கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தோழன் 1992.10

Page 1
கறுப்புத்தினக் கடலுக்குள்
கிழக்கு glU "இநருப்பு
 ിഥൺ
on by (Bol o LGBuil கமர்க்களுக்குள்
 
 
 
 
 

டாபர் 4 அன்பளிப்பு ரூ. 10
SATNG) ITFAĞI, GiT திருடப்பட்டு அகதி விழாக்கள்
அரங்கேற்றம் சூரியன் தேவை! தேவை வெளிச்சம்

Page 2
ஒரு தோழியின் பேனைத் துளிகள் !
றினோஸா ஹனிபா அக்குரனை. 1 4 1 O. 92 அன்பு நிந்ததாசன் சேர்! அன்புத் தோழனின் அருமையான பக்கங்களைப் புரட் டிப் பார்த்ததில் இதயம் மகிழிந்துவிட்டது. இரண்டே மாதங்களில் அவனின் வளர்ச்சி எமக்கு மகிழ்ச்சியளிக் கிறது.
அவனது பக்கங்களைப் புரட்டியதில் இதயத்தைத் தொட்டது அந் த ‘புல்லாங்குழலின் புகைச்சலே’ ஒரு கதையை அல்ல புதுக்கவிதைத் தொகுதியை சிறு கதை வடிவில் படித்துமுடித்த திருப்தி.
பூவையொத்த மென்மையான இதயம் கொண்ட நாதன், அம்பாய் உதிர்த்த அஞ் ச ன விழியாளின் வார்த்தையினால் நொந்திருந்த போது. சோகம் சுகம் விசாரிக்கின்றது. அவன் இதயம் (துயரச்சுமை தாங் காது வியர்க்கின்றது. மண்தைத் தொடும் (இனிமை யான) வரிகள்.
இதயங்கள் இணைந்த பின்னும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாதநிலையில் எமது சமுதாயத்தில் இன்னும் எத்தனை திவ்யாக்கள், நாதன்கள்?
அன்புத் தோழனின் வளர்ச்சியினுாடாக இன்னு மொரு புதுக்கவிதைத் தொகுதியை படிக்க மனம் நிறைந்த அவா! ۔۔۔۔۔
இங்கு தோழி

தோழன் ஆசிரியர் As 1992 ஒக்,
நிந்ததாசன் மலர் - 0
மாதாநத கலை, 118, பிரதான வீதி, இதழ் - 03
இலக்கிய இதழ் மாவனல்லை. 函鲈
ஆசிரிய பீடம்
தோழனின் தோழர்களே!
வாசிப்பு என்பது அறிவின் சேமிப்பு. வாசிப்பு மனித னைப் பூரணப்படுத்துகிறது. இருளைத் தூரத்துரத்தும் சந்திர னைப்போல அறியாமையின் வேரறுத்து அறிவுக்கு உயிரூட்டுவது வாசிப்புத்தான். i
இ ன் றைய சூழ்நிலையில் பெரும்பான்மையானவர்கள் வாசிப்பினைச் சித்திரவதையாகக் கருதுகின்றார்கள். தங்கள் பொறுமையினைக் கத்தரிப்பதாக நித்தம் நினைக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் பட்டப்பகலில் வாழ்ந்தாலும் இருளை இதயத்தில் குடியமர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலை வெந்து சாம்பலாக வேண்டும் உவப்பும், உந்துதலும் உள்ளங் களைச் சொந்தங்கொண்டு வாசிப்பு வாசனையை வசமாக்க வேண்டும்.
நாளாந்த பத்திரிகைகள் வாசிப்போர் எத்தனை பேர்? வாராந்த பத்திரிகை வாசிப்போர் எத்தனை பேர்? சஞ்சிகை கள் வாசிப்போர் எத்தனை பேர்கள்? எம் சமூகத்தில் மிக மிகக் குறைவானவர்களே வாசிப்புச் சோலையின் அறிவுத்தென் றலை அருந்தி மகிழ்கிறார்கள். மகான்களாக, மேதைகளாகத் திகழ்கின்றார்கள். W எம் பாடசாலை மாணவர்கள் கூட வாசிப்புப் பழக்கம் அற்றவர்களாக இருப்பதனால் இவர்களின் அறிவில் மாற்றங் காண்பது அரிது. ஆனால் எமது சகோதர மொழி பேசுகின்ற மாணவர்கள், பெற்றோர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் இன்று வாசிப்பினை நாளாந்தக் கடமையாகக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அவர்கள் மிக வேகமாக அறிவிலும் வேறுவேறு நல்ல துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கின் றார்கள். அவர்கள் மத்தியிலிருந்து எத்தனையோ விதம் வித மான பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள். வேறு பிரசுரங் கள் என்றெல்லாம் நாளாந்தம் பெருகிக்கொண்டிருப்பதனால் அறிவு அருவி அவர்களை நோக்கிப் பாய்கிறது. எழுத்தாளர் களையும், பத்திரிகை ஆசிரியர்களையும், பிரசுரிப்பாளர்களை யும் ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

Page 3
02 தோழன்
ஆனால் எமது நிலை கவலையின் சுவாலைக்குள் கருகிக் கொண்டிருக்கிறது. தமிழ் மொழியில் ஒரிரண்டு தரமான பத் திரிகைகள், சஞ்சிகைகள் வெளி வந்து விழி திறக்கின்றன" வழிகள் காட்டுகின்றன. பொறாமைகளினாலும், போட்டிகளி னாலும், தாழ்வு மனப்பான்மைகளினாலும் அவை மரணித்துப் போகின்றன. இந்த வெந்த நிலை இன்னமும் தொடர வேண் டுமா? வேண்டவே வேண்டாம்! இதுதான் தோழனின் வேண்டு கோளாகும். (ஆ+ர்)
இலக்கியச் செய்தி
கடந்த 11, 10, 92 (ஞாயிற்றுக்கிழமை) பேராதனைப் பல்கலைக்கழக கலை அரங்கில் ஓர் இனிய நிகழ்வு நடந்தேறி யது. ஆம்! கலாசாலைத் தமிழ்ச்சங்க சஞ்சிகையான "இளங்கதிர்" வெளியீடும், கவியரங்கும், கருத்தரங்கும் நடைபெற்றன:
முன்னைய இளங்கதிர் ஆசிரியர்களான திரு. சிவகுரு நாதன் (பிரதம ஆசிரியர், தினகரன்) திரு. சிவநேசச்செல்வன் (பிரதம ஆசிரியர், வீரகேசரி) திரு எஸ். குணரத்தினம் (தலைவர் தமிழ்ச்சங்கம் கொழும்பு) ஆகி யோர் கள் சிறப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
கலாநிதி துரை மனோகரன் தலைமையில் கவியரங்கு நடைபெற்றது. நான்கு இளங்கவிஞர்கள் சிறப்பாகக் கவிதை களைக் காற்றில் கலக்கவிட்டுச் செவிகளில் அரங்கேற்றினர். மணிவண்ணன் - பொறியியற்பீடம், ராஜன் நசுறுதீன் - கலைப் பீடம், மரினா இல்யாஸ் - கலைப்பீடம் ஜீவகவி - கலைப் பீடம். பேராசிரியர் எஸ். தில்லைநாதன் தலைமையில் கருத்தரங்கு இடம்பெற்றது. சிவ குரு நா த ன் நகைச்சுவையோடு பழைய ஞாபகங்களை அழகாகக் கூறினார். சிவநேசச்செல்வன் அரிய கருத்துக்களை முன்வைத்தார். குணரத்தினம் நீங்காத நினைவு களைச் சொல்லி நெகிழவைத்தார். கலாநிதி. க. அருணாசலம் நல்ல பல கருத்துக்களை நயமாக எடுத்துரைத்தார். இறுதியில் கலாநிதி காதர் கலாசாலை நடைமுறை விடயங்களை நகைச் சுவை ததும்ப எடுத்துச்சொன்னார்.
இறுதியில் சிவகுருநாதன், சிவநேசச் செல்வன், குணரத் தினம் மூவருக்கும் தமிழ்த்துறைத்தலைவர் தில்லைநாதன் நினை வுச் சின்னங்களை வழங்கிக் கெளரவித்தார்.
நூல் வெளியீடும், கலைநிகழ்ச்சிகளும் மாலையில் பெரேரா கலையரங்கில் இடம்பெற்றன.

தோழன் 03
சென்ற இதழ் தொடர்ச்சி.
திரைப்படமும் நாடக வடிவங்களும பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி போன்றவற்றின் மதிப் பீடுகள் வாயிலாகவே அவற்றின் குறைநிறைகளைக் கலைஞர் கள் அறிய வாய்ப்பு ஏற்படுகின்றது.
வானொலி நாடகத்தைப் பொறுத்தவரையில், ஏற்கனவே ஒலிப்பதிவு செய்யப்பட்டே ஒலிபரப்புச் செய்யப்படுவதால், குறைகள் ஏற்படினும், முன்கூட்டியே திருத்திக்கொள்ள வாய்ப் புண்டு. வானொலிக் கலைஞர்கள் பெரும்பாலும் நேயர் கடி தங்கள் வாயிலாகவும், சிலவேளைகளிற்பத்திரிகை மதிப்பீடுகள்
மூலமாகவும் கலைஞரின் கருத்தை அறிந்து கொள்ள முடிகின்
DSl.
கலாநிதி துரை மனோகரன்
ஒப்பனையைப் பொறுத்தவரையிலும் இவற்றுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன. மேடைநாடகத்தைப் பொறுத்தளவில் அரங்கின் இறுதி ஆசனங்களில் அமர்ந்திருக்கும் பார்வையாள ரும் கலைஞர்களின் முகபாவங்களைத் தெளிவாகப் பார்க்கத் தக்கதாக ஒப்பனை அமைய வேண்டும் அதனால், மேடை நாடகங்களில் சற்று மிகை ஒப்பனை அவசியமானதாக அமை கின்றது. குறிப்பாக, நடிகர்களின் கண்கள் பெரிதாகத்தெரியும் வகையில் ஒப்பனை செய்யப்படுவதுண்டு. ஆனால் திரைப்படம், தொலைக்காட்சி நாடகம் என்பவற்றில் கலைஞர்களுக்கான ஒப்பனை மிதமாகவே அமைந்திருக்கும் திரைப்பட அரங்கின் எந்த ஆசனத்தில் இருப்போரும் கலைஞர்களின் முகபாவங் களைக் கவனிக்க இயலும், ெ த  ைல க் கா ட் சி நாடகப் பார்வையாளரும் நெருங்கிய தூரத்திலிருந்தே அவற் றை ப் பார்வையிடுவர். அத ன r ல் திரைப்படம், தொலைக்காட்சி நாடகம் ஆகியவற்றில் மிகை ஒப்பனை அருவருப்பை ஏற்படுத் தும், வானொலி நாடகக் கலைஞரைப் பொறுத்தவரையில் ஒலி வாயிலாகவே சுவைஞர்கள் அவர்களைத் தரிசிப்பதால், ஒப்பனை என்பது தேவையற்ற ஒன் றா க விளங்குகின்றது. வானொலி நாடகங்களிற் பாத்திரங்களுக்கேற்ற உருவ அமைப்பு முக்கியமன்று; அவற்றுக்கேற்ற குரல் அமைப்பே அவசியமானது.

Page 4
O4 தோழன்
திரைப்படம், தொலைக்காட்சி நாடகம் ஆகியவற்றில், அவற்றுக்கும், பார்வையாளருக்குமிடையிலான மறை முக த் தொடர்புக்கருவியாக அமைவது கமராவாகும். கமரா வாயி லாகவே கதாசிரியரின் கற்பனையும், இயக்குநரின் நெறியாள்கை யும், ஒலிப்பதிவாளரின் ஒத்துழைப்பும், கலைஞர்களின் நடிப் பாற்றலும் சங்கமித்து, படத்தொகுப்பாளரினால் திரைப்பட மும், தொலைக்காட்சி நாடகமும் இறுதி வடிவம் பெறுகின்றன.
இக்கலை வடிவங்களின் அரங்கேற்றத்தைப் பொறுத்தி வரையிலும் இவற்றுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட நாடகம் ஒரு சமயத்தில் ஒரு மேடையிலேயே அரங்கேற்றத்தைப் பெறவியலும். அந்தக் குறிப்பிட்ட நாடகம்" அரங்கேற்ற மண்டபத்திற் குழுமியிருப்போர் மாத்திரமே அந்நாடகத்தை அந்தச்சமயத்திற் பார்த்துச் சுவைக்க முடியும். ஆமீனும், திரைப்படம் ஒரே சமயத்திற் பல திரையரங்குகளிற் பல்லாயிரக்கணக்கான பார்வையாளருக்குச் சுவையூட்ட முடியும். தொலைக்காட்சி நாடகங்கள் இதைவிட ஒரு படி மேலே சென்று, ஒரே சமயத்தில் தமது இல்லங்களில் இருந்தவாறே பல பார்வையாளர் பார்க்கத்தக்க வகையில் அமைகின்றது. வானொலி நாடகங்களும் ஒரேசமயத்திற் பல நேயர்கள் வீடு களில் இருந்தவாறே செவிமடுக்கத்தக்க வாய்ப்பினைக் கொண் டுள்ளன.
இக்கலை வடிவங்களைப் பொறுத்தவரையில், பார்வை யாளரின் ஆயத்த நிலையிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன மேடை நாடகப் பார்வையாளரும் திரைப்படச்சுவைஞரும் குறிப்பிட்ட அரங்குகளுக்குச் செல்வதற்குத் தம்மை முன்கூட் டியே தயார்ப்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் தொலைக்காட் சிப்பார்வையாளரைப் பொறுத்தவரையில், இத்தகைய முன் ஆயத்த நிலை காணப்படுவதில்லை, அவர்கள் தமது சொந்த இல்லங்களில், அல்லது உறவினர், நண்பர்களின் இடங்களில் தத்தம் விருப்புக்கேற்ப இயல்பாக அமர்ந்து பார்வையிடுவர். அவர்களுக்கு எவ்வகைக் கட்டுப்பாடுகளும் அமைவதில்லை. வானொலி நாடக நேயர்களும் அவ்வாறே. எவ்வித குறிப்பிட்ட நேரத்தில் தமக்கு வசதியான வகையில் அமர்ந்து, அல்லது படுத் திருந்து வானொலி நாடகங்களைச்சுவைப்பர்.
திரையரங்குகள், நாடக அரங்குகளில் திரைப்படம், நாட கம் ஆகியவற்றைச் சுவைப்பதற்குப் பார்வையாளர் மத்தியில் இருள் சூழ்நிலை அவசியம். ஆனால், தொலைக்காட்சி நாட

தோழன் 05
கங்கள், வானொலி நாடகங்களைப் பொறுத்தவரை, அத்தகைய சூழ்நிலை ஏற்பாடு அவசியமன்று. இயல்பான ஒலிச்சூழலுடன் அவற்றைச்சுவைக்கலாம்.
மேடை நாடக, திரைப்படப் பார்வையாளரிடையே முக்கிய வேறுபாடு ஒன்று உண்டு. மேடை நாடகத்தைப் பொறுத்தவரை, பார்வையாளர் எவ்வளவுக் கெவ்வளவு முன் ஆசனங்களில் அமர்கின்றனரோ அந்த அளவுக்கு அவர்களால் நன்றாக நாடகத்தை அனுபவிக்க முடிகிறது. ஆனால், திரைப் படத்தை பொறுத்தவரையில், பார்வையாளர் எவ்வளவுக்கெவ் வளவு பின்புற ஆசனங்களில் அமர்கிறார்களோ அந்த அளவுக் குத் திரைப்படத்தை அவர்கள் திருப்தியாகச் சுவைக்க இயலும். ஒரே பார்வையாளனே திரையரங்கில் ஒரு வகை அனுபவத்தை யும், நாடக அரங்கிற் பிறிதொரு அனுபவத்தையும் பெறு
GITT
தொலைக்காட்சியின் வாயிலாக, நாடகங்களை மாத்திர மன்றி, திரைப்படங்களையும் பார்க்கத்தக்க வாய்ப்பு பார்வை யாள்ருக்கு உண்டு. ஆயினும் திரையரங்குகளில் திரைப்படங் களைப் பார்க்கும் போது ஏற்படும் முழுநிறை அனுபவம், அவற்றைத் தொலைக்காட்சி வாயிலாகப் பார்க்கும் போது ஏற்படுவதில்லை. திரையரங்குகளே திரைப்படங்களின் சிறந்த வெளியீட்டு ஊடகமாகும்.
திரைப்படங்கள் பல வேளைகளில் வர்த்தகமயமானவை யாக அமைவதுண்டு. அதனால், பொழுதுபோக்குச் சுவையூட் டக் கூடிய காட்சிகள் அவற்றிற் புகுத்தப்படுவதுண்டு. ஆயினும் தொலைக்காட்சி நாடகங்கள், இல்லங்களிற் குடும்பச் சூழலி லேயே வெளியீடு பெறுவதனால், இயன்றளவு யதார்த்தத் துடன் ஒட்டியவையும், குடும்பச்சூழலை மாசுபடுத் தாதவையு மான காட்சிகள் இடம்பெறுவதுண்டு. மேடை நாடகங்களும் பார்வையாளர்களின் தரிசனத்தை நேரடியாகப் பெறுவதனால் சூழலை மாசுபடுத்தும் காட்சிகள் பெரும்பாலும் இடம்பெறுவ தில்லை. வானொலி நாடகங்களும் இல்லங்களுள் ஒலிவடிவில் நுளைவதால் நேயர்கள் முகம் சுழிக்காத வகையில் காட்சிகள் கவனமாக அமைக்கப்படுவதுண்டு.
இந்நான்கு வகைக் கலை வடிவங்களினதும் கலைஞர் களின் சமூக மதிப்பைப் பொறுத்தவரையில், திரைப்படத்துறை சார்ந்த கலைஞர்களே மக்கள் மத்தியிற் செல்வாக்கும், புகழும் பெற்றவர்களாக விளங்குவதோடு, பொருளாதார வசதியும்

Page 5
O6 தோழன்
கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். திரைப்பட நடிகர், நடிகையருக்கு அடுத்ததாகப் புகழ், பொருளாதார மேம்பாடு கொண்டவர்களாக விளங்குபவர்கள், பின்னணிப் பாடக,பாட கியராவர். திரைப்படம் பார்க்காதவர் மத்தியிற்கூட அவர்கள் செல்வாக்குப் பெற்று விளங்குவது கண்கூடு. அவர்களின் செல் வாக்குக்கு மிகுந்த அடிப்படையாக விளங்குபவை, வானொலி நிலையங்களாகும். திரைப்படத்துறை சார்ந்த கலைஞருக்கு அடுத்ததாகத் தொலைக்காட்சி நாடகக் கலைஞர்கள் மக்கள் மத்தியிற் செல்வாக்குள்ளவராக விளங்குகின்றனர். அவ்வப் போது திரைப்படக் கலைஞர்களும் தொலைக்காட்சி நாடகங் களிற் பங்கு பற்றுவதுண்டு. முகம் தெரியாவிடினும் வானொலி நாடகக் கலைஞர்களும் குரல்வழியாக மக்கள் மத்தியிற் செல் வாக்கு உடையோராகவே உள் ளனர். திரைப்படங்கள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் மக்கள் மத்தியில் அறிமுகமாவதற்கு முன்னர் மேடை நாடகக் கலைஞர் களே மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தனர். கலைத்துறையிற் பல்வேறு புதிய வடிவங்கள் அறிமுகமாகி வரு கின்ற போதிலும், மேடை நாடகத்தின் தனித்துவம் இன்ன மும் மக்கள் கவனத்திற்குரியதாகவே உள்ளது.
முற்றும் ே
கண்சிமிட்டும் மின்மினிகள்
- தொகுப்பு: எம். நஜீபுல்லா - உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது நெருப்புக்கோழி
இதன் உயரம் 2 m இதன் நிறை 1300 N இதற்கு பறக்க முடியாது. ஆனால் இது மணிக்கு 100km
வேகத்தில் ஒடக்கூடியது, இது கல், ஆணி, கண்ணாடி போன்றவற்றையும்
விழுங்கும். இதன் வாழ்வுக்காலம் 80ஆண்டுகள்.
大 * மிக அதிக நேரம் படிக்கவேண்டி ஏற்படின் தொடர்ச் சியாகப் படித்துக்கொண்டே இருக்கக் கூடாது. இடைக் கிடை (அடிக்கடி அல்ல) படிப்பை நிறுத்திவிட்டு தூரத் தில் இருக்கும் பொருளைப் பார்க்க வேண்டும். சிறிது இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் படிப்பதால் கண் களுக்கு அதிக சிரமமிருக்காது.

தோழன் O7
அரும்புகள் அரங்கேற்றம்
தோழனே வாழ்க! மழை
உன்னை
பா காளச் ம்
என் விழிமலர்கள் ಜ್ಷå೩೫ மோதினால் அக்கிரம அக்கினி வாசம்வீசும்! இந்த o:* பூவுலகச் சோலையில் ஒ பாய்ச்சும்! பிரசவமானதால் வாழ்வுப்படகிற்கு வானமகள் o fTl (AQui s 0.
పే- f தலையில் அடித்தே
s ஒப்பாரி
செல்வி சுல்பிகா நவாஸ் இசைத்து
நீர் சிந்துகிறாள்! புனனகை வாழவு
செய்யச் ம்ரான் கண்ணிர் அருவி த் இ
ஊற்றெடுக்கும் விடியல் ஆறமுககும் வடி ஒலித்திடும் அந்த அகராதியில் 琴 இல்லை ! புதுக்கலை துன்பச்சுவாலை உந்தன் தொடுவதுமில்லை இனிய ஓசைகள் மறு உலகில்! எங்கள்
நன்மைப் பயிர் இதய ஆசனத்தில் இங்கே செய்தால் ! இசை பாடின
எம். சஹிட் ஹஸ்லிம் இளைய
தலைமுறை அரங்கை
விருப்புடன் எதிர்பார்ப்பு இலக்கிய மலர்களால் இதய ஆசனம் அலங்கரிக்க ஒரு s எழுந்து வந்த உதய சூரியனுக்காக புதுக்கலை நீ! திரு விழா நடத்துகிறது! 咨 0 م۔۔--محہ “ கற்பனை அலைகள் செல்வி பரீனா மஃரூப்
தேகக்கடலில் செளந்தர்யம் இசைக்கிறது!
கவிமகன் காதர் Y 女

Page 6
O8
தோழன்
இரத்தப்பசி
இரத்தத்தில் விழுந்த
for சுமக்காத தேகங்கள் ! அப்பாவி வாசம் வீசும் ஒப்பற்ற மனித வளங்கள் ! பொலநறுவைச் சோலையின் அந்த மூன்று கிராமப் பூக்களும் வைகறைக்குள் மூர்ச்சையானது l "הנu $)$2 எங்கள் விழி வயல்களில் இரத்தம் விளைகிறதே ! எங்கள் இதயங்கள் தீக்குள் தூக்கி வீசப்பட்டதே ! ஓ ! அரக்கத்தனமே ! g f கோளைத்தனமே ! இந்த ஏழைகளின் புனித இரத்தமா உனக்கு தேவைப்பட்டது? யூகோஸ்லாவியாவை மிஞ்சிவிட்ட இனவெறியே உன்னால் உலகமே அழுகிறதே!
- கரீமா றாஹில்
நிலவுக்கு
மடல்
6ጇ(መ5
sial Go!...... உன் கறைகளை இல்லாமல் செய்து ஒளி வரைந்தவன் அந்த விடியலில் நான்! என் வாசலை விட்டு இரண்டாம் பாதம் நகர்த்தி ஒளி கொடுக்கின்றாய்! இதனால் என் வீடு அமாவாசை உன் வசந்த வாழ்விற்காய் கட்டிய கோட்டைகள் நீர்க் குமிழிகள் தான்! புரியாத இராகங்களை மீட்டிக்கொண்டு தூரத்துக் கனவாக புதிய பாதையில் நீ புரியும் காலம் ஒரு விடியலில் பூப்பூக்கும்! உன் கறைகளை குறைகளாக வெளியிடும் போது
உன் பயணம் என்னில் நிகழும்! அப்போது உன் பயணத்துக்கான பச்சை விளக்குகள் என்னுடைய பாதையில் இருக்க மாட்டாது! ஆனாலும் . உன்னுடைய பயணத்தை நிறுத்துவதற்கு சிவப்பு விளக்குகள் மட்டும் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.
மன்னம்பிட்டி S. Y. பூgதர்

தோழன் 09
சிங்கராசாவனம்
- சுனன் -
இவ்வனம் எங்கே அமைந்துள்ளது? இக்காட்டுக்கு ஏன் ஒரு முக்கியத்துவம் என்று யோசிக்கிறீர்களா? இவ்வனத்தை இலங்கைத் தீவின் நுரையீரல் என்றே கூறி விடலாம்! தீவின் தாழ்நாட்டு ஈரவலயத்தில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பை மூடியிருக்கும் இக்காடானது, உலகின் அயன மண்டல என்றும் பசுமையான ஈரமழைக்காட்டுத் (Evergreen tropical rainforest) தாவர வர்க்க வகைக்குரித்தான உச்ச சூழற்றொகுதியொன்றாகும். இது இலங்கையின் பாதுகாக்கப் பட்ட இயற்கை வனமொன்றும் கூட.
இக்காட்டின் சிறப்பானது, பிரதேசத்தின் மழைவீழ்ச்சி வடிவம், வெப்பநிலை என்பவற்றினால் முக்கியமாக ஆளப் படுகின்றது. சூழலின் சூடான, ஈரலிப்பான தன்மையானது, தாவரங்களின் துரித வளர்ச்சிக்குத் துணையாக நின்று, ஓங்கி வளர்ந்த இராட்சத விருட்சங்களைக் கொண்ட அடர்த்தியான வனாந்தரம் ஒன்றை உருவாக்குவதற்குஏதுவாக அமைந்துள்ளது. இவ்வனத்தின் தனித்துவத் தன்மைகள் பற்றி ஆராயும் போது, நாம் கண்டுகொள்ளக்கூடிய ஓர் இயற்கை ஒழுங்கானது, அதில் உள்ள தாவரங்களின் பலமாடி (Multi-storied) அமைப் பாகும். தாவரவினங்கள் அடர்த்தியாக நெருங்கி வளர்வத னாலேயே இவ்வமைப்பு ஏற்பட்டுள்ளது 45 மீற்றர் வரை உயர்ந்து வளரும் பெரிய மரங்களின் தண்டின் உச்சியில் மாத் திரம் எல்லைப்படுத்தப்பட்டுள்ள முடி (Crown) ஒன்று போன்ற கிளைத்தொகுதியானது வெளிப்பாட்டுப் படையை (Emergent layer) உருவாக்கின்றன. அதை அடுத்து உள்ள உயரமான மர்ங்களின் உச்சிக்குரிய முடிகள் (Apical crowns) விதானப் படையை(Canopy layer)ஆக்குவதுடன், அதைத் தொடர்ந்து plu - 6s9g5 tra2ST Ŭ Lu 60) — (Sub canopy layer) Gayfliq-3, 6iflaöro LJ 689 l— (Shrubs) 5gibau Gmt ifjs6ifsir L u Gool - (Under growths) 6T 65Tip 6p uptiii கில் தாவரங்கள் அமைந்துள்ளதையே 'பலமாடியமைப்பு’’ எனும் பதம் குறித்து நிற்கின்றது. இவ்வொழுங்கு காரண மாகவே எல்லாத் தாவரங்களுக்கும், கிடைக்கும் சூரியவொளியை மிக வினை திறனாக பயன்படுத்தக்கூடியதாகவுள்ளது.
இலங்கையில் காணப்படும் தாவரவினங்களுள் ஆயிரத்திற் கும் மேற்பட்ட இனங்கள் இத்தீவிற்கு மாத்திரம் உரித்தான

Page 7
0 w தோழன்
உண்ணாட்டினங்களாகும். (Endemic plants) என கண்டு பிடிக் கப்பட்டுள்ளது. இவற்றுள் 28% இனங்கள் இவ்வனத்தில் அடங்கி யிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹொர (Dipterocarpus zeylanicus), இலங்கையின் தேசிய மரமான நாகை (Mesua nagasarium), F Gofů u Gorr (Artocarpus nobilis), (35 fäl (56ó) Lu LDU Lib (Shorea zeylanica), dipi6 st (Cinamomum zeylanicum, 6Gué, sfrui (Eletteria ensal) என்பன முக்கியமான சில உண்ணாட்டினங்களுக்கான சிறந்த உதாரணங்களாகும்.
சிங்கராசாவனத்தில் வாழும் தாவரவினங்களின் பலதரப் பட்டதன்மையைப் பற்றி ஆராயும்போது, அவை சூழலுக்கு காண்பிக்கும் இசைவாக்கங்களை மனிதனால் ஏற்படுத்துவதென் பது நினைத்தும் கூட பார்க்க முடியாததொன்றாகும். இவ் விசித்திரத் தோற்றப்பாடுகள் இறைவனால் மனித இனத்துக்கு விடப்பட்டுள்ள சவால்கள் என்றுதான் கூற வேண்டும்! உதைப்பு வேர்கள் (Buttress roots) எனும் பிரதான தண்டின் அடிப்பகுதி அகன்று விரிந்து உ ரு வா கும் விசே ட ஒருவகை வேரினால் உயர்ந்த பெரிய மரங்கள் நிலத்தைப் பற்றிப்பிடித்து, ஈரமான மென்மையான மண்ணில் பிடுங்கப்பட்டு விழாமல் தம்மைக் காத்துக்கொள்கின்றன! துரித வளர்ச்சி காரணமாக மரக்கிளை கள் உறுதியற்றதாகவிருப்பதனால் அவை பெரிய பழங்களை தாங்கத் தயங்குகின்றன, இதற்கான ஏற்பாடுதான் பிராத தண் டில் மலர்கள் தோன்றி பழங்கள் உருவாகும் அடிமரத்தில் மலரு தல் (Cauliflory) எனும் விஷேட தோற்றப்பாடாகும் பலா (Artocarpus heterophyllus) மரத்தில் இத்தோற்றப்பாடை தெளிவாக அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. நீரை விரைவில் வழிந்தோடச் செய்யக்கூடியதாக அமைந்துள்ள வடிநுனியுள்ள இலைகள் (Drip tipleaves) தலைகுனிந்து தொங்கும் கிளை கள் (Nodding branches) அயனமண்டல சூரியக்கதிர்ப்பின் கழியூதாக்கதிர்களை உறிஞ்சி நீக்கவல்ல மென்சிவப்புநிற தளி ரிழைகள், இருள் சூழ்ந்த காட்டின் அடிப்பகுதியில் வாழ முடி யாததன் காரணமாக கூர்ப்புப்பெற்ற ஏறிகளும் (Climbers), மேலொட்டித்தாவரங்களும் (Epiphytes) இக்காட்டின் தனித் துவத்துக்குரிய சில சிறப்பம்சங்களாகும்.
வனவிலங்குகளுக்கு உறைவிடமாக அமையும் இவ்வனம் மனிதனுக்குப் பயனுள்ள ஏ ரா ள மா ன தாவரவினங்களைத் தாங்கி நிற்கின்றது. இறைவனின் அருள்களுள் ஒன்றான இவ் வனத்தின் பயன்கள் எண்ணிலடங்காதவை! ஏலக்காய், கறுவர், வனிலா போன்ற வாசனைத்திரவியங்கள்; மரமஞ்சல், சீந்தி,

தோழன் - 11
இஞ்சி போன்ற மருத்துவப் பெறுமதிவாய்ந்த பயிர்கள்; இக் காட்டிலுள்ள இயற்கை வளங்களாகும்! இக்காட்டில் வளரும் கித்துள் (Toddy palm) மரத்தின் பயன்கள் பல; அதன் இளம் பூந்துணரைத் தட்டி, பின்னர் சீவிப் பெறப்படும் பதனீயைக் கொண்டு கருப்பட்டி, பாணி, கள் தயாரிக்கப்படுகின்றன. பின் னர் கள்ளைக்கொண்டு வினாகிரி (Venigar) தயாரிக்கப்படு கின்றது. அதன் அடிமரத்திலிருந்து மாப்பொருள் பிரித்தெடுக் கப்படுகின்றது. குங்குலிய மரங்களின் மரப்பாலில் இருந்து குங்குலியம் (Resin) தயாரிக்கப்படும். சிலவேளை இந்தத் "தோழன்' சஞ்சிகையை நீங்கள் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருப்பது பிரம்பினால் தயாரிக்கப்பட்ட ஒரு கதிரையில் ஆகவிருக்கலாம். கதிரைகள் மட்டுமல்ல பலதரப்பட்ட தள பாடங்கள் தயாரிப்பதற்காக உதவும் பிரம்பு (Calamus zeylanica) இக்காட்டுக்குரித்தானதாகும். நீங்கள் பொழுதுபோக் காக உங்கள வீட்டுத்தோட்டத்தில் அல்லது பூச்சாடிகளில் ஒகிட் (Orchids), பெக்கோனியா, (Begonia) போன்ற தாவ ரங்களை வளர்த்து அழகு பார்க்கின்றீர்கள் தானே? இவற்றின் இயற்கை உறைவிடமும் இக்காடேதான்! மற்றும் பகற்பொழுதில் கதிரவனின் துணையுடன் வளியில் உள்ள புவியை அதிவெப்பமடை யச்செய்யும் கரியமிலவாயுவான காபனீரொட்சைட்டு (CO2 ) வாயுவை உறிஞ்சி அகற்றுவதன் மூலமும், மனிதன் உட்பட ஏனையவிலங்குகளுக்கு சுவாசிப்பதற்கு இன்றியமையாத பிராண வாயுவான ஓட்சிசன் ( O2 ) வாயுவை வளியில் சேர்ப்பதன் மூலமும், வளிமண்டலத்தைத் தூய்மையாக்கின்றது இக்காடு! மனிதனின் நுரையீரல் எங்கனம் மனிதனின் குருதியை தூய்மை யாக்கின்றதோ அவ்வாறே இவ்வனமானது இலங்கைத் தீவின் வளிமண்டலத்தைத் தூய்மையாக்குகின்றது. மேலும் தரைமீது ஒரு மூடுபடையாக அமைந்து ஈரலிப்பான, குளிரான சூழல் ஒன்றை ஏற்படுத்தி தரை வரண்டு போகாமல் காப்பது மட்டு மின்றி, மழை நீரை தரைமீது வழிந்தோட விடாமல் படிப்படி யாக மண்ணுக்குள் ஊடுருவச்செய்து நீரூற்றுக்கள் வற்றாமல் காக்கின்றது. தரைமீது ஒடும் மழை நீரை தடுக்கும் இவ் வனம் மண்ணரிப்பு ஏற்படுவதை குறைப்பது மட்டுமின்றி வெள் ளப்பெருக்கினால் ஏற்படும் சேதங்களையும் தடுக்கின்றது. அது மட்டுமல்ல ஆழமான மண்ணில் பயனற்றுக் கிடக்கும் நீரை அகத்துறிஞ்சி எடுத்து ஆவியுயீர்ப்பு (Transpiratin) மூலம் அதனை வளிமண்டலத்துக்கு ஆவி வடிவில் வழங்கி முகில்கள் உருவடைவதைத் தூண்டி மழையை ஏற்படுத்தி நீர் வட்டத் தின் சமநிலையைப் பேணுகின்றது. இவ்வாறெல்லாம் நமக்கு

Page 8
2 தோழன்
உதவி ஒத்தாசையாக உள்ள இவ்வனத்திற்கு நாம் ஒத்துழைப்பு வழங்காமலிருப்பது நியாயமா? ஒத்துழைப்பு ஒரு புறமிருக்க அதற்கு தீங்கிழைக்காமலாவது இருக்கக் கூடாதா?
சூழலில் மனிதனின் ஆதிக்கம், சனத்தொகை விரிவு காரண மாக உலகில் இயற்கைக்காடுகள் மிக வேகமாக மறைந்து கொண்டிருக்கும் அபாய நிலை பற்றி சூழலியலாளர்கள் எச்ச ரிக்கை விடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். செவிடனின் காதில் சங்கூதுவது இதை விடப் பரவாயில்லை போல் தெரி கிறது. 1980இல் இலங்கையின் மொத்தத் தரைப்பரப்பின் 40 வீதத்தை மூடியிருந்த காட்டுப்பரப்பளவு தற்பொழுது 1992இல் 25% வரை பாரிய வீழ்ச்சியொன்றை காட்டியிருப்பது மிகவும் பாரதூரமாக கருதப்பட வேண்டிய விடயமாகும்! இலங்கை யின் காட்டுப்பரப்பு 25%ஐ விடவும் குறைவடையுமெனின் கூடிய விரைவில் நம் தீவு ஒரு வரண்ட பூமியாக அல்ல ஒரு பாலை நிலமாகவே மாறலாம் என்று சூழலியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இலங்கையின் இயற்கை எழில் மிகுந்த ‘சிங்க ராசாவனத்தின்' அருமை எத்தகையது என்பது இப்போது நன்கு புரிகின்றது இல்லையா? இலங்கை அரசாங்கம் ஏன் இவ்வனத்தை வனக்காப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண் டும் என்பதும் தெளிவாகிறதல்லவா? பாதுகாக்கப்பட்ட நிலை யிலும் கூட பெரும்பான்மை சனத்தின் சுயநலதிற்காக வரம்பு மீறும் தொழிற்பாடுகள் காரணமாக சிங்கராசாவனமும் அழிவை எதிர்நோக்கியுள்ளது. என்பதை மிகவும் கவலையுடன் குறிப்பிட வேண்டியுள்ளது. மனிதனின் இடையூறு காரணமாக இக்காட் டில் உள்ள சில உண்ணாட்டுக்குரிய இனங்கள் அடியோடு மறைந்துபோய்விட்டன. ! அ வை மீளப்புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்கள் என்பதை மனிதன் உணருவதில்லை. பூ பறிக்கச் செல்லுவதனால் தற்பொழுது அழிவை எதிர்நோக்கி Di sit GMT ( ) GOT DIT GOT GolanuáFTáš gÐ9) " (Dendrobium marcat hae) இனது பரிதாப நிலை மிகவும் கவலைக்குரியது.
ஒவ்வொரு உலகநாடும் சி ந் தி த் துச் செயற்படாமல் தொடர்ந்தும் காடுகளை வரம்புமீறியழிப்பதென்றால் பேரழிவு வெகுதொலைவில் இல்லை என்பது வெள்ளிடைமலை! கண் களைத் திறப்போமாக! காடுகளைக் காத்துத் தாவரங்களை மட்டும் அல்ல நம்மையும் நமது சூழலையும் பாதுகாப்போமாக!
முற்றும் ()

தோழன் 13
இலக்கியத் தேறல் @ಕ್ಯಾಬ್ಡಡ್ದಿ
தாடர்ச்சி கட்டுரைத் தொகுதி (சில குறிப்புக்கள்)
8லம் காலமாகப் பல ர் இவற்றை அநீதியானவை எனத் தெரிந்துகொண்டும் மிக நாசுக்காகவும் - சாமர்த்தியமாகவும் தமதும் தாம் சார்ந்த வர்க்கத்தினதும் நன்மை கருதி மூடி மறைத்துள்ளனர். மிகுந்த திறமையுடன் திட்டமிட்டே அவற் றைச் சாதித்தனர். போதாக்குறைக்கு இறைவனையும் துணைக் கிழுத்து ஆட்டிப்படைத்தனர்; இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு; மனுதர்ம சாஸ்திரம்; அதன் அன்றைய மதிப்பீடும் இன்றைய மதிப்பீடும் கூர்ந்து நோக்கத்தக்கவை; தீவிர இறை பக்தனான காளி உபாசகனான - பாரதி சிறிதும் தயங்காமல் மனுதர்ம சாஸ்திரத்தை நயவஞ்சகம் நிறை ந் த சதித்திட்டம் என்று உறுதிபடக் கூறியுள்ளார். நம்பூதிரிப்பாட் அதற்குமேலும் வரலாற்று ரீதியாகவும் விரிவாகவும் தெளிந்த திடமான விளக் கம் அளித்தார்.
இறைவனே திருவாய் மலர்ந்தருளினார்; தெய்வப் புல வனே திருவாய் மொழிந்தான்; கவிச்சக்கரவர்த்தியே கூறியரு ளினார். என்பதால் அவற்றிலே தவறேதும் இருக்க முடியாது; முடியவே முடியாது எனக்கூறி அன்றைய மக்களின் வாயை மூடிவிடுவது சுலபம். ஆயின் எதனையும் ஏன்? எப்படி? என, விஞ்ஞான பூர்வமாகச் சிந்திக்கத்தெரிந்துகொண்ட எதனையும் மறுபரிசீலனை செய்ய முயலும் இன்றைய தலைமுறையின் வாயினை அவ்வாறு எவராலும் இலகுவில் மூடிவிட முடியாது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு; திருக்குறள், சிலப்பதிகாரம் மனுதர்ம ஸாஸ்திரம், சைவசித்தாந்த நூல்கள் முதலியன பற்றி இன்று எழுந்துள்ள பெரும் வாதப்பிரதிவாதங்கள் என லாம். &
ஒரு சில விடயங்களையாவது நாம் மனத்திலிருத்துதல் இவ்விடத்தே அவசியமானதெனலாம். தமிழகத்தின் - தமிழர் சமுதாயத்தின் - மனித குலத்தின் - கடந்த காலகட்டங்கள் எவையும் குறைபாடுகள் எவையுமே அற்ற பொற்காலங்கள் அல்ல. பொற்காலவாதிகளாற் கொண்டாடப்படும்சங்ககாலமோ சோழப் பேரரசர் காலமோ, பிரித்தானியப் பேரரசுக்காலமோ, அசோகப் பேரரசுக் காலமோ, கிரேக்க - உரோமப் பேரரசுக் காலமோ, நெப்போலியன் யுகமோ கூட இதற்கு விதிவிலக்கல்ல.

Page 9
14 தோழன்
சங்கச் சான்றோர்கள், வள்ளுவன், இளங்கோ, கம்பன், சேக்கிழார், பாரதி, பாரதிதாசன், காளிதாசன், வால்மீகி, தாகூர், ஷேக்ஸ்பியர், கார்க்கி, டால்ஸ்டாய் முதலிய இலக் கிய கர்த்தாக்களும் முதலில் மனிதர்களே; பின்னரே இலக்கிய கர்த்தாக்கள். சராசரி மனிதர்களிலும் பார்க்க அவர்கள் சற்று அதிகமாகவோ மிக அதிகமாகவோ சிந்தித்தார்கள் ; செயற் பட்டார்கள், அதற்காக அவர்களிடமோ அவர்களது கருத்துக் களிலோ சிந்தனைகளிலோ எதுவித குறையும் கிடையாது; மற்றவர்கள் குறை கண்டுபிடிக்கக்கூடாது; அவர்கள் தெய்வீகப் பிறவிகள்; அவர்களது வாக்குகள் வேதவாக்குகள் தெய்வீக மானவை என நாம் எ ண் ணு வ தும் அ வ ற் றை அப் படியே ஏற்றுக்கொள்வதும் எம்மை நாமே ஏமாற்றிக்கொள் ளும் செயல்களாகும்; அறிவியற் கண்ணோட்டத்துக்குப் புறம் பானவையாகும்.
- கலாதிநிதி க. அருணாசலம் - தமிழ்த்துறை: பேராதனைப் பல்கலைக்கழகம்.
சங்கச் சான்றோர்கள் முதல் இன்றைய ஜெயகாந்தன், டொமினிக் ஜீவா, டானியல், கைலாசபதி, சிவத்தம்பி, அதற்கு அப்பாலும் கார்ல் மாக்ஸ், ஏங்கல்ஸ், லெனின் முதலிய பல்லா யிரக்கணக்கானவர்கள் வரை பலராலும் போற்றப்படுகின்றார் கள் பின்பற்றப்படுகின்றார்கள் எனில் அதற்கான காரணம்; அவர்கள் தமது காலத்தைய வாழ்வியற் சிந்தனைகள், சமுதாய மதிப்பீடுகள், கருத்தோட்டங்கள், நியதிகள் முதலியவற்றையும் மீறிச் சற்றோ - அதிகமாகவோ - மிக அதிகமாகவோ சிந்தித் தார்கள் செயற்பட்டார்கள் என்பதனாலேயேயாகும். அதற் காக அவர்களிடம் குறைபாடுகளே கிடையாது என எண்ணு வதும், அவர்கள் தமது சமகாலத்திய வாழ்வியற் சிந்தனை களாலும், கருத்தோட்டங்களாலும் சமகால சமுதாய மதிப் பீடுகள், போக்குகள், நியதிகள் முதலியவற்றாலும் அறவே பாதிக்கப்படவில்லை எனவோ, அவற்றை முற்று முழுதாக மீறி அதற்குமப்பால் முழுமையாகச் செயற்பட்டார்கள் எனவோ எண்ணுவதும் மடமையேயாகும். எடுத்துக்காட்டாக, வள்ளுவ ரின் குறட்பாக்களைக் கூர் ந்து நோக்கினாலே இவ்வுண்மை தெற்றெனப் புலப்படும். கருத்துக்களும் சிந்தனைகளும் தேங்கி நிற்பவையல்ல; மாறாக அவை காலத்துக்குக்காலம் மேன்மேலும் வளர்ந்தும் தெளிவுபெற்றும் வருபவை என்பதை நாம் மனத் திலிருத்துதல் வேண்டும்.
(இன்னும் வரும்: அடுத்த இதழில்)

தோழன் 5
LD ானி - வட்டதெனியச் செல்வி விமோசனம் தாஜ"ன்னிஸா ஸரூக்
ിഥ.G அஞ்ஞானம் தழைத்து மனிதஇனம்
மாக்களாய் வாழ்ந்துவந்த காலகட்டமது. மனிதன் தன் மிகதி துவத்தை உணராது மண்கட்டிகள் முன்னே சிரம் சாய்த்த அறியாமைக் காலமது. தாய்க்கும் தாரத்திற்கும் தரம் பிரித் துப் பார்க்க முடியாதளவு தாய்க்குலம் தாழ்த்தப்பட்ட கால மிது. மதுவையும் மங்கையையும் சிற்றின்பச் சீதனமாக உப யோகித்து சீரழிந்த காலமது உழைப்பு என்பது அடுத்தவன் சொத்தைக் கொள்ளையடிப்பதென்று உரிமை பாராட்டிய கால மது பாரெங்கும் கடும் இருளில் மூழ்கி வாழ வழி தெரியாது மனிதசமுதாயம் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த வேளையில் திடீ ரென ஒரு அரும் தீப் பிழம்பு ஹிரா மலைக் குகையிலே ஒலித்த "இக்ரஹ்” எனும் மழைத்துளி பட்டுக் கறை படிந்த சமுதாயம் களிப்புறத் தொடங்கியது.
ஆம்! மனித சமுதாயத்திற்கு வழிகாட்டி விமோசனத் திற்கு வழிகூற ஒரே நொடியில் இரு ஒளி விளக்குகள் அறி யாமை எனும் இருளை அறிவைக்கொண்டு அகற்றவே அதன் ஆரம்பப் போதனை அறிவு பற்றி எடுத்தியம்பியற்று. விமோ சனம் என்பது இம்மையை மட்டும் நோக்கமாகக் கொண்ட தல்ல. மாறாக இம்மை மறுமை ஈருலகிலும் உயர் நிலையை அடைவதையே விமோசனம் என்கிறது.
எனவே மானிட விமோசனத்திற்கு வழிகூற வந்த அல் குர்ஆனும் இதனைப் போதிக்க வந்த அண்ணலாரின் வழி முறையாம் அல்ஹதீஸும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய தன்னிகரற்ற தன்மைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. அறியாமைக்கால அத் த னை பண்புகளையுமகற்றி மனிதன் தன்னை அல்லாஹ்வின் பிரதிநிதியாக அல்லாஹ்வால் பிரகட னப் படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் முழுமையான வாழ்க்கைத் திட்டத்தை அவை வழங்கின.
இம்மையை இலட்சியமாகக் கொண் ட வாழ்க்கையே மானிட அழிவுக்கு அடிப்படை என்பதையறிந்த எல்லாம்வல்ல அல்லாஹ் "இம்மை மறுமையின் விளைநிலம்’ என்ற பொன் மொழியை அண்ணலாரின் மூலம் எடுத்துரைத்து வாழ்வின் இலட்சியத்தைச் சீர்படுத்துகின்றான். சொர்க்கத்தின் சுகபோகத்

Page 10
6 தோழன்
தைப் பற்றியும் நரகத்தின் வேதனைகள் பற்றியும் அல்குர் ஆனும், அல் ஹதீஸும் அதிகமாக எடுத்தியம்புவதன் மூலம் மானிட வாழ்வைச் சீர்படுத்த முனைகின்றன. அல்லாஹ்வின் படைப்புகளிலெல்லாம் மேலான படைப்பாகப் படைக்கப்பட் டுள்ள மனிதன் அல்லாஹ்வின் பிரதிநிதி “கலீபா என்றே குர் ஆனும் ஹதீஸும் பிரபல்யப்படுத்துகின்றன. சடப் பொருள் களுக்குத் தலைசாய்க்கும் கேவலத்திலிருந்து விடுபட்டு அவ னைப் படைத்த அல்லாஹ்வுக்கு மட்டுமே ஸ"ஜூது செய்ய வேண்டுமென்பதை அல்குர்ஆனும் ஹதீஸும் போதிக்கும் ஏகத் துவம் பணிக்கின்றது. அல் குர்ஆன் அல்ஹதீஸின் ஆரம்பப் போதனைகள் மா னிட விமோசனத்துக்கு அடிப்படையான இறைவன் பற்றிய நம்பிக்கைகளையும் மறுமை பற்றிய விசு வாசத்தையும் ஏற்படுத்திய பின்னர் படிப்படியாக வாழ்வின் சகல துறைகள் பற்றியும் அவை போதிக்கத் தொடங்குகின்றன. அதன் பயனாகத் தாய்க்குலத்தைத் தாசிகளாகப் பார்த்த சமூ கம் 'தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கத்தைக்" காணத் துடித் தது. சிற்றின்பச் சீதனமாய்ச் சீரழிந்த மாதர் சமுதாயம் அல் குர்ஆன் அல்ஹதீஸின் போதனையால் 'மஹர் கொடுத்து வாங் கும் மாணிக்கக் கற்களாய் மாறிவிட்டது. “பொருளிட்டல் பற் றியும், ஈட்டிய பொருளைச் செலவு செய்தல் பற்றியும் அல்குர்ஆனும் ஹதீஸும் எடுத்தியம்பிய உயரிய கருத் துக்கள் பாலைவனத்துக் கொள்ளையர்களைப் பாதையின் விழு பொருளின் பாதுகாவலர்களாக மாற்றி விட்டது. இத்தகைய பாரிய மாற்றங்களைப் பாரினிலே கால் நூற்றாண்டுகளில் ஏற்படுத்திய பெருமை அல்குர்ஆன், அல்ஹதீஸ் இரண்டையும் சார்ந்ததாகும்.
ஆனால் இன்று மனிதன் குர்ஆன் ஹதீஸ் கூறும் வழி யில் நின்றும் விலகிச் சென்றமையால் நாகரீகத்தின் பெயரில் நரக வாழ்க்கையைத் தனதாக்கிக்கொண்டான். போதையும் போரும் இடம் பிடிக்காத இடமே இல்லை எனுமளவிற்கு உல கம் அந்தகாரத்தில் மூழ்கி விட்டது. மாணிக்கக் கற்களாய் மதிக்கப்பட வேண்டிய மாதர்குலம் சீதனத்தின் கோரப்பிடியால் சோரம் போகும் அவலத்தை என்ன சொல்ல? விபச்சார விருந்து படைத்தல் சாதாரணமாகி விட்டதால் அல்குர்ஆன் அருளப்பட்ட 1400ஆம் ஆண்டு 'எயிட்ஸ் யுகமாகப் பிரகட னப் படுத்தப்பட்டு விட்ட அவமானம் எதனால் ஏற்பட்டது? வட்டி சம்பந்தப்படாத பொருளீட்டலே இல்லையெனும் அள வுக்கு சந்துகளிலும் பொந்துகளிலும் அது இடம்பிடித்து விட்

தோழன் 17
டது. ஆமாம் இவையாவும் எதனால்? குர்ஆன் ஹதீஸ் இரண் டிலிருந்தும் மனிதன் விமோசனம் தேடுவதை விடுத்து ‘நவீன் ஜாஹிலியத் தின் கொள்கைகளில் விமோசனம் தேடியதால் ஏற்பட்ட விளைவுகள். அகிலத்திற்கு அல்குர்ஆன் ஹதீஸின் போதனைகளை அறிமுகம் செய்ய வேண்டிய இந்த நபிமார் களின் வாரிசுகள் தமது உள்ளத்திலிருந்து கூட அவற்றை அகற்றி விட்டதனால் ஏற்பட்ட அவலங்கள்.
ஆக நவீன ஜாஹிலிய்யத்தின் கோரப்பிடியிலிருந்து மனித சமுதாயத்தை விடுவித்து அல்குர்ஆன் ஹதீஸின் அடிப்படை யில் விமோசனத்திற்கு வழி கூறுவோம். இறை சிந்தனையிலி ருந்து மனிதனையகற்றி இம்மையின் இன்பத்தில் மூழ்கடிக்கச் செய்யும் இசைக்கருவிகளை உடைத்தெறிவோம். கள்ளச் சாரா யத்தை மட்டுமல்ல அரச அனுமதியோடு சந்திகள் தோறும் விற்பனையாகும் அத்தனை மது விற்பனைத் தவறனைகளை யும் இடித்துத் தள்ளுவோம் 'அல்லாஹ்வால் ஹராமாக்கியதை ஹலாலாக்க யாருக்கும் அனுமதியில்லை' என்ற கோஷத்தை அகிலமெங்கும் முழக்கிடுவோம்.
அபிவிருத்தியின் பெயரால் நாட்டில் விருத்தியடைந்து வரும் அத்தனை சூதுகளையும் அல்குர்ஆன் ஹதீஸின் வழி நின்று அகற்றிடுவோம். வியாபாரம் என்ற பெயரால் அளவை நிறுவை களில் மோசடி செய்வதையும், விலையேற்றத்தை எதிர் பார்த்து எளியோர்களின் வயிறுகளை எரித்துவிடும் பதுக்கல் களையும் அல்குர்ஆனும் ஹதீஸும் வன்மையாகக் கண்டிக்கும் வாசகங்களை ஒதும் மந்திரங்களாக மட்டுமன்றி சமுதாயச் சந்தைக்குச் சரக்குகளாய் ஏற்றிடுவோம்.
கார்ல்மாக்சின் " கம்யுனிசம் கபுருக்குள் போய்விட்ட இந் நிலையில் அங்கே முதலாளித்துவம் இடம்பிடித்து விடாமல் இஸ்லாத்தைப் பறை சாற்றுவோம். அந்நியனின் கண்களுக்குக் கவர்ச்சியூட்டும் இந்த முழு அரை நிர் வா ண க் காரிகைகள் 'எய்ட்ஸ்’ பரப்பும் விஷக்கிருமிகள் என்பதை எடுத்துரைத்து அல்குர்ஆன் ஹதீஸ் போதிக்கும் "பர்தா" முறையைப் பாரெங் கும் பரப்பிவிடுவோம். வெறும் பேச்சாலும் எழுத்தாலும் நம் இலட்சியங்களை அடைந்துகொள்ள முடியாதல்லவா? நடை முறையிலும் கடைபிடித்தொழுகுவோமாக!

Page 11
8 . தோழன்
சிறுகதை
) ஒரு
கவிதை
நிந்ததாசன்
ஆமி மணப்பெண் குளிர்ச்சி நாணத்தால் பூரித்துப் போயி (ருந்தாள். ஆகாய மணமகன் மழைத்துளி நரம்புகளை மீட்டி ராகமிசைத்துக்கொண்டு இருந்தான். சூரிய தேவனுக்குச்சரி யான ஏமாற்றம். பூமியின் தரிசனம் கிடைக்காமல் எங்கோ தொலைந்து போயிருந்தான் அவன். தென்றல் கூட குளிர் ஏந் தும் பல்லக்கானது. தெருக்கள் நீராடை அணிந்து கொண்டி ருந்தன w
"இம்.! குடை ஒன்றிருந்தால் இந்த நேரம் மருந்துக் கடைக்குப் போய் தேவையானதை வேண்டிக்கொண்டு வந்தி ருக்கலாமே!’ வசந்தனின் இல்லாமை மெளனத்தோடு அவ னுள்ளத்தில் அரங்கேறுகின்றது. வானம் மழை எச்சிலை உமிழ்ந்து கொண்டே இருக்கின்றது.
அந்த வீதிக்கே பொருட்களை வழங்கும் ஒரு கடையில் வசந்தனின் அடைக்கலம்.
'சே. இந்த மழை உடாது போலிருக்கே!' அவனின் பொறுமை, பொறுமை இழந்து அசைக்கிறது.
மழைக்கு முதல் வாழ்த்துத் தெரிவிக்கும் ஒரு விவசாயி அவன். பயிர்களின் பாதுகாவலன்; பசுமையோடு புல்லாங் குழல் வாசிப்பவன் அவன். ஆனால் இப்போது மழையை முதல் எதிரியாகப் பிரகடனப்படுத்தினான் வசந்தன். பொறுமை புகையிரதம் தரிக்கவில்லை. சிறகு முளைத்துப்பறக்க மழை அவ னின் உடல் ஆசனத்தை அபிசேகம் செய்து கொண்டிருந்தது. அவனின் கால்கள் ரோதையாயின. விரைவை அமுல்படுத்திக் கொண்டிருந்தான். ஒட்டமும், நடையும் கலப்படமானது.
அந்த கிருமிகளின் எதிரியான மருந்துக்கடை வசந்தனை வணக்கம் சொல்லி வரவேற்றது. அவனின் சுவாசம் சுறுசுறுப் புச்சுருதி வாசித்தது. பணம்-மருந்து கைமாற்றப்படுகிறது. மருந்தையும் மழை நீர் திருடி விருந்தாக்கி விடும் என்ற பயம் மனதை அட்டை போல பற்றிக்கொண்டது. நீர் துளைக் காத பொலித்தீன் பைக்குள் மருந்து மறைந்து கொள்கிறது.
 

தோழன் I9
மீண்டும் நடையும், ஒட்டமுமாக கலப்படமானது. வானமோ விசித்திரமாகக் கூத்துப்போட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு வினாடிக்குள் பிறந்து மறு வினாடிக்குள் மரணிக்கின்றன மின்னல்கள். வானத்தோலைப் பிழக்கின்றது, நெருப்புத்தசை
ள்ே கோடுகளாக மடிகின்றன. இடி ஒலி உலகத்தைக்கைப் பற்றி உலாவுகின்றது. ஆம்! வானம் தனக்கு உயிர் இருப்பதை உலகுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. வசந்தனின் மன வய லில் வேதனை விதைகள், காலநிலை கதை பேசி விதைத்துக் கொண்டிருக்கின்றது.
'கடவுளே. இந்த நேரம் . என்ன நடந்திருக்குமோ?*
அவசரத்தை நேசித்தான் வசந்தன். பாதப்பேனையினர்ல் தூரத் தைச் சுருக்கி எழுதினான். அந்தக்குடிசை சோகத்தினால் செய் யப்பட்டது. வறுமையினால் வேயப்பட்டது. இடவசதிப்பஞ்சம். அத்தியவசிய பொருட்கள் கூட அந்தக் குடிசையைக் காதலிக்க வில்லை போலும். வறுமை சுலோகம் ஏந்தி விளம்பரம் செய் தது. வயிற்றுப்பசியின் நிரந்தர வாரிசுகள் வசந்தனின் குடும் Lilih.
அவனின் உயிரின் பாதி நோயின் மடியில் துவண்டு கிடக் கிறாள். ஆனாலும் அன்பு கெளரவமடைவது அவர்களைப்பார்த் துத்தான். அவனது கண்களில், மனைவிதான் பார்வை. அவ னின் சுவாசம் அவளால்தான் இயங்குகின்றது. அவளின் சுவா சங்கூட அவனின் பெயரைத்தான் உச்சரிக்கும். வறுமை வர வேற்புக்கீதம் பாடும். அவர்களுக்கு பொறுமை தான் இசைய மைக்கும். அன்பு வாழ்க்கையாகிறது. வாழ்க்கை அன்பாக மாற்றப்படுகிறது.
‘சகு.ந்த.லா! சகுந்தலா..!" அவளின் பெயர் சந்தோச மடைகிறது. அவனின் குரல் கணிவைத் திருமணம் செய்து கொள் கிறது. விழிகள் நட்சத்திரங்களுக்குள் விழுகின்றன.
“மழைக்.குள். நலைஞ்சி.போயிட்..டீங்களா ?* அன்பு ஆரவாரப்படுகின்றது. உள்ளம் வெள்ளாடையை உரி மையாக்குகிறது. வேதனையின் விழிம்பிலும் அன்பு விசாரிக்கப் படுகிறது. பெண்மைக்குப் பொருள் மென்மை என்பது நிரூபிக் கப்படுகிறது. கண் ஆனவன் கணவன் என்ற வேதம் கல்லில் எழுதப்படுகிறது. அது சொல்லில் பூக்கிறது.
*காச்சல். தடுமல் வந்தி.டுமே.1 ஐயோ. என்னால எவ்வளவு. கஸ்டம் உங்.களுக்கு." அவளின்விழி மரத்தில்

Page 12
20 தோழன்
கண்ணீர்க்காய்கள் உற்பத்தியாகின்றன. வார்த்தைகள் வேதனை வியர்வையோடு புறப்படுகின்றன.
'எனக்கு ஒண்டும் நடக்காது. முதல்ல. இந்த மருந்தைக்
குடி.!" கட்டளை அன்புக்கு விற்பனையானது. பாய்தான் கட்டில், அதில் அவளது முனகல் ஒலிபரப்பப்படுகின்றது. சக்தி யெல்லாம் பிரயோகிக்க அவனின் அன்பும் ஆதரவும் அவளை அமரச்செய்கிறது. மருந்து அவளின் வயிற்றுக்குள் சமிபாடடை கிறது.
'மெதுவா.மெ.து.வா." மீண்டும் அவள் விழிகள் மொட்டாகின்றன. -
*காசிக்கு என்ன. செஞ்.ச்.ங்க...? அவளின் வாய்
வாய்க்காலில் வார்த்தை நீர் சலசலக்கிறது. சோகம் தலை சீவிக் கொள்கிறது. அதற் கு மெளனம் மயானமானது. வசந்தன் பதிலைத்தேடிக் கொண்டிருந்தான். பொய் ப் புகை க் குள் வார்த்தை ஏலம் போனது.
*" கடனுக்கு வாங்கினேன். ' அவளும் மெளனத்திற்குள் கரைந்து போனாள், வசந்தனோ நினைவுக் குதிரையில் சவாரி செய்தான்.
பத்து வருடப்பூக்கள் பறிக்கப்பட்டுவிட்டன. சகுந்தலா, வின் கழுத்தில் வசந்தனின் கரம் பட்டு மூன்று வாரிசு வசந்தங் கள் மலர்ந்தன. முதல் வசந்தம். வலிமையின் இலக்கணம். மிகுதி இரண்டும் மென்மைத் தேன் தேங்கி நிற்கும் நந்தவனங் கள், வசந்தன் நிரந்தரத் தொழில் கயிற்றைப் பற்றிப்பிடிக்க முயன்றும் முயற்சி தோல்விக்குள் சங்கமித்தது.
மானுட ஈக்களின் வயிற்றுப் பசிக்கு வள்ளலாகும் வய லில் தான் வசந்தனுக்கு கூலி வேலை. உழைப்பின் அத்திவா ரம் உத்தரவாதமடையாததால் வாழ்க்கைக்கட்டிடம் வலுவிழந் தது. நாளாந்தக்கூலி அவனின்திருப்தியை நிறைவு செய்யவில்லை. வாழ்க்கைச்செலவு வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்டான். வேதனைகள் அவனிடம் தலை குனியவில்லை. தோல்விகளின் தொடர் பயணத்திற்குள் வழுக்கி விழுந்தான். ஒரு சூரியச் சிரிப்பில் ஒய்வை ஒய்யாரமாக்கிக் கொண்டால் குடும்பத்தின் வயிற்றில் தீ முளைக்கும். துன்பம் தளைக்கும். வறுமை இருள் நிரந்தரமாகியது. வாழ்க்கை வானத்தில் அவனால் ஒரு சூரி யனைப் பிரசவிக்க முடியவில்லை. கனவுகள் வெறுமனே நித்தி ரைக்குள் நீச்சலடிக்கும் மீன்கள்தான். நினைவுகளோ மனதிற் குள் மட்டும் அரங்கேறும் மெளன நாடகந்தான். ஒருவனுக்கு

தோழன் 21
உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் பாரதி யின் போர்க்குரல் வசந்தனுக்காகவே பிறந்தது. விரக்தியின் பக்கத்தில் நின்று ஒப்பந்தம் செய்து கொண்டான். அவனின் வீணை முஹாரிக்கு உத்தரவு பிறப்பித்தது.
இரவும் பகலும் இறந்தும், பிறந்தும் கொண்டிருந்தன. சூரியர்களும், சந்திரர்களும் ஒளி விழாக்களுக்குத் தலைமை 5ாங்கினார்கள் குழந்தைப் புஷ்பங்கள் வசந்தனின் வாழ்க்கைச் சோலையினை அலங்கரித்தன. இந்த உலக நாடகத்திற்கு மூன்று புதிய பாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டதால் மழலைக்குள் மயங்கி நிற்பான். அவனின் வேதனைகள் ஒதுங்கிநிற்கும் அந்த மழலைப் புல்லாங்குழல்களில்,
'அப் பா ! எனக்குப் பாப்பா ஒண்டுவாங்கித்தாங்க "" ‘‘அப்பா..! எனக்கு மான் பொம்மை வாங்கித்தாங்க குழந்தைகளின் விண்ணப்பக் கடிதங்கள். ஆசை தீபத்தைச் சொற்களால் ஏந்தும் மழலை வாய்கள். பாசத்தை ஆட்சி செய் யும் சக்கரவர்த்திதான் வசந்தன். அன்பைப் பூஜிக்கும் புனித பக்தன் அவன் இரக்கத்தின் இதயத்தை திருடிக்கொண்டவன். ஆனால் பணத்தின் பாதையில் பாதம் பதிக்காதவன். தன் இரத்தத் துளிகளின் ஆசைகளை நிராகரித்தான். அவனால் சுமக்க முடியாத சுமை. அவசியமானவைகளைக்கூட சிரமத்தின் உச்சியில் நின்றுதான் நிறைவுசெய்கின்றான். அவனின் வாழ்க் கைப் புத்தகமெங்கும் ஒரே தத்துவந்தான் மனிதன் சந்திரனை முத்தமிடும் யுகமிது. கோள்களுக்குக் கால்கள் பூட்டி பூமிக்கு இழுத்துவந்து நூதனசாலையில் காட்சிக்கு வைக்கும் காலமிது. ஆடம்பரம் நடனம் புரியும் நவீன நூற்றாண்டிது. ஆனால்; ஏழைகளின் வயிறுகள் இன்னமும் தீப்பிடித்து எரிகின்றன. ஏழை களின் தென்றல் புயலாகத்தான் பிறப்பெடுக்கின்றது. இருளின ஆயுள் தண்டனைக் கைதிகளா இந்த ஏழைகள்? வசந்தன் ஆயி ரந் தடவைகள் இந்த சிந்தனை இறகால் பறந்திருப்பான். கீறல விழுந்த இசைத்தட்டைப்போல அவனின் வாழ்க்கை பாடுவது இல்லாமை எனும் பாட்டைத்தான். அந்தப் பாட்டின் மெட்டு இருட்டுத்தான்
‘இன்னமும் . நீங் க தலயத் தொடக்கல்லை யா?" மனைவியின் விசாரணைக் கத்தரிக்கோல் அவன் நினைவு நாடாவைக்கத்தரித்தது. அன்பினால் அவனது இதயம் இரண்டு துண்டானது
'சாப்பாடு வாங்கிட்டு வாரன் கொஞ்சம் சாப்புடுறியா புள்ள ..?' 'இம்.ம்..!" ஆமோதிப்பு அவனின் காதை மோதியது. ஏழைகளை உறிஞ்சும் பணக்கார அட்டைகள் போல
暴 炒

Page 13
22 - தோழன்
ஈரத்தை உறிஞ்சி பாரத்தைச் சொந்தமாக்கிய மேனி உறை களைக் களைந்தான். வேறு உடை அவன் உடலை உடைமை கொண்டது. அப்போது பக்கத்து வீட்டுப் பார்வதியின் தரிசனம். அவளின் குரல் அஞ்சல் செய்யப்பட்டது. 'வசந்தன் ! எங்க போக?"
*கொஞ்சம் வெளியில போயிட்டு வரலாம் எண்டுதான். அக்கா. கொஞ்சம் ச கு ந் த லா வை ப் பாத்துக்கங்க." பொறுப்பை ஒப்படைத்தான் அவன். இறந்த காலத்தில் பார் வதியிடம் பட்ட கடன் கழுத்தை நசுக்கும் என்பதனால், ஒரு தடை உத்தரவுக்காக. 'அக்கா. நான் வேலைக்குப்போய் ரண்டு கிழமையாகுது. கை யில் ஒரு சதமும் இல்ல. என்ர சின்ன மகளுக்காக காதுப்பூ வாங்கி வெச்சிருந்தன் . அத வித்துத்தான் மருந்தும் வாங்கினன்' அவனின் விழிகள் நீர் பூ க் கும் அருவியானது. முகத்திலோ சோகம் மொழிபெயர்க்கப்பட்டது. அழுகை ஆலயத்தில் குடி யிருக்கும் தெய்வம் அவன். "இஞ்சப்பாரு ? இவள் படுக்கையில உழுந்து ரண்டு மாச மாகுது, டொக்குத்தரும் கைவிரிச்சாச்சி ஏன் நீ கஷ்டப்படு றாய்? உண்ட புள்ளைகளும் அங்கொண்டும் இங்கொண்டுமா கிடக்குதுகள். இன்னொரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு சுக மாக வாழப்பாரு ' ! பார்வதி பிரசங்கத்தின் சாரதியானாள். உணர்வுகளைக் கோர்த்து மாலையாக்கினாள். அவளின் உள் ளத்துக் கதவுகளை வார்த்தைத் திறப்புக்களால் விலக்கி வைத் தாள். வசந்தனின் இதயமலர் கருகியது. அன்பிற்காகத்தன்னை சமர்ப்பணம் செய்தவன் துன்பவார்த்தைத் தூக்குக்கயிற்றுக்குள் இறுகித் தொங்கினான். பார்வதி பெண் என்பதை அவன் விழிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதயம் அங்கீகரிக்கவில்லை. விசம் ஒன்று உயிர் பெற்று நிற்பதைப் போலிருந்தது அவனுக்கு. 'பா.ர். வதி. '' குரல் ஒவியம் கோபவர்ணம் பூசியது.
உங் களைத் தான் ' சகுந்தலா வின் குரல் அரங்கேறிய தைக்கண்டு அவளின் பக்கத்தில் வசந்தனின் சுவாசம் சோகம் பேசியது. " "பார்.வ .தி. சொல்றது சரிதான்! இனி . நீங்க. நம்முட புள்ளை களைக் காப்பாத்துறண்டா இன்.னொரு ‘* சகுந் தலாவின் பேச்சு முற்றுப்புள்ளியை சொந்தமாக்கவில்லை.ஆனால் அவளின் மூச்சு முற்றுப்புள்ளிக்குள் புகுந்தது. வசந்தன் அழு கையைத் தொழுதான். தூய அன்பு தூரப் போனதால் துய ரம் பற்றி சொற்பொழிவு நடத்தினான்.
தன் குழந்தைப் பூக்களுக்காக வ ச ந் த ன் சுவாசித்துக் கொண்டிருக்கிறான். சகுந்தலாவின் நினைவுக்குள் மூழ்கிக் கொண்டே நாட்களின் நகர்வில் நகர்கிறான். (முற்றும்)

தோழன் 23
சின்னச் சின்னக் கோலங்கள்
தயாரிப்பு: ஏ. ஸி. நஸார்
+ தமிழ்ச் சிறுகதையின் தந்தை - வரகனேரி வேங்கட சுப்ர மணி ஐயர். இவரது முதற் கதை “குளத்தங்கரை அரச மரம் மங்கையக்கரசியின் காதல் (சிறுகதைத் தொகுதி). + ஆறுமுக நாவலர்தான் தமிழ் மொழியில் முதன் முதலா
கக் குறியீடுகளை அறிமுகப்படுத்தினார். + தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் "பிரதாப முதலியார் சரித்திரம் இதனை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை. + இலங்கையில் முதன்முதல் எழுதப்பட்ட த மிழ் நா வல் ‘அசன்பேயின் சரித்திரம்" எழுதியவர் அறிஞர் சித்தி லெப்பை (1885) + தமிழ் நாடகத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் பம்
மல் சம்பந்த முதலியார். + ஈழத்தில் தமிழ் நாடகத்தின் தந்தை என்று போற்றப்படு
பவர் கலையரசு சொர்ணலிங்கம்பிள்ளை. + மண்வாசனை வீசும் சிறந்த ஈழத்து நாவல் நிலக்கிளி
எழுதியவர் அ. பால மனோகரன். + முதன்முதல் வெளிவந்த தமிழ்ப் பத்திரிகை 'உதயதாரகை” 1841 ல் அமெரிக்க மிசனறிசார்பில் வெளிவந்த கிரிஸ்தவப் பத்திரிகை. + இலங்கை நேசன், சைவ அபிமானி, சைவ உதயபாணன், இந்து சாதனம். இவை இலங்கையில் ஆரம்ப காலத்தில் வெளிவந்த சைவ சமயப் பத்திரிகைகளாகும். முஸ்லிம் நேசன், சைபுல் இஸ்லாம் இவை ஆரம்ப காலத்தில் வெளி வந்த இஸ்லாமிய மறுமலர்ச்சிப் பத்திரிகைகளாகும். + பிரபல நாவலாசிரியை லட்சுமியின் இயற்பெயர் திரிபுர
சுந்தரியாகும். இவர் ஒரு வைத்தியர். + "மல்குடிடேய்ஸ் இயக்குனர் ஆர். கே. நாரயணன் பிரபல
மான நாவலாசிரியர். + தமிழில் முதன்முதலாக அகராதி யாத்தவர் வீரமாமுனிவர் (பெஸ்கின்) இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இதன் பெயர் ‘சதுரகராதி" + தமிழ்ச் சிறுகதை மேதை புதுமைப்பித்தனின் இயற்பெயர்
வேதாசலம் என்பதாகும்.

Page 14
24 தோழன்
மாத்திரைகள் யாத்திரை
நிசா ஏ. கரீம்
நிந்தவூர்
+ ஒரு மனிதனுக்கு மதப்பற்று, மொழிப்பற்று, தேசப்பற்று, ஊர்ப்பற்று இருக்கவேண்டும். அதைப்போல தன்னில் தனக் குப் பற்றுதல் ஏற்படுவது மிக அவசியம். காதல் ஒரு மிருகத்தை மனிதனாக்குகிறது. மனிதனைப் புனிதனாக்குகின்றது. புனிதனை மகாத்மாவாக்குகின்றது. + தன்நம்பிக்கை இமயத்தையும் சாய்க்கும். இது மிகவும்
வலிமையும், சக்தியும் வாய்ந்தது. 十 உன்னைப்பற்றி நீயே தெரிந்துகொள்ள சிறு நேரம் உன்னை நீயே விமர்சனம் செய்! உன் குறைகளை அடுத்தவர்கள் சுட்டிக்காட்டுவதற்கு முன்னதாகவே அக்குறைகளை நீயே அகற்றிக்கொள்வாய்! + தன்னுடையமனதை தானே வெல்லமுடியாவிட்டால் அடுத்த வர்களின் மனதை வெல்வதற்குச் சாத்தியமே இல்லை. மனதிற்கு அடிமையாகாமல் மனதை உனக்கு அடிமையாக்கு நிச்சயம் உயர்வாய்! சகல மனிதர்களினதும் மனங்களில் இரு தன்மைகள் காணப் படுகின்றன. ஒன்று மிருகத்தன்மை, புனிதத்தன்மை இவற் றில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதோ அதன் விளைவை அனுபவிக்கலாம். மனிதர்களே! புனிதத்தன் மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அன்பும், பண்பும், சாந்தியும், சமாதானமும் நிலவட்டும்!
சிறுகதைப் போட்டிக்குப் போதிய கதைகள்
கிடைக்காமையினால் இதன் முடிவுத் திகதி 31-12-92 வரை நீடிக்கப்பட்டுள்ளது. (ஆ+ர்)

அனுபவம்
நான் காற்றோடு பறந்த ஒர் வெள்ளைக் காகிதம்!
தாலாட்டின் சுகம் காண மேலெழுந்தேன்!அலைந்தேன்!
இதோ! நான் மீண்டும் தரையில் !
எடுத்து வாசியுங்கள்!
என்னில் வாசகங்கள்!
அவை காலத்தாயின்
அழியாத பாடங்கள்!
- மாவனல்லை
ரீஸா லத்தீப்
அநீதிகள்
கும்மாளம்
அநியாய மேடையில் அவதூறுகள்! அராஜகக் கொடி பறக்கிறது நீதிகளைத் தொலைத்தே ! உரிமைகள்
கரிபூசப்பட்டு உண்மை வசந்தங்கள் புதைக்கப்படும்போது பொய்கள் தானே பூக்கின்றன! விடிவுகூட உதாசீனம் செய்யப்பட்டதால் இதயங்களில்
நெருப்பு உற்பத்தி!
- களுத்துறைச்செல்வி - எச். நப்லா
தனிப்பிரதி தபாலில் பெற
ՃՀ.»:
தோழனுக்குத்
தோள் கொடுங்கள்!
அரைவருடச் சந்தா (த செ உட்பட) 60, 00 12 இதழ்களுக்கு (த செ உட்பட)
I 0, 00 11.00
120 00
X ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பு.
X தரமான ஆக்கங்களை'தோழன்’ எதிர்பார்க்கிறான்.

Page 15
தோழனின் வளர்ச் அதன் எழுச்சிக்கும் 51 I ÉSIG GiT
இதய பூர்வமானவ
Principal, Teachers and Students
Kg|Mw|Zahira Centr Ma Wamella.
இல, 118 மெயின் வீதி மார் A, C. நாஹறில் என்பவரால் மா
அச்சகத்தில் அச்சிட்டு ெ

சிக்கும்
ாழ்த்துக்கள்!
all College
பனல்லையில் வசிக்கும் வனல்லை எம். ஜே. எம். பளியிடப்பட்டது.