கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2002.08

Page 1
கொழும்புத் தமிழ்ர் சங்கத்தின் முன்னா । ।।।।।। ஞாயிற்றுக்கிழமை பாலை 3.00 மீ இசிவகுருநாதன் அவர்களின் தலைை ।।।। உயர்திரு. மா.இளஞ் நீக்கம் செய்து சிறப்புரை ஆற்றுகிறார்
கொழும்புத் த 7, 57 வது ஒழுங்கை (உருத்திரா
தொலைபேசி
வெய் முகவரி : WWy இனைய தபால் முகவரி Cl3C
 
 

ਹੈ । ano
துனைத் ਜਨਮ அமர் குமார் ப்படத் திரை நீக்கம் 250 2002 விக்கு சங்கத் தலைவர் கலாசூரி மயில் நடைபெற்றவேளை வவுனியா செழியன் உருவப்படத்தினை திரை
>
மிழ்ச் சங்கம்
மாவத்தை , கொழும்பு 06. OI-375
.colombo. tanilsa ngan.org leureka. Ik
விலை இயன்ற அன்பளிப்பு

Page 2
ஆர 魏
府
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின்
வெளியீடான
ഉണുബ சிறப்புற எமது ஆசிகள்
NTC ஆசிரியகள்
அனைத்து வகுப்புக்களும்
NTC
கடற்கரைத் தெரு நீர்கொழும்பு
தரம் 6 முதல் 13 வரையான
sCHIM
2
s 霍
S
ད།
 

இதயம் திறந்து.
"ஒலை"யின் 07 வது இதழ் இது. பதினாறு பக்கங்களில் மலர்ந்த ஒலை'யின் முதலாவது இதழ் ஈழத்து எழுத்தாளர்கள் / கலைஞர்கள் / பத்திரிகையாளர்கள் / இலக்கிய ஆர்வ
லர்கள் / கொழும்புத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் வழங்கிய ஊக்கத்தின்ால் அதன் ஏழாவது இதழில் முப்பத்திரண்டு பக்கங்களாக விரிந்திருக்கிறது. இவ்வளர்ச்சி மேலும் எமக்கு ஊக்கியாகும். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் செய்திகளை மட்டும் தாங்கி மடலாக வெளிவரத் தொடங்கிய "ஒலை" அதன் 05வது இதழிலிருந்து கலை இலக்கியமாசிகையாகவும் மாற்றம் கண்டு வருவதை வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். இப்பரிணாம வளர்ச்சியை மேலும் ஓங்கச் செய்வதற்காகப் படைப்பாளிகளிடமிருந்து தரமான கலை இலக்கிய ஆக்கங்களை "ஒலை" அவாவி நிற்கின்றது. "ஒலை"யின் 04வது இதழில் இதயம் திறந்து. நாம் வெளிப்படுத்தியிருந்த எமது உன்னதமான இலக்கியக் கொள்கை வழியில் மேலும் தடம் பதித்து முன்னேற தமிழபிமானிகளிடமிருந்து எல்லாவகை யான ஒத்தாசைகளையும் "ஒலை"நாடி நிற்கின்றது.
நன்றி! மீண்டும் மறுமடலில்.
-ஆசிரியர்
‘ஓலை’ பக்கம்

Page 3
சங்கப்பலகை
10.07.2002ல் இறையடி சேர்ந்த இலக்கிய கலாநிதி பண்டிதமணி ஏழாலை மு.கந்தையா அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம்
07.08.2002 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பண்டிதர் க.உமாமகேஸ்வரன், பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம், சா.முருகவேள் (இளைப்பாறிய நூலகர், யாழ் பல்கலைக்கழகம்), பண்டிதர் சி. அப்புத்துரை (இளைப்பாறிய அதிபர்), சைவப் புலவர் சு.செல்லத்துரை (இளைப்பாறிய அதிபர்) ஆகியோர் சொற்பொழிவாற்றினர். ஜின்னாஹற் ஷரிபுத்தீன் (துணைத்தலைவர்-கொழும்புத் தமிழ்ச் சங்கம்) அவர்களின் கவிதாஞ்சலி இடம் பெற்றது.
ஒலை 5வது இதழ் வெளியீடு
ஒலையின் 5வது இதழ் 07.08.2002 அன்று நடைபெற்ற இலக்கிய கலாநிதி
-பண்டிதமணி ஏழாலை மு.கந்தையா அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் சங்கத்தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பெற்றது. முதற் பிரதியை சங்கத் துணைத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
أص
r N
'அறிவோர் ஒன்று கூடல் திருக்குறள் ஆய்வு
02.09.98 ஆரம்பித்து பிரதி புதன் கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு நடைபெற்று வருகின்ற 'அறிவோர் ஒன்றுகூடல்' நிகழ்ச்சிச் தொடரில் 14.08.2002 அன்று நடைபெற்ற 173வது நிகழ்வில் மட்டுவில் ஆநடராசா அவர்கள் "திருக்குறளில் சைவ சித்தாந்தம்" எனும் பொருளில் ஆய்வுரை நிகழ்த்தினார்.
أص
‘ஓலை’ பக்தம் 2

கணிப்பொறித் திருவிழா
கொழும்புத் தமிழ்ச் சங்கமும் சென்னை வள்ளி மென்பொருள் நிறுவனமும் இணைந்து நடாத்திய கணிப்பொறித் திருவிழா (தகவல் தொழில்நுட்ப புத்தக மற்றும் தமிழ் மென்பொருள் கண்காட்சி (TBooks and Tamil Software Exhibition) 2002 glab6ril 17, 18, 19 (சனி, ஞாயிறு, திங்கள்) ஆகிய மூன்று நாட்களும் காலை 10.00 மணிமுதல் மாலை 7.30
மணிவரை நடைபெற்றது. أص
சேர் பொன்னம்பலம் இராமநாதன் - நூல் வெளியீடு NA
(ஆங்கிலத்தில் - நூல் ஆசிரியர் - மா.க.ஈழவேந்தன்)
21.08.2002 புதன் கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ் வாழ்த்து :- செல்விபவித்திரா கிருபானந்தமூர்த்தி தலைமையுரை :- திரு.பெ.விஜயரத்தினம்
(துணைத்தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்) வெளியீட்டுரை : திரு கந்தையா நீலகண்டன்
(பொதுச்செயலாளர், அகில இலங்கைஇந்துமாமன்றம்)
சிறப்புரை :- திரு.டி.எம்.சுவாமிநாதன்
(அறங்காவலர், பொன்னம்பலவாணேஸ்வரர்தேவஸ்தானம்) சிறப்புரை :- திருமதிபரீதா ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
(தலைவர், சோனக இஸ்லாமிய கலாசார நிலையம், மகளிர் பிரிவு) சிறப்புரை :- திரு.ந.ழரீகாந்தா (சட்டத்தரணி) ஆய்வுரைகள் :- (1) திரு.பீ.பீ.தேவராஜ்
(முன்னாள் இந்துசமய விவகார அமைச்சர்) (2)பேராசிரியர். திரு.சி.பத்மநாதன்
(பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத்தலைவர்) (3) திருமதி.சாந்தி சச்சிதானந்தம் ー (பல்துறை ஆய்வாளர்)
‘ஓலை’ பக்கம் 3

Page 4
N 「一 கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர்
அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களின் உருவப்படத் திரைநீக்கம்
25.08.02 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி. இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திருமதி யோ. குமார் பொன்னம்பலம், திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பா.உ.ஆகியோரும் சமூகமளித்திருந்தனர். பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழ் வாழ்த்து :- செல்விபவித்திரா கிருபானந்தமூர்த்தி வரவேற்புரை :- கலாநிதி.நல்லையா குமரகுருபரன்
(சிரேஸ்ட உபதலைவர், தமிழ்க் காங்கிரஸ்) ஆசியுரை :- பிரம்மபூரீ குஞ்சிதபாதக் குருக்கள்
(பிரதம குரு பொன்னம்பலவாணேஸ்வரஆலயம்) தலைமையுரை :- கலாசூரி இ.சிவகுருநாதன்
(தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்) உருவப்பட திரை: திரு.மா.இளஞ்செழியன் நீக்கம் (மாவட்ட நீதிபதி - வவுனியா) உரைகள் :- திரு.அவிநாயகமூர்த்தி
(பாராளுமன்ற உறுப்பினர் - யாழ் மாவட்டம்) திரு.ஆ.சிவனேசச் செல்வன் (பிரதம ஆசிரியர், தினக்குரல்)
இரங்கல் பா :- த.கோபாலகிருஷ்ணன் (செங்கதிரோன்) ஏற்புரை :- திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
(பாராளுமன்ற உறுப்பினர், யாழ் மாவட்டம்) நன்றியுரை :- திரு.ஆ.இரகுபதி பாலறிதரன்
(பொதுச்செயலாளர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்) * நிகழ்ச்சியில் லண்டனிலிருந்து வருகை தந்திருந்த சர்வதேச அகதி. கள் சம்மேளன இயக்குநரும், லண்டன் தமிழினி’ ஆசிரியருமான திரு.வ.குலேந்திரன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார். * அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களின் குடும்பத்தின் சார்பில் கொழும்புத் தமிழ் சங்க 2வது மாடிக் கட்டிட நிர்மாணத்திற்கான அன்பளிப்பாக வழங்கப் பெற்ற ரூபாய் ஒரு லட்சம் (100,000/=) தொகையினை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவருமான திரு.அவிநாயகமூர்த்தி அவர்கள் சங்கத் தலைவர் இ. சிவகுருநாதன் அவர்களிடம் ஒப்படைத்தார்.
‘ஓலை’ பக்கம் 4

பெறுமதி சேர்வரி (VAT) பற்றிய கருத்தரங்கு மேற்படி கருத்தரங்கு கொழும்புத் தமிழ்ச் சங்கக் கல்விக் குழுச் செயலாளர் திரு.த.சிவஞானரஞ்சன் அவர்களின் ஏற்பாட்டில் 25.08.2002 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
விடயம் பற்றிய சிறப்புரையை திரு.பாலசுந்தரம் - சிவாஜி (சிரேஸ்ட வரிமதிப்பாளர் - VAT Branch உள்நாட்டு இறைவரித் திணைக்களம்)
அவர்கள் நிகழ்த்தினார். أص நிகழ்த்தி ܢܠ
r N சொற்பொழிவு ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலை
சர்வதேச அகதிகள் சம்மேளன இயக்குநரும், லண்டன் "தமிழினி" ஆசிரியருமான திரு.வ. குலேந்திரன் அவர்களின் "ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலை" எனும் தலைப்பிலான சொற்பொழிவு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் 28.08.2002 புதன்கிழமை பி.ப.5.30 க்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திரு.வ.குலேந்திரன் அவர்கள் நிகழ்வின் இறுதியில் கொழும்புத் தமிழ்ச்சங்கப் பணிகளுக்கு உதவு முகமாக ரூபாய் பத்தாயிரம் .அன்பளிப்புச் செய்தார் )=/10,000 "ܢ
r N கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கும் மாதாந்த இசை நிகழ்ச்சி
கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கும் மாதாந்த தமிழிசை நிகழ்ச்சித் தொடரின் 13வது நிகழ்வு 31.08.2002 சனிக்கிழமை சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. "இசை நினைவலைகள்" என்னும் பொருள் பற்றி திரு. டபிள்யூ. எஸ்.செந்தில்நாதன் அவர்கள் (சட்டத்தரணி) உரையாற்றினார்.
أم
‘ஓலை’ பக்கம் 5

Page 5
நூல்நயம் காண்போம்.
05.05.2000 இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இலங்கை எழுத்தாளர்களால் எழுதி வெளியிடப்படும் நூல்கள் இங்கு நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர் 0208.2002 மாற்றங்களை நிபீஅருளானந்தம் ஆ.இரகுபதிபா6Ն)
(85) மறுப்பதற்கில்லை பூரீதரன்
(சிறுகதைத்தொகுதி 09.08.2002 | பாட்டி சொன்ன லெ.முருகபூபதி வ.இராசையா
(86) கதைகள்
(உருவகம்) 16.08.2002 நீண்ட பயணம் செகணேசலிங்கன் க.கலாகரன்
(87) (நாவல்)
23.08.2002 இலக்கிய நெஞ்சம் மூணாக்கானா ஏ.இக்பால்
(88) (இலக்கியக் மு.கணபதிப்பிள்ளை
கட்டுரைகள்) 3008-2002) ஓர்மம் (சிறுகதைத் வேல் அமுதன் சிதம்பரப்பிள்ளை
(89) தொகுதி) சிவகுமார்
r -
சிறுவர் நாடக பயிலரங்கு
சிறுவர் மத்தியில் நாடகத்துறையில் ஆர்வத்தையும், ஆற்றலையும் வளர்க்குமுகமாக 7-12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கேற்ற வகையில் இலவச நாடக பயிலரங்கு 17.08.2002 முதல் 21.09.2002 வரையுள்ள சனிக்கிழமை தோறும் காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நாடக பயிலரங்கு நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் வெள்ளவத்தையிலுள்ள 7, 57 வது ஒழுங்கையிலுள்ள தமிழ்ச் சங்கத்தில் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கொழும்புத் தமிழ்ச் சங்கச் செயலாளர் ஆ.இரகுபதி பாலழறிதரன் தெரிவித்துள்ளார்.
N
الض.
‘ஓலை’ பக்தம் 6

நிகழவிருப்பவை
செப்டம்பர் 2002 சங்க நிகழ்ச்சிகள்
01.09.2002 ஞாயிற்றுக்கிழமை மு.ப.9.00 மணி தொழில்சார் முகாமைத்துவ பயிற்சி நெறி (தமிழ்) ஆரம்பம்
04.09.2002, புதன்கிழமை பி.ப5.30 மணி
'அறிவோர் ஒன்று கூடல்'- திருக்குறள் ஆய்வு
விடயம் : "திருக்குறளில் அறிவு பற்றிய ஆய்வு"
நிகழ்த்துபவர் : திரு.த.இராஜரட்னம்
(பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி உப அதிபர்)
06.09.2002 வெள்ளிக்கிழமை பி530 மணி
நூல் நயம் காண்போம்" -
நூல் : கனவுகளின் எல்லை (கவிதை) நூலாசிரியர் : நல்லூர் த.ஜெயசீலன் நயம் காண்பவர் : க.சிவகுமார்
11.09.2002, புதன்கிழமை பிப5.30 மணி 'அறிவோர் ஒன்று கூடல்' - விளக்கவுரை
"திருக்குறள் வகுப்பை எப்படி நடத்துவது?" -சிங்கப்பூர் தமிழறிஞர் இ.சி.சிங்கன் அவர்கள்
13.09.2002 வெள்ளிக்கிழமை பிய5.30 மணி.
நூல்நயம் காண்போம்"
நூல் : புதிய பூக்கள் (சிறுவர் இலக்கியம்) நூலாசிரியர் : திரு.வ.இராசையா நயம் காண்பவர் : அனு.வை.நாகராஜன்
14.09.2002 சனிக்கிழமை மாலை 6.00 மணி மாதாந்த தமிழிசை நிகழ்ச்சி - கலாபூசணம் உடப்பூர் பெரி.சோமஸ்கந்தர்
குழுவினரின் 'வில்லிசை - காட்டில் வாழும் கரடி நாட்டுக்கு வந்த கதை' (சுதாராஜ் எழுதிய குழந்தை இலக்கியம்)
‘ஓலை’ பக்தம் 7

Page 6
18.09.2002, புதன்கிழமை பிப530 மணி
'அறிவோர் ஒன்று கூடல்'- திருக்குறள் ஆய்வு
விடயம் : திருக்குறளில் அரசியல்'
நிகழ்த்துபவர் : திரு.மா,கணபதிப்பிள்ளை
(கொழும்பு றோயல் கல்லூரி தமிழ்த்துறைப் பொறுப்பாசிரியர்)
21.09.2002 சனிக்கிழமை பிப530 மணி கொழும்புத் தமிழ்ச் சங்க நூல் வெளியீடு இலங்கைத் தமிழர் வாழ்வும் வகிபாகமும் இலங்கையில் தமிழர் கல்வி' - வளர்ச்சியும் பிரச்சினைகளும் சோ.சந்திரசேகரன்
25.09.2002, புதன்கிழமை பிப5.30 மணிக்கு
'அறிவோர் ஒன்று கூடல்'- திருக்குறள் ஆய்வ.
விடயம் : "திருக்குறளில் கல்வி"
நிகழ்த்துபவர் : திரு.உ.நவரட்னம்
(தேசிய ஆசிரிய அதிகாரசபைப் பணிப்பாளர், கல்வி அமைச்சு)
27.09.2002 வெள்ளிக்கிழமை பி.ப5.30 மணி நூல் நயம் காண்போம்"
நூல் ! உங்களை நோக்கி (கட்டுரைகள்) நூலாசிரியர் : "தெருத்துசியோன் (RC. ராஜ்குமார்)
29.09.2002 ஞாயிற்றுக்கிழமை பி.ப5.30 மணி கவிதா மாலை (காலாண்டு கவிதா நிகழ்வு - 1) 'நீலாவணன் கவிதைகள்" நிகழ்த்துவோர் : எழில்வேந்தனுடன் இணைந்து ஏனைய பல கவிஞர்கள்.
* 2606 d' Uá9ú 8

மறைந்த இலக்கிய கலாநிதி பண்டிதர்.மு.கந்தையா அவர்களை நினைவு கூர்ந்து 07.03.2002 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்திய நினைவாஞ்சலிக் கூட்டத்தில் பாடப்பட்ட
அஞ்சலிப்Uா
வெண்பா ஏழாலை ஈன்ற இலக்கியக் கலாநிதியை யாழுக்குப் பேர்சேர்த்த வுத்தமனை - வாழும் தமிழ்கொண்டு பாடித் தமிழ்ச்சங்கம் ஏற்றும் தமிழுக்குஞ் சீராம் அது.
யாழ்மண்ணின் கீர்த்தி எலோருமறி வார்கூறின் ஏழாலை யாழுக்கோ ரேற்றங்காண் - ஏழாலைக் கந்தையாப் பண்டிதரால் கண்டபுகழ் சேருமதில் விந்தையில்லைச் சத்தியமே தான்.
சைவத் தமிழுலகு செய்தபெரு நற்றவமோ சைவத் தழிழுக்குத் தொண்டியற்ற - சைவநெறி முற்று முணர்ந்தே முதுபுலவன் கந்தையா உற்றானிம் மன்புவியிற் றான்.
பண்டிதர் தம்முள் மணியென்றே பேர்கொண்டார் பண்டிதர் மாமதுரைப் பொற்பதியின் - லண்டன் இளமாணிப் பட்டமொடு ஏற்றசமஸ் கிருத மொழிமேன்மைச் சான்றிதழுந் தான்.
சாகித்ய மண்டலத்தின் சீர்கொண்ட பேரறிஞர் ஆகும் பரிசிவர்க்கென் றாய்ந்தறிந்தே - வாகாய்க் கொழும்புத் தமிழ்ச்சங்கம் கோன்றமிழில் என்றே வழங்கியது சான்றுபரிசில்.
பெரும்புலவர் என்றவரைப் பேசும் உலகம் கரும்பாய்க் கவிசெய்யும் கற்றோன் - பெரும்பேறே மாவைப்பிள் ளைத்தமிழிம் மண்போற்றும் பொக்கிஷமாம் தேவைசைவ நீதிக் கது.
‘ஓலை’ பக்கம் 9

Page 7
அரன்வாழு பொற்றலமென் றொதுதிருக் கேதீச் சரமேன்மை கூறவென ஐயா. திருப்பதியின் மான்மியமென் றோர்நூல் வடித்தெடுத்தார் கான்கொப்புத் தேன்தோற்கும் பாவமுதாந் தேர்
நாவில் நறையூறும் நற்றமிழாம் ஒசைநயம் பாவில் கலந்தாடும் நெஞ்சினிக்கும் - சைவர்க்கோ பக்தி மிகுந்த பரவசத்தால் நெஞ்சுருகும் சக்திமிகு பாக்களவை யாம்
பற்பலநூல் கற்றபெரும் பண்டிதராம் அஃதேபோல் பற்பலநூல் செய்தபெரும் பண்டிதராம் - பற்பலரைப் பண்டிதரா யாக்கவவர் பாடுபட்டார் மேலாண்மைப் பண்டிதர்கள் போற்றுதமிழ்க் கோன்
வாக்குப்போல் வாழ்வும்வேறல்லவொன்றே என்பர்போல் வாக்குபோல் வாழ்ந்து வழிகாட்டி - வாழ்வில் சாதித்தார் பற்பலவும் சான்றோன் -மு.கந்தையா ஒதற் கரியாறென் றோது.
கட்டளைக் கலித்துறை
செந்தமிழ்ப் பண்டிதன் சீர்பெறுமாசன் தமிழ்ப்புலவன் புத்திசால் மேதை புகழ்மிகு சைவன் மறைந்ததிரு
கந்தையா மேன்மை எடுத்தோ தினோம்தமிழ்ச் சங்கமவை முந்தி இருந்தவச் சான்றோன் பெயர்நிலை பெற்றிடவே
கவியாக்கம்
ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
‘ஓலை’ பக்கம் 10

ஏழாலை கலாநிதி பண்டிதர் மு.கந்தையா நூல் வெளியீட்டுக் கழகம்
ஏழாலை மேற்கு, சுன்னாகம் (றுரீலங்கா) 8.8.2002
தலைவர் / செயலாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
அன்புடையீர்!
இலக்கிய கலாநிதி பண்டிதமணி ஏழாலை மு.கந்தையாB.A. அவர்களின் அஞ்சலிக்கூட்டம்.
எங்கள் வேண்டுகோளை ஏற்றுப் பண்டிதர் ஐயா அவர்களின் அஞ்சலிக் கூட்டத்தை ஒழுங்கு செய்து முழுப் பொறுப்புக்களையும் ஏற்றுச் சிறப்பாகச் செய்தமைக்கு எங்கள் இதயபூர்வமான நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
நாம் எதிர்பார்த்ததிலும் பார்க்கப் பல மடங்கு சிறப்பாகக் கூட்டம் நடைபெற்றது. தக்கபல சான்றோர்கள் சபையில் நிறைந்திருந்தார்கள். தமிழ்ச் சங்க நிர்வர்கிகள் அனைவரும் சமூகமாயிருந்து சிறப்பித்தனர். தங்கள் சங்கம் கொழும்பில் எவ்வளவு உயர்ந்த நிலையில் பணி செய்கிறது என்பதை நாம் வெளிப்படையாகக் காணமுடிந்தது.
தங்கள் பணி மேலும் சிறந்தோங்க வேண்டுமென வாழ்த்தி மீண்டும் எமது நன்றியைத் தங்களுக்குத் தெரிவிக்கின்றோம்.
நன்றி இங்ங்னம் சு.செல்லத்துரை செயலாளர் பண்டிதர் நால் வெளியீட்டுக்கழகம்
‘ஓலை’ பக்கம் 11

Page 8
கொ ழும்புத் தமிழ்ச் சங்கமும், சென்னை வள்ளி மென் பொருள் நிறுவனமும்
இணைந்து நடாத்திய 'கணிப்பொறித்திருவிழா' ஆகஸ்ட் 17, 18 மற்றும் 19ம் திகதிகளில் காலை 10.00 மணிமுதல் மாலை 7.30 மணிவரை கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. கண்காட்சி மூன்று தினங்களும் காலை 10.00 மணிமுதல் மாலை 7.30 மணி வரை இடைவேளை இல்லாது இயங்கியது.
முதலாம் நாள் 2002 ஆகஸ்ட் 17, சனிக்கிழமை மு.ப.10.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணி வரை
தலைமை : கலாசூரி இ.சிவகுருநாதன்
(தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
பிரதம விருந்தினர் : கெளரவ பெ.இராதாகிருஷ்ணன் (பா.உ)
சிறப்பு விருந்தினர் : திரு.க.நாவுக்கரசு (பிரதித் தலைவர்,
தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு)
கண்காட்சியினை பிரதம விருந்தினர் கெளரவ பெ.இராதாகிருஷ்ணன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் சம்பிராதயபூர்வமாக நாடாவை வெட்டி மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பித்து assavaவைத்தார். மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து செல்வி பவித்ரா கிருபானந்தமூர்த்தி தமிழ் மொழி வாழ்த்துப்பா இசைத்தார். திரு.ஆ.இரகுபதி பாலழரீதரன் (பொதுச் செயலாளர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்) திரு.சொ. ஆனந்தன் (நிர்வாகி, சென்னை வள்ளி மென்பொருள் நிறுவனம்) ஆகியோர் முறையே கொழும்புத் தமிழ்ச்
‘ஓலை’ பக்தம் 12
 
 

சங்கத்தின் சார்பிலும் , வள்ளி மென்பொருள் நிறுவனத்தின் சார்பிலும் வரவேற்புரை நிகழ்த்தினர்.
மென்பொருள் கண்காட்சி தொடக்கவுரையை கொழும்புத் தமிழ்ச் சங்கக் காப்பாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் ஆற்றுவதற்கு இருந்தும் சுகயினம் காரணமாக அவர்ால் சமூகமளிக்க முடியவில்லை. எனினும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்.
பிரதம/சிறப்பு விருந்தினர்களின் உரைகளைத் தொடர்ந்து கணிப்பொறியில் தமிழில் எழுதவும், தமிழால் எழுதவும் உகந்த தமிழ் விசைப்பலகையான 'சங்கப்பலகை"யின் முதலாவது பலகையை பிரதம விருந்தினரான கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் பெ.இராதாகிருஷ்ணனிடமிருந்து புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக் கொள்ள, இரண்டாவது பலகையை சிறப்பு விருந்தினரான திரு.க.நாவுக்கரசிடமிருந்து யுனி ஆர்ட்ஸ்' உரிமையாளர் பொன்.விமலேந்திரன் பெற்றுக் கொண்டார். இறுதியில் கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைச் செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற மு.ப.11.00 மணிக்கு கண்காட்சி ஆரம்பமானது.
இக்கண்காட்சியில் மாணவர்களும், கல்விமான்களும், அரசாங்க / தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும், கணணி ஆர்வலர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கணிப்பொறித்திருவிழாவினை 17.08.2002 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ திரு பெ.இராதாகிருஷ்ணன் அவர்கள் நாடாவை வெட்டி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கிறார்.
‘ஓலை’ பக்கம் 13

Page 9
தமிழில் கணினியை இயக்குவது தொடர்பாக இக்கண்காட்ச வடிவமைக. கப்பட்டு இருந்தது. பன்னிரண்டு இந்திய தமிழ் மென்பொருள் நிறுவனங்கள் இக் கணிப்பொறி திருவிழாவில் பங்கேற்றிருந்தன. முதல் நாளிலிலேயே ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இக்கண்காட்சியை பார்வையிட்டனர்.
தமிழில் எப்படி மின்னஞ்சல் அனுப்புவது, தமிழில் இணையத்தளங்களைப் பிரயோகிப்பது, தமிழ் விசைப் பலகைகளை கையாள்வது எப்படி போன்ற செயல் முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன் தமிழ் மென்பொருள். களின் செயற்பாடுகள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. தமிழில் வெளிவந்துள்ள தகவல் தொழில்நுட்ப புத்தகங்களும், தமிழ் மென்பொருள்களும், தமிழ் விசைப்பலகைகளும் கர்ட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. ふ
இரண்டாம் நாள் 2002 ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக் கிழமை மு.ப.10.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணி வரை
g5606u60)LD : கலாசூரி இ.சிவகுருநாதன்
(தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
பிரதம விருந்தினர் : திரு.இரா. நடராஜா •
(பொது முகாமையாளர் பான் ஏசியா வங்கி)
சிறப்பு விருந்தினர் : திரு இ.றொபின் செல்வக்குமார்
(ஆசிரியர், கம்பியூட்டர் எக்ஸ்பிரஸ்)
மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து செல்வன்.நிரோஷன் பாலேஸ்வரனின் தமிழ் வாழ்த்து இடம் பெற்றது. கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பிரதம சிறப்பு விருந்தினர்களின் உரைகளும் இடம் பெற்றன.
கண்காட்சியில் பங்கேற்றிருந்த மென்பொருள் நிறுவனங்களின் சார்பில் சென்னை வள்ளி மென்பொருள்நிறுவனத்தின் நிர்வாகி திரு.சொ.ஆனந்தன் அவர்கள் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கென இலங்கை ரூபாயில் சுமார் இருபதினாயிரம் பெறுமதியான தமிழ் தொழில்நுட்ப புத்தகங்கள், தமிழ் மென்பொருள் மற்றும் தமிழ் விசைப்பலகை என்பவற்றை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தலைவரிடம் அன்பளிப்பாகக் கையளித்தார். நன்றியுரையை கொழும்புத் தமிழ்ச் சங்கத்துணைத்தலைவர் திரு.த.இராஜரட்ணம் அவர்கள் வழங்க மு.ப.11.00 மணிக்கு கண்காட்சி ஆரம்பமானது.
‘ஓலை’ பக்கம் 14

நிறைவு நாள்
நிறைவு நாளான மூன்றாவது நாள் 2002, ஆகஸ்ட் 19 திங்கட்கிழமையன்று, மு.ப.10.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணி வரை கண்காட்சி இடம் பெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சிகள் மாலை 7.30 மணிக்குப் பின் ஆரம்பமாயிற்று.
g560)660)LD : கலாசூரி இ.சிவகுருநாதன்
(தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
பிரதம விருந்தினர் : திரு.மு.கனகரத்தினம்
(உதவிப் பொது முகாமையாளர், இலங்கை வங்கி வெளிநாட்டுக் கிளைகள்)
சிறப்பு விருந்தினர் : திரு ஆண்டோ பீட்டர்
(தமிழ் கணினி எழுத்தாளர், சென்னை)
மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து செல்வன்.அரவிந்தன்; கிருபானந்தமூர்த்தி தமிழ் வாழ்த்திசைத்தார். கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் டாக்டர் ஜின்னா ஷரிபுத்தீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இத்திருவிழாவை கொழும்புத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்வதில் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்ட சென்னை வள்ளி மென்பொருள் நிறுவன நிர்வாகி திரு.சொ.ஆனந்தன் அவர்கள் சிறப்பு விரிவுரை ஆற்றினார். பிரதம / சிறப்பு விருந்தினர்கள் உரைகள் இடம் பெற்றன. கண்காட்சியில் பங்கேற்றிருந்த மென்பொருள் நிறுவனங்களின் சார்பில் திரு.சொ.ஆனந்தன் அவர்கள் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு ரூபாய் பத்தாயிரம் (10,000/-) சங்கத் தலைவரிடம் அன்பளிப்பாகக் கையளித்தார். எதிர்பாராதவிதமாக நிறைவு நாள் நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்ட அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற
"g806v” Uású 15

Page 10
உறுப்பினர் கெளரவ அ.சந்திரநேரு அவர்களும் உரையாற்றினார். நன்றியுரையை சங்கத்துணைத்தலைவர் மு.கதிர்காமநாதன் அவர்கள் வழங்கினார்.
உலகின் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்திலும், இணையத் தளங்களின் வளர்ச்சியிலும் தமிழும் முன்னணி வகிப்பது பெருமைக்குரியதே. இன்று ஆயிரக்கணக்கான தமிழ் இணையத் தளங்கள் வெற்றிகரமாக இணைய வானில் உலா வருகின்றன.
கடந்த 1997 முதல் தொடர்ச்சியாக நடைபெற்ற 4 உலகத் தமிழ் இணைய மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் அதில் நடைபெற்ற தமிழ் மென் பொருள் கண்காட்சிகள் மூலம் கணினி மற்றும் இணைய தொழில் நுட்பத்தில் தமிழின் பயன்பாடும் , மென்பொருள் வணிகமும் மிகவும் வேகமடைந்துள்ளது.
வருகிற செப்டம்பர் 27ம் திகதி அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிக்கோ நகரில் 5-ம் உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற இருக்கும் வேளையில் இலங்கையில் அரிய கணிப்பொறி கண்காட்சி நடைபெற்றது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இந்தியாவில் தமிழ் மென்பொருள் வர்த்தகம் மற்றும் முன்னேற்றத்தில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டும், தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளிலும், தமிழ் மக்கள் வாழும் வெளிநாடுகளிலும் தமிழ் மென்பொருள் வணிகத்தை, பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்க் கணினியின் தலைமைச் செயலகமாக விளங்கும். "வள்ளி மென்பொருள் நிறுவனம்' 'கொழும்புத் தமிழ்ச் சங்கத்துடன்" இணைந்து இந்த கண்காட்சியை நடத்தியது.
நவீன விஞ்ஞான முன்னேற்ற வளர்ச்சியின் வெளிப்பாடாக இதுவரையில் வெளிவந்துள்ள உலகின் முன்னணி தமிழ் மென்பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப புத்தகங்களின் கண்காட்சி மற்றும் நேரடி செயல் விளக்கம் தான் இந்த கண்காட்சியின் பிரதான அம்சம்.
தமிழ் மக்களின் வாழ்க்கையோடு கணிப்பொறியையும், இணையத் தொழில் நுட்பத்தையும் இணைப்பதோடு, தமிழையும், தமிழ் மக்களையும் , நவீன தொழில் நுட்பத்தையும் ஒரே மேடையில் சங்கமிக்க வைத்தது இக் கணிப்பொறித் திருவிழா.
இந்த திருவிழாவின் நோக்கம் கணிப்பொறியில் தமிழின் வலிமையை , பயன்பாட்டை, தேவையை இலங்கை தமிழ் மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளச் செய்வதும் அவர்தம் அறிவுத்திறனை கணிப்பொறி மூலம் விரிவடையச் செய்வதுமாகும் என்று கூறினாலும் மிகையாகாது. இப்படிப்பட்ட
‘ஓலை’ பக்தம் 16

ஒரு அரிய கணிப்பொறித் திருவிழா இலங்கையில் நடைபெற்றது இதுவே முதன்முறை.
தமிழ் மொழியில் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திட வேண்டும். தமிழில் மென்பொருள்,செயல் வரைபுகள் அமைந்திட வேண்டும். கட்டளைகள், விசைப்பலகைகள் என அனைத்தும் தமிழில் வந்திட வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் தமிழர்களிடை யே மெல்ல மெல்ல வளர்ந்து இன்று இவைகள் யாவும் செயல்களாக மாறி விட்டன.
இண்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்! கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும், மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவதில்லை - அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை, மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிIசை யோங்கும்"
என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ! இந்த வசையெனக் கெய்திட லாமோ? சென்றி டுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்று மகாகவி பாரதியின் கவிதை வரிகளினுடாகத் தமிழன்னை அன்று ஆதங்கப்பட்டாள். ஆனால் தமிழில் ஆத்மார்த்தமான ஈடுபாடும் ஆர்வமும் மிக்க அறிவியல்சார் தமிழறிஞர்களால் இன்று இந்தப் பெரும் பழி தீர்ந்து புகழ் ஏறிப் புவிIசை என்றும் தமிழ் இருக்கும் என்பதற்கு இக்கணிப்பொறி விழா ஓர் எடுத்துக்காட்டாகும்.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் தமிழ் மொழி / கலை / இலக்கிய பண்பாட்டு வளர்ச்சியில் ஆற்றிவரும் பன்முகப்பணிகளை பலரும் பாராட்டினர். எதிர்கால கணினி யுகத்தை தமிழால் வெல்வோம்!
தொகுப்பு : ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி (துணைப் பொதுச்செயலாளர்
கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
‘ஓலை’ பக்கும் 17

Page 11
N கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களின் உருவப்படத் திரைநீக்கம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 25.08.02 அன்று நடைபெற்ற போது செங்கதிரோன் படித்த இரங்கல்பா. الص ܢܬ
காணக் கனவுகண்ட காவலனே! போயி
தலைசாயாத் தமிழன் நீ தான் என்பதால்தானா தலைமீது வேட்டுவைத்துத் தரைசாய வைத்தார்கள்?
லைநகரில் தமிழ் வளர்க்கு
她
ழ்ெச் சங்கத் துணைத் தலைவி
ங்கெங்கு விளைந்தாலும் சன்னதம் கொண்டெழுந்து சமர்செய்த உன்னுடலைச் சன்னங்கள் துளைத்திடவே சதிசெய்தார்! உன்நாமம் மண்ணிலே நிலைத்திருக்கும்! மாமனிதா போயினையோ!
செங்கதிரோன்
أص
‘ஓலை’ பக்கம் 18
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பன்மொழிப்புலவர்.த.கனகரத்தினம்
LDTணாக்கர் விடும் பிழைகளில் 40 வீதம் சந்திப்பிழைகளாக இருக்" கின்றன. கணிணியுகத்தில் அச்சுப் பிழைகளுக்கும் குறைவில்லை. பிழை. களின் பொறுப்பைக் கணிணி மேற் சுமத்திவிட்டு நாமும் வாளாவிருக்கின். றோம். கணிணிக்கும் மனிதனின் மூளைதான் பிரதானமென்பதையும் மறந்து விடுகின்றோம். பாட நூல்கள் தொட்டு பத்திரிகைகள் வரை பிழைகளைச் சுமந்துதான் வெளிவருகின்றன. பிழைகண்டு வருந்தித் தலையிற் குட்டுவதற். குத் தானும் சீத்தலைச் சாத்தனார் போன்ற ஒருவரேனும் இன்று இல்லையே!
நிற்க, மாணாக்கர்களில் பெரும்பாலோர் சந்தித்தொல்லை பற்றிக் கூறுவதையும் கேட்கின்றோம். ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டல் (Spelling) தொல்லை உண்டு. அதுபோலத் தமிழிலே சந்தித் தொல்லை இருக்கிறது. ஆங்கிலத்தில் சில சொற்களை ஒலிப்பது போல எழுதுவதில்லை (உ-ம often, Buffet, Debt, Subtle, Know, psychology) -99560TT6i gibg gLitut ITGB ஏற்படுகிறது. தமிழிலே மெய்யெழுத்தை எங்கே சேர்ப்பது எங்கே விடுவது என்ற விதிகளை அறியாமையாலே மாணாக்கர் இடர்ப்படுகின்றனர்.
தமிழிலே சந்தி இருப்பதற்குக் காரணம் உண்டு. இருப்பதும் அவசியம் கூட. பழங்காலத்தில் கேட்டுக் கற்ற கல்வியே மிகுதியாகவிருந்தது. அன்றியும் தமிழ் மக்கள் நுண்ணிய செவிப்புலனுடையவர்களாக இருந்தார்கள்.
ஓசை நுட்பம் அறிந்து பழகினார்கள். எனவே சந்தி ஒலிகளையும் போற்றிக் காத்தனர். பார்த்துக் கற்கும் காலம் இது. இக் காலத்து மாணாக்கருக்கு இந்தச் சந்தி ஒலிகள் வேண்டாத சுமையாகவும் தென்படுகின்றன, மலையாளம் போன்ற மொழிகளிலும் சந்திகள் இறுக்கமாகக் கவனிக்கப்படுகின்றன.
தமிழில் சந்தி பற்றிய ஐயங்களை அகராதி கொண்டும் நீக்க முடியாது. இலக்கணத்தைக் கற்றால்தான் அவற்றை ஒருவாறு தீர்த்துக் கொள்ளலாம். மாணாக்கர் முயன்று சந்தி ஒலிகளைக் கற்றுக் கொள்ளல் வேண்டும். இதற்கு நெடுங்காலப் பயிற்சி வேண்டும் என்பதும் உண்மை. வேற்றுமொழி பேசுபவர்கள் தமிழைக் கற்கும் போது கண்ட அனுபவமும் இதுவேயாகும்.
வாழைபழம், கீரை கறி என எழுதிப் பாருங்கள். அவற்றை ஒலித்துப் பாருங்கள். வாழைப்பழம், கீரைக்கறி என வல்லெழுத்து மிக்கு ஒலிப்பதையே நம் செவி கேட்டுக் கேட்டுப் பயின்றிருக்கிறதல்லவா? எமக்கும் பழங்காலத்து
“gabóv” Uásó 19

Page 12
மக்கள் போல் செவி நுட்பமிருந்தால் சந்தி சேர்த்தே ஒலிப்போம்: ஒலிப்பது போலவே எழுதுவோம்.
வாழை பழம் தேவை. வாங்கி வாவென வீட்டுக்காரப் பையனை அனுப்பினேன். வாழைப்பழக் கடைக்காரர் இலக்கணமறிந்தவர். அவர் பையனிடம் வாழையும் பழமும் கொடுத்து அனுப்பினார். சந்தியாக 'ப்' என்னும் ஒரு வல்லின மெய்யை இடாமையால் இந்த அநர்த்தம் ஏற்பட்டது. வாழைப்பழம் என்று எழுதிக் கொடுத்திருந்தால், கடைக்காரர் சரியாக வாழைப்பழத்தையல்லவா கொடுத்திருப்பார்.
பலா + பழம்- பலாப்பழம், அன்னாசி +பழம் =அன்னாசிப்பழம் என்றே அமையும். புளிப்பழமாயினும் சரி இனிப்புப் பழமாயினும் சரி வல்லின மெய் பெற்றே புளிக்கும் அல்லது இனிக்கும்.
புளி + பழம் - புளிப்பழம் இனிப்பு + பழம் = இனிப்புப் பழம் என்றே
960)LEDLID.
இவ்வாறு வல்லின மெய்கள் வருமொழி முதலாக வருமிடத்து வந்த வல்லினம் மிகும் என்ற இலக்கண விதியைக் கைக் கொண்டால் பிழையற உச்சரிக்கலாம்; பிழையற எழுதலாம்.
கொக்கு +கால் - கொக்குக்கால்
கன்று +குட்டி = கன்றுக்குட்டி
இலங்கை +திவு = இலங்கைத்தீவு
கிளி + கூடு = கிளிக்கூடு
இடை + சேரி = இடைச்சேரி
வாய் + கால் = வாய்க்கால்
ஊர் + குருவி - ஊர்க்குருவி
தமிழ் + சங்கம் = தமிழ்ச்சங்கம்
கூட்டு + தாபனம் - கூட்டுத்தாபனம்
கொழும்பு + சங்கம் - கொழும்புச்சங்கம்
சங்க + தலைவர் = சங்கத் தலைவர்
சங்க + புலவர் = சங்கப்புலவர்
தேசிய + கல்வி - தேசியக் கல்வி
இந்த இலக்கண விதியைக் கைக் கொள்கையில் இலக்கியங்களில் சில இடங்களில் இது மீறப்படுகிறதா? அதாவது சில இடங்களில் வல்லினமெய் போடப்படவில்லையே! அது பிழையல்லவா? என்ற கேள்வி எழலாம்.
திருக்குறளில் ஆதி +பவன் = ஆதிபகவன் என்றே வருகிறது. நாக + பாம்பு = நாகபாம்பு என்றே வருகிறது.
‘ஓலை’ பக்கம் 20

இவை முறைப்படி ஆதிப்பகவன்; நாகப்பாம்பு என்று ஏன் வந்ததில்லை. என்று ஏன் வந்ததில. அதற்கும் நியாயம் உண்டு. ஆதி என்பதும் நாக என்பதும் சமஸ்கிருதச் சொற்கள். எனவே அவை தமிழ் இலக்கணப்படி அமையவில்லை : இயல்பாகப் புணர்ந்தன. ஆதிபகவன்; நாகபாம்பு என்றே வழங்குகின்றன. இவற்றைச் செயற்கையாகப் புணர்த்தினால் அவற்றை எமது
செவிப்புலன் ஏற்றுக் கொள்வதுமில்லை.
V
ஈழத்து எழுத்தாளர்/கலைஞர் /பத்திரிகையாளர் மாநாடு
ஈழத்து எழுத்தாளர் / கலைஞர் / பத்திரிகையாளர்களின் முழுமையான விபரங்களைத் திரட்டித் தொகுத்து கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் ஆவணப்படுத்தி வைக்கும் முயற்சியினை கொழும்புத் தமிழ்ச் சங்கம் மேற் கொண்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக கடந்த ஆண்டு கொழும்புத் தமிழ்ச்சங்க ஸ்தாபகவாரம் (22.03.2001 - 25.03.2001) கொண்டாடப்பட்ட போது அதன்நிறைவுநாளான 25.03.2001 அன்று காலை சங்கத் தலைவர் கலாசூரி.இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் சங்கத்தின் காப்பாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் நெறியாள்கையின் கீழ் நடைபெற்ற ஈழத்து எழுத்தாளர்/கலைஞர் / பத்திரிகையாளர் ஒன்று கூடல் நிகழ்வின் போது சமூகமளித்தவர்களுக்கு விபரங்களைச் சேகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் நேரில் கையளிக்கப்பட்டன. சமூகமளிக்காதவர்களில் முகவரிகள் தெரிந்தவர்களுக்கு தபாலில் அனுப்பப்பட்டன. பலர் தபாலிலும் நேரிலும் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள்.
எதிர்வரும் நவம்பர் 16,17ந் திகதிகளில் இருநாட்களும் முழுநாள் நிகழ்வாக ஈழத்து எழுத்தாளர்/கலைஞர் / பத்திரிகையாளர்களின் மாநாடு ஒன்றினைக் கூட்டுவதற்குக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் தீர்மானித்துள்ளது.எனவே மேற்படி விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்பாதவர்கள் அவற்றை உடன்பூர்த்தி செய்து செப்டம்பர் 30ம் திகதிக்கு முன்னர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு (செயலாளர், கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல: 7, 57வது ஒழுங்கை உருத்திராமாவத்தை, கொழும்பு -06) தொலைபேசி : 01-363759 என்ற முகவரிக்கு) அனுப்பி வைக்குப்படி தயவாக வேண்டப்படுகின்றனர். படிவங்களைப் பூர்த்தி செய்து அனுப்பி வைப்பவர்கள் மட்டுமே உத்தேச மாநாட்டிற்கு அழைக்கப்படுவர்.
“g6DD6v” Uśøó 21

Page 13
கலைமாமணி கந்தசாமி கணேசபிள்ளை (தவில் வித்துவான்)
மலர்வு :
05.08.1933
09.08.2002
திவில் கணேசன்' என்றும் நாச்சிமார் கோவி. லடி' கணேசன் என்றும் பிரபலம் பெற்றுள்ள தவில் வித்வான் கந்தசாமி கணேசபிள்ளை அவர்கள் தமது 69 வயதினைப் பூர்த்தி செய்து நான்கு நாட்கள் சென்றபின், அதாவது 05.08.1933 இல் பிறந்து 09.08.2002 இல் காலமானார் என்ற செய்தி கேட்டு கண் கலங்காதோர் இருக்க முடியாது. உடல் இளைத்துப் போயிருந்த காலத்திலும், மேடையிலேறி, தவிலைக் கையாள முற்பட்டார் என்றால், அவரது வயது தெரியாது அவரது தவிலில் இருந்து இடி முழக்கம் கேட்கும்.
வடபுலம் வலுவான இசைப் பாரம்பரியத்துக்கு பெயர் பெற்றது அதிலும் முக்கியமாக நாதஸ்வர இசை வரலாறு - ஒரு நீண்ட வரலாறு. நாதஸ்வர வித்வான்களும் தவில் வித்வான்களும் நிறைந்த பூமி - வடபுலம், குறிப்பாக இணுவில், அளவெட்டி, நாச்சாமார் கோவிலடி பெற்று வளர்த்துவிட்ட ஒரு பரம்பரை பற்றி இந்நாட்டுத் தமிழ் மக்கள் பெரும் பூரிப்படைய முடியும்.
இந்த மங்கல இசை வித்வான்களின் வரிசையில் வந்தவர் தவில் மேதை கந்தசாமி கணேசபிள்ளை அவர்கள். இவர் இலங்கையில் மட்டுமல்ல. இந்தியாவிலும் தன் புகழை நிலை நாட்டியவர். இதன் அடையாளம் இவருக்கு தமிழ்நாட்டு அரசு வழங்கிப் பெருமை சேர்த்த கலை மாமணிப்பட்டமாகும்.
1980-களுக்குப் பின், எமது மக்கள் புலம் பெயர்ந்து பலநாடுகளில் வாழ முற்பட்டதன் காரணமாக ஜேர்மனி, கனடா, லண்டன், பிரான்ஸ், சுவிஸ் போன்ற நாடுகளில் எமது கலைஞர்கள் அங்கெல்லாம் சென்று தம் வித்துவத்தை அவர்கள் தொடர்ந்து அனுபவிக்க வழி செய்தார்கள். புலம்பெயர்வு இந்த வகையில் ஒருவித அதிர்ஷ்டம் என்று கருதலாமா?
‘ஓலை’ பக்கம் 22
 

அடக்கமும், பண்பும் நிறைந்த கணேசன் அவர்கள் வித்துவச் செருக்கின்றி எல்லோருடனும், மிகவும் பவ்வியமாகப் பழகும் தன்மை கொண்டவர். இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பிரபல நாதஸ்வரக் கலைஞர்களுக்கெல்லாம் தவில் வாசித்த பெருமைக்குரியவர்.
இவரது கஞ்சிரா வாசிப்பையும் எவரும் இலகுவில் மறந்து விடுவதற்கில்லை. இவர் எப்பேர்ப்பட்ட லய விசேடங்களையும், எந்தத் தாளத்திலும் எத்தனை வேகத்திலும், வாசிக்கக்கூடிய வல்லமை பொருந்தியவர் என்பது முதுபெரும் இசையாளர்களின் ஒருமித்த கருத்தாகும்.
இவர் இலங்கை வானொலி புகழ் மிருதங்க வித்துவான் திரு.க.சண்முகம்பிள்ளை அவர்களின் சகோதரராவார்.
கணேசபிள்ளை அவர்களின் மறைவு வேதனைக்குரியது: ஈடு செய்ய முடியாதது. இருந்தாலும்.
அளவையூர் தட்சணாமூர்த்தியும், இணுவில் சின்னராசாவும் சென்ற அதே இடத்துக்கு நாச்சிமார் கோவிலடி கணேசனும் போய்ச் சேர்ந்து விட்டார்.நாச்சிமார் கோவிலடி இவரது பிரிவை எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போகிறதோ!
பஞ்சவர்ணன்
டூழத்து எழுத்தாளர் / கலைஞர் / பத்திரிகையாளர் விபரம்) / ஈழத்து எழுத்தாளர் / கலைஞர் / பத்திரிகையாளர்களின் முழுமையான Y விபரங்களைத் திரட்டித் தொகுத்து கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் ஆவணப்படுத்தி வைக்கும் முயற்சியினை கொழும்புத் தமிழ்ச்சங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்க ஸ்தாபக வாரம் (22.03.2001 - 25.03.2001) கொண்டாடப்பெற்றபோது அதன் நிறைவுநாளான 25.03.2001 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் /கலைஞர் / பத்திரிகையாளர் ஒன்றுகூடல் நிகழ்வின் போது சமூகமளித்திருந்தவர்களுக்கு விபரங்களைச் சேகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் நேரில் கையளிக்கப்பட்டன. முகவரிகள் கிடைத்தவர்களுக்கு தபாலில் அனுப்பப்பட்டும் வருகின்றன. இதுவரை இவ்விண். ணப்பப்படிவங்கள் கிடைக்கப்பெறாதோர் கொழும்புத் தமிழ்ச்சங்கத்துடன் தொடர்பு கொள்ளும்படியும், விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப்பெற்றோர் தாமதியாது அவற்றை பூரணப்படுத்தி அனுப்பி வைக்கும்படியும் அன்பாக வேண்டப்படுகின்றனர்.
) - இலக்கியக்குழு - ܢܠ
‘ஓலை’ பக்கம் 23

Page 14
-இணுவைந.கணேசலிங்கம்
மரகதம்
றவேற் நர்வழிங் ஹோம். ஏழாவது வார்ட். நாற்பத்தி மூன்றாவது கட்டில் என்னை தாங்கியிருக்கிறது. மயக்கம் மயக்கமாக வருகிறது. இழைத்த துரும்பாட்டமாக - கிழித்துப் போட்ட வாழை நார்போல இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். கேட்டும் கேட்காதது போன்ற இரண்டும் கெட்டான் நிலை இடது கையினூடாக "சேலைன்" ஏறிக் கொண்டிருக்கிறது. இது நாடி நரம்பெல்லாம் ஊடுருவ . கொஞ்சம் உணர்வு வருவதுபோல. இடுப்பெலும்பு விண்ணென்று வலிக்கிறது நாரி புண்ணாக . கை துரங்க முடியாமல், உடம்பை அசைக்க இயலாமல் எனக்கு என்ன நடந்தது.
நேர்ஸ் வருகிறாள் மாத்திரை தருகிறாள். மெல்ல தலையை தூக்கி குடிக்க உதவி புரிகிறாள். கதைக்க வேண்டாம். அழவேண்டாம் என சைகைகாட்டி கண்களை துடைத்து விடுகின்றாள். எல்லாமே கனவு காண்பதுபோல, நினைவில்லா சித்திரம் போல் பிரம்மையாக இருக்கிறது.
குத்துக்கல்லாட்டம் ஆக இருந்த எனக்கு என்ன வந்தது?பலயினமாம். கண்டறியாத பலயினம். எல்லா வேலைகளும் என் தலைமேல் விழ வேறுவழியின்றி இழுத்துப் போட்டு நானே செய்ய. உதவிக்கு ஆளிள்ளாமல். பங்குபோட குடும்பத்தில் ஒருவர் இல்லாமல். உடம்பில் சக்தியிருக்குமட்டும் மாரடித்து தலைசுற்றுகிறது வயிறு புகைகிறது.
அவருக்கு புறமோசன் வரவேண்டும் என்றும். பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றும். கோயில் குளம் திரிந்து விரதம் இருந்து நேர்த்தி வைத்து சிலவேளை ஒருநேரமாக சாப்பிட்டு இப்ப பலயினமாய் மயக்கமாக விழுந்ததுதான் தெரியும்.
அவர் ஒரே ஸ்கூல், ஸ்கூல் என்று ஸ்கூலைப் கட்டிப்பிடித்துக் கொண்டு - பாடசாலையை முன்னேற்றுறன். பிள்ளைகளை முன்னேற்றுறன் என்று ஒடித் திரியிறார். வீட்டை விட்டு ஏழு மணிக்கு வெளிக்கிட்டால் நாலு மணியாகும். ஸ்கூலாலை வர பேந்து போனால் ஒன்பது மணிக்கு மேல செல்லும். சாப்பிடவும் நேரமில்லாமல் அப்படி என்ன வேலையோ?
‘ஓலை’ பக்கம் 24
 

சமுதாயம், சமுதாயமென்று என்னத்தைக் காணப் போகின்றார்கள்? கடைசியிலை குடையும் குஞ்சமும் கொடுத்துத்தான் விடுவாங்கள்?
மகள் மாலினி ஒரே ரியூசன், ரியூசன் என்று. எந்த நேரமும் புத்தகத்துக்கை முகத்தைப் புதைத்தபடி. இல்லாட்டி. ரி.விக்கு முன்னால் மணிக்கணக்கில் நேரம் காலம் தெரியாமல் குந்தியபடி. சின்னன் இதிலை இருக்கிறதை அதிலை எடுத்து வைக்கும். அதிலை இருக்கிறதைப் பரப்பி வைக்கும். கத்திக் குளறிக் கூத்தாடி ஒரே ரகளை. நினைச்சதைச் சாதிக்கும். அவரோடு நானும் ஊரூராகத் திரிந்து-இடம் பெயர்ந்து- உதவிக் காளில்லாமல். நான் படும் வேதனை ஐயோ! தலை பாரமாக இருக்கிறதே.
டொக்டர் வருகிறார். நேர்ஸ் சொல்லிக் கொண்டு ஓடி வருவது தெரிகிறது. ரெதெஸ் கோப்பால் இடது மார்பை அழுத்துகிறார். நெற்றியைச் சுருக்குகிறார். விழுந்த இடத்திலை சயிட் தலை அடிபட்டு விட்டதாம். எக்ஸ்றேயை உயர்த்தி மேலும் கீழும் பார்க்கின்றார். நேர்ஸிடம் ஏதேதோ பேசுகிறார். இன்ஜெக்ஷன் போடுகிறார். புத்துணர்வு பிறப்பது போல. ஒரு மின் வெட்டு. வீட்டுப் பக்கம் மனம் அலை பாய்கிறது.
தம்பி அம்மாவைக் கொண்டு வா வெண்டு அழுவான் - அடம் பிடிப்பான். பெரிசு உம்மெண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு இருக்கும். இருவரையும் கட்டியவிழ்த்துக் கொண்டு என்ன பாடாய் படுகிறாரோ. சிவசத்தியமாய்ச் சொல்லுறன் அவருக்குத் தேத்தண்ணி வைத்து ஊத்திக் குடிக்கத் தெரியாது. வீட்டைக் கழுவி முற்றத்தைக் கூட்டியறியார். சாப்பாடு செய்யவோ. குசினிப்பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டார். ஆனால் வாய்க்கு ருசி பார்ப்பார். உடுப்பு அயன் பண்ணவோ. தோய்க்கவோ. பாத்திரங்கள் மினுக்கவோ, சட்டி கழுவவோ, பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க, சந்தைக்குப் போக, பிள்ளைகளை அழாமல் பார்க்க, வீட்டு வேலைகளைக் கவனிக்கஒண்டுக்கும் ஏலாது. சுருக்கமாகச் சொன்னால் துப்பினத்துக்கு மண்தள்ளார்.
அதிபர் பதவியை எடுத்த பின் மண்டைக்குள்ள ஆயிரம் யோசனைகள். பிரச்சினைகளெண்டு வந்தால் விசர் பிடித்த மாதிரித் திரிவார். பார்க்கப் பாவமாக விருக்கும். ஆனால் நல்லவர். எனக் கொண்டெண்டால் பதறிப் போவார். ஆயிரம் தடவை எப்படியெப்படி எண்டு கேட்டுக் கொண்டே இருப்பார். சாப்பாட்டுக்கு அக்கறையில்லாமல் . கடைச்சாப்பாட்டுடன்.
அதோ. அவர் பிள்ளைகளுடன் - பழவகைகள், பால்மா, பத்தியத்துடன். கையை நீட்டுகிறேன். பிள்ளைகளைக் கட்டிப் பிடிச்சுக் கொஞ்ச வேண்டும் போல- எழும்புறன். முடியவில்லை. கண்ணிர் கன்னத்தில் - உடம்பு
‘ஓலை’ பக்கம் 25

Page 15
அடித்துப் போட்டது போல, வந்ததும் வராததுமாக நேர்ஸ் சொல்கிறார். இரத்தம் ஏத்த வேணுமாம். ஐயோ. கடவுளே!
"அவர் தலையைத் தடவி விடுகிறார். மகன் முகத்தைக் கொஞ்ச - மகள் கையைப் பிடிக்கிறாள். மருந்தே தேவையில்லை - எனக்கெல்லாம்
சுகம் போல."
காங்கேயன்
ஆண்டவனே.! என்ரை மனிஷியைக் காப்பாற்றி விடு. மனமே நீ
அழு. நல்லா அழு. யோசி - நல்லா யோசி. நீ செய்ததெல்லாம் சரியாவெண்டு யோசி.
எனக்கு முன்னமே அதிகாலை எழுந்து -பாத்திரங்கள் கழுவி-தேனிர் வைத்து - வீட்டைப் பெருக்கி குளித்து - இலட்சுமி கடாச்சமாய் - பூ ஆய்ந்து - சுவாமி அறை கூட்டி. விளக்குக் கொழுத்தி - கும்பிட்டு - றேடியோவில் சுப்பிரபாதத்தினைப் போட்டு - வீடே பூபாள ராகம் பாட ஊது பத்தியின் சுகந்த மணம் எழும்.
என்னை எழுப்பிவிட்டுப்பாய் தலகணை சுற்ற-நான் குளித்துக்கும்பிட்டு வரக் காப்பியைக் கையில் தருவாள்.
எனது ரவுஸரையும் அதற்கு ஏற்ற சேர்ட்டினையும் எடுத்து - அழகாக மடிப்புக் குலையாமல் அயன் பண்ணி ரையினையும் 'மச்'சாக எடுத்து வைப்பாள். இதற்குள் புட்டா-பூரியா - இடியப்பமா - பாணா - பணிசா - ரவையா - சமபோஷாவா ஏதாவதொன்று அடுக்களையில் ஆயத்தமாகி விடும்.
பெரியவளை எழுப்பிப் பாடம் படிக்கப் பண்ணி- வீட்டு வேலைகள் சரியா என்று கேட்டு - 'ரைம் ரேபிளின்படி ஸ்கூலுக்குக் கொப்பி - புத்தகங்களை அடுக்கச் சொல்லி - குளிக்கச் சொல்வாள். தலையை நன்றாக வாரிஇரட்டைப் பின்னல் பண்ணி -றிபன் கட்டி - ஏற்கனவே அயன் பண்ணிய பள்ளிச் சீருடை கவுனையும் ரையும் கொடுத்து போட்டுக் குத்தச் சொல்லி - சாப்பிட மறுக்கும் போதெல்லாம் பிசைந்து வாயில் ஊட்டி விடுவாள். சின்னவனையும் எழுப்பிப் - பல் விளக்கப் பண்ணி அவனுக்குச் செய்ய வேண்டியதைகளும் செய்து கொண்டிருப்பாள். இத்தனைக்கும் நடுவே
ரெலிபோன் அழைக்கும் போதெல்லாம் அதற்குப் பதிலிறுத்து - வெளியே தேடி வருகின்றவர்களின் கூப்பிட்ட குரலுக்குப் பதில் சொல்லி அனுப்பி வைப்பதும் அவளே.
ρόω6υ (μό 5ώ 26
 

வேண்டாம் சாப்பாடு - பசியில்லை என்று மறுக்கும் போதெல்லாம் - நான்கு மணிக்கு வீட்டை வரும் வரைக்கும் என்ன செய்யப் போறிங்களாம். காத்துக் குடிக்கப் போறியளா என அன்புடன் கடிந்து கையில் காலை உணவைத் திணித்துச் சாப்பிட வைப்பாள்.
ரவுஸர் போட்டுச் சேர்ட் அணிந்து வரும்போது சேட்டில் மடிப்பிருப்பின் அதனை எடுத்துச் சரி செய்து கொலோன் அடித்து - பவுடர் போடாத நாட்களில் அதனைக் கையில் தெளித்து முகம் கரியாக இருக்கிறது. பூசச் சொல்லி வாசலுக்கு வரும்போது சப்பாத்துப் பொலிஷ் பண்ணப்பட்டு அதனுள்ளே அழகான காலுறையுமிருக்கும். அதனைப் போட்டு நிமிரும் போது கையில் ப்பிறீவ் கேஸினைத் தந்து "டீ"நிரம்பிய பிளாஸ்க்கினையும் தருவாள்.
மகள் வெளிக்கிடும் போது ஸ்கூல் பாக்கினுள் மறக்காமல் "லஞ்" பொக்ஸினையும் - ஒரு லீற்றர் பிளாஸ்டிப் போத்தலில் கொதித்தாறிய நீரினையும் நிரப்பி வைத்து - இடைவேளைக்கு மறந்து போகாமல் சாப்பிடு - மிச்சத்தைக் கொண்டு வராதை - திரும்பத் திரும்பச் சொல்லி. இருவரையும் ஒருவர் பின் ஒருவராக கையசைத்து வழியனுப்பி - மகள் முன்னாள் சைக்கிளிலும் நான் பின்னால் சைக்கிளிலும் செல்லும் போது கவனம் மண்டையிற்கை வேறெதையும் யோசித்துக் கொண்டு செல்ல வேண்டாம். போகும் வரையும் மகளையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஸ்கூலுக்குப் போனால் வீட்டைப் பிள்ளைகளை மறக்கிறதல்லை என அன்புக் கட்டளையிட்டு வழியனுப்பி வைப்பாள். பிள்ளையாரேசுகமாக்கிவிடு-இனி. என்பங்குக்கு நானும் செய்து கொள்கின்றேன். அது மட்டுமா?
பின்னர் முற்றம் கூட்டி - சாணம் தெளித்து மகனுக்குணவூட்டி - நேசறிக்குச் சேர்த்தபின் - மீண்டும் குசினியில் தஞ்சம். மத்தியான சாப்பாட்டுக்கான தடல்புடல், நேசறியிலிருந்து மகனை இதற்கிடையில் கூட்டி வரவேண்டும். உடுப்புத் தோய்த்து - சேர்ட் - கவுணில் பொத்தான் விழுந்தால் அதனையும் தைத்து - பத்திரிகையில் நல்ல விடயங்களையும் பார்த்து - வீட்டுக்குப் போகும் போது இன்முகத்துடன் வரவேற்று சோறு பரிமாறி - நான் குட்டித் துரக்கம் போட்டு எழுவதற்குள்
மகளுக்கு ஆசிரியராக - மகனுக்கு விளையாட்டு நண்பியாக . இன்னும் பூக்கன்றுகள் நட்டு வீட்டை அழகு படுத்தல் - தண்ணிரூற்றல்ரொயிலட் - பாத்றும் - பிளிச்சிங் பவுடர் போட்டுத் தேய்த்தல் - கான் தள்ளல் - சந்தைக்குப் போதல் என்பனவும் அவவின் வேலைப் பட்டியல்,
‘ஓலை’ பக்தம் 27

Page 16
பின்னேரம் டீ" - கொறிக்க ஏதாவது- மீண்டும் இரவுச்சாப்பாட்டுத்தர்பார்இவற்றுக்கும் மத்தியில் பாடசாலையில் நடக்கும் பிரச்சினைகளைக் கூறும் போது என்னுடைய பழுவைக் குறைக்கும் வகையில் ஆதரவு கூறி முடிந்த மட்டில் தன்னுடைய சக்திக்கேற்ற ஆலோசனைகளையும் வழங்குவாள்.
இறுதியாக நாங்கள் எல்லோரும் நித்திரைக்குச் சென்ற பின்னர் தான் - தான் படுக்கையில் சரிந்து கொள்வாள். வள்ளுவர் கூறியது போன்று பின்துங்கி முன்னெழும் பேதை, ஆனால் என்னை விட்டுப் போகாமல் இருக்க வேண்டும்.
வேலைக்குப் பிள்ளையை அமர்த்தலாம். என்று எத்தனையோ தடவை சிந்தித்ததுண்டு. ஆனால் மனம் இடம் தரவில்லை. அதுவும் என் பிள்ளை போல் படிக்கும் வயதிலுள்ள பிள்ளையை வீட்டு வேலைக்காக. அடிமையாக . அதுவும் படிக்க வேண்டும். அப்பழி எமக்குக் கூடாது. கட்டாயக்கல்வி . மனைவிக்கும் அது தெரியும்.
ஆனால் நான் இப்போது படும் வேதனை. எல்லாச் சுமைகளையும் சுமக்கும் போது அதன் பாரம் தெரிகிறது. பாடசாலையில் எதையும் சமாளிக்கலாம். வீட்டில் தனிய முகங் கொடுக்க முடியா தென்பதை முதல் முதல் உணருகின்றேன்.
தேங்காய் திரிவித் தாருங்கள் என்று கேட்கும் போது இந்தச் சின்ன வேலைக்கு நானா. மகளைக் கூப்பிடும் - அது அவைக்குரிய வேலையென்ற எண்ணம் வர மழுப்பியது. ஞாபகம் வர நெஞ்சு உதிரம் வடிக்கிறது.
அவள் தனியாக செய்த வேலையை என்னால் ஜிரணிக்க முடியாமல் இருக்கு. அழகாக அயன் பண்ண முடியவில்லை. ஒவ்பீஸில் என்னை நான் பார்க்குப் போது சேர்ட் கசங்கி. சப்பாத்துத் துடைக்காதது போன்று-தேனீர் போட்டால் அது கழி நீராக . கடைச்சாப்பாடு ஒன்றும் கூற முடியாமல் . பிள்ளைகளின் உடுப்பு - ஆஸ்பத்திரி உடுப்பு தோய்த்து. கைமூட்டு வலிக்கிறது. வீட்டை ஒழுங்காக வைக்கத் தெரியவில்லை. மகனில் அம்மாவின் நச்சரிப்பு. தலைவலிக்கிறது. மொத்தத்தில் வீட்டுநிர்வாகத்தில் மனைவியின் பங்கினை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நானும் பங்குகொள்ளாத உறுத்தல் இப்போது.
அவள் இல்லாமல். ஒரு வாழ்க்கை அதனைக் கற்பனை பண்ணக் கூட முடியவில்லை. அவள் சுகமாக வீடு வரவேண்டும். இதுவே இப்போதைய
பிரார்த்தனை."
‘ஓலை’ பக்தம் 28

"அம்மாவென்றால் அம்மாதான். நீங்கள் நோய் நீங்கி வரவேண்டும். அப்பாவால் உங்களைப் போல வீட்டில் ஒண்டும் செய்யத் தெரியாது. எனது பின்னலைப் பார்த்துப் பிறண்ட்ஸ் - சிரிக்கிறார்கள். உங்களைப் போல என்னால் பின்ன முடியாது தான். பைப் தண்ணிர் தான் ஸ்கூலுக்கு கொண்டு போகின்றேன். கொதித்தாறிய நிரல்ல. சாப்பாட்டுக்கு டிமிக்கி விட்ட எனக்கு அதன் அருமை இப்ப விளங்குது. கவுண் சரியாக மடிப்புப் பிசகாமல் அயன் பண்ணத் தெரியவில்லை. வீடு குப்பையாக. சாமான்கள் ஒழுங்கின்றி சிதறியிருக்கு தம்பி ஒரே அழுகை, பார்க்கப் பாவமாக இருக்கு. அப்பாவும்
தான
இனிமேல் ஒழுங்காக உங்கள் சொல் கேட்பேன். முடிந்த மட்டில் உங்களுக்கு உதவியாக இருப்பேன். சின்னச் சின்ன வேலைகளை யெல்லாம் சொல்லாமல் செய்வேன். நன்றாகப் படிப்பேன். ரி.வி.பார்க்க மாட்டேன். உங்களுக்காக எல்லாம் செய்வேன். ஆனால் ஆஸ்பத்திரியிலிருந்து வருத்தம் மாறிக் கெதியாக வரவேண்டும். அம்மா இல்லாமல் . பிள்ளை
யாரப்பா. நினைத்துப் பார்க்க முடியாது."
வருது. சாப்பாடு தீர்த்த - பாடம் சொல்ல - விளையாட - றாட்டனமாட . கதை சொல்ல. அப்பா..? அம்மா எப்ப வருவா? ஏக்கம் போல அப்பூ சாமி அம்மாவைக் காப்பாத்து."
3: 3: අැද 3: :k
இரண்டு மாதங்களின் பின்னர் மரகதம் மறுபிறவி எடுத்து வீடு
வந்திருக்கிறாள். இப்போது அனைவரும் தங்கள் தங்கள் வேலைகளைப் பங்கு போட்டுக் கொண்டு செய்கிறார்கள். மரகதம் மனதிற்குள் மகிழ்ந்தாள். வீட்டு முற்றத்து வேப்பமரத்திலிருந்து குயிலொன்று கூவியது.
‘ஓலை’ பக்கம் 2

Page 17
வென்று வருக!
நாடறிந்த நாடகக் கலைஞரும் எழுத் தாளருமான திரு.தா.சண்முகநாதன் (சோக்கல்லோ சண்முகம்) அவர்கள் எதிர்வரும் 20.09.2002 வெள்ளிக்கிழமை இடைவிடாது தொடர்ந்து 7 1/2 மணிநேரம் பேசும் தனது உலக சாதனை (கின்னஸ்) முயற்சியை இல: 158 தர்மராம வீதி, வெள்ளவத்தையிலுள்ள பெண்கள் கல்வி ஆய்வு * நிலையக் கேட்போர் கூடத்தில் மு.ப. 9.00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளார். எழுத்துப் பிரதிகள் எதுவுமின்றி தனது சுயவாழ்வின் அனுபவங்களின் அடிப்படையில் நானும் தமிழும்' எனும் தலைப்பில் மனதில் எழும் கருத்துக்களை வெளிப்படுத்துமுகமாக இவரது தொடர் பேச்சு அமையவுள்ளது.
இவரது எழுத்துத் துறைப் பிரவேசம் 1956 இல் பிரசுரமான 'கோமதியின் கணவன்' நாவல் மூலமானதாகும். ஈழத்தின் மூத்த எழுத்தாளரான 'சிற்பியின் 'கலைச்செல்வி மாத சஞ்சிகையில் அவருடன் இணைந்து சுமார் ஐந்தாண்டுகாலம் (1963/68) பணியாற்றியுள்ளார். தினகரன், ஈழநாடு பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
மு.சணளRமுகநாதன் என்பவருடன் இணைந்து 'சானா' எனும் சிறு சஞ்சிகையொன்றினை 1963ல் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நடாத்தினார்.
'சீதனம் சரியா? தப்பா?", "கோடை', 'எந்தையும் தாயும்' ஆகிய நாடகங்களிலும், 'பொன்மணி', 'தெய்வம் தந்த வீடு' ஆகிய ஈழத்துத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த வில்லிசைக் கலைஞரான - தலைமைப் புலவர். இவர் 'கண்மணியாள் காதை" - கவிராஜன் கதை" 'சக்தியின் மகிமை' ஆகிய வில்லிசை நிகழ்ச்சிகளைத் தயாரித்து நிகழ்த்தியுள்ளார். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒலி / ஒளி பரப்பான நகைச்சுவைக் கதம்பமான 'சோக்கல்லோ சண்முகம்" இவரது கலைத்திறமைக்கு முத்திரை குத்தியது. "கிணறு காவி"- ஏழாலையூரான்' 'சானா' - 'வசுமதி - திலகா சண்முகநாதன்' - ஏழாலை சண்முகநாதன். சோக்கல்லோ சண்முகம்' என்ற புனைபெயர்களில் இவர் கலை,இலக்கிய ஆக்கங்களை அளித்துள்ள போதிலும் 'சோக்கல்லோ சண்முகம் தான்
‘ஓலை’ பக்கம் 30
 

இவர் பெயருடன் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டது.
கலை, இலக்கிய உலகில் 'சோக்கல்லோ சண்முகம்' என அழைக்கப்படுகின்ற ஏழாலையூர் தா.சண்முனநாதன் எனும் இக்கலைஞர் தற்போது கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் உள்ளார். சங்கத்தின் இலக்கியக் குழு உறுப்பினராகவுமுள்ள இவர் கொழும்புத் தமிழ்ச்சங்கம் இவ்வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து காலாண்டுக்கொரு தடவை நடாத்த உத்தேசித்துள்ள 'அரங்கம்' -நாடக நிகழ்வின் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
01.08.1935 இல் பிறந்து இன்று அகவை அறுபத்தியேழைப் பூர்த்தி செய்துள்ள திரு.தா.சண்முகநாதன் அவர்கள் கடந்த கால கலை, இலக்கிய, ஊடகத்துறை சாதனைகளுக்கு மேலாக உலக சாதனையொன்றை நிலைநாட்ட முனைந்துள்ள இத்தருணத்தில் அவரின் முயற்சி திருவினையாக வென்று வருக' என 'ஒலை' அவரை வாழ்த்துகின்றது.
- ஆசிரியர்.
r །
தமிழ்மணி இரா நாகலிங்கம் (அன்புமணி) முன்னாள் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பார்வதி அகம் ஆரையம்பதி-1
18, நல்லையா வீதி மட்டக்களப்பு 27.8. 2002 அன்பு கோபாலகிருஷ்ணன், ஜூன் 2002'ஒலை"யில் தங்கள் கவிதை கண்டேன். படித்துச் சுவைத்தேன். பாராட்டுக்கள் கவிக்கோ அப்துல் ரகுமானுக்குப் பொருத்தமான கவிதை "ஒலை"யின் புது வடிவம் கவர்ச்சி, இப்பணி தொடர்தல் தகும். பேராசிரியர் எஸ்.கே.சிவபாலன் எங்கள் ஆத்மநண்பர். அவரது "பண்ணிசைப் பாமாலை" ஒலிப்பேழையும் எமக்கு ஒரு நண்பர் மூலம் கிடைத்தது. பயனுள்ள முயற்சி. கவிஞர் "ஜின்னாஹற்" வின் சிறுகதை சிறப்பு. தங்கள் பணிதொடர்க.
இவ்வண்ணம் இரா நாகலிங்கம் (அன்புமணி) أصـ ܢܠ
‘ஓலை’ பக்தம் 31

Page 18
தமிழ்ச் சங்கத்தின் குரலாய் தரணி எங்கும் ஒலிக்க ஒலை ஒயாமல் வர வளர எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
ܠܓ
al
副
சங்கம் 56Ö6 lenGuilh
2.jpg|T Lonelije)) வெள்ளவத்தை R 6gTEUma Luff : 361381 i 2芯 r 3. A)DEN حالعلاج
‘ஓலை’ பக்கம் 32
 

s
M2/
3Y
7 Oit/ (Best 7 Dis les front
WEL WISHER
MR.S. ILAGANATHAN
266, MAIN STREET,
NEGOMBO
కనై 司菸三N മ>്ടു Jos' ފހަ&-ހިޕޯل?S=ح s ඍ IRŠ ہے۔ s ஒலை சிறப்புற எமது ஆசிகள் ص
மொத்தமாகவும் சில்லறையாகவும் நகர்வுப் பொருட்களுக்கு நாட வேண்டிய இடம்
மகாவிஷ்ணு ரேடர்ஸ் இல, 22 விஷ்திராணி அவென்யூ
நீர்கொழும்பு ܐ
_2-Sకే
幾
NA

Page 19
خلفي
رہے لیے ا/((\\ے
2久zz/ 李ear か
HOUS DES
HICH OUALITY
READYMIAD
WHOLESALE & I 。MP、
READY MAD ACCESSORIES
125, Main St. TI : 03
- به تمام آ۱
|-
ܓ
ー。
s
()

βλάβει (τσαι \\ 擊
SE OF | GINS ||
PORTED E ( | | ES S.
E| GAERWENTS
ETA IDEALERS OF TEXTILES, - G* RMENTS,
FANCY GOODS
'eet, Negombo 1-246,38 窓エ
الگ
_ീട്
リニ