கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறுவடை

Page 1
வெளிவரவுள்ளவை
நவிக் களஞ்சி ILLI LIĊI
* தாரகை என்ற மணித்திரள்
கவிதைத் தொகுதி)
* மனம் என்னும் மாய ஏணி
உளவியற் கைநூல்)
* புது வெள்ளம்
காவலூர் எஸ். ஜெகநாதனின்
ஆ&னத்துப் படைப்புகள் மீது முழு ஆய்வி
வானத்து நிலவு
சிறுவர் சிறுகதைத் தொகுதி
ஆனாரில் ஊர்வலம்
சிறுகதைத் தொகுதி)
* தொடுவானம் குறுநாவல்
* வெற்றுச்சிப்பிகள்
குறு நாவல்)
* தோட்டித்துப் பூக்கள்
நாவல்)
வெளிவந்தது
== {51_L הרE_i
குறு நான்ல்
இலக்கியப் பரிதியின்
இதர நூல்கள்
நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்து எழுத்தாளர்களின் கவிதைகள் தொகுப்பு
- கலா - குமரிநாதன்
- ஞானும்பிகை குகதாசன்
- கலா - குமரிநாதன்
- காவலூர் எஸ். ஜெகநாதன்
- கலா - குமரிநாதன்
- பொ. பத்மநாதன்
- காவலூர் எஸ். ஜெகநாதன்
கலா - குமரிநாதன்
- T
 

( 呜呜0T吋

Page 2

அறுவடை
காவலூர் எஸ். ஜெகநாதனின் ஆக்க இலக்கியத்துக்குப் புறம்பான எழுத்துப்பணி
தொகுப்பு: கலா - குமரிநாதன்
வெளியீடு :
கலாவல்லி இலக்கியப் பரிதி 161, செட்டியார் தெரு,
கொழும்பு-11
இலங்கை

Page 3
F rst Editon 1000 Copies
“ ARUVADA?” THE SELECTED WORKS OF KAVALooR S. JEGANATHAN
Compiled by
KALA - KUMARINATHAN 42, New Chetty Street, Colomb o-l3. Sri Lanka
Cover Design by KAVYAR ALAVEDDI PO. GNANADESIKA
Published by KALAVALL ILAKIYA PARUTHY
Printed by
THE MEHANDAN PRESS LIMITED l6l, Sea Street, Colomb o - Il Sri Lanka
Price:
8:60

நூன் முகம்
சிறு போக அறுவடை
1976-ம் ஆண்டின் முற்பகுதியில் நான் பத்திரிகைத்
துறையில் காலடிவைத்து, கலாவல்லி வெளியிட்ட காலத்திலே தான் காவலூர் எஸ். ஜெகநாதன் இலக்கியத் துறையில் பிரவேசித்தார்.
இவரது ஆரம்ப காலச் சிறு சதைகளில் ஒன்ரு:ன “புரியாத பெண்மை" கலாவல்லியில் பிரசுரமாகியது.
தற்போதய சிறுகதைகள் போன்று சிந்தனைச் செறிவும் சமூகப் பார்வையும் புரியாத பெண்மையில் காணப்படாத போதிலும், கதை சொல்லும் விதம், நடை நுணுக்கம் என்பன கைவரப்பெற்று, 'ஜெகநாதன் வளரக் கூடியவர்" என்று பறை சாற்றின.
எனது ஊகம், கணிப்பு என்பன தவறவில்லை! ஆறு மாதம் என்ற குறுகிய கால எல்லைக்குள் முற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் தரத்தில் உயர்வாக பல்வேறு பத்திரிகைகளிலும் பதித்ந்தோடு, தனது சுய முயற்சியால் "சொந்தங்கள் தொடர் கின்றன என்ற சிறுகதைத் தொகுதியையும் நூ லு ரு வில் வெளிக் கொணர்ந்து விட்டார்.
இன்று.! ஜெகநாதன் இலக்கியத்துறையில் சிறு கதையோடு மட்டும் நின்றுவிடாது கவிதை, உருவகம் , நாவல் போன்ற பல்வேறு இலக்கிய கூறுகளிலும் தமது திறமையைக் காட்டி உயர்ந்து நிற்கிருர், என்பதை ஏலவே வெளிவந்த நூல்களும், அந்தந்த நூல்களுக்கு முன்னுரை வழங்கிய அறிஞர்களின் கூற்றுகளும் நிறுவியுள்ளன.
மிகவும் குறைந்த பிரசுரகளமே யுள்ள நம்நாட்டு பத்திரிகை, சஞ்சிகைகளிலும் எழுதி அனைவரினதும் கவனத்தை ஈர்த்த ஜெகநாதன், பல இலக்கியப் போட்டிகளில் பரிசில் களும் தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளார்.

Page 4
தேனீயை விட மிகச் சுறுசுறுப்பாக இயங்கிய இவரின் எழுத் துப் பணி மேற்குறிப்பிட்டவையை விடப் புறம்பாகவும் இருந் தன. அவற்றை முழுதாக தொகுத்து வெளியிடுதல் பெரும் போக அறுவடையாக அமையும்.
ஆனல்.l
பிரசுர வசதியீனங்கள்! மா தி ரி க் கு ஒன்ருகவேனும் தொகுத்து சிறுபோக அறுவடையாக மட்டுமன்றி, ஒரு வரலாற் றுப் பதிவேடாக வழங்குவது எனது கடமை, தவிரவும், இவரது எழுத்துப் பணியின் முழுப்பரிமாணங்களையும் கண்ணுற்றவன் என்ற வகையின் விளைவே இந்த அறுவடை நூல்!
நூல் வெளியீட்டில் இது வித் தி யாசமான முயற்சி!
எட்டு ஆண்டுகள் என்பது இருபத்தெட்டு வயது நிரம்பிய ஜெகநாதன் என்ற இளைஞனுக்கு குறுகிய காலமே.
எண்ணிக்கையில், தரத்தில் உயர்வாக இலக்கியத்தில் இவர் பணி உயர்ந்திருப்பினும், அது சிறுபோக அறுவடைதான்!
ஜெகநாதன் முன் காலம் நீண்டு கிடக்கிறது; போலவே, சாதனையும் நீண்டு செல்லும்; சந்தேகமில்லை!
ஏறத்தாள எட்டு ஆண்டுகளில் ஆக்க இலக்கியத்துக்கு புறம் பான எழுத்துப் பணியினை மதிப்பிட்டு ஒரு சோறுகளை பதம் பார்த்திடவும், இவரது அயராத இலக்கிய பணியை பாராட்டு முகமாக ஒரு பரிசாகவும் இத்தொகுப்பினை வழங்குவதில் பூரிப் படைகிறேன்.
தேர்ந்தெடுத்துப் பிரசுரிக்க ஆக்கங்களைத் தந்து த விய ஜெகநாதனுக்கும், அட்டைப் படம் வரைந்துதவிய கவியர் அளவெட்டி பொ. ஞானதேசிகன் அவர்களுக்கும் எனது இதைய பூர்வ நன்றி உரித்தாகட்டும்!
1 0-7-83 கலா - குமரிநாதன் கொழும்பு-11 ஆசிரியர் : கலாவல்லி **

அறிமுகம்
அறுவடையின் விளைமணிகள்
சோசலிசம் ;-
பக்கம் 7
கலாவல்லி இதழில் காவலூரான் என்ற புனை பெயரில் ஒவ்வொரு பக்கக் கட் டுரை மாதாமாதம் எழுதிவந்தார். பல் வேறு பிரச்சளைகளிலும் பார்வை பதிப்ப தாக அது அமைந்தது, அதில் ஒன்று சோசலிசம் .
நால்வர் நவின்றவை :- இந்தத் தலைப்பின் கீழ் நாட்
பக்கம் 8
டின் பல பகுதிகளிலுமுள்ள எழுத்தாளர் களோடு தொடர்பு கொண்டு, வெல்வேறு கேல்விகளுக்கு நால்வரின் பதில் களை ப் பெற்று ஒர் அம்சத்தினை சுடர் சஞ்சிகை களில் நடத்தினர். இஸ்லாமிய இலக்கியம் சம்பந்தமான கேள்வியும் பதிலும் இந் நூலை அலங்கரிக்கிறது. இத்தகைய முயற் சிகளின் பரந்த நோக்கு உய்த்துணரக் கூடியது .
தோட்டங்கள் தோறும் :- பேராதனையில் ஜெகநாதன்
பக்கம் 12
பணியாற்றிய காலம் மலையக மக்களின் துயர வாழ்வைக் கண்டு துடித்தவர்- மலை
யக மக்களின் வாழக்கைப் பிரச்சனைகளைச்
சிறு கதைகளாக வடித்தவர், தோட்டங்
கள் தோறும் என்ற தலைப்பில், அங்கு தான் கண்ட துயரச் சித்திரங்களை தினகரன் குறிஞ்சிக் குரலில் எழுதினர். அவற்றில் ஒன்று இந்நூலில் துயர் சாற்றுகிறது.
பிறந்த மண் :- ஜெகநாதனின் இலக்கியப் பணியினைக்
针
பக்கம் 14
கெளரவித்து இளைஞர்கள் யாழ்ப்பாணத் தில் பாராட்டுவிழா நடத்தினர்கள். அதனை யொட்டி ஈழநாடு இதழில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டார்கள், அதில் இடம் பெற்ற ஒரு கட்டு ரை ப் பகுதி இங்கு இடம் பெறுகிறது.

Page 5
இளைஞர் நெஞ்சில்:- *இளைஞர் நெஞ்சில் கன லும்
பக்கம் 15
நெருப்பு’ என்ற தலைப்பில் பதினைந்து கட்டுரைகள் வரை தினகரனின் “இளைஞர் வட்டப்' பகுதியில் எழுதினர். சாதி,
ஒதனம், சினிமா மோகம், பா லியல்
நோய்கள், வேலையில்லாத் திண்டாட்டம் என்றெல்லாம் பல்வேறு உப தலைப்புகளில் கதையும் கட்டுரையும் கலந்த பாணியில் மனதைத் தொடுமாறு எழுதினர். அத் தொடரின் ஒரு கட்டுரை உங்கள் பார் வைக்கு!
உளவியல் மஞ்சரி :- சிறு சஞ்சிகைளின் வளர்ச்சியில்
பக்கம் 17
அக்கறை மிகுந்த ஜெகநாதன், இலங்கை
யில் பல்வேறு பாகங்களிலுமிருந்து அவ்
வப்போது வெளிவந்த சிறு சஞ்சிகைகளைப் பிரபலமான பத் தி ரி கை களி ல் மிகப்
பொருத்தமான முறையிலும், சம்பந்தப்
பட்டவர்கனை உற்சாகப் படுத்துவதாகவும் இலக்கிய ஆர்வலர்களின் கவனிப்பை ஈர்க்குமாறும் எ மு தி ஞ ர். "கலைமலர்' " 'தாரகை” “கிருதயுகம்’ ‘மாருதம்’ ‘ஞான தீபம்’ ‘செவ்வந்தி முதலான பல சிற்றேடு களை அறிமுகம் செய்து எழுதினர். பெரும் பாலானவை "நந்தன" என்ற புனைப்பெய ரில் தினகரனில் வெளிவந்தன. அவற்றில் ஒன்றுதான் "நான்" உளவியல் மஞ்சரியின் அறிமுகம்.
இலக்கியத்துறையில் :- இலக்கியத்துறையில் இளைய
பக்கம் 19
தலைமுறை என்ற தலைப்பில் ஈழநாடு வார மலரில் புதிய தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி இருபத் தேழு கட்டுரைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இளம் எழுத்தாளர் களைப் போய் சந்தித்து அவர்களைப்பற்றி, அவர்களது ஆக்க இலக்கிய முயற்சிகள் பற்றி, இலக்கியக் கருத்துக்கள் பற்றி சுவைவாக எழுதினர். அத் தொடரில் துரை மனேகரன் பற்றிய கட்டுரை இங்கு இடம் பெறுகிறது.
2

பரதன் பெற்ற பாதுகை:- நாடகத்துறையில் ஜெக நாதன் ஈடு படாதபோதும், சில நாடகங்
பக்கம் 24 களுக்கு அவர் எ மு தி ய விமர்சனங்கள் பயன் மிக்கவையாக அமைந்துள்ளன. ‘பரதன் பெற்ற பாதுகை நாடக விமர் சனம் அவற்றுள் ஒன்று.
அக்கரைப் பூக்கள் :- தமிழகத்தின் காத்திரமான இலக் 源 கிய கர்த்தாக்கள் பலருடன் நெருங்கிய பந்கம் 25 உறவு கொண்டவர் காவலூர் கெஜ நாதன். தமிழக ஆக்க இலக்கிய கர்த் தாக் களை அறிமுகம் செய்து அவர் சில கட்டுரை களை தினகரன் வார மஞ்சரிபில் எழுதியுள் ளார். சுடர் இதழில் அவர் எ மு தி ய 'அக்கரைப் பூக்கள் கட்டுரை தமிழ் நாட் டின் முக்கிய படைப்பாளிகள் பற் விவரிக்கிறது.
பஸ் உணர்ச்சிகள் :- சமூகக் கொடுமைகளைக் கண் டு சீறி எழுந்து எழுதிய ஜெகநாதன், அரு வருத்து முகம் சுழிக்கும் பல நடைமுறை களைக் கண்டு ‘பஸ் உணர்ச்சிகள்" போன்ற
கட்டுரை சில தும் எழுதியிருக்கிருர்
- இலக்கிய உலகம் :- இலக்கிய வாதிகளுக்கும் இலக்கிய செய்திகளுக்கும் வெகு ச ன தொடர்பு சாதனங்கள் முக்கியத்துவம் அளிக் க வேண்டும் என்று விரும்பி, தினகரன் இலக் கிய உலகம் பகுதிக்கு சில காலம் இலக் கிய செய்திகள் சேகரித்து எழுதியவர், மாதிரிக்காக சில. விதம் விதமான :- பல்வேறு பிரதேசத்திலும் வாழும் சூழல், வாழ்நிலை, பழக்கவழக்கம், இவற் முல் பாதிக்கப்பட்டு, உளவியல் ரீதி யாக நுட்பமான பேதங்களைக் கண்டு, பல்வேறு சூழலின் சாதாரண மனிதர்களை சந்தித்து ஒரே கேள்வியைப் பல ரி டம் கேட்டு அவர்களின் பதலினூடாக தரிசிக் கும் நிலைகளைச் சில கட்டுரைகளில் மித்திரன் வார மலரில் எழுதினர். அவற்றுள் இங்கு குழந்தைகளைச் சந்தித்தது உள்ளது.
3
பக்கம் 30
பக்கம் 32

Page 6
புதியவார்ப்பு :- தினகரனில் "புதியவார்ப்பு’ என்ற தலைப்பில் பக்கம் 39 ஜெகநாதனைப் பற்றி அந்தனி ஜீவா எழு
- திய குறிப்பு இங்கு இடம் பெறுகிறது.
ஈழத்து சிறுகதைகளில்:- புனைகதைத் துறை தொடர் பக்கம் 40 பாக பல்வேறு தலைப்புகளில் ஜெகநாதன் இலங்கை வானெலியின் கலை க் கோ லம் சஞ்சிகை நிகழ்ச்சியில் சில கட்டுரைகளை வாசித்துள்ளார். ஈழத்துச் சிறு கதைகளின் பிரதேசப் பிரதிபலிப்பு என்ற கட்டுரை மாதிரிக்காக இங்கு இடம் பெறுகிறது.
கண்டோம் :- *கண்டோம் கருத்தறிந்தோம் என்ற தலைப்
பக்கம் 42 பில் சுடர் இதழில் வெளியான ஜெகநாத னின் இலக்கியச் செவ்வி ஒன்றும் சேர்க்கப் 曾 பட்டுள்ளது.
எங்கள் குடும்பத்தில் :- வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல
பக்கம் 44 சக எழுத்தாளர் ஒருவர் மறைந்த காலத்
திலும் அஞ்சலி செலுத்தி மனம் ஆறினர்
ஜெகநாதன். எமது நிறுவனத்தில் பணி
யாற்றிய இ. பெர்னட் நினைவாகவும் இக் கட்டுரை இடம் பெறுகிறது.
நவீன இலக்கியத்தில் :- விமர்சனத்துக் கென்று ஒரு நூலை பக்கம் 46 எடுத்தால், அதில் உள்ள சிறப்பும் சங்களைத் தேடி எடுத்துக் காட்டுவது இவரது விமர் சன மரபாக இருக்கிறது. குறைகளை நாசுக் காக சுட்டிக் காட்டுவதும், நிறைகளை வியந்து போற்றுவதும் அவரது இயல்பாக இருந் தது. பண்டைய மருத்துவத்தில் மூலிகை கள், வன்னி வள நாட்டார் பாடல், மனித புராணம், என்று பல்துறை சார்ந்த நூல் களையும் விமர்சித்துக் கட்டுரைகள் எழுதி யிருக்கிறர். 'இரு வேறு உலகம்" என்ற நூலின் விமர்சனம் இங்கு இடம் பெறு
கிறது.

இலக்கிய மேடை - க லா வல் லி இதழில் * 'இலக்கிய பக்கம் 49 மேடை" என்ற தலைப்பில் சில கட்டுரை களை எழுதினர் காவலூர் எஸ். ஜெகநாதன். இலக்கியத் துறையின் சமகாலப் பிரச்சனை சிலவற்றைத் தனது தனியான பாணியில் அலசினர். அத்தொடரின் முதலாவது கட்டுரை இடம் பெறுகிறது.
இலக்கியச் சந்திப்பு:- ஜெகநாதன், சில்லையூர் செல்வராசன் பக்கம் 53 ஆகியோரின் "சுடர்' இதழுக்கான இலக் கிய சந்திப்பு, உரையாடலின் சிலபகுதி இங்கு தரப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு மட்டுமன்றி, மூத்த தலைமுறை எழுத்தாளர் களை பேட்டி கண்டும் சில எழுதியிருக்கிருர், அவற்றுள் அக ஸ்தியர் பேட்டி குறிப் பிடத்தக்கது.

Page 7

சோசலிசம்
எழுபதாம் ஆண்டு பொதுத் தேர்தலில் அரிசி" பிடித் துக் கொண்ட இடத்தை கடந்த மாதம் நடந்த பொதுத் தேர்தலில் சோசலிசம் பிடித்துக் கொண்டுவிட்டது. " சோசலி சம்’ பற்றிப் பேசாத அபேட்சகர்கள்ே இல்லை. மக்களோ புரியாமல் வாய் பிளந்தார்கள். அ ரி சி எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. ஆனல் "சோசலிசம்’ என்ற வார்த்தை யின் சரியான விளக்கம் பலருக்குப் புரியாத ஒன்று.
சேலைத்தலைப்பு சோசலிசம், முதலாளித்துவ சோசலிசம் என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்ட இந் த சோசலிசம்' இரண்டு கொத்து அரிசி தருமா? என்று வின எழுப்பியவர் களும் உண்டு. அவர்கள் செய்தது உண்மையான சோசலிசம் அல்ல என்றெல்லாம் வர்ணிக்கபபட்டது. ஏதோ ஒன்று நன்மையானது. ஒளிமயமானது. நமக்குப் புலப்படாதது சோசலிசம் என்ற பெயருடன் இருக்கிறது என்று மக்கள் எண்ணத் தொடங்கியிருக்கலாம். க ண் ட பி ன் தானு நம்புகிருேம். கடவுளை நம்பவில்லையா?
தெரிந்ததைத் தருவோம் என்ருல் தான் வில்லங்கம் மக்களுக்கு தெரியாத ஒன்றை தருவோம் இ ன் று உறுதி யளிப்பதில் பிரச்சினை இல்லை எ ன் று நினைத்தார்களோ என்னவோ? “சோசலிசம்" வார்த்தையைத் தாராளமாகப் பாவித்த பலருக்கே அதன் விளக்கம் தெரியுமோ என்பது சந்தேகமானது தான்.
இந்த சோசலிசப் பயணம்" என்ரு லும் அது எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்; இல்லாமை இல்லாத நிலை வேண் டும்’ என்ற இலக்கை நோக்கியதாக இருக்கச் செய்வது ஆள வந்தவர்களினது மட்டுமல்ல அனைவரினதும் கடமையாகும் .
கலாவல்லி மே 1977

Page 8
நால்வர் நவின்றவை
இங்கு ஒரு கேள்விக்கு நான்கு முஸ்லிம் எழுத்தாளர்கள் பதிலளிக்கிறர்கள்
கேள்வி : தமிழ் இலக்கியம் என்று பரந்த அடிப்படையில் செயல் படாது, இஸ்மாமியத் தமிழ் இலக்கியம் என்று பாகு படுத்துவதன் நன்மை தீமைகளைக் கூறுக?
மருதூர்க்கொத்தன் :- (வாப்பு மரிக்கார் முகம்மது இஸ்மாயில்)
இலக்கியத்தை மொழியினடிப்படையில் நோ க்கு வ து தான் சரியானது. அதுவே எனக்கு உடன்பாடான அணுகு முறை, பார்ஸி இலக்கியம், அரபு, இலக்கியம், உருது இலக்கி யம் என்றுதான் பேசப்படுகிறதே யொழிய, இஸ்லர் மிய அரபு இலக்கியம் பார்ஸி இலக்கியம் என்று பேசப்படுவதில்லை.
மணிவாசகரின் திருவாசகத்தையும், ஆண்டாளின் திருப் பாவையையும், குணங்குடி மஸ்தானின் திருப்பாடல்களையும் படிக்கின்ற போதெல்லாம், தமிழின் இழுமென ஒழுக்கும் அழ கும் இனிமையுந்தான் மேலோங்கி நிற்பதைக் காணலாம். கடவுளை அவை எப்பெயர் கொண்டு வகுத்தாலும் இறைவன் மீது நாம் கொண்ட எல்லையற்ற தெய்வீகக் காதலையே புலவர்கள் அவற்றினூடாக வெளியிடுகிருர்கள்.
உண்மை இப்படி . இருப்பினும் இஸ்லாமிய தமிழிலக்கி யம் என்ற பதப்பிரயோகம் நிறுவப்பட்ட சங்கதியாகிவிட் டது. அதை இனி அழித்தெழுத முனைவது ஆரோக்கிய
மாகவும் அமையாது.
தமிழில் முஸ்லிம் புலவர் பெருமக்கள் செய்துள்ள இலக் கிய முயற்சிகளை விரிவாய் ஆராயும் நிலைமை ஏற்பட்டிருப் பதை நன்மையான பெறுபேறெனலாம்.
விபரம் புரியாத சிலர் சமயத்தையும் இலக்கியத்தையும் கலக்கியடிக்க முனைவதும், சீருவிலும் மஸ்தான் ஸாஹிபு பாடல்களிலும் இஸ்லாத்துக்கு விரோதமான கருத்துக்கள்
8

இருப்பதாகக் கூறி அவற்றை நிராகரிக்க வேண்டுமென்று பிலாக்கணம் வைப்பதும் பிரித்து நோக்குவதால் எழுந்த தீமையான பெறுபேறு எனலாம். ኳ W
எம். வை. எம். மீஆது பி. ஏ.-
தமிழ் இலக்கியம் என்னும் போது, தமிழ் மொழி பேசும் சகல சமய இனத்தவர்களும் படைப்பவையே. பல் வே று சமயங்களைச் சேர்ந்தவர்களாயினும் தமிழ் மொழியில் கதை கட்டுரை, கவிதை, நாவல் போன்றவற்றை ஆக்குபவர்கள் தமிழ் இலக்கியத்தையே வளமூட்டுகின்றனர்.
இஸ்லாமிய மதசார்பான கருக்களை உள்ளடக்கியதாக நாவல்கள் சிறுகதைகள், நாடகங்கள் படைக்கப்பட வேண்டி யுள்ளன, அவற்றை முஸ்லிம் வாசகர்கள் வெறும் கலே ரசனைக்காக மாத்திரமன்றி, தமது சமயக் கருத்துக் களை புரிந்து கொள்வதற்காகவும் வாசிப்பது, இதுவே என்னைப் பொறுத்தவரை இஸ்லாமிய இலக்கியம் என்று பாகுபடுத்தி
இலக்கியம் படைப்பதன் நன்மையாகும்.
‘பாகுபாடு என்ற சொல்லை இங்கு பிரயோகிப்பை விட 'வகுத்து நோக்கல்’ எனக் கூறுவதே பொருத்தமாகத் தெரிகின்றது. பாகுபாடு என்னும்போது, இன, மத, பாகு பாடு என்று குறுகிய பொருளைத் தருவது போல் தோன்று கின்றது. எனவே, ஏனைய சமயங்களை, கொள்கைகளைக் கிண் டல் செய்யும் வகையில் இஸ்லாமிய இலக்கியம் அ மை யு மாயின், அவ்வாறு பாகுபடுத்துவது தீமை தரவல்லது, இலக்கியம் எதுவாயினும், அது மக்களிடையே ஒற்றுமை, சமரசம், இணக்கம், சகிப்புத்தன்மை ஏற்படுத்தக்கூடியதாய் அமையவேண்டும். " ܗܝ أن
இஸ்லாமிய இலக்கியமென தனித்து வகுத்திடும்போது, அதன் வளர்ச்சிக்கு முஸ்லிம் சமுகத்தனவந்தர், தலைவர்களிட மிருந்து பெரும் உதவிகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. இது ஒரு நன்மையாகத் தென்படினும், இஸ்லா மிய இலக்கியங்களையும் தமிழ் இலக்கியப் பரப்பில் வைத் து மதிப்பதே நவீன கால சமூக இணக்கத்துக்கு ஏற்றது.
o

Page 9
நயீமா சித்தீக்:-
தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட சைவ, வைஷ் ணவ, பெளத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தினர் அனை வருமே தமிழ் மொழியில் இலக்கியங்களைப் படைத்துள்ள னர். எல்லா மதத்தினரும் தமிழ் மொழியில் தம் பங்களிப் பினைச் செய்திருந்தாலும் இன்று கிறீஸ்தவ இ லக் கி யம் என்ருே சைவ இலக்கியம் என்ருே பேசப்படுவதில்லை.
ஆனல் இஸ்லாமிய மதத்தினரால் ஆக்கப்பட்ட தமிழ் இலக்கியம் 'இஸ்லாமிய இலக்கியம்’ என்று பேசப்படும் அளவுக்கு தன்னிலையால் உயந்திருக்கிறது- இது பெருமைக் குரிய ஒரு விடயமும்தான் -
இஸ்லாமிய மதம் தனக்கேயுரிய கலை, கலாசாரம், பண்பாடுகளைக் கொண்டது. இ ஸ் லா மி ய ர் க ளு டைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் இந்த தாக்கங்களை நாம் கண்கூடாகக் காணமுடியும் அத்துடன் அரபுமொழி யின் தாக்கமும் உண்டு. எனவே, இந்தப் பின்னணியில் அமைந்த இலக்கியம் இஸ்லாமிய இலக்கியம் என்று தனித்து நோக்கப்படுவதே சிறந்தது.
இஸ்லாமிய இலக்கியம் என்று தனித்து நோ க்கு ம் போது தமிழறிந்த எல்ல்ாரும் வாசிக்கப் பின்னிற்பதை நாம் கவலையுடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். (சிறுகதைகள், நாடகங்கள் நாவல்கள், என்பன சற் று விதிவிலக்காகும்.)
ஏ. எஸ். உபைத்துல்லா:
இஸ்லாமிய இலக்கியம் என்னும் போது இஸ்லாமிய மத சம்பந்தமாக தமிழில் எழுதப்பட்டவைகளோ அல்லது
இஸ்லாமியர்களால் தமிழில் எழுதப்பட்டவையோ என்ற
கேள்வி எழுகின்றது.
4.
O

பிரபல எழுத்தாளர் கே. ஏ. அப்பாஸ் உருது மொழி யில் எழுதியவைகளையும், வைக்கம் முகம்மது பவுர் மலையா ளத்தில் எழுதியவைகளையும், உருது இலக்கியம், மலையாள இலக் கியம் என்று சொல்கிருர்களே தவிர இஸ்லாமிய இலக்கியம் என்று முத்திரை குத்தப்படவில்லை.
இஸ்லாமிய எழுத்தாளனின் படைப்புகள் எந்தவொரு குறுகிய கட்டுக்குள் அடங்காது , உமர்கையாமின் கவிதைகளைப் போல உலக இலக்கியமாக மிளிர வேண்டுமென்பது தான் ஆசை! அதைவிட்டு கு று கி ய வரம்புக்குள்ளே இஸ்லாமிய எழுத்தாளர்களைக் கட்டிவைக்கப் பார்ப்பது அரசியல்வாதி களுக்கு ஆதாயமாக இருக்கலாமே தவிர, இலக்கியம் சேம மாக முகிழ்க்க முடியாது.
–Jr t-ff

Page 10
தோட்டங்கள் தோறு ф
தோட்டப் பாடசாலைகளின் அவல நில்
தோட்டங்கள் தோறும் நேரில் சென்று அங்குள்ளவர் களேச் சந்தித்து அவர்களின் வாயிலாகவே தோட்டங்களி லுள்ள குறைபாடுகளை சந்தித்தவர்களின் புகைப்படங்களு டன் வெளியிடுவது முதலில் எமது நோக்கம7க இருந்தது . தமது 'பிரச்சினைகளை" தமது பெயர் படங்களுடன் வெளி யிட சாதாரணமான மக்கள் சம்பந்தப்பட்ட மக்கள் தயங்கு கிருர்கள். விளைவாக எந்த சக்தியும் நம்மைக் பழிவாங்கி விடுமோ என்ற இயல்பான பயம், ஆனல் நாம் அவர்களின் குறைபாடுகளை அம்பலப்படுத்தும் துணிச்சலுள்ளவர்கள். விளைவாக அவர்களிடம் பெற்றதை நான் தருகிறேன்.
மாத்தளையில் இருந்து ஒருமைல் தூரத்தில் உள்ளது வாரியப் பொலத் தோட்டம் தொழிலாளர் ந ல க் கருத் தரங்கு ஒன்றை நடத்திய தோழர்கள் அழைத்திருந்தார்கள் போயிருந்தேன். தோட்டப் பாடசாலை ஒன்றில் கருத்தரங்கு நடந்தது. பாடசாலை என்பதை நான் முதலில் நம்பவில்லை. என்னுடன் வந்த புகைப்படக் கலைஞர் பாலா படம் பிடித் துப் பிரசுரித்தால் "இது பாடசாலையல்ல பொய்’ என்பீர் கள். வேண்டாம் என்று விட்டேன்.
முப்பதுக்கு இருபது யார் நீள அகலமுள்ள 6քՕ5 ւմn tք டைந்த மடம். நிலத்துச் சீ மெ ந் து மறைந்துவிட்டது. "பிசுபிசு' என்று ஒட்டியது. சகதியோ என்று பயந்துவிட் டேன். கருத்தரங்குக்காக மெழுகிஞர்களாம். படுகிழவனின் நிலையில் இருந்த "பள்ளிக்கூடத்துள்" ஒரு சில பழைய வாங்கு கள் எனக்கு இருக்கப் பயமாக இருந்தது.
மாடுகள் அடைக்கும் பட்டியை விட கேவலமான நிலை, மூச்சு விடக் கஷ்டப்படும் அதனுள் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பிக்கிருர்கள். ஐந்து ஆசிரியர்கள் வந்துபோகிருர்கள். அது வேறு உலக அதிசயம் கூட்டம் ந ட ந் து கொண்டி ருந்தபோது தொங்கவிட்டிருந்த பெட்ருே ல் மாக்ஸ் கழன்று
2.

விழுந்தது. பயந்து போனேன். 'நல்ல வேளை கூரையே விழாமல் விட்டது. ஆறுதல் கூறுகிருர், ஒரு கிழவர்.
உண்மைதான் கூரை எப்போது விழும் என்பது கடவு ளுக்குத்தான் வெளிச்சம் புத்தி தெ ரிய த் தொடங்கும் பருவத்தில் ஆரம்பக் கல்வி பெறப் போகும் இடத்தில் இருப் பிடமே இப்படி ஒரு அவலம் என்ருல் அதுவும் கல்வித் துறைக்கு கோடி கோடியாக அரசு பணம் ஒதுக்கும் நாட்டில்
இதுதான் மலையகத் தோட்டப் பாடசாலைகள் பெரும் பாலானவற்றின் நிலை என்கிருர் நண்பர் ஒரு சோறு பதம்.
வாரியப்பொலத் தோட்டப் பாடசாலையைப் பார்த்தால் தோட்டச் சிறர்களது எதிர்காலத்தை நினைத்து கண்ணீர் தான் வரும் கல்விக் கண் திறக்கவிடாமல் இளமையிலேயே குருடாக்கும் நிலை.
இலந்தவெலத் தோட்டத்தில் தலை கீழ் நிலை சிறிதா குலும் நல்ல கட்டிடமுண்டு ஐந்து வகுப்புக்கும் ஒரே ஒரு ஆசிரியர் அவர் ஓடியோடி மேய்ப் பதில் விளைவு பூச்சியம். இப்படி இப்படித் தோட்டப் பாடசாலைகளில் அவல நிலையின் பட்டியல் வெகு நீளம். ஆசிரியர்களிடம் அக்கறையில்லை. வெறும் மாடு கன்று மேய்ப்பது போன்ற உணர்வு அப்படி யானல் அவர்கள் ஆசிரியர் என்று அழைக்கப்பட வேண்டிய தில்லையே சிருர்களுடன் அன்பு ஆதரவுடன் நடப்பதில்லை. வெறும் பொழுதுபோக்கும் மனேபாவம்.
மலையகத்து சமூகச் சிற்பிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய முக்கிய பிரச்சினை இது.
தினகரன் 1 7 gav 1980

Page 11
*பிறந்த மண்ணிற்குப் பெருமைதரும் ஜெகநாதன்”
ஈழத்து இளம் எழுத்தாளர்களில் எ மு ச் சிச் சின்னமாக விளங்கும் காவலூர் ஜெகநாதனுக்கு இளம் வாலிபர்கள் பாராட்டுவிழா நடத்திப் பொன்னுடை போர்த்திக் கெளரவிக் கும் நிகழ்வறிந்து அகமிக மகிழ்கின்றேன்.
தீவகத்து மண்ணுக்குப் பெருமை சேர்க் கும் தீந்தமிழர் வரிசையில் முன்னணிப் பிரமுகராக நிற்கும் இவ் எழுத்தாள நண்பர் மூன்ருண்டுகளில் பதினறு போட்டிகளில் முதற்பரிசு களைத் தட்டிக்கொண்டமை ஒரு சரித்திர நிகழ்வென்ருல் அது மிகையல்ல . மக்களை ஈடேற்றவல்ல மகோன்னத கருத்துக்களை அடிப்படையாக வைத்து தன் பணியைத் திறம் படப் புரியும் நண்பரின் இச்சேவை எதிர்கால சந்ததிக்கு ஒரு வரப்பிரசாத மாகவே அமைந்திருக்கிறது.
பண்டைக்காலத்திலே கிறப்புக்குரியோர் அவரவரின் வாழ் நாளின்போதே பாராட்டப்பட்டதோ, கெள ர விக் க ப் ப ட் டதோ இல்லையென்றே சொல்லலாம். அந்த இழிநிலையை மாற்றி பாராட்டப்பட வேண்டியோர் அவர்களது கண் முன் னே யே கெளரவிக்கப்பட வேண்டுமெ ன்ற உண்மையை உணர்ந்து இன் றைய இளம் வாலிபர் திருக்கூட்டம் இப்பாராட்டு விழாவை எடுப்பதையிட்டு ஒவ்வொரு இளைஞனும் பெருமைப்பட வேண்டும்.
சட்டத்தரணி கே. எஸ். மகேந்திரன் ஈழநாடு சிறப்புமலர் 18-8-1979

இளைஞர் நெஞ்சில் கனலும் நெருப்பு!
விடிந்துவிட்டதா? இன்னும் பறவைகள் கூட துயில் கலைய வில்லையே. ஆனல் என்ன? பணமே நினைப்பாக உறக்கமின்றி புரண்டுகொண்டிருந்த ஒட்டல் முதலாளி எழும்பிவிட்டாரே! அடித்து எழுப்பப்படுகிருர்கள் தொழிலாளர்கள். இயந்திரங் கள் இயங்கத் தொடங்கிவிட்டன.
சமையல் பகுதிக்குள் வேலை. நெருப்பின் காங்கைக்குள் வியர்வையில் குளித்தபடி வேலை. அது முடிய நிலம் வெளுக் கிறது. வானெலியில் காலைக் கதிர் கதறுகிறது.
அடித்துப் பிடித்துக்கொண்டு தயாராகி முன்பகுதிக்கு வந்து விட்டார்கள். ‘ஒரு பிளெயின் ரீ” கொட்டாவி விட்டபடி வரும் பக்கத்துக் கடைத் திண்ணைத் தூங்கி முழுவியளம். தொடர்ந்து வாறவன் போறவன் எல்லாரும் சொல்வதற்கெல்லாம் ஓடி யோடி அவன் விரும்பும் விதம் விதமான சாப்பாட்டுகளை பரி மாரி அவை எல்லாவற்றையும் அவன் சாப்பிடமுடியுமா?
சனம் குறைந்த இடைவேளையில் சாப்பிட முனைகிருன் அதற்கும் காரணமில்லாமல் முதலாளியின் முணுமுணுப்பு. இந்த ஒரு வேலையில் மட்டும்தான் முழுக்கவன்ம்.
மீண்டும் இயந்திரம் இயங்குகிறது.
சாப்பாட்டின் தரக்குறைவு, பரிமாறுவதில் தாமதம், இவற் ரு ல் ஏச்சுக்களை கணக்கின்றி பெற்றுக்கொள்வது இ வர் க ள் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்து கணக்கோடு பணத்தைப் பெறுவது முதலாளி,
மாலையும் செத்துவிடுகிறது.
களைப் பின் உச்ச நிலையில் அவர்கள் நாளொன்றுக்கு எட்டு மணி வேலை என்ற சட்டமெல்லாம் அவர்களுக்கில்லை; அவர் களையும் மனிதர்கள் என்று முதலாளி க ரு தி ன ல் அல்லவா அமுல் நடத்துவதற்கு. கடை அடைக்கும்போது இரவு பதி னுெரு மணி. 兹
சாக்கு ஒன்றை விரித்துவிட்டு தலைக்கு அணையாக பேப்பர் கட்டு, அந்தக் களைப்பிலும் உறக்கம் வராமல் மனம் அலைபாய் கிறது. வந்துவிட்டுப்போன சில பெண்கள், ஞாயிறு பார்த்த படத்தின் கதாநாயகி கையில் விரிந்திருப்பது வயது வந்ததவர் களுக்கு மட்டும் என்று கவரில் அடித்து காசு கொடுத்து வாங் காமல் பிரித்துப்பார்க்க முடியாதவாறு ’கிளிப்பண்ணிய விபச் சாரியின் பாணி. செக்ஸ் புத்தகம், மறுமலர்ச்சி எழுத்தாளர் எழுதியது.
5

Page 12
அதிலே மனம்விட்டு சுகம் கண்டு, நினைவு, கனவு எல்லாமே அதுவாக, எப்போது துரங்கினனே.
படார்’ அடித்து எழுப்பப்படுகிருன். அவனது ஒரு நாள் அல்ல, ஒரு யுகம் முடிந்து மறு யுகம் ஆரம்பமாகிறது. அவ ன து வாழ் வை எண்ணிப் பாருங்கள் மாதம் முடிந்த பின், இது அது என்று கணக்கு முடித்து முதலாளி கொடுக்கப்போகும் சிறு தொகைப் பணத்தையும் எ ன் னி ப் பாருங்கள், கொடுமை இல்லையா?
ஒட்டல்களில் மட்டுமல்ல இப்படி. பலசரக்கு கடைகள்போன்ற பல் தனியார் நிறுவனங்களிலும் இதே நிலைதான். உழைப்பு அவசியம் தான் அந்த உழைப்பு, மனிதன் மனிதனுக இருந்து வழங்கவேண்டியது. நிர்ப்பந்தத் தின்பேரில் இயந்திரமான எல்லை கடந்து அடிமையிலும் கேவல மாக பிழியப்பட்டு பெறப்படுவதல்ல. சில இடங்களில் குறைந்த அந்தக் கூலிகூட ஒழுங்காக கொடுக்கப்படுவதில்லை.
உடல் கசங்காமல் உயர்ந்த சம்பளம் வாங்குபவன் வந்து வயிறு புடைக்க உண்கிருன், உடல் கசங்க உழைப்பவன் அந்த உணவுகளைப் பார்ப்பது மட்டும்தான். உண்பது பழையதுகளை .
இதுவெல்லாம் நமது சமூகத்தில் நீதியாக்கப்பட்டிருக்கிறது. அந்த நீதிகளைப் போட்டுடைக்க வேண்டியது இளைஞர் நம் பொறுப்பல்லவா?
தினகரன்
6

உளவியல் மஞ்சரி ‘நான்'
இலங்கையில் ஒரு தமிழ்ச் சஞ்சிகையைத் தொடர்ந்து வெளியிடுவதென்பது ஒரு பெரிய காரியம், அதுவும் ஒரு துறை சார்ந்து அதற்கென்றே இதழை வெளியிடுவது மலைப்பூட்டும் விடயம். அதனைச் செயலில் சாதித்திருக்கிருர்கள் அ. ம. தி. இல் லத்து இளைஞர்கள். அதுதான் " நான் " என்னும் உளவி 11ல் மஞ்சரியாக கடந்த ஏழு ஆண்டுகளாக வெளிவந்து கொண் டிருக்கிறது. கையடக்கமான அழகிய அமைப்பில் சிறந்த முறையில் தொடர்ந்து வெளிவருகிறது நான் ’.
இரு மாதத்துக்கு ஒன்ருக வெளிவரும் இதழ்களில் ஒவ் வொன்றுக்கும் ஒரு தலைப்புக் கொடுத்து அத்தலைப்பின் கீழ் ஆக்கங்கள் பெறப்பட்டு, பிரசுரிக்கிருர்கள். உதாரணத்துக்குச் சில தலைப்புகள் - தவறு, விதி, பயன், மனித செயற்பாடுகள், உளப்பிறழ்வு.
* நானில் ? வெளிவரும் படைப்புகள் உளவியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமன்றி, அனைவருக்குமே பயன் தரும் வகையில் அமைந்துள்ளன. ஆரோக்கியமான மனவளர்ச்சி யுள்ள சமூகத்தை நிர்மானிக்கும் நோக்கில் சிறப்பாக படைக் கப்படுகின்றன. வி. பற்றிக், கார்டோசா போன்றவர்கள் பயன் மிகு கட்டுரைகளை அளித்துள்ளார்கள். " நான் ” இதழ் களில் வெளிவந்துள்ள கட்டுரைகளை நோக்கும்போது அவை தொகுதியாக வெளியிடப்பட வேண்டும் என்ற அவா உண் டாகிறது.
இம் மாதம் பயம் ' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இதழில் “பயத்திற்கே பயப்படு என்ற யோ. கார்டோசாவின் கட்டுரை, பயமே உன் விலை என்ன ? என்ற ஸ்ரனி அன்ரனி யின் கட்டுரை, குழம்பிய நிலையும் குழம்புகின்ற காரணிகளும் என்ற புலவர் ஒலியின் கட்டுரை, ஆபத்துகளும் ஆக்கச் செயற் பாடுகளும் என்ற ஜீவா ரூபால் எழுதிய கட்டுரை, ஆசிரியர் வி. பற்றிக்கின் அச்சத்தை முறியடிக்க ஆறு முறைகள் கட்டுரை ஆகியன இடம்பெற்றுள்ளன. இவையாவும் கட்டுரை ஆக்கச் சிறப்புப் பெற்றுள்ளன என்று விதந்துரைக்க முடியா விட்டாலும், உள்ளடக்கத்தால் பொலிவு பெற்றுள்ளன.
7

Page 13
ஈழத்தில் சிறுகதை இலக்கியத்தில் உளவியல் ரீதியான அணுகுமுறை கொண்ட படைப்புகள் அரிதாகவே படைக்கப் பட்டுள்ளன. அத்தகைய படைப்புகளுக்கு " நான் களம் கொடுத்து ஊக்குவிக்கிறது. தொடர்ந்து "நானில் உளவியல் சிறுகதைகளை எழுதி வந்துள்ள காவலூர் எஸ். ஜெகநாதன் ஒரு மாறுதலாக இம்மாத இதழில் “ இந்த இதழிலிருந்து ' என்ற கவிதையை எழுதியுள்ளார்.
நான் இதழ், கவிதைகள் பல்வற்றையும் வெளியிட் டிருக்கிறது. எழுதும் ஆர்வம் கொண்ட இளைஞர்களை ஊக்கு வித்தும் மன உளைச்சலால் வருந்தும் இளையவர்களை உற்சாகப் படுத்தியும் " நான் " ஆற்றிவரும் பணி கவனத்துக்குரியது.
* கருத்துக்குயல் ' என்ற தலைப்பின் கீழ் இதழின் தலைப்பை ஒட்டி வாசகர்களிடம் கருத்துக்கள் பெற்று வெளியிட்டு வரு கிருர்கள். ‘நான் எழுதியுள்ள ஆசிரியத் தலையங்கங்கள் அவர்களது இலட்சிய மயமான தீவிரத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஒவ்வோர் இதழிலும் " வாசகர் அறிமுகம் " என்ற பகுதியில் வாசகர்கள் தம்மை அறிமுகப் படுத்துகிறர்கள். சிவையும் பயனுமிக்க பகுதி அது.
* நான் வெளியீடு ஒரு காத்திரமான முயற்சி.
தினகரன்
8

இலக்கியத்துறையில் இளைய தலைமுறை
1976-ம் ஆண்டு நான் இலக்கியத் துறையின் நுழை வாயிலில் நின்றநேரம், யாழ்ப்பாண வளாகத்தில் வைத்து கலாநிதி சண்முகதாஸ் அவர்கள்தான் அவரை எனக்கு அறி முகம் செய்து வைத்தார். எனது சொந்த ஊரிலே ஓர் இலக் கியக் கூட்டம் . தேவன், சொக்கன், மனேன்மணி சண்மிக தாஸ். இப்படி ஓர் இலக்கியப் பட்டாளமே ஒரேயொரு காரில் எப்படிப் போவது என்ற திண்டாட்டத்தில் விரல்விட்டு தலைகளை எண்ணிக் கொண்டிருந்தபோது அவரை நான் கணக் கில் எடுக்கவில்லை. அதற்கான தேவை இல்லையென்ற எண் ணம். ஒரு குழந்தைப்பிள்ளை நெருங்கிக்கொண்டு இருக்கக் கூடிய இடம் அவருக்குப் போதும். மிஞ்சிப்போனல் மடியி லாவது வைத்துக்கொள்ளலாம். \ *...'.
அதுவேதான் நடந்தது. பதினைந்து மைல்கள் அவர் என் மடியில் அமர்ந்திருந்தபோது, கனமே தெரியவில்லை. உடலில் “கணம்' இல்லாதபோதும், ஆள் "ரொம்ப கனமானவர்தான் என்பது கூட்டத்தில் அவர் பேசிமுடிந்த பின்தான் எனக்குப் புரிந்தது. -
துரை மனேகரனுக்கு மெலிந்த உடல். எதிர்க்காற்றிலே அவர் தலையை அசைத்துக் கொண்டு 'பாடுபட்டு’ வரும்போது பாவமாக இருக்கும் ஆனல் ஆற அமர சில மணித்தியாலங் கள் ‘இலக்கியம் பற்றிக் கதைக்கத் தொடங்கினல், அந்தப் பாவமே பொழுமையாக மாறும். அத்துணை ஆழமான கருத் துக்களைத் தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கிருர், இந்த இளைஞர். ・
'பாவையின் பரிசு’- ஈழத்திலே இதுவரை வெளிவந்த நாவல்களிலே ஒரு வித்தியாசமான நாவல். பெண்ணென்றல் பேயுமிரங்கும்-இது பழமொழியளவில் இருக்கின்றது. பெண் ணிற் பெருந்தக்கயாவுள-இது ஏட்டளவில் இருக்கிறது. பெண் ணின் நி3ல உயரவேண்டும். அவள் தெய்வம்-இது பேச்சளவில் இருக்கிறது, செயலளவில் கொடுமை, பழி, பலாத்காரம், இவைகள்தான் இருக்கின்றன. பெண் உயர்ந்தவள் - தெய்வம் எல்லாம் பொய்யாய், பழங்கதையாய் போய்விட்டன. இன்று மிஞ்சியிருப்பது? பெண் ஒரு இயந்திரம். இந்த இதயக்குமுறலை அடிப்படையாகக் கொண்டு பாவையின் பரிசிலே பெண்ணினத் தின் பரிதாபக் குரல்கள் கேட்கின்றன. அதை ஒரேயொருவன் தான் கேட்கிருன் .
9

Page 14
அவன்தான் துரைமனேகரன், அதுவும் தனது பத்தொன்ப தாவது வயதிலே உரும் பிராய் இந்துக்கல்லூரியிலே உயர்தர வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது எழுதி அந்த நாவலை வெளியிட்டிருக்கிருர் என்ருல். மூக்கிலே விரலை வைத்து வியக் கத் தோன்றவில்லையா?
கலையரசு சொர்ணலிங்கமே வியக்கிருர், 'இளைஞர் மனேகர னின் பேணு என்ற தூரிகை தமிழ் என்ற வண்ணக் கலவையைத் தோய்த்து எம் மனத்திலே அழியாது வரைந்துவிட்டது என்று w 'ஆண்களின் குற்றங்களைப் பெண்கள் அவர்களிடம் சொல் லும் போது தமது குற்றங்களை மறைப்பதற்காகப் பெண்களை அடித்தும் கடிந்தும் துன்புறுத்துகிறர்கள். இதுதான் அவர்களின் மான உணர்ச்சியாக்கும் இப்படி பாவையின் பரிசு முழுவதும் கருத்துக்குவியல்கள் சிதறிக்கிடக்கின்றன. நாவலை வாசித்து முடிக்கும்வரை மு. வரதராசனின் நாவலைப் படிப்பது போன்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.
வெளியீட்டு விழாவிலே நாவேந்தன் அவர்கள் அதைக் கூறியிருக்கிருர் . மு. வ. வின் நாவலைப்போல் கருத்துக்கள், பாத்திர வார்ப்பு மட்டுமின்றி மொழிநடைகூட பின்பற்றப் பட்டிருக்கிறது என்று.
அண்மையிலே பேராதனையிலே அவரது இல்லத்தில் சந்தித்த போது இவற்றை சுட்டி மு. வ. வின் நாவலைப்பற்றி முற்போக்கு விமர்சகர்களிடையே ஒருமாதிரியான கருத்து உள்ளதல்லவா? இன்று விமர்சகராகவும் பரிணமித்திருக்கும் நீங்கள் உங்கள் நாவலைப்பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்?
துரை மனேகரனுக்கு கள்ளமற்ற உள்ளம். கதையைத் திருடி விட்டே கற்பூரத்தின்மீது அடித்து சத்தியம் செய்பவர்கள் உள்ள இலக்கியத்துறையில் இவர் ஒரு தனிப்பிறவி.
மு. வ. வின் நாவல்கள்ை அனைத்தையும் படித்து அந்த அருட் டுணர்வால்தான் நான் எழுதினேன். அவரைப் பின்பற்றியே எழுதினேன். ஆனல் இன்று அவரது நாவல்கள் நாவல்களே அல்ல; வெறும் கருத்துக்கோவைகள்தான் என்று தெளிவுபிறந்து விட்டது. அவ்வகையில் பாவையின் பரிசும் ஒரு கருத்துக் கோவையே என்கிருர். இந்த நேர்மை யாருக்கு வரும்?
இந்தத்தெளிவோடு, வளர்ச்சியோடு ஒரு நல்ல நாவலை நீங் கள் தரவேண்டும் என்கிறேன். விரைந்து தருவேன் என்று உறுதி யளிக்கின்ருர் துரை மனேகரன். உரும்பிராயிலே துரைராசா தம்பதிகளுக்கு மகனுகப் பிறந்த இவருக்கு வயது 30,
இதைக் கூறினல் தத்துவத்துக்கு முரணுகிவிடுமோ? அதைக்
20.

கூறினல் கட்சிக்காரருக்குப் பிடிக்காமல் விடுமோ? அவர் கள் என்ன நினைப்பார்க்ளோ? என்றெல்லாம் தன்னுன்ளே இருக்கும் மனிதனைக் கொன்றுவிடாமல் மனதிலே இருப்ப வற்றை-மனதுக்குத் தோன்றுவனவற்றை பட்பட்டென்று கூறு வார், கதைக் கத்தொடங்கினல் அவரை விட்டுப் போக மனம் வராது.
மனிதனை மனிதனுகவே பார்க்கவேண்டும். நாங்களும் மனிதர்களாகவே நின்று பார்க்சுவேண்டும், மனிதாபிமானக் கண்ணுேட்டமில்லாமல்-எதையெடுத்தாலும் தத்துவக் கண் பேணுட்டத்திலேயே பார்ப்பதை விரும்பவில்லை என்கிருர் . அது கான் நமக்கு முந்திய காலகட்டத்து எழுத்தாளர்கள் விட்ட தவறு என்கிறார். மனிதனுக்காக தத்துவமே தவிர தத்துவத் துக்காக மனிதன் இல்லையே.
மனேகரனுக்கு இடதுசாரிக் கருத்துக்களிலே மிகுந்த பற்றுதல். இவரது முதலாவது சிறுகதை ‘நான் கதை எமுதி னேன் தந்தை கதை எழுதுவதைப் பார்த்து தானும் கதை எழுத முற்பட்ட இளம் பையன் அடிவாங்கிய தன் கதையைக் கூறுவது. அது கதை. ஆனல் உண்மையோ முரணுனது. இவ ரைக் கதை எழுத ஊக்குவித்ததே இவருடைய தந்தையார் தான். இதுவரை பத்துச் சிறுகதைகளை எழுதியிருக்கும் இவ ரது ‘ஓர் அறையும் ஒரு நிலவும்" (மல்லிகை 7 7 ஜூலை) கதை வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. -
மணம் மூடிப்பதற்கு முன் ஒரு எழுத்தாளர் சுதந்திரமாக உற்சாகத்தோடு எழுதுகிருர், மணம் முடிந்ததன்பின் பொறுப் புக்கள், மனைவியால் சில சுமைகள், கசப்புகள், இவற்ருல்
சுதந்தரமின்றி எழுதமுடியாது மனநிலைக்கு ஆட்படுகின்ருர்,
எழுத்தாளனுக்கு திருமணம் ஒரு சிறையாகவே மாறிவிடு கிறது. இதுதான் துரை மனேகரனின் சிறை சிறுகதையின் கரு எழுத்தை நேசிக்கும் எந்த எழுத்தாளனும் அதை வாசித் தால் திருமணத்தின் பக்கம் தலை வைத்தும் படுக்கமாட்டான். இவரும் அந்தப்பக்கம் தலைவைத்துப் படுக்காது 71-ம் ஆண்டு தான் கண்ட அனுபவ மொன்றை - தனக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்ற பயத்துடன் எழுதுகிரு ர்.
இன்றே. . மனேகரன் திருமணம் முடிந்த பிறகு தனது கருத்தை மாற்றிக்கொண்டார். அமைகின்ற மளைவியைப் பொறுத்தது அது என்று, இவரது துணை வியார் கனகாம்பிகை படிப்பும் பண்பும் நிறைந்தவர். சோர்த்திருக்கும் இவரை உற் சாகப்படுத்துபவர். அவரே "சும்மா பேசிக்கொண்டிருந்தால்
காணும்.நீங்களும் எழுதவல்லோ வேணும்' என்று கூறுவார்.
2

Page 15
துரை மனேகரன் பேராதனை பல்கலைக் கழகத்திலே உதவி விரிவுரையாளராக கடமையாற்றுகிறர். பீ. ஏ. ட!--திரரி தமிழிலே சிறப்புப் பட்டம் பெற்றவர். ஒவியத் துறையிலும் ஆர்வமுள்ளவர். "மொடேர்ண் ஆட்ஸ்" போன்றவற்றை இவர் அடியோடு வெறுக்கிருர், உருவத்தை அழிக்கும் உருவம் இலக் கியத்தை அழிக்கும் இலக்கியம். இவற்றிலெல்லாம் இவருக்கு ஈடுபாடில்லை,
இது ஒரு சுயையான கதை. எஸ். எஸ். சி. படிக்கும்போது ஒரு மாணவன் தமிழ்ப் பாடத்துக்கு கட்டுரை எழுதச்சொன்னல், இடையிடைலே பெரிய கவிஞராகி தனது கவிதைகளையும் செருகுவார் விந் ததே பண்டிதருக்கு கோபம்.சிலர் பாட்டெழுதப் பார்க்கிருர் கள், அவர்களுக்கெல்லாம் பாட்டு வராது என்று வகுப்பில் மாணவர்களின் முன்னே அவமானப் படுத்திவிட்டார். அந்த மாணவனுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்துவிட்-சி ஒரு சவாலாக தமிழ்க் கவிதை நூல்களையெல்லாம் கற்ருர் கடுமையான உழைப்பு வீண்போகவில்லை. அந்த மாணவர் பலி கலைக் கழகத்தில் படித்தபோது 73ம் ஆண்டு பேராதனை வளா? தமிழ்ச் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியிலே முதல்பரிசை பெற்ருர், ஏங்குகின்ற மூச்செல்லாம் எவரின் மூச்சு என்ற க தையே பரிசைப் பெற்றது. பண்டிதருக்குத்தான் சொந்தமாக னது என்கிருர் அந்த மாணவர். ሰ
அவர் வேறு யாருமல்ல நமது துரை - மனேகரனேதான் இவர் இலக்கியத்துறைக்கு கவிதையோடுதான் நுழைந்தார். பல கவிதைத் தொகுதிகளிலே இவரது கவிதைகள் இடம்யெற் றுள்ளன. இலக்கியத்தின் பல உள்துறைகளினும் காத்திரமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கிருர், பேராசிரியர் கண பதிப்பிள்ளையின் நாட்களில் "சமூக நோக்கு’ என்ற ஆய்வுக் கட்டுரை ‘சிந்தனை' பிரசுரமாக வெளிவந்துள்ளது. நாடகங்களில் ஆய்வு செய்தாரல்லவா ? நாடகத்துறையிலே இவருககுத் தனியான ஒரு பைத்தியம்’ நான் விரிவுரையாளனுக வந்திருக்காவிட்டால், இதுவே தமிழகம் என்ருல், ஒரு திரைப்படக் கதாசிரியணுகவோ - இங்கே நாடகத் துறையினுள்ளே தான் நுழைந்திருப்பேன் என்கிரு ர். இவரது மூன்று நாடகங்கள் பேராதனை பல்கலைக் கழகத்திலும், இரு நாடகங்கள் உரும்பிராயிலும் மேடையேறியுள்ளன. ‘அன்பின் பேரால் - என்ற நாடகம் ஐந்து தடவைகள் யாழ்ப்பாணப் பகுதியில் மேடையேறியது.
மனேகரன் நாடக ஆசிரியர் மட்டுமல்ல தரமான நடிகர்.
22

போதனை பல்கலைக் கழகத்திலே மேடையேறிய வேஷங்கள் வாழ்கின்றன’ நாடகத்தில் தலைமையாசிரியர் தம்பிமுத்துவை மறக்கமுடியுமா? இப்போதும் கண்ணுக்குள்ளே களைக்கட்ட வில்லையா? நினைவில் நிற்கும் பாத்திரம் என்ற பரிசையும் தம்பி (pத்துதான் இவருக்கு பெற்றுக்கொடுத்தார். இவரது பெண் வேடத்துக்கு அந்நாளில் பல்கலைக்கழக மாணவர் மத்தியில் தனியான ஒரு வரவேற்பு இருந்ததுண்டு.
இன்று தங்களைத் தாங்களே பிரபலமாக்கிக்கொண்டு தலை நகரில் இருக்கும் எம். ஜி. ஆர். படத்தில் அடிவாங்கமட்டுமே லாயக்கானவர்கள் - பெரிய கலைஞர்களாக உலாவிவருவது எவ் வளவு வெட்கக்கேடு. கிராமங்களிலே, பல்கலைக்கழகங்களிலே உள்ள தரமானவர்களை நாடு இனம் காண்பது எப்போது என்று வேதனையோடு துடிக்கிருர்:
"இத்தனை ஆண்டுகளாக எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி ஞர்களே! சமூகத்திலே எந்த ஒரு பிரச்சனையையாவது தொட்டு வைத்தார்களா? இல்லையே! பு தி ய தலைமுறை எழுத்தாளர் களும் கண்மூடிக் கொண்டு அதே தடத்தில் செல்வதா? பல அர்த்தங்கள் தொனிக்க கேட்கிறேன்.
பழைய வர்கள் அடிப்படைப் பிரச்னைகளை உ ண ரா ம ல் சொந்த தாழ்வு சிக்கலில் ஆழ்ந்துகொண்டு எழுதினர்கள். இலக்கியம் யாரைச் சேர வேண்டுமோ, அவர்களைச் சேரவில்லை. எழுத்தாளர்கள் தம்மைச் சுற்றி தத்துவத்தில் கட்டிக்கொண்டு மக்களைவிட்டுப் பிரிந்துவிட்டார்கள்.துரை மனேகரன் மனம் திறந்து அடுக்கிக்கொண்டே போனர்.
காரணங்களைக் கூறிவிட்டார். இனி. இவைகளைக் களைந்து இலக்சியத்தின்மூலம் சமூகப் பயனை விளக்கவேண்டும்.
‘பொறுத்தது போதும் பொங்கி எழு மனேகரா. l ஏனிந்த தேக்கம், வேகமாக உங்கள் பணி தொடரலாமே." இது எனது ஏங்குகின்ற மூச்சு . இந்த மூச்சு அணையை உடைத் 两岛/·
எதிர்காலத்தில் நிறைய எதிர்பார்க்கலாம்
στσόταηrt இனி ೧ಎir೧ಳ್ಳರು LunT utih.
-ஈழநாடு
23

Page 16
பரதன் பெற்ற பாதுகை
“பொன்மணி" படம் பார்ப்பதற்கு கலரி ரிக்கற் எடுத்து போனபோது கிடைத்த உபசாரம் கூட இருபத்தைந்து ரூபா ரிக்கட் எடுத்து ‘* பரதன் பெற்ற பாதுகை ' நாடகத்துக்கு போனபோது கிடைக்கவில்லை. இருந்தாலும் சரி, நின்ருலும் முரி உள்ளே போனல் காணும் என்பதுபோல் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக உள்ளே செலுத்தினர்கள். மே டையில் மந்தரை சூழ்ச்சிப்படலம் நடந்துகொண்டிருந்தது.
மந்தரையாக நடித்த மணிமேகலை எவ்வளவு நேரம்தான் முதுகைக் கூனியபடி நடித்துவிட்டார். குனிந்து நின்றே நடிப் பில் நிமிர்ந்துவிட்ட கதாபாத்திரம் அதுதான்! கைகேயியாக நடித்த செல்வி கைகேயியாக மாறிவிட்டபோதும் மேடைக்கேற்ற ‘அழகு இல்லாதது குறையாக இருந்தது. மந்தரை வந்து போனபின் நாடகம் மந்தமாகத்தர்ன் இருந்தது. ஹெ ல ? குமாரி வந்தார் - போனர். சமீபகாலமாக ஈழத்து நாடகத் துறையில் நம்பிக்கை நட்சத்திரமான ஜவாகர், குகன் LITë 3 Të தில் தன் முத்திரையைப் பதித்துத்கொண்டார்!
நாடகத்தின் கடைசிக் கட்டம்' பரதன் இராமரைக் காட் டில் சந்திக்கிருன். இராமராக நடித்த சிவஞானத்தின் கால் களில் பாதுகை இல்லை. சபையோருக்கு அதிர்ச்சி. பாதுகையைக் கேட்கப்போகும் கட்டத்தில்தான் இராமர் ஒடிப்போய் பாது கையைக் காலில் செருகிக்கொண்டு வருகிருர் . ஒப்பனைகள் மிகையாகி பபூன்' கள் போன்று கதாபாத்திரங்கள் காட்சி யளிக்கத்தான் வேண்டுமா?
‘இராமர் பட்டாபிஷேகமே நடக்கவில்லை! கிரீடம் வைத் திருக்கிருர் . தசரதனே கிழவன் ஆனல் தசதரனுக ந டி த் த பெர்னன்டோ இளைஞன் போன்று துள்ளிக் குதிக்கிருர், ஆண் கதாபாத்திரங்கள் யாவுமே பாத்திரம் உணர்ந்து நடிக்கப் 1. வில்லை” இவற்றையெல்லாம் நான் கூறவில்லை. இடைவேளையின் போது நடிகவேள் ஒருவர் கூறினர்.
ஆரம்பத்தில் மொய்த்துக்கொண்டிருந்த சனக்கூட்டம் இடை வேளையின் சற்றுப்பின் எங்கே மாயமாய் மறைந்துவிட்டதோ  ெத ரிய வில் லை . மே டை யி ல் உள்ளவர்கள் மீதோ, அல்லது ரசிகர்கள் மீதோ! கண்டிப்பாக இரண்டில் ஒரு பக்கத் தில் ஏதோ ஒரு குறை உண்டு. கண்டுபிடித்து தீர்க்கவேண்டி யது அவசரம் - அவசியம்! கலாவல்வி
24

அக் கரைப் பூக்கள்
தமிழக எழுத்துத் துறை பற்றி ஈழம் நிரம்பவுமே தெரிந்து வைத்திருக்கிறது. ஈழத்து முயற்சிகள்தான் பெரும் பாலும் அங்கு அறியப்படுவதில்லை. ஒரு வழிப்பாதையின் குறைபாடு இது என்று கூறப்படுகிறது. ஒரளவு உண்மை இருக்கிறதுதான். ஆனல் முழுவதுமான உண்மையை உணரும் போது கசப்பு நெஞ்சை நிறைக்கும். தமிழகத்தை நமது பெரும்பான்மையான வாசகர்கள் எப்படி அறித்து வைத் திருக்கிழுர்கள். வந்து குவியும் வியாபாரக் குப்பைகளில் தரிசனம் தரும் சங்கரிகள், சுஜாதாக்கள் மூலமாகத்தான். இவர்கள்தான் தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர் என்பது பலரது பிரேமை.
கூலிக்கு ஏழுதிக்குவிக்கும் இத்தகைய வியாபாரிகளால் சமூகத்துக்கோ தமிழுக்கோ, துளியும் நன்மை இல்லை.
உண்மையில் சமகாலத்து தமிழகத்தின் சிறந்தபடைப் பாளிகள் என்று பட்டியல், போட்டால் பணம் உழைக்கும் பலரும் விலாச மற்றுப் போய்விடுவார்கள். அது நாளைய இலக்கிய வரலாற்றின் வேலை. நாம் இன்று நம் கவனத் துக்கு எட்டிய படைப்பாளிகளைப் பற்றி. - பெரும்பாலும் இளைய தலைமுறை பற்றி இங்கு கவனம் திருப்புவோம்.
தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த ந. முத் து சாமி சென்னையில் அலுவல் புரிந்து வாழ்ந்து வந்த போதும், புது மைப்பித்தனைப்போல தன் இளமைக்களமாகிய தன்னுாரை அசை போடுகிற வகையில் எழுதியிருக்கிற சிறுகதைகளில் நீர்மை, வண்டி ஆகியவை தமிழின் சிறந்த கதைகள் வரிசை யில் இணைக்கத்தக்கவை. தற்சமயம் கூத்துப் பட்டறை என்று சென்னையில் இயங்கிவரும் அமைப்பில் பங்கு கொண்டு தமிழின் கிராமியக் கலைவடிவமான கூத்து பற்றியும்-அதில் விற்பன்னர்களான புரசை நடேசத்தம் பிரான், கண்ணப்பத் தம்பிரான் ஆகியோர் பற்றியும், பத்மா சுப்பிரமணியத்தின் பரதநாட்டியம் பற்றியும் வைகை இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். நாற்காலிக்காரர், சுவரொட்டிகள், ஆகிய இருவருடைய நவீன நாடகங்கள் புத்தகவடிவில் வெளிவந்த தோடு நாடகமாய் நடிக்கப்பெற்றும் பெருமை பெற்றுள்ளன.
25

Page 17
கலாப் பிரியாவின் கவிதைகளில் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து கிடைக்கும் உண்மைகளைவிட SENTIMENTALISM அதிகம் வெளிப்படுகிறது. இவருடைய வெள்ளம். தீர்த்த யாத் திரை, மற்ருங்கே ஆகிய கவிதைத்தொகுப்புகள் வெளி Gdy jig Git GMT GOT. BANK OF TAMIL NADU GT Gör smo Guši gau? 6io பணிபுரியும் இவரது இயற்பெயர் சோமசுந்தரம்.
ஸ்பிக் உர நிறுவனத்தில் பணிபுரியும் ஏ. ஏ. ஹெச் கே. கோரியின் சிறந்த சிறுகதைகள் தடுமாற்றங்கள் பதினஞ்சு" என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளன. இவருடைய கதைகளில் வாழ்வின் உண்மையை நெகிழச் செய்யும் வாழ்வின் நிலைமைகளே வெளிப்பட்டு நிற்கின்றன. வாழ்வின் நிலைமைகளிலிருந்து வாழ்வின் உண்மைகளுக்கு இவர் நகரமுடிந்தால் நன்ருக இருக்கும். சோர்வின்றி இவர் தொடர்ந்து எழுதுவாரானல் தமிழுக்கு நல்ல சில படைப் புக்கள் கிடைக்கலாம். சிறுகதைகளோடு சில கவிதைகளும் எழுதியிருக்கிரு ர்.
சென்னையில் தமிழ்நாடு அரசு செய்தித்துறையில் பணி யாற்றும், பா. செயப்பிரகாசத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ஒரு ஜெருசலேம்'. தமிழின் மிகச் சிறந்த சிறு கதைகளை உள்ளடக்கியது. காடு, ஒரு கிராமத்து ராத்திரிகள் என்ற வேறு இரண்டு தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
தூத்துக்குடியில் அச்சகம் வைத்து நடத்திவரும் தேவ தேவனின் குளித்துக் கரையேழுத கோபியர்கள் என்ற கவிதைத்தொகுப்பு இவரை தர்மு சிவராமு, நாரனே ஜெய ராமன் ஆகிய கவிஞர்களின் வரிசையில் நிறுத்துகிறது. பிக்ஷ" மணி கைவல்யம் என்ற தனது இயற்பெயரில் சில சிறுகதை களும் எழுதியிருக்கிரு ர்.
தேடல்’ என்ற இலக்கியப்பத்திரிகையின் ஆசிரியரான எல். ஜோதிநாயகம் தெளிவான சிந்தனையுள்ள மார்க்ஸிய வாதி. சிவசுவின் வெளியீடுகளில் இவரது தரமான படைப்புக் கள் இடம் பெற்றிருக்கின்றன.
தாமரையில் தனது முதல் எழுத்துக்களை ஆரம்பித்த சார்வாகன் அதிகம் வெளித்தெரியாத சிறந்த யதார்த்த எழுத்தாளர். ஹரிசீனிவாசன் என்ற பெயரில் இவர் எழுதிய
26

கவிதைகள் சிறந்ததெனக் கருதத்தக்கவை. M. B. B. S. டாக் 1ான இவர், தொழு நோய்ப்பிரிவில் சிறப்பு மருத்துவராக பணிபுரிகிருர், தத்துவச்சார்பு கொள்ளாமையால் மு ற் போக்கு முகாமினரோடு இவரது உறவு கசப்படைந்துள்ளது.
ஆசிரியராகப் பணியாற்றும் பொன்னீலன் வாழ்க்கையை நேரடியாகப் பார்க்கத் தெரிந்தவர் என்பதை அவரது 'ஊற்றில் மலர்ந்தது' என்ற குறுநாவல் தொகுப்பு எடுத்துக் காட்டுகிற்து. முற்போக்கு எழுத்தாளர் என்று வெளிப்படையா சுவே கூறி பெருமைப்படும் இவர், தன் எழுத்துக்கு வாழ்க்கைச் சார்பு கொண்டிருப்பதை தனது ஒவ்வொரு படைப்பிலும் புலப்படுத்துவது தனிச்சிறப்பு. இவருடைய கரிசல்" என்ற நாவல் ர ஷ் ய மொழியில் மொழிபெயர்க்கப்படுகிறது. "உறவுகள்' என்ற இவருடைய குறுநாவல் ‘பூட்டாத பூட்டுக் கள்’ என்ற பெயரில் இயக்குநர் மகேந்திரனல் படமாக்கப்
t-t-gil
அஸ்வகோஷ்’ என்ற பெயரில் எழுதும் ஆ. ராஜேந்திர சோழன், கதைகளில் மட்டுமல்லாது கலாசார விடயங்கள் குறித்தும் தேர்ந்த ஞானத்தை வெளிப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர். எழுத்தைவிட செயல் முக்கியமானது வாழ்க்கை என்று சிலகாலம் எழுதாமலிருந்துவிட்டு, மீண்டும் இப்போது எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியான விடயம். இவருடைய "பறிமுதல்’ என்ற தொகுப்பு வெளிவந்துள்ளது. ஆசிரியராக தொழில் புரிகிருர் .
1974-75 இரு ஆண்டுகளிலும் தமிழ்நாட்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராக இலக்கியச் சிந்தனை அமைப்பினல் தேர்வு செய்யப்பட்டவர் வண்ணதாசன். முறையே "தனுமை’ ‘ஞாபகம்’ என்ற இரண்டு கதைகளும் அந்தப் பெருமையை இவருக்குத் தேடிக்கொடுத்தன . நா. பார்த்தசாரதி, வல்லிக் கண்ணன் இருவர் மீதும் அபிமானம் கொண்ட வண்ண தாசனின் சிறுகதைகள் கற்பனைவாத நிலையில் அமைந்தவை. யதார்த்தத் தளத்தின்மேல் கனவுப்படலத்தை விரித்த கலை ஞர்களில் ஒருவராக இவர் கணிக்கப்படுகிருர் . "கலைக்கப்ப டாத ஒப்பனைகள்’ என்ற இவரது முதலாவது சிறு கதைத் தொகுப்பு, அதனுடைய அமைப்புக்காக இந்திய தேசிய விரு தைப் பெற்றது. "தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்’ என்பது இவரது அடுத்ததொகுப்பு. 'கல்யாண்ஜி என்ற
27

Page 18
பெயரில் கவிதைகளும் எழுதும் இவர், ஒரு சிறந்த ஓவியக் கலைஞருமாவார். பாரத ஸ்டேட் பாங்கில் பணிபுரியும் இவரது சொந்தப் பெயர் கல்யாணசுந்தரம் . தாமரையில் பொறுப் பாசிரியராக இருந்த தி. க. சிவசங்கரன் இவருடைய தந்தை.
வண்ண நிலவனுடைய யதார்த்தத் தரத்திலான சிறு கதைகள்--பெரிய புத்தகக் கம்பனி, வியாபாரிகள் யாரும் பதிப்பிக்காத நிலையில் நல்ல வாசகர்கள் - நண்பர்கள் சில ரின் முயற்சியால் எஸ்தர் என்ற தலைப்பில் வெளிவந்தன. அந்தத்தொகுப்பு இலக்கியத்துறையில் பெரும் பாராட்டு பெற்றுக் கொண்டிருந்தவேளை, இவர் வயிற்றுப் பசியோடும் இருமலோடும் வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தார். ருத்ரய்யா வை இயக்குநராய்க்கொண்ட “அவள் அப்படித்தான்' படத்துக்கு வசனம் எழுதியவர்களில் இவரும் ஒருவர். தமிழ் வாழ்க்கை காதலுக்கு லாயக் கற்றது. என்ற நிலையில் மாப்பா சானின் Munt Oriol தரத்தில் தமிழின் முதல் காதல் நாவல் "கடல் புரத்தில் நான் .சமீபத்தில் வெளிவந்த இவரது நாவல் *சம்பா நதி’. வண்ண நிலவன் இப்போது துக்ளக்கில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிருர் .
சென்னையில் கூட்டுறவுத் துறையில் பணி புரியும் பூமணி இந்தத் தலைமுறையின் மிகச் சிறந்த யதார்த்த எழுத்தாளர் என்று கணிக்கப்பெறுபவர். வயிறுகள், நீதி என்ற சிறு கதைத் தொகுதிகளும் " பிறகு" என்ற நாவலும் வெளிவந்துள்ளன.
விவசாயியான கி. ராஜநாராயணன் தாமரையில் எழுத ஆரம்பித்தவர். கதவு” என்ற யதார்த்த சிறுகதையும் அதே தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பும் இவரை பிரதிநிதிப் படுத்துவன. கன்னிமை, வேட்டி என்ற மற்றும் இரு தொகு திகளும் தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள் என்ற தொகுப் பும் வெளிவந்துள்ளன. ‘கிடை’ என்ற இவருடைய குறுநாவல் தமிழின் தலைசிறந்த படைப்புக்களில் ஒன்ரு க மதிக்கப்படு கிறது. இவர் வாழுகிற கரிசல் நிலம்தான் இவரது படைப்புக் களின் களம். "கோ பல்ல கிராமம்’, பிஞ்சுகள்’ என்ற இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளன. ராஜநாராயணன் ஒய்வான ரசனைக்காரர். சங்கீத ஈடுபாடும், டி. கே. சி. காருக்குறிச்சி அருணசலம், விளாத்திகுளம் நல்லப்பா சுவாமிகள் போன் ருேரோடு நேரடித் தொடர்பும் இருந்ததுண்டு.
28

*வேலி மீறிய கிளை என்கிற புதுக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஜெயராமன். தமிழின் குறிப்பிடத் தகுந்த தொகுப் புகளில் இதுவும் ஒன்று. வாழ்க்கையின் உக்கிரத்தை கவித்து வப் படுத்துதல் என்பதை இவருடைய கவிதைகளின் அனுப வத்தின் ஊடாக உணரலாம்.
உமாபதியின் கவிதைகள் தொகுப்பாக வெளிவராத நிலை யிலும், யாருடனும் இனம் காண முடியாத வகையானவை . நாகர் கோயில் பகுதியில் வங்கி ஒன்றில் பணி புரிகிருர் . இவரது ‘ வெளியிலிருந்து வந்தவன்" தொகுப்பு தயாராகிறது. தேவதேவன், நாரணுே ஜெயராமன் ஆகியோரது கவிதைக ளோடு பொதுத் தன்மையும் அதே நேரத்தில் தனித்துவமும் கொண்டவை தேவதச்சனின் கவிதைகள். தத்துவத்தில் எம். ஏ. பட்டம் பெற்ற இவர் தனது பாரம்பரிய வியாபாரமான நகைக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டு கோவில்பட்டியில் வாழ்ந்து வருகிருர் .
சிறந்த தமிழ் எழுத்தாளர் வரிசையில் இடம் பெறும் நீல. பத்மநாபன் கேரள மின்சார வாரியத்தில் எஞ்சினியர் . இவரது “தலைமுறைகள்’ என்ற முதல் நாவல் தமிழின் சிறந்த யதார்த்த நாவல்களில் ஒன்று. பள்ளிகொண்டபுரம், LÉlgör உலகம், உறவுகள், உதயதாரகை என்பன இவரது பிற நாவல்
5 GT.
விஜயலட்சுமி என்ற பெயரில் பதிப்பகம் நடத்தி இலக் கியப் பணியாற்றி வரும் சிவசுவின் இயற்பெயர் நா. சிவசுப் பிரமணியம். பல சிறுகதை கவிதை தொகுப்புகளை வெளி யிட்டுள்ளார். தமிழில் எம். ஏ. பட்டதாரியான இவர் வெகுஜன வாசகர்களின் ரசனை பற்றி டாக்டர் பட்டத்துக்கு ஆராய்ச்சி செய்து வருகிருர் .
கணையாழியில் ‘முகம்மது கதைகள்’ என்ற கதைத் தொடர் எழுதிய காசிபன் திருவனந்த புரத்தைச் சேர்ந்தவர். இவரது ‘அசடு’, ‘கிரகங்கள்’ என்ற இரு நாவல்கள் வெளி வந்துள்ளன.
தமிழக இலக்கியத்துறையை வளப்படுத்தி அலங்க்ரிக்கும் சில பூக்கள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளேன். இவை மட் டுமே முழுதா ன பூங்கா அல்ல. வேறும் பல பூக்கள் பற்றி
பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதும் எண்ண்ம் உள்ளது.
சுடர் யூ9 ன் 1981
29

Page 19
பஸ் - உணர்ச்சிகள்
உடலைத் தொடும்போது உண்டாவது ஸ்பரிச சுகம் எனப் படும். இருபக்க மனமும் ஒன்றுபடும்போது அது தேனுக இனிக் கும். ஓர் ஆண் ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ ஸ்பரித்து சுகம் காணலாம். அது மனதைப் பொறுத்தது. ஆனல் மற்ற வர்கள் விரும்பாதபோது அவர்களை ஸ்பரித்து சுகம் காண முடி யுமா? இந்த ‘ஒன்சைட் ஸ்பரிசம் எவ்வளவுக்கு சுகம் அளிக்கும்.
தினமும் பயணம் செய்து கொழும்பு பஸ்களில் நடக்கும் குஸ்தி பழக்கமாவிட்டவர்களுக்கு இந்த உரசல் ஒரு பொருட்டே அல்ல. கிராமப் புறங்களில் ஆணுக்கு அருகாக அமர்வதற்கே விரும்பாமல் எழுந்து நிற்கும் பெண்களை நான் கண்டிருக் கிறேன். அந்த ஆண்களும் அப்படியே! அவர்கள் நரகத்துக்கு வரும்போது பஸ்களில் பெரும் மோதல்கள் - உரசல்கள் புதிய அனுபவம் சுகானுபவமாகவே அவர்களை உருக வைத்துவிடும் . அவன் உரசி சுகம் காணும் நகரத்துப் பெண்ணுக்கு இது சர்வசாதாரணம்! அவனுக்கு?
கொழும்பில் தினசரி பிரயாணம் செய்யும் யுவதிகள் தம் மோடு ஒரு குடையையும் துணைக்கு எடுத்துச்செல்ல தவறமாட் டார்கள். தம் பின்னல் யாராவது வாலிபர்கள் நின்று ‘குரங் குச் சேட்டை செய்தால் (குரங்குகள் மன்னிக்க) குடைக்கம்பு அவர்களின் இரக்கமற்ற இதயத்தைப் பிளக்க முயற்சிப்பது போல் நெஞ்சில் இடிக்கும். நல்ல பாதுகாப்பு!
பேராதனை பஸ்சில் தொழிற்சாலைக்குச் செல்லும் ஒரு பெண்ணை நான் தினமும் காண்பேன் எப்போதும் நாலைந்து தடியர்கள் அரைத்துக்கொண்டிருக்க மூச்சுவிட சிரமப்பட்ட வாறு பயணம் செய்வாள். செத்துவிடுவாளோ என்று கூட நான் நினைப்பேன். அவர்களுக்கு அது இன்பத்தை அளிக்குமோ என்னவோ. அவளுக்கு அது நரகவே தன. தொழிற்சாலையில் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைக்கும் அவள் போகும் வழியிலும் இத்தனை கஷ்டமா?
‘மதகுருமாருக்கு மட்டும் என்று எழுதப்பட்டிருக்கும் சீட் டில் அமர்ந்திருப்பவர்கள் மதகுருமார் வந்ததும் எழு ந் து இடம் கொடுத்து விடுவார்கள். ஆனல், "பெண்களுக்கு மட்டும்’ என்று எழுதப்பட்டிருக்கும் சீட்டில் ஆண்கள் சுகமாக அமர்ந்திருப்பார்கள். தாயொருத்தி பிள்ளையைச் சுமந்தபடி சிரமத்துடன் நிற்க "பெண்களுக்கு மட்டும் சீற்றில் ஒரு மொட்
30

வாலிபர் அமர்ந்துகொண்டு ஸ்டைலாக சிகரெட் பிடித் து க் கொண்டிருந்தார். அதன் புகை ‘புகைத்தல் தடைசெய்யப்பட் டுள்ளது" என்ற அறிவிப்பைத் தழுவிச் சென்றது. அதே வாலி பர் மினி மங்கை ஒருத்தி வந்தபோது எழுந்து இடம் கொடுத் தது தனியான கதை! " W
பஸ்சுக்குள் கால் வைத்ததும் உரசலின்பம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று தேடும் வாலிபர்களும் இருக்கிருர் கள். அதேபோன்று அதனை விரும்பும் பெண்களும் இரு க் க லாம். ஆனல் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல. சுற்றி யிருக்கும் பிரயாணிகளுக்கும் எவ்வளவு அவஸ்தை. ‘புகைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது" என்பது போல் இதற்கும் ஓர் அறி விப்பு எழுதினல் என்ன? 'உரசல் தடை செய்யப்பட்டுள்ளது
கதம்பம்
3

Page 20
இலக்கிய உலகம்
O (Upcija Losoof
முல்லை மணியை ரயிலில் கண்டபோது பண்டாரவன்னி யன்தான் ஞாபகத்துக்கு வந் தான். பண்டாரவன்னியன் வரலாற்று நாடகத்தை எழுதி வெளியிட்ட முல்லை மணியை
இலக்கிய உலகம் மறக்கமுடி
யுமா? முல்லை மணி வே. சுப் பிரமணியம் கோப்பாய் ஆசி
ரிய கலாசாலையில் விரிவுரை
யாளராக பணிபுரிகிருர் . பய ணக் களைப்பையும் பாராமல் அவர் நகை ச் சுவை யு ட ன் ஈழத்து இலக்கிய நிலைவரங் களைப் பற்றி உரையாடினர். பல சிறுகதைகளை எழுதியுள்ள முல்லை மணியின் தொகுப்பு, ‘அரசிகள் அழுவதில்லை" தான் தோன்றீஸ்வரர், வில் வையடி பிள்ளையார் மீது பாமாலைகள் பாடியிருக்கிருர் . வீரகேசரி நாவல் போட்டியில் அவரது * மல்லிகை வனம் பரிசு பெற் றது. முல்லை இலக்கிய வட் டத்தின் தலைவராகப் பணி யாற்றிவரும் இவர் தனது மண்ணின்மீது அ ள வ ற் ற பாசம் கொண்டவர்"
O Gg5au6ör Lomaîu'Lff
திருநெல்வேலி சந்தியில் சைக்கிளில் திரும்பியபோது அந்த எலும் புக் கூட்டைக் கண்டதும் நெஞ்சம் துணுக்
குற்றது. எ ன் ன கோலம்?’’
32
கும்
* மாஸ்டர் இது எ ன் கி றேன் வேதனையோடு. 'சாப் பாடு உடம்பில் ஒட்டுவதில்லை"
என்கிருர், யாழ்ப்பாணத்தில்
எந்தப் பொது நிகழ்ச்சி என் ருலும் கணிர் என்று ஒலிக் ஒர் அறிவிப்பாளரின்
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், இனங்காணத் தக்க குரலுக்குரிய தேவன் மாஸ்டர் அவரது தலைமை யைக் காணவே பட்டி மன் றத்துக்குச் சனம் கூடுமே அந்
குரல்
தத் தேவன். வழக்காடு மன்
றத்தில் நீதிபதியாக "சபாஷ்' பெறும் தே வன் மாஸ்டர் உருக்குலைந்த தோற்றத்தில். சமூகத்தின் பொதுச் சொத் தான மாஸ்டர் தன்னைக் கவ னியாமல் விட்ட அவருக்கு
மட்டுமல்ல, எமக்கும் நஷ்டம்
இழப்பு- இது ஒரு பா ட ம். பொது வாழ்வில் உள்ளவர் கள் தம்மைப் பாதுகாப்பதி லும் அக்கறை செலு த் த வேண்டும்.
O esaig urapur
"தீ" போன்ற பல கவிதை கள் தந்தவர் சக்தி பாலையா, சிறந்த அந்தக் கவிஞர் புறக் கோட்டையில் ஒரு விபத்தில் சிக்கி, கொழும்பு பெரியாஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்

டுள்ளார். இலக் கி ய த் தை நேசிக்கும் நண்பர்கள் போய்ப் பார்ப்பது அவருக்கு ஆத்ம பலத்தைக் கூட்டும். இலக்கிய உலகம் கவிஞர் நலமடைய நல்லாசி கூறுகிறது.
0 சுதந்திரமாக
ஈழத்தில் எழுதுபவர்கள் தம் இச்சை ப் ப டி சுதந்திர மாக எழுதுவதில்லை. விமர் சகர்களால் பாராட்டப்பட வேண்டும் என்ற ஒரு மாயை யான நினைப்பை அ ல் ல து முன்னவர்கள் எ மு தி ய து போலவே எழுதினுல்தான் பாராட்டப்படும் எ ன் ற
நினைப்புடன் ஒரு சில எல்லைக்
குள் தம்மை வரையறுத்து எழுதுகிருர்கள். தமிழ்நாட் டில் அவ்வாறு இல்லாததால், தரமோ இல்லையோ புதிய எல்லைகளைத் தொடுகிருர்கள், புதுமையாக இரு க் கி றது. வாசகர்கள் வரவேற்கிருர்கள்
ஆளுல்ை, எம்மவர்களின் ஆக்
கங்களைப் பார்த்தால், திரும் பத் திரும்ப சீ த ன ம், சாதி
என்று அரைத்த மாவையே
33
அரைக்கிருர்கள். த ரமா க எதையும் எழுதலாம் என்ற நிலை வேண்டும்; நினைப் பு வேண்டும் என்கிருர் நமது நாட்டுப் பழம் பெரும் பெண் எழுத்தாளர் ஒருவர். அவர் கூறியது சரியா தவரு? உங் கள் சிந்தனைக்கு.
9 கதிரின் நினைவு
மிகச் சிறந்த எழுத்தாள
ராக இனங் காண ப் ப ட் ட எஸ். கதிர்காமநாதன் இளம் வயதிலேயே கா ல மா ன து நமது துரதிர்ஷ்டம். அற்புத மான அந்தப் படைப்பாளி இன்றிருந்தால் என்று நினைத் துப் பா ர் க் க வே நெஞ்சம் நோகிறது. ஈழத்து இலக்கி யத்தை நினைக்கும்போதெல் லாம் அந்தக் கலை ஞ ணி ன் நினைவு எழுகிறதைத் தவிர்க்க முடியவில்லை. க தி ரி ன் சில சிறுகதைகள் கா லத் தா ல் அழியாதவை. அவரது நினைவு காலத்தை வென்றது.
(தினகரின் மே, 1981)

Page 21
விதம் விதமான குழந்தைகள் வகை வகையான ஆசைகள்
கடந்த ஆண்டினைச் சிறுவர் ஆண்டாகக் கொண்டாடி மகிழ்ந்தோம். அவர்களைப் பற்றிய அக்கறை முற்றுப் பெற்
விட்டதா ? அல்ல !
குழந்தைகள் எந்தக் காலத்திலும் பேணிப் பாதுகாக்கப் பட வேண்டியவர்கள். அவர்களின் உள்ளங்களில்தான் எத்தனை
ஆசைகள்! அவரவர் சூழலுக்கும் மனப்பாங்குக்கும் ஏற்ப அவை மாறுபடுகின்றன.
*" குழந்தாய்! கடவுள் உன் முன் தோன்றினல், f5 என்ன வரம் கேட்பாய்? "
இப்படி ஒரு கேள்வியை நமது குழந்தைகளிடம் கேட் டால் அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? கேட்டோம் கிடைத்த பதில்கள் மிகவும் சுவாரஸ்யமானவை.
அவற்றினை நமது "மித்திரன்' வாரமலர் வாசகர்களுக் குத் தொகுத்துத் தருகின்ருர், காவலூர் எஸ். ஜெகநாதன்.
இதோ படித்துப் பாருங்கள்!
நம் நாட்டின் பல பாகங்களிலும் காண்கின்ற பலதரப் பட்ட வாழ்க்கைத் தரத்திலும் உள்ள குழந்தைகளைக் கண்டு அவர்களின் மனப்பாங்கைத் தரிசிப்பது எனது பயணத்தின் நோக்கம். நம் நாட்டுக் குழந்தைகள் மீது ஒரு படப்பிடிப்பு இது. ஒரு சோறு பதமென்பார்களல்லவா ? வாருங்களேன்.
வெள்ளவத்தையில் ஒரு பின்தங்கிய குடியிருப்புப் பகுதி. உழைக்கும் தொழிலாளர்களே பெரும்பாலானவர்கள். மாலை நேரம், அலங்காரமும் அலங்கோலமுமான பல சிறுவர்கள் நின்று விளையாடிக் கொண்டிருக்கின்ருர்கள். என்ன விளை யாட்டு என்று ஒரு இலக்கு இல்லாத விளையாட்டு!
கே. விஜயன் தனது மகனைப் பிடித்து இழுத்து வருகி ருர். பெயர் துரானி, வீட்டில் ராஜா என்று அழைக்கிருர்கள். அறிமுகமற்றவர்கள் என்று துளியும் பயமின்றி முன்னுல் நிற் கும் துரானிக்கு எட்டு வயது. இசுபத்தன கனிஷ்ட வித்தியா
34

லயத்தில் பாலர் வகுப்பில் படிக்கிருன். நான் கேட்கிறேன் அல்லா உங்க முன்னலை வந்து என்ன வேணுமென்ருலும் கேள், தருகிறேன் என்று கேட்டால், நீங்க என்ன கேட்பீங்க ?
சட்டென்று துரானி கூறுகிருன்; "கார்!" என்று, யார் ஒட்டுவது...? நான் தான் என்று கம்பீரமாகக் கூறுகிருன்
μπή யாரை ஏற்றிக் கொண்டு போவீங்க...? வாப்பாவை Hம் உம்மாவையும் என்கின்ற துராணி பக்கத்து வீட்டுச் சிறு வர்கள் யாரையும் ஏற்றிக்கொண்டு போகமாட்டாணும். அவர் கள் தனக்கு அடிப்பது தானும் காரணம் என்கிரு ன்.
அப்போதே கார் கிடைத்து விட்டது போன்ற பூரிப்பில் இருக்கும், துரா னியைப் பிரிந்து யாழ்ப்பாணம் போவோம்.
தீவுப்பகுதியிலுள்ள ஒரு கிராமம் கரம்பன். இராமநாதன்
தம்பதிகளின் மகன் நரேந்திரனுக்கு வயது 6J (ւք.
முதலாம் வகுப்பு படிக்கிருன். கடவுள் உங்க மு ன்னுலை வந்து என்ன வரம் வேண்டுமென்று கேட்டால் என்ன கேட் பீங்க... என்று கேட்கிறேன். வரம் என்ருல் என்ன என்று தாய் விளக்குகின்ருர் . " படிப்பு" என்று பளிச்சென்று பதில் கூறுகிறன்.
* படிப்புத்தான் வேணுமா ? கடவுளட்ட அதைத் தான் கேட் பீங்களா ? மீண்டும் வினவுகிறேன். கோயிலுக்குப் போஞ அம்மா அதைத் தான் கேக்கச் சொல்லுவா என்றுவிட்டு தாயைப் பார்க்கிருன் நரேந்திரன், வேறு பலவும் கடவுளிடம் கேட்க ஆசை. தாய் முன்னுல் நிற்பது தடை, உங்களுக்கு மட்டும் படிப்பு கேட்பீங்களா எல்லாருக்கும் கேட்பீங்களா..? எல்லா ருக்கும் பூரணி, ஜனர்த்தனன். இப்படி பல பெயர்களை அடுக்கிக்கொண்டே போகிருன் நரேந்திரன்.
பூரணி வேறு யாருமல்ல அவனுடைய சகோதரிதான். இரட்டைப் பிள்ளைகள். அவன் அழுதால் இவளும் அழுவாள்' அவன் சிரிக்கும்போது இவளிடமும் சிரிப்பு. இவளின் ஆசை களும் அவனுடையது போன்றுதானே அதே கேள்வியை கேட்டேன். v,
சில நிமிட மெளனத்தில் ஆழ்ந்த சிந்தனை. . . நீங்க
'என்ன கேப்பீங்க. " காப்பு சங்கிலி பூராணிக்கு நகைகள் தான் வேண்டுமாம், தனக்கு மட்டும்தான் கேட்பாளாம் படிப்பைக் கேட்கமாட்டீங்களா ? என்று கேட்கிறேன். " எனக்
கும் சேர்த்துத்தான் அண்ணன் கேட்டிட்டாரே!" என்று பட்
35

Page 22
இன்று கூறிவிட்டு, என்ன வென்ற கிரிப்புச் சிரிக்கிருள் கெட்டிக்காரி.
மலையகம் போவோமா?
வாரியப்பொலை தோட்டத்தில் இராமச்சந்திரன் தம்பதி *ளின் புதல்வி கலை நாயகி. சங்கமித்த மகளி"வித்தியால் பத்தின் தமிழ்ப் பிரிவில் படிக்கும் கலைநாயகிக்கு வயது பத்து. கடவுள் வந்து விட்டார், எது கேட்டாலும் தருவார். அவ *தி ஆசையைப் பாருங்கள். பெரிய வீடு, கார், ரெலிவிசன் அடுக்கிக் கொண்டே போகிருள். அவளது ஆசைக்குக் கார
ணம் இதுதான். பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகளில் சிலர் மிகவும் வசதி படைத்தவர்கள், காரில்தான் பள்ளிக் கூடம் வருவார்கள். ரவுண் பள்ளிக்கூடமல்லவா? கைலை
நாயகி நடந்து போகிருள். கூடப்படிக்கும் வசதிபடைத்த பிள்ளைகளின் வீட்டு வர்ணனைகளைக் கேட்டு அவளுக்கு ஒரே ஆசை அத்தகைய வாழ்க்கையில்.
கொழும்பில் உள்ள ஒரு முஸ்லிம் நண்பரின் வீடு. அப்துல் சுபான் அவரது பெயர் கீழ்மட்ட மத்தியதரக் குடும் பம். மகள் சுலைகா பீபியை அழைக்கிருர். அல்லா வந்த விவகாரத்தையும் வரம் தரப்பேர்வதையும் அவரே விளக்கு கிருர். மிகவும் பயந்த சுபாவமுடைய பீபி முகத்தில் பயக்களை படர எப்போ தடா விடுபடுவோம் என்பதுபோல் நிற்கிருள். பல நிமிடங்கள் மெளனத்தில் கரைந்து எமது பொறுமையைச் சோதிக்கிறது. மலர் இதழ்கள் அவிழ்கின்றன. "நல்ல உடுப் புகள் வேணும் உங்களுக்கு மட்டும்தான் கேட்பீங்களா ? சம் மிதம் என்று தலையாட்டுகிருள். அதுகூட விடுபடும் அவசரம் சுலைகா பீபிக்கு, நல்ல உடுப்புகள் தேவை தான், அழுக்கான உடை அணிந்திருந்தாள். அப்துல் சுபான்தான் என்ன செய் வார் ? வருமானம் அப்படி பீபியின் மனதில் உடுப்பு இல்லாத குறைதான் பாரமாக இருக்கிறது!
யாழ்ப்பாணம் நான்காம் குறுக்குத் தெருவிலுள்ள ஜூடே ரெருன்ஸ் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் படிக் கிருன் வயது ஏழுதான், துடியான சுபாவம், எப்போதும் சிரித்த முகம், கடவுள் வந்து உங்களட்ட என்ன வேணும் or 6irty கேட்கிருர், எது கேட்டாலும் தருவார், நீங்க என்ன கேட்பீங்க என்று நான் கேட்டு முடிக்கவில்லை. ' பந்து" என் கிமுன் ரெருன்ஸ். கால்பந்து " மாட்ச் சுகள் நடக்கும் சீசன்
M.
36

அல்லவா? அவனுக்கு அதில் தான் ஆசை. பந்து விளையாடப் போநீங்களா சரி உங்களுக்கு மட்டும் கேட்பீங்களா உங்* ப்ரென்ட்ஸ் எல்லாருக்கும் கேட்பீங்களா? தனிய விளையாட ஏலுமா எல்லாருந்தானே விளையாடுவம் " என்று கூறி என்னையே அசடுவழியப் பண்ணிவிட்டான். விளையாட்டில்தான் அவனுக்கு அளவுகடந்த ஆர்வம் என்கிறர் தாய். நாளை ரெருன்ஸ் ஒரு விளையாட்டு வீரனுக வருவானே ?
மாத்தளை பாக்கிய வித்தியாலயத்தில் பயிலும் முனி யாண்டி லட்சுமி பதினெரு வயது. மாத்தளையில் நடந்த சிறுவர் ஆண்டு விழாவில் நடிப்பு, பேச்சு என்று பல பரிசுகள் பெற்றவள். செயற்திறனும் புத்தி கூர்மையும் மிக்கவள் என்று பார்த்ததும் தெரிந்தது. அவளிடம் கேட்டேன் கடவுள் வந்து என்ன வரம் வேணும் என்று கேட்டால் என்ன கேட்பீங்க ?
" என்ன கேட்டாலும் தருவாரா? என்று என்னையே திருப்பிக் கேட்கிருள் லட்சுமி, "ஆமாம், எது கேட்டாலும் தருவார்.
* நான் நல்லாப்படிச்சு உத்தியோகத்திலை சேர வேணும் வீட்டுக்கு உழைச்சுக் குடுக்க வேணும்" அடுக்கிக்கொண்டே போகிருள்.
முனியாண்டி சிறிய சாப்பாட்டுக் கடை வைத்திருக் கிருர், ஏழ்மை வீட்டிலே... அதனுல் லட்சுமியின் மனதில் காசு உழைக்கும் ஆர்வம் இப்போதே! அதுவும் வீட்டுக்கு உழைக்கும் ஆர்வம்!
கடவுளிடம் லட்சுமி அதைக் கேட்க, அதே மாத்தளையில் ராஜா வீதியில் வசிக்கும் வீரபுத்திரனின் மகள் ரமணி என்ன கேட்கிருள் தெரியுமா? ரமணிக்குப் பத்து வயது, ஆஞல், பெரிய மனிசி போன்ற பாவனை புனித தோமையர் மகளிர் கல்லூரியில் படிக்கிருள். நான் கேள்வியைக் கேட்டுவிட்டு பதிலுக்காக காத்திருக்கிறேன். சில நிமிடங்களின் பின் அவள் என்னிடம் கேட்கிருள், "கடவுள் இங்கு வருவாரா நாமதானே கோயிலுக்குப் போகவேணும் ? .
" வந்திட்டார் என்று வைத்துக் கொள்வோம்; நீங்கள் எது கேட்டாலும் தருவார், என்ன கேட்பீங்க ? ரமணியும்
சில நிமிட மெளனம், அதை உடைத்துக் கொண்டு அவள்
37

Page 23
சொல்கிருள்; " ஸ்டார் " என்றுவிட்டு கெஞ்சுவதுபோல் பார்க் கிருள். புரியாமல் வீரபுத்திரனைப் பார்க்கிறேன் நான், வானெ லியில் வரும் சொக்கலேட் விளம்பரம் அவளது மனதில் பதிந்து விட்டது என்கிருர் அவர். ஆசையைப் பார்த்தீர்களா ?
சூழல், வாழ்க்கைத்தரம் இவையெல்லாம் சிறுவர்களின் மனங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. விதம் விதமான அந்தக் குழந்தைகள் மனதின், ஆசைகள்தான் எத்தனை வகை. رஅந்த மனங்களோடு உறவாடுவதே புதிய சுவை!
மித்திரன் வாரமலர் 13 ஜனவரி 1980
38

புதியவார்ப்பு
ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் படிப்பவர்களின் கண்களில் அடிக்கடி காணப்படும் பெயர் காலூர் எஸ். ஜெகநாதன் என்பதாகும். கடந்த மூன்ருண்டு காலத்தில் இயந்திர வேகத் தில் எழுதிக் குவித்தவர் இந்தக் காவலூரான். மூன்ருண்டு காலத்தில் இருநூறுக்கு மேற்பட்ட சிருஷ்டிகளைப் படைத்துவிட்ட இவரை வெறி கொண்ட எழுத்தாளர் என்றேதான் வர்ணிக்க வேண்டும்.
கதை, கவிதை, கட்டுரை ஏன் விமர்சனம் இப்படி பல் வேறு துறைகளில் ஈடுபாடு கொண்டு எழுதிவரும் ஜெகநாதன் பத்து சிறுகதைப் போட்டிகளில் முதற் பரிசு பெற்றுள்ளார். நான்கு சிறுகதைப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை முதற் பரிசாக சுவீகரித்துள்ளார். அகில இலங்கை ரீதியில் நடத்தப் பட்ட பதினறு சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில் களை பெற்று நண்பர்களால் பரிசு எழுத்தாளர்' என்று அன்பாக அழைக்கப்படுகின்ருர்,
இலக்கிய உலகில் 1976-ம் ஆண்டு பிரவேசம் செய்த *சொந்தங்கள் தொடர்கின்றன" என்ற சிறுகதை தொகுதியை யும், கலட்டுத்தரை " என்ற குறுநாவலையும், இரண்டு எழுத் தாளர்களுடன் கூட்டுச்சேர்ந்து " " காலநதி ' என்ற நூலையும் வெளியிட்டுள்ளார்.
கண்டியில் கண்ணுெருவையிலுள்ள விவசாய திணைக்களத் தில் தாவர நோய்ப் பகுதியில் ஆராய்ச்சி உதவியாளராக பணி யாற்றும் காவலூர் ஜெகநாதன், தனது இலக்கிய சகாக்களை கண்டுவிட்டால் போதும், பல மணி நேரம் சுவாரஸ்யமாக உரையாடுவார். எழுதினுல் மட்டும் போதாது எழுத்தில் இருக்கும் சத்தியம் அவர்கள் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் எனக் கூறும் இவர், சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் எழுத்தாளர்களின் போலித்தனங்களை சாடுவதில் வல்லவர். எழுத்துலகில் தேனீயைப்போல சுறுசுறுப்பாக இயங்கும் இவர் இன்னும் பல படைப்புகளை படைக்க வேண்டும்.
- அந்தணி ஜீவா
தினகரன் - 16 ஆகஸ்ட் 1979
39

Page 24
ஈழத்துச் சிறுகதைகளில் பிரதேசப் பிரதிபலிப்பு
இயற்கையின் ரசிப்பு கலைஞர்களிடம் அதிகம். இயற்கை ஐம்புலன்களினலும் அவன் உள்வாங்கும் சுற்றுச்சூழல். அதை வியக்கிருன், நயக்கிருன் கவிதை பிறக்கிறது. நிலவையும் வானத்தையும் பாடினன். அவ்வளவுதான இயற்கை ? மண். அதைவிட மேலான மண்ணின் மைந்தர்கள். அவற்றினை விலக் கிய இலக்கியம் அரிது. பயிர்கள் மண்ணிலே முளை கொள்வது போல் இலக்கியமும் மண்ணிலே முளை கொண்டு நிலைபெறுகிறது. அக்காலம்தொட்டு இன்றுவரையான இலக்கியங்கள் தான் முளை கொண்ட மண்ணை - அதன் மக்களை மறக்காததை ஊன்றிக் கவனித்து அறியலாம்.
நவீன இலக்கிய வடிவங்களில் ஒன்ருன நாவலில் பிர தேச நாவல்கள் என்று சிறப்பாகக் குறிப்பிடும் அளவுக்கு முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாவல் தான் எழுந்த களத்தின் பிரதேசத்தைப் பிரதிபலிப்பதில் நிறைவு பெறும் போது அது பிரதேச நாவல்கள் என்ற வகையைச் சேர்கிறது.
சிறுகதை கடினமான இலக்கிய வடிவம். என்ருலும் பிர சுர வசதி தொடக்க முயற்சிக்கான வாய்ப்பு - ஆரம்ப எழுத் தாளர்களை பெரும்பாலும் சிறுகதைகளையே எழுதத் தூண்டு கிறது. ஈழத்தின் பலவேறு பகுதிகளிலிருந்தும் துடிப்பான ஆர்வத்துடன் இளைஞர்கள் எழுத முனைகிறர்கள். அவர்களி லும் பெரும்பாலானோர் வெறும் முக்கோணத் காதல் கதைகள் செயற்கையான கண்ணீர் வடிப்புகள் என்றில்லாமல் தமது மண்ணை அந்த மண்ணின் மக்களை சித்தரிக்க முனைகிருர்கள்.
பயணுக ஈழத்துச் சிறுகதைகளில் பிரதேசப் பிரதிபலிப்பு சிறப்பாக வெளிப்படுகின்றது. ஒரு சிறுகதையிலேயே பிர தேசத்தை முழுமையாக தரிசிக்க முடியாது. ஆணுல் பிர தேசத்தின் உயிர்த்துடிப்புக்களை வெளிப்படுத்த முடியும்
சிறுகதையில் மண்ணைச் சித்தரிப்பதன் வெற்றிக்கு உதா ரணமாக திரு. முத்துலிங்கத்தின் கோடை மழை ' என்ற சிறுகதையை எடுத்துக் கூறலாம். கொக்குவில் கிராமத்தினை அப்படியே கண்முன் நிறுத்துகிறது அந்தக் கதை, கிராமத்தின் ஒழுங்கைகளும் ஆடு படலையும் மட்டுமன்றி, அப்பகுதி மக்க ளின் மனப்பாங்கும் அற்புதமாகக் சித்தரிக்கப்பட்டுள்ளது.
40

பரவலாக பெயர் , அறியப்படாத கிராமங்களில் இருந் தெல்லாம் புதிதுபுதிதாக இஃாஞர்கள் எழுதுகிருர்கள். அதுவும் 5Tம் - தமது மக்கள் முகம் கொடுக்கும் வாழ்வுப் பிரச்சினை களே - தமது மண்ணின் படைப்பாக்குகிறர்கள். அவ்வப்பகுதி மக்களின் பேச்சு வழக்குகளையே கையாண்டு இயல்பான படைப் Hகளால் ஈழத்து சிறுகதைத் துறையை செழுமைப்படுத்து கிருர்கள்.
புதிய புதிய பிரதேசங்கள் இலக்கியத்தின் வழி அதிக மாகும்போது மக்கள் ஐக்கியப்படுமுர்கள். மனங்களும் வாழ் வின வீச்சும் விரிவடைகிறது. தான் தவழ்ந்து விளையாடிய நடந்து உறவாடிய வாழ்ந்து போராடிய மண்ணை எழுத்தாளன் படைக்கும்போது நேர்மை விளைகிறது; படைப்பில் சுத்தம் தெரிகிறது. அது வெற்றி பெறுவதில ஏது ஐயம் ? மண்ணில் வேர் கொண்ட படைப்பு என்றும் மடிவதில்லை.
மண்ணின் மணம் வீசும் சிறுகதைகள் ஈழத்தில் நிறையவே வெளிவருகிறது எதிர்கால வளத்துக்கு நல்ல அறிகுறி. புதிய படைப்பாளிகள் பிரதேசப் பிரதிபலிப்பில் கவனம் செலுத்த வேண்டும் எ ன் பது மட்டுமே போதும் எ ன்று அர்த்த
DIT G5ITg/ .
- வாஞெலி - கலைக்கோலம்
4.

Page 25
கண்டோம் கருத்தறித்தோம் ! (1976க்குப்பின் கையிலெடுக்கும் ஈழத்து பத்திரிகை சஞ்சி கைகளில் எல்லாம் காலூர் எஸ். ஜெகநாதனின் ஆக்கங்களை அடிக்கடி அவதானித்தேன். அவ் இலக்கியப் படைப்புகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறேன். தமிழ் இலக்கியப் பரப்பிலே இப்பெயர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அளப் பரியது. குறுகிய காலத்தில் நிறைய எழுதி சாதனையை நிலைநாட்டியவரும், இக் காலப்பகுதியில் நீ டை பெற்ற பெரும்பாலான இலக்கியப் போட்டிகளில் தங்கப்பதக்கங் களையும், முதற்பரிசுகளையும் பெற்றுக்கொண்டு அதே வேகத் துடன் எழுதி வருபவருமான ஜெகநாதனை சந்திக்கவேண்டு மென்பது எனது நெடுநாளைய அவாவாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் நூற்றி ஐம்பதுக்கும் அதிகமான சிறு கதைகளையும், உருவகக் கதைகளையும் அநேக இலக்கிய விமர்சனக் கட்டுரைகளையும் பல மரபு, புதுக்கவிதைகளையும் எழுதியுள்ளார். கலட்டுத்தரை, சொந்தங்கள் தெடர்கின் றன, காலநதி என்பன வெளிவந்த இவரது நூல்களாகும். இருபது சிறுகதைகளைக் கொண்ட வானத்து நிலவு தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்து. இவர் பேராதனை மத்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் தாவர நோய்ப் பகுதியில் கடமையாற்றுகிருர்,
கேள்வி : இலக்கியத்தின் மூலம் சமூகப் பிரச்னைகளுக்கு தீர்வு என்பதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில் : ஓர் இனத்திற்கேர் சமூகத்திற்கோ அல்லது தனி மனிதனுக்கோ எந்தக் காரணியினலும் பாதிப்பு ஏற்படும்போது அந்தப்பிரச்சினையிலிருந்து அவர்களை விடுவிக்க ஒரு தீர்வையோ அல்லது தீர்வை நாடியோ படைப்புகளை உருவாக்காமல் பிரச் சினையை மட்டும் வெளிப்படுத்தினுல் போதும் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண எழுத்தாளன் சிந்திக்கவில்லையானல்-ஒரு படைப்பிலே சிந்தனை யின் பங்கு தாழ்ந்து விடுமானல், அதை அரை குறையாகவே கருதுகிறேன், என்கின்ற போது, அந்த தீர்வுகள் வெளிப்படை யாகவோ செயற்கைத் தன்மையுடையதாகவோ இருக்கக் கூடாது என்பதைக் கவனிக்கவேண்டும்: M
கேள்வி : காலமாற்றத்திலே இலக்கியப் போக்குகளில் ஏற் பட்டுவரும் மாறுதல்கள் பற்றிய உங்கள் கணிப்பு என்ன ?
பதில் : சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பெரும்பாலான கதைகளில் பிரசார வேகத்தையும், கலைப்
42

பண்புக் குறைவையும் - பெண் என்ருல் ஒரு எலும்புக் கூட்டை வரைந்து பெண் என்று எழுதுவது போல-வெறும் சித்தாந்த கோஷங்களாகவும் இருந்தன. இந்தக் குறைபாடுகளை சமகால இயக்குநர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள். இதன் சுக விளைவுகள் எதிர்காலத்திற்ருன் துலங்கும்.
கேள்வி : சிறுகதைத் துறையிலே வேகமாகவும், தரமாகவும் பணியாற்றி வரும் நீங்கள் நாவல், கவிதை போன்ற துறைகளிலே தீவிரப்படும் எண்ணம் இல்லையா?
பதில் 76 இல் எழுதத் தொடங்கிய பின் 2 நாவல்கள் எழுதியிருக்கிறேன். விரைவில் வாசகர்களுக்கு எட்டும். இவை தவிர * எரிமலைகள் குமுறுகின்றன, தங்கப்பதக்கத்தையும், 'அவர்கள் நிமிர்ந்து விட்டார்கள், பேராதனை வளாக தமிழ் ச்
சங்கத்திடம் பரிசும் பெற்றிருக்கின்றன. இவை குறுநாவல்களா
கும். மரபுக்கவிதைகளை வேகமாக எழுதிவருகிறேன். அடிக்கடி பத்திரிகைகளில் அவதானிக்கவில்லையா?
கேள்வி : புதுக் கவிதைகளைப்பற்றி
பதில் : புதுமைகள் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய வைதான். மெய்சிலிர்க்கவைக்கும் சில படைப்புகளும் தோன் ருமலில்லை. ஆனல் மேமன் கவி போன்றவர்கள் சூனியம், ஒலி மின்னல், ஏப்பம்.இப்படி ஐந்தாறு வார்த்கைளை வைத்துக் கொண்டு வசனங்களை அடுக்கி புரியாத கவிதை ப் பாசாங்கு செய்ய முற்படுகிருர்கள். பயிரைவிட களை கள் அதிகரிப்பது போற் தெரிகிறது. நல்ல வளர்ச்சிக்குகந்ததல்ல.
கேள்வி : மலையகத்தில் வாழ்கின்ற நீங்கள் மலையக மக்க களின் பிரச்சினைகளில் உங்கள் பார்வையை, சிந்தனைகளை விரித் ததுண்டா? மலையக மறுமலர்ச்சியில் இலக்கியத்தின் பங்குபற்றி உங்கள் கருத்தென்ன?
பதில் மலையக மக்களின் பிரச்சினைகளைக் கருவாகக்கொண்டு பல சிறுகதைகளை எழுதியுள்ளேன். ஆனல் தோட்ட மக்களுடன் கூடி வாழாததாலோ, என்னவோ நம்பகத்தன்மை அற்றதாக குறைப்பிரசவங்களாகிவிட்டன. மலையக மக்களுடன் வாழ்ந்து அவர்களின் பிரச்சினைகளை நன்குணர்ந்த மானிட நேசிப்புள்ள இலக்கிய வாதிகள். ஆத்ம சுத்தியுள்ள இ லக் கி ய விாதிகள் தோன்றி அச்சமூகத்தை நெறிப்படுத்த வேண்டும். மலையகத் தின் அவசர அவசிய தேவை இது. மலையக மறுமலர்ச்சிக்கு இலக்கியத்தின் பங்கு மிக முக்கியமானது. &t-ri
43

Page 26
எங்கள் குடும்பத்தில்
ஒருவர் மறைந்தார்
தாங்க முடியாத அந்தத் துயரச் செய்தி கிடைத்தது. அன்று பதினேழாந் திகதி வேலைத்தல பதட்ட நிலையால் என்னல் புறப்படமுடியவில்லை. சோகம் நெஞ்சைக் கவ்வ ஈழநாடு வாரமலரில் வெளிவந்த அந்தக் கட்டுரையை எடுத் துப் பார்க்கிறேன். எதிர்காலச் செல்வங்களை எழுத்தாளர் கள் மறக்கலாமா? என்று கேட்கிருர் திராட்சையூரான் என்ற தலைப்பிலான இளைய தலைமுறை எழுத்தாளரின் அறி முக கட்டுரை அது. அதே திராட்சையூரான் மறைந்துவிட் டார் என்ற செய்தியை என்ஞல் நம்பக்கூட முடியவில்லை பிரசுரமாகியிருந்த பால்மணம் கமழும் இளமை முகத்தை யும் கட்டுரையையும் திரும்பத்திரும்ப எடுத்துப் பார்க்கிறேன்.
இ. பெர்னட் திராட்சையூரான், இளவாலை இளவல் என்ற புனைபெயர்களில் பல கட்டுரைகள், கவிதைகள், கதை கள், சிந்தனைத்துணுக்குகள் எழுதிவந்தவர் 37 வயதான இளைஞர். பாதுகாவலன் பத்திரிகையின் துணை ஆசிரியராக வும் பணிபுரிந்தவர். சிறுவர்களுக்கென பல்வேறு ஆக்கங் களைப் படைத்தளித்ததோடு எதிர்காலச் செல்வங்களான சிறுவர்களை எமது எழுத்தாளர்கள் புறக்கணிப்பதைக் கண்டு மனம் வருந்தியவர்.
சிறந்த ஒரு எதிர்காலத்தை இலக்கில் உலகில் பெற்று விட அ வ ர் முனைந்து செயலாற்றிக் கொண்டிருந்த வேளை குடும்பி வாழ்வில் நிறைவை நோக்கி அவரது திருமணத் திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளே பெனுட் மறைந்தது, தாங்கமுடியாத துர்ச்சம்பவம்!
44

நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட் போது அவர் மீண்டும் நம்மத்தியில் வருவார், எதிர்காலத் தில் தனது படைப்புகளால் தமிழிலக்கியத்தை அலங்கரிப்பார் என்று நம்பியிருந்தோம். எமது நம்பிக்கைவில் இடிவிழுந்தது. நாளைய நம்பிக்கையான இளந் த விரி ர் கருகியது! து ய ர ம் தருகிறது. ۔۔۔۔۔۔
தனது எழுத்தால் மட்டுமன்றி சமூகசேவை, மதப்பணி என்றெல்லாம் செயல் திறனுடன் இயங்கிவந்த அவரது கல் லறைப் பய்ணத்தை நினைக்கும்போது அவரே க  ைடகியா க இயற்றிய பாதுகாவலனில் பிரசுரமாகிய 'கல்லறை ' என்ற கவிதைதான் ஞாபகம் வருகிறது. தனது முடிவைக் கவிஞன் உள்ளம் முன்னரே அறிந்து விட்டதோ? அத்தக் கவிதையில் ஒருபகுதி :
‘புல்லும் பூடும் அழகு செய்யும், கல்லும் பேசும் வாயிருந் தால் அல்லும் பகலும் தெரியாதிங்கே, தொல்லை எதுவும் இல்லை அங்கே"
தொல்லை எதுவும் இல்லை என்று அவர் நம்பிய கல்ல லறைக்கு அவர் சென்றுவிட்டார். நாம் எங்கள் இலக்கிய குடும்பத்தவனை இழந்து துயரத்தில் நிற்கிருேம். இவரது பெற் ருேர் சகோதரர் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத் தைத் தெரிவிக்கின்ருேம்.
-ஈழநாடு 30 யூலை 1980
45

Page 27
நவீன இலக்கியத்தில் தரமான முயற்சி
புலவர் ம. பார்வதி நாதசி வம் நாடறிந்த நல்ல கவிஞர். பழந்தமிழ் இலக்கியப் புலமையும் படைப்பாற்றலும் மிக்கவர். பழந்தமிழ் இலக்கியங்களிலே தலை புதைத்தவர்கள் பெரும் பாலும் நவீன இலக்கியங்களை நயக்கத் தயங்குவதும் காணக் கண் மறுப்பதும் நடைமுறை ஆயின், புலவர் அவர்கள் நவீன இலக்கியத்தின் தரமான முயற்சிகளை வரயேற்பதோடு மரபின் தளத்தில் நின்றே எளிமையில் புதுமையும் மிக்க கவிதைகளைப் படைத்துவருவது பல்லாற்ருனும் 1ாராட்டப்பட வேண்டிய விடயம், தமிழ் நாட்டில் புலமைக் கல்வி கற்ற பார்வதி நாதசி வம் செய்யுளில் ப யி ன் ற தமிழ் தன் கவிதைகளில் தரப்பார்ப்பதாக நேரில் என்னுடன் வருந்தி பழகு தமிழிலேயே முழுவதும் எழுத முயலுவதாகக் கூறிய போது மற்றவனுக்கு விளங்காததற்கு நானென்ன செய்ய என்ற சிலரின் வித்துவச் செருக்கு நினைவுக்கு வர, புலவரின் பரந்த மன ஆவல் என் இதயத்தைத் தொட்டது.
புலவரின் ‘காதலும் கருணையும்’ என்ற தொகுப்பு வெளி வந்து எட்டு ஆண்டுகளின் பின் வெளிவந்துள்ள இருவேறு உலகம்" என்ற இந்நூலில் இருபது தனிக் கவிதைகளும் ஒரு குறுங்காவியமும் இடம் பெற்றுள்ளன. கவிதைத் துறையில் புலவரின் ஆழ்ந்த அகன்ற, சிருஷ்டிப்புகளைப் பல்வேறு பத்தி ரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் கவியரங்குகளிலும் அனுப வித்தவன் என்ற வகையில், இந்த இரு தொகுதிகள் மட்டு மல்ல, பல்வேறு தொகுதிகளாகப் புலவரின் கவிதைகள் தொடர்ந்து வெளிவருவது தமிழுக்கு ந ல் லது எ ன் று கருதுகிறேன்.
புலவர் பார்வதி நாதசிவம் வித்துவப் பரம்பரையைச் சேர்ந் தவர் என்பதையும் கவிதையும் உரையும் அவரது பரம்பரைச் சொத்து என்பதையும் விட பரந்து விரிந்த கவித்துவ உள் ளம் அவருடையது என்பதில் தான் இளைஞரான எமக்கு மிக்க உவப்பு.
இதுவெல்லாம் கவிதைக்குப் பொருளா என்று அலட்சி யப் படுத்திவிடாது அதையெல்லாம் கவியாக்கும் வல்லமை
புலவரின் தனித்துவம், மின்சார வெட்டா விலையுயர்வா?
46

LItsiar தட்டுப்பாடா? தவழுமல் நகையும் சுவையும் பொங்க புலவரின் கவிதையை எதிர்பார்க்கலாம். நடைமுறை உல கோடு தன்னை, தன் கவிதைகளை நன்ற கவே பிணை த் து க் கொண்டவர் அவர்.
அன்னைக்கு விண்ணப்பம் என்ற முதலாவது கவிதை யின் தான் உய்வதற்குத் தேவியிடம் எண்ணம் வேண்டும். புலவர் அதற்காகப் பொன்னைப் பொருளைக் கோரவில்லை. நீதிசேர் மனத்தையும் அல்லன விரும்பும்போது தோல்வி யையுமே கேட்கிரு ர். அடுத்து வரும் இனிய தமிழ் வாழ்த் துக்கு அப்பால் புத்தாண்டை வரவேற்கும் பாடல் “செங் கதிர் வந்தது வானத்திலே, இருள் சென்று மறைந்தது' என்று பாடுகிருர், நாவலர் பெருமானையும் பண்டிதமணியை யும் வாழ்த்தும் இரு பாடல்கள் பண்பும் பயனும் மிக்கன.
நடுங்கும் குளிர், வீதியோரத்தில் ஓர் ஏழைத்தாயும் சேயும் போர்வையோ சட்டையோ அற்ற நிலையில் தாய்ப் பாலிலா முலையினைச் சுவைத்தவாறு நடுங்கிக் கிடந்தது சேய், பக்கத்தில் ஒரு நாய், அதற்காவது உடல் முழுவதும் மயிரெ னும் போர்வை. இவர்களுக்கு குளிர் கவிதை புலவரின் மிகுந்த மனிதாபிமானத்தையும் புலப்படுத்துகிறது.
பொற்றெடி மீது மோதிக் கற்றுாணிடம் மன்னிப்புக் கேட்ட குடிகாரன் பற்றிய கவிதையும், தள்ளுவதற்கு மாணவர் இருப்பதால் பெற்ருே?ல் பற்றி நினைத்தும் பாராத அதிபரின் மோட்டார் வண்டி பற்றிய கவிதையும் , மாவைத் தேடிச் சலிப் புறும் கவிதையும் பாணுக்குப் பறந்த பாவையின் கவிதையும், மின்சார வெட்டும் சம்சார சோகமும் நினைக்கும் தோறும் சிரிப்பைத் தருவன. அவை அநாகரிகத்தில் விளையும் கோமா ளித்தனமான சிரிப்பு அல்ல வலிந்து அத்தகைய காட்சிகளைத் திணிப்பது புலவரின் முறையுமல்ல இயல்பாகவே "நகை'யைத் தரும் காட்சிகளை கவிதையில் படம் பிடிக்கிரு ர். இது புலவரில் காணப்படும் சிறப்பம்சம். நகைச்சுவை உணர்வு மி க ஷ ம் கொண்ட புலவர் "சும்மா’ உரையாடும் போதே "பொடி" வைத்துப் பல நகைச்சுவைகளை உதிர்ப்பவர், கவிதை என்று வந்துவிட்டால் சும்மாவா விடுவார்.
வாராரோ அன்பர், நாணமே தடை ஆகிய கவிதைகளில் காதல் உணர்வுகளைக் கச்சிதமாகச் சித்திரித்த புலவர் 'அஞ் சுகம் துணிந்துவிட்டாள் கவிதையில் காதலித்து விட்டுப்
47

Page 28
பணத்துக்காக மனம் மாறும் காதலனை நரியென நிற்பவனே, ஆண்கள் நாணிடப் பிறந்தனை செல்க' என்று எடுத்தெறியும் அஞ்சுகத்தைப் படைத்தார். ' பணம் எனும் பாவை’ ‘‘குறும் பாய் நகைத்தாள்’ சுமாரான கவிதைகள்.
'இல்லக விளக்கு' கவிதையில் பாவையரை ஏற்கும் Hலவர் ‘எழுத்துக்கு மறுநாள்’ கவிதையில் திருமண எழுத் 'துக்கு மறுநாள் ஆணும் பெண்ணும் சந்திக்கும் இன்ப அவஸ் தையைச் சுவைபட வெளிப்படுத்துகிருர், அக்கவிதையில் இறுதியில் ‘பாரல்ெலாம் எழுத்தின் பின்னர் பெறும் பயன் அவரும் பெற்ருர்" என்று முடிக்கிருர், இங்கு எழுத்து இரு பொருள் தருகிறது. ஒன்று திருமண எழுத்து, ம ற் ற து எழுத்து தனது எழுத்தின் பின்னர் உலகம் பெறும் பயனைக் 'கற்பனை செய்கிறர் புலவர். எழுத்தின் மீது புலவரின் நேசிப்பு அளவு கடந்திருப்பதை இங்கு காண்கிருேம்.
w நாடு விட்டுச் சென்றவர் திரும்பி வந்தபோது, ஊரிலே பலர் சுடலை வழி போய் விட்டதைப் பாடும் கவிதை ‘எங்கே அவர்?’ தொகுப்பிலே முக்கியமான பகுதி நூலின் தலைப்பிலே அமைந்துள்ள குறுங்காவியம்.
* இருவேறு உலகம்’ என்ற இக் குறுங்காவியம் புலவரின் கற்பனைத் திறனுக்கும் கவிதை வளத்துக்கும் சான்ற க அமைந் துள்ளது. காவியப் பண்பின் சிறப்புக் குன்ருத எளிமையும் தரமும் வாய்ந்த ஒரு கதையை வடித்துள்ளார் புலவர். இடவர்ணனையாகட்டும்; பாத்திரப் படைப்பிலாகட்டும் காவி யத்தின் ஒவ்வோர் அம்சத்திலும் புலவர் மிகுந்த கவனமெடுத் துள்ளமை தெரிகிறது. இதனைப் படிக்கும்போது புலவரிட மிருந்து பெருங்காவியம் ஒன்றைத் தமிழுலகு பெறவேண்டும் என்ற அவா மேலோங்குகிறது. புலவரின் இது போன்ற குறுங்காவியங்கள் ஒரு தொகுதியாகவும், தனிக் கவிதைகள் ஒரு தொகுதியாகவும் வெளிவந்திருந்தால் இன்னும் சிறப் பாக இருந்திருக்கும்.
புலவரின் படைப்புகள் அத்தனையும் நூலாகட்டும் அவரது பேணு அச்சுருவம் பெறுவது பற்றிய கவலையில்லாமல்
இயங்கட்டும். அதன் விளை வா கத் தமிழ் பொலியட்டும்.
"இருவேறு உலகம்” வெளிவர உதவிய வள்ளல் போல் பலர் உதவ முன்வர வேண்டும். =தினகரன்
48

இலக்கிய மேடை
ஈழத்து இலக்கியத் துைைறயைப் பல நோய்கள் பற் றிப் பீடித்துள்ளன; தமிழகத்தின் இலக்கியவாதிகள் எங்கே போகிருர்கள் என்று உரத்துக் கேள்வியெழுப்பிவிட்டுப் பதிலையும் தாமே சொல்லி முகம் சுழித்து அத்துடன் அமர்ந்து விடு வார்களா ? மீண்டும் மீண்டும் வடக்கு நோக்கியே தம் பார்வையை வைத்து அந்த அசிங்கம் பற்றியே அலசுவதில் காலம் போக்குவார்கள். நமது இலக்கியத்தை நசிவுபடுத்த இந்தியக் குப்பைகள் வந்து இறங்குகின்றன என்று குரல் எழுப்புபவர்கள் அதற்காக ஒரு வியாபாரிபோல் பணக்கணக்கு காட்டுகிருர்கவே தவிர, அவை ஈழத்து எழுத்துக்களில் ஏற் படுத்தும் தாக்கங்களை ஆராய்தார்களா? இப்படிப் பல ஏக் கங்கள் எழுந்ததால், நமது இலக்கியத்துறை இலக்கியப் படைப் புக்கள் சம்பந்தமான பிரச்சினைகளை அலசுவதற்காகவே இக் கட்டுரைத் தொடர் ஆரம்பமாகிறது.
இது யாரையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட வில்லை. இத்தொடரில் சம்பந்தப்பட்டவர்கள் தரும் விளக் கங்களும், பதில்களும் பிரசுரிக்கப்படும்.
சமகால ஈழத்துச் சிறுகதைகளின் வடிவம் பற்றி முதலில் நோக்குவோம்.
சிறுகதை என்ருல் ஒரு திறந்த யன்னல் என்பார்கள். ஒரு மின்னல், பொறி என்றெல்லாம் கூறுவார்கள். எழுத் தாளனின் மனத்திலே பதிந்துவிடுகின்ற ஒரு காட்சி - அதன் விவரணம் தான் சிறுகதை, அது பற்றி பல பல கருத்துக்கள் கூறப்படுவது உண்டு.
பறவையைக் கண்டான், விமானம் படைத்தான் என் பதுபோல் ஒரு காட்சி அவன் மனதில் பதியாது " கதை " பிறக்க முடியாது , மனதில் பதிந்துவிட்ட அந்தக் காட்சியை விளக்கப் பாத்திரங்களை நடமாடவிட அவற்றின் பழைய * கதைகளை வரிசைப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது. ஒரு காட்சியை விவரித்து பின் நினைவோட்டத்தில் பழைய * வரலாற்றை சுவைபடக் கூறுவது இப்போது சாதாரண மாாகக் கையாளப்படுகிறது.
49

Page 29
இப்படி ஒரு கதை சுருக்கமாக விவரித்துக் கூறும்போது சில விமர்சகர்கள் சீறிப் பாய்கிறர்கள்.
தமிழ்க் கதைஞர் வட்டத்தின் காவலர் மதிப்பிற்குரிய வ. இராசையா அவர்கள் எனது சிறுகதை ஒன்றினை குறுநாவல் " பாணியுடையது என்று விமர்சித்தார். நானும் ஏற்றுக் கொண்டேன்.
சிறுகதையிலே ' குறுநாவல் " பாணி ?
உதாரணத்துக்கு ஒன்று.
* ஒரு சமுத்திரத்தின் கூனல் நிமிர்கின்றது " என்ற எனது கதையில் சிறு நிலச் சுவாந்தர்கள் மீனவர்களைச் சுரண்டி வாழ்வதையும், மீனவர்களில் பழைய தலைமுறையினர் அடிமைத் தனத்தை ஏற்றுக் கொள்வதையும் இளைய தலைமுறையினர் போராடி சமூகத்தின் கூனலை நிமிர்த்தும்போது பழைய அடி மைத் தலைமுறையும் சுதந்திர உணர்வு பெறுவதையும் படம் பிடித்துக் காட்டியிருந்தேன். ہے۔
இக்கதைக் கரு நாவலாகவே எழுதப்பட வேண்டிய ஒன்று. இவ்வாறு இன்று ஈழத்தில் வெளிவரும் பல சிறுகதை களும் ஒரு நாவலுக்கு வேண்டிய கதைக் கனத்தைக் கொண் டுள்ளன. வ. இராசையா அவர்களின் கருத்துப்படி * குறுநாவல் , சாயலை உடையன அதுவும் சிறுகதை என்ற குறிப்புடன் வருவன உண்மையில் குறுநாவல் என்ருல்.
காரணம் என்ன ?
ஈழத்து எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை வாசகர் கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. அதுவும் நாவல் என்ருல் கேட்கவேண்டியதில்லை : இப்படியான நிலையில் ஒரு நாவலுக்குரிய அம்சங்களை கொண்ட கதையையே சிறுகதையின் அளவில் (பக்க எண்ணிக்கை) எழுத வேண்டிய நிர்ப்பந்தம் எழுத்தாளர்களுக்கு உண்டு. நாவலாக எழுதியிருந்தால் எழுத்தாளனின் வீடுகளில்தான் அவை தூங் கும். காலப்போக்கு, பிரசுரகளம் இவற்ருல் ஒரு நாவலின் பண்புகளுடன் சிறுகதையின் அளவில் ஆக்கங்களைப் படைப்பது தவிர்க்க முடியாததாகின்றது.
50

இக்கருத்தை மல்லிகை (1974-ம்) ஆண்டு மலரில் திரு.முருகையன் எழுதியிருக்கிருர். இராகையா ஆவர்கள் * குறை காண்பது போல் குறுநாவலின் சாயலில் சிறுகதை எழுதுவது தவிர்க்க முடியாத காலத்தின் தேவை. அந்நிலைக்கு நமது எழுத்தாளர்கள் தள்ளப்படுகின்ருர்கள் என்கிருர் முருகையன். திரு. இராசையா அவர்கள் ஏற்றுக் கொள்வார் களோ என்னவோ ?
ஈழத்து இலக்கியத் துறையின் வளமான ஊற்றுக்காக சிரித்திரன் சுந்தர் ஒரு தடவை " " நாலைந்து கருத்துக்களை சிறு கதை ஒன்றில் திணிப்பது பொருளாதார நோக்கில் எழுத் தாளனுக்கு நட்டம் ' என்ருர், நமது எழுத்தாளர்களுக்கு இலாபம் " என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்களுக்கு கருத் துக்களைக் கூற வேண்டும் என்ற வேகத்தில் தான் நம்மவர்கள் எழுதுகிருர்கள். எந்த நட்டத்தையும் ஏற்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
இவ்வாறு சமுதாய நலன் ஒன்றையே நோக்காக கொண்டு ஈழத்தில் எழுத்தாளர்கள் எழுதி வருகிருர்கள். தமிழகத்துச் சஞ்சிகைகளிலே வெளிவரும் கதைகளை எடுத்துக் கொண்டால் (இவர்கள் குப்பை என்று ஒதுக்குபவற்றிலும் ) ஒரு மனைவியு டன் தவழுன நடத்தை ஏற்பட வேண்டிய சந்தர்ப்பம் , "பிரா? கழற்றுவது, முறை தவறிய உறவு இப்படி ஏதாவது ஒன்றை வைத்து " குறுநாவல் பாணி" என்று இவர்கள் சீறிப் பாய்கி முர்களே, அவர்கள் சிறுகதைக்குரிய பண்புகள் என்று எதிர் பார்க்கும் அத்தனையும் நிறைவாக வருகிறது. அந்தப் படைப் புக்கள் வளர்ந்து வரும் நமது புதிய எழுத்தாளர்களின் எழுத் தில் குறிப்பிடத்தக்க மதிப்புகளை ஏற்படுத்திவிடும். P.
இலக்கிய"நோக்கு எதுவும் அற்ற குப்பை - சிறுகதையின் வடிவம் நிறையப் பெற்றுள்ளது. தரமான சிந்தனையை (அது குறு நாவல் சாயல் உடையதென்றலும் ) பிரதிபலிக்கும் கதை இரண்டையும் திரு. இராசையா போன்றவர்களின் தராசில் இட் டால் எது தாழுமோ ?
உதாரணத்துக்கு ஒன்று; தமிழகத்தில் மிக வேகமாக முண்ணணிக்கு வந்துள்ள வண்ணதாசன் அவர்களின் புளிப்புக் கனிகள் என்ற கதை - கலைக்கப்படாத ஒப்பனைகள் தொகுப்பில் உள்ளது; ( குமுதத்திலும் பின்னர் வெளிவந்தது) ஒரு பெண்ணை விரும்பி, அவள் கிட்டாத வேளை சேற்றை வாரி வீசுவதை வெளிப்படுத்துகிறது. தரமான இக்கதை இவர்களின் கருத்துப்
5

Page 30
படி சிறுகதை வடிவம் நிறையப் பெற்றது, ஆனல் குமுதத்தில் 12 பக்கங்களில் வெளிவந்தது. ஈழத்துப் பிரசுர களத்தை ஈழத்து எழுத்தாளர்களின் நிர்ப்பந்தத்தை எம்மவர்கள் உணர வேண்டும்.
லாபநட்டம் பார்க்காமல் கருத்துக்களை வெளிப்படுத்த
ந ரு ܖ
வேண்டுமென்ற அவா. நாவல்களுக்கான மிகக்குறைந்த பிரசுர வசதி. சமூக மாற்றங்களைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற சிந்தனை. பிரச்சினைகளுக்கு முடிந்தளவு தீர்வு காண
வேண்டுமென்ற புதிய போக்கு. இவை எல்லாம் ஈழத்து எழுத் தளர்களின் சிறுகதைகள் குறுநாவல் பாணியில் அமைவதற் கான காரணிகள். இது ஒரு நிர்ப்பந்தம். காலத்தின் தேவை. இது தமிழகத்து இலக்கியங்களின் தாக்கத்தாலும் மாற்ற முடியாதது.
மதிப்புக்குரிய இராசையா போன்றவர்கள் இந்த நிலைப் பாட்டில் நின்று சிந்திப்பார்களா ? திரு, முருகையன் 74ல் கூறியது இன்று பெருமளவு வெளிப்படுகிறது. அவை தமிழ்க் கதைஞர் வட்ட காவலரின் எண்ணத்தில் சிறுகதைகளே இல்லை. பரவாயில்லை!
இனி. எழுத்தாளன் சமுதாயப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது சரியானதா..? என்ற கேள்விக்கு விடை காண்போம் .
கலாவல்லி - ஆகஸ்ட் 1978
52

இலக்கியச் சந்திப்பு!
சில்லையூர் செல்வரஜன் - காவலூர் ஜெகநாதன்
எமது நாட்டில் இரு சிறந்த இலக்கியவாதிகள் சந் திக்கிருர்கள். சில்லையூர் செல்வராசன தெரியாத தமிழர் கள் இருக்கமாட்டார்கள். தான்தோன்றிக் கவிராயராகி கவிதைத்துறையிலே பல சாதனைகளை நிகழ்த் கியவர். என்ருலும், கலை இலக்கியத்தின் பல்வேறு துறைகளும் கைவரப்பெற்றவர். இந்தப் பல்கலைவேந்தர் பிறவிக் கலைஞர், இலக்கியப்பணி புரிபவர். காவலூர் எஸ். ஜெகநாதன் 76 ஆம் ஆண் டு இலக்கியத்துறையுள் நுழைந்தவர். ஏராளமான சிறுககைகளே எழுதிக்குவித்துப் பிரபலமானவர். இலக்கியப் போட்டிகளிலெல்லாம் பரிசு களைத் தட்டிக்கொண்டதால் “பரிசு எழுத்தாளர்" என்று பத்திரிகைகளாலும் இலக்கிய ரசிகர்களாலும் குறிப் பிடப்படுபவர். இருவரும் சந்தித்து பலமணிநேரம் உரை யாடினர்கள் சுடருக்காக அவர்களின் உரையாடல் இங்கு இடம் பெறுகிறது.
ஜெகநாதன்: சிறுகதைத்துறையிலேயே நான் தீவிர ஆர் வம் கொண்டிருப்பதால் அதிலிருந்தே தொடங்குவோம். நீங்கள் கதை எழுத ஆரம்பித்த கதையையும் அக்காலத்தில் எழுந்த கதைகள் பற்றியும் கூறுங்கள். ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு உங்கள் பங்களிப்பு என்ன?
செல்வராசன்: நிறைய வாசிக்கும் பழக்கம் என்ளுேடு கூடப் பிறந்தது. ஈழத்தில் முதல் சிறுகதைப் போட்டியை 50 ஆம் ஆண்டளவில் சுதந்திரன் நடத்தியபோது, அதற்கு கதை எழு தத் துணிந்தேன். சதங்கை நாதத்தை அனுப்பினேன். முதற் பரிசு கிடைத்தது. அந்தக் காலத்துக்கு அது ஒன்றே போதும் . எழுத்தாளர்களும் குறைவு. பத்திரிகைகளும் குறைவு. அக்காலத்தில் ஒரு எழுத்தாளன் பிரபலமடைய அது போதும் . இக்காலத்தில் எழுத்தாளர் எண்ணிக்கை மிக அதிகம் . அந்த நிலையில் பிரபலமாவதென்ரு ல் மிகவும் கடினம். உங்களைப் போல் தொடர்ந்து ஏராளமான பரிசுகள் பெற்ருல்தான் உண்டு. குளத்தில் தேடுவதற்கும் கடலில் தேடுவதற்கும் உள்ள வித்தியாசம் . அதைத் தொடர்ந்து
53

Page 31
பல கதைகள் எழுதினேன் தான். ஆனல் இவை வரலாற்றில் இடம்பெறக் கூடியவை அல்ல. ஈழத்து சிறுகதைகதுறைக்கு எனது பங்களிப்பு என்ருல் , வீ ர கே ச ரி வாரமலர் ஆசிரியராக இருந்தபோது நல்ல பல சிறு கதைகளைத் தேர்ந்து எழுத்தாளர்களுக்கு உற்சாக மூட்டி எழுதச் செய் ததுதான்.
ஜெக அன்றும் இன்றும் ஈழ , தமிழக சிறுகதைகளில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களைப்பற்றி பார்ப்போம். பொது வாக ஈழத்தில் தரம் அன்றையதைவிட கூடியுள்ளதாகவும், தமிழகத்தில் தரம் அன்றையதைவிட குறைந்துள்ளதாகவும் நான் நினைக்கிறேன்.
செல்வ; நீர் அப்படித்தான் சொல்வீர். சொல்ல வேண்டும். ஆனல் உண்மை வேருக இருப்பது போல் தோன் றுகிறது. தமிழகதி தின் அக்கால கதைகளில் ஆழமான கலை நேர்த்தி இருந்தது. இப்போது அது குறைந்து பொழுது போக்கு மலிந்துவிட்டது. அதே வேளை சில சமூகப் பார் வைகள், கூடியுள்ளதையும் மறுக்க முடியாது. ஈழததில் அக் காலத்தில் டானியல், அ. செ. மு. பொன்னுத்துரை போன் றவர்கள் சம்பவங்களை கிரகித்து படைப்ாாக்கி கொடுத் தார்கள். புல்லைத்தின்றமாடு பாலைத்தான் கொடுக்கவேண்டும். புல்லைக்கொடுக்கக்கூடாது.
ஜெக: அப்படியென்ருல் இப்பேபதைய பசுக்கள் புல் லைத்தான் தருகின்றன என்கிறீர்களா?
செல்வ: தவறு! எல்லாம் அல்ல. உதாரணமாக உமது கதைகளைப் பார்த்தால் மிகத்தரமான கதைகளும் பலவுண்டு மறுக்கவில்லை. ஆனல் பலவற்றில் அவசரக் கோலமும் தெரி கிறது. பத்திரிகையை இலக்காகக் கொண்டு கதை படைக்கக் கூடாது. ஏனென்ருல் பத்திரிகையில் வரும் எல்லாம் இலக் கிய அந்தஸ்து பெறுவதில்லை. காலத்தில் நிலைப்பதில்லை. எத் தனை கதைகள் காதற் கண்ணீர் வடித்து இசையும் கதையும் ‘ரைப்"பில் பத்திரிகைகளில் வருகின்றன? அவை யெல்லாம் இலக்கியமாக மதிக்கப்படாது. ஆற்றல் மிக்க நீர் தொகுப் புகளை வெளியிடுப்போது, பத்திரிகைச் சிந்தனையில்லாது எழுதி கனமாக கதைகளை வெளியிடவேண்டும். இது எ ன து ஆலோசனை.
54

ஜெக: நன்றி செல்வராசன். உங்களுடைய 'ஈழத்து நாவல் வளர்ச்சி! நூல் படித்திருக்கிறேன். அந்த முயற்சியில் உங்களை உந்திய அக புறக் காரணிகள் யாது? இப்போது சிலர் எழுதும் வரலாற்று நூல்களில் இருட்டடிப்புகளைக் கண் to is at it?
செல்வ: இலக்கியத்தில் நாம் என்ன செய்திருக்கிருேம் என்ற தேடல் முயற்சியின் விளைவு அது. அந்த முயற்சிக்கு நம்மை உந்தியது 'ஈழத்து இலக்கியம் 10 ஆண்டுகள் பின் தங்கியிருக்கிறது" என்ற பகீரதன் இங்கு வந்து பசியது. மூன்று ஆண்டுகள் அதற்காகப்பாடுபட்டேன். முதல் முயற்சி யாதலால் கடினமாக இருந்தது. வரலாறு எழுதும் போது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்கக்கூடாது. பழைய வரலாறு என்ருலும் காரியமில்லை. சமகால வரலாற் றிலேயே இப்படி ஒரு மோசடி
சுடர் ஜனவரி 1980 -
55