கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விடிவு 1988 (5)

Page 1
மக்கள் கலே, இலக்கியப்
8 ᏱᎼᎣᎼᏱᎼᏱᏱᎣᎣᎣᎣᎣᎣᎣᎼᏱᎼᏱᏱᎼᎣᎼ?
ब्लवः
இதழ்: 5 1989 --------------------- :
 
 
 
 

முதலாம் ஆண்டு
றைவு மலர்
------------------ பேரவையின் வெளியீடு
i----, ---------
அன்பளிப்பு ரூபா 6.00,

Page 2
WTTH BEST сомPL/мENTs FROM
HE HANNAELECTRICALS
No: O3, 2ND CROSS STREET,
COLOMBO - 11.
Tel 549936
ஏகாதிபத்தியத்திற்கும் Visit
அந்நிய ஆதிக்கத்துக்கும்
எதிராக உங்கள், கலைப் பயணம் தொடரட்டும்.
RAJAM GRAM CENTRE
Visit
AROAN BROTHERS
Wholesale and Retail
Merchants - Groceries and Oilmans Goods.
315, Layards Broadway Colombo - 14.
44OIA, Layards Broadway Colombo - 14.
Wholesale and Retail Grams Merchants.

ஆசிரியர் பீடம் இதுவரை நாம் 0 -
ஒரு சமூக மாற்றத்துக்கான கலாச்சாரப் போராட்டத்தை ஆரம்பித்து முதலாம் வருட நிறைவை அடையும் இந்த வர லாற்றுப் பயணத்தின் இடைவேளையில் எமது இயக்க செயற் பாடுகள் பற்றி மனசு திறந்து உரையாடுவதில் மகிழ்ச்சி கொள்கிமுேம்.
கடந்த 1988 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ம. க. இ. பே. மூன்று பிரதான தொழிற்பாடுகளை முன்கொண்டு முன்னேறி யது.
முற்போக்கு கலை, இலக்கியங்களை வளர்த்தல், வளரும் இளம் படைப்பாளிகளுக்கு இன்றைய அநீதியான சமூக அமைப் புப்பற்றி தெளிவு கொடுத்தலும் அவர்களை ஸ்தாபனப்படுத்த லும், போலி சந்தர்ப்பவாத கலை, இலக்கியவாதிகளை அம்பலப் படுத்துதல், காலாண்டு சஞ்சிகையொன்றை கொண்டு நடாத் துதல்.
இந்தத் தொழிற்பாடுகளின் அடிப்படையில் கீழ்வரும் சுக மான பணிகள் நிறைவேறின.
வடமேல், மத்திய, மேல் மாகாணக் கிளைகள் ஸ்தாபிக்கப் பட்டமை, பேரவையின் மாணவர் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டமை விடிவு சஞ்சிகைவெளியிட்டமை.
மேல் மற்றும் மத்தியமாகாணக் கிளைகள் மூலமாக இது வரை 10 க்கு மேற்பட்ட கவியரங்குகளும், இலக்கியக் கருத் தரங்குகளும், நூல் அறிமுக விழாக்களும் நடைப்பெற்றதோடு இரத்ததானம் வழங்குதல், இலவச நூல் விநியோகம் போன்ற வையும் அவ்வப்போது நடைபெற்றது.
பேரவையின் மாணவர் பிரிவான தேசிய மாணவர் முன் னணி மூலமாக இலவசமாக மலையகப் பகுதிகளில் கல்வி வகுப் புக்கள் நடாத்தியதோடு, மாணவர்களின் உரிமைகளுக்கு எதி ராகத் தொடரும் அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன அறிக்கைகள் வெளியிட்டமையும், இனவாதத்திற்கு அப்பாற்பட்ட மாணவர் போராட்டங்களில் பங்குக் கொண்ட மையும் விசேட நிகழ்வுகளாகும்.
இந்த ஆனந்தமான சாதனைகளுக்கெல்லாம் கிரீடம் சூட்டி யது போல் பேரவையின் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குர லாக விடிவு இதழ் வெளிவந்தமை மகத்தான வெற்றியாகும்,
അ 1 -

Page 3
இத்தகைய இனிய சாதனைகளுக்கு எல்லாம் அடிப்படையாக கஷ்டப்படும் மானுடமும், எங்கள் இனிய மண்ணுமே எங்க ளுக்கு ஆயுதமாகின. அத்தோடு எங்கள் எதிரிகளின் தாக்கு தல்களும் எங்களுக்கென்று ஒரு சாதனை மாளிகை உருவாக் கப்பட உந்துசக்திகளாகின. −
ஒன்றைத் தெளிவாக்குகிருேம்.
எத்தகைய எதிர்ப்புக்கள் மத்தியிலும், இழப்புக்களின் மத்தி யிலும் நாம் வரிந்து கட்டிக் கொண்ட இந்த வரலாற்றுப் பய ணத்தை கைவிடமாட்டோம். மரணமும் இழப்பும் எங்களின் பக்கத்துணைகளே! \
நேற்றைய நேற்றுக்களைப்போலவே - நாளைய நாளைகளிலும் நமது பணி ஆர்த்தெழுந்து வரும். குறிப்பாக ஏனைய மாகா னங்களில் கிளைகளை ஆரம்பிப்பதும், பேரவையின் ‘மக்கள் வெளியீட்டகம்" மூலம் நூல்களை வெளியிடுவதும் எதிர்காலத் தில் எழுந்து வரவுள்ள பிரதான செயற்திட்டங்களாகும்.
இவை இனிது வெற்றி பெற உங்களை பங்காளர்களாக அழைக்கிருேம்.
எமது பயனம் பற்றிய இந்த எழுத்துக்களில் எங்களோடு துணைவந்தவர்களையும் நாம் மறக்கக் கூடாதல்லவா!
தினகரன், வீரகேசரி, தினபதி, Sun ஆசிரியர் குழுவினர் களுக்கும், கொட்/முஸ்லிம் வித்தியாலய அதிபர் திரு. எம். காசிம் அவர்களுக்கும், கொட்/அனுஷா கல்வி நிறுவன அதிபர் அவர்களுக்கும் க/கலைமகள் வித்தியாலய நிருவாகத்தினருக்கும், எமது கிளைப்பணிகளில் கலந்து கொண்டவர்களுக்கும், சிறப் புரை. தலைமை வகித்தவர்களுக்கும், விடிவு இதழுக்கு அன் பளிப்புக்கள் அனுப்பியவர்களுக்கும், விளம்பரம் தந்து உதவிய வர்களுக்கும், எம்மை சுயவிமர்சன பாதைக்கு வழிகோலிய அன்புக்குரிய விமர்சகர்களுக்கும், எம்மை அதிருப்தியடையச் செய்த வீம்புக்குரிய 'அநுதாப' விமர்சகர்களுக்கும் எமது மனசு நிறைந்த நன்றிகள்! நன்றிகள்!!
எங்கள் பாதை மக்கள் எங்கள் பயணம் சுத்த சோஷலிசம்!
மீண்டும் அடுத்த இதழில் இதயங்களை இணைப்போம்!
எங்கள் எழுதுகோல்கள் ஏழைகளின் எழுச்சிகளை ஏந்தி வரட்டும்
- 2r

சமகால உலகில் ஆயுதப் போராட்டங்களும் சில அனுபவங்களும் ஹியூமன்
சமகால உலகில் ஆயுதப் போராட்டம் என்பது சர்வசாதா ரணமான விடயமாகக் கொள்ளப்படுகிறது. அதாவது மனித னின் நாளாந்த நடவடிக்கைகளில் கூட ஆயுதப் பாவிப்பு விரும் பியோ விரும்பாமலோ தவிர்க்கப்பட முடியாததாகி விட்டது.
அரசியலை பொறுத்த வரை மார்க்சிச கோட்பாடு ஆயுதப் போராட்டத்தை கட்டாயமான ஒரு தேவையாகக் கொள் கிறது. ஏற்றத் தாழ்வான, பிற்போக்கான சமூக அமைப்பை மாற்றி சமதர்மசமுதாயத்தை இஸ்தாபிக்கவேண்டுமாயின் அதற்கு மிகவும் இறுக்கமான தடையாக இருக்கும் அரசியல் யந்திரத்தை சிதைக்க ஆயுதப்போராட்டம் இன்றியமையாதது என்பதாகும். அதைத் தவிர தேசிய விடுதலப் போராட்டங் களிலும் அடக்கப்பட்ட இன, சமூக மக்களின் போராட்டர் களிலும் கொடுங்கோன்மை அரசாங்கத்தை மாற்றியமைப் பதை நோக்காகக் கொண்ட போராட்டங்களிலும் "மார்க்சிச நியாயப்படுத்தலுக்கு உட்பட்டும், உட்படாமலும்" ஆயுதப் போராட்டங்கள், இடம்பெறுவதை உலகில் காண முடிகிறது.
சமகால உலகில் நடைபெறும் சகலவிதமான (சதிகள், கொள்களகள், கொலைகள், குழுச்சண்டை, ஆயுத எதிர்ப்பு தற்காப்பு நடவடிக்கை) ஆயுத நடவடிக்கைகளும் ஆயுதப் போராட்டம் என்றும் அர்த்தம் கற்பிக்கப்படுகின்றன. அத் துடன் அவ்வாயுத நடவடிக்கைகள் தோல்வியடைவதாலும் வெற்றியடையாமல் இருப்பதாலும், சமகால உலகில் ஆயுதப் போராட்டமே சரிவராத விடயம் என்றும் ஆயுதப்போராட் டம் பற்றி அபிப்பிராயம் கூறமுயற்சிகள் நடைபெறுகின்றன.
இரண்டாம் உலக மகாயுத்தத்தை அடுத்து இஸ்பெயினில் நடைபெற்ற ஜெனரல் பிரான்கோவின் கொடுங்கோன்மைக்கு எதிராக இடதுசாரிகட்சிகள், தொழிற்சங்கங்கள் போராடின. இவற்றில் கிராபோ இயக்கம் மிகவும் முக்கியமானது. கிராபோ இயக்கத்தின் ‘அக்டோபர் முதலாம் திகதிய பாசிச எதிர்ப்பு குழுவினது ஆயுதநடவடிக்கை பிரான்கோவின் கொடுங்கோன் மைக்கு எதிரான போராட்டங்களில் மிகவும் குறிப்பிடத் தக்கது. ஆனல் ஜெனரல் பிரான்கோவின் இறப்புக்கு பின்பு இஸ்பெயினில் முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி தோன்றியது. எனினும் கிராபோ இயக்கம் உழைக்கும் வர்க்க ஆட்சியை அமைக்கும் நோக்கம் கொண்டிருந்தது என்ற அடிப்படையில் தொடர்ந்து தங்களது போராட்ட்த்தை தெர்டர்ந்தது. அதன டிப்படையில் கிராபோவின் ஆயுதநடவடிக்கை 1977,80 காலகட் டத்தில் உத்வேகமடைந்தது. ஆணுல் கிராபோ இயக்கத்திலிருந்து மக்கள் தூரவே விலகி நின்றனர். இவ்வேளை சக்தியான மக்கள் தலைமையொன்றை கட்டிவளர்க்காமல், சரியான அரசியல் சூழ் நிலைஇருந்தபோதும் இஸ்பெயினில் மக்கள் போராட்ட நடவடிக்
۔۔۔- 3 سے

Page 4
கையை விட அரசின் அடக்கும் நடவடிக்கையே மேலோங் கியது. அதைத் தொடர்ந்து மீண்டும் அங்கு பாசிசம் நவபாசிச மாக வளர்ந்தது.
1989 ஆம் ஆண்டளவில் மாஒவாதிகள் என்றழைக்கப்பட்ட வர்களால் 'செம்படை' என்ற ஆயுத அமைப்பு தோற்று விக்கப்பட்டது. டிரொக்சியதொடர்புடையவர்கள் என்றழைக் கப்பட்டவர்களால் 'ஐக்கிய டோக்கியோ யோக்கோ காமோ போராட்ட சபை" என்ற ஆயுத அமைப்பும் தோற்றுவிக்கப் பட்டது. இந்த அமைப்புக்களின் ஆயுத நடவடிக்கைகள் ஜப் பானில் பரவலாக தீவிரமடைந்தன. இதகுல்தான் ஜப்பான் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. என்ருல் பிழை யாகரது அவ்வொப்பந்தத்தை அடுத்து மேற்படி ஆயுத அமைப் புக்கள சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். பலர் கைதுசெய்யப் பட்டனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாது மேற்படி இருபோராட்ட அமைப்புகளும் 1971 இல் ஒன்ருக இணைந்தன. அது செம்படை என்ற பெயரிலேயே இயங்கியது. அந்த இணைப்புடன் அதன் அமைப்பும், நடவடிக் கையும் குறுகியது.
ஆனல் அப்படை இப்போது ஜப்பானுக்கு வெளியிலேயே இயங்குகிறது. அது இப்போது ‘உலக புரட்சியின் சாத்தியம்" பற்றி பேசிக்சொண்டு பாரிஸில் தலைமை காரியாலயத்தைக் கொண்டு இயங்குகிறது. அத்தோடு 1969 அளவில் மேற்படி அமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டபோது கொண்டிருந்த அர சியல் கொள்கைகளிலிருந்து தற்போதைய செம்படை தூர சென்று விட்டது. அது மட்டுமன்றி ஐரோப்பாவில் இருக்கும் பணம் படைத்த ஜப்பானியர்களின் பணத்தை கொள்ளை அடிப்பதையே தற்போது செம்படை அதனது, ஆயுதப் போராட்டமாகக் கொண்டுள்ளது.
துருக்கியில் கம்யூனிஸ்டுகள் பொலிஸ்படையில் ஊடுருவி அரச எதிர்ப்பு போராட்டங்களை செய்தனர். ஆளுல் அதன் எதிர்த்து துருக்கியில் அரச இராணுவ நடவடிக்கைகள் அதி கரித்தன. அத்தோடு இராணுவ ஆட்சிக்கும் வித்திட்டது இதஞல் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமன்றி முற்போக்கு ஜை நாயக சக்திகள், லிபரல் பிரிவினர் என்போகுக்கும் எதிராக அடக்குமுறைகள் தொடர்ந்தன.
இவ்வாறு உலகில் பல நாடுகளில் ஆயுத நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன. அவற்றில் மேற்கு ஜேர்மனியில் "பாடபர் - மயினேப், ஜூலை 2 இயக்கம், இத்தாலியின் றெ4 பிராகேடிஸ், பிரிமாவீனியா, என். ஏ. பி. பிரிட்டனில்' 'என் கிரிபிரிகேடிஸ்" பிரான்சில் "டிரெக்டர் எக்சன்", அமெரிக்கா
on 4 -

வில் *வெற்மன் சிம்பயோனிஸ விடுதலை இராணுவம்', உருகு வேயில் " டுபோமாரோ" இயக்கம், சிலியில் எம். ஆர். ஐ,' இந்தியாவில் நக்சலைட் இயக்கம் என்பனவற்றின் தோல்விகள் வரலாற்றில் மறக்க முடியாதவை.
மேற்படி தோல்விகளை காரணம் காட்டி ஆயுதப் போராட் டங்கள் சாத்தியமற்றவை என்ற முடிவுக்கு வர முயற்சிக்கக் கூடாது. சோவியத் யூனியனில் அக்டோபர் புரட்சி, சீனக் கம் யூனிஸ்ட் கட்சியின் மக்கள் புத்தம், 60 களில் கியூபாவில் பிடே லிஸ்டா இயக்கம், 79இல் நிக்கரகுவாவில் சண்டனி 6fח-וע" இயக்கம் என்பன வெற்றியடைந்துள்ளனவே, பெருமளவில் தோல்வி அடைந்த போராட்டங்களுக்கும் வெற்றியடைந்த சில போராட்டங்களுக்குமிடையேயான வேறுபாடுகளை உணர்ந்து அறிதல் அவசியம். ஏதாவது ஒரு நோக்கத்திற்காக ஏதாவது ஒரு குழுவினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவும் புரட்சி கரமான ஆயுதப் போராட்டங்கள் என்று கொள்ளமுடியாது என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்.
லத்தின் அமெரிக்காவில் 60 களில் மிகவும் பலமான இயக்க மாக “டுபோமாரோ" விளங்கியது அது 'பழைய இடதுசாரி களை' விடவித்தியாசமாக இயங்கி கிராமிய மக்களிடருந்து விடுபட்டு நகர கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டனர். மக்கள்சக்தி தொடர்பாக அவ்வியக்கம் கொண்டிருந்த பிழையான கருத்து காரணமாக "டுபோமாரோ இயக்கமே மக்கள், மக்களே டுபோ மாரோ இயக்கம்'என்று ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மையே தோல்விக்கு காரணமாகும் என்று ஆராயப்பட்டுள்ளது.
ஆனல் லத்தீன் அமெரிக்காவில் 1979ல் வெற்றியடைந்த நிக்கரகுவா சண்டினிஷ்டா இயக்கம் குறித்து கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம் “பழைய இடதுசாரி"களுக்கு எதிரான போக்கு லத்தீன் அமெரிக்காவில் காணப்படும் பொது அம்ச மாகும். நிக்கரகுவாவிலும் "புதிய இடதுசாரி" தலைமையே புரட்சியை வெற்றிக்கு கொண்டு வந்தது.
சோமோசாவின் அடக்குமுறைக்கு எதிராகவே சன்டினிஷ் டாக்கள் தர்களது கைகளில் ஆயுதங்களை ஏந்தினர். சோமர சாவினல் அடக்கப்பட்ட மக்களின் தொழிலாளர்களின் உரிமை களை பாதுகாக்க போராடினர். மக்களின் மத்தியிலான ஐக்கிய வெகுஜன வேலைகனே அரசியலில் பலமாகக் கொண்டனர். இது வெற்றியடைவதற்கு காரணம் மக்கள் பலம், நிதானமான சர் தேச தேசியக் கொள்கை, உறுதியான சரியான ஆயுதப் போராட்டம் என்பனவே ஆகும். சண்டினிஷ்டாவின் ol/5ver சோமோசாவினது அடக்குறையை குறிபார்த்ததேயன்றி, நேச
- 5 -

Page 5
சக்திகளே அல்ல. (பழைய இடதுசாரிகள் all ul- நேச சக்தி களுக்கு எதிராக வல்ல.)
அதேவேளை கியூபா போராட்டம் விசேட சூழ்நிலைகளில் வெற்றி அடைந்தமையையும் கவனத்தில் கொள்ளத் தவறக் கூடாது.
பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள் ஹெயிற்றி, எல்சல்வடோர். ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் கம்யூ னிஸ்ட்டுக்களின் போராட்டங்கள், பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் போன்றன முனைப்பானவையாகக் கொள்ளப்படு
கின்றன.
இதைவிட உருகுவேயில் கம்யூனிஸ்டுக்களின் ஆயுதப்போ ராட்டம் சமகால உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. உருகுவே கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ருெட்னி அரிஸ்மென்ட் தலைமையிலான போராட்டம் ஜனநாயக முறை மைக்குள் இருக்கும் நவீன காலனித்துவ பொருளாதாரமுறை மைக்கு எதிராக எப்படி ஆயுதப் போராட்டம் நடத்துவது என்பதற்கு மிகவும் யதார்த்த பூர்வமானதாக கொள்ளப்படு கிறது. விசேடமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான "தேசிய விடுதலை போராட்டத்துக் கு' உருகுவே கம்யூனிஸ்டுக் களின் தலைமை முன்னுதாரணமாகக் கொள்ளப்படுகிறது.
இலங்கையில் 1971 இல் கிளர்ச்சி முறியாக்கப்பட்டதும், தமிழர் தீவிரவாத இயக்கங்களின் ஆயுத நடவடிக்கைகளை அடுத்து இந்தியப் படைகள் இங்கு நிலைகொண்டுள்ளதும் கவனிக்கத் தக்கன. 1987, 88 காலங்களில் ஜே. வி. பியின் ரை ஆயுத, எதிர்ப்பு நடவடிக்கைகளை அடுத்தும் ஐ. தே. கட்சியை சேர்ந்த இன்னுமொருவர் ஜனதிபதியாகி இருப்பதும் கவனத் தில் எடுக்காமல் இருக்க முடியாதவை.
* மாணவர்:- என்ன சார் நம்ம நாட்டுல புதுசா டுமீல்,
டுமீல் என்று சத்தம் வருது. ஆசிரியர்- அட . அதுவா நம்ம அகிம்சா நாட்டுல கண்டு பிடிச்சுள்ள உயிர்கொல்லும் சாதனம் தம்பி அது . -புரட்சி மகன் மர்லீன் விருதோடை.
б -

கேம்பிலிருந்து ஒரு கடிதம் .
மகே ஆதரமெனிக்கே
(5 சோகக் காலைப் பொழுதில் மடல் கண்டேன்! நேற்றையப் பகலில் அடுத்தத்தெரு அஜித் நாசகாரிகள் வைத்த ஷெல்லில் தாக்கப்பட்டு செத்துவிட்டான் இன்னும் மூவருக்கும் எனது இடது பாதத்திற்கும் மெல்லிய காயங்கள் அன்பேமுந்ததாள் மாலை மூன்று யுவதிகளே "கேம்பு’க்குள் இழுத்து வந்து எனது சகாககள் கற்பழித்து விட்டனர் பின்னர், *நாசகாரி' எனச் சொல்லி நடுத்தெருவில்சுட்டுவிட்டனர் பிரேதத்தை களுகங்கைக்கு காணிக்கை auntiSoori.
அதேநாள் இரவுஇரண்டு இளைஞர்களை கடத்தி வந்து இரும்புக் கம்பியால் தலையில் அடித்து கூர்மையான ஊசியால் கண்களைக் காயப்படுத்தினர் பின்னர்; *கேம்பின்’ புத்தர் சிலை முன் “டயர்" வைத்து எரித்து
விட்டனர். மகே ஆதரமெனிக்கேமுன்போல் என்னல் முழுநோன்மதித்தினங்களில் பன்சலைப்பக்கம் போகமுடியாதுள்ளது.
* ஒரு
கால மக்களுககாக பரிநிர்வாணம் அடைந்த
புத திருககு பூ வைதது
இந்த இரத்தக் கைகளால்
எவ்வாறு பூஜிப்பது * 83 ல்
?Quỹ
முருகேசு, பார்வதி; இப்போது நந்தாவதி, நிமால் இதுவே எனது யதார்த்தம்!
* உனக்கு இவைகள்
முழுக்க அந்நியமானவை தான்! ஆனலும், ஆனலும் இநதப் பிரதேச யதார்த்தம்! இரத்தத்தால் நனைக் கப்படு கிறது. * அன்பே மெனிக்கே.
ஒன்றைச் சொல்கிறேன்; எங்களின் அழிப்புக்கள் அவர்கள் இலட்சியங்களை முழுக்க ஒடுக்காது! ஏனென்ருல்; விடுதலைப் போராட்டம்
@@ முடிவுப்புள்ளியல்ல!
தி ஆயிரம் வெற்றிகளைத் தரும் ஆனந்த ஆரம்பம்!
水
நன்றி! எனறும உன அன்பகலாக் கனவன்!
கவிஞர் நிதானிதாசன் பேராதனைப் பல்கலைக்கழகம்
- 7 -

Page 6
கவிதை
இனியும் வேண்டாம் இந்ததேசம் நாசமாகும்
இழிவு நிலை இனியும் வேண்டாம் சொந்த நாட்டில் அகதியாகி
சிந்தும் கண்ணிர இனியும் வேண்டாம். வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சும்
வெட்டிச்சண்டை இனியும் வேண்டாம்.
事 ஒற்றுமை எங்கோ மறைந்து போகும் s இனத்துவேஷம் இனியும் வேண்டாம் வேற்றுமை எங்கும் நிறைந்திருக்கும்
வேண்டா குணம் இனியும் வேண்டாம் உற்றம் உறவு எலாம் இழக்கும்
அவலச் செயல் இனியும் வேண்டாம்.
来参 岑
பயத்துடன் வெளியில் செல்லும்
பணிந்தநிலை இனியும் வேண்டாம் துயர்தரும் உயிர் பலிகள்
தாயகத்தில் இனியும் வேண்டாம் உயரி கல்வி தடை படல்
இங்கு தொடர இனியும் வேண்டாம்.
本 率 米
மனித உரிமை மறுக்கப்படும்
மாயத்திரை இனியும் வேண்டாம் பிணக்குக் கொண்டு இளைஞர்சக்தி
பாராதல் இனியும, வேண்டாம் தனக்குமட்டும் என்ற கொள்கை
தரணியிலே இனியும் வேண்டாம்.
求 米 家
+ கவிஞர் கலாநெஞ்சன் ஷாஜஹான் (கொழும்பு பல்கலைக்கழகம் )
ஹைக்கூ ஒரு புரட்சி வீரனின் இருதயத் துடிப்பின மொழிப்பெயர்த்தேன்; என்நிலம் . என் மனிதம்
நவாஸ் ஏ. ஹமீட், வெலிமடை
سے 8 سے

\ - > đ =ஒளிப்படக்கலை
=சிறு குறிப்புகள்
* எஸ். ஜீவராஜ் B. A. Dip in (phy)
இன்றைய நவீன உலகில் காணப்படுகின்ற பல்வேறு கலை களில் ஒளிப்படக்கலையும் குறிப்பிடக்கூடிய ஒன்ருகும். இன்று இக்கலைப்பற்றி அறியாதவர்கள் குறைவு என்று குறிப்பிடுமள விற்கு மிகப்பிரபல்யம் வாய்ந்ததாக காணப்படுகிறது. அக அனுபவ உணர்வுகளை குறியீடுகள் மூலம் வெளிப்படுத்துகின்ற பலகலைகளில் இருந்து சிலவேறுபட்ட அம்சங்களை புகைப்படக் கலை கொண்டிருப்பதையும் அவதானிக்க முடியும்.
ஒரு கலைஞன் தனது கலைத்துவஆற்றலை வெளிக்கொணரும் போது அது அவனது ஆளுமையையும், சுக உணர்வையும் பிரதிபலிப்பது போன்று ஒரு புகைப்படக் கலைஞனும் தான் தெரிவுசெய்யும் காட்சியமைப்பின் மூலம் தன்னைபிரதிபலிக்கிருன், இங்கு குறிப்பிட்ட கலைஞன் எதை சேர்த்துக்கொள்கிருன் எதை விட்டு விடுகிருன் என்பது மிகுந்த முக்கியம். அதாவது புகைப் படத்தை எடுப்பதற்கு அவன் தெரிவுசெய்யும் 'கமராக்கோணம்" அவனது கலைத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது.
ஆயினும் இன்று புகைப்படக் கலை, கலை என்ற நோக்கிலிருந்து புறவயமான வியாபார நோக்கில் பயன்படுத்தப்படுகின்ற ஓர் தொழில் என்ற ரீதியிலும் பலரால் செய்யப்படுகிறது. இங்கே தொழில் முறையாக புகைப்படக் கலையை தாம் அணுகும் போது அங்கு அப்புகைப்படத்தில் கலைத்துவமான அம்சங்களை காண்பது அரிதாகவே இருக்கும். இதற்கு காரணம் குறிப்பிட்ட கலைஞன் தனது அகவுணர்வுகளுக்கு ஏற்ப செயற்படாமல் மற்ற வர்களின் கருத்தை நிறைவேற்றுபவனுக காணப்படுவதாகும்.
இற்றைக்கு சில நூறு வருடங்களுக்கு முன்பு உருவாகிய புகைப்படக்கலை நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப இன்று எண்ணிப் பார்க்க இயலாத அளவிற்கு நவீனமயமடைந்துள்ளது. ஆரம்பத்தில் கறுப்பு, வெள்ளை நிறங்களில் பிடிக்கப்பட்ட படங்கள் இப்போது இயற்கையை அப்படியே பிரதிபலிக்கின்ற வர்ணப்படங்களாகவும் பிடிக்கப்படுகிறது. அத்துடன் படங்களை எடுக்கும் 'கமரா படங்களை பதிவு செய்யும் முறை ஆகிய வற்றில் கொம்பியூட்டர்’ தொழில் நுட்பங்களும் பயன்படுத் தப்படுவதனல், இது கலை என்பதிலிருந்து விஞ்ஞான மாக பரிணுமம் அடைந்துள்ளது. குறிப்பாக மருத்துவம், விண்வெளி, புவியியல், காலநிலை, பத்திரிகை போன்ற துறை களில், புகைப்படச்சலையின் பங்கு குறிப்பிடத்தக்கதாகவுள்ளது.
- 9 -

Page 7
உடைத்தால் திறக்கப்படும்
சிறுகதை ஆர். எம். இம்தியாஸ்
(பேராதனைப் பல்கலைக்கழகம்)
'உம்மா நான், திங்கக்கெலம ஸ்கூலுக்கு போகமாட்டன் . கழுவி. கழுவி ஊத்தயான இந்த சேர்ட்டை . எனக்கு வேணும்."
வீட்டை அடைந்த மகனின் வார்த்தைகளே கேட்டு, அடுப் பங்கரையில் ஈர விறகைக்கொண்டு சமையல் செய்துகொண் டிருந்த தாய் பெளசியா கலவரமடைந்துவிட்டாள்.
** என்ன. மகன் வாப்பாவும் என்ன செய்ய..? அவரும் ஒழைச்சுப்போடுருருதானே.” மனைவி தன் அன்புக் கணவருக் காக அநுதாபத்துடன் வாதாடிஞள்.
"வாப்பாக்கு என்ட தேவய நிறைவேற்ற முடியாது. தான் ஸ்கூலுக்கு போவது எப்படிம்மா..?"
“என்ன. உள்ள உம்மாவுக்கும், மவனுக்கும் சச்சரவு.?" குடிசையின் வெளிப்புறத்தில் பீடியை புகைத்தவண்ணம் அமர்ந் திருந்த காசீம் நாநா நடக்கும் விவகாரத்தை அறிய உள்ளே துழைந்தார்.
*வாப்பா, எனக்கு மாத்திரம் போட வெள்ள சேர்ட் இல்ல. உங்கட முதலாளிட மகன் மாத்திரம் நாளுக்கு நாள் புது சேர்ட்போடுருன். நான்மட்டும் ஒரு சேர்ட்டவைத்து வருஷம் முழுக்கா போடுறன். எனக்கு ஒரு புது சேர்ட் வேணும்." ر
மகனின் நியாயமான பிடிவாதத்தை காசிம் ராதாவும் உணர்ந்தார்.
"மகன். ஒனக்குத்தானே தெரியும் என்ட நாள் கூலியைப்
பத்தி. வெயிலில் படாதபாடுபட்டும் அவங்க தாரது முப்பது தானே. இதுல எப்படி எல்லா தேவையையும் சமாளிக்க." காசிம் நாநா தனது உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்கா ததன், சோக அவலத்தை விவரித்தார்.
- 10 -

'காலம் காலமா நீங்களும் ஓங்கட முதலாளிக்கு ஒழைச்சு போடுறிக்க ஓங்கட ஒழைப்பால அவங்க மாடிவீடு கட்டுருங்க. எங்களுக்கு ஒரு அடி நிலமும் சொந்தமில்ல. அவங்க கார்ல போருங்க. எங்களுக்கு ஒரு பஸ்ல போறதுக்குகூட காசுஇல்ல. இது ஏமாறுதலவார விளைவுதான். வாப்பா" இது அநியாயம் தானே..?’’
முதலாளித்துவ சுரண்டலும், அதனல் தொழிவாளர்களின் சோகமான பின் தங்கிய வாழ்வும் மகனின் பேச்சு அடையாள மிட்டது. பேச்சின் பகைப்புலத்தை உணர்ந்த காசிம்நாநா:
* மகன். முதலாளிட சொத்த பறிக்கவா. சொல்ருய்?" காசிம் தாநாவின் கேள்வி அந்த குடிசைக்குள் ஆர்த்தெழுந்தது" குடிசையின் இடதுபக்க மூலையில் தரையில் உட்கார்ந்து விளை யாட்டுத் துப்பாக்கியை ஏத்தியவாறு இருந்த மகள் மஸிதா வின் கவிதை வாசிப்பு இடையில் இருந்த மெளனத்தோடு போரிட்டுக்கொண்டது.
"இனி உடைத்தாலே திறக்கப்படும். பறித்தாலே கொடுக் கப்படும்.' விடிவினை பாடும் அந்த அழகான வரிகள் காசிம் நா நாவுக்கு மட்டுமல்ல அடிமைப்பட்டுள்ள குடிசை மனிதர் களுக்கெல்லாம் புது சேதியை சொல்லிக் கொண்டிருந்தன. *
1947 பொதுத்தேர்தலுக்கு பிறகு ஐ.தே.க. டி. எஸ் சேனநாயக்க தலைமையில் ஆட்சிபீடமேறியது. முக்கிய எதிர்க்கட்சி இன்றைய ல. ச. ச. கட்சி. வடக்கில் ஜி. ஜியா ரின் தலைமையில் அ. இ. த. கா. வெற்றி பெற்றது. ஜி. ஜி. யார் அரசில் இணைய ஆர்வம் காட்டினர். ஆனல் டி. எஸ். தயாராக இருக்கவில்லை. இந்நிலையில் டி. எஸ்ஸை நமது அண்மைய கடந்தகால தர்மிஷ்டர் ஜே. ஆர். சந் தித்து ஜி. ஜி. க்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டி ஞர். இதற்கு ஜே.ஆர் விட்ட நியாயம் என்ன தெரியுமா? ஐ. தே. க. யின் பிரதான எதிரி மார்க்ஸிஸ்டுகளே. இவர் களை எதிர்க்க ஜி. ஜி. யாரே சரியான ஆசாமி. ஆகவே நாம் அவரை பயன்பத்ெத வேண்டும் என்ருர், டி. எஸ். சும் யோசனை யை ஏற்ருர். ஜி. ஜி. யாரும் தமது "சமஷ்டி கோரிக்கையை" அம்போவென விட்டார். இங்கு ஒரு விசேடம் என்னவென்முல் சமஷ்டி கோரிக்கைகளை ஆதரித்த இடதுசாரிகள் எதிர்க்கப்பட்டதும், எதிராளி களுடன் இணைந்ததுமேயாகும்.தமிழ்ப் பிரிவினைவாதத்தை நியாயப்படுத்துவோர்கள் தமிழ்த் தலைவர்களால் விடப் பட்ட தவறுகளையும் ஏற்றேயாக வேண்டும்.
- 11 -

Page 8
89. 01. 29 அன்று நடந்த கலைவாதி கலீலின் ருேணியா வாழுமாஎன்ற புத்தகவெளியீட்டில்வாசிக்கப்பட்டகவிதை
இறுதிமரியாதை
கவிஞர் எம். பாலகிருஷ்ணன் ஒரு நாட்காலை என் வீடுட்டுக்கு கலைஞன் ஒருவன் கடிந்து வந்தான் வணக்கங்கள் கோடியென வாழ்த்தியழைத்தேன் வந்ததென்ன இன்று வளம் கொதிக்க ஏழ்மையில் வாழும் எத்தன் வீட்டுக்கே என்றமர ஏந்தி நின்றேன் ருோணியோவின் எதிரியாய் மாரில் உள்ளோர் எனையென்றும் இடித்துரைப்பார்
* இன்றில்லம் வந்திருப்பது என்னவிடயமென்றேன்
சாவுச் செய்தி யொன்றை சாற்றத்தான் வந்துள்ளேன். காலையிலேயே இங்கு கடிந்து வந்தேஞயினும் வேலை பலவுண்டு ஒய்வு எதுவுமில்லை மரனயாத்திரைக்கு மாநிலமே கூடிவிட்டது. நாழி கழியுமுன்னே நீயும் வந்திடென்ருன்
* பத்துக்குப் புதுக்கவிதையும் பதினைத்திற்கு பைந்தமிழையும்
விற்றுத்தின்கின்ற வாய்க்கொல்லி கரியப்பனே இன்று காலமானதென்றேன்! இல்லை இல்லை இரட்டைக் கொலை நடந்தின்ருேடு நாடுவிழித்துவிட்டதென்ருள்
* நிதானிதாசனும் நகரத்தில் கில்லாடியாம்
செய்து விட்டானென்று சந்தேகம் சிலபேருக்கு ஆளும் தலைமறைவாகி ஐந்தாறு நாளாம்
* இறந்தது யாரப்பா என்றிங்கு இயம்புக - நின்
விமர்சனத்தை போலிங்கு விசனத்தையும் நீட்டுகிருய் சுருக்கமாய்ச் சொல்லித் தொலைந்தால் போதுமென்றேன்.
* இனவெறி இறந்தின்று ஏழாம்கத்தம் தம்பீ
மதவெறியை இன்று மயானத்துக்கு தூக்கினம்
* மெளன அஞ்சலியை மதவெறிக்கு செலுத்தவின்று ருேணியோ வாழுமாமென்று ஊர்குழுமி நிற்குது நீயும்வந்து நின்இறுதி வணக்கத்தை செலுத்தி விட்டுச் செல்என்மூன்
- 12 -

综á G
மேடைகளில் சமதர்மம் பேச்சுப.பேசி வேடமிட்டுத் திரிந்தவர்கள் சாட்சி !
s 拳
இவர்களையே நம்பி என்ன ஆச்சு - நாம் ஏமாந்தோம் என்றேதான் பேச்சு !
事
இனி இவரை நம்புவதா? சீச்சி - நாம் எம் வழிக்குத் திரும்புவதே மாட்சி !
事
தனியுடைமை தகர்க்காத ஆட்சி எதுவும் ாமதுழைப்பைச் சுரண்டுவதே ஏய்ச்சு ! செல்வி லெனினே நுவரெலியா.
தலைவர்கள். பசுத்தோல் போர்த்திய புலிகள் எல்லாம் கைக் கட்டி வாக்குப்பிச்சைக் கேட்கும் தேர்தல் காலம் இது. பின்னர், பிச்சைப் போட்டவர்களே பிச்சை எடுக்க W மாற்றும் மந்திரக்காரர்கள் இவர்கள் ! இவர்களே தேச பிதாக்கள் புரட்சி நேசன் நிஹார் கொழும்பு.
- 13 -

Page 9
சிறு கதை ww
பயணம் எங்கே
கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ்
பண்டாரகம
大
ண்ேணிப் பார்த்தேன்; ஆக ஏழேபேர் முன்தினம் பதி குெருபேர்; நேற்றுப் பத்துபேர். விழிகள் முத்துலட்சுமி யைத் தேடின. தனியாளின் "பட்டுமாளும்’ இந்தத் தோட்டப் பாடசாலையில் நாலாம், ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கே சவால்விடும் கெட்டிக்காரி. அவளோ ஆக இரண்டாம் ஆண்டு
தான்.
*" வவுனியாவுக்கு போயிருச்சி . **விடை கிடைத்தது. நளி னியிடமிருந்து சதா யாருடஞவது சண்டையிட்டுக் கொண்டிருக் கும் விஜயகுமார், ஒரு நிமிடங்கூட சும்மா இருக்கவிடாது. "சேர் பாடம்" எனக் கடமையை உணர்த்தும் ஷர்மிளா தேவி, எந்த வேலையானுலும் முன்னுக்கு நிக்கும் நிவ்டன் குமார் ஒழுக்கத்தில் தனித்துவமான ரத்தினகுமாரி. இவர் கண்யெல்லாம் இனி எங்கே போய் காண்பது?
கிளிநொச்சிக்கும், வவுனியாவுக்குமல்லவா தேடிக்கொண்டு போக வேண்டும்.?
வரவு இடாப்பில் 94 பேர் கொண்ட ஸ்கூல் . வழமை யாக ஐம்பது பேருக்கிடையில் எதிர்பார்க்கக் கூடிய ஸ்கூல்.
இது சில மாதங்களுக்கு முன்னர், வந்ததும்தான் வந்தது ஆகஸ்ட் விடுமுறை. இலங்கை - இந்திய ' சமாதான" உடன் படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலப் பகுதியும் அதுதான்.
விடுமுறைக்குப் பின் வந்து அவதானித்த போது எல்லாம் தலை கீழாக மாறிப் போயிருந்தது.
இரண்டு லயன்கள் முற்ருகத் தீக்கிரை, இரண்டு உயிர்களின் விண்ணுக யாத்திரை: உயிருக்கே உத்தரவாத மற்ற நிலையில் நாளாந்தம் வன்னிப் பகுதிக்குப் பயணமாகும் "நாட்டின் முது கெலும்புகள்"; பிள்ளைகளை வெளியே அனுப்பக்கூடத் தயங்கும் பெற்றெடுத்த உள்ளங்கள்.
- 14 -

இப்படியான சூழ்நிலையில் ஏழுபேர் வந்ததே ஆச்சர்யம் தான். சேர், நாங்கள் போகிருேம். பரம்பரை, பரம்பரையாக வாழ்ந்த இடத்தை விட்டு போரது மனசக்கு சங்கடம்தான். ஆன உயிர்மேல் உள்ள ஆசை எங்களை ஒட்டி வெரட்டுதே. அடிக்கடி வந்து மாணவர்களின் கல்வி பற்றி விசாரிக்கும் ரூப னின் கடிதம் இதய வேதனையை இன்னும் ஒருபடி அதிகரிக் கச் செய்தது.
வரவு குறையக் குறைய ஸ்கூலை மூடிவிட்டு என்னையும் *டிரான்ஸ்பரில்" அனுப்பிவிடுவார்கள். ஆளுல்.
இந்த விஜய குமார்களினதும், முத்துலட்சுமிகளதும் எதிர் காலம்? அவர்களுடன் கொண்ட உறவுகள்.
இவற்றையெல்லாம் நினைக்கையில். அதோ வருடக் கணக்கில் "ரிபெயர்ஸ்" செய்யப்படாது இன்ருே நாளையோ இடிந்து கவிழவிருக்கும் ஸ்கூல் "பில்டிங்கின்' எஞ்சிய பகுதி யையும், ஒரு வருடத்துக்கு மேலாக கட்டப்பட்டு வரும் புதுக் கட்டிடத்தையும் காணும்போதெல்லாம் பொத்துக்கொண்டு வரும் இயல்பான எரிச்சலும் தூசளவுதான். ★
சிறுகதை என்பது என்ன ?
குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் மனித மனம் படும் பாட்டை அல்லது ஒரு பாத்திரம் இயங்குகின்ற முறை யைக் குறிப்பதே சிறுகதை.
நாவலேப் போன்ற முழு வாழ்க்கையையோ அல்லது வாழ்க்கைப் பிரச்சினையின் எல்லா அம்சங்களையுமோ இறு கதை ஆராயாது வாழ்க்கையின் அடியாகவோ அல்லது பிரச்சினையின் அடியாகவோ தோன்றும் ஒரு மனித நிலை அல்லது உணர்வு நிலையே சிறுகதைக்கு முக்கியமாகும். சிறுகதையில் பாத்திரங்கள் வளர்க்கப்படுவதில்லை; வார்க் கப்படுகின்றன. அதாவது வார்த்த பாத்திரங்களின் இயக்க நிலையில் தோன்றும் ஓர் உண்மைதான் சிறுகதையின் கருவாக அமையும். மேலும் பாத்திரங்களின் இயக்கம் வாழ்க்கையிலுள்ள ஒரு முக்கிய பண் பினை க் காட்ட வேண்டும்.
கா. சிவத்தம்பி
தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
سی۔ 15 سے

Page 10
புதிய கவிதைகள் சமூக அந்திக்கு எதிரான தர்மாவேசக் கோபமே இந்தப் பகுதி கவிஞர்களின் கிரீடம். எழுந்து நடக்க முடியாது தட்டித்தடுமாறும் இந்த இனையவர்களிடம்
விமர்சகர்கள், வேண்டாம் என்பது மரணம் முற்றுப் புள்ளியல்ல சரைந்துத் திங்கள் எனச் சுமந்த தாயே!
அழகுக் கனவுகள் எத்தனே? அந்தக் கனவுகளுக்குரிய ஆயுள்காலம் இங்கு குறைவே!
அக்கிரம ஒலைகளில் புத்தனேச் சாட்சிக்கிழுக்கும் தர்மிஷ்டத் தலைவர்களுக்கு சாங்களின் மண்டை ஒடுகள்தான் பிட்சா பாத்திரமாவதா?
svar
அன்புத் தாயே! இனத்தின் ப்ெயரால் இம்சிக்கப்படுபவர்களுக்காய் ஆரம்பமாகும் இந்தப் பயணப் பிரிவு தற்காலிகமானதே!
米:,
தாயும், தாய்நாடும் இரு கண்கள் என்பதை நீ, எனக்கு உணர்த்தியுள்ளாய்! ஆகவே - எனது பயணத்தை ஆசீர்வதி! 事
போராளிகளுக்கு மரணம் முற்றுப்புள்ளியல்ல! அம்மா!
t
செல்வி பிரமீளா கந்தையா பொகவந்தலாவ
மக்களுக்காகப் பிறந்தேன்.
மரணிப்பதில்
கிறேன். மக்களுக்காக அடைகிறேன்.
கவித்துவயாகம்
எமது வேண்டுகோள் - ஆர்"
தேடி புறப் பட
கல்யாணக் கனவு மானிட சமுதாயமே இலட்சியமனிதர்களையும் இடர வைத்து ஊர்வலம் வரும் சீதனத்துக்கு எப்போது முடிவு?
அந்த முடிவே இங்குள்ள கன்னிகளுக்கு கல்யாணக் கால கனவுகளை சுமந்து வரும்! 家
மாவனல்லைச் செல்வி ரஸ்ாளு
யதார்த்த அணைவுகள் தனியொருவனின் தர்மிஷ்டம் தாயகத்தை தாரை வார்த்துவிட்டது! 来
சமாதானக் கோஷத்துடன் வருகை தந்தவர்கள் சமாதிகளை
நிர்மாணிக்கின்றனர் »k
விதிகளில் மானிட பினங்கள் மண்டை ஓடுகளுக்குள் சுதந்திர எழுத்துக்கள்! இன்றைய ஜனநாயகம் இவையே!
புதுநகரான் அஷ்ரப் பொலன்நறுவை
மக்களுக்காகப் படைக் மகிழ்ச்சியும்
முஹம்மது சம்பந்தர்
- 16 -

புதுக் கவிதைகளும் புரியாதவைகளும்
சந்திரிகா தருமலிங்கம்
பலாங்கொடை
திமிழ்க் கவிதைக்குள் இருக்கும் இரண்டு வகையான கவிதை களில், இன்று புதுக் கவிதைகளுக்காய் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளும், விமர்சனங்களும் அதிகம் எனலாம். இதன் தோற் றம் மிக அண்மைக் காலமானது எனயாவரும் தெரிந்தே. பிச்சமூர்த்தி என்பவரால் இதன் அறிமுகம் தமிழுக்கு கிடைத் தது. ஆங்கில யாப்புக்கு அப்பாற்பட்ட கவிதைகளை கவிஞர் வால்ட்விட்மன் மூலம் அறிந்து, 1934-ம் ஆண்டளவில் புதுக் கவிதைகள் எழுதும் முயற்சியில் இறங்கியதாக பிச்சமூர்த்தி கூறிக்கொள்கிருர். ஆகவே இவரால் புதுக் கவிதை தமிழுக்கு வந்ததென கூறுவது பொருத்தமானதாகும். பதிவு ரீதியான இத் தகவலை விடுத்து - புதுக் கவிதைகள் பழ மொழிகளிலிருந்து தோன்றியவைகள் என்றும், பாரதியார் வசன கவிதைகளே, புதுக் கவிதையின் முன்னேடிகள் என்றும் வாதங்கள் தோன்று கின்றன. இவைகள் யாவும் இன்றைய புதுக் கவிதையின் தோற்றத்துடன் தொடர்புடையவை யாகும். இனி புதுக் கவி தைகள் சம்பந்தமான தகவல்களை பார்ப்போம்.
இந்திய சுதந்திர விடுதலைக்குப் பின் வளர்ச்சி பெற்ற புதுக் கவிதைகள் யாவும் இடதுசாரி கருத்துக்களையும், தனி மனித சுகங்களையும் முன்வைத்தே பாடப்பட்டன. தமிழகத்தில் எல் வாறு புதுக் கவிதைப் போக்கு இருந்ததோ அதே தாக்கங் களும் இங்கு நிகழ்ந்த து எனலாம். உதாரணத்திற்கு சில கவி தைகளைப் பார்ப்போம்.
*"கொட்டும் மழையில் / நாம் / கூலிக்கு ஏங்கையிலே | அவர் கள் / கொட்டும் மழையிலும் / குளிர்ப் பானம் குடிக்கிருர்கள் / நமது மூலதனத்தின் | தற்கால முதலாளிகள் ...' என்று (சிகரம்) தமிழக ஏடு ஒன்றில் மம்தா என்ற கவிஞர் பாடுகிருர். இதே கருத்தினை ஒட்டிய ஒரு கவிதையை நமது தேசத்தைச் சேர்ந்த வதிரி சி. ரவிந்திரன் (அக்னி இதழிலில்) இப்படி பாடுகிருர்.
'நீங்கள் / கொட்டி சிந்தி / முட்டத்தின்று வெளியே எறி யும் / மிச்ச உணவு / உங்கள் | ஒளியின் கீற்றில் / வெளிச்சமாய் | எங்களுக்கு / வெகுவாய்த் தெரிகிறது ! உங்களுக்கு / உழைத்துப் போட்ட / நாங்கள் | கஞ்சிக்கூட/ குடிக்கவில்லை."
- 17 -

Page 11
முதலாளிகள் மட்டும் உணணுகிருரர்கள் | புதிய விடிவு பூக் கும் வரை / பசி அடிமைகள் போன்ற கருத்துகளுக்குள்ளேயே புதுக் கவிஞர்கள் சுற்றிச் சுற்றி வருவதைப் பார்க்கிருேம். இருப் பினும் இவைகளை விட பல அருமையான படைப்புக்கள் மார்க் சியக் கவிஞர்கள் பாடாமலில்லை என்பதை சுட்டிக் காட்டத் தான் ஆகவேண்டும்.
பரிணுமனின் (தமிழகம்) கவிதை ஒன்றின் இடை வரிகள் வருமாறு:-
*நாம் காலத்தால் / விழித்துக் கொண்டவர்கள் / கைவிலங் குகளைச் / சூரியனில் பொசுக்கிவிட்டுக் / கரத்திற்கும் / கருத்திற் கும் ஆயுதம் தேடுவோம். இதேபோல் ராம் ஜி உலகநாதன் (இலங்கை) தோட்டத் தொழிலாளர்களை பின்வருமாறு பாடு கிருர், ' நாங்கள் / பொருளாதார கொங்கிரி ட் டூ க் கள் / மறைந்த இரும்புக் கம்பிகள். முன் சொன்ன இரண்டு புதுக் கவிதை விட பின் இரண்டு கவிதைகளிலும் உறுதியிருப்பதை அவதானிக்கலாம்.
இனி காதல் கவிதைகளை நோக்குவோம்.
*நீயென் / கண்ணின் இமையிலிருக்கும் / நத்தவனம் / இருந் தும் இல்லை எனக்குத் / தென்றல் சுகம் - என்று பாடும் தமிழகக் கவிஞர் சத்தீஷ் குமாரும் நமது கவிஞர்கள்" தேவீ நீ, ! சிரிக் கும் போது I கலகலக்கும் / முத்துப் பரல்களைப் பொறுக்க / ஓடி வந்தேன் / ஆனல் / கண்ணிர் முத்துக்களைத் தான் | அள்ளிச் செல்கிறேன்." என்று ஏ. ஆர். ஏ. ஹசீர் பாடுவதும், "தேவீ | நீயே சத்தியமாகச் சொல்லு / நான் தென்றலைத்தானே சூடி னேன் / அது தீக்குளிக்கிறதே" - என்று சொல்லும் நிதானி தாசன் கவிதையிலும் பல்வேறு ஒற்றுமைகளை காணக் கூடிதாக வுள்ளது.
அதேவேளை கவிதைகள் என்று எழுதவரும் படைப்பாளி கள் தங்களுக்குள்ளேயே முரண்பட்டுக் கொள்வதையும் புதுக் கவிதைகளில் அவதானிக்கலாம். நவசக்தி இதழில் ‘தேவீ உன்னிடம் ஒரு சின்னப் பிரேரணை | நான் எப்போதும் / நிழல் களை நேசிப்பதில்லை” என நிதானி தாசன் என்பவர் நேரடி யாகச் சொல்லும் கருத்தின் வெளிச்சம் என்ன? நிழல்களை நேசிக்காத மனிதர்கள் உண்டா? முரண்பட்டுக்கொள்ளும் தன்மை மேத்தாவிடமும் உள்ளது. ‘நாம் 1 ஆயுதங்களைக் கீழே போடாதே 1 அர்ச்சுனர்கள் ஆவோம் "எ ன் று பாடிவிட்டு எழுந்து நின்ருல் இமயமலைகள். நாம் படுத்திருந்தாலும் பாரத நதிகள். எழுந்திருந்தால் சொல்லிவிட்டு படுத்திருந்தாலும் என்று சொல்லிக்கொள்வது வார்த்தை ஜாலத்தால் வந்த விளைவே என்று ஆ. செகந்நாதன் என்னும் தமிழக விமர்சகர் புதுக் கவிதை ஒரு திறனுய்வு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புதுக் கவிதைகள் தமக்குள் முரண்பட்டுக்கொள்வதை நாம் காணலாம். புதுக் கவிதை என்பதை எப்படியும் எழுத லாம் என்று பலர் நினைத்து - அதன் வழியே போவதானுல்தான். வெறும் வசனங்களும் கவிதைகளாகின்றன.
سست 18 سے

அவைகளில் சில:- 'அ.ை உன்னை என்னிடமிருந்து பிரித்துவிட்டார்களாம் / அவர்கள்தான் / சொல்கிருர்கள் | என் இதயத்திலிருந்து / உன்னைப் பிரிக்கவே மாட்டார்கள் | அது அவர்களால் / நிச்சயமாய் முடியாது’’ இதை புதுக் கவிதை யென கவிமஞ்சரி இதழ் வெளியிட்டுள்ளது. இவற்றைவிட இனனும் ஒருபடி மோசமான வார்த்தை குவியல்களும் உண்டு. இவ்வாரு ன படைப்புக்களுக்கு சபா. ஜெயராசா புதுக் கவிதை யின் கூாப்பு என்ற கட்டுரையில் கூறியிருப்பதாவது. 'சொற் களை குத்தான அடுக்குதலும், கற்பனை நவிர்ச்சியுருவங்களுக்கு கட்டுப்படுவதும், நொடிகள் விடுவதும், உயிர்ப்பு மிக்க மக்கள் மொழியிலிருந்து வெகுதூரம் விலகி நிற்பதும் சொற்களை மயக்க விலைகளாகப் பயன்படுத்த எனணுதலும் புதுக்கவிதைகளாக மாட்டா,’’ மக்கள் மொழியிலிருந்து வெகுதூரம் விலகி நின்று கவிதை படைபபதால் எவ்வித பிரயோசனமும் இல்லையென் பதை வல்லக் கண்ணன் கூறுவதாவது "புதுக் கவிதையின் பயன்பாடும் இதல்ை குன்றுகிறது. சமுதாயக் குறைப்பாடு களையவோ, சமுதாய மாற்றுக்கான கருத்துக்களை சாதாரண மக்களுககுப் புரிய வைக்கவோ இயலாது போகலாம்." இவ்விரு வான கருத்துக்களுக்கு எதிர்க் கருத்துக்களும் இல்லாமல் இல்லை எனலாம. விளங்காத தன்மை புதுக் கவிதைகளில் இருக்க வேண்டும் என்று வாதம் பண்ணும் க. நா. சு. பாலா போன் ருேரும் இருக்கினறனர். (க. நா. சு. அண்மையில் மறைந்து விட் டாா) துருப்பினும் சிக்கலில்லாமல் புதுக்கவிதைகளை உணர்த் தும் முறை, படிமங்களே இணைத்துக்கொண்ட கவிதைகளில் கடினமானதாக இருக்குமல்லவா? உதாரணத்திற்கு மேமன் கவியின கவிதைகளைப் பார்ப்போம். ‘பாஷை வெறியில் / பாதையை குருடாக்கி / பினங்களைப் புணரும் / பாபம் போல் மாறும் / மனுவும் இன குரோதங்களைச் சொல்லும்" இக்கவிதை யின் இறுதியில், 'தீயின் நுனியில் | ஜீவிக்கும் பரிசுத்தம் / மனுஷ இதயத்தில் / பூக்கவேண்டிய ! அனுதையாய் / தவமிருக்கும் காலம்' - | ஒரு வாசகனுக்கு ஒன்றுமே புரியாத அளவில் முடித்துள்ளார். வெகுஜனரசனை என்பதும் உயர்வான கவிதை என்பதும் ரொம்ப சீக்கிரம் பொருந்தி வராது என்று கூறும் பாலா போன்ருேருக்கும் சரி இதன் இறுதி பகுதிகள் விளங் குமோ? சிறந்த கவிஞர்கள் கூட படிமக் கையாளலில் மயங்கி விடுகின்றனர் என்று ந. முருகேசன் குறிப்பிட்டிருப்பது இங்கு அவதானிக்கத் தக்கது. கவிஞன் என்பவன் தனக்கென ஒரு வடிவத்தை அமைக்கும் போது சிக்கலில்லாமல் இருந்தால்தான் மனசுக்குள் கவிதையைப் பற்றி உரையாடிக் கொள்ளலாம்.
سے 19 ـــــــــ

Page 12
புதுக்கவிதையின் சிறப்பு என ஏற்றுக் கொள்ளப்படும் படி எங்கள் வாசகரை தொடுமளவிற்கு இருந்தாலே அதற்கு வெற்றியுண்டு. இனி சில படிமக் கவிதைகளை நோக்குவோம்.
"தேசப்படத்திலுள்ள / கோடுகள் / விடுதலைக்குப் போரா டிய/ வீரத்தியாகிகளின் / விலா எலும்புக் கூடுகள்’’ என்று பாடும்.
மேத்தாவின் கவிதையும், 'ஹலிக்கெப்டர்கள் | தலைகீழா கப் பறக்கின்றன / கவசவாகனங்கள் | குழந்தைகளுக்கு மேலா கச் / செல்கின்றன - என்று சொல்லும் சேரனின் கவிதையும் வாசகர்களை இறுகிப் பிடித்துக்கொள்ளும் என்று சொல்லலாம்.
புதுக் கவிதைகளை இப்படித் தான் எழுதவேண்டும் என நான் எல்லை போடவில்லை. இப்படி இருந்தால் நன்ற க இருக் கும் என சொல்லிக் கொள்கிறேன். இவைகள் பற்றி இன்னும் எழுதுகிறேன்.
வாசகர் பூமி
* விடிவு வரட்டும் இந்நாட்டுக்கு, எம்மக்களுக்கு இலக்கியத் துக்கு என்று சகலதுக்கும், ம. க. இ. பே விடிவு மலரட்டும். ஆனல் எழுத்துப் பிழையின்றி வரடடும். தினகரன் வாரமஞ்சரி (28.05.88) - திரேசா சியாமளா
* மலையகத்தின் பிரதான நகரான கண்டி மாநகரில் இருந்து ம. க. இ. பே வெளியீடாக விடிவு விரிந்துள்ளது. ஆக்கங் கள் அனைத்தும் ஆக்ரோஷ 0ாகவுள்ளன. தினகரன் வாரமஞ்சரி (5.06.88)
-ரிஸ்கிஷெரீப்- மாவனெல்லை
* விடிவு இதழ் முதலாளித்துவப் போக்கையும், அது கட்டி வளர்க்கும் பேதங்களையும் எதிர்த்துக் குரல் கொடுப்பதாக அமைய வேண்டும். தினகரன் குன்றின் குரல் (26.11.88)
- எம். எம். எம். நூலுல்ஹக்
சாய்ந்தமருது
* விடிவும், இப்பேரவையும் சாதிமத பேதமற்று இலங்கையில் இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டு வருகின்றன. இலக்கியம் என்ற போர்வையில் மதத்தை பலவந்தமாகத் திணிக்க எத்தனித்த இயக்கங்கள் செயலிழந்துப்போன நிலையில் இப்பேரவையும், விடிவும் வெளிவருகிறது இலக்கிய நெஞ் சங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும். தினகரன் (11. 01. 89) - க. பாலேந்திரகுமார்
யாழ்ப்பாணம்
- 20 -

தீப்பயிர்கள் கவிஞர் மு. மு: பாசில் கல்முனை. * வாருங்கள்
எங்களைச் சூழ்ந்துக்
கொள்ளுங்கள். எங்கள் உரிமைகளைப்
பறியுங்கள் உடைமைகளைத்தூக்குங்கள் முடிந்தால் - மீதியோடு மீதியாய் எங்கள் உடம்புகளையும்
கொளுத்துங்கள் * நீங்கள் -
அறுக்க அறுக்க எங்கள் மண்ணின் வளம் குன்றும், புதிய சேதன உரமாக எங்கள் உடலே மண்ணில் உக்கும் அங்கே - பிணவாடைக்குள் மண்ணைப் பிளந்து உயிர்பொற்றெழும்
நீங்கள் அறுக்க முடியாது! கொளுத்த முடியாது! இவை - உங்கள் நெருப்பையும் சப்பி விழுங்கும் தீப்பயிர்கள். மறந்து விடாதீர்கள் * எங்கள்
உடல்களின் உரத்தில் தனங்களின் நடுவில் தழைத்த இவை எனறும அக்கினி நாற்றுக்கள்
பயிர்களை
பொறுத்தவளுக்கு
ஈவாயோ
சியாளு ஹமீட்
தர்காநகர்.
* மாதர்க்கு மாப்பிள்ளை
Lo sist Légy Gus65) saldo காதருகே புரோக்கர்கள் கனக்கைதான்கேட்பார்கள் சீதனமெனனது கொடுப்பீர். நகைஎத்தண்பவுனளிப்பீர். பாதாளத்தில் பணமாம் குப்பையிலே குணமாம்.
4:560GBup LDITULDLIT பூவை மனம் காயமடா.
* நாதியற்ற நங்கையடா
நாயனெருவன் மட்டுமடா ஒதி படித்த பிள்ளையடா நன்றும் குறை இல்லையடா சாதி மெய்தீனுமடா சன்மார்க்க கன்னியடா எழுதி ஒருவளம் பரமே எடுத்துவைத்தேன்
unr i GvL.-mr.
* பாதிவாழ்வு போனதடா
பாதை வரவில்லையடா போதிபோகமாட்டேனடா போகம் வரவில்லையடா போதிலொரு பொன்
மனதை
பொறுத்தவளுக்கு
Faunt Guust.
ஒலியின் வேகத்திலும் பார்க்க விரைந்து செல்லும் விமானங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். அதிலும் புதிய வகை ஒன்று தோன்றி உள்ளது. இது Stout வகை யைச் சார்ந்தது. அதாவது இவை குறுகிய ஓடுபாதையில் மேல் எழும்பக் கூடியவையும் செங்குத்தாக இறங்கக்
கூடியவையுமாகும்.
--سے 21 سے

Page 13
நாடகம் : நடைமுறை -
* கண்டி எம். ராமச்சந்திரன்
இடம்:- தொழி:-
விவ:-
தொழி:- விவ:-
தொழி:-
a su:-
தொழி:- விவ:-
தொழி:-
ஹக்கலை பாத்திரங்கள்: தொழிலாளி, விவசாயி. மச்சான் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் காய் கறித் தோட்டத்திலே வேலை செய்றே? அதை ஏன், ஒய் கேக்கிறே! ராவு பூராவும் அரைத் தூக்கந்தான்.
ஏன் அப்படி? குளுரு நடுக்கம் பாதி கள்ளன் களவாணிக வந்து மரக்கறிகளை எல்லாம் களவெடுத்துக் குட்டுப்பூடு வானுகளோங்கிற ப யம் பா தி சரியாத்தூக்கம் வராதுங்கிறேன்!
அது தலையெழுத்து ஓய்! என்ன மயிறு எழுத்தேர2 எனக்குத் தெரியாது. விடிய நாலு மணிக்கி முழிச்சா, தோட்டத்தே ஒரு சுத்துச் சத்திப் பாத்துப்புட்டு, பல்லு வெளக்கி, மூஞ்செக் கழுவிட்டு ஒன்னுக்கு ரெண்டுக்கெல்லாம் போயி முடிச்சுப்புட்டு, பில்லு புடுங்கி, பூவாளிலே தண்ணி போட்டுப்புட்டு, கையக்காலே கழுவிப்புட்டு, ஒங்க அக்கா சுட்டு வச்ச ரொட்டியையும், செஞ்சி வச்ச தேங்காச் சம்பலையும் சேத்துத் தின்னுப்புட்டு, சீனியக் கொஞ்சம் கையிலே எடுத்து வச்சி நக்கிக் கிட்டு, ஊத்தி வச்ச தேத்தண்ணி ரெண்டு மொடக் குக் குடிச்சுப்புட்டு திரும்பவும்,தோட்டத்துக்குள்ளே நொழைஞ்சா - குனிஞ்ச தலே நிமுராம மண்னேக் கிண்டிக்கிட்டே இருக்கவேண்டியதுதான், பகல் முட் டும். அப்பறங் குளிச்சுப்புட்டு, கொக்கா ஆக்கி வச்ச சோத்தையும் கறியையும் போட்டுப் பெனஞ்சி நாலு வாயி அள்ளிப் போட்டுக்கிட்டு, அதுக்கு மேலே ரெண்டு மொடக்குத் தண்ணியை குடிச்சுப்புட்டு - அப்புறமுந் தோட்டத்துக்குள்ளேதான்
அப்புறம்? அந்தியானதும், பூவாளிலே தண்ணி ஊத்தீட்டு, காலே கையே கழுவிப்புட்டு, வீட்டுக்குள்ளே பூத்தாவெளக்கு வய்க்க வேண்டியதுதான்
-u
பட்ட கஷ்டத்துக்குப் பலன் கெடைக்குதுதானே ஒய்? ஒரு கிலோ போஞ்சி எவ்வளவுக்கு விக்கிறே?
- 22 -

அது நம்ப கைலே இல்லேங்கிறேன்! வர்ற யாவாரிக குடுக்கிறதுதான் கூடுஞ ஒரு கிலோவுக்கு அஞ்சு
ரூபா!
தொழி:- அட பாவிகளா! ஒரு கிலோ போஞ்சியே ஒனக்
கிட்டே அஞ்சு ரூவாய்க்கி வாய்ங்காத்து, எங்க கிட்ட அய்நூறு கிரேமே பதினைஞ்சி ரூபாய்க்கில்லே விக்கிருய்ங்க! இவிங்க தலையிலே இடி விழுகாதா ஒய்? இதுவரைக்கும் அப்படி ஒன்னு நடக்கலே! ஆளு நம்ம தலைதான் ஒய் - மொட்டையாப் போச்சி!!
தொழி:- அப்ப இந்தக் கொள்ளைக்காரப் பயலுக தலையிலே,
நாம கல்லெத் தூக்கிப் போட்டாத்தான் சரிப்படும்? அரசு அன்னு கேக்கும், தெய்வம் நின்னு கேக்குமுங்
கிருங்க ஆளு இங்கே ஒன்னுங் கேக்குருப்புலே இல்லையே?
தொழி:- அரசு அவனுகபூட்டுத்தானே - அது எப்பவுங் கேக்
காது! அந்தத் தெய்வத்துக்கும் சக்தி இல்லே! உக் காரக்கூட முடியாமே விழுந்துபடுத்திறிச்சி? அது எங்கே இனி - எழுந்திருச்சி நின்னு கேக்குறது! நம்ம எழுந்திருச்சி நின்று கேட்டாத்தான் சரிவரும் ஒய்! சரி சரி வேறேநேரங்கதைச்சுக்கிறுவம், நா னு ம் வேலைவெட்டிய கவனிக்கணும் அப்ப பொயிட்டு வா!
தொழி:- அப்ப நான் - வாறேன் மச்சான். அதோ பஸ்ஸு
வருது ஒய்! நான் வாறேன்! வீட்டுலே எல்லாரையும் கேட்டேன்னு சொல்லு! மரக் கறியே நான் குடு த் தே ன் னு சொல்லி தங்கச்சிக்கிட்டே குடு!
WATH BEST COM PLI MENTS FROM :
CYCLE & HOUSE
Repair of Cycles, All kind of Motor cycles, scooters and spray painting
insurance works undertaken.
Partner M. M. M. FAZIM
216. Mahavidyalaya Mawatha, Colombo - 13.
- 23 -

Page 14
VDIVU
130, D. S. SENANAYAKE VEEDIYA, KANDY.
பிரதம ஆசிரியர்: நிதானிதாசன் ஆசிரியர்குழு: கண்டி எம். ராமச்சந்திரன், எம். இஸட், ஷாஜஹான், எஸ். பி. செல்வராஜ முகவரி
130, டி. எஸ், சேனநாயக்கா வீதி, கண்டி. தொலைபேசி: 08.23196
எமது மனித நேயபணிக்கான பங்காளர்களாக உங்களையும் நாம் அழைக்கிருேம். விடிவு இதழ் தொடர்ந்து வெளிவர வேண்டுமென ஆசைப்படு பவர்களை சந் தா தா ர ராக இணை யு மாறு அன்புடன் வேண்டுகிழுேம்.
சந்தா விபரம்: ஆறு மாதச் சந்தா ரூ. 30.00 வருடச் சந்தா ரூபா 60.00 (தபால் கட்டணம் உட்பட) சந்தா அனுப்புவோர் விடிவு செயலக முகவரிக்கு அனுப்ப வும். பெறுபவராக R.M.IMTIYAZgumragsums KANDY 6 TG37 AL6b.
ம. க. இ. பே கிளைச் செய்தி கள்: ம. க. இ. பே. கொழும் புக் கிளை கடந்த வருடம் நவம்பர் 13ம் திகதி 8வது கவி மாலைப் பொழுது நிகழ்ச்சியை யும், விடிவு 4வது இதழ் அறிமுக விழாவினையும்நடாத்
தியது. கவிஞர் எம். வளியீர் தலைமையில்சட்டத்தரணி இ. தம்பையா பூரீமுருகன்(LLB), அல் அகுமத் தெளிவத்தை
ஜோசப்,கலைவாதி கலீல் விமர்
சன உரைகள் நிகழ்த்தினர். * ம. க. இ. பே கொழும் புக் கிளையின் 9வது கவிமாலைப் பொழுது நிகழ்ச்சியும், கருத் தரங்கும், அனுஷாகல்வி நிலை யத்தில் கடந்த 8. 01. 89ல் கவிஞர் கலா விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. மொழி வரதன், கலைஞர் சக்தி, ஏ. பாலையா ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
* ம. க. இ. பேரவையின் 10 வது கவிமாலைப் பொழுது கருத்தரங்கும் கொட்/முஸ் லிம் வித்தியாலயத்தில் நடை பெற்றது. செ. கணேசலிங் கன் சிறப்புரை நிகழ்த்திஞர். * ம. க. இ. பே பொதுச் செயலாளர் எஸ். சீவராஜ், ஜப்பான் யுனெஸ் கோ நிறு வனத்தினுல் ஏற்பாடு செய் யப்பட்ட புகைப்பட கலை ஞர்கள் மாநாட்டில் பேரவை சார்பாக ஜப்பானுக்குசென்று மாநாட்டில் கலந்துக்கொண்டு விட்டு நாடு திரும்பியுள்ளார். ம. க. இ. பே. புத்தளம் மாவட்டக்கிளே அண்மையில் அங்குரார்ப்பணமாகியது.
தலைவர் எம். எஸ். எம். முஸாப்பீர், செயலாளர்: எம். எம். எம். மர்லின்
பொருளாளர்; எம். மஃசூர். நிர்வாக உறுப் பினர்கள்:
ஏ. ஆர் எம். அமீன், எம்.
நியாஸ், cupes outfi: J. P. HOUSE, Viruthodai, Madurankuli.
ك= 24 --

வேலேந்தி, வீரவாளேந்தி கோலேந்தி குவலயத்தில் - என்றும பேரேந்தி(ப்) பெருமையுடன் புகழேந்தி வெற்றி பெற - என் வாழ்த்துக்கள்
சட்டத்தரணி
எஸ். முத்துமீரான்
WITH Best coMPLIMENTS FROM:-
I. C. I. & AGENCIES
Dealers in Perfumes, essential Oils, Essences for Aerated Water & Bakery Requirements Colour powder of Liquid
38. OLD MOOR STEET
COLOMBO - 12.
Phone - 31046

Page 15
WITH THE BEST C.
**0H, M.Y. advance kம0ாledg
MEEZAN &
P. O. B. No. 5, Old M Colom
T"
3 2 5 4 A
BEST WIS
Broadway
309, LAYARD.'
COLOM
DRUGGST
T/P 2 62 8 2
30 DSS வீதி கண்டியில் வசி
கொழும்பு - 12. குமரன் வெளியிட

OMIPILTIMENTS FROM --:
LORD :
me in
E.
Ozra F. 2d .
COMPANY
Ο Α. Ι 12 Τ.
Moor Street,
bO – T2.
Cabole +MEEZAN"
HES FROM : " .
Pharmacy
'S BROADWAY
[B) — 14.
GROCERIES
க்கும் நிதானிதாசனுகிய என்னுல்
அச்சகத்தில் அச்சிட்டு =ப்பட்டது.