கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தோழன் 1993.08-09

Page 1
leeft - 01 இதழ் = 08 / 1993 ஒகஸ்
இ.
Ř §§`့် \
{{
-L
“ எண்ணிய முடித நல்லவே எண்ணி
திண்ணிய நெஞ்: “ தெளிந்த நல்லறி
- LDAP, F
L S TT L STAAT MTT SYT u u T qSS S LS L YTS TTT uZTKL KZ T T S S ATA LTLuLSL SAu
 
 
 
 

- செப்டம்பர் அன்பளிப்பு ரூ.10/-
s
LLuT uu S Zu LLLLLL LLLLLMMS MALLZZzLLLLL LL LTLLG LLM LMLLLLLL LL LL LLLLLLLLS Y LLL LLS நல் வேண்டும் ால் வேண்டும் Fம் வேண்டும் |வு வேண்டும்?
கவி சுப்ர மணியபாரதி
LLLLLS L S L S LLLLL LL LLLLL LL LLL LMM LTTZZTKLLLLL LSL LMMT SLLLLL LSLS S LSLS

Page 2
தமிழ், சிங்கள, ஆங்கில,
ஹிந்தி திரைப்படங்களுக்கும், |பாடல்களை ஒலிப்பதிவு செய்துகொள்
வதற்கும் நாடவேண்டிய இடம்
CINECITA MUSIC CORNER
8/16, CITYSDE SHOPPING COMPLEX, MAN STREET
Mawanella.
V. P. P. ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

1993 ஜூன் ஆசிரியர்:
தோழன்
ஜூலை நிந்ததாசன் மாதாந்த கலை, மலர் 01 23. நயா வல, இலக்கிய இதழ் இதழ் - 06 மாவனல்லை.
மொழி விழி ஒளிபெற
மொழியறிவு சிறு பருவத்திலிருந்தே சுரந்து ஊற்றெடுக்க வேண்டும். மாணவர்களுக்கு தமிழ் மொழிப்பற்றுதலை கற்பித் தல் மூலம் ஏற்படுத்துதல் மிக வும் அவசியமாகும். இந்தப் புனிதமான பொறுப்புக்குரியவர்கள் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசான்களே!
பக்தி, அன்பு, பண்பு, ஆற்றல், அழகியல் ஈடுபாடு, அறி வியல் நோக்கு மாணவர்கள் மத்தியில் மேம்பாடடைய மொழி தான் வழியாகவும், விழியாகவும் திகழ்கின்றது. கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தலைவர் கள், அறிஞர்கள் மாணவர்கள் மத்தியில் உருவாக வேண்டும். அதற்குரிய அம்சங்களை தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் விதைக்க வேண்டும்; வளர்க்க வேண்டும். இதற்கு தமிழ் மொழியிற் சிறந்த அறிவு, குரல் வளம், கற்பனை வளம், நடித்துக் காட்டுந்திறன், பொது அறிவு, நகைச்சுவைப் பண்பு, கலை ரசனை, வாசிப்புப் பழக்கம் போன்ற தன்மைகள் தமிழ் மொழி கற்பிக்கின்ற ஆசிரியர்களிடம் அமைந்திருப்பது அவசியமாகும்.
லகர - ழகர, ரகர - றகர, னகர - ணகர உச்சரிப்புச்சுத்தம் சில ஆசிரியர்களிடத்தில் இல்லாததன் விளைவாகவும், வகுப்பறை யில் அழகுத்தமிழில் உரையாடாமல் கொச்சைத்தமிழில் உரை யாடுவதினாலும் மாணவர்களின் எழுத்திலும் பேச்சிலும் இவை மிகுந்த பாதிப்புக்களை ஏற்படுத்தி விடுகின்றன.
எமக்குத் தமிழ் மொழியறிவு முதன்மையானது. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்". நாளைய விடியலில் மொழி யறிவுமிக்க தெள்ளு தமிழ் உள்ளங்கள் உதிக்கவேண்டும். தமிழ் மொழி கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களின் பங்களிப்பு ஒன்றே இதற்குத் துணையாகும்.
தமிழ்மொழி கற்பிப்பதற்குத் தகுதியுடைய பல ஆசிரியர்கள் இருக்கின்றனர். நாம் அவர் களை ஊக்குவிப்பதோடு தமிழ் மொ ழி அமுலாக்கல் அமைச்சும் கட்டாயமாக கெளரவிக்க வேண்டும், (ஆ+ர்)

Page 3
02 தோழன்
நமது வானத்தின் கீழ்
நவீனன் Qy
உழைப்பின் மறுபெயர்
மனித சாதனைகளுக்கெல்லாம் என்றும் அடிப்படையாக விளங்குவது, உழைப்பே. உழைப்பு மட்டுமே எவரையும் உயர்த் தும். இந்த உண்மையை எ ல் லோ ரு ம் ஒப்புக்கொள்ளினும், அதனை வாழ்விற் கடைப்பிடிப்போர் ஒரு சிலர் மட்டுமே. அத் தகைய ஒருசிலரில் ஒருவர்தான், யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வந்துகொண்டிருக்கும் "மல்லிகை" இதழின் ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா, பொதுவாகவே சிறு சஞ்சிகைகளின் ஆயுள் மிகக் குறுகியது. அவை தோன்றும்போதே, அவற்றின் 'ஆயுட் பலம்" பற்றிய சந்தேகம் பலருக்கு வந்துவிடுவதுண்டு. அதற் கேற்ப, சில தோன்றிய வேகத்திலேயே மடிந்துவிடுவதுண்டு. இன்னும் சில, சிறிதுகாலம் தொடர்ந்து வாழ்ந்துவிட்டு, அகால மரணம் அடைவதுண்டு. இந்நிலையில் இலங்கையில் இருபத் தைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சஞ்சிகையை வெளியிட்டு ஒருவர் சாதனை புரிந்து வருகின்றார் எனில், அவர் டொமினிக் ஜீவாவாகவே இருக்க முடியும். ஒரளவே பாடசாலைக் கல்வி யைப்பெற்று, சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து, எழுத்துத் துறையில் கால்பதித்து, இலங்கையின் சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற சிறுகதை எழுத்தாளராக முன்னேறி, "மல்லிகை"யின் ஆசிரியராகப் பரிணாமம் பெற்று விளங்குகிறார் ஜீவா. எழுத்தாளர் டொமினிக் ஜீவாவை விட. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா மிகப் பிரபலமானவர்; அதிக சக்தி உள்ளவர், ஈழத்து இலக்கியவுலகிற் பெருந்தாக் கத்தை ஏற்படுத்திய சஞ்சிகைகளுள் மல்லிகை முதன்மையானது. மல்லிகையை வெளியிடுவதோடு மாத்திரம் நின்றுவிடாது, அதன் சார்பில் "மல்லிகைப் பந்தல்" என்ற பதிப்பகத்தைத் தொடங்கி இதுவரையில் இலக்கியத்துறையோடு தொடர்பான ஏழு நூல் களை வெளியிட்டுள்ளார். இந்த மண்ணையும் மக்களையும் தமது மூச்சாகக்கொண்டு உழைத்துவரும் அறுபதைத் தாண்டிய "இளைஞர்' அவர். அரசு வட பகுதிக்கு விதித்த மின்சாரத் தடை, பொருளாதாரத்தடை முதலானவற்றையும் மீறி, தமது முயற்சியினால் பாடசாலைப் பயிற்சிக் கொப்பித் தாள்களில்

தோழன் O3
மல்லிகையை அவர் அச்சிட்டு வெளிக்கொணர்கின்றமை வியப் புக்குரியது; வாழ்த்துக்கும் உரியது. உழைப்புக்கு மறுபெயர் ஒன்றைக் குறிப்பிடலாமெனில் தயங்காது டொமினிக் ஜீவா வைக் கூறலாம்.
நமது தமிழ்க் கல்வி?
சில ஆண்டுகளுக்கு முன் மலையகப் பாடசாலை ஒன்றில் நான் கவனித்து வேதனைப்பட்ட சம்பவம் இது. குறிப்பிட்ட அப்பாடசாலையின் ஒரு புறத்தில் தோட்டப்பாடசாலை ஆசிரி யர்களுக்கான தமிழ்ப் பயிற்சிநெறி நடைபெற்றுக்கொண்டிருந் தது. ஆசிரியர் ஒருவர் பயிற்சிநெறி மாணவர்களுக்குப் பாரதி யின் கண்ணன் பாட்டில் ஒரு பகுதியைக் கற்பித்துக்கொண்டி ருந்தார். தமிழ் வகுப்பு ஒன்று நடைபெறுகிறது என்று நினைத் துக்கொண்ட எனக்கு, அந்தப் பயிற்சிநெறி வகுப்பிலிருந்து வந்த வினோத ஒலிகள் வியப்பை ஏற்படுத்தின. பாடசாலையின் ஒரு புறத்தில் இன்னொரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்த நிலை யில், என் செவிகள் பயிற்சி வகுப்பைக் கவனிக்கத் தொடங்கின. பயிற்சிநெறி ஆசிரியர், "சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ’’ என்ற பாடலைக் கற்பித்துக்கொண்டிருந் தார். கற்பிக்கும்போது, "சூரிய சந்திரரோ" "வானக் கருமை கொல்லோ"? போன்ற ஒவ்வோர் அடியின் இறுதிப் பகுதிகளை யும் ஒப்பாரி போல "ஒஓ!" என்று இழுத்துக்கொண்டிருந்தார். **கண்ணம்மா" என்ற சொல் வரும் இடங்களிலும் அவ்வாறே இழுத்துக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வகுப்பிலிருந்த ஒரு குறும்புக்கார மாணவர் வகுப்புக்கு மேலும் "நகைச்சுவை" யூட்டக்கருதி, ஆசிரியர் ‘கண்ணம்ஆ' என்று இழுக்கின்ற போது, அதே பாணியிலேயே இழுத்து, “கண்ணனுக்கு அம்மா கண்ணம்மா!" என்று புதிய பதவுரை சொல்லிக்கொண்டிருந் தார். ஆசிரியரும் தமது கோமாளித்தனமான 'கற்பித்தலுக்கு'க் கிடைத்த வெகுமதியென மாணவனின் கோமாளித்தனத்தை இரசித்து, மென்மேலும் உற்சாகத்துடன் அதே பாணியில் ஒப் பாரி வைத்துக்கொண்டிருந்தார். நான் நமது தமிழ்க் கல்வி யின் நிலை பற்றி நொந்துகொண்டேன். அவ் ஆசிரியரிடம் கற்றி அதே மாணவர்கள் தான் எதிர்காலத்தில் மலையகத்தில் தமி ழைப் பயிற்றுவிக்கப் போகின்றவர்கள் என்று அன்று எண்ணிய போது, நெஞ்சு பொறுக்கவில்லை. அந்தக் குறிப்பிட்ட பாட நேரத்தில், பாரதியைப் பற்றிய சிறந்த அறிமுகத்தை மாண

Page 4
04 தோழன்
வர்க்கு அளித்து, பயனும் சுவையும் பொங்கக் கண்ணன் பாட் டின் அப்பகுதியைக் கற்பித்திருந்தால், மாணவர் எவ்வளவு பயன் பெற்றிருப்பர்! இலக்கியப் பாடத்தைச் சிலர் பொழுதுபோக் குப் பாடமாக நினைப்பதனாலேயே இத்தகைய அவலநிலை தமிழ்க்கல்விக்கு ஏற்படுகின்றது.
*சிவாஜி கணேசன் கட்டிய கோயில்’
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், தஞ்சாவூரில் என் மனத்தில் பதிந்த நிகழ்ச்சி இது. தஞ்சைப் பெரிய கோயிலை முதன் முறையாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். கம்பீரமான கோபுரத்தையும், அழகான தோற்றத்தையும் கொண்டிருந்த தஞ்சைப் பெரிய கோயிலை ஆர்வமுடன் பார்வையிட்டுக்கொண்டு வந்தபோது, தமிழ் நாட்டின் ஏதோவொரு பகுதியிலிருந்த ஒரு குடும்பத்தினரும் கோயிலைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்த னர். படித்த நடுத்தர வர்க்கக் குடும்பம் போன்று தோன்றியது. கோயிலை அவர்கள் பார்வையிட்டுக்கொண்டு வந்தபோது, அக் குடும்பத்தில் அண்ணன் போலத் தோன்றியவன் பதினைந்து, அல்லது பதினாறு வயது மதிக்கத்தக்க த ன் த ங் கை யை ப் பார்த்து, 'இது யாரு கட்டின கோயில் தெரியுமா?" என்று கேட்டான். அந்தப் பெண் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் 'இது சிவாஜி கணேசன் கட்டின கோயில்" என்று பதிலளித்தாள். இதைக் கவனித்துக்கொண்டிருந்த எனக் குத் தூக்கிவாரிப் போட்டது. பின்னர்தான் புரிந்தது பிள்ளை ராஜராஜசோழன் படம் பார்த்திருக்கிறாள். அதில் ராஜராஜ சோழனாகச் சிவாஜி கணேசன் நடித்திருக்கிறார். ராஜராஜ சோழனுக்கும், சிவாஜி கணேசனுக்கும் வித்தியாசம் தெரியாத அந்தப் பேதைப் பெண் சிவாஜிகணேசன் கட்டிய கோயில்தான் தஞ்சைப் பெருங்கோயில் என்று நம்பிவிட்டாள். என்ன செய் வது? ராஜராஜசோழன் கட்டிய கோயிலுக்கு இப்படியொரு விதியா என்று நினைத்துக்கொண்டேன். சினிமா மாயை அந் தப் பெண்ணை இப்படியாக்கிவிட்டது.
தமிழ்த் திரைப்படங்களும் காதல் காட்சிகளும் நமது தமிழ்த் திரைப்படங்களில் நம்பமுடியாத முக்கிய
அம்சமாக விளங்குவது, கதை. அதற்கேற்றாற்போலவே காதல் காட்சிகளும் நம்பமுடியாத வண்ணம் அமைவதுண்டு. திரைப்

தோழன் 05
படக் காதல் காட்சிகளில் ஒருவகை, கனவுக் காட்சிகளாகவும், மறுவகை வெளிப்புறக் காட்சிகளாகவும் இடம்பெறுவதுண்டு. கனவுக்காட்சிகளில் காதலர்கள் இளவரசன் - இளவரசியாகத் தோன்றி, ரசிகர்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவர். ரசிகர்களும் நிசவுலகை மறந்து, கனவுலகின் மயக்கத்தில் அவர்களுக்குப் பின்னாலேயே சுற்றித் திரிவர். கனவுலகக் காட்சிகளில் கண் ணைப் பறிக்கும் ஆடை அலங்காரங்களுடன் தோழியர் புடை சூழக் காதலனும், காதலியும் பாட்டுப்பாடி ஆடம்பரமாகக் காதலிப்பர். தயாரிப்பாளர்களும் கண்மண் தெரியாமல் அக் காட்சிகளுக்குக் காசை இறைப்பார்கள். வெளிப்புறக் காதல் காட்சிகள் வேறொரு வகையில் வேடிக்கையானவை. பழைய திரைப்படங்களில் காதலர்கள் பெரும்பாலும் பூந்தோட்டத்தில் மரங்களைச் சுற்றிச் சுற்றி ஒடிப்பிடித்து விளையாடி, ஆடிப் பாடிக் காதலிப்பர். இன்றைய திரைப்படங்களில் காதல் காட் சிகள் என்பவை, பெரும்பாலும் **தே காப்பியாச’’க் காட்சிக ளாகவே இடம்பெறுவதுண்டு. காதலர் இருவரும் கருத்தொரு மித்துக் கைகளை ஒரேமாதிரி நீட்டிமடக்கி, குனிந்து வளைந்து, கால்களை அகட்டி, ஒடுக்கி வயிற்றைக் குலுக்கி உடலுக்குப் போதிய பயிற்சியளித்தவாறு பாடிக்கொண்டு காதலிப்பர். தேவையானபோது, காதலர்களை மழையில் நனையச்செய்து அல்லது ஆறு, குளங்களில் குளிக்கச்செய்து, நெறியாளர் அவர் களைக் காதலிக்கச்செய்வதுமுண்டு. எந்தக் காதல் காட்சியிலும் காதலர்கள் பாடியே ஆகவேண்டும். பாடாமல் காதலிப்பதற்கு அவர்கள் இலகுவில் அனுமதிக்கப்படுவதில்லை. மிகச் சில வேளை களில் மட்டுமே திரைப்படக் காதலர்கள் இயல்பாகக் காதலிப் பதுண்டு. ஆனால், பெரும்பாலும் அவர்கள் இயல்பாகக் காத லிப்பதற்குத் தயாரிப்பாளர்களும், நெறியாளரும் அனுமதிப்ப தில்லை. காதல் அகவயமானது என்பதை ஏனோ வசதியாக மறந்து, அது ஆடம்பரமானது என்று காட்டுவதையே நமது திரையுலகத் தயாரிப்பாளர், நெறியாளர், வினியோகஸ்தர் ஆகி யோர் விரும்புகின்றனர். தமது பணப்பெட்டிகள் அதன் மூல மாகவே நிரம்பும் என்பது அவர்களுககுத் தெரியும். ரசிகப் பெருமக்களும் இத்தகைய பொய்மையான உலகுக்குப் பழக்கப் பட்டுவிட்டமை, அவர்களுக்கு மிகவும் வாய்ப்பாகப் போய்விட்
-Sil.
இவை, தமிழ்ப் படங்களில் மட்டுமல்ல; பெரும்பாலான இந்தியத் திரைப்படங்களின் பொது விதியாகிவிட்டன.

Page 5
தோழன் 06*
நாடகமும் நடுவர்களும்
நமது நாட்டிற் புதிய கலாசாரம் ஒன்று வேரூன்றத் தொடங்குவதுபோல் தோன்றுகின்றது. தமிழ்க் கலை இலக்கிய விடயங்களிற் கூட அரசியற் தலையீடு எந்தளவுக்குச் சாத்திய மாகலாம் என்று பரிசோதனை செய்வதுபோல் முயற்சிகள் மெல்லத் தோன்றியுள்ளன. அண்மையில் இலங்கையில் மாகாண ரீதியாக நடைபெற்ற போட்டியொன்றில், நடுவர்களால் முத லாவதாகத் தெரிவுசெய்யப்பட்டு, விழாவிற் தங்கப் பதக்கமும் பெற்ற நாடகமொன்று இலங்கை ரீதியாக நடைபெற்ற போட் டியிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. ஆயினும், அது அப் போட்டியில் இடம்பெறவே செய்தது. இலங்கை ரீதியாக நடை பெற்ற போட்டியிலும் அந்நாடகம் முதலிடத்தைப் பெற்றது. ஆயினும் அதற்குப் பரிசளிக்கப்படவில்லை. இத்தனைக்கும் அது ஒரு சமூக நாடகம். சமூக நாடகத்திற் சமூகப் பிரச்சினைகள் இடம்பெறாமல் வேறென்ன பிரச்சினைகள் இடம்பெற வேண் டும்? ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வேதனைகளும் சோதனை களும் விடியலை எதிர்பார்க்கும் நிலையும்தான் அந்த நாடகத் தில் இடம்பெற்றிருந்தன. எவரையும் புண்படுத்துவதாகவோ தனிப்பட்ட முறையில் அவமதிப்பதாகவோ அந்நாடகம் அமைய வில்லை. பிரச்சினைகளைப் பொதுமைப்படுத்தியே நாடகத்திற் தெரிவித்திருந்தனர். ஆனால் நமது அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில், நாட்டில் தேனும் பாலும் ஒடுவதாகவும், மக்கள் பிரச்சினைகள் இன்றி வாழ்கின்றனர் என்பதாகவுமே சமூக நாடகங்கள் அமையவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதற்காக, சமூகப் பிரச்சினைகள் தரமான முறையில் கலைத் துவமாக நாடகங்களில் மேடையேற்றப்படுவதனை, கல்விமான் களும், அத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களுமான நடுவர்கள் பொருட்படுத்தக்கூடாது என அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பது நியாயமாகுமா? அவர்களது அபிலாசை நிறைவேற ஒரு வழி இருக்கிறது; இனிமேல் இலங்கையில் சமூக நாடகம் தொடர் பான போட்டிகள் நடைபெறும்போது, அரசியல் தலைவர் களையே நடுவர்களாகப் பணிபுரியுமாறு செய்வது நல்லது.

07
தோழன்
மானுடத்தின் தேவை.
‘தமிழ்ச் சங்கம் ஈன்ற தங்கம்"
இது
குருதிப் பூக்களின் அறுவடைக் காலமோ..? சகோதர மனிதனின் சதையைச் சாப்பிட சோமாலியர்கள் கூடத் துணியவில்லை. இங்கு மட்டும் அப்படியென்ன பஞ்சம்
இரைப்பைகள் காய்ந்துபோனால் வயிறுகள் மட்டும்தான் எரியும்
இருதயங்கள் காய்ந்து போனால் உலகம் முழுவதும் எரிந்து போய்விடுமே ...! இது எழுதுகோல் உமிழ்கின்ற பொய்யல்ல, பழுதாகிப்போன பூமியின் புலம்பல் ... ! காதுகொடுத்துக்கேள், இன்று - பச்சிளம் பாலகர்கள் கூட பாலுக்காக அழுவதைவிட்டு அமைதி வேண்டித்தான் அடம் பிடிக்கின்றன.
(பேராதனைப் பல்கலைக்கழக சங்கப் பலகையிலிருந்து)
அந்தோ...!
வெளிச்சத்தில் இருந்து கொண்டே இருளைத் தரிசிக்கும் அந்த விழிகள் செய்த பிழைதான் என்ன ...? நிகழ்வுகள் தான் நெருப்பிலே எழுதப்படுகின்றன என்றால் - நித்திரையில் கூடவா அனல் பறக்க வேண்டும்.? மரணபயம் கனவிலும் வந்து துரத்துகிறது; துன்புறுத்துகிறது.! மழை வருமோ மழை வருமோ என்று வானத்தைப் பார்த்திருத்த மக்களெல்லாம் கொலை வருமோ கொலை வருமோ என்று குலை நடுங்கிக் குமுறுகிறார்கள். ! நிகழ்காலமே நிச்சயமில்லாத போது எதிர்காலத்தை எட்டிப்பார்க்க எந்த நெஞ்சுக்கும் சக்தியில்லை. I

Page 6
தோழன் 08
இப்போதெல்லாம் என்று இரப்பதை விட்டுவிட்டு, தொட்டிலில் தூங்கும் "சமாதானம் வேணுங்க . குழந்தைக்குத் FrTÉS... ” ” GT Gör gp 35 IT GóT தாயின் ஒப்பாரிதான் மன்றாடப் போகிறான்..! தாலாட்டாகிறது.! ஆம் - இன்று
இனி - மானுடத்தின் தெருப்பிச்சைகாரனும் பிரதான தேவை "தானம் பண்ணுங்க சாமி. அது ஒன்றுதான். !
* மரீனா இல்யாஸ்
狩魔 ல் மேடை O 0 கலாநிதி துரை மனோகரன் அவர்களின் "தமிழ் இலக்3
கியம் - பார்வையும் பதிவும் மிக விரைவில் வெளிவர* C வுள்ளது. 용 C Οι
*மருதூர் ஏ. மஜீத் அவர்களின் 'சந்தணப் போர்வையும் 9 * பன்னீர்க் கூதலும் கவிதைத் தொகுதியைப்பெற 436, பேழைய சந்தை வீதி, சாய்ந்தமருது - 01, கல்முனை ೯॰ಣ
முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். விலை ரூபா 88/-密
3C 體 &கலாநிதி க. அருணாசலம் அவர்களின் ‘சுவாமி விபுலாநந்தரின் 0 சமய சிந்தனைகள் நூ ல் அண்மையில் கண்டியில் வெளி3 2யிடப்பட்டது. விலை 30/- நூலைப் பெறவிரும்புகிறவர்கள் 0 용 க. அருணாசலம் M. A., Ph., D, தமிழ்த்துறை, பேராதனை?
பல்கலைக்கழகம், பேராதனை என்ற முகவரியுடன் தொ 3 டர்பு கொள்ளவும் 沁
அறிவு தலைக்கு கிரீடம், அடக்கம் காலுக்கு செருப்பு - ஹிப்ரு ஒரு வினாடிப் பொறுமை பத்து வருட சுகம் - கிரீஸ் கோபத்திற்கு கண்ணில்லை - இந்தியா குழந்தையில்லாதவன் அன்பைப் புரிந்துக்கொள்ள மாட்டான்
- இத்தாலி 5 குறைந்த ஆசை இன்ப வாழ்க்கை - துருக்கி
தொகுப்பு: செல்வன், ஏ. சீ. எம். முஸம்மில்,
d95 LDLI 60) 6T,
 
 
 
 
 

தோழன் O9
நான்தான் ரவியின் இதயம்
(சென்ற இதழின் தொடர்ச்சி)
ரவியின் உடலில் நான் ஆற்றும் பங்கினை இப்பொழுது கூறுகிறேன். ரவியின் உடலில் பணிபுரியும் ஏனைய எல்லா சகாக்களுக்கும் தேவையான போசணைக்கூறுகள் ஒட்சிசன், ஓமோன்கள் போன்ற மற்றும் பொருட்களைத் தாங்கிய குரு தியை சீரான வேகத்தில் செலுத்துவதும், அவ்வாறு செலுத்தப் பட்ட குருதியானது போசணையையும், ஒட்சிசனையும் இழந்து காபனீரொட்சைட்டு உட்பட மற்றும் கழிவுப்பொருட்களை சுமந்த நிலையில் பரிதாபமாக திரும்ப என்னை வந்தடையும் போது அதனை சுத்திகரிப்புக்காக சுவாசத்தொகுதிக்கு செலுத்து வதுமே எனது முக்கிய நோக்கமாகும், எனவே ஒரே வேளையில் இரண்டு சுற்றோட்டங்களை நிகழ்த்துகிறேன். உடல் பூராவும் குருதியை வினியோகிக்கும் தொகுதிச் சுற்றோட்டமும் (Systemic Circulation) சுத்திகரிப்புக்கான சுவாசப்பைச் சுற்றோட்டமும் (Pulmonary Circulation) ஆகும். இதனையே விலங்கியல் வல்லு நர்கள் இரட்டைச் சுற்றோட்டம் (Double Circulation) என்பர். சுருங்கக் கூறின் ரவியின் உடல் பூராவும் குருதியை சுற்றி யோடச்செய்யும் பம்பி (Pump) ஒன்றாகக் கடமை புரிகிறேன். ஒருநாள் ரவி தேகப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். திடீரென மார்பில் ஏற்பட்ட வலி ஒன்றின் காரணமாக ரவி அசந்து போனார். ரவி என்னைத்தான் சந் தேகித்தார். உடனே அவருக்கு ஏற்பட்ட பயம் காரணமாக பரிவு நரம்புகள் மேலும் தூண்டப்பட எனக்கு என்னையே கட் டுப்படுத்த முடியாமல் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தேன்! ரவி யிற்கு மேலும் வியர்த்துப்போட்டது. உடனே அவர் டாக்டரிடம் கொண்டுசெல்லப்பட்டார். ரவியின் குருதியமுக்கத்தை சோதித்த டாக்டர் சிரித்தார். ரவி வீணாகப் பயப்பட்டிருப்பதாகவும், குருதியமுக்கம் சாதாரண நிலையில் உள்ளது என்றும், மார் புத்தசையில் பிடிப்பொன்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆறுதல் கூறினார். டாக்டர் சோதிக்கும் போது எனது இதயவறையினுள் அமுக்கம் அறை தளர்ந்த நிலையில் 80 Hg mm ஆகவும் (Dias"olic Pressure) egy60) (D 3 (5fi 8u É1606vu9 db 120 Hg mm gy3,6yb (Systolic Pressure) gobiisgi. 'your heart is quite all right என டாக்டர் கூறக் கேட்ட எனக்கு தாங்கமுடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் ரவிக்கான எனது பங்கை இது வரை

Page 7
10 தோழன்
யில் நான் செவ்வனே நிறைவேற்றியுள்ளேன் என்ற திருப்தி என்னுள் ஏற்பட்டது.
இறுதியாக, என்னில் ஏற்படும் கோளாறுகள் பற்றி ஆராய்வோம். ரவி தாயின் வயிற்றில் இருந்த வேளையில் ரவி யின் குருதியானது அவரது தாயின் சூல்வித்தகத்தினால் சுத்தி கரிக்கப்பட்டதனால் எனக்கோ சுவாசச் சுற்றோட்டம் ஒன்றை நிகழ்த்தவேண்டிய அவசியமிருக்கவில்லை. அப்பொழுது எனது சோணையறைகளுக்கிடையில் தடுப்பு சுவர் திறந்த நிலையில் இரு சோணைகளிலும் உள்ள குருதி ஒன்றோடொன்று கலக்கப் பட்டிருந்தது. ரவி பிறந்தவுடனே வளிச்சுவாசத்தை மேற்கொள்ள ஆரம்பித்தபடியால், சடுதியாக எனக்கும் சுவாசப்பைச் சுற் றோட்டத்தை ஆரம்பிக்கவேண்டி ஏற்பட்டது. இதன் விளை வாக எனது இடது சோணையறையில் சடுதியாக ஏற்பட்ட குருதியமுக்கத்தினால் சோணையறைகளுக்கிடையிலான சுவர் செவ்வனே மூடப்பட்டது. தவறியாவது இச்சுவர் அரைகுறை யாக மூடப்பட்டிருந்தால் ரவி நீலக்குழந்தை அல்லது இதயத் 56, gplaol (Blue Babies! Hole in the heart) Grs TuSabrst gi) fuq-d கப்பட்டிருப்பார். தற்பொழுது சத்திரசிகிச்சை மூலம் இந்நோய் குணமாக்கப்படுகிறது.
இந்நோயின்போது ஒட்சியேற்றப்பட்ட குருதியுடன் ஒட்சி சன் நீக்கப்பட்ட குருதி ஒன்றுகலக்கப்படுவதனால் உடல் இழை யங்களுக்குப் போதிய ஒட்சிசன் கிடைக்காமல் போகும். மற் றும் என்னில் ஏற்படக்கூடிய இன்னும் ஒரு நோய் இதயத்தின் முறுமுறுப்பு (Heart Murmur) எனவழைக்கப்படுகிறது. இதய ஒலி யில் ஏற்படும் மாற்றம் இந்நோயை கண்டுபிடிக்க உதவுகின் றது. இதயவால்வுகள் அசாதாரணமாக அமைவதனால் அல்லது சில பற்றீரியாக்கள் ஏற்படுத்தும் தாக்கத்தினால் வால்வுகள் பழுதடைவதன் விளைவாக இது ஏற்படலாம். மூட்டுவாதக் காய்ச்சல் (Rheumatic Feyer) ஏற்பட்டால் அதற்குக் காரண மான பற்றீரியாக்கள் பெரும்பாலும் வால்வுகளைத் தாக்குவ தாக அறியப்பட்டுள்ளது. இதையும் சத்திர சிகிச்சையினால் செயற்கைப் ப்ளாத்திக் வால்வுகளைப் (Plastic Valves) பொருத் துவதன் மூலம் குணப்படுத்த முடியுமாகவுள்ளது.
இதயவால்வுகள் உயிர்ப்பாகக் கருமமாற்றுபவையல்ல, அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள இதயநாண்கள் (Chordaetendineae) என்பவை, இதயத்தசை தொழிற்படும்போது இழு விசைக்குட்படுவதனாலேயே, வால்வுகள் அசைகின்றன. வயது முதிர்ந்தவர்களில் ஏற்படும் மாரடைப்பு (Heart attack/stroke Coronary thrombosis) எனும் நிலை பாரதூரமானதும் குணப்

தோழன் s 1
படுத்துவதும் பிரச்சினைக்குரியதுமாகும். இந்நிலை ஏற்படுவதற் குக் காரணம் எனது தசைகளுக்கு ஒட்சிசன் , போசனை என்ப வற்றை வழங்கும் முடியுரு நாடியின் உட்சுவரில் கொலஸ்தரோல் (Cholesterol) எனும் கொழுப்புப் பொருள் படிவதாலேயே பெரும்பாலும் இந்நிலை ஏற்படுகின்றது. E. C. G. (ElectroCardio Gram) சோதனை மூலம் இதயத்தின் எந்தப்பகுதி செய லிழந்துள்ளது என்பதைக்கண்டு பிடிக்கலாம். X- கதிர் படங்கள் மூலமும் இதை அனுமானிக்கக்கூடியதாகவுள்ளது.
மார்பில் ஏற்படும் கடுமையான நோவும், வியர்த்தலும் இதன் ஆரம்ப அறிகுறிகளாகும். முட்டை மஞ்சற்கரு, ஈரல், தேங்காய் எண்ணை போன்ற கொலஸ்தரோல் நிறைந்த உணவு களை அதிகதிகம் உட்கொள்வதனாலும், புகைத்தல் (Smoking) காரணமாகவும், கோப்பிப் பானத்தை அதிகப்படியாக எடுப்பத னாலும் குருதியில் கொலஸ்தரோல் மட்டம் அதிகரிப்பதாக அறியப்பட்டுள்ளது. பழங்கள், மரக்கறி வகைகள், தானியங்கள் போன்ற நார் செறிந்த உணவுகளை (Fibre diet) அதிகம் உட் கொள்வதனால் கொலஸ்தரோல் மட்டம் குறைவதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து விளங்குவது என்னவென்றால் அளவாக உட்கொள்ளப்படும் நிறை உண வு (Balance diet) என்னைப் பாதுகாத்துப் பேண உதவுகின்றது என்பதாகும். மற்றும் அளவான உடற்பயிற்சியும், நிம்மதியான சந்தோசமான மனநிலையும் எ ன து ஆரோக்கியத்துக்கு அவசியப்படுகிறது. வேகமாக நடப்பது எனது தொழிற்பாட்டை சீராகப் பேண சிறந்த உடற்பயிற்சி ஒன்று என்பதை ஒருநாள் ரவியின் டாக் டர் நண்பன் ஒருவர் கூறக்கேட்டேன். ,
மற்றும் எனது சகாக்களுள் முக்கியமான ஒருவரான நாடி களில் கொலஸ்தரோல் படிவதனால் அவை தடிப்படைவதன் காரணமாக என்னுள் உயர் அமுக்கம் ஒன்று தூண்டப்படலாம். இந்நிலை அதிபர இழுவை (Hypertension) அல்லது உயர் குருதி u(pé5id (High blood pressure) 6T60) LLG)6(Dg). 256ör 660)6IT வாகக் புன்நாடிகள் வெடித்து மூளை, சிறுநீரகம் போன்ற அங் கங்கள் பாதிக்கப்படலாம். மயக்க நிலை (Coma) பாரிசவாதம் (Paralise) போன்ற பக்க விளைவுகள் இதனால் ஏற்படலாம். இதுவும் வயதடையும் போது முதிர்ந்தவர்களில் ஏற்படும் ஒரு நிலையாகும். w
இதுவரையில் இறைவன் அருளால் ரவியின் சிறந்த பழக்க வழக்கங்கள் காரணமாக நான் நற்சுகமுடையேன். ரவி என் னுடன் ஒத்துழைக்கும் வரையில் நானும் அவருடன் ஒத்துழைப் பேன்.

Page 8
2 தோழன்
பள்ளி மல்லிகைகளே!
துள்ளித்திரியும் பிள்ளைப்பருவத்தில் அறிவை அள்ளிப் பருகிடும் பள்ளிப் பருவத்தை எதிர்கொள்ளும் மாணவமணிகளை அரவணைக்கும் கடமைகள் ஏராளம், தாராளம். ஈன்றெடுத்த பெற்றோருக்கும்,வழிகாட்டும் ஆசானுக்கும்,கலைத்திறனளிக்கும் கலையகத்திற்கும், வாழ்வளிக்கும் தாய்நாட்டிற்கும், உயர்வளிக் கும் இறைவனுக்கும் ஆற்றவேண்டிய பணிகள் எத்தனை எத் தனை.
'தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை' 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" என்றெல்லாம் சான்றோரால் புக ழப்படுவோர் பெற்றெடுத்து பேருமிட்டு வாழவைத்தனரே அப் பெற்றோருக்கு முதற்கண் நாம் தரும் கண்ணியம் வேண்டற் பாலது. தாம் பெற்ற செல்வம் சான்றோனாக வேண்டுமே யென வேண்டாத இறைஞ்சுதல்களேயில்லை. இவர்களை நாம் கண்கண்ட தெய்வங்களெனப் புகழவேண்டுமல்லவோ. இதனா லல்லவோ அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' எனக் கூறிப்போந்தனர்.
- உயன்வத்த சுபியான் -
அரவணைத்து, அறிவளித்து, உயர்வளித்து, இழிவகற்றும் ஆசிரிய இரத்தினங்களை நேசித்தும் யாசித்தும் கண்ணியத்தால் பூசிக்க வேண்டுமன்றோ. 'கல்வி கரையில' 'கற்றது கைமண் ணளவு" எனும் பொன்மணி மொழிகளுக்கொப்ப பன்னூறு வகை நூல்களையும் கற்று பொறுப்புடையோராக வேண்டு மன்றோ, இதனாலன்றோ ‘கண்டது கற்கப் பண்டிதனாவான்' என நவின்றனர்.
அன்பும், பண்பும், அடக்கமும், வீரமும், திறமையும், பொறுமையும், ஒழுக்கமும் கொண்டவர்களாகப் பரிணமிக்கக் "கற்றதனாய பயனென்கொள் வாழநிவன்' 'நற்றால் தொழா ரெனின்’ எனும் குறளுக்கோம்ப வாழ்வது நம் கடனன்றோ. இன்றேல் "ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது" என்பதுபோல பயனற்ற கல்வியைப் பெற்றவர்களாகி கடமை துறந்தவர்களாகி 6ílu – Dr.Grtuont?
சுத்தம் சுகம் தரும் என்பதற்கிலக்கணமாக தூய வெண் சீருடையணிந்து ஆய சூழலை தூய்மையாக்கி, பொன்னிகர் குணங்களை வளர்த்து, தன்னிகரற்ற திறன்களைப்பெற்று தன்

தோழன் 3
மதியொத்த சீடர்களாகி ஆற்றவேண்டிய பணிகள் இத்துடன் முடிந்து விடுமா? தன்னையும், வகுப்பையும், சூழலையும் சுத்த மாகவும், அழகாகவும் வைத்திருக்க வேண்டுவதும் அவசியமல் லவா? தீஞ்சுவை கணிதரும் மாணவமணிகளை வளர்த்து பூஞ் செடி புதர் வளர்த்து நிழல் படர மணங் க ம ழ தூய வளி கிடைக்க வழிவகுக்க வேண்டுமல்லவா? நாடகத்தமிழ் வளர்த்து இன்னிசைப் பண்பாடி அரங்கேறிடும் நாட்டியம் பயின்று தேன் சுவை உணர நிகழ்த்துவதும் நலன்புரி மாணவர் திறனன்றோ.
தாம் பெற்ற கல்வி அத்திப்பூவாகி மறைந்திடில் இத் தனையும் புரிந்தும் தகுமோ? எனவே அர்ச்சனைப் பூவாக மக் கள் சேவ்ையின் நிமித்தம் தியாகத்துடன் தாயகம் தளைக்கப் பணியாற்றிடில் மக்கள் சேவை மகேசன் சேவையாக மலர்ந்து மணம்பரப்ப தாய்த்திரு நாட்டின் தவப்புதல்வர்களாக வாழ்வது நம் கடனன்றோ? ...
முக்தியினைத் தவறவிடில் இத்தனை சாதித்தும் அத்தனை யும் பயனற்றதாகிவிடும். எனவே; பக்தியினைக் கைக்கொண்டு முக்தியினையடையும் சக்தியினை பெறவேண்டுமாகில் சமயங்கள் காட்டும் வழியேற்று கடைத்தேறுவதும் எம்மீது காட்டப்பட் டுள்ள கடமையாகும். அதுவே அறிவுடைமையாகும். எனவே அறிவைப்பெற்று அருங்குண்ங்களை வளர்த்து ஐங்குரவரையும் போற்றி நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுள்ளவர்களாகவும் அரு மறை ஒதும் அறவழியேற்று நெறி வழி செல்லும் நற்பிரஜைக
ளாவோமாக!
ஒன்றே குலம்
- பெறோஸா ஸ்லிம் -
அண்ட வெளியில் மனிதன் கை பட்டாலும் பகையே!
உலவுகின்றான்! கால் பட்டாலும் பகையே! புதுமைகள் படைக்கின்றான்! ஆய்வாரில்லை காரணத்தை! பிரபஞ்சமதின் எல்லோர்க்கும்
பருமன்தான் தேடுகின்றான்! ஒரு தாயே, தந்தையே! வரலாறு, நாகரிகம், மொழி காசினியோர் யாவருமே
எல்லாமே ஆய்கின்றான்! உடன் பிறந்தார் தாம், ஒ மனிதன் உயர்ந்துவிட்டான் என்றிங்கு எம்மனிதன் பெயரளவில். நோக்குகின்றான்?
ஆம் மனிதன் உயர்ந்துவிட்டான்
பகைமையில்,
குற்றம் காணில் சுற்றம் இல்லை உறவு மாந்தருக்குள் !

Page 9
தோழன் 14
மலையக நாவல்கள்
- ஒர் அறிமுகம் (சென்ற இதழின் தொடர்ச்சி)
நாவலாசிரியரின் மேற்கண்ட விளக்கங்கள் வெறுமனே கற் பனையல்ல; யாவும் வரலாற்று உண்மைகளே என்பதைப் பல சான்றுகள் நிரூபிக்கின்றன. (சோ. சந்திரசேகரன், இலங்கை இந்தியர் வரலாறு 1989, பக் 10-74)
சுமார் இருபது நாட்களுக்கு மேல் அவர்கள் கால்நடை யாக மேற்கொண்ட கொடூரமான பயணத்தின் பின்பு மலை யகத்தின் நாவலப்பிட்டி என்ற கிராமத்திலிருந்து (நூறாண்டு களுக்கு முன்பு நாவலப்பிட்டி நகரமல்ல; கிராமமே) ஏழு மைல் களுக்கு அப்பாலிருந்த ‘ஹமில்டன் தோட்டத்தையடைந்தமை அங்கு அவர்களுக்குச் சிறிதேனும் ஒத்துவராத காலநிலை, சூழல், இருப்பிட வசதியின்மை, போதிய உணவின்மை முதலிய கொடூ ரங்களைச் சகித்துப் பழகுவதற்கு முன் ன ரே ஆண், பெண், நோயாளர் என்ற வேறுபாடுகளின்றித் தொழில் செய்வதற்கு வற்புறுத்தப்பட்டமை, அதனைத்தொடர்ந்து அவர்கள் யந்திரங் களாகச் செயற்படத்தொடங்கியமை, கோப்பிப் பயிர்ச்செய்கை நலிவடையத் தேயிலைத் தோட்டங்கள் பெருகியமை, அதற் கான காரணங்கள், ஏலவே குடியேற்றப்பட்டிருந்த தமிழகத் தொழிலாளர்கள், குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் தமக் கேற்பட்ட கொடிய அனுபவங்களைப் புதிதாக வந்தவர்களிடம் தெரிவித்தமை, புதிதாக வந்துசேர்ந்த பெண் தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்தாலும் வேறுவழியற்ற நிலை யி ல் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்கும் பலியாகியமை, பெருந்தோட் டங்களைச்சேர்ந்த பெரியதுரை முதல் கங்காணி, கணக்குப் பிள்ளை முதலியோர்வரை பெண் தொழிலாளர்கள் பலரைத் தமது காமப்பசிக்கு இரையாக்கியமை, தொழிலாளர்கள் பற்றி அவர்கள் கொண்டிருந்த அலட்சிய மனோபாவம், பாலியற் சுரண்டலுக்கு இடமளிக்க மறுத்த பெண் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் அதிகாரிகளாற் பழிவாங்கப்பட் டமை, தொழிலாளரின் சகிக்கவொண்ணா வதிவிடப்பிரச்சினை அதனாலேற்படும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் முதலியவற்றை யெல்லாம் நாவலின் கதையோட்டத்துக்கு ஊறுவிளைவிக்காம லும் உள்ளத்தைப் பிணிக்கும் வகையிலும் பல்வேறு உத்திகளைக் கையாண்டு நாவலாசிரியர் விளக்கிச் செல்கின்றார்.

தோழன் 4.5
நாவலின் தொடக்கத்திலேயே அவர் காட்டும் சேந்தூர்க் கிராமப்புறத்தையொட்டிங் சேரிப்புறங்களைப் பற்றிக்கூறுமுன்பு "அது ஒரு சின்னஞ்சிறிய கிராமம். இந்த 1964 ம் ஆண்டிற்கூட அந்தக் கிராமத்தைப் போய்ப்பார்த்தால் ஒற்றையடிப் பாதை களைத்தவிர, வேறு நல்ல ரோடுகளையோ விசாலமான வீதி களையோ காணமுடியாது. அப்படிக்காண வேண்டுமென்றால் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கழியவேண்டுமோ, சொல் வதற்கில்லை. . ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன், அந்
கலாநிதி க அருணாசலம்
முதுநிலை விரிவுரையாளர். தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
தக் கிராமம் எந்த நிலையில் இருந்திருக்கும் என்று சொல்லா மலே யாரும் தெரிந்துகொள்ளலாம்' (தூரத்துப்பச்சை, 1984 பக். 5) என்கின்றார். மலையகத் தோட்டங்களிற் குடியேற்றப் பட்ட தொழிலாளர்களுள் மிகப்பெரும் பகுதியினர் தமிழகத் திலே பிறப்பினடிப்படையிலான சாதிரீதியாகவும், பொருளா தார ரீதியாகவும் காலம் காலமாக மிகப் பிற்படுத்தப்பட்டிருந் தவர்களே என்னும் உண்மையை நாவலாசிரியர் அறிந்தோ அறி யாமலோ வெளிப்படுத்தியுள்ளார். (தொடரும்)
கலைஞர்கள் மிகுந்த குடும்பம்
ஜேர்மனி ஹைனா (Haina) பகுதியின் தச்சுக்கலை வல்லு 5íř “ “ G3?IT GJIT Göt oasp 5äTiflisë që@lu Gör ”” (Jowan Henrich Dishpen) (1682 - 1764) இவர் "ஏழு ஒவியர்களின் தந்தை. ‘பதினாறு’ புகழ்பெற்ற கலைஞர்களின் தாத்தா. "முப்பத்து நாலு கலை ஞர்களின் கொள்ளுதாத்தா.
அழிந்தும் கூட! ஸ்பெயின் படை இத்தாலி நாட்டு பியோரனோ அரண் மனையை ஆக்கிரமித்து தீக்கிரையாக்கியது. எல்லாம் அழிந்தும் கூட “மடோனா'' தேவதையின் பொன் பிரேம் போட்ட ஓவி
யம் ஒரு கீறல் கூட இல்லாமல் திருடப்படாமல் தப்பியது.
தொகுப்பு:- செய்யத் இம்ரான்

Page 10
6 தோழன் நாம் ஒரு முடிவு செய்வோம்
- ரோஷான் ஏ. ஜிப்ரி என் என்னை பிரியத்துக்குரிய தோழி முதலில் புரிகிறது சந்திக்கத் உன் இரண்டாவது தவறியவள் "நீ" புலம்பல் அப்போது இந்த வாழப் பட . விஞ்ஞானபுகத்தின் வழி தேடினாய், முடிவுகளுக்கு இப்போது (upg-Golgi)606) auth! வாழ்க்கைப் பட. உன் வரமின்றி பப்பாசிக் வாடிக்கிடக்கின்றாய்! கன்னத்தின் மேல் இனி. , கண்ணிர் வசந்தகாலம், சொரிந்து 61 LT காயப்படுத்தாதே . நியாயமில்லைதான் "பொறு ஒரு இருந்தாலும் முடிவு செய்வோம்" பொறு நாம், உன் சேதிகேட்ட 5X5 (Մ)ւգ-6վ தினமே செய்வோம். என் நிம்மதி **சமாதானத்தைப் போல் தொலைந்து போனது
அகதிகளில் ஒருவனாக
நித்தம் நிம்மதியாய் வாழ்ந்தவன் நிம்மதியிழந்தான் மண்ணாசையில் மயங்கியதால்! பொன்னாசையில் பொறுமையிழந்தான் ஆயுத உலகை ஆதரித்ததால்! ஆயுதத்தால்
- கே. எம். கலீம் -
ஆகாததேதுமில்லை என்ற ஆதங்க வெறியுடன் ஆயுதமேந்தினால் அந்தோ! பரிதாபம் அத்தனை குண்டுகளும் அகதிகளாய் பிரசவிக்க அமைதியிழந்து அலைகிறான் அகதிகளில் ஒருவனாக!

தோழன் 17
மல்லிகைப்பந்தலும் மலர்ந்த பூக்களும் - ஒரு மதிப்பீடு தொடர் கட்டுரை சென்ற இதழின் தொடர்ச்சி
ஈழத்தின் தரமான எழுத்தாளருள் ஒருவராகக் கணிப்பிடம் பெறவேண்டிய சோமகாந்தனின் (ஈழத்துச் சோமு) ஆகுதி" என்ற சிறுகதைத் தொகுதி, 1959 - 1986 காலப்பகுதியிற் பிர சுரம் பெற்ற பதினொரு சிறுகதைகளின் தொகுப்பாக விளங்கு கின்றது. இத்தொகுதியினைப் படிக்கும்போது, இத் த கை ய நூலொன்று வெளிவராது இருந்திருப்பின், ஈழத்தின் தரமான எழுத்தாளர் ஒருவரது படைப்புகளின் அருமையைப் பு தி ய தலைமுறை உணராமலே செயற்பட்டிருக்கும் என்ற உணர்வே மேலோங்குகிறது.
யாழ்ப்பாணத்துப் பிரதேசப் பகைப்புலம் சோமகாந்த னின் சிறுகதைகளில் அழுத்தம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக் கது. வேண்டாத வருணனைகளை விலக்கி, நிகழ்வைக் குறிப் பாகச் சுட்டும் பாங்கு அவருக்குக் கைவந்த விடயம். அதே வேளை, தமது சார்பு நிலை உழைப்பாளர் பக்கமே என்பதை எவ்வித ஆரவாரமுமின்றி அவர் உணர்த்துவதும் நோக்கத்தக் கது. “சவங்கள்! ஒரு நாளைக்கு எத்தனை தடவை சாப்பிட் டுத் தொலைக்கிறாங்கள்' பசியறியாத அருணாசலத்துக்கு, சின் னானுக்குப் பசித்தது ஏளனமாகப்பட்டது. (காசுக்காக அல்ல.) போன்ற இடங்களை அவரது சார்புநிலைக்கு எடுத்துக்காட்டு களாகக் கூறலாம்.
சோமகாந்தனின் பதினொரு சிறுகதைகளில், நிலவோ நெருப்போ?, காசுக்காக அல்ல. , ஆகுதி, விடியல் ஆகிய நான் கும் இத்தொகுதிக்குப் பெருமை சேர்க்கும் தரத்தைச் சார்ந்தன வாக விளங்குகின்றன. ஆயினும் காசுக்காக அல்ல. என்ற சிறு கதையில் இலேசான செயற்கைப்பாங்கு இடம்பெற்றுவிட்ட மையை உய்த்துணர முடியும். கோயிற் குருக்கள் பாத்திரங் களை மையப்பாத்திரங்களாகக்கொண்ட ஆகுதி, விடியல் ஆகிய சிறுகதைகளில், முதற்கதையில் இடம்பெறும் ஜெகந்நாதக்குருக் கள் பரிதாபத்திற்குரியவராகவும், விடியலிற் காணப்படும் வைத் தீஸ்வர ஐயர் துணிச்சல் மிக்கவராகவும் இனங்காணத்தக்கவர். ஆகுதியில் இடம்பெறும் குருக்கள், அதிகார பலத்துட் சிக்கிச் செய்வதறியாது திகைப்பவராகவும், விடியலில் வரும் ஐயர், அத்தகைய அதிகார பலத்திற்கு ஆட்படாது, சொந்த முறையிற்

Page 11
8 தோழன்
தீர்வினை மேற்கொண்டு செயற்படுபவராகவும் விளங்குகின்ற னர். ஒரே சமூக பொருளாதார அ மை ப் புக் குள் இருவேறு உழைப்பாளர்களை (கோயிற் பூசர்களும் யாழ்ப்பாணச் சமூக, பொருளாதார அமைப்பில் உழைப்பாளர்களே) ஆசிரியர் வார்த் துள்ளார். இரு பாத்திர வார்ப்புகளும் வெவ்வேறு வகையிற் தரமானவையாக இருப்பினும், ‘விடியல் வைத்தீஸ்வர ஐயர் சமுதாயப் பங்களிப்பைப் பொறுத்தவரையில் ஒரு சிறந்த முன் மாதிரியாக விளங்குகின்றார். அடிமை உழைப்பை வெறுக்கும் செயலூக்கமுள்ள, புதுமை நோக்குடைய ஒர் ஐயரையே சோம காந்தன் முன்கொணர்ந்துள்ளார். 'வலத்தோளில் கலப்பையும், கையில் ஓரிணை எருதுகளுமாக வெளியே கிளம்பிவிட்டார். இடத்தோளில் வெள்ளை வெளேர் என்ற திரளான பூணுரலும், நெற்றியில் விபூதிப் பூச்சும் சந்தன திலகமும் காலைச்சூரியனின் இளங்கதிர்களில் மின்னிக்கொண்டிருந்தன. என்ற சோமகாந்த னின் வரிகள், புதிய உழைப்பாளர் ஒருவரைச் சமுதாயத்தின் முன் இனங்காட்டுகின்றன. ஆகுதி, விடியல் ஆகிய சிறுகதை களைப் பொறுத்தவரையில், சில்லையூர் செல்வராசன் தமது *மதிப்பு மடலிற் பொருத்தமாக குறிப்பிட்டுள்ளமை போன்று, **காலநிர்ணயம் செய்தால் இந்த இரண்டு சிறுகதைகளும்கூட, 1959-1969 என்ற பத்தாண்டுகாலப் பகைப்புலம் கொண்டவை தாம் "
ஈழத்தின் கணிசமான எழுத்தாளரிடம் காணப்படும் பெருங் குறை, பேச்சுவழக்கைப் பயன்படுத்தும்போது சில வேளைகளிற் காட்டும் அக்கறையற்ற போக்காகும். அதனால், பாத்திரங் களின் பேச்சு வழக்கினிடையே செந்தமிழ் வழக்கும் விரவிவர நேரிடுகின்றது. இதே குறை சோமகாந்தனிடத்தும் குடிபுகுந்து விடுவதை ஆங்காங்கு காணமுடிகிறது.
ஆகுதி தொகுதியிலுள்ள சிறுகதைகளில், ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கான அவரது சிறந்த பங்களிப்புகளாக நிலவோ நெருப்போ?, விடியல், ஆகுதி ஆகிய சிறுகதைகளைக் குறிப்பிட முடியும். இத்தொகுதியிலுள்ள பல சிறுகதைகளுக்கு அவரது தனித்துவம் வாய்ந்த நடையே பெரும் பக்கபலமாகவும், பாது காப்பரணாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தின் வளர்ந்துவரும் பிறிதொரு சிறுகதை எழுத்தாள ரான ப. ஆப்டீனின் “இரவின் ராகங்கள்’ என்ற தொகுதி, இந் நாட்டின் இலக்கியப்பரப்பில் இன்னொரு பரிமாணத்தைச்சேர்க்க உதவியுள்ளது. மலையகம், கொழும்பு, மட்டக்களப்பு, அம் பாறை, சிலாபம், அநுராதபுரம், ஆ கி ய பிரதேசங்களைப்

தோழன் W 9.
பகைப்புலமாகக்கொண்ட படைப்புகளாக இத்தொகுதியிலுள்ள அவரது சிறுகதைகள் விளங்குவது தற்செயலானதன்று. ஆசிரி யரின் அனுபவச் செழுமையை ஒருவகையில் அவை உணர்த்தி நிற்கின்றன எனலாம். சோமகாந்தனைப் போலவே, ஆப்டீனும் தமது உழைப்புலகச் சார்பினைக் கதைகளினூடே இயல்பாகப் புலப்படுத்தியுள்ளார். தமது படைப்புகளுக்கான சமூகப்பார் வையின் காலகட்ட விரிவினைப் பின்வருமாறு அவர் தெரிவித் துள்ளார். “1970 க்குப் பின்பு, எனது சமூகப் பார்வை சற்று விரிவடைந்து, இலக்கியம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் படைக் கப்பட வேண்டும் என்னும் மகத்தான இலட்சியம் எனது உள் ளத்திலும் வேரூன்றத் தொடங்கியிருந்தது. தேயிலைத் தோட் டங்களில் எழுதுவினைஞனாக இருந்த எனக்கு 1972ம் ஆண்டு ஆசிரிய நியமனம் கிடைத்தபோது, நாட்டின் பல மாவட்டங் களிலும் கடமையாற்ற வாய்ப்புக் கிடைத்தது. இப்புதிய திருப் பம் எனது இலக்கிய முயற்சிகளுக்குச் சாதகமாகவே அமைந் தது.”*
கலாநிதி துரைமனோகரன்
ஆப்டீனின் கதைகளில் முஸ்லிம் சமூக மாந்தரும், மலை யகத் தொழிலாளரும் பாத்திரங்களாக உலாவுகின்றனர். மக்க ளையும், அவர்களது வாழ்வியற் பின்னணிகளையும் ஆழ்ந்து நோக்கியுள்ளமை, அவரது சிறுகதைகளுக்கு ஒருவகைத் தனித் துவத்தை ஏற்படுத்தியுள்ளன. "யதார்த்தமாகவும், மண் வாசனையுடனும் படைக்க முயன்றிருக்கிறேன்' என்று தமது முன்னுரையில் அவர் கூறுவது, வெறும் ஒப்புக்காக அல்ல என் பது கதைகளின் மூலம் துலக்கமாகின்றது. ஆப்டீனின் சமூகப் பார்வை மண்வாசனையுடன் இணைந்து, அவரது படைப்பு களுக்குப் புதிய வீச்சினைப் பாய்ச்சியுள்ளது. அவ்வப்பிரதேசப் பேச்சுவழக்கினைக் கையாள்வதில் அவர் காட்டும் மிகுந்த அக் கறை, அவரது எழுத்து வளர்ச்சிக்கு ஓர் உறுதுணையான அம்ச் மாகும்.
ஆப்டீனிடத்துக் காணத்தகும் இன்னொரு சிறப்பம்சம், சமுதாயம் பற்றி ய விமர்சனத்தையும் கலைத்துவத்துடன் துணிந்து கையாளும் எழுத்துரமாகும். அவர்கள் காத்துக்கொண் டிருக்கிறார்கள், ஒரு கிராமத்தின் புதுக்கதிர்கள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுக்களாக விளங்குகின்றன. வர்க்க உணர் வின் இலேசான கீற்றைப் பந்தல்போடும் செக்கு மாடுகள் என்ற கதை உணர்த்துகின்றது.
(மீண்டும் அடுத்த இதழில் மலரும்)

Page 12
20 தோழன்
சிறுகதை
-ஊர்கள்
- நிந்ததாசன் - அண்ணனும் தம்பியும் போல அந்தக்கிராமங்கள். சோலை யூரில் சுவாசப்பாசை பேசும் தமிழர்கள்! வயலூரில் சுவாச முக வரி எழுதும் முஸ்லீங்கள். சோலையூரைச் சுற்றியுள்ள கிரா மங்கள் அனைத்துமே முஸ்லீங்களைச் சுமந்திருந்தன. சோலை யூர் மட்டும் தமிழர்களைச் சுமந்திருந்தது.
இனவெறி விழிந்திருக்கும் நேரமது. மக்களின் மனச்சாட்சி மயானம் சென்றவேளை. மனிதா பி மா னம் மரித்துப்போன காலம். சுயநல சாக்கடைகளின் தூண்டுதலால் அந்த விடியலும் இனவெறியுடன் புறப்பட்டது. இனத்துவேசம் மனித மனங் களில் கருத்தரிக்க; இனக்கலவரம் பிரசவமானது. எங்கோ நடை பெற்ற கொலைகளுக்காக, யாரோ வெறியர்கள் குருதியபிசேகம் செய்தமைக்காக சோலையூரைச்சுற்றி கலவர தீப்பிழம்புகள், மனங்களில் பூகம்பம். இதயங்களில் அக்கினி.
சோலையூர் தீக்குள் தீக்குளித்தது. பக்கத்திலிருந்த கிரா மங்கள் சோலையூரின் ஜீவன்களான தமிழ் மக்களுக்கு துக்கம் கொடுத்தன. மூன்று பக்கங்களிலும் முற்றுகை. சொத்துக்கள் சோகமாகின. உயிர்களை மட்டும் பாதுகாக்க அந்த மக்கள் வய லூரை நாடினார்கள். வயலூர் துவேசத்தை தூக்கி எறிந்த நிலம். மனிதாபிமானத்தை மனங்களில் விதைத்த பூமி. சகோ தரர்களாகவே தமிழர்களை மதித்த முஸ்லீங்கள் அந்த நிலத் தின் புதல்வர்களாக இருந்ததனால் தமிழர்களின் இதயமெங்கும் புன்னகை விதைத்தார்கள்
சோலையூரின் வீடுகள் எங்கும் பலநூறு தமிழ்க் குடும் பங்கள், அகதி முத்திரை குத்தப்பட்ட தமிழர்களுக்காக அகதி முகாம் உருவானது. அவர்களின் தேவைகள் விசாரிக்கப்பட்டு உதவிகள் உயரமாகின. கபூரின் வீட்டிலும் மூன்று தமிழ்க்குடும் பங்கள் தஞ்சமடைந்திருந்தன. வயலூர் இதயங்களை அவனின் இதயத்துடிப்புப் போற்றியது. அவர்களின் பெருந்தன்மை அவ ணுக்குள் சூரியனாகப் பிறப்பெடுத்தது. இளைஞர்கள் தமிழ் மக்களுக்கு சந்தோசம் வழங்குவதில் தீவிரத்தை அமுல்படுத்தி னார்கள். அவர்களின் இதயங்களில் படிந்த சோகக் கறைகளைக் கழுவும் நீரானார்கள்.
“உம்மா! நான் பொய்கைத்தீவுக்குப் போயிட்டு வரனும் ஏதும் வாங்கனுமா?' ' தன்னை இந்த உலகத்திற்குள் உமிழ்ந்த

தோழன் 2
உத்தமியிடம் கேட்டான்.
"இந்த நேரத்தில ஒருவிடமும் போகவேணாம்' கலவரம் கண் திறந்திருக்கும் வேளையை ஞாபகப்படுத்தித் தடுத்தாள் தாய்.
‘முஸ்லிமாக்கள் தானே! நான் அவசரமாக பாறுாக்சேரைச் சந்திக்கணும் என்ர வேல விசயமா வரச்சொன்னாரு!" அணு மதிக்காக மீண்டும் காரண மனுவைச் சமர்ப்பித்தான் கபூர்.
“கடைகள் துறந்திருந்தால் இந்த லிஸ்ட்ல இருக்கிற சாமான்களை வாங்கிட்டுவா. கவனம் மகன்! " மகிழ்ச்சியோடு பிரதான வீதிக்குள் வந்தான். வாகனங்கள் வீதியை மேய்வது குறைவாகவே இருந்தது. பஸ் போக்குவரத்துக் காணப்பட்டது" மக்களும் சாதாரணமாகவே நடமாடினார்கள். முட்களுக்குள் இந்த மனிதர்கள் சாதாரணமாகவே வாழப்பழகிவிட்டார்கள். புகைக்குள் பார்வையை தூதனுப்பவும் பழகிவிட்டார்கள், கபூ ரின் சிந்தனைக்குள் மலர்ந்த பூக்களிவை.
கலைப்பட்டதாரியான அவன் மானுடத்தின் நேசன், கலாசாலையில் படிப்பை உண்கின்ற காலங்களில் முஸ்லிம் நண் பர்களோடு எப்படியோ அப்படித்தான் தமிழ் நண்பர்களோடும். வேறுபாடு, துவேசம் அழுக்குகளைக் கழுவிய இ த யம் அவ னுடையது. தமிழர்களைக் குண்டுகள் உண்டுகொள்ளும்போதும் துடிப்பான். முஸ்லீம்களை குண்டுகள் உண்டுகொள்ளும்போதும் துடிப்பான்.
**சே மனுசர்களை இப்படி அழிக்கிறார்களே! படுபாவி கள்!' அவனின் இதயம் அவனையே கடிக்கும். துடிதுடித்துப் போவான். ‘முதல்ல இந்த துவேசச் சக்தியை வளர்க்கிறவர் களைக் கொல்லணும்" கோபம் இவற்றைக் குட்டிபோடும். அவனின் சிந்தனையோடு சேர்ந்து பஸ்ஸும் நான்கு மைல் களைச் சுருக்கின. பொய்கைத்தீவில் பாதங்களைப் பதித்தான். வழமைபோல் மக்களின் ஊர்வலங்கள்! அசம்பாவிதங்கள் நடந்த தடயங்கள் எதுவுமில்லை.
'இம்!'" பெருமூச்சோடு ஒரு நிம்மதி அவனுக்குள்! பாரூக் சேரின் வீட்டுக்கு வழிகாட்டும் பாதையை அவனது பாதங்கள் சுருக்கி எழுதிக்கொண்டிருந்தன. ஒரு தேனீர்க்கடை தன் இமைகளை விலக்கிவிழித்திருந்தது. நான்கு இளைஞர்களின் குரல்கள் கலந்து ஒலித்துக்கொண்டிருந்தன
* உஸ்.ஸ்! உஸ் ஸ்’ அழைப்பிற்கான அடையாளச் சத்தம் கபூர் திரும்பினான். அவனைத்தான் அவர்கள் அழைத் தார்கள். மெல்லிய பயம் அவன் இதயத்திடம் சொல்லியது.

Page 13
தோழன் 22
அவர்களிடம் சென்றான். 'ஊருக்குப் புதுசா இருக்கே?" ‘எந்த ஊரு' "என்ன பேரு?" அவர்கள் விசாரணைக் கடிதம் எழுதினார் $ ଗt. 'அயடின்ரியைக் காட்டு??? ஒருவனின் பலாத்காரத் தொனி கபூர் அடையாள அட்டையைக் காட்டினான். 'அடே ராஸ்கல்! எங்கிட ஊருக்குள்ள வர என்ன தைரியம்டா உனக்கு வயலூர் நாயே!' அசிங்கமான வார்த்தைகளைச் சமர்ப்பித்தார்கள். ’ ‘தமிழனைக் காப்பாத்துற நாய்கள். இவன இன்டக்கி சும்மா உடப்படாது'
அவர்கள் கபூருக்கு அடித்தார்கள், உதைத்தார்கள். இப்படி நடக்குமென்று அவன் எதிர்பார்க்கவில்லை. உம்மாவின் வார்த் தைகள் இதயத்தின் மேல் மிதந்தன. "என்னது இப்படிப் போட்டு அடிக்கிறீங்க யாரது?' பாறுாக் சேர் கேட்டவாறு பார்வையைப் பதித்தார். 'ஆ கபூரா? சேச்சே!' கபூரின் நெற்றியில் குருதி வடிந்து கொண்டிருந்தது. "ஏன் இப்படி அடிக்கிறீங்க?' பாறுாக் சேர் கோபத்தைக் கக்கினார். "இவன் வயலூரான். தமுழன்களுக்கு சாப்பாடும் உடுபுடவை யும் கொடுத்துக் காப்பாத்துறவன். இவனுக்கு அடிக்கிறது அந்த வயலூரான்களுக்கே அடிக்கிறதுமாதிரி' காரணத்தை வார்த்தை களால் உமிழ்ந்தார்கள். 'நீங்களெல்லாம் மனுசர்களா? சீ! மனுசன் எண்டா மிருகத் துக்கும் அவர்களுக்குமிடையில் வித்தியாசமிருக்கணும்' அவர் நியாயத்தை நிமிர்த்திக்காட்ட முயன்றார். 'நீங்க ஏன் இதில தலையிடுநீங்க? உங்கட வேலயப் பாத்திட் டுப் போங்க?" கோபத்தோடு குதித்தான் ஒருவன்.
'அடே! என்னத் தேடிவந்த ஆளை அடிச்சா நான் சும்மா இருப்பேனா? இம்! நீங்க முஸ்லீங்கள் தானே? முஹம்மது நபி இப்படிப் பழிவாங்கச் சொன்னாரா? இல்லையே! அந்நிய மதத் தவர்களை அவர்கள் மதித்தார்கள்! அவர்களுடைய கோயில் களைப் பாதுகாத்தார்கள் தன்னைக்கொலைசெய்ய வந்த எதிரி யைக்கூட மன்னித்துக் கருணை காட்டினார்கள். இப்படிப்பட்ட நாயகத்தின் முன்மாதிரியை நாம் செய்கிறோமா? இல்லை! பழிக் குப்பழி, வெட்டுக்கு வெட்டு எண்டு இப்படியே இருந்தா எப் படி மனுசர்கள் நிம்மதியா வாழ்றது?’ பாறுாக் சேர் கோபத்

தோழன் 23.
தினால் கொதித்தார். அவரின் பொறுமை எல்லைதாண்டி எதி ரொலித்தது. அவர் சிறிது நேரம் கபூரைப் பார்த்தார். அவர் களையும் பார்த்தார். 'நீ தமுழாக்கள்ள ஊட்டுல சாப்புடல்லையா? சொல்லு!' “நீ தமுழாக்கள்ள கல்யாணத்துக்குப் போகல்லையா? சொல்லு' 'உண்ட ஊட்டுக்கு இதுக்குமுந்தி தம்முழாக்கள் வரல்லையா? நீ பழகல்லையா? சொல்லு!"
அவரின் கேள்விகள் அவர்களின் அறிவில் விழுந்தன. சிறிது மெளனம் கைப்பற்றியது. "ஏன் இப்ப மட்டும் அடிச்சிக்கணும் நம்முட மூதாதையர்கள் தம்முழர்களோட அண்ணன் தம்பி போல வாழல்லையா? என்ன? இப்படி விரோதிகளா நாமளும் தமுழர்களும் இருக்கிறதுக்குக் காரணம் என்ன? முதல்ல அதக் கண்டுபுடிங்க? சில சுயநலவாதிகளை இனங்கண்டு அவர்களை அடிச்சு ஒழியுங்க"
ஆவேசம் பிரசங்கம் நிகழ்த்தியது. நியாயங்களையும் உண் மைகளையும் திரைநீக்கிக் காட்டியது. அவர்களின் வாய்கள் தைக் கப்பட்டது போலாகிவிட்டது. 'வயலூர் காரனாக தானில்லையே எண்டு எனக்குக் கவலை ஏனண்டா அவர்களும் அந்த விலைமதிக்கமுடியாத உயிர்களுக்கு அடைக்கலம் குடுக்சாட்டி வேறு யாருதான் குடுப்பாங்க" இத யத்தில் இருக்கும் உணர்ச்சிகளை அவர்களிடம் விதைத்தார் பாறுரக் சேர். "சேர் எங்கள மன்னிச்சிடுங்க. தம்பி! நீங்களும் பெரிசிபடுத்தா தீங்க. உங்கிட ஊருல போய் இதச்சொல்லாதீங்க" அறிவுக் கண்திறந்தார்கள் அவர்கள். 'தம்பிமார்களே நடந்தது நடந்து போச்சு! இனிமேலாவது இரண்டு சமூகங்களும் ஒற்றுமையா வாழனும், அதற்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்க!”
அடுத்தநாட் காலையில் தமிழ் முஸ்லிம் இன ஒற்றுமை சம்பந்தமான துண்டுப்பிரசுரங்களும், சுவரொட்டிகளும் அந்த ஊரை முழுதாக கைதுசெய்திருந்தன.
(முற்றும்) + தோழனுக்காக புல்ஸ்கப் தாள் 5 பக்கங்களுக்கு மேற்படாமல்
தரமான சிறுகதைகளை எழுதுங்கள்.
+ கதைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனை. ஆக்கங்களைத் திருத்தவும், சுருக்கவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு.

Page 14
24 தோழன்
சேர் போஸ்ட்
தோழன் ஆசிரியர் அவர்கள்!
தோழன் பெற்றேன். “விடுதலை ராகங்களை’ சேர்த்துக் கொண்டதற்கு நன்றி. இம்முறை தோழன் சற்று கனதியாகவே பிறந்திருக்கிறான். எனினும், சிறுகதைகளை ஆசிரியரே குத்த கைக்கு எடுப்பதாக பேசப்பட்டது. நான் நினைக்கிறேன் தர மான சிறுகதைகள் வருவதில்லையென்று.
கவிதைகளில் சிரமம் எடுக்கும் வாசகர்கள் கதைகளில் கூடிய அக்கறை காட்டுவதில்லையென்பது உண்மைதான்.
சென்ற தோழனில், உங்கள் ‘மனித ம் சிறுகதையை வாசித்து முடிக்கும்போது, நீங்கள் என் மனமெங்கும் உயர்ந்து நின்றீர்கள். இது முகஸ்துதியுமல்ல, வெறும் போலித் தேன் தடவலுமல்ல. மனந்திறந்து வாழ்த்துகிறேன்.
அப்படியான உயிரோட்டமுள்ள சிறு கதை ஒன்றல்ல, இரண்டை ஒரே தடவையில் பிரசுரித்தாலும் நான் குதூகலிப் பேன்.
கடைசியாக அடிக்கடி தோழன் இடம்பெயர்வது சங்கட மாகவுள்ளது. தவிர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
நன்றி - ஓட்டமாவடி அறபாத் -
★ அன்புத் தோழனுக்கு
தோழனின் 2, 3, 4, இதழ்களை என் கரங்கள் பற்றிய போது, அதில் கண்களைப் பதித்தேன். அப்பாடா? அத்தனை யும் அரியவை, புதியவை, இனியவை, உள்ளத்தை உரசிடும் கவிதைகள், சிறுகதைகள், சிந்தனையைத் தூண்டும் சிந்தனைத் துளிகள், அறிவுக்கு விருந்தாக அரியபல சேதிகள் அத்தனையும் அள்ளித்தரும் தோழனே! நீ ஒரு கலை இலக்கிய களஞ்சியம்! ஒரே பார்வையில் என்னுள்ளத்தைத் தொட்டுவிட்டாய்! உன் தொண்டு என்றும் தொடர என் வாழ்த்துகள் உனக்கு!
- கே. எம். கலிம் - சீனக்குடா -

முதல் இறகு விரிப்பு
- அக்குரணை இளைய அப்துல்லாஹ் -
பக்திப் பரவசமாய்
ஆலமரம் சூழ
ஆரவாரம் .
மெல்லெனவாய்
இறகு முளைத்த காக்கை ஒன்றின் மூன்று குஞ்சுகள் பறக்க எத்தணிப்பு .
★
தாய்க் காக்கை தனயன் களை சுப முகூர்த்தத்தில் முதல் இறகை விரிக்க
ஒரு சமிக்ஞை.
-
է 1 (0... காக்கையின் உத்தரவு. ls. . . . D. . .
மீண்டும் தாய்க்காக்கை விழித்து மிலாந்தி. குஞ்சுகள் மூன்றில், ஒன்று:
மெது வாய் "கூ கூ .' என்றது இயலாமையை அப்படி விண்ணப்பித்தது, கோபம் வந்ததாய் கண்கள் சிவந்து இறகு துடித்து. சொண்டு கூராகி. காக்கை சன்னதம் ஆடியது
★
அந்த மூன்றும் குயில் குஞ்சுகள்? கொத்தி குதறுவதற்காய் கதறிய காக்கையின் அலறல் கேட்டு பயத்தால் மூன்றும் பறக்கத் தொடங்கின. முதல் இறகை முனைப்பாய் விரித்தன.

Page 15
Do You say
an Art?
Yes of cours
AWait
AN OFESET P
Will be at
le
OFFSET ER LETTE
 
 

Printing is
RINTERS
Ma Wamella
Soon
- PRESS, PH ITI IMG
RWICE
GN
대
ல்ெ வசிக்கும் (ாவில் 1. M. அச்சசுத்தில் அச்சிட்டு