கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையகமும் இலக்கியமும்

Page 1
sssssssssssssssss必
 


Page 2

Uலுலிதுமு9. 66D66iplb

Page 3
LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LL
ஈழத்தில் தமிழ் நாடகம்
அன்னை இந்திரா
காந்தி நடேசய்யர்
சுவாமி விபுலாநந்தர்
The Hill Country in Sri Lanka Tamil Literature
மலையக மாணிக்கங்கள் (அச்சில்)
இவர்கள் வித்தியாசமானவர்கள் (அச்சில்)
(மல்லிகை பந்தல் வெளியீடு)
 

அந்தனிஜீவா
மலையக வெளியீட்டகம்

Page 4
இந்நூல் இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபையின் சலுகையுடன் அச்சிடப்பட்டுள்ளது. இதில் உள்ளடக்கி யுள்ள பொருள் சபையின் கருத்துக்களை பிரதிபலிக்க மாட்டாது என்பதனை கவனத்திற் கொள்ளவும்.
மலையகமும் இலக்கியமும்
(இலக்கிய விமர்சன நூல்) C) அந்தனிஜீவா
முதற் பதிப்பு : நவம்பர் 1995 வெளியீடு : மலையக வெளியீட்டகம்
57 மகிந்த பிளேஸ், கொழும்பு - 6. அட்டைப்படம் : ஒவியர் எஸ். டி. சாமி
அச்சுப்பதிப்பு : லக்ஷா கிராபிக்ஸ் பிறைவேற் லிமிற்றட்
Malayagamum Illakiyamum
(Literary Criticism)
C) Anthony Jeeva
First Edition : November 1995 . Published By : Hill Country Publishing House
57, Mahinda Place, , Colombo - 6 Cover Design By : S. D. Samy Printed By : Laxsu Graphic (Pvt) Ltd.
Colombo 13.
Price: Ruppes : Rs 65/- ISBN 955 - 9084 - 02 - X
 

மலையக ஆக்க இலக்கிய முன்னோடி
தேசபக்தன் கோ. நடேசய்யரவர்களுக்கு இந்நூல் காணிக்கை

Page 5
இந்தியாவின் தென்கோடித்தமிழர்கள் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுவ தற்காக இங்கு கொண்டு வரப்பட்டவர்கள். ஏராளமானோர் மத்திய மலை நாட்டில் குடிய மர்த்தப்பட்டார்கள். இவர்களை மலையக மக்கள் என்றும் குறிஞ்சி நில மக்கள் என்றும் இனம் காட்டப்படுகிறார்கள்.
இந்த குறிஞ்சி நில மலையக மக்கள் புலம் பெயர்ந்து இங்கு வந்த பொழுது, தங்களின் பாரம்பரிய கலை வடிவங்களுடன் வாய்மொழி இலக்கியமான நாட்டார் இயல் பண்பாடுகளையும் கொண்டு வந்தார்கள்.
கால மாற்றத்திற்கு ஏற்ப இவர்களின் கலை இலக்கிய வடிவங்கள் மாற்றமும் மறுமலர்ச்சியும் பெற்றது. இவைகள் இலங்கை தமிழ் இலக்கியத் தின் தனித்துவமுள்ள மலையக இலக்கியமாக பரிணமித்தது.
இந்த மலையக மக்களின் வாய்மொழி பாடல்கள் முதல் இன்றைய நவீன ஆக்க இலக் கியம் வரை இவர்கள் இங்கு வருவதற்கு அனுபவித்த கஷ்டங்களையும், கங்காணிமார் களிடம் அனுபவித்த கொடுமைகளையும், கோப்பி பயிரிட்ட காலத்தில் ஏற்பட்ட அவலத்தையும் அதன் பின்னர் தேயிலைப் பயிரிட்ட காலத்தில் இடம் பெற்ற மாற்றத்தையும் இவைகளில் காணலாம்.
அது மாத்திரமல்ல அம்மக்களைப் பாதித்த குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டபொழுது
 
 

அந்த மக்களின் வாழ்வில் பாதிப்பு ஏற்பட்டது வேத னைக்குறிய அந்த காலப்பகுதியில் எழுந்த இலக்கிய முயற்சிகள் சோகக்குரல் எழுப்புவதாக இருந்தது.
அறுபதுகளில் அபரிதமான இலக்கிய முயற்சி கள் மலையகத்தில் மேற்கொள்ளப்பட்டன. இலங் கை தமிழ் இலக்கியத்திற்கு காத்திரமான பங்க ளிப்பை மலையக படைப்பாளிகள் செய்துள்ளனர். அதனை இனங்காட்டுவதே எனது முயற்சியாகும்.
கடந்த மூன்று தசாப்தங்களாக மலையக கலை இலக்கியங்களுடன் மிக நெருக்கமான தொடர்பு பூண்டு. மலையக இலக்கியம் பற்றி ஐம்ப துக்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன். மேலும் வெளி நாடுகளிலிருந்து வெளிவரும் பத்திரிகை சஞ்சிகையிலும் எழுதியுள்ளேன். வானொலியிலும் தொலைகாட்சியிலும் உரை நிகழ்த்தியுள்ளேன். rw
சென்னையில் எண்பதுகளில் இலக்கியம்’ எனற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும்,திருச்சி பிஷப் ஹிபர் கல்லூரியிலும் மலையக இலக்கியம் சம்பந்தமான உரைகளை நிகழ்த்தியுள்ளேன்.
ஆனால், அவை எல்லாம் காற்றோடு கலந்த நிகழ்வுகளாக போய் விடக்கூடாது என்பதற்காக “மலையகமும் இலக்கியமும்” என்ற நூலை எழுதினேன்.
இந்நூலை 1993ம் ஆண்டு தேசிய நூலக அபிவிருத்திச் சபையிடம் அங்கீகாரத்திற்காக சமர்பிக்கப்பட்டு அச்சிடுவதற்கு அங்கிகரிக் கப்பட்டது. இலங்கை தேசியநூலகசேவைகள் சபை

Page 6
பொருளுதவி செய்திராவிட்டால், இந்நூல் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருக்கும்.
மலையக இலக்கியம் பற்றி அறிந்து கொள்
வதற்கு இந்நூல் வழிகாட்டியாக அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
மலையக கலை இலக்கிய பேரவை, மலையக வெளியீட்டகம் ஆகியவற்றின் ஊடாக என்பணிகள் தொடர்வதற்கு உந்து சக்தியாக விளங்கும் மலை யக இலக்கியத்தின் நம்பிக்கைக்குரியவர்களான ஆய்வாளரும் படைப்பாளியுமான சாரல் நாடன். கவிஞர் சு. முரளிதரன், எனது இலக்கிய முயற்சி களை ஊக்குவிக்கும் இலங்கை முற்போக்கு எழுத தாளர் சங்க அமைப்புச் செயலாளர்கிரு.நா. சோம காந்தன், பூபாலசிங்கம் பூரீதர்சிங், கவிஞர் மேமன் கவி ஆகியோரை நன்றியுடன் நினைவு கூறு கின்றேன்.
அந்தனிஜீவா
57 மகிந்த பிளேஸ். கொழும்பு - 6.
 

அந்தணிஜீவா
நுழைவாயில்
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் “மலையக இலக்கியம்” என்ற அம்சம் குறிப்பிடத்தக்கது. தனித்துவமிக்க இந்த மலைய கத் தமிழ் இலக்கியம் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த இந்திய வம்சாவளித் தமிழர்களினால் வளர்க்கப்பட்டது, வழிநடத்தப்பட்டது. s
இந்த மலையக இலக்கியம் பற்றி அறிவதற்கு முன்னோட்ட மாக இந்த மக்களின் வரலாற்றுப்பின்னணியை அறிந்துகொள் வது அவசியமாகும். அது அவர்களின் இலக்கிய முயற்சிகளை இனங்கண்டுகொள்ள வழிக்காட்டுவதாகும்.
வரலாற்றுப் பின்னணி
இந்திய வம்சாவளியின் மலையக மக்கள் 180 ஆண்டு களுக்கு மேலாக இலங்கையில் வாழ்கின்றனர். 1824 ஆம் ஆண்டு பதினாறு குடும்பங்களின் வருகையோடு இவர்களின் குடியேற்றம் ஆரம்பமானது.
இந்தியாவில் தென்கோடித் தமிழர்கள் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முயற்சிகளில் ஈடுபடுவதற்காக இங்கு அழைத் துவரப்பட்டு, ஏராளமாக மத்திய மலைநாட்டில் குடியமர்த்தப் பட்டனர். இவர்கள் மல்ையக மக்கள் என்றும், குறிஞ்சிநில மக்கள் என்றும் இனங்காட்டப்படுகின்றார்கள். இவர்களைப் பற்றியதும், இம்மக்களிடையே தோன்றிய இல்க்கிய படைப்பாளி களினதும் ஆக்கங்கள் மலையக இலக்கியம் என இனங்

Page 7
மலையகமும், இலக்கியமும்
காட்டப்படுகின்றது. இவ்வாறு வரையறுத்துக் குறிப்பிடுவது இலங்கை மலையகத் தமிழ் இலக்கியமாகும்.
இந்திய வம்சாவளித் தமிழரான இவர்கள் இங்கு வரும் பொழுது தங்களோடு தங்கள் கலாசாரத்தையும், பண்பாட்டை யும், சமய நம்பிக்கைகளையும் கொண்டு வந்தார்கள். அவர்கள் அவ்விதம் கொண்டு வந்தது பழமை மிகுந்த, வளம் நிறைந்த தென்னிந்திய கலாசாரமாகும்.
"மலையகத் தமிழர் என இன்று இனங்காட்டப்படுகின்ற இந்திய வம்சாவளியினரின் பண்பாட்டுணர்வுகள் தென்னிந் தியக் கலாசாரத்தின் மறுபதிப்பாகவே இருந்துவருகிறது என லாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தில் இங்கு குடியேற ஆரம்பித்தவர்களின் தொடர் குடியேற்ற சந்ததி யினரான இந்த மலையக மக்கள் அந்தப் பாதிப்பிலிருந்து விடுபடவே இல்லை!" (01)
இந்திய மண்ணில் வாழ்ந்து பழகிய இம்மக்கள் இலங்கை யில் குடியேறிய பின்னர் சூழ்நிலை மாற்றத்திற்கேற்ப புதிய புதிய அனுபவங்களைப் பெற்றார்கள். இந்திய மண்ணின் தொடர்பை முற்றாக அறுத்துக் கொள்ளாமல் அத்தொடர்பை குடியேறிய இடத்தில் தங்களின் புதிய முயற்சிகளுக்கு உதவு கிற விதத்தில் பயன்படுத்திக்கொண்டார்கள்."நேற்றிருந்தோம் அந்த வீட்டில்” என்ற உணர்வுடன் மகாகவி பாரதியின் கவி தைக்கொப்ப நீண்டகாலம் வாழ்ந்தார்கள்.
இந்திய வம்சாவளியினர் இங்கு புலம்பெயர்ந்து வந்த பொழுது,தங்களின் பாரம்பரிய கலை வடிவங்களையும் நாட்டார்
 

அந்தனிஜீவா
வழக்காறுகளையும் தங்களோடு புதிய கனவுகளுடன் கொண்டு வந்தார்கள். இவர்களின் ஆரம்பகால வெளிப்பாடுகள் அனைத்தும் வாய்மொழி இலக்கியங்களாகவே அமைந்தன.
உழைப்பு ஒன்றையே தங்களின் வாழ்க்கை அளவுகோ லாகக் கொண்டுவிட்ட இந்த மக்களின் வாழ்க்கைமுறை, வாழ்க்கைத்தரம், மதநம்பிக்கை, மனோபாவம் இவைகளை யொல்லாம் தெரிந்துகொள்ள சாலை காணாத மலை நிலத்தில் முதலில் அவர்கள் அனுபவித்த மன உணர்வுகளை அறிந்து கொள்ள என்ன இருக்கிறது? எங்கு நோக்கினும் உழைப்பின் காட்சியணியாக விளங்கும் இன்றைய மலையகத்தோடு “போட்டால்தின்பேன்” “வைத்தால் சுமப்பேன்” என்கிற விலங்கு நிலையிலிருந்து வேறுபடாத இந்த பரிதாபத்திற்குரியவர்களின் வாழ்க்கையை இணைத்துப் பார்க்கையில் வெளிப்படுகின்ற வேதனைப்பெருமூச்சுக்கும், ஏக்கப்பொருமலுக்கும் வழிய மைத்த நிகழ்ச்சிகளை நாமெதன் மூலம் அறிந்து கொள்ளலாம்?
மன உணர்ச்சியை அப்படியே பிரதிபலிக்கிற கண்ணாடி யான வாய்மொழிப் பாடல்கள் ஒரளவுக்கு மனிதர்களின் உள் ளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்றன. அவர்களது இருப் பிடங்களின் பெயர்கள் ஆகியவைகளோடு ஆங்கிலேயர்கள் எழுதி வைத்திருக்கிற குறிப்புகள், தொழிலாளர் சம்பந்தமான சட்டங்கள், அவை உருவாவதற்கான சூழ்நிலை ஆகியவை களையெல்லாம் பிணைத்து வைத்துப் பார்க்கையில் மலையக சமுதாயத்தின் உள்ளோட்ட வரலாற்றை ஓரளவுக்கேனும் தெரிந்து கொள்ளலாம். (02)

Page 8
மலையகமும், இலக்கியமும்
வாய்மொழி இலக்கியம்
மலையகத் தோட்டங்களில் குடியேறியவர்கள் தென்னிந் திய கிராமங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக வந்ததைப்போ லவே, ஒரு தோட்டத்தில் அல்லது சில தோட்டங்களில் ஒரே பகுதியைச் சேர்ந்த தமிழக கிராமம் ஒன்றின் மக்கள் இங்கும் இணைந்து வாழத்தொடங்கியமையினால் தமது பூர்வீக கிராமியப் பண்புகளும், பழக்க வழக்கங்களும், மரபுகள், சமயச் சடங்குகள் என்பனவும் இவர்களிடையே தொடர்ந்து நிலவி வந்தன.
தென்னிந்திய கிராமங்களில் பாடிய பாடல்கள், கொண்டா டிய விழாக்கள், கலை மரபுகள், சமயச் சடங்குகள், சம்பிரதா யங்கள் என்பனவற்றைத்தாம் குடியேறிய இடங்களில் பேணிப் பாதுகாத்து வளர்த்து வந்துள்ளனர்.
தென்னிந்தியாவில் தாங்கள் வாழ்ந்த வயற்புற கிராமிய சூழ்நிலையில் பிறந்த வாய்மொழி இலக்கியமான நாட்டார் பாடல்கள், இலங்கைத் தோட்டப்புறச் சூழலில் சிறிது மாற்றத் துடன் பாடப்பட்டுள்ளன என்பதை அந்தந்தப் பாடல் வரிகளின் மூலம் அறிந்துகொள்ளலாம். AW*
வாய்மொழி இலக்கியம், கிராமியப் பாடல்கள், நாட்டார் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், கதைப் பாடல்கள், தெம்மாங் குப் பாடல்கள், குரவைப் பாடல்கள், தாலாட்டு, ஒப்பாரி, வாழ்த் துப் பாடல்கள் என வாய்மொழி இலக்கியம் வகுக்கப்பட்டும் தொகுக்கப்பட்டும் உள்ளன.
 

அந்தனிஜிவா
இலங்கையின் ஏனைய பிராந்திய வாய்மொழி இலக்கியம் அம்மக்களின் சமூக வாழ்க்கை முறைகளையும், பழக்க வழக் கங்களையும் வெளிப்படுத்தி அமைகின்றபோது, இந்த மலையக மக்களின் வாய்மொழிப்பாடல்கள் அம்மக்களின் வரலாற்றில் பல நெளிவு சுழிவுகளை வெளிப்படுத்தி இருக்கின்றதைக் கண்டுகொள்ளலாம். இது இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு இந்த மக்களின் மற்றுமொரு பங்களிப்பாகும்.
இந்த வாய்மொழிப்பாடல்களில் இவர்களின் துன்பதுயரங் கள், சோகப் பெருமூச்சுகள், இன்ப துன்பங்கள், ஆசாபா சங்களை கண்டுகொள்ளலாம். மலையக வாய்மொழிபாடல்கள் தாலாட்டு எனத் தொடங்கி காதல், ஒப்பாரி, கும்மி என விரிவ டைந்துள்ளன. இந்த பாடல்களுக்கு ஆதாரமாக நிற்பது தென் னிந்திய பண்டைய கிராமியக் கலாசாரத்தின் வேர்கள்தான்.
இக்காலப் பகுதியிலுள்ள பிற அனைத்தும் வழிவழியாக வாய்மொழியாக உயிர் வாழ்ந்துவரும் பாடல்களேயாகும். எனினும் இவ்வாரம்பகாலப் பகுதியில் வெளியான ஆங்கிலத் துரைமார்கள் மலைப்பிரதேசங்களில் தமிழர்களிடையே வாழ்ந்த வர்கள். அவர்கள் எழுதிய பிரயாணக் குறிப்புகள், அநுபவக் குறிப்புகள், வேட்டை அநுபவங்கள் கோப்பிக் காலத்திலும், பின்னர் தேயிலைக் காலத்திலும் மலையகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், அதனூடாகத் தமிழ்த் தொழிலாளர்கள் வளர்த்துக் கொண்ட வாழ்க்கை முறையையும், நம்பிக்கைக ளையும் வெளிப்படுத்த உதவுகின்றன. உண்மைக்கும் உழைப்புக்கும் பேர்போன எஜமான விசுவாசிகளாக அவர்களது பண்பாடு அமைந்திருந்த பங்கை ஏறக்குறைய இவ்விதம்

Page 9
Dariavus(pið, இலக்கியமும்
எழுதப்பட்டுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நூல்களில் அவர்கள்
நிறைந்த அளவில் தமிழ்ச்சொற்கள், ஆங்கிலப் பிரயோகம் பெற்றிருப்பதைக் காணலாம். 1869ஆம் ஆண்டு ஜோன்கெப்பர் என்பவர் ஒர் ஆங்கில சஞ்சிகையை "முனியாண்டி” என்ற பெயரில் ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (03) அது மாத்திரமல்ல, இந்த வாய்மொழிப்பாடல்கள் மூலம் தான் இவர்களின் வரலாற்றுப் பதிவுகளைக் கண்டுபிடிக்கலாம்.
"அவர்கள் கண்டிச்சீமைக்குக் கனவுகளுடன் வந்தனர். புலம் பெயர்த்தலுடன் அவர்கள் வாழ்க்கை ஆரம்பமாயிற்று. இன்றுவரை அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்துள்ளனர். இவையனைத்தையும் உயிர்த்துடிப்புடன் புலப்படுத்தும் உருக்கமான சொல்லோவியங்களாய் இப்பாடல் கள் அமைந்துள்ளன" என்று கூறும் பேராசிரியர் கைலாசபதி, “அவை அந்த மக்கட் கூட்டத்தினரின் சான்றுகளாக மட்டும் அமையவில்லை, அவர்களின் கனவுகளின் இலட்சியக் குரலாக விளங்குகின்றன” எனக் குறிப்பிடுகின்றார். (04)
மலையக வாய்மொழி இலக்கியத்தைப் பார்ப்போமானால், அந்த வரலாற்று உண்மை புலப்படுகின்றது.
அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வரும் பொழுது:
 

அந்தனிஜீவா
"வாடை யடிக்குதடி வாடகாத்து வீசுமடி செந்நெல் மணக்கு தடி சேர்ந்துவந்த கப்பலிலே"
என்று கப்பலில் வந்த சோகக் கதையைப் பாடல் வரிகள் மூலம் புலப்படுத்துகிறார்கள்.
“ஊரான ஊரிழந்தேன் ஒத்தப்பனைத் தோப்பிழந்தேன் பேரான கண்டியிலே பெத்த தாயே நாமறந்தேன்”
என்ற பாடல் அநாதரவாக வஞ்சிக்கப்பட்ட நிலைமையைக் காட்டுவதாக அமைகின்றது. இதே போன்று கோப்பிப் பயிர்ச்செய்கையின் போது ஒருபாடல்:
“கோண கோண மலையேறி போப்பிப்பழம் பறிக்கையிலே ஒத்தபழம் தப்பிச்சின்னு ஒதைச்சானையா சின்னத்துரை”
என்று கூறிவிட்டு
கங்காணி காட்டு மேலே கண்டாக்கையா ரோட்டுமேலே பொடியன் பழமெடுக்க பொல்லாப்பு நேந்ததையா"

Page 10
மலையகமும், இலக்கியமும்
என்ற வேதனைப் புலம்பலும், பின்னர் தேயிலைப் பயிர்ச் செய்கைக் காலத்தின்போது:
"கொழுந்து வளந்திருச்சு
கூடைபோட நாளாச்சு சேந்து நெரே புடிச்சு
சிட்டா பறக்குறாளே”
தேயிலைக் கொழுந்து வளர்ந்திருப்பதைப் பார்த்து மனம் பூரித்துப்பாடுகிறாள்:
மலையகத் தேயிலைத் தோட்டங்களில் கங்காணிமார்க
ளின் ஆதிக்கம் மிகக் கொடுமையாக இருந்தது. அவர்களின்
காட்டுத்தர்பார்கள், அட்டகாசங்களைப் பின்வரும் பாடல்கள் மூலம் உணரலாம்:
"எண்ணி குழிவெட்டி இடுப்பொடிஞ்சி நிக்கையிலே வெட்டு வெட்டு என்கிறானே வேலையத்த கங்காணி."
என்று தன் வேதனையை வெளிப்படுத்துகிறான். அதைப் போன்று கங்காணியைப் பற்றிக் கூறும் இன்னொரு பாடல்:
"அந்தானை தோட்டமுணு ஆசையா தானிருந்தேன் ஒருமூட்டைத் தூக்கச்சொல்லி ஒதைக்கிறாரே கண்டாக்கையா"
 

அந்தனிஜீவா
மலையக வாய்மொழிப் பாடல்களில் துன்பதுயரங்கள் மாத் திரமன்றி அவர்களிடையே கனவுகளும், காதல் உணர்வுகளும் கலந்திருந்தன என்பதற்குப் பல பாடல்கள் சான்றாக உள்ளன. அத்தகைய பாடல்களில் ஒன்று:
"கொத்தமல்லி தோட்டத்திலே கொழுந்து கிள்ளப் போறப்பொண்ணே கொண்டுவந்தேன் மல்லிகைப் பூ ஒன் கொண்டையில் குட்டிவிட"
இன்னொரு பாடல்:
"மாமன் மகளே மருதப் பலாச்சுளையே
ஏலம் கிராம்பே ஒன்ன என்ன சொல்லிக் கூப்பிடுவேன்”
இப்படிப் பல பாடல்கள் அவர்களிடையே உலாவி வந்துள்ளன.
இதேபோன்று மலையகத்துத் தோட்டப்புறச் சிறுவர்கள் பாடும் பாடல்
"சிக்குபுக்கு நீலகிரி தொப்பி தோட்டம் நாங்கவந்த கப்பலிலே மிச்சங் கூட்டம்”

Page 11
மலையகமும், இலக்கியமும்
நீலகிரி என்பது நானுஒயாவையும்,தொப்பித்தோட்டம் என் பது அட்டனையும் குறிக்கும் தமிழ்ப்பெயர்கள். மலையகத்தில் வழங்கிவரும் வாய்மொழிப்பாடல்களில் இதுபோன்ற வரலாற்று உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.
மலையகத்தின் வரலாறு எழுதப்படாத குறையை இந்த வாய்மொழி இலக்கியங்களே நிவர்த்திசெய்கின்றன. மலையக வாய்மொழிப்பாடல்கள் இந்த மக்களின் முதல் ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கூறும் ஆதாரங்களாக விளங்குகின்றன.
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதிகளான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார் ஆகிய பகுதிகளில் வழங்கப்படும் பாடல்களை கலாநிதி சு. வித்தியானந்தன், வட்டுக்கோட்டை மு.இராமலிங்கம், வித்துவான் எ..ப்.எக்ஸ். ஸி. நடராசா ஆகியோர் தொகுத்துநூலுருவில் வெளியிட்டுள்ள னர். மலையக மக்களிடையே வழங்கும் வாய்மொழிப் பாடல்களை சேகரித்து"மலைநாட்டு மக்கள் பாடல்கள்” என்ற தலைப்பில் மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை வெளியிட் டுள்ளார். இன்னும் இந்த மக்களின் ஏடறியா இலக்கியமாக வாழும் நாட்டார் வழக்காறுகளை மறைந்துவிடாமல் தொகுத்து நூலுருவில் வெளியிடப்பட வேண்டியது சமுதாயத்தின் அத்தி யாவசிய தேவையாகும். ஒரு சமுதாயத்தின் பின்னணியை அறிய இந்தப் பாடல்கள் துணை நிற்கும்.
NV/
 

அந்தனிஜீவா
மலையகமும் கவிதையும்
மலையக மக்களிடையே ஆரம்பகால முயற்சிகள் அனைத் தும் கவிதை வடிவிலேயே வெளிவர ஆரம்பித்தன. இதற்கு முக்கிய காரணியாக இருந்தவை, மலையக வாய்மொழி இலக்கியங்களான நாட்டார் பாடல்களுடன் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, ராஜா தேசிங்கு, அல்லி அரசாணிமாலை, நளமகராஜன் கதை, விக்கிரமாதித்தன் கதை, மாரியம்மன் தாலாட்டு போன்றவையாகும். இவற்றின் உந்துதலால் மலையக ஆக்க இலக்கியத்திற்கு முன்னேடியாக பாடல்களே பிறந்தன.
மலையகக் கவிதை இலக்கியத்திற்கு முன்னோடியாகவும், முதல்வராகவும் நமக்குக் காட்சிதருபவர் அருள்வாக்கி அப்துல் காதர் புலவர். மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடையே அப்துல்காதர் புலவர் மதிப்புப்பெற்று விளங்கினார். அவர்கள் மத்தியில் இடம்பெற்ற விழாக்களிலும், சடங்கு வைபவங்களிலும் கவிதை பொழிவார். பொது விழாக்களிலும் பங்குபற்றி கும்மி, நொண்டிச்சிந்துபோன்ற பாடல்களை மலையக சூழ்நிலையைக் கருவாகக்கொண்டு பாடிக்காட்டினார். இவர் முப்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கண்டி மாந கருக்கு அருகிலுள்ள தெல்தோட்டையில் 1866ஆம் ஆண்டு பிறந்த இவர், 1918ஆம் ஆண்டு கண்டியில் அமரரானார்.
முத்தார மார்பகத்தென் முத்தமிழாம் வித்தாரக் கொத்தாரம் பூண்ட கண்டிக்

Page 12
மலையகமும், இலக்கியமும்
கொற்றவரே - சித்தார் புலவனெனக் கண்டன்பு தந்தருள்வீர் பாடலனனெனக் - கண்ணாய்ந்து
வண்ணப் புலவோர்
வடித்தமிழால் போற்றிசெய வெண்ணற்ற மாரியருளிந்தீரே - தண்ணத் தமிழ் பகர்வோனென் மேற்றயை புரிவீர் - கண்டித் தமிழ்தென வாய்ந்துற்றீரணி
அருள்வாக்கி எழுதிய கவிதை ஒன்று மேலே காணப்படுவது.
1920ஆம் ஆண்டுக்குப் பின்னரே மழைத்தூறல்கள் போன்று கவிதை முயற்சிகள் காவடிச் சிந்துகளாக, வாய் மொழிப்பாடல்கள் வடிவில் சிறுசிறு துண்டுப் பிரசுரங்களாக அச்சிடப்பட்டு தோட்டத் தொழிலாளர்களிடையே பாடிப்பரப் பப்பட்டன. இதற்கெல்லாம் முக்கிய காரணகர்த்தாவாக விளங் கியவர் மலையகத்து நிர்மாண சிற்பி என்றழைக்கப்படும் தேச பக்தன் கோ. நடேசய்யர் ஆவார்.
பத்திரிகையாளரும், எழுத்தாளரும், தொழிற்சங்கவாதியு மான கோ. நடேசய்யர்தன்துணைவியாரான திருமதி மீனாட்சி அம்மாளுடன் தோட்டம் தோட்டமாகச் சென்று தொழிலாள ருக்கு விடுதலை உணர்வையூட்டும் பிரசங்கங்களைச் செய்வார். அவ்ரது மனைவியான திருமதி மீனாட்சி அம்மாள் தனது இனிய குரலால் மகாகவி பாரதியாரின் பாடல்களையும், தாமே இயற்றிய பாடல்களையும் பாடுவார். பின்னர் அந்தப்
 

அந்தனிஜீவா
பாடல்களைத் துண்டுப்பிரசுரமாக அச்சிட்டு அவர்களிடையே விநியோகித்துள்ளார்.
"காட்டைத் திருத்தினது இந்தியனாலே - நீங்கள் கற்றுக்கொண்டு பேசுவது இந்தியனாலே நாட்டைத் திருத்தினதும் இந்தியனாலே - இப்ப நன்றிகெட்டுப் பேசுவ்தாகாது சொல்மேலே."
இதுபோன்ற பாடல்கள் அடங்கிய பிரசுரம் "இந்தியர்களது இலங்கை வாழ்க்கை நிலைமை" (05) என்ற பெயரில் வெளியா கியுள்ளது. இது மாத்திரமன்றி கோ. நடேசய்யரின் எழுத்தும், பேச்சும், பத்திரிகை பிரசுரங்களும் தோட்டத்தொழிலாளர் களிடையே ஓர் எழுச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தி யுள்ளன.
"இந்து மக்கள் சிந்தும் வேர்வை ரெத்தக்காசு தானே - அடா இரவு பகல்
உறக்கமின்றி ஏய்த்துப் பறிக்கலாமா? (06)
இதுபோன்ற உணர்ச்சிகரமான பாடல்களை கோ. நடேசய்யர் தன் "தேசபக்தன்” பத்திரிகையில் எழுதினார்.
கோ. நடேசய்யர் மிகப்பெரிய செயல் வீரர். இந்த நாட்டின் தொழிற் சங்க வரலாற்றிலும், அரசியல் நடவடிக்கைகளிலும்,

Page 13
மலையகமும், இலக்கியமும்
பத்திரிகை வெளியீட்டுத் துறைகளிலும் மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகளிலும் தமது பாரிய பங்களிப்பினால் முத்திரை பதித்துக் கொண்டவர். இந்த நான்கு துறைகளிலும் அய்யரின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது, தடம் பதித்த நிகழ்ச்சிகளாக கருதப்பட வேண்டியது. (07)
தேசபக்தன் கோ. நடேசய்யர் பதின்னான்கு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பாடக்கூடிய பாடல்களை எளிய முறையில்- சரளமான நடையில் எழுதிதுண்டுப்பிரசுரங்களாக வும், சிறு நூல் வடிவங்களாகவும் நாவலப்பிட்டியில் பிறவிக் கவிஞர் எஸ்.ஆர்.எஸ்.பெரியாம்பிள்ளை, எஸ். கோவிந்தசாமி தேவர், பி.ஆர். பெரியசாமி, கா. சி. ரெங்கநாதன், சீனிவாசகம், தொண்டன் ஆசிரியர் எஸ். எஸ். நாதன், ஜில் சிட்டுக்குருவி யார், பதுளை வ. ஞானப்பண்டிதன் போன்றவர்கள் வெளி யிட்டும், தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் பாடியும், பரப்பியும் வந்தார்கள். இந்த நிலைமை இன்றுவரை தொடர்வதைக் காணலாம். கண்டி மாநகருக்கு அருகில் தெல்தோட்டை, அதன் கூப்பிடு தூரத்தில் பட்டியகாமம் என்ற சிறு தேயிலைத் தோட்டம். அங்கு வாழும் பாவலர் வேல்சாமிதாசன் தான் இயற்றிய பாடல்களை துண்டுப்பிரசுரமாக அச்சிட்டுதோட்டம் தோட்டமாகச் சென்று பாடி விற்று ஜீவிக்கிறார்.
"இந்தியாவிலிருந்து வந்த சேதி கேளுங்கோ இறந்துபோன பாட்டன் படகில் வந்தார் பாருங்கோ இலங்கைநகர் ஈனுழையாக் காடுதானுங்கோ - பாட்டன் இருதயத்தை கலங்கவிடாதழித்திட்டாரங்கோ.
 

அந்தனிஜீவா
காலைமணி ஐந்துக்கெல்லாம் தப்படிப்பாங்கோ கணக்குபோல ஆறுக்கெல்லாம் பெரட்டெடுப்பாங்கோ வேலையிலே ஏழுக்கெல்லாம் இல்லாவிட்டாங்கோ வேலையில்லை என்றுசொல்லி விரட்டிடுவாங்கோ."
இப்படி கணிரென்ற குரலில் பாடுபவர் வேறு யாருமல்ல, பட்டிய காமம் தந்த பாவலன் எம். பி. வேல்சாமிதாசன்தான். எழுபதை எட்டிவிட்ட தோற்றம், ஆனாலும் அவரின் கம்பீரக் குரல் அவரை நமக்கு இனம் காட்டுகிறது. அவரின் இனிமை மிகுந்த பாடல்களைக் கேட்கும் ஆவலில் இன்னொரு பாடலைப் பாடச்சொல்கிறோம். தான் எழுதி வெளியிட்ட "இலங்கைத் தொழிலாளர் இம்சைக்குரல்" என்ற பாட்டுப்புத்தகத்திலிருந்து சில வரிகளைப் பாடுகிறார்.
ஆலவட்டம் போட்டுக்கொண்டு வேலைவெட்டி செய்யாமல் அழகுநடை வேண்டாம்பா மக்களே அடிவயிறு சுருங்கிப்போகும் மக்களே.
என்று பாடுகிறார். (08)
கண்டியில் வாழ்ந்து தமிழகம் சென்றுவிட்ட கவி சிதம்பரநாத பாவலர் 1934ஆம் ஆண்டு “பெளத்தாயன” என்ற பெயரில் புத்தபெருமான் சரித்திரத்தை "வீரகேசரி”யில் காவியமாக எழுதினார்.
"மகாகவி பாரதியாரின் அதிமுக்கிய பாடலான "கரும்புத் தோட்டத்திலே" என்ற பாடலும், அண்ணாமலைச் செட்டியார்

Page 14
மலையகமும், இலக்கியமும்
காவடிச்சிந்தும் இங்கு எதிரொலித்தது. இவற்றைப்பின்பற்றிச் சிவனொளிபாதம், கதிர்காமம் ஆகிய திருத்தலங்களை பேரா தெனிய, ரதாளை, நுவரெலிய ஆகிய இடங்களைப்பற்றியும் நாவலப்பிட்டி பெரியாம்பிள்ளை, எஸ். எஸ். நாதன், கந்தசாமி கணக்கப்பிள்ளை, எம்டன் ஏ. விஜயரட்ன ஆகியோர் பாடல் களைப் புனைந்தனர். அவற்றைப் புத்தகங்களாக வெளியிட்டு மக்கள் மத்தியில் பாடியும் வந்தனர். (09)
பாரத கவியரசர் தாகூர், கவிக்குயில் சரோஜினிதேவி போன்ற இந்தியக் கவிகளின் படைப்புகளால் ஆங்கிலக் கவிதை யாலும், உந்தப்பட்டு கவிதை படைத்தவர் இருவர். ஒருவர் மலையக மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை. மற்றவர் கே. கணேஷ்.
ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதிய சி. வி. வேலுப்பிள்ளை தனது ஆற்றல்மிக்க எழுத்துக்களால் மலையக மக்களின் துன் பம் துயரங்களை, அந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அகில உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டினார். அவரது "966T (fc86)T60T L. g|Trulloor" (In Ceylon Tea Garden) 6T66TD கவிதை நூலே இந்த அரும்பணியைச் செய்தது. மலையகத்தில் குறிப்பிடக்கூடிய மற்றுமொரு கவிஞரான சக்தீ. பாலையா “தேயிலைத் தோட்டத்திலே" என்ற பெயரில் இதற்கு தமிழ் வடிவம் கொடுத்தார்.
புழுதிப்படுக்கையில் புதைந்த என மக்களை
போற்றும் இரங்கற்
 

அந்தனிஜீவா
புகழ்மொழி இல்லை பழுதிலா அவர்க்கோர் கல்லறை இல்லை பிரிந்தவர் நினைவுநாள் பகர்வாரில்லை
எனத்“தேயிலைத்தோட்டத்திலே"நூலில் சி.வி.வேலுப்பிள்ளை குறிப்பிடுகிறார்.
1963ஆம் ஆண்டு ஆசிய ஆபிரிக்க கவிதைகளின் முதலா வது தொகுப்பு வெளிவந்த பொழுது, இலங்கை, இந்தியா, சீனா, கொங்கோ, இந்தோனேசியா, கொரியா, சூடான், தங்கனிகா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய பத்து நாடுகளைச் சேர்ந்த எழுபது கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றன. இதில் இடம்பெற்ற ஒரே ஒரு தமிழ்க்கவிஞனின் கவிதை இந்திய வம்சாவளியினரான மலையக மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையின் படைப்பாகும்.
சி. வி. வேலுப்பிள்ளையின் ஆளுமை வெகுவாக வெளிப் பட்டது ஆங்கிலக் கவிதைகளில்தான். ஆர். ஆர். குரோசட் தம்பையா, தம்பிமுத்து என்ற ஆங்கிலத்தில் கவிதைகள் புனைந்த ஏனைய இலங்கைத் தமிழ்க் கவிஞர்களோடு இணையாக வைத்துப் புகழ்பெற்றவர் சி. வி. வேலுப்பிள் ளையாகும். ஜோர்ஜ் கீட், ஜே. விஜயதுங்க, ஹரிசன் பீரிஸ், அனஸ்ட்வேன், நளினி ஜயசூரிய, வோல்டர் தலகொடபிட்டிய, ஏர்லி மென்டிஸ், ஹெக்டர் டி அல்விஸ் என்ற ஆங்கிலத்தில் எழுதிய ஏனைய இலங்கைக் கவிஞர்களோடு சமமாக

Page 15
மலையகமும், இலக்கியமும்
வைத்துக் கணிக்கப்பட்டவர் சி. வி. வேலுப்பிள்ளையாவார். 1972ல் இலங்கை அரசின் கலாசார அமைச்சு அவரை கெளர வித்துச் சிறப்பித்தது. யாழ்பாணத்திலிருந்து வெளிவரும் "மல்லிகை” இலக்கிய சஞ்சிகை இவரின் உருவப்படத்தை அட்டையில் பிரசுரித்துக் கெளரவித்தது. மலையக கலை இலக்கியப் பேரவை இவருக்கு "தினகரன்” பிரதம ஆசிரியர் திரு. ஆர். சிவகுருநாதன் தலைமையில் தலைநகரான கொழும் பில் பெருவிழா எடுத்து "மக்கள் கவிமணி” என்ற பட்டம் வழங்கிக் கெளரவித்தது. பேராசிரியர் கைலாசபதி இவரின் படைப்புக்களைப் பற்றிய ஆய்வுரை நிகழ்த்தினார். “ஒப்சேவர்” “டைம்ஸ்” என்ற இலங்கை ஆங்கில தேசிய பத்திரிகைகளிலும், “மெயில்” “இலஸ்ரேட்டெட் வீக்கிலி” என்ற இந்திய ஆங்கில இதழ்களிலும் நிறையவே எழுதினார். இவரது கவிதை ஆற்றலை வியந்த தெவர் ஆர் சூரியசேனா இலங்கை வானொலியில் தான் நடத்திய "வொய்ஸ் ஆப் லங்கா” (Voice ofLanka) என்ற வானொலி நிகழ்ச்சியில் இவரது கவிதைகளை ஒலிபரப்பியுள்ளார். மலையக இலக்கிய முன்னோடிகளில் மிக முக்கியமானவராக மதிக்கப்படுகிறவர் சி. வி.வேலுப்பிள்ளையாவார்.
மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளையுடன் இரட்டையர் என வர்ணிக்கப்பட்ட மூத்த கவிஞர் கே. கணேஷ். 1955ஆம் ஆண்டு ஜப்பான் சக்கரவர்த்தியின் பிறந்ததின விழாவை ஒட்டி நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் திரு. கே. கணேஷின் ஆங்கிலக் கவிதையும் பரிசு பெற்றது. இவர் “ஹோசிமின் சிறைக்குறிப்புகளை” தமிழில் தந்துள்ளார். உக்ரேனியா மகாகவிதாராஷ் செவிசென்கோவின் "கதிரினாவை”தமிழாக் கம் செய்துள்ளார். சோவியத் கவிஞர் குப்பியோனோக்வின்
 

அந்தனிஜீவா
புதுக்கவிதைகளை தமிழ்ப் படுத்தியுள்ளார். பல்கேரிய கவிதை களையும் தமிழுக்குத் தந்துள்ளார். சர்வதேச கவிதைகளைத் தமிழ் வாசகர்களுக்குத் தருவதில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.
அறுபதுகளில் கண்டியிலிருந்து பத்திரின்கயாளர் க. ப. சிவம் வெளியிட்ட "மலைமுரசு" பல கவிஞர்களையும், படைப் பாளிகளையும் உருவாக்க உதவியது. அதில் வெளிவந்த கவிமணி எம். ஸி. எம். சுபைரின் கவிதை இது.
“தேயிலைத் தோட்டத்தில் - உடல் தேய்ந்து தேய்ந்து துரும்பாகி மெலிந்திட ஒய்வின்றி நாமுழைத்தோம் - மச்சான் நோய்கண்டு தானிளைத்தோம் - உடல் ஊறிச் சுரந்திடும் வேர்வைப் புனல் பாய்ச்சி ஓங்கும் பயிர் வளர்த்தோம் - வளம் தாங்கும் உயிர் கொடுத்தோம் - வரும் சாவிலும் நாமிந்தத் தேயிலைக்கே - உரம் ஆகப் புதைந்திடுவோம் - பெரும் தியாகம் புரிந்திடுவோம்
கண்டி க. ப. சிவத்துடன் இரட்டையராக இணைந்து செயல் பட்ட கவிஞர் ஈழக்குமாரின் முயற்சியால் நாற்பது கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய "குறிஞ்சிப்பூ” என்ற கவிதைத்தொகுதி வெளிவந்தது. மலையகக் கவிஞர்களின் கவிதை ஆற்றலை இந்த கவிதைத்தொகுதி ஏனைய பிரதேச எழுத்தாளர்களுக் குச் சிறப்பாக அறிமுகப்படுத்தியது.

Page 16
மலையகமும், இலக்கியமும்
எழுபதுகளில் பல புதியவர்கள் கவிதைத்துறையில் காலடி எடுத்துவைத்தனர். இவர்களில் அரு. சிவானந்தனை சிறப்பாக எடுத்துக்கூறலாம். இவர் சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின் காரணமாக தமிழகம் சென்றுவிட்டாலும் "வண்ணச்சிறகு கவிதைகள்” என்ற மகுடத்தில் இவரின் கவிதைத்தொகுதி வெளிவந்தது.
"நான் பிறந்த நாட்டினிலே நான் இருக்க விதியில்லை என்ஜென்ம பூமியிலே எனக்கு உரிமையில்லை”
என்று தன் மனக்குமுறலை அரு. சிவானந்தம் வெளிப்ப டுத்துகிறார்.
மலையக கவிதை என்றதும் இன்றைய நினைவில் மனக்கண்முன் வருபவர் இருவர். ஒருவர் தோட்டத் தொழிலா ளியாக வாழ்ந்துகொண்டு மரபுக்கவிதைகள் மூலம் மலையகத் துக்குத் தமது பங்களிப்பை செய்துவரும் குறிஞ்சி தென்னவன். இன்னொருவர் நவீன கல்வியைக்கற்று பட்டம் பெற்று புதுக் கவிதை மூலம் தமது திறமையை வெளிப்படுத்தி வரும் சு. முர ளிதரன். ஐம்பதுகளிலிருந்து இன்றுவரை எழுதிவரும் தென்னவன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனை களையும், அவலங்களையும், ஏக்கங்களையும், வாழ்வியலான வறுமை நிலைமையினையும், தொழிற்சங்கங்களால் ஏமாற்றப் படும் நிலையினையும் சோக உணர்வு ததும்ப தமது கவிதை களில் புலப்படுத்தி வருகின்றார். (10)
 

அந்தனிஜீவா
"கூடையை முதுகில் தாங்கி கோணலாய் உடல்வளைந்து சாடையில் விழிகள் நோக்கும் தன்னிலை பிறழ்ந்து சென்ற ஆடையைக் கரங்கள் நீண்டு அள்ளியே மார்பை மூடும் வாடையில் மேனியாட வரையிடைக் கால்கள் ஒடும்
சிலிர் என மோதுங்காற்றும்
சில்லிடும் பணியும் சேர்ந்து குளிரினில் உடல் நடுங்க கோதையின் கரங்கள் நீண்டு தளிரினை பறிக்கும் நேர்த்தித்
தவிப்பினில் அழகு ஒடும் “கலீர்” என வளைந்துசெல்லும் கதைகளோ அனந்தம் கோடி.”
இவ்வாறு "குறிஞ்சித் தென்னவன் கவிதைகள்” என்ற கவிதைத் தொகுதியில் “பெண்தெய்வம்” என்ற கவிதையில் மலையகப் பெண்மகளைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார் கவிஞர். இக்கவிஞர் ஒரு தொழிலாளியாக இருந்து பெற்ற அனுபவம் தொழிலாளர்களின் உணர்வுகளை, ஆசாபாசங் களை அவர்களின் இதயத்து குமுறல்களை தனது கவிதை களில் தரத் தவறவில்லை.
“நமக்குத் தொழில் கவிதை” என்றான் பாரதி. கவிதை புனைதலைப் பலர் தொழிலாகக் கொண்டிருக்கலாம். ஆனால்

Page 17
மலையகமும், இலக்கியமும்
எனக்குக் கவிதை தொழிலல்ல. எனது இரத்த நாளங்களில் ஒடும் உயிர்த்துடிப்பு, தீமையைக்கண்டு கொதித்தெழும்பும் உணர்வின் வடிகால். பொழுதுபோக்காக மனக்கிளர்ச்சியின் உந்துதலால் எழுதப்பட்டவையல்ல! மலைகள், அவைகளில் ஒய்வுகொள்ளும் முகில்கள், அதன் மேனியெங்கும் பட்டொளி வீசிப்பரிமளிக்கும் தேயிலைப்பசுமைகள்! அம்மண்ணின் அடியில் புதைக்கப்பட்ட இம்மக்களின் அவலம் நிறைந்த வாழ்க்கைச் சரித்திரங்கள் - இவையாவும் எனது கவிதைகளின் கருக்கள்” எனக் குறிப்பிடுகின்றார் கவிஞர் குறிஞ்சித் தென்னவன்.
மலையகத்தின் நம்பிக்கைக்குரிய ஆற்றல்மிக்க கவிஞரான
சு. முரளிதரனின் "தியாக யந்திரங்கள்” (1986) மலையகத்தின் முதலாவது புதுக் கவிதைத் தொகுதி. அதேபோன்று "கூடைக்குள் தேசம்” (1987) என்ற மகுடத்தில் வெளிவந்த இலங்கையின் முதலாவது ஹைக்கூ தொகுதியும் இவருடை யதே. இந்த இரண்டு தொகுதிகளுக்குப் பிறகு இவர் எழுதிய கவிதைகளில் இவருடைய வளர்ச்சி தென்படுகிறது.
சங்கங்களுக்காகச்
செத்தது போதும் - இனி
எங்களுக்காய்
சாவோமென எழுதப்பட்ட
முதல் அத்தியாயம்
சிவனு லெட்சுமணன்
தேர்தல் தேரோட்டத்துக்கு
நாம் வதியும்
ஏழாயிரம் ஏக்கரா
பாதையாக வேண்டுமென
 

அந்தணிஜீவா
பதறினான் - இந்த பாதகத்துக்கு கொடுக்கும் இடம் நாளை நம் கோவணத்திலும் கொடியவர்களின் குடியிருப்புக்கு குடைபிடிக்குமென அன்றே உணர்ந்தவன். மலையக மக்களின் மனவெளிகள் தோறும் நிறைந்து - அந்த டெவன் நீர் வீழ்ச்சியில் வீரச்சாவின் வெடியோசை இன்றும் எதிரொலிக்க இறந்துபோன லெட்சுமணன் எழுபத்தேழின் விடிவெள்ளி இவ்வாறு சு. முரளிதரன் "தீவகத்து ஊமைகள்” என்ற கவிதையில் குறிப்பிடுகின்றார்.
இவரைத் தொடர்ந்து பல புதியவர்களும் கவிதை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளனர். பத்திரிகைகளில், சஞ்சிகை களில் வெளிவந்த கவிதைகள், நூலுருவில் வெளிவராத காரணத்தால் மலையகக் கவிஞர்கள் இலைமறை காயாகவே இருக்கின்றார்கள்.

Page 18
மலையகமும் இலக்கியமும்
அமரனின் "தூவானம்” எஸ். ஸி. எம். சுபைரின் "எங்கள் தாய்நாடு” “சாரணாகையூமின்” “சிறுவர் பாட்டு”, “கவிதை நெஞ்சம்”, எம்.எச்.எம். ஹலீம்தீனின் "இதயமலர்” “காலத்தின் கோலங்கள்” க.ப. லிங்கதாஸனின், “குழந்தைக்குயில்” குறிஞ்சி தென்னவனின், "குறிஞ்சி தென்னவன் கவிதைகள்”, எம். ராமச்சந்திரனின் "விடிவை நோக்கி”,கவிதை, அல் அஸ்மத்தின் “மலைக்குயில்", சி. எ. எலியாஸின் “ஓவியம்", யோகேஸ்வரி துரைப்பாண்டியின் "இதயத்து ஈரங்கள்", பொகவந்தலாவ ழரீதரன், கலகெதர உனைஸ் ஆரிப், "இருளைத்துளாவும் மின்மினிகள்", பெ. லோகேஸ்வரன், பா.சு.பாஸ்கரன், “என்றும் அன்புடன்" ஆகிய படைப்புகள் நூலுருவம் பெற்றுள்ளன.
மலையகம் வளர்த்த கவிதைத்துறைக்கு அறுபதுகளுக்குப் பின்னர் இன்றுவரை எழுதிக்கொண்டிருப்பவர்கள் சக்தி பாலையா, தமிழோவியன், சி. ஏ. எலியாஸ், குறிஞ்சி தென்ன வன், ஏ. பி. வி. கோமஸ், எஸ். பி. தங்கவேல், எம். ஸி. எம். சுபைர், மலைத்தம்பி, பண்ணாமத்துக் கவிராயர், எம். எச். எம். ஹலீம்தீன், க. ப. லிங்கதாசன், அல் அஸிமத், பானா தங்கம், எம். இராமச்சந்திரன், சி. எஸ். காந்தி, மல்லிகை சி. குமார், சாரணாகையூம், புசல்லாவ இஸ்மாலிகா, பண்டாரவளை அன்புச்செல்வன், உஸ்மான் மரிக்கார், வெளிமடை ரபீக், ஈழக்கவி, எஸ். பன்னீர் செல்வம், இரா. நித்தியானந்தன் ஆகியோராவர்.
 

அந்தனிஜீவா
மலையகமும் சிறுகதையும்.
கவிதை இலக்கியத்தைப் போல் அல்லாது சிறுகதைத் துறைக்குத் தமிழில் குறுகியகால வரலாறே உண்டு. தமிழில் அச்சுப்பொறி உபயோகத்திற்கு வந்ததும் பத்தொன்பதாம் நூற் றாண்டின் ஆரம்பத்திலிருந்தே வாய்மொழியாக வழங்கிவந்த கதைகள் நூல் வடிவில் அச்சிடப் பெற்றன. பலர் படிக்கவும், படிப்பதை மற்றவர் கேட்கவும் வாய்ப்பு ஏற்பட்டது. இவ்வகையில் கதைகள் என்ற வடிவில் முதன் முதலில் அச்சில் வந்தது வீரமா முனிவர் என்ற தமிழ்ப் பெயரைப் பூண்ட இத்தாலி நாட்டுப் பாதிரியார் கொன்ஸ்டான்டியஸ் பெஸ்கி (Constantius Beschi 1680-1749) என்பவர் தேடிக் கொடுத்த கையெழுத்துப் பிரதி யைக்கொண்டு சென்னைக்கல்விச் சங்கத்தார் 1822ல் அச் சிட்ட நூலேயாகும். (11) இதனைத் தொடர்ந்து கதைகேட்கும் பழக்கம் கதை படிக்கும் பழக்கமாக மாறியது.
தமிழில் சிறுகதைத் துறை சிறப்பாக வளர்ச்சி பெற்றது. “மணிக்கொடி" சஞ்சிகையின் காலத்தில் தான் 1933 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவரத்தொடங்கிய மணிக்கொடியின் தாக்கம் இலங்கையிலும் பரவியது. மணிக்கொடி எழுத்தாளர் களில் முக்கியமாகக் கருதப்படும் புதுமைப்பித்தனின் படைப்பு கள் மலையக எழுத்தாளரகளுக்கு ஓர் உந்து சக்தியாக விளங்கின.
மலையக ஆக்க இலக்கியத்துறைக்கு வித்திட்ட பெருமை கோ. நடேசய்யர் அவர்களையே சாரும். கோ. நடேசய்யர் தஞ் சாவூரில் அரசாங்கப் பணியில் இருந்துவிட்டு, பின்னர் பத்தி ரிகை ஒன்றில் பணியாற்றியபோது அப்பத்திரிகைக்கு சந்தா

Page 19
மலையகமும், இலக்கியமும்
திரட்ட இலங்கை வந்துள்ளார். பின்னர் 1920 ல் இலங்கை வந்து “தேசநேசன்" என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பின்னர் சொந்தமாக “தேசபக்தன்” என்ற நாளிதழை நடத்தியுள்ளார். பத்திரிகையாளராக தன்னை அறி முகப்படுத்திக்கொண்ட நடேசய்யர் மலையக மக்களின் விடிவுக் காகத் தம்மை அர்ப்பணித்தது மாத்திரமல்லாது, பிரிட்டிஷ் ஆட்சியில் மோசமாகச் சுரண்டப்பட்ட மலையகத் தொழிலாளர் மத்தியில் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் நட்சத்திரமாகத் திகழ்ந்தார். நடேசய்யர் மலையகத்தின் அரசியல், சமூக, இலக் கிய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறார். மலையகத் தின் முதல் தொழிற்சங்கவாதியாகவும், பத்திரிகையாளராக வும், சட்டசபையில் இந்திய வம்சாவளிப் பிரதிநிதியாகவும், ஆற்றல் மிகுந்த எழுத்தாளராகவும் நடேசய்யர் திகழ்ந்தார்.
"மலையகத்தின் எழுத்து வழி இலக்கியத்தின் மூலவர் நடேசய்யரே ஆவார். “இராமசாமி சேர்வையின் சரித்திரம்” என்ற நடேசய்யரின் சிறுகதைதான் மலையகத்தின் முதலாவது என்ற அந்தஸ்த்தைப் பெறத்தக்கது. நடேசய்யரைப் பற்றிய ஆய்வுகள் இப்போதுதான் முக்கியத்துவம் பெறுகின்றன. சாரல் நாடன், அந்தனிஜிவா ஆகிய எழுத்தாளர்கள் அவரது பணிகளை ஆய்வதிலும், அவரது பணிகளை மக்கள் அறியச் செய்வதிலும் மிகுந்த ஈடுபாடு காட்டிஉழைத்துவருகின்றனர்.” இவ்வாறு ஜேர்மனியில் பெர்லினில் நவம்பர் 1991ல் நடைபெற்ற நடேசய்யர் நூற்றாண்டு நினைவு பேருரையில் விரிவுரையாளர் மு. நித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளார். (12)
மலையக ஆக்க இலக்கியத்துக்கு கோ. நடேசய்யர் வழி காட்டலுடன் சிலர் காலடி எடுத்து வைத்தாலும், கவிதைத்துறை
 

அந்தனிஜீவா
யில் காட்டிய ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் புனைக்கதைத் துறையில் காட்டவில்லை. தமிழகத்தின் மணிக்கொடியின் தாக் கத்தின் பின்னரே இவர்கள் சிறுகதைத்துறையில் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினார்கள். “மணிக்கொடி" சஞ்சிகை யிலே தனது சிறுகதையை வெளியிட்ட பெருமை கே. கணேஷ்க்கு உண்டு. அவரின்"ஆசாநாசம்” மணிக்கொடியில் வெளிவந்தது. அட்டனைச் சேர்ந்த பொ. கிருஷ்ணசுவாமி தமி ழகப் பத்திரிகையில் எழுதினார். அவரைத்தொடர்ந்து ந. அ. தியாகராஜன், ர.பேல், மாத்தளை அருணேசர், சி. வி. வேலுப்பிள்ளை போன்றோர் தமிழக சஞ்சிகைகளில் தங்கள் படைப்புகளை வெளியிட்டுள்ளனர்.
1950-களுக்குப் பின்னரே மலையகத்தில் கல்வி எல்லோ ருக்கும் உரிய சொத்தாக மாறியது. பெரியார் ஈ.வே.ரா-வின் சுயமரியாதைக் கருத்துக்கள், திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் ஏடுகள் மலையகத்திற்கு வரத்தொடங்கின. பாரதிதாசன் பாடல்கள் மலையக இளைஞர் களுக்குப் பரிச்சயமாயிற்று. தூக்குமேடை, இரத்தக்கண்ணீர் போன்ற நாடக நூல்களின் தாக்கம் மலையக இளந்தலைமுறை யினரிடையே ஒரு மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து மலையக இலக்கிய வளர்ச்சியில் ஓர் இலக்கிய விழிப்புணர்வு அறுபதுகளில் ஏற்பட்டது. இலக்கிய உலகில் புதுமைப்பார்வையும், புதிய வீச்சும் உதயமாகின. பல புதியவர்கள் அதிக உற்சாகத்துடன் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டனர். அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த இரட்டையர்கள் என்று வர்ணிக்கப்படும், எப்போதும் பிரியாத

Page 20
மலையகமும், இலக்கியமும்
நண்பர்களான இரா.சிவலிங்கம்,திருச்செந்தூரன் ஆகியோர் இவர்களுக்கு உந்துசக்தியாக விளங்கினார்கள். இவர்களின் வழிக்காட்டலுடன் இளையதலைமுறையினர் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்தனர். அதற்கு உறுதுணையாக கண்டி க. ப. சிவம் வெளியிட்ட மலையகத்தின் மணிக்கொடி என்ற ழைக்கப்பட்ட "மலைமுரசு" சஞ்சிகை விளங்கியது. இந்தக் காலகட்டத்தில் "கல்கி" சஞ்சிகை நடாத்திய கடல்கடந்த இலக் கியப் போட்டி ஒன்றில் திருச்செந்தூரனின் “உரிமை எங்கே” என்ற சிறுகதைக்கு பரிசு கிடைத்தது. இது பலரின் பார்வையை மலையகத்தின் பக்கம் திருப்பியது. இதனைத் தொடர்ந்து பலர் மலையக சிறுகதை துறையில் காத்திரமான படைப்புக ளைத் தந்தார்கள். இவர்களை மலையக இயக்கங்களும், சஞ்சி கைகளும், தேசிய தினசரிகளும் உற்சாகமூட்டி உரமிட்டு வளர்த்தன. மலையகச் சிறுகதைத் துறையில் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி ஆசிரியரான திருச்செந்தூரனைத் தொடர்ந்து ஹைலண்ட் கல்லூரி மாணவர்களான சாரல்நா டன், பி. மரியதாஸ், எம்.வாமதேவன்,வனராஜன், மு. சிவலிங்கம் போன்றவர்கள் நல்ல சிறுகதைகளை எழுதினார்கள்.
மலையக சிறுகதை முன்னோடி என்றும், மலையக சிறு கதைக்கு உருவம் சமைத்தவர் என்றும் போற்றப்படும் என். எஸ். எம். ராமையா மலையக மண்வாசனை கமழும் நல்ல சிறுகதைகளைத் தந்துள்ளார். வானொலி நாடகங்களை எழுதிக்கொண்டிருந்த இவரை சிறுகதைத் துறைக்கு அப்போது தினகரன் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த கலாநிதி கைலாசபதி கொண்டுவந்தார். இவர் எழுதிய “ஒரு கூடைக்கொழுந்து" சிறுகதை இலக்கிய உலகில் பலரின் கவனத்தை ஈர்த்தது.
 

அந்தனிஜீவா
“மூன்று ஆண்டுகள் ஒரு தோட்டத்தில் பணிபுருந்துவிட்டு, அந்த உலகத்திற்கு நாம் லாயக்கில்லை என்ற பெருந்தன்மை யான முடிவோடு கொழும்புக்குக் கிளம்பினேன். மூன்று ஆண்டு களுக்குள் ஒரு முப்பது ஆண்டு வாழ்வையே வாழ்ந்து முடித்தது போன்றிருந்தது எனக்கு. அந்த மூன்று ஆண்டுகளில் அதன் நினைவுகளை மறக்கக்கூடிய ஏதாவது ஒரு மாற்றம் அவசிய மாக இருந்தது. பிரதேச மணம் என்ற இலக்கிய தர்மம், ஈழத்து இலக்கிய உலகில் கால்பரப்பி நின்று கொண்டிருந்த அந்த சமயத்தில் மலையகம் மட்டும் இன்றும் குரல் எழுப்பாது இருந்ததை என்னால் உணர முடிந்தது. இந்நிலையில் இலக்கியத்திற்குச் சத்தியமே அடிப்படையாக இருக்க வேண்டும் என்ற கருத்து என்னைக் கவர்ந்துகொண்டது. அந்த வேட்கையோடு எழுதிய முதற் சிறுகதைதான். “ஒரு கூடைக் கொழுந்து” என்ற பிரச்சனைக்கதை. அது ஏற்படுத்திய பரபரப்பைக் கண்டு எனக்கு வியப்பு அல்ல, பயம் தான் ஏற்பட்டது" - என்கிறார் என். எஸ். எம். ராமையா. (13)
இவரது சிறுகதைகளைத் தொகுத்து பதுளை மு. நித்தியானந்தன் வைகறை வெளியீட்டின் மூலம் 1980ல் வெளியிட்டார். இத்தொகுதிக்கு சாகித்திய மண்டலப் பரிசும் கிடைத்தது. "மலையகச் சிறுகதைக்கு உருவம் கொடுத்தவர் என மலையகச் சிறுகதை ஆசிரியர்களாலேயே பாராட்டப்படும் என். எஸ். எம். ராமையாவின் "ஒருகூடைக் கொழுந்து” சிறு கதைகளைப் படித்துப் பார்த்தால் அவைகள் மலையக உழைக் கும் மக்களின் வாழ்க்கையில் இருந்து முகிழ்ந்திருக்கின்றன. இவரது சிறுகதைகளில் துயரமான, சோக சம்பவங்கள் இழை யோடுகின்றன.

Page 21
மலையகமும், இலக்கியமும்
"வாழ்க்கையின் சாரளமே சிறுகதை என தமிழ்ச்சிறுகதை களின் முன்னோடியான புதுமைப்பித்தன் எடுத்துரைத்தார். அதற்கு இலக்கணம் வகுத்தாற்போல்"ஒருகூடைக்கொழுந்து" சிறுகதைத்தொகுதியில் கதாசிரியர் ராமையா மனிதாபிமானத் தோடு பாத்திரங்களைப் படைத்திருக்கிறார். இச்சிறுகதைகள் மூலம் கடந்தகால மலையகத்தை நம்மால் தரிசிக்க முடிகிறது. இந்தச் சிறுகதையில் காணப்படும் பாத்திரங்கள், சம்பவங்கள் வாழ்வோடு, வரலாற்றோடு பின்னிப் பிணைந்துவிட்டது. இத் தொகுதியின் தலைப்புக்கு உரித்தான “ஒருகூடைக்கொ ழுந்து” சிறுகதையில் நாம் சந்தித்து உறவாடும் லெட்சுமிப் பாத்திரம் நாம் என்றைக்கும் மறக்கமுடியாத பாத்திரம்."லெட்சு மிக்கு கை வேகமாக விழத்துவங்கியது. பங்குனி மாத பச்சை பார்ப்பதற்கே ஒர் அழகு. எழுத்து வெறிகொண்டவர்களுக்கு அது ஒரு போதை தரும் விளையாட்டு. இளந்தளிர்கள் சடசட வென ஒடிந்துகொண்டிருந்தன." இப்படி லெட்சுமி தேயிலைக்
"வேட்கை" சிறுகதையில் ரங்கையா கிழவனின் ஆசை எப் படிநிராசையாகின்றதுஎன்பதனை ஒரு கைதேர்ந்த புகைப்படக் கலைஞன் தன் காமிராவால் படம்பிடித்துக் காட்டுவதைப் போல
ஏறிவந்த ரங்கையாக்கிழவன் கடைசிப்படியில் நின்று வாயால் ஊதிக்கொண்டான். பத்துப்பதினைந்து படிகள் அவன் ஏறியதில் அவனுடைய கிழட்டுக்கால்கள் வெடவெடவென்றுநடுங்கின.” இப்படி ரங்கையாவை வர்ணிக்கின்றார். தன்னுடைய ஆசை யை நிறைவேற்ற தள்ளாத வயதிலும் மண்ணோடு போராடும் ரங்கையாக்கிழவன், காடு எரிந்தால் மழைவரும் என்ற நம்பிக்
 

அந்தனிஜீவா
கைக்காக தான் பாடுபட்ட சேனையை எரித்துவிடும் மாணிக் கம், கைவிரல்களில் தோல் கிழிந்து ரத்தம் கசிய கொழுந் தெடுத்து தனது சத்தியத்தை நிலைநாட்டும் லெட்சுமி, இப்படி பற்பல பாத்திரங்களை யதார்த்தபூர்வமான கலைத்துவ வடிவங் களில் கதைகளில் சந்திக்கின்றோம்.
கடந்த கால் நூற்றாண்டுகளாக எழுத்துத் துயிைலீடுபட்ட என்.எஸ். எம்.ராமையா இருபதுக்கும் குறைவான சிறுகதைக ளையே எழுதியுள்ளார். எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் குறைவானவை என்றாலும், தரத்தில் உயர்வானவை. இவரது “வேட்கை" என்ற சிறுகதை வாசகர் வட்டம் "அக்கரை இலக் கியம்” என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இவரது “கோவில்" என்ற சிறுகதை ஜேர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள் ளது. "வேட்டை” சிங்களத்தில் வெளி வந்துள்ளது. மலையக மக்களின் வாழ்க்கையை கருவாகக்கொண்டுள்ள இக்கதை கள் அம்மண்ணுக்கே உரிய சிறப்பான தன்மையுடன் உரை யாடுகின்றன. மலையகச் சிறுகதைகள் பற்றிப் பேசும் பொழுது, ஒரு காலகட்டத்தில் பிரதிபலிக்கும் ராமையாவின் கதைகள் வரலாற்று முக்கியத்துவம் பெறும் என்பதில் ஐயமில்லை." (14)
மலையக எழுத்தாளர்களின் ஆற்றலை உணர்ந்த தேசிய தினசரிகளான “வீரகேசரி”, “தினகரன்” ஆகிய நாளிதழ்கள் இவர்களை இனங்கண்டு வாய்ப்பளிக்கத் தொடங்கின. "வீரகேசரி” மலைநாட்டு எழுத்தாளர்களுக்கு என்று சிறுகதைப் போட்டியை 1962ல் நடத்தியது. இதுவே மலையக எழுத்தாளர் களை படைப்பிலக்கியத்துறையில் அதிக ஆர்வமும், அக்கறை யும்காட்டத் தூண்டியது. முதலாவது சிறுகதைப் போட்டியில்

Page 22
மலையகமும், இலக்கியமும்
தெளிவத்தை ஜோசப்பின் "பாட்டி சொன்ன கதை", சாரல்நாட னின் "காலஓட்டம்” தங்கபிரகாசின் "காயம்” ஆகிய சிறுகதை கள் முறையே மூன்று பரிசுகளையும் பெற்றன. இந்த சிறுகதைப் போட்டியை நடத்துவதற்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் இரா. சிவலிங்கம் "வீரகேசரி" துணை ஆசிரியர்களான எஸ். எம். கார்மேகம், பதுளை பெரி. கந்தசாமி, பொஸ்கோஸ் கருப்பையா ஆகியோர்கள்.
அந்த முதல் போட்டியிலேயே, நமக்கென்று நடத்தப்படு கின்ற போட்டி என்ற உணர்வோடு நூற்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் பங்குபற்றினர். அதன் தொடர்ச்சியான மலை நாட்டுச் சிறுகதைப் போட்டியிலும் ஏராளமான எழுத்தாளர்கள் கலந்துகொண்டு பரிசு பெற்றிருந்தனர். மூன்றாவது மலை நாட்டு சிறுகதைப் போட்டியில் பரிசும், பாராட்டும் பெற்றவர்க ளையும் சேர்த்து இருபது எழுத்தாளர்கள் வரை இந்த ஐந்தாண் டுகளில் மலைநாட்டு எழுத்தாளர்களாக போட்டிகள் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்கள். போட்டிகள் மூலம் என்று எழுது வதற்கு தனியான காரணம் உண்டு.
மலைநாட்டிலும் சிறுகதை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை இலக்கிய உலகு அறிய ஆரம்பித்தது. போட்டிகளில் கலந்துகொண்டு அவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொண்ட போதுதான், பத்திரிகைகளை நம்பி மாத்திரமே சிறுகதைகளை நிர்பந்தத்தில் வைத்திருக்கும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையின் போதிய ஆதரவு இல்லாமல் போனாலும், தங் களை இனங்காட்டக்கூடிய அளவுக்கு கிடைத்த சிறிய வாய்ப்பு களையும் பயன்படுத்திக் கொள்ளும் மலைநாட்டு எழுத்தாளர்
 

அந்தனிஜீவா
கள் பாராட்டுக்குரியவர்களாகின்றனர்.(15)இப்பரிசுச் சிறுகதை கள் ஒன்பது “கதைக்கனிகள்” என்ற பெயரில் நூலாக 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது.
வீரகேசரி சிறுகதைப் போட்டிகள் மூலம் பரவலாக அறியப் பட்ட தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைகள் "நாமிருக்கும் நாடே" என்ற தொகுப்பாக வெளிவந்து 1979 ஆம் ஆண்டிற் கான சாகித்தியமண்டலப்பரிசைப் பெற்றது. மலையக எழுத்தா ளர்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்களில் இவர் முக்கியமானவர். "ஊன்றுகோல்”, “பாவசங்கீர்த்தனம்" ஆகிய சிறுகதைகள் கடல்கடந்த தமிழகத்து "கலைமகள்" சஞ்சிகை யிலும் இடம் பிடித்தது.
அறுபதுகளில் இலக்கிய விழிப்புணர்வுக் கட்டத்தில் அரும் பிய தெளிவத்தை ஜோசப் இன்று ஈழத்துச் சிறுகதை உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கிறார். இவரது கதைக ளின் பகைப்புலன், கதைசொல்லும் திறன், வாழ்க்கை பற்றிய இவரது பிரத்தியோகமான பார்வை, கூர்மையான அவதானிப் போடு கூடிய நிகழ்ச்சிக் கோர்வை, கதைகளின் உணர்வுக் கோலத்திற்கேற்றதான தேர்ந்த சொற்பிரயோகம் என்பன இவரின் தனித்துவமான எழுத்தின் அடிப்படைகளாகும். மலை யக வாழ்க்கையில் சாதாரணமாக காணத்தவறிவிடுகிற சின் னஞ்சிறு அம்சங்களையும் கோடிட்டுக் காட்டுகின்ற லாவகம் ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களில் இவரை முன்னணிக்கு கொணர்கிறது. இவரது எழுத்தின் தரிசனம் பற்றி அபிப்பிராய பேதங்கள் இருப்பினும், இவர் வீச்சும் வளமுமிக்க எழுத்தாளர் என்பதில் ஐயமில்லை.

Page 23
மலையகமும், இலக்கியமும்
"பெரிய கங்காணிக்கு சாராயம் வாங்கிக் கொடுத்தாவது காலியாகும் காம்பிராவை பெற்றுக்கொள்ள துடியாய்த் துடித் தான்." இறுதியில் தன் கைமீறிப்போவதைப்பார்த்து திகைத்துப் போவதை "மீன்கள்” கதை அற்புதமாக சித்தரிக்கின்றது. "இரண்டு நாளாவது கிழவியின் உயிரை நிறுத்திவைத்து, அவ ளது ஒய்வுப் பணத்தைப் பெற்றுவிட ஒடித்திரிந்த வீரன் விக்கித் துப்போய் நின்றான்.” பழம் விழுந்தது கதையில், இஸ்டோரி லிருந்து இரவிரவாக தேயிலைத்தூள் மூட்டை மூட்டையாக கடத்தப்படும் நிலையில் குடித்துப்பார்க்க எடுத்த நாலு அவுன்ஸ் பெனிங்ஸ் நாளெல்லாம் நாயாக பாடுபடும் அவனை நடுவீதியில் நிறுத்தி விடுகிற முரண்பாட்டின் அவலத்தை "கூனல்" அநாயசமாக சித்தரிக்கிறது.
“இந்தச் சமூக அமைப்பிற்குள் முகிழ்கின்ற பிரயாசைகள் இறுதிக் கணக்கெடுப்பில் தோல்வியில் முடிகின்றன. ஏமாற்றப் பட்ட திகைப்பில் ஆழ்ந்துபோகின்ற கதாபாத்திரங்கள் தன்னந் தனியாளாகும்படி முறையின் விளிம்பில் நமக்கு தரிசனம் தரு கின்றன." - என்கிறார் "நாமிருக்கும் நாடே" முன்னுரையில் மு. நித்தியானந்தன்.
வீரகேசரி சிறுகதைப் போட்டி மூலம் அறிமுகமான எழுத் தாளர் சாரல் நாடன். இவர் ஒரு தொகுதி போடும் அளவுக்கு சிறப்பான சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரை இன்றைய இளையதலைமுறையினர் ஒர் ஆய்வாளராகத் தெரிந்து வைத் திருக்கும் அளவுக்கு ஒரு படைப்பிலக்கியவாதியாக தெரிந்து வைத்திருக்கவில்லை. அறுபதுகளில் இவர் வாரமஞ்சரியில் எழுதிய"எவளோ ஒருத்தி” என்ற சிறுகதையின் மூலம் பலரின் பார்வைக்கு உள்ளானார். இந்தச் சிறுகதையை பிரசுரித்த
 

அந்தனிஜீவா
பேராசிரியர் கைலாசபதி, அவரது ஆற்றலை இனங்கண்டு, தொடர்ந்து எழுதும்படி தம் கைப்பட கடிதம் எழுதினார். என். எஸ். எம். ராமையாவும், சாரல்நாடனும் மலையக இலக்கியத் தின் நம்பிக்கைகள் என்று சி.வி.வேலுப்பிள்ளையிடம் கூறியுள் ளார். இந்தக் கதையைப் பாராட்டி டாக்டர் நந்தி, ரசிகமணி கனக செந்திநாதன் ஆகியோர் கடிதம் எழுதியுள்ளார்கள். "எவளோ ஒருத்தி” எனும், சிறுகதையில் தொழிலாளர்களி டையே அவ்வப்போது எழுகின்ற போராட்டங்களும், கிளர்ச்சிகளும், மறுதலிப்புகளும் அடிநாதங்களாக ஒலிப்பத்ைக் காணலாம். சாரல் நாடனின் “பிரேத ஊர்வலம்” (தினகரன் 1963) “ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை” (சிந்தாமணி 1973) “சுயகெளரவம்” (தினகரன் 1964) ஆகிய சிறுகதைகளைச் சிறப்பித்துக் கூறலாம்.
இன்னொரு மிக முக்கிய படைப்பாளி மு. சிவலிங்கம். மலையக எழுத்தாளர்களில் அங்கதச்சுவையுடன் கூடிய நடை இவரது கதைகளில் விரவிக்கிடப்பதைக் காணலாம். அறுபகளில் எழுதத்தொடங்கிய இவர், இருபத்தைந்து சிறுகதைகளுக்கு மேலாக எழுதியுள்ளார். அவரின் சிறுகதைத் தொகுதி "மலைக ளின் மக்கள்” என்ற மகுடத்தில் வந்துள்ளது. இந்தத் தொகுதி 1991 ஆம் ஆண்டுக்குரிய சாகித்தியப் பரிசைப் பெற்றுள்ளது.
மற்றும் குறிப்பிடக் கூடிய மூன்று எழுத்தாளர்கள் மாத்தளை சோமு, மலரன்பன், மாத்தளை வடிவேலன். இவர்கள் மாத்தளை நகருக்கே பெருமை தேடித்தந்த சிறுகதைப் படைப்பாளிகள். இவர்கள் ஒவ்வொருவரின் மூன்று கதைகளாக மொத்தம் ஒன்பதுகதைகள் கொண்ட தொகுதி"தோட்டக் காட்டினிலே” என்ற பெயரில் 1980ல் வெளியாகியுள்ளது.

Page 24
மலையகமும், இலக்கியமும்
"இலங்கையில் கடந்த மூன்று சகாப்தங்களாக தேசிய இலக்கிய கோட்பாடு இயங்க வடிவம் பெற்றமையும், அவ்வுணர் வின் விளைவாகவும், வெளிப்பாடாகவும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அவ்வப்போது மண்வாசனை கமழும் ஆற்றல் மிக்க ஆக்கங்கள் உருவாகிவந்துள்ளமையும், இவற்றின் உடனிகழ்ச் சியாக மொழி நடை, இலக்கிய உத்திகள் முதலியவற்றிலே குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டு வந்தமையும் இப்பொழுது இலக்கிய வரலாறாகிவிட்டன. பிரதேச வாழ்க்கையை பொரு ளாய்க் கொண்டு எழுதப்பட்டு வந்துள்ள படைப்புகளில், பெருந் தோட்டப்பயிர்ச் செய்கைக்குக் களமாக உள்ள மலைநாட்டை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பனவிற்குத் தனியிட முண்டு. சிறுகதை, நாவல், நாடகம், கவிதை என்ற இலக்கியப் பிரிவுகளில் சிறுகதையே மலைப்பிரதேசம் பற்றிய படைப்புகளில் முதலிடம் பெற்றுள்ளது எனலாம்.” என்றுகூறும் பேராசிரியர் கைலாசபதி, “தோட்டக் காட்டினிலே” தொகுதி பற்றித் தெரிவிக்கையில், “மாத்தளை சோமு தொகுத்தளித்திருக்கும் இந்நூலிலுள்ள கதைகளைப் படிக்கையில், மலையக வாழ்க்கை யை உள் நின்று சித்தரிக்கும் எழுத்தாளர்களின் உள்ளங்களை யும், ஆற்றல்களையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. மலையக மக்களைத் தூரநின்று பார்த்து எழுதுபவர்களும் இருக்கின்ற னர். இத்தொகுதியில் இடம்பெறும் கதைகளின் ஆசிரியர் மூவரும் இயன்றவரை நடப்பியல்களை புரிந்துகொண்டு நியா யத்தின் பக்கம் நின்று எழுத முயன்றிருக்கின்றனர். நன்மை, தீமைக்கு வேறுபாடு காணத் தெரிந்தவர்களாக இருக்கின் றனர். இதனால் இக்கதைகளைப் படித்தபொழுது திருப்தியும், தெளிவும் ஏற்பட்டன." (16) என்கிறார்.
 

அந்தணிஜீவா
மாத்தளை எழுத்தாளர்களான இந்த மூவரும் மலையகச் சிறுகதைத்துறையில் ஆற்றல்மிக்க படைப்பாளிகளாகக் கணிக் கப்படுகின்றார்கள். இந்தத் தொகுதியில் பார்வதி, தார்மீகம், உறவுகள் என்ற கதைகளை மலரன்பன் எழுதியுள்ளார். இந்த மூன்று கதைகளையும் உள்ளடக்கி இவரது பன்னிரண்டு சிறு கதைகள் “கோடிச்சோலை, என்ற தலைப்பில் வெளிவந்தது. 1989 ஆம் ஆண்டிற்கான சாகித்திய பரிசினைப் பெற்றுள்ளது. இவர் எழுதிய பிள்ளையார் சுழி (1992) என்ற சிறுகதை மலை யகத்தவர்களைப்பற்றிய விவரணமாக, சிறப்பான சிறுகதையாக அமைந்துள்ளது. மாத்தளை எழுத்தாளர்களில் மற்றவரான மாத்தளை சோமுவின் சிறுகதைகள் “நமக்கென்றொரு பூமி” என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இவர் தொழில் காரணமாக வெளிநாட்டில் வாழ்ந்தாலும், மலையகப் பின்னணியைக் கொண்ட கவிதைகளை தமிழக சஞ்சிகைகளான சுபமங்களா, கலைமகள், கணையாழி ஆகிய சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.
மாத்தளை எழுத்தாளர்களில் மூவரில் ஒருவரான மாத் தளை வடிவேலன் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைப் பற்றி மட்டுமல்லாது, றப்பர்த் தோட்டத் தொழிலாளர்களைப் பற்றியும் எழுதியுள்ளார். இரண்டு தொகுதிகள் போடும் அளவிற் குத் தரமான சிறுகதைகளைத் தந்துள்ளார். இவர் மலையக நிகழ்கலை நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுவதிலும் ஆர்வமாய் ஈடுபட்டுள்ளார்.
மற்றுமொரு எழுத்தாளரான ஏ.பி.வி.கோமஸின் கதைகள் "வாழ்க்கையே ஒரு புதிர்” என்ற தொகுதியாக வெளிவந்துள் ளது. நூரளை சண்முகநாதனும் நிறையவே எழுதியுள்ளார்.

Page 25
மலையகமும், இலக்கியமும்
“பெரியசாமி பீ. ஏ. ஆகிவிட்டான்” என்ற கதை சிலாகித்துப் பேசப்பட்டது. ஓரளவு நிறையவே எழுதிய இன்னொரு சிறு கதை எழுத்தாளர் மல்லிகை சி.குமார். மலையக எழுத்தாளர்க ளின் ஆற்றலை இனங்கண்டுதேசிய தினசரிகள் களம் அமைத் துக் கொடுத்தன. மலையக சூழல் புதியதோர் ரசனையை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தக்கூடிய வாய்ப்பைப்பெற்றி ருப்பதை உணர்ந்து பிற பிராந்திய எழுத்தாளர்களான அ. ந. கந்தசாமி, அ.செ. முருகானந்தன், டாக்டர் நந்தி, செ. கணேச லிங்கம், நவாலியூர் நா.செல்லத்துரை, நீர்வை பொன்னையன், செ. யோகநாதன், எஸ். அகஸ்தியர், யோ. பெனடிக்ற்பாலன், சொக்கன், நிவேதிதா, கச்சாயில் ரத்தினம் போன்ற பலரும் மலையகப் பின்னணியில் சிறுகதைகளைப் படைத்தனர். இவர் களது கதைகள் நியாயமான வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், மலையகப் படைப்பாளிகளின் எழுத்துக்களில் காணக்கிடைக் கும் உயிரோட்டம் இவைகளில் இல்லை.
டாக்டர் நந்தியால் ஊக்குவிக்கப்பட்ட நாவல்நகர் ப. ஆப்தீன் தனது சிறுகதைகளை “இரவின் ராகங்கள்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். மொழிவரதன் "மேகமலைகளின் ராகங் கள்” என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத்தொகுதியை வெளியிட் டுள்ளார். மலையகத்தின் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெண் எழுத்தாளர்களான நயீமா ஏ. சித்திக், பூரணி இவர்களைத் தொடர்ந்து, புசல்லாவ இஸ்மாலிகா, பாலரஞ்சனிசர்மா, சாந்தா ராஜ், சாந்திமோகன், ஸ்டெல்லாமேரி, ரோகினி முத்தையா, திலகா பழனிவேல் ஆகியோர் எழுதிவருகின்றார்கள்.
 

அந்தனிஜீவா
மலையகச் சிறுகதைகளின் ஆரம்ப காலங்கள் அவலத்தை, சோகத்தை எழுதிவந்ததிலிருந்து மாற்றம் தென்படுகிறது. மனித மனத்தை பல பருவங்களிலும், களங்களிலும், பலகோணங் களிலும் தரிசிக்கும் வாய்ப்பை காண்கின்றோம். மலையக சிறு கதைகள் வளர்ந்துள்ளதை காட்டுகிறது. இவற்றை மாத்தளை வடிவேலன், அல்அஸoமத், கேகாலை கயிலைநாதன் ஆகியோ ரின் கதைகளில் காணலாம்.
“மலையக ஆக்க இலக்கியத்துறையில், குறிப்பாக சிறு கதைத் துறையில் 80-களுக்குப்பின்னரான பத்துவருடங்களில் புதிய எழுத்தாளர் தோன்றாதது ஒரு பாரிய குறைபாடு ஆகும் என்று தனது கட்டுரை ஒன்றில் மேமன்கவி (17) கூறியுள்ளார். 90 -களில் இத்தகைய குறைபாடுகளை அகற்ற மலையக கலை இலக்கிய பேரவை, குன்றின்குரல் சஞ்சிகை குழுவினர் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வகையில் எழுத்துத்துறையில் ஆர்வமிக்க இளம் தலைமுறையினரிடையே எழுத்து-பயிற்சிப் பட்டறை, சிறுகதை அரங்குகளை நடத்தியதன் விளைவாக பல புதியவர்கள் படைப்பிலக்கியத் துறையில் அக்கறையுடன் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றால் எதிர்காலத்தில் நல்ல விளைச்சலைக் காணலாம்.
N/ 2s

Page 26
மலையகமும், இலக்கியமும்
மலையகமும், நாவல்களும்
நாவல்கள் சமுதாயத்தின் சரித்திரமாகும். சரித்திரத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவை களுக்கு அதிகமாக இருக்கின்றன. சரித்திரத்தைப் புதிதாக உருவாக்கும் ஆற்றல் படைத்த மனிதர்களை உருவாக்கும் சக்தி அவைகளுக்குண்டு. மனிதனின் சமூகவாழ்வை நாவல் கள் சித்தரிக்கின்றன. சமுதாய மாறுதல்களை நாவலாசிரியர் கள் மிகக் கூர்மையாக அவதானிக்கிறார்கள். அதனால் அவர் களது படைப்புகள் காலத்தைக் கணக்கெடுக்கும் வரலாற்று ஆவணங்களாக அமைகின்றன.
இலங்கைத் தமிழ் நாவல்துறை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தோற்றம் பெற்றது. நமது தமிழ் நாவலின் வரலாறு சித்திலெவ்வை மரைக்கார் எழுதிய "அசன்மே சரித்திரம்" (1885) என்ற நாவலுடன் ஆரம்பமாகிறது.
இலங்கைத் தமிழ் நாவல் வெளிவந்து ஒரு நூற்றாண்டைத் தாண்டிவிட்டது. ஆரம்பகால நாவல்களில் அற்புதத்தன்மை களும், வீர சாகஸ் நிகழ்ச்சிகளுமே கருவாக அமைந்தன. தமிழ் நாட்டிலும் ஆரம்பகாலங்களில் இதே நிலைமைதான். ஆங்கிலத்திலுள்ள அற்புத சம்பவக் கதைகளைத் தழுவி தமிழில் எழுந்த கதைகளுடன் வேதநாயகம்பிள்ளை எழுதிய “பிரதாப முதலியார் சரித்திரம்” “சுகுணசுந்தரி” என்பனவும், சூரிய நாராயண சாஸ்திரியார் எழுதிய "மதிவாணன்” என்பனவும் விசேடமாக ஈண்டு குறிப்பிடத்தக்கவை. ராஜமய்யர் எழுதிய "கமலம்பாள் சரித்திரம்” திருக்கோணமலைச் சரவணப்பிள்ளை
 

அந்தனிஜீவா
எழுதிய"மோகனாங்கி” என்பதும் ஆங்கிலத்திலுள்ள உலகியற் கதைகளடங்கிய நாவல்களைத் தழுவி தமிழில் எழுதப்பட்ட நாவல்களாகும். (18)
ஆனால் இங்கு எழுதப்பட்ட நொறுங்குண்ட இதயம் (1914) சுதந்திரம் செய்த தந்திரம் (1918) நீலகண்டன் (1925) சோமா வதிஅல்லது இலங்கை இந்திய நட்பு (1931) ஆகிய நாவல்களில் சமூக உணர்வின் மாற்றத்தைக் காணலாம். இதற்கு முக்கிய காரணம்"இலங்கையில் ஆங்கிலேயர்கள் வருகையால் நிகழ்ந்த மாறுதல்கள் முக்கியமானது. பழைய நிலமானிய அமைப்பில் ஏற்படத்தொடங்கிய வெடிப்பாகும். புதிய ஆங்கிலக் கல்வியும், பதவிகளும், புதிய மத்தியதர வர்க்கத்தின் தோற்றத்திற்கு வழி சமைத்தன. கல்விமுறையின் விரிவும், நாட்டில் எங்கும் ஏற்பட்ட பொது விருத்தியும், சிங்கள, தமிழ் சமூகங்களில் இப்புதிய
கைத்தொழில் என்பவற்றில் சுதேசிகள் ஈடுபட்டனர். கிறிஸ்துவ மதம் பரம்பலினால் ஒர் அந்நிய கலாசாரமும் எம்மிடையே தோன்றத் தொடங்கியது. இதனால் புதிய எண்ணங்களும், புதிய சிந்தனைகளும் தோன்றுவதற்கு ஒரு சமூகச் சூழ்நிலை உண்டாயிற்று.” - என்கிறார் விரிவுரையாளர் திருமதி சித்ரலேகா மெளனகுரு. (19)
முதல் தமிழ்நாவல் வெளிவந்து அரைநூற்றாண்டுகளுக்குப் பின்னரே நாவல் இலக்கியத்துறையில் மாற்றமும், மறுமலர்ச்சி யும் ஏற்பட்டன. ஏறத்தாழ 1940 ஆம் ஆண்டை அடுத்து ஈழத்து தமிழ் நாவலில் ஒரு புதிய திருப்பம் உருவாகியது. சமுதாயத்திற்குப் பயன்படத்தக்க கருத்துக்களைக் கூறுவதற்

Page 27
மலையகமும், இலக்கியமும்
கான "கதை" வடிவே நாவல் என்ற முறையில் எண்ணம் மாற்ற மடைந்தது. அது ஒரு கலை வடிவம் என்ற உணர்வு தலை தூக்கியது. மரபுரீதியிலான இலக்கியச் சிந்தனைகளிலிருந்து விடுபட்டுப் புதுமை நாடும் ஆர்வமும், புதியது படைக்கும் ஆர்வ மும் மேலோங்கின. மேல்நாட்டு நாவல்களையும் தமிழ் நாட்டு நாவல்களையும் வாசித்து அவற்றின் அருட்டுணர்வால் ஏற்பட்ட இப்புத்தெழுச்சிக்கு அக்காலப்பகுதி பத்திரிகை சாதனங்கள் களம் அமைத்தன. ஈழகேசரி பத்திரிகையின் பணி இவ்வகை யில் வரலாற்றுச் சிறப்புடையது. சமகாலத் தமிழ் நாட்டின் நவீன இலக்கிய விழிப்புணர்ச்சியோடு, ஈழத்து எழுத்தாளர்கள் கொண்டிருந்த "எழுத்துத்தொடர்பு" சிந்தனை வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தது. ஈழத்து மண்ணின் பண்பாட்டு அம்சங்க ளைக் கலாபூர்வமாகப் படைக்கவேண்டும் என்ற ஆர்வம் ஐம்பது களின் முடிவில் தேசிய உணர்வுச்சாயலைப் பெற்றது. (20) இதன் தாக்கம் மலைப்பிராந்தியத்தையும் எட்டிப்பார்க்கத் தவறவில்லை. - -
மலையக நாவல்களுக்கு அடியெடுத்துக் கொடுத்த பெருமை மலையக ஆக்க இலக்கியக்கர்த்தா கோ.நடேசய்ய ரையே சாரும். இவர் தான் நடத்திய பத்திரிகைகளில் தொடர் நாவல்களை எழுதினார். நடேசய்யர் தன் எண்ணங்களையும், மன்க்கருத்துக்களையும் வெளிப்படுத்த கதைகளையே பயன் படுத்தினார். 1924-ல் முதலில் நடந்த சட்ட நிரூபணசபை தேர்தலில் - இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முன்னர், தோற்றவுடன் அய்யர் துவண்டாரில்லை. உடனே “மூலையில் குந்திய முதியோன் அல்லது துப்பறியும் திறம்” இது 03.10.1924 தேசபக்தனில் ஆரம்பமானது. நாவல் என்ற ரூபத்தில் தமது உள்ளக்கிடக்கைகளை வெளியில் கொட்டித் தீர்ப்பதற்காக
 

அந்தணிஜீவா
இந்தத் தொடரினைப் பயன்படுத்தினார். இது இவருக்குக் கைவந்த கலை. (21) அய்யரின் தமிழ் நடை சரளமானது. அய்ய ரைத்தொடர்ந்து, அய்யருடைய தேசபக்தனில் உதவி ஆசிரிய ராகப் பணியாற்றிய எச்.நெல்லையா "காந்தாமணி அல்லது தீண்டாமைச் சாவுமனி" (1937) "சோமாவதி அல்லது இலங் கை இந்தியர் நட்பு” (1940) நாவல்களை எழுதி வெளியிட்டார்.
ஐம்பதுகளுக்குப் பின் அ.சிதம்பரநாத பாவலர் "நவஜீவன்” என்ற பத்திரிகையில் “ஜானகியின் துணிவு” என்ற நாவலை எழுதியுள்ளார். இதே காலகட்டத்தில் எம்.எ.அப்பாஸ்"இவளைப் பார்” (1953) “மூன்று பிரேதங்கள்", "ஒரே ரத்தம்”, “சிங்களத் தீவின் மர்மம்” (1956) "யக்டயாவின் மர்மம்" ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல்கள் பரபரப்பாக விற்பனை யாகியுள்ளன. டி.எம்.பீர்முகம்மது என்பவர்"ஹமீதாபானு" என்ற புனைபெயரில் “கங்காணி மகள்” என்ற நாவலை எழுதினார். “சிங்களமும் செந்தமிழும்” (1964)"உலகுக்கோர் புதுமைக்கவி பாரதி” என்றநூலும் அவரால் வெளியிடப்பட்டவை. சி.வி.வேலுப் பிள்ளை "வாழ்வற்ற வாழ்வு” என்ற நாவலை தினகரன் பத்திரி கையிலும், "வீடற்றவன்” நாவலை (1962) வீரகேசரியிலும் எழுதி னார். சி.வி.வேலுப்பிள்ளையைத் தொடர்ந்து நந்தி "மலைக் கொழுந்து” என்ற நாவலை எழுதினார். இது 1962தினகரனில் தொடராக வெளிவந்து பின்னர் 1964ல் நூலுருவம் பெற்றது. இதனைத் தொடர்ந்து கோகிலம் சுப்பையாவின் "தூரத்துப் பச்சை” (1964) என்ற நாவல் நூலுருவில் வெளிவந்தது. இது சென்னையில் பதிப்பிக்கப்பட்டது.
நந்தியின் மலைக்கொழுந்து, கோகிலம் சுப்பையாவின் தூரத்துப்பச்சை ஆகிய இரு நாவல்களும் தோன்றுவதற்கு

Page 28
மலையகமும், இலக்கியமும்
முன்னர் தமிழ் நாட்டிலிருந்து வந்த மணிக்கொடி இதழில் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை புது மைப்பித்தன் "துன்பக்கேணி"யாக எழுதினார். இதனை ஒரு நீண்ட சிறுகதை என்று சொல்வாருண்டு. தமிழ்நாட்டின் திரு நெல்வேலி கிராமம் ஒன்றிலிருந்து இலங்கை மலைத்தோட்டத் திற்குத் தன் தாயுடன் பிழைக்கப்போன மருதையின் அவல வாழ்வையே இந்தக் கதை சித்தரிக்கின்றது.
மலையகத்தில் அறுபதுகளுக்குப்பின் தோன்றிய நாவல்க ளுக்கு ஒரு வலுவான பின்னணி உண்டு. கடந்த மூன்றரை தசாப்தங்களாக வெளிவந்த நாவல்களை ஒருங்கே நோக்கும் போது இந்த நாவல்களே இந்தப்பாவப்பட்ட மக்களின் வரலாற்று ஆவணங்களாக் காணப்படுகின்றன. இவர்கள் வாழ்வின் ஒவ் வொரு காலகட்டங்களையும் இந்த நாவல்கள் யதார்த்தபூர்வ மாகச் சித்தரிக்கின்றன. கோகிலம் சுப்பையாவின் "தூரத்துப் பச்சை” இந்த மலையக மக்களின் வரலாறு சொல்லும் ஆவண மாகும். இது மூன்று தலைமுறைகளின் கதையைச் சொல்லு கின்றது.
“அவன் கற்பனையெல்லாம் இலங்கை போய் பணத்தைக் குவித்துக்கொண்டு வந்து இங்கே பெரிய வீடுவாசல் கட்டிக் கொண்டு நிம்மதியாக வயதுசென்ற காலத்தில் வாழவேண்டும் என்பது தான். அன்றியும் அங்கு போய் நிம்மதியாக பசி பட்டி னியின்றி இன்பமாக வாழ்ந்து அடிக்கடி திரும்பி ஊருக்கு வந்து போவதாகும் அவன் உள்ளத்தில் கற்பனைகள் சுற்றி வட்டமிட்டன. எத்தனை எத்தனையோ இன்பக்கனவுகள். அதாவது தேயிலை, காப்பிச் செடிகளின் தூர்களில் பொற்காசு
 

அந்தணிஜீவா
கள் குவிந்து கிடப்பதாகவும், அதை அள்ளி ஊருக்குகொண்டு வருவதுபோலவும் சேத்தூர் கிராமத்தில் எல்லோரும் இவனை அதிசயத்தோடு பார்ப்பதாகவும், இவனுக்குத் தனியே மரி யாதை அளிப்பதாகவும், வள்ளியை நல்ல இடத்தில் மணமுடித்து நல்ல நிலையில் கண்டு களிப்பதாகவும் அவன் எத்தனை எத்த னையோ கற்பனைக் கனவுகள் கண்டுவந்தான்.
இப்படி தூரத்துப்பச்சை’ நாவலில் கோகிலம் சுப்பையா ஆசை வார்த்தை கேட்டு மனதில் அலைபாயும் எண்ணங்களை வேலன் என்னும் பாத்திரத்தினூடாக கூறுகின்றார். இந்த வேலன் சிறுமியான தனது மகளோடு இலங்கை வருகின்றான். சிறுமி தான் நாவலின் பிரதான பாத்திரம். இந்த பாத்திரத்தி னுாடாக தமிழகத்தை விட்டு இலங்கை வரும்போது அனுபவித்த துன்பங்கள் தோட்டப் பகுதியில் தமது வாழ்க்கையை நிலைப் படுத்திக்கொள்ள முகங்கொண்ட சங்கடங்கள் தோட்ட வாழ்க் கை உழைப்பு, உழைப்பின் பயனை அறியாத அவர்களின் துயர வாழ்வை சித்தரிக்கின்றார்.
இந்த நாவல் பல்வேறு பிரச்சனைகளை, இளம் பெண்கள் அதிகாரிகளால் பாலியல் ரீதியில் ஒடுக்கப்படுகின்றதை - அது மட்டுமல்லாமல் தன்மானத்தோடு எவ்வாறு பெண்கள் துயரத் துடன் வாழ்வை தொடர்கிறார்கள் என்பதனை சுட்டிக்காட்டத் தவறவில்லை. இந்த நாவல்கள் தொழிலாளர்களின் பன்முகப் பட்ட பிரச்சனைகளை அலசி இறுதியில் தொழிற்சங்கம் அமைக் கும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபடுவது வரை சுட்டிக் காட்டி நிறைவடைகின்றது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிலைமையை அறிந்துகொள்ள "தூரத்துப்பச்சை” பெரிதும் உதவுகின்றது.

Page 29
மலையகமும், இலக்கியமும்
இந்த மக்களின் வரலாற்றில் இரண்டாவது கட்டமாகக் கொள்ளப்படத்தக்கது தொழிற்சங்கங்களை அமைத்து தமது நலவுரிமைகளைப் பேணிக்கொண்டமையாகும். இதற்காக இவர்கள் நடத்திய போராட்டங்கள், தியாக வேள்விகள் இத்தகைய சம்பவங்களைக் கருவாகக்கொண்ட நாவல் சி.வி.வேலுப்பிள்ளையின் “வீடற்றவன்” 1962ல் வீரகேசரியில் தொடர் நவீனமாக வந்து 1981ல் இது நூலுருவம் பெற்றது.
இராமலிங்கம் இந்த நாவலின் கதாநாயகன். தொழிற்சங் கத்தைத்தோட்டத்தில் அமைக்க, குழப்பக்காரனெனமுத்திரை குத்தப்பட்டு அவன் அலைக்கழிக்கப்படுவது நூலின் கருவாகும்.
"வானத்தை சதா ஆலிங்கனம் செய்து கொண்டிருக்கும் அந்த மலைத்தொடர் அசுர மரங்களையும், அடர்ந்த புதர்களை யும் பின்னிய காட்டுக்கொடி படர்ந்த நீலமுகில் காடு. இதற்கு நீலகிரி என்ற பெயர் மிகப்பொருத்தமானது. ஒரு சனிக்கிழமை மாலை நாலு மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள ரயில் ஸ்டே சனை கோச்சி அடைந்தது. ஒரு பிரயாணி மட்டுமே இறங்கி னார். இரண்டே நிமிடத்தில் கோச்சி மறுமடியும் திமிறிக் கொண்டு புறப்பட்டது". இப்படி"வீடற்றவன்” நாவலை நகர்த்து கின்றார் சி.வி.வேலுப்பிள்ளை.
“....................... இராமலிங்கம் பல தோட்டங்களில் வேலை தேடி சோர்ந்துபோனவன். தனது மாமன் பெரியசாமிகங்காணியாக இருக்கும் தோட்டத்துக்கு வந்து பற்றுச்சீட்டுக்களை அவர் கையில் கொடுத்தான். கங்காணி பற்றுச்சீட்டைத் திரும்பத் திரும்பப் பார்த்துவிட்டு முகத்தைச் சுளித்தார். ஏதோ ஒரு முடி வுக்கு வந்தவர்போல் எழுந்து உள்ளே போனார். பூசை அறை
 

அந்தனிஜீவா
யில் இருந்த வெள்ளித்தட்டில் கற்பூரம் கொழுத்தி, "தம்பி ராமலிங்கம், ஒன்னைப்பத்தி முந்தியே தொரைக்கு தாக்கல் வந்திருக்கு. நாம் நம்பிக்கையோடு பேசனும். சங்கத்துக்கு
றார். ராமலிங்கம் வியர்த்துக்கொட்ட பாக்குவெட்டியில் அகப் பட்ட கொட்டைப்பாக்கின் நிலையில் பரிதாபப்பட்டான். "சங்கத் துக்கு நான் ஆள் சேர்க்கம்ாட்டேன். இது சத்தியம்” என்று நடுங்கும் கரங்களோடு கற்பூரத்தைத் தொட்டுக்கொடுத்தான்.
இதே ராமலிங்கம் நாவலின் முடிவில் மறுபடியும் கையில் பற்றுச்சீட்டுடன் வேலைதேடி தோட்டம் தோட்டமாக அலைகி றான். சி.வி.வேலுப்பிள்ளையின் தொழிற்சங்க அனுபவம், தோட் டத் தொழிலாளர்களுடன் அவருக்கிருந்த உறவு, இந்த நாவ லுக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. வீடற்றவன் நாவலைப் போலவே தொழிற்சங்கப் போராட்டத்தைச் சித்தரிக்கும் மற்றொரு நாவல் யோ.பெனடிக்ற்பாலனின் “சொந்தக்காரன்” இந்த நாவலில் இடதுசாரி தொழிற்சங்கத்தை தோட்டத்துக் குள்ளே அமைத்ததைக் கருவாகக்கொண்டு இருந்தாலும், இது தோட்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை, அன் றாட நிகழ்வுகளை சொல்லாமலில்லை. “தானே தன் மனைவி யுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள முனையும் நாட்க ளில் தனக்கேற்படும் கஷ்டத்தையும், மற்ற லயங்களில் உள்ள வர்களின் அனுபவங்களையும் அவை ஏற்படுத்தும் மன நிஷ்டூரங் களையும் அவன் அறிவான். அந்தக் காம்பிராவில் வீரமுத்துவும் கல்யாணம் முடித்து வந்தால் . பருவமடைந்த பொட்டு நட்சத் திரம், வயதுவந்த பிள்ளைகள் ஏற்படுத்தும் அவஸ்தைகளையும், சங்கடங்களையும் அவனால் நினைத்துப் பார்க்கவே முடிய வில்லை. இவ்வாறு"லயக்காம்பிரா” என அழைக்கப்படும் அங்கத்

Page 30
மலையகமும், இலக்கியமும்
தினர் எல்லோரும் வாசம் செய்யும் அவலநிலையைச் சுட்டிக் காட்டுகிறார் நாவலாசிரியர்.
புதிதாக லயக்காம்பிரா கிடைக்காத பட்சத்தில் சின்னக் கலப்பன், புதுக் காம்பிரா கட்டுகிறான். இதை எதிர்க்கும் துரையோடு ஏற்படும் போராட்டத்தில் விளையும் நிலைமை களைக் கொண்டு நகர்த்தப்படுகிறது. நந்தியின் “மலைக்கொ ழுந்து" இவ்வாறே தொழிற்சங்கப் பிரச்சினையையும் தனது நாவலின் பிரதான அம்சங்களில் ஒன்றாக உள்ளடக்கியுள்ளார் நாவலாசிரியர்.
தொழிற்சங்கச் சுதந்திரம் கிடைத்து இந்த மக்கள் தலை நிமிர்ந்தபோது இவர்களின் குடியுரிமை பறிக்கப்படுகிறது. குடி யுரிமை பறிக்கப்பட்ட பின்னர் இம்மக்கள் வாக்குரிமை இல்லாத வர்கள் என்ற காரணத்தால் அரசியல் இயக்கங்கள் இவர்கள் மீது செலுத்திய பாசத்தைக் குறைத்துக்கொண்டன. உழைக் கும் இம்மக்களை சுமையாக கருதினார்கள். இலங்கையும் இந்தியாவும் இவர்களையோ, இவர்களின் தலைமைகளையோ கலந்தாலோசிக்காமல் ஒப்பந்தங்கள் செய்துகொண்டன. இப்படி மேல்மட்டப் பேச்சுவார்த்தைகள் காரணமாக தாயகம் திரும்புதல் என்ற போர்வையில் மீள இந்தியாவுக்கு புலம்பெயர்ந் தார்கள். அந்த சோகக்கதையை குறுநாவலாக எடுத்துக் கூறினார் தொ. சிக்கன்ராஜ0. "தாயகம்” (1963)
"நான் அவளை வருங்கால மனைவியாகவும், அவள் என்னை வருங்காலக் கணவனாகவும் மனதில் வரிந்து கொண்டு வாழ்கின்றோம். அப்படிப்பட்ட அந்தப்பிரிவு ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அவள் இன்னும் மூன்று மாதங்களில் இந்த
 

அந்தனிஜீவா
நாட்டை விட்டு போய்விடுவாள். நானும் இன்னும் மூன்று மாதங்களில் இந்த நாட்டைவிட்டு அந்த இந்திய பூமிக்குப் போய்விட்டால் எங்கள் கனவு நனவாகலாம். ஒருவேளை நான் அப்படிப் போகாமல் இந்த நாடே. என்று உரிமைபெற்று வாழத்தொடங்கிவிட்டால் அந்தக்கனவு, கனவாகவே என்னுள் அமுங்கிப்போய்விடும், நினைவுகளாகவே ஆகிவிடும். அதை நினைக்கவே பெரும் திகிலாக இருக்கிறது." என காதல் வசப் பட்ட இருவர் வாழ்வில் தாயகம் திரும்புதல் ஏற்படுத்தும் உள உளைச்சலைக் காட்டுகிறார் நாவலாசிரியர்.
தோட்டத் தொழிலாளர்களது வாழ்க்கைப் பிரச்சினை களை, சம்பளப் போராட்டத்தைச் சித்தரிப்பது தெளிவத்தை ஜோசப்பின் "காலங்கள் சாவதில்லை" (1974) நாவல். தோட்டத்துரையின் பழிவாங்கலை எதிர்த்துப்போராட முயலும் ஒரு பெண்ணின் மன உறுதியைக் காட்டும் வகையில் எழுதப்பட்டது. கே. ஆர். டேவிட்டின் "வரலாறு அவளைத் தோற்றுவிட்டது" (1976)
இதற்குப் பின்னர் வெளிவந்த நாவல்களில் தி. ஞானசே கரின் “குருதிமலை" (1979) நாவலும், சி.வி.வேலுப்பிள்ளையின் "இனி படமாட்டேன்” (1984) நாவலும் குறிப்பிடத்தக்கன. சம கால வரலாற்றுநிகழ்வுகளைச் சொல்வதில் இந்நாவல்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. திரு. ஞானசேகரின் “குருதிமலை” கோகிலம் சுப்பையாவின் "தூரத்துப்பச்சை" க்கு இணையாக கொள்ளப்படத்தக்க அற்புத நவீனம்.
எழுபதுகளின் பிற்பகுதியில் இம்மக்களின் வாழ்க்கையில் இடியெனப் புகுந்த இனவாத நிகழ்வுகள், அரசாங்க ஒடுக்கு

Page 31
முறைகள் என்பன இந்நாவலில் விரிவாகச் சொல்லப்படு கின்றன. டெல்டா, சங்குவாரி தோட்டங்களில் காடையர்க ளின் இனவாதப் படையெடுப்பு மலையக மக்களின் வரலாற்றில் ஒரு இரத்தக் கீறலை ஏற்ப்படுத்தியது. தோட்டக்காணிகளை வேறு மக்களின் குடியிருப்புக்கு கொடுப்பதற்கான அரசாங்கத் தின் தேர்தல் தந்திர திட்டத்தால் வெகுண்டெழுந்த மக்களின் மீது பாய்ந்த வேட்டில் சிவனு இலட்சுமணன் பலியானது போன்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட "குருதிமலை" மலையக நாவல்களில் சிறப்பாகப் பேசப்படுகின் றது. இலங்கை சாகித்திய பரிசில்களையும் பெற்றது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம். ஏ. பாடத்திட்டத்திற்கு உசாத் துணை நூலாக சேர்க்கப்பட்டுள்ளது.
தோட்டங்கள் தேசியமயமாகிவிட்டதைத் தொழிலாளர்கள் மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். அப்படித்தான் தொடங்குகிறது "குருதிமலை” நாவல். துன்பங்கள் நிறைந்த தமது வாழ்வில் ஒரு நல்ல எதிர்க்காலம் ஏற்படப்போகிறதென அவர்கள் நம்பினர். ஆனால் அதற்கு நேர்மாறாக எல்லாம் நடக்கிறது. அரசியல் சந்தர்ப்பவாதிகளின் சாதுரியங்கள், சுரண் டல்கள் தோட்டத்து வாழ்வையே சிதைக்கின்றன. அடிவாரங் களிலுள்ள கிராமப்புற சிங்கள மக்களுக்கே தோட்ட நிலம் சொந்தம் என்று கூறி இருதரப்பாருக்கும் பகையை மூட்டுகி றார்கள். காலங்காலமாக பாடுபட்ட தொழிலாளர்களை வெளி யேறச் சொல்கிறார்கள் - போராடுகிறார்கள். தலைமை தாங் கிச் சென்ற வீரையா கட்டவிழ்த்துவிடப்பட்ட பொலிசாரின் துப்பாக்கிக்குப்பலியாகிறான். அவனுடைய உயிர்த்தியாகமும், தொழிலாளர் போராட்டமும் அதிகார வர்க்கத்தினரைச் செயலிழக்கச் செய்தது. தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சி தடைப்பட்டது.
 

அந்தனிஜீவா
இந்த நாவல் எடுத்துக் கொண்ட பிரச்சினை, ஏனைய மலையக நாவல்களிலிருந்து வித்தியாசமானது. இது அண்மைக்காலத்துப் பிரச்சினை, இது மிகவும் அண்மைக் காலத்து நாவல் என்றபடியால் "குருதிமலை” இதனை தன் மையப்பிரச்சினையாக எடுத்துக்கொண்டுள்ளது. துன்பப்படு வோர் சார்பாக நின்று இப்பிரச்சினையை யதார்த்தப்போக் காகச் சித்தரிப்பது இந்த நாவலின் சிறப்பு. தோட்டத் தொழி லாளர்களாகிய தமிழர்கள் கிராமப்புறத்து மக்களாகிய சிங்கள வர்கள் இவ்விரு சமூகங்களிடையே ஒரு சமநிலை உணர்வுடன் நிகழ்ச்சிகளை கொண்டு சென்றிருக்கிறார், ஆசிரியர். செந்தாமரை - பியசேனாவின் காதல், முதியான்சே சுமணபால இவர்களின் உணர்வுகள், இதற்கு உறுதுணை செய்கின்றன. வீரையா இப்படிக் கேட்கிறான் "அப்படின்னா தோட்டத் தொழி லாளிங்களோட நாட்டாளுங்களும் ஒரே தோட்டத்திலே ஒத்து மையா இருக்கிறதஅரசாங்கம் விரும்பலீங்களா?"அவனுடைய கேள்வி ஒரளவு நியாய உணர்வுகொண்ட (சிங்கள) துரையை சிந்திக்க வைக்கிறது. தோட்டத் தொழிலாளர் (தமிழர்) களோடு கிராமத்து (சிங்கள) மக்கள் ஒன்றாக வாழ்வதை ஏன் இந்த அரசியல்வாதிகள் விரும்பவில்லை என்று குருதிமலை பற்றி குறிப்பிடுகிறார் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் தி. சு. நடராசன். (22)
சி.வி. வேலுப்பிள்ளையின் இறுதிநாவலாகவும், மலையகம் பற்றிய நாவலாகவும் கொள்ளப்படும் "இனி படமாட்டேன்” நாவல் ஒருவகையில் அவரின் சுய சரித்திரமாகவும் கொள்ளப் படலாம். இந்த நாவலின் முக்கிய பாத்திரமான ஜகன் தமிழ்த் தந்தைக்கும் சிங்களத் தாய்க்கும் பிறந்தவன். வன்முறைக்குப்

Page 32
மலையகமும், இலக்கியமும்
பின்னர் தமிழ் நாடு செல்லலாமா என்று யோசித்து, அந்நாட் டைச் சென்று பார்த்து வருகிறான். அங்குள்ள நிலைமைகள் அவனது போக்குக்கும் சிந்தனை ஒட்டத்துக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. மீண்டும் இலங்கைக்கு வந்துவிடுகிறான். இந்த நாவல் இலங்கையா? இந்தியாவா? என இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்களினால் பாதிப்படைந்து அந்தரப் பட்டிருந்த மக்களுக்கு இலங்கையே அவர்கள் பூமி, இங்கேயே காலூன்றி தடைகளை எதிர்கொள்ள வேண்டுமென்று அவர் தீர்ப்புச் சொல்வதாக அமைகின்றது.
“வெள்ளிக்கிழமை உங்க வீட்டு அம்மாளை நல்லா பார்த் தேன். ரொம்பமிடுக்காகச் சிங்கள நடைபோட்டு உங்களோட போச்சே .”
"அதென்ன சிங்கள நடை?” என்று சிரித்துக்கொண்டே கேட்டேன். சிங்கள ஆளுக நடக்கிறதையும், தமிழ ஆளுக நடக்கிறதையும் பார்த்தாலே தெரியும். அவுங்க சொந்த வீட்டுக் குள்ளே நடக்கிற மாதிரி நடக்கிறாங்க, நாம பரக்கபரக்க பார்த்து நடக்கிறோம்"
மேலே காண்பது "இனி படமாட்டேன்” நாவலில் வரும் உரையாடலின் ஒரு பகுதி என தன் அணிந்துரை ஆரம்பித்த தமிழக விமர்சகரும், எழுத்தாளருமான சிதம்பர ரகுநாதன் குறிப்பிடுகிறார். இலங்கை நாட்டிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும், சிங்களப் பெண்ணொ ருத்தியைக் காதலித்து மணந்துகொண்ட அதே தமிழினத்தைச் சேர்ந்த ஒரு ஆணும் பேசிக்கொள்ளும் பகுதி இது. இந்திய
 

அந்தனிஜீவா
வம்சாவளித் தமிழர்கள் இங்கு எத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதைப் புலப்படுத்திவிடுகின்றன.
இன்னொரு நாவலான புலோலியூர் சதாசிவத்தின் "மூட் டத்தினுள்ளே” (1983) மலையக மக்களின் பிரச்சனைகளைச் . சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது. மற்றும் திரு.இராஜகோபா லின் “கண்ணான கண்மணிக்குக் கதைபேச நேரமில்லை” மாத்தளை கார்த்திக்கேசுவின் “வழிபிறந்தது” ஆகிய நாவல்கள் 90 களில் வெளிவந்திருக்கின்றன.
எடுத்தியம்பும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றன. பிறந்ததி லிருந்து இறக்கும் வரை துயரமிகுந்த இம்மக்களின் வாழ்க் கையை இவர்களைப் பற்றிய இலக்கியங்களில் காணலாம். தொடர்ந்து நித்தியம் இல்லாமை தங்களின் பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க இவர்களுக்குப் போதிய பலத்தைக் கொடுக்க வில்லை. எனவே இப்படைப்புகளில் மனிதன் துயரப்படுவதற் கென்றே பிறந்ததாகச் சித்தரிக்கப்படுவதையே அதிகமாகக்காணலாம். மனிதநேயம் பாடுவதாக அமைந்த எழுத்துக்களே அதிகம்.
★

Page 33
மலையகமும், இலக்கியமும்
மலையகமும் கலைகளும்
கலைகள் ஒரு சமூகத்தின் உயிர்த்துடிப்பாகும். மலைய மக்களின் வாழ்வோடு இரண்டறக்கலந்து, அவர்களின் உணர் வுகளோடு சங்கமித்து வளர்ந்துவரும் கலைகள், சடங்கு சம்பிர தாயங்களுடன் ஆரம்பமாகி, இன்று நிகழ்கலை வடிவங்களாக சிறப்பாக வளர்ந்துள்ளது.
மலையகத்தில் வந்து குடியேறியவர்கள் தமது பாரம்பரிய தெய்வ வழிபாடு, கலை கலாசார, நடன மரபுகள் என்பனவர றைத்தங்களுடன் கொண்டுவந்தனர். மலையக கலை கலாசார அம்சங்கள், தென்னிந்திய கலாசார அம்சங்களின் தொடர்ச்சி யாகவே காணப்படுகின்றன. மலையகத்தில் குடியேறியோர விவசாய தொழிலாளர் உட்பட ஏனைய தாழ்ந்த ஜாதிகள் என்று கருதப்பட்ட பிரிவினர்களைச் சேர்ந்தோரே அதிகமா னோர் ஆவர். கலை இலக்கியங்கள் வர்க்கம் சார்ந்தவை இவ்வகையில் இங்குநிலைபெற்றது கீழ்மட்ட மரபான கிராமிய மரபாகும். அதாவது இம்மரபு கிராமிய பாரம்பரியத்தைச் சார்ந்த தாகவே உள்ளது. இங்கு குடியேறியவர்களில் அதிகமானோர் தென்னிந்திய சமூக அமைப்பின் அடித்தள மக்களாகவும் இருந் தனர். இந்த அம்சத்திற்கு உட்பட்டே கலை இலக்கியக் கருப் பொருளும் வெளிப்பாடுகளும், அவற்றின் தன்மையும் அமைந் தன எனலாம். (23)
மலையகத்தில் சிறுகதை, கவிதை,நாவல் என்ற கணக்கெ டுப்புகளும், ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் மலையக மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து இலக்கியமான கலைகளைப் பற்றிதகவல்கள் மிகக் குறைவாகவே வந்துள்ளன.
 

அந்தனிஜிவா
"இந்திய வம்சாவளியினர் இங்கு புலம்பெயர்ந்து வந்த பொழுது தங்களின் பாரம்பரிய கலை வடிவங்களையும் தங்க ளோடு கொண்டு வந்தனர். தேயிலைக்கு முன்னர் கோப்பிக் காலத்தில் கூட “கும்மியோ கும்மி கோப்பிக் காட்டுக் கும்மி" என்பது இவர்கள் வளர்த்த கலைகளாகும். இவர்கள் மத்தியில் வேர்கொண்டு தழைத்த கலைகளை முதலில் பார்ப்போம். கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், பொன்னர் - சங்கரர் கதை, அருச்சுனன் தபசு, காமன் கூத்து, தப்பு இசை போன்ற பலவாகும்.
மலையக மக்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றுதான் தப்பு. தப்புக் கருவியை 18 வகையாக அடிக்கலாம். காலைத்தப்பு பிரட்டுத் தப்பு, திருமணத் தப்பு, சடங்குத் தப்பு, சாவுத் தப்பு, காமன் பண்டிகைத் தப்பு, திருவிழாத் தப்பு, கரகத் தப்பு இப்படி பலவிதமான தப்புக்களை ஒலியின் மூலம் வேறுபடுத்தி D 600TJ6Ivo TLD.
இதுபோன்று காவடி ஆட்டம், கரகாட்டம், திருவிழா உற்சவங்களுக்கும் தப்புக் கருவியினைப் பயன்படுத்துவார்கள். மற்றும் காமன் கூத்து, அருச்சுனன் தபசு, பொன்னர் - சங்கரர் கதை ஆகியவற்றிற்கு தப்புக் கருவியைப் பயன்படுத்துவார்கள். இன்னொரு முக்கிய இசைக்கருவி உடுக்கு. காவடி ஆட்டம், கரகாட்டம், பேயாட்டம் போன்றவற்றிற்கு உடுக்கே நாயக னாகத் திகழும். W
இதுபோன்ற பாரம்பரிய கருவிகளான உறுமி மேளம், தமூர், செஞ்சனக் கட்டை, சங்கு, சேகண்டி, தண்டை போன்ற கரு விகள் உபயோகிக்கப்படும். இன்றும்கூட நம்மிடையே கும்மி,

Page 34
மலையகமும், இலக்கியமும்
கோலாட்டம், காவடி என்பன ஆடப்பட்டுவருகின்றன. இவை கள் தோட்ட மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட பாரம்பரியக் கலைகளாகும்.
தோட்டங்களில் ஆலய திருவிழாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் வைபவங்களிலும் பெண்கள் கும்மியடித்து மகிழ்வார்கள்.
தன்னனனாதினம் தன்னனானே - தன தன்னனனாதினம் தன்னானே என்றுதான் சொல்லுங்களேன் தன்னன்ன என்றுதான் சொல்லுங்களே - உங்க நாவுக்கு சர்க்கரை நான் தாரேன் தன்னனாதினம் தன்னானே தேங்காய் உடைக்கவே தண்ணி சிதறவே. தெப்பக்குளம் எல்லாம் தத்தளிக்க மருத வந்தாலும் தேரோட்டம் தான் - அந்த மருத மீனாட்சி மாயவன் தங்கச்சி வந்து வடம் தொட்டால் தேரோடுமாம் தன்னனனாதினம் தன்னானே சின்னக் குளத்திலே நீராடி - அந்தச் சிங்காரத் தோப்பிலே வேட்டையாடி வீட்டுக்கு வாராளாம் வெள்ளிரதேமறி வீரக்கணைக் கொண்ட வீசுங்கடி தன்னனனாதினம் தன்னானே.
இத்தகைய பாடல்களைப் பாடி பெண்கள் கும்மியடித்து மகிழ்வார்கள். இன்று நம்மிடையே காணப்படும் கூத்துக்கள் காமன் கூத்து, பொன்னர் - சங்கர் கதை, அருச்சுனன் தபசு
 
 

அந்தனிஜீவா
போன்றவையாகும். நம்மக்களிடையே ஆண்டுதோறும் அதி சிறப்பாக ஆடப்படுவதும் மலையகத்தோட்டங்களில் பக்தியுடன் கொண்டாடப்படுவதும் காமன் கூத்தாகும். (24)
மலையக மக்கள் வாழ்க்கையோடு இணைந்த ஒரு கூத்துத் தான் காமன் பண்டிகை. காமன் கூத்தை வருடந்தோறும் தம் தோட்டத்தில் சிறப்பாக நடத்தினால் தோட்ட மக்களுடைய வாழ்வு சிறக்கும் என்ற நம்பிக்கை தோட்டப்புற மக்களிடையே மேலோங்கியுள்ளது. அத்துடன் கன்னியர், காளையர் தாம் விரும்பியோரை அடைவதுடன் மேலான இல்லற வாழ்வினைப் பெற்றுச் சற்புத்தரர்களையும் அடையமுடியும் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளனர்.
சீவகசிந்தாமணியில் சீவகன் வணங்கிய இடம் காமன் கோட்டம் என்பதனை நாம் படித்திருக்கின்றோம். இதுவே காலப்போக்கில் திரிபடைந்து காமன் கூத்தாகிவிட்டது.
“மலையகத் தோட்டங்களில் காமன் கூத்து அல்லது காமாண்டி, "கம்பம் நடுதல்” என்னும் நிகழ்ச்சியோடு ஆரம்பமா கின்றது. மாசி மாதம் அம்மாவாசி கழிந்த மூன்றாம் நாளில் மூன்றாம் பிறையில் காமாண்டி வாத்தியார் தலைமையில் காமன் கூத்தில் பங்கு பற்றுவோரும், ஏனையோரும் ஆற்றங்கரை அல்லது தோட்டத்திலுள்ள பீலிக்கரை முதலான நீர்நிலைக்குச் செல்வர். அங்கு கம்பம் பாலித்தல் என்னும் சடங்குகளுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். பேய்கரும்பு,கொட்டைமுத்து, செங் கரும்பு, துவரை, மூங்கில் குருத்து ஆகியவற்றை ஒரு கட்டாகக் கட்டி, இவற்றின் இலைகளையும் இக்கட்டுடன் சேர்த்து, வைக்

Page 35
மலையகமும், இலக்கியமும்
கோலை கயிறுபோல் திரித்துக் கட்டாகக் கட்டிச் சேர்த்து கம்பத்திற்கு மேலாக சுற்றி, பூசைசெய்து பக்தி பிரவாகத்துடன் ஊர்வலமாகக் கொண்டு வருவர். இதனை குடி அல்லது அழைத் துக்கொண்டு வருதல் என்றும் கூறுவர். தப்புவாத்தியம் முழங்க அனைவரும் குளித்து ஈர உடுப்புடன் வரும்போது பக்தி சிரத் தையினை வெளிக்காட்டும் காட்சியாக இது அமையும்.” (25)
இவ்வாறு கொண்டுவந்த கம்பத்தை வழமையாக நடும் காமன் பொட்டலில் நடுவர். இவ்வாறு கம்பம் நடும் இடமே காமன் கோவில் எனக் கணிக்கப்படும். காமன் கம்பத்தை நடு வதற்கு முன்னர் சென்ற வருடம் மூடிய பழைய குழியைத் தோண்டுவர். அதில் இட்ட வெள்ளிக்காசுகளை மட்டும் எடுத் துக்கொண்டு பழையபடியே அட்சரத்தோடு இணைந்த வெள்ளித்தகட்டையும், தங்கம், பிடிமண் என்பனவற்றையும் காமன் வாத்தியார் வசமுள்ள பிடிமண் என்பவற்றையும் போட்டு கம்பத்தை நடுவர். பின்னர் கம்பத்திற்குப் பால் ஊற்றப்படும். குழியிலிருந்து பெறப்பட்ட நாணயங்களை வைத்திருந்தால் நோய்நொடி தீரும் என்ற நம்பிக்கை உண்டு. காமன் பண்டிகை யின்போது, கம்பம் ஊன்றும் முதல் நாள் நிகழ்ச்சியின்போது குழியினுள் இடப்படும் பிடிமண் பரம்பரையாக காமன் ஊன்றி ஊன்றி எரிந்த இடத்திலிருந்து பெறப்பட்டதாகும். பழமை வாய்ந்த பிடிமண்ணே சக்திவாய்ந்ததாகும். மன்மதன் அருள் அதற்கு அதிகமாக உண்டு என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம்.
காமன் கூத்து என்ற பாரம்பரிய நாடக நிகழ்ச்சியை மலை யக மக்கள் ஒரு விழாவாக நடத்தி வருகிறார்கள். "கதக்களி”
 

அந்தனிஜீவா
நாட்டிய அம்சத்தைக் கொண்ட இந்த காமன் கூத்து, ஒரு தத்துவார்த்த உண்மையை அடிப்படை அம்சமாகக் கொண்ட புராணக்கதையாகும்.
மலையகத்தின் பாரம்பரிய கலைகளில் தனிக்சிறப்பு வாய்ந் தது காமன் கூத்து. காமன் பண்டிகைக்குச் சிறப்புச் சேர்ப்பவர் வாத்தியாரே. இப்படிப்பட்ட வாத்தியாருக்கு எரிந்த கட்சி, எரி யாத கட்சி என்பவற்றுக்கு விடை பகரக்கூடிய போதிய கல்வி ஞானம் தேவை. மன்மதனை சிவபெருமான் எரித்துவிட்டார் என்பது எரிந்த கட்சியின் நிலை! சிவபெருமானால் எரிக்க முடியாத சக்திவாய்ந்தவர் சம்ராரி எனும் மன்மதன் என்பது எரியாத கட்சியின் நிலை!
1965 ஆம் வருடத்தில், கவிஞரும், “காங்கிரஸ்” பத்திரிகை யின் துணை ஆசிரியருமான எஸ்.பி.தங்கவேல் எழுதி வெளி யிட்ட "இரதி-மதன் தென்றல் பாட்டு" ஒரு நவீன படைப்பாகும். தாயகம் திரும்பி தோட்டத்தொழிலாளர்கள், இந்நூலை தமிழ கத்திற்கு எடுத்துப்போய் இன்றைக்கும் சிறப்பித்து வருகின்ற னர். மலையகத்தில் பல தோட்டங்களில், குறிப்பாக மாத்தளை, நாவலப்பிட்டி பகுதிதோட்டங்களில் கவிஞர் எழுதி வெளியிட்ட அப்புத்தகத்தின் வாயிலாகவே காமன் விழா நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரதி மதன் தென்றல் பாட்டு நூல் எளிமை எழிலை, புனையாப் பொலிவுகொண்டு, செங்கரும்பின் சுவையை விட இனிமைமிக்க பாடலாக விளங்குகிறது. திரிபுர மங்களதாஸ் என்னும் புலவர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் “நவீன

Page 36
பலையகமும், இலக்கியமும்
மன்மதன் ஒப்பாரி” என்ற நாவலை வெளியிட்டுள்ளார். ஒப்பாரி மாத்திரமல்ல, அக்காலத்து மெட்டுகளுக்குள் அமைந்த லாவணி களும், ராகங்களும் எல்லாமே ஒட்டுமொத்தமாக அடுக்குத் தொடரில் அழகாக எழுதப்பட்ட நூலாகும். இன்றைக்கும் கூட அதுபோன்ற அடுக்குத்தொடரில் சுவைமிக்கதாக எழுதக் கூடிய கவிஞர்கள் அரிது என்றே சொல்லலாம். அந்த மங்க ளதாஸ் புலவரைப் போன்றே கவிஞர் தங்கவேலுவும் தனது படைப்பை வெளியிட்டுள்ளார். இந்நூலுக்கு சான்றுக்கவிதந்த பிறவிக்கவிஞர் பெரியாம்பிள்ளை "தங்கவேல்தாஸ்” என்று குறிப்பிட்டுக் கவிதை மூலம் பாராட்டுகிறார்.
எனவே, கவிஞருடைய கவிதைகளும், காமன் கூத்துப்பா டல்களும் பிறந்த நிலையில் சிறந்துநின்று சிந்தையை அள்ளும் தன்மை வாய்ந்தன. கவிதைகளின் வனப்பையும் வாழ்வையும், புலமை, நிலைமை தலைமை தாங்கப் பிறக்கும் கவிதைகள் பெறுவதில்லை என்பது நமது கவிஞருடைய அசைக்க முடியாத வாதமாகும். தமிழ் மக்களின் பண்பட்ட நெஞ்ச ஆழ அகலத்தை யும், புறவண்ண ஆற்றலையும் நாட்டுப்பாடல்களிலே காணலாம். கல்லாத கட்டுப்பாடற்ற நிலையில் பொங்கிப் புரண்டு அருவி யென ஒலியெழுப்பி கவரக்கூடிய இந்த இலக்கியங்களின், எளிய வனப்பில் ஆழ்ந்துகாணும் இன்ப உணர்வை எழுத்தில் வடிப்பதென்பது இயலாத காரியம்.
கவிஞர் வெளியிட்டுள்ள இரதி-மதன் தென்றல் பாட்டு என்ற நூல் காமன்விழா நடத்துவதற்குப் பயிற்சிபெறாத - இதி காசத்தைப் படித்தறியாதவர்களுக்கு ஒரு வழிகாட்டி நூல் என்றே கூறலாம். ஆரம்ப முதல் கடைசிவரை காமன் கூத்தை எவ்வாறு நடத்துவ்தென்பது பாடல்களாக எழுதப்பட்டுள்ளது.
 

அந்தனிஜீவா
கம்பம் பாலிப்பது, கம்பம் நடுதல், இரதி-மதன் திருமணம், தூதன் வருதல், மதன் இரதி தர்க்கம், இந்திரனை மன்மதன் சந்தித்தல், பரமன் தவநிலைக்கேகி பஞ்சமலர்க்கணை எய்தல், மன்மதனை பரமசிவன் நெற்றிக்கண்ணால் எரித்தல், ரதியின் துயரத்தைப்போக்க மன்மதனை அரூபியாக சிவபெருமானே உயிர் எழுப்பி எரியாத கட்சிக்காரர்கள் -
மன்மதன் - தேவருக்கு தேவனவன் தெரியாத ரூபனவன் திருமால் அரன் அயன் முதலிய ஜீவஜந்துக்களும் மற்றும் ஜீவனும் தானுமவன். அந்த செத்தமதன் இங்கு வந்தால் ஜெகமேது புவியேது செங்கதிரோன் பிறையேது மதன் செத்து மடியவில்லை தேடிரதிப் போகவில்லை. என்று பாடி அதற்கு பதில் கிடைக்காவிட்டால், அவ்வருடத் தில் அந்த கம்பத்தை எரிக்கமுடியாது. எரிந்த கட்சிக்காரர்கள் சிவபெருமானுடைய திருவிளையாடல்களையும், அவருடைய சக்தியையும் பெரிதுபடுத்திப் பாடி மன்மதன் எரிந்தான் என்று ஒப்பிவிப்பார்கள். இதற்கெல்லாம் போதிய புராணக்கதைகள் படித்த அறிவு தேவை.
பிரபஞ்ச நாயகனான ஈசனுடைய பேரின்பத்தைக் கலைக் கப்போந்த சரசசிருங்கார மோகனத்தெய்வம், சிற்றின்பத்தை ஊட்டும் மலர்க்கணையை எய்த காரணத்தால், அரசனுடைய நெற்றிக்கண்ணுக்கு இரையாகி காமன் என்ற அத்தெய்வம் பஸ்பமாகியது என்பதே காமன் கதையின் கருவாகும்.

Page 37
மலையகமும், இலக்கியமும்
பெருந்தோட்டப்பகுதியில் மாசிமாதம் மூன்றாம் பிறையில் ஆரம்பிக்கப்பட்டு பதினாறாம் நாளில் கம்பம் எரிவதோடு விழா முடிவடைகின்றது. இந்த குறிப்பிட்ட நாட்களில் இரதி, மதன். தூதன், இந்திரன், வீரபத்திரன், சிவப்பெருமான் ஆகியோருக் கான வேடமணிபவர்கள் நோன்பு இருப்பார்கள். முதல்நாள். திருமணநாள், கடைசிநாட்கள் வரை விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். பயபக்தியோடு இது நடைப்பெறும். சுருக்கமாக கூறின், தாம்பத்திய உறவுகூட வைத்துக்கொள்ளாத அளவில் பயபக்தியாக காமன் கூத்தை நடத்தவேண்டும். இதேபோன்றே அருச்சுனன் தபசுமாகும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வழங்கிவரும் நாட்டுக் கூத்துப் போன்றே கலையுருவம் கொண்டது காமன் கூத்து. இதனை நாட்டுக் கூத்து மரபுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
காமன் கூத்தைத் தொடர்ந்து மலையகத்தில் ஆடப்பட்டு வரும் கூத்து அருச்சுனன் தபசு. இக்கூத்து இன்று பெருமளவில் வழக்கொழிந்து விட்டது. இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை மலையக மக்கள் வெறும் கதைகளாக மட்டும் எண்ணிப் படிப்பதில்லை. பக்தியுணர்வுடன் படிப்பார்கள். மலை யக மக்களின் வாழ்வோடு இணைந்துவிட்ட மகாபாரதக் கதை யில் வரும் அருச்சுனனின் பாத்திரம் மறக்கமுடியாத பாத்திரமா கும். இத்தனை முக்கியத்துவம் பெற்ற அருச்சுனனின் பெருமை களை விளக்கும் வண்ணமே அருச்சுனன் தபசு என்ற கூத்து
ஆடப்படுகிறது.
மலையகத்தில் கூத்துவடிவில் ஆடப்படும் இன்னொரு நிகழ்ச்சி பொன்னர் - சங்கர் கூத்தாகும். இது நிகழ்வடிவில் உள்ள கலையாகும். இந்தக் கூத்து தனித்தவமும், கவிச்சுவை
 

அந்தணிஜீவா
யும், காவியத்தன்மையும் கொண்டது. வீரத்தை வலியுறுத்தும் இக்கூத்து அவலச்சுவையோடு ஒசை நயமேவும் சுவையும் கொண்டது. பாட்டும் வசனமும் கலந்த இக்கூத்து மலையக பாரம்பரிய கலைகளின் தனிச் சிறப்புடையது. குறுநில மன்ன னான மலையப்பன் தான் வில்லன். ஆராயு என்ற பெண்ணை சிறைபிடித்தபோது பொன்னர்- சங்கர் உயிரையும் மதிக்காமல் மலைமேல் படையைக் கூட்டிப் போரிட்டுச் சிறை மீட்டியதாக உருவம் கொடுக்கப்பட்ட கதை இது. இக்கதையை தொடர் கதையாக சுவைபட கலைஞர் மு.கருணாநிதி அழகாக எழுதியி ருக்கிறார். தமிழகத்தின் நிஜக்கதைகளில் இதுவும் ஒன்று.
மற்றும் பாரம்பரிய கலைகளில் கரகாட்டம் முக்கியமானது. இக்கரகக் கலை கண்ணகி அம்மன் வழிபாட்டுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் கிராம தேவதை கோவில்களிலும் விழாக்களிலும் ஆடப்படும் இவ்வாட் டத்தை மலையக மக்கள் மறந்துவிடாமல் தோட்டத்து ஆலய உற்சவங்களிலும் விழாக்களிலும் ஆடி வருகின்றனர். கரகக் கலை இவ்வாறு பக்தி உணர்வுமிக்கதாக விளங்குவதுடன், உற்சவத்திற்குப் புறம்பான பொது வைபவங்களில் ஆடப்படும் கலை நயமிக்க ஆட்டமாகவும் விளங்குகின்றது. மற்றும் ஒயி லாட்டம், சிலம்பாட்டம், தேவராட்டம் போன்ற நிகழ்கலை ஆட்டங்களும் இவர்களின் பாரம்பரிய கலைகளாகும். நிகழ் கலைகளில் ஒன்று ஒயிலாட்டம். ஆண்கள் மட்டுமே பங்குகொள் ளும் இந்த ஆட்டக்கலைக்கு ஒயில்கும்மி என்ற பெயருண்டு. உடலை வில்போல் வளைத்து நெளிந்து தாளம் மற்றும் பாட்டுக் கேற்றதாக ஆடப்படும் கலையாக உள்ளது. இது ஒரு குழு நடனம். சிலம்பாட்டம் தற்காப்புக் கலையாக இருப்பினும், அது

Page 38
மலையகமும், இலக்கியமும்
நிகழ்த்தப்படும் சமூகச் சூழலில் பிற நிகழ்த்தும் கலைகளைப் போன்று பரந்து, பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் உரிய கலையாகக் காட்சியளிக்கிறது. கையிலுள்ள கம்பை வீசி ஒலியெழுப்பும் ஒருவகையான விளையாட்டே சிலம்பாட்டம். இது வலரிவிச்சு என்றும் கூறப்படும்.
இப்பொழுது நம்மிடையே இல்லாதது தேரோட்டம். கயிலை மலையில் பரமனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடைபெற்ற போது, தேவர்களெல்லாம் கூடி மகிழ்ச்சியாக ஆடிய ஆட்டம் இது. இப்பொழுது தமிழகத்தில் பல சிற்றுார்களில் நடை பெறுகின்றது.
மலையகத்தில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்கு முக்கிய இட முண்டு. கடந்த காலங்களில் இந்தியத் தொழிலாளர்களை இங்கு ஏமாற்றிக் கூட்டிவந்தமை வெள்ளைக்காரத்துரைமார்க ளின் கொடுமைகள், கொட்டும் பனி, அட்டைக்கடி இவற்றை யெல்லாம் விபரிக்கும் வண்ணம் இசைத்து வருகின்றனர். இசை, பாடல் ஆகியவற்றுடன் கதை சொல்லும் இந்த நிகழ்ச் சிக்கு மலையக மக்களிடையே பெரும் வரவேற்புண்டு.
அரசாங்கத்தின் கீழியங்கும் கல்விஅமைச்சு பாடசாலைகள் தோறும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் தமிழ்தினவிழாவில் வில்லிசை நிகழ்ச்சியும் ஒன்றாக இருப்பதால் வில்லிசை மறைந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டுவருகிறது. நாடகக் கலைஞ ரான லடீஸ் வீரமணி தம் குழுவினருடன் வில்லிசை நிகழ்ச்சி களை மலையகத்தின் பல பகுதிகளிலும் நடத்தியுள்ளார். இவர் மலையக கலை இலக்கியப் பேரவை, சத்தியோதய நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கண்டி மாவட்டப் பாடசாலை
 

அந்தனிஜீவா
ஆசிரியர்களுக்கான “வில்லிசை" பற்றிய பயிற்சிப் பட்டறை ஒன்றினை நடத்தியுள்ளார்.
நல்ல பல கருத்துக்களை மக்களிடையே நகைச்சுவையோடு பரப்பியவர் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் என்பது பிரசித்தம். கிருஷ்ணன் - மதுரம் குழுவினர் தோட்டப்புறங்க ளுக்கு அருகிலுள்ள திரைப்பட மாளிகைகளில் நடத்திய நாட கங்கள் தோட்டப்புறத்து இளைஞர்களையும் இத்தகைய நாடகங்களை நடத்தத் தூண்டியது.
வள்ளி திருமணம், நளன் சரித்திரம், ஞானசெளந்தரி, கோவ
லன் சரித்திரம் சத்தியவான் - சாவித்திரி என்பன ஆரம்பத்தில் மேடைக்கு வந்தபொழுது பாடல்களே அதிகமாக இருந்தன. வசனங்கள் மிகக் குறைவு எனலாம். இவை தோட்டப் பகுதி களில் மேடை நாடகமாகப் பரிணமித்தாலும், வள்ளி-முருகன் உட்பட பாத்திரம் ஏற்போர் நோன்பிருந்து, காப்புக்கட்டியே நடித்தனர். அக்காலத்தின் மேடை அமைப்புக்காட்சி சோடனை என்பன மிகவும் குறைந்தே காணப்பட்டன. இடைவெளிண்ய நிரப்ப“பபூன்” மேடையில் தோன்றி சபையோரை கலகலப்பாக் குவான். இவனை “விதுாஷகன்” என அழைப்பதுண்டு. இவன் சில வேளைகளில் கட்டியக்காரனைப் போன்று கதை ஒட்டத் திற்கு துணை புரிவான். நகைச்சுவையே பபூனின் முக்கிய பங்களிப்பாகும். பாடுவதுடன், கேலிபேசி சபையோரை மகிழ்விப் பான். விநோத உடை அமைப்பு, ஆட்டம் என்பனவற்றினால்
இவன் கோமாளியாக கருதப்படுவான். f பச்சைப் பசுங்கிளி சோலை
பாக்கு துவர்க்குதுனா புத்தா புதுச்சேரி சுண்ணாம்பு

Page 39
மலையகமும், இலக்கியமும
என்பது ஒரு பபூன் பாடலாகும். மலையகத்தில் இவ்வாறு பயூன் பாடல்கள் உள்ளன.
கவலைப்பட வேண்டாம் நளராஜனே காக்கிறேன் நானுந்தன் குடிப்படையை ஆகாயம் பாரு நளராஜனே ஆதரித்தருளுவேன் கார்க்கோடன்
என்பது நளன் தமயந்திநாடகத்தில் வரும் ஒரு பாடலாகும். இவ்வாறு வசனங்கள் குறைந்து பாடல்கள் அதிகரித்தே
இருந்தன. (26)
மலையகத்தில் தமிழகத்தின் சினிமா நாடகம் என்பன இவர்களைப் பெரிதும் பாதித்தன.தமிழகத்திலிருந்து சுயமரியா தைக் கருத்துக்கள், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் முதலியவற்றின் பிரசார ஏடுகள் மலையகத்திற்கு வரத் தொடங்கின. மலையக மக்கள் திராவிட முன்னேற்றக்கழக பிரசார நாடகங்களை மேடையேற்றினார்கள். இத்தகைய நாட கங்கள் தமிழ்பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் அரங்கேற்றப்பட்டன. மலையகத்தில் உரி மையற்ற தோட்டத் தொழிலாளர் மத்தியில் தி. மு. க. பிரசார நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. கலைஞர் கருணா நிதியின் மணிமகுடம், தூக்குமேடை, நச்சுக்கோப்பை, எம். ஆர். ராதாவின் ரத்தக்கண்ணிர் போன்ற நாடகங்கள் மலைய கத்தின் பல பகுதிகளிலும் மேடையேற்றப்பட்டன.
இத்தகைய சீர்திருத்த நாடகங்களை மலையகத்தோட்டத் தொழிலாளர்கள் விரும்பிப்பார்த்தனர். அதிலுள்ள முற்போக் கான கருத்துக்களை அவர்கள் பெரிதும் விரும்பிவரவேற்றனர்.
 

அந்தனிஜீவா
விடிவை நோக்கிக் காத்திருக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் தி. மு. க. பிரசார நாடகங்கள் ஆரம்பகாலங்களின் மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தின. இதன் கார ணமாகவே சொந்தமாக நாடகங்கள் எழுதி மேடையேற்றத் தொடங்கினார்கள்.
ஐம்பது, அறுபதுகளில் நவீன நாடகத்துறையில் இளை ஞர்கள் ஆர்வமும், அக்கறையும் காட்டினர். ஏ. பி. வி. கோமஸ், திருச்செந்தூரன், தமிழோவியன் போன்றவர்கள் நாடகம் எழுதுவதிலும், நடிப்பதிலும் ஆர்வம் காட்டினார்கள். அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிய கலைக்கழகம் நடத்திய போட்டிகள், கருத்தரங்குகள் இவர்களுக்கு உந்து சக்தியாக அமைந்தன.
கூத்து மரபினைப் பாதுகாப்பதையும், வளர்ப்பதையும் தனது பிரதான பணியாகக் கொண்டு இயங்கிய கலைக்கழகம் ஈழத்து தமிழர் மத்தியில் நவீன நாடகத்துறையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது. நவீன நாடகத்துறை என்ற நிலையில் அன்று வளர்ச்சி பெற்றிருந்தவை கலையரசு மரபும், பேராசிரியர் கணபதிப்பிள்ளை மரபும், சினிமாப் பாணியில் அமைந்த நாடக மரபுமேயாகும். எனவே நவீன நாடகத்துறைக்கு ஊக்கமளிப் பதற்காகக் கலைக்கழகம் எடுத்த முயற்சிகள் மேற்குறிப்பிட்ட நாடக மரபுகளின் வளர்ச்சிக்கு அளித்த ஊக்க முயற்சிக ளாகவே உள்ளன.
நவீன நாடக எழுத்துப்பிரதிக்குச் சன்மானம் வழங்குவதன் மூலமும் அவற்றைத் தனது செலவில் அச்சிடுவதன் மூலமும் கலைக்கழகம் எழுத்தாளர்களையும், நெறியாளர்களையும் ஊக்குவித்தது. மன்றங்களுக்கிடையே நடத்தப்பட்ட நாடகப்

Page 40
மலையகமும், இலக்கியமும்
போட்டிகளில் எழுத்தாளர்களுக்கிடையே நடாத்தப்பட்ட நாடகப்பிரதிபோட்டிகளிலும் இத்தகைய நாடகங்களே அதிகம் காணப்பட்டன. சினிமாப்பாணி நாடகங்களைத் தவிர்த்து, கலை யரசு மரபிலமைந்த நாடகங்களையும் கலைக்கழகம் ஊக்கு வித்து தயாரிப்பில், நடிப்பில், அரங்கமைப்பில் ஒழுங்கையும், செம்மையையும் கலைக்கழகம் வேண்டியது. மட்டக்களப்பு, மலைநாடு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட நாடகக் கருத்தரங்குகள் மூலம் கலைக்கழகம் நாடக தயாரிப்பா ளர், எழுத்தாளர், இயக்குநர், ஒப்பனையாளர், ஒளியாளர் என் போருக்கு போதனையூட்டியது. இக்கருத்தரங்குகளில் அன்று நாடக ஈடுபாடுடைய அனைவரும் பயனடையும் வண்ணம் நடத்தியவர் அன்று கலைக்கழகத் தலைவராயிருந்த சு. வித்தி யானந்தனாவார். அவரின் இப்பணி பல புதிய நாடக எழுத்தாளர் களையும் உருவாக்கியது. இதன் பிரதிபலனாகப் போட்டிக்குப் பல நாடகங்கள் வந்தன. ஆனால் இவற்றுள் மிகப்பெரும்பாலா னவை கலையரசு சொர்ணலிங்கம் மரபில் வந்த சரித்திர இதி காச புராணக்கதைகளாக அமைந்துவிட்டன. மேடை அமைப்பு, நடிப்புமுறைகளிலும் அவரது மரபையே பின்பற்றின. கலைக்கழ கம் நடத்திய மேடை நாடகப் போட்டியில் பங்குபற்றிய "திப்புசுல் தான்” “ஆதவனே மன்னிப்பாய்” “சிங்களத்துச் சிங்காரி" என் பன இவற்றுக்கு நல்ல உதாரணங்களாகும். பின்னோக்கிப் பார்க்குமிடத்து கலைக்கழகம் வளர்த்த நவீன நாடக மரபு கலையரசு மரபாகவே உள்ளது என கலாநிதி மெளனகுரு குறிப்பிடுகிறார். (27)
தலைநகரில் மேடையேற்றப்பட்ட எம். கே. அப்பாஸின் "கள்ளத்தோணி” நாடகம் பின்னர் மலையகத்தில் மேடையேற் றப்பட்டது. நடிகவேள் லடீஸ் வீரமணியின் கங்காணி மகள்,
 

அந்தணிஜீவா
நாடற்றவன் போன்ற நாடகங்கள் கொழும்பு, பதுளை, அட்டன், பண்டாரவளை என பல பகுதியளிலும் மேடையேறியது. இத னையொட்டி பல தோட்டங்களில் இத்தகைய நாடகங்களைப் போல சுயமாக எழுதி சினிமாப் பாடல் கலந்து நாடகங்கள் மேடையேற்றப்பெற்றன. இலங்கை திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகளில், விழாக்களில் நாடகங்கள் மேடையேறத் தவறவில்லை. தொழில் காரணமாக கொழும்பில் வாழ்ந்த மலையகத்தவர்கள் நாடகங்களை மேடையேற்றுவதிலும், நடிப்ப திலும் ஆர்வங்காட்டினார்கள். கலாசார அமைச்சின் கீழ் இயங் கிய நாடகக்குழு நடத்திய நாடக விழாக்களிலும், தேசிய இளைஞர் சேவை மன்றம் ஆண்டுதோறும் அகில இலங்கை ரீதியில் நடத்திவரும் விழாக்களிலும் மலையக் கலைஞர்கள் பரிசும், பாராட்டும் பெற்றுள்ளார்கள்.
இன்று மலையக பாரம்பரிய கலைகளில் ஒன்றான காமன் கூத்து தேசிய கலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலக்கியத் துறையைப் போலவே கலைத்துறையிலும் மலையகத்தைச் சார்ந்த இளந்தலைமுறையினர் சாதனைகளை நிலை நாட்டத் தவறமாட்டார்கள். எதிர்காலத்தில் ஈழத்து நாடக முயற்சிகள் பற்றிக் கணக்கெடுப்பு நிகழ்த்தும் பொழுது மலையகத்தைப் பற் றிய தனித்துவத்தையும், சிறப்பையும் அவை வலியுறுத்துவ தோடு, மனித வாழ்வின் ஒர் அம்சமாக கலைகள் ஒன்றுகலந்து விட்ட தன்மையைச் சுட்டிக் காட்டுவதாக அமையும்.
மலையக நவீன நாடகத்தறையின் வளர்ச்சிக்காக விசேட பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். அரங்கியல மைப்புப் பற்றிய துறைசார்ந்தவர்களின் பயிற்சி மிக முக்கிய மானது ஆகும். இதனை பாடசாலை உயர் வகுப்பு மாணவர்கள்
மட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

Page 41
மலையகமும், இலக்கியமும்
பிற முயற்சிகள்
மலையக கலை இலக்கிய வளர்ச்சிக்கு இயக்கங்களும், சஞ்சிகைகளும், நூல் வெளியீட்டு முயற்சிகளும் பெருமளவில் செயலாற்றியுள்ளன. உதிரிகளாக நடைபெற்ற சின்னச்சிறு முயற்சிகள் கூட அவற்றை உரமூட்டி வளர்த்துள்ளன.
மலையக ஆக்க இலக்கிய முன்னோடியான கோ. நடேசய் யர் பத்திரிகைநூல் வெயியீட்டுத்துறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார். நூல் வெளியீட்டுத் துறையில் மிகப்பெரிய சாதனைக் குரியவராகத் திகழ்ந்துள்ளார்.
இலங்கையில் தனது செயற்பாடுகளை வெற்றிகரமாக்குவ தற்கு பத்திரிகைகளின் அவசியத்தை அவரைப்போல் உணர்ந்தவர்கள் வேறு எவருமிலர். அவற்றைப் பாவித்துப் பயன் பெற்றதிலும் அவரே முன் நிற்கிறார். தேச நேசன் (1923 - 1924) தேசபக்தன் (1924-1929) தொழிலாளி (1929) தோட் டத்தொழிலாளி (1947) உரிமைப்போர், சுதந்திரப்போர், வீரன், சுதந்திரன் என்று தமிழிலும், சிட்டிசன் (1922) "போர்வார்ட் (1929) இந்தியன் ஒப்பினியன் (1936) இந்தியன் எஸ்டேட் லேபர் (1929) என்று ஆங்கிலத்திலும் அவர் பத்திரிகைகளை வெளியிட்டிருக்கிறார். அப்பத்திரிகைகளில் ஆசிரியராகக் கடமையாற்றியிருக்கிறார். லேக்ஹவுசிலும் சில காலம் பணியாற்றியுள்ளார்.
இலங்கையில் வியாபாரத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு 1930 களில் ஆரம்பமான தமிழ் தேசியப் பத்திரிகை யான வீரகேசரியின் முதல் ஆசிரியரான எச். நெல்லையா
 

அந்தனிஜீவா
என்பவர் நடேசய்யரின் கீழ் தேசபக்தனில் 1927-ல் கடமை யாற்றியவரே ஆவார். வீரகேசரி ஆசிரியராக பிறகு வந்த நாகலிங்கம் என்பவர் அய்யருக்கு மருமகன் உறவாவார். இவ் விதம் தன்னுடைய எழுத்துக்களாலும் தனது தலைமையின் கீழ் பயிற்றப்பட்டவர்களின் எழுத்துக்களாலும் நடேசய்யர் இலங்கைப் பத்திரிகை உலகுக்கு அளப்பரிய பணிகளைச் செய்திருக்கிறார். அதனை மிகவும் நுட்பமாக அவதானித்த வர்கள் காலஞ்சென்ற ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வ நாயகம் ஆவார்கள். இருவரும் பத்திரிகை ஒன்றின் மூலமே தமது கருத்துக்களை மக்களிடையே பரப்ப முடியும் என்று 1947ல் எண்ணியபோது, அவர்கள் நினைவில் வந்தவர் நடேசய்யரே ஆவர். (28)
இதனைத் தொடர்ந்து பாரதியின் சீடரான வ.ராமசாமி (வ.ரா) எச்.நெல்லையா, கே.வி.எஸ்.வாஸ், சாரநாதன், நாக லிங்கம், லோகநாதன் ஆகியோர் பத்திரிகைத்துறைக்கு பெரும் பணியாற்றியுள்ளார்கள். கே.கணேஷ் (பாரதி), பதுளை முத்தை யாப்பிள்ளை (கலையொளி), ரா.மு.நாகலிங்கம் (செய்தி) க.ப. சிவம் (மலைமுரசு), பொ.கிருஷ்ணசாமி (டெய்லிமிரர்), எஸ்.எம்.கார்மேகம் (வீரகேசரி), அ.மு.துரைசாமி (எங்கள் மலைநாடு), பி.ஆர்.பெரியசாமி (வளநாடு) எஸ்.எஸ்.நாதன் (தொண்டன்), எஸ்.பி.தங்கவேல் (தொழிலாளி) போன்றவர் களின் பணிகள் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு உந்துசக்தி யாக இருந்துள்ளன என்பது வரலாற்று உண்மைகளாகும்.
கோநடேசய்யரவர்களுக்குப் பின்னர் நூல் வெளியீட்டு முயற்சிகளில் சாதனை புரிந்தவர்கள் எம்.ஏ.அப்பாஸ், டி.எம்.பீர்

Page 42
மலையகமும், இலக்கியமும்
முகம்மது. இலங்கையில் சிறிது காலம் வாழ்ந்த அப்பாஸ் அவர்களின்"கள்ளத்தோணி","கட்டுங்கள் மூட்டையை" ஆகிய நாடக நூல்கள் ஒரே ஆண்டில் நான்கு பதிப்பாக வெளிவந்துள் ளன. "கள்ளத்தோணி” நூலின் வெளியீட்டு விழாவுக்காக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இலங்கை வந்திருந்தார்.
மலையகத்தில் தனிமனித முயற்சிகளால் அவ்வப்போது சில நூல்களும் நூற்றுக்கணக்கில் சிறுசிறு பிரசுரங்களும் வெளியாகியுள்ளன. ஐம்பதுகளுக்குப் பின்னர் நூல் வெளி யீட்டுத்துறையில் ஐம்பதுகளுக்கு அதிகமான நூல்களை வெளியிட்ட பெருமை சட்டத்தரணி எஸ்.எம்.ஹனிபா அவர்க ளைச் சாரும். 1953ல் தமிழ்மன்றம் என்ற பதிப்பகத்தை ஆரம் பித்து இவர் எழுபது நூல்கள் வரை வெளியிட்டுள்ளார். தனி மனிதராக எஸ்.எம்.ஹனீபா இத்தகைய நூல்களை வெளியிட் டதை ஒரு சாதனை என்றே குறிப்பிடலாம்.
குறிஞ்சிப்பண்ணை என்ற பதிப்பகத்தை 1969ல் ஆரம்பித்த எஸ்.மல்லிகைகாதலன், "தாயகம்” என்ற சிக்கன்ராஜபவின் குறுநாவலையும், வெளிமடை குமரனின் "தூவானம்” என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். ஈழக்குமார் முயற்சியால் “குறிஞ்சிப்பூ” கவிதைத் தொகுதியும், எஸ்.எம்.கார் மேகம் என்பவரின் முயற்சியால் “கதைக்கனிகள்” என்ற பரிசுக் கதைகள் தொகுதியும் வெளிவந்தன. பதுளையைச் சேர்ந்த மு.நித்தியானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவு ரையாளராகப் பணியாற்றிய பொழுது "நாமிருக்கும் நாடே", “ஒரு கூடைக்கொழுந்து", "வீடற்றவன்” ஆகிய படைப்புகளை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட என்.எஸ்.எம்.ராமையா
 

அந்தணிTவா
வின் “ஒரு கூடைக்கொழுந்து” சிறுகதைத் தொகுதியை இருபது ஆண்டுகளுக்குப்பிறகு இலக்கிய ஆர்வலரான எச்.எச். விக்கிரமசிங்க (மாத்தளை செல்வா) வெளியிட்டார். கண்டி யைச் சேர்ந்த பி.எம்.புண்ணியாமீன் என்பவர் சிந்தனை வட்டத் தின் மூலம் இளைய தலைமுறையினரின் நூல்களை வெளி யிட்டு வருகிறார்.
மலையக கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பின் சகோதர நிறுவனமான “மலையக வெளியீட்டகம்” பத்து நூல் களை வெளியிட்டுள்ளது. இப்பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த தேசபக்தன் கோ.நடேசய்யர் நூல் மறைக்கவும், மறக்கவும்பட்ட மாமனிதரை வெளி உலகுக்குக் கொண்டுவந்தது. அண்மைக் காலமாக மாத்தளை கார்த்திக்கேசு "குறிஞ்சிப்பண்ணை" மூலம் தமிழகத்தின் இளவழகன் பதிப்பகத்துடன் இணைந்து மலையக எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு வருகிறார்.
தேசியகலை இலக்கியப்பேரவை என்ற அமைப்பு சென்னை சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சாரல்நாட னின் “மலையக வாய்மொழி இலக்கியம்” மலையக கவிஞர்கள் "குன்னறத்துக் குமுறல்' ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது.
எந்தவிதமான அரசின் உதவியோ, தொழிற்சங்கங்களின் ஆதரவோ இன்றி தனிப்பட்ட மனித முயற்சிகளாக இந்த நூல் வெளியீடுகள் நடைபெறுகின்றன. V
மலையக இலக்கிய வளர்ச்சிக்கு சஞ்சிகைகளின் பங்கு முக்கியமானது. தமிழகத்தின் மணிக்கொடியைப் போல கண்டி யிலிருந்து க.ப.சிவம் ஈழக்குமார் வெளியிட்ட "மலைமுரசு"

Page 43
மலையகமும், இலக்கியமும்
மலையக எழுத்தாளர்களின் படைப்புகளுக்குக் களம் அமைத் துக் கொடுத்துள்ளது. தெளிவத்தை ஜோசப், சாரல்நாடன்
போன்ற படைப்பாளிகள் இச்சஞ்சிகையின் மூலமே அறிமுகமானார்கள்.
கண்டியிலிருந்துவெளிவந்த மலைமுரசுவைத் தொடர்ந்து அட்டனிலிருந்து இரா.பாலாவை ஆசிரியராகக் கொண்டு "மலைப்பொறி” வெளிவந்தது. பதுளையிலிருந்து "பூங்குன்றம்" என்ற சஞ்சிகை, கண்டியிலிருந்து "சாரல்” என்ற இதழும் வந்தன. மற்றும் "நதி”, “தீர்த்தக்கரை","அஞ்சலி","கொழுந்து", "குன்றின்குரல்" ஆகிய சஞ்சிகைகளின் பங்களிப்புகள் விமர்ச கர்களாலும் ஆய்வாளர்களாலும் குறிப்பிடப்படுவதுண்டு. சிறு சஞ்சிகைகளின் காலம் குறுகியதுதான் என்றாலும் அவைகள் ஆற்றிய பணிகள் வரலாற்றுப் பதிவுக்குரியதே.
போரிடுவதற்குக் களமும், வாதிடுவதற்கு மன்றமும் தேவை. மலையக இலக்கிய கர்த்தாக்கள் தங்கள் படைப்புகளை வெளி யிடுவதற்கு சிறு சஞ்சிகைகள் இடங்கொடுத்து உதவுகின்றன. மலையக இலக்கிய கர்த்தாக்கள் தங்கள் படைப்புகளை வெளியி டவதற்கு சிறு சஞ்சிகைகளையே பெரிதும் நம்பியிருக்கிறார் கள். எண்பதுகளில் தோன்றி நின்றுபோன சஞ்சிகைகள் மறு மலர்ச்சி, அல்லி, மலைஓசை, உதயம், நவஉதயம், மலைச் சாரல், குறிஞ்சிக்குரல், குருதிமலர், நதி, இயக்கம், வெண் னிலா, தீர்த்தக்கரை, செளமியம், கொழுந்து, கொந்தளிப்பு, நண்பன், ஜனநாயகம் என்பவைகளாகும். தாக்கம், தேயிலை, ப்ரியநிலா, குன்றின் குரல் ஆகியவை இன்றும் வெளி வருகின்றன.
 

அந்தனிஜீவா
கொழுந்து 1988ல் ஆரம்பிக்கப்பட்டது. ஏழு இதழ்கள் வெளி வந்துதடைப்பட்டுப்போனது. மலையக இலக்கியப் பேரவையின் வெளியீடாக வெளிவந்த இதழ் பரவலான இலக்கிய அங்கீகாரத் திற்கு வழிவகுத்தது. சிறப்பாக இதில் வந்த் ஆக்கங்களை இலங்கையில் பிற ஏடுகள் மறுபிரசுரம் செய்தன. தமிழகத்தில் வெளியாகும் கணையாழி, மக்கள் மறுவாழ்வு, மக்கள் மன்றம் ஆகிய ஏடுகளும், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தேனீ, சிந்த னை, வெகுஜனம், தூண்டில், தேடல் போன்ற ஏடுகளும் அவை களை விரும்பி மறுபிரசுரம் செய்தன. மலையக இலக்கியம் பற்றிய தேடுதல் முயற்சிகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக் கையை இந்த சஞ்சிகை பெருக்கியிருக்கின்றது. (29)
கண்டியிலிருந்து தோட்டப் பிரதேசங்களுக்கான கூட்டுச் செயலகம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக “குன்றின் குரல்" சஞ்சிகையை வெளியிட்டு வருகிறது. ஆரம்பகாலங் களில் இலக்கியத் தன்மை மிகக் குறைவாகக் காணப்பட்ட இச்சஞ்சிகை படிப்படியாக காத்திரமான இலக்கியப் படைப்பு களை வெளியிடலாயிற்று. மலையக மூத்த எழுத்தாளர்களின் நூலுருவம் பெறாத சிறுகதைகளை மறுபிரசுரம் செய்தது. மேலும் மலையகத்தில் மறைந்த தலைவர்களைப் பற்றிய வாழ்க் கைக் குறிப்புகளை வெளியிட்டது. இச்சஞ்சிகை பதினோரா வது ஆண்டில் வெளிவந்தபொழுது தரமான மலையக எழுத்தா ளர்களின் படைப்புகளை வெளியிட்டு, இலங்கையில் காத்திர மான சஞ்சிகையாகப் பேசப்பட்டது. இதற்குக் காரணியாக அமைந்தவர்கள் இச்சஞ்சிகை ஆசிரியர் குழுவினர்களே. அவர் களில் குறிப்பிடத்தக்கவர் அந்தனிஜிவா, ஜே.ஜேஸ்கொடி, பெ. முத்துலிங்கம், சு.முரளிதரன், மேனகா கந்தசாமி ஆகியோர்.

Page 44
மலையகமும், இலக்கியமும்
மலையகப் புத்திஜீவிகளில் ஒருவரான எல்.சாந்திகுமாரை ஆசிரியராகக் கொண்டு காலாண்டு இலக்கிய இதழாக வெளி வந்த “தீர்த்தக்கரை” ஐந்து இதழ்களுடன் தனது பயணத்தை முடித்துக்கொண்டாலும், அதனுடைய காத்திரமான பங்களிப்பு மலையக சஞ்சிகை வரலாற்றில் பெருமை சேர்க்கின்றது.
"சிந்தனைப் பேதங்களுக்கெல்லாம் அப்பால் நின்று இலக்கியம் படைக்கும் நவீன கம்பர்கள் ஒருபுறமும், எமக்கு இளங்காலையின் கதகதப்புத்தேவையில்லைநெருப்புத்தாருங் கள் என்ற யதார்த்தத்தை மறந்த நக்கீரர்கள் பிறிதொரு புறமும் நின்று வரிந்து கட்டிக்கொண்டு மகத்தான கூப்பாடு போடு கையில் இவற்றின் இடையே அல்லலுறும் இளம் எழுத்தாளர் களைப் பார்த்ததுமே நாம் எம்மை இந்த புதிய அக்கினிப் பரீட் சையில் இறங்கிக்கொள்ள நேரிட்டது." இவ்வாறு கூறிக் கொண்டு "தீர்த்தக்கரை” தோன்றியது. மலையகத்தின் முன் னேற்றத்தில் ஆர்வமும், அக்கறையும் கொண்டிருந்த அறிவு ஜீவிகளின் கூட்டுறவு முயற்சிதான் இக்காலாண்டு ஏடு. மலையக மக்களின் வாழ்க்கை, அவர்களுடைய சூழ்நிலை பிரச்சனைகள், மற்றும் கலாசாரம் ஆகியவற்றில் கருத்துச் செலுத்தியது. (30)
காலத்துக்குக் காலம் மலையக சஞ்சிகைகள் மலையக இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றியுள்ளன. இவை கள் முறையாகத் தொகுக்கப்பட்டு கணக்கெடுப்புச் செய்யப்பட வேண்டும்.
୪
 

அந்தனிஜீவா
முடிவுரை
மலையக இலக்கியம் இலங்கையின் தேசிய இலக்கிய இயக்கத்தின் ஒரு பிரிவாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. "நான் பெற்ற புதிய இலக்கிய அனுபவம், மலையக இலக்கிய வளர்ச்சியைப் பற்றியதாகும். மலையக இலக்கியம் என்று குறிப்பிடும் பொழுது, அது வெறும் பூகோள அடிப்படையாகக் கொண்டதன்று. தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அங்கு குடியேறிய இந்திய வம்சாவளியினர் ஆகியோர் உற் பத்தி உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய போக் குகளைக் குறிப்பதே மலையக இலக்கியமாகும். இந்த இலக் கியத்தின் வயது எழுபது ஆண்டுகளாகும். மலையக இலக்கி யத்தின் தீவிர பாய்ச்சல் 1960 களில் தொடங்கிவிட்டது. கோ. நடேசய்யர், சி.வி.வேலுப்பிள்ளை, கே.கணேஷ், மாத்தளை அரு ணேசர் ஆகியோர் மலையக இலக்கிய முன்னோடிகளாவர். சாரால்நாடனின் “தேசபக்தன் கோ.நடேசய்யர்”, அந்தனி ஜீவாவின் “குன்றின்குரல்" மற்றும் மலையக இதழ்கள் மூலமும் ஏனைய பல கலந்துரையாடல்கள் மூலமும் மலையக இலக்கிய வளர்ச்சியைப் புரிந்த கொண்டேன். மலையக இதழ்களும், மலையக எழுத்தாளர் மன்றங்களும் புதிய தனித்தன்மை வாய்ந்த மலையக தேசிய இயக்கத்தை உருவாக்கி வருகின் றன. (31) என்று தமிழறிஞர் பெ.சு.மணி குறிப்பிடுகின்றார்.
“மலையக இலக்கியம் இன்று புதிய பரிமாணத்தைப் பெற்றுத்திகழ்கின்றது. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மலை யகம் புது ரத்தம் பாய்ச்சியது” என்று பேராசிரியர் கைலாசபதி வியந்து பாராட்டும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது.

Page 45
மலையகமும், இலக்கியமும்
இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு காத்திரமான பங்களிப்பை மலையகப் படைப்பாளிகள் செய்துள்ளனர். இதனைச் சரியாக எடைபோட்டு எவரும் எழுதவில்லை. இத்தகைய குறைபாடு உண்டு. இதனால் மலையக இலக்கிய வரலாறு முழுமையாக எழுதப்படல் வேண்டும். இதற்கு முன்னோட்டமாக இந்த மலையகமும் இலக்கியமும்’ என்ற நூல் அமையுமென்ற நம்பிக்கை உண்டு.
لسے تع
 

அந்தனிஜீவா
சான்றாதாரங்கள்
(O1)
(02)
(03)
(04)
(05)
(O6)
(07)
(08)
(0.9)
(10)
ËHIHIilihihilii!,
சாரல்நாடன்
சாரல்நாடன்
சாரல்நாடன்
க.கைலாசபதி
திருமதி மீனாட்சி
அம்மாள்
கோ.நடேசய்யர்
சாரல்நாடன்
அந்தனிஜீவா
சி.வி.வேலுப்பிள்ளை
கலாநிதி. துரை
மனோகரன்
மலையகத் தமிழர் மொழிப்பண்பாடு பற்றிய ஒரு கண்ணோட்டம். மல்லிகை (வெள்ளிவிழா மலர் 1990)
“மலைத்தமிழர்” சென்னை மலையரசிப் பதிப்பகம் (1990)
"மலையகம் வளர்த்த தமிழ்" கொழுந்து (மே, ஜூன் (1990)
முன்னுரை: "மலைநாட்டு மக்கள் பாடல்"
சென்னை கலைஞன் பதிப்பகம் (நவம்பர் 1983)
"இந்தியர்களது இலங்கை வாழ்க்கை நிலைமை" அட்டன் கணேஷ் அச்சகம் (1940)
தேசபக்தன் (5.2.1926) கொழும்பு
தேசபக்தன் கோ.நடேசய்யர் மலையக வெளியீட்டகம் (1988)
பட்டிய காமத்தில் ஒரு பாவலன் குன்றின்குரல் (மார்ச் 1992) கண்டி
புதுமை இலக்கியம்
சென்னை "மக்கள் மறுவாழ்வு" (1987)
தமிழ் இலக்கியம் பார்வையும், பதிவும் 6,6ööflọ thô06ụ6)Im60fì thọ,4} |}65,6ụLI0 (1993)

Page 46
மலையகமும், இலக்கியமும்
(11)
(12)
(13)
(14)
(15)
(16)
(17)
(18)
(19)
(20)
(21)
பெ.கோ.சுந்தரராஜன் சோ.சிவபாதசுந்தரம்
மு.நித்தியானந்தன்
என். எஸ். எம்.
JT60)LDUT
அந்தனி ஜீவா
எஸ். எம். கார்மேகம்
க.கைலாசபதி
மேமன் கவி
வி.செல்வநாயகம்
சித்ரலேகா மெளனகுரு
நா. சுப்பிரமணியன்
சாரல்நாடன்
தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் சென்னை, க்ரியா (1989)
கோ.நடேசய்யர் நூற்றாண்டுவிழா தமிழன் - லண்டன் (1992)
எழுத்துலகில் மறக்கமுடியாத சம்பவம் சிந்தாமணி (10.10.1967) கொழும்பு
ஒரு கூடைக்கொழுந்து - சில குறிப்புகள் மல்லிகை மே/ஜூன் 1981 - யாழ்ப்பாணம்
நமது சிறுகதை (1.5.1967) வீரகேசரி - கொழும்பு முன்னுரை:தோட்டக்காட்டினிலே மாத்தளை எழுத்தாளர் ஒன்றியம் (1980)
மலையக ஆக்க இலக்கியத்துறையில் மலரன்பன் கதைகள் - தினகரன் வாரமஞ்சரி (10.3.93)
தமிழ் இலக்கிய வரலாறு - சென்னை (1960)
ஈழத்துநாவல்களின் சமூக உணர்வின் தோற்றம் சிந்தனை தொகுதி 1 (1976) யாழ்ப்பாணக் கலைக்கழகம்
ஈழத்து தமிழ் நாவல் - தமிழியற் கட்டுரைகள் யாழ்ப்பாணம் 1982.
தேசபக்தன் கோ. நடேசய்யர்
மலையக வெளியீட்டகம் (1988)
 

அந்தனிTவா
(22)
(23)
(24)
(25)
(26)
(27)
(28)
(29)
(30)
(3)
டாக்டர் தி. சு. நடராசன்
மாத்தளை வடிவேலன்
அந்தனிஜீவா
மாத்தளை வடிவேலன்
மாத்தளை வடிவேலன்
கலாநிதி சி. மெளனகுரு
சாரல்நாடன்
சாரல்நாடன்
வல்லிக்கண்ணன்
பெ. சு. மணி
"இலங்கை மலையகத் தமிழ் நாவல்கள்" தாமரை (உலகத்தமிழ் மாநாட்டு சிறப்பிதழ்) சென்னை) (ஜனவரி 1981)
மலையகப் பாரம்பரிய கலைகள். குறிஞ்சிப்பதிப்பக வெளியீடு. கொழும்பு (1992)
மலையகப் பாரம்பரிய கலைகள். செங்கோல். ஆண்டு 1, இதழ் 1 (செப் 1992) கொழும்பு
காமன்கூத்து - குன்றின் குரல் ஆண்டு 12 இதழ் 3. கண்டி (1993)
மலையகப் பாரம்பரிய கலைகள் (1992)
ஈழத்து தமிழ் நாடக அரங்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் (1993)
தேசபக்தன் கோ. நடேசய்யர் மலையக வெளியீட்டகம் (1988)
எண்பதுகளில் மலையகம் - இலக்கியம் குன்றின் குரல் (மார்ச் 1992) கண்டி தமிழில் சிறு பத்திரிகை - ஐந்தினைப் பதிப்பகம் சென்னை (1991) சுபமங்களர் V
(டிசம்பர் 1992) சென்னை.

Page 47
K
Zi " آئے==
lil a
- d
Tamil Literature had many serious Studie:
Anthony Jceva ha state awards for his Aarivaro. His other pl the problems faced b had been staged mO
Het is alSO OInC O! this COuntry amoung to have introduced til
K. S. Sivakumarath. Senior Journalist / Litera
ISBN 955 - 9084 - 0

2e Editor of Kuntrin ural, a quality literary magine in Tamil, published with CCent on the Hill Country festyle, Anthony Jeeva, is lso a well known Columnist journalist, Writer and a ramatist. His innumerable rticles on the Hill Country bCen Sourcc material for s by others.
ad been a recipient of many plays, Alaihal and Aararo ay Akkini Pookal based on y the Working class people re than 12 times.
the pioneer dramatists in he Tamil-Speaking artistes, he Street Theatre.
y Critic.
- x