கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2002.10

Page 1
冒墅_上 Vision 20-20 Opticians
Optorreirist with 25 years Experience will take care of your sight
35/ Dr. W. M. Perera My (Cata சேர்) ETel Cri0-8
扈,酰s 3.
출 蒙
7tt Be Affael Peog
Western Jewelers
Jewellers & Germa Mercha armis
88, Sea Street, Colombo -
Tel: 433977 335682 鑫
-エ
 
 
 
 
 
 
 
 

TITJ,
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 7, 57 வது ஒழுங்கை (உருத்திரா ானத்தை கொழும்பு .ே தொளுவபேசி 1-39
வெப் முகவரி A www.cGIOITibotanilsangarn.org இணைய தபால் முகவரி 5 189893
இன்று அன்பளிப்பு

Page 2
INTERNATIONAL
BOOKSHOP
240, Galle Road, Welawatte, Colombo - 6
性 N Tel 074-5I5024 つ 52y. _2ଏଠିଁଷି
 

இதயம் திறந்து.
'ஒலையின் ஒன்பதாவது இதழையும் உங்கள் கரங்களில் உலவ விடுவதில் உவகையடைகிறோம். ஒப்டோபர் மாதம் 22, 23, 24 ம் திகதிகளில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய முதலாவது மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடந்தேறி. யுள்ளது. நபிவழிநம் வழிநற்றமிழ் நம்மொழி என்ற சிந்தனை வழியில் இம்மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. இதனையே முன்பு இஸ்லாம் எங்கள் வழி. இன்பத் தமிழ் எம் மொழி என்பர். எவ்வாறெனினும் மத நம்பிக்கைகளால் வேறுபட்டிருப்பினும் மொழியால் நாம் கூறுபட வில்லை என்பதை இம்மாநாடு உணர்த்தியுள்ளமை குறித்து ஈழத் தமிழர்கள் உவகையடையலாம். சைவ, வைணவ சமயம் சார்ந்த பக்தி இலக்கியங்களுடன் பெளத்த மதம் சார்ந்த மணிமேகலை’ கிறிஸ்தவ மதம் சார்ந்த 'தேம்பாவணி இஸ்லாமிய மதம் சார்ந்த 'சீறாப்புராணம்' ஆகிய காப்பியங்களும் தமிழ் மொழியைச் செழுமையுறச் செய்துள்ளன. இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தில் தமிழ் மொழி பேசுவோர் மதங்களால் வேறுபட்டிருப்பினும் பேசும்மொழி தமிழால் பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதை நடைமுறையில் காட்டும் வகையில் நடந்து முடிந்துள்ள இம் மாநாட்டின் சமூகப் பயன்பாடு அமைய வேண்டும். இம்மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத்தலைவரான இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன் அவர்கள் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர்களில் ஒருவராக விளங்குவதும் எமக்குப் பெருமையே. மாநாட்டு ஏற்பாட்டாளர்கள், மாநாட்டில் கலந்து கொண்ட உள்நாட்டு வெளிநாட்டு பேராளர்கள் அனைவரையும் 'ஒலை'பாராட்டி மகிழ்கிறது. நன்றி மீண்டும் மறுமடலில்.
- ஆசிரியர்
‘ஓலை’ பக்கம் 1

Page 3
ஆக்க இலக்கியம் ஒரு தவம் விருதுகள் அங்கீகாரமே!
முருகபூபதி
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்ப் பெற்றோர்கள் பதட்டத்துடனும், அவர்களின் பிள்ளைகள் பரவசத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் தலைமுறை இடைவெளி என்பது புதிய பரிணா. மத்தைப் பெற்றுள்ளது"
இவ்வாறு அண்மையில் இலங்கை அரசின் சாகித்திய விருதினைத் தமது "பறவைகள்" நாவலுக்குப் பெற்றுக் கொண்ட பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு.லெ.முருகபூபதி தெரிவித்தார்.
நாவல், சிறுகதை, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், கடித இலக்கியம், கட்டுரை இலக்கியம், நேர்காணல் முதலான பல்துறைகளிலும் சுமார் பன்னிரண்டு நூல்களை எழுதியவர் முருகபூபதி. 1976இல் தமது முதலாவது சிறுகதைத் தொகுதியான "சுமையின் பங்காளிகள்" எனும் நூலுக்கு சாகித்திய விருதினைப் பெற்றுக் கொண்ட முருகபூபதி மீண்டும் ஒரு சாகித்திய விருதினைத் தமது முதலாவது நாவல் "பறவைகள்" எனும் நூலுக்கு இவ்வருடம் பெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த அவரைச் சந்தித்த பொழுது நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம். கேள்வி:புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ்ப் பிள்ளைகள் எதிர்காலத்தில் தமிழை மறந்து விடுவார்கள் என்று கூறப்படுகின்றதே. அதனால் புலம் பெயர்ந்து இலக்கியம் படைக்கும் உங்களைப் போன்றவர்களின் நூல்கள் எதிர்காலச் சந்ததியிடம் மதிப்பிழந்து போய்விடும் என்று சொல்லப்படுகிறதே! இதுபற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்? பதில் : எமது பிள்ளைகள் வெளிநாடுகளில் தமிழ்ச் சூழலில் வாழவில்லை என்பதனால் இத்தகைய கேள்விகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. தமிழ் இன அடையாளம் பேணுவதற்கான பகிரதப்பிரயத்தனத்திலேயே எம்மவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். சம காலத்தில், ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் வெளிநாடுகளில் தமிழ்ப் பாடசாலைகள், தமிழ் வானொலிகள், தமிழ்ப்பத்திரிகைகள், தமிழ்நிகழ்ச்சிகள்,
‘ஓலை’ பக்கம் 2
 

தமிழ் விழாக்கள் பல்கிப் பெருகியுள்ளன. இதேவேளை கணிணித் தொழி. நுட்பவியல் மூலம் பல "வெப்" தளங்கள் தோன்றியுள்ளன. வெளிநாடுகளில் இசை,நடனம் முதலான கலைத்துறைசார்ந்த வகுப்புகளும் பெருகியுள்ளன. அரங்கேற்றங்களுக்கும் குறைவில்லை.
இவை யாவுமே எமது தாய்மொழியை, கலை இலக்கியங்களைத் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்லும் பெரும் முயற்சியாகும்.
நூல்நிலையங்களும் தமிழ்ச் சமூகத்தவரிடையே இயங்குகின்றன. தமிழில் சிறுவர் இலக்கிய நூல்களும் சஞ்சிகைகளும் வெளியாகின்றன.
தமிழ் இன அடையாளம் பேணுவதற்காகத் தமிழ் மொழியின் தேவை உணரப்பட்டிருக்கிறது. எனவே, நாம் சாதகமாகவே சிந்தித்துச் செயற்படுகின்றோம். இதற்கான பதிலைக் காலம் தான் சொல்லும்.
கேள்வி: வெளிநாடுகளில் எம்மவர் மத்தியில் தலைமுறை இடைவெளிப்பிரச்சினை யூதாகரமாகத் தோற்றமளிக்கின்றதா?
பதில்: தலைமுறை இடைவெளி காலம் காலமாகவே தொடரும் ஒரு சுவாரஸ்யமான விவகாரம் . ஏன், தாயகத்தில் தலைமுறை இடைவெளி இல்லையா? இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளின் கல்வி, பொருளாதாரம், சமூகம் முதலான விவகாரங்களை வெளிநாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கமுயன்றால் நிறைய வேறுபாடுகளை நாம் தரிசிக்க முடியும். வெளிநாடுகளில் எம்மவர் பிள்ளைகளிடம் கேள்விகேட்கும் சந்தேகங்களை நிவர். த்தி செய்ய முயலும் மனோபாவம் அதிகம். அதற்கு அங்குள்ள கல்வி. முறையும் வாழ்வுமுறையும் பிரதான காரணம். திருமண அழைப்பிதழ்களில் பிள்ளையாரின் படம் பிரசுரிக்கப்பட்டதால் பிரம்மச்சாரியான இவர் ஏன் இங்கு இடம்பெறுகிறார் என்ற கேள்வியும் ஞானப்பால் ஊட்டிய உமாதேவியாரைப் பற்றிப் பாடாமல் அவர் கணவர் சிவபெருமானைப் பற்றி பாடினாரே அது ஏன் என்ற சந்தேகமும், திருமணப் பொருத்தங்களில், அது என்ன செவ்வாய் தோஷம்?என்ற கேள்வியுடன், செவ்வாய்க் கிரகத்தில் தண்ணிர் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்களே என்ற பதிலும் இளம் தலைமுறையிடம் வெளிவருவதைப் பார்த்திருக்கிறேன்.
பெற்றோர் சொல்கிறார்களே என்பதற்காக முன்பின் தெரியாத ஒருவருக்குக் கழுத்தை நீட்ட முடியுமா? என்று கேட்கும் இளம் தலைமுறை இன்று விஞ்ஞான தொழிநுட்பவியலுக்கேற்ப சிந்திக்கின்றது. இதனால், தமிழ் பண்பாட்டு பெறுமதிகள் அழிந்துவிடப் போகின்றதே என முத்த தலைமுறை கூப்பாடு போடுகின்றது.
தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பது எம் தாயகத்தில் இன்று நேற்றுச் சொல்லப்பட்ட கருத்து அல்ல.
‘ஓலை’ பக்கம் 3

Page 4
எனவே, தலைமுறை இடைவெளி விவகாரமும் மனித வாழ்வில் நிரந்தரமானதே.
இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்று பாடுபடுகின்றோம். அதேபோன்று தலைமுறைகளுக்கிடையிலும் புரிந்துணர்வு அவசியம் தானே! புரிந்துணர்வு பல சிக்கல்களை நிவர்த்தி செய்யும். பெற்றோர் பிள்ளைகளிடையே பயம், தயக்கம் இருப்பதனால் தான் புரிந்துணர்வும் தொலை தூரத்தில் இருக்கின்றது.
இலக்கியப் படைப்புகள் தலைமுறை இடைவெளிப் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காணும்.
கேள்வி: முதலாவது சிறுகதைத் தொகுதிக்கும் தற்பொழுது முதலாவது நாவலுக்கும் சாகித்திய விருது பெற்றுள்ளீர்கள். இரண்டிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சில நூல்களை எழுதியிருக்கிறீர்கள். அடுத்தடுத்துப் புனைகதை இலக்கியத்திற்கே விருது பெற்றிருக்கிறீர்கள் . எனினும் ஏனைய துறைகளிலும் ஈடுபட்டு நீங்கள் எழுதிய நூல்கள் விருதுகளையோ பரிசில்களையோ பெறவில்லையே. அப்படியாயின் புனைகதை இலக்கியம் தான் உங்களுடைய பிரதான எழுத்துப் பணியாகிறதா?
பதில் : இல்லை.பொதுவாகவே விருதுகள் பரிசில்களை எதிர்பார்த்து எவரும் எழுதுவதில்லை. ஆக்க இலக்கியப் பணியென்பது ஒரு வகையில் தவம், சிறுகதை எழுத்தாளனாகத்தான் இலக்கிய உலகில் பிரவேசித்தேன். பின்னர் தொழில்நிமித்தம் பத்திரிகையாளனாக மாறினேன். இலங்கையில் இருக்கும் பொழுது ஒரே சமயத்தில் ஆக்க இலக்கியக்காரனாகவும் பத்திரிகையாளனாகவும் பயணித்தேன். இது முடிவற்ற முற்றுப் பெறாத பயணம், எழுத்து ஊழியம் ஒரு தவம் என்பதனால் தான் புலம் பெயர்ந்த பின்பும் இப்பணி தொடர்கிறது.
விருதுகள், பரிசுகள், எமக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் இருக்கலாம். ஆனால் எந்தவொரு எழுத்தாளனும் இந்த அங்கீகாரங்களுக்கு ஆசைப்பட்டு எழுதுவதில்லை. நான் கட்டுரை, சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், நேர்காணல்நினைவுத் தொடர்கள் முதலானவற்றிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறேன். இவைகளுக்கும் விருதுகள், பரிசில்கள் கிடைக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
கேள்வி. நீங்கள் எழுத்துப் பணியுடன் இலக்கிய இயக்கப் பணிகளிலும் ஈடுபடுகிறீர்கள். உங்களுடைய அடுத்த கட்ட இலக்கிய இயக்கப்பணி யாது?
பதில்: இலங்கையில் இருக்கும் போது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் நீர்கொழும்பு இலக்கிய வட்டத்திலும் ஈடுபட்டிருந்தேன். ஆனால் இவை
‘ஓலை’ Úású 4.

தற்போதுஸ்தம்பிதமடைந்திருப்பதையிட்டு மிகவும் கவலைப்படுகின்றேன். ஆயினும் நான் வளர்ந்த மல்லிகைப் பாசறை அயராமல் இயங்கிக் கொண்டிருப்பதை எண்ணிமனநிறைவடைகிறேன் அதற்காக மல்லிகை, மல்லிகைப் பந்தல் நண்பர் திரு.டொமினிக் ஜீவா எனதுநன்றிக்கும் பாராட்டுக்கும் உரிய ஸ்தானத்தைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியானது. அவுஸ்திரேலியாவில் வருடாந்தம் கோண்ட விடுமுறையில் எழுத்தாளர் விழாவை ஒழுங்கு செய்து நடாத்தி வருகிறேன். அறிந்ததைப் பகிர்தல், அறியாததை அறிந்து கொள்ள முயல்தல் - இதுவே எமது எழுத்தாளர் விழாவின் நோக்கம் கலையும் இலக்கியமும் எமது கண்கள். அதனைப் பேணிப் பாதுகாப்போம்.
சந்திப்பு ஜெயப்ரஷன்யா நவரட்ணம்
மாஸ்டர் சிவலிங்கத்திற்கு
656TJ6JLJL LLL
மட்டக்களப்பு கலைஞர் மாஸ்டர் சிவலிங்கத்துக்கு அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகம் "இலக்கிய முதுமாணி" கெளரவப்பட்டம் வழங்கிக் கெளரவித்தது.
பல்கலைக்கழக வேந்தர் வைத்தியகலாநிதி ரி.வரகுணம் அவர்கள் மாஸ்டர் சிவலிங்கத்துக்கு மேற்படி கெளரவப்பட்டத்தை வழங்கிக் கெளரவித்தார். மாஸ்டர் சிவலிங்கத்தின் கலை, இலக்கிய சேவையைப் பாராட்டியே கிழக்குப் பல்கலைக்கழகம் இலக்கிய முதுமாணி கெளரவப் பட்டத்தை வழங்கியது.
அஞ்சலி
08.10.200 அன்று காலமான பிரபல புகைப்படக் கலைஞரும் நாடகக் கலைஞருமான அமரர் கிங் ஸ்லி எஸ்.செல்லையா அவர்களுக்கு எமது கண் ணிர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகின்றோம் இலங்கையில் தயாரான மஞ்சள் குங்குமம்'திரைப் படத் தயாரிப்புப் பணிகளில் இவர் பங்கேற்றிருந் Uதமை குறிப்பிடத்தக்கது.
‘ஓலை’ பக்கம் 5

Page 5
சங்கப்பலகை
180 வது அறிவோர் ஒன்று கூடல் - இலக்கியச் சந்திப்பு N
2001ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான ("பறை क्लīब्लकल्ला, அரசின் சாகித்தியமண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளர்லெ. முருகபூபதி அவர்களுடனான இலக்கியச் சந்திப்பு02.10.2002 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கத்தலைவர் கலாசூரி இ. சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நூல் நயம் காண்போம். (93)
05.05.2000இல் ஆரம்பித்து பிரதிவெள்ளிக்கிழமைதோறும் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சித் தொடரின் 93 வது நூல் நயம் காண்போம் 04.10.2002 அன்று நடைபெற்றது. செல்வி சி.திருமலர்ப்பாக்கியம் அவர்களின் ‘சாவித்திரி" (காவியம்) நூலினை பண்டிதர் சி. அப்புத்துரை அவர்கள் நயம் கண்டார்.
أص r- 181வது அறிவோர் ஒன்று கூடல் ད།
‘புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழின் பயன்பாடு’
உரை : திரு. ஐ. தி. சம்பந்தன் 09.10.2002 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு திரு. ஐ.திசம்பந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். au60öL6r MARKANDAN & CO (SOLICITORS & ADMINISTRATORS FOR OATHS) இன் நிறுவனர் திரு. எம். மார்க்கண்டன் அவர்களால் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட தொலைநகல் இயந்திரமொன்றினை (Fax Machine) திரு. எம். மார்க்கண்டன் சார்பில் திரு.ஐ.திசம்பந்தன் அவர்கள் சங்கத் தலைவர் கலாசூரி. இ. ).சிவகுருநாதன் அவர்களிடம் இந்நிகழ்வின் இறுதியில் கையளித்தார் ܠܐ
‘ஓலை’ பக்தம் 6
 
 
 
 

/ s s O a s
வில்லிசைப் புலவர் - கலாபூஷணம் சின்னமணி N
குழுவினரின் வில்லிசை "சத்தியவான் சாவித்திரி" 10.10.2002 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு ''
சங்கத்தலைவர் கலாசூரி.இ.சிவகுருநாதன் அவர். களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் செல்வி. பவித்ரா கிருபானந்தமூர்த்திதமிழ் வாழ்த்தையும் திரு.தா சண்முகநாதன் (சோக்கல்லோ சண்முகம்-ஆட்சிக்குழுஉறுப்பினர் வரவேற்புரையையும் திரு.ஆ.இரகுபதி பாலறிதரன் (பொதுச் செயலாளர்) நன்றியுரையையும் வழங்கினர்.
لاتة
‘ஓலை’ 8வது இதழ் வெளியீடு
10.10.2002 அன்று நடைபெற்ற சின்னமணி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியின் இறுதியில் சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பெற்றது. முதற்பிரதியை சங்க உறுப்பினரும் பிரபல கட்டிட ஒப்பந்தக்காரருமான திரு.எஸ். இலகுப்பிள்ளை அவர்கள் பெற்றுக்கொண்டார்.
صـ
བ།
r 182வது அறிவோர் ஒன்று கூடல்
1610.02 (புதன்கிழமை பிய 5.30)
பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் அவர்கள் ‘பாளி, சிங்கள மொழி இலக்கியங்களில் திருக்குறட் கருவூலங்கள்’ எனும் பொருளில் ஆய்வுரை நிகழ்த்தினார் لم
r
183வது அறிவோர் ஒன்று கூடல் கொழும்புத் தமிழ்ச் சங்கமும் திருமறைக் கலாமன்றமும் இணைந்து நடாத்திய கலா நிகழ்வுகள்
23.10.2002 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பின்வரும் கலாநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
இசை நாடகத்தில் இரச வெளிப்பாடு
1) சிங்கள கிராமியக் கலைவடிவங்கள் தமிழ் சிங்கள புத்தாக்க நடனம் -ܠ
لم
‘ஓலை’ பக்கம் 7

Page 6
கொழும்புத் தமிழ்ச் சங்கமும் சுடரொளி வெளியீட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய மூன்று நூல்களின் அறிமுக விழா
1. "நூல் தேட்டம்" - ஆசிரியர்.என்.செல்வராசா
(ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான ஓர் நூல் விபரப் பட்டியல்) 2. "யாழ்ப்பாணப் பொது நூலகம்" - ஆசிரியர்.என்.செல்வராசா
(வரலாற்றுத் தொகுப்பு) 3. "அகதிகளின் சோக வரலாறு" - ஆசிரியர் ஐதிசம்பந்தன்
(இனக்கலவரத்தின் அடிப்படையானது)
ஆகிய நூல்களின் அறிமுகமும் ஆய்வும்
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் (கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) துணைக் காப்பாளர், கொழும்புத்தமிழ்சங்கம் அவர்களின் தலைமையில் 26.10.2002 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திரு.எம்.செல்லச்சாமி அவர்கள் (பிரதித்தலைவர் இ.தொ.கா) கலந்து கொண்டார். இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள் மங்கல விளக்கை ஏற்றிவைக்க வரவேற்புரையை கொழும்புத் தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் திரு. ஆ. இரகுபதி பாலழறீதரன் நிகழ்த்தினார். தலைமையுரையைத் தொடர்ந்து சங்கத்தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்கள் நுால்களை வெளியிட்டு வைத்தார். முதற் பிரதிகளை முறையே புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர், திரு.க.ஜெயபாலசிங்கம், திரு.என்.பேரின்பநாயகம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூல் ஆய்வு பின்வருவோர்களால் நிகழ்த்தப்பட்டது.
நூல் தேட்டம் திரு.வி.ரி.தமிழ்மாறன் - முதல்நிலை விரிவுரையாளர் சட்டபீடம் - கொழும்புப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண பொது நூலகம் திரு.ஆ.சிவநேசச் செல்வன் - பிரதம ஆசிரியர், தினக்குரல்
அகதிகளின் சோக வரலாறு திரு. இளையதம்பி தயானந்தா - சிரேஸ்ட அறிவிப்பாளர்
*-இலங்கை ஒலியாப்புக் கூட்டுக்கியனம்
‘ஓலை’ பக்கம் 8

இலக்கியச் சந்திப்பும் - கலந்துரையாடலும்
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒக்டோபர் 22,23,24(2002) திகதிகளில்நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய முதலாவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த வெளிநாட்டுத் தமிழறிஞர்களுடான சந்திப்பும் கலந்துரையாடலும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் (25.10.2002) வெள்ளிக்கிழமை பி.ப.5.30க்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பின்வரும் பிரமுகர்கள் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
1.
2.
3.
பேராசிரியர் - டாக்டர் கவிக்கோ அப்துல் றகுமான்
மணவை முஸ்த்தபா - பன்னுரலாசிரியர்
பேராசிரியர் டாக்டர்-சேமு - முகமதலி (தமிழ்த்துறைத்தலைவர் - காய்தேமில்லத் கல்லூரி)
பேராசிரியர். மு.இ. அகமது மரைக்கார் (தமிழ்த்துறை - புதுக்கல்லூரி, சென்னை)
பேராசிரியை. நசீமா அகமது மரைக்கார்
கவிஞர் - இ. பதுருத்தின்
டாக்டர் - செம்மல்
முனைவர் அ.இரபியுதீன் (தலைவர், உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்)
“திருவள்ளுவரின் கடவுட் கொள்கை” எனும் தலைப்பில் திரு. தா.சண்முகநாதன் (சோக்கல்லோ சண்முகம்) அவர்கள் ஆய்வுச் சொற்பொழிவுநிகழ்த்தினார்.
184வது அறிவோர் ஒன்று கூடல் 30.10.2002 புதன்கிழமை பிய 530
أص
‘ஓலை’ பக்கம் 9

Page 7
நிகழவிருப்பவை
நவம்பர் 2002 சங்க நிகழ்ச்சிகள்
01.11.2002 - வெள்ளிக்கிழமை மாலை 5.30 மலேசியத் தமிழ் எழுத்தாளர் திரு. சை. பீர்முகம்மது அவர்களின் ஐந்து நூல்களின் அறிமுக விழா
06.11.2002 - புதன்கிழமை பிய 5.30
185 வது “அறிவோர் ஒன்று கூடல்'
08.11.2002 - வெள்ளிக்கிழமை பிய 5.30 94வது நூல்நயம் காண்போம் நூல் : நிதர்சனத்தின் புத்திரர்கள் (நாடக எழுத்துருக்கள்) நூலாசிரியர் : கந்தையா நூரி கணேகன் நயம் காண்பவர் : திரு. எஸ். பூரீபிரிந்தன் 1311-2002 - புதன்கிழமை பிய 5.30 186 வது 'அறிவோர் ஒன்று கூடல்'
2011.2002 - புதன்கிழமை பிய 5.30
187வது அறிவோர் ஒன்று கூடல்
எழுத்தாளர் பாலமனோகரன் அவர்களுடன் இலக்கியச் சந்திப்பும்,
கலந்துரையாடலும்.
22.11.2002 வெள்ளிகிழமை பிய 5.30
95 வது நூல்நயம் காண்போம்”
நூல் : சுதாராஜின் சிறுகதைகள் நூலாசிரியர் : சுதாராஜ்
நயம் காண்பவர் : நீபி.அருள்னந்தம்
23.11.2002 சனிக்கிழமை மாலை 6.00
14வது மாதாந்த தமிழிசை நிகழ்ச்சி
27.12002 புதன்கிழமை பிய 530
188வது அறிவோர் ஒன்று கூடல் - இலக்கியச் சொற்பொழிவு
“பாலைக்கலி” - மட்டுவில் ஆநடராசா அவர்கள்
29.11.2002 வெள்ளிக்கிழமை பிப530
96வது நூல்நயம் காண்போம்.
நூல் : “படைப்போம் பாடுவோம்' (சிறுவர்பாடல்)
நூலாசிரியர் : திரு.தி.சிவசாமி (தில்லைச்சிவன்)
நயம் காண்பவர் : திரு.இளையதம்பி தயானந்தா
- சங்கப்பலகை தயாரிப்பு : சி.சரவணபவன் (ஆட்சிக்குழு உறுப்பினர்)
‘ஓலை’ பக்கம் 10

தமிழியல் ஆய்வுத்துறையை ஊக்குவிக்க வேண்டும் என்று அறிஞர்களி. டையே எழுந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக 1952 இல் தமிழ்ப் பண்பாடு Tamil Culture என்னும் காலாண்டு ஆங்கில ஆய்வுச் சஞ்சிகையும், 1954 இல் சென்னையிலும் தொடர்ந்து இலங்கையிலும் தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும் தோன்றின. 1961 அக்டோபர் 28ம் திகதி இந்தியன் எக்ஸ்பிரஸ்' என்ற ஆங்கில நாளேட்டிலே , மலாயாப் பல்கலைக்கழக இந்தியவியல் துறையின் தலைவராகவும், சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்த இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராdifu Ji g56)gbg5ct, 2560fb/Tu Jabib 99.356TTi (Rev. Prof. Xavier S.Thaninayagam) தமிழியல் ஆய்வுகள் நவீனப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அதற்கென ஆண்டுதோறும் அனைத்துலகத் தமிழறிஞர்களின் மாநாடு ஒன்று நடைபெற வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டார்.
இதற்கான முதல் மாநாடு சென்னையிலே ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகத்திலே தான் நடைபெற வேண்டுமென விரும்பிய தனிநாயகம் அடிகளார் தனது முயற்சிக்கு அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்த பல்கலைச் செல்வர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் அவர்களின் ஆதரவை நாடினார். அவர்கள் இருவரும் சேர்ந்து அப்போதைய சென்னை முதல்வர் திரு.சி.சுப்பிரமணியம் அவர்களுக்குத் தங்கள் எண்ணத்தை அறிவித்தனர். ஆயினும் திரு.சி.சுப்பிரமணியம் அவர்கள் டில்லிக்கு மாற்றலாகியதால் சென்னையில் மாநாடு கூட்டும் முயற்சி தாமதமாகியது.
பின்னர் 1963ம் ஆண்டு சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் முதலமைச். சர் திரு.எம்.பக்தவத்சலம் தலைமை தாங்கிய கூட்டத்தில் தனிநாயகம் அடிகளார் தனது எண்ணத்தை முன்மொழிந்தார். முதலமைச்சர் உட்பட அங்கு கூடியிருந்த அறிஞர்கள் அனைவரும் இதனை வரவேற்று 1964தைத் திங்களில் மாநாட்டைச் சென்னையில் நடாத்துவதென முடிவெடுத்தனர். ஆனால் இம்முயற்சி இந்திய-சீன எல்லைப்புற யுத்தம் காரணமாக நிறுத்தும்படியாகி விட்டது.
இந்நிலையிலே, மலேசிய அமைச்சர் திரு.வெ.மாணிக்கவாசகம் அவர்களைத் தலைவராகவும், திரு.வி.செல்வநாயகம் அவர்களைச் செயலாளராகவும் கொண்டு இயங்கி வந்த (இந்தியப் பள்ளிகளின்) தேசியக் கல்வி 616Tiétéfai, abupabgig5iig, (National Education (Indian Schools) Develop
‘ஓலை’ பக்கம் 11

Page 8
ment Council) மலேசியாவில் இத்தகைய மாநாட்டைக் கூட்டுவதற்குத் தனிநாயகம் அடிகளார் வேண்டுகோள் விடுத்தார். மாநாட்டை நடாத்த மலாயாப் பல்கலைக்கழகம் முன்வருமானால் தேசியக் கல்வி வளர்ச்சிக் கழகம் அதற்கான நிதியைத் திரட்டித்தர ஆயத்தமாக உள்ளதெனத் தலைவர் டான் பூரீ வெ.மாணிக்கவாசகம் அறிவித்திருந்தார். இதனையொட்டித் தமிழறிஞர்களைக் கொண்ட ஓர் அனைத்துலக அமைப்பொன்றைத் தோற்றுவிப்பதற்குத் தனிநாயகம் அடிகளார் எடுத்துக் கொண்ட முயற்சி அவரது நெடுநாளைய கனவு 1964ம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற அனைத்துலக ஆசிய மண்டல மொழியறிஞர்களின் மாநாட்டில் (International Congress Orientalist) b6076) Tujip).
தனிநாயகம் அடிகளார் மதுரைப்பல்கலைக்கழகத்துணைவேந்தர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் மு.வரதராசனார்; பிரான்ஸ் நாட்டுப் பேராசிரியர் ஜின் பில்லியோட்சா (ProfJean Filliozat), இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக சமஸ்கிருதப் பேராசிரியர் தோமஸ் பரோவ் (Thomas Burrow); கலிபோர்னியா பெர்க்கெலி பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத - மொழியியல் துறைகளின் பேராசிரியர் முர்ரே பார்ண்சன் இமானுயாவ் (Murray Barnson Emeneau); ஒல்லாந்துநாட்டு லெய்டன் பல்கலைக்கழகத்துச் சமஸ்கிருதப் பேராசிரியர் பிரான்சியஸ் ஜாகோபஸ் கூய்ப்பர் (Francius Jacobus Kuiper); செக் நாட்டுத் தலைநகர் ப்ராஹாவில் உள்ள சார்லஸ் பல்கலைக் கழகத்தின் திராவிடத்துவப் பேராசிரியர் கமில் ஸ்வெலபில் (Kamil Zvelebil); வி.ஜ.அப்புமணியம், ஏ.சி.செட்டியார், டாக்டர் ஆஸர் (Prof R.E.Asher); ஏ.கே.இராமனுஜம், சாலை இளந்திரையன் ஆகியோர் கலந்துகொண்ட அமைப்புக் கூட்டத்தில் பேராசிரியர் பில்லி யோட்ஸாவைத் தலைவராகக் கொண்ட அனைத்துலக தமிழாராய்ச்சி நிறுவனம் 7-1-74 அன்று அதிகாரபூர்வமாகத் தோற்றுவிக்கப்பட்டது.
முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு
அனைத்துலகத் தமிழறிஞர்களையெல்லாம் ஒன்றுகூட்டிய தமிழாராய்ச்சி மாநாடு - கருத்தரங்கைக் கூட்டுவதற்குத் தனிநாயகம் அடிகளார் தொடர்ந்து எடுத்துக் கொண்ட முயற்சிகள் காரணமாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கொருமுறை இத்தகைய மாநாட்டைக் கூட்டுவது என அனைத்துலக தமிழாராய்ச்சிநிறுவனம்'தீர்மானித்தது. அதன் பெறுபேறாக,
1. உலகின் பல பாகங்களிலுமுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்களைச் சார்ந்த தமிழாராய்ச்சித் துறையில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் ஒன்றுகூடித் தங்கள் கருத்துக்களையும், அறிவையும் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவது.
‘ஓலை’ பக்கம் 12

2. தங்களுடைய ஆராய்ச்சி முடிவுகளைப் பகிர்ந்து கொள்ள ஓர்
அரங்கத்தை ஏற்படுத்தித் தருவது.
3. தமிழாராய்ச்சித் துறைகளில் ஆர்வத்தைத் தோற்றுவித்துப் புதிய
ஆய்வுத் துறைகளை அடையாளம் காண்பது.
4. அனைத்துலகரீதியில் அறிஞர்களிடையே கூட்டு முயற்சியிலான ஆய்வு
முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புக்களை ஏற்படுத்துவது ஆகியவற்றை மாநாட்டின் நோக்கங்களாகக் கொண்டு முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலே 1966ம் ஆண்டு ஏப்ரல் 16-23 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு அடிகோலிய பெருமை அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கே உரியதென்று பொதுவாகக் கூறினாலும் சிறப்பாக அப்பெருமைக்குப் பேராசிரியர் தவத்திரு. தனிநாயகம் அடிகளாரும், மாநாட்டுப் பொருளாளராக விளங்கிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் பொதுச் செயலாளரான திரு.ஆ. சுப்பையா அவர்களுமே உரித்துடையவர்கள்.
மலாயாப்பல்கலைக்கழகம், தேசிய கல்வி வளர்ச்சிக் கழகத்தின் இந்தியப் பிரிவு, அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகிய மூன்று அமைப்புக்களின் சார்பில் அம்மாநாடு கூட்டப் பெற்றது. மாநாட்டு அமைப்புக்குழுவின் தலைவராக அப்போது மலேசிய அமைச்சரவையில் பொதுப்பணி, தபால் தந்தி தொடர்புகள் அமைச்சராகவிருந்த அமரர் டான்று சம்பந்தன் அவர்களும், செயலாளராக வி.செல்வநாயகம் அவர்களுமே செயலாற்றினார்கள். மலேசியாவில் துங்கு அப்துல் ரஹமான் மண்டபத்தில் திறப்புவிழாக் கண்ட இம்மாநாடு முன்னாள் மலேசியப் பிரதமர்துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் தொடக்கி வைத்த பெருமை பெற்றது. மலேசிய அரசாங்கம் இம். மாநாட்டிற்கு 55 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கி ஊக்குவித்தது.
மாநாட்டைத் தொடக்கி வைத்த மலேசியப் பிரதமர் தனது உரையின் போது "யாதும் ஊரே யாவரும் கேளிர்!" என்ற கணியன்பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகளைத் தமிழிலே கூறி அதற்கு ஆங்கிலத்தில் விளக்கமும் Gabir(Bg5gji (All the earth is my homeland and all Its people my Kinsmen) பாராட்டியது தமிழ் கூறு நல்லுலகு என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய நிகழ்ச்சியாகும்.
தமிழியல் ஆய்வுத்துறையிலே ஒரு புதிய பரிணாமத்தை இந்த முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஏற்படுத்திற்று. அன்றிலிருந்து அன்னைத் தமிழ் புதிய எழுச்சியுடன் உலாவரத் தொடங்கினாள்.
S
‘ஓலை’ பக்கம் 13

Page 9
உருவகம்
செங்கதிரோன்
இரட்டை மாட்டுவண்டியோட்டப் போட்டி களை கட்டிற்று. பார்வையாளர் கூட்டத்தின் கைதட்டலும், வாய்ச்சத்தமும் வானைப்பிளக்க முன்னணியில் சென்று கொண்டிருந்த வண்டி மேலும் வேகமாக வெற்றிக் கம்பத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
மாடுகள் இண்டும் வேகமாகப் பாய்ந்து பாய்ந்து ஓடிக் கொண்டே தங்களுக்குள் உரையாடிக் கொண்டன.
"பார்த்தாயா! மக்கள் காட்டும் உற்சாகமும் ஊக்கமும் எம்மை நோக்கித்தான். நாம் இருவரும் இப்படி வேகமாக ஓடாவிட்டால் வெற்றிக் கம்பத்தை நெருங்க முடியுமா?"
இதனைச் செவிமடுத்த சில்லுகளிரண்டும், "உங்கள் ஒட்டத்திற்கு ஈடுகொடுத்து நாங்கள் வேகமாகச் சுழலாவிட்டால் நீங்கள் வேகமாக ஒடி என்ன பயன்? நாங்கள் தான் அடையப் போகும் வெற்றிக்குக் காரணமானவர்கள்" என்று ஒரே குரலில் சொல்லிச் சிரித்தன.
உரையாடலைக் கேட்ட வண்டியோட்டி வாயைத் திறந்தான். "நான் ஒரு மனிதன் மலைபோல் இங்கு இருக்கின்றேன் என்பதை மறந்து விட்டா மமதையோடு பேசுகிறீர்கள். நான் இல்லாவிட்டால் ஏ! மாடுகளே! உங்களால் ஒட முடியுமா? சில்லுகளே! நீங்களும் தான் சுழல முடியுமா?
வண்டியோட்டியின் கையிலிருந்த பிரம்பும் தன்பாட்டிற்கு விட்டு வைக்கவில்லை.
"என்னால் ஓங்கி மாடுகளின் முதுகில் சாத்துகிறபோதுதானே அவை வேகமாகக் கால்களை எடுத்து வைக்கின்றன. நான் இல்லாமல் வெறுங்கைகளால் வீசி, மாடுகளை ஒட்ட முடியுமா? வெற்றியில் எனக்கும் தான் பங்குண்டு" என்றது.
முழு உரையாடலையும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த அச்சு அமைதியாகச் சொன்னது.
"என்னை மறந்து விட்டு எல்லோரும் பேசுகிறீர்களே!" அச்சின் கூற்றை எவரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. வெற்றிக்கம்பத்தை எட்ட இன்னும் சிறிய இடைவெளிதான் இருந்தது. "ஐயோ!" - பார்வையாளர்கள் அனைவரும் ஒருமித்து ஒலமிட்டார்கள்.
‘ஓலை’ பக்கம் 14
 
 

அந்தோ! ஓட்டப்பாதையின் ஒரத்தில் வண்டி குடை சாய்ந்து விட்டது. குடை சாய்ந்த வண்டியைச் சுற்றிக் கூட்டம் கூடிற்று.
வண்டி நிலத்திற் சரிந்து கிடந்தது. சில்லொன்று அப்பால் வீசப்பட்டுக் கிடந்தது. மாடுகளிரண்டும் கால்கள் பின்ன வெருண்டு கொண்டு நின்றன. வண்டியோட்டியின் கையிலிருந்த பிரம்பு இரண்டு துண்டாய் முறிந்து ஒர் மூலையில் முனகியது. விழுந்த வண்டியோட்டி ஒருவாறாகத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழும்பி நொண்டியவண்ணம் மெல்லமெல்லநடந்து கடையாணியைத் தேடினான். நிலத்திற் கிடந்த கடையாணி வண்டியோட்டியைப் பார்த்துக் கேளாமற் கேட்டது.
"நான் கழன்று விட்டதை நீங்கள் கவனிக்கவேயில்லையே!" மாடுகள் இரண்டும் ஆளையாள் பார்த்து அசடு வழிந்தன. பிரம்பு இப்போது பேசாமற் கிடந்தது. வண்டியோட்டி தலையிலே கையை வைத்தான்.
& &W &saw YouGoirlGir Markandan & Co (Solicitors & Administrators For oaths) Bq61607 if 5ub. எம். மார்க்கண்டன் (LLB) அவர்கள் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கென தொலைநகல் இயந்திரGuditor sisodeOT (Fax Machine) அன்பளிப்புச் செய்திருந்தார். இவ்வன்பளிப்பினை ஏற்பாடு செய்து 经、 ※ உதவிய திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்கள் 09.10.2002 அன்று பி.ப.5.30 மணிக்கு நடைபெற்ற 181 வது 'அறிவோர் ஒன்று கூடல்' நிகழ்வின் போது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் திரு.எம்.மார்க்கண்டன் அவர்களின் சார்பில் தொலைநகல் இயந்திரத்தினை சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களிடம் கையளித்தார்.
‘ஓலை’ பக்கம் 15

Page 10
олib Sayby outbu.
பச்சை ஓலை கண்டனன் பரிம எரிப்பைச் சுவைத்தனன் இச்சை திர யானுமோ எழுத்தெ ழுத்தாய்ப் பார்த்தனன் மெச்சி எழுத விரும்பினன் மெல்ல நிறுத்திக் கொண்டனன் பச்சை பச்சையாய்வரப் பார்த்துப் பின்னர் எழுதலாம்
மூத்த புலவன் வைகசி முன்பு வாழ்த்தி வணங்கினன் பார்த்து மகிழ்ந்துநின்றயான் பலிதம் இன்று பார்க்கிறேன் ஏத்து சங்கத் திவ்விதழ் இன்னும் பொலிந்து ஒளிருக காத்திருக்கும் புலமையோர் கருத்தில் நிறைந்து வாழிய,
வெண்பா யாப்பில் அஞ்சலி விரும்பு புலவர்க் கமுதமாம் அண்ணல் பொன்னம் பலத்தினை அணையும் இரங்கல் ஐயையோ
விண்ணை முட்டி ஒலித்தது வீரன் திறனைத் தெரித்தது கண்ணை இழந்தோ மெனவெமைக் கருத வைத்துக் கனன்றது.
தவில்கணேசன் தயவினில் தளிர்த்த தவிலின் தனியிசை நவில்வதற்கிங் கரிதிதை நாங்கள் போற்றிச் சுவைக்கலாம் எவருமறியச் சொல்வளம் எளிதாய் ஏற்றுப் பெருக்கவிங் கவிரும் முறைமை அளவினோ டரிதா யமைத்துக் கொள்ளலாம்.
அருமை தெரிந்த போதினில் அணைத்து மதிப்போம் அன்னையை பெருமை கண்டோம் கதையினில் பெறுக வெற்றி தருவையே திருவாம் மகனே சண்முக தேர்ந்தோம் உவகை கொண்டனம் இருமைச் சார்பு முண்டுனக் கெழிலோ டொன்றி வாழிய,
வாழி ஒலை நீடுழி வளம்நிறைந்து வாழிய ஆழி சூழும் உலகினில் அரிதாஞ் செய்தி தாங்குக ஊழி வந்த போதிலும் உவப்பி லவற்றை உதறுவாய் காழி வேந்த னாமெனக் கருது நெறியில் வாழிய.
‘ஓலை’ பக்கம் 16
IT
 
 
 

. குழந்தையின் பெயர்கள் அன்று கொஞ்சிடும் தமிழில் இன்றோ
பழந்தமிழ் முற்றாய்நீக்கிப் பல மொழிப் பெயரும் வைப்பார்! களங்கமே - இழிவே! இந்தக் கலியுகம் மறைந்திடாதோ? விளங்கிடாப் பொருளில்லாப்போர் வெட்கத்தைத் தரவே காணோம்!
கவுதமன், தனுசான், மேனன், கபில், டயான், சுவிசன், ராஜி, சவுமியன், சுதர்சன், லிங்கன், தயாநிதி, சுமநாத், ரூபன், பவுணிகன் துஸாந்தன், பாலன், மந்தரன், மயூரன், தீபன்!
யோபிதா, அஜித்தா, ரூபா, யுவதியா, சுகன்யா, ரேகா, கோபியா, பிறேமா, திவ்யா, கோமளா, வினுஷா, மாயா, நாபிதா, மிரண்யா, றஞ்சி, நாத்தினா, மிருணா, ஜீவா, ஆபிதா, வனஜா, நீலா, அபிநயா, புவனா, ராதா!
. இந்தியா தமிழா வேறா? எம்மொழி - என்ன ஓசை?
எந்தவோர் மொழி என்றாலும் எல்லாமே சரிதான் என்றால் செந்தமிழ்க்கவலை இங்கேன்?திருந்திய வாழ்க்கை இங்கேன்? அந்ததோ தமிழே நீ போய் அவனியில் எங்கேனும் வாழ்!
. என்றுதான் சொல்ல வேண்டும்! இதைவிட வழிவேறில்லை!
அன்றுபோல் அம்மையப்பன் ஆகவும் பழசென்றாலும் இன்றுவேறான நல்ல இன்தமிழ்ப் பொருளேடிட்டால் நன்றலோ? பற்றில்லாமல் நம்மைநாம் அழிக்கலாமோ?
. அம்பி, நல்அப்பன், மாறன், அருள், ஊரன், அழகன், பாரி, நம்பி, நல் இன்பன், ஏந்தல், நாவலன், புலவன், வேலன், நம்பழம், சேரன், சோழன், நக்கீரன், குரிசில், துரயோன்!
அழ, கறி, வன்பு, அல்லி, அமுது, அம்மை, அரசி, ஆத்தி, எழிலி, ஏந்திழையாள், கிள்ளை, இன்மொழி, இதழி, செல்வம், குழலி, சேயிழையாள், தங்கம், குழலியாள், ஐம்பால், முத்து, பழநிலா, வடிவு, செந்தி பாவை, மாமணியாள், மங்கை
. தமிழெனில் பொருளிருக்கும் சரக்கு நம்மிடத்திலுண்டு! அமுதெனப் பற்றுவைத்தே அவைசுவைப்பதனைவிட்டு எமதுமானத்தை விட்டே இரவிலில் வாழுகின்றோம்! தமிழரால் தமிழ் வாழாமல் தாழுமேல் தலை எழுத்தே!
‘ஓலை’ பக்கம் 17

Page 11
O pTLD56
வான் ւյժ փ கொண்ட யாழ்நகருக்கு வந்து சேர்ந்திட்டதை நினைக்கும் போதே இவன் மகிழ்ச்சிக்காளாகினான். கொழும்பிலிருந்து பேருந்தில் இங்கு வந்து சேர நீண்ட ஒரு பொழுதைக் கழித்துக் கஷ்டப்பட்டிருந்தாலும் மணிக்கூண்டு வீதியைக் கண்டதுமே இவனுக்கு உள்ள உடலலுப்பெல்லாமே வெளியே காற்றாய்ப் பறந்து விட்டது மாதிரித் தெரிந்தது. மணிக்கூண்டு வீதியை பேருந்து தாண்டிச் செல்கையில் உள்ளே இருந்த இவன் உடனே அவ்விடம் நோக்கி நேரம் பார்த்தான் பன்னிரெண்டு மணி என்று பளிச்சென்று கடிகாரத்தில் தெரிகிறது. இப்போது புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுக் கிடக்கும் கோபுரம் பிரித்தானியரின் பாரம்பரியத்தையும், நாகரிகத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறதாக இவன் எண்ணியதை விட, அதற்கும் மேலாக நடந்த கொடூர யுத்தத்திலும் அது காப்பாற்றப்பட்டதாயுள்ளதே என்பதுதான் அவனுக்கு மிகவும் ஆச்சிரியத்தையளித்தது. இதையும் அவன் எண்ணி முடிப்பதற்குள் யாழ் மத்திய பேருந்து நிலையத் தரிப்பிடத்துக்கு அந்த வாகனம் வந்தடைந்து விட்டது. அது அங்கே நின்றதும் மணிக்கணக்கில் அதற்குள் அடைபட்டுக் கிடந்த பிரயாணிகள் கூழாங்கற்கள் சரிந்தது போல இறங்கிக் கொண்டார்கள். அப்படியே அவர்களில் ஒருவனாக இவனும் இறங்கிக் கொண்டான். அந்த இடம் இவனுக்கு இப்போது புதுப்பொலிவு பெற்றதைப் போலத் தான் பார்ப்பதற்கு தெரிகிறது. அங்குமிங்கும் புதினம் பார்த்ததோடு அச்சுவேலிக்குப் போகவென்று பெயரெழுதிப் போட்டுக் கிடந்த வாகனத்தைப் பார்த்து ஏறிக் கொண்டான். அங்கே இருக்குமிடத்தில் இவனுக்கு தினப்பத்திரிகையை கொண்டுவந்து ஒருவன் விற்றான்.
"எவ்வளவப்பா"
"ஐந்து ரூபாய்" கொடுத்துவாங்கி மேலோட்டமாக தலைப்புச் செய்தியை மாத்திரம் படித்து பத்திரிகையை மடித்துக் கைப்பைக்குள் வைத்துக் கொண்டான். வெளியே ஒலிபெருக்கியில் சினிமாப்பாட்டு பாடிக்கொண்டிருந்தது. அது முடிந்ததும் ஏதேதோ கடை விளம்பரங்களை அடுத்தாற்போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சத்தம் இவனது காதையும் குடைந்தது.
‘ஓலை’ பக்தம் 18
 

அலைந்து அலைந்து அங்கம் உலைந்து போனாலும் சுறுசுறு எறும்புகளைப் போல் அங்கே நடந்து திரிந்து கொண்டிருப்பவர்களை இவன் பேருந்துக்குள் இருந்தவாறே பார்த்தான். அவர்களின் ஓர்மத்தை மனதுக்குள் பாராட்டிக் கொண்டு தன் இனத்தைப் பார்த்து இவன் பெருமை கொண்டவனாய் அங்கிருந்தான். இந்த நேரம் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு சாரதி உள்ளே ஏறி இருக்கையில் அமர்ந்தார். பிறகு இயந்திரத்தை இயக்கி பேருந்தை அவர் நகர வைத்தார். ஆரிய குளம் தாண்டி பருத்தித்துறை வீதி வழியாக இப்போது அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இவன் யன்னல் வழியாக வெளியே பலதையும் பார்க்கிறான். ஆனால், அவன் மனமோ குதிரைப் பந்தயம் செய்து வன்னியில் இருந்து வரும்போது பார்த்த காட்சிகளையே ஞாபகத்தில் கொண்டு வந்தது. இந்த நாட்டுக்குள் வந்து உருப்படியாக ஒன்றையும் பார்த்து அவன் திருப்தியடைந்தவனாயில்லை. ஷெல் விழுந்து சிதறியதால் சிதிலமடைந்த வீடுகளும், கட்டடங்களும் நிலப்பரப்புக்குக் கிட்டவாக வந்து வெடித்துச் சிதறும் எரிகுண்டுகளால் கருகிப் போய்க் கிடக்கும் பனைகளும் தென்னை மரங்களும் இப்போதும் இவன் மனதை விட்டகலாமலேயே இருந்து கொண்டிருந்தன. பச்சைப் புண் மாதிரித்தான் அதுவெல்லாம் உடலையும் வலித்தது அவனுக்கு. நல்லூர் கடந்து இருபாலையும் வரக்கிட்டவாக தன்வீட்டு நினைவுகள் தான் முழுவதுமாக இவனுக்கு வருகிறது. வீடு எப்படி இருக்குமோ? என்று இந்த நேரம் ஏங்கத் தொடங்கினான். "வீட்டுக்குக் கனக்கச் செலவழிச்சுத்தான் உருப்படுத்த வேணும். வல்லுசாய் பார்த்தால் ரெண்டு லட்சம் செலவு செய்ய வரும் போல கிடக்கு. என்று உறவினர் ஒருவர் தபால் அட்டையில் எழுதி இவன் கொழும்பில் இருந்த போது போட்டிருந்தார். "நகை நட்டுகளை வித்துத் துலைச்செண்டாலும் அதுகளை வடிவாச் செய்து ஒப்பேற்றிப் போட்டு எங்கட சொந்த வீடு வழிய போய் இருப்பமப்பா இங்கின கூலிக்கெண்டு வீடெடுத்திருந்து சீயெண்டு போச்சு இந்த இடங்களிலயிருந்து இவ்வளவு நாளும் நாங்கள் பட்டதுகளெல்லாம் காணும்" என்று இவன் மனைவியும் ஒருநாள் கண்களில் ஈரம்பனிக்கச் சொன்னாள். பிள்ளைகளும் "எங்கட வீட்ட போவமப்பா" என்று விளையாட்டு விளையாட்டாக இவனிடம் வந்து சொல்கிறார்கள். சின்னப்பிள்ளைகள் அவர்கள் ஒருவனுக்கு ஒன்பது மற்றவனுக்கு எட்டு என்றுதான் வயது இருக்கும். அங்கே இந்த அருமந்த செல்வங்கள் பிறந்து ஒன்று இரண்டு வயதாவதற்குள்ளேயே இடம் பெயர வேண்டியதாய் வந்து தொலைத்துவிட்டது. கொழும்புக்கு வந்து ஏழு வருடங்கள் அவர்களுக்கு இப்போது முடிந்து விட்டது. பிள்ளைகளுக்கென்றால் பிறந்த ஊரும் தெரியாது வீடும் தெரியாது. என்றாலும் மண்வாசனை இருக்கிறதே ... எங்கே இருந்தாலும்
"gá06v” Uású 19

Page 12
பரம்பரைக்கும் அது இருக்கும் போலும். ஏனென்றால் இவனும் மனைவியும் ஊரைப்பற்றியும் தங்கள் வீட்டைப்பற்றியும் கதைக்க அவர்களும் ஊதுபத்தி மணம் பிடித்தது மாதிரி அந்த மண்வாசனையையறிந்திருக்கிறார்கள். கொஞ்ச நாட்களாக அதையே கேட்டுக் கதைத்துக் கொண்டு தகப்பனையும் அங்கே இருக்க விடுகிறார்களில்லை. அதனாலேயே ஒருக்கால் போவோம், போய்ப் பார்ப்போம்- வீட்டைத் திருத்துவோம், -என்று திட சிந்தனையோடு இவன் இங்கே வரவெளிக்கிட்டான்.
நீர்வேலி கடந்து போயிற்றா? என்று மனதில் எழுந்த கேள்வியோடு அவன் தன்னை அந்த நினைவில் இருந்து சுதாகரித்துக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட ஐயத்தைப் போக்க இருபக்கத்துக் கண்ணாடி வழியாகவும் கண்ணோட்டினான். வலப்பக்கமாக உள்ள தோட்டத்துக் காணிகளில் புது வாழை மரங்கள் வளர்ந்து நன்றாய் இலைகள் கொண்டிருந்தன. கன்னி வாழை. களின் இலைகளெல்லாம் அவனை வரவேற்பது போல் ஆடியும் அசைந்தன. இந்த இடத்தில் வெம்மை தணிந்து குளிர்ச்சியைப் பெற்றது அவன் உடல், இன்னும் அந்தப் பேருந்து வேகமாய் விரைகிறது. அவன் ஆசைகளும் அதிகமாயின. ஊரில் பலரையும் போய்ப்பார்க்க வேண்டும் பேசவேண்டும் என்பதோடு அங்கே எவ்வெவ்வகையான சாப்பாடுகளுண்டோ அவ்வவ்வகையெல்லாம் ஒன்றும் விடாமல் வாங்கிச் சாப்பிட வேண்டும் என்றிவன் நினைக்கிறான். அந்த நினைவே முடிவு பெறமுன் ஆவரங்கால் சிவன் கோவி. லடிக்கும் பேருந்து வந்து விட்டது கோயிற் கோபுரத்தைப் பார்த்தவுடனே சகல உலக விசாரங்களும் அகன்று ஒருமித்த மனதுடன் தியான உணர்வு அவனுக்கு மேலெழுந்ததாகி விட்டது கண்களை மூடிக் கொண்டு பக்தியோடு சிவ சிவ என்றான். மனமும் உடலும் சுகம் பெற்றதைப் போல் கொஞ்சநேரம் இருந்தது. அதற்குள்ளாக "அச்சுவேலி இறங்குங்கோ" என்று சொல்கிறார் நடத்துநர். அச்சுவேலியாம் என்று இவனுக்குள்ளே ஒருவர் சத்தம் போட்டு உசுப்பி விட்டதைப் போல் இருந்தது. இமை மடல்களைத் திறந்து அங்கே கடைகளைத் தான் இவன் முதலில் பார்த்தான். இறங்கி அந்த இடத்தி. லிருந்து பிறகு அவன் நடக்கத் தொடங்கினான். வீடு எட்டவல்ல கிட்டத்தான் என்பதால் உடம்பும் வேர்க்காது தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். ஐயையோ என் வீடா இது? வீட்டருகில் நிற்கிற மாமரத்திலிருந்து ஒரு மாங்காயேனும் ஒட்டின் மேல் விழுந்து உடைந்தால் உடனே அதைப் புதிதாய் வாங்கிப் போட்டிடுவேனே ஆனால் இப்போ வீட்டிலிருக்கும் அரைவாசி ஒடுகளையே எங்கே போனதென்று காணேல்லயே. போகட்டும் அதுதான் இல்லையென்றால் வீட்டுக் கதவுகள் எங்கே போயிற்று?ஜன்னல் அது கூட இல்லையே? ஒருபக்கச் சுவர் எப்படி உடைந்தது? என்ன நடந்தது அந்தச் சுவருக்கு? இப்படி இடிந்து விழுந்து கிடக்கிறதே. இதில மாத்திரம் நிண்டு கொண்டு இப்பிடியெல்லாம் குழம்பிடாத இன்னும் இருக்கும் போய்ப்பார் என்கிறது இவன் மனம். இவன் சகலத்தையும்
‘ஓலை’ பக்கம் 20

ஒவ்வொன்றாகப் போய்ப் பார்க்கிறான். இதையெல்லாம் பார்க்க வேண்டுமென்றுதானே நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் பிரயாணம் பண்ணி ஒவ்வொரு வாகனமாக ஏறி இறங்கி நடந்து களைத்து கஷ்டப்பட்டு இவ்விடமாக அவன் வந்தான். இவன் கிணத்தைப் போய்ப் பார்க்கிறனாக்கும். இந்தக் கிணறு இருக்கிறதே அதிலே உள்ள தண்ணிர் முன்னம் குடிக்க இளநீர் மாதிரி இருக்கும் இப்போது பாசிப் படைகள் அடைந்து கிணறே இருண்டு கிடக்கிறது. கிணற்றடியில் துலாவுக்கென்று நட்ட பூவரசுகள் கிளைகளை நீட்டி குழைகளையும் கிணற்றுக்குள் குப்பை போட்டிருக்கிறது. அதைப் பார்த்து விட்டு வீட்டுக்குள்ளே திரும்பவும் வருகிறான். ஏதாவது வீட்டுச் சாமான்கள் கிடைக்குமா? என்கிற நப்பாசையை மனதில் தேக்கி வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் தேடித் திரிகிறான். உமியைப் பிடைத்து அரிசி தேடுவது மாதிரி அவன் செய்கை இருக்கிறது. இதுவீடா காடா என்ற ஐமிச்சமும் அவனுக்கு வருகிறது. இதையெல்லாம் யாராவது ஒருவருடன் கதைத்துப் பகிர்ந்துகொண்டால்தான் தன் மனப்பாரம் குறையும் என்பதாக நினைத்துக் கொள்கிறான். உடனே வெளியில் வர வெளிக்கிடுகிறான். வரும் போது வாசலில் நின்ற தன்வீட்டுமாமரத்தையும் ஒரு கணம் அதிலே நின்றபடி பார்க்கிறான். கடைசி முறை அது காய்த்ததை நினைவில் வரவழைத்து ஒரு பொழுது நிறுத்தினான். இடம் பெயரும் போது அப்படியாக அந்த மரம் மூச்சாய்க் காய்த்திருந்தது. கெட்டுக்களை தரையில் இழுத்துக் கிடத்தி விடும் போலிருந்தது. இவன் இடம் பெயர்ந்த காலத்தில் இந்த மரம் காய்த்த கடைசிக் காய்ப்பு. ஒரு பழம் அதில நாங்கள் சாப்பிடவும் கிடைக்கேல்லேயே" என்றதாய் விசனப்பட்டுக் கொண்டு அடுத்த வீட்டுக்காரரைப் பார்க்கவென்று அவன் போகிறான். சுப்பர் தன்னுடைய வீட்டுக்கு வந்து விட்டதாகத்தான் தெரிகிறது. வீட்டுக்குள் இருந்து பல குரல்கள் வெளியேயும் கேட்கின்றன. கயிற்று வட்டத்தை மேலே துரக்கிவிட்டு படலையை இவன் திறக்கிறான். திறந்ததும் ஒரு பக்கம் கீழே சரிந்து படலை விழுந்துவிட்டது. அதைத்துக்கிநிமிர்த்தி மீண்டும் வளையத்தை மாட்டி விட்டு அவன் உள்ளே போனான். மண்ணடைந்து கிடக்கும் மண்வெட்டியைத் தட்டிக் கொண்டு ஆட்டுக்கொட்டிலின் பக்கமாகநின்று சுப்பையர் இவனைப்பார்க்கிறார். அந்தத் தொழுவத்தின் ஓர் அந்தத்தில் பலாக் குழையும் மறு அந்தத்தில் வேப்பிலையும் கட்டப்பட்டிருக்கிறது. அளவான இரண்டுகுட்டி ஆடுகள் அவைகளிலே இருந்து குழைகளை தின்கின்றன. அதையெல்லாம் இவன் பார்க்கிறான். பழைய வாழ்க்கை மீண்டும் இப்படியே எல்லோருக்கும் துளிர் விட்டு வருமா? என்ற கேள்விக்குறியோடு அதிலே நின்றபடி "சுப்பையாண்ணை!" என்று அவரை அவன் கூப்பிட்டான். காந்தம் போல் அந்தக் குரலில் இழுபட்டுக் கொண்டு அவன் நின்ற இடத்துக்கு சுப்பையா வருகிறார்.
"ga06v” Uá4ó 21

Page 13
குடங்கிப் படுத்திருந்த நாய் எழும்பி அவனைப் பார்த்துக் குரைக்கிறது. "சீ.போ." அவர் வெருட்ட நாயும் அவனை நன்றாகப் பார்க்கிற்து. நல்ல உடைகளை அணிந்து அசத்தலாக இருந்த அவனைப் பார்த்து யோசித்துக் கொண்டு அவனுக்குக் கிட்டக் கிட்டவாய் அவர் வந்துவிட்டார். நெற்றியிலே கையை வைத்து கண்ணாடிக்கு நிழல் விழுத்திக் கொண்டு நீறுபூத்த கண்களால் அவனைப் பார்க்கிறார் அவர். "சுதாத்தம்பியே வாருமடி" என்று இப்போது அழைக்கிறார். அவரது குரல் தழைந்து போய் இருக்கிறதையும் துயரபாரம் கண்களில் தெரிவதையும் இவன் அவதானிக்கிறான். எப்படி இருக்கிறியள்? எப்ப வீட்டுக்கு வந்தியள்?" "மூண்டு மாதமாகுதடிராசன்" இதை எவ்வளவோ அன்பாகச் சொல்கிறார். "வாரும் உள்ள வாரும்" என்று மீண்டும் அவனை அவர் அழைக்கிறார். "ஓம்", போட்டுக் கொண்டு இவனும் அவர் வீட்டு வாசலுக்குக் கிட்ட வாய்ப் போக நடக்கிறான். அவரது பிள்ளைகளெல்லாம் அந்தக் காலத்து வேடர்கள் மாதிரி மண்விறாந்தையில் குந்திக் கொண்டிருக்கிறார்கள். "தம்பிக்குக் கோப்பி போட்டுக் கொண்டாருங்கோ" என்று சொல்லியபடி ஒரு பக்கீசுப் பெட்டியை அவர் கொண்டு வந்து வெளியில் வைக்கிறார். "ஒரு சாமானும் இந்த வீட்டில இருக்கேல்ல" என்று சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அவர் சொல்கிறார். "இடம் பெயர்ந்து ஒண்டும் நாங்கள் பிறகு தேடவும் வசதி வரேல்ல" பிறகும் மனவருத்தத்தோடு சொல்கிறார். சுப்பையரின் கடைசி மகன் தேங்காய் சில்லையும் வைத்து புழுக்கொடியல் தின்று கொண்டிருக்கிறான். அவனைக் கண்டுவிட்டு நன்றாக அவனைத் தெரிந்தவன் போல் தேங்காய்ப்பால் கடவாயிலிருந்து ஒழுகச் சிரிக்கிறான் . இப்போது அந்தக் குடும்பம் முழுதுமே அவனைச் சுற்றி வட்டம் போட்டு நிற்கின்றனர். ஒருவாண்டுப் பயலும் அதற்குள்ளே நிற்கிறான். "ஆர் இந்தப் பிள்ளை?இவன் கேட்டவுடன் பேரன் என்கிறாள் சுப்பையாவின் மனைவி. சொல்லிவிட்டு அவள் மூக்கைச் சிந்துகிறாள். "அவளுக்கு ஏன் இப்படியெல்லாம் தலையில வந்து விழுந்துதோ தெரியேல்லயப்பு" என்று சொல்வதைத் தொடர்ந்து பொல பொலவென்று மீண்டும் அவள் கண்ணிரைச் சிந்துகிறாள். அதைப்பார்க்கச் சகிக்காமல் உடன் இவன் எங்கேயோ பார்க்கிறான். புழு அரித்தது மாதிரி பழைய நினைவுகள் அவனை குடைய ஆரம்பிக்கின்றன. சுப்பையாவின் மருமகன் கிளிநொச்சியில் இடம்பெயர்ந்து இருக்கும் போது ஷெல் விழுந்து இறந்ததை கொழும்பிலிருந்தவாறே முன்பு இவன் அறிந்திருந்தான். இந்த முட்டுப்பட்ட குடும்பத்தில் அவளும் பிள்ளையும் எப்படி இனிச் சீவிக்கப் போகிறார்கள்? அவளுக்கொரு கலியாணமென்றாலும் இனி மேல் ஆகுமா?
‘ஓலை’ பக்கம் 22

இங்கு கன்னிப் பெண்களே மாப்பிள்ளை கிடைக்காது உரிய திருமண வயதைக் கடந்து நிற்கும் போது விதன்வக்கு மறுவாழ்வு கிடைப்பது இலகுவில் எப்படிச் சாத்தியமாம்? என்று கவலையோடு நினைத்துக் கொண்டு அவன் இருக்க. அவள் தான் கோப்பியைக் கொண்டு வந்து இவனுக்குக் கொடுக்கும்படி தாயிடம் கொடுத்தாளாக்கும். தாய்தான் இவனுக்கு முன்னால் நின்று கோப்பிக் கோப்பையை நீட்டுகிறார். மரியாதையாக இவனும் அதைக் கையில் வாங்கி கோப்பித் தண்ணியை வாயில் ஊற்றினான். கோப்பி நன்றாகத் தான் இருந்தது. ஆனால், அவனால் அதை ஒழுங்காகக் குடிக்கத்தான் முடியவில்லை. மனம் மிகவும் அவனுக்கு வேதனைப்பட்டது. "நான் போயிற்று நாளைக்கு வாறனம்மா" என்று அவன் சுப்பையாவின் மனைவியைப் பார்த்துச் சொன்னான். அவள் கையைப் கட்டிக்கொண்டு நின்றபடி "சரியப்பு" என்கிறாள். கொஞ்சம் தொலைவில் நின்று கொண்டு மகளும் இவனைப் பார்த்தபடி சோகமாய் நின்று கொண்டிருக்கிறாள். அவளுக்கும் இவன் விடைபெற்றுக் கொள்வது போல் தலையை ஆட்டுகிறான். அவளும் அதற்கொத்ததாய் வெறுமைப்பட்ட ஒரு சிரிப்புச் சிரிக்கிறாள். இவன் கடைசியாக சுப்பையாவின் கையை அன்புடன் பற்றி தடவி விட்டு விடை பெறுகிறான்.
அவன் போக வென்று வெளிக்கிடும் போது. "இங்க தங்கலாம் தானே தம்பி" என்கிறார் சுப்பையா. "உங்களுக்கெதுக்குச் சிரமம் நான் நாளைக்கு வாறன்" என்கிறான் இவன். அப்படிச் சொல்லிவிட்டு வெளியே போய் அந்த வீட்டு ஒழுங்கை வழியாக இவன் நடந்து கொண்டிருக்கிறான். இனி எங்கே போவது என்று ஒன்றுமாக அவனுக்குத் தெரியவில்லை. ஒரு விட்டேற்றியான மனோநிலையில் அவ்வீதி வழியாக இவன் நடந்து கொண்டிருக்கிறான். தமிழர்களின் சமுக அந்தஸ்து , செல்வம். வள ஆதாரங்களை கெடுத்தவர்களை நினைத்து இவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வருகிறது. அவர்களையெல்லாம் நினைத்து மனதுக்குள் சபித்தபடி கால்போன போக்கில் அவன் நடந்து போய்க் கொண்டிருக்கிறான். மேலே அத்துவானம் போல் அவன் மனமும் ஒன்றுமே இல்லாத வெறுமை நிலைக்கும் போய் விட்டது. எங்கோ ஒரு சூனியப் பிரதேசத்தில் புகுந்து சிக்குண்டவனைப் போல் இப்போது அவன் தன்நிலை மாறியிருந்தான்.
স্ত্ৰ৯
‘ஓலை’ யச்சம் 23

Page 14
பன்மொழிப்புலவர்.த.கனகரத்தினம்
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்று தொல் காப்பியர் கூறுகிறார். அவருடைய காலத்தில் சொற்கள் எல்லாம் காரணகாரியத் தொடர்புடைய பொருள் குறித்து நின்றன. நாளடைவில் சில சொற்களுக்குரிய காரணம் மறக்கப்பட்டுவிட்டது. பிற்காலத்தில் வளர்ச்சி பெற்ற விஞ்ஞானம் போன்ற துறைகளில் இடுகுறிப் பெயர்கள் பெருந் தொகையாக ஆக்கப்பட்டுள்ளன. இதனால் இலக்கண வழக்கை வைத்தே சில சொற்கள் பிழையானவை, சில சரியானவை என்பதைக் கூறமுடியும்.
வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாகலான்' எனத் தொல்காப்பியம் கூறும்.
அப்போது என்பது அப்போ, அப்ப எனப் பேச்சு வழக்கில் வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்குவது பிழை. அ+போது (அந்த நேரம்) என்ற பொருளை அப்போ என்ற சொல் தருவதில்லை. போது, பொழுது என்பன நேரத்தைக் குறிப்பன பொழுது புலர்ந்தது; பொற்கோழி கூவிற்று". "முப்போதும் மலர்தூவி வணங்கு" என்றே (நேரத்தைச்சுட்டி) வழங்குகின்றன. இ+போது = இப்போது, இ+ பொழுது = இப்பொழுது என்றே அமைய வேண்டும்.
நீதித்தலங்களில் நீ குற்றவாளியா? சுத்தவாளியா? என்று விசாரிக்கப்படுவதை அறிவோம்.
குற்றம் செய்தவன் குற்றவாளி. குற்றம் செய்யாத சுத்தன் - சுத்தவாளி. இதைவிடுத்து ஒசைக்கேற்பக் குற்றம், சுற்றம் குற்றவாளி, சுற்றவாளி என்று கூறுவது வழு.
சுற்றம் என்பது உறவினரைக் குறிக்கும். சுற்றியிருக்கும் உறவினர் சுற்றத்தவர். எனவே, சுற்றம் என்பது குற்றத்தின் எதிர்ச்சொல்லாக அமையாது.
கோவை என்பது கோர்வையெனப் பிழைபட வழங்குவதைக் காண்கின்றோம். சில செய்தித்தாள்கள் பிழையான சொல்லையே தடித்த எழுத்தில் பிரசுரித்தும் வருகின்றன. கோவை என்பதன் பகுதி கோ - கோத்தல் என்பதாகும். கோ+வை = கோவை ஆகும். "கோக்கவா பொறுக்கவா' என்பது இலக்கிய வழக்கு.
"gá06v” Uásá 24
 

தஞ்சைவாணன் கோவை என்றே இலக்கிய நூலின் பெயர் வழங்கும். கோவையுலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்' என்பது பாடல் ஒன்றின் அடி. திறப்புக்கோவை என்றே திறப்புக்களின் கூட்டத்தை வழங்கல் வேண்டும். File என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் கோவை என வழங்கலாம். சமாதானத்திற் கெனினும் கைகோப்போம் என்றே வழங்கல் வேண்டும்.
கைகோர்த்தல் என்பது பிழை. கைகோத்தல். கைகோப்போம் என்றே சரியாக வழங்கல் வேண்டும். அத்வல்' என்ற சிங்களத் தொடரை மொழி பெயர்த்தவர்கள் கை கோர்த்தல் என்று பிழையாகப் பாடி மகிழ்ந்தார்கள். இது ஏன் பிழையென்பதைச் சிறிது சிந்திப்போம். கோர்த்தல் என்பதன் பகுதி கோர்' என அமையும். கோர் என்றால் கோருதல் என்பது பொருளாகும். எனவே, சமாதானத்திற்கு கை கோர்ப்போம் என்றால் சமாதானத்திற்கு கைகோருவோம் என்றாகும்.
இனி ஊசியில் நூலைக்கோத்தலா கோர்த்தலா சரி என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஊசியில் நூலைக் கோத்தல் (ஊசியில் நூலைக் கோ.) என்பதுவே சரி. கோர்த்தல் எனக் கூறுவதோ கோர் எனக் கூறுவதோ பிழை.
செய்தி வாசித்தல் என்பதனைச் சேதி வாசித்தல் என்று குறிப்பிடுவது பிழை. (சேதி எனின். அரிதல், அழித்தல் என்ற பொருள்தரும்) என்ன செய்தி? எனவே வினவுதல் வேண்டும் என்ன சேதி என்பது பிழையான வழக்கு.
செய்தி என்பதன் பகுதி செய். அதன் விகுதி தி,
செப் என்பது நிகழ்வைக் குறிக்கும். எனவே, நிகழ்வனவற்றைச் செய்தி என்று வழங்குவதே சரி. செய்தி செய்தித்தாள் செய்தி மஞ்சரி. எனவே வழங்கும். (சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? எனத் திரைப்பாடலில் சேதி இடம் பெற்றுளது.)
நாடக ஒத்திகையா? நாடக ஒத்திக்கையா சரியான வழக்கு என ஆராயுமிடத்துஒத்திக்கை என்பதே சரி கலை நிகழ்ச்சிகளை மேடையேற்றுவதற்கு முன் சரி பிழை பார்த்துத் திருத்தும் நிகழ்ச்சி ஒத்திக்கையாகும்.
கலாசாரமா கலாச்சாரமா சரி என ஆராயில் கலாசாரம் என்பதே சரி. இது பண்பாட்டைக் குறிக்கும்.
கலா+ஆசாரம் என்ற இரு வடமொழிச் சொற்கள் புணரும் போது 'ச்' மிகாது. கலாசாரம் என்றே அமையும். (கலா என்பது கலைகளைக் குறிக்கும். ஆசாரம் - ஒழுக்கம் என்பதைக் குறிக்கும்) சிலா+ஆசனம் = சிலாசனம்; கலா+பவனம் =கலாபவனம் என்பனவற்றையும் கவனத்திற் கொள்க.
‘ஓலை’ பக்கம் 25

Page 15
கலாசார அமைச்சு கலாசார நிகழ்ச்சிகள் என்றே வழங்குதல் வேண்டும்.
அருகாமை என்ற சொல்லும் பிழையான முறையில் உபயோகப்பட்டு வருவதை நாம் அவதானிக்கலாம். அருகாமை என்பதன் பொருள் அண்மித்துச் செல்லாமை - கிட்டிச் செல்லாமை என்பதாகும். இதனை அண்மையில் (பக்கத்தில்) என்ற பொருளில் உபயோகிக்கும் போதுஅருகில் என்றே உபயோகித்தல் வேண்டும். கொழும்புத் தமிழ்ச் சங்கம் சைவ மங்கையர் கழகத்துக்கு அருகாமையில் இருக்கிறது என்று உபயோகிப்பது பிழை. அருகில் இருக்கிறது என்று எழுதுவதே சரியான வாக்கியமாகும்.
எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்.
பாடினவன் பாட்டைக் கெடுத்தான்' என்ற நிலை வளர விடாது தமிழ் asT(SLIITLDIT?
S
e R BRN கண்ணிர் அஞ்சலி ! 羧 酸 கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முன்- ) '~~~~~~ - '~~~~' :- னாள் பொருளாளர் அமரர் திரு.த. 13 20 நடேஸ்வரன் (இல:11, உருத்திரா * 喙 மாவத்தை கொழும்பு -06) அவர்க- 03 O ளுக்கு எமது கண்ணிர் அஞ்சலியைக் భ. காணிக்கையாக்குகின்றோம். 1920 2002
தமிழில் புதுக்கவிதை என்கின்றபோக்கு வந்ததின் பின்னர் வாக்கியத்தை முறித்துபின் அவற்றை வரிசையிலே வைத்து எழுதி ஆக்கியதால் வந்த சொல் அடுக்குகளெல்லாம் கவிதைகளாகிவிட்ட ஒர் ஆரோக்கியமற்ற தன்மைநிலவுகிறது. அதனால் புதுக்கவிதைத் தொகுதிகளும் புற்றீசல்போலப்புறப்படுகின்றன.எனினும் நல்ல கவிதைகள் அவைமரபா.
பிருந்தாலென்ன அல்லது புதிதாயிருந்தாலென்ன காலத்தை வென்றுநிலைக் O காலஓட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிடும் என்பது உண்மை. ஈழத்தின் சிறந்த கவிஞர்களின் கவிதைகளை வெளிக்கொணர்வதின் ஊடாக கவிதை பற்றிய பிரக்ஞையை இலக்கிய ஆர்வலர்களிடையே வளர்ப்பதற்காக கவிதாமாலை' என்ற மகுடத்தில் காலாண்டுக்கொரு தடவை கவிதா நிகழ்வை நடாத்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு ஏற்பாடு செய்து அதன் முதலாவது நிகழ்வு இன்று (29.09.2002) மாலை 5.30 க்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் திரு.எஸ்.எழில்வேந்தன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கவிஞர் நீலாவணனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளை சுமார் 15 கவிஞர்கள் நிகழ்த்தவுள்ளனர். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வாரம் ஒரு வலம்" வானொலி நிகழ்ச்சியில் (29.09.2002 காலை 7.00 மணி) கொழும்புத் தமிழ்ச் சங்க இலக்கியச் செயலாளர் வழங்கிய உரையிலிருந்து.)
‘ஓலை’ பக்கம் 26
 

.دعصحد. . . . ن ، ويجسس O
256)N disD15 ஒலை ஏங்கி வளர்வதற்காக உதவிக்கரங்கள்
வழங்கிய இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
6i
K. O. PILLA 123, FITZJOHN AVENUE, BORNET, HERTS EN5 2HR
U.K.
ரூ. 2,000.00
டாக்டர் ஆர். விக்னேஸ்வரன் மனிங்ரவுண் பிளட்ஸ் 1, விக்ரோறியா இடம், கொழும்பு - 08.
ლენ. 500.00
தமிழினி
கவிஞர் என். மணிவாசகன். ஜே.பி (“மணிக்கவிராயர்”)
வ. குலேந்திரன் O p லணர்டன் நாவலா ஒழுங்கை, அக்கரைப்பற்று 7/3 ლეხ. 1,000.00 গুড়, 50000
E VAASAVAN எழுத்தாளர் 5, SCOTSDALE ROAD, fli. சத்தியநாதன் LEE, LONDON, இல6, பார்க் வீதி, SE12 8BS கொழும்பு 05
ரூ. 1,000.00 ரூ. 300.00 !
பணிடிதர் திரு. கேஎஸ். சி. அப்புத்துரை திருச்செல்வம் 18/1, 6JTaf6) 65, 68/14, ao
9வது ஒழுங்கை, ! சித்தார்த்த
கொழும்பு - 13 வீதி, கிருலப்பனை ரூ. 500.00 கொழும்பு-06 ரூ. 2000
‘ஓலை’ பக்கம் 27

Page 16
குலேந்திரன் அவர்கள்
லண்டனிலிருந்து தமிழி
1083 Garratt Lane, London SW17 OLN P.O.Box 24359 London SW17 OFD Tel: 0208682 4494 Fax: 0208682 9922
கலாசூரிஇசிவகுருநாதன், தலைவர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஐயா அவர்கட்கு, தமிழினி குலேந்திரன் தலைசாய்ந்த வணக்கங்கள்.
கொழும்பு தமிழ்ச் சங்கம் ஆற்றி வருகின்ற அரிய பெரிய சேவைகளை பூரிலங்காவில் தங்கியிருந்த சில தினங்களில் அறிகின்ற வாய்ப்பினைப் பெற்றேன். இது தவிர எனக்கு ஒரு நாளை ஒதுக்கித் தந்து பேசவைத்தமையை பெரும்பேறாகக் கருதுகின்றேன். உங்கள் தலைமையிலே உள்ள சுத்தியுடன் செயற்படும் அனைவரையும் பார்க்க, பேச கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு பெருமகிழ்வடைகிறேன். ஒலை இதழ்கள் கிடைக்கப் பெற்றேன்.நன்றி. ஒலையை வெளியிட ஓராண்டு காலத்திற்கான செலவுகளை ஏற்க நான் தயாராகவுள்ளேன். பத்திரிகைத் துறையில் பல்லாண்டு கால அனுபவமுள்ள உங்கள் தலைமையில் "ஒலை" மூலை முடுக்கெல்லாம் உடள்ள தமிழர்களை முடுக்கி விட முனையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. என்னையும் ஒரு ஆயுட்க ல அங்கத்தவனாக்கி அதற்குரிய அங்கத்துவ கட்டணத்தை எனக்கு அறிவியுங்கள் இலண்டனிலிருந்து என்னாலான உதவி களை, பணிகளை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவிட உங்கள் உத்தரவினை எதிர்பார்த்துள்ளேன். உங்களுடைய பதிலை எதிர் பார்க்கும் இவ்வேளையில் 1000 ரூபாய்களை ஒலைக்காக அனுப்பியுள்ளேன். அன்புடன், தமிழினி குலேந்திரன் குறிப்பு: சர்வதேச அகதிகள் சம்மேளன இயக்குநரும், லண்டன் தமிழினி ஆசிரியருமான திரு.வகுலேந்திரன் அவர்கள் அண்மையில் இலங்கை வந்திருந்தபோது 28.03.2002 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலை' எனும் தலைப்பில் உரையாற்றியிருந்தார். அச்சமயம் சங்கப்பணிகளுக்கு ரூபாய் பத்தாயிரம் (10,000) அன்பளிப்புச் செய்திருந்தார். லண்டன் திரும்பி ‘ஓலை’க்கு ரூபாய் ஆயிரம் (1000/=) வழங்கியுள்ளதுடன் 'ஒலையின் ஓராண்டிற்கான செலவையும் ஏற்க முன்வந்த அவரது தயாள சிந்தைக்கும் தமிழபிமானத்திற்கும் எமது பாராட்டுக்களுடன் மனப்பூர்வமான நன்றி.
களையும் உரித்தாக்குகின்றோம்.
ஆசிரியர்
‘ஓலை’ பக்கம் 28
 
 
 
 

e
தி கலைஞருக்கு உதவுவோம்! M A.
சிறந்த வில்லிசைக் கலைஞரும், ஒய்வு பெற்ற அதிபருமான கலாபூஷணம் திரு.பெரி.சோமஸ்கந்தர் அவர்கள் (குமரகோட்டம், 62 B, நெடுந்தெரு 2ம் வட்டாரம், உடப்பு, 61004) கடந்த நான்கு ஆண்டுகளாக இருதய நோயினால் பீடிக்கப்பட்டு இருதய வைத்திய நிபுணர் திரு.எஸ்.நரேந்திரன் அவர்களிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 13.10.2002 gy6ir q (oldful ultil J. L. அதிநவீன பரிசோதனை மூலம் இருதய சத்திர சிகிச்சை அவசரமாகவும், அவசியமாகவும் செய்ய வேண்டுமென்று வைத்திய நிபுணர் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு சுமார் 4 1/2 இலட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இச்செலவை ஈடுசெய்யும் வசதி இக் கலைஞருக்கு இல்லை. இதனால் நல்லிதயங்களை நாடி இக்கலைஞர் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்திடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20.10.2002 ஞாயிற்றுக்கிழமை நடந்த கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழுக் கூட்டத்தில் சங்க உறுப்பினர்களிடமிருந்து ரூபாய் பத்தாயிரத்திற்கு (10,000/-) குறையாத தொகையினைத் திரட்டி வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வசதி படைத்த அனைவரும் கருணையுள்ளம் கொண்டு இக்கலைஞருக்குக் கைகொடுக்க வேண்டியது கடமையென உணர்ந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து இவருக்கு உதவ விரும்புவோர் Gs, TLDiélus 61sld (Commercial Bank) 'faituli d6061T (Chilaw Branch) சேமிப்புக்கணக்கு இல: 8430005217 க்கு தங்கள் நிதித் தொகையை அனுப்பி வைக்குமாறு தயவாக வேண்டப்படுகின்றனர்.
三公
NSy
DSIN ഗീട്
‘ஓலை’ பக்கம் 29

Page 17
マダエー - ܓܓܪܬܐ 評° வாழ்த்தி நான் சீமை சேர்ந்தேன். a. (கவிஞரி ஞானமணியம்)
மதுரையிற் சங்கம் வைத்தாள் மருவிடும் உயர்வுங் கண்டோம்
மதுரநற் தமிழாம் அன்னை அந்தமொன்றில்லா மாண்பின் மானிலம் உணரச் செய்தாள் அழகிது வளரும் பாடே.! மன்னிடும் அமுதை முன்னை.! புதிரைமா முனிவர் ஒன்றிப் பக்குவம் உடையதாலே போற்றிய கலைமாக் கடலை, பாலிக்கும் முறையினாலே புலவரும் அறிஞர் தாமும் பைந்தமிழ்க் கொழும்புத் புகழ்ந்தணி செய்தார் பாடே..! தமிழ்ச்சங்கம்
பாரினிற் பரந்து நீடும் காவியம் அணியுஞ் சங்கம் சிக்கிலா நிருவாகத்தின் கரந்தையிற் கிளை விரித்து சீரிய சிறப்பினாலே மேவிடும் உலகில் எங்கும் திக்கெலாம் அகலும் பாடே!
மின்னொளிக் கிரணம் விட்டுத் தீஞ்சுவைக் கானம் பாடே.! தாவிய திலங்கை நாட்டுத்
தலைநகர் கொழும்பிலேயும், ஆனியிற் தரிசித் தாங்கே தேவியாள் அன்னை வண்ணம் அற்புதம் பலவுங் கண்டேன்! சிறந்திட மகிழ்ந்து பாடே. நானிதங்களித்தேன் ஓங்கும்
நற்பயன் நாலுங் கண்டேன் செந்தமிழ்ச் சங்கம் இங்கு மானிலத் திவ்வாறெங்கும் சீருடன் வளரக் கண்டோம் " வாழ்கவே தமிழ்ச் சங்கங்கள் நந்தமிழ்ப் பெரியார் கூடும் வானிலுஞ் சிறக்க வென்று,
நாட்டமும் நலமுங் கண்டோம் வாழ்த்திநான் சீமை சேர்ந்தேன். வந்துளம் பொலியும் மக்கள்
J2S -ܝܡܬܬܵܐ
‘ஓலை’ பக்கம் 30
 

“Praveen Gunaseelan”  : 
Sent : Tuesday, October 15, 2002, 1.20 AM Subject : letter to gopalakrishnan
அன்புடன் கோபாலகிருஷ்ணன் நலம். நலமா? ஒலைகள் கிடைத்தன. பூகோளம் இணையச் சஞ்சிகையை மாதாந்தம்: வெளியிட்டு வருகிறோம். இம்மாதச் சஞ்சிகையில் ஒலை அறிமுகம் இடம் பெற்றுள்ளது. எங்கள் புதிய விலாசம் Algu. Gunaseelan, Laedelistrasse 12, 6003 Luzern, Switzerland. 6Tilab6ft 360600Tulgig567 (pab6) if: http:/mypage.bluewindow.ch/pookoolam உங்கள் சொந்த தபால், இணைய முகவரிகளை எதிர்பார்க்கின்றோம். பூகோளத்திற்கு மின்னஞ்சலில் ஆக்கங்களையும் அனுப்பி வைக்கவும். அன்புடன் அழகு. குணசீலன் ஒலை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்த மடல் பூகோளத்திற்குக் கிடைத்தது. பவளவிழாக் கணிட மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவிற்கு அளிக்கப்பட்ட பாராட்டுவிழா உட்படச் சங்கத்தின் பல் வேறு நிகழ்வுகள் குறித்தும் ஒலை தெரிவிக்கின்றது. தனிநாயகம் அடிகள் பற்றிய குறிப்பொன்றும், டொமினிக் ஜீவாவிற்கு பாராட்டுப் பாடி செங்கதிரோன் எழுதிய கவிதை ஒன்றும் ஒலையில் குறிப்பிடும்படியாக இடம்பெற்றுள்ளது. இவற்றிற்கும் அப்பால் தமிழ்ச்சங்கத்தின் அண்மைக்கால வெளியீடுகளான 16 நூல்களின் விபரங்களையும் ஒலை கொண்டுள்ளது. இலங்கைப் பல்கலைக்கழகங்களின் முன்னாள், இந்நாள் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் இந்த நூல்களை எழுதி உள்ளனர்.
அஞ்சலி 08.10.2002 அன்று மரணமெய்திய யாழ்ப்பாணம் இணுவில் மேற்கைச் சேர்ந்த அமரர் மார்க்கண்டு அவர்களுக்கு எமது அஞ்சலி . இவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நீண்ட கால உறுப்பினரும் தற்போதைய நிலைய அமைப்புச் செயலாளருமான திரு.மா.சடாச்சரம் (ஆசிரியர், மருதானை தொண்டர் வித்தியாலயம்) அவர்களின் தந்தையாவார்.
‘ஓலை’ பக்கம் 31

Page 18
இசிவகுருநாதன்
பாரதத்தின் புதிய ஜனாதிபதி பார்தரத்னா அப்துல் ' கலாம் அவர்களுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான ஜின்னாஹற் ஷரிபுத்தீன் அவர்கள் கவியாக்கம் செய்த வாழ்த்துப் பா ஒன்றினை 28.07.2002 கடித மூலம் புதுடெல்லி ஜனாதிபதி மாளிகைக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கம் அனுப்பியிருந்தது. அக் கடிதத்தின் அடிப்பகுதியில் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் தன்கைப்பட எழுதி அனுப்பி 17092002 அன்று கிடைத்த பதில்
With the Compliments of The President of India
க்இரகுபதி பாலறிதரன் ரெதுச் செயலாளர்
لـ
‘ஓலை’ பக்கம் 32
 

-2
MS
sSRge2 དང་། སོ་མྱུ་
7Ditla (Best 17 Disse srovna
PHAREX
RECORDING CENTRE
I-2, BEACH STREET, (OFF SEA STREET),
COLOMBO - II の三s霹 70մ, Փա 10մա եon 穹
APANCO
MARKETING HOUSE
205, Galle Road Welawatte Tel 589372
弓を教üs ... a ாே