கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2003.01

Page 1
ട}|(" &CE) 戮
In the Memory of
LATE. AMASTER SHELTON SEBARATNAM
Advanced Level (Maths) Student Wijayaratnam Hindu College Negombo
M. AMALO ATPAWANAYAGAM 28/12, St. RiTA's Road,
". エ Nego Mbo. 羅 E: O-O B 21్యF_ [6ܔ
 

ஆசிரியர் : செங்கதிரோன்
隨 கொழும்புத் தமிழ்ச்சங்க மாதாந்த மடல்
S S H
இ 8.
... .333 ...
= }
· ანა - ჯ. ჯ. ჯ. დ. 5 კვ. წ.
... ."
.ܐ ¬ܨܒܘs 1
:
.
---- .୫୍ இ
: ---- ! s! ! ! ୍
:
-:
-
"T" "22 - -- థ్రో = ா 7ܪ7:
*
கொழும்புத் தமிழ்ச் атчэш 7, 37 வது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை), கொழும்பு 06. தொலைபேசி 01-363739 வெப் முகவரி www.colombo.tamisangam இணைய தபால் முகவரி : ctseேபாeal
விலை இயன்ற அன்பளிப்பு

Page 2
வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகை மாளிகையில்
(BILILILDefibson) 5005).IJLD
Gusful i (Belgium) சர்வதேச இரத்தினக்கல்லியல் நிறுவனத்தினால் (International Gemmological Institute) உறுதிப்படுத்தப்பட்டு - பரிசோதிக்கப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட்டு - மாற்றமுடியாதபடி பைகளில் மூடித் தாளிடப்பட்டது.
வெள்ளவத்தை
fjulötunnfl efðbuafl
230 காலி வீதி, கொழும்பு - 06. தொலைபேசி 363392, 362427 தொலை நகல் : 504933 À Lissi 63,653 s : nithkal (aslt.lk
 

இதயம் திறந்து.
ஒலையின் இப் பன்னிரண்டாவது இதழ் கவிஞர் நீலாவணன் நினைவாக விரிகிறது.
கிழக்கிலங்கையின் தென் கோடியாகிய கல்முனைப் பிரதேசத்தில் பெரிய நீலாவணை எனும் கரையோரக் கிராமத்தில் 31.06.1931இல் பிறந்து அங்கேயே வளர்ந்து வாழ்ந்து 11.01.1975இல் மரணம் எய்திய கேசகப்பிள்ளை சின்னத்துரை எனும் முழுப்பெயரை இயற்பெயராகக் கொண்ட கவிஞர் நீலாவணன் நவீன கவிதையின் முன்னோடிக் கவிஞர்களுள் முக்கியமான ஒருவர்.
கவிதை, சிறுகதை, உருவகக்கதை, பாநாடகம், காவியம், கட்டுரை, விருந்தாந்த சித்திரம் ஆகிய வடிவங்களில் ஆக்கங்களைப் படைத்தாரெனினும் கவிதைத் துறையே அவரைப் புகழ் பூக்கவைத்தது.
1960களில் கல்முனை எழுத்தாளர் சங்கத்தைச் ஸ்தாபித்து வழி நடாத்தியதன் மூலம் அப்பிரதேசத்தில் எழுத்தாளர் பரம்பரையொன்றினை நீலாவணன் உருவாக்கியவர்.
நீலாவணனின் ஆக்கங்கள் பல இன்னும் பத்திரிகை நறுக்குகளாகவும், கையெழுத்துப் பிரதிகளாவுமே உள்ளன. இது வரை வெளிவந்தவை வழி (கவிதைத் தொகுதி - 1976 ); வேளாண்மை (காவியம் - 1982), ஒத்திகை (கவிதைத் தொகுதி - 2001) என்பனவே. நீலாவணனைப் பற்றி இதுவரை இரு நூல்கள் வெளிவந்துள்ளன. ஒன்று கலாநிதி சி.மெளனகுருவின் கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன், மற்றது எஸ்.பொன்னுத்துரை எழுதிய நீலாவணன்-எஸ். பொ. நினைவுகள். இரண்டுமே 1994 இல் வெளிவந்தவை. நீலாவணனின் ஆக்கங்கள் அத்தனையும் நூலுருப்பெற வேண்டியதும் அவற்றின் வாயிலாக நீலாவணன் மேலும் வாசிப்புக்குட்படுத்தப்படலும் அவசியம், பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்கள் எவரேனும் நீலாவணனை தங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வார்களேயானால் அது ஆக்கபூர்வமானதோர் செயற்பாடாக அமையும், இதன் மூலம் ஈழத்து இலக்கிய உலகு மேலும் உரம் ஊட்டப் பெறும் என்பது நிச்சயம். அதற்கான ஒரு உந்துதலே ஓலையின் இவ்விதழ்.
நன்றி! மீண்டும் மறுமடலில்.
- ஆசிரியர்
‘ஓலை’ பக்கம் 1

Page 3
HisGJ DIT GIGANTIGOffsBli
வாழ்க்கைக் குறிப்புகள்
விேஞர் நீலாவணன் 31-06-1931ல் பெரிய நீலாவணையில் பிறந்தார். சித்தாயுள் வேத வைத்தியர் திரு.கேசகப்பிள்ளை. திருமதி. கே. தங்கம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வன் இவர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல வருடங்கள் நற்சேவை புரிந்த இவர், தனது பிறந்த ஊர்மீது கொண்ட பற்றின் காரணமாகவே நீலாவணன்' என்னும் புனைபெயரை வரித்துக் கொண்டு கால்நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக எழுதிவந்தார். இவர் இயற்கை எய்தும் வரை முழுமூச்சோடு ஆக்க இலக்கியத்துக்கு - குறிப்பாக ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் 1948ல் இருந்து எழுதத் தொடங்கினார். சிறுகதைமூலம் எழுத்துலகில் பிரவேசித்து கவிதையும் சிறுகதையும் எழுதிக்கொண்டிருந்தார். அப்போது சுதந்திரன் ஆசிரியராக இருந்த திரு.எஸ்.டி. சிவநாயகம் இதனைக் கண்ணுற்று "நீங்கள் நூற்றுக்கணக்கானவர். களுள் ஒருவராக இருப்பதிலும் பார்க்க, நாலைந்து பேர்களுள் ஒருவராகப் பிரகாசிக்கலாம். சிறுகதையை விட்டுவிட்டுக் கவிதையையே எழுதுங்கள்!" என்று அன்புக்கட்டளை இட்டார். அதனை ஏற்றுநீலாவணன், ஏராளமான சிறந்த கவிதைகளையே எழுதிக் கொண்டிருந்தார். அக்காலத்தில் கவிதை எழுதுபவர்கள் சிறுகதை எழுதுபவர்களிலும் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனால் தற்போதுநிலைமை எதிர்மாறாக உள்ளது.
1961ல், கல்முனைப் பகுதியில் உள்ள எழுத்தாளர்களை ஒன்று சேர்த்துக் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தார். அதன் தலைவராகப் பல வருடங்கள் பொறுப்பேற்று இப்பகுதியின் இலக்கிய விழிப்புணர்ச்சிக்கு வித்திட்டார்.
கவி அரங்குகள், விமர்சன அரங்குகள், நினைவு விழாக்கள், பாராட்டு விழாக்கள், நூல் அறிமுகங்கள் எழுத்தாளர் சந்திப்புக்கள் என்பன கல்முனை எழுத்தாளர் சங்கத்தால் இப்பகுதியில் முதன்முதலாகவும் மிகச் சிறப்பாகவும் நடை பெற நீலாவணன் காலாக இருந்தார்.
அகில இலங்கைரீதியாக, தினகரன் பத்திரிகைமூலம் (1962ல்) நடைபெற்ற இலங்கையர் கோன் சிறுகதைப் போட்டி, இலங்கையர் கோன்விழா, மழைக்கை'கவிதை நாடக அரங்கேற்றம் என்பன கல்முனை
‘ஓலை’ பக்கம் 2
 

எழுத்தாளர் சங்கம் நடாத்திய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகவும், இலக்கிய நெஞ்சங்களில் நீங்காது நிலைத்துள்ள பசுமை நினைவுகளாகவும் மிளிர்கின்றன. இவையாவற்றுக்கும் முக்கிய ஆலோசகராகவும் நீலாவணன் விளங்கியதோடு அதற்காக பைசிக்கிள் ஓடி ஆதரவுதிரட்டல் போன்ற உடல் உழைப்பு நல்குவதிலும் மிகுந்த உசாராகவே விளங்கி
650 sssf.
மழைக்கை'கவிதை நாடகம் கிழக்கிலே (1963ல்) முதன் முதல் மேடை ஏறிய கவிதை நாடகமாகும். மகாபாரதத்தில் செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கர்ணனின் கடைசிகாலக் கதையைக் கருவாகக் கொண்ட இந் நாடகம் அறுசீர் விருத்தப்பாக்களினால் மிகவும் நயமான பேச் சோசைப் பண்பில் அமைக்கப் பெற்ற இலகு நடை மேடை நாடகம் ஆகும். இந் நாடகத்தில் மு.சடாட்சரம்-கர்ணன், நீலாவணன்-குந்திதேவி, மருதூர்க் கொத்தன்-கிருஷ்ணன், எம்.ஏ.நுஃமான்-இந்திரப்பிராமணன், மருதூர்க்கனி-பிராமணன், கே.பீதாம்பரம்-இந்திரன் என்று பாத்திரமேற்றுநடித்தமை குறிப்பிடத்தக்கது. மழைக்கை' 1964இல் வீரகேசரியிலும் வெளிவந்தது.
1966ல் ஜனாப் உஸ்மான் மேர்சா காட்டிய அன்பினால், அவரின் கிழக்குப் பதிப்பகத்தில் பாடும் மீன் இதழை - நீலாவணனை ஆசிரியராகக் கொண்டு - அச்சிட்டும் அது வெளிவராமலே போயிற்று.
1967ல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து (தலைவர் சண்முகம் சிவலிங்கம்; செயலாளர் மு.சடாட்சரன், கெளரவ ஆசிரியர் - நீலாவணன், காப்பாளர் கே.ஆர். அருளையாB.A) பாடும் மீன்' என்னும் இலக்கிய இதழை நடாத்தினார். அது இரண்டு இதழ்களே வந்தாலும் அதற்கு இலக்கிய உலகில் தனி இடம் உண்டு.
11 - 01 - 1975ல் இயற்கை எய்தினார்.
1976ல் இவரது வழி என்னும் முதலாவது கவிதை நூல் வெளிவந்தது. இது இலங்கை சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளது.
1982ல் நீலாவணனது வேளாணர்மைக் காவியம் நூலுருவாக வந்துள்ளது. 2001 இல் ஒத்திகை (கவிதைத் தொகுப்பு) வெளிவந்துள்ளது.
இவரது துணைவியார் திருமதி அழகேஸ்வரிசின்னத்துரை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றுள்ளார். இவருக்கு எழில் வேந்தன், வினோதன் ஆகிய இரு புதல்வர்களும் எழிலரசி, ஊர்மிளா, கோசலா ஆகிய மூன்று புதல்விகளும் உள்ளனர். இவரின் சிரேஷ்டபுதல்வன் சி.எழில்வேந்தன் தற்போது சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்திப்பணிப்பாளராகக் கடமை புரிகிறார். &
‘ஓலை’ பக்தம் 3

Page 4
06.07.98 முதல் 12.07.98 வரை கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய ஈழத்துக் கவிஞர் வாரம்' நிகழ்வின் ஆறாம்நாளான 11.07.93 சனிக்கிழமை கவிஞர் நீலாவணனின் உருவப்படம் திரைநீக்கம் செய்யப்பட்டு புகழாரம் சூட்டப் பெற்றார். தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக ஒய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் குமாரசுவாமி சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டார். நீலாவணன் பற்றிய சிறப்புச் சொற்பொழிவை திரு.த. கோபாலகிருஸ்ணன் நிகழ்த்தினார். திரு.எஸ்.எழில்வேந்தன் அவர்களால் நீலாவணனின் பாவம் வாத்தியார்'கவிதை மொழியப்பட்டது.நீலாவணன் எழுதிய போடிமகள் பொன்னம்மா'(விருந்தாந்த சித்திரம்)வாக செல்வி மங்களகெளரி விராகநாதன் நடித்துக் காட்டினார்.
தொகுப்புரை வழங்கும் செல்வி, சற்சொரூபவதிநாதன், சிறப்புச் சொற்பொழிவாற்றிய த.கோபாலகிருஸ்ணன், தலமைதாங்கிய சங்கத் தலைவர் கலாசூரி. இ.சிவகுருநாதன், சிறப்பு அதிதி குமாரசுவாமி சோமசுந்தரம் (ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்), செகுணரத்தினம் (கொழும்புத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர்) திருமதி. நீலாவணன் ஆகியோர்.
கவிஞர் நீலாவணனின் உருவப்படத்திற்கு நீலாவணனின் பாவம் வாத்தியார்' மலர்மாலை அணிவிக்கும் கவிதை மொழியும்
திருமதி நீலாவணன். மகன் எஸ்.எழில்வேந்தன்.
‘ஓலை’ பக்கம் 4
 
 
 
 
 
 

* * ; ; ; : ; : 8: 3 X 3 : : E &
* 1948இல் எழுதத் தொடங்கிய நீலாவணனை அவர் கே.சி.நீலாவணன் எனும் பெயரில் சுதந்திரன்' பத்திரிகையில் எழுதிய 'பிராயச் சித்தம்' சிறுகதையே இலக்கிய உலகிற்கு எழுத்தாளனாக அறிமுகப்படுத்திற்று. இவரது முதற்கவிதை 1948ம் ஆண்டிலே தினகரன் பாலர் கழகத்தில் பிரசுரமாகியிருந்தாலும் கூட கே.சி.நீலாவணன் எனும் புனைபெயரில் 1953இல் சுதந்திரனில் வெளிவந்த ஓடி வருவதென்னேரமோ?' எனும் கவிதை மூலமே கவிஞராக அறிமுகம் ஆனார். இவரது இறுதிக்கவிதை பொய்மை பொகங்கிற்று' என்பதாகும்.
* கே.சி.நீலாவணன் - நீலாவண்ணன் - நீலாவணன் - நீலாசின்னத்துரை - மானாபரணன் - இராமபாணம் - எழில் காந்தன் - சின்னான் கவிராயர் - எறிகுண்டுக் கவிராயர் - கொழுவு துறட்டி - அம்மாச்சி ஆறுமுகம் - வேதாந்தன் - சங்கு சக்கரன் எனும் புனைபெயர்களில் கவிதை, சிறுகதை, உருவகக் கதை, கவிதை நாடகம், காவியம், கட்டுரை, விருத்தாந்த சித்திரம் ஆகிய வடிவங்களில் ஆக்கங்களைப் படைத்தாரெனினும் கவிதைத் துறையே அவரைப் புகழ்பூக்க வைத்தது என்பதாலும், தனது ஊரான பெரியநிலாவணை மீது கொண்ட பற்றினால் சூடிக் கொண்ட நீலாவணன் எனும் பெயரே நிலைத்துவிட்டது. என்பதாலும் எழுத்துலகில் கவிஞர் நீலாவணண் என்றே தடம்பதித்தார்.
* 1960களில் ஈழத்து இலக்கிய முகாமில் முற்போக்கு என்றும் பிற்போக்கு என்றும் சொற்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தனது இலக்கியக் கொள்கை நற்போக்கு என்று நாடிய அணி சேராத் தனித்துவக் கவிஞன் நீலாவணன்.
* நீலாவணன் கவிதைகள் ஒசைநயம் துள்ளும் சந்தக் கவிதைகளாகும். செவிக்கு இன்பம் தரும் லயமும், தாளமும் அமைந்த சந்தக் கவிதைகளை அவர் ஆக்கினார். நளவெண்பா பாடிய புலவன் புகழேந்தியின் பெயர் தமிழுலகில் வெண்பாவிற்புகழேந்தி என்று நிலைத்துவிட்டது போல் - ஈழத்து இலக்கிய உலகில் வெண்பாவிற் பெரியதம்பி என புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை பேர் பெற்றது போல் 'சந்தக்கவிதைக்கு நீலாவணன்' என்ற சங்கதியும் எழுத்துலகில் நின்று நிலைக்கும்.
* வேகமும், தீவிரமும், முன்கோபமும் இவர் இயல்பான குணங்களெனினும் மனிதநேயப்பண்பும், நகைச்சுவை உணர்வும் நீலாவணனிடம் நிறைந்திருந்தன.
‘ஓலை’ பக்கம் 5

Page 5
* மட்டக்களப்பில் வழங்கும் கிராமியச் சொற்களை நீலாவணன் தன் கவிதைகளில் நிறையக் கையாண்டுள்ளார். மட்டக்களப்பு மக்களின் வாழ்வுமுறை, சடங்குகள், பழக்கவழக்கங்களை நீலாவணன் தன் கவிதைகள் வாயிலாக பதிவு செய்து கொண்ட அளவுக்கு வேறு எந்தக் கவிஞரும் இதுவரை செய்யவில்லை, மட்டக்களப்பு வாழ்க்கை முறை, சடங்குகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய விழையும் சமூகவியலாளர்களுக்கு நீலாவணன் கவிதைகள் நிறையத் தகவல்களை வழங்கத் கூடியவை.
* மட்டக்களப்பின் கவிதைப் பாரம்பரியத்தின் ஊற்றுக் கண்களாகத் திகழ்பவை இம்மண்ணின் நாட்டார் பாடல்களே. இங்கு மட்டக்களப்பு பிரதேசம் எனக் கூறப்படுவது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வடக்கே வெருகல் ஆற்றையும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் கிழக்கே வங்காளவிரிகுடாக் கடலையும் மேற்கே ஊவாமலைக் குன்றுகளையும் எல்லைகளாகக் கொண்டு இலங்கிய நிலப்பரப்பாகும். இந் நிலப்பரப்பில் காலங்காலமாக எழுதா இலக்கியமாகத் திகழ்ந்த நாட்டாள் பாடல்கள். (கிராமியக் கவிகள்) மட்டக்களப்பின் பேச்சுமொழியில் இம்மண்ணின் மண்வாசனைகமழும் வகையிலே புனையப்பட்டவை. இப்பாடல்களெல்லாம் பெரும்பாலும் தனிப்பாடல்களே. எனினும் செந்நெறி இலக்கியங்கள் என வரும் போது விபுலானந்த அடிகளார் மற்றும் புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின் கவிதைப் பாரம்பரியத்தின் அடியொற்றி மட்டக்களப்புமண் ஆனது பல கவிஞர்களை ஈன்றெடுத்துள்ள போதிலும் இவர்களில் எவருமே - கவிஞர் நீலாவணனைத் தவிர - ஈழத்தமிழ் பிரதேசங்களில் தனித்துவம் வாய்ந்ததான மட்டக்களப்பின் பாரம்பரியங்களையும். சடங்குகளையும் அம்மக்களின் வஞ்சகமில்லாத வாழ்க்கை முறைகளையும் வைத்துக் காவியம் ஒன்றினை வடித்துத் தரவில்லை. ஆனால் கவிஞர் நீலாவணன் மட்டக்களப்பு மண்ணின் வாழ்க்கையை இலக்கியமாக்க எத்தனித்தார். அதன் விளைவே அன்னாரின் வேளாணர்மைக் காவியம்.
* 1960களில் கல்முனை எழுத்தாளர் சங்கத்தைச் ஸ்தாபித்து வழி நடாத்தியதன் மூலம் கல்முனைப் பிரதேசத்திலே எழுத்தாளர் பரம்பரையொன்றை நீலாவணன் உருவாக்கினார். மருதூர்க் சொத்தன், மருதூர்க்கனி, அன்பு முகையதின், மு.சடாட்சரன், கல்முனைப் பூபால், மருதூர்வாணன், பாலமுனை பாறுக், எம்.ஏ.நுஃமான், முல்லைவிரக்குட்டி, கனகசூரியம், சத்தியநாதன், நோ.மணிவாசகன், ஆனந்தன் என்று ஓர் இலக்கியப்பட்டாளமே அவரின் அரவணைப்பில் உருவானது. கல்முனை. யிலே, அவரின் இலக்கியச் சகாக்களாக சண்முகம் சிவலிங்கம், பாண்டியூரன், ஜிவா ஜீவரத்தினம், பஸில் காரியப்பர், ஈழமேகம் பக்கிர்தம்பி ஆகியோர் விளங்கினர். இலங்கையின் எந்தவொரு தனிப்பிரதேசத்திலும்
‘ஓலை’ பக்கம் 6

கல்முனைப் பிரதேசத்தைப் போல் அதிக எண்ணிக்கையான இலக்கியவாதிகள் இருந்ததில்லை. இவ்விலக்கியவாதிகள் அனைவரும் கவிஞர். கள் என்பது இன்னுமொரு சிறப்பு. இதற்குக் காரணம் கவிஞர் நீலாவணனே.
நீலாவணனுடன் நெருக்கமாயிருந்த ஏனைய சமகால இலக்கிய நண்பர். களாக எஸ்.பொன்னுத்துரை, இளம்பிறை எம்.ஏ.றமான், அண்ணல், இலங்கையர்கோன், ராஜபாரதி, மண்டூர் சோமசுந்தரப்பிள்ளை, வ.அ.இராசரத்தினம், கனக செந்திநாதன், ஏ.ஜே.கனகரத்னா, மஹாகவி ஆகியோர் இருந்துள்ளனர். இவரது இலக்கிய முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுப்போராக கல்முனையிலே டாக்டர் எம்.முருகேசபிள்ளை அவர்களும், கே.ஆர்.அருளையாB.A அவர்களும் திகழ்ந்துள்ளனர். இவரது படைப்புக்களுக்குக் களம் கொடுத்த பத்திரிகையாளர்களில் சுதந்திரன் எஸ்.டி.சிவநாயகம், தினகரன் ஆர்.சிவகுருநாதன் என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். வித்துவான் எப்.எக்.ஸி.நடராசா, புலவர் மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை. புலவர் ஆ.மு.ஷரிபுத்தீன் ஆகியோர் இவரது எழுத்துக்களையிட்டு பெருமிதம் கொண்ட மூத்த தலைமுறை அறிஞர்களாவர்.
நீலாவணன் உயிர்வாழ்ந்த காலத்தில் அவர் முறையாக வெளிப்படுத்தப்படவில்லை என்ற விடயம் மிகவும் விசனிக்கத்தக்கது. பல்கலைக்கழகப் பின்புலத்தில் பட்டம் என்ற அங்குசத்தை வைத்துக்கொண்டு ஈழத்து இலக்கிய உலகின் விமர்சனத்துறையை ஒரு காலத்தில் ஆக்கிரமித்துக் கொண்ட பேராசிரியர்களும் அவர்களது மாணவ சகாக்களும் தாங்கள் வரித்துக்கொண்ட கலை, இலக்கிய, அரசியல் கோட்பாட்டு முகாம்களுக்குள் முடங்காதவர்களை ஈழத்து இலக்கிய உலகில் இருட்டடிப்புச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. அவ்வாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டவர்களுள் கவிஞர் நீலாவணனும் ஒருவர். எனினும் நிலா. வணன் மறைவுக்குப் பின் இதில் சிறிது மாற்றம் ஏற்பட்டதையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். அந்த வகையில் நீலாவணன் மறைவுக்குப்பின் கலாநிதி.சி.மெளகுரு எழுதிய"கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் - நீலாவணன் வாழ்வும் இலக்கியப் பணியும்” என்ற நீலாவணன் பற்றிய நூல் முற். குறிப்பிட்ட பேராசிரியர்கள் விட்ட பிழைக்கு பின்னால் வந்த மாணவ சகாக்கள் தேடிய பிராயச்சித்தம் போலும். எனினும் நீலாவணன் உயிர் வாழ்ந்த காலத்திலேயே டொமினிக் ஜீவா அவர்களின் மல்லிகை" மே 1970 இதழில்நீலாவணனின் உருவப்படத்தை அட்டைப்படமாக வெளியிட்டதை பாராட்டாமல் இருக்க முடியாது. இவரைப்பற்றிய குறிப்பை சி.பி.சத்தியநாதன் எழுதியிருந்தார்.
‘ஓலை’ பக்கம் 7

Page 6
1990 யூன் வடகிழக்கு கலவாத்தில் கல்முனைப் பிரதேசத்தில் காணாமல் போனவர்களுள் கவிஞர் பாண்டியூரன் (கணபதிப்பிள்ளை) அவர்களும் ஒருவர். அமரர் நீலாவணன் பற்றி பாண்டியூரன் அவர்கள் 1987இல் எழுதிய - இதுவரை எதிலும் அச்சேறாத கவிதை இது
- பாண்டியூரன் -
காலக் கிழவனர், கவிதை யிளமைக் களியாட்டில் சால மயங்கி. தழுவித் தழுவித் தமிழ்மாந்தும் கோலம் மதர்த்த குமரிப் படையல் பலசெய்தோன் நீலா வணன் எனர் நினைவி லகலா நெடுமாலாம்.
அண்ணன், எனக்கோர் அமுதன், அழியாக் கவி நீலா வணிணன், எழுதும் வடிவம், முழுவானி மதியம் தான்! திண்ணம் தமிழினர் தெளிந்த நிறையில் தினங்காணும் வண்ணம், கவிதை வடித்த புலவனர் மறைவானோ..?
வானப் பொழிவினர் வரவை யெதிர்நோக் கிடு பைங்கழி மானக், கவிதை மலர்வை யெதிர்பார்த் திடுவையம்
“ஓல’ பக்கம் 8
 

தேனிற் குளிரத், திரளாய்க் கவிதை பொழி தெய்வ ஞானக் கவிஞன், நளினம், எமக்குள் நடஞ்செய்யும்.
வாவி மகளினர் மருட்டு மிசையாம் மகுடிக்குள் தாவி யாசையுந் தமிழைத் தருவோணர், கவிதைக்குட் பாவின் வடிவம் பலவும் பரிசீ லனை செய்தோன் சாவில் முடியாச் சனத்து ளொருவன், தமிழ்ச்சொத்து!
நீலா வணனுக் கெதிரே யெதுவுந் தமிழ்ச்சொற்கள் வாலா யமென வருமே, வணங்கிக் கை கட்டும்! ஏலா தவரும் எழுவார், இளமை கிழம் கொள்வார்! மாலாய்க் கலவி மருவத் துணிவார், மதுவுண்பார்.
“ஆக்குஞ் சரத்தை யணிசெய் மலரின் தொகையுள்ளே, தூக்கும் பொழுதில். தொடமுனி உதிரும் தொடைவேண்டாம்! பூக்கும் நிலவினர் பொலிவும், உதிராப் புனைவுந்தான் யாக்குந் திறன்” எண்(று) ஆக்கும் புலவனர் அவனொன்றே!
பாவின் வடிவம் பலதும், வழிபாற் படநெஞ்சம் தாவி யசையுந் தமிழைத் தருவோன், தமிழர்குன்றாக்
ᏉgᎮᏍ)Ꮝb" Uẩ3ứ 9

Page 7
கோவிற் சுடரே யிவன்செய் கவிதை குவலயத்துள் சாவில் முடியாச் சனத்துள் இவனைத் தரிசித்தோம்!
கம்பனி, புரட்சிக் கவிபா ரதி, பா ரதிதாசனி செம்பா வளத்துச் சிலம்பனி, திருவள் ஞவர்யாரும் நம்பா லுறவாய் நடைகொள் பவராய் நனிசெய்தும் தம்பா வழியில் தனிப்பா ணியினைத் தரநின்றோனர்.
ஞாலம் வதுவை கலக்கும் “மழைக்கை” “வழி” “உறவு" காலம் வியக்கும் ‘துயில்" பின் நடக்கும் “ஒளிவீடு" “வேளாண்மை" பா விருந்தாய் எவர்க்கும் மிகத்தந்த நீலா வணனிமா மருதம் நிகர்ப்பா வளநெஞ்சன்!
நீலா வணனை நெருங்கிப் பழகும் கவியுள்ளம் வாலை யுணர்வில் மதர்க்கும், தமிழின் வசமாகிப் பாலில் முழுகும் பழச்சா றருந்தும் பசிதீரும், ஏலா திவனை யிதன்மேற் புகல்நா வெனக்கில்லை!
‘ஓலை’ பத்தும் 10

விருத்தாந்த சித்திரம்
- அம்மாச்சி ஆறுமுகம் -
நகைச்சுவை ஒன்றையே நோக்கமாகக் கொண்டு ‘விருத்தாந்த சித்திரம் எனும் மகுடத்தின் கீழ்'அம்மாச்சி ஆறுமுகம் எனும் புனைபெயரில் கவிஞர் நீலாவணன் சில வித்தியாசமான படைப்புக்களைத் தந்தார். 1967 இல் நீலாவணனை ஆசிரியராகக் கொண்டு கல்முனைத் தமிழ் இலக்கியக்கழகம் வெளியிட்ட பாடும்மீன் எனும் இலக்கியச் சிற்றிதழின் முதலாவது, இரண்டாவது இதழ்களில் (இரு இதழ்களுடன் நின்று போனது) முறையே போடி மகள் பொன்னம்மர் விசிமெம்பர் காசிநாதர் எனுமிரு விருந்தாந்த சித்திரங்கள் வெளிவந்தன. இலக்கியச் சுவைஞர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றன. இவர் எழுதிய இன்னொரு விருத்தாந்த சித்திரமே பசுநெய் விசுவலிங்கம் இதுவரை எதிலும் அச்சேறாதது.
நீங்க என்னப் பற்றி என்ன நினச்சாலும் சரிதான் அதப்பற்றி எனக்கொண்டும் கவல கிடையாது.
ஏன்? எண்டு கேப்பியள். அது தான் தெரியுமே, நம்மட போக்கு ஒரு தனிப்போக்கு எதுக்கும் கவலப்படாதபோக்கு!
அண்டைக்குப் பாருங்க, ஏறாவூர்ச் சந்தியில வச்சு, ஒரு கடக்காறன்,வாற வரத்தில. வஸ்ஸ9க்குள்ள இருந்த என்ன, வெளியால இழுத்துப் போட்டு மொங்கு மொங்கெண்டு மொங்கிப் போட்டான். நீங்கெண்டால். இன்னேரம் சவம்! நிண்டு பிடிச்சனோ இல்லையோ? இந்த மண்ணாங்கட்டி உடம்பயும் தந்து இந்தப் பூமியில ஆண்டவன் நம்ம படச்சுட்டது என்னத்துக்குத்தான் பின்ன? ஆரும் சோட்டப்பட்டவனுகள் அடிச்சு ஆசையத் தீத்துக்கட்டுமே! நமக்கென்ன அதால குறஞ்ச போறது?நானோ ஒரு 'விசினஸ் மன்'இதுகளுக் கெல்லாம் பயந்தா தமிழண்ட பொருளாதாரம் எப்பிடி எழும்பும்? துணிஞ்சு இறங்கிற்றன். வாறதப் பாப்பமே!
வியாபாரம் எண்டால், வெறுமனே வேண்டி விக்கிற வேல மட்டும் இல்ல, உற்பத்தியும் நாமதான், விற்பனையும் நாமதான். அதால ஏதும் டேஞ்சர்கள் நடந்தாலும் நாமதான். ஆசுபத்திரிக்குப் போக வேண்டிய அலுவல்கள் ஏதும்
‘ஓலை’ பக்கம் 11

Page 8
நடந்து போனாலும் அதுக்கும் பொறுப்பு நாமதான்! ஆண்டவன் காவலாக இன்னும் அப்பிடி ஒண்டும் நடக்கல்ல. எட்டில தப்பில ஆரும் கைவச்சாலும், காயம் கீயம் கிடையாது! வியாபாரத்தில பொறுமதான் முக்கியம் பாருங்க. நம்மடவிஸ்னஸ் பிழையில்ல.
எங்கட ஊராக்கள் இருக்காங்களே. அவங்க மண்ணில தயிலம் வடிச்சுத்தான் காலம் ஒட்டுறாங்க. அப்பா என்னயும் மாடு மேச்சு மணல்ல தயிலம் வடிக்கிற வேலதான் பழக்கப் பாத்தார். அது அவர்ர குலத் தொழில் மரக்கறித் தோட்டம் (காலை) நாட்டவும் - வயலுக்குள்ள போய் வேலவெட்டி செய்யவும் தான் இவனுகளுக்குத் தெரியும்.
'மாடுகள் மேய்த்து மடயனாய்ப் போகாமல் எண்டு எங்க பெத்தப்பா எண்ணச் சிந்து பாடிக் காட்டி இருக்கார் எனக்கு. அப்பனும் அவர்ர காலயும்! விட்டெறிஞ்சு போட்டு வெளிக்கிட்டு வந்திற்றன்.
வெம்புமணலும் - வேகாவெயிலும் மனிசர உயிரோடு கருவாடாக்கிப்போடும். வெம்பு மணலுக்கு வேகா வெயில்ல குடம் தூக்கித் தண்ணி ஊத்தவேணும். துலாக்கால்ல நிண்டு பகலைக் கெல்லாம் தூங்கவேணும். கால செய்யிறவனுகளப்பாத்தா அது விளங்கும். அவனுகள் நடக்கக்க பாக்க வேணும், முதுக கூனி பூமியக் கொஞ்சப் போறாப்பல இருக்கும். மனிசச் சாங்க பாங்கமும் இல்ல! அது போனா வயலுக்க சுரிக்குள்ள போய் நிண்டு மாயவேணும்! எங்கட ஊரான் அரவாசிப்பேர் கசம் பிடிச்சுத்தான் செத்தவனுகள்! மணல்ல தயிலம் வடிச்சால் நமக்கும் அது தான்! இதெல்லாம் நமக்குப் பிடிக்கல்ல, நம்மட போக்கு ஒரு தனிப்போக்கு எதுக்கும் கவலப்படாத போக்கு! விட்டெறிஞ்சு போட்டு வெளிக்கிட்டன்.
கோயிலடிச்சந்தி தேத்தண்ணிக்கட வாசல், நல்ல சுதியான இடம், ஆலமரநிழலும், அதுக்குக் கீழமணலும் கடதாசிக் கூட்டமும் நல்ல தொழில். கொசுகடிச்சாலும் வருமானம் பிழையில்ல. வாறவன் போறவன் பாத்து ஒரு தேத்தண்ணிய வீடிய வாங்கித்தராமப் போகமாட்டான். சில வேளையில திறீறோசுகளும் வந்து எண்படும். அது அண்டைக்கு நம்மட முழிவிசளத்தப் பொறுத்தது. கடையடிப் பிளைப்புத் துவங்கின புதுசில. ஒரு நாளைக்கு ஒரு இருபது முப்பது தேத்தண்ணி வீடிசுறுட்டு வெற்றிலை பாக்கு எண்டு ஆப்பிடும். போகப் போக ஒரு நாளைக்கு ஒரு பிளேன்டி கிடைக்கிறதும் பொறுப்பு. சமை பார்திற்று இருக்கக்குள்ளேயே கோழிச் சூடான் வாழப்பழமும் கேக்கும் துதளுமாத் திண்டு போட்டு பால் தேத்தண்ணியும் குடிக்கானுகள்! என்ன விசுவன் இவடத்த இருக்கிற எண்டு கேக்கான் இல்ல முன்னாலயெல்லாம் வாங்கித்தந்தவங்கள் தான். போகப் போக நம்மட யாவாரம் படுத்துப் போச்சு! கடக்காறனும் முகம் தந்து கதைக்கிறல்ல. நானும் ஒரு ரோசக் காரன் கண்டயளோ அவடத்த விட்டு எழும்பியாச்சு.
‘ஓலை’ பக்கம் 12

என்ன செய்தாலும் அம்மா அம்மாதான். அப்பன் தோட்டத்துக்கு போன பிறகு தனியா இருப்பாவு. அந்நேரம் போய் பிடிப்பன் சரியான பிடி. காசுதாறயோ இல்லக் கடல்ல சாகட்டோ! எண்டாக் காணும். 'அது வெம்பு மணல்லதயிலம் வடிக்கிற காசி உனக்கென்னத்துக்கு?எண்டு ஏசிப்போட்டும் முடிச்சவுட்டுத் தருவாவு ஆணெண்டு அம்மைக்கு நான் ஒருவன் தானே! அது தான் செல்லம்! அப்பனுக்கு என்னக் கண்ணில காட்ட ஏலாது, அவர் கிடக்கார்! எந்நேரம் பார்த்தாலும் மண்தோண்டுற தான் வேல!
காச வாங்கிற்று அவடத்த கிராம முன்னேற்ற சங்க மண்டபத்துக்குள்ள போனா. என்னப் போல தோட்டம் துரவு செய்யாத நாகரிகமான நாலுபேர் வருவானுகள். கூடிற்றமோ. கந்தண்ட கமுக்கட்டுக்குள்ள தானே கடதாசிக் கூட்டம் வெட்டுத்தான் நடக்கும்! வெண்டுத்தமோ. வெறியுந்தான் - பட முந்தான். விருந்து வேடிக்கையுந்தான். அது பெரிய தடபுடல். ஒரு நாள் வெண்டகாசில தான் இந்த நைலோன் சேட்டும் மணிக்கூடும் வாங்குன நான். நல்ல தொழில்தான். சில நாளையில கொண்டு போய் சொட்ட நூத்துப் போடும். நான் நைலோன் சேட்டும் மணிக்கூடும் கொம்பு மீசையும் கொண்டு திரியிறது, எங்கட ஊரான் பகுதியானுக்குப் பிடிக்கல்ல. பொலிசில போய்க் குத்தி விட்டுத்தானுகள்! ஒருவன் நல்லாருக்கிறது மற்றவனுக்கு எரிச்சல்! அதுதான் இந்த ஊர் ஒருநாளும் நல்லா வரமாட்டா துகண்டயளோ! ஊரவன் ஒண்டுக்கும் விட மாட்டான்.
அவங்க பொலிசில சொன்னாப்பலநாங்க சும்மா இருந்திருவமா?குத்திக் குடுத்தவங்கட வீடுகள்ளமட்டும் இல்ல, அவங்கட இனசனம் எண்டிருக்கிற ஆக்கள்ற வீடுகளிலயும் தான் இப்ப ஒரு கோழிக் குஞ்சுக்கும் வழியில்ல! ராவோட ராவா எல்லாம் புறக்கிப் போட்டம்! அதயும் பொலிசுக்குச் சொல்லிப் பாத்தாங்க. சொன்னாக்களத் தெரியும். அடுத்த நாள் ஆக்கள்ற கால வழிய மையோரிக் கிழங்கெல்லாம் மாயமாக மறஞ்சுது! ஏதும் தொழிலத் தொடங்கினா - அதுக்கெல்லாம் விறேக்குப் போட்டா நாங்க என்னதான் தொழில் செய்யுற? 'கிழங்கெல்லாம் கொண்டு போயித்தானுகள் வம்பில புறக்கிகள்!' எண்டு கொம்பினாப்பல எங்களுக்கென்ன? நாங்க தொழில் செய்யிறம்! இந்த ஊர்ல அந்தத் தொழிலயும் பெருப்பிக்க வழியில்ல, கோழி மரவள்ளிக் கிழங்கு - தேங்காய் - உரல் உலக்க - அம்மிகுளவி - துருவில அருவாக்கத்தி இப்பிடி என்னவுந்தான் கிடைக்கும். இதக்கொண்டு காலத்த எப்பிடி 'றோள்' பண்ணுற? நக நட்டு காசுபணம் உள்ள ஊரா இது? களி சற ஊர்! காஞ்ச பயலுகள்! கோழி வளக்கவும் பயப்படுறானுகள். எனக் கொண்டால் கடும் பொறுப்பு!
இடையில ஒரு நாள் அம்மையிர முறிஞ்சி போய்க்கிடந்த அட்டியலக் கிளப்பிற்று, மட்டக்களப்பில கொண்டுபோய் வித்துப் போட்டு - மலநாடு - மன்னார் யாப்பாணம் திருக்கோணமலையெல்லாம் ஒரு றவுண் அடிச்சன்,
‘ஓலை’ பக்கம் 13

Page 9
இந்தப் பகுதிகள்ள மட்டக்களப்புப் பசு நெய்யெண்டால் நல்ல மானம் எண்டு கேள்விப்பட்டன், காசெல்லாம் முடிஞ்சு போச்சு.
ஊருக்குத் திரும்பிவந்துசேரக்க எண்ட நைலோன்சேட்பக்கற்றுக்குள்ள சிங்கமார்க் வீடி ஒரு கட்டும் குறையாக் கிடக்கு காசு பச்சநாவி ஒரு சதமும் இல்ல! எப்படி நெய் விஸ்னஸ் தொடங்குற? கோயிலடிக் கடயில குந்திற்று இருந்து லயின் பண்ணிப்பாத்தால் ஒரு வழியும் இல்ல!
அம்மைய வளஞ்சு பாத்தன். இந்த முற அதெல்லாம் பலிக்கல்ல! தண்ணி குடிக்கிற செம்பத்துக்கிக் கமுக்கட்டுக்குள்ள வச்சன். அப்பவாறன் எண்டு போட்டு கடப்படிக்குப் போறத்துக் கிடயில சேல முடிச்சவிள் பட்டுத்து! ஆகரெண்டு ரூபா தான். செம்பக்கொண்டு போய் ஆருக்கும் குடுத்தாலும் ரெண்டு ரூபாய்க்கு மேல தரமாட்டாங்க. செம்பத்துக்கி எறிஞ்சு போட்டு றோட்டுக்கு வந்தா. பட விளம்பரம் சொல்றான். புது முகம் நிருவாண தேவி நடிச்ச படம்! அதப் பாக்க இந்த நெய் யாவாரம் எனக்குப் பெரிசில்ல கண்டயளோ!
கலரிக்கு டிக்கட் தேத்தண்ணிச் செலவும் போக அம்ம தந்த காசில ஒரு ரூபா மிச்சம்!
படம் ஓடி முடிஞ்சபிறகு தான் நெய்விஸ்னஸ் நினப்பு வருகுது.நாளைக்கு எப்பிடியும் தொடங்க வேணும்.
கடையில போய் ரெண்டரை றாத்தல் கூப்பன் மாவும், அஞ்சாறு கணிஞ்ச கதலி வாழப் பழமும் - மஞ்சள் பவுடரும் வாங்கி எடுத்தன். இனி அதுக்கு உயிர். குடுக்க எரும நெய் அரப்போத்தல் ஒரு ஆளப்பிடிச்சு எடுத்தன். அலுவல் முடிஞ்சாப்பல தான்.
கூப்பன் மாவ, பச்சத் தண்ணியில கொட்டி கையால நல்லாக்கரச்சுப் போட்டு, வாழப் பழத்தையும் மஞ்சள் பவுடரையும் போட்டுப் பினைஞ்சு அரிதட்டால சக்க போக வடிச்சு பதமாக்கி நாலு போத்தல் வாத்துப்போட்டன். எரும நெய் அரப் போத்தலையும் நல்லா உருக்கிமஞ்சள் பவுடரும் கலந்து நாலு போத்தலும் கழுத்து மறய ஊத்தி குடுதி போட்டன். கிளம்பிற்றன்.
தொழில் செய்யிறம் எண்டால் ஆரும் வஸ்ஸூக்கு கைமாற்றுத் தருவான். ஒரேயடியா மட்டக்களப்பு. அப்புக்காத்துப் பெருக்கிளாசி மார்ர வீடுகளப் பாத்து விசாரிச்சன். பசு நெய் நல்ல சுத்தமான படுவான்கர நெய்! எங்கட மாட்டில எடுத்ததையா எண்டு போட்டன் கணக்கு. பன்ரெண்டு மணிக்குள்ள ஏழர ரூபா மேனிக்கு முப்பது ரூபா எழும்பிற்று. இனி அந்தப் பக்கம் தலவச்சும் படுக்கொண்ணா! கண்டு பிடிச்சாங்களோ. ஆறு மாசமோ ஒரு வரிஷமோ. அனுப்பியே போடுவாங்க. முழுப்பேரும் பெருக்கிளாசிமார்! எத்தின சாதி
‘ஓலை’ பக்கம் 4

வழக்குகள வெண்டாக்கள நான் வெண்டுத்தன். அடுத்தறிப் தான் ஏறாவூர். அதிலயும் பிழையில்ல. ஒரு இருபத்தஞ்சு ரூபா. அவன் கடக்காறன்.தனக்கும் அதில ஆதாயம் வச்சுத்தானே வாங்குவான். போத்தல் ஆறேகால் மேனிக்குக் குடுத்தன். எண்டாலும் குற்றமில்ல.
எண்ட பசுநெய்ய வாங்கி, கண்ணாடி அலுமாரிக்குள்ள சோவுக்கு அடுக்கி வச்சிருக்கான் அந்தக் கடக்காற மடப்பயல்,
அது கூப்பன் மாவும் வாழப் பழமும் ரெண்டு மூண்டு நாளயால புளி புளியெண்டு புளிச்சி - நுரை நுரையெண்டு நுரைச்சி கேஸ் எழும்பித்துப் பொங்கி. போத்தல் முடி சக்கெண்டு எழும்பிக் கண்ணாடி அலுமாரி தூள்! நாத்தம் தாங்க ஏலாமப் போச்சாம். அந்தக் கோபத்த வச்சுத்தான் திருக்கோணமலை றிப் போய்வரக்குள்ள கடக்காறன் இழுத்துப் போட்டு கும்பித் தள்ளிற்றான். கடவுள் காவலாக் காயம் கீயம் இல்ல, நல்ல உடம்பு, தாங்கிற்று!
பசுநெய் விஸ்னஸ் நல்ல தொழில்தான். ஆனா. இண்டைகுப் போன பக்கம் இன்னொரு நாளைக்குத் தல காட்ட ஒண்ணா, புதுப்புது ஊர்கள் உண்டுபடுமெண்டால். இந்தத் தொழிலத் தொடந்து கொண்டு போகல்லாம்!
போக வேண்டிய இடமெல்லாம் போய் முடிஞ்சு! இந்தத் தொழிலவிட்டு இனி வேற தொழில்தான் தேட வேணும். ஏமாந்தவனுகள் கண்டுபிடிச்சானுகளோ எலும் பெலும்பாக் கழத்தி எண்ணி எண்ணி வைப்பானுகள். அதுதான் டேஞ்சர்!
கையில இருந்த முதலெல்லாம் கரஞ்சு போச்சு. இனி என்ன செய்யலாம் எண்டு யோசிக்கன். எங்கட ஊருக்குக் கிழக்கால கிடக்கிற வங்காள விரிகுடாவப் பத்தித்தான், அதிகமாக இப்ப ஆராட்சி பண்ணுறன்.
இந்தக் கடலநான் நினைக்கிறாப்பல ஒருநாளைக்கு சாராயமாமாத்திற வித்தையக் கண்டுபுடிச்சிப் போட்டுத்தான் உடுவன். அதுக்குப்புறகு பாருங்க இந்த இலங்கத் தேசத்தில நானும் ஒரு மனிசனாத் தான் சீவிப்பன். நம்மட இனத்துக்கும் ஏதும் உதவி செய்யாமல் விடமாட்டன். கட்டாயம் செய்வன்.
உப்புத் தண்ணியோட என்னத்த என்னத்தக் கலந்தால் சாராயமாகுமோ? அதுதான் இப்பதலைக்குள்ள இடி குடச்சல் எல்லாம்.
நான் விசுவலிங்கம்! பசு நெய் விசுவலிங்கம் எண்டால். ஊர் தேசத்துக்குத் தெரியாது. ஏனெண்டால் ஒரோர் ஊருக்கு ஒரோர் பேரும் விலாசமும் எனக்கு! அது கள இப்பவிட்டுத்தன் பாருங்க. கடல, சாராயமாக்கிற வரையும் என்ன நீங்க பசுநெய் விசுவலிங்கம் எண்டு கூப்பிடலாம். பரவாயில்லை! கூப்பிடுங்க!
S
‘ஓலை’ பக்கம் 15

Page 10
(எஸ். எழில்வேந்தனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு நீலாவணனின் மற்றொரு கவிதைத் தொகுப்பு நூலான "ஒத்திகை 24.06.2001 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப் பெற்றது. அவ்வெளியீட்டு நிகழ்வில் த. கோபாலகிருஸ்ணன்(செங்கதிரோன்) நிகழ்த்திய உரையிலிருந்து)
அப்பா நீலாவணனின் எண்பது பாக்கள் எடுத்து ஒரு நூல் செய்து 'ஒத்திகை எனும் பெயரில் எழில்வேந்தன் பதிப்பித்த புத்தகம் இதுவாகும்.
நூலின் தலைப்பு 'ஒத்திகை' எனினும் ஈழத்துக்கவிதை வரலாற்றில் இது ஒர் அரங்கேற்றம்' ஆகும். காரணங்கள் பல புதுக்கவிதை' என்கின்ற போக்குவந்தபின் அச்சுக் கோப்பவனும் கவிதை எழுதலாம் என்று ஆகி விட்டது. வாக்கியத்தை முறித்துப் பின் வரிசையில் வைத்தெழுதி ஆக்கியதால் வந்த சொல் அடுக்குகளெல்லாம் கவிதை நூல்களாக அரங்கேறுகின்ற ஓர் அவலமான சூழ்நிலையில், ஆழமான கவித்துவம்மிக்க நீலாவணனின் கவிதைகள் ஒத்திகை"யாக அரங்கேறுவது ஒர் உருப்படியான இலக்கிய நிகழ்வு ஆகும். ஈழத்துக் கவிதை வரலாறு மீண்டும் மிடுக்கோடு நடை கொள்வதற்கானதொரு 'ஒத்திகை யோ என்று கூட இதனை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
இவ்வெளியீட்டு விழாவுக்குத் தலமைதாங்கும் கலாநிதி எம்.ஏ.நுஃ மான் அவர்கள் மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஸ்ரப் எழுதிய நான் எனும் நீ எனும் கவிதை நூலுக்கு எழுதியிருந்த முன்னுரையையும் நினைத்துப் பார்க்கிறேன். நீலாவணன் பிறந்த கல்முனை மண்ணில் அவரை மிஞ்சிய கவிஞர் எவரும் இதுவரை உருவாகவில்லை" என்று தனது கருத்தை அம் முன்னுரையில் முன் வைத்திருந்தார். அவரே நீலாவணனின் 'ஒத்திகைக்கு முன்னுரை வழங்கியிருப்பதும், அவரே நூல் வெளியீட்டிற்குத் தலைமை
தாங்குவதும் மிகவும் பொருத்தமே.
স্ত্ৰ9
‘ஓலை’ பக்கம் 16
 

கல்விப் பொதுத் தராதர (உயர்தரம்) தமிழ் மொழிப் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள நீலாவணனின் கவிதை
1966 இல் எழுதப்பட்டது.
2-]] !
மரணித்துப் போன எங்கள் மானாகப் போடிப் பெரியப்பா, நீர் ஓர் பெரிய மனிதர்தான்! பெட்டி இழைத்தும், பிரம்பு பின்னல் வேலைசெய்தும், வட்டிக்குளத்து வரால் மீன் பிடிக்கக் கரப்புகளும் கட்டி விற்றுக் காலத்தை ஒட்டும் ஒருகிழவன் என்றே நம் ஊரறியும்,
நேற்றுவரை.
பத்துநாள் தொட்டுப் பகலிரவாய்ப் பாய்மீதில், வைத்தியமே இன்றி. வயிற்றாலடியோடும், சத்தி எடுத்தும், வாய் சன்னி பிசத்தியும், செத்தும் பிழைத்தும் கிடந்தீர் சுவரோரம்.
“எட்டுநாளாக இரணம் எதும் குடலுக்குட் செல்லவில்லை” எனஉருகி உம்மனைவி வள்ளி,
‘ஓலை’ பத்தம் 17

Page 11
புளுங்கல் அரிசவிந்த வெந்நீரை அள்ளி உமக்குப் பருக்குகையில், நீர் - அவளை,
ஐம்பது ஆண்டாயப் அனுபவித்துக் கொண்டதற்கும், ஒன்பது பிள்ளைகளை உற்பவித்துப் பெற்றதற்கும்,
ஈற்றில் உமக்காய் இரவுபகல் கண்விழித்து, ஊற்றை அளைந்ததற்கும், உம்குறைகள் கேட்டதற்கும் ஈடாக, ஒர்வார்த்தை யேனும் இயம்பாமல் போய்விட்டீராமே! புலம்புகிறாள் வள்ளியம்மை!
நாய்படாப் பாடுமது நோயிலவள் பட்டதுண்மை என்றாலும். ஓர் வகையில் ஆனந்தம் வள்ளிக்கு என்னவென்றால்தனிபுருஷன் மானாகப் போடிக்கும் எத்தனைபேர் சொந்தம்! அதோ, எக்கவுண்டண், எஞ்சினியர் வைத்திய கலாநிதிகள் வர்த்தகர், பேராசிரியர் சத்தா சமுத்திரம்தான் சாதிசனம் என்பதனால்!
‘ஓலை’ பக்கம் 18

தந்திகிடைத்து மிக நொந்துபட்டுவந்தார்கள். அந்தி வரைக்கும் ஏதும் ஆகாரம் தின்னாமல் குந்தியிருந்து, குளறி அழுதார்கள்! ஐந்தாறுகாரில் இரவே ஊர்போய்விட்டார்!
எத்தனைபேர் சுற்றமிந்த ஏழைக் கிழவனுக்கு! இத்தனைநாள் மட்டுமிது யார்க்கும் தெரியாது! உண்மையினைக் கண்டெங்கள் ஊர் - விரலை மூக்கில் வைக்கும் வண்ணம் மறைவாக வாழ்ந்தீர்! இறவாமல்.
இன்னும் உயிரோ டிருந்தீரே யாமாகில் எனின வகையாய் அறிவோம் உறவினரை! செத்தாலும் செத்தீர் நும் செல்வக் குடும்பத்தைப் பத்தியமாய்ப் பார்த்திந்தப் பாரில் வழங்கிவரும் உண்மை உறவறியும் ஊர்!
‘ஓலை’ பத்தம் 19

Page 12
நெஞ்சில் நிறைந்த நீலாவணன்
- ஜீவா. ஜீவரத்தினம் -
முன்னாட் கவிதை முறைமை பிறழாது பின்னாட் புதுமைப் பெருங்கடலுள் நீராடி நெஞ்சைக் கவரும் நிகரில்லா வைரமணிச் செஞ்சொற் கவிச்சரத்தால் செந்தமிழை இன்பூட்டி, விண்ணின் கவிதை மிடியைத் தொலைப்பதற்கு மண்ணைத் துறந்த வரகவிஞன் - என்னண்ணன் நீலாவணனை நினைக்கின்றேன்.
ஈழத்தில், பாலாறு பொங்கிப் பரந்து வழிந்ததுபோல், வெல்லச் சுவைக்கவிதை வெள்ளத்தில் நெஞ்செல்லாம் அள்ளுண்ட காலம் அகத்தைத் தொடுகிறது!
நீலாவணன்,
அந்த நேரில்லாக் காலத்தில் கோலோச்சும் காட்சி குளிர்ச்சி தருகிறது! எந்தத் தமிழேடும்
இக்கவிஞன் பாடலென்றால் சந்தை பிடிக்கத் தமக்குள்ளே போட்டியிடும் காட்சி மனதைக் கவர்கிறது! நம்கவிஞன் ஆட்சி கவிதைக்கு அழகைச் சொரிகிறது!
நெஞ்சுள் நிறைந்துள்ள நீங்கா நினைவுகளைக்
கொஞ்சம் மறந்து, இன்று கோலோச்சும் பாவாணர்
‘ஓலை’ பக்கம் 20
 
 
 

வெட்டி ஒட்டுகின்ற விளங்காத சொற்கூட்டம், பட்டம், பரிசு பெறும் - பான்மையினை எண்ணுகையில். நீலா வணனிருந்தால் நிச்சயமாய்த் தன்கவிதை வேலால் எறிந்து விலக்கானோ விக்கினத்தை? கண்ணி சொரியும் கவிமகளைப் பூரிக்கப் பண்ணானோ? நாமதனைப் பார்த்து மகிழோமோ? எண்ணுகிறேன். எண்ணுகிறேன். எண்ணத்தின் மத்தியிலே, அண்ணன் நீலாவணனின் ஆத்மா ஒலிக்கிறது.
ஆசு இரியவைக்கும் ஆசிரியர்:
ஆனாலும்,
தாசன் கவிதைக்கு! தான் வாழ்நாள் அத்தனையும் தாய்மொழிக்குச் சீருட்டும் தாகம் மிகுந்ததனால் பேய்போல் பிணித்த பெருங்கவிதைச் சன்னதத்தில் ஆயிரமாய்ப் பாடி அவளை அலங்கரித்தார், வாயினிக்க நெஞ்சினிக்க வாழ்த்தி வளம் தந்தார்!
உள்ளத் தெழுகின்ற ஒவ்வோர் உணர்ச்சியையும் அள்ளிப் பிசைந்து ஓர் அழகுருவம் செய்தெடுத்தால் நீலாவணனை
அங்கு நேரிலே கண்டிடலாம்! நூலான மேனி நுடங்காத கம்பீரம், கால்நடையில் வேகம், கருமங்கள் செய்வதிலோ றால் போல் துடிப்பு: ரகசியங்கள் நெஞ்சில் இருக்க விடாத இயல்பு, எவரும் வாழ்வில் மறக்க முடியா மலர்ச்சிரிப்பு, நட்புக்கு நல்ல உவமை, நலிந்தோரின் உற்றதுணை, எல்லாம் அமைந்திட்ட இவ்வுருவே நம்கவிஞர்!
‘ஓலை’ பக்கம் 21

Page 13
நீலாவணனின் நினைவைத் தொடாத பொருள் ஞாலத்தில் இல்லையென்றே நான்துணிந்து கூறிடுவேன்! காதற் பெருக்கின் கலவிதரும் பேறுமுதல் சாதல் வரையுள்ள சங்கதிகள் அத்தனையும் . வாழும் கவிதை மரபுபிறழாத நீலாவணனில் நிலைபெற்று விட்டதனைச் சான்றோர் அறிவர்:
தமிழ் இலக்கணத்தில் அவர் ஆன்ற புலமைக்கு அவர் கவிதை சாட்சிதரும்! பண்டை இலக்கியத்தில் பாண்டித்யம்: இந்நாளிற் கண்ட புதுமைக் கவியாற்றல் யாவும் வழி - கவிஞரின் கவிதைத் தொகுப்பு நூல் * வழி காட்டும்! அந்த வழியில்
அவர் வீசும் தெளிமருந்து இந்நாள் செயற்படுமேல், நம்கவிதைத் தோட்டத்தைப் பீடித்த தொற்றுநோய் மாய்ந்தொழிதல் நூற்றுக்கு நூறு நுகரத் தகுந்தவுண்மை!
நீலாவணனை விட்டு நீங்காத பன்பொன்று வேளாண்மை, இல்லாம் விரியத் திறந்திருக்கும்: நண்பர் பலர்வருவர், நாவக் குருசி தரும் தின் பண்டம், தேனீர், சிகரட். அதற்கப்பால், பத்திரிகைச் செய்திகளைப் பற்றி விமர்சனங்கள், புத்தகம் போடல்,
புதுக்கவிதை, நாவல்கள். இப்படியே நீளும் இலக்கிய சர்ச்சையின்பின், தப்பாமல் அண்ணர் தனது கவிதையொன்றைப் பாடுவார் - எம்மைப் பரவசத்தில் ஆழ்த்திடுவார்! "கூடுவோம் நாளை" எனக் கூட்டம் கலைந்து செல்லும்!
‘ஓலை’ பக்தம் 22

வேளாண்மை' என்றோர் விரிவான காவியத்தை வாழ் நாளுட் பாடி, வளமட்டு மாநகரார் பண்பாட்டை எங்கும் பரப்பும் அவராசை கண்பட்டுப் போனதுபோல் காற்பங்கில் நிற்கிறது" அந்தவோர் ஆசைமட்டும் அல்ல: அவர்மறைய ஐந்துநாள் முன்னர் அகில இலங்கையையும். உள்ளம் உருகவைத்து ஒர்துயரை நாம் கண்டோம் -
**வள்ளம் ஒன்று எங்களது வாவியில் ஆழ்ந்ததனால் ஏழெட்டுப் பேர்கள் இறந்தார்கள்! எல்லாரும் நாளுக்கு நாள் பழகும் நம்மை அறிந்தவரே! தாங்க முடியா அச்சம்பவத்தை வித்தாக்கி நாங்கள் ஒருமுவர்! நல்லதொரு காவியத்தைப் பாட இருந்தோம், பகவான் அவரைத்தன் கூட அழைத்ததனால் கொஞ்சு தமிழ் அன்னை ஒரு பாமாலை தோற்றாள்! நம் பாவலரின் ஆசைகளை நாமாவது முனைந்து நாட்ட விழைகின்றோம், ஈழத்தில் நல்ல இலக்கியத்தை நாடுகின்ற நாள் மீண்டும் தோன்றும் என்ற நம்பிக்கை உள்ளதனால் காத்திருக்கின்றோம். கவிஞரின் ஆசை மொட்டும் பூத்துக் குலுங்கும் புவி!
* வழி - கவிஞரின் கவிதைத் தொகுப்பு நூல்
** 1975 ஜனவரி முற்பகுதியில் துறைநீலாவணைத் துறையில் நிகழ்ந்த சோக சம்பவம்.
&
‘ஓலை’ பக்கம் 23

Page 14
- மு.சடாட்சரன் -
ம்ேபதுகளில் எழுத்த தொடங்கிய கவிஞர் நீலாவணன், அவர் அமரராகும்வரை (1975) ஒயாது எழுதிக் கொண்டே வாழ்ந்தார். சமூக வாழ்வியலின் சகல கோணங்களையும் படம் பிடித்துள்ளார். இவர் எழுதியவற்றில் அறுபதிலிருந்து எழுபத்தைந்துவரை எழுதிய கவிதைகளே உச்சமான கவிதைகள் என்று சொல்லலாம். ஈழத்துத் தமிழ்க்கவிதை அறுபதுகளின் ஆரம்பத்திலிருந்தே புதிய பரிமாணங்களைப் பெற்று வளர்ந்தது என்பது சகலராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட விடயம். இக்கவிதை வளர்ச்சிக்கு நிலாவணன் ஆற்றிய பங்களிப்பு மிகப் பெரியது என்பதும் யாவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
நாங்கள் மரபுக்கவிதை, புதுக்கவிதை என்று பிரித்து, முழுமனதோடு ஒன்றையும், அரைமனதோடு மற்றதையும், நோக்குவது ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணை புரியுமா என்பது சந்தேகமே. தற்காலத்தில் எழுதப்படுகின்ற மரபுக் கவிதைகளிலும் வேண்டாத சொல்லடுக்கு வகைகளும் உள்ளன. அது போல் புதுக் கவிதை என்று எழுதப்படுபவைகளிலும், வீணான சொற் பிரயோகப் போலிகளும் உள்ளன. உணர்ச்சி வாக்கியங்களை கூட்டிக் குறைத்து முறித்துப் பிரசுரித்துவிட்டால், அது புதுக்கவிதை ஆகிவிடாது. எந்த வடிவத்தில் அமைந்தாலும் அது உயிருள்ள கவிதையாய், கவிதை இலட்சணங்கள் நிறைந்ததாய் விளங்கவேண்டும். அதுவே வரவேற்கத்தக்கது.
கவிதை என்பது இதயத்தால் உணரக்கூடியதாகவும், இன்பம் பயப்பதாகவும், அழகிய கற்பனைகள் நிறைந்ததாகவும், அமைய வேண்டும். அத்தோடு படிக்குந்தோறும், உணர்வலைகளைக் கிளறத்தக்கதாகவும் இருப்பதோடு சிந்தனையில் விரும்பத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைவதே சிறந்த கவிதையாகும். இத்தன்மைகள் நிறைந்தது மரபுக்கவிதையாகவோ, புதுக்கவிதையாகவோ, எதுவாக இருந்தாலும், அவற்றை
‘ஓலை’ பக்கம் 24
 

விரும்பி வரவேற்பதே சரியானது. அப்போதுதான் சிறந்த கவிதைகள் - நம்மத்தியில் தோன்றி எம்மொழிக்கு வளம் சேர்க்க வழியேற்படும்.
இந்தவகையில் நீலாவணனின் பல நூற்றுக்கணக்கான கவிதைகள் தமிழுக்கு அணிசேர்க்கும் நவீன கவிதைகள் என்றே சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். அண்மையில் வெளிவந்த 'ஒத்திகை கவிதை நூலை எடுத்துக் கொண்டால் இது 186 பக்கங்களில் அழகிய மூவர்ண அட்டைப்படத்தோடு நன்னூல் வெளியீடாக கவர்ச்சிகரமான அமைப்பில் 80 கவிதைகளை உள்ளடக்கியதாய் வெளிவந்துள்ளது. இது நீலாவணனின் இரண்டாவது கவிதைக் தொகுதி.
இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள், அவர் எழுதிய நாட்களிலே, நீலாவணனின் முத்துமுத்தான அழகிய கையெழுத்துப் பிரதியிலே படித்து ரசித்திருக்கிறேன். தற்போது அவற்றை அழகான ஒரு தொகுதியாக அச்சுருவில் பார்க்கும் போது ஒரு மனநிறைவு ஏற்படுகின்றது. நீலாவணன் அமரராகி சுமார் கால் நூற்றாண்டு கடந்த பின்பே அவருடைய முக்கியமான ஒரு கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது என்பது துர்ப்பாக்கியமானதே. என்றாலும் இன்னும் காலந்தாழ்த்தாமல் ஒத்திகை நூல் வெளிவந்ததால் ஆறுதல் அடையலாம்.
இந்நூலிலுள்ள கவிதைகள் எழுதிய காலத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. 50-59 களில் எழுதியவை 08 கவிதைகளும், 60 - 64 வரை எழுதியவவை 34 கவிதைகளும், 65-69 வரை எழுதியவை 29 கவிதைகளும், 70 - 74 ஆண்டு வரை எழுதியவை 09 கவிதைகளுமாக மொத்தம் 80 கவிதைகள் உள்ளன. இவ்விதம் காலத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கினாலும் பொருளை அடிப்படையாகக் கொண்டு சிந்திப்பதும் பயன்தரத்தக்கதே. இவர் காதலில் ஆரம்பித்து, தமிழ்த் தேசிய உணர்வில் பயின்று, சமூகமுரண்பாடுகளையும், அவலங்களையும் எழுதி வளர்ந்து இறுதிக் காலத்தில் ஆன்ம நேய உணர்வில் ஊறித்திளைத்து நிகரற்ற கவிதைகளைப் படைத்துத் தந்து இறவாப் பெருவாழ்வு பெற்றுள்ளார்.
வெள்ளை உளத் தோடும், விரிந்த மனப்பான்மையோடும் பழகிய நீலாவணன், வாழ்க்கையில் உணர்ச்சி வசமானவராகவே விளங்கினார் . எவ்விடத்திலும் தனது கம்பீரத்தை நிலைநாட்டியே வந்தார். ஒரு சர்ச்சையில் கூட, "என்னைத் தெரியும் எனக்கு" என்று தன்நம்பிக்கை மிகுந்த கவிஞராகவே பிரதிபலித்தார். அதனாலே தான்:
'இதுவரை உலகிடை எவனொரு புலவனும் இசைத்திடாததுவாய்,
ᏉᏯᏍ6ᏡᏉ பக்கம் 25

Page 15
மக்கள் சுவைத்திடாததுவாய்,
புது எழில் பொலிகிற
கவிபுனை வழியினை
நினைத்து நினைத்து.
நெஞ்சுருகி பன்முகநோக்கோடு சமூக யதார்த்தக் கவிதைகளையும், ஆன்மீக உணர்வுக் கவிதைகளையும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவாறு, படைத்துத்தந்துள்ளார்.
وه «
ஒத்திகை நூலிலுள்ள கவிதைகளில், 'ஓடிவருவதென்னேர மோ?, நானென்ன விலைப்பொருளா? இனிக்கும் அன்பு, காணேன் உன்னை, சீவனைத்தான் வேண்டுமடி, வேடன், பூக்கொய்யவரவில்லை, என்பவை காதல் உணர்வுக் கவிதைகள், கூத்து, போதியோ பொன்னம்மா, வெளுத்துக்கட்டு, போன்றவை சமூக அவலங்களை அநீதிகளை, அக்கிரமங்களைப் படம் பிடித்த கவிதைகள். வெள்ளையாநான்வளர்த்த வீரா, இரகசியம், விழா, புற்று, தீப்பள்ளயம், ஒருசொல், மானம், பரிவு - பொங்கல் உவர்ப்பு போன்றவை, சமுகக் குறைபாடுகளைச் சுட்டும் கவிதைகள். மங்கள நாயகன், ஒ. என் வண்டிக்காரா, நெருப்பே வா, ஒத்திகை, ஏக்கம், முத்தக்காச்சு, போட்டா பிடிக்காமல் போம், படம்பார்ப்போம், பட்டம், பலூன் போன்றவை ஆன்மீக உணர்வைச் சித்தரிக்கும் குறியீட்டுப் பாங்கான கவிதைகள்.
பொதுவாக நீலாவணனின் ஆன்மீகத் தேடல் தொடர்பான கவிதைகள் அவரின் தனிச்சிறப்புக்களில் ஒன்றாகும். மேலும் இவரிடம் காணப்படும் தனிச்சிறப்புக்களில் மற்றொன்று புதிய உவமைகளைக் கையாண்டமை ஆகும். உதராரணமாக 'பொங்கல் உவர்ப்பு (93) என்னும் கவிதையை நோக்கினால்,
"உண்மையினர் புன்முறுவல் போலக்
கிழக்கெல்லாம் வெண்ணெயப் பரந்து வெளுப்பாகி,
மெல்ல மெல்லக்
கங்குல் நடுங்கிக் கடைகட்ட
ஆழியிடைச் சிங்கம் பிடரிசிலிர்த்தாப்போல்
செங்கதிரோன் தோன்றுதற்கு முன்பே
துணைவி துயிலெழுந்து
தேன் தமிழைக் காதில் தெளித்தாள்,
குளித்தேனர் போய்.
புதுப் பானைக்குள்
நிலவைச் சாறுபிழிந்த
சலவைப் பால் ஊற்றி. என்பவை அவரின் அழகிய கற்பனைக்கு அத்தாட்சிகளாகும்,
‘ஓலை’ பக்கம் 26

'எதுவாழ்வு' என்னும் கவிதையில்,
"தாள்களிலே அச்சடிக்கும் தமிழெல்லாம் இலக்கியமா?
தனித்து வாழ,
ஆழமுள்ள பொருள் கண்டு
அழியாத பொருள் பாடல் எனக்கு வாழ்வு!
ஏலத்தால் மலியாத
கோலஎழில் கவிபடைத்தல் எனக்கு வாழ்வு' என்று எழுத்தின் நோக்கை விளக்குகின்றார்.
மேலும்,
" நிலவுமுகம் தாளாக
நினைவெல்லாம் மையாக, நீண்ட உன்றன்
கலை குலுங்கும் தளிர்க்கரத்தால்
கட்டியதோர் காவியமாம் கடிதம் கண்டேன்!”
(நானென்ன விலைப்பொருளா)
மாடு மிதித்து மசிந்த வயற்சேற்றிடையே போடும் முளை நெல்லே பூமியொடும் ஒன்றாகிக் கூடினாற் போல் விழிகள் கூடிற்று, வேடுவன் கை அம்பு துளைக்க ஒரு ஆணிசிங்கம் வீழ்ந்து பட்ட சம்பவம் போல் ஆனது அச்சங்கதியும், தெம்புடனே கையைப் பிடித்தார்.
(இனிக்கும் அன்பு)
போன்ற சொற்சித்திரங்கள் நீலாவணனின் அழியாத முத்திரைகள், இவ்விதமாக வாழ்வியலைப் பல கோணங்களிலும் படம் பிடித்த ஒப்பற்ற கவிஞனின் ஆக்கங்கள் வெளிவரவேண்டியவை இன்னும் உள்ளன. பாநாடகங்கள் (மழைக்கை, மனக் கண், பட்டமரம், சிலம்பு, துணை) குறுங்காவியம் (வடமீன்) கவி அரங்கக் கவிதைகள், உருவகக்கதைகள், முதலியவை நாலுருப் பெற்றால் இலக்கிய நெஞ்சங்களுக்கு நல்விருந்தாக அமையவே செய்யும்.
ஆகவே நிகரற்ற கவிஞரான நீலாவணனின் கவிதைகள், ஈழத்துத் தமிழ்க்கவிதை உலகின் பொற்காலத்திற்கு வழி வகுத்தது என்பது உண்மையே.
ং২১
‘ஓலை’ Uist 27

Page 16
(காலாண்டு கவிதா நிகழ்வு) கவிஞர் நீலாவணன் கவிதைகள் 29.09.02 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30
தமிழில் புதுக்கவிதை என்கின்ற போக்கு உருவானதன் பின்பு வசனத்தை பகுதி பகுதிகளாக உடைத்து பின் அப்பகுதிகளை வரிசையிலே வைத்து எழுதியவை எல்லாம் கவிதைகள் என்ற பெயரில் வெளிவரும் ஓர் துர்ப்பாக்கியநிலை தமிழ்க்கவிதை உலகில் எழுந்துள்ளது. இந்நிலையைக் களைவதற்காவும், ஈழத்தின் தலை சிறந்த கவிஞர்களின் கவிதைகளை மீண்டும் வெளிக்கொணர்வதின் ஊடாக கவிதை பற்றிய பிரக்ஞையை இலக்கிய ஆர்வலர்களிடையே குறிப்பாக இளம் சந்ததி யினரிடையே வளர்ப்பதற்காகவும் 'கவிதா'கவிதா மாலை நிகழ்வில் மாலை' என்ற மகுடத்தில் காலாண்டுக்கொருமங்கல விளக்கேற்றும் திருமதி தடவை கவிதா நிகழ்வை நடாத்த கொழும்புத் அழகேஸ்வரி சின்னத்துரை தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக்குழு ஏற்பாடு (நீலாவணனின் மனைவி) செய்து அதன் முதலாவது நிகழ்வு 29.09.02 அன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்புச் கூட.வி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் திரு.எஸ்.எழில்வேந்தன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, கவிஞர் நீலாவணனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கவிஞர்களால் மொழியப்பட்டன. திருமதி நிலாமதி பிச்சையப்பாவின் தமிழ்வாழ்த்து. பின் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலழறீதரனின் தலைமையுரையும் வரவேற்புரையும் இடம்பெற்றன. பின்வரும் கவிஞர்கள் பின்வரும் கவிதைகளை மொழிந்தனர்.
தமிழ் வாழ்த்திசைக்கும் திருமதி நிலாமதியிச்சையப்பா
"gé06z” (V55ű 28
 
 
 
 
 
 
 

தலைமை வகித்த கொழும்புத் தமிழ்ச்சங்கச் செயலாளர் ஆஇரகுபதி பாலமுரீதரன் கவிஞர்கள்
ஜின்னாஹ் ஷரிபுத்தீன், செங்கதிரோன், இளைதம்பி தயானந்தா, த.சிவசங்கர் ஆகியோர்.
கவிஞர்கள்
ஜின்னாஹற் ஷரிபுத்தின் சோ. தேவராஜா இளையதம்பி தயானந்தா
கமலினி செல்வராஜன்
க.கலாகரன் செங்கதிரோன்
ழரீதர் பிச்சையப்பா
சிதம்பரப்பிள்ளை சிவகுமார்
த.சிவசங்கர்
லோ.பிரசன்னா செல்வி கலைவாணி கிண்ணியா அமீர் அலி
ஏ.ஆர்.வாமலோசனன் தி.திருக்குமரன்
கவிதைத் தலைப்புக்கள்
"பசையற்ற மன்" " வெளுத்துக்கட்டு" "போதியோ பொன்னம்மா" ஆட்டுக்குடல் ராமசாமி "வெள்ளையா நான் வளர்ந்த வீரா" "விடுதியில் வேந்தன்"
tf- - - f
O) "பாவம் வாத்தியார்" "உறவு" "பிள்ளையார்விட்ட பிழை" "முருங்கைக் காய்" "வாய்க்காத புத்தாண்டு" "ஆட்டுக்காரமுடச் சிறுவன்" "sig9ọớF6OD LI JT" "துயில் "கவிதை" "நெருப்பே வா" "கூழைப்பலா" "நம்பிக்கை" "இன்றுணக்குச் சம்பளமா?"
முதுபெரும் கவிஞரான அமரர் நீலாவணன் அந்தந்தக் காலங்களில் வடித்த கவிதைகளை இக்கால இளம் கவிஞர்கள் மேடையிலே தத்தம் தனித்துவமான பாணியில் மொழிந்தவை நீலாவணன் கவிதைகளை ஒரு புதிய கோணத்திலிருந்து சுவைக்கும் வாய்ப்பை வழங்கியது. எழில் வேந்
‘ஓலை’ பக்கம் 29

Page 17
தன் (நீலாவணன் அவர்களின் மகன்) ஒவ்வொரு கவி. தைத் தலைப்பும் படிக்கத் தொடங்கப்படுவதற்கு முன்னர் சுருக்கமாக அக் கவிதை எழுந்த சந்தர்ப்பத்தையும், பின்னணியையும் தொகுத்கவிஞர்கள் கிண்ணிய அமீர் அலி சிதம்பரப்பிள்ளை துக் கூறியமை இந்நிகழ்வின்
சிவகுமார். திதிருக்குமரன், ஏ.ஆர்.வாமலோசனன் இன்னுமோர் சிறப்பாகும்.
பூரீதர் பிச்சையப்பா ஆகியோர்.
ஒவ்வொரு கவிஞர்களும் நீலாவணன் கவிதைகளை உணர்வுபூர்வமாக மொழிந்தனர். மூத்த கவி. ஞன் ஒருவரின் கவிதைகளை ஏனைய கவிஞர்களைக் கொண்டு மேடையேற்றியமை மெச்சத்தக்க ஒரு ...:::. O வித்தியாசமான இலக்கிய கவிஞர்கள் செல்விகலைவாணி சோ.தேவராஜா. நிகழ்வாகும். இதனை ஏற்க.கலாகரன், லோயிரசன்னா ஆகியோருடன் பாடுசெய்த கொழும்புத் தமிதொகுப்புரை வழங்கிய எளப்.எழில்வேந்தன். ழ்ச்சங்கத்தின் இலக்கியக் குழு நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய தாகும். நிகழ்வின் இறுதியில் கொழும்புத் தமிழ்ச்சங்கத் துணைச் செயலாளர் திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி நன்றியுரை ஆற்றினார். கவிஞர் நீலாவணனின் மனைவியுட்பட அவரது குடும்ப அங்கத்தவர்கள் பலரும் இந்நிகழ்வில் வந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
XX отко, -- கவிதை மொழியும் கமலினி செல்வராஜன்
8° ဗျွိ ပွိုး၊ စိ தமிழ் வாழ்த்துப் பாடும் திருமதி. நன்றியுரை ஆற்றும் திரு. ஆழ் - சுபாஷாமினி கந்தசாமி (ஆசிரியை, வாப்பிள்ளை கந்தசாமி (கொழும்புத் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து தமிழ்ச்சங்கத் துணைச் செயலாளர்) மத்திய கல்லூரி)
தொகுப்பு -ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
‘ஓலை’ பக்கம் 30
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வழி
: நீலாவணன்
: (3D, I976.
திருமதி, நீலாவணன்,
பெரிய நீலாவணை, கல்முனை,
: எஸ்.கே.செளந்தராஜன் (செள)
றெயின்போ பிரிண்டர்ஸ்
231, ஆதிரிப் பள்ளித் தெரு, கொழும்பு - 13
நூல் : வேளாண்மை (குறுங்காவியம்)
ஆசிரியர் : நீலாவணன்
முதற்பதிப்பு : 1982 செப்டம்பர்
அச்சுப்பதிவு : அமுதா அச்சகம் முதுர்.
வெளியீடு தங்கம் வெளியீடு - முதுர்,
அட்டைப்படம் : நிர்மல்
உரிமை : திருமதி. நீலாவணன்
நூல் ஒத்திகை-நீலாவணன் கவிதைகள்
முதற்பதிப்பு : மே 31, 2001
நூல் ஆசிரியர் : நீலாவணன்
பதிப்புரிமை ; எஸ். எழில்வேந்தன்
வெளியீடு : நன்னூல் பதிப்பகம்,
48/3, புனித மரியாள் வீதி, கொழும்பு 15, இலங்கை, தொலைபேசி - 526495. E-mail: seventhan Gyahoo.com
அச்சிடுபவர் : யுனிஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்,
கொழும்பு 13.
‘ஓலை’ பத்தம் 31

Page 18
நூல்
|ஆசிரியர்
கால ஓட்டத்தினு டே ஒரு கவிஞன்
கலாநிதி சி.மெளனகுரு
நீலாவணன் வாழ்வும் இலக்கியப் பணியும்
முதற் பதிப்பு : மார்ச் 1994
அச்சு சூர்யா அச்சகம், சென்னை-41,
வெளியீடு தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் 6/ தாயார் சாகிப் 2வது சந்து சென்னை-600 002
நூல் : நீலாவணன் - எஸ் பொ.நினைவுகள்
ஆசிரியர் எஸ் பொ.
வெளியீடு காலம்(கனடா) வெளியீட்டுடன்
s இணைந்து மித்ர வெளியீடு
375-10 ஆற்காடு சாலை சென்னை -600 024 இந்தியா
முதற் பதிப்பு : செப்ரெம்பர் 1994
உரிமைப் பதிவு
அமைப்பு இளம்பிறை எம்.ஏ.ரஹற்மான்.
“ஓலை’ பக்கம் 32
 
 
 
 
 
 
 
 
 
 
 

3MEDIŠTEUTUNUT Lopăð5 (pIguquon?
- மணிக்கவிராயர் மணிவாசகன் -
"படும் மீன்" முதலாவது சஞ்சிகையின் முதலாவது இதழை வெளியிடுவதற்கு முன்பு கல்முனை எழுத்தாளார் சங்கம் அதன் செயற் குழுக் கூட்டத்தைக் கல்முனை பாத்திமாக் கல்லூரி மண்டபத்தில் நடத்தியது. கூட்டத்திற்கு அமரர் கவிஞர் நீலாவணன் தலைமை வகிக்க கவிஞர் பாண்டியூரன், எம்.ஏநுஃமான், மு.சடாட்சரன், சசி ஸ்டீபன் (சண்முகம்சிவலிங்கம்) ஜிவா ஜீவரத்தினம், மருதூர்க்கனி மருதுர்க் கொத்தன். அரு - கணேஷ், மருதுர்வாணன், திலகன், தருமலிங்கம், மணிவாசகன்(நான்) ஆகியோர் கலந்து கொண்டனர். அண்ணன் கவிஞர் நீலாவணன் அவர்களைச் சிறப்பாசிரியராகக் கொண்ட பாடும் மீன்' இதழை ஏறக்குறைய எல்லோரும் சிலாகித்துப் பேசினர்.
ஆனால், நான் எழுந்து சற்று வித்தியாசமாக ஒரு கருத்தைச் சொன்னேன். "பாமர மக்களுக்கும் புரியும் படியாக இன்னும் இலக தமிழில் - எளிய நடையில் படைப்புகள் அமைதல் சஞ்சிகையின் விற்பனைக் கிராக்கியை மக்களிடையே ஏற்படுத்த ஒரு வாய்ப்பாகும்" இதுதான் நான் கூறிய கருத்து.
நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அண்ணன் நீலாவணனுக்கு இக் கருத்து பெரும் ஆத்திரத்தை மூட்டி விட்டது. அவர் சட்டென்று எழுந்து தம்பி மணிவாசகன் சொல்வதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. பாப்பாக்கள் பாமரர்கள் இலக்கியமா நாம் படைக்க இங்கு கூடியுள்ளோம். இவர்கள் வேண்டுமென்றால் - "அம்புலிமாமாவை, 'கல்கண்டை' வாங்கிப் பார்க்கட்டும்! நாம் சற்று தரமான - அழகான கற்றோர் காமுறும் வண்ணம் இலக்கியம் படைப்போம்! "பாடும்மீன்" குடிசைக்குப் போவதைவிட, கோபுரத்தை எட்டுவதையே நான் விரும்புகிறேன்" - என்று சற்று காரசாரமாக - என்னைப் பார்த்தபடியே உரத்த குரலில் கூறிவிட்டார். எல்லோரும் என் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தார்கள், எனக்கு என்னவோ போலிருந்தது,
அதன் பின் சில வாரகாலம் அவர் என்னோடு பேசவில்லை. வீதியில் அவரைக் காண நேரிட்டாலும், கல்முனையிலுள்ள முருகன் ஸ்டோர்ஸ்
‘ஓலை’ பக்தம் 33

Page 19
கடையில் (அநேகமாக பத்திரிகை வாங்க வருவார்) சந்திக்க நேர்ந்தாலும் எதுவுமே பேசமாட்டார். யாரோ ஒரு பகைவனைப் பார்ப்பது போல - சில சில வேளைகளில் பார்த்துவிட்டுச் செல்வார். இது என் நெஞ்சைக் குடையும் ஒரு சங்கடமான - வேதனையான நிகழ்ச்சியாகி விட்டது. அண்ணன் என்னோடு இப்படிச் சின்ன விசயத்துக்காகக் கோபித்து விட்டாரே என்று எனது சக நண்பர்களிடம் கவலைப்பட்டுப் பேசித்திருந்தேன்.
ஒரு நாள் -
பாண்டிருப்பிலிருந்து அண்ணன் வேல்முருகு (முன்னாள் மா.அ.ச. உறுப்பினர் - கூட்டணிப்பிரமுகர்) அவர்களைச் சந்தித்துவிட்டுக் காலை 11 மணியளவில் பைசிக்களில் வந்து கொண்டிருக்கும் போது - கல்முனை வைத்தியசாலைக்கு முன்பாக - அண்ணன் நீலாவணன் பைசிக்களில் எதிர் கொண்டு வருவதைக் கண்டேன். அவரைக்காணும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் - என் மனம் ஏதோ குற்றவாளியின் மனம் போல் - படபடத்து அடித்துக் கொள்ளும், அவர் என்னைக் கடந்து போகும்வரை அவர் முகத்தையே நான் பார்த்துக்கொண்டே வந்தேன். இன்றைக்காவது அண்ணன் சிரிக்கமாட்டாரா? என்ற ஒரு ஆதங்கம் என் மனத்துள் படபடத்தவாறு!
என்ன ஆச்சரியம்!
என்னை நெருங்கியதும் அவர் பைசிக்களை நிற்பாட்டி "தம்பி மணி" சுதந்திரன் கவிதை கண்டன். இன்னும் ரெண்டு வரிகள் கூட எழுதியிருக்கலாம். நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்க!" என்று கூறிவிட்டு ஒரு பழைய சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றார். ஒரு நிமிடம் நான் திகைத்துப்போய் நின்றேன்.
சுதந்திரன் பத்திரிகையில் அந்தக் கிழமை எனது கவிதையொன்று பிரசுரமாகியிருந்தது. அத்ைதான் அவர் அப்படி மனம் திறந்து பாராட்டிச் சென்றார். அவரது மனத்திற்கு நல்லது என்று பட்டால் கோபதாபங்களை மறந்து பாராட்டும் உயர்ந்த இயல்பு - என்பதை நிரூபித்து விட்டார் அவர்.
சுதந்திரனில் கவிதை வந்த செய்தி எனக்குத் தந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் - என் மதிப்புக்குரிய அண்ணன் நீலாவணன் - சில வார இடைவெளிக்குப்பின் - கோபத்தை மறந்து அன்று என்னோடு பேசிய நிகழ்வுதான் - எனக்குப் பெரு மகிழ்ச்சியைத்தந்தது.
என் வாழ்க்கையில் இதை நான் மறக்கமுடியுமா?- எப்படி மறக்க முடியும்? மறைந்த அந்த மாகவிஞரை நினைக்கும் போது, எனக்கு இந்த நிகழ்வே நினைவுக்கு வரும்.
S
‘ஓலை’ பக்தம் 34

நீலாவணன் என்னும் அழகிய கவிதைச் சோலை
- மருதூர்க்கனி -
நீலாவணனின் அழகிய கவிதைச் சோலை செழித்து வளர்ந்து, காய்த்துப் பழுத்து நிரம்பி வழிந்தது. அவற்றை ரசிக்கவும், அங்கு தாகத்திற்குப்பருகவும், கிளிக்குஞ்சுகளும், மணிப்புறாக்களும் அங்கு வந்து கூடின. அந்த அழகிய கவிதைச் சோலை இரவும் பகலும் கல்யாணவீடுபோல சதா கலகலப்பாகவே இருந்தது.
சிந்தனைகள் வளர்ந்து - சிறகு முளைத்த அந்தப் பறவைக் குஞ்சுகள் முழுமனித குலத்துக்குமான விமோசனத்திற்குமான பாதையைத் தேடிப் பறக்கத் தொடங்கின. ஆனாலும் தாம் வளர்ந்த கவிதைச் சோலையை மறக்கமுடியாமல் நினைவுகளில் மீட்டிக் கொண்டேதான் பறந்து கொண்டிருந்தன.
இன்று, உயர்ந்த - உன்னதமான மனிதாபிமான லட்சியத்திற்காக குரல் கொடுத்துப்பாடும் அந்தப்பறவைகளின் தீட்சண்யமான கவிதைக் குரல்கள் உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலிக்கின்றன. மனிதனை மனிதன் சுரண்டாத விடுதலையின் சுவர்க்க பூமியைப் படைப்பதற்காக அவர்களின் எழுத்தாயுதங்களால் வாழ்வென்ற வீணையில் பூபாளம் இசைத்து மீட்டப்படுகின்றன!
இந்த லட்சியங்களால் புடம் போடப்பட்டு, இன்று நிமிர்ந்து நின்று பிரகாஷிக்கின்ற இந்தக் கவிதைப் பறவைகளின் அன்றைய அழகிய - மனிதாபிமானத்தோற்றத்திற்கு அடியெடுத்துத் தந்த பெருமையும் சிறப்பும் நிச்சயமாகவே நீலாவணனின் அழகிய கவிதைச் சோலைக்கே உரியது.
இந்த அழகிய கவிதைச் சோலையில் இரவு பகலென்று பாராமல் ஆவேசத்தோடு சதா பாடிக்கொண்டிருந்த அந்த ஆண் குயிலின் இனிய நாதம், திடீரென்று 11-1-75- ஆந் தேதி பிற்பகலிரவு 11-30 மணியளவில் நின்றேவிட்டது! ஆனாலும் அந்த, அழகிய ஆவேசப்பிளம்பு உற்பவித்த கனற் பொறிகளின் இனிய நாதம் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டேயிருக்கும். இந்தக் கனற் பொறிகளின் இனியநாதம் இந்த உலகத்தின் மாற்றத்திற்காக ஓங்கிப்பாடிக் கொண்டேயிருக்கும்!
‘ஓலை’ பக்தம் 35

Page 20
12-1.75- ஆந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, பனிபடர் பிரதேசத்தின் கடுங்குளிரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றது. பொல்லாத பயங்கரமான குளிர் வீசுகின்றது. இருதய நோயாளர்கள் கவனமென்ற வைத்தியர்களின் அறிக்கைகளையும் நினைத்துப்பார்த்த வண்ணம் நான் கடற்கரைப் பக்கமாகப் புறப்படுகிறேன்.
மாசிமாத மழைப்பனி, மரகதத்தினில் நித்திலம் கொட்டியும் தூசு நீவிய மெத்தெனும் போர்வையில் துயில்கிறாள். தூரத்தே தாய்மையின் பாசம் முற்றிய பசுவொன்று தன் கன்றை "ம்மா' என்று அழைக்கிறது. என்ற நீலாவணனின் வேட்கை" கவிதையின் அடிகளை அன்றைய விடியற் பொழுதோடு தொடர்புறுத்திக் கொண்டு கடற்கரை ஓரமாக நடந்து கொண்டிருக்கிறேன்.
பசையற்ற வெம்புமணலிலும் பசுமைகானும் - உழைக்கின்ற மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் நீலாவணனின் பசையற்ற மண் கவிதையின் களத்தினை ஊடறுத்துப் போகையில், 'வண்ணார் துணி வெளுக்கும் தோணா தெரிகின்றது. அதற்குக் கிழக்கில் கடற்கரையில் தோணி ஒன்று கரை சேருகின்றது. நான் அந்த இடத்துக்குச் செல்லுகிறேன். வலையில் தோறா, அறுக்குளா, பாலை மீன்வகைகள் பட்டுத் துடிப்பது தெரிகின்றது! வலை இழுக்கின்ற மீனவர்கள் பற்றிய நீலாவணனின் குழந்தைப் பாடலொன்றை எனது வாய் முணுமுணுக்கின்றது.
தோணியிலிருந்து இறக்கி கரைக்குவந்த மஜீதுத் தண்டயல் என்னை உற்றுப் பார்க்கிறார்! இரவு நீலாவணன் இறந்தாமே. என்று என்னிடம் கேட்கிறார்.
என்னால் நம்பவே முடியவில்லை! ஒட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்து சேருகிறேன். மனைவியிடமும் சொல்லிவிட்டு "கொத்தனிடம் ஒடுகிறேன். அந்தப் பாரச் செய்தியை கொத்தனுக்கு நான் தான் முதலில் ஏத்திவைக்க வேண்டியிருந்தது. அவரையும் பைசிக்கிள் வண்டியில் ஏற்றிக் கொண்டு நீலாவணனின் வீட்டுக்குப் போய்ச் சேருகின்றேன்.
அந்தப் பொல்லாத காட்சி என்னை அப்படியே உருக்கியே விட்டது, எங்கள் அன்புக்கும் பாசத்துக்குமுரிய நீலாவணன் நீண்ட உறக்கத்தில் கிடந்தார். அண்ணியும், மருமக்களும் உற்றார் உறவினர்களும் பிரிவைத் தாங்கமாட்டாமல் தம்மைக் கசக்கிப் பிழிந்து தாரையாக வார்த்து ஊற்றிக்கொண்டு கிடந்தார்கள்!
அண்ணன் நீலாவணன் 1964-ம் ஆண்டு எழுதிய, "இந்த உலகில் இருந்த சில நாழிகையில்..' என்ற 'துயில் கவிதைதான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. அந்தத் 'துயில் கவிதையைப் பற்றி, ஏற்கனவே என்னிடத்தில் குறிப்பிட்டிருந்ததை ஒருதரம் நினைத்துப் பார்த்தபொழுது எனது தவிப்பை அடக்கவே முடியவில்லை.!
‘ஓலை’ பக்கம் 36

அண்ணனின் மூத்த மகன் 'வேந்தனைக் கண்டு யார்யாருக்கு அறிவித்திருக்கிறாய் என்று கேட்கிறேன். தபாற்கந்தோருக்குச் செல்லுகிறேன்; நண்பர்களுக்குத் தந்தி கொடுக்கிறேன். மீண்டும் வந்து சேருகிறேன். நண்பர்கள், சிவலிங்கம், சடாட்சரன், அன்பு முகைதீன், பஸில் காரியப்பர், பாண்டியூரன், ஜிவா ஜீவரத்தினம், நெய்தல் நம்பி, நவம் எல்லோரும் வந்து சேருகின்றனர்.
"நாம் என்ன செய்வது. எப்படி நடந்து கொள்வது?" என்று கொத்தனும், நானும், சிவலிங்கமும், சடாட்சரனும், நவமுமாக கூடி யோசிக்கின்றோாம், பத்திரிகைகளுக்குச் செய்திகள் எழுதுகிறோம். துயில் பாடலை அச்சடித்து அத்துடன் கல்முனைப் பிரதேச எழுத்தாளர்களின் சார்பில் ஒரு அனுதாபச் செய்தியை வெளியிட முடிவு செய்கிறோம். அத்துடன் மயானத்தில் நடத்தவிருக்கும் அனுதாபக் கூட்டத்தை ஒழுங்கு செய்வதிலும் அதற்காக முடிந்த அளவு உதவுவது பற்றியும் ஆலோசிக்கின்றோம்
13-1-75 ஆந் தேதி வர வேண்டிய நண்பர்களும் உறவினர்களும் வந்து கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து மஹாகவியின் மனைவியாரும், மூத்த மகனும், வரதராசனும் இன்னும் பலரும் வந்து சேர்ந்தார்கள்.
மரண ஊர்வலம் பி.ப.4 மணியளவில் பெரிய நீலாவணைக் கடற்கரையை நோக்கிப் புறப்பட்டது. 'ஊரிலே பறை மேளம் ஒலித்தது. உண்மை, ஒருயிர் போயது என்ற நீலாவணனின் ஒரு கவிதையின் வரிகளை எனக்குள் நினைக்கிறேன்.
பெரியநிலாவணையின் சரித்திரத்திலேயே கண்டறியாத ஜன சமுத்திரம் மயானத்தை அடைகின்றது. புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் தலைமையில் அனுதாபக் கூட்டம் ஆரம்பமாகியது. கிழக்கிலங்கையின் கவிமழை ஒய்ந்துவிட்டது என்று தொடங்கிய புலவர்மணி அவர்கள் மயான வைராக்கியம் பற்றிப்பேசி. தற்காலிகப் 'பாஸ்ப் போட்'டில் நாம் இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம் என்றும், 'பிறந்த மண்ணைப் பெரிதாய் நேசித்தவர்' சமூகத் தொண்டர்' என்றும் தனது தலைமையுரையில் கூறிமுடித்தார்.
ஆ.மு.ஷரிபுத்தீன், கல்முனைப் பூபால், வசீகரன் முதலியோர் கவிதாஞ்சலி செய்தார்கள்.
புலவர் ஆ.மு.ஷரிபுத்தீன் தனது கவிதாஞ்சலியின் போது, தன்னுடைய நல்மாணாக்கருள் சிரேஷ்ட மாணவராகவும் குருவின் நல்லாசி பெற்ற மாணவராகவும் சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தவர் என்றும், தனக்குச் சரமகவி பாடுவானென்று தாம் நம்பியிருக்க குருவையே சரமகவிபாடச் செய்துவிட்டுப் போய்விட்டானென்றும் இரங்கினார்.
‘ஓலை’ பக்கம் 37

Page 21
மட்டக்களப்புத் தேசியப் பேரவை உறுப்பினர் திரு.செ.இராஜதுரை உரை. யாற்றுகையில், கல்முனைப் பிரதேசத்தில் ஒரு எழுத்தாளர் படையையே உருவாக்கிய எனது நல்ல நண்பனொருவன் மறைந்து விட்டது தமிழுக்கும் கிழக்கிலங்கைக்கு பேரிழப்பென்று குறிப்பிட்டார்.
கலைஞர்களெல்லாம் இறந்த தன் பின்புதான் பாராட்டப்படுவது என்பது, கலைஞர்களுக்கும் நமக்கும் துரதிஷ்டமாகி விட்டது. அதுவும், இந்த இளம் வயதில் (44) அருமை மனைவியையும் இரண்டு ஆண்களையும் மூன்று பெண் மக்களையும் பிரிந்து சென்றுவிட்டார். ஆனாலும் தன்னை அவர் நிலைநாட்டிவிட்டுச் சென்றுள்ளார். நீலாவணனின் கவிதைத் தொகுதி விரைவில் வெளிவரவேண்டும்; நீலாவணன் தொகுதியை மட்டுமல்ல கிழக்கிலங்கைத் தமிழ்க் கவிஞர்களுடைய கவிதைகளையெல்லாம் தொகுத்து ஒரு தமிழ்ப் பொக்கிஷமாக வெளிவரவேண்டும்; இதற்கு தன்னாலான முழு ஆதரவையும் தருவதாகவும் கூறினார்.
மருதூர்க் கொத்தனும், மு.சடாட்சரனும் தமக்கும் நீலாவணனுக்கும் இருந்த உறவையும், நினைவுகளையும் நினைவுகூர்ந்து மிகவும் உருக்கமாக எடுத்துரைத்து ஒரு காலகட்டத்தைப் பிரதிபலித்த கவிஞன் என்றும் தாமும் தமது நண்பர்களும் உருவாகுவதற்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் என்றும் வாழ்நாள் முழுவதும் ஓர் உணர்ச்சிப் பிழம்பாகவே வாழ்ந்தார் என்றும் அதுவே அவரது பலமும் பலஹினமாகவும் அமைந்துவிட்டது என்றும் குறிப்பிட்டார்கள்.
மண்டுர்க் கவிஞர் சோமசுந்தரம், வேல்முருகு, வரதராசன் முதலியோரும் இரங்கலுரை நிகழ்த்தினார்கள்.
இறுதி நிகழ்ச்சியாக, கவிஞர் நீலாவணனின் கவிதைகளில் சில படிக்கப்பட்டன. கல்லாறு சபாரத்தினம், ஆசிரியர், 'துயில் கவிதையை மிகவும் உருக்கமாகவே பாடி தமது அஞ்சலியைச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, கவிஞரின் பிறிதொரு பாடலை, நவம்' வாசித்தார். நீலாவணனின், 'பசையற்ற மண் கவிதையை, அதே மயான - வெம்புமணல் களத்திலிருந்து நான்படித்தேன்.
அடக்கம் முடிந்தது, அழுகையும் நினைவுகளும் முடியவில்லை; அத்தோடு, கவிஞர்நீலாவணன் நினைத்த சமூகப்பணி காலத்தின் தேவை உணர்ந்து, மேலும் கூர்மையாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியுள்ளது. அதன் மூலம் தான் அவரது ஆத்மா சாந்தியடையுமென்று நினைக்கிறேன் தீமைகளுக்கு எதிராக குமுறுகின்ற அவரது சுபாவம் அழகான கவிதைப் பிழம்பாக சமூகத்தைப் பிரதிபலித்தது. அதன் வழியில் புறப்பட்டுள்ள புதிய செங்கவிஞர் படை இன்று சமூகத்தைப் பிரதிபலிப்பதோடு நில்லாது சமூகத்தை மாற்றுவதற்கான உந்துசக்தியாகப் புறப்பட்டுக் கொண்டு நிற்கின்றது.
‘ஓலை’ பக்கம் 38

சிலர் குறிப்பிடுவது போல, நீலாவணன் தமிழில் எழுதியதாலோ, அல்லது கிழங்கிலங்கைகயில் பிறந்ததாலோ அவர் நின்று வாழப் போவதில்லை! நீலாவணன் கவிஞன். சமுதாயத்தில் நிலவிய, கொடுமைகளுக்கு எதிராக, கஷ்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விமோ சனத்திற்காக குரல் கொடுத்தவன்; உயர்ந்த மனிதாபிமானி அதனால்தான் நீலாவணன் வாழப்போகிறான். அவரது கவிதைகள் காலத்தின் போக்கொக்கோடு, அவரளவில் நின்று சமுதாய நோக்கில் விமர்சிக்கப் படவேண்டும். அந்தப் பணி தொடரப்பட வேண்டும்; தொடரப்படும். பாரதிக்குப் பின், கவிதையை வளப்படுத்திய கவிஞர் வரிசையில் நிச்சயமாகவே நீலாவணனுக்கு 6?(b முக்கிய இடமுண்டு. நீலாவணன் என்ற பெயரில்மட்டுமல்ல நிலா - சின்னத்துரை' என்ற பெயரில் கதைகளும், 'கொளுவு துறட்டி' என்ற பெயரில் இலக்கியப் போலிகளுக்கு ஆப்பு, 'அம்மாச்சி ஆறுமுகம் என்ற பெயரில், சீர்திருத்த நடைச் சித்திரங்களும் எழுதியவர், இந்தப் படைப்புக்கள் பற்றியும் ஆய்வுகள் நடத்தப்பட்ட வேண்டும். அத்தோடு நீலாவணனின் கவிதா சாமர்த்தியத்தை தமிழ் என்றும், 'கிழக்கு - மட்டக்களப்பு என்றும் குறுகிய வட்டத்துக்குள் நோக்குகின்ற மனப்பான்மை களைந்தெறியப்பட்டு, நீலாவணன் காலத்தே - தன்னளவில் பிரதிபலித்த ஒரு ஆற்றல் மிக்க கவிஞன் என்ற நோக்கில் ஆராயப்பட வேண்டும். இதுதான் ஒரு கவிஞனைப் பற்றிய சரியான ஆராய்வுக்கு வழிவகுக்குமென்று நினைக்கின்றோம்.
‘ஓலை’ பக்தம் 39

Page 22
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்றுக் கலாச்சாரப் பேரவையினால் நடாத்தப்பட்ட (1972) கவிதைப்போட்டியில், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் தலைமையின் கீழ், கவிஞர் நீலாவணன் பிரதம நடுவராக இருக்க புதியதோர் உலகை நோக்கி என்னும் தலைப்பின் கீழ் பாடப்பட்டு பாராட்டும் முதற் பரிசும் பெற்ற கவிதையின் ஒரு பகுதி
கவிதாசிரியர் கருணானந்தராசா அவர்கள் தற்போது லண்டனில் வசிக்கிறார்.
3
Gugi š!Gueritem!
சி. கருணானந்தராசா (தமிழாரியன்)
கற்பு என்றொரு சொல்லினை ஆக்கிக் கதைபல கட்டி விட்டார் - பெண்ணை அற்பமானவளாக நினைத்து அடிமைகள் ஆக்கிவிட்டார் உற்சவங்கள் நடாத்தி உலகினில் கற்புடையோர்களென - ஒரு சொற்பமும் அறிவற்ற மடைச்சியர் தன்னை வழுத்துகிறார்.
கட்டிய பெண்ணை வெங்கானகம் விட்டுக் கழன்றவன் உத்தமனாம் - அந்த மட்டியை மீண்டும் சுயம்வரம் வைத்து மணந்தவள் உத்தமியாம்,
குட்டை பிடித்துக் குரங்கினைப் போலக் குடிலில்க்கிடந்தவனை - ஒரு பெட்டியில் வைத்துச்சுமந்து பரத்தையைத் சேர்ந்தவள் உத்தமியாம்.
கொண்ட பொருளது யாவுமழித்தொரு கூத்தியைச் சேர்ந்தவனை - கண் கண்டதெய்வம் எனக்கால் பிடித்தாள் அந்தக்கண்ணகி உத்தமியாம். வண்டில் விடுங்கதை யாருக்குத்தேவை வளர் இளம் தங்கையரே - இந்த பொண்டில் புருசர்கள் நீதியில் வேற்றுமை போக்கச்சினந்தெழுவிர்.
'gi'), 'i' ('',í8ú 40

5.
கட்டியவன் வரதட்சணை கேட்டுக் கழுத்தை நெரிக்கையில் வான் - ஒலிப் பெட்டியிற் பாடுது பாட்டுக் கொடியவம் மட்டியைத் தெய்வ
மென்றே முட்டக்குடித்தவம் மூடன் ஐ துை முதுகைப் பிளக்கையிலே - ᏘᏏᏪ Ꭼ"
செட்டில் முழங்குதப் பேடியின் காலினைத் தொட்டு வணங்கிடென்றே.
உன்னைக் கெடுத்தொரு உண்மையை மூட உதித்தவிக் காவியங்கள் - அடி இன்னுமிருக்கையில் இந்த உலகினில் ஏறும்புகழுடனே. என்னவிடுதலை வேண்டிக்கிடக்குது? ஏழை சோம்புகிறாய் -
...)49 அன்னநடையினளே மிதியாவையும் ஆனைநடை நடந்தே.
வேறு
கட்டையானகவுனை அணிந்தொரு பெட்டை செல்வதுகண்டு விடலைகள் சுட்டி அவ்விளமங்கையைப் பற்பல சொட்டை வார்த்தை பகன்றவள் - வேதனை பட்டு நாணம் படர முகமெலாம் பாதகர் சமுதாய நிலையினை திட்டிச்சிந்தை வெதும்பிடல் என்றுதான் திருமோ அதையாமுமறிகி - லோம்.
உடையைக் கொண்டு ஒருவரைமட்டிடல் உண்மையான மதிப்பிடலாகுமோ! நடையிற்பண்பில் நயமுறு பேச்சினில் நாமொருத்தரைக் கண்டு தெளியலாம். தொடையைக் கண்டிளம் பென்மை1ை1க்காய்ந்திடும் துர்க்குணத்துப் பதர்களிடம்மதன் படையைக் கொண்டு மிரட்டுதலாற்கொலோ பண்பையிட்டு மிகைபடச் சொல்கிறார்.
'g'an)62 (355 41

Page 23
3. நாடகங்களில், வானொலி, சஞ்சிகை, நாலுவீதியும் சேர்ந்திடு
சந்திகள் வீடெலாம் இந்தமூடரின் தீஞ்செயல் மேவிநிற்குது ஆதலினாற்தினம் தேடித்தேடித் இத்தியவர்கட்கெலாம் செப்புவீர் அறம் என்னுயிர்த் தோழர்காள் பேடித்தன்மை அகற்றிடச் சொல்லுவீர் பெண்மையைப்புகழ்ந்தேத்திடச் செய்குவீர்
4. எட்டிரண்டு முளத்துணிதன்னையே கட்டுகின்ற நம் கன்னியர்
அஃதினை விட்டுக்கட்டைக்கவுனை அணிந்திடல் வீட்டிலேயொரு சிக்கனச் செய்கையாம். முட்டுக் காலதன் மேற்தெரிந்தாற்குடி மூழ்கிப்போவதோர் நாளிலும் இல்லையாம் கெட்ட நோக்கிலெதனையும் பார்க்கிற கேடர்க்கேயிது கேவலமாகுமாம்.
5. பண்டைக்காலப் பருவ மகளிர்கள் பண்புகெட்டுத்
தவறிடவில்லை யோர் துண்டைத்தானிள மார்பினிற் கட்டினர் தூயகற்பினலக்கணம் காட்டினர். கெண்டைக்காலதன் மேற் தெரிந்தாலது கேடென்றெண்ணும் உலுத்தர்தம் தீக்குணச் சுண்டைக்காய்த்தலை சுக்கெனத்துள்பட துரயமாதர் நடைசெய்தல் வேண்டுமாம்.
6. ஆதலால் எனதன் பிளந்தங்கைகாள் தீது இம் "மினி"யென்றிடு
மூடரின் ஒதலுக்குச் செவியளியாமலே உடைகுறைத்தொரு சிக்கனம் பேணுவீர் பேதமுற்ற களங்க மனத்தொடு பெண்மைதன்னை இகழ்கிற காமுக காதகக்குணநாய்கள் முகத்திலே காறி எச்சிலுமிழ்ந்து துரத்துவீர்.
&
ஓலை’ பக்கம் 42

செங்கதிரோன் எழுதும்
6: DESTiff6)
(கவிஞர் நீலாவணனின் “வேளாண்மை” காவியத்தின் தொடர்ச்சி)
அறிமுகம்.
பிவிஞர் நீலாவணன் மட்டக்களப்பு மண்ணின் வாழ்க்கையை இலக்கியமாக்க எத்தனித்தார். அதன் விளைவே அன்னாரின் 'வேளாண்மை'க் காவியம். ஈழத்தமிழ் பிரதேசங்களில் தனித்துவம் வாய்ந்ததான மட்டக்களப்பின் பாரம்பரியங்களையும், சடங்குகளையும், அம்மக்களின் வஞ்சகமில்லா வாழ்க்கை முறைகளையும் வைத்துக் காவியம் ஒன்றினை வடிப்பதற்காகவே நீலாவணன் 'வேளண்மை'யை விதைத்தார். ஆனால் 'வேளாண்மைக் காவியத்தை நிறைவுசெய்து அதன் முற்றிய முழு விளைச்சலையும் காணுமுன்பே 'கதிர் பருவத்திலேயே அவரின் உயிரைக் காலன் கவர்ந்து சென்றுவிட்டான். 'வேளாண்மைக் காவியத்தின் குடலை', 'கதிர்' ஆகிய இரு பகுதிகளையே அவர் எழுதி முடித்திருந்தார். அவையும் கூடகையெழுத்துப் பிரதியாகவே அவர் வீட்டில் கிடந்தது. கவிஞர் நீலாவணன் 11.01.1975 இல் காலமானர். 1980 காலப்பகுதியில் ஈழத்தின் முதுபெரும் பிரபல எழுத்தாளர் காலஞ்சென்ற வ.அ.இராசரத்தினம் அவர்கள் கல்முனைப் பிரதேசத்திற்குச் சென்றிருந்தபோது கவிஞர் மு.சடாட்சரன் அவர்கள் கவிஞர் நீலாவணன் எழுதி முற்றுப்பெறாத 'வேளாண்மை' எனும் காவியத்தை நீலாவணனின் மனைவியிடமிருந்து பெற்று அவரிடம் படிக்கக் கொடுத்தார். அப்போது வ.அ.அவர்கள் மூதூரிலே சிறு அச்சுக்கூடம் ஒன்றிற்குச் சொந்தக் காரனாக இருந்தார். அதனால் 'வேளாண்மை' (குறுங்காவியம்) எனும் நூலின் முதற்பதிப்பு 1982 செப்டம்பரில் தங்கம் வெளியீடாக (தங்கம் வெளியீடு, திரிகூடம், மூதூர்) வெளிவந்தது. நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள வ.அ.இராசரத்தினம் அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார்.
"இக்காவியத்தின் மூலம் இயந்திர நாகரீகத்தாற் கற்பழிந்து விடாத மட்டக்களப்பின் குமரியழகையும் மட்டக்களப்பாரின் விருந்திருக்க உண்ணாத வேளாண்மைத் தனத்தையும் வெளியுலகிற்குக் காட்டத்தான் நீலாவணன் ஆசைப்பட்டிருக்கின்றார் எனத் துலாம்பரமாகிறது."
"தான் ஆசை பற்றி அறைய வந்ததை நிலாவணன் கம்ப காம்பீர்யத்தோடு விருத்தப்பாற்களாற் பாடியிருக்கிறார். மட்டக்களப்பின். பழகு தமிழ்ச்
‘ஓலை’ பக்கம் 43

Page 24
சொற்கள் அவரின் கவிதா காம்பீர்யத்திற்குக் கைகட்டிச் சேவகம் புரிந்து, இலக்கிய அந்தஸ்ததைப் பெற்றிருக்கின்றன. ஏடறியாப் பெண்களும் கவி இசைக்கும் தெற்கு மட்டக்களப்பின் கவிவளம் இக்காவியத்தின் இலக்கணக் கரைகளுக்குளடங்கிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியாகப் பாய்கிறது"
"நூறுநூறு ஆண்டுகளுக்கும் பின்னால்வரும் நம் சந்ததியினார் மட்டக்களப்பைத் தரிசிக்குமாறும் அழகான காவியத்தைத் தந்திருக்கிறார் கவிஞர் நீலாவணன்."
0 0 ()
06.07.1998 முதல் 12.07.1998 வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்திய ஈழத்துக் கவிஞர் வாரம்' நிகழ்ச்சியின் கீழ் நாளொரு கவிஞரைப் பாராட்டி நிகழ்வுகள் இடம் பெற்றன. முதல் நாள் நவாலியூர் சோமசுந்தரப்புலவர், இரண்டாம் நாள் கவிஞர் சோ. நடராசா, மூன்றாம் நாள் ஆ.மு.வுரிபுத்தின், நான்காம்நாள் கவிஞர் மஹாகவி, ஐந்தாம்நாள் கவிஞர். சில்லையூர் செல்வராசன், ஆறாம்நாளன்று (1.07.98) கவிஞர் நீலாவணன் ஆகியோரின் உருவப்படங்கள் திரைநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் பற்றிய சிறப்புச் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. கவிஞர் நீலாவணன் பற்றிய சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தும் வாய்ப்பைக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனக்கு வழங்கியிருந்தது. அதனால் ஏற்கெனவே பல முறை படித்து சுவைத்த நீலாவணனின் 'வேளண்மை'க் காவியத்தை மீண்டுமொரு முறை நான் படிக்க நேர்ந்தது. அன்று நான் நீலாவணன் பற்றி நிகழ்த்திய சுமார் ஒன்றேகால் மணி நேரச் சொற் பொழிவு அனைவராலும் பாராட்டப் பெற்றதுடன், நீலாவணன் பற்றிய முழுவாசிப்புக்கான அருட்டுணர்வையும் அவையில் ஏற்படுத்தியிருந்தது என்பது மிகைப்பட்ட சுற்றல்ல. மேலும், 05.05.2000 இல் ஆரம்பித்து பிரதிவெள்ளிக்கிழமை தோறும் பி.ப.5.30 க்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்றுவரும் நூல்நயம் காண்போம்" நிகழ்ச்சித் தொடரின் 34வது நிகழ்வில் (24.01.2001)'நீலாவணனின் வேளாண்மை' காவியத்தை நான் நயம் கண்டேன். என்னுடைய நூல்நயத்தால் மிகவும் கவரப்பெற்ற எனது நண்பரும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரும் தேசியகலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்தவருமான சட்டத்தரணி சோ.தேவராஜா அவர்கள் நூல்நயம் காண்போம்'நிகழ்ச். சியின் பின்பு என்னைச் சந்தித்து நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தைத் தொடர்ந்து எழுதும்படி அன்போடு கேட்டுக்கொண்டார். நீலாவணனின் கவிதையோட்டத்தோடு இயைந்து எப்படி அக்காவியத்தைத் தொடர்ந்து எழுதுவது என்று சற்று உள் மனம் உறுத்திய போதிலும்
‘ஓலை’ Uísó 44

நீலாவணன் மீது எனக்கிருந்த பிடிப்பின் காரணமாக அவரது வேண்டுகோளுக்கு இசைந்தேன். இதனைப் பின் நான் நீலாவணனின் மகன் எழில்வேந்தனிடம் தெரிவித்தபோது அவரும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் நீலாவணன் அவர்கள் மனம் கொண்டிருந்த காவியத்தின் இறுதிப் பகுதியின் கதைச்சம்பவங்களையும் சுருக்கமாக எனக்குச் சொல்லி என்னை எழுதும்படி உற்சாகப்படுத்தினார். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் இலக்கியச் செயலாளரும், இந்நாள் துணைத் தலைவருமான நண்பர் கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத்தினும் என்னை எழுதும்படி அடிக்கடி துரண்டிக் கொண்டிருந்தார்.
இத்தகையதோர் பகைப்புலத்திலேயே கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தின் மீதிப்பகுதியை விளைச்சல்' என்ற பெயரில் எழுதத் துணிந்தேன்.
- செங்கதிரோன் -
(அடுத்த இதழில் விளையும்)
‘ஓலை’ பக்கம் 45

Page 25
செப்படம்பர் மாதத்துக்கான ஒலை (8) வாசிக்கக் கிடைத்தது. இதயம் திறந்து. பகுதியில் ஒரேவிதமான விடயங்களையே தொடர்ந்தும் எழுதிவருகிறீர்கள். கோரிக்கை மாதிரியான பாங்கைத் தவிர்த்து நிறுவுதலான தேடலுக்குதவியாக அமையும், கலை - இலக்கியப் படைப்புகள் தொடர்பான கருத்துப் பரிமாறலுக்கேற்ற ஆக்கங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
சோ. தேவராஜா எழுதியிருந்த பூங்கா’ பற்றிய குறிப்புகள் நன்றாக இருந்தன. அட்டை அலங்கரிப்பு, மற்றும் பக்க வடிவமைப்புகளில் வழமையான சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு புதுமையான அல்லது வித்தியாசமான எண்ணங்களுக்கு அங்கீகாரமளியுங்கள். ஒலை தனித்துவம் கொள்ள அது உதவும். பணி சிறக்கப் பாராட்டுக்கள்
79/2, Kaburady Road, M.L.M.ANZAR Kattankudy - 02 26.10.2002
9 சங்கச் சுரங்கமாக விளங்கும் ‘ஓலை’ எட்டாவது சஞ்சிகை
கிடைக்கப்பெற்றேன். நன்றி.
ஒலை சாலை தோறும் பவனிவரும் பேரேடாக வளர்ச்சியடையவும், அது தமிழ் மக்களின் கரங்களின் தவழும் ஞான ஏடாக அமையவும் வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
பாக்கியவதி, ஞானசிரோன்மணி சைவப்புலவர் - பண்டிதர் 15, வித்தியாலயம் ஒழுங்கை ஆர், வடிவேல் திருகோணமலை. 27,10.2002
9 ‘ஓலை’ சிறிய கடுகு - பெரிய காரம். நாடளாவிய தமிழ்ப்பணியில்
நீண்ட பணி ஆற்றிவரும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்கு கட்டாயம் இப்படி ஒரு சஞ்சிகை இருக்கவே வேண்டும். ஒலைச்சிறுகதைக்குரிய படைப்பாளி கணேசலிங்கம், இணுவிலராயும். என்னிலக்கிய மாணவராயும் இருப்பவர். இருமடியல்ல, மும்மடி மகிழ்ச்சி.
8வது இதழும் கிடைத்தது. நறுக்கு பகுதியில் என் கவிதை வெளிவந்துள்ளமை கண்டு மிக மகிழ்ந்தேன். தமிழ்மயமான ஒரு
‘ஓலை’ பக்தம் 46
 

வட்டத்திற்கு என் புத்தகச் செய்தி பரவ அதிக வாய்ப்பு வசிட்டர் வாயால் வாழ்த்துப் பெற்றதுபோல ‘ஓலை’யால் என் கவிதை அங்கீகரிக்கப்பட்டுள்ளமை பெருவெற்றி.
ஆசிரியர், யாழ் இந்துக்கல்லூரி, பண்டிதர் சாவே. பஞ்சாட்சரம்
யாழ்ப்பாணம் 28.10.2002
‘ஓலை’ இதழ்கள் கிரமமாகக் கிடைத்து வருகின்றன. அவ்வாறு கிடைக்கச் செய்யும் உங்கள் அயராத பணிக்கு என நன்றியும் அன்பும் உரித்தாகுக.
வாரந்தோறும் எத்தனை நிகழ்சிகள் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறுகின்றன. உங்கள் நிகழ்ச்சி நிரலையும் செய்திகளையும் படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு வேலை அமைதியாக நடைபெறுகிறது! ‘ஓலை’யை ஒரு இலக்கிய சஞ்சிகையாக வளர்த்தெடுக்க முயலும் உங்கள் ஆவல் நிச்சயம் நிறைவேறும். இலக்கிய நெஞ்சங்களின் ஆதரவுஉங்களுக்குநிச்சயம் கிடைக்கும்.
348, Galle Road, Colombo - 06 Dr. M.K. Muruganandan 30, 10.2002 M.B.B.S (Cey) D. Ac (SL)
தங்கள் மாதாந்த மடல் ஒலை 08 கிடைத்தது. அனுப்பியமைக்கு அன்பு சேர்நன்றிகள் உரித்தாகுக!
ஒலையை ஒழுங்காக வாசித்து - சுவைத்து வரும் சுவைஞருள் நானும் ஒருவன். தொடக்க காலத்தில் சங்கத் தகவல்களைத் திரட்டித் தந்த ஒலை இன்று மெல்ல. மெல்ல ஆனால், உறுதியுடன் கலை, இலக்கியம், கல்வி, கலாசாரம் முதலிய விடயங்களையும் சேரத் தரும் மாசிகையாக பரிணமித்து, வெற்றிநடை போடுவது கண்டு அகமகிழ்கின்றேன்.
ஒலையின் வளர்ச்சிக்கு அயராது உழைத்து வரும் ஒலை பொறுப்பாசிரியருக்கும், தமிழ்ச் சங்க இலக்கியக் குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள்! ஒலையைத் தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் தமது வேலைத் தளத்தை விசாலித்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கும் எனது நன்றிகள்!
8/3/3, Metro Apartment, வேல் அமுதன்
55 Lane, Wellawatte, Colombo – 0ó (வேலுப்பிள்ளை அமுதலிங்கம்)
05.11.2002
"gszbev” Uá4á 47

Page 26
தாங்கள் ஒழுங்காக என் பெயருக்கு அனுப்பி வரும் ஓலை மடல்கள் தவறாமல் என்னிடம் வந்து சேர்கின்றன என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தங்களுக்கு அறியத்தருகிறேன். நானும் சில நூல்களை கொழும்புதமிழ்ச்சங்கத்திற்கு அன்பளிப்புச் செய்வதற்காக எடுத்து வைத்திருக்கிறேன். ‘ஓலை’க்கு எனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி
Suthumalai South அன்புடன் Manipay 台 μ ε 17.2.202 சந்திரா தனபாலசிங்கம்.
9 ஒலையில் இடம் பெறும் சொல்வளம் பெருக்குவோம் - ஒரு நல்ல விடயம். பாராட்டப்பட வேண்டியதொன்று. (ஓலை 9) அருகு எனும் சொல்லுக்கு அருகல், (அருகுதல்) குறைவு என்றும் அர்த்தங்கள் ண்டு. இதன்படி, அருகாமை என்பதற்கு குறையாமை என்றும் மபாருள் கொள்ள முடியும். தமிழறிஞர் அ.கி.பரந்தாமனாரின் நல்ல தமிழ் எழுத வேண்டுமா? எனும் நூலில் அருகாமை என்பதற்கு குறையாமை என்றே பொருள் தரப்பட்டுள்ளது. நன்றி
ஆரணியகம், 4793, புதிய கல்முனை வீதி அன்புடன் நாவற்குடா, மட்டக்களப்பு வாகரைவாணன் 19.12.2O2
r
அஞ்சவி
15.12.2002 அன்று நீர்கொழும்பில் காலமான ஒய்வுபெற்ற சிரேஷ்ட புகையிரத நிலைய அதிபரும் எழுத்தாளருமாகிய அமரர். திரு. சுப்பிரமணியம் சிவராஜலிங்கம் அவர்களுக்கு 'ஒலை அஞ்சலி செலுத்துகிறது. இவர் 'அந்திப் பொழுதின் சிந்தனை மலர்கள் (6) JJ6DITË DJ bis 6J6üb), "How to Deliver Speeches Effectively" gléu நூல்களின் ஆசிரியராவார்.
أص ܢܠ
‘ஓலை’ பக்கம் 48
 

名 fUith (Best 70'issues frotu 魏
ஈழத்திவிருந்து வெளிவரும் கலை இலக்கிய இருமாத இதழ்
மூன்றாவது மனிதன்
தொடர்புகளுக்கு EDITOR, 143, Muhandram Road, Colombo - 03. TP : 0777 - 389127 E. Mail mm-sGeol.lk
ana
مصا
Ž:
_xis