கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாமன் மகனே

Page 1

so è

Page 2

மாமன் மகனே

Page 3
இந்நூலாசிரியரின்
பிற நூல்கள்
ஆங்கிலம்
விஸ் மாஜனி கவிதை நாடகம் வழிப்போக்கன் வசன கவிதை இலங்கை தேயிலைத் தோட்டத்திலே கவிதை
உழைக்கப்பிறந்தவர்கள் உரைநடைச் சித்திரம்
தமிழ்
தேயிலைத்தோட்டத்திலே கவிதை வாழ்வற்ற வாழ்வு நவீனம் வீடற்ற வன் நவீனம்
பார்வதி நவீனம்

மாமன் மகனே
மலைநாட்டு மக்கள் பாடல்கள்
வR. வி. வேலுப்பிள்ளை
மா வலிப் பிரசுர ம்
618 3/3, காலி வீதி
கொழும்பு--3

Page 4
முதற் பதிப்பு 1976
விலை ரூபாய் 5ማ]
naamsmanir
சுதந்திரன் அச்சகம், கொழும்பு-12.

முன்னுரை
நமது மொழியிலே, ‘கிராமிய இலக்கியம்', 'நாடோ டிப் பாடல்கள்’, ‘வாய்மொழி இலக்கியம்’, ‘மக்கள் இலக்கியம்’, ‘நாட்டார் பாடல்கள்’ எனப் பல்வேறு பெயர்களில் வழங்கும் பாடல்கள் நமது மொழியின் வளத்துக்கும் வலுவுக்கும் சான் ருய் விளங்குவன. பெரும்பாலும் எழுத்தறிவற்ற மக்களால் வாய்மொழி யாக இயற்றப்படும் இத்தகைய பாடல்கள் உலகின் மிகப் பழைய இலக்கிய வகையைச் சேர்ந்தன. அது மட்டுமன்று; உலக வரலாற்றிலே மனுக்குலத்தின் பெரும் பகுதி அறிந்த இலக்கிய வகையும் இதுவே யாகும். இவ்விலக்கியத்தை அ டி ப் ப  ைட யா ய் க் கொண்டே ஏனைய இலக்கியங்கள் எழுந்தன.
சமஸ்கிருத மொழியிலுள்ள மிகப் பழைய இலக் கியத் தொகுதியான வேத கீதங்கள், கிரேக்க மொழி யிலுள்ள ஆதிகாவியங்களாம் இலியாது, ஒதீசி முதலி யன, புராதன சுமேரிய ஐதிகக் கதைகள், பண்டைத் தமிழில் எழுந்த (சங்கப்பாடல்கள் என வழங்கும்) சான் ருேர் செய்யுள்கள், இவை போன்ற பேரிலக்கியங்கள் பலவும் வாய்மொழி இலக்கியங்களாய்ப் பிறந்தவையே, இவையனைத்தும் பிற்பட்ட காலத்திலேயே ஏட்டிலும் கடந்த சில நூற்றண்டுகளுக்குள்ளேயே அச்சிலும் பொறிக்கப்பட்டன.
இவ்வாறு, ஆதிகாலத்திலிருந்து பல்வேறு இன மக்களிடையே, பல்வேறு மொழிகளில் வாய்மொழி இலக்கியங்கள் எழுந்தமை யாலேயே அவை இன்றுவரை அழகும் ஆற்றலும் உடையனவாய் விளங்குகின்றன

Page 5
நீண்டகாலப் பாரம்பரியமும் மரபும் இருப்பதன் காரண மாக, மனிதன் உருவாக்கிதுள்ள ஆய்வறிவுத் துறைகள் பலவற்றைத் தெரிந்து கொள்வதற்கு வாய்மொழி இலக்கியம் பெருந்துணையாய் இருக்கிறது. அத்துறை களைப் பூரணமாகத் தெரிந்துகொள்வதற்கு வாய்மொழி இலக்கியம் இன்றியமையாதது என்றும் கூறுதல் தவரு காது. உதாரணமாக, நமது வரலாறு, மொழி, இலக் கியம், இசை, சமயம், சமூகவியல் என்பன்வற்றைக் கற்கும் பொழுது, வாய்மொழிப் பாடல்கள் எத்துணை முக்கியமானவை என்பதை உணர முடிகிறது. சுருங்கக் கூறின், ஒரு கூட்ட மக்களின் பண்பாட்டுக் கருவூலமாக வாய்மொழி இலக்கியம் திகழ்கிறது.
இவ்விலக்கியத்தின் பிரதான சிறப்பியல்புகள் சில வற்றை இவ்விடத்தில் நினைந்துகொள்ளல் தகும். அச்சியந்திரத்தின் வருகை க்குப் பின் எழுந்த ஆக்க இலக்கிய நூல்களிற் பெரும்பாலானவை அதிக மதிக மாகத் தனிப்பட்ட எழுத்தாளர்களது உலக நோக்கை யும், ஆசாபாசங்களையும் பிரதிபலிப்பனவாக அமை கின்றன. குறிப்பாக நவீன கவிதை, சிறுகதை என்பன வற்றிலே, தனிமனிதவாதம் முனைப்பாய்க்காணப்படும். இதன் தருக்கரீதியான விளைவாகப் பல எழுத்தாளரது சிருஷ்டிகளிலே தனிமனிதருக்கு ஏற்படக்கூடிய தவிப்பு தடுமாற்றம், அவலம், ஏமாற்றம், விரக்தி, நம்பிக்கை வரட்சி முதலியன அதீதமாய் இடம் பெறுவதைக் காணலாம். ஆனல் கைத் தொழிற் புரட்சிக்கும் முத லாளித்துவ சமுதாய அமைப்புக்கும் முற்பட்ட கால முதல் வழங்கிவருகின்ற வாய்மொழிப்பாடல்கள், அடிப் படையில், வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் மக் களின் கூட்டான, பொதுவான, உணர்வுகளை வெளி படுத்துவனவாய் உள்ளன. வெவ்வேறு தொழில்களிலு முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கும் ஒத்த வாழ்க்கை நிலை யிலுள்ளோரின் அநுபவ வெளிப்பாடாக முகிழ்க்கும் வாய்மொழிப் பாடல்களில், த்னிமனிதர்களது மனே பாவத்துக்குப் பதிலாகக் கூட்டு வாழ்க்கையின்
ii

உறுதிப்பாடும் நன்னம்பிக்கையும் வெளிப்படுதல் குறிப் பிடத்தக்கதாகும். வாய்மொழி இலக்கியத்தின் இப் பொதுப் பண்புபற்றி உலகப் புகழ் பெற்ற ருஷ்ய எழுத் தாளர் மாக்சிம் கார்க்கி ஒரிடத்திற் கூறியுள்ளது மனங் கொளத் தக்கது.
கிராமியப் பாடல்களை இயற்றியோர் மிகக் கடினமான வாழ்க்கை நடத்தினர்; அவர்கள் வருந்திச் செய்த வெறுப்பூட்டுகிற மட்டுமீறிய உழைப்புக்குக் கூட அர்த்தம் எதுவும் இல்லாத வகையில் மேலிருந்தோரால் ஈவிரக்க மற்ற முறை யிற் சுரண்டப்பட்டனர். தனிப்பட்ட வாழ்க்கை யிலும் அவர்கள் எத்தகைய உரிமையோ பாது காப்போ அற்ற வராய் அல்லலுற்றனர். அவ்வா றிருந்தும், அம்மக்கள் உருவாக்கிய கிராமியப் பாடல்களில் சோர்வுவாதமோ துன்ப இயற்கைக் கோட்பாடோ எள்ளளவும் தலைகாட்டுவதில்லை. அதுமட்டுமன்று; ஒட்டு மொத்தமாக நோக்கும் பொழுது அம்மக்களிடையே, தமது நித்தியத்து வத்தைப் பற்றிய உணர்வும், இறுதியில் தமது எதிர்ச்சக்திகள் வெல்லப்படும் என்ற மன உறுதி யும் ஆழமாகப் பதிந்திருக்கக் காணலாம்.
நன்னம்பிக்கையும் மன உறுதியும் கிராமியப்பாடல் களின் அடிப்படைப் பண்புகளாக இருந்து வந்தமை யாலேயே காலந்தோறும் மக்கட் சமுதாயத்திலே தோன்றிய முற்போக்கான உணர்வுகளும் எண்ணங் களும் அப்பாடல்களில் அடிநாதமாய் அமைந்துள்ளன. கல்வியறிவு அருகிய அம்மக்களது பாடல்களிலே கற்ருே ரும் வியக்க வல்ல தத்துவத் தெளிவு வியாபித்திருப் பதைக் காணலாம். இன்னெரு விதத்திற்கூறுவதானல், நாட்டுப்பாடல்கள், ஒரு குறிப்பிட்ட மக்கட் கூட்டத் தினரின் வரலாற்றுச் சான்றுகளாக மட்டும் அமைய வில்லை; அவர்களது கனவுகளின் இலட்சியக் குரலாக வும் இலங்குகின்றன.
இவ்வாறு, வரலாற்று விளக்கமும், சமுதாய முக் கியத்துவமும், உளவியல் நுணுக்கங்களும், உன்னத
iii

Page 6
இலட்சியங்களும் விரஷியிருப்பதனலேயே ஒவ்வொரு கூட்ட மக்களின் தேசிய மரபுகளைத் திறம்படச் சித் திரிக்கும் ஆற்றலுடையனவாய் நாட்டுப்பாடல்கள் கருதப்படுகின்றன. ஜாக்லின்ஸே என்ற ஆங்கிலத் திறனய்வாளர் கூறுவது போல, இத்தகைய பாடல் களே, “உண்மையான தேசிய வரலாற்றைப் பிழம்புரு வாகக் காட்ட வல்லன.”
岑 米 米 : ,事 ※
திரு. ஸி. வி. வேலுப்பிள்ளை அவர்கள் சேகரித்துத் தொகுத்து வெளியிடும் மலைநாட்டு மக்கள் பாடல் களின் கையெழுத்துப் பிரதியை நான் படித்தபொழுது, மேற்கூறிய சிந்தனைகள் மேலெழுந்தன. இத்தொகுதி யிலுள்ள பாடல்கள் நவீன இலங்கை வரலாற்றின் ஒரு பகுதிக்கு உயிர்த்தோற்றங்கொடுப்பனவாய் உள் 6f6ðf • ·
இலங்கையில் முதலாளித்துவத்தின், பிரிட்டிஷ் குடி யேற்ற வாதத்தின், முதல் வெளிப்பாடு பெருந்தோட்ட பயிர்ச் செய்கையாகவே இருந்தது. நமது நாட்டில் அந் நிய முதலாளித்துவம் நிலை கொள் ள த் தொடங் கியமையை அப்பொருளாதார அமைப்பே முதன்முத லாக முரசறைந்தது. முதலாளித்துவமும் ஏகாதிபத்திய மும் தமது வளர்ச்சியின் போது தேச வரம்புகளைக் கடந்து செல்வம் சேர்ப்பதற்கிணங்க, இலங்கைக்கு வந்த அந்நிய குடியேற்றவாதிகள் - பெருந்தோட்டச் சொந்தக்காரர்கள் - தென்னிந்தியாவிலிருந்து தொழி லாளர்களை இங்குக் கொணர்ந்தனர். தொழில் முறை ஒப்பந்தப் பிணைப்புச் செய்துகொண்டு இங்கு வந்த, தென்னிந்தியத் தொழிலாளர்கள் ஏறத்தாழக் கொத் தடிமைகளாகவே புதிய வாழ்க்கையைத் தொடங்கினர். *கண்டிச் சீமைக்கு’க் கனவுகளுடன் வந்தனர். புல பெயர்தலுடன் அவர்கள் வாழ்க்கை ஆரம்பமாயிற்று. இன்று வரை அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்
iv.

நோக்கி வந்துள்ளனர். இவையனைத்தையும் உயிர்தி துடிப்புடன் புலப்படுத்தும் உருக்கமான சொல்லோ வியங்களாய் இப்பாடல்கள் அமைந்துள்ளன.
சென்ற நூற்றண்டின் முதற்காலிலே ‘க ண் டி ச் சீமைக்கு ஆள் கட்டியபோது பிறந்த பாடல்கள் முதல் இலங்கைக்கு வந்த தொழிலாளர்கள் தலைமுறைகளாக இங்கே வாழ்ந்து இங்கேயே இறந்தவர்களை எண்ணி இரங்கும் ஒப்பாரிப் பாடல்கள் வரை, வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களையும் பிரதிபலிக்கும் பாடல்கள்காதலிலிருந்து கடவுள் வழிபாடு வரை பல்துறைகளைச் சார்ந்த பாடல்கள் - இத்தொகுதியில் இடம்பெறுகின் றன.
பொதுவாகவே ஈழத்தில் நாட்டுப் பாடல்களேச் சேர்ப்போரும் தொகுத்து வெளியிடுவோரும் அருத்த லாகவே உள்ளனர். விரல் விட்டு எண்ணக்கூடியவர் களே இத்துறையில் இடைவிடாது உழைத்து வந்திருக் கின்றனர். இச் சிறு குழுவினருள் காலஞ்சென்ற மக்கள் கவிமணி மு. இராம லிங்கம் விதந்து குறிப்பிடத் தக் கவர். பல்கலைக் கழகத்து விரிவுரையாளர்கள் சிலரும் மக்கள் பண்பாட்டு இயலில் ஒரளவு ஈடுபாடு கொண்டு ஆய்வுகள் நடத்தியுள்ளனரெனினும், நாட்டுப்பாட்ல்கள் சம்பந்தமான விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகள் குறிப் பிடத்தக்க விதத்தில் நிகழ்ந்துள்ளன என்பதற்கில்லை.
மலையக நாட்டுப்பாடல்கள் குறித்து அவ்வப்போது பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் சிற் சில ஆய்வுக் கட்டுரைகளும் வானெலியில் விவரணச் சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன. ஆயினும் மலையக நாட்டுப் பாடல்களை உண்மையாகப் பிரநிதித்துவப்படுத்துவ தும், அதிகார பூர்வமானதும், நம்பத்தக்கதுமான தொகுதியொன்று இதுகாறும் வெளிவந்திருப்பதாய்த் தெரியவில்லை. அத்தகைய தொகுதியை வெளியிடும் தகுதி திரு. ஸி. வி. வேலுப்பிள்ளைக்கு நிரம்ப உண்டு,
V

Page 7
ஆசிரியராய், தொழிற்சங்க வாதியாய், பராளுமன்ற உறுப்பினராய், அரசியல் பிரமுகராய், இலக்கிய கர்த் தாவாய், பத்திரிகை எழுத்தாளராய் இவை யாவற்றுக் கும் மேலாக அப்பழுக்கற்ற மனிதாபிமானியாய் வாழ்ந்து வரும் வேலுப்பிள்ளை அவர்களுக்கு, நாட்டுப் பஈடல்களில் நாட்டம் இன்று நேற்று ஏற்பட்ட தொன்று அன்று. அவரது ஊனுடனும் உதிரத் துட னும் ஒன்ரு கிக் கலந்துவிட்ட பாடல்கள் இவை. ஈழத் தின் முக்கியமான கவிஞர்களில் ஒருவராய்த் திகழும் ஆசிரியர், பல நூற்றுக்கணக்கான பாடல்களிலிருந்து வகைமாதிரிக்குப் பொருத்தமான சிலவற்றை இந்: நூலிலே தொகுத்துள்ளார். இத் தொகுதியிலுள்ள பாடல்களின் பொருட்பரப்பையும், வளத்தையும் சொல் தயத்தையும், இசைப் பாங்கையும் இன்னுே ரன்ன பிறவற்றையும் சுவைக்கும் நாம் அதேவேளையில் தொகுப்பாசிரியரது கவியுள்ளத்தையும் கண்டுகொள்ள லாம் என நினைக்கிறேன்.
புலம் பெயர்ந்து வந்தமையாலும், பொருளாதாரச் சுரண்டலினலும், முதலாளித்துவ அரசியல் அமைப்பில் அடிக்கடி நிகழும் பதவிப் போட்டிகளினலும் சூறையா டப் பெற்ற ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களது மெல்லாம் துன்பக் கேணியிலே தோய்ந்து வாழ்ந்து வரும் மலையக மக்களது - வாழ்க்கையும் தவிர்க்க இய லாதவாறு பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டே வரு கிறது. இந்நிலையிலே பழைய நாட்டுப் பாடல்களைச் சேர்த்து வெளியிடுதல் பாராட்டத்தக்க ஒரு பணியா கும். இவற்றிற் பல, கால வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லத்தக்க வை. எனவே, பேணப்பட வேண்டியவை.
புதிய புதிய பாடல்கள் இன்றும் அம்மக்கள் மத்தியி லிருந்து தோன்றிக் கொண்டிருக்கின்றன. சினிமடி வானெலி முதலிய நவீன தொடர்பு சாதனங்கள் இப் புதிய பாடல்களைப் பல வழிகளிற் பாதிக்கவும் செய்.
V፫

கின்றன. இதன் விளைவாகப் புதிய பாடல்களின் குணும் சத்திற் சிற் சில வேறுபாடுகளும் உண்டு. ஆயினும் இவற்றுக்கு இலக்கிய மூலம் தேடுவோர் இத் தொகுதியி லுள்ள பாடல்களைப் படித்தறிந்து கொள்வது அத்தியா வசியமாகும்.
இன்று ஈழத்திற் காணப்படும் சிருஷ்டி இலக்கிய எழுச்சியில் மலையகக் கலைஞர்கள் குறிப்பிடத்தக்க பாத் திரத்தை வகிக்கின்றனர். இது பலருமறிந்த உண்மை, தானே சிருஷ்டி கர்த்தாவாகவும் விளங்கும் வேலுப் பிள்ளை அவர்கள், ப ல ரு க் கு ம் பயன்படக்கூடிய நூலொன்றைப் பக்குவமாகத் தயாரித்து வெளியிடு கிருர்கள். அவருக்குத் தமிழிலக்கிய உலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. நூலைப் படிப்போர்க்கு இலக்கிய இன்பமும், தொகுப்பாசிரியருக்கு ஆத்ம திருப்தியும் இந்நூல் வெளியீட்டால் ஏற்படும் என்று எண்ணு கிறேன். நெடுங்கால நண்பர் ஒருவரது நூலுக்கு முன்னுரை எழுதுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின் றேன். தமிழியல் ஆய்வாளர் இந்நூலை உவந்து வர வேற்பர் என்பதில் எனக்கு எதுவித ஐயமுமில்லை.
க. கைலாசபதி யாழ்ப்பாண வளாகம் திருநெல்வேலி யாழ்ப்பாணம்
Wii

Page 8
நன்றியுரை
இத்தொகுப்பில் இடம்பெறும் நாட்டுப்பாடல்களில் ஒரு பகுதிப் பாடல்கள் எஸ். முத்துச்சாமி பண்டாரம் அவர்களா வழங்கப்பட்டவை.
மலையக நாட்டுப் பாடல்களின் களஞ்சியமாக அவ திகழ்ந்தார். மலையக நாட்டுப் பாடல்களை போஷித்து அவற்றை ஜீவத் துடிப்போடு பாதுகாத்து வந்த மிகச் சிலரி அவரும் ஒருவர்.
эauf வழங்கிய பாடல்கள் நூலுருப் பெறும் இத்தருணத் தில், அவருக்கு எவ்வளவு தூரம் நான் கடமைப் பட்டிரு கிறேன் என்பதை அவ்வளவு சுலபமாக வார்த்தைகளால் சொல்ல முடியாதவனுக இருக்கிறேன்.
இத்தொகுப்பில் இடம்வகிக்கும் ஒப்பாரி, தாலாட்டு பாடல்கள் திருமதி சந்திரா இராசையாவினுல் திரட்டி வழங் கப்பட்டவை. ஏனைய சில பாடல்கள் செல்வி சங்கரவடிவ செல்லேயா, திருமதி ஐ. நல்லசெல்வம், திருவாளர்கள் வலி. எஸ். காந்தி, தீ. சிவலிங்கம் ஆகியோரால் சேகரித்து அளிக்கப்பட்டவை. இவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தொகுப்பை நூலுருவாகக் கொணர்தற்கு உறுதுணை புரிந்த இலங்கை கலாசார பேரவைக்கும், அதன் தமிழ் இல: கிய குழுவிற்கும் எனது ஆழ்ந்த நன்றியறிதலைத் தெரிவித் துக் கொள்கிறேன். .
கொழும்பு வி. வி. வேலுப்பிள்ை 11-11-1976
Viii

தெம்மாங்கு பாடி
தெருவழியே போனுலும்
அன்பான வார்த்தை சொல்லி
அழைப்பாரு யாருமில்லே

Page 9

1825 கண்டிச் சீமைக்கு ஆள் கட்டிய போது
கண்டி கண்டி எங்காதிங்க கண்டிப் பேச்சு பேசாதீங்க கண்டி படும் சீரழிவே கண்ட பேரு சொல்லுவாங்க
கண்டி கண்டி எங்காதிங்க கண்டிப் பேச்சு பேசாதிங்க சாதி கெட்ட கண்டியிலே சக்கிலியன் கங்காணி
அட்ட கடியும் அரிய வழி நடையும் கட்ட எடறுவதும் காணலாம் கண்டியிலே
ஆளுக் கட்டும் நம்ம சீமை அரிசி போடும் கண்டிச் சீமை சோறு போடும் கண்டிச் சீமை சொந்த மினு என்ணுதிங்க

Page 10
பயணம்
வாடையடிக்கு தடி வடகாத்து வீசுதடி சென்னல் மணக்குதடி - நம்ம சேந்து வந்த கப்பலிலே
வண்டி வருகு தடி வடமதுரை டேசனிலே தந்தி வந்து பேசுதடி - நம்ம தரும தொரை வாசலிலே.

கண்டிச் சீமைக்கு வந்தபின்
கண்டிக்கு வந்த மினு கனத்த நகை போட்ட மினு மஞ்ச குளிச்ச மினு மனுச மக்க தெரியலியோ
பான்தயிலே வீடிருக்க பழனிச் சம்பா சோறிருக்க எரும தயிரிருக்க ஏண்டி வந்தே கண்டிச் சீமை?
ஊரான ஊரிழந்தேன் ஒத்தப்பனே தோப்பிழந்தேன் பேரான கண்டியிலே
பெத்த தாயே நாமறந்தேன்

Page 11
கோப்பிக் காலம்
கூனி அடிச்ச மலை
கோப்பிக் கன்னு போட்ட மலை
அண்ணனைத் தோத்த மலை அந்தா தெரியுதடி
கோப்பி பழுத்துருச்சு கொண்டு போக நாளாச்சு சீமை தொரைகளெல்லாம் சிரிக்குருக சன்ன லிலே
பழமிருக்கு சாக்குலே தான் பாத்துக்கடி பத்தரமா பாசு மாங் கோப்பியிலே பழமெடுக்க நேரமாச்சு
கங்காணி காட்டு மேலே கண்டாக்கையா ரோட்டு, மேலே பொடியன் பழமெடுக்க பொல்லாப்பு நேர்ந்த தையா
பழமும் எடுக்கவில்லே பழைய சோறும் திங்கவில்லே வீட்டுக்குப் போகவில்லே
வேகுதையா என் மனசு

'இடுப்பிலேயும் சாயச் சீலை இருபுறமும் கோப்பி மரம் அவசரமா புடுங்குருளே அடுத்த வீட்டு ராமாயி
ஆப்பத்தே சுட்டு வச்சு
அது நடுவே மருந்தே வச்சு கோப்பி குடிக்கச் சொல்லி கொல்லுருளே சிங்களத்தி
கோப்பி குடிச்சிட்டாராம்
குதுரே மேலே ஏறிட்டாராம் பச்சக் காடு சுத்தி வர பத்தே நிமிசம் செல்லும்
பத்து மணிநேரத்திலே பழம் எடுக்கும் வேளையிலே பரிகாசம் பேசியல்ல பவுன் கொடுத்தார் கையிலே; கண்டிருந்த கருத்தக் குட்டி கணக்கன் கிட்டே சொல்லிட்டாளே!

Page 12
தேயிலைக் காலம்
கொழுந்து வளந்திருச்சு கூடே போட நாளாச்சு சேந்து நெரே புடிச்சு சிட்டா பறக்குருளே
கண்டித் தொரை தோட்டத்திலே கருத்தக் குட்டி முழி மிரட்டி கிட்ட கிட்ட நெரே புடிச்சு சிட்டா பறக்குருளே
கட்டத் தொர பட்டியிலே கட்ட க் குட்டி ரெண்டு பேரு கிட்ட கிட்ட நெரே புடிச்சு சிட்டிா பறக்குருளே.
காலையிலே நெரே புடிச்சு காட்டு தொங்க போய் முடிச்சு கூடே நெறயிலியே - இந்த கூனபய தோட்டத்திலே
நானும் நெரே புடிச்சு நயமா கொழுந்தெடுத்தேன் கூடே நெறஞ்சு போச்சு கொழுந்து நெறு சின்ன தொரே

துரை
நம்ம தொரை நல்ல தொரை நாடறிஞ்ச கோட்டுத் தொரை கோட்டுத் தொரை பொல்லாதவன் ரோட்டை விட்டு கீழிறங்கு
செடியே செடிக் கொழுந்தே சின்ன தொரை டீ கொழுந்தே வாரணச் செடிக் கொழுந்தே வந்திட்டாரே நம் ம தொரை
துரை பங்களா
கொய்யா பழம் பழுக்கும் கொட மல்லிகே பூ பூக்கும் சீத்தா பழம் பழுக்கும் - நம்ம சின்னத் தொரை வாசலிலே
ஆறடி தான் வங்களாவாம்
அறுவதடி பூந்தோட்டம் பூஞ்செடிக்கு தண்ணிப்போடும் புண் ணியரே என் பொறப்பு
வங்களா கோழி
அப்புக் குசினி மேட்டி அடவால் த வால் காரன் வாங்கோழி ரெண்டும் காணும் வாங்க மச்சான் தேடிப் பாப்பம்

Page 13
இஸ்டிோரு
இஸ்டோரும் கட்டியாச்சு இஞ்சிநீரும் பூட்டி யாச்சு இளவட்டப் பொண்டுகளே எலே பொறக்க வந்திடுங்க
மேரிவளே தோட்டத்திலே மேக் கணக்கு கண்டக்கையா இஞ்சிநீரே தட்டி விட்டு எலை பொறுக்க நான் வாறேன்
ஆடு தையா இஞ்சிநீரு அரைக்கு தையா செம்பு ரோதை ஒடுதையா வாரு களும் ஒளிஞ்சிருந்து பாருமையா
வெங்கல ரோதையிலே வேலை செய்யும் என் சாமி வெத்திலை வேணுமின்ன வெளியே வந்து கேளுமையா

பெரிய கங்காணி
கும் மி
திண்ணையே திண்ணையே கூட்டுங்கடி - அந்த தெருவுத் திண்ணைய கூட்டுங்கடி நம்மையா கங்காணி சாஞ்சிருக்கிற சருகைதிண்ணைய கூட்டுங்கடி
சு ரை படந்த தைப் பாருங்கடி - அது சுத்திப் படந்ததைப் பாருங்கடி சுரை விதை போலே நம்மையா கங்காணி சொல்லு வருசயே பாருங்கடி
பாகை படந்த தைப் பாருங்கடி - அது பத்திப் படந்ததைப் பாருங்கடி பாகை விதை போலே நம்மையா கங் காணி பல்லு வரிசையைப் பாருங்கடி
செம்புச் சிலை போலே பெண்ணே உ அவர் சிம்மா சனத்திலே வச்சுப் பிட்டு வேலைக் கிறங்கிய நம்மையா கங்காணிக்கு ஏழெட்டு பேராம் வப்பாட்டி
முருங்கெல போல கோலமிட்டு - அவர் முன்னஞ்சு பின்னஞ்சு கூத்தியராம் சரிகை துப்பட்டி மேல் போட்டு - அவர் தங்கப் பல்லாக்கு மேல் வாராரும்
9

Page 14
கல கலனு மழை பேய கம்பளித் தண்ணி அலைமோத காரியக் காரராம் நம்மையா கங்காணி கடுக்கன் மின்னலைப் பாருங்கடி
சொலு சொலுணு மீழை $LJuנ துப்பட்டி தண்ணி அலைமோத செரிகுசு காரராம் நம்மையா கங்காணி சொல்லு வருசைய பாருங்கடி
குதிரே வாரத பாருங்கடி குதிரை குனிஞ்சு வாரத பாருங்கடி குதிரே மேலே நம்மையா சங்காணி கும்பிட்டு சம்பளம் கேளுங்கடி
சித்திர புத்திர கண்டாங்கியாம் செப்புக் கொடத்திலே எழுதியிருக்கும் எடுத்து குடுப்பாராம் நம்மையா கங்காணி இழுத்து மாராப்பு போடச் சொல்லி
கிருச்ச மிதியடியாம் கீபோட்ட சோமாங்களாம் வேட்டே நாயே கைப் புடிச்சு வேலே விட வாராரும்
1 Ο

கண்டாக்கு
மணிக்கவத்தை தோட்டத்திலே மயிருவத்தி கண்டாக்கையா உருலோச அடகு வச்சு உருட்டுரு ரே ஜின்னு போத்த
அந்தன தோட்ட மீது ஆசையா தானிருந்தேன் - ஒர மூட்டே தூக்கச் சொல்லி ஒதைக்கிருரே கண்டாக்கையா
கல்லாறு தோட்டத்திலே கண்டாக்கையா பொல்லாதவன் மொட்டே புடுங்கு தின்னு மூணுளு விரட்டி போட்டான் வேலை முடிஞ்சிருச்சு வீட்டுக்குப் பயணமாச்சு வேலையில்லா கண்டக்கையா
வெரட்டுருரு எங்களே தான்
ll

Page 15
கணக்கப்பிள்ளை
பொட்டுப் பொட்டா பொஸ்தகமாம் பொன் பதிச்ச பேணு குச்சியாம் ஆதரிச்சு பேரு போடும் ஐயா கணக்கப் புள்ளே பொழுதும் எறங்கிரிச்சு பூ மரமும் சாஞ்சிரிச்சு இன்னம் இரங்கலையோ எசமானே ஒங்க மனம் அவசரமா நா(ன்) போறேன் அரே பேரு போடாதிங்க
食
ஒடி நெரே புடிச்சு ஒரு கூடே கொழுந்தெடுக்க பாவி கணக்கப் புள்ளே
பத்து ராத்த போடுருனே
2

கங்காணி
தோட்டம் பிரளியில்லே தொர மேலே குத்தமில்லே கங்காணி மாராளே கன பிரளி யாகுதையா
எண் ணிக் குழி வெட்டி இடுப்பொடிஞ்சி நிக்கயிலே "வெட்டு வெட்டு” எங் குருனே வேலையத்த கங்காணி
அஞ்சு மணியாச்சு ஐயா வர நேர மாச்சு கொஞ்சி விளையாடாதீங்க கோளுக்காரன் கங்காணி
கங்காணி பெண்டாட்டி
கங்காணி பெண்டாட்டி காசுக்காரி எண்டிருந்தேன் அரிசிக் காசு கேட்டதுக்கு ஆட்டுருளே தண்டட்டியே
கங்காணி பெண்டாட்டி காசுக்காரி என்டிருந்தேன் பச்சக் காட்டு தொங்கலிலே மொச்சுக் கொட்ட்ே விக்கிருளே
13

Page 16
தோட்டம் காதல் - பெண்:
கருத்த முத்து செவத்த முத்து கடலோரம் வெளஞ்ச முத்து இங்கிலிசு பேசும் முத்து எவளெடுத்து கெஞ்சுருளோ?
காலுச்சட்டை மேலுச் சட்டை உள் கமுசு வாசுக் கோட்டு - ஒங்க தங்க உருலோசுக்கு அங்கம் பதறுதையா
குத்துக் கட்டே மேலேறி கொழுந்து வெத்திலே போடையிலே கைபுடி லேஞ்சு கண்டு - என் கள்ள மனம் துள்ளுதையா
காலிலேயும் வெள்ளி மிஞ்சு கழுத்திலேயும் தங்கக் காரை மேலிலேயும் வெள்ளை லேஞ்சு - எனக்கு வேலை செய்யக் கூடலையே
கோப்பியிலே கொழுந்து மில்லே கொழுந்தெடுக்க சிந்தே யில்லே வாங் கடி பெண்டுகளா - நாம வதளே பக்கம் போயிருவோம்
l 4

ஊருககுப் போரமினு ஒரு மனசா தானிருந்தேன் தேசிக்காயே போட்டல்லோ தேத்திட்டாரு எம்மனசே
ஏறுறது ஏலமலே எடுக்கிறது ஏலப் பழம் பாடுறது ஒங்க மேலே பன்னிரு தண்ணி போலே
முத்து முத்தா மோதிரமாம் முகப்பு வச்ச மே முருகாம் உருலோசு காரப்பையா-நான் உனக் கழுத கண்ணிரு
பேராதனிப் பாலத்திலே பீலிவச்சு போகுதையா காட்டுக்குள்ளே கமுக மரம்-நான் கண்டு பேசி ஆறு மாசம்.
பனிய லயத்து சாவல் பாசமுள்ள வெள்ள சாவல் காலு வளர்ந்த சாவல் கண்டாலும் பேசுதில்லே
5

Page 17
தோட்டம்: காதல்-ஆண்!
மேட்டு லயத்து புள்ளே மிஞ்சிபோட்ட ரஞ்சிதமே-உன்னே காணுேனு மின்னலும்
காவல் கடுங்காவல்
சவுக்கு மரம் போலே சரடா வளந்த புள்ளே இன்னும் செத்தே நீ வளந்தா செத்திருவேன் ஒன் மேலே
கொந்தரப்பு காரக் குட்டி கொழுந்தெடுக்கும் சின்னக் குட்டி உன் கொந்தரப்பே கண்டவுடன் கொழுந்தெடுக்க கூடலேயே
அஞ்சுங் கிளி யழகே ஆடு தொடை ரெண்டழகே கொஞ்சுங் கிளியழகே கொந்தரப்பா வெட்டப் போறே
ஈரப் பிலாக்காயே இன்பமுள்ள தேங்காப் பாலே வன்னி நாட்டு கொச்சிக்காயே வருமம் தாண்டி ஒன் மேலே
16

வட்டுக் கருப்பட்டியே வாசமுள்ள சுண்ணும்பே துட்டுக் கருப்பட்டியே தோட்டம் விட்டா நீ போறே?
அச்சடி சீலை கட்டி அடுத்த தோட்டம் போற குட்டி அச்சடி சீலையிலே அடிச்சு விட்டேன் மேவிலாசம்
வட்டுக் கருப்பட்டியே வாகான செங்கரும்பே புட்டுக் கருப்பட்டியே போறேண்டி தோட்டம் விட்டு
சாந்தார்க்கு சந்தனமே சாதி மரிக் கொழுந்தே வெறுத்திட்டு போற மின்னு வேலே விட்டு வந்துருதே
என்னையே நம்பாத டி
எழுதிக் கடன் வாங்காதடி
உன்னையே நான் பிரிஞ்சு ஊருக்குப் போறேண்டி
7

Page 18
தோட்டம் விட்டுப் போற மின்று: தொயரங்களே வைக்காதடி எட்டுமணி கோச்சியிலே எட்டிவந்து பார்த்திடுவேன்
மஞ்சள் மினிக்கியடி மயிரெல்லாம் பூ மினிக்கி கொண்டே மினிக்கியடி-உன்னை கொண்டு போவேன் தொங்க தோட்டம்
ஏத்தமடி பெத்துராசி எறக்கமடி ராசாத் தோட்டம் தூரமடி தொப்பித் தோட்டம் தொடந்து வாடி நடந்து போவோம்,
பட்டுக்கரே வேட்டி கட்டி பாலூத்தி சாதங் கட்டி மட்டுக் கொலே போகுமுன்னே மானே மறந்தனடி
மானிருக்கும் புதுத் தோட்டம் மயிலிருக்கும் அம்பா கோட்டை தேனிருக்கும் ரசவளையாம்
தேடிப் போவார் கோடிப் பேரு,
8

சக்கிலியக் குட்டி ச மஞ்ச புள்ள ராமாயி- அவளே கண்டா வரச் சொல்லுங்க காச்ச கன்னு மே மலைக்கி
வாழமலே தொங்கலிலே வளவி போட்ட கருத்தக் குட்டி கோரப் பள்ளம் வந்தியன்னு குரும்பே வெட்டி நாந் தருவேன்
கொத்தமல்லித் தோட்டத்திலே
கொழுந்து கிள்ளி போற பெண்ணே கொண்டுவந்தேன் மல்லிகைப் பூ ஒன் கொண்டையிலே சூட்டிவிட
19

Page 19
பொது
காதல் -
பெண்
கஸ் லுருக கடலுருக கண்டார் மனமுருக நானும் சடங்காகி நாப்பத் தொரு நாளாச்சு
நானும் சடங்காகி நாப்பத்தொரு நாளாச்சு ஏனின்னு கேக்கலையே ஏறிட்டு முகம் பார்க்கலையே
மாமன் மகனே மருதப் பிலாச் சொளையே ஏலம் கிராம்பே-ஒன்னே என்ன சொல்லிக் கூப்பிடுவேன்"
மறந்தா மறக்கு தில்லே மருந்து தின்ன ஆறுதில்லே மருதே சர விளக்கே-நான் மறக்குறது எந்த விதம்
ஈரல் கருகுதையா இரு தொடையும் நோகுதையா நினைத்துப் படுத்தாலும் நித்திரையும் போகுதில்லே
20

கலலுக் கட்டி வில்வ மரம் கவுறு கட்டி ஆலமரம் முத்துப் பல் என் சாமி-நீ முகங் கழுவ வார தெப்ப?
வேட்டின்ன வெள்ள வேட்டி விருச்சுப் பாத்தா ஏ கருப்பு ஏ கருப்பு சாமியோடே எறந்திட்டாலும் குத்தமில்லே
அடியும் மிதியும் பட்டோம் அவராலே சொல்லுங் கேட்டோம் முழி மிரட்டி சாமியாலே மூங்கியாலே அடியும் பட்டோம்
காட்டுக்குள்ளே கமுக மரம் கண்ணி வச்சு ஆறு மாசம் பேசோனு மின்னலும் பெத்த தாயி சத்துராதி
நகரத்துச் சந்தனமே நான் படிக்கும் புத்தகமே பூ நாக வாசகரே-நீங்க போகமனம் வந்திரிச்சோ
21

Page 20
கம்பி மேலே கம்பியிருக்க தங்கக் கம்பி நானிருக்க பித்தளக் கம்பி மேலே பேராசை 60) 6u é56) non?
முத்து முத்தா லேஞ்சே முகம் தொடைச்கும் து வாலையே தங்க முடி லேஞ்சே-என்னே தவற விட்டே ரோட்டு வழி
என்னையே வச்சு விட்டு எளய தாரம் கட்டின நீங்க பூ முடியும் கூந்தலிலே-ஒரு பூ நாகம் தீண்டி டாதோ?
ஒடுற தண்ணியிலே ஆடுற பம்பரமே பம்பரத்தே நம்பியலோ-நான் வெம்பிறவியானேன் டி
பானையை ஒழுக விட்டேன் பன்னிரை சிந்த விட்டேன் வாசமுள்ள சவுக்காரத்தே வந்தார்க்கு தான மிட்டேன்
22

காதல் - ஆண்:
கொண்டையிலே பூச்சூடி கோயிலுக்கு போற தங்கம் ஒன் கொண்டே அலங்காரம் ஒன் கொரலோசை சிங்காரம்
பாக்குப் பணம் பெறுமா பல்காவி சொற் பெறுமா சொல்லுப் பணம் பெறுமா-என் சோலைக் கிளி வாய் திறந்தா
பாக்கிட்ட பல்லழகி பாதசரம் பூண்டழகி கொன்னப் பூ வாகனமே-நான் கூப்பிட்டது கேக் கலையோ?
பேரீச்சம் பழமே பெரிய எடத்துக் கிரிய டமே ஆளுக்கிளே நிக்கயிலே-நான் ஆர விட்டுக் கூப்பிடுவேன்
ஒன் கிள்ளி கொசுகத்துக்கும் கீமடியி வெத்திலைக்கும் அள்ளிய தே மலுக்கும்-நான் ஆசை வச்சேன் உன் மேலே
இடி இடிச்சி மழை பொழிய இரு கடலும் பொங்கி வர கொடைபுடிச்சி நான் வருவேன் குணமயிலே கலங்காதே
23

Page 21
வாழப் பழமே வலது கையி சக்கரையே உள்ளங்கையி தேனே
உருகுறனடி உன்னலே
மல்லியப் பூவே மணமுள்ள ரோசாப் பூவே கண்ணு வலிப் பூவே-ஒன்னே கண்டு வெகு நாளாச்சே
ஒலை எழுதி விட்டேன் உள்ளாளு தூது விட்டேன் சாடே எழுதி விட்டேன்-நான் சன்னக் கம்பி சீலையிலே
ஒடுற தண்ணியிலே ஓரச்சு விட்டேன் சந்தனத்தை சேந்துச்சோ சேர லியோ-அந்த செவத்த புள்ளே நெத்தியிலே
தக்காளி சாறெடுத்து தனிச் சாறே ஊடே விட்டு பொட்டு வச்சுப் போனலும் பொருந்தலையே என் மனசு
24

சின்ன சின்ன வெத்திலேயே சிரிக்கி மேலே நித்திரையே நித்திரையில் கண்ட கணு-என் நெஞ்சுருகி போகு தடி
செம்பு வளவிக்காரி செவத்த புள்ள ராமாயி ஒன் செம்பு வளவியிலே-என் சீவ னெல்லாம் போகுதடி
ஈய வளவிக்காரி இடே சிறுத்த கள்ளப் புள்ளே பைய நடந்து வாடி-ஒன் பல்காவி சிந்திடாமே
புள்ளி ரவிக்கைக் காரி புளியங்கொட்டை சேலைக்காரி-உன் புள்ளி ரவிக்கை மேலே வில்லா வளயிரண்டி
கடலோட கடலொரச கடலு தண்ணி மீனு ரச ஒன்னேட நானுரச
ஒலகம் பொறுக்கலையே
25

Page 22
ஆல விழுது போலே அந்தப் புள்ளே தலைமயிரு தூக்கி முடிந்தாலுன்ன துரக்கணுங் கூடு போலே
அரிசி குத்தி மடியிலிட்டு அன்னம் போலே நட நடந்து சொகுசுக்கார செவத்தப் புள்ளே சோறு கொண்டு வார தெப்ப?
ஆத்திலே தலை முழு கி
அவளும் நானும் பல் விளக்கி துருநீறு பூசையிலே தூரமினு சொன்னுளே
ஈருகுள்ளி போலே இடசிறுத்த கள்ளப் புள்ளே பாக்காமே போறியடி படமெடுத்த நாகம் போலே
காணுக் கருங் குயிலே கருத்துள்ள மாமயிலே சாமத்திலே வந்து ஒன்னே ஏமாத்தி கொண்டு போவேன்
26

நல்ல நிலா வெறிக்க
நானும் வந்து வெளியே நிக்க தள்ளிக் கதவடைக்க சம்மதமோ ஒன் மனசு
கேட்டேண்டி ஒன்னே கெஞ்சினேண்டி நெஞ்சுருக மாட்டேன்னு சொன்னியடி - ஒன்னே மாடசாமி கேக்காதோ?
பூசணிப் பூவே பொழுதிறங்கப் பூத்த பூவே நாதியத் த பூவாலே
நானுமொரு சொல்லுங்கேட்டேன்
செம்புச் சிலை போலே தெய்வம் வந்து நிக்கு தடி மாம்பழத் தழகி-என்
பிரே விடு நான் போறேன்
இட்டுமேலே பொட்டு வைச்சு பொட்டலிலே போர தங்கம் டுபாட்டலிலே பேஞ்ச தண்ணி ஒன் பொட்டு உருக பேயலியே
27

Page 23
தோட்டம்
காதல் - தர்க்கம்
ஆண்
பெண்.
பெண்
ஆண்
கூட மேலே கூட வச்சு கொழுந்தெடுக்க போர புள்ளே கூட எறக்கி வச்சு குளுந்த வார்த்தைசொல்லிப் போடி
என்புருசன் கங்காணி என் கொழுந்தன் கவ் வாத்து எளைய கொழுந்தனு மே இஸ்டோரு மேல் கணக்கு
கவ் வாத்து காரப் பையா கத்தி வெட்டும் பாண்டி மன்னு கத்தி என்ன மின்னுறது-உன் கவ் வாத் தென்ன பிந்துறது
வெட்டுனலும் வெட்டு வண்டி மேசை வெட்டு வெட்டுவண்டி ஒன் மேலே கண்ணிருந்தா ஒன்று ரெண்டா வெட்டுறண்டி
28

பெண். முந்நூறு ஆளுக்குள்ளே
முள்ளு குத்தும் என் சாமி முள்ளு மூனும் மண்ணு க்குள்ளே முழிக ரெண்டும் என் மேலே
ஆண். நாநூறு ஆளுக்குள்ளே
நடுவே நிக்கும் துலுக்கக் குட்டி விரல்கள் பத்தும் தேயிலையில் விழிக ரெண்டும் என் மேலே
ஆண்- வட்ட வட்ட பாறையிலே
வர கரிசி தீட்டையிலே ஆர் கொடுத்த சாயச் சீலை ஆல வட்டம் போடுதடி
பெண் - ஆரும் கொடுக்கவில்லே
அவுசாரி போகவில்லே கையாலே பாடுபட்டு கட்டினேன் சாயச் சீலை
29

Page 24
FT6A
காளை கருத்தக் காளே கண்ணுடி மயிலே காளே சூலம் போட்ட வெள்ளக் காளே சுத்துதடி மத்தியானம்
வேட்டி வெளுத்துக் கட்டி வெள்ளே உருமா சொங்கு விட்டு சொங்குக்கு சொங்கு தொங்கு தையா சீலைப் பேனு
பாட்டுக்கு பணிய லயம் பந்தடிக்க மேட்டு லயம் பேச்சிக்கு பீலிக் கரை வாச்சதடி மன்னனுக்கு
காது கடுக்கன் வித்தேன் காலு மிஞ்சி ரெண்டும் வித்தேன் அருணு கொடியும் வித்தேன் அவுசாரி உன்னுலே
மாமன் மகனிருக்க மாலையிட்ட சாமியிருக்க வழியிலே வந்த பயல் மாப்புள்ளையா வந்த தென்ன?
30

கடலே பருப்பு போலே வெடலே பய ரெண்டு பேரு கண்ணி வச்சு திரியிருண்டி என்னே புடிப்பதுக்கு
வானத்திலே ரோட்டு வெட்டி
மாதளம் பூ பாய் விரிச்சு அங்கேருந்து பேசுருனே அரக்கு லேஞ்சு காரப் பையன்
சீறுதய்யா சிங்கமலை சிதறுதய்யா காணுத் தண்ணி
அள்ளுதய்யா சாயச் சீலை-நம்ம ஐயாதொரை தோட்டத்திலே
அச்சடி சீலை கட்டி அடுத்த தோட்டம் போற குட்டி அங்கே ரெண்டு டாக்கு தொரை சொரண்டு ராண்டி கரண்டி போட்டு
தண்டட்டிக்கும் மேலட்டுக்கும் தண்ணிப்படா தே கத்துக்கும் உன் தோலு வளயலுக்கும் தொயந்தாண்டி முத்துச்சாமி
31

Page 25
மூக்குத்தி போட்ட புள்ளே முகம் சிவந்த சின்னப் புள்ளே நாக்கு சிவந்த புள்ளே நான் தாண்டி உன் புருசன்
வெத்திலையும் போடலாமா? வீதி வழி போகலாமா? கண்ணுடி பாக்கலாமா? தன்னழகு பத்தாதோ!
கண்டாக்கு மாடு போலே கருத்த புள்ள வீராயி - ஒன்னே தொட்டதொரு தோஷத்தாலே துன்பம் வந்து நேந்ததடி
வண்ணுரப் புள்ளேயடி
வடுகப் புள்ளே ராமாயி கிண்ணுர பெட்டியாலே கேடு வந்து நேந்த தடி
அடி வண்ணுரக் குட்டி மலடி பெத்த மாங்குயிலே வெள்ளாவி பானையிலே வேகுதடி உன் சதிரம்
32

அம்பட்ட புள்ளேயடி அடியே புள்ளே பூரணமே - ஒன் செம்பட்ட தலைமயிரே செரைக்க வல்லே உத்தரவு
ஒரு கொத்து அரிசி திம்பா ஒன்னரே நா சீக்கிருப்பா பெரட்டுக்கு போகையிலே பெருந் தொடே நோகுதும்பா கோழிக்காரன் பெண்டாட்டி குட்டிப் புள்ளே வள்ளியம் மே கொழும்புத் தோட்டத் தொங்கலிலே கூட்டம் போட்டு பேசுருளே
நாலு சீப்பு வாழப் பழம் நனையாத பச்சரிசி
உடையாத தேங்கா கொண்டு உறவாட வாராயடி
33

Page 26
தாலாட்டுப் பாடல்
ஆரிரரோ ஆரிரரோ-கண்ணே ஆரிரரோ ஆரிரரோ
குளங்கலங்க தலை முழு கி கொடி போல ராம மிட்டு மலை முழங்க பாடி வரும் மலைப் பழனியாண்டவர்க்கு
ஆரிரரோ ஆரிரரோ-கண்ணே ஆரிரரோ ஆரிரரோ
அஞ்சு விரல் மரிப்பார்-சுப்பைய்ா ஐவருக்கும் கை மரிப் பார்-சாமி பத்து விரல் மரிப்பார் பன்னிரண்டு கை மரிப் பார்
தோளிலே காவடியாம்-சாமிக்கு கழுத்திலே துளசிமணி ஆடி வரும் காவடியே-சாமி அந்த மடம் இறங் தம்
தெய்வானை பச்சை நிறம் வள்ளியம் மை பவள நிறம்
சுப்பையா சோதி நிறம் துலங்கு தையா கதிர்காமம்
34

கண்ணே உறங்கையர் கான மயிலுறங்கு பொன்னே உறங் கையா பூமரத்து வண்டுரங்கு
துரங்கையா கண்ணே தூங்காமணி துரங்கு உறங்கையா கண்ணே
ஒட்டிவிடு நித் திரையே
ஒடுஞ வள்ளி-கண்ணே ஒளிஞ்சா வனந் தேடி தேடினர் வேலவரும்-ஏழு திருப்பாக் கடலறிய
வள்ளி அழகுக்கும்-வள்ளி வலது புறம் தே மலுக்கும் கூந்தல் அழகுக்கும் வேலவர் குறவேசம் கொண்டாரோ
வள்ளின்ன வள்ளி-என் கண்ணே மலைமேல் படரும் வள்ளி கொடிபடர்ந்த வள்ளியோடு-நீ கூடப் பிறந்த கண்ணே
35

Page 27
கண்ணே கமலநிறம்-கண்ணே யுன் கண் அருவம் தங்க நிறம் மேனி பவள நிறம்-கண்ணே யுன் மேற்புருவம் தங்க நிறம்
ஆரு பெத்த பாலகனுே-கண்ணே நீ அன்பு பெத்த செம்பகப் பூ தேனே தினை மாவோ-கண்ணே நீ தெவிட்டாத மாங்கனியோ
வாழைப் பழமோ-கண்ணே நீ வைகாசி மாம்பழமோ . கோவைப் பழமோ-கண்ணே நீ கொஞ்சி வந்த ரஞ்சிதமோ
காணிக்கைக் கொண்டு-செல்வமே கண்டி கதிருமலை போனுேமையா வழியா வழி நடந்து-செல்வமே வரத்துக்கே போனேமையா
மாலை தந்தா வாடுமின்னு-செல்வமே மலர் கொடுத்தா உதிருமின்னு பூ தந்தா வாடுமின்னு பிள்ளை தந்தார் தாலாட்ட
ஆரிரரோ ஆரிரரோ-கண்ணே ஆரிரரோ ஆரிரரோ
36

அஞ்சு கிளி மெத்தையெல்லாம்-சாமி அது நிறைஞ்ச மல்லிகைப் பூ பத்தாமே அழுதுச்சின்னு-சாமி பவள தேர் கேட்டாராம்
பெத்தா பிராமணத்தி-சாமி பெயரிட்டாள் நாக கன்னி வளர்த்தா பிராமணத்தி-சாமிக் வரங்கொடுப்பார் மாயவரும்
பால் தருவாள் தாயாரும்-சாமிக்கு பழம் தருவாள் முப்பாட்டி-சாமிக்கு சோறிடுவாள் தாயாரும்-சாமிக்கு சுகம் தருவார் பரமசிவன்
அழுது வந்தான் நம்ம கண்ணு தொழுது வந்தே சூரியனை அழுதால் அரும் புதிரும்-தம்பிக்கு அந்தி பட்டால் கண்ணசரும்
கோட்டையிலே திருநாளாம் குயிலுமொரு வாகனமாம் குயிலை வரவழைக்க-எங்க குழந்தை விளையாட
37

Page 28
ஆரிரரோ ஆரிரரோ-கண்ணே ஆரிரரோ ஆரிரரோ
தாழை இரு புறமாம்-தாழை தழையிரதும் ஆயிரமாம் புன்னை இருபுறமாம்-புன்னை பூக்குறதும் ஆயிரமாம்
அதிலே அடை கிடக்கும்-சாமி அஞ்சுதலை செந் நாகம் சீறுதாம் நாகம்-கண்ணே சிவக்கு தர்ம் கண்ணிரண்டும்
பெத்தா துரோபதை யாம்-உங்களே பேரு வைத்தார் தரும தொரே வளர்த்தார் கமலக் கன்னி-தங்கமே வரந் தந்தார் மாயவரும்
பட்டாலே தொட்டி கட்டி பவளக் கொடி கயிரும் முத்தாலே ஆபரணம்-செல்வமே முகம் பார்க்கக் கண்ணுடி
ஏலேலையாம் கோவுரமாம்-செல்வமே எறும்பேரு மண்டபமாம் எறும்பேரு மண்டபத்தை-தங்கமே இருந்தாள வந்தாயோ
38

பத்தெலையாம் கோவுரமாம்-தங்கமே பாம்பேரு மண்டபமாம் பாம்பேரு மண்டபத்தை--செல்வமே பள்ளி கொள்ள வந்தாயோ
மருதையிலே திருநாளாம்-தங்கமே மயில் மேலே வாகனமாம் மயிலே வரவழைக்க-எங்க மைந்தன் விளையாட
தங்க பொஸ்தகமாம்--செல்வமே சாஞ்சிருக்க நாற்காலி கல்லாலே கோட்டைகளாம்-தங்கமே கணக்கெழுத மண்டபமாம்
மாலை விரிஞ்ச முத்து மல்லிகையே என் தேனே தேனே திரவியமே தெவிட்டாத மாங்கனியே
கரும்பே ரசமே கசக்காத சக்கரையே வாழைப் பழமே-என் வைகாசி மாம்பழமே
39.

Page 29
-2 fτ (3σιτ ஆரிரரோ-கண்ணே ஆரிரரோ ஆரிரரோ
ராமர் பசுவணைய லெட்சுமனர் பால் கறக்க சீதையம்மா எழுந்திரிச்சி தீ மூட்டி பால் காச்சி தங்க குவளையிலே தாதி மார் பால் கறக்க வந்த அரு மணியே
முத்தாலே ஆபரணம் முடிப்பாரே உன் மாமன் பட்டெத்து தொட்டி கட்டி பசும் பொன்னெடுத்து பொட்டு வைப்பார்
செம்பொன் எழுத்தாணி சிவகங்கை வில்லோலை வில்லோலை வாசிக்க
வீமன வந்தவரே
குளிச்சு முழு கி குளத்தருகே போகையிலே குருநாதர் பார்த்து குடுத்த குழந்தையல்லோ
40

கண்ணி தவமிருந்து கண்டெடுத்த ரத் தினத்தை சீதை தவமிருந்து செல்வத்தை கண்டெடுத்தேன்
சங்கு முழங்கு தையா சங்கரனுர் கோயிலிலே நீ தான் உறங்காயோ உன் தாயார் மடிமேலே
செம்பொன் சிலை எழுதி செல்லாத நாடெழுதி செல்லாத நாட்டை நீ செழிக்கப் பிறந்தாயோ
அழுதால் முகம் சோம்பும் அன்னமுதே கண் வளரும் சிரித்தால் சிலம்புதிரும் செல்வமே வாய் திறந்தால்
பூருவத்து சிங்கமுத்து பூசைக்கு வந்த கண்ணு ஏனழுதே எங்க கண்ணே இப்போதே கூறிடுவாய்
41

Page 30
அத்த மக்க வாசலுக்கு நித்தம் நீ போகாதே குத்தம் குறைகள்-அவர் கூறுவார் நித்தமுமே
வங்காளம் சிங்கப்பூர் மலையாளம் ராப் பயணம் சிங்கப்பூர் கச்சேரியே-உங்கப்பா சேதி சொல்லும் வல்லவியே
மான மருதக் கோடு மருதையிலே அய்யாக் கோடு குரிச்சி மேல் உட்கார்ந்து-உங்கப்பா வார்த்தை சொல்லும் வல்ல வியே.
திரும்பி வந்து சேதி சொல்லும் செல்லத்தொரை உன் தகப்பன் பட்டாள தொட்டி எல்லாம் பவளக் கொடி தூக்கினவர்
ஆரிரரோ ஆரிரரோ-கண்ணே ஆரிரரோ ஆரிரரோ
42

பட்டெடுங்க தொட்டி கட்ட - பசும் பொன்னெடுங்க பொட்டுமிட பட்டாலே தொட்டிகளாம்-கண்ணுக்கு பவளக் கொடிக்கயிரும்
கண்மணியே இன்னமுதே கற்கண்டே பாகே பொன்னே புது மணியே போக்கம்மா நித்திரையே
கொட்டி வைத்த முத்தோ - என் குவிந்த நவரத்தினமே கட்டிக் கரும்பே - என் கண்மணியே கண் துயிலாய்
ஆரடிச்சி நீயழுதே - கண்ணே அழுத கண்ணில் நீர் தழும்ப - உங்க தாத்தா அடித் தாரோ - கண்ணே தாமரைப் பூ செண்டாலே
உங்க பாட்டியடித்தாளோ - கண்ணே பாலூட்டும் கையாலே உங்க ஐயா அடித் தாரோ அரளிப் பூ செண்டாலே
ஆரும் அடித்தாலும் - கண்ணே அம்மான் மார் வைதாலும் சத்தே மனம் பொறுத்து சந்திரனே கண்ணுறங்கு
>43

Page 31
ஒப்பாரி:
தாய்க்கு
மட்டபனை ஓலை என்னைப் பெத்த அம்மா மயில் அடையும் பூஞ்சோலை மயிலை வெரட்டினமோ மயில் கூட்டைப் பிச் சமோ மயிலு விடுங் கண்ணிரு - நம்ம மாளிகையில் சுத்து தம்மா
குட்டைப் பனை ஓலை என்னைப் பெத்த அம்மாவே குயிலடையும் பூஞ்சோலை குயிலை வெரட்டினமோ குயில் கூட்டைப் பிச்சமோ - அந்த குயிலு விடுங் கண்ணிரு - நம்ம கோட்டை எல்லாம் சுத்து தம்மா
ஈச்சம் குருத்திலையோ என்னைப் பெத்த அம்மா - நம்ம இன மெல்லாம் காட்டுலையோ நீ பெத்த ஈஸ்பரியை விட்டு இனிப் பிரிந்து போறியின் னு- நீ பெத்தி பொன்னிருந்து புலம்புருளே
44

தாழங் குருத்தோலை என்னைப் பெத்த மாதாவே - நம்ம சனமெல்லாம் காட்டுலையோ நீ பெத்த தங்க மகளை விட்டு தனிப் பிரிந்து போறியின் னு நீ பெத்த தங்க ம க புலம்புருளே
பச்சைக் கிளிகளெல்லாம் - என்னைப் பாலைக் குடிங்களெங்கும் பசியாறிப் போங்களெங்கும் என்னைப் பெத்த அம்மாவே - நான் பாலைக் குடிக்கவில்லே பசியாறிப் போன தில்லே எனைப் பெத்த பார்வதியைக் கண்டால் பசியும் போகு தும்பேன்
கொல்லி மலை ஓரம் கோவைப் படந்திருக்கும் என்னைப் பெத்த அம்மாவே கோவை கொடியறுக்க கொலைகாரன் எங்கிருந்தான் கோவை தழைக்காதோ நீ பெத்த குழந்தையும் வாழாதோ
45

Page 32
பத்து ஊர் தாய் எனக்கு பக்க உதவி சொன்னலும் என்னைப் பெத்த பார்வதியே - நான் இனிப் பாக்குறது எக்காலம் எட்டு ஊர் தாய் எனக்கு எடுத்துதவி சொன்னலும் என்னைப் பெத்த ஈஸ் பரியோ - உன்னிை எதுக்க வர காணுவேனே
தண்ணி தவிக்கு தின்னு என்னைப் பெத்த அம்மா - நாங்க தங்கமலை போயிருந்தோம் - அங்கே தண்ணிரு இல்லாமே
தாழ மரமானுேம் தாசிகைப் பூவானேம்
வெந்நி தவிக்கு தின்னு - நாங்க
வெள்ளிமலை போயிருந்தோம் - அங்hே
வெந்நீரு இல்லாமே
வேங்கை மரமானுேம் வேசிகைப் பூவானேம்
-46

மங்கை தலைமாடு என்னைப் பெத்த அம்மா மார்க்கண்டன் கால்மாடு-நான் மங்கை குடமுடைக்க-நீ பெத்த மார்க்கண்டன் கொள்ளிவைக்க
சீதை தலை மாடு என்னைப் பெத்த அம்மா நீ பெத்த சிறு தொண்டன்
காமாடு - நான் சீதை குடமுடைக்க - நீ பெத்த சிறு தொண்டன் கொள்ளி வைக்க
47

Page 33
தந்தைக்கு
கத்தரிக்காய் பச்சை நிறம் என்னைப் பெத்த அப்பா கருணர் கை பூ மாலை காத்தடிச்சு மங்காமே-நீ பெத்த, மக்க கவலை வைச்சு மங்குருேமே
வெள்ளரிக்காய் பச்சை நிறம் என்னைப் பெத்த அப்பா வீமர் கைப் பூமாலை வெயிலடித்து மங்காமே நீ பெத்த மக்கள் விசனம் வச்சு மங்குறமே
பச்சைப் புடலங்காய் என்னைப் பெத்த அப்பா பாதையிலே காச்சிருக்கும் நான் பாலூத்தி பொங்கு முன்னே நீங்க போன பாதை தெரியலியே
நீலப் புடலங்காய் என்னைப் பெத்த அப்பா நிலத்திலே காச்சிருக்கும் - நான் நெய்யூத்திப் பொங்கு முன்னே நீங்க போன நேரந்தெரிய லியே.
48俘

பொன்னும் சருவக் கிண்ணம் - நீ போய் குளிக்குந் தெப்பக்குளம் போய் குளிச்சு வீடு வந்த புண்ணியரே எங்கே போனே
எனக்கு தங்க விசுப் பலகே - இங்கே
சாஞ்சிருக்கும் பூப்பலகே - நீங்க
சாய்ந்திருந்து சேதி சொன்ன சாமி வெளியே வரும்
பொன்னும் விசுப் பலகே - நான் போத்தும் தெய்வழகே - நீங்க போயிருந்து சேதி சொன்னு பொழுதே விடிஞ்சி வரும்
49

Page 34
கணவனுக்கு
காசி விசிறி வரும் கைலாச தீர்த்தம் வரும் காசி மகாராசருடன் - நான் கலந்திருந்து வாழலியே
செஞ்சி விசிறி வரும் தெய்வலோக தீர்த்தம் வரும் செஞ்சி மகாராஜருடன் - நான் சேர்ந்திருந்து வாழலியே
பூசைக்குப் பண்ணிய பொன்னுஞ் செபமாலை பூசை முடியலியே - நம்ம பூ உதிர வாழலியே
காசுக் கரிசி வாங்கி கன்னுன் த வலை வாங்கி கண்ணுர் சொக்கருக்கு - நம்ம கை பூசை செய்துவந்தோம்
நம்ம பணத்த ரிசி வே கலியே - ஐயே நம்ம பாவந் தொலையலியே நம்ம காசரிசி வேகலியே - நம்ம கருமந் தொலையலியே
50

இது ஆசைக்குப் பண்ணியதோ அழகுச் சிகமானே ஆசையுடன் வாழலியே - என்னை தேடிய ராசா நம்ம
சீவும் பலகையிலே சிங்கப்பூர் மெத்தையிலே - நம்ம சீதையும் இராமருமா சேந்திருந்து வாழலியே
படிக்கும் பலகையிலே பஞ்சு நல்ல மெத்தையிலே பாண்டியருந் தேவியரா - நம்ம பக்கத்திலே வாழலியே
ஆனை செமையை ஒத்த ஐந்து லட்சம் பஞ்சாங்கம் அள்ளியே வச்ச இவர் அரண்மனையில் வாழலியே
பொழுதில்லோ போகுது
பூங்காவனம் கடந்து
பொழுதை நிறுத்திடுங்க - நான் பொண் குறையைச் சொல்லி வாரேன்
51

Page 35
நிலா வில்லோ போகுது நீலவனங் கடந்து நிலாவை நிறுத்திடுங்க - நான் நெளிவு குறையைச் சொல்லி வாரேன்
ஆத்தாங் கரை மூலையிலே அன்னம் போல் நின்னுலும் அன்ன முனு பாராமே - உங்களை அம்பு போட்டு சுட்டான? அம்பு போட்ட புண்ணுற - எனக்கு அனேக நாள் செல்லுமே
குளத்தங்கரை மூலையிலே குயிலு போல நின்ஞலும் - ஒங்களை குண்டு போட்டு சுட்டானே குண்டு போட்ட புண்ணுற - எனக்கு கோடி நாள் செல்லுமே
தலையே வலிக்குதி ன்னு தீங்கரும்பு கட்டிலிலே தாமரைப் பூ மெத்தையிலே - நாள் தங்கமே தலை சாஞ்சனின் ஞ தஞ்சா ஊரு தைலம் தனித் தைலம் வந்திறங்கும்
52

புடரி வலிக்குதின்னு பொன்னரும்பு கட்டிலிலே பூ போட்ட மெத்தையிலே-நான் பொன்ன தலை சாஞ்சேனின்ன பூவாலுாரு தைலம் புதுத் தைலம் வந்திறங்கும்
சாமிமலை அந்தப் பக்கம் சந்திரத்தால் வில்வ மரம்-நான் சண்டாளி வாய் திறந்தா சாமி மரச் சந்தை கொஞ்சம் கூடிக் கலைஞ்சிடுமே
கொல்லிமலை அந்தப் பக்கம் குங்கு மத்தால் வில்வ மரம்-நான் கொடும்பாவி வாய் திறந்தால் கொல்லிமலைச் சண்டை-கொஞ்சம் கூடிக் கலைஞ்சிடுமே என் சாமிக்கு முன்னே-நான் தாங்காவலி பட்டேனின்ன தங்கரதங் கிடைக்கும்-எனக்கு தனிப்பந்தல் மேலாகும்
53

Page 36
புண்ணியர்க்கு முன்பாக-நான் பொன்ன வெளிப்பட்டேன்ன பொன்னு ரதங் கிடைக்கும்-எனக்கு: பூப்பந்தல் மேலாகும்
செப்போடு போட்டு சிங்க முகத் தேரெழுதி-நீங்க எப்போதும் போல இங்கே வரக் காண்பேன செஞ்சியிலே நல்ல மரம்-நான்: சீரகங்க காய்ச்ச மரம் செஞ்சி தவமிருக்க-நம்ம தெய்வத்துக்கும் சம்மதமா?
54."

குழந்தைக்கு
பூவாலே பாவை செய்து-நம்ம புள்ளை வச்சுக் கொஞ்சினலும்-இந்த பூ பாவை பேசிடுமோ-நம்ம புள்ளை கலி தீர்ந்திடுமோ
நடந்தேன் திருப்பதிக்கு நாலு முகச் சந்நதிக்கு-நம்ம மண்ணுலே பாவை செய்தால் மண் பாவை பேசிடுமோ?
மரத்துக் கிளிகளெல்லாம் மைந்தர் வச்சுக் கொஞ்சுதையா மாத கைக்குப் பிஞ்சிறங்க-நமக்கு மாமாங்கம் சென்றிடுமோ?
மலராத பூவை என் கட்டிக் கரும்பேநான் மடிமேலே வைச்சிருந்தேன்.இன்னைக்கு மலர்ந்து வரும் நாளையிலே-ஒன்னை மண்ணுக்கோ ஒப்படைச்சேன்.
பூக்காத பூவை என் பொன்னு மணியே -நான் பெட்டியிலே வச்சிருந்தேன் இன்னைக்கு பூத்து வரும் நாளையிலேஒன்னை பூமிக்கோ ஒப்படைச் சேன்.

Page 37
ஒயிலாட்டப் பாட்டு
தன்னே தின நாதினம் தன்னே தின நாதினம் தன்னே தின நாதினம் தான நன்னே
முந்திவி முந்திவி நாயகனே முப்பத்து முக்கோடி தேவர்களே கந்தனுக்காகவே முன் பிறந்த-ஒயிலே கச்சிக் கணபதி முன்னடைவாய்
ஆலமரத்தடிப் புள்ள யாரே அரசமரத்தடி நாயகரே பால மரத்தடி புள்ள யாரே பாலன் குரலோசை மங்கிடாமே
பொன்னலங் காவேரி தன்னை துதி செய்யும் பூமியே தொட்டு சலாமும் செய்யும்
ஏடறியேன் எழுத்தறியேன் ஏட்டு வகைகளும் நானறியேன் பாடறியேன் நான்பாட்டறியேன் பாட்டு வகைகளும் நானறியேன்
56

கூந்தல் பனையோலை கொல்ல னெழுத்தாணி குண்டு எழுத்தாணி கண்டறியேன் பச்சைப் பனையோலை பாங்கு எழுத்தாணி பத்து விரலும் பதிந்தறியேன்
வெள்ளிப் பணம் போலே பொட்டிடுங்க வெள்ளே உருமாலே சொங்கிடுங்க ஒன்று சொன்னது போல் தம்பி மாரே ஒயிலு வரிசைக்கு நேரெடுங்க
வட்டப் பொட்டுக்காரா வா மயிலே திட்டங்கள் சொல்லுகிறேன் நேரே நில்லு நேரே நில்லு நெளியாமே நில்லு-அங்கே நெட்டுக்கொரு முழம் தள்ளி நில்லு
அக்கமும் பக்கமும் பாக்காதிங்க வெக்கத்தே மனதினி லெண்ணுதிங்க காலோடே காலு ஒரசிடாமே கை புடி லேஞ்சு சிதறிடாமே
மேலோடே மேலு ஒரசிடாமே வேருவே தண் ணி சிந்திடாமே ஒன்று சொன்னது போல் தம்பிமாரே ஒன்னு நடி வருசே தீரும் சொன்னேன்
57

Page 38
ஒயில் கும்மி
ஆத்துக்குத் தான் அந்தப் புறம்-அன்னமே ஆடு மேய்க்கும் பொன் மயிலே ஆத்திலேயும் தண்ணி வந்தா-அன்னமே எந்த விதம் நீ வருவாய்?
ஆத்திலேயும் தண்ணி வந்தா-மச்சானே நா(ன்) கம்மாளனே கூட்டி வந்து கப்பலுமே உண்டு பண்ணி-மச்சானே கப்பலுமே வந்திடுவேன்.
ஊர்க்குருவி வே சங் கொண்டு உயரப் பறந்தியின்ன - அன்னமே செம்பிருந்து வே சங் கொண்டு செந்தூக்கா தூக்கிடுவேன்
செம்பிராந்து வேசங் கொண்டு-மச்சானே செந்தூக்கா தூக்க வந்தா
நான் பூமியைக் கிழிச்சிக் கொண்டு புல்லா முளைச்சிடுவேன்
நீ பூமியே கிழிச் சிக் கொண்டு-அன்னமே நீ புல்லா முளைச்சியின்ன-நான் காராம்பசு வேசங் கொண்டு கரண்டிருவேன் அந்தப் புல்லே

அரிச்சந்திரன் ஒயில் கும்மி:
கண்ணே என் கண்மணியே-எந்தன் கட்டாணி முத்தே மரகதமே
பொன்னே நவமணியே-ராஜ புத்திரனே யெந்தன் கை துணையே
சொன்ன சொல் மீருதடா-புத்தி சொல் கிறேன் கேளடா யென் மகனே
பார வனந்தனிலே-புத்தி பாம்புகளுண்டடா கண்மணியே
தூரத்தே போகாதேடா-வருந் தோழரை விட்டு விலகாதேடா
புத்துமே லேரு தடா-அங்கே புத்தடி நாகங்கள் மெத்தவுண்டு
பத்திக் கடிக்குமடா-வரும் பாலரை விட்டு விலகாத டா
கான கந் தன்னிலே தான்-விஷக் காஞ்சிரங் காய்களுண்டு.
தான் தேசிக் காயெனவே- அதைத் தானே பறித்து நீ தின்னுதடா
வேங்கை கரடியுண்டு-அதை வெட்டுவ மென்று நீ போகாத டா
あ 9

Page 39
ஓங்கியடித்திடுமே-கண்டா ஒடி யொதுங்கிடுவாய் என் மகனே
பாங்காகப் போகையிலே-சகுனம்
பார்த்துக் கொண்டு போடா
யென்மகனே
தீங்காச் சகுனங் கண்டால்-நீயுஞ் சீக்கிரமிங்கே திரும்பி விடு.
60

காடாங்கி
விநாயகர் துதி
அரிஹரி என்ற சொல்லு அனுதினமும் நான் மறவேன் சிவ சிவா என்ற சொல்லு சிந்தையிலே நான் மறவேன்
முந்தி முந்தி விநாயகனே முருக சரஸ் பதியே கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே முன்னடைவாய் வேலவர்க்கு முன் பிறந்த விநாயக ரே முன்னடவா தாழ்வில்லா சங்கரனர் புத்திரனே வாருமையா முன்னடக்கும் பிள்ளை யார்க்கு கண்ணடக்கம் பொன்னலே கண்ணடக்கம் பொன்னலே கால் சிலம்பு முத்தாலே முத்தாலே தண்டை கொஞ்சும் முன்னடக்கம் பிள்ளையார்க்கு செல்வக் கணபதியே-உன் சீர் பாதம் நான் மறவேன்
6

Page 40
குரு வணக்கம்
குருவும் குலையும்-கொலை கொடுத்த என் தகப்பா உன்னை வணங்கி நான் உக்காந்தேன் மந்தையிலே மந்தை கலைய மட்டும் மடி யை விட்டுப் போகாதே
முந்தித் தவமிருந்து முன்னெரு நாள் சுமந்திருந்து அந்திப் பகலும் அறுபத்தொரு நாழிகையும் தொந்தி சரிய-துடை குலுங்க பெற்றெடுத்த மாதாவே மாதா குருவே வளர்த்தெடுத்த என் தகப்பா உங்களை நம்பி நான் உக்காந்தேன் மந்தையிலே
莎2

பியம்மனை வருந்துதல்
வச்சதொரு வெத்திலைக்கு வகை மானம் சொல்லனுமே இட்டதொரு வெத்திலைக்கு இடைமானம் சொல்லனுமே என் நாவு த வருமல் நல்ல குரல் மங்காமல் ஏடு தவற மல்-என் எழுத்தாணி சாயாமல் சொல்லு த வருமே-என் சொல் சோரம் போகாமே நாவில் குடியிருந்து நல்லோசை தாரு மம்மா
என்னைக் காட்டிக் கொடுக்காதே கடக்கே போய் நிக்காதே என்னைப் பிடிச்சுக் கொடுக்காதே மின்னே போய் நிக்காதே
நீங்க வாங்க வலது புறம்-எனக்கு தாங்க திருவாக்கு-தாயா உன்னைக் காணுத் நாடு. இங்கே கருக்க லடையுதம்மா-தாயா
63

Page 41
நீ இல்லாத நாடு இங்கே s LDO இருளு வந்து கப்புதம்மா எங்க கற்பு சிலைய்ே-சிவனர் வச்சாடும் பம்பரமே, செம்பு சிலையே-சிவனர் வச்சாடும் பம்பரமே, செம்பு சிலையே-எங்க
சிவன் கை பம்பரமே உன்னைத் தேடி அழைத்திட்டேன் உன் திருமுகத்தைக் காணமே
தேசிக்காய் வெட்டும் சிங்களவன் தேசமிது. பில்லிக்காரன் தேசத்தே கொல்லிக் கண்ணு மாரி கொடுஞ் சூரி பாப்பாத்தி-நீ பள்ளிக் கூடம்போட்டாயோ. நீங்க வாங்க வலது புறம் நீங்க தாங்க திருவாக்கு-தாயா மந்தை களைய மட்டும் மடிய விட்டுப் போகாதே
64

நதை வீரனை வருந்துதல்
உன்னைக் கூப்பிட்டேன் இந்நேரம் உன்னைக் கூப்பிட்டேன் இந்நேரம் சாதிலிங்க மேடையிலே சாஞ்சு படுக்காதே-நம்ம பொம்மி மடி மேலே பொய் உறக்கம் கொள்ளாதே-உன் கச்சை வரிந்து கட்டி கருங்கச்சை தொங்க விட்டு-உன் இடது புறம் சொங் கைலே ஏமனது அச்சாரம்-உன் வலது புறம் செங்கையிலே மாகாளி அச்சாரம் உனக்கு காரிக் குதிரை உன் கை நிறைய துப்பாக்கி நம்ம வெள்ளைக் குதிரை உனக்கு வெடி வாலு சீனி மட்டம் உனக்கு வீசை துடிக்க லியே என்னைக் காட்டிக் கொடுத்து கடக்க போய் நிக்காதே-உன்னை கூப்பிட்டேன் என்று கோபங்க கொள்ளாதே இறங்கும் திருமுகத்தே ஏறெடுத்து கண்பாரு-நீங்க வாங்க வலது புரம் தாங்க திருவாக்கு
6场

Page 42
யூனி முருகனை வருந்துதல்
ஆண்டவா-ஆண்டவா
உன்னைக் கூப்பிட்டேன்-இந்நேரம் தங்க வடிவேலு-தங்க வடிவேலு உங்க வண்ண மயிலேறி என் குடங்கையிலே வந்து நில்லு உனக்கு பெர்ன்னர ச்சு ராம மிட்டால் பொழுதொருக்கா சொல்லுமென்று உனக்கு தங்கம், அரைச்சு தங்க வடிவேலு - தங்க வடிவேலு உனக்கு தனிராமம் சாத்திவிட்டேன் உனக்கு வலது புறம் வள்ளியம்மை உனக்கு இடது புறம் தெய்வானை நீங்க கவர்ந்த திருமுகத்தால் கண் பார்க்க வேணுமின்னேன் வாண்டாம் தருமமில்லை வாண்டாம் தருமமில்லை சுவாமி பொய்யை உரையாதே பொழைகள் வந்து சேருமின்னே நான் பார்க்கு மொரு மந்தையிலே இன்னெருவன் பாக்காமே.
66

குறி சொல்லுதல்
யாரும் செய்யும் குற்றம் எவரு செய்யும் தீவினை-என்று என்னை மடிபிடித்து கேக்கவந்தே நீதம் விளங்கனுமோ நிச்சயமும் சொல்லனுமோ சொல்லுகிறேன் பஞ்சாயம் துவங்குகிறேன் கம்பையிலே யாரு செய்த குற்றம் எவரு செய்த தீவினைகள் நச்சு வலியும் . நம்ம வீட்டில் நையாண்டி கூத்துகளும் ஆனல் அருங் கூத்து பெண்னல் பெரும் கூத்து ஒருவர் சொல்லும் வார்த்தை ஒருவருக்கு ஏருது நீயாரு நானுரு மீனுரு - கொக்காரு என்று போர்க் கலகம் மெத்தவுன்னே போர்க் கலகம் மெத்தவுன்னே

Page 43
ஆண்டவா போகாதே, போகாதே எல்லைக் கதிகாரி எசமானே தஞ்சமின்னேன். உனக்கு தெக்கே விழுந்த சடை தெங்கடலில் பூசையின்னே உனக்கு வடக்கே விழுந்த சடை வடகடலில் பூசையின்னேன் அண்ணு - கிண்டி சாமுண்டி கிடந்துருளும் சப்பாணி சப்பாணி பூடம் - அண்ணு சமத்தனே எழுந்திரடா.
கேள்ப்பா சொல்லுகிறேன் துவங்குகிறேன் நீதங்களும் கானுக் கறையும் கண்டேன் கல்பாறை மேடை கண்டேன் நஞ்சு தின்னு நஞ்சு கக்கும் நட்சாம வேளையிலே உண்டு தின்னு உண்டு கக்கும் ஒருச்சாம வேளையிலே
68

நம்ம மட்டம் சிறுக் நம்ம மதலையும் கண்ணுகளும் ஒரு சாமம் வேளை விட்டு மறு சாமம் வேளையிலே நம்ம அண்ணன் முனியன் நம்ம அடங்கா புலி எருது வேட்டைக்குப் போயி விரும்புமந்த வேளையிலே பட்ட மரம் குச்சி படக்கெனு ஒடிந்தப்பா கன்னி பயந்த மங்கை கண்டு பயந்தாளே - அவள் கண்டு பயந்தாளே போட்டதொரு அம்பு - முனியன் பின்வாங்க மாட்டான் போ அப்பா - இது ஒரே குத்தமில்லை மங்கை செய்த குற்றம் மாரளவு இருக்கு தின்னேன் பொறுச்க முடியாது
69

Page 44
பொறுக்க முடியாது பூமி இடங் கொள்ளாது பூமி இடங் கொள்ளாது. கூவும் சாவல் - கொலை சாவல் ஒன்று உண்டு பாரமலை முனியனுக்கு பக்க நதிக்கு இரு போத்தல் படைக்க வேனு மின்னரு - கண்ணு படைக்க வேணு மின்னரு
ஆரக் கட்டல்
நம்ம சித்திரர் புத்திரர் சிவனு பெருங் கணக்கர், உன் பேரைச் சொல்லி அள்ளி விட்டேன் சாம்பல் நம்ம நாட்டுக் கணக்கர் நமஞர் பெருங்கணக்கர் மண்டிையிலே எழுதி மயிரால் மறைந்த ஐயாவு - ஆண்டவா உன்னைக் கூப்பிட்டேன்
இந் நேரம், இந்நேரம்
7 9

காளி வணக்கம்
நீலிகாபாலி நிறைஞ்ச திரு குலி கும்பத்தழகி கோபாலன் தங்கையரே உனக்கு ஐந்து தலை நாகம் அடை காக்கும் தாழையிலே உனக்குப் பத்துத் தலை நாகம் பறக்குதம்மா உன் கொலுவில் உனக்கு பாம்பாலே கம்மாடு உனக்கு படத்தாலே முக்காடு உனக்குப் பொந்து புளிய மரம் நீ போயிருக்க ஆலமரம் - தாயே உன் மயிரே கருப்பொளியே மேனி எல்லாம் தங்க நிறம் புருவம் கருப்பொளியே எங்கள் செம்புச் சிலையே சிவன் கையி பம்பரமே கல்லோடி உன் மனசு கரையலியே எள்ளவும் நீ கடைக் கண்னல் பார்த்தால் நான் கடைத்தேறி போயிருவேன் நம்ம ஊர் காக்கும் காளி உத்தமியே உன் காவல் நம்ம பேச்சி சடச்சி நம்ம பிணந் தின்னும் ராக்காச்சி உன் பேரூச் சொல்லி அள்ளி விட்டேன் சாம்பல் கட்டினேன் கட்டு காவல் பதனமின்னு
71

Page 45
மாடிாசாமி வணக்கம்
எங்கள் மாடத் துரையே மக மேரு பருவதமே-நீங்க பச்சை பிணத் தையல்லோ பால் வடிய தின்னவண்டா கணுக்கால் எலும் பை எல்லாம் கரும்பென்று தின்னவண்டா முன்னங்கால் எலும் பையெல்லாம் முட்டையின்னு தின்னவண்டா * உன்பேரு சொல்லியல்லோ அள்ளி விட்டேன் சாம்பல் நான் கட்டினேன் கட்டு நம்ம. கம்பை கலையாமல் போட்டதொரு சாம்பலுக்கு பொழைகள் வந்து சேராமல்
குருவணக்கம்
எனக்கு குருவும் குலையும் குலை கொடுத்த ஆண்டவனே உன்னைக் கூப்பிட்டேன் இந்நேரம் - இந்நேரம் உன் பேரைச் சொல்லி அள்ளி விட்டேன் சாம்பல் பாடுறது ஒன்பாடு பழி வந்தால் உன் பாரம்
72

தொட்டியத்து சின்னு வணக்கம்
ஆரு கண்ட வெண்ணிறு ஐயனர் கண்ட வெண்ணிறு நம்ம தொட்டியத்து சின்னு துரை மகனும் கண்ட வெண்ணிறு காவல் பதன மின்னு கட்டினேன் கட்டு அள்ளி விட்டேன் சாம்பலுமே பொழைகள் வந்து சேராமல்
காமன் பாட்டு
துதி முன் நடக்கும் பிள்ளை யார்க்கு கண்ணடக்கம் பொன்னலே முன் நடக்க வேனுமையா நாவில் குடியிருந்து நல்லோசை தாருமையா ஆயன் மகன் கதை பாட அருள் புரிய வேணுமையா அருள் புரிய வேண்டுமென்று அடி வணங்கி தெண்ட நிட்டீேன்.
73

Page 46
காமன் நடல்
மூன்றம் வளர் பிறையில் தனி மூச்சந்திதனில் அன்பாய் வளர்ந்ததொரு இன்பமுள்ளயேய் கரும்பும் ஓங்கார மாவிலையும் ஓசையுள்ள பொன்னர சும் ஆனை சேனை வைக்கோல்பிறி தாளுக சுத்தியபின் அதனுள் விராட்டியொன்று அன்பாக தன்னுரட்டி ஆழக் குழி தோண்டி அதிலே பால் ஊத்தி அழகான வெள்ளி பணம் சதிராகவே போட்டு செந்தமாய் காமன் நட்டு
மன்மதன்
அர வணையிலே துயில் வோன் பெருமுதலையாய் வருவோன் ஆங்காரச் சக்கரத்தில் ஓங்கார முக்கறித் தோன். அரக்கர்களை வேர் அறுத்தோன் - இரக்க மதம் அளித்தோன் ஆமை உருவெடுத்தோன் பூமி பாரம் தீர்த்தோன்.
74

ஆண்டவன் என்பெருமான் வேண்டிய பொன் பாதனுக்கு ஆபத்தில் வாருமென்பொழுது பிரலாபித்துச் சொல்ல வந்தாய்
அன்புடன் ஆதரித்து தெம்புகள் சில உரைத்து அனுப்படி பெண்ணே எனக்கு வளப்பமுள்ள வேல் மதனர்
நட்சத்திரம் போலுதித்த விட்சித்திர பெண்மயிலே நாயகியே என்னுடைய உபாயமுள்ள பெண்ரதியே.
நாரத ன் சபைக்கே டிாரணமாய் நான்போறேன் நன்மார்க்க வார்த்தை எல்லாம் திறமாக நானறிந்து
நாடியே இவ்விடம் தேடியே வாரனடி
நான் எழுதித் தந்ததொரு மாணிக்கப் பொம்மைதனை நாயகியே வைத் திரடி மாயன் மருமகளே
75,

Page 47
ரதி
பூவே மரிக்கொழுந்தே புனுகு சட்ட சந்தனமே பூசும் கதம்பப் பொடி பூமலரே என் கணவா,
பூவை தனிய விட்டு தேவ சபை நீர் போனுல் பூ மெத்தை வெந்துவிடும் பூ மலரும் பூக்காது
புண்ணியனே நீ போகாதே பூவால் கணை தொடுக்க புத் திமிக வேண்டி பூலோக சக்கர வர்த்தி அவர் போனதொரு காரியங்கள் புண் ணியனர் ஆகவில்லை
புண்ணில் வைத்த கோளதுபோல்-நான் புலம்பித் தவித்திடுவேன் அரசனில் லா பெண்னதுபோல் அழுது புலம்பிடுவேன் - என்று புத்திமதி சொல்லலுருள் வெற்றிப் பிள்ளை வேல் துரைக்கு.
76

மணிவண்ணன் பெற்றெடுத்த துணிவுள்ள என் கணவர் மர்மிதிக்குடையவனே நேச சுகி காரனணே
நீர்க்கமுடன் வில் வளைத் து வையகம் கீர்த்திபெற்ற வையக மெல்லாம் நிறைந்த ஒய்யாரமான பதி
வண்ணப்பதுமை செய்து உன்னிப்பாய் தாரேனென்று வக் கணையாய் சொல்ல வந்தீர் சக்கர பாணி தன் மகனே வண்ணக்குலப்பாக்கு தெள்ளிய சுண்ணும்பு மிட்டு மகிழ்ந்துமே நான் கொடுத்தா வாய் திறந்து பேசிடுமோ நேசனே உந்தனைப் போல்
77

Page 48
கடைசிப் பயணம்
காரு தடி கம்பரிசி கசக்கு தடி கானுத்தண்ணி இனிக்குதடி நம்ம சீமை இனிப்பயணம் தப்பாது
78


Page 49
HD HD 55 CE5 5G I
மருதப் பிலாச்ெ ஏலம் கிராம்பே ஒன்?
5TiST GIFTIGü 5ú