கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தீவும் தீர்வுகளும்

Page 1

ಇಂಗ್ಲಿ sell
貓 تمام
• 5IT
றுல்ஹக்

Page 2

தீவும் தீர்வுகளும்
எம்.எம்.எம்.நூறுல்ஹக் -Diploma in MassMedia
மருதம் கலை இலக்கிய வட்டம் சாய்ந்தமருது-05

Page 3
தலைப்பு
LSUL|ft|D
ஆசிரியர் : -
Li5:56,
முதல் பதிப்பு
EGOTSC
அச்சுப்பதிப்பு
ପୌରାଣୀll)) : -
9I [60)LGI LQ QI 60D LDLiL!
விலை
தீவும் தீர்வுகளும் ஆசிரியருக்கே எம்.எம்.எம்.நூறுல்ஹக் |-X 1-109
மார்ச் 1998
அந்-நூர் என்டர்பிறைஸ் மிலக்ஷ் கிரபிக் 87. மாளிகாகந்த வீதி,
கொழும்பு-10.
தொலைபேசி 683669 மருதம் கலை இலக்கிய வட்டம் 129|பி, ஒஸ்மன் வீதி சாய்ந்தமருது-05 எம். எம். எம். நகீபு
bUIT. 100/=

aflof LugoOTLD
எனது வள்ர்ச்சியின் Lskoi/62).07é5 (3/5/55/ ஆக்கமும் ஊக்கமும் நல்கிய - நல்குகின்ற எனதருமைப் பெற்றோர்களான மர்ஹும், அல்-ஹாஜ், மெளலவி ஐ.எல்.முஹம்மது முத்து (பஹற்ஜி)
ஐ எல. பாததுமம7 ஆகியோர்களுக்கு இந்நூல்
diffDILL/400/IO

Page 4

முரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும், துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான, மாண்புமிகு அமைச்சர், சட்ட முதுமாணி, அல்ஹாஜ் எம். எச். எம். அவழ்ரஃப் அவர்களின்
மதிப்புரை எம். எம். எம். நூறுல்ஹக் அவர்களுடைய "தீவும் தீர்வுகளும்” எனும் நூல் வெளிவருவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
SOLD bss
சமீபகால நூல் வெளியீட்டுப் பரப்பில் இதுவொரு வித்தியாசமான முயற்சியாகும். அநேகமானோர் கவிதை, சிறுகதை. நாவல் போன்ற துறைகளில் கவனம் செலுத்துகின்ற காலகட்டத்தில், நூறுல்ஹக் சமுதாயப் பிரச்சினைகளையும், தன்மைகளையும் அரசியல் கண்ணோட்டத்தில் ஆராய்கிறார். இந்நூலில் இடம்பெற்றிருக்கும் பத்தொன்பது கட்டுரைகளிலும் இப்பண்பினைக் காணலாம். இது அவரது எழுத்துக்களின் வெற்றியாகும். அதே நேரம் சமூகத்தின் மீது அவரது ஈடுபாட்டையும் காட்டப் போதுமானது.
இலங்கை முஸ்லிம்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டு பத்தாண்டுகளே ஆகின்றன. அதற்கு முன்னைய சகாப்தங்களில் முஸ்லிம்களின் அரசியல் தனிமனித ஆளுமைக்கும், பிரதேச, கிராம பற்றுதலுக்குமே உட்பட்டிருந்தது. பாராளுமன்ற தேர்தலில் கூட கட்சியின் செல்வாக்கை விட தேர்தலில் போட்டியிட்டவர்களின் தனிமனித செல்வாக்கு மேலோங்கிய சந்தர்ப்பங்களையும் நாம் காண்கின்றோம். இந்நிலையை மாற்றி யதார்த்த ரீதியாகச் சிந்திக்கக் கூடிய அரசியல் உணர்வினை இந்நாட்டு மக்களுக்கு ஊட்டியதில் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பங்கினையிட்டுப் பெருமைப்படுகின்றேன்.
இந் நூலில் உள்ள கட்டுரைகள் கடந்த பத்தாண்டுகளுள் எழுதப்பட்டவைகளாகும். இதுவொரு கட்டுரைகளின் தொகுப்பேயன்றி, ஒரு தனி நூலல்ல. பற்பல சந்தர்ப்பங்களில், கால இடைவெளிகளுக்கு மத்தியில் இவை எழுதப்பட்டுள்ளன. அவ்வவ்கால சூழ்நிலைகளினால் நூறுல்ஹக் உடைய உணர்வுகள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருப்பதையும், அதனால் வெளிவந்த உணர்வுகளையும் இக்கட்டுரைகளில் ஆங்காங்கே காணக் கூடியதாகவுள்ளது. இத்தகைய அவரது எல்லாக் கருத்துக்களோடும் உடன்பட முடியாதென்ற போதிலும், அக்கருத்துக்கள் அந்தந்தக் காலங்களில் அவர் கொண்டிருந்த உணர்வுகளின் வெளிப்பாடென்றே எண்ணுகின்றேன்.
குறிப்பாக தமிழ்-முஸ்லிம் உறவுகள் பாதிக்கப்பட்டபோது, இரு சமூகங்களுக்கிடையிலும் கசப்புணர்வுகள் ஏற்பட்டன. மனத்தாங்கலும் ஏற்பட்டன. இதற்கான காரணம் அச்சமூகங்களல்ல. மாறாக அவற்றிலிருந்த பொறுப்பற்ற தனிநபர்களேயாவர். தனிநபர் நடவடிக்கைகளின் விளைவுகளுக்கான முழுப்பாரத்தையும், பாவத்தையும் சமூகம் ஏற்க வேண்டியிருப்பது தவிர்க்க முடியாததாகும்.
தமிழ்-முஸ்லிம் உறவில் பாதிக்கப்படும் பின்னணிகளில் எந்தத் தீர்வையும்

Page 5
யாரும் கொண்டு வரமுடியாது. இவ்விரு சமூகங்களும் ஒன்றையொன்று நம்பி வாழப்பழகிக் கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கில் இவ்விரு சமூகங்களும் அப்பிராந்தியத்திலுள்ள சிறுபான்மைச் சிங்கள மக்களின் நம்பிக்கைகளையும் பெறுவது அவசியமாகும். ஒரு சமூகத்தின் பாதுகாப்பு இன்னுமொரு சமூகத்தின் பொறுப்பாக இருக்க வேண்டுமேயொழிய சமூகங்கள் தமது பாதுகாப்புக்காக இராணுவத்தையோ, பொலிஸையோ நம்பி இருக்கக் கூடாது. இத்தகைய சமகாலப் பார்வையுடன் தான் நூறுல்ஹக் உடைய கட்டுரைகளை நாம் படிப்பதுடன் அவை எழுதப்பட்ட காலத்தின் பின்னணிகளையும் உணர்தல் வேண்டும்.
முஸ்லிம்கள் தமிழர்களின் விரோதிகளாக இருந்ததுமில்லை. இருக்கப் போவது மில்லை. தமிழ் சகோதரர்களின் ஆரம்பகால சாத்வீகப் போராட்டங்களில் பங்குபற்றி, இரத்தம் சிந்தி சிறை சென்றவர்களுள் முஸ்லிம்களும் அடங்குவர். இளைஞர்கள் இயக்க ரீதியாக தம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டபோது, முஸ்லிம் இளைஞர்களும் அவற்றில் பங்குபற்றினர். காலக்கிரமத்தில் இத்தகைய முஸ்லிம் போராளிகள் அவர்களை விட்டுவிலகி வெளியேறியமைக்கான காரணம் என்னவென்பதை ஆராய்தல் அவசியமாகும். அதனை இந்நூலின் கட்டுரைகள் சிறப்பாகச் செய்கின்றன.
இலங்கை முஸ்லிம்களின் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் மிக முக்கிய காலகட்டத்திலேயே இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்ட வேளைகளில் ஆதரிக்க யாருமின்றி அநாதரவாக நின்றனர். அதே போன்று தமது பாரம்பரிய வசிப்பிடத்திலிருந்து ஒரு தொகுதியினர் வெளியேற்றப்பட்டதும், மறுபகுதியினர் அல்லலுற்றதும் கூட இந்தக்காலப் பகுதியிலேயே ஆகும். அதனால் முஸ்லிம்களின் குரல் ஓங்கி ஒலித்து தமக்குரிய இடத்தைப் பெறுவதற்கான வழிசமைத்த தனிக் கட்சி தோன்றியதும் இக்காலகட்டத்திலேயேயாகும். விரக்தியுற்று, வழிதவறிச் செல்லவிருந்த இளைஞர்களுக்கு ஜனநாயகரீதியான தளம் ஒன்றினை இக்கட்சி அமைத்துக் கொடுத்ததும் இக்காலகட்டமே. ν
அதனாற்தான் நூறுல்ஹக் உடைய கட்டுரைகள் காலப் பொருத்த முடையன வாகின்றன. காலத்தின் தாக்கம் இவரது எழுத்துக்களின் கருப்பொருளாய் அமைந்துள்ளதைப் பார்க்கலாம். இதே போன்றுதான் முஸ்லிம்களுக்கான தனிக்கட்சியின் அவசியம், மாகாண சபையின் தேவை என்பனவற்றையும் ஏனைய கட்டுரைகள் விளக்குகின்றன. இந்த ரீதியில் பார்க்கும் போது, நூறுல்ஹக் அவர்களின் முயற்சியினைப் பராட்டுகின்றேன்.
அங்காங்கே சிதறிக் கிடக்கின்ற தனிமனிதத் திறமைகளை மட்டும் கொண்டு ஒரு சமூகம் முன்னேற முடியாது. அரசியல்மயப்படுத்தப்பட்டு, அணிக்குட் படுத்தப்பட்ட சமுதாய அமைப்பொன்றின் மூலமே உரிமைகளை வென்றெடுக்கவும், பாதுகாக்கவும். வளர்க்கவும் முடியும். இத்துறையில் இக்கருத்துக்களை எடுத்துவிளக்கும் எழுத்தாளர்களின் பங்களிப்பும் முக்கியமானதாகும். அதனால் நூறுல்ஹக் உடைய இத்தகைய சேவை தொடர வேண்டுமென ஆசைப்படுகின்றேன்.
எம்.எச்.எம்.அஷ்ரஃப் ଜୋ துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு
காழுமபு புனரமைப்பு அமைச்சர்.
23-03-1998

சொல்லவேண்டியது.
(முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறுபட்ட இம்சைகளை அனுபவித்துக்
கொண்டிருக்கிறது. இதிலிருந்து மீளுவது எதிர்காலச் சிறப்புக்கு வழியாகும். ஆயினும் அதற்கான வழிமுறைகளை காண்பது கட்டாயமானது.
இவ்வழியில், எனது எழுத்துலக வாழ்க்கையில் நாம் எதிர்கொண்ட் பல்வேறு பிரச்சினைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
1986களிலிருந்து 1997கள் வரை எழுதியவற்றுள் சிலவற்றை இந்நூலின் உள்ளடக்கமாக்கி இருக்கின்றேன். இந்நூலில் இடம்பெற்றுள்ள எல்லாக் கட்டுரைகளையும் அவற்றை எழுதிய கர்லசூழலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது காலப்பொருத்தமுடையதாக இருக்கும்.
1986 ஆம் ஆண்டு என்பது இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கையில் - அரசியல் துறையில் பெரியதோர் மாற்றத்தை நம்முன் தந்த காலமாகும். சுருங்கக்கூறுமிடத்து அரசியல் விடுதலைக்கு வித்திட்ட காலம் இதுவாகும்.
இக்காலத்தின் தாக்கமும், சமூகத்தின் மீது எனக்கிருந்த பற்றுதலும் அவ்வப்போது சமூகம் எதிர்கொண்ட இம்சைகளை - நெருக்கடிகளை எழுதவைத்தன. அவற்றின் சிலவற்றின் அறுவடையே இந்த "தீவும் தீர்வுகளும்” ஆகும்.
இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் கடந்த சில ஆண்டுகளில் நமது சமூகம் எத்தகைய நெருக்கடிகளை சந்தித்திருந்தது என்பதை உணர ஏதுவாக அமையும. அதேநேரம் இன்னும் பத்தாண்டின் பின்னர் - இன்று சிறுவர்களாக இருந்தவர்களும் அவர்களின் முற்கால பதிவுகளை இனங்கண்டு கொள்ள இந்நூல் வழியாகும் என்பது என் துணிவு.
காலப்பதிவுகள் ஒரு சமூகத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். அந்த வகையில் இந்நூல் நின்று நிலைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருந்தாலும், இதனை எதிர்காலம் தான் தீர்மானிக்க வல்லதாகும் என்பதிலும் எனக்கு உடன்பாடே.
“எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம்". (குர்ஆன் 5:8)

Page 6
இந்த மறைவசனத்தின் வழியில் நின்று நமது சமூகத்தின் சத்தியத்தையே முன்வைத்துள்ளேன். தவிர, தன் குடும்பத்தார். தன் இனத்தார் என்பதற்காக அவர்கள் உண்மையின்பால் இல்லாத போதிலும் அவர்களின் தவறான செயல்களுக்கு உதவ வேண்டும் - மறைக்க வேண்டும் என்ற மனோபாவத்திலிருந்து எழுதவில்லை.
எனவே நீதியாகவும், உண்மையாகவும் எனது எழுத்துக்கள் கருத்துக்கள் அமைந்துள்ளன என்பதில் ஐயமில்லை என்பதையும் எதிர்கால வரலாறு கூறும் என்பதும் என் நம்பிக்கையே.
இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கிய மாண்புமிகு அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச். எம். அஷ்ரஃப் (எல்.எல். எம்.) அவர்கட்கும்,
இந்நூலில் உள்ளடக்கம் பெற்றிருக்கும் கட்டுரைகளை பிரசுரித்து உதவிய பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் - அதன் ஆசிரியர்களுக்கும்.
இந்நூலை வெளிக்கொணரும் மருதம் கலை இலக்கிய வட்டத்திற்கும். பதிப்புரை வழங்கிய அதன் தலைவரான ஜனாப் ஏ. எம். எம். நஸிர் அவர்கட்கும்,
இந்நூலின் முகப்பு அட்டையையும், நூலாசிரியரின் அடையாளத்தையும் யாத்துதவிய ஜனாப்: எம். எம். முஹம்மது நகீபு அவர்கட்கும்,
இந்நூல் வெளிவருவதில் அதிக அக்கறையையும், தியாகங்களையும் மேற்கொண்டு இந்நூலாக்க முயற்சியை வெற்றியடைய பெரிதும் உதவிய அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் (எம்.ஏ.) அவர்கட்கும், ஜனாப்: எஸ்.எச்.
நி.மத் அவர்கட்கும்,
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை சேகரித்தும், நெறிப்படுத்தியும் உதவிய என் இனிய இல்லாள் எஸ்.யூ. கமர் ஜான் பீபீ (சமாதான நீதவான்) அவர்கட்கும்
இந்நூலினை அழகூற கணணிப்படுத்தியும், பதிப்பித்தும் உதவிய ஜனாப்களான அல்ஹாஜ் எஸ்.எல். ஹலீல் றகுமான், எம்.ஐ. லியாகத் அலி ஆகியோர்களுக்கும்,
இந்நூலினை வாங்கி ஊக்கப்படுத்தும் அனைத்து உள்ளங்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.
மீண்டும் ஒரு சந்திப்பில் சந்திப்போம்.
எம்.எம்.எம்.நூறுல்ஹக் -Diploma in Massmedia27-03-1998 129,ஒஸ்மன் வீதி, சாய்ந்தமருது-5

பதிப்புரை
பDருதம் கலை இலக்கிய வட்டம் தனது முதலாவது வெளியீடாக
ஜனாப்: எம். எம். எம். நூறுல்ஹக் அவர்களின் பத்தொன்பது கட்டுரைகளை ஒன்றிணைத்து "தீவும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் வெளிக்கொணர்கின்றது.
நமது சமூகத்தின் இன்றைய தேவைகள் பற்றி அவ்வவ்போது எழுதிய சிலநூறு கட்டுரைகளிலிருந்து பதினேழும், முஸ்லிம் சமூகத்துக்கெதிராக எழுதப்பட்ட கூற்றுக்களை மறுத்து எழுதப்பட்ட பல கட்டுரைகளிலிருந்து இரண்டும் இந்நூலின் உள்ளடக்கங்களாகும்.
நம் மத்தியில் பலநூறு எழுத்தளர்கள் இருந்த போதிலும் நமது சமூகத்தின் விடுதலையை கருப்பொருளாகக் கொண்டு எழுதுபவர்கள் மிகச் சிலரே. அவர்களுள் ஒருவரே ஜனாப்: எம்.எம்.எம். நூறுல்ஹக் ஆவார்.
இவர் கடந்த 1981களிலிருந்து எழுத்துலகில் இருந்து வருபவர். “எவ்வளவு எழுதினோம் என்பதை விட என்ன எழுதினோம்" என்று பார்ப்பதே மேல் என்ற கொள்கையுடன் தன் எழுத்துக்களை முத்திரை பதித்தவரும் ஆவார்.
நமது சமூகத்தவர்கள் ஒவ்வொருவரும்தெளிவுகளைப் பெறத்தக்க வகையில் இந்நூலின் உள்ளடக்கம் வெற்றிகண்டுள்ளது. எனவே நாம் ஒவ்வொருவரும'இந்நூலை வாங்கி, இவரை உற்சாகப்படுத்தி விடுவது நமது 5L60)LDuJIT(35lb.
இந்நூலிற்கு நீங்கள் வழங்கும் ஆதரவே எமது அடுத்த வெளியீட்டின் அத்திவாரமாகும். எங்கள் முயற்சியில் வெற்றியையும், தோல்வியையும் நிர்ணயிப்பவர்கள் நீங்களே.
எனவே, எமது முதல் முயற்சியினை மகிழ்ச்சிக்குரியதாக்கி விடுவதுடன், இந்நூலின் ஆசிரியரையும் கைதுக்கி விடுவீர்களென்ற நம்பிக்கைகளுடன் விடைபெறுகின்றோம்.
ஏ.எம்.எம். நஸிர்
தலைவர்,
மருதம் கலை இலக்கிய வட்டம்
சாய்ந்த மருது.
27-3- 1998

Page 7
ඉ_6) ශිඛ1 වේ.ඨiඛtඛතක!
பக்கம்
1. இலங்கையில், இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
2 முஸ்லிம்களின் மெளனம் தவறாகப் புரியப்பட்டதா? 3. வடக்குகிழக்கு இணைப்பும் முஸ்லிம்களின் நிட்ைபாடும் O
4 முஸ்லிம் அரசியற் கட்சி முஸ்லிம்களின் இன்றைய தேவை 2
5. முஸ்லிம் மாகாணசபையும் முஸ்லிம் அமைப்புகளும் 4 6 வடக்கு முஸ்லிம்களும் மீள்குடியேற்றமும் 17
7. அமைச்சர்அஷரஃப் அமைச்சுக்குறைப்பும் ஆதரவு விலக்கலும் 2O 8. முஸ்லிம்களும் தனிக்கட்சியும் 23
9. அரசு - புலிகள் பேச்சுவார்த்தை முஸ்லிம்களுக்கு இன்னலாகுமா? 25
10. முஸ்லிம் ஊர்காவல் படையும் அவர்களின் எதிர்காலமும் 29
11. தமிழ்-முஸ்லிம் கலவரங்களும் பரஸ்பர குற்றச்சாட்டுகளும் 32
12. முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்? 41
13. கிழக்கு பிரிந்தால் முஸ்லிம் விகிதாசாரம் பாதுகாக்கப்படுமா? 43
14. முனைப்புடன் நிகழும் சினமூட்டல்கள் 48 15. இலங்கைத் தீவும் இலக்கில்லாத் தீர்வுகளும் 51
16. வடக்கு மாகாண முஸ்லிம்கள் தொடர்ந்தும் அகதிகள் தானா? 60
17. பேரினவாத சகதிக்குள் முஸ்லிம் உரிமைகள் 63
18. தெரிந்த விடைகளுக்கான கேள்விகள் 77
19. முஸ்லிம்கள் தமிழர்களின் விரோதிகள்? 102

இலங்கையில் இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் சிலகுறிப்புகளர்
லங்கையில் இஸ்லாத்தின் தோற்றம் அரேபியர் களின் ஈழத்து வருகையோடு தொடர்புபட்டுள்ள தெனக் கூறலாம். ஏனென்றால் அரேபியர்களின் தொடர்பு இஸ்லாமியர்களின் தொடர் பெண் றும் எண் ண கருத இடமுண்டெனலாம். М
அரேபியர்களின் வரலாற்றுத் தடாகத்தை நாம் கலக்கும் போது, நபியுல் லாஹி (ஸல்) அவர்கள் துTதராகப் பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்னர் அரேபியாவில் ஹனிப் மதம், கிறிஸ்தவ மதம் போன்ற ஏக தெய்வச் சமயங்கள் இருந்திருக்கின்றன.
ஆனால் அரேபியாவில் பல மதங்கள் இருந்த போதிலும் சிலை வணக்கத்தின் ஊடுருவல் எல்லாச் சமயங்களினுள்ளும் நுழைந்து அதன் ஆதிக்கம் செல்வாக்கும் ஆளுமையுமே தலை நிமிர்ந்து காணப்பட்டது.
இதனால் ஏகதெய்வக் கொள்கைப்பற்றுள்ளவர்கள் புறம்பாக ஒதுங்கி வாழ வேண்டியதாகி விட்டது. இப்படி ஆத்மீக உணர்வுள்ள ஜீவன்களாக வரக்கத் இப்னு நெளபல, உதுமான் இப்னு ஹ"வான். ஸியாத் இப்னு அம்றா, அபூ அனஸ் போன்றவர்களை குறிப்பிடலாம்.
மேற்காணும் விடயத்தை மேற்கோள்காட்டி ஈழத்தில் அரேபியர்களின் வருகை எனும் வரலாற்றைத் தட்டிக் கேட்போமேயானால் சிலைவணங்கிகள் மாத்திரம் தான் தொடர்பு வைத்திருந்தார்கள் எனக் கூற முடியாது.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 8
2
மாறாக ஆத்மீக விழிப்புணர்வுள்ளோர்களும் - அதாவது சரியான தெளராத். இன்ஜில் வேதங்களை இதயத்தில் சுமந்து திரிந்தவர்களின் தொடர்பும் இலங்கையில் இருந்திருக்கக்கூடும்.
இன்னோர்களின் தொடர்பை இஸ்லாமியர்களின் தொடர்பு என எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புண்டல்லவா? ஏனெனில் நபியுல்லாஹற் (ஸல்) அவர்களுக்கு முன்னர் வந்த ரஸ"ல்மார்களும் அதாவது சுஹ"புகளும், வேதங்களும் கொடுக்கப்பட்டவர்கள் இறைதூதர்களே. தூதர்கள் யாவரும் போதித்தவை எல்லாம் ஒரே அடிப்படையான தவ்ஹீத் - ஏகத்துவத்தைத்தான்.
இதனால்தான் எல்லாம் வல்ல அல்லாஹற்விடம் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது. ஆகையால் ஆதம் (அலை) அவர்களிலிருந்து இறுதித் தூதர் நபியுல்லாஹற் (ஸல்) அவர்கள் வரை போதிக்கப்பட்ட தூதுகள் யாவும் இஸ்லாம் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.
பொதுவாக இலங்கை முஸ்லிம்களது மூதாதையர்கள் அரேபியர்கள் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அப்பழுக்கற்ற உண்மையாகும். ஆனர்ல் அரேபியர்களின் தொடர்பு இலங்கையுடன் சங்கமித்தது எப்போது என்ற காலகட்டத்திற்கு சரியான வரலாற்றுத் தெளிவில்லை.
ஆயினும் இலங்கையின் முதுமைத் தன்மையை ஒத்ததுதான் அரேபியர்களின் (வருகையும்) வரலாறு என்பது தீக்கனலையொத்த உண்மையாகும்.
“கிறிஸ்தவ நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன்னரேயே அரேபியர்கள் இலங்கையில் குடியேறியதாக” Piny குறிப்பிடுகிறார்.
Sir Gersontenment தனது Perl Plus எனும் நூலில் “முதலாம் நூற்றாண்டிலேயே அரேபியர் இலங்கையில் இருந்ததாக குறிப்பிடுகிறார்.
முன்னாள் புதைபொருள் ஆராய்ச்சி ஆணையாளரான கலாநிதி பாலேந்திரா, "முஸ்லிம்கள் இந்நாட்டின் பழங்குடி மக்களேயாவர். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சோனகர் இங்கு இருந்தமையினால் வேடரையோ அல்லது ஏனைய ஈழப் பழங்குடி மக்களையோ போன்று அவர்களும் பழங்குடி மக்கள் என்பது விளங்கும்” எனக்குறிப்பிடுகிறார்.
கலாநிதி அந்திரியஸ் நெல் என்பவர் “கி.மு. 377 ம் வருடம் அநுராதபுரத்தில் அரேபியர்களுக்கெனப் புறம்பான வசிப்பிடம் ஒதுக்கப்பட்டது” எனக் கூறியுள்ளார்.
வரலாற்றுப் பேராசிரியரும் ஜெர்மனிய இலக்கியகர்த்தாவுமான வில்ஹெல்ம் கைகர் என்பவர், “இந்நாட்டிற்கு ஆரியர் வருவதற்கு மிக நீண்டகாலத்திற்கு முன்னரே அரேபியர் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள்” என அத்தாட்சிப்படுத்துகிறார்.
“சிங்களவர்களாகிய நாம் இந்த நாட்டிலே வாழ்ந்த காலம் தொட்டே முஸ்லிம்களும் இந்நாட்டிலே வாழ்ந்துள்ளார்கள். இரு சமூகத்தவர்களுக்கு மிடையில் நெருங்கிய நட்புறவு நிலவி வந்துள்ளது” என எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க கூறியுள்ளார்கள். (இஸ்லாமும் தமிழும்)
மேற்கூறிய எடுகோள்களிலிருந்து ஒரு விடயம் எம்மைத் தட்டிப்பார்க்கிறது. அதாவது வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே அரேபியர்களின் தொடர்பு இலங்கையுடன் இலங்கிக் கொண்டிருந்தன என்னும் முடிவிற்கு வர முடிகிறது. தவிர திட்டமான காலகட்டம் இதுதான் எனக் கட்டியம் கூறமுடியாதுள்ளது.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

அரேபியர்களின் இலங்கை வருகையை இரண்டு காரணங்களைக் கொண்டு நாம் குசலம் விசாரிக்கலாம்.
3 அரேபியர்களின் பிரதான தொழிலாக இருந்த வாதத்கத்திற்கு ஏற்ற சில பொருட்கள் இலங்கையில் தாராளமாகக் கிடைத்ததன. இங்கு கிடைத்த பொருட்கள் உலக சந்தைகளில் அவர்களுக்கு நல்ல இலாபத்தை ஈட்டிக் கொடுத்தன:
அத்தோடு அவர்களுடைய செல்வாக்கும் பெருகியது. இதனால் அவர்களின் வருகையும் பெருகியது. அதேநேரம் வெளியுலக வியாபாரத்தை மட்டும் கவனஞ் செலுத்தாது இலங்கையின் உள்ளுர் வாணிபத்திலும் ஆர்வம் காட்டலாயினர். இதனால் அரேபியர்கள் இங்கேயே தங்களுடைய இருப்பிட வசதிகளையும் ஆக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று.
 ெஆதி பிதா ஆதம் (அலை) அவர்களின் புனித பாதச் சுவடு இலங்கையில் படிந்திருப்பதும் ஆதம் மலை நோக்கி யாத்திரை நோக்கிலும் அரேபியர்களின் வருகை இங்கு நிலைபெறத் தொடங்கியதெனப் பல வரலாற்றாசிரியர்கள் அறிய வைத்துள்ளார்கள்.
"இந்தியா பூமியில் ஸரந்தீப் என்ற இடத்திலுள்ள நூத் என்ற மலையில் ஆதம் (அலை) வந்திறங்கினார்கள்” (மஆலிமுத் தன்ஸிஸில்)
ஆதம் (அலை) இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள். அது இந்திய பூமியிலுள்ளது” என்றும் "இலங்கையிலுள்ள மலையொன்றில் ஆதம் (அலை) முதன் முதலில் வந்திறங்கினார்கள்” என்று இப்னு அப்பாஸ் அறிவித்துள்ளார்கள் என்று இமாம் அபூ இஸ்ஹாக் அந்தட்லிபீ (ரஹற்) தமது கஸஸ"ல் அன்பியா என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள.
"ஆதம் (அலை) இலங்கையில் விடப்பட்டார்கள். அவர்கள் சுவனத்திலிருந்து தம்மோடு சில வாசனைச் செடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். அவை காய்ந்து இலங்கையில் இருந்து காற்றினால் எடுத்துச் செல்லப்பட்டு இந்திய மண்ணிலும் நறுமண வாசனைப் பொருட்கள் உற்பத்தியாயின."(அஹற்பாறுஸ். ஸமான்)
“இலங்கையில் றஹயின் என்றழைக்கப்பட்ட ஒரு மலை உண்டு. அம்மலை மீதே ஆதம் (அலை) வந்திறங்கினார்கள். அதன் முகட்டில் ஆதமின் பாதச் சுவடொன்று கல்லில் பதிவாகியுள்ளது.”(மு."ஜமுல் புல்தான்)
"ஆதம் (அலை) இலங்கையிலும் ஹவ்வா ஜித்தாவிலும் விடப்பட்டனர்.” (தாயிறதுல் மஆரிபில் இஸ்லாமிய்யா)
"ஆதம் (அலை) இலங்கை வந்திறங்கினார் என்ற கருத்தே அதிக பலம்வாய்ந்ததாகும்.” (இஸ்லாமியக்கலைக்களஞ்சியம் - பாகம் : 01)
"இலங்கையிலுள்ள ஆதம் மலை போர்த்துக்கீஸரினால் பிக்டிஆதம் (Picd Adam) என்றழைக்கப்பட்டது." (தாயிரதுல் மஆரிப்)
இப்னு அப்பாஸ் (ரழி), அலி (ரழி), கதாதா (ரழி), அபுல் ஆலியா (ரஹற்) ஆகியோர் "ஆதம் இந்தியாவில் உள்ள இலங்கையில் நூத் என்ற மலையில் விடப்பட்டார்கள்” என்று அறிவித்துள்ளனர். (அல் காமில் பித் தாரிஹற்)
இலங்கையை அரேபியர்கள் சைலான், ஸரந்தீப் போன்ற நாமங்களால் அழைத்தனர் - அறிந்திருந்தனர் என்பதும் நம் நினைவிலிருத்தல் அவசியம்.
தீவும் தீர்வுகளும் எம். எம்.எம்.நூறுல்ஹக்

Page 9
4.
இஸ்லாம் என்பது முழு மனித சமுதாயத்துக்கும் ஏற்றதொரு வாழ்க்கை நெறியாகும். இலகு வழிமுறைகளைக் கொண்ட சம்பூரண இஸ்லாத்தின் கொள்கை வாகனத்தைப் பல பாகங்கள் என்ற பாதைகளில் ஒட்டிச் செல்லும் சாரதியாக நபியுல்லாஹற் (ஸல்) அவர்கள் கி.பி. 610 இல் இவ்வகிலத்தின் தூதராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்கள்.
இக்கால கட்டத்தை இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டமெனக் கூறலாம். ஏனென்றால் நபியுல்லாஹற் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் இறைதூதராக வாழ்ந்த இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குள் மக்காவிலும் மதீனாவிலும் முழு அரேபிய தீபகற்பத்திலும் இஸ்லாமியத் தென்றல் வீசியதுடன் பாரசீக, உரோம சாம்ராஜ் யங்களுக்கும் இத்தென்றல் பரவியதென வரலாறு கூறுகிறது.
இலங்கையில் வாழ்ந்த அரேபியர்களும் இலங்கை மக்களும் இஸ்லாத்தின் புத்தெழுச்சி பற்றியும் அதன் போதகர் பற்றியும் அரேபிய வணிகர்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்திருக்க வேண்டும். இதனால்தான் இதுபற்றி விபரம் அறிந்து வருவதற்காக ஈழத்திலிருந்து தூது அனுப்பியதாக வரலாற்றுக் குறிப்புகளில் தரிசிக்கக்கூடியதாக உள்ளது.
வரலாற்றாசிரியர் இப்னு ஷஹற்ரயார் என்பவர் தனது "அஜாயிபுல் ஹிந்த்” எனும் நூலில் பின்வரும் குறிப்பை எழுதியுள்ளார். அதாவது "இலங்கையிலும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் வாழ்ந்த அரேபிய மக்கள் இஸ்லாத்தையும் அதன் போதகரையும் பற்றிக் கேள்விப்பட்டு ஆற்றல்மிக்க ஒருவரைத் தேர்ந்தெடுத்து உண்மையான விபரங்களை அறிந்து வருமாறு அரேபியாவிற்கு அனுப்பிவைத்தார்கள்.
அவர் அங்கு சென்றபோது நபியுல்லாஹற் (ஸல்) அவர்களும, முதல் கலீபா அபூபக்கர் (ரழி) அவர்களும் மரணித்து உமர் (ரழி) அவர்களின் கிலாபத்து நடந்து கொண்டிருந்தது. கலிபாவிடம் தகவல்களை அறிந்து தூதுவர் ஈழத்திற்கு மீளும்போது மக்ரான் பகுதியில் மரணமடைந்தார். ஆயினும் கூடச் சென்றிருந்த பணியாள் இலங்கை வந்து இஸ்லாத்தையும் நபியுல்லாஹற் (ஸல்) அவர்களையும் பற்றி மக்களுக்கு அறிவித்தார் "என்று.
இவ்வாறு இலங்கையில் இஸ்லாம் முகவுரை எழுதியதுடன் இங்கு வருகை தந்த அரேபிய வணிகர்களின் நேர்மையான நடத்தையும் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறைமையும் பொய்யும் வஞ்சகமும் கலக்காத பழக்க வழக்கங்களும் இங்குள்ளவர்களின் இதயங்களில் குடியேறியிருக்க வேண்டும்.
ஏனெனில் அரேபியர்களின் வணிகத் தொடர்பு இலங்கையுடன் காலத்தால் முதுமை பெற்றிருந்தது. இதனால் இவர்களுடன் அவர்களும் அவர்களுடன் இவர்களும் புரிந்துணர்வு எனும் காதல் வயப்பட்டிருக்க நியாயமுண்டு.
இருந்தாலும் இலங்கையரின் இஸ்லாமிய தாகங்களுக்கு ஒரு நீரூற்றாக கி.பி.எட்டாம் நூற்றாண்டில் இலங்கையில் தன் உருவங்களை இறக்கிக் கொண்டன் பனுாஹாஷிம் குலத்தினர் எனலாம்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் உமையா ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்ட கொடுமைச் சுமைகளை தாங்கமுடியாமல் பனுாஹாஷிம்கள் அரபு நாட்டிலிருந்து இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் குடியேறினர்.
இலங்கையில் தங்கள் பாதங்களைப் பதித்தோர் திருகோணமலை. யாழ்ப்பாணம். மாதோட்டம். குதிரைமலை. புத்தளம், கொழும்பு வேர்வளை. காலி ஆகிய இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அரேபிய
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

5
நாட்டு - இஸ்லாமிய வரலாற்றோடு இச்சம்பவத்தை தூக்கிக்காட்டும் போது சமனாகவே தென்படுகிறதெனக் கூறலாம்.
உமையாக்கள் கிலாபத்தை முடிசூட்டிக் கொண்டபோது அவர்களுக்கெதிரான பனூஹாஷிம்களைக் கொடுமைப்படுத்தினர். ஏனெனில் உமையாக கிலாபத்தை ஆரம்பித்த முஆவியாவுக்கு எதிராகவும் அவர் மகன் யஸிதுக்கெதிராகவும் பனுஹாஷிம் குலத்தவரான அலி (ரழி), ஹ"ஸைன் (ரழி) முதலானோர் அவர்களின் தவறான போக்கினை வெளிச்சமாக்கி கண்டித்துப் போரிட்டார்கள்.
இதற்குப் பழிவாங்கவும் மீண்டும் அவர்கள் எழுச்சியுறாது தடுக்கவும் கலீபா அப்துல் மலிக் இப்னு மர்வான் (கி.பி 687-705) இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
எனவே இவ்வாறு வந்தவர்களிடம் இஸ்லாமிய அறிவும் பண்பாடும் மிக ஆழமாக வேரூன்றி இருந்திருக்கும். இவைகள் இங்குள்ளவர்களுக்கு இஸ்லாத்தை விளம்பரப்படுத்தும் ஒரு குரலாக அமைந்திருக்குமென எண்ணு வதற்கு வாய்ப்புண்டு.
ஏனெனில் அக்கால கட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் வணக்க வழிபாடு களில் குறுக்கீடு செய்தோ குரோதம் கொண்டாடியோ அக்கால சிங்கள மன்னர்கள் தங்களைச் சிறுமைப்படுத்திக் கொள்ளாமல் இருந்தார்கள்.
ஓர் இஸ்லாமிய நாட்டில் கிடைக்காத சுதந்திரம் இஸ்லாமியர்களுக்கு இலங்கையில் அப்போது கிடைத்திருக்கிறது. இஸ்லாமியர்களின் மத உணர்வுகளுக்கு அக்கால மக்கள் மதிப்பும், கெளரவமும் கொடுத்ததினால்தான் இஸ்லாம் தன்னை வளர்த்துக் கொள்ளவும் - பெருக்கிக் கொள்ளவும் ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பினைப் பெற்றதெனலாம்.
இலங்கையில் மதமாற்றம நிகழும் அளவில் மத போதகர்கள் வந்து மேடை போட்டு பிரசாரம் செய்ததாகவோ வீதிகளில் கூவித்திரிந்ததாகவோ எவ்வித வரலாற்றுச் சான்றுகளையும் காணமுடியவில்லை.
ஆயினும் கொழும்பு மையவாடியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு நடுகைக்கல் அடையாளம் மூலம் காலித் இப்னு பகாயா என்பவர் மத்போதகராக இருக்கலா மென நம்ப இடமுண்டு. அப்படியானாலும் இவர்களுடைய போதனையும் ஒரு சிறு வட்டத்தினுள்ளேயே ஆட்சி புரிந்திருக்குமென்றே கூறவேண்டியுள்ளது.
முஸ்லிம்கள் தாங்கள் வாழும் பிரதேசங்களில் பள்ளிவாசல்களை ஏற்படுத்திக் கொண்டனர். அங்கு தொழுகைக்காக மட்டும் வந்து போகவில்லை மாறாக மார்க்கக் கல்வி கற்கும் ஆரம்ப கலைக்கூடமாகவும் முஸ்லிம்களிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்து பிணைத்து வைக்கும் நீதித்தலமாகவும் விளங்கியது.
இவற்றுக்கு அப்போதைய ஆளும் வர்க்கத்தினரின் ஒத்தாசை பக்க பலமாக இருந்திருக்கின்றன. இதனால் இஸ்லாம் பல பாகங்களுக்கும் பரந்து செல்ல உதவியதெனக் கூறலாம்.
இலங்கையில் இஸ்லாம் ஓரளவு குடிசை கட்டியிருந்த வேளை பக்தாத், குர்துபா போன்ற மத்தியகாலத்தில் புகழ்பெற்றிருந்த முஸ்லிம் சாம்ராஜ்யங்களிலிருந்து மார்க்க நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அங்கு நடைமுறையிலிருந்த சில சட்டங்கள் இங்கும் முஸ்லிம்களின் நடை முறையில் காணப்பட்டது.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 10
6
இதுபற்றி சேர் அலெக்ஸாண்டர் ஜோன்சன் “இலங்கை முகம்மதியர்கள் மத்தியில் உள்ள விவாக சொத்துரிமைச்சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளை நான் ஆராயும் பொழுது அதுபோன்ற வழக்குகளில் பக்தாத்தினதும் கொர்டோவாவினதும் "காழிகளால் வழங்கப்பட்ட தீர்ப்புகள் அடங்கிய - அவர்கள் தம்வசம் வைத்திருந்த குறிப்புகளை எனது வழிகாட்டலுக்காக அடிக்கடி என் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அத்தீர்ப்புக்கள் இலங்கை முகம்மதியர்கள் மத்தியில் எழுநூறு, எண்ணுறு ஆண்டுகளாக சட்டமாகக் கணிக்கப்பட்டு வந்துள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார். -
பக்தாத் கல்வித் துறையிலும் நாகரிகத்திலும் மேன்மைய்டைந்த காலப்பகுதியாக விளங்கிய சூழ்நிலையில்தான் இலங்கைக்கும் மார்க்க அறிஞர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதை நாம் யூகித்துணர முடிகிறது.
இலங்கையில் இஸ்லாம் வளர்ச்சியடைவதற்கு மேலும் துணையாக தென்னிந்தியாவிலிருந்து வந்த "ஷெய்கு" மார்களின் வருகையும் அரபு மத்ரஸாக்களின் உருவாக்கமும் துணைபுரிந்தன. தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏற்பட்ட தொடர்பு இஸ்லாத்தின் முக்கிய வளர்ச்சிக்குத் துணைநின்றன என்பதும் ஒருவகைச் சான்றே எனக் கொள்ளலாம்.
தென்னிந்தியாவில் பிறந்த மத்ரஸாக்களில் கல்விபயில்வதற்காக இங்கிருந்து சிலர் சென்றுள்ளனர். அதேசமயம் அங்கிருந்தும் இங்கு வந்த மார்க்க அறிஞர்கள் மத போதனைகளை நிகழ்தியுள்ளனர். கூடவே பெரும்பான்மை யானோர் “தரீக்கா” எனும் தோட்டத்தை ஏற்படுத்தி "முரிதீன்"கள் எனும் தோட்டக்காரர்களையும் ஏற்படுத்தியதுடன் இலங்கையின் பல பாகங்களிலும் இம்முறையைக் கைக்கொண்டதோடு தைக்கா - ஸாவியாக்களையும் நிறுவி அதன் ஊடாக மத்ரஸாக்களையும் உருவாக்கினர் எனலாம்.
இந்த வகையில் இலங்கையில் உருவான மத்ரஸாக்களில் முதன்மையான தெனக் கருதப்படும் "மத்ரஸதுல் பாரீ” என்பதை மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் நிறுவப்பட்டதாக வரலாறு கைதட்டிச் சொல்கிறது.
அத்தோடு இலங்கையின் பள்ளிவாசல்களில் பெரும்பான்மையாக தென்னிந்திய ஆலிம்களே கடமையாற்றியுள்ளனர். மேலும் பல மொழிகளில் இருந்த நூல்களை தமிழுக்கும் அரபுத்தமிழிலும் மொழிபெயர்த்து உலாவ விட்டதுடன் இஸ்லாமிய சட்டங்கள் இங்கு நிலைபெறவும் பெரிதும் உதவினார்கள் எனவும் வரலாறு தடயம் பதித்து வைத்துள்ளது.
ஆகவே இலங்கையில் இஸ்லாத்தின் தோற்றுவாயைக் கண்டுபிடிப்பதில் ஒரு சிக்கல் நிலை தென்பட்டாலும் இலங்கையில் இஸ்லாம் தோன்றி - வளர்ச்சி பெற்றதற்கு அரேபிய வணிகர்கள், சிங்கள மன்னர் - மக்களின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை பக்தாத் மார்க்க அறிஞர்கள். தென்னிந்தியா விலிருந்து வந்த சமய பெரியார் - மார்க்க அறிஞர்கள் போன்றோர்களின் பங்களிப்புத்தான் எனக் கூறி வைக்கலாம்.
குறிப்பு: இக்கட்டுரை இலங்கையில் இஸ்லாத்தினர் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி முழுமையான ஆய்வை முனர்வைப்பதல்ல, மாறாக முழுமையான ஆய்வுப்பணிக்கு இதுவொரு ஆரம்பப்படியாக அமையலாமென்ற இலக்கில் எழுதப்பட்டதாகும்.
-எழுச்சிக்குரல் - LOTifi O1-15 1992
16-31 1992
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

இந்தியப்படையினர் வருை முஸ்லிம்களின் மெளனம் தவறாகப் புரியப்பட்டதா?
ந்தாண்டில் இலங்கை ஜனாதிபதிக்கும்இந்தியப்
பிரதமருக்குமிடையில் கைச்சாத்தான "ஒப்பந்தம்"
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததென்று கூறப்பட்டது. இந்த ஒப்பந்தத்தைக் கொண்டு வடக்கு - கிழக்கில் அமைதிப்படை நிலை கொண்டதை நாம் அறிவோம்.
இலங்கையின் ஒப்பந்தத்தையோ படைகளின் வருகையி னையோ சிங்களவர்கள்ல் பெரும்பான்மையினர் விரும்ப வில்லை. இதன் எதிரொலியாக நடைபெற்ற வன்செயல்களும் நஷ்டங்களும் கொஞ்சநஞ்சமல்ல என்பதும் வெளிப் J60)Lu JT60135l.
ஆயினும் தமிழர்களில் 99 வீதமானவர்கள் இந்தியப் படையின் வருகையினை குறிப்பாக வடக்கு, கிழக்கில் வரவேற்று தங்கள் மகிழ்ச்சிப் பெருக்கை ஓங்கி ஒலிக்கச் செய்தனர்.
ஆயினும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம் கள் மெளனமாக இருந்தனர். இந்த மெளனத்திற்கு இரண்டு அர்த்தங்களை ஏனையோர்கள் சிருஷ்டித்துக்கொண்டனர். அவையாவன: முஸ்லிம்கள் இந்தியப்படையை வரவேற் கின்றனர் - எதிர்க்கின்றனர் என்பனவாகும்.
எது எப்படி இருப்பினும், முஸ்லிம்கள் மெளனமாகவே இருந்தனர் என்பதே உண்மை. இந்த மெளனத்திற்கு ஆழமான அர்த்தமும் உண்டு. தமிழ் சகோதரர்களின் நீண்டகாலப் போராட்டத்திற்கு ஒரு விடிவும், விமோசனமும், இலங்கையில் அமைதி நிலவவும் இந்த ஒப்பந்தமும், இந்தியப்படையும் உதவுமானால் அதற்கு முட்டுக்கட்டையாக முஸ்லிம்கள் இருக்கத்தயாரில்லை என்பதைச் சொல்வதே.
இந்த அம்சத்தை இலங்கையில் இந்தியட்படை நிலைபெறச் செய்யுமா? எனப் பார்த்திருந்தனர். (மாறாக இந்திய காஷ்மீர்,
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 11
பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்களுடன் இந்தியப்படை எவ்வாறு உறவு கொண்டதென்பதை நன்கறிந்திருந்தனர் இலங்கை முஸ்லிம்கள்) ஏனெனில் இந்தியப்படையின் நோக்கும். போக்கும் எந்தக் கோணம் என்பது முஸ்லிம்கள் அறிந்தவைதான். −
ஆனால் ஆரம்பத்தில் இந்தியப்படைகளின் வருகைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு எனக்கூறிய கருத்து தவறானதாகும் என்பதற்கு ஒரு விஷயத்தை இவ்விடத்தில் நாம் நினைவூட்டி வைக்கலாம். அதாவது இலங்கையில் இஸ்ரேலியர்களின் வருகையினை அரசு அறிவித்த போது முழு இலங்கை முஸ்லிம்களும் எதிர்ப்புக் கொடியைத் தூக்கிப் பிடித்தனர்.
எனினும் கிழக்கில் குறிப்பாக அரச படைகளுடன் மோதிக்கொண்ட வரலாறு சாய்ந்தமருதுக் கிராமத்துக்கு உண்டு. இவைகள் எதனைக் காட்டுகிறது? முஸ்லிம்கள் தங்கள் எதிரிகளை எதிரி என இனங்காட்டத் தயங்கும் ஒரு சமூகமல்ல என்பதை அல்லவா?
ஆகவே இந்தியப்படைகளின் வருகையின் போது (ஆரம்பத்தில்) முஸ்லிம்கள் மெளனமாக இருந்ததற்கு நியாயமான காரணங்களாக நாம் முன்னர் சுட்டிக் காட்டிய அம்சங்கள் இருந்தனவென்பது யதார்த்தமானதே.
அண்மையில் - அதாவது இந்தியப்படைகளின் நிலைகெள்ள்ளுதலின் பின்னர் அவர்களின் அனுசரனையும் குறிப்பாக கிழக்கில, மூதூர், கிண்ணியா, ஓட்டமாவடி, காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல்களின மூலம் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட உயிரிழப்புக்களும் பொருட்சேதங்களும் கொஞ்சநஞ்சமல்ல.
இவ்வாறான அடாவடித்தனங்களின் பின்னர்தான் முஸ்லிம்கள் இந்தியப்படையினரை எதிர்க்கின்றனர் - வேண்டாமென கோஷமெழுப்புகின்றனர். இது நியாயமான கோரிக்கை என்பது மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் எவரும் ஏற்றுக்கொள்வார்கள்.
சாய்ந்தமருது, மாளிகைக்காடு பகுதியில் நிகழ்ந்த அனர்த்தங்களின் பின்னர் அப்பகுதிக்கு விரைந்த புனர்வாழ்வு அமைச்சர் அவர்கள் கல்முனை ஸாஹிராவில் நடந்த கூட்டத்திலும் கலந்து கொண்டார். அவ்வமயம் கூடியிருந்த முஸ்லிம்கள் “இந்தியப்படைகளை வெளியேற்று! இந்தியப்படைகளை வெளியேற்று!” என கோஷமிட்டனராம். இந்தக் கோஷங்கள் இப்போது அங்குமட்டுமல்ல தலைநகரின் பல பாகங்களிலும் அமைதியான முறையில் இளைஞர்கள் அரங்கேற்றினார்கள் எனச் செய்திகள் கூறுகின்றன.
இது ஒரு புறமிருக்க சிலர் இப்போது முஸ்லிம்கள் இந்தியப்படை மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என அறிக்கை விடுகின்றனர்.இதில் எவ்வித உண்மைகளுமில்லை. இப்போதெல்லாம் இந்தியப்படைகள் கிழக்கில் குடிகொண்டிருப்பது முஸ்லிம்களின் ஆரோக்கியமான சூழ்நிலைக்கு உகந்தது அல்ல என்ற கருத்துக்கள் வலுப்பெற்று, முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்படல் வேண்டும். இன்னுமின்னும் நாங்கள் இந்தியப்படைகளை நம்பி ஏமாந்து விடத் தயாரில்லை என்ற கருத்துக்களை ஏகோபித்து கேட்கக்கூடியதாக உள்ளது.
கிழக்கு வாழ் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு இலங்கை அரசு உதவுமா? அண்மையில் அறிவிக்கப்பட்ட நஷ்டஈடுகள் உரியவர்களுக்குச் சென்றடையுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- 2 25ul/LO
ஏப்ரல் 22 - மே 06 -1988
கீலும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

வடக்கு,கிழக்கு இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்
முஸ்லிம்களும் இருக்கிறார்கள் என்பதை நிருபித்து நிற்க, பொதுத்தேர்தல் சிங்களவர்களும், தமிழர்களும் தான் கிழக்கில் கணிசமாக வாழ்கிறார்கள் எனச் சுட்டி நிற்கிறது.
|IDဖွံ့ဖြိုမှီ சபைத் தேர்தல் இங்கு தமிழர்களும்
இது உண்மையான நிலைக்குப் புறம்பான நிரூபணமாகும். ஏனெனில் 1981 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் படி கிழக்கில் வாழும் மொத்த சனத்தொகை 976,476 ஆகும்.
இவற்றில் சிங்களவர்கள் - 236,786 தமிழர்கள் - 375,355 முஸ்லிம்கள் - 317,177 கிறிஸ்தவர்கள் - 45753 ஏனையோர் 1405 (உண்மையில் சிங்களவர்களின் அதிகரிப்பு இயற்கை யானதல்ல. பிரதேச இணைப்புக்கள, குடியேற்றத்திட்டங்கள், புனித நகரத் திட்டங்கள், தொழில் வாய்ப்புக்கள் என்ற போர்வையினால் ஏற்படுத்தப்பட்டவை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.)
அப்படியானால் இந்தத் தெளிவான உண்மைகளுக்குப் புறம்பாக தேர்தல் முடிவுகளைக் கொண்டு சமூகங்களை “புரிந்துணர்வதற்கு முற்படுவது அறிவுபூர்வமானதல்ல.
இந்த நியாயத்தையே இந்திய அரசு ஏற்றுக்கொள்ளலாம் * சர்வஜன வாக்கெடுப்பு வேண்டாம் என இந்தியா இலங்கை அரசைக் கேட்கலாம் - வேண்டலாம். இதனை ஏற்றுக் கொள்ளாது இலங்கை அரசு தனது நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தவும் முற்படலாம்.
எது எப்படியிருந்த போதிலும், கிழக்கில் சர்வஜன வாக் கெடுப்பு நடத்தப்படுவதினால் மிகவும் பாதிப்புக்குள்ளா குபவர்களாக முஸ்லிம்கள் இருப்பார்கள் என்பதில் ஐய மில்லை.
தீவும் தீள்வுகளும் எம்.எம். எம்.நூறுல்ஹக்

Page 12
O
ஏனெனில், தமிழர்கள் இணைப்பை ஆதரித்து நிற்க சிங்களவர்கள் இணைப்புக்கு எதிராக நிற்கின்றனர். இடையில் முஸ்லிம்கள் அளிக்கும் வாக்குகளே தீர்மானிக்கும் வாக்குகளாக அமையலாம். இதுதான் முஸ்லிம் களுக்குப் பெருத்த “அடியாக" அமையும்.
இணைப்பிற்கு எதிராக முஸ்லிம்கள் வாக்களிப்பார்களேயானால் தமிழர்களின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டிவரும். இந்நிலையில் மத்திய அரசு முஸ்லிம்களுக்கு உதவுமென்று முழுமையாக நம்புவது மிகவும் பிழையான எதிர்பார்ப்பென்றே கூறவேண்டும்.
முஸ்லிம்கள் தமிழ்த் தீவிரவாதிகளாலும், இந்தியப் படைகளினாலும் தாக்கப்பட்டு அகதிகளாக அங்கும் இங்கும் அலைந்தபோது உதவாமை, மேலும் சிங்களவரைப் பொறுத்தவரை இப்போதே அரசின் படைப்பலத்துடன் இருப்பவர்கள். அப்படியிருந்தும் மிக அண்மையில் நடைபெற்ற அரந்தலாவை, கெலிஒயா, நெலும்வேவ, பொரவேவ, செவனப்பிட்டிய போன்ற சிங்களu பிரதேசங்களில் நடைபெற்ற தாக்குதல்களைக் கூட தடுத்துவிட முடியவில்லை.
இப்படி அவர்களையே அவர்களால் பாதுகாக்க முடியாத நிலையில் முஸ்லிம்களைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பார்கள் என்று எப்படி நம்புவது? எனப் பலர் சந்தேகிக்கின்றனர். இது நியாயமான சந்தேகமும் - பதில் காண வேண்டிய விடயமுமாகும்.
தமிழர்களைப் பொறுத்த வரை ஆயுதங்களைச் சட்டபூர்வமாகவும் சட்டபூர்வமில்லாமலும் ஏந்தியுள்ளனர். முஸ்லிம்களைப் பொறுத்த வரை இப்படி ஆயுதங்களை அரசு சட்டபூர்வமாக வழங்கினாலும் அது சில வேளை கிராமங்களைப் பாதுகாக்கக் கூட உதவுமென்று கூறமுடியாது.
ஆனால் தொழில் செய்வதற்கு போகும் வழியில் - பிரயாணம் செய்யும் போது - வயற்காணிகளுக்கு செல்லும் போது - இப்படித் தனது கிராமத்தை விட்டு வெளிப்படும் போது கடத்தப்பட்டு கொல்லப்படலாம். இதே பாணியில் இதற்கு முன்னரும் முஸ்லிம்களை இரையாக்கியுள்ளனர்.
எனவே இணைப்புக்கு எதிராக வாக்களிப்பதன் மூலம் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்கொள்ள சக்தியில்லை என்ற தோரணையில் சரணாகதி ஆகிவிடும் நிலைக்கும் இப்போது முஸ்லிம்கள் தயாரில்லை.
“வாழ்ந்தால் எமது உரிமைகளைப் பெற்று வாழ்வோம் . இல்லையேல் உரிமைக்காகப் போராடி மடிவோம்” என்ற பக்குவத்தில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
“விழிப்புணர்வு மெல்ல மெல்ல முஸ்லிம் சமுகத்தினுள் அடைக்கலம். தேடுகிறது. இதனை எப்படியும் இல்லாமற் செய்து விடவேண்டுமெனப் பலரும் முயற்சி எடுக்கின்றனர்.
இணைப்புக்கு ஆதரவாக முஸ்லிம்கள் வாக்களிப்பார்களேயானால் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் தாக்கப்படலாம் எனவும் அஞ்சுகின்றனர். உண்மையில் இவ்விடத்தில் ஒரு யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமது அண்டையர்களை நேசித்து வாழ்பவர்கள் - ஒற்றுமையையும் - சமாதானத்தையும்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

கடைப்பிடிப்பவர்கள் - இதே தோரணையில் ஏனைய சமுகத்தினரும் முஸ்லிம்களுடன் வாழ வேண்டும். அப்போதுதான் நிம்மதியாகவும் சுபீட்சமாகவும் இந்நாட்டு மக்கள் எல்லோரும் ஒன்று என வாழலாம்.
தமிழர்களின் பழைய தலைமைத்துவமும் - புதிய தலைமைத்துவத்தின் ஒரு பகுதியும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதினால் ஏற்படும் பாதக நிலையையும் - முஸ்லிம்களின் மனோ நிலையையும் ஒரளவு நாடி பிடித்துப் பார்த்து முஸ்லிம்கள் கோரும் "தனியான அமைப்பில் நியாயமிருக்கிறது என்பதைக் கொள்கையளவில் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் அதனைத் தந்துவிடும் எண்ணம் கிஞ்சிற்றும் காணப்படவில்லை. மாறாக கண்துடைப்பான ”தனித்துவம்" வழங்க முன்வருவார்கள் என்பதையும் அவர்களின் கருத்துக்களிலிருந்து பெறக்கூடியதாக உள்ளது.
"வடக்கு.கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் பிரதேசங்களை வரையறுத்து மாகாண சபை நடவடிக்கைகளை மேற்கொள்வது பிரஜைகள் தொண்டர் படைகளில் போதியளவு முஸ்லிம்களை சேர்த்துக் கொள்வது போன்ற விடயங்கள் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரசும் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கமும் உடன்பட்டுள்ள தாக தெரியவருகிறது" (தினபதி 2002-1989)
“சர்வஜன. வாக்கெடுப்பை நடாத்தி கிழக்கு மாகாணத்தில் மீண்டும் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தாது வடக்குடன் கிழக்கு இணைப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும். தமிழ் முஸ்லிம் ஐக்கியம் பலப்படுத்தப்படும் வகையில், மாகாண அரசியலில் முஸ்லிம்களும் பங்காளிகளாகும் வகையில் சட்டம் இயற்றி முஸ்லிம்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும்” (த.வி.கூ. 1989 பொதுத் தேர்தல் விஞ்ஞாபனம்)
"இம்மாகாணங்களில் (வடகிழக்கு) அதிகாரப் பரவலாக்கத்தின் போது முஸ்லிம்களின் நலன்களும் சட்ட ரீதியாக பாதுகாக்கப்பட வேண்டும்”.(ரெலோ செயலதிபர் செல்வம் - தினகரன் 04 - 03 - 1989)
எப்படியோ முஸ்லிம்களையும் அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருப்பதை மேற்படி கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
உண்மையில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை அலசி - ஆராய்ந்து இணக்கம் காண இலங்கை அரசு, இந்திய அரசு, தமிழ்க் குழுக்கள். ரீ.ல.மு.காங்கிரஸ் எல்லாம் ஒன்றிணைந்து முற்படும் போதுதான் முஸ்லிம்களுக்கு உறுதியானதாகவும் - பக்கபலமானதாகவும் அமையும் என முஸ்லிம் அரசியல் அவதானிகள் நம்புகின்றனா-கருதுகின்றனர்.
மாறாக இப்படிப் பல தமிழ்க்குழுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்வதினாலோ அல்லது காட்டுகின்ற முடிவினாலோ “தீர்வு” ஏற்படப் போவதில்லையெனவும் எடுத்துக் காட்டுகின்றனர்.
இதற்கிடையில் வெளியே ஒரு சக்தி அதாவது விடுதலைப்புலிகள் நிற்கிறது. இதனை எப்படி உள்ளே இழுக்க முடியுமோ அப்படி உள்ளே இழுத்து விட வேண்டும். மாறாக அப்படியே வெளியே விட்டுவிடுவது அவ்வளவு நல்லதல்ல.
புலிகளை குறைவாக மதிப்பீடு செய்வது மிகப்பிழையான போக்கென்பதையும்
உணரவேண்டும். வடகிழக்கில் நிரந்தர அமைதியும் சமாதானமும் தொடர வேண்டுமானால் புலிகளையும் உள்ளே இழுக்க வேண்டும்; தீர்வில் முக்கிய
தீவும் தீர்வுகளும் எம்.எம். எம்.நூறுல்ஹக்

Page 13
2
பங்கும் கொடுக்க வேண்டும். இல்லையெல் நெருக்கடியான நிலைக்கு வடகிழக்கு மாகாணங்கள் தள்ளப்படுவதிலிருந்து விடுதலை பெற முடியாதென்றும் அரசியல் அவதானிகள் சுட்டி நிற்கின்றனர்.
சர்வஜன வாக்கெடுப்பை நடத்தாது நல்லதொரு முடிவுக்கு வருவதுதான் பொருத்தமாக அமையுமெனலாம். தமிழ் - முஸ்லிம்களுக்கிடையில் நடந்து முடிந்த பல சம்பவங்களின் "வடுக்கள்” இன்றும் ஆறிப்போகாத - அழிந்து விடாத நிலையில் வாக்கெடுப்பு வருமாயின் நிச்சயமாக இணைப்புக்கெதிராகவே முஸ்லிம்கள் வாக்களிக்கத் துணியலாம்.
ஏனெனில் அரசியல் பலம் முழுமையாகக் கிட்டுவதற்கு முன்னரே பல தமிழ்க்குழுக்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் நடந்து கொண்ட விதம் அரசியல் பலம் முழுமையாகக்கிட்டினால் நம்மை நிரந்தர "அடிமை வாழ்விற்கும் - அடக்கு முறைமைகளுக்கும் தஞ்சம் பெறச் செய்யும் கைங்கரியத்தில் தொழிற்படுவார்கள் என்ற அச்ச உணர்வு மேலோங்கி - இணைப்புக்கு எதிராகவே தொழிற்பட்டுவிடலாம்.
இப்படி நடந்து விட்டால் தமிழ்க் குழுக்கள் தாம் சிந்திய இரத்தத்திற்கும் போராடிய வேகத்திற்கும் கிட்டவிருந்த பலனுக்கும் முட்டுக்கட்டையாக முஸ்லிம்கள்தான் இருந்தார்கள் என்று எண்ணுவார்கள் - கூறுவார்கள். தவிர வாக்கெடுப்பு நடாத்திய அரசையோ முஸ்லிம்களைத் துன்புறுத்திய குழுக்களையோ பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். மாறாக “தமிழர்களின் எதிரி" முஸ்லிம்கள் என்ற தப்பான எண்ணத்தையே பரப்பி விடுவதற்கும் சந்தர்ப்பமாகிவிடும்.
முஸ்லிம்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படாத நிலையிலும் ஆயுத பலம் இல்லாத நிலையிலும் - சர்வஜன வாக்கெடுப்பு வந்தால் என்ன செய்வது? வாக்களிப்பில் கலந்து கொள்ளாது தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும். இது தவிர வேறு வழியில்லை.
அதனைத் தொடர்ந்து போராட்டக்களத்தில் முஸ்லிம்களும் இறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இது இன்னமும் நிலைமையை மோசமாக்குமே தவிர சாந்திக்கு வழிகாட்டாது.
எனவே சர்வஜன வாக்கெடுப்பை நடத்தாத நிலையில் கிழக்கு வாழ் மக்கள் நிம்மதியாகவும் அச்சமின்றியும் சுதந்திரமாகவும் தனித்துவத்துடனும் வாழக்கூடிய பாதையை அமைத்துக் கொடுப்பது இலங்கை அரசு, இந்திய அரசு, தமிழ்க்குழுக்கள, முஸ்லிம்களுடைய தனித்துவமிக்க குரலான பூரீ.ல.மு.காங்கிரஸ் ஆகியவற்றின் கடமையாகும். இக்கடமையை இவர்கள் சரிவரச் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
திசை. 8-4-1989
தீவும் தீர்வுகளும் எம். எம்.எம்.நூறுல்ஹக்

முஸ்லிம் அரசியற்கட்சி இன்றைய தேவை
w ம்மத்தியில் இன்றுள்ள எந்த இயக்கங்களையும் நாம் அரசியற்கட்சியாக அங்கீகரிக்கத் துணியக்கூடாது. சரியான - அதுவும் முஸ்லிம்களின் தனித்துவமும்
உரிமையும் பேணக்கூடிய கோட்பாடுடைய ஓர் அரசியற் கட்சி கிழக்கிலிருநுது உதயமாக வேண்டும்.
நமது நாட்டைப் பொறுத்தவரை நாம் நீண்டகால வரலாறுள்ள ஓர் சமூகமாகும். எமது தனித்துவங்களும் நிலையாகப் பாதுகாப்புப் பெறுவதென்றால் அதற்கு நிச்சய மாக நமக்கென்று ஓர் அரசியற் கட்சி அமைவது அவசியமாகு மென்பதை நாம் உணர்ந்து கொண்டோம் என்பதை - அண்மைக்காலமாக “அரசியற் கட்சி வேண்டும் அதற்கு ஏற்புடைய இயக்கம் நாம்தான்” எனக் கூக்குரலிடுவதிலிருந்து தெட்டத் தெளிவாக உணரமுடிகிறது.
ஒரு சமூகத்திற்கென்று தோன்றும் கட்சிக்கான பக்குவமும் அரசியல் அமைப்பும் நமக்கு சாதகமாக இருப்பதாக தெரிய வில்லை. இந்த நிலையில் நமது யதார்த்தமான தாபம் சரியான தாபரிப்பை பெறுமென்று கொள்ள முடியாதுதான்.
ஆனால் சரியான அடிப்படையில் நாம் இவ்விடயத்த்ை அணுகினால் நிச்சயமாக ஒரு சமுகத்திற்கென்று தோன்றும் கட்சியின் மூலம் கிடைக்கும் அளப்பரிய நன்மைகள் நமக்கும் கிட்டுமென்று துணிந்து கூறலாம். எதிர்பார்க்கலாம். அது வல்லாது தேவையான மாற்றங்கள் எம்மிடமில்லாத வரை வெற்றிப்பாதையை நாம் தொட்டுப்பார்ப்பது என்னவோ சந்தேகம்தான்
எனவே பின்வரும் அம்சங்களில் எமது கவனம் சரியான இலக்கில் பதியப்படுகின்ற போதுதான் - எமது உயர் எழுச்சித் தாகத்தை தணித்துக் கொள்ளச் சாத்தியமுண்டு என்று துணிந்து கூறலாம்.
3ே நமக்கென்று அமைத்துக் கொள்ளும் அரசியற் கட்சியின் கோட்பாடுகளை வகுக்கும் அடிப்படை ஆதாரமாக
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹற்க்

Page 14
14
- மூலாதாரமாக குர்ஆன், ஹதீஸ், இஜ்மா. கியாஸ் ஆகியவற்றைக் கைக் கொள்ளல்; அதே நேரம் தற்பொழுது நம்மத்தியிலுள்ள எந்த இயக்கங்களையும் அரசியற் கட்சியாக ஏற்கக்கூடாது.
ஏனெனில் இன்று நம் மத்தியிலுள்ள எந்த இயக்கங்களின் அடிப்படைக் கொள்கைகள் இந்த நான்கடிப்படையில் முழுமையானதாக இல்லை. அது மாத்திரமன்றி சில இயக்கங்களின் தலைவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதையும் இனங்காட்டியுள்ளனர் - நாமும் இனங்கண்டு கொள்வோம்.
கட்சியின் தலைமைத்துவமும் அங்கத்துவமும் உண்மை விசுவாசி
களுடையதாக இருக்க வேண்டும். அதாவது விசுவாச வாழ்க்கை வாழ்பவராக இல்லையேல் தலை நிமிர்ந்து - அல்லாஹற்வுக்கு மாத்திரம் பயந்து அவனிற்கே தலைசாய்ந்து கொள்ளாது யார் யாருக்கெல்லாமோ பயப்பட்டு தலை சாய்ந்து விடுவார்கள் - இன்னோர்களினால் நாம் எப்பயனையும் பெறமுடியாது. மாறாக எம் எதிர்பார்ப்புக்கள் எதிர்பார்ப்பாகவே இருக்கும்.
3 முஸ்லிம் அரசியற் கட்சி கிழக்கிலிருந்து தான் உதயமாக வேண்டும். அப்போதுதான் இந்நாட்டில் பரந்து வாழும் முழு முஸ்லிம் சமுதாயத்திற்கும் உதவக்கூடிய ஓர் அரசியல் அமைப்பாக அமையும்.
3 முஸ்லிம்களின்பிரதிநிதித்துவம் முஸ்லிம்களுக்கென்று தோன்றும் கட் பிலே இருக்க வேண்டும். வேறெந்த கட்சியிலும் சேர்ந்து விடக்கூடாது. ஆனால் அப்படி வேறு கட்சியில் பிாதிநிதித்துவம் தேடிக்கொள்ள நம்மவர்கள் முற்பட்டாலும் நமது வாக்குகளை நமக்கென்று உதயமாகும் அமைப்பிற்கே சொந்தம் என்ற அடிப்படையில் உறுதியாக இருக்க வேண்டும்.
எமக்கு போதியளவு பிரதிநிதித்துவம் கட்டாயமானது. ஆனால் நமக்கு கணிசமான பிரதிநிதித்துவம் கிட்டுமா? என்பது கேள்விக்குறியே. ஏனெனில் இலங்கை ஜனநாயக சோசலிஸ் குடியரசின் 1978 அரசியலமைப்பில் புகுத்தப்பட்டுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் அது தொடர்பான தொகுதியமைப்பு முறைப்பட்டியல் என்பனவாகும்.
அதாவது இவ்வமைப்பின் மூலம் ஓர் அங்கீகரிக்கப்பட்ட கட்சியோ குழுவோ ஒரு தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 12.5 வீதம் பெற்றால் தான் அத்தொகுதியில் தனது பிரதிநிதியை தெரிவு செய்ய தகுதியைப் பெறமுடியும்.
அப்படியானால் அம்பாறை. திருமலை, மட்டக்களப்பு வன்னி ஆகிய நான்கு மாவட்டங்களில் மாத்திரம் தான் 12.5 வீதத்திற்கு மேலாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஏனைய பிரதேசங்களில் முஸ்லிம்கள் இந்தளவிற்கு இல்லை. அப்படியானால் நமது பிரதிநிதித்துவம் எத்தனை என்பதையும் நாம் கவனத்திற் கொள்ளல் அவசியம்.
மேற்படி அம்சங்களில் புதியதோர் சகாப்தத்தை உருவாக்கக்கூடிய விரைவாக - கூட்டமைப்பு கட்டியெழுப்பப்படல் வேண்டும். ஒரு சமூகத்திற்கென்று உருவாக் கப்படும் கட்சியில் போதிய பிரதிநிதித்துவம் வேண்டும். அப்படியல்லாத ஒரு கட்சியின் மூலம் என்ன பயன்பாட்டை பெற முடியும்?
ஆகவேதான் எமக்கு போதியளவு பிரதிநிதித்துவம் பெறக்கூடிய அரசியல் அமைப்பில் நாம் தனிக்கட்சி அமைப்பதன் மூலமே நமது வாக்குகளின் தாக்கத்தை நமது சமூகம் முழுமையாகப் பெறச் சந்தர்ப்பமுண்டு. எனவே நாம் நமக்காக உருவாக்கும் அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை நன்குணர்ந்து
கொள்வது அவசியமாகும். -
அல் - வற"தா ஆக - ஒக் 1986
/
தீவும் தீர்வுகளும் எம். எம்.எம்.நூறுல்ஹக்

முஸ்லிம் மாகாண சபையும் முஸ்லிம் அமைப்புக்களும்
பாரம்பரியங்களையும் உரிமைதளையும் பறிகொடு
த்து பரதேசிகளாகவுள்ளனர்.குறிப்பாக வட - கிழக் கில் வாழும் முஸ்லிம் மக்கள் மிகவும் நெருக்கடியான அச்சுறுத்தல்கள், உயிரிழப்புகள், உடமையிழப்புகள், பாரம் பரிய இழப்புகள் என முகம் கொடுத்துக் கொண்டிருப்பதை நாம் துலாம்பரமாகப் பார்க்கின்றோம்.
g லங்கை வாழ் முஸ்லிம் சமூகமின்று தனித்துவமிக்க
முஸ்லிம்களின் நசுக்கப்படும் உரிமைகள் தத்துவங்களை எடுத்துக் கூறவும் கேட்டுப்பெறவுமென தோற்றம் பெற்ற அரசியற் கட்சிகள், இயக்கங்கள் எல்லாம் தோன்றிய இலக்கையடையும் வழிகளில் பயணம் செய்கின்றதா? எனும் வினா இன்று நம் முன் நிற்பதையும் நாம் ஒதுக்கிவிட (Ot9u Tgl.
முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை அபிலாசைகளை ஒவ்வொரு அமைப்புகளும் வெவ்வேறு கண்ணோட்டத்தி லேயே நோக்குகிறது - அணுகுகிறதென்பது கண்கூடு. இதுதான் குறித்த ஒரு விடயத்தில் ஒருமித்த கருத்தின்றி இருப்பதன் மர்மமாகும்.
இதுவொரு ஆரோக்கியமான போக்காக இல்லாவிட்டாலும் இயல்பான நடைமுறையாக இருந்து வருவதையும் நாம் கருத்திற் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்
ஒரே சிந்தனையில் ஒருமித்துப்போகும் தன்மை எந்த சமுக மக்களிடையேயும் இல்லாத பண்பென்றே கூறவேண் டும். இதனை நாம் “முன்னைய நிகழ்வுகள் பின்னைய வற்றுக்கு படிப்பினையாகும்” என்பதற்கொப்ப அண்மையில் தமிழ் மக்களிடையே ஏற்பட்ட எழுச்சியில் கூட தரிசிக்கலாம்
"தனியான தாயகத்தில் உரிமைகள் பெற்ற சமூகமாக
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 15
S
மிளிர வேண்டும்” என்ற நோக்கில் ஆயுதம் தரித்தவர்கள் அதாவது இலக்கில் ஒருமித்த அவர்களினால் அதனைப்பெறும் வழிவகையில் ஒன்றுபடமுடியாது பல இயக் கங்களாகவும் கருத்து முரணி உடையவர்களாகவும் போட்டிக்குழுக்களாகவும் கூறுபட்டதையும் நாம் தள்ளி வைத்துவிட முடியாது.
இட்து போன்றே முஸ்லிம் சமூகமும் தனது "அரசியற் பலத்தையும் உரிமை களையும் பாதுகாக்க வேண்டும்” என்ற இலக்கில் எல்லா அமைப்புக்களும் ஒன்றுபட்டாலும் அதனை வென்றெடுக்கும் வகையில் வேறுபட்ட கருத்துடைய வர்களாகவும் இருக்கின்றனர்.
பெரும்பான்மையானவர்கள் “உத்தேச பெரும்பான்மை முஸ்லிம் மாகாண சபை” யில் நம்பிக்கை வைக்க சில சில்லறைகள் இதற்கு மாற்றமான வழியில் ஊஞ்சலாடுகின்றனர். -8
இத்தகைய "தன்மை தமிழ் பேசும் மக்களிடையே மட்டுமன்றி பொதுவாக எல்லாவின மக்களிடையேயும் புரையோடிப் போன ஒரு விடயமாவே நாம் இதனை உலக அரங்கில் காண்கின்றோம்.
இந்தப் பின்னணியை கருத்திற் கொள்ளாது முஸ்லிம் சமூகத்திடம் மாத்திரம் ஒன்றுபட்டு ஒருமித்த வேண்டுகோளாக தங்களின் அபிலாசைகள் முன்வைக்கப்பட வேண்டுமென்ற தோரணையில் கருத்துக்கள் ஊசலாடுவதையும் நாம் அவதானிக்கலாம்.
இதன்பின்னால் பாரிய உள்நோக்கம் புதைந்து கிடக்கிறது என்று நாம் சந்தேகித்தால் தவறாகுமா?
எது எப்படியிருப்பினும் வட - கிழக்கு வாழ் மக்கள் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தின் மேலிருக்கின்றனர். அவர்களின் உரிமைகள் விடயமாக அந்தந்த இன மக்கள் தீர்வுகளை அவசர அவசியமாக எடுக்கக்கூடிய நிலையிலிருக்கும் இவ்வேளையில் முஸ்லிம் அமைப்புக்கள் எல்லாம் ஒன்றுபட்டு தங்களின் அபிலாசைகளை (மாகாண சபையை) முன்வைக்க வேண்டும் என்ற தோரணை யில் நடந்து கொள்ள முற்படுவது அர்த்தமற்றது.
பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பாகவும் நீண்டகால கோரிக்கை யாகவும் இவ்விடயம் இருப்பதே அதன் அவசியத்தை உணர்த்தப் போதுமான சான்றாகும்.
ஒன்றுபடல் வேண்டும் ஒருமித்து கோர வேண்டும் என்ற போக்கு நியாயமல்ல. நியாயமென்றால் தமிழ் சமூகத்தின் அமைப்புகளிடையேயும் ஒன்று பட்டு ஒருமித்து வாருங்கள் - கோருங்கள் என்றெல்லாம் கூறவேண்டுமே? அதுவரை தமிழ் அமைப்புக்களின் நிலை என்ன? சில அமைப்புக்கள் உள்வட்டத்துள் நின்றால் இன்னும் சில வெளியே நிற்கும். வெளியே நிற்பவைகள் உள் வட்டத்தினுள் நுழைந்தால் உள்ளேயிருந்தவைகள் வெளியேறி விடும். இது மாறி மாறி நிகழும் நிலைப்பாடாக இருக்கிறது. இதனால் தீர்வு ஏற்பட்டுவிடாது போராட்டமே மேலோங்குகிறது. சமாதானம் - ஒன்றுபடுதல் எல்லாம் தோல்வியைத் தழுவிக்கொள்வதையும் காண்கிறோம்.
ஆகவே ஒருமித்து வருமாறு வேண்டுவது - அணுகுவது என்பதெல்லாம் நடைமுறைச்சாத்தியமானதல்ல. இதிலேயே தொக்கி - தொங்கி நிற்காது நடைமுறைச் சாத்தியமான பக்கம் எம் கவனஞ் திருப்பப்படுவதே ஆக்கபூர்வமான
தீவும் தீள்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

7
பணிக்கும் அறிவுபூர்வமான வாழ்வுக்கும் வழியாகும்.
"கட்சிகள், அமைப்புக்கள் என்பவற்றுக்காக மக்கள் இருக்கக்கூடாது. ஆனால் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பனவாகவே கட்சிகள். அமைப்புக்கள் இருக்க வேண்டும்” என்ற பொது கோட்பாட்டில் உரசிப்பார்ப்போமாயின் முஸ்லிம்களுக்கு ஒரு மாகாண சபை அவசியமா? இல்லையா? என்பதை அங்குள்ள முஸ்லிம் மக்களிடம் அபிப்பிராய வாக்கெடுப்பு நடாத்துவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் - தீர்மானிக்கலாம்.
இதற்கேற்ப வடகிழக்கில் வாழும் முஸ்லிம் "மக்களின் பிரதேசங்களை வரையறை செய்து அவர்களிடையே வாக்கெடுப்பு நடாத்துவதற்கு ஏற்ப சட்ட திருத்தங்களையும் கொண்டுவருவதன் மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம்.
இவ்வாறு நடாத்துவதன் மூலம் வட கிழக்கு இணைப்புத்தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துவதை தவிர்க்கலாம். அதே வேளை கிழக்கில் ஒடவிருக்கும் இரத்தக்களரியையும் தவிர்க்கலாம். முஸ்லிம் மாகாண சபைக்கு ஆதரவுக் கரமில்லையானால் வட கிழக்கு மாகாணங்களை இணைக்கலாம். மாறாக ஆதரவுக்கரம் முஸ்லிம் மாகாணத்தின் மேல்பற்றுமானால் முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபையை நிறுவலாம்.
ஏனைய தமிழ் பிரதேசங்களை உள்ளடக்கிய வட - கிழக்கு இணைப்பை சாத்தியப்படுத்தலாம். சிங்கள மக்களை தொகுதிகளாக அல்லது உதவி அரசாங்க பிரிவுகளாக பிரித்தெடுத்து சிங்களப் பகுதிகளுடன் இணைப்பது என்பது அவ்வளவு சிரமமான காரியமுமல்லவே.
முஸ்லிம் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதற்குப் பதிலாக தமிழ் மக்களிடையே வாக்கெடுப்பு நடாத்தி இணைப்புப் பற்றிய முடிவுக்கு வரலாமே? என்ற வினாவை இங்கு சிலர் தொடுக்கலாம். இது அவசியமல்லாத வினாவாகும்.ஏனெனில் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை முஸ்லிம்களே தீர்மானிக்க வேண்டுமே தவிர ஏனையவர்களல்ல.
இந்த வகையில் தமிழர்களுடன் முஸ்லிம்கள் இணைந்து இருக்க வேண்டுமென தமிழ் சமூகம், முஸ்லிம் சமூகத்தைக் கேட்க முடியாது. கேட்பது நியாயமுமல்ல. மாறாக நியாயமென்றால் தமிழர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து வாழுங்கள் எனக்கோருவதும் சாத்தியமாகிவிடும்.
எனவே முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை - உரிமைகளை தமிழ் மக்களினால் பிரதிபலிக்க முடியாது. அவ்வாறே தமிழ் மக்களின் அபிலாசைகளை உரிமைகளை முஸ்லிம் மக்களினால் பிரதிபலிக்க முடியாதென்பதே யதார்த்தமாகும்.
-விடிவுஇதழ் 11 1990
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 16
18
வடக்கு முஸ்லிம்களும் ーベ மீள் குடியேற்றமும்
メ
லங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரை பல்வேறு பட்ட நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டி ருக்கின்றனர் என்பது தெளிவான சங்கதி.
இருக்கும் நெருக்கடிகள் போதாதென்று இன்னுமொரு சுமையாக அகதிகள் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.
இந்நிலையில் கூட “இலங்கையில் முஸ்லிம்கள் நிம்மதியாகவும் சுபீட்சமாகவும் வாழ்கிறார்களென்று பிரசாரம் செய்து தங்கள் பைகளை நிறைத் துக் கொள்பவர்களும் இருக்கத்தானி செய்கிறார்கள். உண்மைகள் ஒருபோதும் அழிந்து விடாது. மாறாக சில வேளை உறங்கிப்போவதுண்டு”.
குறிப்பாக வடக்கு மாகாணத்திலிருந்து யாழ்நகர், மன்னார் பிரதேசம் போன்றவற்றிலிருந்து முஸ்லிம்களை வெறுங்கையோடு விடுதலைப் புலிகள் விரட்டியடித்து விட்டு அவர்களின் உடமைகளை உரிமை கொண்டது உலகமறிந்த விடயமாகும்.
நிர்க்கதிக்குள்ளான முஸ்லிம் மக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்கள் சரியான கோணத்தில் நோக்கினார்களா? அவர்களின் வளமான வாழ்வு - முன்னைய வாழ்க்கை அமைப்பு மீண்டும் கைகூடக் கூடிய வகையில் ஆக் கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்களா? என்று நாம் பார்த்தால் பூஜ்யம் தான்.
தனது சொந்தக் காலில் வேரூன்றி தன்மானத்துடன் வாழ்ந்த மக்கள் இன்று பிறர் தயவை எதிர்பார்த்து வாழும் ஓர் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
வட பகுதியில் முஸ்லிம்களின் வரலாறு இலங்கையில் முஸ்லிம்களின் ஆதிக்குடியேற்ற வரலாற்றோடு தொடர்புடையது. (காலத்தால் பழLைOப்பட்ட பாரம்பரியத்துக்கு வரும் ஆபத்து போராட்டத்திற்கு வித்திடக்கூடியது என்று பாடம் புகட்டியவர் களினால் தங்களைப் பார்க்கலும் சிறுபான்மையான சமூகத்தின்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

19
பாரம்பரியங்களுக்கு வேட்டுவைக்கும் நடவடிக்கையில் ஈடுபடத் துணிந்தது அறிவுபூர்வமான போக்கல்லவென்பதும் நிதர்சனமானதே)
பாரம்பரிய பிரதேசத்திற்காகப் போராடும் குழுவெனப் பிரகடனப்படுத்திக் கொண்ட குழுவே இன்னுமொரு சமுகத்தினது பாரம்பரியத்துக்கும் தனித்துவத்துக்கும் அச்சுறுத்தலாக - ஊறுவிளைவிப்பவர்களாக மாறியது.
எது எப்படி இருப்பினும், முஸ்லிம்களின் பாரம்பரியங்களையும் தனித்துவத்தையும் இன்னுமொரு சமூகத்திடம் “அடமானம்" வைக்கும் கைங்கரியம் அறிவுபூர்வ மானதாகவோ, ஆக்கபூர்வமானதாகவோ அமையாதென்பதும் எம் கவனங்களுக்கு அப்பாலிருக்க முடியாது.
குடிபெயர்க்கப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அங்கு குடியேற வேண்டும். ஆனால் எப்போது? எப்படி? என்பதில்தான் கருத்து முரண்பாடு தோன்றுகிறது.
குடியேற தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் பாரிய இழப்புக் களை தாங்கிக்கொள்ளக் கூடியவர்களாவும் எம்மைத் தயார்படுத்திக் கொள்ளல்வேண்டும். “வாழ்ந்தால் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்; இல்லையேல் வாழாது விட வேண்டும்” என்ற உணர்வு முஸ்லிம்களுக்கு வருதல் ஏற்படுதல் அவசிய்ப் பண்பாகும்.
அங்கும் இங்கும் சில அகதிமுகாம்கள்ளிலும் காலத்தை எவ்வளவு நாளைக்கு கடத்துவதென்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். எவ்வளவு துரிதமாக மீண்டும் குடியேற முடியுமோ அவ்வளவு விரைவாக குடியேறி தங்களின் மண்ணை விலை கொள்வதுடன் பழைய வாழ்க்கையையும் அவசரமாகத் தொடங்க முயல வேண்டும்.'
இது எப்போது? எப்படிச் சாத்தியப்படுத்துவதென்பதே இப்போதுள்ள பாரிய வினா. முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்ட பகுதி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதென்பது சரியான, தெளிவான செய்திகள் மூலம் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை.
எனவே முதலில் பிறரின் கரங்களை முழுமையாக நம்பாத சொந்தமான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுட்ன், அரசாங்கத்தினது பாதுகாப்பு அனுசரனையும் கிடைக்கக்கூடியதான சூழ்நிலை உருவாக்கப்படுதல் வேண்டும்.
ஆரம்பத்தில் ஆண்களிலிருந்து சிலர் மீண்டும் குடியமர்த்தப்படல் வேண்டும். அவர்கள் தங்கள் உடமைகளை இனங்கண்டு தனதாக்கிக் கொண்டு வாழ்க்கை வண்டியை ஒட்ட முன்னர் செய்யப்பட்ட - அல்லது புதிதான தொழில் முயற்சியில் ஈடுபடல் வேண்டும்.
நிம்மதியாகவும் பீதியின்றியும் வாழாமென்ற திடம் ஏற்பட்ட பின்னர் பெண்க ளையும் மிகுதமான ஆண்களையும் குடியமர்த்தலாம். இதற்கிடையில் குடியேறும் மக்களின் தொழில்களை செவ்வைப்படுத்துவதற்கான உதவிகளையும் செய்ய முன்வர வேண்டும்.
இழப்புக்களை ஒரளவு ஈடுசெய்யக் கூடிய நஷ்டஈடுகள் வழங்கப்படுதலும் உண்மையயான பாதுகாப்பு ஏற்பாடும் அவசியமாகும். இப்படியான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலமே அகதிகளான வட பகுதி முஸ்லிம்களின் எதிர்காலத்தை ஒரளவு தீர்மானிக்கலாம்.
மீண்டும் குடியேறுதல் மூலமே எமது பாரம்பரியம் தனித்துவம் பாதுகாக்கப்படும் என்பது உண்மையே. அதேநேரம் இப்போதுள்ள சூழ்நிலையில் குடியேறுவது சாத்தியமா? என்பதையும் சிந்திக்க வேண்டும் வேண்டும். -Լյուff76m) -
ஜூலை 1997
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 17
அமைச்சர் அவுத்ர
அமைச்சுக் குறைப்பும் ஆதரவு விலக்கலும்
னாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தமது அமைச்சரவையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி அமைச்சுக்களின் எண்ணிக்கைகள்
அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில் பல அபிப்பிராய பேதங்கள் உருவாகியுள்ளன.
அமைச்சரவையில் புதிய முகங்களைக் கொண்டு வந்தும் சில அமைச்சர்களின் அமைச்சுக்களில் குறைப்புக்களை ஏற்படுத்தியும் திருமதி ரீமணி அத்துலத் முதலியை அமைச்சரவையிலிருந்து முற்றாக நீக்கியும் இவ்வமைச்சரவை மாற்றம் அமைந்திருந்தது.
இவ்வமைச்சரவை மாற்றம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுவொரு சலசலப்பையும் சச்சரவையும் ஏற்படுத்தி ஒரு பூகம்பத்துக்கான அமைதியைக் கண்டிருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.
ஆயினும் அமைச்சர் எம். எச். எம். அஷ்ரஃப்பின் அமைச்சு மாற்றம் பற்றி முஸ்லிம்களிடம் அதிகம் வெகுவாகப் பேசப்பட்ட துடன் பல்வேறு யூகங்களையும் கட்டவிழ்த்து விட்டன. அவற்றி னை கூட்டுமொத்தமாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
9 அமைச்சர் அஷர..பின் அமைச்சில் ஊழல்கள் ஏற்பட்டுள்ளன. ஆதலால்தான் இம்மாற்றம் என்றனர். இவர்களின் வாதத்திற்கு மாற்றப்படாத அமைச்சுக்களை காரணம் காட்டி கருத்து வெளிப்படுத்தினர்.
3 தனது ஏழு பாராளுமன்ற பிரதிநிதிகளும் அரசாங்கத் திற்கான ஆதரவினை விலக்கிக் கொள்ளும் போது அதைவிடவும் அதிகரித்த தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதிகள் தங்களது ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்கினால் ரீ.ல.மு.கா.வின் நிலை என்னவாகும் என்ற ஐயப்பாடு அமைச்சர் அஷ்ரஃபிற்கு இருக்கும் வரை அமைச்சர் அஷ்ரஃபின் ஆதரவு பொதுஜன முன்னணிக்கே இருக்கும்.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்
 
 
 

2
3 அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. எனவே இவற்றில் அமைச்சர் அஷ்ரஃப் மோதிக்கொள்வதன் மூலம் மூக்குடைபடப் போகிறார் எனவும் பேசிக் கொண்டனர்.
இவைகளை கூட்டுமொத்தமாக பார்க்கும் போது இவைகள் எவைகளும் அமைச்சர் அஷ்ரஃப் மீது கொண்ட நல்லெண்ணத்தின் பேரிலோ அவர்கள் மீது கொண்ட கரிசனையால் எழுந்தவைகளோ அல்லவென்பது தெளிவானது.
ஏனெனில் மேற்படி கூற்றுக்களை நாம் ஒவ்வொன்றாக சற்று விரிவாக நோக்குவதன் மூலம் தெளிவர்க உணர்ந்து கொள்ளலாம்.
09-06-97 இல் அமைச்சர் அஷ்ரஃபின் அமைச்சு என பிரகடனப்படுத்தப் பட்டவைகள் "துறைமுக, கப்பற்துறை புனர் வாழ்வு (கிழக்கு மாகாணம் " ஆகவே புனரமைப்பு முற்றாக எடுக் கப்பட்டு புனர் வாழ்வு வரையறுக் கப்பட்டிருந்தது.
24-06-97 இல் அமைச்சர் அஷ்ரஃப் ஏற்றுக்கொண்ட அமைச்சுக்கள் பின்வருமாறு: "துறைமுக அபிவிருத்தி, புனர் வாழ்வு, புனரமைப்பு" என்பனவாகும். ஆகவே இங்கு இல்லாமல் போனது கப்பற்துறை மட்டுமே. துறைமுக அமைச்சின் பெயர் துறைமுக அபிவிருத்தி என மாற்றப்பட்டுள்ளது.
எனவே எந்த அமைச் சிலும் ஊழல் இல்லை என்பதற்கு அவர் வகித்த அமைச்சுக்கள் எல்லாம் இருதடவை மாற்றத்துள்ளும் மாறிமாறி வந்திருப்பதன் மூலம் நிருபிக்கின்றன. அமைச்சு குறைப்புக்கு ஊழல்கள் காரணம் என்று கூறுவதற்கில் லை.
பொதுஜன முன்னணிக்கு அமைச்சர் அஷ்ரஃப் அவர்கள் வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்வதன் மூலம் நிச்சயமாக ஒரு பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தை ஜனாதிபதிக்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இதனைத் தடுப்பதாயின் தனது பெரும்பான்மை - அதாவது 113 பேர்களின் ஆதரவை தனக்குரியதாக்கி காட்டுவதன் மூலமே தனது ஆட்சியை நீடித்துக் கொள்ள ஒரே வழியாகும். ஆதலால் ரீ-ல.மு.காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும் அதிகமானவர்களின் ஆதரவை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
இந்நிலையில் ரீ.ல.மு.கா.வை விட அதிகரித்துக் காணப்படும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஜனாதிபதிக்கு ஏற்படும்.
ரீ.ல.மு.கா.வின் ஆதரவைப் பெறுவதும் அழுத்தத்தை எதிர்கொள்வதென்பதும, தமிழ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை உள்வாரியாகப் பெறுவதும், அழுத்தத்தை எதிர்கொள்வதென்பதும் ஒரேவகையான தன்மைகளைக் கொண்டதல்ல. இவைகள் வெவ்வேறான அமுக்கங்களைக் கொண்டதென்றே கூறவேணி டும் .
ஆட்சியை நிலைபெற்று வைத்திருக்க எண்ணிக்கையை கூட்டிக் காட்டுவதற்கு மட்டும் ஆதரவைப் பெறுவதுடன் இது முடிவடைந்து விடும் ஒன்றல்ல. மாறாக ஆதரவை உள்வாங்கவும் அதனை நிலைபெறச் செய்வதற்கும் சில சலுகை கைமாறுகளை செய்வதுடன் தொடர்புபட்டதாகும்.
அவ்வாறானதாயின் ரீ.ல.மு.கா.எதிர்பார்க்கும் அழுத்தம் என்பது வேறு: தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்பார்ப்பு - அழுத்தம் என்பது வேறானதாகும். இவற்றில் அமைச்சர் அஷ்ரஃபின் ஆதரவை தொடராக வைத்துக்கொள்வதன் மூலமே நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்கலாம்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களுக்கு மாற்றீடாக முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு முழுமையாக உட்படாத ஒரு ஜனாதிபதியாகவே இன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 18
(5DTUjih 55]ID Q601 ) 6Ј6) J 3, 1600 U UO65T3 (36) bio LJU LIG4).
இந்நிலையில் ஜனாதிபதியுடன் முழுமையான ஒத்துழைப்பை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் கூட்டுமொத்தமாக வழங்கத் தயாராக இருந்திருப்பார்களா? என்பது ஒரு விசயம். ஆட்சியை நிலை கொள்ளச் செய்வதற்காக வேண்டி அவர்களின் கோரிக்கைகளுக்கு இசைவாக நடப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்தாலும் அவற்றினைக் கொண்டு எத்தனை நாட்களுக்கு பதவிக் காலத்தை தக்க வைத்துக் கொள்வதென்பது இன்னொரு விடயமாகும்.
அரசு தேவையெனக் கருதி யுத்தத்தை தொடரும் போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் "யுத்தம் வேண்டாம்" என நியாயபூர்வமான காரணங்களைக் காட்டி அழுத்தம் கொடுக்கும் போது அவற்றினை எத்தனை நாட்களுக்கு தட்டிக் கழிக்க முடியும்? ஆகவே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசு உள்வாரியாகப் பெறும் என்ற ஐயப்பாடு அமைச்சர் அஷ்ரஃபிற்கு இருக்கும் வரை பொதுஜன முன்னணிக்கான ஆதரவை விலக்காது இருக்கப்போதிய சான்றல்ல.
மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகும் சந்தர்ப்பம் கிட்டியும் அமைச்சராகாது இருந்தவர். பகிரங்கமாக "நான் அமைச்சராக வேண்டுமானால் இருபத்தி நான்கு மணித்தியாலத்துள் ஆகலாம்" என்று பறை சாற்றியது. இது நடைமுறைக்கு சாத்தியமற்றதுமல்ல; மிகையான எதிர்பார்ப்புமல்ல என்பதற்கு அன்றைய ஜனாதிபதி பிரேமதாசாவிற்கும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எம். எச். எம். அஷ்ரஃப்பிற்குமிடையிலான நெருக்கம் நாடறிந்ததே.
தன் சொல் நாணயத்தைக் காப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதில் நின்றும் பின் நிற்காதவர் அல்ஹாஜ் எம். எச். எம். அஷ்ரஃப் என்பதும் அவர் வரலாறு. ஆகவே பாராளுமன்ற பிரதிநிதி பதவி மீதோ அமைச்சர் பதவி மீதோ மோகம் கொண் டலையும் ஒரு சராசரி மனிதனாக அமைச்சர் அஷ்ரஃப் இல்லை என்று துணிந்து கூறலாம். இத்துணிவுக்கு மேற்படி இரு காரணங்களும் ஓர் உந்து சக்தியாகும். ۔۔۔۔
இலங்கை அரசியலமைப்பின் அத்தியாயம் VI ஆட்சித் துறை அமைச்சரவை பற்றி கூறும் போது 44 - (3) பிரிவு இப்படிக் கூறுகிறது. * “ஜனாதிபதி குறித்தொதுக்கப்பட்ட விடயங்களையும் அமைச்சரவையின் அமைப்பையும் எந்நேரத்திலும் மாற்றலாம். அத்தகைய மாற்றங்கள் அமைச்சரவையின் இடையறா தொடர்ச்சியையும் பாராளுமன்றத்தின் பால் அமைச்சரவைக்குள்ள பொறுப் பின் இடையறாத் தொடர்ச்சியையும் பாதித்தல் ஆகாது".
ஆகவே அமைச்சர் அஷ்ரஃப் இலங்கையின் அரசியல் யாப்பு முறைமை பற்றி அறியாது அமைச்சுக் குறைப்புப் பற்றி தனது ஆட்சேபனையை தெரிவிக்கவுமில்லை என்பது மிகத் தெளிவான ஒன்றே.
அமைச்சர் பதவி என்பது வேறு; ஆட்சி அமைக்க ஆதரவு நல்குவதாக வாக்குறுதி வழங்குவது வேறு. அமைச்சுப் பதவிக்காக வாக்குறுதியை விலக்குவது என்பது விவேகமான செயல் அல்ல என்பதை அமைச்சர் அஷ்ரஃப் நன்கறிவார்
அதலால்தான் பொதுஜன முன்னணிக்கான ஆதரவை விலக்குவது அமைச்சர் பதவிகளுடன் தொடர்பற்றது அல்ல என்பதால்தான் ஜனாப்: அபூபக்கர் அவர்களை சத்தியப் பிரமாணம் செய்வதிலிருந்து காலதாமதமோ, தடையோ விதிக்காததிலிருந்து புரிந்து கொள்ளலாம். V.
ஆனால் அமைச்சர் அஷ்ரஃப் தனது அமைச்சுக்கள் பற்றியும், பிரதியமைச்சர் ஹரிஸ் புல்லாஹ வின் பிரதி அமைச்சுக்கள் பற்றியும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதானது பொதுஜன முன்னணி அரசுக்கான ஆதரவை விலத்தும் நோக்குடன் அல்ல என்றே கருதவேண்டும்.
தினக்குரல. 10-07-97
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

23
முஸ்லிம்களும் தனிக்கட்சியும்
தெளிவாக எம்மில் பலர் இன்று உணர்ந்து கொண்டோம்.
இதனால் நமக்கொரு கட்சி வேண்டும் என்பதில் ஒரு மித்து விட்டோம்.
b மக்கென்று ஓர் அரசியற்கட்சியின் அவசியத்தை தெட்டத்
இந்த எழுச்சி நல்லதொரு எதிர் காலத்தை நமக்குத்
தரும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் ஓர் எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்பு நமக்கு ஆரோக்கியமானதாக அமைவ தென்றால் நம்மிடையே பல கட்சிகள் உருவாகாதிருக்க வேண்டும்.
நம்மிடையே பல கட்சிகள் தோன்றுமாயின் நாம் பல பாகமாக பிரிந்து விடுவோம். அப்போது எம்மிடையே கூட்டு மொத்தமான பலமிராது. ஒன்று திரட்டப்பட்ட வாக்குப்பல மிராது. குறித்த விடயங்களில் ஒருமித்த கருத்துக்களும் அதற்காகப் போராடும் திறமையும் இராது.
மாறாக நமக்குத் தேவையான அபிலாசைகளை நிறைவு செய்து கொள்ள முடியாத பேதமையையும், ஏட்டிக்குப் போட்டியான நிலையும் ஏற்படும். இப்படிப் பல பிளவுகளும் பிரச்சினைகளும் நம்மை வரவேற்கும் இந்த நிலையில் நாம் எந்த பயன்பாட்டையும் சரியானதாகப் பெறமாட்டோமென்பது நிச்சயமானது.
கட்சிகள் தோற்றம் பெறுமாயின் "நமக்கென்று கட்சிகளிருக் கின்றன” எனப் பெருமை தான் பேசமுடியுமேயல்லாது வேறெந்த ஆக்கபூர்வமான தாக்கங்களையும் நாம் அடைந்து விடமுடியாது.
அதேநேரம் நாம் எதற்காக “கட்சி” வேண்டுமென்று
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 19
24
ஒருமித்தோமோ அந்த இலக்கை தப்பவிட்டதாகவே முடியும். அதனால் மீண்டும் நாம் நாளையே எதிர்பார்ப்பதுடன் "அரசனை நம்பி புருசனை கைவிட்ட” நிலைக்கு இட்டுச் செல்லப்படுவோம்.
ஆகவே நமக்கென்று ஒரேயொரு கட்சிதான் இருக்கவேண்டும. அப்போதுதான் நாம் கட்சியை ஏற்படுத்தியதன் இலக்கை அடைய முடியும். அதேநேரம் நாம் முக்கியமான ஒரு விசயத்தை மறந்து விடக்கூடாது .
அதாவது நமக்கென்று நாம் ஏற்படுத்தும் கட்சியின் மூலம் நாம் முழுமையாக பயன்பெற வேண்டுமானால் நமது வாக்குப்பலம் பிரிந்து விடாது "நமது கட்சி"க்குத்தான் என்ற ஒன்றுபடுதலும. உறுதியுமிருக்க வேண்டும்.
“நமக்கென்று” தோன்றும் கட்சியிலுள்ளவர்களின் தனிப்பட்ட நடவடிக் கைகளையும் அவர்கள் மீதுள்ள தனிப்ப்ட்ட விருப்பு வெறுப்புக்களையும் அளவுகோலாகக் கொண்டு மதிப்பிடாது. கட்சியின் கொள்கைகளையும் அதன் செயற்பாட்டையும் கொண்டுதான் அளக்க வேண்டும்.
நமது சமுகத்தை “அடகு” வைக்கும் நிலைப்பாடு காணப்படுமாயின் அதற்கான காரணிகளை அடையாளம் கண்டு அகற்றுதல், திருத்துதல் போன்ற அம்சங்களை கையாளுதல் வேண்டுமேயல்லாது கட்சியை முடக்கிவிட துணிவது ஆரோக்கியமான நிலைக்கு "வேட்டு” வைப்பதாகவே அமையும்.
-அல்-ஹதா
நவ - ஜன 1986
பெப் - ஏப் 1987
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

w
“sirano...ps, unaTri வடக்கு,கிழக்கில் புத்ததில்த நிறுத்தி தேர்தல் O போட்டியிட முன்வரும் போது மற்றக் தேர்தலில் போட்டியிட) அல்ர்கள் அனுமதயளித்தால் நாம் தேர்தலை தட்ாத்த தயாராக இருக்கிறோம். அப்பொழுதுர்தர்ன் அப் பகுதி மக்களின் உண்மைய்ான பிரதிநிதிகள் யார் எனர் று நாம் றிந்து கொள்ள முடியும் என en GSS Groep MGM
அரசு, புலிகள் பேச்சுவார்த்தை முஸ்லிம்களுக்கு இன்னலாகுமா?
விவகாரம் ஒருவாறு அமைதியைக் கண்டுவிட்டது. -
ஆயினும் இதனால் ஏற்பட்ட விரிசல்கள். மனக்கசப்புகள். குரோதங்களின் கோணங்கள் வெவ்வேறு உருவல் தாக்கம் பதிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுவதையும் நாம் இப்போது அவதானிக்க முடிகிறது.
b ரீட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய “இம்பீச்மென்ற
இது ஒருபுறமிருக்க இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மீண்டும் பேச்சுவார்த்தை நிகழலாமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்பேச்சுவார்த்தைகளுக்கு ஓர் இணைப்புப் பாலமாக அமைச்சர் தொண்டமான் அமையக்கூடும் என்ற நம்பிக்கையும் எட்டிப்பார்க்கிறது.
அண்மையில் யாழ் வர்த்தகள் மூலம் தூதுவிட்ட அமைச்சரின் முயற்சி பயனளிக்கும் நிலையை நோக்கி பயணம் செய்வதாக இருந்தாலும் இது நேற்று இன்று உரமிடப்பட்ட பயணம் அல்ல.
"புலிகளுடனான பேச்சுவார்த்தையை அரசாங்கம் உடனடி யாக ஆரம்பிக்க வேண்டுமென நான் மீண்டும் வற்புறுத்துகிறேன் என அமைச்சர் தொண்டமான் கடந்த மே தின விழாவில் கூறியது இங்கு நினைவு கூரத்தக்கது.
“சமாதானம் வரவேண்டும், மக்கள் அமைதியான வாழ்வைத். தொடரவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் தீர்க்கமான தீர்வுகளும, அகம கிழ்வான வாழ்வும் தோன்ற முடியும். அதுவல்லாது ஒரு பக்கம் மட்டும் தீர்வு காண விழையும் நிலையானது இன்னும் சில
சிக்கல்களை தோற்றுவிக்கவே வழியாகும். 雛
“முரண்பாடான” கோட்பாடுகளில் நின்று கொண்டு “இணக்கம்”காணவேண்டுமென துடிப்பது சமாதானத்தின்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 20
26
அறிகுறியின் முற்றத்தைக் கூட காணமுடியாத நிலையையே ஏற்படுத்து மென்பதையும் நாம் மறக்கலாகாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் "அமைதி” என்பது புலிகளால் மாத்திரம் ஏற்படுத்தக் கூடியதுமல்ல, அவர்களை ஒதுக்கிவைத்து விட்டுக் காணக் கூடியதுமல்ல என்ற யதார்த்த நிலையை நாம் கவனத்திலெடுத்துக் கொள்ளுதல் மிக முக்கியமாகும்.
தமிழ் அமைப்புக்கள் ப்ல உண்டு. அவற்றில் ஓர் அங்கமாகவே புலிகளும் இருக்கிறார்கள். பெரும்பாலான தமிழ் மக்களினால் புலிகள் நேசிக்கப்பட்டாலும் ஏனைய அமைப்புக்களுக்கும் தமிழ் மக்களின் ஆதரவு இல்லையென்று சொல்லமுடியாத நிலையிருப்பதும் ஓர் உண்மையாகும்.
இக்கூற்றையே ஜனாதிபதி அவர்களும் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களின் உரையிலிருந்து அறிய முடிகிறது. "இப்போது வடக்கு, கிழக்கு மக்களின் ஏக பிரதிநிதிகள் நாங்களே எனக்காட்டிக் கொள்ள முனைகின்றனர். இரு மாகாணங்களிலுமுள்ள தமிழ் பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாமேயென்று எல்.ரீ.ரீ.ஈ யினர் கோருவதை ஒரு ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது” எனக் கூறியது அரசாங்கத்தின் போக்கை விளக்குகிறது.
புலிகளின் தன்னாதிக்கமான ஆட்சியை (ஈழம்) கோரும் எண்ணத்தை இன்னமும் கைவிடவில்லை. இது அரசாங்கம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளும் தன்மையில் இல்லாத எதிர்பார்ப்பாகும். அதேவேளை "ஆயுதங்களை கீழே வைத்துவிட்டும் ஏனைய தமிழ் குழுக்களும் புலிகளுடனான பேச்சுவார்த் தையில் கலந்து கொண்டும் பிரபாகரன் வெளியே வந்து பேசவேண்டுமென்ற” அரசாங்கத்தின் முன்னைய கோட்பாடுகளில் “தளர்வு” காணப்படுவதாகவும் தெரியவில்லை.
பாராளுமன்றத்தில் அண்மையில் (25-09-91) உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் டாக்டர் விமல் விக்கிரமசிங்ஹ "எல்.ரீ.ரீ.ஈ. யும் ஆயுதங்களை கீழே வைத்தால்தான் அவர்களுடன் பேசுவோம்” எனக் கூறியிருப்பது எதைக் காட்டுகிறது?.
“அரசுடனான எமது பேச்சுக்கள் நிபந்தனையற்றதாகவே இருக்க வேண்டுமென நாம் கோரி வருகிறோம்” என வன்னியில் யோகி கூறியிருக்கிறார்.
அமைச்சர் தொண்டமான் சில அடிப்படைகளை முன்வைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு பச்சை விளக்கு தூக்கியிருக்கிறார். ஆனால் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்" நாம் நேரடிப் பேச்சுக்களில் பங்குபற்றி எமது பிரச்சினைகளை தீர்ப்பதிலேயே ஆர்வம் கொண்டுள்ளோம்" எனக் கூறியிருக்கிறார்
"முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவது போல” இருக்கிறது இக்கூற்று. ஆகவே "முரண்பாடு கொண்ட அணுகுமுறையினால், கருத்தினால் தீர்வுக்கு வருதல் சாத்தியமா? என்பதை முதலில் தெளிவு பெறல் வேண்டும்.
பேச்சுவார்த்தையில் அரசு இறங்குவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் (தமிழர், முஸ்லிம், சிங்களவர்களின்) அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய சரியான ஆக்கபூர்வமான தீர்வினைப்
தீவும் தீர்வுகளும் எம்.எம். எம்.நூறுல்ஹக்

27
பகிரங்கப்படுத்தல் வேண்டும். (ஏனெனில் புலிகளின் கோரிக்கை ஈழம் என்பது பகிரங்கப் பிரகடனம்) அதனை ஏற்றுக் கொள்ளாத நிலையில் இருப்பவர்கள்தான் மாற்று யோசனையை முன்வைக்க வேண்டும் அப்போது புலிகள் அரசின் பிரகடனத்தை ஏற்பார்கள்; அல்லது மறுப்பார்கள்.
எற்றுக்கொண்டால் அல்லது சில திருத்தங்களை முன் மொழிந்தால் ஏற்புடையது என்றால் ஏற்று பேச்சுவார்த்தையை தொடரலாம் - நெருக்கத்தை இறுக்கலாம். அல்லது முழுமையாக நிராகரித்துக்கொண்டால் அதே நேரம் அனைத்துக் குழுக்களும், மக்களும் பொருந்திக்கொண்டால் புலிகளை தனிமைப்படுத்தி அவர்களின் உரத்தைப் பணியச் செய்யலாம்.
அதுவல்லாது இப்படி "ஏட்டிக்குப்போட்டியான” முரண்பாடுகளில் நின்று கொண்டு எத்தனை பேச்சுவார்த்ததை முயற்சிகளை மேற்கொண்டாலும் அத்தனையும் தோல்விகளை அரவணைத்துக் கொள்வது இயற்கையே.
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு மக்களின் பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளக்கூடிய நீதியான நீடித்த தீர்வொன்றினைக் காண்பதே புலிகளை தனிமைப்படுத்துவதற்கு உதவும் என முன்னர் ஒரு விழாவில் ஜனாதிபதி கூறியது இங்கு மீண்டும் நினைவு கூரத்தக்கது.
வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் பிரச்சினையின் தீர்வில் முஸ்லிம்கள் அல்லது சிங்களவர்கள் நசுக்கப்படுவது அல்லது பொறியாக அகப்படுத்துவது ஆரோக்கியமான, நல்லிணக்கத்திற்கு குந்தகமானதுடன் அமைதியற்ற சூழ்நிலையே தொடர்ந்திருக்க வழிவகுக்குமென்பது யதார்த்தமானது.
1989 ஆம் ஆண்டின் கடைசிப்பகுதிக்கும் 1990 ஆம் ஆண்டின் ஆரம்ப காலகட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்துள் அரசுக்கும் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று தற்காலிக இடைக்கால அமைதி தோன்றியது நினைவிருக்கலாம். இக்கால கட்டத்துள் யுத்த நிறுத்தம் இருதரப்பிலும் கடைப்பிடிக்கப்பட்டன. ஆனால் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுமில்லை; அவ்வாறு கேட்கப்படவுமில்லை என்பது ஒரு புறமிருக்க, ஆயுதங்களும் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. (இப்போது இது ஏற்றுக் கொள்ளப்பட்டு நோக்கமும் கூறப்பட்டுள்ளது)
அதுமட்டுமன்றி கடந்த ஆண்டில் காத்தான்குடி, ஏறாவூர் பிரதேசங்களில் தொழுகையில் ஈடுபட்டோரை கோழைத்தனமாக கொன்று குவித்தமை இதற்கு முன்னர் மூதூர், ஓட்டமாவடி, காத்தான்குடி, கல்முனை, அக்கரைப்பற்று என முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்களை கொன்று குவித்ததுடன் உடமைகளை சூறையாடியதையும் மறந்து விடுவதற்கில்லை.
மிக அண்மையில் கூட லகுகல, பொலநறுவை, புத்தூர், (இருமுறை) மெதிரிகிரிய, மாவடிப்பள்ளி, சம்மாந்துறை வயல்வெளியென இவர்களின் கொலை வெறி தடயம் பதிக்கப்பட்டவையாகும். இத்தகைய கெடுபிடிகளை புலிகள் இயக்கம் மட்டுமன்றி ஆயுதம் தாங்கிய அனைத்து தமிழ் இயக்கங்களும் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து பேணி நெருக்கடிக்குள் அகப்படுத்தி வந்திருக் கின்றதென்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும்.
கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி, ஒட்டமாவடி, கல்முனை போன்ற பிரதேசங்களை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டுமென காலக்கெடு விதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளை பேச்சுவார்த்தை என்றதும்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 21
28
முஸ்லிம்கள் கிலி கொண்டு அச்சமடைந்து சந்தேகக் கண்கொண்டு நோக்குவது எந்த வகையில் தவறாகும்?.
"சூடுபட்ட பூனை அடுப்பங்கரையை நாடாது" என்பார்கள். அது போல் "பேச்சுவார்த்தை முன்னர் ஏற்படுத்திய தழும்புகள் இப்போது தடவிப் பார்க்க வைக்கிறது. தவிர சமாதானம் தோன்றக் கூடாது என்பதோ, புலிகளுடன் பேசக் கூடாது என்பதோ முஸ்லிம்களுடைய இலக்கல்ல. பேச்சு வார்த்தை என்ற போர்வையில் மீண்டும் ஒரு இரத்தக்களரி ஏற்படுத்தும் பலத்துக்கு பயன்படுத்தும் இடைவெளியாக இது அமையக்கூடாதென்ற எதிர்பார்ப்பும் அபிலாசைகளினாலும் ஏற்பட்ட சந்தேகமும் அச்சமுமே முஸ்லிம்களுடையது
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களுடைய எண்ணங்கள் அபிலாசைகளை ஆயுதம் தரித்த தமிழ் குழுக்களும் மிதவாத குழுக்களும் எதுவும் சரியாக இனங்காணத் தவறியதுடன் பிழையான புரிந்துணர்வில் முஸ்லிம்களை இம்சிப்பதிலும் தூசிப்பதிலும் ஒரே வகையான கொள்கையை கடைப்பிடித்து வந்திருப்பதை 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் பரக்க நாம் காணலாம்
இந்நிலையில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை - உறவு என்பது இரண்டறக் கலந்ததாக பரிணமிக்க முடியாது; அப்படி எதிர்பார்ப்பதில் நியாயமுமில்லை. ஏனெனில் தமிழ் முஸ்லிம்களுக்கிடையே அடிப்படை வேறுபாடுகள் நிறைய உண்டு. அவர்களுக்கு முக்கியமானதென்பது தமிழர்களுக்கு முக்கியமற்று அமையலாம். அவர்களுக்கு முக்கியமானது முஸ்லிம்களுக்கு முக்கியமற்றுப் போகலாம். ஆகவே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே தமிழ் முஸ்லிம் உறவில் இருக்கும் எஞ்சிய நிலையாகும்
அப்படியானால் எப்படி இந்த ஒற்றுமை? முஸ்லிம்களுடைய பிரச்சினையை அவர்களே கையாள வேண்டும். அது எத்தகையதாக இருந்தாலும் சரியே. அது போன்றே தமிழர்களுடையவும். (இது வரை அவர்களது உரிமையில் முஸ்லிம்கள் கை வைத்ததாக இல்லை) இதனால் முரண்பாடுகள் தவிர்க்கப்படலாம்; பகைமையும் மறையப்படலாம்; “புன்முறுவல்" உறவு தஞ்சம் பெறலாம்.
இது தவிர இணைய முடியாத - விரும்பாதவர்களை இணைக்க முயல்வது எப்படி நியாயம்? “வேண்டாம் என்கின்ற மனைவியின் கால் பட்டாலும் குற்றம் கை பட்டாலும் குற்றம்” என்பது போன்ற கணவன்-மனைவி உறவான நிலையில் தமிழர் - முஸ்லிம்கள் ஆகிவிட்டனர் என்பது நாம் சொல்லாமலே நிகழ்வுகள் நிர்ணயித்து நிற்பதைக் காணலாம்.
எனவே அரசு - புலிகள் பேச்சுவார்த்தை நல்லெண்ணத்திலும் சாத்தியமான அடிப்படைகளிலும் உருவாக வேண்டும். முஸ்லிம்களின் நியாயமான அச்சங்கள் தவிர்க்கும் உறுதிமொழிகள் உறுதியாக முன்வைக்கப்படுதல் வேண்டும்.
உதயம்
8-11-1991
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

29
முஸ்லிம் ஊர்காவல் படையும் அவர்களின் எதிர்காலமும்!
ஸ்லிம் சமுகம் “பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ் (UD நிலையில் பூரந்து வாழ்வதை நாம் பார்க்கலாம்.
இந்த பலஹினமான இன்டவெளியினுள் பலர்
புகுந்து பலப்பரீட்சை நடாத்திக் கொண்டிருப்பதை நாம் இங்கும் அங்கும் தரிசிக்கின்றோம்.
*凝 குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் பெரிதும் நசுக்கப்பட்டு அடக்கு முறைமைக்குள் அடைக்கலம் புகுந்திருப்பதையும் பார்க்கலாம்.
ஆயுத பலத்துடன் அடந்தேறும் அணியை நிராயுத பாணியாக இருக்கும் முஸ்லிம்களினால் எப்படி எதிர்கொள்ள முடியும்? தற்பாதுகாப்பு நடவடிக்கையில் எங்கணம் இறங்கு வது? இதனால் விளைந்தது என்ன? பல அகதி முகாம்களை தமது உறைவிடமாக உறவு கொண்டதுதான்.
எத்தனை உயிர் பறிப்பு? எவ்வளவு உடமை இழப்பு? எல்லாம் இழந்து வெறும் கைகளுடன் - கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட பரிதாபகரமான வாழ்வை அரவணைத்துக் கொண்டதையும் நாம் எளிதில் மறைப்பதற்கோ மறப்பதற்கோ இல்லை.
இது நேற்று இன்று ஆரம்பமான கதையல்ல. மாறாக பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் மீது திட்டமிட்டுத் தொடுக்கப்படும் தொடர் கதையுமாகும். இதிலிருந்து விடிவு பிறக்காதா? என ஏங்கும் நெஞ்சங்களின் தரிசனம் கொஞ்சநஞ்சமல்ல.
பொதுவாக இலங்கையில் வாழும் முஸ்லிம்களின உயிர்
களுக்கும், உடமைகளுக்கும், முஸ்லிம் பிரதேசங்களுக்கும், பாதுகாப்பு அரண் கட்டப்படாத நிலையே காணப்படுகிறது.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 22
30
எவ்வேளையிலும் எங்கும் எதுவும் நடக்கலாம் பாரிய இழப்புக்களையும் பெறலாம் என்கின்ற ஒரு இக்கட்டான கால கட்டத்துள்தான் காலத்தை கட்த - நகர்த்த வேண்டியிருப்பதையும் நாம் பார்க்கலாம்.
இதற்கிடையில் முஸ்லிம் ஊர்காவல் படை அமைவதை தமிழ் சமூகத்தின் பல அமைப்புக்கள் எதிர்த்து கருத்துக்களை முன்வைக்கின்றன. முஸ்லிம் ஊர்காவல் படையென்பது தமிழர்களுக்கெதிராக உருவாகும் அமைப்பு என்றும் தமிழர்களின் தனித்துவத்திற்கு பாதகமாக அமையுமென்றும் உரத்து கோஷமிடுவதையும் நாம் காண்கிறோம்.
ஆனால் தங்கள் சமூகத்தினுள் நவீன ஆயுதம் தாங்கிய பல குழுக்கள் இயங்கிவருகின்றன. அவை அரச படைகளோடு மட்டுமல்ல இந்திய சமாதானப் படையோடும் போர் புரிந்தவைகள் என்பதை அவர்கள் ஏற்க மறுப்பதோடு மறைக்கவும் முயல்வது பெரும் ஆச்சரியமான சம்பவமாகும்.
புதுக்குடியிருப்பு சம்பவத்தை பெரிதுபடுத்தும் அவர்கள் முஸ்லிம்களுக்கு நடந்தவைகளை மறந்து விட்டார்கள். தமிழர்கள் தரப்பில் ஆயுதம் தரித்தவர்கள் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அடாவடித்தனங்களுக்கு மேலான ஒரு சம்பவமாகவோ ஈடான சம்பவமாகவோ இல்லையென்ற வகையில் தமிழ் சமூகம் ஆறுதல் அடைய வேண்டும் - உணர வேண்டும் என சிலரால் கூறப்பட்டாலுமி, மனிதாபிமானமில்லா வகையில் எத்தரப்பு நடந்து கொண்டாலும் அதனை நியாயப்படுத்த முடியாதென்பதே அடிப்படையாகும். முஸ்லிம்கள் செய்தாலும் தமிழர்கள் செய்தாலும் குற்றம் குற்றம்தான். " سمه
எனவே முஸ்லிம் ஊர்காவல் படை என்பது வெறும் காட்சிப் பொருளாகவும் வெளியுலகிற்கு காட்டப்படும் ஒரு கண்துடைப்பு பாதுகாப்பு கைங்கரியமாகவும் அமைந்து விடும் ஆபத்து இதிலிருக்கின்றன. இவ்வாறான நிலை சமூக மேம்பாட்டுக்கோ பாதுகாப்பிற்கோ வழிவகுக்காது என்பதை கருத்திற் கொண்டு ஆக்கபூர்வமான வழிவகையில் வாழ்ந்து சமூகத்திற்கு நன்மைகள் விளையும் படைகளாகவே மாறவேண்டும்.
இதற்கு தங்களின் நோக்கம் என்ன? நாம் என்ன செய்ய வேண்டும்? யாருக்கெதிராக போராடுவது - பாதுகாப்பது? என்பது பற்றி அடிப்படைத் தெளிவுகளை முதலில் பெற வேண்டும். அப்போதுதான் இலட்சியமுள்ள படைகளாக இலக்கை நோக்கிப் பயணம் செய்யலாம்.
ᎾᎾ முஸ்லிம்களின் உயிர், உடமைகளின் பாதுகாப்பு 3 முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேச பாதுகாப்பு
இந்த பிரதான இரு அடிப்படையில் உருவான அமைப்பு எந்த சமூகத்திற்கும் எதிரானதாக இருக்கக் கூடாது - இருக்காதென்பதையும் உணரத் தலைப்படல் வேண்டும்.
கூடவே நாம் யார்? நமது கடமைகள் எதிலிருந்து பெறப்படுகின்றன? அவற்றின் நெறியாக்கம் எப்படியானது? என்பதெல்லாம் மனதிலிருத்திக் கொள்ள வேண்டும்.
தீம் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

3
உண்மையில் மேற்படி நோக்குக்கு எதிராக எந்தக் குழு நம்மை நோக்கி விரைகிறதோ அதற்கு எதிராகவே ஊர்காவல் படை தொழிற்பட சித்தமாக இருக்க வேண்டும்.
முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்கு வாழும் மக்களுடன் பரஸ்பர உறவுபூண்டு வாழவிரும்புவர்கள் தவிர அவர்களுக்கு இன்டயூறு வகுப்பவர்கள் அல்லவென்பதை வரலாறு சுட்டிக்காட்டி நிற்பதை நாம் மறந்துவிட முடியாது.
முஸ்லிம் ஊர்காவல் படையினர்கள் சிந்தனைபூர்வமாகவும் க்ண்ணி யத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். முன்னைய நிகழ்வு பின்னைய நிகழ்வுக்கு பாடமென்பது போல் இப்போது இவ்வமைப்பில் அங்கம் வகிப்பவர்கள் அறிவு பூர்வமாவும் நாகரீகத்துடனும் நடக்க வேண்டும்.
நாம் எந்த சமுகத்துக்கும் எதிரானவர்களல்ல. யாரையும் காட்டிக்கொடுப் பவர்களுமல்ல. மாறாக நமது சமூகத்துக்கு அச்சுறுத்தல் எந்தக் கோணத்தில் வருகின்றதோ அந்தக் கோணத்தில் எதிர் கொள்ள வேண்டியவர்கள் நாமென்ற எண்ணமும் போக்குமே வேண்டும்.
அதுவே நமக்கு நன்மை தரும். தவிர குறித்த சிலருக்காக வால் பிடிப்பவர்களாக அல்லாது வாழ்வதன் மூலமே “முஸ்லிம் ஊர்காவல் படை” அமைப்பின் மூலம் முஸ்லிம் சமூகம் நன்மை பெறுமெனக் கூறிவைக்கலாம்.
-Լյուճl6ո%-
நவம்பர் 1990
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 23
32
தமிழ், முஸ்லிம் கலவரங்களும் பரஸ்பர குற்றச்சாட்டுகளும்
ழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் நீண்ட கால உறவு உண்டு. அது பரஸ்பர நல்லுறவாகவும் ஒற்றுமை மிக்கதாகவும் . இருந்தன. இந்த உயர்ந்த உறவுக்கு "கண்திருஷ்டி” பட்டதுபோல அண்மைக்காலமாக இவ்விரு சமூகங்களும் அடிக்கடி மோதிக் கொள்கின்றன.
இது வேதனைமிக்கது மட்டுமன்றி வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயங்களாகும் என்பதையும் இவ்விரு சமூகங்களும் எண்ணிப்பார்க்காதிருக்க முடியாது.
i.
பாரம்பரிய உறவில் நீண்டதோர் “விரிசல்" ஏற்பட்டிருக்கிற
தென்னும் கசப்பான உண்மையை ஏற்றுத்தானாக வேண்டும்.
இது இவ்விரு சிறுபான்மைச் சமூகங்களின் உயர்வுக்கும், வெற்றிக்கும் ஒரு தடைக்கல்லாகவே அமையும்.
உண்மையில் சிறுபான்மைச் சமூகங்கள் பரஸ்பர நல் லெண்ணம் கொண்டு ஒற்றுமையாக வாழ்வார்களாயின் இழந்த உரிமைகளை மீட்டுப்பெற்று உரிமையும், தனனா திக்கமும் உள்ள சமூகங்களாக தலை நிமிர்ந்து வாழ வழிவகுக்கும் என்பதை நாம் மறந்து விட முடியாது.
சிறுபான்மைச் சமூகங்கள் அடிக்கடி மோதிக் கொண்டிருப் பதன் மூலம் அழிவின்பால் இட்டுச் செல்லப்படுவதுடன், சிறுபான்மைச் சமூகங்களின் பொது எதிரியே நன்மையடைந்து விடவே வழிவகுக்கும். ஆனால் தமிழ்,முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை எதிர்பார்க்கும் அல்லது ஏற்படுத்த விரும்பும் போது வன்முறையினால் அமைதியையும் பரஸ்பர உறவை யும் ஏற்படுத்திவிட முடியாதென்பது யதார்த்தமானதாகும்.
கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ்,முஸ்லிம்களின் உறவு
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்
 
 
 
 
 
 
 

33
பலப்பட்ட திடமான நிலையில் கட்டியெழுப்பப்படல் வேண்டும். அது அமைதியான அணுகுமுறையினால் தோன்றவல்லதாகும். மாறாக சிறுபான்மைச் சமூகம் இன்னுமொரு சிறுபான்மைச் சமூகத்தின் மீது தனது அடக்குமுறையினாலோ அல்லது தனது ஆயுத மிரட்டலினாலோ இதனை ஏற்படுத்த முடியாது.
இப்படி வன்முறையினால் ஒற்றுமை எனும் கட்டடம் கட்டப்படுமானால் அது உறுதியில்லாது உடைந்து விடும் என்பது யதார்த்தமானது. யதார்த்தங் களை தொலைத்து விட்ட முடிவுகளும் தீர்வுகளும் நிரந்தரமாகாதென்பது வரலாறு நமக்கு சொல்லிக்கொண்டிருக்கும் பாடம் அல்லது ஞானம் எனலாம்.
எனவே முரண்பாடுகள் எங்கிருந்து தோன்றுகின்றன? அதை எப்படி செவ்வைப்படுத்தலாம்? எனும் பக்கங்களில் சிந்தனையை ஒட விட்டு ஓரளவு தீர்கக்தரிசனமிக்க இணக்கப்பாடுகளில் ஒன்றித்து விடுவதே இன்றைய தேவையாகும்.
LDfTDPT85 தொடரான மோதல்களில் தஞ்சம் பெற்றுக் கொண்டிருந்தால் கிழக்கு மாகாணத்தை ஓர் யுத்த களமாகவே பிரகடனம் செய்யவேண்டியிருக்கும். இதனால் எந்த சமூகத்துக்கு நன்மை உண்டு? உண்மையில் சிறுபான்மைச் சமூகங்கள் இன்னுமின்னும் சிறுபான்மையாக மாறுவதுடன. உடமை இழப்புகளும் பகைமை உணர்வுகளுமே மேலோங்குவதுடன் பிரதேசம் அபிவிருத்திகள் இழந்து நிற்குமென்பன எம் கவனததிற்கு கொள்ளப்படுமாயின் நிச்சயமாக நல்ல பல மாற்றங்கள் விளைய உதவும் என துணிந்து கூறலாம்.
தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்படும் மோதல்களுக்கான அடிப்படைக் காரணங்களை இரண்டு அடிப்படைக்குள் அடக்கிப்பார்க்க முடிகிறது. ஒன்று அரசியல் காரணங்களால் எழுகின்ற முரண்பாடுகள். இரண்டு பொருளாதார அடிப்படையில் காணப்படும் ஒப்பீட்டளவிலான ஏற்றத்தாழ்வுகளின் நிமிர்த்தம் ஏற்படும் பொறாமை உணர்வும். காழ்ப்புணர்வினதும் முரண்பாடுகள் என்பனவாகும்.
இவைகளை நாம் சற்று விரிவாக பார்ப்பதுடன் இவைகளிலிருந்து விடுபட்டு ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழ உதவும் வழிகளை இனி நாம் நோக்குவோம்
3 கிழக்கிலங்கை முஸ்லிம் பிரதிநிதித்துவம் தமிழ் அரசியற் கட்சியினாலேயே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அப்படியிருந்தும் அவர்கள் ஆளும் கட்சியில் தாவிக்கொண்டனர். இதனால் முஸ்லிம்களை அரசியலில் நம்ப முடியாது.
3 1987ஆம் ஆண்டு அரசு பிரதேச சபை தேர்தலை பிரகடனப்படுத்திய போது தமிழ் சமூகங்கள் பங்கெடுத்துக் கொள்ள முடியாத நிலையிருந்த போது முஸ்லிம்கள் தேர்தலில் பங்கெடுத்துக்கொள்ள முற்பட்டது.
ல தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் முன்நின்று உழைக்காது மெளனம் சாதித்தது.
3 வட - கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு எனக் கோஷமிட்டது; கோஷமிடுவது
9 தமிழ் சமூகங்களுக்கெதிராக முஸ்லிம் அமைச்சர்கள் உள்நாட்டிலும் .
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 24
34
வெளிநாட்டிலும் பிரசாரம் மேற்கொண்டமை.
3 கிழக்கில் சிங்கள சமூகத்ததை குடியேற்றும் போதெல்லாம் எதிர்ப்புக் குரல் எழுப்பாது - தமிழ் சமுகத்தின் எதிர்ப்புக் குரலுடன் தோழமை கொள்ளாதிருந்தமை.
3 ஒப்பீட்டளவில் தமிழ் சமூகத்தை விட முஸ்லிம்கள் ஆடம்பரமாகவும் - செல்வச் செழிப்பிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனும் எண்ணம்.
9 தமிழ் சமூகத்தின் வியாபாரத் தாபனங்களையும், காணிகளையும் முஸ்லிம்கள் அபகரித்துக் கொண்டனர். இதனால் தமிழர்களின் பிரதேசம் சுருங்கிக் கொண்டதுடன் வறுமையையும் ஏற்க வேண்டியதாகி விட்டது.
3 கல்முனைச் சந்தையில் கூட தமிழ் சமூகத்ததுக்குரிய பங்கு சரியாக கொடுக்கப்படவில்லை. அதாவது தமிழ் சமூகத்துக்குரிய பங்கையும் முஸ்லிம்கள் அபகரித்தக் கொண்டனர். f
3 தமிழ் சமூகம் பணத்தில் வீக்கம் அடைந்திருந்ததனால் முஸ்லிம்கள் அவர்களின் வீடுகளையும், வேளாண்மைக் காணிகளையும் கொள்ளை லாபத்தில் சுரண்டிக்கொண்ட சுரண்டல் பேர்வழிகள்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முஸ்லிம்கள் மீது தமிழ் சமுகத்தின் ஒரு பகுதியினரினால் பல்வேறு கட்டங்களில் சுமத்தப்பட்டு வந்துள்ளன. இவைகள் உண்மைதானா? என்று கூட சற்றும் சிந்திக்காது - பரப்பப்பட்ட இக்கூற்றுக்களில் சோரம் போன தமிழ் சகோதரர்கள் முஸ்லிம்களை சந்தேகக் கண்கொண்டு நோக்கத் தொடங்கினர் எனலாம்.
இதன் விளைவாக முஸ்லிம்கள் என்றால் அவர்கள் பணத்தில் மிதப்பவர்கள் என்றும் பிறர் சொத்துக்களை அபகரிப்பவர்கள் என்றும் சுரண்டல் பேர்வழிகள் என்றும் சித்தரிக்கப்படலானார்கள்.
இக் கருத்துக்களை தமிழர்களில் சிலர் தங்களின் சமூகத்தின் மத்தியில் வேரூன்றச் செய்வதற்காக மேற்கொண்ட முயற்சியில் பல இளைஞர்களும் - விடுதலைப் போராளிகளும் சோரம் போனார்கள் .
இதனால் முஸ்லிம்கள் என்றால், அவர்கள் தமிழர்களின் "எதிரி” என்ற உணர்வு தமிழ் சமூகத்தின் மத்தியில குடி கொண்டதினால் பகைமை உணர்வு மேலோங்கி அடிக்கடி தமிழ் - முஸ்லிம் கலவரங்கள் தோன்றத் தொடங்கியதெனலாம்.
முரண்பாடுகள் காணப்படும் விடயங்களில் ஓரளவு கவனஞ் செலுத்தப்பட்டு இவற்றுக்கான பரிகாரங்கள் இவ்விரு சிறுபான்மைச் சமூகத்தின் முன் முன்வைக்கப்படுதல் வேண்டும். இக்கைங்கரியத்தை தமிழ் - முஸ்லிம் சமூகங்களிலுள்ள புத்தி ஜீவிகள் செய்ய வேண்டும். அப்போதுதான் சமூக ஒற்றுமையும் அமைதியும் ஏற்பட ஏதுவான வழிகள் பிறக்கலாம் எனலாம்.
இலங்கையின் இனப்பிரச்சனை கூர்மையடைந்து - உச்சக்கட்டத்ததைப் பெற்றது 1983 எனக் கொள்ளலாம்.ஆனால் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் உறவில் மோதல்களும் முரண்பாடுகளும் வலுப்பெற்று கூர்மை அடைந்தது 1985 ஆகும்.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

35
இதன் பின்னர் இன்றுவரை (1989) பல மோதல்கள் அடிக்கடி ஏற்பட்டுப் பல உயிரிழப்புக்களையும் பல கோடிப் பெறுமதியான உடமைச் சேதங்களையும் தந்தன. இவ்விழப்புகள் ஏற்படாது தடுத்து - நடைபெறாது தடுத்து பாதுகாப்பு கொடுக்கும் சூழ்நிலையிருந்தும் இதனைக் கைக்கொள்ளாது துவேசத்தை முடுக்கிவிட்டு - மோதலை விரிவு படுத்தவே செய்தனர் எனலாம்.
இப்படியான பிழையான போக்குகளையும, நோக்குகளையும் கடைப்பிடித்து வந்ததுவே தொடரான மோதல்களுக்கும் - நிலையான பகைமைக்கும் வழிவகுத்தன என்பது தமிழ் - முஸ்லிம் சமூகம் உணர வேண்டிய கட்டாய பக்கங்களாகும்
அரசியலில் முஸ்லிம்களை நம்ப முடியாது. அவர்கள் கட்சி விட்டு கட்சி மாறக்கூடியவர்கள் என்ற எண்ணம் தமிழர்களுக்கு ஏற்பட்டது நியாயமாக இருக்கலாம் அவர்களுக்கு ஆனால் முஸ்லிம்கள‘தமிழர்களின் அரசியல் கட்சிகளை முழுமையாக நம்பாமைக்கும் அடிப்படை வித்தாக இருந்தவர்கள் யார்? அவர்கள் எந்த சமூகத்தை சார்ந்தவர்கள்? போன்ற விபரங்களையும் கொஞ்சம் வரலாற்றின்அத்தியாயங்களில் புரட்டிப்பார்ப்பது அவசியம் அல்லவா?
அப்படி ஆராய்ந்து பார்க்க முற்பட்டது - முஸ்லிம்கள் மீதே பழியைச் சுமத்திவிடுவது பொருத்தம்தானா? இது அறிவுபூர்வமான போக்கா? என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்வார்களா? அரசியல் லாபத்திற்காகவும் வர்க்க நன்மைக்காகவும் “தமிழ் பேசும் மக்கள்” என்றால் அது தமிழர் - முஸ்லிம்களை உள்ளடக்கியதாகும் எனக்கூறிய சந்தர்ப்பங்களும், தமிழர்களை மாத்திரம் தான் இது குறிக்கும் என பறைசாற்றிய சந்தர்ப்பங்களும் எத்தனை?
மதத்தால் முஸ்லிம்கள் வேறுபட்டாலும் இனத்தால் தமிழர்களும் - முஸ்லிம்களும் ஒன்றுதான் எனக் கூறிய சந்தர்ப்பங்கள் எத்தனை? பின் தமிழன் தமிழன் தான் - சோனி (சோனகர்கள்) சோனி (முஸ்லிம்கள்) தான் என பிரித்துப் பார்த்த சந்தர்ப்பங்கள் தான் எத்தனை?
இவ்வாறான விஷயங்கள் எல்லாம் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டிய விசயங்கள் அல்லவா? தமிழர்களுக்கும் - முஸ்லிம்களுக்கும் இடையில் அரசியல் ரீதியாகவும் வர்க்க ரீதியாவும் 'எதிர்ப்புணர்வு ஏற்பட்டது இலங்கையின் சுதந்திரத்துக்குப்பின்பல்ல அதற்கு முன்பே.
1885இல் சேர்.பொன் இராமநாதனால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களும் . 1915இல் அவர் நடந்து கொண்ட விதங்களும் எம் சிந்தனைகளுக்குள் சந்திக்கப்பட வேண்டியவைகள். இவைகள் மாத்திரமன்று. மிக அண்மைக்காலமான 1984, 1985, 1986, 1987. என்று தொடருவதும் கவனம் பெற வேணடியது.
சிறுபான்மைச் சமூகங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனக்கூறுகின்றனர். ஆனால் ஒற்றுமைக்குப் பங்கமாக நடந்து கொள்கிறவர்கள் யாரென்பதை அறிய முற்படுகிறார்களா? என்றால் அதுதான் இல்லை. மாறாக கலவரங்கள் ஏற்பட்டுவிட்டால் தமிழ் - முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சதி நடைபெறுகிறது. இதற்கு விலை போய்விடாது நல்லுறவு பேணப்பட வேண்டும் என அறிக்கைகள் விடமட்டும் பின் நிற்பதில்லை.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 25
36
இது சமரசம் ஏற்படுத்தும் கைங்கரியமா? ஒற்றுமைக்கு சதி செய்தவர்கள் யார் என்பதெல்லாம் இனம் காண முற்படாமை ஏன்? என்பதெல்லாம் எம் கவனங்களுக்கு அப்பாலானது அல்ல.
எது எப்படியிருப்பினும் முஸ்லிம்களை தங்களின் ஆளுமைக்குட்பட்ட
வர்களாகவும் அதேநேரம் அவர்களுக்கென்று அவர்களிலிருந்து பிரதிநிதிகள் தோன்றக்கூடாது என்பதிலும் அன்றைய தமிழ்த் தலைவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு 1885 ஆம் ஆண்டு ஒரு சான்று அன்றைய காலகட்டத்தில் (1885ல்) முஸ்லிம்களுக்கு முஸ்லிம்களிலிருந்து பிரதிநிதித்துவம் வேண்டுமென்ற கோஷம் வலுப்பெற்று வந்த காலமது.
தமிழ் சமூகத்தின் ஏகபோக தலைவராக கருதப்பட்ட சேர்.பொன் இராமநாதன் "தமிழர்களும முஸ்லிம்களும் சமயத்தால் வேறுபட்டாலும் இனத்தால் ஒன்று” எனக்கூறி முஸ்லிம்களுக்கென்று தனியான பிரதிநிதித்துவம் தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்தார். இது அரசியலில் முஸ்லிம்களை தமிழர்கள் ஆளவேண்டுமென்ற போக்கைக் காட்டியதினால் தமிழ் அரசியல்வாதிகள் மீது முஸ்லிம்க்ளும் - முஸ்லிம் அரசியல்வாதிகளும் சந்தேகக் கண்கொண்டு நோக்கத்தொடங்கினர். எனலாம்.
பின்னர் 1915இல் ஏற்பட்ட சிங்கள - முஸ்லிம் கலவரங்களின்போது இனத்தால் ஒன்று என வர்ணிக்கப்பட்டவர்களும், கலவரத்தின் போது அநியாயமாக தாக்கப்பட்டவர்களுமான முஸ்லிம்களை அப்படியே கை நழுவ விட்டுவிட்டு சிங்களவர்களுடன் உறவை உறுதிப்படுத்திக் கொண்டும் வர்க்க நலன்களை கருத்திற் கொண்டு உண்மைக்கு மாறாக முஸ்லிம்களை காட்டிக் கொடுத்து பெருமை தேடிக் கொண்டதும் இதே தலைமை என்பதை தமிழ் சமூகம் மறந்துவிட முடியாது.
இப்படியான நிகழ்வின் தாக்கங்களாக "தமிழர்களை முஸ்லிம்கள் நம்ப முடியாது’ என்னும் எண்ணத்தை வளர்க்கச் செய்ததெனலாம். இதுபற்றி பாதிப்பை கவனத்திலெடுத்து எதிர்காலத்திலாவது அரசியலில் ஒன்றுபட்டு வாழக்கூடிய மனோநிலையை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் முயற்சியில் தமிழர்கள் சார்பாக சரியாக இறங்கப்படவுமில்லை, தொழிற்படவுமில்லை. மாறாக பழைய தலைமைத்துவம் கைக்கொண்ட அதே புறக்கணிப்பு சிந்தனையையே கைக்கொண்டொழுகுபவர்களாக தமிழர்கள் இருந்து வந்துள்ளனர் என்பதும் வரலாற்றில் தடம் பதிக்கப்பட்டவையாகும்.
1984ம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மகாநாட்டின் போது, தமிழர்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட "அம்பாறை மாவட்டம் தவிர்ந்த வடகிழக்கு இணைப்பு எனும்கோரிக்கை கூட முஸ்லிம்களை கவனத்தில் கொள்ளாது அல்லது கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களுள் ஒரளவு முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் மாவட்டம் தவிர்க்கப்படல்பவச5 வேண்டும் என்ற கோரிக்கையாகக் கூட இதனைக் கொள்ளலாம்.
உண்மையில் யார் அரவணைத்து உறவை உறுதியாகக் கட்டியெழுப்ப விரும்புகிறார்கள்? வெறுத்து புறக்கணிக்க முற்படுகிறார்கள் என்பதெல்லாம் நாம் யூகித்துக் கொள்ள உதவுகிறதல்லவா?
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

37
அது மாத்திரமன்று. இலங்கையின் இனப்பிரச்சினையின் தீர்வில் முஸலிம்களுக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஓர் அரண் எனக் கொள்ளப்பட்டு இலங்கை முஸ்லிம்கள் ஏகோபித்த வேண்டுகோளாக வேண்டப்பட்ட “முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை வேண்டாததோர் வேண்டுகோளாகக்” கூட தமிழர் தரப்பில் கூறப்பட்டதும் முஸ்லிம்களை மேலும் ஐயுறச் செய்தது எனலாம்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனக்கூறப்பட்ட (1987 ஜூலை 29ல் கைச்சாத்தான) இலங்கை - இந்திய உடன்படிக்கையில் முஸ்லிம்களின் அபிலாசைகள் சேர்க்கப்படவுமில்லை. அவர்களிடம் கேட்கப்படவுமில்லை
அப்படியான ஓர் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட அத்தனை தமிழ் அமைப்புக்களும் ஒருவகையில் முஸ்லிம்களை நடுத்தெருவில் நிறுத்தியேனும் தங்கள் “பை” நிறைந்தால் சரி எனும் போக்கை கடைப்பிடிக்கத் தயாராகி விட்டவைகள் எனக் கூடக் கொள்ள முடியும் அல்லவா?. அப்படியானால் முஸ்லிம்கள் அரசியலில் தமிழர்களுடன் ஒன்றித்திருப்பதன் மூலம் எந்தப் பயன்பாட்டையும் பெறப்போவதில்லை என்ற மனோநிலையில் தூரப்போய்விட எண்ணுவது பிழையானதா?
1987ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர்கள் அக்கறை காட்டாது இருந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் அக்கறை செலுத்தியதும் குடியேற்றப்பிரச்சினையின் போது பலமான எதிர்ப்புக்களை காட்டாது விட்டதும் பெரும் தவறு என சிந்திக்கத்தலைப்பட்ட தமிழ் சமூகம் ஏன் அவர்கள் இப்படி நடக்க முற்பட்டார்களென்பதை ஒருமுறை சிந்தித்துப்பார்க்க தவறிவிட்டனர் அல்லது அது பற்றி அக்கறை கொள்ள விரும்பவில்லை எனலாம்.
மேற்படி இரண்டு அம்சங்களிலும் தமிழர்களின் அபிலாசைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் நடந்து கொண்டது சிங்களவர்களின் அரவணைப்பை எதிர்பார்த்து அல்லது நம்பி என்று கூறலாம். இது முஸ்லிம்களின் தவறல்ல. மாறாக இந்த நிலைக்கு முஸ்லிம்களை நிர்ப்பந்தித்தவர்கள் தமிழர்கள் எனும் கசப்பான உண்மை உணரப்படுதல் அவசியமாகும்.
தமிழ் சமூகத்திலிருந்து விடுதலைப் போராளிகள்" என்ற பெயரில் ஆயுதம் தாங்கியவர்களில் ஒரு பகுதியினர் முஸ்லிம்களிடம் கட்டாய பண வசூலிப்பிலும், நெல் பறித்தலிலும், வாகனக் கடத்தலிலும், ஆட்கடத்தலிலும, பள்ளிவாசல்களிலிருந்து வந்தவர்களின் தாடி பிடித்திழுக்கப்பட்டு - தாக்கப்பட்டது போன்ற கைங்கரியத்தில் இறங்கிய போது உறங்கிக்கிடந்த உணர்வுகள் விழித்தெழுந்தது. அதற்கு உரமிடுவது போல ஒரு சக்தியும் உதவ முன்வந்த தினால் பலமும் ஓரளவு கிட்டியதினால் மோதுவதற்கு முன்வந்தனர் முஸ்லிம்கள் 1985இல் ஆகும்.
இது பொறுமையிழந்த போக்கின் நிலைப்பாடாகும். “குட்டக்குட்டக் குனிபவ னும் மடையன்; குனியக்குனியக் குட்டுபவனும் மடையன்” என்னும் பழமொழி உணர்த்தும் பண்பு கூட உணரப்படாமையின் வெளிப்பாடாகக் கூட இதனைக் கொள்ளலாம். ஆயினும் இனக்கலவரங்கள் கிழக்கின் பல பாகங்களிலும் விரிந்தன. இது கிழக்கு மாகாணத்தில் ஆயுதம் ஏந்திய குழுவினர்களின் தவறான அல்லது சரியான வழிகட்டல் இல்லாததினால் முஸ்லிம்கள் மீது கரிசனை காட்டுவதற்குப் பதிலாக பகைமையுணர்வை வேரூன்றச்செய்து
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 26
38
மோதலில் இறங்க முன்வந்ததன் விளைவு எனலாம்.
இப்போக்கினால் தமிழர்களுடன் சார்ந்து வாழ்வதை விட சிங்களவர்களுடன் சார்ந்து வாழ்வதினால் நன்மைகளும் பாதுகாப்பும் பெறலாம் என்று முஸ்லிம்கள் எண்ணத் தொடங்க வழி சமைத்தது. உண்மையில் 1984 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் தமிழ் - முஸ்லிம் கலவரமொன்று தோன்றக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்பட்ட வேளை அங்கு ஆயுதம் ஏந்திய தமிழ் குழுவினர் மேற்கொண்ட ஆக்கபூர்வமான முயற்சியினால் அக்கலவரம் தடுக்கப்பட்டது இங்கு நினைவு கூரத்தக்கது.
இப்படியான முயற்சிகள் கிழக்கில் ஆயுதம் ஏந்தியவர்களினால் கைக்கொள்ளப்படாது பொறாமையாலும், காழ்ப்புணர்ச்சியினாலும் தங்களை அடிமைப்படுத்திக் கொண்டதும் இனக்கலவரங்களை தொடர வழிவகுத்தன என்று கூறலாம்.
விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கெடுத்துக் கொள்ளாது இருந்ததினால் முஸ்லிம்கள் இழப்புக்களை சந்திக்காமலில்லை. மாறாக தமிழ் வாலிபர்களையும், உடமைகளையும் நாம் இழந்து பெறும் சுதந்திரத்தில் அல்லது உரிமையில் முஸ்லிம்களும் பங்கு கொள்வார்களே என்ற வேக்காடு நோக்கில் நோக்கப்பட்டனர். V−
இதனால் முஸ்லிம்கள் மீது கோப உணர்வை விதைக்கவே முற்பட்டனர். ஆனால் கொஞ்சம் ஆழமாகவும் பொறுமையாகவும் தமிழர்கள் சிந்திக்க தலைப்பட்டிருப்பின் முஸ்லிம்களை நியாயவாதிகளாகவும் அடுத்தவர்களின் உரிமையில் கைபோட விரும்பாதவர்கள் என்பதையும் கண்டிருக்கலாம்; கலவரங்களையும் தடுத்திருக்கலாம்.
இலங்கை முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் அதாவது எந்தப்பிரதேசத்தில் வாழ்ந்தாலும் அங்கு வாழும் மக்களுடன் அன்னியோன்யமாகவும் பரஸ்பர நல்லெண்ண உறவு பூண்டும் வாழ விரும்புபவர்கள். அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் நாட்டுப் பிரிவினையோ மொழிப்பிரச்சினையோ வைத்துப் போராட்டம் நடத்துவதற்கு தயாராக இருக்கவில்லை என்பது வரலாறு.
ஆனால் அவர்கள் என்றும், அவர்களின் மதமென்றும் வாழ்பவர்கள். அதே நேரம் அடுத்தவர்களின் உரிமையில் கைபோடுபவர்களுமல்ல. இந்த அடிப்படையில் வாழும் முஸ்லிம்கள் நாட்டுப்பிரிவினையையும் - மொழியையும் உள்ளடக்கிய போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை என்பது உண்மைதான்.
ஆனால் தமிழர்களின் போராட்டம் நியாயமானது-அவசியமானது என்பதை புரிந்திருந்தார்கள். இதனால்தான் முஸ்லிம்கள் மெளனம் சாதித்தனர் இல்லாவிட்டால் சிங்கள சமூகத்துடன் முழுமையாக சங்கமமாகி - தமிழர்களுக்கு எதிராக போராடுவதில் முழு மூச்சாக ஈடுபட முன்வந்திருப்பார்கள். இப்படியல்லாது "சும்மா" மெளனமாய் இருந்ததே அவர்களின் உயர்ந்த பண்பினால் என்பது உணரப்படவில்லை. மாறாக நாம் போராடுவது முஸ்லிம்கள் சும்மாவிருந்து சுகம் அனுபவிப்பதா? என்ற காழ்ப்புணர்வே மேலோங்கியதால் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையும் தூரவிலகிச் சென்றது எனலாம்.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

3Տ}
வடக்கு கிழக்குக்கு அப்பாலிருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் தமிழருக் கெதிராக பிரசாரம் மேற்கொண்டது உண்மையே. ஆனால் அவர்கள் இப்படியான போக்கில் தங்களை உட்படுத்திக்கொண்டது முஸ்லிம்களுக்காக அல்ல. மாறாக தங்களின் பதவியைக் காப்பபாற்றிக் கொள்ளவும் - தாங்கள் சார்ந்திருந்த அரசியற் கட்சியின் நலன் பேணவும் என்பது வெள்ளிடை மலை. இதனைச் சரிவர உணர்ந்திருந்தால் இதற்காக கிழக்கு வாழ் முஸ்லிம்களுடன் பகைத்துக்கொள்ள முற்படாதிருந்திருக்கலாம். வட - கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு என ஆளும் கட்சி கூறி வந்ததும் முஸ்லிம்களில் சில ரும் இதற்கு விலை போனதும் உண்மையே.
ஆனால் கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையினர் வட - கிழக்கு இணைப்புக்கு எதிரானவர்களல்ல. ஆனால் ஒரு நிபந்தனையுடன் ஏற்றுக் கொள்கின்றனர் என்பது புரியப்படவில்லை. அவர்கள் நிபந்தனை விதிப்பதில் கூட நிறைய நியாயம் உண்டென்பது மறுக்கமுடியாத விஷயம். ஒரு சமூகத்துக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம், கல்வி வாய்ப்பு தொழில் வாய்ப்பு போன்ற முக்கிய தேவைகள் வடக்கு - கிழக்கு இணைப்பின் மூலம் பாதிப்படைவது தெளிவானது.
இந்த ஆபத்திலிருந்து ஓரளவு விடுதலை பெறுவதற்கும் தமிழர்களில் அபிலாசைகளுக்கு விரோதமில்லாததுமான தீர்மானம் எடுப்பது முஸ்லிம்களுக்கு, கட்டாயமானது. ஆகையால்தான் வட - கிழக்கு எல்லைக்குள்ளிருக்கும் முஸ்லி பிரதேசங்களை ஒன்றிணைத்து முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை ஒன்று அமைக்கப்பட்ட நிலையில் வட - கிழக்கு இணைப்புக்கு முழு ஆதரவு என்பது தமிழ் மக்களால் சரியாக உணரப்படவில்லை.
முஸ்லிம்களால் இந்நிலைப்பாடுகள் தெளிவாக வெளிப்படுத்தப்பட்', வந்துள்ளன. இதனைச் சரிவர உணர்ந்து கொள்ள சிரத்தை எடுக்கப்பட்டால் முரண்பாடுகள் தோன்றுவதும் கலவரங்கள் ஏற்படுவதும் ஓரள ~. தவிர்க்கப்பட்டிருக்கலாம். "
ஒப்பீட்ளவில் தமிழர்களைவிட முஸ்லிம்கள் செல்வந்தர்களாக இருக்கிறார்க என்பது ஓரளவு உண்மையே! ஆனால் முஸ்லிம்கள் எல்லோரும் செல்வந்தர்களல்ல. விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும், கடற்றொழிலா ளர்களுமே உளர் என்பதும் உணரப்படல் சேண்டும்.
கிழக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் இங்கு எத்தனையோ முஸ்லிம் குக்கிராமங்கள் - வறுமையின் நிழலில் தஞ்சம் பெற்றிருக்கின்றன. இதுவே முஸ்லிம்களின் சராசரி வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவதாகக் கொள்ள 6) Tub.
காத்தான்குடி, கல்முனை, அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களில் கடைகள் ஓரளவு நிறைந்து காணப்படுகின்றன. இவை ஒப்பீட்டளவில் அதிகம் என்று கூறலாம். இது முஸ்லிம்கள் வியாபாரத்துறையில் காட்டும் ஆர்வத்திற்கு சான்றாகக் கொள்ளலாம் அதேநேரம் தமிழர்கள் கல்வித் துறையில் அதிக நாட்ட்ம் செலுத்தியதன் பயனாக ஒப்பீட்டளவில் முஸ்லிம்களை விட உத்தியோகத்தவர்கள் அதிகமாகும்.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 27
40
இவ்விரு சமூகங்களும் வெவ்வேறு துறையில் தங்கள் முயற்சியை மேற்கொண்டு வியாபாரம், உத்தியோகம் எனும் துறைகளில் முன்னேறி ஒரு சமுதாயத்தை விட இன்னொரு சமூகம் ஒப்பீட்டளவில் உயர்ந்து காணப்படு கிறதென்பதை பரஸ்பர அடிப்படையில் புரிந்து கொள்வார்களாயின் காழ்ப்புணர்ச்சி யும், பொறாமையும் தலை தூக்காது ஒற்றுமையாக வாழ வழிவகுக்குமென்று கூறலாம்.
முஸ்லிம்கள் பிறருடைய சொத்தை அபகரித்து முன்னுக்கு வந்தவர்களல்லர். மாறாக சொந்த முயற்சியினால் உழைக்கப்பட்ட பணத்தினால் பிறர் விற்கும் போது சில வியாபார ஸ்தலங்களை பணம் கொடுத்தே வாங்கியுள்ளனர் என்பது ஆதாரபூர்வமான விஷயம். கல்முனை சந்தையானாலும் சரி வேறெந்த இடமானாலும் அங்கு முஸ்லிம்களின் கை ஓரளவு ஓங்கியிருக்குமானல் அது முறைகேடான வழியால் ஏற்பட்டதல்ல என்பது சான்றுகளுடன் நிரூபிக்கக்கூடியது.
வடக்கு மாகாணத்தில் இருப்பது போன்று தமிழர்கள் தமிழர்களுக்கே அல்லது கோயில்களுக்கே விற்க வேண்டுமென்ற கட்டுப்பாடு இருக்கவில்லை. நடைமுறையில் கைககொண்டொழுகப்படவில்லை. இதனால் தமிழர்களில் பலர் முஸ்லிம்களுக்கு தங்கள் சொத்துக்களை நியாயவிலையில் விற்றனர்: முஸ்லிம்களும் வாங்கினர். இப்படி விற்கப்பட்டவைகளில் மீண்டும் உரிமை கோரி நிற்பது தவறான போக்கு என்பது உணரப்படவில்லை. -
தங்களின் சமூக அமைப்பு அப்போது இருந்த நிலையில் ஏற்பட்ட இழப்புகள் என்று கருதப்படுபவைகளுக்கு மறைமுகமாக தாங்களும் ஒரு காரணி என்பதும் உணரப்பட வேண்டிய விஷயங்கள். நமது சமூகத்தின் சொத்துக்கள் பிறர் கரங்களுக்கு மாறக்கூடாது என்று எண்ணுபவர்கள் தங்களின் முன்னைய இயலாமையையும், பலஹினத்தையும் கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் தமிழர்களின் சொத்துக்கள் தமிழர்களுக்கு அல்லது கோயில்களுக்கே விற்கப்பட வேண்டும் என்ற வரையறையை விதிக்க வேண்டும்.
தமிழர் - முஸ்லிம் சமூகங்களின் பிரதேசங்கள் எது என்பதை மீளாய்வு செய்து சரியாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். இதுவே ஓரளவு சமாதானமாக வாழ உதவும் என்று கூறலாம். உண்மையில் தமிழர் - முஸ்லிம் சமூகங்களிடைய பழையன மறக்கப்பட்டு புதிய உறவு சரியான அணுகுமுறையில் கட்டியெழுப்பப்படுவது கட்டாயமானது. இதனை இரு சமூகத்திலும் உள்ள புத்திஜீவிகள் மேற்கொள்ளல் வேண்டும்.
அப்போதுதான் சமரசம் ஏற்படும். ஒற்றுமையான வாழ்வு மிளிரும் எனலாம். இதனை இரு சமூகத்தவரும் கைக்கொள்வார்கள் என நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
-பார்வை
19-9-89, 5-10-89, 25-1 1-89, O6-01-90
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்?
மூன்றாம் சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சிறுபான்மை என்று வாழும் போது பல பிரச்சினைகள் தலை தூக்கி தலை நிமிர்ந்து வாழ முடியாதளவில் நெருக்கடியான வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவது உலக அரங்கில் இன்று சர்வசாதாரணமான விஷயமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டி ருப்பதை நாம் அவதானிக்க முடிகிறது.
b ம் நாட்டைப் பொறுத்தவரை எண்ணிக்கையில் நாம்
பல நாடுகளில் பிரச்சினைகள் தோன்றி படுமோசமான நிலையில் நாடுகள் சிக்கித் தவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக அமைவது “ஒரு நாட்டை ஆளும் பெரும்பான்மைச் சமூகம் அந்நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளில் கை வைப்பதாகும்” என்னும் பேருண்மையை நாம் மறந்து விட முடியாது.
இந்த நிலையில் நமது நாடும் அங்கம் கொண்டுவிட்டதோ என ஐயுறும் அளவில் நமது நாட்டில் அண்மைக்கால நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக நாம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளோம். ஆனால் நிம்மதியாகவும், செல்வச் செழிப்பிலும், சொகுசான வாழ்விலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனரென்று பலராலும் பேசப்படு கின்றது. ஆயினும் வறுமையில் வாடும் மக்களில் முஸ்லிம்கள் முதன்மையானவர்கள் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 28
42
இது மாத்திரமா? காணிப்பிரச்சினை, குடியேற்றம், நீர்ப்பாசனம், மொழி, நிர்வாகம், நீதி, இஸ்லாமிய கலாசாரத்தை குழிதோண்டிப்புதைக்கும் கொத்தணிப் பாடசால்ை கல்வித்துறை, அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் புறக்கணிப்பும, அடக்குமுறைமைகளும் கையாளப்பட்டு நசுக்கப்பட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த நிலைமை இன்று நேற்றுத் தோன்றியவையல்ல; பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இதன் மூலம் நமது சமூகம் பல இழப்புக்களையும் அவலங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுகின்றது.
இது போதாதென்பது போல நாட்டின் நாலாபுறங்களிலும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள "இனமோதல்" குறிப்பாக கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம்களிடையே வேரூன்றி காணப்படுவது எம் துரதிஷ்டம் என்பதை விட சிறுபான்மை சமூகங்களின் "கெட்ட காலம்" என்பதையும் உணரத் தலைப்படல் வேண்டும்.
இஸ்லாமிய அறநெறியிலும் கைவைக்குமளவில் பிற சமுகத்தவர்கள் துணிந்திருக்கும் இக்கால கட்டத்தில் எமது தலைவர்களினதும் இஸ்லாமிய இயக்கங்களினதும் உழைப்பு மிக அவசியமானதாகும். ஆனால் தட்டிக்கேட்க வேண்டியவர்கள் ஏனோ கைகட்டி வாழ்கின்றனர்.
மேடையில் நின்று "கூக்குரல்" இடுவதிலும் பேனா பிடித்து "அறிக்கைகள்” விடுவதாலும் வட்டம் போட்டு "திட்டம்” போடுவதாலும் இப்பிரச்சினைகளுக்கு முடிவு காணலாமென்று எண்ணுவது எண்ணிக்கையிலிருந்து பூஜ்யத்தில் வந்ததாகவே முடியும்.
நம்மை நசுக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்குச் சரியான - தீர்க்கமான தீர்வு காணாவிடத்து நாமும் நமது வருங்காலச் சந்ததிகளும் நிம்மதியாக இந்த நாட்டில் வாழ்வது முடியாத காரியமாகிவிடும்.
எனவே நமது எதிர்காலத்துக்காக நாம் எந்த முறையில் அணுகுவதால் இப்பிரச்சினையிலிருந்து விடுபட முடியுமோ அந்த அடிப்படையில் இப்பிரச் சினைகளை அணுகிக்கொள்ள நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும். அதுவே விவேகமான முறையுமாகும்.
-அல் - ஹதா
ஆகஸ்ட் - ஒக்டோபர் 1986
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

43
独
கிழக்கு பிரிந்தால் முஸ்லிம் விகிதாசாரம் பாதுகாக்கப்படுமா?
தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசம் எனும் கோட்பாட்டில் எல்லா தமிழ் ஆயுதக் குழுக்களும் , அரசியலற் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒருமித்த கோஷமாக எழுப் பிக் கொண்டிருப்பதை இன்று நாம் கேட்கலாம்.
6) டக்கும், கிழக்கும் இணைக்கப்படல் வேண்டும் அது
தமிழ் சமூகம் "ஒன றுபட்ட" கோரிக் கையாக, விடயமாக முன்ன்வக்கப்பட்ட அம்சம் இதுவென்றால் மிகையல்ல. அண்மை யப் பொதுத்தேர்தலின் போது போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதியாகக் கூட "வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பான வாக்கெடுப்பைத் தடுப்பதும இணைப்பை உறுதிப்படுத்துவதும்" என்பதையே பிரகடனப்படுத்தியிருந்தனர். ஆகவே தமிழ் சமூகத்துக்கு வடக்கும், கிழக்கும் இணைய வேண்டிய அவசியமிருப்பதை இதன் மூலம் நன்கறியலாம்.
தமிழ் சமூகத்திலிருந்து ஆயுதம் தரித்த குழுக்கள் : ஒன்றுக் கொன்று மோதி பிளவுபட்டுக் கொண்டிருந்தாலும் அவைகள் தங்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றுகொண்டு தனித் தனியாக வடக்குடன் கிழக்கு இணைய வேண்டும். அது தமிழர்களின் "பாரம்பரியப் பிரதேசம்" என்பதையும் வலியுறுத்த தவறாதிருப்பதையும் நாம் பார்க்கிறோம்.
உண்மையில் தமிழ் சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வும் சமாதான நிலையும் தோன்றச் செய்ய வேண்டும் என்ற தூய்மையான எண்ணமும் துணிச்சலும் கொண்ட உறுதியான கைங்கரியம் என்றால் வடக்கும் கிழக்கும் இணைந்த அமைப்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மூலமே சாத்தியப்படுத்தலாம் என்ற யதார்த்தமான நிலைப்பாட்டையும் நாம் பார்க்கலாம்.
அதேநேரம் நாம் இன்னொரு முக்கிய அம்சத்தையும் கவனத்திற் கொள்ள வேண்டும். - அதாவது தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட இரு சமூகங்கள் இந்நாட்டில் வாழ்கின்றன. ஒன்று தமிழ் சமூகம் மற்றது முஸ்லிம் சமூகம், இவ்விரு சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளும் இடைவெளி
தீவும் தீர்வுகளும் எம்.எம். எம்.நூறுல்ஹக்

Page 29
44
களும் கனத்து பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டவர்களாக குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றவர்கள் உள்ளனரென்பதும் ஒரு யதார்த்தமாகும்.
தமிழ் சமூகத்தில் தோன்றிய அரசியல் தலைமைத் துவங்களும், ஆயுதக் குழுக்களும் "முஸ்லிம்களும் தமிழ் இனம் தான்" என்ற ஒரு மனயை கோட்பாட்டை முன்வைத்த போதிலும் நடைமுறையில் அதாவது அவர்களின் பல்வேறுபட்ட நடவடிக்கைகளே முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசினாலும் அவர்கள் தமிழ் இனத்தின் ஓர் அங்கமல்ல. அவர்கள் தனிப்பட்ட ஓர் சமூகம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
"மதத்தால் மட்டும் தான் வேறுபட்டவர்கள் முஸ்லிம்கள்" என்ற அவர்களின் கூற்று ஏற்கத்தக்கதெனில் தமிழ் மொழியைப் பேசுகின்ற கிறிஸ்தவர்களும் இந்துக்களும் முரண்பட்டு மோத வேண்டுமல்லவா? மோதவில்லையே. ஏன்? மாறாக முஸ்லிம் சமூகத்தை நசுக்கிய சந்தர்ப்பங்கள்தான் எத்தனை? ஒரேயினம் எனக் கூறிவிட்டு முஸ்லிம்களை கைநழுவ விட்டுவிட்டு தமிழ் மக்களின் உரிமை எனக் கோரிய நிகழ்வுகளும் நிறைய உண்டு.
முஸ்லிம் பொலிஸாரை தமிழ் பொலிஸ் காரர்களிலிருந்து தனிமைப்படுத்தி கொன்ற நிகழ்வுகளும், வடமாகாணத்திலிருந்து வெறுங்கைகளோடு விரட்டியடித்த நிகழ்வுகளும் துல்லியமாக தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே சமூகம் அல்ல என்பதை dறைசாற்ற போதுமான சம்பவங்களாகும் ,
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கிடையில் வாழும் மக்களுக் கிடையில் தோன்றியுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு காணும்போது நிச்சயமாக முஸ்லிம் சமூகத்தை தள்ளிவைத்து விட்டு காணமுடியாதென்பதும் ஒரு யதார்த்தமான அம்சமாகி விட்டதையும் நாம் பார்க்கலாம்.
இலங்கை - இந்திய ஒப்பந்தமும் அதன் விளைவாக நடைமுறைக்கு வந்த நிகழ்வுகள் யாவும் பரிபூரண வெற்றியைத் தராது தோல்வி நிலைக்கு இட்டுச் சென்ற காரணிகளுள் முஸ்லிம் மக்களைப் பற்றி அந்த ஒப்பந்தம் சரியாக கொண்டிருக்காமையும் என்பதும் இப்போது நாம் நிதர்சனமாக உணர்கின்றோம்.
எது எப்படி இருப்பினும் வடக்கு, கிழக்கு மக்களிடையே ஓர் இணக்கப்பாட்டை உருவாக்கி அமைதி காண்பதென்றால் முஸ்லிம் சமூகத்தையும் கருத்திற் கொண்டு, அவர்களின் கருத்துக் களையும் உள்வாங்கித்தான் சாத்தியமாகுமென்பதை இலங்கை - இந்திய அரசுகள் மட்டுமல்ல சர்வதேச அரசியல் மட்டங்களிலும் இன்று உணர்த்தப்பட்ட - உணரப்பட்ட ஓர் உண்மையாகும். நிதர்சனங்களை புறக் கணித்து விட்டு வெற்றிப்படிகளில் ஏறலாமென்று நம்புவது - நினைப்பது பகல் கனவாகவே அமையும்,
வடக்கும் கிழக்கும் தனித்தனியாக இருக்கவேண்டும் என்ற கோரிக்கையில் சிங்கள மக்கள் உறுதியாக இருப்பது போல தமிழ் மக்கள் இணைந்திருக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் உறுதியாக இருப்பதும் பட்டவெளிச்சமான உண்மைகளாகும். அப்படியானால் இணைப்பா? பிரிப்பா? என்ற வாக்கெடுப்பில் தீர்மானிக்கும் சமூகமாக - வாக்காக முஸ்லிம்களே இருக்கப் போகின்றார்கள் என்பதும் ஒரு தெளிவான விடயம்.
இந்நிலையில் வாக்கெடுப்பு என்று ஒன்று வந்தால் பலத்த அழிவுகளை முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதனைச் சிலர் உணர்ந்து கொள்ளாது வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் எனக் கோருவது முஸ்லிம்கள் - தம் கைகளினாலேயே தங்கள் கணிகளை குத்துவது போல் தானி அமையும்.
அணிமையில் வடக்கு கிழக்குக்கு அப்பாலுள்ள சிலர் வடக்குடன் கிழக்கு
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

45
இணைவதை முஸ லிம்களுடன் இணைந்து நாம் எதிர்க்க வேணடும் என்ற தோரணையில் சிங்கள சமூக அரசியல் வாதிகள் கூறியுள்ளனர். இது ஆழமாக நோக்கப்பட வேண்டிய ஒரு கூற்று.
محبہ ہی வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களை விட அப்பால் வாழும் முஸ்லிம்களே அதிகம். அதுவும் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களும் இப்போது அதிகரித்திருக்கும் இவ்வேளையில் சிங்கள மக்களின் உணர்வுகளுக்கு எதிராக முஸ்லிம்கள் நடந்து கொண்டால் நிலை என்னவாகும்? என்பதையும் சிந்திக்க வேண்டும். "இந்த நாட்டில் சிங்கள சிங்கம் எழுந்தால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது" என எச்சரிக்கை விடுத்திருப்பதும் நமக்கு புறம்பானதல்ல.
அதே நேரம் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு அப்பால் நாம் நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதில் பாதியை இப்போதே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம. மிகுதியையும் அனுபவித்துக் கொள்ளலாமென்று சமாதானமும் கூற முற்படலாம். ஆகவே விவேகமான போக்கென்றால் வாக்கெடுப்பின்றி ஒரு சுமுகமான தீர்வுக்கு மூன்று சமூகங்களும் வருவதே. V
உண்மையில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் சபையின் கீழ் முஸ்லிம்கள் வாழ்வது சாத்தியமல்ல. விகிதாசாரம் பாதிக்கப்படுவதன் மூலம் பாரிய இழப்புக்களை முஸ்லிம்கள் சுமக்க வேண்டிவரும். இணைப்பின் பின்னர் கிழக்கில் 33% முஸ்லிம்கள் 11% மாக மாற்றம் பெறும் என்று மட்டுமே கூறுகின்றனர். ஆனால் இதனையும் விட முஸ்லிம்களின் வீதம் குறைய சாத்தியம் உண்டு. அதாவது வடக்கு, கிழக்குக்கு அப்பாலுள்ள முஸ்லிம்களில் யாரும் இங்கு குடியேற விரும்பமாட்டார்கள் என்பது நிச்சயமானது. ஆனால் தமிழ் சமூகத்திலிருந்து இது சாத்தியமாகலாம். ஆகவே வீதம் மேலும் குறையலாம் என்பதும் ஒரு பதார்த்தமாகவும் அமையலாம்.
எனவே முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் கோரும் "முஸ்லிம் பெரும் பான்மை மாகாண சபை' ஒன்று அமைவதன் மூலமே முஸ்லிம்கள் ஓரளவு எழுச்சி பெறலாம் தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்பும் நிறைவடையலாம். பரஸ்பர ஒற்றுமையும் வேற்றுமைக்குள் ஒற்றுமையும் காணலாம் அமைதியும் திரும்பலாம். அதுவல்லாது தனித் தமிழ் மாகாண சபை என்றால் இனமோதல்களும் அமைதியின் மையும் பெரும்பாலும் தோன்றலாம்.
முஸ்லிம் மாகாண சபை என்பது வடக்கு, கிழக்கில் தமிழ் சமூகத்திற்கு வழங்கப்படுவது போன்றிருக்க வேண்டும். தனித்துவமாக - அவர்களுக்கு கீழ் இயங்குவதாக இல்லாதிருத்தல் முக்கியம். இதில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்க வேண்டும். இருக்கிறார்கள்.
தொணி டமானின் யோசனையில் முஸ்லிம்களுக்கென்று கூறியிருப்பது தமிழ் சமூகத்துக்கு வழங்கப்படும் அமைப்புக்குள் இயங்கும் ஓர் அமைப்பாகும். இது இன்னுமொரு போராட்டத்துக்கே வழி வகுக்கும். ஆகையால் அவரது யோசனையில் முஸ்லிம்களுக்காக முன்வைத்திருக்கும் அதிகார அலகு அர்த்தமற்றதும் இன மோதலுக்குமே வழிவகுக்கும் என்பதையும் முஸ்லிம்கள் மனதிலிருத்தல் நலம் பயக்கும்.
வடக்கும் கிழக்கும் தனித்தனியாக இருக்க வேண்டுமென்ற கோட்பாடு தமிழர்களுக்கு தீர்வாக எப்படி அமையும் என்பது ஒரு கேள்விக் குறியானது. ஆனால் முஸ்லிம்கள் நன்மையடையலாம் எனக் கூறுவது ஒரு வகையான "கவர்ச்சி” வார்த்தையே தவிர நடைமுயைச் சாத்தியமானதல்ல.
கிழக்கிலங்கையில் குறிப்பாக முழு இலங்கையிலும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டம் அம்பாறை மட்டுமே. அது கூட மிகச் சிறிய முஸ்லிம், சிங்கள சனத்தொகை வித்தியாசத்திலே இன்று இருக்கிறது.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 30
46
முன்னர் அம்பாறை மாவட்டத்தில் மூன்று எம். பீ. க்கள் இருந்தும் சிங்கள குடியேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. இப்போதைய அரசியலமைப்பு தேர்தல் முறையினால் மூன்று முஸ்லிம் எம்.பீ. க்களை இம் மாவட்டத்தில் முஸ்லிம் வாக்குகளினால் பெற்றுக் கொள்வதில் பலத்த நடைமுறைச் சிக்கலிருக்கின்றன.
இப்படியான ஓர் நிலையில் கிழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டால் முஸ்லிம்களின் விகிதாசாரம் பாதுகாக்கப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம் ? கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டமான அம்பாறையில் முதலாமம் இடத்தில் முஸ்லிம்கள், இரண்டாம் இடம் சிங்களவர்கள். (இது சிறிய வித்தியாசமே) மூன்றாம் இடம் தமிழர்கள்.
மட்டக்களப்பில் முதலாம் இடம் தமிழர், இரண்டாம் இடம் முஸ்லிம்கள, மூன்றாம் இடம் சிங்களவர்கள். திருகோணமலையில் முதலாம் இடம் சிங்களவர்கள், இரண்டாம் இடம் தமிழர்கள, மூன்றாம் இடம் முஸ்லிம்கள். இங்கு மூன்று சமூகங்களும் ஏறத்தாழ சமபலம் கொண்டவர்களே.
ஆகவே அம்பாறை, திருமலை மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்களை பிரதேச இணைப்புகள் என்ற பெயரில் சிங்களவர்களின் விகிதாசாரத்தை கூட்டமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இவற்றையெல்லாம் கருத்திற் கொள்ளாது மேற் கை, மத்திய பகுதிகளை அரசியல் தளமாகக் கொண்ட முஸ்லிம் அரசியல் வாதிகள் வடக்கும் கிழக்கும் பிரிய வேண்டுமெனக் குரல் கொடுக்கின்றனர். இது வடக்கு, கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம்கள் மீது கரிசனை கொண்ட கூற்றல்ல. அவர்களின் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்காக கையாளும் ஒரு வகை தந்திரோபாயமாகும்.
"முஸ்லிம்களுக்கு ஆபத்து என்றால் பதவி துறக்க நாங்கள் தயார்; முஸ்லிம்களை பணயம் வைத்து இன்றைய பயங்கரவாதப் பிரச்சினைக்கு முடிவுகள் எடுக்க இடமளிக்கமாட்டோம்" என்றெல்லாம் வீர சூளுரைகளை உதிர்த்ததற்கு மிக அணிமையாக இலங்க - இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதில் முஸ்லிம்களை பணயமாக, கேடயமாக பயன்படுத்தியது பகிரங்கமே. அப்போது சூளுரைகளெல்லாம் மறந்து பெட்டிப்பாம்பாக அடங்கி அதற்கு ஏற்ப நெளிந்து பேசியும் அறிக்கைகளும் விடத் தவறவில்லை. முதுகெலும் பில்லாத இவர்களுக்குப் பின்னால் நிற்ப்து நன்மை பயக்குமா?
வடக்குடன் கிழக்கு இணையக் கூடாது; அதற்கு முஸ்லிம்கள் உதவ வேண்டும் என்று கேட்பதாக இருப்பின் கிழக்கில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் சரியாக வாக்களித்துப் பெறக்கூடிய சூழ்நிலை அதாவது அம்பாறையில் பெரும்பான்மையாகக் கொண்ட ரு கரையோர மாவட்டம் ஏற்படுத்துதல், சிங்கள குடியேற்றம், பிரதேச இணைப்பு முலம் கிழக்கில் அதிகரிக்காமைக் கான உத்தரவாதங்கள் எல்லாம் முன்வைக்கப்பட்ட பின்னர் அல்லவா முஸ்லிம்களுக்கு பிரிவு நன்மை பயக்கும்? அதுவல்லாது வெறுமனே வடக்குடன் கிழக்கு இணைவதற்கு எதிர்ப்பு என்பதினால் மட்டும் முஸ்லிம்களுக்கு எல்லாம் வந்து விடும் என நம்புவது கேலிக்கூத்தாகவே இருக்கும் .
"முஸ்லிம்கள் எல்லாச் சமூகங்களுடனும் நல்லுறவு பூண்டு வாழ வேண்டும்" என் ஆலோசனை கூறுகின்றனர். இது வடக்கு - கிழக்குக்கு புறம்பான ஆலோசனையா? என்றொரு ஐயமும் எழத்தான் செய்கிறது.
இங்கு தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு ஓரளவு நம்மை இழக்காது ஒத்துப் போக வேண்டும். வடக்கு கிழக்குக்கு அப பால் சிங்கள மக்களுடன் நாம் நம்மை இழக்காது ஒத்துழைத்து வாழ வேண்டும். இதற்கேற்ப ஒருபக்கச் சார்பாக கருத்துக் கூறுவது முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்கு உகந்ததல்ல.
உதயம 21 பெப் 92
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

47
முனைப்புடன் நிகழும் சினமூட்டல்கள்
டந்த ஜ"ன் 19 - ஜ"லை 03. 1997க்குரிய சரிநிகர்’ இதழ் 124 ல் , "வாழைச்சேனை
வருமானம்!” என்ற தலைப்பில் பிரசுரமான செய்தியை, சம்பவத்தை ஒட்டிய மேலும் சில நிகழ்வுகளைப் பற்றி குறிப்புகளை இங்கு பதிவு செய்து வைப்பதே இக்கட்டுரையின் இலக்காகும்.
வாழைச்சேனைப் பிரதேசத்தில் மிக அண்மைக் காலமாக என்றுமில்லாதவாறு அடிக்கடி புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற் குமிடையில் சமர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யுத்தக் கெடுபிடியுள் இங்குள்ளோர் சிக்கிச் சீரழிவது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம் போல் ஒட்டிக்கொண்டுள்ளன.
இந்நிலையை இங்குள்ள முஸ்லிம்களும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆயின் இவர்களின் வாழ்க்கையிலும் நிம்மதியை இழக்கச் செய்ததோடு இழப்புக்களையும் சுமக்க வேண்டியதுடன் அச்சத்தோடு வாழ்க்கையை ஒட்டவேண்டிய இக்கட்டான நிலையையும் உருவாக்கியுள்ளது.
இது தவிக்க முடியாத யுத்த ஜுவாலையினால் ஏற்பட்ட தொரு சுமை - மேலதிக வேதனையென ஆறுதல் அடைந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறுவது நியாயமாகி விட முடியும்.
ஆனால் கடந்த மார்ச் 1997களிலிருந்து இப்பிரதேச முஸ்லிம்களிடமிருந்து கட்டாயப்படுத்தி கப்பம் வாங்கும் போக்கை மீண்டும் புலிகள் மேற்கொண்டு வருவதாக
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 31
48
நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் வாழும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இருநூறு இயந்திரப் படகுக்காரர்களிடமிருந்து தலா ஒவ்வொரு இயந்திரப் படகுக்கும் மாதாந்தம் "இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபா பணமாகவும், இருபத்தி நான்கு கலன் டீசலும், இருபது கிலோ மீனும் கப்பமாக வசூலிக்கப் படுவதாக தெரிய வருகிறது.
அவ்வாறாயின் ஒவ்வொரு இயந்திரப் படகுக்காரரும் ஏறத்தாழ 6372= ரூபாவை கப்பமாக புலிகளுக்குச் செலுத்துகின்றனர். இது அவர்கள் மனமொப்பி செலுத்தவில்லை என்பதால்தான் இது குறித்த அதிருப்தியும் முனங்கல்களும் வெளிப்படுகின்றன.
நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் மீது கனரக ஆயுதபாணிகளாக புலிகள் மேற்கொள்ளும் கப்பவசூலிப்பு மனக்கசப்புக்களையும் பகையுணர்வுகளையுமே தங்கச் செய்து விடுகின்றன என்றே கூற வேண்டியுள்ளது.
ஏனெனில் ஏலவே இவ்வாறான போக்கை முஸ்லிம்கள் மீது திணித்த போது அது சினமூட்டலுக்கு வழிவகுத்து சமூக மோதலை ஏற்படுத்தி ஒய்ந்தது வரலாறு. மீண்டும் அப்படியொரு இரத்தக் கறை படிந்த வாழ்வை நோக்கி பயணிப்பது நடைமுறையல்ல.
கசப்பான அனுபவங்களை வழங்கிய வழியில் மீண்டும், மீண்டுமொருமுறை நிலைகொள்ளுதலில் புலிகள் கரிசனை கொள்வதென்பது இன்னுமின்னும் விலகிச்செல்லும் கைங்கரியத்திற்கே உதவவல்லது என்பது மறைவானதல்ல. ஆயின் மீட்சிப் பாதையையும் இந்த நெருக்கடிகள் உடனடியாக நிறுத்தப்படும் வழிவகைகளையும் புலிகளின் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படல் வேண்டும். இல்லையேல் மீண்டுமொரு சமூக மோதலை ஏற்படுத்தி விடக்கூடும் என்ற நியாயமான ஐயத்தை புறந்தள்ளமுடியாது.
கப்பம் செலுத்தத் தவறுவோர் மீது நையப்புடைக்கப்பட்டு தொழில் உபகரணங்களை புலிகள் எடுத்துச் செல்லும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்ற ஐயத்தின் காரணமாகவே கப்பம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் இப்படியொரு நெருக்கடி இம்மக்கள் மீது ஏற்பட்டால் இங்கு வாழும் பலரின் வாழ்வில் வறுமையை ஏற்படுத்திவிட வல்லதாகும்.
இது ஒரு புறமிருக்க "மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த" கதை போன்று புலிகளின் அட்டகாசத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கும் இயந்திரப் படகுக்காரரிடமிருந்து இப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவமும், காவல் துறையினரும் தினசரி 300 கிலோவுக்கு குறையாத மீன்களை எடுத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான கப்பத் திணிப்புக்கள் கண்டிக்கத் தக்கதும், தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுமாகும். இச்செயல் விசனத்தையும் சினமூட்டல்களையுமே விளைவிக்கக் கூடியது. இது ஆரோக்கியமான சூழலுக்கும் சமூக வாழ்க்கை முறைமைக்கும் வேட்டான ஒன்றென்பதும் கவனிக்கத்தக்கதாகும். ཐ་
இப்பிரதேசத்துக்குரியவர்களின் சுமார் இருபதாயிரம் ஏக்கர் பயிர்க்காணிகள்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

49
ஏறத்தாழ பன்னிரெண்டு வருடங்களாக பயிர் செய்யப்படாது உள்ளன. எனினும் இவற்றின் இரண்டாயிரம் ஏக்கர் காணிகளில் பயிர் செய்வதற்கு முஸ்லிம் விவசாயிகள் நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகளுக்கூடாக புலிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தையில் முக்கிய தொனியாக இருப்பது பயிரிடப்படும் காணிகளுக்கு தலா ஏக்கருக்கு “இவ்வளவு கப்பமாக வரியாகச் செலுத்தப்படல் வேண்டும்” என்பது பற்றியே எனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. அதேநேரம் முஸ்லிம் விவசாயிகள் அச்சமின்றி பயிரிடலாமென்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. W
புலிகளின் அழைப்பையேற்று பயிாச்செய்கையில் ஈடுபடலாமா? முன்னரும் நம்பவைத்து காலை வாரியது போல் இம்முறையும் செய்யமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
பயிர்ச் செய்கையின் போது உபயோகிக்கப்படும் உழவு இயந்திரங்கள், வாகனங்கள் என்பவைகளைப் பறித்துச் செல்லமாட்டார்கள் என்பதில் புலிகள் மீது நம்பிக்கை வைக்கலாமா? .
3 வயல் வேலைக்குச் செல்வோரை கடத்திக் கொல்லாதிருப்பர்களா? அதே நேரம் இரவு நேர வயற்காவலுக்கு தங்குவதற்கு அனுமதிப்பார்களா?
3 இப்போது கேட்கும் வரிப்பணத்தை விட பயிர்கள் விளைந்த பின்னர் ஏக்கருக்கு இவ்வளவு என்று அதிகரித்துக் கோரமாட்டார்கள் என்று நம்பலாமா? இப்போது அடிக்கடி தலைகாட்டும் இராணுவம், புலிகளுக்கான மோதல் வலுத்து தொடரான யுத்த சூழல் தோன்றமாட்டாதென்பதற்கு என்ன உத்தரவாதம்?
3 அறுவடை காலங்களில் உற்பத்திப் பொருட்களிலும் கப்பம் கேட்க
மாட்டார்கள் என்பதை எப்படி, எதனை வைத்து நம்புவது?
மேற்படி அச்சம் நிறைந்த நியாயமான ஐயங்களை இங்குள்ள முஸ்லிம் விவசாயிகளும், நிலச்சுவாந்தர்களும் முணுமுணுப்பதாகவும் தெரியவருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒரு நிலையான முடிவில் புலிகள் இருப்புக் கொள்வதில்லை என்பதாகும்.
பேச்சுக்கள், உறுதிமொழிகள் ஒருபுறமாகவும், செயல்கள் அதற்கு எதிர் சாயலில் அமைந்துவிடும் பாங்கை புலிகள் கைக்கொள்வதில் கரிசனை கொண்டவர்கள் என்று சந்தேகத்துடனான நம்பிக்கைக்கு வழிவகுக்கின்றன என்றே கூறவேண்டும்.
பொதுவாக கப்பம் கோருவது விரும்பத்தகாத செயல் என்பதில் உறுதி கொண்டவர்கள் இங்குள்ள முஸ்லிம்கள் என்பது தெட்டத்தெளிவானது. ஆகவே இந்நடவடிக்கை இனவாதமாக, சமூகவிரோதச் செயலாக கணிக்கப் படுவதையும் நாம் புறந்தள்ளிவிடல் முடியாது.
ஆயின், சிந்தனை பூர்வமாகவும் சிநேக பூர்வமாகவும் முஸ்லிம்களின் மனதை வென்று திருப்தி கொள்ளும் வகையில் புலிகள் நடந்து கொள்ள
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 32
'50
வேண்டும். ஏனெனில் கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களைக் கருத்திற் கொண்டு முஸ்லிம்களின் தனித்துவங்களை கலைத்து விடாதளவில் புலிகள் தங்கள் செயற்திட்டங்களை நெறிப்படுத்தல் வேண்டும்.
இதுவே எதிர்காலத்தில் இப்பிரதேச குடியிருப்பாளர்களான தமிழ்-முஸ்லிம்
மக்களுக்கிடையில் புரிந்துணர்வு வயப்படுத்தலை ஏற்படுத்தி அமைதியான உறவு நிலை கொள்ள வழியாகுமென நாம் நம்பிக்கை வைக்கலாம்.
இது போன்ற வேறுபல நிகழ்வுகள் திருமலை வாழ் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளமையையும் அறிய முடிகிறது. இச்சம்பவங்கள் முஸ்லிம்களின் தன்மானத்தில் அல்லது உரிமைகளில் கைவைப்பதற்கு ஒப்பானது என்பது மிகையான கூற்றல்ல. இத்தகைய நிகழ்வுகள் "பழிக்குப்பழி' என்ற ஆட்டத்தை ஏற்படுத்தவல்லது என்பது கடந்த கால நிகழ்வுகளே.
இப்படி சினமூட்டல்கள் சிறுகச்சிறுக தூவப்படும் சந்தர்ப்பங்களில் சில வேளை அது சமூகவிரோத மோதலைத் தந்ததும், உடனே "தமிழ்-முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்துவதில் மூன்றாம் சக்தி வெற்றி கண்டுள்ளது” என அறிக்கைகள் விட்டதுமே எஞ்சிப்போனதாக நிகழ்ந்தன.
இந்த அமர்க்களத்தில் மோதலுக்கு தூபமிட்ட சினமூட்டல் நிகழ்வுகள் யார் தரப்பிலிருந்து தொடங்கப்பட்டது என்பது மறைந்து விடுவதுண்டு. இந்நிலையினால் நாம் கண்ட பயன்தான் என்ன? அழிவுகளும் துயரங்களும் தவிர வேறென்ன?
வெள்ளம் வந்த பின்னர் அணை கட்டுவதிலும் பார்க்க முன்னர் அணை கட்டுவதில்தான் நன்மைகள் உண்டு. எனவே சமூக மோதலைத் துவங்கி இரத்தக் கறைகளை ஒட்டிய பின்னர் சமாதானம் பற்றி சிந்திக்கும் போது சில அழிவுகளை ஏற்றுக்கொண்ட நிலையில்தான் சாத்தியப்படுத்தலாம்.
ஆகவே இதனை ஆரம்பத்திலிருந்து அதாவது சமூக மோதலுக்கு காரணமாகின்றவற்றை இனங்கண்டு அவை யார் தரப்பில் நிகழ்வுக்கான முனைப்புக்கொண்டு காணப்படுகிறதோ அதனைத் தடுக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுவதானது அழிவுக்கு முன்னரே தடைச்சுவர் எழுப்பிவிட்டதாக அமையும்.
இப்போது நிகழ்ந்துள்ள சம்பவங்களிலிருந்து அதாவது நாம் மேலே சுட்டிக் காட்டியுள்ளவைகளை வைத்து நோக்கும் போது கிழக்கு மாகாண முஸ்லிம்களிடம் மோதலை உருவாக்குவதற்கான சினமூட்டலில் புலிகள் இறங்கியிருப்பதாகவே கொள்ள முடிகிறது.
ஆகவே புலிகள் முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் தங்களின் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டிய காலகட்டத்தின் மீது உள்ளன ரென்பது இன்றைய நிலையும் அவாவுமாகும்.
விவேகமான நடைமுறைகளைக் கைக்கொண்டு தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவில் சுமுகமான உறவு நிலை கொள்ளும் வழிமுறைகளில் புலிகள் அக்கறை செலுத்த வேண்டியுள்ளதென்பதை மறக்காதவரை தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையில் பரஸ்பர உறவு விடுபடாதென்பது அப்பழுக்கற்ற உண்மை யாகும.
-offsif -
இதழ் 127 - 1997
தீவும் தீர்வுகளும் h− எம்.எம்.எம்.நூறுல்ஹக்

51
இலங்கைத் தீவும் இலக்கில்லாத் தீர்வுகளும்!
களாகக் கொண்ட நாடு இலங்கை இன்று இந்த pவின சமூகங்களுக்குள் நிலவுகின்ற முரண்பாடு களை மூன்று வகையாக நாம் இனம் காணலாம்.
邬 ங்களம், தமிழ். முஸ்லிம் மக்களை பிரதான சமுகங்
1 சிங்கள-தமிழ் மக்களுக்கிடையிலான இனவாதப்
போக்கு அல்லது பகை உணர்வு.
2 சிங்கள-முஸ்லிம் மக்களுக்கிடையிலான இனவாதப்
போக்கு அல்லது பகை உணர்வு.
3 தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையிலான இனவாதப்
போக்கு அல்லது பகை உணர்வு.
இத்தகைய நிலை நெடுங்காலமாகவே இருந்து வருகிறது இந்தப் போக்குகளை இலங்கையின் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம், பிற்பட்ட காலம் என வகைப்படுத்திப் பார்க்கலாம்.
காலத்துக்குக் காலம் இம்மூவின மக்களிலிருந்து தோன்றிய தலைமைத்துவங்கள் (முஸ்லிம்களின் தனித்துவமான அரசியல் தலைமைத்துவம் என்பது 1986களுக்கு முன்னர் இருக்க வில்லை. மாறாக இந்நாட்டை ஆளுகின்ற வர்க்கம் காட்டுகின்ற தலைமைத்துவமே இருந்து வந்தது. இதன் விபரம் பின்னர் இடம் பெறும்) இந்நாட்டில் நிலவிய பிரச்சினைகளை எதிர் கொண்ட விதம் சரியா? பிழையா? என்றொரு விவாதத்தையும் நமக்கு மத்தியில் விட்டுள்ளது.
பல்லாண்டு காலமாக பிரச்சினைகள் தீர்க்கப்படாது மேலு பிரச்சினைகள் வேரூன்றி வந்திருப்பதைக் காணும் போது அந்தத் தலைமைத்துவங்கள் மீது சந்தேகம் எழுவதென்பது இயல்பான ஒன்றெனக் கொள்ளலாம்.
இருந்த போதிலும் பிரச்சினைகள் தீர்க்கப்படாது
தீவும் தீர்வுகளும் எம்.எம். எம்.நூறுல்ஹக்

Page 33
52
வளர்ந்தோங்கியதற்கு பின்வரும் காரணங்களும் ஒருவகையில் உறுதுணையாக அமைந்திருக்கலாம் என நாம் நம்புவது மிகையானதொன்றல்ல.
பிரச்சினைகள் தோன்றிய எழுவாய் ஒருபக்கமிருக்க வேறாரு பக்கமாய் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்பட்டமை.
பிரச்சினைகளுக்கு தீர்வு இதுதான் என இரு தரப்பிலும் ஏற்றுக்கொண்ட பின்னர் எழுதப்பட்ட ஒப்பந்தங்களும் அதனையொட்டி பிரகடனப்படுத்தப்பட்ட சட்டங்களும் நடைமுறைக்கு கொண்டுவராது கிழித்தும் - ஒதுக்கியும் வந்தமை.
தற்துணிவின் பேரில் அதாவது முத்தரப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் இரு தரப்புக்களுக்குள் உருவான ஒப்பந்தங்கள்.
இத்தகைய சூழல்கள் தீர்வுகளை பின்தள்ளி வந்திருப்பதை வரலாறு நன்கு புடம் போட்டுக் காட்டத் தவறவில்லை எனலாம். வரலாறுகளிலிருந்து பாடம் படிக்கவில்லையானால் அந்த வரலாற்றுத் தடயம் அர்த்தமற்றதாகிவிடக்கூடும்.
இலங்கையின் பிரதான சமூகங்களுக்குள் காணப்படும் பிளவு - வேறுபாடுகள் இனவாதமா? அல்லது ஆளும் வர்க்கத்துக்கெதிரான சதியா? என்று கூட தலைமைத்துவங்கள் முரண்பட்டுள்ளன.
ஆகவே பிரச்சினைகளின் தன்மை என்ன? என்பதைக் கூட நண்குணராத சூழலில் வகுக்கப்படும் தீர்வுகள் எப்படி தீர்வாக மாறி சமாதானம் - அமைதியைக் கொண்டுவர முடியும்?
"தமிழ் மக்களை ஆயுதம் ஏந்தும் நிலைக்கு கொண்டு வந்தது இந்நாட்டை ஆண்ட வர்க்கங்கள்தான். ஆகையால் நாங்கள் இந்நிலைக்கு வந்தது நிர்ப்பந்தமே தவிர விரும்பியல்ல. எங்கள் தரப்பு சுத்தமானதும் நியாயமானதும் கூட"
இந்தக் கருத்தை ஆயுதம் தரித்த அனைத்து தமிழ் குழுக்களும் அவரவர் பரிபாசையில் - சொற்றொடரில் அழுத்தம் கொடுத்து விளக்கியுள்ளன. (இந்த நிர்ப்பந்தத்தை முஸ்லிம்கள் மீது திணிப்பது தமிழர் தரப்பில் நியாயமாகுமா? என்பதைப் பின்னர் பார்ப்போம்)
இன்று மிதவாதிகள் என்று வர்ணிக்கப்படும் தமிழ் தலைமைத்துவங்கள் அன்றும் இன்றும் தங்கள் சமூகத்தின் புறக்கணிப்பைத் தெளிவாக விளக்கித் தீர்வுகளை அஹிம்சை வழியில் தேடி நாடி நிற்கின்றனர்.
அப்போதைய ஆட்சியாளர் - பிரச்சினைகள் தோற்றம் பெற்றபோது ஆளும் வர்க்கமாக இருந்தவர்கள் எதிர்த்த போதும் நிலமைகளின் அகோரம் விளங்கி தீர்வுகள் காண்போம் என வந்தனர். இதன் வெளிப்பாடாக சில ஒப்பந்தங்களும் உருப்பெற்றன. -
இந்த நிலையினை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி மக்களை “இனவாத சகதி"யில் அமிழ்த்தித் தாங்கள் ஆட்சி வாகனம் ஏறத்துடித்தனர். அவர்களது எண்ணமும் நிறைவேறியது. தூய நோக்கும் உண்மையும் அங்கு புதையுண்டு கிடந்தது.
இப்படி மாறி மாறித் தோன்றிய இடர்களினால் தமிழ் இளைஞர்கள் வெகுண்டெழுந்தனர். அஹிம்சை தலைமைத்துவங்களை நம்பிப் பயன் இல்லை. ஆயுதப் போராட்டத்தின் மூலமே விடிவு காணலாம் எனப் புறப்பட்ட குழுவை வளர்த்துவிட்ட பங்கு தமிழ் மிதவாத தலைமைத்துவங்களுக்கும் உண்டென்பது
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

53
தெளிவா னது.
சரியோ பிழையோ ஆயுதப்போராட்டம் உச்சநிலையினை அடைந்த போது ஆட்சியாளர்கள் தீவிரவாதிகள்" என வர்ணித்துக்கொண்டே பேச்சுவார்த்தைக்கு ஆயுதக் குழுக்களை அழைத்தனர். விரும்பியோ விரும்பாமலோ அவர் (களுடன் ஆயுதமேந்திய இளைஞர்) களுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் எனும் பேருண்மையை ஜீரணித்துக் கொண்டனர் அன்றைய ஆட்சியாளர்கள்.
நம் நாட்டிலும் அயல் நாட்டிலும் முடுக்கிவிடப்பட்ட சமாதான பேச்சுவார்த் தைகள் சிங்கள - பெளத்த மதத் தலைவர்களின் வெகுண்டெழுந்து பிரயோகித்த தகாத வார்த்தைகளுக்குள் பேச்சுவார்த்தை பிசுபிசுத்துக் கொண்டது. இதிலிருந்து இன்னும் சில உண்மைகளை நாம் அறியலாம். ஆட்சி வாகனத்தில் தொடர்ச் சியான நிலை கொள்ளுதலுக்கும். எதிர்க்கட்சிகள் ஆட்சிவாகனத்தில் ஏறிக்கொள் வதற்காகவும் தமிழர் பிரச்சினைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு வந்திருப்பதையும் ஆளும் வர்க்கத்துக்குள் புதையுண்டிருந்த சில இனத்துவேச சிந்தனையாளர்களின் வெளிப்பாடுகளையும் தரிசிக்கின்றோம்.
இந்த நாடு சிங்கள மக்களுக்கு சொந்தமானதும் இங்கு பெளத்தம் மட்டுமே உயர்ந்த சமயம் எனக் கூறிக்கொண்டு அதன் விழுமியங்களின் பாதுகாப்புக்கு மாத்திரமே நாம் என்ற கொள்கையிலிருந்து சிங்கள மக்கள் - குறிப்பாக ஆளும் வர்க்கம் விடுபடுவதன் மூலமே சிங்கள - தமிழ் உறவில் நல்லிணக்கத்தை கொண்டுவர முடியும்.
அண்மையில் தொடங்கப்பட்ட அரசு - புலிகள் பேச்சுவார்த்தைகள் கூட சரியான மையத்திலிருந்து துவங்கப்பட்டுள்ளதா? என்பதும் கேள்விக்குரியதே. ஏனெனில் மிக அண்மையில் புலிகள் தரப்பிலிருந்து யுத்த நிறுத்தம் மீறப்பட்ட துடன் உடன்பாட்டிலிருந்தும் புலிகள் விலகிக்கொள்வதாவும் அறிவித்திருந்தது தெரிந்ததே. இருந்த போதிலும் புலிகளிடம் இதுதான் எங்கள் கோரிக்கை எனச் சொல்வதற்கு திட்டமிருக்கிறது. அது நடைமுறைச்சாத்தியமா? என்ற கேள்விக்குப் புறம்பாக புலிகளின் கோரிக்கைகளுக்கு மாற்றீடான திட்டங்களையும் பரிசீலிக்க புலிகள் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தனா.
அதேநேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு என்பது பண்டா செல்வா ஒப்பந்தத்திலிருந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் வடக்கு - கிழக்கு பிரிந்து வரும் அதிகாரங்களைக் கொண்டது. புலிகளின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றும் இதுவரை திருத்தம் காணாததுமான வடக்கு- கிழக்கு இணைந்த தனியான ஆட்சி என்பதற்கு எதிரானதுமாகும்.
எதிரும் புதிருமான அடிப்படையிலும் சமாதானம் தேடி பேச்சுவார்த்தையில் அரசும் புலிகளும் இறங்கினர். உண்மையில் இந்தப் பேச்சுவார்த்தை சமர்தானம் நாடியதா? அல்லது இருதரப்பிலும் இராணுவ ரீதியான பலப்படுத்தலுக்கான பூச்சாண்டியா? என்று அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியது எவ்வளவு பொருத்தம் என்பதை இப்போது நாம் உணரலாம்.
அண்மையில் நடைமுறையிலிருந்த யுத்த தவிர்ப்பு ஒப்பந்தம் மீறப்பட்டது. ஏன்? வெவ்வேறு கோணங்களிலிருந்து பிரச்சினைகளை அணுகியதன் பரிசு அது. ஒன்றுபட்ட கருத்துக்களில் அல்லது விட்டுக் கொடுத்தல் எனும் நிலையிலிருந்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருந்தால் தோல்வியைத் தழுவியிருக்காது. இது ஒரு யதார்த்தப் போக்கின் வெளிப்பாடு.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 34
54
இலங்கை அரசு தமிழ் மக்களின் குறிப்பாக வட பகுதி மக்களின் மனங்களை வென்று தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளவும், சர்வதேசத்தின் நல்லெண்ணத்தையும் தன்பக்கம் திருப்பவும், தனது இராணுவங்களை பலப்படுத்திக்கொள்ள தேவையான அவகாசங்களை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் தங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது எனலாம்.
புலிகள் தரப்பில் குறிப்பாக குடாநாட்டு மக்களிடம் சிங்கள தலைமைத்துவங்க ளெல்லாம் "ஒரே குட்டையில் ஊறிய மட்டடைகள்" அவர்களை நம்பமுடியாது எனும் நிலையினை தெளிவுபூட்டவும் தங்கள் இராணுவ பலத்தைக் கூட்டிக்கொள்ளவும், சர்வதேச கவனத்தை தங்கள் பக்கம் கொண்டுவரவும் இந்தப் பேச்சுவார்த்தையில் (புலிகள்) முகங்கொண்டது எனலாம். புலிகள் அண்மையில் எதிர்பாராத வேளையில் ஒப்பந்த விலகலும் தாக்குதல் மேற்கொண்டதும், வெற்றிகரமாக நிறைவேற்றியதும் அரசுக்கு ஓர் அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும் என்பதே புலிகளின் நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. புலிகளின் பலத்துக்கு இதுவோர் எடுத்துக்காட்டாக இல்லையானாலும் அச்சுறுத்தல் கொடுக்கும் சக்திகள் இன்னும் தங்களிடம் இருக்கிறது என்பதைக் காட்டப் போதுமானதே. ஆயினும் புலிகளின் இந்தச் செயல் அநாகரீகமானதே. நமது நாடு இருண்ட யுகத்திலிருந்து விடுபட்டு வெளிச்சத் (தில் சமாதானத்) தில் முகம் புதைத்துக் கொள்ளவே சிங்கள - தமிழ் - முஸ்லிம் மக்கள் விருப்பத்தோடு உள்ளனர். சமாதானம் தோன்றி சுபீட்சம் பெறவேண்டும் என்ற எண்ணமே இந்நாட்டு மக்களின் மனங்களில் நிலைகொண்டிருப்பது கண்கூடு.
சமாதானம் தோன்றுவதற்கு என்ன விலையினைச் செலுத்தவும் மக்கள் தயாரான நிலையில் இருக்கின்றனர் என்பதை இவர்களின் ஒவ்வொரு செயல்களும் நமக்குத் தொட்டுக்காட்டத் தவறவில்லை.
பிரச்சினைகளின் மையமென்ன ? அதற்கு வேற்றுமையில் ஒற்றுமை காண்பது எவ்வாறு? என்பன போன்ற அம்சங்களைக் கொண்ட அணுகுமுறையில் அண்மைய பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. ஆதலால்தான் இத்தனை விரைவாக தோல்வியைத் தழுவிக்கொண்டது.
பேச்சுவார்த்தை என்பது வெறும் பேச்சாக அல்லாது பிரச்சினைகளின் மையத்தை இனங்கண்டு அதிலிருந்து பேச்சுவார்த்தைகள் நடைமுறைச் சாத்தியமான திசையில் நகர்த்துவதன் மூலமே சிங்கள - தமிழ் மக்களுக்கிடையில் இணைந்த உறவை கட்டியெழுப்பலாம் எனும் உண்மைகளை மறக்காத வரை வெற்றி நிச்சயமானது.
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்த நாட்டைத் துண்டாட வேண்டும் என்றோ - ஆள வேண்டுமென்ற எண்ணமோ இல்லை. சிங்கள மன்னர் காலம் தொட்டு இந்நாட்டின் ஆட்சிபீடங்களை அலங்கரித்தவர்கள் வரை தோள்கொடுத்து வந்தவர்கள் முஸ்லிம்கள் என்பது வெள்ளிடை
D60)6)uJIT601.g.
இந்நாட்டின் நாலாபுறங்களிலும் சிதறுண்டு முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஆனால் பல இடங்களில் மிகக் குறைந்த தொகையுடையவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இலங்கை முஸ்லிம்களில் மூன்றில் இருபகுதிகள் வடக்கு கிழக்குக்கு அப்பாலும் மூன்றில் ஒரு பகுதி வட - கிழக்கிலும் நிலை கொண்டுள்ள 6T町。
இலங்கையின் ஆதிக்குடிகளில் முஸ்லிம்களும் அங்கம் கொள்கின்றனர்.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

SS
இலங்கையின் வரலாறு தொடங்கும் போது முஸ்லிம்களையும் உள்ளடக்கியே தொடங்குகிறது.
முஸ்லிம்களின் பற்று எனும் போது அவர்கள் சார்ந்துள்ள இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியில் அளவு கடந்த பக்தியும் பற்றும் கொண்டுள்ளனர். இஸ்லாத்திற்கெதிரான கோஷங்களை - கோட்பாடுகளை எதிர்கொள்வதில் பின்நின்றதாக சரித்திரமில்லை எனலாம்.
இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். பிரச்சினைகளின் தன்மைகள் வாழ்விடத்தைப் பொறுத்து மாறுபட்டுக் காணப்படுகின்றன. வடக்கு - கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் இன்னல்கள் ஒருவகையானவை.
அதே நேரம் வட - கிழக்கிற்கு அப்பால் வாழ்கின்ற முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளின் மையம் ஒருவகையானது. இருப்பினும் பொதுவாக எல்லா முஸ்லிம்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும்உள்ளன. இவைகளை நாம் வரலாறுகளிலிருந்தும் விளங்கக் கூடியதாகவுள்ளது.
இலங்கை முஸ்லிம்களில் பலர் வியாபார அடிப்படையில் நிலை கொண்டுள்ளனர். குறிப்பாக நகரங்களில் சில கடைகளின் சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள். பெரும்பான்மையான முஸ்லிம்கள் கூலித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விரல் விட்டெண்ணக் கூடியவர்கள் அரச உத்தியோகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் கடமையாற்றுகின்றனர்.
இலங்னையின் சில நகரங்களில் முஸ்லிம் வியாபார ஸ்தாபனம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இதனைக்கண்டு காழ்ப்புற்றவர்களின் எரிச்சல் உணர்வின் உந்துதலின் பேரில் பெரும்பான்மையினர்கள் முஸ்லிம்கள் மீதும் அவர்களது உடமைகள் மீதும் குறிவைத்து தாக்கியுள்ளனர்.
இத்தகைய காட்டுத்தர்பர் ’நடவடிக்கையில் சிங்கள - தமிழ் மக்கள் இறங்கியிருப்பதை நாம் தெளிவாகப் பார்க்கலாம். குறுகிய பார்வையினால் எழுகின்ற இனத்துவேச வேட்காட்டுக்குள் முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்டு வந்திருப்பதையும் நாம் அவதானிக்கலாம்.
இலங்கையில் ஏற்பட்ட சிங்கள - முஸ்லிம் கலவரங்களிலும், தமிழ் - முஸ்லிம் கலவரங்களிலும் ஏறத்தாழ இந்த காழ்ப்புணர்வுத் தன்மையினை அவதானிக்கும் அதேவேளை தமிழ் - முஸ்லிம் கலவரங்களின் பின்னால் அரசியல் காரணங்கள் புதையுண்டு கிடப்பதை நாம் பார்க்கலாம். ,
சிங்கள - முஸ்லிம் கலவரங்களினால் இதுவரை முஸ்லிம்கள் அடைந்த சேதங்களையும், தமிழ் - முஸ்லிம் கலவரங்களினால் அடைந்த முஸ்லிம்களின் சேதங்களையும் ஒப்பீட்டளவில் பார்த்தால் தமிழ் - முஸ்லிம் இனமோதலினாலேயே அநேக முஸ்லிம்களின் உயிர்களும் உடமைகளும் இழக்கப்பட்டிருக்கிறது என்பது மறைவானதல்ல.
1915, 1974, 1982 ஆகிய காலகட்டத்தில் சிங்கள முஸ்லிம் கலவரங்களும் இடையிடையே நிகழ்ந்த தென்பகுதி கடை எரிப்புக்களும் அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் இன மோதலாகும். இதுதவிர பாரிய இனக்கலவரங்களும் ஏற்படவில்லை எனலாம். வெகுசன தொடர்பு சாதனங்கள் ஊடாக முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தும் கதாபாத்திரங்கள் மூலமும் தவறுகளில் ஈடுபடுவோர்களை இனத்தின் - சமூகத்தின் பெயரால் இனங்காட்டி செய்திகள்
தீவும் தீர்வுகளும் r. எம்.எம்.எம்.நூறுல்ஹத்

Page 35
bS
வெளியிடல் போன்ற அடிப்படைகளிலும் சிங்கள - முஸ்லிம் முரண்பாடுகள் கவனம் பெறுகிறது.
முஸ்லிம்களின் தனித்துவம் என்பது இலங்கையின் பிரதான கட்சிகள் பெரும்பான்மையோர் காட்டும் அல்லது ஆளும் வர்க்கம் தரும் தலைமைத்துவத்தையே முஸ்லிம்கள் ஏற்க வேண்டும் என்ற குறுகிய மனோநிலையையும் சிந்தனைகளையும் பெரும்பான்மையினர்களிடம் நாம் காணக்கூடியதாகவுள்ளது.
இப்படியிருப்பதன் மூலம் வாக்குச்சேகரிக்கும் முகவர்களாகவும் வெற்றிக்குத் துணையாக முஸ்லிம்களைப் பயன்படுத்திவிட்டு சில அற்ப சலுகைகளை வழங்கி தங்களுடன் தங்க வைத்துக் கொள்ளும் கைங்கரியம் மூலம் முஸ்லிம்களின் தனித்துவமான அரசியல் பலத்தை நசுக்கலாம் என்பதில் அவர்கள் கண்ணுங் கருத்துமாக இருந்து வந்திருப்பதைக் காணலாம்.
சிங்கள - முஸ்லிம் இனக்கலவரங்கள் மூலம் பாரிய அளவில் சேதங்கள் ஏற்படுத்தவில்லை என்பதும் உண்மையே. ஆனால் எதிர்காலத்தில் இப்படியொரு இனமோதல் தோன்றினால் பாரியளவில் சேதங்களை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தலாம்.
ஏனெனில் இதற்கு ஏதுவாகவே முஸ்லிம்களின் வதிவிடங்கள் இயற்கையாக அமைந்து விட்டன. சிங்கள மக்களால் சூழப்பட்ட முஸ்லிம் குடியிருப்புகள் அநேகமுள்ளன. ஆதலால் இன மோதல் என்று வந்தால் பாரிய பாதிப்புக்களைத் தரவல்லது என்பது நிதர்சனமே.
வடக்கு - கிழக்குக்கு அப்பால் வாழ்கின்ற முஸ்லிம்களில் ஓரளவு கணிசமாக ஒன்றுபட்டு வாழ்வது கொழும்பு, கண்டி, புத்தளம், காலி, வெலிகாமம் போன்ற பிரதேசங்களைக் கூறலாம். இவர்கள் விரல் விட்டெண்ணக்கூடிய குடும்பங்களே. அநேக குடும்பங்கள் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டு சூழப்பட்ட பிரதேசங்களே.
இந்நிலையில் நாடு தழுவிய சிங்கள, முஸ்லிம் இன மோதல் வந்தால் அரச படைகள் தங்கள் கரங்களை விரித்தோ அல்லது இறுக மூடியோ இருந்தால் முஸ்லிம்கள் (வடக்கு, கிழக்குக்கு அப்பால் வாழ்வோர்) இருந்த இடம் தெரியாமல் போய்விடும் "அபாயம்” இருக்கின்றன.
இவற்றையெல்லாம் கருத்திற்கொள்ளாது வெறும் பந்துகள், மிருகங்கள் வீடுகளுக்குள் அல்லது வளவிற்குள் நுழைவதன் மூலம் நுழைந்த பொருளின் சொந்தக்காரருடன் கத்திக்குத்து, அடிதடியென முஸ்லிம்களில் சிலர் இறங்குகின்றனர். இது விவேகமான நடைமுறையல்ல.
இனவாத நோக்கில் அல்லது சமயத்துடன் ஒட்டிய முஸ்லிம்களின் விடயங்களில் கேவலமாகப்பேசி இழிவுபடுத்தும் கைங்கரியங்களில் பெரும்பான்மையினர் இறங்கினால் அதனை நியாயமான முறையில் அமைதியான வழியில் தீர்த்துக்கொள்வது எப்படி என்று சிந்திக்க வேண்டுமே தவிர அடிதடிகள் மூலம் தீர்வுகாண முற்படுதல் கூடாது. இல்லையேல் இன்னும் வேறு சில சிக்கல்களைத் தரலாம்.
சில இடங்களில் கட்டியாக குவிந்திணைந்து வாழ்கின்ற செருக்கு மிகு உணர்வு அடிதடியில் இறங்கத்தூண்டுமானால் இதன் முடிவு பாரிய இழப்புகளுக்கு வழியாக அமையும்.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

57
சிதறுண்டு- பிளவுபட்டு வாழாது ஒன்றிணைந்து வாழ வேண்டும். அதுவே பலமான வாழ்விற்கு வழியென இஸ்லாம் விளம்பரப்படுத்துவதையும், மோதலில் குதிப்பதற்கு முன்னர் (முஸ்லிம்கள்) சிந்திக்க வேண்டும். பலத்தை கவனத்திற்கொள்ளாது அடிதடியில் இறங்குவதன் மூலம் வெற்றியோ உயர்ச் சியோ அடைய முடியாது என்பது தெளிவு.
ஒன்றுபட்டுத் தான் வாழ இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆகையால் சிதறுண்டு அங்குமிங்கும் வாழும் மக்களைப் பற்றி நாங்கள் கட்டியாக வாழ்பவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டியது அல்ல. இப்படியே நாம் நடப்போம் என்று முட்டாள் தனமாகக் கூறுவோரும் உண்டு.
சிந்தனைக்கு இடம் கொடுக்காது வெறுமனே ஆயுத பலத்துடன் மோதலில் இறங்கலாம் என்பது இஸ்லாமியர்களின் நடைமுறைகளாக இருக்க முடியாது. மாறாக. அது அழிவுகளைத் தேடித் தரும் மனோ இச்சையாகவே அமைய (փIգակմ). *
பயந்து வாழ வேண்டும்: - கோழைகளாக மாறவேண்டும் முஸ்லிம்கள் என்று மேற்படி கருத்துக்களுக்கு அர்த்தம் கொண்டால் அது அறிவுபூர்வமான தல்ல. நிலைமைகளை அனுசரித்து விடடுக் கொடுத்தல் புரிந்துணர்வுத் தன்மையின் வாழப் பழக வேண்டுமென்பதை வலியுறுத்துவதே மேற்படி கருத்துக் களின் உண்மை அர்த்தமாகும்.
சிங்கள - முஸ்லிம் மக்களின் முரண்பாடுகளை உரிய முறையில் விளங்கி அதனை நேரிய வழியில் தீர்த்துக்கொஸ்ள தூய எண்ணத்துடன் இரு தரப்பு தலைமைத்துவங்களும் தயாராக வேண்டும். இதன் மூலமே சுமூகமான உறவு இவ்விரு சமூகங்களுக்குள் தோன்ற முடியும்.
இவைகளைக் கருத்திற்கொண்டு மனோ விசாலத்துடன் நேர்மையாக மக்களை நெறிப்படுத்துவதன் மூலமே மகிழ்வான மன நிம்மதியான உறவு நிலவ முடியும் எனும் பேருண்மையை மறக்கலாகாது. அதுவே உயர்ச்சிக்கு வழியாகும்.
தமிழ் - முஸ்லிம் மக்களின் இடைவெளி அல்லது வடக்கு கிழக்குக்கு அப்ப்ால் இல்லை எனக் கூறலாம். எவ்வாறு வடக்கு கிழக்குக்கு அப்பால் வாழுகின்ற முஸ்லிம் மக்களை பூரணமாக சிங்களப் பேரினவாதம் பற்றிக் கொள்கின்றதோ அப்படியே தமிழ்ப் பேரினவாதம் முஸ்லிம்களை வடக்கு கிழக்குக்குள் பூரணமாக அப்பிக்கொண்டுள்ளது.
தமிழ் - முஸ்லிம் மக்களின் இனத்துவேச முரண்பாடு என்பது பொருளாதாரம், அரசியல் எனும் காரணத்தால் உருவான ஒன்று. இது இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் என்று இன்று வரை காணப்படுவது மிகவும் வேதனையான சங்கதி.
முரண்பாடுகளுக்கு மத்தியிலும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பரஸ்பர உறவும் நல்லெண்ணமும் வளர்ந்து வந்திருப்பதை வரலாற்றில் காணலாம். இதற்கு மாறாக ஏறத்தாழ பதினொரு வருடங்களாக வரலாறு மாறிக் கொண்டிருப்பதையும் நாம் அவதானிக்கலாம்.
இந்த இடைவெளியின் தாக்கம் இன்று உணரப்படாமல் இருந்தாலும் நாளைய சந்ததிகளின் மத்தியில் பாரியரூபம் எடுத்து தாண்டவம் ஆடத் தொடங்கினால் பிரதேசமே அழிவில் தஞ்சம் பெற வேண்டியதாகிவிடும்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 36
என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
உண்மையில் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் பிணக்குகள் வரக் காரணம் என்ன? முஸ்லிம்களையும் உள்ளடக்கித் தமிழர்கள் ஆள வேண்டும்: அதாவது தலைமைத்துவம் தமிழர்களிடம் இருக்க வேண்டும்; வடக்கு கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு மட்டுமே பாரம்பரியப் பிரதேசம்: ஒப்பீட்டளவில் தமிழர்களை விட முஸ்லிம்கள் அதிக கடைகளுக்கு சொந்தக்காரர்கள் எனும் காழ்ப்புணர்ச்சி முஸ்லிம்கள் என்று ஒரு தனியான இனம் இல்லை; அவர்களும் தமிழர்களே எனும் கூற்றுக்களினால் முரண்பாடுகள் தோன்றுகிறதெனலாம்.
தமிழ் சமூகத்திலிருந்து தோன்றிய மிதவாத அரசியல் தலைமைத்துவங்கள் தொட்டு ஈற்றில் வெளிக்கிளம்பிய ஆயுதமேந்திய அத்தனை அமைப்புக்களும் முஸ்லிம்களை இம்சைப்படுத்தி வந்திருக்கின்றன. முலிம்களில் இருந்து முஸ்லிம்களுக்கான தலைமைத்துவம் தோன்றிவிடலாகாது என்பதில் சிங்கள தமிழ் பேரினவதம் தொடர்ந்திருந்து வந்திருப்பதை தரிசிக்கலாம்.
இது மாத்திரமன்று. ஆயுதக் குழுக்கள் முஸ்லிம் கல்விமான்களையும, உத்தியோகபூர்வமாக பயிற்சி பெற்ற முஸ்லிம் பொலிசாரையும் வேறாக்கி கொன்றொழித்த நிகழ்வுகளும் இந்த பின்னணியில் நோக்கத்தக்கது.
எவ்வாறு சேர் பொன். இராமநாதன் போன்றோர்களின் கூற்றுக்கள் நிராகரிக்கப்பட்டு முஸ்லிம்கள் அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றார்களோ அ." து போன்றே ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தலுக்கும், சிங்களத் தலைமைத்துவத்தின் இடக்குமுடக்கான பிரசார சவால்களுக்கு மத்தயிலும் முஸ்லிம் கட்சி தோற்றம் பெற்று வளர்ந்து வந்திருப்பதைப் பார்க்கின்றோம்.
ஆயுதம் ஏந்திய அனைத்து தமிழ் இயக்கங்களின் ஆயுதங்கள் முஸ்லிம் மக்கள் மீது திருப்பப்பட்டிருப்பது வரலாறு. ஆயினும் புலிகள் தவிர்ந்த பல மிதவாதக் குழுக்களும், ஆயுதமேந்திய தமிழ்க் குழுக்களும் முஸ்லிம்களை தனியான ஓர் இனமாக - சமூகமாக ஏற்று, அவர்களுக்கான - உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதில் ஒன்றுபட்டுக் கூறியுள்ளனர்.
அதே வேளை இது விடயத்தில் புலிகள் மெளனம் சாதிப்பது பல கேள்விகளை எழுப்பு வழியாகும். விரும்பியோ, விரும்பாமலோ விடுதலைப் புலிகள் ஓர் அச்சுறுத்தும் சக்தி என்பது பல கட்டங்களில் எண்பிக்கப்பட்டு வந்திருப்பதை நாம் பார்க்கலாம்.
முஸ்லிம்களின் குரலாக பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை அங்கீகரிப்பதாக புலிகள் அண்மையில் அறிவித்திருந்தது அறிந்ததே. அப்படியானால் இது வரை பூரீ. ல. மு. கா. முன்வைத்த கோரிக்கைகளையும், கோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்டதாகவே அர்த்தப்படும்.
ஆகவே "முஸ்லிம்கள் தனியான ஒரு சமூகம், அவர்களுக்கென்று வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்துள் ஓர் அதிகார அலகு வேண்டும்” எனும் கோரிக்கையையிட்டு புலிகள் மெளனம் கலைக்காதிருப்பது சரியல்ல.
அரசு - புலிகளுக்கடையில் சுமார் 14 வாரங்களாகக் கடைப்பிடிக்கப்பட்ட யுத்த நிறுத்தம் அண்மையில் புலிகளால் மீறப்பட்டது தெரிந்ததே. புலிகளின் ஒப்பந்த விலகலுக்கு கூறிய காரணங்களில் “கிழக்கு மாகாணத்தில் புலிகள் ஆயுதத்துடன் நடமாட வேண்டும் என்ற கோரிக்கை பற்ற அரசின் பின்னடைவும்" ஒன்று எனக் கூறப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

59
இப்படி முஸ்லிம்கள் அஞ்சுவதற்குக் காரணம் இருக்கிறது. அண்மையில் அமுலில் இருந்த யுத்த தவிர்ப்பு ஒப்பந்த வேளையில் வாழைச்சேனை பிரதேசத்தில் பொருள் பறிப்பிலும், சாய்ந்தமருதில் மோட்டார் சைக்கிள் குறைந்த பணத்தைக் கொடுத்து அவர் (கள் - உரிமையாளர்) களின் விருப்பம் கேட்காது அபகரித்ததிலும், அதே இடத்திலுள்ள வைத்திய சாலையில் நுழைந்து சில பொருட்களை பறித்துச் சென்றமையும். ஏற்கனவே புலிகள் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அடாவடித்தனங்களும் இப்படி சந்தேகிக்க வைக்கிறது என்று கூறலாம்.
தமிழ் ஆயுதமேந்திய குழுக்கள் முஸ்லிம்கள் மீது ம்ேறகொண்ட அடாவடித்தனங்களிலும், ஈனச் செயல்களில் இருந்தும் புலிகள் ஆரம்ப காலத்தில் விலகி நின்றது உண்மையே. ஆயினும் பின்னர் புலிகளும் இந்த நிலைக்கு சோரம் போனதும் மெய்யே.
1984 தொடக்கம் 1992 வரை தொடர்ந்து வந்த ஒவ்வொரு ஆண்டுகளிலும் நடந்த முஸ்லிம்கள் மீதான தாக்குதலில் புலிகளின் பங்கிருந்தது தெளிவான விடயம். குறிப்பாக காத்தான்குடி பள்ளிவாயல் கொலை. ஏறாவூர் தாக்குதல், அளிஞ்சிப்பொத்தான போன்ற பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் அழிப்பு நடவடிக்கைகளின் நினைவுகள் முஸ்லிம்களின் மனதைவிட்டு நீங்குமா என்பதும் ஒரு கேள்வியே.
இந்த ஈனச்செயல்கள், இந்தியாவின் பிரதமர் ரஜிவைக் கொன்றது. கைதிகளாக்கிய வடபகுதி முஸ்லிம் 37 பேர்கள் பற்றிய விபரழ் கூறாமை, முஸ்லிம்களின் அபிலாசைகளைப் பற்றி புதிய கருத்துக்களைக் கூறாமை, அண்மைய யுத்த தவிர்ப்பு விலகல் போன்ற புலிகளின் நடவடிக்கைகள் அவர்களின் அரசியல் சாணக்கியமற்ற அணுகுமுறைமைகளுக்கு சான்று என்பது அரசியல் அவதானிகளின் கருத்து.
இப்படி புலிகளின் அறிவுக்குப் புறம்பான நடவடிக்கைகளினால் முஸ்லிம்கள் இன்றும் சந்தேகித்து வாழ்கின்றனர். புலிகள் தான் தமிழ் சமூகமல்ல, தமிழ் மக்கள் வேறு - புலிகள் வேறு எனப் பார்க்கப்படல் வேண்டும் எனும் கோஷம் வலுப்பெறுவதை அவதானிக்கலாம்.
ஆனால் புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்று எண்ண முடியவில்லை. ஏனெனில் புலிகளை மீறி தமிழ் மக்களோ, அல்லது ஏனைய ஆயுதக் குழுக்களோ நேர்முகமாக முஸ்லிம்கள் பற்றி புலிகளுடன் பேசுவதற்கு அஞ்சும் நிலைமைகளைக் காணலாம்.
எது எப்படியிருப்பினும் தமிழ் - முஸ்லிம் மக்களின் மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் கள்ையப்படல் வேண்டும். இவ்விரு சமுகங்களின் தலைமைத்துவங்கள், புத்திஜீவிகள் கொண்ட குழுக்களுக்கிடையில் பரஸ்பரம் உறவாடி, கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவுகளுக்கு இரு சமூகங்களும் கட்டுப்படல் வேண்டும்.
இத்தகைய புரிந்துணர்வுகளுக்கு மத்தியில் காணப்படும் இணக்கங்களே இலங்கத்தக்கது. இதனை மறக்காதவரை தமிழ் - முஸ்லிம் உறவு மகிழ்வானதாக அமையும்
боfиq62/
இதழ்21 1995
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 37
முஸ்லிம்கள் தொடர்ந்தும் “அகதிகள்” தானா?
வாரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வடபகுதி முஸ்லிம்கள் அப்பிரதேசத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
வரலாற்றுக் கறை படிந்த இந்நிகழ்வுக்கு இன்று ஏழு வயது நடந்து கொண்டிருக்கிறது. நம்மில் பலருக்கு இது மறந்த விடயமாக அமைந்து விட்டது.
d5. 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் இறுதி
வெளியேற்றப்பட்டவர்களில் சிலர் மன்னாரில் குடியேறி மரண பீதியோடும் வறுமைப் போராட்டங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா. ኴ
பெரும்பகுதியினர் அகதிகள் என்ற வட்டத்துள் நிலை கொண்டு அங்கும் இங்குமாக அலைக்கழிந்த வாழ்க்கை முறைமைக்குள் தரிபட்டு இருக்கின்றனர். குறிப்பிட்டு சுட்டிக் காட்டும் தொகையினர் சொந்த உறைவிடங்களையும் வாடகை வீடுகளையும் தமதாக்கிக் கொண்டுள்ளனர்.
இம்மக்கள் நிர்க்கதியானபோது துடிதுடித் தெழுந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் எழுந்த வேகத்துள்ளேயே அமுங்கிப் போயுள்ளதையும் இன்று தெளிவாக நாம் அவதானிக்கலாம்.
ஆயினும் இடையிடையே மட்டும் சில அறிக்கைகளை தொடர்புச் சாதனங்கள் மூலம் விடுத்து நாங்கள் இன்னும் அக்கறையோடு தான் இருக்கிறோம் என்று மட்டும் அடையா ளப்படுத்தத் தவற வில்லை.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்
 

S.
அதேநேரம் அகதிகள் என்ற முத்திரையை நீக்கி வளமான வாழ்வில் அகதிகள் நிலை கொள்ளச் செய்யும் ஆக்கபூர்வமான செயற்திடடங்களில் இவர்கள் இறங்கத் துணியவில்லை
இந்நிலையில்தான் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு என்பது அகதி என்றொரு சஞ்சிகையை வெளியிடுவதோடு வேறு சில பிரசுரங்கள், அறிக்கைகளினால் அல்லலுறும் முஸ்லிம் அகதிகளின் வாழ்க்கையைப் பற்றியும் விளம்பரப்படுத்துகிறது.
உண்மையில் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் பல்வேறுபட்ட இன்னல்களை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் மனித வாழ்கையின் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், கல்வி, சுகாதாரம், ஒழுக்கம் என்பனவற்றில் கூட ஊறுவிளைந்த நிலையே காணப்படுகிறது.
இந்நிலை தொடர்கதையானால் இளம் சந்ததிகள் வேண்டத்தகாத வாழ்க்கை முறையை தேர்ந்து கொள்ளவும் பொதுவாக எல்லோரும் விரக்தியின் ள்ல்லைக்குச் செல்வதிலிருந்தும் விடுபட முடியாத நிலைக்கு ஆளாகவும் கூடும்.
இத்தகைய இழிநிலையிலிருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பும் கடமையும் முஸ்லிம் அரசியல்வாதிகள், கல்விமான்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது. அகதிகள் என்ற பெயர் இல்லாதொழிந்து அவர்களின் சொந்த மண்ணில் காலூன்றும் நாளே இவர்கள் வாழ்வின் பொன்னாளாகும்.
அந்நாள் இவர்கள் வாழ்வில் திரும்பிவிட வேண்டும் என்பதற்கு மனத்துாய் மையுடன் அறிவுபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளும் நிலை இன்றில்லாமை பெருங்குறையே. உண்மையில் வடபகுதியிலிருந்து பலவந்தமாக முஸ்லிம்களை வெளியேற்றியதிலிருக்கும் பங்கு இவர்களை மீண்டும் அங்கு குடியமர்த்துவதில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மாத்திரம் தங்கியிருக்கவில்லை என்றே கூற வேண்டும்.
இம்முடிவுக்கு நம்மை இட்டுச் செல்வதில் பின்வரும் காரணங்கள் முதன்மை பெறுகின்றன. பிரபாகரன் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களில் சிலர் முஸ்லிம்களை வட்பகுதியிலிருந்து வெளியேற்றிய வரலாற்றுத் தவறுக்கு வருத்தம் தெரிவித்திருப்பது இதனை மற்றொரு வகையில் நோக்கும் போது மீள்குடியேற்ற அழைப்புக்கான சமிக்ஞையாகக் கொள்ளலாம்.
வடபகுதியிலிருந்த முஸ்லிம்களை விரட்டியதற்கு பிரபாகரன் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களினால் இன்றுவரை நியாயபூர்வ காரணங்களைக் கூற முடியாதிருப்பது தவறான செயல் என ஏற்றுக்கொண்ட பின்னரும் அதனைத் திருத்திக்கொள்ளும் வழியில் இறங்களிது பேச்சளவில் தக்க வைத்துக் கொண்டிருப்பது.
ஆகவே வடபகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், மீள்வாழ்வு என்பது இலங்கையின் இனப்பிரச்சினையுடன் தொடர்புபட்டதாகவே பரிணமித்துள்ளது. இதனை நாம் ஜீரணித்துக் கொள்ள வேண்டும்.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 38
62
வடபகுதி முஸ்லிம்களின் நிர்க்கதியான வாழ்வு முறைமைக்கு மாற்றுத்தீர்வு காணும் பாரிய பொறுப்பு ரீ.ல.மு.கா.வுக்கு இருக்கிறது. இதனைப் பின்வரும் காரணங்கள் ஊர்ஜிதம் செய்வதாகக் கொள்ளலாம்.
3 கடந்த 1994ல் நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது வாக்களிப்பில் கலந்து கொண்ட வடபகுதி முஸ்லிம்களில் பெரும் பகுதியினர் ரீ.ல.மு.கா.வுக்கு வாக்களித்திருப்பது.
3 வட பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இரு மாவட்டங்களில்
பாராளுமன்ற பதவிகளை காப்பாற்றி வென்றெடுத்திருப்பது. 3 றூர்.ல.மு.கா. இன்று ஆளும் வர்க்கத்தில் ஓர் அங்கமாக இருப்பது. 3 அஷ்ரப் - சந்திரிகா ஒப்பந்தத்தில் வடபகுதி முஸ்லிம் (அகதி) கள் விடயத்தை முதன்மையாகக் கொண்டிருப்பதாக ரீ.ல.மு.கா. அறிமுகப்படுத்தியிருப்பது.
3 ரீ.ல.மு.கா.வின் தேசியத் தலைவரே புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சுக்குப்
பொறுப்பாக இருப்பது.
எனவே தங்களின் கடப்பாட்டிலிருந்து ரீல.மு.கா. விலகிப்போவது நல்லதல்ல. ஆகவே ஒரு சில செயற்திட்டங்களில் ரீ.ல.மு.கா. தனது காலை வேரூன்றச் செய்ய முற்பட்டதெனலாம்.
ழரீ.ல.மு.கா. மாதிரிக் கிராமங்களை உருவாக்கி அதில் மீள் குடியேற்றங் களை ஏற்படுத்தியதானது அகதிகள் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வில்லா விட்டாலும் ஓர் ஆறுதல் நடவடிக்கை என்பதில் கருத்து முரண்பாடு இல்லை.
ஆயினும் இது அகதிகள் எல்லோரும் பெற்றுக் கொண்ட வசதிகள் அல்லவென்பதினால் பாராடட்ப்பட்ட வேகத்திலேயே விமர்சனத்துக்கும் உரித்தாகிவிட்டதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இருப்பினும் அகதிகள் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்விை நோக்கி நாம் செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையை உருவாக்கும் பொறுப்புக்கள் யாரார் மீது உள்ளதோ அவர்கள் எல்லோரும் இவ்விடயத்தில் ஒண்றிணைந்து தொழிற்பட வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.
-நவமணி. 01-06-1997
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

63
பேரினவாத சகதிக்குள் முஸ்லிம் உரிமைகள்!
லங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்னும்
மூன்று பிரதான சமூகங்கள் நிலை கொண்டுள்ளன.
இவர்களே இந்நாட்டின் பழமைவாய்ந்த குடிமக்கள் என்பதில் எவ்வித ஐயங்களும் இல்லை.
இந்த மூன்று சமூகங்களும் இங்கு வந்தேறிய குடிகள் என்பதற்கே வலுவான சான்றுகள் கிடைக்கின்றன. ஆயினும் இவர்களுள் எவர்கள் இங்கு முந்திக்குடியேறியவர்கள் என்பதில் கருத்து முரண்பாடு நிலவுகிறது.
ஒவ்வொரு சமூசங்களும் தாங்களே முதலில் வந்து குடியேறியவர்கள் எனச்சான்றாதாரங்களைச் சாற்றியுள்ளனர். எது எப்படி இருப்பினும், இன்று மூன்று சமூகங்களும் இலங்கை யின் பழமைவாய்ந்த மக்கள் எனக் கொள்வதில் கருத்து வேறுபாடு இல்லையென்பது கவனிக்கத்தக்கதொரு அம்சமா கும்.
இம் மூன்று சமூகங்களுக்கும் தாய்மொழி இரண்டாகும். சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சிங்கள மக்களும், தமிழ் மொழியைத் தாய்மொழியாகத் தமிழர்களும், முஸ்லிம்களும் கொண்டுள்ளனர்.
இலங்கையின் மொத்த குடிசனத் தொகையில் ஏறத்தாழ எட்டு வீதமானோர் முஸ்லிம்களாகும். இவர்களின் மூன்றில் ஒருபகுதியினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருப்புக் கொண்டிருக்க ஏனைய இருமடங்கினர்களும் நாட்டின் பிற ஏழு மாகாணங்களிலும் சிதறி வாழ்கின்றனர்.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 39
64
இலங்கை முஸ்லிம்களின் குடிசனப்பரம்பல் - இருப்பு பொருளாதார வளங்கள் போன்ற அத்தியாவசியமானவைகள் ஒரு தொய்வு நிலைக்குள் அகப்பட்டுக் காணப்படுகிறது. வேறு வார்த்தையில் கூறுவதானால் சிங்கள. தமிழ் மக்களினால் சூழப்பட்டுள்ளன. −
இதனால் சில வளைந்து விட்டுக்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை திணிக்கிறது எனலாம்.
இலங்கையின் தேசிய சமூகங்களுக்குள் முஸ்லிம்களும் ஒரு தனியான சமூகமென்ற வகையில் அவர்களுக்கான உரிமைகளையும். சலுகைகளையும் பெறத் தகுதியுடையவர்களே. இதற்கு மாறான வாழ்வானது அடிமைச் சமூகமாகவே அடையாளப்படுத்தும் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில் இருத்திக் காரியமாற்ற ைேண்டும்.
ஒரு சமூகம் தனது "தனித்துவம், மதம், கலாசாரம், நிலம். பொருளாதாரம். பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் போன்ற அடிப்படை உரின்மகளை இழந்த சமூகமாக வாழ்வதினால் எந்தவிதமான நன்மைகளும் இல்லை.
இந்நிலையில் தான் இன்று இலங்கை முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக் கின்றனர். w
இதுவோர் ஆரோக்கியமான சூழ்நிலைக்குப் புறம்பானது என்பது நமக்கு மறைவானதல்ல. ஆயினும் சமூக உரிமைகள் பற்றி உணர்வு எம்மில் ஒவ்வொரு வரிடமும் இழையோட வேண்டிய பண்பாகும்.
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரை இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பு என்றாலும் சரி பின்பு என்றாலும் சரி நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுத் தன்மைக்கு ஊறுவிளைவித்து பிரிவினைக்கு ஒருபோதும் வழிவகை செய்யாத வர்களென்ற வரலாற்றுக்கு உரியவர்களாகவே உள்ளனர்.
போத்துக்கேயருக்கு காட்டிக் கொடுக்கும் கைங்கரியத்தில் சிங்களவர்களில் சிலர் முற்பட்ட காலகட்டத்தில் கூட மாயாதுன்னையுடன் இணைந்து நின்று போராடினார்கள் முஸ்லிம்கள். இந்த யுத்தத்தில் சுமார் 4000 முஸ்லிம்கள் மரணித்ததாக வரலாறு கூறுகிறது. இது இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னர் முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புக்களுக்கு ஒரு சான்றாகக் கொள்ளலாம்.
இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னர் பெரும்பான்மையினரின் கட்சி ஆட்சிபீடம் ஏறுவதற்கு “வாக்குகள்’ எனும் ஏணிப்படி மூலம் உதவியதுடன் அரசுக்குத் துணையாக அல்லது ஓர் உந்து சக்தியாக முஸ்லிம்கள் தொழிற் பட்டனர் என்பது நாடறிந்த நிஜமாகும்.
முஸ்லிம்களின் வாக்குகள் அங்குமிங்குமாய் சிதறிக் காணப்பட்ட போதிலும் முன்னர் சுமார் 60 தேர்தல் தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தன்மையில் அமைந்திருந்தது. இது முஸ்லிம்களின் பலத்தின் ஒரு பகுதியென கொள்ளப்பட்டது. அல்லது நம்பப்பட்டது.
இதனைக் கடந்த 1978க்கு முன்னர் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. இன்று இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு ஒரு
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

65
சில தேர்தல் மாவட்டங்களிலும். ஜனாதிபதி தேர்தலிலும் எனச் சுருங்கி விட்டது. பலமுள்ள சமூகமாக இருக்க வேண்டிய முஸ்லிம்கள் இப்படியான சொல் லொணாத் துயரங்களின் சுமைகளைச் சுமக்க வேண்டியவர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது பெரும்பான்மையினரின் பேரினவாதத்தால் ஏற்பட்ட நிலையாகும்.
உண்மையில் முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளையும் அச்சத்தோடும் பீதியோடும் கேள்விக்குறிகளோடும் தான் கழிக்க வேண்டியுள்ளது. உயிர். கற்பு. உடமைகள் போன்ற கேந்திரங்களுக்குக கூட பாதுகாப்பில்லாத அச்சுறுத்தல் நிலையே இன்று உள்ளது.
சுருங்கக்கூறுமிடத்து முஸ்லிம்களின் குடியிருப்புகள். நிலங்கள். பொருளாதார வளங்கள். பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள். தனித்துவங்கள், சமயம், கலாசாரம் போன்றவைகள் இன்று ஆயுதக்கரங்களின் நசுக்குதல்களுக்குள் அகப்பட்டுள்ளன.
இதனை வேறுவார்த்தையில் கூறுவதாயின் ஒரு சமூகத்துக்கு முதுகெலும்பாகத் திகழும் கல்வி, சமயம், வேலைவாய்ப்பு. குடியேற்றம், பாராளுமன்றப் பிரதி நிதித்துவம், சமூக ஒற்றுமை போன்ற முக்கிய அம்சங்கள் சீர்கேட்டுக்குள்ளா கியுள்ளன.
இந்நிலையானது பல இழப்புகளுக்கு வழிவகுத்து விடுவதுடன், இலங்கையில் தனித்துவமான ஒரு முஸ்லிம் சமூகம் இல்லை என்ற கருத்தையும் வெளியுலகிற்கு வெளிப்படுத்தி விடுமென்பதை முஸ்லிம்கள் மறந்து விடமுடியாது.
நம் நாட்டின் ஆட்சிப்பீடத்தை மாறிமாறிக் கையாண்ட ஆட்சியாளர்களின் விவேகமற்ற அணுகுமுறையினால் இலங்கை முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகமாக மாற்றப்பட்டனர் என்பது வெள்ளிடை மலையானது.
இந்தத் தவறை முஸ்லிம்கள் மீது நாம் பிரயோகித்தோம் என்பதை நேரடியாக பெரும்பான்மைக் கட்சியினர் ஏற்றுக்கொள்ள முன்வராத போதிலும் தேர்தல் காலங்களில் அவர்களை இவர்களும் - இவர்களை அவர்களும் சாடிக் கொள்ளும்போது முஸ்லிம்கள் மீது நசுக்குதல்களை மேற்கொண்டவைகளும் வெளிப்படுத்தப்படும்.
இதன் மூலம் முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கும் முயற்சிகளில் ஒருவரைவிட ஒருவர் சளைத்தவர்களல்லர் என்பதை ஒப்புக்கொள்வதை நாம் அவதானிக்கலாம்.
திட்டமிட்ட tāsக் குடியேற்றமும், நிலப்பறிப்பும்
முஸ்லிம்கள் ஓரளவு செறிந்து வாழும் பகுதிகளில் மீன்பிடி, வேலைவாய்ப்பு,
நிலப்பங்கீடு, புனித பூமி, பிரதேசங்களை இணைத்தல், அத்துமீறிக குடியேறுதல் குடியேற்றுதல் போன்ற காரணங்களினால் முஸ்லிம்களின் வீதத்தில்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 40
66 குறைப்புக்களையும் நிலப்பறிப்புக்களையும் பேரினவாத அரசுகள் மேற்கொண்டன.
இவற்றுக்குப் பல சான்றுகள் குவிந்து கிடந்தாலும் நமது நோக்கிற்கு வலுசேர்க்கும் வகையில் சில சம்பவங்களை நினைவு படுத்திப்பார்ப்போம். அப்போதுதான் முஸ்லிம்கள் மீது தொடரப்பட்ட - தொடர்ந்து கொண்டிருக்கும் பேரினவாதங்கள் துலங்கும்.
அம்பாறை தீகவாப்பியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 997 ஏக்கர் காணிகளை கடந்த அரசாங்கங்கள் சுவீகரித்துக்கொண்டதுடன. சிங்களக் குடியேற்றங்களையும் ஏற்படுத்தியது. நஷ்டஈடுகள் வழங்குவதாக வாக்குறுதிகள் வழங்கப்பட் டபோதிலும் அவை இன்றுவரை வெறும் வாக்குறுதிகளாகவே இருப்பது வேதனைகளுடன் வெளிப்படுத்தப்படவேண்டிய உண்மைகளாகும்.
நுரைச்சேனைக் கண்டத்தில் முஸ்லிம்களிடமிருந்து 1500 ஏக்கர் நிலம் கரும்புச் செய்கைக்கென சுவீகரிக்கப்பட்டது. இருந்தாலும் கரும்புச் செய்கை கைவிடப்பட்டு 55 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.
கிரிந்தை ஒரு சிறுமீன்பிடிக் கிராமமாகும். வேறு பிரதேச சிங்களவர்கள் இங்கு காலத்துக்குக் காலம் மீன பிடிக்க வருவதுண்டு. இவர்களினால் கிரிந்தையில் வாழும் முஸ்லிம்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதுண்டு. 9.
இதனைத் தீர்த்து வைக்க வந்த அன்றைய கடற்றொழில் அமைச்சர் மீன்பிடிக்கும் கடற்கரையில் 90 வீதமானவை சிங்களவர்களுக்கும், 10 வீதமானவை மட்டுமே இங்கு பரம்பரையாக வாழும் முஸ்லிம் மீன்பிடிக் குடும்பங்களுக்கென்றும் வகுத்து வைத்தார்.
இத்தீர்வினால் கடற்றொழிலையே நம்பிவாழ்ந்த கிரிந்தை முஸ்லிம்களின் வாழ்க்கையில் வறுமைச்சுமைகள் மேலும் அதிகரிக்கவே உதவியது என்பது ஒரு விசயம்; இனவாதத்துடன் கூடிய தீர்வு இதுவென்பது மற்றொரு அம்சமாகும்.
கல்லோயா, சேனநாயக்க சமுத்திரம், அம்பலம்ஒயாக் குளம், பன்னல கமக்குளம் போன்ற இடங்களில் ஆரம்பகாலந் தொட்டே முஸ்லிம்கள் மீன்பிடித்து வந்தனர். இப்போது இவ்விடங்களில் முஸ்லிம்கள் எவரும் தலைகாட்டக் கூடாதென்று சிங்களவர்களால் அதட்டி விரட்டப்பட்ட சம்பவங்கள் பல. இது பற்றி காவல்நிலையங்களில் முறையிட்டபோதிலும் பக்கச்சார்பாக அவர்கள் நடந்து கொள்வதே வரலாறாகிப் போயிற்று. பேரினவாதத்தின் மற்றொரு வடிவம் இதுவாகும்.
நாவலடி எனும் இடத்தில் வெளியூர்களிலிருந்து வந்து தங்கி. சிங்களவர்கள் மீன் பிடிப்பதற்கு வீடு கட்டிக் கொடுத்து உதவியது தெரிந்ததே. இது தவறான செயல் என்பதல்ல. ஆனால் பரம்பரையாக இங்கு வாழும் முஸ்லிம்களுக்கு இவ்வாறான உதவிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும், புதியவர்களின் வருகையினால் இங்கு நிரந்தரமாக மீன்பிடித்தொழிலையே நம்பி வாழ்ந்தோர்களின் நிம்மதியான வாழ்வு முறைமைக்கும் வேட்டாக அமைந்ததென்பதும் கவனிக்கத் தக்கது"
படவக்கட்டு என்னும் இடத்துக்கு 'சாகரபுர எனப் பெயர் சூட்டி அரசாங்கத்
தீவும் தீர்வுகளும் எம். எம்.எம்.நூறுல்ஹக்

67 தினால் இலவசமாக வீடு கட்டி அதில் நீர்கொழும்புப் பகுதியிலுள்ள சிங்கள மீனவர்களை குடியமர்த்தினர். இதனால் இங்கு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து மீன் பிடித்தொழிலையே நம்பியிருந்த முஸ்லிம்களின் தொழில் உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளானது.
ஏறாவூரில் புன்னக்குடாவில் ஐ. தே. க. ஆட்சிக்கால கடற்றொழில் அமைச்சரி னால் 100 வீடுகள் கட்டி பிற ஊர்களைச் சேர்ந்த சிங்களவர்களை குடியமர்த்தினர்.
அறுகம்பை. உல்லை. இலவை போன்ற இடங்களில் உள்ளுர் மீனவர்களுக் கெனஅரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட மீனவர் குடியேற்றத் திட்டத்துக்கான வீடுகளில் கூட காலி மாத்தறை போன்ற இடங்களைச் சேர்ந்த சிங்கள மீனவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 1963ஆம் ஆண்டு அம்பாறை மாவட்ட சனத்தொகை 211,820 ஆகும். இவற்றில் முஸ்லிம்கள் 98.510 பேர்களும் சிங்களவர்கள் 62,160 பேர்களும் வாழ்ந்தனர் என குடிசன மதிப்பீடு கூறுகிறது. அதேநேரம் 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் படி இம்மாவட்டத்தின் மொத்த குடிசனத் தொகை 388,786 ஆக அதிகரித்துள்ளது 161.754 முஸ்லிம்களும் 4637 சிங்களவர்களும் என இவ்வதிகரிப்பு காணப்படுகிறது.
தினக்குரல். 19-6-97
இடைப்பட்ட 18 ஆண்டு இலங்கையின் மொத்த சனத்தொகையின் இயற்கை அதிகரிப்பு 40 வீதத்திலும் குறைவாக இருக்க; அம்பாறை மாவட்ட சனத்தொகை அதிகரிப்பு 83.55 வீதமாகும். இதில் முஸ்லிம்கள் 64.20 வீதமும், சிங்களவர்கள் 135.47 வீதமாகவும் அதிகரித்துள்ளன. ஆகவே இது திட்டமிட்ட குடியேற்றங்களில் ஒன்று என்பதை நாம் துல்லியமாகப் புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு அம்பாறை மாவட்டம் மட்டுமல்ல என்பதற்குப் புத்தளம் மாவட்டம் ஒரு சான்றாகும். கடந்த 1921ஆம் ஆண்டு இம்மாவட்டத்தில் 33 வீதமாக இருந்த முஸ்லிம்களின் குடிசனத்தொகை 195 இல் 29.7 வீதமாகக் குறைந்தது. 1921 இல் 42.30 வீதமாக இருந்த சிங்களவர் குடிசனத்தொகை 1953 இல் 53 வீதமாக அதிகரித்தது.
இது இயற்கையான அதிகரிப்பு அல்ல. ஈற்றில் சிலாபம் மாவட்டத்தை புத்தளத்துடன் இணைத்து தற்போதைய புத்தளம் மாவட்டத்தின் மொத்த குடிசனத் தொகையில் 9.7 வீதமாக முஸ்லிம்கள் குறைக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்ல. திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளை இணைத்தும் முஸ்லிம்களின் விகிதாசாரத்தை குறைக்கும் பணியில் பேரினவாத அரசுகள் செயற்பட்டன என்பதும் வரலாறே.
“புனிதநகர் திட்டம்” என்ற போர்வையில் அம்பாறையில் "தீகவாப்பி புனித நகர்’ திட்டமும், 'திருகோணமலையில் “சேருவில புனித நகர்’ திட்டமும், பொலநறுவையில் "சோமாவதி புனித நகர்’ திட்டங்களினாலும் முஸ்லிம்களின் நிலங்கள் பறிப்புக்குள்ளானது.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 41
68
இவைகள் வெறும் நில இழப்புக்கள் என வாழாவிருக்க முடியாது. மாறாக முஸ்லிம்களுடைய அரசியல், பொருளாதாரம், மதம், தனித்துவம் போன்ற கேந்திர அம்சங்களில் தாக்கத்ததைப் பதிக்கவல்லதாகும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக அல்லது அவர்கள் ஓரளவு அதிகமாக ஓங்கியிருக்கும் பிரதேசங்களை இல்லாமற் செய்வதின் மூலம் பாரம்பரிய பிரதேசம். பெரும்பான்மைப் பிரதேசம் என முஸ்லிம்கள் எதிர்காத்தில் கூறாதிருப்பதற்கும. தனித்துவ அடையாளங்களை இல்லாமற் செய்வதில் பேரினவாதம் காட்டும் அக்கறைகளே இவைகள்.
பேரினவாத நசுக்குதல்களுக்கு முகம் கொடுத்து அவற்றினை வென்றெடுக்க வேண்டும். இல்லையேல் நமது சமகாலத்தை மட்டுமல்ல நமது எதிர்கால சந்ததிகள் வரை இழப்புக்களைத் தாங்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும் என்பதை புறந்தள்ளி விடல் முடியாது. மாறாக நாம் கவனஞ் செலுத்த வேண்டிய பக்கங்களே.
வேலைவாய்ப்புக்களிலும் முஸ்லிம்
திட்டமிட்ட வகையில் புறக்கணிப்பு
ஒரு சமூகத்திற்கு போதியளவில் வேலை வாய்ப்புக்கள் அமைவது. இன்றியமையாத ஒன்றாகும். அவ்வாறு அமையவில்லையானால் அச்சமூகம் பொருளாதார சீர்கேட்டுக்கு உரித்தாகி வறுமையிலும் விரக்தி மனப்பான்மையிலும் பெரும் பகுதியினரை ஆட்கொள்ளச் செய்து விடும்.
இந்நிலையானது சமூகச் சீர்கேடுகளையும் போராட்டச் சிந்தனைகளையும் ஏற்படுத்திவிடும் அபாயகரமானது. இது இன்று உலக அரங்குகளில் பரவலாக அவதானிக்கப்படுகின்ற ஒன்றாகும். நமது நாடும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை சமகாலத்தில் காணக்கூடியதாக உள்ளது.
முஸ்லிம் சமூகம் இந்நிலைக்கு ஆளாகவேண்டிய நிர்ப்பந்தத்தை பேரினவாத ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் எனக்கூறும் சூழலை அடைந்திருக்கிறது எனலாம். இது மிகையான கூற்றல்ல என்பதைப் பின்வரும் புள்ளிவிபரங்கள் நிருபிப்பதாகக் கொள்ளலாம்.
மட்டக்களப்பு மாவட்ட மொத்த குடிசனத் தொகையில் 29.25 வீதமானவர்கள் முஸ்லிம்களாகும். இம்மாவட்டத்தில் அமைந்துள்ள "கிழக்கிலங்கை கடதாசி ஆலைக் கூட்டுத்தாபனம்", "கச்சேரி”களிலும் கூட மிகக்குறைவான முஸ்லிம்களுக்கே தொழில் வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் நாடுகளின் கிளைகளாக இலங்கையில் நிறுவப்பட்டுள்ள ஒமான் வங்கி, துபாய் வங்கி போன்ற நிறுவனங்களில் கூட 10 வீதத்துக்கும் குறைந்த முஸ்லிம்களுக்கே தொழில் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கக் கூட்டுத்தாபன வேலைவாய்ப்புகளில் 74 வீதமான சிங்களவர்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்
 
 
 

69
களுக்கு சராசரி 83 வீதமும், 18 வீதமான தமிழர்கள் சராசரி 13 வீதமும், 7.5 வீதமான முஸ்லிம்கள் சராசரி 4 வீதமும் தொழில் பெற்றுள்ளனர்.
முஸ்லிம்களின் கரங்களில் தங்கியிருந்த இரத்தினக்கல் வியாபாரத்தை அவர்களிடமிருந்து மாற்றிவிடும் முயற்சியில் பேரினவாத அரசியல் வாதிகள் இறங்கி வெற்றியும் அடைந்துள்ளனர் எனலாம். இது பேரின வாதத்தால் முஸ்லிம்கள் இழந்த தொழில் வாய்ப்புக்களில் ஓர் அங்கமாகும்.
ஏற்கனவே முஸ்லிம்களிடமிருந்து வந்த இரத்தினக்கல் சுரங்கப் பகுதிகள் கைவிடப்பட்டு புதிய இடங்களில் ஏற்படுத்தியதன் மூலமும் "இரத்தினக்கல் கூட்டுத்தாபனம்" என்ற பெயரில் சிங்களவர்களை அதிகமாக உள்ளடக்கிய ஒரு கூட்டுத்தாபனத்தை உருவாக்கியதன் மூலமும் இத்தொழில் வாய்ப்பில் ஈடுபட்ட முஸ்லிம்கள் வேலையின்றி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
புத்தளம் நகரின் பழைய பேரூந்து நிலையத்தை மையமாக வைத்து முஸ்லிம்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த வர்த்தகத் துறையினை சிதறடித்து புதிதாக ஒரு பேரூந்து நிலையத்தை அமைத்து புத்தளம் நகரில் பேரூந்து தரிப்பை மையமாகக் கொணட வியாபாரத்தை முஸ்லிம்களிடமிருந்து திட்டமிட்டுப் பறித்தெடுத்துக் கொண்டவர்கள் பேரினவாத ஆட்சியாளர்களே.
சிங்களப் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கிருந்த சில வர்த்தக நிலையங்கள் காலத்திற்குக் காலம் சிங்களக் குண்டர்களினால் தாக்கி சூறையாடப்படுவதும் தீவைத்துக் கொளுத்தப்படுவதும் ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது.
இத்தகைய அடாவடித்தனங்களின் போது ஆட்சியாளர்கள் பேரினவாத போக்கினைக் கடைப்பிடிக்கின்றனர். இதனால் முறையிட வேண்டிய இடங்களில் முறையிட்டும் பயனில்லாத நிலையைக் காணலாம். பக்கச் சார்புகளும், சமுக விரோத மனப்பான்மைகளும் இன்று அதிகரித்து விட்டன.
சுருங்கக் கூறுமிடத்து இலங்கையின் பெரும்பான்மையான பிரதேசங்களில் முஸ்லிம்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். இன்று இந்நிலையினை இல்லாமல் செய்வதில் பேரினவாத அரசியல் பெரிதும் உதவியது எனலாம்.
இதனால் மேம்பட்டிருந்த முஸ்லிம்களது பொருளாதார நிலைகள் வீழ்ச்சிய டைந்துள்ளன. அதே நேரம் பலர் தொழில்வாய்ப்பினை இழந்துள்ளனர் என்பது மறைவானதல்ல. இது தனியார்துறை சார்ந்த வேலைவாய்ப்பு இழப்புக்கு பேரினவாதத்தின் சான்றாகக்கொள்ள முடியும்.
எனவே முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ற அளவில் அரசாங்க தொழில் வாய்ப்புகள் கிட்டிவில்லலை என்பதும் பொதுவாக முஸ்லிம்கள் தங்களது குடிசனத்தொகைவிதத்துக்கு ஏற்ற அளவில் தொழில்வாய்ப்புகள் இல்லை என்பதும் அப்பழுக்கற்ற உண்மைகளாகும்.
போதிய அளவிலான் தொழில்வாய்ப்புகள் ஒரு சமூகத்துக்கு கிடைக்க வில்லையானால் அச்சமூகழ் வறுமையையும் வெறுமையையும் வெகுவாக சந்தித்துக்கொள்ளும். இதனால் புறநடையான சிந்தனைகளுக்கு அச்சமூகம் உட்படலாம் என நியாயபூர்வமான அச்சத்தை ஒதுக்கிவிடல் விவேகமான
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 42
70
நடைமுறையல்ல.
சமய, சமூக அடிப்படைகளில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பேரினவாத நெருக்கடிகளி
முஸ்லிம்களுக்கு மதம் - இஸ்லாம் எனும் அறநெறி அவர்களின் உயிரிலும் மேலாக நேசிக்கப்படுகின்ற ஒன்றாகும். இதற்கெதிரான வன்முறைகளை எதிர் கொள்வதில் நம்நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்கு வாழும் முஸ்லிம்களும் பின்நிற்கவில்லை என்ற வரலாறு இன்றுவரை நிலைபெற்றுள்ளது.
எனவே முஸ்லிம்கள் தங்கள் சமயம் தவிர்ந்த எதனையும் விட்டுக் கொடுக்கவோ, உலக விவகார சம்பந்தமான மாற்றீடான தீர்வுகளுக்கு இசைந்து செல்லக் கூடியவர்கள் எனலாம். இதற்காக மார்க்கத்திலும் விட்டுத்தர துணிவார்கள் என தப்புக்கணக்கிடலாகாது.
பெரும்பான்மையினரின் பேரினவாதச் சிந்தனைகளினால் முஸ்லிம்கள் சமயம், சமூக ரீதியான பல ஊறுகளை சந்தித்த சங்கடங்கள் அநேகம். அவற்றிலிருந்து ஓரிரு விடயங்களை இங்கு தொட்டுக் காட்டுவதினால் சந்தேகமற நம்பிக்கை பிறக்கவும் மாற்று வழி பற்றிய தேடலுக்கும் இலகுவாக அமையும் எனலாம்.
முஸ்லிம்களின் ஐம்பெரும் கட்டாயக் கடமைகளில் ஒன்றான தொழுகையின் அழைப்பான ‘அதான் - பாங்கை ஒலிபெருக்கி மூலம் கூறக்கூடாது என்ற எழுதாத சட்டம் இந்த நாட்டின் சில பகுதிகளில் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது.
9 முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குச் செல்லும் மக்கள் தொழுகையில் கூட கட்டுப்பாடுகள் விதித்த காலங்களும் இருந்தன.
கடந்த 1974 நவம்பர் மாதம் மஹியங்கனையில் உள்ள பங்கரஹகம எனும் முஸ்லிம் கிராமம் சிங்களவர்களால் தீவைக்கப்பட்டது; பள்ளிவாசல் உடைக்கப்பட்டது; 67 க்கும் கூடுதலான வீடுகள், 7 கடைகள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டன.
தினக்குரல. 20-6-97
கடந்த 1976ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் புத்தளம் பெரியபள்ளிவாசலில் சிங்களப் பொலிசார் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக நடாத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஏழு முஸ்லிம்கள் இறந்து போனார்கள். இதனையடுத்து பெளத்த பிக்கு ஒருவரின் தலைமையில் காவல்படையினரும் சிங்களக்காடையரும் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்தாக்குதலில் முஸ்லிம்களின் 271 வீடுகள் தீயிடப்பட்டு 44 கடைகள் சூறையாடப்பட்டு இருவர் கொல்லப்பட்டனர்.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்
 
 
 

71
கடந்த 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பு கொம்பனித்தெரு பள்ளிவாசலில் தொழுகை நடத்திய முஹம்மது ஹ"சைன் ஜப்பார் பொலிசாரால் குண்டடிபட்டு இறந்தார். கடந்த 1983 டிசமபர் 18ஆம் திகதி கண்டி - மாவில்மடையில் உள்ள ஒருமுஸ்லிம் புனித அடக்கஸ்தலம் தாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. இத்தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன் நூற்றாண்டு காலத்துக்குக் கூடுதலான வரலாறு கொண்ட புனித அடக்கஸ்தலத்தல் உள்ள பள்ளிக்கட்டிடத்தில் ஒரு பெளத்த கொடி பறக்கவிடப்பட்டது. (இதனைப் பொலிசார் அகற்றினர்) காரைதீவு சந்தியிலுள்ள முஸ்லிம் புனித அடக்கத்தலம் தமிழர்களினால் சிதைக்கப்பட்டது. தீகவாப்பி பகுதியில் புயலால் சேதமடைந்த திராய்ஓடைப் பள்ளிவாசலைத் திருத்திக் கட்டுவதற்கு அரசாங்கம் தடைவிதித்தது. புயலால் அம்பாறைப் பள்ளிவாசலுக்கான உத்தரவுப் பத்திரம் காணாமல் போய் விட்டது. பிரதி கேட்டு விண்ணப்பித்ததற்கு அம்பாறைக் கச்சேரி கொடுத்த பதில் "காணியை விட்டு வெளியேறு” எனும் கட்டளையாகும். முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர முற்பட்டது. நபியுல்லாஹற் (ஸல்) அவர்களின் உருவப்படம் என பாடப் புத்தகங்களில் பதிப்பித்தது. பரீட்சை வினாக்கொத்துக்களில் முஸ்லிம்களின் சமயத்தையும் மனதையும்
புண்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்டிருந்தவைகள்.
கடந்த 1915ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தின் போது 49 முஸ்லிம்கள் கொல்ல்ப்பட்டனர். 189 பேர்கள் காயமடைந்தனர். 17 பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்ட அதேவேளை 86 பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டன. 4075 முஸ்லிம் கடைகள் சூறையாடப்பட்டன. முழு இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சொத்து இழப்பு 50 இலட்சம் என நம்பப்படுகிறது.
கடந்த 1982இல் காலி நகரிலும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 15 கிராமங்களில் சிங்களக்குண்டர்களால் முஸ்லிம்கள் தாக்குதல்களுக்குள்ளாகி உடமைகள்
சூறையாடப்பட்டு உயிர்கள் பறிக்கப்பட்டன.
வாழைத்தோட்டம், லியாஸ்புரோட்வே, பேருவளை, களுத்துறை, பாணந்துறை, புல்மோட்டை, நீர்கொழும்பு, வத்தளை - அக்பர் டவுண் போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட சிங்கள - முஸ்லிம் கைகலப்பிலும் முஸ்லிம்களின் உயிர்கள், உடமைகள் சேதத்துக்குள்ளாகின.
தினக்குரல். 21-6-97
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 43
72
சிங்கள - முஸ்லிம் சமுக மோதலின் பின்னணியில் சமய சகிப்புத்தன்மை, பொறுமை இழப்பு என்பனவற்றால் ஏற்பட்டதென்பது போன்று வெளிவாரியில் தென்பட்டாலும் உள்ளுர முஸ்லிம்களின் ஆடம்பர வாழ்வின் மீதும் வர்த்தகத்தின் மீதும் கொண்ட கசப்புணர்வுகளும் அரசியல் வேறுபாடுகளுமே காரணம் எனக்கொள்ள இடமுண்டு.
இவற்றினை அந்தந்த மோதல்களின் போது இலக்காகக் கொண்டு தொடரப்பட்ட தலங்கள். மேற்கொண்ட முனைப்புகள். பின்னர் விடுத்த அறிக்கைகள் மூலம் தெளிவாக உணரமுடிகிறது
முஸ்லிம்கள்மீதான பேரினவாதி வெட்டுமுகங்களிலிருந்து
இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு முஸ்லிம்கள் எவ்வளவு தான் பங்களிப்புகளை வழங்கியபோதிலும் அவைகள் விரைவில் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாகி, சிங்களவர்களுடன் தோளோடு தோள்கொடுத்த வரலாறுகள் தோற்று - (தொய்ந்து) போன நிலையே மிச்சமாகும்.
இலங்கையின் நீண்ட்கால வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான முஸ்லிம்கள்
இந்த நாட்டின் சுதந்திரத்துக்குப் பின் நடைபெற்ற பல தேர்தல்களில் ஐக்கிய
தேசியக் கட்சியை பெரும்பாலான முஸ்லிம்கள் தங்கள் விருப்புக்குரியதாகக் கொண்டு வாக்களித்து வந்திருப்பதே வரலாறு. -
அப்படி இருந்தும் கடந்த 1984களில் இஸ்ரேலியர்களை இங்கு வரவழைக்க முயன்ற தொடக்க நேரத்திலேயே கட்சி பேதங்களுக்கப்பால் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு "இஸ்ரேலியர்களை வரவழைக்க வேணடாம்!” எனக் கோஷமிட்டனர். இதனைக் கருத்தில் கொண்டு குறைந்த பட்சம் ஆறுதல் வார்த்தையையேனும் கூற முற்படவில்லை. மாறாக முஸ்லிம்களின் கோரிக்கையை எடுத்தெறிந்து பேசுவதில் அக்கறை காட்டியதாகவே காணப்படுகிறது. அன்றைய ஜனாதிபதி மறைந்த ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் இதுவிடயத்தில் எவ்வளவு இறுகிய போக்கைக் கடைப்பிடித்தார் என்பதற்கு அவர்களது பின்வரும் கூற்றுக்கள் போதிய சான்றாகும்.
"அரபு நாடுகளின் கொள்கை அனுசரிப்பில் எந்த மாற்றமும் இல்லை; அதே போல் இஸ்ரேலின் உதவியைப் பெறும் நோக்கத்திலும் மாற்றமில்லை. இதனை விரும்பாதவர்கள் எவராவது கட்சிக்குள் இருந்தால் வெளியே போகலாம்; அல்லது வெளியேற்றப்படுவர்" (நன்றி. - ஈழமுரசு 6-6-1984)
இச்செய்தியையடுத்து ஐக்கிய தேசியக்கட்சியைச் சார்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள பெட்டிப்பாம்பாக அடங்கி மெளனம் சாதித்தனர். ஆரம்பத்தில் காணப்பட்ட வீர உணர்ச்சி - சமூகப்பற்று எல்லாம் தங்களது பதவி, அந்தஸ்துகள் முன்னால் தோற்றுப்போய் விட்டன.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்
 
 
 
 
 

73
ஆயினும் அதே கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டிரோன் பெர்ணான்டோ அவர்கள் இஸ்ரேலின் விடயத்தில் தளர்ச்சியான கருத்தை முன்வைத்தார். “இஸ்ரேலியர் இங்கிருப்பது இந்தியாவைப் பாதிக்குமானால் நாம் அவர்களை வெளியேற்றுவது பற்றி ஆராய்வோம்" (தினகரன 1481987) என்பது அக்கூற்றாகும்.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் இரண்டாகும் ஒன்று மேற்படி கருத்து வெளியிடப்பட்ட காலத்திலும் ஜனாதிபதியாக இருந்தவர் ஜே. ஆர். ஜயவர்தன அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது; மற்றொன்று காலம் காலமாக ஐ.தே.க.வை ஆதரித்து அதன் வெற்றிக்குப் பலமுறை வழிவகுத்த முஸ்லிம்களுக்கு இப்படியான ஓர் ஆறுதல் வார்த்ததையேனும் கூறமுடியாதளவில் பேரினவாதம் மேலிட்டிருந்தது.
எதிர்த்தரப்பில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் தான் உரிமை, தனித்துவம், சுதந்திரம் என பெரிதாகப் பேசலாம் என்கின்ற ஒரு நடைமுறைக்கு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பழக்கப்பட்டு விட்ட நிலையினை அவதானிக்கலாம். இந்த மாயைக்குள் எமது முஸ்லிம் பிரதிநிதிகளும் சிக்கிக்காணப்படுவது நமது துரதிஷ்டமானது.
நமது நாட்டில் ஆளும் கட்சிகளாக மாறிமாறி வருவது ஐ.தே.க.வும், ரீ.ல.த.க.வும் என்பது ஒரு நடைமுறையாகவே உள்ளது. இவ்விரு கட்சிகளிலும் முஸ்லிம்களின் அங்கத்துவம், ஆதரவு என்பவை இருக்கின்றன. ஆயினும் மேற்படி கட்சிகள் முஸ்லிமகளுக்கு கால்வாரிய சந்தர்ப்பங்களே நிறைய உண்டு. தொடரும் சிங்களப் பேரினவாதத்துக்கு மிக அண்மைச் சான்றுகள் என்ற வகையில் பின்வரும் நிகழ்வுகளைக் கொள்ளலாம்.
3 பொது விடுமுறையாக இருந்த ஹஜ் பெருநாள் தினத்தை முஸ்லிம்களுக்கு மடடுமென மட்டுப்படுத்தி முஸ்லிம்களில் சிலரை அசெளகரியத்துக்கு உள்ளாகியிருப்பது.
3 அம்பாறை மாவட்டத்தில் சிங்களப்பகுதியல் அறுவடைக்குச் சென்ற முஸ்லிம்
விவசாயக் கூலியாட்களை தூஷித்து தாக்கி விரட்டியது.
3 அண்மையில் அரசாங்கம் முன்வைத்த இனப்பிரச்சனைத் தீர்வில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் பற்றியோ அல்லது அவர்களின் கோரிக்கைகள் - அதாவது முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை அல்லது தனியான அலகு பற்றி எதுவும் குறிப்பிடாது மெளனம் சாதித்திருப்பது.
3 அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய மாற்றீட்டுக்காணி “பொன்னன் வெளி”யை கிடைக்காது இடைநிறுத்தி வைத்திருப்பது. 3 தொடர்புசாதன ஊடகங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு விரோதமான சிந்தனைகள், கருத்துக்களில் பெரும்பான்மை சமூக மக்களிடையே விதைக்கும் வகையில் ஒலி-ஒளிபரப்பு நிகழ்சிகள், எழுத்து மூலமான படைப்புகள் மூலம் தொடரும் இனவாதத்துக்கு தடை, தணிக்கையை கொண்டுவராமல் இருப்பது.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 44
74
இப்படி இதன் பட்டியல் நீண்டு கொண்டு செல்லக்கூடியது. ஆயினும் நமது சிந்தனையில் மாற்றங்களை நாடி முடிவுகளைத்தேடி பயணிப்பதற்கு இது போதுமானது.
சமூகவியலைப் பற்றி அக்கறை இல்லாதவர்களிடையே நூற்றுக்கணக்கான சான்றுகளைக் குவித்தாலும் பயனில்லை.
முஸ்லிம்களைப்பற்றிப் பேசாத தீர்வுத்திட்டம்
முஸ்லிம்களைப்பற்றிப் பேசாத தீர்வுத்திட்டம், முஸ்லிம்கள் மீது தொடரப்படும் இனவாதங்களை இனம் கண்டபின்னரும் "இது நல்ல தீர்வுத் திட்டம், நல்ல ஆட்சியாளர்கள். இந்த ஆட்சியில் முஸ்லிம்கள் உரிமைகளை வென்றெடுக்க வில்லையானால் வேறெந்த ஆட்சியிலும் பெற இயலாது” என ஆளும் வர்க்கம் சார்ந்த முஸ்லிம் பிரதிநிதிகள் முண்டியடித்துக்கொண்டு அறிக்கைகளையும் பேட்டிகளையும் வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.
அதேநேரம் முன்னைய ஆட்சியாளர்களாகவும் இன்றைய எதிர்த்தரப் பினர்களாகவும் உள்ள “மெளனமே தாய்மொழி, உரிமை இழப்புகளே உரிமை” என்று மெளனம் காத்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல்வாதிகள் இன்று “உரிமைகள், சுதந்திரங்கள் மீட்க” என அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு கூட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் "தனித்துவம், பாரம்பரியம், சமூக உரிமைப் போராட்டம்"
போன்ற அழுத்தம் நிறைந்த சொற்களை வைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற எனக்கூறின் அது மிகையான கூற்றாகிவிடாத சூழலே காணப்படுகின்றது எனலாம்.
சிறுபான்மையினருக்கு பேரினவாதம் நெருக்கடியானது
எது எப்படி இருப்பினும், பேரினவாதங்கள் சிறுபான்மையினர் மீது அழுத்தம் கொடுப்பதில் குறைவில்லாதது. அதேநேரம் சிறுபான்மையினரின் உரிமைகளை விழுங்கிவிடுவதில் பேரினவாதம் முன்னிலை கொண்டது என்பதை கீழ்வரும் கூற்று மிகத்தெளிவாக சுட்டிக்கர்ட்டுகிறது.
"சிறுபான்மையினரின் வகுப்புவாதம் ஆபத்தானது. ஆனால் அது மெதுவாக ஓய்ந்து விடும். பெரும்பான்மையினரின் வகுப்புவாதமோ சிறுபான்மையினரின் வகுப்புவாதத்தை விட மிகப்பயங்கரமானது. ஏனெனில் பெரும்பான்மையினரின்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம். நூறுல்ஹக்
 
 
 
 

75
வகுப்புவாதம் “தேசியம்” என்ற போர்வையை அணிந்து கொள்கிறது.
இந்த வகுப்புவாதம் எங்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. சிறிது தூண்டி னாலும் அவ்வுணர்ச்சி விரைவில் எழுந்து விடும். இந்த வகுப்புவாத உணர்ச்சி தூண்டப்பட்டால் மதிப்புக்குரிவர்கள் கூட காட்டுமிராண்டிபோல நடந்து கொள்ள முற்படுவார்கள்" (நன்றி: இலங்கையில் இஸ்லாம்)
மேற்படி கூற்று பண்டிதர் நேரு அவர்களுடையதாகும். இக்கருத்தை வேறு வார்த்தையில் கூறுவதாயின் இந்தியாவின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான ஹ"மாயூன் கபீர் பின்வருமாறு கூறுகிறார்.
"பெரும்பான்மையினர் தேசிய நலன் என்ற மாறுவேடத்தில் தமது கொள்கையை வற்புறுத்திவிட்டு சிறுபான்மையினரின் பீதிகளை குறுகிய மனப்பான்மை என்று தட்டிக்கழித்து விடுவது எளிது. ஒரு பகுதியினரின் நலனை விட விரிவான தேசிய நலனே கவனிக்கப்படல் வேண்டும் என்று நிச்சயமாக எவரும் விவாதிக்கலாம். ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பான்மையினரிடம் தமது சொந்த நலனை தேசிய நலன் என்று ஒன்றுபடுத்தும் ஒருபோக்கு அடிக்கடி காணப்படுகின்றது. (நன்றி. இலங்கையில் இஸ்லாம்)
மேற்படி கருத்துக்களின் தோற்றுவாய் இந்தியாவானாலும் இன்று நமது நாட்டில் நிலவும் பேரினவாதத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டுவது போல் அமைந்துள்ளது. ஆயின் உரியவர்கள் உரிய முறையில் பாடம் படித்துக்கொள் வதன் மூலமே உண்மையான தேசியமும், சமூக ஐக்கியீங்களும் இங்கு நிலைபெற முடியுமெனலாம்.
பெரும்பான்மையினர் சிறுபான்மைச் சமூகங்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்தல் ஆகாது. அவ்வாறு பிரயோகிப்பதன் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகள், தனித்துவங்கள், சுதந்திரங்கள் போன்ற முக்கிய கேந்திரப்பண்புகள், தன்மைகள் இல்லாமல் போய்விடுகின்றன.
இந்நிலை விரக்தியை ஏற்படுத்தி விடுவதுடன் சினமூட்டல்களுக்கும் வழிவகுக் கினறன. அது சிலவேளை கிளர்ச்சி அல்லது சமூக விடுதலைப்போராட்டம் என்ற வடிவங்களுக்கு உந்தித் தள்ளிவிடும் அபாயகரமானது என்பதை புறந்தள்ளிவிட முடியாது.
இலங்கையில் முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற பேரினவாத நசுக்கல்கள் தொடர்ந்திருக்குமானால் வேறொரு திசையை நோக்கி தங்கள் சிந்தனைகளை திருப்பிவிடலாம். இது நம் நாட்டில் இன்றிருக்கும் இனவாதச் சக்தியை மேலும் அதிகரிக்கத் துணையாகி நாட்டின் தேசிய நலனுக்கும், ஒருமைப்பாட்டிற்கும், அபிவிருத்திகளுக்கும் பங்கமாக அமையும் என்பது கவனம் செலுத்தப்படவேண்டிய அம்சமே.
எனவே முஸ்லிம்களின் உரிமைகள், தனித்துவங்கள், பாரம்பரியங்கள், கலாச்சாரங்கள, சுதந்திரங்கள், சமய அனுஷ்டானங்கள், நிலங்கள் போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதற்கு பெரும்பான்மையினர் காரணமாக இருத்தல் ஆகாது. மாறாக இவர்களின் பாதுகாவலர்களாகவே இருக்க வேண்டும்.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 45
76
சிங்களப் பேரினவாதங்கள் தவிர்க்க்ப்படவேண்டிய ஒன்றாகும். இதன் மூலமே சமுகங்களுக்குள் ஒற்றுமையையும், பரஸ்பரத்தையும் சிநேகயூர்வத்தையும் வளர்த்தெடுப்பதுடன் சிறுபான்மையினரின் உரிமைகள் பேணும் நிலை நிலவமுடியும்.
இதுவே இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டின் எதிர்கால சுபீட்சத்துக்கும். எழுச்சிக்கும், விடிவுக்கும் உண்மையான தேசியத்துக்கும் உதவக்கூடியதென்பதை மறக்காதவரை மோட்சம் நிச்சயமானதொன்று எனலாம்.
தினக்குரல்
23-6-97
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

77
தெரிந்த விடைகளுக்கான கேள்விகள்
தமிழ் பேசும் மக்கள் என்ற வார்த்தையில் முஸ்லிம் மக்களை உள்ளடக்க முடியுமா?
டந்த 1995 செப்டம்பர் 78.9 ஆகிய தினங்களில் 5 நாளிதழில் முறையே "ரீலங்கா
முஸ்லிம் காங்கிரசின் யோசனைகளும் அம்பாறை மாவட்ட தமிழர்களின் நிலமையும், இன்று அம்பாறை தமிழ் மக்களின் நலன் பேண எவ்வித அமைப்பும் இல்லை. தமிழ் பெரும்பான்மை பிரதேச சபைகள் உருவாக்கப்படவேண்டும்” எனும் தலைப்புக்களில் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் என்பவர் சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். *
அக்கருத்துக்கள் எல்லர்ம் சரியானவையா? அல்லது பிழையானவையா? என்ற விவாதத்தை தொடக்கி வைப்பது என் நோக்கமல்ல. மாறாக முஸ்லிம்கள் தொடர்பாக அக்கட்டு ரைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கும் சில தவறான உள்ளடக் . கங்களுக்கு மட்டும் தெளிவான விளக்கங்களை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
“தமிழரசுக்கட்சிக் காலத்தில் இருந்தே தமிழ் அரசியல் கட்சிகளினால் பயன்ப்டுத்தப்பட்டுவந்த “தமிழ் பேசும் மக்கள் என்ற சொற்பிரயோகத்தை ழரீ.ல.மு.கா. நிராகரித்துள்ளது என்பதும் இதுகாலவரை தமிழ் அரசியல் கட்சிகள் கோரிவந்த சுயாட்சியுடைய மொழிவாரி மாநிலம் என்ற கோட்பாட்டிற்கு மாறாக வடக்கு - கிழக்கில் இனரீதியான முஸ்லிம் அரசியல் அலகு (தனியான முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை) ஒன்றையே பூரீ.ல.மு.கா. இன்று கோரிக்கையாக விடுத்துள்ளது"
தீவும் கீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 46
78
தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் மேற்படி கூற்றுக்களை தனது கட்டுரை வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
மேற்கண்ட அவரது கருத்துக்களில் இரு பிழையான தரவுகளை முன்வைத் துள்ளார். அவையாவன: "தமிழ் பேசும் மக்கள்” என்ற சொற்பிரயோகத்தை நிராகரிதத்தும் “தனியான முஸ்லிம் மாகாண சபை' ஒன்று வேண்டுமென்ற கோரிக்கையும் ரீ.ல.மு.காங்கிரஸினால் முன்வைக்கப்பட்டது போல் காட்டி யிருப்பது. இலங்கையில் "தமிழ் பேசும் மக்கள்” என்ற சொற்பிரயோகம் இனவாதம் அல்லது சமூக அரசியல் ஒதுக்கல் எனும் அடிப்படையில் பாவிக்கப்பட்டதினால் அச்சொல்லின் யதார்த்த நிலை நிராகரிக்கப்பட்டதோ என்றொரு ஐயமும் உண்டு.
1885ஆம் ஆண்டு இலங்கை சட்டசபையிலும் 1888ஆம் ஆண்டு அரச ஆசிய கழகத்திலும் “இலங்கை முஸ்லிம்கள் தேசிய இனத்தைப் பொறுத்த வரையில் தமிழர்கள்: சமயத்தைப் பொறுத்தவரை முஹம்மதியர்கள் எனும் கருத்தை சேர்.பொன் இராமநாதன் முன்வைத்தார்.
“இராமநாதன் ஈழத்து முஸ்லிம்களை ஒரு தனி இனமாக இடம்பெறச்செய்யாது தமிழ் இனத்துக்குள் அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்ததற்கு அந்த வேளையில் பேரறிஞர் சித்திலெப்வை அவர்கள் ஒருகாரணத்தையும் காட்டியிருந்தார்கள். அதாவது அந்தச் சமயத்தில் சட்டவாக்க சபைக்கு சோனக உறுப்பினர் ஒருவரை நியமிக்க பிரிட்டிஷ் அரசும் சிந்தித்துக்கொண்டிருந்தது. சோனகர் ஒரு தனி இனமல்ல என்ற கூற்றை வெள்ளையராட்சி ஏற்றுக் கொண்டால் ஒரு முஸ்லிம் " நியணத்திற்கு இடமே இல்லாது போயிருக்கலாம்" (மர்ஹம் எச்.எம்.பி. முகைதீன் இலங்கை சோனகர் இன வரலாறு தினகரன் முஸ்லிம் மலர் 29-4-1977)
முஸ்லிம்கள் தம்மை ஒரு தனிஇனமாகத் தாபிக்க முயன்ற போதும், தமக்கென ஓர் அரசியல் வளர்ச்சியை உருவாக்க முயன்றபோதும் இராமநாதன் செய்த குறுக்கீடு தொற்று நோய் போல அவர் வழிவந்த தமிழ் தலைமைகளிலும் காணப்பட்டதா என்ற ஐயமும் முஸ்லிம்களிடத்தில் உண்டு.
“1885ல் சேர் பொன்னம்பலம் இராமநாதன் முன்வைத்த முஸ்லிம்களால் வெறுக்கப்பட்ட அதே உபாயங்களையா நீங்களும் முன்வைக்கிறீர்கள்? அதில் அவர் படுதோல்வியுற்றதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்” என சேர் ராஸிக் பரீத் 1958ல் பாராளுமன்றத்தில் தமிழ்த் தலைவர்களைப்பார்த்துக் கூறினார். (அவுர்ஷரா பெப்-மார்ச் 1985)
மிதவாத தமிழ் அரசியல் தலைமை தொட்டு ஈறாகத் தோன்றிய ஆயுதமேந்திய இளம் தலைமை வரை இந்தக் கருத்தில் நிலை கொண்டிருக்கின்றனர் என்பதற்கு பின்வரும் கூற்றை ஆதாரமாகக் கொள்ளமுடியும்.
“இலங்கையில் முஸ்லிம்கள்" என அழைக்கப்படும் மக்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவிய தமிழர்களே. இந்த இஸ்லாமியத் தமிழர்கள் இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு இணைபிரியாத அங்கம் என்பது எமது நிலைப்பாடு" (இஸ்லாமியத் தலைவரும் தமிழீழ விடுதலைப்போராட்டமும் ஜனவரி 1987 இது தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளியீடாகும்.)
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

79
"தமிழ் பேசும் மக்கள்’ எனும் சொற்றொடர் இலங்கையில் எவ்வாறு பாவிக்கப் பட்டதென்பது பற்றி யாழ். பல்கலைக் கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் முன்வைத்திருந்த கருத்தொன்று இங்கு பொருத்தமாக இருக்கு மென்று நம்புகிறேன். அக்கருத்தாவது,
"தமிழ் என்ற சொல் அம்மொழியையும் அதனைப்பயன்படுத்துபவரையும் குறிக்கின்றது. தென்னிந்தியாவில் இச்சொல்லின் பயன்பாடு முஸ்லிம்களையும் குறிக்கிறது. (பெரும்பாலும் அவர்கள் தமிழ் முஸ்லிம்கள் எனக் குறிக்கப் படுவதுண்டு) ஆனால் இலங்கையில் முஸ்லிம்கள் வேறான தனித்துவத்தை கொண்டுள்ளனர்.
எனவே சமஷ்டிக்கட்சி "தமிழ் பேசும் மக்கள்" என்ற தொடரை பிரபலப்படுத்த முயற்சி செய்ததே. ஆனால் அது மிகச் சிறியளவே வெற்றி பெற்றது. இலங்கை யின் சமய கலாசார பாரம்பரியங்களும் வரலாற்று நிலைமைகளும் முஸ்லிம் களுக்கு ஒரு தனியான அரசியல் தனித்துவத்தை அளித்தன" (நன்றி. இலங்கையில் இனத்துவமும் சமுக மாற்றமும்)
இலங்கையில் வாழும் பிரதான 'மூவின சமுகத்துள் இரு சமுகத்தினர் மொழியினை வைத்து அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர். அதனையே அவ்விரு சமூகங்களும் வரவேற்று அரவணைத்துள்ளதைக் காணலாம். சிங்களவர். தமிழர் என மொழியினை வைத்து அடையாளம் காணும் அதேநேரம் முஸ்லிம்கள் மட்டும் சமயத்தை வைத்தே இனங்காணப்பட வேண்டியவர்களாவர்.
சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவர்களும் தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவர்களும் சிங்கள - தமிழ் கலவரங்களின் போது அவரவர் மொழி ரீதியில் பிரிந்து நின்று போராடினார்கள் என்பது வரலாறு கண்ட உண்மை. ஆகவே மொழியினை வைத்து சிங்களவர். தமிழர் அடையாளப்படுத்தப்பட வேண்டியவர்கள் தவிர முஸ்லிம்கள் அல்ல என்பது தெட்டத்தெளிவான சங்கதி.
அதுமாத்திரமன்றி முஸ்லிம்களைப் பொறுத்தவரை “மொழி” ஒரு பிரச்சினை யாக அமையவில்லை. உலகின் பலபாகங்களிலும் வாழும் முஸ்லிம்கள் எந்த மொழியைப் பேசினாலும் அதனை ஒரு தொடர்பு ஊடகமாகக் கருதுகின்ற னரே தவிர வேறில்லை.
உலகில் எங்கேயாவது வாழும் முஸ்லிம்கள் மொழிக்கு அந்தஸ்து வழங்கி வழிப்பட்டதோ மொழிப்போராட்டம் நடத்தியதாகவோ வரலாறு இல்லை. ஆதலால் மொழித்திணிப்பு முஸ்லிம்களிடம் வெற்றிபெறும் வாய்ப்பில்லை.
எனவே மொழியை வைத்து இலங்கை முஸ்லிமானாலும் சரி, உலகில் வேறெங்கு வாழும் முஸ்லிமானாலும் சரி அடையாளங் காணத்தக்கவர்களல்ல என்பது பட்டவர்த்தமான உண்மை. இதற்கு மாற்றமான நடவடிக்கையில் ஏனைய சமூகத்தினர் இறங்குவதென்பது அர்த்தமற்ற போக்கென்பது தெளிவானதே.
"தமிழர்கள்தான் இஸ்லாத்தைத் தழுவியிருக்கிறார்கள்” என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும் கூட இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 47
للسكتة
"தமிழர்கள்” எனக்கூறுவது - அழைப்பது சாத்தியமற்ற ஒன்று என்றே கூறவேண்டும்.
ஏனெனில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோர்களை இஸ்லாமிய தனித்துவமிக்க கலாசாரமும், வணக்க வழிபாடுகளுமே வரவேற்று - அரவ ணைத்துக் கொள்கிறது. அதலால் அவர்கள் முஸ்லிம்கள், விசுவாசிகள் இஸ்லாமியர்கள். அல்லது அவர்கள் வாழும் நாட்டில் முஸ்லிம்களைக் குறிக்கும் தனிச் சொற்களாலுமே அழைக்கப்படவேண்டியவர்களாகின்றனர்.
இத்தகைய போக்கு என்பது முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமான கைங்கரியம் என்றே கூற வேண்டும். இதனை இன்னொரு நடைமுறையினை வைத்தும் வேறுபடுத்திப்பார்க்கலாம். சில தமிழர்க்ளின் வீட்டில் பெளத்த. கிறிஸ்தவர்களின் படங்களும, பெளத்தர்களின் வீட்டில் தமிழர்களின் கடவுள், கிறிஸ்தவ கடவுள்களின் படங்களும. கிறிஸ்தவர்களின் இல்லங்களில் பெளத்த கடவுளும் தமிழர்களின் கடவுள்களின் படங்களும் தொங்கவைப்பதுண்டு.
இப்படி எல்லா மதங்களும் ஒன்றென்ற கொள்கையோ எல்லாச் சமயங்களின் வணக்க வழிபாடுகள் வேறானாலும் அவைகள் கொண்டு போய்ச் சேர்க்கும் இடம், நிலை ஒன்றுதான் என்ற அடிப்படை முஸ்லிம்களிடம் இருக்க முடியாது: இருக்கவும் இல்லை. •
இதனால் தான் இஸ்லாம் இரத்த உறவினால் உருவாகும் உறவிற்கென்று ஒரு தனியான இடம் வழங்கவில்லை. மாறாக இஸ்லாம் எனும் அறநெறியை ஏற்றுக்கொண்டதினால் ஏற்படும் பந்தமான முஸ்லிம் - ஏற்றுக் கொண்டவர்; இஸ்லாமியர் - விசுவாசி என்பதற்கே முக்கியத்துவம் வழங்குகிறது.
"பிறப்பு, தாய்நாடு, நிறம், தாய்மொழி போன்றவை இயற்கையான அமைப்புக்கள் என்பதால் இவற்றை அடிப்படையாகக் கொண்ட இனம் பற்றி கோட்பாடுகளை இஸ்லாம் ஏற்கவில்லை”. (நன்றி. இஸ்லாம் ஓர் அறிமுகம்)
இலங்கை வாழ் முஸ்லிம்களின் தாய்மொழி தமிழாக இருப்பதினாலோ அல்லது தமிழ் மொழியைப் பேசுவதாலோ தமிழர்களாக - தமிழ் இனமாகக் கருதப்படமுடியாது. ஏனெனில் ஈரானில் வாழும் முஸ்லிம்கள் பாரசீக மொழியைப் பேசுவதினால் “பாரசீக முஸ்லிம்கள்” என்றோ, பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்கள் உர்து மொழியைப் பேசுவதினால் "உர்து முஸ்லிம்கள்” என்றோ கூறுவதில்லையே. வீரகேசரி - 26.10.1995
முஸ்லிம் மாகாணக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எப்போது
இஸ்லாம் எனும் அறநெறியை ஏற்றுக்கொண்டவர்கள் எந்த நாட்டில், எந்த மொழியைப் பேசிக்கொண்டாலும் அவர்கள் முஸ்லிம்கள் - இஸ்லாமியர்கள் - விசுவாசிகள் போன்ற அவர்களைத் தனியாகக் குறிக்கும் சொற்களைக் கொண்டு இனங்காணப்பட்டு அவர்களிடையே சகோதரத்துவம் பேணப்பட வேண்டியவர்களே.
தீவும் தீர்வுகளும் எம். எம். எம்.நூறுல்ஹக்
 
 
 
 

8
“இலங்கையில் வாழும் தமிழர், சிங்களவா, முஸ்லிம்கள் யாவரும் ஒரேவகையான உடலியற் பண்புகளைக் கொண்டிருந்த போதிலும் வெவ்வேறான இனக்குழுக்களாகவே உள்ளனர். தனித்தனி இனக்குழுக்களாக இவர்களை வேறுபடுத்துவன சமயம், மொழி ஆகியவையும். ஏனைய பண்பாட்டு தனித்தன்மை களுமாகும்”. (சித்திரலேகா மெளனகுரு) t
“சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் பற்றிய உண்மையான காரணிகள் இன்னொரு முக்கிய தேசிய இனமான முஸ்லிம் மக்கள் விடயத்தில் ஏற்புடை யனவே. (சேனக பண்டாரநாயக்கா)
முஸ்லிம்களைப் பொறுத்தவரை தமிழ் மொழி என்பது தெய்வீக அம்சம் கொண்டதாகவோ அவர்கள் பின்பற்றும் அறநெறிக் கோட்பாடர்ன இஸ்லாத்துடன தொடர்பு கொண்டதாகவோ அமையவில்லை. அதே நேரம், மொழி முஸ்லிம் களின் சமயத்திற்கு சவாலாக அமையுமானால் அந்த மொழியை தூக்கி எறியவும் முஸ்லிம்கள் பின்நிற்கவில்லை என்பதை இலங்கை வரலாற்றில் பரக்கக் காணலாம்.
இந்த வரையறைக்கு மாற்றமான கருத்துக்கள், மொழி பற்றி முஸ்லிம் இல்லாதவர்களிடம் இருக்கலாம். அதற்காக அவற்றினை முஸ்லிம்கள் ஏற்றுத்தான ஆக வேண்டும் என்ற கட்டாயத் திணிப்பை மேற்கொள்வது அறிவுபூர்வமானதல்ல.
“தமிழ்பேசும் மக்கள் என்ற சொற்றொடர் ஒரு இனக்குழுவை குறிப்பதல்ல. உண்மையிலே இலங்கைத் தமிழர், இலங்கை முஸ்லிம்கள். இந்தியத் தமிழர்கள் ஆகிய மூன்று இனக்குழுவையுமே குறிக்கும்” என ஜனாப், எம்ஐஎம்.ழஹியதீன் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் பேசும் மக்கள்” என்ற சொற்றொடரை சமய ரீதியாக நோக்கினால் ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவம்’ எனும் மூன்று மதப்பிரிவினர்களைச் சுட்டி நிற்கும். ஆகவே இச்சொற்றொடர் குறித்த ஒரு சமூகத்தை - இனத்தை மட்டும் உள்ளடக்கவில்லை என்பது மிகத்தெளிவானதே.
"நீண்டகாலம் தொட்டே இலங்கையில் அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் வேறுபட்ட இனப்பிரினர்களாக கருதப்பட்டு வருகின்றனர். முஸ்லிம் மக்களுக்கென பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் அரச சபையில் தனியான பிரதிநிதித்துவங்கள் கூட ஒதுக்கப்பட்டுள்ளன" (ஜனாப் எம்.எச்.எம்.அஷ்ரப் வீரகேசரி - 72-1987)
முஸ்லிம்களை தமிழ் இனத்துள் அடக்கி இனங்காட்ட முற்படுவதற்கு பிரதானமான காரணம் ஆளும் வர்க்கமாக தமிழ் சமூகமும் ஆளப்படுபவர்களாக
முஸ்லிம் சமூகமும் இருக்கவேண்டும் என்கின்ற குறுகிய வேட்கையின்
விளைவென்று துணிந்து கூறலாம்.
முஸ்லிம்கள் தனியானதொரு சமூகக்குழு என பல்வேறு கட்டங்களில் பல்வேறு கோணங்களில் ஆதாரங்களை அறைந்தும், இல்லை முஸ்லிம்கள் தமிழ் இனம்தான் எனும் பல்லவியை மீண்டும் மீண்டுமாக பாடுவதன் உள்நோக்கம்தான் என்ன?
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 48
82
ஆளும் ஆசை - தலைமைத்துவ வேட்கை தமிழ்த் தலைமைத்துவங்களிடம் இல்லையானால் நேர்மையான சான்றுகளின் பேரில் முஸ்லிம்கள் தனியானதொரு சமூகம் என்பதை ஏற்றுக்கொள்வதில் தடையேதும் இருக்க நியாயமில்லை. நியாயங்களை புதைத்துவிட்ட நிலையில் "தமிழ் பேசும் மக்கள்” என்ற சொற்றொடரை குறுகிய சிதைவிலேயே பயன்படுத்தப்பட்டதென்பதைக் கூறுவது தவறாகுமா?
”தமிழ் பேசும் மக்கள்” என்ற சொற்றொடர் முஸ்லிம்களை தமிழ் இனமாகக் காட்டும் நோக்கில்தான் பாவிக்கப்பட்டதென்பது நிருபிக்கப்பட்ட உண்மை. அன்றி லிருந்தே இந்தச் சொற்றொடரும் நிராகரிக்கப்பட்டதாகும்.
இலங்கை வாழ் சமுகங்களுக்குள் பிரிவினை உணர்வுகள் எப்போது வேர்விட்டதோ அப்போதே முஸ்லிம்களும் தங்களை தனியானதொரு சமூகம் என்பதை இனங்காட்டி வந்திருப்பதை வரலாறு நன்கு புடம்போட்டுக் காட்டத் தவறவில்லை.
இந்த வரலாற்றுக்கு புறநடையாக ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் "எங்கள் இரத்தத்தில் சிங்களம் ஒடுகிறது” என்றும் "தமிழ் இரத்தம் ஒடுகிறது” என்றும் கூறியதை வைத்துக் கொண்டு பெரும்பான்மையான முஸ்லிம்களினால் தூக்கிவீசப்பட்ட கருத்துக்களை சிம்மாசனத்தில் அமர்த்திப் பார்ப்பது அறிவுபூர் வமான நடவடிக்கையல்ல.
இப்படிக் கருத்துச் சிதைவுகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தின் நிலையினை நிர்ணயிக்க முற்படுவது சரியல்ல. ஏனெனில் இந்தச் சிதைவென்பது சமூக மேம்பாட்டிற்காக ஏற்பட்டதல்ல. மாறாக தங்களின் பதவி நாற்காலிகளை தக்க வைத்துக்கோள்வதற்காக "சமூகத்தை உதைத்துத் தள்ளியதே” இந்தச் சிதைவின் வித்து அல்லது பின்னணியாகும்.
ஆகவே “தமிழ் பேசும் மக்கள்” என்ற சொற்றொடர் ஏற்கனவே முஸ்லிம் களினால் நிராகரிக்கப்பட்டு வந்திருப்பதை நாம் அவதானிக்கலாம்.இந்த அவதானம் தான் இச்சொற்றொடரை ரீ.ல.மு.கா.வும் நிராகரித்துக் கொண்டதன் பின்னணி யாகும். மாறாக ரீ.ல.மு.காங்கிரஸே “தமிழ் பேசும் மக்கள்” எனும் சொற் றொடரை நிராகரித்தது என்பது உண்மைக்குப்புறம்பானது.
ரீ.ல.மு.காங்கிரஸ் முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்ததினாலும் பெரும்பான்மையான முஸ்லிம்களினால் வெறுத்தொதுக்கப்பட்ட “தமிழ் பேசும் மக்கள்” என்ற சொற்பிரயோகத்தை மறுப்பது தவிர வேறு வழி ரீ.ல.மு.காங்கிரசிற்கு இருக்கவில்லை என்பதே மெத்தச் சரியானது. 1.
“முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை" கோரிக்கை என்பது ரீ.ல.மு. காங்கிரஸினதென்றும், இந்த வேண்டுகோளினால் வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் மக்களின் போராட்டம் கொச்சைப்படுத்தப்படுகிறதென்று பரவலாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டாகும்.
ஒரு பிரச்சினையின் மையம் விளங்க வேண்டுமானால் முதலில் கசப்புணர்வு, பக்கச்சார்பு எனும் மனோ நிலையினை ஒரம் கட்டவேண்டும். அடுத்து
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

83 விவாதப்பொறியுடன் எதனையும் அணுகாது விட்டுக் கொடுத்தல், மனிதாபிமானம் போன்ற உயர் தன்மைகளுடன் அணுக முன்வர வேண்டும். அப்போதுதான் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். ஒற்றுமையும் நேசமும் நிலை கொள்ளும். பீதிகள் மறைந்து அழிவுகளும் நீங்கிய சந்தோச உதயங்கள் சமூகங்களுக்குள் நிலை கொள்ள வழியேற்படும் எனலாம்.
முஸ்லிம்களுக்கான தனியான அரசியல் அலகு கிழக்கு மாகாணத்தில் அமைய வேண்டும் என்ற அவா 1986களில் தோற்றம் பெற்றவையல்ல. மாறாக அது நீண்ட காலத்து எதிர்பார்ப்பாகும் என்பதை அல்ஹாஜ் எஸ்.இஸட் மசூர் மெளலானா தனது பாணியில் கீழ்க்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
"கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்குப் புறம்பான ஒருபகுதி ஒதுக்கப்படுவதை தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் அங்கீகரித்திருக்கிறார். பண்டா - செல்வா ஒப்பந்தமும் இதனைக் கூறியிருக்கிறது. இந்நிலையில் முஸ்லிம்கள் தம் பகுதியை உட்படுத்தித் தனியான மாகாண சபை ஒன்று அமைக்கப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுப்பது புதிய விடயம் ஒன்றல்ல”. (தினகரன் 2-8-86)
தமிழர்களின் அபிலாசைகளைத் தீர்த்துவைக்கக் கூடிய ஒரு நியாயமான தீர்வைக் காணும் முயற்சி தோல்வியடையாமல் இருப்பதற்கு இன்று முஸ்லிம் சமூகம் முன்வைத்துள்ள முஸ்லிம்களுக்கான தனியான மாகாணசபை என்னும் யோசனை பெரிதும் நாம் நம்புகிறோம்" (ஜனாப் எம்.எச்எம் அஷ்ரப் தினகரன் 3-8-86)
முஸ்லிம்களுக்கென தனியான மாகாண சபை தோற்றுவிக்கப்பட வேண்டுமென முஸ்லிம் லீக் வழங்கியுள்ள ஆலோசனையை நியாய புத்தியுடன் சிந்திக்கும் எவரும் பெரிதும் வரவேற்பர்" (முன்னாள் தபால் தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம்.ஏ. அப்துல் மஜீத் பீஏ. உதயம் 14 - 27 நவம்பர் 1986) y
-வீரகேசரி - 27.10-95
முஸ்லிம்களின் தனி மாகாணத்துக்கான போராட்டம் தனித்துவமானதொன்று
"முஸ்லிம் லீக் முன்வைத்த பெரும்பான்மை முஸ்லிம் மாகாண யோசனைக்கு பல்வேறு இயக்கங்களும் கிழக்கு மாகாண இயக்கங்களும் ஆதரவு தெரிவித் திருப்பது குறித்து முஸ்லிம் லீக் செயற்குழு பாராட்டுத் தெரிவித்துள்ளது". (தினகரன் 2-10-86)
"கிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மை முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கிய பெரும்பான்மை முஸ்லிம் மாகாணம் ஒன்றை அமைக்கும்படி முஸ்லிம் அரசியல் இயக்கங்கள் கோருகின்றன. அரசாங்கத்திடம் தெரிவித்துள்ள இக்கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்துவதென்று கொழும்பில் நடைபெற்ற
தீவும் தீள்வுகளும், எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 49
84
மகாநாடொன்றில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. ஐ.தே.க. ரீ.ல.சு.க. அகில இலங்கை முஸ்லிம் லீக், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணிகளின் சம்மேளனம், பூரீ.ல.மு.கா. சோனக இஸ்லாமிய கலாசார நிலையம், பாமிஸ் வாலிப சம்மேளனம், கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி. அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை ஆகிய பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாட்டிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது" (தினகரன் 11-3-87)
"முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை பற்றிய கருத்துக்களைப் பெறும் நோக்கில் பல அமைப்புக்களை ஒன்றிணைக்கும் கைங்கரியத்தில் ”அம்பாறை மாவட்டத்தின் பள்ளிவாசல்களின் சம்மேளனம்” இறங்கி 10-8-86ல் அட்டாளைச்சேனையில் ஒன்று கூட்டியது. இந்த ஒன்று கூடலில் காத்தான்குடி பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களும், பூரீ.ல.மு.கா. முஸ்லிம் லீக் வாலிப முன்னணி, சாய்ந்தமருது சமாதான சபை, கல்முனை ஹிஜ்ரா கவுன்சில், கிழக்கிலங்கை அரபுக்கல்லூரி, அக்கரைப்பற்று பிரதேச சபை. அக்கரைப்பற்று மக்கள் சம்மேளனம் ஆகிய ஸ்தாபனங்களும், சம்மாந்துறை - பொத்துவில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவர் மற்றும் ஐ.தே.க. பூரீ.ல.சு.க. ஆகியவற்றின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த ஒன்றுகூடலிலும் முஸ்லிம் மாகாணசபை வேண்டுமென்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முஸ்லிம்களின் தனி மாகாணப் போராட்டம் தனித்துவமான ஒன்று என்பதும் அது முஸ்லிம் லீக்கினால் முதன் முதலில் முன்வைக்கப்பட்டதென்பதையும் மேலே உள்ள சான்றுகளில் தெளிவாகக் காணலாம். பின்னர் இக்கோரிக்கை பல அமைப்புக்களினாலும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் பலவற்றாலும் அங்கீகரிக்கப்பட்டு பரவலாகப் பேசப்பட்டதுமாக மாறியது.
குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்புக்களும் மேல்மாகாணத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் அமைப்புக்களில் பலவும் ஒன்றிணைந்து பெரும்பான்மை யான முஸ்லிம்களின் ஏகோபித்த யோசனையாக "முஸ்லிம் மாகாணசபைக் கோரிக்கை” வளர்ச்சி கண்டதென்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களின் வரலாற்று முக்கியத்துவமிக்க இந்தக் கோரிக்கையினை பெளத்த பேரினவாத அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கவில்லை என்பது ஆச்சரியமான சங்கதியல்ல. ஆனால் தமிழ் மிதவாதம் தொட்டு தீவிரவாத தலைமைத்துவம் வரையும் முஸ்லிம் மாகாணசபைக் கோரிக்கை நிராகரிக்கப் பட்டிருப்பது தான் ஆச்சரியத்துக்குரியது.
1956ஆம் ஆண்டு நடைபெற்ற திருமலை மாநாட்டில் “முஸ்லிம்கள் விரும்பினால் அவர்களுக்கென்று ஓர் மாநில அரசு” என்று தீர்மானமும் 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ல் திருமலையில் கூடிய தமிழரசுக்கட்சியின் 9வது மகாநாட்டில் "இலங்கையில் ஒரு சுயாட்சி தமிழரசும் ஒரு முஸ்லிம் அரசும் அமைய வேண்டும்" என்ற கொள்கையை வலியுறுத்தியவர்கள் பின் வந்த காலங்களில் தங்கள் வாக்குறுதிகளை எவ்வாறு காற்றில் பறக்கவிட்டனர் என்பதற்கு “முஸ்லிம்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

85
மாகாணசபை" கோரிக்கை ஒன்றே போதுமான சான்றாகும்.
"முஸ்லிம்கள் தமக்கும் ஒரு தனி மாகாணம் வேண்டுமென்று கோருவதை நாம் எதிர்க்கவில்லை. எதிர்க்கப் போவதுமில்லை. அதற்கு நாம் பூரண ஆதரவு வழங்குவோம்".(மறைந்த திரு. அமிர்தலிங்கம் தினகரன் 22-8-86)
"மேலதிகமாக அவர்கள் கேட்கின்ற தனி முஸ்லிம் மாகாணத்தைப் பொறுத்த வகையில் நாம் இன்னும் ஆலோசிக்க வேண்டும். அதன் சில பலாபலன்கள் பாதகமாக அமையும் என்ற அச்சம் தோன்றியுள்ளது" (திரு.எம். சிவசிதம்பரம் g5kori Joi áITTLoej5őff 27-9-87)
1982ஆம் ஆண்டு ஓர் அமைப்பாகத் தோற்றம் பெற்ற ரீ.ல.மு.கா. 1986 நவம்பர் 29ல் கூடிய மாநாட்டில் “இதுவொரு அரசியல் கட்சியாகும்” என்ற பிரகடனத்தை முன்வைத்தது. ஆயினும் 1988களில் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் ஒன்றாக பரிணமித்தது. அரசியல் கட்சியாக பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாற்றம் பெற்ற சிறிய காலத்துள் அது மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. இக்காலகட்டத்தில் முஸ்லிம் மக்களிடம் சிலாகிக்கப்பட்ட “முஸ்லிம் மாகாண சபை" கோரிக்கையை தனது தேர்தல் வாக்குறுதியாக வழங்கிற்று. '
"முஸ்லிம்கள் ஒன்றுபட்டு முழுமையாக ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியினை ஆதரிப்பது கிழக்கில் ஓர் தனியான முஸ்லிம் மாகாணம் அமைவதை உறுதி செய்வதாக அமையும். இதன் மூலம் நாம் மாகாண சபையை வென்றெடுக்க முயல்வோம்". அன்றைய தேர்தல் பிரசாரங்கள் - குறிப்பாக மாகாண சபை பிரசாரங்கள் -முஸ்லிம்களிடம் நன்கு பதியப்பட்டு விட்டது. இந்த எதிர்பார்ப்பு என்பது தற்செயலான விபத்து; நிலையானதல்ல. மாறாக பேரினவாதங்களினால் நெருக்கப்பட்டு, நசுக்கப்பட்டு அனுபவித்த துன்பவியலாலும் எதிர்கால இருள்மய வாழ்க்கையின் எதிர் விளைவினாலும் உறுதியாகவும் அவசியமாகவும் உருவானதே “முஸ்லிம் மாகாண சபை” என்று கூறலாம்.
வீரகேசரி 28-10-95
முஸ்லிம் மாகாண சபை கோரிக்கையை தீவிரப்படுத்திய பின்னணிக் காரணிகள்
பூரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியின் யோசனைகளில் “முஸ்லிம் பெரும்பான்மையான மாகாண சபை அல்லது முஸ்லிம் தனியான மாகாண அலகு" என்பதை தெரிவித்திருக்கிறதென்றால் அது அவர்களின் சுயவிருப்பத்தின் பேரிலோ, பதவி ஆசையின் உந்துதலிலோ எழுந்த எழுச்சியல்ல. மாறாக முஸ்லிம்களிடம் காணப்படும் அபிலாசைகளுக்கு அரசியல் களம் வழங்கும் கட்டுப்பாடு அதற்கு இருக்கிறது. கடமையுணர்வின் வெளிப்பாடே இந்த யோசனைகளின் பின்புலம் என்பது நிதர்சனமானது.
வரலாற்று முக்கியத்துவமாக முஸ்லிம்களிடம் கருதப்படும் “முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை" கோரிக்கையினை மக்கள் மயப்படுத்திய
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 50
86
பெருமையும். பந்தமும் ரீ.ல.மு.காங்கிரஸை மிஞ்சிய சக்தி இல்லை என்பதும் ஒரு வரலாற்று உண்மையே.
"முஸ்லிம் மாகாணசபைக் கோரிக்கைக்கு முஸ்லிம்கள் வழங்கிய ஆணையை ரீ.ல.மு.கா. அரசியல் மயப்படுத்தியதுடன் அரசியல் அந்தஸ்தும் பெற முயல்கிறது. தவிர ஏனைய சமூகத்தின் போராட்டங்களை கொச்சைப் படுத்தவில்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
முஸ்லிம்களிடமிருந்து “முஸ்லிம் மாகாண சபைக் கோரிக்கையின் பின்னணி என ஆரம்பத்தில் கருதப்பட்ட மூன்று காரணங்களை ஜனாப் எம்.வை.எம். சித்தீக் (B.Com Hons , MPA) அவர்கள் “முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை - இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த கோரிக்கையாகும்” எனும் நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அவற்றை இங்கே சுருக்கித் தருகின்றேன்.
அ,"கிழக்கின் அம்பாறை தொகுதி நீங்கலாக அல்லது அம்பாறை தொகுதி உட்பட ஒரு மாகாண சபை உருவாகுமானால் அது 'தமிழ் பேசும் மக்களுக்கிடையிலான முடிவில்லாத மோதல்களுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்ற ஒரு பயம்தான் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாண சபையினைக் கோருவதற்கு அடிப்படைக் காரணமாகும்"
ஆ. "தற்போதுள்ள எல்லைகளை அடிப்படையாக வைத்து ஒன்பது மாகாண சபைகள் உருவாகுமானால் தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட இரண்டு தமிழ் மாநிலங்களும் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஏழு சிங்கள மாகாண சபைகளும் காணப்படும். இந்நிலையானது இலங்கையில் முஸ்லிம் இனமொன்று இல்லை என்ற உணர்வை வெளியுலகிற்கு ஏற்படுத்தக்கூடும்"
இ. இந்தியாவில் அதிகாரப் பரவலாக்கல் செய்யப்பட்டபோது அல்லது மாநில சபைகள் உருவாக்கப்பட்டபோது தனிப்பட்ட இனங்களின் கலாசார பாரம்பரிய தனித்துவங்கள் மதிக்கப்படவில்லை. இதனாலேயே நாகலாந்து, மிசோராம், அஸ்ஸாம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் மொழி, இன, மத. கலாசாரப் பிரச்சினைகள் அடிக்கடி எழுகின்றன. இந்த அனுபவம் இலங்கை யில் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் முஸ்லிம்களின் தனிப்பட்ட கலாசார பாரம்பரிய பெறுமதிகள் மதிக்கப்படவேண்டும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் தமக்கென ஒரு மாகாண சபையை பெற்றுக்கொள்ளுதல் அவசிய மாகின்றது"
இவ்வாறான காரணங்களுடன் இன்று இன்னும் சில சம்பவங்களும் சேர்ந்து "முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை'யின் அவசியத்தை தீவிரமாக்கியுள்ளது. இந்நிலையானது குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள மிதவாத, தீவிரவாத தமிழ்த் தலைமைகளின் சிந்தனைபூர்வமற்ற நடவடிக்கை அணுகு முறையினால் ஏற்பட்டதெனக் துணிந்து கூறலாம்.
சிங்களப் பேரினவாதம், தமிழ்ப் பேரினவாதம் எனும் இருவகையான நசுக்குதல்களை இலங்கை முஸ்லிம்கள் தாங்க வேண்டியவர்களாக இருந்து கொண்டிருப்பது அவர்களின் துரதிஷ்டமிக்க நிலையென்றே கூறண்ேடும். ஒப்பீட்டளவில் தமிழ்ப் பேரினவாதத்தால் முஸ்லிம்கள் சுமந்த உயிர்ப்பலிகள்,
தீவும் தீர்வுகளும் V எம்.எம்.எம்.நூறுல்ஹக்

87 உடமைச் சேதங்கள் என்பன அநேகமானதென்பது மறுக்க முடியாத p 600160LDuisbus.
1987ல் உருவான இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஏற்பட்ட ஆயுதமேந்தியவர்களின் சுதந்திர வலமும், அதன் மூலம் முஸ்லிம் மக்களை அவர்கள் நடத்திய விதங்களும், தகாத வார்த்தைகளினால் தூவித்தவைகளும் நீங்கா நினைவில் நிலை கொண்டவை.
இந்தியப்படைகளின் அனுசரனையுடனும் வடக்கு - கிழக்கில் சிறிதுகாலம் நடைமுறையில் இருந்த மாகாண சபையின் நிர்வாகமும் அவர்களின் தமிழ்த் தேசிய இராணுவங்களும் முஸ்லிம்களை எப்படி இம்சைப்படுத்தியது என்பது மறைவான சங்கதியல்லவே! எனவே தமிழர்களின் சுதந்திரமான அரசியல் நிர்வாகத்தில் முஸ்லிமகள் நிம்மதியாக வாழ முடியுமா?
அனர்த்தங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டது மிகக் குறைவே. எனவே அவர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள் அச்சமின்றி இருப்புக் கொள்ளலாம் என்று கூறியவர்களும் முஸ்லிம்களில் இருந்தனர். இப்படி எண்ணிய சிலரும் தங்கள் எண்ணத்தைத் தற்கொலை செய்துவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கே தள்ளப்பட்டனர்.
ஏனெனில் காத்தான்குடியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் மக்களை வெட்டியும், சுட்டும் கொன்றொழித்தமை; நடு இரவில் தூங்கிக்கொண்டிருந்த ஏறாவூர் முஸ்லிம் மக்கள் மீது காட்டுத் தர்பார் நடத்திக் கொன்றமையும், அழிஞ்சிப்பொத்தானை பேர்ன்ற கிராமங்களில் வாழ்ந்த அப்பாவி முஸ்லிம் மக்களை வெட்டியும், சுட்டும் கொன்றொழித்தல் போன்ற செயல்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்டதனால்.
இப்படியான கொடுரச் சம்பவங்கள் மேலும் மேலுமாக “முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபையினை வலுப்படுத்துபவையாகவே இருந்தன. இதில் இரண்டாம் கருத்து இருப்பதற்கு நியாயமில்லை. இவ்விடத்தில் ஜனாப்.எம்.ஐ.எம். முஹியதின் அவர்கள் கூறிய "கிழக்கிலங்கையில் முஸ்லிம் பெரும்பான்மையாகவுள்ள ஒரு ம்ாகாண அமைப்பே இலங்கைச் சோனகரின் இனப்பாதுகாப்புக்கு தகுந்த காப்புறுதி” எனும் கருத்து மனங்கொள்ளக் தக்கதாகும்.
தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் என்பவரோ “றி.ல.மு.கா.கட்சியே இனறு முஸ்லிம் மக்களின் குறிப்பாக வட - கிழக்கு மாகாண முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியாக பரிணமித்து நிற்கிறது" எனக்கூறியுள்ளார். எனவே வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் இதய தாபங்களை சப்ையேற்றும் பொறுப்பு இக்கட்சியின் தலைமை மீது சுமத்தப்பட்ட அம்சம் அல்லவா? அந்தக் கடமையின் வெளிப்பாடே இந்த யோசனைகளின் பின்புலம் என்பதே சரியானது.
ரீ.ல.மு.காங்கிரஸின் கோரிக்கையென அழுத்தம் கொடுப்பதை விட இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையினரின் ஏகோபித்த கோாக்கையான முஸ்லிம் மாகாண சபையினை மக்கள் மயப்படுத்தி அரசியல் அந்தஸ்து பெறுவதற்கு
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 51
88
முன்னெடுத்துச் சென்ற பொறுப்பையே ரீ.ல.மு.கா. செய்ததென்ற அழுத்தமே பொருத்தமாகும்.
-வீரகேசரி. 29-10-95
"தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை வடக்கு. கிழக்கு இணைப்பு என்பது பேரம் பேசுவதற்கோ அல்லது சமரசம் செய்து கொள்வதற்கோ உரிய விடயம் அல்ல என்பதில் உறுதியாக இருக்கின்றன. ரீ.ல.மு.காங்கிரஸைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு நிபந்தனையுடனான ஆதரவை யளிப்பது என்ற எண்ணப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தது. -
இது தம்பியட்டா கோபாலகிருஷ்ணன் என்பவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள். வடக்கும், கிழக்கும் தமிழ் மக்களுக்கு மட்டும் சொந்தம் என்ற கருத்தில் தமிழ்த் தலைமைகள் விடாப்பிடியாக தொங்குவது உண்மைதான். இந்தப் "பிடிவாதம் தமிழ், முஸ்லிம் மக்களிடயே பிரிவினையை வளர்க்கவே உதவும். கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரை தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய வதிவிடம் என்பதும் இவ்விரு சமூகமும் நிலத்தொடர்பற்ற நிலையிலேயே வாழ்கின்றனர் என்பதும் ஓர் அப்பழுக்கற்ற உண்மையாகும. r
இந்த யதார்த்த நிலையினைப் புரிந்துணர்வுடன் நோக்காது வடக்கும், கிழக்கும் தனித்தமிழ் மக்களின் தாயகம்" என்ற கோட்பாடானது தமிழ்த் தலைமையின் கீழ் முஸ்லிம்கள் வாழ வேண்டும்” என எதிர்பார்ப்பது போல அமையும். இது விவேகமானது அல்ல. எது எப்படி இருப்பினும் "ஒரு சமுகத்தின் உரிமையினை இன்னொரு சமுகம் வழங்கவேண்டும்” என்ற நிலையானது பேரினவாதத்தின் நடைமுறையாகும். இதனையே தமிழ்த்தலைமைகள் கைக்கொண்டொழுக முனைவதென்பது பிரச்சினையை தீர்க்காது என்பதும் திண்ணமே.
இனப் பிரிவு மட்டக் களப்பு அம் பாறை | திருமலை மொத்தம்
இலங்கைத் தமிழர் 234,348 783 15 , 867 3 399, 406 மலையகத் தமிழர் 13868 1140 67 6 12045 முஸ்லிம்கள் 79317 161,481 7 - 403 3 15-201 சிங்களவர் 10647 46,371 863 41 243,358 பறங்கியர் 2300 6 . 3 || 121 4 54 மலாயர் 49 179 735 96.3 ஏனையோர் 1371 387 590 1348 . மொத்தம் 330 899 388786 256790 9 76.75
மாவட்ட அடிப்படையில் கிழக்கு மாகாணத்துக் குடிசன அமைப்பு 1981
தீவும் தீர்வுகளும் எம். எம்.எம்.நூறுல்ஹக்
 

கிழக்கு மாகாணம் முஸ்லிம்களுக்கும் பாரம்பரிய பிரதேசம் என்ற கோட்பாட்டை மிதவாத, தீவிரவாத தமிழ்த் தலைமைகள் ஏற்றுக்கொள்வதன் மூலமே சமரசத்தீர்வைப் பெறும் சாத்தியம் இருக்கிறது. கிழக்கு மாகாணம் முஸ்லிம் மக்களுக்கும் பாரம்பரிய பிரதேசம் என்பது பற்றி வ.ஐ.ச.ஜெயபாலன் தனது கருத்துக்களை இப்படிச் சுட்டிக்காட்டியுள்ளார்.
"தமிழ்ப்பேசும் மக்களது பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் இந்த மாநிலத்தில் வாழும் முஸ்லிம் மக்களதும் பாரம்பரிய பிரதேசமாகும். முஸ்லிம்களையும் உள்ளடக்கிய நிலையில் மட்டுமே கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் உரிமை கொண்டாடுவது சாத்தியமாகும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த அம்பாறை, திருகோணமலை மாவட்டப் பிரதேசங்களில் இதுவே உண்மை நிலையுமாகும்.
உண்மையில் கிழக்கு மாகாணம், புத்தளம், மன்னார் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்காத எந்த ஓர் இயக்கமும் தம்மை அனைத்து தமிழ் பேசும் மாநிலத்தின் மக்களின் இயக்கம் என கூறிக்கொள்ளுதல் முடியாது” (தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் 1983 (93Libus)
முஸ்லிம் மக்கள் மீது தமிழ்ப் பேரினவாதத்தின் அடந்தேதுறுதலின் உச்சநிலையாலும், அரசியல் ரீதியாக முஸ்லிம்களை தரம் குறைப்பதாலும், வடக்கு, கிழககு இணைவதன் மூலம் முஸ்லிம்களின் விகிதாசாரம் குறைவதாலும் தமிழர் ஆட்சியில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழமுடியாது என்பன போன்ற காரணங்களும் “முஸ்லிம் மாகாண சபை” என்ற நிபந்தனைகளுடனான வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதன் அடிப்படையாகும்.
எனவே இன்று முஸ்லிம் மக்களுக்கான அதுவும் அவர்களின் அங்கீகாரம் பெற்ற ஓர் அரசியல் கட்சியாக ரீல.மு.காங்கிரஸ் இருப்பதனால் அது முஸ்லிம்களின் நலனில் அக்கறை எடுப்பது கட்டாயமாகி விடுகிறதே தவிர அது ஏனைய சமுகத்தின்
போராட்டங்களை கொச்சைப்படுத்த முனையவில்லை என்பதும் நிதர்சனமானது.
எனவே நிபந்தனையுடனான ஆதரவை முஸ்லிம்கள் முன்வைப்பதில் நியாயமான காரணங்கள் முஸ்லிம்களின் தரப்பில் இருப்பதைக் காணலாம். அதனால்தான் பூரீ.ல.மு.காங்கிரஸ் நிபந்தனைகளுடனான ஆதரவு என்ற பிரகடனத்தை முன்வைத்தது. இது அக்கட்சியின் அணுமுறையின் சிறப்புக்கும் அரசியல் சாணக்கியத்துக்கும் சான்றாகும்.
“இன்று முஸ்லிம் ஐக்கிய முன்னணியை தலைத்து விட்டு அதன் தலைவர் எம்.ஐ.எம். முஹியதீன் யூரீல.மு.கா.வில் சேர்ந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது” என தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அபிப்பிராயப்படுகிறார். அவரது இக்கூற்றும் உண்மைக்குப் புறம்பானது.
முஸ்லிம் ஐக்கிய முன்னணி கட்சியைக் கலைத்து விடுமாறு தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பிவிட்டு ஜனாப் எம்.ஐ.எம்.முஹியதீன் யூரீ.ல.மு.காங்கிரஸ"டன் சங்கமமானது மெய்யே. ஆனால் அக்கட்சியை தேர்தல் ஆணையாளர் இரத்துச் செய்யவில்லை. மாறாக இன்று ஜனாப் வஹாப் என்பவரின் தலைமையில் முஸ்லிம் ஐக்கிய முன்னணி இயங்கி வருவதும் உண்மையே.
முஸ்லிம்களின் இணக்கத்தைப் பெறாத எந்த அரசியல் தீர்வும் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமையைப் பேணுவதற்கு உதவமாட்டாது. அதுபோலவே
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 52
90 .
பூரீ.ல.மு.காங்கிரஸ் இன்று முன்வைத்துள்ள கோரிக்கைகள் மீதான எத்தகைய தீர்மானங்களும் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் இணக்கத்தைப் பெறாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிவகுக்கமாட்டாது என்பதை தமிழ் அரசியல் கட்சிகளும், பூரீ.ல.மு.காங்கிரஸ"ம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் பூரீல.மு.காங்கிரஸ் முன்வைத்துள்ள யோசனைகளின் மீதான முடிவுகளின் சாதகபாதகங்களை எதிர்காலத்தில் நேரடியாக அனுபவிக்கப் போகின்றவர்கள் உத்தேச முஸ்லிம் அரசியல் அலகில் தனியான முஸ்லிம் பெரும்பான்மை மாகாணத்தில் சிறுபான்மையினராக வாழப்போகின்ற அம்பாறை மாவட்ட தமிழர்களே ஆவர்"
முஸ்லிம் மாகாணசபை" யோசனையால் நேரடியாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என மிக அழுத்தம் கொடுத்து மேற்படி கருத்துக்களை தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் முன்வைத்துள்ளார். இது அவர் சார்ந்துள்ள மக்கள் பிரச்சனை என்பதினால் நியாயமான கருத்துக்களாக ஏற்றுக்கொள்ள முடியுமானால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஓர் மாநில ஆட்சியாக இருக்க வேண்டுமென்று தமிழ் மக்கள் தரப்பில் பேதத்துக்கப்பால் நின்று கோருவது எந்த வகையில் நியாயமாகும்? இந்த இணைப்பின் மூலம் அவ்விரு மாகாணங்களிலும் உள்ள பல மாவட்டங்களிலும் வாழும முஸ்லிம் மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு அழுத்தம் தராது தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் நழுவிச் சென்றிருப்பது ஏன்?
முஸ்லிம்களின் இணக்கத்தைப் பெறாத தீர்வில் பயன் இல்லையென்று ஒரு சாட்டுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். என்றே நாம் கருத வேண்டியுள்ளது. ஏனெனில் நியாயமாக சிந்திக்கும் எவரும் முஸ்லிம் சமூகம் கோரும் மாகாணசபை பிழையானது என்று கூறத்துணியார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் அத்தனை முஸ்லிம்களையும் உள்ளடக்கியதாக “முஸ்லிம் பெரும்பான்மை மாகாணசபை யோசனை அமையவில்லை. மாறாக சிலபகுதிகள் தமிழ் மாகாணத்துக்குள்ளும் அமையும்.
குறைந்த பட்சமான முஸ்லிம்கள் தமிழ் மக்களின் ஆட்சியிலும் பெரும்பகுதி யினர் முஸ்லிம்களின் ஆட்சியிலும் அதேநேரம குறைந்தபட்சமான தமிழ்மக்கள் முஸ்லிம்களின் ஆளுமையிலும் பெரும்பகுதியான தமிழர்கள் தமிழர்களின் ஆளுமையின் கீழும் அமையக்கூடியதாகவே முஸ்லிம்கள் தரப்பில் முன்வைக் கப்பட்ட முஸ்லிம் மாகாணசபையின் அடிப்படையாகும்.
இப்படி இருபகுதியினரின் ஆட்சியிலும் சிறு பகுதியினர் நிலைகொள்வதென்பது எதிர்காலத்தில் பாதுகாப்பான சூழலுக்கும் நிலையான பரஸ்பர ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் எனவும் நம்பப்பட்டது. இதற்கு மாறாக உத்தேச முஸ்லிம் அலகில் தமிழ் மக்களே வாழக்கூடாது என்ற தோரணையில் கருத்துக்களைக் கூறும் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் போன்றோரின் சிந்தனைகள் இன்னுமின்னும் முஸ்லிம் மாகாணத்தின் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்த்த போதுமான சான்றுகளல்லவா? -வீரக்ேசரி-30-10-1995
தமிழரசுக் கட்சியின் சார்பில் வெற்றிபெற்ற
முஸ்லிம் எம்.பி.க்கள் கட்சி தாவியது ஏன்
பக்கச் சார்பாக அழுத்தம் கொடுப்பது என்பது இன்னும் இன வாதத்தைே
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹ:
 

9.
தூவிநிற்கும். அதனை விடுத்து மனிதாபிமானம், சத்தியம் போன்ற உயர் பண்புகளின் அளவுகோலினால் எதனையும் அளக்க வேண்டும். அதுவே நேர்மையானதாகும். உத்தேச முஸ்லிம் அலகில் அதுவும் ஒரேயொரு மாவட்டத்தில் மட்டுமே தமிழ் மக்களில் சிறுதொகையினர் உள்ளடக்கம் பெறுகின்றனர். இதனையே ஜீரணித்துக்கொள்ள தமிழ் மக்களினால் முடியவில்லை என்றால் வடக்கு.கிழக்கு இணைந்த தமிழ் மாகாணத்தினுள் ஏறத்தாழ 31520 கிழக்கு முஸ்லிம் மக்கள் வாழ வேண்டுமென்பது தமிழ் தலைமைகளின் நியாயமான கோரிக்கையா?
“1977 வரை முஸ்லிம் பிரதிநிதிகளை தெரிவு செய்ய பயன்பட்டனவே தவிர தங்களுக்கென்று தமிழ் அரசியல் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்யும் வாய்ப்பில்லை அவர்களுக்கு (அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு) கொடுக்க வில்லை.
தம்பியப்பா கோபாலகிருஷ்ணனின் இந்த ஆதங்கத்தில் நியாயம் இருக்கலாம். இந்நிலையானது தொகுதி நிர்ணயங்களின் போது ஏற்பட்ட தவறாகும். தொகுதி நிர்ணயங்களின் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர் உதாரணத்திற்கு இராச மாணிக்கம், இராசதுரை, மாணிக்கவாசகர் போன்றோரைக் கூறலாம்.
இதே குறைபாடு கல்குடா தொகுதியிலும் இருந்தது. வாழைச்சேனை, ஒட்டமாவடி, மீராவோடை போனற முஸ்லிம்களின் வாக்குகள் தமிழ்ப்பிரதிநிதி ஒருவரையே தெரிவு செய்ய உதவியதும் வரலாறே. ஆகவே தொகுதி நிர்ணயத் தின் போது முஸ்லிம்களுக்கும் பாதகம் நடந்திருக்கிறது. தமிழ்மக்கள் மட்டும் தான் இந்தக் குறைபாட்டுக்குரியவர்களல்ல எனும் உண்மைகளும் வெளிப் படுத்தப்பட வேண்டியவைகளே.
“தமிழர்களுடைய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கக் கட்சிக்கு மாறி முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, அரசியல் தேவைகளை நிறைவேற்றி வைத்தார்களே தவிர தங்கள் வெற்றிக்கு வாக்களித்த தமிழ் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் அபிலாசைகளை புறக்கணித்தது மட்டுல்ல தமிழ் மக்களுக்கு எதிராக நடந்து அவர்களுக்கு துரோகம் இழைத்தனர். பாராளுமன்ற தேர்தல் தொகுதிகளுக்கும் எல்லை நிர்ணயம் நடைபெற்ற வேளைகளிலெல்லாம் தமிழர்களின் நலன்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளினால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டன".
அன்றிருந்த தேர்தல் தொகுதி எல்லைகளினால் தமிழ்மக்களின் வாக்கு 1977களுக்கு முன்னர் முஸ்லிம் பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வதற்கு உதவியிருக்கிறது என்பது அம்பாறை மாவட்டத்தில் மறுப்பதற் கில்லை. அதுபோன்று கல்குடாத் தொகுதியில் முஸ்லிம் வாக்குகள் தமிழ்ப் பிரதிநிதியை தெரிவு செய்யவே உதவியிருக்கிறது என்பதும் மறைவானதல்ல.
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் வாக்குகளினாலும் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களெல்லாம் தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தூக்கி வீசிவிட்டு முஸ்லிம்களின் நலனில் அக்கறை காட்டவே கட்சி மாறினார்கள்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 53
92
என்ற வாதம் அர்த்தமற்றது. விதிவிலக்காக எம்.சீ. அகமது மட்டும் தனது தொகுதியின் அபிவிருத்திப்பணியில் அக்கறை செலுத்தினார். இவர் கட்சி மாறிய போதிலும் தமிழ், முஸ்லிம் மக்களினால் நேசிக்கப்பட்டவராவார்.
1985களில் கிழக்கில் வெடித்த தமிழ். முஸ்லிம் இனக்கலவர வேளையில் கல்முனைத் தொகுதி தமிழ்ப்பிரதேசத்துள் தன்னந்தனியாக அதுவும் முஸ்லிம் மக்களினால் போகவேண்டாமென தடுக்கப்பட்டதையும் பொருட்படுத்தாது தமிழ்க் கிராமத்துள் சென்றார் என்றால் அது அவரது தற்துணிச்சலின் செயல் என்று மட்டும் கூறிவிட முடியாது. மாறாக தமிழ்மக்களுடன் அவருக்கிருந்த ஈடுபாடு, தமிழ்மக்கள் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை, அவர் மீது தமிழ்மக்கள் கொண்டிருந்த நெருக்கம் என்பனவற்றின வெளிப்பாடாகவே இந்தச் சம்பவத்தைக் கொள்ளலாம்.
பொதுவாக தமிழரசுக்கட்சியின் ஆதரவு பெற்று பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகள் சிலர் கட்சி தாவினர் என்பது முஸ்லிம் சமுகத்தின் நலன்களை கருத்திற் கொண்டல்ல. மாறாக அவர்களின் பதவி நாற்காலியை இழக்காத நோக்கும் யாழ்ப்பான நோக்கு அல்லது வடபுல ஆதிக்கம் என்பவற்றுக்காக என்றே கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூக, அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்கே கட்சித்தாவுதல் உதவியதென்று கொண்டால் இன்று முஸ்லிம்கள் இரு பேரினவாதங்களுக்குள்ளும் நசுக்கப்பட்டடிருக்க வேண்டியதில்லை என்பதும் தனியானதொரு அரசியற் கட்சியொன்று நனவாகி இருப்பதும் எப்படி என்ற வினாக்கள் மேற்கண்ட முடிவிற்கே இட்டுச் செல்லும். ஆகவே சமூக மேம்பாடு அல்ல என்பது தெளிவாகிறது.
முஸ்லிம்களின் கட்சித்தாவுதல் சரியானது என நியாயம் கற்பிப்பதல்ல என் நோக்கம். ஆனால் இத்தகைய நிகழ்வுகள் தமிழ் அரசியல் தலைமைத்து வங்களிலும் காணப்பட்ட பண்பு என்பதே என் கருத்து. இது தொடர்பாக வ.ஐ.ச.ஜெயபாலனின் சில கருத்துக்கள் மனம் கொள்ளத்தக்கதாக உள்ளது. அவற்றினை இவ்விடத்தில் நின்னவூட்டிப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக அமையும் * 6 T6J6)(TLD).
பிறந்து விட்ட மனிதன் இறப்பது ஒரு முறை தான். அதை நாம் இனத்தின் எழுச்சிக்குப் பயன்படுத்தும் வழியில் பயன்படுத்துவதே நாம் இனத்துக்குப் புரியும் சிறந்த பணி” (தடுப்புக்காவலில் நம் புதுமைலோலன்) என எழுதியும் பேசியும் வந்த மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த கே.எஸ்.ஏ. கபூர், தமிழரசுக் கட்சியின் “பிரசாரப் பீரங்கிகளுள் ஒருவராக அமைந்த கல்முனை மசூர் மெளளலானா என்பவர்கள் கைதாகி பனாகொடை முகாமில் தமிழரசு தலைவர்களுடன் சிறையிடப்பட்டிருந்தனர்.
இருந்தும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியின் கல்முனை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சீ அஹமது 13-7-61ல் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி றி.ல.சு.கட்சி அரசுடன் சேர்ந்து கொண்டதையே தமிழரசாருக்கு முக்கியமானதாகத் தெரிந்தது. -வீரகேசரி -
- 1 1-95
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

93
கிழக்கு சிங்களக் குடியேற்றங்களையிட்டு
முஸ்லிம் மக்கள் மெளனம் சாதித்தது ஏன்?
சத்தியாக்கிரகப் போராட்டத்தில் வட மாகாணத்திலும் சரி கிழக்கு மாகாணத் திலும் சரி மனப்பூர்வமாகப் பங்குபற்றிய சாதாரண முஸ்லிம் மக்களையோ பனாகொடை இராணுவச்சிறைக்குத் தம்முடன் கைதிகளாக தொடர்ந்து வந்த முஸ்லிம் மக்களையோ முதன்மைப்படுத்துவதற்குப் பதிலாக இப்பிரதேசங்களின் பூர்ஷ"வா முஸ்லிம் தலைமைகளின் போக்கையே தமிழரசுக் கட்சியின் அன்றைய குட்டி பூர்ஷ"வா. பூர்ஷ"வாத தலைவர்கள் கருத்திற் கொண்டனர்.
இந்த அவநம்பிக்கை நிறைந்த காலகட்டத்தை சாதமாக்கிக் கொண்ட கொழும்புசார் தமிழ் வர்த்தக முதலாளிகளும் அவர்களுக்கு சேவை செய்யும் கற்றறிந்த தமிழ் மேலாளர்களும் தமிழரசுக்கட்சியின் தலைமையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இத்தகைய சீரழிவிற்கு ஆட்பட்ட தமிழரசுக் கட்சியின் கண்களில் கொழும்பு வாழ் முஸ்லிம்களின் வர்த்தக முதலாளித்துவ தலைமையும் அதன் கல்விமான்களும் பேரினவாத பூரீ.ல.சு.கட்சிக்கு வழங்கிய ஆதரவே பொருட்டாகத் தெரிந்தது.
இப்படியாக தமிழ், முஸ்லிம் உயர் வர்க்கங்களது போட்டிகளும் பூசல்களும் சாதாரண தமிழ், முஸ்லிம் மக்களது தலைகளில் சுமத்தப்பட்டன. முஸ்லிம்களை அரசியலில் நம்ப முடியாது என்ற கருத்து தமிழர்களிடையிலும் தமிழர்களை அரசியலில் நம்ப முடியாது என்ற கருத்து முஸ்லிம்களிடத்திலும் பரவலாகிய காலகட்டம் இதுவேயாகும்.
இதன் பின்னர் தமிழரசுக்கட்சியையோ, அதை அடியொற்றி வந்த ஏனைய இயக்கங்களையோ தமிழ், முஸ்லிம் மக்களது ஐக்கியத்திலேயே தமிழ் பேசும் மக்களுக்கான பொதுத்தன்மையைக் கட்டி எழுப்புவதிலேயே குறிப்பிடத்தக்க கரிசனைகளைக் காட்டவில்லை.
1956ல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கல்முனை, பொத்துவில் தொகுதிகளில் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களான எம்.எஸ். காரியப்பரும் எம்.எம். முஸ்தபாவும் வெற்றி பெற்றனர். 1960ல் கல்முனைத் தொகுதியில் எம்.சீ. அஹமதுவும், 1965ல் மூதார் தொகுதியில் எம்.ஈ.எச். முஹம்மது அலியும் தமிழரக்கட்சி சார்பாக வெற்றி பெற்றனர். வெற்றிபெற்றதன் பின்னர் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிய இவர்கள் துரதிஷ்டவசமாக சிங்களே, பெளத்த பேரினவாத அரசுகளுடன் சேர்ந்து கொண்டனர். இதனால் சிங்கள பெளத்த பேரினவாத அரசுகளுக்கு கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக முஸ்லிம் மக்களின் பிரதேசங்களில் சிங்கள, பெளத்த குடியேற்றங்களை நிறுவுவது இலகுவாகியது.
எனினும் 1965ல் தமிழரசுக் கட்சி ஐ.தே.க. அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழ் பேசும் மக்களுக்கு இதே துரோகத்தைச் செய்தது என்பதையும், முஸ்லிம் தலைவர்கள் மட்டுமல்ல பல்வேறு தமிழ்த் தலைவர்களும் தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றபின் மேற்படி கட்சியிலிருந்து விலகி சிங்கள பேரினவாத அரசுகளுடன் சேர்ந்துள்ளனர் என்பதையும் நாம் மறந்து
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 54
விடுதல் இயலாது" (நன்றி. தேசிய இனப்பிரச்சனையும் முஸ்லிம் மக்களும்)
தேர்தல் முடிவுகள் வெளியாகிய மறுநாளே கட்சி விட்டு கட்சி மாறிய தமிழ்த் தலைவர்களும் இல்லாமல் இல்லை. பொதுவாக இவ்விரு சமூகங் களினதும் தலைமைகள் கைக்கொண்ட காரியங்களே. இதனைத் தவிர்த்து முஸ்லிம்களின் தரப்பில் மட்டும் தான் கட்சித் தாவுதல்கள் நிகழ்ந்திருப்பது போல காட்டமுற்பட்டிருப்பது விவேகமான செயலல்லவே.
வடக்குத்தமிழர்கள், கிழக்குத்தமிழர்கள் என்ற வேறுபாடு தமிழ் மக்களுக்குள் இருந்து வந்துள்ளதன் எதிரொலியாக அதாவது வடக்கு ஆதிக்கத்துக்குள் நின்றுபிடிக்க முடியாத காரணத்தினால் திருவாளர்கள் செ.இராசதுரை. தம்பிராசா, கனகரத்தினம். தில்லநாதன் போன்றோர்கள் கட்சி தாவுதலில் இறங்கினார்கள்.
தமிழ் மக்களினாலேயே வடபகுதி அல்லது யாழ்ப்பாண நோக்கு என்பனவற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியவில்லையென்றால் முஸ்லிம்கள் அதுவும் கிழக்கு மாகாணத்தினர் எம்மாத்திரம்? தமிழ், முஸ்லிம் சமூகங்களில் கட்சி தாவிய தலைமைத்துவங்கள் இருந்தன என்பதே உண்மை. இதனை விட்டுவிட்டு முஸ்லிம் பிரதிநிதிகள் விலகியதை மட்டும் தூக்கிப்பிடிப்பது ஏன்? இது பக்கச் சார்பான சிந்தனையின் வெளிப்பாடா?
இப்படி பக்கச் சார்பான சிந்தனையால் முஸ்லிம்களை தமிழ் அரசியல் தலைமைத்துவங்களில் சில ஆக்கிரமிப்பாளர்களாகவும் கேவலமான பண்பு கொண்டவர்கள் போல சித்தரித்துக் காட்டினார்கள். இந்த “முனைதல்"தான் தமிழ் மக்களை விட்டுவிட்டு சிங்கள மக்களை நாடிப்போனதன் - நம்பிப் போனதன் இரகசியம் என்பது தவறான கருத்தாக இருக்கமுடியாது.
கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களின் போது முஸ்லிம்கள் மெளனமாக இருந்தது, தமிழ்அரசியல் தலைமைத்துவங்கள் சில முஸ்லிம்களை “எட்டி உதைத்ததன்’ பேரில் தான் என்பது இன்று விளங்கும் உண்மைகளாகும்.
அம்பாறை மாவட்டத்தில் அவ்வாறு முஸ்லிம்கள் சிங்களவர்களிடம் பறிகொடுத்த காணியிழப்புகளை ஈடு செய்ய தமிழர்களின் காணிகளையே பிடித்துக்கொண்டனர். இதற்கு அவ்வப்போது ஏற்பட்ட தமிழ் - முஸ்லிம் கலவரங்களும் 1983க்குப் பின்னர் ஏற்பட்ட வன்செயல்களும் அரசியல் செல்வாக்கும், பொருளாதார பலமும் அவர்களுக்கு துணைபரிந்தன. 1990 ஜூன் வன்செயல் காலத்திலும் அதற்குப்பின்னரும் அரச படைகளின் அனுசரனைகளுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு மிகவும் மோசமான உயிர் இழப்புகளும் உடமை அழிவுகளும் ஏற்படுத்தப்பட்டன.
இப்படி அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் தமிழர்களின் சொத்துக்களை சூறையாடி சுகமனுபவிப்பவர்கள் என்றும் அதற்காகவே முஸ்லிம் ஊர்காவல் படையினரை உருவாக்கினார்கள் என்றும் அதிகமான தமிழ்மக்களை அரச படை, ஊர்காவல் படைகளின் உதவியுடன் முஸ்லிம்கள் கொன்றொழித்தனர் என்பது போன்ற கருத்துக்களுக்கு அழுத்தம் கொடுத்து மேற்படி வரிகைைள
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

95
தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் எழுதியுள்ளார்.
சிங்கள ஆட்சிகள் முஸ்லிம்களின் காணிகளைச் சுவீகரித்துக் கொண்டது உண்மையான செய்தியே. அதனைச் சுட்டிக்காட்டிய தம்பியப்பா கோபால கிருஷ்ணனை பாராட்டாமல் இருக்கமுடியாது. அதேநேரம் இந்த இழப்பை ஈடு செய்வதற்காக "தமிழர்களின் காணிகளையே பிடித்துக் கொண்டனர்” என்ற மனோ உழைச்சலான பொய்யான வாதத்தை கண்டிக்காமல் இருக்கமுடியாது
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் விளைச்சல் நிலமானாலும் சரி விளைச்ச லற்ற நிலமானாலும் சரி. வியாபார நிலையங்களானாலும் சரி வீடுகளானாலும் சரி இவைகள் எவற்றிலும் ஆக்கிரமிப்போ சுரண்டலோ முஸ்லிம்கள் தரப்பிலிருந்து நிகழவில்லை" என்பது நிதர்சனமானது.
அம்பாறை மாவட்ட தமிழர்கள் என்று பொதுவாகக் கூறப்பட்டபோதிலும் குறிப்பாக கல்முனை, காரைதீவு பிரதேசங்களில் தான் இந்த அத்துமீறல் நடைபெற்றது என்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. இந்தப்பிழையான தரவுகளை பின்னர் வந்த ஆயுதம் தரித்த இளைய தலைமுறையினருக்கும் ஊட்டப்பட்டது. இதனால் முஸ்லிம் விரோதப் போக்கை வேரூன்றச் செய்வதில் சில தமிழ்ப் பிரதேசங்களின் பங்கு திரைம்றைவில் நடைபெற்றன என்பதும் நம்பகமானதே. Y
இதன் எதிரொலியாக எப்போதும் முஸ்லிம்களைத் தமிழர்களின் விரோதிகள் அல்லது தமிழர்களின் சொத்துக்களை ஆக்கிரமிப்புச் செய்த வன்முறையாளர்கள் என்ற கருத்தில் நோக்கப்படலானார்கள். இது முஸ்லிம்களின் உண்மை நிலைமைக்கு மாற்றமானது. இந்தக் குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலை என்ன என்பது பற்றி சில குறிப்புக்களை “இப்னு அஸத்’ என்பவரின் கட்டுரைகளிலிருந்து முன்வைக்கலாம் என நினைக்கிறேன். இதன் மூலமாவது முஸ்லிம்களின் சமரசப் போக்கினை தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையே இச்சுட்டுதலின் நோக்கமாகும்
வீரகேசரி - 2-11-1995
அம்பாறை முஸ்லிம்களின் வயற்காணிகள் அவர்களது பூர்வீக சொத்துக்களாகும் !
1947 இல் பட்டின சபையாகத் (கல்முனை) தரமுயர்த்தப்பட்டது. அதன் கீழ் இரு தமிழ் வட்டாரங்களும் ஐந்து முஸ்லிம் வட்டாரங்களுமாக மொத்தம் ஏழு வட்டாரங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். கல்முனைப் பட்டினத்தின் முதலாவது தேர்தல் 1947ல் நடந்தது. அதில் 1773 தமிழர்களும் 5131 முஸ்லிம்களும் வாக்களித்தார்கள்.
அக்கால கட்டத்தில் கல்முனைப் பட்டினத்திலுள்ள வர்த்தக நிலையங்களில்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 55
S6
98% தென்னிந்திய முஸ்லிம்களுக்கும். இந்திய தமிழர்களுக்கும். யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் சராசரி 2% மும் கடைகள் இருந்தன. அன்றைய சந்தை அமைப்பின் படி மீன், மரக்கறி வியாபாரிகளுக்கு இரண்டு திறந்த கட்டடங்களும் அவற்றை மையமாக வைத்து நான்கு புறமும் 37. கடை அறைகளும் கட்டப் பட்டிருந்தன. திறந்த கட்டடத்தில் எந்தக் கட்டுப்பாடுமின்றி சகல இனத்தவர்களும் வியாபாரம் செய்தனர்.
நிரந்தரக் கடைகளில் 16 உள்ளுர் முஸ்லிம்களுக்கும். 8 இந்திய முஸ்லிம் களுக்கும். 7 உள்ளுர்த் தமிழர்களுக்கும் 3 யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் 2 சிங்களவர்களுக்கும் சந்தைக்காரரின் காரியாலயமாக ஒரு கடையும் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.
உள்ளுர்த் தமிழர்களோ தங்களின் 7 கடைகளில் 5 ஐ உள்ளுர் முஸ்லிம் களுக்கு விற்றுவிட்டனர். யாழப்பாணத் தமிழர்களோ ஒரு கடையை `நம்பியார் எனும் இந்திய மலையாளிக்கும். கல்முனை முதலாம் குறிச்சி கூட்டுறவு பண்டகசாலைக்குமாக இரண்டு கடைகளை விற்றுவிட்டனர்.
வர்த்தகப் பெருக்கத்தின் காரணமாக 1956ல் கல்முனைப் பட்டனத்தில் 120 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. அவைகளுள் பட்டனசபை உறுப்பினரா யிருந்த இரு தமிழர்களுக்கு ஏழும், 27 வீதம் ஏனைய தமிழர்களுக்குமென கொடுக்கப்பட்டது. அக்கடைகளைப் பெற்ற தமிழர்கள் காலப்போக்கில முஸ்லிம் களுக்கு விற்று விட்டனர். முஸ்லிம்கள் எந்தக் கடையையும் அபகரிக்கவேயில்லை.
1952ல் நாட்டில் இந்தியர், பாக்கிஸ்தானியர் குடிவரவு-குடியகல்வு திட்டத்தை நிறைவு செய்ததின் காரணமாக இந்திய வர்த்தகர்கள் உள்ளுர்வாசிகளிடம் தங்களின் கடைகளையும் கட்டடங்களையும் கைமாற்றியும் விற்றும் விட்டு தங்களின் முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு தாயகம் சென்றார்கள். இதன் காரணமாகவே வியாபார நிலையங்களில் பெரும் பகுதி முஸ்லிம்கள் வசமாகியது. இதை வைத்து முஸ்லிம்களை ஆக்கிரமிப்பாளர்களாக சிந்திப்பது முறைதானா?
1947 ஆம் ஆண்டு அன்றிருந்த அரசினால் கல்முனை தாழையடிக்குளம் வணிகப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 200 கடைகளுக்கு நில அளவைப்படம் தயாரிக்கப்பட்டு காணிக் கச்சேரியும் நடத்தப்பட்டது. அதில் வியாபாரிகளும் தெரிவு செய்யப்பட்டனர். இதில் 38 கடைகள் தமிழர்களுக்கும் 13 கடைகள் சிங்களவர்களுக்கும் வழங்கப்பட்டு பேர்மிட்டுகளும் கையளிக் கப்பட்டன. இவ்விதம் கொடுக்கப்பட்ட 51 கடைகளையும் இதர சமூகத்தினரும் பெறுமதியான விலைகளுக்கு முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டனர். (நன்றி. எழுச்சிக்குரல ஜூன் 1988)
பிஸர் துரையின் கடற்கரைத் தோட்டத்தில் பெரும் மனம் கொண்ட ஒரு சில முஸ்லிம்களால் கிரயமாகப்பெற்று தரிசாகக்கிடந்த நிலங்களை முன்பு அரச பூமியில் குடியேறி அநீதத்துக்குள்ளான முஸ்லிம்களுக்குப் பூதானமாகப் பங்கிட்டுக் கொடுத்தனர். இதில் ஒரு அங்குலப் பூமிதானும் அரசினதோ அன்றித் தமிழர்களினதேர் அல்ல. முஸ்லிம்கள் ஒரு போதும் தமிழர்களின் ஒரு அங்குலப்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

97
பூமியையேனும் அத்துமீறிப் பிடிக்கவோ ஆக்கிரமிக்கவோ இல்லை. தமிழர்களிடமிருந்து விலைக் கிரயமாகப்பெற்ற பூமிகளுக்கும் தமிழ்நொத்தாரிசுகள் மூலமே உறுதிகளும் முடிக்கப்பட்டடுள்ளன.
கல்முனையில் வர்த்தகம் புரிந்து வந்த இந்தியர்களும், பிற வியாபாரிகளும் குளிப்பதற்கும், குடிநீர் பெறுவதற்கும் 1949 ஆம் ஆண்டு அரச நன்கொடைப் பணத்தைக் கொண்டு ஒரு பொதுக்கிணறு கட்டப்பட்டது. நாளடைவில் கல்முனையில் அன்றிருந்த பிரபல வணிகர் எஸ்.எஸ்.எம். சொளுக்கார், மர்ஹம் ஆதம் போடி ஆகியோரது வளவில் ஒரு துண்டை கொத்துவேலி போட்டு அடைத்து ‘அம்மான்’ எனும் ஒரு கிழவர் அவ்விடத்திலிருந்த நிழல் மரத்தின் வேரில் ஒரு சாமிச் சிலையையும் வைத்து தினமும் குளிப்பதற்காகச் செல்லும் சகலரிடமும் உண்டியல் வைத்து காணிக்கை சேர்த்து குடும்பம் நடாத்தி வந்தார். அவரின் மரணத்தின் பின் பொதுக்கிணற்றையும் தடைசெய்து விட்டு அந்த இடத்தில் உடனுக்குடன் ஒரு கோயில் நிறுவப்பட்டது. இந்த இதிகாசப் பித்தலாட்டத்தையிட்டு கல்முனை முஸ்லிம்கள் எதுவும் பேசவில்லை. இதிலிருந்தாகுதல் முஸ்லிம்களின் சமாதானப் பெருநோக்கை விளங்க முடியாதா?
சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கல்முனையில் கடற்கரைப்பள்ளிவாயல் இயங்கி வருவது யாவரும் அறிந்ததே. இதன் வடபுற எல்லையில் 1932ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியாளரால் நாலு ஏக்கள் பரப்புடைய நிலம் முஸ்லிம் மையவாடியாக பிரகடனப்படுத்தப்பட்டு இன்றும் அது பாவனைகளிலிருந்து வருகின்றது. அதன் வடமேற்குப் புறத்தின் ஒரு பகுதியில் உள்ள ஆல மரநிழலில் 1952ஆம் ஆண்டு "சீனிச்சாமி எனும் ஒரு தமிழ்த்துறவி சூலம் என்று ஒரு இரும்புக்கம்பியை வைத்து பறண் கட்டி சயனித்துக் கொண்டிருந்தார்.
அவர் இறந்த பின்பு அந்த இடம் தமிழர்களின் பூர்வீகச் சொத்து என்றும் புனித நிலம் என்றும் தமிழர்களால் உண்மைக்கு மாறக திரித்துக் கூறப்பட்டது. எனினும் அமைதி, சமாதானம் என்பவற்றைக் கருதி 1965ஆம் ஆண்டு அங்கு கோயில் கட்டுவதற்கு முஸ்லிம்களால் நிலம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.
சுமார் ஆறு நூற்றாண்டு சரித்திரம் கொண்ட காரைதீவிலுள்ள இரு பள்ளி வாசல்களும் இற்றைக்கு இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களால் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டது. முஸ்லிம்களின் பள்ளிவாசலைப் பகிரங்கமாக அழித்துவிட்டு அந்தக் காணியில் கோயிலும், சந்தையும், விவசாய விஸ்தரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அங்கிருந்த முஸ்லிம்களின் பல கடைகளையும் தமிழர்கள் அழித்தொழித்தார்கள். அன்று முதல் இன்று வரை கல்முனை, சாய்ந்தமருது. நிந்தவூர், சம்மாந்துறை முஸ்லிம்கள் காரைதீவை ஊடறுத்துச் செல்லும் போது தாக்குதலுக்கு இலக்காகாத நாட்களே கிடையாது. அப்பகுதியில் நடைபெறும் வழிப்பறிக் கொள்ளைகளுக்கு எல்லையே கிடையாது. (நன்றி. எடுச்சிக்குரல் ஜூலை 1988)
நாவற்குடா, கல்லாறு, ஆரையம்பதி போன்ற பிரதேச தமிழர்களின் காணியே அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அனுபவிக்கும் காணிகள் என்றொரு கருத்தும் தமிழ் மக்களிடம் உள்ளதை அவதானிக்கலாம். இக்கூற்றில் உண்மையில்லை
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 56
98
என்பது தான் யதார்த்தம். அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நெற்காணிகள் அவர்களின் பூர்வீகச்சொத்தாகும். தொடர்ந்து மூன்று நான்கு போக விளைச்சலில் ஏற்பட்ட குறையினால் பலமுறை மேற்படி தமிழ் பிரதேசத்தில் வட்டிக்குப் பணம் கொடுத்தவர்களிடம் முஸ்லிம்கள் பணம் பெற்றனர். முதலும் வட்டியுமாகச் சேர்த்து பெரிய தொகையாகப் பெருகியதனால் அவர்களுக்கு நிரந்தரமான இடாப்பு மாற்றிக் கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்தனர் என்பதே யதார்த்த வரலாறு.
எனவே தமிழர்களின் பூர்வீகக் காணிகள் என்பது பின்னர் உருவாக்கப்பட்ட கதையாகும். முஸ்லிம்களில் பின்னர் பணம் உள்ளவர்கள் உருவானார்கள். அவர்கள் ஈடு மூலமாக இழந்த காணிகளை உரிய முறையில் சரியான தொகைக்கு வாங்கினார்கள் என்பதே உண்மை. இந்த உண்மைக்குப் புறம்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை சித்தரிப்பதென்பது தமிழர் தரப்பினரால் நீண்டகாலமாக நிலவும் ஒரு போக்கு என்பதையும் உணரத்தலைப்படுதல் உண்மைகளை அறிய வாய்ப்பாகும்.
இவ்விடத்தில் இன்னொரு உண்மையையும் விளங்குதல் மூலம் முஸ்லிம்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதை உணர மேலும் ஒரு காரணமாக அமையும் என்று நம்பலாம். அதாவது அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் கிராமங்களை தமிழ் மக்களின் கிராமங்களுடன் ஒப்பிட்டு நோக்கினால் மிகச் சிறியதென்பதைக் காணலாம். அதேநேரம் தமிழ் மக்களின சனத்தொக்ைகுக் கூடிய காணிகளை கொண்டிருக்கும் அவர்கள். சனத்தொகை கூடிய அதுவும் நில நெருக்கடிக்குள்ளான முஸ்லிம்களுக்கு கிரயமாக காணிகளை விற்றனர். இதனால் முஸ்லிம்களின் எல்லை சிறிது விரிந்தது என்பதுதான் உண்மை.
எனவே முஸ்லிம் மக்கள் தமிழர்களின் சொத்துக்களை அத்துமீறி அபகரித்துக் கொணடனர் என்பதில் எவ்வித உண்மையுமில்லை என்பதை மேற்படி சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன.
தமிழ், முஸ்லிம் மக்களுக்குள் சில பிணக்குகளும் பூசல்களும் இடையிடையே நிகழ்ந்துள்ளன. ஆனால் அது ஒரு இனக்கலவரமாக மாறி பாரிய அழிவுகளை ஏற்படுத்தவில்லை என்பது வரலாறு. இந்த வரலாற்றை உடைத்தெறிந்து பாரிய அழிவுகளை சொந்தம் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளியது 1985 ஏப்ரல் மாதம் துவங்கிய பிணக்கு - சண்டை என்று கூறினால் அது மிகையாகாது.
1985ஆம் ஆண்டு சித்திரை மாதம் காரைதீவுக்கும் மாளிகைக்கர்டு கிராமத்துக்கும் இடையில் தொடங்கப்பட்ட சிறு கைகலப்பு கிழக்கு மாகாணம் பூராகவும் பற்றிக்கொண்டு சொல்லொணாத் துயரங்களையும் இழப்புகளையும் ஏற்படுத்திவிட்டு ஒய்ந்தது. அத்தோடு நின்று விடாது "தமிழர்களும், முஸ்லிம்களும் நிரந்தரப் பகையாளிகள்” போல ஆக்கிவிட்டது.
1985ல் நடைபெற்ற காரைதீவு உடமைச்சேதங்களின் பின்னால் அரச படைகளின் பின்னணி இருந்தது என்ற கருத்து பரவலாக அன்று உலா வந்தது தான். ஆனால் இதுதவிர வேறெந்தக் கலவரங்களின் போதும் முஸ்லிம்களுக்கு
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

99
துணையாக அரச படைகளோ ஆயுதக்குழுக்களோ இயக்க ரீதியாக பின்னணியில் இருந்ததில்லை. என்பது உரத்தும் உறுதியாகவும் கூறுவதற்குரியதே.
வீரகேசரி 3-11-gs
தமிழ் ,முஸ்லிம் ஒருமைப்பாட்டுக்காக பழையதை மறந்து ஒன்றிணைவோம்!
முஸ்லிம்கள் மீது தமிழர்களினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டபோதெல்லாம் ஆயுதமேந்திய இயக்கங்களும. இந்திய அமைதிப்படையும. தமிழ்த் தேசிய இராணுவங்களும் பின்னணியாக இருந்து வந்துள்ளன என்பது ஐயமற நிருபிக்கப்பட்டவை. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் குறிப்பிடும் 1990 ஜூலை வன்செயல் என்பது கூட ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள் தரப்பில் தான் இழப்புக்கள் அநேகம் என்பதும் வெள்ளிடை மலையானது .
அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு மிகவும் மோசமான உயிர், உடமை அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன என்பதில் எவ்வித உண்மையுமில்லை. மாறாக ஒருசில அழிவுகள் ஏற்பட்டன என்பதே யதார்த்த நிலையாகும். அதேநேரம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு மிகவும் மோசமான உயிர், உடமை அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன என்பதே மெய். உதாரணத்திற்கு அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் ஒன்றான சம்மாந்துறையில் மட்டும் தமிழர்கள் தரப்பிலிருந்து ஏற்படுத்தப்பட்ட அழிவுகளின் விபரங்களை ஆதார பூர்வமாக 7-8-1989 ல் சாம்பராக்கப்பட்ட சம்மாந்துறை', ஈழத்தினர் இர்ைனுமொருமூலை' எனும் நூல்களில் காணலாம்.
எனவே அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் தான் அநேகமான உயிர், உடமைச் சேதங்களை தாங்க வேண்டியவர்களாக இருக்கின்றனர் என்பதே உண்மை நிலையென்பது நிதர்சனமாக உணரக்கூடியது.
1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தங்களுக்கு இருந்த ஒரேயொரு அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பறிகொடுத்த அரசியல் அநாதைகளாகி நிற்கின்றனர்” என ஆதங்கப்படும் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் இந்நிலை யாரால்? எப்படி? வந்தது என்று விளக்கவில்லை. ரீ.ல.மு.காங்கிரஸின் யோசனைகளையும், அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அடாவடித்தனங்கள் நிறைந்தவர்கள் எனச்சுட்டிக்காட்டும் கட்டுரையில் விளக்கமில்லாது மேற்படி கருத்தை புகுத்தியிருப்பது. இதுவும் முஸ்லிம்களின் சதியென நினைக்கட்டும் என்ற எண்ணமா? கட்டுரையாசிரியருக்கு.
இன்று எமது நாட்டில் நடைமுறையில் இருக்கும் விகிதாசார தேர்தல் முறையில் அம்பாறை மாவட்டத்தில் வாழும் அத்தனை தமிழ் மக்களும் ஒருமித்து ஒரு கட்சிக்கு அல்லது ஒரு சுயேட்சைக் குழுவுக்கு வாக்களிப்பதன் மூலமே ஒரு பிரதிநிதியைப் பெற முடியும். இந்த யதார்த்த நிலைக்குப் புறம்பாக 1994 ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் சில கட்சிகளில் தமிழ் வேட்பாளர்கள்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 57
OO
பிரிந்து நின்று போட்டியிட்டதன் விளைவு வாக்குகள் அங்குமிங்குமாகச் சிதறியது. பிரதிநிதித்துவமும் தவறியது. இது இப்பிரதேச தமிழ் மக்களின் சிந்தனையில் ஏற்பட்ட குறைபாடே. எது எப்படியிருப்பினும் எதிர்வரும் காலங்களில் வாக்குகள் சிதற விடாது ஒருமித்து வாக்களிப்பதன் மூலமே பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை காப்பாற்றலாமி.
இயலவே பிரிக்கப்பட்ட "ஆலையடிவேம்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவு என்பது கூட அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரங்கநாயகி பத்மநாதனின் அரசியல் செல்வாக்கினால் உருவாக்கப்பட்டதே. அவ்வாறு உருவானது சரியா? பிழையா ? என்பதல்ல என் ஆய்வு மாறாக இவ்வாறு உதவி அரசாங்க அதிபர் பிரிவு உருவாக்கும் போது பிரதேசங்களின் எல்லையை நிர்ணயித்துக் கொண்டது பிழையானதென்பது ஒர் அம்சம். இந்த எல்லையை வரையறுத்துக் கொள்ளும் போது அம்பாறை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தடுக்க முடியவில்லை என்பது இன்னொரு விசயமாகும்.
"அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவு ‘கருங்கொடி பிரதேச சபை' என்று முஸ்லிம்களுக்குரிய பகுதியாகவும் ‘ஆலையடிவேம்பு பிரதேச சபை' என்று தமிழருக்குரிய பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று முஸ்லிம்கள்ன் பிரத்தியேக நெற்சாகுபடி வயல்கள் அனைத்தும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் அனைத்தும், எதிர்காலப் பரம்பலுக்குரிய முடிக்குரிய காணிகளனைத்தும், ஏனைய நீர், நில வளங்கள னைத்தும் கடற்பிரதேசத்தில் பெரும்பான்மையானதும், வெள்ளப் பாதுகாப்பு வடிகாலனைத்தும், ஏனைய முக்கிய நிர்வாக ஸ்தாபனம் அனைத்தும் தமிழருக் கான பிரதேச சபை எல்லைக்குள் அடக்கமாகும் வண்ணம் எல்லை வகுக்கப்பட்டுள்ளது".
இதனை விமர்சன ரீதியாக நோக்கியோர் "அக்கரைப்பற்றில் முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் இன விகிதாசர்ரம் இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இருந்தும் தமிழருக்கான ஆலையடி வேம்பு பிரதேச சபையின் ஆள்புல 1ல்லைக்குள்ளேயே முஸ்லிம்களின் பொருளாதார வளங்கள் அடக்கமாக்கப் பட்டுள்ளன. இது விசமத்தமான பிரிவாகும்” எனக் கூறினர்.
காரைதீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவுடன் மாளிகைக்காடு பிரதேசம் இணைக்கப்பட்டுள்ளது. இது மாளிகைக்காடு முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு எதிரான செயல். சுருங்கக்கூறுமிடத்து முஸ்லிம்களுக்கு பாதகமான எல்லை அமைப்புக்களும் அம்பாறை மாவட்டத்தில் இல்லாமலில்லை. ஒரு பக்கம் மட்டுமே எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் சாட்டுவது அறிவுபூர்வமான செயல் அல்ல.
முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு புறம்பாக எல்லைகளை வகுத்துக் கொண்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் செல்வாக்குப்பலம் என்பது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆளுமையை மிஞ்சியதெனலாம். இது போலவே 1959 - 1976 களில் தேர்தல் தொகுதி எல்லை மீளமைப்பின்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

O
போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கை ஓங்கி இருந்தது. இது அரசியலில் சகஜமான நிலையாகும். -
"வடக்கு - கிழக்கு மாகாணத்துள் வாழும் முஸ்லிம்களை தமிழ் மக்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவருவது எப்படி நியாயமில்லை என்கின்றோமோ அப்படியே தமிழ் மக்களை முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவருவதும் நியாயமில்லை என்கின்றோம் எனும் கருத்துத் தொனிக்கும் வகையில் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் முடிந்த முடிவாகத் தெரிவித்துள்ளார்.
உண்மையில் ஒரு யதார்த்தத்தை தமிழ். முஸ்லிம் சமூகத்தில் உள்ள அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள். பாமர மக்கள் எல்லோரும் தெளிவாக விளங்க வேண்டியது என்னவெனில் “தமிழர்களை விட்டு முஸ்லிம்களோ முஸ்லிம்களை விட்டு தமிழர்களோ பிரிந்து வாழ முடியாது; வடக்கு - கிழக்கு மாகாணத்தில்" எனும் பேருண்மையை நில அமைப்பும், பொருளாதாரக் காரணிக ளும், மொழியும் சில பொதுப் பிரச்சினைகளில் ஒரே மாதிரியான ஏதுக்களுக்குள் உட்பட்டு வாழும் தன்மைகளே இந்த இணைந்து வாழவேண்டிய கட்டாயத்தை முன்வைக்கின்றன.
எனவே தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையே ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களை முன்வைப்பதைத் தவிர்த்துக் கொள்வதுடன் பழைய இரு தரப்புக் குற்றங்களையும் மறந்து எதிர்கால சுபிட்சத்துக்கு ஒன்றுபட்டு - ஒன்றித்து வாழ என்ன வழி இருக்கின்றது என்பதையே எழுத்திலும் பேச்சிலும் மூச்சாக்கி நடைமுறை வாழ்வில் கைக்கொண்டொழுகும் ஒரு சூழலை ஏற்படுத்தும் பொறுப்பு தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும் புத்திஜீவிகளினதும் கடமை என்பதினை மறக்காத வரை எழுச்சியும் விமோசனமும் நிச்சயமானதே.
வீரகேசரி 4-11-95
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம். நூறுல்ஹக்

Page 58
O2
முஸ்லிம்கள் தமிழர்களின் விரோதிகள்?
மிழீழ விடுதலைப் புலிகள்ன் மட்டு/அம்பாறை அரசயற்துறைப் பொறுப்பாளர் துரை அவர்களினால் “நலிவுறும் தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவு” எனும் தலைப்பில் தீட்டப்பட்ட கடிதமொன்று “பள்ளிவாசல் சம்மேளனங்களுக்கு" அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தின் முக்கிய பகுதிகளை சரிநிகர் 110 இதழில் புலிகளின் கடிதம் எனும் தலைப்பில் வெளியிடப் பட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இம்மடல் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையிலான ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் எழுதப்பட்டடுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையில் ஐக்கியம், பரஸ்பரம், நல்லுறவு, நல்லெண்ணம் போன்ற ஆரோக்கிய சூழல் பேணப்படவேண்டியது இக்கால கட்டத்தின் மிக அவசரமான, அவசியமான பணியாகும் என்பதில் இரண்டாம் கருத்துக் கூறுவதற்கில்லை.
ஆனால் புலிகளின் மேற்படி மடலில் சில வரிகள் தமிழ்முஸ்லிம் மக்களுக்கிடையிலான வேற்றுமைக்கு வழிசமைத்த வர்கள் முஸ்லிம்கள் தான் என்றும, அரசின் சதி ஆலோசனையில் சோரம் போனவர்களும் அவர்களே என்பது போலும் அழுத்தம் தருவதுதான் வேதனையானதும் கண்டிக்கத் தக்கதுமாகும்.
நல்லிணக்கத்தை மையமாகக் கொண்டு எழுதுவது என்ற போர்வையில் இக்கடிதத்தினூடாக முஸ்லிம்களைத் தமிழ் மக்களின் விரோதிகள் போல சித்தரிக்கும் ஒரு கைங்கரியத் தில் புலிகள் இறங்கியுள்ளனரா? என்ற சந்தேகத்தையும் தருகிறது.
தீவும் தீர்வுகளும் எம். எம்.எம்.நூறுல்ஹக்
 
 

03 புலிகளால் இதற்கு முன்னரும் கூட தமிழ்-முஸ்லிம் மக்களுக்குள் ஐக்கியம் பேணப்படவேண்டும் என்றும் ஒற்றுமைக்கு வேட் டுவைப் போர்கள் இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிக்கைகள் விடப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.
இப்படி ஐக்கியத்தை வலியுறுத்திக் கூறிவிட்டு வேற்றுமைகளுக்கு வாய்க்கால் வெட்டிய நிகழ்வுகளுக்கும் புலிகள் பொறுப்பாக இருந்த சந்தர்ப்பங்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இல்லாமலில்லை.
தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையில் ஐக்கியம் வலுப்பெறுவதற்கான முயற்சிகளை இவ்விரு சமூகங்களும் முன்னெடுத்துச் செல்லவேண்டுமென்ற அடிப்படையான கருத்துக்கு முரண்பட்ட அபிப்பிராயங்களை இங்கு அவிழ்த்து விடுவது எனது நோக்கமல்ல.
மாறாக ஒற்றுமைக்கு எதிரானவர்கள் முஸ்லிம்கள் என்று உண்மைக்குப் புறம்பாக புலிகள் இனங்காட்டியிருப்பது தவறானதென்பதும், இத்தகைய இனங்காட்டல்கள் எதிர் காலத்தில் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையில் ஐக்கியத்தை வளர்த்தெடுக்காதென்பதையும் சுட்டுவதே என் இலக்காகும்.
“ழரீலங்கா அரச படைகளுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் பேராட்டத் திற்கு எதிராகச் செயற்பட்டுவரும் எவரும் இன. மத, பால். பிரதேச வேறுபாடற்று எம்மால் தண்டிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் எவருக்கும் புதிதல்ல.
இது அணி மையில மருத முனையைச் சேர்ந்த முஸ்லிமீ ஊர்காவற்படையினரை புலிகள் கொன்று தண்டித்த தொடரில் கூறப்பட்டாலும் அவர்களின் அடிப்படைக் கொள்கைகளுள் இதுவும் ஓர் அம்சம் என்பதை "தண்டிக்கப்படும் சம்பவங்கள் இங்கு எவருக்கும் புதிதல்ல" எனும் வரிகள் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.
”டாகுபாடின்றி பூரீலங்கா அரச படைகளை கொன்று வருகின்றோம்” என்ற கூற்றில் எவ்வளவு தூரம் “மெய்மை உடையவர்களாக புலிகள் இருக்கிறார்கள் என்று நாம் அலசிப் பார்ப்போமானால் "பூஜ்யம்” தான் முடிவாகக் கிடைக்கும்.
1990 களில் கிழக்கில் 13 பொலிஸ் நிலையங்களைத் தாக்கிய புலிகள் 10 பேரைக் கொன்று சுமார் 800 பொலிசாரை பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டனர். அவர்களுள் 75% மானவர்கள் முஸ்லிம்களே. தப்பி வந்த சிலரது கூற்றுப்படி தமிழ்ப் பொலிசார் விடுவிக்கப்பட்டனர். முஸ்லிம் பொலிசார் காடுகளில் வரிசையாக நிறுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பொலிஸ் நிலையங்கள். படைகளின் காவலரண்கள் கூட்டுமொத்தமாக தாக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் தவிர்ந்த வேளையில் ரீலங்கா அரச படைகளில் கடமையாற்றும் தமிழர்கள் தண்டிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இல்லையென்றே கூற வேண்டும்”“இன மத பால் பிரதேச வேறுபாடுகளின்றித தண்டிக்கிறோம்” என்ற அவர்களது கூற்றை இது வலுவிழக்கச் செய்வதுடன் உண்மை வேறொன்றாயிருப்பதையும் மிகத் தெளிவாகக காட்டுகிறது.
“கடந்த எண்பதுகளில் கூட இதே போன்றதொரு நிலையை அரசு திட்டமிட்டு ஏற்படுத்தியது. மத்திய கிழக்கு முஸ்லிம்களின் இரத்தத்தினால் கறைபடிந்த வரலாற்றையுடைய புலனாய்வு அமைப்பொன்றின் ஆலோசனையின் பெயரில் எம்மிரு இனங்களுக்கிடையேயும் விரோதத்தை உருவாக்கியது. இரு இனங்களும் அந்த மோசவலையில் வீழ்ந்து விட எமது தென் தமிழீழமே அல்லோல கல்லோலப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்” எனவும் அக்கடிதத்தில் காணப்படுகிறது.
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 59
O4
இந்த சமூக மோதல் நடந்தது 1985 சித்திரை மாதம் என்பதே சரியானதாகும். இக்காலத்தின் பின்னர்தான் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவில் விரிசல் பரவலாக பற்றிக்கொண்டது.
எது எப்படியிருப்பினும் இக்கலவரம் உருவாகுவதற்கான பின்னணியில் இருந்த காரணிகள் யாவை? என்றும, இம்மோதலின் ஆரம்ப நிலை தோற்றம் பெற்றது எவ்வாறு? என்றும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்வதன் மூலமே 1985 களில் ஏற்பட்ட சமூக மோதலின் தூண்டுகோலர் யாரென்பதும் அரசின் சதிவலையில் சோரம் போனோர் யார் என்பதும் துலங்கும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட குழுக்களிலிருந்த சிலர் முஸ்லிம்களின் பொருளாதாரம், கல்வி. கலாசாரம். சமயம் என்பனவற்றுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதனால் உடமை. உரிமை என பல இழப்புக்களை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஏற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இத்தகைய சமூக விரோதப் போக்குகள் கைவிடப்படவேண்டுமெனவும், மன்னார் மாவட்டத்தின் ரசூல் புதுவெளிக்கருகாமையில் அமைந்துள்ள அளவைக்கப்பள்ளி வாசல் வளவில் வைத்து தபால் அதிகாரி ஆப்தீன் கரீம்பாய். அப்துல் ஸலாம் என்போர்கள் ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதையும் கண்டித்து அதுவும் அமைதியான முறையில் கடையடைத்து தமது எதிர்ப்பையும, அனுதாபங்களையும், வேதனையையும் முஸ்லிம்கள் வெளிப்படுத்தினார்கள். இதனை ஜீரணித்துக் கொள்ளும் மனோநிலையில்லாத ஆயுதமேந்திய சில தமிழ் இளைஞர்களினால் அது குழப்பப்பட்டது.
ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்களில் சிலரும் காரைதீவு வாசிகளில் சிலருமாகச் சேர்ந்து அருகிலிருந்த மாளிகைக்காடு, சாய்ந்தமருது கிராமங்களில் தீ வைத்தும் தாக்குதல்கள் நடாத்தியும் சேதங்களை முதன்முதலில் ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணம் பூராவும் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையில் கலவரங்கள் ஏற்பட்டன. இம்மோதலின் போது ஆயுத மேந்திய தமிழ் இளைஞர்களும் நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனரென்பது கவனிக்கத்தக்கது.
இம்மோதலினால் முஸ்லிம்கள் தரப்பில் நிகழ்ந்த இழப்புக்கள் தமிழ் மக்களை விட அதிகமென்பது சந்தேகத்துக்கு அப்பால் நிருபிக்கக்கூடியதாகும். இக்கலவரத்தின் போது மாளிகைக்காடு, சாய்ந்தமருது ஊர்களின் பாதுகாப்பின் நிமித்தம் இலங்கை பாதுகாப்புப்படையினரை நம்பவேண்டிய நிலை உருவாகியது. ஆயுதம் தரித்த தமிழ் இளைஞர்களில் சிலர் மேற்கொண்ட நடவடிக்கைகளாலேயே இந்நிலைமை உருவாகியது. அதுவல்லாது வெறுமனே இஸ்ரவேலரின் ஆலோசனையின் பேரில் அரசு உருவாக்கிய சதியில் முஸ்லிம்கள் வீழ்ந்துவிட்டார்கள் என்று ஆர்ப்பரிப்பதில் அர்த்தமே இல்லை. எனவே 1985 சித்திரை மாதம் கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே வன்செயல்களை ஆரம்பித்து வைத்தவர்கள் ஆயுதமேந்திய தமிழ் இளைஞர் களில் சிலரும் காரைதீவுக் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் சிலரும் என்பது வெளிப்படை.
ஆயுதம் தரித்த இளைஞர்கள் மீது முஸ்லிம்கள் நல்லெண்ணம் கொள்ளா வகையில் அவர்கள் முஸ்லிம்களின் கல்வி, சமயம், கலாச்சாரம், பொருளாதாரம் போன்ற துறைகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்பது 1985களில் ஏற்பட்ட சமூக மோதலினால் கிழக்கு
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

105
வாழ் எல்லா முஸ்லிம்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உயிர் உடமை சேதங்களை ஏற்க வேண்டியவர்களாக இருந்தனர் என்பது ஐயங்களுக்கு அப்பாலான உண்மைகளாகும்.
ஏற்றுக் கொள்ளுதல, புரிந்துணர்வுகள் தான் சில வேளை எதிர்காலத்தில் இங்குள்ள தமிழ் - முஸ்லிம் மக்களுடைய பழைய நல்லுறவுக்கும் பரஸ்பர நேசத்துக்கும் நிரந்தர ஐக்கியத்துக்கும் வழியாக அமையலாமென்ற நம்பிக்கை உண்டு. .
"1990 களில் ஆரம்பத்தில் கூட அரசு சதி மேல் சதி தீட்டி மோசம் செய்தது" என துரை அவர்கள் கூறுவது அவர்களின் ஈனச்செயல்களை மறைப்பதற்காக முஸ்லிம்களின் சிந்தனையை வேறொரு திசையை நோக்கி நகர்த்த கையாளும் திட்டமா? என்று நாம் மீண்டும். சந்தேகத்துடன் கேட்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
1990 களின் ஆரம்பத்தில் மட்டுமல்ல அவ்வாண்டின் இறுதி வரை புலிகள் முஸ்லிம்களுக்கு வரலாறு மறக்க முடியாத கொடுமைகள் செய்துள்ளனர் என்பதை வரலாறு உள்வாங்கியுள்ளது. இவ்வாண்டுக்கு முன்னரும் புலிகள் கிண்ணியா, காத்தான்குடி, கல்முனை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டரென்பது வரலாறே.
ஆயுதம் ஏந்திய தமிழ்க்’ குழுக்களுக்குள் புலிகள் தான் முஸ்லிம்களுக்கு அநேகமான இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர் என்ற முடிவுக்கு இட்டுச் சென்ற ஆண்டுகள் இந்த 1990கள் என்பது அவர்களுக்கு மறந்து போயிருக்கலாம். ஆனால் முஸ்லிம்களின் மனதிலிருந்து விலகிப்போயிருக்காது.
1990களில் ஆரம்ப நாட்களில் முஸ்லிம்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை கீழ்க்காணும் காரணங்கள் தொடர்பு படுத்திப்பார்க்கக் கூடியதாக உள்ளது. தவிர துரை அவர்கள் கூறுவது போல அரசின் சதியுடன் அல்ல.
மாறாக புலிகளின் தவறான அணுகுமுறையினால் ஏற்பட்டவைகள் என்று கூறுவதற்குத்தான் சான்றுகள் நிறைய உண்டு. 1990களில் நடைபெற்ற சம்பவங்களின் யதார்த்தத்தை தெளிவாக பார்க்கும் போது இம்முடிவிற்கே இவை நம்மை இட்டுச் செல்கின்றதெனலாம்.
“பிரபல கவிஞர் அன்பு முகையதீன் சில தினங்களுக்கு முன்பு தமிழ் இயக்க கோஷ்டியொன்றினால் எடுத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணையின் பின்பு விடுதலை செய்யப்பட்டார்” (தினகரன் 28-1-90)
காத்தான்குடியில் நேற்றுக்காலை புலிகள் ஒலிபெருக்கியின் மூலம் "அன்புள்ள காத்தான்குடி மக்களே! நேற்று இரவு எமது இயக்க ஆதரவாளர் ஒருவர் காத்தான்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து காத்தான்குடியில் துக்க தினத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்கின்றோம். என்றும் தேடுதல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்களை தேடுகிறோம் என்றும் அறிவித்தனர்" (தினகரன் 31-1-1990)
"பூரீ.ல.மு.காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் எம்.வை.எம்.மன்சூர் நேற்றுக்காலை 9 மணியளவில் அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லபபட்டாா" (தினகரன் 31-1-1990)
"முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாதென்று புலிகள் இயக்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களில் ஒருவரான ஜனாப் மருதுார்க் கனியும் இந்தப் பயங்கரவாதிகளினால் கடத்திச் செல்லப்பட்டார். கல்முனை சந்தைப்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 60
OG
பிரதேசத்திலிருந்து 15 வர்த்தகர்களும், 25 முஸ்லிம் இளைஞர்களும் புலிகளினால் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டுள்ளனா" (தினபதி 31-1-90)
“கடந்த வாரம் புலிகள் இயக்க உறுப்பினர் கல்முனைக்குடி பள்ளிவாசலில் வைத்து முஸ்லிம் ஆயுதபாணிகளினால் கடத்திக் கொல்லப்பட்டார். காத்தான்குடியில் திங்கட்கிழமை புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லட்பட்டார் வீரகேசரி 3 - 1-90) м
“ஆயுதங்களை வைத்திருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் அவற்றை கையளித்து சரணடையுமாறு புலிகள் ஒலிபெருக்கி மூலம் நேற்று வேண்டுகோள் விடுத்தனர். கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது பகுதிகளில் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வீரகேசரி 31-1-90)
கல்முனைப்பகுதியில் கடந்த இருதினங்களாக புலிகளால் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி நேற்றுக்காலை ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று நடைபெற்றது. ஊர்வலத்தின் மீது கிரனைட் வீசப்பட்டதாகவும் இதனால் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் 25 பேர் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது (வீரகேசரி 02-02 90)
"தனியார் (கல்முனையில்) ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 5 முஸ்லிம் நோயாளிகளை தமிழ் துப்பாக்கி நபர்கள் சுட்டுக் கொன்றனா'(தினகரன் 03-02-90)
இது புலிகளினால் 1990களின் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் மீது திணித்தவற்றின் ஒரு பகுதியே. ஜூன் மாதத்திலிருந்து அனுபவித்த கசப்பான வாழக்கையையும் ஏற்றுக்கொண்ட இழப்புகளின் ஒரு பகுதியையும் கீழ்க்காணும் செய்திகள் ஊர்ஜிதம் செய்கின்றன.
“30 முஸ்லிம் வர்த்தகர்கள் புலிகளினால் கடத்தப்பட்டு பெருந்தொகையான பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிழக்கில் உள்ள பெளத்த விகாரை ஒன்றை முஸ்லிம்களைப் போல் தொப்பி அணிந்து விடுதலைப் புலிகள் தகர்க்க முனைந்துள்ளனர்." (தினகரன் 22-06-90)
“கல்முனை நகரம் சுடுகாடு போல் காட்சியளிக்கிறது. நகரில் சில இடங்களில் சடலங்கள் அரைகுறையாக எரிந்த நிலையில் காகங்கள் கொத்திக் குதறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. கல்முனை நகரத்திலுள்ள பெரும்பாலான கடைகள் சூறையாடப்பட்டு எரிந்த நிலையில் காணப்படுகிறது. கடையொன்றினுள் 5 சடலங்கள் எரிந்த நிலையில் காணப்பட்டன”. (சிந்தாமணி 24-6-90)
“புலிகள் இயக்கத்தினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட 5 முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்ய உதவுமாறு பெற்றோரும் கல்முனை வாழ் பொதுமக்களும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனா” (தினகரன் 09-07-90)
"1990-07-14 ஹஜ் கடமையை நிறைவேற்றிட்டு வந்தோர் ஓந்தாச்சிமடம் எனும் இடத்தில் வைத்து வழிமறிக்கப்பட்டு அவர்கள் உடமைகள் பறிக்கப்பட்டன. இறுதியில் கொன்று தீயில் வீசப்பட்டனர். அவ்வாறு கொலையுண்டவர்கள் 65 பேர்களாவர்” (அல் ஹஸனாத் ஜூலை - ஒகஸ்ட 1992)
“சம்மாந்துறையில் நேற்று புலிகள் துப்பாக்கிப்பிரயோகம் செய்த போது 55 வயதான இப்ராஹீமும் 23 வயதான மரைக்கார் கமால்தீனும் கொல்லப்பட்டனர். புதுப்பள்ளிசாசலும் குண்டால் சேதமுற்று 15 பேர் காயமடைந்தனர்". ( தினகரன் 25-07-90) ܀-
“சம்மாந்துறையில் கைகாட்டியடி ஜாரியா பள்ளிவாசல் வளவுக்குள் நேற்று
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

107
முன்தினம் இரவு 5 இளைஞர்கள் ஆயுதபாணியான கோஷ்டியொன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயங்களுக்கு இலக்காகியுள்ள னர்”.(தினகரன் 30-07-90)
"அக்கரைப்பற்றில் திங்கள் இரவு விடுதலைப் புலிகள் விவசாயிகள் என வர்ணிக்கப்படும் 13 முஸ்லிம்களை படுகொலை செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதனை பொலிஸார் உறுதி செய்துள்ளனர். (தினகரன் 01-08-1990)
“சம்மாந்துறையில் உள்ள மஜித்புரம் கிராமத்தின் மீது புலிகள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். கடந்த புதன் இரவு நடந்ததாகக் கூறப்படும் இத்தாக்குதலில் 2 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்" (தினபதி 03-08-90)
“90-8-3 காத்தான்குடியில் இரண்டு பள்ளிவாசல்களில் இஷா தொழுது கொண்டிருந்தவர்கள் ஒரேவேளையில் சுடுபட்டனர். அப்பொழுது தொழுகைக்குப் போன சிறு பிள்ளைகள் கூட விடுபடாத வகையில் 167 பேர் கொலை செய்யப்பட்டனர். 38 பேர் காயமுற்றனா" (அல் ஹஸனாத் ஜூலை - ஒகஸ்ட 1992)
“199- 8-12ல் ஏறாவூரில் புகுந்து 115 ஆண்கள் 27 பெண்கள் 31 பிள்ளைகள் என மொத்தம் 173பேர் சயனைட் பூசப்பட்ட கத்திகளால் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர். சில கர்ப்பிணிப் பெண்களது வயிற்றைக் கிழித்து பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றமை அவர்களது கொடுமைக்கும் கொலை வெறிக்கும் போதிய சான்றாகும்" (அல் ஹஸனாத் ஜூலை - ஒகஸ்ட 1992)
புலிகளினால் முஸ்லிம் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட அட்டுழியங்கள் இவ்வளவுதான் என்ற அடிப்படையி இல்லாமல் நமது நோக்கிற்கு வலு சேர்க்கும் வகையிலேயே மேற்காணும் சான்றுகள் இங்கு தரப்பட்டுள்ளன.
உண்மையில் துரை அவர்கள் கூறுவது போல் "1990களின் ஆரம்பத்தில் கூட அரசு சதிமேல் சதி தீட்டி மோசம் செய்தது" என்பதில் எத்தகைய உண்மைகளும் இல்லை.ஆயினும் அரசின் சதி முயற்சியென்றாலும் கூட அதில் முதலில் இரையாகிப்போனவர்கள் புலிகள் என்றே கூற வேண்டியிருக்கிறது.
பொதுவாக 1985 ஏப்ரல் தொட்டு 1996 செப்டம்பர் வரை நிகழ்ந்த தமிழ்முஸ்லிம் கலவரங்களை முதலில் ஆரம்பித்து வைத்தவர்கள் தமிழர்கள் அல்லது ஆயுதமேந்திய தமிழர்கள் என்பது தீக்கனலை ஒத்த உண்மையாகும்.
“ஊர்காவல் படையென்ற பெயரில் ஊர் சுற்றித்திரியும் இளைஞர் தங்களின் எதிர்கால நிலையென்ன.? இந்தப் போரில் தாங்கள் ஆற்றும் பங்கு என்ன என்பதை சிந்தித்துப் பார்க்கின்றார்களா? துப்பாக்கி ஏந்துவதன் மூலம் சண்டையினை வாசலுக்கு வரவழைக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிறிலங்கா படையின் யுத்த தந்திரோபாயத்தில் தாங்கள் பலியாகிக் கொண்டிருப்பதை உணர்வார்களா? மேற்படி கருத்துக்களை துரை அவர்கள் தெரிவித்திருப்பதன் மூலம் முஸ்லிம் ஊர்காவல் படையின் தோற்றம் அர்த்தமற்றதொன்று எனவும், இதனாற்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்ப்பையும் சண்டையையும் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தை திணிக்கிறதென்ற கருத்தையும் நாம் விளங்கிக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
ஊர்காவல் படையினர்கள் அரச படையின் ஓர் அங்கம் போலிருந்தாலும்
இதன் உருவாக்கத்திற்கு காரணமானவற்றுள் தமிழ் மக்களில் ஆயுதமேந்திய போராட்டக் குழுக்களும் அங்கம் கொள்வதை யாரும் மறைத்து விட இயலாது.
இலங்கை முஸ்லிம்கள் சிங்கள.தமிழ் எனும் இரு சமூகங்களின் பேரினவாதப்
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 61
08
அனாலேயே அடையாளப்படுத்த முடியும் என்ற கோஷம்.
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் பெரும்பான்மை யினர் ஹீ.ல.மு.கா.வை ஆதரித்துள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆயின் அதன் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறதே தவிர குறையவில்லை. இத்தகைய நிலையில் உள்ள கட்சி பற்றி குறைபடுவதென்பது ஐக்கியத்துக்கு பங்கமாக அமையக்கூடும்.
U.ல.மு.கா.வின் ஆரம்ப காலந்தொட்டு அதன் கருத்துக்களில் மிக அவதானம் செலுத்தியவன் என்ற வகையில் உறுதியாகக் கூறமுடியும். இக்கட்சி தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், பரஸ்பர உறவையும் ஏற்படுத்தும் வகையில் தான் கருத்துக்களை முன்வைத்து வந்திருக்கின்றன: முன்வைத்துக் கொண்டிருக்கின்றன.
பூரீல.மு.கா.வின் தேசிய தலைவரான கெளரவ அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரட்ப் (எல்.எல்.எம) அவர்கள் இயல்பாகவே தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் ஒற்றுமை நிலவுவதற்கு ஒரு பாலமாகவும். சமூக ஐக்கியங்கள் பற்றிய கருத்துக்களில் மிக ஊறித்திளைத்தவரென்பதும் அவதானத்துக்குரியவைகளே.
உண்மைகள் இப்படியிருக்க அதற்கு மாற்றமான கருத்துக்களை இக்கட்சியின் மீது திணிக்க முற்படுவதென்பது மேலும் கசப்பான அனுபவங்களைத் தோற்றுவிக்கலாம் என்பதும் நாம் கவனஞ் செலுத்த வேண்டிய பக்கங்களே. சுருங்கக் கூறுமிடத்து பூரீ.ல.மு.கா.தேர்தல் வெற்றியை மையமாக வைத்து தமிழ் முஸ்லிம மக்களிடையே மோதலைத் துண்டும் வகையிலோ அல்லது இனத்துவேஷ முனைப்புடன் அதன் நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதுமே யதார்த்தமான வரலாறாகும்.
”மார்க்கத்திற்கு புறம்பான வழியில் அவர்களைப் போன்ற சிறுபான்மையினராகிய தமிழருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதும் துரதிஷ்டமானது" என துரை அவர்கள் குறிப்பிடுவதும் ஐக்கியத்துக்கு பங்கமான கூற்றே.
தமிழ் மக்களுக்கெதிரான மனோநிலையில் - கருத்துக்களில் முஸ்லிம்கள் நிலை கொண்டிருக்கின்றனர் என்ற வாதம் அர்த்தமற்ற தொன்றாகும். ஒரு போதும் இத்தகைய நிலையில் முஸ்லிம்கள் இல்லை என்பதை பின்வரும் காரணங்களிலிருந்து தெட்டத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம் .
தமிழ் மக்களின் போராட்டம் அர்த்தமற்ற ஒன்று என பேரினவாதக் கட்சிகளின் அதியுயர் பீடத்தைச் சேராத எந்தவொரு முஸ்லிம்களும் கூறிக்கொள்ளாமை,
3 தமிழ் மக்களின் பிரதேசத்துள் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது முஸ்லிம் பிரதேசத்துள் தமிழ் இளஞர்கள் மறைந்த வேளையில் முஸ்லிம்கள் காட்டிக் கொடுக்காமை.
3 தமிழ் மக்கள் மத்தியிலிருந்து எழுகின்ற நியாயமான கோரிக்கைகளுக்கு தடைக் கற்களாக இல்லாமலிருப்பது. r
с» 1985களுக்கு முன்னர் தமிழப் போராளிகள் முஸ்லிம்களிடம் வந்து உணவு, உறைவிடம் கைச்செலவிற்காக பணங்கள் கேட்டபோது இல்லை என்று கூறாது கொடுத்துதவியமை.
இப்படியிருந்தும் தமிழருக்கெதிரான மனோ நிலையுடையோர்களாக முஸ்லிம்கள் இருக்கின்றனர் என்று பக்கச்சார்பான கருத்துக்களை துரை அவர்கள் விரித்திருப்பது விவேகமற்ற நடவடிக்கையாகும்.
தீவும் தீர்வுகளும் எம். எம்.எம்.நூறுல்ஹக்

O9
உண்மையில தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் ஐக்கியம் முக்கியமானது. ஆயினும் அதனை கட்டி எழுப்புவதற்கு எந்தச் சமூகத்தினர் விட்டுக் கொடுப்பு களையும் நம்பிக்கைகளையும் ஏற்படுத்த வேண்டிய பொறுப் பிலிருக்கின்றனர் எண்பது முதலில் தெளிவு பெற வேணி டியது.
தமிழ்-முஸ்லிம மக்களிடமிருந்து இன்று முன்வைக்கப்படும் கோரிக்கைகளின் நியாயபூர்வமானவைகள் செத்துவிடாத நிலையில் இவ் விரு சமூகங்களும் சுமுகமாக அதேநேரம் தனித்துவம் கசங்காத நிலையில் விட்டுக் கொடுப்புக்களில் கவனஞ் செலுத்திக் கொள்ளல.
கடந்த கால கசப்பான அனுபவங்கள் இனங் காணப் பட்டு எதிர் காலத்தில் அவற்றினைத் தவிர்த்துக் கொள்வதற்கான உத்தரவாதங்களை இவ் விரு சமூகத்தினர்களும் ஏற்படுத்துதல் சந்தேகப் பார்வைகள் மறையக் கூடிய வகையில் இவ் விரு சமூகங்களும் தங்களை மாற்றிக் கொள்வதோடு நம்பிக்கைகள் ஏற்படக் கூடிய வகையில் எதிர் காலத்தில் தங்கள் நடவடிக்கை களை ஏற்படுத்திக் கொள்ளல்
இவ்வாறான வழிமுறைகள் மூலமே தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற முடியும். தவிர வேறு வழியில் அல்ல. முன் னர் சமூக மோதல் ஏற்படக் காரணமாக இருந்தவற்றில் ”விடாப் பிடியாக" தொங்குவது நல்லதல்ல.
ரீ.ல.மு.கா வை ஒதுக் கி விட்டு வேறு எந்த முஸ்லிம் அமைப்புக்களுடன் இணைந்து கொண்டு எத்தனை சமரச முயற்சிகள் மேற்கொண்டாலும் அவைகள் தோல்வியைத் தழுவ வல்லன என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் உணரத் தக்க உண மையாகும் .
முன்னர் "கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி ஓர் இணக்கப்பாட்டை ஒப்பந்தமாக்கிக் கொண்டது. அது நடைமுறைக்கு வராமற் செயலிழந்து போனது. அந்த இணக்கத்தை உருவாக்க மும் முரமாக உழைத்தவர்களுள் பெரும் பகுதியினர் இப் போது ரீ.ல.மு.கா. வில் இணைந துள் ளனர் . .
இவைகள் எல்லாம் நமக் குணர்த்துவது என்ன? வடக்கு-கிழக்கு முஸ்லிம்களினது அரசியல் சக்தியாக ரீ.ல. மு.கா. வை அங்கீகரித்துக் கொள்வதுடன் எதிர் காலத்தில் ஏற்படுத்த வேணி டியதென்று கருதும் விடயம் பற்றியும் கலந்தாலோசிப்பது கட்டாயமானதென்ற முடிவையும் ரீ.ல.மு.கா. வை ஓரம் கட்டி விட்டு ஏற்படுத்தும் எதுவும் நிரந்தரம் அற்றதாகவே அமையும் என்னும் உணமைகளையுமே.
உண்மையில் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் ஐக்கியம் நிலவ வேணடும் என்பது பற்றி மனத் துாய் மையுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கின்றார்களா? என்பது ஒரு விஷயம் குறைந்த பட்சம் ஐக்கியத்தை அடித்தளமாக இட்டு துரை அவர்களால் அனுப்பிய மடல் கூட மன விரோத வெளிப்பாட்டையே கொண்டிருக்கின்றன என்பது இன்னொரு விஷயமாகும்.
எது எப்படியிருப்பினும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் நல்லிணக்கம் பேணப்பட அறிவுபூர்வமான நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளும் ரீல மு.கா. வும் ஈடுபடல் வேண்டும் என்பதே இனி றைய அவாவாகும்.
எனவே தோல்வி கணிட சித்தாந்த முறைகளை கைவிட்டு விட்டு வெற்றிகளைப் பெறக்கூடிய கூர்மையான புத்திகளின் வழியில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் ஐக்கியத்தை வளர்ப்போம்! வளமான வாழ் விற்கு வழி 360) DL (UTuß! -சாரிநபிகர் -
ஜன23 பெர7ை பெப்.06 பெப் **v7
தீவும் தீர்வுகளும் எம்.எம்.எம்.நூறுல்ஹக்

Page 62
மலும் அதுீர் நின்ஜ்ஜிஐiேgது இR பாத்தW இரது கிறிரேசர்கள் இவர் "அஜி இரதா " பத்திரிகேமி பிரதம ஆசிரியர்
ரீஜிங் உதய சிங்கம் ஆTப் பத்திரிகைகளில் அதவி ஆசிரியராக பணியாற்றி: தினபதி - திதானதினகரன் - Wரஞ்ச் ஜீகேசரி தினக்குரல் தேசிய தாளிதழிகளிலு தவWணி திசை வார இதழிகளிலும் சரிநிகர் எழுச்சிக்குர்ஜ் ப்ே பத்திரிகைக இது இர்ஜாவிய இனக்கிய அரசியல் ಹಿಜ್ರಿàಳಿಳ್ಳಳ್ಳ! தாஜ் சஞ்சிகைகளின் விமர்சனங்களையும் பிரசுரித்து அகதிகரித்துச் சிகரீன: குறிப்பித்தக்கது மிமி கிர் மிர் நூறுகிலுச் மிகிரீர் - Diploma in M55 നedia - இவரது இயற்பெயர் மருதூர் மெய்யொளி செஞ்சுடர் இலக்கணி எர்ண்னிகிச் இவரது புனைப்பெயர்கள்  ேவலிரர்களுள் இங்wத்தேடலும் 9 சதுப் பித்ர் சிறப்பு Wர் 9 சதுர் அழிலு சிறப்பு M இவரது வெளியீடுகள் தவிர் சிக்கிய காற்றாய் புலர்பிக்கொண்டிருக்கிந்து
ଦର୍ଶାଶ୍ରୁନ୍ଧି
சழிகங்களுக்கெதிராகவும்
Fuß Ð
எழுதத் தொடங்கி விட்டமை
கதிEக்குரியது
இவற்றிது or
இவரது
அதிதுரதிர்
அவசியபுத்கிரது
SEN 955 - ESTO5 - OO - "

அடையாளம்
து முத்து டிரீஜி
ஈளிலும்
எம்.எம்.எம். நகீபு
புதுயுகம் - இணையாசிரியர்