கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2003.04

Page 1
வெள்ளவத்தை
நித்தியகல்யாணி நகை மாளிகையில்
அப்பழுக்கற்ற வைரம்
பெல்ஜியம் (Belgium) சர்வதேச இரத்தினக்கல்லியல் நிறுவனத்தினால் (International Gemmological Institute) உறுதிப்படுத்தப்பட்டு - பரிசோதிக்கப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட்டு - மாற்றமுடியாதபடி பைகளில் மூடித் தாளிடப்பட்டது.
வெள்ளவத்தை
நித்தியகல்யாணி ஜூவலரி
230 காலி வீதி கொழும்பு - OG தொலைபேசி 333392 362427
தொலை நகல் 504933 盛
Ésissi-Fi inithkalasltlik
潭
 
 
 
 

மிழ்ச்சங்க மாதாந்து மடல்
... . 21,ܗ மழரசங்கததுன ராவது ஸ்தாபன விழாவின் முதல் நாளான
காலை 900 மணிக்கு அகில இலங்கை இந்து மாமன்றத்
தலைவர் திவிகயிலாயபிள்ளை அவர்கள் ெ
. . . . . . சியையும் மலின்பு விற்பனையை
副”鸭
கொழும்புத் தமிழ்ச் சங்கம்
7, 57 வது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை), கொழும்பு 0ர்.
él:5 Issolo LIEF : CJLF
ELIEF = 0.1-363759
வெப் முகவரி WWW. Colombo.tamitsangam.org இணைய தபால் முகவரி : ctsஇeurekal
விஜை இயன்ற அன்பளிப்பு

Page 2
இறுதிUT *SUE 夏 70th best Compliments from S. ; s
POWERTECHNOLOGIST
ELECTRICAL ENGINEERING CONSULTANTS AND CONTRACTORS
Residential, Commercial & Industrial Electrical Contractors.
We specialize in:
Electrical installations & Maintenance for O Residential O Commercial O Industrial
O Designing and Repairing of Control Panels O Electrical Distribution Systems Repairing & Rewinding of Electrical Appliances
O Data cabling
Telephone: 761184,725013 Mobile: 0777-318412,0777-306543 Fax: 074-204863, 761184 E-mail: power tecs (ahotmail.com
368 1/1, GALLE R ༥ S E NKOAD, 羹 MoUNT AVINIA. 藥 57)\\ Zآی}S

இதயம் திறந்அவ.
அரசகருமங்களில் இந்நாட்டின் தேசிய மொழிகளிலொன்றான தமிழ் மொழியின் பயன்பாடு குறித்து இலங்கையின் அரசியலமைப்பில் பல உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டுள்ள போதிலும் கூட நடைமுறையில் அவை "ஏட்டுச் சுரைக்காய்' ஆக ஆகிப்போனதையே ஈழத்தமிழர்கள் அனுபவமாகப் பெற்றுள்ளனர்.
1987 இல் நிறைவேற்றப்பட்ட மாகாணசபைகள் சட்டத்திற்கமைய 'வடக்கு கிழக்கு மாகாண அரசு நிறுவப்பட்ட பின்னரும் கூட வடக்கு கிழக்கு மாகாண அரசின் ஆளுகைக்குட்பட்ட ஆள்புலக் கருமங்களில் தமிழ் மொழியின் பயன்பாடு என்பது அதிருப்திக்குரியதாகவே அண்மைக்காலம் வரை நிலவி வருகிறது. இதற்குக் காரணம் வடக்கு கிழக்கு மாகாண அரசின் உயரதிகாரிகள் அவர்களில் அனேகம் பேர் தமிழர்களா. யிருந்த போதிலும் கூட எல்லோரிடமும் தமிழிலே கருமமாற்ற வேண்டும் என்ற உறுதிப்பாடு இருக்கவில்லை. மாறாக ஆங்கிலத்தில்தான் அதிகம் பேர் கடமையாற்றினார்கள். தமிழிலே அனைத்து நிருவாகம்' என்ற சுலோகம் பல்லாண்டுகளாக உச்சரிக்கப்பட்ட போதும் அதனை நடைமுறைப்படுத்த உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால் இன்று இக்குறைபாடு உணரப்பட்டு அதன் முதல் அறிகுறி. யாய் வடக்கு கிழக்கு மாகாணசபையின் திட்டமிடல் செயலகத்தினால் துறைசார் சொல்லகராதி (அபிவிருத்தி கலைச்சொல்லகராதி - Development Glossary) ஒன்று (பாகம் -1) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வகராதியை வெளியிடுவதில் முன்நின்ற வடக்கு கிழக்கு மாகாண சபையின் உயரதிகாரிகளும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய ஏனைய அலுவலர்களும் பாராட்டுக்குரியவர்கள். இவ்வகராதியின் அடுத்தடுத்த பாகங்களும் விரைவில் வெளிவந்துநடைமுறையில் தமிழிலே அனைத்து நிருவாகம்' என்ற செயற்பாடு அதன் உச்சத்தை அடைய வடக்கு கிழக்கு மாகாண அரசு இன்னும் தீவிரமாகச் செயற்பட வேண்டும் என்பதே 'ஒலையின் ஆதங்கம்.
நன்றி. மீண்டும் மறுமடலில்.
- ஆசிரியர்
ஒலையில் வெளிவரும் ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பு
66
Uéétif 1 ஓலை’ - 15 ஏப்ரலி 2003)

Page 3
இலக்கிய வாழ்வில் இடறிய சம்பவங்கள் O
கலாபூஷணம்.ஏ.இக்பால்
(இலக்கிய வாழ்வில் இடறிய சம்பவங்கள்" எனும் தலைப்பில் எனது அநுபவ நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய எணர்ணினேன். அப்பதிவில் முதலாவது வருவது இச்சம்பவமல்ல. இங்கே இதை முதலாவதாக எழுதுவதற்குக் காரணம்" "ஒலை" 12வது இதழ் நீலாவணன் நினைவுச் சிறப்பிதழாக" வந்ததே. அதில் சில வரலாற்றுப் பதிவுகளின் காலம் பிழை என எண்ணுவதால் இச்சம்பவம் அதைத் திருத்தலாமல்லவா? அடுத்தடுத்து இச்சம்பவ நிகழ்ச்சிக்குரிய காலத்திற்கு முந்தியவைகள் வெளிவரும்)
நீலாவணனின் கவிதைகள் படிப்பதில் ஈடுபாடு கொண்ட நான் அக்காலம் அவரைச் சந்திப்பதில் அதிக ஈடுபாடு கொள்ளவில்லை. அக்காலத்தில் நான் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மட்டக்களப்புத் தெற்குக் கிளையின் செயலாளராக இருந்ததினாலும், அவர் தமிழரசுக்கட்சியின் ஓர் ஆஸ்தானக் கவிஞர் போல் விளங்கியதினாலும் சந்திக்கும் வாய்ப்பும் மனமும் இல்லாமலாகிவிட்டன.
ஆசிரிய கலாசாலைப் பயிற்சி முடிந்ததும் 1962 ஜனவரியில் எனக்கு அனுராதபுரம், கியூலகட முஸ்லிம் வித்தியாலயத்தில் நியமனம் கிடைத்தது. அதிலிருந்து மாற்றம் பெறுவதற்காக 1962 ஜனவரி 30இல் கொழும்பு சென்று கல்வி அமைச்சில் ஆசிரிய இடமாற்றப் பொறுப்புக்குரிய கல்விப்பணிப்பாளர் எம்.சமீம் அவர்களைச் சந்தித்தபின், பெப்ருவரிமுதலாம் திகதி மட்டக்களப்பு இரவு நேரப் புகையிரதத்தில் பயணம் செய்யும்போது , அரசு வெளியீடு எம்.ஏறஹற்மானும் மட்டக்களப்புக்குப் பயணித்துக் கொண்டிருந்தார். 1962 பெப்ருவரி 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை, எம்.ஏறஹற்மானைக் கூட்டிச் செல்ல புகையிரத நிலையம் வந்த எஸ்.பொன்னுத்துரை என்னிடம் "நீலாவணன் உங்களைச் சந்திக்கவிருக்கின்றார், இந்த நாட்களில் சந்திக்கக்கூடும்" எனக் கூறினார்.
எஸ்.பொன்னுத்துரை கூறியது போல், நீலாவணன் 1962 பெப்ருவரி 3ஆம் திகதி சனிக்கிழமை அக்கரைப்பற்று வந்து என்னைச் சந்தித்தார். நீண்ட நேரம் அன்புடன் அளவளாவிய நீலாவணன் "பொன்னுத்துரையை முற்போக்காளர்கள் ஒதுக்கிவிட்டனர். மரபுவாதிகளும் அவரை மறுதலிக்கின்றனர்.
‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003) Uééti, 2

எனவே, கல்முனையில் தற்கால எழுத்தாளர்களை அழைத்துக் கதைக்க வேண்டும். அவர்களைக் கூட்டி 7ஆம் திகதி புதன்கிழமை எங்கள் வீட்டில் காலையில் சந்திக்க ஏற்பாடு செய்வது உங்கள் பொறுப்பு" என்றவர் புதுமைப்பித்தனின் நூல்கள் அத்தனையையும் என்னிடமிருந்து பெற்றுச் சென்றார்.
1962 பெப்ருவரி 4ஆம் திகதி சம்மாந்துறை, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய இடங்களிளெல்லாம் சென்று எழுத்தாளர்களை வரவழைத்தேன். அதன்படி 1962 பெபருவரி 7ஆம் திகதி காலை, வி.எம். இஸ்மாயில், யூ.எல்.ஏ.மஜித், பஸில்காரியப்பர், காஸிம்பாவா, கலீல், எம்.ஏ.நுஃ மான், எஸ்.பொன்னுத்துரை, எம்.ஏறஹற்மான் இன்னும் பலர் நீலாவணன் வீட்டில் சமுகமளித்தனர். நல்லதோர் இலக்கியச் சந்திப்பாக அக்கூட்டம் இருந்தது. அக்கூட்டத்தில் "உத்திகளும் சிறுகதையும்" எனும் தலைப்பில் எஸ்.பொன்னுத்துரையின் கதைகளை உதாரணப்படுத்திநான் நீண்ட நேரம் பேசினேன். அக்காலம் எஸ்.பொன்னுத்துரையின் ஆக்கங்களை இலயித்துப் படிப்பவன் நான். பிரக்ஞை ஒட்டம் Stream of consciousneSS கதைக்கு எஸ்.பொன்னுத்துரையின் 'சைவர் பூஜ்யமல்ல, அ.முத்துலிங்கத்தின் அக்கா கதைகளை உதாரணப்படுத்தினேன். உபபாத்திரம் மேலெழும் Ring Larden Technique க்கு எஸ்.பொன்னுத்துரையின் "இரத்தம் சிவப்பல்ல" கதையையும், Flash back - பின்னோக்கல் உத்திக்கு எஸ்.பொன்னுத்துரையின் "மேடை", "வீழ்ச்சி" கதைகளையும், ஹெமிங்வே-படர்க்கை உத்திக்கு எஸ்.பொன்னுத்துரையின் சிறுகதையொன்றையும் கூறி எஸ்.பொன்னுத்துரை நினைவுக் குதிர்' எனும் உத்தியொன்றைக் கண்டு பிடித்து "குமிழ்" எனும் சிறு கதையை எழுதியிருக்கிறார் என்ற செய்தியையும் அங்கே எடுத்துரைத்துச் சிலாகித்தேன்.
கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் நிலைப்பாடும், எஸ்.பொன்னுத்துரைக்குத் தங்கப்பதக்கம் அளித்துக் கெளரவிக்கும் உறுதிப்பாடும் இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டன.
பகல் உணவு நீலாவணன் வீட்டில் இடம் பெற்றது. உணவுக்குமுன், பெருங்குடி மக்கள் சாராயம் குடித்தனர். நான் முஸ்லிம், சாராயம் குடியாதவன். அதை ருசித்துப் பார்க்க உள்ளங்கையில் ஊற்றி வாய்க்கெடுத்தேன். உண்மையில் யூ.எல்.ஏ.மஜீத் நான் குடிகாரனாகி விடுவேனோ எனப் பயந்தே விட்டார்.
இறுதியில் எம்.ஏ.நுஃமானின் பைசிக்கிளிலேயே நான் கல்முனை வந்தேன். வரும் வழியில் 21.01.1962 ஞாயிறு வீரகேசரியில் வெளிவந்த "அறியாமை" எனும் எனது உருவகக்கதை பற்றி எம்.ஏ.நு.மான்அதிகம் புகழ்ந்து சிலாகித்தார். அக்காலம் இலக்கியத்தில் அவர் கண்விடுக்காத பூனைக்குட்டிதான். இன்று எம்.ஏ.நுட்மானின் இலக்கிய வளர்ச்சி அபாரமானது.
பக்தம் 3 ‘ஓலை’ - 15 (ஏப்ரல் 2003)

Page 4
எஸ்.பொன்னுத்துரைக்குத் தங்கப்பதக்கம் சூட்டியதுடன் இவர்களுடனான தொடர்பு குறைந்துவிட்டது. ஆனால், இராட்சச வாசகனாகிய நீலாவணன் ஒரு வாரத்துக்குள்ளேயே புதுமைப்பித்தனை முழுதும் வாசித்து விட்டுப் புத்தகங்களை ஒப்படைத்துவிட்டார்.
1968களில் தர்கா நகர் ஸாஹிறாவின் "சுவை" என்னும் தட்டச்சு றோணியோ பத்திரிகையை எனது மேற்பார்வையில் மாணவர்களிடை ஏற்படுத்தினேன்.அதன் ஆசிரியர் எம்.ஜே.எம்.கமால் - இவர் இன்று 'திக்வல்ல கமால்' எனும் பெயரில் பிரசித்தமானவர். உதவி ஆசிரியர் வை.எம்.எம். ஹாபில். இவர் "அரும்பு" எனும் பிரபல்ய அறிவியல் சஞ்சிகையின் ஆசிரியராக இன்று பிரசித்தமானவர். "சுவை"க்கு ஒரு கவிதை கேட்டு நீலாவணனுக்கு எழுதினேன். அவர் அனுப்பிச் "சுவை"யில் பிரசுரமான கவிதை இதுதான்.
சுவை யாவும் எனக்கு நீயே
(ஏழை மனைவி, கணவன் வீட்டில் இல்லை. அவனில்லாதபோது அவளுக்கு மட்டும் சுவை உணவா? இல்லை! கீரைக்கறி. குப்பையிலே முளைத்திருந்த சிறு கீரை கொய்து வந்தாள். ஏதோ சமைத்தாள் கறி என்ற பெயரில், அதற்கு உப்புப்புளி.? யாருக்குத் தெரியும்? கணவன். இவன் வருவான் என்று இவள் எதிர்பார்க்கவேயில்லை. வந்துவிட்டான் அவன். உப்புப்புளி தாளிதங்கள் இல்லாத உணவை அவனுக்குப் பரிமாறினாள். அதையெல்லாம் கவனியாது அவன் சாப்பிட்டான். பாராட்டியும் பாடத் தொடங்கிவிட்டான்.
உப்பொழிந்தே போகட்டும் உளத்தண்பு பெருக்கெடுக்க உலையில் தீயால் வெப்பமுன துடல் புகுந்து முகமதியில் ஒளிர்கின்ற வியர்வை முத்து எப்படியோ கறியுள்ளும் இறங்கிற்றே அதன்இனிமைக் கிந்த உப்பு எப்படித்தான் நிகராகும் இனியவளே சுவையாவும் எனக்கு நீயே
‘ஓலை’ - 15 ஏப்ரலி 2003) Uóøó 4

புளி எதற்குக் கறியினுக்கு பொருள்தேட நான்பிரிந்த
பொழுதெல்லாம் பூம் பொழிலான உன்னிதழ்தான் பொழிந்தகவை அமுதெல்லாம் பொருந்தி நின்றே புளியாகி மதுவாகிப் போயிற்றே எழிலேநின் போதை முத்தம் அழிகின்ற பொழுதன்றோ அண்பேறீ புளியெணிணி அஞ்ச வேண்டும்!
குப்பையிலே முளைத்திருந்த
சிறுகீரைதனைப் பிடுங்கிக்
கொண்டு வந்தே
உப்பின்றிப் புளியின்றி
உவப்யூட்டும் தாளிதங்கள்
ஒன்று மின்றி
இப்படியோர் சுவைக் கறியை
இயற்றிவிடும் திறமைக்காய்
ஈவதற்கு
எப்பரிசும் தகுதியில்லை
இப்படி வா நானளிப்பேன்
இனிய முத்தம் இக்கவிதை நீலாவணனின் கவிதை வங்கியில் சேர்ந்திருக்குமா?இதன்
எழுத்துப்பிரதி அவர்கள் யாரிடமாவது இருக்குமா? என்பது சந்தேகம். அதனால், 10.11.2001இல் கண்டியில் நடந்த நீலாவணனின் "ஒத்திகை" கவிதைத் தொகுதி அறிமுக விழாவில், அத்தொகுதியை விமர்சிக்கச் சென்ற நான், அன்று நீலாவணனின் மகனார் எழில் வேந்தன் அவர்களிடம் இக்கவிதையைக் கையளித்தேன். நீலாவணன் பற்றிய வரலாற்றில் திரிபுகள் உண்டாகக்கூடாது என்பதற்காக இப்பதிவைச் செய்கின்றேன். நீலாவணன் இறுகிய கொள்கைப்பிடிப்பாளர். இதனால், எஸ்.பொ.நஹற்மான் கூட்டு நீண்டு நிலைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- தொடரும்
U640, 5 ‘ஓலை’ - 15 ஏப்ரலி 2003)

Page 5
புனிதநாட்களில் திருமண ஆலோசகரான என்னிடம் வாடிக்கையாளரின் வருகை குறைவு. இன்று வெள்ளிக்கிழமையும் நிலைமை அப்படியே.
இந்நேரம் முற்பகல் பத்தரை மணி. சற்று ஆறுதலாக இருக்கிறேன்.
தொலைபேசி மணி அடிக்கிறது. மணமகள் பகுதி வாடிக்கையாளர் ஒருவர் என்னுடன் தொடர்பு கொள்கின்றார்.
"மிக்கநன்றி ஐயா! நீங்க அனுப்பிய பையன்பிள்ளையின் ஒவ்வீஸ்சுக்குப் போய் - பிள்ளையைச் சந்தித்து - கதைத்து - சம்மதமும் தெரிவித்து இருக்கிறான்", தொடர்பாளர் மகிழ்ச்சியாகத் தெரிவிக்கிறார்.
ஆனால் எனக்கு அத்துமீறிப் போனதில் அதிர்ச்சியும், ஆதங்கமும்!
"நான் ஒருவரையும் அனுப்பவில்லையே! ஆர் அவர்?என்ன நடந்தது?." நான் விசாரிக்கிறேன்.
"நீங்க ராஜா என்ற யாழ்ப்பாண ரவுண் பையனை அனுப்பினிங்களாம். அவர் உங்கடை பேரைச் சொல்லித்தான் தன்னை அறிமுகம் செய்து, பிள்ளையோடும் கதைத்து இருக்கிறார்."
நான் தெரிவித்த பொதுத் தவகல்களுள் எப்படியோ சுழியோடி, அதிஸ்ட வசமாக பிள்ளை வேலை செய்யும் இடத்தை அறிந்திருக்கிறான் பாவி! ஆனால், பிள்ளையைப் போய் சந்திக்க முன் எனக்கு ஒரு சொல் சொல்லி. யிருக்க வேணும்! மற்றது பிள்ளையின் செளகரியத்தையும், சம்மதத்தையும் தெரிந்து கொள்ளாமல், போனது தவறு என்ற வருத்தத்துடன், "பையன் சொன்னது உண்மையல்ல, நான் சந்திப்பை ஒழுங்கு செய்யவும் இல்லை, அனுமதிக்கவும் இல்லை" என அறுதியாகச் சொன்னேன்.
"பறவாயில்லை ஐயா! எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்கு. இனித் தயவு செய்து இதைப் பெரிசுபடுத்தாதையுங்கோ. பையனுக்குப் பிள்ளையைப் பிடித்திருக்காம், பிள்ளை வேலை செய்யும் அதே ஒவ்வீஸிசிலை வேலை செய்யும் தனது நண்பன் ஒருவனைப் பிடித்து, ஒவ்வீஸிசிற்குள்
66
ஓலை’ - 15 (ஏப்ரலி 2003) су55ай 6
 

நுழைந்ததால், விசயம் எல்லாருக்கும் தெரிந்து போச்சு. சக ஒவ்வீஸ்சேஸ் பிள்ளையை வாழ்த்தியும் இருக்கினம்; சீவ் எக்கவுண்டன் - அவர் ஒரு சிங்களவர், அவர் தானாக பிள்ளையிடம் வந்து வாழ்த்தி இருக்கிறார். கேக்கும் வாங்குவிச்சு வெட்டி, கொண்டாடி இருக்கினம். என்ன எப்பிடியெண்டாலும், பங்குனியும் பறந்து விட்டுது அல்லே, கலியாண எழுத்தைக் கெதியாக வைக்கலாம் தானே!"
(2)
முற்பகல் பதினொரு மணி மணமகன் பகுதி முக்கியஸ்தர் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுகிறார்.
"ஐயா, ராஜா நேற்று ஒவ்வீஸ்சுக்குப் போய்ப் பார்த்த அசிஸ்டன் எக்கவுண்டன் சரிப்பட்டு வராது. பிள்ளைக்குக் களத்திர தோஷமும், மாங்கல்ய தோஷமும், கலியாணத்திற்குப் பிறகு பிரச்சினைகள் வருமாம்."
"பொருத்தமில்லாத சாதகம் என்றால், ஏன் ஒவ்வீஸ்சுக்குப் போய் பிள்ளையைப் பார்த்தனிங்கள்"
"பையனின் தாய் எங்களுக்குச் சொல்லாமல் கொள்ளாமல் நேற்றுத்தான் யாரோ இந்தியாவில் இருந்து வந்த சோதிடமெண்டு அவரிட்டை சாதகங்களைக் காட்டிப் பலன் கேட்ட இடத்தில்தான் சரிப்பட்டு வராது என்பது தெரிய வந்தது"
"சோதிடரைச் சாட்டாதையுங்கோ, சோதிடர் பாவம்!"
"பின்னடிக்குச் சரியில்லை எண்டால், எப்பிடிஜய்ா செய்கிறது?"உங்கடை பையனுக்கு எண்டால் செய்வியளா?" நான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்து பொறுமையை இழந்தேன்.
"உங்களுக்குப்பிள்ளை பொதுநிறம், சாதாரண தோற்றம் எண்டபடியால் பிடிக்கயில்லை. உண்மையைச் சொல்லுகிறதை விட்டு, என் வேறை கதை அளக்கிறியள்?"
"ஐயா, கோவியாதையுங்கோ! ஒரு மாதிரி சோதிடரைச் சாட்டி இதைச் சமாளித்துப் போடுங்கோ"
எனக்குக் கோபம் கொப்பளித்தது. கொதிப்பைச் சதாகரிக்கத் தவறிய நான் "பீங்கான் கடைக்குள் எருமை நுழைந்தது போல் அவசரப்பட்டு விட்டேன்." எனக் கடிந்து கொண்டேன்; பொழிந்தும் தள்ளினேன்.
(யாவும் கற்பனை)
Uśøó 7 ‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003)

Page 6
செங்கதிரோன் எழுதும் விளைச்சல் 62
(கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி)
அன்னம்மா முறைமச்சான் செல்லனுடனான
ன் பமைய நினைவகளை மீட்டுகிறாள்.
கல்முனைப் பள்ளி செல்லக் காத்தவள் நின்ற போது மெல்லிசாய் "அன்னம்..!" என்று மிதிவண்டி மீதில் வந்து சொல்லியே அழைத்து அன்று சொந்தத்தைத் தூக்கிவைத்த செல்லனை எண்ணிப் பார்த்தாள். சிறுநகை இதழ்கள் சிந்தும்!
"கத்தரிக் காயை ஆயக் காலைக்குள் நின்ற வேளை எத்தனை தரம்தான் அந்த இடத்திற்கு வந்து போனாய்..? சத்தியம் அத்தான்! உன்னைச் சந்திக்க ஆசை. ஆனால். உத்தமம் இல்லை. நாளை ஊர் வாயை மூடலாமோ?
மாலைக்குள் மறைப்பில் நின்று மறுகுவாய் ஒழுங்கைக்குள்ளே! காலைக்குள் கையைக்காட்டிக் காண்பித்து வா! வா! என்பாய்! நாளைக்கு வாவன் என்று நாளும் தான் அனுப்பி வைத்து தாலிக்கு நாளைப்பார்த்துத் தவித்தாளே! இந்த அன்னம்.
‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003) பக்கம் 8
 

ஊர்னலாம் உறங்கும் நேரம் உனைக்கானவென்றெ ஒர்நாள் பார்வதிப் பெத்த்ா வோடு * 'பள்ளயம்' பார்க்கப்போன நேரத்தில் நீயும் அத்தான்! நிழல் போனப் பின்னே வந்தாய்! ஊர்வம்பு சொல்லு மென்றே உன்னோடு பேசவில்லை"
பின்னாலே செல்லன் வந்து பேசாமல் கையைப் பற்ற "என்னத்தான்!" என்றாள் அன்னம், "இஞ்ச பார்!" என்று சொல்லி அன்னத்தின் கையைப் பொத்தி அமுக்கினான் காப்புச் சோடி. அந்நாளை எண்ணி நெஞ்சில் அன்னம்மா ஆனந்தித்தாள்.
பாண்டிருப்பு (கல்முனை) திரெளபதை அம்மன் கோயில் வருடாந்த (தீ மிதிப்பு) உற்சவம் தீப்பள்ளயம் என அழைக்கப்படும்
- இன்னும் விளையும்
| fulITElfsOL
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஊழியர்களாகக் கடமையாற்றிய திரு.சிவசண்முகமூர்த்தி வேறு கடமையேற்பதற்காகவும், திருமதி. சக்தி மனோகரி தனது கணவருடன் இணைந்து கொள்ளும் பொருட்டுக் கனடாவுக்குச் செல்வதற்காகவும் தங்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றனர்.
09.03.2003 ஞாயிறு காலை 10.00 மணிக்கு கொழும்புத்தமிழ்ச்சங்கம், குமாரசுவாமி வினோதன் கருத்தரங்கக் கூடத்தில் சங்கத் தலைவர் பெ.விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் சங்க ஊழியர்களின் ஏற்பாட்டில் இவர்களுக்குச் சேவைநலம் பாராட்டும், பிரியாவிடையும் இடம் பெற்றன. நினைவுப் பரிசில்களும் வழங்கப்பெற்றன.
இவர்களின் எதிர்காலம் சிறக்க 'ஒலையும் வாழ்த்துகிறது.
பக்தம் 9 ‘ஓலை’ - 15 ஏப்ரலி 2003)

Page 7
this
1. வள்ளுவன் உலகமா மேதை - அவன்
வாய்மொழி இதுவரை பொய்யானதில்லை! தெள்ளுதமிழ்க்குறள் வேதம்- மூன்று
செய்யும் - தவிர்க்கும் தியக்காதமுப்பால் 2. நூற்றுடன் முப்பத்துமூன்று - பக்கம்
நுட்பமுடன்பட்டை தீட்டியவைரம் ஏற்றுநாம் பார்த்திடும்போது - குறள் எப்பக்கமும் சுடர்வீசவே செய்யும்! 3. கையினில் வெண்ணெய் இருக்க - நெய்க்கு காசினிஎங்கும் அலைந்திடலாமோ? பொய்களில் வாழ்ந்திடலாமோ? - தூய
புனிதத்தை அழுக்கினில் புதைத்திடலாமோ? 4. தோல்வியே தந்தனர் அல்லால் - வெற்றி
சொல்லிடும்நூலை எவர்வரைந்தார்கள்? வால் மீகி, வேதவியாசர் - பெரும்
வார்த்தைகளாடினர். கடுகு தந்தாரோ? 5. ஆயிரம் நூல்படியாதீர்! - ஒன்றில்
ஆழுங்கள் மு.வ.உரையொடும் முற்றாய்! தீயுரை ஆரியம்வேண்டாம் -தேடி
திராவிட மரபுரை வாணரைக் காணிர் 6. இளைதாக முள்மரம் கொன்றே (879)- நிற்கும்
ஈழத்துச்சிக்கல் விடுவித்திருந்தால் களையுநர் கைகொல்லுமாமோ? - மரம்
காழ்ப்பேறுமாமோ - குறள்மறப்பன்றோ? 7. தமிழ்க் கணக்காயர், மாணாக்கர் - குறள்
தன்னுடன் தூங்கி விழித்தெழ வேண்டும்! அமிழ்தம் அமிர்தம் ஆகாது! - அதை
ஆவலுடன் உண்ண ஆயுள் நீடிக்கும்! குறள்வழி அரசு நடந்தால் - ஏதும்
குறைவருமோ, நாடும் காடாகுமாமோ? அறம் நெஞ்சில் இல்லாமைதானே - சிக்கல்
அனைத்திற்கும் அடிப்படை, வள்ளுவம் அஃதே!
தாமரைத்தீவான்"
‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003) UőSaó 10
 

ஈழத்து இலக்கியச் சிற்றிதழ் வரிசையில் மேலும் ஒரு புதிய வரவு
கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அதுவே மாபெரும் சக்தி என மகுடம் தாங்கி திருக்கோணமலையிலிருந்து வெளிவந்துள்ளது சுட்டும் விழி (காலாண்டிதழ்). இதன் வெளியீடு கொழும்புத் தமிழ்ச்சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்களின் ஏற்பாட்டில் 10.03.2003 திங்கள்கிழமை பி.ப.5.00 மணிக்கு பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தொடர்புகளுக்கு; யதீந்திரா (ஆசிரியர்) இல, 14 வைத்தியசாலை விடுதி திருக்கோணமலை
கவிதேசம்
புதிதாக வெளிவந்து கொண்டிருக்கும் கவிதேசம் கவிதைச் சஞ்சிகைக்கு கவிதைகள், கவிதைகள் சம்பந்தமான திறனாய்வுக் கட்டுரைகள், உலகக் கவிஞர்களின் மொழி பெயர்ப்புக் கவிதைகள் தேவை. எழுதும் விடயங்கள் எல்லாவற்றுக்கும் சன்மானம் உண்டு.
தொடர்புகள் : திக்கவயல் சிதர்மகுலசிங்கம் ஆசிரியர். கவிதேசம் 481, பார் வீதி, மட்டக்களப்பு
cJá4ú, 11 ‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003)

Page 8
சர்வதேச மகளிர்தின நிகழ்ச்சி
கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய சர்வதேச மகளிர்தின நிகழ்ச்சி "இலங்கையில் மகளிரின் இன்றைய நிலை" எனும் தொனிப்பொருளில், 08.03.2003 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குச் சங்கத்துணைத்தலைவர் புலவர் திருமதி பூரணம் ஏனாதிநாதன் அவர்களின் தலைமையில் கொழும்புத் தமிழ்ச்சங்கம், சங்கரப்பிள்ள்ை மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக சிலிங்கோ. கம்பனிகள் குழுவின் பிரதித்தலைவர் செல்வி. மாலா சபாரட்னம் அவர்கள் கலந்து கொண்டார். நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்துமகா வித்தியாலய ஆசிரியை திருமதிசுபாஷாமினி கந்தசாமியின் தமிழ்வாழ்த்துடன்நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. பின்வருவோர் உரைநிகழ்த்தினர். * திருமதி.வேலம்மாள் செல்லச்சாமி (மேல் மாகாணசபை உறுப்பினர்) * திருமதி.ஜெயந்தி விநோதன் (சட்டத்தரணி) * திருமதி தயாமணி இராஜரட்னம்
(பிரதிப்பணிப்பாளர் - கல்வித் திணைக்களம், கொழும்பு) * செல்வி. நாகபூஷணி கருப்பையா (அறிவிப்பாளர், தென்றல்) * திருமதி.சந்திரகாந்தா முருகானந்தம்
(ஆசிரியை, இரத்மலான இந்துக்கல்லூரி
கருத்தரங்கைச் செல்வி.சற் சொரூபவதி நாதன் நெறிப்படுத்தினார். தொடர்ந்து செல்வி. சற் சொரூபவதியின் நெறியாள் - கையின் கீழ், திருமதிதிலகா விவேகானந்தர்
எழுதிய "புதுப்புது அர்த்தங்கள்" நாடகம் இடம் பெற்றது.ஆட்சிக் குழு உறுப்பினர் திருமதி புவனேஸ்வரி அரியரட்னம் நன்றியுரை ஆற்றி:
60TITT.
‘ஓலை’ - 15 ஏப்ரல் 2003) Uő5ű 12
 
 
 
 
 
 

"பறவைகள்” நாவல் வெளியீட்டுவிழா
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் திரு.லெ.முருகபூபதி அவர்களின் "பறவைகள்" (நாவல்) -2001ம் ஆண்டிற்குரிய இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. வெளியீட்டு விழா, 09.03.2003 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு சங்கத் துணைத்தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் கொழும்புத் தமிழ்ச்சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக சமூக அபிவிருத்தி அமைச்சரும், நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ பிரதி அமைச்சருமான மாண்புமிகு பெ.சந்திரசேகரன் பா.உ. அவர்கள் கலந்து கொண்டார். திருவாளர்கள் பெ.இராதாகிருஷ்ணன் (பாராளுமன்ற உறுப்பினர்), கே.ரி.குருசாமி (கொழும்பு மாநகர. சபை உறுப்பினர்), கலாபூஷணம் செல்லத்தம்பி மாணிக்கவாசகர் (அகில இலங்கை சமாதான நீதவான்), நாகலிங்கம் நடராஜா (அகில இலங்கை சமாதான நீதவான்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில்
* தமிழ்வாழ்த்து - செல்வி பவித்ரா கிருபானந்தமூர்த்தி
* வரவேற்புரை - த.கோபாலகிருஷ்ணன் (இலக்கியச் செயலாளர், கொ.த.ச) * தலைமையுரை - பெ.விஜயரத்தினம் (துணைத்தலவர், கொதச)
* நூல் வெளியீட்டுரை - பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
(துணைக்காப்பாளர், கொ.த.ச.)
* நூல்நயம் - சிதம்பரப்பிள்ளை சிவகுமார் (இலங்கை-ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம்)
* சிறப்பு விருந்தினர் உரைகள்
* பிரதம விருந்தினர் உரை
* ஏற்புரை - செல்வி ஜெயபிரசண்யா நவரத்தினம்
ஆகியன இடம்பெற்றன. நூலின் முதற்பிரதியை மாண்புமிகு அமைச்சர் பெ.சந்திரசேகரன் அவர்களிடமிருந்து நீர்கொழும்பு புஸ்பா ஜுவலரி உரிமையாளர் திரு.எம்.ஏகாம்பரம் அவர்கள் பெற்றுக்கொண்டார். கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைப் பொதுச் செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். இவ்வெளியீட்டு விழாவின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொழும்புத் தமிழ் சங்கத்தின் இலக்கியச் செயற்பாட்டுக்குப் பயன்படுத்தப்படவேண்டுமென்று லெமுருகபூபதி அன்பளிப்புச் செய்திருந்தார்.
Uф3ф 1з ‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003)

Page 9
சிறப்பு விருந்தினர் உரை ஏற்புரை
"பறவைகள்” நாவல் வெளியீட்டுவிழா
‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003) U55ű 14
 

கலந்துரையாடல்
14.03.2003 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்க உறுப்பினர் திரு.நாகலிங்கம் நடராசா (அகில இலங்கை சமாதான நீதவான்) அவர்களின் தலைமையில் இலக்கிய இன்பம்' எனும் பொருளில் திரு.சீசிவப்பிரகாசம் அவர்களின் உரையும் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றமும் இடம் பெற்றது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 61 வது ஸ்தாபக தினவிழா
22.03.2003, 23.03.2003 இருதினங்கள் நடைபெற்றன. முதலாம்நாளான 22.03.2003 காலை 9.30 மணிக்கு அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் திரு.வி.கயிலாயபிள்ளை அவர்கள் கொழும்புத் தமிழ்ச்சங்க நூல்களின் கண்காட்சியையும் மலிவு விற்பனையையும் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். காலை நிகழ்வு சங்கத்துணைத்தலைவர் திரு.த.இராஜரட்னம்
மாலை நிகழ்வுகள் சங்கத்துணைத்தலைவர் டாக்டர் ஜின்னா ஷரிபுத்தின் அவர்களின் தலைமையில் நடைபெற்றன. கிழக்கின் அபிவிருத்தி முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.கே.சண்முகலிங்கம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சிப் பணிப்பாளர் திரு.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் முறையே பிரதம, சிறப்பு அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். தமிழ் வாழ்த்து - செல்வி.இந்துஜா கணேசராஜா, வரவேற்புரை -திரு.மு.கதிர்காமநாதன் ஜே.பி.(துணைத்தலைவர்,கொ.த.ச) ஆகிய நிகழ்ச்சிகளை அடுத்து, தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் ஜனாப்,ரமீஸ் அப்துல்லா அவர்கள் "கிழக்கிலங்கை வாய்மொழி இலக்கியம்" என்ற பொருளில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். பிரதம, சிறப்பு அதிதிகளின் உரையின் பின்னர் திருமதி.வயலற் சந்திரசேகரம் குழுவினரின் ஈழத்துச் சுந்தராம்பாள் பாடலும், பல்சுவையும் கலைநிகழ்ச்சியும் இடம் பெற்றது. திரு.வ.சிவசோதி (ஆட்சிக்குழு உறுப்பினர், கொ.த.ச)நன்றியுரை நிகழ்த்தினார்.
U66d, 15 ‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003)

Page 10
தமிழ் வாழ்த்து
பிரதம அதிதியை
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 81 வது ஸ்தாபக தினவிழா
‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003) பக்தம் 16
 

23.03.2003 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5.30 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி.இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாகதிரு.எஸ்.சுப்பிரமணியம் செட்டியார் ஜே.பி.(பிரதம அறங்காவலர், புதிய கதிரேசன் கோயில், கொழும்பு04) அவர்களும் சிறப்பு அதிதியாக திரு.எஸ்.தியாகராசா (அதிபர், எஸ்.ரி.ஆர். பிலிம்ஸ்) அவர்களும், கலந்து சிறப்பித்தனர். தமிழ்வாழ்த்து - செல்வி பவித்ரா . கிருபானந்த மூர்த்தி, வரவேற்புரை திரு.வி.ஏ.திருஞானசுந்தரம் ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து, மலையக கலை இலக்கியப் பேரவைத் தலைவர் எழுத்தாளர் சாரல்நாடன் அவர்கள் மலையக இலக்கியம் - மறுபக்கம்" என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
謚 鳶 鑫* a
பிரதம அதிதியை வரவேற்றல்
சிறப்பு அதிதியை வரவேற்றல்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 61 வது ஸ்தாபக தினவிழா
சிறப்புச் சொற்பொழிவு
Uágú 17 ‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003)

Page 11
ஒலை -14வது இதழ் வெளியீடு
கொழும்புத் தமிழ்ச்சங்க மாதாந்த மடல் ஒலையின் 14வது இதழ் சங்க ஸ்தாபகதின விழாவின் போது 23.03.2003 அன்று சங்கத்தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் முதற்பிரதியை 'ஒலை' ஆசிரியரிடமிருந்து எஸ்.ரி.ஆர்.பிலிம்ஸ் அதிபர் திரு.எஸ்.தியாகராசா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தமிழக அறிஞர்களின் இலக்கியச் சொற்பொழிவுகள் 26.03.2003 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கத் துணைத்தலைவர்
பெ.விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பின்வரும் தமிழக அறிஞர்கள் உரையாற்றினர்.
திரு.செல்லக்கணபதி - "குழந்தைகளுக்குப் பாட்டும் கதையும்" திருபூவண்ணன் - "சிறுவர் இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்
இந்நிகழ்ச்சியில் கனடாவிலிருந்து வருகை தந்திருந்த கனடா அணுசக்தி அதிகாரசபையின் முன்னாள் தலைவரும், Carlton பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளருமான டாக்டர் இலகுப்பிள்ளை அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003) uś5ć 18
 

கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் கூடிப்பயில்வோம்
y y
மாணவ மாணவிகள் வழங்கிய நியதி 29.03.2003 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. முழுநிகழ்வுகளும் சிறுவர்களாலேயே நிகழ்த்தப்பெற்றன. நிகழ்வின் இறுதியில் மூத்த எழுத்தாளர் திரு.வ.இராசையா அவர்கள் கருத்துரை வழங்கினார். இந்நிகழ்வினை கல்விச்குழுச் செயலாளர் த.சிவஞானரஞ்சன் மற்றும் த.ஜீவாகரன் வ.சிவசோதி (ஆட்சிக்குழு உறுப்பினர்) ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர்.
அறிவோர் ஒன்று கூடல் - இலக்கியச் சொற்பொழிவு
திகதி விடயம் நிகழ்த்தியவர்
05.03.2003 கலித்தொகையில் முல்லைக்கலி மட்டுவில் ஆநடராசா
(198)
12.03.2003 மெல்லத் தமிழ் இனிச் சாகும். சோக்கல்லோ (199) (ஜேர்மனி அனுபவ உரை) சண்முகநாதன்
19.03.2003 கலித்தொகையில் 'நெய்தற்கலி மட்டுவில் ஆநடராசா
(200)
நால்நயம் காணர்போம். 05.05.2000இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30மணிக்கு நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் இலங்கை எழுத்தாளர்களது நூல்கள் நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி நூலின் பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
21.03.2003|செவ்வானம் (நாவல்)|செகணேசலிங்கன்திரு.கே.ரீராகவரா8g6 (106) ஆசிரியர் கொழும்பு
றோயல் கல்லூரி
2ஜ032003இலங்கை எழுத்தாளர் திரு.எஸ் திரு.முருகேசு (107) களின் இருபத்தாறு சிறு ெ ரு. இரவீந்திரன்
கதைகள்(சிறுகதைத் செல்வகுமா (இலங்கை ஒலிபரப்புக் தொகுதி) கூட்டுத்தாபனம்)
சங்கப்பலகை தயாரிப்பு : சி.சரவணபவன் (ஆட்சிக்குழு உறுப்பினர்)
Uá5dì 19 ‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003)

Page 12
09.03.2003 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய இலங்கைச் சாகித்திய மண்டல பரிசுபெற்ற திருலெமுருகபூபதி அவர்களின் "பறவைகள்" (நாவல்) நூல் வெளியீட்டு விழாவிற்கு முருகபூபதியின் செய்தி
மதிப்பிற்குரிய - தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கலாசூரி சிவகுருநாதன் அவர்கட்கும் - மாண்புமிகு அமைச்சர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் - மாநகரசபை உறுப்பினர்கள், சமூக நலன் விரும்பிகள், கல்விமான்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள்- அறிஞர்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கம்.
வெளியிடப்படும் நாவலின் ஆசிரியர் பிரசன்னமின்றி நடைபெறும் விழாவில் -யார் - யார் என்ன பேசுகிறார்கள் என்பதை அறியமுடியாமலேயேஎனது கருத்துக்களை நன்றியறிதலுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
நான் எழுத்துலகில் பிரவேசித்த காலம் முதலே கொழும்புத் தமிழ்ச் சங்கத்துடன் எனக்குத் தொடர்புகள் இருந்து வருகின்றன.
நான் அங்கம் வகிக்கும் - இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பல நிகழ்ச்சிகளை இச்சங்க மண்டபத்தில் நடத்தியிருக்கிறது.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்திற்கே தனியாக ஒரு வரலாறு உண்டு. தலைநகரில் தமிழ், கலை, இலக்கிய, கல்வி, சமூகப்பணிகளை மிகுந்த ஆரோக்கியமுடன் தங்குதடையின்றி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தமிழ்ச்சங்கத்திற்காகக் கடுமையாக உழைத்த, உழைத்து வரும் அன்பர்களின் செயற்பாடுகள் குறிப்பிட்ட வரலாறில் இடம்பெறத்தக்கவை.
இன்றுப்பறவைகள் வெளியீட்டு விழாவில் நீங்கள் அனைவரும் கூடியிருக்கிறீர்கள். இதனை நடத்தும் சங்கத்தின் மீதும் - தமிழ் இலக்கியத்தின் மீதும் தனிப்பட்ட முறையில் என்மீதும் தங்கள் அனைவருக்கும் உள்ள விசேட அக்கறையின் நிமித்தமே இங்கே குழுமியிருக்கிறீர்கள்.
எனது நினைவுகள் என்றும் உங்கள் அனைவரதும் வசத்தில்தான் என்பதை நம்பிக்கொள்ளுங்கள். அந்தநம்பிக்கையுடன்பறவைகள் நாவலைப் படித்துப்பாருங்கள்.
இது எனது முதலாவது நாவல்.
எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம் தான் வாழ்க்கை. நான் புலம் பெயர்ந்தது தற்காலிகமானது தான். அதே சமயம் எதிர்பாராததும்தான்.
‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003) பக்கம் 20

புலம்பெயர்ந்த பின்பு நிகழ்ந்தவையும் எதிர்பாராதவைகள் தான்.
இந்தப் பறவைகள் நாவலுக்குச் சாகித்திய விருது கிடைத்ததும் எதிர்பாராத நிகழ்வுதான்.
விருதுகளை, பரிசில்களை, பாராட்டுதல்களை எதிர்பார்த்து எந்தவொரு படைப்பாளியும் எழுவதில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து.
எழுத்து ஒரு வகையில் தவம்.
விருதுகள் அங்கீகாரம்,
இந்த அங்கீகாரத்திற்காகப் படைப்பாளி தவம் இருப்பதில்லை.
g5607 g5. U60DL I60dU மாத்திரமே தனது தவத்தின் வெளிப்பாடாகப் படைப்பாளி முன்வைக்கின்றான்.
பறவைகள் - இலங்கை மக்களின் -எனது தாயகத்தின் புதல்வர்கள். புதல்வியர்களின் இடப்பெயர்வை - புலப்பெயர்வைச் சித்திரிக்கின்றது.
எங்கள் தேசம் நன்றாகக் காயப்பட்டு விட்டது. அந்தக் காயம் குணப்படுத்தப்பட வேண்டும். காயப்படுத்தியவர்களே - காயத்திற்கு மருந்து தேடி அலையும் காலத்தில் நாம் வாழ்கின்றோம். இங்குதான் படைப்பாளியின் பணியாது என்ற கேள்வி எழுகின்றது.
மனிதநேயம்தான் ஒரு படைப்பாளியின் மிகப்பெரிய பலம். அந்தப் பலம் பிரயோகிக்கப்படவேண்டியது. எழுத்தில் மட்டுமல்ல - செயலிலும் தான்.
எங்கள் தேசம் - யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொழுது - பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். ஒவ்வொரு யுத்தத்திலும் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.
நடந்து ஒய்ந்துள்ள யுத்தம் விதவைத் தாய்மாரினதும் காலம் கடந்தும் கணவனுக்காக ஏங்கியிருக்கும் கன்னியரினதும் எண்ணிக்கையைப் பெருக்கியுள்ளது.
யுத்தச் சூழலினால் இடம் பெயர்ந்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் - தேசம் விட்டு தேசம் புலம் பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் வாழ்வின் மீதான நம்பிக்கைகளுக்குச் சவால்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவிய மண்ணிலேயே தன் குழந்தையும் தவழ்ந்து விளையாடவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் - ஏக்கப் பெருமூச்சுகளை விட்டபடி - இடம்பெயர்ந்தவர்களும் புலம்பெயர்ந்தவர்களும் பொழுதுகளைக் கழிக்கின்றனர்.
Uő5ó 21 ‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003)

Page 13
நாம் அனைவரும் பறவைகளாகப் பறந்து கொண்டிருக்கிறோம். ஆகாரத்திற்காகப் பறவைகள் தரையை நாடுவது போன்று - இடம் பெயர்ந்தோரும்புலம்பெயர்ந்தோரும் தம் தாயகமாம் தரையை நாடுவதற்கே பெரிதும் விரும்புவர்.
மனித உரிமைகளுக்காகவும் - ஜனநாயகத்திற்காகவும்- சமாதானத்திற்காகவும். இன ஐக்கியத்திற்காகவும் சிந்தித்துச் செயல்படும் அன்பர்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள்.
உங்கள் அனைவரதும் பேராதரவுடன் இந்த விழா இங்கு நடத்தப்படுகின்றது. உங்கள் ஆதரவு கொழும்புத் தமிழ்ச்சங்கத்திற்கு இந்த விழாவின் மூலமும் கிடைத்திருப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
எனக்கு நீங்கள் வழங்கும் உற்சாகமான ஆதரவை - ஏனைய எழுத்தாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று அன்போடு கோருகின்றேன்.
"புத்தகம்:, "பத்திரிகை" - "சஞ்சிகை" என்றவுடன் அது ஏதோ இலவசமாகப் பெறப்படவேண்டிய ஒரு பண்டம் என்ற மரபே எம்மவர் மத்தியில் வளர்ந்துள்ளது. நாம் எது எதற்கோ பணத்தை வீணாகச் செலவழிக்கின்றோம். ஆனால் காலம் காலமாக அழியாமல் இருக்கக்கூடிய ஒரு படைப்பு நூலை விலை கொடுத்துப் பெறுவதற்குத் தயங்குகின்றோம்.
வீட்டுக்கு ஒரு குடும்ப நூலகம் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு தனி மனிதரும் வாசிப்பினால் முழுமையாவார். "வாசிப்பு மனிதனை முழுமையாக்கும்" என்றார் காந்தியடிகள். எனவே வாசிக்கும் இயக்கம் எம்மிடம் தோன்ற வேண்டும். இன்று எம்மவரின் படைப்புகள் நிறைய வெளியாகின்றன. உங்கள் ஆதரவு - எமது எழுத்தாளர்கள் அனைவருக்கும் தேவை.
மல்லிகை ஆசிரியர் திரு.டொமினிக் ஜீவா அவர்களினால் 1972இல் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டேன். எனது முதலாவது சிறுகதைத் தொகுதிக்கும் - முதலாவது நாவலுக்கும் சாகித்திய விருது கிடைத்துள்ளது. இந்தப் பெருமையெல்லாம் என்மீதும், இலக்கியத்தின் மீதும் அன்பு செலுத்தும் உங்கள் அனைவரையும் சாாந்தது.
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. வணக்கம்.
முருகபூபதி
P.O. Box 350, Craigieburn, Victoria 3064, Australia
‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003) Uóóó 22

(1) பொங்குதமிழ் வீறுகொண்டு
பூரித்து நிற்கையிலே நங்கதவை டெங்குருவில் நமன்தட்ட - எங்களது மருத்துவர்கள் தலைசொறிய மட்டக்களப்பினிலே பெருத்தப்பயப்பீதி வந்ததே!
(2) குண்டாலே வாராத
குலைநடுக்கம் நுளம்பினையே கண்டாலே வருகிறதே கண்ணே - "ஒண்டாலும்" தீராத டெங்காம் செய்யஒரு மருந்திலையாம் வீராவேசம்பேசல் வீண்!
(3) கத்திவைத்துக் கழுத்தைக்
கத்தரித்துக் கொன்றாலும் நித்திரையில் செத்தாலும் நிம்மதியே! -குத்திவிட்டு ஒடும் கொசுபரப்பும் டெங்கின் உயிர்வதையால் வீடும் எமலோகமே!
(4) ஆண்கொசுக்கள் சாறருந்தி
அவைபாட்டிலேயிருக்க ஏன் இந்தப் பெண்கொசுக்கள் இரத்தத்தை தான் விரும்பி குடிக்கின்றதாம்?குறைவயதிலேயே
டெங்குக் கவிதைகள்
(5) காதருகே கிணுகினுத்துக்
காதல் மொழிசொல் கொசுவே
சாதலுக்கு வைரஸ் தருதற்கு -ஏதுவெனக் கண்டபின்னும் நுளம்புக் கடியைத் தடுக்காமல் "நிண்டு"கதைக்கின்றாயே நீ!
(6) சுற்றிச் சுற்றிப் பறந்தே
சுள்ளென்று ஊசிபோட்டு சற்றுநேரத்தில்இரத்தம் சாப்பிட்டும் - தொற்றுகிற வைரஸ் பரப்பும் நுளம்புகளை மாய்க்காமல் செய்வதெல்லாம்வீண்தெரி.
(7) காய்ச்சல் தலையிடியும்
கண்கள் பின்னால் வலியும் வீச்சான தசைமூட்டில் வேதனையும் - மூச்சினுடன் குருதிப் பெருக்குகுமட்டல் மல சலத்துடனே, இறுதிநிலைடெங்குக் கிது.
(8) சூழல்சீர் கேடும்
சுகாதாரக்குறைபாடும் ஆழ உணராத அறிவீனம் - வேளைக்கே முன்தடுப்பு முயற்சியிலை
உயிரை முடிக்கின்ற முறைகேட்டுச் செயல்களதன் தாம் அறியமுனை! பின்விளைவேடெங்குப்பேய்!
"அக்கரைச்சக்தி"
Uásó 23 ‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003)

Page 14
DGOOL GOOOOTDDGOD
ஒலையிதழ் சிலளனக்கு உவந்துனுப்பியிருந்தீர்கள் வேளைக் கெனதுகரம் கிட்டியது. கோலமிகு தமிழன்னை தனையிங்கு சால்புடனே காக்குமுங்கள் தமிழ்ச்சங்கத் தனித்துவமே தான்!
அறிஞரைப் போற்றி, நூல் ஆக்கங்கள் நெய்தும் திருக்குறளாய்வுகளும் செய்திங்கு - பெருமையாய்த் தமிழ்ப்பணி செய்துவக்கும் தமிழ்ச்சங்கந் தன்னை அமிழ்தெனப் போற்றுவோ மாம்!
ஆன்மீக வுரைகளும், கலைஞர் கெளரவிப்பும் நூன்னயம் காணலும் உவப்பதே
தேன்தமிழ் அறிவோ ரொன்றுகூடல் அனைத்தும் நடத்துகிற பெருமையும் சங்கத்திற்கே யாம்!
சொல்வளம் பெருக்கவு மோர்பகுதியுருவாக்கி தெள்ளுதமிழ் வளமதனைத் தெளிவாக - சொல்லுகிற பன்மொழிப் புலவர்,த கனகரத்தினம்ஜயா வின்சேவை தொடரட்டு மினிது!
ஆழிசூழ் ஈழமண்ணில் அழகுதமிழ் மொழியதனை வாழி! என சங்கம் வைத்து வளர்க்கின்றமேலோரை வாழ்த்துக்கிறேனோலையிதழ் உலகெலாம் பரந்து வாழ்தமிழர் மனைசேர்தல் நன்று!
பன்னிரெண்டாம் இதழ் பாமன்னன் நீலாவண னென்னுங் கவிஞர்க்கு நினைவிதழாம் - என்கரம் கிட்டியதும்பிரித் திட்டமுடன் வாசித்தேன் மட்டுண்ட வண்ணம் மனம்! O
- தெமோதரை குறிஞ்சிவாணன்
31. சாகாமம். தம்பிலுவில், திருக்கோவில்.
‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003) பக்கம் 24

உதவும் கரங்கள்
ஒலை ஓங்கி வளர்வதற்காக உதவிக் கரங்கள் வழங்கிய இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்
திரு.ஜெயம் விஜயரத்தினம், கொழும்பு-03 10,000.00 எஸ்.தியாகராசா, கொழும்பு 10,000.00 என்.கணேசலிங்கம், நீர்கொழும்பு 1,800.00 எஸ்.தங்கவேலு, நீர்கொழும்பு 500.00 செங்கையாழியான் 500.00 ச.அருளானந்தம், திருகோணமலை : 500.00 வை.கங்கைவேணியன் 300.00 அன்புமணி.இரா.நாகலிங்கம் 250.00
ஒலை யின் 12வது இதழ் நீலாவணன் சிறப்பிதழாக.
கொழும்புதமிழ்ச்சங்கத்தின் வெளியீடான "ஒலை"நீலாவணன் நினைவுச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.இப்பன்னிரெண்டாவது இதழ் பல சிறப்பம்சங்களைத் தாங்கி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் பணியையும், இலக்கியப் பணியையும் சிறப்பாக ஆற்றிவரும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் நிகழ்ச்சிகளைக் குறிப்பாக வெளிவந்துகொண்டிருந்த "ஒலை" சஞ்சிகை கவிஞரொருவரின் இலக்கியப்பதிவினைத்தாங்கி வெளிவந்திருப்பது சிறப்பு இதே வகையில் தொடர்ந்தும் இவ்வாறனதொரு இலக்கியகர்த்தாவினை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் சஞ்சிகையாக "ஒலை வெளிவருமானால் பாராட்டத்தக்கது.
தமிழ் கவிதையுலகுக்குத் தம் படைப்பாற்றல் மூலம் பெருமை சேர்த்த கவிஞர் நீலாவணன் தம் குறுகிய கால இலக்கியப்பிரவேசத்திற்குள் சாதித்தவை என்ன என்பதற்கு இந்த ஒலை இதழ் ஒரு சிறப்பான சான்று.உலக இலக்கியத்தோடு போட்டி போட்டுக்கொண்டு அதற்கு நிகராக ஈழத்து இலக்கியத்துறை வளர்ச்சியுற்றுள்ள இச்சந்தர்ப்பத்தில், அதன் வளர்ச்சிக்கு தோள் கொடுத்தவர்கள், அதற்காகவே வாழ்ந்து அர்ப்பணித்தவர்களை போற்றப்படவேண்டியதும், நினைவுகூரப்படவேண்டியதும் அவசியமானதே.
இதனடிப்படையில் "ஒலை"யின் தொடர்ந்துவரும் இதழ்கள் இதனை அடியொற்றியதாக வெளிவருமானால் இலக்கிய உலகு மகிழ்ச்சியுறும்.
அறுபதுகளிலிருந்து புத்துணர்ச்சி பெற்று புதிய பரிமாணங்களை எட்டியுள்ளது. ஈழத்துக்கவிதையுலகம். இதற்குக் கவிஞர் நீலாவணனின் பங்களிப்பு அளப்பரியது. கவிதைகள் வாழும்வரை அன்னாரின் நினைவுகளும் வாழும். தினகரன் கலை இலக்கிய பகுதியூடாகவும் அமரர் கவிஞர் நீலாவணனுக்கு அஞ்சலிகள்,
எல்.செல்வா நன்றி - தினகரன் (28.03.2003
U63d 25 ‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003)

Page 15
அவர்களுக்குள்ளும்
நீபி.அருளானந்தம்
எங்களுக்கெல்லாம் அந்தக் கெடுதியான சம்பவம் நடந்த திகதி சரியாக என் ஞாபகத்துக்கு வரவில்லை.
அன்று என்ன கிழமை என்பதும் என் நினைவில் இல்லை.
நேரம் என்னவென்று மட்டும் நன்றாக ஞாபகமுண்டு. அந்த ஆண்டும் அச்சுப்போல் மனதில் பதிந்திருக்கிறது.
சரியாக அந்த அண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஐந்தாம் ஆண்டு . இதைச் சரியாக சொல்லிவிட்டேன். நேரம் காலை (கிட்டமுட்ட ஐந்துமணி). இதுவும் ரொம்பச் சரி. அன்று விடியற் பொழுதிலே வழமைபோல என் மனைவி நித்திரையால் எழும்பி விட்டாள். நானும் அந்தவேளை மனோற்சாகமாய் எழுந்து கொண்டுவிட்டேன்.
அதிகமாக வீட்டிலே உளுந்துத் தோசைதான் காலையிலே எங்கள் குடும்பத்தினருக்குச் சாப்பாடு. அன்றும், முன்னைய இரவில் ஆட்டுக்கல்லில் ஆட்டி வைத்த உளுந்துமாவை தோசைக்கல்லில் ஊற்றி அவள் தோசையைச் சுட ஆரம்பித்தாள்.
எங்கள் வீட்டுக் குசினிக்குப் பின்னால் உள்ள பெரிய நிலப்பரப்பில், ஒரு மூலையில், வேலியோரமாக உயரித்த பலாமரம் ஒன்று நன்றாக கிளைவிட்டுச் சடைத்துப்போய்நிற்கிறது. மரத்துக்குக் கீழே அந்தக் கருமிருட்டுக்குள்போய் சலவாதிக்குப் போக முழங்காலை மடித்துக் குந்தியபடி நான் இருந்தேன். பலாப்பூவின் வாசம் வழமையான மூத்திர நாற்றத்தை அமுக்கியிருந்தது.
ஒன்றுக்கிருந்த பிறகு நடந்து வீட்டுக்கு முன்னே உள்ள வேப்பமரத்தடிக்கு வந்தேன். வீட்டு முற்றத்தில் பதியம் போட்டிருந்த மல்லிகை இப்போது பூத்திருக்கிறது.
சுர். என்று மனைவி தோசை ஊற்றும் சத்தம் படலையடியில் நிற்கும் போதும் எனக்குக் கேட்கிறது. தோசையின் வாசனை நல்லெண்ணெய்க் கமறலுடன் வீசிக் கொண்டிருக்கிறது. என் கைக்கெட்டின மட்டும் கீழே கிளை
& G 99
ஓலை’ - 15 (ஏப்ரலி 2003) Uásó 26
 

நீட்டிக் கொண்டிருந்த வலுவல்ல வேப்பமரத்தின் மென் கெட்டில் பிடித்து நேரானதொரு குச்சி உடைத்தேன். அதை ஒருபக்கம் வாயில் வைத்து பற்களால் கடித்து நுனியை மென்மையாக பாகமாய், பல்லைத் தீட்டக் கூடியதாய் ஆக்கினேன். வேப்பம் கைப்புச்சாறு வாய்க்குள் புரண்டு கிடந்த உமிழ்நீரை ஊற்றெடுக்கச் செய்தது. காலை வெறுவாய்க்கு அது ஒரு இதம், சாற்றை வாய்க்குள் சிறிது வைத்தபடி மல்லிகைப் பந்தலைப் பார்த்துக் கொண்டு ஒருவாறு பல்துலக்கி முடித்தேன்.
கிணற்றில் தண்ணீரள்ளி வாயைக் கொப்பளித்து நான் கை, கால், முகம் கழுவிவர மூத்த மகனும் நித்திரை விட்டு படுக்கையால் எழும்பி விட்டான். அவனும் உமியை வாயில் போட்டுக் கொண்டு பற்களைத் தீட்டி முகம் கழுவி முடித்தான்.
வேப்பமரத்திலே காகங்களின் அட்டகாசம் நடந்து கொண்டிருக்கிறது. விடியலில் எல்லாக் காகங்களும் போடும் கா. கா. என்ற கூப்பாட்டில் காலைச் சோம்பலே எனக்குப் பறந்து விட்டது.
மகனொருபக்கம். நானொரு பக்கமாய் தோசையைச் சாப்பிட குசினியிலுள்ள பலகைகளில் உட்கார்ந்து கொண்டோம். வேளைக்கே சட்னியையும் மனைவி தயார் செய்து விட்டிருந்தாள். தோசைச் சட்டியிலிருந்து சுடச்சுட தோசையை எடுத்து எங்கள் தட்டுக்ளில் போட முறுகல் பதமான அந்தச் தோசைகளை விள்ளல் விள்ளலாகப் பிட்டு எடுத்து சட்னியில் தொட்டு நானும் மகனும் சுவையாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
"அம்மாவுக்கும் தோசையைக் குடுத்தனுப்பும்" நான் மனைவியிடம் சொன்னேன்.
"எட்டு மணிக்குத்தான் மாமி , நித்திரையால எழும்புவா. பள்ளிக்கூடம் போக முதல் இவன் அங்க மாமிக்குக் கொண்டுபோய்க் குடுத்திட்டுத்தான் போவான்"
எனக்குத் தெரியும். மாமியில் அவளுக்குப் பாசமிருக்குதென்று. என்றாலும், காலையிலேயே குடும்ப அக்கறை எனக்கும் இருக்கிறதென்று அவளுக்குக் காட்ட வேண்டுமே. அதற்காகத் தான் நானும் அவளுக்கு இதை ஞாபகமூட்டினேன். மகன் தோசையைச் சாப்பிடாமல் ஒரு விள்ளலை கையில் வைத்து உருண்டையாகப் பிடித்துக் கொண்டிருந்தான்.
"விளையாடாமல் வடிவாச் சாப்பிடன் மேன்." நான் மகனைப் பார்த்துச் சொன்னேன்.
"அம்மா சட்னி போடுங்கோ." என்று அவன் தாயைக் கேட்டான்.
Uééd 27 ‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003)

Page 16
"சம்பலை மட்டும் தின்னாம தோசையைத் தின்னு.தேங்காய்தான் இப்ப விலை." என்று அவள் பிள்ளையை அதட்டினாள்.
"நீ. உறைப்பைக் கணக்கத்தின்னாத.வயிறெரியப்போவுது"இதை நான் அவனுக்குச் சொன்னேன்.
.காகங்கள் கூட்டமாக வேம்பிலிருந்து பறந்து விட்டது. ஓரிரண்டு காகங்கள் மரத்தில் எஞ்சியதாய் இருந்து கொண்டு கர்.கர். என்று பனிக்குளிருக்காக்கும் சத்தம் போடுகின்றன. கோபாலாச்சியின் நாட்டுச் சாவல்கள் போட்டிக்கு உரக்கக் கூவிக்கொண்டு இப்போ இருக்கின்றன.
குசினிவாசலில் பானை சட்டி கழுவுகிற இடத்தில் நிற்கிற பப்பாசிகுண்டு குண்டாய் நெருங்கியடித்துக் காய்காய்த்திருக்கிறது. அந்த மரத்துக்குக் கீழே நீலப்பூக்கள் கொத்தாய் பூத்திருக்கும் தூதுவளைச் செடியொன்றும் பற்றையாய்ப் படர்ந்திருக்கிறது.
பலாக்கொட்டையளவு உருவம் கொண்ட ஒரு குருவி வீச். வீச்.சென்று கத்தியபடி தத்திக்கொண்டு அந்தச் சிறு கெட்டுகளிலே மாறி மாறி இருந்து கொண்டுதன்மதர்ப்பைக் காட்டுகிறது. சாப்பிட்டபடி இவைகளையும் பார்த்துக் கொண்டு நான் இருக்க. வீச்சென்ற. அந்த ஒரு கத்தலோடு. குருவி. விர்ரெனப் பறந்து விட்டது. அது பறந்து போன பின்பும் அங்கேயிருந்து என் கண்பார்வையை வேறுபக்கத்துக்கு நான் விலத்தவில்லை. அதற்குள்ளேதான்.
"டமார்.'
என்ற அந்த வெடிச்சத்தம். என் காதுகளை செவிடாக்கியது போல் இருந்தது. அந்தச் சத்தத்தில் எனக்கு அடிவயிற்றில் இடி விழுந்தாற்போல் இருந்தது. சதிரம் பதறியது. அந்தப் பயத்தால் நலுங்க நெஞ்சடிக்க அதிகரித்தது. •
"கேம்புக்கு முன்னால இருந்துதான் அந்த வெடிச்சத்தம்" இதை ஊகித்து நான் மனைவிக்குச் சொல்ல.
"ஐயோ!.ஐயோ!.." என்று அவள் கையிலிருந்த சட்டுவத்தை கீழே நிலத்தில் போட்டுவிட்டு வாய் குளறியபடி விதிர் விதிர்த்து நடுங்கிக் கொண்டிருக்கிறாள். கருமான் பட்டறைபோல் நாசியிலிருந்து ஆவியடிக்கும் அனல்மூச்சு அவளிடமிருந்து வெளிப்படுகிறது.
அவளை நடுங்காதே என்று தைரியம் சொன்னேன். ஆனால் எனக்கும் நடுங்குகிறது.
பிள்ளைகளெல்லாம் அந்த வெடிச்சத்தத்துடன் பாயிலிருந்து எழுந்து
G 99
ஓலை’ - 15 (ஏப்ரலி 2003) суé5ф 28

வந்து விட்டார்கள். கோழிக்குஞ்சுகள் தாய்க்கோழியின் சிறகுக்குள் தஞ்சமடைவது போல அம்மாவின் காலைக் கட்டிப்பிடித்தபடி நிற்கிறார்கள். புறா நடுங்குவது போல என் பிள்ளைகளெல்லாம் நடுங்குகிறார்கள்.
"என்ன செய்யிறது?. என்ன செய்யிறது.?"மனைவி பதைபதைக்கிறாள்.
"என்ன செய்வம்?. என்ன செய்வம்.?"நான் அவளைக் கேட்கிறேன்.
"இங்க இருக்க வேணாம். கெதியா இங்கயிருந்து வேற எங்கினையாவது போயிடுவம்" அவள் அந்தரப்படுகிறாள். பிள்ளைகள் திருதிருவென்று முழிக்கிறார்கள். அந்த இடத்திலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் என்ன?. வழிமுறைகள் என்ன? என்பதைத் தேடும் உந்துதலில் நான் இருந்து கொண்டிருக்கிறேன்.
மூத்தவன் போய் வானொலிப்பெட்டியைத் தூக்குகிறான். இளையவன் போய் வீட்டுப்படியாலே துவிச்சக்கர வண்டியை முற்றத்தடிக்கு இறக்குகிறான். மனைவி ஒரு பையில் சீலைகளையும் பிள்ளைகளின் உடுப்புகளில் சிலவற்றையும் வைத்துத் திணிக்கிறாள். நான் "அம்மா. என்ரை அம்மா" என்று அவர்களைப் பார்த்து குளறியபடி நிற்கிறேன்.
"ஆறியமர்ந்து யோசிக்க நேரமில்லை. அவவைப்போய்க் கூப்பிடுங்கோ. கெதியா அவவைப் போய்க் கூட்டியாருங்கோ." என்கிறாள் மனைவி.
சரவெடிகள் வெடித்தாற்போல் துவக்கு வெடிச்சத்தங்கள் இன்னுமின்னும் கேட்கத் தொடங்கி விட்டன. எங்கள் வீட்டிலே அவவைப் போய்ப் பார்த்து கூட்டிக் கொண்டுவர வேண்டும். இதற்காக நான் வீட்டிலிருந்து வெளியே வெளிக்கிடப் போனேன்.
முதலைக் ஹெலி ஒன்று மேலே வானத்தில் வட்டம் போட்டு பறந்து கொண்டிருக்கிறது.
அங்கே இருந்து கொண்டே அவர்கள் கீழ்ே நடமாடுகிறவர்களைப் பார்த்துச் சுடுவார்களாமே..?.
அந்தப் பயங்களின் அலைகள் மெல்ல மெல்ல எழுந்து என் புலன்களில் வியாபித்தன.
அந்த வெளியால் நடந்து அம்மாவின் வீட்டுக்கு எப்படிப் போகிறது.? நான் மனம் குழம்பியபடி வீட்டுப் படியில் நின்றேன். பெற்ற தாயல்லவா. செத்தாலும் பரவாயில்லை.என்று ஒரு முரட்டு
தைரியம் வந்துவிட்டது. அதற்குப் பிற்பாடு நெஞ்சோர்மத்தோடு சாகிறதெல்லாருக்கும் பொது என்று நினைத்துக் கொண்டு பயத்தைச் சமாளித்தபடி
Uóóó 29 ‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003)

Page 17
வீட்டுக்கு வெளியே வெளிக்கிட்டேன்.
மேலே பார்க்காமல் சாக்கிரதையாக நிலத்தைப் பார்த்தபடி ஒட்டமும் நடையுமாய் அம்மாவின் வீட்டுக்குப் போய் அவவைக் கூப்பிட்டேன்.
s as so வயசு போனதுகளெல்லாம் தாங்கள் சொல்லுறது தான் சரியெண்டு அடம் பிடிக்குங்கள்.
அவ. "நான் வீட்ட விட்டு வெளிக்கிடமாட்டன்" என்றிருந்திட்டா.
அந்த இடத்திலிருந்து அவவை தப்பிக்க வைக்கவேண்டும் என்ற ஆக்ஞையுடன் அவவை கெஞ்சிக் கொண்டு நின்று விட்டு நான் ஆத்திரத்தோட வீட்டுக்குத் திரும்பி விட்டேன். அம்மா வராத ஏமாற்றம் திராவகமாக என் இதயத்தில் இறங்கி எரித்தது.
"அம்மா ஏன் வரேல்ல.?" என்று வீட்டுக்கு வந்ததும் மனைவி கேட்கிறாள்.
"வரமாட்டுதாம் கிறுக்குப் பிடிச்சது. வீட்டைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருக்கப் போகுதாம். அவர்கள் வந்து சுட்டுத் துலைக்கப் போறாங்கள்"
"ஐயோ இந்த மனுவழி இந்த நேரத்தில இப்படி மோட்டுத்தனமாய் நடக்குது" என்று மனைவியும் ஏசிவிட்டாள்.
இதற்குள் மூத்த பெடியன் போய் கயிற்றை அவிழ்த்து வீட்டு வேலிக்கு வெளியாலே மாடுகளை விரட்டி விடுகிறான். அந்த மாடுகள் காய்ந்த சாணியின் வாசனையுடன் ஒழுங்கை வழியாக விரைந்து ஒடுகின்றன.
இளைய மகன் மீன் தொட்டியிலுள்ள மீன் குஞ்சுகளுக்கு சாப்பாடு போடவேண்டும் என்ற ஞாபகத்தில் வீட்டுக்குள்ளே ஒடுகிறான். சின்னமகள் சாமான் பையை முதுகு முறிகிற அளவுக்கு சுமந்தபடி முக்கித் தவித்துக் கொண்டு நிற்கிறாள். இந்த எல்லா வேலைகளையும் அவசர அவசரமாய் முடித்துக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு அந்த இடத்தால் நாங்கள் வெளிக்கிடுகிறோம். பக்கத்து வீட்டு ஆச்சி ஒருத்தியும் "புலக்காணியாலயிருந்து அப்பு இன்னும் வீட்டுக்கு வந்து சேரல்ல." என்று சொல்லிக் கொண்டு எங்களுடன் கூடவாய் சேர்ந்து கொண்டா.
.எல்லாருமாக முன்னால் உள்ள பிரதான வீதிப் பக்கம் போகாமல் பின் ஒழுங்கை வழியாக பதட்டத்துடன் நடந்து கொண்டிருக்கிறோம்.
எறும்புகள் போல் சாரி சாரியாக அந்த ஒழுங்கை வழியிலெல்லாம் சனங்கள் கைகளில் பைகளும் சயிக்கிள் கரியலில் சாமான்களுமாகக் காவிக் கொண்டு திபதிபு வென்று போய்க் கொண்டிருக்கிறார்கள்.
ஒற்றைக் கண்ணைச் சரித்து கீழே பார்த்தாற்போல ஒருபக்கம் சரிந்து
‘ஓலை’ - 15 ஏப்ரல் 2003) Uśøó 30

கொண்டு வானில் ரெண்டு ஹெலி பறந்து கொண்டிருக்கிறது.
இடையிடையே.
.டி.டி.டிடடிட.டிர்ர்ர்ர்ர்ர்.டிட். என்று சரமாரியாக துவக்கு வெடிச்சத்தம் அதிலிருந்து விட்டுவிட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறது. காலை வேளையில் வானின் அமைதியை அந்தச் சத்தம் இழக்கச் செய்கிறது. தன்னியக்கத் துப்பாக்கியின் அந்தச் சத்தத்திலே வெருண்டு போய் ஒரு குருவியும் கூட வானில் பறக்கவில்லை.
இடையிடையே வெடிக்கும் ஆட்லரியின் அதிர்வேட்டுச்சத்தம் நிலத்தையே நடுங்க வைக்கிறது. கன்னத்தில் ரத்தமெல்லாம் எங்களுக்குச் சுண்டிவிட்டது. ஒருவர் முகத்திலும் இரத்தப்பிடிப்பில்லாம வெளுத்து இருக்கிறது. மிகப்பெரிய மனச்சூன்யம் எங்களை ஆட்கொண்டது போல் இருந்தது.
"நீங்கள் வளவுக்க அந்தப் பாம்பை அடிச்சிருக்கப்படாது. பிரமசத்தி பிடிச்சதுமாதிரி அதின்ரை சாபம் தான் எங்களை வீட்டால எழுப்பிப் போட்டுது"
இந்த நேரம் மனைவி மங்களம் பாடினாள்.
எனக்கு எரிச்சலாய் வருகிறது. "எந்தப் பாம்பு" என்று உறுக்கிக் கேட்டேன்.
".அதுதான் நாக பாம்பு. நான் சொன்னா கேட்டாத்தானே.சும்மா அதை தடியக் காட்டி கலைச்சிருக்கலாம்"
எனக்கு நன்றாய்க் கோபம் சுருசுருவென்று ஏறிவிட்டது.
"பாம்பைக் கண்டா அடிக்காம அதோட செல்லம் விளையாடுறதே. நான் அம்மாவை நினைச்சுக் கொண்டிருக்கிறன்.அதுக்க நீபேக்கிளாத்திக் கதை கதைக்கிறாய்."
இதுக்குப்பிறகு நானும் அவளும் மெளனம்தான். அண்டை அயலில வீதி முழுக்க நின்று கொண்டு அதையெடு இதைப்பிடியென்று சனங்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் பிரச்சினைக்குள் ஆச்சிவேறு தன்பாட்டைச் சொல்லி அழுதபடியிருக்கிறாள்.
அவவையும் ஆற்றித்தேற்றி நான்தான் கூட்டிச் செல்லவேண்டியதாய் இருக்கிறது.
"தோசையை என்ன செய்தாய்?" இருந்தாற் போல மனைவியிடம் நான் கேட்கிறேன்.
"பையிக்க சுட்டதுகள் கிடக்கு. மா அப்பிடியே அடுப்பங்கரையில்
பானேக்க கிடக்கு."
сЈђаф 31 ‘ஓலை’ - 15 ஏப்ரல் 2003)

Page 18
.ஆளுக்கு ரெண்டு தோசையென்றாலும் சாப்பிடலாம். பணமும் சட்டைப் பைக்குள் பத்திரமாய்க் கிடக்கு.
இப்படிநினைத்துக் கொண்டே நம்பிக்கையுடன் நடந்தேன்.நான்கு கிலோ மீட்டர்களைக் கடந்து ஒருபாடசாலையடிக்குநாங்கள் இப்போதுவந்து சேர்ந்து விட்டோம்.வேளைக்கே அங்கே வந்துதஞ்சமடைந்த சனத்தால் பள்ளிக்கூடம் நிரம்பிவழிகிறது. பள்ளிக் கூட மைானத்தில் ஒரு துண்டை விரித்துக் கொண்டு நாங்கள் இருந்தோம்.நேரம் போய்க் கொண்டிருந்தது. அம்மாவுக்கு என்ன நடந்ததோ..? என்று நினைத்தபடி நான் துக்க சாகரத்தில் அமிழ்ந்திப்போய்க் கிடந்தேன்.
ஆறு மணித்தியாலத்துக்குப்பிறகு ஆச்சி தேடிய அப்பு வந்து சேர்ந்தார்.
அப்பு வந்ததும் அவரைப் பார்த்துவிட்டு ஆச்சி, ஒ.வென்று ஒலம் வைத்தழுதாள்.
அப்பு ஆச்சியை ஒரு அதட்டு அதட்டியபிறகு ஆதுரத்துடன் நான்தான் அப்புவோடு முதன் முதலாகக் கதைத்தேன்.
"அங்கயெல்லாம் எப்பிடி இருக்கப்பு. அம்மா வீட்டோட அதுக்க இருந்திட்டா. அவவைப் பற்றியேதும் அறிஞ்சியளே". நான் துடித்துப்போய்க் கேட்டேன்.
நான் கேட்டவுடன் ஒரு செய்திப் படலத்தைப் போட்டுக் காட்டினாற்போல எங்களுக்கு நன்றாய் விளங்க அப்பு விபரங்கள் சொன்னார்.
"சுந்தரலிங்கம் பப்பா வளவுக்க நாலு பிரேதங்கள் கிடக்குத் தம்பி. பக்கத்து அரிசி மில்லில புழுங்கல் காயப் போடுற சீமெந்து நிலத்தில் மூண்டு. . அங்க ரயர்க்கடையிக்க கந்தசாமியைச் சுட்டுப்போட்டு நெருப்பு வைச்சிட்டாங்கள். ராணுவத்தின்ரை அட்டகாசம் அப்பிடி. வலு அட்டகாசம்.றோட்டு றோட்டாய்ப் பிரேதங்கள் அங்கினையாய்ப் பாக்கக் கிடக்க. எல்லாவிடத்திலயும் சாவோலங்கள் தான்.காம்புக்கு அங்கால. உங்கட சொந்தக் காரற்ர வீடு தான். அந்தச் சனிக்ரறிய வீட்டுக்கபூந்து சுட்டிருக்கிறாங்கள். அவற்றை வீடு முழுக்க ரெத்தக்காடாய்க் கிடக்காம் என்ன கண்டியோ. ஒரு பெடி அதுக்கால போனதோ வெண்டு அவங்கள் அவரை விடுத்து விடுத்துக் கேக்க. அவர் தனக்குத் தெரியாதெண்டிருக்கிறார்.
.அவர் கணக்கவும் ஞாயம் கதைச்சிருக்கிறார் போல.
.வாய்க்க குழலை வைச்சுக் சுட்டிருக்கிறாங்கள்..மனுவழி அதைப்பார்த்திட்டு குளறித்திட்ட அவஷக்கும் வாய்க்க குழலை ஒட்டிச் சுட்டுவிட்டிட்டாங்களாம். உவன் விசுவன். அவன்தான் மேசன். அவன்ரை பெடியனையும்
‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003) Uš4ф з2

வளவுக்க சுட்டுப்போட்டுக்கிடக்கு. யூசியில் வேலை செய்யிறான் சொத்தியன். அவனையும் சுட்டுப் போட்டாங்களாம். கொலைகாறங்கள் கழிசடைநாயஸ்."
அவருடைய பேச்சில் உணர்ச்சி ஒலி செய்தது. இதையெல்லாவற்றையம் கேட்க எனக்கு இருதயம் அரிசி மில் எஞ்சின் மாதிரி பலத்துப் படபடத்து அடிக்கத் தொடங்கி விட்டது.
"எங்கட அம்மா. எங்கட அம்மா." என்று நான் அவரைப் பார்த்துக்கேட்டேன். எனக்குத் தொண்டைக் குவளை துருத்திக் கொண்டு விம்மல் விம்மலாக வந்தது. கண்களில் கண்ணிர் நிறைந்து பார்க்க முடியாமல் பார்வையை எனக்கு மறைத்து விட்டது.
"அதையும் கேள்விப்பட்டன். தெய்வ சகாயம் போல உன்ர அம்மாக்கு ஒரு கெடுதியும் இல்லையாம். உன்ரை கொக்காவின்ரை வீட்ட அவபத்திரமாய் (3ĒģLT.
அப்படிச் சொன்னார் அப்பு. .
அதைக்கேட்டதும் இரு கைகளாலும் என் கண்களில் கசிந்த கண்ணிரை வளித்துத் துடைத்துவிட்டு நான் நிம்மதியடைந்தேன். "எப்படி அதால போனவ?"என்று அப்புவிடம் மெல்லிய குரலில் கேட்டேன்.
"உங்கட வீட்ட முந்தி வாடைக்கிருந்தினமே. சில்வாவெண்டு அதுதான் அந்த சிங்கள ஆக்கள். அவற்றை மகன் ராணுவம் அதால போனாப் பிறகு அந்தச் சவ அமைதியான இடத்துக்குப் போயிருக்கிறான். அங்க உங்கடை வீட்டில அம்மாவைக் கண்டு பேசிப் போட்டு பத்திரமாய் அங்கயிருந்து அவவை கூட்டிக்கொண்டு போய் அங்க உங்களின்ரை கொக்காளின்ரை வீட்ட விட்டிருக்கிறான்"
அப்பு அப்படிச் சொல்லவும். சில்வாவின் மகனை நினைத்து என் மனதில் ஏற்பட்ட நன்றிப் பெருக்கால் நான் மிகவும் உணர்ச்சி வயப்பட்டேன். அந்தச் சிங்களச் சகோதரன் செய்த உதவிக்கு என்ன கைமாறு அவனுக்குத் திருப்பிச்
செய்வதென்று தெரியாமல் நான் தவித்தேன்.
(ID
சங்கம் வளர்த்த சான்றோர்கள் . 02 (கொழும்புத் தமிழ்ச் சங்கத்தை வளர்த்த அறிஞர்கள்) கட்டுரைத் தொடர் அடுத்த இதழில் தொடரும்.
Ujøó 33 ‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003)

Page 19
கொழும்புத் தமிழ்ச் சங்கம் (LT്ളI) ന്റെബ് ബ
-வித்துவான் ரஹ்மான்
ஒலை குறித்து என்னிடத்தில் உயர்ந்த மதிப்பு உளது. அது, பண்டைக் காலத்தில் பைந்தமிழ் சுமந்து பாதுகாத்து வந்த ஓர் ஏடு.
சான்றோர் சங்கம் நிறுவியதால், ஏடு எனும் ஒலை, எம்மவரின் குருதி ஒட்டத்தினுாடே மிதந்து கொண்டிருக்கிறது. பாண்டித்துரைத் தேவனார் நான்காவது தமிழ்ச் சங்கம் நடாத்தியதன் பிறகு கொழும்பில் ஒரு தமிழ்ச் சங்கம் நடாத்தப்படுவதையே நான் உணர்கிறேன்.
வெறுமனே, தமிழ்ச் சங்கம் எனும் பெயருடன் இருந்துவிடாமல் தமிழ் புரத்தற்கு, வளர்த்தற்கு சாத்தியமானவை எவை , எவையோ, அவை அவையை கொழும்புத் தமிழ்ச்சங்கம் செவ்வனே செயற்படுத்தி வருவது அறிந்து வியக்கிறேன். புகழ்கிறேன். வாழ்த்துகிறேன்.
அன்று சங்கத்தின் உயிர்நாடியாக விளங்கியது ஒலை. இன்றும் சங்கத்தின் உயிர்நாடியாக விளங்குவதும் ஒலைதான்.
கொழும்புத் தமிழ்ச் சங்கம், இன்றுவரை எனக்கு மூவோலைகளை அனுப்பி வைத்திருக்கிறது.
அந்த மூன்றும் முத்தமிழ், முச்சங்கம்; மூவேந்தர் பணி.
ஒலை தரும் செம்மல் செங்கதிரோன் என்பதனால் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஏனெனில் சுட்டெரிக்கும் வெய்யோன் அல்லவா செங்கதிரோன்? செங்கதிரோன் தீமைகளைச் சுடவில்லையாயின் சீவித்தற்காய் சுகவழிகள் இல்லாமற் போகும்.
செங்கதிரோன்பற்றி நவமணி வித்துவான்பகுதியில் இப்படி எழுதினேன்.
"செங்கதிரோன் வெங்கதிரால் தீப்பிழம்பைக் கக்குகிற சங்கைமிகு பாலையிலே
சம்சம்தரும் யாஅல்லா
‘ஓலை’ - 15 ஏப்ரலி 2003) Uásó 34

என்று இந்தக் கவிதை கூறும் உள்ளார்ந்த தத்துவக் கருத்தை, உயர்மலையனைய உத்தம அறிஞர் உணர்ந்து கொண்டிருப்பர்.
ஒலையின் ஆசிரியராய செங்கதிரோன் உண்மையிலேயே செங்கதி. ரோனேயாவார். அவர் வீரகேசரியில் 200205,31 ஆந்திகதி கவிக்கோ அப்துல் ரஹற்மானுக்குக் கொடுத்திருந்த சூட்டில் கனல் கக்குவதைக் கண்டேன்.
பூப்படையாப் பெண்கலெல்லாம் பிள்ளைபெற வந்ததுபோல் யாப்பறியாப் பேர்களெல்லாம் பாப்புனைய வந்து விட்டார். என்று எழுதிப் புழுக்கவிதைப் பேடிகளின் பிடரிகளில் ஓங்கி அறை விட்டிருந்தார்.
மனங்குளிர்ந்துபோன நான், மறுநாளே அவர்க்கு பதிற்கவிதை எழுதினேன். அது வீரகேசரியில் 2002.06.07ஆம்திகதி பிரசுரமாயிற்று. அதில்,
செங்கதிரோன் நின்னுடனே சேர்ந்து உழைத்திடுவேன் எம்மொழியாம் இன்தமிழ் என்றும்நின்று நன்றுயர என்று குறிப்பிட்டிருந்தேன். ஆதலால் எனது அன்பிற்குரிய செங்கதி. ரோனுக்கு இவை எனது ஆலோசனைகள்.
(1) இந்த புழுக்கவிதைகளை ஒலையில் அண்டவிடவே வேண்டாம்.
(2) பண்டைய ஒலையில் கறையான் புகுந்து பாழ்படுத்தியது போல
இந்தஒலையிலும் இக் கறையானை அனுமதிக்க வேண்டாம்.
(3) இலக்கண சுத்தமான இனிய தமிழை ஏற்றி விடுங்கள். நீலாவணன் குறிப்பிட்டாற்போல ஒலைஉயர் மாடி வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.
(4) 60ம் ஆண்டுகளில் 70 ஆம் ஆண்டுகளில் எனும் சொற்கள் இனி வேண்டாம். அறுபதாம் ஆண்டளவில் என வரவிடுங்கள். இப்படி நீங்கள் எழுதியிருந்ததை ஒலையில் படித்திருக்கிறேன்.
நன்றி. அவ்வப்போது நவமணியில் ஒலை பற்றி எழுதி வருவேன்.
Uóóó 35 ‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003)

Page 20
D ஒலைகள் ஒழுங்காக என் வீடு தேடி வருகின்றன. மனமார்ந்த நன்றிகள். இதுவரை ஒலைக்கு உதவாமையையிட்டு வேதனை அடைகிறேன். காலம் கனியும் போது என் பங்களிப்பு நிட்சயமாக ஒலையை வந்தடையும்.
சாதாரண செய்திக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்ட ஒலை மிகக் குறுகிய காலத்துள் ஒர் இலக்கிய சஞ்சிகையாக மிளிர்கிறது. பாராட்டுகள்.
ஒரு விரலால் பிறரைச் சுட்டும்போது ஏனைய நான்கு விரல்களும் என்னைச் சுட்டுவதை நான் நன்கு அறிவேன். இருப்பினும் பிழைகளைச் சுட்டிக் காட்டுவது மனித இயல்புமட்டுமல்ல, திருந்தவும் வழி ஏற்படும். ஒலை 11வது இதழ் கிடைத்தது. 1ம் பக்கத்தில் தமிழ் மொழிக் கொலை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஒலையின் 13ம் பக்கத்தில் இடம் பெற்ற வள்ளுவமாலை செய்யுளில் பல தமிழ் மொழிக் கொலைகள் காணப்படுகின்றன. இச்செய்யுளுக்கான ஆங்கில மொழி பெயர்ப்பும் பொருத்தமானதாக அமையவில்லை.
"ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனின் இது சீரியது என்று ஒன்றை செப்பரிதால் - ஆரியம் வேதம் உடைத்து தமிழ்த்திரு வள்ளுவனார் ஒது குறட்பா உடைத்து இதுவே சரியான செய்யுளாகும்.
8/23 பிள்ளையார் கோயில் வீதி இ.பாக்கியராசா 1ம் குறுக்கு ஊடகவியலாளர் கல்லடி மண்டூர் மட்டக்களப்பு
18.02.2003
D ஒலை 12 மிகச் சிறப்பாக வெளிவந்துள்ளது. நீலாவணனைப் பற்றிய தகவல்கள் உரைக்குறிப்பு (பக்.5) பல முக்கியமான தகவல்களைக் கொண்டுள்ளது.
பாண்டியூரனின் கவிதை - நீலாவணன் பாணியிலேயே அமைந்து நீலாவணனை நெஞ்சில் நிறுத்தி வைக்கிறது. அவ்வாறே ஜீவாவின் கவிதையும் அமைந்துள்ளது. இவ்விருவரையும் நீலாவணனின் வாரிசு என்றே கொள்ளலாம்.
‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003) பக்கம் 36
 

நீலாவணனின் உறவு (பாடப்புத்தகத்தில் இடம் பெற்றது) அவரது 'பேச்சுத் தமிழ்" கவிதைக்கு உரைகல். மட்,பேச்சுத்தமிழ், என்னமாய் நெஞ்சில் ஒட்டிக் கொள்கிறது.
இக்கவிதைகளின் தொகுப்பு அபூர்வம்.
'கவிதாமாலை' விபரங்கள் நெஞ்சை நிறைத்தன.
18, நல்லையவிதி அன்புமணி.இராநாகலிங்கம் மட்டக்களப்பு.
3.3.2003
> ஒவ்வொரு மாதமும் தவறாமல் ஒலை சிற்றிதழ் பல்வேறு அம்சங்களுடன்
காத்திரமான கலைப் பொக்கிஷமாக வெளி வருகின்றது. தைமாத 12வது இதழ் மறைந்த கவிஞர் பெரிய நீலாவணை நீலாவணனின் நினைவுச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. நிகரற்ற கவிஞர் நீலாவணன் பற்றிய பல சுவையான, காலத்தால் அழியாத தகவல்கள் மற்றும் கவிதைகளைச் சுவைக்கத் தந்த ஒலைக்கு நிச்சயமாக நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். இன்று வளர்ந்து வரும் பல இளங்கலைஞர்கள், கவிஞர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து அவர்களின் நலங்காக்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்கு நிச்சயமாக நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
46/5, டன்பார் வீதி அட்டன் பாலா சங்குப்பிள்ளை
உரிமையாளர், சங்குப்பிள்ளை
அன் கோ,
051-22399, 22057
09.03.2003
D தமிழ்ச் சங்கம் விடுத்த ஒலை என் வீடு வந்து சேர்ந்தது. கவிஞர்நீலாவணன்
கவிதைச் சிறப்பிதழ் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.
481, பார்வதி திக்கவயல் சிதர்மகுலசிங்கம்
மட்டக்களப்பு
11.03.2003
பக்தம் 37 ‘ஓலை’ - 15 ஏப்ரலி 2003)

Page 21
D "ஒலை" 12வது இதழ் கிடைக்கப் பெற்றேன். "ஒலை" வளர்ச்சியில் உயர்ச்சி
கண்டுள்ளது.
நீலாவணன் அவர்கள் தமிழ் உலகம் போற்றும் ஈழத்துச் சிறந்த கவிஞர். எழுத்தாளர். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர். பாராட்டுக்குரியவர்கள். "ஒலை" மூலம் கெளரவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இதைப்போன்று தமிழ்ப்பற்று மிக்க எழுத்தாளர்கள் காலத்திற்குக் காலம் கெளரவிக்கப்படல் வேண்டும். பல்கலைப்புலவர் திரு.க.சி.குலரத்தினம் ஐயா அவர்களையும் "ஒலை" மூலம் கெளரவிக்கவேண்டும்.
No.9, 7th Lane ஐ. திசம்பந்தன் off St.Benedict Road,
Kotahena, Colombo
11.03.2003
D தமிழ் மணம் கமழும் ஒலை (12வது மடல்) கிடைக்கப் பெற்றேன். மிக்கநன்றி. அதுவும் கவிஞர் நீலாவணன் நினைவுச்சிறப்பிதழாக மலர்ந்தமை பொன்குடத்துக்குப் பொட்டிட்ட மாதிரியல்லவா அமைந்திருந்தது.
1968 களில் தினபதி கவிதாமண்டலத்தில் பிரசுரிப்பதற்காகக் கவிஞர் மதிப்பிற்குரிய நீலாவணனுக்கு, சிபாரிசு செய்வதற்காக அனுப்பியபோது 'உனது தந்தை ஒரு பெரும் புலவர், ஆதலினால் பூனையின் வயிற்றில் எது பிறந்தாலும் எலிபிடிக்கும். ஆதலினால் கவிதையை வாசிக்காமலே சிபாரிசு செய்துள்ளேன்" எனற அன்புக்குறிப்புடன் பதில் அனுப்பியிருந்த அவ்விலக்கியப் பெருந்தகையை இச்சந்தர்ப்பத்தில் நன்றிக்கனிவுடன் நினைத்தும் பார்க்கின்றேன்.
ஒலையில் வெளிவருகின்ற எல்லா அம்சங்களுமே தரமானதாகவும், சிறப்பாகவுமுள்ளன. இலக்கியத்தகவல்களைத் தெளிவுபடுத்தவும், பரிமாற்றம் செய்யவும் கேள்வி பதில்' பகுதியொன்றையும் ஒலையின் பக்கங்களில் தாங்கிவருமாயின்தங்கள் பணிமிகச்சிறப்பாக அமையுமென நம்புகின்றேன்.
தமிழே! தமிழே தமிழர்க்குயிரே
இன்னுமின்னும் இசை பெற வாழி
வணக்கங்களுடன்
59/3, ஹிஜ்றா மாவத்தை கலைஅமுதன் D.M.C.M.இக்பால் J.P. மல்லவப்பிட்டிய, குருநாகல் தொ.பேசி.037-23004 12.03.2003
‘ஓலை’ - 15 ஏப்ரலி 2003) பக்தம் 38

> அன்புடையீர் வணக்கம்,
எனது "பறவைகள்' நாவல் வெளியீட்டு விழா தங்கள் சங்கத்தில் நடைபெற்ற வேளையில் - 'ஒலை 12ஆவது இதழ் (கவிஞர் அமரர் நீலாவணன் நினைவுச் சிறப்பிதழ்) எனது கரங்களுக்குக் கிடைத்தது.
நீலாவணனை நான் நேரில் பார்க்கவில்லை என்ற மனக்குறை நீண்டகாலமாக இருந்தது. இச்சிறப்பிதழைப் படித்ததும் அந்தக் குறை ஒரளவு நீங்கிய ஆறுதலுடன் இம்மடலை எழுகின்றேன்.
எனது வாழ்வில் தர்மசங்கடமான நிலைமை தோன்றும் சந்தர்ப்பங்கள் ஏராளமாக வந்துள்ளன.
29.09.02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் எனக்கு ஒரு தர்மசங்கடமான
நெருக்கடியை ஏற்படுத்திய கவலையையும் ஒலை 12ஆவது இதழ் ஓரளவு போக்கியுள்ளது.
27ஆம் திகதி நள்ளிரவு இலங்கையில் கால்பதித்தவுடன்-மறுநாள், எனக்கு கிட்டிய செய்தி இனிமையானது. நண்பர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி, "29ஆம் திகதி தமிழ்ச்சங்கத்தில் கவிஞர் நீலாவணன் கவிதாமாலை நடைபெறவிருப்பதாகச் சொன்னார். இந்த நிகழ்வுக்குச் சென்றால் பலரையும் சந்திக்கலாம் என்ற விருப்பத்துடன் இருந்தேன்.
அன்று காலை-நீர்கொழும்பில் எனது ஒன்றுவிட்ட அக்காவின் மகனுக்குத் திருமண வரவேற்பு, இந்த மருமகனைக் குழந்தையிலிருந்தே தெரியும், தற்போது அக்காவும் - மச்சானும் உயிரோடு இல்லை.
"மாமா நீங்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள். கட்டாயம் வரவேண்டும்" என்ற அன்புக்கட்டளை மாப்பிள்ளையிடமிருந்து,
தாய், தகப்பனை இழந்து விட்ட பிள்ளை. தவிர்க்க முடியாத நிகழ்ச்சி. அதனை நீர்கொழும்பில முடித்துக் கொண்டுதமிழ்ச் சங்கத்திற்கு ஒடுவது என்பதே எனது திட்டம்.
எதிர்பாராதவிதமாக 28ஆம் திகதி காலையில் ஒரு தகவல் தொலைபேசி மூலம் எனக்குக் கிடைக்கிறது.
திருமறைக் கலாமன்றத்தின் மகளிர் கருத்தரங்கம்- மாலையில் காப்பியவிழாவும் நடைபெறவிருப்பதாகவும்-இரவுநிகழ்ச்சியில்பவளவிழாக் கண்ட டொமினிக் ஜீவா பாராட்டிக் கெளரவிக்கப்படவுள்ளதாகவும் அந்தப் பாராட்டுரையை நான்தான் நிகழ்த்தவிருப்பதாகவும் அந்தத் தகவல் சொன்னது.
மல்லிகை மூலம் என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் டொமினிக்ஜீவா.
Uágó 39 ‘ஓலை’ - 15 (ஏப்ரலி 2003)

Page 22
திருமறைக் கலாமன்ற இயக்குனர் அருட்திரு.மரியசேவியர் எனது நல்ல நண்பர். அவுஸ்திரேலியாவுக்கு வரும் பொழுதெல்லாம் சந்திப்பவர். நடைபெறவிருப்பது காப்பிய விழா, நாட்டுக்கூத்துக் கலைவடிவங்களை அவுஸ்திரேலியாவில் காண்பது அபூர்வம். ஐம்பெரும் காப்பியங்களை. கூத்து வடிவில் ஒரே மேடையில் பார்க்கும் சந்தர்ப்பம். நடக்கவிருக்கும் இடம் கதிரேசன் மண்டபம்,
எதற்குச் செல்வது - எதனைத் தவிர்ப்பது. மிகவும் தர்மசங்கடம்.எனது மன உளைச்சலை ஜீவாவிடம் தெரிவித்தேன்.அவரது ஆலோசனைப்படி முதலில் தமிழ்ச் சங்கத்திற்கு வந்தேன். கவிதா நிகழ்வு ஆரம்பமாகாதிருந்த மாலைப் பொழுது. அந்த இனிய பொழுதில் - திருமதி நீலாவணன் அவர்களையும்- நண்பர் எழில்வேந்தனையும் சந்தித்து எனது நிலையை விளக்கிவிட்டு விடைபெற்றேன்.
தற்போது ஒலை 12வது இதழ் - அந்த நிகழ்வையும் - நீலாவணன் பற்றிய சிறந்த அறிமுகத்தையும் விரிவாகத் தந்திருக்கிறது. கடல் கடந்து வாழும் எம்மவர்க்கு 'ஒலை' மூலம் தமிழ்ச்சங்கம் மேற்கொள்ளும் பணி போற்றுதலுக்கு உரியது.
கலை, இலக்கிய நேசிப்பு மிக்க படைப்பாளிகளுக்கு எனக்கு நேர்ந்த தர்மசங்கடங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பிரார்த்திக்கின்றேன்.
P.O.BOX 350 முருகபூபதி Craigieburn
Victoria 3064
Australia
13.3.2003
P 61607d5a5b. ஒலையின் நீலாவணன்' சிறப்பிதழின் பின்னரும் என் மகிழ்வையும், திருப்தியையும் தெரிவிக்காது விடில் அது படைப்பாளியின் அசட்டையாகிவிடும். ஒலையின் படிமுறை வளர்ச்சியின் உச்சமாக நீலாவணன் சிறப்பிதழ் அமைந்துள்ளது. தமிழ்ச்சங்க செய்திகளைத் தெரிவிக்க ஆரம்பிக்கப்பட்ட ஒலை இன்று, தமிழிலக்கிய ஏடாக வளர்ந்துள்ளது. இந்த அமைப்பு தொடர வேண்டுகின்றேன்.
DR.K.KUNARASA செங்கையாழியான் B.A.(Cey), M.A., Ph.d., SLAS
No.82, Brown Road
Neeraviyady, Jaffna.
14.03.2003
G6
ஓலை’ - 15 ஏப்ரலி 2003) Uá5ф 40

தமிழ்ச் சங்கத்தின் குரலாய் தரணி எங்கும் ஒலிக்க ஒலை ஒயாமல் வர
வளர எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !
affilib is belle)aub
உருத்திரா மாவத்தை வெள்ளவத்தை R 65ITEDapeuf : 361381 i 57N, MCHINÉS