கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2003.09

Page 1
வெள்ளவத்தை
நித்தியகல்யாணி நகை மாளிகையில்
அப்பழுக்கற்ற வைரம்
பெல்ஜியம் (Belgium) சர்வதேச இரத்தினக்கல்லியல் நிறுவனத்தினால் International Gerinological Institute உறுதிப்படுத்தப்பட்டு - பரிசோதிக்கப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட்டு மாற்றமுடியாதபடி பைகளில் மூடித் தாளிடப்பட்டது
வெள்ளவத்தை
juureir56ÖLLUITEIT EGIERUM
230 காலி வீதி கொழும்பு - 03 தொலைபேசி 2832 23:242
E தொலை நகல் 504933 。 | 独 IRTi nihialistik
ܔܛ EN) Jリー
 

செங்கதிரோன்
リ e=m。 "-"
2003
ஒலை 17 யூன் 23 மாதவி நினைவுச் சிறப்பிதழ் 28208 விக்கிழமை கொழும்புத் தர்ச் சங்கக் குமாரசுவாமி விநோதன் கருத்தங்கக் கூடத்திப் சித் துணைக்காளர் பேராசிரியர் சோசந்திரசேகரம் தலைமையில் நடைபெற்றது அார் மஹாகவி அவர்களின் உருவப்படத்திற்குகள் திருமதி ஒளவை விக்னேஸ்வரன் மர்மாவை அணிவிக்கிறா
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 5 வது ஒழுங்கே உருந்திர பாவத்தை கொழும்பு 06
リlcm。山』 I11-2調国37。■ வெய் முகவரி WWW, Colombotanisangam, og இனைய துபாய் முகவரி 150 அபeal
Enillwybrau E. EDIGEDD COLES LIGriffiniau

Page 2
群 நலவாழததுககள 歌
důLJLOGolub Gů8JTEů (பலசரக்குக் கடை) இல, 118, கடற்கரைத் தெரு, நீர்கொழும்பு தொலைபேசி : 031-2238256
Ditta CBef Disse frona
St. Antony Hardware Stores
No. 28, MARKET ROAD Y
N アイ NEGOMBO 霍 ܓ݁ܶܐ 27WNS ഗ്ര{S
 
 

இதயம் திறந்து.
தமிழ்ச்சமூகத்தின் இளையதலைமுறையினரிடத்தே வாசிப்புப் பழக்கமும், அறிவுத் தேடல் முயற்சியும் வெகுவாக அருகி வருகின்றன. அளவுக்கு மீறிய பொழுது போக்குச் சாதனங்களும், பரீட்சைகளை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கல்வி முறைமைகளும், 'உலகமயமாக்கல்' ஏற்படுத்தியுள்ள பண்பாட்டுச் சீரழிவுகளும் நல்ல நூல்களைத் தேடிக்கற்கின்ற மனோபாவத்தை இளைய தலைமுறையினரிடத்தே மாற்றியமைத்து விட்டன. இப்போக்கிலிருந்து இளையசமுதாயத்தை மீட்டெடுப்பதில் பெற்றோரின் பங்கு மிகவும் வேண்டற்பாலது. பாடவிதானங்களை மட்டுமே நெட்டுருப் பண்ணுவதற்குத் தங்கள் பிள்ளைகளை நிர்ப்பந்தம் செய்து அவர்களது அறிவுத்தேடலை இளமையிலேயே மழுங்கடித்துவிடாமல் அவர்களது ஆற்றலையும், ஆளுமையையும் வளர்த்தெடுக்கும் வகையில் அவர்களிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க முன்வரவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் பூசை அறையொன்றை வைத்திருப்பதைப் போன்று புத்தக அறையொன்றையும் அத்தியாவசியமாக ஆக்குதல் வேண்டும். நல்ல தமிழ் நூல்களை அப்புத்தக அறையினில் சேகரித்து வைக்கும் போது அவ்வீட்டுப் பிள்ளைகள் நிச்சயமாக அவற்றை எடுத்து வாசிக்கவே செய்வர். வாசிப்பு ஒரு மனிதனை முழுமையாக்குகின்றது. இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் ஓர் வீட்டு நூல்நிலையம்' அமையும் போது அது இளைய தலைமுறையை வாசிக்கத் தூண்டுவது மட்டுமல்ல, அதன் பக்கவிளைவாக எழுத்தாளர்கள் ஆக்கங்களைப் படைக்கவும் புத்தக வெளியீட்டாளர்கள் நூல்களை வெளியிடவும் மேலும் உற்சாகம் பெறுவர். இது ஓர் ஆரோக்கியமான தமிழ்ச் சூழலை ஏற்படுத்தி அறிவுசார் தமிழ்ச்சமூகம் மேலும் தலைநிமிரவழிபடைக்கும். எனவே தங்களுடைய வீட்டில் 'வீட்டு நூல்நிலையம்' ஒன்றினை அமைத்து புத்தகப் பண்பாட்டுப் புரட்சியொன்றினை ஏற்படுத்த முன்வருமாறு தமிழ்ப் பெற்றோர்களை 'ஒலை' வினயமாக வேண்டி நிற்கிறது.
நன்றி. மீணர்டும் மறுமடலில்.
- ஆசிரியர்
Uásó 1 “papay” - 20 (nadagdud 2003)

Page 3
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)
தாவீது அடிகளாரின் திருவுருவப்படத் திறப்புவிழாவும் சிறப்புசி சொற்பொழிவும் 31052003 சனிக்கிழமை மாலை 530 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம், குமாரசுவாமி விநோதன் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. இதற்குமுன்னின்று உழைத்தவர் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு. அருள்.மா.இராஜேந்திரன். யாழ் ஆயர் மேதததோம்ளப் சவுந்தரநாயகம் ஆண்டகையின் வாழ்த்துச் செய்தி யாழ் மறைமாவட்டத்தில் தமிழ்ப் பணிபுரிந்து மறைந்து போன அமரர் கயசிந் சிங்கராயர் டேவிற் என்னும் தாவீது அடிகளாரின் உருவப்படம் கொழும்புத் தமிழ் மன்றத்தால் 31.05.2003இல் திரை நீக்கம் செய்யப்படவிருப்பதை அறிந்து மிக மகிழ்ச்சியடைகின்றோம். அந்நிகழ்விற்கு எம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ள முடியாமல் இருப்பதையிட்டு கவலையடைகிறோம். சமயத்தையும் தமிழையும் தம்மிரு கண்களென கருதி அல்லும் பகலும் அயராது உழைத்தவர் தாவீது அடிகள். குறிப்பாக தமிழ்த்தாய்க்கு அவர் ஆற்றிய பணிகள் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியில் இவரின் ஆழ்ந்த பங்களிப்பும் ஆங்கில மொழியில் தமிழ் மொழியின் பெருமையை எழுதிய ஆற்றலும், 35 மொழிகளை ஐயம் திரிபறக் கற்று மொழிகளில் பரிச்சயம் பெற்றவராய் திகழ்ந்த பாண்டித்தியமும் என்றுமே இவரது பெயரை பறைசாற்றிக் கொண்டிருக்கும்.1981இல் யாழ்.நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட செய்தியின் அதிர்ச்சியில் அமரத்துவமடைந்த இவர்கள் பணிகளைத் தொடர யாரும் இல்லையே என்ற ஒரு ஏக்க உணர்வு தமிழுலகில் இன்றும் இருக்கவே செய்கிறது. இளைய சமுதாயத்தினர் இவரைப் பற்றி அறிந்து கொள்ளவும் அதன்வழி தமிழ் மொழிக்கு தம் பங்களிப்பினை வழங்கவும் வகை செய்யும் விதமாக கொழும்புத் தமிழ்ச் சங்கம் இவருடைய திரு உருவப் படத்தை திரைநீக்கம் செய்து விழா. எடுப்பது மிகப்பொருத்தமானது. இளையசமுதாயத்தினருக்கும் இவரை அறிமுகம் செய்யும் இச் சரித்திர நிகழ்வினால் தமிழ்ச் சங்கம் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்கிறது என்பதில் ஐயமில்லை. இந்நிகழ்வினைச் சிறப்பாக அமைத்த தமிழ்ச்சங்கத்தினரின்பணிஎன்றும் சிறக்க வாழ்த்துக்களையும் இறையாசீர்களையும் வேண்டி நிற்கிறோம். 26.05.2003 இதோமஸ் சவுந்தரநாயகம் (யாழ் ஆயர்) أم ܢܠ
பக்கம் 2
 
 

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினரால் நடாத்தப்படும் தாவீது அடிகளாரின் திருவுருவப்படத்திறப்பு விழாவும் சிறப்புச் சொற்பொழிவும் என்ற நிகழ்விற்கு அழைப்பிதழ் அனுப்பியமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அபூர்வ பிறவிகளாகத் திகழ்ந்த உலகப் பெரியார்களில் தாவீது அடிகளாரும் ஒருவர். தமிழ் மக்களுக்குப் பெருமை தேடித்தந்த இந்த மாமனிதனின் நினைவைக் கொண்டாடி அவருடைய பெருமையை நீடித்து நிலைக்கச் செய்யும் உங்கள் நல் முயற்சியை நான் மிகவும் பாராட்டுகின்றேன். தொடரும் தங்கள் பணிகளுக்கு எனது ஆசியைத் தெரிவித்து நிற்கின்றேன்.
இப்படிக்கு இரா யோசேப்பு
12.06.03 மன்னார் ஆயர்
DIOCESE OF TRNCOMALEE - BATTCALOA
R. Rev. DR, KINGSYSWAMPLA BISKOP*S HOUS
ATCADA
(SRI LANKA)
م............................................هللMay ..2!M .ظ2a
ToPlo NO: «S522
Mr. Arul M.Rajendra
3. A., Кугмеy Road,
Godenbg = 08.
Luasar Mr. Rajndra
Sorry for the delay in replying your kind latter of 30th April, 2003,
inviting ins for the Meeting of the Colobo Tail Sangan, when portrait of
lato Dr. osv. Fro HS1)avid will bg unvoiLed.
I apprinciate your sarvies and involvinsint in auch litéir,' and
Cultural activities and I would like very Mach to be pranart.
but ubfortunataly, it is not possible for he to fake it on 3,5203
lua to othe coruyuitMontas
whilu asking you to have no excused, I convey fly best withibs, prayers
and bis Aange for the Buccass of the above prograformo. ***
God bulese you.
Yours incorely in the Lord,
سے ایم سمصللا سوا منہد}}+
Giahop of Trincunaluu-Batticaloa
اسس – --ܢܠ
U44ф з "adap' - 20 (66.06(fdUsf 2003)

Page 4
குறுங்காவியம்3 செங்கதிரோன் எழுதும்
(கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி)
ளைச்சள்
s
(அன்னம் - செல்லன் கல்யாணப் பேச்சுவார்த்தை சுபமாக முடிந்த சந்தோஷம்)
முந்தியொரு முக்காலில் போய் முசுப்பாத்தி பண்ணிவிட்டு வந்திருந்தான் 'வகிறன்' வன்னமணி எழும்பிநின்று "சொந்தமினித் தொடரட்டும் சோறெடுங்க" என்று சொல்ல வந்திருந்தோ ரெல்லோரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
கந்தப்பர் மற்றலுவல் கவனிக்க வென்றெழுந்தார். குந்தியிருந்த பெண்கள் கும்மாளச் சிரிப்பும் பேச்சும் பந்தியினை வைப்பதற்குப் பாயெடுத்தும் போட்டார்கள். சந்தைக்குப் போயிருந்த சாமியும்தான் வந்துவிட்டான்.
மாப்பிள்ளை செல்ல னோடு மகிழ்ச்சியில் நின்ற சாமி கூப்பிட்ட சத்தம் கேட்டுக் குதித்தோடி வந்தான்; கந்தர். ஏற்பாட்டைப் பாரென் றோத ஏகினான் உள்ளே 'லீக்கர் ஷாப்பினில் வாங்கி வந்த சரக்கொன்றைத் தூக்கி வந்தான்.
“தலை” - 20 செப்ரெம்பர் 2003) Uású 4
 
 

எடுமச்சான்' என்றார் கந்தர், இறைச்சி வந்திறங்கிற்றங்கே, 'குடுமச்சான் உன் கிளாசை' குஷி வந்து அழகர் கூற, கொடுவா மீன் பொரியல் கோப்பை கொண்டங்கே வைத்துப் போத்தல் குடுதியைத் திருகிச் சாமி
கொண்டாட்டம்தானே' என்றான்.
குறையொன்றும் இல்லை. எங்கள் குலம் தழைக்க வேணும் மச்சான்! அரைவெறியில் அழகர் சொல்ல, அதுதானே! என்ற சாமி அறையொன்றுள் போய் அளவாய் அனுக்கினான்; சற்றுப் பின்னர், மறைவாக மற்றொன்றைத் தன் மடிக்குள்ளே கட்டி வந்தான்.
"எடுமச்சான்! இன்னொன்"றென்று எடுத்தங்கே கந்தர்வைக்க, குடி ஆட்டம் தொடங்கிற்றங்கே. குசினிக்குள் நின்ற பொன்னு "அடிமச்சாள்! கனகம் வா! வா! ஆட்டத்தைப் பார்! பார்!" என்றாள். மடியவிழ்ந்து வேட்டி வீழ மாணிக்கம் ஆடுகின்றான்.
தொந்தி வயிறுடையான் துரைசிங்கம் அண்ணாவி குந்தி யெழும்பி நன்றாய்க் கொடுக்கிறுக்கிக் கட்டியபின் தந்தனத்தா" என்று சொல்லித் தம்பண்ணன் பாட்டெடுக்க "குந்தி வருகை"யினைக் கூத்தாடிக் காட்டுகிறார்.
- இன்னும் விளையும்
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)

Page 5
சங்கச் சான்றோரைக் கெளரவித்திருக்கும் ஓலை
-காத்தான்குடி அனு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் பணிகள் அண்மைக்காலமாக சுறுசுறுப்பாகிக் கொண்டு வருவதைப் போல, அதன் மாத வெளியீடான "ஒலை"யின் வரவும் சுறுசுறுப்பாகியிருக்கிறது.
"ஓலை" தனது 14 ஆவது இதழினை அண்மையில் விரித்திருக்கிறது. வழமைபோலவே "ஒலை"யின் இலக்கியப் பங்களிப்பு இவ்விதழிலும் பிரகாசிக்கின்றது.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அறுபத்தியோராவது சங்கத்தின விழா. வில் "சங்கச் சான்றோன்" விருது பெற்ற திருவாளர்களான கா.பொ.இரத்தினம், இ.நமசிவாயம், ஆர்.எம்.பழனியப்ப செட்டியார் ஆகியோரின் புகைப்படங்கள் "ஒலை"14 ஆவது இதழின் முன்னட்டையில் பிரசுரிக்கப்பட்டிருப்பது அவர்களைக் கெளரவிப்பதற்காக பொருத்தமான பணியேயாகும்.
யூ.எல்.அலியார், எம்.ஏ.அவர்களின் "சர்வதேச மகளிர் தினம்" தொடர்பான நோக்குதல் கட்டுரை சிந்திக்கக் கூடிய கருப் பொருட்களை முன்வைக்கிறது. செங்கதிரோன் எழுதும் 'விளைச்சல்' குறுங்காவியம் (கவிஞர் நீலாவணனின் 'வேளாண்மை'க் காவியத்தின் தொட்ர்ச்சி) கவித்துவம் கலைநயம் பிசகாத சுவாரசியத்தோடு தொடர்கிறது.
"சாதுமிரண்டால்" கவிஞர் மருதமைந்தன் அவர்களின் உருவகமாகும். உருவகக் கதைகளை வித்தியாசமான பாணியில் கையாள்வதில் வல்லவரான மருத மைந்தன் மீண்டும் இலக்கியப் பிரவேசம் செய்திருப்பது வரவேற். கத்தக்கதாகும். "சாதுமிரண்டால்" கதைக்கும் கூட மருத மைந்தன் பயன்படுத்தியிருக்கும் உருவகங்கள் சமூகத்தின் யதார்த்தமாகவே வெளிப்பட்டு
நிற்கிறது.
"தமிழிசை பற்றிய புரிதலும் - ஈழத் தமிழிசையின் தேவைப்பாடும்" என்ற
ராஜபூரீகாந்தன் அவர்களின் கட்டுரை அரிய பல தகவல்களை எமக்களிக்
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003) U636 6
 
 
 

கிறது. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பாக இன்னும் முழுமையாக ஆராயப்பட வேண்டும்.
கா.வைத்தீஸ்வரன் எழுதிய 'சுகவாழ்க்கை' என்ற ஆரோக்கிய நூல் பற்றிய அறிமுகக் குறிப்புக்களை செங்கதிரோன் தந்திருக்கிறார். இணுவை ந.கணேசலிங்கம் எழுதியிருக்கும் 'சிபார்சு" சிறுகதையும் "ஒலை"யின் தரத்துக்கு பங்காற்றியிருக்கிறது. சிறுகதை என்று சொல்லுவதை விட சின்னஞ் சிறு கதை என்றே சொல்ல வெண்டும். பாத்திரப்படைப்பு கருப்பொருள் நகர்வு என்பன இன்னும் விசாலித்திருக்க வேண்டும்.
கவிஞர் ஏ.இக்பால், ஏறாவூர் தாஹிர் ஆகியோரின் இரண்டு கவிதைகள் "ஒலை"யில் பிரசுரமாகியிருக்கின்றன. இதில் ஏறாவூர் தாஹிரின் கவிதையே கவிதைக்குரிய இலட்சணங்களைக் கொண்டிருக்கிறது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையை கடந்த கால நினைவுகளுடாக "இரத்த உறவுகளாய்" என்ற தாஹிரின் கவிதை வலியுறுத்துகிறது.
வி.எஸ்.நவமணியின் "கலாசாரம் - பண்பாடு.?" என்ற விவாதத்துக்குரிய விடயம் அவசியம் ஆராயப்பட வேண்டியதாகும். நவமணி கூறியிருப்பதுபோல தமிழறிஞர்கள் இவ்விவாதம் குறித்துக் கவனஞ் செலுத்துதல் வேண்டும்.
இவை தவிர"ஓலை" வாசகர்களின் கடிதங்கள், சில குறிப்புகள், இலக்கியத் தகவல்கள், நிகழ்வுகளின் செய்திப்படங்கள் என்பனவும் "ஒலை 14"இல் இடம் பெற்றிருக்கின்றன. "ஒலை"யின் வரவு கலை - இலக்கிய ஆர்வலர்களால் அவசியம் வேண்டப்படுவது போல, அதன் வரவும் (தொடர்ச்சியான) அவசியம் எதிர்பார்க்கப்படுகின்றன.
கிடைக்கின்ற அனைத்து ஆக்கங்களையும், அல்லது அறியப்பட்டவர்களின் முகத்துதிக்காக படைப்புக்களையும் பிரசுரிக்கின்ற ஒரு தன்மை "ஒலை" யில் நிகழ்வது அவ்வப்போது தென்படுகின்றது. இந் நிலையை இனியேனும் மாற்றி தரத்துக்கு மாத்திரம் "ஒலை" இடமளிக்க வேண்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நன்றி : வீரகேசரி - கலைக்கேசரி 2405-2003
தவறுக்கு வருந்துகிறோம்
ஒலை-16 (மே 2003) பக்கம் 36 இல் புடல் டி கம் டி காய் என்றும் புளி டி கம்பு காய் என்றும் தவறுதலாக அச்சுப்பிழையேற்பட்டுள்ளது. அவற்றை முறையே புடல் + அம் டி காய் என்றும் புளி டி அம் டி காய் என்றும் திருத்தவும். தவறுக்கு வருந்துகிறோம். (ஆர்)
U65 to 7 ‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)

Page 6
"பிறைப்பண்ணை ţ வெளியீட்டாளரான அ.ஸ்.அப்துஸ்ஸமது அவர்கள், "தலைமைக்கும் கல்விச் சிறப்புக்கும் உரித்துடைய முஸ்லிம் கல்விமான்கள் சிலரின் வாழ்க்கைப்பணியைத் தொகுத்து ஒரு புத்தகம் எழுதுங்கள். அதை நான் வெளியிடுவேன்" என என்னைக் கேட்டார். நானும் அதில் ஈடுபட முனைந்தேன். ஒன்பது பெயர்களைத் தெரிந்தேன். உயிருடன் இருப்பவர். களை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டது. அணுக வேண்டியவர்களில் ஒருவர்தான் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள். அவரைச் சந்திக்க வேண்டும். அவரிடமிருந்து வாழ்க்கைக் குறிப்புடன், அவர்களது சேவை பற்றியும் அறிய வேண்டும். 1963ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தான் இவ்வெண்ணம் உதித்தது. இக்காலம் அவர் கல்வி அமைச்சராக இருக்கவில்லை. சுகாதார அமைச்சராக இருந்தார்.
சந்தித்துத் தேவைப்படும் விடயத்தை விபரமாக எழுதி, சந்திக்க வாய்ப்பளிக்குமாறு, அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினேன். "அடுத்த மாதம் 6 அல்லது 7 ஆந்திகதிகாலை 10 மணிக்குப்பின், என்னைப் பார்க்க முடியும்" என்று 1963 டிசம்பர் 24இல், 35 பேதுரீஸ் ஒழுங்கை, கொள்ளுப்பிட்டி, கொழும்பிலிருந்து எனக்குப் பதில் வந்தது.
சுருக்கமான கேள்விக் கொத்தொன்றைத் தயாரித்துக் கொண்டு 1964 ஜனவரி 6ஆம்நாள் காலை பத்துமணிக்குப்பின், பழைய பாராளுமன்றத்துக்கு அடுத்துள்ள அரசாங்கச் செயலகக் கட்டிடத்துள் இருக்கும் சுகாதார அமைச்சுக்குச் சென்றேன். அங்கே, வந்த விடயத்தைச் சொன்னவுடன் உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஆலோசனைக்கூட்டம் (Conferences) நடக்கும் மண்டபம் போல், இருபக்கமும் நீண்ட வளைந்த மேசையின் ஆரம்பத்தில் தலைமை வகிக்கும் இடத்தில் அன்றையச் சுகாதார அமைச்சர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹற்மூத் வீற்றிருந்த்ார். நீண்ட இம்மேசைகளைத் தாண்டி அவரிருக்கும் இடத்திற்குச் சென்றேன். "என்னா வந்த?" என்னும் கேள்வியை என்னிடம் உரத்த தொனியில் கேட்டார். எந்தச் சங்கோசமோ, பயமோ எனக்கு அப்பருவத்திலில்லை. உடனே, "அவ்விஷயம் பற்றி
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003) CJású 8
 

எல்லாவற்றையும் உங்களுக்கு எழுதியிருந்தேன். அது சம்பந்தமாகத்தான் வந்திருக்கிறேன்" என்று பதில் சொன்னேன்.
"அப்படியா, ஆராரப்பத்தியெல்லாம் அதுல வருது?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்.நானும் விரிவாக "அறிஞர் சித்திலெவ்வை, நீதியரசர் அக்பர், டி.பி.ஜாயா, பாரி மாஸ்டர்" என அந்நேரம் உயிருடன் இல்லாத வர்களை முதலில் கூறி, அப்போதுவாழ்ந்து கொண்டிருந்தவர்களான அறிஞர் ஏ.எம் ஏ.அஸிஸ், ஏ.ஆர்.றாசீக் பரீத், நீங்கள், ஆசிரிய தந்தை ஐ.எல்.எம். மஷ்ஹPர், திருமதி பிந்தாரா காலித் இவர்களைப் பற்றித்தான் எழுதுகிறேன்" என்றேன்.
"என்னைத் தெரியுமா?" நான் கல்வி அமைச்சராகவும், சுகாதார அமைச்சராகவும் இருந்திருக்கின்றேன். இதுக்கு முதல் எந்த முஸ்லிமுக்கும் இந்த அமைச்சுக்கள் கிடைத்ததில்லை. அவங்களுக்கெல்லாம் கிடைத்தது தொழில் மந்திரியும், வானொலி மந்திரியும் தான். அதனால், என்னத்தான் புத்தகத்தில் முதலில் போடணும்" என்றார்.
"இந்தப் புத்தகத்தை எழுதுவது நான், அச்சடித்து வெளியிடுவது நான், யாரை முதலில் போடுவது, எப்படி வரிசைப்படுத்துவது என்பதைத் தீர்மானிப்பதும் நான்தான்" என்று கூறி முடித்தேன்.
"அப்படியெண்டா ஒண்டும் தர ஏலாது" என்று உரத்த சத்தத்துடன் கூறினார்.
"அப்படியா! உங்களை ஆங்கிலம் படித்த மேல்தட்டிலுள்ளவர்களே நன்கறிவர். சாதாரணமாகத் தமிழ் படித்த சனங்களுக்கு உங்களப் பற்றி ஒன்றும் தெரியாது. அதனால், உங்களை அவர்கள் மத்தியில் எடுத்துக் கூறி, அறிமுகம் செய்வதற்காகவே இந்த முயற்சியில் ஈடுபட்டேன். அதற்கு நீங்கள் உடன்படுவதாகத் தெரியவில்லை. இப்படிச் சந்திக்க இடம் தந்ததற்கு நன்றி, வருகிறேன்" என்று திரும்பினேன்.
"நில்லுங்க! இப்படி இந்த நேரத்தில எப்படி எனக்கு எல்லாத்தையும் சொல்லலாம்?" என்று கீழிறங்கினார்.
"இன்றைக்கே எல்லாம் தர வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அழைக்கும் நேரம் எனக்கு வரமுடியும்" என்று சொன்னேன். "சரி நான் உங்களக் கூப்பிடுவன். அப்போது வாருங்கள்" என்றார். திரும்பி விட்டேன்.
மூன்று வாரங்கள் கழிந்தபின், அமைச்சரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் சுகாதார அமைச்சுக்குச் சென்றேன். அங்கே, கம்பளை ஸாஹிறாவில் அமைச்சர் பதியுத்தின் மஹற்மூத் அவர்கள் அதிபராக இருக்கும்
cású 9 ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)

Page 7
போது, உதவியாசிரியராக இருந்த சீசிவப்பிரகாசம் என்பவர் நின்றார். அப்போது, அவர் வவுனியாவில் கல்வி அதிகாரியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவரே, அல்ஹாஜ் பதியுத்தின் மஹற்மூத் அவர்களது பூரண வாழ்க்கைக் குறிப்புகளையும் 'வன்போ'அளவுதாளில் 30பக்கங்கள் எழுதிய கையேட்டை எனக்களித்தார். அமைச்சரும், சிரித்த முகத்துடன் . முகமலர்ச்சியுடன் அப்படித்தருவதை ஏற்றுநின்றார். நான் அதைக் கொண்டு வந்து, எனக்குத் தேவையான அளவு விடயங்களை எடுத்தெழுதினேன்.
அறிஞர் ஏ.எம்.ஏ.அஸிஸ் அவர்களைச் சந்தித்தபோது, அமைச்சர் பதியுத்தின் மஹற்மூத் அவர்கள், அவரை நூலில் முதலாவதாகப் போட வேண்டும் என்று கேட்ட சங்கதியைச் சொன்னேன். அதற்கவர், "இலங்கை, இந்தியா மாதிரி பெரிய நாடல்ல. 'விரலுக்கேற்ற வீக்கம்" என்பார்களே அதுபோல், இங்குள்ள பலர் அதிக சேவை செய்திருக்கின்றார்கள். ஏன் அவர் கேட்டமாதிரி அவரை முதலிலே போட்டால் என்ன? இரு மந்திரியாக இருந்த போதும், மந்திரியாக இருக்காத போதும் அவரது சிந்தனைகளும், செயல்களும் தேசியரீதியிலும், சர்வதேச ரீதியிலும் செயல்பட்டிருக்கின்றன" என்று வியந்தார். ஏ.எம்.ஏ.அஸிஸின் விரிந்த மனத்தைப் புரிந்து புளகாங்கிதமடைந்தேன். அப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்தோர்களுக்கு முதன்மையாக அல்ஹாஜ் பதியுத்தின் மஹமூத் அவர்களை அடக்கி நூலை எழுதி வெளியிட்டேன்.
"முஸ்லிம் கலைச்சுடர் மணிகள்" எனும் அந்நூல் எனது முதல் நூல். அழகிய வெள்ளை வெளிநாட்டு, "பேங்" கடுதாசியில் அச்சடித்த நூல். ஆனால், மன்னிக்க முடியாதளவு எழுத்துப்பிழைகள் மலிந்திருந்தன. ஒரு நூல் எப்படி அமையக் கூடாதோ அதற்கு உதாரணம் அந்நூல்தான். இதை வெளியிட்டவர் பிறைப்பண்ணை அஸ்.அப்துஸ்ஸமதுதான். நான் இதை வெளியிடக்கூடாது எனத்தடுத்தும் செலவு காரணமாக வெளியிட்டுவிட்டார். அதாவது சந்தைக்கு நூலைப் போட்டுவிட்டார். ஒரு புத்தகம் எப்படி அமைய வேண்டும்? என்பதைக் காட்டவே, ஸ்பீனா பதிப்பகம் மூலம் எனது "மெளலானா ரூமியின் சிந்தனைகள்" நூலை வெளியிட்டுக் காட்டினேன். இன்றும் இந்நாட்டில் 167க்கு மேல் நூல்களை வெளியிட்டிருக்கும் வெளியீட்டகங்கள் கூட, ஒரு நூலை எப்படி அழகாக அமைத்து வெளியிடுவது எனத் தெரியாமல் திண்டாடுகின்றன. பழங்காலக் கல்யாண வீடுகள் போல் பல நூல்கள் அமைந்திருப்பதையும் கண்டு கண்கூசலாம்.
1965 பெப்ருவரியில் பிறைப்பண்ணையின் ஏழாவது நூலாக எனது "முஸ்லிம் கலைச்சுடர் மணிகளை" அ.ஸ்.அப்துஸ்ஸமது வெளியிட்டார். அக்காலம், தேர்தல் காலம் என்பதினால், பதியுத்தின் மஹற்மூத் அவர்களுக்கு
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003) Uású 10

இந்நூல் பற்றிக் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால், என்னுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளும் நிலைக்கானார். அதனால், அவரின் அறிவின் நுண்மை, சேவைத்திறமை, ஆளுமையின் உயர்வு என்பனவற்றை அதிகம் உணர முடிந்தது. ஒருமுறை ஒரு முக்கிய பிரச்சினை காரணமாக அவர் செய்த ஒரு வேலையைப் பற்றி பலர் கூடியிருக்கும் இடத் ல்ெ "அந்த விடயம் உங்களுக்குத் தெரியாது சேர்!" என்று தலைக்கிறுக்குடன் கூறிவிட்டேன். அதிர்ச்சியடைந்த அம்மனிதர், மிகவும் ஆவேசப்பட்டு ஷேக்பியரின் நாடகத்தில் வரும் கூற்றொன்றை தமிழில் முதலாவதாகக் கர்ஜனையுடன் "எனது பைத்தியக்காரச் செய்கைகளிலும் ஒரு ஒழுங்குண்டு" எனக்கூறி, ab60igibg5G5IT60fulsi) "There is a method in my madness" 676ip gild56ugisதிலும் உரைத்துவிட்டு, ஆத்திரம் தணிந்து, "எந்த மனிதனுடனும் கதைக்கும் போது, உனக்குத் தெரியாது என்று கூறுவது எளிய பண்பு " என்று எனக்கறிவுறுத்தினார். நான் மந்திரி பதியுத்தீனிடமிருந்து பெற்ற பெரும் அறிவிது. நான் பதியுத்தீன் மஹற்முத்திடம் பயன் பெறாவிட்டாலும், மற்றவர்களுக்காகப் பயன்படும் சேவைகளை அவரிடம் பெற்றிருக்கின்றேன். இலங்கையின் பெரும் தமிழறிஞர், பன்னூல் ஆசிரியர் தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை அவர்கள் டாக்டர் அல்ஹாஜ் பதியுத்தின் அவர்களைச் சொந்த விடயமாகச் சந்திக்க வேண்டும் எனக் கேட்டார். நான் ஓர் இரவு, சந்திக்க நேரமெடுத்துக் கூட்டிச் சென்றேன். அமைச்சருக்கு மு.க.எழுதிய அத்தனை "பாரி நிலைய வெளியீட்டு" நூல்களையும், தமிழறிஞர் கொடுத்தார். மு.க.சென்றபின், அமைச்சரைச் சந்தித்த போது, அத்தனை நூல்களையும் அமைச்சர் எனக்குத் தந்து "இவற்றைப் பத்திரப்படுத்திக் கொள். இங்கு வைத்தால், வருபவர்கள் எடுத்துச் சென்றுவிடுவார்கள்" என்றார். உண்மையில் தனக்கான எதையும் உழைத்துச் சேமிக்காத மனிதர்தானவர்.
பூரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி கலைந்து விட்டது. காபந்து அரசாங்கம் அப்போது நடைபெறுகிறது. தேர்தல் கெடுபிடி ஆரம்பமாகவில்லை. இக்காலங்களில் அரசியல்வாதிகளைச் சந்திப்பது கஷ்டமானதல்ல. எனவே, கல்வி அமைச்சர் பதியுத்தீன் மஹற்மூத் அவர்களைச் சந்திக்க அவரது கம்பளை வீட்டுக்குச் சென்றேன். நான் அவரது வீட்டை அடையும் போது, காலை பதினொரு மணியிருக்கும். வாசலில் காவலில் நின்றவரை எனக்குத் தெரியும். என்னைக் கண்டதும் அவர் சொன்னார். "சரியான நேரந்தான் வந்திருக்கிறியள்.மந்திரி சொன்னார் நான் அதிகம் ஒய்வெடுக்க வேண்டும். யாரையும் உள்ளே விட்டுவிடாதே துரங்கப் போகிறேன் என்று அறையை அடைத்துவிட்டார். இன்றைக்குக் கம்பளையிலா தங்கல்" என்று கதைத்துக் கொண்டிருக்கும்போது, ஒர் இளம் பெண்ணும் வயதான தாயும் அங்கு வந்தார்கள். அவர்களுக்கும் இக்கதையை வாசல் காப்போர்
Uóstó 11 ‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)

Page 8
சொன்னார். "ஐயோ! நாங்கள் பதுளையிலிருந்து வருகிறோம். கல்வி அமைச்சனரச் சந்தித்தே ஆக வேண்டும்" என்று அமர்க்களப்பட்டனர். வாய்வில் காப்போருக்கும் இவர்களுக்குமிடையில் "ஓ! ஒ!!" என்று சண்டை. அமைச்சர் மேலேயிருந்து இதைக்கவனித்தார். உடனே சத்தம் போட்டார். "அவங்கள உள்ள உடு" என்றார். வாயில் காப்போர் என்னையும் "நீங்களும் போய்க் கதையுங்கள்" என்றார். அவர்களுடன் நானும் அங்கே சென்றுவிட்டேன். "இக்பாலா, இருந்துக்கங்கோ" என்றார்.நானும் பக்கத்திலிருந்த கதிரையில் இருந்து கொண்டேன்.
"எப்படி வந்த?" என்று அவர்களிடம் உரத்துக் கேட்டார். அவர் எண்ணியது "என்னா வந்த?" என்ற கேள்வியாகத்தான் இருக்க வேண்டும். அந்தத் தாய் "காதிலிருந்த காதுப்புச் சோடிய ஈடு வச்சுத்தான் பதுளையிலிருந்து வாறோம்" என்றாள். அமைச்சர் அப்படிப் பதறிவிட்டார். மெளன. மாகிப் பின், "என்னாத்துக்கு வந்த?" தணிந்த கரகரத்த குரலில் கேட்டார். "எண்ட பிள்ள பாஸ் பண்ணி இரண்டு வருஷத்துக்கு மேலே. அவவோட படிச்சவங்க டீச்சராகிட்டாங்க. இதுக்கு ஒண்ணும். கிடைக்கல்ல. நான் பதுளைப்பிட்டியில் அப்பம் சுட்டு விக்கிறவள்!" என்று அழுதாள் அத்தாய். மந்திரியும் அழுவது போல்தான் எனக்குப்பட்டது. "பதுளைப்பிட்டிய இவனத் தெரியாதா?" என்று ஒருவரின் பெயதைக் குறிப்பிட்டுக் கேட்டார். அவங்களுக்கும் நான்தான் அப்பம் கொடுப்பேன்" என்றாள் அத்தாய். உடனே அவருக்கு டெலிபோன் எடுத்தார் அமைச்சர். ஏதேதோ பேசி ஏசினார். "அவங்கட்ட இதச்செல்லல்லயா?இப்பவா வாற" என்று கூறிவிட்டு, செயலாளர் பாஸ்கரலிங்கத்துக்குப் போன் செய்தார். "அந்த லிஸ்டில் இந்தப் பெயரையும், விலாசத்தையும் சேர்த்து உடனே நேர்முகப் பரீட்சைக்கழைத்து நியமனம் கொடுங்கள்" என்று உத்தரவிட்டார். பின், அந்தத் தாயையும் மகளையும் நோக்கி, "உடனே" என்றால் அப்படி நடக்காது. விஷயம் நடக்கும்" என்று கூறியவர். உள்ளே சென்று திரும்பி வந்து கையிலிருந்த பணத்தை அத்தாயிடம் கொடுத்து, அவருடைய காதைத் தொட்டு, உடனே போய் இத எடுத்துக்கங்க" என்றார். அப்போதுதான், அவரது மனித உணர்வை உயர்வுடன் பார்த்தேன்.
காபந்து காலத்தில் நியமனம் அதிகம் கொடுத்த பெருமை அமைச்சர் பதியுத்தீனையே சாரும், அடுத்து வந்த அரசு அவர் சார்ந்ததல்ல. ஆனால், அந்நியமனங்களை அவர்களால் அசைக்க முடியவேயில்லை. அவ்விதம் ஆப்படித்தே அவர் கொடுத்தார். அந்த விஷயத்தில் இரும்பு மனிதர் தான்
96).
- தொடரும்
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003) 055ú 12

மத்தளம் கட்டும் மட்டக்களப்புத் தேசம்
Ué só 13
கால் புதையும் குறுமனல் கண் மூட வைக்கும் காற்று ஆல், வேம்பு, ஆத்தி நின்று மக்கள் அமர்ந்து கதை பேச நிழற் பாய் விரிக்கும் நேர்த்தி.
மரங்களில் இருந்து மழலை சிந்தும் மரகதக் கிளிகள் குரலில் அமுதம் குழைக்கும் குயில்கள் மரப் பொந்துகளிலும் கொம்புகளிலும் இரகசியமாகத் தேனி சேர்க்கும் ஈக்கள்!
பொனர் செய்யும் நன் செய்கள் பூக்களாகவே தோன்றும் பொய்கைகள் சுரும்புகளின் சொர்க்க லோகம் திரும்பும் பக்கமெலாம் காதுகளில் தேன்!
முத்துப் பனித்துளிகள் மொய்த்துக் கிடக்கும் மெத்தைப் புல் விரிப்பில் பால் முட்டிகளோடு பக்குவமாக நடை பழகும் பசுப் பெண்கள்.
பச்சை நிறத்தையே நிதமும் அச்சடித்துக் கொண்டிருக்கும் அழகு பூமி!
கடலும் ஆறும் கட்டிப் புரளும்
கழி முகம் அதைக் காவல் செய்யும் கானல்
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)

Page 9
ஒலைக் கூந்தலை விரித்துப் போட்டு ஒயிலாக நிற்கும் தென்னைகள் அதில் உரசி உரசி இன்பம் காணும் உப்புக் காற்றுபறக்க ஆயத்தமாகும் படகுப் பறவைகள்.
சேற்றிலும் ஆற்றிலும் விளையும் செந்தமிழ்க் கவிதை ஊற்றெடுத்துப் பாயும். மட்டக்களப்பின் உயிர் அது!
சித்திரைத்திங்கள் என்றதும்
ஒரு சிலிர்ப்போடு
மத்தளம் கட்டும் எங்கள்
மட்டக்களப்புத் தேசம்!
- வாகரைவாணன்
“நிலை" - 20 செப்ரெம்பர் 2003) uésó 14
 

கொழும்புத் தமிழ்ச்சங்க உறுப்பினர் திரு.காவைத்தீஸ்வரன் அவர்கள் எழுதிய இந்நூலின் வெளியீடு 08:06.2008 ஞாயிறு மு.ப930 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
நூலின் பெயர் : குழந்தைகளின் வேண்டுகோள்
கிடைக்குமிடம் : பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை
நூலாசிரியர் : திரு.காவைத்தீஸ்வரன்
விலை : ரூ.100/=
"குழந்தைகளே எமது வரும்காலச் செல்வங்கள். தாய் தந்தையரின் அன்பு, அரவணைப்பு, ஊக்குவிப்பு, கரிசனை, பாதுகாப்புணர்வு முதலியன பாலர்பராயத்தில் மிக அவசியம். இவ்வுணர்வு இப்பராயத்தில் சரிவரக் கிடைக்காவிடின் அவர்கள் வாழ்க்கை துன்பியலுட் செல்வதைத் தவிர்க்க முடியாது. நாம் குதூகலமாக இருப்பதற்கும், முகத்தை இறுக்கமாக்கிக் கொள்வதற்கும், பாலர்பராயத்தில் நாம் பெற்ற அனுபவங்களும், உள்ளுணர்வுகளுமே பிரதான காரணிகளாகின்றன. இக்கால கட்டத்தில் பெற்றோரின் நல்லமுன் உதாரணங்கள் தேவை.
குழந்தைகள் பெற்றோருக்கும், மூத்தோருக்கும் விடுக்கும் வேண்டுகோளாக இந்நூலின் கருத்தியல் விளங்குகிறது. குழந்தைகள் எதிர்நோக்கும் உறுத்தல்கள், சவால்கள், அவற்றிற்கான பரிகாரங்களையும் சிறுவரின் வேண்டுகோளாக விடுத்திருப்பது ஓர் சிறப்பு அம்சமாகும். இந்நூலை வாசிக்கும் போது உரிய மதிப்பீடு செய்வதற்கு உணர்த்துவதற்காக அவை அமைகின்றன. இதன் மூலம் எமது குழந்தைகள் எப்படி வளர்க்கப்பட வேண்டும், வழி நடாத்தப்பட வேண்டும், என விளக்குகிறார் ஆசிரியர். குழந்தைகள் நலமோம்பும் சமூக சேவையாளர், நலப்பணியாளர், பெற்றோர் யாவருக்கும் இந்நூல் ஒர் கையேடாக அமையமுடியும்.
நூலாசிரியர் திரு.கா.வைத்தீஸ்வரன், சுகாதாரக் கல்வியாளனாகத்தாம் கண்டவை, கேட்டவை, அனுபவித்தவை, கற்றவை தொடர்பான பலவருட வெளிக்கள அனுபவங்களை மிகிஷம் இலகு தமிழில் தந்துள்ளார். இந்நூல் மூலமாக அதி உன்னதமான வழியில் ஆக்கபூர்வமாகச் செயற்படத் தூண்டிய இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். மேலும் மறைந்திருக்கும் ஆசிரியரின் ஆழமான சிந்தனைகளை எமது சமூகத்திற்கு வழங்க அந்த நல்ல இறைவனை வேண்டுகிறேன்.
புனித குடும்ப கன்னியர் மடம் - வண.சகோMபேற்ரண்ட்
Uású 15 ‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)

Page 10
கூத்துக்கலை பற்றி நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
'மூனாக்கானா
அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடந்த நாட்டுக் கூத்துக் கலந்துரையாடலில் கவிஞர் அமிர்தநாயகம் அவர்கள் பல கருத்துக்களைத் தெரிவித்ததாகப் பத்திரிகை (தினகரன் 06.07.2003) வாயிலாக அறிந்தேன். அதில் இரண்டு கருத்துக்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒன்று: யாழ்ப்பாணத்திலிருந்துதான் கூத்துக்கள் வடக்குக் கிழக்குக்குப் பரவின. என்பது
இரண்டு: வடமோடி தென்மோடி என்று கூத்துக்களை கூறுபோடுவதை எதிர்க்கின்றேன். என்பது
கவிஞர் அவர்கள் கூறும் போது தான் எட்டுத்தலைமுறை அண்ணாவி பரம்பரையில் வந்ததாகவும் கூறியுள்ளார். அண்ணாவியாராக இருந்து கூத்துக்களைப் பழக்கி அரங்கேற்றுவது வேறு. கூத்தின் தோற்றம், வரலாறு, வளர்ச்சி பற்றி ஆய்வு செய்வது வேறு. அண்ணாவிமார்கள் எல்லோரும் ஆய்வாளர்களாக இருக்க முடியாது. எனவே, கவிஞரின் இரு கருத்துக்களைப் பற்றிச் சிறிது சிந்திப்போம்.
தில்லைக்கூத்தன் ஆடியதே முதல் கூத்து. திருநந்திதேவர் அடித்த மத்தள்மே முதலாவது தோல்வாத்தியம். இது புராணவரலாறு, மனித வரலாற்றை எடுத்துக் கொண்டால், ஆதிமனிதர்கள், உணவுக்காக, கல்லாலோ ஈட்டியாலோ அம்பாலோ மிருகங்களுக்கு எறியும் போது அவை விழுவதைக் கண்ட மகிழ்ச்சியிலும், அவற்றை ஒன்றாக உண்டு மகிழும் போது துள்ளிக் குதித்து ஆடியதுதான் மனிதனின் முதல் கூத்து. இது பின்னர் மனிதனின் அறிவு வளர்ச்சி காரணமாக சில விதிமுறைகளை அமைத்து தாளம், பாடல் இவைகளையும் சேர்த்துக் கொண்டது. இதன் பின்னர் ஒப்பனை, உடைகள், அணிகள் சேர்ந்து பூரண வளர்ச்சி பெற்றது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள், வீட்டிலே
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003) Uású 16
 

கணவன் கோபத்தினாலே துள்ளிக் குதித்து அட்டகாசம் பண்ணும் போது இஞ்ச என்ன நடந்திற்றென்று நீ கிடந்து கூத்தாடுறா என்று மனைவி கேட்பதை நாம் கண்டிருக்கிறோம். எனவே கூத்து என்றால் துள்ளிக் குதித்து ஆடுவது என்றும் பொருள் கொள்ளலாம். எனவே ஆட்டமே கூத்தின் முக்கிய அங்கமாகும். இதனோடு தாளமும் பாடலும் ஒப்பனையும் சேரும் போது கூத்துக்கலை பூரணமடைகிறது.
யாழ்ப்பாணத்தில் ஆடப்படும் கூத்துக்கும் மட்டக்களப்பில் ஆடப்படும் கூத்துக்கும் பல பெருத்த வேறுபாடுகள் உண்டு. மட்டக்களப்பிலே எல்லோரும் சுற்றி இருந்து பார்க்கக்கூடியதாக வட்டக்களரியில்தான் கூத்தை ஆடுவார்கள். நீள்சதுரமான மேடையில் ஆடுவதில்லை. நாடகங்களுக்குத்தான் மேடைபோடுவார்கள். இங்கே கூத்துக்கு ஆதி வாத்தியமான மத்தளமே பயன்படுத்தப்படுகிறது. மிருதங்கமோ ஹார்மோனியமோ பயன்படுத்தப்படுவதில்லை. ஒப்பனை உடையலங்காரங்ளில் கூட வேறுபாடுண்டு. கரப்பு, கத்தாக்கு எனப்படும். உடைகளை அரசர்கள் அணிவார்கள். இரண்டரை அடி உயரம் இரண்டடி அகலமான பெரிய கிரீடங்களை சக்கரவர்த்திகள் அணிவார்கள். கதையோட்டம் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தப்படுமேயொழியவசனங்களிலல்ல. எனவே இங்கு ஆடப்படும் கூத்துக்களில் வசனம் குறைவு. அதுமட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் வடபாங்கு தென்பாங்கு எனக்குறிப்பிடப்படும் வேறுபாடு இங்கே வடமோடி தென்மோடி எனக் குறிப்பிடப்படுகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்குக் கூத்து வந்திருந்தால் ஒவ்வொரு அம்சத்திலும் ஏன் இவ்வாறு மாற்றமடைந்துள்ளது. தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பரத நாட்டியம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் அதிகமாக ஆடப்படுகிறது. ஆனால் இவற்றில் எவ்வித மாற்றமும் இல்லாமல்தானே ஆடப்படுகிறது. எனவே பரத நாட்டியம் யாழ்ப்பாணத்திலிருந்துதான் தமிழ் நாட்டுக்குப் போனதுஎன்று சொல்லமுடியுமா?மன்னார், முல்லைத்தீவுப்பகுதிகள் யாழ்ப்பாணத்தை அண்டியிருப்பதால் இங்கு ஆடப்படும் கூத்துக்களில் யாழ்ப்பாணக் கூத்துக்களின் நிழல் படிந்திருக்கலாம். ஆனால் மட்டக்களப்புக் கூத்து தனித்தன்மையானது. மட்டக்களப்புக்குச் சொந்தமானதென்பதே உண்மையாகும். எனவே ஆதாரமில்லாமல் இவ்வாறு கருத்துக்கள் வெளியிடுவது எட்டுத்தலைமுறை அண்ணாவியாராக உள்ள கவிஞருக்கு அழகல்ல.
கவிஞருடைய இரண்டாவது கருத்து வடமோடி, தென்மோடி எனக் கூறுபோடக் கூடாது. இக்கூற்றானது ஆண்களையும் பெண்களையும் சேர்த்து அலிகளாக்குவது போன்றது. ஆடல், பாடல், வசனம், தாளம், தரு, ஒப்பனை, உடைகள், ஆயுதங்கள், முடிகள், தாளக்கட்டுகள் என இவ்வாறு எல்லாவற்றிலும் மாறுபாட்டைக் கொண்ட இவ்விரு மோடிகளும் வெவ்வேறு நயங்களையும், சுவைகளையும் கொண்டவை. இக்கூத்துக்களைப் பார்த்தவர்கள் இதை உணர்வார்கள். கோப்பி, தேனீர் போன்ற சூடான பானங்களையும், சர்வத், மோர் போன்ற குளிரான பானங்களையும் ஒன்றாக்கலாமா? அறுசுவைகளையும்
பக்கம் 17 ‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)

Page 11
பாருங்கள். உறைப்பு, புளிப்பு, இனிப்புப் போன்ற வேறுபட்ட சுவைகளைக் கொண்டபடியால்தான் நாம் பல சுவையான உணவுகளைச் சாப்பிடுகிறோம். நவரசங்களைப் பாருங்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்வுகளை நமக்கு அளிக்கின்றன. இவைகளை ஒன்றாக்கலாமா?றோசா, அலரி, மல்லிகை போன்ற மலர்கள் கூட நமக்கு வெவ்வேறு மணங்களைத் தந்து மகிழ்விக்கின்றன. இதேபோலத்தான், சகல பிரிவுகளிலும் வேறுபாடான சுவைகளை நமக்கு அளிக்கும். இரு மோடிக் கூத்துக்களையும் ஒன்றாக்கிப் புதுமோடி காண்பது மாபெருந்தவறு. எனவே கவிஞரின் இரண்டாவது கருத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அழுத்தமாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
மூனாக்கானா (மு.கணபதிப்பிள்ளை) வேளாளர் வீதி, ஆரையம்பதி
கூத்துக் கலை தமிழினத்தை அடையாளமிட்டுக் காட்டுகின்ற தனிப் பெருமையுடையது.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் 07.05.2003ல் நாட்டுக்கூத்துக்கலை பற்றி நடந்த கலந்துரையாடல் ஒன்றில் நான் பேசிய இரண்டு கருத்துக்களைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதென்றும், "கூத்துக்கலை பற்றி நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை திரு.மு.கணபதிப்பிள்ளை அவர்கள் மட்டக்களப்பில் இருந்து எழுதியிருந்தார். அதைப் படித்தேன். கட்டுரையின் தலைப்பு கட்டுரையாளருக்கே பொருந்தும்.
கட்டுரையாளர் கணபதிப்பிள்ளை நான் கூறிய கருத்துக்களில் இரண்டைத் தன்னால் ஒப்புக் கொள்ள முடியாதென்று குறிப்பிட்டவர் அதில் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து தான் பிறமாவட்டங்களுக்குக் கூத்துப் போனது என்பதையும் மற்றையது வடமோடி, தென்மோடி என்பதை மறுக்கின்றேன் என்றும் ஆதார. மில்லாமல் நான் பேசுகின்றேன் என்றார். நான் ஆதாரமில்லாமல் பேசுகின்றேன் என்று நீங்கள் கருதினால் மட்டக்களப்புக் கூத்து மட்டக்களப்பிற்குத் தனித்துவமானதென்றால் அதற்கான ஆதாரமேதும் உங்கள் கட்டுரையில் நீங்கள் காட்டினிகளா? உங்களால் மட்டக்களப்பிலே ஆடப்படும் கூத்துக்களில் யாழ்ப் பாணத்திலே உள்ள கூத்துக்கள் போன்று முழு இரவுக் கூத்துக்கள் உண்டா? மட்டக்களப்புப் புலவர்களால் 16.17ம் நூற்றாண்டுகளிலிருந்து இன்றுவரை பாடப்பெற்ற கூத்துக்கள் எவை எவையென வரிசையிட்டுக் காட்ட முடியுமா?
நான் அறிந்த வரை மட்டக்களப்பில் ஆடப்பட்டு வந்த பிரபலமான கூத்துக்கள் யாழ்ப்பாணப் புலவர்களால் பாடப்பட்டவைகள் தான். வித்தி. யானந்தன் அவர்கள் 1970ல் இளவாலை சென்ஹென்றீஸ் கல்லூரி மண்டபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் சொன்னார், இராமநாடகம், அனுவுருத்திரன் போன்ற
ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003) C55ú 18

கூத்துக்கள் மட்டக்களப்பிற்கு உரியவையென்று. அவை எந்தப்புலவர்களால் எங்கே பாடப்பட்டது என்பது நீங்கள் அறியாததா? 1706ம் ஆண்டு இணுவையூர் சின்னதம்பிப்புலவர் பாடி வட்டுக்கோட்டை கண்ணகி அம்மன் கோவிலிலும் இணுவிலும் களரி போடப்பட்டதாக அறிந்தோம். இதேபோல் இராமநாடகம், தர்மபுத்திரன், விராடநாடகம், கோவலன் கண்ணகி, அதிரூப அமராவதி, அலங்காரரூபன், போன்ற கூத்துக்கள் மட்டக்களப்பிலே ஆடப்பட்டு வந்துள்ளது. இவைகள் மட்டக்களப்பிற்கு வரக் காரணமாய் இருந்தவர்கள் யாழ்ப்பாணத்துக் கூத்தர்களும் அண்ணாவிமார்களுந்தான்.
இரண்டாவதாக வடமோடி தென்மோடி என்று கூறு போடுவதை நான் ஏற்கவில்லை என்பதை நீங்கள் விரும்பவில்லை என்பது உங்கள் கருத்து. இதற்கு நீங்கள் சொன்ன காரணம். ஆட்டம், தாளக்கட்டு, ஒப்பனைகள் மட்டக்களப்பிற்குத்தான் தனித்துவமானதென்றும் மட்டக்களப்புக் கூத்துக்களில்தான் இவைகள் காணப்படுகின்றது என்பதும் உங்கள் கருத்து. ஆனால் அப்படியல்ல. ஆதிகாலத்தில் இருந்து ஆடப்பட்டுவந்த தென்மோடிக் கூத்து தமிழ்க்கூத்துத் தான். தமிழர் பிரதேசமெங்கும் இந்தக் கூத்துத்தான் ஆடப்பட்டு வந்துள்ளது. மேலே சொன்ன ஒப்பனை, தாளக்கட்டு எல்லாமே ஒரே மாதிரித்தான் இருந்தன. யாழ்ப்பாணம் பருத்தித்துறை முல்லைத்தீவு ஆகிய நகரங்களில் பரம்பரை பரம்பரையாக இருந்து வந்த இன்றிருக்கும் பிற்சந்ததிகளிடம் மிகப் பழமையான முடிகள் மார்புக்கவசம், புயகவசம், சமுலாலி வில்லுடுப்புகளின் எச்சங்களைக் காணலாம்.
இந்திய நாடகங்களின் வருகை
இந்திய வடபாங்கு நாடகங்கள் ஈழத்திற்குப் படையெடுத்ததன் காரணத். தால் அக்கூத்துகளைப் பார்க்க மக்கள் பெருந்திரளாக கூடியிருந்து பார்ப்பதனாலும் நாட்டுக்கூத்துக்களும் இந்தியநாடகங்களின் ஒப்பனை வடிவங்களுக்கு மாற்றமடையக் காரணமாகி விட்டது. இந்திய வடபாங்கு நாடகங்களும் ஆட்டமுள்ளவைகள் தான். ஆனால் நாட்டுக்கூத்து ஆட்டங்களைப் பார்க்கச் சற்று வித்தியாசமானவை. அந்த ஒப்பனைகளையும் ஆட்ட அசைவுகளையுந்தான் பின்வந்த கத்தோலிக்க சமயக் கூத்துக்கள் உள்வாங்கியுள்ளது என்பதைக் கத்தோலிக்க சமயக் கூத்துகளில் காணலாம். காலஞ் செல்லச் செல்ல இந்திய நாடகங்களின் வருகையோடு பக்திச்சினிமாக்களும் ஆக்கிரமித்ததோடு இந்து சமயத் தமிழ்க் கூத்து மெல்ல மெல்ல மறைந்து இன்று முற்றாகவே யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாண நகர்ப் பகுதிகளிலும் இக்கூத்து ஆடப்படுவதில்லை. வருடத்தில் ஒரு கூத்துக் கூட ஆடப்படுவதில்லை. முழுமையான ஆட்டத்தை காணமுடியாது. ஆனால் இக்கூத்து மட்டக்களப்பிலே ஆட்டங்களோடு நிற்கின்றது என்பது உண்மை.
திரு.மு.க.அவர்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார், "யாழ்ப்பாணக் கூத்துக்களை நீள்சதுர படச்சட்ட மேடையின் ஒரு பக்கப்பார்வையில் இருந்து
பக்தம் 19 ‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)

Page 12
பார்ப்பார்கள். மட்டக்களப்பில் மேடையைச் சுற்றியிருந்து பார்ப்பார்கள்" என்று. இது தவறு. கூத்தின் ஆரம்பம் எப்போது யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்றதோ அன்றுமுதல் 15-16 நூற்றாண்டு காலம் வரையும் வட்டக்களரி ஆட்டத்தில்தான் ஆடப்பட்டது என்பதை முன் குறிப்பிட்டுள்ளேன். கூத்தை வட்டமேடை அமைப்பைச் சுற்றியிருந்துதான் பார்ப்பார்கள். யாழ்ப்பாணத்தில் கூத்து தோற்றம் பெற்ற காலம் முதல் சமீப காலம் வரை இந்த நிலை காணப்பட்டது. முல்லைத்திவு மன்னார் போன்ற பிரதேசங்களில் கூட இந்த நிலைதான் காணப்பட்டது. கொழும்பை அண்டிய பிரதேசங்களாகிய புத்தளம் சிலாபம் போன்ற பிரதேசங்களில் கூட வட்டக்களரிமேடையமைப்பில்தான் ஆடப்பட்டு வந்துள்ளது. எனவே இதை மட்டக்களப்பிற்குத்தான் தனித்துவமானது என்று கூறமுடியாது. கத்தோலிக்க சமயக்கதைகளைக் கொண்ட கூத்துக்கள் கூட ஆரம்ப காலத்திலே வட்டக்களரி ஆட்டத்தில் ஆடப்பட்டதாக அறிய முடிகின்றது. மூவிராசாக்கள், ஊசோன்பாலந்தை, என்றிக் எப்பறதோர் போன்ற கூத்துக்களைச் சொல்லலாம். நாங்கள் எப்படியும் நினைத்து எதையும் சொல்லலாம். அது பேச்சுச் சுதந்திரம்.
நண்பருக்கு நான் ஒன்று சொல்லவிரும்புகின்றேன். தமிழினம் ஒரு பூர்வீக இனம். ஈழத்தின் முத்த குடிகள். எங்களுக்கென்று தனித்துவமான கலைப் பாரம்பரியம் உண்டு. அதில் எங்கள் இனத்தின் ஆணி வேராக நிற்பது இந்தக் கூத்துக்கலை. இதைக்காலங்காலமாக காத்து வந்தவர்கள் படிப்பறிவில்லாத பாமர மக்கள். இவர்களால் பாதுகாத்து வந்த இந்தக்கலை இப்போதுதான் கல்விசார் சமூகத்தின் கண்களில் பட்டது. இக்கூத்துத்தான் தேசியக் கலை என்று சர்வதேச அரங்குகளில் காட்டி நிற்கின்றார்கள். இந்த வேளையில் தான் இக்கலையைப் பல கூறுகளாகப் பாங்கு சொல்லி இனத்தைக் கூறு போடுகின்றார்கள். இது தமிழினத்துள் விதைக்கப்படும் ஒரு விஷ வித்து என்று நான் கருதுகின்றேன். இதற்கு நாங்கள் இடம் கொடுக்கக் கூடாது. இந்தக் கூத்தின் தனித்துவத்தைக் காப்பாற்ற வேண்டியது கலைஞர்களாகிய எங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.
கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார், யாழ்ப்பாணத்துக் கூத்துக்களில் ஆடப்படும் ஆட்டங்களில் பரதநாட்டிய ஆட்டங்களின் வாடை வீசுகின்றதென்று. அது உண்மை. கூத்தின் வாடை தெரியாதவர் ஒருவர் யாழ்ப்பாணம் வந்து எங்கெங்கு கூத்துக்கள் இருக்கின்றதென்பதை அறிந்து அவர்களில் சிலதைக் கேள்விச் செவிகளில் புகுத்தி தான் ஒரு கூத்தனென்பதைக் காட்ட முயன்று பரதநாட்டியக்காரரிடம் சிலதைப் பெற்று கொல்லர் தெருவில் ஊசி விற்கின்றார். தான்தான் யாழ்ப்பாணத்தில் ஆட்டக்கூத்தைக் கொண்டுவந்தவன் மாதிரிக் கதைக்கின்றார்.
அவருடைய ஊருக்குக் கூத்துப் போனதே யாழ்ப்பாணத்தில் இருந்துதான். அவர் பிறந்த மண்ணில் கூத்து அழிந்து போனதை அறியமாட்டார் போலும். என்ன
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003) 055ú 20

செய்வது படித்த மனிதர் கல்விமான்கள் என்றால் எதையும் சொல்லலாம்
எதையும் செய்யலாம் என்ற எண்ணம் போலும். நீங்கள் அந்தக் கூத்தைத்தான் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டீர்கள் போலும்,
பா.அமிர்தநாயகம்
31- சிவானந்தா றோட்டு
கொழும்பு -13
பதினைந்தாவது 'ஒலை" செங்கதிரோனை ஆசிரியராகக் கொண்டு கொழும்பு தமிழ்ச்சங்க மாதாந்த இதழாக வெளிவரும் "ஒலை"யின் 15வது இதழ் வெளிவந்துள்ளது. கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் 61வது ஸ்தாபக தினவிழா காட்சியொன்றை முன்னட்டையில் தாங்கி பல்வேறு சிறப்பம்சங்களுடன் இவ்விதழ் வெளிவந்துள்ளது. தமிழ்ச்சங்கத்தின் செய்தி மடலாக ஆரம்பித்து சிற்றிலக்கிய இதழாக ஒலை வளர்ச்சியடைந்துள்ளமை மகிழ்ச்சி தரும் விடயம். "ஒலை"யின் ஆசிரியர் தலையங்கம் சிறந்ததொரு செயலுக்காகத் தம் பாராட்டைத் தெரிவித்து நிற்கிறது. வட்கிழக்கு மாகாண சபையின் திட்டமிடல் துறைசார் சொல்லகராதியின் வரவிற்கானதே
ஏ.இக்பாலின் இலக்கிய வாழ்வில் இடறிய சம்பவங்கள், வேல் அமுதனின் குறுங்கதை, செங்கதிரோனின் விளைச்சல், தாமரைத் தீவானின் "கடுகு" நீபி.அருளானந்தத்தின் சிறுகதையுடன் பல சிறப்பம்சங்களைத்தாங்கி பயன்மிக்க சஞ்சிகையாக 'ஒலை' வெளிவந்திருக்கிறது. தொடரட்டும் அதன் இலக்கியப் பணி
-எல்.செல்வா
நன்றி: தினகரன் 08:08:2008
பக்கம் 21 ‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)

Page 13
புதுநலம்
வட்டிப்பணத்தை.
எண்ணிக் கொண்டிருந்த. தகப்பனிடம். மகன் கேட்டான். "அப்பா. பொது நலமென்றால். என்ன?" "இருக்கும் போது எல்லோர்க்கும் கொடுத்தல் -பின் நூற்றுக்குப் ப்த்தென எடுத்தல்"
என்றார் தந்தை..!
போலி முன்னேற்றம் அடுக்கியிருந்த.! பாசிக்குடாவின் நல்ல நோட்டுக்களின் நடுவே ஒசிக் குளிப்பிற்கு..! அகப்பட்டுக் கொண்ட உடை களைந்த
நிர்வாண மனிதர்கள் வெளிநாட்டவர்கள்.
கள்ள நோட்டொன்று அழுக்கு மணம் போக
அத்தரைப்ப் பூசிற்று. இல்லையாம்.
நம்மவர்கள் தானாம்.
கருமிகள் பிச்சைக்காரனின் கொச்சைத் தமிழ்பாட்டில் இச்சை கொண்டு நின்றவர்கள் - அவன் தட்டை ஏந்தியதும் தம் பாட்டில் சென்றனர்.
வேண்டுகோள் இறைவா! மீண்டும் ஒரு பிறப்பிருந்தால், எனக்கு..! முதுகிலும் இரண்டு கண்களை வைத்துவிடு! ஏனென்றால். தட்டிக் கொடுக்கும் சாட்டில் முதுகில் குத்துவோரைத் தடுக்க,
வசதியாக இருக்கும்.!
- கறுவாக்கேணி முத்துமாதவன்
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003) பக்கம் 22
 

GDiIuqib (BJitEGI.
நானோர் முஸ்லிம்; எண்ணும் படியாய் நீயோர் இந்து: எதில்தான் பிரிவு? அவன்ொரு பெளத்தன்; இவனொரு கிறிஸ்தவன்! உன்னையும், என்னையும் ஆயினும் என்ன..? அன்னையே ஈன்றனள்? மதங்களைப் பேசி, ്യൽബ്ധ, ജൈ8!b மீதத்தளாற் பிரிந் കൃn~'୫ அவளே பெற்றன்xே * மண்டைகள் பிளப்போம்? ృళ
ழதீங்களின் பெயர்களா
2 錢 *மனிதம்' மறந்து,
&
மந்தையின் குலமாய் * மாற்ற்ஜடைகிறோம் f x, இனம், ம்ெ . *୪
3.
இடம் அஜித்கின்றீேழ்!
இது இம்மதம் நீயெனே
களித்தான் போலும்? :)
భగ్య ჯჭწX
உனக்கும். எனக்கும். என்போன்றவர்க்கும்.” அவர்போன்றிவர்க்கும்! உண்ணும் உணவும், துரும்பிலும் மெலியவை! உயிரும், உணர்வும்
உடலில் ஊரும் - ஏறாவூர் தாஹிர் உதிரமும் நிறமும்
CJá5ú 23 ‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)

Page 14
கலாசாரம், பண்பாடு ஆகிய சொற்களின் பொருள்கள் குறித்து அறிஞர்கள் பலரது கருத்துக்களை ஒலை - 14 இதழ் வாயிலாக திரு.வி.எஸ். நவமணி அவர்கள் குறிப்பிட்டிருந்தார். பண்பாடு, கலாசாரம் ஆகியசொற்கள் ஒரே பொருளைத் தருபவைகளாக மிளிர்கின்றன என்பது சில அறிஞர்களது கருத்தாகவுள்ளது.
உதாரணமாக பெருங்கற்காலப் பண்பாடு, பெருங்கற் கலாசாரம் ஆகிய சொற்களை எழுத்தாளர்கள் பயன்படுத்தும் வேளை, இவ்விரு சொற்களும் ஒரு பொருளைக் குறிப்பனவாக உள்ளன. ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகளது (முன்னைய பெரியவர்) கருத்து இதற்குப் பொருந்துவதாகவுள்ளது. கலாசாரம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழ்வடிவமே பண்பாடு என்று சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, தொன்மைமிகுநமது தமிழ் இலக்கியப் பாரம்பரியம், தமிழர் வாழ்வியல் ஆகியனவற்றின் அடிப்படையில் நோக்குமிடத்து பண்பாடு கலாசாரம் ஆகிய இரு சொற்களும் வெவ்வேறு பொருள்களைத் தருபவைகளாக மிளிர்கின்றன என்பது எனது கருத்தாகும். அது ஒவ்வொரு பிரதேசத்துக்குரியதாகவிருக்கலாம். அல்லது தேசிய ரீதியாகவிருக்கலாம்.
பொதுவாகக் கூறுமிடத்து, தமிழர் பண்பாடு' என்பது தமிழர்களது வாழ்வியலைக் குறிப்பதாகும். விருந்தோம்பல், ஒருவனுக்கு ஒருத்தி, போர் என்றால் புலிக்குணம், பொங்கும் இன்பக் காதல் என்றால் பூமணம், திருக்குறள் காட்டும் வாழ்க்கை முறை. மாதா, பிதா குரு தெய்வம் போற்றுதல் போன்றவை பண்பாடு என்ற வரையறைக்குள் அடக்கம்,
இதேபோன்று தமிழ்க் கலாசாரம் என்று குறிப்பிடுமிடத்து தமிழர் வாழ்வியலில் தனித்துவம் மிக்கதான அடையாளங்களைப் புலப்படுத்துவனவாக விளங்கும் சில அம்சங்களைக் குறிப்பிடலாம். வேட்டி, சால்வை, புடவை, தாவணிபாவாடை அணிதல், மஞ்சள், குங்குமம்(திலகம்) மாவிலை தோரணம் ஆகியன தமிழர் கலாசார விழுமியங்கள் எனலாம். சமூக கலாசாரம் என்பது ஒருவருக்கு சூட்டும் பெயர்களில் கூட மிளிரும். மாறன், கரிகாலன், சேனன், பழையன், வீரன் சிவன், வள்ளி முருகன் போன்ற பெயர்கள் இதற்கான சான்றுகள் எனலாம். - பனங்காடு வானதி
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003) Uásá 24
 

பன்மொழிப் புலவரின் பதில்
பண்பாடு = கலாசாரம்=Culture . கலாசாரம் என்பது வடசொல். பண்பாடு என்பது தமிழ் சொல். கலா + ஆசாரம் என்பது கலாசாரமாகப் புணரும். இதுபற்றி முன்னர் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. (ஓலை 14இல்)
விழுமியம் என்பது - Values. மனித விழுமியம் - Human Values. விழுமம் விழுப்பம் என்ற சொற்களே விழுமியம். விழுமியங்கள் (பன்மை) என வழங்கப்படுகின்றன.
'ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப்படும்' என்ற திருக்குறளில் விழுப்பம் என்ற சொல் ஆளப்பட்டிருக்கிறது. ஒழுக்கமும் ஒரு விழுமியமே.
கலாசாரம் = பண்பாடு என்பன நாடு, சமூகம், மொழி, இனம் என்பவற்றிற்கமைய வேறுபடும். ஆனால், விழுமியங்கள் எல்லோருக்கும் பொதுவானவையாகக் காணப்படும். மனித விழுமியங்களை எடுத்துக் கொண்டால் மனிதர் எல்லோருக்கும் அவை பொதுவாகவே அமையும்,
எனவே, பண்பாடும் விழுமியமும் ஒன்றன்று. அவை இருவேறு பொருள்களையே சுட்டும்.
பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம்.
புடலங்காய் என்பதும் சரியே
பகுபத உறுப்புக்களான பகுதியையும் விகுதியையும் இணைப்பதற்கு அல்லது கூட்டுப் பெயராக்கத்தில் இரண்டு சொற்களை இணைப்பதற்குப் பயன்படும் பகுபத உறுப்பு சாரியை எனப்படும். (பேராசிரியர் .எம்.ஏ.நுஃமான் அடிப்படைத் தமிழ் இலக்கணம் பக்கம் -36)பேராசிரியரின் இவ்வரை விலக்கணத்தினை
"பதமுன் விகுதியும் பதமும் உருபும்
புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை
வருதலும் தவிர்தலும் விகற்பமும் ஆகும்"
என்னும் நன்னூல் சூத்திரம் எடுத்துக்காட்டும். இச்சூத்திரத்திற்கு அமைவாக புடல் என்னும் சொல்லோடு காய் எனும் சொல் புணர்கையில் அம் என்னும் சாரியை வரும். இதன்படி புடல் + அம் + காய் = புடலங்காய்
uá5ú 25 ‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)

Page 15
என்றாகிறது. இது போன்றதே புளியங்காய் (புளி + அம் + காய்) என்னும் சொல்லும். ஆயினும், புளி + கறி என்னும் சொற்கள் புணர்கையில் அவற்றின் இடையே அம் சாரியை வருவதில்லை. இதனையே மேற்படிச் சூத்திரம் தவிர்தல் எனச் சுட்டும்.
தமிழறிஞர் அ.கி.பரந்தாமனார் தமது, "நல்ல தமிழ் எழுத வேண்டுமா? எனும் நூலில் 'புடல்' எனும் சொல் தெலுங்கு என்பார். அறிஞரோடு உடன்படாத நமது பன்மொழிப் புலவர் புடலங்காய் என்பது தெலுங்குமொழியில் பொட்லகாய' எனக் குறிக்கப்படும் என்கிறார். (ஒலை - 16 பக்கம் 36)
இச்சொற்கள் (புடல், புடலங்காய், புடோலங்காய், பொட்லகாய) எத்தகைய ஒலி அமைப்பைக் கொண்டிருப்பினும் அவை அனைத்தும் ஓர் அடிச்சொல்லில் இருந்து ஆரம்பமாகி அவ்வப் பிரதேசத்திற்கேற்பத் திரிபு அடைந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. சொற்கள் திரிபு அடைதல் பற்றி மொழியியல் அறிஞர் மு.வ.அவர்கள் தமது மொழி வரலாறு எனும் நூலில் (பக்.139-140) தெளிவாக விளக்கியுள்ளார்.
மேலும், மொழியியல் அறிஞர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் 'தமிழும் பிற மொழியும்' எனும் தமது கட்டுரையில் திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொதுவான அடிப்படைச் சொற்கள் பல இருக்கின்றன. இச்சொற்கள் திராவிட மொழிகள் ஒவ்வொன்றிலும் அவ்வவ் மொழிகளின் ஒலிமுறைக்கேற்ப உருவ வேறுபாடு அமைந்து விளங்கும் என்று தெரிவித்துள்ளமை திராவிட மொழிச் சொற்களின் திரிபுக்கான காரணத்தை விளக்கப் போதுமானதாகும்.
மேற்படி இரு மொழியியல் அறிஞர்களின் கூற்றுக்கமைவாகவே கட்டமு, பொம்மு எனும் தெலுங்குச் சொற்கள் தமிழில் கட்டிடம், பொம்மை என்றும் நீர் (தண்ணிர்) காய் எனும் தமிழ்ச் சொற்கள் தெலுங்கில் நீர்லு, காய என்றும் வழங்குதலை நாம் உய்த்துணர்ந்து கொள்ளலாம், புகழ்பெற்ற கட்டப்பொம்மன் எனும் பெயர் கெட்டிப் பொம்மு எனும் தெலுங்குப் பெயரின் திரிபு என்பதை படித்தவர்கள் அறிவர்.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் புடலங்காய் எனப்படுவது, வேறுபிரதேசத்தில் புடோலங்காய் என்று வழங்கப்படுதல் கூடும். மட்டக்களப்புப் பிரதேசத்தைப் போன்றே தமிழ் நாட்டிலும் புடலங்காய் எனும் சொல்லே பயன்பாட்டில் உள்ளமையை நர்மதாவின் தமிழ் அகராதி (பக்.562) எடுத்துக் காட்டும்.
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003) பக்கம் 26

வளர்ச்சி என்பது குறைவில் இருந்தே உண்டாகும் எனும் பிரமாணத்திற்கமைய புடல எனும் சொல் புடோல் ஆக நீட்சி (ட் எனும் குறில் டோ எனும் நெடிலாக) அடைதல் இயல்பாகும். இச் சொல்லிலும் (புடோலங்காய்) அம் சாரியை இடம் பெற்றிருத்தல் (புடோல் + அம் + காய்) கவனிக்கத்தக்கது.
புடலங்காய் பாம்பு போலத் தோற்றம் தருவதைக் கண்ட வெள்ளைக்காரன் அதனை Snake Gourd என்று குறிப்பிட்டமை ஆச்சரியத்திற்குரியதன்று. இவ்வாங்கிலச் சொல் புடலங்காயின் தோற்றம் பற்றி எழுந்ததே. இதுபோன்றே முருங்கைக்காயை அதன் தோற்றத்திற்காக அதே வெள். ளைக்காரன் Drumstick என்று அழைத்தமையையும் இச் சந்தர்ப்பத்தில் எண்ணிப் பார்த்தல் பொருத்தம் உடையதாகும்.
புடலங்காய் எனும் சொல் பற்றிய எனது குறிப்பில் (ஓலை 16) புடை' எனும் சொல்லில் இருந்து புடல் எனும் சொல் தோற்றம் பெற்றதாகக் குறிப்பிடவில்லை. அப்படி இருக்கையில்புடை என்ற அடியில் இருந்து புடல் வராது என்று பன்மொழிப் புலவர் கூறுவது ஏனோ?
பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களின் அனைத்துத் திராவிட மொழிகளுக்கும் பொதுவான அடிப்படைச் சொற்கள் இருக்கின்றன எனும் கருத்தினைநாம் ஏற்றுக் கொள்வோமாயின் திராவிட மொழிகளில் ஒன்றான தெலுங்குச் சொல்லுக்கு (புடல்) அடிச்சொல் காண்பது தமிழ் இலக்கணப்படி எப்படிப் பொருந்தும் என்ற கேள்விக்கே இடமில்லை. மேலும், சொற்கள் அல்லது சொல் உறுப்புக்கள் பொருள் தரும் வகையில் ஒன்றோடொன்றுவதையே தமிழ் இலக்கணம் புணர்ச்சி என்று சொல்லும். இதன்படியே புடல், காய் எனும் இரண்டு சொற்களும் அம் சாரியை பெற்றுப் பொருந்துகின்றன.
பெண்கள் தம் புடையில் (இடுப்பில்) வைத்து ஆடை அணிவதனால் அது புடைவை என்று (காரணப் பொதுப் பெயராக) அழைக்கப்படலாயிற்று. இது அணியப்படும் பொருள்கள் அணிகள் என்று குறிக்கப்படுவது போன்றதாகும்.
'வை' என்பதனைத் தொழிற் பெயர் விகுதிகளில் ஒன்று என்று கூறும் நன்னூல் அதனைச் செய் எனும் ஏவலின் பகாப்பதம் என்றும் கூறும். தமிழ் அகராதியும் 'வையென்னேவல்' என்றே தெரிவிக்கின்றது.
கடைசியாக, 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று கூறிய தொல்காப்பியர் மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா' என்று குறிப்பிட்டுள்ளதையும் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளல் வேண்டும்.
- வாகரைவாணன்
uésó 27 “gazoav” - 20 (6ørŰ6øróUíf 2003)

Page 16
(6) LIഖങ്ങി B
பன்மொழிப்புலவர் - த.கனகரத்தினம் பி.ஏ.(இலண்டன்) கல்வி டிப்ளோமா
கட்டளைக் கலித்துறை
1. ஒங்கு புகழும் ஒளிர வுலகெலாம் ஏத்திநிற்கத்
தாங்கு கலைகள் தரமெனக் கண்டு துதித்திடவே தேங்கு சுவையும் தெவிட்டி மணங்கமழ் தென்றலெனப் பாங்குடன் ஒலை பவனி வருகவே பாரினிலே.
2. பெற்றினும் ஒலை வளமார் திருமுகமாகுமன்றோ!
முற்றிய ஞானம் முழுமதியாக நிலவொளியிற் கற்குங் கலைகள் கதிர்விடக் காதினிற் செய்திகளும் பற்றிட ஓலை பவனி வருகவே பாரினிலே,
3. சீரான கட்டுரை சேர்ந்த சிறுகதை சூடிநின்று
ஏரான சொல்வளம் ஏத்தும் கவிதை எடுத்தியம்பி நேரான பாதை நெறியினில் நெஞ்சம் நெக்குருகப் பேரான ஓலை பவனி வருகவே பாரினிலே,
4. மாசிகை யாக மலர்ந்திடும் ஓலை மணமுடனே
ஆசிகள் பெற்று அனைவரின் ஆக்கமும் ஆங்கொலிக்கக் காசினி போற்றும் கொழும்புத் தமிழ்ச்சங்கச் செய்திகளும் பேசிட ஓலை பவனி வருகவே பாரினிலே,
5. வருக வருக மலர்ந்து வருகவே மங்களமாய்த்
தருக தருக கனிந்த சுவையும் கமகமக்கப் பெருக அறிவும் பருகக் கொடுவந்தளித்திடுமெம் திருவென ஒலை பவனி வருகவே பாரினிலே,
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003) பக்கம் 28

ஒலை -17 (யூன் 2003) மஹாகவி நினைவுச் சிறப்பிதழ் வெளியீடு
வெளியீட்டு விழா 02.08.2003 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம், குமாரசுவாமி விநோதன் கருத்தரங்கக் கூடத்தில் சங்கத் துணைக் காப்பாளர் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் (கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பேராசிரியர் எம்.ஏ.நு.மான் (தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு.ஆ.சிவனேசச் செல்வன் (பிரதம ஆசிரியர், தினக்குரல்) திரு.எஸ்.ஆர்.சுந்தரம் (கண்ணன்) பதிப்பாசிரியர் - ஆசிரியர் - காலச்சுவடு - தமிழ்நாடு அவர்களும் கலந்து கொண்டனர். வெளியீட்டுரையை கொழும்புத் தமிழ்ச்சங்கத் துணைத் தலைவர் திரு.த.இராஜரட்னம் அவர்களும், நயவுரையை திரு.க.சிவகுமார் (பத்திரிகையாளர்) அவர்களும்நிகழ்த்தி முதற்பிரதியை வீரகேசரி முன்னாள் ஆசிரியர் திரு.கே.சிவப்பிரகாசம் அவர்களும், சிறப்புப் பிரதிகள்ை மனித உரிமைச் செயற்பாட்டாளர் செல்வி.மகேஸ்வரி வேலாயுதம், திரு.இ.மயூர. நாதன் (தொழிலதிபர்), சின்மயா மிஸன் திரு.சி.இராஜதுரை, திரு.மு.புஸ்பராஜா (தொழிலதிபர்) ஆகியோரும் பெற்றுக் கொண்டனர். பின்வரும் நிகழ்வுகளும் இடம் பெற்றன.
Uá5g 29 ‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)

Page 17
பாட்டு ("கூடித் தொழில்கள் முயல்வோம்") - திருமதி ஒளவை விக்னேஸ்வரன்
பிரதம விருந்தினர் உரை - பேராசிரியர் எம்ஏ நுஃமான் சிறப்பு விருந்தினர் உரை - திரு.ஆ.சிவனேசச்செல்வன் ஏற்புரை - 'ஒலை" ஆசிரியர்
நிறைவுரை - திரு.எஸ்.கே.விக்னேஸ்வரன்
இலக்கியச் சந்திப்பு
ஜேர்மன் தமிழ் நாதம் (சஞ்சிகை) ஆசிரியர் திரு.ஆ.பூபதிபால வடிவேற்கரன் அவர்களுடனான இலக்கியச்சந்திப்பு 08:08.2003 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்குக் கொழும்புத் தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜேர்மனி வாழ் தமிழர் வாழ்வியல்' எனும் பொருள் பற்றி கலந்துரையாடப்பட்டதோடு, தமிழ்நாதம் சஞ்சிகையின் சில இதழ்களும் ஆசிரியரால் தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்டன.
சிறப்புச் சொற்பொழிவு
15.08.2003 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்குக் கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.க.நீலகண்டன் அவர்கள் தலைமையில் துணைப் பொதுச் செயலாளர் திரு.ஆ.கந்தசாமி அவர்களது தொடக்க உரையைத் தொடர்ந்து சங்கப் பொதுச் செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலழறிதரன் அவர்களால் 'கம்பன் முதல் காசி ஆனந்தன் வரை' என்ற பொருளில் உரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் கம்பன் முதல் காசி ஆனந்தன் வரையுமான கவிஞர்கள் சிலரது கவிதை, பாடல்கள் செல்வி பவித்ரா கிருபானந்தமுர்த்தி, திரு.ஆனந்தன் ஆகியோரால் பாடப்பட்டமை சிறப்பம்சமாகும்.
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003) U55ú 30
 

சிறப்புச் சொற்பொழிவு
20.08.2003 புதன்கிழமை மாலை 5.30 மணிக்குக் கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் க.நீலகண்டன் தலைமையில் துணைத்தலைவர் திரு.த.இராஜரட்னம் அவர்களது அறிமுக உரையைத் தொடர்ந்து கொழும்புத் தமிழ்ச்சங்க முன்னாள் நிதிச் செயலாளரும் தற்போது அமெரிக்காவில் வசிப்பவருமான திரு.இ.விக்னராஜா அவர்களால் "அமெரிக்காவில் தமிழர் வாழ்வியல்" என்ற பொருளில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. O
சிறப்புச் சொற்பொழிவு "மனநோய் - புனர்வாழ்வு"
23.08.2003 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் திரு.த.இராஜரட்ணம் அவர்கள் தலைமையில் பொதுச்செயலாளர் திரு.ஆ.இரகுபதிபாலறிதரன் அவர்களது அறிமுக உரையைத் தொடர்ந்து வைத்திய கலாநிதி (திருமதி) உமா - அம்பி சிவகுமாரன் (தலைமை மனநோய் மருத்துவ ஆலோசகர் - பப்புவா நியூகினி சுகாதார அமைச்சு, மனநோய் மருத்துவ விரிவுரையாளர் பப்புவா நியூகினி பல்கலைக்கழகம்) அவர்களால் மனநோய் - புனர்வாழ்வு' என்ற பொருளில் உரை நிகழ்த்தப்பட்டது.
21வது மாதாந்த இசை நிகழ்ச்சி
கொழும்புத் தமிழ்ச்சங்க மாதாந்த இசை நிகழ்ச்சித் தொடரின் 21வது நிகழ்வாக புல்லாங்குழல் கச்சேரி 30.08.2003 சனிக்கிழமை பி.ப.6.00மணிக்கு சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பின்வருவோர் பங்குபற்றினர்.
திரு.பிச்சையப்பா ஞானவரதன் - புல்லாங்குழல் திருTபோலமுரளி - வயலின் திரு.Aரகுநாதன் - மிருதங்கம்
மேலும் கொழும்புத் தமிழ்ச்சங்க இசைநிகழ்ச்சி சிறப்பாக அமையும் GuTQ5Ľ(6 LDJ(8LD60)Lu|úb LDibDub Sound Mixer,4-mic, micStand-4) g,á57u ஒலியமைப்புச் சாதனங்களையும் சங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய பேராசிரியர் எஸ்.கே.மகேஸ்வரன் (மொனாஸ் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா) அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இவ்வுபரகரணங்கள் பேராசிரியர் எஸ்.கே.மகேஸ்வரனின் சகோதரரான அமரர் எஸ்.கே.பரராசசிங்கம் அவர்களின் நினைவாக அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன.
U55ú 31 "gapad' - 20 (6606)aduf 2003)

Page 18
திகதி விடயம் நிகழ்த்தியவர்
13.08.2003 சிலப்பதிகாரத் தொடர் புராணவித்தகர் மு.தியாராசா
(217) "மாதவியாள் வரைந்தமடல்"
2008-2003 அமெரிக்காவில் தமிழர் திரு.இ.விக்னராஜா
(218) வாழ்வியல்
27.8.2003 சிலப்பதிகாரத் தொடர் புராணவித்தகர்
(219) துன்பியல் ஆரம்பம்' திரு.மு.தியாகராஜா
நால்நயம் காணர்போம்.
05.05.2000இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 530மணிக்கு நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் இலங்கை எழுத்தாளர்களது நூல்கள் நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி நூலின் பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
01.08.2003 உணர்வுக்கோலம் கலாநிதி.க. திரு.இளையதம்பி (112) (கவிதை) கணேசலிங்கம் தயானந்தா
(இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)
22.08.2003 யாதும் ஊரே - ஒரு கவிஞர் அம்பி திரு.
(113) யாத்திரை திருலிங்கநாதன்
29.08.2003 I இனப்பிரச்சினையும் திரு.சி.அ திரு.அ.நிக்ஷன் (114) அரசியல் தீர்வு ஜோதிலிங்கம் (வீரகேசரி,
யோசனைகளும் ஆசிரியப்பீடம்)
சங்கப்பலகை தயாரிப்பு : சி.சரவணபவன் (ஆட்சிக்குழு உறுப்பினர்)
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)
Úású 32
 

இலங்கை சிறுவர் சஞ்சிகைகள்
_. சில குறிப்புகள்
நவமணி
இலங்கை சிறுவர் சஞ்சிகைகள் குறித்து சில தகவல்கள் தெரிவிக்க விரும்புகின்றேன்.
‘வெற்றிமணி’ ஆரம்பகாலத்தில் இந்திய சிறுவர் பத்திரிகைகளுக்கு நிகரான தரத்தில் வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருந்தது. அது சிறிது காலம் நிறுத்தப்பட்டு திரும்ப வெளிவந்த போது அதன் தரம் சற்றே குறைந்திருந்த தென்றே சொல்ல வேண்டும். அப்பத்திரிகையில் ‘தமிழ்த்தீவு என்னும் ஒரு தொடர்நாடகம் வெளிவந்தது. எங்கள்பள்ளிநாட்களில் அதை அரங்கேற்றினோம்.
'கல் கண்டு’ எப்படி சிறுவர் பத்திரிகையாக ஆரம்பித்து எல்லா வயதினரும் வாசிக்கும் பத்திரிகையாக வளர்ச்சி பெற்றதோ அதே பாணியில் வெளிவந்தது ‘திருமகன்’ என்னும் பத்திரிகையாகும். குகா’ என்பவர் பாமன்கடையிலிருந்து இப்பத்திரிகையை வெளிக்கொணர்ந்தார். இவர் ஒரு மர்மமான மனிதராக இருந்தார். தமிழ்வாணன் சங்கர்லால் என்னும் துப்பறியும் நிபுணரை உருவாக்கியது போல இவர் தம்பி என்னும் நிபுணரை உருவாக்கியிருந்தார்.
செ.கணேசலிங்கனின் 'குமரன் இதழும் - ஆரம்பசில இதழ்கள் - சிறுவர் பத்திரிகையாகவே வெளிவந்தது.
ஜனரஞ்சகப் பத்திரிகையான ‘மாணிக்கம்’ பத்திரிகை வெளியீட்டாளர்கள் 'மதனன்’ என்னும் சிறுவர் பத்திரிகையையும் வெளியிட்டார்கள். இது வெள்ளவத்தை கல்யாணி வீதியிலிருந்து வெளியிடப்பட்டது.
மெய்கண்டான்நிறுவனத்தினர் நட்சத்திரமாமா' என்னும் ‘அப்புலிமாமா' பாணி சஞ்சிகையை வெளியிட்டார்கள்.
மேலே குறிப்பிட்ட இருபத்திரிகைகளும் தென்னிந்தியப் பத்திரிகைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்தல் தடைசெய்யப்பட்ட கால கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தடைநீங்கியதும் அப்போட்டியினை எதிர் கொள்ள முடியாமல் நின்று போய் விட்டகாகக் கருதலாம்.
மலையக்கத்தில் அட்டன் அல்லது தலவாக்கொல்லையிலிருந்து ‘அறி
&
U55ű 33 ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)

Page 19
வாயுதம்' என்னும் சிறுவர் பத்திரிகையும் வந்தது. ‘கட்டமாமா பதில்கள்’ என்ற தலைப்பில் சுவையான கேள்விபதில் பகுதி இவ்விதழில் பிரசுரிக்கப்பட்டது. முந்திய இதழில் பிழைகள் மலிந்திருந்ததையோ அப்படியான ஒரு குறைப்பாட்டையோ பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு “நாசமாய்ப் போன முருகன் பிரஸ்காரர்கள் (அச்சகத்தின் பெயர் அவ்வளவாக ஞாபகம் இல்லை அல்லது வேறொரு பெயராயிருக்கலாம்) செய்த வேலை தான்” என்று பதிலளித்திருந்தது ஞாபகத்திற்கு வருகின்றது. இந்தப் பத்திரிகை இரண்டொரு இதழ்கள்தான் வெளிவந்தது என்று நினைக்கின்றேன்.
‘வீரகேசரி’ நிறுவனத்தினர் வெளியிட்ட ‘விஞ்ஞானி’ என்ற பத்திரிகையை தனியே சிறுவர் பத்திரிகை என்று கொள்ள முடியாவிட்டாலும் பெரும்பாலான மாணவர்கள் விரும்பி வாசிக்கும் பத்திரிகையாக இருந்தது.
'மஞ்சரி மாதிரியில் வெளிவந்த ‘செங்கதிர் உயர்வகுப்பு மாணவர். களைக் கவர்ந்த பத்திரிகையாகும்.
“கீதா பத்திரிகையை வெளியிட்டவர்களும் ஒரு சிறுவர் பத்திரிகையை வெளியிட்டதைக் குறித்தும், 'கண்மணி’ என்றொரு பத்திரிகை யாழ்ப்பாணத்திலிருந்தோ, மட்டக்களப்பிலிருந்தோ வெளிவந்தது குறித்தும் மங்கிய ஞாபகம் இருக்கின்றது. விபரம் தெரிந்தவர்கள் தெரிவிப்பார்கள் என்றே நம்புகின்றேன்.
'பூங்கா தான் முதல் சிறுவர் பத்திரிகை என்று எழுதியதன் (ஓலை - 8, பக்கம் 26) மூலம் மேலும் விவரங்களை வெளிக்கொணர உதவிய எழுத்தாளருக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
ஐம்பத்தேழு காலப்பகுதியில் மலையகத்திலிருந்து க.மனோகரன் என்பவரால் 'மாணவமலர்' என்றோர் ஏடு வெளியிடப்பட்டுள்ளது.
ஒலை ஆக்கம் கனிமொழியில் மறுபிரசுர்ம் ஒலை -14ல் வெளிவந்த மருதமைந்தன் அவர்கள் எழுதிய சாதுமிரண்டால்' (உருவகம்) சென்னையிலிருந்து வெளிவரும் "கனிமொழி (அரங்கம் -4 பொழிவு -6, ஆனி 2034- யூன் 2003, 16.06.2003)இலக்கிய இதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003) U55ú 34

கலாபூசணம் 30,கடைச்சாமி வீதி
அராலியூர் ந.சுந்தரப்பிள்ளை B.A நீராவியடி (இலங்கை Dip - in Edu) யாழ்ப்பாணம்
O3.01.2003
தலைவர், கொழும்புத் தமிழ்ச்சங்கம் அன்புடையீர், இத்துடன் வரும் பத்திரிகை நறுக்கை உங்கள் உறுப்பினர்கள் எல்லோரிடமும் வாசிக்கக் கொடுங்கள். எழுத்தாளர் வாசிக்க வேண்டிய கட்டுரை. நன்றி
அன்புடன்
அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை
போட்டிகளும் பரிசுகளும் விருதுகளும்.
நாங்கள் போட்டிகளும் பொறாமைகளும் பரிசுகளும் விருதுகளும் நிறைந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாடசாலை வாழ்க்கையுடன் தொடங்கும் போட்டிகள், மனிதன் இறக்கும்வரை நீடிக்கின்றன.
தமிழ்த்தினப் போட்டிகளையே எடுத்துக்கொள்வோம். பாடசாலை மட்டத்தில் தொடங்கி, கொழும்பு செல்லும்வரை எத்தனை போட்டிகள். இந்தப் போட்டிகளுக்காக மாணவர்களைக் கசக்கிப் பிழிந்துவிடுவார்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்களும் பாவம் களைத்துப்போவார்கள்! போட்டி முடிவுகள் வெளியிடப்படும் பொழுது முணுமுணுப்புகள் நிறையக்கேட்கும். afel) வேளைகளில் முணுமுணுப்புகள் முறைப்பாடுகளாக மாறும். போட்டி முடிவுகள் பற்றிய கண்டனக் கடிதங்களைப் பத்திரிகைளிலும் வாசிக்கலாம்.
இருந்தாலும் அடுத்த ஆண்டும் அதே போட்டிகளை அதே முறையில் நடத்துகிறோம். மாணவர்களும் பங்கு பற்றுகிறார்கள். என்ன செய்வது. எங்களுடைய வாழ்க்கையே போட்டி மயமாகிவிட்டதே! அதிலிருந்து தப்பமுடியாது.
விளையாட்டுப்போட்டிகள், பந்தடிகள் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. சிநேகயூர்வப் பந்தடிப் போட்டிகள், அடிதடிகளில் முடிவதும் உண்டு. சிலவேளைகளில் மத்தியஸ்தர்களுக்கும் அவை தாராளமாகக் கொடுக் கப்படும்!
பெரியவர்களது உலகத்தில்தான் பெரும்பெரும் போட்டிகள்! முதலில் உத்தியோகம் பெறுவதற்குப் போட்டி. பிறகு பதவியுயர்வுக்குப் போட்டி. பிறகு
Оф4ü з5 ‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)

Page 20
செல்வாக்குப் போட்டி. அதன்பிறகு சேவைநீடிப்புப் போட்டி சேவை முடிந்தால் பதவிகளுக்குப் போட்டி..!
எல்லாப் போட்டிகளையும் பற்றி எழுதினால் வாசகர்களுக்குத் தலை சுற்றும் எனவே, வாசகர் நலனைக் கருத்திற்கொண்டு எனக்கு நன்கு தெரிந்த இலக்கிய உலகப் போட்டிகளைப் பற்றி மட்டும் சுருக்கமாக எழுதுகிறேன்.
இன்று எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் பரிசுகளும் விருதுகளும் வழங்கப் பல கழகங்களும் நிறுவனங்களும் உள்ளன. அரசாங்கங்களும் அவற்றை வழங்குகின்றன. இந்தப் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்படாத பழங்காலத்தில் தானே சிறந்த இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன. கம்பனுக்கும் வள்ளுவனுக்கும் இளங்கோவுக்கும் யார் சாகித்திய மண்டலப் பரிசுகொடுத்தார்கள்? ஷேக்ஸ்பியருக்கும் மொலியருக்கும் டில்டனுக்கும் ஷெல்லிக்கும் சாகித்தியப் பரிசா கொடுத்தார்கள்?
எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் அவர்கள் வாழுகின்ற காலத்திலேயே கெளரவிக்கவேண்டும், அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும் என்பதுதான் அரசாங்கங்கள் பரிசுகளும் விருதுகளும் வழங்குவதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. அந்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா?
இந்திய சாகித்திய பரிசுகள், விருதுகள் பற்றியே கண்டனங்கள் நிறைய எழுதப்பட்டுள்ளன. இலங்கை சாகித்தியப் பரிசுகள் பற்றி ஏன் பேசுவான்? பல ஒட்டைகள்! என்னைப் பற்றி மட்டும் கொஞ்சம் சொல்கிறேன்.
நான் 1945ஆம் ஆண்டிலிருந்து நாடகத் துறையில் உழைத்துவருகிறேன். 1980ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வானொலி ஊடாக இலங்கையர் எல்லோருக்கும் நாடக விருந்து அளித்து வருகிறேன். வானொலி நாடக நூல்கள் உட்பட பல நாடக நூல்கள் வெளியிட்டேன். இலங்கை அரசாங்கத்தின் சாகித்தியப் பரிசு அவற்றில் ஒன்றிற்குக் கூட வழங்கப்படவில்லை!.
சாகித்தியப் பரிசு என்ன? ஒரு சிலரது தீர்மானம், அவர்கள் எல்லாம் அறிந்தவர்களுமல்ல, முற்றும் துறந்த முனிவர்களுமல்ல. அவர்களும் விருப்பு வெறுப்புகளும் ஆசாபாசங்களும் கொண்ட மனிதர்களே!
நான் அரசாங்கம் பரிசுகளும் விருதுகளும் வழங்கக் கூடாது என்று சொல்லவில்லை. அவற்றை நேர்மையாக வழங்காவிட்டால், அவற்றை வழங்குவதில் உள்ள நோக்கம் நிறைவேறாது!
பரிசுகளில் பெரிய பரிசு நோபல் பரிசு. அவற்றை வழங்குவதிலேயே இமாலயத் தவறுகள் விடப்பட்டிருக்கின்றன. உலகின் தலைசிறந்த நாவலாசிரியராகக் கருதப்படும் லியோடால்ஸ்டாய்க்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. அன்ரன் செக்காவிற்கும் மக்ஸிம் கோர்க்கிற்கும் கூட வழங்
‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003) Оф4ф з6

கப்படவில்லை. ஷேக்ஸ்பியருக்குப் பின்பு உலக நாடக வானில் தோன்றிய மாபெரும் மேதை கென்றிக் இப்சனுக்கும் நோபல் பரிசு வழங்கப்படவில்லை!
எனது ஐம்பது வருட இலக்கிய உலக வாழ்க்கையில் இருந்து எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நான் சொல்லும் அறிவுரைகளும் இது தான். பரிசுகளும் விருதுகளும் வழங்கப்படவில்லை என்று கவலைப்படாதீர்கள். அவை கிடைத்துவிட்டனவே என்றும் தலைகால் தெரியாமல் துள்ளிக்குதிக் காதிர்கள் ! அமைதியாக இலக்கியப்பணி புரியுங்கள். சாதனைகள் செய்வீர்கள். நீங்கள் செய்வது தான் உங்களது சாதனை எழுத்தாற்றல் இறைவன் எங்களுக்குத் தந்த விஷேட திறமை, அதை உலக நன்மைக்காகப் பயன்படுத்தவேண்டியது எங்களதுகடமை.
கட்டுரையாசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க பிரசுரிக்கப்பட்டது - நன்றி! 'உதயன்' (29.12.2002)
ஒலை றோசாவாகவே மலர்ந்தது
ஒலை மொட்டாக அரும்பிய போது அது எவ்வண்ணம் மலரப் போகின்றது எனத் தமிழ் கூறும் நல்லுலகம் எதிர்பார்த்தது. மலர்ந்தபோது மிகமிக அழகாகக் கவர்ச்சிகரமாகவே காட்சி அளித்தது. முள்முருக்கம் பூவைப் போலன்றி அனைவரும் சூடிக் கொள்ளத்தக்க வகையில் றோசாகவே மலர்ந்தது. ஒலை ஒரு சமயம் றோசாகவும் இன்னொரு வேளை கனகாம்பரமாகவும் மணம் பரப்புகின்றது. மகிழம் பூப்போன்ற நறுமணமும் அதனிடம் உண்டு. வாழ்த்துக்கள்.
தமிழ்ச் சங்கப் பணிகளையும் அதன் செயற்பாடுகளையும் ஒலை முதலில் எடுத்துரைத்தது. இன்று அது தனது அடிப்படைப் பணிகளுடன் தரம் வாய்ந்த இலக்கிய ஏடாகவும் வளர்ந்து வருகிறது. இலக்கிய கர்த்தாக்களை அவர்களுக்கே உரிய சுதந்திரத்துடன் இன்றைய உலகிற்கு அறிமுகஞ் செய்யும் பணியையும் அது சிரமேற்கொண்டுள்ளது. உதாரணமாக வ.அ.இராசரத்தினம் பற்றிய பல தகவல்களை அறியும் வாய்ப்பை ஒலைவாசகர்களுக்குத்தந்துள்ளது. ஒலையின் குறுங்காவியம் "விளைச்சல்" அற்புதம், மிக்மிக நயந்தேன். அனுபவித்தேன். ஒலை பழைமைக்குப் பழைமையும் புதுமைக்குப் புதுமையுமாக அர்ப்பணிப்புடன் வெளிவரும் ஒரு புரட்சிகரமான ஏடென்பதே எனது கணிப்பு.
- செல்லப்பா நடராசா (தினகரன் அலுவலக முன்னைநாள் பத்திரிகையாளர், பாராளுமன்ற ஓய்வு பெற்ற சிரேஷ்ட ஹன்சாட் அறிக்கையாளர்)
Uású 37 ‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)

Page 21
> தாங்கள் தொடர்ந்து அனுப்பி வந்த 14 ஒலை இதழ்களும் எனக்குக் கிடைத்தன. காத்திரமான இலக்கியச் செய்திகள், ஆக்கங்கள் ஆகியனவற்றைத் தாங்கி வரும் 'ஒலை' பயனுள்ள ஓர் ஆவணம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஒலையின் படிப்படியான வளர்ச்சியினை என்னால் நன்கு உணர முடிகின்றது. பயன் கருதாது எனக்குத் தொடர்ந்து ஒலை இதழ்கள் அனுப்பி வருவது தமிழுக்கு அளிக்கும் கெளரவம் என்று கருதுகின்றேன்.
தங்கள் சீரிய பணி தொடர நல்ல இதயங்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்குமென்பதில் சிறிதும் ஐயமில்லை. மென்மேலும் 'ஒலை'வளர்ந்து வளம் பெற எனது உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.
"வானதி பவனம்" நாநவநாயகமூர்த்தி பனங்காடு, அக்கரைப்பற்று (ஆய்வார்வலர்) 2003.05.22
> Short and Sweet என்பது போல ஒலையில் வரும் கனகச்சிதமான, அளவான ஆக்கங்கள் சுவையோடு அறிவுக்கு விருந்தாகவும், நல்ல படிப்பினை ஊட்டுவதோடு யதார்த்ததையும் உள்ளங்கை நெல்லிக்கனியாக பிரதிபலிக்கவும் செய்யும் சிறுகதைகள் பிரமாதம், அவற்றுள் காலத்துக்கேற்ற சிறுகதை 'சிபார்சு"அற்புதம்!அருமையிலும் அருமை! கதாசிரியர் இணுவை.ந.கணேசலிங்கம் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
17/1, செண்பகச் சோலை திருமதிZ.B.ஸக்கரியா
ஹபுகளில்தலாவ 26,05.2003
> கவிஞர் செங்கதிரோன் அவர்களே!
தவறாமல் எனக்கு 'ஒலை கிடைக்கச் செய்து வருவது குறித்து மிகவும் நன்றியுடையேன். கவிஞர் நீலாவணன் அரைகுறையில் விட்டுச் சென்ற வேளாண்மை' காவியத்தை அவர் பாணியிலேயே தொடர்ந்தெழுதி முடிக்க வேண்டுமென உறுதிபூண்டு 'விளைச்சல்' எனும் தலைப்பில் நீங்கள் எழுதிவருவதை வாசித்தேன். அருமையாக உள்ளது. இதை நீங்கள் செய்தவற்கு முற்றிலும் தகுதியானவர்தான் என நிரூபித்தும்
“தலை” - 20 செப்ரெம்பர் 2003) Uású 38
 

வருகிறீர்கள். நீலாவணனின் ஆத்மா கவியுலகில் இனித்தான் சாந்தி. பெறும். 176/3, W.A.De fl6üb6MIT DIT 6çi6oog5 கொழும்பு-06 27.05.2003 > எனது கடிதத்தின் பதிலாக ஒலை இன்று என் கரம் எட்டியது. உடனே எல்லாவற்றையும் உள்ளெடுத்து அசைமீட்டு சுவைத்தேன். இலக்கியத்துக்கான தனி மலராக மலர்ந்துள்ளது. புதிய பரிணாமம் காணப்படுகிறது. சஞ்சிகை என்பதற்கு ஒரு வரைவிலக்கணமாகவுள்ளது.
சக்திதாசன்
F-2பதுளுபிட்டிய, பதுளை எஸ்.பியாலமுருகன் 12.06.2003 * ஓலை தொடர்ச்சியாக கிடைத்துவருகிறது.நன்றி. இதுவரை கிடைத்த ஒலைகளை வைத்து நோக்கும் போது, ஒலையில் ஒரு படிமுறை சார்ந்த வளர்ச்சியை அவதானிக்க முடிகின்றது. இந்நிலைமை மேலும் விரிவு கொண்டு ஒலை ஒரு பன்முகத்தன்மையான கலை, இலக்கிய இதழாக மலர வேண்டுமென்பதே என்னுடைய அவா. என்றும் ஒலை அதிகம் மரபுத்தன்மையான ஆக்க வெளிப்பாடுகளுக்கே முதன்மை அளிப்பதாக தெரிகிறது. இந்நிலைமை பன்முகத் தன்மையான வளர்ச்சிக்கு இடையூறாகவே அமையும். அதற்காக மரபினை நிராகரிக்க வேண்டும் என நான் சொல்ல முற்படவில்லை. எமது வேர் எமக்கு அவசியம். ஆனால் வேரோடு மட்டுமே நாம் நிற்க முடியாது. எமது வேரிலிருந்து எமக்கான நவீனத்தை நோக்கிநாம் நகர வேண்டும். உலக இலக்கியப் பரப்பு மிகவும் விசாலமானவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந் நிலைமையை ஒலை உள்வாங்கிக் கொள்ளும் போது ஒலை நிட்சயமாக ஒரு சிறந்த கலை, இலக்கிய சமூக இதழாக வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.
14, வைத்தியசாலை விடுதி, யதீந்திரா திருக்கோணமலை 28.06.2003
> 6.g6.j ஒலை அற்புதம்! சொல்லும் விசயம் கற்பிதம், வாசிக்க. வாசிக்க
அமிர்தம்!
481, பார்வீதி, மட்டக்களப்பு திக்கவயல் தர்மகுலசிங்கம் 30.06.2003 > "ஒலை 15 மேலும் பெருகேறியுள்ளது. கவிஞர் நீலாவணன் விட்ட இடத்திலிருந்து தொடரும் "விளைச்சல்" அவர் எழுதிய அதே பாணியில் அமைந்திருப்பது ஆச்சரியம். எப்படி இது..?
Uš4ф з9 ‘ஓலை’ - 20 செப்ரெம்பர் 2003)

Page 22
கனடா வாழ்க.தா.செல்வராச கோபால் இதே முயற்சியை மேற்கொண்டு நீலாவணன் விட்ட இடத்திலிருந்துமீதியைத் தொடர்ந்து எழுதி நூலாக வெளியிட்டிருந்தார். அதுவும் சுவை.
அதைப் போலவே தாங்கள் இப்போது எழுதும் தொடர், மூல ஆசிரியர் எழுதியது போலவே அமைந்துள்ளது. பாராட்டுக்கள். 'ஒலையின் ஏனைய பக்கங்களும் நன்கு வடிவமைக்கப்பட்டு, சஞ்சிகை பளிச்என அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.
18. நல்லையா வீதி இரா நாகலிங்கம் மட்டக்களப்பு (அன்புமணி) 30.06.2003
> "ஒலை" 15 வது மடல் கிடைக்கப் பெற்றேன். தாமரைத்தீவான் அவர்களின் "கடுகு" நீபி.அருளானாந்தம் அவர்களின் "அவர்களுக்குள்ளும்" மிகவும் நல்ல படைப்புகள். ஆசிரியர் செங்கதிரோன் அவர்களின் இதயம் திறந்து.'தமிழ் வானில் உதயநிலாவாக உள்ளது. அனைவருக்கும் எனது பாராட்டல்கள்!
மன்/முள்ளிக்குளம் அ.த.க.பாடசாலை செஞானராசா
பாலம்பிட்டி
08.07.2003 > வணக்கம். தங்கள் ஒலைகள் கிடைக்கப் பெற்றேன்.நன்றிகள். உடன்
பதில் எழுத வேண்டும் என நினைத்தும் வேலைகளுக்கு மத்தியில்
முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும்.
பல சிரமங்களுக்கு மத்தியிரும் "ஒலை" தொடர்ந்து வெளிவருவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது. மேலும் பல காத்திரமான விடயங்களை தாங்கி வர என் வாழ்த்துக்கள்.
33/A, மேல்மாடி ஒழுங்கை செல்விசுமதிஅற்புதராஜா
நாவற்குடா, மட்டக்களப்பு 10,07.2003
> மாதாந்தம் எமது கரம் சேரும் ஒலை கண்டு மிக்க மகிழ்ச்சி. அதன் ஆக்கங்கள் அற்புதமானவை. பயன்தரக்கூடியவை, சங்கம் வளர்த்த தமிழ் மேலும் ஒலையாய் விரியக் காண நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது. மேலும் தீந்தமிழ் வளர இந்த வாசகியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
161/1, கிறீன் வீதி, திருமதி. சிவாஜினி குகதாஸ்
திருமலை 28.07.2003
"தலை" - 20 செப்ரெம்பர் 2003) U4íasó 40

ട്ട}(~ དིང་རི་
S. தமிழ்ச் சங்கத்தின் குரலாய்
SŞ
தரணி எங்கும் ஒலிக்க ஒலை ஒயாமல் வர வளர எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !
சங்கம் கல்வி நிலையம்
உருத்திரா மாவத்தை வெள்ளவத்தை R ക്രെഞ്ചശേീ : 2з6Iз81 s s SNS ഭ്രൂ(S