடுபொடியாகிய நிலையில் அவர்படும் வேதனைகளையும் தவிப்புகளையும் உள்ளத்தை உருக்கும் வகையில் வெளிப்படுத்தியுள்ளார்.
நித்தியானந்தனின் கவிதைகளில் காணப்படும் குறிப்பிடத்தகுந்த ஒரு சிறப்புப் பண்பு அவர் தம்மைத் தோட்டத் தொழிலாளரிடமிருந்து வேறுபடுத்தி நோக்காது, தாமும் தோட்டத் தொழிலாளருள் ஒருவராக

புதுக்கவிதை 265
மாறிநின்று குரல் கொடுப்பதேயாகும் அப்பண்பினை மேற்கண்ட பாடற் பகுதியிலும் தெளிவாகக் காணலாம் பொதுவுடைமை மலர்ச்சியின் மூலமே மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிமைத்தனம் நீங்கும் என, ஆவலோடு காத்திருந்தமையையும் சோவியத் வீழ்ச்சியால் அவை பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்ற தவிப்பினையும் இப்பாடற் பகுதியில் வெளிப்படுத்தியுள்ளார்.
6Tisair கைவிலங்கு கழற்றப்படும் என்று காத்திருந்தோம் எங்கள் கனவுகள்தான் சிறையிடப்பட்டன
ஓ!
இந்த .
அந்த .
எப்படி வந்தது?
திசை தெரியா
இடத்தில் இருந்து
திரும்பிப் பார்க்கிறேன்
எங்கே அவர்கள் செய்த புரட்சி? 2f
என வரும் பகுதிகள் உள்ளத்தைத் தொடுவனவாகவும் கவிஞரின் பரிதவிப்பினையும் உள்ளக் குமுறலையும் வெளிப்படுத்துவனவாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகவரியைத் தொலைத்துவிட்ட தொழிலாளர்களின் கையறு நிலையைக் கண்டு உள்ளங்கொதிக்கும் கவிஞர் தாமும் தொழிலாளருள் ஒருவராக நின்று இறைவனிடம் தமது மனத்தவிப்பையும் ஏக்கங்களையும் வெளியிடும் பாங்கில், இந்தத் தேசியத்தின் ஆமைகள்' என்னும்

Page 135
265 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
தலைப்பிலமைந்துள்ள கவிதைகள் விளங்குகின்றன. "முதலைகளின் நாட்டில் எம்மை ஏன் ஆமைகளாய்ப் படைத்தாய்?" எனத் தொடங்கி இறைவனிடமே அடுக்கடுக்காக வினாக்களைக்கேட்டுப் படிப்போரைச் சிந்திக்க வைக்கும் வகையில், "வோட்டுப் பொறுக்கிகளுக்கு" இரையாகிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் அவலங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
தோட்டத் தொழிலாளருள்ளும், பெண் தொழிலாளர்களே சொல்லொணாத் துயரங்களுக்கும் அவலங்களுக்கும் இம்சைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். நவீன துச்சாதனர்களாகவும், கோவலர்களாகவும் துஷ்யந்தர்களாகவும் விளங்கும் தோட்ட அதிகாரிகளும் பிறரும் தவித்த முயலை அடிப்பதுபோல'தமது உடல் வேட்கையைத் தீர்ப்பதற்காக, அடிமை நிலையில் விளங்கும் தொழிலாளப் பெண்களுக்குச் செய்யும் கொடுமைகள் சொல்லுந்தரமன்று குடும்பச் சுமையுடன் வேலைப்பளு, வறுமைக் கொடுமை, அதிகாரிகளின் அடாவடித்தனங்கள், கணவன்மாரின் பொறுப்பற்ற செயல்கள் முதலியவற்றால் வாழ்க்கையே தாங்கொணாச் சுமையாகி அவதியுறும் தொழிலாளப் பெண்களின் அவலங்களையும், அவர்களது உள்ளக் குமுறல்களையும் நெஞ்சக் கொதிப்பையும் பொருத்தமான குறியீடுகளையும் படிமங்களையும் கையாண்டு ஏற்ற வகையில் வெளிப்படுத்துவனவாக 'இந்தக் கறுப்புத் தேசத்தின் சிவப்புப் பூக்கள்" "அந்தத் தேயிலைத் தோட்டத்திலே ஒரு நாள்" ஆகிய தலைப்புகளில் அமைந்துள்ள கவிதைகள் விளங்குகின்றன.
பன்னிரண்டு பக்கங்களுக்குமேல் நீண்டு செல்லும் இக்கவிதைப் பகுதிகளில், ஆசிரியரது கவித்துவ வீறினையும் நறுக்காகக் கருத்துகளை வெளிப்படுத்துவதையும் அறிவும் உணர்வும் ஒன்றாகிய நிலையில் பொருத்தமாகவும் அளவாகவும் குறியீடுகளைக் கையாளும் பாங்கையும் அவதானிக்கலாம் இக்கவிதைப் பகுதிகளில் அடுக்கடுக்காக இடம்பெறும் வினாக்கள், தொழிலாளப் பெண்களின் உள்ளக் கொதிப்பை வெளிப்படுத்துவதுடன் படிப்போரையும் சிந்திக்க வைப்பனவாக விளங்குகின்றன.

புதுக்கவிதை 267
காலம் பார்த்து இங்கு தான்
எங்கள் கண்ணபிரான்களும் கண்களை மூடிக்கொண்டு கழுத்தறுப்புச் செய்தார்கள் அதனால்தான் கால் வயிற்றுக்கும்
எங்கள்
கண்ணகிகள்
தங்கள் காவியச் சேலையைக்
கழற்றி எறிந்தார்கள்?
என வரும் பகுதியும்
ஊர்வசியின்னே ஊர்வலம் போகும்
இந்த
மேனகை புருஷர்கள் கூறுகின்றார்கள் கண்டால் எங்களைக் கசக்கின்றதாம்
ஊருக்கே
நாம் ஒரு
தனி ஒரு
உறுததலாம நாங்கள் - அவர்களுக்குச் சமுதாயச் சாக்கடைகள்.
என வரும் பகுதியும்

Page 136
268 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
இந்த
சுத இந்திர) புருஷர்களின் இன்பங்களுக்காகச் சதைக் கல்லாகச் சபிக்கப்பட்டவர்கள் நாங்கள். 24
என வரும் பகுதியும்
நாம்
இந்த
ஆதாம்களுக்கு ஏவாளாகிப் போனோம் Lis6.5i விலைப் பேயிடம் விடுபட
இரவில் சதைப் பேயிடம் விலையாகிப் போனோமே?
எனவரும் பகுதியும் உள்ளத்தை உறுத்துவனவாக அமைந்துள்ளன.
இவ்வாறெல்லாம் பெண் தொழிலாளர்களின் அவலங்களையும் அவர்களுக்குக் கொடுமைகள் புரியும் கயவர்களின் சிறுமைத் தனங்களையும் புலப்படுத்திச் செல்லும் கவிஞர், பொறுமையிழந்த தொழிலாளர்கள் அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராகப் போராடத் துணிவதையும் எழுச்சியுறமுயல்வதையும் விண்டு காட்டத்தவறவில்லை.
எனினும்
இனிநாம் இரவுச் குரியன்கள் இருட்டின் வெளிச்சங்கள்

புதுக்கவிதை 269
அவர்களின் - உடல் வேட்கைக்காக -இனி எங்கள்
விடுதலை Gallaosau அடக்கிவிட முடியாது
நாங்கள் கார்காலப்புத்திரர்களாய் இதற்குச் சாவு மனிஅழப்போம் போர்க்காலக் குருவிகளாகப்
பொங்கி எழுவோம் 26
எனவரும் பகுதியும்
அவளைக் கேள்விப்பட்டது முதல் வேள்வித்தீவடிவrனேன் கதறியது உள்ளம் பதறியது என்கரங்கள்
அன்றுதான்
srair வாலிபம் வாளேந்திக் கொண்டது. 27
என வரும் பகுதியும் மனங்கொளத்தக்கவை
இன்றைய நெருக்கடி மிக்க நிலைமைகளால் மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகம் மட்டுமின்றி ஏனைய சமூகங்களும் இந்த நாடும் எத்தகைய இன்னல்களுள்ளாகிக் கொண்டிருக்கின்றன என்பதையும்

Page 137
270 இலங்கையின் ர்தமிழ் இலக்கியம்
பாதை மாறிய பயணங்களால் எதிர்காலநிலைமை என்னவாகுமோ என்ற ஏக்கத்தையும் வெளியிடும் பாங்கில், "இங்கே தர்மம் சிலுவையில் மரித்தபோது . " என்றும் தலைப்பிலமைந்துள்ள பாடல்கள் அமைந்துள்ளன. குறியீட்டுப்பாங்கில் நறுக்காகக் கருத்துகளை வெளியிடும் கவிஞரது பாடல்களின் ஒரு பகுதிவருமாறு:
ாம்தேசத்துச்
சிங்கமும் புலியும்
மோதி முடியும் போது
போதிசத்துவர்களின்
எலும்புகள் கூட
மிச்சமிருக்காது
போதி மரங்களின்
இலைகள் கூட
தேடக் கிடைக்காது
காற்று மாத்திரமே
மிச்சமிருக்கும்
இங்கு
கொடிகள் இருக்காது 28
"....... இந்த புதுக்கவிதையாளர்களையோ அல்லது உரைவீச்சாளர்களையோ வாழ்ந்த வாழ்கின்ற தரமிகு கவிருர்களுடன் ஒப்பிட்டு ஆய்வதைவிட, அதனால் மனம் நொந்து கொள்வதைவிட இன்றைய சீரழிந்து போன சாக்கடை அரசியலில் பிழைப்பு நடத்துகின்ற மூன்றாம்தர சினிமாவுக்காகத்தம்மை அடகுவைத்துளழுத்தையே விற்று வாழ்கின்ற முன்னணியிலுள்ள சில தமிழகக் கவிஞர்களோடும் எழுத்தாளர்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இலங்கையின் புதுக்கவிதையாளர்கள் அல்லது உரைவீச்சாளர்களின் படைப்புகள் மிகு மேலானவை அவர்கள் நின்று எழுதுகின்ற தாமும் சிறப்பானவை" 29 ான உறுதியாகக் கூறும் கவிரரிடம் ஆழமான சமூகப் பார்வையும்

புதுக்கவிதை 271
மானுட நேசிப்பும் காணப்படுகின்றனவேனும் அவை மேலும் விரிவடைய வேண்டியதும் கலைத்துவம் குன்றாது கவனித்துக்கொள்வதும் அவசியமாகும். 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல அவரது எதிர்கால வளர்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக முகவரியைத் தொலைத்தவர்கள்’ என்னும் தொகுதியிலமைந்துள்ள கவிதைகள் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
676060TLlanfassir
மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொள்ளாத புதுக்கவிதையாளர்கள் சிலரும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவமளித்துப் புதுக்கவிதைகளைப் படைத்துள்ளமை மனங் கொளத்தக்கது. அத்தகைய சிலருள் வஐச ஜெயபாலன், பார்த்திபன், க. ஆதவன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இன்றைய ஈழத்துத் தமிழ்க்கவிதை உலகில் தனித்துவ ஆளுமையுடலும் கவித்துவ வீறுடனும் கவிதைகள் படைத்துக் கொண்டிருக்கும் முன்னணிக் கவிஞர்களுள் ஒருவராகத் திகழ்பவர் வஜ.ச. ஜெயபாலன், குறுகிய காலத்தில் அதிக அளவு கவிதைகளை இயற்றி அளித்துள்ள ஜெயபாலன், மானுட நேயமும் முற்போக்குச் சிந்தனைகளும்,ஆழமானசமூகப் பார்வையும் அசாதாரணத்துணிச்சலும் எதிர்கால நம்பிக்கையும் தனித்துவ ஆளுமையும் கொண்டவர் என்பதை அவரது கவிதைகள் பல உணர்த்திநிற்கின்றன.
umavulasé Gengivnersefinir பிரச்சினைகள் பற்றிய அவரது கவிதைகளில் பிரச்சினைகளோடு ஒன்றித்த நேரடி அனுபவம் சற்றுக் குறைந்துகாணப்படினும் பரிவும் மாலுட நேயமும் மேலோங்கிநிற்பதையும் தொழிலாளரின் சிறுவர்கள் வறுமைக் கொடுமை காரணமாக நகர்புறங்களின் செல்வந்தர் வீடுகளிலும் உணவகங்களிலும், பிற இடங்களிலும் வேலைக்காரர்'ான்ற பெயரில் கொடுமைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளவதையும் தம் வயதொத்த சிறுவர்கள் அழகாக உடுத்திப் பாடசாலைக்குச் செல்வதைப் பார்த்து ரங்கித் தவிப்பதையும்

Page 138
272 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
அத்தகைய ஈனநிலை கண்டு நெஞ்சம்குமுறுவதையும் அவதானிக்கலாம் அதே நேரம் இத்தகைய ஈனநிலைதனை அகற்றவும் தொழிலாளரது உள்ளத்திலே கொடுமைகளுக்கெதிராகப் போராட்ட உணர்வினை ஏற்படுத்தவும், எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்கவும் தூண்டுவனவாக அவரது பாடல்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் அவரது எழில் முடிபுனைக’’ என்னும் தலைப்பில் அமைந்துள்ள கவிதை குறிப்பிடத்தக்கது.
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முக்கியமாகக் கொண்டு சில சிறுகதைகளையும் புதுக்கவிதைகளையும் படைத்துள்ள க. ஆதவன், மலையகத் தோட்டத் தொழிலாளர் மீது மாத்திரமின்றி உலகில் எங்கெங்கு உழைக்கும் வர்க்கத்தினர் அடக்கி ஒடுக்கப் படுகின்றனரோ, கொடுமைகளுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாகின்றனரோ, அவர்கள் மீதும் பரிவும் பாசமும் கொண்டவர் என்பதனை அவர் இயற்றியுள்ள கவிதைகள் மட்டுமின்றி மொழிபெயர்ப்புச் செய்துள்ள கவிதைகளும் புலப்படுத்தி நிற்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் அவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிலிநாட்டின் போர்க் கவிஞனாகப் போற்றப்படும் விக்டர்ஜாரா என்பவரது ஒரு கவிதைப்பகுதி பிரகடனம்’ என்ற தலைப்பில் தமிழாக்கம். செய்யப்பட்டுள்ளமை மனங்கொளத்த க்கது? f
அவரது கவிதைகள் படிப்போர் உள்ளத்தில் தொழிலாளர் மீது அனுதாபத்தையும் பற்றுதலையும் ஏற்படுத்தும் அதே நேரம் தொழிலாளரது அறியாமையையும் ஏழ்மையையும் பயன்படுத்தி ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதிகள், போலித்தலைவர்கள், ஏமாற்றுக்காரர்முதலியோர்மீது வெறுப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தும்பாங்கில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மலையகப் பாடசாலைகளின் அவலநிலை, கல்வி கற்கும் மாணவர்களது அவலங்கள், இலங்கை-இந்திய தலைவர்களது ஒப்பந்தங்களல் கணவனைப் பிரிந்த மனைவியும் மனைவியைப் பிரிந்த

புதுக்கவிதை 273
கணவனும் தாயைப் பிரிந்த பிள்ளைகளும், பிள்ளைகளைப் பிரிந்த தந்தையும் காதலிகளைப் பிரிந்த காதலர்களும் சகோதரிகளைப் பிரிந்த சகோதரர்களும் எனத் தொழிலாளர்கள் அடைந்த வேதனைகள் முதலியன தொடக்கம் 1970 -களில் தோட்டங்களைத் தேசியமயமாக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள், இனக்கலவரம்’ என்ற பெயரில் பேரினவாதிகள் தோட்டத் தொழிலாளர் மீது அடிக்கடி கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் முதலியவற்றால், தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்கள், ஏற்பட்ட உயிர் உடைமை இழப்புகள், அடிக்கடி அவர்களது குடிசைகள் எரிக்கப்பட்டமை முதலியன வரை பல்வேறு விடயங்களையும் அலசியுள்ள கவிஞர், அத்துடனமையாது தொழிலாளர்கள் தமது எதிர்காலத்தைநம்பிக்கையுடன் நோக்கும் வகையிலும் கருத்துகளைப் புலப்படுத்தியுள்ளமை மனங்கொளத்தக்கது. இவ்வகையிலே இந்தப் பொழுது விடியட்டும்'என்னும் தலைப்பிலமைந்த நீண்ட கவிதைப் பகுதியின் ஒரு சிறு பகுகிவருமாறு:
வானம் கறுத்துக் கிடந்தது
நாங்கள்
உழைத்துக் களைத்திருந்தோம் காக்கிச் சட்டைகளும் சப்பாத்துக் கால்களும்
அங்கும் இங்கும்
ஒழத்திரிந்தன
எங்கள் நிலங்களைத் துண்டு துண்டாய்ப்பிரிக்கும் முயற்சியை எங்கள் விரிந்த உலகை எல்லைகளிட்டுப்பிரிக்கும் முயற்சியை துப்பாக்கி முனையில் தொடங்கினர் காவலர்

Page 139
274 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
துடித்துமாண்டார் தோழர் லட்சுமணன் வானம் கறுத்துக் கிடந்தது எங்கும் ஒரே நிசப்தம் நிலவியது
பஞ்சடைந்த செவிகள் rשgéשששו ש6שL/TLá நெஞ்சடைத்த துக்கம் நீண்டு விரிந்தது நாங்கள் கைகளைப் பிசைந்தோம் கண்கள் சிவந்தன இரத்தம் கொதித்தது நாங்கள்.
ாங்கிருந்தோ எழுந்த பெருத்த ஒலம் வானைப் பிளந்தது பெருத்தன ஒலங்கள் ாங்கும் ஒரே புகைமண்டலம் massir Avuunziassar இரவோடிரவாக எரிக். 32 (டயரிாரித்திருந்தது)
அவரது கவிதைகளின் அமைப்பிற் குறிப்பிடத் தகுந்த சில் Jafau Lairdsalt arouruGallipor, March - 1 March - 12 March - 13. March f4, March - 20 March - 2. March - 22 March - 24எனப்பதலைப்புகளிட்டு அத்தலைப்புகளின் கீழ் ஒவ்வொரு பாடற்பகுதியும் அமைந்துள்ளன. இவை நாட்குறிப்பேடு"(டயறி) ஒன்றில் புதுக்கவிதை வடிவிற்கானப்படும் செய்திகள் போன்று அமைந்துள்ளன.
இந்தப் பொழுதுவிடியட்டும்"ான்ற தலைப்பின் கீழ்

புதுக்கவிதை 275
"கைதட்ட சிரிக்க இங்கொன்றும் இல்லை - எனினும் கைகொடுத்துதவுங்கள் இதுவோர் யுகத்தின் கதை இதுவோர் யுகத்தின் கதை காலம் காலமாய். . உழைக்கும் வர்க்கமொன்றின் பெயர் தெரியாப்பிரதிநிதியின் கண்ணிர்ப் புஷ்பங்கள் வரிவரியாய் எழுதியவோர் சோகக்கதை!
இதுவோர் யுகத்தின் கதை"
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் (1977) புசல்லாவைக்கு அண்மையிலுள்ள டெல்டா தோட்டம் எரிக்கப்பட்ட பொழுது, பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடைத்த டயறி ஒன்றில் கிடந்த வாசகங்கள் இவை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையும் நோக்கத்தக்கது. அத்துடன் கருத்துகளுக்கு அழுத்தம் கொடுத்து உணர்ச்சியூட்டும் வகையில் வேண்டிய விடத்துச் சொற்களையோ, சொற்றொடர்களையோ இருமுறை திரும்பத் திரும்ப கையாளும் பண்பும் காணப்படுகிறது. பண்டைய இடைக்காலச் செய்யுள்கள் சிலவற்றிலும் இப்பண்பு இடம் பெறுதல் குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாகச் சில அரகள் வருமாறு:
சான்னப்பறும் இப்பழத்தான்
நானும் இப்பழத்தான்
ான்மகனுக்கும் இதுவே நடக்கும்
ான் மகனுக்கும் இதுவே நடக்கும்
உழைக்கிறேன் - உழைக்கிறேன்
Tarmoruair arashruwasar
இப்படி இப்படியே. /
lampihapuh Albanwau... lapiparuh Aribawa,

Page 140
276 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
இறக்குமதி என்ன? இறக்குமதி என்ன? வழிந்த வியர்வையே வழிந்த வியர்வையே
கூவியழைத்தேன்நானுன்னை கூவியழைத்தேன்நானுன்னை மாற்றம் விரும்பி. மாற்றம் விரும்பி°
மலையகத்தின் வீறார்ந்த இளங்கவிஞர்களுள் ஒருவர் "வண்ணச் சிறகு"எனப் புனை பெயர்பூண்ட அரு. சிவானந்தனாவார். இலங்கை - இந்திய அரசுகளிடையே இடம் பெற்ற ஒப்பந்தங்களாலும் அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட கொடூரமான வன்செயல்களினாலும் சாதாரண தொழிலாளர்கள் மட்டுமின்றித் தரமான இலக்கிய கர்த்தாக்கள் பலரும் மலையகத்தை விடுத்து இந்தியாவிற்கும் வேறுநாடுகளுக்கும் நெஞ்சுமுட்டிய வேதனையுடனும், புனித்த கண்களுடனும் புலம் பெயரலாயினர். அத்தகையவர்களுள் ஒருவரே வண்ணச் சிறகு, அவரது "சென்று வருகிறேன் ஜென்ம பூமியே" என்ற தலைப்பிலமைந்த பாடற் பகுதிகள் நெஞ்சினையுருக்கும் வகையில் மேற்கண்ட உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.
பின்வரும்பாடற் பகுதிகள் இவ்வகையில் நோக்கத்தக்கவை:
நாட்கள் கழிகின்றன;
நாடுகடக்கும் வேளை
நெருங்குகின்றது,
பிரிவு என் வாசலைத்தட்டுகிறது
பிரிவு வேதனையின் பிரதிநிதி
விழிவாசலை முட்டுகிறான்
அழுது விடுவேனோ என்ற பயம்
என்னை அமுக்குகிறது."

புதுக்கவிதை 27
". நான் பிறந்த நாட்டினிலே நான் இருக்க விதியில்லை : என் ஜென்ம பூமியிலே எனக்கு உரிமையில்லை. என்றக்கால் . வேதனைகள் முட்டாதோ!"
"என் கவிதைப் பொருள்களை நான் இன்று பிரிகின்றேன் இதயத்தின் சுமையோடு தேசம் கடக்கிறேன்" 34
1960 -களின் நடுப்பகுதியில் கவிதையுலகிற் புகுந்த அவரது கவிதைகளுள் ஒரு பகுதியே, குறிப்பாக 1980 -க்குப்பின் இயற்றப்பட்டவையே "வண்ணச் சிறகு கவிதைகள்" என்னும் தொகுதியாக வெளிவந்துள்ளது. ". இந்த அரசியற் குழலும் தோட்டப் பொருளாதாரக் கட்டமைப்பின் கீழ் இயங்கிக் கொண்டிருந்த அரை - அடிமைச் சமூக வாழ்க்கைச் சூழலும்தான், நான் வாழ்ந்த குழலாக இருந்தன. இவற்றை உள்ளடக்கமாகக் கொண்டே என் கவிதைகள் வெளிப்பட்டன. . என் கவிதைகளுக்குப் பின்னே ஒரு வாழ்க்கை ஒரு அனுபவம் மறைந்துள்ளது. வெறுமனே எழுத வேண்டும் என்பதற்காக நான் எழுதவில்லை. என்னைச் சுற்றிலுமுள்ள உலகம் எனக்கு முரணாக உள்ளது. நான் அதனுடன் இணைந்து போக முடியாதுள்ளது. நான் புறச் குழல்களுடன் முரண்பட்டு உள்ளேன். அந்த முரண்பாடுகளின் வெளிப்பாடே என் கவிதைகள்." 35 என அவர் கூறியுள்ளமை அவரது கவிதைகளின் பண்பினைப் புலப்படுத்துவதாக உள்ளது.
இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் வதைபட்டுப் பெற்ற அவரது அனுபவங்களும் உலக அரங்கில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஈவு இரக்கமற்ற பல்வேறு வகையான சுரண்டற் கொடுமைகளும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பல்வேறுபட்ட பிரச்சினைகளும்

Page 141
278 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
அவற்றுக்கான தீர்வு மார்க்கங்களும் தீவிரமுற்போக்குச் சிந்தனைகளும் அவரது கவிதைகளில் மேலோங்கிக் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது.
"கொடுமைகளைக் கண்டுள்ளம்
குமுறுகின்ற கலகக்காரன்!
வறுமைக் கோலத்தைத்
திட்டுகின்ற வார்க்கத்தின்
வாழ்வுக்குக் குழிவெட்டப்
புறப்பட்ட பூதம் நான்."36
எனக் கூறும் கவிஞர் இலங்கையின் மலையகத் தோட்டங்களில் வாடிவதங்கும் தொழிலாளர்களைப் பற்றி மட்டுமல்லாது தமிழகம் சென்ற பின் அங்குள்ள பண்ணைகளிற் சகோதரத் தொழிலாளர்கள் படும் அவலங்களையும் அனுபவிக்கும் இன்னல்களையும் கண்டு நெஞ்சக் குமுறலுடன் பல கவிதைகளை இயற்றியுள்ளார்.
இலங்கையின் மலையகத்தைப் போலவே, தமிழகத்துப் பண்ணைகளிலும் தொழிலாளர் குடும்பத்தின் அங்கத்தினர் எல்லோரும் நாள்முழுவதும் உழைத்தாலே அன்றன்றாட பசித்தியைத்தணிக்க முடியும் பண்ணைகளில் தொழில் செய்யும் சிறுவன் ஒருவனின் பரிதாப நிலையினைப் பின்வருமாறு வெளிப்படுத்தி உள்ளார்.
இவன்
உதயக் கதிர்வீச்சு
உலகைத் தழுவுமுன்
உழைக்கச் செல்வான்
உழைப்பு உதிர்க்கும்
வியர்வை ஊற்றில்
பண்ணைவயல்களைப்
பசுமையாக்கி
பசி விழிகள்
பரிதவிக்க

புதுக்கவிதை 279
பண்ணை முற்றத்தில் ஒட்டிய வயிறோடும் ஒற்றைக் கால் தவமிருந்து பெற்ற தென்னவோ ஒற்றை நெற்கதிர்தான்.”*
ஒரு சிலமாற்றங்களுடன் இக்கவிதை மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பொருந்தக் கூடியதே.
வன்செயல்களின் போது தொழிலாளர்கள் எத்தகைய அச்சத்துடன் இரவுப் பொழுதுகளில் தவித்துக் கொண்டிருந்தனர் என்பதைக் கவிஞர் தத்ரூபமாகப் பின்வருமாறு காட்டியுள்ளார்
"நிச்சயமற்றுப் போயின நம் இரவுகள்
அன்பே படுக்கைக்குப் போகுமுன் இறுதி அர்த்தங்களுடன் பார்த்துக் கொள்வோம்
இறுதியாக
மாறி மாறி நம் கண்ணிர்த்துளிகளை நாமே துடைத்துக் கொள்வோட
இந்த இரவில் நாம் எரியாதிருந்தால் விடியலில், பனிமுத்துக்கள்தாங்கும் தேயிலைத் தளிர்களில் விரல்கள் பதிப்போம்" 38

Page 142
260 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
விசாலப் பார்வையும் ஆழமான சமூக நோக்கும் கலைத்துவமும் கருத்துவீச்சும் கொண்ட இவரது கவிதைகளின் நடை, வேகமும் விறுவிறுப்பும் கருத்துகளைத் தாங்கும் வன்மையும் கொண்டது. மிகப் பொருத்தமான குறியீடுகள் அவரது கவிதைகளுக்குத் தனிச் சோபை அளிக்கின்றன. இரா. நித்தியானந்தனது கவிதைகளுக்கும் இவரது கவிதைகளுக்குமிடையே மிக நெருக்கமான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அவர்கள் வரித்துக் கொண்ட தத்துவமும் பிறந்து வளர்ந்த சூழலும், இளமைத் துடிப்பும் தீவிர முற்போக்குச் சிந்தனைகளுமே இதற்குக் காரணங்கள் எனலாம்.
மலையகக் கவிதை உலகிலும் புதுக்கவிதை உலகிலும்பிரகாசித்துக் கொண்டிருக்கும் பெண் கவிஞர்களுள் திருமதி இஸ்மாலிகா விதந்து கூறத்தக்க ஒருவர். மலையகத் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் அனுபவித்துவரும் வேதனைகளையும் கொடுமை களையும் அவற்றைப் போக்குவதற்கான வழிவகைகளையும் முக்கியமாகக் கொண்டு சிறுகதைகளையும் கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் ஆக்கியுள்ள இவரது கவிதைகளோ, புதுக்கவிதைகளோ இதுவரை தொகுதிகளாக வெளிவராமை துரதிஷ்டமே.
பொதுவாகத் தமிழ் இலக்கிய உலகில் இன்று காணப்படுவது போன்றே மலையக இலக்கிய உலகிலும் நூற்றுக் கணக்கானோர்இன்று புதுக் கவிதைத் துறையில் தீவிர ஈடுபாடு காட்டிவருகின்றனர். சஞ்சிகைகள் பலவும் இவற்றை விரும்பிப் பிரசுரிக்கின்றன. இக் கவிஞர்களுள் மிகப் பெரும்பாலோர் ஆண்டில் இளையவர்களே. குறிஞ்சித் தென்னவன், மாத்தளை வடிவேலன் போன்ற முதிய எழுத்தாளர் சிலரும் புதுக்கவிதைத் துறையில் இன்று மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்கால வளர்ச்சிக்கு நம்பிக்கையூட்டும் வகையிற் புதுக்கவிதைகளைப் படைத்துவரும் கவிருர்கள் சிலர் வருமாறு; ச. பன்னீர் செல்வம் வெளிமடை ரபீக், பூண்டுலோயா என். சுப்பிரமணியம், கம்பளை க. நாகபூஷணி பதுளை ந. தாரணி (கவிதா), பிரமிளா கந்தையா, ச. பன்னீர்,

புதுக்கவிதை 281
ரஷீத் எம். ரியாழ், மாவனல்ல நிம்லா, செல்வி ரஸானா, கே. எம். அப்துல் ஸ்மது, மரீனா இல்யாஸ், ஜீவகன், மலைமகன், பூரிதேவிப்பிரியா, ரம்பொட எஸ். பரமேஸ், எஸ். யோகராஜ் எஸ்.விஜயா, பீஷ்மா, இரா. அ. இராமன், ப. ஆப்டின், மடுல்கெல லாசரஸ், விகே.ஆர் மதிவாணன், வட்டகொடை பி திருச்செல்வம், புசல்லாவ மன்னனூர் மதுரன், நீலா - குழந்தைவேல், இறாகலை அ. பன்னீர், ழயகலை ஆசிர், சுப்ராமைந்தன், கலைமகள் ஹிதாயா, செ. மகேந்திரன், மல்லிகை சி குமார் உனைஸ் ஆரிப் பொகவந்தலாவை சோ. பூரீதரன், உஸ்மான் மரிக்கார், இரா. திருச்செல்வம், லிந்துலை சி சார்ள்ஸ், பாலசர்மா முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
வெளிமடை ரபீக் புதுக்கவிதைத் துறையில் இன்று மிக வேகமாக முன்னேறி வருகிறார். 'இரத்த மொழிபெயர்ப்புகள்" முதலிய தலைப்புகளிலமைந்துள்ள அவரது புதுக்கவிதைகள் நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளன.
"நீங்கள்
வாழ்வதற்காக உழைக்கவில்லை
உழைப்பதற்காகவே
வாழ்கிறீர்கள்
நீங்கள் இன்றும்
தென்றலாய்த்தான்
திரிகின்றீர்கள்
குறாவளியாய் மாறினால்
தேசம்
தாங்காது
676ảrướ6ömraẻ” 39
எனவரும் பகுதிகள் இவ்வகையில் நோக்கத்தக்கவை

Page 143
282 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
கம்பளை கநாகபூஷணியின் 'மெழுகுதிரிகள்' 'ஒரு தாயின் விதி' "கரைகள்", "அறியாமை', 'துரதிஷ்டம்', 'நிலாதேசம்', 'நாங்கள் மத்தளங்கள்', 'அசிங்கங்கள்" O முதலிய தலைப்புகளிலமைந்துள்ள கவிதைகள், மலையகத்தின் இன்றைய இளந்தலைமுறையினரின் எழுச்சி கல்வி கற்று உத்தியோகம் பெற்றுக் கொண்டதும் சிலர் தாம் பிறந்து வளர்ந்த சூழலை மறந்தும் தமது சகோதரத் தொழிலாளர்களை ஏளனப்படுத்தியும் தாம் பிறந்து வளர்ந்த குடும்பத்துடனான தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டும் கீழ்த்தரமாக நடந்து கொள்ளுதல், இளந்தொழிலாளப் பெண்கள் சிலர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் மோகம் கொள்வதால் ஏற்படும் சீரழிவுகள், மலையகத் தொழிலாளர் சமூகம் கல்வித்துறையில் முன்னேற வேண்டியதன் இன்றியமையாமை முதலியவற்றைச் சித்தரிப்பனவாகக் காணப்படுகின்றன.
பிரமீளா கந்தையாவின் "சித்தார்த்தன் நித்திரை' ப ஆப்டீனின் "உன் கோலத்தைக் கலைத்து விடு" லிந்துலை சி. சார்ள்ஸின் "சிலிர்த்தெழுந்திடு சிநேகிதி' ஜீவகனின் "மீண்டும் தலைப்புச் செய்திகள் வாசிக்கப்படுகின்றன" பூரீதேவிப்பிரியாவின் "கொம்பை ஒழத்திடுக" எஸ்.விஜயாவின் "சுமைதாங்கிகள்" இரா. அ. இராமனின் 'அணிதிரண்டு செல்லுவோமுங்க' ச. பன்னீர்ச் செல்வத்தின் "அருமை அம்மா' வட்டகொடை மீதிருச்செல்வத்தின் 'இனியும் ஏமாறமாட்டோம்' இறாகலை அ பன்னின் 'புறப்படுகிறது புயல்", "சாதித்ததென்ன? சாதனைகள் என்ன?" சுப்ரா மைந்தனின் "கையெழுத்தே தலையெழுத்தாகி' மலைமகனின் "தோட்டப் பாடசாலை"நிஷாகவியின் நாளை நிறைவேற்றும் 'திலகா பழனிவேலின் "காரணம் இதுதானோ?" இப்னு அஸாமத்தின் 'பிரஜாவுரிமை விலாசம்" ஜனப்பிரியனின் "அழுகைக் கோச்சியிலே' நீலா-குழந்தைவேலின் 'மலைப்பூக்கள் விரிகின்றன" முதலிய தலைப்புகளிலமைந்துள்ள கவிதைகள் o olims மாதிரிக்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடத்தக்கவை. இக்கவிதைகள்

புதுக்கவிதை 283
மலையகத்தின் இன்றைய நிலைமைகளையும் புதிய வளர்ச்சிப் போக்குகளையும் சித்தரிப்பனவாகவும் அலசுபவையாகவும் விளங்குதல் மனங்கொளத்தக்கது.
மலையகத் தொழிலாளர் என்ற வகையில் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து வர்க்க் ஒற்றுமையுடன் செயற்படுதல் அவசியம் அதன் மூலமே தொழிலாளர்கள் எழுச்சியுற முடியும் என்னும் கருத்துகளை வற்புறுத்தும் வகையில் சிங்களப் புதுக்கவிதையாளர்கள் சிலர் புதுக்கவிதைகளை இயற்றியுள்ளனர். சிலரது கவிதைகள் தமிழாக்கம் பெற்றுள்ளன. இவ்வகையில் எடுத்துக்காட்டாக சினந்தாகுமாரி சந்திரசேகரவின் "ஒன்று சேர்வோம் அருந்ததி' பராக்கிரம கொடித்துவக்குவின் "அன்று இறந்தவன் நம்மில் ஒருவன்" 42 ஆகிய தலைப்புகளிலமைந்துள்ள கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.
சு முரளிதரனின் முயற்சிகளைத் தொடர்ந்து மலையகத்தில் பல இளங்கவிஞர்கள் "ஹைக்கூ" கவிதைகளைப் படைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாலரஞ்சளி சர்மா, எஸ். மனுவேல் ஆசீர்வாதம் சோ. பூரிதரன் முதலியோரது ஹைக்கூ கவிதைகள் 43 இவ்வகையில் நோக்கத்தக்கன.
தொகுத்து நோக்கும் போது, மலையகப் புதுக்கவிதையுலகில் வளர்ச்சியுற்று வருபவர்கள், ஆரம்ப நிலையிலுள்ளோர் ஆகியோரது கவிதைகளில் ஒரோவிடத்து அனுபவ முதிர்ச்சியின்மை கலைத்துவக் குறைவு முதலியன காணப்படினும் செப்பழ வித்தைகளோ, வார்த்தை ஜாலங்களோ, இருண்மையோ, புரிந்துகொள்ள முடியாமையோ இல்லாது சமூக நோக்கும் கருத்துச் செறிவும் முனைப்புப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தாமும் புதுக் கவிதை படைக்க வேண்டும் இலக்கிய உலகிற்பிரபல்யம் பெறவேண்டும் என்ற போலிப்புகழுக்கு ஆசைப்பட்டுக் கவிதை படைப்பதிலும் பார்க்கக் குமுறிக் கொந்தளிக்கும் தமது உள்ளத் தவிப்புகளையும் ஏக்கங்களையும் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிரான தமது போர்க் குரலையும் எழுச்சியுறத் துடிக்கும்

Page 144
284 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
மனோநிலையையும் வெளிப்படுத்துவதற்கேற்ற ஒரு வடிகாலாகவே புதுக்கவிதையைப் பயன்படுத்த முனைவதை அவதானிக்கலாம். தமிழ்ப் புதுக்கவிதை உலகுக்கு, மலையகம் எதிர்காலத்திற் காத்திரமான பங்களிப்பை நல்கும் என்பதில் ஐயமில்லை.
சான்றாதாரம்
1 மகாகவி பாரதியார் கவிதைகள், சான்றோர். 33 - 2
2 மஹாகவி கோடை, 1970 பக் W.
3. மகாகவி பாரதியார் கவிதைகள்.
4 கைலாசபதி, க, மரபு இளங்கதிர் 1962-63 ஆண்டு மலர் பக .105 தமிழ்ச்சங்கம் பேராதனைப் பல்கலைக்கழகம்
5 கைலாசபதி, க, நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், 1980 լյժ: 40 - 41
6 மல்லிகை ஒக்டோபர் 1985 பக். 47
7 மல்லிகை, ஓகஸ்ட்-செப்டம்பர் 1985 பக்37
8 இவற்றுக்கு எடுத்துக்காட்டாகச் சில பாடல்கள் அடுத்துத்
தரப்படுகின்றன. மலையகப் புதுக்கவிதைத் துறையின் முன்னோடிகளாக இருவர் விளங்குகின்றனர். ஒருவர் சி.வி வேலுப்பிள்ளை. மற்றவர்

புதுக்கவிதை 235
சக்தி அ. பாலையா. சி.வி. வேலுப்பிள்ளையின் வழிப் போக்கள் (WAY FARER) என்னும் வசன கவிதைத் தொகுப்பு 1947 ம் ஆண்டு வெளிவந்ததாக அறிய முடிகின்றது. எனினும் பார்வைக்குக் கிடைக்கவில்லை. இதே போன்று பாலையாவின் வசன கவிதைகளையும் பெறமுடியவில்லை. கே. கணேஷின் தமிழாக்கமாக அமைந்த வசன கவிதைகளும் மலையகப் புதுக்கவிதைக்கு 62/6nmuń 65%9FtiuĴL/607a2umas அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
9. "சுனில்கொத்தால்" "லோகபா" பழங்குடியைச் சேர்ந்தவள். அந்தப்பழங்குடியின் முதற் பட்டதாரி மேற்கு வங்காளப் பல்கலைக் கழகத்தில் சாதி ரீதியாக அவளுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு எதிராக அவள் தற்கொலை செய்து கொண்டாள். " வயல் - 5, காலாண்டிதழ் ஜனவரி-மார்ச் 1993 பக். 65-66
10 குன்றின் குரல், மலர் - 10 இதழ்-1 1990 பக் 14
17 மேலது.
12 கொழுந்து இதழ்-4 ஜனவரி-மார்ச் 1988 பக்9
13. கொழுந்து இதழ்-7 மே 1990 பக். 22-23
14. மேலது பக் 23-25
15 மேலது. பக். 26
16.நித்தியானந்தன்.இரா, முகவரியைத் தொலைத்தவர்கள், 1983 என்னுரை.
17 மேலது.
18. மேலது.

Page 145
286 இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம்
19 மேலது.
20. மேலது.
27 மேலது
22 மேலது.
23. மேலது.
24 மேலது.
25 மேலது
26 மேலது
27 மேலது
28 மேலது
29 மேலது என்றுரை
30 தீர்த்தக்கரை, ஜனவரி-மார்ச் 1982 பக்.7
31 தீர்த்தக்கரை, நவம்பர்-டிசம்பர் 1980 பக்23
32 தீர்த்தக்கரை, ஜுன்-ஆகஸ்ட், 1980 பக்32
33. ዘ 颅 * Liai, 30-32
34 வண்ணச்சிறகு கவிதைகள், 1985 பக் 93 - 94
3கி மேலது முன்றுரை, பக் 4 - 4

புதுக்கவிதை 287
36. மேலது பக் 88
37 மேலது பக் 30-31
38. மேலது. பக் 73 - 74
39 கொழுந்து இதழ்-4 ஜனவரி-மார்ச் 1988 பக்13
40. இவரது கவிதைகள் பல விடிவு, வீரகேசரி, தினகரன் முதலியவற்றில் வெளிவந்ததுள்ளன. அரும்புகள்’ என்னும் கவிதைத் தொகுதியிலும் சில பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
41. இக் கவிதைகள் குன்றின்குரல் கொழுந்து விழவு, அக்னி அக்கினிக்குஞ்சு, திரள், தீர்த்தக்கரை முதலிய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.
42 இக்கவிதைகள் குன்றின்குரல் மார்ச் 1992 இதழ் - 10 1988 ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.
43. இக்கவிதைகள் குன்றின்குரல், டிசம்பர் - 92 மார்ச் - 92 ஆகஸ்ட் - 90 ஆகிய இதழ்களிலும் இருளைத்துழாவும் மின்மினிகள்" ான்றும் கவிதைத் தொகுதியிலும் வெளிவந்துள்ளன.