கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூங்குன்றம் 1971.03

Page 1
旱
畢 *{ 專 平 부 *
專 A 旱 부 -
-- 專 專 부 單
*T 專 ܬܐ . 韋 부 부 專
శత్రులు
மலக்குள் மாண்
அவரிங்கு
॥
。 cm 。
தெய்வத் தமிழ ஆவி சுருக்கிடுதே - ெ
வாக்குரிமையில்லே
வாழ் உரிழையி சுக்குரல் ஒசையிலேகூவிக் குமுறிடுே
மலக்குள் மாண்டிடே மனிதராகி வந்:
அந்தப் பஞ்சைகள் 刷
ஆருய்ப் பாயுது சொந்தம் சுதந்திரம்
சோறு |-
கண்களில் தேங்கிடும் க
கால்களில் தூவி கண்களில் களிப்புச் சுட քրոմլե ոլոIII է :
சொந்தத் தவர் அவர்
கோதரர் ஆனவ இந்தத் துயரினில் வாழு இன்னலப் போ
**************
லக்கிய மாத இ
 

xҳ ұ***********
மனிதராகி வந்தார்
கநாதன் ே
(GLJ — GTJÉI Tr7 ர்கள் தேம்புகின்ற குரல் நஞ்சில் டிடுதே!
வா - அவரிங்கு
ந்திடும் கண்ணீர்
in
ண்ண்னிர் - அவர் டூம் பூவோர் பரும் = அந்தக் கென்று IDFliվեմ,
அன்ருே - சிம்
அன்ருே ழம் - அவர் 10 க்குவோம் வார்.
இதழ்
DIT 1971

Page 2

பூங்குன்றம்
மாத இதழ் O இதழ் 2 O Dij 1971
M.
அலுவலகம் : 235, 'லோவர் வீதி, பதுளை.
o-o-oo."J"Novo-o-o-
எண்ணம் É
wA^-
'பூங்குன்றம்" முதல் இதழுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு நமக்கு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித் துள்ளது. பல்வேறு துறையில் உல்ாளவர்களும், பல்வேறு தரத் தினரும், எழுதும் கடிதங்களில் இருந்து அவர்களனைவரின் ஆதரவையும் 'பூங்குன்றம் பெறும் என்ற நம்பிக்கையை அடைகிருேம்.
அறிவுத் துறையில் பணியாற்றும் நண்பர்கள் பலர், இதழின் வளர்ச்சிக்காகப் பல அரிய ஆலோசனைகளை வழங்கி புள்ளார்கள். அவர்களுடய அறிவுரைகளை எல்லாம் ஏற்று, "பூங்குன்றம்' காலப்போக்கில் பணி புரியும் எனத் தெரிவித்துக் கொள்ளு கின்ருேம்.
இதழில் “சுவை குறைவு என்பது மாணவர் பலரின் குறை பாடு. இனி வரும் இதழ்கள், பல் சுவைகள் பெற்றுப் பயன் விளைவிக்கும்.
பூங்குன்றம் ‘மலைநாட்டு முத்திரை குத்தப்பட்டு வெளி வரு வதாகப் பலர் குறைப்பட்டுள்ளனர். குறைபாடு உண்மையே. எல்லாப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய இலக்கிய பணி புரியவே விரும்புகின்றேம். அதற்கு எழுத்தாளர் அனைவரின் ஒத்து ழைப்பும் தேவை.
கடந்த ஒரு மாத காலத்தில், மலையகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பலர், கதைகள், கட்டுரைகள் அனுப்பியுள்ளனர். எழுதுபவர்கள், இதழின் அளவையும் மனதில் கொண்டு எழுதி ணுல் நலம். குறுநாவல்களையும், தொடர் கட்டுரைகளையும், ஏற்றுப் பிரசுரிக்கும் அளவுக்குப் பூங்குன்றம் பொருள்வளம்" படைத்ததல்ல.
சிறிய அளவில் நிறைந்த பணி புரிய வேண்டும் என்பதே பூங்குன்றத்தின் அவா.

Page 3
*பூங்குன்றம்? வெளியீட்டு விழா
'பூங்குன்றம் முதல் இதழைத் தலைவரிடமிருந்து திரு. கே. எஸ். இரத்தினசாமி வாங்குகின்றர்.
"எங்கும் தமிழுணர்ச்சி பெருகிக் காணப்படுகின்றது. தமிழின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என, நமது நாட்டிலும், பலரும் பலவித முயற்சிகளில் ஆர்வங் காட்டி வருகின்றனர். அத்தகைய முயற்சி களுள் ஒன்றே "பூங்குன்றம்’ பத்திரிகை முயற்சியும். இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களைப் பாராட்டுகிறேன்-வெற்றிபெற வாழ்த்துகிறேன்"- இவ்வாறு 8-2-71 அன்று, நடைபெற்ற 'பூங்குன்றம்' மாத இதழ் வெளி யீட்டு விழாவிலே, தலைமை வகித்து உரையாற்றிய பதுளையின் பிரபல வழக்கறிஞர் உயர் திரு. கே. வி. நடராஜா அவர்கள் கூறிஞர்கள்.
 

வெளியீட்டு விழாச் சொற்பொழிவாற்றிய ஆசிரியர் திரு. எஸ். சந்திரசேகரன் தமது உரையில் தமிழகத்துப் பத்திரிக்கைகளுக்கும் ஈழத்துப் பத்திரிகைகளுக்கும் இடையில் உள்ள வியாபாரப் போக்குகளே யும், இலக்கிய நோக்குகளையும் சுட்டிக் காட்டி, ஈழத்து எழுத்தாளர்கள் முயன்ருல், சிறந்த படைப்புக்களைப் படைக்க முடியும் எனக் கூறினர். (அவருடைய உரையின் சுருக்கம் அடுத்த இதழில் வெளிவரும்).
சமுக சேவைகளில் ஈடுபாடு கொண்டவரும், மொடர்ன் பட மாளிகை உரிமையாளருமான திரு. கே. எஸ். இரத்தினசாமி முதலாவது இதழைப் பெற்று விற்பனையை ஆரம்பித்து வைத்து, வாழ்த்தினர்.
திரு. ஏ. கே. கந்தசாமி, திரு. இராஜசூரியன் ஆகியோரும், இதழின் வெற்றிக்கு வாழ்த்துக் கூறினர்.
ை வாங்கிய . கே. எஸ். இரத்தினசாமி தழை (5 占写
பூங்குன்றத்தை வாழ்த்துகிறர்.

Page 4
நவீன டிசைன்களில்
உத்தரவாதமுள்ள
தங்க நகைகளுக்கு
Y
> சாந்தி <
ந  ைக ம |ாளிகை
17. லோவர் வீதி, பதுளை

நவ யுகம் அமைப்போம்!
- க. மொழிவரதன் -
சாதிக ளொழிந்திட வேண்டும் - பாரதியின்
சமத்துவ மோங்கிட வேண்டும் பீதியு மகன்றிட வேண்டும் - பெண்ணினம்
பெருமையும் வெற்றிட வேண்டும் நீதியும் நிலைத்திட வேண்டும் - மக்கள்
நேர் லி போற்றிட வேண்டும் மாத ரியக்ககூடா வேண்டும் . அவர்தம் மாண்பினு லுலகுய்ய வேண்டும்
கவலைக ளொழிந்திட வேண்டும் - கன்னியர்
கவிதைகள் படைத்திட வேண்டும் கலைகள் கற்றிட வேண்டும் - பாரதியின்
காதல் மலர்ந்திட வேண்டும் சிலைகள் வைத்திட வேண்டும் - அறிஞர்தம் சேவையைப் புகழ்ந்திட வேண்டும் மலைகள் செழித்திட வேண்டும் - நாட்டில்
மண்வள மோங்கிட வேண்டும்.
பஞ்சம் நீங்கிட வேண்டும் - உலகில்
பாமர ருயர்ந்திட வேண்டும் நெஞ்சம் துணிந்திட வேண்டும் - உலகில்
நீசரை அழித்திட வேண்டும் இலஞ்சம் தூற்றிட வேண்டும் - இல்லாமை
இங்கில்லையென் றியம்பிட வேண்டும் வஞ்சம் தவிர்த்திட வேண்டும் . வீண்
வம்புகள் மறைந்திட வேண்டும்.

Page 5
6
நெஞ்சினலைகள் - சேகரன் -
LAASASLLASAASSLALALASAASAASqLLLLLSAAAASLLLLLAALLLAALLLLLAASAAAAAAAAqSSLLLLLSLLSASAASASSLALLAAAAALLLLLLL
தேயிலைத் தோட்டமொன்றில், ஒரு மணி நேரத்தில் நான் கண்ட
காட்சிகளினுல் உருவான எண்ண ஓட்டமே இது.)
எங்கும் ஒரே பனிப்படலம். டத்து யாருக்கு அப்பால் சுத்த சூன்யமான காட்சி. இலேசான மழைத்தூறல் வேறு. வீட்டுக்குள்ளே யே என்னை அடைந்து கிடக்கச் செய்தது:
'அய்யா ஒரு பாக்குத்துண்டு குடுங்களே' என்ற குரல் கேட் டுத் திரும்பினேன், ஜன்னலுக்கு அப்பால் தலையில் கூடையுடன் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் உடுத்தியிருந்த கந் தைக்கு மேல் கந்தையாக ஒரு படங்கு இடுப்புக்குக் கீழே நீண்டிரு ந்தது. அப்படங்குதான் அவளுடைய உடம்பின் பருமனையும் கூட்டி க்காட்டியது.
"பாக்காவது கீக்காவது மணி ஏழேமுக்காலாச்சு போறியா, இல் லையா வேலைக்கி", கணக்கப்பிள்ளை தனக்கே உரித்தான குரலில் கத் திக்கொண்டு உள்ளே வந்தார் பாவம்,அவள் "பாக்கையோ கீக்கை யோ' வாங்காமலே சென்றுவிட்டாள். "அவளுக்குக் கொஞ்சம் பைத் தியம், சும்மா வந்து கரச்ச கொடுப்பா' என்று பக்கத்திலிருந்தவர் என்னிடங் கூறினர் எனக்கு இச்செய்தி சிறிது இதமாக இருந்தது. ஏனெனில் ஒரு வாய் வெற்றிலை போடக்கூட நேரங் காலம் ஒரு தொழிலாளிக்குத் தேவையெனில் அவனே அவளோ இக் கொடுமை யை எல்லாம் நினையாமலிருக்க பைத்தியமாக இருந்து விடுவது நல்லதல்லவா?
ஆனல் உடனே என் எண்ணம் தவருனது என்பதை உணர் ந்தேன். வெறுப்பு கோபம் என்பன மனித சுபாவங்கள். ஆனல் எல்லாவற்றையுஞ் சகித்துக்கொண்டு எவ்விதஉணர்ச்சியுமின்றி வாளா விருப்பது மனித சுபாவமாகுமா? மக்கள் உணர்ச்சியுள்ளவர்களாக மாரு தவரை, கொடுமைக்கு எதிராக எழுச்சி கொள்ளாதவரை அதி காரவர்க்கம் அவர்களை ஆட்டிப்படைப்பது இலகுவாகி விடுகிறதல்லவா?
வாழ்க்கைக் கதை சில சமயங்களில், ஒருவனுடைய வாழ்க்கையே தன் கதை யை எழுதிக்கொண்டு. அச்சுப்பக்கங்களில் மையைப் பூசிக்கொண்டு நிற்பது போலத்தோன்றுகின்றது. நுட்பமான கவனிப்பும் வெளிப் புறத் தோற்றத்தை ஊடுருவிக் கொண்டு சென்று தேடப்பட்ட ஆழ்ந்த உண்மையும்தான் முக்கியமானவை."
- ஒரு விமர்சகர்.

7
“வேலைக்கி போற லச்சணமா, பேரு வேணுமின சுருக்காப்போ ரீங்களா இல்லையா' - மீண்டும் கணக்கப்பிள்ளையின் அதிகாரஒலம்.
குசினிக்கிலே இருந்துக்கிட்டா வேலை பாக்ரிய: மலக்கி வெள் ளன போயில பாக்கனும்
இதைச்சொன்ன பெண் கணக்கரை முறைத்துப்பார்த்துவிட்டு வேகமாகச் சென்ருள்.
எனக்கு ஒரே ஆனந்தம். எதிர்த்துப்பேசும் அளவுக்கு உணர் வு பெற்றுவிட்டாள் அல்லவா? வார்த்தைகள் கிடைத்து விட்டன. அடுத்தது செயல். இந்தக் கொக்கரிக்கும் வர்க்கத்திர்க்கு எதிராக கொளுந்து கிள்ளும் கைகளினல் ஆயுதம் ஏந்தும் நாள் வெகு துார த்திலில்லை. அன்றைக்குப் பேச்சுக்கிணையான செயலைக் கண்டுவிடலாம்.
கணக்கப்பிள்ளை ஒரு மாதிரியாகக் காணப்பட்டார். காலை யிலேயே சூடு கிடைத்து விட்டதல்லவா?
கணக்கரும் தொழிலாளவர்க்கத்திலிருந்து வந்தவர்தான். ஆனல் வந்த பாதையை மறந்து விட்டார் தொழிலாளரை அடக்கியாள்வ தால்தான் தனக்கு மதிப்பும் மரியாதையும் என்ற முதலாளித்துவ குனம்சம் அவரைப் பிடித்தாட்டுகின்றது. ஒரு தோட்டத் துரைக்கு ஆயிரம் சலாம்போட்டுத் தன் அடிமைத் தனத்தைப் பறைசாற்று கின்றர். அவனுடைய தயவுக்காக ஏங்குகின்றர் ஆனல் தனது அதி காரத்தைக் காட்டி ஒரு தோட்டச் சமுதாயத்தையே பகைத்துக் கொள்கின்றர். பிரிவினை நீடிக்கும்வரை முதலாளிக்குக் கொண்டாட் டந்தானே? முதலாளித்துவ சமுதாயந்தான் ஒரு மனிதனை மக்களி லிருந்து எவ்வளவு லாவகமாக பிரித்துத் தனிப்படுத்துகின்றது.
நேரம் 8-30 மணியாகிவிட்டது. நானும் 4 மைல் தூரம் நடந்து சென்றுதான் பஸ்ஸைப் பிடிக்கவேண்டும்.
இன்னும் பனிப்படலம் கலைந்தபாடில்லை. மழைத் தூறலும் உடம்பைத் துளைத்துக்கொண்டிருந்தது. பெண் தொழிலாளர்கள், தலையில் கூடையுடன் தேயிலை மலையிலிருந்து நிறுக்குமிடத்திற்கு ஏறி க்கொண்டிருந்தனர்.
சீர்திருத்தம் ஒன்றே அல்லால் குலமில்லை ஒருவனே அல்லால் தெய்வமில்லை என்றதோர் தமிழன் சொல்லை மறந்ததால் அல்லவோ வந்தது தொல்லை.
பாரதிதாசன் - سی

Page 6
8
“Stř 56 inr ep Gogoyulurrri giř e6Jnr ep 600)juurriř” GT Gör gp G3Lurr Lurr தினங்களில் நகரில் விற்கப்படும் மெழுது துணி 'கொங்காணி'யாக அவர்கள் உடலைத் தூற்றலிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்தது.
இவர்களைப் பார்த்தவுடன், “கூந்தலிற் சூடிய மலரின் பாரத் தால் பெண்ணுெருத்தியின் இடை ஒடிந்துவிடும் போலிருக்கிறது”என்ற கருத்தில் புலவர் ஒருவர் பாடிய இலக்கிய நயமிக்க பாடல் நினை வுக்கு வந்தது, அவ்விலக்கிய நங்கைகளை 20, 30 இருத்தல் பாரத் துடன் மலை ஏறும், இந் நங்கையரோடு ஒப்பிட்டது என் மனம் பாவம், புலவர் கண்ட நங்கையர் எமது பாட்டாளி நங்கையர் செல் லும் இக் காட்சியைக் கண் டா லே சுக்குநூருக உடைந்துவிடுவர். உழைத்து, உழைத்து இந்நாட்டை வளம்படுத்தி இறுதியில் எந்தப் புலவரும் கான விரும்பாதவர்களாக தேயிலைக்கே உரமாகிவிடும் எமது "கூடை நங்கையரைக் காண நெஞ்சம் நெகிழ்ந்தது.
இத்தொழிலாள வர்க்கந்தான் இந் நாட்டின் பொருளாதரத் தில் 60% ஈட்டிக் கொடுக்கின்றது. ஆனல் அவர்கள் வாழும் வாழ்க்கை தான் என்ன? வெளியில் இறங்கினல் கேட்கும் வசைச் சொற்கள் தான் எத்தனை எது வந்தாலும் சகித்துக்கொண்டிருந்து பழக்கப் பட்டு விட்டார்கள். "ஆண்டவன் விட்டப்படித்தான் நடக்கும், தலை விதி யாரைவிட்டது". இவைகள் - இவர்களுக்கு சர்வரோக நிவா ரணியாக்கப்பட்டு விட்டன. அதிகார வர்க்கம் இதனைக்கொண்டே அவர்களின் உணர்வுகளைக் கட்டிவைத்திருக்கிறது. ஆனல் பிற்போக்கு வாதிகளின் இச் செயல்கள் தவிடுபொடியாகும் நாள் நெருங்கிக் கொண்டுதாணிருக்கிறது.
பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். மழை பலமாகப் பெய்ய
ஆரம்பித்தது, பக்கத்திலிருந்த பெட்டிக்கடை தாழ்வாரத்தில் ஒதுங்
கினேன். சில வாலிபர்களும் அங்கு நின்றுகொண்டிருந்தனர். எதிரே
சில இளம் பெண்கள் - வருங்காலக் கூடை நங்கையர் - "சொரண்டி"
யுடன் தேயிலைத் தூற்றில் போராடிக்கொண்டிருந்தனர். கிழக் கங்
காணி குளிரின் தாக்குதலால் வாய்ப்பேச்சின்றி நின்றுகொண்டிருந் தார். என் பக்கத்தில் நின்றிருந்த இளைஞர் பிதற்றத் தொடங்கினர்.
காதல், வீரம், சோகம் என்று தமிழர் தமக்கே உரியதென உரிமை
கொண்டாடும் மூவுணர்வுகளில் முன்னது அவரை ஆட்கொண்டுவிட்
டது போலும்,
"என் ரம்பா புள்ளை மழையிலே தொப்பையா நனைஞ்சுகிட்டு வேலை செய்யுது. ஐயோ என் மனசு உருகுதே.
பாருடா, லேசா இங்கிட்டும் பாக்கிரு: கொம்பனிக்கு நஷ்டமா போயிரும்? (நிமிர்ந்து அவள் பக்கம் திரும்பிய அவளைப்பார்த்து கேள்வி) ஒதவிக்கி வரலாமா. , சம்மதந்தான.? (சினிமா மெட்டில்) (14-ம் பக்கம் பார்க்க)

வேதனை!
- கவிஞர், குறிஞ்சிவாணன் -
ஏட்டினி லேஇங்கு பாட்டுக்கள் தீட்டியே
இ ன் ன லைச் சாடிவந்தோம்! - கொடும் வன்மையைச் சாடிவந்தோம்! - அட
தோட்டத் தொழிலாளர் வாட்டும் வறுமையை
ஒட்டமுன் வந்தவர்யார்? - இன்பம் நாட்டமுன் வந்தவர்யார்?
வீட்டு நிலையினை மாட்டுத் தொழுவமே
என்றேதான் கூறிவிட்டோம்! - நெஞ்சத் துன்பமும் கூறிவிட்டோம்! - அந்தப்
பாட்டைப் புரிந்தவர் ஒட்டமாய் ஒடியே
வந் திங்கு என்ன செய்தார்? - வாழ்வில் நொந்தவர்க் கென்ன செய்தார்?
வாட்டும் வறுமைப் பாட்டின் பொருளாக்கிப்
காட்டினுேம் வேதனையை - தீட்டிக் காட்டினுேம் சாதனையை - அந்தப்
பாட்டின் பொருளெல்லாம் ஏட்டுச் சுரைக்காயாய்
கறிக்கோ உதவவில்லை! - - இன்னல் முறிக் க உதவவில்லை!

Page 7
இ வ் வி தழ் பிரசுரமாகும் வேளையில் இந்தியாவில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின் றது. பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி நடைபெறும், கீ  ைழ த் தேசங்களில் தேர்தலின் மூத்த உடன்பிறப்பாய்க் காணப்படுவது கட்சிகளின் கூட்டுச் சேர்க்கையா கும். அடிப்படைக் கோட்பாடு களில் ஒற்றுமையின்றியே ஏற் படும் சந்தர்ப்பவாதக் கூட்டுக் களின் அருவருப்பான நாடகங் கள் நடைபெறும் அரங்கம் இந் தியாதான் என்று கூறினல், தவ ருகிவிடாது.
கூட்டுச் சேரும் முயற்சிகள் அரசியலோடு நின்றுவிடுவதாகக் கூறுவதற்கில்லை; கலை இலக்கியத்
பெறும் நிறுவனத்துக்கும் ஏற் பட்ட போராட்ட முடிவாய்க் கருதிய (சரியாகத்தான்) "தாம ரை”க்காரர் போராடிவந்த பெரு மகனுக்கு வாழ்த்துக் கூறி வர வேற்றனர்.
இந்த இடத்தில் தாமரைக் காரர் கலை, இலக்கியமும் அரசி யலும் நெருங்கிய தொடர்புடை யவை என்ற கோட்பாடுடைய வர் என்பதும், நா பா. அக் கோட்பாட்டை முழுவதாய் ஏற் காதவராய் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முற்றுமுழுதாய் கலை கலைக் காக என்ற வாதத்தின் சார்பில் நில்லாமலும், கலை மக்களுக்காக
துறை யிலும் என்றக் கோ 35 IT 600T G) nr ub ட் பா ட் டில் த மிழ் நாட் o 0 ஆழ்ந்து விடா டில் இம் மு சுழியோட்டம் மலும், மத் யற் சி சி ல திய நிலையிலி கா லத் தி ன் - சுழியோடி முனியன் - ரு ந் து கொ முன் மே ற் ண்டு தனது
கொள்ள ப் பட்டு, பின்னர் தோல்வியில் முடிந்து, தற்போது பங்காளிகள் எதிரிக ளாகி நாகுக்காய் வசை பாடுவதைக் காணலாம், தாமரை -தீபம் இதழ்களைத்தான் குறிப்பி டுகின்றேன்.
நா. பார்த்தசாரதி, கல்கி யில் நீண்டகாலம் பணியாற்றி விட்டு, த னக் கும் நிருவாகஸ் தருக்கும் ஏற்பட்ட தகராறு கார ணமாக விலகினர். இந்த வில கல் - விலக்கல் விவகாரத்தை, எழுத்தாளனுக்கும் அ வ ன் ப ைட ப் பா ற் ற லை விலைக்குப்
வாசகர் கூட் டத்தைப் பெ ரு க் க முயன்ற நா. பா. வை தாமரைக்காரர் தம் வசப்படுத்த முயன்றனர்,
நா. பா தீபத்தை ஆரம் பித்தார் முற்போக்குவாதிகள் வர வேற் புக் கீதமிசைத்தனர். இதழின் தரத்தைச் சிறப்பிக்கும் வகையில் விஷயதானம் செய்த னர். தாமரையின் தார்மீக ஆத ரவு தீபத்தின் வளர்ச்சிக்கு அநு சரணையாயிருந்ததென்பதில் ஐய மில்லை.
இந்த இலக்கியக் கூட்டு சில

காலத்தில் முறிந்தது. தாமரைக் காரரும், தீபக்காரரும் நேர் எதி ரிகளாய் நிற்கின்றனர்.
ஏன்?
கொஞ்சம் ஆழமாய்ச் சுழி யோடிப் பார்த்தாலே உண்மை தெரியலாம்.
உழைக்கும் வர்க்கத்தினர் grrtfL 6orgfris தாமரைக்காரர் நா. பா. வையும் அவ்வர்க்கச் சார்பினராய் மாற்ற முனைந்தனர் இது நா. பா. கல்கியிலிருந்து பிரிந்ததும் ஏற்பட்டது. முன்னர் நா. பா. தாமரையில் எழுதிய கதைகளின் தன்மையும் தாம ரைக்காரரின் முனைவுக்கும் கார ணமாயிற்று
ஆனல் நா. பா. "கழுவும் மீனிலே நழுவும் மீன்" தன்னு டைய வாசகர் கூ ட் டத் தை பெருக்கினர், தீபத்தின் செல் வாக்கு அதிகரித்தது, பெரு முத லாளிகளின் விளம்ப ரங் கள் கிடைத்தன. பத்திரிகை வளர்ந் தது, நா. பா. வும் வளர்ந்தார் முடிவு: மத்திய நிலையிலிருந்த நா. பா. ஒரு புறஞ் சாரலா யினர். ஆனல் தாமரைக்காரர் எதிர் பார்த்த பக்கத்திற் சேரா மல் அதற்கு எதிர்ப் பக்கமாய்ப் போனர். ஆமாம், வளர்ச்சிய டைந்த நா. பா. தனக்குரிய வர்க்கத்திற்காக, முதலாளி வர்க் கத்திற்காக உழைக்கலானர். தாமரையின் இலக்கியத்தில் அர சியல் வாசம் வீசுவதாய்க் குறை கண்ட அதே நா. பா தனது வாசக நலன்களுக்கேற்ற அரசி
யலை தனது நாவல்களின் மையக் கருத்தாக்கலானர்.
தாமரை - தீபம் கூட்டணி 'அரோகரா" ஆகிவிட்டது.
வர்க்கங்களைப்பற்றி நன்கு ணர்ந்தவர்களாகிய "தாமரைக் காரர்? ஏன் நா. பா. வைப்பற்றி வர்க்கரீதியில் ஆராய வில் லை என்பதுதான் புதிராயிருக்கின் நிறது. ዶ
(ஜெயகாந்தனைப் பொறுத்த வ  ைரயிலும் , இந்த முடிவு பொருந்துமென்றே நினைக்கின் றேன்.)
Χ. Χ. Χ
தமிழ் நாட்டிலும் பயிற்சி
மொழியைத் தமிழாக் கும் முயற்சி காணப்படுகின்றது.
தாய்மொழிக் கல்வி என்பது இலங்கையைப் பொறுத்தவரை
யில் நீண்டகாலத்தின் முன்னரே தீர்க்கப்பட்ட பிரச்சினை. பயிற்சி மொழிப் பிரச்சினையின் உடன் பிறப்பு மொழி பெயர்க்கும் பிரச்
g&or.
கல்வி பயிற்றும் மொழி தமிழ் எனவாகும்போது மருத்து வம், பொறியியல், பெளதிகம், இரசாயனம், உயிரியல் இன்னபிற அறிவியற் துறைகளிலும் தமிழ் நூல்கள் தோன்றுவது அவசிய மாகின்றது. பிறநாட்டு நல்லறி ஞர் சாத்திரங்கள் தமிழாக்கம் பெறுவதும் அவசியமாகின்றது.
இந்த அவசியத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு நமது நாட்

Page 8
டில் மொழிபெயர்ப்பு வேலைகள்
சில செய்யப்பட்டுள்ளன. அவற்
றைப் படிக்கும்போது, அவை படிக்கப்படுவதற்காகத் தான் மொழிபெயர்க்கப்பட்டனவா என்ற ஐயப்பாடு தோன்றுகின் நிறது. மொழிபெயர்ப்பாளர் தமக்குத் தமிழ்மொழியிலுள்ள Hாண்டித்தியத்தைப் புலப்படுத் துவதற்காகவே மொழிபெயர்ப்பு பணியிலீடுபடுகின்றனரோ என முடிவு செய்ய வேண்டியதாயுள் ளது. வ ர ல |ா று பொருளியல்
முதலிய துறை நூல்களே இந்'
நிலையிலிருந்தால் ஏனைய அறி
வியற் துறை நூல்கள் எப்படி ,
யிருக்கும் எனச் சிந்திக்கவே அச் சிமாயிருக்கின்றது.
இதற்குக் காரணம், உயர் -
நிலையிற் பயிலும் மாணவர்குத் தானே நூல்கள் என்ற உணர் வாயிருக்கலாம். அல்லது முன் னல் குறிப்பிட்டது போன்று வித்துவச் செருக்காயிருக்கலாம்.
இவ்விடத்தில் யாருக் கு மொழிபெயர்ப்பதுஎன்ற விஷயத் தைப்பற்றிச் சிறிது யோசிப்பது நன்று. அறிவு யாருக்குத் தேவை யோ அவர்க்கு நூல் தேவை. அப்படியென்ருல், அறிவியலறிவு யாருக்குத் தேவை? மாணவர்க்கு மட்டுந்தான? இல்லை நாட்டில் கைத்தொழில் அபிவிருத்தி ஏற் பட ஏற்ப ட பொதுமக்களும் விஞ்ஞானக் கருவிகளுடனும், சொற்களுடனும் சம்மந்தப்படு வர். மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்குமிடங்களிலும், மின்னியற் பிரிவைச் சார்ந்த தொழில் நுட்ப விவகாரங்களி லும், மற்றும் இவற்றையொத்த
பிற துறைகளிலும் இப்போது உயர்நிலைக் கல்வி அறிவு பெரு தவர் ஈடுபடுவதையும் அவர்கள் பல விஞ்ஞானச் சொற்களைச் சரளமாகச் கையாளுவதையும் அவதானிக்கலாம். எப்படி அர சியல் மக்கட் சார்புடையதாய். அவர்களாலேயே நடைமுறைப் படுத்தப்படுவதாய் ஏற்கனவே மாறிவிட்டதோ, அப்படி அறி வியலும் மாற வேண்டியிருக்கின் நிறது மா றிக் கொண் டிருக் கின்றது அவைதாம் அறிவியல் பண்பும் பயனுமாய் அமையும்.
மாணவர்க்குப் போ ன் றே வெகு சனங்களுக்கும் அறிவிய லைப் புகட்டும் அவசியமிருப்ப தால், அறிவியல் நூல்களை அவ் விலக்கியத்தை நிறைவு செய்யும் வகையில் எளிமையான நடை யிலாக்கல் வேண்டும். மொழி பெயர்க்கும்போதும் இந்நோக்க ம் மனத்திருத்தப்பட வேண்டிப து. மாணவர் தரம் உயர உயர அவர்தம் கல்வி அறிவாழம் அ திகரிக்குமென்பதும், அதற்கேற் ப, எழுதப்படும் நூல்களின் எ ளிமை குறையுமென்பதும் உண் மையே. எனினும் கலைச்சொற்க ளைப் பெறுத்தவரையில் அவற் றை ஆரம்ப அறிவியலைப் பயில் வார்க்கும் உயர் நிலையிலுள்ளார் க்குமென வேறுபடுத்த வேண்டி யதில்லை.
மாணவரோ பொது மக்க ளோ, விஞ்ஞானிகளோ யாரா யிருந்தாலும் குறித்தவொரு க லைச்சொல்லைப் பயன்படுத்துவது சாலவும் நன்று. அதே போன் று ஒரு மொழி எத்தனை நாடுக ளில் வழக்கிலிருந்தாலும் அத்த

னை நாடுகளிலும் கலைச்சொல் ஒருமைப்பாடு இருக்க வேண்டும். தமிழ் வழங்கு ம் தேசங்களில் இந்நிலை உண்டா? இல்லை. ஒரே ஆங்கிலச் சொல்லுக்கு ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்துகிறர் கள். உதாரணமாக பொருளிய லில் வரும் DEMAND என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ் நாட்டில் தேவை என்ற தமிழ்ப் பதமும் இலங்கைப் பல் கலை க் கழகத்தில் கேள்வி என்ற சொல் லும், இலங்கைக் கல்வித்திணைக் களப் பரீட்சைகளில் தேவை என்ற சொல்லும் பயன் படுத் தப் படுகின்றன. தமிழ்ப் பத்தி ரிக்கைகள் கி ராக் கி எ ன் ற தமிழ்ச் (?) * சொல்லைப் ப யன் படுத்துகின்றன. இந்தச் சாதா ரண சொல்லுக்கே இவ்வளவு தகராறு ஏற்படுமாயின் ஏனைய அறிவியற் துறைச் சொற்கள் என்னென்ன வேஷத்தில் வரு  ெம ன் பது ஆண்டவனுக்கே வெளிக்சம்,
கலைச் சொற்களை கண்டுபிடிக் கும் தமிழ் விஞ்ஞானிகளுக்குப் பெருவாரியாகப் பணமும் கொட் டப்படுவதாக அறிகின்ருேம். (யார் குடுமிதான் சும்மா ஆடு கின்றது?) விளைவாக, தமிழ் நாட் டிலும், ஈழத்திலும் வெவ்வேறு கலைச் சொற்கள் கையாளப்படு வதால் இரு நாட்டு அறிவியல் நூல்களும் பரிமாற்றம் செய்யப் படுவதிலும் கஷ்டங்கள் உண்டு. இலங்கை அரசகரும மொழித் திணைக்களம்பெரு வரியானபணத் தைக் கொட்டி மொழிபெயர்த்த தமிழ் நூல்கள். தனித் தமிழ் மனத்தை வீசிக்கொண்டு, பிறந் தகத்தை விட்டு வெளியேரும லிருப்பதாக அறிகின்ருேம். இப்
கலைச்
13
பிரச்சினைக்கு எப்படித்தான் முடி வுகாண்பது?
சில மு டி வு களைத் தரலா மென்று நினைக்கின்றேன்
1. த மிழ் தா டு , ஈழம் மலேசியா முதலிய நாட்டு அர சாங்கங்கள் கலந்து பேசி கலைச் சொல்லாக்கக் முழுவொன்றை நிறுவவேண்டும்.
2. அக்குழுவால் ஆ க் கப் பெறும் கலைச் சொற் களை யே தமிழ் வழங்கும் நாடுகளனைத்தும் பயன்படுத்தவேண்டும்
சாலைகள், பல்கலைக் கழகங்கள்,
நூல்கள் முதலிய எல்லாவற்றி லும் .
3. ஒவ்வொரு நாடும் சில சில நூல்களை மொழிபெயர்க்கத் தெரிவு செய்துகொள்ளவுேண் டும். இதனுல் எல்லா நூல்க ளுக்கும் சந்தை இருக்கும்.
கலைச்சொல்லாக்கக் குழுவி னரும் சில விஷயங்களை அவதா னிக்க வேண்டும்.
1, தமது மொழித்துாய்மை யைப் பேணுவதாக நினைத்துக் கொண்டு பொருளை நாசப்படுத் தக்கூடாது. ஜோர்ஜ் என்பது சோச்சு எனவும், ஸ்டாலின் என் பது சுடாலின் எனவும் ஷேக்ஸ் பியர் செகசுப்பியர் எனவும் கொலை செய்யப்பட்டிருப்பதை நுால்களிற் காணலாம். ரம்சே என்பது ராமசாமி என மாறி
னலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
2. பிறமொழிகளில் எவ் வாறு கலைச் சொல்லாக்கம் நடை பெறுகின்றனதென அவதானிக்க வேண்டும். உதாரணம்: ஜப்பா னிய, சீன மொழிகள்.
3. தாம் சகலதுமறிந்த அறி ஞர் எனவும், தம் வாக்கு தேவ வாக்காய் மக்களால் ஏற்கப்படு மெனவும் கருதிக்கொள்ளாமல், அறிவியலுக்கும், மொ ழி க்கும் சேவை செய்யும் உளப்பாங்கு டன் செயலாற்றவேண்டும்,

Page 9
14
(8-ம் பக்கத் தொடர்ச்சி)
அவள் மீண்டும் குனிந்து "சொரண்டி" யை தேயிலைக்கிடையில் புகுத் தினுள். பஸ் வந்துவிட்டது. வண்டிக்குள் ஏறியவுடன் எனது சிந்தனை விரிந்தன.
"இளைஞர்களாகிய நீங்கள் உத்வேகமும், ஜீவசக்தியும் நிறைந் தவர்கள். வாழ்வின் ஆரம்பத்திலிருக்கிறீர்கள் காலை 8 அல்லது 9 மணியளவில் காணும் சூரியன் போலிருக்கிறீர்கள். நம்பிக்கை முழு வதும் உங்கள்மீது வைக்கப்பட்டிருக்கிறது . . உலகம் உங்களுக்குரியது.
சுதந்திரமும், ஜீவகளையுமுள்ள ஒரு புதிய நாட்டை உருவாக் கிய சிற்பி ஒருவர் அந்நாட்டின் இளைஞர் சிலரைச் சந்தித்து ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.ஒரு நாட்டின் வருங்காலச் சந்ததிக்கு எவ் வளவு பொருப்புக் காத்திருக்கிறது. ஆனல் நம் நாட்டின் இளைஞர் களைப் பொருத்தவரை அவர்களுக்கு எதிர்கால நம்பிக்கை எதுவுமே யின்றி வளர்த்தெடுக்கப் படுகின்ருர்கள், அவர்களது சூழல், சினிமா பத்திரிக்கை எல்லாமே அவர்களைக் கெடுக்கத்தான் உதவுகின்றன. ஏன்? பாடசாலையுங்கூட அவர்களுக்குச் சரியான வழிகாட்டியாக அமையவில்லை. அவர்கள் சிந்தனை சில்லரை இன்பங்களுக்குத் திரும்பி விடுகின்றது. ஆளும் வர்க்கத்தின் ஊழல்களைக் கண்டு எழுச்சி கொள் வதைத் தடுக்க இவ்வாருக ஒரு சமுதாயமே அச்சமுதாய நலனுக்கே எதிராகத் திருப்பப்பட்டு விடுகின்றது.
என் மனதில் கேள்வி அலைகள் சில மோதின.
இந்த நிலைகளுக்கெல்லாம் காரணமென்ன? ஒரே பதில், இந்தச்சமுதாய அமைப்புத்தான்.
அழுகி நாற்றமெடுக்கும் இந்தச் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு கள் இருக்கும்வரை முதலாளி வர்க்கம் தன் நலனைக் காப்பாற்ற மற்ற வர்க்கத்தை-தொழிலாள வர்க்கத்தை-அடக்கி ஆண்டு கொண்டுதாணி ருக்கும். தானுகவே முன்வந்து தன் செல்வத்தைப் பகிர்ந்து கொடுத்து அவர்களது வாழ்க்கையை உயர்த்தி விடப்போவதில்லை.
அப்படியானுல் தொழிலாளருக்கு எப்பொழுதுதான் விமோச னம் கிடைக்கப்போகின்றது?
விமோசனத்துக்கு வழியும் ஒன்றுதான். முதலாளி வர்க்கத்துக் கெதிரான போராட்டம் ஆளும் முதலாளி வர்க்கத்தைத் துாக்கி யெறிய வேண்டும். அந்த இடத்தில் தொழிலாளி வர்க்கம் தன் ஆட் சியை நிறுவ வேண்டும்.
எப்போதுதான் இது நடைபெறப் போகின்றது?

15
எங்கே நிம்மதி?
மவுல்வி ஒருவர் ஹஜ் யாத்திரை போய்த் திரும்பியிருந்தார். சிவபக்தர் ஒருவர் பழனிக்குப் போய்த் திரும்பயிருந்தார். சிறிஸ்தவர் ஒருவர் வேலாங்கண்ணி" போய்த் திரும்பியிருந்தார்.
வைஷ்ணவர் ஒருவர் திருப்பதிக்குப் போய்த் திரும்பியிருந்தார். நால்வரும் சந்தித்தார்கள். போளுல் ஹஜ் யாத்திரை போகவேண்டும்" என்ருர் மவுல்வி. "ஏறினுல் திருப்பதி மலை ஏறவேண்டும்’ வைஷ்ணவர். "மொட்டையடித்தால் பழனியில் அடிக்கவேண்டும்” என்றர் சைவர்.
'வணங்கினுல் வேலாங்கண்ணி மாதாவை வணங்கவேண்டும்" என்றர்
கிருஸ்தவர்.
நால்வருக்கும் சண்டை வந்துவிட்டது.
அப்போது அவ்வழியே சென்ற வழிபோக்கர் ஒருவரைக் கூப்பிட்டு "எங்கே போனுல் நிம்மதி? என்று கேட்டார்கள் நால்வரும்.
அவர் சொன்னுர் உறுதியாக,
'நீங்கள் உறுதியாகவும், நம்பிக்கையோடும் ஒற்றுமையோடும் நிம்
மதியைக் காணக்கூடிய இடம் ஒன்றுதான் உண்டு. அதுதான் சுடுகாடு"
- கண்ணதாசன் -
འ།།ཁ་བ་ཁང་27
உழைக்கும் தொழிலாள விவசாய வர்க்கம் எப்போது விழித்து க்கொள்கிறதோ அப்போதுதான்.
மக்கள் விழிப்புணர்ச்சி பெருதவரை ஆளும் வர்க்கம் தன் அட க்குமுறைக் கருவிகளைச் கீழே வைக்கப்போவதில்லை. என்று மக்கள் விழித்துக் கொள்ளுகின்றர்களோ அன்று ஆளும் பிற்போக்கு வர்க்கம் துாக்கியெறியப்படுவது திண்ணம்.
இது வெறுய் ஊகமல்ல. வரலாற்று நியதி இந்த நியதியிலிருந்து முதலாளித்துவ சமுதாயம் மாத்திரம் தப்ப முடியுமா?

Page 10
ரத்தங்கள் மண்ணில்
கலப்பதில்லை
- மு. நித்தியானந்தன் -
ஊதைக் காற்று.
கிழவனுக்குத் தூக்கம் வரவில்லை. திண்ணைக் கிராதிக் கூடாக வெளியே பார்த்தான். கரு நிழலாகத் தெரிந்த சவுக்கு மரங்களுக்கு மப்பால் கீழ்வானில் நிலவு மேலேறிக்கொண்டிருந்தது, தூரத்தே நாய்கள் குரைக்கும் ஒசை சன்னமாய் கேட்கிறது.
தோட்டமோ சுடுகாடாய் கிடக்கிறது. நாஜிகள் படையெடுத்த பிரதேசம் மாதிரி. லயங்களில் யாருமில்லை. சின்னஞ் சிறுசுகளின் அழுகுரலைக்கூடக் கேட்க முடியவில்லை. லயங்களில் விளக்குகளை ஏற்றி வைக்கவும் எவருமில்லை. பசு மாடுகள் அநாதரவாகக் கதறுகின்றன. பட்டியில் பிடித்து அடைக்கவோ. புல் போடவோ, புண்ணுக்குத் தண்ணிர் காட்டவோ ஒருவருமில்லை. காலையில் திறந்துவிட்ட கோழி கள் அடைய வேண்டிய இடங்களுக்கு வந்து அலைமோதிக்கொண்டி ருக்கின்றன. வாளி, மண்வெட்டி, கம்பளி, கூடை எல்லாம் வாச லில் போட்டது போட்டபடி தாறுமாருகக் கிடக்கின்றன.
கிழவன் வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றன்.
அவனுக்கு வயது அறுபத்தைந்தைத் தாண்டிவிட்டது. சவசவத் துப்போன உடம்பு, பிஞ்சுப் பாகற்காயாய் சுருங்கிப்போன சருமம் அகன்ற மூக்கைச் சுற்றி இருபுறமும் ஆழமான கோடு பழுப்பேறி விட்ட புருவங்களின் கீழே பிரகாசமான கண்கள், அவற்றில் ஆத் திரம் நிழலாடுகிறது.
அவனுக்குத் தாம்பத்ய சுகம் தந்தவள் பழுப்பு இலை மாதிரி உதிர்ந்து போய் பதின்முன்று வருடங்களாகிறது. அவனேடு வாழ்ந்த காலங் களுக்கு அத்தாட்சி இல்லாமலேயே செத்துப்போவள். கிழவன் இப் போது ஒரு தனிக்கட்டை.
நீண்ட காலங்களுக்குப் பின்னல் கிழவன் இப்போதுதான் ஆத் திரப்பட்டிருக்கிருன். அவன் நரம்புகள் கொதிப்பேறுகின்றன. உடம்பு வெடவெடக்கிறத,

II 7
கடந்த மூன்று மாத காலமாக அந்தத் தோட்டத்தில் p5 60) L -- பெற்றுவந்த வேலை நிறுத்தத்தில் அவன் அதிக அக்கறை கொண்டி ருந்தான். கீனுகலை தோட்டத்தைப் பன்னிரண்டு மைல்களுக்கு அப் பால் தள்ளியிருந்த குயின்ஸ்டவுன் குறுாப்புடன் இணைப்பதையும், சமர்வில் என்னும் வெள்ளையன் கீனுக்கலை தோட்டத் துரையாக நிய மிக்கப்படுவதையும் எதிர்த்தே இந்த வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
மூன்று மாத காலம் என்பது அவர்களுக்கு மூன்று யுகங்கள்போல,
பல லயங்களில் அடுப்புப் புகையைக் காணமுடியவில்லை. திருப்பி விடுவோம் என்ற நம்பிக்கையோடும், திருப்பி விடுவதற்கு எதிர்கா லத்தில் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல், வீடுகளில் பெண்டு பிள்ளைகளிடம் இருந்த நகைகள் எல்லாம் பதுளையின் உத்தரவுபெற்ற நகை அடவு பிடிப்போரிடம் தஞ்சம் புகுந்தன. சட்டப்படி கொடுக் கப்பட வேண்டிய பங்கீட்டரிசியும் கொடுக்கப்படவில்லை அல்லது மிகத்தாமதமாகக் கொடுக்கப்பட்டன.
எல்லார் முகத்திலும் அதிருப்தியும், ஏக்கமும், பட்டினிக்களையுமே எழுதி ஒட்டப்பட்ருந்தன. ஆனல் அவர்கள் உறுதியோடு நின்றர்கள்
வேலை நிறுத்தத்தை ஒரு கட்டுக் கோப்புடன் கொண்டுநடத்து திெல் மூன்று மாதம் இராப்பகலாக ராமையா கடுமையாக உழைத் ததை நினைத்துப் பார்த்தபோது கிழவனுக்கு உடல் குலுங்குகிறது. கிழவனின் மடியிலே கதை கேட்டு வளர்ந்தவன் ராமையா.
ஒரு நாள் கிழவன் தான் கேட்டான்.
* 'இன்னம் எவ்வளவு நாளைக்கு வேலை நிறுத்தம் நடக்கும்???
** எவ்வளவு நாளைக்கு வேண்டுமானுலும் நடக்கட்டும். நாங்க அசையமாட்டோம்." ராமையா உறுதியாகச் சொன்னன்.
**எல்லாரும் பசியும் பட்டினியுமாகக் கிடக்கிறதைப் பாத்தியா?* என்று கிழவன் கேட்டதற்கு ராமையா கொஞ்ச நேரம் சென்று பதில் சொன்னன்.
'மிருகங்களைப்போல இப்படி ஈனமா வாழ்ந்து கஷ்டப்படுறதைக் காட்டிலும் இந்த வாழ்க்கையை மாத்தி அமைச்சுக்கிறது லேசு. அந் தப் போராட்டத்துலே உயிரே போனலும் பரவாயில்லெ. நான் சாக லாம்; எனக்குப் பின்னுக்கு வர்றவங்க சாகலாம். நம்ம வர்க்கமே செத்துப்போயிடாது. ஆணு, இந்த சட்டத்தை அழிச்சுர முடியும். நடக்கிற அநியாயங்களுக்கு ஒரு முடிவு கட்ட முடியும். அதைத்தான் நீங்கள்ளாம் தெரிஞ்சுகனும்.”*

Page 11
18
அந்தப் புரட்சிக்காரனைக் கிழவன் பெருமையோடு பார்த்தான்.
*செல்லரித்துப்போன இந்தச் சட்டங்கள் சாசுவதமானவை அல்ல; அதற்குச் சிரஞ்சீவித்தன்மை இல்லை" என்றெல்லாம் ராமையா அடித் துப் பேசுகிறபோது கிழவனுக்கு புல்லரிக்கும்.
வெற்றிகரமான அந்த மூன்று மாத வேலை நிறுத்தத்திற்கு அன்று தான் சோதனை ஆரம்பமானது.
பகல் இரண்டு மணியிருக்கும்.
வாசலில் நிற்பவனுக்கு "வீட்டில் யgருமில்லை" என்று வேலைக்காரி யிடம் சொல்லி அனுப்புகிற வீட்டுக்காரியின் நெஞ்சுபோல வெயில் இரக்கமற்று காய்ந்துகொண்டிருந்தது.
வேலை நிறுத்தத்தை முறியடித்து, போலீஸ் உதவியுடன் தோட் டத்திற்குள் நுழைய நிர்வாகம் தீர்ம்ானித்திருந்தது:
போலீஸ் ஜீப் தோட்டத்திற்குள் வந்துவிட்டது என்ற விஷயம் காட்டுத்தீபோல தோட்டமெங்கும் பரவி விட்டது. ஆர்ப்பாட்டமில் லாமலே தொடர்கிற வேலை நிறுத்தத்தை ஆயுதந்தாங்கி அடக்கிவிட முனைந்தது தொழிலாளர்களுக்கு ஆத்திரமூட்டியது.
"இதை அனுமதிக்க முடியாது" என்று எல்லாரும் பேசிக்கொண் nrri 55 Gir.
"பார்ப்போம்" என்று இளவட்டங்கள் துணிந்தன. பெண்கள், சின்னஞ்சிறுசுகள் எல்லாம். ஆத்திரத்தோடு வாசலுக்கு வந்தனர்.
கூட்டமாய் எல்லர்ம் திரண்டபோது கூச்சல் வலுத்தது.
போலீஸ் காரர் - அந்தக் காவல் நாய்கள் உஷராகின.
குடிவெறியில் அவர்கள் கண்கள் சிவந்திருந்தன. துப்பாக்கிகள் வெயிலில் பளபளத்தன.
ஜீப்பை நோக்கி கற்கள் பறந்தன. கூட்டமோ ஆத்திரத்தோடு முன்னேறிக்கொண்டிருக்கிறது.
போலீஸ்காரர்கள் பீதியுற்றனர்.
கற்கள் பறக்கின்றன.
அவர்கள் வானத்தை நோக்கிச் சுட்டு எச்சரிக்கைப்படுத்தவில்லை.

19
முழங்கால்களுக்கு கீழே சுட்டு அடக்க முயன்றிருக்கலாம். எதிரேறிவரும் தொழிலாளரின் பரந்த மார்புகளை நோக்கி அவர்
கள் சுட்டிடார்கள்.
சுட்டார்கள்.
முனிசிப்பல் தெருவில் லைசென்ஸ் இல்லாத நாய்களைச் சுடுவதைப் போல அவர்கள் சுட்டார்கள்.
'அம்மா' என்ற மரண ஒலம் உயிர் மூச்சிலிருந்து தொண்டை கிழியக் கூட்டத்திலிருந்து எழுகிறது:
ரத்தம் சீறியடிக்க நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஒரு உயிர் தள் ளாடுகிறது.
ஓ! மக்கள் படை இல்லாமல் மக்களுக்கு எதுவுமேயில்லை. ராமையா செத்துப் பிணமாகிச் சாய்கிறன்.
முகம் மரண அவஸ்தையால் சுருங்கி, உடல் கோணி நெலிந்து, கடைவாயில் நுரை கக்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனன்.
அந்தச் சாவு இறக்ைப்போல மென்மையானதல்ல - இமயத்தைப் போல பாரமானது.
"ஐ ஐ யோ.. ??
இந்த அவல ஒலத்திற்குரியவனின் குடலைக் கிழித்துக்கொண்டு அடுத்த தோட்டா பாய்கிறது.
உழைக்கும் உடலங்களுக்கு கிடைக்கிற பரிசுகள்.
துர
நீதி
தர்மம் ஜனநாயகம் சட்டம் அமைதி ஒழுங்கு
-- g5IT

Page 12
20
w
தளர்வுற்றேன் (ட
- அட்டாம்பிட்டிய ராமு -
m/YAY
திங்கள் வரும் நேரம் : தீவிய
வு வர - மங்கை செங்கை வளையல் சிரிக்க(ச்) சேர்ந் தாள் !
அன்ன நடை பயின்று : என
அருகு இருத்தி - இதழ் சின்னங் கள் பதித்தாள் சிந்தைக்கு
சிற்றிடையாள் ! பெருரு மின்பக் காதல் போதை
மருவித் தேங்க - மரக் குருவி யுரு வெடுத்து(ப்)
பறந் தாள் ! உணர்வுகள் கணத் தெழுந்து உருப் பெற்று - தளர் நினைவாய் சிதைந் துருக தளர் வுற் றேன்.
வணக்கத்துக்குரிய ராமையாவின் உடலை முனிசிப்பல் குப்பை லொறியிலே கொண்டுசென்று குழிதோண்டிப் புதைத்திருக்கிருர்கள்.
கிழவனுக்கு ரத்தம் கொதித்தது. கைக்கு அகப்பட்ட வயதுப் பெண்கள் எல்லாரையும் குழப்பம் செய்ததாகச்சொல்லி ஜீப்பில் போட்டுக்கொண்டு பேர்ய்விட்டார்கள். தோட்டத்தைவிட்டு யாரும் வெளியேறவோ, உள்ளேசெல்லவோ அனுமதிக்கப்படவில்லை.
அரைகுறை உயிரோடு பதுளைக்கு கொண்டுசெல்லப்பட்ட அழகர் சாமியும் செத்துப்போனன் என்று கேட்டபோது அவனைப்பெற்றெ டுத்தவள் கதறினுள்:
**கொலைக்கார பாவிங்களா! நீங்க. அழிஞ்சி போயிடுவீங்க?" - அந்தத் தாயின் வார்த்கைகள் பலிக்கட்டும்.
**இந்த ரத்தம் மண்ணுேடு கலந்துராது. அது ரத்தத்தோடே தான் கலக்கணும்'
கிழவன் ஆத்திரத்தோடு நிமிர்ந்தபோது மங்கிய நிலவெளியில் செங்கொடி பறக்கிறது . தெரிகிறது.

2.
கலாலயம் அளித்த கலை நிகழ்ச்சி
சென்ற மாதம் பதுளை சரஸ் வதி மகா வித்தியாலய மண்ட பத்தில் பதுளைத் தமிழ்க் கலை மன்றத்தினரால் “ 35 G) for øju ub” என்ற பெயரில் கலை வகுப்புக்கள் நடத்துவற்கான ஒரு ஸ்தாபனம் அங்குரார்ப்பணம் செய்யப்பட் டது. தமது நோக்கத்தின் நற் பயனைப் பிரத்தியட்சப்படுத்தும் வகையில் ஒரு நாட்டிய நிகழ்ச்சி யையும் ஏற்பாடு செய்திருந்த் னர். உள்ளூர் இறைவரி ஆணை யாளராகவிருந்த திரு. சி சிற்றம் பலம் அவர்களின் ஆசியுரையின் பின்னர் இடம் பெற்ற செல்வி சுகிர்தாராணி சின்னத்துரையின் நாட்டியம் அன்றைய முக்கிய நிக ழ்ச்சியாக அமைந்தது.
நாட்டியத்தைப் பற்றிக் கூறு முன்னர் வேருெரு விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். பதுளை மலைநாட்டுப் பகுகியிலு . ள்ள முக்கிய பட்டனங்களிலொ ன்றென்பதும், வரலாற்று முக்கி யத்துவம் பெற்ற தென்பதுவும் பலருமறிந்ததே. எனினும் பதுளை யைப் போன்ற பின்தங்கிய பட் டனம் வேறெதுவும் உண்டோ வென்பதுவும் சந்தேகமே, ஒரு நகரத்துக்குத் தேவையான பல அம்சங்கள் பதுளையில் இல்லை. அவற்றில் முக்கியமானது நாட் டியங்கள் நாடகங்கள் நடத்துவ தற்கு வசதியான மண்டபம். ஒரு நிகழ்ச்சி நடத்துவதாயிருந்தால் பாடசாலை மண்டபங்களைத்தான் பயன்படுத்த வேண்டும். அவுற் றிலோ பலரகமான குறைபர்டு செய்வோர் இப் பிரச்சினைகளுக்கு ஈடுகொடுக்கத் தயாராயிருக்க வேண்டும்.
செல்வி சுகிர்தராணி சின்னத் துரையின் நாட்டிய நிகழ்ச்சி இவ் விடர்ப்பாடுகளின் மத் தி யி லே தான் இடம்பெற்றது. அத்துடன் அன்று வேறு இரண்டு சிக்கல் கள் காணப்பட்டன. நாட்டியத் திற்கான பாடல்கள் பதிவு செய்
- கலைப்பிரியன்
யப்பட்டிருந்த டேப் ரெக்கார்ட் தெளிவாய்க் கேட்கும் வண்ணம் இயங்க வில்லை என்பது ஒன்று மண்டபத்தின் மத்தியில் பூட்டப் பட்டிருந்த 300 வோல்ட் பல்ப் நாட்டியம் நடந்தபோதும் ஒளி யுமிழந்து பாரிப்போரின் கட்பு லச் சக்தியை குறைத்தது என்பது மற்றது,
இவ்வளவு சங்கடங்களினி டையே நல்லதொரு நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த திருப்தி மு டி வில் ஏற்பட்டதென்ருல் செல்வி சுகிர்ததராணியின் நட னவன்மைதான் அதற்குக் கார ணம்.
** சிந்தையறிந்து வாடி ** எ ன் ற இராகமாலிகையுடன் ஆரம்பித்தது நிகழ்ச்சி, முருகப் பெருமான நினைந்து நினைந்துரு கும் சுகிர்தராணி அடுத்து நாட் டைக் குறிஞ்சி ராகத்திலமைந்த பால் வடியும் மு 8 ம் என்ற பாட் டில் ”பரவசமிகவாகுதே' என்ற தொடருக்கு பலவிதங்களிலான பரவச நிலையை அபிநயித்து காட் டினர், பார்ப்போரனைவரும் பர வசமடைந்திருப்பர்.
பரவசமடைந்த உள் ளங்க
ளைத் துள்ளி எழச்செய்து விறு விறுப்பேற்படுத்திய
**ஆனத்த நடனம்' என்னும் காம்போதி ராகப் பாடலுக்கான அபிநயம். கைவழி ந யன ஞ் செல்ல. கண்வழி மனமுஞ் செல்ல ஆடும் பரதக்கலை செல்வி சுகிர்தரானி யைப் பொறுத்தவரையில் கை வந்த கலை என்பது தெளிவாய்த் தெரிந்தது.
பதுளைப் பகுதியில் கலை வகுப் புக்களே நடாத்த உத்தேசித் துள்ள கலாலயத்தார் பார்ப்போ ரின் ஆர்வத்தைத் து ன் ட க் கூடிய நிகழ்ச்சியொன்றினை நடத் தியதன் மூலம் தம்நோக்கத்தில் ஆரம்ப வெற்றியை அடைந்துள் ளனர் என்பதில் ஐயமில்லை.

Page 13
22
நாட்டுப் பாடல்களும்
- Y தேவராஜ்
'தமிழர் தொன்மைவாய்ந்த இனம் என்பதில் ஐயமில்லை", **ஆனல் வரலாறு எழுதிவைக்காத காரணத்தினல் தமிழரின் வர லாற்றுச் சிறப்பை தமிழ் இலக்கியத்தின் மூலமே நாம் அறிகிருேம். இத் தொன்மையை நிரூபிக்க இலக்கியத்தைத் தவிர வேறு சான்று கள் எமக்குப் பூரணமாகச் கிடைக்கவில்லை' என்று வரலாற்று வல் லுனர்கள் கூறுவதில் எமது இலக்கியத்தின் சிறப்பை நாம் நன்கறிய லாம், சமுதாயத்தின் வாழ்க்கை முறையை அப்பட்டமாக பிரதிப லிப்பது இலக்கியமாகும். அதனல்தான் இலக்கியம் சமுதாயத்தின் கண்ணுடி என்பதை நாம் ஒப்புக்கொள்கிருேம்,
ஆகவே ஒரு சமுதாயத்தின் கலாச்சாரத்தைப் பிரதி பலிப் பது அவ்வக்காலங்க ளில் தோன்றிய இலக்கியங்களாகும். இது நூல் வடிவாகவோ, வாய்மொழியாகவோ இருக்கலாம். அப்படித்தோன்றிய பல ஒலைச் சுவடுகளும் வாய் மொழிகளும் இன்று நூல்வடிவம் பெற் ரு லும் இன்னும் பல நாட்டுப்பாடல்களும், பழமொழிகளும், விடு கதைகளும் நூல்வடிவம் பெருமல் வாய்மொழிப் பாடல்களாகவே இருக் கின்றன.
இந்நிலை இந்தியாவில் மட்டுமல்ல எமது இலங்கையிலும்தான். குறிப்பாக எமது மலையக சமுதாயத்தைப் பொருத்தவரையில் அவர் களின் ஆரம்ப வாழ்க்கை முதல் இன்றைக்கு இருபத்தி ஐந்து ஆண்டு கட்கு முற்பட்ட காலம் வரைக்கும் உள்ள வாழ்க்கை முறைகளை இம் மாதரியான பாடல்கள் மூலமே அறியக்கிடக்கிறது. இவர்கள் இந்தி யாவில் இருந்து வந்து குடியேறியபோது இவர்களுக்கிடையே படித் தவர்களோ எழுத்தாளர்களோ இன்மையால் இவர்களின் வாழ்க்கை முறைகளைப் பிரதி பண்ணிக்கூட, எந்த இலக்கியமும் நூல் வடிவில் இடம்பெறவில்லை. ஆனல் வாய்மொழி இலக்கியங்களான 'நாட்டுப் பாடல்களான கும்மி, ஒப்பாரி, தெம்மாங்கு விடுகதை பழமொழிகள்’’ என்பன அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந் துள்ளன, என்பதை இன்று கிடைக்கும் சில பாடல்களைக்கொண்டு நாம் உணர முடிகிறது. இப்பாடல்கள் இப்பொழுது மலையகத்தில் இலை மறை காயாகவே இருக்கின்றன அதுவும் காலப்போக்கில் எமது சமுதாயத்தை விட்டு அழிந்துபோகும் என்ற உண்மை எத்தனையோ படித்த பெரியவர்கள் தெரிந்தும் அவற்றை அழியாவண்ணம் பாது காக்க முன்வருகின்ருரில்லை இவைகளைச் சேகரித்து நூல்வடிவமாக்கா விட்டால் நிச்சயமாக அழிந்தேவிடும்.
இந்தியாவில் இக்குறையைப்போக்க திரு. நா. வானமாமலை அவர்கள் அரும்பாடுபட்டு நாட்டுப் பாடல்களான கும்மி தெம்மாங்கு, ஒப்பாரி, போன்ற வற்றைத் தேடிப்பிடித்து **ஆராய்ச்சி, தாமரை”* என்னும் இதழ்களில் வெளியிடுவதோடு ஆராச்சிக் கட்டுரைகளையும்

23
எழுதி நாட்டுப்பாடல்களுக்கு புத்துயிர் அளித்துக்கொண்டிருக்கிருர், இது அவர் தமிழ் சமுதாயத்துக்கும், தமிழுக்கும் செய்யும் பெரும் பணியாகும், இதேபோல் மலையக எழுத்தாளரான சி வி. வேலுப் பிள்ளை அவர்கள் மலையக நாட்டுப் பாடல்களை எல்லாம் சேகரித்து நூல்வடிவாக்க முயன்று கொண்டிருக்கிருர். இப்பணி உண்மையி லேயே வெற்றிபெறவேண்டுமானுல் எம்போன்ற படித்த இளைஞர்சள் முன்வாவேண்டும் பாடல் தெரிந்தவர்களை எல்லாம் ஆங்காங்கே தேடிக் கண்டுபிடித்து அவைகளை எழுதி நூல்வடிவாக்க முயல்பவர்க ளுக்கு அனுப்பினல் அப்பாடல்கள் நூல்வடிவம்பெறுவதோடு எமது சமகாய வரலாற்றை, எழுதுவதற்கு அடிக்கல் இட்டவர்களாக யும் மதிக்கப்படுவோம், அல்லது மலையகத்தைப் பிரதிபலிக்கும் இலக்கிய மட்டுமல்ல வரலாற்றுக்கு அடிகோலும் ஒரு சான்றையே இழப்பவர் களாவோம்,
இனி அம்மாதிரியான சில பாடல்களைப் பார்ப்போம்"
ஆசை வச்சேன் உன் மேலே அலரி வச்சேன் தோட்டத்திலே பூவெடுக்கும் நாளேயிலே போறேனே கோட்டம் விட்டு தோட்டம் விட்டுப் போறேனு துயரப்பட்டு நிக்காதே - வேறு தோட்டம் போன முணும் நாளு போட்டுடுவேன் போஸ்டுகாடு
இப்பாடலைக் கொண்டு அக்காலத்தில் அடிக்கடி தோட்டம்விட்டு தோட்டம் மாறிப்போய்க் குடியேறி உள்ளார்கள் என்பதையும் அவ ர்களும் உண்மைக் காதல் வாழ்க்கை மேற்கொண்டு வாழ்ந்திருக்கிரு ர்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது, அத்தோடு ஆங்கிலேயரின் ஆதிக்கத்தால் சாதாரண மக்கள் மத்தியி லும் போஸ்டுகாடு என்ற சொல் சாதாரணமாகப் பரவி இருந்தது என்பதையும் நாம் அறியலாம்.
ஊரான ஊரிழந்தேன் ஒத்த பனைத் தோப்பிழந்வேன் பேரான கண்டியிலே பெத்த தாயை நானிழந்தேன் கூனி அடிச்ச மலை கோப்பிக்கண்ணு GLI FL- LD2suo எங்க அண்ல்எனே தோத்த மலை ஐயோ தெரியுதேடி
இப்பாடலைக் கொண்டு பார்க்குமிடத்து இலங்சைக்கு வர ஆசைப்பட்டதால் செழிப்பான ஊரையும், பனந்தோப்பையும் பெற் றதாயையும் கூடப்பிறந்த அண்ணனையும் இழந்திருக்கிருள் என்ப தையும், காடுகளை அழித்து கோப்பி உண்டாக்கினர்கள் என்பதையும் உணர்ந்து அறிகின் ருேம்.
இப்படியே மலையக மக்களின் வாழ்கையை, அவர்களின் இன் பதுன்பங்களை பிரதிபலிக்கும் பலப்பல பாடல்களை நாம் முயன்ருல் சேகரிக்கலாம்.

Page 14
உங்களுக்குத் தேவையான எல்லா விதமான
அச்சு வேலைகளுக்கும்,
எங்களைக் கலந்தாலோசியுங்கள்!
i. பதுளை அச்சகம்
235, லோவர் வீதி, : பதுளை.
இப்பத்திரிகை, பதுஒைரு அச்சகத்தாருக்காக, பதுளை, 235, லோவர் வீதியில், இருக்கும் சிெ.ச.நாதனுல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே.


Page 15