கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ப்ரிய நிலா 1995.01-03

Page 1
With the Best C.
NERS MALAWA
 

ஆசிரியர்' 'உயன்வத்தை றம்ஜான்
"V" 91 GörüJErfEIL : IOA
EEEU)ճՆ)
இலக்கிய 鞑 இதழ் :
pliments of ANELLA

Page 2
கேகாலை மாநகரில்
புதுப் புது டிசைன்களில் சகல வைபவங்களுக்கும் ஏற்ற
சாரிவகைகள் சேட்டிங்துணிகள் ஸ்கடின் துணிகள் முதல்
தயாரிக்கப்பட்ட
சகல விதமான ஆடைகளையும் பெற்றுக்கொள்ள ஏற்ற இடம்
GsteeN GARDEN TeXTILES
NO. 31 MAINSTReeT, KeGAULe O. PC. MsAs46T.
நங்கையர் விரும்பும் நவீன டிசைன்களில் 22 கரட் தங்க நகைகளுக்கு நாடுங்கள்.
கெளரி ஜவலர்ஸ்
35/ஏ, பிரதான வீதி, கஹவத்தை.
ിന്ന eee eAeA0eSSekSLkL0LeeSeSEceSYLLLLLL0LkSLSkSkLLkSLLEkSAS
M
S R
s
涵
氢
リ
 
 
 
 
 
 
 
 
 
 

காலாண்டு கலை இலக்கிய இதழ் ஆசிரியர் : 'ஸெளதுல் உம்மா’ உயன்வத்தை றம்ஜான் உதவி: திருமதி ஜெமீலா றம்ஜான்
ଗ ଗ
புத்தாண்டு வாழ்த்துக்களோடு ப்ரியநிலா வாசகர்களை
சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். தனது கலைப் பணியை ஒரு புனிதப் பணியாக எண்ணி எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் வாசக நெஞ்சங்களின் மீது வைத்துள்ள நம்பிக்கையில் தான் உலா வர முடிகிற தென்பதைக் கூறாமல் இருக்க முடியாது.
எனவே இன்ன கியங்கள் இன்றைய சமூகத்தின் உறக்க நிலையைக் கை ப்புறச் செய்து மறுமலர்ச்சிக்கான படைப்புக்களைத் தந்துதவ. .ண்டும்.
சமூகத்தின் மருமலர்ச்சிக்குத் தடையாக உள்ள சுரண்டல், வறுமை, பசி, பட்டினி அறியாமை அனைத்தும் போக்கிட எழுத்தாளர்கள் தத்தம் பேனாக்களை உயர்த்த வேண்டும். குரல் கொடுக்க வேண்டும். சமூகத்தின் அவல நிலையை அலரலை செவிமடுத்து, அவர்களின் விடுதலைக்காக, விமோசனத்திற்காக பாடுபடாத இலக்கியம் இலக்கியமாக இருக்க முடியாது.
கலைஞர்களுக்குக் களம் தருவதில் ப்ரியநிலா மூத்தவர்கள் புதியவர்கள் இந்த இனத்தவர்கள் அந்த இனத்தவர்கள் என்று இனங்கான முயல்வது கிடையாது. முயன்றதும் கிடையாது. எனவே, எழுதுங்கள் உங்கள் எழுத்துக்கள் சமூக மேம்பாட்டுக்கு உதவட்டும்.
ப்ரியநிலா கலைகளை வளர்க்க முற்படுவது போன்றே கலாச்சாரங்களையும் காப்பதோடு, சமூக சேவையாளர்களையும், சாதனையாளர்களையும் கண்டு பிடித்து, அவ்வப்போது அறிமுகம் செய்வதையும் அறவீர்கள்.
எனவே, கடந்த 5 வருடங்களாக அமைதியான முறையில் தனது பணியைச் செய்து வரும் “ப்ரியநிலா" மூலம் பல மூத்த களைஞர்களை இனங்காட்டிக் கொடுத்தும் புது எழுத்தாளர்களை உருவாக்கியும் உள்ளதென்பதை நினைக்கும் போது, உள்ளத்தில் பெரும் நிறைவு உண்டாகின்றது.
இனியும் பணி தொடர, வாழ்த்துங்கள்! கை கொடுங்கள்!!

Page 3
( சனநாயக நாடுகளில்
பத்திரிகைகளின் பங்கு)
S SS SS SLSSS SS SS SS SS SS
- gùumrňr - M.A.
சனநாயக நாடுகளில் முக்கிய அம்சங்களில் ஒன்று பொதுசன அபிப்பிராயமாகும். பொதுசன அபிப்பிராயத்திற்கு இடங்கொடா நாடுகளை சன நாயக நாடுகளல்ல என உறுதியாகக் கூறலாம். பொதுசன அபிப்பிராயத்தை வெளிப்படுத்தும் பத்திரிகைகள், தேர்தல் தொகுதிகள், கல்லூரிகள், சர்வகலாசாலைகள், வானொலி, நூல்கள், பொதுக் கூட்டங்கள் ஆதியன குறிப்பிடத்தக்கன. இவைகளுள் மிக முக்கிய இடம் பெறுவது பத்திரிகைகளாகும். பத்திரிகைகள் சன நாயக நாடுகளில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இவ்வித சிறப்பை நோக்கிப் போலும் ஒரு சிறந்த மேல் நாட்டுப் பத்திரிகையாசிரியர் பத்திரிகைகள் மக்கள் ஆட்சியின் மத்திய பிரச்சினை எனக் குறிப்பிட்டுள்ளார். சமுதாயத்தில் இவ்விதமான பத்திரிகைகளின் பங்கு ஒரு சாதாரண பிரஜையின் கொள்கை நிர்ணயத்தில் பங்கெடுப்பதோடு, அறிவு வளர்ச்சியிலும் மகிழ்ச்சியளிப்பதிலும் முக்கிய பங்குடையதாக இருக்கின்றன.
இன்று மிக மலிவாகவும் இலகுவாகவும் பல விடயங்களை அறிந்து கொள்ள உதவும் ஒரு சாதனமாகவுள்ளது பத்திரிகை யொன்றேயாகும். சனநாயக நாடுகளில் பத்திரிகை ஒரு சாதாரண விடயமாகும். இப்பத்திரிகைகளே சனநாயகத்தைப் பாதுகாக்கும் முக்கிய கருவிகளாக விளங்குகின்றன. மக்கள் சுதந்திரத்திலே முக்கிய அங்கங்களிலே இரண்டு, எழுத்துச் சுதந்திரமுமாகும் பேச்சுச் சுதந்திரமாகும். இவ்விரண்டு சுதந்திரங்களையும் பாதுகாத்து உண்மையான சனநாயக ஒளியைப் பரப்பிக் கொண்டு கடமைபுரிகின்ற பத்திரிகைகள் இவ்விதமாகச் சுதந்திரத்தின் தன்மைகளைப் பாதுகாத்து விளங்கும் கோட்டையாக இருக்கும் பத்திரிகைகளை ஒரு சில சனநாயக நாடுகள் அரசாட்சியின் ஆதிக்கத்திட்குட்படுத்த முயல்கின்றன. இந்நிலையில் மக்கள் தமது சுதந்திரம் பாதிக்கப்படும் என மறுப்புக் குரல் எழுப்புகின்றனர். ஒரு விதத்தில் இது பொருந்தக் கூடியதே. இருந்தாலும் பத்திரிகைகளின் தன்மை, அவைகளின் நிகழ்காலப்போக்கு, கடைப்பிடிக்கும் கொள்கை ஆதியவைகளை நன்கு ஆராய்ந்து அளவிட்டுத்தான் நன்மை தீமைகளை பத்திரிகைகளையிட்டுத் தீர்ப்பளிக்க வேண்டும்.
பத்திரிகைகள் ஒரு பிரஜையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஒரு சாதனமாகவே கடமையாற்றுகின்றன. முக்கியமாக அரசியலைப் பொறுத்தவரை அரசியல் தலைவர்களின் கொள்கைகளை வெளிப்படுத்தும் சாதனமாகவே பத்திரிகைகள் கடமையாற்றுகின்றதெனலாம். இந்நிலையில் பத்திரிகை படிக்கும் மக்கள் நன்மை எது, தீமை எது எனச் சீர்தூக்கி
2

அறியக் கூடியதாக இருக்கிறது. நல்வழிக்கு முரணாவதையும், தீய வழிக்கு நிலையாவதையும், மக்கள் கணிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. சனநாயக நாடுகளில் சில பத்திரிகைகள் ஆட்சிக் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் கடமையாற்றுகின்றன. ஆட்சிக் கட்சியை ஆதரித்து ஒரு பத்திரிகை புகழும் போது அதே நிலையில் ஆட்சிக் கட்சியைக் குறைகூறி இன்னொரு கட்சி இகழ்ச்சியாக எழுதும். இவ்வித நிலைமை பூரண சுதந்திரம் உள்ள நாட்டில் மட்டுமே நிலவ முடியும். இதனால் மக்கள் ஆட்சியில் ஈடுபட்டிருப்போர் நன்மை தீமைகளை உணரக்கூடியதாக இருக்கின்றது. இரசியா போன்ற பொதுவுடமை நாடுகளில் இவ்வித முறைக்கு இடமில்லை. நடைமுறையில் இருக்கும் நிகழ்ச்சியை அரசாங்கத்திற்குப் பாதமாக எழுதினால் எழுதியவர் தண்டனையடைய
நேரிடும்.
பத்திரிகையாசிரியர் நாட்டில் நிலவும் விடயங்களைத் தொகுத்துப் பத்திரிகையிலே வெளியிடுகின்றார். இவ்விடயத்தில் அரசாங்கக் கட்சியைப் பற்றிய நல்ல அறிக்கைகளும், அரசியல் செல்லும் தீய வழியையிட்டுக் கூடாத அறிக்கையையும், வாசிக்கும் மக்கள் அரசியல் நடைபெறும் முறையை - வழியை நன்கு கண்காணிக்கக் கூடியதாக இருக்கிறது . இவ்விதமாக மக்கள் கண்காணிக்குட்பட்ட அரசாட்சி இந்நிலையில் மக்களையிட்டு அச்சங் கொள்ள இடமுண்டு, ஆகையால் மக்கள் விரும்பும் அபிப்பிராயத்திற்குள் பட்ட கொள்கைகளைக் கொண்டு நேரான வழியில் செல்ல ஆட்சியாளர் முயல்வர். சனநாயகம் பாதுகாக்கப்படுவதோடு மக்கள் குரலுக்கு இந்நிலையில் இடமேற்படுகின்றது. சனநாயக ஆட்சி என்பது மக்களுக்கு மக்களினின்றும் மக்களால் ஏற்பட்ட ஓர் அரசியலமைப்பாகும். இவ்வித ஆட்சிக்கு மக்கள் கண்காணிப்பும் அவர்கள் ஆதரவும் உதவியும் இடை விடாதிருத்தல் அவசியம். இந்நிலையில் மக்களைத் தொடர்புபடுத்தி அவர்கள் பார்வையை அரசாங்கத்தின் மேல் திருப்பி அவர்களைக் கண்காணிக்கச் செய்யும் பெரும் கடமையைச் செய்து கொண்டிருப்பது பத்திரிகைகளே.
பல இடங்களிலும் கட்சிகள் கூட்டங்கள் நடத்துகின்றன என வைத்துக் கொண்டால் இக்கூட்டத்தில் குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்கும் வாக்காளர் யாவரும் தொடர்ந்து பங்கு பெறமுடியாது. இலட்சக் கணக்கான வாக்காளர் நூற்றுக் கணக்கான மைல்கள் கடந்து குறிப்பிட்ட இடத்திற்குச் சமூகமளிக்க முடியாத நிலையுண்டு. இவ்வித கூட்டங்களுக்குச் சென்று பங்கு கொடுக்காத வாக்காளர் கூட்டத்தில் இடம் பெற்ற விடயங்களை அறிய முடியாத நிலைமைகளேற்படுவதோடு கூட்டத்தை நடத்துவோர் தமது ஆதரவாளர்கள் யாவருக்கும் தாம் எடுத்துக் காட்டிய குறிப்புக்களை விளங்க வைக்க முடியாத நிலையும் உண்டாகிறது. ஆனால் பத்திரிகைகள் மேற்குறிப்பிட்ட கூட்டத்தில் நடைபெற்ற விடயங்களை ஆதரவாளர்கள் மட்டுமன்றி நாடு முழுவதும் பரப்பக் கூடியதாக இருக்கிறது. இந்நிலையில் பத்திரிகை ஒர் உன்னத கடமையைப் புரிகின்றதென்றே கூறலாம். ஒரு சாதாரண தொழிலாளியின் நிலையில் நாம் பத்திரிகையின் நிலையை ஆராய்ந்தால் ஒரு தொழிலாளிக்கு அதிக விலைகொடுத்து நூல்களைப் பெற்று அரசியல் நிலைமைகளை அறியவோ அல்லது நாட்டில் கட்சிகள்
3

Page 4
நடாத்தும் கூட்டங்களுக்கெல்லாம் சென்று சொற் பொழிவுகளைக் கேட்டுத் தமது அபிப்பிராயத்தை நிர்ணயிக்கவோ முடியாது. ஒரு தொழிலாளியின் நிலை, அவனுக்குக் காலை முதல் மாலை வரை ஓயாத உழைப்பு. கிடைப்பது சிறிது நேர ஓய்வு மட்டுமே. கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கெல்லாம் போக நேரமோ பணவசதியோ இல்லை. இந்நிலையில் மலிவாகக் கிடைக்கும் பத்திரிகையை வாங்கிக் குறிப்பிட்ட அந்த ஓய்வு நேரத்தில் அப்படியே ஏப்பம் விடக்கூடிய நிலையில் தான் இருக்கிறான். இதனை நோக்கும் போது, அவற்றின் சேவை ஓர் உன்னத நிலையை அளித்திருக்கின்றதெனலாம்.
இது மட்டுமன்றி சொந்த அபிப்பிராயங்களை வளர்க்கும் கட்சியில் பத்திரிகைகள் கடமை புரிகின்றன. குறிப்பிட்ட ஒரு பத்திரிகையைத் தான் வாசிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மக்கள் எவ்விதப் பத்திரிகையையும் வாசித்து அவைகளினூடாகத் தமக்குகந்த கட்சியையும் கொள்கையையும் தீர்மானித்துக் கொள்ளலாம். இதற்கு நிறைய இடமுண்டு. இதே போன்று ஆளும் கட்சியின் குறைநிறைகளை எதிர் கட்சி எடுத்துக் கூறும் போது, எதிர்க் கட்சியின் குறைநிறைகளை ஆளும் கட்சி எடுத்துக் காட்டக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இதனால் மக்கள் அரசியலில் ஒரு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். மேற் கூறிய முறையில் பத்திரிகைகளின் நிலைமையை இட்டு ஆராயும் போது மக்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் முக்கிய சாதனமாகவும், எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் ஆகியவைகளைப் பாதுகாத்து மதிப்பளிக்கும் சாதனமாகவும் உள்ளதென்பது தெளிவு.
பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதிலும், அதை வெளியிடுவதிலும், பொதுசன அபிப்பிராயம் இது என்று ஒன்றை உற்பத்தி செய்வதிலும் மிகச் சக்திவாய்ந்ததொரு சாதனமாகப் பத்திரிகை இருந்தபோதும் சமூகத்திலும் அரசியலரங்கிலும் பெரியதொரு சக்தியாக இருப்பவர் பத்திரிகை முதலாளியே. எல்லாப் புதினங்களும் அவற்றைப் பற்றிய விமரிசனங்களும் பத்திரிகை மூலமே பொதுசனங்களுக்குக் கிடைக்கிறது. பொது சனங்கள் பத்திரிகை முதலாளியின் தயவில் இருக்கிறார்கள்.
கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பக்கச் சார்பு இல்லாது அபிப்பிராயம் கூறுகிறோம் என்று கூறிக் கொண்டு புதினங்களைத் திரித்தும் சிலவற்றைப் பெரிதாக எடுத்துக் காட்டியும் வேறு சிலவற்றை மறைத்தும் கட்சிச் சார்பான விடயங்களைப் பத்திரிகை முதலாளி வெளியிடவும் இடமுண்டு. மக்கள் ஆட்சி நாடுகளில் அடிக்கடி பத்திரிகைகள் செய்திகளோடு தங்கள் அபிப்பிராயங்களையும் கலந்தளிப்பது காணப் பெறுகிறது. ஒரு பத்திரிகைக்குப் பிடித்தவர் பேச்சைக் கர்ச்சனை’ ‘முழக்கம்” என்றும், வேண்டாதவர் பிரசங்கத்தை “கொக்கரிப்பு”“ஒலம்”, பிதற்றல் என்றும்பத்திரிகைகள் வெளியிடுகின்றன. சில பத்திரிகைகள் தலைப்புக்களில் கிண்டல் மனப்பான்மையில் நாசுக்காகத்
தலையங்ங்களை வெளியிடுதல், காணக் கூடியவையே.
4.

மக்கள் தீவிரமாக இருக்கும் போது அதை உணர்ந்து சில பத்திரிகைகள் பொதுசன அபிப்பிராயத்திற்கு ஆதரவளித்த போதும் பெரும்பாலும் இக்காலப் பத்திரிகைகள் பொதுசன அபிப்பிராயத்தை உண்டாக்குகின்றனவே தவிர, பொதுசன அபிப்பிராயம் இதுதான் என எடுத்துக் காட்டுவது கிடையாது.
இவ்வாறு பத்திரிகைகளால் ஏற்படும் இடர்கள் ஒருவிதத்தில் நல்லவைகளாக அமைவதும் உண்டு. அதோடு அதிக தூரம் முரண்பட்டும் செல்லும், பத்திரிகைகளின் தீமைகள் ஒரு கட்டுப்பாட்டின் கீழ் திருத்த முடியாதவைகளுமல்ல.
ஆனால் பத்திரிகைகளை தேசியமாக்கி அரசாங்கத்தின் கீழ் அடக்கல், மக்களது பேச்சுச் சுதந்திரத்தையும், எழுத்துச் சுதந்திரத்தையும் பறிப்பதாக அமையும். பத்திரிகைகள் செய்திகளைத் தரும் கருவிகளாகவோ, கட்சிகளின் சாதனங்களாகவோ வேலை செய்து மக்கள் அபிப்பிராயத்தை உருவாக்க முயற்சிப்பது ஆரம்பத்தில் தீமையையிட்டுக் கூறும்போது எடுத்துக் காட்டப்பட்டது. ஒரு விதத்தில் இது நியாயமான முறையே எனக் கூறக் கூடியதாகவும் இருக்கும். அப்பொழுதுதான் மக்கள் ஆட்சியில் பிரச்சனைகள் பல்வேறு கோணங்களிலிருந்து பெரிய அளவில் விவாதிக்கப் பெறும் இதையே முன்பு கூறியபடி "திருத்த முடியாத தீமைகளல்ல” என்ற சொல்லுக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். இதைப் போன்றே மற்றவைகளையும் ஆறாய்ந்து தீர்ப்பளித்தல் நன்று இருந்த போதும் செய்திகளைப் பற்றிய தங்கள் அபிப்பிராயத்தைப் பத்திரிகைகள் தங்கள் தலையங்கங்களிலும் நிருபர்கள் அனுப்பும் விமரிசனங்களிலும் விளக்குவதோடு அபிப்பிராயப் பகுதிகளையும் செய்திப் பகுதிகளையும் தெளிவாகப் பிரித்துக் காண்பிப்பதே பத்திரிகைகளின் நெறிக்கு உகந்ததாக -9|6ՓւDամ).
பத்திரிகைகளின் நெறியில்லாப் போக்கைக் கண்டிக்கச் செய்யும் சில சாதனங்களை உபயோகித்து நடு நிலைமைக்குக் கொண்டு வரலாம். அரசாங்கம் தனிமனிதன் பாதிக்கப்படும் போதும் உண்மைக்கு எதிராகச் செல்லும் போதும் தடைகள் விதிக்கலாம். ஆனால் அரசாங்கத்திற்கு எதிராக உண்மையைக் கூறும் போது தங்கள் அலுவல்களைச் சரிவரச் செய்ய பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் மிக முக்கியமாகும். இச் சுதந்திரம் அரசாங்கத்தினாலோ தனி மனிதர்களின் செல்வாக்கினாலோ ஒரு பகுதியினரின் விருப்பங்களினாலோ குறைக்கப்பெறக் கூடாது.

Page 5
சமூகங்களுக்கிடையே நல்லெண்ணங்கள் வளர்க்கப்படல் வேண்டும்!
- பூரீ தாரால் கஹவத்தை -
இன்று நாட்டின் முக்கிய தேவைகளுள் ஒன்றாக எது கருதப்படுகின்றது என்று நூறு பேரிடம் கேட்டால் நூறு வீதத்தினருமே, சமாதானம் ஒற்றுமை, நிம்மதி என்ற கருத்துப்படத்தான் பதில் சொல்வார்கள்.
இக் கருத்து பல வருடங்களாக 15லராலும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் :ந்துள் ளது . ஆனால் எந்தளவுக்கு செயலுருவம் பெற்றுள்ளது என்ற கேள்வியை
6ழுப்பினால் பூஜ்யமே என்று தான் சொல்ல வேண்டும்.
வெறுமனே போதனைகளாலும், ஒரு சில நேரங்களில் பிரிவினைகள் என்று பாராது சில நிகழ்ச்சிகளில் ஒன்று கூடிகளைந்து விடுவதால் மட்டும் இது ஏற்பட முடியாது.
நாம் அனைவருமே சகல இனத்தவருமே அரசியல், மொழி, சமயம் என்று ஏதாவதொன்றில் சிக்குண்டு, விடுகிறோம். சமயம், மொழி என்னும் போதும் அப்படியே இப்படிப் பிரிவுபட்டுள்ளவர்களே தான் ஒற்றுமை, நிம்மதி, சமாதானம் என்று பேசுவதும். என்றாலும் இம்மனோ நிலை நமக்குள் ஏற்படுவதற்கு நாம் என்ன பரிகாரத்தைக் கையாழ்கிறோம்!
சகல இன மக்களிடையேயும் சமாதானத்தையும் ஒற்றுமையையும், நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதற்கான வழிகள் ஏற்படவேண்டும். நாம் அனைவரும் ஒரே நாட்டவர் எமக்குள் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் இன்ப துன்பங்கள் சகலருக்கும் பொதுவானவை. ஒவ்வொரு சமூகத்திலுமுள்ள நச்சுத் தன் மை வாய்ந்த கருத்துக் களைக் கொண்டவர்களின் கருத்துக்களை சக்தியற்றதாக்கக் கூடிய முயற்சிகள் எமக்குள் ஏதுமில்லை. எனவே, இவற்றைக் களைந்தெரியக் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். அதே போன்று நல்ல சிந்தனைப் போக்கும் தூப்பார்வையும் கொண்ட புத்தி ஜீவிகள் எல்லா இனத்தவர்கள் மத்தியிலும் உள்ளனர். இவர்களை இனங் கண்டு, அவர்களிடையே உள்ள நல்லெண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும் பல வழிகளைச் செய்யலாம். உதாரணமாக சகல தேர்தல் தொகுதிகளிலும் சகல இனத்தவர்களின் மதகுருமார்கள் சமூக சேவையாளர்கள், கல்வி மான்கள், எழுத்தாளர்கள்
6
 

போன்றோரை கொண்ட ஒன்றியங்களை ஏற்படுத்தலாம். அவற்றின் பிரதிநிதிகளைக் கொண்டு மாகாண ரீதியாகவும் நாடளவிலான ஒன்றியத்தையும் அமைக்கலாம். இவ்வாறு செய்யப்படும் போது சமூகங்களுக்கிடையே சில்லறைப் பிணக்குகளைக் கண்டறிந்து அவ்வப்பிரதேசங்களில் அவற்றுக்கான பரிகாரங்களைக் காணும் போது, துவேசத்தன்மை அற்றுப்போகின்றது. நல்லெண்ணம் வளரவும் அரசியல் ரீதியாகவோ, வேறு அற்ப நோக்கங்களுக்காக மக்களைக் கூறு போடுவோர்களுக்கும், துவேசக் கருத்துக்களைப் பரப்புவோருக்கும் சமூகத்தில் நாட்டில் இடமில்லாமல் போய்விடலாம்.
இத்தகைய ஒன்றியங்களின் மூலம் தொகுதி மட்டத்திலும் பிரதேச மாகாண மட்டத்திலும் சமூக சேவை தலைமைத்துவப் பயிற்சி, கல்வி, கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி அவரவர்களிடமுள்ள வளங்களைப் பயன்படுத்த வசதி வாய்ப்புக்களைத் செய்து கொடுக்கலாம்.
இவையெல்லாம், சமூகங்களிடையே நல்லெண்ணத்தை வளர்க்கவும், மேற்கொள்ளப்படவேண்டிய முயற்சிகளை மேற்கொள்ள பொருத்தமானதோர் காலகட்டமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. அத்தோடு இன்றைய சூழ்நிலையில் இத்தகைய முயற்சிகளில் கவனம் செலுத்துவது அவசியமும் அவசரமுமான தென்றால் மிகையன்று.
இத்தகைய முயற்சிகளை அரசாங்கம் தான் செய்ய வேண்டுமென்பதல்ல. அவ்வப்பிரதேசத்திலுள்ள சிலர் சேர்ந்து ஆரம்பித்து விட்டால், நாடு முழுவதிலும் வியாபித்து விடும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகையதோர் அமைப்பு ஏற்கனவே, கஹவத்தையில் சங்கைக்குரிய தான் தாவே ஞானவிமல தேரோ, எம்.அப்துல் சமத், யூரீல பூரீ விஸ்வநாத் குருக்கள் சிசிர ரியன்ஸி பிதா ஆன்த்தசரத் மல்லவ ஆராச்சி எம்.என்.எம். ஹாசைன் போன்றோர் பிரதேச ஆதரவாளர்களைக் கொண்டு ஆரம்பித்து செயல்பட்டுக் கொண்டு வருவதைப் பார்க்க முடிகிறது. இவர்களின் முன் மாதிரி ஏனைய பிரதேசங்களுகும் புதுச் செய்தியாகப் பரப்பப்பட்டு செயற்படச் செய்ய வேண்டும். அண்மையில் இவ்வொன்றியம் இன, மத, வேறுபாடின்றி சமூக சேவையாளர்களை கலைஞர்களை இனங்கண்டு பொன்னாடை போர்த்தி கெளரவித்ததன் மூலம் நல்லதோர் முன்மாதிரியைக் காட்டிவிட்டனர். இவ்வாறான முயற்சிகள், இவ்வமைப்பின் மூலம் செய்யப்படும் போது, நாட்டில் சாந்தி, சமாதானம், ஒற்றுமை நிலவும், அற்ப காரியங்களுக்கெல்லாழ் வெறி பிடித்தவர்கள் போன்று நடந்து கொள்ளும் தன்மை அற்றுப் போவதற்கும், பிரிவினைகளை ஏற்படுத்த முயலும் சந்தர்ப்பவாதிகளுக்கும், காலம், இடம், இல்லாமற் போவதையும் 'காலப்போக்கில் உணர்ந்து கொள்ள முடியும்.
எனவே, சிந்திப்போம், செயல்படுவோம்
நல்லவை நடக்க நாட்டம் கொள்வோம்.

Page 6
நரம்புகளில் ஓடும் நம்பிக்கை
- fonom யூசுப்
சிறுகதை
அது ஒரு சுகமான அந்திப் பொழுது, நினைவுகளை கனவுகளாக்கி கவிதை பாடும் மாணவச் சிட்டுக்களுக்கு அது ஒரு சுகமான அந்திப் பொழுது பேச் சும் கேலியும் கதகதப்பும் வாழ்வென்று நினைத்திருக்கம் அந்த இளசுகளுக்கு அது ஒரு சுகம் தரும் மாலைப் பொழுது .
அந்த கிராமத்தின் உயர்தர பாடசாலையில் இன்று ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகங்களை அரங்கேற்றுவதிலும், மாணவர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட இலக்கியப் படைப்புக்களை நாடகமாகவும், கவிதையாகவும் பாடலாகவும் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு காதலன் தன் காதலியின் பிரிவுதாங்க முடியாமல் படும் வேதனையை நான் கவிதை கலந்த நாடகமாக இயற்றி இருந்தேன்.
என் நாடகத்தின் நடிகனும் நானே கதாநாயகனும் நானே!
அரங்கேற்றப்பட்ட என் நாடகம்! கனவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த இளம் நெஞ்சங்களில் நன்றாகவே இடம் பிடித்து விட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் அந்த இதமான நினைவுகளில் நான் வீட்டை நோக்கி நடக்கின்றேன்.
பின்னால் இருந்து ஒரு குரல் “ரோஷன்: இன்று ஸ்கூலில் நீங்கள் தான் கதாநாயகன்."
திரும்பினேன்; ஷாமிலா! நன்றி சொல்ல மறந்தவனாக ஷா Nலாவுடன் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அழகைப் பார்க்கிறேன்.

என்ன அழகு
வானத்து நிலவும் கெளவ்வை இதழும் கயல் விழிகளும் வாவிலலின் புருவமும் தவறிப் பிறந்த தாரகையோ!
ஒரு தந்தவனமே என்னை நோக்கி நடந்து வருவதைப் போன்ற பிரமிப்பு!
என் வாழ் நாளில் இது போன்ற அழகான பெண்ணைப் பார்த்ததே இல்லை.
“என்ன ரோஷன் அப்படியே பிரமித்து போய் விட்டீர்கள்
ஷாமிலா கேட்ட போதுதான் நினைவு திரும்பியவனாக!
"இல்ல ஷாமிலா. . .!" ஒர் உண்மையை மறைக்க முயற்சி செய்தேன்.
“ஒ! இவள் யார் என்று பார்க்கின்றீர்களா. . . என் பிரண்ட் ரினோஷா . . ."
ரினோஷா!
இந்த நிலவு முகத்திற்கு சரியான பெயரைத்தான் வைத்திருக்கின்றார்கள்.
"நாங்கள் வருகின்றோம் ரோஷன்” என்று பிரிந்து செல்லும் பாதையில் என் இதயத்தை பிரித்தெடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்.
அந்த இரவு! என் வாழ்நாளிலே மிகவும் கொடுமையான இரவு.
இமைகள் மூடிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டேன் அவள்
மறைந்து விடுவாள்! என்பதனால் . . . !

Page 7
அடுத்த நாள் காலை பாடசாலையில் அவளின் முகதரிசனத்துக்காக ஏங்கினேன். அந்த நிலவு எங்கும் தட்டுப்படாதா என்று என் இதயம் தடுமாறத் தொடங்கியது.
ஷாமிலாவின் நண்பி யாராக இருக்கும். ஷாமிலாவிடம் கேட்ப்பார்ப்போமா? அவளைப் பற்றி அறிய மனம் துடிக்கின்றது . நினைவுகள் அவளை பின் தொடர்கின்றன.
அன்று பாடசாலை விட்டதும் அவர்கள் நடந்து செல்லும் பாதையில் தயங்கித் தயங்கி நடக்கின்றேன். அவர்கள் என்னைப் பின் தொடர்கின்றனர். என்னை அறிந்து கொண்ட ஷாமிலா!
“ரோஷன் என்ன எங்கள் வீதிப்பக்கம். . .!” இல்ல பெரியம்மா வீட்டுக்கு. . .!" வாய் தடுமாறுகின்றது .
"ஒ . . . அப்படியா! எங்களுக்கு பேச்சுத் துணைக்கு உதவியாக இருக்கும்!
“ஷாமிலா! உங்களுக்கு புதிய தோழி ஒருத்தி கிடைத்திருக்கின்றாள் போலும்." எனது இதயம் அந்த நந்தவனத்தை அறிவதிலேயே ஆர்வமாக இருந்தது.
"ஒ . . . இவளைப் பற்றி சொல்லவே மறந்து விட்டேன். இவள் ரினோஷா கண்டியைச் சேர்ந்தவள் எமது வீட்டில் தங்கி இருப்பதோடு எனது வகுப்புத் தோழியும் எமது பாடசாலைக்கு புதிய மாணவி.
ரினோஷா! நீ என்ன வானத்து நில்வா! உனக்கு மட்டும் இறைவன் ஏன் - இந்த அழகை கொடுத்தான்!
நான் என்னை மறந்து கவிதை உலகுக்குள் ஜனனிக்கிறேன்.
“என்ன ரோஷன் மெளனமாகிட்டிங்க! உங்கள் கவிதை வரிகளில் ஒன்று இரண்டை அனுப்புங்களேன்.” ஷாமிலாவின் குரல் என்னை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகின்றது.
“உங்களின் நாடகத்தைப் பார்த்தபின் இவள், உங்களைப் பற்றி ஒரே அடியாக புகழுகின்றாள்”
O

நாங்கள் பிரிந்து செல்ல வேண்டிய இடம் வருகின்றது.
"நாங்கள் போய்வரவா. . .!” ஷாமிலா. மெளனமாக பார்வையாள் வருகின்றேன் என்கிறாள் ரினோஷா!
உனக் கென்ன - நீ - போய் விட்டாய் என் - இதயத்தை பற்ற வைத்து விட்டு !
இப்போதெல்லாம் நான் பாடசாலைக்கு கவருவதே இல்லை. அவளின் தரிசனம் தவரிவிடும் என்ற பயத்தினால்,
另 岛 s
காலச் சக்கரம் என் காதலை இதயத்துள் சுமந்து கொண்டு ஒடுகிறது. அவளிடம் காதலை சொல்ல எனக்கு தைரியம் இல்லை. எங்களது கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையும் நெருங்கி விட்டது. பரீட்சை முடிந்தவுடன் நாங்கள் பாடசாலையை விட்டு வெளியேர வேண்டும்.
அன்றொரு நாள் பாடசாலை விட்டதும் என்னை வீதியில் தனியாக சந்தித்த ஷாமிலா!
“ரோஷன், நீங்கள் ரினோஷாவை காதலிப்பது எனக்குத் தெரியும் . ஏன் அவளிடம் கூறாமல் மெளனமாக இருக்கின்றீர்கள். இன்னும் ஒரு சில நாட்களில் நீங்கள் பாடசாலையை விட்டு வெளியேற இருக்கின்றீர்கள். அதற்குள் அவளிடம் கூறிவிடுங்கள்” என்று கூறிவிட்டு ஷாமிலா போய் விட்டாள். என் மெளனமே காதலை எரித்து விடுமோ” சிந்திக்கிறேன். கடைசியில் ஒரு முடிவுடன் அவளுக்காக கடிதம் எழுதுகின்றேன்.
நந்தவனமே என் - நினைவுகளில் வந்து - சித்திரவதை செய்கிறாய்! உன் இதயத்தில் குடியிருக்க ஆசைப்படுகிற்ேன்
ரோஷன்,

Page 8
என் கவிதைக் கடிதத்தினை சுமந்து கொண்டு பாடசாலை செல்கின்றேன். இடைவேளை நேரம்.
அவளின் வருகைக்காக காத்திருக்கின்றேன்.
நந்தவனம் என் அருகில் வருகின்றது. "ரினோஷா” நிற்கின்றாள். “இதில் என் எண்ணத்தை எழுதி வைத்திருக்கின்றேன் பதில் தாருங்கள்." கடித வரிகளை கையில் திணித்து விட்டு நடக்கின்றேன்.
நாட்கள் நகர்கின்றன. அவளின் பதில் என்னை அடையவில்லை. அன்று எமது வெளியேறும் மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவம், ஒவ்வொருவராக வாழ்த்துகின்றனர்.
ஷாமிலாவுடன் ரினோஷாவும் வருகின்றாள்.
"ரோஷன் உங்களிடம் ரினோஷா ஏதோ கூற வேண்டுமாம்” ஷாமிலா.
என் இதயத்தை ஊடுருவும் அந்த விழிகளை பார்க்கின்றேன். என்னை இழக்கச் செய்யும் அந்த காந்த சக்தி மிக்க விழிகள்
தரையைப் பார்க்கின்றன.
என் காதுகளுக்கு மட்டும் கேட்டுகும் விதத்தில் “நா. . . நா உங்கள விரும்புகிறேன்.” இதில் விபரமாக எழுதியுள்ளேன்.
என் கைகளில் அவளின் இதயத்தை திணித்து விட்டு சாமிலாவை இழுத்துக் கொண்டு ஓடுகிறாள்.
(யாவும் கற்பனை)
12

கண்டி இந்திய துணைத் தூதுவர்
அண்மையில் கேகாலை சாந்த மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற “ப்ரிய நிலா" இதழின் 16 ஆவது அறிமுகம், மேற்படி கல்லூரி முதல்வர் திரு.எஸ். மரதன் தலைமையில் இடம் பெற்ற போது கண்டி - இந்திய துணைத் தூதுவர் மாண்புமிகு அ.கருப்பையா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து பேசும் போது, தமிழ் பேசும் மக்கள் எங்கு, எப்படி வாழ்ந்த போதும், தத்தமது பாரம்பரிய கலை, கலாச்சாரங்களையும், அவர்தம் மொழியையும் சமயப் பண்பாடுகளையும், வளர்த்தெடுப்பதில் இத்தகைய சஞ்சிகைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.
முதன் முறையாக கேகாலை மாவட்டத்திற்கு வருகை தர காரணியாக அமைந்த "ப்ரிய நிலா" இதழை என்னால் மறக்க முடியாது. "ப்ரிய நிலா" என்றென்றும் நிலைத்து நிற்க அதன் ஆசிரியர் உயன்வத்தை ரம்ஜான் தனது இலக்கியப் பணிகளை தொடர எனது வாழ்த்துக்கள் எனவும் துணைத் தூதுவர் தமது சிறப்புப் பேச்சில் குறிப்பிட்டார்.
சமாதான நீதவான் திரு.அம்பன் பிட்டி பிரேமநாதன் வரவேற்புரை நிகழ்த்தினர்.
தமிழ்மணி திரு.க.ப.சிவம், திரு.க.மகேஸ்வரன் பிள்ளை உட்பட மற்றும் பலர் உறையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் - சமாதான நீதவான் திரு. எஸ். முத்தையா அவர்கள், கண்டி ரத்னமஹால் நகைமாளிகை உரிமையாளர் திரு. வீ.இராமசாமி அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இவ்விழாவின் போது தமிழ்மணி க.ப. சிவத்தின் இலக்கியப்பணியை கெளரவிக்கும் வகையில் அவரைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தகவல் : "கேகாலை கோகிலா"
3

Page 9
(ல்திரித்Nெ பத்திரிகையாளர் - ܓܠ
Y S LLS S S S L SS SL LSS LS S S
- சாரல் நாடன்
இலங்கை பத்திரிகை உலகு இந்திய வம்சாவளியினருக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. இங்கு பத்திரிகை வெளியீட்டு முயற்சிகள் பரவலாக ஆரம்பமான இந்நூற்றாண்டின் மூன்றாம் தசாப்த காலப்பகுதியில் தமிழ், மலையாளப் பத்திரிகைகளில் மட்டுமின்றி ஆங்கிலப் பத்திரிகைகளிலும் அவர்களின் பங்களிப்பு கணிசமானதாகவே இருந்திருக்கிறது.
பத்திரிகை வெளியீட்டாளர்களாகவும், பிரதம ஆசியர்களாகவும், செய்தி ஆசிரியர்களாகவும், நிருபர்களாகவும், விநியோகஸ்தர்களாகவும் பல தரத்தில் கடமையாற்றி அவர்களாற்றிய பங்கு அளப்பரியது.
அந்த வரிசையில் சுப்பிரமணிய செட்டியார், எச். நெல்லையா. டி சாரநாதன், டி. ராமானுஜம், அய்யங்கார், லோகு, கே. வி. எஸ். வாஸ் என்று பலரும் நினைவில் நிற்க வேண்டியவர்களே. இந்த வரிசையில் மேல் மட்டத்தில் அணி செய்ய வேண்டிய இன்னொரு பெயருமுண்டு
அந்தப் பெயருக்குரியவர் திரு.கோதண்டராம நடேசய்யர் ஆவார். அவரின் முக்கியத்துவம் இது காலம் வரையில் இலங்கையில் உணரப்படவில்லை என்றே கூறத்தோன்றுகிறது .
இலங்கை சட்ட நிரூபண சபையில் (1925 - 1931) ஆறு ஆண்டுகளும், இலங்கை அரசாங்க சபையில் (1936 - 1947) பதினொரு ஆண்டுகளும் கெளரவ உறுப்பினராக விளங்கிய நடேசய்யர், இலங்கை வாழ் இந்திய மக்களின், சிறப்பாகப் பெருந்தோடட்டத் தொழிலாளர்களின் இதயக் குரலாக விளங்கினார்.
இயல்பாலும் ஏற்றுக் கொண்ட பணியாலும் அவர் ஒரு பத்திரிகையாளர். தனது சட்டசபை பேச்சுக்களிலேயே பலமுறை அவர் தன்னை இப்படி இனம் காட்டிக் கொள்கிறார். அவரது பத்திரிகை அநுபவமும், எழுத்தாற்றலும் மிகவும் சக்தி வாய்ந்தவை. உண்மையில் இது நாள்வரை அவரது பத்திரிகைச் சேவையை உரிய முறையில் மதிப்பிடவும், கெளரவிக்கவும், இலங்கையின் அறிஞர் குழாம் தவறிவிட்டதென்பதை மூடி மறைப்பதால் யாருக்கும் லாபமில்லை. இலங்கையின் முதல் தமிழ் தினசரியை ஆரம்பித்த பெருமைக்குரியவர் கோ. நடேசய்யர் என்பதை நிறுவுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இதுவரை முதல் தமிழ்த்தினசரியாகக் கருதப்பட்டது 'தினத்தபால்
என்ற ரி ஆகும். இத்தகவலை கனக செந்திநாதனின் 'ஈழத்து இலக்க *ச்சி' என்ற நூலிலும், கோப்பாய் சிவத்தின் இலங்கையின் தமிழ்ப் கள் சஞ்சிகைகள்’ என்ற வெளியீட்டிலும் காணலாம்.
14

நடேசய்யர் நடாத்திய ஏடுகளில் தேசநேசன், தேசபக்தன், சுதந்திரன் ஆகிய மூன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவைகள். இவை மூன்றுமே தினசரி ஏடுகளாக வெளிவந்தவைகள். தேசநேசன், நடேசய்யர் ஆசிரியராக இருந்து நடாத்திய முதல் ஏடாகும், இது 1921ல் வெளியானது. இரண்டாண்டுகளுக்கும் குறைவாகவே உயிர்வாழ்ந்தது. இந்த ஏடு தினசரியாக சில காலம் வெளிவந்திருக்கின்றது.
1922ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி ‘தேசநேசன்' என்ற தமிழ்த் தினசரி ஏடு தனது முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது என்ற செய்தி தி சிட்டிசன்’ என்ற ஆங்கில ஏட்டில் முதல் இதழில் கடைசிப்பக்கத்தில் வெளியாகி இருக்கின்றது. தேசநேசன் பத்திரிகையில் பணியாற்றிய ஆசிரியர் குழுவின் போட்டோ படமும் கூடவே பிரசுரமாகியிருக்கின்றது. தேசநேசன் பத்திரிகைக்குச் சொந்தக்காரர்களாக இலங்கை தேசிய காங்கிரஸின் பிரமுகர்களான எம். ஏ.அருளானந்தமும், டாக்டர் ஈ.வி.ரட்ணமும் இருந்தனர். தேசநேசன் எந்தக் காலப்பகுதியில் தினசரியாக வந்தது என்பதற்கு ஆதாரம் ஒன்றும் பார்க்கக் கிடைக்கவில்லை.
நடேசய்யரின் அடுத்த பத்திரிகை முயற்சி ‘தேசபக்தன்,; ஆகும். அதன் வெளியீட்டாளரும், ஆசிரியரும் அவரே ஆவார். அதன் முதல் இதழ் 1924ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி வெளிவந்தது. திங்கள், புதன், வெள்ளி என்று வாரத்துக்கு மூன்று இதழ்களாகத் தொடர்ந்து வெற்றிகரமாக வெளிவந்த இந்தப் பத்திரிகை, 1929ம் ஆண்டு தினசரியாக வெளிவரத்தொடங்கியது. ஆறு பக்கங்களில் வெளியான இத் தினசரி கொழும்பில் மூன்று சதத்துக்கும், பிற இடங்களில் ஐந்து சதத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இலங்கையில் வெளிவரும் ஒ;ே தமிழ்த் தினசரி என்று ஆங்கிலத்தில் முன்பக்கப் பிரகடனம் இந்த ஏட்டில் காணப்படுகின்றது. எனவே, தேசசேனும் தேசபக்தனும் தினத்தபால் வருவதற்கு முன்பே வெளிவந்த தினசரிகள் என்பது பெறப்படுகின்றது.
1929ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி வெளிவந்த தேசபக்தன் ஏட்டில் க அமீராமுகைதீனைப் பற்றிய குறிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அவரது தினத்தபால் குறித்தோ அல்லது அவரது பத்திரிகை முயற்சிகள் குறித்தோ எவ்விதக் குறிப்பும் அதிலிருக்கக் காணோம்.
1927ம் ஜனவரி மாதம் 3ம் தேதி வெளிவந்த தேசபக்தன் ஏட்டில் பெரி. சுப்பிரமணிய செட்டியாரைப்பற்றி ஒரு குறிப்பு வெளியாகி இருக்கின்றது. 'உண்மை உழைப்பினாலும் ஏற்பட்ட செல்வாக்கை ஒருவரும் மாற்ற முடியாது. தன்னல மறுப்பினாலும், என்ற அந்தக் குறிப்பில் நடேசய்யர், செட்டியாருக்கு எச்சரித்திருக்கிறார். இந்தச் சுப்ரமணிய செட்டியார்தான் 1030ல் வீரகேசரி நாளிதழை வெளிக்கொணர்ந்தவர்.
வீரகேசரி நாளிதழில் முதல் ஆசிரியராகப் பணியாற்றியவர் எச். நெல்லையா என்பவராவர். அவரது பத்திரிகைப் பங்களிப்பு பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுக் கெளரவிக்கப்பட்டிருக்கின்றது.
15

Page 10
பத்திரிகைத் துறை குறித்து ஆய்வு செய்து முதுகலைமாணிப்பட்டம் பெற்றவர்கள் வீரகேசரி ஆசிரியர் ஆ.சிவநேசச் செல்வன், தினகரன் ஆசிரியர் இ. சிவகுருநாதன் இருவருமாகும். குரும்பசிட்டி கனகரத்தினம், ச, பஞ்சாட்சரசர்மா ஆகியோரும் இத்துறையில் ஆய்வு நடாத்தியுள்ளனர். அவர்களின் ஆய்வுகள் நூலுருவில் கிடைக்காவிட்டாலும் 'தினத்தபாலே இலங்கையின் முதல் தமிழ் தினசரி என்ற கருத்தே இன்றுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
ஈழத்தின் முதலாவது செய்திப்பத்திரிகை க.அ.மீராமுகைதீன் என்பவரால் நடாத்தப்பட்ட தினத்தபால் என்றெழுதும் கோப்பாய் சிவம், அது வெளிவர ஆரம்பித்த காலம் சரியாகத் தெரியவில்லை (பக்கம் 3) என்று எழுதுகிறார்.
தேசிய சுவடி திணைக்களம் தரும் குறிப்புகளின் படி 1930 ஆண்டுதான் தினத்தபால் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. இதே ஆண்டில்தான் வீரகேசரியும் வெளிவர ஆரம்பித்தது. வீரகேசரி நின்று நிலைத்தது. தினத்தபால் அற்ப ஆயுசில் நின்று போனது. வீரகேசரியை இரண்டாவது தமிழ்த் தினசரி என்றும், அதற்கு முன்னர் வெளியான 'தினத்தபால் முதலாவது தமிழ் தினசரி என்றும் ஒரு கருத்தை இலகுவில் நிலை நிறுத்த இது ஏதுவாயிற்று. இதில் வேடிக்கை என்னவென்றால், தினத்தபால் வெளிவர ஆரம்பித்த சரியான தேதி தெரியாத போதே இப்படி ஒரு முடிவு செய்யப்பட்டதுதான்.
இப்படி ஒரு முடிவு செய்யப்பட்டதற்கு கனக செந்திநாதனின் "ஈழத்து இலக்கிய வளர்ச்சி" என்ற நூலே ஆரம்ப காரணம் என்று சொல்லத் தோன்றுகிறது. இலங்கையில் வெளியான எல்லாச் சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பவைகளைச் சேகரித்து நடமாடும் தகவல் நிலையமாக விளங்கியவர் கனக செந்திநாதன் ஆவார். அவரது தகவல்கள் எல்லோராலும், பொதுவாக மறுப்பின்றி ஏற்கப்படுவது வழக்கம். அந்த முறையிலேயே இந்தப் பிழையான தகவலும் ஏற்கப்பட்டு இதுவரை நம்மிடையே பரப்பப்பட்டு வந்திருக்கின்றது.
கோ. நடேசய்யர் இலங்கையில் பத்துக்கும் மேற்பட்ட பத்திரிகைகளை நடாத்தி இருக்கிறார். தேவையும் அவசரமும் ஏற்படுகின்ற போது புதிது புதிதாகப் பத்திரிகைகளைத் தோற்றுவிக்கவும், தேவை முடிந்தபின்னால் அவைகளைத் தொடர்ந்து நடாத்துவதில் கவனம் செலுத்தாமலும் இருந்திருக்கிறார். ஆங்கிலம், தமிழ் என்ற இரண்டு மொழிகளிலும் கைவந்த அய்யர் இவ்விரண்டு மொழிப் பத்திரிகைகளையும் நடாத்தி வெற்றி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருபத்தைந்தாண்டுகள் (1922 - 1947) அய்யர் ஆற்றிய பணிகளில், இறுதியாக அவர் ஆசிரியராக இருந்த சுதந்திரன்' பத்திரிகை குறித்தே, அதுவும் பிழையான, மறைக்கப்பட்ட ஓரிருதகவல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன.
இந்தக் காலப்பகுதியில் சுதந்திரன் பத்திரிகையில் அய்யர் அற்புதமான அரசியல் கட்டுரைகளை எழுதி இருக்கிறார். நாவல் எதையும் சுதந்திரன் பத்திரிகையில் எழுதவில்லை. அவ்விதம் எழுதியதாக சில்லையூர் செல்வராசனும், கனக செந்திநாதனும் கூறியிருப்பது உண்மைக்கு மாறானது ஆகும். அய்யரின் ஒரு நாவல் ‘தேசபக்தன், ஏட்டில் வெளிவந்திருக்கிறது என்பதுவே உண்மையாகும்.
6

இந்த எச். நெல்லையா என்பவர் 1927ல் தேசபக்தனில், நடேசய்யரின் கீழ் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார் என்பதும், அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர் என்பதும் அவ்வளவாகப் பிரபல்யப்படுத்தப்படவில்லை.
நடேசய்யரின் மரணத்துக்குப் பின்னர் வெளியான தலையங்கத்தில் (8-11-1947) சுதந்திரன் தினசரியில் இலங்கையின் முதன் முதலாக தினசரி தமிழ்ப்பத்திரிகை ஒன்றை வெளியிட்டவரும் இவரே. இன்று இலங்கையிலும், இந்தியாவிலும் அவரிடம் பத்திரிகைத் தொழில் பயின்றவர்கள் அநேகருண்டு. இலங்கையிலுள்ள தமிழருக்கென ஒருபத்திரிகை இல்லாததையிட்டுவருந்தி எங்கள் ‘சுதந்திரன்’ பத்திரிகையை தமிழ்ப் பெரியார்களைக் கொண்டு வெளிவரச் செய்த முக்கிய கர்த்தாவும் திரு.நடேசய்யர்தான்’ என்ற குறிப்பு வெளியாகி இருப்பதைக் கவனத்தில் எடுக்கும் பொழுது சுதந்திரனில் நடேசய்யர் பணியாற்றியதைத் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பவர்கள், சுதந்திரன் பகிரங்கமாக வெளிப்படுத்திய உண்மைச் செய்தியை, இலங்கையின் முதன் முதலாக தினசரி தமிழ்ப் பத்திரிகையை வெளியிட்டவர் கோதண்டராம நடேசய்யர்தான் என்பதை தெரிந்து கொள்ளமாலிருந்தது ஏன் என்பது இலகுவில் விளங்கிட முடியாத ஒரு சங்கதிதான் அய்யர் ஒர் இந்தியர் - அதிலும் தென்னிந்தியப் பிராமணர், இந்திய வெறுப்புணர்வும், பிராமண எதிர்ப்புணர்வும் ஒன்றிணைந்து வளர்ந்தமையால் இப்படி நேர்ந்ததோ எனது எண்ணத் தோன்றுகிறது.
நடேசய்யர் இலங்கையில் வந்து குடியேறிய 1920ம் ஆண்டுக்கு முன்னரேயே இந்தியாவில் வர்த்தக மித்திரன் என்ற ஒர் ஏட்டை நடாத்தினார். இலங்கையில் அவரது முயற்சியிலும், ஆசிரியர் பொறுப்பிலும் தேச நேசன் (1921 - 1923) தேசபக்தன் (1924 - 1925, தொழிலாளி (1924), தோட்டத்தொழிலாளி (1947), உரிமைப்போர், சுதந்திரப்போர், வீரன், சுதந்திரன் (1947) என்ற தமிழ்ப் பத்திரிகைகளும் சிட்டிசன் (1922), ..போர்வர்ட் (1926), இந்தியன் எஸ்டேட் லேபரர் (1929), இந்தியன் ஒப்பீனியன் (1936) என்ற ஆங்கில மொழிப் பத்திரிகைகளும் வெளியாகி இருக்கின்றன.
மேலும், நடேசய்யர் இந்தக் காலப்பகுதியில் பன்னிரண்டு தமிழ்ப் புத்தகங்களையும், இரண்டு ஆங்கில நூல்களையும் வெளியிட்டிருக்கிறார் என்பதும் அவரது நுண்மான் நுழைப்புலத்துக்கும், ஆற்றலுக்கும் சான்று பகரும் தன்மையுடையது .
நடேசய்யரின் பத்திரிகைத் துறைப் பணி போலவே, தொழிற்பணிகளும் சாதனைகளும், அரசியல் பணிகளும் பலதரப்பட்டவை.
நடேசய்யர் சுதந்திரன் தினசரியில் ஐந்து மாதங்களே கடமையாற்றினார். சுதந்திரன் இதழ் 1947ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் தேதி வெளிவரத்தொடங்கியது. அதே ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி
அய்யர் மரணம் அடைந்தார்.
நன்றி - மல்லிகை,
7

Page 11
மலையகத் தாயின் மைந்தருள் ஒருவர்
கலாநிதி - துரை மனோகரன் -
இலங்கையின் இலக்கியவுலகில் மகிவும் பரிச்சயமான பெயர்களில் ஒன்று அந்தனி ஜீவா என்பதாகும். இந்தப் பெயருக்குரியவர், ஐம்பது வயதை எட்டியபோதிலும் இளமைத் தோற்றத்துடனேயே இன்றும் விளங்குபவர். மலையகத்தின் இலக்கிய வளர்ச்சியோடு தம்மையும் இரண்டறக் கலந்தவருள் ஒருவராக அந்தனி ஜீவா விளங்குகின்றார்.
எஸ். எஸ். ஸி. வரை கல்வி பயின்ற அவர் பாடசாலையில் கற்கும் காலத்திலே இலக்கிய ஆர்வம் கொண்டவராக விளங்கினார். அவரது அத்தகைய ஆர்வம், பதினைந்து வயதிலேயே இலக்கிய உலகில் அவரை அறிமுகப்படுத்தி வைத்தது. சுதந்திரன் பத்திரிகையில் வெளியான கவிதையொன்று, அவரது இலக்கிய உலகப் பிரவேசத்துக்கு வழியமைத்தது. மாணவராக இருந்தபோது, கரும்பு என்ற சிறுவர் சஞ்சிகையை நண்பர்களுடன் இணைந்து கூட்டாக நடத்தியுள்ளார்.
இளம் வயதிலே இடது சாரி அரசியல் கருத்துகளாற் கவரப்பட்டு, இலங்கைச் சமசமாஜக் கட்சியின் முழுநேர ஊழியராக ஜீவா கடமையாற்றினார். அப்போது, கட்சியின் மாதப் பத்திரிகையான ஜனசக்தியின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
பத்திரிகைத்துறை அந்தனி ஜீவாவை மிகவும் வசீகரித்து, அவரது செயலார்வத்துக்கு ஊக்கமளித்தது. கலைதாசன் என்ற நண்பருடன் இணைந்து, தேசபக்தன் என்னும் பெயரில் பத்திரிகையொன்றையும் வெளியிட்டுள்ளார். அப்பத்திரிகையின் கெளரவ ஆசிரியராக அ.ந.கந்தசாமி விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கவிதா என்ற பெயரில் கலை இலக்கியச் சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தினபதி பத்திரிகையிலும்அவர் பணியாற்றியதோடு, யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையின் கொழும்பு நிருபராகவும் கடமையாற்றியுள்ளார்.
மலையகத்தின் கலை - இலக்கிய முயற்சிகளைச் சிறப்பாகப் பிரதிபலித்து, கொழுந்து என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் அந்தணி ஜீவா பணிபுரிந்துள்ளார். இதுவரை கொழுந்தின் ஏழு இதழ்கள் வரையில் வெளிவந்துள்ளன. தற்போது தோட்டப் பிரதேசக் கூட்டுச்செயலகத்தினால்
f8
 
 
 

வெளியிடப்படும் குன்றின் குரல் சஞ்சிகையின் ஆசிரியராகவும், தேசிய கிறிஸ்தவ ஆணைக் குழுவினால் வெளியிடப்படும் செங்கோல் என்னும் பத்திரிகையின் இணையாசிரியராகவும் விளங்குகின்றார். இன்றைய நிலையில் எழுத்தும், பத்திரிகைத்துறையும் அந்தனி ஜீவாவின் தொழிலாகவும், வாழ்வாகவும் அமைந்துவிட்டன.
நாடகத்துறையில் அந்தனி ஜீவாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இந்துக் கலாசார இராஜாங்க அமைச்சு நடத்திய தமிழ் நாடக விழாவில் அவர் நெறிப்படுத்திய ஆராரோ ஆரிரரோ’ என்ற நாடகம் இரு விருதுகளைப் பெற்றது. இவரது, அக்கினிப் பூக்கள்’ என்னும் நாடகம் பன்னிரண்டு முறை மேடையேறியதாகத் தெரிகிறது. தேசிய நாடகவிழாவொன்றில் இவர் தயாரித்து நெறியாள்கை செய்த 'அலைகள் என்ற நாடகம் இரு விருதுகளைப் பெற்றது. பிரதி நூற்றாண்டு விழாவின்போது, பிரபல நாவலாசிரியர் இளங்கீரன் எழுதிய மகாகவி பாரதி என்ற நாடகம் இவரால் நெறிப்படுத்தப்பட்டது.
1978ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் திருப்பூர் என்னுமிடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் கலந்து கொண்டு, நா.வானமாமலை அவர்களின் தலைமையில் நிகழ்த்திய உரை, ஈழத்தில் தமிழ் நாடகம் என்ற நூலாக வெளிவந்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையிலும் திருச்சியிலும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்திலும் மலையக இலக்கிய வளர்ச்சி குறித்து உரைகளை அந்தனி ஜீவா நிகழ்த்தியுள்ளார். மலையக இலக்கியம் பற்றி வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் உரையாற்றியதோடு, பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். சி.வி.வேலுப்பிள்ளைக்கு விழாவெடுத்து, அவர் வாழும்போதே அவரைக் கெளரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்துக் கலாசார தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் தமிழ்மணி, என்ற பட்டம் வழங்கப்பட்டு அந்தனி ஜீவா பாராட்டப்பட்டுள்ளார்.
மலையக இலக்கியப் பேரவையின் செயலாளராக விளங்கும் அந்தனி ஜீவா, மலையகத்தின் கலை இலக்கிய எழுச்சிக்குத் தம்மாலான பங்களிப்பினை நல்கிவந்துள்ளார். மனிதருக்கேயுள்ள பலங்களும், பலவீனங்களும் அந்தனி ஜீவாவுக்கும் உண்டு. ஆயினும், எதிர்காலத்தில் தமது பலவீனங்களை உடைத் தெறிந்து, தமது பலங்கள் எவையென்பதை உணர்ந்து அவற்றை மென்மேலும் அதிகரிப்பதன் வாயிலாக, ஈழத்து இலக்கியவுலகில் அவர் இன்னும் சாதனையாளராக விளங்குவதற்குரிய
வாய்ப்புகள் நிறையவே உண்டு.
9

Page 12
ட்ெசைக்கு ஆயத்தமாவது எப்படி? -அரசமலர்- ܓܠ
அறியாமை குடி கொண்டிருந்த அக்காலம் தொட்டு அறிவிலே புதுமைகளைக் கண்டு பிடிக்கும் விஞ்ஞான உலகில் வாழும் இன்றைய மனிதன்வரை கல்வியைக் கற்றுக்கொண்டே வாழ்கிறான். அவன் கற்கும் முயற்சிக்குத் தக்க பயனையும் அடைகிறான். ஒருவன் கற்கும் கல்வியை அளக்கும் கருவியாக பரீட்சைகள் அமைந்துள்ளன. கல்வியைக் கற்பதற்காக எத்தனையோ கலைக் கூடங்கள் , கலாசாலைகள் தோன்றியுள்ளன. இவற்றில் இலட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். இவர்களின் கல்வித்தரத்தை கணிப்பதற்காக பல பரீட்சைகள் நாடாத்தப்படுகின்றன. இப்பரீட்சைகள் ஒவ்வொருவரையும் பல துறைகளில் தொழில் புரிய உதவக் கூடியதாகவும், மேல் படிப்பு படிப்பதற்கு ஏற்றதாகவும், உத்தியோக உயர்வு அளிப்பதற்காகவும் தெரிவு செய்ய முடிகிறது.
ஒருவன் பரீட்சையில் சித்தியெய்த வேண்டுமாயின் அதில் அவனுக்கு பற்றிருக்க வேண்டும். இல்லாது பிறரின் துTண்டுதலுக்காகவோ பலாத்காரத்திற்குப் பயந்தோ பரீட்சைக்கு இருக்காது, தனது சொந்த விருப்பத்திலேயே பரீட்சைக்கிருக்க வேண்டும். அத்துடன் எழுதப் போகும் பரீட்சையில் நிச்சயம் சித்தியடைவேன் என்ற தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும் . இதையே ஜான் சன் என்பவர் நம்பிக்கையில்லையேல் முயற்சியுமில்லை” என்று கூறியுள்ளார். அதைப் போல் வள்ளுவப் பெருந்தகையும்.
“எண்ணிய எண்ணியாங்கெய்தில எண்ணியார்
திண்ணியராகப் பெறின்’
என்று கூறி தன்னம்பிக்கையை வலியுறுத்துவதைக் காணக் கூடியதாயிருக்கிறது. பரீட்சையில் பற்றும், தன்னம்பிக்கையும் இருந்தால் மட்டும் போதாது. படிக்கும் பாடத்தில் நல்ல முறைகளைக் கையாண்டு ப்டிக்க வேண்டும்.
2O

முதலில் பரீட்சைக்குரிய பாடத்திட்டத்தை நல்ல முறையில் பார்த்து அதற்கான ஒரு நேரகுசியை அமைத்துக் கொள்ளவேண்டும். பின்பு கஷ்டமான பகுதிகளைக் கூடிய கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். மேற்கூறிய முறைகளைக் கையாண்டு பாடங்களைப் படித்த பின்பு பரீட்சைக்கு ஆயத்தமாதல் வேண்டும். பரீட்சைக்குப் பாடங்களைப் படிக்கும்போது தெரிந்த ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும். அல்லது குழு முறையை ஏற்படுத்திப் படிக்க வேண்டும். குழு முறையில் பாடங்களைப் படிக்கும் போது கீழ்வரும் முறைகளைக் கையாள்வது பயனுடையதாகும்.
1. குழுவில் மூன்று அல்லது ஐந்து பேர் இடம்பெற வேண்டும்.
2. குழுவில் உள்ளோரில் ஒருவராவது சிறந்த திறமையாளராக
இருக்கவேண்டும்.
3. குழுவிலுள்ள ஒருவர் வாசித்து விளக்க, மற்றவர்கள்
கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
4. தேவையான இடங்களில் வாசிப்பவரோ, அல்லது நன்கு
தெரிந்த ஒருவரோ விளக்க வேண்டும்.
5. குழுவில் உள்ள ஒவ்வொருவரும் கேள்விகளைக் கேட்டு
விடைகளைப் பறிமாறிக்கொள்ள வேண்டும்.
6. சந்தேகங்களைக் குழுவில் உள்ளோரிடமோ, அல்லது தெரிந்த ஒருவரிடமோ கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
இப்படியாக நாம் ஒருவரது துணையுடன் அல்லது குழுவாகப் படிக்கும் போது நேரங்களையும் அவதானிக்க வேண்டும். இரவில் தூக்கமின்றி கண் விழித்துக்கொண்டும், உணவு சாப்பிட்ட உடனும், சூரியன் அஸ்தமணமாகும் நேரத்திலும் மூளை கூடுதலாக களைப்படைந்த நேரத்திலும், படித்தல் கூடாது. படிப்பதற்கு அதிகாலையும், பசிவந்து உண்ணும் முன்பும் சிறந்த நேரங்களாகும்.
படிப்பதற்கென வகுக்கப்பட்ட நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் மற்ற விடயங்களைக் கவனிப்பதிலும், மாலையில் விளையாட்டுக்களிலும் ஈடுபடவேண்டும். இதனால் படிப்பதில் ஏற்படும் சோம்பலும் நீங்கி படித்த , விடயங்களை மறக்காதிருக்க உதவுகிறது. தொடர்ந்து படித்துக்கொண்டிருப்பதால் மூளையும்
21

Page 13
கண்ணும் களைப்படைகிறது. இதனால் பல விதமான கெடுதல்கள் ஏற்படக் கூடும். தொடர்ந்து ஒரு பாடத்தை நீண்ட நேரம் படிப்பதால் அப்பாடத்தில் வெறுப்பும் சோர்வும் ஏற்படும். எனவே பாடங்களை மாற்றியமைத்து கஷ்டமான ஒரு பாடத்துக்குப் பின், இலேசான ஒரு பாடத்தைப் படிக்கவேண்டும். ஒரு கொப்பியை வைத்து முக்கிய குறிப்புக்களைப் பதித்துக் கொள்ள வேண்டும். இது பாடத்தை படித்து முடித்ததும் மீட்டுவதற்கு இலேசாக இருக்கும்.
பாடங்களைப் படித்து முடிந்ததும் அவற்றைப் பரீட்சைக்காகப் படிக்க நேரசூசியை அமைத்துக் கொள்ள வேண்டும். மீட்டல் செய்வதை 2 மாதங்களுக்கு முதல் ஆரம்பிக்கலாம். பழைய வினாப் பத்திரங்களை தேடி படிப்பதோடு விடை எழுதி தெரிந்தவர்களிடம் காட்டி சரியான விடை எழுதப் பழக வேண்டும்.
பரீட்சைக்கு முந்திய இரு நாட்களிலும் விஷேட குறிப்புகளைப் பார்த்துக் கொள்வதோடு உடலைச் சீர்படுத்துவதிலும் ஒய்வு எடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். பரீட்சை மண்டபத்தினுள் நுழைந்த பின் கொடுக்கப்பட்ட கேள்விகளை நன்கு வாசித்துவிட்டு நேரத்தையும் வகுத்துக் கொண்டு முதலில் இலேசான கேள்விகளுக்கு பதில் எழுதவேண்டும், இவ்வாறு நாம் பாடங்களை ஆயத்தப் படுத்தி பரீட்சைக்கு முன் கையாள வேண்டியவற்றை அனுசரித்து நடந்து கொண்டால் பரீட்சையில் இலகுவில் சித்தியடையலாம்.
22

/
பெண்மைக்கு வாழ்வு ஈந்த நபிகளார்
u ஹரீரா அனஸ் - அக்குறணை
இப்பெருமுலகில் மக்கள் செறிந்துமே வாழுகின்ற ஒப் பெரு நிலையைக் காண்பாய் தோழி ! ஒப்பிலா வாழ்வையுனக்கு ஒதுக்கியே தந்தாரந்த உத்தம நபியவர்கள் இப் பெருந் தன்மை யெந்த வுலகத்து நெறியில் காண்பாய்? தப்பது செய்துவிட்டால் கணவனே
தண்டிக்காமல் அப்பெண்ணினின் நிலையைக் கண்டு அருஞ் சொற்கள் கூறிப் பின்னர்
அவளைத் தான் காக்க வேண்டும்.
விலாவினில் செய்த பெண்ணாள் வேண்டுமே பொறுதியானுக்கு என்று ஈண்டுதான் சொல்லிக் காட்டி பெண்மையைப் பாதுகாக்கும் நபிகள் பெருமையைப் பாராய் தோழி ! பெண்மையாய்ப் பிறந்திட்டாலோ தந்தையின் பொறுப்பிலென்றார். அங்கது இல்லையென்றால் வளர்ப்பவன் பொறுப்பிலாகும். そぐ பின்னரே அந்தப் பெண்ணாள் கணவனின் கைகளிலே ஒரு கனவான பிரஜையாவாள். மஹரினைக் கொடுத்து ஒருவன் மணமகனாகி விட்டால் என்றும்
மங்கையைக் காப்பது அவனே உண்மை.
23

Page 14
பெண்ணினில் தவறு கண்டு அந்த ஆணவன் வெறுத்து விட்டு அவளினை விலக்க நேர்ந்தால் என்றுமே 'தலாக்” குண்டு என்பதைப் போலப் பெண்ணே உந்தனின் கணவன் மீது உனக்குத் தான் வெறுப் பேற்பட்டு வாழ்வினைத் தொடரமுடியா வதைக்கு நீயாளாகில்; "குல்உ” என்கின்ற கணவனை விலக்குவதும்
உந்தவனுக்குரிமையாமே, தோழி !
ஒரவஞ்சனை இல்லாச் சட்டம் இயம்பிடும் ஷரீ ஆச் சட்டம் இறுகிதைத் தந்தார் நபிகள் கோமகன் திறனைப் புகழு தோழி !
அன்புடன் நபிகள் சொன்ன அருந்தவ சொற்கள் உந்தன் பொன் பெறும் வாழ்வில் என்றும் பொறுப்புடன் நோக்க வேண்டும்.

- - - - - - - - - - سا
சமூகசேவையாளர் அறிமுகம் g) so teo)6n)ii U.6 L)
محله -- - - - - - - - - - - - - - - - - - - - -
தன்னலம் பாராது, சாதி, மதம் பாராது மனித நேயங்களை நேசித்து, சமூகப் பணிகளில், ஆர்வமுள்ளோரை இளைய தலைமுறையினருக்கு :வுறிமுகம் செய்து வரும் வரிசையில் ரியநிலா" மூலம், பொறியியலாளரும், ალ. - ...> εί ε ρ σε சேவையாளரும் , i கல்விமானுமாகிய அல்ஹாஜ், ஹ0 சைர் | ۔ ۔ ۔ ۔۔ .ಓ ஆசுப் அவர்களை அறிமுகம் செய்து ா:வப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
ஆ+ர்)
தானும் தன் பாடும் தானும் தன் தொழிலும் என்று
வாழ்பவர்களும், தான் கானும் இன்பம் மன நிறைவு மற்றவர்களும் காண வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும், தன்னால் இயன்றதை மற்றவர்களுக்கும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களும் நம்முள் இல்லாமல் இல்லை.
இங்கே இவ்விதழ் மூலம் அறிமுகமாகும் கல்வி மானும், சமூக சேவையாளருமான அல்ஹாஜ் ஹம் சைர் யூசுப் அவர்கள் இளைய தலைமுறையினர் இனங்கண்டு கொள்ளவேண்டிய ஒருவர்.
பொருளாதார வசதிகள், குடும்ப செல்வாக்குகள் ஒருங்கே அமைந்த போதிலும், சிலர் திட்டமிட்டு தம் எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதில்லை.
ஆனால் அல்ஹாஜ், ஹுசைர் அவர்களைப் பொறுத்த வரையில் தனது ஆரம்பக் கல்வியை உயன்வத்தை நூராணியாவிலும், அதன்பின் மாத்தளை ஸாஹிராவிலும், தொழில்நுட்பக்கல்லூரிகளிலும் கல்வியை முடித்துக் கொண்டு இங்கிலாந் துரிலுள்ள மத்திய சர்வகலாசாலையில் பட்டப்படிப்பையும் முடித்துக்கொண்டார்.
25

Page 15
அதன் பிறகு என்ஜினியரின் கொண் ஸல்டன் கம்பிகியிலும் இறுதியில் லண்டன் மாநகர சபையின் நீர் வினியோக சபையில் பொறியியலாளராகவும் சேவை செய்துவிட்டு அதன் பின் சவூதி அரேபியியாவிலும் சேவையை மேற்கொண்டார்.
அங்கு 500 நோயாளிகளுக்கான படுக்கைகளைக் கொண்ட வைத்தியசாலையொன்றை நிர்மானிக்கும் பொறுப்பை மேற்கொண்டார். இவ்வைத்தியசாலையை நிர்மானிக்க 3 வருடங்கள் சென்றன. "
அதன் பிறகு ஜித்தாவில் 400 அறைகளைக் கொண்ட "ரெட் ஸிபெலஸ்” என்ற ஹோட்டல் கட்டடத்தை நிர்மாணிக்க எடுத்த 3 வருடங்களின்போதும் பொறியியலாளராகப் பணி புரிந்துள்ளார். அத்தோடு மதீனா நகரில் கிப்லதைன் "பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ள புனித ஸம்ஸம் நீரைக் குளிரூட்டும் வேலைத்திட்டத்திலும் பொறியியலாளராகப் பணிபுரிந்தார். இக்காலங்களில் பல்வேறுபட்ட சமூகத்தின ரோடு இணைந்து பழகும் வாய்ப்புக் கிடைத்தமையால் அவ்வந்நாட்டு கலாச்சார பண்பாட்டு பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.
1969 முதல் 1985 வரை கடல் கடந்த நாடுகளில் பணிபுரிந்து நாடு திரும்பிய அல்ஹாஜ், ஹர0 சைர் அவர்களின் சிந்தனையில் பல்வேறுவிதமான கற்பனைகள் உதயமாயின. “ஒரு மனிதனின் வாழ்நாளில் தனக்கென எவ்வளவு தான் உழைத்தாலும் சமூகத்திற்காக, மக்களுக்காக சிறிதளவேனும் தம்மாலான பங்களிப்பைச் செய்தால் அவைதான் நிலைத்து நிற்பவை என்ற கருத்து மேலோங்கி நின்றது. சமூகப் பணி புனிதமானது என எண்ணி சமூகத்தோடு இணைய வேண்டும். இன, மத, வேறுபாடுகளின்றி, தம்மால் இயன்ற சேவையைச் செய்ய வேண்டும் என்ற நன்நோக்கோடு பல அமைப்புக்களில் அங்கத்தவம் பெற்றார்.
26

sair uSci) psit GT Consult Ont ASSOcidition தலைவராக, இளைஞர்களின் நல்வாழ்வு கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தி தூய்மையான சூழலை மனித சமூகத்துக்கு அறிமுகம் செய்யும் பணியைச் செய்யும் “லயன்ஸ் கிளப்பில் அங்கத்தவராகி தற்போது பிரதி தலைவராகவும் உள்ளார்.
scar, filsù Professiondl Associotion / Concer Society போன்ற அமைப்புகளிலும் மத்திய மாகாண மு. லீக் வாலிப மு. ஆலோசகராகவும் உயன்வத்தை சர்வ சங்க ஒன்றியத்தின் ஸ்தாபக அங்கத்தவராகவும் உயன்வத்தை மஸ்ஜிதுன் - நூர் பள்ளிவாசலின் கல்வி, கலாசார தலைவராகவும் இருந்துள்ளார்.
தற்பொழுது மாவனல்லைத் தேர்தல் தொகுதியில் படித்த புத்தி ஜீவிகளை ஒன்றிணைத்து “ழரீ லங்கா முஸ்லிம் எசெம்பிலி” என்ற பெயரில் அமைப்பொன்றை அமைத்து அதன் தலைவராக இருந்து வருவதோடு இப்பிரதேசத்தின் கல்வி பொருளாதார வளர்ச்சிக்கு சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை நிலைநாட்டும் பொருட்டு இன, மத, வேறுபாடின்றி பல்வேறான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மாவனல்லை பிரதேசத்தில் "லயன்ஸ் கிளப்பை" அறிமுகம் செய்தவரும் இவரே . இத்தகைய வசதி படைத்தவர்கள் கல்வி மான்கள் சமூகத்தின் மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
27

Page 16
மனம் விட்டு கு
துயரைத் துரத்திடு
நெஞ்சமொன்று இருக்கும் வரை - அங்கு
நிஜங்களை சூழவேண்டும்
வஞ்சமில்லா வார்த்தைகள் - மனதை
வாஞ்சையுடன் அணைக்க வேண்டும்
துன்பங்கள் படர முன்பே - அதனை
துடைத்திட வேண்டும்
இன்பங்களை களைய முன்பே - வாழ்வில் இனிமை தீட்ட வேண்டும்
பிரிவு வந்து சேரினும் - துயரை பொதிகட்டிட வேண்டும்
எரிந்து விழும் நெஞ்சமெனினும் அதை
எதிர்த்து ஏற்றம்பெற வேண்டும்
ஏழ்மை கரு வளர்ந்தாலும் - உழைத்து
ஏற்றம் பெற வேண்டும்
வாழ்வில் வசந்தம் பெற - துயர்
வராது காக்க வேண்டும்
பின்னலாய் சிக்கல் வரினும் - அதனை
பிடித்து நிருத்த வேணும் மேன்மைமிகு வாழ்வை பெற - தூய
மனம் திகழ வேண்டும்
திருமதி
: umtym sęuDT
ÜNLI (BGDI (86) காலாண்டுக் கொரு முறை - நீ வலம் வரும் போது எம் இதயங்கள் தூண்டப் படுகின்றன.
எங்களைத் தட்டி எழுப்பியதும் நீதான் படிக்கத் தூண்டியதும் நீயேதான் எழுதத் தூண்டியதும் நீயேதான்.
ஈழத்தில் மட்டு மென்ன உன் ஆக்கிரமிப்பு தமிழகத்தையும், தாண்டி மத்திய கிழக்கையும் பிடித்துவிட்டதாகத் தகவல் வருடங்கள் ஐந்தைத் தாண்டிய - நீ இப்பொழுது வளர்ந்து விட்ட
28
வாலிபன்
இனியும் உன் பன்ரிதொ
வேண்டும் வாழ்த்துகிே பணி தொடர
juli 66DTI GJIT
- C இலக்கிய வானில் e Guit 6) (5th ப்ரிய நிலாவே வா!
குளிர் காலக் காற்றுப் (
குழைந்து வீசும் ப்ரிய நிலாவே வr !!!
ஐந்தாண்டுகளாய் அழகிய பைந்தமிழில் பவணி வரும் ப்ரிய நிலாவே வா !!!
மலையகத்தின் தென்றலி உயன்வத்தையில் வந்து ப்ரிய நிலாவே வா!!!
دها
நிலவுக்கோ
என்
ப்ரிய நிலா
தேய்ந்து . . .
வளாநது . . . நிரந்தரமில்லா
உன்
வாழ்க்கையை எண்ணி நான் கண்ணீர் சிந்த மாட்டே

Fல இதயங்கள்
இங்கு வளாநது . . . தேய்ந்து . . . பட்டினிச்சாவில் சங்கமிக்கும் எதியோப்பியங்களும் சோமாலியாக்களும் இருக்கம் வரை
p៩
ரிம்ஸான் சாலி அரநாயக்க,
டவளை கலீல் - இருளின்
சேலையைக் (க்) கிழித்தெரியும் நீ. . . மனித மூளைகளை முற்றுகையிட்டிருக்கும் போலே பாவத்திரைகளைக்
கிழித்தெறிந்தாலென்ன?
இரவெல்லாம் நடந்து நடந்து நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் வெளிச்சக்கு.ை பிடிக்கும் உன் கre'கள் рҒ. Ш வலித்தாலென்ன ? தித்த உடைந்தாலென்ன?
புவியில் இரவு பகலாய் நடக்கும் பாவங்களுக்கெதி"ாக வாள் தூக்காதவ8ர அன்று உனை நேசித்தேன்
அழகால வள் என்பதால் இன்று உனை விரும்புவதா ? வெறுப்பதா? உன் பதிலில் தான் என் விடையுமுண்டு
இஃது
கண்ணிர்க்காயங்களுடன்
ஜி.னைஸ் -
6ᏱᎢ
கலங்கிய மனது.
29

Page 17
\\ - - - - - - - - - - - - - سا
வார்த்தைகளா? கவனம்
தொகுப்பு : நுளில்லா சுபைர்
சிலர் பேசுவதைக் கேட்க அப்படி ஒரு இன்பம் அள்ளிச் சொரியும் புதுப்புனல் உள்ளத்தில் பொங்கி வழியும். தெவிட்டாத நயம் தேனைத் தொளிக்கும். இத்தகையோரின பேச்சைக் கேட்க இணக்கமாய்க் காத்திருப்போம்.
ஆனால், சிலர் பேச ஆரம்பித்து விட்டால் போதும், போதுமென்றாகிவிடும். எப்போ முடிக்கப் போகின்றான் என்று முனங்க ஆரம்பித்துவிடுவோம்.
இங்கே நாம் காண்பது என்னவென்றால் முதல் பிரிவினர் கவர்ச்சியாக இடம் அறிந்து பயனுள்ளதாக பேசுகிறார். மற்றவரிடம் அந்தத் திறமை இல்லை என்பதுதான்.
எனவேதான், யாரிடம் பேசவேண்டும் யாரைப்பற்றிப் பேச வேண்டும். எப்படி? எப்பொழுது? எங்கே? என்ற ஐந்து காரியங்களைத் தெரிந்து வைத்திருந்தால் சரியாகப் பேசலாம் என்கிறார் டப்ளியூ. ஈ. நொரிஸ் என்ற அறிஞர்.
ஒரு சிறு நெருப்பு தவறான இடத்தில் தவறான முறையில் பயன்படுத்தும் போது ஏற்படும் நஷ்டத்திற்கு அளவேயில்லை.
இன்று சமுதாயத்தில் வாயால் கெட்டவர்கள் எத்தனை பேர்? அன்றாட வாழ்க்கையில் வார்த்தைகள் முக்கியமான இடத்தை பெறுகின்றன என்பதை எண்ணிப் பார்த்தோர் எத்தனை பேர்? வார்த்தைகள் வெல்லவும் செய்யும், கொல்லவும் செய்யும் சக்தி மிக்கவை.
வார்த்தைகள் நமது சிந்தனைகளை பிரதிபலிக்கின்றன. வார்த்தைகள் நமது மனதை படம் பிடித்துக்காட்டுவதோடு, நமது ஆன்மாவின் நிலையை அப்பட்டமாகக் காட்டும் அட்டவணையாகும்.
SO

நிமது நினைவுகள் அணிந்து வரும் உடைகளே வார்த்த்ைகள். அழுக்குப் படிந்த கந்தயையும், பீற்றலையும் நாம் அணிய விரும்பவதில்ல. அதே போன்று நமது சிந்தனைகளுக்கு அழுக்கான கந்தைகளை உடையாகப் போட்டு வெளியே அனுப்பக்கூடாது.
"வார்த்தைகள் கருத்துக்களைத் தாங்கிநிற்கும் ஆணிகள்” என்றார் ஒருவர். பேசும் வார்த்தைகள் ஆக்கும், அழிக்கும் திறம் படைத்தவை. உயர்த்தவும் செய்யும் வீழ்த்தவும் செய்யும். இன்பத்தை அளிப்பதும், துன்பத்தை தருவதும் வார்த்தைகளே! நமக்குப் பெயர் தேடிக் கொடுப்பதும் பெயரை அழிப்பதும் வார்த்தைகளே!
பெருமையும், சிறுமையும், வெற்றியும், தோல்வியும் வார்த்தைகளால் வருகின்றன. அனல் மூட்டும் வார்த்தைகளைப் பேசி எதையும் சாதித்துக்கொள்ள முடியும் துடிப்புள்ள வார்த்தைகளைப் பேசி தூங்கியவர்களைத் தட்டியெழுப்பலாம் பொருள் சொரிந்த வார்த்தைகளைப் பேசி, வாழ்வை வளமாக்கலாம் ஆனால், இன்று இன்னதைத்தான் பேச வேண்டுமென்று நியதியின்றி எதை எதையோ பேசி முடிவு கான முடியாது திண்டாடுகின்றோம்.
போர்வாளை விட கூர்மையான வார்த்தைகளை, எழுத்திலும், பேச்சிலும், கவனத்தோடு பயன்படுத்தி காரியம் பார்க்கின்றார்கள்? ஆனால் பிரசுரிக்கப்படாத வார்த்தைகளை அழித்துவிடலாம். ஆனால் பேசப்பட்ட வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது.
எனவே, வாசகர்களே, வார்த்தைகளைக் கவனமாகப் பிரயோகியுங்கள்.
3.

Page 18
------------------------ سا N பித்தனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
கிழக்கிழங்கை தந்த சிறுகதை மன்னன் மர்ஹாம், ஜனாப் கே. எம். ஷா (பித்தன்) அண்மையில் இறையடி சேர்ந்த செய்தி கேட்ட இலக்கிய உள்ளங்கள் கண் கலங்கிப் போயிருப்பர்
என்பதில் சந்தேகமேயில்லை.
இளைய தலைமுறையினர் அறிந்திராவிடினும், நம் நாட்டு சிறுகதை எழுத்துலக மன்னனாக இருந்த இவரது இறுதிக் காலம் வறுமைக் கோட்டிலேயே கழிந்தது. 1990 லிருந்த சமய கலாச்சார தமிழ் மொழி அமுலாக்கள் அமைச்சராகவிருந்த திரு.பீ.பீ. தேவராஜ் 7000/- பணப் பரிசு கொடுத்துதவியதோடு 1991ல் மு.ச.க.இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் தாஜுல் அதீப்” என்ற பட்டத்தையும் வழங்கி 10,000 ரூபாய் அன்பளிப்புச் செய்து கெளரவித்ததோடு எம்.எச்.எம்.சம்ஸின் தலைமையில் திக்வெல்ல இலக்கியப் பிரியர்களின் முயற்சியால் மூத்த எழுத்தாளர் ஷாவின் நிலைகண்டு சிங்களக் கலைஞர்கள் 10,000 ரூபாய் அன்பளிப்புச்
செய்து மகிழ்வித்தனர்.
யார் யார் எதைத்தான் செய்தாலும் மர்ஹாம் பித்தனின் இலக்கியப் பணிக்கு ஈடாகுமோ? அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக!

மலையகத்தின் இலக்கிய வளர்ச்சியில்
ஆற்றிவரும் பணி தொடர வாழ்த்துக்கள்
NO. 101, COLOMAO STREET,
KAND W.
TeL: O8-32545, 08-23166

Page 19
盟
。 。 லக்கி லேண்
தயாரிப்பா குண்டசாலை
Я -ов — பெக்ஸ் = 94
FFFFFFF"ffffffffffffffff
M.J. M. OFFSET FRINTE
11 11 : 1 1+1 ܒܡ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i'r tîGithaf, L''' | } GITIGH G
- கண்டி 24217ー32574 -a3243s
*
S. FAVANELLA