கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் மொழியியற் சிந்தனைகள்

Page 1
GL ராசிரி யர் சு
ஆய்வுக்
தொகுப்ப
LTšL .
ஆர்.
 
 
 

Tsusig; aiT
இராசாராம் சுபதினி

Page 2

தமிழ்மொழியியற் சிந்தனைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியற் பேராசிரியர் சு.சுசீந்திரராசாவின்
ஆய்வுக் கட்டுரைகள்
தொகுப்பாசிரியர்கள் டாக்டர் சு.இராசாராம் முதுநிலைப் பேராசிரியர் இந்திய மொழிகள் பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆர்.சுபதினி முதுநிலை விரிவுரையாளர் மொழியியல் ஆங்கிலத்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ரிஷபம் பதிப்பகம் சென்னை 600 078.

Page 3
தமிழ் மொழியியற் சிந்தனைகள்
பேராசிரியர் சு. சுசீந்திரராசா
முதற் பதிப்பு, சூலை, 1999
அச்சகம்:
மாணவர் மறுதோன்றி அச்சகம், பாரிமுனை, சென்னை - 1
வெளியீடு:
ரிஷபம் பதிப்பகம் 31/45, இராணி அண்ணா நகர் சென்னை 600 078.
விலை: இந்தியா : ரூ.50/-
இலங்கை: ரூ.100/-

1O.
11.
12.
13.
14.
15.
பொருளடக்கம்
ஒலித்துணை உகரம்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் ஆக்கப்பெயர்கள்
மொழி இயலும் மொழிபயிற்றலும்
மரபுத்தொடர்கள்
இலங்கையில் தமிழை இரண்டாவது மொழியாகக் கற்றலும் கற்பித்தலும்
மொழித்தொடர்பு
தமிழ்மொழிப் பாடநூல்களில் பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும்
ஒலி ஒப்புமையால் எழுந்த நம்பிக்கைகளா?
உறவுப்பெயரமைப்பில் ஓர் உறவு
விபுலாநந்த அடிகளாரின் மொழிச் சிந்தனை
பண்டிதமணியின் மொழிநடை
தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் ஒத்த கருத்துள்ள சொற்களும் எதிர்க்கருத்துள்ள சொற்களும்
இலங்கைத் தமிழ்மொழி - ஒரு குறிப்பு
மொழியில் சமுதாயப் படிநிலைகள்
நாட்டார் பாடல் மொழி
பக்கம்
24
55
68
77
11 O
122
126
131
137
145
153
157
162

Page 4

பதிப்புரை
பேராசிரியர் சு.சுசீந்திரராசாவின் மொழியியற் சிந்தனைகளைத் தொகுத்து அளிப்பதன் மூலம் தமிழ்மொழியின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்துவது இந்நூலின் நோக்கம் எனலாம். தென்குமரி எல்லையைத் தொட்டு அலைமோதிக் கொண்டிருக்கும் ஈழத்துத் தமிழைத் தற்கால மொழியியல் நோக்கில் இந்நூலில் அடங்கும் கட்டுரைகள் ஆராய்கின்றன. குறிப்பாக, யாழ்ப்பாணத் தமிழ், ஈழத்தின் பிற வட்டாரத் தமிழ்க் கிளைமொழிகள் ஆகியவற்றின் இலக்கண அமைப்பு இக்கட்டுரைகளில் விரிவாக விளக்கப்படுகின்றது. ஈழத்து மொழியறிஞர்களான விபுலாநந்த அடிகள், ஆறுமுக நாவலர், கணபதிப் பிள்ளை ஆகியோர் பாதையில் யாழ்ப்பாணத் தமிழின் இலக்கண அமைப்பை முழுமையாக்கி இக்கட்டுரைகள் மூலம் வழங்குகிறார் சுசீந்திரராசா.
பேராசிரியர் சுசீந்திரராசா ஈழத்துத் தமிழ்மொழியை ஆழமாக ஆராய்ந்தவர்களுள் முதன்மையானவரும் முக்கியமானவரும் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர்; பழகுதற்கு இனியவர்; நல்லாசிரியர்; ஆய்வு நெறியாளர்; சிறந்த பண்பாளர். பேராசிரியர்கள் மு.வரதராசனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகியோரின் தலை மாணாக்கருள் ஒருவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏராளமான கட்டுரைகள் இவர் எழுதியுள்ளார். பேராசிரியர்கள்கெயர் (JamesW.Gair, USA) ஆர்.இ. ஆஷர் (REAsher, UK), yngiu as Tilli (John Ross Carder, USA) GunsiTD 9,565fessit T6) இவரது ஆய்வுக் கட்டுரைகள் பாராட்டப்பட்டுள்ளன. இந்தியா, உருசியா, சப்பான், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பேரறிஞர்களோடு இணைந்து பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இந்நூலில் மொத்தம் 15 ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. இவை பேராசிரியரால் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. இவையனைத்தும் யாழ்ப்பாணத் தமிழின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துவனஎன்றாலும்மொழியியற்சிந்தனைநோக்கில் முக்கியமாக நான்கு பிரிவுகளுள் இவற்றை அடக்கலாம். ×
1. பொது மொழியியல்
2. யாழ்ப்பாணத் தமிழ்
3.மொழிகற்றலும் கற்பித்தலும்
4. நாட்டார் பாடல்
ஒலித்துணை உகரம், மரபுத் தொடர்கள், மொழித் தொடர்பு, ஒலி ஒப்புமையால் எழுந்த நம்பிக்கைகளா? விபுலாநந்த அடிகளாரின் மொழிச்

Page 5
சிந்தனை,பண்டிதமணியின்மொழிநடை, உறவுப்பெயரமைப்பில் ஒர் உறவு என்னும் ஏழு கட்டுரைகள் முதல் பிரிவினுள் அடங்கும்.
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழை ஆராயும் கட்டுரைகளாக யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் ஆக்கப் பெயர்கள், இலங்கைத் தமிழ்மொழி, மொழியில் சமுதாயப் படிநிலைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
மொழி இயலும் மொழி பயிற்றலும், இலங்கையில் தமிழை இரண்டாவது மொழியாகக் கற்றலும் கற்பித்தலும், தமிழ் மொழிப் பாடநூல்களில் பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும், தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் ஒத்த கருத்துள்ள சொற்களும் எதிர்க் கருத்துள்ள சொற்களும் ஆகிய ஆய்வுக் கட்டுரைகளை மொழி கற்றலும் கற்பித்தலும் என்னும் பகுதியின் கீழ் அடக்கலாம். 'tha (-
ஈழத்திலுள்ள நாட்டார் பாடல்களின் மொழியை ஒரு கட்டுரை விளக்குகிறது.
பேர்ாசிரியரின்மொழியைப் பற்றிய பன்முகப்பார்வையை இவ் ஆய்வுக் கட்டுரைகள் விளக்கி நிற்கின்றன. இக்கட்டுரைகளின் ஆதார சுருதியாக இழையோடும் ஈழத்துத்தமிழின் அனைத்துக்கூறுகளும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பேராசிரியரின் மொழியியலறிவுக்குப் பெருமை சேர்க்கிறது. எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் ஒரு நாணயத்தின் இருமுகங்களாகும். இவற்றுள் எந்த முகமும் அழகற்றது அன்று. பேச்சுத் தமிழின் முக்கியத்துவத்தை மொழியியல் கருவிகொண்டு பாமரரையும் கவரும் வண்ணம் பேராசிரியர் வடித்துள்ள சிந்தனைகள் உணர்ந்து போற்றத்தக்கவை. &
፵ቌqÜ மொழியைத் தாய்மொழியாகவோ இரண்டாம் மொழியாகவோ அன்னிய மொழியாகவோ கற்கும்/கற்பிக்கும் நிலையில் ஏற்படும் பிரச்சினைகளை மிகத் துல்லியமாகப் பேராசிரியர் விளக்குகிறார். மொழியியலுக்கும் மொழிபயிற்றலுக்குமிடையேயுள்ள உறவை விளக்கி (மொழி இயலும் மொழி பயிற்றலும்) இலங்கைத் தமிழ்ப் பாடநூல்களில் பேச்சுத் தமிழ் மற்றும் எழுத்துத் தமிழ் பற்றிய பாடநூலாசிரியரின் கருத்துகளுக்குவிளக்கமளிக்கிறார்.இதைப்போலவேதமிழ்ப்பாடநூல்களில் கையாளப்பட்டுள்ள ஒத்த கருத்துள்ள சொற்களையும் எதிர்க் கருத்துள்ள சொற்களையும் வகைப்படுத்தி மொழிப் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றிய சிந்தனையில்லாத பாடநூலாசிரியர்களின் மனம்போன போக்கினைப் பேராசிரியர் கண்டித்துரைக்கிறார்.

சிங்களமாணவர்கள்தமிழை இரண்டாவதுமொழியாகக்கற்கும்போதும், அவர்களுக்குத் தமிழாசிரியர்கள் தமிழைக் கற்பிக்கும்போதும் ஒலியன் நிலையில் எழும் சிக்கல்களைப் பேராசிரியர் விளக்குகிறார். யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழை இவ் ஆய்வுக்காகப் பேராசிரியர் எடுத்தாள்வது போலப் பிறநாடுகளில் வழங்கும் தமிழ்க் கிளைமொழிகளும் மொழிக் கல்வி ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
நாட்டார் பாடல்களைப் பதிப்பிக்கும்போது பதிப்பாசிரியர்கள் பேச்சு மொழியை எந்த அளவிற்கு அச்சிலே பேணிப் பாதுகாத்துள்ளனர் என்பது குறித்து ஈழத்துக் கல்வெட்டுகளைச் சான்றுகாட்டிப் பதிப்பு முரண்களை நாட்டார் பாடல் மொழி என்னும் கட்டுரையிலே பேராசிரியர் விவரிக்கிறார். ஈழத்து நாட்டுப் பாடல்களில் பயின்று வரும் மொழிவழக்கின் அடிப்படையில் அவை தோன்றிய காலத்தையும் வட்டாரத்தையும் ஊகித்து அறியலாம் என்னும் கருத்தையும் அவர் முன்வைக்கிறார்.ஒலிமாற்றங்களின் அடிப்படையில் காலத்தைக் கணிக்கும் இவரது ஆய்வு நெறிமுறை தமிழக நாட்டார் பாடல் ஆய்வாளர் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.
மொத்தத்தில், ஈழத்து இலக்கியப் பெருமைக்கு அணி சேர்க்கும் ஈழத் தமிழ் மொழி பேராசிரியர் சுசீந்திரராசாவின் இக்கட்டுரைகளால் முழு வடிவம் பெற்றுள்ளது. இவ்வடிவம் இந்தியத் தமிழினின்றும் மாறுபட்டது. இதைப் போன்றே தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் வழங்கும் தமிழ் மொழியின் தனித்த நிலையும் விளக்கப்பட வேண்டும் என நம்மை இக்கட்டுரைகள் சிந்திக்கத் தூண்டுகின்றன. இவ்வழியில் தடம் பதிக்கப் பல மொழியியல் ஆய்வாளர்கள் முன்வருவார்களேயானால் இக்கட்டுரைத் தொகுப்பின் வெற்றி அதுவேயாகும்.
அறுபத்தைந்து அகவை நிரம்பும் பேராசிரியர் சுசீந்திரராசா அவர்கள் தம் ஆய்வுப் பணியைப் புதிய தெம்புடன் தொடர்ந்திட எங்கள் பேரவாவை இத்தருணத்தில் புலப்படுத்திக் கொள்கிறோம்.
இக்கட்டுரைகளைத்தொகுத்துவெளியிடஅனுமதியளித்த பேராசிரியர் சுசீந்திரராசா அவர்களுக்கு எங்கள் நன்றி. இந்நூலை அச்சேற்றும் நிலையில் எங்களுக்கு உதவிய முனைவர் இரா.முரளிதரன், தமிழ்ப் பல்கலைக் கழகம், திரு.ப.திருநாவுக்கரசு, சென்னை, அழகுற அச்சிட உதவிய திரு.சா.அ.சௌரிராசன், மாணவர் நகலகம், சென்னை ஆகியோருக்கும் எங்கள் நன்றி.
சு.இராசாராம்
ஆர்.சுபதினி

Page 6

சுசீந்திராாகா
1
ஒலித்துணை உகரம்
இன்று இந்திய நாட்டுப் பேச்சுத் தமிழில் எந்தச் சொல்லும் மெய்யொலியில் முடிவதில்லை. இவ்வியல்பு இந்தியத் தமிழ்க் கிளைமொழிகள் அனைத்திற்கும் பொதுவாகக் காணப்படுகின்றது. ஆயின் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் தடையொலிகள் தவிர்ந்த ஏனைய மெய்யொலிகள் பலவற்றில் முடிவடைகின்ற சொற்கள் பல. யாழ்ப்பாணத் தமிழில் - ம் என்ற மெய்யொலியில் முடிகின்ற சொற்கள் இந்தியத் தமிழில் ஈற்று - ம் கெட்டு, முன்நின்ற உயிர் மூக்கினச்சாயல் உடையதாக வழங்குகின்றன. யாழ்ப்பாணத் தமிழில் யகரவொற்றில் முடிகின்ற சொற்கள் இந்தியத்தமிழில் இகரம் பெற்று முடிகின்றன. மேலும் யாழ்ப்பாணத்தமிழில் ஏனைய மெய்யொலிகளில் முடிகின்ற சொற்கள் இந்தியத் தமிழில் ஓர் ஒலித்துணை உகரம் பெற்று முடிகின்றன. எடுத்துக்காட்டுக்கள்
பின்வருமாறு:
யாழ்ப்பாணத் தமிழ் இந்தியத் தமிழ்
மரம் LD5 (maró)
பாய் LumuS
கண் கண்ணு பால் UTE? வாத்தியார் வாத்தியாரு
மரம், பாய், கண், பால், வாத்தியார் ஆகிய பெயர்ச்சொற்கள் இலக்கிய வழக்கிலும் ஈற்றில் உகரம் பெறுவதில்லை. இலக்கியத்தில் சொல்லு முதலிய சில சொற்கள் உள. எனினும், இங்கு இலக்கியத் தமிழோடு யாழ்ப்பாணத் தமிழ் மிக நெருங்கி இருப்பதைக் காண்கின்றோம்.

Page 7
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 2
ஆயின், ஈற்றில் உகரம் பெறாதுமெய்யொலியில் முடியக்கூடிய பெயர்ச் சொற்கள் சில யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழிலும் உகரம்பெற்று முடிவதைக் காணலாம். இவை மிகச் சில. முள் என்பது யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் முள்ளு என ஆகியுள்ளது. இது பேச்சிலும் முள் என நிற்கலாம். முள் என்ற சொல்லையே பலர் இலக்கிய வழக்கில் கையாள்கின்றார்கள். இதுவே பழைய வடிவமும் ஆகும்.
மரம், பாய், கண், பால், வாத்தியார் போன்ற யாழ்ப்பாணத்து வழக்கை நோக்கும்போது 'முள்ளு என்பதும் 'முள்' என நமது பேச்சில் வழங்கியிருக்க வேண்டும் அல்லவா? ஆயின், இங்கு ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் ஒரு நெறிப்பட்டதாகவே காணப்படுகின்றது. இந்நெறியைக் கண்டு கூறுவதே இக்கட்டுரையின் முடிபாகும்.
யாழ்ப்பாணத் தமிழில் மெய்யிலே முடிவடைந்திருக்க வேண்டிய சொற்கள் சில இன்று ஒலித்துணை உகரம் பெற்று முடிகின்றன. அச்சொற்களில் சிலவற்றைக் கூறுவோம்:
கல் கல்லு பல் பல்லு வில் வில்லு நெல் நெல்லு சொல் சொல்லு எள் எள்ளு முள் முள்ளு
B36T களஞ கொள் கொள்ளு புல் புல்லு
ஏனையவற்றை நமது அன்றாட பேச்சு வழக்கில் காண்க.
(CV, C, என்ற வடிவத்தையுடைய ஓரசைச்சொற்களில் C -ல் ஆகவோ -ள் ஆகவோ இருக்குமாயின், ஈற்றில் ஒலித்துணையாக உகரம் தோன்றியுள்ளது. உகரம் தோன்றவே (C) V, C, C, u என்ற வடிவம் அமைகின்றது. (C) என்பது ஏதேனும் மெய்; சொல்லில் வரலாம் - வராது விடலாம். V என்பது ஏதேனும் குற்றுயிர்.

3 சுசீந்திரராசா
யாழ்ப்பாணத் தமிழில் பிற வடிவத்தை உடைய சொற்களில் உகரம் பெறும் இம்மாற்றம் இல்லை. எடுத்துக்காட்டு:
கண்
LD6T
ஆண் தேள் தோல் கால்
கடவுள்
குறிப்பு 1. தமிழில் வல்லின மெய்கள் ஈறாக வரும்போது குற்றியலுகரம்
ஒலிக்கப்படும். இம்முறை பண்டு தொட்டு இருந்து வருகின்றது.
நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி ஈற்றும் குற்றிய லுகரம் வல்லாறு ர்ந்தே"
(6T(p.36) எனத் தொல்காப்பியர் விளக்கினார்.
மேலும், தெலுங்கு மொழியில் ஒவ்வொரு சொல்லும் உயிர் ஈறாகவே முடிவடைகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தகும்.

Page 8
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 4.
2
யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில்
ஆக்கப் பெயர்கள்
1.0 மொழியில் ஓர் எளிமையான அடிச்சொல் அல்லது ஆக்கம் பெற்ற அடிச்சொல் மேலும் ஆக்க ஒட்டு (derivational affix)' 6J bugs67 ep6, GLDT சொல்லில் உள்ள உயிர் அல்லது மெய்யொலியில் மாற்றம் பெறுவதன் மூலமோ சொற்பெருக்கத்திற்கு இடமளிக்கிறது. எடுத்துக்காட்டாகத் தமிழில் கல் என்னும் வினையடி - வி என்னும் ஆக்க ஒட்டு (விகுதி) பெற்று கல்வி என அமைகிறது. கெடுஎன்னும்வினையடியில் உள்ள முதற்குறில் நெடிலாக மாறுவதால் கேடு என்னும் சொல்லைப் பெறுகின்றோம். இவ்வாறு மொழியில் அடிச்சொற்கள் ஆக்கம் பெற்றுப் பெருகும் முறை ஒரு நியதிக்கு உட்பட்டதாகவே உள்ளது.ஒருசொல்மொழியில் உள்ளஎந்த ஒருஒட்டையும் ஏற்கும் என்றோ அல்லது எந்த ஒலி மாற்றத்தையும் அடையும் என்றோ கூறிவிட முடியாது.
அடிச்சொல்லும் ஆக்கச்சொல்லும் ஒரே இலக்கண வகையைச் சேர்ந்தனவாகவோ வெவ்வேறு வகையைச் சேர்ந்தனவாகவோ இருக்கக்கூடும். சில ஆக்க ஒட்டுக்கள் அடிச்சொல்லின் இலக்கணவகையை மாற்றிவிடும்; சில மாற்றுவதில்லை.மேலே காட்டியவினையடிகள்முறையே ஆக்க ஒட்டு ஏற்று, ஒலி மாற்றம் பெற்றுப் பெயர்ச் சொற்கள் ஆக அமைந்துள்ளன. ஆங்கிலத்தில் ஆக்க ஒட்டுகள் மூலம் பெயரில் இருந்து பெயரடை அமைகிறது; வினையில் இருந்து பெயர் அமைகிறது; பெயரில் இருந்து வினை அமைகிறது; வினையில் இருந்து பெயரடை அமைகிறது 6TG5535 TLGBa,6T (up6)p(SuSeason-Seasonal, sing-singer, prison-imprison, accept - acceptable. இவை அனைத்தும் வகை மாறும் ஆக்கங்கள். ஆயின், ஆங்கிலத்தில் hood என்னும் ஒட்டு அடிச் சொல்லின் இலக்கண வகையை

5 சுசீந்திரராசா
மாற்றுவதில்லை.man, manhoodஆகிய இரண்டும்பெயரே. ஆக்கஒட்டுக்கள் மூலம் மேலும் மேலும் வகை மாறும் ஆக்கங்களும் உண்டு. manliness, modernisation ஆகிய சொற்களைப் பிரித்துக் காண்க. முறையே man பெயர்; manly Guuj60L; manliness Guus 6T66T6|b, modern Quuj60)L; modernise வினை; modernisation பெயர் எனவும் காணலாம். குறித்த ஓர் ஒட்டைச் சில சொற்கள் மட்டும் ஏற்பதுண்டு. மற்றும் ஓர் ஒட்டைப் பல சொற்கள் ஏற்பதும் உண்டு. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் - hood என்னும் ஒட்டு manhood, nationhood, christhood எனச் சில சொற்களோடு மட்டுமே வரக் காண்கிறோம். தமிழில் - த்தை என்னும் ஒட்டு நட போன்ற ஒரு சில சொற்களோடு மட்டும் வருகிறது. ஆயின், தமிழில் - இ என்னும் விகுதி செயல் முதல் பொருளில் மிகப் பல சொற்களோடு வரக் காண்கிறோம். எடுத்துக்காட்டுக்களைக் கீழே (2, 3) காண்க. குறித்த ஆக்க ஒட்டு ஒன்றினை ஏற்று அமையும் நூற்றுக்கணக்கான புதிய சொற்கள் நீண்டகாலம் வாழாமல் வழக்கிறந்து போவதும் உண்டு. அமெரிக்காவில் சில ஆண்டுகட்குமுன்cafeteria என்னும் சொல்லமைப்பை ஒட்டி (-teria என்னும் ஒட்டுப் பெறுவதன் மூலம்) groceteria, booteteria, booketeria GuT6TD BTĎgDJės Guddu'l- சொற்கள் தோன்றினவாம். இன்று அவற்றுள் பெரும்பாலானவை மறக்கப்பட்ட நிலையிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் உளவாம்."
1.1 இங்கு யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் வழங்கும் ஆக்க ஒட்டுகளையும் அவை சேர்வதன்மூலம் தோன்றும் ஆக்கச் சொற்களையும் ஒலிமாற்றம் மூலம் அமையும் ஆக்கச்சொற்களையும்இயன்றவரைவிரிவாகக் காண்போம். இவற்றை ஆய்வுப் பயன் கருதித் தேவைக்கேற்ப இலக்கிய வழக்கு, இந்தியப் பேச்சு வழக்கு ஆகியவற்றோடு ஆங்காங்கு ஒப்பு நோக்கி விவரண அடிப்படையிலும் வரலாற்று அடிப்படையிலும் காண்போம். இவ்வாறு ஆக்க வடிவங்களின் அமைப்பு, வரலாறு, வழக்குப் போன்றவற்றை ஆராய்வதன்மூலம் தமிழ்மொழியின் தொழிற்பாடுபற்றிய அறிவு தெளிவடையும். சமுதாயத்தில் தோன்றும் புதிய கருத்துக்களை வெளியிடுவதற்கு ஏற்ற புதிய சொற்களை முறைப்படி உருவாக்கிக் கொள்ளவும் முடியும். AA
யாழ்ப்பாணத்துத் தமிழில் ஆக்கப் பெயர்கள் பெயர், வினை, பெயரடை போன்றவற்றை அடியாகக் கொண்டு பிறக்கின்றன. அடியாக நிற்பன ஏற்கும் விகுதிகளும் (ஒட்டுகள்) பலவகை. முதற்கண் அடிகளைப் பெயரடி, வினையடி, பெயரடை அடி என வகை செய்து பின் ஒவ்வொரு வகையிலும்

Page 9
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 6
விகுதிகளைக் கருத்திற் கொண்டு மேலும் வகைப்படுத்துவோம். சில விகுதிகள் ஆக்கத்தில் பெருவழக்கை ஏற்படுத்துகின்றன; பல விகுதிகள் இவ்வாறு பெருவழக்கை ஏற்படுத்துவதில்லை.
1.2 வகைப்படுத்தும்போது சிக்கல்கள் எழுவது உண்டு. எடுத்துக்காட்டாக, குளிர்ச்சி என்னும் ஆக்கப் பெயரின் அடி பெயரா? வினையா? இங்கு காரணங் காட்டாது வினையென்றே கொள்கிறோம். இத்தகைய சிக்கல் ஒருபுறமிருக்க ஆக்கப் பெயர்களை விளக்கும்போது சந்தி (புணர்ச்சி) அடிப்படையிலே தோன்றும் சிக்கல்களும் உண்டு. இவற்றைத் தனியே ஆராய்தல் வேண்டற்பாலது எனக் கொண்டு ஈண்டு கருத்திற் கொள்ளவில்லை.
2
2.0 GluuuJLq
2.1 பால் காட்டும் விகுதி பெற்று அமைவன"
அஃறிணைப் பெயரடிகளுள் சில பால் காட்டும் விகுதி ஏற்றுப்பொருள் மாற்றத்துடன் உயர்திணைப் பெயராக அமைகின்றன.
சில பெயரடிகள் ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டன் விகுதியையும்பெறுவன. பால்காட்டும்விகுதிசிறப்பாகப் பெண்பால் விகுதி பெயரடியைப் பொறுத்து வேறுபடுகிறது.
·6了,5打。 (அ) கட்டை கட்டையன்
கட்டைச்சி (ஆ) கரை கரையான்
கரையாடிச்சி (இ) கீரிமலை கீரிமலையான் கீரிமலையாள் (FF) éïo- சீமான்
சீமாட்டி (உ) செகிடு செகிடன்
செகிடி
மேலேகாட்டியவகைகள் ஒவ்வொன்றிலும் அடங்கக்கூடியபெயரடிகள் பல உண்டு. அவற்றுட் சிலவற்றை மட்டும் இங்கு காட்டுகிறோம்.
(அ) இடை, தொக்கை, பறை, பெடி, பேய், (ஆ) வெள்- (பெண்பால்).

சுசீந்திரராசா
(இ) ஊர், தீவு (உ) குறுடு, தோழ், விசர். சீம் - என்பது கட்டுண்ட (bound) பெயரடியாகும். இது ஏனையவை போன்று தனிவடிவமாக (free form) வழங்குவதில்லை. பாட்டன், பாட்டி, மச்சான், மச்சாள் போன்றவற்றிலும் பெயரடி கட்டுண்ட வடிவமாகவே உள்ளது.
ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டின் விகுதியையும் ஏற்கும் பெயரடிகளுள் பல மரியாதை இன்மைப் பொருள் தொனிக்கும் ஆண்பால் பன்மை, மரியாதை இன்மைப் பொருள் தொனிக்கும் பெண்பால் பன்மை, மரியாதைப் பொருள் தொனிக்கும் ஆண்பால் ஒருமை, ஆண்பால் பெண்பால் பொதுப்பன்மை ஆகிய விகுதிகளைப் பெறுவன.
Test செகிடு செகிடங்கள்
செகிடியள் செகிடர் செகிடரவை
மரியாதைப் பொருள் தொனிக்கும் ஆண்பால் ஒருமை விகுதி சந்தர்ப்பத்தைப் பொறுத்து ஆண்பால் - பெண்பால் பொதுப்பன்மைப் பொருளையும் தரவல்லது. இவ்வேறுபாட்டை அது ஏற்கும் வினைமுற்றுக் காட்டும். எ.கா.செகிடர்வாறார், செகிடர்வரீனம். சில பெயரடிகள் பொதுவாக மரியாதைப் பொருள் தொனிக்கும் ஆண்பால் ஒருமை விகுதி ஏற்று அப்பொருளில் வழங்குவதில்லை. அவை அவ்விகுதியை ஏற்கும்போது ஆண்பால் - பெண்பால் பொதுப்பன்மைப் பொருளையே தருகின்றன.
6t.T. பறை பறையர்
பேய் பேயர்
பால்காட்டும் விகுதியைப் பெறுவனவற்றுள் சில பெண்பால் விகுதியை மட்டும் ஏற்பதில்லை.
6.95T. கிழங்கு கிழங்கன்
கிழங்கங்கள் கிழங்கர் கிழங்கரவை
காடை, கிறுக்கு, குரங்கு, சாக்கு, பல்லு, பனி, புளி, மாடு, மொறடு, மோடு, வயிறு, விழல் என்பன காட்டிய வகையில் அடங்கும்.
அஃறிணைப் பெயரடிகள் - காற் (-கார்) என்னும் ஒட்டைப் பெற்றுப் பின் பால் விகுதி ஏற்று - காறன்,- காறிபோன்று முடிவதும் உண்டு.

Page 10
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 8
6. 6) கடைக்காறன்
கடைக்காறி வேலை வேலைக்காறன்
வேலைக்காறி
தமிழில் காணப்படும் -காற் என்பது வடமொழி வடிவம் ஒன்றின் திரிபாகும். வடமொழியில் கும்பகார என வருவதை நினைவிற் கொள்க. -காறன், -காறி ஆகிய விகுதிகள் ஏனைய விகுதிகளைக் காட்டிலும் சொல்லாக்க ஆற்றல் உடையன. எனவே, இவை மிகப் பல சொற்களோடு வருகின்றன. -காரன், -காரி என்பன இலக்கிய வழக்குடையன. ரகரம் சில இடத்துப் பேச்சில் றகரமாக ஒலிக்கப்படுகிறது. -காரன், -காரி பெற்று அமைந்த பெயர்களை இரண்டாவது பாண்டியப் பேரரசு காலத் தமிழ்ச் சாசனங்களில் காண்கின்றோம். எ.கா. வேட்டைக்காரர். நிவந்தக்காரர்.
2.2 பெயரடிகள்-ஆன் விகுதியை ஏற்கின்றன. இவ்விகுதி பெயரடிக்கு உரிமைப் பொருளைத் தருகிறது. இவ்விகுதியை ஏற்று அமைவன மிகப் பல. இங்கு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் தருகிறோம்.
sts e의 அதான் இது இதான் கிழக்கு கிழக்கான் தெற்கு தெற்கான் மேல் மேலான்
സ്കെ வீட்டான்
23 தன்மை குறிக்கும் -த்தனம் என்னும் விகுதியை 44 பெயரடிகள் ஏற்கின்றன.
6ts. ஊதாரி ஊதாரித்தனம்
காடை,காவாலி, கிறுக்கு,குப்பை, குரங்கு,குழந்தைப்பிள்ளை, குறும்பு, கோமாளி,கோழை, சண்டி, சிறுபிள்ளை, சேட்டை, சோம்பேறி, நட்டாமுட்டி, நாட்டாண்மை, புத்திசாலி, பேடி, பேய், போக்கிலி, போலி, பொறுக்கி, முட்டாள், மொக்கு, வம்பு, விசர், விடுகாலி, விளையாட்டு, வெருளி, வேசை என்பனவும் அசடு, அற்பம், கசவாரம், கஞ்சம், கஞ்சல், கள்ளம், குள்ளம், குறுடு, பகடு, பட்டிக்காடு, பிடிவாதம், மிருகம், முறடு, மோடு என்பனவும் இவ்வகையில் அமைவன.
2.4 செயல் முதற்பொருளைக் குறிக்கும் -இ விகுதியை 9 பெயரடிகள் ஏற்கின்றன. -

9 சுசீந்திரராசா
6T.S. உபகாரம் உபகாரி
சந்தர்ப்பவாதம், ஞானம், தியாகம், தீவிரவாதம், பயங்கரவாதம், பாவம், பிரிவினைவாதம், லோபம்.
-அம் விகுதிபெற்றுத்தமிழில் அமைந்த சொற்கள்-இ விகுதிபெற்றன. இவற்றுள் சில அண்மைக் காலத்தில் பேச்சுவழக்கிற்கு வந்தவை.
2.5 -ஆளி என்னும் விகுதியை 22 பெயரடிகள் ஏற்கின்றன. இவ்விகுதி ஆட்சி', 'உடைமை' என்னும் பொருளைத் தருகிறது.
6.5T. உழைப்பு ر- உழைப்பாளி
உறவு,கடன்,காவல்.குற்றம் கூட்டு,கொடை சுற்றம்,செலவு.தொழில், நோய், பகை, பங்கு, படிப்பு, படைப்பு, பாத்திரம், பேச்சு, பொறுப்பு, போர், முதல், வழக்கு, விருந்து என்பன இவ்வகையில் அடங்கும்.
2.6 தன்மை குறிக்கும் -மை விகுதியை 2 பெயரடிகள் ஏற்கின்றன.
6.5. ஆண் ஆண்மை 2.7-வாசி என்னும் விகுதியை 5 பெயரடிகள் ஏற்கின்றன.
6.T.s. se!бој அரைவாசி
அரைக்கால், கால், முக்கால், விலை என்பனவும் இவ்விகுதியை ஏற்கின்றன. இவ்விகுதி பெரும்பாலும் பின்னத்துடன் வருகிறது. சுகவாசி, முகவாசிஎன்றசொற்களும்வழக்கில் உண்டு.ஆயின்இவ்விருசொற்களிலும் வரும் -வாசி வேறு பொருளைத் தருகிறதா எனச் சிந்தித்தல் வேண்டும்.
2.8 உடைமைப் பொருள் தரும் -சாலி என்னும் விகுதியை 11 பெயரடிகள் ஏற்கின்றன.
6.T.s. அதிட்டம் அதிட்டசாலி
அனுபவம், குணம், தந்திரம், திறமை, தைரியம், பலம், பாக்கியம், புத்தி, பொறுமை, மூளை என்பன இவ்வாறு அமைவன.
2.9 -மான் என்னும் விகுதியை 5 பெயரடிகள் ஏற்கின்றன.
6下.5百。 கல்வி கல்விமான்
சாதி, நீதி, பக்தி, புத்தி என்பன இவ்வகையில் அடங்கும்.
2.10-வான் என்னும் விகுதியை 4 பெயரடிகள் ஏற்கின்றன.
6T.s. சத்தியம் சத்தியவான்

Page 11
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 1O
பாக்கியம், புண்ணியம், யோக்கியம் என்பன இவ்வகையில் அடங்கும். 2.11 -கரம் என்னும் விகுதியை 6 பெயரடிகள் ஏற்கின்றன.
6.95T. உணர்ச்சி உணர்ச்சிகரம்
சந்தோஷம், துக்கம், பயம், மகிழ்ச்சி, வெற்றி என்பன இவ்வகையின. 2.12-மாரி என்னும் விகுதியை 4 பெயரடிகள் ஏற்கின்றன.
6T.95T. ஆண் ஆண்மாரி சோறு, பெண், வயிறு என்பன இவ்வகையில் அடங்கும். சோறு, வயிறு என்பன முறையே சோத்துமாரி, வயித்துமாரி என அமையும்.
2.13-வந்தர்என்னும்விகுதிஒரேஒருபெயரடியுடன்மட்டும்வருகிறது.
6.T. செல்வம் செல்வந்தர்
3
3.0 வினையடி
3.1 பெயரடிகள் போல வினையடிகளும் பால் காட்டும் விகுதி பெறுகின்றன.
6T.s. தட்டு தட்டான்
தட்டாத்தி கொல்(லு) கொல்லன்
கொல்லங்கள் கொல்லச்சி கொல்லச்சியள். கொல்லர் கொல்லரவை கொதி கொதியன்
கொதியங்கள் கொதியர்
கொதியரவை
இங்கும் பால் விகுதி வினையடியைப் பொறுத்து வேறுபடுகிறது. சில வினையடிகள் பால் காட்டும் விகுதிகளுள் சிலவற்றை ஏற்பதில்லை. எடுத்துக்காட்டாக, கொதி என்னும் வினையடி பெண்பால் விகுதியை ஏற்பதில்லை. கொல்லர் என்னும் சொல் வழக்கில் இருப்பினும் அது மரியாதைப் பொருள் தொனிக்கும் ஆண்பால் ஒருமைப் பொருளில்

11 சுசீந்திரராசா
வழங்காது ஆண்பால் - பெண்பால் பொதுப்பன்மைப் பொருளிலே மட்டும் வழங்கக் காண்கிறோம். கொதியர் என்னும் ஆக்கப்பெயர் மரியாதைப் பொருள் தொனிக்கும் ஆண்பால் ஒருமையிலும், ஆண்பால் - பெண்பால் பொதுப்பன்மையிலும் வழங்கக் காண்கிறோம்.
-காறன், -காறி போன்ற விகுதிகள் பெயருக்கும் வினைக்கும் பொதுவாக உள்ள சில அடிகளோடு சேர்ந்துவரக் காண்கிறோம். எ.கா. வெட்டு: வெட்டுக்காறர். அவை தனிவடிவங் கொண்ட வினையடிகளுடன் சேர்ந்து வரக் காணோம். எழுது, எழுத்து என வினைக்கும் பெயருக்கும் தனிவடிவங்கள் காணப்படும்போது -காறன், -காறி ஆகியவை வினையடியுடன் வராது பெயரடியுடன் மட்டும் வரக் காண்கிறோம். இவ்வாக்கத்தை விதிவிலக்காகக் (1,2) கொள்தல் வேண்டும்.
3.2 -தனம் என்னும் விகுதியை எதிர்மறை வினைகள் (எச்சங்கள்) ஏற்கின்றன.
6.5T. அறியா அறியாத்தனம் தெரியா, புரியா, விளங்கா ஆகிய மூன்றும் இவ்வகையின.
3.3 செயல் முதற்பொருள் குறிக்கும்-இ விகுதியை 28 வினையடிகள் ஏற்கின்றன.
6.S. அனாப்பு அனாப்பி அதட்டு, அலட்டு, அளாப்பு, இடுக்கு, உயர், எதிர், ஏமிலாந்து, கடத்து, குளறு, கொளுவு, சப்பு, சளாப்பு, சறுக்கு, சிணுங்கு, சுறண்டு, சூப்பு, தூங்கு, நக்கு, நொண்டு, பதுங்கு, புளுகு, பொறுக்கு, மளுப்பு, மூடு, வார், விசிறு, வெருள் என்பன இவ்வகையில் அடங்கும்.
ஆடு, ஆட்டு என்னும் வினையடிகள் -இ விகுதி பெற்று வேறு சில பெயரடிகளுடன் நின்று தொகைச் சொற்கள் போன்று அமைவதும் உண்டு,
6.T.s. சூதாடு சூதாடி
பாம்பாட்டு பாம்பாட்டி
கூத்தாடு, குரங்காட்டு, சூத்தாட்டு, தலையாட்டு, பெண்டாட்டு, பேயாட்டு ஆகியவற்றைக்காண்க.சூதாடி, பாம்பாட்டிபோன்றவடிவங்களில் உள்ள விகுதி முறையே -ஆடி, -ஆட்டி எனக் கொள்வோரும் உளர்.
நன்னூல் உரைகாரர்-இ விகுதியின் செயல் முதற்பொருளை உணர்ந்து 'வினைமுதற் பொருள் என்றனர். கால்டுவெல் தமிழில் உள்ள -இ விகுதி வடமொழியில் இதே பொருளைத் தரும் -இ விகுதியில் இருந்தும் வேறுபட்டது எனக் காட்டினார்.

Page 12
தமிழ் மொழியியற் சிந்தனைகள்
12
தமிழில் -அல் போன்ற சில விகுதிகளும் வினைமுதற் பொருளைத் தருவனவாயினும் (இலக்கியவழக்கில் ஏந்தல், தோன்றல்), -இ விகுதி போலச் சொற்களைப் பெருக்குவனவன்று. சேர்ந்தாரைக் கொல்லி (குறள் 306), குடிதாங்கி (பெருந்தொகை) எனப் பண்டு வழங்கியதுபோல இன்றும்
புதிய தொகை ஆக்கங்களில்
பொருளைத் தருவது - இ விகுதியேயாம்.
6.95, 6J))
(b)-اچ6 ஒடு
காட்டு
கொத்து
கொல் தாங்கு
தின் நோக்கு பேசு வருடு வெட்டு
ஏறி
چا-اه؟
كاليا
காட்டி
கொத்தி
கொல்லி தாங்கி
தின்னி நோக்கி பேசி
வருடி வெட்டி
(COrnpOund
செயல்முதற்
சோம்பேறி மரமேறி வந்தேறி கார்ஒட்டி நாடோடி முன்னோடி ஆள்காட்டி கைகாட்டி திசைகாட்டி நாள்காட்டி வழிகாட்டி மரம்கொத்தி மீன்கொத்தி பூச்சிகொல்லி இடிதாங்கி சுமைதாங்கி பழந்தின்னி தொலைநோக்கி தொலைபேசி
وعاL) لح6-عا وك பாக்குவெட்டி மண்வெட்டி
சேர்ந்தாரைக் கொல்லி என்னும் திருக்குறள்தொடரிலேதான்-இ விகுதி வினைமுதற் பொருளில் முதன்முதலாகக் காணப்படுகிறது. இதனைச் சங்க
இலக்கியங்களில் காணோம்.
3.4 சில வினையடிகள் -ஐ விகுதி பெற்றுப் பெயராக அமைகின்றன.
6.T.s.
கிட
கிடை

13 சுசீந்திரராசா
சும,நட, பிற என்பனவும்இவ்வகையில் அடங்கும்.இந்தஅடிச்சொற்கள் ஒரு காலத்தில் உடன்படுமெய் ஏற்காது இகரத்தைப் பெற்று அமைந்தன என எண்ணுவதற்கு இடமுண்டு: கிட+ இ, சும + இ போன்று.
உடு, உருள், எடு, ஒடு, கல்,கவல், கொடு, கொல், கொள், சவள், சுறுள், தடு, திரண், திரள், நில், நிறு, பகு, படு, வகு, வறு, விடு, வில் ஆகியனவும் -ஐவிகுதி பெறுவன.
3.5 -வி விகுதி பெறும் வினையடிகள் 5 ஆகும்.
6.95. கல் கல்வி
கேள், துற, தோல், பிற என்பன ஏனையவையாகும். 3.6 -தல் விகுதி பெறுவன 3 வினையடிகளாகும்.
6T.s. لکDه " ل ஆறுதல்
கெடு, தேர் என்பன ஏனையவை. நோதல் என்னும் ஒரு சொல்லை யாழ்ப்பாண வழக்கு எனச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி குறித்துள்ளது. ஆயின் இச்சொல் இன்றும் பேச்சு வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை.
3.7-வான் விகுதியை 2 வினையடிகள் மட்டும் ஏற்கின்றன.
6. கக்கு கக்குவான்
பயில்.
3.8-வாணி விகுதி பெறும் வினையடி ஒன்றே ஆகும்.
6.T.s. தட்டு தட்டுவாணி
3.9 -அவுவிகுதிபெறுவன5 வினையடிகள்.
6.T.s. உண் உணவு
உழ், கள், செல், வா (வர்-). vm 3.10 -வை என்னும் விகுதியை 14 வினையடிகள் ஏற்கின்றன.
6.5. 96T . அளவை
இழு, கட, கல, கோர், சேர், தாழ், நடு, பற, பார், போர், விழு, வெழு, வேர். நடு என்னும் வினையடி -வை விகுதி பெற்றுத்தரும் பொருளை-கை
விகுதி ஏற்பதன் மூலமும் தருகிறது. (3.18)
3.11 -ச்சு விகுதி ஏற்பன4 வினையடிகள்.

Page 13
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 14
6T.s, பிணை பிணைச்சு குழை, முடி, வரி. 3.12-புவிகுதியை 2 வினையடிகள் பெறுகின்றன.
6.8%. இயல் இயல்பு (tpԼԳ.
-பு விகுதி -வு ஆக மாற்றம் பெற்றதைச் சொற்களில் காணலாம். சங்க இலக்கியங்களில் -பு விகுதி பெற்றுவருவன -வு விகுதியுடன் காணப்படுகின்றன. அழிபு - அழிவு (குறுந்தொகை), இழிபு - இழிவு (தொல்காப்பியம்), துணிபு - துணிவு, பிரிபு - பிரிவு (அகநானூறு) போன்ற சொற்களைக் காண்க. -வு பெற்றுவரும் சொற்கள் அனைத்திற்கும் -பு கொண்ட வடிவங்கள்காணப்படவில்லை. எடுத்துக்காட்டு அறிவு,பொலிவு.
இன்றும் (Մ գԿ - (ՄԳ6ւ ஆகிய இரு வழக்குகளும் யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் இருப்பதைக் காண்க.
3.13 -வு விகுதி பெறுகின்ற வினையடிகள் 52 ஆகும்.
6.95. அசை அசைவு
அடை, அணை, அலக்கழி, அழி, அள, அறி, இழ, ஈ, உணர், உய், உயர், உலை, உழை, எரி, ஒழி, ஒய், கசி, கழி, கிழி, குறை, சரி, சா, சாய், சார், சிதை, சோர், தறி, தாழ், துணி, துற, தெரி, தொய், நிறை, நினை, நெரி, நெளி, பதி, பணி, பிரி, பிள, பொலி, பொறி, மலி, மறை, முடி, முறி, மெலி, வளை, வாழ், விடி, விளை.
3.14 -த்தி விகுதியை 4 வினையடிகள் ஏற்கின்றன.
6.95. அடர் அட(ர்)த்தி குளிர், நேர், வளர். 3.15 -தி விகுதியை ஏற்கும் வினையடிகள் 11 ஆகும்.
6.T.s. அயர் அயர்தி அசர், அறு, இறு, கெடு, செய், தகு, பற, பொறு, மற, விடு. 3.16 -ச்சி விகுதி பெறுபவை 14 வினையடிகள் ஆகும்.
6ΤέδΠ. அதிர் அதிர்ச்சி
ஆராய், இகழ், உயர், எழு, கவர், கிளர், குளிர், சூழ், தளர், தொடர், மகிழ், வளர், வீழ்,

15 சுசீந்திரராசா
வள(ர்)த்தி (3.14), வளர்ச்சி என்பன பெரும்பாலும் ஒரே பொருளைத் தருவன. விவரண அடிப்படையில் இரண்டையும் கட்டிலா மாற்றமுடைய வடிவங்கள் (free variants) எனலாம். ஆயின், வரலாற்று நோக்கில் அவை வேறுபட்ட இரு தோற்றங்கள் ஆகும். இன்று குளி(ர்)த்தி என்னும் சொல் கோயில் பற்றி வருகிறது. அங்கும் குளிர்ச்சி என்னும் பொருள் உண்டு.
3.17-சிவிகுதியை 8 வினையடிகள் ஏற்கின்றன.
6.s. ஆள் ஆட்சி சுழல், பயில், புகழ், புரள், முயல், மீள், வறள். 3.18-கை விகுதியை 6 வினையடிகள் பெறுகின்றன.
6.T. لک})? அழுகை கொள், செய், திரி, தொழு, நடு.
நடு என்னும் வினையடி-கை விகுதிக்குப் பதிலாக -வை விகுதியையும் ஏற்பது உண்டு. நடுகை, நடுவை ஆகிய இரண்டிற்கும் பொருள் வேறுபாடு இல்லை எனலாம். '
3.19 -க்கை விகுதி ஏற்கும் வினையடிகள் 6 ஆகும்.
6 I.BT. அறி அறிக்கை இரு எச்சரி, கிட, படு, வாழ். 3.20 -மை விகுதியை 10 வினையடிகள் ஏற்கின்றன.
6.T.sf. இனி இனிமை குளிர், கூர், தலை, தாழ், நிலை, நேர், பகை, பொறு, வலி. 3.21-மதி விகுதி பெறுவன 8 வினையடிகள்.
6Ꭲ .5ᏐfᎢ . இறக்கு இறக்குமதி ஏத்து, குடு (குடுக்கு-), சேர், தா (தரு-), பெறு, போ, வா (வரு-). 3.22 -ச்சல் விகுதியை 16 வினையடிகள் ஏற்கின்றன.
6.5f. அலை அலைச்சல்
இரை,உலை, எரி, சுழி, காய்,குன்ற, கை, துணி,தோய், நரை, பறை, பாய், புகை, மேய், விளை.
இவற்றைக் கிளைமொழிகளில் காணப்படும் தனித் தோற்றங்கள் எனக் கொள்ளலாம். கிளைமொழிகள் சொல்லாக்கத்தில் தனிப்போக்குடையன; இலக்கியத்தின் போக்கில் இருந்து வேறுபடுவன. துணிச்சல், துணிவு ஆகிய வடிவங்களைக் காண்க. அண்மைக்காலத்தில் துணிச்சல் என்னும் சொல்

Page 14
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 16
இலக்கிய வழக்கிலும் கையாளப்பட்டு வருகிறது. ஆக்க வேறுபாட்டைப் பின்வரும் சொற்கள் விளக்கும்.
கிளைமொழி இலக்கியமொழி அலைச்சல் அலைவு கைச்சல் கைப்பு விள்ைச்சல் விளையுள்
விளைவு
பறைச்சல் என்னும் சொல் தமிழ்க் கிளைமொழிகளுள் யாழ்ப்பாணத்து வழக்கில் மட்டும் காணப்படுகிறது. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி இச்சொல்லைத் தருகிறது. எமனோ, பரோ ஆகியோர் அமைத்த திராவிட 9|La 56le T6) 6) J6) TDD 95 UTé) (Dravidian Etymological Dictionary) மலையாளத்திலிருந்து பறயுக, பறச்சல் ஆகிய இரண்டையும் தருகிறது.
-த்தல் விகுதி தொழிற்பெயர் விகுதியாக மட்டும் மொழியில் வருகிறது. இது பேச்சு வழக்கில் வரக் கானோம். -தல் விகுதி தொழிற்பெயர் விகுதியாக இலக்கிய வழக்கில் வருகிறது. பேச்சுவழக்கில் பெயராக்க விகுதியாகவும் வருகிறது. -ச்சல் என்னும் பேச்சுவழக்கு விகுதிக்கு ஆதாரம் -த்தல் எனக் கொள்வது பொருத்தமாகத் தோன்றவில்லை. ஆறுதல், கெடுதல், தேர்தல் எனப் பேச்சில் காண்க. பேச்சில் ‘கெடுத்தல்' என்பாரில்லை எனலாம்; கெடுக்கிறது' என்றே கூறுகிறார்கள். கழித்தல், கழிச்சல் என்பன பேச்சுவழக்கில் உண்டு. இவை இரண்டும்வெவ்வேறுபொருளைத்தருவன. கழித்தல் என்பது இலக்கிய வழக்கில் இருந்து கணிதத்தைக் குறிக்கவந்த சொல்லாகும்.
3.23-அல் விகுதியை 59 வினையடிகள் ஏற்கின்றன.
6.95. அவி அவியல்
அழுகு, இடி, இர, இருமு, ஏவு, கடை, கரை, கிண்டு, கிழி, குடு, குவி, குழை, குளி, கொந்து, கொளுவு, சமை, சாம்பு, சிக்கு, சீவு, சுண்டு, சோம்பு, தடங்கு, தப்பு, தவ்வு, தறி, துப்பு, தும்மு, துவை, தூறு, தை, தொங்கு, நக்கு, நசி, நாறு, நீக்கு, நெளி, படை, பாடு, பிசங்கு, பின்னு, பீச்சு, புதை, புலம்பு, பெருக்கு, பொங்கு, பொரி, மறி, மின்னு. முத்து, முறி, மோது, வத்து, வளை, வறு, வாங்கு, வாடு, விக்கு, வெம்பு.
3.24-ப்பு விகுதியை 90 வினையடிகள் ஏற்கின்றன.
6.95 ft. அங்கலாய் அங்கலாய்ப்பு
அடு,அடை, அமை, அரி, அறிவி, அருவரு.அலு,அழை, அறி, இர,இரு, இளி, இற, இறை, இனி, உடு, உழை, உறு, உறை, எடு, எதிர், ஏய், ஒழி, ஒறு, ஓங்காளி, கச, கட, கடு, கல, கழி, களை, கறு, கனை, குதி, குளி, குறி, கை, கொதி, கொப்புளி,கொழு, சமாளி,சிரி,சிவ,சிற,சுனை,செழி,தடி,தடு,தாளி,
திகை, தீர், துடி, துடை, துற, நட, நடி, நினை, நெளி, பதி, பதை, படி, படை,

17 சுசீந்திரராசா
பழு, பற, பிடி, பிழை, பிற, புளி, பொறு, மதி, மடி, மலை, மறு, மன்னி, மித, முழி, மூ, மூதலி, வகு, வலி, வாய், விதை, விடு, விரி, விறை, வெடி, வெறு,
வேய், வை.
தொகைச்சொற்களும்-ப்பு விகுதி பெறுவது உண்டு.
6.T. அன்பளி அன்பளிப்பு மொழிபெயர். ஒலிக்குறிப்பு வினைச்சொற்களும் -ப்பு விகுதிபெறுகின்றன.
6T.S. é5LéL- கடகடப்பு
கலகல, கறகற, குழுகுழு, சலசல, சுறுசுறு, பதைபதை, படபட, பளபள, பரபர, பிசுபிசு, புறுபுறு, மினுமினு, முணுமுணு, வழவழ, விறுவிறு.
3.25-ம் விகுதிபெறும் வினையடிகள் 3 ஆகும்.
6.e5. சின சினம்
நய, மன. 3.26 -அம் விகுதி பெறும் வினையடிகள் 61 ஆகும்.
விகுதியை ஏற்கும்போது தோன்றும் ஒலி மாற்ற அடிப்படையில் இவ்வினையடிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
எ.கா. அடக்கு அடக்கம்
இரங்கு இரக்கம்
s கூச்சம்
3.26.1 அகல், அழுத்து, ஆட்டு, இணக்கு, இறக்கு, உயர், உருக்கு, ஊக்கு, எட்டு, எண்ணு, எழுப்பு, ஏத்து, ஏமாத்து, ஒடுக்கு, ஒதுக்கு, ஒட்டு, கட்டு, கலக்கு, குலுக்கு, குழப்பு, கூட்டு, சுணக்கு, சுருக்கு, தாக்கு, தாழ், திருத்து, திருப்பு, தேக்கு, தேட்டு, நீட்டு, நீள், நெருக்கு, நோக்கு, பிணக்கு, பெருப்பு, பெருக்கு, பொருத்து, மதி, மயக்கு, முழக்கு, வருத்து, வளை, வழக்கு, வாட்டு, விருப்பு, விளக்கு.
3.26.2 ஏங்கு, சிணுங்கு, தயங்கு, தூங்கு, நடுங்கு, புழுங்கு, வீங்கு. 3.26.3 கொண்டாடு, தள்ளாடு, திண்டாடு, நாடு, மாறாடு 3.27-ப்பை விகுதி பெறுவன2 ஆகும்.
6T., கிலுகிலு கிலுகிலுப்பை
குடுகுடு.
3.23-அடி விகுதியை 5 வினையடிகள் ஏற்கின்றன.
sts, கலக்கு கலக்கடி

Page 15
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 18
காவு, கிட்டு, குழப்பு, நெருக்கு.
3.29 -வாய் விகுதி பெறுவன3 ஆகும்.
6.9. 67(Աք எழுவாய் கழு, வா (வரு-).
3.30 -முதல் விகுதி பெறுவன2 ஆகும்.
6ኽ.ém5፪. கொள் கொள்முதல் பறி.
3.31 -வாக்கு விகுதி பெறும் வினையடி ஒன்றே ஆகும்.
எ.கா. செல் செல்வாக்கு 3.32-அன் விகுதி பெறுவன2 ஆகும்.
6.95. 956) கலவன்
குதி.
-அன் விகுதி முன்பும் (2.1) காட்டப்பட்டது. பொருள் அடிப்படையில் வெவ்வேறு விகுதிகளாகக் கொள்தல் வேண்டும். 3.33 -அரம் விகுதி பெறுவன2ஆகும்.
6.T.T. நிலவு நிலவரம் விளம்பு.
3.34-வாளம் விகுதியை ஒரு வினையடி மட்டும் ஏற்கிறது.
6.s. கடி கடிவாளம்
3.35 -அவம் விகுதியை ஒரு வினையடி மட்டும் ஏற்கிறது.
6.95. தாண்டு தாண்டவம்
336 -ஆளம் விகுதியை 2 வினையடிகள் ஏற்கின்றன.
6T.6ff, ஏர் ஏராளம்
தார் .
தாராளம் என்னும் சொல்லில் வரும் தார் - எனும் அடிச்சொல் தமிழில் தனித்து வழங்குவதில்லை. இச்சொல்லைச் சென்னைப் பேரகராதி dhara என்னும் வடமொழிச்சொல்லில் இருந்து பெற்றதாகக் கூறுகிறது. 3.37-இடம் விகுதி பெறும் வினையடி ஒன்றே ஆகும்.
6T.95T, கட்டு கட்டிடம் 3.38-அணம் விகுதிபெறுவன 3 ஆகும்.
6T.T. ஒத்து ஒத்தணம் கட்டு, தூக்கு.

19 சுசீந்திரராசா
3.39 -த்தை விகுதி பெறும் வினையடிகள் 2 ஆகும்.
.. لياb . பூத்தை
- سا5
பூத்தை என்னும் சொல் யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் கெட்ட நடத்தையுடைய பெண்ணைக் குறிக்கிறது. பேத்தை என்னும் சொல்லும் வழக்கில் உண்டு. இது வால்பேத்தை எனத் தொகையிலும் வருகிறது. பேத்தை என்பதன் அடிச்சொல் தெளிவாக இல்லை. -த்தை விகுதி பழைய இலக்கியங்களில் வரக் காணோம். இது கன்னடத்திலும் தெலுங்கிலும் வினையோடு ஆக்க விகுதியாக வருகிறது. எமனோ, பரோவின் அகராதியில் 252, 1114, 1551, 1763,2957, 3564 என எண்ணிடப்பெற்ற சொற்களைக்
காண்க.
3,40-அத்து விகுதியை ஒரு வினையடி மட்டும் ஏற்கிறது.
sts வா(வர்-) வரத்து
3.41 -க்குவிகுதியை ஒரு வினையடி மட்டும் ஏற்கிறது.
6. போ போக்கு
3.42 -தம் விகுதியை ஒரு வினையடி மட்டும் ஏற்கிறது.
6T.S. தாளி தாளிதம்
3.43 -த்தம் விகுதியை ஒரு வினையடி மட்டும் ஏற்கிறது.
6T., ہوا (نکا பிடித்தம்
3,44 -ய் விகுதியை ஒரு வினையடி மட்டும் ஏற்கிறது.
s.st. நோ நோய்
3.45 -மானம் விகுதியை 4 வினையடிகள் ஏற்கின்றன.
6.5. 96. அடைமானம்
தீர், தேய், பெறு.
3.46 -குணிவிகுதியை ஒரு வினையடி மட்டும் ஏற்கின்றது.
- T.S. {(? அழுகுணி
3.47-படி விகுதியை 4 வினையடிகள் ஏற்கின்றன.
6.T. கட்டு கட்டுபடி

Page 16
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 2O
குழறு, செல் (செல்லு), தள்ளு.
வரும்படிஎன்னும்பெயரில் உள்ள-படிவடிவத்திலே ஒத்தவேறுவிகுதி எனக் கொள்தல் பொருத்தமாகும்.
3.48-பனவுவிகுதியை 4 வினையடிகள் ஏற்கின்றன.
எ.கா. குடு குடுப்பனவு
குடி, தின், படி, வில்.
கொள்வனவு என்னும் சொல்லில் -வனவு வந்துள்ளது. ப>வ மாற்றம் எனக் கருதலாம். முடிபு - முடிவு போன்ற சொற்களைக் கருத்திற்கொள்க. ,Ꮡ
3.49 -பனை விகுதியை 3 வினையடிகள் பெறுகின்றன.
6.T. கல் கற்பனை
படி, வில்.
3.50 சொல்லின் ஈற்றுயிர்க்கு முதலுயிர் (penultimate vowel) நீட்டம் பெறுவது 7 வினையடிகளில் ஆகும்.
6T.s. இடு Fा:(5)
கெடு, சுடு, தின், நக்கு, படு, பெறு.
தலையிடு, முறையிடு, அடிபடு, இடிபடு, உடன்படு, எடுபடு, கட்டுப்படு, குத்துப்படு, தட்டுப்படு, தேவைப்ப்டு, பிடிபடு, முட்டுப்படு, வெட்டுப்படு என அமையும் சொற்களையும் இங்கு கருத்திற்கொள்க.
3.51 வினையடியில் உள்ள ஈற்றுமெய் இரட்டித்துப்பெயராக அமையும் மாற்றத்தை 14 வினையடிகளில் காண்கிறோம்.
6.T. 2 -(bSö உருக்கு
எழுது, ஏசு, ஒழுகு, ஒடு, கருது, கூடு, பாடு, பூசு, பெருகு, முழுகு, மூசு, விளையாடு, வீசு.
4.
4.0 பெயரடை அடி
4.1 பால் காட்டும் விகுதியைப் பெறும் பெயரடை அடிகள் 3 ஆகும்.

பெரிய, மற்ற,
4.2 -ஐ விகுதி பெறும் பெயரடை அடிகள் 9 ஆகும்.
சுசீந்திரராசா
சின்னவன்
சின்னவங்கள்
சின்னவள்
சின்னவளவை
சின்னவர்
சின்னவா
சின்னவை சின்னது சின்னதுகள்
90.566)LD
இளம், கடும், கரும், கொடும், திறம், பழம், பெரும், வெறும்.
4.3 -மை விகுதி பெறும் பெயரடை அடிகள் 3 ஆகும்.
புது, மெது.
குறிப்பு
1. (ஆக்க) ஒட்டு",
தனிமை
விகுதி" என்னும் பிரயோகங்களுக்குப் பதிலாக
"சொல்லாக்கச் சொல்லியன்' என்னும் பிரயோகத்தை அறிஞர் சிலர்
கையாள்கின்றனர். இவ்வாய்வில் 'விகுதி என்னும் சொல் குறிக்கும்
விரிந்த பொருளைத் தெளிவாக உணர்ந்து கொள்தல் வேண்டும்.
2. smoots: Charles F. Hockett (1958) A Course in Modern Linguistics, Macmillan,
p. 308.
3. தமிழில் பொதுவாக ஒருவரைக் குறிக்குஞ்சொல் (பால் காட்டும் சொல்)
மேலும் ஆக்க விகுதிகளைப் பெறுவதில்லை. ஆயின் ஆங்கிலம் போன்ற
சில மொழிகள் ஏற்பதுண்டு. ஆங்கிலத்தில் பின்வரும் ஆக்கங்களைக்
காண்க.
chemist-ry confectioner-y linguist-ics villain-y

Page 17
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 22
4. தொழிற் பெயரையும் ஆக்கப் பெயரையும் வேறுபடுத்தல் வேண்டும். வினையடியில் இருந்து இருவகைப் பெயர்களை ஆக்குகிறோம். ஒன்று செய்-தல் போன்ற வகை. மற்றதுசெய்-கைபோன்ற வகை.இருவகைப் பெயர்களும் வேற்றுமை உருபை ஏற்கும். ஆயின் அடைகளை ஏற்பதில் இரண்டிற்குமிடையே வேறுபாடுண்டு. செய்தல் 665 வினையடைகளை மட்டுமே ஏற்கும்; செய்கை வகை பெயரடைகளை மட்டுமே ஏற்கும். முதல்வகை தொழிற் பெயர்; இரண்டாவது வகை ஆக்கப் பெயர். இந்த வேறுபாட்டைக் கால்டுவெல் கூறியுள்ளார். காண்க : Caldwell, R. (1961) A Comparative Grammar of the Dravidian Languages, Madras, pp.542-45.
இப்பெயர்கள் இரண்டும் மேலும் ஒருவகையில் வேறுபடுகின்றன. ஆக்கப் பெயர் பன்மையாக (விகுதி பெற்று) வழங்குவதுண்டு; தொழிற்பெயர் இவ்வாறு வழங்குவதில்லை. செய்கைகள் என்பர். செய்தல்கள் என்பாரில்லை. இலக்கிய வழக்கில் ஆக்கப்பெயருடன் பால் காட்டும் விகுதியைச் சேர்த்து வழங்க முடியும் செய்கை, செய்கையன், செய்கை-ஆள்-அன் செய்கையாளன். தொழிற்பெயர் இவ்வாறு வழங்குவதில்லை. மேலும், தொழிற் பெயருக்கு ஒத்த எதிர்மறைச் சொல் உண்டு; ஆனால் ஆக்கப் பெயருக்கு இல்லை. எடுத்துக்காட்டாக, செய்தல் - செய்யாமை.
உசாவியவை கருணாகரன், கி. இராம.சுந்தரம் (1971) “பேச்சுத்தமிழில் ஆக்கப் பெயர்கள்', செந்தமிழ்ச்செல்வி,தொகுதி 46, எண் 2, சென்னை.
பவணந்தி, நன்னூல்.
Agesthialingom, S. (1964) "Tamil Nouns", Anthropological Linguistics, 6 No. 1.7-12, Bloomington.
Burrow, T. and Emeneau, M.B. (1961) A Dravidian Etymological Dictionary, Oxford.
bid. (1968) A Dravidian Etymological Dictionary supplement, Oxford.
Charles F. Hockett (1958) A Course in Modern Linguistics, Macmillan.
Kamaleswaran, K.S. (1974) Nouns in Tamil, Ph.D. diss. (unpiblished), Annamalai University, Annamalainagar.
Meenakshisundaran, T.P. (1965) A History of Tamil Language, Poona.
Robert Caldwell (1956 3rd ed.) A Comparative Grammar of the Dravidian or

23 சுசீந்திரராசா
South Indian Family of Languages, Madras.
Shanmugam, S.V. (1971) Dravidian Nouns, Annamalai University, Annamalainagar.
Shanmugampillai, M. (1961) "Derivative Nouns in Modern Tamil", Indian Linguistics, Vol.22, Poona.
Suseendirarajah, S. (1967) A Descriptive study of Ceylon Tamil with special reference to Jaffna Tamil, Ph.D. Diss. (unpublished), Annamalai University, Annamalainagar.

Page 18
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 24
3
மொழி இயலும் மொழி பயிற்றலும்
1.0 மொழி ஆய்வு
மொழி பழையனவற்றுள் ஒன்று. நமது நினைவிற்கு எட்டாத காலம் தொட்டு சமுதாயத்தில் மனிதன் மொழி பேசி வருகிறான். சில ஆயிரம் ஆண்டுகளாக மொழியை எழுதி வருகிறான். மொழியைப் பயிற்றிப் பயின்றும் வருகிறான். மொழியைப் பயிற்றுவதற்கும், பயில்வதற்கும் என வழிகாட்டி நூல்கள் எழுதி வருகிறான். ஒரு மொழியைப் பிற மொழியில் பெயர்த்தும் வருகிறான். எனவே, இவை உலகில் பண்டுதொட்டு நடைபெற்று வரும் பழந்தொழில்கள்.
மனிதன் பெற்ற பெரும் பேறுகளுள் மொழியும் ஒன்று. மொழி மனித வாழ்வோடு மிக நெருங்கிய தொடர்புடையது. ஆதலால் மனிதன் தன்னைத் தான்அறிந்துகொள்ளுவதற்குமொழியைப்புரிந்துகொள்ளவேண்டும்என்று எண்ணினான். அறிஞன் மொழியின் தன்மை பற்றிப் பண்டை நாட்களிலேயே சிந்திக்கலானான். பிறமொழித் தொடர்பு கொண்டபோது மொழிகளை ஒப்புநோக்கிக் காணத் தொடங்கினான். பண்டு சிறப்பாகக் கிரேக்கம், ரோமாபுரி, சீனம், அரேபியா, இந்தியா போன்ற நாடுகளில் மொழிபற்றிச் சிந்தித்த அறிஞர் சிலர் ஏதோ வகையில் மொழியை விளக்கிக்கூற முயன்றனர். இவர்களுள் பாணினி போன்ற அறிஞர்களின் மொழி விளக்க முறைகள் சிறந்து விளங்குகின்றன. தொல்காப்பியரின் மொழியறிவும் விளக்கமும் பாராட்டப்படுகின்றன. காலப்போக்கில் மொழியில் வழங்கும் சொற்பொருள் பற்றிய சிந்தனை வளர்ந்து பின் சொற்களின் தோற்றம், அடிச்சொல், மொழி ஒப்பிலக்கண ஆய்வு, மொழியின் தோற்றமும் வரலாறும் என்றெல்லாம் மொழிக்கலை வரலாற்று முறையில் வளர்ந்து, இன்று விளக்க முறைக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தற்கால மொழி இயல் எனப் பெயர் பெற்ற ஒரு கலையாக உருப்பெற்றுப் பல்கலைக்கழகங்களிலே வளர்ந்து வருகிறது. இங்கு தற்கால மொழி இயல்

25 சுசீந்திரராசா
என்று கூறுவது குறிப்பிட்ட ஒரு காலத்து மொழியியல் ஆய்வை முற்கால மொழி இயல் என்று வேறுபடுத்துவதற்கேயாம். ஆயின் முற்கால மொழி இயல் ஆய்வின் தொடர்ச்சிதான் தற்கால மொழி இயல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞான வளர்ச்சிக்குப் பெயர் பெற்றது. விஞ்ஞான வளர்ச்சியும் ஆய்வு முறைகளும் ஏனைய அறிவுத்துறை ஆய்வையும் செம்மைப்படுத்தத் துணைபுரிந்தன என்பதில் ஐயமில்லை. விஞ்ஞான வளர்ச்சி மனித சமுதாயத்தில் பெரும் பெரும் மாற்றங்களைச் செய்துவிட்டது. மனிதனின் சிந்தனையிலே - நோக்கிலே - கூட்ப் பெரும் புரட்சியைச் செய்துள்ளது. தற்கால மொழி இயல் முறைகள் உருப்பெறத் தற்கால விஞ்ஞான ஆய்வு முறைகள் பெருமளவு காரணமாயின என்பது கண்கூடு. அறிஞர் தற்கால மொழி இயலை "மொழி பற்றிய ஓர் அறிவியல்' என்றெல்லாம் விளக்குகின்றனர். ஆயின் தொடக்ககாலத்திலே மொழி இயல் என்பது தத்துவம் என்ற தொட்டிலிலேதான் வளரத் தொடங்கியது. அறிஞர் தொடக்க காலத்தில் மொழியைத் தனித்துறையாக எடுத்து ஆராய எண்ணவில்லை. தத்துவம், தர்க்கம், மதம் ஆகிய துறைகளோடு சார்த்தி ஆராய்ந்தனர்; கீபுரு, லத்தீன், அரபுமொழி, வடமொழி போன்றவை மதத்திற்கெனக் கொள்ளப்பட்டன. ஆதலால் பிற்காலத்தில் தோன்றிய புறநிலை நோக்கு ஆய்வுமுறையும் முடிபுகளைப் பிறர் பரிசோதனைக்கும் உட்படுத்தும் போக்குமுறையும் பழங்காலத்து மொழியியலில் இல்லை என்பர். இங்கு ஆய்வுமுறை அடிப்படையில் முற்கால மொழியியல் என்றும் தற்கால மொழியியல் என்றும் பிரித்துப் பேசவேண்டிய நிலை தோன்றுகிறது.
இன்று குறிப்பிட்ட துறை ஒன்றில் நடைபெறும் ஆராய்ச்சிகள் பிறதுறைகள் சிலவற்றிற்கும் பயன்படுவதைக் காண்கிறோம். ஒரு துறையில் ஆராய்ச்சி உண்மைகளைக் காண்பதற்குப் பிறதுறை ஒன்றின் ஒத்துழைப்பு அவசியம் வேண்டி இருப்பதையும் காண்கின்றோம். கலைகளைத் தனித்தனிக் கலைகளாகப் பிரித்து ஆராய்வது விசேட ஆய்வுக்கோ ஆழ ஆய்வுக்கோ உதவினாலும் கலைகள். பல ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கிடக்கின்றன என்பதை மறக்கலாகாது. ஆராய்ச்சி உண்மையின் பொருட்டும் ஆராய்ச்சியின் முழுப்பயனைப் பெறுவதன் பொருட்டும் பல துறையினர் ஒத்துழைக்க வேண்டிய நிலை தோன்றுகிறது. உலகு சென்று கொண்டிருக்கும் வேகத்தில் ஒருவரே பல துறைகளில் திறமை பெறுவது அரிதாகிறது. அறிவு ஆராய்ச்சியிலும் கூட்டுறவு இன்றியமையாததாகிறது.
இங்கு தப்பெண்ணம் தோன்றாதிருப்பதற்கு முக்கியமான ஒரு கருத்தைத் தெரிய வேண்டும். மொழி அறிஞனின் மொழியியல் அறிவும்

Page 19
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 26
ஆற்றலும் வேறு; மொழி ஆசிரியனின் மொழி பயிற்றும் அறிவும் ஆற்றலும் வேறு. ஆயின் இருவரும் ஒரு பொருளையே (மொழி) வெவ்வேறு கோணத்தில் இருந்து ஆள்கின்றனர். மொழி பயிற்றுவதில் இருவரும் சேர்ந்து ஆராயும் நிலை சிறந்தநிலையாகும்.
2.0 மொழி இயல் பயன்படுமா?
மொழி இயல் அறிஞர் பல ஆண்டுகளாகப் பலதிறப்பட்ட மொழிகளை அவதானித்து ஆய்ந்து பொதுமொழி இயல் கோட்பாடுகள் எனக் கூறியுள்ளனர். அவர்கள் இக்கோட்பாடு எதனையும் கற்பனையில் கண்டு கூறவில்லை. எவற்றையும் அர்த்தமற்ற கொள்கைகளாக வெளியிடவில்லை. இக்கோட்பாடுகள் விஞ்ஞான ரீதியில் அமைந்திருப்பதால் பிறர் அவதானத்திற்கும், பரிசோதனைக்கும், ஆராய்ச்சிக்கும் உட்பட்டதாக
உள்ளன.
மொழி ஆசிரியன் மொழி பயிற்றுவதற்கு இக்கோட்பாட்டு அறிவு பயன்படுமென்பதைப் பலர் இன்று உணர்ந்துவரக் காண்கின்றோம். இக்கோட்பாடுகளின் பொருளை உணர்ந்தால் மொழி பயிற்றலைச் செம்மைப்படுத்த முடியுமெனச் சில நாடுகளில் செயல்முறையில் காட்டியுள்ளனர். இன்று அமெரிக்காவில் மொழி ஆசிரியருக்கு மொழியியல் கோட்பாட்டு அறிவு வேண்டும் என ஓரளவு வற்புறுத்தவும் தொடங்கியுள்ளனர். இந்திய நாட்டிலும் மொழி ஆசிரியர்க்கு மொழி இயல் அறிவு ஓரளவாவது இருப்பது பயனுடைத்து என்ற நம்பிக்கை பரவுகின்றது.
என்றாலும் நீங்கள் இங்கு கேட்கலாம்; இந்தக் கூத்தெல்லாம் எதற்கு? இத்தனை காலமும் நாம் தமிழ்மொழியைப் பயிற்றவில்லையா? மாணவர் பயிலவில்லையா? தற்கால மொழி இயல் நேற்று இன்றுதானே தோன்றியது! நாள் இதுவரைமொழிபயிற்றும்கருமம்நடைபெறவில்லையா? என்றுமொழி இயலை விரும்பியோ விரும்பாமலோ கேட்கலாம். கருமம் நடைபெற்றுத்தான் வந்தது. ஐயமில்லை. ஆனால், இங்கு ஒரு வேறுபாடு உண்டு. இதனை அறிஞர் ஒருவர்" உவமை மூலம் விளக்குகிறார்.
Insome respects the changes in language teaching can becompared with those which have already occurred in the conversion of the textile industry from a craft to an appliedScience backed by a technology. in the production of textiles, until forty years ago the processes and methods used were largely traditional, their efficiency and appropriateness had hardly been questioned and changes or improvements were generally the simple product of ingenuity rather than of a radical change of

27 M சுசீந்திரராசா
theoretical out-look. The present picture is vastly different. The textile industry now
incorporates the findings and attitudes of applied Science - of Physics, Chemistry, Engineering, Economics, Statistics - at every point where they can improve upon the methods and products of the traditional crafts.
Language teaching is changing in a similar way with the application of Scientific
knowledge and technics assisting the personal art of the teacher. In its most
advanced form, language teachingtoday bears little relation to the same occupation
as it was Carried Outtwenty years ago.
3.0 மொழியியல் கோட்பாடுகள்
3.1 மொழியை அவதானித்தல்
மொழிஎன்பதுஅன்றாடு நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒருநிகழ்ச்சி (event), எனவே, மொழியைக் கூர்ந்து அவதானிக்க முடியும், மொழியை அவதானிப்பதற்குத் தக்க பயிற்சி வேண்டும். தாய்மொழியை அவதானிப்பதற்கு நல்ல பயிற்சி வேண்டும். ஏனெனில், பிறமொழியைக் காட்டிலும் தாய்மொழி நமக்கு நன்றாகப் பழக்கப்பட்டதொன்று. தாய்மொழியில் வாக்கிய அமைப்புச் சிலவற்றைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம். எடுத்துக்காட்டாக, "இது இலங்கையில் செய்தது" என்னும் வாக்கிய அமைப்பின் புதுமையை. நாம் காண்பதில்லை. வேற்றுமொழியாளன் திடீரெனக் கண்டுவிடுகிறான். பேச்சுமொழியில் "என்னைச் சொன்னதாகக் கேளுங்கள்' என்ற வாக்கிய அமைப்பையும் சிந்தித்துப் பாருங்கள். இதேபோல ஒலிநிலையிலும் வேற்றுமொழியாளர் தமிழைக்கற்கும்போதுசில நுட்பமான வேறுபாட்டைக்காண்கிறார்கள்.தமிழ் பேசுபவன் 'அம்மி என்ற சொல்லை வேறு சொற்களோடு சேர்த்துக் கூறாது (in isolation) தனித்துக் கூறும்போது ஈற்றுயிர் நெடிலாகவே இருக்கிறது என வேற்றுமொழியாளர் சுட்டிக் காட்டுகின்றனர். நாம் இந்த வேறுபாட்டைக் காதினால் உணர்வதில்லை. இவ்வாறு வேற்றுமொழியாளர் தமிழ் கற்கும்போது எழுப்பும் சில ஐயங்களைக் கேட்டு எவவாறு விளக்குவது என வியக்கின்றோம்.
மொழி அவதானிப்பு மொழி ஆசிரியனுக்கு வேண்டற்பாலது. தனது காலத்து மொழி வழக்கை அவதானிக்காது பயிற்றும் மொழி ஆசிரியன் செயற்கை நிலையில் நின்று மொழியைக் கண்மூடித்தனமாகப் பயிற்றுபவனாவான். வழக்கில் உள்ள மொழியை அவதானிக்காத ஆசிரியனின் மொழிச்சிந்தனை முழுமை வாய்ந்தது ஆகாது. பண்டு

Page 20
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 28.
எழுதப்பெற்ற இலக்கண நூல்களே என்றுமுள தமிழுக்காம் எனக் கொள்வது அறிவுடைமை ஆகாது. மொழி காலந்தோறும் மாறும்போது பண்டைய இலக்கண நூல்களையே பற்றுக்கோடு எனச் சிக்கெனப் பிடித்து இருக்க முடியுமா? எடுத்துக்காட்டாக, "நீர்' என்பது முன்னிலைப் பன்மைப் பெயர் என இலக்கண நூல்கள் கூறுகின்றன. இது அந்நூல்கள் தோன்றிய காலத்து மொழிக்குப்பொருந்தும். ஆயின் இன்றைய தமிழ்வழக்கிற்குப்பொருந்துமா? இன்று பேச்சிலாயினும் எழுத்திலாயினும் நீர் என்னும் பெயர் பன்மையில் வழங்கக் காணோம். மொழிபயிற்றும் ஆசிரியனுக்கே தற்காலத் தமிழில் நீர் என்பதைப் பன்மையில் பயன்படுத்தும் வாய்ப்புத் தோன்றுவது அரிது. ஏனெனில் இன்றைய மொழிவழக்கில் நீர் ஒருமையே ஆகிவிட்டது. மேலும் இன்று நீர் என்ற முன்னிலை ஒருமைப்பெயரும் 'நீ என்ற முன்னிலை ஒருமைப் பெயரும் சமுதாய மதிப்பு அடிப்படையில் வேற்றுநிலை வழக்கில் உள்ளன. இவ்வாறிருக்க நீர் என்பது பன்மைப் பெயர் என்று எதன் பொருட்டு கீழ்வகுப்பு மாணவர்களுக்கு விடாப்பிடியாக ஒதவேண்டும்? இது கண்மூடித்தனம் அன்றோ? நீர் என்பது ஒரு காலத்தில் பன்மைப் பெயராக வழங்கியது என்று வரலாற்று அடிப்படையில் கூறுவது வேறு. கீழ்வகுப்பு மாணவர்களுக்கு வரலாற்று அடிப்படையில் மொழியமைப்பை விளக்க வேண்டிய அவசியம் இன்று இல்லை. மொழி பற்றிய பொய்க்கூற்றுகள் நிலைப்பதற்குக் காரணம் மொழிவழக்கை அவதானிக்கத் தவறுவதேயாம். மொழிவழக்கு அவதானிக்கக் கூடியதாக இருந்தும் மொழி ஆசிரியன் மொழியை அவதானிக்கத் தவறுவதற்கு மொழி இயல் பயிற்சிக் குறைவும் காரணமாகும்.
மொழிவழக்குப் பற்றித் தெளிவு இல்லாதபோது ஆசிரியன் மாணவர்களுக்குச் செம்மையாகப் பயிற்ற முடியுமா? "ஐயா! இன்று நாம் பேசும்போதும் எழுதும் போதும் நீர் என்பதை ஒருமைப் பெயராகவே பயன்படுத்துகின்றோம். நீங்கள் அதனைப் பன்மைப் பெயர் என்று ஏன் கூறுகின்றீர்கள் எனத் திறமை உள்ள மாணவன் கேட்டு விட்டால் ஆசிரியன் விளக்கம் கூற வேண்டுமல்லவா? மாணவர்களுக்கு வேண்டிய தரப்படுத்தப்பட்ட பாடநூல்களை எழுதும்பொறுப்பும் பணியும்ஆசிரியர்க்கு உண்டு. பாடநூல்கள் திறம்பட எழுதப்பெறாவிடின் அவை ஆசிரியனின் மொழி பயிற்றும் திறமையையே பாதித்துவிடும். எனவே, ஆசிரியனுக்கு மொழி அவதானிப்புப் பயனுடைத்து. காலத்துக்குக் காலம் வழக்கிலுள்ள மொழியைக் கருத்தில் கொண்டு அவதானிக்க வேண்டும்.

29 சுசீந்திரராசா
3.2 மொழிமாற்றத்தை உணர்தல்
மொழி மாறும் இயல்புடையது என்னும் மொழி இயல் கோட்பாட்டை மொழி ஆசிரியன்நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். மொழி என்றுமே ஒரே நிலையில் நிலையாக நிலைத்திருப்பதில்லை. மொழி அமைப்புப்பற்றிய கூற்றுக்கள் (இலக்கணங்கள்) மொழி மாற்றத்திற்கேற்ப மாற வேண்டும். பதின்மூன்றாம் நூற்றாண்டிற்குப்பின், தமிழ்மொழி அமைப்பிலே மாற்றம் அடைந்துள்ளது.இந்த மாற்றத்தைநம்மை அறியாமலே நாம்ஏற்றுக்கொண்ட போதும் தற்காலத் தமிழிற்குப் பொருந்தாத மொழியமைப்புக் கூற்றுக்களைக் கைவிடத் துணிவதில்லை. பிற்காலத்து இலக்கண ஆசிரியர்களில் சிலரே துணியவில்லை. தமது காலத்து மொழிவழக்கை ஒரளவு உள்ளபடி துணிந்து கூறிய சிறப்பு வீரசோழிய ஆசிரியர்க்கு உரியது. பின் தோன்றிய நன்னூல் இல்லாத வழக்கையும் கூறியுள்ளது. இதற்குக் காரணம் தொல்லாசிரியர் கருத்தை, மொழி மாறிவிட்டாலும் 'பொன்னேபோலப் போற்றும் பற்றுப்போலும். இவர் வழியில்தான் இன்று நாமும் தமிழ் பயிற்றும்போது செல்ல ஆசைப்படுகிறோம். தற்கால வழக்கிலுள்ள மொழி அமைப்பைப் புறக்கணித்துப் பழைய இலக்கண நூல்களை ஆதாரமாகக் கொண்டோ அவற்றை ஒட்டி எழுந்தஇலக்கணக்கைநூல்களை ஆதாரமாகக்கொண்டோ தமிழ் மொழியைப் பயிற்றுகின்றோம்." இந்நூல்கள் கூறாதனவற்றைக் கூறுவதற்கு நமக்குத் தயக்கம். உண்மை எதுவாயினும் ஒரு சிலரைப் பெரியோர் என்று (பயபக்தியால்?) அஞ்சும் மரபில் ஊறிவிட்டோம். இந்நிலையில் மொழி அமைப்பையோ மொழி தொழில்பட்டு இயங்கும் முறையையோ எவ்வாறு மாணவன் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்? நமது நாட்டிலே ஆங்கில மொழியைக் கற்பிக்கும்போது சிலவற்றைத் தவறு என்று கூறுகின்றோம். ஆனால் ஆங்கிலத்தை முதல் மொழியாகப் (தாய்மொழியாகப்) பேசுகின்றவர் இவற்றைத் தற்கால வழக்கு என ஏற்றுக் கொள்கின்றனர். இக்கருத்தை இந்தியாவில் நடைபெற்ற ஆங்கில மொழியாசிரியர் கருத்தரங்கு ஒன்றில் ஆங்கிலேயர் ஒருவரே சுட்டிக்
காட்டினார்.
"I have long experience of condemning Wren and Martin. If the talk is about the change in English usage English has certainly changed and is changing from the time of Wren and Martin and others have sat and written English Grammar. Often have written English which was objected to by the people saying that it cannot be treated as English. When I wrote "Eat your tea and let us go out', I was criticised saying "Can you eat your tea?" and said in English tea is a meal and we eat it, but

Page 21
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 3O
they won't allow this. The other thing that would like to point out is, "it is me" Well, in English we don't say, "it is", and manythings like that which forty yearsago would have been Considered as a bad usuage or bad Grammar, is in usage now. The use of "Shall", and "Will" is changing. These things have changed materially since the time of Wren and Martin. Current usage of English of educated people in English is not accepted by the experts of English Grammar in South India as correct usage. The only thing we would say is that this is what the native people say."
சொந்த மொழி மாற்றத்தை அவதானித்துக் கொள்ளத் தயங்குபவர் பிறமொழி மாற்றத்தை அவதானித்துக் கொள்ளாமை வியப்பன்று. நாம் விரும்பினாலும் வெறுத்தாலும்மொழிமாறுகிறது.இதனைமொழிஆசிரியன் புறக்கணிக்க முடியாது. வேண்டும் என்று விருப்பு வெறுப்பினால் புறக்கணித்தால் மொழி ஆசிரியன் மொழியின் தன்மையையும் அமைப்பையும் நேர்மையற்ற முறையில் பயிற்றுவதாக அல்லவா முடியும்?
3.3 மொழியை அமைப்புடையதாகக் காணுதல்
இனி, மொழியை அவதானிப்பதற்கும் மாற்றம் அடைவது மொழி இயல்பு என உணர்வதற்கும் மொழியை அமைப்புடையதொன்றாகக் காணும் ஆற்றல் வேண்டும். மொழியை விளங்குவது மொழி அமைப்பை விளங்குவதாகும். மொழியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மொழி அமைப்பைத் தாமாகக் காணும் ஆற்றலைப் பெற வேண்டும்.
மொழி அமைப்பை எவ்வாறு கண்டு கொள்வது என்பதற்கு விளக்கமொழி இயலில் (descriptive inguistics) ஒரளவு பயிற்சி பெற வேண்டும், மொழியின் அமைப்பை ஒலியன்நிலை, உருபன்நில்ை, வாக்கியநிலை என வெவ்வேறு நிலையில் காணலாம். ஒரு நிலையில் காணப்படும் வேற்றுநிலை வழக்கு (contrastive usage) வேறு ஒரு நிலையில் வேற்றுநிலை வழக்கற்றதாகலாம் (non-contrastive). இது ஒருபுறம். மறுபுறம் ஒரு நிலையில் காணப்படும் வேற்றுநிலை வழக்கு மொழிநிலைகள் அனைத்திலும் வேற்றுநிலை வழக்காகக் காணப்படலாம். எடுத்துக்காட்டாக, உருபன் நிலையில் (morphologicallevel) அவன், இவன், உவன் என்பவற்றில் சுட்டுப் பெயர்கள் (demonstrative bases) வேற்றுநிலை வழக்கில் உள்ளன. உருபன் நிலையிலுள்ள இவ்வேற்றுநிலை, வாக்கிய நிலையில் அர்த்தமற்றதாகிப் போகிறது. ஏனெனில் வாக்கிய நிலையில் மூன்று சுட்டும் அவன் வந்தான், இவன் வந்தான், உவன் வந்தான் என்று ஒரே வினை கொண்டு முடியும். உருபன் நிலையில் அவன், அவள், அவர் என்பன

31 சுசீந்திரராசா
வேற்றுநிலை வழக்கில் உள்ளன. இதே வேற்றுநிலை வாக்கியநிலையிலும் உண்டு, 'அவன் வந்தான்", "அவள் வந்தாள்', 'அவர் வந்தார் என வரும் வாக்கியங்களில் பெயரில் உள்ளவேறுபாட்டிற்கேற்பவினையும்வெவ்வேறு பால்விகுதிகொண்டு வருவதைக் காண்க. மேலும் உருபன்நிலையில் உள்ள தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற வேற்றுநிலை வழக்கு, வாக்கிய நிலையிலும் உண்டு. மேலும் உருபன் நிலையிலே அறியமுடியாத சில அம்சங்களை வாக்கியநிலையிலேதான் அறிய முடிகிறது. தமிழில் எல்லாப் பெயர்களும் பால்விகுதி பெறுவதில்லை. எனவே பால்விகுதி பெறாத பெயர்களின் பாலை உணர்வதற்கு வாக்கிய நிலையே உதவுகிறது. எடுத்துக்காட்டாக 'தம்பி’ என்ற சொல்லில் பால்விகுதி இல்லை. ஆயின் இது ஏற்கும் வினை, பெயரின் பாலையும் காட்டிவிடும். பெயருக்கும் வினைக்கும் இசைவு (concord) உண்டு. தம்பி வந்தான் என வாக்கிய நிலையில் பாலை அறிகிறோம்.
3.4 புறநிலை நோக்கில் அணுகுதல்
மொழியைப் புறநிலை (objective) நோக்கில் அணுக வேண்டும் என்பது மொழி இயல் அடிப்படைக் கருத்துக்களுள் ஒன்று. இக்கருத்தை மொழி ஆசிரியர் பெரும்பாலும் கடைப்பிடிப்பதில்லை என்பதை அவர்கள் மொழிபற்றிக் கூறும் கூற்றுக்களில் இருந்தும் எழுதும் பாடநூல்களில் இருந்தும் அறியலாம். மொழிபற்றிய கூற்றுக்கள் அனைத்தும் புறநிலைநோக்கு அடிப்படையில் அமைந்தனவாக இருந்தால்தான் அக்கூற்றுக்கள் பிறர் ஆராய்ச்சிக்கும் பரிசோதனைக்கும் உட்பட்டனவாக அமையும். மேலும் மொழியிலே செய்யும் வகைகள் (classification) புறநிலைநோக்கில் காணத்தக்க அடிப்படை உடையனவாக இருக்க வேண்டும். நாம் செய்யும் வகைகள் மொழியமைப்பைக் காட்டுவதற்கு இன்றியமையாதனவாகவும், பொருத்தமுடையனவாகவும் (structuraly indispensable and relevant) இருக்க வேண்டும். இலக்கணங்களில் சுருக்கமும் நுட்பமும் எதிர்பார்க்கப்படும். இன்று கணிதம் போன்ற சுருக்கத்தை (mathematical preciseness) மொழி விளக்கங்களில் எதிர்பார்க்கிறார்கள். நமது பண்டைய அறிஞர்களும் இக்கருத்தைப் போற்றினார்கள். தமிழ் மரபு சுருங்கச்சொல்லல்’ எனக்கூறுகிறது. பாணினியின் இலக்கணத்தில் சுருங்கச் சொல்லும் முறை மிகவும் கையாளப்பட்டுள்ளது.
"A grammarian rejoices more over the saving of half a syllable than over the birth
Of a Son"
- Old Hindu saying
"it is vain to do with more what can be done with fewer"
-William of Ocean

Page 22
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 32
என்ற கூற்றுக்கள் இங்கு நினைவிற்கு வருகின்றன. எனவே மொழி விளக்கங்களில் தேவையற்ற கூற்றுக்களையும் வகைகளையும் விட்டுவிட வேண்டும்.
நாம் தமிழிலே பொதுவாகப் பெயர்களைப் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என வகை செய்கின்றோம். இந்த வகைமுறை மொழியமைப்பை விளக்குவதற்கு இன்றியமையாததா? சினைப்பெயரும் பொருட்பெயர் ஆகாதா? ஒரு வகையிலே அடங்குவது மற்ற வகையிலும் அடங்கக் காண்கின்றோம் அல்லவா? மேலும் ஒவ்வொரு வகையிலும் பெயர்களை அடக்கும்போது மொழிக்குப் புறம்பான காரணங்களைக் கொள்கின்றோம். இவ்வாறு மொழிக்குப் புறம்பான காரணங்களையோ பொருளையோ (meaning) ஆதாரமாகக் கொள்வது விஞ்ஞான ஆய்வு முறையைப் பாதிப்பதாகும். ஒருமைப்பாடு இல்லாதுபோய்விடும். அகநிலை (subjective) நோக்கையே போற்றுவதாகும். அகநிலை நோக்கில் மொழியை அறியும் ஆசிரியர் அதே நோக்கைத்தான் மாணவரிடமும் எதிர்பார்ப்பார். இவ்வழியை விட்டு மொழியை விஞ்ஞானத்துறையில் ஒன்றாகக் கருதித் திட்டமிட்டு முறையாகப் பரிசோதனைக்கும் பிறர் சிந்தனைக்கும் உட்பட்டதாகக் கற்க வேண்டும் - என்றால், நாம் மொழியைப் புறநிலை நோக்கில் ஆராயப் பழகி, தரும் விளக்கங்களுக்கும் செய்யும் வகைகளுக்கும் மொழி வடிவத்தையே (form) அடிப்படையாகக் கொள்ள வேண்டும். இக்கருத்தினை 'பத்ரு ஹரி போன்ற இந்திய இலக்கண அறிஞர் சிலர் கூறியுள்ளனர். தமிழ் இலக்கணகாரருக்கும் உரைகாரர்க்கும் இக்கருத்து உடன்பாடாய் இருந்திருக்க வேண்டும். புறநிலைப் போக்கிலே சிந்திக்கும் மொழி ஆசிரியனுக்கு மொழியின் தன்மை பற்றியும் அமைப்புப் பற்றியும் தெளிவான கருத்துக்கள் பிறக்கும் என்பதில் ஐயமில்லை.
3.5 மொழியை வேற்றுநிலை வழக்குகளாகக் காணுதல்
மொழி வேற்றுநிலை வழக்குகளாகவே (contrasts) அமைகிறது. இவ்வேற்றுநிலை வழக்குகளைக் கண்டு விளங்கிக் கொள்வது மொழியமைப்பை அறியும் வழியாகும். நாம் மொழியில் செய்யும் வகைகள் இவ்வேற்றுநிலை வழக்குகளைக் காட்ட வல்லனவாக இருக்க வேண்டும். இல்லைஎன்றால் நாம் செய்யும் வகைகள் மாணவனுக்கு வீண் சுமையாகவே இருக்கும். பெயரைப் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என வகுப்பதால் பயன் என்ன என்று கேட்டோம். இவ்வகை முறை மாணவன் நினைவில் சுமையாகவே இருக்கும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற வெவ்வேறு ப்ெயர்கள் சொல் நிலையிலோ, வாக்கிய

33 சுசீந்திரராசா
நிலையிலோ பயின்று வரும்போதுவேற்றுநிலை வழக்கில் வருகின்றனவா? புறநிலை நோக்கில் ஆராயும்போது இல்லை என்ற விடையே கிடைக்கிறது.
ஆயின் பெயர்களை வகைப்படுத்தியே ஆகவேண்டும். பெயர்ச்சொற்கள் வாக்கியத்தில் பயின்று வரும்போது அனைத்தும் ஒரே வகையான வரன்முறை (distribution) உடையன எனக் கொள்ள முடியாது. பொதுவாகச் சொற்கள் என்று கொண்டாலே சில சொற்கள் வினாவெழுத்தை (வினாவிகுதியை) ஏற்பதில்லை. எடுத்துக்காட்டாக, நல்ல, பெரிய, பழைய, வெறும். இவை நல்லவீடு, பெரிய வீடு, பழைய வீடு, வெறும் வீடு எனப் பயின்றுவரக் காண்கின்றோம். ஆயின் இவற்றுக்குள்ளேயே வேறுபாடு உண்டு. பெரிய, பழைய, நல்ல ஆகிய மூன்றும் பெரியது, பழையது, நல்லது (வீடு பெரியது, வீடு பழையது, வீடு நல்லது) எனவழங்கும். ஆயின்'வெறும்" அவ்வாறு வழங்குவதில்லை. இனி, பெயர்ச்சொற்கள் அனைத்தும் பன்மை விகுதி ஏற்பதில்லை. குளிர் என்ற சொல்லுக்குப் பன்மை விகுதி சேர்ப்பதில்லை. மேலும் சில பெயர்ச்சொற்கள் எண்ணுப் பெயரை அடையாகக் கொள்வதில்லை. ‘மூன்று பால்' என்ற வாக்கியத்தை விளக்குவதற்கு வாக்கியத்தின் அடிப்படை அமைப்பை நோக்க வேண்டும். இதுதொக்குநிற்கும்வாக்கியம்(elpticalsentence). பால்,நீர்போன்றபெயர்கள் எண்ணுப் பெயர் கொண்டு வருவதில்லை. ஆனால் அன்றாடு மூன்று பால்’ எனச் சொல்லக் கேட்கின்றோம். ‘மூன்று பேணி பால்’ என்பதே மூன்று பால் என நிற்கிறது. 3.6 வாக்கியங்களின் ஆழ்நிலையமைப்பைக் காணுதல்
சில வாக்கியங்களின் அமைப்பை மேற்போக்காக ஆராய்ந்து விளக்கிவிட முடியாது. சில வாக்கியங்களுக்கு ஆழ்நிலை அமைப்பு (deep structure) உண்டு. இவற்றைக் காண்பதன் மூலமே வாக்கிய அமைப்பை
விளக்க முடியும்.
எடுத்துக்காட்டாக:
1.தண்ணிர் குடிக்கிற பையன் நல்லவன். 2. தண்ணிர் குடிக்கிற கோப்பை நல்லது.
என்ற இரு வாக்கியங்களையும் எடுத்துக் கொள்வோம். மேற்போக்காகப் பார்க்கும் பொழுது இரு வாக்கியங்களும் ஒரே அமைப்பு உடையன எனத் தோன்றலாம். இவ்வாக்கியங்களில் உள்ள சொற்களுக்குச்சொல்லிலக்கணம் மட்டும் கூறினால் வாக்கிய அமைப்பு வேறுபாட்டைக் காணவே முடியாது. இங்கு சொல்லிலக்கணம் கூறும் முறை பயன்படாது போகின்றது. இவ்விரு

Page 23
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 34
வாக்கியங்களும் வெவ்வேறு அடிப்படை வாக்கியங்களில் (key sentences) இருந்து தோன்றியன. இங்குதான் நமக்கு மொழி மாற்றிலக்கண (b6JT&de)5,5600Tib (Transformational Generative Grammar) uu6TuGépg.
மேலும் இங்கு தமிழில் சொற்றொடர்சிலவற்றைப் புரிந்துகொள்வதற்கு மொழிமாற்றிலக்கணம் உதவுமாற்றை விளக்குவோம்.
1. படித்த பையன். 2. படித்த பாடம். 3. படித்த கண்ணாடி, 4. படித்த பள்ளிக்கூடம்.
மேற்போக்காகப் பார்க்கும்போது இவற்றின் அமைப்பு ஒரே மாதிரித் தோன்றலாம். ஆனால், உண்மையிலே ஒவ்வொன்றிலும் எச்சத்திற்கும் பெயர்க்கும் உள்ள உறவு வெவ்வேறு வகையானது.
முறையே:
1. எழுவாய் - பயனிலை உறவு. 2. செயப்படுபொருள் - பயனிலை உறவு. 3. மூன்றாம் வேற்றுமை - பயனிலை உறவு. 4. ஏழாம் வேற்றுமை - பயனிலை உறவு.
காண்கிறோம். இவற்றை முறையே பின்வரும் அடிப்படை வாக்கியங்களில் இருந்து பெறுகிறோம்.
1. பையன் படித்தான்.
2. பாடத்தைப் படித்தான்.
3. கண்ணாடியால் படித்தான்.
4. பள்ளிக்கூடத்தில் படித்தான்.
எனவே இவை ஒவ்வொன்றும் கீழறை அல்லது ஆழ்நிலை அமைப்பில்
(underlying or deep structure) (S6) guGalsTD60T.G.Logix
1. துவைத்த பையன். 2. துவைத்த சட்டை. 3. துவைத்த சவுக்காரம். 4.துவைத்த கூலி, 5. துவைத்த கல். 6.துவைத்த வேகம்.

35 சுசீந்திரராசா
ஆகியவற்றின் அமைப்பு வேறுபாட்டின் நுட்பத்தைப் பேராசிரியர் எஸ்.அகஸ்தியலிங்கம் விளக்குவதைக் காண்க."
நீண்ட வாக்கியங்களைச் சொற்களின் சேர்க்கையாக மட்டும் காண்பது
தவறு." சொற்களைப் பயிற்றுவது மொழியைப் பயிற்றுவது ஆகாது. ஆசிரியன் சொற்களைக் காட்டிலும் மொழி அமைப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மொழியின் அமைப்பை நன்கு அறிந்த ஆசிரியன் அமைப்புக்களைத்தரப்படுத்திப் பயிற்றமுடியும். தமிழில் சொல் நிலையைக் காட்டிலும் வாக்கிய நிலையிலே மொழி அமைப்பு நுட்பங்கள் (finer aspects) உண்டு. எடுத்துக்காட்டாக, தான் (அழுத்தம் குறிப்பது - emphasis marker) என்பதுவாக்கியத்திலே வருகிற எந்தச்சொல்லிற்குப்பின்னும் (அடைதவிர) வருகிறது, ஒருமுறையில் ஒரு சொல்லிற்குப்பின் மட்டும்தான் வருகிறது.
1. அவன் மனிதன்.
2. அவன் தான் மனிதன்.
3. அவன் மனிதன் தான்.
வாக்கியத்தில்தான் பலசொற்களோடு ஒரேமுறையில் வருவதில்லை,
4. அவன்தான் மனிதன் தான்.
என வருவதில்லை. ஆயின் வாக்கியத்தில் உள்ள சொற்களோடு வினா எழுத்தைச் சேர்த்துவிட்டால் 'தான்' என்பதன் வரன்முறை (distribution) மாறி வருகிறது.
1. அவன் மனிதன்.
2. அவன் மனிதன்தான்.
3. அவன்தான் மனிதன்.
4. அவனா மனிதன்.
5. அவன் மனிதனா.
6. அவன் மனிதன்தானா.
7. அவன் தானா மனிதன்.
ஆகியவை வழக்கில் உண்டு. ஆயின்,
8. அவனா தான் மனிதன். 9. அவன் மனிதனா தான்.
என்பன வழக்கில் இல்லை.

Page 24
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 36
10.அவனேதான் மனிதன். 11. அவன் மனிதனே தான்.
என்பன வழக்கில் இருப்பதையும் காண்க,
இத்தகையவாக்கியநுட்பங்களில் பலர் ஈடுபடுகின்றனர்.அண்மையில்
HSchifman என்பவர் எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரையைக் காண்க."
3.7 முழுமையான விளக்கம் கூறுதல்
மொழியை விளக்கும்போது அரைகுறையாக விளக்காது முழுமையாக விளக்க வேண்டும். விஞ்ஞானநோக்கில்மொழி அமைப்பைவிளக்கும்போது எதனையும் எஞ்சிநிற்க விடக்கூடாது. காலங்கள் இவை என்றும், இந்தக்கால இடைநிலைகள் இவை இவை என்றும்கூறினால்மட்டும்போதாது.நிகழ்கால இடைநிலைகள் ஆநின்று, கின்று, கிறு எனப்படும். எல்லா வினைகளும் இவற்றை ஏற்கக் காண்கின்றோம். எடுத்துக்காட்டாக: நடவாநின்றான், நடக்கின்றான், நடக்கிறான் (இன்று ஆநின்று வழங்குவது அரிதாகிறது). ஆனால், வருங்கால இடைநிலைகள் இரண்டையும், இறந்தகால இடைநிலைகள் நான்கையும் ஒரே வினை ஏற்பதில்லை. சில வினைகள் வருங்காலத்திற்கு 'ப்' என்ற இடைநிலையை ஏற்கும். ஏனையவை 'வ்' என்ற இடைநிலையை ஏற்கும். இவ்வாறே இறந்தகால இடைநிலைகளும், த் என்னும் இடைநிலையை ஏற்கும் வினை இவை,'ட்' எனும் இடைநிலையை ஏற்கும்வினை இவை, ‘ற்', 'இன்' என்பவற்றை ஏற்கும் வினைகள் இவை என்று கூறாவிடின் மாணவனுக்கும் மயக்கம் தோன்றலாம். இவ்வாறே, பால் விகுதிகளைக் கூறினால் அவை எவ்வெவற்றோடு எல்லாம் பயின்றுவரும் எனக் கூறவேண்டாவா? வழக்கிற் கண்டுகொள்க என்பது மொழிபயிற்றலைப் பொறுத்தமட்டில் பொருந்தாது. மொழிபற்றிய விளக்கக் கூற்றுக்கள் அரைகுறையாக இருப்பின் பயிற்றும் ஆசிரியனுக்கும் பயிலும் மாணவனுக்கும் இடர்ப்பாடுதான் தோன்றும். மொழி இயல் கருத்துப்படி மொழி அமைப்புப் பற்றிய கூற்றுக்கள் முழுமையுடையனவாக இருக்க வேண்டும்.
3.8 மொழிபற்றி முழுநோக்குக் கொள்ளல்
மொழியை விளக்கும்போது மொழி பற்றிய முழுநோக்கு வேண்டும்; "சிங்க நோக்கு வேண்டும். ஒருவர் மொழிக்கூறு பற்றித் தரும் வரையறை இலக்கணம் (definition) மொழியைப் பொறுத்தவரை யாண்டும் பொருத்தமுடையதாக இருக்க வேண்டும். இந்த நோக்கு மொழி பயிற்றும் ஆசிரியர்க்கு (அல்லது பாடநூல்கள் எழுதியவர்க்கு மட்டும்?) பெரும்பாலும்

37 JájfâJ TATFIT
இல்லை என்பதைத்தமிழ் மலர்கள்காட்டிவிடுகின்றன.இங்குவேற்றுமொழி பயிற்றுவதற்கும் தாய்மொழி பயிற்றுவதற்கும் வேறுபாடு உண்டு என்பதை மறக்கக்கூடாது. வேற்றுமொழி கற்கும் மாணவனுக்கு அம்மொழி அறிவு கொஞ்சமும் இல்லை. ஆயின் தாய்மொழி கற்பவனுக்கு அம்மொழியறிவு உண்டு.
இனித் தமிழ் மலர்களிலிருந்து சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். பெரும்பாலும் தமிழ் மலர் ஒவ்வொன்றிலும் மொழிப்பயிற்சி என்னும் பகுதிகளில் கூறப்பெற்றுள்ள கருத்துக்கள் சிந்தனைக்குரியன. இங்கு தமிழ்மலர் நான்காம் புத்தகத்தில் மட்டும் இருந்து சிலவற்றை எடுத்து ஆராய்வோம்.'
பெயர்ச்சொல் - வினைச்சொல்லிற்கு விளக்கம் பின்வருமாறு கூறப்படுகிறது.
'அரசன் ஆண்டான்' இவ்வாக்கியத்தில் 'அரசன்', 'ஆண்டான்' என்னும் இரண்டு சொற்கள் இருக்கின்றன. அவற்றுள் 'அரசன் என்னும் சொல் ஒரு பொருளின் பெயரை உணர்த்துகின்றது. ஆகவே, 'அரசன் பெயர்ச் சொல்லாகும். 'ஆண்டான்' என்பது அரசன்செய்தவினையை (தொழிலை) உணர்த்துகின்றது.அதனால், ஆண்டான்' என்பதுவினைச்சொல் எனப்படும். யாதாயினும் ஒருபொருளின் பெயரை உணர்த்துஞ் சொல் பெயர்ச்சொல். ஒரு பொருளின் தொழிலை உணர்த்துஞ்சொல் வினைச்சொல்."
இங்கு பெயர்ச்சொல்லுக்கும், வினைச்சொல்லுக்கும் விளக்கம் தரும்போது ஆசிரியர் புறநிலை நோக்கைக்கைவிட்டுவிட்டார். 'யாதாயினும் ஒரு பொருளின் பெயர் என்று கூறும்போது மாணவன் கட்புலனுக்குத் தோன்றும் பொருட்களையே எண்ணத்தில் கொள்வான். 'அணு', 'காற்று' போன்றவற்றைப்பொருளாக நோக்குவது எளிதன்று. எண்ணம்நன்று' என்ற வாக்கியத்திலே 'எண்ணம்' என்பதைப் பொருள் என மாணவனுக்கு விளக்குவது எளிதன்று. தொழில் பெயரில் பெயர் என்ற கருத்தை எவ்வாறு விளக்குவது? மேலும் ஒரு பொருளின் தொழிலை உணர்த்துஞ் சொல் வினைச்சொல் என்றால் 'அவன் கரியன்', ‘உணவு உண்டு’, ‘உணவு வேண்டும்', 'உணவு இல்லை என்ற வாக்கியங்களில் கரியன், உண்டு, வேண்டும், இல்லை என்பனவும் வினைச்சொல் தானே! குறிப்பு வினை என்று வகைசெய்தாலும் இவை முதலில் வினைச்சொல்லில் அடங்கும். இவை பேச்சிலும் எழுத்திலும் அடிக்கடி பயின்று வருபவை. இவை

Page 25
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 38
பொருளின் தொழிலை உணர்த்துமாற்றைத்தெளியமுடியுமா? தத்துவம்தான் பேசவேண்டும்.
பொருளைக் கருத்திலே கொள்ளாது மொழிவடிவத்தை அடிப்படையாகக் கொண்டு பொதுமொழிக் கொள்கையைத் தொல்காப்பியர் கூறியதை நாம் உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டோம். அல்லது கைவிட்டுவிட்டோம். முன்பு தெய்வச்சிலையார் பற்றி அடிக்குறிப்பில் கூறினோம். வினைக்கும் பெயர்க்கும் மொழி,வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு புறநிலைநோக்கிலே தொல்காப்பியர்விளக்கந்தந்ததை இன்றைய மொழியறிஞர் பாராட்டுகின்றார். தொல்காப்பியர் வினை இன்னதென்பதை,
வினையெனப்படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங்காலைக் காலமொடு தோன்றும் (683) என விளக்குவார். இதேபோலப் பெயரை,
பெயர்நிலைக்கிளவி காலந்தோன்றா தொழில் நிலை ஒட்டும் ஒன்றலங்கடையே (554)
கூறியமுறையின் உருபுநிலை திரியாது ஈறு பெயர்க்காகும் இயற்கைய என்ப (553)
என்ற சூத்திரங்களால் விளக்குவார்.
இனி,தமிழ்மலர்நான்காம்புத்தகத்தில் வாக்கியத்தை விளக்குமாற்றைக்
காண்போம்.'
“நரி இறந்தது'
என்பது ஒருவாக்கியம்.இதிலே இரண்டுசொற்கள் இருக்கின்றன.முதலாவது சொல்லாகிய நரி என்பது பெயர்ச்சொல்; பொருளை உணர்த்திற்று.
இறந்தது என்பது வினைச்சொல். நரியின் தொழிலை (வினையை) உணர்த்திற்று. இந்த இரண்டு (நரி, இறந்தது) சொற்களும் சேர்ந்து ஒரு வாக்கியம் ஆயின் இவை இரண்டும் இணையாவிடிற் பொருள் புலனாகாது.
நரி என்று மட்டுங் கூறி நிறுத்தினால், நரி என்ன செய்தது என்பது விளங்காது. இறந்தது என்றுமட்டும் கூறி நிறுத்தினால், எது இறந்தது என்பது புலனாகாமையால் வாக்கியம் பூரணமான பொருளைத் தராது. ஆகவே, நரி' என்னும் பெயர்ச்சொல்லும், "இறந்தது' என்னும் வினைச்சொல்லும் இயைந்தபோது மட்டுமே வாக்கியம் விளக்கம் உடையதாயிற்று.

39 சுசீந்திரராசா
எனவே, பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இணைந்தே பொருளை, உணர்த்தும் வாக்கியங்கள் ஆகும்."
இந்தத் தமிழ்மலரிலே இது தமிழ் வாக்கியம் பற்றி ஒரு பொதுக்கூற்றுப் (general statement) போலவே அமைந்துள்ளது. “பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இயைந்தபோது மட்டுமே (இணைந்தே)" எனக் கூறுவதைக் காண்க. வாக்கிய அமைப்புக்களின் முழு நோக்கில்லாமையால் இப்படி எழுதுகிறார்கள். நான் வந்தேன்' என்ற வாக்கியத்தைக் கருதுங்கள். இதில் நான் என்பது வேண்டியதே இல்லை. 'வந்தேன்' என்று மட்டும். கூறினாலே வாக்கியமாகிப் பொருள் தரும். நான் வந்தேன்' என்ற வாக்கியத்தில் உண்மையிலே நான் என்பதுமிகையாக (redundant) உள்ளது. மொழிகளில் ஒரு சொல் வாக்கியங்களும் (one word-sentences) உண்டு.
மேலும் தமிழ்மலரில் இருந்து ஓர் எடுத்துக்காட்டு:
“ஒரு வாக்கியத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்ச் சொற்கள் இருக்குமாயின் அவற்றுள் ஒரு பெயர்ச்சொல்லே பொருள் விளக்கத்துக்கு அவசியமுடையதாகும்.
இவ்வாறே வாக்கியத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வினைச்சொற்கள் வருமாயின், அவ்வாக்கியத்தை முற்றுப் பெறுவித்து நிற்கும் வினைச்சொல்லே முக்கியமாகும்.
முக்கியமான பெயர்ச்சொல் "எழுவாய்' எனவும், முக்கியமான
வினைச்சொல் 'பயனிலை" எனவும் கூறப்படும்”.
இங்கு கூட மொழி பற்றிய முழு நோக்கில்லை என்பது தெளிவாகிறது. ஏதோ ஓர் அமைப்பை மட்டும் கருதி இவ்வாறு மொழியில் வரும் வாக்கியங்களுக்குப் பொதுக்கூற்றாகக் கூறிவிடுகிறார்கள். நானும் நண்பனும் பாடசாலைக்குச் சென்றோம்" போன்ற வாக்கியத்தைக் கருதி இருந்தால் இவ்வாறு கூறுவார்களா? தராதரப்படுத்தல் என்ற போர்வையால் இத்தகைய தவறுகளைப் போர்த்து மூடிக் கட்ட முயல்வது அழகல்ல. தமிழ்மலர்களில் இருந்து இத்தகைய எடுத்துக்காட்டுக்கள் பலவற்றைத் தரலாம். விரிக்கில் பெருகும்.
3.9 பற்றற்ற மொழி நோக்குக் கொள்ளல்
மொழி, அடிப்படையில் எதற்காக இருக்கிறது என்று நாம் பொதுவாகச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மொழியின் முதற்பயன் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்குப் பயன்படுவதே. கருத்துப் பரிமாற்றம் தங்குதடையின்றி

Page 26
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 4O
நடைபெறுமாயின் அதற்கு மேலாக மொழியைப் பொறுத்தவரையில் நாம் மொழி பேசுபவர் என்ற அளவில் வேறு எதனையும் எதிர்பார்க்க வேண்டுமா? கருத்துப் பரிமாற்றம் மிகத் தெளிவாக நடைபெறும்போதும் “சரி”, “பிழை என்று பேசுவதற்கு இடமளிக்க வேண்டுமா? இங்கு சரி பிழை என்பன மொழியைப் பொறுத்ததன்று. சமுதாய நோக்கைப் பொறுத்தேயாம்." மொழியமைப்பு முழுவதுமே தன்முனைப்பாக (arbitrary) வருவது. ஒரு மொழியமைப்பை விளக்கும்போது ஏன் என்ற வினாவிற்கு விடைதர முடியாது. தமிழிலே ஒன்றன்பாலாக இருப்பது வட்மொழியிலே பெண்பாலாக இருக்கலாம். தமிழிலே ஒருமை பன்மை எனஎண் இரண்டாகப் பேசப்படுகிறது. வடமொழியிலே ஒருமை இருமை பன்மை என மூன்றாக உண்டு. தமிழிலே பால் பாகுபாடு இயற்கையோடு இயைந்தது என இறுமாந்து பேசுபவர் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இயற்கையோடு இயைந்த பால் பாகுபாடு என்றால் ஒருமையில் மட்டும்தானா இந்த இயைபு? இயற்கையோடு இயைந்த இயைபு என்றால் பன்மையிலும் ஆண் பலர்பால், பெண் பலர்பால், ஆண் பெண் பலர்பால் என இருக்க வேண்டாவா? மேலும் அஃறிணையிலும் இயற்கையோடு இயைத்துப் பால் பாகுபாடு செய்யாமைக்குக் காரணம் என்ன? இதற்கு வாக்கியத்தில் உயர்திணைப் பெயரையும் அஃறிணைப் பெயரையும் வைத்துப் பார்க்கும்போது விளக்கம் கிடைக்கிறது. அவன் வந்தான், அவள் வந்தாள், களிறு வந்தது, பிடி வந்தது, சேவல் நின்றது, பேடு நின்றது. அஃறிணையில் வினை வரும்போது ஆண் பெண் என்ற பால் பாகுபாடு தேவையற்றதாகிப் போகிறது.*
இவைபோன்றே சொல்லும் சொல் குறிக்கும் பொருளும் தன்முனைப்பாக (arbitrary) வருவது. இவ்வாறாக, சரி பிழை என்ற எண்ணம் என்ன அடிப்படையில் (basis) தோன்றுகிறது. யான் பள்ளியில் படிக்கும்போது கதியால் என்று எழுதியதற்கு எனது மதிப்பிற்கும், அன்பிற்குமுரிய பண்டிதர் ஒருவர் என்னை அடி அடி என்று அடித்ததை இன்று நினைத்துப் பார்க்கும்போது கூட மனம் நோகிறது. கதிகால் என எழுதவேண்டும் என்று வற்புறுத்தினார். கதியால் என்ற சொல் நாம் கருதும் கருத்தை ஐயம் எதுவுமின்றித் தெரிவிக்கும்வரை - பிறர் புரிந்து கொள்ளும் வரை - அதிலே என்ன பிழை என்று இன்று கேட்க விரும்புகிறேன். கதிகால் என்று பயன்படுத்தினேன் என்றால் பல இடங்களில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறாமல் போய்விடும். மேலும் கிழம் என்ற சொல்லைக் கொச்சை என்றும் இழிசொல் என்றும் தமிழ்மலர்' கூறுகிறது. சரி பிழை என்று நீதி வழங்குபவர் யார்? ஒரு காலத்தில் பிழை எனப்பட்டது பின் ஒரு காலத்தில் சரி என ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கிழம் என்ற சொல்லைப் பேராசிரியர்

41 சுசீந்திரராசா
தெ.பொ.மீனாட்சிசுந்தரன் தாம் கல்வி பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில் கையாண்டமை நினைவிற்கு வருகிறது. மாறி மாறிச்செல்லும் இயல்புடைய மொழியிலேசரி பிழை எனப்பேசுவதற்கு 6/pע அடிப்படை(basis) அமைத்துக் கொள்வது எளிதாகுமா? சிலரின் மனம்போன போக்கில் "சரி', 'பிழை" என வகுப்பது பொருந்துமா?
பேச்சு மொழியிலே மட்டும் வருகிற சொல்வடிவம் என்ற காரணத்தால் ஒன்றைப் பிழை எனலாமா? சொற்களைப் பொறுத்தமட்டில் பேச்சு மொழிச்சொற்கள் இவை, இலக்கிய மொழிச் சொற்கள் இவை என்று கோடு வரைந்து தெளிவாகப் பிரித்துக் காட்டிவிட முடியுமா? பேச்சு மொழிச் சொற்களும், இலக்கிய மொழிச் சொற்களும் ஒன்றிலொன்று கலப்பதைக் காண்கிறோம். என்ரை வீடு எனத் தமிழில் பேசுகிறோம். இலக்கிய மலையாளத்தில் (பேச்சிலும்)-ரை அல்லது-ரெஆறாம்வேற்றுமைஉருபாக உள்ளது. தமிழில் கொச்சையாக இருப்பது, மலையாளத்தில் செம்மையான வழக்கு காரணம்? மொழியமைப்புத் தன்முனைப்பாக வருவது. மேலும் பேச்சுத்தமிழ், இலக்கியத்தமிழ் ஆகிய இரண்டும் சேர்ந்ததுதானே தமிழ்மொழி? பேச்சுத் தமிழைத் தமிழல்ல என்று சொல்லத் துணிவது எளிதன்று. தமிழ் மொழி இத்தனை நூற்றாண்டுகளாக வாழும் மொழியாக (iving language) வாழ்ந்து வருகிறது என்றால் அதற்குக் காரணமாக இருப்பவர்கள் தமிழை நாள்தோறும் பேசிப்பேசி வரும் பொதுமக்களேயாம்.
சொற்கள் சரியா பிழையா என்பதில்தான் ஆசிரியர்கள் காலத்தைக் கழிக்கிறார்கள். சொற்களில் கொள்ளும் ஆர்வத்தை முக்கியமான மொழியமைப்பிலே கொள்ளக் காணோம். மொழியிலே சொற்களை நம்ப முடியாது. சொற்கள் எளிதாகத் தோன்றி, எளிதாக மாறி, எளிதாக மறையக்
கூடியவை."
3.10 பேச்சு மொழிக் காழ்ப்பைப் போக்குதல்
இங்கு முக்கியமான ஒருகருத்தை உணரவேண்டும்.மொழிஎன்பதுஒரு வடிவில் மட்டும் இருப்பது அன்று. மொழி எத்தனையோ வடிவம் பெற்று வழங்குகிறது. பல வடிவங்களின் கூட்டே மொழியாகும். பேச்சுமொழி வெவ்வேறு வகையில் தேவைக்கேற்றவாறு கையாளப்படுகின்றது. இவ்வாறே எழுத்துமொழியும். இன்று பல்கலைக்கழகத்துத் தமிழ்ப் பேராசிரியர்களும், இலக்கியங்களைக் கற்பிக்கும்போது பேச்சுமொழியைக் கையாள்கின்றனர். பலர் பேச்சு மொழியிலே மேடைகளில் பேசுகின்றனர். நாடகத்திலே, சினிமாவிலே நடிக்கிறார்கள். கதைகளிலே, நாவல்களிலே,

Page 27
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 42
கவிதைகளிலே பேச்சுமொழி இடம் பெறுகின்றது. வானொலியிலே பேச்சுமொழி கேட்கிறது. இவற்றைவிடப் பொழுதெல்லாம் பேச்சுமொழியிலே பேசுகிறோம்.
இவற்றிற்கெல்லாம் இத்தகைய பேச்சுமொழியைக் கையாளும் தமிழன் பேச்சுத் தமிழை,இழிவு என்றும்,கொச்சை என்றும் கூறுவது தன்னைத்தானே தூற்றுவது ஆகும்." மொழியின் தன்மையையும், போக்கையும் உணராது, மொழி இயலின் உயிர்க்கருத்தைப் புரியாது இவ்வாறு கூறுகிறார்கள். மொழி இயலார் கோட்பாட்டின்படி மொழி என்றாலே பேச்சு மொழிதான். இக்கருத்தினை சுவாமி விபுலானந்தர், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரன் போன்ற பேராசிரியர்கள் உணர்ந்து ஏற்றுக் கொண்டனர். சுவாமி விபுலானந்தர் பேச்சுத்தமிழை உயிர்த்தமிழ் என்று குறிப்பிட்டார்."
இது இவ்வாறாக, மொழி ஆசிரியன் பேச்சுத் தமிழை இழிந்த தமிழ்" என்று ஒதுக்கித் தள்ளி விடுகிறான். மொழி ஆசிரியனுக்குப் பேச்சுமொழி அறிவின் இன்றியமையாமையைப் பின்பு விரித்துக் கூறுவோம். இங்கு மொழியாசிரியன் பேச்சுத்தமிழ் பற்றி எத்தகைய தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறான் என்பதைப் பார்ப்போம்.
தமிழ்மலர் (9) பின்வருமாறு சில கருத்துக்களை 'உலக வழக்குச் சொல்லும் செய்யுள் வழக்குச் சொல்லும்' என்னும் தலைப்பில் கூறுகிறது.*
“கற்றறிந்தவர்பேச்சிலே தெளிவும்,ஒழுங்கும், முறைமையும்இயல்பாக அமைந்து கிடக்கும்; கல்லாதவர் பேச்சிலே அத்திறங்களைக் காண்டல் அரிது.”
"கற்றவர் பேச்சிலே பொருட்டெளிவும், அதற்குரிய சொன்னிலை ஒழுங்கும், அழகும், இனிமையும் இயல்பாய் அமைந்து கிடத்தலினாலே, அப்பேச்சுக் கல்லாதார் பேச்சிலும் உயர்ந்ததென்று கொள்ளப்படும். ஆதலாற் கற்றறிந்தார் பேச்சே உயர் வழக்கு எனப்படுவதாயிற்று. அதற்கு மாறாகக் கல்லாதார் பேச்சு இழிவழக்கு எனப்படுவதாயிற்று."
“கல்லாதவர் பேசும்மொழி காலந்தோறும் திரிபடையும்; இடந்தோறும் வேறுபடும்; அதற்கு நிலைபேறும் இல்லை. இலக்கண வரம்பும் இல்லை. அடிப்பட்ட சான்றோர் அதனைக் கொடுந்தமிழ் வழக்கென்றும், கொச்சை வழக்கென்றும் கொண்டனர்."

43 சுசீந்திரராசா
"கற்றறிந்தோர் உலகியல் பற்றிக் கல்லாதாருடன் பேசும்போது, அவர் எளிதில் விளங்கும் பொருட்டு ஒரோவொருகாற் சிற்சில சொற்களைக் கல்லாதவர் போல் இசைபபாராயினும் எழுதும்போது அவற்றை முற்றாய்க்
களைந்து இலக்கண வரம்பு கடவாது வழங்குவர்.'
ஆறுமுகநாவலரும்'இலக்கணநூலாவது உயர்ந்தோர்வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுவதற்கும், பேசுவதற்கும் கருவியாகிய நூலாம்" என்று அதன் இயல்பை விளக்கியுள்ளார். கற்றறிந்தவரே உயர்ந்தோர் என்று மதிக்கப்பட்டனர். கல்லாதவர் இழிந்தோர் என்று கருதப்பட்டனர். கற்றறிந்தவரான உயர்ந்தோரே உலகிலுள்ள மற்றையோருக்கு ஒழுக்க நெறியையும், வழக்கு முறையையுங் காட்டுபவராதலால் அவரையே உலகம் என்று கூறுவது தமிழ் மரபு."
இக்கருத்துக்கள் அனைத்தும் அகநிலை நோக்கிலே எழுந்தவை. கல்லாதவர் பேச்சிலே தெளிவு இல்லை, ஒழுங்கு இல்லை, முறைமை இல்லை என்றால், ஒருவர் பேசுவதை மற்றொருவர் எவ்வாறு புரிந்து கொள்கிறார்? தமிழ் மொழியைப் பேசுபவர் ஒருவரை ஒருவர் கஷ்டம் இல்லாமல் புரிந்து கொள்கின்றனர். இந்திய அரசியல் விஷயங்களையெல்லாம் மாபெரும் அரசியல் மகாநாடுகளில் காமராசர்பேச்சு மொழியிலேதான் என்றும் பேசினார், பேசுகிறார். தென்னிந்தியாவில் சமுதாயப் புரட்சி செய்யும் பெரியார் இராமசாமி எப்பொழுதும் பேச்சுமொழியில்தான் பேசினார். கற்றறிந்தார் பேச்சே உயர்வழக்கு என்றால், கற்றறிந்தாரும் இருபத்திநான்கு மணி நேரத்தில் கூடிய நேரம் பேச்சுமொழியிலேதான் பேசுகிறார்கள். தமிழ்ப் பேராசிரியர்களே இலக்கியம் கற்பிக்கும்போது பேச்சுமொழியைக் கையாளுகிறார்கள் என்றோம். பண்டிதர்களும் (கற்றறிந்தார் என்று பொருள்) தமது வாழ்நாளில் கூடிய காலப்பகுதி இழிந்தோராகவும், சிறிய காலப்பகுதி மட்டும் கற்றறிந்தோராகவும் வாழ்கிறார்களா? கற்றறிந்தார் என்பவர் யார்? அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திலே எத்தனை பேர் எனப் புரியவில்லை?
இலக்கியநடையிலே தமிழ்மொழியைக்கனவிலும்பேசவேண்டும்என விரும்பி முயல்பவர் சமுதாயத்தால் நகையாடப்படுகிறார்கள். மதிப்பிற்குரிய பேராசிரியர் தேவநேயப் பாவாணர் எப்பொழுதும் செந்தமிழிலே பேசுவதைத் தமிழ் வளர்க்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சமுதாயமே நகைத்தது. இங்கு பேச்சுமொழிக்கு ரவீந்திரநாத் தாகூர் பெருமை தேடித் தந்தமை நினைவிற்கு வருகிறது.

Page 28
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 44
பேச்சு மொழி வேறு;இலக்கிய மொழி வேறு.இரண்டும் சிறப்புடையன; இலக்கணம் உடையன. ஒன்றின் இலக்கணத்தை மற்றதில் காண முடியாது. எனவே பேச்சு மொழிக்கும் இலக்கண வரம்பு உண்டு. மொழி, பேச்சு மொழியாயினும் இலக்கிய மொழியாயினும் மாறுகிறது. இடந்தோறும் வேறுபடுகிறது. நாம் மொழியைப் பேசிப் பேசித்தான் மாற வைக்கிறோம். எழுத்திலே இருக்கிற மொழி அவ்வளவு விரைவாக மாற்றம் பெறுவதில்லை. ஆனால் அதிலும் மாற்றம் நடைபெறுகிறது. சேனா வரையரின் உரைநடையை இன்று காண்கிறோமா? நாவலர் பெருமானின் நடையையே விட்டுவிட்டார்கள். இன்று இந்திய இலக்கியத் தமிழிற்கும் இலங்கை இலக்கியத்தமிழிற்கும் வேறுபாடு உண்டு. எனவே மொழி எப்படியெல்லாம் மாறும் என்று சோதிடம் கூற முடியாது. மொழி மாற்றம் அடையக்கூடாது என்றால் நாம் மொழியைப் பயன்படுத்தாது விட்டுவிட வேண்டும். ஒரு காலத்தில் யகரத்திலும், சகரத்திலும் தொடங்கிய சொற்களை மக்கள் உச்சரித்து உச்சரித்துக் காலப்போக்கில் யகரத்தையும் சகரத்தையும் விட்டே விட்டார்கள். யாடு-ஆடு, யாண்டு-ஆண்டு, சாடு-ஆடு, சான்றோர்-ஆன்றோர் போன்ற சொற்களைக் காண்க. பேராசிரியர் பரோ இத்தகைய சொற்களைத் திரட்டித் தந்துள்ளார்.' காலத்துக்குக் காலம் மொழியில் நடைபெறும் மாற்றம் பற்றிய வரலாற்றை அறிந்து கொண்டால் மொழியின் போக்கையும் தன்மையையும் விளக்கிக் கொள்ளலாம். ஆசிரியர் மொழிபற்றிக் கொண்டிருக்கும் பொதுநோக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆசிரியர்களுடைய மொழிநோக்கு மொழிப்பற்றிலே சிக்கிக் கொள்ளாது, அகநிலைப் போக்கிலே அமையாது, புறநிலைப் போக்கிலே அமைய வேண்டும். இதற்கு மொழி இயல் கோட்பாடுகள் துணை செய்யும். 3.11 பேச்சு மொழி அறிவு பயன்படுதல் \ பேச்சு மொழி இலக்கிய மொழி என்று பிரித்துப் பேசும்போதும், பேச்சு மொழி பற்றிய அறிவு ஆசிரியர்கள் இலக்கிய மொழி எனப்படுவதைப் பயிற்றுவதற்குப் பயன்படும்.
குழந்தை முதலில் பேச்சு மொழியையே பேசக் கற்கின்றது. இவ்வாறு கற்கும்போது ஆசிரியர்கள் சிலவற்றைப் பிழை" என்று திருத்துகிறார்கள். ஒலிகளைத் திருத்துகிறார்கள், சொற்களைத் திருத்துகிறார்கள், வாக்கிய அமைப்பைத் திருத்துகிறார்கள். சொல்லையும் பொருளையும் இயைபுபடுத்தும் முறையைத் திருத்தும்போது இலக்கிய மொழியை அளவுகோலாகக் கொள்வதில்லை. இங்கு வளர்ந்தவர்களுடைய பேச்சு

45 சுசீந்திரராசா
மொழியே அளவுகோல். குழந்தையும் நாம் அன்றாடு பேசுவதுபோலப் பேசக் கற்க வேண்டும் என விரும்புகிறோம். நாம் பேசுவது போலக் குழந்தை பேசாவிட்டால் குழந்தையைத் திருத்துகிறோம். இது ஒரு நிலை. பின்பும் வேறோர் நிலையில் குழந்தையைத் திருத்துகிறோம். இதுவே இலக்கிய மொழி கற்கும் நிலை. இரு நிலைகளிலும் “சரி”, “பிழை" என்ற எண்ணம் தோன்றுகிறது. எதிர்பாராத வகையில் தமிழ் மொழியில் பேச்சு மொழியும் இலக்கிய மொழியும் மிகப் பிரிந்து காணப்படுகின்றன.
முதல் நிலையிலே குழந்தை விடும் "பிழைகள்' எத்தகையன? இப்பகுதியைத் தனியே ஆராய வேண்டும். இரண்டாவது நிலையே நமக்கு முக்கியமானது.இரண்டாவதுநிலையில் தோன்றும் பிழைகளுக்குக்காரணம் இலக்கிய மொழியில் பேச்சு மொழியின் தலையீடே (Interference)
மொழியைக் குழந்தைநன்றாகப்பேசப்பழகியதற்குப் பின்பே பள்ளிக்குச்
செல்கிறது. தமிழில், பேச்சு மொழிக்கும் இலக்கிய மொழிக்கும் இடையே வாக்கிய அமைப்பைப் பொறுத்தமட்டில் சில வேறுபாடுகளே உண்டு. ஆனால் உருபன்களின்கூறுகளில் வேற்றுமைமிகமிக அதிகம்.சில சொற்கள் பேச்சிலும் இலக்கியத்திலும் வேறுபாடின்றி வருகின்றன. எடுத்துக்காட்டாக அம்மா, பூ, மரம். சில சொற்கள் ஒழுங்குபட்டஒரு மாற்றத்தைப்பெறுகின்றன. இலங்கையில் இலக்கிய வழக்கில் சொல்லின் நடுவே உள்ள -ன்ற் பேச்சிலே -ண்ட் ஆகிறது. எடுத்துக்காட்டாக கன்று > கண்டு. எனவே பேச்சுமொழியை நாம் மனதில் வைத்துக் கொண்டு இலக்கிய மொழி கற்கும்போது குழந்தைக்குத் தோன்றக்கூடிய கஷ்டங்களை முன்கூட்டியே கூறிவிடலாம். இக்கஷ்டங்களைப் போக்குவதில் ஆசிரியர் கூடிய கவனம் செலுத்தலாம். இவற்றைக் காட்டிலும் குழந்தைக்கு மிகக் கஷ்டமான பகுதி எழுத்துக்களை எழுதவும், ஒலியோடு பொருத்தி வாசிக்கவும் கற்றுக் கொள்வதேயாகும். இதுவரை பேசப் பயின்ற குழந்தை எழுதுவதையும் வாசிப்பதையும் புதிய ஆற்றல்களாகக் கற்றுக் கொள்ளவேண்டும்.
பள்ளிக்குப் போகும் நிலையில் குழந்தை நன்றாகப் பேசப் பழகி விடுகின்றது. எழுத்துக்களைக் கற்பது ஒரு சுமை. குழந்தை பெரும்பாலும் பேசுவதையே எழுத முயலும். இவற்றையெல்லாம் 'பிழை, பிழை" என்று சொன்னால் குழந்தை தான் பேசுவதெல்லாம் பிழை என்ற எண்ணத்தைக் கொள்ளும். எனவே தொடங்கும் போது பேச்சுத் தமிழுக்கும், இலக்கியத் தமிழுக்கும் பொதுவாக உள்ள வாக்கிய அமைப்புக்களையும், சொற்களையும் அறிமுகப்படுத்திப் படிப்படியாகப் பேச்சு மொழியிலிருந்து வேறுபடும்

Page 29
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 46
அமைப்புகளையும் சொற்களையும்அறிமுகப்படுத்தலாம்.எடுத்துக்காட்டாக, இது என்ன? இது பூ இது மரம்.
தமிழைப் பொறுத்தவரை, குழந்தை எங்கும் பேச்சு மொழியையே கேட்கிறது. திடீரென இலக்கிய மொழிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. நூலிலே தவிர, குழந்தை இலக்கிய மொழியை வேறு எங்கு காணவோ, கேட்கவோ முடியும்? இலக்கிய மொழி பயிலும் வகுப்பிலே கூட ஆசிரியர் பெரும்பாலும் பேச்சு மொழி மூலமல்லவா புத்தகத் தமிழைப் பயிற்றுகிறார்? W
குழந்தையின் சுற்றாடலுக்கு ஏற்பக் குழந்தையின் சொல்லறிவும். வேறுபடும். எந்த எந்தச் சொற்களைப் பாடத்தில் சேர்த்துக்கொள்வது என்பது பிரச்சினை. கொழும்பிலே உள்ள கல்லூரி ஒன்றில் ஜி.சி.இ. வகுப்பிலே புழுங்கல்’ என்ற சொல்லைப் பலர் புரிந்து கொள்ளவில்லையாம். இச்சொல்
கிராமத்திலே உள்ள குழந்தைக்குத் தெரியும்.
தமிழ்மலர் முதற்புத்தகத்திலே முதலில் வரும் வாக்கியம் பின்வருமாறு: பார் படம். இந்த வாக்கியத்தின் அமைப்பு குழந்தைக்கு மட்டுமல்ல வளர்ந்தவர்களுக்கும் உரைநடையிலே புதுமையாகும். வாக்கியத்தின் முதலில் வினை வந்து உணர்ச்சியையா, அல்லது அழுத்தத்தையா (emphasis) இங்கு குறிக்கிறது? இரண்டாவது பாடத்தில் பாடம்" என்ற சொல் வருகிறது. இச்சொல்லைக் குழந்தை எளிதாகப் புரிந்து கொள்ளுமா?
பேச்சு வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் வேற்று நிலையில் வரும் சொற்கள் சில உண்டு. எடுத்துக்காட்டாக (1) இவர், (2) அவை. இச்சொற்கள் குழந்தைக்குச் சிக்கலாக இருக்கும். ஏனெனில், பேச்சிலே இவர் என்பது உயர்திணை ஆண்பால்; இலக்கிய வழக்கிலே ஆண்பாலுக்கும், பெண்பாலுக்கும்பொதுவாக வரலாம்.இதேபோல'அவை' என்பதுபேச்சிலே உயர்திணைப் பன்மை, இலக்கிய வழக்கிலே அஃறிணைப் பன்மை. இத்தகைய வேறுபாடு உள்ள சொற்களிலே ஆசிரியர் அக்கறை கொள்ள வேண்டும். மொழி சமுதாயப் பழக்கவழக்கங்களோடு நெருங்கிய தொடர்புடையது, இப்பழக்கவழக்கங்கள் சமுதாயத்திற்குச் சமுதாயம், இடத்திற்குஇடம்வேறுபடுவதுஉண்டு.சில குடும்பங்களிலே இன்று"மாமா படம் பார்' என்று சொன்னால், “சிகெட்டபழக்கம்,நல்ல பழக்கவழக்கம் பழக வேணும்' என்று வற்புறுத்தி, "மாமா படம் பாருங்கள்' என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். நாகரிகமான பேச்சு என ஒன்று அகநிலையில் தோன்றி

47 சுசீந்திரராசா
விடுகிறது. நூலிலே "மாமா படம் பார்’ என்றிருந்தால் இதனைக் குழந்தை எவ்வாறு எதிர்நோக்கும்? இங்கு ஒரு பிரச்சினை உண்டல்லவா? மொழி சமுதாயத்தோடு தொடர்புடையதாக இருப்பதால் இத்தகைய பிரச்சினைகள் பல தோன்றுகின்றன. m
3.12 ஒலி இயல் பயன்படுதல்
மொழி பலவாறு உச்சரிக்கப்படுகிறது. இந்தியத் தமிழரின் உச்சரிப்பு யாழ்ப்பாணத் தமிழரின் உச்சரிப்பில் இருந்து வேறுபடுகின்றது. முஸ்லிம் மக்களின் உச்சரிப்பு வேறு வகையாகக் காணப்படுகின்றது. 'செம்மொழி வழக்கைப் பற்றிக் கவலை கொள்பவர், நல்ல காலம் உச்சரிப்பிலே செம்மையான உச்சரிப்பு என ஒன்றை நிலைநாட்ட முன்வரவில்லை. மொழிகளிலே உள்ளஒலிகளைவேறுபடுத்திஉச்சரிக்கும்நுட்பத்தைவிளக்க முறையில் அறிந்து கொள்ளுவதற்கு ஒலியியல் பயன்படும். எனவே, மொழியாசிரியனுக்கு ஓரளவு ஒலியியல் அறிவு வேண்டுமென எதிர்பார்ப்பதில் தவறு இல்லை.
மொழி ஒலிகளைப் பொறுத்தமட்டில் பேச்சு மொழி, இலக்கிய மொழி ஆகிய இரண்டையும் பெரும்பாலும் ஒரே மாதிரித்தான் உச்சரிக்கிறோம். சில வேறுபாடு உண்டு. தெளிவாகச் சொன்னால் பேச்சின்போது காணப்படும் உச்சரிப்பையே இலக்கியத் தமிழிலும் ஏறக்குறைய 100க்கு 90 வீதம் காண்கிறோம். பேசும்போது ள, ழ என்ற இரு ஒலிகள் வேறுபடுத்தப்படுவதில்லை. இதேபோல நகரம் சொல்லின் இடையிலே அடுத்துத் தகரம் வரும்போது மட்டும்தான் நகரமாக உச்சரிக்கப்படுகின்றது. ஏனைய இடங்களில் னகரமாகவே உச்சரிக்கப்படுகின்றது; எனவே பேச்சில் உள்ள உச்சரிப்பு ஆற்றல் வாய்ந்ததாகி விடுகின்றது. முஸ்லிம் மக்கள் இலக்கியத் தமிழைப் படித்தாலும், பேசினாலும் அவர்கள் உச்சரிப்பிலே இருந்து முஸ்லிம்கள் என்று பெரும்பாலும் சொல்லி விடலாம்.
எழுத்துக்களைப் பொறுத்தவரையில் ணன, நன, ழள, ரற ஆகியன மாணவர்களுக்குத்தொல்லைதருகின்றன. முஸ்லிம்கள்ழ,ள,லமூன்றையும் லகரமாக ஒலிப்பதைக்கேட்கலாம். எனவேபேச்சுமொழியைப் பயிலும்போது இத்தகைய ஒலிகளின் தொல்லைகள் தோன்றும் என எதிர்பார்க்கலாம். தமிழ்மலர்களிலே லகர, ழகர, ளகர பேதச்சொற்கள் என்றும், ணகர, னகர பேதச் சொற்கள் என்றும், ரகர, றகர பேதச்சொற்கள் என்றும், நகர, னகர பேதச்
சொற்கள் என்றும் சொற் பட்டியல்களைக் காண்கின்றோம். ஒலிகளைத்

Page 30
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 48
தவறாக உச்சரிக்கப் பயின்றபின் மாணவர்கள் இச்சொற்களின் பட்டியலை மனதிலே வைத்திருப்பது எளிதன்று. இளமையில் இருந்து ஒலிகளை வேறுபடுத்தி ஒலித்துப் பழகினால் இத்தொல்லைகள் ஏற்படா. யாழ்ப்பாணத்து மாணவனுக்கு ளகர, ழகரம் தரும் தொல்லைபோல ரகர, றகரம் தொல்லை தருவதில்லை. ஏனெனில், இளமையில் இருந்து ரகர, றகரத்தை வேறுபடுத்தி ஒலிக்கின்றான். இந்திய மாணவனுக்கு ரகர, றகரம் பெருந்தொல்லை.
தமிழ் ஒலிகளை எப்படி ஒலிப்பது? நமது பாடப்புத்தக ஆசிரியர்கள் பழைய இலக்கண நூல்களைப் புரட்டிப் பார்த்து ஒலிப்பு முறையை வருணிக்கின்றார்கள்.இலக்கண ஆசிரியர்கள் தமது காலத்தில் வழக்கிலிருந்த உச்சரிப்பு முறையையே வருணித்துள்ளார்கள். உண்மையிலே அவர்கள் திறமையை நாம் பாராட்ட வேண்டும். ஒலியியல் ஆய்வில் இந்திய நாட்டு மொழியறிஞர்களே முன்னோடிகள். ஆனால், அவர்களின் ஒலி உச்சரிப்பு இன்றைய தமிழ் உச்சரிப்பிற்கு எந்த அளவு பொருந்தும்? “ஆய்தக்கு இடம்தலை" என்று அவர்கள் கூறுவதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. தொல்காப்பியரோ, நன்னூலாரோதமிழை ஒலித்ததுபோலவே நாமும் இன்று ஒலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒருவேளை ஒருவர் அவ்வாறு ஒலித்தால் நமக்கு ஒன்றுமே விளங்காமல் போகலாம். ஏன்? இன்று யாழ்ப்பாணத்துத் தமிழன் தமிழை ஒலித்துப் பேசுவதை இந்தியத் தமிழன் நூற்றுக்கு ஐம்பது வீதம் விளங்குவதில்லை. ஒலி வெவ்வேறு கோணத்தில் மாறி விட்டது என்பதற்கு இதுவே நல்ல சான்றாகும்.
சில குறிப்பிட்ட ஒலிகளுக்கிடையே உள்ள மயக்கம் நேற்று இன்று தொடங்கியது அன்று. ளகர, ழகர மயக்கம் சங்க இலக்கியங்களிலே உண்டு என்று நண்பர் கமலேஸ்வரன் ஆராய்ச்சிக் கூட்டமொன்றில் கூறியது நினைவிற்கு வருகின்றது. பவளம், பவழம் என்ற எடுத்துக்காட்டை ஒருவர் காட்டினார்.” வேலை, வேளை, கருமை, கறுப்பு போன்ற சொற்களையும்
காண்க.
இங்கு ஒரு முக்கியமான கருத்தை மனதில் பதிய வைக்க வேண்டும். மொழியிலே உள்ள ஒலிகளும் தன்முனைப்பாக (arbitrary) வருவன. காரணம் பற்றி அமைந்தன அன்று. இந்த மொழியில் இந்த ஒலி இருக்கின்றதே. அது அந்த மொழியில் ஏன் இல்லை என்று கேட்டுக் காரணம் தர முடியாது. ஒலிகளில் வேறுபாடு இருக்கின்ற வரையில்தான் எழுத்து வேறுபாட்டிற்கும் முக்கியத்துவம். ஈர்ஒலிகளோ, பல ஒலிகளோ ஒன்றாவதையும்(coalescence),

49 சுசீந்திரராசா
ஓர் ஒலி பலவாகப் பிளவுபடுவதையும் (split) மொழி வரலாற்றில்
காண்கிறோம்.
இது இவ்வாறாக மொழி ஆசிரியர்கள் ஒலிகள் பற்றி அகநிலைப் போக்கில் தோன்றும் கருத்துக்களுக்கு இடமளிக்கின்றார்கள். றகரம் தமிழுக்கே சிறப்பு என்று தமிழ்மலர் (9) கூறுகின்றது. இதன் பொருள் என்ன? இது எவ்வளவு துணிச்சலான கூற்று. உலகமொழிகள் அனைத்திலும் இடம் பெறுகிற ஒலிகளை ஆய்ந்த பின்னரன்றோ இத்தகைய கூற்றுத் தோன்றலாம்? இன்று ஆராய்ச்சியாளர் மொழியமைப்பின் விளக்கத்தை - இலக்கணத்தை - விஞ்ஞான நுட்பம், கணித நுட்பமுடையதாகக் காண விரும்புகிறார்கள். தமிழ் உரைநடை ஆற்றல் வாய்ந்ததாக, அறிவு ஆய்வுக்கு ஏற்ற உரைநடையாக அமையவேண்டுமாயின் இத்தகைய (றகரம்தமிழுக்கே சிறப்பு) கூற்றுக்கு இடம் கொடுக்க முடியுமா? சிறிதுகாலம் ழகர ஒலி தமிழுக்கே சிறப்பானது என்று சிலர் சொல்லித் திரிந்தனர். ஒருமுறை ழகரம்" என்றால் இனிமை அமிழ்து என்று கூறி, ழகரம் இருப்பதால் தமிழ் என்பதே இனிமை என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கூறிய அறிஞர் ஒருவரை மாணவர் கழுதை என்ற சொல்லிலும் ழகரம் இனிமையைத் தருகிறதா எனக் கேட்டது நினைவிற்கு வருகின்றது. இவையெல்லாம்
அகநிலைப் போக்கில் எழும் நல்ல கற்பனை.
இன்று மொழியறிஞர் விஞ்ஞானக் கருவிகளின் துணைகொண்டு ஒலியின் பிறப்பை நுட்பமாக வருணிக்கின்றனர். அகநிலை நோக்கிற்கு இடமே இல்லாமல் போய்விடும்.
இனி, பேச்சு மொழியில் உள்ள புணர்ச்சிகளை இலக்கிய மொழியிலும் காணும்போது, அவை மாணவர்களுக்குப் புதிராக இருப்பதில்லை. வாழைப்பழம் என்ற சொல்லில் உள்ள ஒலிகளைக் குழந்தை சரிவர ஒலிக்குமாயின் 'வாழைப்பழம்' எனப் பகரவொற்று மிகும் வண்ணம் எழுதிவிடும். கல்தூண் என்று சொல்லிப் பழகிய குழந்தை “கற்றுரண்' என்பதைக் கண்டு அஞ்சும். ஒலிகளை ஒலிக்கும்போது தான் புணர்ச்சி ஏற்படும்; ஏற்பட வேண்டும். எழுதிவிட்டால் மட்டும் புணர்ச்சி தோன்றாது. இங்கு பயன் இல்லை. மொழியைப் பேசாது எழுதுவதற்கு மட்டும் பயன்படுத்தினால் அங்கு புணர்ச்சி தோன்றுவதற்கு இடமில்லை. அங்கு புணர்ச்சி பயனற்றதாகும்; உயிர் அற்றதாகும். பேச்சின் காரணமாகப் புணர்ச்சி காலத்துக்குக் காலம் மாறுவது உண்டு. பழைய இலக்கணங்களே பொது விதிகள் என்றும், சிறப்பு விதிகள் என்றும், விதிவிலக்கு என்றும் கூறுவது

Page 31
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 5O
இக்காரணத்தினாலேயே விகற்பமென்று பேசப்படுகிறது. நட + கொற்றா = நடகொற்றா, நடக்கொற்றா என ஏவல் வினைமுன் வலி விகற்பித்தன.
புணர்ச்சி இன்மை தெளிவைத் தருமாயின் - வழக்கில் இருக்குமாயின் - நாம் எதற்காகப் புணர்ச்சியை வற்புறுத்த வேண்டும்? சில புணர்ச்சிகளைப் பிரித்து எழுதிவிட்டால், எத்தனையோ பாடல்களை மாணவர்கள் தாமாகவே புரிந்து கொள்வார்கள். பொருள் விளக்கத்திற்கு இன்றியமையாத புணர்ச்சிகளை மட்டும் மேற்கொள்ளலாம். புணர்ச்சி விதிகள் காரணமாகவே தமிழை வெறுக்கும் மாணவர் பலர். குழந்தைகளுக்கு என எழுதப்பெற்ற தமிழ்மலர்களிலே கையாளப்படும் புணர்ச்சிகள் சிலவற்றைப் பாருங்கள்:
| تیهو و
“நூலிற் றுங்கும் இரையைப் பார் 'அஞ்சாமற் றனிவழியே போக
வேண்டாம்'முதலிற்றணியாக", "கரும்பலகையிற்றுலாம்பரமாக"
இந்தியநாட்டில் அறிஞர்பழம்பெரும்இலக்கியங்களையெல்லாம்பதம் பிரித்து எழுதி வெளியிடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இராஜம் வெளியீடுகளையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக் கம்பராமாயண வெளியீடுகளையும், திருவாசக வெளியீடுகளையும் காண்க. தமிழ்ப் பேராசிரியர் பலர் வேண்டாத புணர்ச்சிகளைக் கைவிட்டு எழுதுகிறார்கள். நாம் மட்டும் நமது நாட்டில் குழந்தைகளை எதற்காகத் துன்புறுத்த வேண்டும்?
புணர்ச்சி விதிகளைக் கொள்ளாவிடின் பொருள் மயக்கம் தோன்றும் என்று சில இடங்களைக் காட்டலாம். எடுத்துக்காட்டாக, 'அவர் கண்டார், 'அவிர்க் கண்டார் ஆகிய இரண்டும் வெவ்வேறு பொருளைத் தருவன. இதேபோல 'வாழைபழம் கொண்டு வாருங்கள்', 'வாழைப்பழம் கொண்டு வாருங்கள்', என்பனவும் வெவ்வேறு பொருள் தருவன. இத்தகைய இடங்களில் புணர்ச்சி வேறுபாடு வேண்டும். மேலும், நாம் ஒன்றை நினைவிலே கொள்ள வேண்டும். பொருள் மயக்கம் என்பது மொழியிலே ஏதோ வகையில் ஆங்காங்கு இருக்கத்தான் செய்யும்.*ஆனால், மொழி ஒரு வெற்றிடத்தில் மொழியப்படுவதன்று. சந்தர்ப்பம் சூழ்நிலை என உண்டு. இவை பொருள் மயக்கத்தைத் தெளிவுபடுத்த உதவும். பொருள் தெளிவு, மொழிக்கு மொழி வேறுபடும். காரணம், பொருள் அமைப்பு (structure of content) மொழிக்கு மொழி வேறுபடுகிறது. உறவுப் பெயர்களையும், நிறப்பெயர்களையும் மொழிக்கு மொழி ஒப்பு நோக்கிக் காண்க. home/house எனத் தமிழில் வேறுபடுத்தமுடியாது. பலகாரம் என்ற சொல்லிற்கு ஒத்த ஒரே சொல் சிங்களத்தில் இல்லையாம்.

51. • சுசீந்திரராசா
3.13 மொழியமைப்பைத் தனியே கொள்தல்
மொழியாசிரியர்கள் மொழியமைப்புத் தகுதியையும், பொருள் தகுதியையும் ஒன்றாக்கி விடுகின்றனர். எதிர்ப்பொருட் சொல் கூறுதல், மொழி அமைப்பின் பாற்பட்டதன்று எதிர்ப்பொருட் சொற்களை அகநிலை அடிப்படையிலேதான் கூறி வருகிறோம். இதற்குப் புறநிலை அடிப்படை (objective basis) இருப்பதாகத் தெரியவில்லை. 'விருப்பத்தோடு (தமிழ்மலர் 3) என்பதற்கு எதிர்ச்சொல் கேட்டிருக்கிறார்கள். மாணவன் 'விருப்பமின்றி என்று விடை தந்தால்? வெறுப்போடு என்று விடை தந்தால்? மேலும் இருந்தார் (தமிழ்மலர்4) என்பதற்கு எதிர்க்கருத்துள்ள சொல்கேட்கிறார்கள். கிடந்தார், நின்றார், ஓடினார், இருக்கவில்லை. இவற்றில் எதனை விடையாக எதிர்பார்க்கலாம்? என்ன அடிப்படை? இங்கு புறநிலைப் போக்கில் மாணவனைப் பரிசோதிப்பது (objectivetesting) முடியாதகாரியமாகிறது.இதே மலரில் 'பிரிந்திருப்பார், பிற்ந்தார் என்பனவற்றிற்கு எதிர்க்கருத்துள்ள சொற்களைக் கேட்டு இருக்கிறார்கள். நாடு என்பதற்கு எதிர்க்கருத்துள்ள சொல்காடு என்பர். ஒருமுறை வீடு என்பதற்குஎதிர்க்கருத்துள்ளசொல்என்ன என்று கேட்டபோது, எனது மாணவர் காடு என்று கூறி, "காடு வா வீடு போ' என்ற மொழியையும் காட்டினார். எதிர்க்கருத்துள்ள சொற்களைப் போலவே ஒருபொருள் குறித்த பல சொற்களையும் நாம் ஆராய வேண்டும். உணவு, தீனி, இரை என்பன ஒரேபொருள்குறித்துநிற்பனஅன்று.இதனை இவற்றின் வரன்முறை (distribution) காட்டி விடும். விடுகவிகள் (தமிழ்மலர் 4) மொழிப்பயிற்சியில் பொருந்துமாற்றைப் புரிய முடியவில்லை. இதில் தந்துள்ள விடுகவிகளுக்குப் பல விடைகளை ஆசிரியர் எதிர்பார்ப்பாரா? மரபு வழி வந்த விடையை மட்டுந்தான் விடை என்று வற்புறுத்த மாட்டார் என எண்ணுகிறோம். விடுகவிகள் மாணவரது கற்பனையைத் தூண்டும்.
மொழியமைப்புத் தகுதி (grammaticalness) வேறு; பொருள் தகுதி (semantic accuracy) வேறு. இதனை இந்திய மொழி அறிஞர் நன்கு உணர்ந்திருந்தனர். வடமொழி ஆசிரியர் சுவையான எடுத்துக்காட்டைக் காட்டுவர்." ஆகாயத்தாமரை என்ற எடுத்துக்காட்டையும் காண்க.
4.0 வேண்டுகோள்
இங்கு சில கருத்துக்களைக் கூறியுள்ளேன். இன்னும் ஓய்வு கிடைக்கும்போது சில கருத்துக்களை எடுத்துக்காட்டுடன் தரலாம். இங்கு கூறிய கருத்துக்களில் சில, சிலருக்குக் கசப்பாக இருக்கலாம். என்னைத் தமிழ்த்துரோகி என வருணிக்கவும் துணியலாம். அவர்களுக்கு ஒன்றுமட்டும்

Page 32
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 52
கூறுவேன். எனக்கும் தமிழ்ப்பற்று உண்டு. ஆனால் பற்று வேறு; ஆராய்ச்சி வேறு. ஆராய்ச்சியில் விருப்பு வெறுப்பிற்கு இடமில்லை.
இங்கு கூறிய கருத்துக்கள் முற்றும் முடிந்த முடிபுகள் அன்று. இத்துறையிலே மேலும் ஆராய்ச்சி செய்வதற்கு மொழி இயலாரும், மொழி பயிற்றும் ஆசியிர்களும் ஒருவரை ஒருவர் வெறுக்காது ஒத்துழைக்க வேண்டும். இத்துறை ஆராய்ச்சி செய்வதற்கு வளமான துறை. போட்டி அல்லது வெற்றி தோல்வி என்ற மனப்பான்மை இன்றி ஆசிரியர்கள் அருள் கூர்ந்து, மனம் திறந்து பேசவேண்டும்.
இங்கு கூறிய கருத்துக்களே மொழி இயல் கோட்பாடுகள் (The principles of Linguistics) என எண்ண வேண்டா. கோட்பாடுகள் என்று சொல்வதைக் காடடிலும் கருத்துக்கள் என்று கூறுவது பொருத்தம். அழுத்தம் கொடுக்க வேண்டிக் கோட்பாடுகள் என்றேன்.
"Some disagreement is a healthy sign of activity"
என்ற மேற்கோளைக் கூறி முடிக்கிறேன்.
குறிப்புகள்
1. தமிழ் மொழி பயிற்றல்’ என்னும் பொருள் பற்றிக் கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையில் நடைபெற்ற கருத்தரங்கில் இவ்வுரையை நிகழ்த்தியபோது பலர் தமது ஐயங்களைக் கேட்டு என்னை மேலும் சிந்திக்கச்செய்தனர். அவர்களுக்கு எனது நன்றி!
2. Peter Strevens, Papersin languageandlanguage teaching, P. 1. Oxford. 1966.
3. Suseendirarajah.S. Reflections of Certain Social Differences in Jaffna Tamil, Anthropological Linguistics, Vol. 12, No.7, Indiana University Publication, U.S.A. 1970.
4. நமது இலக்கண நூல்களை எள்ளிநகையாடுவதாக எண்ண வேண்டா. உண்மையிலே நமது பண்டைய இலக்கண நூல்கள் தமிழரின் மொழிச் சிந்தனையைக் காட்டுகின்றன. தொல்காப்பியத்தைச் சிறந்த விளக்கமுறை இலக்கணம் என்று தற்கால மொழியறிஞர் போற்றுகின்றனர். தொல்காப்பியரின் மொழிநுட்ப அறிவைப் பேராசிரியர் எஸ்.அகஸ்தியலிங்கம் பாராட்டியுள்ளார். ஆயின், தற்காலத்

53 சுசீந்திரராசா
1.O.
11.
12.
13.
14.
15.
16.
17.
18
தமிழிற்குத் தொல்காப்பியக் கூற்றுக்கள் நூற்றுக்கு நூறு வீதம் பொருந்தும் எனக் கொள்ள முடியாது. மொழி மாறி விட்டது.
Pandit P.B.(Ed.), Linguistics and English Language Teaching, Proceedings
of a Seminar held at the Centre of Advanced Study in Linguistics, Deccan
Coillege, Poona, P.81.
Sydney M. Lamb, Outline of Stratificational Grammmar, University of California, P2, இந்த மேற்கோள்கள் மேலே குறித்த நூலில் கையாளப்பட்டுள்ளன.
பத்ருஹரி, வாக்யபதிய, பிரஹ்மகாண்ட, செய்யுள்.
தொல்காப்பியர், உயர்திணையை ஆண்பால், பெண்பால், பலர்பால் என வகுத்தமை பொருள் (meaning) அடிப்படையிலன்று; வாக்கிய அடிப்படையிலேயாம். இது ' குறித்துத் தெய்வச்சிலையார் விளக்கும்போது, “பொருள் நோக்கிக் கூறினாரல்லர். சொல்முடிபு மூவகையென்று கூறினாரென்க” என்றும், அஃறிணை பற்றி, “அவையெல்லாம் ஒருமையாயின் வந்தது எனவும், பன்மையாயின் வந்தன எனவும் வழங்கப்படுதலிற் சொல் முடிபு நோக்கிக் கூறினார்
என்க" என்றும் விளக்குவதைக் காண்க.
Agesthialingom, S., Tolkappiyar's Treatment of Syntax, Aaraaichi, Oct. 1969.
Hockett, Charles F., A Course in Modern Linguistics, P.148, U.S.A. 1958.
Schiffman H. Hypersentences in Tamil, Indian Linguistics, Vol.32, No. 1.
1971
தமிழ்மலர், நான்காம் புத்தகம், ப.9, முதலாம் பதிப்பு - 1968.
தமிழ்மலர், நான்காம் புத்தகம், ப.17-19, முதலாம் பதிப்பு - 1968.
"Wrong is a social judgement" . See Halliday, McIntosh, Strevens, The Linguistic Sciences and Language Teaching, Longmans, P. O7, 1968.
Grammatical genders do not necessarily coincide with natural genders 6T6TD கருத்தையும் காண்க.
தமிழ்மலர் 9, ப.260, இரண்டாம் பதிப்பு - 1969.
Gleason H.A. An introduction to Descriptive Linguistics, P.6, 1969.
. "A speaker who is made ashamed of his own language habits suffers a basic

Page 33
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 54
19.
2O.
21.
22.
23.
24.
25.
26.
injury as a human being to make anyone especially a child, feel so ashamed is as indefensible as to make him feel ashamed of the Colour of his skin.' - The Linguistic Sciences and Language Teaching, P.105
அருள் செல்வநாயகம் (தொகுப்பு), விபுலானந்த வெள்ளம், ப.34.
தமிழ்மலர் 9, ப.140-141, இரண்டாம் பதிப்பு, 1969.
Burrow T. Initial y and n in Dravidian, BSOAS X (1943-46); The loss of initial css in south Dravidian, BSOASXII (1947).
கருத்தரங்கு நடைபெற்றபோது கோப்பாய் ஆசிரியர் கலாசாலைத் தமிழ் விரிவுரையாளர் பண்டிதர் சி.குமாரசாமி இதனை எடுத்துக்காட்டாகக் காட்டினார்.
தமிழ்மலர், இரண்டாம்புத்தகம், ப.98
தமிழ்மலர், மூன்றாம் புத்தகம், ப.49.
நமது பழைய இலக்கணநூல்களுக்குக்கருத்துவேறுபடும்உரைகள் பல இருப்பதைக் காண்க.
இங்கு வடமொழி வாசகம் ஒன்றின் ஆங்கில மொழி பெயர்ப்பைத் 5(5éCD6T. "There goes a son of a barren woman, with a chaplet made of
skyflowers (on his head) having had his bathin (a) mirage (water), and carrying with him a bow made of hare's horns."

55 சுசீந்திரராசா
4
மரபுத் தொடர்கள்
I
இன்று, தமிழ் கற்கும் மாணவர்கள், மரபுத் தொடர்கள், பழமொழிகள், உவமைகள் என்பனவற்றை நன்கு விளங்கிக் கொள்வதற்கும், கையாள்வதற்கும், சுவைப்பதற்கும் பயிற்சி பெறுகிறார்கள். ஆயின், சற்றுச் சிந்தித்துப் பார்க்குமிடத்து மரபுத் தொடர்கள் பற்றி நூல்களில் காணப்படும் கருத்தும் விளக்கமும் ஓரளவு குழப்பத்தை விளைவிக்கின்றன. இதனால் மாணவர்கள் பல தரப்பட்ட நூல்களிலிருந்து மரபுத் தொடர்களில் பெறும் (ஆசிரியர்கள் தரும்) பயிற்சி தெளிவற்றதாகக் காணப்படுகின்றது. இந்நிலையை இயன்றவரை விரிவாகச் சுட்டிக்காட்டி, தற்கால மொழியியல் அடிப்படையில் மரபுத் தொடருக்குக் கூறப்படும் விளக்கங்களைத் தந்து அறிஞர்கள் மத்தியில் சிக்கல்களை எழுப்புவதே இவ்வாய்வின்நோக்காகும்.
I
பழமொழி, உவமை என்பனவற்றோடு கருதும்போது மரபுத் தொடர் என்ற வழக்காறு அண்மைக் காலத்திலே தோன்றிய ஒன்றாகும். இத்தொடரே தமிழிற்குப் புதியது; பல அகராதிகளில் இன்னும் இடம் பெற்றிலது. தமிழ் மொழிக்கல்வியில் இதன் முக்கியத்துவமும் சிறப்பும் அண்மைக் காலத்திலேதான் வலியுறுத்தப் பெற்றது. முப்பது அல்லது நாற்பது ஆண்டுகட்கு முன் தமிழ் கற்றலிலும் கற்பித்தலிலும் மரபுத் தொடர் இன்றுபோல சிறப்பிடம் பெற்றிருக்கவில்லை-இட்மேபெற்றிருக்கவில்லை என்றுகூடச் சொல்லலாம். ஆனால் அன்றும் மக்கள் பேச்சு வழக்கில் மரபுத் தொடர்களைக் கையாண்டனர். இவை பெரும்பாலும் பேச்சு வழக்கிலே வழங்கி வந்தமையாலும், பேச்சு வழக்கு இழிவழக்கு எனத் தமிழறிஞரால் கொள்ளப்பட்டமையாலும் அன்று போற்றப்படவில்லை போலும். காலப்போக்கில் ஆங்கில மொழியில் idioms என்பனவற்றிற்குத் தமிழிலும்

Page 34
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 56
ஒத்தவை உண்டு; அவற்றை மரபுத் தொடர்கள் எனலாம் என்ற உணர்வு ஆங்கிலங் கற்ற தமிழறிஞர் சிலரிடம் தோன்றியது. Idioms என்பனவற்றிற்கு ஆங்கில மொழியிலே கொடுக்கப்படும் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் தமிழில் மரபுத் தொடர்கள் பெறுதல் வேண்டும் என்ற எண்ணம் படிப்படியே வளர்ந்து வந்தது. எப்படியோ idioms = மரபுத் தொடர், மரபுத் தொடர் = idioms என்ற சமன்பாடு தமிழ், ஆங்கிலங் கற்றோரிடம் இன்று நிலைத்துவிட்டது." யாரும் idioms, மரபுத் தொடர் ஆகிய இரண்டினையும் ஒப்புநோக்கி ஆழ்ந்து சிந்தித்துச் சமன்பாடு செய்ததாகத் தெரியவில்லை. சான்றாக ஆங்கிலத்தில் இடியம் (idiom) என அமைந்த ஒன்றிற்குத்தமிழில் ஒத்தது மரபுத்தொடர் என அமையாது, பழமொழி என அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, to rob Peter topay Paul என்பது ஆங்கிலத்தில் இடியம் ஆம். இதற்குத்தமிழில் ஒத்ததாகக் கொள்ளப்படுவது: "கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது'. ஆயின் இது தமிழில் பழமொழியாகவே கொள்ளப்படுகிறது. எனவே இடியம் = மரபுத் தொடர், மரபுத் தொடர் = இடியம் எனும் நோக்கு முழுமையாகப் பொருந்துவதாக இல்லை." .
III
அ.கி.பரந்தாமனாரின் நல்ல தமிழ் எழுதவேண்டுமா? என்னும் நூலில் இனிய சொற்றொடர்களும் (interesting phrases)' 'மரபுத் தொடர்களும் (idioms) கலந்து 31ஆவது அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளன. மரபுத் தொடர்கள் (3) எனக் குறிக்கப்பெற்று வேறுபடுத்தப்பட்டுள்ளன. 32ஆவது அத்தியாயத்தில் உவமைகளும் 33ஆவது அத்தியாத்தில் பழமொழிகளும் தரப்பட்டுள்ளன.இவை வெவ்வேறாக வகுக்கப்பெற்றிருப்பதால் ஒன்றுடன் மற்றொன்றிற்குத் தொடர்பில்லை; தனித்தனிப் பிரிவில் அடங்குவன என்ற எண்ணம் நமக்குத்தோன்றலாம். நல்ல தமிழ் எழுதுவதற்கு வழிகாட்டிபோல் அமைந்த பரந்தாமனாரின் நூலில் இனிய சொற்றொடர்கள் எனவும் பழமொழிகள் எனவும் கொள்வதற்குரிய அடிப்படை விளக்கப்படவில்லை.
இது ஒரு குறை எனலாம்.
IV
இலங்கை அரசினரால் பாடசாலைப் பாடநூலாக வெளியிடப் பெற்ற தமிழ்9 என்னும் நூலிலும் மரபுத் தொடர்கள், உவமைகள், பழமொழிகள் எனத் தனிப்பகுதிகளில் தரப்பட்டுள்ளன. இந்நூலில் மரபுத் தொடர்பின்வருமாறு
விளக்கப்பட்டுள்ளது:

5
57 ப? சுசீந்திரராசா
"சொற்களுக்குரிய நேர்ப்பொருளை உணர்த்தாது அச்சொற்களின் ஆற்றலால் ஒருகுறித்தபொருளில்வழங்கிவரும்தொடர்மரபுத்தொடர்எனப் பெயர்பெறும். இதனை இலக்கணைத் தொடர் எனவும் கூறுவர். மரபு - முறைமை. இலக்கணை - குறிப்பு" (ப.60).
இங்கு மரபுத் தொடருக்கு இரு பண்புகள் கூறப்பட்டுள்ளன. அவையாவன: (1) நேர்ப்பொருள் உணர்த்தாமை; (2) ஒரு குறித்த பொருள் உணர்த்துதல். தொடர் எனப் பேசுவதால் ஒருசொல்லிற்கு மேற்பட இருத்தல் வேண்டும் எனவும் தனிச்சொல் விலக்கப்பட்டுள்ளது எனவும் கொள்ளலாம். இப்பாடநூலில் நமக்கு நேர்ப்பொருள், குறிப்புப்பொருள் என்பனவற்றிற்கு மேலும் கிடைக்கும் விளக்கம் பின்வருமாறு:
“ஒற்றைக் காலில் நிற்றல் என்பது மரபுத் தொடர். இதன் நேர்ப்பொருள் இரு காலில் அன்றி ஒரு காலில் நிற்றல் என்பதாகும். வழக்கில் இது, இதன் பொருளன்று. பிடிவாதமாக நிற்றல் என்பதே இத்தொடரின் பொருள். இது குறிப்பினாற் பெற்ற பொருளாகும். . இவ்வாறு மரபுத் தொடர் ஒவ்வொன்றும் வெளிப்படை, இலக்கணை என்னும் இருவகைப் பொருள்களை உடையது. வெளிப்படைப் பொருள் சிறப்புடையதன்று.
இலக்கணைப் பொருளே சிறப்புடையது" (ப.61).
இவ்விளக்க வெளிப்பாடு சற்று மயக்கத்தைத் தருகிறது. ஒற்றைக் காலில் நிற்றல் என்பது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மரபுத் தொடராகாது." ஏனெனில் மேற்கூறியவாறு மரபுத் தொடர் ஒவ்வொன்றும் வெளிப்படை, இலக்கணை என்னும் இருவகைப் பொருள்களையுடையது. அவ்வாறாயின், எடுத்த எடுப்பிலே ஒற்றைக் காலில் நிற்றல் என்பது மரபுத் தொடர் என எவ்வாறு விளக்க முடியும்? வழக்கிலே நேர்ப்பொருளைக் குறிக்கும் சந்தர்ப்பமும் தோன்றலாமன்றோ? இன்று சிலர் ஒற்றைக் காலில் நெடுநேரம் நிற்றலைச் சாதனையாகவும் செய்கின்றார்கள். சில விளையாட்டிலும் ஒற்றைக் காலில் நிற்றல் உண்டு. இத்தகைய பிற சந்தர்ப்பங்களும் உண்டு. அவ்வாறாயின்,"இதன்நேர்ப்பொருள் இருகாலில் அன்றி ஒருகாலில்நிற்றல் என்பதாகும். வழக்கில் இது இதன் பொருளன்று. பிடிவாதமாக நிற்றல் என்பதே இத்தொடரின் பொருள்' எனக் கூறுவது எங்ங்ணம்? மேலும் மேற்தந்த விளக்கத்தில் 'குறித்த பொருள் எனவும், பின்பு அதனையே குறிப்புப் பொருள் எனவும் கூறுவதால் பொருள் மயக்கம் ஏற்படுகிறது. இக்கால வழக்கில் குறித்த பொருள் - Specified meaning, குறிப்புப் பொருள் - suggestive meaningஅன்றோ? இரண்டும் வேறுபடுவனவன்றோ?

Page 35
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 58
எனவே, ஒற்றைக்காலில் நிற்றல் என்பது இருகாலில் அன்றி ஒருகாலில் நிற்றல் என்னும் நேர்ப்பொருளைக் குறிக்காது, பிடிவாதமாக நிற்றல் என்னும் பொருளை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குறிக்கும்போது அது மரபுத்தொடராகும் என மாற்றிக் கூறுதல் சிறப்புடைத்து. வழக்கில் எப்பொருளைக் கொள்தல் நன்று எனின், சந்தர்ப்பத்தைக் கண்டுகொள்க. சந்தர்ப்பமின்றிக் கொள்ளும்போது, இரண்டும் அதன் பொருளே. மேலும் பொருட் சிறப்புடைமையும் இன்மையும் சந்தர்ப்பத்தையும் பேசுவோன் கேட்போன் மனநிலையையும் பொறுத்ததேயாகும். VM
தமிழ் 9 235 மரபுத் தொடர்களை உபயோகமான மரபுத் தொடர்கள் என அவற்றின் இலக்கனைப் பொருளுடன் தருகிறது. 214 வினைத் தொடராக அமைகின்றன; 21 பெயர்த்தொடராக அமைகின்றன.
V
தமிழ் 7 (திருத்திய பதிப்பு) என்னும் நூலில்"மாணவர்களுக்கு முதலில் உவமைத் தொடரில் பயிற்சி அளித்து (ப.60), பின்னர் மரபுத் தொடர்கள் விளக்கப்படுகின்றன. மரபுத்தொடர்பற்றிய விளக்கம் பின்வருமாறு:
"நேர்ப்பொருளை உணர்த்தாமல் மறைபொருள் அல்லது குறிப்புப் பொருளை உணர்த்தும் சொற்றொடர்கள் மரபுத் தொடர்கள் எனப்படும்' (ப.122).
மரபு வழியாக மறைபொருளை உணர்த்தல் என்னும் கருத்தும் தமிழ் 7இல் (ப.122) கிடைக்கிறது. தமிழ் 9ற்கும் தமிழ் 7ற்கும் விளக்கத்தில் அதிக வேறுபாடில்லை எனலாம். ஆயின், இங்கும் சொற்றொடர்கள் நேர்ப்பொருளை உணர்த்தாமல் குறித்த பொருளை உணர்த்துமிடத்து மரபுத் தொடர்களாகும் என மேற்காட்டிய விளக்கத்தை மாற்றிக் கூறுதல் வேண்டற்பாலது. ‘மறைபொருள்', 'குறிப்புப்பொருள் எனப் பேசுவதைக் காட்டிலும் குறித்த பொருள் எனல் நன்று. யாரும் மறைபொருளையோ குறிப்புப் பொருளையோ தாமாக உணர்ந்து கொள்தல் அரிது. மரபுத் தொடர் ஒன்றின் மறைபொருளோ குறிப்புப் பொருளோ பலவாதல் கூடும். ஆயின் எதனைக் கொள்வது? இதுதான் எனக் குறித்தல் வேண்டுமன்றோ? தமிழில் சில மரபுத் தொடர்கள் ஒரு பொருளுக்கு மேற்பட வழங்குதலும் உண்டு. ஆலாத்தி எடுத்தல் என்பதனைக் காண்க.

59 சுசீந்திரராசா
VI
இனி, பழமொழி என்பது யாது?"நாம்நாள்தோறும் பேசும் வாக்கியங்கள் அவ்வப்போது எம்மால் அமைக்கப்படுவன. அவை அவ்வப்போதைய தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்துவிட்டு மறைந்து போகின்றன. எனினும், சிற்சில வாக்கியங்கள் பொருட்சிறப்பு மிக்கவையாய்ப் பிறந்து, மீண்டும் மீண்டும் எடுத்தாளப்படும் தகுதியைப் பெற்று விடுகின்றன. அத்தகைய வாக்கியங்களே பழமொழிகள்” என்பது தமிழ் 9 (ப.138) மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தரும் விளக்கமாகும். (நம் முன்னோர்களுள்) "புலமை படைத்தவர், அழகிய மொழிநடையிலே கூறிய அறிவுரைகளை நாம் முதுமொழி என்றும் மூதுரை என்றும்போற்றுகின்றோம். அத்துணைப்புலமை படைக்காதோரும், தமது அனுபவத்திற்கண்டவற்றைச சொல்லி வைத்துள்ளனர். அவற்றையே நாம் பழமொழிகள் என்கின்றோம்" என்பது தமிழ் 7 (ப.130) தரும் விளக்கம். ஆயின், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஊக்கமது கைவிடேல், கிட்டாதாயின் வெட்டென மற போன்றவை சில நூல்களில் பழமொழிகளாகவும் கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்ப் பாடநூல்களில் காணப்படும் பழமொழி விளக்கங்களில் நேர்ப்பொருள் அல்லது வெளிப்படைப்பொருள், குறிப்புப்பொருள் அல்லது மறைபொருள்என்றபேச்சேஎழவில்லை.ஏட்டுச்சுரைக்காய்கறிக்கு உதவாது என்பது பழமொழி. இதன்பொருள்: “நடைமுறைக்கு உதவாத வெறும் புத்தகப்படிப்புப் பயனற்றது" (தமிழ் 7, ப.131). இதுபோன்று காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்னும் பழமொழியின் பொருள்: "எந்தக் காரியத்தையும் வாய்ப்பான காலத்திலே செய்துகொள்ளவேண்டும்" என்பது ஆம் (தமிழ் 7, ப.131). இவ்வாறே ஏனைய பழமொழிகளையும் அவற்றின்
பொருளையும் கண்டுகொள்க.
பழமொழிகள் பலவற்றிற்கு இருபொருள் உண்டு என்பது வெள்ளிடைமலை. ஒன்று நேர்ப்பொருள் அல்லது வெளிப்படைப் பொருள்; மற்றது குறிப்புப் பொருள் அல்லது மறைபொருள். குறித்த பொருள் எனவும் பேசலாம். மரபுத் தொடருக்கு முன்னர் கூறிய விளக்கத்தை இங்கு நினைவுகொள்க. பழமொழிகளும் நேர்ப்பொருள், குறிப்புப் பொருள் உடையன எனின் அவை மரபுத் தொடராகும் தகுதியும் பெறுகின்றன அன்றோ? பழமொழியும் மரபுத் தொடர் எனக் கொள்வதற்குத் தடை யாது? வேறுபட்டன எனின் வேறுபாட்டையன்றோ வலியுறுத்திக் காட்டுதல் வேண்டும்?

Page 36
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 6O
மரபுத் தொடரைத் தொடர் எனவும் பழமொழியை வாக்கியம் எனவும் வேறுபடுத்தலாம் எனின் அதுவும் பொருந்தாது. காற்றுள்ளபோது தூற்றிக்கொள் என்பது வாக்கியம்; பந்தம் பிடித்தல் என்பது தொடர் என வேறுபடுத்துவது பொருந்தாது. இவற்றை நாம் கொள்ளும் முறையைப் பொறுத்ததே இவ்வேறுபாடு, காற்றுள்ளபோது தூற்றிக் கொள்தல் எனக் கொள்ளின் இதுவும் தொடர் ஆகும். பந்தம் பிடிஎனின் வாக்கியமாகும். பந்தம் பிடித்தல் என்பதில் உள்ள -த்தல் நாம் படைத்துக் கொண்டது. இதன் எதிர்மறை வடிவத்தையும் ஒர்க, பந்தம் பிடி என்பதே அடிப்படை வடிவமாகும்" w
VII
இனி, உவமைத் தொடர்களைக் காண்போம். போல’ என்பதை நீக்கி விட்டால் உவமைத் தொடர் மரபுத் தொடராகின்றது. ஊமை கண்ட கனாப்போல, குடத்தினுள் விளக்குப்போல, குன்றின் மேலிட்ட விளக்குப் போல ஆகிய உவமைத் தொடர்கள் போல இன்றி மரபுத் தொடராகக் கொள்ளப்பட்டுள்ளன (பரந்தாமனார், ப.248, 249). உவமைத் தொடர்களை போல' என்பதனோடு பழமொழிகளாகவும் கொள்தல் உண்டு'. பரந்தாமனாரின் இனிய சொற்றொடர்களுள் சில நமது தமிழ்ப் பாடநூல்கள் மரபுத் தொடருக்குக் கூறும் விளக்கத்தின்படி மரபுத் தொடராகவும் அமையக்கூடியவை. அழுத கண்ணும் சிந்திய மூக்கும் (ப.247), எலியும் பூனையுமாக (ப.248), ஒட்டமும் நடையுமாய் (ப.248) போன்றவற்றைக்
காண்க.
VIII
எனவே, இதுகாறுங் கூறியவற்றால் தமிழில் மரபுத்தொடர்பற்றி நிலவுங் கருத்து சிந்திக்குமிடத்துத் தெளிவற்று குழப்பமாகக் காணப்படுகிறது என்பதும் பலநிலைகளில் ஆராய்தல் வேண்டற்பாலது என்பதும் புலனாகும்.
IX
இன்று மொழியைப் பல கோணங்களில் இருந்து ஆராய்ந்து வரும் மொழியியலார் இடியம் பற்றிச்சிந்தித்துள்ளனரா?அவர்கள் நோக்கில் இடியம்
என்பது யாது?

61 சுசீந்திரராசா
X
இன்றுவரை வெளியாகியுள்ள மொழியியல் பாடநூல்களில் அமெரிக்க நாட்டு மொழியியல் அறிஞர் சாள்ஸ் எப்ஹொக்கெற் தமது நூலில்' இடியம் பற்றி-இடியத்தின்வரைவிலக்கணம்,தோற்றம்,இயல்பு,வகைஎன்பனபற்றி - ஓரளவு விரிவாகக் கூறியுள்ளார். இக்கருத்துக்களை நூலின் ஒரு பகுதியில் விவரண நோக்கிலும் மற்றொரு பகுதியில் வரலாற்று நோக்கிலும் கூறியுள்ளார். பிரித்தானிய மொழியியல் அறிஞர் றொபின்ஸ் தமது நூலில்' இடியம் பற்றி மிகச் சுருக்கமாகக் கூறியுள்ளார். இவர்கள் இருவரது கருத்துக்களையும் காண்போம்.
XI
முதற்கண் ஹொக்கெற் கூறும் கருத்தை நமது தேவைக்கேற்பக்
காண்போம். இவர்,
“அமைப்பிலிருந்துபொருளை உய்த்துணரமுடியாதஇலக்கணவடிவம் ஒன்றைத்தற்காலிகமாக'y" என அழைப்போம். யாதும் ஒரு’y" தன்நிகழ்வில் தன்னைக் காட்டிலும் பெரிதான 'y" ஒன்றில் உறுப்பியாக இல்லை எனின் இடியமாகும்'
என இடியத்திற்கு வரைவிலக்கணங் கூறுகிறார்.
Youtung என்னும் சீனமொழி வடிவத்தில் (Chinese form) இரு அண்மை உறுப்புக்கள் உள. அவையாவன: you tung முதல் உறுப்பின் பொருள் கொழுப்பு, எண்ணெய்.இரண்டாவது உறுப்பின்பொருள்'பெரிய உருளை வடிவான கொள்கலம்'. ஆங்கிலத்தில் black cat என்பதில் black 6T66TUg Cat என்பதை விசேடிப்பதைப் போன்று மேற்காட்டிய சீனவடிவத்திலும் முதல் உறுப்பு இரண்டாவது உறுப்பை விசேடிக்கிறது. எனவே அமைப்பு அடிப்படையில் youtung என்பதன் பொருள் எண்ணெய் கொள்கலம்' என உய்த்துணர முடிகிறது. ஆயின் இதுபோன்ற பிறிதோர் வடிவத்தில் இவ்வாறு பொருளை உய்த்துணர முடியவில்லை.
mashang எனும் சீன வடிவத்திலும் இரு அண்மை உறுப்புக்கள் உள. ஒன்று ma, மற்றது Shang முதலுறுப்பின் பொருள் ‘குதிரை' இரண்டாவது உறுப்பின்பொருள் மேலே உள்ள இடம்','உச்சி','மேலே செல்' என்பனவாம். இங்கும் முதலாவது இரண்டாவதை விசேடிக்கிறது. அமைப்பு

Page 37
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 62
அடிப்படையில் mashang என்பதன் பொருள் 'குதிரையின் முதுகு, 'குதிரையின் முதுகு மீது என உய்த்துணரலாம். ஆனால் இதன் பொருள் இதுவன்று; வேகமாக', 'உடனடியாக’ என்பனவே பொருளாம். சீனமொழியைத் தாய்மொழியாகப் பேசுவோனே ma, shang என்ற இரண்டையும் அறிந்திருந்தும் mashang என்பதன் பொருளை (தனியே கற்றாலன்றி) அறியாதவனாகவே இருப்பான். மரத்தில் பட்டை உரித்தல் என்பதன் அமைப்பு அடிப்படையில் அதன் பொருளை உய்த்துணர்ந்து கொள்வது போலக் கல்லில் நார் உரித்தல் என்பதன் பொருளை உய்த்துணர்ந்தால் அப்பொருள் தவறானதாகும். அதன் அமைப்பு நமக்குப் பொருளை உணர்த்துவதாக இல்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் கூட அதன் பொருளைத் தனியே கற்றிருந்தாலன்றி அமைப்பு அடிப்படையில் பிழையான - அர்த்தமற்ற - பொருளையே கூற முற்படுவர்.
ஹொக்கெற்றின் விளக்கத்தின்படி மொழியிலே காணப்படும் பல தொகை வடிவங்கள் (composite forms) இடியம்கள் ஆம் அவர் ஒரு தனி வடிவம் இரண்டோ இரண்டிற்கு மேற்பட்ட இடியமாகவோ அமைதலும் உண்டு என்கிறார்." மேலும் தனிச்சொல் ஒன்று கூட வெவ்வேறு இடியமாக அமைதலும் உண்டு என்கிறார்." எந்த ஒரு மொழியிலும் இடியம்கள் மிகப்பல; நாள்தோறும் புதியன தோன்றிக் கொண்டே இருக்கின்றன. சில தோன்றி உடனே மறைகின்றன. ஏனையவை நீண்டகாலம் வாழ்ந்து
மறைகின்றன; வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு மொழியிலும் இடியத்தின் ஆக்கத்திற்கு வாய்ப்பான, உகந்த கோலங்கள் (patterns) உண்டு. இவற்றுள் சில எல்லா மொழிகளுக்கும் பொதுவானவை. ஹொக்கெற் இடியம்களின் வகைகளைப் பதிலானவை (Substitutes), gui Ouufe,6it (personal names), (5Djé5 6.JL46) is 56t (abbreviations), Gla poljрпLi GlgЛ603,8,5т (phrasal compounds), o su stolo g|60sf356T (figures of Speech), G5 TěšGODF (slang) 6T60Të GongDjálp Ti. M6JÖÓlb5
எடுத்துக்காட்டுக்கள்:
பதிலானவை: எத்தனை பழங்கள் உண்டு?
மூன்று. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
மூன்றுஎன்பது எத்தனையோவினாக்களின்விடையாக வரலாம்.நாலும் இரண்டும் ஆறன்று; குறித்த நூலுக்குப் பதிலானவை. is your cat a he or a she? என்னும் வாக்கியத்தில் he, she ஆகிய இரண்டும்பதிலானவை; எனவே இடியம்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

63 சுசீந்திரராசா
இயற்பெயர்கள்: கமலம்
கமலம் என்னும் சாதாரணப் பெயர் இயற்பெயராகக் கொள்ளப்பட்டுள்ளது. சில மொழிகளில் சாதாரணப் பெயர் ஒன்று இயற்பெயராகும்போது இலக்கணப் பண்பிலே வேறுபடுவதுண்டு.' தமிழில் கமலம், மலர் போன்ற அஃறிணைப் பெயர்கள் உயர்திணை இயற்பெயர்களாக வழங்கும்போது இலக்கணப் பண்பிலே வேறுபடுமாற்றைக் காண்க. இயற்பெயராகவன்றி வேறு எவ்வகையிலும் வழங்காத வடிவங்களும் மொழிகளில் உண்டு. ஆங்கிலத்தில் 6TGB)ğšgjš5 ITLOB : Guds (Mary), 6SN6O6Suud (William), 6T6Slag Guģš (Elizabeth).
குறுக்க வடிவங்கள்: யுனெஸ்கோ
குறுக்க வடிவங்கள் சில மீண்டும் சொல்போல அமைந்து விடுகின்றன.
யுனெஸ்கோ என்பது சொல் போலவே அமைந்துள்ளது.
சொற்றொடர் தொகைகள்: வெள்ளை அறிக்கை
A white paper The white paper
A woman doctor.
உவமை அணிகள்: அவன் படிப்பிலே புலி
He married a lemon.
Gay, Té60s: Scram 'go away கொச்சை வடிவங்கள் மொழியில் பெரும்பாலும் நிலைத்து வாழ்வதில்லை.
மேற்கூறியவை ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் உள. அவற்றை நூலிற்
கண்டுகொள்க.
ΧIΙ
றொபின்ஸ் என்பவர் இடியம் என்பதனைப் பின்வருமாறு தமது நூலில் விளக்குகிறார்.
“பகுதியாயுள்ள சொற்களில் ஒன்று மற்றொன்றை விட்டுப் பிரிந்து நின்றுஏனைய பயன்பாட்டில்உணர்த்தும்பொருளடிப்படையில் உய்த்துணர முடியாத சொற்பொருட் செயற்பாட்டை உடைய ஒன்றிற்கு மேற்பட்ட சொற்களின் வழக்கமான சேர்க்கைகளைக் குறிப்பதற்கு இடியம் என்னும்
18
சொல் பயன்படுத்தப்படுகின்றது.

Page 38
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 64
வழக்கிறந்தசில சொற்கள் இடியம்களில் பேணப்படுகின்றனஎனக்கூறி ஆங்கிலத்தில் to and fro, kith and kin போன்றவற்றை எடுத்துக்காட்டாகத் தருகிறார். ஒன்றிற்கு மேற்பட்ட சொற்களின் வழக்கமான சேர்க்கை" எனக் கூறுவதால் இடியம் தொடராகவே அமையும்; தனிச்சொல்லாக அமையாது என்பது இவர் கருத்து.
XIII
தமிழிலே தனிச்சொற்களும் இடியமாக அமையும் எனின் மரபுத்தொடர் என்னும் பிரயோகத்தை மாற்றி அமைத்தல் வேண்டும். Idiom என்பதற்கு இருமொழி அகராதி" தரும் தமிழ்ச்சொற்களுள் மரபுக் கூறு, மரபு வழக்கு என்பன பொருத்தமாகும்.
தமிழிலே அந்த அலுவல் தன்னால்தான் நடைபெற்றது என்று கண்ணன் கொக்கரித்துத் திரிகிறார் / கூவித் திரிகிறார் போன்ற கூற்றுக்கள் சாதாரணமானவை. ஈண்டு கொக்கரித்துத் திரிதல், கூவித்திரிதல் என்பன ஐயமின்றி மரபுத் தொடர்கள். மேற்காட்டிய கூற்று பொருள் மாற்றமின்றி அந்த அலுவல் தன்னால்தான் நடைபெற்றது என்று கண்ணன் கொக்கரிக்கிறார் / கூவுகிறார் என வழங்குதலும் உண்டு. இங்கு கொக்கரிக்கிறார், கூவுகிறார்என்பன தொடரன்று. மேலும், இன்று அவர்பாடு தொப்பி, அவள் ஒரு பம்பரம் போன்ற கூற்றுக்களில் தனிச்சொல் இடியமாக அமையவில்லையா? idiomatic use எனப் பொதுவாகப் பேசுகின்றோம். இவற்றில் இப்பயன்பாடு இல்லையா? இவை சிந்தனைக்குரிய வினாக்கள் ஆகும்.
தொடர்தான் இடியமாகும் எனக் கொள்ளும்போதும், நாம் கொள்ளத்தக்க பல தொடர்களை மரபுத் தொடர்களாகக் கொள்வதில்லை. 'எனக்கு இப்பொழுது கைநிறைய வேலை உண்டு, அவர் வாய்பொத்திக் கொண்டிருந்தார் என்னுங் கூற்றுக்களில் 'கை நிறைய வேலை', 'வாய் பொத்தி இருத்தல்' என்பனவற்றை யாரும் மரபுத் தொடராகக் கருதவோ கூறவோ காணோம். ஆங்கிலத்தில்handsarefultoshutup என்பன இடியம்கள்
ஆம். தமிழில் காட்டியவை மொழிபெயர்ப்புக்கள் போலத் தோன்றலாம்.

65 சுசீந்திரராசா
XIV
சிந்திப்போர்க்குத் தமிழிலே இடியம் ஆய்வுக்கு வளமான துறையாக அமைந்துள்ளது. வரைவிலக்கணங் கண்டு எவற்றையெல்லாம் இடியமாகக் கொள்வோம்? தமிழிலே தனிச்சொல்லையும் தகுதி கண்டு இடியம் எனக் கொள்வோமா? கொள்ளின் இடியம் என்பதை மரபு வழக்கு எனக் கூறிப்புதிய வழக்காற்றை ஏற்படுத்துவோமா? தமிழிலே உள்ள மரபு வழக்குகளைத் தொகுத்து அவற்றை வகை செய்து, சமூக மொழியியல் அடிப்படையில் ஆராய்தல் வேண்டும். உடல் உறுப்புகளின் செயல்கள் (bodily processes) தொடர்பான எத்தனையோ தொடர்கள் தமிழ்மொழியில் மரபுத்தொடர்களாக வழங்குகின்றன. கோயில், (கோயிற்) சடங்கு தொடர்பான தொடர்கள் மிகப்பல மரபுத் தொடர்களாகவும் வழங்கக் காண்கிறோம். இவற்றையும் இவை போன்ற அடிப்படையுடைய பிறவற்றையும் சமூக மொழியியல் நோக்கிலும் ஆராயலாம் அல்லவா? பாடபேதம் உடையவை, ஈழத்தில் மட்டும் வழங்குபவை, பொது வழக்குடையவை, ஒரே பொருளுடையவை, மொழிபெயர்ப்புக்களாக வந்தவை, எதிர்மறையாக மட்டும் வழங்குபவை, உடன்பாட்டாக மட்டும் வருபவை, இரண்டுமாக வருபவை, இடக்கரடக்கானவை, சமூகத்தின் பன்முகப்பட்ட கலாச்சாரங்களையும் வாழ்க்கைமுறைகளையும் பிரதிபலிப்பவை எனப் பலகோணங்களில் நின்று சிந்திக்கலாம். மேலும், இலக்கிய வழக்குடையவை, பேச்சு வழக்கில் நிற்பவை எனக் காணலாம். இவை தமிழில் எவ்வாறு அமைகின்றன என வரலாற்றுக் கண்கொண்டு ஆராய்ந்து, அவற்றிற்கு வாய்ப்பான கோலங்களாக இருப்பவை எவை எனக் காணுதல் பயனுடைத்து. கூற்றுக்களில் இவற்றின் வரன்முறை பற்றியும் சிந்தித்தல் வேண்டும். தனித்தனியாகவும் கூட்டாகவும் சிந்திப்போம். வாரீர். குறிப்புகள் 1. மரபுத் தொடர் என்றால் என்ன? மொழியியல் அடிப்படையில் வரைவிலக்கணங்கண்டுவிளக்கிக்கூறுமாறுபேராசிரியர்கா.சிவத்தம்பி வெவ்வேறு சமயத்தில் கேட்டார். அப்பொழுது உள்ளத்தில் தோன்றிய குழப்பம் இவ்வாய்வை மேற்கொள்ளத்தூண்டிற்று. அவருக்கு நன்றி. 2. idioms Proverbs என ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நூல்கள் போலவோ தமிழில் பழமொழிகள் என வெளிவந்துள்ள நூல்கள் போலவோ மரபுத் தொடர்களைக் கொண்ட தனிநூல் இதுகாறும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
3. stools : James Main Dixon, English idioms, Thomas Nelson and sons Ltd.,

Page 39
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 66
1.O.
11.
12.
13.
14.
15.
16.
London.
ஆங்கிலத்தில் HMS போன்ற குறுக்க வடிவம் இடியமாக உள்ளது. தமிழில் குறுக்க வடிவம் எதுவும் மரபுத்தொடராக இல்லை. அ.கி.பரந்தாமனார், நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, தமிழ் இந்தியா பதிப்பகம், சென்னை. 1955.
இ.முருகையன் (பதிப்பாசிரியர்), தமிழ் 9, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை, 1974.
இந்நூல் இன்று பாடசாலைகளில் பயன்படுத்தப்படுவதில்லை. எனினும் இதனில் காணப்படும் சிந்தனை பொதுவாகத் தமிழறிஞரின் நோக்கைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம்.
"An idiomatic composite form may coincide in morphemic shape with a form that is not idiomatic. White paper is an idiom when it referes to certain sort of
governmental document, but not when it refers merely to paper that is white" - Charles F. Hockett, A Course in Modern Linguistics, p. 172, Macmillan, 1958.
தமிழ் ஏழாந்தரம் (திருத்திய பதிப்பு), கல்வி வெளியீட்டுத்
திணைக்களம், இலங்கை, 1979.
3,76oTags : Ramulu's 1 OO 1 Select Proverbs M.S.Ramulu & Co., Madras. ஆங்கிலத்தில் Hands areful என்பது ஓர் இடியம். இது வாக்கியம். மு.இராமலிங்கம், யாழ்ப்பாணப் பேச்சுவழக்குப் பழமொழிகள், திருமகள் அழுத்தகம், சுன்னாகம். 1976.
Charles F. Hocket, bid.
R. H. Robins, General Linguistics: An Introductory Survey, Longman, 1971.
"Let us momentarily use the term "Y" for any grammatical form the meaning of which is not deducible from its structure. Any Y, in any occurrence in which it is nota constituent of a larger Y, is an idiom" Ibid. p. 172.
"A single form can be two or more idioms. Statue of liberty is one idiom as the designation of an object in New York Bay, it is another in its reference to a certain play in football". Ibid. p. 172.
"Bearis presumably the same morpheme in Women bear children and can't bear the pain, but it is different idiom in these two environments' bid. p. 172.

67 சுசீந்திரராசா
17. "In Fijian, a word used as a proper name of a person or place is marked by the preceding particle/ko /, while words used as "ordinary" names of things are marked in the same Syntactical circumstances by final na Vanua levus the (or a) big land, big Island' but Iko wanualevul 'Big Island' as the name of the largestisland of the Fiji group". Charles F. Hockett, Ibid. p.311.
18. "Idiom is used to refer to habitual Collocation of more than One word, that tend to be used together, with a semantic function not readily deducible from the other uses of the component words apart from each other". Ibid.).65.
19.5ITsots : A Chidambaranatha Chettiar (ed.) English - Tamil Dictionary,
University of Madras, Madras, 1965.

Page 40
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 68
5
இலங்கையில் தமிழை இரண்டாவது மொழியாகக் கற்றலும் கற்பித்தலும்
ஒரு நாட்டில் பல மொழிகள் வழக்கில் இருக்கும்போது மக்கள் தத்தம் தாய்மொழியுடன் நாட்டில் வழங்கும் ஏனைய மொழிகளையும் இயன்றவரை கற்பது அவர்களுக்கு ஏதோ வகையில் பயனுள்ளதாக அமையும். நமது நாட்டில் இன்று மூன்றுமொழிகள் வழக்கில் உள்ளன. அவை சிங்களம்,தமிழ், ஆங்கிலம் ஆகும். இவற்றுள் சிங்களமும் தமிழும் பண்டுதொட்டு நம்நாட்டு மக்களின் தாய்மொழியாக இருந்து வருகின்றன. ஆங்கிலம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத் தொடக்கத்தில் இருந்து இந்நாட்டு மக்கள் பலரின் இரண்டாவது மொழியாக இருந்து வருகின்றது. மொழிப் பண்பாட்டிலே குறிப்பிட்ட தாய் மொழிகளுக்கும் ஆங்கிலத்திற்கும் பெரும்ளவு வரையறுத்துக் கூறத்தக்க வெவ்வேறு தொழிற்கூறுகள் இருந்து வந்துள்ளன. இலங்கைவிடுதலை அடைந்ததற்குப்பின்னர்மொழிகளின்தொழிற்கூறுகள் பெரும் மாற்றம் பெற்றன.
இலங்கையில் சிங்களவர் பெரும்பான்மையினர்; தமிழர் சிறுபான்மையினர். சிங்களம், தமிழ் தவிர்ந்த பிற மொழிகள் சிலவற்றைத் தாய்மொழியாகக் கொண்டவரும் இலங்கையில் உளர். அவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு இல்லை. பண்டுதொட்டு இன்றுவரை தமிழை இரண்டாவது மொழியாகக் கற்றுத் தேர்ச்சி பெற்ற சிங்களவர் மிகக் குறைவு. இதேபோன்று சிங்களத்தை இரண்டாவது மொழியாகக் கற்றுத் தேர்ச்சி பெற்ற தமிழரும் மிகக் குறைவு. இது உள்நாட்டு மொழியறிவுநிலை. மறுபுறம் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கற்ற நல்ல மொழியாட்சி பெற்ற சிங்களவரும் தமிழரும் மிகப் பலர். இதற்குக் காரணம் ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக, கல்வி
"இணையாசிரியர்: இகயிலைநாதன், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.

69 சுசீந்திரராசா
மொழியாக இருந்தமையேயாகும். பிரித்தானியத் தொடர்பு, உலகத்தொடர்பு என்பனவும் ஆங்கிலம் கற்பதற்குத்தூண்டுதலாக அமைந்தன. கிறித்தவமும் காரணமாயிற்று. அன்று ஆங்கிலம் கற்றவர் பெற்றிருந்த ஆங்கில மொழியறிவு உயர்வாகவே இருந்தது. ஆதலால் ஆங்கிலமறிந்த தமிழரும் சிங்களவரும் தமக்குள் ஆங்கிலம் மூலமே கருத்துப் பரிமாற்றம் செய்து வந்தனர். கிராமப்புற பள்ளி மாணவன் கூட இவ்வாறு ஆங்கிலத்தில் ஓரளவு கருத்துப் பரிமாறக் கூடியவனாக விளங்கினான்.
இந்த நிலை இலங்கை விடுதலை பெற்றதற்குப் பின்னர் படிப்படியாக மாறத் தொடங்கியது. நாட்டிலே சிங்களம் ஆட்சிமொழியாகியது; கல்விமொழிசிங்களம் அல்லதுதமிழ்எனமாறியது.ஆங்கிலத்தின்பயன்பாடு சுருங்கிச் சுருங்கி வந்தது; செல்வாக்கும் குறைந்தது. ஆங்கிலம் பாடசாலைகளிலே இரண்டாவது மொழியாகத் தொடர்ந்து கற்கப்பட்டு வந்த போதிலும் முன்னர் பெற்றிருந்த தகுநிலையை இழந்தது. மாணவர்களின் ஆங்கில உரையாடல்திறனும் எழுத்துத்திறனும் குறைந்து குறைந்துவந்தன. முன்னர் போலன்றி ஆங்கிலத்தை அன்றாட வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தக்கூடிய சிங்களவர், தமிழர் எண்ணிக்கை வீழ்ந்தது. இதனால் காலப்போக்கில் சிங்களவரும் தமிழரும் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் குறைந்தது. மொழிச் சமுதாயங்களிடையே படிப்படியாகப் பிரிவினை ஏற்பட்டது. அரசின் அன்றைய மொழிக் கொள்கையும் அன்று நிலவிய அரசியல் கருத்துக்களும் இப்பிரிவினையை மேலும் இறுகச் செய்தன. காலத்திற்குக் காலம் மொழிச் சமுதாயங்களிடையே தோன்றிய சந்தேகம், வெறுப்பு, காழ்ப்பு, பகை, கலவரம் ஆகியவற்றை இங்கு விரித்துக் கூற வேண்டியதில்லை. அத்தகைய சுற்றுச்சார்பு நிலையில் சிங்களத்தை அல்லது தமிழை இரண்டாவது மொழியாகக் கீற்பதற்கோ கற்பிப்பதற்கோ வேண்டிய ஆர்வம், வாய்ப்பு இல்லாமற் போனது வியப்பன்று.
இன்றைய நிலை சற்று வேறு. இன்று சட்டத்திலே மொழிப் பிரச்சினை தீர்க்கப்பட்டு சிங்களத்துடன் தமிழும் அரச கரும மொழியாக ஏற்கப்பட்டுள்ளது. இதுகாறும் மொழியடிப்படையில் இருந்து வந்த காழ்ப்பு நீங்கும் பொருட்டுச் செய்ய வேண்டிய சிலவற்றுள் சிங்களத்தையும் தமிழையும் இரண்டாவது மொழியாகக் கற்பதைத் தூண்டுவதும் ஒன்றாகும். எனவே சிங்களத்தையோ தமிழையோ இரண்டாவது மொழியாகக் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு வேண்டிய திட்டங்களை நாடு முழுவதிலும் வகுத்தல் விரும்பத்தக்கது. இரண்டாவது மொழி கற்பித்தலில் தற்கால நெறிமுறைகளைப் பின்பற்றுதல் மூலம்

Page 41
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 7ο
மாணவர்களின் மொழி கற்றல் சுமையைக் குறைக்கலாம்; ஆர்வத்தைக் கூட்டலாம். மொழி கற்பிக்கும் ஆசிரியர்களின் சுமையையும் குறைக்கலாம். இன்று ஆங்கிலத்தைநாட்டிலே இரண்டாவதுமொழியாகக்கற்பது கற்பிப்பது பற்றி நாம் அரிதில் முயன்று செயற்படுவதை மனதிற்கொண்டு அத்தகைய செயற்பாடு உள்நாட்டு மொழிகளையும் இரண்டாவது மொழியாகக் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் வேண்டுவதே என உணர்தல் வேண்டும்.
சிங்களமாணவர்கள் தமிழை இரண்டாவதுமொழியாகக்கற்கும்போதும் அவர்களுக்குத் தமிழாசிரியர்கள் தமிழைக் கற்பிக்கும்போதும் பல சிக்கல்கள் தோன்றலாம். அவற்றுள் சிலவற்றை முன்கூட்டியே இனங்கண்டு சுட்டிக் காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
ஒரு மொழியை இரண்டாவது மொழியாகக் கற்பவர் அதனை முதலில் பேசக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும். ஒரு மொழி பல கிளை மொழிகளைக் கொண்டதாயின் எந்தக் கிளைமொழியைத் தேர்ந்தெடுத்துக் கற்பது, கற்பிப்பது என்பது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எழும் ஒரு பிரச்சினையாகும். எழுத்து மொழியும் மக்களிடையே வேறுபடுவதாயின் இத்தகைய பிரச்சினை அங்கும் தோன்றலாம். பிரித்தானிய ஆங்கிலமும் அமெரிக்க ஆங்கிலமும் பேச்சு நிலையிலும் எழுத்து நிலையிலும் வேறுபடுவதைக் கருதுக.
பேச்சுத்தமிழ் இடத்திற்கு இடம், சமுதாயத்திற்குச் சமுதாயம் மிக வேறுபடுவது; பலவாறு வேறுபடுவது. எழுத்துத் தமிழில் அத்தகைய வேறுபாடு மிகக்குறைவு. இலங்கையிலே பேச்சுத்தமிழ் பொதுவாக நோக்குமிடத்து யாழ்ப்பாணத்தமிழ், மட்டக்களப்புத் தமிழ், மலைநாட்டுத் தமிழ், இஸ்லாமியர் தமிழ் என வேறுபடுகின்றது. வேண்டுமானால்,இன்னும் நுட்பமாக வேறுபடுத்தலாம். இவற்றுள் இரண்டாவது மொழியாகத்தமிழைப் பேசக் கற்க விரும்புபவர்களுக்கு எவ்வகையினைத்தேர்ந்தெடுப்பது என்பது கற்றல், கற்பித்தல்நிலைகளில் முதலில் எழும் ஒரு பிரச்சினையாகும்.இன்று தமிழ் பேசக்கூடிய சிங்களவர் மலைநாட்டுத் தமிழையோ இஸ்லாமியர் தமிழையோதான் பின்பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழையோ மட்டக்களப்பு பேச்சுத் தமிழையோ பேசுவதாகக் கூறமுடியவில்லை. காரணம் அதிக தொடர்பும் மிகக் குறைந்த தொடர்புமே. சிங்களவர்களுக்கு மலைநாட்டுத் தமிழருடனும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களுடனும் தொடர்பு மிகஅதிகம். ஆனால், யாழ்ப்பாணத்துமக்களுடனோ மட்டக்களப்பு மக்களுடனோ நெருங்கிய தொடர்பு மிகக்குறைவு.

71. சுசீந்திரராசா
மலைநாட்டுப் பேச்சுத் தமிழும் இஸ்லாமிய மக்களின் பேச்சுத்தமிழும் உலகிலே பரந்துபட்டு வழங்கும் இந்தியப் பேச்சுத்தமிழுடன்அதிக ஒற்றுமை உடையன. எனவே இந்த இருவகைகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுப்பது பயனுள்ளதாக அமையும் என்ற எண்ணம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தோன்றலாம். மறுபுறம் யாழ்ப்பாணத் தமிழ் காலத்தால் சமூக நோக்கில் கீர்த்தி (prestige) பெற்றது. யாழ்ப்பாணத் தமிழும் மட்டக்களப்புத் தமிழும் எழுத்துத் தமிழுடன் ஒற்றுமை அதிகம் உடையன எனப் பொதுவாகக் கருதப்படுகின்றன. எனவே, எழுத்துத் தமிழையும் கற்க விரும்பும் சிங்களவர்கள் இந்த இரு வகைகளில் ஒன்றைக் கற்பது தமக்குப் பயனுள்ளதாக அமையும் என்க் கருதலாம். எது எப்படியாயினும், இவ்வாறு போட்டி போடக்கூடிய இத்தகைய கிளை மொழிகளில் ஏதோ ஒன்றினைக் காரணங் கருதாது தேர்ந்து எடுப்பது தவறாகாது. ஏனென்றால், இவ்வாறு தேர்ந்தெடுத்த பேச்சு மொழி வகையொன்றினை நன்கு கற்றதற்குப் பின் ஏனைய வகைகளையும் தேவையேற்படும்போது ஒருவர் எளிதாகத் தாமாகவே பேசப் பழகிக் கொள்ளலாம். ஏனைய கிளைமொழிகளைச் சிறிய முயற்சியுடன் நன்கு புரிந்து கொள்ளலாம். தமிழிலே பேச்சுமொழி வகைகள் மிகப் பலவாயினும் தமிழர் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கின்றனர் அன்றோ? கிளைமொழிகளைப் புரிந்துகொள்ளும் அளவிலே வேறுபாடு இருக்கக்கூடும். பொதுவாக அந்த வேறுபாடு பெரும் விபரீதத்தினை ஏற்படுத்தாது. −
மொழி அமைப்பு மொழிக்கு மொழி வேறுபடக் காண்கிறோம். மொழிகளை இரண்டாவது மொழியாகக்கற்கும்போது அமைப்புவேறுபாட்டு அடிப்படையில் சிக்கல்கள் தோன்றுவது உண்டு. சிங்களமும் தமிழும் வெவ்வேறுமொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை. அவை அமைப்பிலே எல்லா நிலைகளிலும் வேறுபடுபவை. எனவே சிங்களத்தையும்தமிழையும்தற்கால மொழியியல் நெறிமுறைக்கேற்ப ஒப்பீட்டு அடிப்படையில் ஆராய்ந்து ஒப்புவமைகளையும் வேற்றுமைகளையும் கண்டறிவது கற்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். மொழியின் பல நிலைகளிலும் ஒப்பீட்டாய்வை மேற்கொள்ளலாமெனினும் இங்கு ஒலியியல் ஒலியனியல் ஆகிய இரு நிலைகளிலும் மட்டும் ஒப்பீட்டாய்வை மேற்கொண்டு சிங்கள மாணவர்கள் தமிழைக் கற்றலிலும் அவர்களுக்குத் தமிழைக் கற்பித்தலிலும் எழக்கூடிய சிக்கல்களை மட்டும் சுருக்கமாகச் சுட்டிக் காட்டுகின்றோம். இதேபோன்று உருபனியல், வாக்கியவியல், சொற்பொருளியல் ஆகிய நிலைகளில் ஆய்வு பின்னர் மேற்கொள்ளப்படும்.

Page 42
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 72
எந்த ஒரு மொழியைக் கற்க முற்படும்போதும் மாணவர்களுக்குமுதலில் தோன்றும் பிரச்சினை உச்சரிப்புப் பற்றியதாகவே இருக்கும். ஏனென்றால், ஒரு மொழியை உச்சரிக்காமல் கற்றல் அரிது; கற்கும் மொழியில் புதிய ஒலிகளும் ஒலிகளின் புதிய சேர்க்கைகளும் இருப்பது உண்டு. சொற்களில் ஒலிகள் பயின்று வரும் இடங்களும் புதியனவாகலாம். வரும் ஒலிகள் ஓரளவு பழக்கமானவை என்றாலும் அவற்றின் தன்மையிலே சிறிய சிறிய வேறுபாடு இருக்கலாம்.
இங்கு யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழை சிங்கள மாணவர்கள் கற்கும்போதும் அவர்களுக்கு அதனைக் கற்பிக்கும்போதும் தோன்றும் பிரச்சினைகள் சிலவற்றை வகுப்பறையில் மொழி கற்றல், கற்பித்தல் ஆகிய செயற்பாடுகளைச் சில ஆண்டுகள் அவதானித்த அநுபவ அடிப்படையில் கூறுவோம். இந்த அவதானிப்பு கொழும்புப் பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி நிலையம்
ஆகிய இடங்களில் இடம்பெற்றது.
இனி, முதற்கண் உயிர் ஒலியன்களைக் கருதுவோம். சிங்களத்தில் (கொழும்பிலும் சுற்றுப்புறத்திலும் பேசப்படும் வகை) 13 உயிர் ஒலியன்கள் உள. அவற்றுள் 7 குறில்; 6 நெடில். அவையாவன:
Ա i:
Ee a O e: e:
3E 3. ae
யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் 10 ஒலியன்கள் உள. அவற்றுள் 5 குறில்; 5 நெடில். அவையாவன:
i Ա i: Uli:
e Ο e: O
3 a:
இருமொழிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழிலே உயிர் ஒலியன்களின் எண்ணிக்கை குறைவு. தமிழில் உள்ள 10 ஒலியன்களுக்கும் இயைந்து உடன்படும் ஒலியன்கள் சிங்களத்தில் உண்டு. மேலதிகமாக ஐ ஐ:3 என்பன சிங்களத்தில் ஒலியன்கள்.
இரு மொழிகளிலும் உள்ள உயிர் ஒலியன்களின் மாற்றொலிகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள. தமிழில் (+) () ஆகிய இரண்டும் // ஒலியனின் மாற்றொலிகள். சிங்களத்தில் (1) மட்டுமே | ஒலியனின் மாற்றொலி. தமிழ்ச் சொற்களில் / வரும்போதெல்லாம் அதனைச் சிங்கள மாணவர் ll என்றே ஒலிக்கிறார்கள். அதாவது, (4) என ஒலிக்க வேண்டிய

73 சுசீந்திரராசா
இடத்தும் (i) என்றே ஒலிக்கிறார்கள். இதேபோன்று தமிழில் /i/ ஒலியனின் மாற்றொலியாக (+) வரும்போதும் அதனை மாணவர்கள் (i) என்றே ஒலிக்கிறார்கள். தமிழில் /u/ ஒலியன் (+) (u) ஆகிய இரண்டையும் மாற்றொலியாக உடையது. சிங்களத்தில் /ul ஒலியன் (u) எனும் மாற்றொலியை மட்டும் உடையது. இதே நிலை இதனை ஒத்த நெடிலிலும் உண்டு.எனவேதமிழ்ச்சொற்களில்(+)te)வரும்போதுஅதனைமாணவர்கள் முறையே (u) (u) என ஒலிக்கிறார்கள். /nakku/ எனும் சொல்லைத் தமிழர் (nakkt) என ஒலிப்பர். ஆனால் சிங்கள மாணவர் (nakku) என்றே ஒலிக்க முற்படுவர். இது தனித்தன்மை வாய்ந்த உச்சரிப்பாகத் தோன்றும்.
தமிழில் |a| ஒலியன் (a) (e) எனும் மாற்றொலிகளையுடையது. சிங்களத்தில் |a| ஒலியன் (ae) எனும் மாற்றொலியை உடையது. தமிழில் (e) வரும்போதெல்லாம் அதனைச் சிங்கள மாணவர் (ae) என்று ஒலிக்க் முற்படுகின்றனர். தமிழ்ச் சொற்களின் ஈற்றில் வரும் -ay எனும் தொடரை e என ஒலிக்கும் போக்கு அவர்களிடம் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக (katay) "கடை" எனும் சொல் (kate) என ஒலிக்கப்படுகிறது. சொற்களின் முதலசையில் வரும் நெடிலின் நீட்டத்தைக் குறைத்து உச்சரிக்கும் போக்கு தமிழ் கற்கும் சிங்கள மாணவர்களிடம் உண்டு. சிங்களத்தில் சொற்களின் ஈற்றில் வரும்உயிர்ஒலிகள்ஒருவகைகுரல்வளைஒலியின் பிடியுடன்(glotal catch) உச்சரிக்கப்படுகின்றன. இந்தப் பழக்கம் தமிழ்ச் சொற்களின் ஈற்றில் வரும் உயிர் ஒலிகளை ஒலிக்கும்போதும் சிங்கள மாணவர்களுக்கு வந்து விடுகிறது. எடுத்துக்காட்டாக (V++) "வீடு' எனும் சொல்லை (vidu?) என ஒலிக்கிறார்கள். இருமொழிகளிலும் மூக்கின ஒலிகளுக்கு முன்னர் வரும் உயிர் ஒலிகள் மூக்கினச் சாயல் பெறுகின்றன. ஆனால் சிங்களத்தில் இந்த மூக்கினச்சாயல் வன்மை பெற்றது.தமிழிலேமென்மையாகவருவது.சிங்கள மாணவர்கள் தமிழ்ச் சொற்களிலும் மூக்கினச் சாயலை வன்மைப்படுத்தி விடுகிறார்கள். இத்தகைய இயல்புகளால் சிங்கள மாணவர்கள் பேசுந் தமிழ் சிங்களத்தமிழ்' ஆகிவிடுகிறது.
இனி மெய்யொலியன்களைப் பார்ப்போம். சிங்களத்தில் 24 மெய்யொலியன்கள் உள:தமிழில் 14 மெய்யொலியன்கள் உள.சிங்களத்தில் 10 ஒலியன்கள்மேலதிகமாகஉள.இருமொழிகளிலும்உள்ளஒலியன்களைப் பின்வரும் அட்டவணைகளில் காண்க:
சிங்களம்:

Page 43
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 74
6 d d g
:S 's
m r
| r
V y
(h
தமிழ்:
t -- t C
n n
r
W у
இரு மொழிகளிலும் 11 ஒலியன்கள் இயைந்து உடன்படுகின்றன. தடையொலியன்களைப் பொறுத்தவரை தமிழிலே நுனிநா நுனியண்ண ஒலியன் உண்டு; சிங்களத்தில் இல்லை. சிங்களத்தில் ஒலிப்பு, ஒலிப்பில்லா, முன் மூக்கினச் சாயல் ஒலியன்களுக்கிடையே உள்ள முவ்வழி முரண் தமிழிலே இல்லை
இரு மொழிகளிலும் மூக்கொலியன்களைப் பொறுத்தவரை முவ்வழி முரண் உண்டு. ஆனால் மூன்றாம் ஒலியன் வேறுபடுகிறது. சிங்களத்தில் மருங்கொலியன் 1: தமிழில் 2. தமிழிலே குழிந்துரசொலியனும் குரல்வளை பிளந்துரசொலியனும் இல்லை.
தமிழ் மெய்யொலியன்களின் பல மாற்றொலிகள் சிங்கள மாணவர்களுக்குப் புதியன. எனவே அவற்றை ஒலிப்பதிலும் இனங்கண்டு கொள்வதிலும் அவர்களுக்குச் சிக்கல் தோன்றுகின்றன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம். சிங்களத்தில் நுனிநா நுனியண்ணத்தடை ஒலிft) இல்லை. இது தமிழ்ச் சொற்களில் முதல் நிலையில் வரும்போதெல்லாம் அதனைச் சிங்கள மாணவர்கள் வளைநாத் தடையொலியாக, அதாவது (!) என உச்சரிக்கிறார்கள். சொற்களிலே ஈருயிர்க்கிடையே தனி (t) வரும்போது அதனை நுனிநா நுனியண்ண வருடொலியாக, அதாவது tr ஆக

75 சுசீந்திரராசா
ஒலிக்கிறார்கள். இரட்டித்துt) என வரும்போது அதனை t என ஒலிக்கிறார்கள்.நாவளை மூக்கொலியும் நாவளை மருங்கொலியும் தமிழிலே ஒலியன்கள். அதாவது (n) (n) தொழிற்பாடுடைய ஒலிகளாக (functional) முரண் நிலையில் வருவன. இவைபோன்று நுனிநா நுனியண்ண மருங்கொலியும் வளைநா மருங்கொலியும் தமிழிலே ஒலியன்கள். சிங்களத்தில் (nm) மாற்றொலிகள்.[][மாற்றொலிகள், (n)(1)ஆகியவற்றில் வளைநாத்தன்மை (retrofexion) குறிப்பிடத்தக்க அளவு இல்லை; மிக இலேசாகவே உள்ளது. ஆதலால் மாணவர்கள் தமிழில் வரும்/n/fr) ஒலிய்ை நுனிநா நுனியண்ண ஒலியாக, அதாவது (n) ஆக ஒலிக்கின்றனர். இதேபோன்று |[[ஒலியை நுனிநா நுனியண்ண ஒலியாக, அதாவது !!! :) ஆக ஒலிக்கின்றார்கள். இதனால் அவர்கள் பேச்சில் தமிழில் வேறுபடுத்தி ஒலிக்கப்படும் சொற்கள் (கொன்னை, கொண்ணை, கொல்லை, கொள்ளை போன்றவை) ஒரே மாதிரி ஒலிக்கப்படுகின்றன. அதனால் உச்சரிப்பிலும் பொருளிலும் வேறுபடும் இவ்விரு சொற்கள் ஒன்றாகி விடுகின்றன. சொல்லின் நடுவே உயிர் ஒலிகளுக்கிடையே வரும்/p/ ஒலியன் (***) என ஒலிக்கப்படும்.இதனைச்சிங்களமாணவர்கள் பெரும்பாலும்(4)எனவோ (b)எனவோ ஒலிக்கின்றனர்.தமிழ்ச்சொற்களில் ஈருயிர்களுக்கிடையேவரும் (k) ஒலியன் (x) என ஒலிக்கப்படும். இதனைச் சிங்கள மாணவாகள் 5Ld மொழியில்வரும்(h)ஆகவோ(g)ஆகவோஒலிக்கிறார்கள்.இனிப்பொதுவாக ஒப்பிட்டுப் பார்க்கும்போது தடை ஒலிகளின் ஒலிப்பு வன்மை இருமொழிகளிலும் வேறுபடுகிறது. சிங்களத்தில் வரும்b d qjg ஒலியன்கள் எனக் கண்டோம். இவை இவற்றையொத்த தமிழ் மாற்றொலிகளை விட ஒலிப்பு வன்மை மிக்கவை. எனவே தமிழ் மாற்றொலிகளையும் சிங்கள மாணவர்கள் மிக்க ஒலிப்புடனேயே ஒலிக்க முற்படுகின்றனர். /w/ (v) சிங்களத்திலும் தமிழிலும் உண்டு. தமிழ்ச் சொற்களின் முதல் நிலையில் வரும் (v) ஒலியைச் சிங்கள மாணவர்கள் ஒலிக்கும்போது தமது உதடுகளைக் குவிய வைத்து ஒலிக்கின்றனர். ஆதலால் அது தமிழ் ஒலியாகத் தோன்றுவதில்லை.
தமிழ் மெய்யொலியன்கள் கூட்டாக வரும்போதும் சிங்கள மாணவர்களுக்குச் சில சிக்கல்கள் தோன்றுகின்றன. சிங்களத்திலும் தமிழிலும் மெய்யொலியன்கள் பெரும்பாலும் இரட்டிப்பன. ஆனால் சிங்களத்தில் வரும் இரட்டிப்பு தமிழில் உள்ளதைக் காட்டிலும் விறைப்பும் நீட்டமும் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. இந்தப் பழக்கம் தமிழ்ச்

Page 44
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 76
சொற்களைஉச்சரிக்கும்போதும்வருவதுஉண்டு.தமிழில்வரும்(t),(r),(pr), (!) ஆகிய சேர்க்கைகள் பிரச்சினையாகும். இவற்றை அவர்கள் பெரும்பாலும் முறையே (t) (rh Inn), (II) என ஒலிக்கிறார்கள். தமிழில் வெவ்வேறு ஒலியன்கள் சேர்ந்து வரும்போது அவற்றைச் சிங்கள மாணவர்கள் பெரும்பாலும் பின்னோக்கு ஓரினமாக்கி (regressive assimilation) ஒலிக்கின்றனர். (metku) எனும் சொல் (mekkt) ஆகிவிடுகிறது. சிங்களத்தில் ஒரிடமூக்கன் அல்லாத ஒலி + தடை ஒலி வருவதில்லை. தமிழில் வருவது உண்டு. இவ்வாறு தமிழில் வரும் ஒரிட மூக்கன் அல்லாத ஒலியைச் சிங்கள மாணவர்கள் ஒரிடமூக்கன் ஆக ஒலிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக (enbut) அன்பு' எனும் சொல்லை (ambu) என ஒலிக்கிறார்கள். சொல் வேறாகிப் பொருளும் வேறுபட்டு விடுகிறது.
இதுகாறும் ஒப்பீட்டாய்வு அடிப்படையில் கூறிய சில கருத்துக்கள் தமிழ் மொழியை நமது நாட்டில் இரண்டாவதுமொழியாகக் கற்பிப்பதற்குத்துணை செய்யும் எனவும் இவ்வாய்வு ஏனைய அறிஞர்களையும் இத்தகைய ஆய்வை மேற்கொள்ளவும் செம்மைப்படுத்தவும் தூண்டும் எனவும் நம்புகின்றோம்.
உசாத்துணை
Coates, WADeSilva, MWS., 1960, "The Segmental Phonemes of Sinhalese." University of Ceylon Review, 18, 163-75. V−
Fairbanks, G. H. Gair, J.W., DeSilva, M.W.S., 1968, Colloquial Sinhalese, Partl, Ithaca, N.Y.
Gair. J.W., Suseendirarajah, S., Karunatillake, W.S. 1978, An introduction to Spoken Tamil, External Services Agency, University of Sri Lanka.
Kailajnathan.R., 198O, A Contrastive Study of Sinhala and Tamil Phonology, M.A. diss. (unpublished), University ofKelaniya.
Karunatillake. W.S., Suseendirarajah. S., 1973, "Phonology of Sinhalese and Sri LankaTamil; AStudy in Contrastand Interference.", Indian Linguistics, Vol.34, No.3, POOma.
Suseendirarajah.S., 1967. A Descriptive Study of Ceylon Tamil, Ph.D. diss. (unpublished), Annamalai University.

77 சுசீந்திரராசா
6
மொழித் தொடர்பு
1.0 மொழிக்கலப்பு
இரு வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளும்போது அவர்களுடைய மொழிகளில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. மாற்றம் என்பது இருவர் மொழிகளிலும் ஏற்படத்தக்கதொன்று. ஒருவர் மொழி மற்றவர் மொழியை ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு அளவிற்குச் செல்வாக்குப்படுத்தலாம். இங்குப் பேச்சு மொழிகளைத்தான் கருத்திற் கொள்ளுகின்றோம். ஆனால் நூலளவில் எழுத்து மொழியாக நிற்கும் பிறமொழி ஒன்றைப் படிக்கும்போது, செல்வாக்கு என்பது ஒரு மொழியில்தான் தோன்ற முடியும். ஏனெனில் வாசிப்பவர்களின் முதல் மொழி நூலளவில் நிற்கும் எழுத்து மொழியைச் செல்வாக்குப்படுத்த முடியாது. ஆயின்,வாசிப்பவர்களுடைய முதல்மொழியை நூலளவில் உள்ள எழுத்து மொழி ஏதோ வகையில் செல்வாக்குப்படுத்தமுடியும். செல்வாக்குப் படுத்தும் மொழியைக் கடன் தரும் மொழி (donor language) என்றும் செல்வாக்கை ஏற்றுக்கொள்ளும்மொழியைக்கடன்பெறும்மொழி (borrowing language) என்றும் கொள்ளலாம். இன்றைய மொழியியலார் மொழிக்கலப்பை எளிமையாகவிளக்குவதற்குஇச்சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறார்கள்.
1.1 வாய்ப்பான நிலை
ஒரு மொழி கடன் தர வேறு ஒரு மொழி கடன் ஏற்று மொழிக்கலப்பு உண்டாகின்றது. மொழிக்கலப்புப் பல காரணங்களில் தங்கியுள்ளது. இவற்றில் ஒன்று மொழிகளிடையே உள்ள மொழி ஒப்புமை அளவு (degree of similarity between two languages). Ob GILDTSB56T 635 635 Fģg (5ėsSud நிலை மொழிக்கலப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பானது அன்று. இருமொழிகள் மிக மிக வேறுபட்டு, ஒரு மொழி பேசுபவரை மற்ற மொழி பேசுபவர்

Page 45
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 78
சிறிதேனும் விளங்கிக் கொள்ள முடியாத நிலையிலும் மொழிக்கலப்பு ஏற்படுவதற்கு இடமில்லை. ஒன்றில் இக்கரை அல்லது அக்கரை என்ற இந்த இரண்டு நிலைகளையும் தவிர்த்து, மொழிக்கலப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பான ஒரு இடைப்பட்ட நிலையை மொழிகளின் தொடர்பிற் காண முடிகின்றது.
இருமொழிகள் தொடர்பு கொள்வதால் மட்டும் ஒரு மொழி (அ என்று கொள்வோம்) மற்ற மொழியில் இருந்து (ஆ என்று கொள்வோம்) கடன் பெற்றுவிடும் என்று சொல்வதற்கில்லை. கடன் ஏற்படப் பொதுவாக இரு நிலைகள் தோன்ற வேண்டும்.அமொழியைப்பேசுபவர்ஆமொழியிலிருந்து தாம் கடன் பெற்றுக் கையாள நினைக்கும் சொல்லை விளங்கிக் கொள்ள வேண்டும்; அல்லது விளங்கிக் கொண்டதாகவோ எண்ண வேண்டும். 1.2 கலப்பிலே தோன்றும் கடன்
இங்குக் கடன் என்ற சொல்லின் பொருளை விழிப்புடன் கொள்ள வேண்டும். பணம் இல்லாதபோது ஒருவர் பிறரிடம் சென்று கடன்பெறும் நிலை வேறு வந்து தாமாகவே கடன் தருபவர் பெரும்பாலும் இல்லை. சொற்கள் இல்லையே என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு மொழி பிறமொழிச் சொற்களை ஏற்பதில்லை. பெரும்பாலும் வேற்று மொழிகள் ஒரு மொழியில் வந்து கலந்து கடன் தருகின்றன. மொழிகளைப் பொறுத்தவரையில் பெற்ற கடனைத் திருப்பிக் கொடுக்கும் பொறுப்பும் இல்லை. கடன் கொடுக்கும் மொழி கடன் கொடுப்பதால் இழப்பது ஒன்றுமில்லை; தான் முன்பு இருந்தவாறே இருக்கும். ஆனால் கடன் பெறும் மொழிதான் முன்பு இருந்த நிலையில் இருந்து சிறிதளவேனும் மாற்றம் அடைந்து விடுகிறது. இதுவரை மொழியில் இல்லாத ஏதோ சில கூறுகள் நுழைந்துவிடுகின்றனவல்லவா?
1.3 கலப்பின் தோற்றமும் பரவலும்
ஒருவர் பிறமொழி ஒன்றிலிருந்து ஒரு சொல்லையோ இலக்கணக் கூற்றையோ தமது தனியாள் மொழியில் (idiolect) ஏற்றுக் கையாளலாம். இவ்வாறு பிறமொழிக் கூறு ஒன்று ஒருவரின் தனியாள் மொழியில் புகுதலையும், அது புகுந்தபின் பலரின் தனியாள் மொழிகளில் இடம்பெற்று மொழியில் பரவுவதையும் வேறுபடுத்தி விளக்க வேண்டும். ஒருவரே பிறமொழிச் சொல் ஒன்றைத் தமது தனியாள்மொழியில் முதன்முதலாக ஆளலாம்.இவரோடு பேசுகின்றவர்கள் இவர் புதிதாகப் பயன்படுத்தும்இந்தப் பிறமொழிச் சொல்லைத் தாமும் பயன்படுத்தத் தொடங்கலாம்.

79 சுசீந்திரராசா
இவ்வாறு புதிதாகப் புகுந்த சொல், காலப்போக்கில் எல்லாருடைய பேசசிலும
பரவிநிலைபெறலாம்; பரவாமல் முதன்முதற்பயன்படுத்தியவரின்பேச்சிலே
மட்டும் சில நாளோ பல நாளோ வாழ்ந்து வழக்கிறந்து போகவும் கூடும்.
ஆதலால் ஒருவரின் தனியாள்மொழியில் மட்டும் வேற்றுமொழிச் சொல்
ஒன்று இடம் பெற்றுவிட்டால் பொதுவாக மொழிக்கலப்பு ஆகி, மொழியில்
மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஒரு
மொழியில் வந்து கலந்த பிறமொழிச் சொற்களை யார் யார் முதன்முதலாக
ஏற்று வழங்கினார்கள் என்றும் அவை எக்காலத்தில் மொழியில் வந்து
புகுந்தன என்றும் திட்டவட்டமாகக் கூறுவதற்கு வேண்டிய பழைய
ஆவணங்கள் பல மொழிகளில் இல்லை. ஆனால் சில மொழிகளிலே சில சொற்கள் தோன்றிய கால வரலாற்றைத் திட்டவட்டமாகக் கூற முடிகின்றது.
Physicist, scientist 6T6TD Garfissir 1840-go 9650TGS William Whewell என்பவரால் ஆக்கப்பட்டனவாம். சில சொற்களை நோக்கும்போது அவை: தொடக்கத்தில் நாட்டின் சில பகுதிகளில் மட்டும் நெடுநாள் வழங்கிக் காலப்போக்கில் ஏனைய பகுதிகளுக்கும் பரவியதாக அறிகின்றோம்.
1.4 பிறமொழிச்சொற்கள் 1.4.1 ஏற்கும் நோக்கமும் காரணமும்
பிறமொழிச் சொல்லை ஒருவர் கையாள்வதற்கு மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ ஏதோ ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.
மக்கள் சில வேளைகளில் அதிகாரம் படைத்த சிலரைத் தங்களிலும் பார்க்க உயர்ந்தவர்கள் என மதிக்கிறார்கள். தமது எண்ணத்தில் உயர்ந்து விளங்குபவர்களை வாழ்க்கை முறையிலும் பேச்சிலும் பின்பற்ற விரும்புகிறார்கள். தந்தையை "டடி என்றும், தாயை "மமி’ என்றும், மாமியை அன்ரி" என்றும் சொல்வதே நாகரிகம் எனவும் அப்பு, ஆச்சி, அம்மா, மாமி என்பன இழிவழக்கு எனவும் நம்மிற் சிலர் எண்ணிய காலம் உண்டல்லவா? தமிழையே ஆங்கிலம் போலப்பேசியவர்களும் உண்டு! ஆங்கிலேயர் போல வாழ விரும்பித்தம்மையும் ஆங்கிலேயர் எனப் பிறர்மதிக்கவேண்டும் என்று விரும்பிய தமிழர் சிலரும் ஒரு காலத்தில் ஆங்காங்கு இருந்தார்கள். சிறுபான்மையோர் பெரும்பான்மையோருடன் ஒன்றிவாழ விரும்பிப் பெரும்பான்மையோரின்பேச்சைத்தமதுமொழியில் பின்பற்றுவதும்உண்டு. இவற்றிற்கெல்லாம் காரணம் அவர்களின் மதிப்பு நோக்கமேயாகும் (prestige motive).

Page 46
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 8O
ஏதோ ஒன்றைக் குறிக்க ஒரு மொழியில் சொல் இல்லையே என்ற குறையை நிறைவுபடுத்த விரும்பும் மனப்பான்மை காரணமாகப் (the need filingmotive) பிறமொழிச்சொல்ஏற்கப்படுகின்றது.புதிய அனுபவங்கள்,புதிய பொருள்கள், புதிய செயல்முறைகள் - இவை பிறமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்வதற்கு இன்றியமையாத ፴ቋ(Ù சூழ்நிலையை உருவாக்குகின்றன.
ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுகின்றவர்கள் வாழ்ந்த ஊர்களில் வேறு மொழி பேசுபவர்கள் வந்து குடியேறும்போது முன்னவர்களின் மொழியில் வழங்கிய ஊர்ப் பெயர்களைப் பின்வந்தவர்கள் தமது மொழியில் ஏற்றுக் கொள்வது உண்டு. வீயன்னா, பாரிஸ், லண்டன் ஆகிய ஊர்ப்பெயர்கள் கெல்ரிக் (Celtic) மொழியைச் சேர்ந்தவை. இவைபோலவே அமெரிக்காவில் உள்ள மிச்சிக்கன், சிகாகோ, விஸ்கொன்சின் என்ற ஊர்ப்பெயர்கள் அல்கோங்கியன் (Algonquian) மொழிப் பெயர்களாம். நமது நாட்டிலும் சிங்களவர் வாழும் பகுதிகளில் தமிழ் ஊர்ப் பெயர்களையும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள ஊர்ப்பெயர்களையும் காணலாம்.
மேலும் சொந்த மொழியிலே உள்ள சில சொற்கள் குறித்து நிற்கும் கருத்துக்கள் ஒரு வகையான இழிவுணர்வு கலந்தனவாகவும், ஆனால் அவற்றிற்கு நேரான பிறமொழிச் சொற்கள் சொந்த மொழியிற் காணப்படும் அந்த இழிவுணர்வு அற்றவை என்றும் மக்களாற் கருதப்படுவது உண்டு. தமிழர் சமுதாயத்திலே வண்ணானைவண்ணான்என்றோகட்டாடி(கட்டாடி என்ற சொல் வண்ணானை அழைப்பதற்குப் பயன்படுத்தப்படுவது; இலங்கையில் மட்டும்வழக்கில் உண்டு.)என்றோஅழைப்பதைக்காட்டிலும் டோபி என்று அழைத்தால் அவனுக்கு மகிழ்ச்சி. இதேபோல அம்பட்டன் தன்னைப் ‘பாபர் எனப் பிறர் அழைப்பதை விரும்புகின்றான். வண்ணான், கட்டாடி, பரியாரி (பரிகாரி) என்ற சொற்கள் இருப்பினும், நமது சமுதாயச் சூழ்நிலையால் டோபி', 'பாபர் என்ற வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
1.4.2 ஏற்கும் முறை
பிறமொழிச் சொற்களை அப்படியே எப்பொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை. சிலவேளைகளில் அப்படியே ஏற்றுக்கொள்வதும் உண்டு. பாஸ்" என்ற ஆங்கிலச் சொல்லை யாழ்ப்பாணத் தமிழில் அப்படியே ஏற்றுக் கொண்டோம். புதிய பொருளையோ கருத்தையோ குறிப்பதற்கும் பிறமொழிச் சொல்லை ஏற்காமல் மொழியில் இருக்கின்ற சொற்களையே

81 சுசீந்திரராசா
அப்பொருளையோகருத்தையோ குறிப்பதற்குப்பயன்படுத்துவதும் உண்டு. இந்தியப் பேச்சுத்தமிழில் கார் (car) என்ற ஆங்கிலச் சொல்லிற்குப் பதிலாக பெரும்பாலும் வண்டி என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள். அணு என்ற சொல் நுண்மை, நுண்மையானது, பொடி என்ற பொருளில் தமிழ் இலக்கியங்களில் வருகிறது. வடமொழி வேதங்களிலே வந்துள்ளது. மணிமேகலையில்(27:113,114)வரும் அணு என்ற சொல்லிற்குப்பொருள் “உயிர் (not atom)" என்பர் டாக்டர் என்.சுப்பிரமணியம். ஆனால், இன்று பெரும்பாலும் அணு என்பது விஞ்ஞான உலகில் atom என்ற பிறமொழிச் சொல் தரும் பொருளையே தமிழிலும் குறிக்கும் சொல்லாக விளங்குகிறது. விமானம், வானவூர்தி போன்ற சொற்களையும் காண்க. இவ்வாறு வேற்றுமொழிச் செல்வாக்கால் சொந்த மொழியிற் சொற்களை இடம் பெய்ர்த்து அமைத்துக்கொள்வதை loan Shift என்று மொழியியலார் கூறுவர்.
பிறமொழிகளிலே சில சொற்றொட்ர்கள் குறிக்கும் கருத்தைச் சொந்த மொழியில் உள்ள சில ஏற்ற சொற்களைக் கூட்டிச் சொற்றொடராக்கி அதே கருத்தை வெளிப்படுத்தும் முயற்சியும் மொழிகளிலே நடைபெறுவது உண்டு. அருவி என்ற சொல் தமிழிலே இருந்தபோதிலும் water-fals என்ற ஆங்கிலச் சொற்றொடரைப் பயின்று, அதன் கருத்தை உணர்ந்து, தமிழிலே வழக்கில் இருந்த நீர்-வீழ்ச்சி என்ற இருசொற்களையும் ஒன்றாகக் கூட்டி water-fals என்பது எதனைக் குறிக்கின்றதோ அதனைக் குறிக்க நீர்வீழ்ச்சி என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. இத்தகைய அமைப்பை loan
translation என்பர் மொழியியலார்.
பிறமொழிச்சொல்லின் ஒரு பகுதியை மட்டும் பெற்றுச் சொந்தமொழிச் சொல் ஒன்றின் பகுதியோடு ஒட்டி, ஒட்டிய இரு பகுதிகளையும் ஒரு சொல்லாகப் பயன்படுத்துவது உண்டு. எடுத்துக்காட்டாக, பதினான்கு என்ற எண்ணைக் குறிக்கும் தசநான்கு என்ற சொல் நெடுநல்வாடையில் (வரி:115) வருகிறது. தச என்பது வடசொல்; நான்கு என்பது தமிழ்ச்சொல். இவ்வாறு அமைத்துக் கொள்வதை 'வேற்றுமொழிக் கூறுகளின் ஒட்டமைப்புச் சொல்" (ioan bend) என்பர். சொந்த மொழியிலே உள்ள சில விகுதிகளைப் பிறமொழிச் சொற்களோடு சேர்த்துப் பொருள் வேறுபாட்டை உணர்த்துவதும் உண்டு. யாழ்ப்பாணத் தமிழிலே clerk என்ற ஆங்கிலச் சொல்லைக் 'கிளாக்கர், 'கிளாக்கு', 'கிளாக்கன்' என விகுதிகளைச் சேர்த்து
நுட்பமான பொருள் வேறுபாட்டை உணர்த்துவதைக் காண்க.
ஒரு மொழியின் கிளைமொழிகளில் பிறமொழிச் சொல் வெவ்வேறு

Page 47
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 82
வடிவம் பெறுவதும் உண்டு. யாழ்ப்பாணத் தமிழிலே பேனை என்கிறோம்; இந்தியத்தமிழில் பேனா என்கிறார்கள். இரண்டு கிளைமொழிகளிலும் பென் (pen)என்றே அமைத்திருக்கலாமல்லவா? ஏன்பேனைஎன்றும்ப்ேனாஎன்றும் அமைந்தது? விளக்கம் தருவது எளிதன்று. மக்களுடைய உச்சரிப்பு முறையைக் காரணமாகச் சொல்லலாம். கடன் தந்த மொழியை அடிப்படையாகக் கொண்டும் விளக்கலாம். போர்த்துக்கீய மொழியில் வழங்கும் peno என்ற சொல்லை ஒட்டி இந்தியத் தமிழில் பேனா என அமைத்திருக்கலாம். pen என்பதன் ஈற்றில் உயிர் எழுத்துஇல்லை.இவற்றுள் எது சரி? இரண்டுமே சரி.
1.4.3 ஏற்ற சொற்களில் மாற்றம்
பிற மொழிச் சொற்கள் வந்து கலந்து வழக்கில் இடம் பெறும்போது
அவை பொருள் வேறுபடுவதும் உண்டு. அவசரம் என்ற சொல் வடமொழியில் சந்தர்ப்பம் (time) என்ற பொருளுடையது. இன்று தமிழில் உடனடி அல்லது படுவிரைவு என்ற பொருளைக் குறிக்கின்றது. வடமொழியில் கேவலம் என்பது மட்டும் என்ற பொருளைத் தரும். தமிழில் உருவற்றது அல்லது அழகற்றது என்பது பொருள். மேலும், மனநிலை என்ற பொருளுடைய அவஸ்தா என்னும் வடமொழிச்சொல் தமிழில் துன்பத்தைக் குறிக்க வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணத் தமிழிலே எம்டன் என்ற சொல் எந்தச் சூழ்நிலையிலும் தப்பிப் பிழைத்துக் கொள்பவனைக் குறிக்கின்றது. உலகப்போர்க்காலத்தில் ஒரு கப்பலின் பெயராக எம்டன் வழங்கியது. இந்தக் கப்பல் போரிலே மாளாது தப்பிப் பிழைத்தது.
குறிப்பிட்ட ஒரு கருத்தையுடைய சொல் வழக்கில் உள்ளபோதே, அதே கருத்தைத் தரும் பிறமொழிச் சொல் மொழியிற் புகுந்து விடுவதையும் காண்கிறோம். ஆயின், இரண்டு சொற்களும் வாழ்வதற்குப் போட்டியிடுகின்றன.காலப்போக்கில் ஒன்றின் வீழ்ச்சி மற்றதன் வாழ்வாகும். சில வேளைகளில் இரண்டு சொற்களும் நிலைத்து வாழும், இவ்வாறு ஒரே கருத்தைத் தரும் சொந்த மொழிச் சொல்லும் பிறமொழிச் சொல்லும் நிலைத்திருக்கும்போது, பொதுவாக, இந்த இரண்டுசொற்களில் ஏதோஒன்று தான் குறித்து நிற்கும் கருத்தில் சிறிது மாற்றம் பெற்றுவிடுகின்றது.
1.4.4 ஒன்றாகக் கலத்தல்
முதல் முதல் பிறமொழிச் சொல்லைக் கையாளபவாகள் அச்சொல்லின்
உச்சரிப்பை இயன்றளவு ஒட்டி உச்சரிப்பார்கள். காலப்போக்கில் பலருடைய

83 சுசீந்திரராசா
பேச்சில் பரவும்போது அந்தச் சொல் உருவத்திலும் உச்சரிப்பிலும் மாறிவிடுகின்றது. இவ்வாறு மாறி, இறுதியில் பேசுபவர்களின் ஒலிப்பழக்கத்திற்கேற்பத் தழுவப்பட்ட சொல்லாகி விடும். Shroff என்பது சிறாப்பர் என்றும் doctor என்பது டாக்கொத்தர் என்றும் ஆகியதைக் காண்க.
ஆனால் குறுகியகால எல்லையிற் குறிப்பிட்ட ஒரு மொழியில் இருந்து பல சொற்கள் வந்து வேறொரு மொழியிற் புகுமாயின், சொற்கள் வந்து கலக்கும் முறை ஒன்று அமைந்து விடுகின்றது. தமிழில் வடமொழிக் சொற்கள் வந்து அமையும் முறைபற்றிப் பவணந்தி முனிவர் நன்னூல் பதவியலில் விரிவாக விளக்குகின்றார். இன்று ஆங்கிலச் சொற்களைத் தமிழில் அமைக்கும் முறை, மொழிபெயர்ப்பு நூல்களிலே வேறுபடக் காணலாம். ஆயினும் காலப்போக்கில் ஏதோ ஒரு அமைப்பு முறை தமிழில் வேரூன்றி நிலைக்கும் எனச்சொல்லலாம்.
சொந்த மொழியிலே பிறமொழிச் சொல்லொன்று வந்து கலந்து வேரூன்றி விட்டால், இச்சொல்லும் சொந்த மொழியில் உள்ள ஏனையு சொற்களைப் போலாகி விடுகின்றது. சிம்மி, சைக்கிள், புசல், புனல் (funnel), பேனை என்ற சொற்களை அன்றாடு பேச்சில் வழங்குகின்றோம். இவற்றைப் பிறமொழிச் சொற்கள் என்று எத்தனை பேர் எண்ணுவார்கள்? இவற்றிற்கும் மொழிபெயர்ப்பு வேண்டுமா? இவை தமிழ்ச் சொற்கள் என்றே சொல்லத் தோன்றவில்லையா? பொதுமக்களைக் கேட்டுப்பார்த்தால் தமிழ்ச் சொற்கள் என்றே சத்தியம் செய்வார்கள்! திறைச்சேரிஎன்ற சொல்லைக்காலப்போக்கில் அறிஞரும் திறை*சேரி எனப்பிரித்துப் பொருள் கூறித் தமிழ்ச்சொல்லே என வாதாடலாம். இவ்வாறு பொருள் கொள்ள இவ் வேற்றுமொழிச் சொல் எதிர்பாராத வகையில் இடந்தருகிறது.
1.4.5 வழக்கிறத்தல்
ஒரு மொழியில் வந்து கலந்த பிறமொழிச் சொற்கள், அவை குறித்து நிற்கும் கருவிகளோ பொருள்களோ சமுதாய வாழ்வில் இல்லாமற் போகத் தாமும் வழக்கிறப்பதுண்டு. Tram என்ற சொல் தமிழர் நாவில் நடமாடி அக்கருவி இங்கு அற்றுப்போக அதனைக் குறிக்கும் சொல்லும் வழக்கிறந்து கொண்டிருக்கிறது. இந்தத் தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகள் tram என்றால் என்ன என்று கேட்பார்களல்லவா? மேலும் பிறமொழிச் சொல் காலப்போக்கில் பொருள் திரிந்து இடக்கான சொல்லானால் (taboo) அதுவும் வழக்கிறந்து விடும். :

Page 48
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 84
1.5 கலப்பால் ஆகும் விளைவு
கொள்கையளவில், ஒரு மொழி பிறமொழி ஒன்றை மிக மிகச் செல்வாக்குப் படுத்திக் காலப்போக்கில் எந்தமொழி கடன் தந்த மொழி எந்தமொழி கடன் பெற்ற மொழி என்று சொல்ல முடியாத ஒரு நிலையை உருவாக்கலாம்.தமிழிலே உள்ள சில சொற்கள்வடமொழிச்சொற்களாதமிழ்ச் சொற்களா என்று பகுத்து அறியமுடியாத நிலை உண்டல்லவா? கால்டுவெல், எமனோ, பரோ போன்றவர் சில வழிகளைக் கூறுகின்றார்கள். ஆனால் இன்னும் தெளிவு இல்லை.
பிறமொழிச்சொற்களைவரையறை இன்றிக்கடன்வாங்குவதால் ஆகக் கூடிய விளைவு என்ன? பிஜின்மொழிகள் தோன்றலாம்.'ஐரோப்பிய வணிகர் தமது வாணிபத்தைப் பெருக்கும்போது அவர்களுக்குப் பிறநாட்டு மொழியறிவு தேவையாக இருந்தது. சீனாவோடு வாணிபம் செய்தபோது ஐரோப்பியர் தமது எண்ணத்தைத் தமது மொழியிலே சொல்லி, ஏதோ வகையில் கருத்தைப் பரிமாற வேண்டும் என்ற விருப்பினால் கொச்சை ஆங்கிலத்திலும் (broken English) குழந்தை மொழியிலும் பேசினார்கள். இவ்வாறு பேசினால் சீனர்கள் தம்மை எளிதில் புரிந்து கொள்வார்கள் என்று எண்ணினார்கள். ஐரோப்பியர் சொல்லுவதை எப்படியோ புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தாலும், ஆவலாலும் சீனர்களும் அவர்கள் சொல்லுவதைத் திரும்பச் சொல்லிச் சொல்லிப் பழகினார்கள். காலப்போக்கில் சீன-பிஜின் ஆங்கிலம் (Chinese Pidgin English) என்ற மொழி தோன்றியது. இந்த மொழியும் ஏனைய மொழிகளின் பண்புகள் உடையது. இந்த மொழியிலே பொதுவாகச் சொற்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஆனால் தேவை ஏற்படும்போது இம்மொழியும் கடன் பெற்றுச் சொற்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள முடியும்.
1.6 கலப்பிற்கு வரவேற்பு
பிறமொழிக் கலப்பை வரவேற்று ஏற்றுக்கொள்ளும் முறை மொழிக்கு மொழி வேறுபடுகிறது. சில மொழிகள் பிறமொழிச் செல்வாக்கைத் தயங்காமல் வரவேற்கின்றன; சில எதிர்க்கின்றன. ஒரே மொழிகூடப் பிறமொழிக் கலப்பைக் காலத்திற்குக் காலம் வெவ்வேறு வகையில் வரவேற்கின்றது. உடைகளும், பழக்கவழக்க முறைகளும் காலத்திற்குக் காலம் மாறுவதுபோலப் பிறமொழிக் கலப்பிற்கு அளிக்கப்படும் வரவேற்பும் காலத்திற்குக் காலம் மாறுவதைக் காண்கின்றோம்.

85 சுசீந்திரராசா
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மன் மொழியில் வேற்றுமொழிச் சொற்கள் வந்து கலந்ததை அந்நாட்டு அறிஞர்கள் எதிர்த்தார்கள். இவர்கள் எதிர்த்ததன் விளைவாகப் பிறமொழிச் சொற்கலப்பு நின்றுவிடவில்லை. மேலும் அதிகரித்தது. பண்டுதொட்டே றோமான்ஸ் மொழிகள் (Romance languages) லத்தீன் மொழியில் இருந்து கடன் வாங்கி வருகின்றன; யப்பான் மொழியும் கொரியன் மொழியும் சீன மொழியிலிருந்து கடன்வாங்குகின்றன. தமிழ்நாட்டிலும் வடமொழியைத் தெய்வமொழியெனப் போற்றித் தமிழில் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்திய காலமும் பின்பு வெறுத்து வடமொழிச் சொற்களை நீக்குவதற்கே இயக்கம் நிறுவிய காலமும் உண்டு. இன்று தமிழ் அறிஞர்களிடையே வடமொழியைக் கண்மூடிக் கொண்டு போற்றும் நிலையும், வெறுக்கும் நிலையும் மாறி இன்றியமையாத் தேவைக்கேற்ப ஏற்கும் நிலை தோன்றி வருகின்றது என்று கூறலாம்.
2.0 தமிழில் மொழிக்கலப்பு
2.1 தமிழ்-வடமொழித்தொடர்பு
தமிழில் வேற்றுமொழிக் கலப்பை ஆராய்கிறவர்கள் தமிழ்
வடமொழியோடு கொண்ட தொடர்பைச் சிறப்பாக ஆராய வேண்டும். ஏனெனில், பன்னெடுங்காலமாகத்தமிழும் வடமொழியும் இந்திய நாட்டிலே அறிஞர்களால் போற்றப்படும் மொழிகளாக விளங்கி வருகின்றன. நமக்குக் கிடைத்த தமிழ் நூல்களுள் மிகப் பழமையான தொல்காப்பியமே வடசொல் பற்றிப் பேசுகின்றது. எனவே பண்டை நாட்களிலேயே தமிழ் மொழிக்கும் வடமொழிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பையிட்டு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
2.1.1 வடமொழிச் செல்வாக்கு
ஒரு காலத்தில் இந்திய நாடு முழுவதிலும் வடமொழி பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது. உலக மொழி போல இந்தியாவிலே வடமொழி விளங்கிற்று. இன்று பல நாடுகளில் ஆங்கிலம் உலகமொழியென ஒரளவு போற்றும் அளவிற்குச் செல்வாக்குப் பெற்றிருப்பது போல அன்று இந்திய நாட்டில் வடமொழி செல்வாக்குப் பெற்றிருந்தது. வடமொழி அறிவு தமிழறிவிற்கு இன்றியமையாதது எனத் தமிழறிஞர்களும் கருதினார்கள்;

Page 49
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 86
தெய்வமொழி எனப் போற்றினார்கள். வடமொழியை நன்கு கற்றுப் பயிற்சி பெற்றார்கள். வடமொழியில் சங்கரர், இராமானுசர் போன்றவர்கள் எழுதினார்கள். இவர்கள் காலத்தில் வடமொழியில் எழுதுவது சிறப்பு எனப் போற்றப்பட்டது போலும். தமிழ்நாட்டிலே காஞ்சி வடமொழிக் கல்விக்குச் சிறந்து விளங்கியது. பழமை வாய்ந்த லீலாதிலகம் என்னும் மலையாள இலக்கண நூலே வடமொழியில் எழுதப்பட்டது. இவ்வாறு வடமொழிக்கும் ஏனைய இந்திய மொழிகளுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இதன் பயனாக மொழிகள் கலந்தன. இங்கு மொழிக்கலப்பு என்று சொல்லும்போது வடமொழி பிறமொழிகளிலும், பிறமொழிகள் வடமொழியிலும் கலந்ததாகக் கொள்ள வேண்டும் கலந்த அளவில் வேறுபாடு இருக்கலாம். தமிழில்ே வடமொழிச்சொற்கள் கலந்ததைப் போலச்சில தமிழ்ச்சொற்கள்(தமிழுட்பட ஏனைய திராவிட மொழிகளிலும் வழங்குமாயின் திராவிடச்சொற்கள் என்க)
வடமொழியிலும் கலந்தன என்ற உண்மையை அறிஞர் விளக்கியுள்ளனர்.
2.1.2 காலந்தோறும் தமிழில் வடமொழி
தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் வடசொற்கள் அதிகமாக இல்லை. உலகம், காலம் போன்ற சொற்கள் தமிழ்ச் சொற்களா வடமொழிச் சொற்களா என்ற கருத்து வேறுபாடு உண்டு. அந்தம், உவமம் கரணம், காரணம், காமம்போன்ற சில சொற்களை வடமொழிச்சொற்களாகத் தொல்காப்பியத்தில் காட்டமுடியும்.
தொல்காப்பிய விளக்கங்களுக்குப் புறம்பான வடசொற்களைச் சங்க இலக்கியங்களிற் காண்கின்றோம். யவனர் (புறம் 56.18), யூபம் (புறம் 15:21). சங்க இலக்கியம் சிலவற்றிலே இடம் பெற்றுள்ள வடமொழிச் சொற்களுக்குச் சில எடுத்துக்காட்டு : குறுந்தொகையிலே ஆதி (293:45, யாமம் (6:1); அகநானூற்றிலே அரமியம் (124:5), தேயம் (333:20), நிதி (60:14). வீதி (1479) கலித்தொகையிலே ஆரம் (79:12), காரணம் (60:12), நேமி (105:9); பரிபாடலிலே கமலம் (2:14), போகம்.(5:79); மிதுனம் (11:6); புறநானூற்றிலே அமிழ்தம் (182:2), குமரி (67:6); திருமுருகாற்றுப்படையிலே அவுணர் (வரி 59), அங்குசம் (110), மந்திரம் (95); நெடுநல்வாடையிலே உரோகிணி (163), சாலேகம் (125): சிலப்பதிகாரத்தில் அரமியம்(காதை2:வரி 27).அவுணர்(6:7).ஆரம்(44) சாரணர் (10:163), புண்ணியம் (3:97) முதலிய சொற்களையும் மணிமேகலையில் அசுரர் (6:180), ஆசனம் (962), துக்கம் (25:4) பத்தினி (16:50), 11:11( فارلیا). நாமம் (27:23) முதலிய ہی சொற்களையும்

કે ܀ 2 ܪ” *** : ܝ ܪܝ ܬ ܕ݁ܫܶ - س۔ع۔ مس۔ * 87 ார்க்கோன்டின் பேசி: சுசீந்திரரர்ச்ா
வடசொற்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். திருக்குறளில் ஆதி (1), பாக்கியம் (1141) என்பன வடசொற்கள். இவ்விலக்கியங்களிலே வடமொழி இயற்பெயர்களை உடைய புலவர்களையும் காண்கிறோம்: உருத்திரன் (குறுந்-274), உலோச்சன் (நற்.11), தேவனார் (நற்.227), மார்க்கண்டேயர் (புறம், 365).
ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்புதான் வடசொற்கள் ஏராளமாக வந்து தமிழிற் கலந்தன. இதற்குக் காரணம் தமிழ்நாடு வடமொழிக் கல்விக்குச் சிறந்த இடங்களுள் ஒன்றாக விளங்கியமையே. சைவ வைஷ்ணவ சமயங்கள் ஆற்றல் பெற்று விளங்கியமையும் காரணமாகும். அரசியல், மதம், தத்துவம் ஆகியவை காரணமாக வடமொழி - தமிழ்த் தொடர்பு மிக நெருங்கியது. கணம், சதுர்வேதி மங்கலம், சபை போன்ற சொற்கள் அரசியல் அடிப்படையாகவும், அர்ச்சனை, ஈசுவரன், விட்டுணு போன்ற சொற்கள் மத அடிப்படையாகவும் கலாச்சார அடிப்படையாகவும் தமிழிற் கலந்தன. அரசர்களும் வடமொழிப் பெயர்களைத் தம் பெயராகக் கொண்டனர். குலோத்துங்க, நிருபதுங்க, ராஜராஜ ராஜேந்திர ஆகிய பெயர்களைக் காண்க. ஒட்டக்கூத்தரின்
பாடல்களில் தமிழ்ப்படுத்திய வடசொற்களைக் காணலாம்.
மணிப்பிரவாள நடை தோன்றியபோது பல வடமொழிச் சொற்கள் பெரும்பாலும் தத்துவச் சொற்கள் - தமிழிற் கலந்தன. 13, 14, 15ஆம் நூற்றாண்டுகள் தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு வரை சைவர்களாலும் வைஷ்ணவர்களாலும் போற்றப்பட்ட மணிப்பிரவாள நடை மலையாளத்திற் குடிகொண்டு நிலைத்ததைப்போல்" தமிழில் நிலைக்கவில்லை. அருணகிரிநாதரது திருப்புகழிலும், தாயுமானவர், வில்லிபுத்தூரார் பாடல்களிலும் வடசொற்கள் மட்டுமன்றி வடமொழிச் சொற்றொடர்களும் இடம் பெற்றிருப்பதைக் காண்கின்றோம்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. தமிழில் உள்ள வடசொற்களை நீக்க வேண்டும் என்பது இவ்வியக்கத்தின் குறிக்கோள். தேவையின்றிப் பிறமொழிச் சொற்களைப் புகுத்த வேண்டும் என்று சிலர் விரும்பும்போது இத்தகைய எதிர்ப்பும் தோன்றலாம். ஆனால் வடமொழியை முற்றாக வேண்டாம் என்று உதறித் தள்ளிவிடக்கூடிய காலம் இன்னும் வரவில்லை. தேவை ஏற்படும்போது கலைச்சொற்களை வடமொழியிலிருந்து ஏற்கவேண்டிய நிலையும் முற்றாக மாறிவிடவில்லை."

Page 50
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 88
தமிழ் இலக்கண இலக்கிய நூல்களிலே வரும் சொற்களை ஆராய்ந்து ஒவ்வொரு காலத்திலும் வடசொற்கள் நூற்றுக்கு எத்தனை வீதம் கலந்துள்ளன என்று கணக்கிட்டுச் சொல்லலாம். சில சொற்களைத் தமிழ்ச் சொற்களா வடசொற்களா என்று எளிதில் முடிவுசெய்ய முடியாத நிலை உண்டு என்றோம் (1.5). எனினும், மேற்போக்காகச் சங்க இலக்கியத்தில் ஏறக்குறைய நூற்றுக்கு இரண்டு வீதம் என்றும், பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் நான்கு வீதம் என்றும், ஆழ்வார். நாயன்மார் பாடல்களில் பத்து அல்லது பதினைந்து வீதம் என்றும் சொல்லலாம். மணிப்பிரவாள நடையில் வடசொற்கள் மிக அதிகமாகக் கையாளப்பட்டன. எனினும், பிற திராவிட மொழிகளோடு ஒப்புநோக்கும்போது தமிழில் வடமொழிச் சொற்கள் அவ்வளவு அதிகமாக இல்லை. திராவிட மொழிகளுள் மலையாளமே வடமொழிச் செல்வாக்கால் சொற்பொருளில் மிக மாற்றம் அடைந்தது. பொதுவாகப் பேச்சுத் தமிழில் வடமொழிச் சொல் குறைவு. அதுவும் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழில்
மிகக்குறைவு எனலாம்."
ஒரு மொழியில் மிக எளிதாகக் கலப்பவை பிறமொழிச் சொற்களே.' இலக்கணக் கூறுகள் எளிதாகக் கலப்பதில்லை. பிறமொழிச் சொற்கள் எத்தனையோ தமிழிற் கலந்தபோதிலும், பிறமொழி இலக்கணக்கூறு மலந்ததற்குவீட்டுக்காரன்,வீட்டுக்காரிபோன்றசொற்களில்வரும்-கார்(க்ரு என்னும் வடசொற் பகுதியினின்றும் அமைந்தது) என்ற விகுதி ஒன்றை மட்டுமே காட்ட முடிகின்றது.*
22தமிழில் வடமொழி தவிர்ந்த மொழிகள்
2.2.3 முண்டா மொழிகள்
தமிழ்மொழி வடமொழி தவிர ஏனைய மொழிகளோடு தொடர்பு கொள்ளவில்லையா? வெவ்வேறு காலங்களில் பலமொழிகளோடு தொடர்பு
கொண்டது.
மிகப் பழங்காலத்திலே முண்டாமொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளே தமிழ்மொழிக்கு அயல்மொழிகளாக இருந்தன. தவளை, தவக்கை என்ற சொற்கள் முண்டா மொழிச் சொற்கள் என்பர் அறிஞர். வழுதுணை என்பதும் முண்டா மொழிச் சொல்லாம். இன்று வழங்கும் ஆடுகீடு, கல்லுக்கில்லு, மரம்கிரம் போன்ற எதிரொலிச் சொற்களை (echo words) அமைக்கும் முறை முண்டா மொழிகளிலிருந்து வந்தது எனக்

89 சுசீந்தி ரராசா
கருதுகின்றனர். இத்தகைய எதிரொலிச் சொற்கள் இந்திய மொழிகள் பலவற்றில் உண்டு. தமிழிலே ஒரு சொல்லில் உள்ள முதல் எழுத்திற்குப் பதிலாக கி/கீமட்டும் எதிரொலிச் சொல்லில் வருவதைக் காணலாம்; மற்றும் இந்திய மொழிகளில் ஏனைய வல்லின எழுத்துக்களும் தமிழில் கி/கீ வருகின்ற இடங்களில் வருகின்றன. தமிழில் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை என்ற வேறுபாடும் முண்டா மொழிச் செல்வாக்கு எனக் கருதத் தோன்றுகிறது. இந்த வேறுபாடு வேறு சில திராவிட மொழிகளிலும் இருக்கின்றது. தமிழில் நாம் என்பது உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, ஆனால் இவ்வாறு தொல்காப்பியர் கூறவில்லை. சங்க இலக்கியத்தில் ஆங்காங்கு இந்த வேறுபாட்டைஉய்த்துணரமுடிந்தாலும்இப்பெயர்பயின்று வருமிடங்களிலெல்லாம் வேறுபடுத்தப்பட்டிருப்பதாகக் கொள்வதற் கில்லை. இன்றைய இந்தியத் தமிழிலும் (பேச்சிலும் எழுத்திலும்) இந்த வேறுபாட்டைக்காணலாம்; ஆனால் யாழ்ப்பாணத்தமிழில் இல்லை.
2.2.2 ஏனைய இந்திய மொழிகள்
தெலுங்கு,கன்னடம்,மலையாளம்ஆகியதிராவிடமொழிகளிலிருந்தும் சொற்கள் தமிழிற்கலந்துள்ளன. கத்தரி (வடமொழிKartari?) (துணிவெட்டும் கருவி), பத்தர் (பொற்கொல்லர்) என்பவை தெலுங்குச் சொற்கள். நல்லன் எனப் பொருள்படும் ஒள்ளியன் (சீவக. 741) என்ற சொல் 'ஒள்ளெ என்னும் கன்னடப் பெயரடை அடியாக அமைந்த சொல். அவியல், சக்கை, பறை (பேசு) என்பன மலையாளச் சொற்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் இந்த மொழி அந்த மொழியிலிருந்து கடன்பெற்ற சொற்கள் இவை இவை என வரையறுத்துத் தெளிவாகச் சொல்வதில் இடர்ப்பாடு தேர்ன்றும். இன்னும் வேறு சில இந்திய மொழிகளிலிருந்தும் சொற்கள் தமிழிற் கலந்துள்ளன. பட்டாணி, காயம் (புண் அடையாளம்), குண்டான் போன்ற மராத்தி மொழிச் சொற்களும், தமிழில் கலந்து விட்டதாக டாக்டர் பி.சி.கணேசசுந்தரமும் டாக்டர் வி.ஐ.சுப்பிரமணியமும் காட்டுவர்." ஆட்சி அல்லது நிர்வாகம் சம்பந்தமான உருதுச் சொற்கள் ஆயிரத்திற்கு அதிகமாகத் தமிழில் உண்டு என சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் (SuDS) risuse,Sobis (Tamil Lexicon, Madras University) அறிகின்றோம். அசல், அபின், தபால், தொப்பி, மாகாணம் முதலியன இந்துஸ்தானிச்சொற்களுக்கு எடுத்துக்காட்டு,

Page 51
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 90
2.2.3 சிங்களம், மலாய், சீனம் முதலியன
சிங்களத்தோடு ஏற்பட்ட தொடர்பால் முருங்கா (முருங்கை), அந்தோ ஆகிய இரு சொற்களும் தமிழில் கலந்ததாக இலக்கண உரையாசிரியர் கூறுகின்றனர். அந்தோ என்பது சிங்கள நாட்டுச் சொல் என்று முன்னைய உரையாசிரியர்கள் எழுதியிருந்தாலும், அது ஹந்த என்னும் வடசொல்லின் சிதைவு என்போரும் உளர். போஞ்சிக்காய் என்பதில் போஞ்சி என்ற சொல்லையும்சிங்களச்சொல்லாகத்தமிழ்ப்பேரகராதிகுறித்துள்ளது.ஆயின், இது தவறு எனத் தோன்றுகிறது." சவ்வரிசி என்பதில் சவ் என்ற முதலுறுப்பும், கிட்டங்கி, மங்குஸ்தான் என்ற சொற்களும் மலாய்மொழிச் சொற்கள். மணிலாக் கொட்டை என்பதில் மணிலா என்பது மணிலா (Manila) என்ற ஊர்ப் பெயரடியாகத் தோன்றியது. நேரடியாகவோ மலாய் மொழி வழியாகவோ சீனச்சொற்கள் சில தமிழிற் கலந்துள்ளன பீங்கான் சீனச் சொல். ஏலம் (போட்டியாக விலை கூறி விற்றல்) அரபுச் சொல்; போர்த்துக்கீயர் வழிவந்த சொல். தமிழ்ப் பேரகராதி ஏறக்குறைய 289 சொற்களை அரபு மொழியிலிருந்து வந்தனவாகக் கூறுகின்றது. சுமார், தம் (மூச்சு), தயார் முதலியன பர்ஷிய மொழிச் சொற்களாம். பேரகராதி ஏறக்குறைய 119 சொற்களைப் பர்ஷிய மொழிச்சொற்கள் எனக் குறித்துள்ளது.*
2.2.4 ஐரோப்பிய மொழிகள்
ஒரை (இரண்டரை நாழிகை நேரம்), சுருங்கை, மத்திகை என்பன கிரேக்க மொழிச் சொற்களாம். யவனம் என்பது கிரேக்க நாடு. யவனர் என்ற சொல்லை முன்பு (2.1.2) காட்டினோம். நமது நாட்டைப் போர்த்துக்கீயர் கைப்பற்றி ஆண்டனர். முதலில் மக்கள் போர்த்துக்கீயரைப் பறங்கி என்ற பெயராற் குறிப்பிட்டனர்; பின்பு ஒல்லாந்தரையும் பறங்கி என்றனர். சென்னை மாநிலத்திலே பறங்கிமலை (St.Thomas Mount), பறங்கிப்பேட்டை (Porto Novo) என்னும் இடங்களில் போர்த்துக்கீய மக்கள் வாழ்ந்ததாகக் கருத இடமுண்டு. யாழ்ப்பாணத்திலும் பறங்கித் தெரு என்று ஒரு வீதிப்பெயர் வழங்குகிறது. போர்த்துக்கீயரால் மொழித் தொடர்பு ஏற்பட்டது. அலவாங்கு, அலுமாரி, கடதாசி, கதிரை, கிறாதி, கொய்யா (பழவகை), கோவா (இலைவகை), சப்பாத்து, சாவி, பீப்பா, வாத்து, வாங்கு, யன்னல் என்பனவும் கத்தோலிக்-, பாதிரி என்பனவும் ஆயா, றாத்தல், லாச்சம், பிஸ்கால் என்பனவும் தமிழிலே கலந்த போர்த்துக்கீயச் சொற்களுக்குச் சில எடுத்துக்காட்டு." சித்தாரி (நீதிமன்றத்தில் சித்தாரி) என்ற

91 சுசீந்திரராசா
வினைச்சொல்லும் போர்த்துக்கீயச் சொல்லடியாக (citar) அமைந்தது என அறிகின்றோம். இவ்வாறு வேற்றுமொழிச் சொல்லடியாக வினை அமைவது அரிது. போர்த்துக்கீயரை அடுத்து ஒல்லாந்தர் ஆண்டனர். இன்றும் யாழ்ப்பாணத்தில் லைடன் (Leyden), டெல்ஃற் (Deft) என்ற ஊர்ப் பெயர்கள் ஒல்லாந்தர் ஆட்சியை நினைவுறுத்துகின்றன. உலாந்தா, கக்கூசு, கந்தோர், துட்டு, போஞ்சி என்பன ஒல்லாந்த மொழிச் சொற்கள். குசினி, பட்டாளம், போத்தல், ரோந்து, லாந்தர் என்பன பிரஞ்சுச் சொற்கள். ஆங்கிலேயரின் நீண்டகால ஆட்சியால் நமது நாட்டில் ஆங்கிலக்கல்வி வேரூன்றியது. ஆட்சிமொழி ஆங்கிலமாக மாறியது. எத்தனையோ ஆங்கிலச் சொற்கள் தமிழிற் புகுந்துவிட்டன. இன்று ஆங்கிலம் படித்தவர்கள் தமக்குள் உரையாடும்போது ஏறக்குறைய இரண்டு தமிழ்ச்சொல்லுக்கு ஓர் ஆங்கிலச் சொல் வீதமாகக் கலந்து பேசுவதைக் காண்கின்றோம். ஆங்கில வினைச்சொற்களையும் ஏற்று அவற்றுடன்பண்ணு என்ற தமிழ் வினையைச் சேர்த்துஉரையாடுவதைக்கேட்கின்றோம்:driveபண்ணு,meetபண்ணு,speak பண்ணு, wash பண்ணு. இத்தகைய அமைப்பைப் பிற மொழிகளிலும் காணலாம்.' தமிழிற் கலந்த ஆங்கிலச் சொற்களை அரசாட்சி, பழக்கவழக்கம், மதம், போர், விளையாட்டு, கலாச்சாரம், அறிவியல் போன்ற பல அடிப்படையாக வந்தவை என வகைப்படுத்திக் காட்டலாம். ஆங்கில வாக்கிய அமைப்பும் தமிழ் வாக்கிய அமைப்பைச் செல்வாக்குப்படுத்தியுள்ளது. நீங்கள் தேநீர் விருந்திற்கு அழைக்கப்படுகிறீர்கள்’ எனச் சிலர் எழுதும் வாக்கியத்தில் ஆங்கில வாக்கிய அமைப்பையே காண்கிறோம் என அறிஞர் சுட்டிக் காட்டினர். மேலும், ஆங்கிலத்தின் செல்வாக்கால் ஒரு என்னும் எண்ணுப் பெயரடையைத் தமிழில் வேண்டாத இடங்களிலும் பயன்படுத்துகின்றோம்.
2.3 யாழ்ப்பாணத் தமிழிலே பிறமொழி
யாழ்ப்பாணத்தவருடைய பேச்சிலே வடமொழி ஒலிகள் பெரும்பாலும் திரிந்தே வழங்குகின்றன. இதனால் எழுதும்போதும் கிரந்த எழுத்துக்களைக் கையாளும் வழக்கமும் குற்ைவு, மேஜை என்று இந்தியத் தமிழர் பலர் எழுதுவதை யாழ்ப்பாணத்தவர் மேசை என்றே எழுதக் காண்கிறோம். இன்று இந்தியத் தமிழில் (எழுத்திலும் பேச்சிலும்) கலந்துள்ள அளவு பிறமொழிச் சொற்கள் யாழ்ப்பாணத் தமிழிலே இல்லை எனலாம். காரணம், இந்திய நாடு மிகப்பெரிய நாடு; பல மொழிகள் வழங்கும் நாடு. அமெரிக்கா போல இந்தியாவும் பலமொழிக்கூடமாக விளங்குகிறது. அரசியல்,கலை, வாணிபம்

Page 52
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 92
காரணமாக மக்களின் நடமாட்டம் அதிகம். சங்கம் விளங்கிய மதுரையில் இன்று செளராஷ்டிர மொழியை முதல் மொழியாக உடையவர் மிகப் பலர். வீட்டிலே தெலுங்கோ கன்னடமோ பேசி வெளியே தமிழ் பேசுபவர்களும் படிப்பவர்களும் கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களில் வாழ்கிறார்கள். கல்லூரிகளிலே தமிழ்ப் பேராசிரியராக இருப்பவர் சிலர் தமது வீட்டிலே தெலுங்கோ கன்னடமோ பேசுபவர். ஏனைய இந்திய மொழிகளைப் பேசுவோரும் ஆங்காங்குவாழ்கிறார்கள்.இந்தநிலை இலங்கையில் இல்லை. இன்று இங்கு வழங்கும் மொழிகள் மூன்றே. இவற்றுள் ஆங்கிலத்தின் செல்வாக்கை நமது பேச்சிலும் எழுத்திலும் காணலாம். எழுத்திலே,-தமிழ் வாக்கிய அமைப்பிலே - ஆங்கிலத்தின் செல்வாக்கை இந்தியத் தமிழிலும் பார்க்க யாழ்ப்பாணத் தமிழில் தெளிவாகக் காணலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வெளிவந்த சில மொழிபெயர்ப்பு நூல்களைப் படித்தால் இக்கருத்தைத் தெற்றெனத் தெளியலாம். தமிழ் சிங்களத்தைச் செல்வாக்குப்படுத்திய அளவிற்குச் சிங்களம் தமிழைச் செல்வாக்குப்படுத்தியதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தவரின் இன்றைய பேச்சுத்தமிழிலே கூட எத்தனை சொற்களைச் சிங்களச் சொற்களாகக் காட்டமுடிகின்றது? இந்தியத்தமிழில் இல்லாத-இந்தியர்க்குப் புரியாத - நூற்றுக்கணக்கான சொற்கள் யாழ்ப்பாணத்தவர் பேச்சில் வழங்குகின்றன. ஆனால் இவற்றுள் கந்தோர், சம்பல் போன்ற சில சொற்கள் பெரும்பாலும் சிங்களமல்லாத வேற்றுமொழிச் சொற்கள். ஏனையவை காலப்போக்கிலே யாழ்ப்பாணத் தமிழில் தோன்றிய சொற்கள் எனவே கொள்ளவேண்டியுள்ளது. சிங்களத்திற் காணப்படும் தமிழின் செல்வாக்கைச் சிங்கள அறிஞர்களும் விளக்கியுள்ளார்கள். எனினும் இன்றைய மொழி இயல் கொள்கைப்படி சிங்களத்தையும் தமிழையும் ஒப்புநோக்கி ஆராய்வது ஆராய்ச்சி வளர்ச்சிக்குப் பயனளிக்கும்."
2.4 இலக்கண ஆசிரியர், உரையாசிரியர் கருத்து
5 SpoLos SuSeo 36,253,600T (p60pulq (morphological classification' சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என நான்காக வகுப்பு சொற்கோவை முறைப்படி (etymological classification) வேறு வகையாகவு வகைப்படுத்தல் உண்டு." இதனை,
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே. (880)

93 சுசீந்திரராசா
என்ற தொல்காப்பியச் சூத்திரம் விளக்குகின்றது. இவற்றுள் இயற்சொல்லும் திரிசொல்லும் செந்தமிழ்ச் சொற்கள் என்பர். ஆயின், இயற்சொல்லுக்கும் திரிசொல்லுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
அவற்றுள்,
இயற்சொற்றாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழாமை இசைக்குஞ் சொல்லே. (881)
என்று தொல்காப்பியரும்,
செந்தமிழாகித்திரியாதியாவர்க்கும்
தம்பொருள் விளக்குந் தன்மைய இயற்சொல். (271) என்று பவணந்தியாரும் விளக்குவர். எனவே இயற்சொல் என்பது மக்களின் பேச்சு வழக்கில் உள்ள தமிழ்ச்சொற்களேயாம். இனி,திரிசொல்லை
ஒருபொருள் குறித்த வேறுசொல்லாகியும் வேறுபொருள் குறித்த ஒருசொல்லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி, (882)
என்று தொல்காப்பியரும்,
ஒருபொருள்குறித்த பலசொல்லாகியும் பலபொருள் குறித்த ஒருசொல்லாகியும் அரிதுனர் பொருளன திரிசொல் லாகும். (272)
என்று பவணந்தியாரும் விளக்குவர். எனவே, பேச்சு வழக்கிறந்து
செய்யுளளவில் நின்ற தமிழ்ச்சொற்களே திரிசொல்லாம். *לית ن؛ اثر
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி, (883)
எனத் தொல்காப்பியரும்,
செந்தமிழ் நிலஞ்சேர்பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற்றிரண்டினில் தமிழொழிநிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப. (273)
என நன்னூலாரும் திசைச்சொல் பற்றிக் கூறுகின்றனர். இளம்பூரணர், சேனாவரையர் ஆகியோர் கருத்துப்படி திசைச்சொல் என்பது கொடுந்தமிழ்ச்

Page 53
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 94.
சொல்லாகும். டாக்டர் பி.எஸ்.சுப்பிரமண்ய சாஸ்திரியார் தொல்காப்பியர் singji Soosé Gas Tsosos) "the word borrowed in Tamil from the languages current in the twelve countries bordering the Tamil land" 6T6Tui. 560s&Gla T6) glislepth வடமொழியும் தவிர்ந்த ஏனைய மொழிகளில் இருந்து வரும் சொற்கள் என்போரும் உளர். வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்தன வடசொல் என்றும், பிறமொழிச் சொற்கள் எல்லாம் திசைச்சொற்கள் என்றும் வகைப்படுத்தலே ஈண்டு நோக்கமாகும் என்பர் பேராசிரியர் மு.வரதராசன்.'
இனி,
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
என்பதில் செந்தமிழ் என்பதற்குச் செந்தமிழ் மொழியெனப் பொருள்கொள்ளாது செந்தமிழ்நாடு எனப் பொருள் கூறினர் உரையாசிரியர். பவணந்தியாரும் அவர் கொள்கையினை ஏற்றுப் பன்னிரு நிலத்தின் வேறாகச் செந்தமிழ் நிலமெனத் தனியே ஒன்றுள்ளதென்று கொண்டார். செந்தமிழ் நாடெனத் தனியே ஒரு நாடிருந்ததென்பதும், அஃதொழிந்த ஏனைய பன்னிரு நாட்டுப் பகுதிகளும் கொடுந்தமிழ் நாடாம் என்பதும் பிற்காலத்தார் தம் பிழையுரையாதல் திண்ணம் எனப் பேராசிரியர் வெள்ளைவாரணன் கூறும் கருத்தையும் காண்க.*
வடமொழியிலிருந்து தமிழிற் கலந்த சொற்கள் வடசொற்கள் எனப்பட்டன.
வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. (884)
என்று தொல்காப்பியரும்,
பொதுவெழுத்தானுஞ் சிறப்பெழுத்தானும்
ஈரெழுத் தானு மியைவன வடசொல். (274)
என்று நன்னூலாரும் கூறுவர். தொல்காப்பியர் வடசொல் என்று கூறுவது சமஸ்கிருத மொழியையே என்று பொதுவாகக் கொள்ளினும், வடசொல் என்பதால் பிராகிருதத்தையும் பாளியையும் குறிப்பதாகவும் கொள்ள வேண்டும்.*
வடசொற்கள் தமிழில் அமையும் முறைபற்றிப் புத்தமித்திரனார்,
பவணந்திமுனிவர் போன்ற பிற்காலத்து இலக்கண ஆசிரியர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள். தொல்காப்பியரோ

95 சுசீந்திரராசா
வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. (884)
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். (885)
என்று மட்டும் கூறினார். மிக விரித்துக் கூறவேண்டிய இன்றியமையாமை தொல்காப்பியர்க்குத் தோன்றவில்லை. காலப்போக்கில் வடசொற்கள் ஏராளமாகக் கலந்தபோது கலக்கும்முறை ஒன்று ஏற்பட்டது. இதனை விளக்கும் இன்றியமையாமை பிற்காலத்து இலக்கண ஆசிரியர்களுக்குத் தோன்றியது. வடமொழி தவிர்ந்த பிறமொழிச் சொற்களும் தமிழிற் கலந்தபோதிலும் எண்ணிக்கையிலே வடமொழிச் சொற்கள் பலவாதலால் அவற்றின் ஆக்கத்தை மட்டும் இலக்கண ஆசிரியர்கள் விளக்கினார்கள்போலும்.
பவணந்தியார் வடசொற்களை மூவகைப்படுத்துவர் (நன்.274):
1. வடமொழி, தமிழ் ஆகிய இரண்டிற்கும் பொதுவாகிய
எழுத்துக்களால் (எழுத்து = ஒலி) அமைந்த சொற்கள்.
2. வடமொழிக்கே சிறப்பான எழுத்துக்களால் அமைந்தவை.
3. வடமொழிக்கும் தமிழுக்கும் பொதுவான எழுத்துக்களாலும்
வடமொழிக்கே சிறப்பான எழுத்துக்களாலும் அமைந்தவை.
பிற்காலத்து இலக்கண நூலார்தமிழிற் கலந்தவடசொற்களைத்தற்சமம் என்றும் தற்பவம் என்றும் வகைப்படுத்திப் பேசுவர். தமிழ்மொழிக்கும் வடமொழிக்கும் பொதுவெழுத்துக்களால் அமைந்த வடசொற்களைத் தற்சமம் என்பர்; வடமொழிக்கே உரிய எழுத்துக்களால் அமைந்த சொற்கள் தமிழில் கலந்துவிட்டால், அவற்றைத் தற்பவம் என்பர். அமலம், காரணம், மேரு போன்றவற்றைத் தற்சமம் என்றும் அரி, அரன், சுகி, போகி போன்றவற்றைத் தற்பவம் என்றும் காட்டுவர்.
புத்தமித்திரனார்தமதுவீரசோழியத்தில் வடசொல்லின்ஒலிகள்தமிழில் அமையுமாற்றைச் சில சூத்திரங்களிற் கூறியுள்ளார்:

Page 54
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 96
மெய்யொலிகள்?*
வீரசோழியம் சூத்.57
வடமொழியில் தமிழில் அமையும்போது
k kከ 9 gh k (ககரம்) C Ch j jh C (சகரம்) t th d dh (டகரம்)
t th d dh t (தகரம்) O ph b bh p (பகரம்) y- iy— - ilー、ulー
r- arー、irー、urー
எடுத்துக்காட்டு
khaņda kaņtam கண்டம் gâna kānam கானம் ghata katam ö93lub Chattra Cattiram சத்திரம் jala Calarn சலம் pátha páțam பாடம் pīda pītai பீடை mūqha mūtan மூடன் kathā katai கதை dāna tānam தானம் dhana tanam தனம் phaņa param பணம் bāņa panam பாணம் bhagavān pakavān பகவான் yakşa iyakkar இயக்கர் laňká ilaňkai இலங்கை lõka ulõkam உலோகம் raħ arañkam அரங்கம் rāvaņa irāvaņan இராவணன் rбma urõmam உரோமம்

97
வீரசோழியம் சூத்.58.
一sー S
S- く 一sー
hー -h-
வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார் கருத்துப்படி:
ーiー>ーyー;sー>cー
எடுத்துக்காட்டு
pakşa
dakşa
parişkāra
nişkāra
puruşa
śańkhu
Šālā
Sakala
Sästra
hari
hara
mahstala
mõha
mahimā
pańkaja
şaşți
வீரசோழியம் சூத்.59.
வடமொழி மெய்க்கூட்டொலிகள் (Consonant clusters)
-ciy
சுசீந்திரராசா
-kk
ーkkー sகெடும்
ーtー
C
-t-س- " يذه، تo
ZEO 一yー ーkー
- pakkam பக்கம்
takkan தக்கன் parikkāram பரிக்காரம் nikkaram நிக்காரம் puruțan புருடன் cańku சங்கு calai FT66)
Cakalam சகலம் cātiram சாத்திரம் ari அரி aran அரன் mayitalam மயிதலம் mõkam மோகம்
makimai LDe%l6כסLמ
pańkayam பங்கயம் cati 5 ہوا تا
தமிழில் அமைதல்
-kiy
-kil

Page 55
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 98
-ty- -tiy-tra- -tir一yー 一如y一 -mi- ستس.rnl-سد
-kV- —-küv--
பெருந்தேவனார் கருத்துப்படி :-dm->-tum-i-tn->-tan-அல்லது
–tirገ-–.
எடுத்துக்காட்டு
vākya vakkiyam வாக்கியம் Sukla Cukkilam சுக்கிலம் vācya vācciyam வாச்சியம் Satya cattiyam சத்தியம் putra puttiran புத்திரன் naya nātiyam நாட்டியம் pakva pakkuvam பக்குவம் padma patumam பதுமம் ratna " iratinan இரத்தினம்
இந்த விளக்கம் வடமொழிச் சொற்களுக்கேயன்றிப் பிறமொழிச் சொற்களுக்கும் பொருந்தும். “தமிழல்லன போம் வேறு தேயச் சொல்லின் மாட்டெழுத்து மிதனாலறி” என வீரசோழியம் (சூ.59) கூறுகிறது. இதற்கு "ஆரியம், வடுகு, தெலுங்கு, சாவகம், சோனகம், சிங்களம், பப்பரம் இவை முதலாகிய பிறதேயச் சொற்களையுந் தமிழாக்குமிடத்து இவ்விலக்கணத்தானே முடிக்க' என்பர் உரைவகுத்த பெருந்தேவனார்.
பவணந்தியார் தமது பதவியலில் வடமொழியாக்கத்தை விளக்குகின்றார் (சூத்.146-148).
உயிரொலிகள்
வடமொழி தமிழில்
『一 i
-r- -iru

99
kከ
Ch
th
th
ph
சுசீந்திரராசா
மெய்யொலிகள்
g gh kー ーkー
j jh C- ーCー
d dh t一ー ーtー
d dh {ー ーtー
b bh p- ーpー
一yー
Cー ーCー 一yー
C- ーキー
C- ーCー 一t一
-k- مسم3
iy—
ar-, ir-, ur
il-, ul
தமிழில் உள்ள மெய்க்கூட்டொலிகளினின்றும் வேறுபட்ட மெய்க்
கூட்டொலிகள் அமையுமாறு (சூத்.149).
Су
Cr
C
Cn
CV
Cր
rt
(Cஎன்பது ஏதேனும் மெய்)
Ciy
Cir
Cil
Cum
Cuv
Can
rut
மயிலைநாதர் வேறுசில மாற்றங்களையும் காட்டுவர் (சூத்.148. உரை):
-kt
-vy
ーrvー stー
一St一
-tya
சக்தி ககூழி
காவ்ய
பர்வத ஸ்தூல அஸ்த
ஆதித்ய
一tt一 சத்தி 一tc一 கட்சி -ppiy- காப்பியம் ーruppー பருப்பதம்
-- தூலம் -tt- அத்தம்
-tan- ஆதித்தன்,
அவர் முதல் நான்கிலும் திரிபு; ஏனையவற்றில் கேடு என்பர்.

Page 56
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 1 OXO
2.5 தமிழில் பிறமொழிச்சொற்களால் விளைவு
டாக்டர் பி.சி.கணேசசுந்தரமும் டாக்டர் எஸ்.வைத்தியநாதனும் நன்னூலை அடிப்படையாகக் கொண்டு தமிழில் உள்ள வடமொழிச் சொற்களை மதிப்பீடு செய்துள்ளார்கள்.° இலக்கண நூல்கள் கூறும் வடமொழியாக்க விளக்கங்களைப் (விதிகளை?) புலவர்கள் காலந்தோறும் எந்த அளவிற்குக் கையாண்டனர் எனச் சிந்திக்க வேண்டும். இலக்கண நூல்கள் சொல்லின் முதல்நிலையில் வாரா என்ற எழுத்துக்கள் பிற்காலத்துத் தமிழ் இலக்கியங்கள் சிலவற்றிலேயே சொல்லின் முதல் நிலையில் வரவில்லையா! இன்று ராத்திரி, ராமன், லஞ்சம், லாபம், லோகம் என்றெல்லாம் பேசக் கேட்கவில்லையா? அன்றாடு பேசும்போது இறப்பு, இறங்கு, இறால், இறைச்சி போன்ற சொற்களை எவ்வாறு உச்சரிக்கின்றோம்? இகரம் சொல்லின் முதல் நிலையில் கேட்கின்றதா? ஒலிப்பதைத் தானே எழுதவேண்டும். இல்லை என்றால் ஆங்கிலச்சொற்கள் பலவற்றைப்போல எழுத்துமுறையும் உச்சரிப்பு முறையும் வேறுபட்டுச் சில எழுத்துக்கள் சொற்களிலே ஒலியிழந்து 'மெளன எழுத்துக்கள் ஆகிவிடும் அல்லவா? சில இலக்கியங்களில் பயின்றுவரும் தமிழ் மட்டுந்தானா தமிழ்? தமிழ் என்று பேசும்போது செய்தித்தாள், சிறுகதை, நாவல், புதுமைக்கவிதை ஆகியவற்றிற்குக் கையாளப்படும் தமிழ்மொழியைப் புறக்கணிக்க முடியுமா? இப்படியெல்லாம் கேட்கத் தோன்றும். உண்மையைக் காண வேண்டும். இவற்றில் மொழியை எப்படியெல்லாம் கையாள்கிறார்கள் என்று ஆராய்ந்தால் மொழியின் இன்றைய போக்கை அறியலாம். இந்தியர்களுடைய பேச்சுமொழியில் வடமொழி ஒலிகளையும் அடிக்கடி கேட்கமுடியும். தமிழ்ப் பேராசிரியர் சிலரைத் தவிரப் பெரும்பாலும் ஏனையோர் எழுதும்போது ஜ, ஷ, ஸ, ஹ முதலிய கிரந்த எழுத்துக்களையும் தவிர்க்க முடியாத சில சூழ்நிலையில் கையாள்கிறார்கள். தமிழறிஞர் அனைவரின் மதிப்பைப் பெற்று வாழ்ந்த திரு.வி.க. அவர்களும் சில சொற்களிலே கிரந்த எழுத்துக்களைக் கையாண்டுள்ளார். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய திரு.அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்களும் இங்கிலிஷ், சமஸ்கிருதம்,ஹியூபுருபோன்றசொற்களைளழுதும்போதுகிரந்த எழுத்துக்களைக் கையாண்டதோடு இடச்சு எனஎழுதாது டச்சு (Dutch) எனவும் இலத்தீன்எனஎழுதாதுலத்தீன்(Latin) எனவும்பல இடங்களில்எழுதியுள்ளார். இன்று மட்டுமல்ல, பிற்காலத்துத் தமிழ் இலக்கியங்கள் சிலவற்றிலும் கிரந்த எழுத்துக்கள் கையாளப்பட்டுள்ளன.

101. சுசீந்திரராசா
வடமொழி ஒலிகள் என வரையறுக்காமல் பொதுவாகப் பிறமொழிச் சொற்களிலே பயின்றுவரும்புதிய ஒலிகள் தனித்தோ கூட்டொலிகளாகவோ (cluster) எவ்வாறு உச்சரிக்கப்படுகின்றன என்று சிந்திக்க வேண்டும். அவுன்ஸ், டோபி, டாக்கொத்தர், டாப்பு, றைவர், றேசர், றேடியோ, ராத்திரி, ரீ, ரோச், லாபம், ளாச்சி போன்ற சொற்களினாலும் ஆஸ்பத்திரி, இஸ்லாம், ஈஸ்வரன், கிறிஸ்மஸ், பக்தி, பத்மா, ஸ்ரேசன் போன்ற சொற்களினாலும் சில ஒலிகள் தனியாகவோ கூட்டாகவோ சொல்லின் முதல் நிலையிலும், இடைநிலையிலும், ஈற்று நிலையிலும் புதிதாக வரலாயின. இவற்றுள் சில ஒலிகள் தமிழில் உண்டென்றாலும் இவை பயின்றுவரும் இடமும் முறையும் தமிழ்மொழிக்குப் புதியன. பிறமொழிச் சொற்கலப்பால் உள்ள சொற்களில் பொருள் மாற்றம் ஏற்படுவதைக் குறித்தோம் (1.4.2). புகுந்த பிறமொழிச் சொற்கள் தமிழ் அகராதிகளிலும் இடம் பெற்றுள்ளன. வந்து கலந்த பிறமொழிச் சொற்கள் தமிழிலே வழங்கும் சொற்களின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டன. சொற்களைத்தொடராக்கிவாக்கியமாக அமைப்பதிலும் வேற்றுமொழிச் செல்வாக்கைக் காணலாம் என்றோம் (2.2.4).
3.0 பிறமொழிகளில் தமிழ்
இனி, பிறமொழிச் சொற்கள் தமிழ்மொழியில் புகுந்தது போலத் தமிழ்ச் சொற்களும் பிறமொழிகளில் புகுந்துள்ளன. திராவிட மொழிகளின் செல்வாக்கால் வடமொழிதனது குடும்பத்தைச்சேர்ந்த ஏனைய மொழிகளில் இல்லாத சில ஒலிகளைக் கொண்டு விளங்குகிறது என்றும் வாக்கிய அமைப்பிலும் ஒரே இடத்தில் திராவிடமொழிச்செல்வாக்கைப்பெற்றுள்ளது எனக் கருதத் தோன்றுகிறது என்றும் அறிஞர் நம்புகின்றனர். வடமொழியில் தமிழ்ச் சொற்கள் உண்டு என்றோம் (2.1.1). திராவிடச் சொற்கள் வடமொழியில் நூற்றுக்கணக்கில் உள எனப் பேராசிரியர் ரி.பறோ காட்டியுள்ளார். அனல (அனல்), குடி, பல்லி, நீர (நீர்), மீன (மீன்) என்பன சில எடுத்துக்காட்டு, சீனமொழியில் காஞ்சி என்ற ஊர்ப்பெயர் Housang-tche என்று வழங்கியதாக திரு.கே.ஏ.நீலகண்ட சாத்திரி கூறுவர். சில தமிழ்ச் சொற்கள் சிங்களச் சாசனங்களில் இடம்பெற்றுள்ளன. குடி, கூலி, மருமகன், வியல் என்பன எடுத்துக்காட்டு" பெருமகன் என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளது. முன்பு குழந்தைகளுக்கென எழுதப்பட்ட சிங்களநூலில் தமிழ்ச் சொற்கள் சில கையாளப்பட்டுள்ளன." மேலும் சிங்களத்தில் அடி (foot),அச்சு (வடமொழிaksa- என்பதன்திரிபு?), இழவு, உழுக்கு,கல் (stone), சரக்கு, சிலம்பு, திப்பிலி (வடமொழி pippaா?), பெட்டி, நங்கை, நெல்லி போன்ற தமிழ்ச் சொற்கள் சில திரிந்தும் சில திரியாமலும் இன்றைய

Page 57
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 1O2
வழக்கிலே வழங்குகின்றன. அம்மா, ஆச்சி, தாத்தா, மாமா என்ற உறவுப் பெயர்ச் சொற்கள் சிங்களத்திலும் வழங்குகின்றன. உறவுப் பெயர்களையும் ஒரு மொழியின் அடிப்படைச் சொற்களில் (basic vocabulary) சேர்ப்பது உண்டு. எனவே மேலே குறிப்பிட்டவைதமிழ் அடிப்படைச்சொற்களில் சில. ஆயினும், இவற்றைச் சிங்களம் தமிழில் இருந்தா பெற்றது எனத் தெளிந்து முடிவு செய்யும்போது, இவற்றிற்குப் பொருளிலும் ஓரளவுஒலியிலும் ஒத்த சொற்கள்வடமொழியிலும்திராவிடமொழிகள் அல்லாதஏனையசில இந்திய மொழிகளிலும் உண்டு என்ற உண்மையைக் கருத்திற் கொள்ள வேண்டும். பேராசிரியர் எமனோவும் பேராசிரியர் பறோவும் இச்சொற்களைத் தமது திராவிட மொழி வேர்ச்சொல்லகராதியில் சேர்த்துள்ளனர். மேலும் சிதத் சங்கரவ என்ற சிங்கள இலக்கண நூலிலும் தமிழ் இலக்கண நூல்களின் செல்வாக்குக் காணப்படுகிறது."
தைலாந்து மக்கள்திருவெம்பாவை திருப்பாவையைத்தமதுமொழியில் எழுதிப் பாடுகின்றார்கள். இந்தோனேசிய, மலாய் மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் வழங்குகின்றன. கப்பல், சுக்கு, பவளம், முத்து என்ற பொருட்பெயர்களும் அக்கா, தம்பி, மாமா, மாமி என்ற உறவுப் பெயர்களும், அப்பம், கஞ்சி, பிட்டு என்ற உணவுப் பெயர்களும் சிறிது திரிந்து வழங்குகின்றன. ஆதிலட்சுமி அம்மையார் கிட்டத்தட்ட எண்பத்தைந்து சொற்களைத் தமிழ்ச் சொற்களாகக் காட்டுகின்றார்." ஆயின், அவர்கள் காட்டும் அனைத்தையும்தமிழ்ச்சொற்களாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவர்கள் சில தமிழ்ச்சொற்களுக்கும் அவற்றின் ஒலியமைப்புடைய மலாய் மொழிச் சொற்களுக்கும் பொருட் பொருத்தங் காட்டுவது கற்பனையாகவே தோன்றுகிறது. கப்பல், குதிரை, பிட்டு (வடமொழி pista.pistaka - திரிபு?), பெட்டி, மாணிக்கம், வகை, விலங்கு போன்ற பன்னிரண்டுசொற்கள்திரிந்து பிலிப்பைன் மொழிகளில் வழங்குவதாகக் கருத இடமுண்டு என்று பிரான்சிஸ்கோ என்பவர் குறிப்பிட்டுள்ளார்.°
செருப்பு என்ற தமிழ்ச்சொல் chirpos எனப் போர்த்துக்கீய மொழியிலும் வேறு சில ஐரோப்பிய மொழிகளிலும் வழங்குகின்றது. ஹீபுரு மொழியில் தோகை என்ற தமிழ்ச்சொல் திரிந்துtuki என வழங்குவதாகக் கால்டுவெல்லே கூறினார்.அரிசிஎன்ற சொல்கிரேக்கமொழியில்oruzaஎனவழங்குகின்றதாம் மேலும் பிப்பலி (திப்பலி) என்ற சொல் piper என்றும் பழைய என்பது pala என்றும் நீர் என்பது nero என்றும் வழங்குகின்றதாம்.“ தமிழ்ச்சொற்கள் பல ஆங்கிலத்தில் வழங்குகின்றன;* ஆங்கில அகராதிகளிலும் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கூறுவோம்:

O3 சுசீந்திரராசா
அணைக்கட்டு aniCut
ஒலை Olla கஞ்சி Conjee கயிறு COir கறி Curry கட்டுமரம் Catamaran
Cash
கூலி COOly கொப்பறை copra சர்க்கரை jaggery சுண்ணாம்பு Chunnan சுருட்டு CherOOt தேக்கு teak தோணி dhoney / doney பந்தல் pandal பறையன் pariah புண்ணாக்கு poonac வெற்றிலை betel
மாங்காய் mango மிளகு தண்ணி muligatawny
36.jpg|6it cooly 6T6TD Gamsi)-ismsT6TD6S5.5Gupg|Coolieism 6T66T64th pariah என்ற சொல் -dom என்ற விகுதி பெற்று parahdom எனவும் ஆங்கிலத்தில் வழங்கக் காணலாம். தமிழில் கறி (சோறுகறி) என்னும் சொல் பெயர்ச்சொல்லாகவே உள்ளது; ஆயின் curry ஆங்கிலத்தில் பெயராகவும் வினையாகவும் அமைந்துள்ளது. மேலும் 'பறைய' என்ற சொல்லைஷெல்லி தமது கவிதை ஒன்றில் உருவகமாகக் கையாண்டுள்ளார்.*
3.1 சுற்றிவரும் சொல்
பழைய தமிழ் இலக்கியங்களிலே வந்துள்ள இஞ்சி என்ற திராவிடச்சொல் உலகிலே பல மொழிகளில் திரிந்து வழங்குகிறது."
inkiväâri Finnish
ingefära Swedish
irbir Russian
gingSear Irish

Page 58
தமிழ் மொழியியற் சிந்தனைகள்
1O4
ginger English
gember Dutch
ingwer German
imbier Polish .
gingembre French gyömbèr Hungarian
ghimber Romanian
gengivre Portuguese jengibre Spanish
ZefZefO Italian
zenxheffi Albanian
zencefi Turkish
janjapili Georgian
zingiberis Greek
skenjebbir Kabyal
zengheb hil Hebrew
zanjabil ArabjC
tangaWizi Swahili
zanjabil PerSjan
இச்சொல்லை மேலே குறிப்பிட்ட மொழிகள் எல்லாம் நேரடியாகத் திராவிட மொழிகளில் இருந்து பெற்றன எனக் கூறுவதற்கில்லை. கிரேக்க மொழி போன்ற ஏதோ ஒரு மொழி திராவிட மொழிகளோடு தொடர்பு கொண்டு இச்சொல்லைப் பெற, ஏனைய மொழிகள் அம்மொழியிடமிருந்து பெற்று வழங்கியிருக்கலாம். இவ்வாறு ஒரு மொழிச்சொல் பல நூற்றாண்டுகளில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வழங்கும் மொழிகளில் திரிந்து கலந்தும் விடுகிறது. இத்தகைய சொல்லைக் குறிப்பதற்கு அறிஞர் Wanderwort என்ற ஜெர்மன் சொல்லைப் பயன்படுத்துவர்.
ஆனால் பிறமொழிகளில் தமிழ்ச்சொல் போல இருப்பனவெல்லாம் தமிழ்ச்சொற்களேளனமுடிவுகட்டவேண்டா.எதிர்பாராதவகையில் ஒப்புமை 25é56ofTib: 2 (56oT60)L- round; e56ff Cold; 55rée5 shrink; sco56T curi - இவற்றையும் இவை போன்றவற்றையும் தமிழ்ச் சொற்கள் என முடிவுகட்டி விட முடியுமா?

105 சுசீந்திரராசா
குறிப்புகள்
1.
9.
தாய்மொழி என்ற சொல் சில சூழ்நிலையில் பொருள் மயக்கத்தை உண்டாக்குகின்றது. ஆதலால் அதற்குப் பதிலாக முதல்மொழி என்ற சொல் கையாளப்படுகின்றது.
ஏறக்குறைய ஒத்த தனியாள்மொழிகளின் (idiolects) கூட்டே மொழி என
மொழியியலாளர் மொழியை விளக்குவர்.
. Suseendirarajah, S. Reflections of Certain Social Aspects in Jaffna Tamil, Paper
presented at a Seminar at Annamalai University. (1965).
. Subrahmaniyan, N., Pre-Pallavan Tamil Index, University of Madras, P.31.
(1966).
. Ullmann, Stephen, The Principles of Semantics, Glasgow University
Publications, Glasgow. (1957). A.
"The competition between the Norman French loans beef, veal, pork, mutton and the inherited native English words ox, calf, swine, sheep, did not lead to the loss of either set, the semantic differentiation which helped to retain them all is discussed by Sir Walter Scott in a famous passage in Ivanhoe" - Hockett, Charles F., A Course in Modern Linguistics, The Macmilian Company, NewYork,
P399. (1958).
... "On the other hand, if many loan words come from a single source over a
relatively short period, there may develop a fashion of adaptation which then makes for a greater consistency in the treatment of further loans from the same source"- Hockett, Charles F., A Course in Modern Linguistics, P.418.
. "So - called pidgins represent the most extreme results of borrowing known
to us"- Hockett, Charles F., A Course in Modern Linguistics, P.42O.
. “Inany case, Sanskrit which has always beenthe Lingua Franca of the intelligent
world of India still continues to be the permanent store house from which Tamil,
though to a lesser extent than other languages in India, gets its necessary
technical terms whenever there is a demand. Perhaps this will continue to be such a store house even in future, though not to the extentithas been in the past" - Meenakshisundaran, T.P., A History of Tamil Language, Deccan College Building Centenary and Silver Jubilee Series: 22, Poona, P.175. (1965).
"From the point of the student of semantics, Malayalam, of all the Dravidian

Page 59
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 1O6
Languages, has suffered to the greatest extent from all the dominant sway of Sanskrit"- Ramaswami Aiyar, LV., Collected Papers of L.V.Ramaswami Aiyar, (Mimeo) Department of Linguistics, Annamalai University. (1960).
10. Suseendirarajah, S., A Study of the Lexical items in Ceylon Tamil, Paper
presented at a Seminar at Annamalai University. (1964).
11. "The vocabulary is something more or less kept open for foreign words. One may in this way Construct a sliding scale of resistance to foreign influences, beginning with phonology where the resistance is greatest, coming down to morphology where it is still less, downto syntax where it is still less and finally the vocabulary where the resistance is the least". --Ullmann, Stephen. The Principles of Semantics, PP. 188-89.
12. "The suffix-kaar has different shades of meaning according to the noun with which it occur. Generally it indicates possession, profession, or dealings in certain activity. This suffix occurs mostly with neuter nouns. But the derivation with this suffix is productive. This suffix is somewhatsimilar to the Hindi-vaalaa and - vaali" - Suseendirarajah, S. Descriptive Study of Ceylon Tamil, Ph.D., Thesis, Annamalai University. (Under print).
13. Ganeshsundaram, P.C., and Subramoniam, V.I., Marathi Loans in Tamil, Indian
Linguistics, Vol. 14, Poona. (1954).
14. இத்தகைய சில தவறுகள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் உள. ஆயின், தமிழ் ஆராய்ச்சி சிறந்து வளராத காலத்திலேயே வெளிவந்த பேரகராதியில் இத்தகைய தவறு இருப்பது வியப்பன்று. இன்றும் தமிழ் ஆராய்ச்சித் துறைகள் சிலவற்றிற்கு ஆதாரமாக விளங்கும் இப்பேரகராதியைத்திருத்தி அமைக்கும் பணியில் அறிஞர் ஈடுபட வேண்டும். போஞ்சி சிங்களச் சொல்லன்று எனச் சுட்டிக்காட்டிய சிந்தனை (Vol. 111.No.1, 1970) ஆசிரியர்க்கு நன்றி.
15. Manickam, T.S., The Treatment of Loans in Tamil (other than Sanskrit), M. Litt.
Thesis, Annamalai University. (Unpublished).
16. Meenakshisundaran, T.P., and Shanmugam Pillai, M., The Portuguese Influence Revealed by Tamil Words, Collected Papers of Prof. T.P. Meenakshisundaran, Prof. T. P.Meenakshisundaran Sixty-First Birthday Commemoration Volume, Annamalai University, P.135. (1961).

107
17.
18.
19.
2O.
21.
22.
23.
24.
25.
சுசீந்திரராசா
"Chinese verbs were also borrowed, but were made into Japanese Or Korean
verbs only by virtue of an established fashion of loan blending the borrowed
verb was used as the first element of a compound, the second element being the stem of a native verb of very general meaning" - Hockett, Charles F., A Course in Modern Linguistics, P.418.
முன்பு சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் ஏ.எம்.குணசேகரா, முதலியார் டபிள்யூ எப்.குணவாதன, எம்.ஏச்.கந்தவல, சி.இ.கொடகும்புற ஆகியோர் இத்துறையிலோ இதனோடு தொடர்புள்ள துறையிலோ ஓரளவு உழைத்தனர். எம்.எச்.பி.சில்வா என்பவர் ஆக்ஸ்போர்ட் Lu6d360d6Mbërs55p5ġġ66) E5LDg5 D. Phill. LulëģDg5 “Influence of Dravida on Sinhalese"6T66Tg) bouTc(b6TLuigg Tribesita, Theses on Asia, Accepted by Universities in the United Kingdom and Ireland 1877-1964, compiled by B.C.Bloomfield என்ற நூலிலிருந்து அறிகின்றோம். அறிவியல் கண்கொண்டு மொழிகளையும் ஆராயும் போக்கு நாளுக்கு நாள் சிறந்துகொண்டு வருகிறது. வரதராசன், மு, மொழிவரலாறு, கழக வெளியீடு, சென்னை, ப.12 (1954).
Subramanya Sastri, P.S., Tolkappiyam — Collatikaram with an English Commentary, Annamalai University, P.248. (1945).
வரதராசன், மு, மொழிவரலாறு, ப.107.
வெள்ளைவாரணன், க, தொல்காப்பியம் - நன்னூல், எழுத்ததிகாரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, ப.12. (1962).
Meenakshisundaran, T.P., A History of Tamil Language, P. 171.
-என்ற குறியீடு ஓர் எழுத்துக்குப்பின் (k-) வருமாயின் அவ்வெழுத்து சொல்லின் முதல் நிலையில் வருவதையும், எழுத்துக்கு முன் வருமாயின் (-k) அவ்வெழுத்து சொல்லின் ஈற்றில் வருவதையும், முன்னுக்கும்பின்னுக்கும் வருமாயின்(-k-) அவ்வெழுத்துசொல்லின் இடையில் வருவதையும் குறிக்கும்.
Ganeshsundaram, P.C. and Vaidyanathan, S. An Evaluation of Sanskrit Loan Words in Tamil from the point of Nannul, Indian Linguistics, Vol. 19. Poona.
(1958).

Page 60
தமிழ் மொழியியற் சிந்தனைகள் O8
26. Epigraphia Zeylanica, Vol. 1.P.247, P.93, PP-61-62, P. 117.
27. Meenakshisundaran, T.P., A Tamilian's Thoughts on a Shinalese Balasiksha,
Mahajana College Carnival Souvenir, Tellippalai. (1954).
28. Dhammaratna Thero, The Influence of the Tamil Language on Sinhala Letters, Proceedings of the First international Conference Seminar of Tamil Studies, Vol. 11, Kuala Lumpur (1966).
29. Audilakshmi Anjaneyulu, Tamil Words in Indonesian and Malayan Languages,
Tamil Culture, Vol.9, No. 1 (1961).
30. Francisco, J.R., Notes on Probable Tamil Words in Philippine Languages, Proceedings of the First International Conference Seminar of Tamil Studies, Vol. 1 1. Kuala Lumpur. (1966).
31. Legrand, F., Tamil Loan-Words in Greek, Tamil Culture, Vol. 3., No. 1. (1954).
32. Subba Rao, G., Indian Words in English, A Study in Indo-British Cultural and
Linguistic Relations, The Clarendon Press, Oxford. (1954).
33. "Not the swart Pariah in some Indian grove' - The Solitary.
34. Gerald Barry, Bronowski, J., James Fisher, Julian Huxley (Editorial Board, Communication and Language: Networks of Thought and Action, Doubleday and Company Inc., New York, P.68. (1965).
பயன்படுத்திய பிற நூல்களும் கட்டுரைகளும்
தமிழ்
தொல்காப்பியர், தொல்காப்பியம் (மூலம்), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. (1954).
பவணந்தி, நன்னூல், காண்டிகை உரை, ஆறுமுக நாவலர் பதிப்பு ; மயிலைநாதர் உரை, உ.வே.சாமிநாதையர் பதிப்பு, சென்னை. (1946).
புத்தமித்திரனார், வீரசோழியம், பவானந்தர் கழக வெளியீடு, சென்னை. (1942).
ஆங்கிலம்
Anavaratavinayakam Pillai, S., The Sanskritic Element in the Vocabularies of the Dravidian Languages, Dravidic Studies 111, Madras. (1923).

109 சுசீந்திரராசா
Bloomfield, L., Language, New York. (1933).
Burrow, T., and Emeneau, M.B., A Dravidian Etymological Dictionary, Oxford. (1961).
Emeneau, M.B., and Burrow, T., Dravidian Borrowings from Indo-Aryan, University
of California Publications in Linguistics. (1962).
Haugen, Einar. The Analysis of Linguistic Borrowing, Language, Vol. 26.
Subramoniam, V.I., Dravidian Words in Sanskrit, Tamil Culture, Vol.9. No.3. (1961).
Vaidyanathan, S., A Study of the Semantics of Sanskrit Loan Words in Modern Tamil, Indian Linguistics, Turner Jubilee Volume 1. (1958).

Page 61
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 110
7
தமிழ்மொழிப் ப ாடநூல்களில் பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும்'
1.0 இன்றைய கல்விமுறையில் மாணவர்கள் பாலர் வகுப்பிலிருந்தே பேச்சுத்தமிழ்', 'எழுத்துத்தமிழ்' என்பன பற்றி ஏதோ ஒருவகை உணர்வைப் பெறுகிறார்கள். பாலர் வகுப்பிலிருந்து மேல்வகுப்பிற்குச் செல்லச் செல்ல இந்த உணர்வு அதிகரிக்கிறது. எழுதுவதற்கும், நூல்களைப் படித்துவிளங்கிக் கொள்வதற்கும் வேண்டிய மொழி வழக்கைத் தாம் அன்றாட வாழ்வில் பேசக் கற்றுவிட்ட வழக்கிலிருந்து படிப்படியாக வேறுபடுத்திக் கற்றுக் கொள்கிறார்கள். மொழியின்பாற்பட்ட இருவழக்குகளையும், நன்கு அறிந்து அவற்றைத் தனித்தனியாகவோ, கலந்தோ, இடம் அறிந்து இயல்பாகக் கையாளும் திறனைப் பெறுதல் ஒருவரது பழக்கத்தில் வருவதாகும். இவை பற்றி மாணவர்கள் தமது வயதிற்கும் வகுப்பிற்கும் ஏற்ப தெளிவாகவும் விரிவாகவும் அறிந்து கொள்வது வேண்டற்பாலதே. இதனாற் போலும் பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் தமிழ்மொழிப் பாடநூல்களில் பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் பற்றிப் பேசப்படுகிறது. இவை பற்றி முதன்முதலாகத் தமிழ் ஆறாந்தரம்' என்னும் நூலின் முதற்பாடத்திலே பேசப்படுகிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கதே.
2.0 ஆயின் பேச்சுமொழி, எழுத்துமொழி ஆகிய இரு வழக்குகளுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி இந்நூலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் விளக்கங்களும் மிகத் தவறானவை. ஆதலால் அவை மயக்கத்தையும் குழப்பத்தையும் தருவனவாய் அமைந்துள்ளன. கருத்துக்களைக் கூறும் முறைமையும் தெளிவற்றுக் காணப்படுகிறது. எனவே இவற்றைப் படிப்பிக்கும் ஆசிரியர்களும் அவர்கள் காட்டும் வழிநின்று மொழியைக் கற்கும் மாணவர்களும் தத்தம் முயற்சியால் பெற வேண்டிய - பெறக்கூடிய - பயனைப் பெறுகின்றார்களோ என்பது ஐயத்திற்குரியதாகிறது. இந்நிலை

111 சுசீந்திரராசா
தோன்றுவதற்கு ஏதுவாகிய பின்னணியைச் சற்று விரிவாக ஆராய்ந்து தெளிவுபடுத்துதலும் பணியாகும் என்னும் நம்பிக்கையால் இங்கு தற்கால மொழியியற் கண்ணோட்டத்தில் કીco கருத்துக்களைக் கூற விரும்புகின்றோம்." 3.0 தமிழ் ஆறாந்தரம்' என்னும் நூலின் முதற்பாடம் 'கண்ணன் குடும்பம்" என்பதாகும். இப்பாடம் நான்கு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. பாடத்தின் முன்னுரை போல அமைந்திருக்கும் முதற்பகுதியில்
“நமது அன்றாட வாழ்க்கையிலே, நாம் பேசும் தமிழுக்கும் எழுதும் தமிழுக்கும் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உள. பேச்சு வழக்கானது எழுத்து வழக்கிலும், எழுத்து வழக்கானது பேச்சு வழக்கிலும், செல்வாக்குப் பெற்றுவருவதை வாழும் மொழியிற் காணலாம்.இந்தப் பாடத்தை வாசித்துமுடித்ததும், இந்த இருவகை வழக்குகளுக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி உங்கள் ஆசிரியரோடு கலந்து உரையாடுங்கள்."
6Tss எழுதப்பட்டுள்ளது.
3.1 இதன் அடிப்படையில் இப்பாடத்தின் இரண்டாம் பகுதி நாம் பேசும் தமிழுக்கும் எழுதும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் விளக்குவதற்கென அமைந்தது. மேலும் “பேச்சு வழக்கானது எழுத்து வழக்கிலும் எழுத்து வழக்கானது பேச்சு வழக்கிலும் செல்வாக்குப் பெற்று வருகிறது" என்னும் கருத்தை விளக்குவதற்கென அமைந்தது. இவை இரண்டும் இப்பாடத்தின் குறிக்கோள்கள் எனலாம். ஆயின் ஆசிரியர்கள் பாடத்தைப் படிப்பித்து முடித்துவிட்டபின் - மாணவர்கள் படித்துவிட்டபின்-பாடத்தின் குறிக்கோள்கள்எந்த அளவிற்குச் செம்மையாகநிறைவேற்றப்படுகின்றனஎன்பது சிந்தனைக்கு உரியதாகிறது. இப்பாடம் பேச்சு வழக்கு எழுத்து வழக்கில் செல்வாக்குப் பெற்று வருகிறது என்னுங் கருத்தையும் எழுத்து வழக்கு பேச்சு வழக்கில் செல்வாக்குப் பெற்று வருகிறது என்னுங் கருத்தையும் பாடப்பொருளின் மூலமோ விள்க்கத்தின் மூலமோ தெளிவுபடுத்தத் தவறி விடுகிறது. மேலும் ஒற்றுமை வேற்றுமைகளை விளக்குமிடத்து ஒற்றுமைகளை முற்றாகப் புறக்கணித்து வேற்றுமைகளையே விதந்து கூறுவதும் வியப்பிற்குரியதாகிறது.
3.2 பாடம் முழுவதும் எழுத்துத் தமிழிலேதான் அமைந்துள்ளது. கண்ணன் குடும்பத்திலே பார்வதி ஆச்சியைத் தவிர அனைவருமே எழுத்துத்

Page 62
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 112
தமிழிலேதான் உரையாடுகிறார்கள். உரையாடுவோருள் பார்வதி ஆச்சியின் பேச்சில் வரும் இரு சொற்களின் (அது, நல்லது) பயன்பாடு (use) மட்டும் பேச்சுத்தமிழின் பாற்பட்டதாக அமைந்துள்ளது. எல்லோரும் எழுத்துத்தமிழைப் பேசுமிடத்து ஒருவர் மட்டும் பேச்சுத் தமிழைக் கையாள்கிறார். ஆச்சிஎழுத்துத்தமிழிலேநடைபெறும்உரையாடலில் கலந்து கொள்வதால் எழுத்துத் தமிழையும் அறிந்தவராகவே காணப்படுகின்றார். ஆச்சியின் பேச்சில் இடையிடையே எழுத்துத்தமிழும் புகுந்து விடுகின்றது. ஆயின் இங்கு ஆச்சி மட்டும் எதற்காகப் பேச்சுத்தமிழில் பேசவேண்டும்? கிழவி என்பது காரணமா? எழுத்துத்தமிழிலே உரையாடுபவர்களோடு ஆச்சி எதற்காக எழுத்துத்தமிழிலே பேசவில்லை? ஆச்சிக்கு எழுத்துத்தமிழ் விளங்கும்; ஆனால் பேசத் தெரியாது எனக்கொள்வதா? அவ்வாறெனின் பேச்சுத்தமிழிலே பொதுவாக யாரும் கையாளாத நீதியோடு (வேற்றுமை உருபின் வடிவத்தைக் கருதுக) என்னும் எழுத்துத் தமிழ்ப் பிரயோகத்தை அவரது பேச்சில் காண்பது எவ்வாறு? ஏனையோர் எதற்காக எழுத்துத்தமிழில் பேசவேண்டும்? பாடத்திலே பேச்சுத்தமிழையும் எழுத்துத் தமிழையும் விளக்குவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற சூழல் ஒரு குடும்பச் சூழலாகும். இக்குடும்பச் சூழலிலே ஆச்சியை விட அனைவருமே எழுத்துத்தமிழில் உரையாடுகிறார்கள் என்றால் இது செயற்கையான - விநோதமான - சூழலன்றோ? எழுத்துத்தமிழிலே பேசுகின்ற ஒரு குடும்பச்சூழலை நாம் கற்பனையுலகில்தான் காணக்கூடும். இச்சூழலும் இச்சூழலில் நடைபெறும் உரையாடலும் எழுத்துத்தமிழ், பேச்சுத்தமிழ் ஆகியவற்றின் பயன்பாடு பற்றித்தவறான எண்ணங்களை மாணவர் உள்ளத்தில் தோற்றுவிக்கக்கூடும் எனநாம் அஞ்சுவதில் தவறுண்டோ? இப்பாடம் பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் ஆகியவற்றின் உண்மையான பயன்பாடுகளைப் பிரதிபலிப்பதாக இல்லை. இரண்டிற்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் மாணவர் அறிந்துகொள்வதற்கு முன்னர் இரண்டின் பயன்பாடுகள் பற்றிய தெளிவான விளக்கம் பெறுவது பயனுடைத்து அன்றோ? பயன்பாடுகளை நன்கு அறியாத நிலையில் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் நுட்பமாகத் தெளிந்து கொள்வது எளிதன்று எனலாம். ஆறாந்தரம்வரை பேச்சுத்தமிழைத் தமது மொழிப் பாடநூல்களிலே காணாத மாணவர்களுக்கு இப்பாடம் பேச்சுமொழியில் அமைந்த ஓர் உரையாடலாகவோ ஓரங்க நாடகமாகவோ அமைந்திருப்பின் அது பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் பற்றிப் பேசுவதற்குச் சிறந்த முதல் இடமாக அமைந்திருக்கும். சமுதாயத்திலே பேச்சுத்தமிழின் பயன்பாடுகள் (uses of

113 சுசீந்திரராசா
spoken Tamil) uDSulbugious 6T (characteristics) upsub&ngj6, g5D66bp இடமாகவும் அமைந்திருக்கும்.
3.3 பாடத்தின் முதற்பகுதியில் குறிப்பிட்டவாறு மாணவர்கள் ஆசிரியரோடு கலந்து உரையாடுவதற்குத் துணை செய்வது போலப் பாடத்தின் நான்காம் பகுதியில் “பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும்" என்னும் தலைப்பில் சில விளக்கங்கள் கூறப்பெற்றுள்ளன. இவ்விளக்கங்கள் பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் பற்றி மக்கள் பொதுவாகக் கொண்டுள்ள தவறான கருத்துக்களை மேலும் வலியுறுத்துவதற்குத் துணை செய்வன போன்று அமைந்துள்ளன. இக்கருத்துக்கள் தவறானவை என்பதையும் எனவே இவை மாணவர்களுக்குத் தகாதவை என்பதையும் இவற்றால் பல மயக்கங்களும் குழப்பங்களும்தோன்றுவதற்குஇடமுண்டுஎன்பதையும்ஆசிரியர்களுக்கும் பாடநூல் ஆக்கத்தில் ஈடுபடுவோர்க்கும் ஆய்வாளர்க்கும் சுட்டிக் காட்டுதல்
பயனுடையது.
பாடத்திலே “பேச்சுவழக்கு', 'எழுத்துவழக்கு" என்னும் தொடர்கள் குறித்து நிற்கும் பொருள் தெளிவாக இல்லை. இரண்டிற்கும் உள்ள வேறுபாடு அறிவியல் அடிப்படையில் வெளிப்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம் இவ்விரு தொடர்களையும் கலைச்சொற்களாகக் கொண்டு அவற்றின் பொருளை வரையறை செய்யாமையேயாகும். சாதாரண வழக்கிலே உள்ள தொடர்களைக் கலைச்சொற்களாகக் கையாளும்போது அவை குறித்து நிற்கும் பொருள் பற்றி நாம் விழிப்பாக இருத்தல் வேண்டும். இல்லையென்றால் தெளிவற்று விடும். எடுத்துக்காட்டாக, தமிழ் 3இல் ஆசிரியர்க்குரிய குறிப்புகள் என்னும் பகுதியில் “பேச்சுப்பாடம் வாசிப்புக்கு முகஞ்செய்வதாய், கலந்துரையாடல், எல்லாரும் சேர்ந்து சொல்லல், எல்லாரும் சேர்ந்து பாடல் என்னும் அங்கங்களை உடையதாய் அமையும். சொற்களைச் சரியாக உச்சரிப்பதிலும் தகுந்ததரிப்புக்களுடன் ஒலிப்பதிலும் மாணவர்க்கு முதன்மையான பயிற்சியைத் தருவது பேச்சுப் பாடமேயாகும்" எனக் கூறப்பெற்றுள்ளது. எனவே பேச்சுப்பாடத்தில் கையாளப்படும் தமிழ்மொழி பேச்சுமொழி தானா என்ற ஐயம் எழலாம். பேச்சு வழக்கும் சில சந்தர்ப்பங்களில் எழுதப்படுகிறது. அப்பொழுது அது எழுத்து வழக்கு எனப்படுமா என்னும் ஐயமும் தோன்றலாம். மேலும் பாடத்தின் முதற்பகுதியில் “பேச்சுவழக்கானதுஎழுத்துவழக்கிலும், எழுத்துவழக்கானது பேச்சு வழக்கிலும் செல்வாக்குப் பெற்று வருவதை வாழும் மொழியிற் காணலாம்” எனக் கூறப்பெற்றிருத்தலையும் கருத்திற்கொள்தல் வேண்டும்.

Page 63
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 114
இக்கருத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு காலத்து மொழியில் பேச்சு வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் பொதுவாக உள்ளவையும் உண்டு என்ற உண்மையைக் கண்டு அறியும் உணர்வு ஆரம்ப வகுப்புக்களில் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஆரம்ப வகுப்புகளுக்குப் பாட நூல்களை எழுதுவோர்க்கும் மிக இன்றியமையாதது; பயனுடையது. متر
3.4 தமிழ்மொழியில் ஆட்சி பெற வந்துள்ள மாணவர்களுக்கு வரலாற்று அடிப்படையில் மொழி பற்றிக் கூறப்படும் கருத்துக்களும் விளக்கங்களும் ஆறாம் வகுப்பில் எந்த அளவிற்குப் பயன்படும் என்பது பற்றியும் இக்கருத்துக்களை மாணவர்கள் எந்த அளவிற்கு விளங்கிக் கொள்வார்கள் என்பதுபற்றியும் அனுபவம்வாய்ந்த ஆசிரியர்களும் பாடநூல் எழுதுவோரும் ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். கூறும் வரலாற்றுக் கருத்துக்களைத் தெளிவின்றி அரைகுறையாகக் கூறும்போது ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் எண்ணுதல் வேண்டும். புதிய கருத்துக்களாகச் சிலவற்றை மாணவர்களுக்கு உணர்த்தும்பொருட்டுத் துணையாகக் கொள்ளப்படும்
எடுத்துக்காட்டுக்கள் தெளிவாக உள்ளனவா எனவும் ஆராய்தல் வேண்டும்.
3.4.1 இனி, பாடத்தின் நான்காம் பகுதியில்
“அ. அம்மா இறைவழிபாட்டில் ஆழ்ந்தார். இந்த வாக்கியத்தில் வரும் அம்மா என்ற சொல்லை அவதானியுங்கள். இலக்கண வழக்கில் 'அம்மா’ என்பது அம்மாள் (அல்லது அம்மை) என்ற சொல்லின் விளிவடிவமாகும். அடிக்கடி வழங்கும் பயிற்சியால் இந்த விளிவடிவம் இக்காலப் பேச்சுவழக்கில் எழுவாய் வடிவமாகவும் நிற்கின்றது. அம்மாவை, அம்மாவினால், அம்மாவுக்கு என்பன போல ஐ முதலிய வேற்றுமை உருபுகள் பெற்று வருவதைக் காணலாம். இதுபோலவே உறவுப்பெயர்கள் பலவும் இக்கால வழக்கில் மாற்றமடைந்துள்ளன."
எனக் கூறப்பெற்றுள்ளது.
3.4.1.1 மாணவர்களின் விளக்கத்திற்கென எழுதப்பெற்ற இக்கருத்துக்கள் செய்யும் குழப்பங்களைக் காண்போம். இப்பகுதியில் "இலக்கண வழக்கு', "இக்காலப் பேச்சுவழக்கு' என இரு வழக்குகள் ஒன்றுக்கு மற்றது மாறுபட்டதாக, வேறுபட்டதாகப் பேசப்படுகின்றன. இதனால் இங்கு தரப்பட்டுள்ள விளக்கத்தைப் படிப்போர்க்கு “இக்காலப் பேச்சுவழக்கு”
இலக்கணமற்றதுஎன்ற எண்ணம்தோன்றுகிறது.மேலும் "இந்தவிளிவடிவம்

115 சுசீந்திரராசா,
(அம்மா) இக்காலப் பேச்சுவழக்கில் எழுவாய் வடிவமாகவும் நிற்கின்றது” எனக் கூறுவதால் அம்மா என்ற சொல் எழுத்துத் தமிழில் அல்லது மேலே கூறப்பெற்ற "இலக்கண வழக்கில்" எழுவாய் வடிவமாக நிற்பதில்லை என்ற கருத்தும் கிடைக்கிறது. ஆயின், உண்மையிலே இன்று அம்மா என்னும் வடிவம் "இலக்கண வழக்கிலும்” எழுவாயாக நிற்பதில்லையா? மேலும் "இதுபோலவே உறவுப்பெயர்கள் பலவும் இக்கால வழக்கில் மாற்றமடைந்துள்ளன" எனக் கூறுவதால் எக்காலத்திற்கும் உரிய இலக்கண வழக்கு என ஒன்று உண்டு; இக்கால வழக்கு (பேச்சு வழக்கு? எழுத்து வழக்கு? இரண்டும்?) எனப் பிறிதொன்று உண்டு என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த எண்ணத்தை இங்கு மேலும் தரப்பட்டுள்ள அப்பன், அண்ணன், மாமன், அக்காள் போன்ற எடுத்துக்காட்டுக்கள் வலுவடையச் செய்கின்றன. ஆயின் இக்காலத்துப் பேச்சு, எழுத்து ஆகிய இரு வழக்குகளிலும் சந்தர்ப்பத்தைப் பொறுத்து அப்பன், அண்ணன், மாமன், அக்காள் போன்ற உறவுப்பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதனை நாம் மறத்தல் ஆகாது. 3.4.1.2தரப்பட்டுள்ள விளக்கத்தில் அம்மாள், அம்மா போன்ற வடிவங்களை வரலாற்றுக் கண்கொண்டு நோக்கி வடிவங்களின் மாற்றங்களுக்குக் கற்பனையில் காரணங்கூறுதல் விரும்பத்தக்கதன்று. 'அடிக்கடி வழங்கும் பயிற்சியால் இந்த விளிவடிவம் (அம்மா) இக்காலப்பேச்சுவழக்கில் எழுவாய் வடிவமாகவும்நிற்கின்றது' என்னுங் கருத்துப்பொருந்தாது; அடிப்படையற்ற கற்பனையாகவே தோன்றுகிறது. இக்காரணம் ஏற்கத்தக்கது எனின் தம்பீ என்னும் விளிவடிவமும் எழுவாய் வடிவமாக அமையாதது ஏனெனக் கேட்கலாம் அன்றோ? காரணங்காட்ட வேண்டிய அவசியம் இருப்பின் விளக்கமுறையாக (descriptively) எழுத்துத் தமிழ்ச்சொற்கள் சில ஈற்றுமெய் கெட்டுப் பேச்சுவழக்கில் நிற்பது உண்டு என விளக்குவது பொருத்தமுடையதாகும்.
3.5 அடுத்து இதே பாடத்தில் மேலும் சில புதிய கருத்துக்களை விளக்கும் முயற்சியில் வாக்கியத்தை முடிக்கும் முற்றுவினை பற்றிப் பேசப்படுகிறது. "பேச்சுவழக்கின் செல்வாக்கால், எழுத்துவழக்கிலும் இவ்வாறு முடிக்குஞ்சொல் இல்லாத வாக்கியங்கள் சிற்சில சந்தர்ப்பங்களில் ஆளப்படுகின்றன" எனக் கூறப்பட்டுள்ளது. இவ்விளக்கமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. இது தவறான வரலாற்று விளக்கமாகும். ஏனெனில் அது மரம் போன்ற (பெயர்+பெயர்) வாக்கியங்களை விளக்குவது

Page 64
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 116
எங்ங்னம்? ஈண்டு முடிக்குஞ்சொல் யாது? பாடத்தில் தரப்பட்டுள்ள 。 விளக்கத்தின்படி இல்லை எனல் வேண்டும். எனவே இதுபோன்ற வாக்கியங்களையும் பேச்சுவழக்கின் செல்வாக்கால் எழுத்துவழக்கில் தோன்றியவை எனக் கொள்வதா? இத்தகைய பல வாக்கியங்கள் பேச்சு, எழுத்து ஆகிய இருவழக்கிலும் உண்டல்லவா? எது எதன்மீதுசெல்வாக்கைச் செலுத்தியது என எளிதில் Ցռ!D(ւplգեւկլDT? 3.6 இனி "வாணி, யார் அது?" என்னும் வாக்கியத்தில் உள்ள அது என்னும் சொல்லின் பயன்பாடு பற்றித் தரப்பட்டுள்ள விளக்கத்தைப் பார்ப்போம். “பேச்சுவழக்கில் இது (அது என்னும் வடிவம்) நன்கு பயின்று வருவதால், இக்கால எழுத்துவழக்கிலும் இஃது இடம்பெற்று வருகிறது" என்னுங் காரணத்தைச் சிந்தித்துப் பாருங்கள். இங்கும் கற்பனை தலையோங்குகிறது. பேச்சு வழக்கில் நன்கு பயின்று வருவன எழுத்து வழக்கிலும் இடம்பெறும் என முடிவு செய்வதற்கு ஆதாரம் யாது? எழுத்துவழக்கு என்பது ஒரே ஒரு வகை எனக் கருதாது பலவகையைக் (varieties) கொண்டது என்றும் எழுத்து வழக்கில் உரையாடலாக அமையும் பகுதிகளில் உரையாடல் நடைபெறும் சூழலையும் பேசும் பாத்திரங்களின் அந்தஸ்தையும் பொறுத்து எழுத்தாளர் பலர் இன்று பேச்சு வழக்கைக் கையாள்கின்றனர் என்றும் கருதுதல் பொருத்தமாகும்.
3. "..................... கதைகள் நல்லது" என்னும் வாக்கிய அமைப்பிற்குத் தரப்பட்டுள்ள விளக்கத்தையும் நாம் சிந்தித்தல் வேண்டும். பாரதியார் பாடலிலும் ". கதைகள் நல்லது" போன்ற வழக்கு உண்டு எனக் காட்டப்பட்டுள்ளது. "நாம் எல்லோரும் அறிவோம்', 'உங்கள் எல்லோரையும்" போன்ற தொடர்களின் அமைப்பைப்பற்றித் தரப்பட்டுள்ள விளக்கங்களையும் சிந்தித்துப் பார்த்தல் நன்று. பாடத்திலே “இலக்கண வழக்கு' என ஒன்றும் “பேச்சுவழக்கு" என மற்றொன்றும்,"இக்கால வழக்கு" என வேறொன்றுமாக மூன்று வழக்குகள் பேசப்படுகின்றன. இப்பாகுபாடு தெளிவற்று நமது உள்ளத்தை மயங்க வைக்கின்றன. பேச்சுமொழி, எழுத்துமொழி பற்றி இவ்வாறெல்லாம் பேசுவதற்குமுன்எதுபேச்சுமொழிஎது எழுத்துமொழி எனத் தெளிவாகக்கூறி இவை மக்களால் வெவ்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு சுற்றுச்சார்புநிலைகளில் (situations) வெவ்வேறு வகையில் பயன்படுத்தப்படுமாற்றை மாணவர்களுக்குத் தெளிவாகக் கூறுதல் விரும்பத்தக்கது என மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
3.8 இப்பாடநூலின் 16ஆம் பாடத்திலும் (இருநூறு மீற்றர் என்னும் பாடம்)

117 சுசீந்திரராசா
பேச்சுமொழி, எழுத்துமொழி பற்றிச் சில கருத்துக்கள் பயிற்சி மூலம் புகட்டப்படுகின்றன. ஆராய்ச்சி அறிஞரால் கைவிடப்பட்ட கருத்துக்களைப் பின்தங்கி நின்று போற்றுதல் நமது அறிவு வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் அறிகுறி ஆகாது என்பதை மனதிற்கொண்டு பாடத்தின் மூன்றாம் பகுதியாக அமைந்துள்ள பயிற்சி பற்றிச் சிந்திப்போம். பயிற்சி பின்வருமாறு:
“பேச்சுமொழிக்குரிய சில இயல்புகள் கீழே தரப்பட்டுள்ளன. சரியான
விடைகளைக் கண்டுபிடியுங்கள்.
பேச்சு மொழியில்
1. வாக்கியங்கள் நீண்டிருக்கும்.
வாக்கியங்கள் குறுக்கமாக இருக்கும். 2. சொற்கள் எளிதாக உச்சரிக்கக் கூடியனவாயிருக்கும்.
சொற்கள் சிரமத்தோடு உச்சரிக்க வேண்டியனவாயிருக்கும்.
3. பெரும்பாலும் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் முதலிய
வாக்கியக் கூறுகள் நிறைவுபெற்றிருக்கும். வாக்கியங்கள் அரைகுறையாக இருக்கும்.
4. எண்ணங்கள் நீண்டு சிக்கலாக அமைந்திருக்கும்.
எண்ணங்கள் நேர்மையாகவும்எளிமையாகவும்சிக்கல்இல்லாமலும் இருக்கும்.
5. எண்ணங்கள் இயல்பாக அமைந்திருக்கும்.
எண்ணங்கள் தருக்கமுறைப்படி செயற்கையாக ஒழுங்குபடுத்தப் பட்டிருக்கும்."
3.8.1 சில கருத்துக்களை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகத் தரப்பெற்றுள்ள இப்பயிற்சி சிந்தனையைக் கலங்க வைக்கிறது. எதிர்பார்க்கப்படும் விடைகள் ஏதோ மனம்போன போக்கில் அமைந்தவையாகவே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக முதலாவது பயிற்சிக்கு எதிர்பார்க்கப்படும் விடை பேச்சுமொழியில் வாக்கியங்கள் குறுக்கமாக இருக்கும் என்பதாகும். ஆயின் வாக்கியங்கள் நீண்டிருப்பதும் குறுக்கமாக இருப்பதும் மொழியைப் பயன்படுத்துவோனைப் பொறுத்ததேயன்றிப் பேச்சுமொழியைப் பொறுத்தது என்றோ எழுத்துமொழியைப் பொறுத்தது என்றோ கூறுதல் பொருந்தாது. பேச்சுமொழியில் குறுகிய வாக்கியங்கள் உண்டு; நீண்ட வாக்கியங்களும்

Page 65
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 118
உண்டு. இதேபோன்று எழுத்துமொழியிலும் இரண்டும் உண்டு. மக்கள் சந்தர்ப்பம், சூழ்நிலை, தேவை என்பனவற்றிற்கேற்ப குறுகிய வாக்கியங்களையும் நீண்ட வாக்கியங்களையும் பேச்சில் கையாள்வதில்லையா? எடுத்துக்காட்டாக "இப்ப சந்தைக்குப் போய் சாமான்களை வாங்கி வந்திட்டு நாங்கள் எல்லாரும் இந்த வண்டிலிலையே கோயிலுக்கு இருள முன்னம் போய் விடலாம்" என்று பேசுவதை நாம் கேட்பதில்லையா? இது நீண்டவாக்கியம் அன்றோ? தேவைக்கேற்ப எழுத்திலே சிறிய சிறிய வாக்கியங்களை எழுதுவோர் இல்லையா? வாக்கியத்தின் நீள அளவு ஒருவரது தனி நடையாக அமையலாம். மொழிபற்றாத (non-linguistic) காரணங்களையும் காட்டுதல் கூடும்.
3.8.2 இரண்டாவது பயிற்சிக்கு எதிர்பார்க்கப்படும் விடை பேச்சுமொழியில் சொற்கள் எளிதாக உச்சரிக்கக் கூடியனவாயிருக்கும் என்பதாகும். ஆயின் உச்சரிப்பிலே எளிமையும் சிரமமும் மொழிவகையைப் பொறுத்தன என்னுங் கருத்தை இன்று யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. எளிமையும் சிரமமும் ஒருவர் பெற்ற மொழிப் பழக்கத்தையும் பயிற்சியையும் பொறுத்தன. எனவே உச்சரிப்பு எளிமை, உச்சரிப்புச் சிரமம் என்னும் அடிப்படையில் பேச்சுமொழி, எழுத்துமொழி ஆகிய இரண்டினையும் வேறுபடுத்தல் தவறாகும். இவ்வேறுபாடு அறிவியல் அடிப்படையில் அமைவதன்று. 3.8.3 மூன்றாவது பயிற்சிக்கு எதிர்பார்க்கப்படும் விடை பேச்சுமொழியில் வாக்கியங்கள் அரைகுறையாக நிற்கும் என்பதாகும். ஆயின் எழுத்து மொழியிலும் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் முதலிய வாக்கியக் கூறுகள் தொக்கு நிற்றல் உண்டு என்பதனை மறத்தல் ஆகாது. தொக்கு நிற்றலையே வாக்கியங்கள் அரைகுறையாக நிற்றல் எனல் பொருந்தாது. இங்கும் ஒருவரது நடை, மொழி நிகழும் சந்தர்ப்பம் போன்றவற்றைக் கருதுதல் வேண்டும்.
3.8.4 நான்காவது பயிற்சிக்கு எதிர்பார்க்கப்படும் விடை பேச்சுமொழியில் எண்ணங்கள் நேர்மையாகவும் எளிமையாகவும் சிக்கல் இல்லாமலும் இருக்கும் என்பதாகும். ஆயின் எண்ணங்கள் வேறு: எண்ணங்களை வெளிப்படுத்தப் பயன்படும் மொழியோ மொழியமைப்போ வேறு. எண்ணங்கள் சிக்கலாக அமைவதும் எளிமையாக அமைவதும் எண்ணுபவரையும் எண்ணத்தை வெளியிடுபவரையும் பொறுத்தனவேயாம். ஒருவருக்குச் சிக்கலாகத் தோன்றும் எண்ணம் வேறு ஒருவருக்கு எளிமையாகத் தோன்றுவதுஇல்லையா? சிலசமயம் சிறிய சிறிய வாக்கியங்களில் உள்ள எண்ணங்களையும் நாம் விளங்கிக் கொள்வதில்

119 சுசீந்திரராசா
சிரமப்படுவதில்லையா? மறுபுறத்தில் பெரிய பெரிய வாக்கியங்களில் உள்ள எண்ணங்களை நாம் எளிதாக விளங்கிக் கொள்வதில்லையா?
3.9 மேலும் "எண்ணங்கள் நீண்டு சிக்கலாக அமைந்திருக்கும்", “எண்ணங்கள் நேர்மையாகவும் எளிமையாகவும் சிக்கல் இல்லாமலும் இருக்கும்”, “எண்ணங்கள் இயல்பாக அமைந்திருக்கும்”, “எண்ணங்கள் தருக்க முறைப்படி செயற்கையாக ஒழுங்குபடுத்தப் பட்டிருக்கும்" போன்ற கருத்துக்களை ஆறாம் வகுப்பு மாணவர்கள் விளங்கிக் கொள்வார்கள் என்று நம்பமுடியவில்லை. ஆசிரியர்கள் அனைவருமே இக்கருத்துக்களைத் தெளிந்து கொள்வார்கள் என்பதுகூட ஐயம். தெளிந்து கொள்ளாத இடத்துச் சிலர் மனம்போன போக்கில் இவற்றிற்கு விளக்கம்தர முற்படக்கூடும். இக்கருத்துக்கள் பாடநூலிலே எடுத்துக்காட்டுகள் மூலம் தெளிவாக விளக்கப்படவில்லை என்பதையும் நீாம் சுட்டிக்காட்டுதல் வேண்டும்: இக்கருத்துக்களை அறிவியல் அடிப்படையில் எடுத்துக்காட்டுக்கள் மூலம் நிலைநாட்டுதலும் அரிதாகும். 3.10 இருபதாம் பாடத்தின் நான்காம் பகுதியிலும் பேச்சுமொழி, எழுத்துமொழி பற்றிக் குழப்பமான கருத்துக்கள் காணப்படுகின்றன. இங்கு வாயாற் பேசுவது ஒருவகைமொழி எனவும் எழுத்தில் எழுதுவது மற்றொரு வகை மொழி எனவும் வகைப்படுத்தப்படுகிறது. வாயால் பேசுவதையும் எழுதலாம்; எழுத்தில் எழுதுவதையும் பேசலாம் என்ற நிலையை நூலாசிரியர் மறந்துவிட்டனர் போலும், இந்நூலில் இடம்பெற்றுள்ள எத்தனையோ பாடங்களில் பாத்திரங்கள் எழுத்துத் தமிழிலேதான் பேசுகின்றன.
3.11 'ஒழுங்கு' பற்றியும் பேசப்படுகிறது. இந்த ஒழுங்கே இலக்கண அமைப்பு எனப்படுகிறது.எழுத்துமொழியில் ஒழுங்குமுறை, உண்டு என்றும் பேச்சுமொழியில் இல்லை என்றும் பேசப்படுகிறது. பேச்சுமொழியில் சொற்கள் மனம்போன போக்கில் அமைகின்றனவாம். இவ்வாறெல்லாம் கூறியதற்குப்பின் 'எனினும், பேச்சுமொழியிலும் அடிப்படையான ஓர் இலக்கண அமைதி இருப்பதைக்காணலாம்" எனக்கூறப்படுகிறது.இவ்வாறு கூறுவதால் முன்பின் முரண் தோன்றுகின்றதல்லவா? கருத்துக்களை ஒழுங்குபடுத்திக் கூறுவதிலே பண்டைய அறிஞர் போற்றிய சிங்க நோக்கு வேண்டற்பாலது.
3.12 மேலும் பாடத்திலே சில கூற்றுக்கள் விதிகள்போல அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக “மொழியீற்று ஏகாரம் ஐகாரமாகும்" என்னுங் கூற்றைக் காண்க. இவ்விதிக்கு அங்கே - அங்கை, கொழும்பிலே - கொழும்பிலை,

Page 66
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 12O
போகாதே-போகாதை போன்றனஎடுத்துக்காட்டுக்களாகத்தரப்பட்டுள்ளன. ஆயின் "அவரே சொன்னார்' என்னுமிடத்து ஏகாரம் ஐகாரமாவதில்லை. இவ்வாறு இன்னுங் காட்டலாம்.
4.0 தமிழ் மொழியில் எழுத விரும்பும் மாணவர்களுக்குப் பாடநூல்களில் உள்ள பாடங்கள் வழிகாட்டிகளாக அமைகின்றன. இவற்றைப் பற்றுக் கோடெனக் கொண்டு பயின்று மொழி என்னும் நீண்டவழியில் படிப்படியாகச் செல்லும் மாணவர்களுக்கு வேண்டாத மயக்கங்களும் குழப்பங்களும் தோன்றுதல் விரும்பத்தக்கதன்று. பல்கலைக்கழக நிலையிலும் தமிழைச் சரளமாக எழுதுவதில் தொல்லைப்படும் மாணவர்கள் பலர் உளர். மொழிக்கல்வியிலே இந்நிலை தோன்றுவதற்குப்பலகாரணங்கள் இருத்தல்கண்கூடு. அவற்றுள் பாடநூல்களில் உள்ளகுறைகளும் அடங்கும். மொழிப் பாடநூல்கள் எழுதுவதுஎளிதானகாரியம் அன்று. பயிற்சி நூல்களும் இவ்வாறே. இவற்றின் ஆக்கத்தில் ஈடுபடுவோர்க்கு விசேட பயிற்சி இன்றியமையாதது. நவீன மொழியியல் (குறிப்பாகப் பிரயோக மொழியியல்), உளவியல், ஆராய்ச்சி முறை என்பன ஓங்கி வளர்ந்து வரும் இந்நாட்களில் மொழி கற்பித்தலும் அதற்கெனத் தராதரப்படுத்தப்பட்ட பாடநூல்கள் எழுதுவதும் தனிக்கலையாக ஓங்கி வளர்தல் வேண்டும். இதற்குப் பலதுறை அறிஞர்களின் கூட்டு முயற்சியை நாடுதல் நன்று. பாடநூல்களில் மொழிபற்றிய கூற்றுகளைச் செம்மைப்படுத்துவதற்கு மொழியியலாளரின் துணை உண்டு. அவர்கள் மொழியை அறிந்ததோடு மொழி பற்றியும் அறிந்தவர்கள், மொழி உள்நோக்குடையவர்கள். பாடநூல்கள் செம்மையாக அமைந்தால் கற்பித்தலும் கற்றலும் சிறக்கும். வளர்ச்சி கருதி இங்கு கூறிய கருத்துக்கள் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினரையும் கல்விமான்களையும் ஆசிரியர்களையும் பாடநூல் ஆக்கத்தில் ஈடுபடுவோரையும் சிந்திக்க வைக்கும் என நம்புகிறோம்.
குறிப்புகள்
1. இவ்வாய்வைப்படிப்பதற்குமுன் கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தின் (இலங்கை) தமிழ் ஆறாந்தரம்' என்னும் பாடநூலில் உள்ள முதற்பாடத்தையும் இருபதாம் பாடத்தையும் வாசித்துக்கொள்வது நன்று.
2. மொழியாசிரியர்களுக்கும் மொழிப்பாடநூல் ஆக்கத்தில் ஈடுபடுவோர்க்கும் பிரயோக மொழியியல் பயிற்சி பயன்படும் என்பதை அரசு ஏற்று அவர்களுக்குத் தக்க பயிற்சி அளிப்பதற்கு ஏற்பாடு செய்தல் விரும்பத்தக்கது.

121 சுசீந்திரராசா
3. இக்கருத்துக்களோடு தொடர்பற்ற ஒரு வினாவும் இப்பகுதியில்
இருப்பதைக் கண்டு முறைமை பற்றிச் சற்றுச் சிந்திக்க.
உசாத்துணைக்கட்டுரைகள் சண்முகம், செ.வை, “பேச்சும் எழுத்தும்”, மொழியியல், 2.3. ப.57-85, அண்ணாமலை நகர், 1978.
சுசீந்திரராசா, சு. “மொழியியலும் மொழிபயிற்றலும்', கலைமலர், வெள்ளிவிழா வெளியீடு, ஆசிரிய கலாசாலை, கோப்பாய், 1971.
முத்துச்சண்முகன், "மக்கள் தமிழும் இலக்கியத்தமிழும்', இக்காலத்தமிழ், ப.1-15, மதுரை, 1973,
Ferguson, C.A., “Diglossia”, Word, 15, pp 325-340, 1959.
Shanmugampillai, M., "Tamil Literary and Colloquial", International Journal of American Linguistics, 26.3, pp 27-42, 1960.
SSLSLSL SLLLS LLLL LSLLSLLLLSLLSSS SSLSSSLSLSLSLSLSL SSLS S LSLLSL "Merger of Literary and Colloquial Tamil", Anthropological Linguistics, 7.3, pp 59-66, 1965.
Varadarajan, M., "The Spoken and Literary Language in Modern Tamil", Indian Literature, 8.1, pp 82-89, New Delhi, 1962.

Page 67
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 122
8
ஒலி ஒப்புமையால் எழுந்த நம்பிக்கைகளா?
உலகமெங்கும் சமுதாயங்களில் எண்ணிறந்த நம்பிக்கைகள் (beliefs) உண்டு. இவற்றின் தோற்றத்திற்கு ஏதோ அடிப்படை இருந்திருக்க வேண்டும். இவை பண்டு தொட்டு கற்றோராலும் மற்றோராலும் பொருளுடையன என ஏற்கப்பட்டு நம்பப்பட்டு வருகின்றன. அறிவியல் வளர்ந்து ஓங்கி வளரும் இக்காலத்தில் இவற்றுள் சிலவோ பலவோ மூடநம்பிக்கைகள் என்று குறிப்பிடப்படுகின்றன. எனினும் இவற்றுள் சில நம் பகுத்தறிவிற்கு அப்பால் உள. அதனால் சிலவற்றில் மக்கள் வைத்த நம்பிக்கை நீங்கியபாடில்லை. இந்தியநாட்டுத் தலைசிறந்த விஞ்ஞானி ஒருவர் பல்லி சொல்வதில் நம்பிக்கை கொண்டிருந்ததாக இந்தியமக்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசிக் கொண்டார்கள். இந்த அளவிற்குச் சில நம்பிக்கைகள் ஆற்றல் பெற்றுவிட்டன. இவை மக்களின் தனி வாழ்விலும் சமுதாய வாழ்விலும் செல்வாக்குப் புரிகின்றன. கண் துடித்தல், காகம் கரைதல், பல்லி சொல்தல், புள் நிமித்தம் போன்றவை பொருள் குறிப்பன எனப் பண்டைய சமுதாயம் நம்பியதை இலக்கியங்களிலிருந்து (முறையே சிலப்பதிகாரம் 5:239, குறுந்தொகை 210:6, நற்றிணை 333:10-12, புறநானூறு 123:1-2) அறிகின்றோம். நம்பிக்கைகளின் அடிப்படைபற்றிப் பொதுவாகச் சிந்திக்குமிடத்து யாழ்ப்பாணத்துச் சமுதாயத்திலே இன்று நிலவிவரும் சில நம்பிக்கைகளை ஒலி ஒப்புமை மூலம் விளக்கக்கூடுமா என்று எண்ணத்தோன்றுகிறது.
வேறுபட்ட இருகூறுகள் ஒலியொப்புமை உடைத்தாயின் அவற்றை உள்ளம் ஒன்றுபோலத் தொடர்புபடுத்திக் காண்பது உண்டு. பேராசிரியர் வரதராசன் தமிழ்நாட்டுக்கிராமப்புறத்தில் கணவனுடைய பெயர்முருகையா என்று இருந்தால், மனைவி முருங்கைக்காய் என்று சொல்லாமல் அதைக்

123 சுசீந்திரராசா
கொம்புக்காய் என்று சொல்வாள்; மாமனாரின் பெயர் சீதாராமன் என்று இருந்தால், மருமகள் சீதாபழத்தைச்செடிப்பழம் என்று சொல்வாள்.சுப்பையா என்பவரை மணந்த ஒருத்தி உப்பு என்னும் சொல்லையும் ஒலிக்கக் கூசுவது உண்டு, (மு.வரதராசன், மொழி வரலாறு, சென்னை, ப.46) எனக் கூறுவது நினைவிற்கு வருகிறது. ஒலி ஒப்புமை எனத் தனியே கருதும்போது, ஒலிக்குறிப்புச் சொற்களின் தோற்றமும் நினைவிற்கு வருகிறது.
நம்பிக்கைகளுக்கு வேறு காரணம் இருக்க ஒலி ஒப்புமை எதிர்பார்க்காதவாறு அமைந்ததாகவும் இருக்கலாம். எதனையும் முடிந்த முடிவாகக்கூற முற்படாது பிறபண்பாடுகளில் ஒலிஒப்புமை அடிப்படையில் தோன்றிய நம்பிக்கைகளோடு ஒப்பு நோக்கிச் சிந்திப்பதற்கு ஆர்வமுடையோரைத் தூண்டுவதே இங்கு நோக்காகும். சில நம்பிக்கைகளைக் காண்போம்:
1. கிராமங்களில் மக்கள் கலவாய்க்குருவி கத்துவதைக் கேட்டவுடனே துப்துப் என்றுதுப்புவதுபோலச்செய்வர்.கலவாய்க்குருவிகத்துகிறது;ஏதோ கலகம் வரப்போகிறது என்று கூறி அஞ்சுவார்கள். துப்புவதுபோலச் செய்வது கலகத்தைத் தவிர்ப்பதற்கு வழி என நம்புகிறார்கள். கலவாய்க்குருவி கத்தினால் கலகம் என்ற நம்பிக்கை மக்களிடம் தோன்றியமைக்குக் காரணம் கலவாய் (கலகவாய்), கலகம் ஆகிய சொற்களுக்கு இடையேயுள்ள ஒலி ஒப்புமையாக இருக்குமா?
2. செம்பகம் (செம்புகம்) வீட்டிற்குள் வந்தால் செல்வம் வரும் என்ற நம்பிக்கை சில கிராமங்களில் உண்டு. செம்பகத்திற்குச் செம்போத்து என்பது மறுபெயர். செம்போத்து என்னும் சொல் பெருவழக்கில் இருந்த காலத்தில் அதனைச் சம்பத்து என்னும் சொல்லோடு தொடர்புபடுத்தியமையால் இந்நம்பிக்கை தோன்றியிருக்கக் கூடுமா?
3.சில கிராமங்களிலே ஒருபெண்திருமணஞ்செய்துஇருக்கின்றபோது வீட்டுக்குள் எங்கேயாவது குளவிகள் கூடுகட்டினால், 945 அப்பெண்ணுக்குக் குழந்தை பிறக்கும் என்பதற்கு அறிகுறி என நம்புகிறார்கள். குழவி என்றால் கைக்குழந்தை. குளவி, குழவி ஆகிய இரு சொற்களும் நமது உச்சரிப்பிலே ஒன்றுதான். எனவே இங்கு ஒலி ஒப்புமையைப் புறக்கணிக்க முடியவில்லை.

Page 68
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 124
4. தேரை கைக்குழந்தைகள் மீது பாய்ந்து விழுந்தால் குழந்தை தேய்ந்து ஒல்லியாகி விடும் என்று மக்கள் பொதுவாக அஞ்சுவார்கள். குழந்தை இருக்கும் இடத்துக்குத் தேரை வந்தால் உடனே குழந்தையை அப்புறம் தூக்கிச் செல்வார்கள். தேரை, தேய் ஆகிய இரு சொற்களும் ஓரளவு ஒலி ஒப்புமை உடையன.
5. தேன் தலையில் பட்டால் தலைமயிர் நரைத்துப் போகும் என்ற நம்பிக்கை உண்டு. அறிவியல் அடிப்படையில் இது உண்மையா என அறிதல் நன்று. பொதுவாக அவ்வாறு நரைப்பதாகக் காணோம். நறை என்னும் சொல்லுக்குத் தேன் என்னும் பொருள். நறை, நரை என்பன ஒலி ஒப்புமை உடையன. இந்தியத் தமிழில் இரு சொற்களும் ஒரே மாதிரி உச்சரிக்கப்படுகின்றன.
6. அரணை கடித்தால் மரணம் என்பர். பொதுவாக அரணை மக்களைக் கடிப்பதில்லை. பாம்பைக் கண்டு ஓடுவதுபோல அரணையைக் கண்டு மக்கள் ஓடுவதில்லை. இந்த நம்பிக்கையைப் பொறுத்தவரை கடித்தால்" என்னும் சொல்லில் 'ஆல்' என்பதற்கே அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அரணை என்னும் சொல் யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கில் அறனை என உச்சரிக்கப்படுகிறது. அரணை, மரணம் ஆகிய இரு சொற்களிலும் உள்ள ரகரம் இந்தியத்தமிழில் றகரமாகவே உச்சரிக்கப்படுகிறது.
7. முருங்கையில் ஏறும்போது விழுந்து ஒருவர்க்கு முறிவு ஏற்பட்டால், அம்முறிவு எளிதில் மாறாது என நம்புகிறார்கள். முருங்கை : முறிவு எனத் தொடர்பு படுத்தப்பட்டனவா?
8. வெள்ளிக்கிழமைகளில் மண், பீங்கான், போசலின் போன்றவற்றில் செய்யப்பட்ட பாத்திரங்கள் உடைந்தால் தரித்திரம் ஏற்படுமாம். வெள்ளி என்பது பணம், பொருள் என்பனவற்றையும் குறிக்கலாம். வெள்ளியில் செய்யப்பட்ட காசுகள் வழக்கில் இருந்தன. ஒலி ஒப்புமையால் வெள்ளியும் வெள்ளிக்கிழமையும் தொடர்புபெற்றனவா?
9. ஞாயிறு நோயறு, செவ்வாய் வெறுவாய், அட்டமி நவமியில் தொட்டது நாசம், உச்சிப் பல்லிக்கு அச்சமில்லை, கள்ள வியாழன் கழுத்தறுக்கும், குட்டிப் பல்லு குடியைக் கெடுக்கும் தெற்றுப்பல்லுத் தேசத்தை ஆளும் போன்றவை நம்பிக்கை பொதிந்த பழமொழிகளாக வழங்குகின்றன. இவற்றிலும் ஒலி ஒப்புமையும் ஒலிநயமும் இருக்கக் காண்கிறோம். முட்டையா குஞ்சா முதல் என்பதுபோல இவற்றிலும் முதல்

125 சுசீந்திரராசா
கருத்து பின் ஒலி ஒப்புமையா அன்றி ஒலி ஒப்புமை பின் கருத்தா எனக் கேட்டுக் குழப்புதல் ஈண்டு விரும்பத்தக்கது அன்று. இது என்றுமே சிக்கல்.
கிராமங்கள்தோறும் சென்று கள ஆய்வு செய்யின் ஒலி ஒப்புமையைக் காரணமாகவோ பல காரணங்களுள் ஒன்றாகவோ கூறக்கூடிய இன்னும் பல நம்பிக்கைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கைகூடும். வாழ்க்கை முறைகளில் விரைந்து ஏற்படும் மாற்றங்களின் தாக்குதலால் இவை போன்ற நம்பிக்கைகள் கிராம வாழ்க்கையில் படிப்படியாக மறைந்து வருகின்றன. முற்றாக மறைவதற்கு முன்னர் அவற்றை அறிந்து குறித்து வைப்பது ஆராய்ச்சிக்குப் பயன்படக்கூடிய நற்பணியாகும்.

Page 69
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 126
9
உறவுப் பெயரமைப்பில் ஒர் உறவு
யாழ்ப்பாணத்தவர்களுடைய மூதாதையர் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்தவர்கள் எனப் பொதுவாக நம்பப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மக்கள்தம்பரம்பரைபற்றிப் பேசும்போது தாம் இந்தியாவிற் குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து வந்து குடியேறியவர்களின் சந்ததியினர் எனப் பெருமைப்படுவது உண்டு. குடியேற்றம் பற்றிப் பேசுஞ் சில நூல்களைச் சான்று காட்டுவதும் உண்டு. இன்று தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாழும் மக்களிடையேயும் யாழ்ப்பாணத்தவர்களிடையேயுங் காணப்படும் மொழிக்கூறுகள், சமுதாய அமைப்பு, பழக்கவழக்கங்கள், தெய்வ வழிபாட்டு முறை, நம்பிக்கைகள், மரபுகள் போன்றவற்றைக் கூர்ந்து ஒப்புநோக்கி ஆராயுமிடத்து, தென்னிந்தியாவிற் குறிப்பிடத்தக்க சிற்சில பகுதிகளில் வாழும் மக்களிடையேயும் யாழ்ப்பாணத்தவர்களிடையேயும் பொதுமைப் பண்புகள் மிகுந்துகாணப்படுகின்றன.இவை பெரும்பாலும்பண்டுதொட்டு வரும் பண்புகள் எனலாம்.
I
சமுதாயத்தில் மக்கள் தமக்குள் உறவுகொள்ளும் முறைக்கேற்ப உறவுப் பெயர்களும் அவற்றின் எண்ணிக்கையும் பொருளும் அமைப்பும் மொழிக்கு மொழி வேறுபடுகின்றன. தமிழர் கையாளும் உறவுப் பெயர்களையும், ஆங்கிலேயர் கையாளும் உறவுப் பெயர்களையும் ஒப்புநோக்கும்போது இவ்வேறுபாடு எளிதிற் புலனாகும். ஒரு மொழி பேசுவோர் மத்தியிலும் உறவுப் பெயர்கள் பலவாறு வேறுபடுவதுண்டு. இவ்வாறு வேறுபட்டு அமையினும் சில இயல்புகளில் தனி ஒப்புமை இருப்பதும் உண்டு. இவ்வேறுபாடு பொதுவாகப் பண்பாட்டு வேறுபாட்டினாற்றோன்றுகிறது எனலாம். ஒப்புமைக்குக் காரணம் அம்மொழி பேசுவோரிடமுள்ள ஒருமைப்பாடாகலாம். எடுத்துக்காட்டாக, இந்தியத் தமிழர் கையாளும் உறவுப்பெயர்கள் யாழ்ப்பாணத்தவர்கையாளும் உறவுப்பெயர்களில்இருந்து வடிவம், எண்ணிக்கை, பொருள், அமைப்பு முதலியவற்றில் வேறுபடினுஞ் சில ஒப்புமையும் உடையன.

127 சுசீந்திரராசா
தமிழ்நாட்டிற் கன்னியாகுமரிப் பகுதி மக்களும் ஈழத்தில் யாழ்ப்பாணத்தவர்களும் கையாளும் உறவுப் பெயர்களின் அமைப்பில் நாம் அறிந்தவரை வேறு எப்பகுதியிலுங் காணப்படாத தனி ஒப்புமை ஒன்று காணப்படுகிறது. இவ்விரு பகுதிகளுக்கும் பண்டுதொட்டு நெருங்கிய தொடர்பு இருந்தது எனப் பொதுவாக நிலவுங் கருத்துக்கு இவ்வொப்புமை மேலும் ஒரு சான்றாக அமையக்கூடும் என்பதனைச் சுட்டிக் காட்டுவதே இங்கு நோக்காகும்.
III
கன்னியாகுமரி மாவட்டத்திற் கேரளத்தைச் சார்ந்துள்ளவில்வங்கோடு, கல்குளம் தாலுகாக்களில் வாழும் நாடார் சாதியைச் சேர்ந்த மக்களின் பேச்சில் நெருங்கிய உறவைக் குறிக்குந் தராதர வழக்குடைய எட்டு உறவுப் பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே முன்னிலை வழக்குடைய உறவுப் பெயர்கள் உள. இத்தராதர வழக்குடைய எட்டு அடிப்படை உறவுப் பெயர்களைப் பொதுவாக எல்லோரும் அறிவர்என்றும், ஆயின் இப்பெயர்கள் முன்னிலை வழக்குப் பெயர்களாகும் ஓர் அமைப்பு முறை திராவிட மொழிகளிலோ கிளை மொழிகளிலோ இதுகாறுங் கண்ட அமைப்பிற்கு உட்படாதது என்றும், இப்பெயர்களின் வடிவங்களை எமனோ, பரோ ஆகிய அறிஞர் தாமும் தம் அகராதியிற் குறிக்கவில்லை என்றும் அகில உலக திராவிட மொழியியற் பள்ளியைச் சேர்ந்த எம்.மனுவேல் தமது கட்டுரை 96.156) (M. Manuel, Some Unique Kinship Terms Current in a Dialect of Kanyakumari District, International Journal of Dravidian Linguistics, June 1981 Kerala) குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள தராதரப் பெயர்களும் அவற்றின் பொருளும் பின்வருமாறு:
தராதரப் பெயர் ܢ முன்னிலை வழக்கில் மட்டும்
1. அப்பன் (தந்தை, என் ! எங்கள் கொப்பன் (உன் தந்தை)
தந்தை)
2. ஐயா (தந்தை, என் ! எங்கள் தந்தை) கொய்யா (உன் தந்தை) 3. அப்பச்சி (தந்தையின் தந்தை, என் கொப்பச்சி (உன் தந்தையின் தந்தை
தந்தையின் தந்தை) 4. அம்மா / அம்மை (தாய், என் தாய்) கொம்மா / கொம்மை (உன் தாய்) 5. அண்ணன் (மூத்த சகோதரன், என் கொண்ணன் (உன் மூத்த சகோதரன்
மூத்த சகோதரன்)

Page 70
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 128
6. ஆத்தா (மூத்த சகோதரி, என் மூத்த கோத்தா (உன் மூத்த சகோதரி)
சகோதரி) 7. தம்பி (இளைய சகோதரன், என் தொம்பி (உன் இளைய சகோதரன்)
இளைய சகோதரன்) 8. தங்கச்சி (இளைய சகோதரி, என் தொங்கச்சி (உன் இளைய சகோதரி)
இளைய சகோதரி)
இவ்வுறவுப் பெயர்களுள் முதல் ஐந்தும் யாழ்ப்பாணத்தவர் சமுதாயத்தில் அடைப்புக்குறியினுட் காட்டிய பொருளில் வழங்கக் காண்கிறோம். யாழ்ப்பாண வழக்கில் தராதரப் பெயர்கள் பெரும்பாலும் தன்மைப் பொருளைத் தருவனவாயினும் பேசுவோன் குறிப்பிற்கேற்ப முன்னிலைப் பொருளுணர்ச்சியையோ படர்க்கைப் பொருளுணர்ச்சியையோ தரவும் கூடும். ஆறாவது பெயர் யாழ்ப்பாணத் தமிழில் இல்லை. ஆத்தை (தாய்), கோத்தை (உன் தாய்) என்னும் கிராமங்களிற் கல்வியறிவு மிகக்குறைந்த மக்களிடம் குறிப்பாகச் சில சாதி மக்கள் பேச்சில் வழங்கக் காணலாம். இவ்விரு பெயர்களும் இழிவழக்கு என்னும் பொருள்பட்டு வழக்கொழிந்துவருகின்றன.தம்பி,தங்கச்சிஎன்னும் பெயர்களும் யாழ்ப்பாண வழக்கில் உண்டு. ஆனால் தொம்பி, தொங்கச்சி என்பன இல்லை. எனவே இவை இரண்டும் யாழ்ப்பாணத்தவர்க்குப்
புதுமையானவை.
யாழ்ப்பாணத் தமிழில் இன்னுஞ் சில உறவுப் பெயர்கள் இதே முன்னிலை வழக்கின் அமைப்பைப் பெற்று வழங்குகின்றன. அவை
பின்வருமாறு:
1. அப்பு (தந்தை) கொப்பு (உன் தந்தை)
2. ஆச்சி (தாய், தாயின் தாய், கோச்சி (உன் தாய், உன் தாயின் தாய்)
தந்தையின் தாய்)
3. அக்கா (மூத்த சகோதரி) கொக்கா (உன் மூத்த சகோதரி)
4. அத்தான் (மூத்த சகோதரியின் கொத்தான் (உன் மூத்த சகோதரியின்
கணவன்) கணவன்)
5. அம்மான் (தாயின் சகோதரன்) கொம்மான் (உன் தாயின் சகோதரன்)
யாழ்ப்பாணத் தமிழில் உயிர் எழுத்திற்றொடங்கும் உறவுப் பெயர்கள் அனைத்தும் முன்னிலை வழக்கமைப்பைப் பெறுகின்றன. சொல்லின் முதலுயிர்க்குப் பதிலாகக் கொ, கோ வருகிறது; முதலுயிர் குறிலாயின் கொ வரும்; நெடிலாயின் கோவரும். இவ்வமைப்பைப் பொறுத்தவரை உயிரிலே

129 ர் ஐபி சுசீந்திரராசா
தொடங்கும் உறவுப்பெயர் எதுவும் விதிவிலக்கன்று. இன்று அண்ணி (அண்ணன் மனைவி) என்னும் சொல் சில குடும்பங்களில் மட்டும் வழங்குகிறது. இது அண்மையில் இந்திய வழக்கில் இருந்து வந்து யாழ்ப்பாணத் தமிழிற் கலந்த சொல். எனவே, இதனை யாழ்ப்பாணத்து வழக்கு என மயங்கிக் கொண்ணியும் உண்டா என வினாவற்க. உயிரிலே தொடங்கும் 'அத்தை போன்ற இந்திய உறவுப் பெயர்கள் யாழ்ப்பாணத் தமிழில் இல்லை.
V
தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களுக்குரிய தனித்தனி உறவுப் பெயர்கள் பண்டைய இலக்கியங்களிற் காணப்படுகின்றன.
எடுத்துக்காட்டு:
என்னை என் அப்பன்
எந்தை எம் அப்பன்
நுந்தை உம், உம் அப்பன்
தந்தை தன், தம் அப்பன்
LJILI என தாய
ஞாய் உன் தாய்
தாய் அவன், அவள், அதன் - தாய் ஆய் தாய்
இன்று தந்தை என்னும் சொல் இலக்கியத் தமிழில் மட்டும் மூவிடத்திற்கும் பொதுவாக வழங்க ஏனைய சொற்கள் வழக்கிறந்துவிட்டன. தன்மை, முன்னிலை இடத்திற்குரிய உறவுப்பெயர்களாகிய எங்கை,உங்கை, எம்பி, உம்பி, நுவ்வை முதலியன இன்றைய இலக்கிய வழக்கிலும் பேச்சு வழக்கிலும் இல்லாமற் போய்விட்டன.
யாழ்ப்பாணத்தவரின் பேச்சுத் தமிழிலே வழங்கும் முன்னிலை உறவுப் பெயர்களுட் கொப்பன், கொம்மா, கொண்ணன் ஆகிய மூன்றுங் கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யூருக்கு அண்மையில் வாழும் நாடார், கிருஷ்ண வகைக்காரர் என்போர் பேச்சிலும் வழங்குகின்றன எனச் F6T(pasto S61656m (MShanmugampillai, A Tamil Dialect in Ceylon, Indian Linguistics, Wol 23, 1962) குறிப்பிட்டுள்ளார். இராமநாதபுர மாவட்டத்தில் ங்ொப்பன் (உன் அப்பன்), ங்ொம்மா (உன் அம்மா), ங்ொண்ணன் (உன் அண்ணன்) ஆகிய மூன்று உறவுப் பெயர்கள் முன்னிலை வழக்கில் வழங்குகின்றன எனவுங் குறிப்பிட்டுள்ளார்.

Page 71
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 13O
V
இவ்வுறவுப் பெயர்களை ஒப்புநோக்கிச் சிந்திக்குமிடத்து இவை மிகப் பழைமையானவை என எண்ணத் தோன்றுகிறது. நாம் அறிந்த ஏனைய தமிழ்க் கிளைமொழிகளைக் காட்டிலும் யாழ்ப்பாணத் தமிழிலே தான் முன்னிலை உறவுப் பெயர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளன. இவை யாழ்ப்பாணத் தமிழிலே பெருவழக்குடையன; சீரான ஓர் அமைப்புப் பெற்றுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் வழங்கும் தொம்பி, தொங்கச்சி ஆகிய இரு வடிவங்களுஞ் சிந்தனைக்குரியன. இவையும் மிகப் பழைய வடிவங்களாக இருக்கலாம். இவை யாழ்ப்பாணத் தமிழில் வழக்கிறந்துவிட்டன எனக் கொள்ளலாம் அல்லது பிற்காலத்திலே கன்னியாகுமரி மாவட்டத்திற்றோன்றிய தனிவடிவங்கள் எனக்கொள்ளலாம். இன்றைய நிலையில் இவ்விரு வடிவங்கள்பற்றி எதனையும் உறுதியாகக் கூறமுடியவில்லை. மேலும் ஆராய்தல் வேண்டும். இராமநாதபுரத்திற் காணப்படும் பெயர்களின் முதல் ஒலியாகிய ங்கரத்தைக் ககரத்தின் மாற்றமாகக் கொள்ளலாம். நுகரம் சொல்லின் முதல்நிலையில் வருவதுதமிழ் மொழியின் பண்புக்குப் பொருந்தாது.
உறவுப் பெயரமைப்பிற் காணப்படும் உறவுபோல ஏனைய மொழிக்கூறுகளிலும் இங்குகுறிப்பிட்ட பகுதிகளிடையே ஒப்புமை உண்டு. ஏனைய தமிழ்க் கிளைமொழிகளிற் காணப்படாத சில பண்புகள் யாழ்ப்பாணத் தமிழுக்கும் மலையாளத்துக்கும் பொதுவாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தவர், மலையாளத்தவர் வாழ்க்கை முறைகளிற் பல பொதுப் பண்புகள் உள. இங்கு குறிப்பிட்ட பகுதிகளையும், தமிழ்நாட்டின் ஏனைய சில பகுதிகளையும், கேரளத்தையுங் கருத்திற் கொண்டுமொழி, சமுதாயம், பண்பாடு என்பன பற்றி ஒப்புநோக்கி ஆராய்தல் பயனுடைத்து. இதன்மூலம் நம்மைநாமே அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்புக் கிடைக்கும்.

131, சுசீந்திரராசா
10
விபுலாநந்த அடிகளாரின் மொழிச்சிந்தனை
சுவாமி விபுலாநந்த அடிகளாரை நினைக்குந்தோறும் அவர்கள் எழுதிய யாழ்நூலும் மதங்கசூளாமணியும் நினைவிற்கு வருகின்றன. இவையே அறிவுலகில் அடிகளாருக்குப் பெரும் புகழ் ஈட்டித் தந்தவை. இவ்விரு நூல்களை விட அடிகளார் பல கட்டுரைகளையும் பாடல்களையும் தமிழில் எழுதியுள்ளார்; சில கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தும் உள்ளார். அவரது கட்டுரைகளிலும் பாடல்களிலும் சில தொகுக்கப்பெற்று நூல்களாகவும் வெளிவந்துள்ளன.
விபுலாநந்த அடிகளாரின் சிந்தனை மொழி, இலக்கியம், மதம், இசை போன்ற பல பொருள் பற்றி அமைந்தது. மொழி பற்றிய அவரது சிந்தனையைச் சில கட்டுரைகளில் காண்கின்றோம். லகரவெழுத்து' எனத் தமிழ்ப் பொழிலில் எழுதினார்; தமிழில் எழுத்துக்குறை எனக் கலைமகளில் எழுதினார்; சோழமண்டலத் தமிழும் ஈழமண்டலத் தமிழும்" எனவும் 3,606) LD56fsi) 6T(p560T fr; 5 Spoudry seSuSuso' (The Phonetics of the Tamil Language) என ஆங்கிலத்தில் எழுதி வட இந்தியாவிலிருந்து வெளிவந்த 'மாடர்ன் ரெவ்யூ" (Modern Review) எனும் மாசிகையில் வெளியிட்டார்; The Gift of Tongues - an Essay on the Study of Language'6T6079 ride, 556) SyLigs பாரதத்தில் எழுதினார். 'கலைச் சொல்லாக்கம்' பற்றி 1936ஆம் ஆண்டு சென்னை மாகாணத் தமிழர் சங்கத்தாரினாதரவில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்திலே தலைமைப் பேருரை நிகழ்த்தினார். இன்னும் இவை போன்று நாம் அறியாதவையும் இருக்கக்கூடும். அடிகளார் மொழி பற்றிக் கூறிய அனைத்தையும் படித்து அடிகளார் மொழிச் சிந்தனை பற்றி அறிய முற்படலாம். ஆயின் அதற்கு இன்றைய காலம், சூழ்நிலை சாதகமாக இல்லை. விபுலாநந்த வெள்ளம் எனச் சில கட்டுரைகளை அருள்

Page 72
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 132
செல்வநாயகம் தொகுத்து வெளியிட்ட நூலில் வரும் 'கலைச்சொல்லாக்கம்", சோழமண்டலத் தமிழும் ஈழமண்டலத் தமிழும்' ஆகிய இரு கட்டுரைகளையும் மட்டும் உளங்கொண்டு அடிகளாரின் மொழிச்சிந்தனை பற்றிச் சுருக்கமாகச் சில கருத்துக்கள் கூறுவதே இவ்வாய்வின் நோக்கமாகும். அடிகளாரின் மொழி பற்றிய சிந்தனைகளை அறிந்து அவற்றை இன்றைய நோக்கில் மதிப்பீடு செய்வது நம்நாட்டு ஆய்வையும் ஆய்வு வளர்ச்சியையும் அறிந்து கொள்வதற்குப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.
விபுலாநந்தர்காலத்திலிருந்து இன்றுவரை பொதுமொழியியல் (General பnguistics) ஆய்வு படிப்படியாக நவீனமயப்படுத்தப்பட்டு ஓங்கி வளர்ந்து உள்ளது; மேலும் வளர்கிறது. நவீன மொழியியல் சிந்தனையின் தாக்கத்தைத் தமிழ் மொழியியல் ஆய்விலும் சிறக்கக் காண்கிறோம். மேலைநாட்டு மொழியியல் வளர்ச்சியை உளங்கொண்டு காலத்திற்கேற்ப தமிழ் மொழியியல் பற்றிச் சிந்தித்த நம் நாட்டு அறிஞர்கள் என எண்ணும்போது விபுலாநந்த அடிகளாருக்குச் சிறந்த இடம் உண்டு; அவருக்குத் தமிழ்நாட்டிலும், சிறப்பாக நமது நாட்டிலும் முதலிடம் உண்டு என்றால் மிகையாகாது. அடிகளாரின் செல்வாக்கினால்தான் போலும் அவர்களின் மாணவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களும் தமிழ் மொழியியலில் ஈடுபடலானார்."
கலைச்சொல்லாக்கம் பற்றி அறிஞர் பலர் காலத்துக்குக்காலம் எழுதியுள்ளனர். மகாநாடுகள் நடைபெற்றுள்ளன. தமிழ்மொழி வளர்ச்சி, கலைச்சொல்லாக்கம் போன்றவற்றை ஒட்டி தனித்தமிழ்', 'தூயதமிழ், செந்தமிழ்' என்றெல்லாம் பேசப்பட்டது. வடமொழியை வேண்டுமென்றே உயர்த்திப் பேசிய காலமும் தமிழைத் தாழ்த்திப் பேசிய காலமும் உண்டு. இதனில் உணர்ச்சி பொங்கியது; அரசியல் கலந்தது. அது ஒரு காலம். அறிவியல் வளர வளர அறிஞர், ஆய்வாளர் மத்தியில் அறிவியல் நோக்கு பரவத் தொடங்கியது. இந்த நோக்கை மொழி ஆய்விலும் அறிஞர் பயன்படுத்தியபோது பொதுவாக இருந்துவந்த மொழி நோக்குத் திசை மாறியது. மொழி பற்றி பொதுக்கோட்பாடுகள் வெளிவரலாயின. மொழியின் தன்மை தெளிவு பெறத் தொடங்கியது. மொழி வரலாறு, மொழித் தொடர்பு எனப் பொதுவாக அறிஞர் எழுதினர். இன்றும் எழுதுகின்றனர். இங்கு வைன்றை (Weinreich, U), ஈனார் ஹொகென் (Einar Haugen) போன்றோரைக் குறிப்பிடலாம். மேலும் சமூக மொழியியல் (Sociolinguistics) நோக்கிலும் மொழிச்சிந்தனை தெளிவுபெற்றுவருகிறது.

133 சுசீந்திரராசர
விபுலாநந்த அடிகளார் தமிழ்மொழி வளர்ச்சி பற்றியும் பிறமொழிச் சொற்களை ஏற்பதைப் பற்றியும் கூறிய கருத்துக்கள் சில பின்வருவன:
"உயிருள்ள மொழியானது பிறமொழித் தொடர்பு கொண்டு தனக்குரிய சொற்களஞ்சியத்தைப் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்."
"................... வடமொழியிலிருந்தெடுத்துத் தமிழான்றோராலே தமிழுருவாக்கி வழங்கப்பட்ட சொற்களைப் பிறமொழிச் சொற்களெனக் கடிந்தொதுக்குதல் மேற்கொள்ளாது அவை தம்மை ஆக்கத் தமிழ் மொழியாகத் தழுவிக்கொள்வதே முறையாகும்."
“ஒரோவிடத்து ஆட்சிப்பட்ட வடமொழிப் பதங்களைத் தமிழில் வழங்குதல் குற்றமாகாது. பிங்கலந்தை, திவாகரம், சூடாமணி நிகண்டு என்னும் நிகண்டுகளிலே வந்த பதங்களையெடுத்தாள்வது எவ்வாற்றாலும் பொருத்தமுடையதாகும்."
அடிகளார் பல ஆண்டுகட்கு முன்னர் கூறிய இக்கருத்துக்களைத் தற்கால மொழியியலாளர் ஏற்றுக்கொள்வதற்குத்தயக்கங்காட்டமாட்டார்கள். தமிழ் மொழியியலை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்ட பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரன் வடமொழியை முற்றாக வேண்டாம்என்று உதறித் தள்ளிவிடக்கூடிய காலம் இன்னும் வரவில்லை என்றும், தேவை ஏற்படும்போது கலைச்சொற்களை வடமொழியில்ருந்து ஏற்க வேண்டிய மேலும் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கிப் பயன்படுத்தும் பணியாட்கள் மொழி
லையும் முற்றாக மாறிவிடவில்லை என்றும் கூறியுள்ளார்.
ul4 UPDD لل
பற்றிப் பேசும் அவர் 'தமிழனை விட்டு தமிழினைக் காணும் முயற்சி வீண், வீண், வீண்" எனக்கூறினார்.நாம் இக்கருத்துக்களைப் புறக்கணித்தல் அரிது.
பொதுவாகத் தமிழ்ப் பண்டிதர் பலர் பேச்சுமொழிக்குச் சிறப்பளிப்பதில்லை. புத்தகத் தமிழையே தமிழ்' என்று போற்றி அதனைச் செந்தமிழ்' என்றும் கூறுவர். அவர்கட்கு மொழிமாற்றம் உடன்பாடன்று. கன்னித்தமிழ் என்றே பேசினர்; சிலர் இன்றும் பேசுகின்றனர். அவர்கள் மொழி வேறுபாட்டில் உயர்வு,தாழ்வுகாண்பர். ஆயின் ஈழத்திலே முதற் பண்டிதராக விளங்கிய விபுலாநந்த அடிகளார் தமது காலத்திலேயே மொழியின் தன்மையை, போக்கினை, வரலாற்றினை நன்கு உணர்ந்தவராக இருந்தார். பேச்சுமொழி இழிந்தது எனக் கொள்ளாது திண்ணையிலும் தெருவிலும் கடைவீதிகளிலும் தொழிற்சாலைகளிலும் பாமரர் பேசும் தமிழில் சிறப்பியல்புகள் உண்டு என்று நம்பினார். பேச்சு (வழக்கு) மொழியையே

Page 73
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 134
'உயிர்த்தமிழ்' எனக் கருதினார். டி.கே.சிதம்பரநாத முதலியார் போன்றோரை மக்களது வழக்கு மொழியின் அழகையும், ஆற்றலையும் ஆராயுமாறு வேண்டினார். அடிகளார் ‘ஒருவர் பிறந்த தாலுகா, ஜில்லா, அவரது குலம், கோத்திரம், தொழில், பொருணிலை என்னுமிவற்றை அவரது மொழியினின்றும் அறிந்து கொள்ளுகிறோம்" என்றார். அடிகளார் பேச்சுத்தமிழை உயிர்த்தமிழ் எனக்கூறியது அவரிடம் ஏற்பட்டிருந்த தொலையறிவைக் காட்டுகிறது. வழக்கு மொழியின் ஆற்றல் பற்றிப் பேசியதை இன்றைய சமூக மொழியியல் கருத்துக்களோடு வைத்துச் சிந்தித்தால் அவரது நோக்கு-தொலைநோக்கு - எத்தகைய கூர்மை பெற்றது என்பது புலனாகும். இன்று மொழியியலார் பிரதேசமொழி, சமூகமொழி என்றெல்லாம் விரிவாக ஆராய்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலே சிறப்பாகப் பருத்தித்துறைப் பகுதியிலேபேசப்பட்ட தமிழில் நாடகம் சில எழுதிய பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களை அடிகளார் மட்டக்களப்பு வழக்கு மொழியிலும் ஓரிரு நாடகங்கள் எழுதுமாறு வேண்டினார். சமகாலத்திலேயே மொழி வேறுபடுமாற்றை உணர்ந்து தமிழ்நாட்டிலே சோழமண்டலம் என்னும் பகுதியில் பேசப்பட்ட தமிழையும் ஈழமண்டலத்தில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் தம் காலத்தில் பேசப்பட்ட மொழியையும் பயனுள்ள ஆய்வுப்பொருள் எனக்
கொண்டு ஒப்புநோக்கி ஆராய முற்பட்டார்.
உலகமொழிகள் சிலவற்றில் ஆண்கள் கையாளும் மொழிக்கும் பெண்கள் கையாளும் மொழிக்கும் வேறுபாடுகள் உண்டு. இத்தகைய வேறுபாடுகளையும் சமூக மொழியியலார் ஆராய்கின்றனர். 'கா' என்னும் அசைநிலை இடைச்சொல்லை மட்டக்களப்பிலே அதிகமாகப் பெண்கள் வழங்குவதை அடிகளார் அன்று அவதானித்து எடுத்துக் கூறியதை இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும். ஏனைய தமிழ்க்கிளை மொழிகள் எதனிலும் இத்தகைய வேறுபாடு காட்டப் பெற்றதாகத் தெரியவில்லை.
அன்று அடிகளார்கொடுந்தமிழ்,செந்தமிழ் என்ற பாகுபாட்டையும் ஏற்று நாடக நூலுக்குக் கொடுந்தமிழ்வழக்குவருமெனவும்ஏனைய அறிவுநூல்கள் செந்தமிழ் மொழியிலே ஆக்கப்பட வேண்டுமெனவும் கருதினார். அடிகள் கருத்தின்படி அறிவுநூல்கள் என்பன"அறநூல் (Ethics and Law), பொருணுல் (Natural and Social Sciences), 36Tug T6) (Fine Arts), 65 (Bg5 T6) (Religion and Philosophy) பற்றியனவாகும். இத்தகைய நூல்கள் இன்றும் ஒரு மொழியின் தராதர மொழியிலே எழுதப்பட்டு வருவது கண்கூடு.

135 சுசீந்திரராசா
அடிகளார் கருத்துக்கள் ஒரு சில நமக்கு இன்று உடன்பாடற்றவை போலத் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக “யாழ்ப்பாணத்தில் அகரவீற்றின் பின்னும் யகரம் உடம்படு மெய்யாகும். காணவில்லை = காணயில்லை'. யாழ்ப்பாணத்துப்பேச்சிலேஇன்றுமேற்குறித்தஇடத்துயகர உடம்படுமெய் தோன்றக்காணோம். காணவில்லை > காணேல்லை, சொல்லவில்லை"> சொல்லேல்லை, போகவில்லை > போகேல்லை என இன்று அமைவதைக் காண்க. அடிகளார் காலத்துக்குப் பின் யாழ்ப்பாணத்தமிழ் மாறியிருக்கலாம் என வாதாடலாம். ஆயின் அத்தகைய மாற்றங்கள் அவ்வளவு விரைவாக ஏற்படுவதில்லை.
இதுகாறுங்கண்டஅடிகளார்மொழிச்சிந்தனைகளுள்பலமிகவும்சரிசம நிலையானவை (balanced) என்பது போதரும். அவர்கள் மொழிகுறித்து
எழுதியவை அனைத்தையும் தேடிப்படித்து ஆராய்வது பல்கலைக்கழக நிலையில் மேற்கொள்ளத்தக்கது.
குறிப்புகள்
1. விபுலாநந்த அடிகளார் ஆக்கங்கள் பற்றிய விபரங்களை அறிவதற்குப் பார்க்க : எம்.சற்குணம் (ஆசிரியர்) 1969 அடிகளார் படிவமலர், ப.90-93, கொழும்பு. இம்மலரில் தரப்பட்டுள்ள விபரங்கள் முழுமையானவையன்று. சில கட்டுரைகள் வெளிவந்த சஞ்சிகைகளின் இதழ், எண், ஆண்டு போன்ற விபரங்கள் தரப்பட்டவில்லை.
2. ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற இக்கட்டுரையைப் படிக்காமல் கட்டுரைத்
தலைப்பினைச் சரியாகத் தமிழ்ப்படுத்தித் தர முடியவில்லை.
3. அடிகளார் போன்று பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களும் யாழ்ப்பாணத்துப் பேச்சுமொழியை ஆராய்ந்து சில கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.
4. இக்கருத்துக்கள் கலைச்சொல்லாக்கம் என்னும் கட்டுரையில்
வருகின்றன.
5. 5Tears : Meenakshisundaran, T.P. (1965): A History of Tamil Language,
P.175, Deccan College Publication.
6. மீனாட்சிசுந்தரன், தெ.பொ. (1967) தமிழ்மணம், ப.42, மதுரை.
7. இக்கருத்துக்களைச் சோழமண்டலத் தமிழும் ஈழமண்டலத் தமிழும்
என்னும் கட்டுரையில் காண்க.

Page 74
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 136
உசாத்துணை
அருள் செல்வநாயகம் (தொகுப்பாசிரியர்), (1961) விபுலாநந்த வெள்ளம், ஓரியன்ட் லாங்மன்ஸ், சென்னை.
சற்குணம், எம். (ஆசிரியர்), (1969) அடிகளார் படிவமலர், கொழும்பு.
மீனாட்சிசுந்தரன், தெ.பொ. (1967) தமிழ்மணம், மீனாட்சி புத்தக நிலையம்,
மதுரை.
Fasold, Ralph (1990) The Sociolinguistics of Language, Basil Blackwell.
Hudson, R.A. (1987) Sociolinguistics, C.U.P.
Haugen, Einar, The Analysis of Linguistic Borrowing, Language, Vol.26.
Meenakshisundaran, T.P. (1965) A History of Tamil Language, Deccan College.
Smith, Philip (1980) Judging Masculine and Feminine Social identities from Content - Controlled Speech. In Giles, Robinson and Smith 1980: 121-6.
Weinreich, U. (1971) Languages in Contact, The Hague: Mouton.

137 சுசீந்திரராசா
11
பண்டிதமணியின் மொழிநடை
I
“பண்டிதமணியின் மொழிநடை என ஒன்று உண்டா? உண்டு என்பதே விடை. ஆயின் எப்படித் தெரியும்? பண்டிதமணியின் நூல்களைப் படித்த பழக்கத்தினால் ஏற்படும் உள்ளுணர்வு அவ்வாறு கூறுகிறது. அந்த உள்ளுணர்வை நம்பலாமா? நிலைநாட்டுதல் கூடுமா?
உலகில் ஒருவரைப்போல மற்றொருவர் இல்லை. இதேபோன்று ஒருவரைப் போன்று மற்றொருவர் மொழியைப் பேசுவதில்லை; எழுதுவதுமில்லை. இது மொழியியற் கருத்தும் ஆகும். எனவே மேற்கூறிய உள்ளுணர்வு பிழையாகாது. உள்ளுணர்தல் ஒன்று; அதனை நிலைநாட்டுதல் வேறொன்று. உள்ளுணர்வைத் தூண்டுதலாகக் கொண்டு அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து உண்மை எனப் போற்றப்படுவதைத் தக்க சான்றுகளுடன் நிலைநாட்டுதல் வேண்டும்.
பண்டிதமணியின் மொழிநடை 'நல்ல நடை', 'அழகான நடை', அருமையான நடை', 'எளிய நடை', 'சுவையுள்ள நடை எனப் பலர் பேசக் கேட்டுள்ளேன். ஆயின் இத்தகைய நடைகளை வரையறுத்து விளக்குவார் இல்லை. எனவே இத்தகைய கூற்றுக்கள் விளக்கமற்றுப் போகின்றன; ஆதாரமற்ற தற்சார்புடைய கூற்றுக்களாக அமைந்து விடுகின்றன.
I
பண்டிதமணியின் மொழிநடையை ஏனையோரின் மொழி நடையிலிருந்து வேறுபடுத்திய பின்னர்தான் ஒட்டுமொத்தமாகப் பண்டிதமணியின் மொழிநடை எனப் பேசுதல் கூடுமன்றோ? வேறுபடுமாற்றை ஒப்பியல் அடிப்படையில்தான் கண்டுகொள்ள முடியும். பண்டிதமணியின் மொழி நடையை மொழி ஆட்சியின் பல நிலைகளிலே புள்ளியியல் அணுகுமுறையை மேற்கொண்டு ஆராய்தல் வேண்டும்.
10

Page 75
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 138
பண்டிதமணியின் தனிக்கூறுகளை ஒப்பியல் அடிப்படையில் சுட்டிக் காட்டுதல் வேண்டும். இதன் பொருட்டுப் பண்டிதமணியின் நூல்கள் அனைத்தையும் அவை எழுந்த கால வரிசைப்படி துருவித்துருவிப் படித்தல் வேண்டும். பண்டிதமணியின் சமகாலத்தவர் நூல்களையும் மொழி நோக்கிலே படித்தல் வேண்டும். பழைய மொழியமைப்பையும் கருத்திற் கொள்ளல் வேண்டும். தக்கதோர் நெறி நின்று திரட்டிய தகவல்களை ஒப்பீட்டாய்வு செய்த பின்னர்தான் பண்டிதமணியின் மொழிநடை பற்றி நிதானமாகப் பேச முடியும். இது எளிதான காரியமன்று; நீண்டநாள் ஆய்வாகும். V
ஆதலால் இங்கு பண்டிதமணி எழுதிய நூல்களுள் “இலக்கியவழி' என்னும் நூலை மட்டும் கருத்திற் கொண்டு அவரது மொழி பற்றிச் சில கருத்துக்களைத் தற்காலிகமாகக் கூற முற்படுவோம்."
III
ஈழநாட்டுப் புலவர் என்னுங் கட்டுரையில் சின்னத்தம்பிப் புலவரைப் பற்றிக் கூறும்போது பண்டிதமணி “இலக்கணத் தமிழிலே, “முதலியார் வீடு யாதோ?’ என்று வடதேசத்துவித்துவான் சிறுவர்களை வினாவினார்' என்று எழுதியுள்ளார். இங்கு “இலக்கணத் தமிழ்" என்னும் தொடரையும் அது பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தையும் கருத்திற் கொள்க. இவ்விடத்து "இலக்கணத் தமிழ்' என்று விதந்து கூறியதன் காரணம் யாது? முதலியார் வீடு', 'முதலியார் வளவு" போன்ற தொடர்கள் சாதாரண மக்கள் பேச்சிலும் சிறுவர் பேச்சிலும் வழங்குபவை. "யாதோ' என்பதற்குப் பதிலாக 'எது' எனினும் இலக்கணத் தமிழ் ஆகும். ஆனால் 'எது' என்னும் வினாச்சொல் விலக்கப்பட்டுள்ளது. காரணம் அது சிறுவர்மொழியிலும் வழங்குவது என்றதனால்போலும்."யாதோ' என்பது பொதுவாகச்சிறுவர்மொழிவழக்கில் வருவதில்லை. அது சிறுவர்களுக்குப் புதுமையான மொழி வழக்காகும். எனவேதான் அதனைச் சுவாரஸ்யமாக "இலக்கணத்தமிழ்' என்று
பண்டிதமணி கூறினாரோ!
பண்டிதமணி யார் யாரை நினைவிற்கொண்டு தமது கட்டுரைகளையும் நூல்களையும் எழுதினாரோ அவர்கள் அனைவருக்கும் அவரது மொழி பெரும்பாலும் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. பண்டிதமணி கூறிய "இலக்கணத் தமிழ்' போன்ற தமிழ் அவரது நூலில் இல்லை எனலாம். தாம் எழுதுவது மற்றவர் பொருட்டு என்பதனை என்றும் மறந்ததில்லை. பண்டிதமணி பெரும்பாலும் தற்காலத்து வழக்கு முறைகளை அனுசரித்தே எழுதியுள்ளார்.

139 சுசீந்திரராசா
V
தமிழ் மொழியிலே உள்ள எத்தனையோ வகைகளுள் யாழ்ப்பாணத்துப்
பேச்சுமொழி ஒருவகை. இவ்வகைக்கு மட்டும் உரிய சிறப்புக் கூறுகள் உண்டு. இவை இலக்கிய வழக்கில் வருவதில்லை. இலக்கிய மொழிக்கு மட்டும் உரிய சிறப்புக் கூறுகள் உண்டு. இவை பேச்சு மொழியில் வருவதில்லை. பேச்சு மொழி, இலக்கிய மொழி ஆகிய இரண்டிற்கும் பொதுவான மொழிக்கூறுகளும் பலவுண்டு. இவை இரண்டிலும் வருபவை. பண்டிதமணியின் நூலில் மூன்றாவது வகைக் கூறுகளை அதிகம் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக 'சீவக சிந்தாமணியிலே வருகின்ற கனிதரும் மரங்கள், கொடிகள், செடிகளை - சூளாமணியிலே வருகின்ற பழங்கள் நிறைந்த மாடங்களை அந்தக் கம்பன் என்கின்ற வம்பு, பொருள் செய்கிறானில்லை" (ப.9) என எழுதியுள்ளார். இங்கு வினைமுற்றைக் கருதுக. படிக்கிறான் இல்லை, செய்யிறான் இல்லை எனப் பேச்சில் வரும் அமைப்போடு ஒப்பிடுக. மேலும் “ஒரு காலத்தில் மண்ணுலகை விழுங்கினவர்" (ப.7) என்னும் பண்டிதமணியின் வாக்கியத்தில் "விழுங்கினவர்" என்பதற்குப் பதிலாக விழுங்கியவர் என்றாலும் ஏற்றுக் கொள்ளப்படும். இரண்டாவது அமைப்பு இலக்கிய வழக்கிலே மட்டும் வருவது. முதலாவது அமைப்பு பேச்சிலும் இலக்கியத்திலும் வருவது. இவர் தான் பாடினவர் போன்ற அமைப்பு பேச்சிலே வருவதையும், இவர்தான் பாடியவர் போன்ற அமைப்பு பேச்சிலே வராததையும் கருத்திற் கொள்க. பண்டிதமணிக்கு விருப்பமானது முதலமைப்பு
“ஒன்று ஆண், மற்றது பெண்; கணவன் மனைவி' )11.لا(, "இடிமுழக்கம், மின்னல், காற்று, மழை" (ப.11) - இவையும் பண்டிதமணியின் வாக்கியங்கள். மூன்றாவது வகைக்கூறுகள் அதிகம் இருப்பதனால்தான் பண்டிதமணியின் நடை பலருக்கு எளிய நடையாகிறது போலும், பண்டிதமணிகையாண்டுள்ளவாக்கிய அமைப்புக்கள்காரணமாகப் படிப்போர்க்குக் கருத்துக் குழப்பம் தோன்றும் நிலை நூலில் இல்லை எனத் துணியலாம். கருத்திலும் கருத்து வெளிப்பாட்டிலும் அவருக்குத் தெளிவுண்டு.
பண்டிதமணி சிறிய சிறிய வாக்கியங்களை விருப்புக் காரணமாகக் கையாண்டுள்ளார். சிறிய வாக்கியங்களைப் பொருட் செறிவுடையனவாக எழுதுதல் எளிதன்று. அவ்வாறு எழுதுவதற்கு அறிவு முதிர்ச்சியும், அநுபவமும், ஆற்றலும் வேண்டும். அவரது நூலில் ஒரு சொல்லே ஒரு

Page 76
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 14O
வாக்கியமாக அமைதலைக் காணலாம். இரு சொற்களால் அமைந்த வாக்கியங்கள் உண்டு. மூன்று, நான்கு அல்லது ஐந்து சொற்களால் அமைந்த வாக்கியங்களும் உண்டு. இடையிடையே நீண்ட வாக்கியங்களும் வருகின்றன. ஒரு நீண்ட வாக்கியம் ஒரு பத்தியாகவும் உள்ளது. ஆயின் இவ்வகை மிகக் குறைவு. அவை அனைத்து வகைகளையும் புள்ளியியல் அடிப்படையில் கணக்கிட்டு மதிப்பிட முடியும். சுருக்கமாகக் கூறின் அவரது வாக்கிய அமைப்பிலே பழமையும் உண்டு; புதுமையும் உண்டு. பழமை குறைவு; புதுமையே அதிகம் எனலாம். வாக்கியத்தில் சொற்கள் பொருளுணர்ந்து இடமறிந்து கையாளப்பட்டுள்ளன. அத்ாவது தக்க இடங்களில் தக்க சொற்கள் வருகின்றன. அவை பெரும்பாலும் அனைவருக்கும் பழக்கமானவை. "அடியாத மாடு படியாது" (ப.72) போன்ற பழக்கமான பழமொழிகளையும் "இடறு கட்டை" (ப.3), “கால் வைத்தல்" (ப.56) போன்ற மரபுத் தொடர்களையும், கண்டதார் கேட்டதார்" (ப.52), "அது கிடக்க" (ப.70) போன்ற பொருள் பொதிந்த சொற்றொடர்களையும் கையாண்டுள்ளார். ஒரு சில சொற்கள் மட்டுமே சிலருக்குக் கடினமானவையாதல் கூடும். அவை பெரும்பாலும் வடமொழிச் சொற்களாகக் காணப்படுவது காரணமாகலாம். எடுத்துக்காட்டாக பிராரத்தம் (ப.66), ஆவாகனம் (ப.67).
V
பண்டிதமணி தமது கட்டுரைகளிலே வரும் சில சொற்களுக்குத் தாம் கருதும் பொருளையும் கூறிச் செல்லும் நடையுத்தியைக் கையாண்டுள்ளார். இதனை அவரது ஏனைய நூல்களிலும் காணலாம். இங்கு "இலக்கியவழி”யிலிருந்து சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
"இரட்டையர். ஒரு தாய் வயிற்றில் ஒரே கருப்பத்தில் இரட்டையாய்ப் பிறந்தவர்கள் இரட்டையர்" (ப.1).
“காளமேகம் ஆசுகவி. ஆசுகவி என்றால் விரைந்து பாடுகின்ற புலவன் என்பது கருத்து" (ப.6).
"அந்தக் கம்பன் என்கின்ற வம்பு, பொருள் செய்கின்றானில்லை. வம்பு-புதுமை" (ப.9).
“புலவர்கள் என்றால் அறிஞர்கள்" (ப.48).

141 சுசீந்திரராசா
V
"இலக்கியவழி”யிலே உள்ள இருபது கட்டுரைகளில்
பெரும்பாலானவை இலக்கியம் பற்றியவை. புலவர் வரலாறு, நூல் வரலாறு பற்றிய கட்டுரைகளும் உண்டு. கட்டுரைகளில் இறந்தகால நிகழ்ச்சிகளைக் கூறும்போது அவற்றை இறந்த காலத்தில் வருணிக்கலாம்; நிகழ்காலத்திலும் வருணிக்கலாம். இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்வதற்கு இடமுண்டு. பண்டிதமணி இலக்கியக் காட்சிகளை - நிகழ்ச்சிகளை-மட்டுமன்றி ஏனைய காட்சிகளையும் பெரும்பாலும் நிகழ்காலத்திலே வருணித்துள்ளார். "நாவலர் எழுந்தார்’ எனக் கட்டுரைத் தலைப்பை இறந்த காலத்தில் தந்தாராயினும் கட்டுரையுள் காட்சிகளை நிகழ்காலத்திலேயே வருணித்துள்ளார். இதுதவிர, ஒரே கருத்தைநிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும்கூறக்கூடிய இடங்களிலும் பண்டிதமணி நிகழ்காலத்தையே ' விரும்பிக் கையாண்டுள்ளார்.
- 8 எடுத்துக்காட்டாக,
அ) கதைகள் தாய்ப்பாலுடன் சேர்ந்து இரத்தத்திற் கலந்து தேகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றன என்றும், மிருதுவான நரம்புத்துய்களிற் குடியிருக்கின்றன என்றும் பலரும் பலவிதமாகக்
கதைகளைப் பற்றிக் கதைகள் சொல்லுவார்கள்.
(ஆ) கதைகள் தாய்ப்பாலுடன் சேர்ந்து இரத்தத்திற் கலந்து தேகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றன என்றும், மிருதுவான நரம்புத் துய்களிற் குடியிருக்கின்றன என்றும் பலரும்
பலவிதமாகக் கதைகளைப் பற்றிக்கதைகள் சொல்லுகின்றார்கள்.
ஆகிய இரு வாக்கியங்களும் ஒரே கருத்தைப் புலப்படுத்த வல்லன. ஏற்றுக்கொள்ளத் தக்கவை. ஆனால் நடையில் மட்டும் சிறிய வேறுபாடு உண்டு. பண்டிதமணியின் வாக்கியம்நிகழ்கால வினைமுற்றைக்கொண்டது (ப.10); இங்கே இரண்டாவது. இத்தகைய நிலையில் பண்டிதமணி மிகக்
குறைவாக வருங்காலத்தையும் கையாண்டுள்ளார். எடுத்துக்காட்டாக,
"தாயே, என் அருமைத் தந்தை எனக்குக் கட்டளை இட, அதனைத் தாங்கள் எனக்கு வந்து சொல்லுகிறதானால், அதைவிட வேறு என்ன பாக்கியம் இருக்கிறது. அருமை அன்னையே, தாங்கள் எனக்கு ஒன்று சொல்லுவதானால்,அதனை மன்னன் கட்டளை என்றா சொல்லவேண்டும்’ (u.76).

Page 77
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 142
V
'ஒன்றாகப் பழகினோம்', 'ஒன்றாய்ப் பழகினோம் போன்ற வாக்கியங்களில் ஆக, ஆய் என்பன ஒரேபொருளைத்தருவன. ஆக இலக்கிய வழக்கில் வருவது. ஆய் இலக்கிய வழக்கு,பேச்சு வழக்கு ஆகிய இரண்டிலும் வருவது. சிலர் ஆக என்பதைக் கையாள்வர், மற்றும் சிலர் ஆய் என்பதைக் கையாள்வர். இன்னும் சிலர் இரண்டையுமே மாறி மாறிக் கையாளக்கூடும். மூன்றாவது வகையினர் எதனைக் கூடுதலாகக் கையாள்கின்றனர் எனப் புள்ளியியல் அடிப்படையில் கண்டு அதனை நடைக்கூற்ாகக் கொள்ளலாம். பண்டிதமணி 'இலக்கியவழி'யில் ஆய் என்பதனைக் கையாண்டுள்ளார். எடுத்துக்காட்டாக "இரட்டையாய்" (ப.1), "ஆக்குவதாய்" (ப.3), “மயமாய்” (ப.8), "தேவனாய்" (ப.13), "திரள் திரளாய்" (ப.61).
VIII
வினைகளுள் ஒரு வகை வினைகள் எதிர்மறை விகுதியை நேரடியாக ஏற்கும். எடுத்துக்காட்டாக செய் செய்யா. மற்றும் ஒரு வகை நேரடியாக மட்டுமன்றி, க்க் சேர்ந்த பின்னரும் ஏற்கும். எடுத்துக்காட்டாக படி படியா, படிக்கா. நமது பேச்சு வழக்கில் க்க் பெரும்பாலும் வருவதில்லை. பண்டிதமணி க்க் என்பதை விலக்கிக் கொண்டார். எடுத்துக்காட்டாக “களையாத முடவர்" (ப.2), “பல்லை இளியாமல்" (ப.7), "பறியாமலே
பழுத்து." (ப.8), “மெளனத்தைக் குலையாமலே" (ப.14).
IX
வெவ்வேறு நடையுத்திகளால் மிகுதிப் பொருளைப் புலப்படுத்தலாமாயினும் பண்டிதமணி சொற்களை இரட்டிக்க வைத்தே அதனைப் புலப்படுத்துகின்றார். எடுத்துக்காட்டாக "விம்மி விம்மி" (ப.6), "அழுது அழுது" (ப.58), 'திரள் திரளாய்" (ப.61), "இறைத்து இறைத்து' (ப.77). பண்டிதமணியின் கட்டுரைகளில் திரும்பத்திரும்பப் பயின்று வரும் சொற்களுள் "சற்றே" என்னும் சொல் சுட்டிக் காட்டத்தக்கது. அது பயின்று வரும் நூற் பக்கங்களில் சில பின்வருமாறு: ப.9, 12, 14, 20, 26, 30, 34,36,
72.

143 சுசீந்திரராசா
X
பெரும் மதிப்பைக் குறிப்பதற்கு 'அவர்கள் என்னும் சொல்லைப் பண்டிதமணி இயற்பெயர்களோடு பயன்படுத்தியுள்ளார். எத்தனையோ புலவர் பெயர்கள் "இலக்கியவழி'யில் வருகின்றன. எல்லோருக்கும் பண்டிதமணி 'அவர்கள்' என்பதை வழங்கவில்லை. சிலருக்குச் சில கட்டுரைகளில் வழங்கி வேறு சில கட்டுரைகளில் வழங்கவில்லை. துரை என்னும் சொல்லை சேர்பொன்.இராமநாதன் பெயரோடு சேர்த்து சேர்பொன். இராமநாதன் துரை எனக் கூறியுள்ளார் (பக். 62, 66). பல கட்டுரைகளில் நாவலரவர்கள்' என்றே கூறும் பண்டிதமணி ஈழநாட்டுப் புலவர் என்னுங்
கட்டுரையில் 'அவர்கள்' என்ற சொல்லைக் கைவிட்டு விட்டார்.
இவ்விடத்து “இலக்கிய வழி' என்னும் நூல் பண்டிதமணிகாலத்துக்குக் காலம் எழுதிய கட்டுரைகளின் (சொற்ப்ொழிவுகளின்) தொகுப்பு என்பதனை நினைவுகூர்தல் வேண்டும். கட்டுரைகள் எழுந்த காலக்கிரமம் பற்றிய செய்தி நூலிலே இல்லை. இச்செய்தி ஆய்வுக்கு குறிப்பாக மொழி ஆய்வுக்கு முக்கியமானது. இல்லாதபோது ஆய்விலே சில சிக்கல்கள் எழுவதற்கு இடமுண்டு.
XI
பண்டிதமணி பிறமொழி வெறுப்பற்றவர். கிரந்த எழுத்துக்களுடன் சொற்களைக் கையாண்டுள்ளார். எடுத்துக்காட்டாக "ஸ்தம்பித்து விட்டன' (ப.16), "கூேடிமந்தானே' (ப.69), வடமொழிச் சொற்கள் பலவற்றையும் கலந்து எழுதியுள்ளார். சில ஆங்கிலச் சொற்களையும் ஏற்றுள்ளார். "அப்பீல்" (ப.63) ஒர் எடுத்துக்காட்டு. வடமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்தியும், தமிழ்ப்படுத்தாதும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற அவரது எண்ணம் அவரது நடையிலே தெரிகிறது. வேடம் எனக் கொள்ளாது "வேஷம்" (ப.17) எனக் கொண்டவர் தேவபாஷை எனக் கொள்ளாது “தேவபாடை" (ப.74) எனக் கொண்டுள்ளார். இதேபோன்று 'ஆதிசேஷன்" (ப.7) எனவும், “விபீடணன்" (ப.14) எனவும் எழுதியுள்ளார்.
XII
பண்டிதமணியின் மொழிநடை பற்றி இன்னும் கூறலாம். ஆயின்
ஆராயாமல் எதையும் கூறலாமா? ஆய்விலே அவசரம் ஆகாது. ஆய்விலே ஆழ்ந்த பயிற்சி பெற்ற அறிஞர்கள் பண்டிதமணியைப் பல கோணங்களில்

Page 78
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 144
நின்று நிதானமாக ஆராய முன்வருதல் வேண்டும். ஆய்வுலகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையான கருத்துக்களைக் கூற முற்படுதல் வேண்டும்.
1.
குறிப்புகள்
இதுவரை யாரும் பண்டிதமணியின் மொழிநடையை ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, இலக்கியவழி, திருத்தப்பதிப்பு, திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலைப் பழைய மாணவர் சங்க வெளியீடு - 2, 1964,
. இலக்கண நிலையில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவற்றுள் ஏதேனும்
ஒன்றினைத் தேர்ந்தெடுப்பது நடையியலில் "நடைநிலைத் தெரிவு'
எனப்படும்.
பண்டிதமணியின் சமயக் கட்டுரைகள் என்னும் நூலைப் பார்க்க. பாடு -
பெருமை (ப.28), பிரமை - மயக்கம் (ப.29), சத்து - உண்மை (ப.45), “வைநாயிகள்’ என்று பெயர் - வினாவுகிறவர்கள் என்று அர்த்தம் (ப.61).
இவ்வுத்தி பண்டிதமணியின் தனிநடையியற் கூறாகுமா எனச் சிந்தித்தல்
தகும.
விளக்கத்திற்காகச் சில சொற்களுக்குக் கீழ் கோடிடப்பட்டுள்ளது.
“தேவ பாடையி லிக்கதை செய்தவர்" எனத் தொடங்கும் பாடலை
மேற்கோள் காட்டியமையால் (ப.74) பண்டிதமணி பாடலில் உள்ளதுபோல் தாமும் தேவபாடை என எழுதினார் என்று விளக்கங் கூற முற்படலாம். ஆயின் ஏனைய இடங்களையும் சொற்களையும் கருத்திற்
கொள்க.

145 சுசீந்திரராசா
12
தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் ஒத்த கருத்துள்ள சொற்களும் எதிர்க் கருத்துள்ள சொற்களும்
பண்டுதொட்டு மொழிகளில் ஒத்த கருத்துள்ள சொற்கள், எதிர்க்கருத்துள்ள சொற்கள் என்பன ப்ற்றிப்பேசப்பட்டுவருகிறது. மொழிகள் பலவற்றில் இவற்றைத் தரும் அகராதிகளும், நிகண்டு போன்ற பிறநூல்களும் இருக்கக் காண்கிறோம். தமிழ்மொழியில் இலக்கண நூல்கள் ஒத்த கருத்துள்ள சொற்கள் பற்றிக் கூறுகின்றன. சேனாவரையர், நச்சினார்க்கினியர், சிவஞானமுனிவர்", சங்கரநமச்சிவாயர்" போன்ற உரையாசிரியர்கள் சொற்பொருள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.
சொற்பொருள், சொற்பொருள் உறவு என்பன பற்றிக் காலத்துக்குக் காலம் மெய்யியலாரும், தருக்கவியலாரும், அணியிலக்கண அறிஞரும், இலக்கியத்திறனாய்வாளரும், மொழியியலாரும் வேறுபடும் கருத்துக்களைக் கூறியுள்ளனர். அக்கருத்துக்களை இங்கு விரிவாகக் கூறவோ ஆராயவோ முற்படாது, இன்றைய நிலையில் நமது பாடசாலைகளில் தமிழ்மொழி கற்றலிலும் கற்பித்தலிலும் ஒத்த கருத்துள்ள சொற்கள் எதிர்க்கருத்துள்ள சொற்கள் என்பன பற்றிப் பொதுவாக நிலவும் சிந்தனை எத்தன்மைத்து என்பதையும் இவற்றைக் கற்கும் - கற்பிக்கும் முறைகளில் எழும் சிக்கல்கள் யாவை என்பதையும் அறிஞர்களோடு கூடிச் சிந்திப்பதே இவ்வாய்வின் நோக்காகும்.
இன்று ஒத்த கருத்துள்ள சொற்களும் எதிர்க்கருத்துள்ள சொற்களும் தமிழ்மொழிப் பாடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன; பாடசாலைகளில்

Page 79
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 146
பயன்படுத்தப்படும் பாடநூல்களிலும் பயிற்சி நூல்களிலும் இடம் பெறுகின்றன; பெரும்பாலும் மூன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகின்றன. பரீட்சைகளில் இவை பற்றி வினாக்கள்
அமைகின்றன.
மாணவர்கள் பெரும்பாலும் பயிற்சிகள் மூலமே ஒத்த கருத்துள்ள சொற்களிலும் எதிர்க்கருத்துள்ள சொற்களிலும் தேர்ச்சி பெறுகிறார்கள். இவற்றைப் பற்றி மாணவர்கள் இளமையில் பெறும் அறிவு பசுமரத்தாணி என அவர்கள் உள்ளத்தில் நன்கு பதிந்து விடுகிறது. இவை பற்றிய பயிற்சிகள் அரசினர் வெளியிட்ட பாடநூல்களிலும் தனியார் வெளியிட்ட பயிற்சி நூல்களிலும் பலவுண்டு. பாடநூல்களில் உள்ள பயிற்சிகள் போதாவெனக் கருதிப்போலும் தனியார் வெளியிட்ட பயிற்சி நூல்கள் ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் போற்றிப் பயன்படுத்தப்படுகின்றன.பிற காரணங்களும் இருக்கலாம்.
மொழியில் ஆட்சிபெறுவதற்கு,குறிப்பாகக் கீழ் வகுப்புக்களில், பயிற்சி இன்றியமையாதது. ஆயின் நன்கு அமைந்த பயிற்சி நல்ல விளைவைப் பயக்கும்; நன்கு அமையாத பயிற்சி நல்ல விளைவைப் பயவாதிருப்பதோடு தீமையையும் பயக்கலாம். இக்கருத்தை நாம் விருப்பு வெறுப்பு இன்றி உள்ளத்தில் கொள்தல் வேண்டும்.
பிரயோக மொழியியல் (applied linguistics) வள்ர்ந்து பல துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வரும் இந்நாளில் ஒத்த கருத்துள்ள சொற்கள், எதிர்க்கருத்துள்ள சொற்கள் பற்றிச் சிறுவர்கள் பாடசாலையிலும் வீட்டிலும் எழுப்பும் வினாக்களும் தரும் விடைகளும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. மாணவர்கள் எந்தச் சொல்லிற்கும் ஒத்த கருத்துள்ள சொற்களும் எதிர்க்கருத்துள்ள சொற்களும் உண்டு என்று பொதுவாக எண்ணுகிறார்கள். இத்தகைய எண்ணம்சிறுவர்களின் உள்ளத்தில் குடிகொள்வதற்குக்காரணம் பாடநூல்களும், பயிற்சி நூல்களும், கற்பிக்கும் முறையுமே ஆகும். மாணவர்கள் பெரும்பாலும் தாம் பெறும் பயிற்சி அடிப்படையிலன்றோ விளக்கம் பெறுகிறார்கள்.
இனி நூல்களில் இடம்பெறும் பயிற்சிகள் சிலவற்றைக் காண்போம். தமிழ் 4-இல் படம் என்னும் சொல் தனியே தரப்பட்டு அதற்கு ஒத்த கருத்துள்ள சொல் கேட்கப்பட்டுள்ளது. புதுமுறைத் தமிழ்மொழிப்பயிற்சி, மூன்றாம்வகுப்பு'என்னும் நூலில்'இரை, முரடர்போன்றசொற்களுக்குஒத்த

147 சுசீந்திரராசா
கருத்துள்ள சொற்கள் கேட்கப்பட்டுள்ளன. நான்காம் வகுப்பிற்குரிய இதே வரிசை நூலில்"குரல், நீதிஎன்னும் சொற்களுக்கு ஒத்த கருத்துள்ள சொற்கள் கேட்கப்பட்டுள்ளன. வேகம் என்னும் சொல்லிற்கு எதிர்க்கருத்துள்ள சொல் கேட்கப்பட்டுள்ளது.
வேறு ஒரு நூலில் தரப்பட்டுள்ள பயிற்சி ஒன்று பின்வருமாறு:
பின்வரும் பயிற்சியில் ஒவ்வொரு வரியிலுமுள்ள சொற்களில் இரு சொற்கள் எதிரான பொருளுடையவை. அந்த இரண்டு சொற்களையும் தெரிவு செய்து அதன் கீழ்க்கோடிடுக;
உதாரணம் : துணை, அறம், வறுமை, பகை, செல்வம்,
பொறுமை.
1. மூளல், எரிதல், அழல், அவிதல், குளிர்தல், சூடு
2. உயர்வு, மேன்மை, மேம்பாடு, இழிவு, உயர்ச்சி, சிறப்பு
3. சாமம், மத்தியானம், நண்பகல், நள்ளிரவு, காலை, வைகறை
(இவை போன்ற இன்னும் சில.)
கொழும்புப் பாடசாலை ஒன்றில் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு எதிர்க்கருத்துள்ள சொற்களைக் கற்பித்த ஆசிரியர் ஒருவர் ஊடல்:கூடல் என்னும் எடுத்துக்காட்டையும் கொடுத்திருந்தார். இச்சொற்களை மாணவர்கள் தமது குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்ததைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அண்மையில் யாழ்ப்பாணத்துப் பாடசாலை ஒன்றில் மாணவன் நாய்க்கு ஒத்த கருத்துள்ள சொல் யாது என வகுப்பில் வினவியபோது ஆசிரியர் சுவானம் என விடை கூறினாராம்." இவ்வாறு இன்னும் காட்டலாம்.
IV
இத்தகைய பயிற்சிகளில் உள்ள குறையாது? சுருக்கமாகக்கூறின் இவை ஓர் அடிப்படையின்றி, அமைப்பின்றி, தெளிவின்றி, பயிற்சியின் முக்கியத்துவம் பற்றிய சிந்தனையின்றி (நூல்) ஆசிரியர்களின் மனம்போன போக்கில் அமைந்துள்ளன.
படம் என்பதற்கு ஒத்த கருத்துள்ள சொல் யாது எனின், மாணவர்கள் வரைதல், சித்திரம் ஆகிய இரண்டையும் கூறுவார்கள். இவ்வாறு கற்ற மாணவர்கள், நாம் இன்று படம் பார்க்கப் போகிறோம்" என்னும் வாக்கியத்திலும்படம்என்னும் சொல்லிற்கு ஒத்தகருத்துள்ள சொல்வரைதல்
அன்றிச் சித்திரம் எனக் கொள்வார்களா? சொன்னால் அவர்களே சிரிப்பார்கள்.

Page 80
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 148
படம் என்னும் சொல்லிற்குப் பல பொருள் உண்டு. இதனையும் மாணவர்கள்
உணர்தல் வேண்டுமன்றோ?
இரை விலங்கு உணவாகும், இரைக்கு ஒத்த கருத்துள்ள சொல் உணவு, சாப்பாடு எனின் உணவு, சாப்பாடு என்னும் சொற்களுக்கு ஒத்த கருத்துள்ள சொல் இரையாகும். ஆயின் உணவு, சாப்பாடு ஆகிய இரு சொற்களும் பயின்றுவரும் வாக்கியங்களில் அவற்றை நீக்கி, நீக்கியவிடத்து இரை என்னும் சொல்லை வைத்தால் பொருள் எவ்வாறு அமையும்? தம்பிக்குச் சாப்பாடு வேண்டும் என்னும் வாக்கியத்தை உதாரணமாகக் கருதுக.
முரடர் என்னும் சொல்லுக்கு ஒத்த கருத்துள்ள சொல் யாது? ஒரு சொல் கூற முடியவில்லை. ஒரு சொல் இல்லை என்றால் தொடராகக் கூறலாமா?*
மாணவர்கள் நீதி என்னும் சொல்லுக்கு நேர்மை, நியாயம் ஆகிய இரண்டும் ஒத்த கருத்துள்ள சொற்கள் என்பர். ஆயின் வழக்கில் இவற்றிற்கிடையே வேறுபாடு உண்டன்றோ? நமது நாட்டில் நீதிக்கு, நேர்மைக்கு, நியாயத்துக்கு இடம் உண்டா? என்னும் வாக்கியத்தில் நீதி, நேர்மை, நியாயம் என்பன ஒரே பொருளைத் தருவனவாகக் கொள்வதா? வெவ்வேறு பொருளைத் தருவனவாகக் கொள்வதா? நமது ஆங்கில அறிவைத்துணைக்கொண்டு இவற்றைக்காணும்போதுநீதி=justice, நேர்மை = honesty, நியாயம் = reason எனக் கொள்ளலாம். இவை பொருளிலே உறவுள்ளவை. ஆயின் பொருள் ஒன்றே அன்று. மேலும் குரலுக்கு ஒத்த கருத்துள்ள சொல் ஒசையாம். தம்பியின் குரல் கேட்டது' என்போம். ஆயின் தம்பியின் ஓசை கேட்டது' என்போமா?
எனவே நூற்றுக்கு நூறு வீதம் ஒத்த கருத்துள்ள சொற்கள், ஓரளவு ஒத்த கருத்துள்ள சொற்கள் (உறவுள்ள சொற்கள்) எனப் பாகுபாடு செய்ய வேண்டுமா? மொழியில் நூறு வீதம் ஒத்த கருத்துள்ள சொற்கள் பலவன்று. தெளிவின்மை (vagueness), இரு பொருண்மை அன்றிப் பல பொருண்மை (ambiguity), d 600Tié505T6ts (emotive overtones), 6T660T600T rs36061T உள்ளத்தின் நினைவாழத்திலிருந்து வெளிவரச் செய்வதன் விளைவுகள் (evocative effects) என்பன நூறுவீதம் ஒத்தகருத்துள்ள சொற்களை அரிதாக்கி விடுகின்றன. அறிவியல் கலைச்சொற்களில் சிலவற்றைக் காட்ட முடியும். இதனால் போலும் ஆங்கில மொழியை இரண்டாவது மொழியாகக் கற்பிப்பதற்கு என அமெரிக்காவில் எழுதப்பெற்ற பாடநூல்கள் சில "ஒத்த கருத்துள்ள சொற்கள் எனப் பேசாது"பொருளிலே உறவுள்ள சொற்கள் எனப்
பேசுகின்றன.'

149 சுசீந்திரராசா
பிரிவிலவாய் ஒரு பொருள் மேல்வரும் இரு சொற்களைப் பற்றி இலக்கண ஆசிரியர்கள்’ கூறுகிறார்கள். அவை நிவந்தோங்கு, மீமிசை போல்வனவாம். ஒத்த கருத்துள்ள சொற்கள் சேர்ந்து வருவதன் காரணம் தெளிவும் அழுத்தமும் தரும்பொருட்டு என்பர் உல்மன் போன்ற சொற்பொருளியலார்' ஆயின் நீதி நியாயம்', 'குரலோசை' என்னும் தொடர்களை ஒரு பொருள் குறிப்பன என்றும் நிவந்தோங்கு, மீமிசை போல்வன என்றும் கொள்ளமுடியவில்லை, ஒப்பிட்டுக் காண்க.
வேகம் என்பதற்கு எதிர்க்கருத்துள்ள சொல் யாது எனின் மாணவர்கள் மெல்ல என்னும் சொல்லை விடையாகத் தருகிறார்கள். இவ்வாறு தரும்பொழுது வாக்கியத்தில் இச்சொற்களின் பயன்பாட்டை மறந்து விடுகிறார்கள். வேகம், மெல்ல ஆகிய இருசொற்களும் இலக்கணத்தில் வெவ்வேறு வகையின. 'கார்செல்லும் வேகம் யாது?’ என்னும் வாக்கியத்தில் வேகம் என்பதற்குப் பதிலாக "மெல்ல' என்னும் சொல்லைப் பயன்படுத்தி எதிர்ப்பொருளைக் கொள்ள முடியுமா? வடிவத்தில் வேறுபாடற்று வினையாகவும் பெயராகவும் வரும் சொற்கள் உண்டு. மலர், தலை, மண் போன்றவற்றைக் காண்க.“ இத்தகைய ஒரு சொல்லுக்கு வினையாகவோ அன்றிப்பெயராகவோ மட்டும்வரும்சொல்லொன்றைஒத்ததாகக்காட்டுதல் பொருந்துமா?
மேலே காட்டிய அடுத்த பயிற்சியில் தரப்பட்டுள்ள உதாரணம் மயக்கத்தைத் தருகிறது. உதாரணத்தில் வறுமை - செல்வம் விடையாகக் காட்டப்பெற்றுள்ளது. இதே உதாரணத்தில் பகை - துணை என்பனவும் விடையாகலாமல்லவா? இங்கு பயிற்சி 1க்கு மூளல் - அவிதல் விடையாம். எரிதல் - குளிர்தல் என்பனவும் விடையாகலாமன்றோ?'அந்தச் செய்தியைக் கேட்டு மனம் எரிகிறது என்றும் அந்தச் செய்தியைக் கேட்டு மனம் குளிர்கிறது" என்றும் கூறும்பொழுது எதிர்ப்பொருள் இல்லையா? மேலும் எரிதல், அவிதல், குளிர்தல் என்பனவற்றோடு அழல், சூடு என்பனவற்றைச் சேர்ப்பது பொருத்தமா? பயிற்சி 2க்கு உயர்வு - இழிவு, இழிவு - சிறப்பு, மென்மை - இழிவு விடையாகலாமல்லவா? இதே போன்று இம்மை என்பதற்கு எதிர்க்கருத்துள்ள சொல் கேட்பின் மும்மை என்போமா? மறுமை
என்போமா? இரண்டும் என்போமா?
V
சொற்களின் பொருள்-உறவுசிக்கல்வாய்ந்ததுஎனக்கூறினோம்.இந்தச் சிக்கலைப் பயிற்சிகள் மூலம் மேலும் சிக்கலாக்கக் கூடாது. மாணவர்கள்

Page 81
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 15(
மன்னன் என்னும் சொல்லுக்கு ஒத்த கருத்துள்ள சொல் அரசன் என்பர் இதேபோல நட்பு என்பதற்கு எதிர்க்கருத்துள்ள சொல் பகை என்பர். இங்கு அவ்வளவு சிக்கல் இல்லை. எனவே பயிற்சிக்காகச் சொற்களை மனம்போல போக்கிற் கொள்ளாமல் சிந்தித்துக் கொள்தல் வேண்டும். பயிற்சிகளைட் பயனுள்ளவையாகவும் சீரானவையாகவும் அமைப்பது (நூல்) ஆசிரியரின் தனி ஆற்றலாக ஓங்கி வளரவேண்டும்; நற்பணியாக அமைதல் வேண்டும்.
மொழியில் சொல்லுக்குப் பலபொருள் இருக்கலாம் என்றோம். அரி என்னும் சொல்லுக்கு மட்டும் 109 பொருள் உண்டு என்பர் பரந்தாமனார்." ஆங்கிலத்தில் get என்னும் சொல்லுக்கு வழக்கிலே நூற்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு என்பர். இவ்வாறெனின் கோட்பாட்டளவில் மாணவர்கள் தரப்பட்ட ஒரு சொல்லின் எப்பொருளுக்கு ஒத்த கருத்துள்ள சொல்லையோ எதிர்க்கருத்துள்ள சொல்லையோகாண முயல்தல் கூடும் என்பது ஒருசிக்கல். சொல்லுக்குத் தலைப்பொருள் ta hard Core of meaning) உண்டு எனின், அதுவும் கலாச்சார அடிப்படையில்வேறுபடலாம். பள்ளிஎன்னும் சொல்லின் தலைப்பொருள் தமிழ் மாணவனுக்கும் முஸ்லிம் மாணவனுக்கும் வெவ்வேறாக இருக்கலாம் அன்றோ?
பெரும்பாலான பயிற்சிகளில் ஒருசொல் தனியே தரப்பட்டு அதன்ஒத்த கருத்துள்ள சொல்லோ எதிர்க்கருத்துள்ள சொல்லோ கேட்கப்படுகின்றது. பெரும்பாலும் பொருள் உணர்ச்சியை ஏற்படுத்தாது, சிந்தனைக்கு இடமளிக்காது மாணவர்கள் சொற்களை ஏதோ வாய்பாடாகவே கற்கிறார்கள்; அவ்வாறே விடையளிக்கிறார்கள். மேலே ஊடல் -கூடல் எனக் காட்டியதை நினைவிற் கொள்க. சொல்லைத் தனியே தராது வாக்கியத்தில் அமைத்து அதன் ஒத்த கருத்துள்ள சொல்லையோ எதிர்க்கருத்துள்ள சொல்லையோ கேட்பது பயனுடைத்து. பெரும்பாலும் சொற்பொருள் தெளிவும் விளக்கமும் பெறுவது தொடரிலேதான்.' எனவே பயிற்சிகள் வாக்கியமாக அமைதல்
வேண்டற்பாலது.
சொல்லின் பொருள் யாது எனின் மொழியில் அது பயன்படுத்தப்படுமாறு என்பர் சந்தர்ப்பத்தை (context) வற்புறுத்துவோர்." தமிழ் இலக்கண அறிஞரும் கூடிவரும் ஏனைய சொற்களால் ஒரு சொல் தன் பொருளைப் பெறுகிறது என்பர். சொல் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் வெவ்வேறு பொருளை உணர்த்தும் என்பதை உரையாசிரியர்கள்
'வரலாற்றால் பொருள் உணர்த்தும்' என்பர்."

151 - சுசீந்திரராசா
VI
அறிவுத்துறைகள் பலவற்றிலும் தமிழ்மொழி கையாளப்படும் காலம் வந்துவிட்டது. மொழியை ஆற்றல் வாய்ந்ததாக வளர்க்கும் பணி நம்முடையதே. தெளிவும், நுட்பமும் பெறும் விருப்பினாலும் மொழியை இயன்றவரை அறிவியல் அடிப்படையில் காணும் நோக்கினாலும் சில கருத்துக்களைக் கூறினோம். கல்வியாளரும், s ஆய்வாளரும், நூலாசிரியர்களும், பாடசாலை ஆசிரியர்களும் நாம் ஈண்டு கூறிய கருத்துக்களைச் சிந்தனைக்குரியன என ஏற்றுக் கொள்ளின் அதுவே
இவ்வாய்வின் பயனாகும்.
குறிப்புகள்
1. எடுத்துக்காட்டாக : சேனாவரையர், தொல்காப்பியம், சொல்லதிகாரம்,
சூ.1, 155, 249, 394 உரை.
2. நச்சினார்க்கினியர், தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ.399 உரை. 3. சிவஞானமுனிவர், இலக்கண விளக்கச் சூறாவளி, ப.113, 114.
4. சங்கரநமச்சிவாயர், நன்னூல், சூ.62, 131, 272, 290 உரை.
5. மொழியில் ஆட்சி பெறுவதற்காக மாணவர்கள் ஒத்த கருத்துள்ள சொற்களிலும் எதிர்க்கருத்துள்ள சொற்களிலும் பெறும் பயிற்சி எந்த அளவிற்குப் பயன்படுகிறது என்பதனைத் தனியே ஆராய்ந்து கண்டுகொள்தல் வேண்டும்.
6. தமிழ் 4 கல்வி வெளியீட்டுத்திணைக்களம், இலங்கை, ப.216,
7 செ.நடராசா, புதுமுறைத் தமிழ்மொழிப் பயிற்சி, மூன்றாம் வகுப்பு,
யாழ்ப்பாணம், ப.21.
8. செ.நடராசா, புதுமுறைத் தமிழ்மொழிப் பயிற்சி, நான்காம் வகுப்பு, ப.22,
42.
9. இந்நூல் பற்றிய விபரம் தரமுடியவில்லை. 10. ஒரு மொழியில் பிறமொழிச் சொற்கள் வழங்குவதும் அவற்றுள் ஒத்த கருத்துள்ள சொற்கள் இருப்பதும் உண்டு.inmedicinetherearetwonames for the inflamation of the blind gutt caecitisand typhlitis, the former comes from
the Latin word for "blind' the latter from the Greek word' - Stephen Ullmann, Semantics, An introduction to the Science of Meaning, Oxford, p. 142, 1970.

Page 82
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 152
11. ஆங்கிலத்தில் reject என்பதற்கு turn down என்பது ஒத்ததாகக்
காட்டப்படுகிறது.
12. அந்த நூல்களில் இடம் பெறும் பயிற்சி ஒன்றை எடுத்துக்காட்டாகக்
smootes. Find the words in column 2 that are closest in meaning to the words in Column 1.
Column 1 Column 2
a) taste forest
b) food eat
C) woods animal d) bear porridge e) explain aCCOUnt for
இப்பயிற்சி ஒரு பாடத்தின்கீழ் அமைந்துள்ளது. இச்சொற்கள் அனைத்தும் 9|JUITL-556) 3LibQugé6TD66T. & T650T3: Virginia French Allen, Progressive Reading Series, Book 1, A Reading Sampler, English Teaching Division, International
Communication Agency, Washington, 1978.
13.
14.
15.
16.
17.
18.
19.
தொல்காப்பியர், தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ.450. உரையையும் காண்க. பவணந்தி, நன்னூல், சூ.398, உரையையும் காண்க.
Stephen Ullmann, The Principles of Semantics, Oxford, pp. 151-153, 1957.
சில மொழிகளில் ஒரு சொல் பல சொல்வகைகளை (Word-Classes) சேர்ந்ததாக வருதல் உண்டு. ஆங்கிலத்தில் down என்னும் சொல் வினையாகவும்,பெயராகவும்,வினையடையாகவும்,பெயரடையாகவும் வருவது உண்டு.
அ.கி.பரந்தாமனார், நல்ல தமிழ் எழுத வேண்டுமா? சென்னை, ப.3, 1955.
விதிவிலக்காக வாக்கியத்திலும் தெளிவின்மை தோன்றலாம். They can fish என்னும் வாக்கியத்தில் can துணைவினையெனின் ஒரு பொருள்; வினையெனின் வேறுபொருள். இங்கு வாக்கியம் நிகழும் சந்தர்ப்பம் தெளிவைத் தரும். "கோல் கொணர்க என்றான் அரசன்' போன்ற தமிழ் எடுத்துக்காட்டுக்களையும் காண்க.
LWittgenstein, Philosophical Investigations, Oxford, pp.20, 43, 1953.
சேனாவரையர், தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ.389, 394 உரை. நச்சினார்க்கினியர், தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ.389 உரை.

53 சுசீந்திரராசா
13 இலங்கைத் தமிழ்மொழி - ஒரு குறிப்பு
இலங்கையில் தமிழ் மொழி பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வருகின்றது. இதன் காரணமாக இலங்கைத் தமிழ் மொழி சில சிறப்பான
இயல்புகளைப் பெற்றுள்ளது. அவ்வியல்புகளில் சிலவற்றைச் சுருக்கமாகக் கூறுவதே இக்குறிப்பின் நோக்கமாகும்.
இலங்கையில் தமிழ்மொழி பலநூற்றாண்டுகள் வழக்கில் இருந்துவந்த காரணத்தினாலே தமிழ்மொழி அறிவும் சிங்கள மொழி அறிவும் கொண்ட மக்கள் சமுதாயம் ஒன்று பண்டைக் காலத்தில் உருவாகி இருந்தது. இச்சமுதாயத்தில் இருந்த இருமொழி அறிவு பெற்ற மக்கள்தொகையைப் பற்றிக் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஆயின் தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் ஏற்பட்ட தொடர்பையும் அத்தொடர்பால் சிங்கள மொழியில் தோன்றிய விளைவையும் நோக்கும்போது இருமொழி அறிவு கொண்ட மக்கள் சமுதாயம் ஒன்று இருந்தது என்பதையும் அச்சமுதாயம் மூலம் தமிழ் மொழியின் செல்வாக்கு குறிப்பிடத்தகுமளவிற்குச் சிங்கள மொழியில் பரவியது என்பதும் புலனாகிறது. தமிழ்ச்சொற்கள் பலவற்றையும் தமிழ் மொழி (திராவிட மொழி) அமைப்புக்களையும் சிங்கள மொழியில் காண்கிறோம். தமிழ் மொழியையும் சிங்கள மொழியையும் ஒப்புநோக்கி ஆராய்வோர் சிங்கள மொழியையும் ஹிந்தி போன்ற வட இந்தோ ஆரிய மொழிகளையும் ஒப்புநோக்கி ஆராய்ந்தால், தமிழ் மொழித் தொடர்பால் சிங்கள மொழியில் தோன்றிய மொழி விளைவுகளை எளிதில் உணர்வர்.
அப்பா, அக்கா, அய்யா போன்ற உறவுப்பெயர்களும், சொதி (ஹொதி), இடியப்பம் போன்ற உணவுப் பெயர்களும், கத்தி, முட்டி, தொட்டில் போன்ற பொருட் பெயர்களும், மூளை, மணிக்கட்டுப் போன்ற உடல் உறுப்புப் பெயர்களும், பாத்தி, வயல் (வெல்) போன்ற உழவுத்துறைப் பெயர்களும், கால், அரைக்கால், படி, சேர், சுண்டு போன்ற அளவுப்பெயர்களும், வீசு,
1

Page 83
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 154
நடத்து, பாவி, உதவு, அடுக்கு போன்ற வினைகளும் சிங்கள மொழியில் வழங்கக் காண்கிறோம்.'எனக்குவேண்டும்','நான்படிக்கிற புத்தகம்நல்லது, நண்பர் மூன்றுபேர்', 'கோப்பி சரி தேநீர் சரி போன்ற வாக்கிய அமைப்புக்களையும் சிங்கள மொழியில் காண்கிறோம். தமிழில் இன்று வழக்கிலில்லாத வட்டக்கா(ய்) போன்ற சில சொற்களையும் சிங்கள மொழியில் காண்கிறோம்.
இத்தனைக்கும் இலங்கைத் தமிழ் மொழியில் சிங்கள மொழியின் செல்வாக்கு என்றோ, தொடர்பு என்றோ எதனையும் விதந்து கூறுவதற்கு இல்லை எனலாம். முருங்கை என்னும் சொல்லைச் சிங்களச் சொல் என்று காட்டப்பட்டு வந்தது. ஆயின் அதுவும் திராவிடமொழிச் சொல் என்று அண்மையில் சான்றுகளுடன் நிலைநாட்டப்பட்டது. இலங்கையில் சிங்களவர் மத்தியில் நெடுங்காலம் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் பேச்சுத் தமிழில் மட்டும் ஒரு சில சிங்களச் சொற்கள் புகுந்துள்ளன.
இந்நிலையில் நமக்குச் சில ஐயங்கள் எழலாம். முன்னர் குறிப்பிட்ட இருமொழி அறிவு பெற்ற அன்றைய சமுதாயத்தில் வாழ்ந்தோர் யார்? தமிழர்களா? சிங்களவர்களா? தமிழர்களும் சிங்களவர்களுமா? இருமொழி அறிவு ஓர் இனத்தின்பாற்பட்டதாக மட்டும் இருந்ததா? இரு இனத்தின்பாற்பட்டதாக இருந்ததா? அன்றைய சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்றால், அல்லது தமிழர்களும் சிங்களவர்களும் என்றால் தமிழ்மொழிசிங்களமொழியின்இயல்புகளைப்பெறவில்லையா? அன்றைய சமுதாயத்தின் மொழி நோக்கைப் பற்றிக் கூற முடியுமா? இவற்றை விரிவாக ஆராய்தல் வேண்டும்.
அன்று சிங்கள மக்கள் இலங்கையில் வழங்கி வந்த தமிழ் மொழியுடன்தான் - இந்தியாவில் வழங்கி வந்த தமிழ்மொழியியுடன் அன்று - நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார்களென்று கொள்வதில் தவறில்லை. கி.பி.15ம், 16ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தசிங்களக்கவிஞர்கள் தமிழ், வடமொழி, பாளி ஆகிய மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களையே அறிஞர் எனக் கருதினர். இதன் மூலம் தமிழ் மொழி பெற்றிருந்த சிறப்பை ஓரளவு உணர்ந்து கொள்ள முடியும்.
இந்தியாவில் வழங்கும் தமிழ் மொழியோடு இலங்கைத் தமிழ் மொழி காலப்போக்கில் தொடர்பற்ற காரணத்தால் இலங்கைத் தமிழ் மொழியில் குறிப்பாக இரு விளைவுகள் தோன்றின.

155 சுசீந்திரராசா
மொழியில் காலப்போக்கில் மாற்றங்கள் தோன்றுவதுண்டு. இந்தியத் தமிழ் மொழி மாற்றமடைந்து கொண்டு வந்தது. இலங்கைத் தமிழ்மொழியும் மாற்றமடைந்து கொண்டு வந்தது. நெருங்கிய தொடர்பற்ற நிலையில் இந்தியத் தமிழும் இலங்கைத் தமிழும் மாற்றத்தைப் பொறுத்தவரை ஒன்றை மற்றது தாக்கியதாகத் தெரியவில்லை. இரண்டிலும் பெரும்பாலும் தனித்தனிப் போக்குகளையே காண்கிறோம். எனவே சிறப்பாகப் பேச்சைப் பொறுத்தவரை இருமொழி வகைகளும் பிரிந்து நிற்கக் காண்கிறோம். இந்தியத் தமிழில் தோன்றிய மாற்றங்கள் அனைத்தும் இலங்கைத் தமிழில் எழவில்லை. எனவே இலங்கைத் தமிழில் பழைய இலக்கண அமைப்புகைளயும் சொற்களையும் காண்கிறோம். இதனால் ஒரு கால கட்டத்தில் இந்தியத் தமிழர் இலங்கைத் தமிழுக்கு மதிப்பளித்தார்கள். இலங்கைத் தமிழ் சிறப்பாக யாழ்ப்பாணத் தமிழ் செந்தமிழ் என்றனர். மிகச் சிலர் இக்கருத்தை மறுத்தனர். மேலும்முன்பு என்றுமே மொழியில் இருக்காத சில இயல்புகள் - அமைப்புகள், சொற்கள் - இந்தியத் தமிழில் தோன்றின. இவை இலங்கைத் தமிழில் தோன்றவில்லை. இவை இவ்விருவகை மொழிகளையும் தனிப்போக்குடையனவாக்கின.
இலங்கைத்தமிழ் மொழி பிறமொழித் தொடர்பிலும் இந்தியத் தமிழில் இருந்து வேறாக நின்றது. அதன் சிங்களத்தொடர்பைக் காட்டினோம். சிங்கள மொழியிலிருந்து விதந்து கூறும் அளவிற்கு எதனையும் பெறாத இலங்கைத் தமிழ் மொழி பிற மொழித் தொடர்பால் டச்சு, போத்துக்கேயம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலிருந்து பல சொற்களைப் பெற்றுள்ளது. அவை இன்றும் வழக்கில் உண்டு. இந்தியத் தமிழின் பிறமொழித் தொடர்பும், அதன் முறையும், விளைவுகளும் வேறு வகையில் அமைந்துள்ளன.
இறுதியாக அண்மையில் எழுந்துள்ள ஒருசில வேறுபாடுகளைச்சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இன்று இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ் ஆகிய இரண்டும் தொழிற்பாட்டிலும் பயன்பாட்டிலும் வேறுபடக் காண்கிறோம். இதற்குக் காரணம் நாடும் நாட்டு மக்களும், நாட்டு மக்களின் மொழி மனப்பான்மையும், நாட்டின் அரசியலுமே ஆகும். இந்தியாவில் தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்துள்ளார்கள். இலங்கையில் அதனைப் பின்பற்றுவதில் அக்கறை கொள்வாரைக் காணோம். இவற்றை எல்லாம் விரிவாக ஆராய்தல் வேண்டும்.

Page 84
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 156
குறிப்புகள்
1. sitsota, : Suseendirarajah.S., Karunatillake.W.S., A Note on Murushkai in Indrapala.K.(ed.) James Thevathasan Rutnam Felicitation Volume, Jaffna Archaeological Society, Jaffna, Sri Lanka, 1975.
2. Karunatillake.W.S., Tamil influence on the Structure of Sinhalese Language, Souvenir, Fourth International Conference Seminar of Tamil Studies, Jaffna, Sri
Lanka. 1974.
3. வரதராசன்,மு., யான் கண்ட இலங்கை, பாரிநிலையம், சென்னை.
4. அதாவது இக்கட்டுரை எழுதப்படும் 1984ஆம் ஆண்டுஜுன்மாதம்வரை
யாருமே அக்கறை கொள்ளவில்லை.

157 சுசீந்திரராசா
14 மொழியில் சமுதாயப்
படிநிலைகள் மனிதன்பிறரோடு கூடிச்சமுதாயமாக வாழவிரும்புகின்றான்.இவ்வாறு
பலர் ஒன்றாகக் கூடி மனித சமுதாயமாக வாழும்போது அச்சமுதாய வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. சாதி, சமயம், கல்வி,
பணம், வயது போன்றவையே இவ்வேற்றத் தாழ்வுகட்குக் காரணமாக அமைகின்றன. உயர்ந்தோர்தாழ்ந்தோர் என்ற எண்ணம் தோன்றுகிறது.இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும்போது மொழியிலும் ஒரு வேறுபாட்டை உணர்த்த வேண்டிய நிலை வந்துவிடுகிறது. பொதுவாகக் கூறினால், மக்களுடைய சமுதாய வாழ்க்கை முறைகளின் சாயல் காலப்போக்கில் அவர்கள் பேசும் மொழியிலும் ஓரளவு புலப்படுவதைக் காணலாம்.
நாம் பேசும் யாழ்ப்பாணத் தமிழ் எவ்வாறு நமது சமுதாய வாழ்க்கையை ஓரளவு புலப்படுத்தி நிற்கின்றது என்பதனைச் சுருக்கமாக எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். ஈண்டு இப்படி இப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறாமல், இருப்பதை இருக்கும் வண்ணம் எடுத்துக் கூறுவதே நமது குறிக்கோள். சமுதாய வாழ்க்கை இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் மாறுதலடைந்து கொண்டு வருகிற நிலையிலே இதுவே நமது சமுதாய வாழ்க்கை என்றோ, இங்குக் கூறுவது நமது சமுதாயம் முழுவதுக்கும் பொருந்தும் என்றோ கூற வரவில்லை. இனி, நமது சமுதாய அமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வைப் புலப்படுத்தும் மொழி வழக்குகள் சிலவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
முதலில் ஏவல் வினை (imperatives) அமைப்பைப் பார்ப்போம். ஏவல்வினையோடு சில விகுதிகளைச் சேர்த்துப் பேசுகிறோம். ஏவல்வினைச சொற்களும் வினையடிச் சொற்களும் (verb bases) உருவில் ஒன்றாகவே உள்ளன. வினையடிச் சொற்களையே ஏவல் வினைச்சொற்களாகப் பயன்படுத்தினால் அவற்றிற்குத்தனிப்பொருள் உண்டு.வா, போ, படி, இரு, நட என நம்மிலும் தாழ்ந்தவரிடம் கூறலாம். இங்கு தாழ்ந்தவர் என்போர் யார்

Page 85
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 158
என்பதைத் தெளிவாக வரையறுத்து விளக்குவது எளிதன்று. ஒருவரை நோக்க வேறு ஒருவர் தாழ்ந்தவராகலாம். அவர் வயதிலே குறைந்தவராக இருக்கலாம், வேலைக்காரனாக இருக்கலாம். தந்தைக்கு மகனாக இருக்கலாம், அண்ணனுக்குத் தம்பியாக இருக்கலாம். ஆனால் சமுதாயத்திலே ஒருவனாகப் பிறந்து வளர்ந்து வாழ்பவனுக்கு எந்த எந்த நிலைகளில் யார், யாரிடமெல்லாம் வா, போ, படி, இரு, நட என வேறு விகுதிகளைச் சேர்க்காமல் வினையடிகளையே ஏவல் வினையாகப் பயன்படுத்தலாம் என்பது தெரிந்திருக்கக்கூடும். ஆயினும், முன்பின் பழக்கமில்லாதவர்களிடம் பேச வேண்டிய கட்டாயம் சில வேளைகளில் ஏற்படுகிறது. இந்த நிலையில் மதிப்புக் கொடுத்துப் பேசலாமா மதிப்புக் கொடுக்காமல் பேசலாமா என்ற தடுமாற்றம் நமக்குத் தோன்றுகிறது. ஒருவருடைய தோற்றம், உடை, நடை, பேச்சு முதலியவறறைக் கொண்டு சமுதாயத்தில் அவருக்குரிய தரத்தை (அந்தஸ்து) ஓரளவு அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஒருவருடைய சமுதாய தரத்தை ஊகித்துக் கொள்ள முடியாத நிலையில் ஏவல் வினையடிகளோடு குறிப்பிட்ட விகுதி ஒன்றை மட்டும் பயன்படுத்துகிறோம். ஒருவரை வா என்றோ, வாருங்கள் என்றோ சொல்லாமல் வாரும் என்று மட்டும் சொல்லும் வழக்கைக் காண்க. வா என்று சொன்னால் அவமதித்ததாக முடியும். வாருங்கள் என்றாலோ ம்திப்புத் தருவதாகக் கருதப்படும். ஆகவே இரண்டிற்கும் இடைப்பட்ட மதிப்பைத் தெரிவிப்பதற்காக ஏவல்வினைச் சொற்களோடு உம் என்னும் விகுதியைச் சேர்த்து வழங்குகிறோம். பெரும்பாலும் ஆசிரியர் மாணவரிடம் பேசும்போதும், முதியோர் இளையோரிடம் பேசும்போதும், சில குடும்பங்களில் கணவன் மனைவியுடனோ மக்களுடனோ பேசும்போதும் இந்த உம் விகுதியை ஏவல் வினைச்சொற்களோடு சேர்த்துப் பேசுகிறார்கள். ஆனால் ஓர் அதிகாரி மேலதிகாரியிடம் பேசும்போதோ பெரும் மதிப்பிற்குரிய ஒருவரிடம் பேசும்போதோ உம் விகுதியைப் பயன்படுத்துவதில்லை. சுருங்கக்கூறின் குறிப்பிட்ட ஒரு நிலையில் அல்லது சூழலில் மட்டும்தான் உம் விகுதியைப் பயன்படுத்துகிறோம்.
அன் என்ற ஒரு விகுதியையும் ஏவல் வினைச் சொற்களோடு பயன்படுத்துவதைக் காணலாம். ஒருவரைப் பார்த்து படி என்று சொல்லுவதற்கும் படியன் என்று சொல்லுவதற்கும் பொருள் வேறுபாடு உண்டு. இதுபோலவே இரு - இரன், சாப்பிடு - சாப்பிடன், எழுது - எழுதன் போன்றவற்றையும் காண்க. அன் என்னும் விகுதியேற்ற ஏவல் வினைச் சொற்களுக்கும் ஏனைய ஏவல்வினைச் சொற்களுக்கும் பொருளிலே உள்ள வேறுபாடு யாது? வா என்று சொல்லும்போது கட்டளைக் குறிப்பு உண்டு; வாவன் என்று சொல்லும்போதுகட்டளைக்குறிப்புஇல்லை எனலாம்.வாரும்

159 சுசீந்திரராசா
- வாருமன், வாருங்கள் - வாருங்களன் போன்ற வழக்கையும் காண்க. வா, வாரும், வாருங்கள் போன்றவற்றின் அமைப்பு'குறித்தசெயலை உறுதியாகச் செய்ய வேண்டும்’ என்னும் பொருளையே உணர்த்துகிறது என்றும், வாவன், வாருமன், வாருங்களன் போன்றவற்றின் அமைப்பு குறித்த செயலைச் செய்தாலும் செய்கவிட்டாலும் விடுக" என்னும் பொருளையே உணர்த்துகிறது என்றும் கருத்துவேறுபடுபவர்உண்டு.இன்னும் இவற்றிற்கு வேறு பொருள் கொள்ள வேண்டும் எனக் கருதுபவரும் உளர். அஃது எவவாறாயினும் அன் விகுதி சேர்ப்பதால் பொருள் வேறுபாடு உண்டு என்பதே நாம் இங்கு கருத்திற்கொள்ளவேண்டியது.
அடா, அடி ஆகிய இரு இடைச்சொல்லுருபுகளையும் ஏவல் வினைச்சொற்கள் ஏற்கும். எடுத்துக்காட்டாக செய், செய்யடா, செய்யடி இவற்றை இணைத்துக் கூறும்போது மதிப்புக்குறைவை உணர்த்துவதாகக் கருதப்படுகிறது. படியன்ரா, படியன்ரி என்பவற்றில் உள்ள -ரா.-ரி என்பவை அடா, அடி என்பவற்றின் மாற்றமே. இவை அன் என்பதிலுள்ள னகரவொற்றிற்குப் பின் முறையே -ரா.-ரி ஆக மாறுகின்றன.
வர, போக என்னும் செயவென்னெச்ச வாய்பாட்டு எச்சங்களை உம் விகுதி சேர்த்தோ சேர்க்காமலோ பெரும் மதிப்பைக் குறிப்பதற்காகச் சிலர் பயன்படுத்துகின்றனர். இவற்றைப் பெரும்பாலும் தாழ்ந்த சாதியினர் என்போர் தாம் உயர்ந்த சாதியினர் என்போரிடம் பேசும்போது பயன்படுத்துகிறார்கள். இவ்வழக்கு இன்று மறைந்து வருகிறது.
பெயர்ச் சொற்களுக்கும் வினைமுற்றுக்களுக்கும் பின்னும் உம் விகுதியை இணைத்துப் பெரும் மதிப்புத் தெரிவிக்கும் வழக்கத்தையும் யாழ்ப்பாணத்தவர் சிலருடைய பேச்சிலே காணலாம். முன்பு குறிப்பிட்ட உம் விகுதி வேறு:ஈண்டு குறிப்பிடும் உம் விகுதிவேறு.இவை ஒரே வடிவமுள்ள இருவேறுவிகுதிகள்.இலக்கணகாரர்பலபொருள்குறித்தஒருசொல் என்பர். கையிலே வைத்திருப்பது என்ன என்று கேட்டால் “வெத்திலை" என்று சொல்லாமல் “வெத்திலையும்' என்று சிலர் சொல்லுவார்கள். "வெத்திலை" என்று மட்டும் சொன்னால் கேட்பவரை அவமதிப்பதாகும் என எண்ணி உம் விகுதியையும் சேர்த்துப் பெரும் மதிப்புக் காட்டுவதாகக் கூறுகிறார்கள். செய்யிறானும், படிக்கிறானும் போன்ற வினைமுற்றுக்களையும் காண்க. யாழ்ப்பாணத்தவர் உம் விகுதியைப் பயன்படுத்துவது போல இந்தியத் தமிழரும் -ங்க என்னும் விகுதியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இங்கு ஒருவேறுபாடு. யாழ்ப்பாணத்தில் ஒருசிலரின் பேச்சிலே மட்டும் உம் விகுதி இடம் பெறுகிறது; இந்தியாவில் அனைவர் பேச்சிலும் ங்காவைக் கேட்கலாம்.

Page 86
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 16O
இனி, பால் காட்டும் விகுதிகளைப் பயன்படுத்தும் முறையிலும் வெவ்வேறு மதிப்பு அளவு நிலைகளைக் காண முடிகிறது. முன்னிலையில் ஒருவரைப் பார்த்து வந்தாய் எனக் கூறுவதற்கும், வந்தீர் எனக் கூறுவதற்கும், வந்தீங்கள் அல்லது வந்தியள் என்பதற்கும் மதிப்பளவிலே வேறுபாடு உண்டு.வந்தாய் என்றுகூறினால்சிலருக்குக்கோபம்வந்துவிடும். வந்தீங்கள் என்று வேலைக்காரனிடம் கூறினால் தன்னை ஏதோ கேலி செய்வதாக நினைப்பான். வந்தான், வந்தாள் போன்ற சொற்களில் உள்ள பால் காட்டும் விகுதிகள் இன்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றை மட்டுமன்றி மதிப்புக் குறைவையும் உணர்த்துகின்றன. ஆணுக்கு மதிப்புக் கொடுக்க விரும்பினால் ஆர் விகுதியைச் சேர்க்கிறோம். வந்தார், இருக்கிறார் என்பன எடுத்துக்காட்டு. பெண்ணுக்கு மதிப்புக் கொடுக்க விரும்பினால் ஆள் என்னும் விகுதியிலுள்ள ளகர ஒற்றை நீக்கி வழங்குகிறோம். வந்தா, இருந்தா, போனா என்பவை பேச்சில் மதிப்பைக் குறிக்கும் வழக்குகளாகும். இந்தியாவில் பிராமணர் பேசும் தமிழில் இதே சொற்கள் பெண்பால் ஒருமையையும் பலர்பாலையும் குறிக்கும்.
இன்று வழக்கிலே உள்ள முன்னிலைப் பெயர்கள் மூன்று. அவை நீ, நீர், நீங்கள் என்பன. நீ, நீர் என்ற இரண்டும் ஒருமை; நீங்கள் பன்மை, பழைய இலக்கணகாரர்நீரையும் பன்மை என்றனர். இன்று யார்யாரிடம்,நீநீர்,நீங்கள் என்பனவற்றைப் பயன்படுத்துவது என்பது ஒருவர் காட்ட விரும்பும் மதிப்பளவைப் பொறுத்துள்ளது. சிலரிடம் மட்டும்தான் நீ என்று பேசலாம். ஆனால் படிக்காத கிராமத்து மக்கள் பெரும்பாலும் எல்லாரிடமும் நீ என்றே பேசுவதைக்கேட்கலாம். இவர்கள் நீஎன்பதோடு சில முறைப்பெயர்களையும் சேர்த்து'நீஐயா","நீஅண்ணை", "நீதம்பி’ என்று கூறுவதன்மூலம் தங்கள் மதிப்புணர்ச்சியைக் காட்டுவர். சில குடும்பங்களிலே பெற்றோர் குழந்தைகளைக் கூட நீங்கள் என்றுதான் அழைக்கிறார்கள். குழந்தைகள் நீங்கள் என்று பேசுவதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும், பிறரிடம் மதிப்பளிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கருதிக் குழந்தையிடமும் நீங்கள் எனப் பேசுகிறார்கள் போலும்.
யாழ்ப்பாணத்திலே குறிக்கப்பட்ட சில வகுப்பினர் பெரும் மதிப்பைத் தெரிவிப்பதற்காக நாம் என்ற தன்மைப் பன்மைப் பெயரை முன்னிலை ஒருமைப் பெயராகப் பயன்படுத்துகிறார்கள். சமுதாயம் மாறிக்கொண்டு வரும் இந்நாளில் இவ்வழக்கு மறைந்து வருகிறது.
சமுதாயத்திலே உயர்ந்த நிலையுடைய மதத்தலைவர், ஆசிரியர் போன்றவர்களைக் குறித்துப் பேசும்போது பன்மை விகுதியைப் பயன்படுத்துவது உண்டு. ஆயின் ஒருமையைப் பயன்படுத்துவது

161 சுசீந்திரராசா
மரியாதைக்குறைவுஅன்றுஎன்றுஎண்ணியகாலம்உண்டு.அரசனை அரசன் என்றே எழுதினார்கள்; அரச என்று அழைத்தார்கள். பெரும் முனிவர்களையும் ஆசிரியர்களையும் ஒருமையிலே அகத்தியன், தொல்காப்பியன் என எழுதினார்கள். கடவுளையும் ஒருமையிலே கூறினார்கள். காலப்போக்கில் நிலை மாறியது. தொல்காப்பியம் ஒருவரைக் கூறும் உயர்சொற்கிளவி என மரியாதைப் பன்மையைப் பயன்படுத்துவதற்கும் விதி கூறியுள்ளது. அகத்தியன் அகத்தியனார் எனவும், அகத்தியர் எனவும் வழங்கப்பட்டார். ஒருவினைஒடுச்சொல் உயர்பின்வழித்தேஎன்றும்தொல்காப்பியம்கூறிற்று. இயற்பெயர்களின் இறுதியில் உள்ள னகரவொற்றை மதிப்புத் தெரிவிக்கும் விருப்பினால் ரகரவொற்றாக மாற்றி வழங்கும் வழக்கு இன்று உண்டு. இதைப்போன்று அம் கொண்டு முடியும் இயற்பெயர்களை அத்துச் சாரியை சேர்த்துப் பின் ஆர் விகுதி சேர்த்துக் கூறுவதையும் காண்க. சண்முகலிங்கம் சண்முகலிங்கத்தார் ஆகிறார்.
இதுவரை ஏவல்வினை, பெயர்ச்சொற்கள் ஆகியவற்றோடு சில விகுதிகளைச் சேர்த்தோ சேர்க்காமலோ மதிப்பளவை வெளியிடுகின்ற வழக்கைக் கண்டோம். இவ்வழக்கம் பெயர்ச்சொல்லில் மட்டுமோ ஏவல்வினைச் சொல்லோடு மட்டுமோ வழங்கப்பட்டு வந்தது. ஆனால் வினைமுற்றுக்களை வேறுபடுத்தி வழங்கும்போதே அவற்றிற்கு இணையான பெயர்ச்சொற்களின் ஈறுகளையும் மாற்றி வழங்கும் வழக்கமும் உண்டு. கொண்ணன் வந்தான், கொண்ணை வந்தது, கொண்ணர் வந்தார்; சுப்பன் வந்தான், சுப்பு வந்தது, சுப்பர் வந்தார் என்றெல்லாம் வேறுபடுத்திப் பேசுவதை வழக்கில் காண்க. இவற்றுள் ஒன்றன்பால் விகுதியையும் உயர்திணைச் சொற்களோடு இடைப்பட்ட மதிப்பளவைக் குறிக்கப் பயன்படுத்தும் போக்கைக் காண்க.
பிறமொழிகளிலிருந்துகடன்பெற்றசில சொற்களையும் மதிப்பளவிலே வேறுபடுத்துகிறார்கள். கிளாக்கன், கிளாக்கு, கிளாக்கர்; இஞ்சிப்பத்தன், இஞ்சிப்பத்து, இஞ்சிப்பத்தர்; மனேச்சன், மனேச்சு, மனேச்சர் போன்றவற்றை விளக்கத்திற்கு எடுத்துக் காட்டலாம். கிளாக்கன் வந்தான், கிளாக்கு வந்தது. கிளாக்கர் வந்தார் என்றே பெரும்பாலும் கூறுகிறார்கள்.
காலப்போக்கில் சமுதாயம் மாற்றம் அடையும்போது இம்மதிப்பு அளவு நிலைகளும் மாறும் தன்மையன என்பது கண்கூடு. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று சனநாயகத்தையும் பொதுமக்களையும் போற்றும் இந்நாளிலும் நமது சமுதாயத்தில் இத்தகைய ஏற்றத்தாழ்வு நிலைகள் வேரூன்றி இருப்பது வியப்பே

Page 87
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 162
15
நாட்டார் பாடல் மொழி
நாட்டார் பாடல்கள் வாய்மொழி இலக்கியமாக வழங்கி வந்தவை; இன்றும் கிராமப்புறங்களில் அருகி வழங்கி வருபவை; பாடல்கள் தோன்றிய காலத்துப் பேச்சு மொழியிலே அமைந்தவை. பேச்சுமொழி இடத்திற்கிடமும் காலத்திற்குக் காலமும் வேறுபட்டுள்ளதைப் போன்று பேச்சு மொழியில் அமைந்த நாட்டுப் பாடல்களின் மொழியும் இடத்திற்கிடமும் காலத்திற்குக் காலமும் வேறுபட்டிருக்கக் காண்கின்றோம். இன்று நமக்குக் கிடைத்துள்ள நாட்டார் பாடல்கள் பலவற்றிற் காணப்பெறும் பாட வேறுபாடுகளே இதற்கு நல்ல சான்றாகும்.
இன்று நாம் நாட்டார் பாடல்களின் மொழியை ஆராய விரும்பினால் நாடெங்கும் சென்று இப்பாடல்கள் நாட்டுப்புறத்துப் பாமர மக்களிடம் வழங்குமாற்றைச் சரிவரக் கேட்டறிய வேண்டும். காரணம், நாட்டுப் பாடல்களின் உண்மையான மொழிவடிவத்தை இப்பாமர மக்களிடமிருந்துதான் அறிந்துகொள்ளமுடியும்.இவர்களே இப்பாடல்களைத் தலைமுறைதலைமுறையாகப் பாதுகாத்துவருபவர்கள். பாடல்களிலே பாமர மக்களிடம் பாட வேறுபாடுகள் காண்பின் அவற்றைக் கருத்திற் கொள்ள வேண்டும். மக்களின் உச்சரிப்பு முதற்கொண்டு சொல், சொற்றொடர், இலக்கணக்கூறு, பாடற்பொருள் ஆகியவற்றிற் காணப்படும் பாட வேறுபாடுகளைக் குறித்துக் கொள்ளல் வேண்டும். பாட வேறுபாடுகளுள் எவையெல்லாம் பழையன என்ற சிக்கல் தோன்றக்கூடும். பாட வேறுபாடின்றி நாடெங்கும் ஒரு பாடல் வழங்கி வருமாயின், அப்பாடலில் மொழிச்சிக்கல் இல்லையெனலாம். பாட வேறுபாடுகள் இருப்பின் பெரும்பான்மையோரிடம் காணப்படும் பாடமே குறிப்பிட்ட ஒரு பாடலின் பழைய பாடம் என்று ஓரளவு துணியலாம். பெரும்பான்மை என்னும் அடிப்படையைக் கொள்ளினும் ஏற்பதற்கோ விடுவதற்கோ பிற சான்றுகள் இருப்பின், அவற்றையும் துணையாகக் கொண்டு பாட வேறுபாடுகளைச் சீர்தூக்கி ஆராய்தல் நன்று. ஏறத்தாழ இம்முறையையே மொழியியலாரும்

163 ar, áfigí6y yr Iart
மானிடவியலாரும் பழைய வடிவங்களைக் (proto forms) காண்பதற்குக் கடைப்பிடிக்கின்றனர். இங்குக் கூறிய இந்த ஆய்வு முறைக்கு நீண்ட நாள் முயற்சி வேண்டும்.
அறிஞர்பெருமக்கள் பலர் அண்மைக்காலத்தில்நாட்டார் பாடல்களைத் தொகுத்து நூல்களாக வெளியிட்டிருக்கிறார்கள். இவற்றின் அடிப்படையில் நாம் நாட்டார் பாடல் மொழி பற்றிச் சில கருத்துக்களைக் கூற முற்படலாம், ஆயின், நாட்டார் பாடல்களை அச்சேற்றும்போது அவற்றின் பதிப்பாசிரியர்கள் வாய்மொழி இலக்கியமாக வழங்கிய அப்பாடல்களின் பேச்சுமொழியை எந்த அளவிற்கு அச்சிலேயும் பேணிப் பாதுகாத்துள்ளனர் என்று நாம் அறிந்தாலன்றி, நாட்டார் பாடல் மொழி பற்றி அறிவியலடிப்படையில், தெளிவான கருத்துச் சொல்லக்கூடிய நிலை தோன்றாது. பதிப்பாசிரியர்களின் மூலாதாரங்கள் நமக்கும் கிடைக்குமாயின் -நாடெங்கும்சென்று அலைந்து தேடிஆராயின்கிடைக்கக்கூடும்-அவற்றை நாம் மீண்டும் பரிசோதனை செய்து எந்த அளவிற்குப் பதிப்பாசிரியர்கள், மக்கள் வாய்மொழியைத் திரிக்காது நேர்மையாக அச்சிலேயும் பாதுகாத்துள்ளனர் என்று அறியலாம். ஆனால், மூலாதாரங்களுக்குச் செல்லாது இதுகாறும் வெளிவந்துள்ள பாடல்களைப் படிக்கும்போது அவற்றின் பதிப்பாசிரியர்கள் தமது பதிப்புக்களில் மொழி வழக்கை மாற்றாது மக்களிடம் கேட்டறிந்தவாறே அச்சேற்றியுள்ளார்கள் என்று நம்ப நம் உள்ளந் தயங்குகின்றது. பதிப்பாசிரியர்களில் சிலர் நாட்டார் பாடல்களில் வழங்கும் பேச்சு மொழியைப் பொறுப்புணர்ச்சியின்றித் தாம் மொழி பற்றிக் கொண்டுள்ள சொந்த விருப்பு வெறுப்பினால் ஏட்டிலக்கிய மொழியாக்க முயன்றுள்ளனர் என்பதற்கு அவர்தாம் பதிப்பித்துள்ள பாடல்களில் இருந்தே தக்க சான்றுகள் காட்ட முடியும். இன்னும், பதிப்பாசிரியர்களில் சிலர், பாடல்களிலே வருஞ் சொற்கள் சிலவற்றை மட்டும் ஏட்டிலக்கிய மொழிச் சொற்களாக மாற்றிவிட்டு ஏனையவற்றைப் பேச்சுமொழிச் சொற்களாகவே கொண்டுள்ளார்கள். இவர்கள் இவ்வாறு சிலவற்றை மாற்றியமைக்கும் ஏனையவற்றை மாற்றாதுவிட்டமைக்கும் அடிப்படையோ,காரணமோஎன்ன என்று தெரியவில்லை. இனி, இங்குச் சில எடுத்துக்காட்டுக்களைக் காண்போம்:
1. பாசிப் பயற்றழகா, பயத்தங்காய் நெற்றழகா
ஈச்சங்காய்ப் பல்லழகா, இருகாதும் பொன்னழகா
முத்து முடியழகா, முருக்கங்காய்ப் பூச்சழகா
(இராமலிங்கம் 1961, பக்கம் 29)

Page 88
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 164
இப்பாடலில் பயறு என்ற சொல் அடையாகப் பயற்று-எனவும் பயத்தம் - எனவும் வரக் காண்கின்றோம். பயத்தம் - என்ற அடை பயின்று வருவதால், சொல்லில் ஈருயிர்க்கிடையே வரும் -ற்ற் > த்த் - எனப் பேச்சு மொழியில் மாறிய காலத்துக்குப் பிந்திய பாடல் இது எனக் கொள்ளலாம். இவ்வொலி மாற்றத்துக்கு கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன. இப்பாடல் பயற்றங்காய் > பயத்தங்காய் என மாறிய காலத்துக்குப் பிந்திய பாடலாமெனின், பயற்றழகா என்பதும் மக்களாற் பயத்தழகா என்றே மொழியப்பட்டிருக்க வேண்டும் என்று துணியலாமல்லவா? ஆனால், பதிப்பாசிரியர் அதனைப் பயற்றழகா என ஏட்டிலக்கிய மொழியாக மாற்றிவிட்டார் போலும்.
2. முப்பது நாள் உழைத்துழைத்து
நிறையப் பணம் வாங்கி - அதை மூன்று நாளிற் திண்டுவிட்டுக் கடனையும் வாங்கி பாக்கி நாளிற் பெரும் பகுதியை .
(நடராசா 1962, பக்கம் 115)
இப்பாடலில் "மூன்று நாளிற் திண்டுவிட்டு . ” என்ற அடியை மட்டும் கருதுவோம். சொல்லிடையே வரும் -ன்ற்- ஈழத்துத் தமிழ்க் கிளைமொழிகள் பலவற்றில் -ண்ட்- எனக் குறிப்பிடக்கூடிய ஒரு காலத்தில் மாறியது. இந்தியத் தமிழில் - ன்ற > -ண்ண்- என மாறியது. இதற்கு கி.பி.16ஆம் நூற்றாண்டுக்கல்வெட்டுகளிற் சான்று உளது. மேலே தந்துள்ள பாடலில் தின்று > திண்டு என்னும் ஈழத்து ஒலிமாற்றத்தையே காண்கின்றோம். ஆனால், ஒரே அடியில் “மூன்று', 'திண்டு’ என்ற இரு வழக்கும் வருவது வியப்பே. மூன்று > மூண்டு என மாறவில்லையா? பதிப்பாசிரியர் மூண்டு என்பதை மூன்று என மாற்றித் திண்டு என்பதைத் தின்று என மாற்றாது விட்டாரா?
3. முத்திலே முத்து முதிரவிளைஞ்சமுத்து
தொட்டிலிலே ஆணி முத்து துவண்டு விளைஞ்ச
முத்து கொட்டிவைத்த முத்தே குவித்து வைத்த ரத்தினமே கட்டிப் பசும்பொன்னே - என் கண்மணியே நித்திரையோ
(அன்னகாமு 1966, பக்கம் 78) இப்பாடலில் “விளைஞ்ச', 'வைத்த’ ஆகிய இரண்டு சொற்களையும் நோக்குக.தமிழில் சில ஒலிச்சூழலில்-ந்த்->-ஞ்ச்-எனமாறிய காலத்துக்குப் பிற்பட்ட பாடல் இது. ஆயின், இது -த்த்- > -ச்ச்- எனச் சில ஒலிச் சூழலில்

1.65 சுசீந்திரராசா
வந்த மாற்றத்திற்கு முந்திய பாடலா? இம்மாற்றம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு இலக்கியங்கள் சிலவற்றிலே இடம்பெற்றுள்ளமை நினைவுகூரத்தகும். அப்பர் சுவாமிகளின் தேவாரங்களிலே வைத்த என்ற சொல் வச்ச எனப் பயின்று வருகின்றது. இப்பாடலில் வைத்த என வருவது பதிப்பாசிரியர்தம் விருப்பா? அன்றி வைச்ச எனவோ, வச்ச எனவோ வராதது அவர்தம் வெறுப்பா?
இதுகாறும் சொற்களையும் ஒலி மாற்றங்களையும் காட்டினோம். இனி, இலக்கணக் கூற்றை (விகுதி) எடுத்துக் காட்டுவோம்:
4. ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்?
அம்மியடியில் கும்மியடித்தேன்சும்மாவா இருந்தன்.
(நடராசா 1962, பக்கம் 117)
"கும்மியடித்தேன்", "இருந்தன்" என்ற இரண்டையும் நோக்குக. இப்பாடலில் "ஆட்டுக் குஞ்சுக்கு ஆறுதல் பண்ணினேன்” எனவும் ஒரடி பின்னே வருகின்றது. "கோழி முட்டையில் மயிர் பிடுங்கினன்' எனவும் "பாம்புக் குட்டிக்குப் பல்லு விளக்கினன்' எனவும் ஈரடிகள் வருகின்றன. எனவே பாட்டுக்குள்ளேயே முன்னுக்குப்பின் முரண்: “கும்மியடித்தேன்", “பண்ணினேன்" என்பன “பிடுங்கினன்”, “விளக்கினன்' என்பவை போலக் "கும்மியடித்தன்”, “பண்ணினன்' என ஈற்றிலே ஏகார நெட்டுயிரின்றி அகரக்குற்றுயிராக மொழியப்பட்டிருக்குமா? இங்கெல்லாம் மொழியைப் பொறுத்தவரையில், பதிப்பாசிரியர்களின் மனம்போன போக்கையே காண்கின்றோம்.
நாம் நாட்டுப் பாடல்களில் பயின்றுவரும் மொழிவழக்கு அடிப்படையில், அவை தோன்றிய காலத்தையும் வட்டாரத்தையும் ஓரளவு ஊகித்து அறிய முற்படலாம். இம்முயற்சி மக்கள் மொழியுமாறே பாடல்களை அச்சேற்றியிருப்பின் பயன் தரும். இன்று பதிப்பாசிரியர்கள் தந்துள்ள பாட (text) அடிப்படையிலே நாம் பாடல்களின் காலத்தைக் கணிக்கத்துணியலாம். ஆனால், அவர்களுடைய பாடல் மொழி ஈடாட்டமுடையதெனின், அதன்மேல்நாம்கட்டியெழுப்பும் கருத்துரைகளும் ஈடாட்டம்உடையனவே.
பதிப்பாசிரியர்கள் நாட்டுப் பாடல்களின் மொழிநுட்பம் பற்றி அக்கறை கொள்ளாததனால், நாம் இன்றைய பேச்சு மொழியையே பழைய நாட்டுப் பாடல்களிலும் காண முயல்வது அறிவுடைமையாகுமா? இல்லை. பழைய பாடல்களின் மொழி அந்நாளைய பேச்சு மொழியையே பிரதிபலித்து நிற்பதாகக் கொள்வது சாலப்பொருத்தமாகும். காலப்போக்கில் மொழிமாறிக் கொண்டு வரினும் பண்டைய மொழி நிலையொன்றைப் பாடல்களிலே

Page 89
தமிழ் மொழியியற் சிந்தனைகள் 166
இன்றுவரை மக்கள் பாதுகாத்து வந்திருக்கலாம். இவ்வாறு பண்டைய மொழி நிலையைப் பாடல்களிலே பாதுகாப்பதும் எளிதாம்.
நாட்டுப் பாடல்களின் மொழி பற்றி ஆராயும்போது மொழியிலே
பொதுவாக ஏற்பட்ட ஒலிமாற்றங்களுக்கு விதிவிலக்கும் உண்டு என்பதை நாம் மறத்தலாகாது. எடுத்துக்காட்டாக,
தட்டந்தனியெனணை - நான்
தங்கி விட்டேன் ஒற்றை மரம்
ஒற்றை மரமானேன் - நான்
ஒரு மரத்தின் கொப்பானேன்.
(இராமலிங்கம் 1961, பக்கம் 35)
என்ற பாடலிலே 'ஒற்றை' என்ற சொல் வருகின்றது. -ற்ற்- > -த்த்~ என்னும் மாற்றத்திற்கு கி.பி.6ஆம் நூற்றாண்டிலிருந்து கல்வெட்டுச் சான்றுகள் உள. ஆதலால் 'ஒற்றை என்ற சொல்லின் ஒலி வரன்முறையைக் கொண்டு இப்பாடல் பழையது எனக் கொள்ளத் தோன்றும். ஆயின், இப்பாடலில் ஒற்றை என வருவதை விதிவிலக்காகவே கொள்ள வேண்டும். காரணம், யாழ்ப்பாணத்துத் தமிழ் வழக்கில் -ற்ற்- > -த்த்~ என்ற மாற்றம் சில சொற்களிலே எதிர்ப்புப்பெற்றமைக்குச் சான்றுண்டு. ஒற்றை, வெற்றி,பற்று,
மற்ற போன்ற சொற்களையும் காண்க.
ஒலிமாற்ற அடிப்படையில் பாடல்களின் காலத்தைக் கணிப்பதைக் குறிப்பிட்டோம். அதேபோன்று மொழியடிப்படையிற் சில பாடல்கள் தோன்றிய வட்டாரத்தையும் கூறமுடியும். 'அயலும் புடையும் வாழ(வும்) வேண்டும்’ (தமிழண்ணல் 1966, பக்கம் 87) என்ற பாடலிலே கோச்சி, கொப்பர், கொம்மான் என்ற சொற்கள் வருகின்றன. இச்சொற்களின் ஆட்சி ஈழத்தமிழ்க் கிளைமொழிகள் சிலவற்றிற்கே உரியன. ஆதலால் இப்பாடலும் ஈழத்துக்கே உரியது எனக் கொள்ளலாம். -ன்ற்- > -ண்ட்- (ஒன்று> ஒண்டு, தின்று > திண்டு, கன்று > கண்டு, நின்றது > நிண்டது) என மாற்றம் பெற்றுள்ள சொற்களையுடைய பாடல்களும் ஈழநாட்டிற்கே உரியன. இனம் என்னும் விகுதியைப் பெற்று அமையும் உயர்தினைப் பலர்பால் (படர்க்கை) வினைமுற்றுகளையுடைய பாடல்கள் யாழ்ப்பாணத்துக்குரியன எனலாம். எடுத்துக்காட்டாக, “தோளிலே கைபோட்ட உன் தோழர்மார் தேடுகினம்; (இராமலிங்கம் 1961, பக்கம் 31).
இவ்வாறெல்லாம் நாட்டார் பாடல் மொழியை அறிவியல் அடிப்படையில் ஆராய்வதற்குத் தமிழ் மொழியில் - பேச்சு மொழி, எழுத்து

167 சுசீந்திரராசா
மொழி ஆகிய இரண்டினதும் - வரலாற்றறிவும் தமிழ்க் கிளை மொழிகளின் ஒப்பியல் அறிவும் தற்கால மொழியியல் அறிவும் இன்றியமையாதனவாகின்றன.
உசாத்துணை அன்னகாமு.செ. ஏட்டில் எழுதாக்கவிதைகள், சென்னை, 1966. இராமலிங்கம்,மு., இலங்கை நாட்டுப்பாடல்கள், கொழும்பு, 1951. இராமலிங்கம்,மு. கிராமக் கவிக்குயில்களின் ஒப்பாரிகள், கொழும்பு, 1960. இராமலிங்கம்,மு. வட இலங்கையர் போற்றும் நாட்டார் பாடல்கள், யாழ்ப்பாணம், 1961.
தமிழண்ணல், தாலாட்டு, காரைக்குடி, 1966. நடராசா,எஸ்.எக்ஸ்.சி., ஈழத்து நாடோடிப் பாடல்கள், யாழ்ப்பாணம், 1962. வித்தியானந்தன்,சு, மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள், கண்டி, 1962. வித்தியானந்தன்,சு, மன்னார் நாட்டுப் பாடல்கள், கண்டி, 1964. Meenakshisundaran,T. P., A History of Tamil Language, Poona, 1965. Shanmugam.S.V., Epigraphy and Tamil Linguistics, Paper presented at the Seminar on inscriptions, Madras, 1966.

Page 90
பேராசிரியர் சு.சுசீந்திரராசா, இல
LITLI LI IT குடும்பத்தில் சுசீந்திரராசா, ! இலக்கியங்கள் இலங்கையில் மகாவித்துவாக வேந்தனார். ப நவநீதகிருஷ்ணபாரதி, முத்துக்குமாரு ஆகியோரிடம் பாடம் கேட்கும் வாம் சீதாராம சாஸ்திரியிடம் சமஸ்கிருதம் புலமை மிக்கவர். பெங்களூர் புனித
முடித்துவிட்டுப் பேராசிரியர்கள் ஆகியோரின் மாணவராகச் சென்ை ஆனர்சு பயின்றார். 1980 இல் பேரா மானவராக அண்ணாமலைப் பல்கள் முனைவர் பட்டமும் பெற்றார்.
யாழ்ப்பாணக் கல்லூரி,அண்ண பல்கலைக்கழகம், கெலனியா பல்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் ஆங்கிலத்துறையின் தலைவராகவும் பெற்றுள்ளார்.
பேராசிரியர் சுசீந்திரராசா சிறர் நூல்களும் கட்டுரைகளும் பேராசி ஆர்.இ.ஆஷர் (இங்கிலாந்து), ஜேம்ஸ் கணபதிப்பிள்ளை (இலங்கை) ஆகி யாழ்ப்பாணத் தமிழ் பற்றிய இவரது தனித்தன்மையை விளக்குவன.
 

ங்கை
னத்தில் செல்வாக்கு மிக்கக் பிறந்தவர் பேராசிரியர் சுவாமிநாதன் இளம் வயதிலேயே தமிழ் இலக்கண ரில் ஆர்வம் நிறைந்த இவருக்கு
புகழ்பெற்ற தமிழறிஞர்களான * கணேச அய்யர், வித்துவான் எண்டிதர் நமச்சிவாயகம், இளமுருகனார், ந, பண்டிதமணி எஸ்.கணபதிப்பிள்ளை பப்பு கிடைத்தது. சமஸ்கிருத அறிஞர் கற்றார். சிங்கள மொழியிலும் ஆழ்ந்த ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை மு.வரதராசன், அ.ச.ஞானசம்பந்தன் ன பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் சிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் விலக்கழகத்தில் மொழியியல் பயின்று
ாமலைப் பல்கலைக்கழகம், கொழும்பு லைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றி தில் மொழியியல் மற்றும் பேராசிரியராகவும் இருந்து பணி ஓய்வு
ந்த மொழியியல் அறிஞர். இவரது ரியர்கள் அன்றனோவ் (உருசியா), கெயர் (அமெரிக்கா),கருணாதிலகே, யோரின் பாராட்டைப் பெற்றுள்ளன.
கட்டுரைகள் யாழ்ப்பானத் தமிழின்