கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தோழன் 1992.09

Page 1
է քելիrՒ 1 교 :
இதழ் ே செப்
 

蕾
கவி பாரதியார்
ஆசிரியர் அன்பளிப்பு
நிந்தத IT --Fil 1O

Page 2
இலக்கியத் தாகங்கொண்ட உங்கள் முயற்சிக்கு எமது பாராட்டுக்கள் இது சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திடட்டும்
குறைந்த செலவில் குறித்த நேரத்தில் 22 கரட் தங்க நகைகளை பெற்றுக்கொள்ள நம்பிக்கையான ஒரே இடம்
STAR JEWELLERS
SOVEREIGN GOLD, SILVER JEWELLERS AND FANCY GOODS
No. 22 A, Main Street, Mawanella.
T. P. 6049
Best Wishes from
S. H. GOLD HOUSE
No. 453,
2nd Division, Maradana - Colombo 0. T. P. 6995O2

தோழன் THOZAN
மாதாந்த Ꮺ56Ꮌ) Ꭷb , இலக்கிய
இதழ்
冲
மலர் 1
இதழ் 2
大
Editor:
Nindadasan
GoF’u:
'92
大
ஆசிரியர்: நிந்த தாஸன்
தொடர்பு:
Windadasan Wo. 178, Main Street, Mawanella.
ஆசிரிய பிடம்
அன்பு வாசகர்களே !
*தோழன்’ இரண்டாவது இதழ் இதமான இனிக்கும் இலக்கிய அம்சங்களுடன் இதயங்களைச் சந்திக்கின்றது. முதலாவது இதழுக்கு முழு ஆதரவும் வரவேற்பும் கிடைத்ததையிட்டு தோழன் மட்டில்லா மகிழ்ச்சிக்குள் ஆழ்ந்து போனான்.
ஆசிரிய தொழில் மகத்துவமிக்க புனிதமான ஒரு தொழிலாகும். இன்று எம் சமூகத்தில் உள்ள ஆசிரியர்களின் நிலையினை நோக்கும் போது சம் பளக் குறைவு காரணமாக சிக்கனமான சிக்கலான வாழ்க்கையினை வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள். வாழ்க்கைச்செலவின் அதிர்ச்சியினை நாளாந்தம் அளிக்கின்றது. ஆசிரியர் களின் சம்பள உயர்வு பற்றி தேசியப்பத்திரிகைகளில் வெளியாகின்ற செய்திகள் கூட ஆசைகாட்டி மோசம்
|செய்வதாக அமைகின்றது. உயர்வானதும் உறுதியா
னதுமான சம்பள அதிகரிப்புபற்றி எந்தவிதமான தகவல்களும் இல்லை ‘அகில உலக ஆசிரியர் தினத்திற் கூட ஆசிரியர்களுக்கு எம் நாட்டில் எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை
இது ஒரு புறமிருக்க; பெற்றோர்களும், பொது மக்களும் ஆசிரியர்களுக்குக் கொடுக்கின்ற மதிப்பினை நோக்கும்போது இன்னும் கவலைக்குரியதாகவே உள் ளது. ஒரு நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் மான வர்களை வழிப்படுத்தி, நெறிப்படுத்திப் புத்திஜீவி களாக மாற்றுகின்ற பணியினை ஆசிரியர்கள் செய்த போதிலும் மாணவர்களிடத்திலோ அல்லது பெற் றோர்களிடத்திலோ நன்றியுணர்ச்சி சிறிதும் இல்லை வெறும் பணத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு
ஆசிரியர்களைக்கணிப்பீடு செய்வது தவறானதாகும்.
பல தியாகங்களுக்கு மத்தியில் சேவை செய்யும் ஆசிரி யர்களை நாடும் வீடும் மதிக்க வேண்டும். நன்றி யுணர்ச்சியும் ஒழுக்கப்பண்பாடும் எ ம் சமூக த் தி ல் மேலோங்கி வளர வேண்டும். அ ப் போது த ர ன் நாளைய தலைமுறை சீரும் சிறப்பும் பெறும்.
உயர்ச்சி

Page 3
2 தோழன்
கலைஞர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் அரசாங்கம் விருதுகளும், பொன்னாடையும், பொற்கிளியும் வழங்குவது போல நல்ல ஆசிரியர்களுக்கும் அரசாங்கம் வருடாவருடம் விருதுகள் வழங்கிக் கெளரவிக்க வேண்டும்.
தமிழ் மொழி மூலம் கற்பிக்கின்ற ஆசிரியர்களிடத்தில் காணப்படுகின்ற கலை இலக்கியத்திறன்களை வளர்ப்பதற்கான அமைப்பொன்றினை கல்வி அமைச்சு ஏற்படுத்தி ஊக்கத்தினை யும் ஆக்கத்தினையும் வெளிக்கொணர வேண்டும் என்பதே தோழனின் வேண்டுகோளாகும்.
(乌十f)
இமைதிறந்த இரு விழிகள்
*செல்வி நஸ்லி
வெலம்பொடை. 07-07-1992
அன்புத் தோழனுக்கு,
அழகுத் தமிழில் நடைபயின்று முதல் முத்தாய் வெளிவந்த "தோழன் உந்தனுக்கு எந்தன் வாழ்த்துக்கள். குட்டி சஞ்சிகையாய் இதழ் விரித்த போதும் கட்டு
ரைகள், கதை, கவிகள் யாவையும் தாங்கி நிறைவுடன் வந்த தோழனே நீ மேலும் மேலும் வளர இதயத்து ஆசிகள்.
செல்வி முனல்வரா ஆப்தீன்
பூவெலிகட,
ஹன்தெஸ்ஸ.
16-07-1992 ஆர்பின் "தோழன்' சஞ்சிகையாசிரியருக்கு, 2 சமூகத்தில் துளிர்விட்டுள்ள எழுத்தாள இளம் மொட்டுக்களை மலரச்செய்ய தங்கள் மூலம் ஒரு "தோழன்' பிறந்திருப்பது வநவேற்கத்தக்கது. இன்று எத்தனையோ இளம் எழுத்தாளர்கள் இலைமறைகாயாய் ஒளிந்திருப்பது யாவரும் அறித்ததே. அவர்களை இனங்கண்டு கைதுரக்கி விட இன்று எத்தனையோ சஞ்சிகைகள், தொலைத் தொடர்பு சாதனங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் இளம் எழுத்தாளர்களின் பயிற்சியரங்கமாய் உங்கள் தோழன் அமைவான் என நினைக்கிறேன்.

தோழன் 3
ஏணியாக ஒரு மொழி
வீென விஞ்ஞானம் உலகுக்கு அளித்துள்ள தகவற் தொடர்பு சாதனங்கள் வசதிகள் உலகத்தை வெகுவாகச் சுருங் கச் செய்து விட்டது. உலகின் எந்த ஒரு மூலையையும் சில மணி நேரப் பிரயாணத்தில் அடையக் கூடியதாக சக்தி வாய்ந்த விமானங்கள், சில நொடிகளில் தொடர்பு கொள்ளத்தக்கவாறு தொடர்பு சாதனங்கள் உலகமோ ஒரு கிராமமோ என்று வியக்கும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது. கல்வி, பொருளா தாரம், வேலைவாய்ப்பு போன்ற இன்னோரன்ன காரணங் களுக்காக மக்கள் ஒருவரோடொருவர் அதிகம் தொடர்பு கொள்ளக்கூடிய நிலை இன்று தோன்றியுள்ளது. இப்படியாகச் சுருங்கிவிட்ட இவ்வுலகில் மொழியொன்று வகிக்கும் பங்கு மகத்தானது.
பல்லாயிரக்கணக்கான மொழிகள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளன. சைகை மொழியால் பேசிக்கொண்டிருந்த ம்னிதன் என்று தன் உள்ளக்கிடக்கையை சொற்கள், வசனங் களின் துணையுடன் வெளிப்படுத்த ஆரம்பித்தானோ. அன்றே மொழியின் வளர்ச்சியும் ஆரம்பித்து விட்டது. கூடவே சண்டை சச்சரவுகளும்தான். குறிப்பிட்ட நாட்டில் குறிப்பிட்ட பிரதே சத்தில் வாழ்ந்த மக்கள் மொழியை தோற்றுவித்ததுடன் நின்றுவிடாமல் தமது மொழியே சிறந்தது, உயர்த்தது என்ற கருத்தையும் தம்மை அறியாமலே வளர்த்துக்கொண்டனர். மொழிப்பற்று, மொழி வெளியாகி அது ஏற்படுத்திய பாதிப்பு களும், அழிவுகளும் சரித்திர ஏடுகளிலே பதியப்பட்டே வந் துள்ளது. மொழியொன்று வளர்வதற்கு மொழியின் பால் கொண்ட பற்றுதல் உதவினாலும் குறுகிய அதன் சுவர்களை யுந் தாண்டி, பரந்த உலகத்தை, மனிதர்களை, அறியும் முயற்சிகளில் அது தடைகளையும் ஏற்படுத்தி வந்துள்ளது. இதனால் இன்னொரு மொழியை அறிந்து கொள்வதற்கு எந்த முயற்சியும் செய்யாத ஒருவருங்கூட, தாம் பேசும் மொழியே உலகத்தில் மிக இனிமையானது என்று திருப்திப்பட்டுக் கொள் கின்றனர்.
நவீன உலகில் தகவல் தொடர்பின் முக்கியத்துவம், நாம் வாழும் சூழலிலிருந்து மொழிகள் வகுத்துள்ள குறுகிய சுவர் களைக் கடந்து மனிதன் வரவேண்டியுள்ள தேவை, இரண்

Page 4
4. தோழன்
டையும் தொடர்புபடுத்த உலக மக்களுக்கென ஒரு பொது மொழி இருப்பதன் அவசியத்தினை இன்று பலரும் உணரத் தலைப்பட்டுள்ளனர்.
உலகில் இன்று அதிகம் பேசப்படும் மொழி மாண்டரின் சீன மொழி (mandariா Chinese) ஆகும். கிட்டத்தட்ட எழுபத் தைந்து கோடி மக்கள் இதனைப் பேசுகின்றனர். அடுத்து, ஆங் கிலம். இது ஐம்பது கோடி மக்களால் மட்டுமே பேசப்பட்டாலும் முப்பத்திரெண்டு நாடுகளில் தன் கிளைகளை விரித்து விஞ்ஞா னம், வியாபாரம் அரசியல் ஆய துறைகளைத் தழுவிக் கிட்டத் தட்ட உலகப் பொது மொழியாகவே இத்துறைகளில் பாவிக் கப்படுகிறது.
ஆனால் சகல துறைகளையும் தழுவியதான உலகப் பொது மொழியாக ஏற்படும் வாய்ப்பு இதற்கிருப்பதாகக்கூற முடியாது. காரணம் தேசிய, கலாசார ரீதியிலான எந்த மொழிகளுக்கும் இரு க் க க் கூ டி ய தன்மை, ஏனைய மொழி பேசுபவர்களால் இலகுவில் சீரணிக்கப்படலாம் என்று சொல்வதற்கில்லை. மாறாக எதிர்ப்புணர்ச்சிகள் தோன்றலாம். எனவே சகலராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சர்வதேச மொழி கண்டுபிடிக் கப்படுதல் அவசியம். W
* லிங்குவா பிராங்கா " (Lingua Franka) என்ற ஒரு மொழி சில ஐரோப்பிய வியாபாரிகளின் மொழியாக ஒரு காலத் தில் இருந்தது. மேலும் 1887இல் "எ ஸ் பி ரா ன் டோ?* (Esparando) என்ற மொழி கண்டு பிடிக்கப்பட்டது. இன்று கூட இம்மெ*ழியைப் பேசும் ஐந்து மில்லியன் மக்கள் இருந்த போதும் இவை ஐரோப்பிய பின்னணியைக் கொண்டு விளங்கிய ஒரே காரணத்திற்காக சர்வதேச ரீதியில் ஒப்புக் கொள்ளப் படவில்லை.
எனவே, பல்வேறு முக்கிய மொழிகளிலும் உள்ள நல் லம்சங்களைச் சேர்த்துக்கொள்ளக்கூடியதாக, சிறந்த இலக்கணத் தாலும், சொல்வளத்தாலும் அணிசெய்யப்பட்ட ஒரு மொழி உருவாக வேண்டும் அப்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட மொழிபேசும் ஒருவராகப் பிறந்த விபத்தின் காரணமாக வேற்றுமைகளை அதிகம் வளர்த்துக்கொள்ளும் மனப்போக்கு மறைந்து, பொது மனித உணர்ச்சி, மனித நேயம் போன்ற உயர்ந்த எல்லைகளைக் கொண்ட ஒரு சமூ கத்தை அ  ைம த் துக் கொள் வ த நீ கு மொழி துணையாக அமையலாம்.
மாவனல்லை. ரீஸா லதீப்

தோழன்
இருபதாம் நூற்றாண்டின் இருபெரும் புலவர்கள்.
பாரதியார் பெயர் - கப்பிரமணியன் தாய் - லட்சுமி
தந்தை - சின்னச்சாமி ஐயர் பிறப்பு - 1882 இடம் - எட்டயபுரம் திருமணம் - 1897 மனைவி - செல்லம்மாள் கல்வி - கல்கத்தா
பல்கலைக்கழகம் தொழில்- 1904இல் மதுரை
யில் தமிழாசிரியர் - 1907 சுதேச மித்தி ரன் பத்திரிகை துணை ஆசிரியர் - 1907 - 1918 Lil'
டிஷ் ஆட்சிக்கு எதிராக புரட்சி - 1918இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால்
கைது - 1919 விடுதலை - 1920 சுதேச மித்தி
ரன் ஆசிரியர்
புகழ் பெற்ற கவிதைகள் - ܗܝ
கண்ணன் பாட்டு
பாஞ்சாலி சபதம்
குயில் பாட்டு இறப்பு - 1921
பாரதிதாசன் பெயர் - கனக சுப்புரத்தினம் தந்தை - கனகசபை பிறப்பு - 1891 இடம் - புதுச்சேரி புனைப்பெயர் - பாரதியாரு
டன் ஈடுபாடு கொண்ட தால் பாரதிதாசன் என்று சூடினார் கல்வி - வயது 18ல் தமிழ்ப் புலமைப் பட்டம் தொழில் - புதுச்சேரியில் கல்
லூரி ஆசிரியர் கவிதைகள் - (முதல் கவிதை
தொகுப்பு) 'பாரதிதாசன் கவிதை 占Gr”” "பாண்டியன் பரிசு’’ *தமிழச்சியின் கத்தி**
காதலா கடமையா’’ ** அழகின் சிரிப்பு?? **குடும்ப விளக்கு ? 'கடல் மேல் குமிழிகள்' உரை நடைகள் -
'படித்த பெண்கள்?? **சேர தாண்டவம்' ** இரணியன் அல்லது
இணையற்ற வீரன்" நாடக நூல் - "இருண்ட வீடு' பத்திரிகை
ஆசிரியர் - ‘குயில்?? இறப்பு - 1964
தொகுப்பு:- எம். நஜீபுல்லாஹ்

Page 5
6 தோழன்
சென்ற இதழ் தொடர்ச்சி.
திரைப்படமும் நாடக வடிவங்களும்
அத்தோடு, நாடக ஆசிரியர்கள் தமது நாடகத்தோடு தொடர் பான மேடைக் குறிப்புகளையும் நாடகப்பிரதியிற் சேர்த்திருப் பார். வானொலி நாடகம் ஒலியையே அடிப்படையாகக் கொள் வதனால் வானொலி நாடக ஆசிரியர், தமது பிரதியிற்தேவை யான ஒலிக்குறிப்புக்களைக் குறிப்பிட்டிருப்பார். egy6526) f வானொலி நாடகத்தயாரிப்பாளருக்குப் பயன்படத்தக்கவையாக அமையும். அத்தோடு, இந்நாடகத்தில், மேடைநாடகத்தை விடக் காட்சிகள் சற்றுச்சிறியனவாக காணப்படும். அளவுக்கு மீறி நீளமான காட்சிகள் அமையின், வானொலி நாடகம் சலிப்பைத்தரும் அதேவேளை, வானொலி நாடகத்தில் நேரக் கட்டுப்பாடும் மிக முக்கியம்,
திரைப்படச் சுவடி இவற்றினின்றும் பெருமளவு வேறு பட்டதாக அமைந்திருக்கும். காட்சிகள் பெரும்பாலும் சிறியன வாகவே காணப்படும். அக்காட்சிகளும்கூட இயக்குநரின் தீர் மானத்திற்கேற்பச் சிறு சிறு துண்டுக்காட்சிகளாகப் படமாக் கப்பட்டுத் தொகுக்கப்படும். அதேவேளை காட்சிகள் ஸ்டூடி யோவிலும், வெளியிலுமாகப் படமாக்கப்படுவதுண்டு. எனவே, திரைப்படச்சுவடி எழுதுபவர் திரைப்படத்துறை சார்ந்த அறி வையும், அனுபவத்தையும் கொண்டவராக இரு ப் பார். தொலைக்காட்சி நாடகத்திற்கும் இது பொருந்தும். திரைப் படச்சுவடியை ஒத்ததாகவே தொலைக்காட்சி நாடகப்பிரதியும் அமையும்.
மேடை நாடகக்கலைஞர்களின் அனுப வத் திற் கும், வானொலி நாடகக் கலைஞர்களின் அனுபவத்திற்கும், திரைப் பட தொலைக்காட்சி நாடகக்கலைஞர்களின் அனுபவத்திற்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. மேடை நாடகக்கலைஞர் களிடம் பேடை அனுபவம் நிறைய இருக்கும். மிகுந்த கட் டுப்பாட்டுடன் மேடையையும், ஒலி ஒளிச்சாதனங்கை பும் பயன்படுத்த வேண்டியவராக அவர் க ள் இரு ப் டர். மேடை நடிப்புத்தொடர்பாகச் சில வரன்முறைகள் உண்டு. அவற்றைக் கவனத்திற் கொண்டோராக அவர்கள் விளங்குவர். குரலையும் உச்ச ஸ்தாயியிற் பயன்படுத்த வேண்டியவராக இருப்பர். வானொலி நாடகக் கலைஞர்கள் தமது குரலைச்

தோழன் 7
சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் புலப்படுத்தக்கூடிய வகையில், வேண் டிய ஏற்ற இறக்கங்களுடன் பயன்படுத்துவர். குரல் வாயிலா கவே தமது முழுத்திறமையையும் அவர்கள் வெளிக்காட்ட வேண்டியவராக உள்ளனர், எனவே, ஒலி தொடர்பான கட்டுப் பாட்டுணர்வு அவர்களுக்கு அவசியமாகின்றது
திரைப்பட தொலைக்காட்சி நாடகக் கலைஞர்களின் அனுபவம் இவற்றிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். அவர் கள் தமது நடிப்பாற்றலைக் கமரா முன் முழுமையாக வெளிப் படுத்த வேண்டும். காட்சிகள் ஒவ்வொன்றும் தூரக்காட்சி, அண்மைக்காட்சி, குளோஸ் அப்" எனப்பல்வேறு வகைகளிற் படமாக்கப்படும் சிலவேளைகளிற் தாம் ஏற்கும் பாத்திரங் களின் முகபாவங்கள், மனோநிலைகளைத் துல்லியமாக கமரா முன் உணர்த்த வேண்டிய நிலையும் கலைஞர்களுக்கு ஏற்படுவ துண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் தனியாக கமரா முன் மாத் திரமே கற்பனை வளத்துடன் தமது பாத்திரநிலையைப் பிரதி பலக்க வேண்டியவராக இருப்பர். அதனால், பிறதுறைக் கலை ஞர்களை விடவும் அபாரமான கற்பனை வளம் திரைப்பட, தொலைக்காட்சி நாடகக் கலைஞர்களுக்கு அவசியமாகின்றது.
கலாநிதி துரை மனோகரன்
திரைப்படங்களோடு ஒப்பிடுகையில், தொலைக்காட்சி நாடகங் களிற் பெரும்பாலும் "குளோஸ் அப்" காட்சிகள் இடம்பெற வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. பார்வையாளர் தொலைக் காட்சிப் பெட்டிகளுக்கு அருகில் அமர்ந்து, ஒருவகை உறவுச் சூழலிற் பார்வையிடுவதால் "குளோஸ் அப் காட்சிகள் அவற் றிற் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை.
மேடை நாடகத்திற் திரை என்பது நாடகத்தின் தொடக்கம், காட்சி மாற்றங்கள் முடிவு என்பவற்றைக் குறி க்கப் பயன்படுகின்றது. ஆனால், திரைப்படம், தொலைக் காட்சி நாடகம் ஆகியவற்றைப் பொறுத்தளவில், திரையே அவற்றின் அடிப்படை ஊடகமாக அமைந்துள்ளது. திரைப்படங் களிற் பெருவெண்திரையும், தொலைக்காட்சி நாடகங்களிற் சிறுவெண்திரையும் ஊடகங்களாக அமைந்துள்ளன.
திரைப்படம் கதாசிரியரின் கற்பனையை இயன்றவரை சிறந்த முறையிற் புலப்படுத்துவதற்கு ஏற்ற கலாவடிவமாகும். தொலைக்காட்சி நாடகமும் அவ்வாறே யதார்த்தமான சூழ லைத் தத்ரூபமாகத் திரைப்படத்திலும், தொலைக்காட்சி நாட கத்திலும் சித்திரிக்க இயலும். h

Page 6
8 தோழன்
ஆயின், மேடை நாடகத்தில் யதார்த்தச் சூழலை ஏற் படுத்துவது சிரமம், செயற்கைப் பாங்காகவும், குறியீடுகள் வாயிலாகவுமே அவ்வாறான சூழலை ஓரளவு உணர்த்தவியலும், வானொலி நாடகத்தில் ஒலிகள் வாயிலாகவே ஒரளவுக்கு யதார்த்தச் சூழல் உணர்வினை ஏற்படுத்த முடிகின்றது.
பார்வையாளர் முன் தமது திற்மைகளை வெளிப்படுத் தும் முறையிலும், இத்தகைய கலை வடிவங்களிடையே வேறு பாடுகள் உண்டு. மேடை நாடகத்திற் கலைஞர்கள் பார்வை யாளர் முன் நேரடியாகத்தமது திறமையை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. கலைஞர்கள் முழுமையாக உரையாடல்களை மனனம் செய்திருக்க வேண்டும். மேடையில் நடிக்கும்போது, சிலவேளைகளில் உரையாடல்களை மறந்துவிட நேரின், சமா ளிக்கத்தக்கவராக இருத்தல் அவசியம். எந்தக் கலைஞரின் ஆற் றலும் நேருக்குநேர் பார்வையாளர் முன் வெளிப்பட்டுவிடும்? திறமையுள்ளோர் பார்வையாளரின் பாராட்டுக்களை நேரடி யாகவே அனுபவிப்பர். அதேவேளை, நடிப்புச் சோடை போய் விடினோ, அதற்கான 'தண்டனை' யையும் கலைஞர்கள் பார்வையாளர்களிடமிருந்து நேரடியாக அனுபவிக்க நேருவ துண்டு. நாடகத்திற் குறைகள் இருப்பின், அவற்றை அடுத்த மேடையேற்றத்தின் போதே தவிர்த்துத் திருத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். ஆயினும், இயல்பான ஒர் உயிரோட்டம் மேடை நாடகத்தில் எப்போதும் இணைந்து காணப்படும்.
ஆனால், திரைப்பட, தொலைக்காட்சி நாடகக் கலை ஞர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் எழுத்துப் பிரதிகளை முழுமையாக மனனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுவ தில்லை. அன்றன்று படமாக்கப்படும் காட்சிகளுக்குரிய உரை யாடல்களை மனனம் செய்திருந்தாற் போதுமானது. மேலும் ஒவ்வொரு காட்சியும் பல தடவைகள் திரும்பத்திரும்பப் பட மாக்கப்படுவதுண்டு. அதனாற், குறைகளைத் திருத்திக்கொண்டு சிறந்த காட்சிகளைத் தேர்ந்து, திரைப்படம், தொலைக்காட்சி நாடகத்திற் புகுத்த முடிகின்றது. அத்துடன், படத்தொகுப் பின் வாயிலாகவும் குறைகள் வெளித்தெரியாதவாறு இயன்ற முறையிற் செயற்படமுடியும். இவற்றை மீறியும் குறைகள் இருப்பினும், அதற்கான 'தண்டனை'யைக் கலைஞர்களோ, சம்பந்தப்பட்டவர்களோ நேரடியாக அனுபவிக்கத் தேவை யில்லை. அதேபோல, பார்வையாளரின் மனம் திறந்த பாராட்டு களையும் அவர்கள் நேரடியாகப் பெற்று மகிழ வாய்ப்பில்லை.
தொடர்ச்சி அடுத்த இதழில்

தோழன் 9
இலக்கியத் தேறல் “இதழி
தொடர்ச்சி
கட்டுரைத் தொகுதி (சில குறிப்புக்கள்)
இவற்றுக்குச் சமாதானமாக, "இக்காலக் கருத்துக் களையும் சிந்தனைகளையும் மதிப்பீடுகளையும் நாம் அக்கா லத்துக்குப் பொருத்திப்பார்க்கக் கூடாது" எனச் சாட்டுப் போக்கு’க் கூறி நாம் நாசூக்காகத்தப்பித்து விடலாமா? கைமை நோன்பு விதிகளைப் பற்றிச் சிறிது நோக்கினால் இதன் தாற் பரியம் தெற்றெனப் புலப்படும்.
கணவனையிழந்த பெண்கள் உடன் கட்டையேறாவிடில், அதற்குத் தண்டனையாகக் 'கைமைநோன்பு நோற்க வேண் டும். தமிழ் இலக்கியங்கள் முழுவதையும் சாசனங்கள் முதலிய பிறவரலாற்று ஆதாரங்களையும் நுட்பமாக நோக்கும் ஒருவர் ஒருண்மையை உணர்வர்; உணர்ந்து மனதார ஏற்றுக்கொள்வர். அதாவது, கைமைநோன்பு விதிகள் எத்தகைய கொடூரமா னவை; காட்டுமிராண்டித்தனமானவை; நயவஞ்சக இயல்புடை யவைஎன்பதும், ‘கைமைநோன்பு ஒழுக்கம் காலம் காலமாகப் பெண்களுக்கு மட்டுமே உரியதாக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது என்பதுமேயாகும். ஆண்களுக்குக் கைமைநோன்பு தேவையற்றது மட்டுமின்றி, இறந்து போன மனைவியின் உடலை எரித்த சாம்பல் ஆறுமுன்பே அவர்கள் பதினாறு வயதுக் கட்டழகியை மறுமணம் செய்து கொள்ளலாம். யாரும் தடுக்க முடியாது. இத்தகைய அருவருக்கத்தக்க கொடுமைகள் இருபதாம் நூற் றாண்டின் முற்பகுதியிலும் கூடத் தொடர்வதைக் கண்ட பா வேந்தர் பாரதிதாசன் ஆத்திரமும் ஆவேசமும் கொண்டு கூறிய கூற்றுகள், மனிதாபிமானம் கொண்ட எவரது உள்ளத்தையும் இரவுபகல் உறுத்தும் இயல்பின.
மிக்க இளம் வயதிலேயே கணவனையிழந்த பெண் கால மெல்லாம் கைமைநோன்பு நோற்றுச் சொல்லொணாக் கொடு மைகளையும் துயரங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து ஒவ்வொரு கணமும் இறந்து கொண்டிருப்பதை விட, நிட்சயம் அவள் உடன் கட்டை ஏறுவதையே மனப்பூர்வமாக விரும்பு வாள். காரணம்; உடன்க்ட்டை ஏறுவது எத்தகைய துயரம் பொருந்தியதாக இருந்தாலும், இக்காலத்தில் 'சையனைட்' " அருந்துவது போன்றதே. அதாவது, அக்கொடுமையை ஓரிரு கணப்பொழுதுகளே அனுபவிக்கவேண்டும். அதற்குள் உயிர் பிரித்து விடும். ஆயின் கைமை நோன்புக் கொடுமையின் கால நீட்சிக்கு வரம்பே கிடையாது. ஒரு பெண் தனது பதினாறாம் வயதிற் கணவனை இழந்தபின் தொண்ணுாறாவது வயது வரை பிர்வாழ நேரிடின் எழுபத்து நான்கு வருடங்களுக்குக் கைமை
*புக் கொடுமைகளை அனுபவித்தே ஆகவேண்டும்.

Page 7
10 தோழன்
மணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒருவரான கு. ப ரா. மிக மென்மையான இதயம் படைத்தவர்; நோஞ்சான் பிறவி. தமது சிறுகதைகள் பலவற்றில் இத்தகைய கைமை நோன்புக் கொடுமைகளை "அக்கு வேறு ஆணிவேறாக அலசியுள்ளார். அவரது கதைகளைப் படிக்கும் இரக்க சுபாவம் கொண்ட எவரும் கண்ணீர் மல்காமல் இருக்க முடியாது. அவரது கதைகள் வெறுங் கற்பனையல்ல; உண்மையில் அவை அவரது சமகாலச் சமூகக் கொடுமைகளின் பிரதிபலிப்புகளே. கு. ப. ரா. மட்டுமன்றிப் புதுமைப்பித்தன், விந் தன் , ஜெயகாந்தன் முதலிய எழுத்தாளர் கள் பலரும் இத்தகைய கொடுமைகளை மிகத்துலாம்பரமாக அம்பலப்படுத்தியுள்ளதுடன் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
கைமைநோன்பு ஒழுக்கவிதியின் படி, கணவனை இழந்த பெண், அவள் பன்னிரண்டு வயதினளாகவோ அ த ற் கு க் குறைந்த வயதினளாகவோ இருந்தாலுங்கூட மொட்டையடிக்க வேண்டும்; ஆடவர் எவரையும் பார்க்கக்கூடாது; சுப காரியங் கள், மகிழ்ச்சி தரும் கொண்டாட்டங்கள், விழாக்கள் முதலிய எவற்றிலும் கலந்து கொள்ளக் கூடாது; சத்துள்ள சுவையான
கலாநிதி க. அருணாசலம் தமித்துறை, பேராதனை பல்கலைக்கழகம்
உணவு வகைகள் எவற்றையும் உண்ணக் கூடாது; உணவில் உப்பு, புளி முதலியன சேர்க்கக் கூடாது; தன்னை அலங்கரிக் கக் கூடாது; வெளியில் நடமாடக்கூடாது என அவள் அனுப விக்க வேண்டிய கொடுமைகளின் பட்டியல் அனுமாரின் வால் போல் நீண்டு கொண்டே போகும்.
சிந்திக்கத்தெரிந்த எந்தப் பெண்தான் கைமைநோன்புக் கொடுமைகளை விரும்புவாள்! எனவே அவர்கள் மிக நீண்ட காலம் அனுபவிக்க வேண்டிய கொடுமைகளை "இரண்டொரு” நிமிடங்களில் மட்டும் அனுபவிக்க விருப்பித் தமது 'பிரான நாயகர்கள் சென்ற வழியைத்தொடர ༧༽ ன் கட்டை ஏறி னார்கள் என்பதே பொருந்தக் கூடியதாக உள்ளது எனலாம்.
இவ்விடத்தில் ஒன்றினை மட்டும் நாம் சுட்டிக்காட்ட லாம். தமிழகத்தில் மட்டுமல்ல முழு இந்தியாவிலுமே ஏன்! ஈழத்திலுங்கூட காலம் காலமாக மிகப்பெரும் தவறானவையும் அக்கிரமும் அநீதியும் அநாகரிகமும் காட்டு மிராண்டித்தனமும் நிறைந்தவையுமான கருத்துகள் பல அவசியமானவையாகவும் மாட்சிமை மிக்கனவாகவும் தெய்வீகத்தன்மையுடையனவாகவும் போற்றப்பட்டுவந்துள்ளன.
(இன்னும் வரும்; அடுத்த இதழில்)

தோழன் 11
பூமியின் கூரையில் ஒட்டை சுனன்
தமிஅகிலத்தில் உள்ள அந்தரத்தில் மித க்கும் ஒரு பச்சை வீடு போன்றது. ஓசோன் படை அதன் விதானம் போன்றது. சூரியனிலிருந்து புவியை வந்தடையும் கதிர் வீசலில் உள்ள அபாயகரமான கதிர்களை வடித்து, பயனுள்ள கதிர் களை மட்டும் அளவாக வழங்குவதே ஒசோன் படையின் பொறுப்பாக உள்ளது. இதன் விளைவாக பூமியின் வெப்ப நிலை சீராகப் பேணப்பட்டு உயிர் வாழ்வுக்கான நிபந்தனை செவ்வனே நிறைவேற்றப் படு கி ன் றது. இது இறைவனின் இயற்கை ஏற்பாடு எவ்வளவு நுட்பமான ஏற்பாடு இல்லையா? தற்பொழுது சுயநலத்தைக் கருதும் மனித இனம் அளவு கடந்து சூழலைப் பயன்படுத்துவதன் விளைவாக பூமியின் கூரை யில் ஒட்டைகள் விழ ஆரம்பித்துள்ளன. இதன் விளைவு என்ன? அபாயகரமான கழியூதாக்கதிர்களுக்கு அழைப்பு விடுக்க ஆரம் பித்துள்ளதுதான் ! கழியூதாக் - கதிர்கள் மனிதனின் கண்ணில் பார்வையைப் பறிப்பது மட்டு மன்றி தோலை ஊடுருவிச் சென்று விகாரத்தை ஏற்படுத்து வதனால் தோல் புற்றுநோயையும் விளைவிக்கின்றன. ஏற்கனவே அமெரிக்கா, நியுசிலாந்து போன்ற செல்வந்த நாடுகளில் பெற் றோர் குழந்தைகளை சூரிய ஒளியில் விளையாட விடுவது இல்லையாம்! மேலும் எதிர்காலத்தில் எதிர்ப்புக்கவசங்கள் அணிந்து கொண்டுதான் வெளியே நடமாட முடியுமாகுமாம்! விஞ்ஞானிகளின் எச்சரிக்கை இது வெள்ளம் வந்தபின் அணை கட்ட முயல்கிறார்கள் இவர்கள். செல்வந்த நாடுகளுக்கு மேலாகத்தான் பெரிய ஒட்டைகள் இருப்பதாகக்கேள்வி.
இந்த ஒட்டைகள் ஏற்படக்காரணம் என்ன? மனிதனின் ஆடம்பரமான வாழ்வும் சுயநலமுந்தான் இதற்குக் காரணம். குளிர்சாதன உபகரணங்கள் அதாவது கடும் உறைவுச்சாதனங் கள், காற்றுக் கட்டுப்பாட்டு உபகரணங்கள் (Air-Conditioners) உபயோகம் காரணமாக வெளிவரும் CFC எனும் ஒரு வகை வாயுக்களும், வாயுத்தொங்கல் வீசும் திசைகளிலிருந்து (Aerosol Sprays) வளியை அடையும் வாயுக்களும் மேலெழும்பிச்சென்று ஒசோனுடன் தாக்கமுற்று அதில் ஒட்டைகளை ஏற்படுத்துகின் றன. இதிலிருந்து தப்புவதற்கு என்ன வழி? ஆடம்பர சுகபோ கங்களைக் கை விட்டு எளிய வாழ்க்கை முறையை மேற்கொள் வதே ஒரே வழியாகும். செல்வந்த நாடுகள் இதற்கு இணங்கு வார்களா என்பது தான் கேள்விக் குறி?
ஆடம்பர வாழ்வை கைவிடுவோமா அல்லது ஆடம் பரத்தில் மூழ்கி அழிவை அரவணைத்துக்கொள்வோமா?

Page 8
2 தோழன்
கண்சிமிட்டும் மின்மினிகள்
- தொகுப்பு: - எம். நஜீபுல்லா ம
மூட்டைப்பூச்சி * ஆண்மூட்டைப் பூச்சியின் வயிறு பின் முனையிற்
கூர்மையாக இருக்கும். பெண்ணில் வட்ட வளைவாகச் செல்லும். * இது தான் குடிக்கக்கூடிய அதிக கூடிய அளவு
இரத்தத்தை 4 - 5 நிமிடத்தில் குடித்துவிடும். ஒரு தடவை குடித்த இரத்தம் முழுவதும் சமிக்க ஒருவாரம் ஆகும். ஒரு மூட்டைப் பூச்சி தினமொன்றிற்கு 3 - 4 முட்டை களாக 200 முட்டைகள் வரை இடும். * ஒராண்டில் 5 தலைமுறைகளைக் காணும்.
+ விமானம் கண்டு பிடிக்கப்படுவதற்கு 100 வருடங்களுக்கு முன்னேயே பரசூட் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. இதில் முதல் இயக்கிய (வர)து ஒரு நாய். மனிதன்பாதுகாப்பாக
இறங்கமுடியுமா என்பதை பரிசோதிக்க ஒரு மலையில் இருந்து நாயில் பரசூட்டைக்கட்டி கீழே தள்ளிவிட்டிருக் கிறார்கள். + உலகிலேயே அதிகப் பாலங்களைக் கொண்ட நகரம் * வெனிஸ் நகரம். இத்தாலியின் தலை நகரமாகிய இது 80 தீவுகளைக்கொண்ட அழகிய Nகரம். இந்தத் தீவுகளைப் பாலங்களே இணைக்கின்றன. இந்Vவகையில் 400பாலங்கள் காணப்படுகின்றன.
ரஷ்ய அறிஞரான லியோடால்ஸ்டாய்மிகப் பெரும் பணக்காரர். இவர் தனது செல்வத்தை எல்லாம் ஏழைகளுக்கு வழங்கியவர் 50 ஆண்டுகள் மனைவியின் தொந்தரவு தாங்கமுடியாமல் தவித்தவர். 83 ஆவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி ரயில்வே பிளாட்பாரம் ஒன்றில் குளிர் தாங்க முடியாமல் இறந்துபோனார். இறக்கும் முன்பு அவர் அங்கிருந்தவர் களிடம் கூறியது 'நான் இறந்த பிறகு எனதுடலை மனைவிக்கு ம்ட்டும் காட்டக் கூடாது' அந்த அளவிற்கு மனைவியின் மூலம் அவதிப்பட்டவர் அவர்.

தோழன் 13
சிறுகதைப்போட்டி "தோழன் தன்னுடைய இரண்டாவது இதழிலேயே சிறுகதைப் போட்டியினை ஆரம்பித்திருக்கின்றான். தேசிய ரீதியில் வயதுக் கட்டுப்பாடின்றி சகலரும் பாங்குபற்றலாம்.
முதலாவது பரிசுத்தொகை 500 ரூபா இரண்டாவது பரிசுத்தொகை 250 Lunt மூன்றாவது பரிசுத்தொகை 150 junt
போட்டிநிபந்தனைகள்:-
* சமகாலப் பிரச்சினைகளைப்பற்றியதாக இருத்தல்
வேண்டும். * ஐந்து "புல்ஸ்கப்" தாள்களுக்கு மேற்படாதிருத்தல்
வேண்டும் R * போட்டி முடிவுத் திகதி 30, 10, 1992 மேலும் 50 ரூபா மூன்று ஆறுதல் பரிசுகள். போட்டியில் பங்குபற்றுபவர்கள் கீழேஉேள்ள கூப்பனைப் பூத்தி செய்து அனுப்பவும்.
(Up alth ... ..... - .................. ... ... ............... ... ...............
குறிப்பு:-
இப்போட்டிக்குரிய பரிசுத்தொகையினை தோழனின் சார்பில் மனமுவந்து வழங்குபவர் ஜனாப் எம். ரி. எல். யூசுப் அலி அவர்கள்.
தோழனுக்குத் தோள்கொடுங்கள்!
தனிப்பிரதி 10 00 தபாலில்பெற III : 0 0 அரைவருடச்சந்தா (தபாற் செலவு உட்பட) 60 00 12 இதழ்களுக்கு
(தபாற் செலவு உட்பட) 120.00

Page 9
14 தோழன்
இறுகதை
ஒரு புல்லாங்குழல் புகைகிறது
நிந்ததாசன்
Tெணமகள் தன் கார்முகில் வாயால் பூமிக்காதல ஜக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தாள். செடி கொடி தாவரங்கள் குளிர் மகிழ்ச்சியில் ஆடிப்பாடிக் கொண்டிருந்தன. நாதனின் விழிகள் மழைத்துளிகளுக்குள் மொழி பேசியது. தென்றல் மீது குளிர் சவாரி செய்தது. ஜன்னல் பாதையினை தடை செய்தான் அவன். வானம் பூமிக்கு அடிக்கடி காதல் கடிதம் வரைவதுண்டு. மழைத்துளி எழுத்துக்களை பூமிக்காகி தம் வரவேற்பது இயற்கை. நாதன் இயற்கையின் காதலன். பூமி புன்னகை செய்யும்போது இருவிழிகள் திருப்தி விசாரிப்ப தில்லை அவனுக்கு. தென்றல் விரல்களின் ஸ்பரிசத்திற்குள் வசந்தமாகவே மாறியிருக்கிறான். குயிலின் குரல்தூது அவ னின் செவிப்புல்லாங்குழலை வாசிக்கும். நிலவு பூமியைப்பார்த்து ஒளிப்பூத்தூவும் போதும், தாரகைக் கூலித்தொழிலாளிகள் ஒளிவியர்வை கிந்தும் போதும் நாதனின் இதயம் இனிமையின் சினேகிதமாகும். இத்தனைக்கும் அவன் கவிதையின் சாரதி. கவி வாகனத்தைச் செலுத்தும் கவிஞன். ஆனால் இந்த விடி யலில் மழையின் மொழியையோ, தென்றலின் குளிர் அசை வினையோ அவனால் பருக முடியவில்லை.
இதயம் வியர்ப்பதை அவன் உணர்வு அறிவிக்கிறது. சோகம் அவனிடமே கதை சொல்கிறது. வாழ்க்கையினை வசந் தத்தினால் நெய்வதற்கு முயற்சித்தவன் தீயினால் பின்னி விட் டான். அவனின் கற்பனைகள் கதறி அழுதன. காலங்கூட ஏளனமாகத்தான் அவனைப் பார்த்தது. நாதனின் விழிகள் கவிதைக்குத் தீனியாக இப்போதிருக்கவில்லை. சோகம் சுகம் விசாரிக்கிறது. அது சுவாசிக்கும் சத்தமும் கேட்கிறது அவனுக்கு. "இப்படியே யோசிச்சா. ஒரு முடிவும் கிடைக்காது. நான் சொல்லுறபடி செய் மகன்!' நாதனை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியவள்தான் பேச்சு நிறத்தை காற்றுக்கு பூசினாள்.
'அம்.மா.நான். என்ன தான் செய்ய?"
சற்றுக் கடுமை முளைத்துக் கொள்ள அடி. ஜின் விழி ஒளிகள் அம்மாவை நோக்கின.

தோழன் 5
"அவளுக்கு உன்னோட வாழ முடியாட்டி நீ. இன்னொ ருத்திக்கு வாழ்க்கையை கொடு. இந்த உலகத்தில் பொம்புளை களுக்கா பஞ்சம் நீ ஒரு வார்த்தை சொன்னால் போதும் அப்புறம் நான் பார்த்துக்கிறன்.' அம்மாவின் முடிவு அவனிடம் அரங்கேற்றமானது. ஆனந்தம் அவனைக் கைதட்டி அழைக்கவில்லை பதிலாக கவலையின் கைப்பிடிக்குள் சிக்கித் தவித்தான் நாதன்.
'அம். மா. நீங்களே இப்படிச்சொன்னா எப்படி? ஆனா
இருந்தாலும் அது பெண்ணா இருந்தாலும் திருமணம் ஒரு தரந்தான். இம்.! என்ன அவள் புரிஞ்சிக்கல்ல அதுக்குப்போய் அவசரப்படலாமா?’’ அவன் தன் கொள்கைக் கொடியினை ஏற்றி வைத்தான் தாயிடம். அப்போது ஜன்னலின் இமைகளை காற்றின் விரல் கள் விலக்கிவைத்தன. யாரோ வந்திருப்பதை வீட்டு மின்சா ரக் குருவி ஒலிபரப்புச்செய்தது. அவனின் பாதங்கள் வாசலை நேசித்தன. தினகரன் பத்திரிகை விற்பனைக்காரனின் பாத மரங்கள் வேர்விட்டு நின்றன. பணமும் பத்திரிகைக்கு சீதன மானது. பக்கங்களை விழி விழுங்கிக்கொண்டிருந்தது. அவனின் உணர்ச்சிகள் அச்சு ஆடைக்குள் பக்குவமாகப் பூத்திருந்தன. "கடைசிவரிகள் மகுடத்தினால் கவிதைப்பெண் அலங்கரிக்கப் பட்டு பார்த்திருந்தாள்.
இந்த இதயம் உன்
உன் புன்னகையில்தான் விதையினால் தான் நான் கண்ணயர்கிறேன்! செய்யப்பட்டிருக்கிறது! நித்திரை உன் மூச்சுக்களில் நிரந்திரமாகிட முன்பு நான் என் நெய்யப்பட்டிருக்கிறேன்! நிஜமே வா!
அவனின் குரல் கவிப்பூவைப்பறித்தது. விழிகள் கண்ணி ரிற்குள் காணாமல் போய்விட்டன. சோக அடுப்பில் அவனின் இதயம் வெந்தது.
'திவ்யா.பார்த்திருப்பாள்.என்.னை புரிஞ்சி.
வருவா . ளா..? Ο அவன் அன்னியன் போல அவனோடு பரிமாறிக் கொண்டான். அப்போது சுவர்க்கயிற்றில் தொங்கும் புகைப்படம் நாதனை நோக்குகின்றது. திவ்யா-நாதன் இரு வரை யும் சட்டம் இணைத்து வைத்த புகைப்படம். பூக்கள் சமுதாயம் இருவர்

Page 10
16 தோழன்
கழுத்திலும் மகாநாடு நடத்த புன்னகைத்தீர்மானம் நிறை வேறும் காட்சி. அது சாட்சி போல பார்த்திருந்தது. நாதனின் மனவண்டி கரைந்து போன காலங்களை ஏற்றி வந்து கொட்
g-tigil.
C. C. C. நாதன் குடும்பச் செடியில் மூன்றாவதாக மலர்ந்தவன் தாய்க்கு பிள்ளைப் பேற்றுப்பாக்கியத்தின் இறுதிச்சந்தர்ப்பம். அவன் சகோதரிகள் வாசனையை நுகராதவன். அண்ணன் மார்களின் அன்பிற்குள் மூச்சுத்திணறினான். அவர்களின் வியர் வைச்செலவில் கல்வித்தேனை உண்டு ஆசிரியத்தொழிலின் புனி தத்தில் புஷ்பித்தான் அவன். தந்தையின் இறுதிச் சுவாசத்தின் போதுதான் நாதன் அறிமுகமானான். சகோதரர்கள் இரு வரும் இல்லற கல்லறைக்குள் நுளைந்து விட்டனர். இறுதி எச் சம் நாதன் மட்டும் மிச்சம். அன்று திங்கள் தாலாட்டுப் பாடிக்கொண்டு மலர்ந்தது. கல்வி பூக்கும் சோலைக்குச் செல்ல நாதனின் அவசரம் விரைந்து கொண்டிருந்தது.
* மகன் இண்டைக்கு உண்ட இளைய அண்ணன் வாற தாகச் சொல்லியனுப்பிருக்கான். கொஞ்சம் நேரத்தோட **! ... זחוה6 தாயின் ஏவல் சேவலாகக் கூவியது.
"அப்டியா..? அண்ணியும் வாராங்களா?* விசாரணையைத் தொடர்ந்தான் நாதன்.
'பெரும்பாலும் ரண்டு பேருந்தான் வருவாங்களாக்கும்."" தாயின் ஊகம் உத்தரவாதமடைய நாதன் பாதங்களுக்குக் கட்டளையிட்டான். பத்து நிமிடங்கள் அவனைப் பார்த்துக் கொண்டன. அவனின் மூச்சுக்கள் பாடசாலைக்குள் தவழும் காற்றோடு கவிதை வரைந்தது. வகுப்பறைகள் ஒவ்வொன்றி லும் அவனின் அறிவு நீர் அருவியானது. மாணவப்பூக்கள் மகிழ்ச்சியின் வெளிச்சத்தில் அறிவை உழுது கொண்டார்கள ஒய்வுவேளை அவனுக்காகப் பாய் விரித்தது. ஆசிரிய ஒய்வறைக் குள் அவனின் சிந்தனைகள் மின்னல் வேகத்தைப் பின்னால் வரச்செய்தது. தாளில் எழுத் துக் கள் விதைக்கப்பட்டன. தனிமை கவித்துவத்தை காணிக்கையளித்தது. முப்பது நிமி டங்கள் காத்திருந்து கழித்திருக்கும் கவிதை முத்து அவனைப் பார்த்து வியந்தது. ** என்ன . நாதன்...? கவிதை போலிருக்கு .கென் ஐ சீ' அனுமதி மனுச் செய்தான் சுந்தரசீலன் 'வாசகர்களுக்காகத்தானே எழுதுறன்.யூ கென் சீ சுந்தர்'

தோழன் 17
முதல் வாசகன் ஆசீர்வாதத்திற்காக அந்தக் கவிதை திறந்து கிடந்தது. ‘மாணவப் பூக்கள்' தலைப்பு கவிதைக்குத் தலைமை தாங்கியது. ·
உங்கள் உங்கள் வானத்தில்
பாதங்களும் நாங்கள் நிலாக்கள் தான் புதுமையைத் தேடுகின்றன! அறிவு வெளிச்சத்தில்
எல்லாம் அறியாமை ஒதுங்கிக்கொள்கிறது புதுமை வரங்களால் GBgfntag5 Lb
அழைக்கின்றன கைது சைவதில்லை!
சுகத்தின் வாரிசுகள் ஓ! மாணவப் பூக்கள்!
‘’வெரி.குட் வெரி குட்!" பாராட்டு நீராட்டினான் சுந்தரசீலன்
'தங்ஸ் சுந்தர். எனக்குப் பாடம் இருக்கு வாறன்.'" நன்றிப் பூத்தூவினான் நாதன், வகுப்பறையில் புனிதப்பூக் களைச் சலவை செய்யும் வேலை. அந்தப் புனித வேலையில் ஆனந்த ராகம் பாடுவான் நாதன். வெள்ளை உள்ளமென்ற நதியில் படகோட்டி விளையாடுவான் அவன். மணி ஒன்று கண்ணடித்தது.
'ஒ அம்மா இண்டைக்கு நேரத்தோடு வரச்சொன்னாங்
களே** ஞாபகப்பாடல் மனதில் ஒலித்தது. குறுகிய நேர விடுமுறை அனுமதி அவனை வழியனுப்பி வைத்தது. வீட்டுக்குள் அவனின் பாதங்கள் பாட்டுப்பாடின.
*நாதனும் வந்திட்டான். வாங்க எல்லாரும் சாப்பிடலாம்' அம்மாவின் அழைப்பு மணி ஒலித்தது. அண்ணன், அண்ணி வார்த்தைகளின் வார்ப்பில் பூத்து நின்றார்கள். சந்தோசம் சங்கீதம் பாட வயிறுகள் நிறைந்து கொண்டிருந்தன. "அண்ணா ஏன் பாபுவைக் கூட்டிக்கரல்ல?" அண்ணனின் வாரிசைப் பற்றி விசாரணை நடத்தினான்.
'ஆயாக்கிட்ட விட்டுட்டு வந்திருக்கிறம் . இண்டைக்கே ஏழு மணி பஸ்ஸில போகணும் ' அண்ணன் அவசர ராகமிசைத்தான்.
'தம்பி; உனக்கொரு கல்யாணம் பேசி வந்திருக்கு நல்ல இடம். நல்லவங்க கெளரவமான கு டும் பம், தூரஇடத்துச் சொந்தமும் கூட, உண்ட சம்மதந்தான் தேவை. யோசிச்சி நல்ல ஒரு முடிவச்சொல்லு!'

Page 11
8 தோழன்
வந்த நோக்கம் வழுக்கி விழுந்தது. அந்தரங்க அதிர்ச்சி நாத னின் உடம்பெல்லாம் படமெடுத்தாடியது. புதிய சோகம் திரை விலக்கிப்பார்த்தது. திருமணம் ஒரு சிறை. அந்தச்சிறையின் கறைகளுக்குள் புதைந்து கொள்ள விருப்பச்சைகை அவனிடம் இல்லை. ஒரு பறவையைப்போல ஒரு பூவைப் போல வாழ்க் கைச் சீலையினை நெய்ய முனைபவன் நாதன்.
** என்ன பேசாம இருக்காய். அண்ணன் சொன்னா அதில குறையிருக்குமா ?”* அம்மாவின் பக்கவாத்தியம் துக்கத்தின் பக்கத்தில் இருந்து அழைப்பு வந்தது.
‘'இப்ப என்ன அவசரம் ?* சமாளிப்பு புகைந்தது. ‘வயது இருபத்தேழாகுது " தேவையின் அவசரத்தை வயது வரவேற்க அம்மாவின் வார்த் தைகள் வழிந்தன.
“யாரையாவது நீ. ! ? அண்ணாவின் மனமலர் சந்தேக வாசனையை வீசியது.
* எனக்கு ரூ வீக்ஸ் டைம் தாங்க யோசிச்சிச்சொல்லுறன்" தற்காலிக முடிவுக் கடிதம் வரைந்தான். அதனால் அந்தச் சிக்கலின் விக்கலில் இருந்து தப்பிக் கொண்டான்.
அன்றே அவர்களைப் பயணம் அழைத்திக்கொண்டது. ஊரின் உறவுக்குள் நுளைந்து கொள்ளச் சென்று விட்டார்கள். இனிமையின் அந்தப்புரத்தை சொத்தங் கொண்டவன் தொழில் தோழியோடு வாழ்த்தி வாழ்ந்தவன், நண்பர்களின் அன்புக்குள் ஆனந்தம் கண்டவன் இப்போது ஒரு கைதியின் டயரியைப்போல அழுகிறான். இருள் ஒன்று அவனுக்காக காத் திருப்பது போல உணர்வு நிரூபிக்கிறது. கற்பனை மேடையில் நடிக்கும் கலைஞன் அவன். மொழிச்சோலையில் சொற்பூக்களை பறித்துக்கோர்க்கும் கவிஞன் தான் என்றாலும் காதலின் ஓரத் தில்கூட நாதன் நின்றதில்லை. காதல் ஒருவேதனை என்பது நாதனின் வாக்கியம். சாதல் புத்தகத்தில் காதல் முதல் அத் தியாயம் என்பது அவனது வாதம். சோதனைகள் அணிதிரளும் மயான வெளி காதல். இதுதான் நாதனின் மொழி. அதனால் காதலுக்குக் கைகூப்பி வணக்கம் தெரிவிக்க விரும்பவில்லை. பெண்ணின் முகத்தில் மலரைப்பார்த்தவன், அவளின் கூந்தலில் இருள் ஊஞ்சலைக் கண்டவன், உடல் நெளிவை கடலலை களில் நெளியும் படகாகக் கற்பனை செய்தவன் பெண்களை தூரத்தில் இருந்தே கலைகண்களால் அளந்தான். பெண்ணின் உறவுச்சிறையிலிருந்து விடுதலை பெற்றவனாகவே உலாவந்தான் நாதன்.

தோழன் 19
இப்படிப்பட்டவனுக்கு திருமணச்சொல்லே நறுமணமாக இல்லை. இரவுகள் உறக்கத்தின் சினேகிதனாக இல்லை. ஒரு பயம் அவனை முத்தமிடுவது போல, ஒரு துயரம் அவனுக்குள் ளேயே சத்தமிடுவது போல உணர்ந்தான்.
சூரியன் தன் வேலையில் இருந்து தவறவில்லை. நாதன் இன்னமும் முடிவைக்கைப்பிடிக்கவில்லை. ஆசிரியர் ஒய்வறையில் சோகத்தை வேதமாக்கி ஒதிக்கொண்டிருந்தான்.
"நாதன் . உன்னத்தான் தேடிவாறன் அவசரமா ஒரு கவிதை வேணும் எழுதித்தர முடியுமா?’’ சுந்தர சீலன் தேவைத் தோகை விரித்தான்.
‘சுந்தர். ஐயம் வெரிசொறி. எனக்கு இப்ப மூட் இல்ல நான் ஒரு சிக்கல்ல மாட்டிருக்கேண்டா ** நாதனின் வார்த்தைகளே வேர்த்துப்போயின.
**இப் யூ லைக் யூ கேன் டெல் , ' சுந்தரசீலனின் வார்த்தைகள் ஆங்கில ஈரத்தில் நனைந்து ஒலித் தன.
"எனக்கு திருமணம் பேசிவந்திருக்கு. அண்ணண்தான் பேசி பேசியிருக்கார். எனக்கெண்டால் இப்பவிருப்பமில்ல. என்ன செய்யுற என்டே தெரியல்ல. வேண்டாமெண்டால் அம்மா, அண்ணன் ரண்டுபேரும் சொக் ஆயிடுவாங்க . . அதான். G3 u urgêġi g... ' ' இதயத்தை திறந்து வைத்தான்.
'டோன்ற் வொரி . எப்ப இருந்தும் மெரி பண்ணிக்கத் தானே வேணும். ஆரம்பத்திலே ப ய மாத் தா ன் இருக்கும் போகப் போகச் சரியா கிடும் நீ ஒரு கவிஞன். வெரி பியூடிபு லாக லைப் இருக்கும்.' சுந்தரசீலன் திருமணச்சோலைக்குள் நுழைந்தவன் தன் அனுபவ ஆராதனையை வழங்கிப் பூத்தூவினா ன் ༄
‘எப்ப இருந்தும் திருமணம் செய்யத் தானே வேண்டும். பியூட்டிபுலாக இருக்கும்.' இந்த வார்த்தைகள் நாதனின் இதயத்தில் வேர்விட்டுத் துளிர்த் தன. சம்மதத்தில் சஞ்சரிப்பதை விட வேறு வழிகள் மூடித் தான் கிடந்தன அந்தப் புதிய அனுபவத்தின் போதைக்குள் பாதைபோட அவனின் மனம் கட்டளையிட்டது. பாடசாலை கலைந்ததும் சோகம் அவனின் தேகத்தைவிட்டுப் புறப்பட்டது. குழப்பநிலை அவனின் அழைப்பை விட்டு அகன்
Digi.

Page 12
2O தோழன்
‘அம்மா. எனக்குச் சம்மதம். இப்பவே அண்ணன் ஊட்டுக்குப் புறப்படுங்க. '" அன்னை தேன்கிண்ணத்துள் இன்பம் கண்டாள். அண்ணனின் வீட்டில் சுவாசம் சுகமானது.
“பெண்ணை நான் பார்க்கணும்' நாதனின் வேண்டுகோள் வெட்கத்தோடு வெளியில் வந்தது. அடுத்த சூரியனின் விழிப்பில் அந்த மலரை நாதனின் விழிகள் முதன்முதலாக வாசித்தன. முதற்பார்வையிலே அவனது கவிதை யினை இனங்கண்டு கொண்டான். ஒராயிரம் கவிதைகள் சேர்ந்து அவளை வாழ்த்தும் . அவளின் எழிலில் அவனின் கற்பனைகள் தலை நிமிர்ந்து நின்றன. நட்சத்திரங்களைக்கூட அற்புதமாக எட்டிப்பார்க்கும். நிலவு அவள்ை க்கண்டு பொறாமை கொண்டு கருமேகத்திரையை இழுத்து முகத்தை மூடிக்கொள்ளும். எழில் நதியொன்று நாதனின் கடலில் சங்கமிக்க பூத்திருந்தது.
** என்ன பொண்ணு புடிச்சிருக்கா ?* தேவதையை யாராவது தேவையில்லை என்பானா? அவனின் மனம் ஆமோதிப்பு மரியாதை செய்தது. தும்மல் அவசரத்தில் துரது கொண்டு சென்றது. திருமணத்தைக் கண்டு அந்த நாளே சிரித்துக்கொண்டு வாழ்த் தியது. ஒரு வீணைக்கு நிரந்தர சொந்தக்காரனாக ஆனான் நாதன். தான் சொற்களை ஆளும் அரசன் என்றும், மொழி யின் பாதுகாவலன் என்றும் மனைவித்தேனிடம் அறிமுகப் படுத் திக் கொண்டான். அவளின் அழகுக்கு வணக்கம் தெரிவிக்க முதற் கவிதை ஒன்றை அவனின் பேனா ஈன்றது அதை அவ ளிடம் அரங்கேற்றிக்காட்டினான். சங்கீதத்திற்குப் பிறந்தவளே! உன்னாமம் கேட்டு, இந்தப் பூமி கீதம் பாடுகிறது, மெளனம் கூட சப்தம் போடுகிறது உன்னைப்பார்த்து. சந்தோசம் உன் ஆசிர்வாதத்துடன்தான் உருவாகிறது. இந்த கவிஞனின் 'கண்ணகியே! உன்வார்த்தை அமுதங்களில், நான் சுவனத்தைக் கண்டெடுக்க காத்திருக்கிறேன்.
‘'சே. ! இதல்லாம் எனக்குப் புடிக்காது. கவிதையும் கத்தி ரிக்காயும் உங்களுக்கு வேறவேல இல்லையா?* வீணை சுகராகம் இசைக்கும் என்றுதான் எ ன் னி னா ன். ஆனால் விசம் பாய்ச்சுவதை அறிந்ததும் நாதனின் இதயம் துண்டு துண்டானது, அழகின் ஒரத்தில் இருள் உட்கார்ந்து இருப்பதைக்கண்டு உடைந்தான். முதல் பாதம் எடுத்து வைக் கும் போதே முள் குத்தியதனால் மூர்ச்சையானவன் போலா னான் அவன்.

தோழன் 21
அவளின் பார்வைக்கு நாதனின் கவிதைப்பூக்கள் வாசம் வீசுவ தில்லை. கவி தரிசனத் தடையை அவள் விழிகள் அமுல்படுத்தி யிருந்தன. இரண்டு துருவங்கள் ஒன்றானதன் விளைவு. பேச் சும், மெளனமும் நேசம் பூண்டதால் விதி வேறுபாதை ஒன்றை செய்து கொண்டிருந்தது. ஒரு வருடப் புஷ்பம் முரண்பாடுகளால் அவதிப்பட்டு அழிந்து போனது. ஆனால் அவளின் சொற்களின் முட்கள் காயங்களை அங்கீகரித்து அதிகரித்தன. கோபப்புயலை பொறுமைத் தடையினால் தணித்தான் நாதன். அன்றைய நாள் திட்ட்ம் போட்டே விடிந்திருக்கிறது போலும். வெளியில் நிம்மதி கொஞ்சம் வாங்கச்சென்றவன் சூரியன் உச் சியில் ஆட்சி செய்யும் வேளையில் வீட்டுக்குள் தன் மூச்சுக்களை செலவு செய்தான் நாதன். பசி பின்னணி இசைத்தது. சோர்வு அவனை இரக்கத்துடன் பார்த்தது.
'திவ்வி . சர்ப்பாடு ரெடியா ..?’’ ‘'சமைக்கல்ல. கடையில சாப்பிட்டிட்டு வாங்க. ’’ திவ்வியா ஆனந்தப் பதிலில் சமர்ப்பணச்சவாரி செய்தாள். "ஏன் சமைக்கல்ல."? காரணக்கதவைத் திறக்க முயன்றான். ** சமைக்கல் லண்டா சமைக்கல்ல ’’ அடக்கமில்லாத பாம்பு படமெடுத்தாடி அவனின் இதயத்தைக் கொத்தியது. அவன் பொறுமையைத் தூரத்துரத்தினான். கோபம் சாபம் இட்டுச் சஞ்சரித்தது. திவ்யாவின் கனனம் நாதனின் கைகளின் பலத்துக்குள் சரணடைந்தது.
**இனி உன்னோடு வாழ முடியாது நான் போறன்’’ இறுதி வார்த்தைகளை உமிழ்ந்து விட்டு அவளின் தாய் வீட் டில் தனித்து விட்டாள்.
**அம்.மா..!" அண்ணனின் குரல் காதில் எழுதியது. சோகவாழ்க்கையின் அத்தியாயங்களைப் புரட்டிக்கொண்டிருந்த நாதன் சுய நினைவை மீட்டெடுத்தான்.
Ο Ο. Ο
*நாதன்..! இண்டைக்குத் தினகரனில் வந்த உண்டகவிதை யைப்பார்த்தன். உண்ட வேதனை எனக்குப்புரியுது. இம்.! என்ன செய்ய விதியை யாராலதான் மாற்ற முடியும் ...”* அண்ணனின் அனுதாபப் பிரேரணை நிறைவேறியது. திவ்யாவை அவன் விழிகள் தொழுது எட்டுமாதப்பூக்கள் ஏக் கத்தோடு மலர்ந்து இறந்த காலமாகி விட்டன. நாதனின் மனம் பூவிதழ்களால் செய்யப்பட்டதால் சோகத்தினால் கரு கிப் போய்விட்டது.

Page 13
%2 தோழன்
**தம்பி நான் எவ்வளவோ பேசிப்பார்த்தன் திவ்விக்கு உன்னோடு சேர்ந்து வாழ விருப்மில்லை தான் ஆனா . குழப் பமான நிலையிலதான் இருக்குது. நல்லா மெலிஞ்சி போயிட் டது. அண்ணனின் வார்த்தைகள் வேதனைக்கோர்வைகளாக அவனின் இதயத்தில் விழுந்தன.
* இன்னொரு வாழ்க்கையை தேடுறதுதான் வேதனையைத் தீர்க்க ஒரே வழி. உனக்கு புடிச்ச ஒரு பொண்ணைப் பார்த் துச் சொல்லு.”* அண்ணனின் தீர்மானச் சைகையின் அர்த்தங்களால் தீக்குள்ளி ருந்து நெளிவது போல நெளிந்தான் நாதன். ‘நானும் அதத்தான் சொல் றன். ' அம்மாவும் ஆதரவுக்கருத்தை திறந்து வைத்தாள்.
**இஞ்சப்பாருங்க.. குடியிருத்திய இதயத்துல இன்னொருத் தியை என்னால வெக்கமுடியாது. அப்படி வெச்சா அது இத யமுமில்ல வெறும் கல்லு. திவ்வி எப்டிப்பட்டவளாக, இருந் தாலும் பரவாயில்ல. அவள் தான் என் மனைவி. அவளுக்கா கத்தான் நான் காத்திருக்கிறன். அவள் திருந்தி திரும்பி வரு வாள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கு. ’’ ஒரு மனிதப்புனிதன் தன் ஆத்மாவின் அந்தரங்கங்களை பார் வைக்கு வைப்பது போல தன் நம்பிக்கையினை முன்வைத்தான் அப்போது ஒரு காகிதம் சிறகு முழைத்துப் பறந்து வந்து அண் ண னின் கரங்களுக்குள் கெளரவமடைந்தது.
என், சோலையில் பூத்த சொற்களினால், நீ காயப்பட்டுப் போனாய், மனைவி மகுடத்தில், ஒரு நிலாவுக்குத்தான், நான், உரிமை வழங்கியிருக்கிறேன், தேய்ந்தாலும் வளர்ந் தாலும், வானம், ஒரு நிலவைத்தான், திருமணம் செய்து கொள்கிறது, நீ என் மூச்சு, என் பேச்சு, உனக்காக, என் ஆயுள் காத்திருக்கும். நாதனின் ஆத்ம வரிகளை அண்ணனின் விழிகள் தொழுது அழுதன. அப்பொழுது வீட்டின்சைகைக்குயில் கூவியது. வெளியே ஒரு நிலவு நின்று கொண்டிருந்தது. நாதனின் எதிர்பார்ப்பு பூத்து நின்றது. திவ்வியா அமைதியைச் சுமந்து கொண்டிருந் தTள. நாதன், அண்ணன், அம்மா மூன்று இதயங்களும் கழன்று திவ் யாவின் கையைப் பிடிக் வரவேற்புக் கீதம் பாடின. ந் நிலவு இனி ခ###### *ီဓါးနှီဓါ#င်္ခရိ#29. 岛 t ←፵፱ዳE
m-wo- -முற்றும்
30 ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பு, 30 தரமான ஆக்கங்களை தோழன் எதிர்பார்க்கிறான்.

தோழன்
23
அரும்புகள் அரங்கேற்றம்
376 TFD
ஒன்று இரண்டு ஒன்று இரண்டு ஒ ஒன்று! நான் மூச்சு முத்தெடுக்கிறேன் ஓ இரண்டு! மூச்சை விலக்குகிறேன் நான் மூச்சுக்குள் மூழ்கிறேன் மூச்சைத் தொலைக்கிறேன்! மூச்சில் உள்ளக்கமலம் மலரும் மூச்சு விடுகையில் இதயம் ஏழையாகிடும் தென்றல் மேனிவிட்டில் நுளையும்! உயிரை உற்சாகப்படுத்தும்! குருதி மலர் மகிழும் பிணிப்பகை விலகும்!
- தாஹிர் மாஸ்டர்
தும்புளுவாவ.
女
இதயம்
இரும்பானால்!
இதயம் இரும்பானால் உதயமில்லை உணர்வில்லை விரைந்து வாரும் இளைஞரே எதிர்கால வாழ்வுதனை கட்டி எழுப்புங்கள் - ஒற்றுமை நாட்டில் நிலைத்திட!
- கியாஸ்
நிம்மதி
உனக்கு நிம்மதி தேடும் நீ வேறொருவன்! நீ உனக்கு இதயம்!
நீ நீயாக நின்று வாழ்!
உனது இதயம் உதயமாக்கும் நிம்மதியை -எஸ். எல். ஏ.
றஃமான் சாஹிரா மத்திய கல்லூரி,
மாவனல்லை.
女
மழலை!
உலகச் சோலையில் உதிக்கும் புது மொட்டுக்கள்! உன் பேச்சு என் காதில் இனிமைராகம் இசைத்தாலும் குயிலல்ல,
அதுகருமையானது
மழலாய்!
நீ மழலையேதான்!
- ஏ. அஸ்மி
சாஹிரா மத்திய கல்லூரி, மாவனல்லை

Page 14
2
f
தோழன்
நிரந்தரமான
சோகங்கள்!
ஒ .
சினேகிதியே , ! உன் அந்தரங்க ஆத்மா விடும் உஷ்ண(ப்) பெருமூச்சுகளின் சப்தம் . என் செவிகளிலும் விழுகின்றது! ** பெண்” ” என்பவன் கரங்களுக்கும் கால்களுக்கும் கற்பனை விலங்கு மாட்டிய பூமித்தாயின் கைதி! சிநேகிதியே. உணர்வுகளுக்கும் . அபிலாசைகளுக்கும் கட்டுப்போட்டு உன்னை ஜடமாக்கி(ப்) பார்க்கும் இச்சமூகம் வழங்கும் வார்த்தை *பெண்விதி' சிநேகிதியே..!
மாற்ற முடியாத யாப்பு இது!
ஆணினம் மட்டுமல்ல பெண் இனம் - இட்டுக் கொள்ளும் சம்பிரதாய முத்திரைகள்! இப்பிரபஞ்சம் இருக்கும் வரை - பெண்விடும் மூச்சுகள் வெறும் மூச்சுக்களல்ல . பெரும் அக்னி வெப்பங்கள் தான்!
- வெலம்பொடை
நளிபா அஸிஸ்
ஆசைகள்
பூஜ்யத்திற்குள்! மனங்கனில் எண்ணப்புதையல்கள் தூய்மை வெளிச்சம் சிந்தும் போது செயல் ராகங்களில் ஆனந்த சுரம் பிறக்கும்!
மூச்சுக்கள் கூட
அன்பின் பேச்சுக்களாக பிரகடனப்படுத்தப்படும் ! மானுட மயானங்கள் பாவச்சேற்றில் பூஜைநடாத்த ஆசைகள் பூஜ்யத்திற்குள் பதுங்கிக்கொள்ளும்! பாலை வன வெப்பம் இதயங்களுக்குள்ளும் ஊடுருவல் நடாத்தும் நடந்த நிகழ்வுகளுக்கும் விழி முளைக்க வேதனை மொழி அடிக்கடி பிறக்கும்! வசந்த இனிமைகள் தூரத்தில் தான் உட்கார்ந்திருக்கின்றதோ?
சுகங்களின் கதவுகள்
விலகட்டும் ஒ . நானும் மானுடன்! என் தோட்டத்தில் உணர்ச்சி மலர்கள்! காலம் கருத்துக்களை நிச்சயம் பிரசவிக்கும்! அதுவரை பொறுமைக்கொடி பறக்கிறது என்னில்!
- கவிமகன்
எம். எம். ஏ. காதர்

தோழியின் வாழ்த்து
சின்னவளின் கனவுகளை சிறப்புடனே நனவாக்க கலைக் களஞ்சியமாய் காவியம் பல படைத்து தெளிவூட்டும் கதைபடைத்து களிப்பூட்டும் கவிதொடுத்து
மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் சேர்ந்து எங்கள் அஞ்ஞானத்தைச் சுட்டெரிக்கும் உரைபல கொடுத்து
ஜெகமதில் சிகரமாய் சுடரும் நல் ஜோதியாய் நடை தொடர நல் வாழ்த்துக் கவிபாடி விடைபெறும் உன்தோழி
களுத்துறைச் செல்வி எப். ஹ"ஸ்னியா
நன்றிப்பூக்கள்
‘'தோழன்' கலை இலக்கிய சஞ்சிகை வெளியீட்டுவிழா ஜூன் மாதம் 30ம் திகதி மாவனல்லை ஸாஹிரா மத்திய கல்லூரியில் கல்லூரி அதிபர் வை. எல். எம். ராசிக் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற உதவிய ஸாஹிராக் கல்லூரி அதிபர், சகல ஆசிரிய ஆசிரியைகள், பிரமுகர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் தோழன் தன் நன்றிப் பூக்களைச் சொரிகின்றான்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்றமகற்கு,

Page 15
t
நவீன டிசைன்களில் ஆ தங்க நகைகள் ஒடர்
குறித்த நேரத்தில் செ தலை சிறந்த ஒரே இ
SELECTION
19 A, G3 si
LD TI
M. J. , erin
 

அசல் 32 கரட்
கொடுத்து ய்து கொள்ள
JEWELLERS
ா ஜாவலர்ஸ்
ாறல் மார்கட்,
னல்லை.
- n I.