கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2002.11

Page 1
ബ് ܡܢܬܬ̇
ير "تحت
"
POOBALASINGHAM BOOK DEPOT
309 A 2/3, GALLE ROAD, COLOMBO -06
TEL: 074-55775, 504266
tiffa Belt li fire frejgaz
SOBY COMMUNICATION AND RAVELS
54A, HAMPDEN ANE, COLOMBO-5 TEL - Ú75-55396 275-553960/I/2
 
 

-----
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 7, 57 வது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை கொழும்பு : 08, தொலைபேசி 01-468759
வெய் முகவரி : www.coloribo, tartisangari.org இணைய தபால் முகவரி : ctseேபாeal
வில்ை இயன்ற அன்பளிப்பு

Page 2
தமிழ்ச் சங்கத்தின் குரலாய் தரணி எங்கும் ஒலிக்க ஒலை ஒயாமல் வர
வளர எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !
*VIQ
-9
க.தெ.த (காதாரகம்
lõib 5õGDJub
2 siglyn LONGujeong
sistsTsujing தொலைபேசி 3638
Zī
དབྱེ་
 
 

இதயம் திறந்து.
இது ‘ஓலை’ யின் பத்தாவது இதழாகும். இதுவரையில் ‘ஓலை’ யின் கலை - இலக்கிய நோக்கையும், போக்கையும் புரிந்து கொண்டிருப்பீர்கள். உலகளாவிய ரீதியிலே தங்கள் அரசியல், பொருளாதார நலன்களைப் பேணுவதற்கும் அதனை விரிவாக்கிக் கொள்வதற்கும் அகில உலக ஏகாதிபத்திய சக்திகள் கையில் எடுத்துக் கொண்டுள்ள புதிய ஆயுதமே ‘உலகமயமாக்கம்’ எனும் கொள்கையாகும். உலக மயமாக்கம் என்பது உண்மையில் இலங்கையைப் போன்றதொரு வளர்முக நாட்டின் தேசிய செல்வத்தைச் சுரண்டிச் சூறையாடும் நோக்கத்தை மட்டும் அல்ல. இந்நாட்டின் தேசிய இனங்களின் மொழி - கலை - இலக்கிய - கலாசார பண்பாட்டுப்பாரம்பரியங்களிலும், கட்டிக் காத்துவந்த விழுமியங்களிலும் கூட சீரழிவுகளை ஏற்படுத்தி அவற்றை மலினமுறச் செய்து கொச்சைப்படுத்தி காலவரையில் அவற்றின் தனித்துவங்களைத் தகர்த்து இறுதியில் எமது தேசிய அடையாளங்களைக் கூட அழித்துவிடுகின்ற ஆபத்தான அம்சங்களையும் கொண்டிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. காலத்துக்கேற்ப மாற்றமுற வேண்டும் என்ற கருத்தோட்டத்தில் கண்ணை மூடிக்கொண்டு காரியமாற்றாமல் புதுமையை நாம் புகுத்தும் போதும், காலதேசவர்த்தமான மாற்றங்களை நாம் உள்வாங்கி உலகத்தோடு ஒட்ட ஒழுக முனையும் போதும் எமது மொழி-கலை-இலக்கிய-கலாசார-பண்பாட்டு விடயங்களில் நாம் விழிப்பாயிருத்தல் வேண்டும். அறிவியல் வளர்ச்சியின் இன்றைய கட்டமான தகவல் தொழில்நுட்ப யுகத்திற்கு ஈடுகொடுத்து தமிழ்மொழியை நாம் இட்டுச் செல்லும் அதே வேளை தமிழ்மொழி, இலக்கியங்களின் செழுமையும், சீரிளமைத்திறமும் சிதையவிடாமல் சிரத்தை காட்ட வேண்டும். தமிழ் மொழி அறிஞர்கள் / விஞ்ஞானிகள்/எழுத்தாளர்கள்/கலைஞர்கள்/ ஊடகவியலாளர் / தொழில்சார் நிபுணர்கள் / அபிமானிகள் ஆகியோரின் கூட்டுச் சிந்தனையும் செயற்பாடுமே இவ்விடயத்தில் தேவை என்பதை ‘ஓலை’ சுட்டிக்காட்ட விரும்புகிறது.
நன்றி மீணடும் மறுமடலில்.
- ஆசிரியர்
‘ஓலை’ பத்தம் 1

Page 3
ODGD =
தென்னோலை, பனையோலை, கமுகோலை என ஒலைகள் பலவெனினும் பனையோலையே சிறப்பானது. அதன் பயன்பாடு ஏனையவற்றை விட மிகுதியானது. இந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான். பண்டைக் காலத்திய மக்கள் எழுதிப் பயில்வதற்குப்பனை ஒலையையே பயன்படுத்தி உள்ளனர். பழம் பெரும் நூல்கள் எல்லாம் ஒலைகளிலேதான் எழுதப்பட்டிருக்கின்றன. அச்சுக்கலை அறிமுகமாகாத காலப்பகுதியில்-எழுத்தாணி கொண்டு எழுதித்தான் கல்வி வளர்ச்சி கண்டது. அவ்வண்ணம் எழுதப்பட்டே பெருநூல்களும் பாதுகாக்கப்பட்டன. படிக்கப்பட்டன. அண்டை அயல் நாடுகளுக்காய கடிதமும் ஒலைகளிலேயே அனுப்பப்பட்டுள்ளன. இவ்வண்ணம் தமிழர் வரலாற்றில் அழுத்தமானதொரு பதிவை உண்டாக்கிய |ஒலையை இன்றும் நாம் மறந்து விடவில்லை. அறிவியல் வளர்ச்சியின் உயர் பண்பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை. எனினும் பழமையை நாம் |மறந்துவிடவில்லை என்பதை அனுசரித்தே தமிழ்ச் சங்க மாத
இதழுக்கு ஒலை என்று பெயர் தந்திருக்கின்றோம்.
கடந்த ஆண்டு இதனை வெளியிட ஆரம்பித்த போது தமிழ்ச் சங்கச் செயற்பாடுகளை மட்டும் வெளிக் கொணரும் ஏடாக இது அமைந்திருந்தது. அன்பர்களது ஆதரவும் ஊக்குவிப்பும் பெருகுவது காரணமாக இன்று ஒலை ஓர் அறிவுக் களஞ்சியமாக மாறிக்கொண்டு இருக்கிறதென்னும் பெருமைக்குள்ளாகி நிற்கின்றோம். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், வரலாறுகள், செய்திகள், துணுக்குகள் என்று விடயப் பரப்பும் பெருகிக் கொண்டே இருக்கிறது. வாசகர்களிடையே நல்ல மனப்பதிவையும் வளர்த்துக் கொண்டிருக்கிறது. இந்த மனப்பதிவு மேலும் வளர வாய்ப்பும் வளமும் பெருகுவதாக,
சி.அமிர்தலிங்கம் ஆட்சிக்குழு உறுப்பினர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
‘ஓலை’ பக்கம் 2
 

கொழும்புத் தமிழ்ச் சங்க மாதாந்த மடல்- ஒலை 08இல் சர்வதேச சிறுவர் தினத்தையொட்டிமுத்தமிழ் விற்பன்னர் சோ.தேவராஜா எழுதி, பிரசுரமான “பூங்கா’ சிறுவர் சிற்றேடு பற்றிய அழகிய அறிமுகக் கட்டுரையில், இலங்கையில் முதலாவதாகத் தமிழில் வெளிவந்த பிள்ளை களுக்கான சஞ்சிகை “பூங்கா” எனக் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் தமிழில் முதலில் வெளிவந்த சிறுவர் சிற்றேடு"பூங்கா’ என். பது தவறான தகவல் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். இலங்கையின் முதற் தமிழ்ச் சிறுவர் சிற்றேடு “வெற்றிமணி” என்பது வரலாறு.
“வெற்றிமணி” 1950ஆம் ஆண்டு முதல் எத்தனையோ சோதனைகளின் மத்தியிலும் தொடர்ந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன் ஸ்தாபக ஆசிரியர் மாயெழு, குரும்பசிட்டியூர் திரு. மு.க.சுப்பிர மணியம் (திரு.மு.க.சு) அவர்கள். பாடசாலை அதிபரான திரு.மு.க.சு. சிறுவருக்கென பல்வேறு சுவையான அம்சங்களுடன் வெற்றிமணியை மாசிகையாக வெளியிட்டு வந்தார். இவரது காலத்தில் வெற்றிமணியில் கவிஞர் வி.கந்தவனம், கணக்கியலறிஞர் வை.சி.சிவஞானம், பேராசிரியர் நந்தி, இரசிகமணி கனக செந்தில் நாதன், கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை, திக்குவலை கமால், திமிலைத் துமிலன், பேராசிரியர் சாலை இளந்திரையன், கா.தமிழ்த்தம்பி முதலிய அறிஞர்கள் விடயதானம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது. திரு. மு.க.சு 1980ஆம் ஆண்டு சிவபதமெய்தியபோதும், வெற்றிமணி இன்றுவரை வண்ணத்தமிழ் இலவச மாசிகையாக ஜேர்மனியிலிருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கிறது.
வெற்றிமணியின் அறிமுக விழாவொன்றும் 6-10-2002இல் கொழும்புத்தமிழ்ச் சங்க மண்டபத்தில் சட்டத்தரணி K.V.மகாதேவன் தலைமையில் வெற்றிமணி கொழும்பு வாசக வட்டத்தினரால் விமரிசையாக நடத்தப் பட்டதுஎன்பதும், அவ்வறிமுக விழாவில் இக்கட்டுரையாளன் வேல் அமுதன் வெற்றிமணி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தமையும், இவ் விழாவில் மூத்த பத்திரிகையாளர் திரு.ஆ.சிவநேசச் செல்வன் பங்குபற்றி பாராட்டுரை வழங்கினார் என்பதும் மேலுமொரு மூத்த பத்திரிகையாளர் திரு. ஆர். சிவகுருநாதன் விழாவில் கலந்து சிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கவை. gŠo
‘ஓலை’ பக்கம் 3

Page 4
கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்தி வரும் அறிவோர் ஒன்று கூடல் நிகழ்ச்சியின் 177வஅ நிகழ்வன்று (1109.2002) சிறப்புர்ை வழங்கிய சிங்கப்பூர்த் தமிழறிஞர் Dr. இவி சிங்கன் ஆற்றிய உரையின் தொகுப்பு
கட்டளை - 11
திருக்குறள் மூலம்
திருக்குறளில் 133 அதிகாரங்களில் 1330 குறட்பாக்கள் இருக்கின்றன. இவைகளை ஒதுவதற்கு முதலில் தமிழ் எழுத்துக்கள் நன்றாகத் தெரிய வேண்டும். தமிழ் ஒரு புணர்ச்சி மொழியாக இருப்பதால், எழுத்துக்களைப் பிரித்துக் கூட்டிப் படிப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்: இந்தப் பின்னணி இருக்கிறவர்கள் எளிதாகச் செய்யுள் நடையில் படித்துக் கொள்வார்கள். மற்றவர்கள் சந்தி பிரித்துக் குறள் பாடல்களை உச்சரித்து தயங்காமல் படிக்க, இரண்டாவதாகக் கொடுக்கப்பட்ட குறள் பாடல்கள் உதவியாக இருக்கும்.
திருக்குறள் மூலத்தை உடனடியாகப்புரிந்து கொள்வதற்கு 1330 திருக்குறள் பாக்களும் உரைநடையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
‘ஓலை’ பக்கம் 4
 
 

கட்டளை - 2 திருக்குறள் விளையாட்டு
வள்ளுவர் ஏழு என்ற எண்னைப் பல வகையாகக் கையாளுகிறார். ஏழுபிறப்பு என்கிறார். 1330 குறள் எண்களைக் கூட்ட வருவது 7. பாட்டின் சீர்கள் 7. திருக்குறளை வைத்துப்பலவகை வினாவிடை விளையாட்டு விளையாடலாம். முத்தமிழ்க் காவலர், கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள், திருக்குறள் விளையாட்டை உருவாக்கினார்.
கட்டளை - 3
திருக்குறள் அகரவரிசை
சொற்களே சிந்தனையின் கரு. திருவள்ளுவரின் திருக்குறளில் 1330 குறட்பாக்கள், 42194 தமிழ் எழுத்துக்கள் இருக்கின்றன. 1205 சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
தொடர்பிற்கும் சிந்தனைக்கும் சொற்கள் கருவிகளாய் இருக்கின்றன. வெற்றிபெற, ஒருவருக்குச் சொற்களைக் கட்டாயம் ஆளத் தெரியவேண்டும்.
கட்டளை - 4
திருக்குறள் பொருள் அறிதல்
திருக்குறள் சொற்களையும் பொருளையும் அறிந்து அவை கொண்டு பற்பல சொல்லாட்சிகளையும் சொற்றொடர்களையும் உருவாக்கப் பழக வேண்டும்.
கட்டளை - 5
பாட்டோடு பட நினைவு
திருக்குறளின் சொல்லையும் பாட்டையும் அறிந்த பின் அப்பாடலிற்கு ஏற்ற படத்தினை வரைந்து பார்ப்பது நல்லது.
திருக்குறளில் 1330 குறட்பாக்கள் இருக்கின்றன. இதுவரை குறளின் பொருளைப் படமாகத் தீட்டிய ஓவியங்கள் நூறுக்கும் கீழாகத் தான் இருக்கின்றன. எல்லாக் குறள் பாடல்களையும் ஒவிய வடிவத்தில் கொண்டு வர வேண்டும். இதைத் திருக்குறள் வகுப்பு, பள்ளிக்கூடப் பாடத்திட்டங்கள், ஞாயிறு வகுப்புகள் வாயிலாகவோ, அல்லது பணம் கொடுத்து ஒவியர்களை வரையச் சொல்லியோ வெளிக்கொண்டுவர வேண்டும்.
கட்டளை - 8
குறள் வழிக் கதைகள்
குறளின் பொருளை அறிந்துகொள்வதுடன் 1330 குறளுக்கு ஏற்ற கதைகளை படைத்துச் சொல்வது மிக நன்று. இங்கே 133 கதைகள் கொடுக்கப்பட்டு
‘ஓலை’ பக்சம் 5

Page 5
இருக்கின்றன. கதைகள் 50, 100, 150, 200, 500, 1000,2000 சொற்களில் எழுதப்பட வேண்டும்,
கட்டளை - 7 மொழிபெயர்ப்பு
திருக்குறள் பற்பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் 60 நூல்கள் வந்துள்ளன. எனவே மொழிபெயர்ப்புப் பற்றியும் புதிய தமிழ்ச் சொல்லாக்கம் பற்றியும் அறிந்து கொள்வது தாய்மொழியைக் கற்றுக்கொள்ளச் சாலச் சிறந்தது.
கட்டளை - 8 அதிகாரம் அறிதல்
திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்தின் முழுக் கருத்துக்களையும் அறிந்து கொள்ளுதல், அரிய கட்டுரை எழுதப் பேருதவியாக இருக்கும். திருக்குறளை அதிகாரம், அதிகாரமாக ஒப்பித்தல் அல்லது அதிகாரம் அதிகாரமாகப் பல பாணிகளில் பாடுவது.
கட்டளை - 9 பிற நூல் ஒப்புமை
திருக்குறளின் கருத்து மற்றும் சொற்பொருளைப் பிற நூல்களுடன் ஒப்பு ஆராய்வது நம் அறிவை மேம்படுத்தும் ஓர் எளிய வழியாகும்.
கட்டளை - 10 வாழ்வியல் அனுபவம்
திருக்குறளில் இருந்து 133 மேற்கோள்களை நாம் நினைவில் இருத்திக் கொள்வதுடன் நம் வாழ்வியல் அனுபவத்தைச் சிறப்பிக்கவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழு சீர்களையும் எடுக்காமல் 3,4சீர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
பத்து (10) புத்தகங்களின் விலை Rs. 4500/-
உங்களால் வாங்கமுடியாவிட்டால் தமிழ்ச் சங்க நூல்நிலையத்திலிருந்து இலவசமாக எடுத்துப் படிக்கவும். இருபது நூல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வாங்க விரும்புவோர்களுக்கு : எல்லாத் தரமான புத்தகக்கடைகளிலும் கிடைக்கும். அல்லாவிட்டால் நேரடியாகக் கீழ்க் கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
E.W.S. PUBLISHERS CUFF ROAD, SINGAPORE - 209727 TEL: 62915334 FAX: 62952105
‘ஓலை’ பக்தம் 6

சங்கப்Uலகை
மலேசிய எழுத்தாளர் திரு.சைபீர் முகம்மது அவர்களின் ஐந்து நூல்களின் அறிமுக் விழா
01.11.2002 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கும் சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூல்களின் முதற்பிரதி திருபூபாலசிங்கம்பூரிதர்சிங்அவர்களாலும் சிறப்புப் பிரதி கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் திரு. மு.கதிர்காமநாதன் அவர்களாலும் பெறப்பட்டதுடன் நூலாசிரியரால் நூற்தொகுதி தமிழ்ச்சங்கத்திற்கு அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டது. தமிழ்வாழ்த்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் தொடர்ந்து பின்வரும்நிகழ்வுகள் இடம்பெற்றன. வரவேற்புரை: திரு. ஆர். இரகுபதி பாலழறீதரன் (செயலாளர், கொ.த.ச) தலைமையுரை : கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்கள் நூலாசிரியர் அறிமுக உரை: திரு. அந்தனி ஜீவா (செயலாளர், ம.க.இ.பே) சிறப்புரை : பேராசிரியர் சோ. சந்திரசேகரம் (கல்விப்பீடம், கொழும்பு பல்கலைக் கழகம்) வாழ்த்துரை : கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன் (துணைத்தலைவர், கொழும்புத்தமிழ்ச் சங்கம்) ஏற்புரை: நூலாசிரியர் ஜனாப் சை. பீர்முகம்மது நன்றியுரை : திரு.எஸ்.பாஸ்க்கரா (துணைநிதிச் செயலாளர், கொழும்புத் தமிழ்ச் சங்கம் ܢܠ
محم۔
‘ஓலை’ பக்கம் 7

Page 6
கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கும் மாதாந்தத் தமிழிசை நிகழ்ச்சித் தொடரின் 18வது நிகழ்வு
23.11.2002 சனிக்கிழமை பி.ப.6.30க்கு சங்கத்தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் தலைமையில் இரு இசைக் கச்சேரிகள் இடம்பெற்றன.
lub BGöfii did Bff
பாட்டு திருமதி ஹேமவதி கபிலதாஸ் திருமதி நீதிமதி யோகராஜன் வயலின் திரு. TN பாலமுரளி மிருதங்கம் திரு. A. ரகுநாதன்
2ம் இசைக் கச்சேரி பாட்டு திருமதி மீனா சபேஸ்க்குருக்கள் வயலின் திரு. T. N. பாலமுரளி மிருதங்கம் திரு. A. ரகுநாதன்
مصر
‘ஓலை’ பக்கம் 8
 
 

உருவப்படத் திரைநீக்கம்
“ጰ8
கொழும்புத் தமிழ்ச்சங்க முன்னாட் துணைத்தலைவரும் பொருளாளருமான அமரர் த.நடேஸ்வரன் அவர்களது உருவப்படத் திரைநீக்கம் 24.11.2002 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்குச் சங்கத் தலைவர் கலாசூரி. இ. சிவகுருநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உருவப்படத்தை கொழும்புத் தமிழ்ச்சங்கத் துணைத் தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் திரைநீக்கம் செய்து வைக்க சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.க.ஞானகாந்த்ன் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தார்.நினைவஞ்சலிஉரைகளை ஆட்சிக்குழு உறுப்பினர்களான புலவர். அ.திருநாவுக்கரசு, பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் ஆகியோர் நிகழ்த்தினர். துணைத்தலைவர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் ஆக்கிய இரங்கட்பாவினை ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. சி.அமிர்த லிங்கம் படித்தார். அமரர் தநடேஸ்வரனின் குடும்ப உறுப்பினர் சட்டத்தரணி எஸ். பகிரதன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. அமரர் த.நடேஸ்வரனின் மகன் திரு. ந. ராகவன் அவர்களும் சமூகமளித்திருந்தார்.
ー لـ
‘ஓலை’ பக்தம் 9

Page 7
திகதி விடயம் ஆய்வாளர்
06.11.2002 கந்தசஷ்டியும் அதன் மட்டுவில்
(185) தத்துவங்களும் el bl-JTáfiT
13.11.2002 இலக்கியக் கலந்துரையாடல்
(186)
27.11.2002 சங்க இலக்கிய நூலாம் மட்டுவில்
(187) கலித்தொகையில் -gBL-TöT
பாலைக்கலி
நூல்நயம் காண்போம். 05.05.2000 இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இலங்கை எழுத்தாளர்களால் எழுதி வெளியிடப்படும் நூல்கள் இங்கு நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
நயம் கண்டவர்
திகதி நூலின்பெயர் நூலாசிரியர்
நிதர்சனத்தின்
08.11.2002 புத்திரர்கள் நாடக திரு. திரு.
(94) எழுத்துருக்கள்) (சாகித்திய கபூரீகணேசன் ! ? ரீபிருந்தன்
மண்டலப் பரிசு பெற்றது) -
22. 1 2002 சுதாராஜின் சுதாராஜ் திரு. நீபி.
(95) சிறுகதைகள் . . . - அருளானந்தம்
படைப்போம் . திரு.
29.11.2002 UITGB66 intb தில்லைச்சிவன் இளையதம்பி
(96) (சிறுவர் இலக்கியம்) தயானந்தா
‘ஓலை’ பக்தம் 10
 

நிகழவிருப்பவை
டிசம்பர் 2002 சங்க நிகழ்ச்சிகள்
041292 புதன்கிழமை பிய 530 மணி
188வது அறிவோர் ஒன்றுகூடல்
061202 வெள்ளிக்கிழமை பிய 530 மணி
நூல் நயம் காணர்போம் 97வது நூல் - கூடில்லாக் குருவிகள் (சிறுவர் இலக்கியம்) நூலாசிரியர் - ஒலுவில் அமுதன் - நயம் காண்பவர் - திரு.வ.இராசையா 111202 புதன்கிழமை பிய, 530 மணி
189வது அறிவோர் ஒன்றுகூடல் விடயம் - கலித்தொகையில் குறிஞ்சிக்கலி நிகழ்த்துபவர் - மட்டுவில் ஆநடராசா 131202 வெள்ளிக்கிழமை பிப. 530 மணி
98வது நூல்நயம் காண்போம்
நூல் :கமகநிலா ஆசிரியர் : ஆ.மு.சி.வேலழகன் நயம் காண்பவர் : திரு.ந.காண்டீபன் 18.12.02 புதன்கிழமை பிப. 530 மணி
190வது அறிவோர் ஒன்று கூடல்
2012.02 புதன்கிழமை பிப. 530 மணி நூல் : தெய்வம் பேசுவதில்லை (சிறுகதைத் தொகுதி) நூலாசிரியர் : தமிழ்மணி - திருமதி ந. பாலேஸ்வரி நயம்காண்பவர் : திரு.கே.கே.உதயகுமார்
191வது அறிவோர் ஒன்றுகூடல் விடயம் : திருக்குறளைக் கற்றுத்தேர்வதற்குரிய அணுகுமுறைகள் நிகழ்த்துபவர்; திரு. கே.கே சோமசுந்தரம் 27.1282 வெள்ளிக்கிழமை பிப530 மணி
100வது நூல்நயம் காண்போம்
நூல் : நிருத்தியம் நூலாசிரியர் : திருமதி. மீரா மங்களேஸ்வரன் நயம்காண்பவர் : திருமதி லீலாம்பிகை செல்வராஜா 28.12.02 சனிக்கிழமை மாலை 500 மணி கருத்தரங்கு - மக்களும் ஊடகங்களும்.
29.1202 ஞாயிற்றுக்கிழமை காலை 1000 மணி சுகாதாரக்கருத்தரங்கு சங்கப்பலகை தயாரிப்பு : சி. சரவணபவன் (ஆட்சிக்குழு உறுப்பினர்)
‘ஓலை’ பக்தம் 11

Page 8
Y
வாழ்க!
ஒன்றாகிப் பலவாகி உலகத்தின் பழமைகளுள் உயர்ந்ததாகி நன்றாகி மொழிவார்க்கு நலமாகிப் பயில்வோர்க்கு நன்மையாகி வென்றுபல கொடுமைகளும் வீழாது மேன்மேலும் வெற்றிகொண்டு குன்றாகிநிற்கின்ற குறையாத தமிழன்னைக்குமரிவாழ்க !
இயலாகி இசையாகி எழிலான கூத்தாகி இம்மூன்றோடும் மயலான தெலுங்காகிமலையாளம் கன்னடம் மாதுளுவுமாகி புயலான ஆங்கிலத்தால் புகழான வடமொழியால் புலமைபெற்று அயலான சிங்களத்தின் அணைவோடும் வாழுதமிழ் அன்னை வாழ்க!
சிலம்பாகிக்குண்டலமாய்த் தேம்பாவின் அணியாகிச் சீறாவாகி நலம்Uாடும் மேகலையாய் நல்வளையாபதியாகி நன்னூலாகி பழைய தொல்காப்பியமாய்ப் பாச்சிந்தாமணியாகிப் பத்தெட்டாகி இளைய பாவேந்தர்வரை ஏடெல்லாம் ஆடுதமிழ் என்றும் வாழ்க!
சமணருடன் பவுத்தருடன் சைவகத்தோலிக்க இஸ்லாம்மாந்தர் சமமாகக் காத்ததமிழ் சமமாக ஈழத்தில் தலையெடுத்தே எமையாளச் செய்வோர்கள் எடுக்கின்ற தமிழின்நாள் இனியநன்னாள்! இமைப்போதும் சோராமல் இன்தமிழை மறவாமல் என்றும் வாழ்வோம்!
*தாமரைத் தீவான்”
مسـ
‘ஓலை’ பக்கம் 12
 

கணிணிர் - பெண்களின் சிறந்த ஆயுதம் என்பார்கள். உலகில் மிகவும் ஆற்றல் உள்ளது. சக்தியைத் தருவது நீர்வீழ்ச்சி. அதுபோன்று பெண்கள் கண்ணிர் சிந்தியே எதையும் சாதித்துவிடுவார்கள் என்பர், ஆனால் ஒரு பெண் தான் நினைத்ததைச் சாதிப்பதற்கு மாத்திரமா கண்ணிர் சிந்துகிறாள்? இல்லை. கண்ணிர் என்றதும் எல்லோருக்கும் அழுகை, துன்பம் இவையே ஞாபகத்திற்கு வருகின்றன. இந்தக் கண்ணிர் துன்பத்தில் மாத்திரம் வருவதில்லை என்பதைப் பலரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. நவரசம் ததும்பும் எல்லாவகை உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும் கண்ணிர் வரும், காரியம் முடிக்கவே காரிகை கண்ணிர் வடிக்கிறாள் என்று எண்ணுவது தவறானது. கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதற்காகவே தாயைப் படைத்தான் . இது யூதப் பழமொழி. ஒரு தாய் தன் பிள்ளையை வளர்த்தெடுக்கப் பல சந்தர்ப்பங்களில் கண்ணிர் விடுகிறாள். தாய்மையுணர்வு, அவளை வேதனைக் கண்ணிர், பெருமிதக் கண்ணிர், வாஞ்சையை வெளிப்படுத்தும் கண்ணிர் ஆனந்தக் கண்ணிர் என்றுதன் பிள்ளையின் வளர்ச்சியில் அவள் தன்னை அர்ப்பணிக்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவகைக் கண்ணிரைச் சிந்த வைக்கின்றது. தன் மகன் நாட்டுக்காய் உயிரை விட்டான் என்று கேட்டு இறும்பூது எய்தும் போதும் தாய் கண்ணிர் விடுகிறாள். அதனைச் சோகக் கண்ணீர் என்று சங்க இலக்கியம் கூறவில்லையே?ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் நிலையில் அவள் மகன் சான்றோனெனப் பெயர் பெறும் போது அவள் சிந்துவது காரியக் கண்ணிரா?
தோழியரிடையே கருத்துப் பரிமாற்றத்திற்கும் தேறுதல் பெறுவதற்கும் இந்தக் கண்ணீர் இளமங்கையருக்கு உதவுவதையும் குறிப்பிட வேண்டும். இராமாயணத்தில் சீதைக்குத் துணை திரிசடை, தீயவர்கள் மத்தியில் ஆறுதல் பெறச் சீதை அவளிடம். பேசினாள். கண்ணிர் சிந்தினாள். “மாண்டு போயினன் எருவைகட்கு அரசன் மண் மற்றோர் யாண்டை என்றிலை அறிவுறுப்பார்கள். இப்பிறப்பில் காண்டலோ அரிது.” இப்படிக் கண்ணிர் விட, திரிசடை தோழியாக அக் கண்ணிரைத் துடைக்கிறாள்.
"gap6v” Uású 13

Page 9
அன்றொரு நாள் பாண்டிய மன்னன் நீதி தவறியபோது, தன் கணவனைக் கொன்றுவிட்ட போது, ஒரு பெண் பொங்கி எழுந்து நீதி கேட்கப் புறப்பட்டாளே. அப்பொழுதும் அவளுக்கு இரண்டு ஆயுதங்கள். ஒரு கையில் சிலம்பு, கண்களில் கண்ணிர். இது சோகக் கண்ணிர் அல்ல, ஆவேசக் கண்ணிர், கோபக் கண்ணிர்.
பக்தி பரவசத்தினாலும் கண்ணிர் தோன்றுமல்லவா? பஞ்சபாண்டவரின் மனைவி. ஐந்து கணவன்மாரும் உதவ முன்வராதநிலையில் பக்திப் பரவசமாகக் கண்ணிர் விட்டுக் கண்ணனைக் கூவி அழைத்தாள்.
“சக்கரமேந்தி நின்றாய் கண்ணா
சாரங்கமென் றொருவில்லைக் கரந்துடையாய்
அட்சரப் பொருளாவாய் - கண்ணா அக்கார அமுதுணர்ணும் பசுங்குழந்தாய் துக்கங்களNத்திடுவாய் - கண்ணா
தொண்டர் கணிணிரைத் துடைத்திடுவாய்”
இந்தக் குரல் பக்திக்குரல், பரவசக் கண்ணிர், ஒரு பக்தையின் கண்ணீர்.
மிதமிஞ்சிய சிரிப்பு ஏற்படும்போதும் கண்கள் குளமாவதுண்டு. ஏன் ஆக்கிவைத்த உணவு உறைத்தால் கண்ணிர் வருமே. மிளகாயைத் தாளிக்கும்போதும், வெங்காயத்தை உரிக்கும்போதும் பெண்ணின் கண்ணில் நீர் துளித்துவிடுகிறதே.
எனவே தான் நினைத்ததைச் சாதிப்பதற்காக மாத்திரம் பெண் கண்ணி விடுகிறாள் என்பது ஆண்களின் விதண்டாவாதம். எழுத்தாளர் காண்டேகர் ஒருபடி மேலாக இதற்கு விளக்கம் அளித்துள்ளார். பெண்கள் ரொம்பச் செட்ட்ானவர்கள். தனது சொத்தை அவள் சிக்கனமாகப் பேணுவது போன்று, தன் கண்ணிரையும் அநாவசியமாகவோ அலட்சியமாகவோ சிந்திவிடமாட்டாள். ஆம்! பெண் எடுத்ததற்கெல்லாம் கண்ணிர் சிந்துவதாக எள்ளி நகையாடும் ஆண்கள் இந்தக் கூற்றின் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அவள் தன் மகத்தான சொத்தான கண்ணிரை நவரச உணர்வுகளை வெளிப்படுத்தவே பயன்படுத்துகிறாள். காரிகை கண்ணிர் விட்டால் காத்திரமான ஒரு உணர்வு அதனுடன் சம்பந்தப்பட்டுள்ளது என்று எண்ணுங்கள். அவள் கண்ணிர் சொல்லும் கதை என்ன என்று புரிந்துகொள்ள முற்படுங்கள். சாகஸக் கண்ணி என்று
முத்திரை பதிக்காதீர்கள். KNS)
"gap6v” (Uá5á 14

உருவகம்
dSIGIFIJub
நீருக்குள் தூண்டிற் கயிற்றில் தொங்கிய புழுவை ஆவல் மீதுர அவசரமாக அணுகியது மீன்.
“நில்! இரையென்று எண்ணி என்னில் மறைந்திருக்கும் தூண்டிலில் நீ மாட்டிக் கொள்ளப் போகிறாய்”. மீனைப் பார்த்துப் புழு எச்சரித்தது.
“உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள என்னை எச்சரிக்கிறாயா? உன்னைத் தப்பவிடப் போவதில்லை” என்றபடி மீன் மேலும் புழுவை நெருங்கிற்று.
“ஏய்! நான் சொல்வதைக் கேள், என்னுயிரைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இப்போது எனக்கில்லை. மீனவன் என்னைப்பிடித்துத் துண்டிலில் கொழுவியபோதே நான் குற்றுயிராகிவிட்டேன். என் உடல் சிதைக்கப்பட்டு விட்டது. உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இனிநான் இறப்பது நிச்சயம். ஆனால் என்னைக் கொண்டு உன்னை ஏமாற்றும் இந்த மனிதச் செயலை நான் வெறுக்கிறேன். என்னால் இன்னொரு உயிர் மாய்வதற்கு மறைமுகமாகவேனும் நான் உடந்தையாக இருக்கவிரும்பவில்லை. மீண்டும் ஒரு முறை உன்னை எச்சரிக்கிறேன். இரையென்று எண்ணி என்னைக் கொத்தி விழுங்கி வீணாக உன் உயிரை மாய்த்துக் கொள்ளாதே’ புழு புத்தி கூறிற்று.
“கேவலம்! நீ ஒரு புழு எனக்கு இரையாகப் போகிறவன் எனக்குப் புத்திபுகட்டுவதா? தப்பிக் கொள்வதற்குத் தந்திரம் போடும் உன் வார்த்தைகளை நம்ப நான் தயாரில்லை” என்று கூறிய மீன் புழுவின் பதிலுக்குக் காத்திராமல் புழுவைப் பாய்ந்து கவ்வியிழுத்தது.
தூண்டிற் கயிற்றில் கட்டப்பட்டுநீரின் மட்டத்தில் மிதந்து கொண்டிருந்த மிதவைநீருக்குள் அமிழ்வதை மேலே கரையில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்த மீனவன் தூண்டிற் கம்பை உயர்த்தி வேகமாக மேலே இழுத்தான். தூண்டில் தொண்டையில் கொழுவிய மீன் தூண்டிற் கயிற்றுடன் மீனவனின் தலைக்கு மேலாற் சென்று தரையில் கிடந்துதுடித்தது.
S
‘ஓலை’ பக்கும் 15

Page 10
பிஞ்சுகளைப் பிழியாதே!
சிறுவயதுப் பிள்ளையை வேலைக் கேகும்
சீர்கெட்ட மனிதர்க்கு அழிவு என்றோ? வறுமையால் எரிகின்ற சிறுவர் தம்மை
வாசிக்காய் வளர்ப்போரின் கொடுமை மீதம்! தெருநாயாய்ச் சாகின்ற பழியே கொள்வர்
தினமுந்தான் சிறுவர்க்கு அநீதி செய்வோர்! பெருநாசம் ஒர்நாளில் அவர்கள் கொள்வர்
பிழைசின்ன வயதார்க்குத் தீங்கி ழைத்தல்!
மூட்டையைச் சுமக்கத்தான் பணிக்கின்றார்கள் மூடர்கள் புத்திக்கு என்ன வாச்சு? ஏட்டையே காட்டாமல், இளஞ்சிட் டுக்கள்
எதிர்காலம் தனைச்சாம்ப லாக்கின்றார்கள்! வீட்டுக்குள் அடிமைகள் போலப் பூட்டி
விபரங்கள் அறியாமற் செய்கின்றார்கள்! வேட்டுத்தா னேவைத்துக் கொல்ல வேண்டும்!
வீணாக்கிப் பாலரினை வதைப்போ ரையே!
மகளென்றும் பாராமல் காமங் கொள்ளும்
மடையர்கள் நாளுந்தான் உள்ளா ரிங்கே! மிகையாச்சு சிறுமிகளைக் கற்பழிப்போர்
முழுநாளும் செய்திகளில் இதுதலைப்பே திகிலானேன்! இருவயதுக் குழந்தை மீது
தீர்த்தானாம் காமத்தை ஒர்த கப்பன்! தொகையாகும் இக்கொடுமை நீங்க, இன்றே
திட்டுங்கள் நெருப்பாகச் சட்ட திட்டம்!
பூக்கள்தாம் சிறுவர்கள்! வதைகள் செய்து
புண்ணாக்கும் பாவிகளை அழித்தல் மேன்மை! தீக்காடு பலசெய்து, சிறுவர் வாழ்வைச்
சிதைப்போரை அதிலிட்டு வாட்டல் நன்மை! மாக்கள்யார்? வயதேறாய் பால கர்க்கு
மாபெரிய கொடுமைகள் இழைப்போர் தாமே! சாக்காலம் ஒன்றையே நிர்ணயிப்போம்
சத்தியமாய்ப் பிஞ்சுகளைப் பிழிவோ ருக்கு!
- எம்.எல்.எம். அன்ஸார் -
‘ஓலை’ பக்கம் 16

“Reading maketh a man full - 6JTófi'u, D6ofgB6OD6OTŮ JJ6007 மனிதனாக்குகின்றது என்பது ஆங்கிலத்தில் வழங்கும் பழமொழி, வாசிப்பு நாம் அறியாதவற்றைத் தெரிந்துகொள்ளவும், எமது அறிவைப் பலதுறைகளிலும் பரந்து விரிவடையச் செய்யவும், எமது நேரத்தை அதிகபயன் பாட்டுடன் செம்மையாகச் செலவழிக்கவும் நாம் கல்வி. கேள்விஞானங்களில் பிரகாசிக்கவும், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும் துணை புரிகின்றது.
பரபரப்பான இவ்வுலகில் மக்களும் அவசரஅவசரமாக விரைந்து ஓடிக் கொண்டிருக்கும் போது, ஆறுதலாகவும் அமைதியாகவும் பொறுமையைக் கடைப்பிடித்து, ஒட்டத்தை நிறுத்தி வாசிப்பினுள் நம்மைப் புதைத்துக் கொள்வது சாத்தியமா? என்ற கேள்வியும் நியாயமாகவே எழுப்பப்படுகிறது. பல கவர்ச்சிகரமான நிகழ்வுகள் காட்சிகள் சம்பவங்கள் மனதைச் சிறைப்படுத்தும்போது வாசிப்பில் லயிப்பதென்பது இலகுவான காரியமாகுமா?
ஆற்றவேண்டிய பணிகள் பொறுப்புகள் கடமைகள் தவிர்ந்த ஓய்வு நேரத்தை வானொலி, தொலைக்காட்சி,ஊர்வம்பு, அரட்டை, சினிமா என்பன கபஸ்ரீகரம் செய்து விடுகின்றன?நூல்களைப் புரட்டிப்பார்ப்பதற்கு நேரமெங்கே? என்ற நேரத்தொல்லை எம்மைத் துரத்தியடித்தாலும் கூட, வாசிப்பினை நாம் ஒழுங்குமுறையான பழக்கமாக நடைமுறையில் மேற்கொண்டிருக்கவேண்டியது மிக மிக அத்தியாவசியமானது. இது அவரவர் அறிவின் தரத்திற்கும் தன்மைக்கும் இரசனைக்கும் ஏற்றபடி அமைந்திருக்கலாம்.
தொட்டிற்பழக்கமாக வாசிக்கும்பழக்கம் தொடர வேண்டுமென் பதற்காகவே டாலர்வகுப்புகளிலிருந்தே கதைவாசித்தல், கதை கேட்டல், கதை சொல்லல், மெளனவாசிப்பு, உரத்த வாசிப்பு, உச்சரிப்புப் பழக். கங்கள் என்பன பயிற்சிபண்ணப்படுகின்றன. வாசிக்கும் பழக்கத்தையும், ஆர்வத்தையும் இளம் பராயத்திலிருந்தே பிள்ளைகளுக்குப் புகுத்தி. விட்டால், அவற்றில் பிள்ளைகளுக்குத் தணியாத தாகம் ஏற்பட்டு,
‘ஓலை’ பக்கம் 17

Page 11
தொடர்ந்து நூல்களை அவர்கள் வாசிக்கவே செய்வர். இந்நிலையில் பிள்ளைகளுடைய நாட்டத்திற்கும் இரசனைக்கும் விருப்பத்திற்குமேற்றவிதத்தில், பெற்றோர் ஆசிரியர்கள், நூலகத்தினர் பொருத்தமான நூல்களைத் தெரிவுசெய்து கொடுப்பின் பிள்ளைகள் அவற்றைப்பரிபூரண விருப்பத்தோடு வாசித்துத் திருப்தி அடைவர், சிறுபிள்ளைகளை வாசிப்பில் கருத்துன்றுவதற்கு அவர்களுக்கான நூல்கள் கவர்ச்சியான அட்டைப்படங்களுடன், இலகுவான பரிச்சயமான வசனநடையில் அவர்களது ஆர்வத்தைத் தூண்டிச் சிறந்த பண்புகளையும் பழக்கவழக்கங்களையும் கொடுக்கக் கூடிய முறையில் அமைந்திருத்தல் அவசியம், நூல் தரும் செய்திகளோ, கதைகளோ சம்பவங்களோ அந்தந்தவயதிற் கேற்றவகையில் பிள்ளைகளுடைய மனநிலை, அறிவுத்தரம் என்பவற்றிற்குப் பொருத்தமான அவர்களது அனுபவம், மனப்பாங்கு, திறன்களை ஊக்கப்படுத்திச்சிறந்த ஆளுமையை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் சொற்கள், வசன அமைப்புகள், பந்திகள் ஒழுங்கு படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். வாசிக்கும்பிள்ளைகளது அறிவக்கு விருந்தாக, சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டுவதாக, திறமையை விருத்தி செய்யும் விஷயங்களாக அவை அமைந்திருத்தல் வேண்டும். எப்படி அறுசுவை விருந்தில் இனிப்பு, புளிப்பு, கயர்ப்பு, துவர்ப்பு, கைப்புபோன்ற பல் சுவைகளும் பொதிந்திருக்குமோ அதேபோல பல்வேறுசுவைகளும் கூடிய விஷயங்கள் அறிவை வளர்ப்ப தோடு சுவைக்கும் தன்மையையும் விருத்தி செய்து வாசிப்பிலே இடையீடற்ற ஒரு அவாவை ஏற்படுத்த அவை ஏதுவாகின்றன.
மன ஒழுக்கத்தை நெறிப்படுத்தவும் தன்னலம் பேணாப் பொதுநலம் நோக்கும் பரோபகாரச் சிந்தைக்கும் சிறந்த ஆளுமைகள் பொருந்திய சமூகப் பிரஜையாக வாழ்வை மேற் கொள்ளவும் வாசிப்பு ஊக்கம் கொடுக்கிறது. குறிப்பிட்ட ஒரு விடயம் பற்றிப் பலபேருடைய நோக்குகள், எண்ணங்கள் முடிவுகளை வாசிப்பதன் மூலம் நாம் அறியும்போது ஒரு சில நிமிடங்களில் நமது அனுபவ, வாசித்த அறிவு பல மைற்கற்களைத் தாண்டி விடுகிறது. விவேகம் எழுச்சி கொள்கிறது இதனால் தீர்வுகளும் தீர்மானங்களும் முடிவுகளும் மிக இலகுவாகின்றன.
பாரிய வேகத்துடன் வளர்ச்சி பெற்றுவரும் இன்றைய அறிவுலகம் வாசிப்பின் வறுமை, பின்தங்கல்களால் படுபயங்கரமான அறிவீனப் படுகுழியுள் வீழ்ந்து விடும் அபாயமும் நேர இடமுண்டு. வளரும் இவ்வுலகைப்புரிந்து கொள்ள, அதனோடு நாமும் கைகோர்த்துநடைபோடநமது அறிவைத்துலாம்பரமாக்க ஏனைய அறிவுச் சாதனங்களை நாம்
‘ஓலை’ பக்கம் 18

பயன்படுத்துவதுபோன்று, அறிவார்ந்த நூல்களையும் வாசித்து, அறிந்து மேன்மேலும் எமது அறிவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியதும் எமது அன்றாடக் கடமைகளுள் ஒன்றாகிவிடவேண்டும். நம் நாட்டில் வாசிப்புப்பழக்கம் மிக அருகிவருகிறது என்பது ஆய்வாளரின் புள்ளிவிபரக் கணக்கெடுப்பு.
இளமையிலேயே வாசிக்கும் பழக்கத்தில் கருத்துன்றாததன் காரணமாகப் பல்கலைக் கழகமாணவர்கள் தமது பாட அறிவுக்கான விஷயங்களைப் பேராசிரியர்கள் தரும் குறிப்புகளை மட்டுமே வைத்துக் கொண்டு பரீட்சைக்கு விடை எழுதுவதாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களே பகிரங்கமாகக் குற்றம் சாட்டுவதை அறிவோம். அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனை விரிவுக்கும் அடித்தளமான இவ்வாசிப்புப் பழக்கத்தை நாம் நமது வாழ்க்கை முழுதுமே மேற்கொண்டிருத்தல் வரவேற்க வேண்டிய தொன்றாகும்.
மாணவரிடையே வாசிப்புப் பழக்கத்தைக் கட்டாய்ப்படுத்திப் பயிற்சியளிக்கவும், அவர்களது ஒய்வு நேரத்தைச் சிறந்த முறையில் பயனுறச் செய்வதற்குமாக பாடசாலை நேர அட்டவணையில் வாசிப்புக்கெனவும் நேரத்தை ஒதுக்கக் கல்வியமைச்சு கட்டளையிட்டுள்ளது. ஒவ்வொரு பாடசாலையிலும் நூல் நிலையமும் அமைக்கவேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான சில நூல்களைக் கல்வி அமைச்சே தெரிவு செய்து பாடசாலைகளுக்கு இலவசமாக விநியோகமும் செய்கின்றது.
தவிர ஏனைய சனசமூக நிலையங்கள், கல்வி ஸ்தாபனங்கள், கழகங்கள், சங்கங்களிலெல்லாம் சிறந்த வாசிகசாலைகளை அமைத்து அவ்வப்போது வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் உட்பட பழைய புதிய நூல்களையும் வழங்கி வாசிப்போருக்கு வாசிக்கும் பசியைப் போக்குவதற்கு உதவுவதற்கான ஒழுங்குகளைச் செய்துள்ளன. நூல்களும் சாதாரண வாசிப்போர்களுக்கும் பொழுது போக்காக, ரசனைக்காகப்படிப்போருக்கும் உசாத்துணைக் காக, ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்துவோருக்குமென அவ்வத்துறைக்கேற்ற விதத்தில் 'அ'கர. வரிசைப்படி ஒழுங்காக அடுக்கிவைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். உயர்ந்து கொண்டுபோகும் நூல்கள் சஞ்சிகைகள், பத்திரிகைகளின் விலையில் தனிப்பட்டமுறையில் அவற்றைப் பெற்றுப் படிக்கமுடியாத நிலையில் வாசிகசாலைகள் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.
‘ஓலை’ பக்கம் 19

Page 12
வாசிகசாலைப் பொறுப்பாளாகள் எங்கெங் கிருந்து எத்தகைய நூல்கள் எவ்வெப்போது வெளிவருகின்றன என்ற விபரங்களை அதிகம் அறிந்தவர் களாகையால் அவற்றை உரிய முறைப்படி தருவித்துக் கொள்வதன் மூலம் பலவகையான நூல்களையும்நூல் நிலையங்களில் பார்த்துத் தெரிந்து வாசிக்க முடியும். சில நூல்நிலையங்களில் நூல்கள் தூசு படிந்து யாருமே அவற்றைப் பயன்படுத்தாமல் பக்குவமாகப் பூட்டி வைக்கப்பட்டிருப்பதுமுண்டு. இந்நிலை முற்றாக மாற்றமடைய வேண்டும். நூல்கள் அலுமாரிகளிலே அழகாக அடுக் கிவைக்கப்படுவதோடு அவற்றின் பயன்பாடு முற்றுப் பெற்றதாகிவிடாது என்பதனால் நூல் களைக் கண்டபடி பக்கங்களை மடித்து விரித்து மடக்கி அவற்றைப் Ll(9 தாக்கிக் கிழித்து விடுவதென்பதல்ல அர்த்தம். உண்மையில் நூல்கள் வாசிக்கப்பட்டு அறிவுத்தெளிவும் விரிவும் ஏற்படவேண்டியதே நூற்படைப் பின் நோக்கமுமாகும்.
வாசிகசாலைகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் நூல்களின் பக்கங்கள் ஆய்வுக்கோ மேற்கோள்களுக்கோ தேவைப்படின் அவற்றைத திருட்டுத் தனமாகக் கிழித்தெடுப்பதும், மையினாலோ பென்சிலாலோ நூல்களின் பந்திகளில் அடிக்கோடிடல், அடையாளங்கள் இடுதல் கீறுதல், பக்கங்களில் கோடிடல் தமது குறிப்புகள் விமர்சனங்களை எழுதுதல் என்பன தவறான செயலாகும். ஒரு நூலை எத்தனையோ நூற்றுக்கணக்கான வாசகர்கள் உபயோகிக்க வேண்டியிருப்பதால், நாம் பெற்று வாசிக்கும் நூல்களை அழுக்காக்காமல், ஏதேனும் அடையாளங்கள் அடித்தல் கீறுதல் இன்றியும் பக்குவமாகப் பேணுதலவசியம். எமது சொந்த நூலைவிடப் பொதுச் சொத்தான வாசிகசாலை நூல்களை நாம் கவனமாகப் பேணிப் பாதுகாப்பதும் வாசிப்பில் அதீத ஈடுபாடு கொண்டவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்பென்பதையும் நாம் மறந்துவிடலாகாது. KNS)
சங்கப் பதிவேட்டிலிருந்து.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியப் பணிக்கு என்னுடைய பாராட்டுகள்
மு.மு. இஸ்மாயில் 18. 05. 76 நீதிபதி, உயர் நீதிமன்றம், சென்னை
‘ஓலை’ பக்கம் 20

வரலாற்றுச் சிறுகதை
தமிழ் மன்னன் பராக்கிரமபாகு
ஜனநாதமங்கலம் என்று சோழப்பெருமன்னர்களால் அழைக்கப்பட்ட பொலநறுவையில் ஈழத்தின் ஏக மன்னனாக மகுடம் தரித்துக் கொண்ட பாண்டிய நாட்டு அரசபரம்பரையைச் சேர்ந்த மகாபராக்கிரமபாகுவுக்கு நாட்டின் ஒரு பகுதியான உருகுணை ஒரு பெரும் அறை கூவலாகவே எழுந்து நின்றது.
தனது சிறிய தந்தையான பூரீ வல்லபனின் மகன் மானபர்ணனின் மரணத்தின் பின் அவனது தாய் சுகலா உருகுணையின் அரசியாகத் தன்னைப் பிரகடனம் செய்திருந்தாள். படைத்தளபதிகள், பிரதானிகள் என்போரின் ஆதரவுடன் சிற்றன்னை சுகலா செய்த இந்த சுய பிரகடனம் பராக்கிரமபாகுவின் காதில் பழுக்கக் காய்ச்சிய நாராசாரமாக நுழைந்தது. ஆனாலும் காலம் கனியட்டும் என்று அவனது ராஜதந்திரம் ஒரு பெரும் படையெடுப்புக்காகக் காத்திருந்தது.
பராக்கிரமபாகு, ஈழத்தின் அரசனாக மகுடம் சூடிய எட்டாவது ஆண்டு அது. ஒரு நாள். கதிரவன் தனது முகம் காட்டத் தொடங்கும் இளம் காலைப்பொழுது. ரக்கன் என்னும் தமிழ் மறவன் தலைமையில் ஒரு பெரும் காலாட்படையும், யானைப் படையும் தக்கண தேசத்தின் தலைநகரிலிருந்து உருகுணை நோக்கிப் புறப்பட்டன. அந்த இரண்டு படைகளும் எழுப்பிய புழுதி மண்டலத்தில் அப்பிரதேசம் முழுவதுமே ஒரு கணம் காணாமல் போகின்றது.
பராக்கிரமபாகுவின் இந்தப்படை எழுச்சி கண்டு பயந்த சுகலா, உருகுணையின் காடுகளுக்குள் ஒடி ஒளிந்தாலும் படைத்தளபதி ரக்கனின் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை. அவளது மகன்மானபர்ணனால் உருகுணைக்கு எடுதுச் செல்லப் பட்ட புனித சின்னங்களும் மக்களின் பெருத்த ஆரவாரத்தின் மத்தியில் தலைநகருக்கு ஊர்வலமாகவே கொண்டுவரப்பட்டன. இந்த வெற்றியைத் தொடர்ந்து பூதன் என்பவன் பராக்கிரமபாகுவின் ராஜப்பிரதிநிதியாக உருகுணையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கலானான்.
‘ஓலை’ பக்கம் 21

Page 13
எட்டு ஆண்டுகளாகத் தன்னை எதிர்த்து நின்ற உருகுணையின் இறுமாப்பை அடக்கி அடிபணிய வைத்ததில் பராக்கிரமபாகுவை விட அவனது அழகிய பட்டத்து ராணி ரூபவதிக்கே அளவு கடந்த ஆனந்தம். ஈழத்தின் ஒரே ஒரு கோப்பெருந்தேவியாகத் தான் கோலோச்சுகையில் தனக்குப் போட்டியாக ஈழத்தின் ஒரு சிறு பகுதியில் இன்னுமொரு சின்ன இராணியா? அதுவும் தன் மாமி முறையானவளா? மருமகள் ரூபவதியின் உள்ளத்தில் வீசிய ஆத்திரப்புயல் சுகலாவின் கைது பற்றி அறிந்தபின்பே மெல்ல மெல்ல அடங்கத் தொடங்கியது.
உருகுணையைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பரர்க்கிர மபாகுவின் நாட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பக்கம் திரும்பி யது. தன் தாய் இரத்தினவல்லியின் தந்தை முதலாம் விஜயபாகுவின் அந்திமத்தைத் தொடர்ந்து ஓர் இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டிருந்த ஈழம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது என்று எண்ணிய பராக்கிரமபாகு, நாட்டின் நீர்வளத்தைப் பயன்படுத்தி நிலவள விவசாய விருத்திக்குத் திட்டமிட்டான், இதனால், குளங்கள் பல வெட்டப்பட்டன. பண்டவாவி பராக்கிரமசமுத்திரமாக விரிவு பெற்றுப் பலநூறு பரப்பு நன் செய் நிலங்களைப் பசுமையாக்கிக் காட்டிற்று. பராக் கிரமபாகு அந்தப் பசுமை கண்டு பரவசமடைந்தான்.
வளம் கொழிக்கும் ஒரு தேசத்தை இவ்வளவு விரைவில் கட்டி எழுப்பிய மகாபராக்கிரமபாகுவின் மனத்தில் புத்தமதத்தைப் புனரமைப்புச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் எழுந்து நின்றது. மதம் சரியாக மக்களால் பின்பற்றப்பட வேண்டுமானால் அதனைப் போதிக்கும் குருக்கள், நெறி பிறழாதவர்களாக இருக்க வேண்டுமென்று உறுதியாக நம்பிய மன்னன் பராக்கிரமபாகு இதற்கென்று பெளத்தமத அறிஞர் திம்புலாகலை மகாகாசியப்ப தேரரின் தலைமையில் ஓர் ஆலோசனைச் சபையை நிறுவி அதன் மூலம் பிக்குகள் பின்பற்றி நடக்கவென ‘கதிகாவத" எனும் பேரில் ஓர் ஒழுக்க நெறிக் கோவையை உருவாக்கி அதனைக் கல்விகாரையில் பொறிப்பித்தான்.
மகாபராக்கிரமபாகுவின் இந்த மதச்சீர்திருத்தம் மஞ்சள் உடைக்காரரின் வாழ்க்கை நெறியில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இம்மாற். றத்தைப் பர்மா கம்போடியாவில் இருந்து பராக்கிரமபாகுவினால் வரவழைக்கப்பட்ட பெளத்த பிக்குகளின் வருகையும் பெருமளவு உறுதிப்படுத்தியது.
‘ஓலை’ பக்கம் 22

நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் சமயத்துறையிலும் விளைவித்த பெரும் பயனைக் கண்டு மகிழ்ந்த பராக்கிரமபாகு, இதற்கெல்லாம் அடித்தளம் இட்ட தனது தாய்வழிப் பாட்டன் முதலாம் விஜயபாகுவை நினைத்துப் பெருமிதமடைந்தான்.
எழுபது ஆண்டுகளுக்கு மேலாக மும்முடிச் சோழ மண்டலமாக இந் நாட்டைக் கட்டி ஆண்டு சோழ சாம்ராச்சியத்தின் வெற்றிகளையெல்லாம் ஒரு சொப்பனமாக்கிக் காட்டிய விஜயபாகு எத்தகைய தொரு பாரம்பரியத்தைத் தன்னிடம் விட்டுச் சென்றிருக்கின்றார் என்று மீண்டும் நினைத்துப் பார்த்த பராக்கிரமபாகு அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்
T60,
அந்தி சாயும் அழகிய பொழுது அது. வானம் எங்கும் சூரியன் வண்ண ஒளியை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறான். அந்த ஒளிமழையில் மூழ்கியவாறு, இராஜரட்டையின் தலைநகர் பொலநறுவையின் தெற்குப் புலத்தில் செங்கல்லால் ஆன ஏழுமாடி அரண்மனை கம்பீரமாக எழுந்து நிற்கின்றது. அரண்மனையை ஒட்டினாற்போல அமைந்திருக்கும் ‘ராஜவேசி புஜங்க மண்டபம், கலை நிகழ்வுகளுக்கென உருவாக்கப்பட்ட, ‘சரஸ்வதி மண்டபம்’ ‘அந்தணர் மண்டபம்’ என்பன அவ்வரச மாளிகையின் வனப்பை இன்னும் அதிகமாக்கிக் காட்டுகின்றன.
இந்த எழில் போதாதென்று மாளிகையைச் சுற்றி உருவாக்கப்பட்ட மலர்ப்பூங்காவில் இருந்து காற்றோடு கலந்து வரும் நறுமணம் அரசகுடும்பத்தினர் மட்டும் நீந்தி விளையாடும் கேணியில் இருந்து வரும் குளிர்ச்சி - அந்தப் பிரதேசம் முழுவதையுமே பூலோக சொர்க்கமாக்கிக் கொண்டிருந்தன.
இந்தச் சொர்க்க லோகத்தில் தனது பட்டத்து ராணி ரூபவதியோடு இணைந்திருந்து இயற்கை இன்பத்தை அள்ளிப் பருகும் வழக்கத்தைக் கொண்டிருந்த பராக்கிரமபாகு, அன்று மாளிகையின் மந்திராலோசனை மண்டபத்தில் அமைச்சர்கள் தண்டநாயகர்கள் லங்காபுரன்,ஜகத்விஜயன் ஆகியோர்புடைசூழ அமர்ந்திருக்கின்றான்.நீண்ட சிந்தனையில் மன்னன் பராக்கிரமபாகு நிலைத்திருக்கின்றான் என்பதை அவனது நெற்றிச் சுருக்கமும் தீட்சண்யமான கண்களும் எடுத்துக் காட்டுகின்றன.
மாளிகையின் இந்த மந்திராலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தனது பாட்டனின் பரம்பரைப் பூமி மீது அவரின் பேரனாகிய நான் படையெடுப்பதா என்ற தயக்கம் பராக்கிரமபாகுவிற்கு ஏற்படுகின்றது.
‘ஓலை’ பக்கம் 23

Page 14
ஆனாலும் உயிராபத்தில் இருக்கும் தன் நண்பன் மதுரை மன்னன் பராக்கிரம பாண்டியனுக்கு உதவுதல் ஒரு பெரும் கடமையென உணர்ந்த பராக்கிரமபாகு படைத்தளபதி லங்காபுரன் மீது தனது பார்வையை ஒட விட்டவாறே, பாண்டிய நாட்டின் மீது படை நடத்த ஆணை பிறப்பிக்கின்றான். அந்தத் தமிழ் மண் இன்னுமொரு தடவை அந்தி வானமாகிறது.
பாண்டியமன்னன் மாறவர்மன் சீவல்லபனி மரணத்தின் பின்பு,அவனது இரு புதல்வர்களில் ஒருவனான சடையவர்மன், குலசேகரபாண்டியன் நாட்டின் தென்பகுதியை, திருநெல்வேலியில் இருந்து அரசாள, மற்றவன்பராக்கிரம் பாண்டியன், மதுரைக்கு மன்னனாகின்றான். எனினும் பாண்டிய நாடு பங்கு போடப்படுவதை விரும்பாத குலசேகரபாண்டியன், ஒருநாள் திடீரென்று மதுரையைத் தாக்குகின்றான். இதை எதிர்பாராத பராக்கிரமபாண்டியன்,ஈழமன்னன் மகாபராக்கிரமபாகுவிடம் ஆதரவு கோரித் துரது அனுப்புகின்றான்.
தண்டநாயகன் லங்காபுரன் தலைமையில் பாண்டியநாட்டில் காலடி எடுத்து வைத்த ஈழத்துப் படை, இராமேஸ்வரம், குந்துகாலம் ஆகிய ஊர்களைக் கைப்பற்றியபடி மதுரை நோக்கி முன்னேறியது. அதற்கிடையில் சேர நாட்டில் ஒளித்திருந்த பராக்கிரம பாண்டியனின் கடைசிமகன் வீரபாண்டியனைத்தவிர, அவனது குடும்பம் முழுவதுமே குல சேகரனின் வாளுக்கு இரையாகின்றது. குரூரமான இந்தச் சகோதரக் கொலை லங்காபுரனின் கோபக்கனலை மேலும் கிளறிவிடவே அவன் தொண்டி, கருந்தங்குடி திருவேகம்பம், கீழை மங்கலம், மேலை மங்கலம் ஆகிய ஊர்களைக் கைப்பற்றி அவற்றை ஆளும்படி கண்ட தேவ மழவராயன், மழவச்சக்கரவர்த்தி ஆகியோரிடம் பணித்துவிட்டுக் கூடல் மாநகரம் நோக்கிக் கூற்றமெனப் பாய்ந்து சென்றான்.
ஈழத்துப் படைக்கு எதிர்நிற்கமுடியாத குலசேகரனின் படைத்தளபதி. களான சுந்தரபாண்டியன், பாண்டியராசன்,ஆளவந்தான் ஆகியோர் களத்தில் உயிர்துறந்ததைக் கண்ட குலசேகரன் படை முழுவதுமே அச்சத்தில் பின் வாங்குகிறது.
சிங்கப்படையின் இந்த இமாலய வெற்றி, செந்தமிழ் நிலமெங்கும் மயான அமைதியை உண்டாக்குகிறது. ஏற்கனவே தன் மாமனின் கொங்கு நாட்டுப் படையும். ஈழத்துப் படையை எதிர்த்து நிற்க இயலாது புறமுதுகிட்டதால் நிலை குலைந்து போன குலசேகரன், அவசர அவசரமாகச் சோழப்பேரரசன் இரண்டாம் இராஜராஜனிடம் அபயக்கரம் நீட்டினான்.
“ஓலை’ பக்தம் 24

குலசேகரனின் வேண்டுகோளை உடனே ஏற்றுக் கொண்ட கொற்றவன் இராஜராஜன், திருச் சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் ஒரு பெரும் படையை பாண்டிய நாட்டிற்கு ஏவினான்.
தமது நீண்ட காலப் பகைவரான சோழர் படைகளுக்குத் தாக்குப் பிடிக்க இயலாத ஈழப்படை நான்கு திசைகளிலும் சிதறி ஓடத் தொடங்கியது. ஆயினும், தன்னம்பிக்கையோடு இறுதிவரை களத்தில் நின்ற தளபதி லங்காபுரன், சகத்விஜயன் இருவரின் தலைகளும் பல்லவராயனால் மதுரைக் கோட்டை வாயிலில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டன.
பாண்டிய நாட்டில், ஈழத்துப் படையின் தோல்வி மகாபராக்கிரமபாகுவை ஒரு கணம் அசைத்துத் தான் போட்டது. அந்த மன உளைச்சல் பாண்டிய நாட்டின் மீது மீண்டுமொரு தடவை படைப்பலத்தைப் பிரயோகிக்க விரும்பினாலும் அப்போதைய சூழ்நிலையில் அது சரியான இராஜ தந்திரமாகாது என்றுணர்ந்த அவன், பாண்டியன் குலசேகரனுடன் பகைபாராட்டாமல் நட்புக் கொண்டு அதன் ஊடாகத் தனது இரத்த உறவைப் புதுப்பிக்க வேண்டுமெனத் தீர்மானித்தான்.
போர் முடிந்து இரண்டொரு தினங்களில் பாண்டியனின் அத்தாணி மண்டபத்தின் ஒருபுறம் ஈழத்தின் இரத்தினக் கற்கள், அனைவரினதும் பார்வையை அள்ளிக் கொண்டிருக்க, இன்னுமொரு புறம், கறுவா, ஏலம், கராம்பு முதலான பொருட்களில் இருந்தெழுந்த வாசம், மதுரை மாநகரம் முழுவதையுமே தன்வசமாக்கிக் கொண்டிருந்தது.
S
/ー ༄༽ சங்கப் பதிவேட்டிலிருந்து .
கடந்த 35 வருடங்களுக்கு மேலாக, மேலான தமிழ்த் தொண்டாற்றி வரும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினரின் சீரிய பணி சிறந்து, வளர்ந்து பெருமை பெற வேண்டும் என்று இறையருளை இறைஞ்சுகிறேன்.
ஆ. பாஸ்கரதாஸ் தமிழ் அலுவல்கள் பணிப்பாளர்
28.12.1980 பிரதேச அபிவிருத்தி அமைச்சு கொழும்பு للر ܢܠ
‘ஓலை’ பக்கம் 25

Page 15
பன்மொழிப்புலவர்.த.கனகரத்தினம்
6ழுதினவன் ஏட்டைக் கெடுத்தான், பாடினவன்பாட்டைக் கெடுத்தான்
என்ற நிலை வளரக்கூடாது.
இன்றைய சங்ககால இலக்கியங்கள் சரி. மற்றும் அரிய இலக்கிய இலக்கணங்கள் சரி ஏட்டில் இருந்தே அச்சுவாகனம் ஏறியுள்ளன. ஏட்டிலிருந்தவற்றை செல் - கறையான், இராமபாணம் (புத்தகப்பூச்சி), முதலிய பூச்சிகள் அழித்ததும் உண்டு அதனால் எழுத்துக்கள் சிதைந்தன. குற்றுப் பெறாத எழுத்துக்களில் துளை விழுந்து குற்றுக்கள் இடப்பட்டன. கால் பெறும் 'ர' போன்ற எழுத்துக்கள் காலற்றுக் க”ணப்பட்டன. அந்த நிலையில் சித்தரத்தை என்பது சித்தாத்தையாக வாசிக்கப்பட்டது. மருந்திற்குரிய சித்தரத்தை தேடப் போனவர் சித்தாத்தையைத் தேடிக்கண்டு பிடித்த கதை உண்டு. அதே போன்று சுவையான பல கதைகளும் உண்டு. இன்று நவீன அச்சுக்கலை கணினி என்பன வளர்ந்த நிலையில் பிழைகள் நிறைந்திருப்பதுதான் ஆச்சரியம்!
பொது இடங்களில் மக்கள் பார்வைக்காக வைத்திருக்கும் அறிவுறுத்தல்கள், விளம்பரங்கள், பஸ்வண்டிகளில் இருக்கும் பெயர்ப் பலகைள் என்பவற்றில் பிழைகள் மலிந்திருக்கின்றன. இவைகள் உடனும் திருத்தம் பெறல் வேண்டும். இவை மொழிவளர்ச்சியில் அக்கறையுள்ளவர்கள் அனைவரின் சிந்தனை, செயற்பாடு என்பவற்றிற்கு அறை கூவலாக - சவாலாக நிற்கின்றனவன்றோ!
முதலில் பஸ்வண்டிகளில் “கோட்டை” என்பது எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவதானியுங்கள். பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டால் பிழைவிளங்காமலும் போகும். அதனாற்றான் அவதானியுங்கள் என்று குறிப்பிட்டோம். 'கோ' என்ற எழுத்து இடம்பெற வேண்டிய இடத்தில் ‘கொ’ என்ற எழுத்துஎழுதப்படுகிறது. இதன் அர்த்தம் என்னவோ? கொள்ளுப்பிட்டி என்பது கொல்லுப்பிட்டி என்று எழுதப்படுகிறது. மலசல கூடங்களில் மலம் கழிக்குமிடம் என்பது மலம் களிக்குமிடம் (மலம் மகிழும் இடம் என்ற பொருள்தர) என்று எழுதப்படுகிறது. (களித்தல்- சந்தோஷப்படல்).
‘ஓலை’ பக்கம் 26
 

வியாபாரத்தலங்களில் காணப்படும் விளம்பரங்கள் பிழையாக - அதுவும் பெரிய எழுத்தில்-எழுதப்பட்டிருப்பதையே காண்கின்றோம். தேநீர்க் கடை என்பது தேனிர்க்கடை என எழுதப்படுகிறது. உண்மையான பொருளை விளங்கிக் கொள்ளாமையால் ஏற்படும் பிழை இதுவாகும் தேன்+நீர் என்பது தேநீர் ஆகும். அதைவிடுத்து தேனிர் என்று எழுதினால் என்னவாகும்?அது தேநீர் என்ற பொருளையல்லவா தரும்?
துணிமணிவிற்கும் கடை விளம்பரங்களில் புடைவை என்றிருக்க வேண்டிய இடத்தில் புடவைக் கடை, பிடவைக்கடை என எழுதப்பட்டிருக் கிறது. புடையப்படுவது - நெய்யப்படுவது புடைவை. புடை என்பதே சொல்லின் பகுதி. எனவே, புடைவை என்பதே சரியானவழக்காகும்.
அடகு வைக்கும் கடைகளில் அடைவுகடை, அடவுகடை என எழுதுவதும் பிழை. அடைவுஎன்பது பெறுபேற்றைக் குறிக்கும். அடவு என்றாலும் அதன் பொருள் காடு என்பதாகும். எனவே, பொருளை ஈடாக வைக்கும் இடம் அதாவது அடகுவைக்கும் இடம் அடகு கடையாகும். . . .''... . . .
காய்கறிகள் விற்கும் இடத்தை நோக்குவோம். காய்கறிகளின் விலைப்பட்டியலில் காய்கறிகளின் பெயர்களைப் பிழையாகவே எழுதித் தொங்கவிட்டிருக்கிறார்கள் அப்பெயர்களைப் பிழையாகவே உச்சரிக் கிறார்கள். பொதுமக்களும் பிழையாக வழங்குகிறார்கள். எப்படியோ கொடுக்கல் வாங்கல் நடந்து முடிகிறது. ஆங்கிலக் காய்கறிகளை ஆங்கில முறைப்படி உச்சரித்தால் கூட அவற்றைத் தமிழ் முறைப்படி எழுதமுடியும். Carrot என்பதனைக் கரட்டு என்றோ மஞ்சள்முள்ளங்கி என்றோ உபயோகிக்கலாம். Beet root என்பதனை பீட்றுரட்டு என்றோ சீனிக்கிழங்கு என்றோ வழங்கலாம்.
கத்தரிக்காய் என்பதனைக் கத்திரிக்காய் என்பது பிழைகத்தரி என்பது சீனச் சொல் . அதனைக் கத்தரி என்றே உச்சரிக்க வேண்டும். இதே மக்கள் கத்திரிக்கும் கோலைக் கத்தரிக் கோல் என்று எழுதுவார்கள், பேசுவார்கள். வெட்டுதல் என்ற பொருளைத் தரும் கோல் கத்திரிக்கோல் அது போன்று கத்தரிக்காய், கத்திரிக்கவோ வெட்டவோ மாட்டாது. கத்தரிக்காய்க்கும் கத்திரிக் கோலுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டோ எனின் இல்லையென்பதே விடை.
பாகற்காய் என்பதைப் பாவக்காய் என்று எழுதுவார்கள் அவ்வளவுதூரம் அக்காய் என்ன பாவம் செய்து விட்டது. பாகல் + கொடி - பாகற் கொடி, பாகல் + காய் = பாகற்காய் என வழங்குவதே சரி.
“g606v” Uśøó 27

Page 16
பூசணி, பூசுணைக்காய் என்பதனைப் பூசணி, பூசினி என வழங்குவது பிழை.
பின்வரும் மரக்கறிகளின் பிழையான வழக்கும் சரியான வழக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பிழையான வழக்கு சரியானவழக்கு
புடலங்காய் புடோலங்காய்
பயத்தங்காய் பயிற்றங்காய் (பயறு + காய்) வெண்டிக்காய் வெண்டைக்காய்
பிசுக்கங்காய் பீர்க்கங்காய் (பீர்க்கு + காய்) சுரக்காய் சுரைக்காய் (சுரை + காய்) முருக்கங்காய் முருங்கைக்காய் (முருங்கை + காய்) பிலாக்காய் பலாக்காய் (பலா + காய்)
பிழையற்ற திருத்தமான சொற்களை அறிந்து நடைமுறை வழக்கிற் கொண்டுவந்தாற்றான் சொல்வளம் பெருகும்.
‘ஓலை’ பக்கம் 28
 

ஒலை ஏங்கி வளர்வதற்காக உதவிக்கரங்கள் வழங்கிய இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
ஞானசிரோன்மணி, சைவப்புலவர்,
|ட்ாக்டர் பண்டிதர் ஆர். வடிவேல் M எம். கே. முருகானந்தம் “பாக்கியவதி”
348, Galle Road, 15, வித்தியாலயம் ஒழுங்கை Colombo - 06 திருகோணமலை
ரூ. 1,000.00 ლეხ. 300.00
செ. குணரத்தினம் கவிஞர் பொன். சிவானந்தன்
'), காரைதீவு - 04
12, Retreat Road. (கி.மா) Colombo r 04
ரூ. 1,000.00 ரூ. 300.00 '
w
கவிஞர் சோஅது குடியான் கவிஞர் பாலமுனை பாறுக்
, , r'
6/2, Flephant Tank, 1st Street. 'பர்ஸானா மன்ஸில்’ “Royappatah’-siv பாலமுனை-03 Chennai - 14 (aÉ.pr)
South India ’’: : : : "-" یہی い、・・ : ・・。 ரூ. 500.00 ლენ. 300.00
ந.சிவபாதம் ஜெகதீஸ்வரிநாதன்
“செல்வ அகம்” ஆனைக்கோட்டை கிராமசபை வீதி
யாழ்ப்பாணம் | தம்பிலுவில் (கி.மா)
ரூ. 500.00 ரூ. 200.00
(தம்பிலுவில் ஜெகா)
‘ஓலை’ பக்கம் 29

Page 17
ஒலை இதழ்கள் தொடர்ந்து கிடைத்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இத்துடன்
எனது அன்பளிப்பாக 300 ரூபாவுக்கான காசோலை ஒன்றை அனுப்புகின்றேன்:
நன்றி
30.09.2002 சி.பி.சத்தியநாதன்
6 Park Place, Colombo -5
இத்துடன் 500 ரூபாவுக்கான காசுக் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நன்கொடை நிதிக்காக, 'ஒலை' வளர்ச்சியில் எனக்கு நிச்சயம் நம்பிக்கையுண்டு. ஒரு இலட்சியக் கோட்பாட்டுடன்நடை பயில முனையும் 'ஒலை' நிருவாகிகள் தமிழார்வலர்களால் நன்கறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 'ஒலையின் தொலைநோக்கு மெல்ல விரிவடைந்து ஞாலத்தில்நல்லதோர் நூல் என மக்களால் போற்றப்பட என் இதயவாழ்த்துக்கள்! 01.10.2002 என்மணிவாசகன் (ஜேபி) "மணிக்கவிராயர்" நாவலர் ஒழுங்கை, அக்கரைப்பற்று 07/3 கொழும்புத் தமிழ்ச்சங்க ஏடான ஒலை ஜுலை மாத இதழைப் படித்தேன். சங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடிந்தது. இதழ் கையடக்கமாக , அழகாக கவர்ச்சிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் ஒலை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. எனது பாராட்டுக்கள் உரித்தாகுக. கொழும்புத் தமிழ்ச் சங்கம் இன்று கொழும்புக்கு மட்டும் உரிய ஒரு அமைப்பாக இயங்கவில்லை. அகில இலங்கைக்கும் பொதுவான ஒரு சங்கம் போலவும் கொழும்புத் தமிழ்ச்சங்கம் இந்நாட்களில் விருட்சம் போல வளர்ந்து விட்டது. அதனது செயற்பாடுகள், சேவைகள் நடவடிக்கைகளும் அவ்வாறே அமைந்துள்ளன. மீண்டும் எனது பாராட்டுக்கள். 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சங்கச் செயலாளராக விளங்கியவர் வ.மு. கனகசுந்தரம் அவர்கள். அக்காலத்தில் இரா.நெடுஞ்செழியன், தெ.பொ.சுந்தரனார், வித்துவான் சதண்டபாணி தேசிகர் சிறப்பித்த தமிழ்ச்சங்க விழாக்கள் இன்றும் நினைவிலுள்ளன. அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்புத் தமிழ் சங்கத்தை நிறுவிய பிரமுகர்களையும் சங்கம் அமைந்துள்ள ஆதன. த்தை வாங்க அரும்பணி புரிந்த பெரியார்களையும் ஒலை நினைவு கூர வேண்டும், தகவல்களையும் வெளியிட வேண்டும் என மிக விநயமுடன் வேண்டிக் கொள்கிறேன். 1986ம் ஆண்டில் "எனது நோக்கில் இலங்கைப் பாராளுமன்றம்" எனும் எனது நூலைத் தமிழ்ச் சங்கம் தனது பத்தாவது வெளியீடாக வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தியது. அதற்காக என்றும் நன்றியுடையன். 01.10.2002 செல்லப்பா நடராசா, கோண்டாவில்
‘ஓலை’ பக்கம் 30
 

'ேஒலைக்கு ஓர் இலக்கிய இதழுக்கான வடிவம் தரும் முயற்சிக்கு மனம்
நிறைந்த பாராட்டுக்கள். 'ஒலை' ஒரு சோலையாகச் செழிக்கட்டும்.
11.10, 2002 வாகரை வாணன்
தரணியகம், 479/3, புதிய கல்முனை வீதி நாவற் குடா, மட்டக்களப்பு
தாங்கள் அனுப்பும் 'ஒலை' இதழ் ஒழுங்காகக் கிடைக்கிறது. நன்றி.
12.10.2002 மாஸ்டர் சிவலிங்கம்
208, புதிய கல்முனை வீதி கல்லடி, மட்டக்களப்பு
9 ‘ஓலை’ இதழ் 6ஐ முதலில் பெற்றுக் கொண்டேன். தொடர்ந்து ஒலையின்
இதழ்கள் 5,7ஐ பெற முடிந்தது. மிகவும் நன்றி. ஒலை 5 இல் "இதயத்தின் ஈரிதழ்கள்"ஜின்னாஹற் எழுதிய சிறுகதை அற்புதமானது. இப்படி இன்று யார் கதை எழுதப் போகிறார்கள். ஜின்னாஹற் அவர்களுக்கு ஒரு தங்கப்பவுண் பரிசு கொடுக்கலாம். மேலும் ஒலை இதழ் 5 இல் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களைப் பற்றிச் செங்கதிரோன் யாத்த கவிதையும் அற்புதமானது. கவிதையின் அற்புதத்தைச் சொல்ல வேண்டின் எல்லா அடிகளையுமே திருப்பிச் சொல்ல வேண்டும்.
பூப்படையாப் பெண்களெல்லாம் பிள்ளை பெற வந்ததுபோல் - கவிதை யாப்பறியாப் பேர்களெலாம் பாப்புனைய வந்துவிட்டார் இன்றைய நிலையைக் கவிஞர் மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறார். புதுக்கவிதைப் புத்தக முதற்பிரதி வாங்க முந்தும் பிரமுகர்களைச் சாடுகையில் செங்கதிரோன் வெங்கதிரோனாக மாறி இருக்கிறார். அவர் சொல்வதும் இன்றைய யதார்த்த நிலைதான். ஒலை-6இல் மல்லிகை ஜீவா பற்றி செங்கதிரோன் எழுதிய கவிதையில் ஜீவாவின் முழுமையைக் காண முடிந்தது. ஜின்னாஹற் ஷரிபுத்தின் கவிதைகள், புலவர் த.கனகரத்தினம் அவர்களது ஆக்கங்கள், சிறுகதைகள் எல்லாம் நயம் மிக்கவை. இதழ் 7இல் இணுவைந.கணேசலிங்கம் எழுதிய அருமை தெரிந்த போது. சிறுகதை நல்ல படைப்பு. கணேசலிங்கம் கதையைத் தொகுத்த விதம் மிகப் மிகப் பயனுள்ள வகையில் அமைந்துவிட்டது. அதுதானே சமூகத்திற்குத் தேவையானது. ஒலை இதழ்கள் 1,2,3,4 கிடைக்கப் பெறின் மிகவும் ஆனந்தம் அடைவேன். 14.10.2002 செல்லப்பா நடராசா Pothakar Lane,Chenkalady
"gap6v” Uású 31

Page 18
'ஒலை' எனும் நமது பண்பாட்டுப் பொருளுடன் தொடங்கிய தங்கள் தகவல்ப் பணி கலை இலக்கியத் தரம் செறிந்த ஏடுகளாகவும் மிளிர்வதையிட்டு மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றோம்.
எட்டாவது ஒலை - கதம்பச்சக்கரவர்த்தி சோக்கல்லோ சண்முகம் அவர்களின் சாதனை இதழாக முகிழ்ந்தமை ஒலையுடனான சமுக ஒன்றிப்பை அதிகரிக்கின்றது. பாராட்டுக்கள், ஒலையின் உள்ளடக்கமாக அமைந்த நறுக்குகள், கருத்துகள், சங்கப்பலகை, கவிதைகள் அனைத்தும் ஒலைக்கு அணி செய்பவையே! அதில் இடம் பெற்ற பூங்கா'சிறுவர் சஞ்சிகை பற்றிய சிறப்புக் கட்டுரை மனதைத் தொட்டது. சோ.தேவராஜா அவர்கள் ஓர் ஆய்வுரீதியான, சஞ்சிகையின் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் தரும் வகையில் கருத்துக்களைப் பகர்ந்திருந்தார். ஆனால் ஒரு முன்மொழிவு இடறுகின்றது. அதாவது பூங்கா'தான் இலங்கையின் முதலாவது சிறுவர் சஞ்சிகை அல்ல. ஐம்பதுகளில் யாழ். குரும்பசிட்டியில் இருந்து வெளிவந்த “வெற்றி மணி"யும் சிறுவர் சஞ்சிகையே. அதைவிடக் கொழும்பில் பிஞ்சு' என்றொரு சஞ்சிகை, இன்னும் திருகோணமலையில் இருந்தும் சிறுவர் சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன. இன்னும் அவைபற்றிய தகவல்களை ஒலை வாசகர்கள்தருவார்களேயானால் அவை தமிழுக்கும் கால இலக்கியத்துக்கும் காத்திரமான பணியைச் செய்ய உதவும். நன்றி 17.10.2002 சிசத்தியகுமாரன் Public Health Inspector
Chest (Teaching) Hospital Welisara, Ragama.
háiriáitiúirí அறுபதாண்டுகளாய் அளப்பரிய சேவையாற்றும் தமிழ்ச்சங்கத்தின் 7வது ஒலை என்கரம் கிட்டியது. 32 பக்கங்களும் பாதுகாப்பான உறையும் ஒலையின் செழிப்பைக் காட்டுகிறது.
சங்கப்பலகையொடு அஞ்சலி, இரங்கற்பாக்களும் கனகரத்தினம் கட்டுரை,
கலைமாமணி தகவலும் கணிப்பொறிச் செய்தி, கணேசலிங்கம் சிறுகதை சுவைத்தேன். வளர்க ஒலை! வாழ்க பணி
23.10.2002 திருமதி. ஜெகதீஸ்வரி நாதன்
(தம்பிலுவில் ஜெகா)
கிராமசபை வீதி, தம்பிலுவில்
‘ஓலை’ பக்கம் 32

ང་《ཟང་མྱུ༔
ಸ್ಥಗ-2 @ 70’ith (Best 70ihes from
AMARI WILLS LANKA
PRIVATE LIMITED
No.65, Hampden Lane, Wella watte. Tel 074-5I8398
ாே
ང་《ཟ་མྱུ་ 7Ditlu OMBet Disse srovna مجمہ
īs
سمجھیں۔
MR. J.I.KUMAR
CURTAIN DRAPERS
Tailoring Undertaken, Railings and Delmet Fittings
149/11, Sri Siddarthe Road,
Kirulapane Te : O71319374 ܐ
*