கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தோழன் 1993.04-05

Page 1
மலர் - 01 இதழ் - 05 3 1993 ஏ
 
 
 

-
1 7 ܠܐ
- மே 3 அன்பளிப்பு ரூ. 10
ப்ரல்

Page 2
நவீன டிசைன்களில் அசல் 22 கரட் தங்க நகைகள் ஒடர் கொடுத்து குறித்த நேரத்தில் செய்துகொள்ள தலைசிறந்த ஒரே இடம்
SELECTION JEWELLERS செலக்ஷன் ஜாவலர்ஸ் 19 A, சென்றல் மார்கட், மாவனல்லை.
தமிழ், சிங்கள, ஆங்கில, ஹிந்தி, திரைப்படங்களுக்கும் பாடல்களை ஒலிப்பதிவு செய்து கொள்வதற்கும்
நாடவேண்டிய இடம்
CINECITA MUSIC CORNER
8/16, City Side Shopping gomplex, MAIN STREET, MAWLANELLA. .
V. P. P. gôQLlri 356ir எசிறுக்கொள்ளப்படும்.
نیس-سسسسسسسسسسته-سی..... بتیس- حس- مس ------------

தோழன் ஆசிரியர்:
1993 ஏப்ரல் மே
O நிந்ததாசன் s மாதாநத கலை, 23, நயாவல, LD6)ri 0 1 இலக்கிய இதழ். மாவனல்லை. இதழ் - 05
ஆசிரியர் கருத்து. தோழமையுள்ள வாசகர்களே!
தமிழகத்திலிருந்து எம் திருநாட்டுக்குள் வரும் தமிழ்ச் சஞ்சிகைகள் இன்று பெருகிவிட்டன. அவைகளின் ஆதிக்கம் வாசகர்களின் இதயங்களை திசை திருப்பி விடுகின்றன. தரம்" என்பதை நிரூபிக்க அவைகளால் முடிவதில்லை. ஜனரஞ்சக சஞ்சிகைகளாக அவை திகழ்வதனால் சுவை மட்டும் கிடைக்கின் றது. சுவை மட்டும் தருவது ஒரு தரமான சஞ்சிகையின் பணி யன்று. அவை அறிவையும், அழகியலையும், யதார்த்த ஈரலிப்பை யும், சீரான நெறியினையும், உயரிய சமூக நோக்கினையும் உடையதாகப் படைக்கப்படல் வேண்டும். தற்பொழுது வாச கர்களின், சஞ்சிகைகள் பற்றிய அறிவு மேம்பட்டதாகப் பூத் திருப்பதனால் இரண்டாந்தர சஞ்சிகைகளின் ஏமாற்று வித்தை யினை அவர்கள் புரிந்துள்ளார்கள்.
தமிழகத்திலிருந்து அறிஞர்கள் என்ற போர்வையில் சிலர் இங்கு அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இங்கு வருவதன் நோக் கமும், போக்கும் வேறு விதமானது. இலங்கை "வியாபார உல் லாச புரி என்பதனால் தான் இங்கு படையெடுக்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். அறிவு அவர் களிடம் பூஜ்யமே!
தமிழகத்து சினிமாக் கும்பல்களின் கும்மாளம் இங்கு கொடிகட்டிப் பறக்கிறது. அவர்களை அழைத்து பணத்தை சம் பாதிக்கும் இன்னுமொரு கூட்டம் இங்கே திட்டமிட்டுச் செயல் படுவது வேதனையே! தோழனின் வேண்டுதல் யாதெனில்; இரண்டாந்தர தமிழகத்துச் சஞ்சிகைகள் இங்கு வருவது தடை செய்யப்பட வேண்டும்.
இலங்கை அறிஞர்களும், மேதாவிகளும் கெளரவிக்கப் படுவதோடு அவர்களின் பயனை நாம் பூரணமாகப் பெற்றுக் கொண்டு வளர வேண்டும்.
இலங்கை கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண் டு ம். அவர்களின் திறமைகள் வெளியுலகை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அடுத்தவனின் பல்லை விட நமது முரசு சிறப்பானது என்பதை உணருங்கள்! நமது சொந்தக்காலைப் பயன்படுத்தி முன்னேறுங்கள்! முன்னேற்றுங்கள்!!

Page 3
02 தோழன்
நமது வானத்தின் கீழ்.
- நவீனன். --
கைலாசபதி என்றொரு மேதை
பல துறைகளிற் பெயர் பெற்றவர்கள் பலர் உளர். ஆயி னும், அவர்கள் எல்லோரும் எல்லோரது உள்ளத்திலும் வாழ முடிவதில்லை. ஆனால், சிலர் மட்டும் தமது ஆற்றலாலும் ஆளுமையாலும், மனிதப் பண்புகளினாலும் பலரது இதயத்திலும் நிரந்தரமான வாழ்வு பெற்று விளங்குவர். பேராசிரியர் கைலாச பதியும் அத்தகையவரே பல்கலைக்கழகங்களைச் சார்ந்த பலர் தாமுண்டு, தமது ஆராய்சியுண்டு என்று காலத்தைச் செல விடுவதுண்டு. அவர்களது மறைவோடு அத்தகையோர் பற்றிய நினைவுகளும் அடங்கி விடுவதுண்டு. ஆனால், கைலாசபதியைப் பொறுத்தவரை, ஒரு பல்கலைக்கழகப் பேராசானுக்குரிய அத் தனை சிறந்த பண்புகளும் அவரிடத்துக் காணப்பட்டமை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். சிறந்த கல்விமானாக, சிறந்த ஆய்வாளராக, சிறந்த திறனாய்வாளராக விளங்கிய அதே வேளை, சிறந்த ஆசானாகவும் அவர் விளங்கினார். விரிவுரை களின் போது, அவரது கற்பித்தல் திறத்தையும் சுவையையும் அவரது மாணவர்கள் வாயாரச் சொல்லிச் சொல்லி நிறைவு கொள்வர். முற்போக்குப் பார்வையுடன் மாணவருக்கு முழு நிறைவுதரும் வகையில், கனதியாகவும் கவர்ச்சியாகவும் கற்பிக் கும் ஆற்றல் அவருக்கு இயல்பாகவே கைவந்த கலையாகும். அதே போன்று, மாணவரின் உயர்ச்சியிலும் ஆர்வமும் அக்கறை யும் செலுத்தியவராக விளங்கினார். அதேயளவுக்குக் கலை இலக்கியவாதிகள்பாலும் நெருங்கிய நேசத்தை வெளிப்படுத்தி னார். இலங்கையின் எந்த மூலையில் ஓர் இலக்கிய நிகழ்ச்சி நடைபெறினும் அங்கு ஏதோவொருவகையிற் கைலாசபதியின் பெயரும் தொடர்பு படுத்தப்படுவதை நான் நேரிலே அவதானித் துள்ளேன். அவர் காலமானபின் தமிழ் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 'கைலாசபதி இலக்கிய வட்டம்" என்ற பெயரில் இலக்கிய அமைப்புகள் இயங்கி வந்துள்ளன. பேராசிரியராகப் பெரும் பதவிகள் வகித்தபோதிலும், மக்களையும் கலை, இலக்

தோழன் 03
கிய உலகையும் மறவாத சிந்தை கொண்டவராக வாழ்ந்தமையே மறைவுக்குப் பின்னும் அவர் போற்றப்படுவதற்கு காரணமாகும். அவர் குறைகளேயற்ற மனிதரல்லர். ஆனால், அவரது நிறை வுகளே அவரை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன.
இளையராஜாவின் கண்டுபிடிப்பு!
தமிழ்த் திரைப்பட உலகின் இசைத்துறையிற் புதியதொரு திருப்புமுனையாக விளங்குபவர் இளையராஜா. இவருக்கு முன் னரும் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்கள் இத்துறையிற் சிறப்புற்று விளங்கிய போதிலும், இவரது வருகை தனித்துவம் மிக்கதாக அமைந்து விட்டது. இவருக்கு முன்னைய இசையமைப் பாளர் சிலரும் கிராமியம் பொதிந்த திரைப்பாடல்களை இசை யமைத்துள்ளனர். ஆயினும் இளையராஜாவின் இசையில் இயல் பாகவே ஒருவகைக் கிராமிய மணம் வீசுவதைக் கண்டுகொள் ளலாம். அதேவேளை, பல்வேறு மனக்கோலங்களையும் நடை முறை அவதானிப்புகளையும் அவர் தமது இசையமைப்புக்குள் சிறைப்பிடிக்க முனைவதுண்டு. அவரது பல பாடல்கள் அவசர கோலத்தில் இசையமைக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருப்பினும் கணிசமானவற்றில் இளையராஜாவின் முத்திரை பதிந்துள்ளது. அத்தகையவை தமிழ்த் திரையிசை வரலாற்றிற் புதிய சுவடு களைப் பதித்து வருகின்றன. இளையராஜாவின் சாதனைகளுக் கெல்லாம் சிகரம் வைத்தது போன்று அமைந்த அம்சம், பின் னணிப் பாடகி எஸ். ஜானகியை மீளக் கண்டுபிடித்தமையாகும். ஐம்பதுகளிலிருந்தே பாடிவரும் அவரின் உள்ளார்ந்த திறமைகள், பிற இசையமைப்பாளர்களினால் போதிய அளவுக்குப் பயன் படுத்தப் படவில்லை. ஆங்காங்கு சில திரைப்படங்களில் அவரது குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆயினும், பழைய பாடகிகள் சிலரைப் போல் முற்றிலும் ஒதுக்கப்படாமல் அவர் இயங்கி வந் துள்ளார். இளையராஜாவின் திரையிசைத்துறைப் பிரவேசம், ஜானகியின் உள்ளார்ந்த திறமைகள் அத்தனையும் வெளிக் கொணரப்படுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இளையராஜாவின் இத்தகைய கண்டுபிடிப்பு, பழைய பாடகியான ஜானகியை ஒரு புதிய பாடகிபோலவே அறிமுகப்படுத்தியது. இளையராஜா வின் இசையமைப்பிற் பாடும் "புதிய ஜானகியின் குரலுக்கும் “பழைய ஜானகியின் குரலுக்குமிடையே குறிப்பிடத்தக்க வேறு

Page 4
04 தோழன்
பாடு இருப்பதை இசையபிமானிகள் உணரத் தவறார். புதிய தேவைகளுக்கேற்ப ஜானகி தமது குரலைத் திறமையான முறை யில் வளம்படுததிக் கொண்டுள்ளார். எந்தப் பாத்திரத்திற்கும் ஏற்றவகையில் எந்தப் பாடலையும் பாடக் கூடியவராக அவர் தம்மை வளர்த்துக்கொண்டது இளையராஜாவின் இசையட்ை பிலேயே. இத்தகைய ஒரு சிறந்த பாடகியை மீளக் கண்டு பிடித்த பெருமை இளையராஜாவையே சாரும். திறமை வாய்ந்த ஜானகியிடம் ஒரு சிறு குறை காணப்படுகிறது. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அவரது தமிழ் உச்சரிப்பு சில வேளை களில் இடறிவிடுகின்றது. சுசீலாவும் தெலுங்கைத் தாய்மொழி யாகக் கொண்டவரெனினும், அவரிடத்து 'உச்சரிப்புச் சுத்தம்" காணப்படுவது குறிப்பிடத்தக்கது. எனினும், திரையிசைத்துறை யின் சக்ல பரிமாணங்களையும் தத்தம் குரல் வளத்தாலும், கற் பனையாலும், பாவனையாலும் வெளிக்கொணர்ந்தவர்களாகப் பாடகர்களில் ரி. எம். செளந்தர ராஜனையும், பாடகிகளில் ஜானகியையும் குறிப்பிடலாம். .
ரூபவாஹினியும் தமிழ் நிகழ்ச்சிகளும்
ரூபவாஹினிக்குத் தமிழ் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது என்பது ஒவ்வாமைக்குரிய (அலர்ஜி) ஒரு விடயமாகும். பிர சாரத்திற்காகத் தமிழ்ச் செய்திகளை ஆரவாரத்துடன் அது ஒளிபரப்புகிறது. ஆனால், மற்றைய விடயங்களில் அசமந்தப் போக்கையே இனங்காட்டுகிறது. ஏனோதானோவெனச் சில தமிழ் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிவிட்டு, "இதுவே அதிகம்' என்ற பாங்கில் அது நிம்மதியடைகிறது. சிங்கள நிகழ்ச்சிகளுக்குச் செய்யப்படுவது போன்று நிகழ்ச்சி முன்னோட்டம் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு அமைவதில்லை. அருமையாக ஒளிபரப்பப்படும் தமிழ்த் திரைப்படங்களுக்கு மா த் திர ம் சில வேளைகளில் நிகழ்ச்சி முன்னோட்டம் இடம் பெறுவதுண்டு. ரூபவாஹினியின் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவு சில தரமான நிகழ்ச்சிகளை அளித்து வருவது உண்மையே. அதற்குப் போதிய வசதியும் வாய்ப்பு களும் அளிக்கப்பட்டால், மேலும் சிறந்த நிகழ்ச்சிகளை அத னிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஆயினும், ரூபவாஹினியின் மேலிடம் தமிழ் நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரையில் மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வது அப்பட்டமாகத் தெரிகிறது. தனது பேரினவாதப் போக்கைத் தெளிவாகவே

தோழன் 05
இனங்காட்டுகின்றது, தமிழ் பேசும் மக்களுக்குச் சுகாதார விட யங்கள், விவசாயம், போக்குவரத்து விதிகள், பொது விடயங் கள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை என்ப தைப் போன்றோ, அவர்களுக்கு இவை பற்றியெல்லாம் தெரிந் திருக்கத் தேவையில்லை என்பதைப் போன்றோ ரூபவாஹினி நடந்துகொள்கின்றது. நிகழ்ச்சிகளுக்கு நேரத்தை ஒதுக்கும் விடயத்திலும் தனது புறக்கணிப்புப் போக்கைத் தாராளமாக உணர்த்துகின்றது. பெரும்பாலான தமிழ் நிகழ்ச்சிகள், மக்கள் தம் நாளாந்த அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் நேரங்களில்தான் ஒளிபரப்பாகின்றன. கலையரங்கம் போன்ற சில நிகழ்ச்சிகளே இதற்கு விதிவிலக்கு. ஆனால் கலையரங்கமும் சிலவேளைகளில் பிரசார நிகழ்ச்சிகளுக்காக அவ்வப்போது நிறுத்தப்படுவதுண்டு. அவ்வப்போது தேவைக்கேற்ப, தமிழ் நிகழ்ச்சிகளின் நேரங்களே பயன்படுத்தப்படுகின்றன. இயன்றவரையில் பெரும்பான்மை யினருக்குரிய ஒளிபரப்பு நேரங்கள் 'பாதுகாக்கப்படுகின்றன?? ரூபவாஹினி இந்நாட்டின் அனைத்துத் தேசிய இனங்களின் அபிலாசைகளையும், கலாசார அம்சங்களையும் பிரதிபலிக்கக் கடமைப்பட்டுள்ளது. தேசியம் என்பதைப் பெரும்பான்மை யினத்தின் நலன்பேணல் என்பதாகவே இந்நாட்டின் பல நிறு வனங்கள் பிறழ விளக்கிக்கொண்டுள்ளன. இதே நிலை தொடரு மாயின் தமிழ் பேசும் மக்கள் ரூபவாஹினியில் தமிழ் நிகழ்ச்சி களை ஒளிபரப்புவதற்கெனத் தனியான சனல்" ஒன்றினை வற்புறுத்த நேரிடலாம், புறக்கணிப்புகளே பிரச்சினைகளுக்கான வித்து என்பதை உணரத்தக்க பக்குவம், ரூபவாஹினிக்கு இன் னும் ஏற்படவில்லை.
மின்மினிகள்
* வெட்டுக்கிளியின் ரத்தத்தின் நிறம் வெள்ளை. * வண்டின் ரீங்காரம்; அதன் மெல்லிய இறகுகள் மிக விரை
வாக அசைக்கப்படுவதால்தான் ஏற்படுகிறது. * கடல் நீரால் ஐஸ் செய்தால், அந்த ஐஸ் உப்பாக இருக் காது உறையும்போது உப்பு வேறாக தனித்து பிரிந்து விடும். நீர் மட்டுமே உறையும். * பன்றிப் பாலை அதன் மடியால் யாராவது ஒரு மனிதன் கறந்தால் அது பாலாக வெளிவராது. மாறாக ரத்த மாகவே வெளிவரும் அதே நேரம் ஒரு பன்றிக் குட்டி அதன் மடியில் பால் குடித்தால் அது பாலாக வெளிவரும்.
தொகுப்பு: செய்யத் இம்றான்

Page 5
தோழன் 06
சுவர்க்கந்தான் மாளிகை!
ஞாலத்தில் எனை ஈன்ற உத்தமியே தாயே, உன் மலர் வதனம் கற்பனையில் காண்கின்றேன்! காலத்தின் வேகமதில் நீ மறைந்து போனாலும் உன் நினைவலை எனை விட்டகலாதே!
இவ்வுலகில் உனைத் தாயாய் நான் பெறவே, இறைவனின் அருளே; வேறொன்று யானறியேன்! மறுவுலகில் உனை நாம் கண்டு மகிழ்ந்திடவே, மறை யவனைக் கையேந்திக் கேட்கின்றேன்!
தாயே! உன் நிழலில் நாம் பசி தன்னை அறிந்ததில்லை! தாகமதோ, தக்கார் ஏசியதோ கண்டதில்லை! நீதியே ஒதியெமைப் போற்றியே வளர்த்து வந்தாய்! மேகமதாய் என்றும் அன்பைச் சொரிந்து வந்தாய்
நவயுகத்தில் நீ வாழ்ந்தும் நாகரிகம் பிரளாது, முன்னோரின் வழிமுறையைப் போற்றி வந்தாய்! புது யுகங்கள் வந்தபோதும் பழமைகளை மறவாது, ஆன்றோரின் வாக்கினையே செப்பி வந்தாய்!
உன் மக்கள் தமக்குள் ஒற்றுமையாய் வாழ்ந்திடவே, நிதமும் நீ பெரும் பாடுபட்டாய்! தன் மக்கள் உலகோர்க்கு நிதர்சனமாய் இருந்திடவே, அனுதினமும் இறைவனையே வேண்டி வந்தாய்!
நோயில் வீழ்ந்தும் உன் தைரியத்தை இழக்கவில்லை! நோயென்றும் காட்டவில்லை;
சிரித்த முகம் மறையவில்லை! ஒயும் நாள் வந்தும் உன் சிந்தை தளரவில்லை! தாயே எனக் கதறியழ எம்மை நீ விடவுமில்லை!
என் றாயே! உன் அன்பால் பிணைந்து கொண்டோம்! உன் கனவைக் கலைக்கயினித் தேவையேதுமிலை! என்றாயே! உனக்கு சுவர்க்கந்தான் மாளிகையே! என் இறையை இறைஞ்சுகிறேன் எப்பொழுதுமே!
- பெறோஸா ஸ்லீம் -

07 தோழன்
ஒ சகாராவே! உன்னையும் மிஞ்சிடப் போகிறது இவள் மனம்,
வளமான நினைவுகள் விலகிப்போன பருவங்களால் வறண்டுபோன நிலையில் விழிக்குளங்கள் கலங்கிய போதெல்லாம் வழிந்தோடிய கண்ணிர் ஊற்றுக்கள் வற்றிய நிலையில் வசந்தத்தை மறந்த நேரம், வதனத்தில் முதுமை ரேகைகள் தடம் பதிக்க முனையும் போது, உச்சந்தலையில் வெள்ளி நாற்றுக்கள் வரம்பு மீறியே தலை நீட்டிட, கல்யாணச் சந்தையில் களை கட்டிப் பறக்கும் சீதனக் கொடிகள் ! இவள் மணவாழ்க்கையின் திரைச் சீலைகளா? அல்ல! மலைத்து நிலைத்த பாறாங்கற்களாய் எதிர்த்து நிற்கின்றன இவள் முன்! இதை கரைக்க முனைந்த கண்ணிர்கூட களைத்துப் போனதால் இவள் ஒரு "பாவப்பட்ட கன்னி!"
th
ബ
களுத்துறை செல்வி எப். ஹ"ஸ்னியா
இராப் பெண் சேலைக்கு
வான ஒவியன் போடும்
அலங்காரப் புள்ளி!
பூமிக்காதலி ஏமாற்றியதால்
வானக் காதலன் வடிக்கும்
சோகக் கண்ணிர்!
பூமித்தாயின் செல்ல(க்)
குழந்தைகளிற்கு
வான் துரவும் பன்னீர்த் துளி
- செல்வி ரிஜானா ஏ. மஜீத்
t

Page 6
08
தோழன்
புன்னகை மொட்டுக்கள்!
இருளை அழிப்போம்!
வெண்ணிற வானம் உடல் தேசத்தில்! துள்ளி நடைபயின்று கல்விக்கனியை சுவைத்து தேசத்தில் படிந்த தூசியை துடைப்போம்! இளஞ் சிட்டுகளின் இதயத்தில் ஒற்றுமை
Ο வண்ணத்தோழன்! இலக்கிய ரோஜாக்களுக்கு கலை ராஜாவானாய்! அறிவுக் கணியை அமுதாய்ப் புகட்டினாய்! அணையாத
ஜோதி நீ!
1993. 04, 28
9T60TT (Lu 5.
தோழனுக்கு!
கொடியாகப் பறக்க நாளைய விடியலில் ஒளிர்வோம்! கல்வி விளக்கை ஏற்றி இந்த ஞாலத்தின் இருளைக் கிழிப்போம்!
பரீனா மஃறுரப்
※
இணையில்லாத
சுவை நீ! வைரம் போல் ஜொலித்து வாசம் வீசும் வண்ணத் தோழன் நீ!
றாஜிபா றகுமான்
தோழா என்றும் மறவாது என் மனம் உன்னை - ஏனெனில்
உன் "மலரிதழ்கள்"
சிலிர்(விழி)க்க வைத்தது என்னை!
- ரோவ்ஸா அஸ்வர்
கவனிக்கவும்! மன்னிக்கவும்!
மீண்டும் முகவரி மாற்றம்.
முகவரி:
நிந்ததாசன்,
23, நயாவல, மாவனல்லை,
 
 
 

தோழன் 09
நான்தான் ரவியின்
| சுனன்
ரவியின் மூடிய கையின் பருமனுடைய நான் ரவியின் மார்பறையின் சரிமத்தியில் எனக்கென்றே ஒதுக்கப்பட்ட மென் சவ்வினாலான விசேட அறையொன்றில் நிரந்தரமாகத் தங்கி யிருக்கின்றேன். நான் ஒரு சதைப்பற்றான கூம்புருவான திணிவு ஒன்றாக இருந்தபோதும் ரவியின் உடலில் உள்ள ஏனைய பணி யாட்களுடன் ஒப்பிடும்போது, ரவியின் உயிரைக்காக்க என் னைப்போன்று ஒய்வின்றி மிகவும் துரிதமாகவும், சுறுசுறுப்பாக வும் பணிபுரியும் வேறொருவர் இல்லை என்பதை பெருமை யுடன் கூறிக்கொள்கிறேன். நான் ஒய்வெடுத்தால் ரவியிற்கு மண்ணறையில் ஒய்வெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் நான்தான் ரவியின் இதயம் (ரவி, 25 வயது நிரம்பிய நடுத்தர வளர்ச்சியுள்ள சராசரியான கற்பனைக்குரிய ஓர் இளைஞன்).
என்னுடன் சேர்ந்து ரவியின் மார்பறையில் பணிபுரியும் மற்றைய சகாக்களான சுவாசத் தொழிலாற்றும் நுரையீரல்கள் (Lungs) வயிற்றறையை நோக்கி உணவைக்கடத்தும் உணவுப் பாதையான களம் (Oesophagus) குருதியை என்பால் கொண்டு வரும் குருதிக்கலன்களான (Blood Wessels) மெல்லிய சுவருடைய நாளங்கள் (Veins) குருதியை என்னிலிருந்து எடுத்துச்செல்லும் குருதிக்கலன்களான தடித்த சுவருடைய நாடிகள் (Arteries) எனது மிக முக்கிய நண்பர்களாவர். நுரையீரல்கள் என்னை சூழ்ந்து எனக்குப் பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள். களம், என் பின்னால் இருக்கின்றார். நாடிகளும், நாளங்களும் என் னோடு நேரடியாக இணைந்து எனக்கு உதவி ஒத்தாசை புரி கின்றனர்.
எனது உள்ளமைப்பைப் பற்றி கூறுவதானால் நான் நான்கு அறைகளையுடையேன். மெல்லிய சுவருடைய ஒடுங்கிய இரண்டு அறைகளான கூடங்கள் (Atrium) அல்லது சோணை யறைகள் (Auricle) மேற்பக்கமாகவும், தடித்த சுவருடையதும் விசாலமானதுமான அறைகளிரண்டான இதயவறைகள் (Ventri cle) கீழ்ப்பக்கமாகவும் அமைந்துள்ளன. எனது நான்கின் மூன்று பாகமானது இதயவறைக்குரிய தசையினாலேயே ஆக்கப்பட்

Page 7
10 தோழன்
டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனது வலது புறவறைகள் ஒட் சிசன் நீக்கப்பட்ட, காபனீரொட்சைட்டு நிரம்பிய குருதியி னாலும், இடது புறவறைகள் ஒட்சிசன் நிரம்பிய காபனீ ரொட்சைட்டு நீக்கப்பட்ட குருதியினாலும் நிரப்பப்பட்டுள்ளன. இருவகைக் குருதியும் ஒன்றோடொன்று கலக்கப்படாமலிருப்ப தற்கு வேண்டி வலது புற அறைகளுக்கும் இடது புறவறை களுக்குமிடையில் வன்மையான தடுப்புச்சுவர்களுண்டு. சோணை யறைகளிலுள்ள குருதியை இதயவறைகளுக்குட்செல்ல அனுமதிப் பதோடு குருதியானது மீளப்பாயாமல் தடுக்கும் கூடவிதயவறை 6) intaij656TitaOT (Atrio Ventrical Valves (p56, ital Taij6 (Tricuspid Valve) வலது கூடத்துக்கும் வலது இதயவறைக்குமிடையிலும் இருகூர் வால்வானது (Bicuspid Valve) இடது கூடத்துக்கும் இதயவறைக்குமிடையிலும் காணப்படுகின்றன. நாளங்கள் கூடங் களில் திறப்பதோடு, நாடிகள் எனது இதயவறைகளிலிருந்து உதிக்கின்றன. ரவியின் தலையிலிருந்து குருதியை வடிக்கும் மேல் பெரு நாளமும் (Superior Vena Cava) ரவியின் உடலின் கீழ்ப்பாகங்களிலிருந்து குருதியை வடிக்கும் கீழ்ப்பெரு நாளமும் (Inferior Vena Cava) எனது வலது கூடத்தில் திறப்பதோடு, ரவியின் சுவாசப் பைகளிலிருந்து குருதியை வடிக்கும் சுவாசப்பை நாளங்கள் (Pulmonary Weins) நான்கு எனது இடது கூடத்தில் திறக்கின்றன. அதேபோல், சுவாசப்பையை நோக்கி குருதியைக் கடத்தும் சுவாசப்பை நாடியானது (Pulmonary artery) எனது வலது இதயவறையிலிருந்து உதிப்பதோடு, உடல் பூராவும் குரு தியைக் கடத்தும் தொகுதிப் பெருநாடியானது (Aorta) எனது இடது இதயவறையிலிருந்து உதிக்கின்றது. உடல் பூராவும் குரு தியைச் செலுத்துவதற்குக் கூடிய அமுக் கம் ஒன்றை பிர யோ கி க் க வேண் டி யு ள் ள படி யா ல் எ னது இ ட து இ த ய வ றை யி ன் சு வ ரா ன து வலது இதயவறையிலும் கூடத் த டி ப் புடைய து. இதயவறைகளிலிருந்து நா டி க ள் உதிக்கும் இடத்தில், நாடிகளை அடைந்த குருதியானது மீளப் பர்யாமல் தடுப்பதற்கு உதவும் அரைமதி வால்வுகள் (Semi Lunar Valves) எனும் விசேட வாயில்கள் உண்டு. எனது சுவரை ஆக்கும் இதயத்தசைகள் மிகத் தனித்துவம் மிக்கவை! இவ்வகைத் தசைகள் ரவியின் உடலில் வேறெங்கும் காணப்படுவதில்லை. அவற்றின் களைப்பின்றிய துரித இயக்கத்துக்குத் தேவையான போசனைகள் ஒட்சிசன் என்பன முடியுருநாடி (Coronary artery) எனும் விசேட நாடியொன்றினால் வழங்கப்படுவதோடு, அவற் றிலிருந்து ஒட்சிசன் நீக்கப்பட்டதும், கழிவுகள் சேர்க்கப்பட்ட

தோழன்
துமான குருதியானது விசேட முடியுரு நாளங்களினால் துரித மாக வடிக்கப்படுகின்றது.
இதுவரை எனது கட்டமைப்பைப் பற்றிக் கதைத்தோம். இனி, எனது தொழில் பற்றி அறிய நீங்கள் மிக ஆவலாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். அதற்கு முன்னர் எனது நரம்புக் கட்டுப்பாட்டைப்பற்றி ஒருசில வார்த்தைகளைக் குறிப் பிட விரும்புகிறேன். ஏனெனில் அது மிகவும் வினோதமானது.
ரவியின் இச்சையின்றி இயங்கும் தன்னாட்சி நரம்புத் தொகுதியினால் (Automatic Nervous System) நான் வசப்படுத் தப்பட்டுள்ளேன். அத்தொகுதிக்குரிய பரிவு நரம் புக ளு ம் (Sympathetic Nerves) Lugi uña buth L35 (315th (Para Sympathetic Nerves) என்னைக் கட்டுப்படுத்துகின்றன. என்மீது செலுத்தப் பட்டுள்ள பரபரிவு நரம்பானது பத்தாம் மண்டை நரம்புக்குரிய அலையு நரம்பாகும். (Vagus Nerve) என்றாலும், எவ்வித நரம் புத் தூண்டலுமின்றி என்னால் சுயமாகவும் இயங்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களோ தெரியாது. இவ்வியக்கத்துக் கான தூண்டலை வழங்க எனது வலது கூடத்தின் பிற்பக்கச் Sir Gulfóão (g. Tjisin. Läs 5639 (S. A 35goDJ / Sino Atrial Node) 6Tb வேகத்தோற்றுவாய் (Pace Maker) ஒன்று அமைந்துள்ளது. எனவே எனக்கு வழங்கப்பட்டுள்ள நரம்புகள் யாவும் துண்டிக் கப்பட்டாலும் கூட நான் தொடர்ந்தும் இயங்கிக்கொண்டிருப் பேன்! இவ்வாறான எனது தனித்துவமான இயக்கத்தை விலங் கியல் வல்லுநர்கள் ‘தசைப்பிறப்பிற்குரிய இயக்கம்’ (Myo genic action) என்பர். ரவி அவரது தாயின் கருப்பைச் சுவரில் முளையம் ஒன்றாகத் தொங்கிக்கொண்டிருந்த வேளையில் எனக் குரிய நரம்புகள் இன்னும் தொழிற்படாமல் இருந்தபோது நான் சுயமாகத்தான் இயங்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது எனது துடிப்பு நிமிடத்துக்கு 160 ஆகவிருந்தது. பின்னர் ரவி பிறந்து வளர்ந்து நரம்புகள் சரிவரத் தொழிற்பட ஆரம்பித்த போது பரபரிவு நரம்பின் மூலம் எனது துடிப்பு நிமிடத்துக்கு 72 வரை குறைக்கப்பட்டது. ரவி ஓய்வாக "உள்ள நிலையில் பரபரிவு ந ர ம் பு முனை க ள் சு ர க்கு ம் அசற்றைல்கோலீன் (Acetylcholine) எனும் இரசாயனப் பொருளானது எனது துடிப்பு வீதத்தை மந்திக்கின்றது. சில நிலைமைகளில் எனது துடிப்பு வீதம் தூண்டப்படுவதுமுண்டு. பரிவு நரம்புகள் தூண்டப்பட் டால் அவற்றின் முனைகள் சுரக்கும் பதார்த்தங்களிரண்டான அதிரினலீன் (Adrenaline), நோரதிரினலின் (Nor-Adrenaline)

Page 8
2 தோழன்
எனும் ஓமோன்சள் எனது துடிப்பு வீதத்தைக் கூட்டுகின்றன. ரவி பயப்படும்போது, உடற் பயிற்சியில் ஈடுபடும்போது, அல் லது சில மருந்து வகைகளை உட்கொள்ளும்போது இந்நிலை ஏற்படுகிறது. எனது துடிப்பை ஆய்வதற்கு வைத்தியர்கள் ஒரு எளிய கருவியை (Stethoscope) பயன்படுத்துவதை நீங்கள் உங் கள் அனுபவத்திலும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். என் கதையைக் கேட்டுக்கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொரு வரிடமும் என்னைப்போன்ற ஒருவர் பணியாற்றுகிறார் என் பதை உங்களால் மறுக்க முடியாது.
நான் துடிக்கும் முறையை உங்களுக்குக் கூறவா? எனது துடிப்பானது சந்தம் பொருந்தியவொரு இயக்கமாகும். இதில் எனது இதயவறைத் தசைகளே முக்கிய பங்கை வகிக்கின்றன. எனது இரண்டு இதயவறைகளும் ஒரே தடவையில் சுருங்குவதன் மூலம் துடிப்பு ஆரம்பிக்கின்றது. இந்நேரத்தில் கூடங்கள் தளர்ந்த நிலையில் இருப்பதோடு அவை நாளக்குருதியினால் (Venous Blood) நிரப்பப்பட்டுக்கொண்டிருக்கும். இதயவறை சுருங்கும் போது, இதயவறையிலிருந்த குருதியானது அமுக்கத்துடன் நாடிகளினூடாகப் பீறிட்டுப் பாய்கின்றது. இதைத்தொடர்ந்து இதயவறைகள் தளர்ந்து சற்று ஒய்வெடுக்கும்போது கூடங்கள் இலேசாக சுருங்கி தன்னகத்தேயுள்ள குருதியைக் கூடவிதயவறை வால்வுகளினுாடாக இதயவறைக்குட்செலுத்த உதவுகின்றன. இவ்வாறு ஒரு இதயத்துடிப்பானது (Heart Beat) நிறைவேற்றப் படுகின்றது. இதனை வைத்திய நி புணர் க ள் இதய வட்டம் (Heart Cycle) என்பர். ரவியின் ஒரு இதய வட்டமானது 0, 8 செக்கன்கள் நீடிக்கின்றது. இதுவே ஒரு துடிப்புக்கு எடுக்கும் நேரமாகும். இதயத் துடிப்பின் போது ஏற்படும் இதயவொலிக் குக் (Heart Sound) காரணம் இதயவால்வுகள் மூடப்படும் சத்த மாகும். இதயவறைகள் சுருங்கும்போது கூடயிதயவறை வால்வு கள் மூடப்படுகின்றன. இதனால் குருதி கூடங்களுக்கு மீளப் பாய்தல் தடுக்கப்படுகின்றது. இவ்வால்வுகள் மூடப்படும் துடிப் பின் ஆரம்ப ஒலி லப் (Lubb) எனும் சந்தம் உரப்பு குறைந்த தாகவும், இதயவறைகள் தளரும் போது நாடிகளின் அடியில் உள்ள அரைமதி வால்வுகள் மூடப்படும் இரண்டாவது ஒலி உரப்பு கூடிய டப் (Dup) எனும் சந்தமுடையதாகவும் இருக் கும். இவ்வால்வுகள் மூடப்படுவதனால் நாடிக்குருதியானது மீள இதயவறைகளுக்குப் பாய்தல் தடுக்கப்படுகிறது
(தொடர்ச்சி. அடுத்த இதழில்)

தோழன்
மல்லிகைப் பந்தலும் மலர்ந்த பூக்களும் . ஒரு மதிப்பீடு
(தொடர் கட்டுரை - சென்ற இதழின் தொடர்ச்சி).
மல்லிகைப் பந்தல் இத்தொகுதி மூலம் ஆற்றலுள்ள ஓர் இளங்கவிஞனை வெளிப்படுத்தியமை, ஈழத்து இலக்கியத்துறைக் காற்றிய சீரிய பங்களிப்பாகும்.
மல்லிகையில் இருபதாண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற ஐம்பத்தொரு கவிஞர்களின் கவிதைகளது தொகுப்பாக மல்லி கைக் கவிதைகள்’ என்ற தொகுதி அமைந்துள்ளது. இத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளிற் காணத்தகும் "மல்லி கைத் தன்மை'யைத் தமது முன்னுரையில் தொகுப்பாளர் முரு கையன் திறம்பட எடுத்துக்காட்டியுள்ளார். ஒன்பது வகையாக அவர் வகுத்துள்ள 'மல்லிகைத் தன்மைகளின் சாரத்தைப் பின் வருமாறு குறிப்பிடலாம். நடப்பியல் வாழ்வுடன் தொடர்பு, சமுதாயச் சீர்கேடுகள் தொடர்பான எதிர்ப்புணர்வு, உழைப் பாளர் வர்க்கச் சார்பு, மனித நேயத்துடன் மனுக்குல மாண் பினை எடுத்தியம்பல், போராட்ட உணர்வு, எதிர்காலம் பற் றிய நன்னம்பிக்கை என்பவையே அவை, மல்லிகையின் "மல்லி கைத் தன்மை தொடர்பாக, முருகையன் குறிப்பிடும் இன் னோர் அம்சமும் மனங்கொளத்தக்கது; 'தனி ஆளுமைகளின் நூதனப் பண்புகளும் வினோதப் போக்குகளும் என்றேனும் எங்கேனும் காணப்படும் ஆயிரத்திலொரு விசித்திரத் தனிமனித இயல்புகளும் அழுத்தம் பெறும் வகையில் ஆக்கப்படுகின்ற அபூர்வ அகமுகப் படைப்புகள் "மல்லிகையில் அதிகம் இடம் பெறுவதில்லை என்பதையும் இவ்விடத்திலே சொல்லி வைக்க 6) 17 Lib**
மரபும், புதுமையுமாகக் கவிஞர்களின் விருப்பு முனைப் புகளுக்கேற்ப "மல்லிகைக் கவிதைகள்' அமைந்துள்ளன. இத் தொகுப்பில், பிரபலமான ஈழத்துக் கவிஞர்களும், தமது திறமை யால் முன்னுக்கு வந்து கொண்டிருப்போரும், இன்னும் முன் னேறவேண்டும் நிலையிலுள்ளோருமாக முத்திறக் கவிஞர்களை இனங்காண முடிகின்றது. பெரும்பாலான கவிஞர்களிடம் சமூகப் பார்வை உள்ளார்ந்திருப்பதை அவர்தம் கவிதைகள் புலப்படுத்து கின்றன. ஆயினும், அவரவரின் ஆளுமை வீச்சு, கவித்துவப்

Page 9
14 தோழன்
போக்கு, புலப்பாட்டுத்திறன் முதலானவற்றுக்கேற்பக் கவிதை களும் வேறுபடுகின்றன. சிலரது கவிதைகள் கவித்துவமற்ற வெறும் பிரசார வீச்சுகளாக அமைந்துவிட, ஆற்றலுள்ள வேறு சிலர் பிரசாரத்தை உள்ளடக்கிய கவித்துவச் சுவை ததும்பிய கவிதைகளைப் படைத்துள்ளனர். அவற்றுக்கே ஆயுள் நீட்சி என்பது கூறாமலே பெறப்படும்.
இத் தொகுதிக் கவிதைகள் பல்வேறு அனுபவங்களை வாச கர்களுடன் பகிர்ந்துகொள்கின்றன. சமுதாயப் பிரச்சினைகளைத் தார்மீக ஆவேசத்துடனும், கலைத்துவத்துடனும் உணர்த்தும் கவிதைகளும், விரிந்த உலகப் பார்வையுடன் விளங்கும் கவிதை களும், மரபு வழியில் நல்லதை விழைந்தும், தீயதை வெறுத்தும் நோக்கும் கவிதைகளும், சமூகப் பார்வையின் அடித்தளத்திற் காட்சிச் சித்திரங்களாக விளங்குபவையும், இயற்புனைவுடன் இயங்குவனவும், கிராமியத்தை அற்புதமாகச் சித்தரிப்பவையும் எனப் பலவாறான நோக்குகளும், போக்குகளும் கொண்ட கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
இத்தொகுப்பில் இடம்பெறும் சிறந்த கவிதைகளாகப் புதுவை இரத்தினத்துரையின் கழுகும் காட்டெருமையும், வயற் காரரும், கருணையோகனின் உயர்திரு கந்தசாமியும் ஒரு மரண ஊர்வலமும், மு. கனகராஜின் தேவதாருப் பெட்டிக்குள் ஒரு தேசியக் கவிஞன், சண்முகம் சிவலிங்கத்தின் விஸ்வரூபங்கள், பாண்டியூரனின் சேனை அழிகிறது, கல்முனைப் பூபாலின் நெருங்கி வருகிறேன் , முருகையனின் வேலியும் காவலும், சி. மெளனகுருவின் ஒரு கிராமத்துக் காலைப்பொழுது, சு. வில்வ ரத்தினத்தின் வெறுங்காற்றில் கலந்திடுமோ., வ. ஐ. ச. ஜெய பாலனின் எங்கள் கிராமத்துப் பட்டதாரி ஆகியவை விளங்கு கின்றன. ஆகசி கந்தசாமி, மு. சடாட்சரன், எம். எச் எம். சம்ஸ் சோலைக்கிளி, நீலாவணன், பண்ணாமத்துக்கவிராயர், மருதூர்க் கனி, அன்பு முகைதீன், அ. யேசுராசா, முல்லையூரான், மேமன் கவி, வஸிகரன், ஜீவா-ஜீவரத்தினம், சபா. ஜெயராசா ஆகியோ ரது கவிதைகள் குறிப்பிடத்தக்கனவாயுள்ளன. பா. சத்தியசீலன், காரை செ. சுந்தரம்பிள்ளை ஆகியோரது கவிதைகள் மரபுவழி யில், நல்லதை விழைவதும், தீயதை வெறுப்பதுமான போக்கில் அமைந்தவையாகும். ச. வே. பஞ்சாட்சரத்தின் ‘கண்டி அழகு" அவர் தம் இயற்கைப் புனைவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கு கின்றது.
மல்லிகைக் கவிதைகளை இருபகுதிகளாகப் பகுத்திருப்பதும் அதற்கான காரணமும் பொருத்தமானதே. புதிய ஆற்றல்களை

5 தோழன்
இனங்காண்பதற்கு இத்தகைய ‘பிரிவினை" உதவியுள்ளது. இவ் வகையில், இத்தொகுதியின் இரண்டாம் பாகத்தில், சந்திரா தியாகராசா, கலா விஸ்வநாதன், மருதமுனை ஹசன், உஸ்மான் மரிக்கார், த ம ய ந் தி கந்தசாமி, ஆ. இரத்தினவேலோன், வ. இராசையா ஆகியோர் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களாகத் தம்மை இனங்காட்டியுள்ளனர். "இருளுண்மை" (சந்திரா தியா கராசா), ‘ஒரு நடுநிசியும் சப்பாணி நினைவுகளும்" (மருதமுனை ஹஸன்), “சூரியனைச் சுட முடியுமா? (உஸ்மான் மரிக்கார்) ஆகியன, இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற கவிதைகளுள் விதந்து குறிப்பிடத்தக்கவையாகும்.
(கலாநிதி துரை மனோகரன் )
இத்தொகுதிக்குரிய சிறப்புக்களில் ஒன்று, மூன்று மொழி பெயர்ப்புக் கவிதைகளையும் இணைத்திருப்பதாகம். சர்வதேச ரீதியிற் கணிப்புப் பெறத்தக்க சிங்கள, ஆபிரிக்க, உக்ரேனியக் கவிதை ஒவ்வொன்றைப் பிரசுரித்திருப்பது வரவேற்புக்குரியது. சிறந்த பிறமொழிக் கவிதைகளோடு, ஈழத்துத் தமிழ்க் கவிதை களையும் ஒப்பீடு செய்வதற்கு ஒரளவாயினும் இத்தகைய முயற்சி பங்களிப்புச் செய்யும். இம்மொழிபெயர்ப்புக்கவிதைகளின் அழகிய மொழிவார்ப்புக்குக் காரணமாக இப்னு அஸூமத், எம். பால கிருஷ்ணன், கே. கணேஷ் ஆகியோர் ஈழத்துக் கவி உலகின் பாராட்டைப் பெறவேண்டியவர்கள்.
கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலான ஈழத்துத் தமிழ்க் கவிதைப் பரப்பில், மல்லிகையின் கணிசமான பங்களிப்பினை மல்லிகைக் கவிதைகள் உணர்த்தி நிற்கின்றன. சில சாதாரண தரக் கவிதைகளும் மல்லிகையில் இடம்பெற்றிருப்பினும், அவ் வப்போது சர்வதேச ரீதியிற் கணிப்பிடத்தக்க சில கவிதைகளின் களமாகவும் அது விளங்கி வந்துள்ளது என்பதை இத்தொகுதி சுட்டுகின்றது. அதேவேளை, க ட ந் த இரு தசாப்தங்களுக்கு மேலான ஈழத்துக் கவிதைத் துறைபற்றிய ஒரு வெட்டுமுகத் தோற்றமாகவும் இந்நூல் விளங்குகின்றது.
(மீண்டும் மலரும்)
VVVVVVVVV VVVVVVVVVVVVVVVV VVVVVVVVVVVVVVVVVVV
கதைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற் பனை, ஆக்கங்களை தபால் மூலமே அனுப்புதல் வேண்டும் அவற்றைத் திருத்தவும், சுருக்கவும் ஆசிரியருக்கு உரிமையுண்டு.

Page 10
16
விடுதலை
தோழன்
ராகங்கள்!
- ஓட்டமாவடி அறபாத்
ஒவ்வொரு முகாமுக்குள்ளும்
ஒரு மெளனக்குகை வளர்ந்திருக்கும்!
அழுதழுது ஒய்ந்துபோன விழிகள், நம்பிக்கைத்தீயில் வெந்து சாகும்!
இதய கீதங்கள் விடுதலை ராகத்தை விம்மி இசைக்கும்! வறுமைக்கரங்கள் விடிய விடிய
தாளங்கொட்டும்!
பெரு மூச்சின்
உஷ்ண வெறி குடிசைகளை கருகவைக்கும் இழந்த மண்ணின் கனவுகள் இரவுகளைக் காயப்படுத்தி, ஏக்கங்களாய் கொதித்து அடங்கும்
இன்றைய மழலைகளுக்கு இவைகள் எதை உணர்த்தும்? ஒப்பாரிகளை தாலாட்டென்றும், நிவாரணங்களை பரிசென்றும் நினைத்துக் கொள்ளுமோ?
எம் சோக வரலாற்றை "அம்புலி’க் கதையென்று அசட்டைப்படுத்தலாம். அதனால்முலைப்பாலுடன் தாயகச் சத்தையும் சத்தமில்லாமல் ஊட்டு வளர்ந்த பின் அராஜகக் கரங்களில் மூர்ச்சையுற்றுக் கிடக்கும் நம் மண்ணை உயிர்ப்பிக்கட்டும்!
நாளைய சரித்திரங்கள்!
எரியும்
எம் தீவில் சமாதான மழை தொலைந்து போனதேன்? வரட்சிக்குள் மனித வயல்கள் விழுந்ததேன்? சிந்தனைத் தென்றலில் மிதந்து பார் மனிதனே! இங்குள்ள
ஒட்டைகளின் சரித்திரங்கள்
புலப்படும்! நாளைய சரித்திரங்கள் வசந்தத்தினால் நிரப்பப்படட்டும்!
நிசா ஏ. கரீம்

தோழன் 7
gхххххххххххххххххg C சிறுகதை C
}OK
CCCCCCCCCCC மனிதம். * நிந்ததாசன் *
குரியன் முதல் முகங் காட்டும் கிழக்கு. விழிகளை இழுத்துச் செல்லும் கடல். அது தாளமிசைத்துக் கொண்டிருந் தது. சூரியன் தொலையும் திசையில் பசுமையின் அரசாட்சி. வயல்வெளிகள் தென்றலைத் தழுவிக் கொண்டிருந்தன. பெரிய, சிறிய வீடுகள் ஊருக்கு முகவரி கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த சோலையூரின் இதயம் அந்த நகரந்தான். மனித நாவு களுக்கு சுவை தடவும் சந்தையது. மக்கள் பூக்கள்ாக மலர்ந்த சோலையில் ஒரு பாலைவன வேளை,
காலை நழுவும் நேரம். பத்து மணி. குண்டு ஒன்று சுவா சித்ததினால் இருபத்தைந்து உயிர்கள் சுவாசம் இழந்தன. பல பேர்களின் மேனிகளில் இரத்தத் தடவல். அந்த முஸ்லிம் நகரம் சுடுகாடு முகவரியை மாற்றிக் கொண்டது. இரத்த நதி உற் பத்தியாகியது. பட்டாசு வெடிபோலச் சிதறிய மக்கள் பீதி யுடன் வீதிகளை முற்றுகையிட்டனர். ஊர் முழுதும் ‘ஒப்பாரி' ராகம். ‘இவனுகளை சும்மா உடப்படாது! ஈன இரக்கமற்ற நாய்கள்!' - கோபம் கொடிபிடித்தது. கவலை கருத்தரித்தது. "அவனுகளுக்கு நாடு வேணும்டா எங்களை ஏன் அழிக்கிறா னுகள்?' - இளைஞர்களின் ஆவேசம் கோசம் எழுப்பியது.
"அன்னா! அந்த பஸ் வருது. மறிங்கடா!” கோபத்தின் இறுதி வெளிப்பாடு இளைஞர்கள் பஸ்ஸை மறித்து நிறுத்தி னார்கள். பஸ்ஸில் இருந்தவர்கள் சுவாசித்துக்கொண்டே இறந் தவர்கள் போலானார்கள்,
“தம்முழன் இருந்தா இறங்குங்கடா!’’ இரத்த வெறி உரத் துக் கூச்சலிட்டது. ஐந்து பேர்களை பிடித்துக்கொண்டார்கள் அவர்களின் நிறத்தை பயம் மாற்றிவிட்டது.
"எங்கள உட்டுடுங்க காக்கா! நாங்க என்ன செஞ்சோம்! என்ன பாவம் செஞ்சோம்! எங்க்ள, உங்கட அல்லாஹ்வுக்காக உட்டுடுங்க. . " ஒரு பெரியார் கெஞ்சல் கடிதத்தை வார்த் தைகளால் எமுதினார்.

Page 11
18 தோழன்
“இவனுகள் ர கையைக் கட்டுங்க!" ஒரு இளைஞன் அவ - சரத்தை முடுக்கி காரியத்தை முடித்தான். அந்த ஐந்து பேரையும் கட்டி இழுத்துக்கொண்டு சென்றார்கள்.
‘இனித் தமிழனை வெக்கிறதில்ல!" ஒரு இளைஞன் கர்ச்சித் துக்கொண்டே அவனின் பலத்தை அவர்களிடம் சமர்ப்பித்தான்.
'கடவுளுக்காக உட்டுடுங்க காக்கா! எங்கள. ஒண்டுமே செய்யாதீங்க. ஐயோ! கடவுளே...!"
இரத்தக் கண்ணிர் இறுதிப்பயணத்தை நெருங்கிக் கொண் டிருந்தது. அவர்கள் செல்லும் வீதியில் மனித வாசம் மறைந்தே இருந்தது.
அப்போது பொலிஸ் ஜீப் வண்டி வேகத்தையே தாகமா கத்தீர்த்து வந்து கொண்டிருந்தது. அவர்களைப் பிடித்துச் சென்ற உணர்ச்சி உடல்கள் சிதறி ஓடி மறைந்து விட்டன, அந்தத் தமி ழர்கள் ஐந்து பேரும் பக்கத்துச் சுவரில் ஏறிக்குதித்து பதுங்கிக் கொண்டனர்.
'அவனுகள் திரும்பவும் வருவான்கள் நாம் எப்படியாவது தப்பிக்க வேணும்!" மூச்சிரைக்க வார்த்தைகள் புறப்பட்டன. சத்தம் கேட்டு காசிம் போடியார் விழிகளை மேயவிட்டார். அவரைப் பயம் பற்றிப்பிடித்துக்கொண்டது. அவரின் மூளை இயந் திர வேகத்தில் வேலை செய்ய ஆரம்பித்தது. 'அல்லாஹ்..! ஐந்து உயிர்கள்!" அவரின் வாய் அவருக்குத் தெரியாமலேயே இரகசியம் பேசியது.
துணிவைத் தூக்கிப் பிடித்துக்கொண்டார் காசிம் போடி யார். அவர் அந்தத் தமிழர்களுக்கு முன்னாலே வெளிப்பட்டார். மீண்டும் பயம் கைப்பற்றியது.
"எங்கள உட்டுடு . காக்கா. உட்டுடுங்க காக்கா!'" அழுகையை அழைத்துக் கொண்டனர்.
*பயப்புடாதீங்க! நான் மிருகமில்ல . உங்களப் போல மனிசன். அவசரமா இப்படி வாங்க ...!" அவருடைய வார்த் தைகள் மானுட நேசத்தின் சின்னங்களாயின. அவரின் இதயத் தினுடைய வண்ணங்களாயின. சென்ற உயிர் திரும்ப வந்து சேர்ந்தது போன்றிருந்தது. பிரிந்த காதலி வந்து இணைந்தது போன்ற திருப்தி அவர்களுக்கு

தோழன் 9
"ஐயோ! பாவங்கள் எவனோ குண்டு வெச்சதுக்கு இந்த மனுசர்கள் என்ன பாவம் செய்தாங்க. ' காசிம் போடியாரின் மனைவி கூட பெண்மையின் மெல்லிய இதழ்களைத் திறந்து காட்டினாள். அதைக்கேட்டு மனம் நிறைந்து கொண்டார்கள் அவர்கள்.
'புள்ள! இப்ப இவர்கள என்ன செய்யுறது? காப்பாற்ற வேண்டுமென்ற ஆவல்! ஆனால் வழியைத்தான் அவர்களால் தேட முடியவில்லை.
*கிணற்றுக்குள் இறக்குவோம். தண்ணியும் அவ்வளவு இல்லதானே?’ அவருக்கும் அது சிறப்பாகப் படவே, அவசரம் உயிரோடு இணைந்து செயற்பட்டது. அவர்கள் ஐந்து பேரும் கயிற்றின் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கிக் கொண்டனர். கிணற்று வாழ்க்கை அவர்களுக்குக் கிடைத்தது. அவர்களின் பார்வையில் விலைமதிக்க முடியாத நன்றி வழிந்தோடியது. காசிம் போடியார், அவர்களுக்குத் தெய்வமாகவே தெரிபட்டார்.
*காசீங்காக்கா காசீங்காக்கா" இளைஞர்களின் முகவரி அவர்களின் குரலில் தெரிந்தது. அவர் கதவை திறந்தார்.
* இங்க அந்த தமிழன்கள் ஒழிச்சிருக்கான்களோ தெரியாது. தேடிப் பார்க்கவா?’ உத்தரவு கேட்டார்கள்.
“எனக்கென்டாத்தெரியாது. தேடிப்பாருங்க!" அவர் அனு மதியை திறந்து வைத்தார். எல்லா இடங்களிலும் அவர்களின் விழிகள் விழுந்தது. காசிம் போடியார் மெளனத்தை மரியாதைப் படுத்திக் கொண்டிருந்தார். கிணற்றுப்பக்கம் யாராவது தலை காட்டுகின்றானா என்பதைக் கவனிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது நல்ல வேளை, தண்ணீர் வழங்கித் தாகந்தீர்க்கும் அந்தக் கிணறு அவர்களிடமிருந்து தப்பிவிட்டது. அது ஐந்து உயிர்களைப் பாதுகாத்த வள்ளல்.
"அவனுகள் வேறெங்காவது ஓடி ஒழிஞ்சிருப்பான்கள் நாங்க வாரம் !’ அறிவைத் தொலைத்து உணர்ச்சியைச் சூடிக் கொண்ட அந்த இளைஞர்கள் சென்று விட்டார்கள்.
யா அல்லாஹ் ...!" இறைவனுக்கு அவரின் நினைவுகள் சமர்ப்பணமாகின.
பகற் சாப்பாட்டு நேரம் யாரும் வருகிறார்களா? என்று விழிகளைத் தூரச்செலுத்திக் கொண்டிருத்தார் காசிம் போடி யாரின் மனைவி. காசிம் போடியார் வாளியை பரிமாறும் பாத்

Page 12
20 தோழன்
திரமாக்கி, அதில் சாப்பாட்டை வைத்து கிணற்றுக்குள் செலுத் தினார். ஆனால் அந்தத் தமிழர்களுக்கு பயம் தான் பசியாக இருந்தது. வயிற்றில் பசி ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. என்றா லும் அன்பிற்கு மரியாதை செலுத்தி உணவை சாப்பிட்டார்கள்.
சூரியன் காணாமல் போய் விட்டான். இரு ள ஈ ட்சி எங்கும். அந்த ஐந்து தமிழர்களையும் வெளியில் எடுத்தார் காசிம் போடியார். அவரின் காவில் ஐந்து பேரும் விழுந்து விட்டார்கள்.
‘இதெல்லாம் என்னப்பா?. மனுசன மனுசன் மதிக் கலாம்; மதந்தான் வேறானதே தவிர, மற்றும்படி எல்லாம் ஒண்டுதான். ம த ங் களும் கொலைகளைக் கண்டிக்குது. அத உணர்ந்தா இந்த நாடே சுடுகாடா மாறாது . மதவெறியை உட்டுப்போட்டு மனுசநேசத்தை விரும்புறவன்தானப்பா உண் -மையான மனுசன்'" இதயத்தை அவர் வெளிச்சத்தில் வைத்தார்.
**இந்த ரூமுக்குள்ள வந்து படுங்க.. மிசைக்கப்பட்டது.
O SO
அன்பின் நாத
அவர்களுக்கென்று இரவில் ஒரு அறையும், பகலில் கிண -றும் ஒதுக்கப்பட்டன. இப்படி ஆறு நாட்கள் இழுபட்டே கழன்று சென்றன. ஏழாவது நாள் சுமூக நிலை சுகசெய்தி வாசித்தது. காசிம் போடியார் ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்ய போயிருந்தார். அவரின் வரவை அவர்கள் ஆசையோடு நேசித் திருந்தார்கள் 1.
0 முற்றும். 30
0 பெண்மையினை மதிப்பவன் உண்மையில் புனிதமானவன். 0 பெண்கள் உலகத்தின் ஒளிகள் கனிகள் போன்றவர்கள் 0 0 என்றாலும் விலைமதிக்க முடியாத விதைகள் அவர்கள்! ? C அவர்களின் புன்னகைக்காக பாடு படுங்கள்! விழிகளில் 08 O வழிந்தோடும் கண்ணிரை கத்தரிக்க முயலுங்கள்! அன்பே 08 20 உருவானவர்கள்! பண்பையும் அவர்கள் பேணிக் கொண் 03
0 டால் நன்மை விளையும். 3Ck
குறிப்பு: சென்ற இதழில் திருத்தம்.
கடுகுகளின் காரங்கள் - சுனன்.
1. சூரிய குடும்பத்திற்கு மிக சமீபமாகவுள்ள நட்சத்திரத்திற்கு
உள்ள தூரம் - 4, 3 ஒளி ஆண்டு 2. சத்திர சிகிச்சையில் பயன்படும் கதிர் - கழிஒலிக்கதிர்

தோழன் 2.
மலையக நாவல்கள் - ஒர் அறிமுகம்
கடந்த மூன்று தசாப்தங்களாக ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை நல்கி வரும் மலையகம் ஏனைய இலக்கியத் துறைகளைப் போலவே நாவல் இலக்கியத் துறையிலும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வளர்ச்சி நிலையை எட்டிக் கொண்டிருக்கின்றமை மனங்கொளத் தக்கது. மலையகத் தொழி லாளரின் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் வாழ்வியல் அம் சங்களையும் முனைப்பாகக் கொண்டு நாவல்களாகவும் குறு நாவல்களாகவும் இது வரை தமிழிலும் ஆங்கிலத்திலுமாகச் சுமார் பத்தொன்பது படைப்புகள் வெளிவந்துள்ளன.
மலையகத் தொழிலாளரின் சோதனைகளும் வேதனை களும்மிக்க கடந்த கால வரலாற்றையும் அவர்களது துயரங் களையும் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் வாழ்வியல் அம் சங்களையும் பிரதிபலிப்பனவாகவும் அலசுவனவாகவும், நாட் டார் பாடல்கள், க வி ைத க ள் புதுக்கவிதைகள், சிறுகதை கள் முதலியன குறிப்பிடத்தக்க அளவு வெளிவந்துள்ளனவேனும் மலையக நாவல்களிலேயே மேற்கண்ட அம்சங்கள் பெருமள விற்கு விரிவாகவும் ஆழமாகவும் விவரிக்கப்பட்டுள்ளமையும் அலசப்பட்டுள்ளமையும் மனங்கொளத்தக்கது.
மலையக நாவல்களுட் பெரும்பாலான கதை இலக்கியங் களாக மட்டுமன்றித் தொழிலாளரின் வரலாறு கூறும் ஆவணங் களாகவும், மூன்றாம் தர நாவல்களின் முடிவில் இவை யாவும் கற்பனை எனக் கூறப்படுவது போலல்லாமல் யதார்த்த நிலை -யைப் புலப்படுத்த முனையும் படைப்புகளாகவும் விளங்குதல் அலட்சியப் படுத்த முடியாததொன்றாகும்.
*மேலை நாடுகளில் 'மறுமலர்ச்சி யுகம் பெற்றெடுத்த ஒரு கலை வடிவமே நாவல்" என்பர். இன்றைய இலக்கிய கர்த் தாக்கள் தாம் கூறவிரும்பும் செய்திகளையும் அரசியல், சமூக பொருளாதார நிலைமைகளையும் சிக்கல்களையும் எரியும் பிரச் சினைகளையும் விரிவாகவும் ஆழமாகவும் அலசி விமர்சிக்க ஏனைய இலக்கிய வடிவங்களிலும் பார்க்க நாவல் இலக்கியமே அவர் களுக்கு அதிகம் கைகொடுத்து உதவுகின்றது.
மலையகத் தொழிலாளர் தொடர்பாக இதுவரை வெளி வந்த தமிழ் நாவல்களை அவை சித்தரிக்கும் காலப்பகுதியை

Page 13
22 * . , தோழன்
அடிப்படையாக வைத்து நோக்கும் போது 1964ம் ஆண்டு வெளி வந்த கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப் பச்சை” என்னும் நாவலே முதலிற் கவனிக்கப்படவேண்டியது.
தமிழ் நாட்டின் பின்தங்கிய கிராமப் புறங்கள் சிலவற் றையும் மலையகப் பெருந்தோட்டங்கள் சிலவற்றையும் களங் களாகக் கொண்டு, மலையகத் தொழிலாளரினது வருகையின் ஆரம்பம் தொட்டு ஏறத்தாழ நூறாண்டு கால வரலாற்றைப் பிரதிபலிக்கும் இந்நாவல், சுமார் முந்நூற்றிருபத்தெட்டு பக்கங் களாக நீண்டுள்ளது.
மலையகத் தொழிலாளரின் சோக வரலாற்றினைச் சித் திரிக்கும் முதலாவது தமிழ்ச் சிறுகதை புதுமைப் பித்தனின் "துன்பக்கேணி என்னும் படைப்பேயாகும். தூரத்துப் பச்சை என்னும் நாவலையும் துன்பக்கேணியையும் ஒப்பு நோக்கும் போது, சுமார் நாற்பது பக்கங்கள் கொண்ட துன்பக் கேணி என்னும் நீண்ட சிறுகதையே தூரத்துப் பச்சை என்னும் நாவ லாக விரிவடைந்துள்ளது எனக் கூறத்தக்க வகையில் அவற் றிடையே நெருங்கிய ஒற்றுமைகள் பல காணப்படுகின்றன.
தமிழகத்தின் மிக ப் பின்தங்கிய கிராமப் புறங்களுள் ஒன்றான செந்தூர்க் கிராமத்தை ஒட்டியிருந்த சேரிப்புற மக் களின் பரிதாபகரமான வாழ்க்கை நிலையையும் மலையகத்தில் அவர்களை மலிவுக் கூலிகளாகவும் நவீன அடிமைகளாகவும் குடி யேற்றுவதற்காக 'ஆசை காட்டி ஆள் திரட்டும் முயற்சி"யில் ஈடுபடும் கங்காணியின் செயல்களையும் வெளிப்படுத்துவதுடன் ஆரம்பிக்கும் இந்நாவல், ஏறத்தாழ நூறாண்டு கால மலையகத் தொளிலாளரின் வரலாற்றையும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை யும் அவலங்களையும் கால ஓட்டத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங் களையும் சித்தரித்த பின் கொடுமைகள், அக்கிரமங்கள், ஒடுக்கு முறைகள் முதலியவற்றுக்கெதிராகத் தொழிலாளிவர்க்க இளந் தலைமுறையினர் விழிப்புற்றுக் கிளர்ந்தெழுந்து போராடுவதை யும் தோட்ட அதிகாரிகள் பொலிசாரின் துணையுடன் தயை தாட்சண்யமின்றி அவற்றை அடக்க முனைவதையும் காட்டுவ துடன் நிறைவு பெறுகின்றது.
நாவலின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, நாவலாசிரியர் பல்வேறு உத்திகளைக் கையாண்டு, இன்றைய மலையகத் தொழிலாளரின் முன்னோர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்தின் மிகப் பின் கங்கிய கிராமப்புறங்களை ஒட்டியிருந்த சேரிப் புறங்களில் வாழ்ந்துக் கொண்டிருந்த பரி

தோழன் z3
தாபகரமான வாழ்க்கை நிலை, அவர்களது மிகப் பின்தங்கிய சமூக பொருளாதார நிலைமைகள், அடிக்கடி ஏற்பட்ட கொடிய பஞ்சங்கள் அவர்களை வாட்டி வதைத்தமை, அந்நிலையிலேயே இலங்கையிற் பிரித்தானியரால் ஏற்படுத்தப்பட்ட பெருந்தோட் டங்களில் மிகக்குறைந்த கூலிக்கு மிகக்கூடிய உழைப்பினை நல் கச் சுதேசிகள் முன்வராமையினால் கங்காணிகள் மூலம் தமிழ கக் கிராமப் புறங்களிற் கனிவுடனும் பரிவுடனும் ‘ஆசைகாட்டி ஆள் திரட்டும் முயற்சி மேற் கொள்ளப்பட்டமை, பஞ்சத்தி னாலும் நோய்களினாலும் மடிந்து கொண்டிருந்த மேற்கண்ட தொழிலாளர்கள் பிறந்த மண்ணைவிட்டு இலங்கைக்குப் போ வதா விடுவதா என்ற நீண்ட மனப்போராட்டத்தின் பின் கங் -காணிமாரின் மயக்கு வார்த்தைகளை நம்பி மலையகத்திற்குப் புறப்பட்டமை, சேரிப் புறங்களிலிருந்து கால்நடையாகவே நூற் றுக் கணக்கான மைல்கள் இரவு பகலாக மூட்டை முடிச்சுகளு டனும் குழந்தைகளுடனும் மந்தைக் கூட்டங்களைப் போல் கங்
கலாநிதி. க. அருணாசலம், முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்.
காணிமார்களால் விரட்டப்பட்டு இலங்கைக்குக் கப்பலேறுவதற் காகக் கடற்கரையை அடைவதற்குள் அனுபவித்த கொடுமை கள், துன்பங்கள், அவற்றைச் சகிக்க முடியாத நிலையிற் சிலர் கங்காணிமாருக்கு ‘டிமிக்கி விட்டுவிட்டுத் தமது கிராமங்களுக்கு தப்பியோடியமை, தப்பியோட முடியாதவர்களும் ‘பிச்சை வேண் டாம் நாயைப்பிடி’ என்ற நிலையில் தமது சேரிப்புறங்களுக்கு திரும்ப விரும்பியமை, அபாயம் நிறைந்த கடற் பயணத்தின் போது அவர்கள் அடைந்த வேதனைகள், உயிர் இழப்புக்கள் , தலை மன்னாரை அடைந்த பின் மீண்டும் கால்நடையாகவே பல நாட்கள் இரவு பகலாகக் கொடிய மிருகங்களைக் கொண்ட அடர்ந்த காடுகளுக்கூடாகப் போதிய" உணவோ நீரோ ஒய்வோ இன்றி மலையகம் நோக்கிப் பயணம் மேற்கொண்டமை, இடை யிலே கொடிய தொற்று நோய்கள், களைப்பு மிகுதி முதலிய வற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் முதலியவற்றையெல்லாம் நாவலின் முதல் அறுபது பக்கங்களுள் வாசகர் உள்ளத்தைப் பிணிக்கும் வகையில் திரைப்படக் காட்சி போல் சித்தரித்துச் செல்கின்றார்.
(அடுத்த இதழிலும் முகம் காட்டும்.)

Page 14
24
முகம் புை
கார் முகிலில் முகம் புதைத்து நின்ற வேளை நிலவு கலங்குதென்று நெருங்கி வந்தாய் ß!
இதயம் உண்டென்று நீ உன்னையே இழந்தாய்!
女 வேரில்லா வானத்தில் இரவென்றும் பாராமல் மலைமீது தவழ்ந்து வந்தேன்! மனம் பறித்தவனே
இதயத்தை புனிதமாக்கு,
உனக்குள் ஒரு உதயம் உருவ நினைவுகளைப் புனிதமாக்கு; உனக்குள் ஒரு சுகம் பிரசவம நீ செல்லும் பாதை நேரான காலத்தை வெல்லும் மனிதன
உன் சொல்லில் கல்லும் கரை தீ மனிதன் என்பதை மறந்து
நன்றி ஒருவருக்கு செய் தறுங்கொள் என வேண் தெங்கு தானுண்ட நீை தருதலால்.

தோழன்
T
தத்த முழுமதி
செல்வி சுஜா கிருபராஜா
மனமுடைந்து போனதேனோ?
食 நீல வானத்தில் நீ யன்று நானென்று சொன்னவைதான் புரியவில்லை!
Y முகில்கள் தான் சென்றும் முழு மதியாய் நின்ற போதும் முடிவுரையைத் தேடியே முகம் புதைக்கும் மீண்டும்!
ாகும்!
ாகும்! நா என்பதை ஆராய்ந்து பார். ாக வாழ்ந்தால் பார்போற்ற நிலைப்பாய்!
யும்! விடாதே!
.r**శ./****లోk_జానపకా, ఎ தக்கால் அந்நன்றி என்று
ர தன் தலையாலே தான்
- ஒளவையார்.