கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விடிவு 1989 (6)

Page 1
இலக்கிய ஆர்வலர்களின் தாகம் தீர்க்க
விரைவில் வெளிவருகிறது 'மானுட எழுச்சி
கொடுர-திரையினே கிழித்துக்கொண்டு இங்கொரு புரட்சி வெடிக்கின்றது. அது மதத்திற்கும் நிலத்திற்கும் அப்பால் பூக்கப்போகும் புதிய
கவிஞர் புரோட்வே ஹில்மி
NGTI புகளுக்கு:- |060, Marada na Road,
விடிவைப் பற்றி கட்டியம் கூறுகிறது!
Borell:
Climb-8
STI: Länk
T, Phւ ըe: 93.750
து ஒரு சுந்தர் பிரசுர வெளியீடு ܨܠ
"___4-1
799 DSS grafi சிக்கும் நிதானித சஞகிய என்னுள் கொழு குமரன் அச்சகத்தில் அச்சிட்டு
வெளியிடப்பட்டது.
 
 

蜂イ ܣܛܪ.
ரூபா 6.00
.
வ s: இ
ਵ பிச்சைப் பத்திரத்தை இன்றைய இலங்கையின் ஏந்த வைத்துள்ள வழிகாட்டிகள் சோகத்துசொந்தக் தமது வயிற்றுக்கு எந்த மட்டுமல்ல ஜனசவிய திட்டம் - இந்த தேசத்தின் ஜனங்களுக்கு சுரங்களுக்கும் விடிவு கொடுக்கும்?
ஆர். எம். இம்தியாஸ்
மக்கள் கலே, இலக்கியப் பேரவையின் வெளியீடு

Page 2
விரைவில்
மக்கள் கலை, இலக்கியப் Gu ரவையின் வெளியீடாக
O பலஸ்தீன பாசறையில்
O என் தந்தையோ இஸ்ரவேலியன்
என் தாயும் அதுபோலவே இஸ்ரவேலியச்சி ஆணுல் நான் ஒரு மானுடன்
O பூனூலைப் புறத்தொதுக்கிய புதுமைப் பிராமணனின் கதை
ஆகிய விடயங்களைத் தாங்கி வருகிறது
கவிஞர் எம். பாலகிருஷ்ணனின்
இரு வேறு எஃகு பூக்கள்
கிடைக்குமிடம்:-
ம. க. இ. பே. (கொழும்புக் கிளை) 33, B 1 Sri Dhamma Mawatha, Colombo-0.
MANOJ ENTERPRISES
WHOLESALE & RETAL DEALERS IN
EECTRONIC, FANCY GOODS, ELECTRICAL & READYMADE GARMENTSETC.
FAvoURITE SHOPPING CENTRE, 128 111, 16 Q, KEYZER STREET, COLOMBO-l
இதழ் : 6 - 1989
 

ஆசிரியர் பீடம்
கிடந்த 150 வருடங்களுக்கு மேலாக தமது கொழுந்துக் கூடைகளுக்குள் இலங்கைத் தேசத்தையே சுமந்துவந்த மலையக மக்களுக்கு அண்மையில் வாக்குரிமை கிடைக்கும் விதத்தில் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதை மக்கள் கலை, இலக்கியப் பேரவையும், அதன் மாணவர் பிரிவான தேசிய மாணவர் முன்னணியும் உற்சாகத்துடன் வரவேற்கிறது.
1948-ம் ஆண்டளவில் சிங்களப் பேரினவாதம் தமிழ் மக் களுக்கு எதிராக தொடுத்த முதல் அநியாய யுத்தமாக மலையக மக்களின் வாக்குரிமை பறித்தமை காணப்படுகிறது. இந்த கைங்கரியத்தை ஐ. தே. க தலைமைத்துவம் வட, கிழக்கு மாகாணங்களில் "*சமஷ்டி' கோரிய தமிழ் மிதவாதத் தலைவர் களின் ஆசீர்வாதத்துடனும், தெற்கு இடதுசாரிகளின் கடும் எதிர்ப்புடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியமை குறிப்பிடத் தககது.
மலையக மக்களுக்கு தற்போது வாக்குரிமை வழங்கப்படு வதும் ஐ. தே. க. தலைமைத்துவ ஆட்சியின் கீழ் என்பது மிகவும் வேடிக்கையாகவுள்ளது. இத்தகைய சந்தர்ப்பவாதப் போக்கு களுக்கு தத்தமது வர்க்க நலனே துணைபுரிந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியேயாகவேண்டும்.
வாக்குரிமை தீர்வு மாத்திரம் மலையக மக்கள் பிரச்சினை களுக்கு ஒரு நித்திய விடிவை உறுதிப்படுத்தாது. சிங்களப் பேரினவாதத்தினல் தீவிரப்படுத்தப்படும் குடியேற்றம், கைது செய்யப்பட்டுள்ள மலையக இளைஞர் விவகாரம், தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் போன்றவை விசேட “மான, அதேவேளை இழுத்தடிக்கப்பட்டு வரும் பிரச்சினையாக வுள்ளது. இவற்றை தீர்க்க உடனடியாக அக்கறை காட்டுதல் மிகவும் இன்றியமையாதது.
மலையக மக்கள் ஏனைய பிரதேச மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் அனுபவித்தேயாகவேண்டும். இது இன்றைய அநீதியான, மனிதாபிமானமற்ற சமூக அமைப்பில் எவ்விதத் திலும் சாத்தியமாகாது. எல்லாரும் எல்லாம் பெறும் ஒரு சமத்துவ அமைப்பே இந்த மண்ணின் கஷ்டப்படும் மக்களுக்கு சாத்தியமான விடிவை சொந்தமாக்கும் என்பதில் நாம் தெளி வாக உள்ளோம்.
எங்கள் எழுதுகோல்கள் ஏழைகளின் எழுச்சிகளை ஏந்திவரட்டும்.
- 1 -

Page 3
தேசிய பிரச்சினையும் எதிர்கால யதார்த்தமும்!
வி
. எல். பெரைரா பிரதம ஆசிரியர்: தாக்கம்
இலங்கையின் தேசியப் பிரச்சினை ஒரு நெருக்கடியான கட் டத்தில் இருக்கின்றது. இந்த நிலையில், போராளிகளும் இன் றைய சூழ்நிலையை மனதில் கொண்டு தங்கள் கோரிக்கைகளில் வெற்றிபெற புதிய உபாயங்களைக் கையாளவேண்டும். ஒரு ஜன நாயக நாட்டில் மக்களுக்கு அநேக உரிமைகள் இருந்தாலும், பெரும்பான்மை மக்கள் முதலாளித்துவ கட்சியையே ஆதரிக் கிறர்கள்.
ஆளுகின்ற வர்க்கம், தம் கையில் பிரசாரச் சாதனங்களை வைத்திருப்பதன் மூலமாக நவீன வகையில் பிரசாரங்களை முடுக்கிவிட்டு, தாம் சொல்பவற்றை உண்மையென சாதித்து பதியவைக்கின்றது. தொழிலாளரின் கட்சிகளைச் சேர்ந்தோர், குறிப்பாக மார்க்ஸ் தத்துவத்தை அறிந்த இடதுசாரிகள் சித் தாந்த ஒருமைப்பாடு இல்லாத காரணத்தினுல் பல குழுக்களா கப் பிரிந்து பெரும்பான்மையான மக்களைத் தம் பக்கம் ஈர்க்க முடியாத நிலையில் இருக்கின்ருர்கள்.
இப்படி ஏற்படுகின்றபோது சமுதாய விடுதலையை குறிக் கோளாகக் கொண்ட இயக்கங்கள் தங்கள் உயிரை அர்ப்பணித் தாவது வன்முறையில் இறங்குகின்றன. இது தவிர்க்கமுடியாத தொன்ருகும். இது ஒரு புரட்சிகர இலட்சியத்தை மேற்கொண்டு இயங்குவதாகும். லத்தீன் அமெரிக்காவில் நடைபெற்ற புரட்சி கள் தொடர்பான அனுபவங்களைக் கொண்ட ருெஜீஸ் டேபரே (ROGIS DABARA) எழுதிய புரட்சிக்கான உபாயங்கள் என்ற புத்தகத்தை வாசித்தால், இதைப்பற்றி நன்கு அறியலாம். (STRATEGY FOR REVOLUTION) V
ஒரு நாட்டில் பொருளாதாரம் பாரதூரமான வீழ்ச்சியைத் தருகின்றபோது சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் வேறு வழி களில்லாது ஒரு பகுதியினராவது தங்களை அர்ப்பணித்து புரட்சி யில் ஈடுபடுவார்கள். இதனை நாம் சமமற்ற வளர்ச்சி இல்லாத நாடுகளில் காணலாம். (Uneven Development) ரஷ்யா,
( 2)

கியூபா, சீன, நிக்கரகுவா, கிறனடா ஆதிய நாடுகளில் இந் நிலையை நாம் பார்க்கிருேம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் சமூக, பொருளாதார விடுதலையை விட வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இன ஒடுக் கலை எதிர்த்து தங்கள் சுய நிர்ணய உரிமைக்காகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இதுவும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஐரிஷ் நாட்டிலும் இன ஒடுக்கலை எதிர்த்து சுய நிர்ணய போராட்டம் நடைபெற்று வருகின்றது. இது கிட்டத்தட்ட சுமார் 150 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போராட்டமாகும்.
இந்தப் பின்னணியில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற தீவிரவாதிகள் வெற்றியின் விளிம்பில் இருந்திருக்கும் நிலையுமிருந்துள்ளது. எனினும், இயக்கங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் காரணமாக அரசின் சாதகமான நிலைக்கு பின்னடையக் கூடியவாறு போராளிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
வட - கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் போராட்டத் திற்கும் தென்பகுதியில் நடைபெறும் போராட்டத்திற்குமிடை யில் வேற்றுமை இருக்கின்றது. வட - கிழக்கு மாகாணத்தில் சுய நிர்ணய போராட்டம் நடைபெறுகின்றது. தெற்கு மாகா ணப் போராட்டம் ஒரு சமுதாய மாற்றத்திற்கான ஒடுக்கப் பட்ட மக்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஒரு போராட்ட மாக இருக்கலாம். தெற்கு மாகாணத்தைப் பொறுத்த வரை யில், கையாளுகின்ற உபாயம் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் ஆதியவற்றில் கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெரும்பான்மையான அப் பாவி மக்கள் தேசியப் பிரச்சினையில் ஒரு முடிவு காணலாமென இருந்திருக்கின்ருர்கள். இந்தத் தேர்தலுக்குப் பின்னர் வட கிழக்கு மாகாணங்களிலுள்ள இயக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தீவிரவாத இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டுமென்ற எண்ணமும் எழுந்துள்ளது.
இதன் பின்னணிக்கு தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. கருணநிதி சூத்திரதாரியாக இருக்கலாம் வட - கிழக்கு மாகாணங்களில் கூடியளவு அதிகார பரவல்களோடு மீண்டும் ஒரு மாகாண சபைத் தேர்தலை நடத்தி, அதில் தமிழீழ விடு தலைப் புலிகளை போட்டியிட வைத்தால், அவர்கள் வெற்றி யீட்டக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. உதாரணமாக குறுகிய கால
( 3 )

Page 4
அவகாசத்தில் வட - கிழக்கு மாகாணங்களில் சுயேச்சைக் குழு வினராகப் போட்டியிட்ட ஈரோஸ் குழுவினர் 12 ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.
இந்த வெற்றிச் செய்தியை வெளியிட்ட லண்டனிலிருந்து வெளிவரும் ‘சர்வதேச தமிழ்க் குரல்" என்ற சஞ்சிகை அவ் வெற்றியை 'தமிழ் ஈழப் புலிகளின் வெற்றி" என்று புகழாரம் குட்டியுள்ளது. கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் போட்டியிடுவதற்கு கலைஞர் வழி சமைத்தால், அது ஒரு மகத்தான பணியாக அமைந்து விடும். லண்டனில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாட்டில் 'ஈழத் தமிழரின் விடுதலைக்கு திரு. கருணுநிதியின் பங்கு என்ன?’ என்பது பற்றியும் ஆராயப் பட்டது.
இந்திய மத்திய அரசும் அதன் உளவு இயக்கமான ரோவும் எந்தவிதமான தீர்வுக்கும் ஆயத்தமாக இருக்கவேண்டுமென் பதனை தமிழக அரசும் மத்திய அரசும் தீர்மானிக்க வேண்டும். லண்டனில் நடைபெற்ற தமிழர் மாநாடு ஈழத் தமிழரின் பிரச்சினைக்குச் சாதகமாக அமையாவிட்டால் இந்தியாவிலுள்ள பல மாகாணங்களில் இந்திய இராணுவம் இலங்கையில் இருப் பதை ஆட்சேபித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம்.
இந்த ஆண்டில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து மக்களை அணுகும் உபாயங்களில் இது வும் ஒன்றக இருக்கலாம். ஆதலால் இலங்கை அரசும் இந்திய அரசும் விசுவரூபமெடுத்துள்ள தமிழர் பிரச்சினையை தமிழர்களுத் கும் சாதகமாக தீர்க்க முற்படாவிட்டால் விளைவுகள் பாரதூர மாக அமையலாம். ஆதலால், அரசு மக்களின் எண்ணத்திற்கு மதிப்பளித்து பணிந்து பிரச்சினையைத் தீர்ப்பதைத் தான் ஜன நாயக சோஷலிசம் என்று நாம் கூறுகின்ருேம். இந்நிலை ஏற் படாவிட்டால் சிறு தீவுகள் எப்படி கடலால் அரிக்கப்பட்டு, குறுகுகின்றனவோ அதுபோல இனங்களும் அருகி, குறுகி விடும்.
புரட்சிக்கவி இம்தியாஸ், எஸ். கே. குமார் ஆகியோரை இணை ஆசிரியர்களாகக் கொண்டு புயல் சஞ்சிகையின் இரண் டாவது இதழ் விரைவில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. புயல் - 444, செமெனரி கார்டின்ஸ், அம்பிடிய.
(4)

நிஜங்கள் உயன்வத்தை ஷஜிரா. (தொடர் கதை)
'யா அல்லாஹ்” பால்போல இருந்த என் வாழ்வை பாழாக்கிட்டியே. . சந்தோஷமா இருந்த என் மனசை சாகடிச்சிட்டியே றஃமானே.
இது பேமன்ட் பாத்தும்மாவின் அன்ருட வாய்ப்புலம்பல். நல்ல ஒரு கண்ணியமான, சமயப்பற்றுள்ள கெளரவமான குடும்பத்தில் பிறந்தவள் பாத்தும்மா. துரதிர்ஷ்டவசமாக சந் தர்ப்பவசத்தால் வாழ்வில் வழுக்கி விழுந்து விட்டாள். அந்த ஒரே காரணத்துக்காக அந்த சமூகமே அவளை அணுதையாக்கி இறுதியில் விபசாரியாகவும் காரணமாகிவிட்டது.
பாத்தும்மா கண்டி நகரை அடுத்துள்ள ஒரு அழகான சமய உறவுமிக்க முஸ்லிம் கிராமத்தில் பிறந்தவள். அவள் பிறந்த குடும்பமும் அக் கிராமத்திலே ஒரு கெளரவமான இஸ்லாமிய அனுஷ்டானப்படி வாழும் காதியார் குடும்பம்.
காதியார் காலிதீன் என்ருல் அந்தக் கிராமத்தின் சின்னஞ் சிறுசுகள்கூட கைகட்டி வாய்பொத்தி நிற்கும். காதியார் காலி தீனின் பாதரட்சை சத்தம் கேட்டால் கூட கிராமத்தின் இளசு கள் முதல் கிழடுகள் வரை தனது தலை முக்காட்டை போர்த்தி வீதி ஒரங்களில் நிற்கும். காதியார் சென்று அவரது காலடி ஓசையும் ஒய்ந்த பின்பே தனது முக்காட்டை நீக்கி வீதிக்கு இறங் கும் பெண்கள் என்ருல் அவரது மதிப்பை நாம் சொல்லவும் வேண்டுமா!
காதியார் காலிதீனின் மூத்த மகள்தான் பாத்தும்மா.
பாத்தும்மாவின் வாப்பா காலிதீன் மகளை மூன்று வயதிலேயே மதுறஷாவுக்கு அனுப்பி ஒதுவித்தார். ஐந்து வயதிலே மகளை பள்ளிக்கூடம் சேர்த்தார். பாத்தும்மா நல்ல துடிப்புக்காரி. அது போலவே படிப்பிலும் நல்ல கெட்டிக்காரி. தனது வயதை மீறிய தள, தளவென வளர்ந்து வந்தாள்.
பாத்தும்மா அப்போது ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண் டிருந்தாள். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே பாத்தும்மா பெரிய மனுஷியானதால் அவளது பள்ளிக்கூடப் படிப்பும் அத்தோடு நிறுத்தப்பட்டது. பாத்தும்மா பெரிய மனுஷியாகி மூன்று வரு டத்தில் அவளுக்கு அவசர அவசரமாக திருமணமும் நடந்து முடிந்துவிட்டது.
பாத்தும்மாவின் வயதோ பதினைந்து. தன்னைப் பற்றியோ, தன்னைச் சூழவுள்ள புறநிலை பற்றியோ எந்தவிதமான அறிவும் இல்லாத, அறியவும் விரும்பாத அந்த இளம் பிஞ்சு ஒரு குடும்பத் தின் தலைவியாக பலாத்காரமாக ஆக்கப்பட்டதில் பலியானவளும் அந்த அப்பாவி பாத்தும்மாதான். .
(தொடரும்)
( 5)

Page 5
தொடைகள் - 3 - எம்மார் -
யாழ்ப்பாணம். முதலெழுத்தென்றுதல் மோனைத் தொடையாம் என்பதைப் பார்த்துவிட்டோம்.
இனி இரண்டாம் எழுத்தொன்றும் எதுகைத்தொடையைப் JimTri Guntuib.
எதுகைத்தொடை! ஒரு மெய் எழுத்துடன் உயிரெழுத்து 12உம் இணைந்து உயிர் மெய் எழுத்து 12 ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உ + ம் மெய் எழுத்து "க்" உயிர்மெய்யெழுத்து - க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள எனப் 12டாம்.
இவற்றைக் குறில் என்ற குறுகிய சத்தமுடைய எழுத்துக்கள் “7” என்றும் (க, கி, கு, கெ, கை, கொ, கெள); நெடில் என்ற நீண்ட சத்தமுடைய எழுத்துக்கள் '5" என்றும் (கா, கீ, கூ, கே, கோ) இரண்டு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன.
ஆகவே, எதுகைத்தொடையை ஏற்படுத்தும் இரண்டு கவிதை அடிகளின் முதற் சீரின் (சொல்) இரண்டாம் எழுத்து - குறிலுக்குக் குறிலும், நெடிலுக்கு நெடிலும் அமையவேண்டும் என வகுத்துள்ளார்கள். மோனைத் தொடையை ஏற்படுத்த மூன்றுவித இன எழுத்துக் குழுக்கள் ஒவ்வொன்றும் நாலு நாலு எ 11 த்துக்களால் அமைந்ததுபோல் இல்லாது எதுகைத்தொடை அமைப்புக்குக் குறில், நெடில் என்ற இரண்டு இன எழுத்துக் குழுக்களே உள்ளன.
இரண்டு கவிதை அடிகளின் முதற் சீரின் இரண்டாம் எழுத்து முதலாம் அடியில் மெய் எழுத்தாக 'க்' வந்தால் இரண்டாம் அடியின் முதற் சீரின் இரண்டாம் எழுத்தும் அதே மெய் எழுத்தே க்" அமையவேண்டும்.
(இதை அடுத்த விடிவில் தொடருவோம்)
சிறு கவிதைகள் புயலென எதிர்பார்த்தோம் சமூகக் கொடுமைகளை வெறுமன் புழுதி சுட்டெரிக்கும் எங்களூர் தலைமை தீப்பந்தங்கள்
எங்கள் கவிதைகள் ஏ. செல்வராஜ் (பேராதனைப் பல்கலைக் கழகம்)
( 6 )

இன உணர்வு
இன வாதம்
இன வெறி
இமயவரம்பன்
இலங்கையின் இன்றைய அரசியலின் முக்கிய அம்சம் இன உறவுகள் தொடர்பான பிரச்சினையே. நாட்டின் பயங்கர மான பொருளாதார நெருக்கடியானது கடன், தங்குதடையற்ற இறக்குமதிகள், உற்பத்திக்கு உறவில்லாத வேலைவாய்ப்புக்கள், அயல் நாட்டுச் சம்பாத்தியம் போன்றவற்றல் பூசி மெழுகப் பட்டு, பெருவாரியான மக்கள் உணராதவாறு மறைக்கப்பட்டு வந்துள்ளது. நாட்டின் ஜனநாயக அரசு முறையும் உரிமைகளும் மெல்ல மெல்லச் சிதைக்கப்பட்டுள்ளன. இவை ஏதோ சம்பந்தா சம்பந்தம் இல்லாத நிகழ்வுகளாக, தற்செயலான நிர்ப்பந்தங் களாகவே அரசியலில் காணப்படுகின்றன. இனப்பிரச்சினையின் முக்கியத்துவம் அரசால் வலியுறுத்தப்பட்ட அதே சமயம் அதன் தீர்வுக்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மாழுக அதை உக்கிரப்படுத்தும் முறையிலேயே காரியங்கள் செய்யப்பட் டுள்ளன. அதைச் சாட்டாக வைத்து ஆயுதப்படையினதும் பொலிஸாரினதும் அதிகாரமும் அரசாங்க எதேச்சாதிகாரமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரேயடியாக இனப்பிரச்சினையைத் தீர்க் கும் நோக்கம் பாராளுமன்ற அரசியல் கட்சிக்கு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அது போனல் பிழைப்புக்கு வழியேது? ஒ, மதம், இனம், மொழி ஆகியன எல்லாமே பிற்போக்கு அரசியல் பிழைப்புக்கு அவசியமான பண்டங்கள். எனவே இன் றைய சூழலில் முழுமையான தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது என்பதும் உண்மை. ஆனல் மக்கள் மத்தியில் உள்ள முரண் பாடுகளை பகைமையான முரண்பாடுகளாக்கும் முயற்சிகளை நாம் கண்டிக்கத் தவறினல் அது பிற்போக்குக்கே உதவிசெய்யும். சிங்களப் பேரினவாதமும் தமிழ்ப் பிரிவினைவாதமும் எந்த வகை
( 7

Page 6
யிலும் பரந்துபட்ட மக்களின் நலன்கட்கு உகந்தவை அல்ல. ஒரு சமுதாயத்தின் வெவ்வேறு இனங்கள் மத்தியில் மற்ற இனத்தவர்களைப் பற்றிய தவருண எண்ணங்கள் இருப்பது அதி சயம் இல்லை. அவை காலத்துக்குக் காலம் களையெடுக்கப்படா மல் திட்டமிட்டே வளர்க்கப்படும்போதுதான் அவை இன உறவு களை, அபாயகரமான முறையில் பாதிக்கின்றன. இலங்கையில் பல காலமாகப் புறக்கணிக்கப்பட்டும் திட்டமிட்டே சீர்குலைக்கப் பட்டும் வந்துள்ள இன உறவுகள் பற்றி இப்போதும் காலம் கடந்து விடவில்லை என்பதால், எழுதுவது நல்லது என்றே நினைக்கிறேன்.
இன உணர்வு பற்றி யாரும் அதிகம் கூச்சப்படுவதில்லை. ஒல சமயம் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய விஷயமாகவே இன உணர்வு இருந்துள்ளது. என்னளவில், இன உணர்வு என் பது ஆழ்ந்த நோக்கில் அர்த்தமற்ற ஒன்று. ஆயினும் சமுதாயத் தில் இன வேறுபாடுகள் உள்ளபோது அவ் வேறுபாடுகள் வாழ் வின் வெவ்வேறு துறைகளைப் பாதிக்கும்போது அந்த உணர்வைப் பெரும்பாலோரால் தவிர்க்க முடிவதில்லை. இன உணர்வு என் பது ஒரு மனிதனது தன்னடையாளங்களில் ஒன்ருகச் செயல் படுகிறது. அது மொழி, மதம், கலாசாரம் போன்ற பல்வேறு வகைகளில் வெளிப்படும் காரணத்தால் அது முற்ருக புறக்கணிக் கக்கூடிய ஒன்றல்ல. மனித சமுதாயம் மனித சிந்தனையும் மேலும் வளர்ச்சியடையும்போது இன உணர்வுகள் சற்றே ஒதுங்கி வழி விடவே செய்வன. ஆயினும் மனிதனை அவன் உள்ளவாறே ஏற் றுக்கொள்ளும் எந்தச் சிந்தனையும் இன உணர்வுகளை மதியாமல் இருக்க முடியாது. இன்றைய சூழ்நிலையில் இன உணர்வு என் பது இயல்பான ஒன்று என்ற அளவில் மதிக்கப்பட வேண்டிய ஒன்ரு க உள்ளது. இதைக் கடப்பவர்கள் குறுகிய சுயநலனுக் காக கடப்பவர்களாக இருக்கலாம் அல்லது பரந்து பட்ட மனித இன முழுமையினது நலன் நாடுபவர்களாக இருக்கலாம். எனவே இன உணர்வு இல்லாமை என்பது மட்டும் முற்போக்கான ஒன் ருகி விடாது. அதன் இடத்தில் பரந்துபட்ட மானுட உணர்வு உள்ளதா அல்லது வெறும் சுயநலமோ சுரண்டும் வர்க்க நலமோ
( 8 )

உள்ளதா என்பதையொட்டியே இன உணர்வு இல்லாமையை மதிப்பிட முடியும்.
மனிதர் மத்தியில் இன உணர்வுகள் வேறுபடும் அளவுகளில் இருக்கலாம். தன் இனத்தின் நலனை மற்ற இனங்களின் நலன் கட்கு முரணுனதாகக் காணவும் காட்டவும் முனையும்போதும் தன் இனத்தின் இயல்புகளை இன்னெரு இனத்தினதும் மேலான ஒன்முகக் காட்ட முனையும்போதும் இன உணர்வு இனவாத மாகிறது. இது மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு கலாசார வேறுபாடுகளை ஏற்றத்தாழ்வுகளாகத் தரம் பிரித்தல், பிரச்சினைகளை இனமொன்றின் கண்ணுேட்டத்தில் மட்டுமே தனிமைப்படுத்திக் காண முனைதல் போன்று தன்னை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்திக்கொள்கிறது. இன உணர்வு இன வாதமாகும்போது முரண்பாடுகள் பகைமைத்தன்மை பூண ஆரம்பிக்கின்றன. பகைமை உணர்வுகள் வளர்ந்து சகிப்புத் தன்மையின் எல்லை மீறப்படும்போது இனவாதம் இனவெறி யாகிறது.
மனிதனது பலவீனங்களைச் சுரண்டும் வர்க்கங்கள் எப்போதுமே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இன உணர்வு இன்றைய சமுதாயத்தின் தனி மனிதனுக்கு ஒரு ஆதாரமாகவே
அந்த இன உணர்வை மனிதர்களை வேற்றுமைப்படுத்தவும் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றுபடாமல் தடுக்கவும் பயன்படுத்து வதில் பிற்போக்கு சக்திகள் மிகவும் கவனம் செலுத்தி வந்துள் ளன. அறியாமையும் தெளிவீனங்களும் இன உணர்வுகளை உக் கிரப்படுத்த உதவும் சாதனங்கள். இனவாதப் பொய்களையும் அரை உண்மைகளையும் நம்பிப் பழகிவிட்ட மனங்களுக்கு உண்மை உடனடியாகப் புலனுகாது. அதற்காக நாம் சோர்ந்து விட அவ சியம் இல்லை. இனவாதிகளும், இன வெறியர்களும் என்றைக் குமே மக்களை ஏமாற்ற முடியாது. அதற்காக, கைகளைக் கட்டிக் கொண்டு காலம் வரும் என்று காத்திருக்கத் தேவை இல்லை. இனவாதச் சேற்றல் கலங்குண்ட மனங்களை தெளியவைக்கும் கடமை நம் முன் உள்ளது. மற்றவர்களின் இனவாதத்தை இலகுவாக அடையாளம் காணும் நாம் நம் மத்தியிலுள்ள இன வாதத்தையும் அடையாளம் காணத் தவறக்கூடாது. இன வாதத்தை ஒழிப்பது என்பது ஒரு பலமுனைப் போராட்டம். அதற்கு மற்ற இனத்தவரைப் புரிந்துகொள்ளவும் உள்ளபடியே சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
(9)

Page 7
நம்பிக்கை
இன்று உடுப்பதுகூட ஏனுே தாஞே என்ருகி விட்டது;
ஆதிகாலத்தில் மனிதன் ஆடையில்லாமல் திரிந்த கதை ஞாபகம் வந்தது மெதுவாய் சிரிப்பும் வந்தது.
அந்த கூடிணத்தில்
வானம்
g........." வென்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது.
அதைவிட வேகமாய் - எனது
ஆழ்மனம் அழுதது மார்கலிமாவெலிபோல,
மாவெலியில் மோதி மோதியெழும் மூங்கில் மரநிரைபோல தானும் துன்ப பிரளயத்தில் மோதுண்டெழுவேன்;
மூங்கிலே புல்லாங்குழல் ஆவதுபோல நானே - *மனிதன் ஆவேன்!
ஈழக்கவி, வெலிமடை.
சுவரொட்டி
6FG) கூடங்களுக்கெல்லாம் இங்கே - ஒரு புதிய மதிப்பும் மரியாதையும் பிறந்திருக்கிறது!
6TLD gj ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியல் கட்சி வேட்பாளர்கள் எல்லாம் விளம்பரங்களை ஒட்டியே மலசலகூடங்களினை உருமாற்றிவிட்டார்கள்.
ஆணுக்கெது பெண்ணுக்கெது என்று அடையாளம் தெரியாமல் மாறியே உட்புகுந்து மரியாதையை இழக்கச் செய்துவிட்டார்கள.
நல்லவேளை. அதை ஒரு புனிதப் பிரதேசமாய் பிரகடனப்படுத்த இன்னும் தீர்மானம் கொண்டுவரவில்லை.
அழகுணர்ச்சி உடையவர்கள் • அல்லவா - இந்த அரசியல்வாதிகள்!
அதனுலேதான் மலசலகடங்களையெல்லாம் அழகுபடுத்தி உள்ளார்கள் தங்களது முகங்கேைய அதன் சுவர்களில் ஒட்டி.
எம். ராமச்சந்திரன் கண்டி ,
( )0 )

ஆடு நனைகிறது நரி அழுகிறது * ஹரிஸ்டோ பொடொவ்
Dனிதன் மனிதனல் சுரண்டப்படுவது, ஒரு இனம் இன் னெரு இனத்தை சுரண்டுவது முடிவுக்கு வரல்வேண்டும். அப் படியானல் ஒரு வர்க்கபேத மற்ற சமுதாயமே தோற்றம்பெறல் வேண்டும்.
ஒருவரை ஒருவர் சுரண்டுவது நிறுத்தப்படுவதே மார்க்சிசம். ஆனல் நம் முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்ன செய்கிருர்கள்? ஒருவனை ஒருவன் உறிஞ்சியும், சுரண்டியுமே வாழ்கிருர்கள். வளர வழி தேடுகிறர்கள்.
புத்தகம் வெளியிடுபவனுக்கு லஞ்ச பணம் கொடுப்பதன் மூலம் வெளியீட்டாளனின் உழைப்பை எழுத்தாளன் அல்லது கவிஞன் உறிஞ்சுகிருன். கவிஞனின் பணத்தை வெளியீட்டாளன் உறுஞ்சுகிருன். மொத்தத்தில் ஒருவனை ஒருவன் சுரண்டுகிருன் இதற்கு பெயர் முற்போக்காம். இவர்கள் முற்போக்கு அணியாம். ஒருவன் ஒருவனுல் அநியாயமாக தாக்கப்படும்போது அல்லது ஒரு இனம் இன்ணுெரு இனத்தால் ஒடுக்கப்படும்போது மெளனி யாக இருந்துவிட்டு முற்போக்கு பேசுவது வேடிக்கையல்லவா? அதுமட்டுமல்ல. மனித இனத்து / உறுப்பினன் ஒருவன் / மண் தாயின் மடியில்/மயங்கிக் கிடக்கிருன் / அவனை நேசிக்க / யாருமில் லையே./என்றுமுற்போக்கு கவிதையும்பாடிவிடுகிருன் என்னப்பா, கண் முன்னுல் ஒருவன் அநியாயமாகத் தாசி கப்படும்போது ஒன் றுமேசெய்யாது பின்னர் எதை, எதையோ பாடுவது முரண்பாடு இல்லையா? எனக் கேட்டால் “அது எல்லாம் நமக்கு வேண்டாம்" என்று பதில் கூறிவிடுவான். இவர்கள் எல்லோரும் முற்போக் குக் கவிஞர்கள். இவர்களுக்கு தங்கள் பெயர் பத்திரிகையில், மக்கள் தொடர்பு சாதனத்தில் வெளிவரவேண்டும் அவ்வளவு தான். ஏன் நீங்கள் உங்கள் பெயரை பெரிய எழுத்தில் அச் சடித்து சுவரொட்டிகளாக தெருத் தெருவாக ஒட்டக் கூடாது. உங்கள் நோக்கம் பெயர் விளம்பரம்தானே!
முற்போக்கு எனச் சொல்லும் நம்மவர்கள் ஆடு நனை வதைக் கண்டு கண்ணிர் விடும் நரிகளே!
தயவுசெய்து, மனிதன் சுரண்டுவதை தடுக்க வழி சொல் லுங்கள் - அல்லது தடுங்கள். அதைவிட்டு பம்மாத்துக்காட்டி *மார்க்சிசம்" பெயர்ச் சொல்லி சமுதாயத்தை ஏமாற்ருதீர்கள். ஏமாற்ற முயன்றல் உங்கள் போன்றவர்களை அம்பலப்படுத்துவது தார்மீகக் கடமையாகும். அது தனி மனிதத் தாக்குதலாக எவ் விதத்திலும் ஆகாது. 大
(11 )

Page 8
புதிய கவிதைகள்
விடிவு
இந்த மண் அநியாயக்காரர்களின் அடாவடித்தனத்தால் அவதிப்படுகிறது. தெருவெங்கும் மனுஷ பிரேதங்கள் மலிந்துள்ளன இரத்த வாடையே இலங்கை எங்கும்! இராணுவப் பலாத்காரம் நமது மக்களை அடிமையாக்க நீதிகள் வெறுமனே எழுத்துகளாகின்றன. அநியாயங்கள் தொடர அமைதியாகுவது தகுமா? எம். இஸட். எம். முஸாஃபீர் விருதோடை.
நாம்
தினம் தினம் அரங்கேறும் சோகங்களை, அவதானித்தே,சோபையிழந்த பார்வையாளக்குயில்கள் நாம். பொழுதுகளின் புலர்வை சந்தோஷமாக எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த இலவுகாத்த கிளிகள் நாம். இறந்துவிட்ட அமைதிப் புருக்களை
தேடும் மானுட வேட்டைக்காரர்கள் நாம் .
് விடிவை நம்பிக்கையுடன் நாடும் நாளைய மன்னர்கள் நாம்! எம். கே. எம். ஷகீப் திருகோணமலை,
ஜனநாயகம்
தேர்தல் அபேட்சகர்கள் ஆயுதம் சகிதம் உலாவுவது தடை, அரச சார்பு வேட்பாளர்கள் ஆயுதம் தரிப்பதும் கிராமத்தை சுற்றுவதும் இந்தத் தடைக்கு புரியவில்லையா? ஊருக்குத்தான் உபதேசம் என்பது
இந்த ஜனநாயகத்தின் தலைவிதியா?
இளமதியன் இல்யாஸ், பாணந்துறை.
ஒன்றுபடுவோம்
எங்களுக்குள்ளேயே ஏன் இந்த பிளவு? பேதங்கள் எங்களை காயப்படுத்தல் இனியும் தொடரல் அனுமதிக்கலாமா? ஆகவே எங்களுக்குள் பேதங்களை எடுத்தெறிவோம் மானுடத்தின் உயர்வுக்காக ஒன்றுபடுவோம்!
உடுதெனியச்செல்வி வவSரா.
( 12 )

மெய்தினம் உழைக்கும் கரங்களின் உறுதிச் சொல்லும் மெய்தினமே ஊர்வலங்களை மாத்திரம் ஊருக்குள் விட்டுவிட்டு சிவப்பு சட்டைக்காரர்கள் முடங்கிவிடுகிறர்கள். எழுச்சிகண்டு அடிமைத்தனம் அகலும்போதே
உனக்கு உயர்பெறுமதி வரும். எஸ். கே. குமார், அம்பிட்டிய.
இருட்டு ராஜ்யம் இருட்டு ராஜ்யத்துள் குருட்டு மனிதனுக இன்றைய தேசம். ஈ. பி. கோ. வந்தாலும் தடுக்கமுடியாத பலத்த இதயங்கள் இனவெறியை இலட்சியமாக்கும். குப்பிலாம்பில் குறட்டை விடுபவர்கள் உதயம் கண்டதில்லை *காரணம்
பட்டினி கிடந்து உப்பிய வயிற்றில் உயிர் பிரிந்திருக்கும். இப்படியே இந்தத் தேசம் இனி செல்லுமா? அல்லது - மனித விடுதலை எழுச்சியாகுமா? ரிஷ்கி ஷெரீப், மாவனல்லை
புதுமை செய்வோம்
எங்கள் வாழ்க்கை தெருக்களில் உள்ளதுதேசத்தைப்போல்! படித்த படிப்பு பெற்ற பட்டங்கள் இவை இன்று பகடைக்காயா? ஏழைப் பெண்கள் ஆசைகளை அலங்கரித்தல் ஆகாது எனச் சொல்வோரும் உள்ளனரா? ஏக்கங்களை ஏற்பதால் வறுமையே வாரிசாகும் எழுச்சிகண்டு எழுந்து செல்வோம்.
செல்வி ஐனுல் சலாம் ரத்தோட்டை.
என்னை நாடாதே
கொடுமைத்தனங்களே என்னை நாடாதே எரித்திடுவேன் உன்னை நான் அநீதித்தனங்களே என்னை நாடாதே அழித்திடுவேன் உன்னை நான். வறுமையே என்னை நாடாதே புதைத்திடுவேன் உன்னை நான் புரட்சி செய்து
இராசையா நவராசா
கலஹா.
( 13 )

Page 9
நெருப்பு நாட்கள் இரவுகளின் பின் வெளிச்சம். எங்கள் வாழ்வோ என்றுமே இரவுதான். கண்ணிவெடிகளும் ஷெல் தாக்குதல்களும் மரணத்தை சுமந்து வருகிறது! மெளனத்தை, இயலாத்தன்மையை அராஜகம் ஆட்சி செய்கிறது. தடியெடுத்தவர்களை தடியால் தகர்ப்போம்.
அதுவே
இன்றைய அநீதிகளை தீக்கொளுத்தும், கமருன்னிசா, ஏ. சமட் மாவனல்லை.
வாலிப இதயங்கள் ஒவ்வொரு ராத்திரியிலும்
உயிர்கள் நிர்வாணமாகின்றன சுகங்களில் வாழவேண்டிய வாலிப இதயங்கள் துப்பாக்கி பசிக்குள் இரையாகின்றன அப்பாவி வாலிப இதயங்கள் தெருக்களுக்கே வந்துவிட்டன. இன்னெரு
விடியலில் இந்தத் தேசத்தைப்போல் இவர்களுக்கும்
விடிவு கிடைக்கட்டும். தாஜுடீன் எம். அன்வர், காலி.
ஒரு சோகக்கதை
மானுடமே turrirrt Gul unr பரிதாபத்தை உணராயோ பாவையாய் பிறந்ததெம்மை பரிதவிக்க வைத்ததுமேன்? படித்துப் பண்பிருந்தும் பயனில்லை! பணமின்றி பார்வைக்கு பாரினில் வாழ்வுமில்லை. ஏக்கப் பெருமூச்சை எடுத்து செல்வதனல் எப்போது விடிவு? எல்லாரும் எல்லாம் பெறும் சமூகமே நமக்கெல்லாம் விடிவாகுமா?
பொல்வதுர செல்வி வவலோ.
விடிவு?
இந்த இளையவர்களின் இதயத்தில் இருந்துகொள்ளும் அழகிய லட்சியங்கள் எத்தனை அழகானவை! வாழ்வை வளமாக்க முயன்ருலும் வர்க்க சமூகம் வாய்ப்பு வழங்குவதில்லையே. இதனுல்தானே
இவர்கள் அநீதி அமைப்பிலிருந்து விடுதலை தேச
வீறுநடை போடுகின்றனர்.
இர்பானு ஜெப்பார் SE5SötD•
(14)

ரத்தக் குமுறல்
கிழக்கில் மட்டுமல்ல முழு லங்கையிலுமே மனித இரத்தம் மனித வேறுபாடுகளை ஆயுதமாக்கி அரசியல் நடாத்துவது எவ்வளவு நியாயம்? இன்றைய அமைப்புக்கு இனி வைத்தியம் செய்தல் வேண்டும்.
அது - நாளைய சமத்துவ விடியலுக்கு உத்தரவாதமாகட்டும்.
அஷ்ரப் ஏ. ஷமது சாய்ந்தமருது - 03.
சல்மான் + நிதானி= விடிவுகால நட்சத்திரங்கள்
சாத்தானின் வசனங்கள் சல்மான் ருஷ்டியின் படைப்பு! இதனைக்கண்டு இங்குள்ள சாத்தான்கள் * ஒட்டம் பிடிப்பதேன்?
இங்கு - எங்கள் 'விடிவு"க்கு எதிராக தாக்குதல் தொடுப்பதேன்? தங்கள் அசிங்கங்களை மக்கள் கலைஞன் நிதானி பிரகடனப்படுத்துவான் எனும் பயமோ?
ஒடுங்கள் ஒடுங்கள் ஆளுல்
கவிஞன் நிதானியொரு சல்மான் சகோதரரென பிரகடனப்படுத்தாதீர்கள் அவன் அநீதியை எரிக்கும் ஒருகால தீ!
உங்கள்
அசிங்கங்களை அம்பலப்படுத்தியமைக்கு மரணதண்டனையா பரிசு
ஒன்று உறுதி! சல்மான் ருஷ்டி பெயரால் சனங்களை ஏமாற்ற முடியாது மக்கள் கலைஞர்களை மறைத்திடவும் முடியாது!
நிதானியொரு வரலாற்று ஆயுதம் விடிவு பெறும் வீரசமூகத்தில் அவன் ஒரு
வீரநாயகன் முத்து சம்பந்தர், (தலைவர்: ம. க. இ. பே.) கண்டி
போராட்டிம்
தொழிலாளரின் போராட்டங்கள் உஷ்ணக் காற்ருகி தம்மைச் சுடுவதாலோ முதலாளிகளின் வீடுகளிலும் குளிர்ச்சாதனம், வாகனங்களிலும் குளிர்ச்சாதனம் தொழிலாளர் உரிமைகள் மெளனமாகி
(15)

Page 10
மண்ணுள் மறையும்போது என் தேசம் தொழிற்சங்கவாதிகள் என் மக்கள் என்று
சொகுசுவாழ்க்கை எதார்த்தம் சொன்ன “கீதாஞ்சலி"யாகி அந்த ஜனநாயகவாதிகளுக்கு அனுதாபம் தெரிவிக்கிறது. சொல்லுங்கள் on
இந்த பலாங்கொடை பூராஜ், ஜனங்கள் இப்போது
விழித்துவிட்டார்களென! O P இதயங்களில் தட்டி செ ால்லுங்கள் உண்மையாய் சொல்லுங்கள்
o o s G3 F த்தின் G s to இந்தத் தேசத் இந்த தசததைப பாாதது அராஜகம் விரைவில் யாசகம் கேட்டவனுக்கு முற்றுப்பெறுமென சொல்லுங்கள். இன்னும் - நிலாவாசன், தார்மீகம் சாகவில்லையென! கம்பளை.
வாசகர் பூமி
விடிவு ஆண்டு மலர் கிடைத்தது நன்றி! அதில் இடம்பெற்ற அனைத்து அம்சங்களும் மிகவும் பெறுமதி மிக்கவை. குறிப்பாக புதுக் கவிதைகள் பற்றிய கட்டுரையும், சமகால உலகில் ஆயுதப் போராட்டங்கள் பற்றிய கட்டுரையும் குறிப்பிடத்தக்கது. மற் றும் கவிஞர் நிதானிதாசனின் கேம்பிலிருந்து வந்த கடிதம் என் இதயத்தில் பதிந்துவிட்டது. கவிஞருக்கு ஒரு சபாஷ். வத்தேகம. - எம். முஹம்மது நளிர்.
புது சமுதாயத்துக்காக உழைக்கும் விடிவு சகல இலக்கிய் இதயங்களையும் வெற்றிகொள்ள வாழ்த்துக்கள். பிலிமதலாவ, - ஹம்சுல் இனுயா சமத்,
விடிவு இதழ்கள் கிடைக்கப்பெற்றேன். கவர்ச்சியாகவும் துணிவாகவும் உள்ளது. பாராட்டுக்கள். வெலிகம, எம். எச். எம். ஷம்ஸ், B, A,
ஏற்றத்தாழ்வான சமூக அமைப்புக்கு எதிரான கோபம் சகல படைப்பாளிகளிடமே உள்ளது. முயற்சி வரவேற்கத் தக்கதே. ܟ ܲܢ கொழும்பு. - வேம்பை பூரீ முருகன் L. B.
(16)

※※※※※※※※※※※※、
மலையகத் தொழிலாளர் பிரச்சினைகள் - 兴芯芯芯芯芯芯芯芯宋、芯芯芯芯芯芯滨
தொழிற்சங்கங்கள்.மாறுதல்கள். கலாவிஸ்வநாதன் இரத்தினபுரி.
இலங்கைத் தீவில் இருக்கின்ற ஏனைய பிரதேச சமூகங்களை விட நிறைய பிரச்சினைகள் மத்தியில் எதிர்நீச்சல் போட்டு வாழும் ஓர் சமூகம் மலையகத் தொழிலாளர் சமூகமாகும்.
மிக. மிக பின்தங்கிய இச் சமூகம் பிரதானப் பிரச்சினை யான 'பிரஜாவுரிமை" பிரச்சினையே சரிவர தீராத நிலையில் இந்த நாடடின் உயர்வுக்கும், தங்களின் வயிறுகளின் நிறைவுக்கு மாக உழைத்து வருகிருர்கள்.
பிரித்தானிய பேராதிக்கத்திலிருந்து சுதந்திரமடைந்த தேசிய அரசால் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதன் பின் இத் தொழிலாளர்கள் இத் தேசத்தின் “தேசிய அகதி'களாஞர்கள். பின்னர் 1949ல் அமுலான இந்தியா - பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டத்தால் ஒரு சிலரே உரிமைகளைப் பெற்றனர். சிறிமா-சாஸ் திரி ஒப்பந்தம், சிறிமா - இந்திரா ஒப்பந்தங்களால் மந்தை களை போன்று மலையக மக்கள் பங்குபோடப்பட்டனர். ஆனல்; அவ்விரு ஒப்பநதங்களும் சிறிலங்கா அரசு மாறியதும் சரிவர அமுல்படுத்தப்படவில்லை என்பதும் பச்சை உண்மை.
茨
※
அண்மையில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் பிரஜாவுரிமை பிரச்சினைக்கு ஒரு சிறிய தீர்வாக அமைந்துள்ளது. தற்போது மலையகத் தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ளது அடிப்படை உரிமை மட்டுமே. ஆனல், அவர் களது பிரச்சினைகள் தீர்க்கப்படவே இல்லை. தீராத, ஜீவாதாரப் பிரச்சினைகள் ‘தீர்வு’ நிலைக்கு வர இந்தப பிரஜாவுரிமை பிரச் சினை முற்றுப்பெறுவது முக்கியமானதொன்ருகும். தேர்தலை மையமாகக் கொண்ட அரசுகள் அமையும்போது "வாக்கு" பெறும் நோக்கோடு பெரும்பான்மை கட்சிகள் ஏனைய சமூகத் தினரின் பால் இயல்பாகவே ஈர்க்கப்படுகின்றனர். தற்பே. து கணிசமாக உள்ள மலையக மக்களின் "வாக்குகள்" அரசியல் அரங்கில் பாரிய மாறுதலுக்கு வழி சமைத்து விடுவதை நடந்து முடிந்த தேர்தல்கள் கட்டியம் கூறுகின்றன.
( 17)

Page 11
மலையக இளைஞர்களிடையே புதிய விழிப்புணர்வுகள் தோன் றியே வருகின்றன. ஆனல், தாங்கள் வாழும் சூழ்நிலை, புற நிலையின் உண்மையான யதார்த்தத்தை உள்வாங்க தடை யாகின்றது மலையகத்தைப் பொறுத்த மட்டில் தொழிற்சங்கங் கள்தான் 'தலைமை" பொறுப்புக்களை சுமந்துகொண்டுள்ளன. பிரதான இரு தொழிற்சங்கங்களான இ. தொ.கா., ஜ.தொ.க. இரண்டுமே அரசியல் கட்சிகளாகவும் உள்ளபடியால், இவ்விரு தலைமைத்துவத்தையும் அரசியல் ரீதியாக பார்க்கவேண்டியுள்ளது.
தொழிற்சங்கங்களாக ந்ோக்குமிடத்தும் மலையகத் தொழி லாளர்களைக் கொண்டு "பிழைப்பு நடத்தும் நவீன கங்காணி களாகவே இத் தொழிற்சங்க பிரமுகர்கள் பெரும்பாலும் தென் படுகின்றனர்.
வெறும் மந்திரி பதவிகள், சலுகைகள் என்றுமே சமூகத்தின் வளர்ச்சிக்கு போதுமானதே அல்ல.
இத் தேசத்தின் ஏனைய சமூகத்தினருக்கு உள்ள வாழ்க்கை முறையை விட மிகமோசமான வாழ்க்கை முறையைக் கொண்ட சமூகமாக மலையகத்தவர் இருப்பது நிஜம். முன்னுள் எதிர்க் கட் சித் தலைவர் திரு. அநுரா பண்டாரநாயக்கா "பன்றிகள் வசிக் கும் காம்பராக்கள் போன்றதே மலையகத் தோட்டத் தொழி லாளரின் குடியிருப்புக்கள்" என்று முன்னர் ஒருமுறை லண்டன் பத்திரிகையொன்றில் பேட்டியளித்துள்ளார். இதிலிருந்து இச் சமூகத்தினரின் வாழ்க்கை நிலை புலனுகும். “மாறிமாறி வந்த அரசுகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள்" என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மலையக மக்களின் குடியிருப்புக்கள், காணி, கல்வி, சுகாதார வ்சதிகள் இல்லாமை இச் சமூகத்தை மிகவும் பாரதூரமாக பாதித்துள்ளது. மிகவும் அவசியமான இவ் ஜீவாதார உரிமை கள் இவர்களுக்கு கிடைக்க இனி ஒரு விதி செய்வதே இனி உள்ள முக்கிய பணியாகும்.
குடியிருக்கும் ‘காம்பராக்கள்" தங்களுக்கு உரியதல்ல என்ற மனுேபாவத்தால், தற்காலிகமாக தாங்களே திருத்தி வசதி குறை வோடு வாழ்வதே தலைவிதியாகவுள்ளது. இவர்களுக்கென வீடு கள் சொந்தமாகக் கிடைக்கும் பட்சம் ஆரோக்கியமான சமூக மாக மலர்ச்சியுறும்.
( 18)

மலையகத்தில் தொழிற்சங்கங்கள் உருவானதே பெரும் இடை யூறுகள், இடர்ப்பாடுகளுக்கு மத்தியில்தான். இன்று எத்தனையோ தொழிற்சங்கங்கள் மலையகமெங்கும் இருக்கின்றன. இவை சில் லறைப் பிரச்சினைகளை தீர்ப்பதிலே கவனம் செலுத்துகின்றன.
*சம்பள உயர்வு" / "எட்டுமணி நேர வேலை’ இவைகள் போன்ற பிரச்சினைகளை தீர்க்கவே வேறுபட்ட கொள்கை வித்தி யாசங்களுடன் இத்தொழிற்சங்கங்கள் செயல்பட்டன. ஒரு ஒன வெற்றிக%ளயும் ஈட்டின. இடதுசாரி தொழிற்சங்கங்களின் ஆதிச் கத்துக்குள் மலையகம் இருந்தபோது பெருவாரியான "வாக்கு" கள் இடதுசாரி கட்சிகளுக்கே கிடைத்து வந்தமையால் தேசியக் கட்ஒகள் செய்த சதியினல் வாக்குரிமை திட்டமிட்டு 1948-ல் பறிக்கப்பட்டது. இன்று வாக்குறுதி வழங்கப்படுவதும் அதே காரணத்துக்காகவே! என்ருலும் இனி ஒரு "பறிப்பு" நிலை ஏற் படாது மலையக அரசியல் கட்சிகள் விழிப்புடன் சமூகப் பொறுப் புடன் செயல்படவேண்டும்.
அங்ஙனம் அமையாத பட்சம் புதிய அரசியல் சக்திகள் மலையக மக்களுக்காக" தோன்றும் நிலை ஏற்படக்கூடிய சாத் தியக்கூறுகள் உருவாகலாம்.
இன்றைய எம் தேசத்தின் தொழிலாளர் வர்க்கம் சில பிரிவு களாக சிதைந்த நிலையில் உள்ளன. நகர்ப்புற தொழிலாளர் களுக்கும், தோட்டத் தொழிலாளர்களுக்கும் எந்தவிதமான தொழிற்சங்க ரீதியாக ஆகிலும் தொடர்புகள் இல்லை. "தொழி லாளர்கள்" எனும் பதம் அனைத்து உழைக்கும் மக்களையே பிரதி பலிக்கிறது. நகர்ப்புற, தோட்டப்புற தொழிற்சங்கங்கள் இடையே கூட்டுத்துவம்" ஏற்படும் பட்சம் இலகுவாக தொழிலாளர் களின் உரிமைகளை (இரு பக்கத்திலும்) பெறக்கூடிய ஐக்கியபலம்" கிட்டிவிடும்.
அங்ங்ணம் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் சேராத வாறு பிரித்தாளும் ராஜதந்திரம் சமகாலத்தில் நடைமுறையில் உள்ளது என்பதுதான் யதார்த்தம் சந்தாப்பணத்தின் பக்கம் உள்ள ஆசையினை துறந்து சலுகைகள், பதவிகள் சுகத்தினை மறந்து சமூக உயர்வுக்காக உழைக்கும் சங்கங்கள்தான் மலையக மக்களுக்கு 'சாத்தியமான விடிவை" தரக்கூடியவைகள். ஆகவே இளைய மலையகத்தினர் நிதானமாக சிந்தித்து சமூக மாற்றத் துக்கு சத்தானவற்றை செயல்வடிவாக்கமுன் முனைதல்; முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் எனும் முதுமொழியினை உண்மை யாக்கும். O
(19)

Page 12
துணிவாய் புதுயுகமே கலாநெஞ்சன் ஷாஜஹான் (கொழும்பு பல்கலைக் கழகம்)
பாசம் மலிந்திட மோசம் நலிந்திட பூப்பாய் புதுயுகமே! நாசம் மறைந்திட நேசம் நிறைந்திட
நுழைவாய் புது யுகமே! தேசம் பிழைத்திட வேசம் கலைத்திட
தழைப்பாய் பது
வேற்றுமை அகன்றிட ஒற்றுமை வளர்ந்திட
வாராய் புதுயுகமே! மாற்றம் கண்டிட ஏற்றம் கொண்டிட
மலர்வாய் புது யுகமே! கற்றவர் களித்திட மற்றவர் மகிழ்ந்திட
கனிவாய் புது யுகமே!
米 sk 本
விரோதம் ஒளிந்திட குரோதம் குலைந்திட
விடிவாய் புது யுகமே! உண்மை உயர்ந்திட பொய்மை அயர்ந்திட
அமைவாய் புது யுகமே! தர்மம் நிலைத்திட அதர்மம் அழிந்திட
துணிவாய் புது யுகமே! 米 炸
இன்பம் விளைந்திட துன்பம் தொலைந்திட
உதிப்பாய் புது யுகமே!
உண்மை உயர்ந்திட பொய்மை அயர்ந்திட
அமைவாய் புது யுகமே!
தர்மம் நிலைத்திட அதர்மம் அழிந்திட
துணிவாய் புது யுகமே!
வறுமை
வறுமையை முற்ருக ஒழிக்காது செல்வத்தை குவிக்கும் சமூக அமைப்பின் நடுப்புறத்திலே ஏதோ இத்துப் போன அழுகல் இருக்கவேண்டும்; அதனலேயே இச் சமூகம் குற்றச் செயல்களையும் வேகமாகப் பெருக்கிக்
கொள்கிறது. மார்க்ஸ்.
( 20 )

சிறுகதை
தேர்தல் + ஹர்த்தால்?
ஈழகணேஷ்
நூறு கிராம் பருப்பு. ஒரு கிலோ அரிசி.இருநூற்றி ஐம் பது சீனி என, இன்னும் சில பொருட்களோடு ஒரு பட்டியல் தயாராக என் காதுகள் அதை வாங்கிக்கொண்டு இருந்தன.
** என்ன உங்களுக்கு எத்தனை தடவை சொல்லிவிட்டேன். நாளைக்கு கடையெல்லாம் பூட்டு. இன்னிக்கே வாங்கிட்டு வாங்கனு’ என் மனைவி திரும்ப திரும்ப இந்த வார்த்தைகளை யுத்த நிறுத்தம்போல் அறிவித்ததில் எனக்கு எரிச்சலுமில்லை.
'ஏய்!?? உனக்கு காலையில வாங்கித் தந்தா சரிதானே-ஏன் கத்திகிட்டு கிடக்கிரு? என நான் அதட்டல் போட்டது - ஆண் வர்க்கத்தை ஞாபகப் டுத்தி, அவளுக்கு வெளியில் கொண்டுவர முடியாத கோபத்தை உண்டுபண்ணியிருக்கலாம் இந்தமாதிரி சின்ன விஷயங்கள் மிகப் பெரிதாய் உருவம் எடுத்து, அடி - உதை யில் கொண்டுபோய். ரகசியமாய் வைத்திருக்க வேண்டிய சில சில விஷயங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு, பக்கத்து வீட்டுக்கார னுக்கு நம்ம பலவீனத்தை காட்டிக்கொடுத்துவிடுகிறது. இப் போது தேசத்தில் நடக்குதே அது மாதிரி. சில விஷயங்களை நாமே சரிப்பண்ணிக் கொள்ளவேண்டும் என்பதும் எனக்கு தெரியாமலில்லை. ஒரு சின்ன விஷயத்தை பெரிசாக்கி - ஹிரோ வாக பார்த்து இறுதியில் ஒரு பாத்திரமும் இல்லாமல் திரையை மூடவேண்டியவர்களாகி விடுகிருேம். பரிதாபம்! நமது கதை. அது சரி அவ நாளைக்கு ஹர்தால்னு சொல்லி சாமான்கள் வாங் கிட்டு வர சொன்னுளே? உண்மையா? பொய்யா? தெரியல்லையே? ஹர்த்தாலை என்ன வானெலியா அறிவிக்குது. அதோட நமக்கு தெரிஞ்ச பாஷையிலா எங்காவது போஸ்டர் ஒட்டியிருக்காணு? அதுவும் இல்ல. யார் சொல்றதை நம்புவது? ஹர்த்தாலோ? இல்லையோ? நம்ம ஜனங்கள் எப்பவும் வதந்திகளுக்கு கடையை மூடுவார்கள். அப்படியே ஹர்த்தாலா இருந்தாலும், ஒற்றைக் கதவை சரி திறந்து வியாபாரம் பண்ணுமலா இருப்பார்கள் நமது முதலாளிகள். எதற்கும் தைரியமாக தூங்கி எழும்பலாம்.
- 2 -
காலை வழமையான ஆரவாரம் இல்லாமல் பயந்து போய் இருந்தது. மனிதர்கள் தெருக்களுக்கு பத்து இருபதுபேர் வீதம்
( 21 )

Page 13
நடக்கக்கூடியதாய் தெரிந்தது. அரசாங்க பஸ்கள் மாத்திரமே துணிச்சலுடன் ஓடியது. ஹர்த்தாலுடன் போட்டி போடும் தைரியம் அரசுக்கு மாத்திரமே உண்டு என்பதை ஜனநாயக நாட்டில் காணக்கூடியதாய் இருந்தது. இருபது யார் தொலை விலுள்ள ஒரு சில்லறைக் கடையை நோக்கி நடந்தேன். ஒற் றைக் கதவு திறந்திருந்தது. கடைக்குள் ஐந்து ஆறு தலைகள் தெரிந்தன. பொருட்களை வாங்குவதற்காக பாஸ்போர்ட் அலு வலகத்தில் காத்திருப்பதுபோல் அவர்கள் நின்றது எனக்கும் பொறுமையை போதித்தது. எனது பொருட்களை வாங்கிக் கொண்டு - கணக்கை பார்த்தேன். அரிசிக்கும், தேங்காய்க்கும் ஒவ்வொரு ரூபாய் அதிகமாக கூடியிருந்தது. தங்கமூலம் பூசிய லக்ஷமி படத்தின் முன்னல் அமர்ந்திருந்த முதலாளியை நோக்கி "கணக்கு கூடுதலாக இருக்கு" என்றேன். 'சாமான் தட்டுப்பாடு, விலையெல்லாம் ஏறியிருக்கு" என்று வெற்றிலை வாயை திறந்தார்.
பட்ஜெட்போட்டு பொருட்களுக்கு விலையேற்ற வேண்டிய அள
சியமில்லை. அதையெல்லாம் முதலாளிமார்கள் செய்துவிடுவார்கள். கிலோமாவுக்கு இருபத்தைந்து சதம் கூட்டினல் போதும் ஒரு இடி யப்பத்தை எழுபத்தைந்து சதமாக்கும் தைரியம் இருக்கு இவர் களுக்கு. நியாயங்களை மனம் பேச - இதையே அவரிடம் சொன் ணுல் வார வெளியீடுபோல் வரும் அடுத்த ஹர்த்தாலுக்கு நிச்சயம் சாமான்கள் கிடைக்காது போய்விடும். பேச்சுரிமையை வீட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம், பொருட்களை மனைவியிடம் கொடுத்துவிட்டு "பக்கடை" பார்த்தேன். மஞ்சள் பூசிய நாற் பது ரூபாய் கம்பீரமாய் தெரிந்தது. இருபது ரூபாய்க்கு ரேஸ் போட்டுவிட்டு - இருபதை மிச்சம் வைக்க மனம் விரும்பிய தால்.புக்கியை நோக்கி. நடக்க. அது சரி ஹர்த்தால் நாளில் மட்டும் ரேஸ் இயங்கிக்கொண்டிருக்கே என சின்ன யோசனை வர, குதிரைகள் லண்டனில் அல்லவா ஒடிக்கொண்டிருக்கு என நானே பதிலும் தயார் பண்ணிக்கெ" ண்டேன். நீதியெல்லாம் “தனக்கு தனக்கு" என இந்த இருபதாம் நூற்ருண்டில் பரவி விட்டது. தனி மனிதனக இருந்துகிட்டு, இந்த ஊழலெல்லாம் களையப்போனல் மக்களே என்னை "பயங்கரவாதின்னு நினைத்திடு வார்கள். எங்கும் சோம்பல் ஒட்டியிருந்தது மற்றவர்சள்போல்
பகலில் தூங்கவேண்டியதுதான். தூங்காதே தம்பி! தூங்காதே! என கல்யாணசுந்தரம் சொன்னது சுதந்திர இந்தியாவுக்கே பொருந்தாது. அதுவும் நான் பூரீலங்கா. ஐடிண்டிகார்ட் இல்
லாம பயணம் போக முடியாது. சிங்களம் தெரியாம சுற்றமுடி
யாது. யாழ்ப்பாணத்தை பார்க்கணுமா இந்தி வேற படிக்
( 22 )

கணும். எல்லாம் பெரிய தொல்லையாய் போச்சு அங்கேயும் ஹர்த்தால்! இங்கேயும் ஹர்த்தால் நடுவில் ஜனங்கள். போராட் டம் யாருக்கு? மனம் அதிகமாக பேசிக்கொண்டிருக்க ரேஸ் துண்டிலுள்ள மூன்று குதிரைகளும் ஞாபகத்துக்கு வர கண்களை மூடிக்கொண்டேன். நாளைய வெற்றிக்காய் அந்திப்பொழுது ஊரடங்கிலிருந்து விடுபட்டதுடோல் தெருவின்கோலம் தெரிந்தது.
ஒற்றைக் கதவுடன் திறந்திருந்த ஓரிரு கடைகளும் தாழ் பாள் போட்டுக்கொண்டன. மனதில் வழமையான யோசனை வரவே வீடியோக்களின் ராஜ்யமான செக்கடித்தெருவை தேடி நடக்க - அப்பாட! இதுக்கு மட்டும் ஹர்த்தால் இல்லையே? அது போதும் நேரத்தை தள்ளிவிடலாம். தியேட்டர்களில் காண முடியாத ஒவ்வொரு அழகான போஸ்டர்களையும் கண்கள் கவ னிக்க, என்னைப்போலவே ஹர்த்தாலை கழிக்க வந்த நண்பர் ஜெயத்தின் குரல் கேட்டது, ஹலோ. எப்படி? என்றேன். "'உங்க புண்ணியத்தில் இருக்கேன்" படம் பார்க்க போல் ஆம் நானும்தான். இருவருமாக சேர்ந்து பார்க்காத படம் ஒன்றை தேடிக்கொண்டிருந்தோம். “எப்படி இன்றைக்கு?" 'அதை ஏன் கேட்கிறீங்க?" சல்லி கொடுத்தாலும் சாப்பாடு இல்ல! பிச்சைக்காரனவிட நம்ம கதி மோசம் என்ருர், நாடு முழுவதும் தொழிலுக்காக தங்கியிருப்பவர்களின் நிலை பரிதாபம் என மனம் வருந்தியது. 'அப்போ ஜெயம் கல்யாணம் பண்ணிக் கலாம்தானே? 'ஹர்த்தாலுக்காக கல்யாணம் பண்ணி இரண்டு பேரையும் சேர்ந்து கஷ்டப்பட சொல்றீங்களா?" இல்லை - வசதி யிருக்குமே. எங்கே கடை திறந்திருக்கு? பாருங்க காலையில டீ குடிக்க பலமுறை தெருவுக்குள்ள சுத்தி, சொந்தக்காரன்களை யெல்லாம் இடையில் சந்தித்து கடைசியா ஒரு பெட்டிக்கடை,
இப்ப நாங்க டீ குடிக்க அங்கதான் போகனும், *வேண்டாம் சார் சமாளித்துக் கொள்வோம். "என்ன காரணம்' இன்று ஹர்த்தால்" என்றேன். எவனுக்கு தெரியும். எல்லாம் வாத்துபயல்கள். ஹர்த்தாலைப் பற்றியும் - தேர்தலைப் பற்றியும் எவனுக்கும் தெரியாததால தான் இவ்வளவு குழப்பமும் கூச்ச லும் நாட்டில நடக்குது. மேலே ஜெயத்தை பேச விட்டால் இருபத்தைந்தாவது இனக்கலவரம் வந்தாலும் வரலாம் என்று எண்ணி - ஒரு மூன்ருந்தர தமிழ்ப்படத்திலிருந்து காப்பாற்றி ஆங்கில படத்திற்குள் நுழைத்துக் கொண்டேன்.
S5 实滨
(23)

Page 14
ஜனசவிய பொருளாதாரம்
முதலாளித்துவ பொருளாதாரம் மிக விசித்திரமானது. அது யுத்தத்தையே வரவேற்கும். யுத்தத்தில் அழிவு ஏற்படும் மறு புறத்தில் அழிவை நிவர்த்தி செய்ய உற்பத்தி துரிதப்படுத்தப் படும். பொருளாதாரம் வலுப்பெறும்.
இப்பொருளாதார முறையில் தமக்கு வாய்ப்பாக எவரும் விளக்கம் கூறிவிடலாம். இதன்படி வறுமைத் துடைப்புக்கே சிறந்த விளக்கம் கூறிவிடலாம். கூறவும் படுகிறது.
1000 கோடி ரூபாவை ஏழைகளுக்குக் கொடுத்ததும் அவர் கள் இப்பணத்தைக் கொண்டு பண்டங்கள் வாங்க முயல்வர். உடனே அப் பண்டங்களுக்கு தேவை ஏற்படும். அவற்றின் உற் பத்தி பெருகும். அதற்காக பலருக்கு வேலைவாய்ப்பு எற்படும். பொருளாதாரச் செயற்பாடு வேகமடையும்.
பணத்தைக் கவரக்கூடியளவு பண்டங்கள் இல்லாதபோது பண்டங்களின் விலைகள் ஏற்றமடையும். இதைப் பணவீக்கம் at 657 turf.
உள்நாட்டுப் பண்டங்கள் கிட்டாதபோது வெளிநாட்டிலி ருந்து இறக்குமதி செய்யநேரும்.
'ஜனசவிய பணத்தில் குறிப்பிட்ட பண்டங்களே வாங்க முடியும், அவை உள்ளூர்ப் பண்டங்களாகவே இருக்கும் என கூறுகின்றனர். பண முத்திரைகளை கடைகளில் கொடுத்துக் குறைந்த பணம் பெற்று வெளியே பண்டங்களை வாங்க முயல் வோரும் இருப்பர். முன்னர் அரிசிக் கூப்பன்கள் அடைவு வைக்கப்பட்ட காலத்தைப் பெரும்பாலோர் மறந்திருக்க மாட் டார்கள்.
தானே பழம் விழாது
ஒவ்வொரு சமூக அமைப்பும், வரலாறு சீராக்கும்வரை, நிரந்தரமாக நிலைக்கும் என எண்ணிக் கொள்கிறது. வரலாற் றுக் காலம் பூராவும் ஒவ்வொரு சமூக அமைப்பும் தாக்கத் திற்கு உட்படும்போது தற்காத்துக் கொள்கிறது: வன்முறை யால் பேணிக் கொள்கிறது. தானகவே எந்தச் சமூக அமைப் பும் சுதந்திர உணர்வோடு மாறியதில்லை. புரட்சியாளர்க்கு சாதகமாக எந்தச் சமூக அமைப்பும் விட்டுக் கொடுத்ததில்லை. - கஸ்ரோ
(24)

WD VU
30, D. S.
SENANAYAKE VEEDIYA,
நிதானிதாசன் (ஆர். எம். இம்தியாஸ்) ஆசிரியர் குழு: கண்டி எம். ராமச்சந்திரன் எம். இஸட், ஷாஜஹான் எஸ். பி. செல்வராஜ்
முகவரி: 130, டி. எஸ். எஸ். வீதி, கண்டி, ጵ
தொலைபேசி:
196 2 -س {08
எமது மனிதநேய பணிக் கான பங்காளர்களாக உங் களையும் நாம் அழைக்கிருேம். விடிவு இதழ் தொடர்ந்து வெளி வர வேண் டு மென ஆசைப்படுபவர்களை சந்தா தாரராக இணையுமாறு அன் பிடன் வேண்டுகிருேம்.
சந்தா விபரம்:
ஆறு மாதச் சந்தா 30.00 வருடச் சந்தா 60.00 (தபால் செலவு உட்பட) சந்தா அனுப்ப விரும்பு
வோ ரும், தனிப்பிரதிகள்
கொள்வனவு செய்ய விரும்பு
வோரும் பெறுபவராக.
R. M. İmtiyaz
தபாலகமாக Kandy எனவும் இடவும்.
என வும்
செய்திகள்
ம. க. இ. பே. கொழும்புக் Sabir ஆ தர வில் கடந்த 3. 4. 89 9. L. 3. 30 க்கு நாராயண குரு மண்டபத்தில் விடிவு முதலாம் ஆண் டு நிறைவு மலர் வெளியிட்டு விழா த  ைட பெற்றது. திரு. ஏ. எம். நஹியா தலைமை நடைபெற்ற இவ்விழா வில் கலாநிதி ராசதுரை, அஷ்ரப் அஹீஸ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். 10յն றும் தினகரன் பிரதம ஆசிரி யர் ஆர். சிவகுருநாதன், ே எஸ். சிவகுமா ர ன், செ. கணேசலிங்கன், சட்டத்தரணி தேவசேனதிபதி ஆகியோர் கருத்துரை நிகழ்த் தினர். விழா முடிவில் 11 வது கவி மாலைப் பொழுது நடைபெற் ADSl, • a
ம. க. இ. பே., தே ஓய மாணவர் முன்னணி இணைந்து மலையகத்தில் கல்வி நடவடிக் கைகளை அபிவிருத்தி செய்யும் பணிகளில் ஈடுபடவுள்ளதாக பொதுச்செயலாளர் எஸ். ஜீவ ராஜ் அறிவித்துள்ளார்.
ம. க. இ. பே ர  ைவ யின் வெளியீடாக கவிஞர் எம். பாலகிருஷ்ணனின் கவிதைத் தொகுதி விரைவில் வெளி வரவிருப்பதாக வெளியீட்டக நிர்வாகி திெவிேத்துள்ளார்.