கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2002.12

Page 1
கொழும்புத் த 7, 37 வது ஒழுங்கை (உருத்தி தொலைபேசி
வெப் முகவரி : WW இணைய தபால் முகவரி : cts
 
 

சங்க மாதாந்த மடல் :*ಷ್ಣ
璽2002尊
27.12.2002 அன்று நடை பெற்ற 100வது "நூல்நயம் கானர்போம்" நிகழ் விளம் திருமதி மீரா மங்களேளப் வரன் எழுதிய நிருத்தியம் (பரத நாட்டியம்) நூலை திருமதி லீலாம்பிகை செல்வ ராஜா அவர்கள் நயம் கணி டார்
அப்போது இடம்பெற்ற "நிருத்யோபசாரம்' நிகழ்வில் அவரது மாணவிகளான செல விகள் விஜயபாமா ஞானமணி, விஜயபவானி ஞானமணி ஆகியோர்.
糯醫
தமிழ்ச் சங்கம் ரா மாவத்தை) கொழும்பு 06.
O-3637.59 W. Colombo.tamilsangan.org (g. eureka.IK
விலை இயன்ற அன்பளிப்பு

Page 2
High Quality Imported Textiles é Ready made Garments
Wholesale & retail dealers & Importers of Textiles, Ready made garments accessories
& Fancy Goods
125, Main Street, Negombo v
Tel: 031-24638 家 YAlar NJ"47n དབྱེ་
 

இதயம் திறந்து.
ஒலை யின் 11 வது இதழ் இது.
பாடசாலை மாணவர்களுக்குரிய பாடப் புத்தகங்களை இலவசமாக வழங்கல் மறைந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனாவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து வைக்கப் பெற்றது.
தமிழ் பாடநூல்களைப் பொறுத்தவரை
தாமதமான விநியோகம்
விநியோகிக்கப்படும் நூல்களின் போதாமை
பாடநூல்களில் பிழைகள் போன்ற குறைபாடுகள் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கதையே. இது பற்றி இலங்கைத் தமிழ் ஆசிரிய சங்கம் உட்பட பல பொது அமைப்புக்கள் அவ்வப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களின் கவனத்திற்குக் கொணர்ந்திருந்தும் இக்குறைபாடுகள் இன்னும் முற்றாக நீக்கப்பட்டதாயில்லை.
தேசிய கல்வி நிறுவகமும், கல்வி வெளியீட்டுத் திணைக்களமும் இணைந்து வெளியிடப்படும் தமிழ்ப்பாட நூல்களில் தமிழ் மொழிக் கொலை இடம்பெறுவது சர்வசாதாரணமான விடயமாக மாறிவிட்டது. இவ்வருடமும் இது இடம் பெற்றுள்ளதாகப் பத்திரிகைச் செய்திகள் பகர்கின்றன. இனிவரும் காலங்களிலாவது தமிழ் மொழிக் கொலை இடம் பெறாதவகையிலே இச்செயற்பாட்டில் தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ் மொழிப் பிரிவும், கல்வி அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவும் ஆத்மார்த்தமான அக்கறை செலுத்த வேண்டும் என்பது “ஒலை" யின் விநயமான வேண்டுகோள் ஆகும்.
நன்றி மீண்டும் மறுமடலில்.
- ஆசிரியர்
‘ஓலை’ பக்கம்

Page 3
லை 2003 - கனடாவில்
వర్గభ
“உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது”
03.05.1892 - 19.07.1947
உலகின் முதற்றமிழ்ப் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமிவிபுலாநந்தர் நினைவாக ஆராய்ச்சி மகாநாடு, கலைவிழா, பண்பாட்டு ஊர்வலம் ஆகியன. வற்றை கனடா ரொறன்ரோவில் நடாத்தும் நோக்குடன் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் சுவாமி விபுலாநந்தர் விழாக்குழுவினருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
செயல் திட்டங்கள்:
தமிழ்ப் பணிபாட்டு ஊர்வலம் சுவாமி விபுலாநந்தர் ஆராய்ச்சி செய்து யாழ் நூலில் வெளிப்படுத்திய பண் டைத்தமிழரின் யாழ்வகைகள் அழகுற வடிவமைக்கப்பட்ட ஊர்தியில் வைத்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட இளைஞர்களும், மாணவர்களும் வயோதிபர்கள் எனப்பலதரப்பட்டோரும் ஊர்வலத்தில் முக்கிய இடம்பெறுவர். தமிழர் பண்பாட்டுக் கோலங்களைக்காட்டும் இந்த ஊர்வலம் இளையோர் மத்தியில் தமிழ்ப் பண்பாட்டு உணர்வை வளர்க்கவும், ஏனைய சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு எமது பண்பாட்டு அம்சங்களை வெளிப்படுத்தவும் பயன்படும். கணிகாட்சி
சுவாமிவிபுலாநந்தரின் நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், பிரபுத்தபாரதம், புகைப்படங்கள் அவர் பற்றி அறிஞர்கள் எழுதிய நூல்கள், சிறப்பிதழ்கள், உலகநாடுகளில் வெளிவந்த தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் தமிழ்பண்பாட்டுச் சின்னங்கள் என்பன கண்காட்சியில் இடம்பெறும், (சுவாமி பற்றிய மேற்குறிப்
‘ஓலை’ பக்கம் 2
 
 

பிட்ட தகவல்களை வைத்திருப்போர் தயவு செய்து விழாக்குழுவினருடன் தொடர்பு கொள்ளவும்).
சிறப்பு மலர் வெளியீடு
சுவாமிவிபுலாநந்தரின் வரலாறும் பணிகளும் வெளிப்படக்கூடியவகையிலான கட்டுரைகளை சிறப்புமலருக்கு எதிர்பார்க்கின்றோம். தரமானவை பிரசுரிக்கப்படும்.
ஆராய்ச்சி மகாநாடு
சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள், பணிகள், அடிகளார் வாழ்ந்தகாலச் சூழல், இராமகிருஷ்ணமிசன் பணிகள், விபுலாநந்தரின் மொழிப்புலமை, இசைத் திறன், விஞ்ஞான ஆய்வுகள், சமுகக்கோட்பாடு, சுவாமியின் ஆளுமை எனப் பல்துறை சார்ந்தனவாக ஆய்வுக் கட்டுரைகள் அமைதல் வேண்டும்.
அனைத்து நாடுகளிலுமுள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் அறிஞர். கள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர்கள், இயல், இசை, நாடகத் துறை சார்ந்தவர்கள் அறிஞர்கள் அனைவரும் இம்மகாநாட்டில் பங்கு பற்றவேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
கலை நிகழ்ச்சிகள்
பட்டிமன்றம், இசைநிகழ்ச்சி, நடனம், நாட்டிய நாடகம் முதலிய முத்தமிழ் நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இந்நிகழ்ச்சிகளை வழங்க விரும்பும் கலைஞர்கள், கலாமன்றங்கள், நடனப் பள்ளிகள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
விஞ்ஞானம் அறிந்த மெய்ஞானி சுவாமி விபுலாநந்தர் முத்தமிழ் வித்தகர் எனத் தமிழ் கூறும் நல்லுலகோரால் போற்றப்படும் சுவாமிகள் உலகின் முதற்றமிழ்ப் பேராசிரியராக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மூதவையினரால் தேர்ந்தெடுக்கபட்டவர். அது போன்றே இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் அவரே முதற்றமிழ்ப் பேராசியர் என்ற பெருமைக்கும் உரியவர். பேராசிரியர், ஆராய்ச்சியாளர், பத்திரிகை ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி,நாடக ஆசிரியர், புலவர்,ஞானி, முகாமையாளர் எனப்பல்வேறு தகுதிகள் கொண்டவர் எங்கள் சுவாமி, கிழக்கிலங்கையில் அவதரித்து அங்கே கல்விச் சுடரை ஏற்றிவைத்த சுவாமிகள் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் கல்விப்பாரம்பரியத்துக்கும் தொண்டாற்றியவர். தமிழ்நாட்டில் சமூகப்பணியும் இலக்கியப் பணியும் மேற்கொண்டவர்.
ஈழத்தமிழர்கள் தமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் மிக ஆர்வத்துடன் உன்னிப்பாக நோக்கும் காலகட்டத்தில் தற்போது நாம் வாழ்கின்றோம். தமிழரது பண்பாட்டுப்பாரம் பரியங்களையும் வரலாற்றுண்மைகளையும் ஆராய்வதில் மிகவும் மும்மரமாக உழைத்தவர் சுவாமிவிபுலாநந்தர். தமிழர் வரலாறு, பண்பாடு, மொழி, இலக்கியம் சம்பந்தமாக அவர் எழுதிய ஆராய்ச்
‘ஓலை’ பக்கம் 3

Page 4
சிக் கட்டுரைகள் இன்றைய காலக் கட்டத்திற்கு மிகவும் பயன்படுவனவாகும். சுவாமிகள் நாட்டுப்பற்றாளர் என்பதால் தேசியப் பாதுகாப்புக்காகவும் உழைத்தவர் என்பதை அவரது வரலாறு கூறுகிறது. சுவாமி விபுலாநந்தர் பண்டைத்தமிழ் இலக்கியங்களை அரிதில் முயன்று ஆராய்ந்து எழுதிய யாழ்நூல் தமிழ் மக்களுக்குக் கிடைத்த அளப்பெருஞ் செல்வமாகும். அதன் முக்கியத்துவம் தமிழ் அறிஞர்களால் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்றே கூறலாம். இம் மகாநாட்டில் யாழ்நூல் கூறும் யாழ். வகைள் செய்யப்பட்டு அவரது நூல்களும், அவரைப் பற்றி ஏனையோரால் எழுதப்பட்ட நூல்களும் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. இதனால் இளைய தலைமுறையினரின் சிந்தனையைத் தூண்டுவதோடு, பிற இனத்தவர்களும் தமிழர் பண்பாடு பற்றிய மேலாய்வுகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்புகளையும் இதன் மூலம் ஏற்படுத்தலாம். சுவாமிவிபுலாநந்தர் நினைவாக புலம் பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் எடுக்கப்படும் இவ்விழா இங்கு வாழும் மக்களுக்குத் தமிழர்வரலாற்றுப் பாரம்பரியங்களையும் பண்பாட்டுப் பெருமைகளையும் நினைவூட்டுவதோடு. நம்தாயகத்தில் வாழும் மக்களின் கல்வி சமூகமுன்னேற்றம் முதலானவற்றில் அக்கறை காட்டத்தக்க வகையில் நற்பண்புகளை வெளிக்கொணரவும். இன உணர்வும், பண்பாட்டுணர்வும் மேலோங்கச் செய்யவும், இவர்களைப் பொதுப் பணிகளில் ஈடுபடத்தக்கவகையில்நல்லுணர்வைஏற்படுத்தவும் இம்மகாநாடு உதவும் என்பது எமது நோக்கம். இவ்விழாவினை சிறப்பாக வெற்றிபெறச் செய்ய சிவானந்தா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக்கல்லூரி, சென்ற்பற்றிக்கல்லூரி, புனிதமைக்கல்லூரி, திருமலை இந்துக்கல்லூரி, பல்கலைக்கழகங்கள், இராமகிருஸ்ணமிசனைச் சார்ந்தவர்களின் பங்களிப்பினை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். சுவாமி விபுலாநந்தரின் பன்முகப்பட்ட பணிகளை ஆராய்ந்து வெளிப்படுத்தி, தமிழர் பண்பாட்டுப் பெருமையை உலகம் அறியச் செய்திடுவோம்.
உதவிக்கரம்
உலகின் பல்வேறு நாடுகளிலுமுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், சங்கங்கள், அறிஞர்கள், தமிழ்ப்பற்றாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள் அனைவரையும் இப்பெருவிழா சிறந்த முறையில் நடைபெறுவதற்கு உதவிக்கரம் வழங்குவதோடு உங்கள் முழு உணர்வுடன் கூடிய ஒத்துழைப்பினை நல்குமாறு அன்போடு அழைக்கின்றோம். தொடர்புகளுக்கு: செயலாளர், சுவாமி விபுலாநந்தர் விழாக்குழு
108 Muirland Cres, Brampton.
Ont, L6X 4G2, CANADA.
‘ஓலை’ பக்கம் 4

5.06.2001 மாலை தேசிய கலை இலக்கியப் பேரவையின் மாதாந்த
பெளர்ணமி நிகழ்வில் கொழும்புத் தமிழ்ச் சங்க சிறார்களும், திருமறைக் கலாமன்றக் கலைஞர்களும் பங்குபற்றிய பாட்டும் கூத்தும் அரங்க ஆற்றுகை தமிழ் நாடக உலகில் சிறுவர் நாடகங்கள் குதிரைக் கொம்பாக இருக்கும் இக்காலப் பகுதியில் தமிழ் நாடக உலகிற்கும். சிறுவர் நாடக உலகிற்கும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. இந்நாடகங்களைப் பற்றி தொடர்பூடகங்களில் பெரிதும் பாராட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதன் எதிர்வினையைத் தொடர்ந்து நாடகங்களில் பங்குபற்றிய சிறார்களுடனும், திருமறைக் கலாமன்றக் கலைஞர்கள், நாடக ஆசிரியர், நாடக நெறியாளரர்கள், ஒப்பனைக் கலைஞர், பார்வையாளர்கள், தமிழ்ச் சங்க உறுப்பினர்களுடனுமான கலந்துரையாடல் 9.6.2001 மாலை தமிழ்ச்சங்க மண்டபத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் சோ.தேவராஜா தலைமையில் இடம் பெற்றது. அக்கலந்துரையாடலில் “அயலார் தீர்ப்பு” நாடகத்தில் நடித்திருந்த ஒரு சிறுவன் கூறுகையில் “எனக்கு இந்நாடகமே முதல்நாடகமாகும், இந்நாடகத்தில் ஈடுபட்டது ஒரு புதுமையான அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. தொடர்ந்தும் இவ்வாறான நாடகங்களில்நடிக்க ஆசையாக உள்ளது. இச்சந்தர்ப்பத்தை வழங்கிய கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினருக்கும் தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்கும் எனது நன்றிகள்” என்றும் கூறினார். தொடர்ந்து ஏனைய நாடகங்களில் பங்கு பற்றிய பல சிறார்கள் தாம் இந்நாடகங்களில் ஈடுபட்டமை உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியதாகக் கூறினர். தொடர்ந்து நாடகங்களை எழுதிய பேராசிரியர்.சி.சிவசேகரம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் நாளைய நாயகர்களான இன்றைய சிறார்களின் ஆளுமையை விருத்தி செய்வதற்குநாடகங்களே பெரிதும் உதவும் என்று கூறினார். மேலும் நாடகக் கலைஞர் சோக்கல்லோ சண்முகநாதன், தமிழ்ச் சங்க செயலாளர் ஆ.இரகுபதி பாலழரீதரன், நாடகக் கலைஞர் அ.பிரான்சிஸ் ஜெனம், தமிழ்ச் சங்க பொருளாளார் திரு.தி.கணேசராஜா, இலக்கியக் குழு உறுப்பினர் த.கோபாலகிருஸ்ணன் (இந்நாள் இலக்கியச் செயலாளர்), ஆகியோர் நாடகங்களில் நடித்த சிறார்களின் ஆற்றலை வியந்து பாராட்டினர். எனவே அன்றைய கலந்துரையாடல் சிறார்களின் ஆளுமையை விருத்தி செய்யும் பயிற்சிப்பட்டறையானது.நாடகப் பயிற்சிப்பட்டறையின் தோற்றத்திற்கு ஒரு கால்கோளாக அமைந்தது.
'ഝേ' பக்கம் 5

Page 5
அக்கலந்துரையாடலின் பின்விளைவாக இலக்கியக் குழுவின் விதந்துரைப்பிலும் ஆட்சிக்குழுவின் அனுமதியுடனும் 16.06.2001ல் (சனிக்கிழமை) பகல் 12.00 மணியளவில் 17சிறார்களுடன் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் சோ.தேவராஜா அவர்களினால் முதலாவது நாடகப் பயிற்சிப் பட்டறை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்பயிற்சிப் பட்டறையில் நாடகம், கவிதை. பேச்சு ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கப்படுவதன் முதற்கட்ட நடவடிக்கையாக நாடகப் பயிற்சிப் பட்டறை ஆரம்பிக்கப்பட்டு நாடகத் துறையில் திறமைமிக்கவர்களால் அரங்க விளையாட்டுக்கள். உடனடிநாடகங்கள். நாடக உத்திகள் போன்ற பல நாடகவிடயங்கள் கற்பிக்கப்பட்டன.
இப்பயிற்சிப் பட்டறை பிரதி சனி, ஞாயிறு தோறும் பகல் 12.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.15 வரை 12 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்காக கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இலவசமாக நடாத்தப்பட்டு வந்தது. இப்பயிற்சிப் பட்டறையின் நெறியாளர்களாக திருவாளர்கள் சோ.தேவராஜா. வ.சிவஜோதி, சஜீவாகரன் ஆகியோர் பணியாற்றினர்.
இரண்டாவது பட்டறையானது “கூடிப்பயில்வோம்’ சிறார்களுக்காக 24.08.2002இல் ஆரம்பிக்கப்பட்டது. இது பிரதி சனிக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நிகழ்த்தப்படுகிறது.
இதன் பெறுபேறாக சிறார்கள் தாமாகவே நாடகங்களை உருவாக்கி, நெறியாள்கை செய்து நடிக்கும் ஆற்றலை பெறுவர் என்பது திண்ணம்.
இப்பயிற்சிப் பட்டறையின் ஒருங்கமைப்பாளராக கல்விக்குழுச் செயலாளர் த.சிவஞானரஞ்சன் அவர்களும், நெறியாளர்களாக திருவாளர்கள் வ.சிவஜோதி, ச.ஜிவாகரன் ஆகியோரும் பணியாற்றிவருகின்றனர்.
இப்பயிற்சிப்பட்டறையின் பயன்பாட்டை எதிர்வரும் வருடத்தின் தை மாதத்தில் அறுவடையாக அரங்க நிகழ்வு மூலம் பெறலாம் என்பதில் ஐயமில்லை.
பயிற்சிப் பட்டறைகள் மூலம் தனி மனிதனது ஆளுமையானது விருத்தி செய்யப்படுகின்றது. ஆளுமையானது விருத்தி செய்யப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் நல்ல மனிதராக வாழ வழிவகுக்கும். இதன் மூலம் ஒரு நற் சமுதாயத்ததை எதிர்காலத்தில் உருவாக்க முடியும்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இவ்வாறான பணிகள் எதிர்கால சமுதாயத்தில் ஆளுமை மிக்க சந்ததியினை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது என்றால் அது மிகையாகாது.
வ. சிவஜோதி (ஆட்சிக் குழு உறுப்பினர்)
"ga06v” Uású 6

திகதி 6úlu utb ஆய்வாளர்
4.2.02 ஈழத்து சிறுகதை திரு.சோமுரளி
(188) இலக்கியவளர்ச்சி ஆசிரியர்-விபுலானந்தமகா
வித்தியாலயம், தெமட்டகொட)
1.12.02 கலித்தொகையில் மட்டுவில் திரு.ஆ. நடராசா
(189) குறிஞ்சிக்கலி
18.12.02 ஈழத்துநாவல் இலக்கியம் திரு.அ.க.தர்மராஜா 190) (விரிவுரையாளர் - பலாலி ( ஆசிரியப்பயிற்சிக் கல்லூரி)
25.12.02 திருக்குறளை திரு.கே.கே. சோமசுந்தரம்
(191) அணுகும் முறை முன்னாள் பிரதிக்
கல்விப் பணிப்பாளர்
கொழும்புச் தமிழ்ச் சங்க மாதாந்தமடல் ‘ஓலை’ யில் 9வது இதழ் 11.12.2002 அன்று நடைபெற்ற 190வது அறிவோர் ஒன்றுகூடல்நிகழ்வின்
போது கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. முதற் பிரதியை கொழும்புத் தமிழ்ச்சங்கத் துணைத்தலைவரும் முன்னாள் வடமாநிலக் கல்விப் பணிப்பாளருமான இ.சுந்தரலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
‘ஓலை’ பக்கம் 7

Page 6
கொழும்புத் தமிழ்ச் சங்கமும் யாழ்ப்பாணம் - பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து வழங்கிய இசை நாடக மேடைப் பாடல்கள் நிகழ்வு26/12/2002 வியாழக்கிழமை, மாலை 5.30 மணிக்கு திரு. த.இராஜரட்ணம் (துணைத் தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பின்வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ் வாழ்த்து : செல்வி. பவித்ரா நடராஜா வரவேற்புரை : திரு.தி.கணேசராஜா
(நிதிச் செயலாளர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்) தலைமையுரை : திரு.த.இராஜரட்ணம்
(துணைத் தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்) Luru L6ö560o677 பின்வருவோர் வழங்கினர் முத்த கலைஞர் திரு. க. உருத்திராபதி கலாமணி அரியாலையூர் வ.செல்வரட்ணம் (செல்வம்) திரு.நா. விமலநாதன் BSC தமிழ்க் கலைக்காவலன் செல்லையா மெற்றாஸ் மயில் திரு.வே.பிரபாகரன் செல்வி. திவ்யாஞ்சலி - தனபாலசிங்கம் (யாழ். பல்கலைக்கழக நுண்கலை மாணவி) செல்வி,கோமளா - முருகையா திரு.வை.விஜயபாஸ்கரன் - ஆசிரியர் நன்றியுரை : ஆ.இரகுபதிபாலறிதரன்
تھر )பொதுச் செயலாளர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்( ܢܠ
‘ஓலை’ பக்கம் 8
 

நூல்நயம் காண்போம்.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
06.12.02 கூடில்லாக்குருவிகள் |திரு.அ.அலாவுதீன் திரு.வ.இராசையா
(97) (சிறுவர் இலக்கியம்) (ஒலுவில் அமுதன்)
3.2.02 கமகநிலா திரு.ஆ.மு.மு. திரு.ந.காண்டீபன்
(98) (சிறுகதைத்தொகுதி வேலழகன்
20.12.02 தெய்வம் பேசுவதில்லை தமிழ்மணி. திரு.க.க.
(99) (சிறுகதைத்தொகுதி) ந.பாலேஸ்வரி உதயகுமார்
27.1.2.02 நிருத்தியம் திருமதி.மீரா கலாபூசணம் திருமதி
(100) (பரதநாட்டியம்) மங்களேஸ்வரன் லீலாம்பிகை செல்வராஜா
100வது நூல்நயம் கானன்போம்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தால் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடாத்தி வரப்பெறும் நூல்நயம் காண்போம்’ நிகழ்வின் 100வது நிகழ்வு 27.12.2002 அன்று மாலை 5.30மணிக்குச் சங்கத் துணைத் தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் திருமதி. மீரா மங்களேஸ்வரன் எழுதிய பரதநாட்டியம் சம்பந்தமான நிருத்தியம்’ எனும் நூலானது கலாபூசணம் திருமதி லீலாம்பிகை செல்வராஜா அவர்களால் நூல்நயம் காணப்பட்டதோடு அவரது மாணவிகள் மூலம் பரத நாட்டியம் செய்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டதுடன்நிருத்யோபசாரமும் வழங்கப்பட்டது.
பிரதம விருந்தினர் திரு. எஸ்.கே. மகேஸ்வரன், தலைமை வகித்த திரு.பெ. விஜயரத்தினம் நூல் நயவுரை நிகழ்த்திய கலாபூசணம் திருமதி லீலாம்பிகை செல்வராஜா ஆகியோர் மங்கல விளக்கேற்றுதல்
‘ஓலை’ பக்கம் 9

Page 7
செய்முறை விளக்கமளித்த நிருத்யோபசாரம் :
செல்வி ஷெரீன் குணராஜா செல்வி யமுனா ஜயம்பெருமாள்
தமிழ் வாழ்த்து - செல்வி - பவித்திரா நடராஜா வரவேற்புரை - திரு.த.கோபாலகிருஷ்ணன்
(இலக்கியக் குழுச் செயலாளர்) பிரதம விருத்தினர்உரை - பேரா. S.K.மகேஸ்வரன்
(கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை, மொனாஸ் பல்கலைக்கழகம், மெல்பேர்ன், அவுஸ்திரேலியா) சிறப்புவிருந்தினர் உரை - கம்பவாரிதி திரு.இ.ஜெயராஜ்
(அகில இலங்கைக் கம்பன் கழகம்)
நூல்நயம் காணல் - கலாபூசணம்
திருமதி லீலாம்பிகை செல்வராஜா செய்முறை விளக்கம் - செல்வி ரேணுகா பூராஜா
செல்வி ஷெரீன் குணராஜா செல்வி கிறிஸ்தினா சியாமளா விஜயநாதன் நிருத்யோபசாரம் - செல்வி யமுனா ஜயம்பெருமாள்
செல்வி விஜயபாமா ஞானமணி
செல்வி விஜயபவானி ஞானமணி செல்வி தாருண்யா இராஜயோகன்
நன்றியுரை - திரு.சி.அமிர்தலிங்கம்
(ஆட்சிக்குழு உறுப்பினர்) ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
“ைெல’ பக்கம் 10
 

நிகழவிருப்பவை
ஜனவரி 2002 சங்க நிகழ்ச்சிகள்
01.01.2003 புதன்கிழமை பிய 5.30
அறிவோர் ஒன்றுகூடல் (192)
விடயம் - திருக்குறளில் புதுமையும் புரட்சியும்.
நிகழ்த்துவர் - திரு.இறுஸ்கந்தராஜா
08.01.2003 புதன்கிழமை பிய 530
அறிவோர் ஒன்று கூடல் (193)
விடயம் : மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு நகைச்சுவை
(சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் குட்டிக் கதைகள்)
நிகழ்த்துவர் - திரு.இழர்ஸ்கந்தராஜா
10.01.2003 வெள்ளிக்கிழமை பிய 5.30
நூல்நயம் காண்போம் (101)
நூால் - யோகம் இருக்கிறது (சிறுகதைத்தொகுதி)
ஆக்கம் - குந்தவை. நயப்பவர் - திருமதி அன்னலட்சுமி இராஜதுரை
22.01.2003 புதன்கிழமை பிய 530
அறிவோர் ஒன்று கூடல் (194)
24.01.2003 வெள்ளிக்கிழமை மாலை 5.30
நூல்நயம் காண்போம் (102)
நூல் - சிறுவர் பாலியல் கொடுமைகள். ஆக்கம் - இலங்கை மானாமக்கீன்
நயப்பவர் - திருமதி ஞானதீபம் (கேட்சி) சண்முகம்
25.01.2003 சனிக்கிழமை பிய 5.30
கவிதா நிகழ்வு
சில்லையூர் செல்வராஜனின் கவிதைகள்
29.01.2003 புதன்கிழமை பிப 5.30
அறிவோர் ஒன்று கூடல் (195)
31.01.2003 வெள்ளிக்கிழமை மாலை 5.30
நூல்நயம் காண்போம் (103)
நூல் - வேப்பமரம் (சிறுகதைத்தொகுதி) ஆக்கம் - மாவை வரோதயன் நயப்பவர் - சுபாசினி சிறீதரன்
‘ஓலை’ பக்கம் 11

Page 8
எண்பத்திராண்டிவ்வுலகநலங் கண்டுபரங் கொண்ட நடேஸ்வரனார்க்கின்று - பண்டைதமிழ் போற்றி வளர்க்குங் கொழும்புத் தமிழ்ச்சங்கம் சாற்றுகின்ற அஞ்சலிப்பா
சமூகநலந் தன்னைத் தனதுயிராய் எண்ணிச் சமூகநலங் காத்தபெருஞ் சான்றோன் - தமதுயிரின் மூச்சிருக்கும் மட்டும் பொதுப்பணிகள் செய்துயர்ந்த மாட்சிமை மிக்கபெரு மான்
தெய்வத் தலத்திலொரு துயஅறங் காவலனாய் ஐயன் பணிசெய்தான்; ஆறுமுகன் - செய்யருளைத் தேடிக் கதிர்காமஞ் செல்வோர்தொண்டாற்றுசபை கூட்டும்பொருளாளானெறுந் தான்
முதன்மைக் கணக்காளர் முத்தமிழ்மேற்பித்தர் நிதிக்கெங்கள் சங்கச் செயலர் - பதவிகளில் நேர்மைக்குத் தோள்கொடுத்து நல்லபெயர் கொண்டமகான் சீரார் நடேஸ்வரனார் தான்
சிவநெறிச் செம்மல்கள் சந்ததியில் தோன்றி தவப்பணிகள் மேம்மேலுஞ் செய்து - சிவபதத்தைச் சென்றடைந் தாரென்பர் தானா நடேஸ்வரனார் மண்புகழ வாழ்ந்திருந்த மான்
பண்பில் உயர்ந்தோன் புகலில் விருந்தோம்பும் பண்பில் இணையில்லாப் பேராளன். அன்பும் அறமுஞ் சிறக்க அனைவருக்கும் நல்லான் இறந்தும் இறவா தவன்
‘ஓலை’ பக்கம் 12
 

ஞானாம் பிகைபாதிநல்லோன் நடேசனிலே தேன்பால் எனும்வாறே சேர்ந்திருந்தார் - வானோன் வகுத்தவழி இல்லறத்தில் வாழ்ந்துமகிழ்ந்தார்கள் இகபரத்தின் ஏற்ற மெண்ணித் தான்
மாமன் மதியா பரணமெங்கள் சங்கத்தின் சேமங் கருதிநிலங் கொள்வதற்காய்த் - தாமாகத் தந்தார் பெருநிதியம் தந்தைதம்பிப் பிள்ளைக்கும் சொந்தம் தமிழ்வளர்த்த சீர்
நடேஸ்வராக் கல்லூரி நம்நடேசர் தாதை கொடைநலத்தைக் குன்றெனவே கூறும் - படியமைந்த கல்விப் பதிதமிழர் கோன்மைக்கு வித்திட்ட கல்விக்குங் காரணமாம் கேள்
மண்மறைந்து போனாலும் மண்ணுள்ள நாள்வரையும் எண்ணத் தகுசேவை இத்தரைக்கு - விண்ணளவு செய்து மறைந்தார் தொடர்ந்து பரம்பரையும் செய்யவிறை யொன்றே துணை
கவியாக்கம் : ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
6.16il,6ILDITGoday - Garland of Valluvar
ஆரியமுஞ் செந்தமிழும் ஆராய்ந்து அதன் இனிது சீரிய தொன்று என்றைச் செப்பது அரிதாம் - ஆரியம் வேதமுடைத்து தமிழ் திருவள்ளுவனார் ஏது குறட்பாவுடைத்து - வணிணக்கஞ் சாத்தனார். It is impossible to compare and say the greater among Aryan language and Tamil language. because both have all the qualities, a perfact language should posses. If to say that Aryan language has the great Vedas in it, Tamil language has Thirukkural sung by Thiruvalluvar - Vannakkan Sathanaar:
ஏ.என்.யோகநாதன் (ஆட்சிக்குழு உறுப்பினர்)
‘ஓலை’ பக்கம் 13

Page 9
്. ആങ്ങig് GUDGUTGITH...
- ஓர் இனிய நண்பன் -
05.12.1995இல் மட்டக்களப்புமாவட்டத்தில் கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் 8 அமைந்த புதுக்குடியிருப்பு விசேட அதிவீ. ஆனநதன ரடிப்படை முகாம் தாக்குதல் சம்பவத்தில் மலர்வு :08.04.1949 படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்உதிர்வு:05.12.1ggs |குமிடையே நடைபெற்றமோதலில் தர திஸ்டவசமாக அகப்பட்டு அகால மரணமடைந்த அப்பாவிப் பயணிகளுள் கவிஞர் வீ ஆனந்தனும் (வேலுப் பிள்ளை ஆனந்த குமாரசாமி) ஒருவன். இச்சம்பவத்தில் காய முற்ற பயணிகளைத் தாமதமின்றி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருந்தால் ஆனந்தன் உயிர்பிழைத்திருக்கக் கூடும். ஏனெனில் மட்டக்களப்பு வைத்தியாசாலைக்கு சம்பவம் நடந்து மிகவும் தாமதித்தே கொண்டுவரப்பட்ட சடலங்களில் சற்று முன்னதாகவே ஆனந்தன் இறந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறின. தாக்குதல் காயத்தினால் குருதிவழிந்தோட குற்றுயிராய்க் கிடந்து பலமணிநேரம் அவன் உயிருக்காய்ப் போராடியிருக்கிறான். ஆம் ஆனந்தனை அறிந்தவர்களுக்குத் தெரியும், அவன் ஒருபோராட்ட வீரன், புரட்சியாளன்; சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடும் உணர்வு படைத்தவன். தன் மனதில் வரித்துக் கொண்ட கொள்கைகளுக்காக அவை கலை, இலக்கியம் சார்ந்தவையானினும் சரி அல்லது அரசியல் ஆயினும் சரி எந்தச் சந்தர்ப்பத்திலும் பணம், பதவி.புகழ் என்பவற்றிற்காகச் சமரசம் செய்து கொள்ள மறுத்துநின்று போராடியவன். அவனது மதம் மனிதாபிமானமே. அவனது கரங்களில் ஓர் அப்பாவிப் பயணிச் சிறுமியை நெஞ்சோடு மூடி அணைத்தபடிதான் இறந்துகிடந்தான் எனப் பார்த்தவர்கள் சொன்னார். கள். மரணிக்கும் தறுவாயிலும் கூட அவன் ஒரு சிறுமியின் உயிரைப் பாதுகாக்க முனைந்த மனித நேயன். அதனையும் அவனையும் நினைக்கும் போது கண்கள் பனிக்கின்றன.
‘ஓலை’ பக்தம் 14
 

ஆனந்தனின் பிறப்பிடம் அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை. தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து வாழும் கிராமம். அம்மாவின் பெயர் தம்பாப்பிள்ளை தங்கரட்ணம் (மாரிமுத்து); அப்பாவின் பெயர் வேலுப்பிள்ளை. சம்மாந்துறை ஆண்கள் பாடசாலை (தற்போது சம்மாந்துறை தேசியக் கல்லூரி)யில் பள்ளிப்படிப்பு. தபால் திணைக்களத்தில் சம்மாந்துறை தபாலகத்தில் ஒரு தபாற்காரனாகச் சேர்ந்து இறக்கும் போது தபால்தரம் பிரிக்கும் அதிகாரியாக தொழில் உயர்வு பெற்றிருந்த ஆனந்தன் தனக்குக் கிடைக்கவிருந்த ஆசிரிய தொழிலை அரசியல்வாதிகளுக்கு அடிவருடியாக வாழ விரும்பாததால் இழந்தவன். ஆசிரியராக வந்திருந்தால் பின்னாளில் கலாநிதிப்பட்டம் பெற்றிருக்கக் கூடிய திறமையும், அறிவும் ஆனந்தனுக்கு இருந்தது. மட்டக்களப்புமுகத்துவார வீதியில் வத்சலா(பேராசிரியர் சி.மெளனகுரு அவர்களின் மருமகள்)வை காதல் திருமணம் செய்து கொண்டிருந்தான். குழந்தைகள் இல்லை.
ஆனந்தன் ஒரு கவிஞன். சிறந்த விமர்சகன். மட்டக்களப்பு வாசகர் வட்டத்தின் பிரதான பங்காளன். கல்முனை வியூகம் அமைப்பின் உறுப்பினன். மலையாள இலக்கியங்களை தமிழுக்கு மொழி பெயர்த்தவன். மட்டக்களப்பு கலை, இலக்கியக் களத்தில் ஆனந்தன் பதித்த தடங்கள் கனதியானவை. ஆனந்தனின் ஆளுமை அவனது சிறந்த வாசிப்பே. படித்துப் பட்டம் பெற்ற கலாநிதிகள், பேராசிரியர்களுக்குக் கூடத் தெரியாத கலை,இலக்கிய, அரசியல் தகவல்களை அவன் அதிகம் தெரிந்து வைத்திருந்தான். கலை, இலக்கியப் படைப்புக்களை அவன் விமர்சிக்கும் பாங்கே தனியானது. போலிகளைத் தோலுரித்துக் காட்டும் துணிச்சல் மிக்கவன். நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே எனக் கூறத்தயங்காதவன். அவன் அதிகம் எழுதிக் குவித்தவன் அல்ல, ஆனால் அதிகம் எழுதும் அளவுக்கு அறிவும், ஆற்றலும்,ஆளுமையும் கொண்டிருந்தவன். அவன் பங்குபற்றிய (குறிப்பாக கல்முனை, மட்டக்களப்பு பிரதேசங்களில்) இலக்கியக் கூட்டங்கள், கருத்தரங்குகள், கவி. யரங்குகள் அனேகம். அவை எல்லாவற்றிலும் ஆனந்தன் தன் தனித்துவ முத்திரை பதித்தவன். நாடறிந்த எழுத்தாளனாக, கலைஞனாக அவன் தன் வாழ்நாளில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவில்லையானினும் கூட நாடு அறியப்பட வேண்டிய ஆளுமை மிக்கவனாகத் திகழ்ந்தான். மாணவப் பருவத்திலேயே இடது சாரிச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு இறக்கும்வரை எந்தக் குழுவாதங்களுக்குள்ளும் தன்னைக் குறுக்கிக் கொள்ளாமல் பாட்டாளிவர்க்கத்தின் உண்மையான தோழனாக வாழ்ந்தவன். அவனது பணிகளின் அறுவடையில் ஒன்றுதான் மட்டக்களப்பில் இன்று இயங்கும் தரிசனம்" விழிப்புலனற்றோர் பாடசாலை.
‘ஓலை’ பக்தம் 15

Page 10
இன்று இலங்கையில் இயங்கிவரும் இடதுசாரிக்கட்சிகளிலொன்றான புதிய ஜனநாயகக் கட்சியின் 4வது தேசிய மாநாடு நாம்பர் 8ம், 9ம், திகதிகளில் நடந்தேறிய போது நினைவு கூரப்பட்ட மக்கள் கலை இலக்கியத் தளத்தில் பணியாற்றி மறைந்த தோழர்களில் ஆனந்தனும் ஒருவன்.
கல்முனைப் பிரதேசத்தில் மறைந்த கவிஞர் நீலாவணன் அவர்கள் ஒரு கவிஞர் பட்டாளத்தையே உருவாக்கியிருந்தார். இப் பாசறையில் பயிற்சி பெற்றவர்களுள் ஆனந்தனும் அடக்கம்.
“அதர்மம் நாட்டில், அதிகரிக்கும் போது கணிணன் மட்டுமல்ல கவிஞனும் பிறப்பான் ” என்ற தனது கவிதைவரிகளால் சமுதாயத்தில் கவிஞனின் முக்கியத்தையிட்டு முழங்கியவன் ஆனந்தன்.
“என்னை இன்னொருவர் காணும்போது அன்னவர் முகம் மலரவும் அதனறிகுறியால் புன்னகை அவர் முகத்தில் பூக்கவும் வேண்டும் இதுவே நான் எடுத்த பிறவிப்பயன்” என்ற அவனது கவிதை வரிகள் அவனது மனிதநேயக் கொள்கையினை வெளிப்படுத்துகிறது.
“கண்ணகியே தாயே கற்பின் பேரரசே தீத்திறத்தார்தம்மைத் தீயிட்டழித்தவளே! கொங்கைத் தீயால் கொடு நகர் எரித்தாய் ! மீத முலையொன்று உன்னிடத்தே மிச்சமிருக்குதம்மா! அதையும் பிச்செறி இந்த பிணந்தின்னும் நாடெரிய" என்ற ஆனந்தனின் கவிதை கொடுமைகளைக் கண்டு கொதித்து எழும் தர்மாவேசம் மிக்கவனாக அவனை அறிமுகம் செய்கின்றது.
அவன் எழுதிய கவிதைகளிலே எனக்கு மிகவும் பிடித்திருந்து - நான் படலதடவைகள் படித்து ரசித்த பின் வரும் கவிதையினை நினைவுபடுத்தி
‘ஓலை’ பக்தம் 16

என்னுள் எழும் அந்த இனிய நண்பன் ஆனந்தனின் நினைவலைகளை இடை நிறுத்திக் கொள்கின்றேன். இக்கவிதை 'களம்' (ஜனவரி 85) இலக்கியச் சிற்றிதழில் பிரசுரிக்கப்பட்டதாகும்.
என்ன செய்வான்?
என்ன செய்வான்? மட்டக்களப்பான் மரங்குடைந்து நீரெடுப்பான் பாயோடொட்ட வைப்பான் வட்டில் சோற்றுடன் வடிதயிரும் சேர்த்தொன்றாய் வயிறு முட்டத் தின்றே முறுவலிப்பான் என்ற இவன்தன் மேட்டிமைகளெல்லாம் பாட்டிமார் கதை போல் பழங்கதையாய் ஆனதடா
கூத்தாடி என்றோவொருநாள் குது கலித்திருந்தான் காத்தான் பாட்டும் கரகமும் ஆடிக் களித்திருந்தான் மாற்றாண் வாராது தன் மணிணை காத்திருந்தான் இன்று தோற்றான் வேற்றாண் வந்து தன் விளை நிலத்தில் வேலியிடப் பார்த்திருந்தான் வாய்க்கால் தணிணிரை வழி மறித்து ஆக்கினைகள் செய்ய அன்னியனை அனுமதித்தான் சாக்கனாய் வெறும் சவமாய் இன்று போக்கணம் கெட்டுப் போனான்
வந்தாரை வாழவைத்து மணிணில் பிறந்தாரைச் சாகடிக்கும் சிங்காரமான மட்டக்களப்புச் சீமான் வேறென்ன சிரைப்பான்?
‘ஓலை’ பக்கம் 17

Page 11
திரதழில்
கடையொன்றினுள் அலுமாரித்தட்டில் மெழுகுதிரியும், கற்பூரமும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மெழுகு பக்கத்திலிருந்த கற்பூரத்திடம் பின்வருமாறு கதை அளந்தது.
“உலகில் பெரியதியாகியார் தெரியுமா?நான்தான். என்னையே உருக்கி ஒளி கொடுப்பவன் நான். ஆதலால் நானே உலகில் பெரிய தியாகி’.
“என்ன சொல்லுகிறாய். நீ பெரியதியாகியா? எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது' என்று ஏளனச் சிரிப்பொன்றைச் சிந்திய கற்பூரம்,
உன்னை உருக்கி ஒளி கொடுக்கின்றாய் என்பது உண்மைதான். ஆனாலும் நீஅழிந்து "பிடவில்லையே. உருகினாலும் மீண்டும் ஒரு பகுதி உறைந்து மெழுகாக மt, பிடுகின்றாய். ஆனால் என் வாழ்க்கையைப் பார். என்னை எரித்துத் தான் தீபம் ஏற்றுகிறார்கள். நான் பதங்கமாகிவிடுகிறேன் அல்லது எரிந்து கரியாகப் படிந்துவிடுகிறேன். ஒளி கொடுப்பதற்காக முற்றாகவே என்னை அழித்துக் கொள்ளும் நான் பெரிய தியாகியா? அல்லது உருகினா. லும் மீண்டும் உயிர்பெற்றுவிடுகிற நீபெரிய தியாகியா?"என்று வாதிட்டது.
“தியாகத்திற்கு உதாரணமாக கற்பூரத்தை எவரும் காட்டவில்லையே. தியாகத்திற்கு உவமையாக என்னைத்தானே எல்லோரும் எடுத்துச் சொல்லுகிறார்கள்” மெழுகு தன்பெருமையை மீண்டும் பீத்திற்று.
“உருகுவது நீயென்பது உண்மைதான். ஆனால் எரிந்து சாம்பலாவது உன்னில் உள்ள திரியல்லாவா? திரி பற்றத் தொடங்குகிற போது தானே நீ உருகவே ஆரம்பிக்கிறாய். திரியின் தியாகத்தைத் திருடியல்லவா நீ பேர் எடுக்கப் பார்க்கிறாய்!” என்று சற்றுக் காரசாரமாகவே வாதிட்டது கற்பூரம்.
“திரி எரிந்தாலும் வெப்பத்தை உள்வாங்கி உருகுவதுநான் தானே. நான் உருகிஎன்னில் ஒரு பகுதி ஆவியாகிமாறித்தானே திரி தொடர்ந்து எரிகிறது. ஆதலாள் நானே தியாகி” என்று பதில் கூறிய .ெrpகு“என்ன நான் சொல்வது சரிதானே. கற்பூரத்திற்கு நீயே இதனை எடுத்துச் சொல்” என்று திரியைக் கேட்டுக் கொண்டது. திரி ஒன்றும் பேசவில்லை.
கற்பூரமும் விடவில்லை. “முற்றாகவே எங்களை அழித்துக் கொள்ளும் என்னையும் திரியையும் விட பகுதியாகவே உன்னை அழித்துக் கொள்ளும்
‘ஓலை’ பக்கம் 18
 
 

நீ எப்படி பெரிய தியாகியாகி விடமுடியும். திரியைத்தான் கேட்டுப் பார்ப்போமே!” என்று கூறி திரியைத் தன் பக்கம் சாட்சிக்கு அழைத்தது கற்பூரம்.
திரி இப்போதும் ஒன்றும் பேசவில்லை. இவ்வுரையாடலை உன்னிப்பாகக் காது கொடுத்த கடைக்காரன் “உண்மையில் தியாகம் செய்தவன்தன்னைத் தியாகி என்று அழைப்பதிலும் அழைக்கப்படுவதிலும் அக்கறை கொள்ளமாட்டான். அத்தியாகத்தை வேறொருவர் திருடிப்பேர் எடுத்தாலும் அதனைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாது அமைதியாகவே இருப்பான். தியாகம் என்பது கடமை. அதனைப்புரிவது பீத்திக் கொள்வதற்கும் பேரெடுப்பதற்காகவும் அல்ல. தியாகத்தையே தியாகம் செய்வது மாதியாகம் திரியைப் பாருங்கள் தெளிவடைவீர்கள்” என்றும்ெழுகுக்கும் க்ற்பூரத்திற்கும் அறிவுரைபகன்றான்.
மெழுகு, கற்பூரம் இரண்டும் திரியைத் திரும்பிப்பார்த்தன. திரி அப்போதும்
எந்தச் சலனமுமில்லாமல் அமைதியாகவே இருந்தது.
S)
பொழுதே விழயாதா?
கவிஞர் ஏ.இக்பால்
இவரின் பிழையைச் சொல்லிச் சொல்லி அவரே பிழை செய்வார் அவரின் பிழையைக் கூறிக் கூறி இவரே பிழை செய்வார் பிழையே கூறிக்கூறி இவர்கள் பிழைப்பே நடத்துகிறார் பிழைகள் நீக்கிச் சரியாய் நடக்கும் பொழுதே விடியாதா?
ஆளாள் வேறுபட்டால் நினைக்கும் ஆக்கம் வருமாமா நாளால் அவர்கள் போக்கே மாறும் நன்மை தருமா? பேரால் வேறு .ால் இவர்கள் பெருமை சீராமா யார்தான் கொள்கையற்றால் இங்கே ஆட்சி நேராமா?
‘ஓலை’ பத்தம் 19

Page 12
முதலைத் தனதாய் ஆக்கும் நிலைமை முறையாய்த் தீராதா நிதமும் இவர்கள் மாறி மாறி நிகழ்த்தல் ஓயாதா உதவும் மக்கள் உயர்வை நாடும் அரசே வாராதா இதுவே நமது கொள்கை ஆக்கும் இயல்பே தோன்றாதா?
கட்சி இங்கே கோஷ்டி சேர்தல் காலம் காட்டாதா உட்பிரிவோ மக்கள் வலிமை உடைமை யாக்காதா வெட்கி முழவு காணா நேரம் வெறுமை தோன்றாதா உட்பூசல்கள் இல்லாக் கொள்கை உடனே தோன்றாதா?
நமது நட்டின் பொருளை வளர்க்கும் நாள்தனி வாராதா எமது தேவை கழிந்து ஏற்றும்
ஏற்பு தோன்றாதா நமது வளத்தைப் பெருக்கும் சீர்மை
நாட்டில் தோன்றாதா
தனது சுயத்தை வளர்க்கா திருக்கும்
தலைமை தோன்றாதா?
வ 1 கன்னியர் பலரின் பு தேர் ஏறி வந்ததொரு ண் கற்பை அழித்ததொரு ரி கார்கால மேகம். ண ‘புண்ணியவான்' தான் ந் தரியாமல் போனது க் எங்களுர் து தூறல்களோடு. க கண்ணகியம்மன் கோவிலுக்கு | ன ன் I வண்ணக்கன்! 方
- வீ ஆனந்தண் ||வு (ஆனந்தன் கவிதைகள் - பட்டணத்தடிகள்
நூலிலிருந்து)
‘ஓலை’ பக்கம் 20

எனக்குப் பயமாக இருக்கிறது
முற்றத்தில் ஒரமாக தெருவேலியைண்ட்டிப்பிடிக்கிறதுரத்தில்சடைத்து வளர்ந்திருந்த வேப்பமர நிழலில் “கன்வஸ் சாய்வு நாற்காலியைப் போட்டுக் கொண்டு முருகேசர் அமர்த்திருந்தார்.
புசுபுசுவென வீசிய கடல்காற்று அவரது மேனியில் அப்பிப் பிடித்திருத்த வியர்வையைக் காயவைக்கப்பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கே வழமையாக ர்ோந்துவரும் ஆமிக்காரர்கள் தெருவோரமாக வந்து கொண்டிருந்தார்கள்.
“புளுக்கம் போனாலும் இவனுகள்துலையமாட்டானுகள். எப்படிப்போவானுகள். மீனுக்குமீன்,றாலுக்குறால்குடிக்கக்குடி, பொண்ணுக்குப்பொண்எல்லாமே ஒசியில கிடைக்கக்க எவன்போவான்? பொறுங்க எல்லாத்துக்கும் பேச்சுவாத்த முடிஞ்சிரட்டும்” என்று தனக்குள்ளேயே நினைத்து, பற்களை நறுமிக் கொண்டு ஆமிக்காரர்களைப் பார்த்தும் பாராதவர் போல் தன்பாட்டுக்கிருந்த முருகேசரை, ஆமிக்காரனொருவன் வேலிக்கு மேலால் எட்டிப்பார்த்து “அங்கிள், கோஹமத?”என்று கேட்டான்.
தற்செயலாக அவனைப்பார்ப்பது போல பார்த்து, சிரிப்பை வலித்தழைத்து ஒருவாறு சமாளித்துக் கொண்டார்.
3: $ *: & $ 3:
முருகேசன் ஒரு சாதாரண மீனவனின் மகன்தான் என்றாலும் மிகவும் கஷ் டப்பட்டுப்படித்து ஒரு ஆசிரியரானான். குடும்பத்தில் இவன்பெற்றோருக்கு ஒரே. யொரு பிள்ளை. இளைய வயதிலேயே தந்தையை இழந்து போனான், அதனால் தான் படிப்பதற்காகவும், வீட்டுச்செலவிற்காகவும் பணம் தேவைப்பட்டது.
தாய் பாக்கியம் நடைநோயாளி, கடையப்பம் செய்து விற்கவும் அவளால் முடியவில்லை.
வேறுவழியின்றி முருகேசன் தனது தந்தை பார்த்து வந்த மீன்பிடித் தொழி. லைச் செய்து, வருவாயைத் தேடிக் கொண்டான். இரவுபகலென்று பாராமல் உழைத்துக்கொண்டே படித்துமுன்னேறியமுருகேசனைஊர்வியந்துபார்த்தது. முருகேசனப் பாத்தயாடா, தகப்பன் இல்லாட்டியும் அவன்செய்த தொழிலச் செய்து கொண்டே படித்து வாத்தியாராப் பொயித்தான், அவனப்பாத்தாவது நீ
"gá06v” U55á 21

Page 13
முன்னுக்கு வர ஏலாதா? என்று ஊரில் பலர் தங்கள் பிள்ளைகளுக்குப் புத்தி சொன்னார்கள்.
முருகேசனுக்கு எப்படியாவது ஒரு திருமணத்தைச் செய்து கொடுத்து, அவனுடைய மணக்கோலத்தைப் பார்த்த கண்ணோடு, கணவன் போனவழிக்குப் போய் விட வேண்டுமென்று தாய் பாக்கியம் கனவு கண்டாள்.
அவள் கண்ட கனவு வெகுவிரைவிலேயே நிறைவேறுமென்று அவள் எதிர்பார்க்கவேயில்லை.
தூரத்து உறவுக்காரியான அன்னம்மாவை வெகுசிறப்பாக இல்லாவிட்டாலும் அல்லை அயலுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லி முருகேசனைத் திருமணம் முடித்துவைத்து மூன்று மாதங்கள் கூடச் சென்றிருக்காது பாக்கியம் ஒருநாள் இறந்து போனாள்.
முருகேசனும், மனைவி அன்னம்மாவும் பார்ப்பதற்கு அண்ணன் தங்கை போல இருந்தார்கள்.
அன்னம்மா முருகேசனைப் போல அதிகம்படி க்காது போனாலும் ஊர் நிலவரம் தெரிந்தவள். அன்றாடம் முருகேசன் வாங்கிக் கொண்டுபோடும் பத்தி. ரிகை, சஞ்சிகளையெல்லாம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துப் பார்ப்பவள். அல்லை அயல் வீடுகளுக்குத் தேவையில்லாமல் போகும் பழக்கமும் அவளிடம் இல்லை. கணவனின் வாழ்வேதன் வாழ்வுஎன்று அவள் சிறந்த குடும். பப் பெண்ணாக வாழ்ந்தாள்.
முருகேசனும் அன்னம்மாவும் இல்லற பந்தத்தில் இணைந்து நாளடைவில் ஒரு பெண்குழந்தைக்குத் தாய்தந்தையானார்கள், அதன்பிறகு ஏனோ தெரிய வில்லை அன்னம்மாவின் வயிற்றில் எந்தப்பிள்ளையுமே ஜனிக்கவில்லை. ஒரேயொரு பிள்ளையான குமுதினி முருகேசனையே உரித்துக் கொண்டு பிறந்திருந்தாள் அழகானஅடக்கமான பிள்ளை,படிப்பிலும்கெட்டிக்காரியாக இருந்தாள் அவளை ஒரு பட்டதாரியாக்கிவிட வேண்டும் என்பது முருகேசனின் எண். ணம், ஆனாலும் குமுதினி ஏ.ல் பரீட்சையில் நன்றாகத்தேறியிருந்தாலும் பல்கலைக் கழகம் போவதற்கு சில புள்ளிகளால் தட்டுப்பட்டுப் போய் விட்டாள். “இன்னொருமுறை எடுத்துப்பார்’ என்று முருகேசன் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்க வில்லை. இனியென்ன செய்வது?
படிப்பைத் தொடர்ந்தால் அதற்காக மினக்கடலாம். இல்லையெனில் பெண்ணுக்கு அடுத்தாகத் திருமணம்தானே. தொழில் பார்க்கவும் அவள் விரும்பவில்லை, அதனால் முருகேசன் தனக்குத் தெரிந்த ஒரு நண்பனின் உதவியோடு கனடாமாப்பிள்ளைஒருவனுக்குகுமுதினியைத்திருமணம்செய்துகொடுத்தான். சில வருடங்கள் ஊரிலேயே வாழ்ந்து விட்டு குமுதினியும் கணவனோடு கனடா சென்று அங்கேயே “செற்றிலாகிவிட்டாள்.
§ she shද * * *
“gяoяр” Uš4ф 22

முருசேசரும், அன்னம்மாவும் தனித்துப் போனார்கள். மகள் பிரிந்த துயரம் தான். என்றாலும் அந்தப் பிரிவு தவிர்க்க முடியாதிருந்தது. அவளை மறந்து வாழ முருகேசருக்கும் அன்னம்மாவுக்கும் நீண்டகாலம் பிடித்தது. எவ்வாறாயினும் கவலையை மறக்கப் பண்ண குமுதினி அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவாள்.
இலங்கையில் இனப்பிரச்சினைத் தீ கொடுரமாக எரிந்துகொண்டிருந்தபோதுகுமுதினியும், கணவனும் இவர்கள் இருவரையும் வீட்டை யாருக்காவது வாடகைக்குக் கொடுத்துவிட்டு இங்கே வாருங்கள் என்று அழைத்தார்கள்.
முருகேசர் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. வேண்டுமானால் அன்னம்மா வைப் போகச் சொன்னார். இவ்வளவு காலமும் உங்களோடு வாழ்ந்து விட்டு இறுதிக் காலத்தில் உங்களைத் தனியேவிட்டு விட்டு நான்மட்டும் போகவா? என்று அவளும் மறுத்து விட்டாள்.
காலம் நீண்டு போனது. முருகேசர் றிட்டயராகிவிட்டார்.
இதன்பிறகு குழந்தைப் பிள்ளையைப் போல முருகேசர் அன்னம்மாவின் காலடியிலேயே கிடந்து விடிந்தார். இது அவருக்கு மாத்திரமல்ல அன்னம்மாவுக்கும் நன்றாகப் பிடித்திருந்தது.
முருகேசரைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். இளமைக் காலத்திலிருந்தே உற்சாகமான பேர்வழி, நாடகம், எழுத்து, நடிப்பு, பேச்சு என்று ஊரெல்லாம் துரள், கிளப்பியவர், தொழில் செய்யும் நேரத்தைவிட மற்றைய நேரங்களிலெல்லாம் இளைஞர்களோடு சேர்ந்து எதையாவது செய்வார்.
போகப்போக இவர் அரசியல் மேடைகளிலும் ஏறிக்கலக்கத்தொடங்கினார்.
ஆசிரியர் தொழில் கிடைப்பதற்கு முதல் பீரங்கிப் பேச்சாளர் என்ற பெயர் இவருக்கிருந்தது.
வேலை கிடைத்த பின்னால் மேடைப் பேச்சைத்தான் தவிர்த்துக் கொண்டாரே தவிர மறைமுகமாக அரசியல்நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளவேயில்லை.
சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு, பூறி எதிர்ப்புப் போராட்டம் என்று இயங்கிக் கொண்டேயிருந்தார்.
இவருடைய இந்த நடவடிக்கைகளை அவதானித்த எதிரணியினர் இவரைப் பலதடவைகள் தண்ணீர் இல்லாத இடங்களுக்கு இடமாற்றம் செய்தும் கூட மனிசன் எதற்கும் அசையவில்லை.
இவர் பாடசாலைகளில் மாணவர்களுக்குப்படிப்பித்தார் என்பதைவிட தமிழினத்தின் விடுதலைக்காக நாம் என்ன செய்ய வேண்டும். என்று போதித்தார் என்பதுதான் உண்மையானது.
‘ஓலை’ பக்தம் 23

Page 14
இளம் வயதில் தமிழரசு என்று ஒடியாடித்திரிந்தவர், 'றிட்டயர் ஆனபிறகு கூட்டணி, இயக்கம் என்று சும்மா ஆறுதலாகக் கிடவாமல் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டேயிருந்தார். கனடாவிலிருந்த மகளோ அல்லது அன்னம் மாவோ. இவர் போக்கை நிறுத்த முடியவில்லை,
‘என்னதான் இருந்தாலும் கட்டிய பாவத்துக்காக நாட்டு நிலமையை உத்தேசித்து ஏச்சுப் பேச்சு வாங்கினாலும் அடிக்கடி அன்னம்மா புத்தி சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
வயது போய், பென்ஷன் எடுத்தாலும் முருகேசரை யாரும் கிழவன் என்று சொல்ல முடியாது. மெலிந்த தோற்றம். பாரதியாரைப்போல நிமிர்ந்தநடை, எவருக்கும் பயப்படாத மன உறுதி கொண்டவர்.
“என்ர கண்ணோடுதமிழினம் எல்லா உரிமைகளையும் பெற்றுசுதந்திரமாக அவர்கள் தங்கள் சொந்தமண்ணில்வாழ்வதைநான்பார்க்க வேண்டும்! என்று அடிக்கடி சொல்வார்.
இவருக்கென்ன பைத்தியமா பிடித்துவிட்டது? என்று அன்னம்மா தனிமையிலிருந்து பலமுறை அழுதிருக்கிறாள்.
米 来 米 来 率 米
ரோந்து வந்த ஆமிக்காரர்கள் போய்விட்டார்கள். பசி வயிற்றைக் கிள்ளியது. மெல்ல எழுந்த நின்ற போது துரத்திலிருந்த கண்ணகையம்மன் கோவில் மணியும், பறைச்சத்தமும் கேட்டது,
“பத்துப்பதினைந்து வருடங்கள் பூட்டிக் கிடந்த கோவில் கதவு இந்த வருசம் தான் திறந்து சடங்கு நடக்குது கோதாரி புடிப்பானுகள் சனங்கள் எந்தச் சடங்கத்தான் சந்தோசமாகச் செய்ய உட்டானுகள்” என்று தனக்குத் தானே சொல்லியபடி குசினிப்பக்கம் போனார். அன்னம்மா சாப்பாட்டை “றெடி’யாக வைத்திருந்தாள். மூச்சுவிடாமல் மளமளவெனச் சாப்பிட்டு விட்டு மீண்டும் வேப்ப மர நிழலுக்குள் வந்து அமர்ந்து கொண்டார். அன்னம்மாவும் சாப்பிட்டு, குசினியை ஒழுங்குபடுத்திவிட்டு வெற்றிலை வட்டாவையும்துக்கிக் கொண்டு கணவனின் பக்கமாக வந்து குந்திக் கொண்டாள்.
பாக்கை வெட்டி, வெற்றிலையை மடித்து அவளிடம்நீட்டினாள் அன்னம்மா. முருகேசர் நன்றாக வெற்றிலையைப் போட்டுக் குதப்பி புளிச்சென ஒரமாகத் துப்பி விட்டுக் கொண்டார். வெற்றிலைச் செருக்கு ஏறியது.
“அன்னம்மா எனக்கு இப்பெல்லாம் நித்திரையே இல்லடி. ராப்பகலா ஒரே முழிப்புத்தான்” என்று கதையை ஆரம்பித்தார்.
“என்ன புதினமாக் கதைக்கிறீங்க. ராவையில நீங்க குறட்ட உடுற சத்தம் ரெண்டு கட்டத்துரம் கேக்கும், அப்பிடி இருக்கக்க ஏன் பொய் சொல்லுறீங்க?" அது கொஞ்ச நேரத் துக்கம்தான். நான் நிம்மதியா நித்திரகொள்ளு
‘ஓலை’ பக்கம் 24

றெண்டா நம்மட தமிழ்ச்சனங்களுக்கு நிரந்தரமான, நிம்மதியான சீவியம் வரவேணும்.
தமிழ்ச்சனமெண்டும், மொழியெண்டும் தொண்டகிழியக்கத்தி பொலிஸ் காரண்ட கையாலயும், ஆமிக்காரன்ட கையாலயும்அடிபட்ட புறகும் உங்க. ளுக்கு இன்னும் ரோசமில்லை. நல்லவேள உங்கட வாத்திவேலையும் பறி. போயிருக்கும். ஏதோநான்கும்பிடுற தெய்வங்கள் காப்பாத்திப் போட்டுதுகள்” “அன்னம்மா. எதுவும் நடக்க வேணுமெண்டா நடந்தே திரும் அத உட்டுத் தள்ளு’! *
“அதுசரி பேச்சுவாத்தையெல்லாம் நடக்குதே சமாதானம் வருமா?”
“ஏன் சந்தேகப்படுறா?* “நான்மட்டுமா! ஊருலகமெல்லாம் சந்தேகம்தான் படுகுது.” “இனி ஒருத்தனும் வாலாட்டேலா!” “நீங்க இப்பிடிச் சொல்லுறிங்க. பேப்பர்வழிய தமிழாக்களெல்லாம் சவப் பெட்டியத் த்யார் பண்ணிவையுங் கெண்டு வீரமுனையில, கிரானில எல்லாம் சொன்னதாக வந்திருந்ததே?”
“சமாதானத்த விரும்பாத அஞ்சாறு நட்டாமுட்டிகள்ற வேல இது. மறு காலும் நாட்டக் குழப்பி சூறையாடுறதுக்கு அடிப்போடுறானுகள்!”
“என்னெண்டாலும் எனக்குப்பயமாக்கிடக்கு, நீங்க இனிமே பொங்குதமிழ், பூபதி நினைவெண்டு ஒண்டுக்கும் போகாதீங்க, நாளைக்கு இருந்தாப்ப நாடு குழம்பித் தெண்டால்.
“சும்மா விசரக் கிளப்பாத அப்பிடியொண்டும் நடக்காது”
“நீங்க இப்படிச் சொல்லுறீங்க, நேத்துராவு இவன் பூபாலன் தலை கெட்ட வெறியில இதால போக்குள்ள “பொறுங்க, பொறுங்க. கெதியில் உங்கட ஆட்டோட்ட மெல்லாத்தையும் நித்தாட்டிக் காட்டுறனெண்டு சொல்லி, காறித்துப்பிப் போட்டுப் போனவன்.”
“இவனொரு தத்தாரி, நேத்து இப்படிச் சொன்னவன். இண்டைக்கு கூட்டணி எம்பிட்ட நிண்டவன், நாளைக்கு இயக்க ஒப்பீசுக்கு வருவான்! இவனுகளைப் போல ஆக்காளால தான் அன்னம்மா நம்மட நாடு இப்பிடிப்போன! சரி அன்னம்மா! நான் போய்க் கொஞ்ச நேரம் கண்ணயரப் போறன்’ என்றபடி முருகேசர் எழுந்ததும் அன்னம்மா அவரிருந்த சாய்வு நாற்காலியில் ஏறிப் படுத்துக் கொண்டாள்.
படுக்கைக்குப் போன முருகேசருக்கு அன்னம்மா சொன்ன விசயங்களெல்லாம் நினைவுக்கு வந்து மூளையைக் குழப்பியது.
பொங்குதமிழ், பூபதி நினைவு, திலீபன் நினைவு, ஹர்த்தாலென்னு கலந்து
‘ஓலை’ பக்கம் 25

Page 15
கொண்டதும். மேடைகளில் ஏறி முழங்கியதும், அப்போது வீடியோ படம் பிடித்ததும், பத்திரிகை ரெலிவிஷன்களில் அவர்படம் வந்திருந்ததும் அவரது மனத்திரையில் படம் போல ஒடியது.
“பழையபடி நாடு குழம்பினால்,.?” என்றுமில்லாதவாறு முருகேசரைப் பீதி பிடித்துக் கொண்டது. சட்டென எழுந்து வேப்பமர நிழலுக்கு வந்தார்.
“என்ன நித்திர கொள்ளல்லையா?”
“இல்ல, எனக்குப் பயமாக்கிடக்கு அன்னம்மா. நீ சொன்னதப் போல சிலவேளை நாடு குழம்பித் தெண்டால்.”
குழந்தைத்தனமாக அவர் இப்படிச்சொன்னதும் அன்னம்மாவுக்குவாய்வயி. றெல்லாம் பற்றி எரிந்தது. அவர் சுபாவம் அவளுக்கு நன்றாகவே தெரியும். தைரியம் இருப்பது போல காட்டிக் கொள்வார். ஆனால் சாவதற்குச் சரியான பயம், அவளுக்கும் பயம்தான், ஆனாலும் கணவனின் பயத்தைத் தெளிவிக்க “உங்களுக்கு இல்லாத அறிவும், புத்தியும் எனக்கிருக்கா? இனிமே நாடு குழம்பாது, அப்பிடிக் குழம்பினாலும் வெளிநாடுகள் உடாது; இப்ப நடக்கிறது மக்கள் போராட்டம் தானே! இதுக்குள்ள ஆரத்தெரிஞ்சி புடிக்கப் போறாங்க? நீங்க ஒண்டுக்கும் பயப்புடாதீங்க.”
இப்படி அன் ஈம்மா சொன்னதைக் கேட்டதும் முருகேசர் வியப்போடு அவளைப் பார்த்தார்.
“என்ன அப்பிடிப் பாக்கிறீங்க?"
“அடியே அன்னம்மா. இத்தனை நாளும் உன்ன ஒரு ஊமையென்டு தான் நினைச்சிருந்தன். உன்ர முளைக்குள்ள இவ்வளவு சரக்கிருக்கெண்டு இப்பதான் தெரியும்’ என்று செல்லமாக அவளைக் கட்டிப்பிடித்தார்முருகேசர்,
“சும்மா உடுங்க! ரோந்து போன ஆமி திரும்பிவாறநேரம்!” என்று சொல்லி அவர் பிடியை விடுவித்துக் கொண்டு வெற்றிலை வட்டாவையம் தூக்கிக் கொண்டு மண்டபத்திற்குள் ஓடினாாள் அன்னம்மா. €ਟੈ
செங்கதிரோன் எழுதும் விளைச்சல்
(கவிஞர் நீலாவணனின் 'ഖേണ്ടിയെ', காவியத்தின் தொடர்ச்சி) ஆரம்பமாகிறது.
‘ஓலை’ பக்கம் 26
 

ஐயா! புலவீர்காள்.
கையில் ஒரு பேனா.! காகிதமும் கிடைத்து விட்டால்! கன்னா, பின்னா, வெனக் கீறி, கவிதையெனப் பேரை வைக்கும் ஐயா! புலவீர்காள். அடியேன் ஒரு விண்ணப்பம்.! வாய்க்குள் நுழையாத வட சொல்லை வலிந்தெடுத்து வண்ணத் தமிழ் தேனிற்குள் கலக்கின்ற கய மையினை. கவிஞரே. செய்யாதீர்..! எதுகை மோனை.! எதுவின்றிப் போனாலும் 'கரு' விற்கு கூட கவிதையிலே பஞ்சமா? அரியணையில் வீற்றிருக்கும் அரசிதமிழ் மகளை. அம்பலத்தில் கொண்டுவந்து. ’துச்சாதனம்’ செய்யும். துரோகத்தைப் புரியாதீர்..! பண்டையப் புலவர்கள். பண்பாக வளர்த்தவளை பாதகம் புரிந்து படுகொலை நீர் செய்யாதீர்..! புதுக்க விதையுங்கள். புது நூலை நெய்யுங்கள் சாக்கடையில் - நல்ல சந்தனத்தைக் கரைக்காதீர்..!
- கறுவாக்கேணி முத்து மாதவன்
‘ஓலை’ பக்கம் 27

Page 16
பன்மொழிப்புலவர்.த.கனகரத்தினம்
சொல்லும், பொருளும் பற்றிச் சிந்திப்போம். ஒரு சொல்லின் பொருள் நிலையாக அமைய வேண்டும் என்ற நியதி இல்லை. ஒரு சொல்லின் தொடக்ககாலப்பொருளே இன்றுவரை வழங்கவேண்டும் என்னும்நிலையும் எந்த மொழியிலும் இல்லை. ஒரு சொல்லின் பொருள் தொடக்கத்தில் ஒன்றாக இருந்திருக்கும். இன்று வேறொன்றாகவும் இருக்கும்.
பொன் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். தொடக்கத்தில் இது உலோகம் என்னும் பொருளைக் குறிப்பதாக இருந்தது. இரும்பு, செம்பு. வெள்ளி முதலியனவும்பொன் என்றே குறிக்கப்பட்டன. ஐம்பொன்தாலி என்ற வழக்கு இதனை விளக்கும். ஆனால் இன்று பொன் என்றால் உலோகங்களில் உயர்ந்த ஒன்றை மட்டுமே குறிக்கின்றது.
நெய் என்ற சொல்லும் தொடக்கத்தில் நீர்ப்பொருளுமல்லாமல் கடினப் பொருளுமல்லn ல் பசையானவற்றைக் குறிக்க வழங்கியது. இன்று தயிரிலிருந்து எடுபடும் நெய்லய மட்டும் குறிக்க வழங்குகிறது. ஆதலாற்றான், சொல் முதலில் உணர்த்திய பொருள் வேறாகவும் இன்று உணர்த்தும் பொருள் வேறாகவும் இருத்தல் இயல்பே. м
சொல்லின் தொடக்கப் பொருளை ஆராய்தல் எளிதன்று. சில சொற்களின் தொடக்கப் பொருள். விளங்காமல்நிற்கும். உதாரணமாக இல், முன், வழி தலை, முதலிய சொற்களின் தொடக்கப்பொருள்களைக் கூற முடியுமா? முடியாது. மற்றச் சொற்களின் தொடக்கப்பொருள்கள் இன்ன என்று ஒருவாறு அறியலாம். இதுதான் சொற்பிறப்பு ஆராய்ச்சி (Etymology) நல்லூர் பிதா ஞானப்பிரகாச சுவாமிகள் இத்துறையில் உழைத்துவந்தார். தோசை என்பதன் பொருள் தோ + சை. இரண்டு பக்கமும் சுடப்படும் போது “சை என்ற ஓசை எழும், “தோ’ என்பது இரண்டு என்பதைக் குறிக்கும். Biscuits என்பதில் Bi என்பது இரண்டு பக்கம் என்பதைக் குறிப்பதுபோலாம்.
இவரது ஆராய்ச்சியைப்பின்பற்றிநம்நாட்டுஹ.சி. தாவீது அடிகளாரும் உழைத்தார்கள். சொற்பிறப்பு ஆராய்ச்சி பயனற்றது என்பது இன்றைய மொழிநூலார் கருத்தாகும். இன்று அறிஞருலகம் சொற்பொருள் ஆராய்ச்சி (Sentences) யில் தான் கவனம் செலுத்துகின்றது.
சொற்பொருளை ஆராயும் போது சொல் உணர்த்தும் பொருள் எவ்வெவ்வாறு வேறுபட்டுச் செல்கின்றது என்று காணல் வேண்டும்.
“9606v” uésó 28
 

ஒரு சொல்லுக்கு ஒரு பொருளே அமையும். பேச்சு மொழியில் ஒரு சொல் ஒரு பொருளே உணர்த்தும், போர் என்ற சொல் வைக்கோல் போரையும் யுத்தத்தையும் உணர்த்துவது முற்காலத்தில் வைக்கோல்போரை போர்வு என்று வழங்கினார்கள். இக்காலத்தில் வைக்கோல் என்ற அடையோடு வைக்கோல்போர் என வழங்குகிறார்கள். இதே போன்று ஒரு பொருளுக்கு ஒரு சொல்லே வழங்கும். இருசொல் வழங்கின் ஒன்று நிற்க, மற்றொன்று அழியும். அல்லது வேறு பொருளுணர்த்த தொடங்கும். வீடு, இல், மனை என்பன ஒரு பொருட்சொற்கள். இன்று பேச்சுவழக்கில் வீடு என்ற சொல்லே வழங்குகிறது. இல் என்பது இலக்கிய வழக்கோடு நின்றுவிட்டது. பேச்சு வழக்கில் அச்சொல் இல்லை. மனை என்பது பேச்சுவழக்கிலும் வழங்குகிறது. பொருளளவில் வீடுகட்டுதற்குரியநிலப்பகுதி எனச்சிறிது வேறுபட்ட பொருளைத் தருகிறது. நிற்க, இல்லுக்குரியவள் யாரெனின் இல்லாள். மனைக்குரியவள் யாரெனின் மனைவி. ஆனால் இல்லுக்குரியவள் இல்லான்; மனைக்குரியவன் மனைவன் என்ற இலக்கிய வழக்கு இல்லை. இவ்வாறே வீட்டுத்தலைவன், குடும்பத்தலைவன் கணவன். ஆனால் குடும்பத் தலைவியை கணவி என்று சொல்வதில்லை. கணவனின் எதிர்ப்பால் மனைவி எனவே வழங்கும்.
அடுத்து முன்பு இழிந்த பொருளைக் குறித்து வந்த சொல் இப்போது உயர்ந்த பொருளில் வழங்குவதுண்டு. களிப்பு. மகிழ்ச்சி என்பன கள்ளுண்டு மயங்கு தலையே குறித்தன. ஆயின், இப்போது மனம் உவந்திருத்தல் என்னும் உயர்ந்த பொருளைத் தருகின்றன.
முன்பு உயர்ந்த பொருளில் வழங்கி வந்த சொல் இப்போது இழிந்த பொருளைக்குறிக்கின்றன. நாற்றம் என்பது முன்பு உயர்ந்த பொருளில் மணத்தைக் குறித்தது, இன்று அது கெட்ட மணத்தையே குறிக்கின்றது. கர்ப்பூரம் நாறுமோ கமலப்பூநாறுமோ'எனின் வாசனையைத் தானே கருத வேண்டும்.
காதல், காமம் என்ற சொற்களின் வழக்கும் சிந்திக்கற் பாலது. காதல் என்பது அன்பைக் குறிக்கும் அருமையான சொல், காதலாகிக் கசிந்து கண்ணி மல்கி என திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் பாடுகின்றார்கள்.
'காதல் காதல் காதல் போயிற் சாதல் என்கிறார் பாரதியார். திருக்குறளில் இன்பத்துப்பால் என்பது காமத்துப்பால் என்றே வழங்குகிறது. எவ்வாறாயினும் காமம் என்ற சொல் இன்றைய வழக்கில் என்ன பொருள்
தருகின்றது என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். காம சூத்திரம் என்ற திரைப்படமும் எதனை விளக்குகிறதோ,
S
‘ஓலை’ பக்கம் 29

Page 17
S
ஒலை ஓங்கி வளர்வதற்காக உதவிக்கரங்கள் வழங்கிய இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
இ. சுந்தரலிங்கம் திருமதிபூரணம் ஏனாதிநாதன் 54 சி, குவாரி வீதி 21,பெர்னாண்டோ கார்டன் தெகிவளை தெகிவளை
ரூ. 2,000.00 ரூ. 200.00
எம். சிவலிங்கம் ஏ.இக்பால் 15/4 A, ரஜனிமாவத்த 'றிபாயா மன்ஸில், தலாத்துவ வீதி தர்கா நகர் - 12090 நீர்கொழும்பு
ரூ. 300.00 ரூ. 200.00
நன்றி !
அவுஸ்திரேலியாவிலிருந்து அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த திரு.க.திருவருள்வள்ளல் (மறைந்த தமிழறிஞர் புலவர் சிவங். கருணாலய பாண்டியனார் அவர்களின் மகன்) தனது துணைவியார் சகிதம் 29.12.2002 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு நேரில் வருகை தந்து சங்கப் பணிகளுக்காக ரூபாய் பத்தாயிரம் (10,000/=) அன்பளிப்புச் செய்திருந்தார். அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
‘ஓலை’ பக்கம் 30
 

Namasivayam Sivapatham
“Puththoi” “Selva Akam”, Justice of the Peace Anaicoddai, Regd. No.: 97/9/N.E.JafB / 1954 Sri Lanka.
24.11.2002
கெளரவ செயலாளர், தமிழ்ச் சங்கம், கொழும்பு gulff, யாழ் இலக்கிய வட்டம் வெளியிட்ட சுதந்திரன் சிறுகதைகள் அறிமுக விழாவுக்கு வந்த போது தமிழ் சங்கத்தின் செயற்பாடுகளை அவதானித்தேன். பல சான்றோர்களது சிலைகள் வைத்திருப்பதைப்பார்த்துமணம் மிக மகிழ்ந்தேன். புதினப் பத்திரிகைகள் படிப்பதற்கு ஆண்களும் பெண்களும் வந்ததையும் அவதானித்தேன். புதினப் பத்திரிகை படிக்குமிடத்தில் வாசகர் இருந்து படிப்பதற்கு ஏதும் ஒழுங்குகள் செய்யக் கூடாதா? 'ஒலை'நல்லதொரு முயற்சி. அச்சு, அமைப்பு, விஷயதானங்கள் எண்ணி மகிழத்தக்கவை. வாசகருக்குப் பிரயோசனமான விடயங்கள் தரப்படுகின்றன. எனக்கு தவறாது ஒலை கிடைக்கின்றது அதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். ஒலை வெளிவருவதற்கு அன்பளிப்பாக ரூபா 500/= செலுத்தி மற்றுச் சீட்டுப் பெற்றேன்.
துன்பமுற வரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.
sa அன்புடன்
أص r புத்தொளி - ܢܠ
gs ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
స్త్ర From : “Rajes Bala” 
To : 
Sent : Tuesday, December 17, 2002 4:16PM Subject: : Thank you
Dear Editor, Thank you for sending the "olai' It is a wonderful job to run a magazine which is giving us the opportunity to read about the literary events in Colombo. I will be in Sri Lanka from 12.01.03-23.01.03. Launching a book on 19.01.03 and I hope to see you all during my stay in Colombo.
47 Norman avenue Thank you London N225ES, UK Anbudan 208 889 8259 Rajeswary Balasubramaniam
‘ஓலை’ பக்கம் 31

Page 18
வணக்கம். தாங்கள் அனுப்பிய ஒலை 6வது இதழும், 8வது இதழும் கிடைத்தன. வாசித்து மிக்க மகிழ்வு எய்தினேன். ஏழாவது ஏட்டினையும் இணைத்தனுப்பிஇருப்பின் இன்னும் பலபடி இறுப்பூதெய்திருப்பேன். எப்படியோ மிகச் சுறுசுறுப்பாக இதழ்களை அனுப்பிய தங்களுக்கு எனது நன்றி.
அறுபது காலப்பகுதியில்-தமிழறிஞர்.கா.பொ.இரத்தினம் தலைமையில் - நானும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் செயற்குழு உறுப்பினனாகப் பணியாற்றி உள்ளேன். அமரர் மகாகவியும் எங்களோடு இணைந்து செயற்பட்டார் என்பதும் நினைவிற்கு வருகின்றது.
போர்க்காலச் சூழலால், கொஞ்சக்காலம் தமிழ்ச் சங்கத்தின் செயற்பாட்டில் வேகம் குன்றி இருந்தது. ஆனால் இன்று, சமாதானச் சூழலின் சாதகமான போக்கால், சங்கத்தின் செயல்வேகம் அபாரம்,
நூல் நயம் காண்போம், இலக்கியச் சந்திப்பு /அறிவோர் ஒன்றுகூடல், கணிப் பொறித்திருவிழா என்று பல்வேறு வகைப்பட்ட நிகழ்வுகள் வாரந் தோறும் இடைவிடாமல் தமிழ்ச் சங்கத்தில் இடம் பெற்று வருவது, வரவேற்கத்தக்க முனைப்பான செயலாகும்.
50 காலப்பகுதியில் - தமிழகத்திலிருந்து,நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களை இலங்கைக்கு வரவழைத்து, முத்தமிழ் விழா நடத்திய கொழும்புத் தமிழ்ச் சங்கத்தையும், அதன் தலைவர் வித்துவான் சோமசுந்தரம் அவர்களையும் மறந்து விட முடியுமா?
காலத்தை ஒட்டிய நோக்கில் தனது போக்கினை ஈடுபடுத்தி வரும், தமிழ்ச் சங்கத்தினைப் பாராட்டுவதில் மகிழ்வடைகிறேன்.
தொழிலிருந்து ஒய்வு பெற்று வீட்டில் - பதுளையில் தங்கி உள்ளேன். தங்களது சங்கத்தின் செயல்வேகம் தரும் பயனை, மலையகப் பகுதியில் உள்ளவர்களும் அறிந்து, அனுபவிக்கும் பாங்கில் அமைய, இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு ஒரு முறையாவது சங்கத்தின் நிகழ்வை இங்கே நடத்தினால், எல்லோரும் கேட்டு மிகவும் களிப்படைவார்கள். இது தாழ்மையான எனது முன்மொழிதல். ‘ஓலை’ எல்லா வகையில் உயரட்டும் வளரட்டும்!
நன்றி!
எண் 191, பசறைவீதி g)60T 60 3ம்கட்டை, இ.ஆதமிழோவியன்
பதுளை 24.10.2002
‘ஓலை’ பக்கம் 32
 

རྒྱུ་ 65 1 ܠܽ-B, GREENS RoAD, ༄ཇི་ NEGOMBO
TEL 031-39665
2.
சிவமயம்
лfПіпшthї лüЕЛІтїатü
58. பன்னல ரோட், தங்கொட்டுவ.
தொலைபேசி : 031-58236 ܐ
と ாே ܡܓܼܕܬàܐܰܰ

Page 19
sSJaz 茎及
தரமான த ات = இன்றே வி
NevY (
267,
MVella wat
Te 5.
Roš
కెడ్జ్-g 蒙
Of 13
hlulIHldELI
90, 4th (€
கொ
தொலைபேசி
5=PሯÑù..=S)
 

S2= 1ங்க நகைகளுக்கு
ஜயம் செய்யுங்கள்
Ganesha
vellers
Galle Road, இ
te, Colombo - 06 (oo
LOOTU స్త్రీஜி 55651, 503413
ዕC=፵፫፻፫S=
ང་ན་《ང་ཟུ་
2ť f'Ville from ای
ப்வரா அன் கோ
குறுக்குத் தெரு, ழும்பு - 11
: 33 602, 335 102
ബ്