கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1983.03.15

Page 1
(1883) மார்ச் 14 ஆம் திகதி ம
நிறுத்திவிட்டார்.
யுக யுகாந்திரங்களுக்கு
 

61
15 மார்ச் 1983
邯
■ ■
#၈ဖူး .fi!န္တိဖူးဖူး" န္တု။် စူး#0u၈%
--Hill 5 பெயரும் பும்
நிவேத்து நிற்கும்" - ஏங்கெல்ஸ்,
■

Page 2
குமரன் குரல்
ቌr LዐTñ56o)ሇቇ கற்போம்
"மார்க்சின் பெயரும் சேவையும் யுகபுகாந்தரமாக நிலத்து நிற் (5 lb.'
கல்லறை அருகே நின்று ஏங்கெல்ஸ் எழுப்பிய குரல். மார்க்ஸ் மறைந்த மூன்ருவது நாள் (17-3-1883) மயானத்தில் கூறிய வார்த்கை கள் இன்றும் வீண்போகவில்லை; என்றும் வீண்போகாது.
அன்று அவரது சிந்தனைகளைச் சில அறிஞர்களும் தொழிற் சங்கத்த
வர்களுமே படித்தனர்; பாராட்டினர்.
இன்றே உலகம் முழுவதும் அவரது பெயரும் சேவையும் பாராட் டிப் போற்றப்படுகின்றன.
மார்க்ஸ் சிந்தனை ஒரு லெனினைச் செயல்வீரனுக்கியது. ஒரு மr ஒவை புதிய புரட்சியாளனுகச் சிருட்டித்தது. உலகின் பாதிமக்கள் அவரது கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டுவிட்டனர். அவர் hl Illt9. u. வழியிலே புதிய உலகைச் சிருட்டிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மறுபாதி மக்களும் சோஷலிசத்தைக் கட்டி எழுப்பும் காலம் வெகு தூரத்திலில்லை. மனித வரலாற்றை ஊன்றிக் கற்பவர்களுக்கு இதில் எவ்வித சந்தேகமும் ஏற்படமாட்டாது.
மார்க்ஸ் முதலில் ஒரு விஞ்ஞானி; சமூக விஞ்ஞானி; வரலாற் றுப் பொருள் முதல் வாதம் என்ற புதிய கோட்பாட்டை வகுத்த விஞ் ஞானி. அவர் கூறியவற்றை இன்று நடைமுறையில் காண்கிருேம். 135 ஆண்டுகளின் முன் 1848-ல் கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறியவற்றை இன்று நடைமுறையில் காண்கிறேம், 30 வயதிலேயே அவரால் எழு தப்பட்ட இச்சிறு அறிக்கை மனித இனத்தின் சமூக வாழ்வு, அதன் இயங்கியல், வர்க்கப் போராட்டம், உலகப் புரட்சி, சோஷலிச சமு தாயத்தின் அமைப்பு, அதைத் தொடர்ந்த கம்யூனிச சமூக அமை ப்பு யாவையும் கூறி நிற்கிறது.
மார்க்ஸ் ஒரு புதிய சித்தாந்தத்தையும் வகுத்துக் கூறினர். அதுவே இயக்கவியல் பொருள் முதல் வாதமாகும். இச்சித்தாந்தம் மார்க்ஸ் கண்ட மனிதவரலாற்றுடன், வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்ற விஞ்ஞானத்துடன் இணைந்தது. சமுதாயத்தின் இயங் கியல், அதனல் ஏற்படும் சிந்தனை மாற்றம், முரண்பாடுகள், அவற் ருல் ஏற்படும் வளர்ச்சிப் போக்குகளை விஞ்ஞான பூர்வமாக விளக்குவது. மதம் சார்ந்த கருத்தியல் வாதத்திற்கு இது முரணனது.
இயக்கவியல் பொருள் முதல் வாதம் என்ற சித்தாந்தத்தைக் கிர கிப்பதில் பலருக்கு சிரமம் ஏற்படலாம். லெனின் இச்சித்தாந்தத்தைப் புரிந்து கொண்டது மிக எளிமையானது.
பக்கம் 2 குமரன்

‘எல்லாச் சித்தாந்த வாதிகளும் உலகத்திற்குப் பலவேறுவகையாக விளக்கம் கூறியவர்களே. அதை எவ்வாறு மாற்றுவது என்பதே எமது வின" என்ருர் மார்க்ஸ். உலகை மாற்றியமைக்கக் கடியது அரசியல் செயற்பாடே. இது ஒரு புதிய வழமையான சித்தாந்தமல்ல. புதிய நடைமுறை கொண்ட சித்தாந்தம். ஆகவே இயக்கவியல் பொருள் முதல் வாதம் என்பது அரசியற் செயற்பாடு. ‘புரட்சிகர அரசியற்கோட் பாடின்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது’ என்ருர் லெனின்.
மார்க்சினுடைய இப்புதிய நடைமுறை கொண்ட சித்தாந்தம் உல. கை வேகமாக மாற்றக் கூடிய உந்து சக்தியாக விளங்குகிறது. பாட் டாளிகளுக்காகவே கண்டு பிடிக்கப்பட்ட இச்சித்தாந்தத்தைப் பாட் டாளிகளே விரைவில் கிரகித்துக் கொள்ளுகின்றனர். இச்சித்தாந்தத் தைக் கிரகித்துக் கொண்டதும் அது ஓர் உந்து சக்தி ஆகிறது. புரட்சிகர நடைமுறைக்குத் தூண்டுகிறது; வேகமாகப் பாட்டாளி கள் உலகை மாற்றி வருகின்றனர், தம் விலங்குகளை ஒடித்து.
மார்க்சின் சித்தாந்தத்தின் மிகப் பெரிய வெற்றி இதுவே ஆகும். உலக சமூக அமைப்பை வேகமாக மாற்றுவதற்குரிய விஞ்ஞான நடை முறையைக் கண்டவர் மார்க்சே. அதேைலயே யுகயகாந்தரமாக அவ ரது பெயரும் சேவையும் நீடிக்கும் என்று எங்கெல்ஸ் கூறினர்.
மனித இன வரலாற்றில் மனிதனை நேசித்த மகான் மூலதனம் என்ற நூலைப் பாட்டாளிகளுக்காக எழுதுவதில் வறுமையோடு போரா டியதுமட்டுமல்ல வாழ்நாளில் 35 ஆண்டுகளை அதற்காகச் செலவிட்ட தியாகி. பாட்டாளிகளது விலங்கை உடைத்து அவர்கள் இவ்வுலகை ஆளுவதற்கு பாதை காட்டிய அறிஞன். இத்தகைய உயர்ந்த சிந்தனை யாளனும் மாமனிதனுமாகிய மார்க்சின் மறைந்த நாளை நினைவு கூரு வதற்காக இச்சிறு மலரைத் தருவதில் ஒரு சிறு திருப்தி ஏற்படுகிறது. விஞ்ஞானம், சித்தாந்தங்களைக் கிரகிப்பது சிரமமானதே. பரவலாக அனைவரும் ஒரளவு மார்க்சைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண் ணத்துடனேயே பல்வேறு துறையாக அன்னரின் கோட்பாடுகளை விள க்க ஐயன்றுள்ளோம். இவை பூரணத்துவமானவை என்று கருத வேண் l-I).
மார்க்சை முழுமையாதக் கற்க ஒருவரது வாழ்நாளே போதாது. அவற்றைக் கற்கக் கற்க நுனியிலிருந்து கரும்பு தின்னும் சுவை தெரி யும். அவரது சிந்தனை வெறும் இனிப்புக் கொண்ட கருப்பஞ்சாறுமட்டு மல்ல, சத்துணவு கொண்ட பாற்கடலுமாகும்.
தொடர்ந்து அடுத்த 11 இதழ்களிலும் மார்க்சின் சிந்தனைகளே எளிது படுத்தித்தர முயல்வோம். ஆங்காங்கே அடுத்த ஓராண்டும் நடைபெறும் கூட்டங்கள், விரிவுரைகள், கருத்தரங்குகளிலும் பங்கு பற் றுங்கள். மார்க்ஸ் என்ற மாமேதையை ஒரளவு அறிய முற்படுங்கள். வாழ்க்கையில் அவரின் சிந்தனைகள் தரக்கூடிய அறிவையும் சிந்தனைத் தெளிவையும் வாழ்க்கை பற்றிய சரியான கண்ணுேட்டத்தையும் நீங் கள் பெற்றுக் கொள்வீர்கள்.
இத்தகைய பணியில் மார்க்சைக் கற்ற மார்க்சிய வாதிகளையும் எம க்கு உதவும்படி வேண்டுகிறேன். அவர்கள் எமக்கு கட்டுரை, கதை கள், விளக்கங்கள் எழுதுவதில் துணைபுரியலாம். தாமாகவே முன்வந்து அங்காங்கே சிறு குழுக்களாகக் கலந்துரையாடல்களே நடத்தலாம். மார்க்சின் நூல்களைப் பரவலாக்கலாம். இது மார்க் சிற்கு செய்யும் பணியல்ல. மனித சமுதாயத்திற்கு ஆற்றும் மிகப் பெரிய சேவையா கும.
- செ. கணேசலிங்கன்
குமரன் புக்கம் 3

Page 3
நவீன படைப்பிலக்கியத்தில்
o O 8 O O மார்க்சியத்தின் தாக்கம் - 1
--செ. யோகநாதன்
நவீன இலக்கியத்தின் முதல்வனுகக் கருதப்படும் மகாகவி பாரதி யின் எழுத்துக்கள் தமிழுக்கு வலிவும் வனப்பும் கொடுத்தவை என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்ருகும். பாரதியின் சிற ப்பு தன்காலத்து முற்போக்கு அம்சங்களை ஏற்று, மற்றவர்களைவிடக் கொஞ்சந் தொலே தூரம் நோக்கி இனி உருவாகவிருக்கின்ற நல்லம்சங் களையெல்லாம் வரவேற்று எழுதியமையே. பாரதியின் காலப்பகுதி யிலே வாழ்ந்த பழமைவாதிகள் என்போர், முற்பட்ட நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினதும் அதன் எச்ச சொச்சங்களினதும் கருத்துக்களையெல் லாம் முற்று முழுதாகப் பிரதிபலித்து நின்றனர். அவற்றையே சரி யான வழிமுறை எனவும் பிரகடனப்படுத்துகிற முயற்சிகளில் தொ டர்ந்து தங்களின் பிரயத்தனங்களைச் செலுத்தி வந்தனர். இதே வேளையில் அக்காலத்தின் புதுமை விரும்பிகள் தரகு முதலாளித்துவத் தின் கோட்பாடுகளைப் பின்பற்றுபவராயிருந்தனர். முதலாளித்துவத் தின் தோற்றமும், வளர்ச்சியுமே நிகழ்வுற்றுக் கொண்டிருந்த இருப தாம் நூற்றுண்டின் தொடக்கத்திலே இந்திய தேசிய காங்கிரஸ் தன் னுடைய பிரதானமான பலமாக மத்தியதர வர்க்கத்தினரையே கொண் டிருந்தது. இவர்களோடு தேசிய இயக்கப் போராட்டத்திலே தேசிய முதலாளிகளும் இணைந்திருந்தனர். இந்தக் கூட்டத் தினர்தான் சமுதாயத்திலும் முன்னணிப் பாத்திரத்தினை வகித் தனர் என்பதைக் கூறவேண்டியதில்லை. தேசிய முதலாளித்துவத்தைப் பிரதிபலித்த பாரதி, தனது பார்வையினை தொலே நோக்கிய காரணத் தினலேயே தொழிலாள வர்க்கத்தையும், சோஷலிச அம்சங்களையும், அடிமைத்தனமில்லா வாழ்வினையும் புகழத்தக்கதாயிருந்தது. இயக்க வியலின் அம்சங்களைப் பாரதியார் தேர்ந்து உணர்ந்து கொண்டமையே அவரது ஆளுமையைப் பூரணப்படுத்தியதொரு காரணி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 'மண்ணுலகத்து மானுடன் தன்னைக் கட்டியதனையெல்லாம் சிதறுக’ என்று அவன் முழங்குவதற்கு இதுவே காரணமாயிற்று.
பாரதி கவிதையும். வசனமும் எழுதியவன். அவனது கவியைப்போல வசனமும் வீரியம் பெற்றிருந்த போதிலும், சில வடிவங்களை அவன் வசப்படுத்திக் கொள்ளவில்லை. எனினும் அவனெடுத்துக் கொடுத்த அடி யும், பின்னர் காலமருவிய தத்துவ நோக்கும் சேர்ந்து படைப்பிலக்கி யத்துறையிலே புதிய சிந்தனையையும், வடிவங்களையும் உருக் கொள்ளச் செய்தன.
இந்த வளர்ச்சிப் பின்னணியிலேயே தமிழ் படைப்பிலக்கியத்தில் மார்க்சியத்தின் தாக்கத்தினை நாம் தெளிவுற அறிந்து கொள்ள முடியும்,
பக்கம் 4 Soprør

புதுமைப் பித்தனை சிறுகதை மூலவர் என்து சொல்வார்கள். புதுமைப் பித்தனின் எழுத்துக்கள் சமுதாயத்தின் அவலங்களை ஒரு நம்பிக்கை விரட்சியோடு சாடின. சிறுகதைக் கலைக்கு ஒரு தீர்க்கமான வடிவத்தினை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதே அவரது முக்கியத்துவம். அதுவும் பலரால் பின்னர் விசாலிக்கப்பட்டது. கு. அழகிரிசாமி, விந்தன் ஆகி யோர் இந்த வழியினை இன்னும் நிறைவோடு, தீர்க்கமாகக் கையாண்ட னர் என்றே கருதலாம். மக்களின் வாழ்வு அவலங்கள், அவர்களைத் திணறடிக்கும் சூழல்கள் என்பனவற்றை இவர்கள் நிர்த்தாட்சண்ய மாக விமர்சித்து எழுதினர். சமகாலத்து சோஷலிச எழுத்துக்களால் கவரப்பட்ட கு. அழகிரிசாமியின் படைப்புக்களில் வறுமையையும், அதன் காரணங்களையும், அதிகாரத்துவ மமதைகளையும், பெண்ணின் எழுச்சிகள் ஏக்கங்களையும் பெருமளவு காணக்கூடியதாக இருக்கிறது. ஆரம்பகாலத்தின் விமர்சன யதார்த்த எழுத்துக்களை இவர்களிருவரும் நிறையவே வழங்கியிருக்கிறர்கள். விந்தன் தனது சமுதாய விரோதி, தொகுதியிலே கூறுகின்றவை இங்கே கவனிப்புக்குரியன:
“ஒரே வார்த்தையில் சொல்வதானுல். நம் உழைப்புக்கேற்ற மதிப்பு-அந்த மதிப்பைப் பெறுவதற்குத்தான் நாம் இன்று கடவுளு டன் போராடுகிருேம்; மதத்துடன் போராடுகிருேம்; கலையுடன் போரா டுகிருேம். இந்தக் கடுமையான போராட்டத்தில் நாம் வீழ்ந்தாலும் சரி, நம் சந்ததிகளாவது வாழவேண்டும்." வர்க்க அடிப்படையில் சுரண் டப்பட்டு அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் போராட்ட உணர்வுகளை யும், எழுச்சிகளையும் சித்தரிக்கிற எழுத்துக்களுடன் தமிழ்ப் படைப் பிலக்கியத்தில் மார்க்சிய சித்தாந்தத்தின் தாக்கத்தினை நாம் உணர முடிகின்றது. இவ்விதத்திலே ரகுநாதனுடைய 'பஞ்சும் பசியும் முன் உதாரணமான நாவலாகும். நெசவாளர் போராட்டத்தினை வர்க்கக் கண்ணுேட்டத்தில் அலசுகிற நாவல் இது. இதுபோன்ற பல போரா ட்டங்களை விபரிக்கின்ற சிறுகதைகளையும் ரகுநாதன் தொடர்ந்து எழு தினர். மார்க்சியத்தினை தனது வாழ்நெறியாக ஏற்றுக்கெண்ட பாட் டாளிவர்க்கத்தவர்களையும், கட்சி உறுப்பினர்களையும் கதாபாத்திரங்க ளாகக்கொண்ட இவரது கதைகள், அக்காலத்து கம்யூனிஸ்ட் இயக்கப் போக்குகளையும் காண்பிப்பவையாக அமைந்துள்ளன.
ஒடுக்கப்பட்டு, அதனுல் போராட்டமொன்றே மார்க்கமென எழுச் சியுறும் மக்களின் விடிவு விமோசனம் மார்க்சிய நெறிக்குட்பட்டே அமைய வல்லது என்பதனை சித்தாந்தரீதியாகவே ஏற்றுக்கொண்ட எழுத்தாளர் பலரும் அறுபதுகளில் தமிழ்ப் படைப்பிலக்கியத் துறை யில் பிரவேசிக்கலாயினர். இவர்களின் எழுத்துக்களில் அரசியல் முதன்மை பெற்றது மட்டுமல்ல, இவர்களிற் பலரே இலக்கியமென் பதும் மறைமுகமான அரசியலே’ என்ற உறுதிப்பாட்டினையும் கொண்டி ருந்தனர் என்பதும் குறிப்பிடக்கூடியதாகும்.
நிலப்பிரபுத்துவத்தைக் கட்டிக்காத்திட முயல்கின்ற சாதியமைப்பு, சுரண்டல், முதலாளித்துவத்தின் இயற்பண்புகளால் உருவான அயோக் கியத்தனங்கள், வர்க்ககுணம்சங்களைச் சிதைவுபடுத்துவதற்கென முதலா ளித்துவம் உருவாக்குகிற இனவாதக் கருத்துக்கள் என்பனவற்றை
668.
குமரன் பக்கம் 5

Page 4
நிராகரித்தும், அம்பலப்படுத்தியும், மக்களைத் தெளிவான கண்ணுேட் டத்தில் சிந்திக்கவைப்பதிலே இலங்கை நாவல்கள் பெருமளவு பங்கு கொண்டுவருகின்றன; புதிதாகப் படைக்கப்பட்டு வருகின்றன.
இவ்விதத்திலே பார்க்கையில் இலங்கையிலே செ. கணேசலிங்கன், கே. டானியல், எஸ். அகஸ்தியர், பெனடிக்ற்பாலன், சி. சுதந்திரராஜா இந்தியாவில் கு. சின்னப்பபாரதி, டி. செல்வராஜ், பொன்னீலன்,சு.சமுத் திரம் ஆகியோரின் நாவல்கள் குறிப்பிட்டுக்கூறத்தக்கவையாகும். ஏனைய துறைகளில் பெருமளவு எழுத்தாளர்கள் மார்க்சிய சித்தாந்தம் அளித்த தெளிவாலும் நெறிப்படுத்தலாலும் சிறந்த ஆக்கங்களினை மேற்கொண்டு வருகின்றனர்.
சுரண்டல் ஒடுக்குமுறைகள், வெளிநாட்டுச் சக்திகளின் உள்ளூர் அரசியல் குழறுபடிகள், தம்மை விடுவிக்கக் கூடிய மார்க்கம் இதுவே யென்று முற்போக்கு அம்சங்களோடு தம்மை இணைத்துக்கொள்கிற மக்கள் போராட்டங்கள் என்பனவற்றையும், அரசியல் எழுச்சிகளையும், அவற்றின் சரியான மார்க்கங்களையும் மேற்கூறிய எழுத்தாளர்கள் சித் தரித்துள்ளனர். தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் பொதுவான பிரச் சினையாக உள்ள சாதிப் பாகுபாடுகள், அவற்றின் கயமைத்தனமான போக்கு என்பனவற்றையும், மக்களுக்கு எதிராக முதலாளித்துவ அர சாங்கங்கள் கட்டவிழ்த்துவிடும் கொடுமையான அடக்குமுறைகளையும் அம்பலப்ப்டுத்துவதிலும். இவற்றுக்கெதிராக மக்களை அணிதிரட்டுவ தையும் தமிழ் எழுத்துக்களில் ஒரு பொது அம்சமாக இப்போது அவ தானிக்கமுடிகின்றது. இவை சிருஷ்டிக்கப்படுவது உண்மையான தத்து வத் தெளிவிலிருந்துதான். எனினும் இவை குறிக்கும் அரசியல்பார்வை சித்தரிப்புகள் என்பனவற்றில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதும் மனங்கொள்ளத்தக்கதாகும். இவை தனியே நோக்கத்தக்கவை.
பொன்னீலனின் ‘கரிசல்’, ‘கொள்ளைக்காரர்கள்", சு. சமுத்திரத் தின் ‘ஒரு கோட்டுக்கு வெளியே', டி. செல்வராஜின் "மலரும் சருகும்" *தேநீா’, ‘மூலதனம்’, கு. சின்னப்பபாரதியின் தாகம்’,செ. கணேசலிங் கனின் நாவல்கள், கே. டானியலின் "பஞ்சமர்’, ‘போராளிகள் காத் திருக்கிருர்கள்', யோ.பெனடிக்ற்பாலனின் “சொந்தக்காரன்",எஸ். அகஸ் தியரின் 'இருளினுள்ளே', சி. சுதந்திரராஜாவின் ‘மழைக்குறி” ஆகியவை இத்தகைய பார்வையோடு எழுதப்பட்ட நாவல்களெனக் குறிப்பிட லாம், М
நாவல்களிலேயே அழுத்தமான முறையில் விரிவாக மக்களின் எழுச்
சிகள், போராட்டங்கள், பிரச்சினைகள் என்பனவற்றைச் சித்தரிக்க முடியுமென்பதினுல் இவை மிகுந்த தாக்கத்தினையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டன. சமகால அரசியல் 'பிரச்சினை களைக் கருப்பொருளாக்கி நாவல்கள் படைப்பதிலும் மேற்கூறிய எழுத் தாளர்களே முன்னணியில் நின்றனர் என்பதும், அதிலும் குறிப்பாக செ. கணேசலிங்கனின் ‘போர்க்கோலம்’, ‘மண்ணும் மக்களும்". செவ் வானம்”, “அந்நிய மனிதர்கள்’, ‘வதையின் கதை' ஆகியன விதந்து பேசத்தக்கதாயும், முன்னுதாரணமாயும் விளங்கின என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
பக்கம் 6 குமரன்

மாபெரும் சிந்தனையாளன் கார்ல் மார்க்ஸ் - வாழ்க்கைக் குறிப்பு
கார்ல் மார்க்ஸ் 1818மே 5ஆம் திகதி ஜெர்மனியில் பிறந்தார். தந்தை ஒரு வக்கீல்; புரட்டஸ்தாந்து மதத்தைச் சார்ந்த யூத இனத்தவர்மார்க்ஸ் பட்டப்படிப்பு முடிந்தபின்பொன், பர்லின் நகரபல்கலைக் கழகங் களில் சட்டம், வரலாறு, சித்தாந்தம் ஆகிய பாடங்களைக் கற்ருர், 7841இல் எப்புகூரியஷ என்ற கிரேக்கரின் சித்தாந்தம் பற்றிய டாக் டர் பட்டத்திற்குரிய தன் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். ஆரம்பகாலத்தில் ஹேகால் இடதுசாரி குழுவில் இருந்தார்.
1942இல் பத்திரிகை ஆசிரியரானர். மார்க்ஸ் எழுத்துக்களைக் கொண்ட இப் பத்திரிகை அரசின் தணிக்கைக்கு உட்பட்டு பின்னர் தடை செய்யப்பட்டது.
1843இல் நீண்டகாலமாகப் பழகிய ஜென்னியைத் திருமணம் செய்து பாரிஸ் சென்ருர். 1944இல் ஏங்கெல்ஸ் பாரிசுக்கு வந்தபோது சில நாட்கள் பழகி பின் நெருங்கிய நண்பரானர். அக்காலத்திலேயே பாட்டாளியின் சோஷலிசம் பற்றிய கருத்துக்கள் பற்றி கற்று எழுதத் தொடங்கினர். 1845இல் அங்கிருந்தும் புரட்சியாளன் என விரட்டப் பட்டு புருசல்ஸ் நகரம் சென்ருர்,
1847இல் மார்க்சும் ஏங்கெல்சும் “கம்யூனிஸ்டு லீக்" என்ற இரகசிய பிரச்சார சங்கத்தில் சேர்ந்தனர். அதன் இரண்டாவது காங்கிரஸ் 1847 நவெம்பரில் கூடியவேளை இருவரும் கம்யூனிஸ்டு கட்சியின் அறிக் கையை தயாரித்தனர். இதுவே 1848 பிப்ரவரியில் வெளிவந்தது. பொருள் முதல் வாதத்தை முன்வைத்து புதிய உலகைச் சிருஷ்டிக்ரும் திறமையும் சிறப்பும் கொண்டது இவ் அறிக்கை, சமூக வாழ்வு, இயக்க வியல், வர்க்கப் போராட்டம், பாட்டாளியின் உலகளாவிய புரட்சி, புதிய கம்யூனிஸ்டு சமுதாய சிருஷ்டி, யாவையும் இச்சிறிய அறிக்கை உள்ளடக்கியது.
1848 பிப்ரவரியில் புரட்சி ஏற்பட, பெல்ஜியத்திலிருந்து பாரிஸ் சென்ருர். அங்கு ஏற்பட்ட மார்ச்சுப் புரட்சியின் பின் மீண்டும் ஜெர் மனிக்குச் சென்ருர், ஒராண்டு காலம் பத்திரிகை ஆசிரியராகப் பணி புரிந்தார். பின்னர் அங்கிருந்து விரட்டப்பட்டு பாரிஸ் சென்ருர் அங் கிருந்தும் பின்னர் விரட்டப்பட் லண்டன் சென்ருர். இறக்கும்வரை அங்கேயே வாழ்ந்தார்.
நாடுகளிலிருந்து விட்டப்பட்ட காலத்து மார்க்சின் வாழ்க்கை மிகவும் கொடியதாகும். குடும்பம் வறுமையில் வாடியது. ஏங்கெல்சின் உதவி இல்லாதிருப்பின் மூலதனம் என்ற உலகைப் புரட்டத்தக்க சிறந்த ஆராய்ச்சி நூல் வெளிவந்திருக்காது.
7. குமரன்

Page 5
1864இல் முதலாவது சர்வதேசியம் நிறுவப்பட்டது. மார்க்சே இதன் முன்னுேடியாக உழைத்தார். 1871இல் பாரிஸ் கம்யூன் வீழ்ச்சி யடைந்தபோது அது பற்றிய சரியான ஆய்வை மார்க்சே முன்வைத் தார்.
வறும்ை, அயராத உழைப்பு, இயக்கப் பணிகள், மூலதனம் நூல் வேலைகள் அவரை நோயாளியாக்கியது. இரு குழந்தைகளை நோயின லும் வறுமையினலும் பறிகொடுத்தார். மனைவியை 1881இல் இழந் தார். 1883 மார்ச் 14ஆம் நாள் மாலை 2.45க்கு *உயிர்வாழ்ந்த மாபெ ரும் சிந்தனையாளன் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டான்."
(லெனின் எழுதிய வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம்.)
* ஏங்கெல்ஸ்
நான் கருதுவது நீங்கள் மதிக்கும் நற்பண்பு-மனிதாபிமானம், சாளிமை மனிதர்களிடம் நீங்கள் மதிக்கும் நற்பண்பு-தார்மீகத் துணிவு உங்களால் ஓரளவு மன்னிக்கக்கூடிய தீக்குணம்-ஊதாரித்தனம் உங்களால் பேரளவு வெறுக்கப்படும் தீக்குணம்-பொருமை. உங்களது அருவருப்பு பிரபுக்கள், சாமியார்கள், சிப்பாய்கள் விரும்பும் - காரியம் புத்தகங்களைப் படித்தல் v , மிக வெறுக்கும் வரலாற்றுப் பாத்திரங்கள்-போளுபார்ட்டும்
அவர் மருமகனும்
விரும்பும் கவிஞர்-ஷேக்ஸ்பியர் விரும்பும் உரைநடை எழுத்தாளர்-செர்வாண்டிஸ்
(ஸ்பானிய எழுத்தாளர்) விரும்பும் நிறம்-சிவப்பு W விரும்பும் மூதுரை-உனக்கே நீ உண்மையாக இரு விரும்பும் கோஷம்-எல்லோரும் ஒருவருக்காகவும் , ஒருவர் எல்லோருக்காகவும் விரும்பும் பெயர்-லெளரா, ஜென்னி (2ஆவது மகள், மனைவி) விரும்பும் உணவு-மீன் விரும்பும் வீரர்-ஸ்பார்ட்டக்கஸ், கெப்ளர் (அடிமைப் புரட்சித் தலைவன், ஜெர்மன் வானசாஸ்திரி) விரும்பும் வீராங்கன-க்ரேட்கென்.
-1865ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இங்கிலாந்திலும் ஜெர் மனியிலும் விரிவாகப் பரவியிருந்த கேள்விகளுக்கு மார்க்ஸ் அளித்த பதில்களின் தொகுப்பு. பதில்கள் பாதி நகைச்சுவை வடிவத்திலே இருந்தபோதிலும் மனிதன் என்ற முறையிலே மார்க்சுக்கிருந்த தன்மைகளைச் சுவையுடன் வெளிப் படுத்துகின்றன.
குமரன் . பக்கம் 8

டார்வின் - ஒர் அறிமுகம்
h -or66õT
‘உலகத்தின் வயது 6000 ஆண்டுகள்"-கிறிஸ்தவர்கள்.
*உலகத்தின் வயது 100 கோடி வருடங்களுக்கு மேலானது" -பரி ணும வளர்ச்சியை ஏற்ருே?ர்.
எத்தனையோ முரண்பாடான கருத்துக்கள்!
கிறிஸ்தவ எழுத்தாளரிடை, 19ஆம் நூற்ருண்டிலும், உலகத்தைக் கடவுள் படைத்த ஆண்டு பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டு வந்தது.
ஆரம்பத்தில் கடவுள் படைத்த அழகான உலகம் மனிதர்களின் பாவத்தால் பிரளய வெள்ளம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டது. மலைகளும் பள்ளத்தாக்குகளும் தோன்றின.
கடவுள், மனிதனிலும் பிற உயிரினங்கள் மரம் செடிகளிலும் இரண்டு இரண்டையே பிரளயத்தின் பின் காப்பாற்றினர் என்ற கருத்தே மேல் நாடுகளில் நிலவிவந்தது. அச் சோடிகளது வளர்ச்சி யையே இன்று நாம் காண்கிருேம் என்பது அவர்களது முடிவு.
கொப்பனிக்கஸ் (1473-1543) பிரபஞ்சத்தின் ஒரு சிறு கோளமே
உலகம் என்று நிரூபித்தபின்னர் புவியியல் பெளதிகவியல் ஆகிய துறை கள் வளர்ச்சியடைந்தன.
18, 19ஆம் நூற்ருஜண்டில் உயிரியல், தாவரவியல் ஆகியன விஞ்ஞான ஆய்வு முறைக்கு உட்படுத்தப்பட்டன. அவை உயிரின் தோற்றம் வளர்ச்சி பற்றிய புதிய கருத்துக்களையும் சிந்தனைகளையும் தோற்றுவித் தன.
ஆயினும் 19ஆம் நூற்றண்டு முற்பகுதியிலும் லூயி அகசிஸ், பாலே ஆகிய கிறிஸ்தவ எழுத்தாளரது கடவுளின் படைப்பின் சிறப் புப் பற்றிய மத நூல்கள் ஆதிக்கம் செலுத்தின.
*உதாரணமாக, கண்களைப் பாருங்கள். கண்மணி அதன்மேல் மெல் லிய லென்ஸ், (குவிவில்லை) கண்மணி ஒடி பார்வையைத் தேடுகிறது. இத்தனை சிறப்பான அமைப்பை கடவுள் தவிர வேறு எவரால் ஒழுங்கு படுத்தித் தயாரிக்கமுடியும்? என்று கேட்டனர். டார்வின்கூட இளமை யில் பாலேயின் நூலை முற்ருக நம்பியிருந்தார்.
சால்ஸ் டார்வின் 9-2-1809இல் இங்கிலாந்திலுள்ள சோல்பெரி நகரில் பிறந்தார். தந்தையார் கிராம வைத்தியர். 16 வயதில் எடின்
uésb 9 குமரன்

Page 6
பரோ பல்கலேக் கழகத்தில் மருத்துவம் படிக்க அனுப்பினர். டார்வி னுக்கு அக் கல்வியில் ஆர்வம் இருக்கவில்லை. w
சிறுவயதிலிருந்தே செத்த உயிரினங்களைச் சேகரித்து அவற்றின் அமைப்புகளை அறிவதில் ஆர்வம் காட்டிவந்தார். செத்த உயிரினங் களைச் சேகரித்துவைத்திருக்கும் முறைகளை ஒரு நிபுணரிடம் கற்றிருந் தார்.
பரிணும வளர்ச்சி பற்றிய கருத்துகள் அறிஞர்களிடையே அவ் வேளை பரவத்தொடங்கிவிட்டது, அவற்றையெல்லாம் டார்வின் ஆர்வ மாகப் படித்தார்.
விஞ்ஞானக் கட்டுரைகள் படித்து கலந்துரையாடும் பிலினியன் கழ கத்தில் அவரும் அங்கத்தவராயிருந்தார்; ஒரு தடவை பொருள் முதல்
namn.-- வாதக் கருத்துக்களை ஒருவர் படித்தார். அப் பேச்சு கழக குறிப்புப் புத்தகத்திலிருந்து முற்ருக அடிக்கப்பட்டது. இச் சம்பவம் கிறிஸ்தவ ரான டார்வின் தன் கருத்துக்களை வெளியிடுவதைத் தள்ளிப்போடச் செய்தது. ܗܝ ܕ
மருத்துவக்கல்லூரியை விட்டு அளவைக் கப்பல் ஒன்றில் இயற்கை ஆய்வாளராகச் சேர்ந்தார். உலகைச் சுற்றிய இப் பிரபாணத்தில் உல கின் பல பாகங்களிலிருந்து செத்த உயிரினங்களைச் சேகரித்துவந்தார். தென் அமெரிக்காவில் அவருக்கு ஏராளமான பயன்படக்கூடிய ஆதா ரங்கள் கிடைத்தன.
1839இல் எம்மா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு லண்டன் மாநகரில் குடியேறினர்.
வெளியே கடவுள் பக்திநிறைந்த கிறிஸ்தவராகக் காட்டிக்கொண்ட போதும் பரிணும வளர்ச்சி பற்றிய தன் கோட்பாடுகளை 1942 வரையி லேயே பெரும்பாலும் எழுதிவிட்டார். ஆயினும் நூலாக வெளியிடத் தயங்கினர். w
திருமணத்தின் ஒராண்டின் பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டார். அதனல் சமூக வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி கிராமப்புற வீடொன்றில் குடியேறினர். தென் அமெரிக்காவில் ஏற்பட்ட தொற்றுநோய் ஒன்றே அவரது நோய்எனகருதப்பட்டது. நடச்கமுடியாத நில். சில்லுள்ள தாற் காலியிலேயே உலாவினர். நாள்தோறும் சிலமணி நேரம் நூல்களுட னும் தன் உயிரின சேகரிப்புகளுடனும் உழைத்தார். l
லாமாக் என்ற பரிணும சிந்தனேயாளருடன் அவர் பெரும்பாலும் உடன்பட்டார். அன்னர் விளக்கத்தரமுடியாதவற்றை டார்விஞல் சிறப்பாக விளக்கமுடிந்தது.
குமரன் w பக்கம் 10

பரம்பரையாக மனிதன் உட்பட உயிரினங்களின் அமைப்பிலும் பழக்கவழக்கங்களிலும் நிரந்தர மாற்றம் ஏற்பட்டுவந்ததை அவர் கணித்தார். வாழ்வுப் போராட்டமும் தொடர்ந்து வந்திருப்பதையும் அவர் நிரூபித்தார். பயிர் செய்வோர், மிருகங்களை சினைப்படுத்தி வளர்ப் போர், பறவை சேகரிப்போர் ஆகியோரைக் கண்டு பேசுவதிலிருந்து இவை பற்றிய நூல்களையெல்லாம் ஆர்வமாகக் கற்றர்.
அவரது அன்றைய முடிவுகளை மூன்ருக வகுக்கலாம். (1) உலகம் பல மாற்றங்களை அடைந்துள்ளது. இது தொடரும். உயிர் வாழ்வதற்காக பூமியிலுள்ள உயிரினங்களும் தாவரங்களும் மாற்றமடைந்துகொண்டேயிருக்கும்.
(2) இயற்கை எல்லையற்ற வாய்ப்புகளையும் பரம்பரைப் புதுமை களையும் வழங்குகிறது.
(3) இயற்கையின் வளம் வாழ்வுப் போராட்டத்திற்கு இட்டுச் செல்கிறது.
இத்தகைய போராட்டத்தில் தனிச்சிறப்புள்ளவர்கள் உயிர் வாழ் வர். அதிர்ஷ்டம் குறைந்தவர் மடிவர். ஒவ்வொரு மாற்றமும் மிகச் சிறியது. ஒரு பரம்பரையிலிருந்து மறு பரம்பரை வரை ஏற்படும் மாறு தல்கள் மிகமிகச் சிறியன.
1944 வரையிலேயே டார்வின் தன் கண்டுபிடிப்புகளை தர்க்கரீதி யாக முடிவு செய்தபோதும் அவருக்கு அவற்றை வெளியிடத் துணிவு ஏற்படவில்லை. அவ்வாண்டில் 250 பக்க கட்டுரையாக எழுதிவிட்டார்.
தன் கருத்துக்களை வெளியிடின் பெரிய முரண்பாடுகள் ஏற்படும் எனவும், அவை இருட்டடிப்புச் செய்யப்படலாம் எனவும் அஞ்சினர். ஏற்கெனவே அவர் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்ற கருத்து நிலவி யது. அவரும் மதம் என்ற அபினியின் பிடியிலிருந்து முற்முக விடுபட முடியாத நிலையிலேயே இருந்தார்.
1857 வரையில் பரிணும வளர்ச்சி பற்றிய கருத்துக்கள் பரவலாக அடிபடத் தொடங்கின. டார்வின் தனது ஆய்வுகள் அடிபட்டுப்போய் விடுமோ என்றே அஞ்சினர். தன் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட வேண்டிய தவிர்க்கமுடியாத சூழ்நில் ஏற்பட்டது. இறுதியில் 1859.g6) உயிரினங்களின் தோற்றம் என்ற அவரின் நூல் வெளிவந்தது; வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்தபோதும் அந்நூல் ஆய்வு உலகிலே அவருக் கோர் அழியா இடம் தந்தது. உலகச் சிந்தனையாளர்களிடை அவருக் கும் மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டது.
டார்வின்து நூல் பற்றி பலரிடை இருந்து எதிர்ப்புகள் ஏற்பட்ட பொதும் அவ்வேளை பிரபலமாக இருந்த விஞ்ஞானிகளான ஹக்ஸ்லி, வலஸ், கூக்கர் போன்ருேர் ஆதரவு தந்து வரவேற்றனர்.
பக்கம் 11 குமரன்

Page 7
*உயிரினத்தின் தோற்றம்" வெளிவந்த போது டார்வினது கோட் பாட்டில் பல சந்தேகங்க்ள் ஏற்படவே செய்தன. 1885 வரையில் (genes) 'ஜீன்ஸ்’ பற்றி ஆய்வு விரிவடைய அது டார்வினது கோட் பாட்டிற்கு மேலும் வலுவூட்டியது.
நீண்டகாலமாகவே நோயோடு வாழ்ந்த டார்வின் 1882இல் حسیx இறந்தார். அவருக்கு ஐந்து ஆண்பிள்ளைகள். யாவரும் விஞ்ஞானிக ளாகப் புகழ்பெற்றனர்.
வழமையாக டார்வின் என்றதும் ‘மனிதன் குரங்கிலருந்து ம*" றியவன்' என்ற தவருக கருத்தையே யாவரும் கூறக் கேட்டிருப்பீர் கள். அவ்வாறு அவர் கூறவில்லை. மனிதனும் குரங்கும் ஓர் ஆரம்பவழித் தோன்றலின் இரு வேறுபட்ட வழித்தோன்றல்களாகும் என்றே கூறினர்
குழந்தையும் எலியும்
குழந்தை நித்திரையாகிவிட்டது. எழுந்ததும் குடிப்பதற்காக அருகே ஒகு குவளை பால் உள்ளது. எலி ஒன்று அப் பாலைக் குடித்து விட்டது. குழந்தை எழுந்தபோது பாலில்லை. அழத் தொடங்கியது. குழந் தையின் தாய் எலியைத் திட்டிஞள். எதுவும் செய்யமுடியாதநிலையில் எலி சுவரில் தலயை மோதியது. அது பயன்தராது என்று ஓடிச்சென்று வெள்ளாடு ஒன்றிடம் பால் கேட்டது. புல் கொண்டுவா பால் தரு வேன் என்றது ஆடு. எலி புற்றரைக்குச் சென்றது. தண்ணிரில்லாது புல் கருகியிருந்தது. எலி நீரோடைக்குச் சென்றது. யுத்தத்தால் நீரோடை உடைந்து தண்ணீர் வீணே ஓடிக்கொண்டிருந்தது. எலி கொத்தனரிடம் சென்றது. அவன் கல்லுக் கேட்டான். எலி மலையிடம் சென்றது.மலையோமரங்களெல்லாம் வெட்டப்பட்டு வெறும் பாறைக ளாகக் காட்சியளித்தது. மரம் வளர மண் வேண்டும் என்றது மலை. எலி தன்கதையைச் சொல்லி,குழந்தை வளர்ந்ததும் மரம் நடுவான் என்றது.
எலிக்கு போதிய பால் கிடைத்தது. குழந்தை வளர்ந்து மலையில் மரங்களை நட்டான். மேகம் படிந்து மழைநீர் ஒழுங்காக ஓடி வளம் தந்தது. ܝ
-1931இல் கிராம்சி இத்தாலி சிறையிலிருந்து மனைவிக்கு 6TCP திய தன் கிராமத்து நாடோடிக் கதை. தம் பிள்ளைகளுக்கு விரிவுபடுத் திக் கூறும்படி மனைவியை வேண்டியிருந்தார்.
குமரன் பக்கம் 12

மார்க்சும் கலை, இலக்கியமும்
-மாதவன்
முதலாளித்துவ கலை, இலக்கியங்களில் கொலை, திருட்டு, காதல் ஏமாற்றம், கற்பழிப்புப் போன்ற பாலியல் குற்றங்கள், கடத்தல், கலப் படம், ஏமாற்று, சொத்துப் பிணக்குகள், பிற்போக்கான வன்செயல் கள், துன்பியல் சம்பவங்கள் ஆகியவற்றை நீங்கள் தாராளமாகக் காண லாம். இவை யாவும் முதலாளித்துவ சமுதாய அமைப்பிலுள்ள முரண் பாடுகளின் பிரதிபலிப்பேயாகும். பல கற்பனையாக இருப்பினும் அவை சமூக வாழ்விலிருந்து தப்பிவிட மாட்டாது.
முதலாளித்துவத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் குற்றச் செயல்கள் பயமுறுத்துகின்றன. ஆகவே இக்குற்றங்களையெல்லாம் ஒழிப்பதற்காக முதலாளித்துவம் பொலிஸ்படை, சட்டங்கள், சட்ட சபைப் பிரதிநிதிகள், வக்கீல்கள், நீதிபதிகள், யூரர்கள், துப்பறியும் நிபுணர்கள், ஆய்வுகூடங்கள், சிறைச்சாலைகள், பாதுகாப்பு காவற்காரர் கள், சிறை அதிகாரிகள், சட்டக்கல்லூரிகள், கற்பிக்கும் பேராசிரியர் கள் இவ்வாருகப் பல இலட்சம் மக்கள் பொருள் உற்பத்தியில் ஈடு படாது குருவிச்சைகளாகப் பிறர் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக் கின்றனர். கட்டடங்கள், சிறைச்சாலைகள், துப்பாக்கிகள், பொலிஸ், சிறைக்காவலர் சீருடைகள், குற்றவாளிகளை வதைசெய்யும் கருவிகள், பூட்டுகள், திறப்புகள் இவ்வாருண பயனற்ற பாதுகாப்புப் பண்டங் களும் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது.
இதுவே பூர்ஷ்வா நாகரிகமாகும். வேலையற்றவர் தொகையை முத லாளித்துவம் இவ்வாறு குறைக்க முயல்கிறது. தேன் கூட்டிலே கூட உற்பத்தியில் ஈடுபடாத எத்தேனியையும் காண முடியாது.
'சித்தாந்தவாதி கருத்துக்களையும், கவிஞன் கவிதையையும் மத குரு பிரார்த்தனைகளையும், பேராசிரியர் சுருக்கவிரிவுரைகளையும் உற் பத்தி செய்வதுபோல குற்றவாளி குற்றத்தை உற்பத்தி செய்கிருன்’ என்று மார்க்ஸ் கூறியுள்ளார். இதைக் கட்டுப்படுத்த, முன்னர் கூறிய பல பிரிவினர் உழைப்பில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு முதலாளித்துவத்தில் “குற்றச் செயல்" ஒரு பண்டமா கிறது. ہر **
பின்னர் முதலாளித்துவ கலை, இலக்கியத்திலும், குற்றச் செயல் ஒரு முக்கிய பண்டமாகிறது. "குற்றச் செயல்’ என்ற பண்டம் இங்கு நன்கு விலை போகிறது, பத்திரிகைகளில் முக்கிய செய்தியாகி விற்பனையா
குமரன் பக்கம் 13
محرر

Page 8
கிறது, சிறு கதைகள், நாவல்கள், துப்பறியும் கதைகள், மர்மக்கதை கள், காட்டுன் கதைகளான கமிக்ஸ் ஆக இலக்கியச் சந்தையை நிரப்பு கிறது. சினிமா, டி. வி. விடியோ படங்களிலும் "குற்றச் செயல்களே? முக்கிய விற்பனைப் பண்டங்கள் ஆகின்றன; செக்ஸ், வன்செயல் குற் றங்கள் இங்கு முக்கிய பங்குகள் வகிக்கின்றன.
குற்றவாளி, ஒழுக்கம் துன்பியல் உணர்வுகளையும் உற்பத்தி செய் கிருன், இதன் மூலம் மக்களது ஒழுக்க, அழகுணர்வு ஆகிய உணர்வு களையும் ஏற்படுத்துகிறன். இவற்றின் மூலம் ஒரு "சேவை'யும் செய் கிருன், சட்டசபை உறுப்பினர் மூலம் குற்றவியல் சட்டங்கள் மட்டு மல்ல கலைத்துறையில் நாவல்கள், துன்பியல் நாடகங்களையும் உற்பத்தி செய்கிருன் என்று மார்க்ஸ் "மூலதனம்" நூலில் பூர்ஷ்வா நாகரிகம் பற் றிக் கூறும்போது குறிப்பிட்டுள்ளார்,
உற்பத்தி உறவுகள் பொருள் உற்பத்தியின்போது மக்களிடை நிறு வப்படும் உறவுகள். தனியாகவும் கூட்டாகவும் பண்டங்களை உற்பத்தி செய்யலாம். மனித வரலாற்றில் 5 வகையான உற்பத்தி உறவுகள் ஏற் பட்டன.
(1) தொன்மைப் பொதுவுடைமை. உற்பத்திக் கருவிகளும் பொ ருட்களும் சமூகத்திற்குச் சொந்தமாயிருத்தன.
(2) அடிமை, (3) நிலவுடைமை, (4) முதலாளித்துவ சமூகங்களில் உற்பத்திக் கருவிகள், சாதனங் கள் உழைப்பவர்களுக்குக் கிட்டாததினுல் முறையே கைவிலங்கு, நிலம், மூலதனத்திற்கு அடிமையாகின்றனர்.
(5) சோஷலிச சமுதாயத்தில் மீண்டும் உற்பத்தி சமூக உடைமை ஆகிறது.
புதுமை பூக்கட்டும்! அடிவானம் செக்கரிட விழித்த மக்கள்
ஆதவன்போய் மறையுமட்டும் வேலைசெய்தும் விடிவேது மில்லாமல் மிடிமை யோடு,
விதியிதுவா எனப்பாரில் வாழும் வாழ்வு! வடிவான மாளிகைவாழ் போடிமார்கள்
வருத்துகின்ற செயலதனை மாற்றவேண்டின், கடிவாளம் எம்கைக்கு மாறவேண்டும்,
காலமது உரைத்திடுமே நல்லபாடம்! -அ. கெளரிதாசன்.
பக்கம் 14 குமரன்

காகக் கூட்டில் குயில் முட்டைகள்
யோ. பெனடிக்ற் பாலன்
“இதுவரை நேற்றும் இன்றும் நான் சனநாயகம் அல்லது குடியாட்சி பற்றி உங்களுக்கு விளக்கமாகப் படிப்பித்துள்ளேன். பத்தாந்தரத்துக் குரிய புதிய சமூகக் கல்வி என்னும் நூலில் குடியாட்சி என்னும் ஏழாம் அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டே நான் விளக்கம் தத் தேன். சனநாயகம் பற்றி நீங்கள் இப்பொழுது நல்ல விளக்கத்தைப் பெற்றிருப்பீர்கள். இப்பொழுது நான் உங்களிடம் கேள்வி கேட்கப் போகின்றேன். நான் பெயர் சொல்லிக் கேள்வி கேட்கும் மாணவன் மட்டும் பதில் கூறவேண்டும். விளங்குகிறதா?
*ஆம் சேர்?
நின்று கொண்டு படிப்பித்த நான் என் கதிரையில் வந்து அமர்ந் தேன். தொடர்ந்து காலை முதல் ஐந்து வகுப்புகளில் படிப்பித்ததால் களேப்பாக இருத்தது. கால்களும் உளைந்தன. நெஞ்சுத் தடிமலும் மூன்று நாளாக என்னை வதைத்துக் கொண்டிருந்தது.
கதிரையில் இருந்தவாறு அன்று வகுப்பில் சமுகமளித்திருந்த முப் பத்தாறு மாணவர்களின் முகங்களையும் நோட்டம்விட்டேன். எல்லோ ரும் என் கேள்விகளை எதிர்பார்த்திருந்தனர்.
"திரும்பவும் கூறுகிறேன். நான் கேள்வி கேட்கும் மாணவன் மட் டும் பதில் சொல்ல வேண்டும். மற்றவர்கள் மூச்சுக்காட்டக் கூடாது."
*னங்களுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லையா சேர்." யேசுதாசன் எழுந்து கூறிவிட்டு அமர்ந்துவிட்டான். எல்லோரும் அவனது பகிடியைக் கேட்டுச் சிரித்தனர். நானுந் தான்.
*ஒருவனுடைய பதில் கூறும் உரிமையில் மற்றவர்கள் தலையிடக் கூடாது. அதுதான் சனநாயகம்!”
நான் சிரித்தவாறு கூறினேன். அவர்கள் மெளனமாக இருந்தனர். ‘சனநாயகம் பற்றி அமெரிக்க சஞதிபதியாக இருந்த ஆபிரகாம் விங்கன் கூறியது என்ன? செல்வகுமார்!"
*ஒவ்வொருவரும் உரிமைகள் உடையவராக விளங்கும் ஆட்சி முறையே. செல்வகுமார் யோசித்து யோசித்துக் கூறினன்.
இல்லை. பிழை. இது யாருடைய கூற்று மணிவண்ணன்?"
குமரன் பக்கம் 15

Page 9
“சீலி என்பவருடையது." ‘மணிவண்ணன் சரியாகக் கூறிவிட்டான். அப்படியாளுல் ஆபிர காம் லிங்கன் கூறியது என்ன? "நான் கூறுகிறேன் சேர்." துஷியந்தன் எழுந்தான். கெட்டிக்காரன். “உம்மை நான் கேட்கவில்லையே. அமரும் சிவநேசன் கூறலாம்." ‘மக்களால் மக்களுக்காக ஆளப்படுகின்ற மக்களின் ஆட்சியே சன நாயகம்*
ஆம் சரி; சிவநேசன் இருக்கலாம்! இது யார் சுற்று நவசோதி? 'ஆபிரகாம் லிங்கனுடையது!! அவன் இருந்து கொண்டே கூறிவிட்டான். "அந்த ஆட்சி எங்களுடைய நாட்டில் இருக்கிறதா சேர்? வசீகரன் எழுந்து கேட்டுவிட்டு இருந்தான்.
கூடாது!" V
நான் முகத்தைக் கடுமையாக வைத்திருந்தேன்.
சரி, இன்றைய சனநாயக ஆட்சி எக்கோட்பாடுகளை அடிப்படை யாகக் கொண்டுள்ளது? சுரேஷ்குமார்!"
சுரேஷ்குமார் கடைசி வாங்கில் இருப்பவன். படிப்பில் சிறிதும் அக் கறை அற்றவன். அவன் எழுந்து பதில் கூருமல் நின்றன். அப்போது பதில் கூறத் துடிப்பவர்களை அவதானித்தேன்.
“என்ன தெரியாதா? படிப்பிக்கும்போது என்ன யோசனையில் இருந்தீர்?
*பதினறு வயதினிலேயாக இருக்கலாம்!"
m சத்தியன் நசுக்கிடாமல் கூறிவிட்டு இருந்தான். எல்லோரும் சிரித்
தோம்.
“JYLÜLuguLurr சுரேஷ்குமார்? பதில் தெரியாதா கூறும் பார்க்கலாம்? “பொய்யும் புரட்டும் சேர்’-மீண்டும் வகுப்பு சிரிப்பில் மூழ்கியது. “இந்தப் பதில் யார் உமக்குச் சொல்லித் தத்தது. எனக்குத் தெரி யும் யாரென்று?"
"வசீகரன் orto
Ltsb 16 suora'T

நான் வசீகரனே முறைத்துப் பார்த்தேன். அவன் தலைகுனிந்துவிட் டான். அவன் பகிடிவிடவில்லை. அவனை எனக்குத் தெரியும்.
"தேவராசன் நீர் கூறும்? "சுதந்திரம் சமத்துவம்’
‘கெட்டிக்காரன். உட்காரும்." நான் சற்றுநேரம் மெளனமாக வகுப்பைப் பார்த்தேன். *கேட்ட கேள்விக்குமட்டும் பதில். வீண் வம்புகள் எனக்குப் பிடிக்
என் முகத்தில் கண்டிப்பு.
லாரும் அமைதியாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மனித உரிமைகளில் மூலாதாரமான உரிமைகள் மூன்று. அவை என்ன? பிரதீபன்!"
"சொத்து உரிமை, பாதுகாப்பு உரிமை, அடக்குமுறையை எதிர்க் கும் உரிமை! அவன் படக்கென்று கூறிவிட்டான்.
"சரி, சிலுவைதாசன், மூன்ருவது உரிமை என்ன? “அடக்குமுறையை எதிர்க்கும் உரிமை சேர்." 'சரி இரும்." கதிரையில் இருந்து கொண்டு கேள்வி கேட்பதும் பதில் கூறுவதும் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. எழுந்து மேசையில் சாய்ந்து கொண்டு நின்றேன்.
இது ஒரு முக்கியமான கேள்வி. சுருக்கமாக விடை கூறவேண்டும். ஒரு நாட்டில் சனநாயகம் நிலவுகிறதென்பதை எவற்றைக் கொண்டு நாம் அறியலாம்?
இக்கேள்விக்கு அதிகம் பேர் கை உயர்த்தவில்லை. கெட்டிக்கார மாணவர் சிலரே கை உயர்த்தினர். அவர்களில் ஒருவனைப் பார்த்தேன்.
'அமுதன் நீர் கூறும்? i *அரசியற்கட்சிகள் அல்லது எதிர்க்கட்சிகள் இருத்தல், காலத்துக்குக் கர்லம் நடைபெறும் தேர்தல்கள்.
உற்பத்திச் சக்திகள் - பொருளுற்பத்தியில் பயன்படுத்தும் கருவி களும் உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளர்களும், அனுபவம், தொ ழில் நுட்ப பயிற்சிகளையும் இது உள்ளடக்குகிறது. உற்பத்திச் சக்தி களும் (யந்திரங்கள், கருவிகள், மூலப் பொருட்கள் முதலியன) மனித உழைப்புச் சக்தியும் உற்பத்திக்கு அத்தியாவசியமானதாகும். சமூக வாழ்வு உற்பத்திச் சக்திகளிலுமே தங்கியுள்ளது.
குமரன் |- பக்கம் 17

Page 10
மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வாய்ப்பு.
பத்திரிகைச் சுதந்திரம் மற்றது .
அமுதனுக்கு மற்றைய அம்சங்கள் உடனே நினைவுக்கு வரவில்லை.
'குமரன். வேறு என்ன? "சுதந்திரமாகக் கூட்டம் கூடுதல், பத்திரிகைச் சுதந்திரம்!"
ஆம் நல்லது. அமருங்கள்! ஒரு சனநாயக நாட்டில் மக்களுக் கிருக்க வேண்டிய அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் உங்களுக் குத் தெரியும். எமது குடியரசு யாப்பிலே அவை
குறிப்பிடப்பட்டுள் ளன இல்லையா? எல்லோரையும் பார்த்தேன்.
ஆம் சேர்!
சரி, சனநாயதத்திலே அரசாங்கத்தைக் கட்டியாள்பவர் யார்? தேவன்!,
“odissir !”
*சர்வாதிகாரத்தில் புண்ணியமூர்த்தி? *சர்வாதிகாரத்தில் அரசாங்கமே மக்களைக் கட்டியாளும் சேர்."
"ஆம், நல்லது அமரும். இப்பொழுது உங்களுக்கு சனநாயகம்பற்றி நன்முக விளங்குகிறது. இல்லையா?”
எல்லோரையும் பார்த்தேன். "ஆம் சேர்." வழமையாக ஆம் போடுபவர்கள் கூறினலும், சிலர் திருப்தியின்றி
மெளனமாக இருப்பதை நான் அவதானிக்கத் தவறவில்லை. அந்த மாணவர்களை நான் அறிவேன்.
(3gro
வசீகரன் எழுந்து நின்றன். ஏதாவது கிளறிவிடுவான். ‘என்ன சொல்லப் போகிறீர்?"
“எமது நாட்டில் சh Tமுகமா சருவாதிகாரமா நடக்கிறது?
ஏன் அப்படியொரு கத்தேகம்? நான் கேட்டேன். ‘யார் மக்களைக்கட்டியாள்வது என்பதில்சந்தேகமாயிருக்கிறதுசேர்!" நான் மெதுவாகச் சிரித்தேன். சிறிது யோசித்தேன். "இதற்கு உங்களில் ஒருவர் பதில் கூறலாம்!”
உடனே யேசுதாசன் எழுந்தான்.
பக்கம் 18 storotiv

"மேடைகளில் பேசுவதைக் கொண்டு கூறுவதானல் சேர். சந்தேக மில்லை. சனநாயக நாடுதான்!!
அவன் எங்கே குத்துகிருன் என்று எனக்கு விளங்கியதாக நான் காட் டிக் கொள்ளவில்லை. எனக்கேன் வீண்வம்பு,
"நாங்கள் பாடவிடயத்துக்கு அப்பால் செல்லுகிருேம் அப்படிப் போனல் நாம் அரசியல்தான் பேச வேண்டும். நான் அரசாங்க ஊழி யன். நீங்கள் மாணவர்கள். எங்களுக்கு அரசியல் கூடாது!’ நான் அவர்களை நோக்கி அர்த்தத்தோடு சிரித்தேன்.
'அரசியல்தான் சகலவற்றையும் தீர்மானிக்கிறது சேர்’ யேசுதாசன் கூறிவிட்டு இருந்தான். நான் சொன்னேன். "அப்படி அறிந்து வைத்திருப்பது உங்களுக்கும் நல்லது. எனக்கும் நல்லது!" மாணவர்கள் எல்லோரும் அடக்கமாகச் சிரித்தனர்.
நான் வழமையாக மாணவர்கள் கேள்வி கேட்கச் சந்தர்ப்பம் வழங் குவதுண்டு. அந்தச் சந்தர்ப்பத்தை ஆறேழு மாணஃபர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருப்பது எனக்குத் தெரியும்,
"நான் படிப்பித்த விடயத்தில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் கேள்விகள் கேட்கலாம்!"
நான் கூறிவிட்டு ஒவ்வொருவராகக் கண்களால் மேய்ந்தேன். சத்தியன் எழுந்து கை விரல்களால் வாங்கில் கிறுக்கியபடி நின்று கேட்டான்.
"சேர், இங்கு பிரதிநிதித்துவ சனநாயகம் நிலவுகிறதென்று கூறி னிர்கள். ஆனல் பாராளுமன்றத்தின் ஆயுளை இன்னும் ஆறு வரு-" கள் நீடிப்பதற்காக மக்கள் சம்மதம் கேட்டு சர்வசன வாக்கெடுப்பு நடத்தியதால், மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதெனக் கூறப்படுகிறதே?"
அவன் நிற்கும்போதே, யேசுதாசன் எழுந்தான். ‘அந்த நடவடிக்கை சனநாயகத்துக்குச் சாவு மணி அடிக்கும் செயல் என்று சகல எதிர்க்கட்சிகளும் கண்டித்தன, மக்களின் சனநாயக
வர்க்கம் - சமுதாய உற்பத்தியில் மக்கள் வகிக்கும் நிலை, உற்பத் திச் சாதனங்களுடன் இவர்கள் கொண்டுள்ள உறவு, சமுதாயச் செல் வத்தில் இவர்கள் பெறுகின்ற பங்கு, சமுதாய ஒழுங்கமைப்பில் இவர் களது பாத்திரம் ஆகிய நான்கு அங்சங்களையும் கொண்டு தீர்மானிக்கப் படுகிறது. உற்பத்திச் சாதனங்களைக் கொண்ட வர்க்கம் ஆளும் வர்க்க மாகவும் இரு கரங்களைமட்டும் கொண்டு உழைக்கும் பாட்டாளி வர்க் கம் ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவும் வாழ்வதைக் காணலாம்.
குமரன் பக்கம் 19

Page 11
உரிமைகளுக்காகப் போராடுகிற சகல இயக்கங்களும் எதிர்த்தன. அது சனநாயகத்துக்கு மாருனதுதானே சேர்?’ என்னைச் சங்கடத்தில் மாட்டி விடப் பார்க்கிருர்கள் என்று நினைத்தேன். நான் பிடிகொடுக்காமல் பதில் கூறவேண்டும். நான் ஒரு அரசாங்க ஊழியன்.
“பலாத்காரமாக ள்ந்த முடிவும் எடுக்கப்படவில்லையே. சனநாயக முறைப்படி மக்களின் சம்மதம் கேட்கப்பட்டது. மக்களே தீர்ப்பளித் துள்ளார்கள். அதை நாம் ஏற்க வேண்டும் தானே?
என் பதில் அவர்களுக்குத் திருப்தி தரவில்லை. “மக்கள் ஏமாற்றப்படலாம் தானே. அவர்கள் அறியாமல் செய் கிருர்கள்’ என்று வசீகரன் கூறிஞன்.
*கிட்லரும் சர்வாதிகாரியாக மாறுவதற்கு முன் இப்படித்தான் பலமுறை மக்களின் சம்மதம் கேட்டாணுமே? இது யேசுதாசன்.
இவர்கள் எங்கே போகிருர்கள்? எனக்குப் பயும்.
இருக்கலாம். அதற்கு இப்ப என்ன? "இலங்கையிலும் ஒரு தனி மனிதனிடம் சகல அதிகாரங்களும் குவி யும் வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதெனக் கூறப்படு கிறதே சேர்’ இது அமரதீபனின் கேள்வி. எனக்குச் சற்றுக் கோபம் ஏறியது. ‘இதெல்லாம் எங்கள் பாடத்திற்கு அப்பாற்பட்ட விடயம். நீங்கள் அரசியல் பேசுகிறீர்கள். அது கூடாது? நான் உறைப்பாகக் கூறினேன். ‘இல்லை சேர் உண்மையாக நாங்கள் சனநாயகத்தைப் பற்றிந் தெளிவாக அறிய விரும்புகிருேம்!" சத்தியன் கூறிஞன்.
'இல்லை சேர். எங்கள் நாட்டில் சர்வாதிகார ஆட்சி என்று நினைக் கப் பயமா இருக்கிறது. அதுதான்" என்று இராஜகுமார் பணிவாகக் கூறிவிட்டு இருந்தான். நான் அவர்கள் கூறியதை உள் வாங்கிக் கொண்டு புன்சிரிப்புடன் நின்றேன்.
"உங்களுடைய வேலே படிப்பு. சனநாயகத்தைப் பற்றிக் கவலைப் படுவதில்லை’ நான் வார்த்தைகளை அழுத்திக் கூறினேன். சேர் நாங்கள் சிந்திக்கும் பிராணிகள். எதையும் தெளிவாக அறிய ۔۔۔۔
விரும்புவது தவரு? மீண்டும் வசீகரன். பொல்லாதவன்.
'இல்லை." சேர் ஒரு சின்னக் கேள்வி. பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டதனுல் சனநாயகம் பாதிக்கப்படவில்லையா? அமர நீபன் கேட்டான். அவன் பதுங்கியிருக்கும் பூனை.
பூக்கம் 20 குமரன்

‘எப்படி? நான் அதையிட்டு யோசிக்கவில்லை?
‘எவரையும் விசாரணையின்றி தடுப்புக்காவலில் எவ்வளவுகாலமும் வைத்திருக்கலாமாம் சேர். சத்தியன் மீண்டும் எழுந்தான்.
"பயங்கரவாதிகளே ஒழிப்பது பிழையா? நான் கேட்டேன்.
“seyi சட்டத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிக்காரர் எவரையும் பழி வாங்கலாம்தானே? அது எப்படி சனநாயகம் ஆகும்? இது யேசுதாசன்.
"இன்னுெரு விஷயம் சேர். தடுப்புக்காவலில் இருக்கும்போது பல வந்தமாக எடுக்கப்படுகின்ற வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்கலாம். இது நீதிமன்றத்தின் சுதந்திரத்தில் தலையிடுவதில்லையா? அமரதீபன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுத்தான் கேட்டான். நான் தலை குனிந்த படி சற்றுவேளை யோசித்துவிட்டு நிமிர்ந்தேன். பொல்லாத கேள்விகள்.
நீங்கள் கேட்கும் விடயமெல்லாம் எமது பாட விடயத்துக்கு சிப் பாற்பட்ட அரசியல். எமக்கு அவை அவசியமில்லை. நான் சொல்லித் தந்தவை நீங்கள் பரீட்சையில் சித்தியடையப் போதுமானவை! இனி அவர்கள் கேள்விகள் கேட்கக்கூடாதென்ற முடிவோடு வற்புறுத்திக் கூறினேன்.
வசீகரன் எழுந்துநின்று கேட்டான். நான் அதிர்ந்துவிட்டேன்.
"நான் சொன்னதின் அர்த்தம் புரியுமென்று நினைக்கிறேன்" என்று கூறிச் சமாளித்தேன். ஆனல் சத்தியன் எழுந்துநின்றன். பாடம் முடிய மணி அடிக்காதா என்று நான் ஆசைப்பட்டேன்.
சேர் ஒரு கேள்வி. இதுவரை நீங்கள் கூறிய சனநாயகம் யாரு டைய சனநாயகம்?"
'இதென்ன புதுக் கேள்வி?
“இது பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது குடியேற்ற நாடுகளில் அறிமுகப்படுத்திய முதலாளித்துவ சனநாயகம் என்று கூறப்படுகிறதே? இதில் சுரண்டல் வர்க்கத்துக்கு சனநாயகமும் மக்களுக்குச் சர்வாதி காரமும் என்று கருதப்படுகிறதே, உண்மையா சேர்?"
அரசு - பொருளாதார ஆதிக்கம் உள்ள வர்க்கத்தின் அரசியல் அமைப்பு. நிலவும் பொருளாதார அமைப்பைக் காப்பாற்றுவதும், தன்னை எதிர்க்கும் வர்க்கங்களைப் பலாத்காரத்தால் அழித் தொழி ப் பதுமே இவ்வமைப்பின் குறிக்கோளாகும். ‘ஒரு வர்க்கத்தின்மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கு மற்றேர் வர்க்கத்தால் அமைக்கப்பட்ட யந்திரமே அரசு. என்ருர் லெனின்
குமரன் பக்கம் 21

Page 12
"சேர் இது சத்தியன் கேட்ட கேள்வியோடு தொடர்பானது. அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னுெரு வர்க்கத்தை அடக்கியாளப் பயன்படுத் தும் கருவியாம். இன்று ஆட்சியில் உள்ள வர்க்கம் உழைக்கும் வர்க் கமா முதலாளி வர்க்கமா? யேசுதாசன் எழுந்து கேட்டான்.
இருவரையும்) அமரும்படி கைகாட்டினேன். அப்போது பாடம் முடிவதை அறிவிக்கும் மணியொலி கேட்டது. எனக்கு பெரும் நிம்மதி.
"நீங்கள் கூறிய கருத்துக்கள் மார்க்சிஸ்டுகள் கொம்யூனிஸ்டுகளு டைய கருத்துக்கள்ே. அவை பயங்கரமானவை. அவற்றுக்குப் பதில் கூறும்படி எனக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்கவில்லை. இவற்றை யெல்லாம் நீங்கள் படிப்பை முடித்தபின் போய் அறிந்துகொள்ளுங்கள். விளங்குகிறதா?”
நான் கொஞ்சம் சூடாகவே பதில் கூறினேன்.
சேர் நீங்கள் மழுப்புகிறீர்கள். யாருடைய கருத்தாயிருந்தாலும் நாங்கள் உண்மையை அறியவேண்டும் யேசுதாசன் கூறிஞன்
ஆம் சேர்' வசீகரன், சத்தியன், யேசுதாசன், அமரதீபன் உடனே சொன்னர்கள்.
*சரி, நான் ஒரு அரசாங்க ஊழியன் என்பதை உணர்ந்துகொண் டால் சரி. திங்கட்கிழமை சந்திப்போம் நான் சிரித்தவாறு கூறி Garsit. f s
*சேர் திங்கட்கிழமை ஜனநாயகத்தைப் பற்றியே படிப்போம்” வசி கரன் கூறிஞன்.
சரி. வணக்கம்"
நான் மனச் சங்கடத்தோடு அந்த வகுப்பை விட்டு வெளியேறி
னேன்.
2
நான் படிப்பிக்கும் அந்தத் தமிழ் மகாவித்தியாலயம் கொழும்பின் மத்தியில் அமைந்துள்ளது. அங்கே முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை முதலிய இடங்களில் இருந்து வரும் மாணவர்கள் கல்வி கற்கிருர்கள். பெரும்பாலான மாணவர்கள் தொழிலாளர்கள், கடைச் சிப்பந்திகள், சிற்றுாழியர்களின் பிள்ளைகள். பெரும் கல்லூரிகளில் இடம் கிடைக்காத நகைக்கடை வியாபாரிகள், கடைக்காரர்களின் பிள்ளைகள் சிலரும் படிக்கிருர்கள். எனது பத்துவருட ஆசிரியத் தொழில் அனுப வத்தில் இத்துண அரசியல் விழிப்புணர்ச்சியுள்ள மாணவர்களைக் காண வில்லை. அவர்கள் கொழும்பில் பிறந்துவளர்ந்தது காரணமாயிருக்
a tilla- پ . . . به . ----
d'Asto 2 ܨܝ குமரன்

á6VITLt. ாம் வகுப்பு மாணவர்கள் சமூகக்கல்விப் பாடத்தில் அவர் கண்ப்போல் ஈடுபாடுகொண்டதை நான் காணவில்லை. அவர்களின் கேள்வி கேட்கும் ஆர்வம் எனக்குப் பிடித்திருந்தது. ஆனல் என்ன அர சியலுக்குள் இழுத்துவிடும் அவர்களின் போக்கு என்னை பெருஞ் சங்கடத் தில் மாட்டுவதாயிருந்தது. எனக்கு இந்தத் தொழில்போளுல் வேறு தொழில் தெரியாது. நான் பிள்ளைகுட்டிக்காரன், ஏன் வீண் வம்பில் மாட்டிக்கொள்வான்.
அன்று திங்கட்கிழமை. நான் எட்டாம் வகுப்பில் சமூகக் கல்வி படிப்பித்துக்கொண்டிருந் தேன். அடுத்த பாடம் அந்த வகுப்புக்கு. அவர்கள் கேட்கும் கேள் விக்கு நான் நேர்மையாகப் பதில் கூறுவதானல் சிலவேளை அவை அர சாங்கத்துக்கு எதிர்ப்பானதாக அமையலாம். அதை யாரும் மேலிடத் துக்கு அறிவித்தால் என் வேலைக்கு ஆபத்து. அல்லது தண்ணிர் இல் லாத காட்டுக்கு மாற்றம் வரலாம் என்று சக ஆசிரியர்கள் சிலர் கூறி ஞர்கள். எனக்குப் பயமாக இருந்தது. நான் அந்த வகுப்பிற்கு போவதா, விடுவதா" என் மனதில் ஒரே ஊசலாட்டம், அவர்களை நான் பெரிதும் விரும்பினேன்.
அதிபரின் பியொன் வந்து அதிபர் அழைக்கிருர் என்று கூறினன். பாடம் முடிகிற நேரம். நான் அதிபரின் அலுவலகத்துக்குச் சென்றேன். *வாங்க மாஸ்டர், இருங்கோ !” ஏன் கூப்பிட்டீங்க? "வேருென்றுமில்ல. பத்தாம் வகுப்பில் படிக்கிற மாணவர்கள் பலர் பொல்லர்தவர்கள். அவர்களில் பலர் அரசியல் ஈடுபாடுள்ளவர் கள். அமரதீபன், வசீகரன், சத்தியன், யேசுதாசன் போன்றவர்கள் இடதுசாரிக் கட்சி இளைஞர் சங்கங்களில் இருக்கிருர்களாம்."
திரிபுவாதம் - மார்க்சின் இயக்கவியல் பொருள் முதல்வாத சித் தாந்தத்தில் ‘திருத்தம்" செய்யும் முயற்சி. இன்று சீனுவும் சோவியத் ரஷ்யாவும் சோஷலிசத்தை தாம் அமைக்கும் முறைகளை வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் 'திருத்தல்வாதி" என்று குற்றம் கூறுகின் றனா.
e SEKZISKE as a car. ستة ستنخفضتقعتشتتعتنسحقت علات تحت
குமரன் ; பக்கம் 23

Page 13
"அப்படியா சேர்!’ ‘ஓம், ஓம். இங்கு படிக்கிறவர்களில் அதிகம்பேர், அவர்களுடைய வார்த்தைகளில் கூறுவதென்ருல் தொழிலாளி வர்க்கத்தின் பிள்ளைகள் அவர்கள் அப்படித்தான். ஆனல் உங்களைக் கேள்வி கேட்டு வீண் வம் பில் மாட்டிவிட்டுவிடுவார்கள். நீங்கள் அரசாங்க ஊழியன். உங்கள் கருத்து தற்செயலாக அரசாங்கத்துக்கு எதிராக இருக்கலாம். அதிலை பிழையில்லை. ஆளுல் யார் எப்படித் திரி வைப்பார்கள் என்று கூற முடியாதுதானே?"
அதிபர் சங்கரலிங்கம் நல்ல மனிதர். அவர் கூறியதும் நான் யோசித் ததும் ஒன்ருக இருந்தன.
"ஒம் சேர். நான் கவனமாக இருக்கவேணும். எனக்குத் தெரியும்." 'நீங்கள் பாட விடயத்துக்கு அப்பால் போகவேண்டாம். அப்படி அவர்கள் கேள்வி கேட்டால் தலையிலை அடிச்சு அமர்த்திவிடுங்கோஏன் வீண் வில்லங்கம்?"
“ஓம் சேர். நீங்கள் கூறுவதுதான் சரி!"
இதைச் சொல்லத்தான் கூப்பிட்டன். ஏனென்றல் நீங்கள் பாட நேரத்தில் கூறுவதை மாணவர்கள் வெளியிலை சொல்லித் திரிகிறர்கள் அதுதான்." -
‘நன்றி சேர்." நான் எழுத்து அவர் அறையைவிட்டு வெளியில் வந்து யோசித்த வாறு நின்றேன். ‘என்ன செய்யலாம்?
‘சேர் இப்ப எங்களுக்ருப் பாடம் சேர், வாங்க சேர்!" சத்தியன் ஓடிவந்த களைப்போடு நின்றன். *சரி வாறன் நீர் வகுப்புக்குப் போகலாம்!" அவன் திரும்பி வகுப்புக்கு ஓடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.
*வகுப்புக்குப் போவம், அதிபர் கூறினமாதிரி, கேள்வி கேட்டால் மடக்கி இருத்திவிடுவதுதான் சரி.”
நான் ஒரு தீர்க்கமான முடிவோடு அந்த வகுப்பை நோக்கி நடந் (556ir.
ஏனே மனதுக்குள்ளே என்னைப்பற்றி ஒரு அதிருப்தி வளர்ந்து கொண்டிருந்தது.
பக்கம் 24 குமரன்

அ. வரதராஜப்பெருமாள் அரசியற் பொருளாதாரம்-2
முதலாளித்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் முதலாளித்துவம் என்பது என்ன?
முதலாளித்துவம் என்பது மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு முழுமை யாக உட்பட்ட உற்பத்திமுறையைக் கொண்டிருக்கும் சமூக பொரு ளாதார அமைப்பைக் குறிக்கின்றது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி யென்பது மூலதனத் திரட்சியின் தொடர்ச்சியான அதிகரித்துச் செல் லும் செயன் முறையையும்; அதற்குரிய வகையிலான சமூக அமைப்பு மேல்நோக்கி வளர்ச்சியடைந்து செல்லுதலையும் குறிக்கின்றது. முதலா ளித்துவம் என்பது எக்காலத்தும் ஒரே வடிவத்தில் நிலையாக இருந்துவிட வில்லை. அதன் வளர்ச்சிப் போக்கில் அது பல மாற்றங்களை அடைந்து வந்துள்ளது. மூலதனச் திரட்சியின் அதிகரித்துச் செல்லும் செயன் முறை என்பது உட்கிடையாக, மிகை உழைப்புப் பெறுமானம் இலாப வடிவில் சுரண்டப்பட்டு மூலதனத்தோடு மேலும் மேலும் குவிக்கப் கப்பட்டு மூலதனம் விரிந்தும் பரந்தும் செல்லுதலை விளக்கி நிற்கின் றது. மூலதனமே முதலாளித்துவத்திறனைத் தோற்றுவித்தது. அதுவே முதலாளித்துவத்தினை மேலும் வளர்ச்சி நிலை நோக்கி உந்தித்தள்ளு கின்றது. ஆஞல் அதே மூலதனமே பின்னர் ஒரு வளர்ச்சிக் கட்டத்தில் முதலாளித்துவத்தின் விருத்திக்குத் தடையாக அமைந்து, முதலாளித்து வத்தைப் புதைப்பதற்கான சவக்குழியையும் கிண்டி விடுகின்றது.
முதலாளித்துவத்தின் தோற்றத்தினை ஆராய முற்பட்ட சமூக, பொருளாதார வரலாற்ருசிரியர்கள் பலர்-இவர்களுள் கார்ல்மார்க்ஸ் ஏங்கல்ஸ் போன்றேர் உட்படவில்லை-ஐரோப்பாவின் ஒழுக்கக்கோவை யின் மாற்றமே முதலாளித்துவத்தைப் படைத்த"தாகக் கருதுகின்ற னர். இவர்கள் கத்தோலிக்க ஒழுக்க தெறியினை நிலப் பிரபுத்துவத் துக்கு உரியதாகவும்: புரட்டஸ்தாந்து ஒழுக்கநெறி முதலாளித்துவத் துக்கு உரியதெனவும், இனம் காணுகின்றனர். இதஞல் கத்தோலிக்க மதத்திலிருந்து ஜரோப்பியரில் ஒரு பகுதியினர் பிரிந்து புரட்டஸ்தாந்து மதத்தை ஸ்தாபித்ததன் - தழுவியதன் - தொடர்ச்சியான விளைவே நிலமான்ய அமைப்பிலிருந்து முதலாளித்துவம் தோன்றியமை என இவர்கள் விளக்குகின்றனர்.
குமரன் Trias

Page 14
இதை நம்பிக் கொண்டும், தம்மை 'மார்க்ஸிஸ்டுகள்’ என்று அழைத்துக் கொண்டும் பலர் உள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இவ்வகைப்பட்ட சிந்தனையாளர்கள் வரலாற்று உண்மைகளை முழுமை யாகத் தெரியாதவர்களாக, அல்லது மறைப்பவர்களாக இருக்கிருர் கள். இதஞல் வரலாற்றை இவர்கள் தலைகீழாகப் பார்க்கிருரர்கள் அல் லது அவ்வாறு காட்ட முற்படுகிருரர்கள்.
ஐரோப்பிய மறுமலர்ச்சி
நிலமானிய அமைப்புக்குள்ளேயேயிருத்து வந்த தகர்சார்ந்த வணிக, உற்பத்தியாளர்கள் படிப்படியாக மூலதனத்தைத் திரட்டி வளர்ச்சி யடைந்து வந்தனர். இந்தச் செயன்முறையின் ஒரு குறிப்பிடப்பட்ட கட்ட வெளிப்பாடே ஐரோப்பிய மறுமலர்ச்சி என்பதாகும்.
இவ் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் ஒரு வகைப்பட்ட வெளிப்பாடே கத்தோலிக்க மதத்தில் ஏற்பட்ட வெடிப்பும் புரட்டஸ்தாத்து மதத்தின் மலர்ச்சியுமாகும். மறுமலர்ச்சியானது மதத்தில்மட்டுமல்லாது விஞ் ஞானம், தத்துவம், கலே, சட்டம், அரசியல் அமைப்பு ஆகிய பல்வேறு மேற்கட்டமைப்புக்களிலும் பிரதிபலித்தது. இதனை வேருெருவகையில் கூறுவதாயின், நிலமானிய அமைப்புக்குள்ளேயே அதன் அங்கீகாரத் தோடு நிலவி வந்த நிலமானிய நகரத்தின் வகுப்பினர் சிறுகச் சிறுக மூல தனத்தைத் திரட்டி முன்னேறியபோது நிலப்பிரபுத்துவ வர்க்கத் தோடு முரண்பாடடைவதுவும் படிப்படியாக வளர்ச்சியடைந்து வத் தது. இம்முரண்பாட்டு வளர்ச்சியினது விளைவான தொடர்ச்சியான போராட்டங்களினது ஒரு கட்டத்தில் சமூகத்தின் மேற்கட்டமைப்புக் கள் யாவற்றிலும் ஏற்பட்ட வெளிப்பாடுகளின் தொகுப்பினையே ஜேர் மனியர்கள் சீர்திருத்தம் என்றனர். பிரெஞ்சுக்காரர்கள் மறுமலர்ச்சி என்றனர்: இத்தாலியர்கள் புத்துயிர் யுகம் என்றனர்.
இம்மறுமலர்ச்சி, முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு கட்டத்தின் வெளிப்பாடே தவிர, இதன் மேற்தளத்தின் மீது படைக்கப்பட்டதல்ல முதலாளித்துவம். சிந்தனை மாற்றம் பொருளாதார மாற்றத்துக்கு முன்னே செயற்படுவதாகக் கூறுவது கருத்து முதல்வாதமேயாகும். பொருள் முதன்மை ஸ்தானம் வகிப்பதாகவும் பின்னர் சிந்தனையும் பொருளும் ஒன்றையொன்று முன்பின் தொடர்வதாகவும் அமைவதே பொருள் முதல்வாதமாகும், எனவே முதலாளித்துவத்தின் தோற்றதி துக்குரிய காரணத்தைப் புரட்டஸ்தாந்து ஒழுக்கவியலில் தேடுவதுவும் அதனைத் தொடக்கமாகக் கொள்வதுவும் நிலையியல், கருத்து முதல் வாதக் கண்ணேட்டத்தின் வெளிப்பாடே ஆகும்.
12ஆம், 13ஆம், 14ஆம், 15ஆம் நூற்றண்டுகளில் நிலமானிய தகரவகுப்பினர் தம்மை நிலப்படுத்திக் கொள்வதற்கான சலுகை, உரி
as
பக்கம் 26 குமரன்

மைப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். ஆரம்பத்தில் குடியான விவசாயிகள் நிலப்பிரபுக்களுக்கு எதிராகப் போராடிய வேளைகளில் அவர்களோடு இணைந்து கொண்டனர். தமது ஒருகட்ட வளர்ச்சி நிலை யின் பின்னர் போராட்டங்களில் தாம் முன்னணிப் பாத்திரம் வகித்துக் கொண்டு தம்மோடு குடியான விவசாயிகளை இணைத்துக் கொண்ட
WAT IT.
முன்னேறிக் கொண்டிருந்த முதலாளிகளின் போட்டிக்குணவியல்பு சந்தைச் சுதந்திரத்தை அவசியமாக்கிற்று. இது சுதந்திரம், சமத்து வம், சகோதரத்துவம் என்னும் கோஷங்களாக வெளிப்படலாயிற்று. மூலதனத் திரட்டல் நடவடிக்கைக்கு அதிகரித்த இலாபம் பெறல் என் பது அடிப்படையென்பதன் விளைவாக கடுமையான உழைப்பு, சிக்கன மான வாழ்க்கை, எளிமையான வாழ்க்கை என்னும் வாழ்வியல்புகள் வலியுறுத்தப்படலாயிற்று. நகர் சார்ந்த உற்பத்திகளின் விரிவாக்கம், வணிக விரிவாக்கம் என்பன சந்தை விரிவாக்கத்தில் தங்கியிருந்தது. சந்தையின் விரிவாக்கம் பொதுமக்களின் உலோகாயத வாழ்வு ஈடு பாட்டில் தங்கியிருந்தது. இவ்வாறக, நிலமானிய நகர வகுப்பினரிடம் திரண்டு வந்தமூலதனத்தின் அடிப்படையில் ஒன்றுேடொன்று தொடர்பு பட்டுக் காணப்பட்ட அம்சங்கள் யாவற்றினையும் நியாயப்படுத்தும் வகையிலான-அவற்றிற்கு உரிய வகையிலான-கலே, மதம், சட்டம், அரசியல் சிந்தனை மறுமலர்ச்சி - மாற்றங்கள் - நடைமுறையாயின’ இதுவே ஐரோப்பிய மறுமலர்ச்சியாக வெளிப்பட்டது. இது தில மானிய அமைப்பை அழித்தொழிக்கும் ஆற்றலுடன் முதலாளித்துவம் உறுதியாக நிலையூன்றிக் கொண்டதை ஐரோப்பா முழுவதும் பறை பறைவித்தது.
முதலாளித்துவப் புரட்சி
ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக் காலம் தொட்டு ஐரோப்பாவில் ஆதிக்கம் வகித்து வந்த நிலமானிய அமைப்பு 16ஆம் நூற்ருண்டின் நடுப்பகுதியிலிருந்து சகல கட்டமைப்புக்களிலும் வீழ்ச்சியடையத் தொடங்கியது. 16ஆம் நூற்றண்டின் நடுப்பகுதி தொடக்கம் 19ஆம் நூற்ீண்டு முற்பகுதிவரை நிலமானியம் ஐரோப்பாவில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இறுதி மூச்சுவரை முதலாளித்துவத்
சோஷலிசம் - தனிச் சொத்தையும் சுரண்டும் ஆளும் வர்க்கத்தை யும் ஒழித்து செல்வத்தைச் சமமாகப் பங்கீடு செய்வதற்கான போராட் டத்தை முன்வைக்கும் பொருளாதார, சமூக, அரசியற்கோட்பாடு. உற்பத்திச் சாதனங்கள், பரிமாற்றம், விநியோகம் ஆகியவற்றைச் சமூக உடைமையாக்குவதன் மூலமே நடைமுறையில் மேற்கூறியவாறு செல்வத்தைப் பங்கீடு செய்ய முடியும்.
குமரன் ر பக்கம் 27

Page 15
தோடு போராடி வந்தது. ஆணுல், நிலமானிய அமைப்பினுள்ளேயே தன்ன நன்கு உறுதியாக நிலைப்படுத்திக் கொண்ட முதலாளித்துவம் 16ஆம் நூற்றண்டு தொடக்கம் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை அழிக் கத் தொடங்கி 19ஆம் நூற்ருண்டின் முற்பகுதியோடு அதனை ஐரோப் பாவிலிருந்து முற்ருக அழித்தொழித்துவிட்டுத் தனது ஆதிக்கத்தைச் சகல கட்டமைப்புக்களிலும் முழுமையாக நிலப்படுத்திக் கொண்டது. இந்த இடைக்காலப் பகுதியாகிய இரண்டரை நூற்ருண்டுகளையும் ஐரோப்பாவின் முதலாளித்துவம் புரட்சிக் காலம் எனக்குறிப்பிடுவது பொருத்தமானதாகும். இக்காலம் முழுவதும் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த வணிக முதலாளித்தும் இக்கால முடிவிலிருந்து கைத் தொழில் முதலாளித்துவமாக உருப்பெற்றது.
நிலமானிய-முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பிற்களி டையேயான முரண்பாடுகளின் தொடர்ச்சியான வள்ர்ச்சியினதும், மறு மலர்ச்சிச் சிந்தனைப் போராட்டத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியினது மாக அமைந்த முதலாளித்துவப் புரட்சி வெவ்வேறு வடிவில் - அர சனுக்கு எதிரான போராட்ட வடிவிலும், தேசிய விடுதலைப் போர்கள் வடிவிலும்-வெளிப்பட்டது. வெற்றிவாகை சூடிய முதலாவது பூர்ஷ" வாப் புரட்சியாகிய நெதர்லாந்துப் புரட்சி (1586-1609) ஸ்பானிய ஆதிக்கத்துக்கு எதிரான தேசிய விடுதலைப்போர் வடிவில் அமைந்தது. ஆனல் 17ஆம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்தில் இடம் பெற்ற (1641-53) பூர்ஸ"வாப் புரட்சியும், 18ஆம் நூற்ருண்டின் இறுதிப் பகுதியில் (1779-94) பிரான்ஸில் இடம் பெற்ற பூர்வு"சவாப் புரட்சியும் அந்நாடுகளின் முடியாட்சியின் அடக்குமுறைகளுக்கு எதி ரான போர்களாக வெடித்தன. அமெரிக்க பூர்ஸுவாப் புரட்சியானது இங்கிலாந்து ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சுதந்திரப் போராட் டமாக நடைபெற்றது. 19ஆம் தூற்ருண்டில் நடைபெற்ற லத்தின் அமெரிக்கப் புரட்சிகள் ஸ்பானிய, போர்த்துக்கீச ஆட்சியாளருக்கு எதி ரானதாகவும் இத்தாலிய, ஹங்கேரிய புரட்சிகள் ஆ ஸ் தி ரே லிய கொடுங்கோலாட்சிக்கு எதிராகவும் தேசிய விடுதலைப் போராட்ட வடி வங்களிலேயே வெளிப்பட்டன. இப்புரட்சிப் போராட்டங்களே ஐரோப்பாவின் தேசிய அரசுகள் தெளிவாக உருப்பெறுவதற்கு வழி கோலியவையாகும், அதாவது தேசிய முதலாளித்துவத்தின் எல்லேகள் தேசிய அரசுகளின் வடிவில் உருப்பெற்றன. கைத்தொழில் முதலாளித்துவம்
19ஆம் நூற்ருண்டின் முற்பகுதியிலிருந்து ஐரோப்பாவில் வணிக முதலாளித்துவம் கைத்தொழில் முதலாளித்துவமாக உருமாறி வளர்ச்சி யடையத் தொடங்கியது. இது இங்கிலாந்தில் சுமார் அரைநூற்ருண்டு முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது. வணிக முதலாளித்துவத்திளுல் உருப் படுத்தப்பட்ட தேசிய அரசுகளும், மூலதனத்திரட்சியிஞலும் விரிவடை
பக்கம் 28 குமரன்

ந்த சந்தையினலும் விரைவுபடுத்தப்பட்ட தொழில் நுட்ப வளர்ச்சி இயந்திரத்தைத் தோற்றுவித்தமையும் இணைந்து வணிக முதலாளித்து வத்தைக் கைத்தொழில் முதலாளித்துவத் தரத்துக்கு முன்னேற்றின.
ஐரோப்பிய நாடுகள் வணிக முதலாளித்துவ காலத்தில் ஆசிய, ஆபி ரிக்க, லத்தீன், அமெரிக்க நாடுகளின் செல்வ வளங்களைச் சுரண்டித் தமது செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளும் பொருட்டு தமது முன் னேற்றகரமான துப்பாக்கியிஞலும் கடல்வழிப் பயணத்திஞலும் அந் நாடுகளைக் காலணிகளாக்கி வேட்டையாடின. காலனித்துவ நடவடிக்கை குடியேற்றநாடுகள், குடியேறிய நாடுகள் என இருவடிவத்தில் இடம் பெற்றன. இலங்கை, இந்தியா போன்ற மூன்ரும் மண்டல நாடுகள் குடியேற்ற நாடுகளாக இருந்தன. இவை வரலாற்ருேட்டத்தில் குறை விருத்தி நாடுகள் ஆயின. ஆனல் தென்ஞபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற தாடுகள் குடியேறிய நாடுகளின் வகையைச் சேர்ந் தவையாகும். இவை பின்னர் அபிவிருத்தியடைந்த நாடுகளாக ஆகி யுள்ளன.
ஐரோப்பாவில் கைத்தொழில் முதலாளித்துவம் எழுச்சியடைந்த போது காலணி நாடுகளே, ஐரோப்பிய நாடுகள் தமக்கிடையேயான யுத்தத்தின் மூலம் பங்குபோட்டுக்கொண்டன. 18ஆம் நூற்றண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்ருண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற யுத்தங்கள் இவ்வடிப்படைக் காரணி களின் விளைவுகளேயாகும். பங்குபோடலுக்கான இவ் யுத்தங்களின் பின்னர், காலணிகளின் மூலவளத்தைச் சூறையாடல், அந்நாடுகளின் மக்களிடமிருந்து வரியினைத் திரட்டல் என்னும் நிலைகளுக்கு மேலாக அந்நாடுகள் ஐரோப்பிய உற்பத்திப் பொருட்களின் சந்தைக் காடுகள் என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டன. இவ்வாருக ஐரோப்பியக் கைத் தொழில் முதலாளித்துவச் செயல் முறையை 19ஆம் நூற்ருண்டு முழு மையாக அநுபவித்தது.
19ஆம் நூற்ருண்டின் மிக வேகமான தொழில் நுட்ப வளர்ச்சி, அதற்குத் தக்கபடியான உற்பத்திப் பெருக்கம், அதன் தொடர்ச்சியான அதிகரித்த மூலதனத் திரட்சி ஐரோப்பிய தேசிய அரசுகளின் எல்லே களுக்குள் விரிவடைதலையும் பரவலடைதலேயும் முழுமையாக்கியது LBLzYYEL LLSSLLSL0LLLSLLLSLLYLSLLLL0 LLLYLLLST S
கம்யூனிசம் - மார்க்சும் ஏங் கெல்சும் வரலாற்றைப் பொருள் முதல் வாதக் கண்ணுேட்டத்தில் கண்டு வகுத்த கோட்பாடு. சமூக வர்க்கங் கள் ஒழிந்த பின்னர் சோஷலிசத்தைத் தொடர்ந்து ஏற்படும் சமூக அமைப்பே கம்யூனிசமாகும். கம்யூனிசம் இன்னும் ஒருநாட்டிலும் ஏற் படவில்லை. சோவியத் யூனியன், சீனு முதலான சோஷலிச நாடுகளில் வர்க்கப் போராட்டம் இன்னும் முற்றுப்பெறவில்லை.
குமரன் பக்கம் 29,

Page 16
தேசிய அரசுகளின் எல்லைகளுக்குள் விரிவடைந்துவிட்ட மூலதனமானது தேசிய அரசுகளின் எல்லைகளைக் கடந்துபாயவேண்டிய கட்டத்தையடைத் தன. இதனுல் மூலதன ஏற்றுமதிான்றும் நிலை தோற்றம் பெறுவது அவசியமாக்கப்பட்டது.
19ஆம் நூற்ருண்டின் இரண்டாவது அரைப் பகுதியில், ஐரோப் பிய அரசுகளின் தேசிய மூலதனம் அதன் தேசிய எல்லைக்குள்ளேயே தன்னத் தொடர்ந்தும் இருத்திக்கொள்ளும் பொருட்டான போராட் டத்தில் ஈடுபட்டிருந்தது. இம் முயற்சி ஐரோப்பிய பாட்டாளி வர்க் கத்தை மேலும் மேலும் புரட்சிகரமாக்கி அவர்களைப் போராட்டங் களில் ஈடுபடுத்தியது. இதன் விளைவாக, இவ்வரை நூற்றண்டு முழு வதையும் ஐரோப்பா பாட்டாளிவர்க்கப் போராட்டங்களினல் நிறைத் துள்ளது. மூலதனம் தொடர்ந்தும் அரச எல்லைகளுக்குள்ளேயே விரி வடையவும் பரவலடையவும்வேண்டுமாயின் அவ்வத் தேசிய அரசுக ளின் முதலாளிவர்க்கத்தோடு பட்டாளி வர்க்கம் கணக்குத் தீர்த்துக் கொள்வதற்கு இடமளிக்கவேண்டும். இல்லேயாயின் அதாவது, தேசிய எல்லைகளுக்குள் உள்ள முதல்ாளித்துவத்தைப் பாதுகாக்கவேண்டுமா யின் ஒன்றில் உற்பத்திப் பொருட்களுக்கென சந்தையை மேலும் விரி வாக்கவேண்டும். அல்லது தேசிய எல்லைக்குள் குவிந்துகொண்டிருந்த மூலதனத்தை ஏற்றுமதி செய்யவேண்டும் என்னும் நிலைமையை 19ஆம் நூற்ருண்டின் ஐரோப்பாவின் முதலாளித்துவ அரசுகள் ஒவ்வொன் றும் உணர்ந்துகொண்டன.
இறுதியாக, ஐரோப்பிய மூலதனம் தேசிய எல்லைகளைக் கடந்து சர்வதேச ரீதியில் காலணிக்ளே நோக்கிப் பாய்ந்தன. இதனுல் தேசிய முதலாளித்துவமானது ஏகாதிபத்தியம் என்னும் மேலும் முன்னேற்ற கரமான ஒரு கட்டத்துக்கு மாற்றம் பெற்றது. இதன்யே முதலாளித் துவத்தின் உச்சக்கட்டம் ஏகாதிபத்தியம் என லெனின் குறிப்பிடுகின் Gyfr.
ஏகாதிபத்தியம்
ஐரோப்பிய நாடுகளின் மூலதனம் தேசிய எல்லைக்குள் மூடங்கிக் கிடக்கமுடியாமல் சர்வதேசிய ரீதியில் பாய்ந்ததனை 20ஆம் நூற்ருண் டின் ஆரம்பம் கண்டுகொண்டது. தேசிய முதலாளித்துவத்தினேப் பாது காக்கும் பொருட்டு ஒன்றில் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை விரிவடைய வேண்டும் அல்லது மூலதனம் ஏற்றுமதி செய்யப்படுதல் வேண்டும் என்பதில் ஐரோப்பிய அரசுகள் ஒவ்வொன்றினுள்ளும் வாழ்ந்துகொண்டிருந்த முதல்ாளித்துவம், 20ஆம் நூற்ருண்டின் ஆரம் பத்தில், தனது முன்னேய அனுபவரீதியான சந்தை விரிவாக்கம் என்ப தனையே முதலில் மேற்கொண்டது. இச் சந்தை விரிவாக்க நடவடிக்கை யானது, ஒவ்வொரு முதலாளித்துவ அரசும் தனது அரச எல்லையை
பக்கம் 30 குமரன்

விரிவாக்குதல், ஏனைய அரசுகளின் காலணிகளைத் தான் பிடித்துக் கொள்ளல் என்னும் விதமாக மேற்கொள்ளப்பட்டது. சந்தைக்காக நாடு பிடித்தல் என்பதன் விளைவையே முதலாவது உலகமகாயுத்த மாக உலக மக்கள் அனுபவித்தனர். w
முதலாளித்துவத்தின் முதலாவது மாபெரும் நெருக்கடி உலகமகா யுத்தமாக வெளிப்பட்டபோது ஐரோப்பாவின் ஒரு பகுதி முதலாளி கள் தமது சந்தையை விரிவாக்குவதிலும், மறுபகுதி முதலாளிகள் தமது சந்தையைப் பாதுகாப்பதிலும் அக்கறையாக இருந்தனர். இவ்வேளை முல் ரஷ்ய தொழிலாள விவசாயிகள் ரஷ்ய முதலாளிகளோடும் நிலப் பிரபுக்களோடும் கணக்குத் தீர்த்துக்கொண்டனர். ஐரோப்பிய முதலா வித்துவ நாடுகன் ஒவ்வொன்றும் தமது உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைகள், அரசனல்லைகளே மீண்டும் ஒருமுறை வரையறுத்துக் கொண்ட ன. உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையை வரையறை செய்யப் பட்டுவிட்டதனுல் ஒவ்வொரு நாட்டின் முதலாளித்துவமும் தம் அழி விக்ளப் பிற்போடும் பொருட்டு தவிர்க்க முடியாதபடி மூலதன ஏற்று மதியை முக்கிய கொள்கையாக்கிக் கொண்டன. இவ் ஐரோப்பிய மூல தனங்கள், காலனித்துவ நாடுகளில் பண்டங்களையும் பாட்டாளிவர்க்கதி தையும் உற்பத்தி செய்வதன்மூலம் அந்நாடுகளின் உழைக்கும் மக்களைப் புரட்சிகரப்படுத்தியது. w
ஏகாதிபத்தியத்தின் மூலதன ஏற்றுமதியின் விளைவாக 19ஆம் நூற் முண்டு பூராவும் புறநிலயாலும் உணர்வு நிலையாலும் புரட்சிகரமாக விளங்கிய ஐரோப்பியத் தொழிலாளவர்க்கம், இருபதாம் நூற்ருண் டின் ஆரம்பத்திலிருந்து வர்க்க உணர்வில் உழைப்பாளர் நிலப்பிரபுத் துவக் குளும்சத்தை அடையத் தொடங்கியது. முதலாவது உலக மகா யுத்தத்தின்போது பெருந்தொகையான ஐரோப்பியத் தொழிலாள வர்க்கம் முதலாளிகளின் தேசிய வாதம், தேசிய ஒருமைப்பாட்டு வாதத் துக்குப் பலியாகிப்போனதற்கு இவ் உழைப்பாளர் நிலப்பிரபுத்துவக் குணம்சம் குறிப்பிட்டளவு பங்களிப்புச் செலுத்தியது.
மூலதனம் -மார்க்ஸ் எழுதிய பிரதான நூல். முதலாளித்துவத் தின் பொருளாதார அபிவிருத்தியைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளை விபரமாக ஆராயும் நூல்; வரலாற்று ரீதியாகவும் சித்தாந்த முறை யிலும் ஆணித்தரமாக இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது. மார்க்சின் வரலாற்றுப் பொருள் முதல் வாதக் கோட்பாடு இந்நூலில் அடிப்படை
யாகக் கையாளப்பட்டுள்ளது.
Gudsúdr பக்கம் 31

Page 17
பாரதி யார்?-5 一邑。F... இராசாமணி
நிலப்பிரபுத்துவ சமுதாய முறை
சமுதாய வளர்ச்சிப் போக்கின் அடுத்த கட்டமான நிலப்பிரபுத்துவ அமைப்பில் காலடி வைத்தது. நிலங்கள், காடுகள்போன்றவை விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில கூட்டத்தின் கையில் இருந்தன. இதன் விளைவாக மக்களின் பெரும் பகுதியினர் நிலக்கிழார்களைச் சார்ந்து வாழவேண்டியிருந்தது. இது நிலப் பிரபுத்துவ அமைப்பின் அடிப்படை முரண்பாடாகும். சமுதாயத்தில் உழுதுண்போர், உழுவித்துண்போர் என்ற பகுப்புமுறை நிலவியது. உழுதுண்போர் பண்ணை அடிமைகள். உழுவித்துண்போர் நிலக்கிழார்கள்.
உற்பத்திக் கருவிகள் தொடர்ந்து முற்போக்கானவகையில் மேலும் மேலும் நுட்பம் பெறுதல் வேண்டும். மனித சமுதாய வளர்ச்சிக்கு இதுவே அடிப்படை. இயற்கை சக்திகளின் மீது மனிதன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிருன். இவ்வாதிக்கத்தின் அளவை, கருவி களின் வளர்ச்சியின் அளவே வரையறுக்கிறது. உற்பத்திச் சக்திகளே படைப்பின் ஆணிவேர். V
இதுவரை வந்த சமுதாய அமைப்புக்களில் உற்பத்திச் சக்திகள் மெதுவாகவே வளர்ச்சி பெற்றன. வேளாண்மைத்துறையில் இரும்புக் கருவிகளைப் பயன்படுத்தும் முறை வெகுவாக முன்னேறியிருந்தது. அடிமைமுறை உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தின. அடிமை உழைப்பு மேலும் மேலும் ஊதியக் குறைவையே ஏற்படுத்திற்று. உற்பத்திச் சாதனங்களான நிலமும் உழைப்புக்கருவி களும் நிலக்கிழார்களின் தனியுடைமையாயின. நிலங்களின் பெரும் பகுதி அந்நிலக்கிழார்களின் நேரடி மேற்பார்வையிலோ, மேற்பார்வை இன்றியோ இருந்தன.
‘நிலக்கிழார் தன் நேரடி மேற்பார்வையிலுள்ள நிலத்தைத் தான் சென்று பார்க்கவில்லையெனில்-அந்நிலத்தின் மீது நேரடிக் கண்காணிப் பில்லையெனில்-அந்நிலம் அவன் மனைவியைப்போல் வெறுத்துப் பிணக் குக் கொள்ளும்" என்கிறது திருக்குறள் (குறள் 1039)
நிலக்கிழார்கள் தங்களின் அடிமைகட்கு நிலங்களின் ஒரு சிறு பகுதி யைச் சிறு சிறு பிரிவுகளாகப் பங்குபோட்டு அளித்தனர். அதற்கீடாக அடிமைகள் தங்களின் ஆண்டைகளுக்கு ஊழியம் செய்தல் வேண்டும். பண்ணை அடிமையில்லாத சிலர்க்கு நிலக்கிழார் தங்களின் நிலத்தின் மற்
குமரன் பக்கம் 32

ருெரு சிறுபகுதியை வாரத்திற்குவிட்டனர். அறுவடையில் ஒரு குறிப் பிட்ட பகுதியைத் தங்களின் பங்காக அதற்கீடாகப் பெற்றனர். இத ல்ை நிலத்தையே நம்பிவாழும் பொருளாதாரச் சார்புத்தன்மை ஏற்
ill-gil.
தொழுது பின்செல்பவர் (பண்ணை அடிமைகள்), (நிலக்கிழார்க்கு வாரமாகக் கொடுத்தது போக மீதியை) உண்டு பின்செல்பவர் ஆகிய இருவகையினர் அக்காலத்தில் இருந்ததையும் அவர்கள் நிலக்கிழாரைச் சார்ந்து வாழ்ந்ததையும்-நிலக்கிழாரின் (நிலவுடமைப் பொருளியல்) பிடியில் கட்டுண்டு கிடந்ததையும் திருக்குறள் (குறள் 1033) எடுத்துக் காட்டுகிறது.
இவ்வகை நிர்ப்பந்தம் இல்லாவிடில் உழவரைத் தனக்கு வேலை செய்யுமாறு நிலக்கிழார்கள் கட்டாயப்படுத்த முடியாது. இக்கட்டா யத்தின் அளவும் வடிவமும் வெவ்வேறு வகையானவை. இரும்பைக் காய்ச்சி ஊற்றிடுவீரே
இரும்பைக் காய்ச்சி உருக்குதலும் இரும்பைப் பயன்படுத்தலும் மேலும் மேலும் மிகுதியாயின. இதனுல் அதில் நுட்பமும் தேர்ச்சியும் மிகுந்தன. இரும்புக் கலப்பையும் தறியும் பரவலாகப் பயன்படுத்தப் பட்டன. கைத்தொழில் நிலையங்கள் பண்ணைகளுக்குள்ளே உருவாயின. இன்னுெருபுறம் பட்டறைகள் உருவாயின. கைத்தொழில்கள் வளர்ச்சி பெற்று வேளாண்மையிலிருந்து தனித்துப் பிரிந்து சென்றன. சிற்றுார் களில் வாழ்ந்த கைத்தொழிலாளர்கள் நிலக்கிழார்களைச் சார்ந்து வாழ்ந் தனர். கொல்லன்பட்டறையும் மண்பாண்டத் தொழிலுமே முதன் முதல் தோன்றிய தொழில்கள். "கொல்லன் உலைக்கள ஒலி சிவந்த கால் களையுடைய புருக்களின் துயிலைக் கலைத்தன” (1) என்றும் ‘மட்கலஞ் சுடும் சூளையிற் புகைபோல, மலை மறையுமாறு வெள்ளிய மேகம் சூழ்ந்து தோன்றும் (2) என்றும் சங்க நூல்கள் கூறும். "பாம்பின் தோல் போன்ற வடிவினையும் மூங்கிற் கோலின் உட்புறத்தேயுள்ள தோல் போன்று நெய்யப்பட்ட-இழைகளின் வரிசையை அறிய இயலாத - பூ வேலை நிறைந்த ஆடை நெய்ததாகப் பழந்தமிழ் நூல்கள்
(1) ‘கருங்கைக் கொல்லன் இரும்புவிசைத் தெறிந்த
கூடத் திண்ணிசை வெரீஇ மாடத்(து) இறையுறை புறவின் செங்காற் சேவல் இன்றுயில் இரியும் பொன்றுஞ்சு வியநகர்."
பெரும்பாண் 436-440
(2) இலங்குமலை புதைய வெண்மழை கவைஇக்
கலஞ்சுடு புகையிற் ருேன்றும்."
அகநா. 308:5-6
குமரன் பக்கம் 33

Page 18
கூறும். (3) கைத்தொழிலுக்கும் வேளாண்மைக்குமிடையே தொடக் கத்தில் ஏற்பட்ட வேலைப் பிரிவினை ஒரு குறிப்பிட்ட நிலப்பிரபுத்துவப் பண்ணைக்குள்ளே நடைபெற்றது. தொழில் நுட்பம் வளர்ச்சி பெற்றுத் தொழில்கள் ஒரு வரையறைக்குட்படத் தொடங்கியதும் கைவினைஞர் கள் தங்கள் பண்டங்களைச் சந்தையில் விற்றுத் தங்கட்கு வேண்டிய பொருட்களைத் தாங்களே வாங்கிக் கொள்ள விரும்பினர். கைவினைஞர் கள் காலப்போக்கில் பண்ட உற்பத்தியாளர்களாக மாறினர். விற் பனைக்கென்றே அவர்கள் பொருட்களை உற்பத்தி செய்தனர். சிற்றுார் களில் குறைந்த எண்ணிக்கையுள்ளோரே இப்பொருட்களை வாங்கினர். அவர்கட்கு அதனல் ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டது.
நிலக்கிழார்களின் சுரண்டலும் கைவினைஞர்களை மேலும் திக்குமுக் காடச் செய்தது. பெரும்பான்மைக் கைவினைஞர்கள் பண்ணைகளி லிருந்து வெளியேறி-நிலக்கிழார்களின் ஒடுக்கு முறையிலிருந்து விடு பட்டு-நகரங்களை அடைந்தனர். சந்தைக்கான உற்பத்தி பெருகியது. வேளாண்மை உறவுகளின் வளர்ச்சியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. நிலக் கிழார்கட்கு உழைப்பாகச் செலுத்தும் பழக்கம் குறைந்தது. பொரு ளாகவும் பணமாகவும் செலுத்தும் பழக்கம் தலைதூக்கியது.
நிலவுடைமைக்கு அருகிலேயே தன் உற்பத்திக் கருவிகளைத் தனது உடைமையாகக் கொண்டு -தன் சொந்த உழைப்பை அடிப்படையாகக் கொண்டு-சொந்தத்துக்குத் தொழில் செய்யும் உழவனின், கைத்தொழி லாளியின் தனியுடைமையும் இருந்தன. உற்பத்தித் துறையில் ஏதா வது ஒருவகையில் உழைப்பாளி தன் முயற்சியைக் காட்டவும்-ஒரு வேலையை மேற்கொண்டு அதில் அக்கறை காட்டவும் இப்புதிய உற் பத்தி சக்தி அவர்களைத் தூண்டிற்று. எனவே, அடிமை முறையைக் கை விட்டுப் பண்ணை அடிமை முறையை மேற்கொள்ள அக்கால சமுதாய அமைப்பு வழிகோலிற்று.
தனியுடைமை மேலும் மேலும் வளர்ச்சியடைந்தது. கைவினைஞர் கள் வணிக மூலதனத்தில் சுரண்டலுக்கு ஆட்பட்டனர். தொழிலுக்கு வேண்டிய மூலப் பொருட்களை வழங்கி அவர்கள் உற்பத்தி செய்த பண் டங்களை வணிகர்கள் வாங்கிக் கொண்டனர். வணிகர்கள் மூலப்பொருட் களைக் கொடுக்கும்பொழுது அதஞல் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங் களைத் தங்களுக்கே வழங்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தினர். வசதி யற்ற கைவினைஞர்கள் தங்கட்குத் தேவையான மூலப்பொருட்களைக் கட ஞக வாங்கி அக்கடனப் பண்டங்களாகச் செலுத்தினர். காலப் போக்
(3) பாம்புரி யன்ன வடிவின காம்பின்
கழைபடு சொலியின் இழையணி வாரா."
புறநா. 383:9-11
பக்கம் "' குமரன்

கில் கைவினைஞர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பண்டங்களை வாங்கு பவர்களையே முற்றிலும் நம்பி வாழவேண்டிய நிலை ஏற்பட்டது, வணி கத்தையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட வணிகர் கூட்டம் முதல் முதலாகத் தோன்றிற்று.
அடிமைச் சமுதாய முறையிலிருந்த சுரண்டலின் கொடுமை சற்று நெகிழ்ந்து குறைந்தது. சுரண்டப்படுவோர் தங்களைச் சுரண்டுவோர்க்கு எதிராக அடிக்கடி கொந்தளித்து எழுந்தனர். ஆனல் அச்சமூக அமை ப்பை அக்கொந்தளிப்புக்களால் அசைக்க முடியவில்லை.
சாதிகள் இல்லையடி பாப்பா!
பண்டைய பணவுறவுகள் சமூக நிலையில் ஒரு மாறுதலை ஏற்படுத் நிற்று. அரசியல், ஆட்சியின் வடிவங்களை ஆளும் வர்க்கமான நிலக் கிழார்கள் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டனர். மையப்படுத்தப்பட்ட ஆட்சியே நிலப்பிரபுத்துவ அரசின் புது வடிவ மாகும். பொருளாதார ஒருமைப்பாட்டைக் கொண்ட பரந்த நிலப் பகுதிகளே இதற்கு அடிப்படை. அரசியல் ஒருமைப்பாடும் மையப்படுத் தப்பட்ட அரசுகள் உருவாகியதும் வளர்ச்சி பெற்ற நிலப்பிரபுத்துவ அமைப்பின் வரலாற்று முற்போக்கான செயலாகும்.
அடிமை முறை அமைப்பில் சாதிகள் தோன்றின.
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியு மில்லை" என்கிறது
புறநானூறு (335). நிலப்பிரபுத்துவ அமைப்பில் மேலும் சாதி மிகுதி யாகப் பிரித்து வலுவாகத் தன்னைத் தானே பிணைத்துக் கொண்டது. வேலேப் பிரிவினையின் ஒரு சமூக வடிவமாகச் சாதி தோன்றியது. பிறப்பு, தொழில் ஆகிய இரண்டின் அடிப்படையில் சாதி மக்களைப் பாகுபடுத் திற்று. சாதி அமைப்பு உழைப்பாளி மக்களைச் சுரண்டுவதற்குரிய ஒரு வெளிப்படையான கருவியாக அன்று முதல் இன்றுவரை நீடிக்கிறது. மனிதன் எவனும் அவனுடைய குறிப்பிட்ட சாதியைவிட்டு வெளியில் இருக்க முடியாது. அவ்வளவு நெருக்கமாக அவன் சாதியோடு பிணைக் கப்பட்டிருத்தான். பெரும்பான்மையான உடலுழைப்பைக் கொண்ட மக்கள் கீழ் சாதிகளாக-தீண்டப்படாதவர்களாக -நடத்தப்பட்டனர். இச்சாதிப் பிரிவினை உழைப்பாளி மக்களை ஒன்று சேராமல் தடுத்தது. அவர்களைக் கடுமையாகச் சுரண்டிய நிலப்பிரபுத்துவ அரசுக்கு எதிராக ஒன்று சேருவதற்கு இடறுகட்டையாக இருந்தது. சாதி மதங்களைப் பாரோம்
பொருளாதாரச் சுரண்டல், அரசியல் ஒடுக்குமுறை ஆகியவை உழைப்பாளி மக்களைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் நிலைப்படுத்த உதவின.
குமரன் பக்கம் 35

Page 19
கருத்துப் பரப்பியல் அவர்கட்கு வலிய ஆயுதமாகத் திகழ்ந்தது. நிலப் பிரபுத்துவ கருத்தியலாகத் திகழ்ந்தது மதமே. உழைப்பாளர் இவ்வுல கில் அடையும் துன்பத்துக்கும் இன்னல்கட்கும் ஈடாக மேலுலகில் பேரின்பம் அடையலாம் என்ற கருத்தைப் பரப்பிற்று. நிலப்பிரபுத்து வத்துக்கு எதிரான தங்கள் போராட்ட முயற்சியை மதம் வேறு பக்கம் திருப்பியது. மதம் உழைப்பாளர்கள் தங்கள் ஆண்டைகட்கு முழு அடி மைகளாக நிலைத்திருக்க இடையருது முயன்றது. வாழ்க்கையின் ஒவ் வொரு துறையிலும் மதம் ஊடுருவியது. ஆளும் வர்க்கம் தங்களின் அதிகாரத்தின் வன்மையால் மக்களைத் தங்குதடையின்றிச் சுரண்டு வதை மதம் நியாயப்படுத்திற்று; புனிதமாக்கிற்று.
தொட்டில் கிடைக்கவில்லே! சவப்பெட்டி கிடைத்தது
‘எங்கள் மூன்று பிள்ளைகளும் அருகே உள்ளனர். நாங்கள் எல்லோ ரும் அடுத்த அறையில், உயிரற்றுள்ள எமது சிறு தேவதைக்காக அழு தோம். எங்கள் கடூரமான வறுமைக் காலத்தே எம் உயிரான குழந்தை இறந்துவிட்டது எங்கள் ஜேர்மானிய நண்பர்களும் உதவமுடியவில்லை . தாங்க முடியாத துன்பத்துடன் பிரான்சிலிருந்து குடியேறிய நண்பரிடம் சென்று இக்கஷ்டமான நிலையில் உதவும்படி மன்ருடினேன், அவர் இரங்கி 2 பவுண் (கி2) தந்தார். அப்பணத்துடன் வாங்கிய சவப் பெட்டியிலேயே குழந்தை தற்போது அமைதியாகக் கிடக்கிருள். அவள் உலகில் பிறந்தபோது அவளுக்குத் தொட்டிலே கிடைக்கவில்லை. நீண்டகாலமாக அமைதியாகத் தங்கக் கூடிய இடமே கிடைக்கவில்லை." -மார்க்சின் மனைவி ஜென்னி தமது கஷ்டங்கள் பற்றி நண்பர்ஒருவருக்கு லண்டனிலிருந்து எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி.
வர்க்கப் போராட்டம்: சுரண்டப்படுபவர்களுக்கும் உழைப்பைச் சுர ண்டுபவர்களுக்கும் இடையிலுள்ள போராட்டம். வர்க்க நலன் சமர சம் செய்யக்கூடியதல்ல; வர்க்கப் போராட்ட வடிவங்கள் பரந்தவை.பொ ருளாதாரம், அரசியல், கருத்துருவம், சித்தாந்தம். ஆஞல் எல்லாப் போராட்டங்களிலும் பார்க்க அரசியல் போராட்டமே முதன்மையா னது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஏற்பட்ட பின் வர்ககப் போ ராட்டம் புதிய வடிவங்கள் எடுக்கும்.
பூக்கம் 36 குமரன்

தீங்கு நமக்கே
கவலைப் படாதீர்கள்! இவன் எதையும் பார்க்கமாட்டான்! பிறந்தவுடனே இவன் கண்களைப் பிடுங்கி எறிந்துவிட்டோம்!
கவலைப் படாதீர்கள்! இவன் எதையும் பேசமாட்டான்! பேசும் பருவத்திலே இவன் உதடுகளைப் பிணைத்துத் தைத்துவிட்டோம்! கவலைப்படாதீர்கள்! யாரும்வந்து பிரித்துவிடமாட்டார்கள்! பிரித்தால்தான் என்ன? நாவையும் அறுத்தபின்தான் தைத்தோம்! கவல்லப்படாதீர்கள்! f இவனுக்கு எதுவும்கேட்காது! கேட்கும் நிலைதவிர்க்கக் கட்டைகளைக் காதில் அடித்துவிட்டோம்! கவலைப்படாதீர்கள்! எதுகுறித்தும் இவன், எண்ணமிடமாட்டான் ! எண்ணத் தொடங்குமுன்பே மூளையை எடுத்துப் புதைத்துவிட்டோம்! வெயிலிலும் மழையிலும் கிடத்தியே உடலை மரக்கச் செய்துவிட்டோம்! தாக்கித் தாக்கி இவன்மேல்தோலைக் காய்ப்புறச் செய்துவிட்டோம்! இவன்மேல் சுமைகளை ஏற்றுங்கள்! சவாரி செய்யுங்கள்! எழுந்துநிற்க மட்டும் இசைவு தராதீர்கள்! நாய்க்கு ஊற்றும் கூழையே இவனுக்கும் ஊற்றுங்கள்! அதுவும் நான்கு நாட்களுக்கு ஒருமுறை போதும்!
இழப்பு நமக்கே! எழமுயன்றலும் தீங்கு நமக்கே!
--இரணியன், கோவை.
பூக்கம் 37 . . .۔ ۔ ۔ ۔ ۔۔ ❖ : .. &x;ፉ − e5uovo

Page 20
கேள்வி? பதில்! (Gausio”
கே: மதம் மக்களின் அபினி என்று மார்க்ஸ் கூறினர். (அபின் எமது நாகரிகத்திற்கு, வழமைக்கு ஒவ்வாத பொருளாகவே கருதப் பட்டு வருகிறது.) மதம் மயக்கமூட்டுவதாக எவ்வாறு கூறமுடியும்?
மு. கணபதி, திருமல்ல.
ப: இக் கூற்று மார்க்ஸ் எழுதிய ஆழமும் சிக்கலுமான ஒரு பகு தியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதாகும். மார்க்ஸ் பின்வருமாறு எழு தினர். “மதத்தின் வறுமை நிஜ வெறுமையின் வெளிப்பாடு; யதார் த்த துன்பத்தின் எதிர்ப்பைக் காட்டுகிறது; மதம் ஒடுக்கப்பட்ட மக் களின் பெருமூச்சு; இதயமற்ற உலகின் அனுதாபம்; ஆத்மா இல்லா உலகின் ஆத்மா. அது மக்களின் அபினி."
மதத்தையும் மார்க்ஸ்சின் வரலாற்றுப் பொருள் முதல் வாதக் கண்ணுேட்டத்தில் பார்ப்பின் அவரது கருத்து மேலும் தெளிவாகும். அடிமைச் சமுதாயத்திலேயே மதவாதிகள் தோன்றி அடிமைகளுக்கும் ஆத்மா இருக்கிறது என்று கூறி அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் ஆத ரவைப் பெற்றனர்; அனுதாபத்தைப் பெற்றனர். V
நிலப்பிரபுத்துவத்தில் மதம் ஆதிக்கம் செலுத்தியது. சைவசித் தாந்தமும் பதி, பசு, பாசம் என்ற சித்தாந்தத்தைவைக்கும்போதுமக்கள் எல்லோரது ஆத்மாக்களையும் சமன்படுத்தியது. ஐரோப்பிய வரலாற் றில் மதம் அரசியல் ஆதிக்கம் பெற்று அரசர்களை பொம்மையாக வைத்து ஆண்டது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் மத ஆதிக் கம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. 'மறுமலர்ச்சிக் காலம்’ இதை நிரூ பிக்கும். கிறிஸ்தவ மதம் பிளவுபட்டு முதலாளித்துவத்திற்கு வழிவிட் டது. இன்றும் அதன் ஆதிக்கம் முற்ருக ஒழிந்துவிட்டதாக கூறமுடி யாது. உதாரணமாக போலந்து, எல்சல்வடோர், ஈரான், பிற அரபு நாடுகள், இலங்கை, இந்தியா போன்ற மூன்ருவது உலகநாடுகளையும் காணலாம்.
மதம் மேல்மட்ட அமைப்பைச் சேர்ந்தது, கருத்துருவம் சார்ந்தது. அது விஞ்ஞான பூர்வமானது அல்ல. வெறும் கருத்துக்களின், நம்பிக்கை யின் அடிப்படையில் எழுந்தது.
மதம் கருத்து முதல் வாதம் சார்ந்தது. பாட்டாளியின் பொருள் முதல் வாதத்திற்கு எதிர்மறையானதே.
குமரன் - - - - பக்கம் 38

பாட்டாளி கட்சி அமைக்கப்போகும் சோஷலிச, கம்யூனிச சமுதா யத்தில் மதம் முற்ருக ஒழிக்கப்படும். ஆத்மா இல்லாத அடிமை, நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவசமுதாயங்களின் ஆத்மாவாக இருந்த தையே மார்க்ஸ் கூறிஞர். மாஒ இக்கருத்தை மற்றேர்விதமாகச் சொன் ஞர். , y
மனித வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் மனிதனுக்குத் தெய்வம், கோவில்கள் தேவைப்பட்ட்ன; தனக்கு இனித் தேவையில்லை என்று கரு தும்போது தானே அவற்றைத் தூக்கி எறிந்து விடுவான் என்ருர், அபினி மூளையை மயக்குவது. யதார்த்த உலகைக் காணவிடாது தடுப்பது. அதே போலவே மதக்கருத்துக்கள் நினைவிலி மனதில் படிந்து, வாழ்வின் யதார்த்த நிலையைக் காணவிடாது தடுக்கின்றன. மதக் கட்டுப்பாடு கள் உழைப்புச் சுரண்டலுக்கு முன்பிறவி, மறுபிறவி, பாவங்கள்பற் றிப் பேசுகின்றன. பாட்டாளி வரலாற்றுப் பொருள் முதல் வாதம் , இயக்கவியல் பொருள் முதல் வாதம் ஆகிய தன் சித்தாந்தங்களைக் கிர கித்துக் கொண்டதும் இவ் அபினியிலிருந்து விடுதலை பெற்றுவிடுகிருன்.
நீர்வேலி வழிப்பறி வழக்கில் வதைமூலமே வாக்குமூலம் பெறப்பட்
டது என்ற தங்கத்துரை, தேவன், குட்டிமணி ஆகியோரின் கூற்றுக்கள்
(குமரன் 59) நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. 1-3-88இல் அறுவ
ருக்கும் மேல் நீதிமன்ற நீதிபதி சீ. எல். ரி. மூனமல அவர்களால் ஆயுள்
தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்
துக்கு அப்பீல் செய்யப்பட்டுள்ளது. O వ w
2-3-83 அன்று திரு. சீ. எல். ரி. மூனமல அவர்களும், ரூடர்டி அல்
விஸ் அவர்களும் புதிய உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு ஜனதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிர மாணம் செய்து கொண்டனர், O , -
‘பிவிதி கண்ட என்ற சிங்கள பிரசுரத்தை அபிப்பிராய வாக்கெடுப் பின்போது கம்பகா பொலிஸ்சுப்பிரின்டென் பி. உடுகம்பொலபநிமுதல் செய்தது தவறு என தீர்ப்பளித்து நஷ்ட ஈடாக ரூபா 10,000 அன்னர் செலுத்த வேண்டுமென நீதிமன்றம் ஆணையிட்டது. இப்பணத்தை பி. உடுகம்பலவிற்கு அரசு வழங்குவதாகத் தீர்மானித்தது. அன்னுரையும் 11 ஆம் தரத்திலிருந்து 1 ஆம் தரத்திற்கு பதவி உயர்வு செய்வதாகவும் முடிவு செய்துள்ளது.
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் சோஷலிச அமைப்பிற்கு வேண்டிய பெளதிக தேவைகள் உருவாக்கப்பட்ட பின் வர்க்கங்கள் ஒடுக்கப்பட்டு வர்க்கமற்ற, அரசு உதிர்ந்த சமூக அமைப்பிற்கு இட்டுச் செல்லும் இடைப்பட்ட கால்கட்டம். அதாவது சோஷலிசத்திலிருந்து கம்யூனி சத்திற்கு மாறும் காலகட்டம்.
r
குமரன் பக்கம் 39

Page 21
17-3.1883 அன்று கார்ல் மார்க்ஸின் இறுதிச்சடங்கில் பிரெடரிக் ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை
மார்ச் 14ஆம் திகதி பிற்பகல் 2-45 மணிச்கு நிகழ்கால மாபெரும் சிந்தனையாளர் தாம் சிந்திப்பதை நிறுத்தினர். இரண்டே நிமிடங்கள் தனியாகவிடப்பட்ட அவர், நாங்கள் திரும்பிவந்த பொழுது, சாய்வு நாற்காலியில் அமைதியாக உற்ங்கிக் கொண்டிருந்தார்-ஆனல் நித்திய i DTS,
ஐரோப்பா, அமெரிக்கா மாகண்டங்களில் போராடும் பாட்டாளி வர்க்கத்திற்கும் வரலாற்று ரீதியான விஞ்ஞானத்திற்கும் இந்த மணி தரின் மரணத்தால் அளவிடற்கரிய பேரிழப்பு நேர்ந்துள்ளது. இந்த மகத்தான சக்தியின் பிரிவால் ஏற்பட்ட இடைவெளி வெகுவிரைவில் உணரப்படும்.
டார்வின் இயற்கையின் உயிரியல் வளர்ச்சியின் விதியினைக் கண்டு பிடித்ததைப்போல, மார்க்ஸ் மனித வரலாற்றின் வளர்ச்சியின் விதி யினைக் கண்டு பிடித்தார். இதுவரை தத்துவக் கோட்பாடுகளின் அமித வளர்ச்சியால் மறைக்கப்பட்டிருந்த சாதாரண உண்மை, அதாவது மனித வர்க்கம் அரசியல், விஞ்ஞானம், கலை, சமயம் முதலியவற்றி லெல்லாம் ஈடுபடுவதற்கு முன்பாக உண்ண வேண்டும், குடிக்க வேண் டும், உறைவிடமும், உடையும் பெறவேண்டும், எனவே வாழ்க்கைக்கு அவசியமான உடனடி பெளதீகத் தேவைகளின் உற்பத்தியையும் அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட சகாப்தத்தில் அடைந்த பொருளாதார வளர்ச்சியின் அளவை அஸ்திவாரமாகக் கொண்டுதான் அக்கால அர சாங்க அமைப்புகள், சட்டக் கருத்தோட்டங்கள், கலை, மக்களின் சம யம் பற்றிய கருத்துக்கள் இவை யாவும் உருவாக்கப்படுகின்றன. இந்த ரீதியில் தான் இவற்றிற்கு விளக்கம்தர வேண்டுமே தவிர, இதுவரையில் தந்ததுபோல நேர்முரணுக அல்ல.
இதுமட்டுமல்ல, நிகழ்கால முதலாளித்துவ உற்பத்தி முறையை யும், இந்த உற்பத்திமுறை சிருஷ்டித்துள்ள பூர்ஷ"வா சமூகத்தை யும் இயக்கும் விஷேச விதிகளையும் மார்க்ஸ் கண்டு பிடித்தார். எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பூர்ஷ"வா பொருளாதார வாதிகள், சோஷலிஸ்ட் விமர்சகர்கள் ஆகியோரின் முந்தியகால ஆராய்ச்சிகள் இருட்டில் தேடிக்கொண்டிருந்தனவோ அந்தப் பிரச்சினை மீது உபரி மதிப்புப் பற்றிய கண்டு பிடிப்புத் திடீரென ஒளிவெள்ளம் பாய்ச்சியது.
ஒருவரது வாழ்நாளுக்கு இத்தகைய கண்டு பிடிப்புகள் இரண்டு போதும். இதுபோன்ற ஒரு புதுமையைக் கண்டு பிடிப்பவன் கூடப்
பக்கம் 40 குமரன்

பெரும் அதிர்ஷ்ட சாலிதான். ஆனல் மார்க்ஸ் ஆராய்ச்சி செய்த ஒவ் வொரு துறையிலும்-அவர் பல துறைகளில் ஆராய்ச்சி செய்தார்-எதி லுமே மேலோட்டமாக நிற்கவில்லை-ஏன், கணிதத்துறையிலும் கூட, அவர் புதுமைகளைத்தானே கண்டு பிடித்தார்.
அந்த விஞ்ஞான மனிதர் அவ்வாறு இருந்தார். ஆனல் இது அவ ரது முக்கியத்துவத்தின் ஒரு சிறு பகுதிதான். விஞ்ஞானம் என்பது மார்க்ஸிற்கு வரலாற்று ரீதியான இயக்கும் புரட்சிகரமான சக்தி தத் துவ விஞ்ஞானத்தில் ஒரு புதுக் கண்டு பிடிப்பினல், அதன் நடைமுறை உபயோகம் என்ன என்பதை முன் கூட்டிச் சொல்வது மிகவும் அசாத் தியமாக டு தந்தபோதிலும், அவர் அடைந்த மகிழ்ச்சியின் அளவு எவ் வளவு அத.கமாயிருந்த போதிலும், தொழில் துறையிலும், பொதுவாக வரலாற்று ரீதியான வளர்ச்சியிலும் புரட்சிகரமான மாறுதல்களைக் கொண்டு வரும் கண்டு பிடிப்பால் அவர் அடையும் மகிழ்ச்சி முற்றிலும் வேறு விதமாக இருக்கும். உதாரணமாக மின்சாரத்துறையில் ஏற் பட்ட கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியை மிகவும் உன்னதமாகக் கவனித்து வந்தார். அண்மையில் மாஸேஸ் டெப்ரேயின் கண்டு பிடிப்புகளையும் கவனித்து வந்தார்.
மார்க்ஸ் மற்ற எல்லாவற்றிற்கும் முன்னதாக ஒரு புரட்சியாளர். முதலாளித்துவ சமூகத்தையும், அது கொண்டு வந்திருந்த அரசாங்க அமைப்புக்களையும் ஏதாவது ஒரு வழியில் தூக்கியெறிந்து, எந்த நவீன பாட்டாளி வர்க்கம், அதன் நிலைமையினையும், தேவையினையும், விமோ சன வகைகளையும் உணருமாறு செய்வதில் தாம் முதல்வராக இருந் தாரோ, அந்த நவீனகால பாட்டாளி வர்க்கத்தின் விமோசனத்திற் குப் பாடுபட வேண்டும் என்பதே அவரது வாழ்க்கையின் உண்மையான லட்சியம். போராட்டம் அவரது உடன் பிறப்பு. அவர் எவ்வளவு பேராவேசத்துடன் பிடிவாதத்தோடு வெற்றிகரமாகப் போராடினரோ அவ்வாறு ஒரு சிலரால்தான் போராட முடியும். பத்திரிகைகளில் அவர் செய்த பணி, பின்னல் எழுதிய பல போராட்டப் பிரசுரங்கள், பாரிஸ், பிரெஸ்ஸெல்ஸ், லண்டன் முதலிய இடங்களில் உள்ள ஸ்தாபனங்களில் செய்த வேலை, இறுதியாக எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல மகத்தான சர்வதேச தொழிலாளர் சங்கத்தை ஸ்தாபித்தது இவை யெல்லாம் பற்றி, வேறு எதுவுமே செய்யாவிடினும், இவற்றின் ஸ்தாப கர் பெருமை கொள்ளலாம்.
இதன்விளைவாக இவர் காலத்தவர்களில் எல்லோரையும்விட மிகஅதிக மாக மார்க்ஸ் வெறுக்கப்பட்டார். அவதூறுசெய்யப்பட்டார். எதேச்சாதி காரஅரசாங்கங்களும், குடியரசு அரசாங்கங்களும் அவரைத்தத்தம்பிரதே சங்களில்இருந்து நாடுகடத்தின. பூர்ஷாவா வர்க்கம், பழைய வழக்கங்க ளில் நம்பிக்கை உள்ளதுஞ்சரி, அதிதீவிர ஜனநாயகமானதும்சரி அவர்மீது
குமரன் பக்கம் 41

Page 22
அபாண்டங்களைக் குவிப்பதில் ஒன்றையொன்று போட்டியிட்டன. ஆனல் இவற்றையெல்லாம் வெறும் ஒட்டடை என்று ஒதுக்கி அவர் அசட்டை செய்தார். தவிர்க்க முடியாத அவசியம் நிர்ப்பந்தித்தபோது மட்டும் பதில் அளித்தார். அவர் இறந்தபோது சைபீரியா சுரங்கங்களி லிருந்து கலிபோர்னியா வரை, ஐரோப்பா, அமெரிக்காவின் சகல பகு திகளிலிருந்தும் லட்சக் கணக்கில் புரட்சிகரமான ச்க ஊழியர்கள் அவரி டம் அன்பு கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி துக்கம் அனுஷ்டித் தார்கள். அவருக்கு எத்தனையோ எதிரிகள் இருந்த போதிலும், சொ ந்த விரோதி என்று ஒருவர் கூட இல்லை என்று நான்துணிந்து கூறுவேன்.
அவரது பெயரும், அவரது சேவையும் யுகயுகாந்தரங்களுக்கு நிலத்து நிற்கும்.
میولند.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக் கும் கலை இலக்கிய உலகைச் சார்ந்த தம்பதிகளான திரு. நித்தியானந் தன், நிர்மலா ஆகியோரின் வழக்கு கிறிஸ்தவ மதகுருவுடன் நீதிமன் றத்தில் யூன் மாதத்தில் விசாரணைக்கு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட் டது. இச்சட்டத்தின் கீழ் மேலும் ஏராளமானேர் விசாரிக்கப்பட இருப்பதே இவ்விசாரணையை விரைவில் எடுக்க முடியாததற்குக் கார ணம் எனவும் கூறப்பட்டது. இவர்கள் பொலிசாருக்கு அறிவிக்காது பயங்கரவாதிகளுக்குத் தம் வீட்டில் பாதுகாப்பளித்ததே முக்கியமான குற்றம். இவர்கள் எப்போது பொலிசாரின் இரகசிய அறிவிப்பாள ராக நியமிக்கப்பட்டார்கள்" என்று வழக்கறிஞர் டாலா தம்பு நீதிமன்
றத்தில் கேட்டார்.
குமரன் சந்தா 6 இதழ்கள் ரூப்ா 11 2 y ரூபா 20 இலங்கையிலும் தமிழ் நாட்டிலிருந்தும் குமரன் இதழ்களை விற்க விரும்புவோர் எழுதுக. ஆசிரியர், குமரன் 201. டாம்வீதி, கொழும்பு-12.
பக்கம் 42 குமரன்

அ ரிய நூல் கள்
மீண்டும் கிடைக்கும்
சடங்கு செ. கணேசலிங்கன் ტენ. 12.00 செவ்வானம் 9 I5.00
தரையும் தாரகையும் p. 丑6。50
Guntrfdj (Batravub 9 p. 14.25 மண்ணும் மக்களும் 9 p. 1 0,50 அந்நிய மனிதர்கள் 9 P. 13.50 வதையின் கதை 99 15.75 கலையும் சமுதாயமும் 11.25 சொந்தக்காரன் பெனடிக்ற் பாலன் 3.50 வெற்றியின் இரகசியங்கள் அ. ந. கந்தசாமி 5.00 உயர்தர இரசாயனம் கணேசர் சிவபாலன் 90.00
(A. L. வகுப்பு பாடநூல்)
இலக்கியச் சிந்தனைகள் - க. கைலாசபதி
19 ஆராய்ச்சி, விமர்சனக் கட்டுரைகளைக் கொண்டது
e5. 15/-
விற்பனையாளர்களுக்கு கழிவு உண்டு. முற்பணம் அனுப்புவோருக்கு பார்சல் செலவு இனம். வி. பி. பி. ஏற்கப்படும்.
விஜயலட்சுமி புத்தகசாலை 248, காலி வீதி வெள்ளவத்தை
கொழும்பு 6.
தொலைபேசி: 588930

Page 23
壬
--س
KUMARAN - 61 (15-c
:::::
LL SLLLL LLLL LSL L LSL LS S SLSL SSSS LLLLLS LLL LL LLL LLL LLSLSLL SL S LSLSLSLS STTLLL LLLL SLLLLLLLL LLLL LL LLL LLLLLLLLSS
கு ம ர ன் -
ஆசிரியர் :
HH
u
LSLSS S S S SLLSL L LLSL LSL LSLLL LSSS LSSLLS S LS L SL L L L L
மார்க்சின் வா ழ்ச்
ஏங்கெல்சின் ம ய
மார்க் சைக் கற்பே
செ. கணேசலிங்கன்
மார்க்கம் கலே,
மாதவன் படைப்பிலக்கியத்தி
செ. டோகநாதன்
-
முதலாளித்துவத்தி அ. வரதராஜப்பெருமாள் திங்க நமக்கே கோவை இரணியன் பாரதி யார் ? - 5
岳、 இராசாமணி . ܠ டார்வின் - ஓர் 3
மாதவன் காகக்கூடடில குய போ, பெனடிக்ற் பாலன்
கேள்வி P பதில்
அச்சு குமரன் அச்சி செ. கனேசன்
 

Registered as a Newspaper in Sri Lanka.
201 AM STREET, 3-1983) COLOMRO-L 2.
மார்க்சின் நூற்ரூண்டு ::::::::::: சிறப் பிதழ்
கைக் குறிப்பு
прут р. Т. Ј
T
இலக்கியமும்
ல் மார்க்சின் தாக்கம்
ன் தோற்றமும் வளர்ச்சியும்
அறிமுகம்
ல் முட்டைகள்
விலை : ரூ. 2/.
கம், 201, டாம் வீதி, கொழும்பு-12 , |ங்கன்