கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வீடற்றவன்

Page 1
இலங்கை
3. ନNN
亨1
ॐ S 罗
"{"ffffي
.
 

" | آبی || |
疊
*T
의정 江 腳團 |西 山 血
;s.|-};sae翁***ì .|&A多----
----No!s!
Ë 乐出~] 源

Page 2

வீடற்ற வன் இலங்கை வாழ் மலையக தமிழ் மக்கள் பற்றிய குறுகாவல்
ஸி. வி. வேலுப்பிள்ளை
11
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை-600098,

Page 3
இந்தியாவில் முதற் பதிப்பு: மே 1984 இரண்டாம் அச்சு: ஜூலை 1987 உரிமை பதிவு
Code No. A. 188
விலை, ரூ 8400
அச்சிட்டோர் : ஜெய் மாருதி பிரிண்டர்ஸ், 812, பிருந்தாவன் தெரு சென்னை-300 033.

முன்னுரை
பல வருடங்களுக்கு முன் வீரகேசரியில் முதன் முதலாய் நான் தமிழில் எழுதிய இக்குறுநாவலில், இந்திய வம்சர் வளியினரான மலைநாட்டு தொழிலாள மக்களது வஞ்சிக்கப் பட்ட வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை தொட்டுக் காட்ட முற்பட்டிருந்தேன்.
காலங்காலமாக துன்பக்கேணி பில் உழன்ற இந்த மக்கள், கிட்டத்தட்ட 160 வருடங்களுக்கு முன் இலங்கை, யின் தேயிலை-காப்பித் தோட்டங்களுக்குள் காலடி எடுத்து வைத்தார்கள்.
ஒப்பந்தக்கூலி என்பது கடனாள் என்ற பதத்திலிருந்து வித்தியாசமானதாகும். கடல் கடந்து இலங்கை வந்து சேர்ந்த இந்தியத் தமிழன் தனது கப்பலுக்கான பிரயாணக் செலவினை மாத்திரமல்ல; வழியில் உண்ட உணவுக்கான செலவினையும் கூட தன்னை' கொண்டு வந்து சேர்த்த வனுக்கு உழைத்துக் கொடுத்தாக் வேண்டும் என்ற நியதி அன்று இருந்தது. அப்படி கொடுத்தானவர்களையே கடனற்றவர்களாகக் கணிக்கலாம் என்று கொள்ளப்பட்டது.
ஆனால், இது ஆகக்கூடிய காரியமாக இருக்கவில்லை. ஏனெனில் அன்று அவனது மொத்த குடும்ப வருமானமே மாதம் ஒன்றுக்கு ஐம்பத்திரண்டு ரூபாயை தாண்ட்வில்ல்ை, கடனோ கிட்டத்தட்ட இருநூற்றி எழுபது ரூபாவாக இருந்தது.
எனவே கிட்டத்தட்ட நூறு வருடங்களாய் அதாவது 1921 வரை சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் அவர் களின் நன்முயற்சியால் இவ்வேற்பாடு சட்ட பூர்வமாக ஒழித்துக்கட்டப்படும்வரை அந்த ஏழை இந்தியத் தமிழன்
è a a

Page 4
அடர்ந்து வளர்ந்திருந்த அந்தத் தேயிலை மலைகளில் கடனாகத் தானிருந்தான்.
இது அவனது துன்பியல் வாழ்வின் ஒரு துளி மாத்திரமே.
இது குறித்து விரிவாக நண்பர் கித்தியானந்தன் இந் நூலின் முதற்பதிப்புக்கான தனது முன்னுரையில் எழுதி யுள்ளதால் நானும் இது குறித்து மேலும் கதைப்பதென்பது பொருந்தாத ஒன்றாகிறது.
காலத்தின் மாறுதல்களோடு, மலையகத் தொழிலாளரும் எழுந்து நின்று போராடி பல்வேறு உரிமைகளைப் பெற்றுக் கொள்ளத்தான் செய்தனர்.
இருந்தும் இவர்களது கதை, இத்தீவினில் இன்றும் ஒரு வஞ்சிக்கப்பட்ட கதையாகத் தான் தொடர்கின்றது. இன்று இவர்களை பழிவாங்க கிரிமினல் சட்டங்கள் இல்லை. ஆனால் கிரிமினல் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
கண்ணிரால் கறைப்பட்டுப்போன இம்மக்களின் சரிதம் குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு பெரிதும் தெரிந்திருக்க தியாயமில்லை. இதைத் தெரிவிக்கும் முகமாக பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் முன்வந்து தமிழ்நாட்டில் புகழ் பெற்று விளங்கும் நியூ செஞ்சுளி புக் ஹவுஸ் பிரைவேட் விமிடெட் நிறுவனம் வாயிலாக கதையை வெளியிட ஏற்பாடு செய்தமைக்கு நானும் நீகிகோரி போராடும் எங்கள் சமூகமும் நன் டிக்கடன் பட்டவர்தாம்.
இதே வேளை, இச்சந்தர்பபத்தில் இந்நூலின் முதற் பதிப்பை தமது வைகறை வெளியீடாக வெளியிட்டு உதவிய என் இனிய நண்பர் திரு. மு. நித்தியானந்தனை நான் நினைவு கூர்தலும் சாலப் பொருந்தும் ஓர் விசயமாகும்.
மேலும் இந்நூலை வெளியிடுவதில் பெருமுயற்சி எடுத்த திரு. பத்மநாப ஐயருக்கும் நான் நன்றி கூற கடமைப் பாடுடையவன்.
ஸி. வி. வேலுப்பிள்ளை

அணிந்துரை
1893-ல் அமைக்கப்பட்ட இலங்கை அச்சுத் தொழி லாளர் சங்கம்தான் தென் கிழக்காசியாவிலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட தொழிற்சங்கமாக சரித்திர முக் கியத்துவம் பெறுகிறது. இதற்கு இருபத்தைந்து வருடங் களுக்குப் பிறகு தான் 1918-ல் இந்தியாவின் முதலாவது தொழிற்சங்கம் என்று கூறத்தக்க *மெட்ராஸ் லேபர் யூனியன்? உருவாகிறது. மலேசியாவிலும் இந்தோனேசியா விலும் தொழிற்சங்கத் தோற்றப்பாடு என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பட்ட விவகாரமாகும்.
அச் சுத் தொழிலாளர்களை முன்னோடிகளாகக் கொண்டு நகர்ப்பகுதிகளிலும் வேர் பதித்த தொழிற்சங்க இயக்கம் தோட்டப் பகுதிகளிலும் விஸ்தாரம் பெறுவதற்கு மேலும் ஒரு நாற்பதாண்டு காலம் காத்திருக்க வேண்டி யிருந்தது. வேறு விதமாகச் சொல்வதனால், 4820 களிலேயே தென்னிந்தியாவிலிருந்து இந்கயத் தொழிலாளர் கள் குடி பெயர ஆரம்பித்து விட்டார்களாயினும் அவர்கள் மத்தியில் தொழிற்சங்க இயக்கம் வேரூன்றுவதற்கு நூறு ஆண்டு காலம் பிடித்திருக்கிறது.
அமெரிக்காவின் கறுப்பு நிற அடிமைகளுக்கு நிகராக பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியில் மிகவும் குரூரமான சுரண் டலுக்காளான மலையகத் தொழிலாளர்கள் மத்தியில் நூறு ஆண்டு காலமாக தொழிற்சங்க இயக்கம் வேரூன்றாமைக் குரிய காரணங்கள் பரிசீலனைககுரியவை. இலங்கையின் முதலாளித்துவ உற்பத்தி முறையானது. பெருந்தோட்டத் துறைக்கூடாகத்தான் ஊடுருவியதாயினும் தொழிலாளர் களுக்கும் பெருந்தோட்ட முதலாளிகளுக்குமிடையிலான உறவு முறைகளில் நிலமானிய அம்சங்களும் தவறியிருந் தமை இந்நிலைக்குரிய முக்கிய காரணியாகும். கடல் கடந்த முதலீடு, வெளிநாட்டுத்தொழில் நுட்பம், இயந்திர உற்பத்தி முறை சர்வதேச வர்க்கத்திற்கான உற்பத்தி, தொழி லாளர் வர்க்கம், சம்பளம், லாபம் போன்ற முதலாளித்துவ அம்சங்களைக்கொண்டு தோட்டத்துறை காணப்பட்ட அதே நேரத்தில் நிலமானிய அமைப்பின் சில அம்சங்கள் எச்ச சொச் சங்களாக அல்லது முதலாளித்துவ அமைப்பிற் குத் துணை போகும் வகையில் புதுப்பிக்கப்பட்டும் அறிமுக படுத்தப்பட்டிருந்தன. இந்திய கிராமிய சமூக உருவாக்கத் தின் ஒரு மாதிரியை அப்படியே பெயர்த்தெடுத்து மத்திய மலை நாட்டில் பொருத்தியமை முக்கியமான அம்சமாகும். இந்திய கிராமத்தின் சாதி அமைப்பும் அதற்கியைந்த
V/

Page 5
தொழிற் பிரிவினை முறைகளும் தோட்டங்களில் தொழில ாரிடம் கட்டுப் பாட்டைப் பேணுவதில் துரைமாருக்கு வசதி பாக , மைக்கப்பட்டன. இந்தச் சமூக அடுகக்மைவு (Social Stratification) மூலதனத்திற்கும் தொழிலாளர் உழைப்புச் சக்திக்குமிடையிலான கூர்மையான முரண் பாட்டினை மழுங்கடிக்கப் பெரிதும் உதவியது. பெரிய கங்காணிமாரின் தர்பாரும் தொழிலாளர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பஞ்சாயத்துத் தலைவர் வகிக்கும் பாத்திரத்தை பெரிய கங்காணி வகித்தமையும் நம் கவனத்திற்குரியவை. தோட்டத்தை விட்டு தொழிலாளி நினைத்த மாத்திரத்தில் வெளியேற முடியாமல் காவல் காக்கப்பட்டமையும் வெளி யேற முயன்று பிடிபட்டோர் கசையடி, அபராதம் போன்ற தீர்ப்புகளுக்கு உட்படுத்தப்பட்டமையும் கடுமையான கடன் பளுவை உதற முடியாத நிலையும், ஒரு தோட்டத்தை விட்டு வெளியேறினாலும் வேறொரு தோட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியாத நிலைமையும் நிலமானிய சமூகத்தில் போன்று தொழிலாளியை மண்ணோடு பிணைத்த தன்மை யையும் பலப்படுத்துகிறது. தோட்டத்துரையை அல்லது பெரிய கங்காணியை தங்களது ரட்சகராகக் கருதிய தொழி லாளரது மனோபாவமும், பெரிய தங்காணிக்கும் தொழிலாள ருக்கும் இடையிலான நெருங்கிய குடும்ப பந்தமும் இதற்கு துணையான அம்சங்கவாகும். துரைமார் ராஜ்யத்தின் கொடூரமான அடக்கு முறையும் பிழைக்க வந்த இடம் என்ற தொழிலாளர்களின் நிலைப்பாடும் மறுமுனையில் செயற்* பட்டிருந்தன. வர்த்தக ரீதியாக மலையகத் தொழிலாளர் கள் ஸ்தாபன மயப்படுத்துவதை இக்காரணிகள் பின்தள்ளிப் போட்டிருந்தன.
65 it flip Frisé Filth (Trade Union Ordinance) 1935-ல் இலங்கையில் அமுலுக்கு வந்தபோதும் கூட கோட் டங்களில் தொழிற்சங்கங்களை அனுமதிக்கத் துரைமார் தயாராக இருக்கவில்லை. மாறாக, தொழிற்சங்கங்களை முளையிலேயே கிள்ளி எறிய அவர்கள் முயன்றனர். 1939ல் பொகவந்தலாவையில் கொட்டியாகலை தோட்டத் தொழி லாளர்கள் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி கோரிய போது அது அநாவசியமானது, தொழிாளர்களது கட்டுப் ’பாட்டைச் சிதைத்துவிடும் என்று கூறி தோட்டத்துரை அக்கோரிக்கையை நிராகரித்தார். தொழிலாளர்கள் வேலை நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டே தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைப் பெற்றுக் கொண்டனர்.
v

தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது மட்டு மல் ல, தோட்டங்களுக்குள் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் துழைவது கூடத் தடுக்கப்பட்டிருந்தது. தோட்டங்கள் தனியாருக்குச் சொந்தமானவையாக இருந்தமையால் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அத்தோட்டத்தில் தொழிலாளர்களாக இல்லாத பட்சத்தில் நுழைவது கிரிமினல் குற்றத்திற்குரிய அத்துமீறி பிரவேசமாகக் கருதப்பட்டது. ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஜனாப் அ அசீஸ் தோட்டத் துரையின் அனுமதி இல்லாமல் தோட்டத்திற்குள் பிரவேசித்தமைக்காக குறறவியல் அத்துமீறல் பிரவேசக் (Criminal Trespass) குற்றச்சாட்டில் மாஜிஸ்ட்ரேட நீதிமன்றத்தில் மூன்றும்ாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்டி லும் இந்த வழக்கு முறையீடு தோல்வியுற்று பிரிவு கவுன்ஸி லிலேயே இவர் விடுதலை செய்யப்பட்டார்.
தோட்டங்களுக்குள தொழிற்சங்கங்கள் வேரூன்றி விடாமல் தோட்டநிர்வாகம் கையாண்ட அடக்கு முறை களின் பின்னணியில் தான் வீடற்றவன் நாவல் விரிகிறது. தொழிலாளர் தேசிய சங்கத்தைச் சேர்ந்த ஸி. வி வேலுப் பிள்ளை தனது பழுத்த தொழிற்சங்க அநுபவத்தினை ஆதாரமாகக் கொண்டே இந்த நாவல்ை சிருஷ்டித் திருக்கிறார்.
1948-ல் பிரஜாவுரிமைச் சட்டம் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் கிராமியக தோட்ட ஒருங்கிணைப்பு, அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக தோட்டங்களில் நடைபெற்று வரும் காட்டுமிராண்டித்தனமான இன அடக்குமுறைகள், காக்குதல்கள் என்பனவற்றால் மலையகத் தமிழர் வீடற்று, நாடற்று, நிர்க்கதியான நிலைமைக்கே தள்ளப்பட்டு 'வந் துள்ளனர். புதிய சவால்களை எதிர்கொள்ளும் திடம் கொள்ளும் நேரத்திலும் தாங்கள் முன்பின் அறிந்திராத முற் றாகவே தொடர்புகள் அறுந்துபோன நிலையிலும் இந்தியாவை நோக்கிச் செல்லத் தவிக்கும் தூரத்துப் பசுமை கரும் யதார்த்த நிலைமையே. இன்றைய மலையகத் தமிழர்களின் கையறு நிலையினை வீடற்றவன்? என்ற தலைப்பு அழகாகவே சுடடி நிற்கிகது.
இந் நாவலில் வரும் பாத்திரங்கள் நடப்பியல் மெய்மையை மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறார்கள். 66), ph பார்வையாளனாக நில்லாது, பங்கு கொண்டு தனது நீண்ட தொ ழிற் சங்க அநுபவத்தில் தான் தரிசித்த அவலங்கனை, போராட்டங்களை, முரண்பாடுகளை வி. வி. வேலுப்பிள்ள்ை இந்நாவலிலே நுட்பமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார்.
vii

Page 6
சங்கத்துக்கு நான் ஆள் சேர்க்கமாட்டேன், இது சத்தியம் என்று நடுங்கிய கரங்களோடு கற்பூரத்தைத் தொட்டுச் சத்தியம் செய்யும் ராமலிங்கம் இரவோடிரவாக. சங்கத்திற்கு ஆள் சேர்க்கிறான். பின்னால் கடவுளே, எனக்குப் போக வழி தெரியவில்லையே, எனக்கு @○。 எடமில்லையே என்று வாய் விட்டுப் புலம்புகிறான். மார்க்சிய இயங்கியலை அதன் பூரண அர்த்தத்தோடு விளங்கிக் கொள்ளும் ஒறு மார்க்சிய வாதிக்கு இது சிக்கலை ஏற்படுத்த வேண்டியதில்லை. ஒரு வரட்டு மார்க்சீய வாதிக்கு ராமலிங்க ஒடுக்கப் பட்ட மக்களை விடுதலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு தலைமைக கதாநாயகனாகத் தெரியமாட்டான் ஆனால் மனித ஆன்மா அல்லது மனித ஆளுமை வெறுமனே சூழ்நிலை ஏற்படுத்திய தாக்கத்தினால் மட்டு 3ம வந்த விளை பொருளாகவன்றி குழ்நிலைக்கு இயங்கியல் ரீதியில் இசைந்தும் எதிர்த்தும் வளர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தும் சத் தியாகவும் அமை கிறது என்பதனை நாம் உணர வேண்டும். மனிதனின் சமூகப் பிரக்ஞையின் வளர்ச்சி என்பதும் இயங்கியல் சார்ந்தது. பிரக்ஞை உரம் பெறுவதும் சோர்வுறுவதும் மனித ஆத்மாவினதும் சுற்றுச் சார்பினதும் பரஸ்பர தாக்கத் திற்குட்படும் குணாம்சங்கள். வரட்டு யாந்திரீக ரீதியில் இப் பிரக்ஞை சிந்திக்கும் என்று கோடு போடும் வேலை வியர்த்தனமானது. மார்க்ச்சிய அழகியலின் மையான, கலை செத்துவிட்டது. கலை நீடு வாழ்க என்னும் சுலோகத் தினைப் புரிந்து கொண்டால் இதில் சிக்கல் எழுவதில்லை.
மலையக நாட்டார் வழக்கில் ஸி. வி. வேலுப்பிள்ளைக் குள்ள ஆழ்நத தேர்ச்சி இந் நாவலில் வரும் கதாபாத்திரங் களின் உரையாடலைச் செழுமைப்படுத்துவதில் இவருக்கு நிறையவே கை கொடுத்திருககிறது. பதினைந்து வருடங் களுக்கு முை எழுதப்பெற்ற இந்நாவல் இன்றைய நிலைமைக்கும் கூட மிகவும் பொருந்தியிருக்கிறது. இந்த வகையில் இந் நாவல் மலையகத் தமிழர்களைப் பொறுத்த வரையில் பொருள் பொதிந்த பல அர்த்தங்களை உணர்த்து கிறது. திரு. ஞானசேகரனின் குருதிமலை, யோ. பெனடிக் பாலனின சொந்தக்காரன் போன்ற நாவல் வரிசையில் ஸி. வி. வேலுப்பிள்ளையின் வீடற்றவன் நாவலுக்கு, நிச்சயமாக ஓரிடமுண்டு.
மு. நித்தியானந்தன்
viii

வீடற்றவன்
வானத்தை சதா ஆலிங்கனம் செய்து கொண்டிருக்கும் அந்த மலைத்தொடர், அசுர மரங்களையும் அடர்ந்த புதர் களையும் பின்னிய காட்டுக்கொடி படர்ந்த நீல முகில்காடு, இதற்கு நீலகிரி என்று பெயர் மிகப் பொருத்தமானது.
1960-ம் ஆண்டு ஒரு சனிக்கிழமை மாலை நாலு மணிக்கு மேல் கோச்சி
சுக்கு சுக்கு நீலகிரி
சுக்கு சுக்கு நீ யகிரி என்று சத்தமிட்டுக்கொண்டு நீலகிரி மலையடிவரத்திலுள்ள ரெயில்வே ஸ்டேஷனை அடைந்தது. ஒருதனிப் பிரயாணி மாத்திரம் இறங்கினான். இரண்டே நிமிடத்தில் கோச்சி மறுபடியும் திணறிக்கொண்டு புறப்பட்டது.
பிரயாணி கறுத்த நடுத்தரமானவன். கதர் வேஷ்டியும் ஜிப்பாவும் அணிந்திருந்தான். கிராப்புத்தலை, முகத்தில் பருக்கள். ஹிட்லர் மீசை, சுறுசுறுப்பான கண்கள். அவன் நடையில் ஒரு திடம் வயது இருபத்தேழுதானிருக்கும். டிக்கட்டை போர்ட்டரிடம் கொடுத்து விட்டு கம்பிரோட்டி மிகுந்து கீழ் நோக்கி செல்லும் குறுக்கு வழியாய் நடந்தான். அவன் போய்க் கொண்டிருக்கும் திசையில் சற்று தூரத்தே மரக்கோப்புக்கு மத்தியில் சிவப்புக் கூரையோடு முன் முகப்பைக் கொண்ட தனி வீடு அமைந்திருந்தது. அது பெரிய கங்காணியின் வீடு. தொழிலாளர்கள் இதை பெரிய வீடு என்று அழைத்தார்கள். அகிலிருந்து நூறு கஜங் கருக்கும் கீழே கீழ் பளளத்திலுள்ள மூன்று ஒத்தை லயன் களையும் அவற்றிற்கு வலது பக்கத்தில் மட்ட் நிலத்திலுள்ள
.1 | سسلک

Page 7
நான்கு ரெட்டை லயங்களையும் பெரிய வீடு சதா கண் காணித்துக் கொண்டிருந்தது. ஐம்பது வருடங்களுக்கு முன் கட்டிய பழைய காலத்து லயங்கள், தார்பூசிய தகரக் கூரை களைத் தாங்கி நிற்க அஸ்திவாரத்திலிருந்து நாலடி கற்சுவர்; அதற்கு மேல் மண்சுவர். புகை போவதற்கு சிறு சன்னல்கள் இருந்த போதிலும் மண்பகுதி சுவரிலுள்ள ஒட்டைகள் வழியாக புகை போவதற்கு மிக வசதியாக விருந்தது.
ராமலிங்கம் குறுக்கு வழியாக நடந்து லயங்களுக்குச் செல்லும் மூன்றடி நடைபாதையை அடைந்தான். இரு மருங்கிலும் உயர்ந்து வளர்ந்த சூரியகாந்தி வேலிகள். இவைகளை அணைத்துக் கொண்டு கீழே ஒடும் கான்களை புல்லும் கல்லும் தேக்கியபடியால் துர்நீரின் நாற்றம் ராமலிங்கத்தின் மூக்கைத் துளைத்தது. குப்பை மேடு களைத் தாண்டி முதலாம் இலக்கமிடப்பட்ட ஒற்றை லயத்தை அடைந்தான். இந்த ஒற்றை லயத்தில் வரிசை யாக பத்து அறைகளும் அரைச்சுவர் வைத்த பொது ஸ்தோப்பும் அமைந்திருந்தன. எந்த நேரமும் அடித்துக் கொண்டிருக்கும் காற்றிலும், மழையிலும் இருந்து தப்பு வதற்கு விராந்தையின் அரைச்சுவருக்கு மேல் உரச்சாக்கு மரவாடமும், கூரையைக் காற்று அடித்துக் கொண்டு போகாதபடி மணல் மூட்டைகளும் போடப்பட்டிருந்தன. லயத்தைச் சுற்றிப் பதிக்கப்பட்டிருந்த லைசன் கற்கள் விரிவுவிட்டுக் கிடந்தபடியால் நிதானமாய் நடந்து ராமலிங்கம் முதல் வீட்டை அடைந்தான்.
அறைக்குப் பின்னுள்ள சமையல் கட்டில் பேசும் குரல் கேட்டது.
'கொஞ்சம் குடிங்க அத்தே. இன்னும் ஒரு மொடக்கு குடிச்சிருங்க ??
பட்டுப் போன்ற பெண் குரல். அதன் மென்மை யிலிருந்து அவளின் வயது இருபத்தாறுக்கு மேல் இருக்க முடியாது என நிதானிக்கக் கூடியதாய் இருந்தது. ராமலிங்கம் நேரே சமையல் பகுதிக்குப் போனான்.
2

ஒரு குமரிப்பெண், காய்ந்து உலர்ந்துபோன eogg வயதான கிழவியைத் தாங்கிப்பிடித்து கஞ்சி புகட்டிக் கொண்டிருந்தாள். ராமலிங்கம் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் கிழவியை அன்போடு கவனித்தான். அந்தப் பெண்ணும் அவனைத் தலைதூக்கிப் பார்க்கவில்லை.
அவள் குரல் சொல்லியபடி வயது இருபத்தாறுதான் இருக்கும். வாட்டசாட்டமான மினுமினுத்த மேனி, தண்ணி பட்டால் தண்ணி தெறிக்கும் என்ற தோட்டக்காட்டுப் பழமொழிக்கு உதாரணமாக இருந்தது. அவள் இளமையை மறைத்தும் மறைக்காமலும் சேலை அணிந்திருந்தாள், கருகமணியைச் சரடுபோல் மூன்று கண்ணிகளாய்ப் பின்னி பொட்டுடன் கழுத்தில் ஒட்டக் கட்டியிருந்தாள். இதை அழகுபடுத்தும் முறையில் இரு கரங்களிலும் கிருவளையல் ள்ே பாத நடுவிரல்களில் இரட்டை வெள்ளி மிஞ்சிகள், நீலகிரியின் வனதேவதை போல் காணப்பட்ட அவள் பெயர் அலமேலு.
சில நிமிசங்களுக்குப் பின்; *அம்மா மேலுக்கு எப்படியிருக்கு? 22 என்று கேட்டான் gr Arun6ôiÄi sub.
“கொஞ்சம் ஒரு மாதிரியாயிருக்கு மகனே.?? ராமலிங்கம் அலமேலுவை காணாததுபோல நடந்து கொண்டபோதிலும் ஆபத்துக்குப் பாவமில்லை என்பது போல தன்னைச் சமாதானம் செய்து கொண்டு விராந்தைக்குத் திரும்பினான்.
அலமேலுவை அந்தத் தோட்டத்தில் கண்டு மயங்காத பேர்களில்லை. அவளுடைய முகராசி அவள் கணவன் முத்துசாமிக்கு ஆபத்தாக முடிந்தது. அவளால் கொந் தரப்புக் கணக்குப்பிள்ளைக்கும் முத்துசாமிக்கும் மோதல் ஏற்பட்டது. முத்துசாமி சாருக்கட்டை களவெடுத்தான் என்று கேஸ் சோடிக்கப்பட்டு கோட்டு வழக்கில் தண்டிக்கப் பட்டவன். பின் தோட்டம் திரும்பி வராமல் ஓடிமறைந்தான்.
8

Page 8
அதிலிருந்து அலமேலு தனி வாழ்க்கை நடத்திக் கொண்டு இருந்தாள். அப்போதுதான் ராமலிங்கம், அவன் தம்பி பழனியப்பன், அவன் தாய் மூவருமாக நீலகிரி வந்து சேர்ந்தார்கள்.
பழனியப்பன் கண் நிறைந்த வாலிபன். வயசிற்கேற்ற முறுக்கு. உடலும் உயரமும் கண்ணும் மூக்குமாயிருந்தான். அதோடு ஸ்டோர் மேல் தட்டில் வேலை செய்தான். அவன் வேலைக்குப் போய் மூன்றாவது நாள் அலமேலு கொழுந்து சாக்கு தூக்கிக் கொண்டு மேல்தட்டுக்கு வர பழனியப்பன் சென்று கட்டை வெட்டி விட்டு சாக்கை குலுக்கிக் கொட்டச் சொன்னான்.
*அதெல்லாம் எனக்குத் தெரியும்,?? என்றாள். **என்னையும் தெரியுமா??? w *ஏன் தெரியாது. ஆம்பிளை தானே??? இருவரும் சிரித்த?ர்கள். *எந்த லயம் புள்ளே??? *ஒங்க வீட்டுலே இருந்து நாலாவது காம்பரா.?? *ரவைக்கு நெருப்பு பொட்டி வாங்க வாரேன்.?? *நா. சுருட்டு குடிக்கிறதில்லே? என்று சிரித்தாள். அன்று இரவு பழனியப்பன் அலமேலு வீட்டுக்கு தீப்பெட்டி வாங்கப் போனான். சிலநாட்களுக்குள் அவர்கள் சிநேகம் முற்றிவிட்டது. அவளை யாரோடும் கேலி பரிகாசம் பேசக் கூடாது என்று எச்சரிக்கத் தலைப் பட்டான். ஒருநாள் மதியம் அலமேலு கொழுந்து கொட்டி விட்டு மலைக்குத் திரும்பும்போது பெரிய கங்காணிமகன் சிவனையா அவளை வழி மறித்து பேச்சுக் கொடுத்ததை ஸ்டோர் மேல் மெத்தையிலிருந்து பழனியப்பன் கண்டான். இதற்காக அன்று மரலை அவளை நையப் புடைத்து விட்டான்.
4.

இச்சம்பவம் எட்கங்காணி பெரியசாமி காதுக்கு எட்டிய வுடன் தன் மகன் பெயரைக் காப்பாற்ற பழனியப்பன் தோட்டத்துப் பெண்ணை அடித்தான் என்று குற்றம் சாட்டி பத்துச் சீட்டை கொடுக்கச் செய்து தோட்டத்தை விட்டு வெளியேற்றினார். பத்துச்சீட்டால் அவர்கள் இருவரையுப் பிரிக்க முடியவில்லை. நெருப்பு மழை பெய் தாலும் வெள்ளம் புரண்டு ஓடினாலும் இரவில் அவன் அலமேலு வீடு வந்து சேர்ந்து விடுவான். இது தோட்டத் தில் சகலருக்கும் தெரிந்த இரகசியம். ஆனால், ராமலிங்கம் மாத்திரம் குடும்பத்துக்கு வந்த அவமானத்தை மறக்க வில்லை.
குறிப்பறிந்து அலமேலு கிழவியைப் பக்குவமாய் படுக்க வைத்துவிட்டு கொல்லை வழியால் தன் வீடுபோய் சேர்ந்தாள்.
ராமலிங்கம் விராந்தை திண்ணை மேல் உட்கார்ந்தபடி தன் வலது கையைப் பார்த்தபடி எதையோ நினைத்துக் கொண்டிருந்தான்.
கவ்வாத்து வெட்டி, வெட்டி காய்ப்புக் காய்த்த கையில் யோக ரேகைகள் அவன் கண்ணுக்குத் தென்படவில்லை. எனினும் விதியை நினைத்துக்கொண்டு கையைப் பார்த் தான். விதி மனிதனை, அதிலும் தொழிலாளியை எங்கெல் லாமோ இழுத்துச் செல்லும் என்பதும் அவனுக்குத் தெரியும். ராமலிங்கம் பிறந்து வளர்ந்த கண்ணியப்பு தோட்டத் திலிருந்து திடீரென்று பத்துச்சீட்டு கொடுக்கப்பட்டு குடும்பத் தோடு வெளியேற்றப்பட்டவன். பத்துச் சீட்டை கையில் பிடித்துக் கொண்டு கால் தேய தோட்டம் தோட்டமாய் நடந்தான். பதியலாம் என்ற துரைமார்கள் கூட அவனின் துடுக்கான பேச்சைக் கேட்டு பதிய மறுத்து விட்டார்கள். அதோடு அவனை ராங்கிக்காரன் என்று பட்டம் சூட்டிய கண்ணியப்பு துரை தரவளை கிளப்பில் வைத்து தன் சக துரைமார்களுக்கு அவனைப் பற்றி எச்சரிக்கை செய் திருந்தான். எனவே அவன் பெயர் கறுப்புப்பட்டியலில்
5

Page 9
பிளாக் லிஸ்ட் போடப்பட்டிருந்ததால் அட்டன் பகுதியில் அவன் பத்துச்சீட்டை யாரும் தொடவில்லை.
நீலகிரியின் பெயரும் புகழும் அவனுக்குத் தெரிந்திருந் தும் போக்கிடமில்லாது கடைசியாய் ஒன்றரை வருடங் களுக்கு முன் இங்குவந்து சேர்ந்தான். அது நேற்று நடந்த சம்பவம் போலிருந்தது. t
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. பல தோட்டங்களில் வேலை தேடிச் சோர்ந்துபோன ராமலிங்கம் கடைசியாக தனது மாமன் பெரியசாமி எட் கங்காணியாக இருக்கும் நீலகிரிக்கு வந்து சேர்ந்தான். அப்போது மாலை ஏழு மணி யிருக்கும். நல்ல வேளையாய் அந்த நேரத்தில் பெரிய வீட்டில் கூட்டமில்லை. பெரியசாமி தனிமையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
*கும்புடு ரனுங்க?? என்று ராமலிங்கம் கைகூப்பினான்.
*ராமலிங்கமா.இவ்வளவு நாளைக்கு பொறகு, வீட்டுலே எல்லாரும் சொகம்தானே.??
ஆமாங்க.??
ேெஉக்காரப்பா..??
மூலையில் போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.
பெரியசாமிக்கு ஐம்பது வயதுக்கு மேலிருக்கும். மாநிறம், நடுத்தர உயரமானவர். பரந்த மார்பு நரைகண்ட கெலுத்தி மீசை, முண்டாசு கட்டுவதற்கு வசதியாய் கட்டைக் கிராப்பு வெட்டியிருந்தார். வைரக்கல் கடுக்கண் விளக்கு வெளிச்சத்தில் மின்னியது. கைநிறைய தங்க மோதிரங்கள், மல்வேட்டியும், காஷ்மீர் பச்சை சால்வையு அணிந்திருந்தார்.
பூதக்கண்ணாடி வைத்துப் பார்ப்பதுபோல் அவனைக் கூர்ந்து பார்த்தார். வந்த காரியம் தெரிந்து தான் எடை போட்டுப் பார்க்கிறார் என்று தெரிந்து கொண்ட ராமலிங்கம்
6

உடன் எழுந்து பத்துச் சீட்டுகளை மரியாதையோடு இரு கைகளாலும் அவரிடம் கொடுத்தான். **நீங்கதான் என்னே காப்பாத்தோனும், ரொம்ப கஸ்டப்பட்டு போயிட்டன் ??, என்றான். காப்பாத்தோனும் என்ற வார்த்தை லேசாக வரவில்லை. குடும்பப்பாரம், வறுமை, பசிக்கொடுமை9 ரபாற்றம் இவைகளெல்லாம் ஒருங்கே சேர்ந்து அவனை அப்படிக் கெஞ்சும்படி செய்தன.
*உக்காரு தம்பி; சாப்பாட்டுக்குப் பொறகு பேசலாம்,?? என்றார்.
சாப்பாடும் முடிந்தது.
பெரியசாமி பத்துச்சீட்டைத் திரும்பத் திரும்ப பார்த்து விட்டு முகத்தைச் சுழித்துக் கொண்டார்.
'நாலு மாசமாச்சே, அப்பவே வந்திருந்தா பழைய ஆளா இருக்கலாமே. தங்கச்சி சொகமாயிருக்கா.??
*அம்மாளுக்கு இந்தக் கூதல் பிடிக்காதுங்க, அதானுங்க முந்தியே வரலே.’
ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர்போல எழுந்து **இங்கே வா தம்பி,’ என்று உள்ளே சாப்பாட்டுக் கூடத்துக்குப் பக்கத்திலுள்ள பூசை அறைக்குக் கூட்டிச் சென்றார். கிழக்குப்பக்க நடுச்சுவரில் பிரகாசமாக தொங்கிக் கொண் Aடிருந்த முருகக் கடவுளின் படத்துக்கு முன் ஒரு வட்ட ாேசை போடப்பட்டிருந்தது. அதன் மேல் வெள்ளித் தட்டில் விபூதியும் ஒலைக் குடிலில் மல்லிகை மொட்டுகளு மிருந்தன. பெரியசாமி விபூதித் தட்டில் கற்பூரம் கொழுத்திக் இலக கூப்பினார். ராமலிங்கம் தன் கலி தீர்ந்தது என்று ணைங்கி நின்றான்.
'கொண்டான் குடுத்தான் கிட்டே ரகசியம் இல்லே தம்பி, வெள்ளைக்காரன் தோட்டத்துக்குப் பொழைக்க வத்துட்டோம். கொஞ்சம் கவனமா இருக்கணும்.?
7

Page 10
விபூதியை எடுத்துக் கொடுத்தார். grFrunti stħi வினயத்தோடு வாங்கிப் பூசிக் கொண்டான்.
*தம்பி, ஒன்னப்பத்தி முந்தியே தொரைக்கி தாக்கல் வந்திருக்கு. நம்பிக்கையோட பேசணும். சங்கத்துக்கு ஆள் சேக்கலன்னு கற்பூரத்தை தொட்டுக்குடு,** என்றார். ராமலிங்கத்துக்கு உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்துக் கொட்டியது. பாக்குவெட்டியில் அகப்பட்ட கொட்டைப் பாக்கின் நிலையில் பரிதாபப்பட்டான்.
*சத்தியம் பண்ணச் சொல்றீங்களா???
அதுக்கென்ன தம்பி. நமக்குள்ளே தானே???
*சங்கத்துக்கு நான் ஆள் சேர்க்க மாட்டேன். இது சத்தியம்,? என்று நடுங்கிய கரங்களோடு கற்பூரத்தை தொட்டுக் கொடுத்தான்.
இந்த நிபந்தனையில் தான் ஒன்றரை வருடத்துக்கு முன் ராமலிங்கம், தாய், தம்பி ஆகியோரோடு நீலகிரிக்கு வந்தான். ஆறு மாதத்துக்கு முன் அவனுக்கு கல்யாணம் நடந்தது. கூலிக்காரனுக்கும் பொண்டாட்டியா? என்பதற் கிணங்க வாழ்க்கையின் இன்பத்தை அவனால் நுகர முடியவில்லை.
ரம்மியமான நீலகிரி மலைச்சாரலின் கடைக்கோடியில் ஆரோகணித்திருக்கும் தோட்டம். பச்சை திரண்டு பொங்கும் இந்திரத் தோற்றத்தோடு இருந்தும் மக்களுக்கு. அது ஒரு நரகமாயிருந்தது. தோட்டத்தை நடத்தும் சட்ட திட்டங்கள் அதை ஒரு துன்பக்கேணியாக மாற்றின. நின்றால் குத்து, விழுந்தால் உதை” என்ற இப்பழமொழி நீலகிரி தோட்டத்தில்தான் முதன் முதலில் உருவாகியிருக்க வேண்டும். கையெழுத்து தெரியாத நேரம், அதிகாலையில் மலைக்கு வேலைக்குப் போய், திரும்பும்போது விளக்கு வைத்துப்போகும். பெண்கள் நாற்பது இறாத்தல் கொழுந்து எடுத்தால் ஒரு நாள் பேர் கிடைக்கும். இதைப்போலவே
8

அறுபது அடி கான், முந்நூற்றி ஐம்பது மரம் கவ்வாத்து. கால் ஏக்கர் அருகம்புல் வெட்டினால் ஆண்களுக்கு ஒரு நாள் பேர்தான் செக்ரோலில் விழும்.
பெரியசாமி, எட் கங்காணி சங்கத் தலைவர். அவர் மருமகன் முருகப்பன் காரியதரிசி, அவர் மூத்த மருமகன் ஒண்டி முத்து பெரிய கணக்குப்பிள்ளை. இவர்கள் வைத் ததே சட்டம். எனவே தோட்டத்தில் நடக்கும் அட்டூழியங் களை வாய்விட்டுச் சொல்ல முடியாத நிலையில் தொழி லாளர்கள் புழுங்கினார்கள்.
இந்தஅநீதிகளுக்கு முடிவு காணவே இரவோடு இரவாக சங்கத்துக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த வேலைக்கு ராமலிங்கம் தூண்டுகோலாயிருந்தான். எனவே பெரியசாமி கங்காணிக்குக் கொடுத்த சத்தியத்தைப் பற்றி அன்று அவன் பலவாறாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான் 9 சத்தியமே வெல்லும், சத்தியமே வெல்லும் என்றாலும் நீதிக்குச் சத்தியமா, அநீதிக்குச் சத்தியமா என்று பலவாறாக எண்ணி அவன் மனம் குழம்பியது.
2
ஓயாது சிணுங்கிக் கொண்டிருக்கும் மழை. இடை விடாது பெருமூச்சு விடும் காற்று, கருமுகில் கூட்டம்-இவை யெல்லாம் ஒருங்கே சேர்ந்தால்தான் நீலகிரியின் இரவு பூரணமாகும். நாய்கள் கூட இச்சூழ்நிலையைப் பொறுக்க முடியாமல் கோழிக் கிடாப்புக்குக் கீழ் முடங்கப் படுத்தன.
ராமலிங்கம் எங்கோ காட்டுப் பாதையில் பிரயாணஞ் செய்வதுபோல கனவு கண்டு கொண்டு தூங்கினான்" இரட்டை லயத்திலிருந்து ஒரு சேவல் கூவியது. இதைக் கேட்ட மற்ற லயத்துச் சேவல்களும் கூவின. பிரட்டுத் தப்பின் குமுறல் திரண்டு மலைச்சாரலைத் தாக்கி எதிரொலித்தது. விடியற் காலையில்தான் வேலை செய்து
9

Page 11
அலுத்துப் போன சரீரத்துக்குத் தூக்கத்தின் சுகம் தெரிகிறது. இன்னும் இரண்டு நிமிசம் தூங்கிவிட்டால் போதும் என்று நினைத்த போது இரண்டாவது தப்பும்
அடிபட்டது.
கல்லுவெடிச் சத்தத்தைக் கேட்டு மருண்டவனைப் போல ராமலிங்கம் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான்.
*ஏ புள்ளே நேரமாச்சு. எழுந்திரிச்சி தண்ணி போடு??
கமலம் எழுந்து கண்ணைத் தேய்த்துக் கொண்டு அடுப்பை முட்டி தண்ணிர் சுட வைத்தாள். அவள் அடுப் படியில் உட்கார்ந்திருந்த பாவனையும் அவளுடைய சோர்ந்த தலைமுடியும் தூக்கம் கலையாத முகமும் அவன் உள்ளத்தை என்னவோ செய்தன.
தான் எடுத்துக் கொண்ட ரகசிய நடவடிக்கை சரியோ தப்போ, அதை மனைவிக்குச் சொல்லாதிருப்பது முறையா? அதை எத்தனை நாளைக்கு மூடி மறைக்க முடியும்? அறை யில் போடும் திட்டம் அம்பலத்துக்கு வந்துதானேயாகும், தன் சொந்த நன்மைக்காக அவன் இஸ்தச் செய்யவில்லை. இந்தத் தோட்டத்தில் தொழிலாளர்கள் படும் நரகவேதனை யலிருந்து அவர்களை மீட்க வேண்டும். அதனால் தனக்கு ஆபத்து வந்தாலும் பாதகமில்லை. எல்லாம் முடிந்த பின் மனைவிக்கு சொல்வதே உசிதமென்று முடிவு செய்து கொண்டான்.
*அப்பா சாமி,** என்று அவன் தாய் சமையல் கட்டி லிருந்து கூப்பிட்டாள்.
ராமலிங்கம் உடனே தாயிடம் சென்றான். * அம்மா மேலுக்கு எப்படியிருக்கு??? *கொஞ்சம் கலகலன்னு இருக்கு சாமி, காச்சாயிருக் கான்னு பாரு.??
ராமலிங்கம் அவள் நெற்றியை தன் காய்ப்புக் காய்த்த கையால் தொட்டுப் பார்த்தான்.
10

கோச்ச எறங்கிரிச்சும்மா..??
நெசமாவா??? என்று சந்தோசத்தோடு கேட்டுக் (Glast dobrt_moit .
இரண்டு மாசத்துக்குப் பிறகு இப்போதுதான் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
காய்ச்சல் தலைக்கு ஏறியிருந்த போது அவளுக்கு சுய உணர்வு இல்லை, உடல் வேறு, உயிர் வேறு போன்ற உணர்ச்சியில் எல்லாம் வெட்ட வெளியில் மினுமினுத்துக் கொண்டிருந்தது. கிணற்றிலிருந்து வரும் சத்தம் போல் பழனியப்பனைப் பற்றயும் அலமேலுவைப் பற்றியும் நினைவு மனதைத் தொட்டு மாறும். பிள்ளைகள் எல்லாம் தன்னைச் சுற்றியிருந்தால் போதும் என்று நினைப்பாள்.
V
அந்தப் பரிதாப நிலையிலும் அவள் அலமேலுவை நிந்திக்கவில்லை. எல்லாம் சரிதான் என்று தன்னைச் சமாதானம் செய்து கொண்டாள். எனவே யாரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அலமேலு அக்கறையோடு வந்து அவளுக்கு உதவி செய்வதை வெறுக்கவில்லை.
*அம்மா இன்னிக்கு கட்டாயம் மருந்து கொண்டா ரோணும். பெரியவர்கிட்டதான் சொல்லி வாங்கிக்கிட்டு போகனும்,?? என்றான் ராமலிங்கம்.
பெரியசாமி கங்காணியை மாமனார் என்றோ அல்லது எட்கங்காணி என்றோ சொல்லமுடியாத நிலையிலிருந்த படியால் பெரியவர் என்று அவன் அழைப்பது வழக்கம்.
*சரி சாமி, என்ன செய்யிறது. நம்ம பொழச்ச பொழப்ப கடன் கட்டாமேயா போகப்போறோம்," என்றாள்.
தண்ணிர் கொதித்ததும் டஸ்ட் தேயிலைத்தூள் போட்டு வெறும் தேனிர் தயாரித்து, ராமலிங்கத்துக்கு கொடுத்துவிட்டு பழைய சாதத்தை அவசர அவசரமாக சாப்பிட்டாள் கமலம். பின்னர் காய்ந்திருந்த கண்டாங்கி சேலையை மாராப்பிட்டு கட்டி அதற்கு மேல் இடையில்
1.

Page 12
படங்கைச் சுற்றிக் கயிற்றில் கட்டினாள். தலைக்கு லேஞ்சு போட்டு அதற்கு மேல் கம்பளி முக்காடிட்டு தலையில் கூடைக் கயிற்றை மாட்டிக் கொண்டு மற்ற பெண்களோடு கொழுந் தெடுக்க புது மலைக்குப் புறப்பட்டாள்.
ஏழு மணிக்கெல்லாம் ராமலிங்கம் பெரியசாமி கங்காணி வீட்டு முகப்பில் காத்துக் கொண்டிருந்தான். பெரியவர் வேலைக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்தவர் ராமலிங் கத்தைக் கண்டதும்
*யாரது??? என்றார். *நான்தானுங்க ராமலிங்கம்,? என அவன் பதில் சொல்லும்போது அவன் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.
என்ன சங்கதி தம்பி??? என்று அன்போடு கேட்டார். அவன் சந்தேகம் கலைந்தது.
*அம்மாவுக்கு மருந்து வாங்கப் போகனுங்க. பத்து ரூவா குடுத்தீங்கன்னா நல்லதுங்க.??
*அதுக்கென்ன கொஞ்சம் நில்லு தம்பி,** என்ற அவர் பதில் அவனுக்கு இருந்த எஞ்சிய சந்தேகத்தையும் நீக்கியது.
சில நிமிடத்தில் பெரியசாமி பத்து ரூபா நோட்டுடன் வெளியே வந்தார்.
**இந்தா தம்பி நல்லா கவனிச்சுப் பாரு,** என்று மலர்ந்த முகத்துடன் பணத்தை நீட்டினார்.
அதை இரண்டு கைகளையும் ஏந்தி வாங்கிக்கொண்டு பின் மரியாதையோடு வேட்டியை ஒடுக்கிப் பிடித்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தான்.
பெரியசாமி கற்சிலைபோல் நின்று அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வையில் என்ன
2

அந்தரங்கம் இருந்ததென்பது அவருக்கு மாத்திரமே தெரியும்.
ஒன்பது மணிக்கெல்லாம் தலவாக்கொல்லை டவுனை அடைந்த ராமலிங்கம் நேரே வைத்தியர் கடைக்கு சென்றான். தாய்க்கு தற்போது இருக்கும் குணத்தை சொல்லி அதற்கான மருந்துகளை வாங்கினான். வாங்கிக் கொண்டு கடை வீதியை ஒருமுறை சுற்றிப் பார்த்தான். சந்தேகப் பேர்வழிகள் அவன் கண்களில் படவில்லை. எனவே ஜில்லா கமிட்டிக்கு-அதாவது ஜில்லா தொழிற் சங்க காரியாலயத்துக்குப் போனான்.
பிரதிநிதி பெரிய மேசைக்குப் பின் நாற்காலியில் அமர்ந் திருந்தார். அவரைச் சுற்றி பெஞ்சுகளில் உட்கார்ந்திருந்த தொழிலாளர்களோடு கம்பீரமாகப் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
** அந்தக் காலம் மலையேறிவிட்டது. தொழிலாளி என்றால் கிள்ளுக் கீரையா? அடடா, அந்த துரைக் குஞ்சுகள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள ஜம்பம் இங்கே செல்லாது,** என்று கையை உயர்த்தி ஆட்டிப் பேசினார்.
இருபத்தாறு வயது மதிக்கத் தக்க வாலிப முறுக்கு, அதோடு b[0] அடி உயரமுள்ளவராக இருந்தார் அநேகமாய் நூற்றி எண்பது இறாத்தல் கனம் சொல்லலாம் சிவந்த மனிதர். சுருட்டைத் தலை. ஆங்கில உடை அக்ஷரிங் கிருந்தார். தொழிலாளர்கள் அவர் பேச்சில் லயித்து அவரை தங்கள் மெய்க்காவலர் என்றே கருதினார்கள். சில தங்கள் சங்கதியை உடன் சாதித்துக் கொள்வதற்கு அவர் வாலை உருவி விட்டார்கள்.
'நீங்க இந்த ஜில்லாவுக்கு வந்தபிறகு ஒரு மாதிரி காறுங்க. புதுப் பிரதிநிதி கொலப்பக்காரருன்னு சொல்லு gry i s. "*
*பாத்திங்களா அவர்கள் தயவு எனக்கு எதற்கு. யார் இப்படி சொன்னது???
13

Page 13
*தோட்டமெல்லாம் இதே பேச்சுங்க,9 கூட்டத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபன் ராமலிங்கம் வந்திருப்பதைக் கண்டு பிரதிநிதியிடம் தெரிவித்தான்.
'அதுதானுங்க ராமலிங்கம் தலைவரு.?? ராமலிங்கம் பிரதிநிதியை வணக்கம் செய்தான். *ராமலிங்கம் உட்காரட்டும். எப்படி விசயம். ரொம்ப கண்டிப்பாமே. ஏதோ சங்கதியாகி விட்டதா???
**கண்டிப்பெல்லாம் இனிமேல் தானுங்க,’ என்றான். வாலிபன்,
*மொதல்லேயே வ்ந்திட்டியா முத்தையா???
**ஆமா தலைவரே. முருகப்பனும் வந்திருக்கான்,** என்று கூட்டத்திற்கு முன் வரிசையிலிருந்த நறுக்கு மீசை அரைக் குடுமிக்கார நபரைக் காட்டினான்.
*ராமலிங்கத் தலைவரே எப்படி சங்கதியை சாதிக் ッ学成ss?""
பேழைய தோட்டத்திலே தலைவருங்க எங்களுக்கு வழி காட்டுறாங்க,2? என்றான் முருகப்பன்.
நறுக்கு மீசை முருகப்பன் ராமலிங்கத்தையும் முத்தை யாவையும் கடைக்கண்ணால் பார்த்துவிட்டு வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல்,
*இங்கே அவருக்கு கை விலங்கு கால்விலங்கு போட்டிருக்கு. ஏதோ எல்லாருமா சேர்ந்துதான் சங்கதியை முடிச்சோம்,' என்று கெட்டித்தனமாய் திருத்தம் சொன்னான்.
ராமலிங்கம் சிரித்தபடி பதில் விளக்கம் சொல்லவில்லை. 'விஸ்ட் வந்திருக்கா? என்றார் பிரதிநிதி, ராமலிங்கம் உடனே லிஸ்டை எடுத்து பிரதிநிதியிடம் கொடுத்தான்.
14

இதை எடுக்கப் பட்டபாடு சிவசூரியன் அறிஞ்சு போச்சுங்க** என்றான் முருகப்பன்.
ராமலிங்கம் பேசவில்லை. அவனைப் போலவே முத்தை. யாம்ை பேசவில்லை. பிரதிநிதி லிஸ்ட்டைப் பார்த்தபடி
'சரி இன்னும் பாக்கி எவ்வளவு இருக்கு.??
நூத்திப்பத்து பாக்கி.?? 'பாக்கியும் சேர்ந்த பின் துரைக்கு எழுதுவோம்? arrodrigorri 19gr:5965.
*அதுதானுங்க நல்லது?? என்றான் ராமலிங்கம். ெேமஜாரிட்டி நம்மகிட்ட இருக்கையிலே தொரக்கி அத்தாரட்டி போனா தானுங்க மத்த ஆளுகளையும் சேர்க்க முடியுங்க?? என்றான் முருகப்பன்.
*ஆக்கப் பொறுத்த' ஒனக்கு ஆறப் பொறுக்கலே பிரியப்படி செய்யுங்க, சார்.??
சரி பேச்சாளராக யாரைப் போடுவது?99 பிரதிநிதி கேட்டார்.
ராமலிங்கத்தை சிபாரிசு செய்வது போல முத்தையா ராமலிங்கத்தின் முகத்தையும் பிரதிநிதியையும் பார்த்தான். ஆனால், முருகப்பன் ஒன்றும் தெரியாதவனைப் போல் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த நேருவின் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
யோரையாவது போடுங்க? என்றான் ராமலிங்கம். *அனுபவம் வேண்டும்? என்றார் பிரதிநிதி.
*கஸ்டப்பட்டாதானுங்க அனுபோகம் வரும், ரவ்வு பகலாகத்தான் வேலை செஞ்சேன்? என்றான் முருகப்பன்.
'சரி சார், முருகப்பனைப் பேச்சாளராகப் போடுங்க. இதுக்கா இவ்வளவு யோசனை?? என்றான் ராமலிங்கம்.
15

Page 14
ஒேங்க பிரியம்?? என்றான் முருகப்பன். முத்தையா பேசவில்லை. 'சரி முருகப்பனை பேச்சாளராகப் போடுவோம்?? என்றார் பிரதிநிதி.
காரியாலய வாசலில் கருப்பு சலூன் கார் வந்து நின்றது. 'அந்தா தலைவர் ராஜன் வந்திட்டாரு?" என்று எல்லோரும் எழுந்து நின்றார்கள்.
காரிலிருந்து இறங்கியவர் கம்பீரமான தோற்றத்தை யுடையவர். கபில நிற சர்வாணியும் வெள்ளைக் கால் சட்டையும் கறுப்பு சப்பாத்தும் அணிந்திருந்தார். மாநிறம் உயரத்திற்கு தக்க பருமன்; வயது முப்பதுதான் இருக்கும். மலர்ந்த முகத்திற்கு தக்க புத் தி நுட்பமான பார்வையும் சாந்தமும் ஒருங்கே அமைந்திருந்தன.
ேேமோர்னிங் சார்? என்று பிரதிநிதி எழுந்து உபசரித்
தாா.
ராஜன் எல்லோருக்கும் பொதுவாய் கரம் கூப்பினார்.
*உட்காருங்கள். எல்லோரும் சுகம்தானே??? என்றபடி நாற்காலியில் அமர்ந்தார்.
*ஏதோ ஒங்க புண்ணியத் துலே சொகத்துக்கு குறை யில்லீங்க?? என்றார் ஒரு பெரியவர்.
நமது சங்கம் இந்தப் பகுதியில் எப்படி இருக்கிறது??? *அதுக்கென்ன குறைங்க??? *தோட்டங்களிலே நிலைமை எப்படி?
“எங்க தோட்டத்துலே நடக்கிற அட்டூழியம் சொல்ல முடியாதுங்க,** என்றான் முருகப் பன்.
*எங்க தோட்டம் எளச்சதா?? என்று வேறோர்
குரல் கேட்டது.
16

அதையெல்லாம் கவனிப்போம். நான் என்ன சும்மா யிருக்கவா இங்கு இருக்கிறேன்?? என்றார் பிரதிநிதி.
கூட்டத்திலிருந்த ராமலிங்கத்தைக் கண்டார் ராஜன்.
அது ராமலிங்கத் தலைவர்தானே. நல்ல சுகம் தானே. இப்போது எந்தத் தோட்டத்திலே வேலை???
நீலகிரியில் இருக்கிறேனுங்க சார்.?? என்ன நீலகிரியா இருந்திருந்தும் நீலகிரிக்கா proffsir?
வழியில்லாமேதான் போனேன் சார், பாதிக்குமேலே ஆள்களுக்கு துண்டு எடுக்கவும் ஏற்பாடாகிரிச்சு. இன்னிக் குத்தான் லிஸ்ட்கூட கொண்டாந்தோம். கஸ்டம் வந்தா நீங்கதான் கைகொடுக்கனும்,?? என்றான் ராமலிங்கம்.
அப்பிடி கஸ்டம் வருமோ??? என்றார் ராஜன். எப்படி சொல்ல முடியுங்க??? *எல்லாம் பிரதிநிதி கவனிச்சுக் கொள்வார். தோட்டத் திலுள்ள நிலைமை பற்றி அடிக்கடி அவரிடம் சொல்ல வேண்டும் பாக்கியுள்ள தொழிலாளர்களைச் சேர்க்க எவ்வளவு நாளாகும்??? என்று கேட்டார் ராஜன்.
*அத்தாரட்டி போன ஒடனே மத்த ஆளே சேத்துர குறுங்க," என்றான் முருகப்பன். "
'நிதானித்து செய்ய வேண்டும். அரைகுறையாக எதையும் செய்யக்கூடாது.”
நோன் கவனித்துக் கொள்வேன் சார்,?? என்று பிரதிநிதி சொன்னார்.
சேரி நேரமாகிறது. நான் நுவரெலியா போக வேண்டும். உங்களையெல்லாம் கண்டதில் எனக்கு வெகு சந்தோசம் ராமலிங்கம் விசயங்களை அவசியம் நமது பிரதிநிதியிடம் தெரிவியுங்கள். எனக்கும் எழுதலாம்?) wreidiwr prif grairg.6ôr.
17 {2-س-a

Page 15
ராஜன் எழுந்தார். எல்லோரும் எழுந்து வணக்கம் செய்யவே அவர் காரில் ஏறிப் பயணமானார்.
*எனக்கு உத்தரவு கொடுங்க சார், வீட்டுலே சுக மில்லீங்க. போகனுங்க. முருகப்பன் வரலியா??? என்றான்
g TLD66 iaith.
ெேதாரக்கி காயிதத்தை வாங்கிப் போட்டிட்டு வர்றேன் தலைவரே.??
*நாங்கள் லெட்டரை போடுவோம். முருகப்பன் போகலாம்?? என்றார் பிரதிநிதி.
'அடிச்சு குடுத்தீங்கன்னா போட்டுட்டுப் போர னுங்க.??
என் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் இங்கு வர வேண்டியதில்லை.”*
முருகப்பன் தலையைக் கீழே போட்டுக் கொண்டிருந் தான்.
ராமலிங்கமும் முத்தையாவும் புறப்பட்டார்கள்.
3. எட் கங்காணியின் ஒற் றர் க  ைள கடைவீதியில்
ராமலிங்கம் காணவில்லை. எனினும் அவனுக்கு சந்தேகம் தீரவில்லை.
**முத்தையா, யாரையும் கண்டியா?*
'இல்லே ததைவரே.”*
இருவரும் மெளனமாய் நடந்தனர். முருகப்பனின் போக்கு ராமலிங்கத்துக்கு வெறுப்பைக் கொடுத்தது. தலைவர் பதவியில் அவனுக்கு அத்தனை மோகம், சனியன் பிடித்த தலைவர் பதவிக்காக எத்தனை காரணங்கள் சொன்னான். அதை நல்ல முறையில் செய்திருக்கலாமே. ஆனால், தன்னை ஒரு பொம்மை என்று மறைமுகமாய்ச் சுட்டிக்காட்டியது ராமலிங்கத்துக்குப் பொறுக்க முடியவில்லை.
18

அவன் மெளனமாய் நடப்பதைக் கண்ட முத்தையா பேச்சுக் கொடுத்தான்.
என்ன தலைவரே ரொம்ப யோசனையாட்டமிருக்கு.??
அப்படி ஒன்னுமில்லே. அம்மாளுக்கு சொகமில்லா ததை பத்தித்தான் நெனச்சிக்கிட்டு வந்தேன்.??
இப்ப கொஞ்சம் சொகம் தானே.”*
'இன்னைக்குத்தான் கொஞ்சம் தேவலேனு சொன் னுச்சு.??
'வயித்தியரு என்ன சொன்னாரு, தலைவரே???
*இந்த மருந்து முடிஞ்சா சொக மா யிரு மினு
சொன்னாரு.??
*சரி தலைவரே, அத்தாரட்டி காயிதம் தொரக்கி
போனதும் கரச்சல் வருமோ???
*திட்டமா ஏதாவது நடக்கும். ரொம்ப (56.60 யிருக்கோனும்??
“முருகப்பனுக்கு புத்தி பத்தாதுங்க. ஆக்க பொறுத்
தது ஆறப் பொறுக்கலேனு நீங்க சொன்னது சரிதானுங்க,
*பேய கலியாணம் கட்டிகிட்ட பொறகு பயப்பட்டா ԿՔւգ պտո???
*ஒங்கள பெரிய தலைவருக்கு நல்லா தெரியும் போலருக்கே.??
"அவருக்கு யாரோ தெரியாது. அவர் காணாத தலைவரா நடக்காத போராட்டமா. தீர்க்காத பிரச் d606Orur. 96) 060DLL, தைரியத்துக்கும், நேர்மைக்கும் எங்கே போனாலும் அவருக்கு மதிப்பு. அவரு இருக்கு மட்டும் எனக்கு பயமில்லே.??
9

Page 16
*அதுக்காகதான் ஓங்கள போட்டா நல்லதுணு நெனைச்சேன்.??
*அது க் கென் ன மிஞ்சிப் போச்சு. மூருகப்பன் தலைவரரயிருக்கட்டும். என்னால ஏண்ட எல்லாம் செய்யறேன்.
**தலைவரே நீங்க முந்திப் போங்க. நான் சொனங்கி வர்றேன்?? என்று முத்தையா பின்தங்கி விட்டான்.
ராமலிங்கம் பாலத்தைக் கடந்து குறுக்கு வழியாக மலையேறி, மேட்டைக் கடந்து சமபூமியை அடைந்தான். உயர்ந்தும் தாழ்ந்தும் திரண்டோடும் மட்டக் கொழுந்து மலை பச்சை வெல்வெட் விரித்தது போல் மினுமினுத்துக் கொண்டிருந்தது. பச்சையிலும் எத்தனையோ வித பச்சை. இது தங்கம் கலந்த குளுமையின் கண் குளிர்ந்த பச்சை. குமரித் தன்மையோடு விளங்கும் பச்சை அதற்கு அடுத்தாற்போல் பழைய மலை வளர்ந்து முற்றிய வாதுகளையுடைய அடர்ந்த தே யி  ைல ச் செடிகள். கரும்பச்சை நிரைகள். இரண்டும் கொண்ட காட்டை நோக்கி ஏறிச் சென்றன.
இளைப்பாறுவதற்கு சற்று நின்ற ராமலிங்கம் பள்ளத் தில் அமைந்திருக்கும் தலவாக்கொல்லை பட்டணத்தை பார்த்தான். ஆற்றுக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கும் கடை வீதிகள், கட்டிடங்களின் பின்புறம், பல நிற தீந்தை பூசிய கூரைகள், தூரத்திலுள்ள துரைமார் கிளப், இவை களெல்லாம் அவன் கண்ணில் பட்டன. ஆறு ஊர்ந்து மலைக்குப் பின் மறைவது சொப்பனத்தின் முடிவு போலிருந்தது. மலைநாட்டு பட்டிணங்களுக்கு ஒரு தனி சோபை உண்டு என்பதை ராமலிங்கம் மனதால் உணர்ந் தான். ஒரு நிம்மதி அவனுக்கு ஏற்பட்டது.
திடீரென்று 'ஓ ஹோ?’ என்று எச்சரிக்கை சப்தம் மலையடிவாரத்திலிருந்து மிதந்து வந்தது. அது கல்லு வெடி வைக்கும் தொழிலாளர்களது எச்சரிக்கை. சத்தம் வரும் திசையில் நோக்கியபடி ராமலிங்கம் நின்றான். 'டும், டும்?) என்ற பலத்த வெடிச்சத்தம் மலைச்சாரலில் மோதி எதி
20

ரொளித்தது. பூமி அதிர்ச்சி ராமலிங்கத்தின் மனதையும் அதிரச் செய்தது. அவனும் ஒரு வகையில் கல்லுவெடி வைக்கும் வேலையில்தான் ஈடுபட்டிருந்தான் குழியடித்து திரிவைத்து, மருந்தும் கிட்டித்தாகி விட்டது. தீவைக்க வேண்டியதுதான் பாக்கி. வெடிக்குமுன் எந்தத் திசையை நோக்கி ஓடுவது என்ற சந்தேகம் அவனுக்கு, அந்த மனோ நிலலயோடு ராமலிங்கம் வீடு போய்ச் சேர்ந்தான்.
தாய் படுத்திருக்கும் சமையல் கட்டில் பழனியப்பன் பேசிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டது.
*பயப்படாதே அம்மா. முந்திக்கு இப்ப எவ்வளவோ சுகமாகிரிச்சு. அலமேலே வீட்டுலே இருந்து பாக்க சொல்லி யிருக்கேன். நாளைக்கு வர்றேன். போகட்டுமா???
போயிட்டு வா, என் சாமி.??
ராமலிங்கம் ஸ்தோப்பில் தாமதித்து பழனியப்பன் போன பின் உள்ளே போனான்.
ேேயாரது???
*ஏம்மா மேலுக்கு எப்படி இருக்கு???
தேவலே சாமி.??
சோப்பிட்டியா?99
**ஆமா. அலமேலு வந்து குடுத்துச்சி.??
பல வாரங்களுக்குப் பின் அவள் தோற்றித்தில் நல்ல
மாற்றம் ஏற்பட்டிருந்தது. அவள் நெஞ்சிலிருந்து ஒரு பெரும் பாரம் விலகியது போலிருந்தது.
கிழவி சுவரில் சாய்ந்தபடி கால்களை நீட்டி உட்கார்ந் திருந்தாள். இடுப்புக்குக் கீழ் கம்பளி போர்த்தியிருந்தாள். அவள் பசையற்ற முகத்தில் ஒரு கலவரம். ஏதோ சொல் வதற்கு வாயெடுத்தாள். பேசவில்லை. ராமலிங்கம் முகத் தைப் பார்த்தாள்.
21

Page 17
*என்னம்மா? என்னமு வேணுமா?? “இப்புடி கிட்ட வந்து உட்காரு, சாமி.உ ஏதோ முக்கியமான சங்கதி சொல்லப் போகிறாளென்று அருகில் போய் உட்கார்ந்தான்.
*தம்பி வந்திட்டுப் போச்சு. நா இன்னும் எம்புட்டு நாளாக்கி இருக்கப் போறேன். ஒங்களே பெத்து வளக்க..”* அதற்கு மேல் அவளுக்கு பேச முடியவில்லை. கண்ணிர் திரண்டு, வாடிய கன்னங்களின் வழியாய் வடிந்தன.
**ஒன்னே பாக்கத்தானே வந்தான். அதுக்கா அழுகோ னும், தோட்டத்துல கரச்ச இல்லாட்டி சரி.??
*ஒன்னே தலவாக்கொல்லையிலே கண்டானாம். நீ வரதுக்குள்ளே பாத்திட்டுப் போக ஓடி வந்தானாம். ஒன் மொகத்திலே முழிக்க ப்யப்படுரான், மகனே.??
என்ன கண்டானாமா??? **ஆமாவாம்.?? ராமலிங்கத்துக்கு தூக்கி வாரிப் போட்டது. எத்தனை பேர் கண்டார்களோ என்று சந்தேகப்பட்டான்.
*இப்ப என்ன செய்ரானாம்.?? *தெய்யல் வேலை செய்யுதாம். நாளண்டைக்கு வர்றேன்னுச்சு. நீ ஒன்னும் சொல்லாதே மகனே, புள்ளேயினா நல்லது கெட்டதுன்னாயிருக்கு. செமந்த வகுரு கேக்கலே மகனே.??
*அதுக்கென்னம்மா வந்துட்டுப் போகட்டும்.?? மாலை மங்கி இரவு சூழ்ந்து கொண்டுவந்தது. எல்லா வீடுகளிலும் பெண்கள பேச்சு. தாய்மார்களை பன்னிரண்டு மணிக்குப் பிறகு கண்ட குழந்தைகள் சத்தம் போட்டு ஆர வாரம் செய்தன. ஆடவர் திண்ணையிலும் கோழிக்கிடாப் பிலும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது எல்லா லயன்
22

ருக்கும் விளக்கு வெளிச்சத்தோடு ஜீவகளையைக் கொடுத்தது. ராமலிங்கம் மாத்திரம் கோழிக்கிடாப்பில் அமர்ந்தபடி ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான். கமலம் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாள்.
சங்கத்தில் சேர்ந்திருப்பது பற்றி கமலத்திடம் மறைத்து வைப்பது முறையல்ல என்ற முடிவுக்கு வந்தான். சங்கத்தில் சேருவது என்ன இரகசியம். எல்லோருக் தம் தெரிந்த இரக சியம் தானே. அறையில் ஆரம்பித்தது அம்பலத்துக்கு 'வந்து தானே ஆகவேண்டும். கமலத்துக்கு கட்டாயம் சொல்ல வேண்டும். எட் கங்காணி கேட்டால்கூட சொல்ல வேண்டுமென்று முடிவு செய்து கொண்டான்.
கமலம் சமைத்துக் கொண்டிருப்பதற்கு பேச்சுத் துணை யாய் பேசுவது போல தாயின் சுகத்தைப் பற்றியும், பழனி யப்பன் வந்துவிட்டுப் போனது பற்றியும் பேசிக்கொண்டே போனான். இவைகளெல்லாம் வழக்கத்திற்கு மாறான போக்கு. கடைசியாக கமலத்தைப் பார்த்து.
**இப்படி வா?? என்றான். ஏதோ மைத்துனனைப் பற்றிச் சொல்லப் போகி றானென்று அருகில் போனாள். சங்கத்துக்கு துண்டு எடுத் திருப்பதாய் சொன்னான். அவள் இடியைக்கேட்டு மருண்ட நாகத்தைப் போல் திகைத்து அவனைப் பார்த்தாள். பதில் சொல்ல நாவெழவில்லை. சங்கத்தில் சேர்வது கொலைக் குற்றத்திற்கு ஒப்பாய் ஜனங்கள் பேசுவதை அவள் கேட்பதுண்டு. என்றாலும் கணவனிடம் எதிர்த்துப் பேசும் வழக்கம் அவளுக்கில்லை. பேசாது போய் சமையலைத் துரிதப்படுத்திக் கொண்டிருந்தாள்.
சாப்பாட்டுக்குப்பின் ராமலிங்கம் தாய்க்கு மருந்து கொடுத்துவிட்டுப் படுத்தான். கமலமும் பேசாது அவன் பக் கத்தில் படுத்தாள். மூன்றாவது வீட்டில் தனி வாழ்க்கை நடத்தும் பழனி மாமா இரவில் பக்திப் பாடல்கள் பாடுவ துண்டு. ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக ஒரு அபச குணப் பாட்டைப் பாடினார்.
28

Page 18
குரவன் சட்டியிலே முட்டை அவிச்சான்-சாமி
முட்டை அவிச்சான் அவன் சாகும்வரை துக்கம் வச்சான்-சாமி
துக்கம் வச்சான்,
அவன் பாடிய துக்கம் ததும்பிய குரல் ராமலிங்கத்தை என்னவோ செய்தது. கமலமும் மென்மையான மனதை புடையவள். துரங்குவபோல் பாவனை செய்து கொண்டு கிடந்தாள். தூக்கம் வரவில்லை. வெகுநேரத்திற்குப் பின் கண்ணயர்ந்தபோது யாரோ அவள் கழுத்தை நெரிப்பது: போல் உணர்ந்து திரும்பிப்படுத்தாள்.
ராமலிங்கத்துக்கு எப்படி தூக்கம் வரும். கூரைக்கு மேல் காற்று, “ஹோ ஹோ1? என்று அலறிக் கொண்டிருந்தது* அந்த நேரத்தில் யாரோ கதவைத்தட்டும் சத்தம் கேட்டது"
யோரது??? *நான்தான் தலைவரே,2? என்று முருகப்பன் குரல் கொடுத்தான்.
ராமலிங்கம் எழுந்து கதவைத் திறந்து கொண்டு வெளியில் போனான்.
'என்ன இந்த நேரத்திலே??? *நாளைக்கு லீவு போனஸ் எடுக்கப்போறேன். உடடி சலாவுக்கு போயிட்டு வரனும், ஒரு கிழமை போகும். எல் லாம் பாத்துக்கிருங்க,** என்றான்.
*அதுக்கென்ன போயிட்டு வாய்யா?? என்று பேச்சை முடித்துக்கொண்டு கதவைத் தாளிட்டுவிட்டு ராமலிங்கம். படுத்தான். கமலம் ஒன்றும் பேசாதிருந்தாள். அவள் தூங்கவில்லை என்பது ராமலிங்கத்துக்குத் தெரியாம லில்லை. முருகப்பன் இப்படி திடீர் என்று முடிவுக்கு வந்த காரியம் அவனுக்குப் புரிந்தது. துரைக்கு அத்தாரட்டி கடிதம் வரும்போது தலைமறைவாக இருக்கவேண்டு மென்பது அவன் நோக்கமென்பதை ராமலிங்கம் யூகித்துக்
24

கொண்டான். 'அஞ்சு விரலும் ஒரு மாதிரியாகவா" யிருக்கும்,?? என்று தன்னைச் சமாதானம் செய்து கொண்டான்.
நாளை நடக்கப் போவதைத் தெரிந்து கொள்ள ராம லிங்கம் ஆசைப்பட்டான். **ஹோ ஹோ?? என்று காற்று பெருமூச்சு விட்டது. மணல் மூட்டைகளுக்கு கீழ் கூறை படபடவென்று அடித்துக் கொண்டது. விராந்தையில் உரச் சாக்கு மரவாடம் ராட்சத பறவை சிறகடிப்பது போல் சப்தித்தது. வெகு நேரத்திற்குப்பின் ராமலிங்கம் தூங்கினான். a.
4
முருகப்பன் லீவு போனஸ் போட்டுவிட்டு உடடிசலா வுக்குப் போய் ஒரு வாரமாகிவிட்டது. அவனைப் பேச்சாள னோக நியமித்து சங்கத்திலிருந்து துரைக்கு அத்தாரட்டி கடிதம் வந்திருக்க வேண்டும். என்றாலும் ராமலிங்கமும் முத்தையாவும் எதிர்பார்த்தபடி எந்த விபரீதமும் நடக்க வில்லை. இந்த இயற்கைக்கு மாறான அமைதியை ராமலிங் கத்தால் பொறுக்க முடியவில்லை. அவன் தாயின் சுகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருந்தது. அவள் தானே எழுந்து உட்கார்ந்து, அலமேலு வந்து கொடுக்கும் உணவை உட் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டாள். ராமலிங்கத்துக்கு தாயைப் பற்றிய கவலை நாளடைவில் குறைந்து வந்தது.
அன்று ஒரு வெள்ளிக்கிழமை.வழக்கம்போல் கவ்வாத்து வெட்டும் தன் சக தொழிலாளர்களோடு கால்ை ஆறு மணிக்கு எட்டாம் நம்பர் மலைக்குப் போய் சேர்ந்தான். ஒவ்வொரு வரும் தங்களது நிரைகளைப் பிடித்து வெட்ட ஆரம்பித்தார்கள். கவ்வாத்துக் கங்காணி ஒரு கற்பாறை மேல் ஏறி நின்று, “கவனம். நல்லா வெட்டு, வாது பொளக் கப்படாது ,கை கவனம்,?? என்று எச்சரித்துக் கொண்டு நின்றான். தேயிலைச் செடிகளில் பனிநீர் கட்டியிருந்தது.
25

Page 19
வேலை ஆரம்பிக்கத் தண்ணிர் பட்டு விரல்கள் மரத்தன" என்றாலும் சுறுசுறுப்பாக இயந்திரம் இயங்குவதுபோல் கரங்கள் கத்திகள் கொண்டு வெட்டி இழுக்க, வாதுகள், சவரம் செய்யும்போது முடிவிழுவது போல் விழுந்தன. பின்னர் குனிந்து செடிகளுக்குள்ளிருந்த சில்லு வாதுகள், அரும்பு இவைகளையெல்லாம் சுத்தம் செய்து கொண்டு ராமலிங்கம் மேலே வெட்டிச் சென்றான். மற்ற கவ்வாத்துக் காரர்களும் வெட்டிக் கொண்டு விரைந்து சென்றனர்.
பதினொரு மணிக்கு ஒண்டிமுத்து கணக்கப்பிள்ளை மலை சுத்திக் கொண்டு கவ்வாத்துக் காட்டுக்கு வந்தான். வயது இருபத்தெட்டு இருக்கும். நடுத்தா உயரம், மல்வேஷ்டி, டுயிட் கோட்டு, வெள்ளை கமிஸ், தலையில் தும்பைப் பூ போன்ற கணக்கப்பிள்ளை முண்டாசு அணிந் திருந்தான். சின்னத்துரை நடப்பது போல ஆடி ஆடி நடந்து வந்து நின்று கவ்வாத்து கங்காணியைக் கூப்பிட்டான். அவன் பேசும்பேச்சு வெள்ளைக்காரன் தோரணையில் அமைந்திருந்தது.
*ஹேய் கெங்காணி! ஹெங்கே வேலை எப்படி??? *நல்லா இருக்குதுங்க.?? ராமலிங்கம் வெட்டும் நிரையைப் பார்த்து
*ஹெந்த நெரை யார் கெங்காணி??? என்று கேட்டான் ஒண்டி முத்து.
*ஏய் இது யாரப்பா? என்று கூச்சல் போட்டான் கங்காணி
*மடப்பயல், மடப்பயல். இந்த மாத்ரீ வேலே, கெட் வேலே இது நாட் தோட்மிலே,** என்றான் ஒண்டிமுத்து.
'ஏய் இந்த நெரை யாரப்பா??? எல்லா தொழிலாளர்களும் நிமிர்ந்து நின்றார்கள் அதோடு ராமலிங்கமும் நிமிர்ந்தான்.
26

*அந் நெரை கெங்காணி,’ என்றான் ஒண்டிமுத்து. *என் நெரைங்க?? என்றான் ராமலிங்கம். அநேகமாய் அவன் கணக்கப்பிள்ளையின் உள் கருத்தை உணர்ந்து கொண்டான்.
*மிச்சம் மோஸ்மான வேலே ராமலிங்கம். கவ்வாத் வெட்டத் தெரியாத,2?
“ஏன் தெரியாதுங்க. பதினஞ்சி வருஷமா கவ்வாத்து தானுங்க இங்கே வந்ததுலே இருந்து கவ்வாத்து தானே வெட்டுறேன்.??
'மிச்சம் பேசவேண்டா ராமலிங்கம்.?? *கோவிச்சுக்காமே தவறு இருந்தா காட்டுங்க. கங்காணி காலையிலே இருந்து பார்த்துக்கிட்டுத்தானே இருக்காறு.??
ராமலிங்கம் பேசுவதை மற்ற தொழிலாளர்களும் கவனித்தபடி வேலை செய்கிறார்கள்.
**ஒன் வேலே சரியில்லே மனுசன்.?? *அதேதானுங்க. கொஞ்சம் வந்து காட்டுங்க.?? *என்ன காட்றது மனுசன். வேலே சரியில்லேன்னா என்ன காட்றது, மனுசன். வேலே சரியில்லேன்னா
Ffluggi)(36).
**கணக்குப்புள்ளே ஐயா, நீங்க அம்பது யாருக்கு அங்கிட்டு ரோட்டுலேநின்னுகிட்டு சொல்றீங்க. கிட்டத்துலே வந்து சொன்னா திருத்துவேன்,?? என்றான் ராமலிங்கம்.
இந்த அழுத்தம் திருத்தமான பேச்சு எல்லோரையும் கவர்ந்தது.
*ரோட்லே நிக்காம ஒன் தலை நிக்ரதா ராங்கி மனுசன்.??

Page 20
**இந்தாங்க கணக்கப்புள்ளே ஐயா, தலே கிலேனு பேசுர பேச்சே விட்டுடுங்க. குத்தமிருந்தா காட்டோனும் அதவுட்டுப்டு.??
**ஒனக் கவ்வாத்து தெரியா. லயம் போ மனுசன்.??
*எனக்கா கவ்வாத்து தெரியாது. தமிழனுக்கு பொறந் துட்டு வெள்ளகாரனாட்டம் பேசுனாப்புல்லே, நான் பயப்படமாட்டேன். குத்தத்தே திட்டமா காட்டி என்னே லயத்துக்கு வெரட்டனும்.”*
*ஏய் ராமலிங்கம் தலைவரே, லயத்துக்குப் போகச் சொன்னா போய்யா, ஏன் கரச்சல்,?? என்றான் கங்காணி.
**இல்லே கங்காணி, அய்யா அம்பது யாருக்கு அங்கிட்டிருந்து குத்தமின்னா அது என்ன பேச்சு. பெரிய மனுசன் பேசற பேச்சு இப்படியா. என் வேலையில் குத்தமில்லே, லயத்துக்குப் போன்னு சொல்றதுனாலே நான் போறேன் கங்காணி. நீங்க சாக்கி, வேற பேச்சு வேண்டியதில்லை,99 என்று சொல்லிவிட்டு ராமலிங்கம் மலையை விட்டு இறங்கினான்.
நீலகிரியில் எந்தத் தொழிலாளியும் ஒண்டிமுத்துவோடு எதிர்த்து வாதாடியது கிடையாது. ஒண்டிமுத்துவுக்கு சில நிமிடம் மூச்சு திணறிவிட்டது. தனக்குள்ளே ஒரு நடுக்கம். முழங்கால்களில் ஒருவித பலகீனம் ஏற்பட்டது. என்றாலும் கெளரவத்தைக் கைவிடாதபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
ராமலிங்கம் லயத்துக்குப் புறப்பட்டபோது எல்லாம் வெட்டவெளிச்சமாகி விட்டது. சங்கத்துக்கு ஆள் சேர்த்த தற்கு தான் காரணமென்று தெரிந்துவிட்டது. இனிமேல் என்ன நடக்கும், என்ன செய்வது என்பதையெல்லாம் யோசித்தபடி நடந்தான்.
அன்றைய தினம் கொழுந்துக் காட்டிலும் இதுபோன்ற கெடுபிடிகள் நடந்தன. நாற்பது பெண்களோடு கமலமும்
28

அலமேலுவும் கொழுந்தெடுத்தார்கள். அவர்கள் தலைகளில் கம்பளி முக்காடு; சேலைகள் தேயிலைச் செடிகளில் பட்டு கிழிந்து போகாதபடி இடையில் படங்கு கட்டி இருந்தார்கள், தலையில் கயிற்றை மாட்டி முதுகில் கூடை தாங்கியபடி பெண்கள் நிரைவரிசையில் குனிந்து இரண்டு இலையும் ஒரு திரியும் ஆய்ந்து கைநிறைய சேர்த்துக் கூடைகளில் போட்டுக் கொண்டு போனார்கள் .
அங்கு வேலை வாங்கும் மூன்று கங்காணிகளும் பெரிய கங்காணிக்குச் சொந்தக்காரர்கள்.
*முதல் நெறுவைக்கு இருவது ராத்தல் வேணும். எடுக்க முடியாத ஆள் லயத்துக்குப்போ’ என்றான் கங்காணி.
அலமேலு பின்னால் பார்த்தாள்.
'ஏய் அலமேலு என்ன பாக்குறே. ஒன் வாலை வெட்டி போடுவேன். ??
அவள் பேசவில்லை.
மொட்டை எடுக்காதே படவாள்?? என்றான் மற்ற கங்காணி.
தலை குனிந்தபடி பெண்கள் வேலை செய்து கொண்டி ருந்தார்கள்.
அடியேய் இந்த நெரை ஆள் யார்? என்றான் மூன்றாவது கங்காணி.
6 என்னாங்க கங்காணி.??
கேங்காணி, கொங்காணி. தலவரு பொண்டாட்டியாம்! ஒடு லயத்துக்கு? என்றான்.
**கடை பொறுக்கி படவாள். தோட்டத்தைக் கெடுத்துப் போட்டான். இந்த நெரை பொம்பிளை யார்??? மற்ற கங்காணி கேட்டான்.
29

Page 21
*என் நெரைங்க,** என்றாள் அலமேலு. ேேஎறங்கு மலைய விட்டு.”* எேன்னத்துக்கு எறங்கச் சொல்றீங்க??? *நீ பெரிய படவாள். போ லயத்துக்கு,92 ேேலயத்துக்குப் போன்னா போறேன். படவாள் கிட வாள் னு பேசவேண்டாம்.??
ரோசத்தி அம்மா லயத்துக்குப் போங்க. போடி போ,** என்றான் கங்காணி.
'போடி, கீடின்னு சொல்லாதே கங்காணி. நா ஒன் பொண்டாட்டியா??
எஏது வாய் மிஞ்சிருச்சி. போய் ஒன் சங்கத்திலே சொல்லி பீரங்கி கொண்டு வா.??
"ஆமா சங்கத்துலே சொன்னா எல்லாம் நாறிப்போகும் எல்லாரையும் அமட்டுற மாதிரி என்ன அமட்டாதே கங்காணி மாமா??
சில தினங்களுக்கு முன் ராமலிங்கம் சங்கத்திலே துண்டு எடுத்தது பற்றி சொல்லியது கமலத்துக்கு ஞாபகம் வந்தது. மின்னலைக் கண்டு மருண்ட குழந்தை போல் மலையிலி ருந்து இறங்கினாள். அலமேலுவும் அவளோடு பயண மானாள்
கமலம் வீடு வந்து சேரும்போது ராமலிங்கம் வீட்டிலிருந் தான். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அதற்கு மேல் பேச வேண்டிய அவசியமிருக்கவில்லை. தலைக்கு மேல் தண்ணி வந்த பின் அரையடி வந்தாலென்ன பத்தடி வந்தாலென்ன, நடக்கிறது நடக்கட்டும் என்று மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டான்.
எேல்லாம் சரி புள்ளே. கொஞ்சம் தேத்தண்ணி குடு* என்றான்.
30

கமலம் பேசாது தேனீர் போட்டு ராமலிங்கத்துக்குக் கொடுத்தாள்.
வீட்டைவிட்டு எங்கும் போகாது ராமலிங்கம் கோழிக் கிடாப்பில் உட்கார்ந்திருந்தான். இரண்டரை மணிபோல் தட்டுக்கார ராமன் வந்து ராமலிங்கத்தை கணக்கப்பிள்ளை" கூப்பிடுவதாய் சொல்லிவிட்டு நிற்காமல் போனான் வருவது: வந்து தொலையட்டும் என்றபடி நேரே கணக்கப்பிள்ளை வீட்டுக்குப் போனான். கணக்கப்பிள்ளை வீட்டு வேலைக் காரன் இவனைக் கண்டதும்,
**ஐயா, ராமலிங்கம் தலவரு? என்றான். *பங்களாவுக்குப் போகச்சொல்?’ என்று உள்கட்டி லிருந்து ஒரு சத்தம் வந்தது.
அதன்படி பங்களாவுக்குப் பின்புறமிருக்கும் ஆபிசுக்குப் போய் திறந்த சன்னலருகில் ராமலிங்கம் நின்றான்.
துரை உள்ளே உட்கார்ந்திருந்தார். ராமலிங்கம் தலை லேஞ்சைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு
"சலாம் தொரைகளே?? என்றான். சேலாம், நீ ராமலிங்கம்.?? **ஆமாங்க தொரைகளே.??
தோட்டம் வந்து எவ்வள நாள்.? **ஒன்னரை வருசம் தொரைகளே.”* 'நீ மிச்சம் கரச்சல்காரனாம். பெரிய க ங் க ச ரிை சொல்லியாச்சு??
'நான் ஆப்புடி கரச்சல் குடுக்கலீங்களே.* 'நான் கரச்சல் குடுக்கிறதா?*
ராமலிங்கம் பேசவில்லை.
3.

Page 22
துரை வளர்ந்து மெலிந்தவர். ஐம்பது வயதிற்கு மேலி ருக்கும். ஆள் வெள்ளையாய் இருந்தும் அனுமாரின் அச்சில் வார்த்த முகம். வலது கையில் பாதி இல்லை. அவர் எழுந்து ஒரு கையை இங்கும் அங்கும் ஆட்டிக் கொண்டு கூண்டுக்குள் அகப்பட்ட மலைக்குரங்கைப் போல் ஆபிசுக்குள் இங்குமங்குமாய் நடந்தார்.
??apéT தம்பிப் Lugi 6triC3 is که ک
தலவாக்கொல்லையிலே வேலே செய்ரானுங்க.??
'அவன் பொம்பிளே அடிச்சாச். பத்சீட் கொடுத்தாச். உனக்கு தெரியும்.”*
தெரியும் தொரைகளே.??
இப்ப தோட்டம் வர்றதா? நம்ம தோட்டம் வர்றதா???
வரப்போகத்தானே இருக்கானுங்க,29
'அவன் இங்கே வரக்கூடாத். வந்தா ஒனக் பத்சீட், தெரியும்.??
ராமலிங்கத்துக்கு திடுக்கிட்டது. அதோடு சற்றுக் கோபமும்கூட
ேேதொரைகளே.??
'நீ ஏன் தொரை சொல்ல மாட்டே மனுசன். தொரை களே, தொரைகளே சொல்றே.??
சிேன்னத் தொரைக்குத்தான் தொரை. ஒங்களுக்கு தொரைகளேன்னுதான் சொல் ல னுங் க. அதுதான் மரியாதி.??
*சரி, ஒனக்கென்ன சொல்லவேணும்???
*அலமேலு கரச்சல்லே என் தம்பிக்கு பத்துச்சீட்டு குடுத்தீங்க. வாங்கிட்டு ஒடனே போயிட்டான். அதுக்குப் பொறகு சொந்தக்காரரை பார்க்க வாரது எல்லாருக்கும் தெரியும் தொரைகளே.??
32

*அவன் நம்ம தோட்டம் வர்றதா.*
*அது எல்லாருக்கும் தெரியும்.??
*சரி நீ சாக்கி. ஒனக்கு பத்சீட் தெரியும். இந்தா பத்சீட் எடு? என்று பத்துச்சீட்டை எடுத்துக் கொடுத்தார் துரை
*எனக்கு பத்துச்சீட்டு வேண்டாங்க தொரைகளே. பழனியப்பன் சொகமில்லாத தாயே பாக்கவந்தா எனக்கு என்னத்துக்கு பத்து சீட்டுங்க.??
**சட்டம் பேசவாண்டா. ராங்கிக்காரன். கன்ரோல்கு பத்சிட். அங்கே போ..??
* விசாரிச்சு தொரை குத்தமின்னா போறேன்.23
எபேச வேண்டாம் மன்சன்,?? என்றுதுரை படீரென்று சன்னலைச் சாத்தினார். என்றாலும் தனக்குள்ளே பல யோசனை. 'தொரை விசாரிச்சு குத்தமின்னா போறேன் என்ற வார்த்தைகளை யோசித்தார்.
ராமலிங்கம் துரையோடு பேசுயதை பெரிய கிளார்க்கும் பெரிய கங்காணி மகன் சிவனையாவும் கேட்டுக் கொண்டி ருந்தார்கள். துரையுடன் பேச்சுக்குப் பேச்சு பதில் கொடுத் ததைக் கேட்டு பிரமித்தார்கள்.
*ஆள் கிண்டா புள்ளே சிவனையா. ஒரு கொளப்பம் கெளம்பித்தான் ஆகும் போலேருக்கு," என்றார் கிளார்க்கர்.
சிவனையா ஒன்றும் பேசவில்லை.
ராமலிங்கத்துக்கு மேலெல்லாம் வியர்த்தது. மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் கரைந்து விட்டது. நாளை பத்துச்சீட்டு தொழில் கந்தோருக்குப் போய்விடும். வேலை யில்லை. பின் லயத்தைவிட்டு வெளியேற வேண்டும், எங்கு இருப்பது. எந்த சொந்தக்காரர்கள் ஏற்றுக்கொள் வார்கள். பத்துச் சீட்டை மடியில் வைத்துக் கொண்டு ரோட்டை அளக்க வேண்டியதுதான். இப்படி பலவாறு
33 -- sم

Page 23
சிந்தித்துக் கொண்டு போனவன் தன்னையறியாமலேயே பெரிய கங்காணி வீடு போய் சேர்ந்தான்,
முகப்பில் பெரியசாமி கங்காணி சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். கொழுந்துக் காட்டு கங்காணிகளும் இன்னும் சிலரும் குசுகுசு மாநாடு நடத்திக் கொண்டிருந் தார்கள். ராமலிங்கம் உள்ளே வந்ததும் பேச்சு நின்று விட்டது.
*ராமலிங்கம் என்ன வேணும்? தங்கச்சிக்கு இப்ப சொகந்தானே?? என்றார் பெரியசாமி கங்காணி.
ேெஎல்லாம் சொகம்தாணுங்க. தொரே கூப்பிட்டு நோட்டீஸ் கொடுத்திட்டார். பத்துச்சீட்டு நாளை கன்ரோ லுக்கு போயிருங்க.??
* என்ன பத்துச்சீட்டா. காரணம் சொல்லலையா.?? *பழனியப்பன் அம்மாளே பாக்க வந்ததுக்காம். அவனை சாக்கா வச்சி எனக்கு பத்துச்சீட்டு, எனக்கு ஒன்னும் கொறையாதுங்க.சங்கத்துக்கு துண்டெடுத்த பாவம்தானுங்க.”*
*நான்தானே மொதமொத தோட்டத்துலே சங்கம் வச்சேன். எல்லாரையும் ஒரு கண்ணாலே பார்க்கோனுமினு சொன்னேன்.??
நீேங்க நெனக்கிற மாதிரி ஒன்னும் நடக்கலீங்க. இன்னைக்கு காலையிலே கணக்கப்புள்ளே என்னே மானங் கெட்ட மாதிரி பேசினாரு ஏதோ ஒரு ரத்தமுன்னு கரும்புக் கும் ஒரு மொளவச்சி வெட்டனுமினு மாதிரி பொறுத்துக் கிட்டனுங்க. அவர் தோட்டத்தே ஆச்சி பண்ண மனப்பால் குடிக்கிறது ஓங்களுக்கு தெரியாம இருக்கலாம். ஆன" எனக்கு தெரியுங்க. அதையும் பாத்திட்டுத்தானுங்க போவேன்,9 என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
பெரியசாமி அசையாத கற்சிலைபோல் இருந்தார். அவருக்குப் பொறி கலங்கியது போலிருந்தது. அவரைச்
34

சுற்றியிருந்த ஆமாஞ்சாமிகள் தலையைச் சொறிந்து கொண் டிருந்தார்கள்.
ராமலிங்கம் சங்கத்துக்கு ஆள் சேர்த்தது உண்மை. அவனுக்குப் பத்துச்சீட்டு கொடுக்கச் செய்தது உண்மை. ஆனால், ஒண்டிமுத்து கணக்கப்புள்ளை தன் மாமனாகிய பெரியசாமியை வீழ்த்தத் திட்டமிட்டிருப்பது உண்மையா. இதைத் தெரிந்து கொள்ள பெரியசாமி ஆசைப்பட்டார்.
சங்கத்துக்கு ஆள் சேர்த்ததற்காக ராமலிங்கத்துக்குப் பத்துச்சீட்டு கொடுக்கப்பட்டது என்ற செய்தி தோட்டம் முழுவதும் டொம்மு டொம்மு என்று அடிப்பட்டது. கவ்வாத்துக் காட்டில் ராமலிங்கம் கணக்கப்பில்ாளைக்கு கொடுத்த டோசைப்பற்றி சந்து, பொந்து, மூலை, முடுக்கு எல்லா இடங்களிலும் கவ்வாத்துக்காரர்கள் பரப்பி விட்டார்கள். இதைப் போலவே பெரியசாமி மகன் மூன்றாவது கிளார்க் துரைக்கும் ராமலிங்கத்துக்கும் நடந்த பேச்சு வார்த்தையைப் பற்றியும் இதனால் குழப்பம் வரும் என்று எட்கிளார்க் சொன்னதையும் தன் தகப்பனிடம் வந்து சொன்னான். ராமலிங்கம் பொல்லாதவன் என்பது எல்லோருக்கும் விளங்கி விட்டது.
வீடு வந்ததும் தனக்குப் பத்துச்சீட்டு கொடுத்தது பற்றி தன் தாயாருக்கு சொன்னான். s
*அட பாவிகளே ஒங்களுக்கு பொண்டு, புள்ளைக இல்லையா, என் புள்ளே என்ன பாக்க வந்தது ஒங்களுக்கு சகிக்கலையே, என் நெஞ்சி எரியிற மாதிரி ஒங்க வீடு பத்து எரிய** என்று சபித்தாள் அவள்.
கவ்வாத்துக் காட்டில் ஒண்டிமுத்து கணக்குப் பிள்ளைக்கும் ராமலிங்கத்துக்கும் நடந்த தர்க்கம் நீலகிரியில் எந்தக் காலத்திலும் நடந்திராத சம்பவமாகும், ஒரு சாதாரண தொழிலாளி வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லியது; அஞ்சாது தன் உரிமைக்காகப் பேசியதுத்
35

Page 24
மலையைவிட்டு விரட்டப்பட்ட போதும் தலை குனியாது போனது அதி கா ர த் து க்கு நேர் சவால் விட்டது போலிருந்தது.
கவ்வாத்துக்காரர்கள் உள்ளத்தில் ஒரு திடம் ஏற்பட்டது வெள்ளைக்காரனைப் போல் நடித்து கூலிக்காரனை அமட்டிய காலத்துக்கு ராமலிங்கம் சாவுமனி அடித்தது போல் அவர்களுக்குத் தெரிந்தது. இந்த நிலைமை ஒருவாறு கவ்வாத்து கங்காணிக்கும் தெளிவாயிற்று. ஆனால் அதை மற்றவர்களோடு பரிமாறிக் கொள்ள முடியவில்லை. என்றாலும் ஒண்டிமுத்து கணக்கப் பிள்ளையின் சாயம் வெளுத்ததில் அவனுக்கு ஒரு திருப்தி.
கொழுந்துக் காட்டிலிருந்து கமலம், அலமேலு இருவரை யும் லயத்துக்கு விரட்டியது, இதிலிருந்து வேறுபட்ட சம்பவமாகும். இந்த மோதலில் சில்லரை கங்காணிகளே வெற்றியீட்டியதாக நினைத்தார்கள். ஆனால் அலமேலுவின் கொட்டத்தை அடக்க வேண்டும் இதற்கு தகுந்த வழி செய்ய பெரிய கங்காணியிடம் சொல்லவேண்டுமென்று முடிவு செய்தார்கள். ب
துரைக்கும் ராமலிங்கத்துக்கும் நடந்த வாக்குவாதம், ராமலிங்கம் பத்துச்சீட்டு வாங்கமுடியாது என்ற சம்பவம் யாவும் அன்று மாலை நாலு மணிக்கெல்லாம் டொம், டொம் என்று அடிப்பட்டது. ராமலிங்கம் கட்சியில் சேர்ந்த பெண்கள் வேலையை விட்டு வரும்போது தங்கள் தலைவரின் வீரத்தைப் பேசிப் புகழ்ந்து கொண்டு வந்தார்கள்.
* அவரு அஞ்சாத கட்டே. இந்தப் பொக்கியனுக்கா பயப் படுவாரு சரியா குடுத்தாராம். தமிழனுக்கு பொறந் திட்டு வெள்ளேக்காரனாட்டம் பேசி அமட்டாதென்னாராம்.??
6ே கணக்கன் என்ன சொன்னானாம்???
*என்ன சொல்றது. வாலே மடக்கிட்டு போனானாம்.??
இப்படி LuôD6)u Tgi 6Tairaotor பேசிக்கொண்டு வந்தார்கள்
36

*கொழுந்துக் காட்டுலே பொம்பளேய மெரட்டுனதுக்கு அலமேலு நல்லா குடுத்தாளாம்.
*அது பத்தாது.”*
**பேரு போடுறப்ப கணக்கப்புள்ளேயும் கங்காணிமாரும்: தலைகீழே தான் ஆடுவாங்க. ஆடட்டுமே பார்க்கலாம்.??
இவர்கள் எதிர்பார்த்தபடி பேர் போடுமிடத்தில் கங்காணிகள் கொக்கரித்துக் கெர்ண்டு நின்றார்கள்.
*புதுமலையாள் வேறயா நில். தலதுணி கீழே போட்டு முத்தலை பொறக்கு பழைய மலையாள் பார்த்துக்கொண்டு நிக்காதே. ஏய் பிரான்கு பாக்காதே. வேலை கவனம்.??
இப்படி சராமாரியாய் பேசினார்கள். சில கங்காணிகள் ஒண்டிமுத்தை சுற்றிக்கொண்டு  ெய்க்காவலர் போல் நின்றார் 5ரி .
*கெங்காணி வேலே கவனம்,?? என்றான் ஒண்டி முத்து.
இந்த தர்பார்களோடு கொழுந்து நிறுத்து பேர்போட்டு முடிய மாலை ஆறரை ஆகிவிட்டது. பெண்கள் வீடு திரும்பி கம்பளிகளை கொடிக கயிற்றில் போட்டுவிட்டு கூடைகளை யும் சுவரில் தொங்க விட்டார்க: . அவர்களது கணவன் மார்களும் அண்ணன் தம்பிமார்களும் ராமலிங்கம், துரை யோடு வாக்குவாதம் செய்து கடைசிவரை நோட்டீசை வாங்க மறுத்ததைப் பற்றி பேசிக் கொண்டார்கள்.
மலை வேலை செய்யும் சில்லரை கங்காணிகள் வீட்டில் நிலைமை வேறு. அவர்கள் பெரிய கங்காணிக்குப் பந்துக்கள் ராமலிங்கத்தையும் அவன் ஆதரவாளர்களையும் வசை பாடிக் கொண்டு, கர்வத்தோடு காரித்துப்பிக் கொண்டிருந் தார்கள்.
**இந்த நாய் ஏண்டா இப்படி வாலே கிளப்பிக்கிட்டு திரியுது.’ என்று ராமலிங்கத்தின் ஆதரவாளன ஊடே குத்தினான்.
*அரமனே கோழி முட்டேடா..??
37

Page 25
ேேபாடி என் கூத்தியாரே,99
ஆண்டாண்டுகளாய் கட்டுண்டு கிடந்த உணர்ச்சிகள் சீறிக் கொண்டு மேலே வந்தன.
5
அன்று மாலை ஆறு மணிக்கெல்லாம் ராமலிங்கத்தின் ஸ்தோப்பில், முத்தையாவும் பல கவ்வாத்து நண்பர்களும் கவ்வாத்து மலையிலும் கொழுந்துக் காட்டிலும் பின் துரை ஆபிசிலும் நடந்த சம்பவங்கள் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள். ராமலிங்கம் இவற்றிற்கு விளக்கம் கொடுக்கும்போது கமலமும் அலமேலுவும் அவனுக்கு சட்டம் எவ்வளவு தெரியுமென்று வியந்தார்கள்.
*நான் ஒடன் பத்துச்சீட்டு கையிலே வாங்க மாட்டே, மூத்தையா. கேசு முத்தி வரட்டும், பாக்கலாம். இப்பவே ஜில்லாவுக்குப் போய் தொரைக்கு எழுதச் சொல்லனும். நாளைக்கு என்னா செய்யுறது என்கிறத தெரிஞ்சுகிறனும்’ என்றான்.
*சரி புறப்படுங்க தலவரே. இந்த நேரத்திலே முருகப்பனே காணமே?? என்றான் முத்தையா.
*அது மண் குதுரேடா” என்றது ஒரு வாலிபக்குரல்.
*சா, அப்படி பேசாதே தம்பி. நமக்குள்ளே Ᏸ5ᎸᎢᎲl இருக்கும்?" என்றான் ராமலிங்கம்.
சற்று நேரத்துக்கெல்லாம் ராமலிங்கமும் அவன் நண்பர் த்ளும் ஜில்லாக் கமிட்டிக்குப் பயணமானார்கள்.
ராமலிங்கத்தின் வீட்டின் மேல் கண்வைத்துக் கொண் டிருந்த பெரிய கங்காணியின் பந்துக்கள் அவன் ஜில்லா
38

கமிட்டிக்குப் புறப்பட்டதைக் கண்டதும் தலைவிரி கோல மாய் பெரியசாமி வீட்டுக்கு ஓடினார்கள்.
*ராமலிங்கம் ஆளுகளே கூட்டிக்கிட்டு ஜில்லாவுக்குப் போறானுங்க,2? என்றார்கள்.
பெரியசாமி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் சில்லரைக் கங்காணிகள் மரியாதையோடு வேட்டியை ஒதுக்கிப் பிடித்துக்கொண்டு மூலையிலும் கதவுக் குப் பக்கத்திலும் நின்றபடி பேசிக் கொண்டிருந்தார்கள்.
இந்தப் பேச்சுகளுக்கு மத்தியில், வந்தவர்கள் பேச்சை சரியாய் கேட்கவில்லை. ஆனால், பெரியசாமி விசயத்தைக் கிரகித்துக் கொண்டார். **பரவாயில்லை,22 என்று கைய மர்த்தினார். ஆனால் சில்லரைக் கங்காணிகள் பேச்சு தொடர்ந்து நடந்தது.
*ஓங்க மொகத்துக்காக பாத்தனுங்க. இல்லாட்டி கணக்கப்புலே ஐயாவோட தக்கம் பண்ணயிலே பல்லே புடிங்கி கையிலே குடுத்திருப்பேனுங்க.??
*நாய் புடிக்கத் தெரியாத பயல் தோட்டத்தே கெடுத்துட்டானுங்க.??
**கணக்கப்புள்ளே என்னப்பா செஞ்சார்? என்று 6ufulu əf Artu6 GBa5"lmrir.
**இந்தப் பய திடீருன்னு எதிர்த்துப் பேசவும் அவருக்கு ஒரு மாதிரி தானுங்க.??
*என்ன அப்பிடி பேசினான் ராமலிங்கம்.??
*தமிழனுக்கு பொறத்திட்டு வெள்ளக்காரனாட்டம் பேசினா நா பயப்படமாட்டேனின்னானுங்க. ரோட்டே விட்டு கீழே வரச் சொன்னானுங்க.??
*நீ நான்னுன்னு வந்திரிச்சோ.??
39

Page 26
'இல்லீங்க. அப்படி பேசியிருந்தா காலே வாங்கியிருப் பேனுங்க,** என்றான் ஒரு வாலிபக் கங்காணி?
இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பெரியம் சாமியின் மனைவி காமாட்சியம்மாளுக்கு முகத்தில் ஈயாட வில்லை. பெரிய குடும்பப் பெண்களுக்குள்ள எல்லா சுபலட் சனங்களோடு காணப்பட்டாள். வயது நாற்பதுக்கு மேலிருந்தும் அமைதியோடு படாடோபமின்றி தன் அந்தஸ் திற்குத் தக்கபடி மங்களகரமான மஞ்சள் கலந்த சரிகை சேலை அணிந்திருந்தாள். கரங்களில் தங்க வளையல்கள், வைரக்கம்மல்கள், நெற்றியில் குங்குமப் பொட்டு, இவை களுக்கு ஏற்ற குணம் அந்த வீட்டுக்கே ஒரு தனிச் சோபையைக் கொடுத்தது.
பேசுகின்ற கங்காணியைப் பார்த்து, **கணக்கப்புள்ளே அப்படி என்னதான் சொன்னாரு?" என்றாள்.
*ராங்கி மனுசன் ஒனக்கு வேலே தெரியாதுன்னு (3Luf6otrf.oo
**சரி என்று சிரித்து விட்டு, கணக்கப்புள்ளே தம்பி வாரதுக்கு முந்தி ஏதாவது குத்தம் கண்டு சொன்னியா??
பதில் இல்லை.
**நிதானமா நடந்திருந்தா இந்த கரச்சல் வந்திருக் காது தம்பி. இது எங்கே போய் முடியுமோ தெரியலே? உ என்றாள் காமாட்சியம்மாள்.
'அதெல்லாம் பார்க்கலாம்?? என்றார் பெரியசாமி.
**ஏதோ சொன்னேன்? என்றபடி காமாட்சியம்மாள் பின்கட்டுக்குப் போனாள்.
**சரி நம்ம ஆளுக கலயாமே பாத்துக்கிருங்க?* என்றார் பெரியசாமி.
40

இரவு பத்து மணி வரை பேச்சு மாட்டுவண்டி கரடு: முரடான பாதை வழியாய் போவது போல் ஒடிக் கொண் டிருந்தது.
ராமலிங்கமும் அவன் நண்பர்களும் ஜில்லாக்கமிட்டியை: சேரும்போது இரவு ஏழு மணியாகிவிட்டது. பிரதிநிதி எஞ்சியிருந்த தொ ழி லா ள ர் களது பிரச்சினைகளை விசாரித்து, நடவடிக்கைகள் தயாரித்துக் கொண்டிருந்தார்? நியாயத்தை செய்வது மாத்திரமல்ல. அது பூரணமாய் செய்யப்பட்டதாக எல்லோருக்கும் தெரிய வேண்டுமென்பது அவர் கொள்கை. அதோடு உள்ளதை உள்ளபடி பச்சை யாக சொல்லிவிட்டு கரகோசம் எதிர்பார்க்கும் குணமுடை யவர்.
*அடே என்ன இந்த நேரத்திலே ராமலிங்கம் தலைவர், ??
*எனக்கு ஒடன் பத்துச்சீட்டுங்க.?? *அதை கைநீட்டி வாங்கிட்டீங்களாக்கும்.?? *இல்லீங்க. அப்படி சும்மா வாங்கிடுவெங்களாக குத்தத்த விசாரிச்சு பத்துச்சீட்டு குடுக்கச் சொன்னன்.”*
*சபாஷ் தலைவர் உக்காருங்கள்.?? எல்லோரும் உட்கார்ந்தார்கள். *பத்துச்சீட்டு வருமின்னு எனக்குத் தெரியும்.”* எல்லோரும் பிரதிநிதியை நோக்கினர். பிரதிநிதி ஏற இறங்கப் பார்த்து விட்டு;
*அந்த முருகப்பன் எங்கே?? என்று கர்ஜித்தார். “லிவுச்சம்பளம் எடுத்துக்கிட்டு போன ஆள் இன்னும் வரலங்க.??
*கோடாரிக் கம்பு, சரி என்ன நடந்தது, ராமலிங்கம் தலைவர். அதியோடந்தமாக சொல்ல வேண்டும். யாரும் குறுக்கே பேசவேண்டாம். புரிகிறதா.??
41

Page 27
எல்லோரும் பேசாமலிருந்தார்கள். ராமலிங்கம் மாத் திரம் அன்று காலையில் கவ்வாத்து மலையில் நடந்த சிம்பவத்தை ஒன்று விடாது சொன்னான்.
பிரதிநிதி தலையை ஆட்டிக் கொண்டபடி: *அடப்பாவி! பெரிய கணக்கன் துரைக்குஞ்சு போல் பேசி ஆட்களை அமட்டுவது என்ன விபரீதம். தோட் டத்தை மாத்திரம் சீர்குலைக்கவில்லை. தமிழையும் கொலை செய்து விட்டானே; படுபாவி?? என்றார்.
பின் கொழுந்து காட்டில் பெண்கள் துன்புறுத்தப்பட்ட தையும் பத்துச்சீட்டை கொடுக்கவந்த காரணத்தையும் சொன்னான் ராமலிங்கம். அப்பொழுது அவன் தம்பி பழனி யப்பன் கதவு பக்கத்தில் நின்றதை பிரதிநிதி கண்டு
*தோழர் நீங்கள் யார்? பாத்த மாதிரியிருக்கே,73 என்றார்.
**இங்கே தையல் வேலை சார்.?? ேேநீங்கள் கடை வீதியாள். நீலகிரி பெரிய கங்காணிக்கு வேண்டிய ஆளோ???
'அவர் எங்க பாமாங்க.??
**இங்கு வேவு பார்க்க வந்தீங்களோ, தோழர்??? *இல்லீங்க சார் ராமலிங்கம் தலைவர் தம்பி சார்? என்றான் முத்தையா.
*ஓ, அப்படியா. உங்களுக்கு பத்துச்சீட்டு கொடுத்து எவ்வளவு காலம்???
*ஒரு வருசங்க?? *தோட்டதுத்துக்கு அடிக்கடி போவதுண்டா? **ஆமாங்க. தினம் ரவைக்கு போவனுங்க. எல்லோ
ருக்கும் தெரியமிங்க??
42

என்ன பேச்சு. திட்டமாய் யாருக்கு தெரியும்??? கோவல்காரனுக்குத் தெரியும் சார்,??
*எப்படித் தெரியும் பழனியப்பன்??? ேேபேசிவிட்டுப் போவனுங்க.??
'நல்ல சாட்சி. சரி ராமலிங்கம் தலைவர் நாளை முதல் வேலையாக துரைக்கும் நமது தலைவர் திரு. ராஜனுக்கும் கடிதங்கள் எழுதுவேன். பயப்பட வேண்டாம். முழுக்* குளித்தவனுக்கு கூதல் இல்லே என்பது தெரியுமா??
**ஆமாங்க.??
*நாளை வழக்கம்போல் பிரட்டுக்கு எல்லோரும் போங்கள், கணக்கப்பிள்ளை உங்களை லயத்துக்கு விரட்டட்டும். தைரியமாய் தலைநிமிர்ந்து வீட்டுக்குப் போகவேண்டும். புரிகிறதா.??
**நல்லதுங்க சார்,?? என்றான் ராமலிங்கம்.
*முத்தையா, நீங்களும் மற்ற தோழர்களும் இன்றையி லிருந்து ஒரு பெரும் போராட்டத்தில் இறங்கிவிட்டதாய் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் எல்லோருக்கும் பங்கிருக்க வேண்டும். தோட்டத்தில் அன்றாடம் நடக்கும் கெடுபிடிகளை உடனுக்குடன் குறிப்பெழுதி வைத்து என்னிடம் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். குறை சொல்லுவதற்கு இடம் கொடுக்க வேண்டாம். இது போராட்டத்தின் முக்கிய அம்சம். இஸ்டோர், பங்களா, ஆபிஸ் இவைகளை உடைத்து விட்டு உங்கள் தலையில் கடடி வைத்து போலிஸைக் கூப்பிட்டு தொந்தரவு செய்யச் சொல்வார்கள். தேயிலைத் தூளை அட்டாவில் போட்டு விட்டு காவற்காரனை விட்டுப் பிடிப்பார்கள். ஜாக்கிரதை ராமலிங்கம்.??
*எல்லாம் கண்ணாலே கண்ட மாதிரி சொல்றீங்களே Frf...?
48

Page 28
*நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எனக்குத் தெரியும். நான் என்னா இங்கு சிரைக்கவா வந்திருக்கேன்; இந்த முதலாளிக் குஞ்சுகளின் கொட்டத்தை அடக்குவேன். இதற்கு நீங்கள் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். ஏன் தெரியுமா? தொழிலாளி மனிதனாக வாழவேண்டும்" பழனியப்பன் அலமேலுவை ஏதோ காதலித்தான், ஏதோ ஆத்திரத்தில் அடித்துவிட்டான். இதில் எதற்காக துரை தலையிட வேண்டும், கூலிக்காரனுக்கும் பொண்டாட்டியா என்பது சரியாகி விட்டது. துரைமார் கிளப்பில் இவன் பொண்டாட்டியை அவன் பிடித்துக்கொண்டு ஆடிக் கும்மாளம் போடுவது பற்றி நாம் ஏதாவது சொல்வதுண்டா. இரவு இரவாக இவர்கள் கூத்து நடத்துவதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல நமக்கு உரிமையுண்டா???
*பங்களா பக்கம் நமக்கு தல வச்சு படுக்க முடியுங்களா..??
*சரியான வார்த்தை. ராமலிங்கம் இனி பயணப் படுங்கள். நேரமாகிவிட்டது.??
* சார் பெரிய தலைவருக்கு நடந்ததை எழுதலாங் 56TT? oo
**ஏன் எழுதக் கூடாது. நன்றாக எழுதுங்கள். அந்த முருகப்பன் வந்ததும் உடன் இங்கு கூட்டி வாருங்கள்.
வணக்கம் போய் வாருங்கள்.??
*வணக்கம் சார்,??
எல்லோரும் புறப்பட்டனர்.
6
இந்த மூன்று தொழிலாளர்களும் லயத்துக்கு விரட்டப் பட்டபோதிலும் ராமலிங்கம் கணக்கப்பிள்ளையை எதிர்த்துப் பேசியதும் தன்னை உதாசீனம் செய்த கங்காணிக்கு சவால்
44

விட்டதும், நீலகிரியில் அமுல் நடத்தப்பட்டுவந்த சர்வாதி கார முறையைத் தகர்த்தெறிந்துவிட்டது. நீலகிரி தோட்டம் ஒரு சுவரில்லாத மறியல் என்ற நிலை மாறி, ராமலிங்கம் தலைவர் கட்சி, ஒண்டிமுத்து கணக்கப் பிள்ளை கட்சி என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
ராமலிங்கமும் அவனது நண்பர்களும் பயமில்லாது எல்லோரும் அறிய ஜில்லாக் கமிட்டிக்குப் போனது பலருக்கு தைரியத்தையும் சிலருக்குப் பயத்தையும் உண்டு பண்ணியது. இந்த மடமில்லா விட்டால் சந்தமடம் என்றது போல் இந்தத் தோட்டம் இல்லாவிட்டால் அந்த தோட்ட மிருக்கு என்று தங்களுக்கு சமாதானம் சொல்லிக் கொண் டார்கள். எதிர்த்துக் கேட்க ஆளில்லாத இடத்தில் ராமலிங்கம் முளைத்தது எல்லாத் தொழிலாளருக்கும் தெம்பைக் கொடுத்தது.
இரவு பத்து மணிக்கு ராமலிங்கம் வீடு வரும்போது, யாருக்கும் பயமில்லாமல் சங்கத்தில் சேர்ந்த பத்து முக்கியஸ் தர்கள் அவன் வீட்டு ஸ்தோப்பில் கிடந்த இரண்டு கோழிக் கிடாப்புகள் மேல் உட்கார்ந்திருந்தார்கள். அவன் வந்ததும் கேள்விகளை அள்ளி வீசினார்கள்.
**எப்படி தலவரே, பிரதிநிதி இருந்தாரா..?? **இருந்தார். எல்லாம் சொல்றேன். நாளைக்கு பிரட்டுக்கு போகச் சொன்னார்.??
**வீட்டுக்கு விரட்டினானா??? *சரியான பதில் சொல்லிவிட்டு பயப்படாமே வீட்டுக்கு போகச் சொன்னார்.
*பத்துச்சீட்ட நிப்பாட்ட முடியா துன் னு Geir6ðr6örsrsrir???
**அப்படி யாராலே முடியும். அது கேஸ் நடக்கிறப்ப சொல்ற சாக்கியிலே இருக்கு, நம்ம ஒத்துமே பலத்துலே இருக்கு? என்றான் ராமலிங்கம்.
வேறே என்ன சொன்னார்???
45

Page 29
*மு க் கி ய மா ன ஆளுகளே பத்திரமாயிருக்கச் சொன்னாரு ஸ்டோரு, அப்பீஸ், ஆயித காம்பிரா பக்கம் போகவாண்டாமினு சொன்னாரு அவங்களே எதையும் ஒடச்சுப் போட்டுட்டு, நம்ம தலையிலே கட்டி வச்சு பத்துச் சீட்டு குடுக்க ஏற்பாடு செய்வாங்களாம். தப்பித்தவறி குத்துக்கட்டதிட்ட வெட்டப் போகாதீங்க, காவல்காரன் அதேயாச்சும் நம்ம தலயிலே போட்டு போலிசு கொண்டு
வருவானாம்.??
'இதெல்லாம் சொன்னாரா??? **இல்லாட்டி. நாளயிலேயிருந்து தோட்டத்திலே நடக் கிறதெல்லாம் கொப்பிபோட்டு எழுதச் சொன்னாரு.??
*சரி நாளைக்கு பெரட்டுக்கு போய் பாத்திட்டு மத்த சங்கதி பேசலாம். நேரமாச்சி வீட்டுக்குப் போங்க.??
அவனுக்காகக் காத்திருந்தவர்களும் அவனோடு வந்த வர்களும் தங்கள் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டார்கள் கங்காணி, கணக் கப் பிள்  ைள ஆதரவாளர்கள் ராமலிங்கத்தின் வீட்டில் நடப்பதைக் கண்ணோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.
ராமலிங்கம் சாப்பிட்டபின் மனைவிக்கும் தாயாருக்கும் தெம்பு சொல்லிவிட்டுப் படுத்தான். அன்று இரவு அவர் களுக்கு தூக்கம் வரவில்லை. கிழவி சமையல் கட்டில் விளக்கை அமர்த்திவிட்டு வெகு நேரம் பேசாது இருந்து விட்டுப் படுத்தாள். பத்துச்சீட்டு கொடுத்தாச்சு என்ற கெலி அவள் தலைக்கு ஏறிவிட்டது.
சர்ப்பம் தீண்டிய விஷம்போல் சுரணையைக் குலைத்தது. கமலம் புரண்டு புரண்டு கொண்டு படுக்கையில் கிடந்தது ராமலிங்கத்துக்குத் தெரியாமலில்லை.
வெகுநேரம் கழித்து களைத்துப்போன உடல்களுக்கு சாந்தியளிக்க தூக்கம் வந்தது.
பிரட்டுத் தப்பின் குமுறல் மலைச்சாரலில் தாக்கி இடி முழக்கம்போல் எதிரொலித்ததைக் கேட்ட மக்கள் வாரிச்
46

சுருட்டிக் கொண்டு எழுந்தனர். வேலை இல்லை என்ற பட்டம் வாங்கிய ராமலிங்கம், கமலம், அலமேலு மூவரும்: வழக்கம் போல் எழுந்து பிரட்டுக்குப் புறப்பட்டார்கள். ஆண்களும் பெண்களும் கம்பிளிகளை முழங்கால்வரை போட்டு உடலைச் சுற்றிப் பிடித்தபடி தலைவிரிக் கோல மாய் ஓட்டமும் நடையுமாய்ப் போனார்கள்.
தேயிலை ஸ்ரோரின் முன்பக்கத்தில் இருந்த பிரட்டுக் களத்தில் ஒண்டிமுத்துவும் சில்லரைக் கங்காணிகளும் கறுப்புக் கம்பளிக் கோட்டும் முண்டாசுமாகக் காணப் பட்டார்கள்.
வழக்கம்போல் கொழுந்து எடுக்கும் பெண்கள். அதாவது புதுமலை ஆட்களும் பழைய மலை ஆட்களும் இரண்டு வரிசையாக நின்றார்கள். ஆண்கள் பிரட்டு பகுதியில் கவ்வாத்து ஆட்களும் சில்லரை வேலை ஆட் களும் நின்றார்கள். கவ்வாத்துக்காரர்களோடு ராமலிங்கம் நிற்பதையும் கமலமும் அலமேலுவும் புதுமலைப் பெண் களோடு நிற்பதையும் கண்ட கணக்குப்பிள்ளைக்கு மனதில் திக்கென்றது. கங்காணிகளும் ராமலிங்கம் வந்து நிற்பதைக் கண்டு சற்று திகைத்தார்கள்.
மன அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாதபடி ராமலிங்கத் தையும் அவன் மனைவி கமலத்தையும் அலமேலுவையும் லயத்துக்கு விரட்டும்படி ஒண்டிமுத்து ஒரு வாய்க்கார கங்காணிக்கு கட்டளையிட்டான். அந்த கங்காணி புது: மலை பெண்கள் நிற்கும் இடத்திற்கும் கவ்வாத்துக்காரர்கள் நிற்கும் இடத்திற்கும் மத்தியில் நின்று அதிகார தோர னையில்;
**ஏ, ராமலிங்கம், கமலம், அலமேலு மூணு பேரும் லயத்துக்கு ஓடு’ என்றான்.
**என்ன கங்காண் இப்படி தலகாலு தெரியாம பேசுறிங்க, லயத்துக்கு போன்னு சொன்னா நாங்க போறோம்,?? என்றான் ராமலிங்கம்.
47

Page 30
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒண்டிமுத்து, **ஏ நீ சட்டம் பேசவாண்டா. லயம் வெரட்யாச். நீ லயம் போ. ஒன் பத்சீட் கொன்றோல்க் அனுப்பியாச். வாய் பேசவாண்டா,2?
**கணக்கப்பிள்ளை ஐயா நாயமா வீட்டுக்கு போகச் சொன்னா வீட்டுக்குப் போறோம். சும்மா ஏன் ஒடு, கீடுன் னு சொல்லோனும்.”*
**ஒடுகீடுன்னு சொல்லாமே போங்க ஐயான்னு சொல் லோனுமோ,** என்றான் கங்காணி.
*கங்காணி என்னே ஐயான்னு சொல்ல வாண்டாம். நாய வெரட்டுற மாதிரி ஒடுன்னு சொல்ல வாண்டாம்னு தான் சொன்னோன், 99
*என்ன நீ பெரட்டு கலைக்க முடியாதபடி கொழப்பம் செய்றே. லயத்துக்கு ஒடுன்னாஒடே. தோட்டம் தோட்டம வள்ளு பொறக்கிட்டு வந்த எடத்தல ஒழுங்கா இருக்க முடியாதபடி ஒனக்கு சட்டம் வேறயா ?? என்று கங்காணி கத்தினான்.
*ஏ கங்காணி மானம் மரியாதைக்காக இதுவர uijs தேன். ஏங்க கையில என்ன இருக்குன்னு பாத்துப் பேசு. ஒனக்கும் பயப்பட மாட்டேன். எந்த கணக்கப்புள்ளே ஐயாவுக்கும் பயப்புட மாட்டேன். இன்னொருக்கா சத்தம் போடு பார்க்கலாம்,?? என்று ராமலிங்கம் வரிசையை விட்டு இரண்டடி முன்னே வந்தான்.
'ஐயோ வாண்டாம் வாண்டாம்!?? என்று கமலம் பதறி சத்தமிட்டாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வயதுபோன பழனி கங்காணி சமாதானம் செய்வதற்கு ராமலிங்கத்திடம் வந்து அமைதியாகப் பேசினான்.
'அப்பா ராமலிங்கம் எந்த கரச்சலும் பண்ணாதே, வீட்டுக்குப் போ. நான் உன் தகப்பன் மாதிரி. நான் சொல் றதைக் கேளு? என்றான்.
48

*பேசத்தெரியாதவங்களுக்கு கொஞ்சம் புத்தி படிச்சிக் குடுக்க நெனச்சேன். நீங்க என் தகப்பன் மாதிரிதான், ஓங்க சொல்ல நான் தட்டமாட்டேன்,?? என்று சொல்லி விட்டு தலை நிமிர்ந்தபடி பிரட்டுக் களத்தைவிட்டு லயத்துக்குப் புறப்பட்டான் ராமலிங்கம். கமலமும் அலமேலுவும் யாரையும் லட்சை பண்ணாதபடி அவனைப் பின் தொடர்ந்தார்கள்.
ராமலிங்கத்தின் வேலை செய்யும் கைகள் சும்மா இருக்க முடியாமல் தினவெடுத்தன. அவனுக்கு இரண்டு நாட்கள் சும்மா சோம்பேறியாக இருக்கமுடியவில்லை. எனவே கமலத்தைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு முன்னுள்ள காய்கறித் தோட்டத்தை சீர்படுத்திப் பயிரிடப் போனான். பல பகுதிகளில் வேலி சாய்ந்து கிடந்தது. பாத்திகளிருந்த இடங்களில் புல் வளர்ந்து சிறிய சிறிய புதர்கள் காணப் பட்டன. १
பெரும் புற்களை கமலத்தை கை பிடுங்கலாய் பிடுங்கச் சொல்லிவிட்டு வேலிகட்டும் வேலையில் ஈடுபட்டான். கடந்த ஒன்றரை வருடங்களாய் இவர்கள், கணவனும் மனைவியு மாக, இப்படி ஒன்று சேர்ந்து வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. ஆனால், அன்று இரு ஜீவன்களும் ஆணும் பெண்ணும் மெளனமாய்-ஏமாற்றத்தாலும் துன்பத்தாலும், அன்பாலும் இணைக்கப்பட்டு ஒருவரை ஒருவர் பார்த்தும் பார்க்காமலும் வேலையில் ஈடுபட்டார்கள். கணவனோடு சேர்ந்து வேலை செய்வதில் கமலத்துக்கு தன்னையறியாத ஒரு பெருமிதம், அதைப் போலவே, ராமலிங்கத்துக்கும் உள்ளம் நிறைகுடம் போலிருந்தது. பேசுவதற்கு அங்கு ஒன்றுமில்லை. கமலத்தின் மனதை ஏதோ உறுத்திக்கொண்டிருந்தது. அதை எப்படி சொல்வ தென்று, சமயம் பார்த்துக் கொண்டிருந்தாள். சமயமும் சந்தர்ப்பமும் அன்று ஒன்று சேர்ந்து வந்தன.
49 4ے ح-6

Page 31
*ஏ புள்ளே! பதினொரு மணிக்கி மேலேயிருக்கும் போலேயிருக்கு. போய் சமையல் பண்ணா நல்லது,* என்றான் ராமலிங்கம்.
அவள் செவியில் பாதி வார்த்தைகள் மாத்திரமே ஏறின.
என்னாங்க? ? 6ேஎன்னா. சொன்னது கேக்கலியா??? *சரியா கேக்கலே, ஒரு சங்கதியே நெனச்சிகிட் டேயிருந்தேன்!??
என்னா அப்படி பத்துச்சீட்டையா.?? **இல்லே இப்படி வாங்களே.?? ராமலிங்கம் அவள் அருகில் போனான். 'ஏன்னா புள்ளே அப்படி ரகசியம்.??
தலையை குனிந்தபடி **இந்த பயணம் நா குளிக்கலே** என்று நாணிக் கொண்டாள்.
*அம்மா கிட்டே சொல்லலீயா??? 'உம், வெக்கமா வராதோ.”* *கடவுள் கிருபே. வீட்டுக்குப் போ. அலமேலு வந்தா" காதே கடிச்சுவிடு. அம்மாகிட்டே சொல்லுவா,
*சரி நீங்க சுருக்கா வீட்டுக்கு வாங்க?? என்று சொல்லி விட்டுப் போனாள்.
அவள் மனதை பல நாட்க ளா க அழுத்திக் கொண்டிருந்த பாரம் விலகியது போல் இருந்தது. சுமையை இறக்கி வைத்தவள் போல் நடைபோட்டு சென்றாள். ராமலிங்கம் கண்கொட்டாமல் அவளைப் பார்த்து கொண்டு நின்றான். அவன் மனதிற்குள் இனமறியாத உணர்ச்சிகள். பிரட்டுக் களத்துக்குள் அன்று சொன்ன சில வார்த்தை மின்னல் போல் மனத்திரையில் ஓடி மறைந்தன.
60

'என் கையில என்ன இருக்குன்னு பாரு, பொஞ்சாதி புள்ளயே மறந்திட்டு தூக்குமேடை போகத் தயார்.??
அவள் கர்ப்பத்தில் இருப்பது ஆணோ பெண்ணோ, உருவமில்லா பிண்டம். அதை நினைத்து தன் முட்டாள் தனத்தைக் கடிந்து கொண்டான். வேலையில்லாதவன் வீட்டுக்கு கடவுள் பிள்ளைப் பிச்சை கொடுத்து விட்டார் எல்லாம் அவன் சித்தம் என்று மனதை சந்தோசப்படுத்திக் கொண்டு வேலிகளைக் கட்டி முடித்துவிட்டுப் போகும்போது மணி இரண்டாகி விட்டது.
ராமலிங்கத்தின் தாயார் அடுப்படியிலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அலமேலு கமலத்தோடு குசுகுசு பேச்சு நடத்திக் கொண்டிருந்ததிலிருந்து சங்கதி வெளிச்சமாகி விட்டது போலிருந்தது
'மகனே அந்திக்கு மாரியம்மன் கோயிலுக்கு போய் வெளக்கு போடப்பா?? என்று கிழவி முத்துரை வைத்தாள் ** அக்காளையும் கூட்டிக்கிட்டு போகட்டும் அத்தே?) என்றாள் அலமேலு.
'இம்புட்டு நேரம் என்ன பண்ணுனிங்க, பசி யில்லையா? உட்காருங்க,22 என்று கமலம் சாதம் பரிமாறு னாள். இன்று என்றுமில்லாத ருசி. இந்த ருசி நாவிலா அல்லது உள்ளத்திலா என்று அவனுக்குப் புரியவில்லை. வஞ்சகமில்லாது சாப்பிட்டு விட்டான்.
அன்று மாலை தபால்காரன் ஒரு ரிஜிஸ்டர் செய்த கடிதத்தை ராமலிங்கத்திடம் கொண்டு வந்து கொடுத்தான். அது ஜில்லாக் கமிட்டியிலிருந்து வந்தது. அதில் அடங்கி யுள்ள விசயங்களைப் பலமுறை வாசித்தான். அந்த சமயத்தில் முத்தையாவும் இன்னும் சில நண்பர்களும் வந்தார்கள்.
*என்ன முக்கியமான காயித மாட்ட மிருக் கே, தலவரே.??
*அதானே பாக்கிறேன். நீங்களும் வாசிச்சுப் பாருங்க,** என்று கடிதத்தைக் கொடுத்தான்.
51

Page 32
முத்தையா கடிதத்தில் உள்ளவற்றை அதிக வினயத் தோடு வாசித்துவிடடு தலையை அசைத்தபடி
**இதுதானுங்க சரியான மருந்து. நம்ம பிரதிநிதி பலே கெட்டிக்காரருங்க. ஒடனே சங்கதியெல்லாம் நீங்க எழு துங்க, தலவரே. நாளைக்கே நம்ம ஆளுங்ககிட்டே கையொப்பம் வாங்கிருவோம்,?? என்றான்.
**என்ன சொல்லி வாங்குவீங்க முத்தையா??? *ஏன், ஒத்துமைக்குனு சொல்லி வாங்குவோம்: அதெல்லாம் என் கையில விட்டிருங்க,** என்றான். -
பின் ராமலிங்கம் தோட்டத்தில் காய்கறி போட ஆரம் பித்ததைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தபோது மனைவி யின் நிலை பற்றி சொல்லவில்லை. ஆனால் இந்தச் செய்தி யைக் கேட்ட நண்பர்கள் சந்தோசப்பட்டார்கள். பத்துச் சீட்டு கொடுக்கப்பட்டவன் காய்கறித் தோட்டம் போடுவது புதுமை. இது எல்லோரையும் கட்டாயம் சிந்திக்கவைக்கும் என்பது அவர்களுடைய அபிப்பிராயம். -,
*நீங்க தோட்டம் போடுறதே பெரிய கங்காணியும் கணக்குப்புள்ளேயும் ரொம்ப யோசிப்பாங்க. பேச்சு கட்டாயம் தொரைக்கும் போகுங்க,’’ என்றான் முத்தையா. 'போகட்டும். மற்ற சங்க திய இன்னிக்கு ரவ்வு எழுதி முடிக்கிறேன். நாளயே கைடொப்பம் எடுக்கனும்,?? என்றான்.
அேதுதான் முதலே சரின்னு சொன்னேனே தலவரே? அன்று இரவு சாப்பாட்டுக்குப் பின் பெரியம்மாள், கமலம், அலமேலு மூவரும் வெகுநேரம் சமையல் பகுதியில் பேசிக்கொண்டிருந்தார்கள். ராமலிங்கம் விளக்கு வெளிச் சத்தில் எழுத்தும் கையுமாக இருந்தான். மற்றவர்கள் பேச்சில் சோர்ந்து படுத்த பின்னரே வேலை பூர்த்தியடைந் தது. எழுதியவற்றை இருமுறை வாசித்துவிட்டுத் திருப்தி யோடு படுத்தான்.
முதல்நாள் போல் மறுநாளும் ராமலிங்கமும் கமல மும் காய்கறித் தோட்ட வேலையில் ஈடுபட்டார்கள். கால் ஏக்கர்
52

விஸ்தீரமான அந்த இடத்திற்குள் பூஞ்சி, கோவா, அவரை, கத்தரி இவைகளை பயிர் பண்ண பாத்திகளையும் குழிகளையும் பகுதி பகுதியாக அமைத்தார்கள்.
அவர்கள் இருவருக்குமிடையில் வளர்ந்த மெளனத்தில் மூன்றாவது உயிர் நிழல் போல் கண்ணுக்குத் தென்படாமல் இருப்பதைத் தெரிந்ததில் இன்பம். ஆணோ பெண்ணோ தெரியவில்லை. பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டும். குழந்தை எந்த இடத்தில் பிறக்குமோ! இதை நினைக்கும் போது ராமலிங்கத்தின் உள்ளத்தில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது. நான் என்ன பாவம் செய் தேனோ, பிறக்கும் தலைமுறைக்கெல்லாம் இது கிராணம் போல் பத்திப் பிடிக்க வேண்டுமா என்று எண்ணி வெதும் பினான். இந்த சிந்தனைகளை மனைவியுடன் அவன் பகிர்ந்து கொள்ளவில்லை. மெளனம் பெரும் பாறைக்கல் போல் அவன் மனதை அழுத்தியது.
மாலை மயங்கி இருள் படலம் லயங்களைக் கப்பிக் கொண்ட பின்னர் ராமலிங்கத்தின் சகாக்களான முத்தை யாவும் மற்றும் நம்பிக்கைக் குப் பாத்திரமான இருவரும் ராமலிங்கம் எழுதிய மகஜரை எடுத்துக் கொண்டு வீடு வீடாய்ப் போய் குடும்பத் தலைவர்களிடம் ஒப்பம் வாங்கி
னார்கள்.
**இது எதுக்கு??? **ஒத்துமைக்கு.?? அதற்கு மேல் யாரும் பேசவில்லை. இப்படி வீடு வீடாய்ப் போய்க் கையொப்பம் எடுப்பதைக் கண்ட பெரிய கங்காணியின் ஆதரவாளர்கள் ஓடோடிச் சென்று விசயத்தை பெரியசாமியிடம் சொன்னார்கள்.
**கையாலே ஆகாத பயல் என்னமோ செய்றான்னு ஏன் பயப்படனும், சும்மாயிருப்பா? என்றார்.
இவ்வளவு தைரியமாய் பெரிய கங்காணி பேசியதைக் கேட்டவர்கள் தங்கள் லயன்களுக்குத் திரும்பினார்கள்.
*என்னாடி ஒத்துமை, கடுதாசியில் கையொப்பம் போட்டாப்புலே சாச்சிப்புடுவியோ,** என்று வசை பாடினார்கள்.
53

Page 33
இதற்கு ராமலிங்கத்தின் கட்சிக்காரர்கள் உடனுக்குடன் பதில் கொடுக்கவே செய்தார்கள்.
*எங்க தலவருக்கு சாய்க்கக் தெரியாது. பெரிய கங்காணிக்கும் அவுக அப்பனுக்கும் ஆப்பு வைக்கத் தெரியும்?? என்றார்கள். *
தாராளமாய் வீடு வீடாய்ப் போய் கையொப்பம் எடுப்பது, ஒத்துமை சேர்ப்பது போன்ற புதிய நடவடிக் கைகள் தொழிலாளர்களை அழுத்திக் கொண்டிருந்த ப்ாரத்தை அசைத்து விட்டன. தோட்ட அதிகார வர்க்கத் தின் ஆட்சி சந்து, பொந்து, மூலை, முடுக்கு எல்லாம் வியா பித்திருந்ததை புகை முட்டியடித்து பெருச்சாளி வெளிக் கிளம்புவது போல் வெளியானது. லயங்களில் தொழிலாளர் கள் பயமில்லாது இரவிலும் கூட நடமாடினார்கள். பயம் எனும் வார்த்தை நகருவது போலிருந்தது.
கையொப்பமிடும்போது மகஜரில் என்ன எழுதியிருக்கிற தென்று எவரும் வாசிக்கவில்லை.
ஒற்றுமையின் பெயரிலும், தங்களுக்கு நியாயம் பிறக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலும் ஒப்பமிட்டார்கள்.
" இரவு பதினொரு மணிக்கெல்லாம் இந்த வேலை முடிந்ததும் மகஜர் ராமலிங்கத்தின் வீடு வந்து சேர்ந்தது குடும்பத் தலைவர்களின் பெயர்களை எண்ணிப் பார்த்து திருப்தியடைந்தான். கவலையும் சந்தோசமும் மாறி மாறி அவன் மனதை அழுத்தின. அவன் படுத்துத் தூங்கும் போது இரவு ஒரு மணியாகி விட்டது.
அடுத்த நாள் ராமலிங்கம் ஜில்லா காரியாலயத்துக்குப் போய் மகஜரை பிரதிநிதியிடம் சேர்த்தான். அவர் பல தடவை மகஜரை வாசித்து அதிலுள்ள கையொப்பங்களை பரிசோதித்து திருப்தி அடைந்தார்.
ராமலிங்கம் மகஜரில் கையொப்பம் எடுக்கும்போது நடந்த சம்பவங்களைப் பிரதிநிதியிடம் சொன்னான். அவற்றை ரசனையோடு கேட்டு சந்தோ சப்பட்டார்
பிரதிநிதி.
54

*ராமலிங்கம், இந்த மகஜர் நம்பிக்கையின் பெரும் வாளாயுதம். இல்லை ராமபாணம். உங்களுக்கு ஆபத்து வரும்போது இதை எடுத்து சொலட்டிடுவோம். அப்போது தோட்டத்துரையின் சைனியங்கள் எல்லாம் சாம்பலாய்ப் போகும். புரிகிறதா???
புேரியுதுங்க. இது நம்ம பெரிய த ல வ ருக்கு தெரியுங்களா???
'அவர் விசாரணைக்கு வரும்போது சொல்வோம். இது நமக்கு அனுகூலமாயிருக்கும் என்ற நம்பிக்கையில்தான் செய்தேன். அதோடு இந்தப் பெரிய கங்காணி முறை அநாகரிகமான உளுத்துப்போன முறை. இதை ஒழித்துக் கட்டாதவரை தொழிலாளர்களுக்கு விமோசனமில்லை. உங்கள் தோட்டத்தில் நடக்கும் அட்டூழியங்கள் இதற்கு உதாரணம். பெரிய கங்காணி உங்கள் மாமன். எந்தக் காரணத்தால் உங்களை எதிரியாக நினைத்துப் பார்க் கிறார். 92
*தோட்டத்திலே நடக்கிற அநியாயங்களைக் கேட்பது நான் தாங்களே.??
*சரியான வார்த்தை. துரையால் செய்ய முடியாத கேவலமான வேலைகளைச் செய்ய இவர்களைக் கையாட் களாக வைத்திருக்கிறார். இவர்களைத் தொலைத்துக் கட்டிவிட்டால் அவன் கொட்டம் அடங்கும்?? என்றார் பிரதிநிதி.
தொழிலாளர்களைக் கங்காணி பிரட்டிலிருந்து துரை பிரட்டுக்குப் போட்டால் அவர்கள் தலையில் ஏறிக்கொண் டிருக்கும் பெரும் சனியன் தொலைந்துவிடும். அதோடு, தன் தாய் மாமன் பெரியசாமியும் தொலைந்து போவார். அவருக்குப் பின் தொழிலாளர்கள் சுயேட்சையாக வாழ் வார்கள், என்றாலும் பெரிய கங்காணிக்குப் பின் அவர் தொழிலாளர்களுக்காக செய்த காரியங்களை சங்கம் தான் செய்யும் என்றெல்லாம் சில வினாடிகள் ராமலிங்கம் நினைத்தான். அதே சமயத்தில் தன் மாமன் என்ன செய்வார்; மாமி என்ன செய்வாள். தோட்டம் விட்டுப்
55

Page 34
போகும்போது ஒத்தை தப்பு அடித்துப் போகச் சொல்வார் களோ, தோட்டத்தில் அத் த  ைன பேரும் அவருக்கு சொந்தக்காரர்கள்தான். ரத்தபாசம் இங்கு தலையிடாது என்று தனக்குள் சமாதானம் செய்து, கொண்டான்.
இவனது முகக்குறியைக் கவனித்த பிரதிநிதி; *என்ன ராமலிங்கம் பலத்த யோசனை போலிருக்கே?* என்றார்.
**தொரை பிரட்டைப் பத்தி நினைச்சனுங்க”* என்றான்.
'தொழிலாளர்களுக்கு விடுதலை சில சமயம் பெரிய கங்காணி ரோட்டுக்குப் போனபின் வரலாம்.??
*தொழிலாளர்கள் பத்துச் சீட்டைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்க இட்மில்லாது, தோட்டம் தோட்டமாய் அலைந்தபோது இந்தக் கல்நெஞ்சர்கள் இரங்கியதுண்டர ராமலிங்கம்? இந்த அநியாயங்களை நினைக்கும்போது, எனக்குக் கடவுள் மேல்கூட நம்பிக்கையில்லை.??
'நீங்க சொல்றது உண்மைங்க, எங்க விசாரணை" எப்போ வருங்க???
*பதினஞ்சாம் தேதிக்குள் ஏற்பாடு செய்வோம் பயப்பட வேண்டாம்,?? என்றார் பிரதிநிதி.
ராமலிங்கம் ஜில்லாக் கமிட்டியை விட்டுப் புறப்பட்டான் எப்போதும் போல் கடைவீதியில் தோட்டப் பகுதி ஆட்கள் கூட்டம் வருவதும் போவதுமாயிருந்தது. இந்தக் கும்பலில் நீலகிரி ஆட்களை அவன் காணவில்லை.
8
பிரதிநிதி ஏற்கனவே சொல்லியபடி அட்டன் தொழில் கமிசனர் காரியாலயத்தில் பதினைந்தாம் தேதி முற்பகல்
56

விசாரணை நடக்கவிருந்தது. ஒன்பதரை மணிக்கெல்லாம் பெரியசாமி எட்கங்காணி, ஒண்டிமுத்து கணக்கப்பிள்ளைச ஆகியோர் அவர்களுடைய கட்சிக்காரர்கள் சகிதம் தோட்ட லொறியில் போய்ச் சேர்ந்தார்கள். முருகப்பன் வரவில்லை. ராமலிங்கமும் அவன் சகாக்களும் கோச்சியிலும் பஸ்ஸிலும் வந்து சேர்ந்தனர். தொழில் கமிசனர் காரியாலய முகப்பு: வாசலில் என்றுமில்லாத பெருங்கூட்டம்.
ஒன்பதே முக்கால் மணிக்கு ராஜன் ஜில்லா பிரதி நிதியோடு காரில் வந்து இறங்கினார். தொழிலாளர்கள் காந்தத்தால் இழுக்கப்பட்டவர்கள் போல் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அந்த வேளையில் நீலகிரி தோட்டத்து ையும் துரைமார் சம்மேளனச் சட்டக் காரியதரிசியும் வந்திறங் கினர். ராஜனுக்கு வந்தனம் தெரிவித்து விட்டு உள்ளே சென்றனர்.
உதவிக் கமிசனர் தலைமையில் விசாரணை ஆரம்ப" மாகியது. ராமலிங்கத்துக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட காரணத்தை ராஜன் கேட்டார். **காரணம் ஏற்கனவே கொடுத்திருக்கிறோம்?? என்று சற்று ஆக்ரோசத்தோடு, துரைமார் சம்மேளனச் சட்டக்காரியதரிசி ஆரம்பத்தில் G3 usa) Tsotri.
*திரும்பச் சொல்லவேண்டிய கட்டாயமில்லாத போதிலும் சொல்கிறேன். ராமலிங்கத்தின் பழைய சரித்திரம்: அவ்வளவு கவர்ச்சிகரமானதல்ல என்பது உங்களுக்குத் தெரியும். இதற்குமுன் நமது சம்மேளனத்தில் அங்கம் பெற்ற இரண்டு தோட்டங்களிலிருந்து ராமலிங்கம் பத்துச்சீட்டுக கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவன். பெரும் வாய்க் காரன். இவனை எந்தத் தோட்டத்திலும் பதியவில்லை. சொந்தக்காரன் கஷ்டப்படுகிறான் என்று பரிதாபப்பட்டு பெரியசாமி எட்கங்காணி இவனைப் பதியவைத்தார். இவன் கல்யாணத்துக்குப் பணம் கொடுத்து உதவினார். சுகவீன மான இவன் தாய்க்கு வைத்தியம் செய்ய பணம் கொடுத்து வருகிறார். ராமலிங்கத்தின் தம்பி பழனியப்பன் பெரும் காடையன். தோட்டத்தில் வேலை செய்யும் ஒருத்தியை
57

Page 35
அடித்தான். பெண்களை மிருகம் போல் நடத்துவை
நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.??
இந்தக் கடைசி வர்ர்த்தைகளைக் கேட்ட ராஜன் தொழில் அதிகாரியைப் பார்த்து இலேசாகச் சிரித்தார்.
**ஆம் அந்தக் கார ண த் து க் கா கத் தா ன் பழனியப்பனுக்குப் பத்துச்சீட்டு கொடுத்தோம். அவன் எங்கள் உத்தரவில்லாமல் தோட்டத்துக்குள் வந்தால் ராமலிங்கத்தை வெளியேற்றுவோம் என்ற Ф-и-бöт படிக்கையும் உண்டு. இதைப் பெரிய கங்காணி மூலம் ராமலிங்கத்துக்கு தெரிவித்த பின் லேபர் ரிப்போர்ட் புத்தகத்தில் பதிவு செய்துள்ளோம். சென்ற மாதம் பழனியப்பன் எங்கள் உத்தரவில்லாது தோட்டம் வந்தான். அதற்கு சாட்சி ராமலிங்கம் தான். நிபந்தனையை உடைத் ததற்காக ராமலிங்கத்துக்குப் பத்துச்சீட்டு கொடுத்தோம்.??
*ராமலிங்கத்தின் பழைய சரித்திரத்தை நான் வேறு கோணத்தில் இருந்து தெரிவிக்கின்றேன். அதைப் பற்றி இங்கே விமர்சனம் செய்யவேண்டியதில்லை. ஆனால் ஒரு முக்கிய விசயத்தை நான் தெரிந்து கொள்ள வேண்டும். லேபர் ரிப்போட் பதிவு செய்வதற்கு முன், பெரிய கங்காணி நிபந்தனையின் கருத்தை ராமலிங்கத்துக்கு சொன்னதாகக் கூறப்பட்டதல்லவா???
د9.hلی کک
*பெரிய கங்காணி அதை திட்டமாய் ராமலிங்கத்துக்கு சொன்னது உங்களுக்குத் தெரியுமா???
'அது என் கட்டளை. அதைக் கட்டாயம் செய்திருக்க வேண்டும்,?? என்றார் துரை.
*அதில் எனக்கு சந்தேகம்?? என்றார் ராஜன்.
மெளனம்,
58

*சரி. யாராவது பேசவேண்டும். பழனியப்பன் என்ன காரணத்திற்காக தோட்டம் வந்தான்’ என்று ராஜன் கேட்டார்.
*அதைப்பற்றி நாங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்???
*பேசிக்கொள்வது கூடத் தெரியாதோ?99 *தாய்க்கு சுகமில்லையாம்; பார்க்க வந்தானாம்.?? *சுகமில்லாத தாயைப் பார்க்க வந்ததற்குப் பத்துச் சீட்டு. எவ்வளவு பயங்கரமான நிலை, இது பெரிய அநியாயம்,** என்றார் பிரதிநிதி.
**இப்படிக் கடுமையாக பேச ஆரம்பித்தால், இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் எந்தவித நன்மையும் காண முடியாது.* -
*எங்கள் பிரதிநிதிக்கு தாயின்மேல் அதிகப்பற்று எனவே பழனியப்பன் தாயைப் பார்க்கவந்த காரணத் திற்காக எடுக்கப்பட்ட கடூரமான நடவடிக்கை அவருக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணுகிறது.”*
*தோட்டத்திற்கு வந்ததற்காக என்றால் மிகப்பொருத் தமாக இருக்கும்,?? என்றார் சட்டக்காரியதரிசி.
தோயைப் பார்க்கத்தானே.?? *இருக்கலாம்.?? *ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்பீர்களா..?? *சொல்லுங்கள் மிஸ்டர் ராஜன்.?? 'நீங்கள் குடியிருக்கும் பங்களா சொந்தக்காரரும் உங்கள் தமையனும் மனஸ்தாபம் என்று வைத்துக்கொள் வோம். நீங்கள் சுகவீனமாக இருக்கும்பொழுது அவர் உங்களைப் பார்க்கவந்தால் அதற்காக பங்களா சொந்தக் காரர் உங்களை பங்களாவைவிட்டுப் போகும்படி நோட்டீஸ் கொடுத்தால் எப்படியிருக்கும்.??
59

Page 36
அமைதி
*உங்கள் உதாரணம் அவ்வளவு பொருத்தமாக இல்லை.??
*உண்மை. அவ்வளவு பொருத்தமில்லை என்று உணர் கிறேன். உங்கள் பங்களா சொந்தக்காரர் அவ்வளவு மோச மாக நடந்து கொண்டிருக்க மாட்டார். உங்கள் வேலைக்கும் எந்தவித ஆபத்தும் வந்திருக்காது. அதோடு வேறு பங்களா அமர்த்திக்கொள்ளவும் கஸ்டமொன்றும் வராது. ஆனால் ராமலிங்கத்துக்கு வேலையில்லை என்றால் வீடு இல்லை. வேலை தேடிப்போனாலும் வாய்த்து டுக்காய் பேசுவதால் உங்கள் துரைமார் அவன் பத்துச்சீட்டைத் தொட மாட்டார்கள். எனவே, வேலை கிடைக்கும் வரை அவன் ரோட்டில்தான் இருக்கவேண்டும். பாருங்கள் எங்கள் அவல நிலையை, இந்த நாட்டில் இவ்வளவு பயங்கரமான வாழ்வு யாருக்காவது உண்டா, சரி, பழனியப்பன் தோட்டத்திற்கு வரப் போக இருப்பது உங்களுக்குத் தெரியாதா?’’
*தெரியாது. நாங்கள் கண்டிருந்தால் உடன் பத்துச் சீட்டு கொடுத்திருப்போம்.??
**மறைத்து மறைத்துப் பேசுவதில் என்ன பயன். ராமலிங்கம் தொழிற்சங்க வேலையில் ஈடுபட்டதும் பழனி யப்பன் தோட்டம் வருவதும் தெரிந்துவிட்டது. தாயைப் பார்க்க வந்தால் பத்துச்சீட்டு; அண்ணன் தம்பி சண்டை போட்டுக் கொண்டால் பத்துச்சீட்டு; பச்சைத்தண்ணி மருந்து என்றால் பத்துச்சீட்டு, எத்தனை எத்தனை அற்பக் காரணங்களுக்கெல்லாம் பத்துச்சீட்டு, பத்துச்சீட்டு என்றால் தூக்குமரம் என்று அர்த்தம்,?? என்றார் ராஜன்.
ராஜன் பேசுவதை ஜன்னல் வழியாய் பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் தங்கள் கட்சி திடமாய் எடுத்துச்சொல்லப்படுகின்றது என்று உணர்ந்தார்கள். ராஜன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த தொழில் அதிகாரியும் துரைத் தரப்பினரும் மெளனம் சாதித்தார்கள். கடைசியாய்
60

**ஆம் வேதனையான நிலைதான்," என்றார் தொழில் அதிகாரி.
**சற்று மன்னியுங்கள்,?? என்று சொல்லிவிட்டு சட்டக் காரியதரிசி துரையுடன் அடுத் திருந்த அறைக்குச் சென்றார் பல நிமிசங்களுக்குப் பிறகு இருவரும் வந்தார்கள். ஆசனங் களில் அமர்ந்தார்கள்.
'நல்ல செய்தியோடு வந்திருக்கிறீர்கள் போலும்,22 என்றார் தொழில் அதிகாரி.
*ராமலிங்கம் ஆறு மாதங்கள் தோட்டத்தை விட்டு வெளியில் போயிருந்துவிட்டு வந்தால் பதிந்து கொள் கிறோம்," என்றார் சட்டக் காரியதரிசி.
ராஜன் ஏளனமாப் சிரித்துவிட்டுப் பதில் சொன்னார்.
* , ந்த நிபந்தனையை எப்படி ஏற்றுக்கொள்வது. இதில் நல்லெண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்தக் காலத்தில் ராஜாக்கள் பிரஜைகளை தேசப் பிரஷ்டம் செய்தார்கள். இந்த இருபதாம் நூற்றாண்டில் துரைமார் தொழிலாளரை தோட்டப் பிரஷ்டம் செய்கிறார்கள். இது திறந்த மறியல். பழனியப்பன் தான் எதிர்பாராத விதமாக அவசர நிமித்தம், தன் தாயைப் பார்க்க வந்ததற்கு குடும்பத்தில் எல்லோருக்கும் பத்துச் சீட்டு கொடுப்பது நீதியா? தோ ட் ட ங் களி ல் நடக்கும் உண்மை நிலைமைகள் என்ன? கள்ளு விற்கிறவர்கள், வட்டிக்கு பணம் கொடுக்கிறவர்கள், மாட்டுத் தரகர்கள், பிடவைக் காரர்கள், சூதாடிகள் இன்னும் எத்தனையோ பேர்கள் தோட்டத்திற்குள் வருகிறார்கள், போகிறார்கள். இவர்கள் துரையிடம் உத்தரவெடுக்கிறார்களா? இல்லை. பழனி யப்பன் தன் தாயைப் பார்க்க வந்த பாவத்திற்காக ராமலிங்கத்தை அவர் மனைவியிடமிருந்து பிரிக்க நாங்கள் உடந்தையாக இருக்க முடியாது. இந்த மேசையைச் சுற்றி யிருக்கும் நம்மில் யாராவது மனைவி மக்களை விட்டு ஆறு மாதம் பிரிந்திருக்க சம்மதிப்போமா???
*சமாதானத்திற்காக ஒரு வழி சொல்வோம்.??
6.

Page 37
*ஏற்றுக் கொள்ள முடியாத சமாதானத்தைச் சொன் னிர்கள். தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் இருக்கும் போது அவர்கள் பந்துக்கள் வருவது குற்றம் என்று பத்துச் சீட்டை கொடுப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இதற்கு ஒரு முடிவு தேட வேண்டும். ??
*ஒரு முடிவு காண்போம்,?? என்றார் பிரதிநிதி, *தோட்ட நிர்வாகிகள் மறைமுகமாய் ஏன் இந்த நட வடிக்கையில் இறங்கியுள்ளனர் என்பதற்குக் காரணம் குறிப் பிடுகிறேன். பல வருடங்கள் தோட்டத்தில் பெரிய கங்காணியே சங்கத் தலைவர், அவர் மருமகன் பெரிய கணக்கப்பிள்ளை. சங்கத்திற்குக் காரியதரிசி. மற்ற ஒரு மருமகன் முக்கியஸ்தர். எனவே தொழிலாளர்கள் நன்மைக் காக இவர்கள் பணியாற்றக் கூடிய நிலையில்லை. எனவே ராமலிங்கத்தின் தூண்டுதலால் புதிய முறையில் அங்கத் தவர்கள் சேர்க்கப்பட்டார்கள். இதைத் தவிர்க்கவே ராமலிங்கத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது? என்றும் பிறகு தோட்டத்தில் நடக்கும் கெடுபிடிகள் பற்றியும் சொல்லி விட்டு **இந்தக் காரணங்களுக்காக எங்கள் சங்கத்திலுள்ள அங்கத்தவர்கள் துரை பிரட்டு கேட்கிறார் கள். இந்த நோட்டீஸை உங்களுக்குக் கொடுக்கிறோம்?* என்று தொழில் அதிகாரி, துரை, பெரிய கங்காணி ஆகியம் மூவருக்கும் நோட்டீஸைக் கொடுத்தார் ராஜன்.
எதிர்பாராத இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
*சட்டப்படி ஒவ்வொரு தொழிலாளியும் எங்கள் ஆபிசுக்கு வந்து நோட்டீஸ் கொடுக்க வேண்டும்,?* என்றார் சட்டக் காரியதரிசி.
அேதை வரவேற்கிறேன், நோட்டீஸ் கொடுக்கும் நாளைச் சுணக்கமின்றி ஏற்படுத்த வேண்டும். தொழில் இலாகா பிரதிநிதியும் அங்கு பிரசன்னமாக வேண்டும் பின்னால் குற்றச்சாட்டுகளை நன்கு அலசிப் பாருங்கள்.?
62

ஒருவரும் பேசவில்லை. ராஜன் தொழில் அதிகாரிக்கு நன்றி சொல்லிவிட்டுப் பிரதிநிதியோடு புறப்பட்டார். மற்ற வர்கள் எல்லோரும் பேசாது வெளியேறினர்.
பெரியசாமி எட் கங்காணி தலை விரி கோலமாய்: ராஜனைப் பின் தொடர்ந்து ஓடினார்.
*ஐயா, என்ன இப்படி செஞ்சுட்டீங்க. தொர பெரட்டுக் குப் போயிட்டா புள்ளே குட்டிகளே கூட்டிக்கிட்டு எங்கிட்டு: போவேனுங்க.??
அவர் மீசை நடுங்கியது. மூக்கிலிருந்து ஜலம் கொட்டியது. குரல் கம்மிவிட்டது. பெரியவர் கணப்பொழுதில் சுருங்கி விட்டார், தலை லேஞ்சை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். தொழிலாளர்கள் ஒருவரை யொருவர் பார்த்தபடி சுற்றி நின்றார்கள்.
**எனக்கு தள்ளாத வயசாச்சுங்க. ஒரு சொத்து, சுகம், கடை கண்ணி நான் தேடலிங்க. இந்த முந்நூறு ஆளும் எனக்கு சொந்தக்காரங்க. நீங்கதான் எனக்கு வழி சொல்ல னும். எனக்கு யாருமில்ல, சார்??
ராஜன் நிலைமையை அறிந்து துக்கத்தோடு தலையை ஆட்டிக் கொண்டு நின்றார். ராமலிங்கம் தன்னையறியா மலேயே முகத்தைத் துடைத்துக் கொண்டான்.
'என்ன ராமலிங்கம், கண் கலக்கமா??? என்றார் பிரதிநிதி.
*பெரியவர் என் சொந்த மாமனுங்க.99 'அதெல்லாம் அவர் முன்னே யோசிச்சிருக்க வேண்டும்,?? என்றார் பிரதிநிதி,
*ரொம்ப கஸ்டமான நிலை. சூடாய் ஏதும் சொல்லாதீர்கள்,?? என்று ராஜன் பிரதிநிதிக்கும் ஆங்கிலத்தில் கூறினார்.
'பெரியவரே கவலைப்படாதீர்கள். ராமலிங்கத்தின் கேஸை தொழிற்கோர்ட்டு விசாரணைக்கு உடனே போட
63

Page 38
முடிவு. அப்போது உங்கள் பிரச்சினையும் கட்டாயம் கவனிப்போம். எல்லாம் உங்கள் தொழிலாளர் கையில் இரு “கிறது. கவலைப்படாமல் போய்வாருங்கள் ?? என்று சொல்லிவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டார்.
துரைக் கட்சிக்காரர்களும், ஒண்டிமுத்து கணக்கப் பிள்ளையும் லொறியில் ஏறிப் புறப்பட்டார்கள். பெரியசாமி எட் கங்காணியும் அவரது நெருங்கிய பந்துக்களும் ரெயில்வே ஸ்டேசனுக்கு நடந்தார்கள். ராமலிங்கமும் அவன் நண்பர்களும் வேறு கோஷ்டியாய்ப் பிரிந்து :புறப்பட்டார்கள்.
9
நீலகிரிதோட்டம் பலருக்கு அமர்க்களமாகவும் சிலருக்கு இடுகாடாகவும் மாறிவிட்டது. "தொரே பெரட்டு, தொரே பெரட்டு, தொரே பெரட்டு?? என்று பெரும் கொக்கரிப்பு. வேலை ஸ்தலங்களில் வசை, ஸ்டோரில் குசு குசு பேச்சு, -ல பங்களில் கும்மாளம். சந்து, பொந்து, மூலை, முடுக்கு களிலெல்லாம் இதே பேச்சு. “பெரிய கங்காணி ஆட்டம் அடங்கிப்,ோச்சு, கணக்கப்புள்ளே கொட்டம் ஒடுங்கிப் போச்சு, பந்தக்காரன் ஒழிஞ்சான்? என்று எங்கும் எக்களிப்பு. சென்ற ஒரு மாதமாய் லேசு வேலை செய்து கொண்டு சம்பளம் எடுத்தவர்கள் பெரிய கங்கானி வீட்டுக்கும் கணக்கப்பிள்ளை வீட்டுக்கும் துக்கம் தெரிவிக்க தலை தெரியாமல் இருட்டில் போனார்கள். முருகப்பன் போன இடம் தெரியவில்லை. பெரியசாமி எட் கங்காணி முதல் நாள் பட்ட அதிர்ச்சியால் வேலைக்குப் போக வில்லை. *துரை பிரட்டு’ என்ற இரண்டு வார்த்தைகள் அவர் மானம், மரியாதை அதிகாரம் எல்லாவற்றையும் ஒரு நொடியில் நிலைகுலையச் செய்து விட்டன. தன் ஆபிஸ் அறையின் ஜன்னலை மூடிவிட்டு நாற்காலியில் அமர்ந்தபடி விதியை நினைத்துக் கொண்டு அரைப்பட்டினி
64

யோடு மெளன விரதம் பிடித்தார். ஆனால் காமாட்சி
யம்மாள் அவருக்குத் தெம்பு சொல்லி உணவு உட்கொள்ளச் செய்தாள்.
வழக்கம்போல் அன்று மாலை ஒரு கூட்டம் கூடியது. வேலைக்காட்டில் தொழிலாளர்கள் பேசும் வசைகளைப் பொறுக்க முடியாத கங்காணிகள் ஆவேசத்தோடு பேசி னார்கள்.
பேய்புடிச்ச மாதிரி ஆம்பளேயும் பொம்பளேயும் ஆடுறாங்க, ஒரு பேச்சு சொல்லுங்க. குதிங்காலு நரம்பே வெட்டிக்கிட்டு வாரனுங்க.??
நோய்புடிக்கத் தெரியாத பயல் இப்படி செஞ்சிட்டா னுங்களே. *
*நாக்கே புடுங்கிகிட்டு சாகலாமுனு வருது.??
இ டி விழுந் த வாழை மரத்தைப்போல் சாய்வு நாற்காலியில் துவண்டு கிடந்த பெரியசாமி காதில் அவர்கள் பேச்சு ஏறவில்லை.
திரைச்சீலையைப் பிடித்துக் கொண்டு அமைதியோடு நின்ற காமாட்சியம்மாள், ‘நமக்கு சொல் புத்தி வேணும், துல்லாட்டி சொயபுத்தி வேணும். ரெண்டையும் சாமி நமக்குக் குடுக்கலியே?? என்றாள்.
ெேகட்ட காலத்துக்கு எல்லாம் கெட்டதுங்க,22 என்றான் ஒரு கங்காணி.
'அதெல்லாம் சொல்லாதே தம்பி. இனியாவது சமாதானமாயிருக்கப் பாருங்க. நா இன்னமும் சொல்றேன். வெள்ளேக்காரனும் சரி செவத்திலே ஒட்டின சுண்ணாம்பும் சரின்னு சொல்லுவாங்க. அது சரியாப் போச்சு. அவனுக் காக நம்ம சொந்த இனத்தே வஞ்சிச்சோமே இப்ப என்ன ஆச்சு,22 என்றாள் காமாட்சியம்மாள்.
'இனி என்ன செய்யச் சொல்லுறீங்கம்மா?22
வீ-) 65

Page 39
*சமாதானம் செய்ய வழி பண்ணுங்க. முருகப்பன கூப்பிட்டு ராமலிங்க தம்பிகிட்டே பேசச் சொல்லுங்க,**
**முருகப்பன் இருக்கிற எடம் தெரியலியே.?? **அம்மாளுக்கு சொல்றேன். புது வட்டகொடே பெரிய கங்காணிக்கு கரச்ச வந்தப்போ, மாத்தளை கையிலே இருந்து ஒரு கமந்தரகாரனே கொண்டாந்து ஒரு வேலே செஞ்சதும் எல்லாம் டக்குனு நின்னு போச்சுங்களாம்.”*
*ரொம்ப பேருபோன ஆசாமிங்க. நம்ம பெரிய கிளாக்கர் கூட ஒரு சாமான் இடுப்பிலே கட்டி இருக்கிறாரு, ரொம்ப் ரகசியமான சங்கதிங்க.??
*அந்த மனுசன் மாத்த்ள பக்கமா??? என்று பெரிய சாமி கேடடார்.
**ஆமாங்க. பச்சே நூலுகாரனுங்களாம். பெரிய தேவ தைய புடிச்சி உச்சாட்டம் செய்வானுங்களாம். அவன் மந்தரத்தே யாராலையும் வெட்ட முடியாதுங்களாம். ரவைக்கே போய் கொண்டாரனுங்க,** என்றான் மற்ற கங்காணி.
**நல்லது. ரவைக்கே பதினொரு மணி கோச்சியில பொறப்படு,?? என்றார் பெரியசாமி.
பெரிய கங்காணிகளுக்கெல்லாம் மந்திரத்தில் பெரும் நம்பிக்கையுண்டு. அவர் இடுப்பிலும் ஒரு தங்க தாயித்து மறைந்து கிடந்தது. அதன் சக்தி குறைந்து வருவதாய் அவர் அபிப்பிராயப்பட்டார். எனவே ஒரு கெட்டிக்கார மந்திரவாதியை பிடிக்க வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்தார்.
காமாட்சியம்மாளுக்கு மந்திரத்தால் மாங்காய் விழும் என்பதில் சற்று சந்தேகம். மந்திரத்திற்கும் மாயத்திற்கும் செலவிட்ட பணத்தைக் கொண்டு ஒரு தோட்டம் வாங்கி யிருக்கலாம் என்பது அவள் அபிப்பிராயம்.
அந்த சமயத்தில் துரை பங்களா காவற்காரன் ஓடி வந்தான். அவனைக் கண்டு எல்லோரும் திடுக் கிட்டனர்.
66

*ஒங்களெ தொர ஒடனே வரச் சொல்லுராங்க,22 என்றான்.
*கோவமாயிருக்காரா???
*என்னமோ கத்திக்கிட்டு கெடக்கிறாரு. பெரிய கிளார்க்கரே வாயிலே வந்தபடி என்னென்னமோ இங்கிலீசுலே பேசுராங்க,** என்றான்.
பூசை அறைக்குள் நுழைந்து ஒரு கும்பிடு போட்டு விட்டு, குழம்பிய மனதோடு ஆபிசுக்குப் புறப்பட்டார். ஆபிசை அடையும்போது வியர்த்து அசந்து போய்விட்டார். தான் எதிர்பார்த்ததற்கு மேல் துரை விஸ்வரூபத்தில் இருந்தார். ! ኋ "
"சலாம் சார்,?? என்றார் பெரியசாமி.
ெேபரியசாமி நமக்கு மிச்சம் பொய் சொல்லியாச்சு இப்ப ராமலிங்கம் மிச்சம் பெலம். தெரியும். நம்ம தோட்டம் பேர் கெட்டாச், கண்டுரோல் தொரை மூஞ்சி நமக்கு பாக்க முடியா. பெரிய வெக்கம். இப்ப நமக்கெல்லாம் தெரியும். நூத்திபத்தொன்பது ஆள் முதல் தேதி துை பெரட் போடுவேன். கோட் வழக்கு போட் ராமலிங்கம் ஒடன் வெளியே போடுவேன் தெரியும் பெரியசாமி.
அவர் நாக்கு பின்னியது.
*பேசவாண்டாம் பெரியசாமி. ஒன்மகன் பெரணிகாரன் பெரிய கிளாக் சொல்லியாச்சு. அவனுக்கு ஆபிஸ் வேலை
பில்லே,**
*கிளார்க்கர் ஐயா சமயம் பாத்து களுத்தே அறுத் திட்டீங்களே..??
கிளார்க் பேசவில்லை.
**தொரைகளே ஒரு வார்த்தை. எங்க தாத்தா இந்த தோட்டத்துலே கோப்பிப் போட்டார். எங்கப்பா தேயிலே போட கூனியடிச்சாரு, அதுக்குப்புறகு எவ்வளவு காலம்
67

Page 40
கம்பனிக்கு சம்பாரிச்சு கொடுத்தேன். காட்டே அழிச்சி தோட்டம் உண்டாக்கினது என் குடும்பம். இப்ப என்னே பாருங்க, ஒங்களே நம்பி நா என் ஆளுகளே கூடப் பகைச்சேன், சார்.”*
ேேசும்மா பேசவாண்டாம் பெரியசாமி.??
'எல்லாத்துக்கும் கடவுள் இருக்கிறாரு தொரைகளே. நாளக்கி நான் ராசனைக் கண்டு பதில் கொண்டாந்துட றேன். அதுவரைக்கும் எனக்கு ஒதவி செய்யுங்க.??
ேேராமலிங்கம் மேல் வளக்கு போட்டு வெளியே போடுவேன், சொல்.”*
துரை எழுந்து உள்ளே போனார்.
பெரியசாமி வீட்டை நோக்கி நடந்தார். நடக்க முடிய வில்லை. நிலை குலைந்து விட்டது. எண்பது வருடம் பாட்டன் காலத்தில் இருந்து பெருமையோடு வாழ்ந்த வாழ்க்கை இமைப் பொழுதில் சாம்பலாய்ப் போய்விட்டது. நிதானமாய் சிந்திக்க முடியவில்லை. பொறி கலங்கிய நிலையில் எதிரில் வருகிறவர்கள் கூடத் தெரியாமல் குனிந்த தலை நிமிராமல் நடந்தார்.
ஒவ்வொரு தொழிலாளியும் தொழில் இலாக்கா அதிகாரி முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அதற்குப் பின் விசாரணை முடிந்துதான் முடிவு செய்வதென்பதற்கு என்ன வாகியது. முதல் திகதிக்கு துரை பிரட்டு, மகனுக்கு வேலை யில்லை, ராமலிங்கத்தை உடன் வெளியே போட கோர்ட் வழக்கு. இதற்குக் காரணம் யாராயிருக்க முடியும். இந்த விதமான பயங்கர நிலையை பெரியசாமி கனவிலும் எதிர் பார்த்ததில்லை. பெரிய கிளார்க்கரும் தனது மருமகன் ஒண்டிமுத்து கணக்கப்பிள்ளையும் சேர்ந்துதான் இந்தச்சதி செய்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வநதார். ஒண்டிமுத்து மனப்பால் குடிப்பது பற்றி ராமலிங்கம் சொன்னது நிசமாகி விட்டது. போக்கிடமில்லாது திரிந்த ஒண்டிமுத்துவைக்
68

கொண்டு வந்து ஆதரவு கொடுத்து ஆளாக்கியதற்கு இதுவா கைமாறு, என்று நெஞ்சைத் தடவிக் கொண்டு நடந்தார்.
முகில் கூட்டம் பந்தி பந்தியாய் கணவாய் வழியாய் எங்கும் பரவியது. குளிர்காற்று விசம்போல் சுரந்து பரவியது. மாலை மயங்கி இருள் படர்ந்தது.
பெரியசாமி வீடு வரும்போது விளக்கு வைத்தாகி விட்டது. காமாட்சியம்மாளும் அவர்களது நெருங்கிய பந்துவான பழனி மாமாவும் மாத்திரம் கவலையோடு வழியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெரியசாமி வந்ததும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். நிலைமையைப் புரிந்து கொண்ட காமாட்சியம்மாள்;
**குடிக்க ஏதாவது கொண்டாறேன்,?? என்று பின் கட்டுக்குப் போனாள்.
பெரியசாமியால் எதைச் சொல்வது, எதைச் சொல்லக் கூடாது என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. அப்போது காமாட்சியம்மாள் இருவருக்கும் தேனீர் கொண்டு வந்தாள்,
*என்ன இப்புடி இருக்கிறீங்க??? என்றாள். 'மாப்புள்ளே, தொரே என்ன சொன்னாரு??? என்று பழனி மாமா கேட்டார்.
*என்னத்தே சொல்ல. ராமலிங்கத்தே வெளியே போட கோர்டுல வழக்கு போடுவாராம். தம்பி சிவனையா வுக்கு வேலையில்லே. முதல் தேதி நூத்தி பத்தொன்பது ஆளும் தொரே பெரட்டு.??
அதற்கு மேல் அவருக்கு பேசமுடியவில்லை. காமாட்சி யம்மாள் திகைத்து மூச்சுவிட முடியாமல் சிலைபோல் நின்றாள்.
*மாப்புள்ளே, அழியாத கோட்டைக்கி ஆவத்து வந்திரிச்சு. கடவுள் கைவிட மாட்டார். அந்த ராமலிங்கத்தை கூப்பிட்டு நீ பேசு அம்மா. ஆவத்துக்குப் பாவமில்லே. ஒன்
69

Page 41
மொகத்துக்காக ஏண்டதே செய்வான். அவன் துடிக்காட்டி யும் சொந்த ரத்தம் துடிக்கும்,?? என்றார்.
**நல்லது பெரியப்பா?? என்று சொல்லிவிட்டு கணவனைப் பார்த்து, **நீங்க தொரைக்கி என்ன சொன்னிங்க,22 என்றாள்.
**கண்டுரோல் வந்து நோட்டீஸ் எடுக்கோனும். ராஜன் தலவர்கிட்டே பேசப்போரமின்னு சொன்னேன்.”*
'தொரே வதல் சொல்லலயா???
*ராமலிங்கத்தே வெளியே போடப்போறதா சொல் லுன்னாரு.??
*பாத்தீங்களா பெரியப்பா வெள்ளெக்காரன் மகுடியே அதெல்லாம் நமக்குத் வேண்டாம். அரசனே நம்பி புருசனே கைவிட்ட மாதிரிதான் நம்ம நிலமே. வெள்ளக்காரன் ஒரவு இப்பவாவது நமக்கு தெரியனும். இனி மந்தரமும் மாயமும் பலிக்காது. ஏதோ புத்தியே கடன் கொடுத்திட்டோம். ஒண்டிமுத்து நமக்கு வெனையா இருக்கிராருன்னு அந்த ராமலிங்கம் தம்பி முந்தியே சொன்னுச்சு.??
*அவன் புத் திசாலி. எல்லாம் தெரிஞ்சவன். அவன் தான் இனி நமக்கு ஒதவி,** என்றார் பழனி மாமா.
*பொழுது விடியட்டும் கூப்பிட்டு பேசுறேன். பெரியப்பா. சரி ரவைக்கியிருந்து சாமிமேலே கொஞ்சம் படிங்க. நம்மலே புடிச்ச தோசமாவது வெலகட்டும்,”* என்றாள்.
அப்போது பெரியசாமியின் மகன் சிவனையா வீடு வந்தான். வயது இருபத்துநாலு தானிருக்கும். தாயைப் போன்ற சாயல். ஆங்கிலப் பாணியில் வெள்ளை சூட் கறுப்பு சப்பாத்து கழுத்துப் பட்டியோடு காணப்பட்டான். யெளவனத்தின் செழுமை அவன் முகத்தில் தங்கி யிருந்தது.
* என்னப்பா நடந்திச்சு???
70

*ஆபிசிலே நடக்கிற சங்கதி என்னாலே வெளியே போகுதாம். பெரிய கங்காணிக்குச் சொந்தக்காரன் ஆபிசிலே இருக்கிறது முறையில்லேண்ணு கிளார்க்கர்தான் சொன்னது,** என்றான்.
*சரி வீட்டே விட்டு எங்கிட்டும் போகாதே. இந்த அநியாயக்காரப் பய ஆபிசு வேலை நமக்கு வேண்டாம்? சரி சும்மா யோசிச்சுகிட்டு இருக்காமே காலே கையே கழுவிட்டு பூசே பண்ணுங்க. சாப்பிடலாம். ஒடல்லே உயிரு இருக்கிறவரை எதற்கு அஞ்சனும், எந்திரிங்க, மாப்புள்ளே எந்திரிங்க,** என்றார் பழனிமாமா.
பெரிய சாமி தன் துணைவியின் பெருமையை அப்பொழுது தான் உணர்ந்தார். மலை குலைந்தாலும் மனம் குலையாத காமாட்சியம்மாள் ஆபத்து வேளையில் தன் பக்கத்தில் இருப்பது தெய்வத்தின் அனுகூலம் என்று நினைத்தார், உடன எழுந்து கால் கை சுத்தம் செய்து கொண்டு பழனிமாமா சிவனையாவோடு பூசையறைக்குப் போய் முருகப் பெருமானுக்கு தூப தீப ஆராதனை செய்து கரம் கூப்பினார். “ஆபத்து துக்கம், துயரம் அனைத்துக் கும் உன் பாரம் அப்பனே!?? என்று ஒப்புக் கொடுத்துவிட்டு சாப்பாட்டறைக்குப் போனார்கள்.
காமாட்சியம்மாள் அன்போடு பரிமாறிய பதார்த்தங் களை மெளனமாய்ச் சாப்பிட்டார்கள். மனதில் ஓடும் வெள்ளப் பெருக்கு அவர் உணர்ச்சிகளை எங்கோ அடித்துக் கொண்டு சென்றது.
சாப்பாட்டிற்குப் பின் பூசையறைக்கு முன் அமர்ந்து முருகன் மேல் தனக்குத் தெரிந்த பாக்களைப் பழனி மாமா பாடினார். **செந்தில் குமர வேலுண்டு நமக்கென்னன் ஆனாலும் செந்தில் குமரவேலுண்டு?? என்ற அடிகள் பெரிய சாமியின் உடலையும் உள்ளத்தையும் அள்ளிப் பருகுவது போலிருந்தது.
71

Page 42
10
ராமலிங்கத்தின் வீடு சுடுகாட்டு அமைதியில் மூழ்கி யிருந்தது. கமலம் முகம் காய்ந்து, உடல் சோர்ந்து வாடிக் களைத்துப் போய் காணப்பட்டாள். ராமலிங்கத்தின் முகத்தை அடிக்கடி ஏக்கத்தோடு பார்த்துக் கொள்வாள். அந்தப் பார்வையில் எத்தனையோ கேள்விகள், எத்தனையோ துக்கம், எத்தனையோ பரிதாபம் நிறைந் திருந்தன. வார்த்தைக்கு அப்பாற்பட்ட துயரத்தின் பாரத்தை ராமலிங்கத்தின் உள்ளம் தன்னையறியாமலேயே சுமந்தது.
அவன் தாயார் வழக்கம்போல் புலம்பிக் கொண்டிருந் தாள்.
*அடி மாரித் தாயே, பொண்ணுக்கு எறங்கு தாயே இந்த பாரத்தே இளுத்துக்கிட்டு எங்கடி தாயே போவோம்’ மாரியம்மன் கருணை காட்டுவாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவளுக்கு உண்டு. எப்படியாவது ஒரு வழி பிறக்கும், என்று இரவு பகலாய் மாரியம்மன் பெயரை அசையாது சொல்லிக் கொண்டிருந்தாள்.
தொழில் கோர்ட்டில் தன்கேசு முடியும்வரை எங்காவது போய் அத்தக் கூலி வேலை செய்ய வேண்டுமென்று: ராமலிங்கம் தன் நண்பர்களிடம் சொன்னான். அவன் கட்சியைச் சேர்ந்த முக்கிய நண்பர்கள் பிரயாணச் செலவுக் கும் அவன் குடும்பச் செலவுக்கும் நன்கொடை திரட்டிக் கொடுத்தனர். இதில் சம்பந்தப்படாதவர்கள் முருகப்பன் பக்கம் திரும்பினர். அவன் பெரிய கங்காணி வீட்டுக்கும், கணக்கப்பிள்ளை வீட்டுக்கும் மத்தியில் ஊசலாடிக் கொண்டிருந்தான். இது ராமலிங்கத்துக்கு நன்றாகத் தெரி யும். அவன் அந்த நிலையற்ற தன்மையிலிருந்த போதிலும் அங்கு நடக்கும் இரகசிய திட்டங்களை யாரிடமும் தெரிவிப் பதில்லை. உடன் துரை பிரட்டு போடவும், ராமலிங்கத்தை
72

தோட்டம்விட்டு வெளியேற்றவும் துரை போட்டுள்ள திட்டம் பற்றி ஒண்டிமுத்து அவனுக்குச் சொல்லியிருக்க, வேண்டும் என்றாலும் அந்த இரகசியம் வெளிவரவில்லை.
ராமலிங்கத்தின் மேல் கோர்ட்டில் வழக்கு தாக்கல்” செய்யுமுன் அவனால் சாதிக்க முடிந்தவைகளைச் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்த காமாட்சியம்மாள் அவனைக் கூட்டிவர ஆள் அனுப்பியிருந்தாள். செய்தி கிடைத்ததும் ஏதோ முக்கிய காரணம் இருக்க வேண்டும் என்று யூகித்து ராமலிங்கம் உடன் புறப்பட்டான். அந்தத் தோட்டத்திலே அதிமுக்கிய இடமான சமையலறையில் காமாட்சியம்மாள் அவன் வருகையை எதிர்பார்த்திருந்தாள்" அவன் வந்ததும் உட்கார சாக்கெடுத்துப் போட்டு தேனிர் பரிமாறினாள்.
**தம்பி வெள்ளெக்காரனே நம்பி வகைமோசம் போயிட் டோம். மொதல் தேதிக்கு நூத்திப்பத்தொன்பது ஆளுகளே யும் தொர பெரட்டுலே போடுவானாம். ஓங்களே உடனே வெளியே போட கோட்லே வழக்கு தாக்கல் செய்வானாம்" அந்த மனுசனுக்கு மூளே பெரண்டு போச்சு. தம்பிசெவனை யாவுக்கு வேலே நிப்பாட்டியாச்சு. யாரு செஞ்ச வெனையோ தெரியலே, அப்பா?? என்று முடித்தாள்.
ராமலிங்கம் அதிர்ச்சியால் சில நிமிசங்கள் பேசாமலிருந் தான். அவன் தலையில் சம்மட்டியால் அடித்தது போன்றி ருந்தது. இந்தத் திட்டங்களுக்கெல்லாம் பின் மறைந்திருப்ப வர்கள் பெரிய கிளார்க்கும் ஒண்டிமுத்துவும் தான் என்று. தீர்க்கமான முடிவுக்கு வந்தான்.
“நான் முந்தியே பெரியவருக்கு சொன்னனுங்க. என்னே நம்பலே, தூங்குறப்போ கழுத்தறுக்கிற மாதிரி ஆகிப் போச்சுங்க. ஒண்டிமுத்து கணக்கப்புள்ளே பெரிய கங்காணி ஆச்சி பண்றதயும் பாக்கலாங்க.??
*தம்பி நீங்க சொன்னது சரியாப்போச்சு. கண்டுரோல் விசாரணைக்கு முந்தி தொரே பெரட்டு போடமுடியுமா?*
73

Page 43
**ஆளுகளே விசாரணை செஞ்சு, குத்தம் ருசுவான தானுங்க போடமுடியும். விசாரணை வந்தா ஒண்டிமுத்து மேலே குத்தமெல்லாம் ருசுப்படுத்தலாங்க.”*
'நீங்க என்னா செய்யப் போறிங்க???
* எனக்கென்ன மூணு கட்டே தானே. குருவியே ஏத் துக்கிறதா கொம்புண்டுங்களா???
*எங்களுக்கு ஒரு முடிவு வேணுமே தம்பி, கண்ணே கட்டி காட்டுலே விட்டமாதிரி ஆவத்து வந்திருச்சே. அந்த மனுசன் இந்தத் தோட்டத்திலேதானே திரி எடுத்து ஆடு வாரு தம்பி செவனையா ஒண்னும் தெரியாத புள்ளே, எங்களுக்கு யாருமில்லையே?? என்று மனம் இளகிப் பேசினாள்.
**இந்த சோதனையான நேரத்துலே நீங்க தைரியமா இருக்கனுங்க. நா முந்தியே காயிதம் போட்டிருக்கிறனுங்க. பெரியவரே ஒடனே கொழும்புக்குப் போக ஏற்பாடு பண்ணுங்க.??
sth9 அந்த மனுசன் கம்பளைக்கு அங்கிட்டு போன தில்லையே. கொழும்புக்கு போயி எந்த மூலையில தலவரே காணப் போறதோ,29
*ஒரு காரு புடிச்சு தானுங்க போகனும். பழனியப்பனை ஆயும் கூடப்போகச் சொல்றனுங்க,** என்றான்.
'நல்லது. தலவாகெல போயி எல்லாம் தம்பிதான் கவனிக்கோணும்,?? என்றாள் காமாட்சியம்மாள்.
ராமலிங்கம் நிலைமையை தெரிந்து கொண்டான். தான் ஒரு தொழிலாளி. வெயில், மழை, பசி, பட்டினி, சுக துக்கம் எல்லாம் அவனுக்கு ஒன்றுதான். கஷ்டப்பட முடியும். சகித் துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குண்டு. ஆனால் மாமியாரும் அந்தப் பாவி மாமனாரும் வெயில் அறியாதவர்கள். தோட்டம் விட்டுப் போ என்று துரை
74

சொன்னால் எங்கு போவார்கள். இந்த வினையை அவர்கள் வீட்டுக்கு ராமலிங்கமே கொண்டு வந்ததாய் நினைத்துக் கொண்டான்.
**அப்ப நான் போய் எல்லாம் கவனிக்கிறனுங்க. மத்த ஏற்பாடு எல்லாம் செய்யுங்க,22 என்று சொல்லிவிட்டு ராம லிங்கம் புறப்பட்டான்.
காமாட்சியம்மாள் பெரியசாமி எட் கங்காணி கொழும் புக்குப் போவதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்தாள்.
அன்று மாலை அவர் இரகசியமாய் கொழும்புக்குப் புறப்படத் தயாரானார். பூசையறையில் முருகப் பெரு மானுக்கு தீபம் காட்டி, “முருகா என்னைக் காப்பாத்து, நான் பாவியாய் போனேன் ?? என்று கரம் கூப்பி வணங் கினார். 'நான் தெரியாத ஊருக்குப் போறேன். எனக்குத் துணை செய் கடவுளே,’ என்று பன்முறை கும்பிட்டார்,
காமாட்சியம்மாள் கார்த்திகேயன் திருவுருவப்படத்தை வணங்கிவிட்டு கணவனின் கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள்.
*தலவரு கையே காலே புடிச்சி நமக்கு வீட்டு பிச்ே வாங்கிட்டு வாருங்க. தம்பி ராமலிங்கம் மாதிரி நமக்கு எடம் தேட முடியுமா, மத்த பெரிய கங்காணி மாதிரி நமக்கு தோட்டம், தொரவு, கடே, கண்ணி இருக்குதா. நமக்கு கதிர்காமத்தையன் தான் தொணை. நம்ம ஆளுகளே வஞ்சிக்காதீங்கன்னு சொன்னப்போ நீங்க கேக்கலியே.??
**கடவுள் எனக்கு நல்ல புத்தி கொடுக்கலியே,’ என்றார்.
பூசை முடிந்த பின் சாப்பாட்டுக்கு உட்கார்ந்தார். அவர் மகன் சிவனையா பிரயாண உடைகளோடு பக்கத்தில் அமர்ந்திருந்தான். நல்ல பதார்த்தங்களை இருவருக்கும் அன்போடு பரிமாறினாள். பெரியசாமிக்கு சாப்பிட முடிய வில்லை. ஆனால் சிவனையா வஞ்சகமில்லாது சாப் பிட்டான்.
ஏழு மணிக்கெல்லாம் பிரயாணத்திற்கான சாமான்களும் துணி மணிகளும் எடுத்து வைக்கப்பட்டிருந்த சூட்கேசை
75

Page 44
எடுத்துக் கொண்டு மனைவியிடம் விடை பெற்று மகன் சிவனையாவோடு புறப்பட்டார்.
எங்கும் இருள்; வானத்தில் ஒரு நட்சத்திரம் கூட இல்லை. அதைப் போலவே அவர் மனமும் இருண்டிருந்தது. காற்று மரக்கிளைக்குள் ஓலமிட்டு அலறியது. குறுக்குப் பாதை வழியாய் இறங்கி சற்று சிரமத்தோடு தலவாக் கொல்லை பாலத்தையடைந்தார்.
*அது யாரு?" என்றார் பெரியசாமி சற்று பயத்தோடு *நான் தானுங்க பழனியப்பன். அண்ணே ஓங்களோட கொழும்புக்கு போயிட்டு வரச்சொல்லிச்சு,?? என்றான்.
**தம்பி பழனியப்பா,** என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு பின் தொடர்ந்தார். சிவனையா மெளனம் கலையாது, சிலைபோல் பின் சென்றான்.
*எனக்கு பிடிச்ச சனியன், சாதி சனத்தே கூட மறந், திட்டேன்?
'ஒங்களே சொல்றதுக்கு இல்லீங்க. நம்ம ஒண்டிமுத்து இருக்கிறாரே அவரே சொல்லுங்க. அதெல்லாம் முடிஞ்சி" சங்கதிங்க, இப்ப சொல்லி என்ன பிரயோசனங்க??
கோரு புடிச்சிருக்கா??? **ஆமாங்க ஒடனே பொறப்புடலாங்க.?? அவர்கள் பிரதான வீதியை சேர்ந்தபோது சுடலை ஆசாரி கடைக்கு முன் கார் தயாராக நின்றது.
*வாங்க மாமா, இந்தக் காருதானுங்க, ஏறுங்க?? என்று பின்சீட்டுக்கான கதவைத் திறந்தான்.
பெரியசாமியும் சிவனையாவும் ஏறிக் கொண்டார்கள். **டைவர் வாங்க ரெடி,** என்று கூப்பிட்டுவிட்டு முன் சீட்டில் அமர்ந்தான்.
76

- டிரைவர் வந்து தன் ஆசனத்தில் அமர்ந்து காரை முடுக்கினார். சாராய மணம் குப்பென்று அடித்தது. காரை முப்பத்தைந்து மைல் வேகத்தில் ஓட்ட ஆரம்பித்தார்.
பெரியபாமி பிரமித்து கல்லாய் சமைந்து போயிருந்தார். முன் சீட்டில் பழனியப்பன் அலமேலுவை நினைத்துக் கொண்டிருந்தான். சிவனையா உம்மத்தம் பிடித்தவனைப் போல் யாரோடும் பேசவில்லை.
கார் அட்டனை கடந்து கினிகத்தேனைப் பள்ளதாக்கு வழியாய் இறங்கும்போது, **இது பெரிய பள்ளம்,?? என்று ஏளனமாய் டிரைவர் ஞாபகப்படுத்தினான். கங்காணியின் மனோநிலை பரிதாபமாய்ப் போய்விட்டது. மனைவி, மக்களை நினைத்தார். மலைபோல் வளர்ந்த ஆதிக்கம், நிறைகுறையா செல்வம், மதிப்பு, கெளரவம் எல்லாம் ஒரு பிடி சாம்பலாய் மாறினதை நினைத்து வருந்தினார்.
வெள்ளக்காரனே நம்பிக் கெட்டோம். ராஜன் நல்லவர், மனிதர் கஸ்டம் தெரிந்த குணவான். இருந்தாலும் வினை என்ன செய்யுமோ. முடியாது என்று சொல்லிவிட்டால் யரரிடம் போவேன், துரை தயவு தாட்சண்யமற்ற ராட்சத னாச்சே, கடவுளே நான் எங்கு போய் தஞ்சம் புகுவேன். என்ன செய் வே ன், என்று மார்பைத் தடவிக்
கொண்டிருந்தார்.
கார் விர்ரென்று இருளைக் கிழித்துக்கொண்டு சென்றது. பெரியசாமி மனதில் பொங்கி எழும் துன்ப அலைகளை அவர் மகன் எப்படி அறிவான். அவர் கண்களில் வழிந்த கண்ணிரை இருளில் அவன் காணமுடியவில்லை. தான் அலமேலு மேல் கொண்டிருந்த ஆசை குடும்பத்திற்கே அனர்த்தனமாய் வந்து முடிந்ததே. தாயார் அழுத கண்ணிர் அவன் இதயததையே பிழிந்தது. ஆங்கிலம் படித்து என்ன பிரயோசனம். கால் சட்டை போட்டு காரில் போவதில் என்ன கெளரவம். நாளை துரை தோட்டம் விட்டுப்போ
77

Page 45
என்றால் ரோட்டில்தானே நிற்க வேண்டும், என்று கையை முறித்துக் கொண்டு மூலையில் ஒண்டிக் கொண்டிருந்தான்
மூன்றரை மணி நேரத்திற்குள் கார் கொழும்பு வந்து சேர்ந்தது. பெரியசாமிக்கு உஷ்ணம் பொறுக்க முடிய வில்லை. கோட்டையும் கமிஸையும் கழட்டிவிட்டு வியர்வையைத் துடைத்துக் கொண்டார். கோட்டை ஸ்டேசனுக்கு முன்னுள்ள பிரதான வீதியில் கார் நிறுத்தப்பட்டது.
வாகனங்களின் சத்தம், சனக்கூட்டம் இவைகளெல்லாம் பெரியசாமியின் மனதைக் குழப்பியது.
பெரியசாமிக்கும் சிவனையாவுக்கும் பெரிய ஒட்டலில் நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று பழனியப்பன் அவர்களை அழைத்துச் சென்றான். அவர்கள் ரஸ்தாவை விட்டு கடைகளுக்கு முன்னுள்ள நடை பாதையில் நடந்தார்கள். இங்குமங்கும் பிச்சைக்காரர்கள் தலைவிரிக் கோலமாய் படுத்திருப்பதை பார்த்து பெரியசாமி தன்னையறியாதபடி பெருமூச்சு விட்டார். அப்பொழுது பின் பக்கத்திலிருந்து பலத்த சத்தம் வந்தது.
**அடேய் கள்ளத்தோணி ஏய் கள்ளத்தோணி ஏய் கள்ளத்தோணி!!!??
இதைக் கேட்டு பெரியசாமியும் சிவனையாகவும் திகைத்து திரும்பிப் பார்த்தார்கள். s
ஒரு காடையன், சுருட்டைத் தலையன், இடுப்பில் மட்டும் சாரம் கட்டியிருந்தான். இவர்கள் திகைத்ததைக் கண்டு மேலும் உற்சாகமாய்க் கத்தினான்.
'ஏய் கள்ளத்தோணி!?? **மாமா இது ரொம்ப சகஜம். அதே லட்சே பண்ணாதிங்க?' என்றான் பழனியப்பன்.
**கொழும்பு ஊருலே ரஸ்தியாதுகாரன் மிச்சம் கங்காணி? ஐயா?? என்று டிரைவர் தெம்பு சொன்னான்.
78

அவருக்கு பயம். சிவனையாவுக்கு நடுக்கம். நீலகிரிக்கும்: கோட்டைக்கும், எவ்வளவு வித்தியாசம். கொழும் நாகரிகம்: அவர் உடல் சிலிர்க்கும்படி செய்தது.
*தம்பி என்னே தலைவர் வீட்டுக்கு கூட்டிப் போங்க . அப்புறம் சாப்பிடலாம்,?? என்று கெஞ்சினார்,
அவருக்கு நடக்க முடியவில்லை. சமுத்திரம் காணாத மனிதனை அதிலும் கொழுப்பைக் கண்டு மருண்டுபோன மனிதனைக் கள்ளத்தோணி என்றால் எப்படி இருக்கும்.
**நான் கள்ளத்தோணியா,2? என்று தன்னை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டார்.
நல்லவேளையாய் கார் அருகில் இருந்தது. உடனே ஏறிக்கொண்டு ராஜன் வீட்டுக்குப் புறப்பட்டார்கள். பெரிய சாமிக்கு சிவனையாவுக்கும் நிலைகொள்ளவில்லை. பம்பலப் பிட்டியில் நடுத்தரமான ஒரு பங்களாவுக்கு முன் கார் வந்து நின்றது. அதுதான் ராஜன் வீடு. அங்கு கூட்டம் அப்பொழுதுதான் கலைந்து கொண்டிருந்தது. பெரியசாமி காரை விட்டு இறங்கி ராஜனைக் கண்டதும் தலைக்குமேல் கரம் கூப்பி வணங்கினார்.
**உங்களே நம்பித் தான் வந்தேன்.?? அதற்குமேல்அவருக்குப் பேசமுடியவில்லை.
*ளினக்கு வேலே நிப்பாட்டிட்டாங்க சார். முதல் தேதி துரை பிரட்டு போடுவதாய் தொரை சொலலிட் டாருங்க,’ என்றான் சிவனையா.
*போக வழியில்லீங்களே,' என்றார் பெரியசாமி.
*அண்ணனுக்கு கோட்டுலே வழக்கு போடப் போறானாம்,' என்றான் பழனியப்பன்.
*நீங்கதான் தொணை,?? என்றார் பெரியசாமி. இவைகளை உருக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த, ஒருவர்;
79

Page 46
இவர்களுக்கு என்ன நடந்திருக்கிறது Targait?’ விான்று கேட்டார்.
*இவர் ஒரு பெரிய கங்காணி. மூன்று நான்கு தலை *முறையாய் ஒரே கம்பனித்தோட்டத்தில் தங்கள் ஆட்க ளோடு உழைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அங்கே தொழிற்சங்கம் ஸ்தாபித்த பின் இவருக்கு பல தொல்லைகள் ஏற்பட்டுள்ளன,2? என்றார்.
**ஆ மாங்க சார், தோட்டக்காட்டான் வாழ்வு இதுதானுங்க?" என்றார் பெரியசாமி.
*இங்கே ரோட்டுலே நடக்க முடியலிங்களே, கள்ளத் தோணின்னு சத்தம் போடுரானுங்க,2? என்றான் சிவனையா.
யாரும் பேசவில்லை. ராஜன் தலைகுனிந்தபடி நின்றார். அந்த அவமானம் எல்லோரையும் கப்பிக் கொண்டது போலிருந்தது.
ேேபெரியவரே இன்றோடு உலகம் மூழ்கிவிடவில்லை
இது போன்ற சோதனையான சமயத்தில் தான் நீங்கள் சற்று தைரியமாக இருக்க வேண்டும். நாளைக் காலையில் உங்கள் பிரச்சினையை பற்றி கம்பனி டைரக்டரோடு பேச்சு வார்த்தை நடத்தப் போகிறேன். நீங்கள் நேரே காரியா லயத்துக்குப் போங்கள். உங்களுக்கு வேண்டிய வசதி களைச் செய்து கொடுக்கும்படி டெலிபோன் செய்கிறேன்,22 என்றார் ராஜன்.
பெரியசாமி கொழும்பில் ராஜனைச் சந்தித்துவிட்டு தோட்டம் திரும்பிய பின் அவர் வீட்டிலும் வாழ்க்கையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.
80

அவர் மலை சுற்றி மேல் பார்வை செய்யும் வேலையை தன்னையறியாமலேயே நிறுத்திக் கொண்டார். மாலை வேளைகளில் கங்காணிகளும் மற்றும் முகாமைக்காரர்களும் வந்து கூடும் கூட்டம் நாளடைவில் குறைந்து கொண்டே வந்தது. முகத்துக்கு முகம் கண்ணாடி, ஒரு சிலர் மட்டுமே வந்து மாலையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றிச் சொல்லி விட்டு நேரத்தோடு நகர்ந்து விடுவார்கள். ஆனால் பழனி மாமா மட்டும் இதற்கு விதிவிலக்கு மாலை ஏழு மணிக்கு வரும் அவர் சில நாட்களில் இரவை அங்கே கழிப்பார், நளச் சக்கரவர்த்தி கதை விக்கிரமா ரத்தன் கதை இவைகளை நெடுநேரம் படிப்பார். பெரியசாமி கங்காணியும் காமாட்சி யம்மாளும் வெகு ஆர்வத்தோடு கதையை கேட்டு சாந்தி யடைவர். இப்படி இரவு கழியும்.
பகல் நேரம் பாறைக்கல் போல் அவரை அழுத்திக் கொண்டிருக்கும். வழக்கம் போல் காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து குளித்தபின் பூசையறையில் ஒரு சில மணிநேரம் தியானக் கோலத்தோடு இருந்து விடுவார். 'முருகா என்னைக் காப்பாத்து,** என்று மனம் உருகப் பாடுவார். சாம்பிராணிப் புகையும் மல்லிகைப்பூ வாசனையும் “முருகா எங்களைக் காப்பாற்று22 என்ற வார்த்தைகளும் அவர் நிலையற்ற உள்ளத்திற்கு ஒரு சாந்தி யைக் கொடுத்தன
பின்பு காலைச் சாப்பாட்டை அரைகுறையாக முடித்து கொண்டு ஆபிஸ் அறை ஜன்னலை பாதி சாத்தி வைத்துக் கொண்டு அப்படியே கற்சிலைபோல் உட்கார்ந்து விடுவார். உடல் மாத்திரம் அசைவற்று கட்டை போலிருந்தும் sp6. In உள்ளம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி வாடி வதங்கும். அவரது நேற்றைய வாழ்க்கை, அந்தத் தர்பா திரைப்படம் போல் மனக்கண்முன் சுழன்று ஒடும். அதைப் பார்த்து மனம் புழுங்குவார். இந்தச் சந்தர்ப்பத்தில் காமாட்சியம்மாள் அவர் குடிப்பதற்கு பாலோ தேனிரோ கொண்டு வருவாள். அவர் அலங்கோல நிலையைக் கண்டு
.81 6 سے 68

Page 47
என்ன இது எந்த நேரமும் இருட்டு வீட்டுக்குள்ளே. நல்ல பொஸ்தகம் படிங்களே,* என்று கடித்து கொள்வாள்.
**நல்லது?? என்று ஜன்னலைத் திறந்து வைப்பார். பீரோவிலிருந்து திருவிளையாடல் புராணத்தை எடுத்து முன்வைத்துவிட்டு கொண்டு வந்த பானத்தை சாப்பிடுவார் காமாட்சியம்மாள் போனபின் மறுபடியும் உம்மத்தம் பிடித் தவர் போல் இருப்பார்.
மதியமானதும் வழக்கம்போல் பாபர் அரங்கன் சவரம் செய்வதற்காக குளியல் காம்பிராவுக்கு வந்திருப்பதாய் செய்தி வரும். வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள தகரக் கொட் டகைக்குப் போவார். அரங்கன் அவர் வருகையை எதிர் பார்த்து இருப்பான்.
**கும்புடுறேன் அப்பா,** என்று தலை வணங்குவான். பெரியசாமி தலையை ஆட்டிவிட்டு நாற்காலியில் அமர் வார்.
அரங்கன் குடும்பத்தினர் மூன்று தலைமுறையாய் அவருக்கு பணி செய்தவர்கள் நன்றியும் பற்றும் உடைய வர்கள்.
“என்னங்க இது? ஆத்தாளுக்கு இப்படித்தானா ஆதரவு சொல்லப் போறிங்க? தைரியத்த கைவிடாதீங்க கதிரு மலையான் கைவிடமாட்டாருங்க.”*
**ஆமாடா, கதிருமலையான் இல்லாட்டி இந்த வீட்லே கூட இருக்கமாட்டேன். சரி, இப்ப என்ன பேச்சு நடக்குது அரங்கா?.?
"தொரே பிரட்டு கேக்காத ஆளுகளே கணக்கப்புள்ளே சேக்குராருங்க. முருகப்பன் ரகசியமா கையொப்பம் எடுக் கிரானுங்க. ராமலிங்கத்துக்கு கையொப்பம் குடுத்தவுங்க மசிய மாட்டாங்க. இந்த ஆளுகளே ஒடைக்கத்தானுங்க ராமலிங்கத்து மேலே கோர்ட்டு வழக்கு போட்டிருக். கிறார். இந்த வழக்குக்கு அட்டியில்லீங்களாமே.”*
அேது சரிதான்??
82

**கணக்கப்புள்ளே வீட்லேதானுங்க இப்ப ரவிக்கு ரவுே கூட்டம். நம்ம வீட்டு பாலும் சோறும் தின்ன பயக அங்கே தான் குடியா கிடக்குரானுங்க. ஒண்டிமுத்துக்கு நீங்க வேலே வாங்கிக் குடுத்தப்போ எங்க பெரியப்பா சொன்னிச் சிங்க-வழியிலே கெடந்த கோடாலியே அப்பா காலிலே தூக்கிப் போட்டுகிட்டாருன்னு.??
**ஆமாடா, ஆமா. இப்ப குத்துது கொடையிதுன்னு சொல்லி என்ன செய்ய.??
*நம்ம ராமலிங்கம் சும்மா போகாதுங்க. நா போகை யிலே ஒண்டிமுத்த விட்டிட்டு போக மாட்டனுன்னு சபதம் சொல்லுதுங்க.??
'கிளார்க் என்ன செய்யிரான், 29
*அந்த பாவிதானுங்க இதுக்கெல்லாம் ஆண்ம வரு இப்ப மருமகனே சின்னகெளாக்கர் வேலைக்கி கொண்டு வர்ரானாம், 22
இதுபோன்ற உள் அந்தரங்கங்களை பெரியசாமியிடம் சொல்லிவிட்டு அரங்கன் போவான்.
தொழில் கோர்ட்டில் ராமலிங்கத்திற்கு என்ன தீர்ப்பு வருமோ என்று பெரியசாமி எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது அவன் அத்துமீறி தோட்டத்திலே இருப்பது பற்றிய வழக்கு அட்டன் கோர்ட்டில் வந்து விட்டது. இச்செய்தி அவரையும் காமாட்சியம்மாளையும் கலக்கியது.
ராமலிங்கத்தையும் கமலத்தையும் கோர்ட்டில் ஆஜரா கும்படி சமன் வந்தது. இந்த சம்பவம் தொழிலாளர்களை திகிலடையச் செய்த போதிலும் ஜில்லாப் பிரதிநிதி வழக்கை வாதிக்க அந்தோணி சில்வா புரக்டரை அமர்த்தினார்.
வழக்கு விசாரணை நாளன்று ராமலிங்கமும் கமலமும் அட்டன் கோர்ட்டு வாசலில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றார்கள். இரண்டு கேசுகள் முடிந்து, பகல் பதினொரு
88

Page 48
மணிக்கு 'ராமலிங்கம், கமலம்,? என்று பியோன் சத்த மிட்டுக் கூப்பிட்டான். கலங்கிய மனதோடு ராமலிங்கமும் கமலமும் கோர்ட்டுக்குள் சென்றனர், நீண்ட மேசையின் இருபக்கத்திலும் கறுப்புக்கோட்டணிந்த புரக்டர்மார் அமர்ந் திருந்தனர். நீதிபதி அவர்களுக்கு எதிரே உயர்ந்த மேடை யில் அமர்ந்திருந்தார். தோட்டத்துப் புரக்டருக்குப் பக்கத் தில் துரை அமர்ந்திருந்தார். ஒண்டிமுத்து கணக்கப்பிள்ளை சற்று தூாத்தில் தூணுக்குப் பின் நின்றான். தோளுக்கு முதலி, ராமலிங்கத்தையும் கமலத்தையும் பார்த்து
ேேகிளிக்கூட்டுக்கு வா?? என்றான்.
இேது அத்துமீறின வழக்கு? என்று துரை தரப்பு புரக்டர் எழுந்து 6)srróðróornrf,
அப்போது புரக்டர் அந்தோணி சில்வா எழுந்து, நீதி பதியையும் கோர்ட்டையும் ஒரு கண்ணோட்டமிட்டுவிட்டு?
இேந்த தொழிலாளர்களது வழக்கு தொழில் கோர்ட்டின் முன் இருக்கிறது. இதோ தொழில் கோர்ட் அத்தாட்சிப் பத்திரம். இந்த வழக்கு முடியும்வரை எங்களுக்கு அவகாசம் வேண்டும்,?? என்றார்.
அேதற்கு ஒரு மாதம் அல்லது ஆறு மாதமாகலாம். அது வரை இந்த குழப்பச்காரர்கள் எங்கள் தோட்டத்தில் இருக்க முடியாது,** என்றார் துரை தரப்பு புரக்டர்.
*இவர்கள் மேலுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமுன் குழப்பக்காரர்கள் என்று இவர்களை அவமானப்படுத்துவது முறையல்ல.'
**இவர்கள தோட்டத்தில் இருப்பது தொந்தரவு. எங்களுக்கு லயம் வேணும்.”*
என்ன தொந்தரவு? துரையை தினம் தினம் கண்டு இவர்கள் அக்கப்போர் செய்வார்களா? வழக்கு முடியும்வரை அந்த இருண்ட குழிக்குள்தானே பதுங்கிக் கிடப்பார்கள்.”
84

*தோட்டத்தில் நல்லாட்சியை எதிர்த்து இரண்டு தொழிலாளர்கள் லயத்தில் அக்கப்போர் அடித்தால் கட்டுப் பாடு குலைந்து போகும். எங்களுக்குத் தோட்டம் நடத்த முடியாது.”*
*கட்டுப்பாடு, நல்லாட்சி-பிரமாதமான வார்த்தைகள் தான். ஆனால் தோட்டத்தில் நல்லாட்சியுண்டா? இதைச் சொல்வதற்கு உங்கள் நா கூசவில்லையா. இத்தோட்டத்தை யும் துரையையும் சந்தி சிரிக்கும்படி செய்தவன் ஒண்டி முத்து கணக்கப்பிள்ளை. அந்த மனிதன் இந்த அபலை களை உதைத்து வெளியில் போடுவதாய் பறைசாற்றிவிட்டு இங்கு என்ன நடக்கிறதென்று பார்க்க வந்திருக்கின்றான்,** என்று அந்தோணி சில்வா கர்ஜனை செய்தார்.
**துரைக்கு சில விபரங்கள் சொல்வதற்காக வந்திருக்' கிறார். நீங்கள் கவலைப்பட வேண்டாம்?? என்றார் துரையின் புரக்டர்.
'எனக்கு எப்போதுமே கவலை இருப்பதில்லை. ஒண்டிமுத்து கணக்கப்பினளை துரையின் வால், அந்த வாலை தொழில் கோர்ட்டில் வைத்து வெட்டுவேன்?? என்று சுடச் சுடக் கொடுத்தார் புரக்டர் அந்தோனி சில்வா
இந்த சூடான தர்க்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த நீதிபதி
*சரி கேசுக்கு வருவோமே?? என்றார்.
**இந்தச் சட்டத்தை நமது சாசனத்தில் இருந்து நீக்க வேண்டும். இவர் கட்சியைப் பாருங்கள். சட்டம் அவர் களுக்கு சாதகமாக இருப்பதை வைத்துக்கொண்டு இந்த அபலைகளை நசுக்கிப் பிழிகிறார்கள். அந்தப் பெண் கர்ப்பிணியாக இருக்கிறாள் என்பது கூட தோட்டத் துரைக்குத் தெரியவில்லை. நீலகிரி தோட்டம் ஒரு நரகம் அந்த நரகத்தை விட்டு வெளியேறும் போதுகூட அவர்கள்
85

Page 49
சுற்றவாளிகளாகப் போகவேண்டாமா? அவர்களுக்கு மூன்று மாத தவணை வேண்டும் சார்.”*
'பெண் கர்ப்பிணியாக இருப்பதால் மூன்றுமாத தவணை தருகிறேன். அதற்குள் ஒரு தோட்டம் தேடிக் கொள்ள வேண்டும்.??
*இதற்கிடையில் நாங்கள் சுத்தவாளியாகி விட்டால் எங்களுக்கு வேலை வேண்டும்.??
சேரி பெப்ரவரி மாதம் வழக்கை கூப்பிடுவோம்.??
*அதுவரை இவர்களை அநாவசியமாக தொந்தரவு செய்யக்கூடாதென்று தோட்டத்துரையை எ ச் ச ரி க் க வேண்டும் சேர்.”*
**இது அவசியமில்லை,” என்றார் துரை தரப்பு புரக்டர்.
**இவர்கள் தோட்டத்துக் கக்கூஸ், மற்றும் வசதிகளை உபயோகித்தால் ராங்கிக்காரர்கள் என்று துரை சொல்லக் கூடாது.”*
புரக்டர்மார் சிரித்தனர்.
*ராமலிங்கம், கமலம் பெப்ரவரி மாதம் அஞ்சாந்தேதி கார்ட்டுக்கு வா’ என்று தோளுக்கு முதலி சொன்னார்.
ராமலிங்கமும் கமலமும் வேர்த்து விறுவிறுத்து வெளி யேறினர். அவர்களுக்குப் பின்னால் சென்ற ஜில்லாப் பிரதி நிதி
*ராமலிங்கம் எப்படி???
**வணக்கம் சார். உள்ளுக்கா இருந்தீங்க???
**நம்ம புரக்டருக்கு பின்னால்தான் கிட்டே உட்கார்ந் திருந்தேன். ஒண்டிமுத்துவுக்கும் துரைக்கும் நம்ம புரக்டர் குடுத்த டோஸ் போதுமா, ராமலிங்கம்???
86

*அப்பாடி கோட்டு உள்ளுக்கு வச்சி என்ன போடு போட்டாருங்க.??
*நீங்க கக்கூஸ் உபயோகித்தால் உங்களை ராங்கிக் காரங்கன்னு துரை சொல்லக்கூடாது என்றார் நம்ம புரக்டர். இந்தச் சட்டத்துக்கு sg935 ச ரி யான வியாக்கியானம்.??
*அவரு பேச்சிக்கு ஆயிரம் ரூபா கொடுக்கனுங்க.?? *மூன்று மாசத்துக்குள் தொழில் கோட்டில் வெற்றி கண்டால் வேலைகொடுக்க வேண்டுமென்று கேட்டார் தீதவானும் இணங்கிவிட்டார்.??
**நல்லதுங்க சார்.??
*சரி கோச்சியடிக்குப் போங்க. நடந்ததை எல்லோரு ருக்கும் கூட்டம் கூட்டிச் சொல்லுங்கள்.??
ராமலிங்கமும் கமலமும் தோட்டத்துக்கு வந்து சேரும் போது மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. அவர்களது வருகையை எதிர்பார்த்து பெரியம்மாள், அலமேலு மற்றும் ஆதரவாளர்களும் முன் ஸ்தோப்பில் காத்திருந்தார்கள் அதைப்போலவே கணக்கப்பிள்ளையின் ஒற்றர்களும் சற்றுத் தூரத்தில் தெரிந்தும் தெரியாமலும் சுற்றிக்கொண்டிருந் தனர். ராமலிங்கத்தைக் கண்ட பெரியம்மாள்
'மகனே என்னா ஆச்சு??? என்றாள்.
*மூணு மாசம் தவணை அம்மா. தொழில் கோட்டுலே எம்மேலே குத்தமில்லாட்டி பத்துச்சீட்டு பதியோனும்,?? என்றான்.
*பெரிய வெத்தி தலவரே,’ என்று எல்லோரும் சொன்னார்கள்,
ெேதாரே என்ன சொன்னான்???
87

Page 50
*என்ன சொல்றது. நம்ம அந்தோணி சில்வா சரியான போடு போட்டார். ஒண்டிமுத்து தொரை வாலாம். அந்த வாலே தொழில் கோட்டுலே வச்சி வெட்டுவேன்னார்" அதனாலேதான் நீதவான் மூணு மாசம் குடுத்தார்? கடசியில இந்த சட்டம் கக்கூஸ் சட்டமினு சொன்னாராம்.?. *தொழில் கோர்ட்டு கேசுக்கு இவரையே புடிக்கலாம். செலவு போனா காரியமில்லே,2? என்றான் முத்தையா.
**அப்படியே செய்வோம்.??
தலவரே நீங்க போயி சாப்பிடுங்க. பின்னாலே பேசலாம்.??
*பெரியவரு எப்படி இருக்கார்??? *அவரு மூலையிலே ஒறங்கிப் போயிருக்கார்.?? *அப்பா ஒங்க மாமியார் எப்போதும் போல் இன்னைக்கும் தெம்பா இருக்காம். சரி பெறகு வாறோம் நீங்க சாப்பிடுங்க.??
ராமலிங்கத்திற்கு கோர்ட்டில் மூன்று மாத அவகாசம் கொடுத்திருக்கும் செய்தி அன்றே தோட்டமெங்கும் விளம்பர டிாகி விட்டது.
பெரியசாமி எட்கங்காணிக்கும் காமாட்சியம்மாளுக்கும் இச் செய்தி ஒரு தெம்பைக் கொடுத்தது. ஒரு சாதாரண தொழிலாளியை உடன் வெளியே போடமுடியாத நிர்வாகம் தன்னை நினைத்தபடி வெளியே போட முடியாது என்ற முடிவுக்கு வந்தார். ராமலிங்கம் தோட்டத்தை விட்டுப் போகும் முன் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றுகூட நம்பினார். அவர் மனப்போக்கை தெரிந்து கொண்ட காமாட்சியம்மாள் உடன் ராமலிங்கத்தைக் கூட்டிவர ஆள் அனுப்பினாள்.
செய்தி கிடைத்ததும் ராமலிங்கம் சமையலறையில் காமாட்சியம்மாளைச் சந்தித்து கோர்ட்டின் முடிவைக் கூறினான்.
88

'தம்பி நீங்க என்ன செய்யப் போரீங்க??? *ஒடனே எடம் பாக்கனும்ங்க.??
அப்ப நா என்ன செய்யோணும் தம்பி. ஏதாவது ஒரு
முடிவே தெரியனுமே.”*
'நம்ம தலவரு மனம் வச்சா எல்லாம் நடக்கும் கம்பேனி டிரக்டர்கிட்டே பேசிகிட்டு பதில் போடுவதாக. சொல்லியிருக்கிராரு எதுக்கும் மாமாவ கொழும்புக்கு போய்? மறுபடியும் தலவரக் கண்டு கம்பனிக்குப் பேசச் சொன்னா நல்லது. அப்ப எதுவுந் திட்டமா நடக்கும். இப்பிடிக் கதவ அடச்சிகிட்டு வீட்டுக்குள்ளே கெடக்கிறது கேவலம்? துரைக்கும் ஒண்டிமுத்துக்கும் தொக்கா போயிரும்,?* என்றான் ராமலிங்கம்.
*இவருக்கும் கோழே மனது தம்பி. பழனியப்பனையும் கூடப்போகச் சொல்லுவமா???
**நல்லதுங்க. ராக்கோச்சியிலே போனா விடிய கொழும்புக்கு போகலாம்.??
**நல்லது தம்பி. நீங்க என்ன செய்யப் போறிங்க.?? *நாளைக்கி எங்கிட்டும் தோட்டம் பாக்க போக.
அன்று இரவு பத்து மணி கோச்சியில் பெரியசாமி, சிவனையா, பழனிப்பன் மூவரும் கொழும்புக்குப் பயண Ingresor Tře56r,
12
மறுநாள் காலையில் தோட்டம் தேடிப் போவதற்கு. ராமலிங்கம் தயாரானான். இந்த வேலை அவனுக்குப் புதிய அனுபவமில்லை. அதை நினைக்கும்போதே அவன்"
89

Page 51
இரத்தம் குளிர்ந்து விட்டது. உள்ளங்காலில் வெள்ளெலும் பாட என ஒரு காலத்தில் பாட்டாயிருந்தது. பின் அது உண்மையாக மாறியதை நினைக்கும்போது சிரிப்பைக்கூட அவன் மறந்து விட்டான்.
கஸ்டகாலம் வந்ததை நினைத்துப் பெருமூச்சுவிட்டான் நடை, பசி, பட்டினி இவைகளைப் பற்றி அவன் பயந்து அஞ்சிவிடவில்லை. ஆனால் தாய், மனைவி இருவரையும் கஷ்டத்துக்குள்ளாக்கி விட்டோமே என்று தன்னை நிந்தித் துக் கொண்டான்.
அதிகாலையில் எழுந்து முக்கிய நண்பர்களைக் கண்டு அவர்களிடம் வேலை தேடிப் போவதைப் பற்றி தெரிவித்து, தான் வரும்வரை குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டான். எல்லாம் கவனித்துக் கொள்வதாய் நண்பர்கள் வாக்குறுதியளித்தனர்.
பின் வீடு திரும்பி தாய்க்கும் மனைவிக்கும் தெம்பு சொன்னான். 'குருவி ஏத்துக்காத கொம்புண்டா. எங்க யாவது ஒரு இடம் கிடைக்கும் அம்மா? என்றான். கமலம் அடுப்படியிலிருந்தபடி அவன் பேச்சைக் கேட்டுக்கொண் டிருந்தாள். அவள் கல்யாணமான பின் ராமலிங்கம் வீட்டை விட்டு பிரிந்து தனியே செல்வது இதுவே முதல் தடவை யாகும். அதை அவளால் பொறுக்க முடியவில்லை. பெற்ற தாய் பொறுத்துக் கொண்டிருக்கும்போது தான் வாய்விட்டு அழுவது சரியா, என்று பல்லைக் கடித்துக் கொண்டிருந் தாள்.
பெரியம்மாள் மாரித்தாயே என்று உருப்போட்டபடி மகன் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள். பிரயாணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும்போது அபசகுனமாய் ஏதும் செய்யவோ சொல்லவோ கூடாதென்று மருமகளுக்கு சொல்லி வைத்திருந்தாள். மகனை மனங்கலங்காது அனுப்ப வேண்டுமென்பது அவள் அவா.
90

மாற்றுக்கு அவசியமான ஒரு கமிசும் ஒரு வேஸ்டியும் செலவுக்கு பதினைந்து ரூபாவும் எடுத்துக்கொண்டு பயணம் சொன்னான்.
'அம்மா சுருக்கா ஒரு எடம் பாத்துக்கிட்டு வர்றேன் எல்லாம் நம்ம ஆளுக பாத்துக்கிருவுரங்க. கவலைப்படாதே. அலமேலு இங்கிட்டு வந்தா இங்கேயே படுத்துக்கிற சொல்லு???-என்று சொல்லிவிட்டு கமலத்தின் முகத்தைப் பார்த்தான். அவள் தலையைக் குனிந்துக் கொண்டாள் கண் கலங்கி விட்டது. உள்ளத்திலே இனம் தெரியாத ஒரு வேதனை. கீழே விழுந்து வாய் விட்டு கதறியழ வேண்டும் என்ற ஒரு உணர்ச்சி. எப்படியோ சமாளித்துக் கொண் டாள்.
தாய் விபூதியை எடுத்து ராமலிங்கத்தின் நெற்றியில் பூசி,
பேத்தரமா போயிட்டு வா மகனே. மாரி நீ தான் தொனை,** என்று அனுப்பி வைத்தாள்.
வாசல்படியில் நின்றபடி அவன் போய் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள் கமலம்.
ராமலிங்கத்தின் தாய் வயிற்றை பிசைத்துக் கொண்டு சமையல் கட்டுக்குள் வந்து படுத்து விட்டாள். கமலம் கண்ணைத் துடைத்துக் கொண்டு வீட்டு வேலைகளை கவனிக்கலானாள். ஆனால் மனமும் உள்ளமும் புண்பட்டுப் புழுங்கின.
வீட்டை வீட்டுப் புறப்பட்ட ராமலிங்கம் அன்று முழு வதும் அக்கரை பத்தனை பகுதி தோட்டங்களிலுள்ள சொந்தக்காரர்கள், கடைக்காரர்கள் எல்லோரிடமும் வேலை கிடைக்குமா, எங்காவது பத்துச்சீட்டு பதிவார்களா என்று கேட்டுக் களைத்தான். **இல்லை, இல்லை முடியாது? என்ற சொற்களே அவன் காதில் பட்டன.
மாலை ஏழு மணிக்கு டயகம கடைவீதியை அடைந் தான். தனக்கு தெரிந்த தலைவர்கள், தோட்டக் கமிட்டி அங்கத்தவர்கள் யாராவது வந்திருக்கிறார்களா என்று கவனித்தான். கடைவீதிக்கு எதிரே அரிசிக் காம்பிராவுக்கு
9.

Page 52
அருகாமையில் உள்ள புல் சதுக்கத்தின் மேல் கோடியில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட வுடன் தன்னையறியாமலேயே அவன் உள்ளத்தில் பக்தியும் அன்பும் சுரந்தன. ஒரு புண்ணிய ஸ்தலத்தில் இருந்து பிரகாசிக்கும் அந்த ஜோதியைப் பார்ப்பது போல் பார்த் தான். அதுதான் தொழிற்சங்க உரிமைக்காக உயிரை அர்ப்பணித்த ஏப்ரகாம் சிங்கோவின் கல்லறையாகும், பாட்டாளியின் வீரக்கொடியை நாட்டிய இளைஞனின் கடைசி இல்லம். அந்த விளக்கைக் கைகூப்பி கும்பிட அவனுக்கு ஒரு பிரேமை எழுந்தது. அந்த வேளையில்
*என்ன பாத்துக்கிட்டு நிக்கிறீங்க தலவரே,** என்றது ஒரு குரல். தன்னை சமாளித்துக் கொண்டு;
8ேதெரிஞ்சாள் யாரும் வந்திருக்கிறீங்களான்னு பார்த் தேன் தலவரே,** என்றான் ராமலிங்கம்.
எேன்ன இந்த நேரத்திலே???
ேேதாட்டம் தேடி அலையறேன்?? என்றான்.
*தோட்டக்காட்டு தொழிலாளி தலே எழுத்து தலவரே" என்ன செய்யலாம் இன்னைக்கு ஒங்களுக்கு. நாளைக்கி எனக்கு. சரி வாங்க வீட்டுக்குப் போகலாம்.??
ராமலிங்கம் டயகம தலைவர் வீடு போய் சேர்ந்தான். அன்று இரவு சாப்பாட்டிற்குப்பின் தோட்டத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த கமிட்டி அறையில் இரவு பன்னிரண்டு மணிவரை நண்பர்களோடு தனக்கு ஏற்பட்ட தொல்லை. களைப் பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டுப் படுத்தான். தாய், மனைவி ஆகியோருடைய நினைவு அவன் உள்ளத்தை அழுத்தியது. வெகு நேரத்திற்குப் பின் எப்படியோ தூங்கி விட்டான்.
சேவல் கூவும் சத்தம். அதோடு பிரட்டுத் தப்பின் ஒசை, ராமலிங்கம் எழுந்து பிரயாணத்துக்குத்தயாரானான். டயகம,
92

தலைவர் சுடச்சுட ஒரு கிளாஸ் தேனிரும் இரண்டு பனிஸ் களும் கொண்டு வந்தார். ராமலிங்கம் சாப்பிட்ட பின் வெற்றிலையில் பத்து ருபா நோட்டை வைத்து இரு கை களாலும் கொடுத்தார்.
**இது என்ன??? என்று ராமலிங்கம் திகைத்தான், *காணிக்கை தலவரே ஒண்ணும் யோசிக்காதீங்க.?? “கடவுளுக்கு கண்ணில்லேன்னு நெனைச்சேன். சரி இதே மறக்க மாட்டேன் தலவரே.”*
**இப்ப எங்கே போக யோசனே???
**அட்டனுக்குப் போறேன். ஜில்லாவிலே விசாரிச்சுட்டு அந்த பக்கத்திலே பாக்கலாமின்னு நெனைச்சேன்.??
'சரி அப்படியே செய்யுங்க. நம்ம பிரதிநிதி ரொம்ப நல்லவரு கட்டாயம் ஒதவி செய்வாரு??
அேதுதான் அங்கே போறேன்.??
'நல்லது போயிட்டு வாங்க; வணக்கம்.??
வேணக்கம்.??
டயகம் பஜாரையடைந்து அட்டன் பஸ்ஸில் ஏறினான். வழக்கம்போல் கூட்டம். நிற்பதற்கு இடம் கிடைத்ததே போதுமென்றிருந்தது.
இரண்டு மணி நேரத்திற்குப் பின் பஸ் அட்டன் வந்து சேர்ந்தது. நேரே தொழில் சங்க காரியாலயத்துக்கு சென்றான். அங்கு பிரதிநிதி தொழிலாளர்களது பிரச்சினை களைக் கவனித்து தாக்கல் சொல்லிக் கொண்டிருந்தார். ராமலிங்கத்தை உட்காரும்படி கைகாட்டி விட்டு வந்திருந்த வ்ர்களது காரியங்களை முடித்தார். ராமலிங்கம் எல்லாவற் றையும் அமைதியோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
93

Page 53
*சரி ராமலிங்கம் தலவரே என்ன முகவாட்டத்தோடு வந்திருக்கிறீர்கள்?? என்றார் பிரதிநிதி.
*வேலே தேடுரனுங்க. போற தோட்டங்களிலே சும்மாயிருக்க முடியலிங்களே.??
*எனக்கு தெரியும். எப்படி சும்மாயிருக்க முடியும், அக்கிரமம் நடந்தால் அவைகளைத் தீர்க்க வழிதேட வேண்டும். தேடினால் கண்டம் கட்டாயம் வரும். அந்த வகையில் நீங்கள் திடமான ஆள்தான். எவ்வளவு நாளாய் வேலையில்லை???
*ஒரு மாதமாய் வேலே இல்லீங்க, சார்.”*
*அப்படியா, விசாரணை ஏதாவது நடந்ததா???
“பெரிய பிரச்சினையா போச்சுங்க. சங்கத்துக்கு ஆள் சேத்ததுக்கு எனக்கு பத்துச்சீட்டு, பின்னாலே தொரை பிரட்டு, தொழில் கோடு, அத்துமீறின வழக்கு எல்லாம் நடத்தினாருங்க.??
**அப்படியா. கடைசியில முடிவு என்ன ஆச்சு.”*
*மூணி மாசத்துக்கு முந்தி தோட்டம்விட்டுப் போகச் சொல்லிவிட்டார் நீதவான். தொழில் கோர்கோட்டுலே வெத்தி கிடைச்சா திருப்பி வேலே கொடுக்க தீர்ப்புங்க.??
*அது நமக்கு வெத்தி. தற்காலிகமாக தோட்டம் விட்டுப் போகனும். சாப்பாட்டுக்கு மேலே இங்கிட்டு தோட்டம் தேடுங்க தலவரே. ரவைக்கு இங்கே வாங்க* என்று அன்போடு ஆதரவு சொல்லி சாப்பாட்டுக்கு பணம் கொடுத்தார்.
நன்றி தெரிவித்துவிட்டு ராமலிங்கம் புறப்பட்டான். கடைவீதியில் சாபபிட்டுவிட்டு பக்கத்தில் உள்ள தோட்டக்
94

களுக்குப் போய் வேலை கிடைக்குமா என்று விசாரித்தான் போகும் இடமெல்லாம் வழக்கம் போல் இல்லை என்ற பதில்தான் கிடைத்தது. மாலை மயங்கி இருண்டு கொண்டு வந்தது. ராமலிங்கம் இரவை சங்க காரியாலயத்தில் கழிப்பதற்கு விரைந்து நடந்தான். கடைவீதியை அடைந்து தேனீர்க் கடைக்குள் நுழையும்போது எதிர்பாராதவிதமாய் பழைய நண்பனான கதிர்வேலைக் கண்டான். இருவரும்: சுகம் விசாரித்துக் கொண்டனர். ராமலிங்கம் தனக்கு ஏற்பட்டுள்ள சங்கடத்தைப்பற்றி நாலு வார்த்தையில் சொன்னான்.
*அப்புடின்னா ராமலிங்கம் பெத்துராசி வழிய பலாங் கொடைக்குப் போ. அந்தப் பகுதியிலேநெறைய வேலை யிருக்காம். போன மாசம் தான் முப்பது பேர பத்துச்சீட்டு: குடுத்து வெளியே போட்டானாம் தொரை.??
சேரி ரவைக்கி இங்கே ஆபிசிலே படுத்துக் கிடந்திட்டு காலையிலே வெள்ளன போறேன்.??
சங்க காரியாலத்தை சேரும் போது கடைசி நபர்கள் வெளியேறினார்கள். பிரதிநிதி ராமலிங்கத்தின் முகக்குறியி லிருந்து அவன் நிலையை புரிந்து கொண்டார்.
*orrup66 il esth as6u su(3r of Tu’9u'LTéogFIT??? * ஆமாங்க சேர். பலாங்கொடை பக்கம் வேலை யிருக்கிறதா கேள்விப்பட்டேன். நாளை காலையிலே போ லாமினு யோசனைங்க.??
*ரொம்ப நல்லது. இந்த மாதிரி நேரத்தில திடமா யிருக்கோனும். சரி ராமலிங்கம் படுங்க. நான் வர்றேன்.??
ராமலிங்கம் இரு பெஞ்சுகளைச் சேர்த்துப் போட்டுப் பாயை விரித்து, கடுதாசிக் கட்டுகளை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்தான். தனிமையோடு குளிரும், பனியும் சேர்ந்து கொண்டன. இரண்டு மணி கீழ் கோச்சி போகும் வரை தூக்கமில்லை. தாய், மனைவி இவர்கள் நினைவு மனதை உறுத்திக்கொண்டிருந்தது. எப்படியோ தூக்கம்
95

Page 54
குழப்படியான சிதறிப்போன, சொப்பனங்கள் கண்டான். களைத்துப் போய் அதிகாலையில் எழுந்து காரியாலயத்தைக் கூட்டி சுத்தம் செய்துவிட்டு கவலையோடு அயர்ந்து உட்கார்ந்திருந்தான். பிரதிநிதி வந்ததும் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான். போகும் வழியில் பல தோட்டங்களை விசாரித்துக் கொண்டு பொகவந்தலாவ வந்து சேரும்போது பகல் ஒரு மணியாகிவிட்டது. அவனுக்கு நண்பனான ஒருவன் பக்கத்துத் தோட்டத்துத் தலைவனாக இருப்பது ஞாபகம் வந்தது. அங்கு போய் அவனைக் கண்டு சற்று இளைப்பாறிவிட்டு பிரயாணத்தை மேற்கொள்ள நினைத்தான். என்றாலும் கடைவீதிக்கு வந்ததும் மனதை மாற்றிக்கொண்டு ஒரு கிளாஸ் தேனிரும் ஒரு பன்சும் சாப்பிட்டுவிட்டு கல்பொடவு மார்க்கமாய் மேட்டில் ஏறி நடந்தான். நடந்து, நடந்து சலித்துப்போன சரீரம் களைத்தது. சற்று நின்று தனக்கு முன் பரந்த காட்சி *யளிக்கும் தோட்டங்களைப் பார்த்தான். பத்து பதினைந்து மைல் விஸ்தீரணம் வரை பச்சை பசேலென்று கண்குளிரும் காட்சி. விரிந்தோடும் தோட்டங்கள். தோட்டவாரியாக அடர்ந்த மரத்தோப்புகளுக்குள் துரைமார்களுடைய வர்ணக்கரைகளைக் கொண்ட பங்களாக்கள். பள்ளங்களில் கும்பல் கும்பலாய் தொழிலாளர்களின் தார் பூசப்பட்ட லயங்கள். உயர்ந்த மேடுகளில் தேயிலை ஸ்டோர்கள். இவைகளைச் சுற்றி சவுக்குத் தோப்புகள். இந்த அகண்ட வெளியில் மூன்று அடிக்கு ஒரு தேயிலைச் செடியைக் கொண்ட பல்லாயிரம் நிரைகள் ராட்சத கம்பளத்தை விரித்ததைப் போல் அவன் மனத்தை குத்தியது. இந்த மரம், செடி, கட்டிடங்கள் தொழிலாளர்கள் வெறும் கைகளால் உருவாக்கப்பட்டவைகள்.
இவைகளெல்லாம் செஞ்சு என்ன பிரயோசனம்.
உக்கார எடமில்லையே,’ என்று பெருமூச்சுவிட்டு மேலும் நடந்தான். அவன் மனது சகதித் தண்ணிர் போல் ஆனது பெத்துராசி மேட்டை கடந்து தொ-ர்ந்து நடந்தான். தயங்கித் தயங்கி பொகவந்தலாவையும் பலாங்கொடை.
96

'யையும் பிரிக்கும் கர்ட்டுக்குள் புகுந்தான். நாலடி நடை பாதை. ஊற்று நிலம். இருமருங்கிலும் அடர்ந்த காடு. பெரும் மரங்களை இணைத்து காட்டுக் கொடிகள் பின்னிக் கொண்டு தொங்கின. ஜில்லென்று குளிர்காற்று வீசியது. வேதனையின் நிசப்தத்திற்கு இடையிடையே தும்பி வண்டு களின் கணகணப்பான சப்தம். இவைகளெல்லாம் சேர்ந்து அவனை என்னவோ செய்தது போலிருந்தது. தன்னையறி யாமலேயே முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டு ஒரு கல்லின் மேல் உட்கார்ந்தான் பல நிமிடங்கள் இளைப்பாறி மீண்டு ம் நடந்தான். நடுக்காட்டையடையும்போது அசைக்க முடியாத நிசப்தம் அவனை விழுங்கியது.
நூற்றுக்கணக்கான சிறு வண்டுகளின் சப்தம். மரங் கனகக் கு மத்தியில் ஆடும் நிழல். திடீரென்று குருவிகளின் தனிக்குரல், இந்தக் காட்டின் தனித்தன்மையின் சோகம்" அவனுள் அடங்கிக் கிடந்த ஏமாற்றம், கவலை, புண் போன்ற சரீர கஷ்டம், தோல்வி இவைகளெல்லாம் திரண்டு, பொங்கி எழச் செய்தன. நிலைகுலைந்து நடுக்காட்டில் நின்றான். அவன் மூதாதைக ர் இந்த நாட்டுக்கு வந்தகதைகள் ஞாபகத்திற்கு வந்தன. அவர்கள் அநுராதபுரிக். காட்டின் வழியாய் வந்தபோது மலேரியா காய்ச்சலாலும் காலராவாலும் பசிப்பிணியாலும் பட்டு மடிந்த சம்பவங்கள் அவன் மனக்கண்முன் திரைப்படம் போல் சுழன்றன. அந்த நிலையை இப்போது அவன் உடல் புரிந்து கொண்டது. அவர்களது பரிதாபநிலை அவன் உதிரத்தில் கலந்திருப்? பதை தெரிந்து கொண்டான். அன்று அவர்கள் கூட தங்களை வரவேற்கும் ஒரு எல்லையை நோக்கிச் சென்றார்கள். ஆனால் நூற்றைம்பது வருடங்களுக்குப்பின் இன்று போக்கிடமில்லாமல், திசை இன்றி தத்தளித்தான். செத்துப் பிழைத்த தாய், கர்ப்பம் தாங்கிய மனைவி, அவள் வயிற்றில் வளரும் சிசு, ஆணோ பெண்ணோ இனம் தெரியாத உயிர். இவைகளெல்லாம் அவனைச் சூழ்ந்து நின்று முறையிட்டன.
போகும் இடத்தில் எந்தத் தோட்டத்தில் உனக்கு வேலை காத்திருக்கிறது என்ற கேள்வி திடீரென்று அவன்
6-7 9.

Page 55
மனதில் எழுந்தது. எனக்கு எப்படித் தெரியும் என்று தயக் கமான அல்ல-ஏமாற்றமான பதில் அவன் உள்ளத்தில் தொனித்தது.
இடி விழுந்த மரம்போல் அவன் ஆத்மா தகர்ந்து புரண்டது.
**கடவுளே எனக்கு போக வழி தெரியவில்லையே, எனக்கு ஒரு எடமில்லையே?’ என்று வாய்விட்டு புலம் பினான். அவன் தன் குரலைக் கேட்டு திகைத்தான். அவன் இரும்பு நெஞ்சம் கரைந்து விட்டது. அந்த கட்டத் தில் தாயைப் பிரிந்த குழந்தையைப் போல் நடுக்காட்டில் திகைத் தான். மனக்கொதிப்பை அவனால் சகிக்க முடிய வில்லை. பக்கத்தில் கிடந்த கல்லின்மேல் தொப்பென்று உட்கார்ந்து முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு விம்மி விம்மி அழுதான். விரல் சந்துகள் வழியாய் அவன் அழுத கண்ணிர் மண்ணில் கலந்தது, அவன் விம்மியழுத குரல் காட்டின் நிசப்தத்தைக் குலைத்தது.
13
இரவு பத்து மணி. அமாவாசை இருட்டு. அந்த மையிரூட்டில் நீலகிரித் தோட்டம் மூழ்கிக் கிடந்தது. காற்று சுழன்று, சுழன்று அடித்தது. லயங்களைச் சுற்றி நின்ற வாழை மரங்களும் சவுக்கு மரங்களும் அந்த இருண்ட கடலில் அலை மோதின. அதோடு சிணுங்கிய மழை. எப்போதும் போல் பொறுக்க முடியாத குளிர்.
அந்த நள்ளிருட்டிலும்கூட பெரியசாமி கங்காணியும் ராமலிங்கம் தோட்டத்தில் இல்லாதிருப்பது வெறிச்சென்றி ருந்தது.
பெண்களும் பிள்ளைகளும், வயோதிகர்களும் ஆதர வற்றவர்களைப் போல் கம்பளிகளுக்குக் கீழ் முடங்கிக் கிடந்தனர்.
98

முத்தையாவும் அவன் நண்பர்களில் சிலரும் தனித். திருக்க பயந்தவர்களைப் போல் ஒன்றாக சேர்ந்து ஒரு தனியறையில் படுத்திருந்தனர். அவர்களுக்கு தூக்கம் வரவில்லை. ராமலிங்கத்தைப் பற்றியும் பெரியசாமி கங்காணியைப் பற்றியும் பேசிக் கொண்டு புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்கள்.
மேட்டு லயத்தில் நாய் குரைக்கும் சத்தம். அதைக் கேட்ட முத்தையாவும் அவன் நண்பர்களும் எழுந்து எல்லா லயன்களையும் சுற்றி வந்தார்கள். எங்கும் அமைதி யாக இருந்தது. ஆனால் பெரிய கங்காணியின் ஸ்தோப்பில் பழனிமாமா பஞ்சபாண்டவர் வனவாசத்தை லாந்தர் வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தார். உள்ளே வெளிச்சமிருப்பது கதவு சந்துகளில் தெரிந்தது. காமாட்சி யம்மாள் தூங்கியிருக்க வேண்டுமென்று உத்தேசித்துக் கொண்டு அவர்கள் வீடு திரும்பினார்கள். வழியில் முருகப்பன் வீட்டிலும் விளக்கு வெளிச்சமிருப்பதைக் கண்டார்கள்.
முருகப்பனுக்கு தூக்கம் வரவில்லை. ஏதோ கடிதத்தைப் பார்த்துக் கொண்டிருந்திான். தோட்டத்திலுள்ள அக்கப் போர் தொலையும் வரை எங்காவது விருந்தாளியாகப் போக வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அதிலும் பெரியசாமியும் ராமலிங்கமும் தோட்டம் திரும்பும் முன் கம்பி நீட்டி விடுவது நலம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
ஒண்டிமுத்துக் கணக்கப்பிள்ளையும் அவர் குடும்பத் தினரும் அயர்ந்து தூங்கினர். பெரியசாமி கங்காணியை துரை வெளியே போட்டுவிட்டால் ஆட்களை தன்வசப்படுத் திக் கொண்டு பெரிய கங்காணியாகி விடலாம் என்ற பகல் கனவு இரவில் தூங்கும்போது கூட அவனை விடவில்லை. அவன் பெரியசாமி கங்காணியின் வீட்டில் தர்பார் செய்து கொண்டிருப்பதைப் போல் கனவு கண்டு கொண்டிருந்தான்.
ஆனால் நான்கு ஜீவன்களுக்கு மாத்திரம் உறக்க மில்லை. அவர்கள் சரீரம் சுக த்தை மறந்து புழுங்கின. அந்த இரவு அவர்களுக்கு ஒரு புயலாக இருந்தது.
99

Page 56
கல்யாணமான நாள் முதல் கணவனையும் பிள்ளை களையும் பிரிந்தறியாத காமாட்சியம்மாள் பூசையறையில் ஒரு பாயின் மேல் குப்புறப்படுத்தபடி **கடவுளே, கதிர்காம கந்தையனே!?? என்று பிரார்த்தனை செய்துகொண்டு கிடந்தாள். கொழும்புக்கு சென்றிருந்த கணவனும் மகனும் நல்ல சேதி கொண்டு வரவேண்டுமென்று நினைத்த போது ஸ்தோப்பில் பழனிமாமா வனவாசத்தில் அபசகுனமான அடிகளை வாசித்தார். அவ்வார்த்தைகள் அவள் மனதை ரம்பம்போல் அறுத்தன. மார்பகங்களை இரு கைகளாலும் அழுத்திக் கொண்டு கிடந்தாள்.
முதலாவது நம்பர் லயம். முதல் காம்பராவில் மூன்று பெண்கள். சமையற் கட்டில் அலமேலு மல்லாந்து படுத்தபடி கூரையை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு கிடந்தாள். இரண்டு நாட்களாகியும் பழனியப்பன் வர வில்லையே என்ற கவலை அவளுக்கு. கணவனைப் பிரிந்து பின் சுகத்தைக் கண்ட அவளுடைய யெளவன சரீரம் ஆதரவு தந்த காதலனுக்காக ஏங்கியது. அவளை அணைத்துக் கொள்ளும் கரங்கள் இல்லையே. தனிமையை அவளால் பொறுக்க முடியவில்லை. நாளை வருவான் என்று தன்னை சமாதானம் செய்து கொண்டாள்.
செத்துப் பிழைத்த பெரியம்மாளுக்கு தூக்கத்தின் சுகம் கிடைக்கவில்லை. மகனை நினைத்துப் புலம்பிக் கொண்டி ருந்தாள். *நான் பெத்த மகனே. இந்த அத்த ராத்திரி வேளையிலே எங்க இருக்கியோ, என் கண்ணே. ஒன்னே பட்டுப்போல வளத்தேனே. என் சாமி, ஒன்னே செமந்த, என் கொடல் கரயிதே. மாரி, ஆயிரங்கண்ணு மாரி, எங்களே கண்னெடுத்துப் பாரு.??
அவள் துக்கம் மலைபோல் எழுந்து குமுறியது. இந்த வார்த்தைகள் கமலத்தின் காதில் நாராசம்போல் பாய்ந்தன அவள் மனம் நிலை குலைந்தது. புண்பட்ட உள்ளம் கசிந்து உருகியது. அடக்கி வைத்திருந்த அழுகை இதயத்தைக் கிழித்துக கொண்டு வெளிவந்தது. இரு கைகளாலும் அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுதாள். அவளுக்காக. அவள் அழவில்லை; வீடு தேடி அலையும் அவள் கணவனுக். காகவும் பிறக்க இடம் தெரியாது அவள் கர்ப்பத்தில் வளரும்: சிசுவுக்காகவும் அவள் தேம்பித் தேம்பி அழுதாள். ஏதேதோ சொல்லி அழுதாள். அந்த வார்த்தைகள் அவளுக்கே புரியவில்லை. துக்கத்திற்கு பாஷையேது. அ புண்பட்ட மனிதவர்க்கத்தின் ஊமைக்குரல்.
asma saapeaosasunan


Page 57
Code No. A 188
இந்நூல்:
ஸி. வி. வேலுப்பிள்ளே "வீடற்றவன்' எனும் இக் மக்களின் உரிமை குரலாக ஒ நாட்டில் அடிமைகளாக குடி எவ்வாறு அங்குள்ள தோட் கூட போராடிக் கொண் இந்நூல் விளக்குகிறது. அ சுரண்டலுக்கு இரையாகிவிட வர்க்கம் நிச்சயம் வெற்றி செல்லும் என்பதனே இந்நூ சித்தரித்துள்ளார். ஆசிரிய பவத்தின் விளேவாக உருவா நிரம்பிய கதை இது.

T அவர்சள் எழுதிய குறுநாவல் மலேயக தமிழ் விக்கிறது. இலங்கை மலே யேறிய தொழிலாளர்கள் டக் காடுகளில் இன்றுங் டிருக்கின்றனர் என்பதை புன்னிய முதலாளித்துவச் ட்ட அந்நாட்டு உழைக்கும் யை நோக்கி முன்னேறிச் ாபாசிரியர் மிக கவனமாக ரின் தொழிற்சங்க அலு ன பாத்திரப் படைப்புகள்