கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2003.06

Page 1
ஆசிரியர் செ
ஒலை 7 கொழும்புத் தமிழ்ச்சங்
09-01-1927- 20-06-19
கொழும்புத் தய 7, 57 வது ஒழுங்கை (உருத்திரா தொலைபேசி :
வெப் முகவரி WWW இணைய தபால் முகவரி : cts இ
 
 
 
 

-IBITി
க ராதாந்த I_ள் ஜூன் OO3
GEFNISÖGUTT! EFTEJNEJ, ES LEÜ
மின்னல், முகில், தென்றவினை மறவுங்கள் மீந்திருக்கும்
- Iഉ]Iബി
மிழ்ச் சங்கம்
மாவத்தை ) , கொழும்பு : ப்.ே : O1-3637.59 r. Colombo. tamilisangam.org *ė Lu reka.lk

Page 2
SYLÝ ՞NՀԱ()s 魏 70ifl 1Best Goup(interats frona
س
K ՀՀ 8 演
DEALERS IN TEXTILES READYMADE
SPECIALISTS IN SAREES AND BLOUSE
No V, MAIN STREET FORT
COLOMBO 11
s. X
s
47
1
ح
 

இதயம் திறந்து.
'ஒலையின் 12வது இதழைக் (ஜனவரி 2003) கவிஞர் நீலாவணன் நினைவுச் சிறப்பிதழாக வெளியிட்டிருந்தோம். இச்சிறப்பிதழ் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களிடையே வெகுவான வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதன் அடியொற்றி ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னோடிகளுள் மேலும் ஒருவரான அமரர் மஹாகவி (து.உருத்திரமூர்த்தி) அவர்களின் நினைவாக 'ஒலையின் இப் 17வது இதழ் விரிகிறது. நீலாவணனை நினைக்கும் போது மஹாகவியும் மறக்க முடியாதவர்.
தமிழுக்குப் புதியதொரு பா வடிவமாகப் பேசப்பட்ட 'குறும்பா' வைத் தந்தவர் மஹாகவி. தனிக்கவிதைகள் - காவியம் - பாநாடகம்- இசைப்பாடல்- சிறுவர் பாடல் - வில்லுப்பாட்டு - கவியரங்கப் பாடல்கள் எனப் பல்வகைப் பரிமாணங்களில் கவிதையைக் கச்சிதமாகக் கையாண்டு வெற்றி பெற்றவர். ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் பேசப்பட்டவர். 09.01.1927 இல் யாழ்ப்பாணத்தில் அளவெட்டி எனும் கிராமத்தில் பிறந்து தனது பதினாறாவது வயதில் (1943) ஈழகேசரி'யில் பிரசுரமான 'மின்னல்' எனும் கவிதை மூலம் கால்பதித்து ஈழத்து நவீன தமிழ்க்கவிதையின் வளர்ச்சியை அடையாளம் காட்டும் முக்கியமான படைப்பாளிகளுள் முன்வரிசையில் இடம் பெற்று 20.06.1971ல் மரணித்த மஹாகவி அவர்கள் ஈழத்துத் தமிழ்க்கவிதைக்கான தனித்துவ அடையாளங்களை உருவாக்குவதில் ஆற்றல்மிக்க கவிஞராகத் திகழ்ந்தவர்.
06.07.98 முதல் 12.07.98 வரை கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய ஈழத்துக் கவிஞர் வாரம் நிகழ்வின் நான்காம் நாளான 09.07.98 அன்று அமரர் 'மஹாகவி அவர்களின் உருவப்படம் திரைநீக்கம் செய்யப்பட்டுப் புகழாராம் சூட்டப்பெற்றார். அன்று மஹாகவி பற்றிய சிறப்புச் சொற்பொழிவைக் கம்பவாரிதி இ.ஜெயராஜ் நிகழ்த்தினார். மேலும் கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திவரும் காலாண்டு கவிதா நிகழ்வான 'கவிதாமாலை'யின் 11.05.2003 அன்று நடைபெற்ற 3வது நிகழ்வில் மஹாகவியின் கவிதைகள் மொழியப்பட்டன. மஹாகவியை முழுமையாக வெளிக்கொணரும் மேலும் ஒரு முயற்சி இந்நினைவுச் சிறப்பிதழ். இச்சிறப்பிதழ் வெளியீட்டின் மூலம் ஈழத்துக் கவிதை வரலாற்றின் காத்திரமான பக்கங்கள் புரட்டப்படுகின்றன. இதுவரை அச்சேறாமல் கையெழுத்துப் பிரதிகளாகவுள்ளனவும் நூலுருப் பெறாமல் பத்திரிகை நறுக்குகளாகவுள்ளதுமான மஹாகவியின் அனைத்து ஆக்கங்களும் நூலுருப் பெறவும் அதன் மூலம் மஹாகவியின் கவிதா ஆளுமை அறிஞர்களால் மேலும் ஆய்வு செய்யப்படவும் இச்சிறப்பிதழ் துண்டு கோலாக அமையட்டும்.
இச் சிறப்பிதழைத் தயாரிப்பதில் ஒத்தாசை வழங்கிய மஹாகவி அவர்களின் புதல்வன் சேரன், புதல்வி திருமதி. ஒளவை விக்கினேஸ்வரன், மற்றும் எஸ்.எழில்வேந்தன், சோ.தேவராஜா ஆகியோருக்கு நன்றிகள் பல.
நன்றி. மீண்டும் மறுமடலில்.
- ஆசிரியர்
ஒலையில் வெளிவரும் ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பு.
U530, 1 “g606v" - 17 (g'60í 2003)

Page 3
மஹாகவியின் தபால் அட்டைக் கழதங்கள் / கவிதைகள்
போர் நிறுத்தத்தின் விளைவாகக் கிடைத்திருக்கும் நல்ல பயன்களில் ஒன்றாக மஹாகவியின் சேகரிப்பில் இருந்த பல பழைய ஆவணங்கள் மீளக் கிடைத்திருப்பதையும் குறிப்பிட வேண்டும்.
தனக்கு வந்த கடிதங்கள், தன்னைப்பற்றி வெளியாகியிருக்கும் பத்திரி. கைக் குறிப்புகள், கட்டுரைகள் மற்றும் தன்னுடைய நூல்களின் வெளியீட்டு விவரங்கள், செலவீனம், வருவாய் போன்ற ஏராளமானவற்றை ஆண்டு முறைப்படி மஹாகவி தொகுத்து, கோப்புகளில் கட்டி வைத்திருந்தார். இந்தக் கோப்புகளில் தன்னுடைய இதய நோய்க்கு அவர் பயன்படுத்திய மருந்துகளின் விவரம், மருந்துச் சிட்டை போன்ற தகவல்கள் கூட அடங்கியிருந்தன.
இந்தக் கோப்புகள் அனைத்தும் ஒழுங்கான முறையில், அளவெட்டியிலிருக்கும் அவருடைய வீட்டில்' (நிழல்) பேணப்பட்டிருந்தன.
1992 இன் இறுதிப்பகுதியில் இலங்கைப் படையினர் அளவெட்டியை ஆக்கிரமித்தபோது வீட்டில் எஞ்சியிருந்த மஹாகவியின் குடும்பத்தவர்கள் உடனடியாக வெளியேற நேர்ந்தது. மஹாகவியின் ஆவணங்கள் அனைத்துமே அழிந்து போய் விட்டன என்றே அனைவரும் கருதியிருந்தனர்.
ஆனால் அத்தகைய அநியாயம் எதுவும் முற்று முழுதாக நிகழவில்லை. மஹாகவியின் உறவினர்கள் சிலர் கிடைத்த ஆவணத் தொகுப்பை பத்திரமாகப் பேணியிருந்தனர். எனினும் அது எங்கே இருந்தது என்று ஒருவருக்கும் திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஜூன் மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் சென்றிருந்த திருமதி மஹாகவி அவர்கள் இந்த ஆவணங்களைக் கண்டெடுத்துள்ளார். இவை முழுவதும் தொகுக்கப்பட்டு வெளியாவது தமிழ் இலக்கிய ஆய்வாளர்களுக்கும் மஹாகவியின் வாழ்க்கை / கவிதை வரலாற்று ஆய்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இன்றியமையாதது.
மஹாகவியின் ஆவணங்களுக்குள், மஹாகவிக்கு அவருடைய காலத்து இலக்கியவாதிகள் எழுதிய ஏராளமான கடிதங்களும் அடங்கியுள்ளன. குறிப்பாக எம்.ஏ.நுட்மான், நீலாவணன், இ.முருகையன், வி.சிங்காரவேலு, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, பிரேம்ஜி, பிரமிள் (தருமு சிவராமு), எஸ்.பொ. நா.பார்த்தசாரதி, எம்.ஏ.ரஹற்மான், சண்முகம் சிவலிங்கம், எஸ்.டி.சிவநாயகம், சில்லையூர் செல்வராசன் போன்றோரின் முக்கியமான, ரசனைமிக்க, ஆர்வமும் விருப்பும் நிறைந்த பல கடிதங்கள், தபால் அட்டைகளும் எமக்கு உதவக் கூடியன.
66
ஓலை’ - 17 ஜுனி 2003) பக்தம் 2

தபால் அட்டைகளில் சிறு சிறு கவிதைகளாகவே கடிதங்களை அனுப்புவதில் மஹாகவி,முருகையன்,நீலாவணன், நுட்மான் போன்றோர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளமை ஒரு சுவாரசியமான செய்தியாகும். தபால் அட்டைகளில் தான் எழுதி அனுப்பிய சிறு கவிதைகளை - இவை பெரும்பாலும் சுவை மிக்க வெண்பாக்கள் - மஹாகவி நாட்குறிப்பு ஒன்றில் பிரதி பண்ணி வைத்திருந்தார். அந்த நாட் குறிப்பில் இருந்து சில வெண்பாக்களை இங்கே தருகிறோம். வெண்பாக்களோடுள்ள குறிப்புகளும் மஹாகவியினுடையவை.
மெச்ச என்னாலும்
முடியாது! மெய்யாக
அச்சுக் கலைக்கோர்
அழியாத - உச்சி
அமைத்தாய்! அதன் அழகை
ஆரச் சுவைக்க
இமைக்காத கணிணா எனக்கு?
* வரதருக்கு (தி.ச.வரதராஜன்), வள்ளி (மஹாகவியின் முதலாவது கவிதை
நூல்) வெளியானதும் 19-07-1955
பாட்டெழுதச் சொல்லிப் படித்து விட்டுப் போற்றி அதை ஏட்டில் அழகாய் அச் சேற்றுவையே! - கேட்டுக்கொள் என்னை எழுத்துத் துறையில் இறக்கி விட்ட உன்னை மறக்காதுலகு. * அ.செ.மு.முருகானந்தத்துக்கு). 26-07.1955.
சொற்கணக்குப் போட்டுச் சுவை எடுத்துக் காட்டுகிற அற்புதத்தைக் கணிடேன் அலமந்தேன்!- நிற்க இறந்தாரை ஏற்றுகிற எங்களவர் நாட்டில் அறந்தானோ நீ செய்த அன்பு! * சுதந்திரனில் வள்ளி விமர்சனம் செய்த கீரன் செ.கணேசலிங்கனுக்கு. 3.08. 1995
பக்கம் 3 'ഝേ' - 17 ജബ് 2008)

Page 4
ஊருறங்கும் வேளை உறங்காமல் நாமிருந்தும் சேருகின்றாள் இல்லைச் செருக்குடையாள் - வாராஅவ் வெணர்டாமரையாள் விரைந்தாளோ தங்களிடம்? கொணர்டாடு நணர்பா குதித்து. * நீலாவணனின் மகள் பிறந்தமைக்கு. 15-08-1957
அன்பா, உன் அன்பன் அழகைப் பார்! இத்தனை நாள் என் செய்திருந்தான் எழுதாமல் -மன்னிக்க வேண்டாம்! ஊர் சென்று விரைவில் திரும்பி வந்து நீண்ட பதில் தருவான், நில்! * நீலாணனுக்கு. 08.08.1958
6 காடும் நகரும்
கடந்து கடுகதியில் ஒடுவதும் பொங்கும் உவகையிலே - பாடுவதும் எல்லாம் இனிதே; எனினும் அருகொருத்தி இல்லாக் குறையொன் றெமக்கு * காரில் ஊர் செல்லும் பொழுது 14.9.1958
பாட்டுப் படைக்கும் பெரியோரை மக்களுக்குக் காட்டி அவர்தம் கருத்துகளை -ஊட்டும் பணியில் மகிழ்வெய்தும் பணியாளர்க் கெங்கே இணை சொல்ல ஏலும் எனக்கு * கனக செந்திநாதன் அவர்களுக்கு "கவிதை வானில் ஒரு வளர்பிறை" கண்டு. 9.12.1958
‘ஓலை’ - 17 ஜுனி 2003) Uóøó 4

உள்ளதற்கும் மேலே உயரப் புகழ்கின்ற வள்ளல் என் நன்றி,
வரக் கொண்டேன் - பள்ளத்தில்
ஒடும் நீர் போல ஒழுகும் அருங்கவிதை
பாடும் நீர் யாத்துள்ள பாட்டு.
* முருகையனுக்கு. 65.1959
தேன் தோண்டி உண்டு திளைத்திடுக; பேரின்ப வான் தேடி நும் வீட்டு வாயிலிலே வந்தடைக; தான்தோன்றி பாடும்
தமிழ்போல வாழ்க, இவை நான் வேண்டுவன இந்நாள்! * (சில்லையூர்) செல்வராசனின் திருமணத்துக்கு. 9.1.1960
ஆட்டோகிராப்' வரிகள் இவை.
யுகங்கள் கணக்கல்ல சிறுகதைத் தொகுதி நூல் (1986) மூலம் ஈழத்தின் சிறந்த புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்பட்டுள்ள கவிதா எனும் புனைப்பெயர் கொண்ட ஜனாபா சேகு.இஸ்ஸதீன் (செல்வி. நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை) அவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கல்விமாணி பட்டப்படிப்பு மாணவியாகப் படித்துக் கொண்டிருந்தபோது (பேராதனைப் பல்கலைக்கழக இந்து மாமன்ற இளம் பொருளாளரும் கூட) அவருக்கு, அங்கு இடம்பெற்றமானிலம் பயனுற. என்ற தலைப்பிலான கவியரங்கில் சில்லையூர் செல்வராசன் சகிதம் கலந்து கொண்ட மஹாகவி அவர்கள் எழுதிக் கொடுத்த
நல்ல கவிதை நயக்கத் தெரிகின்ற தல்லவோ பெண்மை அறம் "மஹாகவி' 24.366
ஓலை’ - 17 ஜ"னி 2003)

Page 5
இன்றைக்கும் மஹாகவி மாமாவை நினைத்தால் என் நினைவுக்கு
வருவதெல்லாம் மட்டக்களப்புபுளியந்தீவில் அந்த வாவிக் கரையோரம் அமைந்த அரசாங்க அலுவலக விடுதிதான். என் தந்தையாருக்கும் மஹாகவிமாமாவுக்கும் இலக்கிய ரீதியான தொடர்பு நீண்ட நாட்களாக இருந்தாலும் எனக்கு அவரை நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் இந்த மட்டக்களப்பு அரசாங்க விடுதியில் தான் கிடைத்தது.
மட்டக்களப்பு புளியந்திவில் வாவிக்கரையோரமாக எருமைத்தீவை எதிர்கொண்டு அமைந்திருந்தது அந்த பிரமாண்டமான பங்களா. மஹாகவிமாமா அப்போது மட்டக்களப்புக் கச்சேரியில் ஒ.ஏ என்ற பெரிய பதவியை வகித்து வந்தார். கிட்டத்தட்ட அரசாங்க அதிபருக்கு அடுத்த நிலைப் பதவி அது என்று நினைக்கிறேன். அந்தப் பதவி நிலை காரணமாக வழங்கப்பட்டிருந்த அந்த அரசாங்க குவாட்டர்ஸில்தான் அவருடன் எனக்கு நெருங்கிப்பழகக் கிடைத்தது.
நான் அப்போது மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். மஹாகவி மாமாவின் பிள்ளைகளான சேரன், சோழன்,இனியாள், ஒளவை ஆகியோர் மட்டக்களப்பில்பாடசாலைகளில் படித்துக் கொண்டிருந்தனர். மூத்தவன் பாண்டியன் மட்டும் அளவெட்டியில் அம்மம்மாவுடன் தங்கி மகாஜனக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். எனக்கு வீட்டில் 3 சகோதரிகளும் தம்பி ஒருத்தனும், தம்பி கொஞ்சம் உடல்நலக் குறைவானவன். எனவே வார விடுமுறையில் 22 மைல்களுக்கு அப்பாலிருந்த பெரியநிலாவணைக்கு - அதாவது எங்கள் வீட்டுக்குச் சென்று தங்கைகளுடன் பொழுதைக் கழிப்பதை விட 2-3 மைல் தொலைவில் இருந்த மஹாகவி மாமா வீட்டுக்குச் சென்று பொழுதைக் கழிப்பதே விருப்பாக இருந்தது.
இடமிருந்து வலம்
சேரன், வினோதன் (நீலாவணன் மகன்-எட்டிப்பார்ப்பது) அரியம் (தலைமட்டும்- நீலாவணன் வீட்டுச் சேடிப்பெண்). எழிலரசி, நீலாவணன் (பின்னால்), திருமதி நீலாவணன் (கையில் கோசலா) மஹாகவி, பாண் டியன் உடன் நீலாவணன் கவிதைகளில் வந்த எம்.ஜி.ஆர் என்ற நாய்.
‘ஓலை’ - 17 ஜுனி 2003) பக்தம் 6
 
 

பாண்டியனுக்கும் எனக்கும் ஏறத்தாழ ஒரே வயது. தோற்றத்திலும் ஏறத்தாழ
இருவரும் ஒரேமாதிரி இருப்போம். பாண்டியன்மட்டும்தான் என்னை வேந்தன்' என்று அழைப்பான். மஹாகவிமாமாவின் ஏனையபிள்ளைகள் வேந்தன் அண்ணா' என்றே கூப்பிடுவார்கள். புளியந்தீவில் மஹாகவி மாமா வீட்டுக்குப் போவதில் எனக்குப் பெரு விருப்பாக இருந்தது. எனக்கும் அங்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அந்தப் பெரிய பங்களாவின் முன் பரந்து கிடந்த புற்றரையில் எல்லோரும் சேர்ந்து கிரிக்கெட் அடிப்போம். சிலவேளைகளில் கொஞ்சம்தள்ளி சூரியா லேனில் இருந்து எஸ்.பொ.மாமாவின் மகன் அனுராவும் வந்து எமது விளையாட்டில் இணைந்து கொள்வான். எல்லோரும் சேர்ந்து வாவிக் கரையோரம் தண்ணீரில் இறங்கிக் கொட்டமடிப்போம். ஒளித்து விளையாடுவோம். நிறையப் புத்தகங்கள் இருக்கும். படிப்போம். மாமி அவ்வப்போது ஆசையாய் செய்துதரும் உணவு வகையறாக்களை ஒரு கை பார்ப்போம். சில விஷயங்கள் தேவைப்படும் போது வேந்தன் அண்ணாவுக்கு அது வேணுமாம் இதுவேணுமாம் என்று கூறிப் பெறுவதும் வாடிக்கையாக இருந்தது. மாமியின் கைச் சமையல் பற்றிக் கூறுவதென்றால் அதற்கு வேறு கட்டுரை எழுத வேண்டும். அத்தனை ருசியாக இருக்கும். மாமியை அனேகமாக எந்தநேரமும் குசினியில் பார்த்ததாகத்தான் எனக்கு ஞாபகம்.
ஒருநாளும் எங்களுக்குள் சண்டை வந்ததில்லை. சேரனும் சோழனும் இனியாளையும் ஒளவையையும் விளையாட்டுக்களில் சேர்க்கப் பஞ்சிப்படுவார்கள். சகோதரிகளுடன் சண்டை பிடிப்பார்கள். வேந்தன் அண்ணா சமாதான நீதவானாகக் கடமையாற்ற வேண்டிவரும். அப்போது நாமெல்லாம் 15 வயதுக்கும் குறைந்த பிள்ளைகள்.
அந்த வேளைகளிலெல்லாம் மஹாகவி மாமா ஒரு அமைதியான மனிதராக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு ஒரு புன்முறுவலோடு இருப்பார். பிள்ளைகளை அதட்டியோ அடித்தோ நான் ஒருநாளும் கண்டதில்லை. தானும் தனது வேலையுமாக இருப்பார். பெரிய பதவி வகித்ததால் வீட்டிலும் வேலைகளைக் கொண்டு வந்து செய்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன, எழுதிக் கொண்டிருப்பார். இலக்கிய நண்பர்கள் வந்தால் உரையாடிக் கொண்டிருப்பார். மெளனகுரு மாமாவை அங்கே அடிக்கடி கண்டிருக்கிறேன். மெளனகுரு மாமா எங்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடியதும் நினைவிருக்கிறது. உயர் அதிகாரிகளோடு விடுமுறைநாட்களிலும் வெளியில்போவார். போய்வரும்போதெல்லாம் எங்களுக்கு ஏதும் வாங்கி வருவார். என் ஞாபகம் சரியாக இருக்குமானால் ஒரு முறை வாகரைக்கு ஏதோ அலுவலுக்காகப் போய் வரும்போது உயிருடன் நண்டுகள் வாங்கி வந்ததும், மாமி அவற்றை எப்படிச்சமைப்பது என்று தெரியாமல் திண்டாடியதுமான ஒரு சம்பவமும் ஆழ்மனத்தில் கிடக்கிறது. மாமி இது சரிதானே?
நான் அவர் வீட்டுக்குப் போனால் அப்பாவைப்பற்றியும் வீட்டைப்பற்றியும் விசாரிப்பார். நாங்களடிக்கும் கூத்துக்களால் மாமிக்கு தாங்கமுடியாத நிலை ஏற்பட்டால்-அதாவதுமாமிசொல்லியும்நாங்கள் அடங்காத ஒருநிலை ஏற்பட்டால் மாமாவிடம் முறையிடுவார். ஆனால் மாமா குழப்படி பண்ண வேண்டாம்' என்று சொல்வதோடு சரி. பெரிதாக அதைப்பற்றிக் கவலைப்படமாட்டார்.
U55ó 7 ‘ஓலை’ - 17 ஜுனி 2003)

Page 6
பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு கொடுக்க வேண்டுமென்பதில் மஹாகவி மாமாவுக்கு எப்போதும் அக்கறை. ஒருநாள் மாமி பருப்புக் கறி வைத்திருந்தா. அதன் மேல் மாஜரின் விட்டுச் சாப்பிடுவது எங்களெல்லோருக்கும் விருப்பமான விஷயம். ஆனால் மாஜரீன் தீர்ந்து போயிருந்தது. நாங்கள் எல்லோரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து தட்டுக்களில் சோறும் போட்டாயிற்று. மாஜரின் இல்லை. யென்பதைத் தெரிந்து கொண்டு மாமா உடனே தொலைபேசியில் ரவுனில் யாரையோ கூப்பிட்டு மாஜரீன் கொண்டுவரச் செய்து எங்களுக்குத் தந்தது இன்னமும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.
அதேபோல் அவரிடமிருந்த சாம்பல் நிற காரும் - ஏ40 ரகம் என் நினைவை விட்டு அகலவில்லை. ஒரு முறை வீட்டுக்குப் போயிருந்த போது அடுத்தவாரம் பாசிக்குடா போகிறோம் என்று கூறி அப்பாவிடம் அனுமதி பெற்றுக் கொண்டு என்னையும் வரக் கேட்டதும் நானும் அவர்களோடு பாசிக்குடாவுக்கு அந்தக் காரில் போனதும் நல்ல ஞாபகம். மாமிபூசணிக்காய் சாம்பாருடன் சோறு சமைத்துக் கொண்டு போய் பாசிக்குடாக் கடற்கரையோரம் இருந்து சாப்பிட்டதும் மறக்கவில்லை. ஏனென்றால் இந்தச் சாப்பாட்டை அதாவது பூசணிக்காய் சாம்பாரை - முதன் முதலாக இந்தச் சந்தர்ப்பத்தில்தான் நான் சாப்பிட்டேன்.
இதற்கு முந்திய நினைவுகளும் உள்ளன. அவர்கள் யாழ்ப்பாணத்தில் அல்லது கொழும்பில் பணிபுரிந்த காலத்தில் ஒருமுறை பெரிய நீலாவணைக்குக் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். அவர்களையெல்லாம் கூட்டிக் கொண்டு ஒருநாள் காலையில் எங்கள் ஊர்க் கடற்கரைக்குப் போனதும், கடற்கரையில் உடனே பிடித்த மீனை வாங்கி வந்து சமைத்து நாங்கள் எல்லோரும் உண்டதும் எதோ ஒரு கனவு போல்நினைவுக்கு வருகிறது. மாமா அந்தச் சாட்பாட்டை மிகவும் சிலாகித்துச் சாப்பிட்டாரென்று நினைக்கிறேன்.
மஹாகவி மாமா அப்பாவுக்குக் கடிதங்கள் எழுதும்போது பேரன்ப, அல்லது பேரன்பு நண்ப என்று விளித்துத் தான்எழுதுவார். ஒருநாளும் நீலாவணன் என்று பெயர் விழித்து எழுதியதை நான் கண்டதில்லை. அவருடைய கையெழுத்தில் ஒரு சில கடிதங்கள் இன்றும் என்னிடம் பத்திரமாக உள்ளன.
சேரன் பிறந்த போது,
பேரன்ப ஒன்றும் பெரிதாய் எழுதவில்லை சேரன் பிறந்த செருக்கு என்றும், சோழன் பிறந்த போது,
நாளை கடிதம் அனுப்புகிறேன் இங்குபுதுச் சோழனும் தாயும் சுகம் என்றும் அனுப்பியிருந்த இரண்டு தபாலட்டைகளும் அதற்குள் அடக்கம். மஹாகவி மாமாவுடன் எனது தந்தையார் ஓரிரு சந்தர்ப்பங்களில் முரண். பட்டுக் கொண்டாரென நினைக்கிறேன். அவை தனிப்பட்ட முரண்பாடுகள் இல்லையென்றும் இலக்கியம் சார்ந்த முரண்பாடுகள் என்றும் நினைக்கிறேன். இதைப்
‘ஓலை’ - 17 ஜ7ணி 2003) Uő5á 8

பற்றித் தெளிவான விளக்கம் எனக்கு இல்லை. ஆனால் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள் என்பது நிச்சயம்.
மஹாகவி மாமாவின் மரணச் செய்தி வானொலியில் வந்தபோது அப்பா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். செய்தியைக் கேட்டதும் சாப்பாட்டை அப்படியே விட்டுவிட்டு அப்படியே அதிர்ச்சியோடு உட்கார்ந்திருந்தார். மாமாவின் இறுதிக் கிரியை. களில் கலந்து கொள்ளவேண்டுமென எத்தனையோ முயற்சிகள் செய்தும் முடி. யாது போய்விட்டது. அப்போது ஜே.வி.பி கிளர்ச்சி முடிந்து நாடு பழையபடி வழமைக்குத்திரும்பாத நேரம் நினைத்த இடத்துக்குநினைத்த மாத்திரத்தில் செல்ல முடியாது. எப்படியோ ஒடித் திரிந்து கூடிய விரைவில் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிமானத்தில்நாம் யாழ்ப்பாணம் போனோம். எங்களது முதலாவது விமானப்பயணமும், என் தந்தையாரின் ஒரேயொரு விமானப் பயணமும் அதுதான். மரணச் சடங்குகள் முடிந்து ஓரிரு நாட்களின் பின்தான் அளவெட்டிக்குப் போகக் கிடைத்தது.
மாமா இறந்து கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள். அண்மையில் எனது அப்பாவின் கவிதைகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரது பழையடயறிகளையும் ஆராய்ந்தோம். அப்போது மஹாகவிமாமாவின் மரணச் செய்தியைக் கேட்டு அப்பா எழுதியிருந்த ஒரு கவிதை எனக்குக் கிடைத்தது. இந்தக் கவிதையைப் பற்றி என் தாயார் உட்பட எவருக்குமே தெரியாதிருந்தது. மூன்று தசாப்தங்களின் பின் கிடைத்த அந்தக் கவிதை இதுதான்.
இதயம் இருந்ததடா! எண்ணங்கள் பொங்கின இதயம் இருந்துமென்ன ஏக்கம் பிறந்துமென்ன இறக்கை இரண்டிருக்க வில்லையடா என்னிடத்தில் இறக்கை இரண்டிருந்தால். எப்படியோ கண்டிருப்பேன் இன்னேரம் வந்திருப்பேன் எப்படியும் கண்டிருப்பேன் இதயம் இருந்ததடா இறக்கை இருக்கவில்லை. வானொலியில் ஒர்செய்தி வந்தது நான் கேட்டிருந்தேன் ஊனுருகி உள்ளம் உருகி விழிபெருகி நானழவும் நண்பர் நமரழவும் நாடழவும் வானொலியில் ஓர் செய்தி வந்தது நான் கேட்டிருந்தேன்!
இதயம் துடித்ததடா
இறக்கை இருக்கவில்லை! புள்ளி அளவிலொரு பூச்சி மடிந்த கதை சொல்லி அழுகின்ற ஒரு சோகநிறை செய்தியல்ல! அன்னியர்தம் ஆட்சி அருங் கோடை வேக்காட்டின் பின்னணியில், இந்நாட்டு மன்னவர்கள் தம்முடைய
பக்கம் 9 ‘ஓலை’ - 17 ஜுனி 2003)

Page 7
காதலும் பணிபும் கலையும் தமிழ்வாழ்வும் சாதலைக் கண்டு. சலிப்புற்ற செய்தி யல்ல!
வானொலியில் ஒர் செய்தி வந்தது நான் கேட்டிருந்தேன். முடிசூடா மூவேந்தர் முட்டுதலும் ஒளவை அடிகொடுக்க அஞ்சி அழுகின்ற காட்சி படியென்றால் மட்டும் படியார் படுத்துகிறார் என்றுண் பொடிகளைப் பற்றிப் புதுச் செய்தி இல்லையது!
வானொலியில் ஓர் செய்தி வந்தது நான் கேட்டிருந்தேன்
சேரன் பிறந்த செருக்கடா என்னுடைய பேரண்பா என்ற பெருமைமிகு செய்தியல்ல நாளை கடிதம் எழுகிறேன் இங்குபுதுச் சோழனும் தாயும் சுகம் என்ற செய்தியல்ல.
உண்ட செயல் நின்ற உதிரம் உறைந்ததடா கணிகள் துயரக் கனியைப் பிழிந்தன ஆ. என்னவாம் அந்த இழவறையும் வானொலியில் உண்மையா? உன்னை உலகம் இழந்ததுவா!
என்னருமை நண்பா இறுதியாய் உண்மனையில் உன்னைநான் கண்டு உரையாடி உணர்கையிலே தென்னிலங்கை போகின்றேன் தேடியங்கும் வாருங்கள் சொன்னாய், அதிலிருந்த குக்குமத்தை நானறியேன் மூன்று திங்கள் ஆகவில்லை மூச்சு நின்ற தென்கின்றார் நானெந்த வாறிதனை நம்பிடுவேன் நண்பா ஒ. ஏனிந்த வாறுஎமை ஏமாற்றிப் போயினை யோ! வானத்தன் ஆனான் மஹாகவி என்றந்த வானத் தொலியாகி வந்ததடா கேட்டிருந்தேன்.
பாண்டியனுக் கென்ன பகர்ந்தாய் இனியாளை வேண்டும் வரையழவும் விட்டுப் பிரிந்தாயோ? சேரன் ஒளவை சோழனுக்கு செப்பியது தான் எதுவோ வாரம் முடிவோ இவ் வையப் பெருவாழ்வு? உயர்ந்து நிமிர்ந்த உருவம். பின்னால் வாரிவிட்ட தலை. மென்மையான ஆனால் உறுதியான பேச்சு. கனிவான பார்வை. அந்த மஹாகவி மாமா இன்றும் என் நினைவில் இருக்கிறார். அவரது உருவமும் என் ஆழ்மனதில் அப்படியே பதிந்துபோய் இருக்கிறது.
"gasu' - 17 (graf 2003) U55ú 10

பிள்ளைக் கவிஞர் மஹாகவி
சோ.தேவராஜா
ஈழத்துக் கவிதைப் போக்கில் சில பாய்ச்சல்களை நிகழ்த்திய மஹாகவி ஓர் பிள்ளைக் கவிஞராகவும் பரிணமித்துள்ளார் என்பது அவரது ஆறு பாடல்களை கரவை ஏ.சி.கந்தசாமிக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட பாரதி வெளியீட்டகத்தின் நான் அரசன் (சிறுவர் பாடல்கள்) என்ற நூலிலே தரிசிக்க முடிந்தது.
சைவப்புலவர் இரத்தினம் அப்புத்துரை தனது மழலைத் தமிழ்ப்பாடல்' என்ற நூலிலே மஹாகவி பற்றியும் ஒர் பாடலை யாத்துள்ளார். ஏன் மஹாகவியைபிள்ளைகளுக்கான புத்தகத்திலே சேர்த்துள்ளார் என நான் தேடிய போது மஹாகவியின் பிள்ளைப் பாடல்கள் அதற்கான பதிலாய் அமைந்தன.
'ஈழத்து மஹாகவி' என்ற தலைப்பிலே புலவர் இரத்தினம் அப்புத்துரை அவர்களின் பாடல் இவ்வாறாக அமைகிறது.
வெள்ளை மணலின் பரப்பிலே வரைந்து சென்ற நணர்டது கொள்ளை அழகுப் படத்தினைக் குறித்துக் காட்டும் விந்தையை புள்ளி அளவோர் பூச்சியை புறங்கையாலே தட்டிட உள்ளம் நொந்து வெந்திட உருமறைந்து இறந்ததை தெள்ளிதாகக் காட்டிய தீரர் மகா கவியினைப் பள்ளிப் பாலர் கூடியே பாடித் துதித்து ஆடுவோம் புதிய கவிதை மரபிலே போற்றும் வடிவைக் காட்டிய நிதியம் எங்கள் மஹாகவி நினைந்து நினைந்து போற்றுவோம் சிறு நண்டு மணல்மீது சித்திரம் கீறும் சிரத்தையைக் கவியாக்கிய மஹாகவியின் குழந்தைகளுக்குரிய அவதானிப்புத் திறனையும் புள்ளி வடிவிலே உள்ள பூச்சிக்கு நேர்ந்து விட்ட விபத்து மரணத்துக்குக் காரணமான தனது குழந்தை மனத்தின் தூய்மையான துயரத்தையும் படம் பிடித்த மஹாகவியை காவிய நாயகனாக்கி விடுகிறார் கவிஞர் திருமதி இரத்தினம் அப்புத்துரை.
மஹாகவியின் பிள்ளைக் கவிகளாகக் காணக் கிடைத்த பாடல்கள் வருமாறு:
Uő5ó 11 'gé06v" - 17 (g'6ðf 2003)

Page 8
1. காலை கண்ணை விழிக்கிறேன்.
2. அம்மா தோசை சுடுகிறாள்.
3. சின்னக்குருவி பறக்கிறது.
4. கண்ணென்றால் நாம் பார்க்கிறது.
5. நெல்லை ஒருவன் விதைக்கின்றான்.
6. மழையே மழை பொழியாயோ!
பார்க்கும் காட்சிகளில் பரவசம் கொள்ளல், நடைபெறும் அன்றாட
சம்பவங்களில் லயித்தல், மாற்றங்கள் ஒவ்வொன்றையும் கண்டு அதிசயித்தல், புதுமைகளைத் தேடிப் புளகாங்கிதமடைதல், இயற்கையோடு இணைந்து உறவோடு உரிமையோடு பேசுதல், விளையாடுதல், வெருட்டுதல், வினையாற்றும் திறனை வெளிப்படுத்தல், தமது உடல் உறுப்புக்களின் செயற்பாட்டை கண்டு வியத்தல், பறவைகளோடு மழலை மொழியில் உரையாடல், உழைப்பாளர்களின் பெருமை பேசி மகிழ்தல் போன்ற பிள்ளைகளின் உணர்திறனை உள்வாங்கிப் பிள்ளைக் கவிகளைத் தொடுத்து விளையாடுகிறார் கவிஞர் மஹாகவி.
பிள்ளைகளின் மனப்பாங்கில் இயற்கை அவர்களுக்கு அன்னியமானது அல்ல. அன்னியோன்ய உறவைப் பூண்டுள்ளது. மழையும் முகிலும், இடியும், குருவியும், பயிரும், வெயிலும் பிள்ளைகளோடு பேசவும்-விவாதிக்கவும்- சண்டை செய்யவும் வல்ல சிநேகம் கொண்டுள்ளன. பிள்ளைகள் உள்ளொன்று வைத்து வெளியொன்று பேசும் சூழ்ச்சிகள் இல்லாதன. தமக்கு விருப்பமானதை வெளிப்படையாகத் தெரிவிக்கவும், பிழையொன்று எனில் அதனைக் கண்டிக்கவும், தமக்குத் தேவையானதை உரிமையோடு தரும்படி கேட்கவும் வல்லமை உள்ள பிள்ளைகள் தமது தாயானால் என்ன தம்மெல்லைக்கு அப்பாலுள்ள இயற்கையெனில் என்ன வேறுபாடின்றித் துணிவுடன் பேசும் ஆற்றலையும் வெளிப்படுத்துவதாக மழையே, மழை பொழியாயோ' பாடல் ஆக்கப்பட்டுள்ளது.
மழையே. மழை பொழியாயோ? மாரிகாலம் தெரியாயோ? பிழையே பிழையே புரிவாயோ
பெய்யுங் காலம் நினையாயோ?
காலத்துக்கேற்ற கடமையைச் செய்வது இயற்கையின் கடன். அக்கடனைத் தெரிந்து கடமை செய்வதே உன் பணி என இயற்கையோடு முரண்படும் பிள்ளையின் உளப்பாங்கு வெளிப்படுகிறது. மாரிகாலத்தில் மழை பெய்யாமல் ஏன் பிழை விடுகிறாய். மழை பெய்ய ஏன் நீ நினைக்கவில்லை' என உரிமையோடு கண்டிக்கும் பாங்கு சிறப்பாயமைந்துள்ளது.
"வெயிலே, வெயிலே! விரையாயோ! வேண்டாம் என்றால் அகலாயோ?” என்று உத்தரவிடும் பிள்ளையின் ஆளுமையை வெளிப்படுத்துகின்றது.
'இடி, மேளம் அடிப்பதையும் செடிகள் சிரிப்பதையும் கண்டு களிக்கும் பிள்ளையின் மகிழ்வு இன்பம் பெருக்குவதை பாடல் மூலம் கவிஞர் வெளிப்படுத்து
‘ஓலை’ - 17 ஜுனி 2003) பக்தம் 12

கிறார். அத்துடன் இயற்கையின் இயல்பான கடமையைச் செய்என்று சொல்லாமல் உனது இன்பமான கலை நிகழ்வை நிகழ்த்தாயோ என விண்ணப்பம் செய்வதும் பேசுந் திறனைப் புரிய வைப்பதுமாக அமைகிறது. இடியே! இடியே இடியாயோ? இனி உன் மேளம் அடியாயோ? செடியே செடியே மலராயோ? செவ்வந் திகளே சிரியிரோ? 'உழைப்பாளர் பற்றி நெல்லை ஒருவன் விதைக்கிறான்' என்ற கவிதையிலே
பாலை நிலமும் இவராலே பசுமை பெற்று நிற்கிறதே என்று உழைப்பின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றார்.
வானை ஒருவன் அளக்கின்றான் மயிரைக் கூடப் பிளக்கின்றான் என விஞ்ஞான வளர்ச்சி கண்டு வியக்கின்றார்.
உடல் உறுப்புகள் ஒவ்வொன்றின் செயற்படு திறனை கண்ணென்றால் நாம் பார்க்கிறது' என்ற கவிதையிலே ஒரு பிள்ளை முதலில் தனது உடலைப் புரிந்து கொள்ளும் பக்குவம் பெறுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இப்பாடலின் இறுதிவரிகளில்
பல்லென்றால் நாம் கடிக்கிறது பாடம் வகுப்பில் நடக்கிறது நில்லும் நெடுகக் கதைக்கிறதோ? நிறைய வேலை இருக்கிறது! எனப் பாடல் நகைச்சுவையோடு நிறைவு செய்யப்படுகிறது.
'சின்னக்குருவி பறக்கிறது' என்ற பாடலில் பாரதியார் சமைக்கவைத்திருந்த அரிசியைக் குருவிகளுக்குச் சிந்தி, அவை உண்டு மகிழ்ந்த காட்சியை தன்னுள் வயப்படுத்தி, மஹாகவி அக்குருவியோடு பேசி மகிழ்வதை சித்தரிக்கிறதெனலாம்.
வயிறு சிறிய தானாலும் வருத்தம் பெரிதே' என்கிறதோ?.
« 0 பஞ்சம் வந்து சேர்ந்திடுமோ, பத்துப் பயறு வீசுவதால்? என்று பாரதியின் செயலை மஹாகவி நியாயப்படுத்தம் கவி உள்ளத்தை பிள்ளைப் பாடல் மூலம் வெளிப்படுத்துவதைக் காணலாம்.
பிள்ளைகள் உணவு உண்பதில் கொஞ்சம் பின்னடிப்பதில் உள்ள சுமையைத் தாய் அனுபவிப்பது அன்றாட நிகழ்வாகும். அப்பிள்ளைகளுக்கு அப்பிள்ளையின் உளப்பாங்கில் உணவுப்பண்டங்களின் இயற்கை அழகை உவமையோடுவர்ணிப்பதில் ஆசையைத் தூண்டுவதையும் நிலவைப் பிடித்துதா' என்று தாயிடம் கேட்ட பிள்ளைக்கு கண்ணாடியிலே நிலவைக் காட்டி மகிழ்ந்த பழைய பிள்ளைப் பாடல் கதைகளுக்குப் பதிலாக 'அம்மா தோசை சுடுகிறாள் கவிதையிலே நிலவையே சாப்பிடலாம்' என்றவாறாக தாய் ஆசை ஊட்டுவதைக் காணலாம்.
பக்கம் 13 ‘ஓலை’ - 17 ஜுனி 2003)

Page 9
தட்டைக் கரண்டி பிடிக்கின்றாள் சரியாய் பெரிய நிலவைப் போல் வட்டத் தோசை சுடுகின்றாள் வடிவாய்த் தின்பீர் என்கின்றாள். காலை எழுந்ததும் காணும் காட்சியைத் தனது அன்றாட நிகழ்வில் பிள்ளை ஒன்று அனுபவிப்பதை 'காலை கண்ணை விழிக்கின்றேன்' என்ற பாடலில் கவிஞர் காட்சிப்படுத்தியுள்ளார்.
காலை கண்ணை விழிக்கின்றேன் கதவு திறந்து வருகின்றேன் பாலைச் சிந்தி விட்டது போல் படியில் வெய்யில் வீழ்கிறது என பிள்ளைகள் விரும்பும் பால் போல் வெய்யில், வீட்டுப் படியில் சிந்தி. யிருப்பதான சித்தரிப்பு பிள்ளையின் சிந்தனைச் சிறகைப் பறக்கச் செய்வதாகும்.
முற்றத்தினிலே பார்க்கின்றேன் முதல்நாள் இருந்த மொட்டொன்று புத்தம் புதிய பூவாகப் பூத்துச் சிரித்து நிற்கிறது
நானே கையால் நட்ட செடி நானே தண்ணிர் வார்த்த செடி ஆனபடியால் என்னைப் பார்த் தங்கே நின்று சிரிக்கிறது எனத் தனது உழைப்பின் பயனை உடனேயே அனுபவிக்கும் அளப்பரிய மகிழ்வை பிள்ளையில் பாய்ச்சுகிறார். உற்பத்திசாரா பொருளாதார சூழலில் நலிந்து வாழும் நம் சமுதாயத்தில் இப்பிள்ளைப் பாடல் உற்பத்தி உறவின் மகிழ்வைக் கொண்டாடுகிறது.
'எனது உழைப்பை அடுத்தவர் பறிக்க அனுமதிப்பேனோ" என்ற உரிமை உணர்வை ஊட்டுவதாகப் பாடலின் இறுதி அடிகள் செப்பமாக அமைந்துள்ளன எனலாம். அத்துடன் பூ இயற்கையாய் செடியில் இருப்பது அழகானதே தவிர அக்காள் அதனைச் செடியில் இருந்து பறித்து தன் தலையில் சூடுவது இயற்கையைக் கெடுப்பதாகும் என்ற கோபத்துடனோ பாடுவதாகவும் அமையலாம்.
மிக்க வாசம் தருகிறதே மிகவும் மெத்தென் றிருக்கிறதே அக்காள் தலையிற் சூடிடவே அதனை ஆய விடுவேனோ? மஹாகவியின் பிள்ளைப் பாடல்கள் ஈழத்துப்பிள்ளைப்பாடல்களின் மெருகை இனிதே வெளிப்படுத்தியனவாய் அமைந்துள்ளன. இப்பாடல்கள் ஒவ்வோர் பிள்ளைகளின் இல்லந்தோறும் இசைப்பாடல்களாக முழங்கும் இனி ஒரு காலம் வருமோ என்ற பேராசையோடு நிறைவு செய்கிறேன். &
6
ஓலை’ - 17 ஜுனி 2003) U55ó 14

மஹாகவியின் கிராமம்
எம்.ஏ.நுஃமான்
மஹாகவியின் பெரும்பாலான கவிதைகள் யாழ்ப்பாணக் கிராமிய வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை. கிராமியத்தை மஹாகவிபோல் தமிழ்க் கவிதையில் கொண்டுவந்த பிறிதொரு கவிஞன் இல்லை எனலாம். இந்த வகையில் இவருக்கு அண்மையில் நிற்கக்கூடியவர் நீலாவணன் ஒருவர்தான். ஆனால், கிராமியத்தைப் பொறுத்தவரை அளவிலும் தன்மையிலும் மஹாகவி அவரை மிஞ்சி நிற்கிறார். மஹாகவியின் முக்கியமான பெரும்பாலான கவிதைகளில் யாழ்ப்பாணக் கிராமப்புற வாழ்க்கையே சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆயினும் மஹாகவியின் கிராமியச் சித்தரிப்பில் கால அடிப்படையில் இருவேறுபட்ட நிலைகளைக் காணமுடிகிறது. அவரது ஆரம்பகாலக் கவிதைகளில் கிராமம் ஓர் இலட்சியபூமியாகச்சித்தரிக்கப்பட்டுள்ளதையும், அவரது பிற்காலப்படைப்புகளில் கிராமம் அதன் சகல முரண்பாடுகளுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம். ஆரம்பகாலத்தில் அவரிடம் காணப்பட்ட கற்பனாவாதமும்(Romanticism) பிற்காலத்தில் அவரிடம் வலுப்பெற்ற யதார்த்தவாதமும் (Realism) இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்று கூறத் தோன்றுகின்றது.
மஹாகவியின் ஆரம்பக்காலக் கவிதைகளில் நகரமும் கிராமமும் எதிர்நிலைகளாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. 'நகரம் மனித வாழ்வுக்கு உகந்ததன்று. பொய் நாகரிகம் மிகுந்தது. மனித மனத்தை மரத்துப்போகச் செய்வது. பதிலாக கிராமம் மனோரம்மியமானது. மனித மனத்துக்கு உயர்வைத் தருவது. அதுவே மனிதன் முட்டொழிந்து வாழத் தக்க இன்பபுரி. இந்தக் கண்ணோட்டம் 18, 19ம் நூற்றாண்டு மேலைத்தேயக் கற்பனாவாதக் கவிதை மரபின் வழிவருவது எனலாம். கைத்தொழிற் புரட்சியின் விளைவான நகர்ப்புற நாகரிக வளர்ச்சி கிராமத்தின் அமைதியிலும் இயற்கை எழிலிலும் மேலைக் கவிஞர்களுக்கு ஓர் ஈர்ப்பை ஏற்படுத்திய காலம் அது வில்லியம் பிளேக், வில்லியம் வேர்ட்ஸ்வேத், கோல்றிஜ் லோட் பைரன், ஷெல்லி, ஜோன் கீற்ஸ் போன்றவர்களை ஆங்கிலக் கவிதை மரபில் றொமன்ரிக் கவிஞர்கள் (Romantic Poets) என அழைப்பர். இவர்கள் இயற்கை எழிலுக்குத் தங்கள் கவிதைகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள். இயற்கை எழில், மாசுறாத கிராமத்துடன் இணைத்தே நோக்கப்பட்டது.
காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் நகரமயமாக்கலுக்கு உட்பட்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் கடந்த நூற்றாண்டின் ஆரம்பதசாப்தங்களில்நாம் இந்தக் குரலைக் கேட்கிறோம். இந்தியச் சூழலில் போலியான கைத்தொழில் நாகரீகத்திலிருந்து விடுபட்டு இயற்கையோடியைந்த வாழ்வை நோக்கி கிராமத்துக்குத் திரும்புமாறு
Uóstó 15 "galoap' - 17 (graf 2003)

Page 10
மகாத்மாக் காந்தி அழைப்பு விடுத்தமையும் இது தொடர்பாக நாம் நினைவுகூரத்தக்கது. ஐரோப்பிய கற்பனாவாதக் கவிதையின் செல்வாக்கு கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதிவரை இந்தியக் கவிதையில் பெருமளவு காணப்பட்டது. குமாரன் ஆசான், உள்ளுர், வள்ளத்தோல் முதலிய கவிஞர்கள் மூலம் இது மலையாளக் கவிதையில் அதன் உச்சநிலை அடைந்தது என்பர். பாரதி மூலமே இது தமிழுக்கு அறிமுகமாயிற்று. ஆயினும் பாரதிதாசனும் அவரது வாரிசுகளுமே இதைத் தமிழில் பெருமளவு முன்னெடுத்துச் சென்றனர். எனினும், இவர்கள் ரொமன்டிஸத்தின் ஓர் அம்சமான இயற்கை அழகில் மனம் பறிகொடுத்தலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர் எனலாம். பாரதிதாசனின் அழகின் சிரிப்பு இதற்கு உதாரணம். 1950, 60 கள் வரை தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த பாரதிதாசன் பரம்பரையினரின் கவிதைத் தொகுதிகளில் இயற்கை என்ற தலைப்பில் ஒரு தனிப்பகுதி தப்பாமல் இடம்பெற்றிருக்கக் காணலாம். சங்க இலக்கிய மரபில் நாம் காண்பதுபோல் இயற்கை கவிப்பொருளின் பின்னணியாக இல்லாமல் இயற்கையே கவிப்பொருளாகிய தன்மையை இவர்களிடம் காணலாம்.
மஹாகவி தன் ஆரம்ப காலத்தில் இந்தக் கற்பனாவாதக் கவிதை மரபின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தார் எனினும் பாரதிதாசன் மரபினர்போல் இயற். கையை இயற்கையாக அன்றி அதை கிராமியப் பண்பாட்டின் ஒர் பிரிக்கமுடியாத அம்சமாகவே நோக்கியுள்ளார். இயற்கையோடியைந்த வாழ்வு கிராமத்திலேயே, கிராமியப் பண்பாட்டிலேயே கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவரது ஆரம்பாலக் கவிதைகள் சில காட்டுகின்றன. இந்த வகையில் கிராமம், யாழ்ப்பாணம் செல்வேன், செல்லாக்காசு ஆகிய அவரது மூன்று கவிதைகள் முக்கியமானவை.
கிராமம் 1950களின் ஆரம்பத்தில் அவர் எழுதிய கவிதை, கிராம மக்களின் உயர்ந்த பண்பாடு பற்றிய பின்வரும் படிமத்துடன் அது தொடங்குகின்றது.
நாள்முழுதும் பாடுபடுவார்கள்:- ஒயார்;
நன்று புரிவார் இரங்குவார்கள்;
ஆள் புதியன் ஆனாலும்
ஆதரிப்பர், போய் உதவுவார்கள் - ஊரார்கள். பின்னர் கவிதைகிராமத்தின்இயற்கை வனப்பை நோக்கிச்செல்கிறது. அதன் நெல் வயல், மாந்தோப்பு, ஆட்டிடையனின் இசை, வேப்பமர நிழல், பூமலியும் பொய்கை, குயில்பாட்டு இவற்றையெல்லாம் அனுபவிக்கும் போது "நீமடிந்ததென்றிருந்த நின் கவிதை உணர்வுதலைதுாக்கும் பா ஆக்கும்" என்று பாடுகிறார் கவிஞர்.
கடைசியாகக் கவிதை இவ்வாறு முடிகிறது.
நல்லவர்களுக் கிதுதான் நாடு - பொய்
நாகரிகத்துக் கப்பால் ஒடு!
முல்லை நாடு பக்கத்தில்
மூன்றறைகளோடு சிறு வீடு போதும் எடு ஏடு! இங்கு நகரம் பொய்நாகரிகம் என்றும் கிராமம் நல்லவர்களுக்குரியநாடு என்றும்
‘ஓலை’ - 17 ஜுனி 2003) Uóøó 16

கட்டமைக்கப்படுவதைக் காணலாம். இந்த கிராமநகர முரண் யாழ்ப்பாணம் செல்வேன் கவிதையில் இன்னும் கூர்மையாக வெளிப்படுகிறது. இதுவும் 50களின் ஆரம்பத்தில் அவர் எழுதிய கவிதை. இது பத்திரிகையில் பிரசுரமானபோது, ஒரு ஆங்கிலக் கவிதையின் கருத்தைத் தழுவியது என்ற குறிப்பையும் மஹாகவி கொடுத்திருக்கிறார். வள்ளி தொகுப்பில் இது இடம்பெற்றபோது அந்தக் குறிப்பு காணப்படவில்லை. கவிதையைப் படிப்போருக்கு இது எந்த வகையில் ஆங்கிலக் கவிதையின் தழுவல் என்ற வியப்பு ஏற்படும். அவ்வளவு தற்புதுமையானதாக உள்ளது மஹாகவியின் கவிதை. பரபரப்பான கொழும்பில் வேலை செய்யும் ஒரு நடுத்தர வர்க்கத்தவன் சித்திரை விடுமுறையில் யாழ்ப்பாணம் செல்ல ஆயத்தமாகும் உணர்வு நிலையைக் கவிதை வெளிப்படுத்துகின்றது. நகர நாகரிகத்தின் முட்டில் இருந்து விட்டு விடுதலையாகும் உணர்வு நிலையே கவிதையின் மையம், இது கவிஞரின் உணர்வுநிலையாகவும் இருக்கலாம். கவிதை தற்கூற்றாகவே அமைகின்றது.
யாழ்ப்பாணக் கிராமத்தில் தன் வீட்டுச் சுற்றாடலின் இயற்கை வனப்புடன் ஆரம்பமாகிறது கவிதை.
இந்நாள் எல்லாம் எங்கள் வீட்டுப் பொன்னொச்சிச் செடி பூத்துச் சொரியும்! முல்லையும் அருகே மல்லிகைக் கொடியும் கொல்லெனச் சிரித்துக் கொண்டிருக்குங்கள் அல்லவோ? வயல்கள் எல்லாம் பச்சை நெல் நிறைந்திருக்கும் என் நாட்டில்! பாட்டுப் பாடாத உழவன் பாடுவான் துலாக்கள் ஆடாது நிற்கும் அன்றோ இன்றே! கிராமத்தின் இயற்கை வனப்பில்இருந்து அதன் உணவுப்பண்பாட்டுக்குநகர்கிறது மனம் கொழும்பின் ஹோட்டல் தரும் முட்டை ரொட்டிக்குச் சலித்துப் போன மனம் கிராமத்தில் தாய் அன்புடன் ஊட்டிய கூழையும், பழஞ்சோற்றையும் எண்ணி வாயூறுகின்றது.
கூழ்ப்பானையின் முன் கூடிக் குந்தி இருந்து இலைகோலி இடுப்பில் இட்டு ஊட்டிய கரம் தெரிந்து ஊற்றும் அவ்விருந்து அருந்திலனேல் பட்டினி போக்கா பழம், பால், இவ்வூர் ஒட்டலின் முட்டை ரொட்டிகள்! அன்னை பழஞ்சோற்றுண்டி கிழங்கொடு பிசைந்து வழங்கலை நினைத்தால் வாயூறாதோ?
இந்த வாயூறலே பயணத்தைத் துரிதப்படுத்துகின்றது.
கடவுளே! உடனே உடுத்துக் கொண்டு
Uóóó 17 ‘ஓலை’ - 17 ஜ7ணி 2003)

Page 11
அடுத்த ரயிலைப் பிடித்துக்கொள்கிறேன்" என்கிறார் கவிஞர்.
அந்தப் பெற்ற பொன்னாட்டைப் பிரிந்து இனிமேலே
சற்றும் இக்கொழும்பில் தங்கேன்! இங்கே.
என்று தனக்குத் தானே உறுதி கூறிக்கொள்கிறார். அடுத்த வரிகளில் மன, உடல் ரீதியில் முட்டை ஏற்படுத்தும் செயற்கையான நகர நாகரிகம் படிமமாக்கப்படுகின்றது.
முலை இளம் முளைகள் முனைந்தெழுவதனை கலை குறைத்து அணியும் கண்ணியர் காட்டவும் தலை இழந்தே நாம் தடந்தோள் ஒளிக்கும் சட்டைகள் கைகள் முட்ட இட்டும் பட்டிகள் கழுத்தை வெட்ட விட்டும் கொட்டிடும் வியர்வையில் குமைவதா?
என்ற கேள்வி இந்தப் படிமத்தின் ஊடாக மனதில் மேல் எழுகின்றது. அதற்குரிய பதிலோடு கவிதை இவ்வாறு முடிகிறது. இவற்றை விட்டெறிந்து எண்சாணி வேட்டி கட்டி முட்டொழியலாம் அம் மூதூர் செல்வேன்."
நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையே உள்ள உணவு, உடைப் பண்பாட்டு வேறுபாட்டைக் குவிமையப்படுத்தி எளிமையான கிராமப் பண்பாடே உள, உடல் இறுக்கத்தைத் தளர்த்தி ஒரு விடுதலை உணர்வைத் தருகிறது என்ற ஒரு படிமத்தை இக்கவிதை நமக்குத் தருகின்றது. வாலிப வயதில் கிராமத்தைவிட்டு கொழும்புக்குத் தொழில் நிமித்தம் சென்ற இளம் மஹாகவியின் உண்மையான மன உணர்வையும் இக்கவிதை வெளிப்படுத்துகின்றது எனலாம்.
மூன்றாவது கவிதை செல்லாக் காசு" சற்றுப் பிந்தி 1960களின் ஆரம்பத்தில் எழுதப்பட்டது என்று நினைக்கின்றேன். இதுவும் நகரம், கிராமம் என்ற எதிர்முரண்பற்றிய கவிதைதான். இக்கவிதையும் தன்கூற்றாகவே அமைகின்றது. பணத்தை மையமாகக்கொண்ட, ஒரே வட்டத்தில் சுற்றிச் சுழல்கிற, சாரமற்ற நகர வாழ்க்கைக்கு நீண்டகாலமாகப் பழக்கப்பட்ட ஒருவன், பிரதிபலன் எதிர்பாராத கிராம மக்களின் பரிவுக்கு ஆளாகி உயிர்தளிர்ப்புற்ற நிலையை கவிதை சித்தரிக்கின்றது.
பஸ் பயணத்துடன் கவிதை தொடங்குகின்றது. கவிசொல்லியான நகரத்தவன் பஸ்ஸில் பயணம் செய்கிறான். திட்டமான குறியிடம் நோக்கியதன்று அவன் பயணம். சாரமற்ற நகரவாழ்வில் இருந்து தற்காலிகமாகவேனும் விடுபடுவதே அவன் நோக்கமாகத் தெரிகிறது.
"வண்டி செல்கிறது எந்த வழியிலோ! பல வாரமாய்ச் சூட்டினில் மாடுபோல். செயல் மண்டிய நகரிலே வளைய வந்ததால்,
‘ஓலை’ - 17 ஜுனி 2003) U55ай 18

மானிட மனமுமோ மரத்துப் போனது! நொண்டிய அதனை அந் நோயின் நீக்கிடும் நோக்கமொன்றால் சில தூரம் தாண்டினேன்"
என்று தொடங்குகின்றது கவிதை. சூட்டினில்மாடு, மரத்துப்போய்நொண்டும் மனம் என்பன நகரத்தின் வரட்சியைக் காட்டும் சொற் குறியீடுகளாக உள்ளன. அவனுடைய பயணம் ஒரு ஆறுதல் தேடும் பயணம்தான் என்பது தொடக்கத்திலேயே தெரிவிக்கப்படுகின்றது.
கண்டது வழியிலே எழில் இறங்கினேன்; காலடிப் பாதையில் கால் நடந்தன.
எனத் தொடரும் அடுத்தவரிகளில் அவன் எதிர் பாராமலே அவனது நோய்க்கு மருந்து கிடைத்து விட்டது தெரிகிறது. அடுத்துவரும் வரிகளில் அவன் எதிர்கொள்ள நேர்ந்த அனுபவங்கள் விரித்துரைக்கப்படுகின்றன.
"புல்லில் என் பாதங்கள் பட உணர்டாகிய
போதையை சொல்லினில் போட்டுக் காட்டுதல்
அல்ல என நினைவு" என்று தொடர்கிறான். சிலவேளை அது அவன் சொல்லுக்கு அடங்காததாக இருக்கக் கூடும். வெம்பகல் எரித்த வேளையில் அவன் அங்கு போய்ச் சேர்கிறான். அது தொலைவில் உள்ள பின்தங்கிய கிராமம். மாலையானதும் ஒரு கல்லில் அமர்கிறான். "காற்று எனை அணைத்து இன்பக் களைப்புணர்டாக்கிற்று" என்கிறான். அந்தக் களைப்பில் அவனுக்கு பொழுது போனதே தெரியவில்லை. இனிப் போகலாம் என்று எழும்பியபோது"அதோ செல்கிறதாம் இவ்வூர்க் கடைசி வண்டியும்" எனத் தெரியவருகிறது. அடுத்து வரும் இரண்டு செய்யுள்கள் முன்பின் அறிமுகமில்லாத அவனைக் கிராமத்துக் குடிசைவாசிகள் எவ்வாறு உபசரித்தார்கள் என்பதைப் படம் பிடிக்கின்றன.
போய் ஒரு படலையில் தட்டினேன். அது
பொக்கெனத் திறந்தது. பொழுதைத் தூங்க ஓர்
பாய் கிடைத்து. கிள்ளும் பசிக்கு வீட்டவர்
பச்சை அன்பொடு காய்ந்தபாணி கிடைத்தது. என்ற வரிகள் தரும் கருத்தா இல்லாமலே காரியம் நடப்பதான இந்தச் சித்திரம், கிராமத்துப் பண்பாட்டில் இந்த உபசரணை சுயேச்சையான, இயல்பான நிகழ்வு என்ற உணர்வைத் தருகிறது. அன்றுதான் அவன் நிம்மதியான ஆழ்ந்த துயில் கொண்டான் போலும்
வாய் இருந்தது அங்கே நுளம்புக்கு ஆயினும் வந்தது மரணத்தின் துளியைப்போல் துயில் என்று கூறுகிறான காய்கிற கதிர்களின் சவுக்குப்படும் வரை தூங்குகிறான்.
Uóóó 19 “gá196v" - 17 (g"áðf 2003)

Page 12
விடிந்ததும்தான் வீட்டவர் அவனை அன்புடன் விசாரிக்கின்றனர். "ஏங்கிடுவார் அன்றோ தேடி நும்மவர்?" என ஆதங்கப்படுகின்றனர். இப்பொழுதுண்டு ஒரு வண்டி பட்டணம் என வழிப்படுத்துகின்றனர். அந்த வீட்டவரின் அன்பு அதேகணம் மறக் கற்பாலதன்று என்று அவன் நினைக்கின்றான். எல்லாவற்றையும் பணத்தினாலேயே அளவிடும் அவனது பட்டணத்து மனம் அவர்களது பயன்கருதா அன்பையும் அவ்வாறே அளவிட முயல்கிறது.பலர்க்கும் நாம் நீட்டும் தாள் ஒன்றை" அவன் அவர்களுக்கும் நீட்டுகிறான். அதற்கு, அவர்களுடைய எதிர்வினை அவனுக்கு வாழ்வின் மறுபக்கத்தை, நகரத்தவன் காணாத பிறிதொருபக்கத்தை உணர்த்துகின்றது. கவிதை பின்வருமாறு முடிகின்றது.
அப்பொழு தலர்ந்த இன் முகத்தின் மென்மலர் அப்படிக் குவிந்திருள் அடைந்ததேன் துயர் கப்பியதேன் ஒளி விழிகள் மீதிலே! காசையோ அவற்றின் சந்நிதிமுன் வீசினேன்! குப்புற வீழந்தன நிலத்தில் என்விழி கூறுதற் கின்றி என் உதடு மூடின. எப்படியோ பின்னர் நகர் திரும்பினேன். எனினும் என் உளத்திலே உயிர் தளிர்த்தது.
இந்த மூன்று கவிதைகளும் கிராமம் பற்றிய மஹாகவியின் ஆரம்பகாலக் கண்ணோட்டத்தைத் தெளிவுபடுத்துகின்றன. இங்கு கிராமம் முரண்பாடுகளும் மோதல்களும் அற்ற மனிதனின் உயிர் தளிர்க்கச் செய்யும் இலட்சிய பூமியாகவே படிமம் கொள்கிறது. கிராமம் பற்றிய மஹாகவியின் இந்த இலட்சியப் படிமம் 1960களில் அவர் எழுதிய தேரும் திங்களும் போன்ற சிறு கவிதைகளிலும் சடங்கு. கணிமணியாள் காதை, சாதாரண மனிதனது சரித்திரம், கோடை, புதிய தொரு வீடு போன்ற பெரிய படைப்புகளிலும் காணப்படவில்லை. இவையெல்லாம் கிராம வாழ்வையே மையமாகக்கொண்ட படைப்புகள். இவற்றில் சித்திரிக்கப்படும் கிராமம் இலட்சிய பூமியல்ல. இங்கும் முரண்பாடுகளும் மோதல்களும் உண்டு. பொய்மைகளும் போலித்தனங்களும் உண்டு. இங்கு அன்பும் அரவணைப்பும் மட்டுமன்றி வன்முறையும். ஒடுக்குமுறையும் படுகொலைகளும் உண்டு. நீதியை மறுதலிக்கும் கூறுகளும் நீதிக்கான போராட்டங்களும் உண்டு. இந்தக் கிராமம் யதார்த்தமானது. மஹாகவி காட்டும் இந்த யதார்த்தமான கிராமத்தின் இயல்புகள்
விரிவான ஆய்வுக்குரியன.
"2606vy' - 17 (graf 2003) பக்கம் 20

இலங்கைச் சாகித்திய விழா மலர் 1993இல் "மூவர்" எனும் தலைப்பில் வெளியானது.
மஹாகவி, நீலாவணன், முருகையன்
- சண்முகம் சிவலிங்கம்
fழத்து இலக்கிய உலகில், மஹாகவி, நீலாவணன், முருகையன் ஆகிய மூன்று பெயர்களும் ஒருமிக்க உச்சரிக்கப்படுகின்ற பல சந்தர்ப்பங்களைப் பார்த்திருக்கிறோம். இதற்குப் பல காரணங்கள் உண்டு.
ஒரு காரணம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், 1955க்கும், 1980க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், படைப்புக்களின் அளவிலும், தரத்திலும், இலங்கையின் ஏனைய தமிழ் கவிஞர்களைவிட இவர்கள் மிக உயர்ந்து நின்றமையாகும்.
இன்னொரு காரணம், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்த மூன்று கவிஞர்களும் ஒருவர்க்கொருவர் 'தண்டியானவர்கள்' - ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல, என்ற எண்ணம் மேலோங்கி இருந்தமையாகும்.
இலங்கைத் தமிழ் கவிஞரிடையே மஹாகவி எவ்வளவுதான் இமயம் போல் உயர்ந்து நின்றாலும் இன்றுகூட ஒருசில வட்டாரங்களில் மஹாகவியை விட நீலாவணனே சிறந்த கவிஞர் என்ற ஒரு அபிப்பிராயம் உண்டு. இன்னும் சில வட்டாரங்களில் மஹாகவிக்கும் நீலாவணனுக்கும் இல்லாத 'சமூகவிஞ்ஞான நோக்குடைய முற்போக்குக் கவிஞர்' என்ற சிறப்பு முருகையனுக்கு கற்பிக்கப்படுவதுமுண்டு. கலாநிதி கைலாசபதி முருகையனை "கவிஞரின் கவிஞர்" என்று போற்றுவதற்குக் கூச்சப்படவில்லை. மாடும் கயிறுகள் அறுக்கும்" என்ற தனது கவிதைத் தொகுதிக்கு முருகையன் எழுதிய முன்னுரையில், இலங்கைத் தமிழ் கவிதையின் வடிவமைப்பு முறை முற்றிலும் தமது பேனாவுக்குள் இருந்து ஊற்றெடுத்தது என்ற பிரமையை வளர்க்கத் தயங்கவும் இல்லை. இவ்வாறு ஒவ்வோர் வகையில் மூவருமே முக்கியமான முன்னணிக்கவிஞர்கள் என்ற எண்ணம் பரவலாக இருந்தது.
நம்மைப் பொறுத்தவரையில் இந்த மூன்று கவிஞர்களும், ஐம்பதுகளிலிருந்து எழுபதுகள் ஈறாகவுள்ள முப்பதாண்டுக்காலத்தில் இலங்கைத் தமிழ் கவிதையை ஆற்றுப் படுத்திய முக்கிய, சிருஷ்டி ஆற்றல்களாக விளங்குகின்றனர். புதிய போக்குகள் தொடங்கிய எண்பதுகளில் நின்று பார்த்தால் கூட இந்த மூவரினதும் அவர்கள் வழிவந்தோரினதும் கவிதைகளே இலங்கைத் தமிழ்
பக்தம் 21 ‘ஓலை’ - 17 ஜுனி 2003)

Page 13
கவிதையின் வளமான பகுதியாகத் தென்படுகின்றன. ஆகவேதான் இந்த மூன்று பேரையும் ஒரு சேரவைத்து எண்ணத் தோன்றுகிறது.
இவர்களைப் பற்றிய ஒப்பியல் ஆய்வுகள் மிக உபயோகமானவை. விமர்சன ரீதியாக மிகவும் வேண்டப்படுபவை. எனினும் அத்தகையதோர் ஒப்பியல் ஆய்வு இங்கு சாத்தியமானதல்ல. மஹாகவியின் கவிதைகள் பற்றிய எனது இரண்டு கட்டுரைகள் வெளியாகி உள்ளன. அவை தொடர்பாக நுஃமான் எழுதிய மிக விரிவான அறிமுகக் குறிப்புகளும் உள்ளன. மஹாகவியைப் பற்றியவேறு சில கட்டுரைகளும் அவ்வப்போது பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. நீலாவணனைப் பற்றிய இரசனைக் குறிப்புகள் மாத்திரமே சில சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. முருகையனைப் பற்றி எழுதப்பட்டிருக்க கூடியவற்றில் கலாநிதி க.கைலாசபதி 1981 இல் சமூகத் தொண்டன் இதழில் எழுதி, பின்னர் மாடும் கயிறுகள் அறுக்கும் தொகுதியின் பின்னிணைப்பாக வந்த கட்டுரையையும், கலாநிதி சிலோன் விஜயேந்திரன் 'ஈழத்துக் கவிதை விமர்சனம்' என்னும் தனது நூலில் எழுதிய இரசனைக் குறிப்புகளையும் பருமட்டான அபிப்பிராயங்களையும் மாத்திரம் பார்த்திருக்கிறேன். இந்த நிலையில் இவர்களைப் பற்றிய ஒப்பியல் ஆய்வுக்கு இன்னும் நெடுந்தூரம் செல்லவேண்டியுள்ளது.
அதனால், இங்கு இவர்கள் இலங்கைத் தமிழ் கவிதைக்கு ஆற்றிய பொதுப்பங்களிப்புளில் இரண்டொன்றை இனம் காண்பதுடன் அமைகிறேன்.
1. முதலாவதாக, மூன்று பேருமே தமிழ் செய்யுளை உயிர்ப்போடு கையாளுவதில் பெரும் வல்லமை பெற்றிருந்தார்கள். ஒருவருடைய செய்யுளைப் போல் மற்றவருடைய செய்யுள் இல்லையெனினும், ஒவ்வொருவரும், தமிழ் செய்யுளை அனாயாசமாக வளைத்து, நிமிர்த்தி, நெளித்துச் சுழித்து எழுதக் கூடிய ஆற்றல் பெற்றிருந்தார்கள். கலாநிதி கைலாசபதி 1981இல் எழுதிய கட்டுரையில் முருகையன் மிகச் சமீப காலத்தில் செந்நெறிப்பாங்கான கடின மொழிப் பிரயோகத்தை நெகிழ்த்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்" என்றார். 1955 வாக்கில் மஹாகவி, 'கல்லாய் சமைந்த தமிழ் கவிதைக்கு உயிர் ஊட்டுதல்' பற்றியும், முந்தைநாள் யாப்புமுறையில் முடமாக்கும் (அத்) தளையை சற்றே தளர்த்துதல்' பற்றியும் பேசுகிறார். "விட்டுக்கொடுக்காத வெகுபழைய யாப்புமுறை தட்டிக் கொடுக்குமோ தமிழர்களின் கவியுணர்வை' என்றும் அதேகாலப் பகுதியில் மஹாகவி கேட்கிறார். பலவகைச் செய்யுள்களிலும் இவர்களுக்கு இருந்த லாவகம் இலங்கைத் தமிழ் கவிதையின் வேறு பல இயல்புகளுக்கும் மாற்றங்களுக்கும் அடிகோலியது.
2. இரண்டாவதாக, செய்யுளை லாவகமாகக் கையாளும் திறமையுடன் வளர்ந்த இவர்களது செய்யுள் நடையைக் குறிப்பிடலாம், மூன்று பேருமே சற்று ஈவு சோவாக வெவ்வேறு கால அடைவுகளிலேனும், ஒரே படிமுறை வளர்ச்சியை தமது செய்யுள்களில் காண்பிக்கின்றனர். ஆரம்பத்தில் பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் பாதிப்பு மூவருக்குமே இருந்திருக்கின்றது. பின்னர் பாரதி, பாரதிதாசனை விடவும் இனிய, புதிய சந்தங்களை உருவாக்கும் முயற்சி
'ൈ' - 17 ജൂണ് 2003} U55ú 22

மூன்று பேரிடமும் காணப்படுகிறது. 1943ம் ஆண்டிலிருந்து எழுதத் தொடங்கிய மஹாகவியின் சந்தப் பண்பு அதிக காலம் நீடிக்கவில்லை. ஐம்பதுகளின் முற்பகுதியிலேயே அவர் சந்தத்திலிருந்து ஓரளவு விலகிக் கொண்டார். அறுபதுகளுக்கு முந்தியே அவருடைய செய்யுள் நடை முற்றிலும் பேச்சுத் தொனிக்கு மாறிவிட்டது. முருகையன், சந்தத்தை வலுப்படுத்தக் கூடிய உணர்ச்சிப்பெருக்கு, ஆன்மிக விசனம் ஆகிய உள்ளார்த்தங்களின் சுழிப்புகளுக்கு அகப்படாதவராகையால் 'ஒலிகள் சிலுங்கி நின்று வீசு வீசென்று விசிறுவது வேண்டாம்" என்று சந்தத்தை வெகுவாகவே ஒதுக்கி எள்ளலும், நகைச்சுவையும், கிராமியச் சொல்லமைப்பும் கொண்ட பேச்சுத் தொனிக்கு செய்யுளை மாற்றினார். நீலாவணன் அறுபதுகளில் சந்தத்தைக் குறைத்து சந்த அடைவுகுறைந்த பாவினங்களை பேச்சுத் தொனியில் கையாண்டாலும் சந்தத்தை அவர் கடைசி வரையும் முற்றாகக் கைவிடவில்லை. சந்தத்தை அளவோடும் வலுவோடும் பாவிக்கத் தேவையான ஆன்மீக ஏக்கங்கள் அவருக்கு நிறைய இருந்தன. பலவகையான செய்யுள் நடைகளை ஒரே நேரத்தில் கையாண்ட பெருமையும் அவருக்குண்டு. சில உதாணரங்கள் இவைகளைத் தெளிவாக்கும்.
மாசங்கள் பயனற்று மடியாமல் வாழ்வொன்றை அமைவித்தல் இயலாதோ? பேசும் சொல் தமை விட்டு மருவாயோ? பேரின்ப நதி கட்டு முறியாதோ?
கந்தம் படுமலர் சொருகுவை எனினும் கண்டம் பட உயிர் திருகுதல் பிழையே
இனியும் பொழுதினை அரிவதென் இளமை எரியும் படி செரு புரிவது நினைவோ?
(முருகையன்)
இரவெல்லாம் நிலவாகி எம்மீது வாரும் இளந்தென்றல் இதமாயுன் இயல் ஏந்தி ஊரும்! மரமெல்லாம் மலராகி மணமஞ்சமாகும்! மயல் கொண்டு கருவண்டு புதுராகம் ஊதும்!
கன்ன மலர் கொண்டொற்றி ஈரமெல்லாம் துடைத்தான்; கனவின் இழை தனில் நினைவின் கரமொன்று கொடுத்தான்.
(நீலாவணன்)
U55ó 23 “gá196v" - 17 (g°6ðf 2003)

Page 14
பிஞ்சுப் புது நெஞ்சைப் பீறிட்டுப் பொங்கிவரும் பேச்சில் பிற நாட்டார் பெறாத பெரும் பேற்றில், உயிர் மிஞ்சித் தெறிக்கின்ற மேம்பாட்டுப் பாட்டில், எனை மீறிப் பறக்கின்ற மின்சார வீச்சில், அட கிஞ்சித்துமே அழகு கிடையாதாம், கேட்டாயா?
வந்துவந்து மோதுகிற வார்த்தைகளின் உள்ளே
வாராத வெண்பாவின் ஈற்றடியைத் தேடும்
சிந்தனையோ யாப்பிடையே சிக்கிவிட "என்ன
சேதி?" எனும் தோழர்க்கும் காது கொடுக்காது
எந்த ரயில் வண்டியிலே ஏறி வழி மாறி
எங்கு வரை போனீர்கள் என்னுடைய அத்தான்? (மஹாகவி)
வெவ்வேறு அளவிலும் தினுசிலும் சந்தம் பயின்றுவரும் இந்த அடிகளைப்
பின்வரும் பேச்சுத் தொனி அடிகளுடன் ஒப்பு நோக்கலாம்.
பேரன்ப மிக்க கடவுள்.
உமது தபால்
வார இறுதியிலே வந்தது. நாம் படித்தோம்.
சோதனைகள் செய்கின்றேன் என்று கிறுக்கிய உம்
சாதனை கண்டோம்
சரியன்று ஒருவரியும். (முருகையன்)
மரணித்துப் போன எங்கள்
மானாகப் போடிப் பெரியப்பா
நீர் ஓர் பெரிய மனிதர்தான்
பெட்டி இழைத்தும்,
பிரம்பு பின்னல் வேலை செய்தும் வட்டிக்குளத்து வரால் மீன் பிடிக்கக்
கரப்புகளும் சுட்டி விற்றுக்
காலத்தை ஒட்டும் ஒர் கிழவன்
என்றே நம் ஊரறியும்
நேற்று வரை. (நீலாவணன்)
மூன்று வயதில் முலைப்பால் குடிக்கையிலே ஆண்டவனைக் கணிடேன் அருங்கவிதை தோன்றியது. சொன்னேன்
எவரும் சுவைப்பதாய் காணவில்லை. (மஹாகவி)
“g606v" - 17 (g'6ðf 2003) பக்தம் 24

இவ்வாறு சந்தத்தைக் குறைத்தோ, அதனை முற்றாகக் கைவிட்டோ இவர்கள் தமது செய்யுள் நடையை பேச்சோசைத் தொனிக்கு மாற்றியது இலங்கையில் தமிழ் கவிதை அடைந்த முதலாவது பெரும்பாய்ச்சலாகும்.
செய்யுளை லாவகமாகக் கையாண்டு, அதனைப் பேச்சுத் தொனிக்கு கொண்டு வரமுடிந்தமை, மனிதனுடைய பரிணாமத்தில் பெருவிரல், மற்ற நான்கு விரல்களுக்கும் பொருந்தக் கூடிய அவன் கைவிரல் அமைப்பை பெற்றதற்கு ஒப்பாகும். எதையுமே பற்றக்கூடிய வாய்ப்பு, லாவகமான பேச்சோசைச் செய்யுளுக்கு அப்பாற்பட்டதாய் உரைநடை இலக்கியத்துக்கு உரியதாய், இருந்த சிருஷ்டிப்புலம் செய்யுளில் எழுதப்படும் கவிதையாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டது. "வீடும் வெளியும்' என்ற தமது கவிதைத் தொகுதிக்கு, மகாகவி 1969இல் எழுதியிருந்த முன்னுரையின் சில பகுதிகள் இது சம்பந்தமாய் கருதத்தக்கன. அங்கு மஹாகவி கூறுகிறார்.
"சிறுகதை" என்பது செட்டான புதிய இலக்கியவடிவம் ஆகும். சிறிய கவிதைகள் சிலவற்றை அவற்றின் பாங்கில் வடிக்க நான் விரும்பியதால் கிடைத்தவை இத்தொகுதியில் உள்ளன.
நவீன வடிவங்களான சிறுகதை, நாவல் ஆகியன நவீன உரிப்பொருளை கையாண்ட வேளை கவிதை மட்டும் பழைய பொருள்மரபைபற்றியே சுழன்றமையால் அருகிவரும் கலை எனக் கருதுமாறாயிற்று. நீளக்குறைவாலும் பார்வையின் அகலம் இன்மையாலும், சுவைஞர்களை முழுமையாக ஆட்கொள்ள முடியாத சிறுகதையினது அமைப்பை கவிதையாகச் செய்யுளில் வார்க்கும்போது நிறைவுற்ற இலக்கிய வடிவம் ஒன்று தோன்றுதல்கூடும். சிறுகதை இருபரிமாணப்பொருள். ஆனால் அதன் பாங்கில் அமைந்த கவிதை முப்பரிமாண அமைப்பை ஒத்து மிளிரலாம்."
மஹாகவி கூறும் 'சிறுகவிதை - சிறுகதை' பற்றிய இலட்சணங்கள் எப்படியும் இருக்கட்டும். உரையடையில் எழுதப்பட்ட சிருஷ்டிப்புலத்தை செய்யுளில் அமைந்த கவிதைக்குள் கொண்டுவருவது பற்றியமஹாகவியின் பிரகடனமே இங்கு முக்கியமானது.
'சிறுகதையின் பாங்கில்' என்றும், 'சிறுகதையின் அமைப்பை" என்றும் மஹாகவி சற்று அவதானத்துடன் கூறியிருந்தாலும், சாராம்சத்தில் அது சிறுகதையின் வடிவத்தையே குறிக்கும். மஹாகவியின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், அகலிகை. கண்களும் கால்களும், தேரும் திங்களும் முதலிய கவிதைகள் இவ்வகையில் இலகுவாக மனதில் பதியத் தக்க உதாரணங்கள். முருகையனின் தோதுப்பாடு. எங்கள் தாத்தா நித்திரை போகிறார். மதகடி மகாராசா, கயிறு முதலியன முருகையனுக்கே உரிய சொல் முறையுடன் இந்தப்பாங்கில் அமைந்த கவிதைகளாகும். நீலாவணனின் கடவுளே, பயணகாவியம், சுவடு முதலியன இவ்வகைப்பட்டவை.
U55á 25 'ഝേ' - 11 ജൂണ് 2008)

Page 15
சிறுகதை என்கிற திட்டவட்டமான உரைநடை இலக்கிய உத்திக்கு எண்ணம் தாவுகின்ற மனச்சார்பு ஏற்கனவே சிறு சம்பவங்களை செய்யுளின் கவிதைக்குள் உள்வாங்கிய முயற்சிகளின் தொடர்ச்சியாகவே அமைய முடியும். உண்மையும் இதுவே. சிறு சம்பவங்களையும், அன்றாட அனுபவங்களையும் செய்யுளின் கவிதைக்குள் கொண்டுவரும் போக்கும் இவர்களிடம் ஏற்கனவே உள்ளது. இவர்களுடைய எந்தக் கவிதைத் தொகுதியிலும் இதனைப் பரக்கக் காணலாம். உதாரணத்துக்கு ஒரு சிலதைக் குறித்துக் கொள்வோம். முருகையனின் நிலைவேறு, குழந்தை உளவியல், நடப்பு முதலியன. நீலாவணனின் கொஞ்சவந்தாள், ஒவியம் ஒன்று முருங்கைக்காய் முதலியன. மஹாகவியின் பல்லி, திருட்டு, நேர்மை, செத்துப் பிறந்த சிசு முதலியன இவ்வகையின.
அன்றாடச் சம்பவங்களையும் அனுபவங்களையும் கவிதையில் கொண்டுவரும் இந்தக் கவிஞர்களின் எழுத்து முறையை நிகழ்ச்சிப்படுத்துதல்' என 1969ல் வெளியான கவிஞன் கவிதை இதழ் ஒன்றில், இலங்கைத் தமிழ் கவிதை - சில் அவதானங்கள்' என்னும் என்னுடைய கட்டுரையில் பெயரிட்டதாக ஞாபகம். நிகழ்ச்சிப்படுத்துகின்ற போக்கு அன்றாட அனுபவங்களை ஒட்டிய மெய்மை சார்ந்த சம்பவச் சித்திரத்துக்கு மட்டுமல்லாமல், கருத்தியல்ரீதியான புனைவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. முருகையனில் இதைப் பரக்கக் காணலாம். நீலாவணனின் ஒளித்திருநாள், தங்கப்பதக்கம், பாவம் வாத்தியார், வழி, முதலியன இந்த வகைக்கு உதாரணம். மஹாகவியின் தாமதம் ஏன், யாழோசை ஆகியன மஹாகவியில் அரிதாகக் காணப்படும் இவ்வகைக் கவிதைகளுக்கான உதாரணங்கள்.
இவ்வாறு உரைநடைக்குரிய சிருஷ்டிப்புலமான சிறுகதை உருவத்தையும் சிறு. சம்பவங்களின் சித்தரிப்பையும் செய்யுளின் கவிதைக்குள் நிகழ்ச்சிப் படுத்த இவர்கள் முயன்றதன் வாயிலாக குறுங்காவியங்களும், பாநாடகங்களும் இதுகாறும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இல்லாத நவீன யதார்த்தப் பண்புகளுடன் இவர்களுக்கு வாய்க்கப் பெற்றன. முருகையனின், நெடும்பகல், ஆதிபகவன், கோபுரவாசல், கடுழியம் ஆகியனவும் மஹாகவியின் அகலிகை. ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம், சடங்கு, கந்தப்பர் சபதம், கோடை, புதியதோர் வீடு, முற்றிற்று ஆகியனவும் இவ்வகையில் இடம்பெறுகின்றன.
இவைகள் சாதாரண சாதனைகள் அல்ல என்பது தமிழ் இலக்கியப் பின்னணியை பாரதியின் காலத்தோடு தொடங்கிப் பார்த்தாலே புரியும். பாரதியின் முழுக்கவிதை சடலத்திலும், அன்றாட நிகழ்ச்சி அனுபவங்களை ஒட்டிய அவருடைய கவிதைகள் எத்தனை? ஒன்று கூட கவிதை எனத் தேறாத அவருடைய புயற்காற்று, பிழைத்த தென்னந்தோப்பு, மழை ஆகியவற்றை மாத்திரமே கூறலாம். பாரதியின், நெடும்பாடலான குயில், பாஞ்சாலி சபதம் ஆகியன யதார்த்த உரைநடைச் சிருஷ்டிப்புலத்துக்குரிய குறுங்காவியங்கள் ஆகா, பாரதிதாசனின் பாண்டியன் பரிசு பலவகைகளில்
"gay' - 17 (groof 2003) பக்கம் 26

குறுங்காவியத்துக்கு ஒரு முதல் நூலாய்பயன்பட்டிருக்க கூடுமாயினும் நவீன யதார்த்தப் பண்புகள் குறைந்தது. −
செய்யுளில் லாவகம், அதனால் பேச்சுத்தொனி, அதனால் உரைநடையின் சிருஷ்டிப்புலத்தை செய்யுளில் கவிதைக்குள் கொண்டுவந்த நிகழ்ச்சிப்படுத் துதல் என்ற முறையில் மூவராலும் வளர்க்கப்பட்டதாக இலங்த்ை தமிழ் கவிதை அமைகிறது. நிகழ்ச்சிப் படுத்துதல் என்பது கருத்தியல் ரீதியானது அல்ல. கருத்தியல் ரீதியாக அல்லாத நிகழ்ச்சிப் படுத்துதல் கட்புலத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனால் இதற்குரிய கவையாக்க நெறியை கட்புலக்கலையாக்கம் என்று மஹாகவியும் தமிழ்க் கவிதையும்' என்ற எனது கட்டுரையில் பெயரிட நேர்ந்தது. இதற்கெதிராக செவிப்புலன் கலையாக்கத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். இந்த பெயரீடுகளை கலாநிதி நுஃமான், கலாநிதி கைலாசபதி முதலிய விமர்சகர்கள், பின்னர் உபயோகப்படுத்தியும் உள்ளனர்.
கட்புலக் கலையாக்கம், முற்றிலும் உரைநடைக்குரிய சிருஷ்டிப்புலத்தை கவிதைக்குள் கொண்டுவர முனையும் நிகழ்ச்சிப்படுத்துதல் என்னும் எழுத்து முறைக்கே உரியது என்பது இங்கு கருத்தல்ல. சங்ககாலத்தின் ஐந்திணை மரபிலும், கட்புலக் கலையாக்கம் உள்ளதை நினைவுகூரலாம். கம்பன் முதலிய சில காவிய கர்த்தாக்களின் சில பாடல்களும் நினைவுக்கு வரலாம். ஆனால் ஐந்திணை மரபுகாவிய மரபு ஆகியவற்றிற்கும் இன்றைய வாழ்நிலை யதார்த்தத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் கருதத்தக்கன. அந்த அளவுக்கு இவைகளின் கட்புலக் கலையாக்கங்களிடையே உள்ள வேறுபாடுகளையும் புரிந்துகொள்ள முடியும். நாம் இங்கு கூறும் நிகழ்ச்சிப்படுத்துதலின் கட்புலக்கலையாக்கத்தை இந்த மூவரின் சில உதாரணங்கள் தெளிவுபடுத்தும்.
தனிமையில் நின்றேன் வயல்வெளி நடுவில் என்னைச் சூழஎழுந்து வீசிய காற்றில் நெல்மணம் கமழ்ந்து கொண்டிருந்தது.
வெங்காயத்தாள் அங்கு கிடந்தது பச்சைத் தணர்டு குழலாய் மலர்ந்தது வெள்ளைப் பூவைத் தலையிலே குடி
"ஈசிச் செயரில்" இருந்தபடி
பத்திரிகை வாசித்துப் போட்டு
வளைந்து நெளிந்தசைந்து
கொட்டாவி விட்டு
குவலயத்தை மணிடையினுள்
இட்டு வைத்தார் போல்
எடுத்தெறிந்து பேசுகிறீர். (முருகையன்)
(Usasa, 27 "960øv” – 17 g"sof 2003)

Page 16
கொஞ்ச வந்தான், குனிந்தேன், அஞ்சிக் கொஞ்சம் பின்வாங்கி நின்றான் கொஞ்ச வந்தான் பிறகும் தடுத்தேன் விழி கும்பிடவும் கெஞ்சி நின்றான்; பணிந்தான், நகைத்தான் சற்று கிட்ட வந்தான். கொஞ்ச வந்தான்; குனியாது நின்றேன் அவன் கொள்கை வென்றான்;
கடுக்கனில் பிடித்த சால்வைக்
கரையினைக் கவன மாக
எடுத்துப் பின், சோற்றுப் பெட்டி
ஏனங்கள் ஏற்றச் சொல்லி
எடுத்தடி வைத்தார் கந்தப்
போடியார். (நீலாவணன்)
இந்திரன் இறக்கி வந்தான் இமயத்தின் அடிவாரத்தே சந்தனம் கமழும் மார்புச் சால்வையில் சரிகை மீதில் பிந்தி வந்தெறிக்கும் தேய்ந்த பிறையின் செந்நிலவு பட்டுச் சிந்திற்றுமிரண்டங்கே ஒர் சிள்வண்டு வாய் மூடிற்றாம்
தாய் முலை உணர்டு தழைத்து மகிழ்ந்து வாயினிலே தயிர் சிந்திய தொன்று போய் உலை மூட்டிடுவாளை மறந்து பாயில் உருணர்டது. பாதம் எறிந்து.
நீச்சலடிக்கும் நிலத்தில் மலர்க்கை வீச்சினில் விண்ணில் மிதக்க நினைக்கும் கூச்சலிடும் களிகொண்டு எது கண்டும் ஆச்சரியக் கடல் ஆழம் அமிழ்ந்தும் காற்றில் எழும் கடுகோ எனழுன்னே தோற்றும் அவ்வண்டு. தொடர்ந்திரு கணிகள் ஏற்றிய விற்புருவங்கள் இறங்கி ஈற்றில் அதோடும் இருந்தன கீழே. (மஹாகவி)
‘ஓலை’ - 17 ஜுனி 2003) பக்கம் 28

நிகழ்ச்சிப்படுத்தலின் கட்புலக் கலையாக்கம் பற்றி இந்த பெயரீடுகளை பரிசீலிக்காத நிலையில் கவிதையின் பொருளுருவம் என்ற முறையில், கட்புலக் கலையாக்கம் பற்றி முருகையன் 1977இல் கூறியிருப்பதும் மனங்கொள்ளத்தக்கது. நுஃமானின் "தாத்தாமாரும் பேரர்களும்" கவிதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் நுஃமானின் கவிதையின் பொருளுருவம் பற்றி முருகையன் கூறுவது உண்மையில் இந்த மூவராலும் உருவாக்கப்பட்ட கட்புலக்கலையாக்கம் பற்றியதே.
1. காட்சி வைப்புக்களின் வழியிலே கருத்துக்களை முன்னிறுத்துவது மன ஒவியங்களை அல்லது எண்ணப்படங்களை - அதாவது அகக்காட்சிகளை - கவிதைகளை மூலமாகக் கொள்வது.
2. நிகழ்ச்சிக் கோவைகளின் வழியே கருத்துக்களை முன்நிறுத்துவது.
3. கவிதையில் எடுத்தாளப்படும் கருத்து கவிதையின் வளர்ச்சியோடிசைந்து
வளர்ந்து செல்வது
4. கருத்துக்கள் முனைப்புற்று வெளிக்காட்டி நிற்காமல் உள்ளமைந்து கிடத்தல் சங்கப்பாடல்களின் உள்ளுறை உவமம் போல், முருகையனுடைய இந்தக் குறிப்புகள் தான் மேலே முன்வைத்த கருத்துக்களை பலப்படுத்து வனவாகவே உள்ளன.
5. கட்புலக்கலையாக்கமும், அதன் வழியான நிகழ்ச்சிப்படுத்தலும், அதற்கேதுவான பேச்சுத் தொனியின் செய்யுள் ஆற்றலும், இலங்கைத் தமிழ் கவிதையை நவீனப்படுத்தியது என்பது உண்மையே. எனினும் அது மரபின் எல்லைகளுக்கு உட்பட்ட ஒரு நவீனத்துவமே. அடிப்படையில் இந்த மூவரும் மரபுவாதிகளே என்பதில் சந்தேகம் இல்லை. 'உணர்வுடன் கலந்த மரபுணர்ச்சி முருகையனிடம் ஆழமாகக் குடிகொண்டுள்ளது' என்பார் கலாநிதி கைலாசபதி "காப்பியன் வழியில் பாடினியார்/கண்டு போற்றப்பின் சமணர் / யாப்பார் உன்னைக் காரிகையால் / நயந்தோம் வாழி யாப்பே நீ" என்கிறார் நீலாவணன். கவிதை யாப்பு நிலைப்பட்டு இயங்குவதே என்ற கருத்தில் மஹாகவிக்கு உறுதிப்பாடு இருந்தது." என்கிறார் நுஃமான். செய்யுள் முறைக்கு அப்பால், அல்லது யாப்பிலக்கணத்துக்கு அப்பால், ஒசைநயத்துக்கும் ஒத்திசைவுக்கும் அப்பால், ஒரு கவிதை முறை சாத்தியம் என்பதை இந்த மூவரும் நம்ப மறுத்ததுடன் அத்தகைய முயற்சிகளையும் மூர்த்தண்யமாக எதிர்த்தனர் என்பது நமக்கு இன்று ஆச்சரியம் தரும் செய்தியே.
நமக்குப் புரிகிறது. ஒரு கால் நூற்றாண்டுக் காலத்திலும் மேலாக பழைய யாப்புமுறையை எளிமையாக்கி, நெகிழ்ச்சியுள்ளதாக்கி, 'கல்லாய் சமைந்த தமிழ் கவிதைக்கு உயிர்ஊட்டி' நவீன தமிழ் கவிதைக்கென்று ஒரு புது மரபையும் உருவாக்கியவர்கள், அதற்கு அப்பால் ஒரு கவிதை நெறியை அங்கீகரிக்கமாட்டார்கள் என்பது நமக்கு புரிகிறது. இதுகாறும் செய்த
UếSaó 29 . “g606v' - 17 (ég'6öf 2003)

Page 17
வற்றை மூட்டை கட்டி வைத்துவிட்டு வேறு ஒரு திசையில் நடந்திருக்க அவர்களுக்கு ஏலாததுதான். அந்த அளவுக்கு மஹாகவி, நீலாவணனின் காலத்தில் 70களின் முற்பகுதிவரை, இலங்கைத் தமிழ் கவிதையுலகில் புதுக் கவிதையின் காலக்கோடு ஆழமாக விழவும் இல்லை. இப்பிரச்சினையை ஆழ்ந்து யோசிக்கும் முருகையன் "எனது அனுபவத்தில், யாப்பின் சாத்தியப் பாடுகள் எதிர்பாராத வகையிலே விரிசிந்தனையையும் சுயாதீனமான உணர்வு மூட்டங்களையும் திறந்து காட்டுகின்றன. எதேச்சையான குறியீடுகளாகிய சொல்லோசையின் தற்செயலான பொருத்தப்பாடுகள், நிர்க்கதியான அலைச்சல்களைக் காட்டிலும், பயனுள்ள மூலவளங்களின் முன்னிலையில் நம்மைக் கொண்டு சென்று நிறுத்திவிடுகின்றன." என்று கூறுவது எனது அனுபவமாகவும் இருந்துள்ளது என்பதை இங்கு குறிப்பது எனது கடமையாகவும் உள்ளது.
ஆனால் காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. இந்த மூவர்கள் இலங்கைத் தமிழ் கவிதையில் நிலைநாட்டிய மரபுக்குள்ளான மட்டுப்படுத்தப்பட்ட நவீன கவிதைச் சீர்திருத்தம் இலங்கையின் தமிழ் புதுக்கவிதையினது தோற்றத்தையும் வளர்ச்சியியையும் வேகத்தையும் விறுவிறுப்பையும் ஒரு இருபது வருஷ காலம் ஒத்திப் போடத்தான் உதவியதே தவிர அதனை முற்றாக ஒழித்துக் கட்ட உபயோகப்படவில்லை. இலங்கைத் தமிழ் கவிதையில், மஹாகவி, நீலாவணன், முருகையன் ஆகிய மூவரினது பிடியும் நிச்சயமாய் எண்பதுகளில் தளர்ந்து போய்விட்டது என்பது கண்கூடாகத் தெரிகிறது. இது சற்று வருத்தமாகவே உள்ளது எனினும், நாம் இலங்கைத் தமிழ் கவிதையின் ஒரு புதிய சகாப்தத்தில் உள்ளோம் என்பதும், அதற்கு இந்த மூவர்கள் வளர்த்த மேற்கூறிய கவிதைப் பண்புகள் ஏதோ வகையில் உதவக் கூடியன என்பதும் நம்பிக்கை தரும் செய்தியாகும்.
குறும்பா
உத்தேசம் வயது பதினேழாம்
உடல் இளைக்க ஆடல் பயின் றாளாம் எத்தேசத் தெவ்வரங்கும் ஏறாளாம்! ஆசிரியர்
ஒத்தாசை யால். பயிற்சி பாழாம்.
சித்திரம். செள*
"gay' - 17 (gof 2003) Uású 30
 

பிறந்த மண்ணை நேசித்த பிறவிக் கவிஞன்
(ஈழகேசரிப் பத்திரிகையில் 1955ஆம் ஆண்டு இரசிகமணி கனகசெந்திநாதன் "கரவைக் கவி கந்தப்பனார் என்ற புனை பெயரில் நாற்பது பேனா மன்னர்களை அறிமுகஞ் செய்துவைத்தார். அதில் ஒருவர் மஹாகவி மஹாகவியின் கவிதைத் தொகுதிகள் ஒன்றேனும் வெளிவராத அந்தக் காலத்திலும் கூட இரசிகமணி மஹாகவியை இனங்கண்டு எழுதிய கட்டுரையின் சில பகுதிகளை இங்கு நன்றியுடன் தருகின்றோம்.)
"கொண்டேன். கொடுக்கின்றேன். கொள்ளாவிட்டாலென்ன?
கோதைப் பழமென்பார் குறைகள் கண்டாலென்ன? என்று கவிக்குரிய காம்பீர்யத்தோடு கவிதையின் சிகரத்தை எட்டிப் பிடிக்க எக்காளமிடும் கவிஞர்தான் உருத்திரமூர்த்தி என்னும் மஹாகவி கிராம ஊழியன் பண்ணையில் முளைகொண்டு ஈழகேசரியில் வளர்ச்சி பெற்று மறுமலர்ச்சிக் குழுவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட இவர் கிராமத்தைச் சூழ்நிலையாகக் கொண்ட சாதாரண மனிதனின் இன்ப துன்பங்களைக் கவிதைகள் ஆக்கி அழியாப் புகழ் பெற்றவராகிவிட்டார்.
நமது அடிமைத்தனத்தாலே எங்களிடம் இருந்த எத்தனையோ பொருட்களை நாம் இழந்துவிட்டோம். அவற்றுள் ஒன்று பாதசரம். அதைப்பற்றி யார் சிந்தித்தார்கள்? அதை மீண்டும் காண- கேட்கக் கவிஞர் ஆசைப்படுகிறார். பாடுகிறார்.
பாதசரம் எங்கே? என்ற அவரது கவிதை நல்ல சந்த நயத்தோடு இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
ஆர்த்திடும் அரற்றிடும் அனுங்கிடும் உளத்தை ஈர்த்திட இழுத்திட இளங்குமரி காலில் போர்த்தொழில் அனங்கனது பூக்களில் விழுத்தப் பார்த்திடுமின் றவிவினிய பாதசரம் எங்கே?
பாதசரம் எங்கே? என்ற கவியின் குரலைக் கேட்டுவிட்டுத்திரும்பினால் ஜல்
ஜல்' எனச் சிலம்போசை கேட்கிறது. ஆம் கிராமத்து வயல் வரம்பிலே நடக்கும் வள்ளியின் சிலம்போசை அது. இவள் நடையை வேறொரு சந்தத்தில் காட்டுகிறார் கவிஞர்.
ஆடு முன்செல அந்தமான் தொடர்ந்
தோடு கின்றனள் ஒட - சிலம்
போசை கேட்குது கூட
மாடு கொண்டவன் மனைதிரும்புமுன்
பக்தம் 31 "gay" - 11 (భాగf 2003)

Page 18
வீடு கூட்டு வதற்கோ - அன்றி விளக்கு வைத்திடு தற்கோ? கிராமத்துப் பாடசாலைக்குப் படிக்கப் போகும் பையனைப் பார்த்துக் கவிஞர் தமிழையும், தமிழ்க் கவிதையையும் பற்றி உபதேசிக்கிறார். கவிதைகள் கும்மாளமிடுகின்றன.
பெற்றவள் அளித்ததுநீ பேசுகிற நற்றமிழில்
நற்கவிதை என்கிற கற்கண்டு- நீ
நாவலுத்துப் போகு மளவுண்டு
கூடியிளம் நண்பரொடு கூத்தாடல் போல்ப்பாட்டு
பாடுவதும் வேண்டுமடா பாடு - கவிதைப்
பாற்கடலிலே நீச்சல் போடு.
இவை மாத்திரமல்ல. "முற்றல் வெண்டிக்காய் முளைக்கிரை பூசினிக்காய்
கத்தரிக்காய் மாங்காய் கடற்காய் (மீன்) எனப் பலவாய்" விற்கும் சந்தையையும், "கிட்டி அடிக்கக் கிளித்தட்டுத்தான் மறிக்க எட்டுமூலைக் கொடியும் ஏற்ற நல்ல பொட்டல் வெளிகளையும்" பாடித் தான் பிறந்த மண்ணை அளவெட்டியை நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.
தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அளித்த மும் மணிகளில் (அ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி உருத்திரமூர்த்தி) ஒருவர் மஹாகவி, மனிதனை யந்திரம்போல் ஆக்கிவிடும் அரசாங்க உத்தியோகம் புரிகிறார். எனினும் அவரது கவிதைகள் புடமிட்ட தங்கம் போல் இப்போது தான் ஒளி வீசுகின்றன. அவர் கவிதா முயற்சி வெல்க!
@ 2 ம்பா
பெஞ்சனிலே வந்தழகக் கோனார் பெருங்கதிரை மீதமர லானார். அஞ்சாறு நாள் இருந்தார். அடுத்த திங்கள் பின்னேரம். பஞ்சியினாலே இறந்து போனார்.
சித்திரம் செள
‘ஓலை’ - 17 ஜ7ணி 2003) Uí3 c6 32
 

"மஹாகவி' நினைவுகள்
- முருகையன்
அது 1953 என்று நினைக்கிறேன். அப்பொழுதுநான் இலங்கைப் பல்க்லைக் கழகத்தில் விஞ்ஞானபீடத்திற் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு நாள் வீரகேசரி ஞாயிறு வெளியீடொன்றில் வருவதாகச் சொன்ன கவிஞன்' என்ற தலைப்பில், கவிதையொன்று வெளியாகியிருந்தது. அது பிரிவுத் துயர் பற்றியதொரு பாட்டு. தன் காதலியைச் சந்திக்க வருவதாக வாக்களித்த ஒரு கவிஞன் குறித்த நேரத்தில் வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அந்தப் பெண்ணுக்கு மூன்றாமாள் ஒருவர் கூறுகிற பாவனையில் அந்தக் கவிதை அமைந்திருந்தது.
"வீட்டுக்குப் பின்புறத்தில் வேப்ப மரத்தருகில்
ஆட்டுக்குக் கொட்டில் அதன் அருகில்- நீட்டுமைக்
கூந்தல் அவிழ்ந்து விழக் கூம்பிய அவ்வாணிமுகம் கை
ஏந்தி இருக்கின்ற ஏந்திழையே என்று அந்தக் கவிதை தொடர்ந்து சென்றது. அந்த நாளில் எழுதப்பட்டு வந்த கவிதைகள் பலவற்றை விட வித்தியாசமானதாய் இந்தப்பாட்டு இருந்தது. காதற் கவிதைகளை எழுதுகிறவர்கள் 'பொன்னம்பலங்களையும் பூங்காவனங்களையும் கடற்கரைகளையும் வயல்வெளிகளையும் களமாக வைத்துத்தான்பாடுவது வழக்கம். ஆனால், "மஹாகவி" என்ற விநோதமான புனைபெயரை வைத்துக் கொண்டிருந்த இந்த ஆசாமி, ஆட்டுக் கொட்டிலுக்கு அருகிலே, வீட்டுக்கோடியில் நின்ற வேப்பமர நிழலைக் களமாகத் தெரிந்தெடுத்துப் பாடியிருந்தது வித்தியாசமாயிருந்தது.
இவருடன் தொடர்புகொள்ள வேண்டுமென்று என் மனம் விரும்பிற்று. நான் ஒரு வெண்பாவை எழுதி 'வீரகேசரி ஆசிரியர் மேற்பார்த்து' என விலாசமிட்டு "மஹாகவிக்கு" அனுப்பி வைத்தேன்.
"காவியத்தை நாவினிக்கக் கானமிக்க வாறிசைத்துப் பாவியற்றிப் பைந்தமிழிற் பாடுகிறீர்- தாவியெழும் வேகமிக்க சொல்லிணைத்து விந்தைக் கவி சமைக்கும் மாகவிக்கென் வாழ்த்துக் கவி இதுதான் நான் அனுப்பிவைத்த பாட்டு 'வீரகேசரியின் அசிரத்தையால், பத்திரிகைக் காரியாலயத்திற் காத்துக் கிடந்தபின், கடிதம் "மஹாகவி"க்குக் கிடைத்தது. அவரும் பாட்டாகவே பதில் தந்தார். பின்னர், "மஹாகவி" உத்தியோகம் பார்த்த திறைசேரிக்கந்தோரில் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாங்கள் சந்தித்தோம். தொடர்புகள் தொடர்ந்தன. நாமிருவரும் நண்பர்களானோம்.
பக்கம் 33 “giov” - 17 (gati 2003)

Page 19
2.
முதற் சந்திப்பின் பின்னர் "மஹாகவி"யின் கந்தோரிலும் பிற இடங்களிலும் நாங்கள் அடிக்கடி கண்டு, கதைத்து, அளவளாவல் ஆனோம். கலையுலகு பற். றிய விடயங்கள் பலவற்றையும் அலசி ஆராய்வதும் வேடிக்கையாகக் கதைத்தும் சிரித்தும் சிந்தித்தும் மகிழ்வதும் "மஹாகவி" யின் பழக்கமும் வழக்கமும் ஆக இருந்தன. கவிதையின் தன்மைகள், உள்ளடக்கம், அதில் இடம் பெறும் உத்திகள், ஓசை, சொல் வழக்குகள், கலைநுணுக்கங்கள் பற்றி எல்லாம் கலந்துரை. யாடுவதில் ஈடுபாடு காட்டினோம்.
.காலப்பகுதியில் "தேன்மொழி" என்னும் ஒரு கவிதைச் சஞ்சி 55۔ 1954 கையை, யாழ்ப்பாணத்திலே ஆனந்தா அச்சகத்தினை நடத்திக் கொண்டிருந்த தி.ச.வரதராசன் அவர்கள் தொடங்கினார்கள். அவருடைய புனைபெயர் "வரதர்' என்பது. அந்தத் தேன்மொழியின்' ஆசிரியராக வரதர் இருந்தாலும் அதில் வெளியாகிய கவிதைகளைத் தெரிந்தெடுத்துத் தொகுத்து ஒழுங்குபடுத்துகிற பணியைச் செய்தவர், கொழும்பிலே உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்த "மஹாகவி" தான். பதிப்பாசிரியராகிய "மஹாகவி" தேன்மொழி சம்பந்தமான தீர்மானங்களைப் பெரும்பாலும் என்னுடன் கலந்தாலோசித்தே செய்து வந்தார். இலங்கையின் முதலாவது கவிதை இதழாகிய தேன்மொழியை நடத்திய காலத்தில் மஹாகவியுடனான தொடர்பு மேலும் இறுகி நெருக்கமாயிற்று. எங்களிடையே நடைபெற்ற கொடுக்கல் வாங்கலில் அவரிடமிருந்து நானும் என்னிடமிருந்து அவருமாக நாமிருவரும் பெரும் பயனடைந்தோம்.
1956இல் நான் சாவகச்சேரியில் ஆசிரியப்பணியைத் தொடங்கினேன். "மஹாகவி" தொடர்ந்தும் கொழும்பிலேதான் உத்தியோகம் பார்த்தார்.
"மஹாகவி" என்னும் புனைபெயர் பூண்ட திரு.து.உருத்திரமூர்த்தி தம் சொந்த மைத்துனியாகிய பத்மாசனியை மணம் முடித்து பாண்டியன், சோழன், சேரன், இனியாள், ஒளவை என மகவுகள் ஐவரைப் பெற்று வளர்த்தெடுத்தார். அவர்களுள் சேரனும் ஒளவையும் இன்றும் எழுத்துலகில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்கள்.
இனி அவர் வகித்த பதவிகளைப் பற்றியும் சொல்ல வேண்டும். மிகவும் இளைய பிராயத்திலே அரசாங்க சேவையில் ஒர் எழுத்தராகச் சேர்ந்து கொண்ட "மஹாகவி"படிப்படியாக உயர்வுபெற்று அரசகரும மொழித்திணைக்கள உதவி ஆணையாளராகப் பணியாற்றி மறைந்தார். இவ்வாறு உத்தியோக ரீதியிலும் பெருமை பெற்றுத் துலங்கிய அவர் கவிதைத் துறையிலேதான் மிகவும்
கருத்தூன்றி ஓயாமல் உழைத்து வந்தார்.
கவிதைத் துறையில் அவருடைய சாதனைகள் பற்றி இன்ச் சொல்லுதல் வேண்டும். இவர் எழுதி நூல் வடிவம் பெற்று வெளிவந்த கவிதைகள்'வள்ளி, 'குறும்பா, 'கண்மணியாள் காதை, கோடை' என்னும் புத்தகங்களில் அடங்கி
'60' - 17 (graf 2003) பச்ச்ம் 34

யுள்ளன. ஏனைய கவிதைகள் பல ஒட்டுப் புத்தகங்களாக அவராற் பாதுகாக்கப்பட்டு வந்தன. 1956 ஆம் ஆண்டைத் தொடர்ந்து வந்ததொரு காலப்பகுதியில் அவர் திருகோணமலையில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார். அச் சமயம் அவர் தாம் அதுவரை எழுதிப் பிரசுரமான கவிதைகள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு புத்தகமாக்க ஆசைப்பட்டார். அந்தக் கவிதைகளை அவர் "வுல்ஸ்கைப்'தாள்களிலே தம் கைப்பட எழுதி ஐந்தாறு கட்டுகளாக அமைத்து, அந்தக் காலத்திலே சாவகச்சேரியில் வசித்துக் கொண்டிருந்த எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்தக் கவிதைகளைத் தட்டச்சிற் பொறித்துத் தரும்படி என்னைக் கேட்டுக் கொண்டதுடன், புத்தக வடிவில் அவற்றை வெளியிடக் கருதியிருப்பதாகவும் அவ்வாறு வரும் புத்தகத்திற் சேர்த்துக் கொள்வதற்காக முன்னுரை ஒன்றை எழுதியுதவும் படியும் எனக்கு எழுதியிருந்தார்.
அப்போது நான் புதிதாக ஒரு தட்டச்சுப் பொறியை வாங்கி, "ற்றயிப்" அடித்துப் பழகிக் கொண்டிருந்தேன். கண்டது கடியதெல்லாவற்றையும் அடித்துச் சக்தியை வீணடிக்காமல், உருப்படியான பயனுள்ள காரியத்தைச் செய்வதோடு தட்டச்சுப் பழகல் என்ற முயற்சியையும் இணைத்துக் கொள்ள நல்லதொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கிடைத்த தருணத்தை நழுவவிடாமல் பயன்படுத்துவது என்று கருதி, நண்பரின் வேண்டுகோளை நிறைவேற்ற முற்பட்டு அந்தக் காரியத்தைச் செய்து முடித்தேன்.
கவிதைகளைத் தட்டச்சிற் பொறித்ததுடன் நில்லாது அவற்றை வகைப்படுத்தி வரிசைப்படுத்தி ஒழுங்கு செய்தேன். முன்னுரை ஒன்றையும் எழுதிச் சேர்த்துக் கொண்டேன். "மஹாகவி" அளவெட்டியாகிய தம் சொந்த ஊருக்கு வந்த சமயம், ஒரு பெரிய கவிதைத் தொகுதியின் தட்டெழுத்துப்பிரதியாகிய அந்தப் புத்தகத்தை "மஹாகவி"யிடம் ஒப்படைத்தேன்.
அந்தப் புத்தகத்தை அச்சேற்றி வெளியிடுவதற்கு, "மஹாகவி" அவர்கள் பல தடவை, பலர் மூலம் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய வாழ்நாளில் நிறைவேறாத அந்த வேட்கை, அவர் மறைந்து பலபத்து ஆண்டுகள் கழிந்துவிட்ட பின்னுங்கூட (இன்னுங்கூட) நிறைவேறவில்லை. அவர் ஆசையோடும் ஆர். வத்தோடும் தயார் செய்த அந்த முதலாவது தொகுதி என்ன காரணத்தினாலோ இன்னும் வெளிவரவில்லை. ஆங்கில மரபுரையொன்றைத் தழுவிச் சொல்வதானால், இன்னும் அது 'பகல் வெளிச்சத்தைக் காணவில்லை.
"மஹாகவி" செய்த அந்த முதலாவது தொகுப்பு இப்பொழுது எங்கு உள்ளதென்று தெரியவில்லை. அது கவிஞர் மறைந்து சில ஆண்டுகளின் பின்னர்கூட, அளவெட்டியிலுள்ள அவர் வீட்டிலே பேணி வைக்கப்பட்டிருந்தமை எனக்குத் தெரியும். ஒரு சமயம் அவர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளை அதனைப் பார்த்துச் சில கவிதை வரிகளைப் பிரதி எடுத்திருக்கிறேன். திருமதி பத்மாசனி உருத்திரமூர்த்தியையோ, சேரன், ஒளவை ஆகியரையோ விசாரித்தால் சிலவேளை அத்தொகுதியின் தட்டச்சப் பிரதியைக் கண்டெடுக்கக் கூடியதாய் இருக்கலாம். "மஹாகவி'யின் கவிதைகளைப் பதிப்பித்திடும் பணியில் முன்னின்று உழைத்த
பக்தம் 35 ‘ஓலை’ - 17 ஜூன் 2003)

Page 20
எம்.ஏ.நுஃமான் அவர்களும் இதுபற்றி அறிந்திருக்கலாம். இதுதவிர, யாழோசை" என்னும் ஒரு தொகுதியையும் "மஹாகவி" அவர்கள் தயாரித்திருந்தார். இதனை காலம் சென்ற எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் மூலம் புத்தகமாக்கும் முயற்சிகள் கவிஞரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் அந்த முயற்சிகளும் உருப்படியான பலன்களைத் தரத் தவறிவிட்டன.
என்றாலும், எம்.ஏ.நுஃமான் அவர்களின் முன் முயற்சிகளின் பேறாக "மஹாகவி"யின் தனிக்கவிதைகளும் பாநாடகங்களும் காவியங்களும் புத்தக வடிவம் பெற்றுள்ளன என்பது கவனிப்புக்குரியதோர் உண்மையாகும். இன்னும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் "மஹாகவி"படைப்புகளை வெளிப்படுத்துவதில் நுஃ மான் அவர்கள் தொடர்ந்து முனைவராயின், ஈழத்துக் கவிதையுலகு பெருலாபம்
பெறும் என்பதில் ஐயமில்லை.
3.
இனி "மஹாகவி'யின் கவிதைப் பண்புகளையிட்டுச் சில குறிப்புகளைத் தருவது பொருத்தமாயிருக்கும்.
நமது கவிஞரின் பாக்கள் பழகு தமிழால் ஆனவை. ஒசை குழம்பாமல் ஒழுகிச் செல்பவை, தளைப்பிசகு புகுந்து கொள்ளாமல் ஒழுகிச் செல்பவை. "மஹாகவி" கவிதையை ஒரு பெண்ணாக உருவகம் செய்து ஒரு பாட்டினை இயற்றியிருந்தார். அந்தப் பெண்ணை அவர் வருணித்தார். எப்படி?"யாப்புக்குள் இருந்து யாழ் மீட்டுபவள்" என்று. "மஹாகவி'யின் பாக்கள் மேலோட்டமாகப் பார்ப்போருக்குச் சலசலப்புக் காட்டாதவை. ஆனால் ஊன்றி நோக்குவோருக்கு, நெஞ்சத்தின் அடி ஆழத்திலே சென்று அதைப்பவை.
இந்தக் கவிதைகளில், எல்லாரும் வாழவேண்டும் என எண்ணும் ஓர் இதயத்தின் குரலைநாம் இனங்கண்டு கொள்ளுகிறோம். இயற்கைப் பெருந்தாய் இதயம்' என்ற பாட்டு அவருடைய அமைதி வேட்கையின் வெளிப்பாடு.
பூமி கொளுத்திப் புலைமை புரிந்தால் என் சாமி. அவளும் சகிப்பாளோ - ஆமாம் கொடுப்புட் சிரிப்பாள்; எம் கும்மாளம் மிஞ்சில் முடிப்பாள்; ஆம் வைப்பாள் ஒர் முற்று” என்று பாடுவார், கவிஞர் மனிதநேயம் மிளிரும் இவர் கவிதைகளில், சாதாரண மனிதர்களின் வாழ்வு நெறிகளிலும் எண்ண ஓட்டங்களிலும் அசையாத பற்றுறுதி கொண்ட ஒரு சிறப்பையும் நாம் பார்க்கிறோம். கெட்டிக்காரத்தனத்தைச் சொரிந்து வாசகர்களைத் திக்குமுக்காட வைக்கும் நோக்கோ போக்கோ "மஹாகவி"யிடம் மருந்துக்கும் கிடையாது. இதை அப்பாவித்தனம் என்று விமரிசன '9Uj65ii" dislii d5(bgj6 g/60ir(B. (b 3LDub "He is rather naive- FF (36i றாத நெயில்-அப்பாவித்தனமான எளிமை வாய்ந்தவர்" என்று நண்பர் சிவத்தம்பி "மஹாகவி" பற்றிக் குறிப்பிட்டார். நான் உடனே அவரைத் திருத்தினேன். No,
Ć ć,
ஓலை’ - 17 ஜுனி 2003) uású 36

no; he is naive only elusively-g)6)K560LLU-97 LIT65gb60Tib (5 LDITL1565/Libroubஎன்று நான் என் கருத்தைக் கூறினேன். சிவத்தம்பியர் அதை ஏற்றுக் கொள்ள. வில்லை.
கேலியும் கிண்டலுமாக எழுதுவதிலும் "மஹாகவி" வல்லவர். 'குறும்பா' என்பது அந்த விதமான கிண்டற்பாட்டுக்களின் தொகுப்பே ஆகும். கந்தப்ப சப. தம்' என்ற கட்டுக்கதைச் சதகமும் அங்கதப் பண்பு வாய்ந்து நூறு செய்யுள்களால் இயன்றது. அதுவும் நகைச் சுவையுணர்வுடன் எழுதப்பட்ட நெடியதோர் ஆக்கமாகும்.
'கல்லழகி" என்பது பாரதியாரின் குயிற்பாட்டினது போக்கில் ஒடிச் செல்வது. தகனம்' என்னும் சிறு காவியம் ஒன்றினை "மஹாகவியும் நானும் மாறி மாறி எழுதினோம். அதில் இரண்டு இயல்களை "மஹாகவி' எழுத மூன்று இயல்களை நான் எழுதினேன்.
வானொலிக்கென நான் நித்திலக் கோபுரம்' முதலிய பாநாடகங்களை எழுதி ஒலிபரப்புமாறு செய்தமையைக் கண்டு அவரும் பாநாடகத் துறையில் இறங்கினார். அடிக்கரும்பு, சிற்பிஈன்ற முத்து, திருவிழா, பொய்ம்மை', 'கோலம், முற்றிற்று, புதியதொரு வீடு', 'கோடை' என்பன அந்த நாடகங்கள். இவை நாடக உலகில் புதியதோர் எழுச்சிக்குக் காலாயின.
4.
ஏராளமான சிறு கவிதைகளையும், பாநாடகங்கள், காவியங்கள் என்றவாறு கலைச் செழுமை வாய்ந்த படைப்புக்களையும் தந்து சென்ற "மஹாகவி", கலையாக்க அர்ப்பணிப்புக்கு ஒரு மகத்தான முன்னுதாரணம். அவர் தம் ஆக்கங்கள் மேலும் செப்பமாய் ஆய்ந்து நயக்கப்பட வேண்டும்.
அடுத்த இதழில் தொடரும் ஒலை -18 (யூலை 2003) * செங்கதிரோன் எழுதும் விளைச்சல் குறுங்காவியம் . 04 (கவிஞர் நீலாவணனின் "வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி) * சங்கம் வளர்த்த சான்றோர்கள் - க.இ.க. . 03
(கொழும்புத் தமிழ்ச்சங்கத்தை வளர்த்த அறிஞர்கள்) * இலக்கிய வாழ்வில் இடறிய சம்பவங்கள் . 03
(கலாபூஷணம் ஏ.இக்பால்)
U55á 37 ‘ஓலை’ - 17 ஜுனி 2003)

Page 21
தேரும் திங்களும்
'ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை" என்று
வந்தான் ஒருவன்.
வயிற்றில் உலகத்தாய் நொந்து சுமந்திங்கு நூறாண்டு வாழ்வதற்காய்ப் பெற்ற மகனே அவனும்.
பெருந்தோளும் கைகளும், கணிணில் ஒளியும். கவலையிடை உய்ய விழையும் உளமும் உடையவன்தான்.
வந்தான். அவன் ஓர் இளைஞன்
மனிதன் தான். சிந்தனையாம் ஆற்றற் சிறகுதைத்து வானத்தே முந்தநாள் ஏறி முழுநிலவைத் தொட்டுவிட்டு மீண்டவனின் தம்பி
மிகுந்த உழைப்பாளி
"ஈண்டுநாம் யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல் வேண்டும்" எனும் ஒர் இனிய விருப்போடு, வந்தான் குனிந்து வணங்கி வடம்பிடிக்க
நில்!" என்றான் ஒராள் நிறுத்து" என்றான் மற்றோராள் "புல்" என்றான் ஒராள்
"புலை" என்றான் இன்னோராள்
"கொல்" என்றான் ஒராள்
"கொளுத்து" என்றான் வேறோராள்.
கல்லொன்று வீழ்ந்து கழுத்தொன்று வெட்டுண்டு. பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு. சில்லென்று செந்நீர் தெறித்து
6 G
ஓலை’ - 17 ஜுனி 2003)
பக்தம் 38

நிலம் சிவந்து,
மல்லொன்று நேர்ந்து
மணிசர் சொலையுணர்டார்
ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர் வேர் கொண்டது போல் வெடுக்கென்று நின்றுவிடப் பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாய்த் தான்பெற்ற மக்க ளுடைய மதத்தினைக் கணிடபடி
முந்தநாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு வந்தவனின் சுற்றம்.
அதோ மண்ணிற் புரள்கிறது! 1969
கயொத (உயர்தர) தமிழ்ப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மஹாகவியின் கவிதை
பக்தம் 39 “galov' - 17 (graf 2003)

Page 22
(யாழ்ப்பாணத்திலிருந்து திரு.மு.க.சுப்பிரமணியம் அவர்களைக் கெளரவ ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சிறுவர் மாத இதழான “வெற்றிமணி" தனது 30 வது இதழை (15-071971) மஹாகவி மலராக அவரது அட்டைப்படத்துடன் வெளியிட்டதுடன் அவ்விதழினி சிறப்பு அம்சமாக கவிஞர் மஹாகவி பாடி அதுவரை வெளிவராத பிஞ்சுப் பாடல்கள் (குழந்தைகளுக்கு ஏற்றவை) பதினொனி றை மிகப் பெருமையுடன் அளித்திருந்தது. அதில் ஒன்றை இங்கு நன்றியுடன் மறுபிரசுரம் செய்கின்றோம்)
விந்தை அறிந்திடு!
பஞ்சு காற்றிற் பறப்பானேன்? பனங்காய் நிலத்தில் விழுவானேன்? பிஞ்சு மாங்காய் புளிப்பானேன்? பிறகு கனிந்து சுவைப்பானேன்?
கல்லு நீருள் அமிழ்வானேன்? கப்பல் மட்டும் மிதப்பானேன்? புல்லு மழையில் தளிர்ப்பானேன்? பூக்கள் மலர்ந்து சிரிப்பானேன்?
பந்தை உருட்ட உருள்வானேன்? பாறை அசையா திருப்பானேன்? விந்தை பலவும் நிகழ்வானேன்? விரும்பி நாங்கள் படிப்பானேன்?
விரும்பி நாங்கள் படிப்பதற்கே விந்தை பலவும் நிகழ்கிறதாம் கரும்பைத் தின்னப் பிடிக்காதோ? கற்றுக் கொள்ளத் துடிக்காயோ?
மஹாகவி
66
F606v" - 17 (g'6ðf 2003) பக்தம் 40

மஹாகவியைத் தேழ
-ஏ.பீர் முகம்மது
மஹாகவி என்றுபெயர் கொண்டார்;
மனிதர்களின் பொய்முகங்கள் கண்டார்;
தகாத பல கவிதைகளைத் தாள்கணக்கில் எழுதவில்லை;
மகாகவியாய்த் தானுயர்ந்து நின்றார்.
குறுப்பாவைப் புதுவடிவாய்த் தந்தார்,
கொதித்தெழுந்து சிலபேரும் வந்தார்;
வெறும்வாயைச் சப்பியன்று வீணர் புரளி செய்தோரை
நறும்பாவால் நசுக்கி வழி போந்தார்.
நாடகத்தைக் கவிதையிலே போட்டார்;
நம்நாட்டார் அதைமகிழ்ந்து கேட்டார்;
கோடை என்றும் புதியதொரு வீடு' என்றும் பெயர்சூட்டி
மேடையிலே தமிழ்ப் பெருமைமீட்டார்.
கவியுலகைச் சிலகாலம் ஆணர்டார்; கடும் நடையைக் கவிதையிலே வேண்டார்;
புவியினிலே அவர்பெருமை பொதிகைமலை போலாகும், குவி புகழினோடேயே மாண்டார்
இன்றுஅவர் நம்மிடத்தே இல்லை;
இதனாலே புதுக்கவிதைத் தொல்லை; சென்றுவிட்டார் என்றெணர்ணிச் செய்கின்றார்; மஹாகவியார்
இன்றிருந்தால் புதுக்கவிதை முல்லை.
UőSaó 41
‘ஓலை’ - 17 ஜுனி 2003)

Page 23
சொந்தத்திற் கார், கொழும்பிற் காணி, சோக்கான வீடு, வயல், கேணி, இந்தளவும் கொண்டுவரின், இக்கணமே வாணியின் பாற் சிந்தை இழப்பான் தணிட பாணி.
.முன்னாலே வந்து நின்றான் காலன் تی: ) همسر
T
, சத்த மின்றி வந்தவனின் ஸ்$ல் கைத் தலத்திற் பத்து முத்தைப்
j ko ーふ災
பொத்தி வைத்தான். போனான் முச் சூலன்
பஞ்சலிங்கம் பார்க்கின்றான் பார்வை.
பவளம்மாள் மென் முகத்திற் வேர்வை.
கொஞ்சம் அவள் தன்னுடலிற் கொண்டுவந்த சாமானுக்கு
அஞ்சுலட்ச மாம் ஐயா தீர்வை!
ஒரயில் ageality Léry
நீங்கள்
ஓர்மில்வந்த நேரமோ
M بر - ح~~- ۔
split T.
- •
* d (
ஆத்திரம் இல் லாதவன் தான் காத்தான். 558 இரயில் பார்த்தான் காத்து நின்று நின்று இறந்தான் காணர் இரயில் வந்ததுவோ
ஈற்றில் 5-57 போற்தான்.
凸开
T
‘ஓலை’ - 17 ஜுனி 2003) பக்கம் 42
 
 
 
 
 
 
 
 
 
 
 

மஹாகவி வாழ்க்கைக் குறிப்பு
பெயர் :துரைசாமி உருத்திரமூர்த்தி (ஆரம்பத்தில் ருத்ரமூர்த்தி என்றும் பயன்படுத்தியுள்ளார். எனினும் பிற்பாடு உருத்திரமூர்த்தி என்பதே நிலையாயிற்று. அம்பலவாணர் என்ற பெயரையும் அவருடைய தாயார் பயன்படுத்தினார்)
வேறு :பண்டிதர், மாபாடி, காப்பியாற்றுப் காப்பியனார்,
புனைபெயர்கள் மகாலட்சுமி, பாணன், வாணன்.
பிறப்பு :90. 1927 -
கல்வி :எஸ்.எஸ்.சி. (ஆங்கில மொழி மூலம்)
Senior school certificate (English) தமிழில் அதிஉயர் சித்தி.
தொழில் :20.1145-58 வரை.
எழுதுவினைஞர், திறைசேரி, கொழும்பு
1959 - 1961 எழுதுவினைஞர்- கடற்படை அலுவலகம், திருகோணமலை, 1962 - 1967 - எழுதுவினைஞர் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் கொழும்பு.
1967 :இலங்கை நிர்வாக சேவைத் தேர்வில் வெற்றி பெறுதல்
(CAS / SLAS) மாவட்டக்காணி அதிகாரியாக (DLO) மன்னாரில் நியமனம், மாரடைப்பு முதலாவது தாக்குதல்.
1968 - 1969 :மாவட்டக் காணி அதிகாரி, யாழ்ப்பாணம்.
1970 :அரச செயலகத் துணைவர், (OA), மட்டக்களப்பு.
1971 :உதவி ஆணையாளர், அரசகரும மொழித் திணைக்களம்,
கொழும்பு.
திருமணம் :30.08.1954
வாழ்க்கைத் துணை :பத்மாசனிமுத்தையா
மகன்/மகள் :1. பாண்டியன் 2. சேரன்
3. சோழன் 4. இனியாள் 5. ஒளவை
மருமக்கள் :எஸ்.கே.விக்னேஸ்வரன் ந.இரவீந்திரன்
கல்பனா சோழன் ஸ்வெட்லானா பாண்டியன்
பேரப்பிள்ளைகள் :அரசி, அனிச்சா, எல்லாளன், ஆன்யா, செந்திரு, செழியன்.
இறப்பு :ஜூன் 20, 1971.
Uá5á 43 “gápávo – 17 (graf 2003)

Page 24
மஹாகவியின் காவியங்கள்
1. கல்லழகி
எழுதப்பட்டது டிசம்பர் 1959 பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விபரம் தெரியவில்லை.
2. சடங்கு
எழுதப்பட்டது 1961 இறுதியாக இருக்க வேண்டும். 1962 ஜனவரி முதல் தினகரனில் பத்துவாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம் பெற்றது.
3. தகனம்
1962ல் முருகையனுடன் இணைந்து எழுதப்பட்டது. அதே ஆண்டு தேனருவி சஞ்சிகையில் 5 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்Lill-gil.
4. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்
எழுதப்பட்டது ஜூலை 1965. 1966 டிசம்பர் முதல் சுதந்திரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1971ல் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு இதனைத் தனிநூலாக வெளியிட்டது.
5. கண்மணியாள் காதை
எழுதப்பட்டது (கலட்டி என்ற பெயரில்) நவம்பர் 1966. 1967ல் விவேகியில் (அதேபெயரில்) 7 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1968ல் யாழ்ப்பாணம் அன்னை வெளியீட்டகம் திருத்தப்பட்ட பிரதியை முதலில் நூலாக வெளியிட்டது.
8. கந்தப்ப சபதம்
எழுதப்பட்டது 1967 1968 பிப்ரவரி 27 முதல் ஈழநாடு வார இதழில் பத்துவாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம் பெற்றது.
G
ஓலை’ - 17 ஜ7ணி 2003) Uású 44

இதுவரை வெளிவந்த மஹாகவியின் நூல்கள்
வள்ளி (மஹாகவி கவிதைகள்)
முதற்பதிப்பு: ஆடி 1955 வரதர் வெளியீடு.
விற்பனையாளர்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்
மஹாகவியின் குறும்பா
முதற்பதிப்பு: 17 பெப்ரவரி 1966
அரசு வெளியீடு,
23), ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு -3
сJijód 45
மஹாகவியின் கணிமணியாள் காதை (வில்லுப்பாட்டு)
எழுதியது: நவம்பர் 1966
முதல் வானொலி பரப்பியது: மே 1967 முதல் மேடையேற்றியது: டிசம்பர் 1967 முதல் அச்சேற்றியது: நவம்பர் 1968
அன்னை வெளியீட்டகம், 89/1, கோவில் வீதி யாழ்ப்பாணம்.
"gapsu” - 17 (graf 2003)

Page 25
மஹாகவியின் கோடை (பா நாடகம்)
எழுதியது: Uெப்ரவரி 1966
முதல் மேடையேற்றம் ஓகஸ்ட் 1969
முதல் பதிப்பு: செப்டம்பர் 1970
இரண்டாம் பதிப்பு: நவம்பர் 1988
மூன்றாம் பதிப்பு:ஜூன் 1990
வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம் ”*
ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்
97
வீடும்.வெளியும் (கவிதைத் தொகுதி) முதற் பதிப்பு :ஜூன் 1973
வாசகர் சங்கம், நூறிமன்சில், கல்முனை ட6 (வாசகர் சங்க வெளியீடு -6)
மஹாகவியின் இரண்டு காவியங்கள்
1. கந்தப்ப சபதம் என்ற கட்டுக்கதைச் சதகம்
2. FLASICS
முதற்பதிப்பு:ஜூலை 1974
பதிப்பாசிரியர்: டாக்டர் சாலை இளந்திரையன், தில்லிப் பல்கலைக்கழகம், தில்லி- 7
Uாரி நிலையம்:59, Uராட்வே, சென்னை- 1
ஓலை’ - 17 ஜுனி 2003) Uásó 46
 

மஹாகவி கவிதைகள்
198c
புதியதொரு வீடு
1989
மஹாகவியின் ஆறு காவியங்கள்
1. கல்லழகி 2. சடங்கு 3. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் 4. கணிமணியாள் காதை
5. கந்தப்ப சதம் 8. தகனம் முதற்பதிப்பு :மார்ச் 9OOO
வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை
*பதிப்பாசிரியர்: எம்.ஏ.நுஃமான்,
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
If DT356ffair
ft. {{భ
籌藥
0.55ф 47
மஹாகவியின் மூன்று நாடகங்கள்
1. கோடை
2. புதியதொரு வீடு
3. முற்றிற்று
முதற்பதிப்பு:ஜூன் 2000
வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஸன்
பதிப்பாசிரியர்: எம்.ஏ.நுஃமான்
“galos' - 17 (graf 2003)

Page 26
மஹாகவி : இன்னும் வர இருப்பவை கையெழுத்துப்பிரதிகளாகவும் பத்திரிகைநறுக்குகளாகவும் தட்டச்சில் பொறித்தவையாகவும் கணிசமான அளவு மஹாகவியின் கவிதைகள் வெளிவராமல் உள்ளன. மஹாகவியின் கைப்படவே இவை ஒழுங்குபடுத்தப்பட்டுக் கோப்புகளில் உள்ளன. இக் கவிதைகள் பல வகைப்பட்டன. பத்திரிகைகளில் அவ்வப்போது வெளியாகி, இதுவரை வெளியான மஹாகவியின் கவித் தொகைகளில் இடம் பெறாதவை. விழாக்கள், இலக்கியக் கூட்டங்களில் பேச அழைக்கப் பெற்று. பேச்குக்குப் பதில் கவிதையிலே மஹாகவி நிகழ்த்திய உரைகள், வானொலிக்கென எழுதப்பட்ட கவிச்சித்திரங்கள், பாடல்கள், எம்.ஏ.ரஹற்மான் நடத்தி வந்த இளம்பிறை" சஞ்சிகையில் அவ்வப்போது வெளியான சிறுகவிதைகள் என்பன இப்போது எங்களுக்குக் கிடைத்துள்ளன.
இ.முருகையனின் முயற்சியால் தட்டச்சில் பொறிக்கப்பட்ட மஹாகவியின் கவிதைகள் யாழோசை என்ற தலைப்பில் வெளிவராமல் உள்ளன. எனினும் யாழோசை யிலிருந்து கணிசமான அளவு கவிதைகள் அவருடைய பிரசுரம் பெற்ற கவித் தொகைகளில் இடம் பெற்றுள்ளன.
மஹாகவியின் சிறுவர் பாடல்களை, பிஞ்சுப் பாடல்கள்' என்ற தலைப்பில் அவர் தொகுத்திருந்தார். அவற்றில் பெரும்பாலானவை வெற்றிமணியின் மஹாகவி சிறப்பிதழிலும் (1971) நான் அரசன் (கரவைக் கந்தசாமி நினைவு வெளியீடு) தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளன. மஹாகவியின் பிஞ்சுப் பாடல்கள் அனைத்தும் ஏலவே சுதந்திரனில் வெளியாகி இருந்தவைதான்.
மஹாகவியின் வானொலி நாடகங்களும் பத்திரிகை நறுக்குகளாகவும் தட்டச்சுப் பிரதியாகவும் உள்ளன. வெளிவராமலேயிருக்கும் அவருடைய மொழி பெயர்ப்புக்கள் பற்றியும் இங்கு குறிப்பிடலாம். கண்மணியாள் காதையை முழுவதும் அவர் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார். இம்மொழிபெயர்ப்பு கவிதையும் வசனமும் இடையிட்ட தாக அமைந்துள்ளது.
ஆங்கிலத்திலிருந்து சில கவிதைகளையும் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். மிர்ஸா காலிட் கவிதைகள் பல மஹாகவியின் மொழி பெயர்ப்பில் உள்ளன. இதிய மன்னன்' என்ற தலைப்பில் 0edipus Rex நாடகத்தை அவர் மொழிபெயர்க்க ஆரம்பித்திருந்தார். ஜூன் 1971 அவருடைய இறப்பின் காரணமாக மொழிபெயர்ப்பு முற்றுப் பெறவில்லை.
மஹாகவியின் இசைப்பாடல்களின் தொகுப்பு ஒன்று மாநிலத்துப் பெருவாழ்வு என்ற தலைப்பில் இளம் பிறையில் வெளியாகி இருந்தது. இப்போது எஸ்.பொ. வெளியிட்டிருக்கும் குறும்பா மறுபதிப்பில் மாநிலத்துப் பெருவாழ்வும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மணி நேரம்' எனும் தலைப்பில் வானொலிக்கென அவர் எழுதிய பாடல்கள் சில தொகுக்கப்பட்டுள்ளன. பொருணுறு என்ற தலைப்பில் அவருடைய நூறு சிறு கவிதைகள் உள்ளன.
இவற்றை விட மஹாகவியின் வெளிவராத படைப்புகள், கவிதைகள் அவரது நண்பர்களிடம் இருக்கக் கூடும். மஹாகவியின் அனைத்துப் படைப்புகளும் தொகுதி, தொகுதியாகச் செம்பதிப்புகளில் வெளியாவது அவசியமாகும்.
‘ஓலை’ - 17 ஜுனி 2003) பக்கம் 48

-
告Sジ%
家s下 坐
தமிழ்ச் சங்கத்தின் குரலாய் 's
தரணி எங்கும் ஒலிக்க ஒலை ஒயாமல் வர
வளர எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !
சங்கம் கல்வி நிலையம்
盛
དབྱེ་
உருத்திரா மாவத்தை GAGLIGTGTGuğangi རྗོད་ aligneneauLuff : 361381 *NQL J公死

Page 27
நித்தியகல்யாணி
அப்பழுக்க
பெல்ஜிய
சர்வதேச இரத்தில் (International Gt உறுதிப்படுத்தப்பட் உத்தரவாதமளிக்கப்ப பைகளில் மூடி
ിബി நித்தியகல்ய
- 230, காலி வீதி தொலைபேசி
ܓ)
தொலை
மின்னஞ்சல்
家
 

ாவத்தை
நகை மாளிகையில்
” ܡܩ ܲ
கற்ற வைரம்
Liä (Belgium) எக்கல்லியல் நிறுவனத்தினால் emmological Institute) டு - பரிசோதிக்கப்பட்டு ட்டு - மாற்றமுடியாதபடி த் தாளிடப்பட்டது.
ബ്ബ
JПgu gola
கொழும்பு - 06. 363392. 362427
நகல் : 504933 s
: Inithikal(īslit.lk 2.
ഗു{്ട