கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாருதம் 1983.04

Page 1
ΛΛΑARu.
இந்தச் சரத்தில் இனேந்த மலர்கள்
宁。 நாராயணரெட்டி இளம் பாரதி கா சிவத்தம்பி ரோடுஒளி | EIsyyII: LiI
ஆ. சபாரத்தினம் புகழேந்தி முல்லேயூரான் ஞா. ம. செல்வராசா நந்தனு
அமுதபாரதி மார்க்ரேட் வாத்கர்
L-AħT LI JI ir L i ii I
கெளரவ ஆசிரியர் கா
சித்திரை 1983
*
 
 

堑 AW-A PRO LETARIAN FORCE
வலூர் எஸ். ஜெகநாதன்
ரூபா இரண்டு

Page 2
யாழ்நகரில் புதிய ஸ்தாபனம்
* உங்களுக்குத் தேவையான
சகலவிதமான மோட்டார் உதிரிப்பாகங்களுக்கும் நீங்கள் நாடவேண்டிய இடம்
V
ஆனந்த் மோட்டோர்ஸ் ஸ்ரோர்ஸ்
(மோட்டார் உதிரிப்பாக இறக்குமதியாளர்களும்,விற்பனையாளர்களும் 177, ஸ்ரான்லி வீதி, யாழ்பாணம்.
Ananth motors Stores
177, Stanley Road,
Jaffna.

i
இந்த மாருதம் இதழை உங்கள் கைகளில் சேர்ப்பிப்பதில் எமக்கு கொள்ளை மகிழ்ச்சி.
இந்த வேள்வியில் எம்மையும் சொரிய ஆசையும், துணிவும் நீண்ட காலத்திற்கு முந் தியே இருந்தது. சாவும் தேய்வுகளுமே வழக் கமாகிவிட்ட இத்துறையில் விருப்பத்தோடு காலெடுத்து வைத்து முளையிலேயே கருகி விடக் கூடாது என்பதுதான் இந்தத்தாமதம்
உங்கள் மீது எப்பவுமே எமக்கு நம் பிக்கை அளவு க்கு அதிகம் இருந்தும் தொடர்ந்த பிரசுரத்தின் பல்வேறு தேவை களையும், பாதுகாப்பையும் தேடிக் கொண்டு மாருதத்திற்கு தேய்வோ, சாவோ இல்லை என்று கம்பீரமாக முன்னல் வந்து நிற்கிருேம் அத்திவாரம் உங்கள் ஒத்துழைப்புத்தான். பிரகடனங்கள் என்று தனியாக எதற்கு. இந்த இதழும் வரும் இதழ்களும் சாட்சி
களாகும்.
எமக்கென்று ஒரு தனித்துவமான பாதை யில் மாருதம் நடைபோடும். நிச்சயமாக அது தனியான பாதை அல்ல.
சவால்களையும், சபதங்களையும் நாங்கள் வாயால் விடுக்க விரும்புவதில்லை. செயலால் சாதிக்கவே விரும்புகிருேம்.
விதை இட்டுள்ளோம் விருட்சமாவது நிச்சயம். ஏனென் ருல் நாங்கள் உரமாகத் தயார். நீங்கள் பாதுகாப்பீர்கள்
அடுத்த இதழில் சந்திப்போம்.

Page 3
  

Page 4
எல்லாக் கொடுமைகளையும் சமரசத்துக்கு இடமில்லாதவகை யில் எதிர்த்த மாவீரர்.அவர் பெயர் காரல் மார்க்ஸ், நான் ஒரு மனி தன். மனிதத் தன்மை உடைய எதுவுமே எனக்கு அந்நியமல்ல' என்று அவர் கூறினர்.
மனிதர்களுடைய அனுபவங் கள் துன்பங்கள் எவையுமே இந்த மனிதருக்கு அந் நியமான  ைவ அல்ல மனிதத் தன்மை கொண்ட எதுவுமே அவருடைய கவனத்தி லிருந்து தப்பவில்லை. ஏனென்ருல் அவர் மனிதனைப்பற்றியே சிந்தித் தார். அவர்கள் எதற்காக வாழ் இருர்கள், ஏன் துன்பங்களை அனு அவர்களுடைய கனவுகள் எப்படிப்பட்ட  ைவ என்றே சிந்தித்தார்.
அவர் உருவாக்கிய வரலாற் றுப் பொருள் முதல்வாதம் என்ற தத்துவம் உலகத்தின் விஞ்ஞானச்
பவிக்கிருர்கள்,
வரவேற்கிறேம்
தமிழில் முற்போக்கு இலக் கியத்தின் பிதாமகர் சிதம்பர ரகு நாதன், பேராசிரியர் எஸ் gu frLD கிருஷ்ணன், தமிழின் சிறந்த பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ் ணன் மூவரும் தமிழகத்தின் இலக் கியத்தூதுவர்களாக நம் நாட் டுக்கு வருகை தந்துள்ளார்கள்.
ஈழத் - தமிழக உறவினுக்கு இத்தகு படைப்பாளிகளின் வரு
கை உரமிடும். மாரு தமும் வாழ்த்தி வரவேற்பதில் முன் நிற்கிறது.
சிந்தனையில் புரட்சியை ஏற்படுத் தியது. அது ஒரு எளிமையான கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அது மிகவும் எளிமையாக இருப்பதனுல்தான் முதலாளித்துவ வர்க்கப்பேராசிரி யர்களால்பலதலைமுறைகளாகவே அதைப் பார்க்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர்கள் அணிந் திருக்கும் மூக்குக் கண்ணுடிகள் மிகவும் சக்திவாய்ந்தவை உண வைப் பெறுவதற்கு, இருப்பிடம் தேடுவதற்கு, இனப்பெருக்கம் செய்வதற்கு மனிதன் பின்பற்றும் வழிகளும் முறைகளும் அவன் வாழ்கின்ற சமூக உறவுகளை நிர் ணயிக்கின்றன என்ற அடிப்படை யான உண்மை எல்லா நாகரிகத் துக்கும் ஆதாரமாகும்.
எவ்வளவு எளி ைம ய ர ன கருத்து ஒரு குழந்தைகூட இதைப்
புரிந்துகொள்ளுமே. ஆனல் இதை
மறுப்பதற்காகப் பேராசிரியர்கள் மார்க்ஸ் தலையில் எத்தனை கிலோ விஷத்தை, எத்தனை டின் வெறுப் பைக் கொட்டியிருக்கிருர்கள்! அது எளிமையான தாகவும் , பேருண்மையாகவும் இருப்பதனல் தானே அவர்கள் இவ்வளவு வெறுப்பைக் கொட்டினர்கள். உண்மையைச் அவர்களுக்கு ஊதியம் கொடுக்கி முர்கள்? மார்க்சியத்தின் உண் மையை யார் மிகவும் சாமர்த்தி யமாக மறுக்கிருர்களோ அவர் களுக்குத் தானே பதவிகள் கொடுக்கப் படுகின்றன.
சொல்வதற்கா

பார்க்ஸ் தன்வாழ்க்கை முழு வதும் முதலாளித்துவ வர்க்கத் தை எதிர் த் துப் போராடினுர், இனிமேல் மனிதகுலத்தின் முன் னேற்றத்தில் கூடுதலான வளர்ச்சி சமூக அமைப்பில் மாற்றம் ஏற் படவேண்டுமென் ருல் அ  ைதத் தொழிலாளிவர்க்கம்தான் செய்ய முடியும் என்பதை அவர் கண் டார். மனிதர்களிடையே வர்க் கங்களை நிரந்தரமாக ஒழிக்கக் கூடிய ஒரே சக்தி தொழிலாளி வர்க்கமே, சமூகத்தில் மற்ருெரு வர்க்கத்தின் உழைப்பைச்சுரண்டி வாழ்கின்ற கடைசி வர்க்கம் முத லாளித்துவ வர்க்கம். பாட்டாளி வர்க்கம் சமூகத்தை வென்று , உற்பத்திக் கருவிகளைப் பொதுவு டமையாக்கி, சமூக த்தில் ஒரு வர்க்கத்தைச் சுரண்டாமல், அந் தச் சுரண்டலைத் தன்னுடைய சுகபோக வாழ்க்கைக்கு ஆதார மாகக் கொள்ளாமல் ஆட்சி புரியும். 8 w
மார்க்ஸ் எத்தகைய உணர்ச்சிக்
கும் ஆளாகாத அரக்கர், 'மூளை
மட்டுமே உள்ளவர். தன்னுடைய சொந்த ஆசைகளுக்கும், முன் னேற்றத்துக்கும் பாட்டாளி வர்க் கத்தைப் படிக்கல்லாகபயன்படுத் தியவர் என்று முதலாளித்துவ வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் கள் எழுதுகிறர்கள். அவர்கள் எல் லோரையும் தங்களுடைய பிம் பத்திலேயே பார்த்துப் பழக்கப் பட்டவர்கள்.
மார்க்ஸ் எவ்வளவு துன்பங்
களை அனுபவித்தார்! எத்தகைய
யிருந்தால்
மக்கள் கலை
மிக நுட்பமான கருத்தோ அல் லது அற்புதமான கலையோ தமக் குத்தாமேநுட்பமாகவோ அல்ல து அற்புதமாகவோ இருந்து விடு வதால் மத்திரம் அவை சிறந்து விளங்குவதில்லை. உயர்ந்ததா ஆகிவிடுவதுமில்லை,
அவைகளை மக்கள் எவ்வளவு விரும்புகிருர்களோ அவர்களது வாழ்க்கையைச்செம்மைப்படுத்த கலையும் கருத்தும் எவ்வளவு உத
வுகின்றனவோ அவையே நீண்ட
காலம் வாழும். அதுவே பின்னர் மக்கள் கலைகளாக மலரும்
- மல்லிகை முதலாவது இதழ், ஆசிரியத் தலையங்கத்திலிருந்து
கொடிய வறுமைக்கும் ஒடுக்கு முறைக்கும் ஆளாஞர்! இத்தனை யும் அவருடைய சொந்த முன் னேற்றத்துக்காகவா? இந்த கன வான்களைப் போல அ வரும் வாழ்க்கையில் முன்னேற விரும்பி அவர்களைப்போல பொய், மோசடி, துரோகம், காலைப் பிடித்தல், சுரண்டல் ஆகியவற்றைச் செய்திருப்பார். முதலாளித்துவ உலகம் காட்டு கின்ற வெற்றிப் பாதை இது தானே.
(8ம் பக்கம் பார்க்க )

Page 5
நெற்றிக்கண் திறக்கும்
தெலுங்கு மூலம் சி. நாராயணரெட்டி
தமிழில்: இளம்பாரதி
பூக்களின் பேச்சல்ல ༤ , புன்னகை படர்ந்த பேச்சைக் கேள். வேடிக்கைப் ாேச்சல்ல மூப்புடையதே யானுலும் தளர்வடையாத சொற்களின் மெட்டியொலி கேள். அதன்பிறகு களைப்படைந்த நெஞ்சங்களின் சலிப்பொலி எதுவும் கேட்காது. •: , அதன் பிறகு சூடிய மலர்மாலைகளின் அலுப்புத் தெரியாது. ஒரு சர்த்தாஜ் ஒரு மும்தாஜ் இசைத்த பாடல்களின் பேரலைகள் ஏற்றி அனுப்பும் உயரங்கள் தெரியும் உனக்கு, அத்துடன் நிற்பதல்ல, மேலும் உண்டு. அழகு தவழும் மலர்களை வெளிப்படுத்தும் கொடிகள் தம் வாழ்க்கையின் துயர முகங்களை இனம்காண வேண்டும். இந்த ஞானம் கைவர வெண்ணெய் மறைத்துவைத்திருக்கும் தயிர்த் துளிகளை
மோதிச் சுழற்றும் மத்துகொண்டு
கடைந்து பார் நெஞ்சத்தின் உள்ளமைந்த தமுக்குகளின் பறைசாற்றலை உன்னிப்பாகக் கேள். விடிகாலை இளம்பொழுதில் கதவுக்கு வெளியே காக் திருக்கும் அடர் இருட்டின் முற்றுகைக்கு பஜனை கோஷ்டிகளுக்கு மடத்துச் சாமியார்களுக்கு அடிவயிற்றில் நோவு தோன்றியிருப்பதை பார். ஒடிந்த வீணையின் துயரக் குரலைக் கேள்.
புகை மங்கையின் கூந்தல் மறைவில்
மயிர்க்கூச்செரிப்பை உண்டாக்கும் , நடைமுறை வேதனைகளைக் கண்டுகொள் அப்போதுதான் நான் உன்னை மெச்ச நேரும் மூடிய நெற்றிக்கண் இமைகள் திறந்து கண்மணி தென்படும்.

g D f
வள் வள் . . . . .
சுப்பிரமணியத்தைப் போல வேதான் அவர் வீட்டு நாயும், மூக்குமுட்டப் பிடித்தது செமிக்க வேண்டுமென்றே குரைக்கும் சனி யன். நகை அடைவு காணி ஈடு என்று பணத்தை வாரி இறைத்து மணியத்தாரைப் பருக்கவைக்கப் போகிற ஏழைபாழைகள் தொடக் கம் பணத்துக்கு ‘பற்றேர்ண்’ ஆக சுற்றித்தழைத்திருக்கிற உறவினர் வரை மணியத்தார் நாய் ஒருவர்
பாக்கி விடுவதில்லை.
குரைப்பதென்பது அதற்குக் கடமையாக இல்லாமல் உடற் பயிற்சி ஆகியிருக்கிறது. மணியத் தார் வீட்டிலே நின்ருல் அவரைச் சுற்றியே வளைய வளைய வந்து குழைகிறது கரியார்த்தமாக மணியத்தார் உலாத்துக்கிளம்பு கிறபோது தானும் பெரிய வீட்டு நடையுடன் சுற்றுவட்டாரத்தைச் சுற்றிவரும் சுற்றிவந்த ஒரு வேளை யில்தான் இந்த . . . . .
“வள் வள்" துள்ளிப்பாய்ந்து குரைக்கிறது. ஏதோ ஒன்று ஆகித் தான் தீரவேண்டும் என்று, ஆக் கித்தான் ஒய்வேன் என்று தன்
லுள் உறுதிகொண்டது போல்
காவலுர் எஸ். ஜெகநாதன்
விடாப்பிடியாக துள்ளிக்குதித்துக் குரைக்கிறது. வேப்பமரக்கிளையில் குச்சிகளும் குறுணிகளும்கொண்டு காகம் கட்டிய கூடு. w
வள் வள்’’
*ரெண்டில் ஒண்டு பார்க்கிற துதான் குடி எழுப்பிப்போட்டுத் தான் மற்ற வேலை’
துள்ளிக்குதிக்கிருர் மணியத் தார் தன்நாயைப் போலவே அவ ரும் **வள் . . .வள் . . என்பதற் கென்ன நாய்க்கும் அவருக்கும் ஒரு வித்தியாசம். நாய் குரைக்கும் கடிக்காது. இவர் குரைப்பார் கடிக்கவும் செய்வார்.
海
** என்னட்ட ஒரு சொல்லுக் சேட்டாளவையா. . . கேட்டிருந் தால் சரி பாவம் போனல் போகு தெண்டு விட்டுப் போட்டிருப்பன் இனிவிடமாட்டேன் கவுண்மேந்து வரைக்கும் போய் அலுவல் பார்ப் t_J sẳ7 ”’
** மணியண்ணை உங்களை என்ன கேட்கிறது கவுண்மேந்துக் காணி நாங்கள் இருக்க நில மில்லாத நாங்கள் வந் திரு கிறம் நீங்கள் எதுக்கு. . . .'
“கொட்டில் போட்டதும் பத்தாது பேசவும் வந்திட்டாள் எதிர்த்து. . . .பார்க்கிறன் ஒரு கை விதானை என்ர கையிலை, கவுண்
மேந்து ஏசண்ட் என்ர கையிலை.
7
பார் உன்னைக் குடி எழுப்புறன இல்லையா எண்டு. . . *

Page 6
ஒரு உறுமலுடன் நடக்கிருர் மணியம் முடக்கில் திரும்புகிற போது வேப்பமரத்தை நிமிர்ந்து குரைத்துக் கொண்டிருக்கும் நாய் வாய்முடி வால் ஆட்டுகிறது, ‘* உஞ்சு நட. . . " " இருவரும் வீடு திரும்புகிறர்கள்.
அருளமணிக்கு ஐந்து பிள்ளை கள். ஐந்தும் ஒரே சாதி. யாழ்ப் பாணத்துத் தாய் தகப்பன்மாரை உண்டியலோடு மாயப் பண்ணு கிற சாதி. அடுக்கடுக்காக ஐந்தும் பிறக்கக் காரணமாகிவிட்டு அத் தோடு தன் பிறவிப் பயன் முடிந் ததாக அருளமணியின் கணவன் கண்ணை மூடிவிட . . . . அருளமணி பட்டபாடு
வளர்க்க மட்டுமென்ருல் அரு ளமணியின் வெய்யில் குளிப்பு இழுத்துப் பறிக்கும். இது வளர்த் துக் கரையும் சேர்க்கவேண்டும் இருந்தால் தான் எல்லாம் இல் லாவிட்டால் ஒன்றுமில்லை என்று இரத்தத்தோடு ஊறிய குணம் உறவினர்களையும் எட்ட விரட்டி விட . . . . அவளின்ர குமர்கள் கிடந்து** ص சீரழியப்போகுது’’ என் கிற ஊரின் முணுமுணுப்பைத்தகர்க்க முனைந்துதான் கனகரத்தினத்தை மூத்த மருமகன் ஆக் கிஞ ள். எண்ணி நா லே மாதங்களில் தானே த கர்ந்து போக நேரு
மென்று அவள்எதிர்பார்க்கவில்லை
(26ம் பக்கம் பார்க்க)
ஒரு கை கொடுக்கிறேம்
ஒவ்வொரு எழுத்தாளரும் தமது படைப்புக்களை நூல்வடி வில் கொண்டுவர விரும் புவது இயல்பு மட்டுமல்ல அத்தியாவசி யமானதும் கூட
அதற்கு எதிரான சுமைகளே யும், பாரிய சிரமங்களையும் நாம் முற்று முழுவதாக உணர்கிருேம்
விளைவாக நாங்கள் ஒரு கை கொடுக்க வந்துள்ளோம். விரும் பும் எழுத்தாளர்கள் தொடர்பு கொள்ளவும் நிர்வாகி: எஸ். ஜே பதிப்பகம் 43. பிரப்பங்குளம் வீதி, யாழ்ப்பாணம்.
அவர் ஒரு . .
இந்த கனவான்களால் உண் மையான இலட்சியதாகத்தைப் புரிந்துகொள்ள முடியாது.சொர்க் கத்தையே கொடுத்தாலும் நர கத்திலே தள்ளி வதைத்தாலும் என்னுடைய இலட்சியத்தைக் கைவிடமாட்டேன் என்று சொல்
லும் இலட்சிய வெறியைப் புரிந்
துக்கொள்ள முடியாது. தங்கள் பையிலே எவ்வளவு பணம் சேரு கிறது என்ற ஒரு விஷயம்தான் இவர்களுக்கு முக்கியம். ஆனல் மாாக்ஸ் இந்த ரகத்தை சேர்ந்த வரல்ல என்பது இவர்களுடைய துரதிர்ஷ்டமே. ஒரு புரட்சிகர மான இயக்கம்தான் அத்தகைய மனிதரைப் படைக்க முடியும், அத்தகைய தகுதிகளைக் கொண்ட ஒரு மனிதர்தான் புரட்சிகரமான இயக்கத்தை உருவாக்க முடி 4,

கார்த்திகேசு சிவத்தம்பி
நவீன தமிழிலக்கியத்தின் பண்புகளும் கருத்துநிலை அடிப்படையும்
நிவின தமிழிலக்கியம் பற்றிய எமது விமர்சன ஆய்வு கள் அவற்றின் பொருள்பற்றியோ அன்றேல் உருவம்பற்றியோதான் பெரும்பாலாகவுள்ளன. ஆசிரியர் நிலை நின்ருே அன்றேல் இலக்கிய வகை நிலைநின்ருே அல்லது விவ ரிக்கப்படும் பொருள் நிலைநின்ருே இந்த விமர்சன ஆய்வுகளை மேற் கொள்வது பட்டப்பின் ஆய்வுக களின் அமைப்பியலாகியுள்ளது.
ஆனல் இந்த நவீன தமிழி லக்கியங்களின் அடிப்படையான "நவீனத்துவத்தை’’ இனங்கண்டு கொள்வதற்கு அதாவது நவீன இலக்கியம் என்று நாம் கொள் ளும் தமிழிலக்கியங்கள் அதற்கு முந்தியதமிழிலக்கியங்களிலிருந்து
எவ்வாறு வேறுபடுகின்றன என் பதை அறிந்துகொள்வதற்கும் அந்த வேறுபாட்டின் தன்மை எத் தகையது எ ன் ப ைத விளங்கி கொள்வதற்கும், எமது ஆய்வு, மேற் குறிப்பிட்ட ஆய்வு முறை களிலிருந்து சிறிது வேறுபட்ட தாக இருத்தல் அத்தியவசியமா கிறது.
நவீன தமிழிலக்கியத்தின் பண்புகளை ஆராய்வதற்கு முன் னர் சொல்நிலைப்பட்ட ஒரு வேறு பாட்டையும் நாம் உ ண ர் ந் து கொள்ளவேண்டும். “இக் கா ல
இலக்கியம்’ அன்றேல் “தற்கால
இலக்கியம்’ என்ற சொற்ருெட ரைப் பயன்படுத்தாது ' நவீன இலக்கியம்’ எ ன் ற சொற்ருெ டரை ஏன் பயன்படுத்த வேண்டு மென்பது பற்றிச் சிறிது சிந்திக்க வேண்டும். இக்காலத்தில் தோன் றும் இலக்கியங்களிற் சில இன் னும் மத்தியகால இலக்கிய மரபி னின்றுவேறுபடாதனவாக உருவி

Page 7
லும் பொருளிலும் பெரும்பாலும் பிரபந்தவகைகளேப் பின்பற்றியன வாக (உரைநடையில் எழுதப்பட்
டனவெனில் விளக்கவுரை நெறிப்
பட்டனவாக) இருக்கும் தன்மை யை நாம் அவதானிக்கத்தவறமுடி யாது. இலங்கைத் தமிழிலக்கியத் தை உதாரணமாக எ டு த் துக் கொண்டால் புதுக் கவிதைகளும், நாவல்களும் வெளிவரும் இதே நாட்களில் தலபுராணங்களும் வெளிவருவதை நாம் அவதானிக் கத் தவறக்கூடாது. கால இயைபு, காலச் சித்தரிப்பு, வாசகFடுபாடு போ ன்ற வற்றை ஆதாரமாகக் கொண்டு நோக்கும்போது இவற் றையும் ‘நவீன’’ தமிழிலக்கியங் கள் என்று கூறிவிடுதல் முடியாது. எனவே முதலில் நாம்நவீன இலக் கி:பங்களின் நவீனத்துவத்தை இனங்கண்டுகொள்ளல் வேண்டும் அவ்வாறு இனங்கண்டு கொள்ள முனையும் பொழுது இலக்கியவகை களும் (நாவல், சிறுகதை புதுக் கவிதை போன்றவை) இலக்கியப்
*
புண்ணிய பாரதம்
திருச்சூருக்கு அருகே 6 கிமீ. தொலைவில் காளிமங்கலம் ஊருக்கு அருகே ஒரு குடும்பத் தைச் சேர்ந்த 5 பேர் ரயில்முன் பாய்ந்து மாண்டனர் . . . .வறுமை யின் கொடுமை தாங்கமாட்டாது அவர்கள் அவ்வாறு தற்கொலே செய்து:ொாண்டனர்.
நன்றி
நூதன விடியல்
G. L. ாரு ஞ ம் (குடும்பச்சிதைவு, பெண்ணடிமை, தீண் டா  ைம ஒழிப்பு, அரசியற் பிரச்சினைகளும்) நவீன தமிழிலக்கியத்தினை அதற்கு முற்பட்ட இலக்கியத்தினின்று பிரித்துக் காட்டுவதை நாம் அவ தானிக்கலாம். இந்த வேறுபாட் டில் உருவும்,பொருளும் மேலாண் மையுடையனவாக உள்ளன என் பது தெரியவரும். எனவேதான் முன்னர் குறிப்பிட்டது போன்று விமர்சன ஆய்வுகள் உருவிலும் பொருளிலும் தமது கவனத்தைச் செலுத்தத் தொடங்கின. இக்கட் டுரையில் நாம் மேலாண்மையு டையனவும் பெரிதும் வி த ந் து கூறப்படுவனவுமாகிய அந்தவேறு பாடுகளை விடுத்து வேருெருமட் டத்தில் இலைமறை காயாக நிற் கும் மற்றும் சில வேறுபாடுகளை நோக்குவோம்.
நவீன தமிழிலக்கியத்திற்கும். நவீன தமிழிலக்கியதிற்கு முற் பட்ட தமிழிலக்கியத்துக்குமுள்ள
முதலாவது வேறுபாடு அவற்றின்
“உற்பத்தி முறைமை ? Sடு, காணப் படுகிறது. முந்திய இலக் கியங்கள் அச்சியந்திர முறைமை யின் தோண்றல்களன்று. அவை, பிரதானமாக ஏட்டுநிலைப்பட்ட னவே. இந்தவேறுபாட்டை ஓர் அடிப்படை வேறுபாடாகக் கொள்ள முடியுமா என்ற வின எழும்புதல் இயல்பே. ஏனெனில் சற்று முன்னர்தான் நவீன தமிழி லக்கியமல்லாத தற்கால தமிழி லக்கியங்கள் இன்று தோன்றுகின் றன எ ன் பது குறிப்பிடப்பெற்
O

றது. அவையும் அச்சிடப்பட்டே வெளி யி ட ப் பெறுகின்றன. மேலும் புராதன தமிழிலக்கியங் கள் அச்சுவாகனம் ஏற்பட்டமை யை முக்கிய இலக்கியசாதனையாக இன்றும் கருதுகின்ருேம். (வாக னம் என்ற இச் சொல்லின் மு மு அர்த்தத்தையும் நாம் மனங் கொளல் வேண்டும். தெய்வங்கள் வாகனங்களில் உலாக் கொண்டு செல்லப்படுவது போன்று இலக் கியங்களும் ஆரோகணித்து எழுந் தருளும் நிலை இதனல் சுட்டப் பெறுகிறது) ஆயினும் நவீன தமி லக்கியத்துக்கும், அவற்றிற்கு மு ந் தி ய தமிழிலக்கியத்துக்கு முள்ள வேறுபாடு யாதெனில், நவீன தமிழிலக்கியங்கள் அச்சு வடிவத்தில் ஏட்டுவடிவில் இருக்க முடியாது என்பதே. நவீன தமிழிலக்கியத் திற்குமுந்தியவை ஏட்டுவடிவிலும் மனன. நிலையிலுங்கூடப் பேணப் படத்தக்வை. ஆணுல் நாவலோ, சிறுகதையோ, புதுக்கவிதையோ அச்சில் மாத்திரமே தோன்றக் கூடிய இலக்கிய வடிவங்களாகும் இங்கு அச்சு முறைமை என்பது வெறுமனே ஒருவெளியீட்டுமுறை மையை மாத்திரம் குறித்து நிற்க வில்லை. அச்சுமுறைமை இங்குஒரு வாழ்க்கை முறைமையை, பண் பாட்டுக்கோலத்தை, நா க ரி க
மாத்திரமல்லாது,
அச்சிலக்கியம் உற்பத்தியை
வளர்ச்சி நிலையைக் குறித்து நிற்
கின்றது. இங்கு அச்சுமுறைமை என்பது எழுத்தைப் பே ணு ம் முறைமை மாத்திரமன்று. அச்சு முறைமையானது எழுத்  ைத ப் பரப்பும் முறையுமாகும். அச் சு
யிற் காணப்பட்டாலும்,
11
அரியணையில் .
பரதன் மட்டுமே செருப்பை அரியணையில் ஏற்றியதாக கதைவிடாதீர்கள் * பரதன்தான் முதன் முதலில் செருப்பை அரியணையில்
என்று வேண்டுமானுல் சொல்லிக்கொள்ளுங்கள் !
- புகழேந்தி
স্বাঞ্ছsদ
முறைமை எழுத்தறிவின் (liter: Cy) குழந்தையாகவும் அதேவேளை யில் அ த ன் தாயாகவுமிருந்
ஏட்டிலக்கியத்திலும் பார்க்க
பத்தியாளனிடத்திலிருந்து அதிக தூரம் பராதீனப்படுத்துகிறது. எழுத்து முறைமை தோன்றும் பொழுதே இந்தப் பராதீனம் (alienation) 6 fill ill-gil 5 (T65. அதற்கு முன்னர் புலவனது ஆக் கம் அவளுேைல, கேட்போர் முன் னர் வாய்மொழியாகக் கூறப்பட வேண்டியிருந்தது. வீரயுக இலக் கியம் இத்தன்மையானது. எமுத்துமுறைமையுடன் தொடங் கிய டராதீனம் ஏட்டிலக்கிய நிலை ஏட்டி லக்சிய மரபு நிலமானிய உறவு முறையுடன் பின்னிப் பிணைந்து கிடந்தது அந்த நிலையில் உறவு

Page 8
கள் முற்றிலும் பராதீனப்படுத்
தப்படவில்லை. ஆனல் அச்சுமுறை மையோ முதலாளித்துவத்துடன் தொடர்புடையது. மனிதனின் தனிநிலை முக்கியத்துவத்துக்கு அழுத்தங் கொடுத்த முதலாளித் துவம், அதன் வளர்ச்சி நிதிகள் நெறிகள் காரணமாக மனிதப் பராதீனத்தை அதிகப்படுத்தும் இந்தப் பராதீனம் சமதர்மத்தின் கீழ் குறையத் தொடங்கி பொது வுடமையின் கீழ் அற்றுப் போய் விடும் அந்தநிலையில் தனிமனித முக்கியத்துவத்தின் அடிப்படை யிற் சமூக ஒருங்கியையும் ஒரு மைப்பாடும் போற்றப்படும்.
அச்சு முறைமைக்கும் ஜனநா யகத்துக்குமுள்ள கருத்தியல் நிலை சார்ந்த, வரலாறு நிலைப்பட்ட உறவினை விளங்கிக் கொள்ளும் பொழுது தான் அச்சு முறைமை நவீன தமிழிலக்கியத்தின் அச்சா னிையாக அமையும் தன்மை விளங்கும். " ل
அச்சு முறைமையின் பரவல் காரணமாக இலக்கியம் பற்றிய வரைவிலக்கணமே மாறியுள்ளது
என்பதனையும் நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும் அச்சு முறைமையின் தொழிற்பாட்
டால் ‘இலக்கிய’’ த்தின்பொருள் வாசக வட்டம் ஆகியன மாறி யுள்ளதன் காரணமாக அவ்வச்சி யந்திரத்தொழிற்பாட்டுப் பெருக் கத்தின் முன்னர் இலக்கியம் எனும் சொல் முன்னர் படுத்தப்பெற்ற அதேபொருளில்
பயன்
இன்றும் பயன்படுத்தப்பட முடி யுமா எ ன் ற வரைவிலக்கணப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.பலதரப் பட்ட ஆசிரியர்களால் பல் வேறு பல் வேறு சாதனங்களில் வெளிவருவ ன்வற்றை இலக்கியம் என்று கூறு லதிலும் பார்க்க ‘எழுத்துக்கள்’ (Writings) என்றே கூறு வ து பொருந்துமென்று வாதிடுவோர் உளர். இக்கூற்றுக் கவனமாக
பட்ட வாசக மட்டங்கட்கு
ஆராயப்பட வேண்டியது. இலக் கியம் பற்றிய புராதன, மத்திய காலக் கோட்பாடுகள் தகர்த் துள்ள இக்காலக்கட்டத்தில், கம் பனையும் கண்ணதாசனையும், திருத் தக்கதேவரையும் , சுஜாதாவை யும், இளங்கோவையும், மணிய னையும், திருவள்ளுவரையும், டாக் டர் உதய் மூர்த்தியையும் ஒரே மூச்சிற் கணக்கெடுக்க வேண்டி யுள்ள இக்கால கட்டத்தில். ஆசிரி யர்களது ஆக்கக்களை “இலக்கியங் கள்’’ என்று கொள்வதிலும் பார்க்க ‘எழுத்துக்கள்’’ என்று கூறுவது தரநிர்ணயக் கனதியற்ற வொரு நொதுமல் நிலைப் பாடாக வமையும் . “ எழுத்துக் கள் ** ‘இலக்கிய் அந்தஸ்து" க் G335f Trif? நிற்கும் இன்றைய நிலையில் . * எழுத்துக்கள்' என்று கூறிவிடு வதே பொருத்தமானதாகும்.
வளரும்
கடந்த காலச்சேகரிப்பாகவும் நிகழ்காலவிமர்சனமாகவும், எதிர் கால வழிகாட்டலுமாக அமை வதே உண்மையான படைப்பி லக்கியத்தின் இலக்கணம்.
- எஸ் அகஸ்தியிர்
12.

ரோகிணி ஒரு நட்சத்திரக் கவிஞர்
- மு. மேத்தா
குளிர்ச்சி மிகுந்த உதகையிலிருந்து ஒரு வெப்பப் பெருமூச்சு வெளிப்பட்டுள்ளது. -
இத்தப் பெருமூச்சு. . . . வெறும் மூச்சு அல்ல.
புயலாக மாறும் எரிமூச்சு. -
வாய்ப்புகளாலும் விளம்பரங்களாலும் கவிஞர்களாகச் சில பேர் காட்சியளிப்பதுண்டு. இங்கேயோ-உண்மையான ஒரு கவி இதயத்தின் உள்ளத்துடிப்பை நாம் கேட்கிருேம்.
‘நான் -
உப்பு விற்கப் போனபோதெல்லாம் மழை பெய்து உமி விற்கப் போனபோதெல்லாம்
காற்றடித்து.' - வாழ்வின் துக்கத்தை இத்தனை நேர்த்தியாய்-இவ் வளவு கடுமையாய் விமர்சிக்கும் இந்தக்குரல்-அண்மை காலப் புதுக்கவிதை உலகுக்குப் புதிய குரல்.
ஜூ நப்பாசை x
- ரோகிணி வயல்களிலே சதிராடும் .rs” எங்களது - சேற்றுப் புண் கால்களுக்கு
இலக்கியச் சிலம்பின் dF(0b)(FG5) 19556T ஊமை யாகி விடுகின்றன. அறுவடையான −
13

Page 9
மண்ணைப் போன்ற வெறுமையான மார்புகள் தளர்ந்தாடும் சதை யுருண்டைகள் --
வாத்ஸாயனரையும் முற்றும் துறந்தவராக்கி விடுகின்றன. உழைத்துக் காய்த்த
உள்ளங்கைகளோ ! - தாமரைக் கரங்களையே உவமை கூறும் கண்ணதாசனின் கற்பனையைக் கூட வற்றச் செய்து விடுகின்றன. இவ்வாறு . 1. காவியமும்
காதலும்கவிஞனின் கற்பனையும்இரக்கமற்று
எங்களை - 'தள்ளிவைத்து’ விட்டதால் கோடாரியும் மண்வெட்டியும் ஏந்தி -- குடிகாரக் கணவனுக்குக் கப்பம் கட்டும் கூலிப் பணத்திற்காக உழைப்பு மதத்தை தழுவிக் கொண்ட எங்களுக்குள்ளும்
ஒரு
சின்ன நப்பாசை
14

1லைகளெல்லாம் மெல்லத் தகர்ந்து ஒருநாள்இந்தப் பள்ளங்களை நிரப்பி விடாதா!
இலக்கியப் பிரியர்களே!
எங்களிடம் வாருங்கள்
நர்மதாவின் நல்லநூல்களை
நாங்கள் வழங்குகின்றேம்.
தமிழுக்கு வளம் சேர்க்கும் புதிய
புதுக்கவிதைத் தொகுப்புகள்.
கண்ணிர்ப்பூக்கள் உட்பட மு. மேத்தா வின் அனைத்து நூல்களும்.
சூரிய மழை - அனிதா அழியா நிழல்கள் எம். ஏ. நுஃமான் காகிதக் கனவுகள் - மேத்தாதாசன் வீதிகளை நேசிக்கும் வீணைகள் -- LITIČifluum போர்க்காற்று - முல்லையூரான் ஒரு கையெழுத்தில்லாத கடிதம் - புகழேந்தி உதய காலங்கள் - அமுதபாரதி இணை தேடும் இதயம் s - s is ஹிரோசிமாவின் ஹீரோக்கள் - மேமன்கவி
சிறுகதைகள், நாவல்கள், அறிவியல் நூல்கள்
உங்கள் தெரிவுகளுக்கு எஸ். ஜே. புத்தக நிலையம்
எங்களை நாடுங்கள் 43, பிரப்பங்குளம் லேன்,
அல்லது எழுதுங்கள் யாழ்ப்பாணம்.
15

Page 10
உறுதியோடு நடப்போம்
கைலாஸ் இன்று நம்மிடையே இல்லை, தேசத்தின் இழப்பு உலகின் இழப்பு என்பதெல்லாம் கை லா சபதி போன்ற மாமனிதனின் மறைவின்போது உணரப்படுவதுதான் உண்மை ஆனுல் அதையெல்லாம் முந்திக்கொண்டு அது எமது சொந்த இழப்பு என்பதுதான் மனதைக் கசக்குகிறது. மனித இயல்பு. எந்த வேளையிலும் எமக்காகத் திறந்திருந்த அந்தக் கதவுகள், நட்போடு அரவணேத்த அந்தத் தாய் ஆற்றுப் படுத்திய ஆசான் இன்று நம்மிடையே இல்லாதது எவ்வளவு வெறுமையையும், சோர்வையும் ஏற்படுத்திவிட்டிருக்கிறது.
இழப்பின் அதிர்ச்சி தாங்காது ஈழத்தின் அனைத்து அறிந்த நெஞ்சங்களும், எல்லாப் பத்திரிகை சஞ்சிகைகளும் துடித்துப் பதைத்து வெளிப்படுத்தியும் விட்டன. இந்த மூன்று மாதங் களின் பின்னுல் ஆற அமர நினைத்துப் பார்க்கிறபோது. இன் னும் இன்னும் காலம் செல்லச் செல்லத்தான் கைலாசபதி யின் அருமை கனம் பெறும்போல் உணர்கிருேம்.
கைலாசபதியின் சாதனைகள் பலராலும் பட்டியல் போட்டுக் காட்டப்பட்டுவிட்டன. ஒய்வு ஒழிச்சல்கள் இல்லாமல் சாத னையே வாழ்வாய் அவர் சாதித்தவற்றின் பட்டியல் மிக நீள மானது. அவ்வளவு ஏன் அதில் ஒன்றே போதும் கைலாசபதி அவர்களை நிலைநிறுத்த.
கடல்கடந்த நாடுகளிலும் அவரது சிந்தனைகள் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. ஏற்படுத்திக்ம காண்டே இருக்கும். அவரது மறைவின் பின் தமிழக சிறு சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகள் அவற்றை வெளிப்படுத்திநிற்கின்றன  ைக லா ஸ் இன்று நம்மிடையே இல்லாதது விபரிக்க முடியாத பேரிழப்பே.
ஒன்றை நினைத்துத்தான் நாம் ஆறுதல் படமுடியும். கைலாசபதி விதைத்த சிந்தனைகள் என்றும் நம்மோடு வாழும். அவர் காட்டிய பாதை நம்முன்னுல் நீண்டு கிடக் கிறது. அவர் ஊட்டிய உறுதியோடு நடப்போம்.
- மாருதன்
16

ஊனப் பார்வைகள்
அவ்விடிகாலைப் பொழுதின் ரம்மியத்தைக் குலைத்தபடி சின் னம் சிறிய கிராமத்தின் மத்தியி லுள்ள வாசிகசாலை, கோயில், பஸ் ராண்ட், சந்தி எங்கும் இதேகதை தான்.
சிறியவர்கள் பெரியவர்கள் என்று பேதமில்லாமல் எ ல் லோ ரு ம் இதேகதையை யானை பார்த்த குருடர்கள் போல் அலசுவதற் கென்ன. அனைவரின் முகத்திலும் பயக்களை. தாமும் தம்பாடுமாக வாழ்ந்துகொண்டிருந்த செல்லத் துரைமாஸ்டரும். மனைவியும் . . . . வயது வந்து ஓய்வு பெற்றுவிட் டாலும் அவரோடு ஒட்டிய "மாஸ் டர்” இன்னும் ஊர்வாயில் வாஞ் சையோடு ஊறிக்கொண்டுதான்
17
- கே. பி. கே.
இருந்தது. அன்பின் வெளிப்பா
டாக, மாஸ்டர் வெறுமனே மாஸ் டராக இருந்திருந்தால் ஒருவேளை இது நடந்தே இருக்க்ாதோ . . . . . இந்த அவலம் நேர்ந்தே இருக் காதோ. கொழும்பில் மகள் வெளி நாடுகளில் மகன் மார் கள். வீடு பணத் தி ல் கொழுத்திருந்ததால் இது என்ருல்” . . . . பணத்துக்காக இப்படி என்ருல் . . . .?
நேற்றுமாலை வாசிகசாலைவரை தளர் நடையே ஒரு அ ழ காய் எதிர்ப்பட்வர்களுக்கெல்லாம் புன் சிரிப்பும் முகச்சரிப்புமாக வந்து போயிருக்கிருர் மாஸ்டர். பூவும் பொட்டுமாய் சிரித்த முகத்தோடு கிழவி கோயிலுக்கு வந்து போயி ருக்கிருள்
ஊர் கண்டது.
இன்றுகாலை. ஒரே இரவில்
இப்படியொரு படுபாதகம். செல்
லத்து ரை மாஸ்டரும், மனைவியும் கோரமாகச் சுட்டுக் கொல்லப் பட்டு இரத்த வெ ள் ள த் தி ல்
கிடக்கிருர்கள்.

Page 11
ஊர்ட் பெண்கள் முழுவதும் அடித்தொணடை திறந்தால் ஒப் பாரி முகடுகிழிக்கக் கேட் கவா வேண்டும். ஒப்புக்காக என்றில் லாமல் அன்பிலும் அவலத்திலும் பெண்கள் குத்தி முறிகிருர்கள். மகேஸ்வரியும் அவர்களில் ஒரு த்
தியாய் . . . . . ஒருத்தியாய் இருந் ததற்கென்ன அவளுள்ளே குமு றும் புயல்,
மாஸ்டரின் பக்கத்து வீட்டுக்காரி சிவலிங்கத்தைக் கரம்பிடித்த ‘பாவத்துக்காக ’ வாழ்க்கையில் நின்மதியற்று அல்லற்படுபவள், குடி கூத்து, கூட்டாளிகள் என்று சிவலிங்கம் திரிய சீரழிந்துகொண் டிருந்த அவனுக்கு மாஸ்டரும், மனைவியும் எவ்வளவு ஒத்தட மாக உதவினர்கள். உதவி என்ன . . . .
சிவலிங்கம் மா ஸ்டர் வீட் டின் வசதிகளைப், பெரு க்கும் பணப்பெட்டியைக் கண் டு சுடு மூச்சு விட்டு * கிழடுகட்டையள்’ தாங்களும் அனுபவிக்காமல் . . . . அனுபவிக்கிற வெறி . . . . வெளியிடங்களில் இருந்தும் கூட் டாளிகள் என்று வருவதும் கூடிக்
கூடிக் குசுகுசுப்பதும், திட்டம் போடுவதும், மாஸ்டர் வீட்டையே
வேண்டாம்
சந்தேகம்
eburt 15தபாலில் உங்களைத்
சந்தா 6 இதழ்கள் தேடிவரும்.
* ஸ் ஸ் ' என்று சத்தம்
சுற்றிச் சுற்றி நோட்டம் போடு வதும் . . . மகேஸ்வரி இனம் (ரி யாத பயத் தில் கலங்கித் தான் இருந்தாள். இந்த இரவு . ம7 ஸ்டர்வீட்டில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்கிற சத்தம்.
ஊர் முழுவதும் த த் தம் போர்வையுள் சுருள்கிறர்கள். மகேஸ்வரி பதறி எழ . . . . . .
5 frt lég. ஓடிவரும் நாலைந்துபேர். இவள் அறிந்த முகங்கள். தலை ஆளாகச் சிவலிங்கம்.
*மகேசு . . . . ஒருமாதத்துக்கு இங்காலை தலைகாட்டமாட்டன். ஆரும் கேட்டால் கொழும்புக்குப் போய்விட்டதாய்ச் சொல்லவே ணும் சரியா’’ அவனே தலை ஆட்டுகிருன்.
இவள் செய்லிழந்தவளாய். அதிர்ச்சியில் அடிபட்டு
கணவன் ஒருபுறம் மனச்சாட்சி மறுபுறம். எந்தப்பக்கமும் சாய முடியாமல் தத்தளித்து மகேஸ் வரி தலை தலையென்று அடித்து நிமிர்கிறபோது . . . . . . .
ஊரின் குரலாய் ஒரு பெரிய மனிதர் கூறுவது கேட்கிறது.
‘இவங்களுக்கொரு விடுதலை . . இயக்கம் மண்ணுங்கட்டி இந்த வேலை செய்திருக்கிருங்களே
பாவியள்’
ஊரின் ஊனப் பார்வையை நேராக்க மகேஸ்வரி க ண வனே இழக்கவும் தயாராணுள்.
as Kos
18
 

ஆ. சபாரத்தினம் SLLSMMMSLLCCLLSSSSSSMLSSSCLSSLLSCCSCSSSLSLSLS LMMSLSLMSLSLSLSLSLSLSLSL
:ல்பே (ர்ட்) கெழு
-- பித்த உலகில்
சிந்தனைத் தெளிவை நாடிய இலக்யகர்த்தா
“பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக்களிறெனும் அவா விடைப் பிழைத்தும்'
-- மாணிக்கவாசகர்
* குறிக்கோள் இலாது கெட்டான் '
- அப்பர்
- அவரது முதற் புத்தகம் 'சிஸிஃபஸ் புராணம்' 1940ல் வெளிவந்தது. கொரிந்த் நகரவேந் தன் சிஸிஃபஸ், கிரேக்க ஆதி கவிஹோமர் அவனை மனிதருள் பெரிய அறிவாளி எனக் காட்டு -- ; கிருர் அவனுக்குத் தேவர்களின்
குத்தறிவு சிறிதும் அற்ற, இரகசியங்கள் தெரியும். ஈசோப பைத்தியகார உலகில் ஓர் இலட் ஸின் புதல்வி ஈஜினுவை ஜுபிற் சிய உணர்வுடன், இயல்பான றர் அபகரித்துச் செல்கிருர் அவள் "?'' ನ್ಪಿ ಛಿ:-* ಆಲ್ಜ್ டுகிருன். சிஸிப்பைஸ் தனக்குத் #ع இடையருது முயன்ருர் கெமு. தற் தெரிந்த அப்பெண் பற்றிய உண் கால மனிதன் முகம் கொடுக்க மையைச் சொல்லச் சம்மதிக்கி வேண்டிய மிக அவசரமான பிரச் ருன். ஆனல் ஒரு நிபந்தனையிடுகி ான இது என்று நம்பினர். முன் ஈசோபஸ் தனது கொரிந்த்
9

Page 12
நகருக்குத் தண்ணிர் வழங்கவேண் டும். தன் குடிமக்கள் நீர் பெற்று நல்வாழ்வு வாழ அவன் வானவர் களின் இடிமின்னல்களைத் தாங் கினுன் கீழ் உலகில் த ன்ட ன பெற்ருன். -
மற்முெரு கதையின்படி சிஸிஃ யபஸ் மரணதேவனைச்சிறைப்பிடித்
ஒரு கடிதம் இலக்கியமாகிறது
இலக்கியம் என்றதுமே நம் மவர்கள் நாவல், சிறு க  ைத , கவிதை; என்று அவ்வளவோடு நின்றுவிடுகிருர்கள்என்று வல்லிக் கண்ணன் அவர்கள் தீபம் இத ழில் மனம் வருந்தி எழுதியது. சில ருக்கு நினைவிருக்கலாம். வெளி நாட்டில் உழைத்துக்கொண்டி ருக்கும் தமையனுக்கு இங்குள்ள சகோதரி எழுதுவதாக ஒரு சிறிய கடிதம் சிரித்திரனில் வெளிவந் திருக்கிறது.
சிறிய கடிதம் மட்டுமல்ல ஒரு துணுக்குக்கூட இலக்கியஅந்தஸ்து பெறமுடியும் என்பதை உணர்த் துகிறது அந்தக் கடிதம்.
அதனை எழுதியவரை வாழ்த் துகின்ருேம் படிக்கத்தவறியவர் கள் பெப்ரவரி சிரித் திரனை த் தேடிப் படியுங்கள்.
தான். கீழ் உலகின் தேவ னு ன புளுற்ருேவின் இராச்சியத்தில்மரணதேவனின் கருமம் தடைப் பட்ட காரணத்தால் - யாருமே குடியேறவில்லை. புளுற்ருே களையி ழந்த தன்பேரரசைப் புனரமைக் குமாறு போர்த்தேவனை ஏவிவிடு கிமுன், அவன் மரண தேவனை சிறையினின்றும் விடுவிக்கிருன்.
சிஸிஃபஸ் பற்றிய வேருெரு கதை. மரணத்துக்கு மிக அருகில் இருந்த அவனுக்குத்தன் மனைவி பின் அன்பைப் பரீட்சிக்கும்ஆசை வந்தது. தனது பிண த் தைப் புதைக் காது , பொதுசனங்கள் உலாவும் சதுக்கத்தின் நடுவில் போடும்படி கட்டளையிடுகிருன்பூமியில் மறைந்த அவன் உயிர் கீழ் உலகில் தோன்றுகிறது. அவ னுக்குத் தன் மனைவி தன் கட்ட டளைக்குக் கீழ்படிந்துதான்சொன் னபடி செய்தது இயற்கையான மனித நேசத்துக்கு மாரு னது என்ற எண்ணம் உண்டாகிறது. அவன் புளுற்றேவிடம் உத்தரவு பெற்றுப் பூமிக்குத் திரும்பி வரு கிருன், தன் மனைவியைத் தண்டிக் கும் பொருட்டு, ஆனல் இவ்வுல குக்கு மீண்டதும், நீரையும் சூரிய ஒளியையும் சுவைத்து அனுபவித் தும், அவனுக்குப் பாதாளத்து இருள் வாழ்வுக்குத் திரும்ப விருப் பம் இல்லை மீண்டும் அழைத்தும், கோபக் குரல் கொடுத்தும், எச்ச ரிக்கை செய்தும் அவனை அசைக்க முடியவில்லை. பல ஆண் டு கள்
20

குடாக்கடலின் அழகில் மூழ்கியும் புவியின் சிரிப்பில் ஆனந்தம் பெற் றும் அவன் இவ்வுலகில் வாழ்ந் தான். தேவர்கள் ஒரு கட்டளை பிறப்பித்தனர் தே வ தூ த ன் மேர்க்குரி (புதன் ) துணிவுமிக்க அம்மானிடனைப் இவ்வுலக இன் பங்களினின்றும் விலக்கி கழுத் தைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு போய்க் கிழக்கில் தண்டனை வழங் கின்ை. அவன் பெரிய பாழுங்கல் ஒன்றை மலையின் அடிவாரத்திலி ருந்து உச்சிவரை உரு ட் டி க் கொண்டு போகவேண்டும். உச்சி யில் களைத்து நிற்கும்போது - நீங் யது என்று வி ய ர்  ைவ  ைய த் துடைக்க பாருங் கல் தன் சுமை காரணமாக உருண்டு மீண்டும் கீழே வந்துவிடும் அவனது முடி வற்ற பணி மீண்டும் ஆரம்பமா கும். தேவர்கள் பயனற்ற நம்பிக் கையிழந்த கடின முயற்சியை விடப் பொல்லாத த ன் டனை வேருென்று இல்லை என நினைத் தது நியாயமானதே.
இப் பெளராணிகக் க  ைத எமக்கு எதை உணர்த்துகிறது
கெமு அன்றைய ம னி தனது
அபத்த நிலையைப் பிரதிபலிக்கும் வீர புருசனே சிஸிஃபஸ் எனக் காண்கிரு?ர். தனது ஆசைகளுக்கு ஊடாக கொடுந்துன்புறுத்தலுக்கு ஊடாக, அவன் அவளுகை இருக் கிருன் தேவர்களின் மீது கசப்பு, மரணத்தின் மீது வெறுப்பு. வாழ் வின் மீது தீராக்காதல் எல்லாம் சேர்ந்து அவனுக்குவருணனைக்கு
'பாற்பட்ட த ன் ட னை  ைய
வாங் கி க் கொடுத்தன, அவனு டைய சக்தியனைத்தையும் ஒன்று சேர்த்து முயன்றும் ஒரு பயனும் கிடைக்காத நிலைக்கு அவன் தள் ளப்பட்டான். இம் மண்ணுலக ஆசைகளுக்கு விலையாகக் கிடைப் பது இந்நிலையே. கீழ் உலகத்தில் சிஸிஃபஸ் என்ன செய்தான் என நாம் அறியோம்.
பெளராணிகக்கதைகள்குறை யாக நிற்பவை, எமது கற்ப னே அவற்றுக்குள் உயிரைப் புகுத்த வேண்டும். இந் தக்க  ைத யில் , '
உடம்பு முழுவதும் கடின முயற்சி
செய்து பெரிய பா முங் கல் லே உருட்டி, மலை ச் ச ரி வி ல் மேல் நோக்கி ஒரு நூறுமுறை செல்கி றது. முகத்தில் முத்துபோல் வியர் வைவழிய தோல் சுருங்க தசை நார்கள் குறுகிவளைய, தோளையும்
கன்னத்தையும்கூட க் கல்லின்
படைப்பாளிகளுக்கு!
உங்கள் படைப்புக்களை எங்களுக்கு அனுப்பி உங்களை எங்களுக்கு இனம் காட்டுங்கள் உங்களை நாங்கள் உலகுக்கு இனம்காட்டுவோம்
முகவரி:
ஆசிரியர் - மாருதம் 43, பிரப்பங்குளம் லேன் யாழ்ப்பாணம்.

Page 13
புதிய பாதை “பாதை இல்லையே’
என்றெண்ணுதே தொடர்ந்து நட
உனது நடையே - புதியதோர் பாதையைப் போட்டுக் கொடுக்கும்
- அமுதபாரதி
みエ
மீது பொருந்தி, காலால் பொறுப் புக் கொடுத்துக்கொண்டு மீண்டும் தோள் கொடுத் துத் தள்ளும் செயற்கரும் செயலைக் கற்பனை செய்து பாருங்கள். முயற்சியின் இறுதியில் வானமற்ற வெளியில், ஆழம் காண முடியாத காலத்தில் சாதனையின் முடிவை, இலட்சி யத்தின் நிறைவைப் பார்க்கிருேம் பின் சிஸிஃபஸ் அந்தப் பாருங் கல் சிலகணங்களுள் வந்தவழியே உருண்டு ஓ டி ப் பாதாளத்தை அடைவதைத் தன் க ன் ஞ ல் பார்க்கிருன். அங்கிருந்து மீண் டும் உச்சியை நோக்கி அப்பாருங் கல்லை உருட்டவேண்டும். மலையுச் யிலிருந்து சமவெளிக்குச் செல் கிருன் மன்னன்,
இந்த இடத்திலேதான் திரும் பிச் செல்லும் இந்த இடைவெளி நேரத்திலேதான், சிஸிஃபஸின் பாத்திரம் என்னைக் கவர்கிறது. கற்களுக்கு அருகே வருந்திஉழைக் கும் முகம் ஏற்கனவே கல்லாய்ப் போய்விட்டது. அந்த மனிதன்
ம ன ச் சு  ைம யு டி ஸ் பாதங்களை - அடி எடுத்து வைக்க மறுக்கும் பாதங்களைத் - தூ க் கி வைத்து வைத்துப் போகிருன். முடிவுக - ண இயலாத துன்பச் சுமையை நோக்கிப் போகிருன்அவனது துயரத்தைப் போலவே திரும்பிவரும் அந்த மூச்சு விடும் இடைவெளி - அந்த மணிநேரம் தான் - உணர்வு உயிர்க்கும் மணி, 2யர்ந்த உச்சியை விட்டு நீங்கித் தேவுக்களின் கு  ைக களுக்கு த் தாழ்ந்துவரும் ஒவ்வொரு கன மும் அவன் தனது விதிக்கு மேற் பட்டவணுகிருன் தான் உருட்டும் பாறையிலும் ருக்கிருன்.
Luitjft 't? (c?r
பலமுடையவனுயி
இந்தப் பெளராணிக் கதை அவலச்சுவையுடையதா யிருப்பது எதனுல், அதன் கதாநாயகன் உணர்வு உடையவனுயிருந்த படி யால் ஒவ்வொரு அடி எடுத் து வைக்கும்போதும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை அவ னைத்தாங்கி நிற்கையில் அவனது கொடூர தண்டனை எங்கே? இன் றைய தொழிலாளி அவனது வாழ் நாளில் ஒவ்வொரு தினமும் ஒரே வகையான வேலையே செய்கிருன் , இந்தவிதி மேற்கூறிய விதியிலும் குறைந்த அபத்தமானது அல்ல அது அவனது உணர்வைத் தொ டும் அரிய சந்தர்பங்களின் போது தான் அவலச்சுவையை எய்துறது சிஸிஃபஸ் தேவர்களின் பாட் LITGyf? (Proletar, an) Lygru.” SA GSF ui' . யும் மனப்பாங்கு உடை ய வ ன், தனது அபத்தநிலையின் பரப்ப
22

: முழுவதையும் நன்கு உணர்த் விடாது அறிவு ஒளி தெ றிக் கும் தவன் இறங்கிவரும் வேளை யில் மனேநிலை அவனது வெற்றியின் அவன் அதைப் பற்றியே நினைக்கி இரத்திலிட்ட முடியா கிறது. ரு ன் அதேசமயத்தில் அவனது உருத்து நோக்கி வெல்ல இயலாத கொடூர தண்டனையால் பைத் விதி எதுவும் இல்லை.
இயம்பிடித்து இரு ள  ைடந்து
后 咒 蚤 歌
மனித இனம் எழுந்து வந்து.
'அஞ்சாமை மிக்க ஓர் இரண்டாம்
தலைமுறை வெளிவரட்டும் விடுதலை வேட்கை நிரம்பிய மக்கள் வளரட்டும் எதையும் குணப்படுத்தும் அழகும் உறுதியுடன் பற்றிக் கொள்ளும் வலிமையும் நம் இரத்தத்திலும், உயிரிலும் விடாமல் துடிக்கட்டும். y
மனிதன் எனும் ஒர் இனம் எழுந்து வந்து அதிகாரத்தைக் கைப்பற்றட்டும்.’’
- மார்க்ரேட் வாக்கள்
அன்னம் வெளியீடான 'அறைக்குள் வந்த ஆப்பிரிக்கவானம்'
நூலிலிருந்து . . . . . . .
O 些 发 翠 当
விமர்சன வீதியில் ஒரு புதியஒளி
கைலாசபதி பல நூல்கள் உருவாகக் காரண கர்த் தா வாக இருந்தது மட்டுமன்றி பல மார்க்சிய விமர்சகர்கள் உருவாகவும் கார ணமாக இருந்தார். இலங்கைபிலும், தமிழகத்திலும் உருவாகியுள்ள எவரும் கைலாசபதியின் பாதிப்பு இன்றி உருவாகியிருக்க இயலாது என்ற அளவிற்கு ஒரு சகாப்தம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளார்.
23

Page 14
பாரதிபுகழ் பரப்பிய முன்னுேடிகள்
ஆசிரியர் பெ. சு. மணி
ஆய்வு, தேடல் இதுவே வாழ்வாக அலுப்புச் சலிப்பின்றி பாடுபடு பவர் திரு பெ. சு. மணி அவரது பல்வேறு நூ ல் க ள் ஏற்கனவே வந்து ஸ் ள ன - பாரதி புகழ் வளர்த்த முன்னுேடிகளைப் பற் றிய புதிய நூல் இப்போது வந் துள்ளது பாரதி ம க ராக வி யா என்பது பற்றிய கல்கி -வ.ரா மோதல் முழுமையாக இடம் பெற்றுள்ளது புதியதலைமுறைக்கு பயனுள்ள அறிமுகம், மணிபோன் றவர்கள் இந்த ஆய்வினை தமிழ கம் என்று மட்டும் நிறுத் திக் கொள்ளாது பரந்த அளவில் மேற் கொள்ளவேண்டும். இலங்கை , மலேசியாவிலும் பாரதி புகழ் வளர்த்த முன்னே டி கள் பல ருண்டு. பாரதிபற்றிய பார்வை கள் விரியவேண்டுமே தவிர கு
கக் கூடாது அல்லவா? -
மலரும் பூக்கள்
ஆசிரியர்; ரா. பொன்ராசன்
அழகான படங்களுடன் குழந்தை
களுக்கேற்ற சிறந்த பாடல்கள் கொண்ட தொகுப்பு.
நூல் நிலையம்
-நந்தணு
ஹிரோஷிமாவின் ஹிரோக்கள்
ஆசிரியர் மேமன்கவி
கவித்துவப் பற்ருக்குறை என் கிருர் மேத்தா முன்னுரையில். மே ம ன் கவி ஒவ்வொன்றையும் வெளிப்படுத்தப் படுகிற சிரமம் வெளிப்படையாகத் தெரிகிறது. இயலாமையின் சி ர ம ம் என்று நாங்கள் கூறினுல் அதுதான் பிரச வச் சிரமம் என்று ஒரு சிரிப்புச் சிரித்து சிம்மாசனம் ஏறத் தெரி எதுவோ அந்தச் சிரமத்துக்காகவேனும் ஒருமுறை படித்துப் பார்ப்போம்.
யாதா என்ன?
மனித சொரூபங்கள் ஆசிரியர்;- Հ
கோகிலா மகேந்திரன்
எப்படியான உருவத்தில் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளிவரக்
கூடாது என்பதற்கு முன் உசா
ரணமாய் வந்திருக்கிறது மனித சொரூபங்கள். ஆசிரியர் இளைய வர் எதிர்காலம் நிறைய உண்டு அதனை யும் எண்ணிக்கொண்டு பார்க்கிறபோது நம்பிக்கை தரு கின்றன கதைகள். ஈழத்து பெண் எழுத்தாளர்களில் வித்தியாசமா னவாரக இனம் காட்டுகிறர் கோகிலா.
24

இலக்கியச் சிந்தனைகள்
ஆசிரியர்:கலாநிதி க. கைலாசபதி
நம் காலத்தில் வாழ்ந்த சிறந்த
சிந்தனையாளரின் இலக்கியக் கட்
டுரைகளின் தொகுப்பு. பல்க லைக் கழகத்தில் ஒரு குழு அமைக் கப்பட்டு பேராசிரியரின் படைப் புகள் அனைத் தும் சேகரிக்கப் பட்டு வால்யூம்களாக வெளியிடப் படவேண்டும், என்று நினைவுவிழா வில் டாக்டர் நந்தி கூறியது முற் றிலும் சரி. ஆர்வம் ஒன்றே கார ணமாய் அங்கொன்று இங்கொன் ருக வராமல் பகுத்துத் தொகுக் கப்பட்டு தொடர் நூலாக வெளி வருவதே உரியபடி பாதுகாக்க கவும் பயன் பெறவும் சரியான மார்க்கம். அதனை வலியுறுத்துகி றது ‘இலக்கியச் சிந்தனைகள்'
மகரந்தக் கோலங்கள்
ஆசிரியர்: வசந்தரூபன்
கன்னிப் படைப்பு. கவிதைகள்
முழுவதும் விரசம், சரசம். சரி முரசம் எப்போது?
வேழம் படுத்த வீராங்கனை ஆசிரியர் : கவிசேகரன்
அரியான்பொய்கை
வீராங்கனை அரியாத்தை யானை அடக்கிய வரலாற்றுக் கதையை அந்தப் பிரதேசத்தில் தோன்றிய எழுத்தாளர் முல்லைமணி, பால மனுேகரன் ஆகியோர் சிறுகதை, நாவல்களில் பயன்படுத்தியிருக் கிறர்கள். அதேகதையை கவிசே கரனின் படைப்பாக நாட்டுக் கூத்து வடிவில் படிக்கின்றபோது புதிய அனுபவம்.
ஈழத்திலிருந்து ஒர் இலக்கியக் குரல்
ஆசிரியர்: டொமினிக் ஜீவா ஆசிரியருக்கு இயல்பாக அமைந்து விட்ட போர்க் குரல் ஈழத்து இலக்கியத் துறையின் பல்வேறு பிரச்சினைகளையிட்டு வெவ்வேறு காலப்பகுதியில் ஓங்கி ஒலித்தவைபதிவாகியிருக்கின்றன எதிர்காலத்திற்குச் சொந்தமாவ தற்கு. முழுவதும் படித்து நிமிர் கிறபோது ஆசிரியர் பற்றிய பகு திகளை நீக்கி ஈழத்தின் இலக்கிய குர ல் என்ற தலைப் பிலேயே தொகுத் திருக்கலாம் என்று எண் ணத் தோன்றுகிறது.
காத்திருக்கின்றன கவனிப்புக்காக.
இரண்டாவது சூரியஉதயம் X காகிதக்கனவுகள் X நாணலின் கீதை X இனி பொறுப்பதில்லை X பஞ்சமர் X அழியாநிழல்கள் X போர்க்காற்று
X அக்கினிக்குஞ்சு
25

Page 15
சமர் . . . தொடர்ச்சி
குடி கூத்து,ஊரில் பெயர் பெற்றுத் திரிந்தாலும் ‘ஆம் பிளை' என்றுதான் சிதம்பரிச் சாத்திரி மூலம் பேச் சு’ வைத்து சோறு கொடுப்ப தோடு 'கல்யாணம்" முடிந் தது. 'தான் புருசனத்திருத்த வில்லையா' என்பது அருள மணியின் சமாதானம். அது சிதைந்து . . . . ஒரு சின்னக் கீறலைச் சாக் காக வைத்து ‘இனி ஒருத்த ரும் வீட்டிலே இருக்கப்படாது வெளியே போங்க" என்று விட்டான் கனகரத்தினம். வீடு வளவைச் சீதனம் கொடுத்தி ருந்தாள் அருளமணி.
குஞ்சுகளும் தாயுமாக ஒரே இரவில் வெளியேறி. பாழ்பட்டு கிடந்த அர சாங்க நிலத்தில் ஒரு குடிசை அமைத்து . . . .
மணியத்தார் தலைமையில் கிராமசேவகரா, கிராமசேவ கர் தலைமையில் மணியத் தாரா என்று இனம் காண முடியாதபடி ஒருவருக்கொரு வர் குழைந்தபடி வருகிருர் கள். அருளமணியின் குடிசை முற்றம்.
காலில் தைத்த நெருஞ்சி முள்ளை எடுத் தெறிந்த படி
களுக்கென்ன..”*
விதானையின் வாயால் மணி பத்தார் பேசுகிருர்
“கவுண்மேந்து காணி ஒழுங்குமுறையா எழுதி எடுக் க வேணும் நினைச்சமாதிரிப் பிடிக்க ஏலாது. . . ஏழுநாளைக் குள்ள எழும்ப வேணும் சொல்லிப்போட்டன்’ இப் போது மணியத்தார் தன் வாயாலையே பேசினர்.
எங்களுக்குக் காணி பிடிக்கத் தெரியாமலே விட் டனங்கள் சட்டம் தெரியும் பேசாமல் இருந்தம்
‘நான் எங்க ஐயா போவன் இந்தக் குமர் குஞ்சுகளோட
‘எங்க போவியோ எங் மணியத் தார் ஊற்றப்போகும் JFחrחתr யம் விதானையிடம் இப்பவே வேலை செய்தது.
‘இந்த கொட்டிலை விட் டால் வேறகெதி இல்லை ஐயா? இல்லையா . . . இல்லைக் கேட்கிறன் ஏழுநாளிலை எழும் −Lg_69" V__וחנL ‘எழும்பாட்டில்’
“பொலிசு வரும் வந்து எழுப்பும்'
அதை விரும் பாத வர் போல் விதானையாரைக் குறு க்கு மறிப்பு மறிக்கிருர் மணி யம்.பாவம் விதானையார் அந் தளவுக்குப் போகவேணும் .
26

இஞ்சேர் அருளமணி ஏழு நாள் தவனை தாறதே பெரிய காரியம். வேற ஒழுங்கைப் பாரு.
ஏழு நாள் தவணைக்குள்
மணியத்தார் பலஅலுவல்கள்
பார்த்து விட்டார் போக வேண்டிய இடங்கள் எல்லா வற்றுக்கும் பக்கத்துக்கு ஏழு பிழைவிட்டு பட் டி சன அனுப்பிவிட்டார். விதானை மூலம் “பொலிசு’ என்று ஒரு வெருட்டு விட்ட் தற்கென்ன மணியத்தார்அவ் வளவுக்குப் போகாமலே குடி யெழுப்பலாம் எ  ைறு எண் னிக்கொண்டார் .பொலிசில் அணைவுக்குப் போனல் தன் பெட்டிக்கு மெத்தச் சேதம் என்பது கை சுட்டுக் கொண்ட f. TD.
வயிறு நிரப்பிய நன்றி மறவாமல் ஏழாவது நாள் விதானை வந்தார்.
“அவளவைஇன்னும் எழும் பயில் லை யா? விடு நானே பிடுங்கி எறியிறன் தண்ணி ஊற்றினல் இன்னும் துள்ளு வார் என்று மணியத்தார் வார்த்தார் நடவுங்க ஒரு கை பார்ப்பம்’ இருவரும் நடந்தார்கள் அவர்களின் பின்னல் மணியத்தார் வீட்டு நாய் *வள் வள் . . . **
தேவன் மாஸ்டர்
இளவாலையில் பாரதி விழா
கண் பார்வை குன்றிய நிலையில் நடக்கவும் இயலாதநிலையிலிருந்த ஒருவரை இரண்டுபேர் கைத்தாங் கலாக அழைத்து வருகிருரர்கள். அவரே விவாத அரங்குக்கு தலை மை வகித்து’. சபையில் உற்சா கம் கரைபுரண்டது
தேவன் மாஸ்டர் நீதிபதி என்ருல் கூறவாவேண்டும் கடைசி மூச்சுவரை பொது வாழ் வில் உழைத்தவர் அவர்,எழுத்தா ளராக , மொழிபெயர்ப்பாளராக சொற்பொழிவாளராக, நாடகநெ றியாளராக.அடுக்கிக்கொண்டே போகலாம். பல்துறை வேந்தர் அவர். அவரது ஆத்மா சாந்தியடைந்தி ருக்கும்,
Ms.
மரத்திடியில் அண்ணுந்து
நின்று. துள்ளிக் குதித்து குரைக்கிறது கொழுப் புக்
d3h5@ðDDT ul. . . . "
'95IT... 5IT...
நாலு திசைகளிலுமிருந்து பறந்து வந்த காகங்கள் சுற் றிச் சுழன்று மோதுகின்றன “வள் வள்’’ ஐயும் மறந்து கண்மண் தெரியாமல் ஓடியது மணியத்தார் வீட்டு நாய்
நாய்க்குத் தெரிய ஈ து தனக்கு மு ன் பே மணியத் தார் வீடு போய்ச் சேர்ந்தது.

Page 16
முல்லையூரான்
SLSLS SLSLSLSLSLSLSLSLSSTiSMSMAHASSSLSLSSSLLLLrLLkLkLE STS
முரசுகள் முனகுவதில்லே
மனிதரிலாத் தீவிலெனே வாழவிடும் வேண்டுவதோ சகவாசமிவர்களோடு மனிதரிலாத் தீவிலெனை வாழவிடும் எங்கள் அல்பத்தின் பக்கமெலாம் கோர முகங்களின் குடியிருப்பு சீச்சீ வீசுங்கள் தூர அதை கத்தி நீதிபதியின் கறுப்புத் தீர்ப்புகளால் வெள்ளைத் தாள்களெலாம் 'இரத்தம் மணக்கிறது பூப்போல் புழுதியெனப்படுக்க பயங்கரத் தீ சுடுகிறது பரிசுத்தம் பேசும் பஞ்சணை எல்லாம் தோழனின் எலும்புக்கூடால் நிமிர்ந்தே இருக்கிறது நிழல் பிடிக்கும் ஒடுகளே நீங்கள் எந்தத் தோழனின் மண்டை ஒடுகளோ? நாளையிவர் வானத்தைக் கிழித்து - மனித பிணத்தை போலாங்காங்கே வீசிடலாம் வானச்சந்திரன் ஹரிஜனணுணுல் வாவென இழுத்து வாளால் வெட்டலாம் போம்போக்கில் காற்றையும் மறித்து குரல்வளை கிழிக்க உத்தரவிடலாம் நாளைய “ஸ்பெசல் கடைகள் வாசலில் தொழிலாளர்களின் தசையுமாகலாம் வேண்டுவதோ இவர்நேயம் மனிதரிலாத் தீவிலெனை வாழவிடும்
28

இப்படி இக்கொடு ஆமார்
பூமிப் பட்டறையிலிட்டு இதயம்
<9:1Ք Վlէք . . . . அழுதுபுலம்பவும் བ་
கேள் கேள் என்று போதம்வந்தது மகத்துவமோ மனிதரிலாத் தீவுமக்கு போங்காண் புதுக் கவிஞ! உரமற்றுப் போன இதயமண்கிளறு தளிர் விடு! தழை! ஓங்கு! மனிதரைப் பற்று சுற்றிப்படர்
ஆமா ரெல்லாம்
அமுதமாகும்
அன்றேல் அவருனை முறித்துப் போடினும் அம்மரணம் உனக்கு மகத்துவமானதே எங்கே எழுதளிர் தழை ஒங்கு!
இவர் இப்போது?
புத்தகப் பூங்காவினுள் மூழ் கியபோது ஒரு பழைய நூல் அகப் பட்டது. ‘* ஏ ன் வேண் டாம் இந்தி ' அதன் பதிப்புரையில் இப்படி இருந்தது நூலாசிரிய ரைப் பற்றி . . . . .
1965ல் தமிழக மாணவர்கள் இந்தி எதிர் பு அறப்போரில் முனைந்து ஈடுபட்டிருந்த நேரம் அப்போதைய கோவை மாவட் டக்கலெக்டர் திரு. இராமநாதன் கோவைக் கல்லூரி முதல்வர்க ளின் கூட்டம் ஒன்றைத் தமது அலுவலகத் தில் நடத்தினர்.
‘மாணவர் போரினை முறியடிப் பது எப்படி? என்பதுதான் கூட் டத்தின் முக்கிய நோக்கம். ‘அர சினர் கலைக் கல்லூரி மாணவர் துரைக்கண்ணுவை கல்லூரியிலி ருந்து டிஸ்மிஸ் செய்தால் போரா ட்டம் ஒடுங்கிவிடும் என்று பலரும் கூட்டத்தில் கூறிஞர்கள்.
இருபது வருடங்கள் ஆகிவிட் டன. இவர் இப்போது?
நீங்கள் ஊகித்து வையுங்கள் தேடி அறிந்து அடுத்த இதழில் எழுதுகிருேம்,
உழைப்பு
உழைப்பைக் காட்டிலும் மனிதனை மேன்மையுறச் செய்வது
எதுவும் இல்லை. உழைப்பின்றி நாட்ட இயலாது.
மனிதன் தன் கெளரவத்தை நிலை
- லியோ டால்ஸ்டாய்
29

Page 17
தீவகம் அளித்த தீந்தமிழ்ப் புலவர்
- சுப என்
தீவகம் தமிழுக்குப் பல எழுத்தாளர்களையும், கவிஞர் களையும் தமிழுலகுக்குத் தந்திருக்கிறது. நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை ஈழத்துச், சிறுகதையின் பிதாமகர்களில் ஒருவரான திரு, சோ சிவபாதசுந்தரம் முதலாக இன்றுவரை அந்தப்பட்டியல் மிக நீளம் அந்தப் பட்டியலில் காவலூர் கவிஞர் ஞா. ம. செல்வராசர் எத்தகைய இடத்தை வகிக்கி ருர் என்கிற கேள்வி கவிஞரைக் காணச்சென்றபோது மனதில் மேலோங்கியிருந்தது.
கவிஞர் நோய்வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தார். முது மையும் வறுமையும் அவரைக் களைப்பில் ஆழ்த்தியிருந்தது அதனையும் மிஞ்சி எமது சந்திப்பின் உற்சாகம் அவரை எழுப் பியது. தனது புலமையை வாழும் சமூகம் உரியபடி கெளர விக்காததும் தனது படைப்புக்களின் அருமையை உணராத தும் கவிஞரின் ஆதங்கம். பேச்சில் தெரிந்தது. வெகுண்டு ஒடு பவன் அக்கம் பக்கத்தை கவனிக்காதுபோல் சமூகம் புறம் போவதாக அவர் மனம் குமைகிருர், நாங்கள் மறுத்தோம் உங்கள் பெருமைகளை எங்கள் இதழில் எழுதப்போகி ருேம் என்ருேம்.
புலவரிடம் பிறந்த உற்சாகம். அப்பப்பா இவ்வளவு ‘அமுக்கம் கொண்டிருந்ததா அந் தக் கலைஞரின் மனம். காவலூர்க் கவிஞர் என்றதுமே எல்லோருக்கும் ஞாப கம்வருவது “ஞானசவுந்தரி' நாட்டுக்கூத்துத்தான் பல மேடைகள் கண்ட இந்த நாட்டுக்கூத்து நூல்வடிவிலும் வெளியானது. இதைத்தவிர சாம்ராட் அசோகன், பண்டார வன்னியன், புனித அந்தோனியார், புனித வேளாங்கன்னி,
30

ஏழைபடும் பாடு முதலானவை புலவரின் கைவண்ணத்தில் தாட்டுக்கூத்து வடிவம் பெற்று மேடைபல் கண்டதோடு நூலாகவும் வந்தன.
புலவர் செல்வராசா பழமைக்கும் புதுமைக்கும் பால மாக அமைத்தவர் மரபுவழிவந்த கலைகளில் ஈடுபாடுகொண்டு உழைத்ததோடு அமையாது காலத்துக்கேற்ப இன்னும் கவி தைகள் பல எழுதிவருபவர் இரண்டு வருடங்களுக்குள் காவ லூரில் கூட்டுறவுத் தினவிழா கவிதைப்போட்டியில் இன் றைய பல கவிஞர்களைப் பின் தள்ளியவர்
புலவர் கிறிஸ்தவராக இருந்தும் நாகபூஷணி அம்மன் முருகமூர்த்தி, கண்ணகி அம்மன், வைரவர் பேரில் பல பதி கங்களும் இயற்றியிருக்கிருர். இவ்வகையில் மட்டும் ஒன்பது நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
ஏழு சரித்திர நூல்கள் எழுதியிருக்கிருர். சிந்தாகுலமாலை கல்லறைக்கண்ணிர் முதலியன பிரசித்தி பெற்றவை. முதன் முதலாக ஈழத்து கவிஞரால் காவலூர் பெருமை பெற்றது இலக்கியக் களத்தில் காவலூர் என்று பொறித்தவர் அவர் நோய்வாய்ப்பட்டு இருக்கின்ற இவ்வேளையிலும் உள்ளத் தின் வேட்கை சிறிதும் குறையாது ‘பனை’ என்ற நாட்டுக் கூத்தினை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிருர்,
புலவர் நோயிலிருந்து மீண்டு நீடு வாழ வாழ்த்துகிறேம்.
அடுத்த இதழில்:
பாட்டாளி வர்க்கத்திலிருந்து ஒரு படைப்பாளி துரைராஜா எழுதுகிறர்.
வாசகர்களே . . . . .
மாருதம் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களையும், ஆலோசனைகளையும் கெளரவிப்போம். தெரிவியுங்கள்.
31

Page 18
--மலையன்பன்
கலாநிதியே கைலாசா காலனுடன் சென்றனயோ! கண்ணிரை ஓடவிட்டு கதிகலங்க வைத்தனையோ அழுகிய வீண் அலைகளுக்கு எதிரான பாதையிலே அசையாமற் சென்றவனே அசைந்தனையோ இயமனுக்கு
மக்கள் இலக்கியத்தின் எதிரிகளை இடைவிடா தெதிர்த்துவந்தாய் எம்மவர்க்குத் துணையாக இருந்தவனே எங்குசென்ருய் மக்களுக்காய் நீ இருந்தாய் மானுடத்தை நேசித்தாய் உன்னுடல்தான் அழிந்துளது உன் விதைப்பு வாழ்கிறது இன்னும் தான் எம்மோடு இருக்கின்ற துன்சுவடு அத்தனையும் அழியாது இவ்வுலகம் உள்ளவரை
கைலாசபதியே காலனுடன் சென்றனயோ!
தட்டுங்கள்
திறக்கப்படும்
அடுத்த இதழில் உங்கள் கேள்
விகளுக்கு பதிலளிக்கிருேம்.எங்கே
உங்கள் கேள்விகளை அனுப்பி எங்
களைத் திணறடியுங்கள். ஒரு கை
பார்க்கலாம்!
கனைகள்
ஆலாலசுந்தரம் சுடப்பட்டதை
அறிந்து மனம் துடித் துப் பே7
னே' ஆட்டைக் கடித்து மாட் டைக் கடித்து மனிதனை க் சடித்த கதை போல. . . . .
எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம்
(ஈழநாடு 23-2-83) * ஆலாலசுந்தரம் எம் பிக்கு முதல் 3டிபட்ட எல்லோரும் ஆடுமாடுகள்என்பதுதான் எதிர்க் கட்சித் தலைவரின் கருத்து. அது சரி மனிதனின் அர்த் தம்அமிர்தலிங் கத்தின் அகராதியில் கூட்டணி எம்-பிக்கள் என்பதா? அண்மை
யில் இன்னென்று புதிதாக “மனி
தன் ஆகியிருக்கிறது.
- விலை உயர்வுகளுக்கு உலக வங்கியே காரணம் சர்வதே ச நாணய நிதியம், உலகவங்சி ஆகிய இரு நிறுவனங்களும் வெளிவாச லில் ' உட்பிரவேசிக்கும் நீங்கள் உங்கள் எல்லா நம்பிக்கைகளை யும் கைவிட்டு வாருங்கள்’ என அவர்கள் எழுதித் தொங்க விட வேண்டும்,
அணிசேரா மாநாட்டில் ஜனதிபதி ஜெயவர்த்தன வீரகேசரி (10-3-83) * ஜனதிபதி அவர்களே அப் படித்தான நீங்கள் உள்ளே சென் lர்கள்.
காண்டீபன்
32

விற்பனையாகிறது
முல்ல தந்த சிறந்த கலைஞர்
கவிசேகரன்
அரியான் பொய்கை கை . செல்லத்துரை அவர்கள் இயற்றிய
வேழம் படுத்த வீராங்கனே
- நாட்டுக்கூத்து
முகவரி: சமன் வெளியீடு வற்ருப்பளை முள்ளியவளை

Page 19
:: த லகின் எந்த நாட்டுக்கு
உங்கள் பயணத்தை நா பாஸ்போட் விசா வி பிரயானக் காசோலேக
அத்தனேக்கும் எங்களிட
அரிய சந்தர்ப்பம்
அடுத்த எமது தென் குழுவில் நீங்களும் இக்
, ਦੋਨ சிதம்பர தரிசனம் உட தலங்களுக்கும்
இடங்களுக்கும் யாத்தின
தொடர்புெ
யாழ்ப்பானம் பிரப்பங்குளம் பெற்று எஸ். ஜே பதிப்பகத்தி இது பி காண்டன்
 

ங்கள் இலகுவாக்குகிறுேம் மான ரிக்க ற்
քր
வாருங்கள்
இந்திய சுற்றுப் பயனக் ஒனந்து கொள்ளுங்கள்
a
| L மேற்பட்ட
பிரசித்தி பெற்ற
IIJ
Tsir T3 arris || || || LINGAN"
48. அண்ணுமலே வீதி, சுதுமலே தெற்கு மாரிப்பாய்.
XIII (DUTRS
248. A LunaThali Road. Suthumalai South Manipay.
-
峪 rsu Q變** |
பில் வெளியிடுபவர் ஆசிரியர் :