கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தோழன் 1993.10-12

Page 1
மலர் - 02 இதழ் 07 *
சாந்தி- sorar.
 
 

'993 ஒக்டோபர் - டிசம்பர்
TIL) - &56ն II լիճւ

Page 2
தேசப்புறாவே!
O நிந்தவூர் ஏ. சி. சத்தார் O
ஒ. தேசப்புறாவே!! உன் தேகமெங்கும் காயங்கள்! உன் வேள்விகளெல்லாம் கேள்விகளானது
ஏன்?
f
அழகுகளை கைதுசெய்து எழிலரசிப் பட்டம் வாங்கியவள். அழுக்குகளால் எப்போது நீ அலங்கரிக்கப்பட்டாய்? நிலாக் காலமாய் நீந்தியவள் நீ! ஒளிச் சேலையுடுத்தி இதய வானங்களில் உடுக்களை விதைத்திருந்தாய்! நீ சோலை வாசத்தால் வேலி செய்தாய். சோகங்கள் நுழையாமல்
குணக்கேடாய் நடந்து பிணக்காடாய் மாறி புன்னகை இழந்தது ஏன்? ஒற்றுமை மலரம்புகள் எய்த நீ வேற்றுமை குண்டுகளால் உயிர்களை உண்டு மகிழ்வதேன்? உன் துவேசத் தீ அணைக்க
ஒரு கங்கை ஊற்றெடுக்க வேண்டும். வேசத்திரை கிழித்து பாசத்தின் மடியில் எங்களைத் தாலாட்டு போரோசை பேராசை வேரை அடியோடு
அகற்றிடு!
நாளை
நாங்க்ள் மனிதர்களாக மரணிக்க வேண்டும்!

t
Saifuuri: தோழன் ஆசாயா; 1993, ஒக், டிசம்
நிந்ததாசன் լ D6ծrՒ 02 ക്രങ്ങര), 23, நயாவலை, இதழ் 07 இலக்கிய இதழ் T66G)65)6). سر
நாங்கள் கேட்பது. . . .
எமது தேசம் சோகத்தில் வீழ்ந்து பல ஆயிரம் விடியல் -கள் மடிந்துவிட்டன. விலைமதிக்க முடி யா த பல்லாயிரம் உயிர்கள் மண்ணுக்குள் சமிபாடடைந்தன. சாந்தி, சமாதானம் தொலைந்து போனதால் மக்கள் சிதறுண்டு போயினர். எமது தீவின் வளர்ச்சி வலுவிழந்து காணப்படுகின்றது. மக்கள் மகிழ்ச்சி யினை மறந்து வெகுகாலம். இந்தத் துயரநிலை நீடித்துக் கொண்டே செல்கின்றது. ஒவ்வொரு நாளும் விடிகிறது. அது மேற்கே விழுகிறது. ஆனால் மக்கள் வாழ்க்கையில் விடிவில்லை முடியாத போரினால் ஏற்படும் கொடுமையிது.
இன ஐக்கியத்தை கட்டியெழுப்பி, மக்களின் இன்னல்களை முடிவுக்குக் கொண்டுவர எல்லா மக்களும் ஒன்றுபட வேண்டும். யுத்தம், ரத்தம் எனும் பரிதாபகரமான நிலையிலிருந்து எம் தாய்நாடு விடுபட சுயநலத்தை தூக்கி எறிந்துவிட்டு மக்களின் நலனே எம் நலன் எனும் கூற்றுக்கேற்ப உரியவர்கள் நடந்து கொள்ள முன்வரவேண்டும். தீர்க்க முடியாத பிரச்சினையல்ல இது. யுத்தமோ, அடக்குமுறையோ இதற்குரிய தீர்வுமல்ல. புனித மான பேச்சுவார்த்தையினால் இந்நாட்டு மக்களின் உயிர்களுக் -கும், உடைமைகளுக்கும் ஒரு நொடிப் பொழுதில் தீர்வு காணலாம் ‘வாழ்க்கை வாழ்வதற்கே". தேவையில்லாமல் இறந்து மடிந்துபோக மக்கள் தயாரில்லை. பயத்தை சுமந்துகொண்டும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டும் ஒவ்வொரு வினாடியும் இறந்து இறந்து வாழ நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் மணி தர்களாக மதிக்கப்பட வேண்டும். மனிதர்களாகவே மரணிக்க வும் வேண்டும்.
அகதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. வேற்று நாடுகளிலும் அனாதைகளாகச் சுவாசித்துக்கொண்டிருக் கிறார்கள் வடபகுதி முஸ்லீம்கள் மீண்டும் அவர்களின் இருப் பிடத்திற்குச் செல்லும் நிலை உருவாகி, தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இலங்கை முழுவதும் உலாச்செல்லும் நிலை தோன்ற வேண்டும். கனவாகவே இருக்கின்ற சமாதானம், ஐக்கியம் நிஜ மாக வேண்டும். பணமோ பொருளோ வேறுஎந்த செல்வங்களோ எங்களுக்கு வேண்டாம். இப்பொழுது நாங்கள் கேட்பதெல்லாம் சமாதானம்; சமாதானம்; சமாதானம்; (乌-f)

Page 3
02 - தோழன்
|நமது வானத்தின் கீழ்.
-நவீனன்
பாராட்டப்படவேண் Լգա ஒரு பெருமகன்
எமது நாட்டில் எதற்குக் குறைவிருந்தாலும், அமைச்சர் களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் எதுவிதக் குறைவுமில்லை. ஆனால், பெரும்பாலும் அமைச்சர்கள் மக்கள் இலகுவில் அணுக முடியாத வகையிலேயே தங்களைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதுண்டு. எனினும் இதற்கு முற்றிலும் மாறுபட்டு, மக் கள் நலனிலும், தமிழ்க் கலை இலக்கியங்கள் பாலும் அளவற்ற நேசமும், பற்றும் கொண்ட அமைச்சர் ஒருவர் இருக்கின்றார் எனில், இந்துக் கலாச்சார, தமிழ் அலுவல்கள் அமைச்சர் திரு. பீ.பீ தேவராஜ் அவர்களாகவே இருக்க முடியும். அவர் அவ் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின் தமிழ்க் கலை இலக்கியத்துறையிற் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருவது கண்கூடு. இந்நாட்டில் மிக அண்மைக் காலத்தில் தமிழ் மொழி தமிழ் இலக்கியம், தமிழ்க் கலைகள் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு வீறுகொண்டு வளர்ந்து வருவதற்கு அமைச்சரின் அளப்பரிய சேவை ஒரு முக்கிய காரணம். அவர் மக்கள் மீதும், மக்களின் ஆர்வங்கள். முயற்சிகள் மீதும் காட்டும் ஈடுபாடு, அவரைப் பெருமனிதராகவும், கலைக்காவலராகவும் உயர்த்திக் காட்டுகின்றன. அவரைத் தங்களின் ஒரு பலமாகவே தமிழ் பேசும் எழுத்தாளர்களும், கலைஞர்களும் ஆர்வலர்களும் கணித் துள்ளார்கள் என்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். எந்த வொரு நிகழ்ச்சியிற் பங்குபற்றும் போதும், நிகழ்ச்சி முடியும் வரை பொறுமையுடன் காத்திருந்து, தமது கருத்துக்களையும் மனந்திறந்து பேசி அனைவரையும் கவரும் ஒருவராக அமைச்சர் விளங்குகின்றார். அவரின் பிறிதொரு சிறப்பு. அமைச்சருக்குரிய எத்தகைய 'பந்தா”வும் இன்றி நடந்துகொள்வதாகும். தமது பதவியை கண்ணியமாக அணிசெய்து, தமிழ் கலை இலக்கியங் களை வளர்த்து வரும் அமைச்சர் தேவராஜ் அவர்கள் பாராட் டப்படவேண்டிய ஒரு பெருமகன் என்பதிற் கருத்துவேற்றுமைக்கு இடமில்லை.

தோழன் O3
மேடை நாகரிகம்
நமது மேடைகளில் பேச்சாளர்கள் என்று வருபவர்கள் சிலர் நிகழ்த்தும் விசித்திரங்கள் மிகவும் சுவாரசியமானவை. நமது பேச்சாளர் சிலரிடத்தில் "மைக் கைக் கொடுத்துவிட்டால் போதும், கரும்பைக் கண்டது போல மகிழ்ந்து, கடித்துத் தின் ன்ாத குறையாக தடந்துகொள்வர். இலகுவில் அவர்களிடமிருந்து "மைக் கைத் திரும்பப் பெற இயலாது. சிலர் மேடையில் பேசத் தொடங்கி விட்டால், பேசவந்த விடயத்தை கோட்டை விட்டு விட்டு, தமது சுய புராணத்தை விரித்து விளக்குவதிலேயே ஆர் வம் கொள்வதுண்டு. பிறிதொரு சாரார், தமது அலட்டல் களால் அவையோரை அறுப்பதற்காகவே பிற வியெடுத்த *அறுவை மன்னர்கள்" என்பதை அணு அணுவாக நிரூபிப்ப துண்டு. இன்னொரு சாரார், தாம் பேசநினைத்ததையெல்லாம் மேடையிலே கொட்டாவிடில், இலகுவில் தூக்கமே வரமாட் டாது என்பதைப் போல நடந்துகொள்வர். வேறொரு சாரா ருக்கு, மேடையில் ஏறினால் அது தமது நிரந்தர வாசஸ்தலம் என்ற நினைப்பு வந்துவிடுவதுண்டு இலகுவில் மேடையைவிட்டு இறங்கமாட்டார்கள். மற்றைய பேச்சாளரும் பேசுவதற்காக மேடையிலே காத்திருப்பர் என்ற விவஸ்தையே இல்லாமல் மேடை தமக்காகவே அமைக்கப்பட்டது போல நடந்துகொள் வர். தலைமை வகிப்போர் துண்டுக்கு மேல் துண்டு அனுப்பிய பின்னரே அரைமனத்துடன் மேடையைவிட்டு மெல்ல இறங்குவர். தலைவர்கள் ஏதும் செய்யத்தகாத கொடுஞ்செயலைச் செய்து விட்டமை போன்று அவர்கள் மனம் புளுங்குவதுண்டு. பிறிதொரு சாராருக்கு, தமது ‘சாதனைகளை எல்லாம் விலாவாரியாகச் சபையோருக்கு ஒப்புவிக்காவிடின், ஏதோ குற்றமிழைத்துவிட்ட குறுகுறுப்பு ஏற்படுவதுண்டு. ஒரு சாரார் அன்போடு அறிவுரை பகர்வது போன்று, தமது அழுக்காறுகளை மேடையிற் புலப் படுத்துவதுமுண்டு. இன்னொரு சாரார், தம்மை உயர்த்திக் காட்டவேண்டுமென்பதற்காக, பிறரை மேடையில் மட்டந்தட் டித் திருப்திகொள்வதுமுண்டு. வேறு சிலர், தம்மை மேதாவிகள் என நினைத்து, மேடையில் தனது அறியாமையை அப்பட்ட மாக வெளிப்படுத்துவதுமுண்டு. இன்னும் சிலர் எங்கு போனா லும் ஒரே விடயத்தையே ஒரே பாணியில் ஒப்புவித்துவிட்டு திருப்தியடைவதுண்டு. மேலும் சிலர் கூறியது கூறல், மற்றொன் =று விரித்தல், மிகைப்படக் கூறல் ஆகியவற்றையே மேடைத் தொழிலாகப் பயிற்சி செய்வதுண்டு. ஒரு சிலர் பேசத்தொடங்கி

Page 4
04 தோழன்
தமது விடயத்திற்கு வருவதற்கிடையில் ஒரு கருத்தரங்கையே நடத்தி முடித்துவிடலாம். சில பேச்சாளர், மேடையிலே தான் தமது 'பக்தியுணர்வைக் காட்டிப் புகழ்பெற நினைப்பதுண்டு. இன்னும் ஒரு சாரார், பார்வையாளரை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகத் தரம்குறைந்த “பகடிகளையும் பாமரத்தனமான விடயங்களையும் தமது “பேச்சில் இணைத்துக் கொள்வதுமுண்டு. சில பேச்சாளர் கோமாளித்தனமான அங்க சேஷ்டைகளை நிகழ்த்தி குரங்கிலிருந்து பிறந்தவன் தான் மனிதன் என்பதை நிரூபிக்க முயல்வதுண்டு. இத்தகைய பேச்சாளர்"களுக்கு மேடை நாகரிகம் என்ன என்பதே இலகுவில் விளங்குவதில்லை.
தமிழும் முஸ்லிம்களும்
தமிழுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான தொடர்பு
இன்று நேற்று ஏற்பட்டதல்ல; நீண்ட வரலாற்றைக் கொண்ட தாகும். த மிழ் நாட்டிலும், இலங்கையிலும் முஸ்லிம்களின் வரலாறு தொடங்கும் காலம் முதல், தமிழுக்கும் அவர்களுக்கு மிடையிலான தொடர்பு வளர்ச்சிகண்டு வந்துள்ளது. இலங்கை யில் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையிலே அரசியல் ரீதியான சில கசப்புணர்வுகள் நிலவுவது உண்மையே. ஆயினும், தமிழ்மொழி இரு இனத்தாருக்கும் ஒரு பொதுச் சொத்தாக விளங்கி, இவ்வினங்களுக்கிடையே ஒரு பாலமாகவும் இருந்து வந்துள்ளது. தமிழ் எழுத்தாளர், கவிஞர், கலைஞர் போன்று, மு ஸ் லி ம் எழுத்தாளரும், கவிஞரும், கலைஞரும் தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்களிப்புகளை நல்கிவந்துள்ளனர், அவர்களாலும் தமிழ் வளமும் உரமும் பெற்றே வந்துள்ளது. அதேபோன்று, தமிழாலும் தமிழரும், முஸ்லிம்களும் வலுவும் வளமும் பெற்றே வந்துள்ளனர். உண்மை இவ்வாறிருக்க, சில முஸ்லிம் அரசியல்வாதிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போலவும், எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்பது போன்றும் நடந்துகொள்வது, வேதனைக்கும், வெட்கத்துக்கும் உரியதாகும். இதற்கு எடுத்துக்காட்டாக, முஸ்லிம் அமைச்சர் ஒருவர் பேசியதாகப் பத்திரிகையொன்றில் அண்மையில் வெளி வந்த செய்தியின் ஒரு பகுதியைத் தருகின்றேன். 'வெறும் தமிழ் மொழி மூலக் கல்வியினால் எமது முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்காலம் பாழடைந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்
முஸ்லிம் பாடசாலைகளில் சிங்கள மொழிமூலம் கல்வி புகட்டி எமது சமுதாயம் எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து வாழவேண்டும்

தோழன் 05
என்பதே எனது நீண்டகால இலட்சியமாகும். முஸ்லிம்களுக்கு தமிழ்தான் கட்டாயம் என்று கூறமுடியாது. இஸ்லாம் தமிழில் வரவில்லை. ' குறிப்பிட்ட அமைச்சர் அவர்களின் அறியாமைக் காக இரங்குவதைத் தவிர வேறு வழியில்லை. மாண்புமிகு அமைச்சர் அவர்கள், இலங்கையில் மட்டுமன்றி, தமிழ்நாட்டிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்; அவர்களது தாய்மொழியும் தமிழ் தான் என்பதை, ஏனோ வசதியாக மறந்துவிட்டார். அது போகட்டும்! அமைச்சரின் பார்வையில் தமிழ் வாயிலாகத் தமது திறமைகளைப் புலப்படுத்தி வரும் பேராசிரியர் உவைஸ், சுபைர் இளங்கீரன், கலாநிதி எம். ஏ. நுஃமான், மேமன்கவி, சோலைக் கிளி, பண்ணாமத்துக் கவிராயர், இஸ்மாலிகா, கலைவாதி கலீல், உஸ்மான் மரிக்கார், முத்துமீரான், அறிவிப்பாளர் அப்துல் ஹமீட், தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிஞர் இஸ்மாயில், தோப்பில் மீரான், நாகூர் ஹனிபா, திரைப்படப் பாடகர் மனோ போன்ற இவர்களையெல்லாம் (எடுத்துக்காட்டுக்காகச் சில பெயர்களை மாத்திரமே குறிப்பிட்டேன்) என்ன செய்வது? எங்கே தள்ளுவது? தமிழில் இதழொன்றை வெளியிடும் தோழன்' ஆசிரியருக்கு என்ன தண்டனை விதிப்பது?
தமிழ்த்திரைப்படங்களும்
சண்டைக்காட்சிகளும்
திரைப்படங்களில் இடம் பெறும் சண்டைக்காட்சிகள் வன்முறையை ஊக்குவிப்பது போன்று அமைந்திருப்பது ஒருபுற மிருக்க, வேடிக்கையாகவும் விளங்குவதுண்டு. கதாநாயகன் தனியொருவனாக நின்று வில்லன் கூட்டத்தோடு மோதி, அவர் களை வீழ்த்தி நொறுக்கி வெற்றிவாகை சூடுவதுண்டு. கதாநாய கன் ப்லரோடு மோதினாலும், இலகுவிற் காயங்கள் ஏற்படாது தப்புவது அற்புதமே! கதாநாயகி கண்கலங்கி, சிகிச்சை அளிக்க முனைந்தால் மட்டும் அபூர்வமாக அவனுக்குக் காயம் ஏதாவது ஏற்படக்கூடும்! திரைப்படங்களில் வில்லர்கள் செய்யும் கொலை களுக்குத் தண்டனை உண்டு. ஆனால், கதாநாயகர்கள் செய்யும் கொலைகள் கவனிக்கப் படுவதில்லை. சுவைஞரின் மனத்தைக் கொஞ்சம் கசியச் செய்யவேண்டும் என்று இயக்குநராற் கருதப் படும்போது மட்டும் ஒரு காவல்துறை வாகனம் வந்து கதா, நாயகனைக் கைவிலங்கோடு அழைத்துச் செல்வதுண்டு, திரைப்

Page 5
06 தோழன்
படச் சண்டைக்காட்சிகளின் போது இன்னொரு வேடிக்கையும் இடம்பெறுவதுண்டு. சண்டைக் காட்சிகள் உட்புறத்தில் (ஸ்ரூடி யோவுள்) படமாக்கப்படின், சுவர்களின் ஒரமெல்லாம் பெட்டி கள் அடுக்கிவைக்கப்பட்டு, சண்டையிடும் போது அவற்றைப் பொத்துப் பொத்தென்று விழச்செய்வதுண்டு. இதில் என்ன போர் ரகசியம்** உள்ளதென்று புரியவில்லை. வெளிப்புறக் காட்சியெனில், சண்டை நடைபெறும் " களத்தில் பெரும்பாலும் கடைகள் சுற்றிவர அமைக்கப்பட்டு, அவற்றிற் சோடா போத் தல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நடுவில் ஒரு வண்டியில் காய்கறி, பழங்கள் நிறைக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும், சண் -டை மும்முரமாக நடைபெறும் போது, கடைகளில் உள்ள சோடா போத்தல்கள் உடைக்கப்பட்டு, வண்டியில் உள்ள காய் கறி, பழங்கள் கொட்டப்படும். நாட்டில் பஞ்சமும் பட்டினியும் ஆட்டிப் படைக்கும் போது, நமது படத் தயாரிப்பாளர்கள் செய்யும் இத்தகைய அநியாயங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஏனெ னில், நமது "ரசிகர்கள்" தான் எதையும் ரசிக்கத் தயாராக இருக்கிறார்களே!
S S S 9 9 S S S S S 9 s 8 9 S S S S S S S S S S S S 9 S
பசி. எண்ணெய்
குடிப்பதால்தானே கதிர் முனையில் எரிந்துக்கொண்டிருக்கிறது! குந்தி நின்று பின்னென்ன, பூச்சி கூட பரவசமாக ஏழைவயிறுகளுக்குள் பசியை தீர்க்கிறது மூச்சுக் காற்று அதென்ன... .? மட்டுமே முத்தமிடுகிறது .? குடிசை வீட்டு - ஃபறாஹ் குப்பி இலாம்பும் கொழும்பு - 06
ΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔΔ நகைச்சுவை வானில் கொடிகட்டிப்பறக்கிறது! எங்கும் ஒரே பேச்சு!
“சுவைத்திரள்”
நகைச்சுவை பல்சுவை ஏடு ஆசிரியர்: "திக்கவயல்' பதிப்பாசிரியர்; அமிர்தகழியான் ஒவியர்; பூgகோவிந்த் தொடர்புகள்; 105/1, திருமலை வீதி, மட்டக்களப்பு.

தோழன்
புரியாத
ராகங்கள் மீட்டப்படுகின்றன! (சங்கப்பலகையிலிருந்து. J
ஊர்வலமில்லாத இங்கே . . ஊர்கோலமாக நீ! புரியாத இராகங்களை இங்கே மீட்டுவதில் வறண்டுபோன அர்த்தமுமில்லை! பாலைவனமாக நான்! கடந்த கால
உன். பார்வையின் பொருள்
நிகழ்வுகளை மாத்திரம் நூல்களாக வெளியிடும்
விளங்குகின்றது! இந்த
இருந்தாலும் சமூகத்திற்காகவாவது மலரொன்று உன். உதிரும் போது பாதையைக் கொஞ்சம் மாலைக்கு உதவுமா? மாற்றிவிடு!
பாலிங்கே இல்லையென்றால் திரைந்து. . ஊர்வலமில்லாத போகும்போது ஊர்கோலமாக யாருக்கு லாபம்? சொல்லுங்கள்...? இங்கே காலத்தைக் கடத்துவதால் வறண்டு போன இலாபமில்லை! பாலைவனமாக... நான் காட்டாற்று வெள்ளத்தால் மாத்திரம்தான் பலனுமில்லை! இருக்க முடியும்!
* எஸ். வை. பூரீதர்
கலைஞர்கள் மிகுந்த குடும்பம் *ஜோஹான் ஹென்றிச் டிச்பென்’ (1682 - 1764) என்பவர் ஜெர்மனியின் ஹைனா பிரதேச தச்சுக்கலை வல்லுனர். இவர் ஏழு -7- ஓவியர்களின் தந்தை. பதினாறு புகழ்பெற்ற கலைஞர்களின் தாத்தா. 34 கலைஞர்களின் கொள்ளுத்தாத்தா. — filisólu?);ör Believe it or not (5IIdo தொகுப்பு:- செய்யத் இம்ரான்
அத்தலபிடிய, ஹிங்குளை

Page 6
08 தோழன்
அணையாத சிறுகதை
அகல்விளக்கு
மாவனல்லை
வளிலா இப்றாஹிம்,
இயற்கை நிகழ்த்தும் விந்தைகள் ஆயிரமாயிரம். இன்பந் தரும் இளந்தென்றல், ன்துபத்தைத்தரும் கொடூரப்புயல். பயிர் களுக்கும் மனிதனுக்கும் சுகமளிக்கும் இதமான மழை; நாசத்தை விளைவிக்கும் பெரு வெள்ளம், இவை யாவும் இறைவனின் நியதி. இதனை யாரும் தடைசெய்ய முடியாது. மானிட வர்க் கமும் இவ்விதிகட்கு உட்பட்டதே!
ஆம் ரியாஸை மட்டும் இவ்விதி விட்டு விடவில்லை. அன்று நிகழ்ந்த உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சி அவனை நிலை குலைய வைத்தது. வேதனையின் விளிம்பை எட்டவைத்தது. தண்மதி யின் வெண்ணிலவு வெளியிற் காய்ந்து கொண்டிருந்தது. அவன் உள்ளம் கும்மிருட்டில் மூழ்கிக் கிடந்தது. துன்பச் சுமைகளை உள்ளத்தில் சுமந்தவனாகப் புரண்டுப்புரண்டு படுத்தான் ரியாஸ். நித்திரா தேவி அவனை ஆட்கொள்ள மறுத்துவிட்டாள்.
ரியாஸின் இதயக்கடலில் எண்ண அலைகள் மோதின. 'நினைவுப் புண்ணில் நிகழ்ச்சிகள்’ என்ற கல்பட்டதும், எண் -ணங்கள் என்ற குருதி வழிந்தோடியது. இவை யாவும் ரியாஸை பரபரவென இழுத்துச் சென்று ஊரில் நிறுத்தியது.
செல்வந்தப் பெற்றோருக்கு ஏக புதல்வனாகப் பிறந்தான் ரியாஸ். துன் பம், வேத  ைன எ ன் பன என்னவென்று தெரியாது வளர்ந்தான். இளமைப் பருவத்தை எட்டிப்பிடிக்கும் தறுவாயில் தந்தையை இழந்த ரியாஸ் தாய் அனிசாவின் அர வணைப்பில் வளர்ந்தான். தன்மகன் கல்வி கற்று பேரும்புகழும் பெறவேண்டும் என்ற பேராவலுடன் செயல்பட்டாள் ரியாஸின் அன்னை. அல்லும் பகலும் மகனுக்காக இறைவனிடம் பிரார்த் தனை புரிந்தாள். -
இது இவ்வாறிருக்க, பக்கத்தூரில் ரியாஸின் மர்மாவின் மகள் சனீரா தன் தாயை இழந்து தந்தையுடன் தனிமையில் வாழ்ந்துக் கொண்டிருந்தாள். இதனைக் கண்டு பரிதாபம் அடைந்த ரியாஸின் தாய் அனீசா, தன் உடன் பிறந்த அண்ண னின் மகளையும் தன்னுடன் அழைத்துவந்து வளர்க்கலானாள்.

தோழன் 09
இளஞ் சிறார்கள் இருவரும் இனிதே வளர்ந்தனர். விளையாடி மகிழ்ந்தனர்.
வருடங்கள் பல சென்றன. சிறுவர்களாக இருந்த ரியாஸும் சனீராவும் இளமைப் பருவத்தை அடைந்தனர். யாருமறியாமல் காலப்போக்கில் இருவருள்ளங்களிலும் இளங்காதல் துளிர்விட ஆரம்பித்தது. சனீராவின் சந்தை மட்டும் இதுப்ற்றி சிறிது அறிந் திருந்தார். உள்ளூர மகிழ்ச்சியடைந்தார். தன்பொறுப்பு, கடமை யாவும் நீங்கிவிடும் எனக் கனவு கண்டார். ரியாஸின் உள்ளத்தில் சனீரா பூரண இடத்தை பெற்றுவிட்டாள். எல்லாப் பரீட்சை யிலும் சித்தியடைந்து கொண்டே வந்த ரியாஸ் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லவேண்டிய நிலையேற்பட்டது. தாய் அனிஸ்ா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 'தன் மகன் படித்து முடிந்ததும் பெரும் பணப்பசையுள்ள இடத்தில் அழகான, பட் டம்பெற்ற பெண்ணை மருமகளாக அடைய வேண்டும்' என்ற அவாவும் அவளின் உள்ளத்தில் நிலைத்து விட்டது. இதை சனி ராவோ, ரியாஸோ கனவிலும் அறியமாட்டார்கள்.
அன்று தாயினதும், காதலியினதும் பிரிவுத்துயர் பெரிதும் வாட்ட ஆயிரமாயிரம் வேதனைகளை உள்ளத்தே சுமந்தவனாக ரியாஸ் தன் பிரயாணத்தை மேற்கொண்டான். கல்லூரியை அ  ைட ந் த தும் முத ன் மு  ைற யாக த் த ன் அன்பு த் தாயாருக்கும் த ன் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சனீராவுக்கும் கடிதம் வரைந்தான். தொடர்ந்து இருவரும் அஞ் சல்கள் மூலம் அன்பைப் பரிமாறிக்கொண்டனர். ஒரளவு நிம் மதியை அடைந்தனர். தொடர்ந்து ஐந்து வருடங்கள் படித்து முடித்து ஒரு டாக்டராகத்தான் ஊரை அடைய வேண்டும் என்ற பெரும் பொறுப்பும் ரியாஸை அழுத்திக் கொண்டிருந்தது. சனீரா வின் பிரிவுத்துயர் வேறு வாட்டிக் கொன்றது.
எப்படியோ மூன்று வருடங்களை வெற்றிகரமாகக் கழித்த ரியாஸ் மகிழ்ச்சியுடன் இருந்தான். இவ்வேளையிற் தான் பாழும் விதி கோரத் தாண்டவம் புரியத் தொடங்கியது. அதாவது அன்று வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்த தாயின் கடிதம் ரியாஸை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியது, தனக்கு நல்லதோர் இடத்தில் பட்டம்பெற்ற பணக்காரப் பெண்ணை பேசி முடித் திருப்பதாகவும், வந்தவுடன் திருமணம் நடக்க இருப்பதாகவும் அனீசா குறிப்பிட்டிருந்தாள். இதனைக்கண்ட ரியாசின் தலையில் எத்தனையோ இடிகள் வந்து விழுந்ததைப் போல் உணர்வடைந் தான். தலை சுற்றியது; கண்கள் இருண்டன. கால்கள் தள்ளாடக் கட்டிலில் தொப்பென விழுந்தான். வேத னை விம்மலாக வெடித்தது.

Page 7
10 v தோழன்
ஒரு வாரம் கழிந்தது. மனதுக்குத் தைரியத்தை வர வழைத்துக் கொண்டவனாகத் தாய்க்கு ஒரு கடிதத்தை எழுதி -னான். தான் தன்னுடன் படிக்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவிட்டதாகவும், தனக்கு எங்கும் பெண்பார்க்க தேவை யில்லை எனவும் அக்கடிதத்தில் ஆணித்தரமாக எழுதியனுப்பி விட்டான். சனீராதான் அவன் இதயத்தை என்றோ ஆக்கிர மித்து விட்டாளே. W−
ஆவலுடனும் ஆசையுடனும் தன் மகனின் கடிதத்தை எதிர்பார்த்த தாய் பேரதிர்ச்சிக்குள்ளானாள். ரியாஸ் இப்படி நடந்துகொள்வான் என்று கனவில் கூட எண்ணவில்லை. அழு வதும் சிந்திப்பதுமாக காலங்கழித்தாள். ஊண் மறந்தாள் உறக் கம் இழந்தாள். நாளடைவில் எலும்பும் தோலுமாக உருக் குலைந்து விட்டவள் இறுதியில் மரணத்தையே தழுவினாள்.
இந்நிகழ்வுகள் சனீராவையும் பெரிதும் பாதித்துவிட்டது. தன்னைத் தாய்ப்போல் பேணிக் காத்த மாமியின் பிரிவின் வேதனை ஒருபுறம். தன்மீது உயிரையே வைத்திருந்த ரியாஸின் துரோகம் மறுபுறம். இதனால் சனீராவின் தந்தை தன் மகளை அழைத்துக்கொண்டு தன் சிறு குடிசைக்குப் போய்விட்டார். தன் மரணத்திற்கு முன்பு மகள் சனீராவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என விரும்பினார். சனீராவின் பாதி சம்மதத் துடன் ஊரிலுள்ள ஏழை வியாபாரியான சலீம் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தார். பின்பு தான் மருமகன் ரியாஸுக் குத் தாயின் மரணம், சனீராவின் திருமணம் எல்லாவற்றையும் விபரமாக கடிதமூலம் அறிவித்தார். மூன்று மாதத்துக்குள் தானும் உயிர் நீத்தார்.
மாதக்கணக்கில் சனீராவிடமிருந்தும், தாயிடமிருந்தும் கடிதத்தை எதிர்பார்த்த ரியாஸ் வேதனையுடன் இருக்கையில் மாமாவின் கடிதம் வந்தது. சந்தோஷத்துடன் கடிதத்தை எடுத்தான். அவன் முற்றிலும் எதிர்பாராத அவ்விரண்டு அதிர்ச் சிகளை வாசித்ததும் அவனால் சீரணிக்க முடியவில்லை. தன் அறையினுள் மூர்ச்சித்து விழுந்தான். வெகு நேரத்தின் பின்பு எழுந்தான். தன் மூளையே குழம்பிவிட்டதைப் போல் உணர்ந் தான். தான் சிந்திக்காமல் மேற்கொண்ட அவசர முடிவு இத் தகைய விபரீதங்களை ஏற்படுத்தி விட்டதை எண்ணி வருந் தினான். “தாயைக்கொன்ற தனயனே, உனக்கேத டா வாழ்வு? பத்துமாதங்கள் சுமந்து, பெற்று, வளர்த்தவளையல்லவா நீ பறிகொடுத்தாய்? அதுமட்டுமா? காலமெல்லாம் உன்னையே

தோழன்
நம்பி, உனக்காகக் காத்திருந்த உன் உயிர்க் காதலியையுமல்லவா மா ற் றா ன் மனைவியாக்கிவிட்டாய்? நீ ஒரு மதி கெட்ட முட்டாள்" என அவன் மனசாட்சி குத்திக்குதறியது.
வேதனையில் வெதும்பிய ரியாஸ் இறுதியில் சயரோக நோயாளியாகிவிட்டான். தனது படிப்பைத் தொடரமுடிய வில்லை. ஊரிலுள்ள வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தான்" நோய்குணமானதும் தன் படிப்பைத் தொடர உத்தேசித்தான். ரியாஸைப்பற்றிய விபரங்களை கேள்வியுற்ற சனீரா வைத்திய சாலையை நோக்கி விரைந்தோடி வந்தாள். அவனின் தோற் றத்தைக்கண்டு ஏங்கி ஏங்கி அழுதாள். இரவு பகலாக தன் அத்தானுக்குச் சேவை செய்தாள். தனக்கு நேரமில்லாதபோது கணவன் சலீமை அனுப்பினான். இச்சேவையில் அவள் நிம்மதி கண்டாள். ரியாஸின் உடல் நிலையும் தேறிக்கொண்டே வந்தது. பூரண சுகமடைந்து விட்டான். சனீராவின் நிம்மதியான வாழ் -வைப் பாழாக்கக் கூடாது என்பதை நினைத்த ரியாஸ் சலீமி டம் கூறினான் தான் இறந்து விட்டதாக சனீராவிடம் சொல் லும்படி, சலீமும் அவ்வாறே செய்தான். இதற்கிடையில் ரியாஸ் சுகம்பெற்று வெளிநாடு சென்று படிக்கலானான்.
ரியாஸ் இறந்துவிட்டதாக சலீமின் மூலம் அறிந்த சனீரா வின் வேதனைக்கு எல்லையே இல்லை. நாளுக்கு நாள் தலிந்து கொண்டே போனாள். இதனால் சந்தேகம் கொண்ட சலீம் திடீரென ஒருநாள் மாரடைப்பால் இறந்தான். இதற்குள் சனிரா வின் வயிற்றில் சிசு ஒன்றும் வளர்ந்து கொண்டு வந்தது.
ரியாஸ் ஐந்து வருடங்கள் கழித்து டாக்டர் ரியாஸாக தாய் நாடு திரும்பினான். அயலூரிலுள்ள வைத்தியசாலையில், கடமையேற்றான். அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தினம். டாக்டர் ரியாஸ் அனாதை இல்லமொன்றுக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தான். சின்னஞ்சிறு அனாதைச் சிறுமிகளை பார்த்துக்கொண்டே சென்ற டாக்டர் ரியாஸ் ஒரு சிறுமியைக் கண்டதும் அவ்விடத்திலேயே செயலற்று நின்று விட்டான். வைத்தகண் வாங்காமல் அச்சிறுமியையே பார்த்துக் கொண்டி ருந்தான். ஆம்! சனீராவேதான். அகன்ற கண்கள்; சுருண்ட மயிர்; நீண்ட மூக்கு; ஒடோடிச் சென்றார் டாக்டர் இல்லத் தலைவியிடம். இக்குழந்தையின் விபரங்களைக் கேட்டவன், அவர் கூறிய விபரங்களிலிருந்து சனீராவின் குழந்தைதான் என்பதையும் அதைப் பிரசவித்ததும் சனீரா இறந்ததையும், ஊரார் அப் பிள்ளையைஇந்த அனாதைவிடுதியில் சேர்த்ததையும் அறிந்தான். கண்கள் குளமாக அக்குழந்தையை கட்டியணைத்து உச்சி

Page 8
2 - தோழன்
முகர்ந்தான் டாக்டர் ரியாஸ், “என் உயிர் சனீரா கால மெல்லாம் எனக்காகக் காத்திருந்தாய்! என்னை விட்டும், உலகை விட்டும் பிரிந்தாய். ஆனால் என்னுள்ளத்தில் நீ ஏற்றிவைத்த அகல் விளக்கு காலமெல்லாம் ஒளி வீசிக்கொண்டிருக்க உன் நினைவுச் சின்னத்தை எனக்கே தந்து விட்டாய்! அதை நான் காலமெல்லாம் கலங்காமல் காப்பேன். உன் ஆத்மா சாந்தி யடையட்டும்.’’
இவ்வாறு தனக்குள் பிரார்த்தித்த டாக்டர் ரியாஸ் அச் சிறுமியைத் தனதாக்கிக் கொண்டார். *
இது ஒரு ஜப்பானிய உபதேசம்!
ஜப்பானில் ஒர் ஊரில் பிரதான பிக்குவுடன் ஓர் சிஷ்யரும் யாத்திரை மேற்கொண்டிருந்தனர். இடையில் ஒரிடத்தில் ஒரு வாய்க்கால் அருகே யுவதியொருத்தி அவ்வாய்க்காலை கடக்க முடியாது காத்திருந்தாள். பிரதான பிக்கு அப்பெண்ணுக்கு அதைக்கடக்க உதவி புரிந்தார். இதைச் சகிக்காத சிஷ்யர் ஆசி ரமத்தை அடைந்ததும், "குருவே! நம் பயணத்தின் இடையில் யுவதியை தீண்டியது கூடாதல்லவா?" என வினவியபோது ‘நான் அந்த யுவதியை இக்கரையிலிருந்து அக்கரையில் வைத்துவிட்டு வந்துவிட்டேன். நீரோ இன்னும் சுமந்து கொண்டிருக்கிறீர்' என் பதாக அவர் பதில் அமைந்தது. - ரோவ்ஸா அஸ்வர், அரனாயக.
காற்று வாக்கில்!
அதிர்ஷ்ட மின்வெட்டில் காலங்களின் அவன் காட்டில் அன்பளிப்பாம் கடும் மழை அவன் அனுபவங்கள் பெற்ற பாசமும் கையுடைந்த நிலையில் உற்ற நேசமும் காணாமல் போகிறது! பாதச் செருப்புக்கு ஆணவம் அவனில் சமர்பணமாகிறது! கையெழுத்திட்டதால்
காலக் கண்ணாடியில்
வறண்டு போன அவன் நிறமாற்றம்
அவன் மனப்பரப்பில்
மண், பொன் நிதர்சனமாகிறது.
8 ஆம் Gorf ar. జ్ఞాత பணக்காற்றுவாக்கில்
லையம் விளைச்சல்கள்! அலையு
அவனும் ஓர்" காற்றாடி! பர்ஸானா ஹனீபா - பூகொடை.

தோழன் 3
மல்லிகைப்பர் ம்
8 நதலு =ஒரு மதிப்பீடு= மலர்ந்த பூககளும. (தொடர் கட்டுரை)
வர்க்க உணர்வின் இலேசான கீற்றைப் பந்தல் போடும் செக்கு மாடுகள் என்ற கதை உணர்த்துகிறது. புதிய தலை முறையின் உத்வேகத்தை "றபீயுல் அவ்வல் தலைப்பிறை, ஒரு கிராமத்தின் புதுக் கதிர்கள் என்பவை உணர்த்துகின்றன. ஊன்று கோல், புதுப்பட்டிக் கிராமத்திற்கு கடைசி டிக்கட் ஆகியவை மலையகத் தொழிலாளரின் வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டு படைக்கப்பட்டவையாகும். நீந்தத் துடிக்கும் மீன் குஞ்சுகள், மண்ணின் செல்வங்கள் ஆகியவையும் ஆசிரியரின் படைப்பாக் கத்திறனுக்குச் சான்றாகின்றன. இரவின் ராகங்கள் மூலம், நகர நடைபாதைவாசிகளின் வாழ்வியல் நோக்கையும், போக்கையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆப்டீன் முயன்றுள்ளார். முரண்பாடுகள் நல்ல கருவொன்றைக் கொண்ட படைப்பெனி னும், அத  ைன இன்னும் சிறப்பாகப் படைத்திருக்கலாம் எனத் தோன்றுகின்றது. சுரங்கப்பாதை, அந்த வண்டியின் ஒட்டம் ஆகியவை பிரசுரிக்கப்பட்ட முறை, அவற்றின் ஜீவனைக் குற்றுயிராக்கி விட்டது.
நந்தி அவர்கள் தமது ‘அறிமுகத்திற் குறிப்பிட்டுள்ளமை போன்று, “இந்தக் கதைகளின் சமூக சேவை கணிசமானது; அதேவேளையில் அழகியல் அமைதியும் காக்கப்படுகின்றது.”* இத்தொகுப்பில் அடங்கியுள்ள அனைத்துக் கதைகளும் ஆப்டீ னின் எழுத்தினது தரத்தை இனங்காட்டும் அதேவேளை, அவர் -கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள், புதுப்பட்டிக் கிராமத்திற்கு கடைசி டிக்கற், றபியுல் அவ்வல் தலைப்பிறை, நீந்தத் துடிக்கும் மீன் குஞ்சுகள், இரவின் ராகங்கள் ஆகியவை ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கான அவரது தனித்துவப் பங்களிப்புகளாக விளங்கு கின்றன:
**கொடுத்தல்" மூலம் ஈழத்துச் சிறுகதைத் துறைக்குத் தம்மாலான பங்களிப்பினை நல்கிய சுதாராஜ், தமது இரண் டாவது சிறுகதைத் தொகுதியான "ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள் வாயிலாகத் தமது தரத்தை நி ைல நிறுத்த முயற்சித்துள்ளார். படைப்பாற்றலும், கதை கூறும் முறையில் தனித்துவமும் கொண்ட இவ்வெழுத்தாளருக்கு ஈழத்து இலக்கியவுலகிற் தனித்ததோர் இடமுண்டு என்பதை, அவரது

Page 9
14 தோழன்
சிறுகதைகள் சில கட்டியங்கூறி நிற்கின்றன. விசாலமிக்க விஷேட பார்வை அவரிடத்து இயல்பாகவே உள்ளமைந்துள்ளது. எல்லை கள் விரிந்த மனிதாபிமான உணர்வின் பரப்பினை, அவரது படைப்புகள் துல்லியமாக உணர்த்துகின்றன.
பலரின் கவனிப்பைப் பெறாத விடயங்களையும் தமது கணிப்புக்குட்படுத்திப் படைப்பாக்கும் ஆற்றல் சுதாராஜ-சக்கு இயல்பாகவே கைவந்துள்ளது. தொங்கல், கனிவு முதலான சிறு கதைகள் இத்தகையவையாகும். அவருக்கே உரித்தான தனிப் பார்வையின் பிரதிபலிப்பை, அவரது படைப்புகளில் ஆங்காங்கே இனங்கான முடிகின்றது. ‘ஒரு நாளைக்காவது ஒரு வெள்ளை யன் கார் ஒட்டிவர, அதிலிருந்து ஒரு கறுப்புத்தோல் இறங்க வேண்டுமே " (ஒருநாளில் மறைந்த இரு மாலைப்பொழுதுகள்) *அடடே இரக்கப்படுவதற்குக்கூட ஒருவித தகுதி வேண்டும் போலிருக்கே!'" (கால்கள்) முதலானவை அத்தகையவை.
கலாநிதி துரை மனோகரன்
அவரது சிறுகதைகளிற் குறிப்பிடத்தக்கதோர் அம்சம், இறுதி வரைக்கும் மூச்சுவிடாமற் க  ைத  ையக் கொண்டுசெலுத்தி, இறுதியிலேயே கதையின் மூச்சை வெளிவிடும் பாங்காகும். இத்தகைய அம்சம், அவரது படைப்புகளுக்கு ஒருவகைத் தனித் துவத்தை அளிக்கிறது எனலாம். நகைச்சுவை இழையோடக் கதை சொல்லும், "சிரித்திரன்' பண்ணையில் வளர்ந்தமை இவரது பாணிக்கு மெருகூட்டியிருக்கலாம்.
இத்தொகுதியில், தரமான ஒரு படைப்பாளியின் கை வண்ணத்தைக் காட்டும் படைப்புகளும் உள்ளன. அதேவேளை, கதாசிரியரின் ஆற்றலை முழுமையாகப் பிரதிபலிக்காத சிறுகதை களும் இடம்பெற்றுள்ளன. புனிதம் என்ற "ஹவுஸ் மெயிட்டின் மன உணர்வுகளைப் பின்னிக்காட்டும் “ஒரு நாளில் மறைந்த இருமாலைப் பொழுதுகள்", சைக்கிள் பற்றிய சிந்தனையும், வாழ்க்கைப் பிரச்சினைகளையும் இணைத்துச்செல்லும் "சைக்கிள்" யாழ்ப்பாணத்துச் சராசரிக் குடும்பங்களிற் காணத்தகும் பிரச் சினைகளுக்குக் கதையுருவம் கொடுக்கும் 'பாலைவனத்திலும் புல் முளைக்கும்”, சமகாலப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நம்பிக்கை யுணர்வைக் கோடிட்டுக்காட்டும் "மீட்சி , சோற்றுக்காகக் காத் திருந்த பப்புவின் நிலையைச் சோகச் சுவையோடு சொல்லும் *கால்கள்’ ஆகியவை, சுதாராஜ"க்குப் பெருமையையும், ஈழத் திலக்கிய உலகுக்கு வளத்தையும் தேடிக்கொடுக்கும் இலக்கிய ஆக்கங்களாக அமைந்துள்ளன.

தோழன் 15
இந்நூலின் பதிப்புரையிற் குறிப்பிட்டுள்ளமை போன்று, *சுதாராஜ் - புதிய கோணங்களில் சிந்திக்கக்கூடிய ஒருவர்' என்பது, இத்தொகுதி மூலம் நிரூபணமாகின்றது. சிறுகதை எழுத்தாளராகவும், நாவலாசிரியராகவும் விளங்கும் சுதாராஜ், படைப்பாளி என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. இத்தகைய தனித்துவமிக்க படைப்பாளியை இனங்கண்டு, அவரது இரண் டாவது சிறுகதைத் தொகுதியை "மல்லிகைப் பந்தல் வெளி யிட்டமை வரவேற்புக்குரியது, செங்கை ஆழியானின் முன்னுரை யும் நூலுக்கு அணிசேர்க்கிறது.
ஈழத்து எழுத்தின் வாசனையைத் தேசிய ரீதியில் தெரி வித்த பெருமையில் மல்லிகைக்குப் பெரும் பங்குண்டு. அதன் பிரதிபலிப்பினை "அட்டைப் பட ஓவியங்கள் என்ற நூலிலும் காணமுடிகின்றது. "இந்த மண்ணில் அற்புதமானவர்கள், மதிக் -கப்படத்தக்கவர்கள், கெளரவிக்கப்படக் கூடியவர்கள் அன்றும் வாழ்ந்தார்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர் என உரக்கக் கத்தவேண்டும் போல, ஒரு மன உணர்வு என்னை அடிக்கடி ஆட்கொண்டதுண்டு. இதன் எதிரொலியாகத்தான் மக்களின் புத்திரர்கள், கெளரவிக்கப் படத்தக்கவர்கள், மல்லிகையின் அட்டையை அலங்கரித்தார்கள்' என்ற மல்லிகை ஆசிரியரின் கூற்று, அவரது உள நோக்கைத் தெளிவுறுத்துகின்றது. மாதந் தோறும் மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்கள் பற்றிய விட யங்களை அவதானமாகத் தமது தொகுப்பு நூல் மூலம் பதிவு செய்து வைத்தமை, ஈழத்துத் தமிழ் இலக்கியக் களத்துக்கு ஜீவா செய்த பெரும் சேவையாகும். அவரே கூறுவதுபோல, “தமிழில் இது ஒரு புது முயற்சியும் கூட.
இலக்கியவாதிகளாகவும், இலக்கியத்துறையோடு தொடர்பு கொண்டோருமான முப்பத்தைந்து பேர் பற்றிய இந்நூல், உண்மையில் இளைய தலைமுறையினரும், இளம் ஆராய்ச்சி மாணவரும் தங்களுக்குள் வாழ்ந்த, வாழும் இலக்கியத் தொண் -டர்களின் பணிகளையும், தனிப்பட்ட இயல்புகளையும் இயன் றளவில் அறிந்துகொள்ள உதவ முடியும். பொது வாசகருக்கும், தமக்குத் தெரிந்த, தெரியாத இலக்கியவாதிகளின் பண்புகளை யும், பங்களிப்புகளையும் தெரிந்து கொள்ளப் பெருவாய்ப்பினை இந்நூல் நல்குகின்றது. w
ஈழத்துத் தமிழ் இலக்கியவாதிகளை மட்டுமன்றி, இந் நாட்டிலிருந்து ஆங்கிலம் மூலம் சர்வதேசக் கணிப்புப் பெற்ற படைப்புகளை அளித்த அழகு. சுப்பிரமணியம், சிங்கள எழுத் தாளர் மார்டின் விக்கிரமசிங்ஹ ஆகியோரையும் கெளரவித் திருப்பது வரவேற்புக்குரியது. (தொடர்ந்து மலரும்)

Page 10
16
(சங்கப் பலகையிலிருந்து.) எதற்காக..?
உனது இதய அழுகையினை
அமிலக் கவிதைகளாக்கிவிட்டு எதற்கு மல்லிகைச் ச்ரங்களால் மாலைகட்டுவதாகக் கூறுகின்றாய்? சின்ன மலருக்காகச் சிறகுகளை இழந்துவிட்டு வானத்தில் இருப்பதாக வார்த்தைகளால் பறக்கின்றாய்! மெளனத் தோழிக்கும் கவிதைத் தாவணியைப் போட்டு விட்டு நீ நிர்வாணமான போலிகளைப் போர்த்திக் கொண்டிருக்கின்றாய்! அலங்காரமான போலிகளைப் பிரசவிக்கும் உனக்கு நிர்வாணமான நிஜங்களை மலடாக்கத் தெரியவில்லை. இருந்தும் நீ புத்திசாலி
ஏனெனில்
நிஜங்களை உலாவ விட்டு விஷங்களை LDT 60p6nyu ĵi "G வரவேற்கவில்லை.
- ‘கவிதா ?
தோழன்
போர்க்களம்.
அந்த அதிகாலை உதிக்க முன்பு வெடித்த அந்த வெடியின் ஒசை செவியைக் கிழிக்கிறது. வெடிகுண்டுகள் வெடிக்கும் ஓசை செவியைக் கிழிக்கிறது! அந்த தோட்டாக்களின் பெயர்கள் எமக்குத் தெரியாது . யுத்தக்கலம்தான் என் பிறப்பிடம்
அங்குதான் நான்
பிரசவமானேன்.
சமாதானம்! சிவப்பு மழைக்குள் காகம் கரைவது பொழுது விடிந்தால் மட்டுமல்ல பிணம் விழுந்தாலும் தான் . மேகம் கறுப்பது மழைகாலத்தில் மட்டுமல்ல யுத்தகாலத்திலும் தான் கங்கைகள் சிவப்பது மாலை நேரக் கதிர்கள் பட்டுத்தெறிப்பதால் மட்டுமல்ல துப்பாக்கிகளுக்கு முத்தம் கொடுத்த தியாகிகளின் உதிரங்கள் கலப்பதாலும் தான் பொறுத்துப் பார்க்கிறேன் நாளைய பொழுதாவது நமக்காக நல்லதாய் விடியுமா?
6Tlb. அர்ஷத் வெலம்பொடை,

தோழன் 7
|பிணைப்பு சிறுகதை
ச. மணிசேகரன்
பாடுமீன் நாட்டில் ஆரையூரும் காத்தனூரும் பிட்டும் தேங்காய்ப் பூவும் போல பின்னிப் பிணைந்து காணப்படும் இரு கிராமங்கள். ஆரையூர் மக்களின் கொள்வனவு கொடுப்பனவு எல்லாம் காத்தனூரிலும், காத்தனூர் மக்களின் முதலீடுகளெல் லாம் ஆரையூரிலும் காணப்பட்டதும், ஒரு மொழிபேசும் இரு கலாச்சார மக்கள் என்பதும் காரணங்களாகும்.
இரு கிராமங்களிலும் உள்ள பெரும் முதலாளிகளினதும் காடையர்களினதும் போட்டி, பொறாமை காரணமாக சுயநலம் கருதி விசத்துளிகள் தூவப்பட்டன. அதற்கு வலுவூட்டுவதாய் நாட்டின் சூழ்நிலையும் அமைந்து விட்டது. மக்கள் பலிக்கடாக் களாக்கப்பட்டனர். இதனால் அழிவுகளும் துன்ப துயரங்களும் ஏற்பட்டன. இவ்வாறு கலவரங்கள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் இருந்தது.
ஆரையூரைச் சேர்ந்த முரளி, மலையகத்தில் ஒரு ஆசிரி யராக வேலை செய்கிறான். விடுமுறை விட்டதும் வழக்கம் போல தனது ஊருக்கு வந்தான். இம்முறை இரு கிராமங்களும் அமைதியாக இருப்பதன் காரணமாக காத்தனுரரில் இருக்கும் தனது நீண்ட கால நண்பனான கதீரைச் சந்திக்கலாமென்று எண்ணினான்.
திட்டமிட்டபடி அன்று ஞாயிற்றுக்கிழமை கதீரைச் சந் திக்க காத்தனூருக்கு முரளி சென்றான். நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்ததனால் இருவரும் கட்டித்தழுவி ஆனந்தமடைந் தனர். இன்றைய இலக்கியப் போக்குகள் பற்றியும், ஈழத்தின் இலக்கிய வளர்ச்சி பற்றியும் அளவளாவினர். நேரம் ஓடியதே தெரியவில்லை. கதீரின் வீட்டில் முரளிக்கு மதிய உணவு பரி மாறப் பட்டது. இருவரும் கதைத்துக் கதைத்து சுவைத்து உண்டனர்.
பின்னேரம் மூன்று மணியளவில் கதீரின் வீட்டைவிட்டு வெளிக்கிட ஆயத்தமானான். அதற்கிடையில் காத்தனுாருக்குள் ஏதோ அசம்பாவிதம் நடைபெற்று விட்டதற்குரிய சலசலப்பு தென்பட்டது. என்னவென்று அறியலானார்கள்.
காத்தனூர் சந்தையில் பொருட்களை வாங்குவதில் இரு முதலாளிகளுக்கிடையில் தகராறாம். அதனால் அவர்களின்

Page 11
18 தோழன்
கையாட்கள் அடிபட்டுக் கொண்டார்களாம். இறுதியில் பார்த் தால் அதில் ஒரு முதலாளி காத்தனூரையும், மறுமுதலாளி ஆரையூரையும் சேர்ந்தவர்கள்.
இதனை சாட்டாக வைத்து இரு பகுதியாரும் தங்களுக்குச் சாதகமாக கதையைக்கட்டி பெரு நெருப்பாக வளர்த்தனர். இதன் விளைவாக காத்தனூர் சந்தைக்கு வந்த ஆரையூர் மக்கள் பலியாடுகளாக சந்தையினுள் பூட்டி வைத்து வெட்டப்பட்டனர். இரு கிராமங்களும் அல்லோல கல்லோலப்பட்டது. "
இதனை அறிந்த கதீரின் வீட்டார் பயந்து நடுங்கினர். முரளியைப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என்பதற்காக **மகன்; முரளிய ஊரின் எல்லையில விட்டுப்போட்டு வாங்க”* என்று கதீரின் உம்மா கூறினாள். வேணாம் வேணாம் என முரளி தடுத்த போதும், கட்டாயப்படுத்தி கதீரை உம்மா அனுப்பி வைத்தாள். s
ஆரையூரையும், காத்தனுாரையும் பிரிக்கும் எ ல்  ைல வீதிக்கு வந்தனர். அங்கு வந்த பின்புதான் அவர்களுக்கு நிலைமை புரிந்தது. காத்தனூரின் பக்கம் ஒரு குழு பயங்கர ஆயுதங்களு டனும், ஆரையூரினுள் இன்னொரு குழு பயங்கர ஆயுதங்களு டனும் நின்றன. எந்த வேளையிலும் சண்டை மூளும் பதட்ட நிலை நிலவியது.
இக்கூட்டத்தினரை இருவரும் பொருட்படுத்தாமல் முர ளியை எல்லையில் விட்டுவிட்டு திரும்பிச் செல்ல முனைய, ஆரையூர்க் கூட்டம் கதீரைச் சுட்டிக்காட்டி 'அந்தா காத்த னுார்க்காரன் போறான், அவனைப் புடி, வெட்டு, கொல்லு”* என்று கத்தியவாறு ஓடிச் சென்று பிடித்துத் தாக்கத் தொடங் கினர். அதேவேளை காத்தனுார்க் கூட்டம் முரளியைச் சுட்டிக் காட்டி “அந்தா ஆரையூர்க்காரன் போறான், அவனைப் புடிங் கடா, வெட்டுங்கடா" என்று கத்தியவாறு பிடித்து அடிக்கத் தொடங்கினர். அச்சண்டை குழுச்சண்டையாக, பின் ஊர்ச் சண்டையாக மாறியது.
இத்தகவல் பொலிசுக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸ் வரு வதற்கிடையில், சண்டை ஓய்ந்து இரு கூட்டமும் கலைந்து சென்றது. காயப்பட்டவர்களையும் தூக்கிச் சென்றுவிட்டனர். ஆனால் இரு உடல்கள் மட்டும் தலை வேறு முண்டம் வேறாகக் கிடந்தது. அவர்களை யாரும் தொடக்கூட இல்லை.
காரணம், முரளியை ஆரையூர்க் கூட்டம் துரோகி என் றனர். கதீரை காத்தனூர்க் கூட்டம் துரோகி என்றனர்.

தோழன் - 19
முரளியின் முண்டம் ஆரையூரிலும், தலை காத்தனூரின் எல்லைக்குள்ளும் கிடந்தது. அவ்வாறே கதீரின் முண்டம் காத்த னுாரிலும் தலை ஆரையூர் எல்லைக்குள்ளும் கிடந்தது.
இருவரினதும் இரத்தம் ஒன்றாகக் கலந்து உறைந்திருந்தது. இரண்டும் சிவப்பு நிறம். எது கதீரின் ரத்தம்?, எது முரளியின் ரத்தம் என்பதனை யாராலும் அறிய முடியாதது மட்டுமல்ல, பிரிக்க முடியாது என்பதனையும் உணர்த்தினர்.
இறுதியில் பொலிசார் கதீரின் முண்டத்தையும் முரளியின் தலையையும் சேர்த்து ஒர் உடலாகவும், கதீரின் தலையையும் முரளியின் உடலையும் சேர்த்து மற்றொரு உடலாகவும் தைத்து அவசரகாலச் சட்ட விதிகளின்படி இறுதிக் கிரியைகளை நடத்தினர்.
வாழ்வில் என்ன, இறுதியிலும் இரண்டறக் கலந்து விட் டனர்,
இது மதத்தால், மொழியால் நிறத்தால், இனத்தால் பிரதேசத்தால் கூறுபோட முனையும் பிரிவினைவாதிகளுக்கும் ஒர் பலத்த அடி என்பதனை இருவரும் உணர்த்தி விட்டே மறைந்தனர். ※
VVVVVVVV VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV VVVVVV W கருணை மனு!
பொற்கதிர் சூரியனே! ஒரு வெளவால் போல பாற்கதிர் சந்திரனே! நானும் தவம் கிடக்கிறேன். முத்தொளி ஒருமுறை வெள்ளிக் கூட்டங்களே ஒரேயொரு முறை மட்டும் கலைந்து போங்கள்! நான் எனது காரிருள் தன் போர்வையினால் செம்மண் தெருக்களில் பூ முகத்தை மூடட்டும், உலவி வர வேண்டும்; ஏனெனில். ஏனெனில் இருளின் வருகைக்காய் உங்கள் வெளிச்சத்தில் இதயம் தியானிக்க என்னை துருவித் தேடுகின்ற அந்தகார பனங்கூடலுக்குள் கொலை வெறிக்கண்களை தலைகீழாய்த் தொங்கும் கக்கிருள் மறைக்கட்டும்.
- “சித்தன்'
g g g g g c s 6 g g g g 6 g is s 6 g c s s G s ss is Gig கதைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனை. ஆக் கங்களைத் திருத்தவும், சுருக்கவும் ஆசிரியருக்கு உரிமையுண்டு.

Page 12
20 தோழன்
மலையக நாவ ல்கள்
- ஓர் அறிமுகம்.
கலாநிதி க. அருணாசலம் முதுநிலை விரிவுரையாளர் - பேராதனைப் பல்கலைக்கழகம்.
இன்றைய மலையகத் தோட்டத் தொழிலாளரின் மூதா தையர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகக் கிராமப் புறங்களையொட்டியதுமான சேரிப்புறங்களில் எத் தகைய பரிதாபகரமான நிலையில் வாழ்க்கைப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள் என்பதையும், சமூக பொருளா தார ரீதியாகக் காலம் காலமாக மிகவும் பிற்படுத்தப்பட்டிருந்த அவர்களையே அடிக்கடி ஏற்பட்ட கொடிய பஞ்சங்கள் மோச மாகப் பாதித்தன என்பதையும், ஒரு நேரக் கஞ்சிக்குக் கூட வழியற்ற நிலையில் எவ்வாறு பட்டினிச் சாவுகளுக்காளானார் கள் என்பதையும், கிராமப்புற பண்ணைகளிற் கூலி வேலை செய்த அவர்களுள் ஒரு சிறு பகுதியினரே சிறிய துண்டு நிலங் களுக்குச் சொந்தக்காரர்களாக விளங்க, மிகப் பெரும்பாலான வர்கள் குடியிருக்கக்கூட நிலமற்ற நிலையில் பண்ணை முதலா -ளிகளின் நிலங்களிலேயே சிறுசிறு குடிசைகளிற் குடியிருந்தனர் என்பதையும், அதே சமயம் சமூகத்தின் உயர்த்தப்பட்ட சாதி யினரே நிலவுடைமையாளர்களாகவும் செல்வந்தர்களாகவும் விளங்கினர் என்பதையும், அடிக்கடி ஏற்பட்ட பஞ்சங்கள் அவர் களை அதிகம் பாதித்ததில்லை என்பதையும் பண்ணை விவசாய முறையின் கீழ் நிலவிய சமூக அமைப்பு சமுதாய ஏற்றத் தாழ் வுகளையும் சாதிப் பிரிவுகளையும் கொண்டிருந்தது என்பதையும் நாவலாசிரியர் நேரடியாக வர்ணித்தல், எடுத்துரைத்தல், பாத் திரங்களின் உரையாடல்கள், செயற்பாடுகள், சிந்தனைகள் எனப் பல்வேறு உத்திகளைக் கையாண்டு கச்சிதமாக விளக்கிச் செல்கிறார்.
நாவலாசிரியர் காட்டும் மிகப் பின்தங்கிய சேந்தூர்க் கிராமம், அதனிலும் பின்தங்கிய நிலையிலிருந்த சேரிப்புறங்கள், சேந்தூர்க் கிராமத்தைச் சேர்ந்த கோயிற்புரோகிதர், பண்ணை யார் ஜெம்புலிங்கம் பிள்ளை, பள்ளி உபாத்தியாயர் கல்யாண ராமன், செட்டிமார்கள், அரை அடிமை நிலையில் வாழ்ந்த சேரிப்புற மக்கள் முதலியோர் “துன்பக்கேணி" என்னும் சிறு கதையிற் புதுமைப்பித்தன் காட்டும் மிகப் பின்தங்கிய வாசவன்

21 h− தோழன்
பட்டிக் கிராமம், அதனிலும் பின்தங்கிய பறைச்சேரி, வாசவன் பட்டிக் கிராமத்து அக்கிரகாரம், பண்ணையார் நல்ல குற்றா -லம் பிள்ளை, கணக்கு முதலியார் சுந்தரலிங்கம் பிள்ளை, சேரிப் புற மக்கள் முதலியோரை அதிகம் ஒத்திருத்தல் மனங்கொளத் தக்கது.
*நரியூருக்குப் பயந்து புலியூருக்குப் போன" கதை போலவே சேந்தூர்க் கிராமச் சேரிப்புற மக்களின் வாழ்க்கை நிலையும், அவர்கள் மலையகத்திற்கு வந்து குடியேறியபின் கண்ட வாழ்க்கை நிலையும் என்பதைச் சந்தர்ப்பம் வாய்க்கும் ப்ோதெல்லாம் நாவலாசிரியர் கதைப்போக்கில் ஆங்காங்கே பாத்திர உரையா டல் மூலம் விளக்கிச் செல்ல தவறவில்லை.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலப் பகுதித் தொழிலாளர் வரலாற்றை மிக நுணுக்கமாகச் சித்திரித்துச் செல்லும் நாவ லாசிரியர் அந்நூற்றாண்டு காலப் பகுதியுள் தமிழகக் கிராமப் புறத்துச்சேரிப்புறங்களிலும் தொழிலாளர் வாழ்விலும் இலங்கை யின் மலையகத்துக்கும் தமிழகக் கிராமப் புறங்களுக்குமிடை யிலான போக்குவரத்திலும் படிப்படியாக ஏற்பட்டு வந்த மாற் றங்களை மிகுந்த கவனத்துடன் அவதானித்துப் பல்வேறு உத்தி களின் மூலம் அவற்றைக் கதைப் போக்கோடு ஒட்டிக் காட்டி யுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தொழிலாளரின் ஒவ்வொரு தலைமுறையிலும் ஏற்பட்டு வந்த நுணுக்கமான மாற்றங்கள் கூட நாவலாசிரியரின் பார் வைக்குத் தப்பவில்லை. நாவலில் இடம்பெறும் மூத்த தலை முறையைச் சேர்ந்த வேலனும் அவனோடொத்த ஆண்களும் பெண்களைப் போலவே குடுமிக்காரர்களாகவும் காதணி (கடுக் கன்) அணிந்தவர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். ஆயின் மூன் றாவது தலைமுறையைச் சேர்ந்த வள்ளியின் மகனான முருகன் கணக்குப் பிள்ளையின் மகள் தெய்வானையைக் காதலிக்கத் தொடங்கியதும் குடுமியை அகற்றிக் கிராப்பு" வெட்டிக் கொள் வதுடன் ஒரளவு வெளி உலக விபரங்கள் தெரிந்தவனாகவும் தங்கள் அடிமை வாழ்வையும் அதற்கான காரணங்களையும் புரிந்துகொள்பவனாகவும் ஏழ்மையின் மத்தியிலும் நவீன உலகின் நடையுடை பாவனைகளைப் பின்பற்ற முயல்பவனாகவும் விளங் குகின்றான்.
நாவலில் இடம்பெறும் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்களான - {வேலன், அவனது மகள் வள்ளி, அவளது ஒன்பது பிள்ளைகளுள் ஒருவன் முருகன், முருகனின் மகன் மாரி முத்து)- முருகனின் மகன் மாரிமுத்து, லட்சுமணன், மருதை

Page 13
22 தோழன்
முதலிய பாத்திரங்கள் பெருமளவிற்கு புரட்சிகரமான பாத்தி ரங்களாகவே விளங்குகின்றன. முருகனின் மகன் மாரிமுத்து தோட்டத்து அதிகாரிகளின் அடக்குமுறைகளுக்கு அடிபணிய மறுப்பதுடன் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தன் னோடொத்த வயதுடைய ஏனைய தொழிலாளர்களையும் அவற் றில் ஈடுபடுத்த முயல்கிறான். தனது தாயின் தகப்பனாரான கணக்குப் பிள்ளையின் உதவியால் கல்லூரிப் படிப்பை மேற் கொண்டவனாகவும் உலக விவகாரங்கள் தெரிந்தவனாகவும் அடிமை விலங்கை உடைத்தெறிய முயல்பவனாகவும் விளங்கும் அவன் சிங்களத் தொழிலாளிப் பெண்ணான மெனிக்காவைக் காதலித்துத் துணிகரமாகத் திருமணமும் செய்து கொள்கிறான்.
**ஆம்.அந்தத் தோட்டத்தின் ஜனங்கள் இறந்தவர்களைப் பற்றிச் சர்வ சாதாரணமாகவே கருதினார்கள். இதெல்லாம் சகஜமாக நடப்பதுபோல நினைத்துப் பணிவோடு ஏற்றுக்கொண் டார்கள். ஏழ்னிமயும் துன்பமும் தொல்லைகளும் நிறைந்த வாழ்க் கையில் அடிமைத்தனம் கவிந்து மனிதத்தன்மையைக்கூட மறந்து விடச்செய்யும் வாழ்க்கையில், இறப்பை ஒரு வரப்பிரசாதம் என்றே நினைத்தார்கள். கரும்புத் தோட்டத்தில் புகும் யானை களைப் போல் அந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் தோட்ட உத்தியோகத்தர்களும், கங்காணி கணக்குப் பிள்ளை மார்களும் புகுந்து சின்னாப்பின்னமாக்கிவிட்ட பிறகு, அவர்கள் எத்தகையதொரு வாழ்க்கை நடத்த முடியும் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்." (தூரத்துப் பச்சை, 1964, பக். 206) எனக் காணப்பட்ட நிலைமை படிப்படியாக மாற்றமடைவதை யும், "ஆமாம் சாமி”களாகக் கைகட்டி வாய்புதைத்து வாழ்ந்த தொழிலாளர் தமது அடிமை விலங்கை உடைத்தெறிய முயல் வதையும் வாழ்வில் நம்பிக்கையும் பிடிப்பும் கொள்வதையும் கொ டு  ைம க ரூ க்கு ம் அ நீதி க ளு க் கும் எ தி ரா க ப் போராட முனைவதையும் இந்நாவலில் இடம்பெறும் நான்கா வது தலைமுறையிடத்திற் காணலாம்.
நாவலின் கதைப் போக்கோடு ஒட்டி இலங்கையிலும் இந்தியாவிலும் உலகஅரங்கிலும் நூறாண்டு காலப்பகுதியுள் இடம் பெற்றுக்கொண்டிருந்த மாற்றங்களையும் விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றங்களையும் அவை தோட்டத்தொழில் துறை உற்பத்தி, தொழிலாளரின் வாழ்க்கை நிலை முதலியவற்றில் பாதிப்புகளையும் ஏற்படுத்தியது.
(அடுத்த இதழில் தொடரும்)

தோழன் 23
சேர் போஸ்ட்! அன்புள்ள நிந்ததாசன் அவர்கட்கு!
உங்கள் சுகமான வாழ்விற்கு என் பிரார்தனைகள்! தோழமை மிக்க இனிய தோழனை பார்த்தேன். மிகவும் சந்தோஷம். அத் தனை அம்சங்களும் மிக சிறப்பாகவுள்ளன. தெரியாத பல விட யங்களை அறிந்துகொள்வதற்கு இந்த சஞ்சிகை மிகவும் உதவும். அத்துடன் சிறுகதையில் ரத்தினச் சுருக்கமாக பல விடயங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டது அருமையிலும் அருமை. ஆசிரியரைத் தான் பாராட்ட வேண்டும். மலர்ந்திருக்கும் தோழன் என்றும் எங்கள் தோழனாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். நிச்சயமாக இந்தத் தோழன் ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து எல்லோருக்கும் கைகொடுப்பான் என நம்புகின்றேன்.
அன்புடன், ரேலங்கி செல்வாரஜா. (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - ரூபவாகினிக் கூட்டுத்தாபனம்.)
பேரன்புடன் ஆசிரியர் அவர்கட்கு! بی
ஆறாவது இதழ் முழுவதுமாகப் படித்தேன். புரட்சிக் கவிஞனை நினைவுகூரும் காலத்திற்கேற்ப முன்அட்டையில் அவ னது எழுத்துக்களைப் பதித்தது சிறப்பிற்குரியது. தமிழ் மொழி யில் நமது நிலமைப்பற்றிய ‘ஆசிரியர் தலையங்கம்" மிகவும் காத்திரமானதும் ஊன்றி நோக்கற் பாலதுமாகும்
‘நமது வானத்தின் கீழ்' பல தலைப்புகளில் தொட்ட ‘நவீனன்" பாராட்டப் படவேண்டியவர்; அவசியமானது அது. *ஊர்கள்" நிந்ததாசனின் சிறுகதை வளத்திற்கான காலத்திற் கேற்ற படைப்பாக அமைந்திருந்தது. நிந்ததாசனை பாராட்டித் தான் ஆகவேண்டும். v
இம்முறை வெளிவந்த மரீனா இல்யாஸின் 'மானுடத்தின் தேவை” கவிதையும் தற்கால நிலமையைப் பிரதிபலித்தது. அதென்ன "பேராதனைப் பல்கலைக்கழக சங்கப்பலகையிலிருந்து? அனேகரின் கேள்வியாக அது அமையலாம். இதுபற்றி கலைப் பிரிவு மாணவன் மாத்தளைறிழ்வானிடம் கேட்டேன். அஃதாவது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் தமிழ் சங்கத்திற் கென ஒரு அறிவித்தல் பலகை இருக்கிறதாம். அங்கு பயிலும் மாணவர்களில் விரும்பியவர்கள் கவிதைகள் எழுதி பொறுப்பாள ரிடம் கொடுத்தால் அது அந்த அறிவித்தல் பலகையில் போடப் படுமாம்.
அன்பான தோழனின் தொடர்ந்த இருப்பிற்காய் நாமெல் லோரும் கைகோர்த்து உதவுவது இன்றியமையாதது.
- அக்குறணை இளைய அப்துல்லாஹ்.

Page 14
24 தோழன்
2 - ... : :eציאלי, נאיי;
சேர் போஸ்ட்! அன்பின் தோழன் ஆசிரியருக்கு
தங்கள் தோழன் விரித்த 6 வது இதழை சுவைக்கக் கிடைத் ததையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சிரமம் பாராது அதனை சுவைக்க உதவிய தங்களுக்கு முதற்கண் என் நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
பாரதியின் தத்துவம் நிறைந்த பாடல் வரிகளை அட்டைக் குச் சொந்தமாக்கியது வரவேற்கத்தக்கது. மொத்தத்தில் தோழன் சுமந்துவந்த கட்டுரைகள், கவிதைகள், சிறுகதை என்பன வெகு ஜோர். முதலில் மொழியறிவை வளர்ப்பது தமிழ் பாட ஆசிரியர் களின் பணி எனும் தங்களின் சுட்டிக்காட்டல் மொழி வளம் கொண்ட ஒரு சமூகத்தின் உருவாக்கத்திற்கு களம் அமைக்கட்டும். மேலும் தமிழ் கல்வியின் இன்றைய நிலை, சிவாஜி கணேசன் கட்டிய கோயில் எனும் தலைப்பில் இடம்பெற்ற கட்டுரைகள் எம் சிந்தனையைத் தூண்டின. மேலும் "நான் தான் ரவியின் இதயம்’ அறிவுத் தேனாய் அமைந்தது. மேலும் சமாதானம் தொலைந்து போயுள்ள இக்காலகட்டத்தில் சமாதானத்துக்கு அத்திவாரமிடும் தங்களின் சிறுகதையும் ஏனைய சில கவிதைகளும் வரவேற்கத் தக்கது அதில் ‘பச்சிளம் பாலகர்கள் கூட பாலுக்காக அழுவதை விட்டு அம்ைதி வேண்டி அடம் பிடிக்கின்றன." எனும் கவி வரிகள் என் நெஞ்சைத் தொட்டன.
குறிப்பாக காலத்தேவையுடன் கைகோர்த்து நிற்கும் தோழ னின் மலரும் இதழ்கள் மேலும் பல சுவையான தகவல்களுடன் மணம் பரப்ப என் இதயத்து ஆசிகள் உரித்தாகட்டும்.
செல்வி முனஷ்வரா ஆப்தீன் பூவெலிகட - ஹன்தெஸ்ஸ.
கலை இலக்கியக் கப்பலை ஒட்டிச் செல்லும் தோழனுக்கு!
இன்றும் இனி என்றும் "தோழன்’ என் இலக்கிய நேசன். இலக் கியச் சோலையில் அவன் புஷ்பிக்கும் கவிமலர்கள் வாசக நேசர்க ளுக்கு வாசம் வீசியிருக்கும். அதன் சிப்பிக்குள் விளையும் முத்துக் கள் அவன் நண்பர்களின் சொதுக்கள். இவை தோழனின் அங்கங் களை படித்தவுடன் நானறிந்த உண்மைகள் .
கவிமணம் வீசி வீறுநடை போடும் தோழனே! உன் வருகை யால் களிப்புறும் தோழமையுள்ள விழிகளுக்கு கவிப்பால் ஊட்டும் அன்புத்தாயாக நீ என்றும் அவதரிக்க என் மனமார்ந்த ஆசிகள் !
- புத்தளம் என். பி. ஜ"னைத்.

நாம் மனிதர்களில்லையா?
கரீமா றாஹில் ம)
இருளைச் சுவாசிக்கும் இதயங்களே!
இங்கே விளக்குகள் மட்டுமா எரிகின்றன? நாமும் தான் உடம்புகள் ағтшbшөртая6әптub, உணர்வுகளுமா..? கணவுகளை
கைதுசெய்து வாழ்க்கைச் சிறையில் அடைத்து நினைவுகளைப் பிடித்து விடியல்களில் பூட்டினோம். வாழ்க்கையே சிறையாகிட நொண்டியான நினைவுகளால் நாம் முடமாகினோம்! வேதனை ஓடைகளாக மண்ணுக்குள் சங்கமிக்க கல்லறைக் கவிதைகளாக நாம் மாறிக்கொண்டிருக்கிறோம் OTh
இதயக்கதவுகள்
இழுத்து மூடப்பட புதிய எண்ணங்களை புதை குழிக்குள் போட நாமென்ன
sydpóleGod GorssamTrr? ரகசியமாய் சுவாசிப்பதற்கும்
எம்
இதயத்தின் சத்தம் எமக்கு கேட்காமலிருப்பதற்கும் நாமென்ன s மனிதர்களில்லையா? நினைவுப் பூக்கள் மனதில் மலர்வதற்கும் கனவுத் தென்றல்
எம் வாழ்க்கைச் சோலையில் நுழைவதற்கும் அனுமதியா தேவை? தோழர்களே!
எம் உதிரத்தில் இருப்பது சிவப்பு நிறம் மட்டுமல்ல,
எம்
சந்ததியின் சரித்திரமுந்தான்!!!

Page 15
ஜின்களின் அற
அற்புத வைத்
litt
பேய், பிசாசு, சூனிய வியாபாரம் நன்றாக ந பண்ணவும், வெளிநா மற்றும் சகல விடயங்கள் செய்துகொள்ளவும் நேரில் பார்வையிடும் நாட்கள் மட்டும். சந்திக்க வரும்ெ வெள்ளை ஆடையுடன் ெ
ஜின் ச
இல, ! நிந்த
இல, 23, நயா வல மாவனல்லை!
என்பவரால் மாவனல்லை . .
வெளியிடப்
 

LLLLLL LLLLLLLLSLSSLSLSSLSLSSLSLSSLSS LSSLSLSSLSLSSLSLSSLSMLSLSLSLSLSLSLSLSLSLS
at . יח בכתי. றபு மாந்திரீக
ந்திய சேவை
11) it." ம், தீராத நோய்கள்: டைபெற, வீடுகாவல்,
ட் டு விடயங்களையும்ட ளையும் திருப்திகரமாக
விஜயம் செய்யுங்கள்."
lifli - L வெள்ளிக்கிழமைகளில்
.
போது ஊதுபத்தியுடன்,
பரவும ,
|
лі | ததாா השונחו בן להשווה וז 318, புதிய நகர், !
| வூர்.. 05கிமா 1
ta
பில் வசிக்கும் A, C, றாஹில்
M. அச்சகத்தில் அச்சிட்டு ' = التي ساكا لـ