கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்தமிழர் தொன்மை

Page 1


Page 2

ஈழத்தமிழர் தொன்மை
பேராசிரியர். சி.க. சிற்றம்பலம் B.A. (Ceylon), M.A., Ph.D. (Poona) தலைவர், வரலாற்றுத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை
f ER R
ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் இல, 31 சேட் குடியிருப்பு முதல் தெரு, இரண்டாம் மாடி) எழும்பூர், சென்னை - 600 008. தொலைபேசி 826 1063 960600Tug,6Tub WWW.oferr.org LôlcâT60Te55Go oferr (d) vsnl.com

Page 3
நுால்
நுால் தலைப்பு
ஆசிரியர் பெயர்
பதிப்பு
மொழி
தாளின் தன்மை
நுால் அளவு
அச்சு எழுத்து
மொத்தப் பக்கங்கள் :
நுால் கட்டுமானம்
விவர அட்டவணை
“ஈழத்தமிழர் தொன்மை”
பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்
முதற்பதிப்பு - 21.05.2001
தமிழ்
மேப்லித்தோ
18 டெம்மி
12 புள்ளி
XXVI + 102
தையல் கட்டுமானம்
உரிமை ஆசிரியருக்கு
கணினி,
ஒளி அச்சுக்கோப்பு ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்கழகம்.
நுால்
வெளியிடுவோர் OfERR
ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்கழகம். இரண்டாம் மாடி, 31, சேட் குடியிருப்பு முதல் தெரு, சென்னை - 600 008.
விலை : ரூபா 60.00
அச்சிட்டோர் சேகர் ஆப்செட் பிரிண்டர்ஸ்,
168, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 05
இலங்கையில் விலை :
ரூபா 150.00
II:

1
1
O
11.
12.
13.
14.
15.
16.
17.
பொருளடக்கம்
பதிப்புரை
முன்னுரை
நான் அறிந்த சிற்றம்பலம்
பாராட்டுரை
என்னுரை
இந்நுாலாசிரியரைப்பற்றி
ஈழத்தமிழர் தொன்மை ஆதிகாலக் குடியேற்றம் பற்றிய ஐதீகங்கள் தொல்லியல் பின்னணியில் ஆதிக்குடியேற்றம்
. மானிடவியல், மரபணுவியல், சமூகவியல்
சான்றுகள்
பிராமிக் கல்வெட்டுகளின் சான்றுகள் மொழியியல் சான்றுகள்
தமிழ் - சிங்கள மொழிகளின் உறவுகள்
கொடுந்தமிழ் மொழியாகிய எலுவே சிங்கள மொழியாகிறது
இடப்பெயர்கள் தரும் சான்றுகள்
வரலாற்றுக் காலத்தில் தமிழரின் ஆதிக்கம் தொகுப்புரை

Page 4
பதிப்புரை “ஈழத்தமிழர் தொன்மை” எனும் இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் என்னாளும் தமிழர்க்கு வழிகாட்டும் வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவருமான பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களின் நினைவாக, அன்னாரின் நன்மாணாக்கரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான முனைவர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் ஆற்றிய நினைவுப்பேருரையை அவர்களே செப்பம் செய்து உருவாக்கியதாகும்.
இலங்கை வரலாற்றில் இதுவரை தெளியப்படாத மறைப்புலன்களைத் தெளிய வைக்கும் அரிய தன்மைகளைக் கொண்டிருப்பதாலும், இந்தியத் தமிழகத்திற்கும் ஈழத் தமிழகத்திற்குமுள்ள பிரிக்கமுடியாத ஒட்டுறவை - பற்றுக்கோட்டைப் பாரறியச் செய்வதாக இருப்பதாலும், அசைக்க முடியாத அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டிருப்பதாலும் வரலாற்றுக் களஞ்சியத்திற்கு இஃதோர் நல்வரவு ஆகும். 1. ஈழத்தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்தேறு குடிகளல்லர். அந்த மண்ணின் மைந்தர்கள். அதன்பூர்வ குடிகள் என்பதை நிலவியல், சுற்றுச்சார்பியல், தொன்மை வரலாறு,
ஆதாரங்களைக் கொண்டு நிறுவியிருப்பது. 2. ஒருதலைப்பட்சமான போக்காலும், பெளத்த மதக் கண்ணோட்டத்துடனும் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளால் ஈழத்தில் தமிழ், தமிழர் பற்றிய தொன்மைகள் - உண்மைகள் விடப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டியிருப்பது. 3. இலங்கை வரலாற்றில் தென்னிலங்கைக்கே முதன்மை கொடுத்து, வடக்கு - கிழக்கை இரண்டாமிடத்திற்குத் தள்ளியதால், தமிழ் - தமிழர் பங்கைக் கவனமெடுக்காமல்
IV

போன வரலாற்றாய்வின் குறையைச் சுட்டிக்காட்டுவது. 4. பாளி - சிங்கள மொழி நுால்களான மகாவம்சம், தீபவம்சம் போன்றவற்றில் எதிர்மறையாகப் பேசப்படும் தமிழரின் தொன்மையை அவற்றிலிருந்தே எடுத்துக்காட்டுவது. 5. ஓர் ஆட்சித் தொடர்ச்சி சிங்களர்க்கு இருப்பதாலும், தமிழர்க்கு இடை நின்று போனதாலும், அத்தாக்கத்தால் ஈழத்தமிழர் வரலாற்றில் படிந்த இருட்கால வட்டத்தைச் சுட்டிக்காட்டி ஒளியூட்ட முயன்றிருப்பது.
இத்தகு தன்மைகளால் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களின் இந்நுால் இலங்கை வரலாற்றுக்கே ஒரு புத்தொளியைப் பாய்ச்சுகிறதென்றால் மிகையல்ல.
அப்புத்தொளி இலங்கையைப் பற்றி, அதன் வரலாறு பற்றி இதுவரை ஏற்பட்டிருந்த மயக்கங்களையும், தப்பபிப்பிராயங்களையும் போக்கி, உண்மைப் பேருருவை உலகுக்குக் காட்ட உதவுவதாகவும் இருக்கின்றது.
மறுக்க முடியாத ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கும் இந்நுாலை ஒவ்வொரு தமிழரும் வாங்கிப்படிப்பதும், தமிழரல்லாதாருக்கும் இதன் உண்மைச் செய்திகளை உணரத் தருவதும், நமது வரலாற்றுப் பிரக்ஞையைப் பட்டை தீட்டிக் கொள்ள உதவுவதுடன், உலகத்தின் பால் நமது வரலாற்றுப் பெருமையை ஓங்கச் செய்யவும் துணைபுரிவதாகும்.
எனவே, தமிழுலகம் இதனைத் தகுந்தபடி பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்புகிறோம். பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். சா.செ.சந்திரகாசன்
நிறுவனர் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் சென்னை - 600 008.
V

Page 5
முன்னுரை
பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் 1946இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் துணைவிரிவுரையாளராகச் சேர்ந்து பதவி உயர்வுகள் பல பெற்று 1970 ஆம் ஆண்டிலே தமிழ்ப் பேராசிரியரானார். 1977இல் யாழ்ப்பாண வளாகத்தின் தலைவராக நியமனம் பெற்ற இவர், 1979ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்று முறை நியமனம் பெற்றவர். பேராசிரியரின் குடும்பத்தினர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வாழ்ந்த போது எவரையும் அழைத்து விருந்துபசாரம் அளிப்பதில் பெருமகிழ்வு எய்தியவர்கள். குறிப்பாகத் தமிழ்ப் பிள்ளைகள் அங்கு வரும் போது அவர்களுக்கு வேண்டியவாறு பல வகை உதவிகளையும் அளிக்கப் பின் நிற்காதவர்கள்.
ஈழத்துத் தமிழர் மத்தியில் மிகமிகச் செல்வாக்குப் பெற்ற பேராசிரியராக விளங்கிய பெருமையும் இவருக்குண்டு. மிக நெருக்கடியான காலகட்டத்தில்தான் இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தர் பொறுப்பை ஏற்றார். அக்காலம் போக்குவரத்து வசதிகள் சீர்குலைந்த காலம். பஸ்ஸிலேயே தமது கொழும்புப் பயணங்களையும் சளைக்காது மேற்கொண்டவர்.
தனிப்பட்ட வாழ்க்கையில் தன் மனைவியை இழந்து தன் இளம் பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பும் இவருக்கு இருந்தது. இத்தனைக்கும் மத்தியில் பல்கலைக்கழகக் கடமைகளை ஒழுங்காக ஆற்றியதோடு, பொது வைபவங்களிலும் தமது பங்களிப்பினைத் தயங்காது வழங்கியவர்.
VI

கல்வித்துறையில் இவர் பிரதான பதவிகள் பலவற்றையும் வகித்துள்ளார். ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், ஆராய்ச்சி மகாநாடுகள் ஆகியவற்றில் பங்கு பற்றியும் அவற்றுக்குத் தலைமை தாங்கியும், தமிழியல் ஆய்வுக்கு ஊக்கமளித்தும் இவர் ஆற்றிய பணிகள் பல.
பேராசிரியர் அவர்கள் நாடக நுால்களையும், நாட்டுப் பாடல் நுால்களையும் பதிப்பித்து வெளியிட்டிருந்ததோடு, நாட்டுக்கூத்துக் கலைக்கும் புத்துயிர் தந்தவர். பல அரிய ஆராய்ச்சி நுால்களை வெளியிட்டவர். இவற்றுட் தமிழர் சால்பு என்ற நுால் இவருக்குப் பேரும் புகழும் தேடித்தந்துள்ளது.
இவ்வேளையில் பேராசிரியர் அவர்களின் மாணவனான பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள், பேராசிரியரின் நினைவாகப் பண்டைய ஈழத்தில் தமிழர் - ஒரு பன்முகப் பார்வை என்ற கருத்துரை வழங்க, அது இங்கே “ஈழத்தமிழர் தொன்மை” என்ற தலைப்பில் நூலுருவில் ஆக்கம் பெறுகிறது. தமிழ்த் தேசியத்துடனும், தமிழ் வரலாற்றோடும் ஈடுபாடுடைய ஒருவர் இத்தகைய ஆக்கத்தைத் தருவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்றால் மிகையாகாது.
பேராசிரியர். பொ.பாலசுந்தரம்பிள்ளை, துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
21.05. 2001.

Page 6
நான் அறிந்த சிற்றம்பலம்
அராலியில் 01.10.1941இல் பிறந்த பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தமது ஆரம்பக் கல்வியை அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லுாரியிலும் பயின்றார். பின்பு 1961இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றார். 1965இல் இப்பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்டத்தினைப் பெற்றார். பின்னர் 1975இல் அப்போதைய யாழ்ப்பாண வளாகத்தில் வரலாற்றுத்துறையில் துணைவிரிவுரையாளராக இணைந்தார். 1980இல் பூனாப் பல்கலைக்கழகம் இவர் சமர்ப்பித்த ‘ஈழத்துப் பெருங்கற்காலப் பண்பாடு’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரைக்குக் கலாநிதிப் பட்டமளித்தது.
1994இல் விசேட தகைமை அடிப்படையில் வரலாற்றுத்துறையின் இணைப்பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற இவர், 1996இல் இத்துறையின் பேராசிரியராகவும் நியமனம் பெற்று. ஒன்றரைத் தசாப்தங்களுக்கு மேலாக இத்துறையின் தலைவராகவும் கடமையாற்றி வருகின்றார். அத்துடன் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வரலாறு, தொல்லியல் ஆகிய கற்கை நெறிகளை ஈழத்துப் பல்கலைக்கழகங்களான கொழும்பு, பேராதனை. வித்தியாலங்கார, யாழ்ப்பாணம் ஆகியவற்றிற் போதித்த அனுபவமுடைய இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமைமிக்க இவர் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை உள்ளூர், சர்வதேச
VI

சஞ்சிகைகளிலும் வெளியிட்டுள்ளதோடு, பல சர்வதேச மகாநாடுகட்குத் தலைமை தாங்கிக் கட்டுரைகளும் வாசித்துள்ளார். இவரது நுால்கள் பல யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பண்டைய தமிழகம், யாழ்ப்பாணம் - தொன்மை வரலாறு, இந்து சமய வரலாறு பாகம் - 1 ஆகியவை இவரது ஆக்கங்கள் ஆகும். யாழ்ப்பாண இராச்சியம் இவர் பதிப்பித்த நுாலாகும். தற்போது ஈழத்தமிழர் வரலாறு பற்றிய ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆய்வுகள் வளம்பெறவும் பலவாறு உழைத்தவர். கலைப்பீடச் சஞ்சிகையாகிய ‘சிந்தனை நிதி நெருக்கடி காரணமாகப் பல ஆண்டுகளாகச் செயலிழந்த நேரத்தில் அதன் ஆசிரியப் பொறுப்பைத் துணிவுடன் ஏற்றுப் பல்வேறு பொது ஸ்தாபனங்கள் அளித்த நிதி உதவியுடன் இதனை இயங்கச் செய்து இதன் எட்டு இதழ்களையும் தொடர்ந்து வெளிக் கொணர்ந்த பெருமை இவருக்குண்டு. யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் ஆயுட் கால உறுப்பினராகத் திகழும் இவர், கலைப்பீட ஆங்கிலச் சஞ்சிகையாகிய The Sri Lanka Journal of South Asian Studies gait ஆசிரியராக 2000 ஆம் ஆண்டிலிருந்து கடமையாற்றுகின்றார்.
அன்றைய யாழ்ப்பாண வளாகத்தில் முதல் முதலாக ஆசிரிய சங்கம் அமைக்கப்பட்ட போது அதன் அமைப்பாளராகக் கடமை ஆற்றிப் பின்னர் நெருக்கடியான காலகட்டங்களில் இதன் காரியதரிசி, தலைவர் ஆகிய பதவிகளைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொறுப்பேற்றுத் திறம்படக் கருமம் ஆற்றியவர் இவர் ஆவார்.

Page 7
பாலசிங்கம் மாணவர் விடுதியின் மேற்பார்வை யாளராகவும், இந்து மன்றப் பெரும் பொருளாளராகவும் பல ஆண்டுகள் செயலாற்றியவர். சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்ட இவர், பரமேஸ்வரன் ஆலயப் புனருத்தாரணப் பணியின் மூலகர்த்தாவாக விளங்கி இன்று பரமேஸ்வராக் கல்லுாரி இயக்குநர் சபை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை ஆகியவற்றின் உறுப்பினராகவும் திகழ்கின்றார்.
பேராசிரியர். செ. பாலச்சந்திரன்,
கலைப்பீடாதிபதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
21.05.2001.

பாராட்டுரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் சி.க.சிற்றம்பலம் அவர்களால் ஆக்கப்பட்டிருக்கும் “ஈழத் தமிழர் தொன்மை” என்ற இந்த நுால் காலத்தின் நன்கொடை. தமிழ் ஞாலத்தின் ஒளி விளக்கு.
இலங்கை வரலாறு என்பது பண்டைத் தமிழக வரலாற்றின் ஒரு தொடர்ச்சிதான் என்பதையும், இன்று அங்கு வாழும் தமிழர்கள் மட்டுமல்ல. சிங்களவரின் மூதாதையரிலும் பெரும்பான்மையினர் தமிழகத்திலிருந்து சென்றவர்கள்தாம் என்பதையும் நிலவியல், மொழியியல், மரபணுவியல், கல்வெட்டியல் ஆதாரங்களைக் கொண்டு உலகம் ஒப்புக்கொள்ளுமாறு இந்நுாலின் மூலம் நிறுவியிருக்கிறார் பேராசிரியர் சிற்றம்பலம்.
சிங்களவரின் மூதாதையராக 'மகாவம்சம் காட்டும் விஜயனும், அவனுடைய தோழர்களும் லாலா தேசத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு ஏறிவந்த கப்பல். இலங்கையில் தரைதட்டிக் கரையேறியபோது, அவர்களுக்குப் புகலிடமளித்தவர் இயக்கயட்சிப் பெண்ணரசி
குவெய்னி’ என்றே மகாவம்சம் கூறுகிறது.
அப்பெயர் குவி + எய்னி - குவெய்னி அதாவது அழகெல்லாம் ஒருங்கு திரண்டவள் என்று பொருள்படும் ஒரு துாய தமிழ்ச் சொல் என்பார் பன்மொழிப்புலவர் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர். அதற்கு வலுச்சேர்ப்பதுபோல் அக்காலத்தில் அங்கு வழங்கிய ‘எலு’ எனும் மொழி கொடுந்தமிழின் ஒரு கூறுதான் என்கிறார் இந்நூலில் பேராசிரியர் சிற்றம்பலம்.
மேலும், அந்த விஜயன் குவெய்னியை ஏமாற்றி
XI

Page 8
அரசுரிமையைப் பெற்றாலும், அவனும் அவன் தோழர்களும் பாண்டிய நாட்டிலிருந்து அரசகுலப் பெண்களை வரவழைத்து மணந்து கொண்ட பின்பே அங்கிருந்த மக்கள் அவர்களை ஏற்றார்கள் என்பதும் தமிழ்நாட்டுடனான குருதித் தொடர்பைப் புலப்படுத்துவதாகும்.
தவிரவும், இன்று அங்குப் பரவியுள்ள தேரவாத பெளத்த மதமும் தமிழ்நாட்டில் பெளத்தம் பரவியிருந்த காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்து அங்கு நேரடியாகப் பரவியதே என்பார் வரலாற்றறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி. மற்றப்படி பெளத்தம் வடஇந்தியாவிலிருந்து அங்கு நேரடியாகச் சென்று பரவியது என “மகாவம்சம் கூறுவது தமிழ்நாட்டின் மீது வெறுப்பையும். பகையுணர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே இட்டுக்கட்டிய கதை என்பது அவருடைய ஆராய்ச்சி முடிவாகும்.
ஏனெனில், தமிழ்நாட்டில் பெளத்தம் அழிந்து மீண்டும் சைவ, வைணவ சமயங்கள் தழைத்த காலத்தில், இலங்கையிலும் அது போன்ற மதமாற்றம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற பாதுகாப்பு உணர்ச்சியால், அன்று தமிழ்நாட்டில் எஞ்சியிருந்த பெளத்தர்களின் துணையுடன் எழுதப்பட்டதே ‘மகாவம்சம் என்பதும், அதன் பல பகுதிகள் அன்று தமிழ்நாட்டில் நாகபட்டினத்திலிருந்த ‘நாகவிகாரையில் வைத்து எழுதப்பட்டவைதாம் என்பதும் அறிஞர் வேங்கடசாமி ஆராய்ந்து நிலைநாட்டியிருக்கும் செய்தியாகும்.
பேராசிரியர் சிற்றம்பலத்தின் இந்த நூலைப் படித்தபோது மயிலை சீனி.வேங்கடசாமியின் ஆய்வு உறுதிப்படுவதை உணர முடிந்தது.
மகாவம்சத்தின் இன்னொரு கூற்று அனுராதபுரத்திலிருந்து ஆட்சிபுரிந்த இலங்கையின் புகழ்வாய்ந்த மாமன்னன் எல்லாளனை. அவன் தமிழன் என்பதால் “சோழ நாட்டு
XII.

இளவரசன்’ என்பதாகும். அதாவது அவனை அந்நியன் என்று காட்டுவதற்காக மகாவம்சம் அப்படிச் சொல்லியுள்ளது.
ஆனால், தமிழ் இலக்கியங்களிலோ, கல்வெட்டுகளிலோ, சோழர்கள் வெளியிட்டுள்ள மெய்க்கீர்த்திகளிலோ, சாசனங்களிலோ அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஆகவே, எல்லாளன் முழுக்க முழுக்க ஈழத்தமிழ் மன்னன்தான் என்பது புலனாகிறது. அவன் காலத்தில் இலங்கையில் மேலும் 32 தமிழரசர்கள் இருந்தார்கள். அவர்களையெல்லாம் வென்ற பிறகுதான் துட்டகைமுனுவால் அரியணை ஏற முடிந்தது என இந்நூலில் முனைவர் சிற்றம்பலம் எடுத்துக்காட்டியிருப்பது அதை இன்னும் உறுதிப்படுத்துவதாகும்.
இப்படி இலங்கையில் மறைக்கப்பட்ட - திரிக்கப்பட்ட தமிழ் வரலாற்றுத் தடயங்களை வெளியே கொண்டுவரும் ஒரு வெளிச்சக் கைகாட்டியாகவே இந்நூல் திகழ்கிறது.
“விஜயன் தொட்டு தேவநம்பியதீசன் வரை ஆட்சி செய்த மன்னர்களின் பெயர்கள் சிலவற்றில் ‘பண்டு’ என்ற வடிவம் காணப்படுவதும். வரலாற்று ஆசிரியர்கள் இப் “பண்டு’ என்ற பதத்தை வடநாட்டிலுள்ள புத்தரின் வமிசத்துடன் இணைத்தாலும் கூடத் தொல்லியல் பின்னணியில் நோக்கும்போது. இவ்வடிவம் பாண்டியரைக் குறித்தது எனலாம்” என்பது போன்ற இந்நூலின் எடுத்துக் காட்டுகள் முழு இலங்கையின் வரலாறும் எங்கிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதை இனங்காட்டுவதாகும்.
தடுமாறும் தமிழர் வரலாற்றாய்வில், இடறும் இலங்கை வரலாற்றாய்வில் புதிய தடம்பதித்து, நெடுநாளைய வளைவுகளை - பள்ளங்களை நிமிர்த்தவும் உயர்த்தவும்
XIII

Page 9
வழிகாட்டியிருக்கும் இந்நூலாசிரியர் முனைவர் சிற்றம்பலம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருக்குத்
இந்நுால் ஈழத்தமிழர் மட்டுமன்றி உலகத்தமிழர் ஒவ்வொருவரும் படித்துப் பயன்பெற வேண்டிய பாங்குடையதாகும்.
முடிவாகப் பேராசிரியர் அவர்கள் தமிழகத்திற்கும் புதியவரல்லர் என்பதையும் இங்கே சுட்டிக் காட்டுவதும் பொருத்தமாகின்றது. சங்ககாலத் தமிழக வரலாறு எவ்வாறு if88 ଗtଉଁ த் தொல்லியல் கண்ணோட்டத்தில் ப்ச்சிட் புலமையுடன் மிகவிரிவான முறையில் ‘பண்டைய தமிழகம் என்ற பெருநூலாக ஆக்கித்தந்த பெருமையும் இவருக்குண்டு. இந்நூல் அப்பெருமைக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும். முனைவர். அரு. கோபாலன். சென்னை.
2105.2O01.
XV.

என்னுரை
இந்திய உபகண்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும தமிழகம் மிக நீண்ட ஒரு வரலாற்றுப் பாரம்பரியத்தை உடையது. இற்றைக்குச் சுமார் ஐந்து இலட்சம் வருடங்களுக்கு முன்னரே இப்பகுதியில் கற்கால மனிதனின் நடமாட்டம் காணப்பட்டது. இக்கற்காலம் தொடக்கம் சங்க காலம் வரையிலான தமிழக வரலாற்றை நிரைப்படுத்துவதற்கான தொல்லியற் சான்றுகள் உள.
சங்ககாலத்தின் ஆரம்பம் பற்றி அறிஞரிடையே கருத்து வேற்றுமைகள் உளவெனிலும், அண்மைக்கால ஆய்வுகள் கி.மு.500ஆம் ஆண்டினையே இது தோற்றம் பெற்ற காலமாகக் கொள்ளலாம் என எடுத்துக் காட்டியுள்ளன. சங்க காலத்துடனே தான் தமிழகத்தின் வரலாற்றுக் காலமும் ஆரம்பமாகின்றது.
சங்க இலங்கியங்கள் தமிழக வரலாற்றுக்கால நாகரிகத்தையே சித்தரிக்கின்றன. இவை எடுத்தியம்பும் அரசியல், சமூக, பொருளாதார அமைப்பினை உற்று நோக்கும்போது நாகரிகத்தின் அடிப்படை அமிசங்களாகிய வாழ்வு இலக்கியம், எழுத்து, நாணயம், வாணிபம், கலை போன்ற இன்னோரன்னவை இக்காலத்தில் வளர்ச்சி பெற்றதைக் காணமுடிகின்றது.
எழுத்தின் ஆரம்பத்தை வரலாற்றுக் காலத்தின் ஆரம்பமாகக் கொள்ளும் அறிஞர்கள், இதற்கு முந்தைய காலத்தை வரலாற்றுக்கு முற்பட்ட காலமென (Pre-historic period) அடையாளங் காண்பர். இது வரலாற்றுக்கு முற்பட்ட கற்கால மக்களின் வாழ்க்கையை எடுத்தியம்புவதாகும். எனினும் இக்கற்கால மக்களைப் போலன்றி வரலாற்றுக்கால நாகரிகத்திற்கு
XV

Page 10
(Historic period) வழிவகுத்த காலப்பகுதியை வரலாற்றுதய 4таоupта (Proto-Historic Period) GTGI 9феђfвот 960Tub கண்டுள்ளனர்.
இக்காலத்தில் அநேகமாக 500 ஆண்டுகளில் ஏற்பட்ட மனித வளர்ச்சிகள் தான் வரலாற்றுக்கால நாகரிக மலர்வுக்கு வழிவகுத்தன எனலாம்.
தென் இந்தியா, ஈழம் ஆகிய பகுதிகளில் இக்காலத்திற்குரிய கலாசாரம் இரும்புக்கால கலாசாரம் எனவும். பெருங்கற்காலக் கலாசாரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இரும்பே பிரதான பயன்பாட்டுப் பொருளாக இக்காலத்தில் விளங்கியது. இறந்தவர்களுக்குப் பெரிய கற்களை வைத்துக் கொண்டு ஈமச்சின்னங்களை அமைத்ததால் இது பெருங்கற்காலம் எனவும் பெயர்பெற்றது.
கற்களில் மட்டுமன்றிப் பெரிய தாழிகளிலும் இக்கலாசாரத்திற்குரிய மக்கள் இறந்தவர்களை அடக்கஞ் செய்யும் வழக்கும் காணப்பட்டது. இக்காலத்தில் ஏற்பட்ட துரித வளர்ச்சியை இம்மக்கள் விட்டுச் சென்ற வசிப்பிடங்கள். ஈமச்சின்னங்கள். வயல்கள். குளங்கள் ஆகியவற்றில் கிடைத்த தடயங்கள் உறுதி செய்கின்றன. பல்வகை இரும் பாயுதங்கள். மட்பாண்டங்கள், மட்பாண்டங்களிற் காணப்படும் குறியீடுகள் (கிராபிடி) பல்வகை மணிகள். அலங்காரப் பொருட்கள். ஒவியங்கள் ஆகியன இக்கலாசாரத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டி நிற்கின்றன.
திராவிட மொழிகள் பேசப்படும் மாநிலங்களான ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகியவற்றிற் கிடைக்கும் சான்றுகள் இன்றைய
XVI

திராவிடமொழிகளைப் பேசுவோர் இக்கலாசார வழிவந்தோரே என்பதைப் புலப்படுத்தி நிற்கின்றன.
எனினும், திராவிட மொழிகள் பேசப்படும் மாநிலங்களில் முதல் முதலாக இலக்கியம் படைத்து நாகரிகச் சிறப்புக்கொண்ட மாநிலமாகத் தமிழகமே விளங்கியுள்ளது என்றால் மிகையாகாது. மரபு வழிக் கதைகள் பாண்டியர் அமைத்த தமிழ்ச் சங்கங்களான தென்மதுரை, கபாடபுரம் ஆகியவை கடற்கோள்களினால் அழிந்ததையும் இறுதியாக மூன்றாவது தமிழ்ச் சங்கம் தற்கால மதுரையில் அமைந்ததையும் எடுத்துக் கூறுகின்றன. தமிழ் நூல்கள் இக்கடற்கோள்களைப் “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள” என அழைக்கின்றன. பாண்டிநாடே செந்தமிழ் மொழி வழங்கிய பிரதேசமாகும். பழந்தமிழகத்தின் ஏனைய பகுதிகள் கொடுந்தமிழ் மொழிகள் வழக்கிலிருந்த பிரதேசங்களாகும்.
மொழி மட்டுமன்றித் தமிழகத்தில் காணப்படும் மிகப் பழைய கல்வெட்டுகளாகிய பிராமிக் கல்வெட்டுகள் காணப்படும் பிரதேசமும் பாண்டி நாடேயாகும். இத்தகைய வரிவடிவம் வடஇந்தியப் பிராமி வரிவடிவத்திலிருந்து வேறுபட்ட தனிச்சிறப்புகளைக் கொண்டிருந்தது.
இதனால் இதனைத் திராவிடி/தாமிழிதமிழ்-பிராமி எனவும் அறிஞர் அழைப்பர். இவ்வரிவடிவந்தான் கால வெள்ளோட்டத்தில் வடஇந்தியாவிலிருந்து அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் புகுந்த பிராமி வரிவடிவத்துடன் சங்கமமானது.
வடஇந்திய முத்திரை நாணயங்களைப் போலவே
தமிழகத்திற் கிடைத்த முத்திரை நாணயங்களும் பழைமை வாய்ந்தவை. அத்துடன் மன்னரின் பெயர். தலை ஆகியன
XVII

Page 11
பொறித்து முதல்முதலாக நாணயங்களை வெளியிட்ட பெருமையும் பாண்டியருக்கே உளது. இதனால் பழந்தமிழகத்தின் நாகரிகத்துகள் தோன்றிய இடமாகப் பாண்டி நாடே கொள்ளப்படுகின்றது.
இதனால் பிற திராவிடமொழிகளைப் பேசும் மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம் ஆகியவற்றைவிடத் தமிழகத்தை (பண்டைய சேர நாடாகிய தற்காலக் கேரளம் உட்பட) இட்டுச் சென்ற பிரதான காரணி கடல் வாணிகமே எனப் பிரபல அமெரிக்க மானிட இயலாளரான பேராசிரியர் மலோனி கருதுகின்றார்.
தமிழகத்திற் கிடைத்த வாசனைத் திரவியங்கள். கடலில் விளைந்த முத்துக்கள் என்பன பிற நாட்டு வணிகரை இப்பகுதிக்கு ஈர்த்தன. இவ்வணிகத்தொடர்பால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியும் அதன் வழி வந்த கலாசாரப் பரிமாற்றமும் விவசாய சமூக அமைப்பு நகர நாகரிகச் சிறப்பு அம்சங்களைப் பெற்றுத் துரித வளர்ச்சி காண வழிவகுத்தது.
இத்தகைய வாணிகத்தொடர்பு பாக்கு நீரிணையின் இருகரைகளிலும் இருந்த பாண்டிநாடு- ஈழம் ஆகிய பிரதேசங்களைத் துரித நாகரிக வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது என்பதும் பேராசிரியர் மலோனியின் கருத்தாகும்.
ஈழத்தைப் பொறுத்த மட்டில் கற்கால மனிதனின் நடமாட்டம் இற்றைக்குச் சுமார் 125,000 வருடங்களுக்கு முன்னர் தான் காணப்படுகின்றது. எனினும் தமிழகத்தைப் போலன்றி ஈழத்தில் ஏற்பட்ட ஆதிக் குடியேற்றம் பற்றிய ஐதீகங்கள் பெளத்த மத நுால்களாகிய தீபவம்சம், மகாவம்சம் ஆகியனவற்றில் உள.
கி.மு 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கி.மு.250)
XVIII

பெளத்தமதம் இங்குப் புகுந்தபோது இதனைத் தழுவிய மக்கள். நாடு ஆகியவை பற்றி பல்வகையான ஐதீகங்கள் இம்மதத்தினரால் உருவாக்கி வளர்க்கப்பட்டன. இவற்றில் ஒன்றுதான் ஈழத்தின் ஆதிக்குடிகள் அமானுஷ்யர்கள் என்பதாகும்.
ஆனால் தொல்லியல் ஆய்வுகள் கற்கால மக்களே இவ்வாறு இந்நுால்களில் அமானுஷ்யர்களாக விளிக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்துள்ளன. மற்றைய ஐதீகம் சிங்கள மக்களது மூதாதையான விஜயனது குடியேற்றம் பற்றியதாகும். சுமார் கி.மு.500 ஆம் ஆண்டளவில் வடஇந்தியாவிலிருந்து ஈழம் நோக்கி ஏற்பட்ட புலப்பெயர்வாக இது கருதப்படுகின்றது.
இவ்வைதீகத்திற்கூட, விஜயன் பாண்டிநாட்டு இளவரசியை மணந்த நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளதெனினும் இப்பாளி நுால்களில் தமிழர்கள் பின்வந்த குடிகளாகவும், சிங்கள அரசின் அரசதிகாரத்திற்குப் பங்கம் விளைவிப்பவர்களாகவும், ஆக்கிரமிப்பாளராகவும், தவறான சமய நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பவர்களாவும் விளிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய வரலாறே பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக் கழகங்களிலும், சர்வதேச அரங்கிலும் முன்னிலை பெற்று வந்துள்ளது.
ஆனால் கடந்த கால் நுாற்றாண்டாக ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மேற்கூறிய கருதுகோள்கள் வெறும் ஐதீகங்களே என்பதை உறுதி செய்துள்ளன. தமிழகத்தைப் போலவே ஈழத்தின் வரலாற்றுக்கால நாகரிகத்திற்கும் வித்திட்டது பெருங்கற்காலக் கலாசாரமே என்பது இப்போது உறுதியாகி விட்டது.
சிங்கள மக்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக நம்பப்பட்ட குடியேற்ற மையங்கள். ஈமச்சின்னங்கள்
XIX.

Page 12
காணப்படும் இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் அகழ்வுகளும் கி.மு.900 ஆண்டளவில் இக்கலாசாரத்திற்குரிய திராவிட மக்கள் ஈழத்திற் குடியேறியதை உறுதி செய்துள்ளன.
அகழ்வுகளின் போது கிடைத்த மட்பாண்டங்கள், அவற்றிற் காணப்படும் குறியீடுகள். இரும்பாயுதங்கள். மணிவகைகள் ஆகியன தென்னிந்திய, குறிப்பாகத் தமிழகப் பெருங்கற்காலக் கலாசாரத்தின் படர்ச்சியே ஈழத்தின் பெருங்கற்காலக் கலாசாரம் என்பதை உறுதிசெய்துள்ளன. மானிட இயல் மரபணு இயல் சான்றுகளும் இக்கருத்துக்கு மேலும் உரம் சேர்க்கின்றன. பாண்டி நாட்டைப் போன்றே ஈழத்திலும் பிராமி வரிவடிவம் சமகாலத்தில் வழக்கில் வந்துவிட்டது. இதில் இருபடைகள் காணப்படுகின்றன. ஒன்று பழந்தமிழ் வரிவடிவம் மற்றது பெளத்தத்துடன் அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் புகுந்த வடஇந்தியப் பிராமி வரிவடிவம் ஆகும். பழந்தமிழ்ப் பிராமி வரிவடிவம் காணப்பட்டதை மேலும் உறுதி செய்யும் சான்றுகளாக இவற்றிற் காணப்படும் திராவிடப் பதங்களாகிய பருமக(பெருமகன்), அய(ஆய்). வேளுவேள், பரத பத(பரதவர்) போன்றன நாடெங்கிலும் காணப்படும் இக்கல்வெட்டுகளில் காணப்படுவதானது ஈழம் முழுவதும் திராவிட மொழிக் கூட்டத்தினர் வியாபித்திருந்தமையைப் புலனாக்குகின்றது.
பெளத்த மதத்திற்கு அளிக்கப்பட்ட தானங்களை எடுத்தியம்பும் இக்கல்வெட்டுகள் பெருங்கற்காலக் கலாசார மையங்களுக்குக் கிட்டவே காணப்படுகின்றன. அத்துடன் பெருங்கற்காலப் பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகள் பலவும் இப்பிராமிக் கல்வெட்டுகளில் குறியீடுகளாகக் காணப்படுவதானது திராவிட மொழிகளைப்
XX

பேசிய மக்கட் கூட்டத்தினரின் ஒரு பகுதியினரே பெளத்தத்தைத் தழுவியதை எடுத்துக்காட்டுகின்றது.
தமிழ்-சிங்கள மொழிகளுக்கிடையே வசன அமைப்பில் காணப்படும் ஒற்றுமையானது தற்காலச் சிங்கள மொழியின் மூதாதை மொழி எனக் கூறப்படும் எலு மொழி பழந்தமிழ் மொழிகளில் ஒன்றென்றே கருத இடமளிக்கின்றது.
பாண்டி நாட்டில் வழக்கிலிருந்த செந்தமிழ் மொழியும். கொடுந்தமிழ் மொழியாகிய எலுவும் ஈழத்திற் காணப்பட பெளத்தத்துடன் வந்த பிராகிருத, பாளி, வடமொழி ஆகியனவற்றின் செல்வாக்கினால் பழந்தமிழ் மொழியாகிய எலு சிங்கள மொழியாக வளர்ச்சி பெற்றது. சிங்கள வரிவடிவம் கி.பி.7ஆம் நுாற்றாண்டில் வளர்ச்சி பெற, இலக்கணம் கி.பி. 13ஆம் நுாற்றாண்டில் படைக்கப்பட்டது.
மேற்கூறிய கருதுகோளுக்கு அணி சேர்ப்பனவாகச் சிங்களதமிழ் மொழிக் கலாசாரங்களுக்கிடையே நிலவும் அடிப்படை ஒற்றுமைகள் அமைகின்றன. இவற்றில் ஒரே தன்மை வாய்ந்த உறவு முறைப் பெயர்கள் ஒன்றாகும். இவ்வாறேதான் பெளத்த மதத்தைத் தழுவ முன்னர் இந்துக்கடவுளரை இவர்கள் வழிபட்டதை எடுத்துக் காட்டுவனவாகப் பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படும் இந்துக்கடவுளரின் பெயர்களும் இன்றைய சிங்கள மக்களின் நாட்டார் வழிபாட்டில் இடம்பெறும் இக்கடவுளரும் விளங்குகின்றன. இரு இனங்களுக்குமிடையே சாதி அமைப்பில் காணப்படும் அடிப்படை ஒற்றுமை மற்றொன்றாகும்.
மேற்கூறிய கருத்துகள் யாவும் 1980இல் ஈழத்துப் பெருங்கற்காலம் பற்றிய நமது கலாநிதிப் பட்ட ஆய்வில் இடம் பெற்றுள்ளன. இதன் பின்னர் நாமும், பிற
ΧΧΙ

Page 13
அறிஞர்களும் மேற்கொண்ட ஆய்வுகள் நமது கருதுகோள்களை மேலும் உறுதி செய்துள்ளன.
பொதுவாகவே உபகண்டத்தின் அருகில் இருக்கும் தீவுகளில் உபகண்ட மக்கள் குடியேறுவது வழக்காகும். எனினும், இத்தகைய புலப்பெயர்வில் ஈழத்தின் எதிர்கரையிலுள்ள தமிழகத்தின் பங்குபற்றி ஆய்வாளர்கள் ஆழமாக ஆராயாது விட்ட பெருங்குறையை நிவர்த்தி செய்வதே இச்சிறு நூலாகும்.
அண்மைக்காலச் சான்றுகள் தமிழகத்தைப் போலவே, ஈழத்தின் அரச உருவாக்கமும், சமூக, பொருளாதார வளர்ச்சியும் பழைமை படைத்ததை உறுதி செய்தாலும் கூட. வடஇந்தியாவிலிருந்து பெளத்தத்துடன் வந்து கலந்த கலாசாரப் பரிமாற்றம் பழந்தமிழ்க் கலாசாரத்தின் ஒரு பகுதியாகிய தற்காலச் சிங்கள மக்களின் கலாசாரத்தை உருமாற வைத்து, தனித்துவமான பாதைக்கு இட்டுச் சென்றதோடு தனித்துவமான வரலாற்றுப் பாரம்பரியத்தையும் படைக்க வழிசமைத்து விட்டது.
எவ்வாறாயினும், இச்சிறுநுால் தமிழகத்தவர் ஈழத்தமிழரின் தொன்மை பற்றி அறிய உதவும் ஒரு திறவுகோலாக அமையும் என்பது நமது எதிர்பார்ப்பாகும். அதுமட்டுமன்றி இச்சிறு நுால் தமிழகத்திலிருந்து வெளிநாடுகள் நோக்கி ஏற்பட்ட புலப்பெயர்வுகளுக்கும், ஈழத்தமிழகம் நோக்கிய புலப்பெயர்வுக்கும் இடையே நிலவும் வேறுபாட்டையும் தெளிவாக உணர்த்தும் என்பதும் நமது நம்பிக்கையாகும்.
இந்நுால் பற்றிவரும் விமர்சனங்கள் ஈழத்தமிழரின் வரலாறு பற்றி ஆய்வை மேற்கொள்ளும் நம்மை நெறிப்படுத்த உதவும் என்பதும் நமது நம்பிக்கையாகும்.
XXII

நிறைவாகத் தமிழகம் வந்தபோது ஈழத்தமிழரின் தேசபிதாவாகிய தந்தை செல்வநாயகத்தின் அருமை மைந்தனாகிய திரு.சா.செ.சந்திரகாசன் அவர்கள் இதனை நுாலாக வெளியிட விரும்பினார். அவருக்கு நமது நன்றிகள். ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக நிறுவனரான இவர் திக்கற்ற ஈழ ஏதிலியருக்கு ஒரு கற்பகத் தருவாகும்.
இந்நிறுவன வெளியீடாக வரும் இந்நுாலிற்கு பாராட்டுரை நல்கிய முனைவர் அரு.கோபாலன் அவர்கட்கும், பதிப்பின் போது உதவிய நண்பர்களான திருவாளர் சுந்தரபாண்டியன், திருவாளர் உமாபாஸ்கரன் ஆகியோருக்கும் உளமார்ந்த நன்றிகளாகும்.
பேராசிரியர் சி.க. சிற்றம்பலம். வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்,
21.O.5.2001
XXIII

Page 14
இந்நுாலாசிரியர் பற்றி
பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் 01.10.1941 அன்று ஈழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அராலியிற் பிறந்தவர். வரலாற்றில் பி.ஏ. பட்டத்தையும். தொல்லியலில் எம்.ஏ. பி.எச்.டி. பட்டங்களையும் பெற்றவர். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்திலுள்ள கொழும்பு பேராதனை. வித்தியாலங்கார, யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக் கழகங்களில் வரலாறு. தொல்லியல் ஆகிய பாடநெறிகளைக் கற்பித்துவரும் அனுபவம் மிக்கவர்.
1975ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கடமைபுரியும் இவர் 1996ஆம் ஆண்டு இதே பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகி அன்று முதல் இப்பதவியை வகித்து வருகின்றார்.
1980இல் இவர் எழுதிய ஈழத்துப் பெருங்கற்காலப் பண்பாடு என்ற ஆராய்ச்சிக்கட்டுரைக்கு இந்தியாவில் உள்ள புனே பல்கலைக்கழகம் முனைவர் பட்டத்தினை அளித்தது. ஈழத்தின் ஆதிக்குடியேற்றம் பற்றி முதல் முதலாகத் தொல்லியல் நோக்கில் வெளிவந்த ஆராய்ச்சிக் கட்டுரை இஃதாகும். அத்துடன் இன்று சிங்கள-தமிழ் மொழிகளைப் பேசுவோர் தென்னிந்தியாவிலிருந்து குடியேறினர் என்பதும் இவரது கருதுகோளாகும். பெளத்தத்துடன் வந்த பிராகிருத, பாளி மொழிகளின் தாக்கத்தினால் சிங்கள மொழியின் மூலமொழியாகிய எலு சிங்களமாகத் திசைதிரும்பியது என்பதும் இவரால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இம்மொழியைப் பேசியோர் தமிழகத்திலிருந்து வந்ததனை உறுதிப்படுத்தும் விதத்தில் தமிழகத்தை ஒத்த அரச உருவாக்கமே ஈழத்தில் காணப்பட்டதென்பதும்,
XXIV.

தமிழக உள்ளூர் நிருவாகத்தில் பங்குகொண்ட பெருமகன்கள் மட்டுமன்றி. ஆய், வேள் போன்ற சிற்றரசர்களும், பரதவர் போன்ற குலங்களும் ஈழத்தில் காணப்பட்டதும் இவரால் முன்வைக்கப்பட்ட பிற கருதுகோள்களாகும்.
ஈழத்தமிழர் வரலாற்றைக் கடந்த கால்நுாற்றாண்டுகளுக்கு மேலாக ஆராய்ந்து பல்வேறு கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டு வந்துள்ள பேராசிரியர் அவர்கள். தமது ஆய்வின் பெறுபேறுகளைப் பின்வரும் நுால்களாக வெளியிட உள்ளார். அவையாவன,
1) ஈழத்தமிழர் வரலாறு - ()
வரலாற்றுதய காலம் கி.மு.900 -500 வரை 2) ஈழத்தமிழர் வரலாறு - (I) வரலாற்றுக்காலம் கி.மு.500-கி.பி1000வரை 3) ஈழத்தமிழர் வரலாறு - (I)
கி.பி.1000-கி.பி.1500வரை 4) ஈழத்தமிழர் வரலாறு (V)
கி.பி1500-கி.பி 2000வரை
XXV

Page 15
நுால் மலர உதவிய ஏதிலி
மகளிர் மாண்பு
உற்றார் உறவினரை இழந்து வாழ வழியற்று தடுமாறும் ஈழ ஏதிலிப் பெண்களின் நலன் நாடி அவர்கள் வருவாய் ஈட்ட ஆயத்த ஆடை தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தகைமைப்படுத்தல் பயிற்சிகளை வழங்கி வரும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் மகளிர் மேம்பாட்டு பகுதியினர் ஈட்டிய நிதியில் இருந்து இந்நுால் வெளியீட்டுக்கான முற்பணம் பெறப்பட்டுள்ளது. இந்நுால் விற்பனையில் இருந்து அப்பணம் மீளளிப்புச் செய்யப்படும்.
O
நுாலாக்க உதவி
மெய்ப்பு புலவர். இலமா தமிழ்நாவன்
ஓவியம் திரு. புவன்பாபு
கணனி அச்சுக்கோர்ப்பு : திரு.உமா.பாஸ்கரன்
ஒளியச்சு திரு.சி.அருட்சோதி
ஒருங்கிணைப்பு : திரு.மு.மோகனசுந்தரபாண்டியன்
XXVI

1. ஈழத் தமிழரின் தொன்மை பற்றிய ஆய்வு
“ஈழத்தில் தமிழ் மக்களின் ஆதிக் குடியேற்றங்கள் பற்றிய ஆய்வானது பல்வேறு காரணங்களால் சிரமத்திற்குட்பட்டுள்ளது. முக்கியமாகப் பண்டைய வரலாற்றைக் கற்கும் ஏனைய மாணவர்களைப் போலவே நாமும் மூலாதாரங்களின் பற்றாக்குறை பற்றிய பிரச்சினையை எதிர்நோக்குகின்றோம். பாளி, சிங்கள இலக்கியங்கள் நம்பகரமானதும், பெருமளவுக்குப் போதுமானதுமான விதத்தில் அரசியலும், ஓரளவுக்குச் சமயமும் சம்பந்தமான தெர்டர்ச்சியான வரலாற்றை வியக்கத்தக்க விதத்தில் அளித்த போதிலும், ஈழத் தமிழரின் ஆதிக் குடியேற்றம் பற்றிய எமது ஆய்வுக்கு அவற்றின் பங்களிப்பு சொற்பமேயாகும்.
சிங்கள அரசியலில் அல்லது சமய விவகாரங்களில் தமிழரின் நடவடிக்கைகள் பாதிப்பை ஏற்படுத்திய போதுதான் தமிழர் பற்றி இவ்விலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ் வரலாற்று நுால்களைப் பொறுத்தமட்டில், தற்போது கிடைக்கும் இலக்கியச் சான்றுகள் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் இராச்சியம் (யாழ்ப்பாண இராச்சியம்) உருவாக்கப்பட்டு, ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளின் பின்னர் எழுந்தவையே. இவற்றில் கி.பி. 13ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய காலப் பகுதி பற்றிக் கூறும் பகுதிகள் (ஆதித் தமிழ்க் குடியிருப்புகள் நிறுவப்பட்ட காலப் பகுதி ஐதீகங்கள் நிறைந்தனவாய் விளங்குவதால், இவை முழுமையாக நம்பத் தகுந்தவையல்ல. தென்னிந்தியத் தமிழ் நூல்கள் ஈழத்தில் ஏற்பட்ட தமிழரின் நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடத்தக்க குறிப்புகள் எதையும் கொண்டிருக்கவில்லை. இவ்விடயம்
-1-

Page 16
தொடர்பாகத் தொல்லியல் சான்றுகள் ஊக்கமளிப்பனவாக இருந்த போதிலும், அவையும் போதுமானவை அல்ல. துரதிர்ஷ்டவசமாக எமது நாட்டின் தொல்லியல் ஆய்வில் அகழ்வாராய்ச்சி இன்னும் வளர்ச்சி அடையாத துறையாக உள்ளது. அகழ்வாராய்ச்சி வளர்ச்சியடையாத நிலையில், எமது ஆய்வுக்குப் பொருத்தமான தகவல்கள் பற்றி அறிவதற்குக் காத்திருக்க வேண்டியே உள்ளது.”
மேற்கண்ட கூற்று 1969இல், இற்றைக்கு முப்பது ஆண்டுகட்கு முன்னர் வேத்தியல் சங்கத்தின் ஈழக் கிளையில் “ஈழத்தின் ஆதித் தமிழ்க் குடியேற்றங்கள்” என்ற தலைப்பில் எம் ஆசானாகிய பேராசிரியர் கா.இந்திரபாலா அவர்கள் ஆற்றிய உரை. பின்னர், இச்சங்கத்தின் ஆராய்ச்சிச் சஞ்சிகையில் கட்டுரையாக வெளிவந்த போது அதில் இடம் பெற்றுள்ளதாகும். உண்மையில் பேராசிரியர் அவர்கள் 1965இல் “திராவிடக் குடியேற்றங்களும் யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும்” என்ற தலைப்பில் கி.பி. 13ஆம் நுாற்றாண்டு வரையிலான சான்றுகளை ஆராய்ந்து தமது கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக இலண்டன் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரையின் பொழிப்பே மேற்கூறிய கட்டுரையாகும்:
இங்கே ஒன்றை மட்டும் குறிப்பிடுதல் வேண்டும். தமிழ் என்ற எழுத்து வடிவந்தான் வடமொழியில் திராவிட எனவும். பாளி. சிங்கள மொழிகளில் தமிள/தெமள எனவும் இடம் பெற்றுள்ளது. தமிழுக்கும் ஏனைய தென்னிந்திய மொழிகளான மலையாளம், கன்னடம். தெலுங்கு போன்றனவற்றுக்கும் இடையே உள்ள உறவுகளைக் கண்ட கால்டுவெல் என்ற அறிஞர் ஒரு பரந்த அடிப்படையில் இவற்றை எல்லாம் குறிக்கத் “திராவிட மொழிகள்” என்ற பதத்தினைப் பயன்படுத்தினார். இவ்வாறே வட இந்திய
-2-

மொழிகள் “ஆரிய மொழிகள்” என அழைக்கப்பட்டன. மேலும் பேராசிரியரின் ஆராய்ச்சிக் கட்டுரை இன்று இப் பல்கலைக் கழக நுால் நிலையத்திலிருந்து மர்மமான முறையில் மறைந்துவிட்டது என்பதை 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி வெளியான “சண்டே ஒப்சேவர்” என்ற ஆங்கிலப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது.
பேராசிரியர் அவர்கள் இக்கட்டுரையில் பண்டைய ஈழத்தில் தமிழ்க் குடியேற்றங்களின் தோற்றம் பற்றியும் பின்வருமாறு விளக்கியுள்ளார். அதாவது, கிடைக்கும் மூலாதாரங்களைக் கொண்டு இதற்கான விடையைக் காண முடியாத நிலையில், இது பற்றிப்போதுமான தரவும் இல்லாத நிலையில், அதிகளவு யூகங்களின் அடிப்படையிலேதான் இவ்விடயம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் தமது ஆய்வினை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு சிலர் ஆரிய இனத்தவர் இங்குக் குடியேறு முன்னர் தமிழர்கள் இங்கு குடியேறிவிட்டனர் என வாதிட இன்னுஞ் சிலர் கி.மு. 3ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. 10ஆம் நுாற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில்தான் தமிழர்கள் குடியேற்றங்கள் இங்குக் காணப்பட்டன எனவும் வாதிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், கிடைக்கும் மிகக் குறைவான சான்றுகள் அடிப்படையில் நோக்கும் போது, வாணிப நலன்கள். அரசியல் ஆதிக்கப் படர்ச்சி ஈழத்து இராணுவத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் ஆகியவை கிறிஸ்தாப்த காலத்தில் தமிழரைத் தமிழகத்திலிருந்து ஈழத்திற்கு ஈர்த்த பிரதான காரணிகளாகும். எனினும், இத்தகைய நடவடிக்கைகள் மூலம், இக்காலத்தில் நிரந்தரமானதும். பரந்த அளவிலானதுமான தமிழ்க் குடியேற்றங்கள் இங்குக் காணப்படவில்லை. இதனால் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னர் உள்ள காலப் பகுதியிலோ,
-3-

Page 17
அன்றிக் கிறிஸ்தாப்தத்தை அண்டியுள்ள நூற்றாண்டுகளிலோ ஈழத்தில் தமிழ்க் குடியேற்றங்கள் காணப்பட்டதற்கான நம் GÖT சான்றுகள் பாளி நூல்களில் காணப்படவில்லை. தமிழர்கள் ஈழத்துவாசிகளிலிருந்து வேறானவர்கள், தனித்துவமானவர்கள் என்பதை உணர்த்தும் தமிழகத் தமிழரைக் குறிக்கும் “தமேட” என்ற பதந்தான் (கிறிஸ்துவுக்கு முந்திய ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
தொல்லியல் சான்றுகள் மட்டுமே அநேகமாகப் புத்தள மாவட்டத்திலுள்ள பொம்பரிப்பிலும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கதிரவெளியிலும் கி.மு. 2ஆம், கி.பி. 3ஆம் நுாற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழர் குடியேற்றங்கள் காணப்பட்டதை எடுத்துக் காட்டினாலும் கூடக் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களின் குடியேற்றங்கள் பற்றிய நமது அறிவு சூனியமாகவே உள்ளது என எடுத்துக் காட்டும் பேராசிரியர் கா. இந்திரபாலா அவர்கள். உண்மையில் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஓர் உறுதியான இராச்சியத்தை யாழ்ப்பாண இராச்சியம் உருவாக்கு முன்னர்த் தமிழ்க் குடியேற்றங்கள் பற்றிய ஒரு நம்பகமான வரலாற்று, மரபு தமிழர்களால் பேணி வளர்க்கப்படவில்லை என்றும் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பின்னர்தான் ஈழத்தில் குடியேறும் உறுதியான நோக்கத்திலிருந்து, தமிழகத்திலிருந்து தமிழர்கள் இவ்விடம் நோக்கிப் புலம் பெயர்வதற்கான சான்றுகள் காணப்படுவதோடு, வடகிழக்கு மாகாணங்கள் தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்கள் ஆயின எனவும் கூறி முடித்துள்ளார்.
இருந்தும், ஒரு குடியேற்றம் பற்றிய ஆய்வு வெறும் இலக்கியங்களையோ அல்லது கல்வெட்டுகளையோ மட்டும் அடிப்படையாகக் கொண்டு அமைய முடியாதென்றும். மாறாக ஒரு பன்முகப் பார்வைதான் இத்தகைய ஆய்வுக்கு மிகவும்
-4-

பொருத்தமானதொன்றாகும் என நாம் மேலே சுட்டிக் காட்டிய கட்டுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளமையும் ஈண்டு மனங்கொள்ளற்பாலது.
“எந்த ஒரு நாட்டிலும் வெளிநாட்டிலிருந்து ஏற்பட்ட ஆதிக் குடியேற்றங்கள் பற்றிய வரலாற்று ஆய்வானது பல்வகைப் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய பிரச்சினைகளை இலக்கியங்கள். சாசனங்கள் ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு தீர்க்க முடியாது. இதனைத் தீர்ப்பதில் தொல்லியல், பெளதீகம் இயற்பியல், மானிடவியல், வரலாற்றுப் புவியியல், வரலாற்று மொழியியல் ஆகியனவும் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. இப்பிரச்சினைகள், ஏனையவற்றுடன் குடியேற்ற வாசிகளின் தாயகம், புலம்பெயர்வுக்கான காரணிகள். அவர்கள் குடியேறிய பிரதேசங்கள். ஆதிக் குடியேற்றவாசிகளில் தப்பிப் பிழைத்தவர்களின் அளவு ஆகியவற்றை உள்ளடக்கும்.”
உண்மையில், நாடுகளின் வரலாறு பற்றிய ஆய்வின் ஆரம்பத்தில் கட்டுக்கதைகளும் ஐதீகங்களும்தான் அவ்வந் நாடுகளின் உண்மையான வரலாற்றுத் தரவுகள் என ஒருகால் நம்பப்பட்டு வந்துள்ளது. ஆனால், வரலாற்றில் தனியொரு ஆராய்ச்சிப் பிரிவாக அகழ்வாய்வு வளர்ச்சியடையத் தொடங்க. வரலாற்றை ஐதீகங்களிலிருந்து வேறுபடுத்தலும். இதனை ஒரு சமூகத்தின் செயற்பாடு எனக் கொள்ளலும், விஞ்ஞான ரீதியாக நோக்கிப் பன்முகப் பார்வையில் கடந்த காலச் சமூகத்திற்கும் நிகழ்காலச் சமூகத்திற்குமிடையே நிகழும் உரையாடலே இஃதாகும் என்பதும் உணரப்பட்டு வந்துள்ளது. இதனால், மேற்கூறிய பின்னணியில் ஆராய்வதன் நோக்கமாகவே "ஈழத்தமிழர் தொன்மை” என்ற நமது இந்நூல் அமைந்துள்ளது. எனினும் இப்போதைக்கு நமது
-5-

Page 18
இந்நூலில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத் தமிழர் குடியேற்றம் பற்றியே ஆராயப்படவுள்ளது.
I.ஆதிகாலக் குடியேற்றங்கள் பற்றிய ஐதீகங்கள்
ஈழத்தின் நாகரிக வளர்ச்சியை மூன்று காலப் பிரிவுகளாக நிரைப்படுத்தலாம். அவையாவன - வரலாற்றுக்கு முற்பட்ட காலம். வரலாற்றுதய காலம், வரலாற்றுக் காலம் ஆகியவையாகும். எழுத்தின் பயன்பாடு, நாணயப் புழக்கம். நகர மயமாக்கம். விவசாய-வாணிப வளர்ச்சி, பிற தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றுடன் வரலாற்றுக் காலம் ஆரம்பமாகிறது. இதனைத் தேவநம்பியதீசனின் ஆட்சியுடன் (கி.மு. 250-210) ஆரம்பமாகிறது எனக் கொள்ளுதல் மரபெனினும், அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வுகள் கி.மு. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே இது தொடங்கியிருக்கலாம் என்பதை எடுத்துக் காட்டியுள்ளன:
எவ்வாறாயினும், வரலாற்றுக் காலத்திற்கும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்கும் இடைப்பட்ட காலமே வரலாற்று உதய காலமாகும். இக்காலத்திற்றான் ஈழத்து நாகரிக கர்த்தாக்களாகிய சிங்கள-தமிழ் மக்களின் மூதாதையினர் குடியேறினர். இதனால் இதனை ஈழத்து இன்றைய மக்களின் ஆதிக் குடியேற்ற காலமும் எனலாம். எவ்வாறாயினும், ஆதிக் குடியேற்றம் பற்றிய ஐதீகத்தை வளர்த்தெடுப்பதில் பெளத்த மதமே முன்னணியாக விளங்கியது. இது கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தேவநம்பியதீசனின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அசோகச் சக்கரவர்த்தியின் காலத்தில் இங்கு அறிமுகமாகியது. இதனுடன் சம்பந்தப்பட்ட செய்திகள் மட்டுமன்றி, ஈழத்தில் இது பரவிய விதம், இதனைப் போதித்தோர் போன்ற விவரங்கள் அநுராதபுரத்திலுள்ள பிரதான விகாரைகளில் பேணப்பட்டன. இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அக்காலத்தில்
-6-

பெளத்த உலகின் தொடர்பு மொழியாக விளங்கிய பாளி மொழியில் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தீபவம்சமும் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் மகாவம்சமும்” எழுதப்பட்டன.
இந்நுால்களை எழுதியோர், பெளத்தம், அதைத் தழுவியோர், நாடு ஆகிய மூன்றையும் இணைத்தே எழுதினர். பெளத்த மதக் கண்ணோட்டத்தில் இவை எழுதப்பட்டதென்பதை மகாவம்சத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் இதன் ஆசிரியரின் கூற்றாக வரும் “விசுவாசிகளின் உண்மை இன்பத்திற்கும் மனநிறைவுக்குமே” என்ற வாக்கியம் உணர்த்துகின்றது. இந்நூல்களில் ஈழத்து மக்களின் குடியேற்றம் ஐதீகமாகப் பெளத்த மதக் கண்ணோட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
சிங்கத்தின் வழி வந்த விஜயன் கூட்டத்தினர் இங்கு வருவதற்குப் பின்னணியாகக் கெளதம புத்தர் மூன்று விஜயங்களை இந்நாட்டிற்கு மேற்கொண்டு இதன் ஆதிவாசிகளும் அமானுஷ்யர்களுமான யக்ஷர், நாகர் ஆகியோரில் யக்ஷர்களிடமிருந்து நாட்ட்ை அபகரித்துத் தமதாக்கினார். புத்தர் பரிநிர்வாணம்/சமாதி அடைந்த தினத்தில், விஜயன் இந்நாட்டுக்குள் கால்வைத்த போது, அவர்கள் இறங்கிய இடத்தை அவர்கள் தொட்ட போது, கை சிவப்பாக மாறியதால் அந்த இடத்திற்கும் இத்தீவிற்கும் “தம்பபண்ணி” என்று அவர்கள் பெயரிட்டனர்."
யகூஷப் பெண்ணாகிய குவேனியை மணந்து இரு பிள்ளைகளைப் பெற்றுப் பின் முடிசூட விரும்பிய விஜயன், சத்திரியப் பெண்ணாகிய தென்மதுரைப் பாண்டிய இளவரசியை மணந்து. 38 வருடங்கள் தம்பபண்ணியில் அரசாட்சி செய்து, சந்ததி இல்லாது இறந்தான். விஜயனுக்கு மணப்பெண்ணாக வந்த பாண்டிய இளவரசி, விஜயன் 700 தோழர்களுக்கும்
-7-

Page 19
d EFL (néfëF6ÓI6OI 6) J6O35è56 I
தாழி அடக்கம்
கல்லறை தாழிகளை உள்ளடக்கிய கல்லறை கல்மேசை
கல்வட்டம்
பெருங்கற்காலக் குடியிருப்பு மையங்கள் கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்கள் காணப்படும் இடங்கள் * துறைமுகங்கள்
;
பெருங்கற்காலக் கலாசார மையங்கள்
1. காரைநகர் 16. கொக்கபே 2. ஆனைக்கோட்டை 17. திவுல்வேவ 3. கந்தரோடை 18. ரம்பாவேவ 4 மந்தை 19. அனுராதபுரம் 5. தெக்கம் 20. மச்சாகம 6. பொம்பரிப்பு 21. கதிரவெளி 7. அக்குறுகொட 22. O LJ b6U 8. முக்கறுகொட 23. கதிர்காமம் 9. பின்வேவ 24 கல்அத்தார 10. கரம்பன் குளம் 25 மக்கேவிற்ற 11. அலுத்பொம்புவ 26. பதவிகம்பொல 12. LDIDG6 27. இன்கட்டுவ 13. தமவெல்ல கொடல்ல 28 நல்லே 14. வடிகவேவ 29. கலொதுவெவ 15. குருகல்கின்ன
1. ஜம்புகோள பட்டினம் X. ஜிம்கதித்த 11. மதோட்டம் XII. LDbif6a8bLo III. Dlab6OT XII. 666. Gobii, IV உருவெலப் பட்டினம் XIII. QSITEL6'L V. சலாவத்தோட்ட XIV, figure66) VI. fijQhọGQu XV. økôrjTIL
(நீர்கொழும்பு) ΧVΙ. ΘήρΦ0ώΦΠιVII. 6).j9,636m XVI. திஸ்ஸமகாராம VIII. b6DEgßğiġib XVI. கோகன்னதித்த DX. stofoj
(விபரம் படம் - 01 இல் உள்ளது)
-8-

வரலாற்றுதய காலக் குடியேற்ற மையங்கள்
அளவுத்திட்டம் :- 1 செ.மீ. 32 கிமீ
-9ے

Page 20
மணப் பெண்களை அழைத்து வந்ததோடு, தன்னுடன் பதினெண்வினைஞர் குழுவையும் அழைத்து வந்தாள் எனக் கூறப்படுகின்றது. இக்கட்டுக் கதையில் இடம் பெறும் இந்தியாவின் வடநாட்டிலுள்ள இடப் பெயர்களை மட்டுமன்றி, ஈழத்திலும் விஜயனின் கூட்டத்தினர் அமைத்த குடியேற்றங்கள் பற்றிய செய்திகளையும் மையமாக வைத்து இக்குழுவினர் அலையலையாக இந்தியாவின் வடமேற்கு. கிழக்குப் பிராந்தியங்களிலிருந்து வந்து நதிகளை மையமாக வைத்து ஈழத்தின் வடமேற்கு, கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளில் குடியேறினர் என எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.”
இச்காலச் சிங்கள மொழிக்கும் வட இந்திய ஆரிய மொழிகளுக்குமிடையேயுள்ள பல பொதுத் தன்மைகளின் அடிப்படையிலும், இக்காலத் தமிழ்-சிங்கள கலாசாரங்களிடையே நிலவும் வேறுபாடுகள் தனித்தன்மை ஆகியவற்றைக் கொண்டும். இத்தகைய குடியேற்றத்தை உருவாக்கியவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரிய மக்களே எனவும் வரலாற்று ஆசிரியர்களால் விளக்கங் கொடுக்கப்பட்டது."
மகாவம்சத்தில் “ஆரியர்” என்ற சொல் இடம் பெறாத நிலையில், “ஆரிய இனம்” என்பதற்குப் பதிலாக ஆரிய மொழிக் குழுவினர்தான் சரியான பதம் எனக் கருதப்பட்ட காலத்தில், வரலாற்று ஆசிரியர்களால் இவ்வாறு விளக்கம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. அது மட்டுமன்றித் தற்காலச் சிங்கள மக்கள் எவ்வாறு பெயரைப் பெற்றனர் என்பதற்கு விளக்கமாகச் சிங்கத்தைக் கொன்றதால் சிங்கபாகு “சீகள” என அழைக்கப்பட அவனுக்கும் விஜயனுக்கும் இடையே இருந்த உறவால் (விஜயனும் பரிவாரங்களும் சீகள என அழைக்கப்பட்டனர் என்பதாகும்.
அடிக்கடி தமிழகத்திலிருந்து ஏற்பட்ட படையெடுப்புகள், மகாவம்சம் போன்ற நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் ஈழத்து
-10

வாரிசுரிமைப் போரில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாகத் தமிழ் இராணுவத்தினர் விளங்கியமை, தமிழகத்தில் பல்லவ. பாண்டிய வம்சங்களின் எழுச்சியும், ஈழத்து அரசியலில் அவற்றின் தாக்கமும், இந்தியாவில் பெளத்தம் நலிவுற, இந்து மத மறுமலர்ச்சி ஏற்பட்டமை ஆகிய சம்பவங்களால் ஈழத்துப் பெளத்த மத பீடத்தினர் புத்தர் இந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு நாட்டை யக்ஷர்களிடமிருந்து கைப்பற்றி, அதனைப் பெளத்த சாசனத்துக்குரிய நாடாக்கியதால், பெளத்த தர்மம் தழைத்தோங்கும் “தர்ம தீபமே” இஃதாகும் என்ற சித்தாந்தத்தை வளர்த்தெடுத்த நேரத்தில், அரச பதவியில் அமர்ந்தோரும், அரசர்கள், போதிசத்துவர்கள் மட்டுமன்றிப், புத்தரின் சாக்கிய வம்சத்தின் வழிவந்தவர்கள் என்றும், இதனால் பெளத்த சாசனத்திற்குரிய் இந்நாட்டை அவர்களின் அநுசரணையுடனேதான் ஆளவேண்டுமென்ற ஐதீகங்களையும் தமது அரச பதவியை உறுதிப்படுத்துவதற்காக வளர்க்கத் தொடங்கினர்."
இதனால், பாளி நுால்களில் தமிழர் பற்றிய குறிப்புகள் எல்லாவற்றிலும் அவர்கள் விதேசிகள், தவறான சமய நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள், படையெடுப்பாளர்கள் என்று குறிப்புகள் காணப்படுகின்றன. அரசியல் மேலாதிக்கத்திற்காக நடைபெற்ற எல்லாளன். துட்டகைமுனு யுத்தம் கூட. ஓர் இன மோதலாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதோடு, இவ்யுத்தத்தில் கொல்லப்பட்ட பெளத்தத்தைச் சரணடையாத தமிழர்கள் மிருகங்களை விடக் கேவலமானவர்கள். ஆதலால் அவர்களைக் கொன்றமை பற்றி “மன்னா நீ கவலைப்படத் தேவையில்லை” என்று மரணப் படுக்கையில் கழிவிரக்கம் கொண்டிருந்த துட்டகைமுனுவுக்குப் புத்த குருமார் அறிவுரை கூறியதாக மகாவம்சம் கூறுகின்றது.* விந்தையிலும் விந்தை என்னவெனில், துட்டகைமுனுவால் எல்லாளனுக்கு அமைக்கப்பட்ட சமாதியை அகழ்ந்த போது அதில்
- li l

Page 21
கிடைத்த சாம்பலை சூழ்ப்பந்தத்தினால் ஏற்பட்ட சாம்பலை மனிதச் சாம்பல் எனக் கொண்டது மட்டுமன்றித் துட்டகைமுனுவினது சாம்பலே என விஞ்ஞான ரீதியில் கணிப்பீடு செய்யப்பட்டதென்று கூறி ஓர் அறிஞர் கூட்டமே அதிலிணைந்து தர்மிஷ்டர் ஆட்சியில் 1980இல் ஒரு பெரு விழா எடுத்ததாகும்."
இத்தகைய குடியேற்ற ஐதீகங்கள் பிரித்தானியர் ஆட்சியில் மேலும் உரம் பெற்று வளர்ந்தன. இக்காலத்தில் ஏற்பட்ட பெளத்த கலாசார மறுமலர்ச்சிக்கு இவை நல்ல தளமாக அமைந்தது மட்டுமன்றி முழு ஈழத்திலும் ஒரு தேசிய ரீதியான ஒரு மறுமலர்ச்சி ஏற்படுவதற்குப் பதிலாக, ஆரியசிங்கள-பெளத்த மறுமலர்ச்சியாகவும் தமிழர்களுக்கெதிரான ஓர் இயக்கமாகவும் வளர வழிவகுத்தது." இக்காலத்தில் காடுகளாக இருந்த சிங்கள நாகரிகத்தின் மையப் பிரதேசங்கள், கண்டு பிடிக்கப்பட்டு ஆராயப்பட, பெளத்த-சிங்கள முதன்மை மேலும் உறுதியாயிற்று." மாறாகத் தமிழர் மத்தியில் ஏற்பட்ட இந்துக் கலாசார மறுமலர்ச்சி பெளத்தத்தைப் போலல்லாது இந்து மதவெறி அற்ற நிலையில் தமிழ்மொழி மறுமலர்ச்சியாக முதிர்ச்சியடைந்தாலும், தமிழர் தமது பூர்வீகக் குடியேற்றம் பற்றி ஐதீக அடிப்படையிலாவது சான்றுகளைக் கொண்டிராத நிலையில், தமிழரின் பூர்வீகத்தை எடுத்துக் காட்டும் தொல்லியல் எச்சங்கள் அழிக்கப்பட்டும். பாதுகாக்கப்படாமலும் காணப்பட்ட நிலையில், பெளத்த-சிங்கள ஐதீகங்களே கொடி கட்டிப் பறந்தன.
முதலியார் இராசநாயகம்" வண. சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் இக்காலக் கட்டத்தில் மேற்கொண்ட ஆய்வுகளும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. சுவாமி ஞானப் பிரகாசர் தமது பன்மொழிப் புலமையால், தமிழர்கள்,
சிங்களவர்களாக மாறுகின்றார்கள்." ‘ஈழ ஆதிக்குடிகள்
-12

திராவிடரே" போன்ற கட்டுரைகளை மட்டுமன்றிச் சிங்கள மொழியின் திராவிடத் தன்மை என்ற கட்டுரையை 1936இல் இவர் சார்பாக முதலியார் இராசநாயகம் வேத்தியல் கழகக் dig061TuSci) alsTé55 Gurg Fools rush in where the angels fear to treadin' goTril 56p.) ULLJLofburg GT66g GTGiroff நகையாடப்பட்டார்ஃ இக்காலம் வரை பல்கலைக் கழக மட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும் எழுதப்பட்டு வரும் நூல்களில் சுமார் 2000 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த இந்த ஐதீகத்தின் கருப்பொருளாக ஆரிய சிங்களக் குடியேற்றமே முதன்மை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், 1917இல் கந்தரோடையில் ஆய்வு செய்த சேர் போல் பீரிஸ், 1919 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வெளிவந்த டெயிலி நியூஸ் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் “தமிழரின் பழைமையின் திறவுகோல் மண்ணில் மறைந்திருக்கும் அகழ்வாராய்ச்சிச் சின்னங்களை வெளிக் கொணர்வதிலேதான் உண்டு” என்று தீர்க்க தரிசனத்துடன் கூறிய கருத்தைக் கடந்த கால் நூற்றாண்டாக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் நிரூபித்துள்ளதால், இக்கூற்றினை இங்கே பதிதல் அவசியமாகிறது. அன்று அவர் கூறியதாவது -
“I hope the Tamil people will realise that intruth, there is buried in their sands, the story of much more fascinating development than they had hitherto dreamed”
“இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத தமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக் கட்டம்பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்திருப்பதைத் தமிழ் மக்கள் ஒரு காலத்தில் உணர்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.”
- 13

Page 22
I.தொல்லியல் பின்னணியில் ஆதிக்குடியேற்றம்
எவ்வாறாயினும், 1965களில் பாளி நுால்கள் தரும் குடியேற்ற ஐதீகம் வெறும் கட்டுக்கதையென்றும். இவற்றை நிரூபிக்க வரலாற்றுத் தொல்லியல் சான்றுகள் இல்லை என்றும் விமரிசனங்கள் தோன்றத் தொடங்கின. புகழ்பூத்த வரலாற்று ஆசிரியரான ஜி.சி. மென்டிஸ் விஜயன் கதை சீகள அல்லது சிம்கள என அழைக்கப்பட்ட நாட்டுப் பெயருக்கு ஜாதகக் கதைகளிலிருந்து புனைந்து வழங்கப்பட்ட ஐதீகமே இக்கதையாகும் எனக் கூற, மானிடவியலாளரான எஸ். பி. எஸ். சேனாரத்தினாவும்" இவற்றை நிரூபிக்கச் சான்றுகள் இல்லை என்றார். இவரது கூற்றையே 1970இல் ஈழத்தில் அகழ்வாய்வு மேற்கொள்ள வந்த அமெரிக்கத் தொல்லியலாளரான
விமலாபேக்லேயும் பின்வருமாறு ஆமோதித்துள்ளார்ஃ
“புத்த சமயம் ஏற்படுத்திய முதன்மையான செல்வாக்கினால் ஈழம் பற்றிய புலமை சார்ந்த ஆய்வில் நீண்ட காலமாகப் பெளத்த இலக்கியமும் மொழியும் பற்றிய ஆய்வும், அவற்றுக்கான பொருள் கோடலிலுமே கவனஞ் செலுத்தப்பட்டது. இதனால், சாசன-தொல்லியல் சான்றுகள் போன்ற இதர சான்றுகள் அடிக்கடி பெளத்தமத இலக்கியக் கண்ணோட்டத்தில் அணுகப்பட்டன அல்லது முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டன. இத்தகைய அணுகு முறையின் விளைவாக, வரலாற்று ஆசிரியர்கள் ஈழத்தின் ஆதிவரலாற்றைப் பெரும்பாலும் முழுமையாகத் தீபவம்சம், மகாவம்சம் போன்ற பாளி இலக்கியங்களின் அடிப்படையில் படைத்துள்ளனர். இவ் விலக்கியங்கள் எத்தகைய பயனுடையனவாக இருப்பினும், மிகப் பழைய வரலாற்றை அணுகும்போது ஐதீகப் பாங்குடையனவாகவே உள்ளன.”
இக்காலத்தில் ஈழத்தின் ஆதிக் குடியேற்ற மையங்களில் அகழ்வாய்வுகளும், மேலாய்வுகளும் தொடர்ந்தன. 1969இல்
-14

பண்டைய நாகரிகத்தின் மையம் எனப்பட்ட அநுராதபுரத்தில் ஈழத்துத் தொல்லியல் திணைக்களமும்* 1970இல் கந்தரோடை? பொம்பரிப்பு" ஆகிய இடங்களில் விமலாபேக்லே தலைமையிலும் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1980இல் இக்குடியேற்ற மையங்களின் கலாசாரமாகிய பெருங் கற்காலம் பற்றிய கலாநிதிப் பட்ட ஆய்வுக் கட்டுரையும் நம்மால் சமர்ப்பிக்கப்பட்டது. எல்லாமாக, 30 மையங்கள். அதாவது பாளி நுால்கள் குறிக்கும் பிரதேசங்கள்தான் இப்பெருங் கற்காலக் கலாசார மையங்கள் என நம்மால் இனங்காணப்பட்டதோடு, தென்னிந்தியாவில் இக்காலத் திராவிட மொழிகளைப் பேசும் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் வாழும் மக்களின் கலாசாரத்தின் படர்ச்சியே ஈழத்திலுள்ள பெருங் கற்கால மையங்களில் காணப்படும் கலாசார எச்சங்கள் எனவும், சிங்கள - தமிழ்க் கலாசாரங்களும் மொழிகளும் இதன் வழி வந்தவையே எனவும் நம்மால் இனங்காணப்பட்டது.
ஆதித் திராவிட கலாசாரத்தின் குடியிருப்புகளாகப் பொம்பரிப்பு, கதிரவெளி மட்டுமே பேராசிரியர் இந்திரபாலாவினால் இனங்காணப்பட்டன. 1980இல் ஆனைக்கோட்டை அகழ்வும், கலாநிதிப் பட்டத்திற்காகப் பொ. இரகுபதி சமர்ப்பித்த “யாழ் மாவட்டத்தில் ஆதிக் குடியிருப்புகள் - ஒரு தொல்லியல் மேலாய்வு” என்ற ஆராய்ச்சிக் கட்டுரையும், வட பகுதியில் ப.புஷ்பரட்ணம் செ.கிருஷ்ணராசா ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகளும் இக்கலாசாரம் பற்றி மேலும் சான்றுகளை எடுத்துக் காட்டியுள்ளன.
நிற்க. அநுராதபுரத்தில் 1985, 1989ஆம் ஆண்டுகளில் தொல்லியல் திணைக்களத்தினாலும்." 1990-1992ஆம் ஆண்டுகளில் புகழ்பூத்த கேம்பிறிஜ் பல்கலைக் கழகத் தொல்லியலாளரான அல்சின் தலைமையில் கொன்னிங்காம் என்ற ஆய்வாளரினாலும் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன."
-15

Page 23
எண்பதுகளில் பேராசிரியர் காஸ்வெல் தலைமையில் மாந்தையில் அகழ்வுகள் நிகழ்ந்தன.* கலாசார முக்கோணப் பிரிவும் பேராதனைப் பல்கலைக் கழகமும் மாத்தளை மாவட்டத்திலுள்ள பெருங் கற்கால ஈமச் சின்னங்கள் காணப்பட்ட இபின்கட்டுவவில் அகழ்வை மேற்கொண்டன*
ஜேர்மானிய தேசத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள். 1990களில், பாளி நுால்கள் குறிக்கும் உரோகண இராச்சியத்தின் தலைநகரான மாகம என அழைக்கப்பட்ட இன்றைய திஸ்ஸமகாராமப் பகுதியில் உள்ள அக்குறுகொடவில் ஆய்வுகளை நடாத்தின." இக்காலத்தில்தான் பாரிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஈழத்தவரான கலாநிதி போப்பியாராய்ச்சி, ஈழத்தின் மேற்கு தென்கிழக்குப் பகுதிகளில் அமைந்த துறைமுகங்களிலும் அவற்றை அண்டிய குடியிருப்புகளிலும் பெருங்கற்காலக் கலாசார மையங்களைக் கண்டுபிடித்தார்.°
கடந்த கால் நுாற்றாண்டாக மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகளும், அகழ்வாய்வுகளும் ஈழத்தின் நாகரிகத்தை உருவாக்கி வளர்த்தவர்கள் தென்னிந்தியாவைப் போன்று பெருங்கற்காலக் கலாசாரத்தை உருவாக்கிய மக்கட் கூட்டத்தினரே என்பதை எடுத்துக் காட்டியுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் பெருங்கற்காலக் கலாசாரம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகின்றது. பெரிய கற்களைக் கொண்டு ஈமச் சின்னங்களை அமைத்ததால், இஃது இவ்வாறு பெயர் பெற்றது. எனினும், பெருங்கற்களாலான ஈமச் சின்னங்கள் இன்றி. இப்பண்பாட்டின் பிற அம்சங்களான கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்கள், இரும்பாயுதங்கள் ஆகியன. இதன் ஈமச் சின்னங்களாகத் தாழிகள், நீளக்கிடத்தி அடக்கம் செய்தல் ஆகியவற்றில் காணப்பட்டாலும் இவை யாவும் பெருங் கற்காலக் கலாசார வட்டத்திற்குள் அடங்கும்.
- 16

s

Page 24
இக்கலாசாரத்தில் நான்கு கூறுகள் காணப்பட்டன. அவையாவன - மக்கட் குடியிருப்புகள், ஈமச் சின்னங்கள்.- வயல்கள், குளங்கள் ஆகும். இவையாவும் ஒருங்கிணைந்ததே இக்கலாசாரமாகும். அநுராதபுரம், கந்தரோடை, மாந்தை, திஸ்ஸமகாராம ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளிலும், இதனுடன் இணைந்த பெருங்கற்கால ஈமச் சின்னங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளிலிருந்தும் பெறப்பட்ட கலாசாரச் சின்னங்களும் இவை தென்னகப் பெருங் கற்காலத்தின் படர்ச்சியே என்பதை உறுதி செய்துள்ளன.
இவ்வாய்வுகள் பாளி நுால்கள் குறிக்கும் யக்ஷர்களும் நாகர்களும் ஈழத்தின் கற்கால மக்கள் என்பதும், இவர்களது கலாசாரத்திற்கு மேலேதான் பெருங் கற்கால கலாசாரம் கால் ஊன்றி, ஈழத்தின் வரலாற்றுக்கால நாகரிகமாக மலர்ந்தது என்பதை உறுதி செய்துள்ளன.
வரலாற்றுக் காலத்தில் இம் மக்கள் பெளத்தத்தின் தாயகமாகிய வட இந்தியாவுடன் கலாசார ரீதியிலும், வாணிப ரீதியிலும் கொண்டிருந்த தொடர்பினை உறுதிப்படுத்தும் எச்சங்களாக வட இந்தியச் சில மட்பாண்ட வகைகள், எலும்பு ஊசிகள். நாணயங்கள் ஆகியனவும் காணப்படுகின்றன.
இதனால் இத்தகைய தொடர்புகளைப் (கலாசாரத் தொடர்புகள் பாளி நுாலோர் வட இந்தியக் குடியேற்றமெனக் கருதி விஜயன் பற்றிய ஐதீகத்தை வளர்த்தனர் என்பதும் உறுதியாயிற்று. இது பற்றி விரிவாக ஆராய்வது பொருத்தமாகின்றது.
விஜயன் கதை ஒரு கட்டுக் கதையென்றாலும் இது சிங்கள மொழி பேசும் ஆரியரது குடியேற்றத்தை 2000 ஆண்டுகளுக்கு மேலாக வரலாற்று ஏடுகளிலும், பாடசாலைப் புத்தகங்களிலும் முதன்மை பெற்றிருந்த ஒரு குடியேற்றத்தை
-18

எடுத்துக் காட்டுகின்றது என்ற நம்பிக்கையின் விளைவாக இக்கதையுடன் தொடர்புடைய குடியேற்ற மையங்களை அகழ்வாய்வுக்கு உட்படுத்தும் முதல் நடவடிக்கையாக 1969இல் அநுராதபுரத்தில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.*
இதுவரை வரலாற்றுக் காலத் தொல்லியற் சின்னங்களுக்கும் அதனுடன் தொடர்புடைய பெளத்த மத வழிபாட்டிடங்களுக்கும் முதன்மை கொடுத்த தொல்லியல் திணைக்களம், இப்போது இந்த நாகரிகத்தை உருவாக்கியவர்களின் ஆதிக் குடியிருப்புகளின் தோற்றம் பற்றி அறியத் தீர்க்கமான நடவடிக்கை எடுத்தது ஈழத்தின் தொல்லியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும்.
இலண்டன் பல்கலைக் கழகத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரான கொட்றிங்ரனுடன், கலாநிதி சீரன் தெரணியாகலவும் இணைந்தே இவ்வகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழ்வாய்வின் போது, ஆதிக் குடியேற்ற வாசிகளின் படிமங்களாகப் பத்து மீற்றர் கனமுள்ள படிமங்கள் காணப்பட்டன.
அத்துடன் இதில் மூன்று கலாசாரப் படைகளும் இனங்காணப்பட்டன. அடிமட்டத்தில் முதல் கலாசாரப் படையில், கற்கால மக்களது. குறிப்பாக இடைக் கற்கால அல்லது குறுணிக் கற்கால மக்களின் கற்கருவிகள் காணப்பட்டன. இக்கற்காலக் கருவிகள், பாளி நூல்கள் கூறும் அமானுஷ்யர்களான யக்ஷரும் நாகரும் உண்மையிலே மனிதர்கள் என்பதையும் இவர்கள்தான் ஈழத்தின் பூர்வீகக் குடிகளான கற்கால மக்கள் என்பதையும் இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து ஈழத்தை அடைந்தனர் என்பதையும் உறுதி செய்துள்ளன.
இவ்வாய்வு நடைபெற்றபோது, இக்கலாசாரத்தின் தோற்றம் கி.மு. 6000 ஆண்டெனக் கொள்ளப்பட்டது. ஆனால், அண்மைக் கால ஆய்வுகளும், விஞ்ஞான ரீதியிலான தொல்லியல் காலக்
-19

Page 25
கணிப்புகளும் இக்கலாசாரத்தின் தோற்றத்தைக் கி.மு. 28000ஆம் ஆண்டுகளென நிர்ணயித்துள்ளன."
இம்மக்கள் பின்னர் இவ்விடத்தை விட்டு வெளியேறச் சில காலம் அநுராதபுரம் ஜனநடமாட்டமற்ற பகுதியாகவே விளங்கியதை இரண்டாவது படை எடுத்துக் காட்டியுள்ளது. இதன் பின்னர், பெருங் கற்காலக் கலாசாரத்திற்குரிய மக்கள் இங்குக் குடியிருந்ததற்கான படிமங்கள் வெளிவந்தன. இது மூன்றாவது கலாசாரப் படையாகும். இது அ, ஆ என்ற இரு உபபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
நான்காவது படை வரலாற்றுக் காலமாகிய எழுத்தாதாரம், நாகரிக அம்சங்கள் கொண்ட படையாக இனங்காணப்பட்டுள்ளது. மூன்றாவது படையின் "ஆ" பிரிவு, வரலாற்றுக் கால அம்சங்களையும் தன்னோடு அடக்கியிருந்ததால், பெருங் கற்கால மக்களே கற்கால மக்களைப் போலன்றித் தொடர்ச்சியாக இங்கு வாழ்ந்து ஈழத்து நாகரிகத்தை வளர்த்தெடுத்தனர் என்பது உறுதியாயிற்று.
இதனால், கி.மு. 400 ஆம் ஆண்டளவில் பெருங் கற்காலக் கலாசாரம் இங்கு தோற்றம் பெற்றிருக்கலாம் எனக் கொள்ளப்பட்டாலும், அநுராதபுரத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் கிடைத்த தொல்லியல் எச்சங்களை விஞ்ஞானக் காலக் கணிப்புக்கு உட்படுத்தியபோது. இதன் தோற்றம் கி.மு. 1000900 ஆக இருக்கலாம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கி.மு. 300-250இல் ஆரம்பமாகிய வரலாற்றுக் காலத்தில், வட இந்தியாவுடன் கொண்டிருந்த தொடர்பினை எடுத்துக் காட்டும் ஒரு சில மட்பாண்ட ஒடுகளும், நாணயங்களும், எலும்பினாலான எழுத்தாணி ஆகியனவும் இனங்காணப்பட்டன. பெளத்த மதத்தின் வருகையும் இக்காலத்தில் ஏற்பட்டமை
-20

குறிப்பிடத்தக்கது.
இவ்வாறே விமலாபேக்லேயின் தலைமையில் 1970இல் கந்தரோடையில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டது.* அவ்வகழ்வின் போது மூன்று கலாசாரப் படைகள் இனங்காணப்பட்டன. அநுராதபுரத்தைப் போலன்றி, இவ்விடத்தின் குடியேற்றம் பெருங் கற்கால மக்களுடனேதான் ஆரம்பமாகின்றது.
முதலிரு படைகளும் பெருங் கற்கால மக்களின் கலாசாரத்தையும். இறுதிப் படை வரலாற்றுக் கால மக்கள் எவ்வாறு பெருங் கற்காலக் கலாசார வழிவந்தவர்கள் என்பதையும் இனங் காட்டியுள்ளன. இக்கலாசாரத்திற்கும் தென்னிந்தியக் கலாசாரத்திற்குமிடையே உள்ள ஒற்றுமையையே விமலாபேக்லே பின்வருமாறு எடுத்துக் காட்டியுள்ளார்.
“சில மட்பாண்ட வகைகள், குறிப்பாக கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்கள் தென்னிந்தியாவில் இரும்புக் காலத்திற்குரிய இவ்வகை மட்பாண்ட வகைகளை ஒத்ததாகக் காணப்படுகின்றன. இதனால் இருபகுதி மக்களும் ஒரே கலாசாரத்திலிருந்து வந்தவர்கள் அல்லது ஆகக் குறைந்தது தொடர்பினையாவது வைத்திருந்தவர்கள்” எனலாம்.
இதே குழுவினர்கள் பொம்பரிப்பிலுள்ள தாழிக்காட்டிலும் அகழ்வினை மேற்கொண்டிருந்தனர்* 192இல் கண்டு பிடிக்கப்பட்ட இவ்விடம் பின்பு 1956இல் தொல் பொருள் திணைக்களத்தினால் அகழ்வாய்வு செய்யப்பட்டு மேலும் சில தாழிகள் ஆராயப்பட்டன. இத்தாழிகளின் உயரம் 3அடியாகும். இவற்றில் இறந்தவர்களது மண்டையோடுகளும், பிற முக்கிய எலும்புகளும் மட்பாண்டங்களில் அடக்கம்
செய்யப் பட்டிருந்ததோடு இவர்கள் பயன்படுத்திய பொருட்கள்
-21

Page 26
ஆகியவையும் இவற்றுடன் சேர்த்துப் புதைக்கப்பட்டிருந்தன. எல்லாமாக, 8000க்கு மேற்பட்ட தாழிகள் இத்தாழிக்காட்டில் அடக்கஞ் செய்யப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு. இத்தாழிக்காட்டில், 10,000 - 12000 வரையிலான மக்கட் கூட்டம் இங்கு வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. அநுராதபுரத்தில் 1980களிலும் 1990களிலும் அகழ்வுகள் தொடரப்பட்டன." 1991-92ஆம் ஆண்டுகளில் கேம்பிறிஜ் பல் கலைக் கழகத்தின் புகழ்பூத்த தொல்லியலாளரான பேராசிரியர் அல்சின் தலைமையில் கொன்னிங்காமின் அநுசரணையுடன் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1980களில் மாந்தையில் ஜோன் காஸ்வெல் தலைமையில் அகழ்வு நடைபெற்ற போது, பெருங் கற்கால மக்களுக்குரிய கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்களின் பாவனை கண்டுபிடிக்கப்பட்டாலுங்கூட இவ்வகழ்வாய்வு அறிக்கை இன்னும் விரிவான முறையில் கிடைக்கவில்லை."
இதற்கு முன்னர் 1954இல் இதே இடத்தில் தொல்லியல் திணைக்களத்தைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் அகழ்வாய்வை மேற்கொண்டபோது ஒரு மனித எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது.* இது பெருங் கற்கால ஈமச் சின்ன வகைகளில் ஒன்றாகிய நீளக்கிடத்திக் குழிகளில் அடக்கஞ் செய்தல் வகையைச் சார்ந்ததாகும்.
இவ்விடத்தில்தான் புகழ்பூத்த மாந்தைத் துறைமுகம் அமைந்திருந்தது. பாளி நூல்கள் மாதோட்டமாதித்த என இதனை அழைக்கின்றன. கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை வெளியுலகத் தொடர்புடைய புகழ்பூத்த ஈழத்தின் துறைமுகமாக இது விளங்கியது குறிப்பிடத்தக்கது." இவ்வாறே வடபகுதியிலுள்ள துறைமுகமாக ஜம்புகோளப் பட்டினம் அமைந்திருப்பதைப் பாளி நுால்கள் கூறுகின்றன. இது. விட்டுச் சென்ற தொல்லியல் எச்சங்கள் காணப்படாத நிலையில்,
-22

காங்கேசன் துறைமுகத்திற்கும் மாதகலுக்கும் இடையே இத்துறைமுகம் அமைந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.
நிற்க. 1980இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையினர் ஆனைக்கோட்டையில் அகழ்வாய்வை மேற்கொண்டிருந்த போது, இரு எலும்புக் கூடுகள் இனங்காணப்பட்டன." இதனுடன் கறுத்த கல்லில் அமைந்திருந்த ஒரு முத்திரையும் காணப்பட்டது. மாந்தை, ஆனைக் கோட்டை, ஏன்? இன்றைய வடமாகாணம் முழுவதும் பாளி நுால்கள் குறிக்கும் பண்டைய நாகரிகப் பகுதி என்பதும் ஈண்டு நினைவு கூரற்பாலது.
தொல்லியல் சான்றுகள் இப்பகுதியில் அமானுஷ்யர்களான நாகர்கள் வாழ்ந்தார்கள் எனப் பாளி நூல்கள் கூறுவது ஒரு கற்பனையே என்பதை உணர்த்தியுள்ளன. அநுராதபுரம், கந்தரோடை, மாந்தை போன்று தென் கிழக்கில் அமைந்த ஆரியக் குடியேற்றத்தின் மையம் எனப்பட்ட அக்குறுகொடவில் (பண்டைய மாகமவும் தற்போதைய திஸ்ஸமாராமவும் 90களில் ஜேர்மானிய தொல்லியல் குழுவினர் மேற்கொண்ட ஆய்வும் இதுவும் ஆரம்பத்தில் பெருங் கற்கால மக்களின் குடியிருப்பு மையமாக விளங்கியதை உறுதிப்படுத்தியுள்ளது."
இவ்வாறு சிங்கள மக்களின் மூதாதையினரால் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படும் குடியேற்ற மையங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் வட இந்தியாவில் அன்றித், தென்னிந்தியாவிலிருந்தே ஈழத்தின் நாகரிக கர்த்தாக்களின் இக்காலச் சிங்கள-தமிழ் மக்களின் மூதாதையினர் வந்ததை உறுதிப்படுத்தியுள்ளன. பாளி நுால்கள் வறண்ட வலயப் பகுதியில் ஏற்பட்டிருந்த குடியேற்றங்கள் பற்றியே கூறுகின்றன. ஆனால், நாட்டின் மேற்கு, தெற்குப் பகுதிகளிலுள்ள நதிகளையும் இவற்றின் கழிமுகத்தில் அமைந்த
-23

Page 27
துறைமுகங்களையும் மையமாக வைத்துக் குடியேற்றங்கள் காணப்பட்டதை. இப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட கலாநிதி போப்பியாராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ளார்."
இவரது ஆய்வின் மூலமாகத் தெதுறு ஓயா நதியிலுள்ள சலாவத்தோட்ட சிலாபம், களனி கங்கையிலுள்ள வத்தளை, களு கங்கையிலுள்ள கலாதித்தகேளுத்துறை), பெந்தோட்ட கங்கையிலுள்ள பீமதித்தபென்தோட்டை), ஜின் கங்கையிலுள்ள ஜிம்மதித்தஜின்தோட்ட), பொல்வத்த கங்கையிலுள்ள மகாவலுகமவெலிகம), நில்வல கங்கையிலுள்ள நிலாவதித்த, வளவ கங்கையிலுள்ள கோதபவட்டகொடவாயா) ஆகிய துறைமுகங்களில் வரலாற்றுக் காலத்திலும் (சில இடங்களில் வரலாற்றுதய காலத்திலும்) பரவி இருந்த பெருங் கற்காலக் கலாசாரத்தின் எச்சங்கள் இனங் காணப்பட்டன.
கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்கள் மட்டுமன்றி இவற்றுடன் இணைந்த இக் கலாசாரத்திற்குரிய, பல்வகைக் கற்களால் ஆன மணிகள், பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்கள், முத்திரைகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. இத்தகைய போக்கிலேதான் தென்னிந்தியாவிலும், அதாவது ஆறுகளின் கழிமுகங்களிலும்தான் துறைமுகங்கள் காணப்பட்டதை எடுத்துக் காட்டிய கலாநிதி
இப்பகுதியிலிருந்தே ஈழத்தை இவை அடைந்ததை உறுதி செய்துள்ளன எனவும் எடுத்துக் காட்டியுள்ளார்.
பாளி நூல்கள். விஜயன் வருமுன்னர். இப்பகுதியில் காணப்பட்ட நாகர் பற்றியும், இவர்களுக்கும் வட பகுதியில் காணப்பட்ட நாகர்களுக்குமிடையே உள்ள உறவு முறை பற்றியும் குறிப்பிடுவதும் ஈண்டு கவனிக்கத் தக்கது. இத்தகைய குறிப்புகள் வடபகுதி போன்று இப்பகுதியும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனித நடமாட்டத்திற்குரிய பகுதியாக விளங்கி இருக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
-24

இதை உறுதிப்படுத்துவதாக அமைவதுதான் களனி கங்கைப் பகுதியிலுள்ள பிலாப்பிற்றியாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது கிடைத்த வரலாற்றுதய காலத்திற்குரிய பெருங் கற்கால மட்பாண்டங்களாகும்.
இவ்வாறே ஈழத்தின் தென் கிழக்கே உள்ள
பம்பரகஸ்தலாவ, கும்பிகல. பனமமொதரகல பண்டலபுதிராஜவெல ஆகிய இடங்களில் 197இல் தாய்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் சொல்கெய்மும் கலாநிதி சீரன்தெரணியாகலவும் இணைந்தே மேற்கொண்ட மேலாய்வின் போது கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்கள் இனங்காணப்பட்டன." இப்பகுதி விஜயனுடைய சகாக்களால் ஆரம்பிக்கப்பட்ட குடியேற்றப் பகுதிகளில் ஒன்று என ஊகிக்கப்படுவதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது.
இதுவரை மக்கள் வாழ்ந்த குடியிருப்புகளையும், சில பெருங் கற்கால ஈமச்சின்னங்கள் காணப்பட்ட இடங்களையும் ஆராய்ந்தோம் (படம் - 1). ஏற்கெனவே பொம்பரிப்பிற் கிடைத்த தாழி அடக்கங்கள் பற்றிக் குறிப்பிட்டு இருந்தோம் (படம் - 2 - 6 ). இத்தகைய அடக்க முறையின் எச்சங்கள் தெக்கம், கதிர்காமம் (புகழ்பூத்த முருகனாலயம் இருக்கும் இடம்) ஆகிய இடங்களிலும் pot.
நீளக் கிடத்திக் குழிகளில் அடக்கஞ் செய்தலுக்கான சான்றுகள் மாந்தை, ஆனைக்கோட்டை ஆகிய இடங்களில் வெளிவந்துள்ளன. இவ்வகைகளைவிடப் பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிய பிற ஈமச் சின்ன வகைகளான கல்வட்டங்கள். கல்லறைகள் ஆகியனவும் காணப்படுகின்றன. கல்வட்டங்கள் வவுனியா மாவட்டத்திலுள்ள மாமடுவவில் உள. இத்தகைய கல்வட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கதிரவெளியிலும் காணப்படுகின்றன.
கல்லறைகளின் எச்சங்கள் வவுனியா மாவட்டத்திலுள்ள
-25

Page 28
s
 

மாமடுவ, அநுராதபுர மாவட்டத்திலுள்ள திவுல்வேவ. ரம்பவேவ, கொக்கபே, குருநாகல் மாவட்டத்திலுள்ள பின்வேவ, குருகல்கின்ன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கதிரவெளி, மாத்தளை மாவட்டத்திலுள்ள இபின்கட்டுவ போன்ற இடங்களில் உள. இவற்றுள் திவுல்வேவக் கல்லறைகளில் தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து நம்மால் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இபின்கட்டுவவிலுள்ள கல்லறைகளில் பேராதனைப் பல்கலைக் கழகத் தொல்லியல் துறையினரும் கலாசார முக்கோணத்தினரும் இணைந்து அகழ்வை மேற்கொண்டனர். அவ்வகழ்வின் போது கல்லறைகளில் தாழிகளை அடக்கஞ் செய்ததற்கான தடயங்கள் மட்டுமன்றிப் பெரிய கல்லறைகளைச் சுற்றிச் சிறிய கல்லறைகளும் இனங் காணப்பட்டுள்ளன. இவற்றில் கிடைத்த சான்றுகளை விஞ்ஞானக் காலக் கணிப்புக்கு உட்படுத்திய போது, இவற்றின் தோற்றம் கி.மு. 700 என இனங் காணப்பட்டுள்ளது. மேற்கூறிய சின்னங்கள் ஈழத்தின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. விரிவஞ்சி, இவற்றின் விவரம் இங்கே தவிர்க்கப்படுகின்றது.
எனவே, ஒட்டு மொத்தமாக நோக்கும் போது, நாட்டின் கரையோரங்கள், வரண்ட-ஈரவலயப் பிரதேசங்கள், மூலப் பொருட்கள். கனிவளங்கள் காணப்படும் இடங்கள் ஆகியவற்றுள் இப்பண்பாடு செறிந்து காணப்பட்டமை தெளிவாகின்றது. கி.மு.900-500 வரை இவற்றின் செறிவு குறைந்தும், கி.மு. 500க்கும் பின்னர் இவற்றின் செறிவு அதிகரித்தும் காணப்படுவதாகவும் கருதப்படுகின்றது. இனி, இவ்வீமச்சின்னங்களுக்கும் தென்னிந்திய ஈமச் சின்னங்களுக்கும் இடையே இழைவிட்டோடும் ஒற்றுமையை நோக்குவோம். ஈழத்திலுள்ள ஈமச் சின்ன வகையான
-27

Page 29
தாழிகள் தமிழகத்திலே உள்ள தாழிகளை ஒத்ததாகக் காணப்படுகின்றன. ஓரளவுக்கு விரிவாக அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொம்பரிப்பிற் கிடைத்த தாழிகள் பாண்டி நாட்டிலுள்ள தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்த ஆதிச்ச நல்லுார்த் தாழிக் காட்டில் உள்ள தாழிகளை ஒத்துக் காணப்படுகின்றன.
உண்மையிலே தாழி அடக்கங்கள் விரவிக் காணப்படும் இடங்களாக வைகை, தாமிரபரணி ஆறுகளுக்கிடையே அமைந்துள்ள மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்கள் ஆகியன காணப்படுகின்றன. இப்பிரதேசங்களிலும் நீளக் கிடத்திக் குழிகளில் அடக்கஞ் செய்தல் போன்ற வழக்கங்கள் காணப்படுகின்றன. காரணம், மணற்பகுதிகளில் இத்தகைய அடக்கங்கள் மேற்கொள்ளப்படுவது
இதனால், ஆனைக்கோட்டை திருக்கேதீஸ்வரம் மாந்தை ஆகிய இடங்களிற் கிடைத்த நீளக் கிடத்தி அடக்கஞ் செய்ததற்கான எச்சங்கள் தமிழகத்திலிருந்தே இங்கே இவை பரவியதையே எடுத்துக் காட்டுகின்றன எனலாம்.
ஈழத்திற் காணப்படும் கல்லறைகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவற்றுட் சில, ஒரு மீற்றருக்குக் குறைவாகவும், இன்னுஞ் சில ஒரு மீற்றருக்கும் இரண்டு மீற்றருக்கும் இடைப்பட்டனவாகவும், மேலுஞ் சில இரண்டு மீற்றருக்கு மேற்பட்டனவாகவும் உள. இதே போன்ற கல்லறைகள் தமிழகத்தில் புதுக்கோட்டையின் வடக்கே ஆந்திரப் பிரதேசத்திலுள்ள சித்துார் வரை காணப்படுகின்றன.
கல்வட்டங்கள் அல்லது தாழிகளை உடைய கல்லறைகள் விதந்து காணப்படும் இடங்களாகத் தமிழகத்திலுள்ள சேலம் மாவட்டம். கேரளம் ஆகிய இடங்களும் விளங்குகின்றன. பதவிகம்பொல, கதிரவெளி
-28

மாநிலத்திலுள்ள இத்தகைய ஈமச் சின்னங்களையும் நினைவூட்டுகின்றன.
ஈமச் சின்னங்கள் மட்டுமன்றி, இவற்றிலே கிடைத்த மட்பாண்டங்களும் தென்னத்திலிருந்தே, குறிப்பாகத் தமிழகத்திலிருந்தே இங்குப் பரவியதை எடுத்துக் காட்டுகின்றன. கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்கள் பல்வேறு தோற்றமுடையதாகக் காணப்படுகின்றன. இவற்றுள் கிண்ணங்களும் வட்டில்களும் பிரதானமானவையாகும். இத்தகைய மட்பாண்டங்கள் தமிழகத்திலுள்ள ஆதிச்சநல்லுார். அமிர்தமங்கலம், சானுார். அரிக்கமேடு, திருக்காம்புலியூர், கேரள மாநிலத்திலுள்ள போர்க்களம், கர்நாடக மாநிலத்திலுள்ள பிரமகிரி ஆகிய இடங்களிற் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களைத் தோற்றமைப்பில் நினைவூட்டுகின்றன. இத்தக்ைய ஒற்றுமை இரு பிரதேசங்களிலும் கண்டெடுக்கப்பட்ட பானைகள், கூம்பு வடிவிலான மூடிகள், தாங்கிகள் ஆகியவற்றுக்குமிடையே காணப்படுகின்றது.
இவற்றில் காணப்படும் குறியீடுகள்(GraftSymbols) தென்னகத்திலுள்ள பெருங் கற்கால மட்பாண்டங்களிலுள்ள குறியீடுகளை ஒத்துக் காணப்படுகின்றன. இத்தகைய குறியீடுகள் வரலாற்றுக் காலத்திற்குரிய ஈழத்தின் ஆதிப் பிராமிக்
பெருங் கற்கால மக்களே ஈழத்தின் வரலாற்றுக் கால நாகரிகத் வளர்த்தெடுத்தவர்கள் என்பதை உறுதியாக்குகின்றது. மேற்கூறிய பின்னணியில், அதாவது, பாளி நுால்கள் கூறும் வட இந்தியக் குடியேற்றங்கள் நடந்ததாகக் கருதப்படும் இடங்களில் மட்டுமன்றி அவற்றுக்கு அப்பாலும் காணப்படும் தொல்லியல் சின்னங்கள், தென்னிந்தியாவிலிருந்தே, குறிப்பாகக் தமிழகத்திலிருந்தே ஈழத்தின் நாகரிகத்தை உருவாக்கிய மக்கட் கூட்டத்தினரின் இந்தக் குடியேற்றத்தை எடுத்துக் காட்டுகின்றன.
-29

Page 30
கூட்டத்தினரின் இந்தக் குடியேற்றத்தை எடுத்துக் காட்டுகின்றன. மக்கட் கூட்டத்தினர் இவ்வாறு பெருந் தொகையாக இடம் பெயர்ந்து குடியேறியதற்குப் பதிலாக, இக் கலாசார அமிசங்கள் இங்குச் சிலரால் எடுத்து வரப்பட கற்கால மக்களே இக் கலாசாரத்தை வளர்த்தெடுத்திருக்கலாம் எனவும் சிலர் கருதுகின்றனர். இது தவறான கணிப்பீடாகும். காரணம், தென்னிந்தியாவிலோ அன்றி ஈழத்திலோ மேற்கூறிய கலாசார அமிசங்களை உள்வாங்கிப் பெருங் கற்காலக் கலாசாரத்தை வளர்த்தெடுத்ததற்கான கட்டமைப்பினைக் கற்கால சமுதாயம் கொண்டிருக்கவில்லை. அவர்கள் பெருங் கற்கால மக்களுடன் வாழ்ந்ததைத் தமிழகத்தில் மட்டுமன்றி ஈழத்திலும் பெருங் கற்காலக் கலாசார மையங்களில் கிடைத்துள்ள இவர்களின் கற்காலக் கருவிகள் உறுதிப்படுத்தினாலும் கூடப் பெருங் கற்காலக் கலாசாரத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துமளவுக்கு இவர்களின் கலாசாரம் வளர்ச்சி பெறவில்லை.
அத்துடன், பெருங் கற்காலக் கலாசார மையங்களிற் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள், மரபணுவியல், மானிடவியல், சமூகவியல், சாசனவியல், மொழியியல் சான்றுகள் என்பன இக்கலாசாரத்தின் மூலகர்த்தாக்கள் தென்னிந்தியத் தமிழரே என்பதை உறுதி செய்துள்ளன. இது பற்றிச் சுசந்தா குணதிலகா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்." “Sinhalisation is beingessentially a cultural processassociatedwith Buddhism” சிங்கள மயமாக்கம் என்பது பெளத்தத்துடன் ஒன்றிணைந்த கலாசார வளர்ச்சியே ஆகும். ஈழத்தின் ஆதிக் குடியேற்றம் தென்னிந்தியப் பெருங் கற்காலக் கலாசாரத்தின் படர்ச்சியே என்பதைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறைப் பேராசிரியர் சுதர்சன் செனிவரத்தினா 1996 இல் வெளியிட்ட கட்டுரையில் பின்வருமாறு உறுதிப்படுத்தியிருப்பது அவதானிக்கத்தக்கது.*
-30

“வரலாற்றுதய காலத்திற்குரிய குடியிருப்புகள், ஈமச் சின்னங்கள் காணப்படும் மையங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வானது. தென்னிந்திய இரும்புக் கால கலாசாரத்தின் தொழில்நுட்பக் கலாசார அமிசங்களின் தென் எல்லையாக ஈழம் விளங்கியதை எடுத்துக் காட்டுகின்றது.
இவ்விடங்களில் காணப்படும் கருவிகள் இங்கே நெல்லோடு கூடிய விவசாயம், மிருகங்களின் பயன்பாடு, குதிரையின் உபயோகம், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இரும்பு செம்பு ஆகியவற்றில் ஆயுதங்களைச் செய்தல், பல்வேறு கல்லின வகைகளில் மணிகளை உற்பத்தி செய்தல், கிராமங்களை அமைத்தல், கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்கள் ஆகியவற்றின் உற்பத்தி இம் மட்பாண்டங்களில் காணப்படும் குறியீடுகள் ஆகியவை தென்னிந்தியாவிலிருந்துதான் ஈழத்திற்கு இவை அறிமுகமாயின என்பதை உறுதி செய்கின்றன.
விஞ்ஞான காலக் கணிப்பீடு இத்தகைய தொழில் நுட்பக் கலாசார அமிசங்களின் தாயகம் ஆகியவை ஈழத்தின் ஆதிக் குடியேற்றங்கள் பற்றிய பாளி நுால்கள் தரும் தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
அநுராதபுரம் போன்ற வரலாற்றுதய கால மையப் பீடங்களில் கிடைத்த விலங்கியல், தாவரவியல் சான்றுகள் - இம்மக்கள் வேட்டையாடுதல், மந்தை வளர்ப்புடன் நெல் உற்பத்தியிலும் ஈடுபட்டதை எடுத்துக் காட்டுகின்றன. கள ஆய்வுகள் இத்தகைய சிறுசிறு குடியேற்றங்கள் கரையோரப் பகுதிகள், நதியோரங்களிலுள்ள வளமான இடங்கள், கணிப் பொருட்கள் காணப்படும் இடங்கள் ஆகியவற்றில் பரந்திருந்ததை உறுதி செய்கின்றன.
இத்தகைய ஆதி இரும்புக் காலக் கலாசார அமிசங்கள் வரலாற்றுதய காலம் வரலாற்றுக் காலமாக மலரும் வரை மட்டுமன்றி ஆரம்பகால வரலாற்றுக் காலம் வரை நீடித்தன.
-31

Page 31
வரலாற்றுதய காலக் குடியேற்ற மையங்கள், அவற்றுடன் இணைந்த ஈமச் சின்னங்கள் ஆகியவற்றுடன் நெருங்கிக் காணப்படும் பழைய பிராமிக் கல்வெட்டுகளைத் தாங்கி நிற்கும் குகைகள், வரலாற்றுதய கால மக்களின் சந்ததியினரே புதிய கலாசாரப் படர்க்கைக் காலம் வரை நீடித்திருந்ததை எடுத்துக் காட்டுகின்றன.
இதனால் ஈழத்தின் ஆதிநாகரிக கர்த்தாக்களே வரலாற்றுக் கால நாகரிகத்தையும் வளர்த்தெடுத்தவர்கள் என்பதும், இம்மக்கள் மத்தியில்தான் பெளத்த மதமும் பரவியதென்பதும் தெளிவாகின்றது.
பெளத்த மதத்திற்கு அளிக்கப்பட்ட தானங்களை எடுத்தியம்பும் பிராமிக் கல்வெட்டுகள், இக்கலாசார மையங்களை அண்டிக் காணப்படுவதும், பெருங் கற்காலக் கலாசாரத்திற்குரிய பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகள் இப் பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படுவதும் பெருங் கற்கால மக்களே பெளத்தத்தை அநுசரித்தமையை உறுதி செய்கின்றது.
Vமானுடவியல்,மரபணுவியல்,சமூகவியல் சான்றுகள்
பெருங்கற்காலக் கலாசார மையங்களில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளை ஆராய்ந்த அறிஞர்களும், இம்மக்கட் கூட்டத்தினர் தென்னிந்தியாவிலிருந்து இங்குப் புலம் பெயர்ந்துள்ளனர் என எடுத்துக் காட்டியுள்ளனர்° பொம்பரிப்பிற் கிடைத்த எலும்புகளை ஆராய்ந்த மானிடவியலாளர்கள், தென்னிந்தியப் பெருங் கற்காலக் குடியிருப்புகளில் காணப்படும் எலும்புகளை இவை ஒத்தவையென்றும், இத்தகைய மக்கட் கூட்டத்தினரைத் தவிர்த்து ஒரு புதிய மக்கட் கூட்டத்தினர் இங்குக் கால் கொள்ளவில்லை என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளனர்.
-32

V言
தாழிகள், மூடப்பட்ட சட்டிகள் (பொம்பரிப்பு)
அலங்கார வேலைப்பாடுள்ள தாழி (பொம்பரிப்பு)
- 33

Page 32
இவ்வாறே மாந்தையில் கிடைத்த எலும்புக் கூட்டினை ஆராய்ந்த பேராசிரியர்களான சண்முகம், ஜெயவர்த்தனா ஆகியோர். இவை தென்னிந்திய வர்க்கத்தைச் சார்ந்தவை என எடுத்துக் காட்டியுள்ளனர்." ஆனைக் கோட்டையில் கிடைத்த எலும்புக் கூடுகள் இந்திய இராணுவ நடவடிக்கைகளால் மறைந்து விட்டாலும் கூட இவை அடக்கஞ் செய்யப்பட்ட பாங்கிலன்றித் தோற்ற அமைப்பிலும் மாந்தையில் கிடைத்த எலும்புக் கூட்டை ஒத்துக் காணப்படுவது கவனிக்கத்தக்கது.* (LLLb - 07)
இது மட்டுமன்றி. இவ்வெலும்புக் கூட்டில் காணப்படும் இருவரிவடிவ அமைப்பில் உள்ள முத்திரையும் இவற்றின் திராவிடத் தன்மையை உறுதி செய்கிறது. இருவரி வாசகங்களில் முதல்வரி வடிவம் பெருங் கற்கால மட்பாண்டங்களில் காணப்படும் சித்திர எழுத்து முறையையும், இரண்டாவது வரிவடிவம் பிராமி வரிவடிவ எழுத்து முறையையும் பிரதிபலிக்கின்றன. படம் - 08 )
இதனால் பெருங் கற்கால மக்களே சித்திர எழுத்து முறையிலிருந்து பிராமி வரிவடிவ முறையைக் கைக்கொண்டனர் என்பதும் உறுதியாகின்றது. இவற்றைவிட இம்முத்திரையிலுள்ள வாசகமும் “கோவேந்த” “கோவேத” அல்லது “கோவேந்தம்” எனப் பலவாறு வாசிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது. அரசன் அல்லது தலைவன் என்பதே இதன் பொருளாகும்.
தொல்லியல், மானிட இயல் ரீதியில் மட்டுமன்றி மரபணு ஆய்வு அறிஞர்கள் ஈழத்துக் குடியேற்ற வாசிகளின் நாகரிக துகள்களின் தாயகத்தை இனங்காண முயன்றுள்ளனர். இவர்களில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மானிடவியலாளரான கேர்க் முதன்மையானவர். v
விஜயனது மூதாதையினர் புலம்பெயர்ந்து வந்த இடங்கள் என்று நம்பப்படும் வடமேற்கு, வடகிழக்கு
-34

இந்தியாவில் இன்று வாழும் மக்கட் கூட்டத்தினரின் இரத்தத்தையும் இக்காலச் சிங்கள மக்களினது இரத்தத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்த போது, வடமேற்கு இந்திய மக்கட் கூட்டத்தினரின் இரத்தத்திற்கும் இக்காலச் சிங்கள மக்களது இரத்தத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், சிங்கள மக்களது இரத்தம் வடகிழக்கே வங்காளிகளதும், விசேடமாகத் தென்னிந்தியத் தமிழரதும் இரத்தத்துடன் ஒத்துக் காணப்பட்டதையும் விளக்கியுள்ளனர். வங்காளிகள் ஆரியக் கலாசாரத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதும் இங்கு நினைவு கூரற்பாலது.
நம் நாட்டவரான டாக்டர் விஜயசுந்தரவும் இவ்வாய்வில் ஈடுபட்டு, சிங்கள-தமிழ் மக்களின் இரத்த உறவிலுள்ள ஒற்றுமையை எடுத்துக் காட்டியுள்ளார்.° மரபணு ஆய்வு மட்டுமன்றி, சமூகவியலாளர் மேற்கொண்ட ஆய்வுகளும் இத்தகைய ஒற்றுமையை மேலும் வலியுறுத்தியுள்ளன. இதற்குச் சான்று பகருவனவே உறவுமுறைப் பெயர்களாகும். ஒரு சமூகம் எத்தகைய செல்வாக்குக்கு உட்பட்டு, தனது தனித்துவத்தை இழந்தாலும்கூட, அதில் வழக்கிலிருக்கும் உறவு முறைப் பெயர்கள் ஒரு போதும் மாற்றமடையாதது மட்டுமன்றி. அச்சமூகத்தின் உற்பத்தி முறையையும் பொருளாதாரப் பாரம்பரியத்தையும் எடுத்துக் காட்டுவதாயமையும்."
அப்பா, அம்மா. அக்கா, மாமா போன்ற பெயர்கள் இரு சமூகத்தினரிடமும் காணப்படும் பெயர்களாகும். அப்பாவின் மூத்த சகோதரனைப் பெரியப்பா எனவும், இளைய சசோதரனைச் சித்தப்பா எனவும் அழைக்கும் வழக்குத் தமிழில் உண்டு. இதனை ஒத்த பதம்தான் சிங்கள வழக்காற்றில் உள்ள மகா அப்பா, குட அப்பா போன்றனவாகும். விரிவஞ்சி, ஏனைய பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன.
-35

Page 33
சிங்கள - தமிழ் சமூக கலாசாரப் பாரம்பரியத்தைச் சமூகவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த அறிஞர்கள், வட இந்தியாவிலிருந்து ஆதிக் குடியேற்றம் ஏற்பட்டிருந்தால், இங்கு நிலவிய சாதி அமைப்பையும் இந்த மக்கட் கூட்டத்தினர் கொண்டு வந்திருக்க வேண்டும் என வாதிட்டு அதற்கான சான்றுகள் இங்குக் காணப்படவில்லை எனவும் எடுத்துக் காட்டியுள்ளனர்.
வட இந்தியச் சமூகம்-பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு பிரிவுகளாக அல்லது வர்ணங்களகக் காணப்பட்டது. ஈழத்தில் அத்தகைய வழக்கு இருந்ததற்கான சான்றுகள் காணப்படவில்லை. பிராமணர்கள் பற்றி இலக்கியங்களிலும் பழைய பிராமிக் கல்வெட்டுகளிலும் சான்றுகள் காணப்படுகின்றன. ஆனால், வட இந்தியாவைப் போல இவர்கள் சமூகத்தில் உயர்ந்தவர்களாக, வலுவான ஒரு பிரிவினராக, ஈழத்தில் விளங்கியதற்கான சான்றுகள் இல்லை.
М அரண்மனையில் வைத்தியர்களாக, அரசரின் ஆலோசகர்களாக விளங்கியது மட்டுமன்றி, வேதங்களில் விதிக்கப்பட்ட தமது கடமைகளுக்கு அப்பால் வேறு தொழில்களில் ஈடுபட்டதையும் பிராமிக் கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன. சத்திரியர் பற்றியும், வைசியர் பற்றியும் இலக்கியங்களில் ஒரு சில இடங்களில் குறிப்புகள் காணப்பட்டாலும், இவர்களை ஒரு சமூகப் பிரிவினர் என்ற ரீதியில் இக்குறிப்புகள் எடுத்துக் காட்டவில்லை. சூத்திரர் பற்றிக் குறிப்புகளே இல்லை."
இதனால் தமிழகச் சமூக சாதி அமைப்பை ஒத்த அமைப்பே இன்று சிங்கள மொழி பேசும் மக்களது அமைப்பு என்பதைச் சமூகவியலாளர்கள் இனங் கண்டுள்ளனர். திராவிடச் சமூக அமைப்பில் விவசாயிகள் முன்னிலை பெற்றிருந்தனர்.
-36

விவசாயிகளைச் சுற்றித் தொழிலடிப்படையில் ஏனைய பிரிவினரும் செயலாற்றியதைச் சிங்கள-தமிழ்ச் சமூகங்களிடையே நிலவும் சாதி முறை எடுத்துக் காட்டுகிறது." சிங்கள-தமிழ்ச் சமூகங்கள் ஆதியில் தாய்வழிச் சமூதாய மரபில் உருவாகின என்பதும், பின்னரே தந்தை வழிச் சமுதாய மரபிற்கு மாறின என்பதும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படும் “மருமக” என்ற பதம் இன்றும் கேரள மாநிலத்தில் க்கிலிருக்கும் தாய்வழிச் சமுதாய அமைப்பான மருமக்கட் தாய முறையின் எச்சமாக விளங்குகிறது. மருமகன் என்ற பதம் திருமண உறவுகளில் இரு சமூகங்களும் பேணிய பாரம்பரிய வழக்குகளையும் எடுத்துக் காட்டுவதாகவும் உள்ளது.
பெளத்த மதத்தைச் சிங்கள மக்களின் மூதாதையினர் தழுவுமுன்பு தமிழகத்தைப் போன்ற சமய நம்பிக்கைகளையே கடைப்பிடித்திருந்தனர் என்பதை இன்று சிங்களப் பெளத்தர்கள் மத்தியில் நாட்டார் வழிபாடாக (Folk Religion) விளங்கும் சங்க கால நானிலக் கடவுட் கோட்பாடு விளங்குகின்றது என்பதை ஜெர்மானிய அறிஞரான பெச்சாட் விளக்கியுள்ளார். தொல்காப்பியம்." இத்தகைய வழக்கைப் பின்வருமாறு கூறுகின்றது -
மாயோன் மேய காடுறை யுலகமுஞ் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருத நெய்த லெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
தொல், பொருள். அகத். கு.5)
-37

Page 34
இதில் சங்க காலத்தில் முதன்மை பெற்ற தெய்வங்களாக மாயோனும் சேயோனும் விளங்க, இவர்களுக்கு அடுத்தாற் போல வேந்தனும் வருணனும் காணப்படுகின்றனர். இந்த வேந்தன் வருணன் ஆகிய தெய்வங்கள் கூடத் தமிழகப் பழைய தெய்வங்கள் மறைய அவற்றிடத்தில் வடஇந்தியக் கலாசாரத்தின் செல்வாக்கால் இவ்வாறு இடம் பெற்றுள்ளன எனக் கருதுவாருமுளர்.
எவ்வாறாயினும், நான்கு நிலத் தெய்வக் கோட்பாடே பெளத்த மதத்தின் வருகையால் நாற்றிசைத் தெய்வங்களாக (Guardian deities) உருமாறின எனக் கூறம் இவர்கள், சங்க கால நானிலக் கடவுளரின் முதன்மை பெற்ற கடவுளர்களான மாயோனும் சேயோனும் முறையே சிங்கள மக்கள் வழிபாட்டில் உப்புல்வனாகவும் நீலோற்பலன்), கதிர்காமக் கடவுளாகவும் (கதறகமத்தெய்யோ) முதன்மை பெற, அடுத்த இரு கடவுளர்களுக்கும் பதிலாக இராமனும் இலட்சுமணனும், சில சமயம் நாதனும் பத்தினியும் வழிபடப்படுகின்றனர் எனவும் கூறுகின்றனர்.
இந்நானிலக் கோட்பாட்டு மரபில் பெளத்தம் எவ்வாறு இணைந்து மேலோங்கியது என்பதற்கு இந்து விழாவாக விளங்கிய கண்டிப் பெரஉறரா. கி.பி. 17ஆம் நூற்றாண்டில் தான் பெளத்த மதச் சின்னமாகிய தந்த தாதுவையும் இணைத்து ஒரு பெளத்த விழாவாக உருமாறியது தலைசிறந்த சான்றாகும். சமய நம்பிக்கைகள், விழாக்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் ஆகியனவும் இரு சமூகங்களும் பொதுக் கலாசாரத்தின் வழிவந்தன என்பதை எடுத்துக் காட்டுகின்றன. இதற்கு நல்ல உதாரணமாக விளங்குவதுதான் தமிழ்-சிங்களப் புதுவருடப் பிறப்பாகும்.
-38

V.பிராமிக்கல்வெட்டுகளின் சான்றுகள்
நாம் மேலே எடுத்துக் காட்டிய தொல்லியல், மானுடவியல், சமூகவியல் பின்னணியில் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளை ஆராய்வதும் அவசியமாகின்றது. இக் கல்வெட்டுகள் யாவும் இன்றைய தமிழ்-சிங்கள வரிவடிவத்தின் மூலமாகிய பிராமி வரிவடிவத்தில் அமைந்திருப்பதால், இவற்றைப் பிராமிக் கல்வெட்டுகள் என அழைப்பர்.
இப்பிராமி வரிவடிவம் மத்தியக் கிழக்கிலிருந்துதான் இந்தியாவை வந்தடைந்து பின்னர் ஈழத்திற்கு வந்தது எனப் பரவலாகக் கருதப்படுகின்றது. இந்தியாவில் இவ்வரிவடிவம் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் வழக்கில் வந்தபோது, தனித்தனியாகப் பிராந்தியத் தன்மைகளைப் பெற்றிருந்தது.
தென்னிந்தியாவில் வழக்கிலிருந்த பிராமி வரிவடிம் வட இந்தியப் பிராமி வரிவடிவத்தைப் போலன்றித் தனியான தோற்றம் உடையதால் இதனைத் “திழவிடி” எனவும் கல்வெட்டாய்வாளர்கள் அழைக்கின்றனர்.
தமிழகத்திலுள்ள பிராமி வரிவடிவம் ஜைனத் துறவிகளுக்கு அளிக்கப்பட்ட தானங்களை எடுத்தியம்புவதோடு தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்டதால் தாமிழி அல்லது தமிழ் பிராமி எனவும் இது அழைக்கப்படுகின்றது. ஈழத்திலோ எனில், கருங்கற்களாலமைந்த குகைகள் காணப்படும் இடங்களில் இவை பொறிக்கப்பட்டுள்ளன. இக்குகைகள்தான் பெளத்தத் துறவிகளின் வாசஸ்தலங்களாக விளங்கின.
விஜயன் கதையிலும் வட இந்தியாவிலிருந்து ஏற்பட்ட ஆரியக் குடியேற்றத்திலும் நம்பிக்கை கொண்ட வரலாற்று ஆசிரியர்கள். இப்பிராமிக் கல்வெட்டிலுள்ள பிராகிருத மொழி சிங்கள மொழியின் மூலமொழியென எடுத்துக் காட்டி, இவை
-39

Page 35
சிங்கள மக்களின் குடியேற்றத்தை எடுத்தியம்பும் சான்றுகளாக விளங்குகின்றன எனக் கருதினர்.
ஆனால், பெளத்தம் பரவிய பிரதேசங்களில், குறிப்பாகத் தென்னிந்தியாவில் ஆந்திரா போன்ற மாநிலங்களில் எல்லாம் இப் பிராகிருத மொழி மதத்தின் மொழியாக இருந்ததே ஒழிய மக்களின் மொழியாக இருக்கவில்லை. அத்துடன், இங்குள்ள கல்வெட்டுகள் யாவும் கி.பி. 5ஆம் நுாற்றாண்டு வரை இம்மொழியிலேதான் எழுதப்பட்டன.
உதாரணமாக, ஆந்திர மாநிலத்தில், மக்கள் மொழி திராவிட மொழியாகிய தெலுங்காகும். ஆனால், பெளத்த மதத்தைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுகள் பிராகிருத மொழியிலேயே காணப்படுகின்றன. இதனால், மதத்தின் மொழியை மக்களின் மொழியாக ஈழத்து வரலாற் ஆசிரியர்கள் தவறாகப் புரிந்துள்ளனர் எனலாம்.
இப்பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் குறியீடுகளும் பெருங் கற்காலக் கலாசாரத்தின் பானை ஒடுகளிற் காணப்படும் குறியீடுகளை ஒத்துக் காணப்படுவதனால், பெருங் கற்காலக் கலாசாரத்திற்குரிய திராவிட மக்களே பெளத்த மதத்தைத் தழுவினர் என்பது உறுதியாகின்றது. பெளத்தத்திற்கு அளித்த தானங்களை எடுத்தியம்பும் இக் கல்வெட்டுகளில் இந்துப் பெயர்களான சிவ. மகாசிவ, காலசிவ, சிவகுத்த, சிவரக்கித, நந்தி, வேல், விசாக, குமார ஸ்கந்த சாமிதத்த கண்ண, வினு, ராம, பதும, துர்கா, காளி (கடி), திரு. மற்சியாகூழி போன்ற பெயர்களும் காணப்படுகின்றன.
இதில் இடம் பெறும் பிராமணக் குலங்களும் மேலே எடுத்துக் காட்டிய சங்க கால நானிலக் கடவுளர் வழிபாட்டில் திளைத்திருந்த தமிழகம், பின்னர் வட இந்திய வைதிக அலையின் செல்வாக்கால் வட இந்தியக் கடவுளரின் வழிபாட்டு
-40-.

மரபுகளைப் பேணிக் கொண்டது போல, ஈழத்திலும் நடந்தது என்பதை எடுத்துக் காட்டுகின்றன."
பிராமிக் கல்வெட்டுகளை அளித்த பெளத்த மதத்தோர் சூடியிருந்த மேலே எடுத்துக் காட்டிய இந்துப் பெயர்கள் புதிய மதத்தின் பெயர்களைச் சூடுமுன்னர் தமது பழைய நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் பெயர்களையே அவர்கள் சூடியிருந்ததை எடுத்துக் காட்டுகின்றன.
ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளின் பிராமி வரிவடிவம் பெளத்தத்துடனேதான் இங்கு அறிமுகமாக, அதனுடன் இணைந்த ஒரு வரிவடிவமாக இதனைக் கொள்ளும் வழக்கு ஆராய்ச்சியாளர்களிடையே காணப்பட்டாலும் கூட, இவ்வரிவடிவம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் இதில் இருபடைகள் உள என எடுத்துக் காட்டியுள்ளனர். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் பேராசிரியர் பெர்னான்டோ? கலாநிதி சத்த மங்கல கருணாரத்தினா? ஆவர்.
ஈழத்திலுள்ள பிராமி வரிவடிவ அமைப்பினையும் தமிழகத்திலுள்ள தமிழ்-பிராமி வரிவடிவ அமைப்பினையும் ஆராய்ந்த இவர்கள், பெளத்தத்துடன் பிராமி வரிவடிவம் இங்குப் புகுத்தப்படு முன்னர்த் தமிழகம்-ஈழம் ஆகிய இடங்களில் பெளத்தத்திற்கு முந்திய பிராமி வரிவடிவம் காணப்பட்டதென்றும் இத்தகைய வரிவடிவத்தின் எஞ்சியுள்ள எழுத்துகளான அ. இ. ம. ள, ழ, ய, ப, த, ச, க, உ, எ ஆகியவை இவ்விரு பிரதேசங்களிலும் அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் (கி.மு. 250அளவில் பெளத்த மதத்துடன் பிராமி வரிவடிவம் ஈழத்திற்கு அறிமுகமாகு முன்னர், தமிழகம்-ஈழம் ஆகிய பிரதேசங்களில் காணப்பட்டது என்கின்றனர்.
மேற்கூறிய எழுத்துகளுக்கும். அசோக வரிவடிவம் குறிக்கும் எழுத்துகளுக்குமிடையே உருவ அமைப்பிலுள்ள வேறுபாட்டை இனங்கண்டு. இத்தகைய முடிவுக்கு இவர்கள்
-41

Page 36
கிண்ணங்களும், வட்டில்களும். (பொம்பரிப்பு)
LuLib - 05
- 42 -
 

வந்துள்ளனர். இவ்வரி வடிவத்தின் சிறப்பான எழுத்துகளான அ, இ, ம, ள, ழ, ன போன்றன காலகதியில் அசோக கால வரிவடிவத்தின் செல்வாக்கினால் வழக்கொழிய இவற்றினிடத்திலே பெளத்தத்துடன் வந்த பிராமி வரிவடிவம் செல்வாக்கு பெற்றது என வாதிட்டுள்ளனர்.
பெளத்தத்திற்கு முந்திய இவ்வரிவடிவத்தைத் “திராவிடி’ வரிவடிவம் எனக் கலாநிதி சத்தமங்கல கருணாரத்தினா எடுத்துக் காட்டியுள்ளார்." தமிழகத்தில் வழக்கிலிருந்த இவ்வரிவடிவந்தான் “திராவிடி’ எனப் பியூலரினாலும், தமிழ்-பிராமி எனத் தமிழகக் கல்வெட்டாய்வாளர்களினாலும் அழைக்கப்படுவது ஈண்டு நினைவு கூரற்பாலது.
தமிழகத்திலுள்ள தமிழ்-பிராமி வரிவடிவத்திலுள்ள ள, ழ, ன போன்ற வரிவடிவங்களும் ஈழத்தில் எச்ச சொச்சமாகக் காணப்படுவது குறிப்பிடத் தக்கது. இத்தகைய எழுத்துகள் பெளத்தத்துடன் வந்த அசோகச் சக்கரவர்த்தி காலப் பிராமியில் இல்லை. தமிழ் மொழிக்கே சிறப்பான எழுத்தாகிய “ள” கரம் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளில் பரவலாகக் காணப்பட்டாலும் “p” கரம் வவுனியாவிலுள்ள பெரிய புளியங்குளக் கல்வெட்டிலும், கிழக்கு மாகாணத்திலுள்ள பம்பரகஸ்தலாவக் கல்வெட்டிலும், தென் மாகாணத்திலுள்ள மங்குள் மகாவிகாரைக் கல்வெட்டிலும் காணப்படுகின்றது எனக் கலாநிதி சத்தமங்கல கருணாரத்தினா எடுத்துக் காட்டியுள்ளார்.
அண்மையில் அநுராதபுர அகழ்வில் கிடைத்த மட்பாண்ட ஓடுகளில் மட்டுமன்றிப்? பூநகரியில் கிடைத்த மட்பாண்ட ஓடுகளிலும்" இத்தகைய வடிவம் காணப்படுவது குறிப்பிடத் தக்கது.
-43

Page 37
கலாநிதி போப்பியாராய்ச்சி மேற்கொண்ட ஆய்வின் மூலமாகத் தென் மாகாணத்திலுள்ள திஸ்ஸமகாராமப் பகுதியிலுள்ள அக்குறுகொடையில், தமிழகப் பிராமியில் காணப்படும் "ன" வடிவம் கிறிஸ்தாப்த காலத்திற்கு முந்திய இரு நாணயங்களில் காணப்படுவது உறுதியாகியுள்ளது." இவை முறையே "உதிரன்” “சபிஜன்’ என வாசிக்கப்பட்டுள்ளன. அசோக பிராமி வரிவடிவத்தில் காணப்படாத இவ்வரிவடிவம் ஈழத்தில் காணப்படுவது மட்டுமன்றித் தமிழ் மொழியின் நெடுங்கணக்கிலுள்ள எழுத்தை எழுதப் பயன்படுத்தப்பட்ட வடிவமாக இது விளங்குவதும் ஈண்டு அவதானிக்கத்தக்கது. அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் வடஇந்தியாவிலிருந்து புகுந்த வரிவடிவத்திற்கு முந்திய “திராவிடி’ வரிவடிவம் தமிழகம் - ஈழம் ஆகிய பகுதிகளில் காணப்பட்டதை அவற்றின் எச்ச சொச்சங்களாக இக்கல்வெட்டுகளில் காணப்படும் வடிவங்கள் காட்டும் அதே நேரத்தில், பெளத்தத்துடன் வந்த வரிவடிவம் கிறிஸ்தாப்த காலத்தில் இவ்வடிவங்களை அமிழ்த்தியதை எடுத்துக் காட்டும் விதத்தில் இவை வழக்கொழிந்தமை அமைகின்றது.
அசோகனுக்கு முந்திய வரிவடிவத்தில் பயின்ற மக்கள். ஒரே கலாசாரத்தில் திளைத்த மக்கள். பெளத்தத்துடன் வந்த வரிவடிவத்தையும் இணைத்து மாறி மாறிச் சில காலம் கல்வெட்டுகளில் இவ்விரு வரிவடிவங்களையும் பயன்படுத்தினாலும். பழைய வடிவங்கள் ஈற்றில் வழக்கொழிந்ததையே இவை எடுத்துக் காட்டுகின்றன.
இப்பிராமிக் கல்வெட்டுகள் பெளத்தத்தின் மொழியாகிய வட இந்தியப் பிராகிருத மொழியில் எழுதப்பட்டாலும், இவற்றின் எச்சசொச்சமாக எஞ்சி நிற்கும் திராவிடக் குலப் பெயர்கள் பெளத்தம் இங்கு அறிமுகமாவதற்கு முன்னர் தமிழகத்தை ஒத்த குலங்களே இங்குக் காணப்பட்டதை
-44

எடுத்தியம்புகின்றன. வட இந்திய நால்வகை வர்ண சாதி அமைப்புப் பற்றி எந்தவிதச் சான்றுகளும் இக்கல்வெட்டுகளில் காணப்படாத நிலையில், தமிழகக் குலங்கள் பற்றி இவற்றில் உள்ள குறிப்புகள், ஈழம் பழந்தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கியதையே எடுத்துக் காட்டுகின்றது.
இப்பிராமிக் கல்வெட்டுகளைத் துருவி ஆராய்ந்த கனகரத்தினம்" பேராசிரியர் வேலுப்பிள்ளை." இக்கட்டுரையாசிரியர்' ஆகியோருள், இக்கட்டுரையாசிரியர் இதைப் பல்வேறு கட்டுரைகளாக வெளியிட்டுள்ளார். இவற்றில் முதன்மை பெறுவது “பருமக” என்ற வடிவமாகும்.
கிறிஸ்தாப்தத்திற்கு முந்திய 1200 கல்வெட்டுகளில் 400 கல்வெட்டுகளைத் துருவி ஆராயும் பொழுது, குலங்களின் விரிவடைந்த குழுக்களின் தலைவர்களாக விளங்கிய இவர்கள் அக்காலச் சமுதாயத்தில் பிரபுத்துவ நிலையில் காணப்பட்டதோடு, நாட்டின் நிருவாகத்தில் முதுகெலும்பாக விளங்கி விவசாய வாணிப நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் வகித்த துாதுவர், அமைச்சர். சேனாதிபதி, கணக்காளர் போன்ற பதவிகளும் அக்கால அரசியல் பொருளாதாரத் துறையில் இவர்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன. அரசர்களோடு மணத் தொடர்பு கொண்டிருந்தது மட்டுமன்றி, இப்பதம் இக்கல்வெட்டுகளில் கி.பி. 1ஆம் நுாற்றாண்டளவில் வழக்கொழிந்தாலுங்கூடக் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை சிங்கள மன்னர்கள் மாபருமக/மகாபருமக என்ற இவ்விருதுப் பெயரைச் சூடியிருந்தமையானது இக்குலங்களின் தலைவர்களில் ஒருவர்தான் காலகதியில் அரசனாக வந்தமை உறுதியாகின்றது. இதன் மூலத்திற்குப் பலவாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதான விளக்கமாக அமைவது.
-45

Page 38
வடமொழிப் பிரமுகவின் வழிவந்ததே இஃதாகும் என்பதாகும். பிரமுகவிலிருந்து தான் சிங்களப் “பமுக” பாளிப்பமொக்கோ பாமொக்கோ ஆகியன மருவியதென்பதே இவர்கள் தரும் விளக்கமாகும்.
இப்பதத்தை ஒலியமைப்பிலும், உருபனியலமைப்பிலும் ஆராய்ந்து பார்க்கும்போது, மேற்கூறிய சொற்பிறப்பாராய்ச்சி இதன் உண்மையான கருத்தை விளக்கவில்லை என்பது தெரிகின்றது. இதனை வடமொழிச் சொல்லாகிய பிரமுகவின் திரிபெனக் கொண்டால், இச்சொல் மருவிய விதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றாகத் தென்படவில்லை. பிரமுகவில் வரும் “பிர” என்பது “ப' அல்லது “பர” எனத் திரியுமேயொழியப் “பரு” வாகக் பிராகிருத மொழியில் திரியமாட்டாது. எவ்வாறெனில், சமஸ்கிருதத்தில் உள்ள “பிரியா” “சந்திரா” என்ற பதங்கள் பிய, சண்ட எனத் திரிவது போலாகும். இதனால், பருமுக போன்றல்லாது சிங்கள, பாளி வடிவங்கள் வடமொழிப் பிரமுகவின் வழிவந்தவை என்பது புலனாகும்.
அத்துடன் இக்கல்வெட்டுகளில் எட்டு இடங்களில் இதன்பெண்பால் வடிவமாகிய “பருமகள்” காணப்படுவதால் பொதுப் பால் வடிவமாகிய வடமொழிப் பிரமுகவிலிருந்து இக்கல்வெட்டுகளிலுள்ள “பருமக” என்ற வடிவம் உருவாகியிருக்க முடியாது என்பது புலனாகும். தமிழிலுள்ள “பிரமுகர்” என்ற வடிவமும் வடமொழிப் பிரமுக வழிவந்ததே. உண்மையிலேயே இது ஒரு பழந்தமிழ் வடிவமாகும். இதனை இருவாறு புணர்த்தலாம். பரு அல்லது பெரு என்ற பகுதியுடன், மக/மகன் என்ற விகுதியை இணைத்தால், பருமகன் அல்லது பெருமகன் என இது மலரும். “மகன்’ என்றதன் பழைய வடிவந்தான் “மக” ஆகும். இதனால் “பருமக” என்பது பழைய வடிவமே எனக் கொள்ளலாம்.
-46

மக பின்னர் “மான்” என மருவி வழங்கி வந்ததைச் சங்க இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகள் எடுத்தியம்புகின்றன.
சங்க இலக்கியங்களில் பெருமகன் என்பது மறவர் பெருமகன். பாணர் பெருமகன், குறவர் பெருமகன். பூலியர் பெருமகன் போன்றும், மான் என்பது சேரமான். அதியமான் நெடுமானஞ்சி, மலையமான் திருமுடிக்காரி, தொண்டைமான் இளந்திரையன் போன்றும் வழக்கில் வந்திருப்பதை நோக்கும் போது, குலங்களின் தலைவர்களாகக் குறுநிலத் தலைவர்களாக விளங்கிய இவர்கள் அக்கால அரசியலில் முக்கிய பங்காற்றியமை தெரியவருகின்றது.
இத்தகையோரே ஈழத்திலும் இத்தகைய பங்கினை ஆற்றியதை இக்கல்வெட்டுகளின் எண்ணிக்கையில் இவை மூன்றிலொரு விழுக்காட்டில் காணப்படுவது மட்டுமன்றிப், பெருங் கற்காலப் பானை ஓடுகளிலுள்ள குறியீடுகளும் இப்பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படுவதும் உறுதி செய்கிறது.
இக்கல்வெட்டுகளில் காணப்படும் இன்னொரு பதம் “வேள்” ஆகும்." பிராமி வரிவடிவத்திலுள்ள “ள" வை “ளு” என இனங்கண்டு இதனை “வேளு” எனப் பரணவித்தானா வாசித்து இது வடமொழி "வைல்வ” என்ற பதத்தின் மருவுதலே எனக் கொண்டார். ஆனால், இதே பதம் தமிழகப் பிராமிக் கல்வெட்டுகளில் “வேள்” என வாசிக்கப்பட்டதை நோக்கும்போது, ஈழத்திலும் இதே பொருளையே இது தந்து நிற்கின்றது எனலாம்.
சங்க இலக்கியங்கள் குறிக்கும் வேள்கள் குறுநில மன்னர்களாகத் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் ஆட்சி செலுத்தினாலுங்கூட இக்காலத் திருவனந்தபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களே “வேள்நாடு” என
-47

Page 39
அழைக்கப்பட்டது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியங்களில் இவர்கள் “தொன் முடிவேளிர்”, “முதுகுடிவேள்” என அழைக்கப் பட்டார்கள்.
தமிழக வரலாற்றறிஞரான பேராசிரியர் செம்பகலகூஷமி அம்மையார் சங்க இலக்கியங்களில் காணப்படும் வேள்களின் குடியிருப்புகளுக்கும் பெருங் கற்காலக் கலாசாரக் குடியிருப்புகளுக்குமிடையே இழைவிட்டோடும் ஒற்றுமையை எடுத்துக் காட்டியுள்ளதோடு, தமிழ் நாட்டில் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தியவர்களாகவும் இவர்களை இனங்கண்டுள்ளார்." இத்தகைய பணியையே ஈழத்திலுள்ள வேள்களும் ஆற்றினார்கள் என்பது தர்க்கரீதியானதே.
வேள்களின் ஒரு கிளையினரே ஆய்களாகும். வேள்களைப் போன்று அவர்களும் குறுநில மன்னர்களே, ஈழத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட கல்வெட்டுகளில் “அய” “அபி” என்ற வடிவங்கள் காணப்படுகின்றன. அய என்ற வடிவத்திற்கு இளவரசன் என்றும், அபி என்ற வடிவத்திற்கு இளவரசி என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவற்றிலுள்ள “அபி” என்ற வடிவம் மனைவியையும், மகளையும் குறிக்கும் எனவும் கொள்ளப்பட்டுள்ளது. நிற்க. தமிழகப் பின்னணியை அறியாத சிங்கள ஆய்வாளர்கள் மதிப்பிற்குரியவன் எனப் பொருள்படும் வடமொழி “ஆரிய' பாளி "ஐய’ ஆகியவற்றிலிருந்தே அய உருவாக்கம் பெற்றது என விளக்கம் அளித்துள்ளனர்." இன்னும் சிலர் தமிழ் ஐயன்தான் இக்கல்வெட்டுகளில் “அய” என இடம் பெற்றுள்ளது எனவும் கருதுகின்றனர்.*
ஈழப் பிராமியில் குறில் நெடில்களைக் குறிக்க, அசோகப் பிராமியில் இருப்பது போன்று தனிக் குறியீடுகள் காணப்படாதிருப்பதாலும். மெய்யெழுத்துகளுக்குரிய புள்ளி இக்காலத்தில் காணப்படாததாலும், இதனை “ஆய்” என
-48

வாசிப்பதே பொருத்தமானதாகும். இதே போன்ற வடிவம் தமிழகத்திலும் இவ்வாறே இனங்காணப்பட்டதும் ஈண்டு நினைவுகூரற்பாலது.
தமிழிலுள்ள அவ்வை'அம்மை, கன்னடத்திலுள்ள அப்பே என்பன்வே இக்கல்வெட்டுகளில் “அபி” என வழங்கப்பட்டுள்ளது. அதன் பொருள் மதிப்பிற்குரியவள்! பெரியவள் ஆகும். “வ”, “ப'வாக மாறும் வழக்கம் இக்காலக் கல்வெட்டுகளில் காணப்படுவதும் கருத்தில் கொள்ளத்தக்கது.* இவற்றைவிட மேலும் பல பழந்தமிழ் வடிவங்கள் பிராகிருத வெள்ளத்தில் தப்பிப் பிழைத்த நிலையில் இக்கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.
கிட்டத்தட்ட இருநூற்றுக்கு மேற்பட்ட கல்வெட்டுகளில் பத்திலொரு விழுக்காட்டில் பதபரத என்ற வடிவம் உள்ளது.* இவ்வடிவத்தோடு “பதிர” போன்ற வடிவங்களும் உள. ஆனால், பரணவித்தானாவோ எனில், இதை ஒரு விருதுப் பெயராகவே கொண்டு “பிரபு” என்ற கருத்தில் இது வழங்கப்பட்டது என்றார். எல்லாவலையும் பரணவித்தானாவின் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.* உண்மையில், இயற்பெயர்கள் அண்டிவரும் இப்பெயர்களைத் தென்னிந்தியக் குல அமைப்பு முறையை விளங்கிக் கொள்ளாத இவ்வறிஞர்கள் பட்டப் பெயராகவே கருதினர். ஆனால், இதைக் குலப் பெயராகவே கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.
சங்க இலக்கியங்களில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பரதர் குலம் பற்றிய குறிப்புள்ளது. “பரதன்” என்பதுதான் இவற்றுள் பரதவாக இடம் பெற்றுள்ளது. இதன் குறுகிய வடிவந்தான் “பத”வாகும். பாண்டி நாட்டின் கரையோரத்தில் வாழ்ந்த இவர்களில் இரு பிரிவினர் காணப்பட்டனர். ஒரு பிரிவினர் பொருளாதார ரீதியில் சிறப்புறாது. குடிசையில் வாழ்ந்து, மீன்பிடித்தல் - முத்துக் குளித்தல் போன்ற
-49

Page 40
பாகம்
பல்வேறு வளைவுகளுடனான காப்புகள்
(பொம்பரிப்பு) ULLô – 06
-50
 
 

தொழில்களில் ஈடுபட்டவர்கள். மற்றையவர்கள் வாணிபத்தில் முதன்மை பெற்று வசதியான மாடமாளிகைகளில் வாழ்ந்தவர்கள். குதிரை வியாபாரம் போன்றவை இவர்களின் தொழிலாக அமைந்தன. நற்றிணைச் செய்யுள் ஒன்று பரதவர் பனையை வழிபட்டதைக் கூறுகின்றது.
கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அநுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் வணிகரின் கல்வெட்டில் தமிழகத்தவரைக் குறிக்கும் தமிழ (தமேட), ஈள (ஈழ) ஆகிய பதங்கள் காணப்படுகின்றன. இதில் ஈழத்தில் வாழ்ந்த ஈழத்துப் பரதனும் தமிழகத்தைச் சேர்ந்த சமணனும் தமிழகத்து வணிகக் குழுவுக்கு அமைத்துக் கொடுத்த மண்டபம் பற்றிய குறிப்புள்ளது. இம்மண்டபம் வாணிப நடவடிக்கைகளுக்காக இவர்களால் பயன்படுத்தப்பட்டது.* இவ்வணிகக் குழுவினரின் பெயர்கள் இவர்களுக்காக அமைக்கப்பட்ட ஆசனங்களில் காணப்படுகின்றன.
அவையாவன - சக, நசத, கூதிஸ, குபிரசுயத, குபிர ஆகும். குபிர என்பவன் கராவ (கரையான்) எனக் குறிப்பிடப்பட்டு “நா விக’ எனவும் விளிக்கப்பட்டுள்ளான். நாவிக என்றால் கப்பலோட்டி ஆகும். இவனது ஆசனம் உயரத்திற் காணப்படுவதால் இவனே இக்குழுவின் தலைவனாக விளங்கினான் எனலாம். பாண்டி நாட்டின் தென்கோடியில் வாழ்ந்த பரதவர்கள், குதிரை வியாபாரம், முத்துக் குளித்தல் ஆகிய தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளில் குறிப்பாகப் பொலநறுவை மாவட்டத்திலுள்ள பரதவரின் டுவேகலக் கல்வெட்டில் பாய்மரக் கப்பல் ஒன்றின்
வரைபடம் உள்ளது."
-51

Page 41
இத்தகைய வரைபடம் 90களில் மேற்கொள்ளப்பட்ட அநுராதபுர அகழ்வின் போது கிடைத்த பானை ஒட்டிலும் உள்ளது.* தென் மாகாணத்திலுள்ள அக்குறுகொடவிலுள்ள மட்பாண்டத்திலும் றிடியாகலவிலுள்ள கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களிலும் இத்தகைய பாய்மரக் கப்பல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கப்பல்கள் தமிழக நாகப்பட்டினப் பகுதியிலும், தமிழக-ஈழ வாணிபத்திலும், பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டதை நோக்கும் போது தமிழக ஈழப் பரதவர்களின் வாணிப நடவடிக்கைகளின் எச்சங்களாக மேற்கூறிய வரைவுகள் விளங்குகின்றன எனலாம்.
தமிழகத்தில் வாழ்ந்த பழங்குடிகளில் பழையர் என்போரும் ஒருவராவர். இவர்களின் பெயரும் இக்கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.° பாண்டிய வம்சத்தின் தோற்றத்திற்கும் பழையர் குலத்திற்கும் நெருங்கிய ஒற்றுமை ஒன்றுண்டு எனச் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். காரணம், “பழையர்” “பண்டையர்” அல்லது “பண்டு” ஆகியன ஒரே பொருளைத் தந்து நிற்பன மட்டுமன்றிப் பாண்டியரையே குறித்தன எனலாம்.
இச்சந்தர்ப்பத்தில் மேகஸ்தீனிஸ் ஈழத்து மக்கள் “பழகோனி” என அழைக்கப்பட்டனர் எனக் குறிப்பதை நோக்கும் போது, ஆதிக் குடியேற்றத்தில் பாண்டியர் பெற்றிருந்த முக்கியம் விளங்குகிறது." ஏன் பிற்பட்ட மத்திய காலச் சோழக் கல்வெட்டுகளில் கூடத் தென்னிந்தியாவிற்குத் தெற்கே (ஈழம் தவிர்ந்த தீவுகள் யாவும் பழந்தீவுகள் என அழைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனாற் போலும் விஜயன் கட்டுக் கதையில் கூட விஜயனுக்குப் பட்டத்தரசியாகத் தென்மதுரைப் பாண்டிய இளவரசி மட்டுமன்றி. அவளோடு வந்த எழுநுாறு தோழியர்களும் குறிப்பிடப்படுகின்றனர். அது மட்டுமன்றிப்
-52

பதினெண்வினைஞர் கூட்டத்தினரையும் இளவரசி அழைத்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதன் மூலம் ஈழத்து நாகரிக வளர்ச்சிக்குப் பாண்டி நாடு ஆற்றிவந்த பங்கு ஐதீக ரூபத்திலாவது வெளிக் காட்டப்பட்டுள்ளது எனலாம். அத்துடன் விஜயன் தொட்டுத். தேவநம்பியதீசன் வரை ஆட்சி செய்த மன்னர்களின் பெயர்கள் சிலவற்றில் “பண்டு” என்ற வடிவம் காணப்படுவதும் ஆராயற்பாலது. இவை முறையே “பண்டுவாசுதேவ' “பண்டுகாபய” ஆகும். பண்டுகாபய மன்னன் இளமைக் காலத்தில் “பண்டுல” என்ற பிராமணனிடம் கல்வி கற்றதோடு, இப்பிராமணன் வாழ்ந்த இடமாகப் “பண்டுலகம”வும் மகாவம்சத்திற் குறிப்பிடப்படுகின்றது.* அத்துடன் பண்டுகாபயன் வாழ்ந்த இடங்களில் ஒன்றாகத், துவார மண்டலமும் கூறப்படுகின்றது. கபாடபுரத்தின் மற்றொரு வடிவந்தான் துவார மண்டலம் என்பதும் ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.* துவார மண்டலந்தான் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளில் “தவிறிகிரிய” என அழைக்கப்படுகின்றது.*
வரலாற்று ஆசிரியர்கள் இப் “பண்டு” என்ற பதத்தை வடநாட்டிலுள்ள புத்தரின் வமிசத்துடன் இணைத்தாலுங் கூடத் தொல்லியல் பின்னணியில் நோக்கும்போது, பாண்டி நாடு ஈழத்தின் நேரெதிரே காணப்படுவதால், இவ்வடிவம் பாண்டியரைக் குறித்தது எனலாம்.
இதனாற் போலும், நிக்கலஸ் போன்றோர் வடஇந்தியாவிலிருந்து ஏற்பட்ட விஜயனது குடியேற்றத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தாலுங்கூட இத்தகைய வட இந்தியக் குடியேற்றம் ஈழத்தில் ஏற்பட்ட போது, தென்னிந்தியர் ஏன் அதனை எதிர்க்கவில்லை என்றும்,
-53

Page 42
அவ்வாறு எதிர்த்திருந்தாலும் அவர்களின் எதிர்ப்பினைச் சமாளித்து ஈழத்தில் வட இந்தியர் ஒரு ஸ்திரமான அரசைக் கி.மு. நான்காம் நுாற்றாண்டிலோ அல்லது அதற்கு முன்னரோ எவ்வாறு அமைத்தனர் என்பது பற்றியும் திருப்திகரமான முடிவுக்கு வரமுடியாது எனக் கூறியிருப்பதும் ஈண்டு அவதானிக்கத் தக்கது.*
பழையர் என்ற பெயரை நினைவு கூருவதாக அமைவதுதான் கி.மு. 2ஆம் நுாற்றாண்டில் ஈழத்தை ஆட்சிசெய்த பாண்டிய மன்னர்கள் சிலர் “பழையன் மாறன்” “பனையன் மாறன்’ போன்ற பெயர்களைச் சூடியிருந்தமையாகும்.* ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளில் “ஆய்மாற” என்ற வடிவம் காணப்படுகின்றது." இது “மாற” என்ற பாண்டியரின் பெயரைச் சூடியிருந்த ஆய்களைக் குறித்தது எனலாம். இக்கல்வெட்டுகளில் காணப்படும் மற்றுமோர் வடிவந்தான் புலையர் ஆகும்.
பரணவித்தானா? இதனைப் “புலய” என்ற முனியின் வழி பிறந்த வடிவமாகக் கொண்டாலுங்கூட இதனைத் தமிழகப் பின்னணியில் நோக்கும்போது, இது தமிழகப் புலையரையே குறித்து நின்றது எனலாம்.
சுள, சுட என்பது மன்னர்களுக்கும் பிரதானிகளுக்கும் வழங்கப்பட்ட பெயராக இக்கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது.* ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளில் "p" வடிவம் காணப்பட்டாலும், வட இந்தியப் பிராமி வரிவடிவத்தில் ‘ழ’ வடிவம் காணப்படவில்லை. இதனால் இது வரும் இடங்களில் ல அல்லது ள அல்லது ட பயன்படுத்தப்பட்டுள்ளது. அநேகமாக, “ட” தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், “சுள”, “சுட” ஆகிய பதங்கள் தமிழக வமிசத்தவராகிய சோழரையே குறித்தது எனலாம்.
-54

பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படும் மற்றுமோர் வடிவந்தான் ‘உதிய’, ‘உதி” என பலவாறு காணப்படுகின்றது. உதியன் என்ற பெயரின் குறுக்கமாகவே இவற்றைக் கொள்ளலாம். இப்பெயர் தமிழகத்தில் ஆட்சி செய்த சேர வமிசத்தவரை நினைவு கூருகின்றது. பதிற்றுப்பத்தில் முதலாவது சேர மன்னன் உதியஞ்சேரல் என அழைக்கப்படுவதும் நோக்கற்பாலது.
அது மட்டுமன்றி, உதியர் என்பது சங்க காலத்தில் வாழ்ந்த இனக் குழு ஒன்றின் பெயராக விளங்கியதும் FF6TG அவதானிக்கத்தக்கது." அடுத்து முக்கியத்துவம் பெறுவது, “மருமகன்” என்ற வடிவமாகும்." இஃது ஒரு தமிழ்ச் சொல்லாகும். இதற்கு தமிழ் அகராதி" பின்வரும் பொருள்களைத் தருகின்றது. (1) ဓူof ஆணின் சகோதரியின் மகன் அல்லது பெண்ணின் சகோதரனின் மகன் (2) மணத்தால் மருவிய மருமகன் (3) சந்ததியோன். தமிழிலோ எனில் மருமகன். மருமான் எனவும், மணப்பினோர் என்பது வழிவந்தோர் அல்லது முன்னோர் எனவும் பொருள் படும். மருகி. மருமகள் ஆகியவை இவற்றின் பெண் பால் வடிவங்களாகும்.
சிங்களத்தில் இன்றும் வழக்கிலிருக்கும் “முன்பற” என்ற வடிவம் சந்ததியினன் என்ற கருத்திலும் உபயோகத்திலுள்ளது. மருமகன் சிங்கள, தமிழ் சமூகத்தில் இன்றும் பெறும் முக்கியத்துவத்தை நோக்கும்போது, முன்பொருகால் வழக்கிலிருந்த தாய் வழிச் சமுதாய அமைப்பின் எச்சங்களே இவை என எண்ணத் தோன்றுகிறது. இன்றும் மலையாளத்தில் வழக்கிலிருக்கும் மருமக்கட் தாய அமைப்பு முறையும் இப்பழைய அமைப்பின் எச்சமாகும்.
இவற்றைவிடக் கல்வெட்டுகளில் எஞ்சி நிற்கும்
-55

Page 43
வடிவங்களாகக் கோட்டை கடவை, பங்கு, திரு. நகரம் போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம். இறுதியாகச் சங்க
நுால்களில் “திரையர்”, “தியர்” என்ற குலம் பற்றிய குறிப்புள்ளது. இதற்கும் ஈழத்தில் இக்கல்வெட்டுகளில் காணப்படும் “திஸ்ஸ” என்ற வடிவத்திற்கும் உள்ள தொடர்பு ஆராயற்பாலது (ULLò - 9)
V1.மொழியியல் சான்றுகள்
இவ்வாறு ஈழத்துத் தொல்லியல், மானிடவியல், மரபணுவியல், சமூகவியல், சாசனவியல் ஆகியனவற்றின் சான்றுகள், பெளத்தத்துடன் அறிமுகமான பிராகிருத மொழியும் அதன் கலாசாரமும் பரவ முன்னர், இதற்கு முந்திய படையாக, தென்னிந்தியத் தமிழ், தமிழோடு ஒத்த இதன் கிளை மொழி ஆகியன இங்கு காணப்பட்டதை எடுத்தியம்புகின்றன. இதனை மனதிற் கொண்டுதான். பேராசிரியர் சுதர்சன் செனிவரத்தினா பெளத்த கலாசாரம் பரவுமுன்னர். இந்தோ ஒஸ்ரிக் முண்டா, திராவிட மொழிகள் பேசப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை ஏற்றிருந்தார்."
“It is quite likely that the earliest groups may have spoken Indo-Austric Munda and Proto-Dravidian Languages'
இத்தகைய மொழிகளைப் பேசியோரில் திராவிட மொழிக் கூட்டத்தினரே முக்கியப் பங்காற்றினர் என்றும், பெளத்தத்துடன் வந்த பிராகிருத மொழிச் செல்வாக்கால் ஈழத்தில் மொழி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் 90களில் அநுராதபுரத்தில் அகழ்வை மேற்கொண்ட கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கொன்னிங்காம் பின்வருமாறு கூறியிருப்பது அவதானிக்கத்தக்கது."
-56

ஈழத்தில் ஏற்கெனவே நிலவிய மொழிகளுக்குப் பதிலாகப் பிறிதொரு மொழி இதன் இடத்தைப் பெற்றமைக்கான காரணம் ஒன்றோ அல்லது பலசக்திகளின் சேர்க்கையோ என்பது பற்றி இன்னும் தெளிவில்லை. ஈழத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காரணிகள் இத்தகைய மொழி மாற்றத்திற்கு வழி வகுத்திருக்கலாம். இந்த முழுமையான விளைவிலிருந்து இத்தகைய போக்குக்கு வழிவகுத்த உந்து சக்தியைப் பிரித்துப் பார்ப்பதோ அல்லது இனங் காணுவதோ முடியாதுள்ளது. பிராகிருத மொழியில் பெருந்தொகையினதாகிய கல்வெட்டுகள் எழுதப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அம்மொழியைப் பேசியவர்கள் அல்லது எழுதியவ்ர்கள் அதிகமாயிருந்தனர் என்பது அவசியமன்று.
“It is still unclear which process ofcombination ofprocesses, were the cause of Sri Lankan language replacement. It is possible that very different processes were at work at different areas of the Island and that we cannot isolate oridentify a prime mover from the overall result. The presence of a number of inscriptions written in Prakrit, however, don't necessarily indicate a large number of writers or presumably speakers in that language'
இத்தகைய மொழி மாற்றத்திற்கு உதாரணமாக, 1679இல் (17ஆம் நூற்றாண்டில் கண்டி அரசனின் சிறையிலிருந்து ஒடிய றொபேட் நொக்ஸ் என்ற பிரித்தானிய மாலுமி அநுராதபுரத்தில் தாம் கதைத்த சிங்கள மொழியை, அப்பகுதி மக்கள் புரிந்துகொள்ள முடியவில்லை என்ற கூற்றையும் எடுத்துக் காட்டியுள்ளார்."
“Nor could they understand the Chingulay (Sinhalese) language inwhich we spoke to them”
-57

Page 44
பெளத்தத்தின் மொழியாகிய பிராகிருத மொழி பரவுமுன்னர், ஈழத்தில் நிலவிய மொழி திராவிட மொழியே என்ற கொன்னிங்காமின் கூற்றை ஆதரிப்பதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ போதிய சான்றுகள் இல்லை எனக் கூறும் பிரபல தொல்லியலாளரான கலாநிதி சிரன் தெரணியாகல பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இத்தகைய கூற்று அநுராதபுர அகழ்வின் போது, பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஒடுகளின் மொழியை மையமாக வைத்துக் கூறப்பட்டதும் அவதானிக்கத்தக்கது."
இக்கல்வெட்டுகளின் மொழியை ஆராயும்போது, இது இந்தோ ஆரியப் பிராகிருதமாகும். பிராகிருதம் ஈழத்திற்கு அறிமுகமாக முன்னர் நிலவிய மொழி பற்றி அறிய முடியாதுள்ளது. சிங்கள மொழியில் காணப்படும் ஆரிய மொழியல்லாத, திராவிட மொழியல்லாத சொற்களை நோக்கும் போது, பிராகிருத மொழிக்கு முந்திய மொழியாக வேடர் மொழியோ அல்லது திராவிட மொழியோ அல்லது வேறொரு மொழியோ விளங்கியதென்பது தெரியாது. எவ்வாறாயினும், மேன்மக்களது மேலாதிக்கம் ஈழத்தின் ஆதிமொழியில், பிராகிருத மொழியின் அழுத்தம் ஏற்படுவதற்குப் பிரதான காரணியாக இருந்திருக்கலாம்.
Language ofthe inscriptions where discernible is Indo-Aryan Prakrit. There is no way of ascertaining what language was in use before Prakrit in Sri Lanka, whether Vedda, Dravidian or some other category as evidenced by the occurrence of certain nonIndo Aryan, non-Dravidian words in the Sinhalese language. It is probable that elite dominance was the prime factor responsible for the suppression of the earlier base language of Sri Lanka by
Prakrit.
-58

இதனால் இத்தகைய ஈழத்தின் ஆதி மொழிகளில் ஒன்று மேன்மக்களது மேலாதிக்கத்தினால் எவ்வாறு உருமாற்றம் பெற்றது என்பது தெளிவாகின்றது. உண்மையிலே, இக்காலச் சிங்கள மொழியில் பல்வேறு வகையான படைகள் உள. இது தமிழ் மொழியைப் போன்று ஈழத்தில் ஆதிக் குடியேற்றம் நிகழ்ந்த போது இங்குக் காணப்பட்ட ஒஸ்ரலோயிட் இன மக்களின் (இக்கால வேடர்களின் மூதாதையர்கள்) மொழியாகிய ஒஸ்ரிக் மொழிச் சொற்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆதித் திராவிட மொழியாகிய இது, பின்னர் ஏற்பட்ட மேன்மக்களது மேலாதிக்கத்தின் விளைவாகப் பெளத்தத்துடன் வந்த பிராகிருத, பாளி மொழிகளின் செல்வாக்குக்கு உட்பட்ட வரலாறாகும்.
VI.தமிழ்-சிங்கள மொழிகளின் உறவுகள்
தொல்லியல் பின்னணியில் மேற்கூறிய உருமாற்றம் பெற்றதை இன்று நாம் விளங்கிக் கொள்ளுவதற்கு முன்னர், இந்நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் புலமைமிக்க இரு அறிஞர்கள், மொழியியல் ரீதியில் சிங்கள மொழி அடைந்த உருமாற்றம் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளமையை இங்குச் சுட்டிக் காட்டுவதும் அவசியமாகின்றது.
இவர்கள் இவ்வாய்வில் ஈடுபட்டபோது, சிங்கள மொழிக்குப் பலவகையிலும் தொண்டாற்றிய ஜெர்மானிய தேசத்தவரான வில்லியம் கெய்கர் சிங்கள மொழி வட இந்திய ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழி என வாதிட்டாலுங்கூட அதனை அம்மொழிகளில் ஒன்றுடன் இணைக்க முடியாது. அதிலிருந்து இது பிறந்ததென்று நிரூபிக்க முடியாது என்று தத்தளித்தார்.
-59

Page 45
60
S
 

காரணம், சிங்கள மொழி தனிப் பண்புகளையுடையதாக விளங்கியதேயாகும். அது மட்டுமன்றி, இதில் திராவிடச் சாயல் உண்டென்று கூறி இவ்வாய்வில் திராவிட மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஒருவர் ஈடுபடுவது பயனுடையதாகும் என்றார். இத்தகைய ஆய்வில்தான் நாம் மேலே சுட்டிக் காட்டிய சிங்கள-தமிழ் மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற முதலியார் டபிள்யூ.கே.குணவர்த்தனாவும், சுவாமி ஞானப்பிரகாசரும் ஈடுபட்டனர். முதலியார் குணவர்த்தனா அவர்கள் 1918இல் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆனந்தா கல்லுாரியில் சிங்கள மொழி பற்றி ஆற்றிய உரையில் பின்ஜருமாறு குறிப்பிட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.
‘விஞ்ஞான ரீதியாக நோக்கும் போது, மொழி ஒன்றினைத் தீர்மானிக்கும் காரணி அதனது சொற்றொகுதி அல்ல. ஆனால், அதனது வசன அமைப்பே ஆகும். அதாவது, கருத்து வெளிப்பாட்டில் சொற்களை ஒருங்குபடுத்திப் பரஸ்பரம் சீராக்குவது பற்றியதாகும். இவ்வாறு நோக்கும் போது, சிங்களம் அடிப்படையில் ஒரு திராவிட மொழி எனக் கூறல் வேண்டும். இது மட்டுமல்ல. இதன் பரிணாம வளர்ச்சியும் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டதாகத்தான் தெரிகின்றது. சொற்றொகுதியின் அடிப்படையில் சிங்களம் பாளியினதும் சமஸ்கிருதத்தினதும் குழவி எனக் கொள்ளும் வேளையில், அதன் உருவ அமிசங்களிலும் அமைப்பிலும் அடிப்படையில் தமிழ் மொழியின் குழவி எனக் கூறுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.”
இக்கால விஞ்ஞான ரீதியான மொழியியல் ஆய்வாளர்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து யாதெனில் ஒரு மொழிக்குத் தனித்துவத்தைக் கொடுப்பது அதன் சொற்செறிவல்ல. வசன அமைப்பே ஆகும்.
-61

Page 46
இவரது கருத்தைச் சிங்கள மொழி வட இந்திய ஆரிய குடும்பத்தைச் சார்ந்த மொழியே என்று வாதிட்ட கெய்கரைப் பரணவித்தானா ஆகியோர் எதிர்க்காத காரணம் ஒன்றே இவரது கருத்து நியாயமானது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
சுவாமி ஞானப்பிரகாசரும், சிங்கள மொழியானது ஈழத்தின் ஆதி நாகரிக கர்த்தாக்களின் மொழியினை உறுதிப்படுத்தும் நினைவுச் சின்னமே என்றார். பெளத்தத்துடன் வந்த பிராகிருத, பாளி மொழிகளின் செல்வாக்கால்தான், சிங்கள மொழி வட இந்திய ஆரிய மொழிப் பண்பைப் பெற்றுள்ளது என்பது இவர்கள் காட்டும் காரணங்களாகும். தொல்லியற் சான்றுகள் இதனையே உறுதிப்படுத்துகின்றன.
சிங்கள மொழியின் தன்மையை மேலும் ஓர் உதாரணத்தால் விளக்கலாம். சிங்கள நெடுங்கணக்கில் இரண்டு வகை உண்டென்பதை கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முதல் சிங்கள இலக்கண நுாலாகிய “சிதற்சங்கராவ' குறிக்கின்றது. அவையாவன - எலு, கலப்பு நெடுங் கணக்குகளாகும். இவற்றில் எலு நெடுங் கணக்கில் பாளி சமஸ்கிருத உச்சரிப்புகள் காணப்படவில்லை. கலப்பு நெடுங் கணக்கைவிட இது காலத்தால் பழையது.
சிங்களக் கல்வெட்டுகளை உபயோகித்தவர்கள் கூட ஆரம்ப காலத்தில், இக்கலப்பு நெடுங் கணக்கை உபயோகிக்காததை நோக்கும் போது, இந்நெடுங் கணக்கு அவர்களின் வழக்கத்திற்குப் புறம்பானதொன்றாகவே காணப்படுகின்றது.
இதனால் தற்காலச் சிங்கள மொழியின் மூதாதை மொழியாக “எலு” விளங்குகின்றமை தெரிகின்றது. சிங்கள மொழி பற்றி ஆராய்வோர் அம் மூதாதை மொழிச்
-62

சொற்கள் தற்காலச் சிங்க ளத்தில் உள்ளதை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது பற்றிப் பின்னர்ப் பார்ப்போம். இவ்வாறு எலு மொழியைப் பேசியோர் சிங்கள மயமாக்கலால் எவ்வாறு உருமாறினர் என்பதை நாம் மேலே குறிப்பிட்ட கேம்பிறிஜ் பல்கலைக் கழக ஆய்வாளரான கொன்னிங்காமின் கருத்தினை இங்குப் பதிவதன் மூலம் எடுத்துக் காட்ட விரும்புகின்றோம்." “சிங்கள மயமாக்கும் சித்தாந்தத்தின் நோக்கில், தென்னிந்திய அரசுகள் ஈழத்தினைக் கலாசார ரீதியில் தம்வயமாக்கும் முயற்சியினை வலுவாக எதிர்த்தன. இத்தகைய சூழலில் ஈழத்தின் தனித்துவமான இறைமையைப் பேணுவதற்கு அரசர்களும் பெளத்த சங்கத்தினரும் ஈழத்தின் வட இந்திய பெளத்த கலாசாரத் தன்மையை வலியுறுத்தியிருக்கலாம். இத்தகைய அழுத்தத்தின் விளைவாக ஈழத்தில் இருமொழி பாரம்பரியத்திற்குப் பதிலாக ஒரு மொழிப் பாரம்பரியம் படிப்படியாக வளர்ச்சியடைந்திருக்கலாம். உண்மையாகவே, மரபணு ஆய்வாளர்கள், சிங்கள மக்கள் வட இந்தியாவில் வாழும் மக்களிலும் பார்க்க, தென்னிந்திய மக்களுடனே தான் மரபணு ரீதியில் நெருங்கிய தொடர்புடையவர்கள் எனக் கருதுகின்றனர்.”
"By progressive Sinhalisation, they resisted the attempts by the south Indian states to assimilate the Island. In such circumstances, the Indo-European Buddhist nature ofthe Island may have been stressed by Kings and Buddhist communities, in order to preserve sovereignty. This emphasis could have resulted in the gradual spreadofa monolingual in place ofbilingualone. Certainly geneticists have suggested that the Sinhalese are more closely related to south Indian populations than to north Indian groups'
எனவே, சிங்களத்தின் மூதாதை மொழியாகிய “எலு” பெளத்த மதத்தின் மொழிகளாகிய பிராகிருதம், பாளி
-63

Page 47
ஆகியவற்றின் செல்வாக்கால் வடஇந்திய ஆரிய மொழிச் சாயலைப் பெற்றதென்பதே உண்மையாகும்.
ஈழத்தின் ஆதிப் பிராமிக் கல்வெட்டுகளிலே காணப்படும் எச்சங்களான திராவிட வரிவடிவமும், திராவிட குலகுழுப் பெயர்களும் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றன. செல்வாக்குள்ள மொழியொன்று ஏனைய மொழிகளுடன் கலக்கும் போது, கலக்கும் மொழியில் சில சமயம் தனது சாயலை அழுத்திவிடுவதும், சில சமயம் அதனை அழிப்பதும், சில சமயம் அதனை உருமாறச் செய்வதும் வரலாற்று நிகழ்ச்சிகளாகும். இவற்றை விளக்குவதற்கு மொழியியல் அறிஞரான நுாலன் சில உதாரணங்களைத் தந்துள்ளார்."
தற்கால இத்தாலி நாட்டில் அன்று இத்தாலிய மொழி வர்க்கத்தைச் சேர்ந்த பல மொழிகள் வழக்கிலிருந்தன. ஆனால், இம்மொழிகளை இலத்தீன் மொழி கிறிஸ்தாப்த காலத்தை அண்டியுள்ள காலப் பகுதியில் விழுங்கிவிட்டு ஒரு செல்வாக்குள்ள மொழியாக வளர்ச்சி பெற்றது. செல்ரிக் மொழிகள் ஒரு காலத்தில் ஐரோப்பா முழுவதும் பேசப்பட்டமை வரலாறு. ஆனால், உரோம சாம்ராஜ்ஜியத்தின் படர்ச்சியால் அதன் மொழியாகிய இலத்தீன் மொழி, இச் செல்ரிக் மொழிகளை அமிழ்த்திவிட்டது.
இதைப் போன்று இஸ்லாமியரின் எழுச்சியால், ஆப்பிரிக்கா, மேற்காசியா ஆகிய பகுதிகளில் இருந்த சுதேசி மொழிகளை அராபிய மொழி அமிழ்த்திவிட்டது மட்டுமன்றிப் பலமொழிகளின் சாயல்களையும் மாற்றிவிட்டது. உதாரணமாக, இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழைய ஈரானிய மொழியாகிய பேர்சிய மொழி, ஈரானிய மொழியின் செல்வாக்கால் 70%க்கு மேற்பட்ட சொற்செறிவைத் தன்னுள்ளே பெற்றது. ஒரு மதமும் அதனுடன் இணைந்த மொழியும் இன்னொரு மொழிமீது அரச ஆதரவுடன் ஏற்படுத்தும் பாதிப்பால்
-64

பாதிக்கப்படும் மொழி தன் சுயசாயலை இழப்பதற்கு இஃது ஒரு நல்ல உதாரணமாகும்.
இதே கதிதான் சிங்கள மொழியின் மூலமாகிய திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த எலுவுக்கும் நடந்தது. பெளத்தத்தின் வருகையால் ஏற்பட்ட பிராகிருத, பாளி, வட மொழிச் செல்வாக்கால் இவற்றின் சொற்செறிவை அது பெற்று உருமாறினாலும், இதன் உள்தோற்ற அமைப்பு இன்றும் இதன் திராவிடப் பூர்வீகத்தை உறுதி செய்கின்றது
எனலாம்.
VI. கொடுந்தமிழ் மொழியாகிய எலுவே சிங்கள மொழியாகிறது
அப்படியாயின் எலு மொழியின் பூர்வீகம் என்ன என்ற கேள்வி அடுத்து எழுகின்றது. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென நம்பப்படும் தொல்காப்பியம், அக்காலத்தில் தமிழகத்திலிருந்த 12 கிளை மொழிகளைப் பின்வருமாறு கூறுகின்றது
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச் சொற் கிளவி
(தொல்,சொல்.எச்.கு.400
இவை பற்றிப் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆராய்ந்து, இவை வழக்கிலிருந்த பிரதேசங்களையும் இனங்கண்டுள்ளார்." இச்சூத்திரத்தை நோக்கும்போது, அக்காலத் தமிழர்களின் 12 மாநிலங்களிலும் தனித்தனியாகத் தமிழோடு ஒத்த கிளைமொழிகள் இருந்தன எனக் கொண்டாலும் கூடத் தொல்லியற் சான்றுகளை நோக்கும் போது, பாண்டி நாட்டில் காணப்பட்ட மொழியே செந்தமிழ் மொழியாகிச் சங்கத் தமிழாய் இலக்கணமும் கண்டது. இது
-65

Page 48
செம்மொழியாக வளர்ச்சி பெற, ஏனையவை கொடுந்தமிழ் மொழிகளாயின.
செந்தமிழ் மொழி வளர்ந்த பிரதேசமே பாண்டி நாடாகும். இங்கேதான் முச்சங்கங்கள் விளங்கின. இவை முறையே வடமதுரை, கபாடபுரம், தென்மதுரை ஆகிய இடங்களிற் காணப்பட்டன. சங்க இலக்கியங்களில் ஈழத்துப் பூதந்தேவனார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஈழத்தவராகிய இவரே மதுரையில் வாழ்ந்ததால், மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் எனப் பெயர் பெற்றார் எனக் கூறப்படுகின்றது. அவரின் மூன்று பாடல்கள் அகநானுாற்றிலும், மூன்று பாடல்கள் குறுந்தொகையிலும், ஒன்று நற்றிணையிலும் at."
ஈழத்தின் குருநாகல் மாவட்டத்தில் உள்ள பண்டுவசுநுவராவில் இவர் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்தை இவரின் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை முன் வைத்துள்ளார். எவ்வாறாயினும், தமிழகத்திலுள்ள சங்கத்திற்குச் சென்று தமது பாடல்களை ஈழத்துப் புலவர் அரங்கேற்றினார் என்பதை நோக்கும்போது, ஈழத்தில் தமிழ்மொழி சிறப்பான முறையில் இக்காலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த ஒரு நிலையையே இஃது எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.
இன்றும் தமிழகத்தில் வழக்கொழிந்தாலும் யாழ்ப்பாணத்தில் வழக்கொழியாது நிற்கும் சங்ககாலத் தமிழ்ச் சொற்கள் மேற்கூறிய கருத்தினை உறுதி செய்கின்றன. தொல்காப்பியம் குறிப்பது போன்று ஆணை மட்டுமன்றிப் பெண் பிள்ளையையும் மோனே என அழைப்பதும், ஐந்து, அதர். உது, உவன், வந்தாரே போன்ற சொற்கள் இதற்கான சில உதாரணங்களாகும். இச் சொற்கள் பற்றி ஆராய்வது பயனுடையதாகும்."
-66

இவ்வாறு ஈழத்தில் தமிழ் மொழி நிலவியிருந்ததற்கான சான்றுகள் உண்டெனில், “எலு” மொழியின் நிலை என்ன என்ற கேள்வி அடுத்து எழுகின்றது. இவ்வெலு மொழியைத் தமிழகத்தில் நிலவிய கொடுந்தமிழ் மொழியாகக் கொள்ளலாம். இக்கொடுந்தமிழ்தான் பின்னர்ச் சிங்கள மொழியாக ஈழத்தில் வளர்ச்சி பெற்றது.
சிங்கள-தமிழ் மொழிகளுக்கிடையே உருவ அமைப்பில் காணப்படும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு, முதலியார் குணவர்த்தனா, சிங்கள மொழியைத் தமிழ் மொழியின் குழவி என இந்நூற்றாண்டின் முற்பகுதியிலே கூறியிருந்த கருத்தை நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ளதும் ஈண்டு நினைவு கூரற்பாலது.
இவ் “எலு” மொழி நமது நாட்டின் பழைய பெயராகிய ஈழத்திலிருந்துதான் தோன்றியது என்பது சுவாமி ஞானப்பிரகாசரின் கருத்தாகும். ஈழம் ஒரு திராவிடச் சொல் என்பது பிரபல மொழியியலாளரான பேராசிரியர் பரோவின் கூற்றாகும்." ஆகவே தமிழக ஈழக் கல்வெட்டுகள், இலக்கியச் சான்றுகள் ஆகியவற்றை உற்று நோக்கும் போது, இதன் மூலவடிவமாக “ஈழ” இருந்தது புலனாகின்றது. முதலில் தமிழகப் பிராமிக் கல்வெட்டுகளை நோக்குவோம். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றக் கல்வெட்டில் ஈழ-குடும்பிகன் பற்றிய குறிப்புள்ளது." போலாலையன் என அழைக்கப்பட்ட இவன், எருக் கொத்துாரில் வசித்தவனாவான்.
இவ்வாறே கீழவளவுக் கல்வெட்டில், தொண்டியில் வசித்த “ஈழவன்’ அளித்த பள்ளி பற்றிய குறிப்புள்ளது.17 சித்தன்னவாசல் கல்வெட்டில், சிறுப்பாவில் வசித்த "ஈழவர்' பற்றிய குறிப்புளது." ஈழத்திலுள்ள பிராமிக் கல்வெட்டுகளிலும் “ஈழ” பற்றிய குறிப்புளது. அநுராதபுரத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண்டைச்
-67

Page 49
சேர்ந்த தமிழ் வணிகரின் கல்வெட்டில் ஈளபரத (ஈழபரத அதாவது ஈழத்துப் பரதன் என்ற குறிப்புளது." “ழ”வுக்குப் பதிலாக “ள’ எழுதும் வழக்கமும் உண்டு. அத்துடன் வடஇந்தியப் பிராமி வரிவடிவத்தில் ‘ழ’ இல்லாததால், ‘ழ’ வுக்குப் பதிலாக “ள” அல்லது “ல” அல்லது ‘ட’ பயன்படுத்தப்படுவது வழக்கமாகும்.
இவ்வாறே பூநகரியில் கண்டெடுக்கப்பட்ட பானை ஒடுகளில் ஈளlஈலா என்ற பதங்கள் காணப்படுகின்றன." தமிழுக்குரிய சிறப்பான எழுத்துகளாகிய ‘ழ’ கரத்துக்குப் பதிலாக “ள” கரத்தின் அல்லது “ல” கரத்தின் பயன்பாடு இக்காலத்தில் காணப்பட்டதையே இஃது எடுத்துக் காட்டுகின்றது.
இச்சந்தர்ப்பத்தில், ஈழத்து மன்னர்களில் ஒருவனாகக் கி.பி. முதலாம் நுாற்றாண்டில் ஆட்சி செய்த ஈழநாக பற்றி மகாவம்சம் குறிப்பிடுவது அவதானிக்கத் தக்கது." இவ் வீழநாகதான், பிற்பட்ட ராஜவலிய என்னும் சிங்கள நூலில்” “எலுன்நாக” என அழைக்கப்படுவதால், “ஈழ" “எலு” ஆகியவை ஒன்றிலிருந்து ஒன்று மருவிய பதங்களே எனக் கொள்ளலாம்.
பேராசிரியர் வேலுப்பிள்ளை இறையனார் அகப் பொருளுரையில், கடலால் விழுங்கப்பட்ட எழுபத்தொன்பது நாடுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளமை அவதானிக்கத் தக்கது. இவை முறையே - ஏழ்தெங்கநாடு, ஏழ்மதுரைநாடு, ஏழ்முன்பாலைநாடு, ஏழ்பின்பாலைநாடு, ஏழ்குன்றநாடு, ஏழ்குணகரைநாடு, ஏழ்குறும்பைநாடு ஆகும். இங்குக் குறிக்கப்படும் "ஏழ்” என்பது இலக்கம் 7ஐக் குறித்து. 7 x 7 = 49 எனக் கொள்ளுவதற்குப் பதிலாக இந்நாடுகள் ஏழ் நாடுகள் என அழைக்கப்பட்டன எனக் இகாள்ளுதலே பொருத்தமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
-68

(&O 1 gTT그) 그C9니n드93)的-09C9和子
69

Page 50
இதனால், ஈழ-எலு-ஏழ் ஆகியவற்றுக்கிடையே இழைவிட்டோடும் ஒற்றுமை புலனாகின்றது. ஈழநாக, எலுன்நாக என ராஜவலியவில் அழைக்கப்படுவதால், ஈழமும் இவற்றில் தப்பிப் பிழைத்த நாடாக இருக்கலாம்.
அத்துடன், கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் உள்ள சிங்களக் கல்வெட்டுகளிலும் கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் உள்ள சிங்கள இலக்கியங்களிலும் சிங்கள மக்களை அல்லது மொழியைக் குறிக்கக் கெல, கல (Hela/Hala) (SUITGöTp வடிவங்களும்" சிகிரியாக் குகை ஓவியங்களில் உள்ள குறியீடுகள் ஒன்றில் நம்நாடு “கெலதிவி” “Heladivi’ என அழைக்கப்படுவதும் காணப்படுகின்றது.*
அக் கெல. கல ஆகியன சிங்கள மக்களின் மொழியின் பழைய பெயரெனக் கொண்டு பாளிச் சீகள/Sihala போன்ற வடிவத்திலிருந்துதான் இது பிறந்தது எனப் பரணவித்தானா போன்றோர் கருதினர்.
னால், பாளி மூலமாகிய சீகளவில் (Sihala) உள்ள
“சீ” எவ்வாறு விடுபட்டதென விளக்கங் கொடுக்க இவர்கள் தவறிவிட்டனர். இதனால் இத்தகைய சொற்பிறப்பாய்வு தவறாகும். ஈழ, எலு ஆகிய வடிவங்கள் ஒத்த வடிவங்கள் என்பது பற்றி நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.
இதனால், மூலவடிவமாகிய ஏழ் அல்லது ஈழ GT6óTLg GTao, GT), QG5Go, G56) (Eia - Ela - Elu - Hela - Hala) எனத் திரிந்திருந்தது எனக் கொள்ளலாம். பின்னர்க் கெலவுக்குத் “திரு”வைக் குறிக்கும் வடமொழிச் “சிறீ"யின் (Sri) பிராகிருத வடிவமாகிய “சீ” ஐச் சேர்க்கச் சீகள என்ற வடிவம் வந்தது எனக் கொள்வதே பொருத்தமாகும். இப்பாளி “சீகள” வடிவந்தான் சமஸ்கிருதத்தில் “சிம்கள” என வழங்கலாயிற்று.
-70

சில வரலாற்றாசிரியர்கள், சீகளவிலிருந்துதான் ஈழ அல்லது ஈழம் மருவியது எனக் கொள்ளுகின்றனர்.' இது பொருத்தமற்ற கூற்றாகும். காரணம், “சீகள” என்ற வடிவம் கிறிஸ்தாப்தத்திற்கு முந்திய ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படவில்லை. இது. முதல் முதலாக, கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆந்திர மாநிலத்திலுள்ள அமராவதியில் உள்ள கல்வெட்டில்தான் காணப்படுகின்றது.* அதுவும் நமது நாட்டின் பெயராகத் தம்பபண்ணியுடன்தான் இஃது இங்கே இடம் பெற்றுள்ளது. கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்குரிய தீபவம்சத்திலும் இது நாட்டின் பெயராகவே குறிப்பிடப்படுகின்றது.* மகாவம்சத்தில் இரு இடங்களில் இவ்வடிவம் இடம் பெற்றுள்ளது° ஒன்று விஜயன் கதையிலும் மற்றது வட்டகாமினி மன்னனின் பட்டப் பெயராக மகாகாலசீகள எனவும் இதனில் இடம் பெற்றுள்ளது.
இதனால், “சீகள” என்ற வடிவம் ஈழத்திலிருந்து பிறந்ததென்பது தெளிவு. இதுவும் ஈழத்தைப் போலவே, ஆரம்பத்தில் நாட்டையே குறித்துப் பின்னர் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசும் மக்கள் கூட்டத்தினரைச் சுட்டி நிற்கின்றது எனலாம்.
இச்சந்தர்ப்பத்தில் மகாவம்ச ஆசிரியர் விஜயனது குடியேற்றத்தின் போது, இதற்குக் கொடுத்த விளக்கம் பற்றி ஆராய்வது இங்கே பொருத்தமானதாகும். அதாவது, சிங்கத்தைக் கொன்றதால் சிங்கபாகு, சீகள என அழைக்கப்பட அவனுக்கும் அவர்களுக்குமிடையே இருந்த உறவால் (விஜயனும் பரிவாரங்களும்) “ ঐ ও গ্লো’ GT of " உண்மையிலே இக்காலத்தில் சீகள என அழைக்கப்பட்ட நாட்டின் பெயருக்கு, மகாவம்ச ஆசிரியர், இதனை ஓர் இனத்துடன் இணைத்துக் கொடுக்கப்பட்ட விளக்கமாகவே இஃது உள்ளது.
அழைக்கப்பட்டனர்.
-71

Page 51
சீகள என்ற வடிவத்தைச் “சீ”, “கள” என்ற பகுதி-விகுதிகளாகப் பிரித்த இவர், சீ என்பது சிங்கத்தையும், கள என்பது கொல்லலையும் குறித்து நின்று. சிங்கத்தைக் கொன்றவன் வழிவந்தோர் எனக் கல்லா முறைச் சொல்லாராய்ச்சி (Folk Etymology) மூலம் விளக்கங் கொடுத்துள்ளார்.
உண்மையிலே இத்தகைய சொற்பிறப்பாராய்ச்சி. நாம் மேலே எடுத்துக் காட்டிய சான்றுகளிலிருந்து ஆராயும் போது, பொருத்தமானதல்ல என்பது தெளிவாகின்றது. இதனால், பிற்காலச் “சீகள”வின் மூல வடிவம் ஏழ் அல்லது ஈழ அல்லது ஈழமென்பது தெளிவாகின்றது.
IX.இடப்பெயர்கள் தரும் சான்றுகள்
விஜயன் கூட்டத்தினர் வந்திறங்கிய இடத்தைத் தம்பபண்ணி எனக் கூறும் மகாவம்ச ஆசிரியர். இவர்கள் இந்நாட்டுக்குள் கால் வைத்தபோது, தாம் இறங்கிய நிலத்தைத் தொட்டபோது, கை சிவப்பாக மாறியதால் அந்த இடத்திற்கும் இத்தீவிற்கும் “தம்பபண்ணி” எனப் பெயரிடப்பட்டது என்கிறார்.* ஆனால் தமிழகத்து இலக்கிய சாசன ஆதாரங்களை நோக்கும் போது, வடமொழித் தாமிரவர்ணிதான் தம்பபண்ணியாகப் பிராகிருத மொழியில் வழங்கப்பட்டது தெரிகின்றது. இவ்வடமொழித் தாம்ரவரிணி கூடப் பழந்தமிழ் வடிவமாகிய தண்பொருநை'யின் உருமாற்றம் எனக் கொள்ளப்படுகிறது. இதனால், இப்பகுதியில் பாண்டிநாட்டின் தண்பொருநை நதிக் கரையிலிருந்து ஆதிக்குடியேற்றம் ஏற்பட்டதால், ஈழத்திற்கு இப்பெயர் வழங்கப்பட்டதெனலாம். பாண்டி நாட்டிலுள்ள இந்நதி தீரத்தில்தான் இந்தியாவின் மிகப் பெரிய தாழிக்காடான ஆதிச்சநல்லுார் விளங்குகின்றது. விஜயன் குழுவினர் வந்திறங்கியதாகக்
-72

கருதப்படும் மன்னார்த் துறையில், அதுவும் கால ஓயா நதிக் கரையிற்றான் ஈழத்தின் புகழ்பூத்த பெருங் கற்காலத் தாழிக்காடான பொம்பரிப்பு காணப்படுகிறது. இதில் அகழ்வாய்வின் போது கிடைத்த எச்சங்கள் யாவும் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வின் போது கிடைத்த தொல்லியல் எச்சங்களை ஒத்துக் காணப்படுவதால், ஈழத்தின் ஆதிக் குடியேற்ற வாசிகளில் ஒரு பகுதியினர். இப்பகுதியிலிருந்தே இங்கு வந்திருப்பர் எனக் கொள்ளலாம்.
அத்துடன் பொம்பரிப்பு என்பது உண்மையிலே பொன்பரப்பி ஆகும். இதன் பொருள் செம்மண் அல்லது சிவப்பு பூமியாகும். இது மட்டுமன்றி, மாந்தைத் துறைமுகத்தைக் குறிக்கும் மாந்தை என்ற வடிவம், யாழ்ப்பாணத்தின் பழைய பெயரான மணற்றி போன்றன சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள பெயர்களாகும். அத்துடன், துறைமுகங்களைக் குறிக்கும் “பட்டின” என்பதும் தமிழ் வடிவமாகும்.
பாளி நுால்கள் வடபகுதியிலிருந்த துறைமுகங்களாக ஜம்புகோள பட்டன. மாதித்த பட்டன ஆகியவற்றைக் குறிக்கின்றன. இவ்வாறே கி.பி. 1ஆம் நூற்றாண்டுக்குரிய பிராமிக் கல்வெட்டு வளவ கங்கைப் பகுதியிலிருந்த துறைமுகத்தைக் கொதபவட்டபட்டின என அழைக்கின்றது. மாந்தைக்கு அடுத்த துறைமுகமாக உருவெல பட்டன கூறப்படுகிறது. இவ்வாறே, வடமேற்கே, தெற்கே உள்ள நதி தீரங்களில் உள்ள துறைமுகங்கள் தோட்ட அல்லது தித்த எனவும் அழைக்கப்படுகின்றன. ஏன், திருகோணமலைத் துறைமுகங்கூட, கோகன்னதித்த என அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவை எலு மொழிச் சொற்கள் என எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
-73

Page 52
இவற்றோடு நதிகளைக் குறிக்கும் ஒயா, கங்கை போன்றன வேடரின் மூதாதையரான ஒஸ்ரிக் மொழி பேசியோர் இட்ட பெயர்கள் என இனங்காணப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாகக் கால ஒயா, தெதுறு ஓயா, வளவ கங்கை, மகாவலி கங்கை ஆகியவற்றைக் கொள்ளலாம்.
இவற்றிற் பிராகிருத மொழியின் தாக்கத்திற்கு முன்னர், ஒஸ்ரிக், திராவிட மொழிப் பெயர்களே இடப் பெயர்களாக விளங்கியமை தெரிகின்றது. வடஇந்தியக் கலாசாரத்தின் செல்வாக்கிருந்தும் கூட, இன்று பழைய வடிவத்துடன் இவை காணப்படுவது இவற்றின் தொன்மையை எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.
நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, விஜயனுக்குப் பின் அரசு கட்டிலேறியவர்களில், பண்டுவாசுதேவ, பண்டுகாபய (பகுண்ட) போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. இதற்கு வரலாற்று ஆசிரியர் கொடுக்கும் விளக்கமாவது - இப் “பண்டு” என்பது வடமேற்கிந்தியாவில் அரசோச்சிய புத்தரின் வமிசமே என்பதாகும்.
ஆனால், பாளி நுால்களை விரிவாக ஆராயும்போது, “பண்டு” என்ற பதம் தமிழகப் பாண்டியரையே குறித்து நிற்பதைக் காணலாம். இதனால், பிராகிருத மொழிக் கலாசாரத்தின் செல்வாக்கால், பண்டு என்பது பாண்டியரைக் குறித்து நின்றது என்பது மறைக்கப்பட்டு, வட இந்தியக் கண்ணோட்டத்தில் புத்தரின் வமிசத்தோடு இம்மன்னர்கள் இணைக்கப்பட்டனர் என்பது தெளிவாகின்றது.
X.வரலாற்றுக்காலத்தில்தமிழரின் ஆதிக்கம்
இனி, வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்ட படையெடுப்புகளை ஆராய்வோம். தேவநம்பியதீசனின்
-74.

வழிவந்தோர் காலத்தில் ஏற்பட்ட தமிழகப் படையெடுப்புகள் பற்றியும் பாளி நுால்கள் குறிக்கின்றன. குதிரை வியாபாரியின் மகன்களான சேனன், குத்திகன் ஆகியோர் தேவநம்பியதீசனின் தம்பியாகிய சுறதிஸ்ஸவை தோற்கடித்து, நீதி தவறாது 22 ஆண்டுகள் ஈழம் முழுவதையும் ஆண்டனர்.
அசேலனிடம் ஆட்சியைக் கைப்பற்றிய சோழநாட்டிலிருந்து வந்த எலாற (எல்லாளன்) நீதி தவறாது 44 ஆண்டுகள் ஆட்சி செய்தான்° எல்லாளனை வென்ற துட்டகைமுனு (கி.மு. 161-137), அக்காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் ஆட்சி செய்த முப்பத்திரண்டு தமிழரசர்களை வெற்றிகொண்டுதான் ஈழத்தரசனானான்." வட்டகாமினி காலத்தில் (கி.மு. 103-89), பலஉறத்த, பாஉறிய, பணயமாற. பிலயமாற, தாதிக என்ற ஐந்து தமிழகத்தோர் பதினான்கு வருடங்களும் ஏழு மாதங்களும் ஆட்சி செய்தனர்."
வடுக, நீலிய என்போர், அநுலா அரசி காலத்தில் (கி.மு. 48-44) ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, ஒரு வருழம் எட்டு மாதமும் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகின்றது.
இதனால், வரலாற்றுதய காலத்தில் மட்டுமன்றி, சிறிஸ்தாப்தத்தின் தொடக்கத்திலிருந்து தேவநம்பியதீசன் வரையிலான 250 வருடங்களில் மூன்றிலொரு காலப் பகுதியில் தமிழகத்தோர் அநுராதபுர அரசாட்சியைப் பெற்றிருந்ததைப் பாளி நுால்கள் எடுத்துக் கூறுகின்றன. ஈழத்தின் வடபகுதியில் மட்டுமன்றித் தென்கிழக்கிலும், தமிழகத்திலிருந்து வந்த பாண்டிய வமிசத்தினரின் ஆட்சி நடைபெற்றதைக் காணலாம். மகாவம்சம் போன்ற நூல்களில், கதிர்காமம், சந்தனாகம ஆகிய இடங்களில் காணப்பட்ட
சத்திரியர்கள் என இவர்கள் கூறப்படுகின்றனர்."
-75

Page 53
இவர்களுக்குரிய தனித்துவத்தை விளக்க வந்த வரலாற்று ஆசிரியர்கள், வட நாட்டிலிருந்து ஈழத்தின் வடமேற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் நதிகளை அண்டிக் குடியேறிய மக்கட் கூட்டத்தினரைவிட, வேறு ஒரு அலையாக வட இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்களே இவர்கள் எனவும் விளக்கம் தந்துள்ளனர்."
அநுராதபுரத்தில் பெளத்த அரச மரக்கிளை நாட்டு வைபவத்தில் பங்கு கொண்டவர்களாக இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இதன் பின்னர், இவர்கள் பற்றிய குறிப்புகளே காணப்படவில்லை.
ஆனால், குசலன்கந்த மொட்டயக்கல்லு, கெனென்னேகல, கல் உடுப்பொத்தான போன்ற இடங்களிற் காணப்படும் கல்வெட்டுகள் இவர்களுடையதே என்று இன்று இனங் காணப்பட்டுள்ளது." இக்கல்வெட்டுகள் யாவற்றிலும் மீன் இலட்சினை காணப்படுவது பாண்டியத் தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது.
இதனால், இங்கு ஆட்சி செய்தவர்கள் பாண்டிய வமிசத்தோடு தொடர்புடையவர்களாக இருத்தல் வேண்டும் எனக் கருதலாம். இக்கல்வெட்டுகளில் “மீனவன்” என்ற பாண்டிய மன்னரின் பெயரைப் பிராகிருத மொழியில் மஜிமராஜ என எடுத்துக் காட்டும் வடிவம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கெனென்னேகலவில் காணப்படுகின்றது.* இது போன்ற வடிவம், திஸ்ஸமகாராமவிலுள்ள அக்குறுகொடையில் உள்ள நாணயத்தில் “மஜிம” என இடம் பெற்றுள்ளது."
பிராமிக் கல்வெட்டுகளில், தமிழகத்தோர் ஈழத்துடன் நெருங்கிய வாணிபத் தொடர்பினை வைத்திருந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகளும் உள. இதற்கான சான்றுகள் அநுராதபுரம், வவுனியா, சேருவில, குடுவில் ஆகிய
-76

இடங்களில் உள" வணிகர் அமைப்பு ரீதியாக இயங்கியதை அநுராதபுரக் கல்வெட்டு எடுத்துக் காட்டுகின்றது.
தமிழக வணிகரைக் குறிக்கும் “தமேட வணிஜ” என்ற குறிப்பு இவற்றுள் காணப்படுவது ஈண்டு நினைவு கூரற்பாலது." தமிழக-ஈழத் தொடர்புகளை, ஈழத்திற் காணப்படும் தமிழக நாணயங்களும் பல்வகைக் கற்களாலான மணிகள் ஆகியவையும் உறுதி செய்கின்றன.
எனவே, ஈழத் தமிழரின் ஆதிக் குடியேற்றத்தில் இரு அலைகளைக் காணலாம். ஒன்று, வரலாற்றுதய காலக் குடியேற்றம் (கி.மு. 1000-250 வரை). மற்றையது, வரலாற்றுக் காலத்தில் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னருள்ள காலப் பகுதியில் (கி.மு. 250-1 ஏற்பட்ட குடியேற்றமாகும். வரலாற்றுதய காலக் குடியேற்றம் பற்றிப் பாளி நுால்கள் தரும் சான்றுகள் கட்டுக்கதையாகும். தென்னிந்தியாவிலிருந்து ஏற்பட்ட இக்குடியேற்றத்தைத் தொல்லியல், மானிடவியல், மரபணுவியல், சமூகவியல், சாசனவியல் சான்றுகள் உறுதி செய்கின்றன.
தமிழகத்தை ஒத்த அரச உருவாக்கமே ஈழத்திலும் காணப்பட்டதை, மகாவம்சத்தைப் போலன்றிப் பிராமிக் கல்வெட்டுகள் தரும் நாடெங்கிலும் பரந்து காணப்பட்ட குறுநில மன்னர்கள் பற்றிய தகவல்கள் உறுதி செய்கின்றன." (படம் - 9).
இவர்கள், பெளத்தத்துடன் வந்த வட இந்தியக் கலாசாரச் செல்வாக்கால், அதனுடன் இணைந்த தமது அரச அதிகாரத்தைப் புதிய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும், அதற்குரிய அரசப் பதவிகளைக் குறிக்கும் பெயர்களைச் சூடுவதன் மூலமும் ஸ்திரப்படுத்திக் கொண்டனர்.
பருமக எனப்பட்டோர் இவ்வழியில் முன்னின்றதை,
-77

Page 54
ள்
605
/பருமக
உதிய/உதியன்
ման
பத/பரத/பரதன் ஒவ்வொரு குறியீடும்
ti/glി
நாக <婴y வேள் உதி/உ
பருமகன சுட/சுள
முறையே தனித்தனிச் சொற்பிரயோகத்திை
se X 米 AT
A.
*******轉議繳農
••** +>艦縣鬱聲濤瀾 **********驚壞處 ********彙奪集 *********** *魯*粵影據學樂議螺幾 南*常會令駕激燃繪瀨曾 露_廉冷銷勝激|- ·
***‧‧‧‧‧‧***** *** 、 ******,**** 真滅尊業隊為***,
当度有多半季赛事本多卷藏着%x态 塔
ձhճhbՍ
***前辈鲁·奈良赢系隐 **** 『‧********豐溫 燃点****重申参数等乌塔解 洪*→ -+-+---- 辨本皇家委员第零目令多篇段藏好|- い 电影) *本第要多出自蒙雷象鼻专海道篇粤释 *者易身心要点==十身舞蹟 停機增演蕩_導奪_多舉影測寫
후지이히히이시이利可制
|-|-*多书中由上帝本着像
~*¿*****‧‧‧等+x織* #身自多姿多谢必备自中海以*
4义净心堂 =必资知奥心蚀就}~
*首五百多年里曾长期病曼海域*
#**===少复点、
|-|-泌曹密签-*彩濱意
± --- «,o*罗必息事策略射杀*
*
*
பிராமிக்கல்வெட்டுகளி ாவிடப் பெயர்களின் பிரயோகம்
*ーẹ**********鯊黨 }ぶ**事业生必要令燕豪|- # *〜、•=***********
*‧‧麥拳****
ஈழத்துப்
康邊總灣響
000,000
1:1
-78
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவர்கள் சூடிய ராஜ மகாராஜ, கமினி போன்ற பெயர்கள் மட்டுமன்றிக் கி.பி. 10ஆம் நுாற்றாண்டு வரை இவர்களின் மூலத்தை எடுத்துக் காட்டும் “மாபருமக” (மகாபருமக என்ற விருதை மன்னர்கள் சூடியிருந்தமையானது கலாசார உருமாற்றம் பெற்றதை உறுதி செய்கின்றது.
எனினும், இவற்றுள் எஞ்சி நிற்கும் வேள், ஆய் போன்ற வடிவங்கள் தமிழகத்தின் அரசியல் போக்கே ஈழத்திலும் காணப்பட்டதை உறுதி செய்கின்றன. இக்காலத்தில் தமிழகத்திலிருந்து ஏற்பட்ட புலப் பெயர்வுக்குத் தமிழகத்தில் ஏற்பட்ட சனநெருக்கம், ஈழத்தில் காணப்பட்ட மண்வளம், நதிகளின் நீர்வளம், கணிப் பொருள்கள், வாணிபம் ஆகியன பிரதான காரணிகளாக இருந்திருக்கலாம். வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்ட குடிபெயர்வுக்கு, அரசியல் ஆதிக்க விழைவு வியாபாரத்தில் மேலாண்மையைப் பெறல் ஆகியவை முக்கியமான காரணிகளாக விளங்கியிருக்கலாம்.
வரலாற்றுக் காலத்தில், கிறிஸ்து பிறப்பதற்கும் வரலாற்றின் ஆரம்ப காலத்திற்குமிடைப்பட்ட காலமாகிய சுமார் 80 ஆண்டுகள் தமிழரின் ஆட்சி அநுராதபுரத்தில் காணப்பட்டதை மகாவம்சமே குறிப்பதிலிருந்தும், துட்டகைமுனு கி.மு. 2ஆம் நூற்றாண்டில் 32 தமிழ்ச் சிற்றரசர்களைத் தோற்கடித்தே ஈழம் முழுவதும் தனது அதிகாரத்தை நிலைநாட்டினான் என மகாவம்சம் குறிப்பதிலிருந்தும், இக்காலத்திலும் தமிழரின் ஆதிக்கம் ஈழத்தில் காணப்பட்டது புலனாகின்றது.
தமிழகத் தமிழர் ஈழத்துடன் கொண்ட வாணிப நடவடிக்கைகளுக்கு, ஈழத்தில் காணப்பட்ட முத்து, கறிவகைகள், யானைத் தந்தம் போன்றவை பிரதான காரணிகளாக அமைந்திருந்தன. உரோமர்கள் ஈழத்துப்
-79

Page 55
பொருட்களைத் தமிழகத்திலிருந்தே (ஈழத்துக்கு வருவதற்குப் பதிலாக) தொடக்கத்தில் எடுத்துச் சென்றதால், ஈழத்து வாணிபத்திலும் தமிழக வணிகர் முக்கிய பங்காற்றியமை புலனாகின்றது.
தொகுப்புரை
ஏற்கெனவே குறிப்பிட்ட வண்ணம், ஈழ வரலாற்றை மூன்று காலப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன - வரலாற்றுக்கு முற்பட்ட காலம் (கி.மு. 12500-1000), வரலாற்றுதய காலம் (கி.மு. 1000-250), வரலாற்றுக் காலம் (கி.மு. 250க்குப் பின்னர்) ஆகும்.
ஈழத்து ஆதிக்குடியேற்றங்களை எடுத்துக் காட்டும் சான்றுகள், வரலாற்றுதய காலத்திலேதான் காணப்படுகின்றன. பாளி நுால்களான தீபவம்சம், மகாவம்சம் போன்றன இத்தகைய குடியேற்றத்தினை ஐதீகமாக உருவகப்படுத்தியுள்ளன. இதுதான் விஜயன் கதையாகும். தமிழ் நுால்களைப் பொறுத்தமட்டில், இவற்றில் தமிழ் மக்களின் ஆதிக் குடியேற்றங்கள் பற்றிய ஐதீகங்கள் இல்லை. இதனால், விஜயன் கதைகள் ஈழத்து ஆதிக் குடியேற்றம் பற்றி எடுத்துக் கூறும் கதையெனக் கொள்ளப்பட்டு, இக்கதை வட இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்து இங்குக் குடியேறிய ஆரிய மக்களின் குடியேற்றத்தை எடுத்துக் காட்டுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டு வந்துள்ளது.
இதனால்தான் இந்நாட்டின் நாகரிக கர்த்தாக்கள், சிங்கள மக்களின் மூதாதையினரே எனவும் கொள்ளப்பட்டது.
பாளி நுால்களில், தமிழகத்திலிருந்து ஏற்பட்ட படையெடுப்புகளைப் பற்றி வரும் தகவல்கள். தமிழ்
-80

மக்கள் படையெடுப்பாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பாவனையிலும், வாணிப நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்ற பாவனையிலுமே உள்ளன. இந்நாடு சிங்கள பெளத்த மக்களுக்குரிய நாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வளர்க்கப்பட்ட விஜயன் கதையே வரலாற்று நுால்களில் முக்கிய இடத்தினை வகித்தது.
இக்கதையினை ஆராய்ந்த அறிஞர்கள், இஃது ஒரு கட்டுக்கதை என்பதை எடுத்துக் காட்டத் தவறவில்லை. கடந்த மூன்று தசாப்தங்களாக, ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் இக்கதை கூறும் வட இந்தியக் குடியேற்றத்திற்கான தடயங்களை அளிக்கவில்லை.
மாறாகத் தென்னிந்தியாவிலிருந்து கி.மு. 1000 ஆண்டிலிருந்து ஏற்பட்ட புலப் பெயர்வுகளையே உறுதி செய்கின்றன. ஈழத்தில் வாழ்ந்த கற்கால மக்களுக்கு அடுத்தாற் போல் ஏற்பட்ட புலப் பெயர்வே இஃதாகும். இப்புலப் பெயர்வினை உறுதிப்படுத்தும் சான்றாக விளங்குவதுதான் இவர்களால் அறிமுகஞ் செய்யப்பட்ட பெருங் கற்காலக் கலாசாரமாகும்.
இதில் நான்கு பிரதான கூறுகள் காணப்பட்டன. அவையாவன - குடியிருப்புகள், ஈமச் சின்னங்கள், குளங்கள், வயல்கள் ஆகும். பாளி நுால்கள் குறிக்கும் ஆதிக் குடியேற்ற மையங்களான அநுராதபுரம், கந்தரோடை, மாந்தை, திஸ்ஸமகாராமமோகம) ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளும், பெருங் கற்காலக் கலாசாரத்தின் படர்ச்சியே ஈழத்துப் பெருங் கற்காலக் கலாசாரம் என்பதை உறுதி செய்துள்ளன.
இக்கலாசாரத்தின் குடியிருப்புகளில் கிடைத்த எலும்புக் கூடுகள் முக்கியமான சான்றாக விளங்குகின்றன். இவ்வாறே மரபணுவாய் வாளரும் சிங்கள-தமிழ்ச் சமூகங்கள்.
-81

Page 56
இரத்த உறவில் ஒரே தன்மை படைத்துக் காணப்படுவதை எடுத்துக் காட்டியுள்ளனர். அதே நேரத்தில், தற்காலச் சிங்கள மக்கள், வட இந்தியாவிலிருந்து குடியேறியதாகக் கருதப்படும் இந்தியாவின் வடமேற்கு/வடகிழக்குப் பகுதி மக்களின் வழித்தோன்றல்கள் அல்லர் என்பதை உறுதிப்படுத்துவதாய் இம்மரபணுவாய்வு விளங்குகின்றது.
சமூகவியற் பார்வையில், சிங்கள-தமிழ்ச் சமூக அமைப்பு உறவு முறைப் பெயர்கள், வழிபாட்டு மரபுகள், பழக்க வழக்கங்கள் ஆகியனவும் சிங்கள-தமிழ்ச் சமூகங்கள் ஒரு பொதுக் கலாசாரமாகிய பெருங் கற்காலக் கலாசார வழிவந்தவர்கள் என்பதை காணக் கூடியதாகவுள்ளது.
இத்தகைய கலாசாரம் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பெளத்த மதத்தின் வருகையால், வட இந்தியக் கலாசாரச் சாயலை (சிங்களமயமாகும் சாயலைப் பெற்றது என்பதை ஈழத்தின் மிகப் பழைய கல்வெட்டுகளாகிய பிராமிக் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. பெளத்த மதத்திற்குக் கொடுக்கப்பட்ட தானங்களை எடுத்தியம்பும் இவை, சிங்கள மக்களின் ஆதிக் குடியேற்றத்திற்கான சான்றுகளாக மட்டுமன்றி, இவற்றிற் காணப்படும் பிராகிருத மொழிதான் ஒரு மதத்தின் மொழி) ஈழத்து மக்களின் மொழி எனவும் தவறாகக் கருதப்பட்டு வந்தது.
இப்பிராமிக் கல்வெட்டுகள் பெருங் கற்கால கலாசார மையங்களுக்குக் கிட்டக் காணப்படுவது மட்டுமன்றி, இவற்றில் காணப்படும் குறியீடுகள், பெருங் கற்கால மக்களின் பயன்பாட்டில் இருந்த பானை ஓடுகளில் உள்ள குறியீடுகளை ஒத்துக் காணப்படுவதால், பெருங் கற்கால மக்களே பெளத்த மதத்தைத் தழுவினர் என்பது உறுதியாகிறது.
இம்மக்கள் அளித்த தானங்கள், பெளத்தத்தின் மொழியாகிய பிராகிருத மொழியிலே பதியப்பட்டதையே
-82

இவை எடுத்துக் காட்டுகின்றன. பிராகிருத மொழி மட்டுமன்றி. இவற்றை எழுத வட இந்தியப் பிராமி வரிவடிவமும் புகுந்தது.
அண்மைக் கால ஆய்வுகள் இப்பிராமிக் கல்வெட்டுகளின் வரிவடிவில் இருபடைகள் உள என்பதை எடுத்துக் காட்டியுள்ளன. ஒன்று. பெளத்தத்துடன் வந்த வட இந்திய வரிவடிவத்திற்கு முன்னர் வழக்கிலிருந்த வரிவடிவம். இரண்டாவது, பெளத்தத்துடன் வந்த வரிவடிவம்.
முன்னைய வரிவடிவம் தமிழகத்தில் வழக்கிலிருந்த “திராவிடி வரிவடிவம்” ஆகும். தமிழை எழுதப் பயன்பட்டதால், தமிழ் பிராமி என இஃது அழைக்கப்பட்டது. இத்தகைய வடிவமே தமிழகம்-ஈழம் ஆகிய பகுதிகளில் பெளத்தத்துடன் வந்த வட இந்தியப் பிராமி வரிவடிவத்திற்கு முன்னர் வழக்கிலிருந்தது. s பெளத்தத்துடன் வந்த பிராமி வரிவடிவத்தின் செல்வாக்கால் கிறிஸ்தாப்த காலத்தில் இது வழக்கொழிய, வட இந்தியப் பிராமி வரிவடிவமே ஈழத்தின் ஆதிப் பிராமி வரிவடிவமாக வளர்ச்சி பெற்றதும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இப்பிராமி வரிவடிவத்தில் காணப்படும் குலகுழு பெயர்களான வேள், ஆய், பதபரத போன்றவையும், பருமக போன்ற பிற தமிழ்ப் பெயர்களும் தமிழை ஒத்த மொழி பேசியோரே இன்றைய தமிழ், சிங்கள மொழிகளின் மூதாதையினராக விளங்கினர் என்பதை உறுதி செய்கின்றன. தமிழைப் போலன்றிச் சிங்கள மொழியின் தோற்றம், அதன் நெடுங்கணக்கின் ஆரம்பம், கி.பி. 7/8ஆம் நுாற்றாண்டுகள் எனக் கொள்ளப்படுகின்றது. அத்துடன், சிங்கள மொழியின் வளர்ச்சியையும் அறிஞர்கள் மூன்று காலப் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவையாவன - பிராகிருத
-83

Page 57
சிங்களம் (Sinhalese Prakrit) கி.பி. 4ஆம் நூற்றாண்டு வரை. ஆதிச் சிங்களம் (Proto - Sinhala) கி.பி. 7ஆம் நுாற்றாண்டு வரை. சிங்களம் (Sinhala) கி.பி. 7ஆம் நுாற்றாண்டுக்குப் பின்.
மேலும், கி.பி. 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிதற் சங்கராவ என்ற சிங்கள மொழியின் இலக்கண நூல், சிங்கள மொழிக்கு இரு நெடுங்கணக்கைத் தந்துள்ளது. அவையாவன - எலு நெடுங்கணக்கும், பாளி-சமஸ்கிருதம் ஆகியவற்றுடன் இணைந்த மற்றைய நெடுங்கணக்குமாகும். இதனால் பிராகிருத மொழியின் தாக்கம் பெளத்தத்துடன் ஏற்படுமுன்னர், சிங்கள மொழியின் மூதாதை மொழியாக “எலு” விளங்கியது தெரிகின்றது. இந்த எலு மொழிதான் பெளத்த பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் பிராகிருத மொழியின் தாக்கத்திற்கும், செல்வாக்கிற்கும் உட்பட்டது. இவ்வெலு மொழிதான், இதே காலத்தில் தமிழகத்தில் வழக்கிலிருந்த தமிழின் கிளை மொழிகளில் (கொடுந்தமிழ் மொழிகளில் ஒன்றாகும்.
இக்கூற்றினைச் சிங்கள-தமிழ் மொழிகளிடையே காணப்படும் அடிப்படை ஒற்றுமை எடுத்துக் காட்டுகின்றது. இதுதான், பிராகிருத-பாளி மொழிகளின் செல்வாக்கால், இக்காலத்திலிருந்து வட இந்திய மொழிகளின் பண்பைப் பெறத் தொடங்கியது. இதனை மொழியியலாளர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர்.
இந்த எலு என்ற பதம் கூட இந்நாட்டின் ஆதிப் பெயரான ஏழ்ஈழஈழத்தின் வழிவந்ததே. இதற்குச் சான்றாக அமைவதுதான் மகாவம்சத்தில் காணப்படும் ‘ஈழநாக” என்ற பெயராகும். ராஜவலியாவில் எலுன்நாக என இவன் விளிக்கப்படுவதானது இரண்டும் ஒரே தன்மை படைத்தவை என்பதை மட்டுமன்றி ஒன்றிலிருந்து மற்றையது மருவியது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
-84

தமிழ் நூல்கள் கூறும் கடலில் அழிந்த நாடுகளான “ஏழ்” என்ற அடைமொழியுடன் காணப்படும் நாடுகளோடு இணைந்து, பின்னர்த் தப்பிப்பிழைத்த நாடாக ஈழம் விளங்கியிருக்கலாம். காரணம், ஏழ்/ஈழ/எலு ஆகிய பதங்களுக்கிடையே நெருங்கிய ஒற்றுமையுண்டு.
சிங்கள மக்கள் கல்வெட்டுகளில், கெல, கெல், கல (Hela, Hel, Hala) என்வும், சிகிரியாக் கீறல் ஒவியத்தில் நம்நாடு, கெல தீவி எனவும் அழைக்கப்படுவதை நோக்கும்போது, ஏழ்-ஈழ-எல தான் பின்னர், கெல-கல ஆக உருமாற இவ்வடிவத்திற்கு முன்னர்த் “திரு” எனப் பொருள் தரும் “சிறீ”என்ற சமஸ்கிருத வடிவத்தின் பிராகிருத வடிவமாகிய “சீ”ய்ை இணைக்க இது சீகள ஆனது எனலாம். ጎ
“சீகள” என்ற வடிவம் நாட்டைக் குறிக்கும் வடிவம் ஈழ என்ற வடிவத்திற்குப் பிந்தியே காணப்படுவதால், அஃதாவது கி.பி. 3/4ஆம் நூற்றாண்டுகளில் காணப்படுவதால், “ஈழ” என்ற வடிவமோ எனில், கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னரே இலக்கிய சாசனங்களில் இடம் பெற்றுள்ளதால், சீகள என்பது ஈழ என்ற மூலவடிவத்திலிருந்து பிறந்தது தெளிவாகின்றது. சிங்கள மொழி பிராகிருத மொழிக் கால நிலையைத் தாண்டிக், கி.பி. 4ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை ஆதிச்சிங்கள மொழிக் காலத்தை அடைந்த நேரத்தில்தான், மகாவம்ச ஆசிரியரால் சீகள என்ற வடிவத்திற்குச் சிங்கத்தைக் கொன்றோன் வழிவந்தவர்கள் என்ற விளக்கம் கொடுக்கப்பட்டது.
எவ்வாறெனில், இதனைச் சீ-கள எனப் பிரித்துச் சிங்கம்-கொல்லல் எனக் கருத்துக் கொடுக்கப்பட்டுச் சிங்கத்தைக் கொன்றோன் வழிவந்தவர்களே சிங்களவர்கள் என்ற ஐதீகத்தை இக்காலத்தில் உருவாக்கினர்.
-85

Page 58
கொன்னிங்காம் நன்றாக விளக்கிக் கூறியவாறு. இக்காலத்தில் தமிழகக் கலாசாரத்தின் தாக்கத்திலிருந்து, பெளத்த கலாசாரத்தின் தனித்தன்மையை, அதன் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்குப் பெளத்த சங்கத்தினரும் அரசரும் முயன்றனர்.
இதன் விளைவாக, வட இந்தியக் கலாசார செல்வாக்கு மேலோங்கத் தற்காலச் சிங்கள மொழி உருவானது என்பர். இதனால்தான், சமூகவியலாளர் Sinhalisation as being essentially a cultural process associated with Buddhism என்பர்.
அஃதாவது, சிங்கள மயமாக்கம் என்பது பெளத்தத்துடன் ஒன்றிணைந்த கலாசார வளர்ச்சியாகும். இதனால், கி.மு. 250க்கு முன்னர், இந்நாட்டில் திராவிட மொழிகளான தமிழ், எலு மொழிகளைப்பேசிய மக்கட் கூட்டத்தினரும், கற்கால மக்களின் மொழியாகிய ஒஸ்ரிக் மொழி பேசிய மக்கட் கூட்டத்தினரும் காணப்பட்டதைத் தொல்லியல்-மொழியியற் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இது நடந்தது வரலாற்றுதய காலத்திலாகும் ( கி.மு. 900-250 ).
தமிழகத்தில், தொல்காப்பியரின் காலத்தில், செந்தமிழும் கொடுந் தமிழும் காணப்பட்டன என்பது பற்றிக் குறித்திருந்தோம். ஈழத்துப் பூதந்தேவனார் செந்தமிழ் விளங்கிய மதுரை சென்று தமது பாடல்களை அரங்கேற்றியதை நோக்கும் போது, ஈழத்திலும் செந்தமிழும் (தமிழ்), கொடுந்தமிழும் (எலு) காணப்பட்டன எனக் கருதலாம்.
பெளத்தம் அறிமுகமாகிய வரலாற்றுக் காலம், கி.மு. 250இல் தொடங்குகின்றது. பாளி நுால்களின் சான்றுகளை நோக்கும்போது, கிறிஸ்து பிறப்பதற்கு முன்னருள்ள 250
-86

ஆண்டுக் காலத்தில் கூட, தமிழகத்திலிருந்து ஏற்பட்ட படையெடுப்புகளின் விளைவாக, 1/3 காலப் பகுதியில், அநுராதபுரத்தை மையமாகக் கொண்டு தமிழராட்சி ஈழம் முழுவதும் காணப்பட்டது.
அநுராதபுரத்தில் மட்டுமல்ல, எல்லாளன்-துட்டகைமுனு போர் நடந்த காலத்தில், ஈழத்தின் பல பகுதிகளிலும் 32 தமிழ் அரசர்கள் ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகின்றது. தமிழ் வம்சத்தவரான பாண்டியரின் ஆட்சி, அநுராதபுரத்தில் மட்டுமன்றி, ஈழத்தின் தென் கிழக்குப் பகுதியில், பாளி நுால்கள் விளிக்கும் உரோகண இராச்சியத்திலும் காணப்பட்டதைக் கல்வெட்டொன்றிலும், நாணயத்திலும் - பாண்டியரைக் குறிக்கும் “மீனவனின்” பிராகிருத வடிவமாகிய “மஜிமராஜ” “மஜிம” போன்ற வடிவங்கள் மட்டுமன்றிப் பாண்டிய வம்சத்தவரின் மீன் சின்னம் இக்கல்வெட்டுகளில் காணப்படுவதும் உறுதி செய்கின்றது.
தமிழகத்தோர் ஈழத்துடன் வாணிபத் தொடர்புகளை வைத்திருந்ததை, இக் கல்வெட்டுகளில் காணப்படும் தமேழ/ தமேட என்ற பதம் எடுத்துக் காட்டுகிறது.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குரிய இக் கல்வெட்டுகள், அநுராதபுரம்-வவுனியா-சேருவில-குடுவில் ஆகிய இடங்களில் உள. ஈழத் தமிழர் கலாசார ரீதியில் தமிழகத்துடன் கொண்டிருந்த தொடர்பினை எடுத்துக் காட்டும் எச்சமாகச் சங்க நுால்களில் இடம் பெற்றுள்ள பூதந் தேவனாரின் பாடல்கள் அமைகின்றன. இதனால், சுவாமி ஞானப் பிரகாசரின் “ஈழத்தின் நாகரிக கர்த்தாக்கள் திராவிடரே” “தமிழர் சிங்களவர்களாக மாறினர்” என்ற கட்டுரைகளைத் தொல்லியல் பின்னணியில், பன்முகப் பார்வையில் அணுகும்போது இன்றும் ஏற்புடைய கருத்தாகவே அமைகின்றது.
-87

Page 59
தொல்லியல் ரீதியாக, இஃது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அநுராதபுர அகழ்வுகளும் பிற அகழ்வுகளும் எடுத்துக் காட்டியுள்ளன.
இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர்த் தமிழ் நூல்களில் சான்று இல்லாத நிலையில், அகழ்வாய்வு முதன்மை பெறாத நிலையில், பாளி நூல்களை மையமாக வைத்தே பேராசிரியர் கா. இந்திரபாலா அவர்கள், ஈழத் தமிழரின் ஆதிக் குடியேற்றம் பற்றி ஆய்வை மேற்கொண்டிருந்தார். குடியேற்றம் பற்றிய அகழ்வாய்வு மூலம் கிடைத்த சான்றுகள் தமிழ்க் குடியேற்றத்தின் பழைமையை மேலும் எடுத்துச் சென்றதை உணர்ந்த அவர். பின்னர்த் தமது கருத்தையும் மாற்றியிருந்தார்.
தற்போதைய ஆய்வுகள், அதுவும் பன்முகப் பார்வையில் கிடைத்துள்ள சான்றுகள் இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே, சுமார் கி.மு. 1000 ஆண்டளவில் ஈழத்தில் தமிழ் மொழி பேசுவோரும் தற்காலச் சிங்கள மொழி பேசுவோரின் மூதாதை மொழியாகிய தமிழின் கிளை மொழியாகிய எலு மொழி பேசுவோரும் வாழ்ந்ததை உறுதி செய்கின்றன.
இன்னொரு கோணத்தில் நோக்கும்போது, தொல்காப்பியர் காலத்தில் (கி.மு. 3ஆம் நூற்றாண்டு, தமிழகத்தில் செந்தமிழும் கொடுந்தமிழும் காணப்பட்டது போன்றே. ஈழத்திலும் தமிழ் செந்தமிழ், எலு கொடுந்தமிழ் ஆகிய மொழிகள் காணப்பட்டன எனலாம். இவை ஈழத்தமிழரின் தொன்மைக்கு அசைக்க முடியாத சான்றுகளாகும்.
-88

உசாவியவை 1. Indrapala, K. Early Tamil Settlements in Ceylon, Journal of the Royal Asiatic Society, Ceylon Branch (J.R.A.S. (C.B.) N.S. Vol. XIII, 1969, pages 43-63
2. Indrapala, K. Dravidian Settlements in Ceylon and the Beginnings ofthe Kingdom of Jaffna, 1966. Unpublished Ph.D. Thesis, University of London, (London) 1966
3. பேராசிரியர் கா. இந்திரபாலா குறிக்கும் தமிழ் நூல்களாவன - வையாபாடல் (பதிப்பு நடராசா க.செ. (கொழும்பு 1980. யாழ்ப்பாண வைபவமாலை (பதிப்பு) சபாநாதன், குல (கொழும்பு) 1953, கைலாய மாலை (பதிப்பு ஜம்புலிங்கம்பிள்ளை, சா.வே. (சென்னை), 1939, மட்டக்களப்பு மான்மியம் (பதிப்பு நடராசா எவ்.எக்ஸ்.சி (கொழும்பு) 1962
4. Coningham, R.A.E., Allchin, F.R., Batt C.M. and Lucy D. "Passage to India? Anuradhapura and the Early use of the Brahmi Script'published in the Cambridge Archaeological Journal, Vol. 6, No.1, April 1996, page 77
5. Dipavamsa(Tr&ed) Law, B.C., The Ceylon Historical Journal, Vol. VIIJuly and Oct. 1967 and Jan. and April 1968 Nos. 1-4 Chapters X-XI
6. Mahavamsa (Tr & ed) Geiger, W. (Colombo), 1950 Chapters VIII-X. Chapters VI, VIII, Dipavamsa Chapter IX
7. Paranavitana, S. (ed) History of Ceylon, Vol. 1, Part I (Colombo) 1959 pages 82-94
8. Mahavamsa, Chapter VII pages 40-42
9. Ellawala, H. Social History of Early Ceylon (Colombo) 1969 chapter VI
10. Paranavitana, S. (ed.) 1959 pages 82-94
-89

Page 60
11. Mahavamsa, Chapter VIIline 42 12. Gunawardana, R.A.L.H. The Kinsmen of the Buddha; Myth as a Political Charterinthe Ancient and Early Medieval
Kingdoms of Sri Lanka; The Sri Lanka Journalofthe Humanities, Vol. 2 No.1, June 1976 pages 53-62
13.Mahavamsa, Chapter XXV lines 109-111
14. Rutnam, James, T. The Tomb of Elaraat Anuradhapura (Jaffna) 1981, இரத்தினம் ஜே. எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்-தமிழாக்கம் - கனகரட்னா ஏ.ஜே.) மறுமலர்ச்சிக் கழக வெளியீடு யாழ்ப்பாணம் 1981 ح
15. ஜெயவர்த்தனா, குமாரி. 19ஆம் நுாற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நுாற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் நிலவிய வர்க்க, இன உறவுகளின் சில அம்சங்கள் - இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும், சமூக விஞ்ஞானிகள் சங்க வெளியீடு, கொழும்பு. தமிழ்ப் பதிப்பு, யாழ்ப்பாணம். 1985 பக். 141/-180)
16. Godakumbura, G.C., History of Archaeology in Ceylon, J.R.A.S. (C.B.) N.S. Vol. XIII 1969 pages 1-38
17. Rasanayagam, C. Ancient Jaffna, (Madras) 1926
18. Gnanaprakasar, Swami, “Tamils turn Sinhalese”, Tamil Culture, Vol. I, No.2 February 1952 pages 132-142
19. Gnanaprakasar, Swami, “Ceylon, Originally a land of Dravidians' Tamil Culture, Vol. I, No.I., February 1952 pages 27-35
20. Gnanaprakasar, Swami, “Dravidian Element in' Sinhalese” J.R.A.S. (C.B.) Vol. XXXIII, No.89, Parts I, II, III and IV. 1937 pages 233-253 . . .
21. Mendis, G.C., “The Vijaya Legend” Jeyawickrame, M.A. (ed.) Paranavitana Felicitation Volume, (Colombo) 1965
-90

pages 263-279
22. Senaratne, S.P.F. Pre Historic Archaeology of Ceylon (Colombo) 1969
23. Begley, V. Excavations of Iron Age Burials at Pomparippu, 1970, Ancient Ceylon, No.4, 1981 page 53
24. Deraniyagala, S.U. The Citadelof Anuradhapura, 1969 Excavations in the Gedige Area, Ancient Ceylon, No.2, 1972 pages 48-162
25. Begley, V. Proto-historical material from Sri Lanka (Ceylon) and Indian Contacts, Kennedy, K.A.R. and Possehl, E.L. (ed) Ecological Backgrounds of South Asian Pre-History, (New Orleans) 1973, pages 191-196
26. Begley, V. 1981 pages 49-94
27. Sitrampalam, S.K. The Megalithic Culture ofSriLanka, unpublished Ph.D. Thesis, University of Poona, (Poona), 1980
28. Sitrampalam, S.K. Proto-Historic Sri Lanka - An Interdisciplinary Perspective. Paper presented at the 11th International Conference of Historians of Asia, Colombo, 1988. Laterthis was published in the Journal of Asian Studies, Vol. VIII, No.1 September 1994 pages 1-18
29. Ragupathy, P. Early Settlements in Jaffna - An Archaeological Survey (Madras) 1987
30. Deraniyagala, S.U. and Abeyratna, M. "Radio Carbon Chronology of Iron Age and Early Historic Anuradhapura, Sri Lanka; Revised Age Estimate, (Abstract) Paper presented at the 14th International Conference of the European Association of South Asian Archaeologists, Rome 7-11 July 1997
31. Allchin, F.R. and Coningham Robin. Anuradhapura Citadel Archaeological Project: Preliminary report of the Third
-91

Page 61
Season of Sri Lanka British Excavations at Salgaha Watta, July
September 1991, South Asian Studies, 8, 1992 pages 155-167 32. Carsvell, J. and Pricket, M 1984Mantai 1980:A
Preliminary Investigation, Ancient Ceylon5, pages 3-80
33. Karunaratne Piyantha, “A Brief Report of the
Excavationatibbankattuva, a Proto and Early Historic Settlement site, (University of Peradeniya) no date'
34. Weisshaar Hans Joachim "Ancient Mahagama - Archaeological Research in South Ceylon' Domroes manfered and Roth Helmut (ed) Sri Lanka Past and Present, Archaeology, Geography and Economics (Wurzburg) Germany, 1998. pages 38-50
35. Bopearachchi, Osmand, “Archaeological evidence on changing patterns of International trade relations of Ancient Sri Lanka' Bopearachchi Osmand and Weerakkody, D.P.M. (ed) Origin, Evolution and Circulation offoreign coins in the Indian Ocean, (New Delhi), 1998
36. Deraniyagala, S.U. 1972
37. Deraniyagala, S.U. Pre and Proto-Historic settlements in Sri Lanka, Economic Review, Vol. 23 Nos. 7/8, Oct/Nov. 1997
38. Begley, V. 1973 pages 191-196 39. Begley, V. 1981 40. Deraniyagala, S.U. and Abeyratne, M 1997 41. Coningham Robin and Allchin, F.„R. 1992 pages 155167
42. Carswell J and Prickett M. 1984
43. Shanmuganathan, S. Excavations at Thirukketiswaram, Vaithianathan, K. (ed.) Thirukketiswaram Papers (Colombo), 1960
-92

44. Shinde Vasant, Mantai: An important settlement in North-West Sri Lanka, East and West. Vol. 37 Nos. 182, 1981 pages 327-336; Kiribamune Sirima; The Role ofthe Port City of Mahatittha (Mantota) in the Trade networks of Indian Ocean, The Sri Lanka Journal of the Humanities, Golden Jubilee Commemoration Doublenumber, University of Peradeniya, Vol.XVIIXVIII Nos. 182 1991-92, published in 1994 pages 171-192
45. Sitrampalam, S.K. Ancient Jaffna, An Archaeological Perspective, Journal of South Asian Studies, Vol. 3 Nos.1 & 2, 1984 pages 1-16
46. Weisshaar Hans Joachim 1998 pages 38-50; Roth Helmut “Excavations at the Port of Godavaya, Hambantota district, Sri Lanka, Domroes Manfred and Roth Helmut (ed) Sri Lanka Past and Present, Archaeology, Geography and Economics” (Wurzburg) Germany, 1998 pages 1-37
47. Bopearachchi, Osmand. 1998
48. Bopearachchi, Osmand, “Archaeological evidence on maritime and inland trade of Ancient Sri Lanka', Multidisciplinary International Conference on the occasion of the 50th Anniversary of the Independence of Sri Lanka. February 23-28, 1998
49. Solheim, W.G. and Deraniyagala, S.U. Archaeological Survey to investigate South East Asian Prehistoric presence in Ceylon, Ancient Ceylon, Occasional Paper, No. 1, 1972
50. Sitrampalam S.K. 1990 Seneviratne, Sudharshan, "The Archaeology of the Megalithic Black and Redware complex in Sri Lanka” Ancient Ceylon, No.5, 1984 pages 237-307
51. Goonetilleke, Susantha, Sinhalisation: Migration or Cultural Colonisation, Lanka Guardian, Vol. 3, No.1, may 1, May 15, 1980 pages 22-29, 18-19
52. Seneviratne, Sudharshan, Peripheral Regions and
-93

Page 62
Marginal Communities towards an alternative explanationofearly iron age material and social formations in Sri Lanka, Champakalakshmi Rand Gopal S. (ed) Tradition, Dissent and Ideology, Essays in honour of Romila Thapar, (Oxford University Press), 1996 pages 264-310
53. Luckas John Rand Kennedy Kenneth A.R., "Biological Anthropology of Human remains from Pomparippu', Ancient Ceylon, No.4, 1981 pages 97-142
54. Chanmugam, P.K. and Jayawardena, F.L.W. Skeletal remains from Tirukketiswaram, Ceylon Journal of Science, Section (G), 5(2), 1954 pages 65-68
55. Sitrampalam S.K. 1984 56. Ragupathy, P., 1987 pages 200-203
57. Kirk, R.I., The legends of Prince Vijaya - A study of Sinhalese Origins, American Journal of Physical Anthropology, Vol. 45, No. 1, 1976 pages 91-99
58. Wijesundara, C. de S., “Presidential Address given at the 14th Annual Conference of the Sri Lanka Paediatric Association on 31st September 1977
59. Goonetilleke Susantha, 1980, Karve, I, Kinship Organisation in India (Bombay), 1968, Bryce Rayan, Caste in Modern Ceylon-The Sinhalese system in Transition (New Jersey), 1953
60. Karunatilaka P.V.B., Early SriLankan Society - Some reflections on Caste Social Groups and ranking, The Sri Lanka Journal of the Humanities, Vol. DXNos 1 & 2 1983, (Published in 1986), pages 108-143
61. Bechert Heinz(ed) Culture ofCeylonin Medieval Times, (Wiesbaden), 1960
62. Bechert H, Mother right and succesion to the throne in
-94

Malabar and Ceylon, The Ceylon Journal of Historical and Social Studies, Vol. VI, No. 1, 1963, pages 25-39
63. BechertH., The cult of Skanda Kumarainthe Religious History of South India and Ceylon, Proceedings of the Third International Conference Seminar of Tamil Studies, Paris (Pondicherry), 1973 pages 199–201
64. தொல்காப்பியம், பொருளதிகாரம், பதிப்பு தாமோதரம் பிள்ளை, சி.வை. சென்னை 1885
65. Buhler, J.C. Indian Palaeography (Indian - Antiguary, Vol. XXXIII) 1904
66. Nagasamy, R. The Origin and Evolution of the Tamil, Vatteluttu and Grantha Scripts, Proceedings of the Second International Conference Seminar of Tamil Studies (Madras), 1968 pages 410-415;Mahadevan I. Corpus of the Tamil Brahmi Inscriptions (Madras), 1966
67. Sitrampalam S.K., "The Brahmi Inscriptions as a source for the study of Puranic Hinduism in Ancient Sri Lanka. Ancient Ceylon, Vol. I No. 7, 1990 pages 285-309; Paper presented at the International Seminar towards the Second Century of Archaeology in Sri Lanka, on the 7th-13th July, 1990, Organised by the Department of Archaeology in Sri Lanka (Colombo), 1990
68. Fernando PE. The Beginnings ofthe Sinhala Script, Education in Ceylon - A centenary volume I, Colombo 1969, pages 19-24
69. Karunaratne Saddhamangala, "Epigraphica Zeylanica, Vol. VII, being lithic and other inscriptions of Ceylon (Colombo), 1984
70. மேற்படி. பக். 10
-95

Page 63
71. மேற்படி. பக். 71 - 91
72. Wimalasena, N.A. A New Chronology for the letter appearing on the Pottery found near the place in the citadel of Anuradhapura, paper submitted (in Sinhala) for the Section E of the Sri Lanka Historical Association on the occasion of the MultiDisciplinary International Conference on the occasion of 50th Anniversary of Independence of Sri Lanka (February 23-35, 1998) (அநுராதபுர அகழ்வின் போது கிடைத்த மட்பாண்ட ஓடுகளிலுள்ள திராவிட “ழ” தவறுதலாக “ர”வாக வாசிக்கப்பட்டுள்ளமையை மேற்கூறிய ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.)
73. Sitrampalam S.K., and Pushparatnam, P. The Potsherd Inscriptions from Poonakary - A historical perspective. Gopalakrishna Iyer, P. Sivachandran Rand Pushparatnam P(ed) - Professor Sivasamy - Abhijnamala (Jaffna), 1995
74. Bopearachchi Osmand and Wickremesinghe, Rajah, *Rohuna-Anancient civilisation re-visited-Numismatic and Archaeological Evidence on Inland and Maritime Trade (NugegodaColombo) 1999 pages 56-59
75. Kanagaratnam D.J. Tamils and Cultural Pluralism in Ancient Sri Lanka (Colombo) 1978
76. VelupillaiA., Tamil influence in Ancient SriLanka with special reference to early Brahmiinscriptions, Journal of Tamil Studies, Vol. 16, Dec 1979 pages 63-77 and Vol.17, June 1980 pages 6-19
77. Sitrampalam, S.K., (yp.(5.35.1980, éAgibADLbLIGA)Líb éA.é5. பிராமிக் கல்வெட்டுகளும் தமிழும். சிந்தனை - தொகுதி 2 இதழ் 1 பங்குனி 1983 பக்.57-86
78. Sitrampalam, S.K. The title Parumaka found in Sri
-96

Lankan Brahmi Inscriptions. A Reapprisal, Sri Lanka Journal of South Asian Studies, No.1, (New series) 1986-87 pages 13-25
79. Sitrampalam, S.K. TheformofVelu(Vel) ofSriLankan Brahmi Inscriptions - A Reappraisal, paper presented at the XVII annual Congress of Epigraphical Society of India, Tamil University, Thanjavur in February 2-4, 1991; This article was later published in the Sri Lanka Journal of South Asian Studies, No.3, Newseries 1991-92 pages 60-71
80. Champakalakshmi, R. 1975-6 Archaeology and Tamil literary Tradition, Puratattva, Bulletin of the Indian Archaeological Society, No.5 pages 110-122
81. Paranavitana S., Inscriptions of Ceylon-Vol. I Early Brahmi Inscriptions (Colombo), 1970 page DXVI
82. Gunawardana, R.A.L.H., Prelude to the state; An early phase in the evolution ofpolitical institutions inancient Sri LankaThe Sri Lanka Journal of the Humanities, Vol. VIII, Nos. 1 & 2, 1982 page 7
83. Sitrampalam S.K., The Title Aya ofSri Lankan Brahmi Inscriptions - A reappraisal; Summary of the paper submitted to the Archaeological Congress (Colombo), 1988; Sitrampalam, S.K. 1980
84. Seneviratne, Sudharshan, The Baratas; A case of community integration in early historic Sri Lanka; Amerasinghe A.R.B., and Sumanasekara Banda (ed) James Thevathasan Rutnam Festschrift 1985, Sri Lanka UNESCO National Commission (Ratmalana), 1985 pages 49-56
85. Ellawala, H. page 41
86. Sitrampalam S.K., Tamil House Holders Terrace Inscription at Anuradhapura; A Reappraisal, Manivasagar A.V. (ed) Readings in Social Sciences-Essays in Honour of Dr. S.K.S.
-97.

Page 64
Nathan, University of Jaffna, Sri Lanka, (Colombo), 1998 page: 1-9
87. Paranavitana, (p.s5.gbJT6io 1970 G56).Qa). 270
88. Coningham R.A.E., Allchin.F.R., Batt, C.M. and Lucy D. மு.கு.க. 1996, பக் 70-96
89. Bopearachchi Osmand (yp.Gö5.355. 1998, uğ5.150 90. Paranavitana, S. (p.ggrd) 1970, 56).96). 58, 159
91. Nicholas, C.W. Historical Topography of Ancient and Medieval Ceylon, Journal ofthe Ceylon Branch of the Royal Asiatic Society, N.S. Vol. VI 1959 page 9
92. Mahavamsa, மு.கு.நுால் அதி 10 வரி 1
93. மேற்படி
94. Paranavitana, S. (p.65.5 Tg) 1970, 56).96). 1051-52 தோணிகல கல்வெட்டில் இப்பதம் தவிறிகியநகர என இடம் பெற்றுள்ளது.
95. Nicholas, C.W. (p.(5.5. 1959, uá 7-8
96. Mahavamsa, (up.G. b|T6o -9É XXXIll, 6, Iffl 51
97. Paranavitana, S. (p.(5.5 Tg) 1970, 56).9a). 610, 684, 968, 1097
98. மேற்படி கல்.இல, 279, 712
99. Paranavitana, S. (p.G.I.TG) 1970, 56).96). 44, 71, 98, 125, 198, 203, 266, 297. 299, 343, 358, 372, 374, 376, 400-2, 536, 538. 578, 582, 586. 666, 670, 680, 684. 707, 752, 807, 828, 856, 955, 968, 995, 998. 1020, 1088. 112, 1113, 1128, 1195, 1210, 1227
-98

100. Paranavitana, S. (p.G5-5 ridi) 1970, 56).9a). 17, 24, 34, 46, 47. 104, 109, 168, 173, 179, 238, 248, 279, 296, 305, 338-341, 343. 377, 378, 471. 488, 538, 550, 617. 706, 892. 896. 958, 960. Rangaswamy Dorai, The Surnames ofthe Sangam Age-Literary and Tribal (Madras) 1968 pages 243-245
101. Paranavitana, S. Cyp. (gbigby Táio 1970, 856).9Gu).
83. 289, 487, 643, 744, 142, 1161, 1202
102. Tamil Lexican, Vol. V part I, 3090
103. Seneviratne, Sudharshan, (up.G.6, 1996
104. Coningham, R.A.E., Alchin F.R., BattC.M. and Lucy D. மு.கு.க பக் 94
105. மேற்படி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது
106. Deraniyagala S.U. and Abeyratne M. (p.g.as 1997 பக்கம் 14
107. Geiger, W., The Grammer of the Sinhalese language (Colombo) 1938
108. Gunawardhane, W.F. The Origin of the Sinhalese Language, (Colombo), 1918
109. Coningham R.A.E., Allchin F.R., Batt., C.M. and Lucy D., (p.(5.3, 1966 us, 94
110. Rulen Merrit, Aguide to the languages of the world (Standford University), 1975
11. தொல்காப்பியம், சொல்லதிகாரமும் சேனாவரையருரையும்-பதிப்பாசிரியர் கணேசையர் சி. திருமகள் அழுத்தகம், சுன்னாகம், 1938
112. Meenakshisundaram T.P. A History of Tamil Language (Poona), 1965
-99

Page 65
13. அகநானுாறு (பதிப்பு) காசி விசுவநாதன் செட்டியார் மு (திருநெல்வேலி), 1961 செய். 88, 231, 307. குறுந்தொகை (பதிப்பு), சோமசுந்தரனார். பொ.வே. (திருநெல்வேலி) 1962. செய். 189, 343, 360, நற்றிணை (பதிப்பு) சோமசுந்தரனார். பொ.வே. (திருநெல்வேலி) 1962 செய். 366
114. Paranavitana S Cup.(5) TG) 1959 u. 43
115, Burrow, T. The lossofinitial C/S in South Dravidian - collected papers on Dravidian Linguistics (Annamalai Nagar), 1968 pages 150-157
116. Subrahmanya Ayyar, K.V. The Early monuments of the Pandya Country and their Inscriptions, Proceedings of the Third All India Oriental Conference, (Madras), 1924
117. Mahadevan, (yp.(ö5.55. 1966, 356ñ).9Q6a). 9 18. மேற்படி கல்.இல, 27 119. Sitrampalam, S.K. (p.5.5. 1998 120. Sitrampalam, S.K. and Pushparatnam P (p.G.s, 1995
121. Mahavamsa, (pG gré) 99 XXXVaft 15, 45
122. Rajavaliya (ed) Gunasekara B., (Colombo) 1953 page 33
123. Veluppillai A., Epigraphical Evidences for Tamil Studies (Madras) 1980 page 59
124. Epigraphia Zeylanica, Vol. I, 1912-17 Vol. III, 1933, Vol. IV 1943
125. Paranavitana S., Sigiri Graffiti, Being Sinhalese verse of the Eighth, Ninth and Tenth Centuries (London), 1956 Vol. II
-100

page 179
126. Paranavitana, S. (Up.G5 DтG) 1959 LJá. 90 127 மேற்படி 128. Epigraphia Indica, Vol. 20 page 23 129. Dipavamsa, (p.(g) brTao 939. IX 6.Jf 1
130. Mahavamsa மு.கு நுால் அதிகாரம் VI வரி 42 அதிகாரம் XXXI வரி 43
131. மேற்படி, அதி. VI வரி 42 132. மேற்படி. அதி.VI வரி 40-42
133. Sitrampalam S.K. “The Urnburial site of Pomparippu of Sri Lanka - A study, Ancient Ceylon, Vol. 2, No.7, 1990, pages 263-297. Paper presented at the International Seminartowards the second century of Archaeology in Sri Lanka on 7th13th July, 1990. Organised by the Department of Archaeology, Colombo 1990
134. Mahavamsa, gig. XXI of 10-11 135. மேற்படி. வரி 13-14 136. மேற்படி, அதி. XXVவரி 75 137 மேற்படி அதி.XXXI வரி 55-61 138. Gloss)LJlq. -9ß. XXXIV 6)Jffl 18-27 139. மேற்படி, அதி. XIX வரி 54-55
140. Nilakanta Sastri K.A. (ed) A Comprehensive History of India Vol.2 The Mauryas and the Satavahanas (Madras) 1957 chapter XVIII page 575
141. Paranavitana S. (p. 56.5Тdo 1970 LJá. 42-44 142. மேற்படி. பக். 406
-101

Page 66
143. Bopearachchi Osmand, Ancient Coins in Sri Lanka, Economic Review, vol. 23, Nos 7/8, Oct/Nov. 1997 Luis. 22
144. Paranavitana S. Cup.st.prtó uš. 94, 356, 357 480
145. Sitrampalam S.K., Tamils in Early Sri Lanka - A historical perspective, Presidential address, Jaffna Science Association, Session D- Social Science, Annual Session 1993. 23.04.1993. Sitrampalam S.K., The form dameda of the Sri Lankan Brahmi Inscriptions - A historical assessment, Sri Lanka Journal of South Asian Studies, No.6New Series (1996/1999) pages 48-72
சிற்றம்பலம் சி.க. தமிழர் பற்றிக் கூறும் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகள் பற்றிய சில கருத்துகள். தமிழோசை தமிழ் மன்றம். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ( திருநெல்வேலி ) 1988-89 ģ. 29-56
146. Gunawardana, R.A.L.H. (p.sh.-gbirTção 1982
- 102


Page 67
நூலாசிரியரைப் பற்றி.
இலங்ை 01.01.1
கல்விை S வித்திய 1 கல்விை யாழ்ப்பா 1965இ6 கழகத்தில் பட்டம் பெற்றார். 1
வரலாற்றுத்துறையில் துணை வி
1980 இல் இவர் சமர்ப்பி பண்பாடு' என்ற ஆய்வுக் கட்டுை கலாநிதிப் பட்டம் அளித்தது.
1996இல் வரலாற்றுத்து பெற்று. இத்துறையின் தலை அத்துடன் பல ஆண்டுகளாக வி கற்கை நெறிகளை ஈழத்தில் கொழும்பு, பேராதனை, யாழ் ஆகியவற்றில் போதித்த அனுப
தமிழ், ஆங்கிலம் புலமைமிக்க இவரது ஆய்வுக் கL சர்வதேச சஞ்சிகைகளில் வெளி பண்டையத் தமிழகம், யாழ்ப்பா இந்து சமய வரலாறு முதலான பல்கலைக்கழகம் வெளியிட்டுs வரலாறு பற்றிய ஆய்வினை பே
 

பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் க யாழ்ப்பாணம் அராலியில் 941ல் பிறந்தார். ஆரம்பக் ய அராலி சரஸ்வதி மகா ால பத்திலும், இடைநிலைக் III வட்டுக் கோட்டை னக் கல்லூரியிலும் பயின்று ல் பேராதனைப் பல்கலைக் 975இல் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராக இணைந்தார்.
த்த 'ஈழத்துப் பெருங்கற்காலப் ரைக்குப் பூனா பல்கலைக்கழகம்
றைப் பேராசிரியராக நியமனம் வாாகப் பணியாற்றுகின்றார். பாலாறு, தொல்லியல் முதலான ன் பல்கலைக்கழகங்களான ஓப்பாணம், வித்தியாலங்கார
வம் உடையவர்.
ஆகிய இருமொழிகளிலும் ட்டுரைகள் பல உள்ளூர் மற்றும் யாகியுள்ளன. மேலும், இவரது ணம் - தொன்மை வரலாறு,
பல நூல்களை யாழ்ப்பாணப் ர்ளது. தற்போது ஈழத்தமிழர்
மற்கொண்டுள்ளார்.