கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2003.10-12

Page 1
வெள்ளவத்தை
நித்தியகல்யாணி நகை மாளிகையில்
அப்பழுக்கற்ற வைரம்
பெல்ஜியம் (Belgiபா சர்வதேச இரத்தினக்கல்லியல் நிறுவனத்தினால் International Geminological Institute உறுதிப்படுத்தப்பட்டு - பரிசோதிக்கப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட்டு - மாற்றமுடியாதபடி GLIE, EMPIÄ தாளிடப்பட்டது.
வெள்ளவத்தை
ififiliuaitiiu Italili ejala.
230 காலி வீதி கொழும்பு - 03 Q、u 23°236242”
氨 தொலை நகல் 2504939 Š. மின்னஞ்சல் nikiL
 
 
 

ஆசிரியர் செங்கதிEாள்
இலை கொழும்புத் தமிழ்ச்சங்க மாதாந்து மடல்
. . . . . ܀ 23 ܐ ܪ ܪ ܂ - - |-
二ー
-8-
கலாசூரி இசிவகுருநாதன் அவர்களின் நிழற்படத் திறப்பு வைபவமும் அஞ்சலிக் கூட்டமும்
2 அன்று நடைபெற்ற மறைந்த தமிழ்ச் சங்கத் தனவர்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 7, 7. eta ஒழுங்கை உருந்திர iਰ। alTiti : OG
-------
tillf | WWW. Colombo. Tamils Angam. Org 8 сағатын алшпелі штатыгі 1 ст=1ствштеkalk

Page 2
87. ஹம்டன் லேன்
87. 1/3, ஹம்டன் லேன்
வெள்ளவத்தை வெள்ளவத்தை கொழும்பு- 6 கொழும்பு - 6 தொபே 2553068
X À 霍 కెNL _ନତ
 

இதயம் திறந்து.
வெளிநாடுகளில் வதியும் எம்மவர்களுக்கு ஒர் விநயமான வேண்டுகோள். ஈழத்துத் தமிழ்ச் சூழலில் இலக்கியச் சிற்றிதழ் ஒன்றினை வெளியிடுவதில் எதிர்நோக்கப்படும் இடர்கள் நீங்கள் அறியாத தொன்றல்ல. எனினும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக 'ஒலையை வெளியிட்டு வருகின்றோம். இந்த இதழுடன் (ஒலை-21ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் 2003) இருபத்தியொரு இதழ்களை 'ஒலை' விரித்துள்ளது. எழுத்தாளர்களிடமிருந்தும் இலக்கிய ஆர். வலர்களிடமிருந்தும் இயன்ற அன்பளிப்புக்களைப் பெற்றுக் கொண்டு இலவசமாகவே 'ஒலையை வீட்டு விலாசத்திற்குத் தபாலில் அனுப்பிவருகிறோம். புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வதியும் ஈழத்து எழுத்தாளர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் கூட தபாலில் அனுப்பி வருகின்றோம். இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், டென்மார்க், நோர்வே, கனடா, நியுசிலாந்து போன்ற நாடுகளுக்கும் மற்றும் சிங்கப்பூர், மலேசிய, இந்தியா (தமிழ்நாடு) முதலிய நாடுகளுக்குமாக மாதா மாதம் மொத்தம் சுமார் இருநூறு பிரதிகளை அனுப்பி வருகின்றோம். 'ஒலைப்பிரதியொன்றின் தயாரிப்புச் செலவின் இருமடங்கு அல்லது மும்மடங்கு அதனை வெளிநாடுகளுக்கு தபாலில் அனுப்பும் முத்திரைச் செலவாக எமக்கு ஏற்படுகிறது. எனினும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு பல நிதிச் சிரமங்களுக்கு மத்தியிலும் இதனைச் சாத்தியமாக்கி வருகின்றோம். எனவே,
அன்பானவர்களே! உங்கள் தாயகத்தில் நடைபெறும் தமிழ் வளர்ச்சிப் பணிக்கு மேலும் தாமதியாது தயவு செய்து உங்களால்
இயன்ற நிதி அன்பளிப்புக்களை நீட்டி உதவுங்கள்.
மிகுந்தவர் பொற்குவை தாரீர் நிதிகுறைந்தவர் காசுகள்
றகு g5 றந்த ġbir fil
நன்றி. மீணர்டும் மறுமடலில்.
பக்கம் 1 ‘ஓலை’ - 2) (ஒக்,நவம்.ழசம்பர் 2003)

Page 3
குறுங்காவியம்S செங்கதிரோன் எழுதும்
ளைச்சல்
(கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி)
"சந்தோஷம்" முடிந்து சாப்பாட்டுப் பந்தி
வடிவேலும் விடுவானா போய் வார்த்துவிட்டு வந்து நின்றான். 'அடி சக்கை' - அமர்க்களந்தான் அவனும்தான் ஆடுகின்றான்! "விடுமச்சான்!. போதும் இனி. விடு" - அழகர் வேண்டியதால் விடுபட்டார் கந்தர் பின் வீட்டுக்குள் சென்று வந்தார்.
கைகழுவி வாய் அலம்ப கந்தப்பர் செம்பு தந்து பையவேதான் கூட்டிப்போய் பந்தியிலும் இருப்பாட்டி "ஏய்பொன்னு! கொண்ணன்கா! இலைபோடு! எல்லாமே வைநல்லா. வை! வை! வை! வடிவாகக் கவனி!" என்றார்.
அண்ணனின் அருகில் மெல்ல அமைதியாய் வந்த பொன்னு "என்னண்ணா! இன்று நல்லா எடுத்திட்டா போல" என்றாள். "கொண்ணனுக்கென்ன இன்று கொண்டாட்டம்தானே" என்று கண்ணாலே கனகம் பேச களிப்பிலே கந்தர் ஆழ்ந்தார்.
‘ஓலை’ - 2) (ஒக்,நவம்.டிசம்பர்2003) பக்கம் 2
 
 
 

பந்தியில் மற்ற ஆண்கள் பகிடிகள் கதைத்தவண்ணம் குந்தினர்; பெண்கள் ஒடி குசினிக்குள் சோறு கொண்டு வந்தனர்; வடிவாய் எல்லாம் வைத்தனர். வழமைபோல பந்தியின் நடுவில் பெத்தா பார்வதி வைத்தாள் சத்தம்!
"சோறெடுத்து வா! சொர்ணம்! சுண்டலையும் கொண்டு வாகா! ஆரெடுக்கப் போனா பார்.! ஆட்டிறைச்சிக் கறியை. தண்
னிர் எடுத்து வை வள்ளி!
நீளத்தில் பாயை விரி! ஊர் கதைக்கப் போடாகா! உண்டெனவே எல்லாம் வை.'
'உப்'யென்று கேட்டார்கள்; "உறைப்பெங்கே?" - மற்றொருவர் "சப்பித்தான் தின்னநல்ல சதையோடு எலும்பிறைச்சி" 'தப்பாமல் தம்பிக்கு . வா! தயிர், சீனி போடு தங்கம்" "அப்பாடா! நல்லவெட்டு.ஆ!
ஆணத்தில் கொஞ்சம் ஊத்து"
ஆம்பிளைப் பந்தி வைத்து அடங்கிய பின்னர் பொன்னு செம்பினைக் கனகம் கையில் சிறப்பாகத் தந்து மற்ற பொம்பிளைத் தத்தியாரை(ப்) பொறுப்பாக நின்று எந்த வம்பேனும் வந்திடாத வண்ணம்நல் பந்தி வைத்தாள்.
- இன்னும் விளையும்
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 4
NOOL THETTAM
An annotated Bibliogaphy of published writings in Tamil Language by Sri Lankan Writers, home and abroad - N.Selvarajah (Compiler)
தலைவர், கொழும்புத் தமிழ்ச்சங்கம் கொழும்பு -06
அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய ஐயா, கடந்த ஒக்டோபர் 2002க்கான ஒலை இதழ் இன்று கிடைக்கப்பெற்றேன். தயைகூர்ந்து அனுப்பி வைத்தமைக்கு முதற்கண் என் நன்றி. கடந்த 26.10.2002 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற எனது நூல் வெளியீட்டு விழாவின் போது நீங்களும் சங்க அங்கத்தவர்கள் அனைவரும் எனக்களித்த கெளரவத்தை என்றும் மறக்க முடி
L. lFTg2Bol. புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயகத்தின் நினைவை நெஞ்சில் தாங்கி வாழும் எம்மவரைப்பற்றி தமிழ்ச்சங்கம் கொண்டுள்ள மேலான பார்வை, அன்றைய பலரது உரைகளிலும் வெளிப்பட்டு எம்மை மேலும் தமிழ்த் தொண்டை அயராது மேற்கொள்ளும் உத்வேகத்தை அளித்தது. அன்றைய நிகழ்ச்சிகளை இங்கு தீபம் தொலைக்காட்சி இருநாட்கள் ஒளிபரப்பியமையை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் பாரிய நூலகத்தின் நடவடிக்கைகள், எதிர்காலத்திட்டங்கள் பற்றி எனக்குத் தகவல் தருவீர்களாயின் எதிர்காலத்தில் அதன் வளர்ச்சி பற்றிய திட்டமிடலிலும் நடைமுறைப்படுத் தலிலும் நான் உங்களுக்கு என்னாலான ஒத்துழைப்பினைத் தரலாம். தங்கள் மேலான சேவை என்றும் வளர என் வாழ்த்துக்களுடன் இக்கடிதத்தை முடிக்கின்றேன்.
தங்கள் அன்புள்ள என்செல்வராஜா 15.11.2003
N. Selvarajah, 48, Hallwicks Road, Luton, Bedfordshire, U.K, LU29BH
Te: 01582703786 Fax: 01582.528765 لم e-mail : n.selvarajah (antlworld.com ܢܠ
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) பக்கம் 4
 

செப்ரெம்பர் 20ல் .
சங்கப்Uலகை
சிறப்புரை 05.09.2003 ஸ்ெளிக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் தமிழ்ச் சங்க உறுப்பினர் திரு.நா.நடராசா அவர்கள் தலைமையில் திரு.சுநா. பத்மநாதன் அவர்களால் நியூசிலாந்தில் எம்மவர் வாழ்வியல்' என்ற பொருளில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
இலக்கியக் கலந்துரையாடல்
10.09.2003 புதன்கிழமை மாலை 5.30 மணிக்குத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் திரு.ஜின்னாஹற்ஷரிபுத்தின் தலைமையில் தமிழகத்தில் இருந்து வருகைதந்த பிரபல நாவலாசிரியர் தோப்பில் முகம்மது மீரான் அவர்களுடான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தோப்பில் முகம்மது மீரான் அவர்களை வரவேற்றுத் தமிழ்ச்சங்கம் சார்பாக திரு.ஜின்னாஹற் ஷரிபுத்தின் அவர்களால் வாழ்த்துப்பா வாசித்தளிக்கப்பட்டது.
Usaó 5 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 5
மறைந்த தமிழ்ச்சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் நிழற்படத் திறப்பு வைபவமும் அஞ்சலிக் கூட்டமும்
13.09.2003 சனிக்கிழமை மாலை 5.00 மணி தமிழ் வாழ்த்து-செல்வி,இந்துஜா கணேசராஜா அமரரின் நிழற்படம் மாண்புமிகு நீதியரசர் சிவிவிக்
னேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்படுதலும் மாலை மரியாதையும்.
மெளன அஞ்சலி வரவேற்புரை - திரு.பெ.விஜயரத்தினம் (துணைத்தலைவர்) கவிதாஞ்சலி
* டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் (சங்கத்துணைத் தலைவர்) * பன்மொழிப் புலவர் த.கனகரத்தினம் (சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்) * செங்கதிரோன் தகோபாலகிருஷ்ணன் (சங்க இலக்கியக்குழுச் செயலாளர்) தலைமையுரை - திரு.கநீலகண்டன் (சங்கத்தலைவர்) அஞ்சலி உரைகள்
* மாண்புமிகு நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் (உயர்நீதிமன்ற நீதியரசர்) * மாணர்புமிகு ஆளுநர் அலவி மெளலானா * மாணர்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் அவிநாயகமூர்த்தி * மாண்புமிகு திருபிபி.தேவராஜ் (முன்னைநாள் அமைச்சர்) * பேராசிரியர் சோ.சந்திரசேகரம் (சங்கத் துணைக்காப்பாளர்) * திரு.ஆ.சிவநேசச்செல்வன் (பிரதம ஆசிரியர் - தினக்குரல்) * திருசெநடராஜா பிரதம ஆசிரியர் - வீரகேசரி) * திருதிசெந்தில்வேலவர் (பிரதம ஆசிரியர் - தினகரன்) * திருடொமினிக் ஜீவா (மல்லிகை ஆசிரியர்) * செல்வி சற்சொரூபவதி நாதன் (சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்) அஞ்சலிச் செய்திகள்
* மாண்புமிகு அமைச்சர் இம்தியாளப் பாக்கீர் மார்க்கார் * பேராசிரியர் கா.சிவத்தம்பி (சங்கக் காப்பாளர்) நன்றியுரை - திரு.ஆ.இரகுபதி பாலழறீதரன் (பொதுச்செயலாளர்)
ஆகிய நிகழ்வுகள் இடம் பெற்றன.
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) cvá5ú 6
 

பாரதி விழா கொழும்புத் தமிழ்ச்சங்கம்,சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 14.09.03 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கத் தலைவர் திரு.க.நீலகண்டன் அவர்கள் தலைமையில் பாரதி விழா இடம்பெற்றது. இந்நிகழ்வில் மங்கல விளக்கேற்றல்
தமிழ் வாழ்த்து - செல்வி,இந்துஜா கணேசராஜா
வரவேற்புரை - திரு பெவிஜயரத்தினம்
(துணைத் தலைவர் கொழும்புத்தமிழ்ச்சங்கம்)
தலைமையுரை
சிறப்புச் சொற்பொழிவு - பாரதியின் விடுதலைச் சிந்தனைகள்
கலாநிதி துரைமனோகரன் (தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்)
கவியரங்கம் - நற்கவிதை வேண்டும்"
தலைமை - Tஓர்னாஹர் ஷரிபுத்தீன் (துணைத்தலைவர்.
கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
: ck
மாவை வரோதயன் * எஸ்.கே.கலாகரன்
* செல்விசகாஞ்சனா * செல்வி எஸ்.பாமினி
கவிதைகள் மொழிந்தோர்
* செங்கதிரோன் * கசிவகுமார் * இரகுபதிபாலழறிதரன் சோக்கல்லோ சண்முகம் குழுவினரின் வில்லுப்பாட்டு "கவிராஜன் கதை" நன்றியுரை - திருத கோபாலகிருஷ்ணன் (இலக்கியச்
செயலாளர்)
ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
பக்தம் 7
22வது மாதாந்த இசை நிகழ்ச்சி
25.09.2003 வியாழக்கிழமை பி.ப. 6 மணிக்குக் கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 6
டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் பிரபல தென்னிந்தியப் பாடகி கானசரஸ்வதி பட்டம்மாள் அவர்களின் பேத்தி காயத்திரி சுந்தரராமன் அவர்களின் பாட்டுக்கச்சேரி இடம் பெற்றது. அணி செய்
கலைஞர்களாக
திரு.S.திவாகரன் வயலின் திரு.V.ஜம்புநாதன் - மிருதங்கம் திர.P.பிரம்மநாயகம் - கஞ்சிரா திரு.மட்ராஸ் கஜன் - மோர்சிங்
ஆகியோர் பங்குபற்றினர். இக்கச்சேரி நிகழ்த்திய திருமதி க்ாயத்திரி
சுந்தரராமன் அவர்கள் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் செல்வி சற் சொரூபவதி நாதன் அவர்களால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.
சுகாதாரக் கருத்தரங்கு
கொழும்புத் தமிழ்ச்சங்கச் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 28.09.2003 ஞாயிற்றுக்கிமை காலை 9.30 மணிக்குத் தமிழ்ச்சங்கப் பொதுச்செயலாளர் தி.ஆ.இரகுபதி பாலழறீதரன் அவர்கள் தலைமையில் 'ஆரோக்கியத்தில் உணவின் பங்கு' என்ற பொருளில் சுகாதாரக் கருத்தரங்கு இடம் பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் வாழ்த்து தலைமை உரை - திரு.க.நீலகண்டன்
(தலைவர். கொழும்புத் தமிழ்ச்சங்கம்) கலந்துரையாடலின் நோக்கம் திரு.த.சிவஞானரஞ்சன்
(கல்விக்குழுச் செயலாளர், கொ.த.ச.) உணவு குறைந்தாலும் கூடினாலும் நோய் தரும்
Dr.முரளி வல்லிபுரநாதன்
(சுகாதார அமைச்சு திட்டமிடல்
உதவிப்பணிப்பாளர்) "உணவும் தொற்றுநோய்களும்"
(Dr.M.(Suitab65/Tulabóir)
(வைத்திய அதிகாரி, கல்விப்பணியகம்
சுகாதார அமைச்சு) உணவுப் பழக்கவழக்கம் திரு.கா.வைத்தீஸ்வரன்
(உளவள துணையாளர்) குறைந்த செலவில் நிறை உணவு (செய்முறை விளக்கமும் - கலந்துரையாடலும்)
திருமதிTவிநாயகமூர்த்தி
(உப அதிபர், தாதிகள் பயிற்சிக்கல்லூரி,
கலந்துரையாடல், நிறைவுரை, ஆகிய நிகழ்வுகள் இடம் பெற்றதோடு இந்நிகழ்வில் பங்குபற்றியோருக்கு நிறை உணவும் வழங்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) பக்தம் 8

சொற்
திகதி விடயம் நிகழ்த்தியவர்
O3.09.2003 'சிலப்பதிகாரத்தில் விச் s
(220) வேட்டுவவரி" புராணவததகா மு.தயாகராசா
0.09.2003 இலக்கியக் தோப்பில் முகம்மது மீரான்
(221) கலந்துரையாடல் (தமிழ்நாடு)
7.09.2003 சிலப்பதிகாரத்தில்
(222) வேட்டுவவரி (தொடர்ச்சி)|புராணவித்தகர் மு.தியாகராசா
24.09.2003 சிலப்பதிகாரத்தில் P.
(223) புறஞ்சேரியிருத்தல் புராணவித்தகர் மு.தியாகராசா
ᏧᏏfᎢ602gᏏ
நால்நயம் காணர்போம்.
05.05.2000இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30மணிக்கு நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் இலங்கை எழுத்தாளர்களது நூல்கள் நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி நூலின் பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
12.09.2003 சத்தியதரிசனம் சி.சிவசரவணபவன் எஸ்.ஜே.
(115) (சிறுகதைத் (சிற்பி) ஜெயக்குமார்
தொகுதி)
9.09.2003 ஒரு தந்தையின் அன்புமணி தா.சண்முக (116) கதை (நாவல்) இரா.நாகலிங்கம் நாதன்
(சோக்கல்லோ)
26.09.2003 வேள்விநெருப்பு வேபஞ்சாட்சரம் LDK 60D6).
af.56), 69s dif) (117) (சிறுகதைத் ஞசாடசர வரோதயன்
தொகுதி)
U55ú 9
சங்கப்பலகை தயாரிப்பு : சி.சரவணபவன் (ஆட்சிக்குழு உறுப்பினர்)
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 7
பிரபல தமிழக நாவலாசிரியர் தோப்பில் முகம்மது மீரான் அவர்களுக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் அளித்த வரவேற்பின் போது வாசித்தளிக்கப்பட்ட வாழ்த்துப்பா (10.09.2003)
ഖ്LI
பெருமை தமிழுக்குப் பேர்பெறுநற் காதைத் திருதோப்பில் மீரான்கோ தம்மால் - அருமை எழுதுகின்ற அத்தனையும் ஆழிவெண் முத்தாம் முழுவுலகும் போற்றும் படி,
Efnaf Saffu'LT சீர்பெறும் இலங்கைத் திருநாட் டின்தலைப் பேர்பெறு நகரமாம் கொழும்பினிற் செந்தமிழ் ஓங்கி வளர உறுதுணை முதன்மை தாங்கிடு கொழும்புத் தமிழ்ச்சங் கத்தார் தாய்த்தமிழ் நாட்டின் தவப்புதல் வன்னெனும் ஒய்விலா தூறும் ஊற்றெனும் மதியான் மடையொடித் தோடும் புனலெனத் தமிழில் கடலோரக் கிராமக் கதையொடு துறைமுகம் கூணன் தோப்பு சாய்வுநாற் காலி யென் நானிலம் போற்றும் நாவல்கள் செய்தோன் நாவலா சிரியன் நற்றமிழ்ச் சான்றோனர் காவலன் தமிழின் கோனிஎன வானோன் தோப்பில் முகமது மீரான் தமக்கு மூப்பிலாத் தமிழின் மரபுபேணி வாகாய் ஈழமணி மிதித்த இன்பப் பெருக்கால் வாழியெண் றோதும் வாய்ப்பினைப் பெற்றே சங்கத் திருப்பதித் தலமழைத் துள்ளம் பொங்குசெந் தமிழின் புகழ்மொழி பகர்ந்து நற்றமிழ் அறிஞர் நல்லுரை புகல பொற்றுல்கில் போர்த்தி புகழ்க்கவி பாடி நீண்ட நாள் வாழ்வும் நிகரிலாப் புகழும் பூண்டிட நெஞ்சம் பூரிக்க வாழ்த்தினோம் வாழிய வாழிய வென்றே.
‘ஓலை’ - 21 இச்ரவம்.டிசம்பர்2003) Ušзф 10

'Lണ് ബ്ള്യു
தமிழகத் தோடே தமிழெமைச் சேர்த்தது தீந்தமிழின் அமுதமாய் நீபல ஆக்கினை நாமவை ஆதரித்தோம் இமைவழி யாம்நம் இருபுறத் தாருற வேற்றமுற
அமைந்ததாம் நின்வரவும்வர வேற்றோம் அகமகிழ்ந்தே
கவியாக்கம் : ஜின்னாஹ் ஷரிபுத்தீன் துணைத் தலைவர் (கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
செல்வி சற்சொரூபவதி நாதன்
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரும், இந்நாள் ஆட்சிக்குழு உறுப்பினருமான செல்வி. சற்சொரூபவதிநாதன் அவர்கள், 12.10.2003 ஞாயிறு கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை தமிழ் ஊடக6úlu 16UT61Isf S?6ðisÚlu ljó56ör (Sri Lanka Tamil Media Alliance) விருது வழங்கும் விழா -2003 இல் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கான தேசியரீதியிலான விருதினைப் பெற்றார். சமூகத்தை வழிநடத்தும் சக்தி மிகுந்தவர்களான ஊடகவியலாளர்களில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை, இலத்திரனியல் துறையில் சிரமமான காலப்பகுதிகளிலும் துணிவுடன் செயலாற்றிப் புகழ்சேர்த்த தேசியரீதியில் விருதுபெற்ற ஐந்து ஊடகவியலாளர்களில் ஒருவராக செல்வி. சற்சொரூபவதி நாதன் அவர். களை அடையாளம் கண்டு இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இவ்விருதினை இவருக்கு வழங்கியுள்ளது. இவ்விரு. தினைப் பெற்றுத் தனக்கு மட்டுமல்லாமல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கும் பெருமை சேர்த்துள்ள செல்வி சற்சொரூபவதி நாதன் அவர்களை 'ஒலை பாராட்டி மகிழ்கிறது.
U63d 11 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 8
வீங்கு சுபானு வருஷம் விளம்புமாடி ஓங்கு துவாதசி பூர்வபக்கம் - பாங்குறவே சங்கம் வளர்த்த சிவகுருநாதனவர் துங்கவிறை சேர்ந்தநன்னாள்.
வெண்பா முத்தமிழ் வாழ்த்திடும் முத்தசிர்ப் பத்திரிகை வித்தகன் சென்றடைந்தான் விண்ணுலகில் - சித்தமதில் நாளும் சிவகுருநாதன்றன் நற்பணிகள் வாழுமே எம்மனத்தில் நின்று.
கட்டளைக்கலித்துறை சங்கம் வளர்த்தாய் தமிழும் வளர்த்தாய் சிவகுருவாய் பொங்கும் தமிழிற் புகழும் தினகரன்நாதனுமாய் எங்கும் பரவ எழுத்தில் திகழ்ந்தனை எல்லவரும் கங்குல் படியும் கதிரவன் என்றிடு கீர்த்திபெற்றே.
பெற்றநற்கீர்த்தி பெருக விருதுகள் போற்றிவரச் சுற்றமும் நண்பரும் சூழ நகைச்சுவைச் சொல்வளத்தாற் கற்ற கலைகள் கலகல வென்றிடும் கீதமாக நற்றமிழ்ப் பேச்சும் நயம்படக் கேட்டது நாட்டினிலே,
நாட்டினிற் சட்டம் நயந்து படித்தனை நாளிதழில் திட்டிய பத்திகள் தீந்தமிழ் முத்தாய்த் திகழ்ந்தனவே கூட்டிய சங்கங்கள் குன்றின் விளக்காய் ஜொலித்திடநீ காட்டும் வழியிற் கலங்கரைத் தீபமாய்க் கான்றனவே.
கான்ற ஒளியினிற் காரிருள் நீங்கக் கலைவளர ஈன்றநற் தாயென இன்முகம் காட்டி இனிதுவந்தாய்
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) U55á 12
 
 

ஆன்ற அறிவு அனுபவம் ஆளநின் ஆளுமையில் மூன்று தசாப்தம் முனைப்பாய்த் தினகரன் மூத்ததுவே.
மூத்தவன் நீயே முனைவனும் நீயே முழுநிலவிற் பூத்தன தாரகை போலப் பிறபல பத்திரிகை காத்திடும் ஊடக சங்கம் கவினுறக் கூட்டிநின்று ஏத்திடும் வாறு எழுத்திலும் சாதனை ஈட்டினையே.
ஈட்டும் புகழில் இசைந்திடு சட்ட இனியதுறை
பாட்டும் பயனும் பிணைந்திடு வாறாய்ப் பரிமளிக்க ஏட்டில் விரிவுரை என்றும் தொழிலாய் எடுத்தியம்ப நாட்டினிற் சட்டம் நயந்தனர் மாணவர் நாவினிலே,
நாவில் அருளும் நயந்த தமிழில் நகைச்சுவையும் பாவில் இனிமை பலரும் வியக்கப் பகர்ந்திடுவாய் காவில் குயிலின் குரலெனக் கானமும் கேட்டிடும்
கோவிற் சிவனார் திருமுறை ஒதிடும் காரிகையே.
காரிருள் வண்ணக் ககனத் தொளிதரு கிறெனவே ஆரிவர் என்றே அறைந்திடும் வெண்ணிறழகுசெய்யப் பாரில் கொழும்புத் தெருவெலாம் நடந்து பவனிவந்த சீரியநாதன் சிவகுரு வென்றுநாம் செப்புவமே.
செப்பிடும் சங்கம் தழைக்கத் தமிழும் செழுமைபெற ஒப்பில் சமயங்கள் ஒது நெறியில் ஒழுகிறின்றே இப்பிறப் பென்ப தொழிந்திடு நாளிலும் ஏற்றபணி தப்பில் வழியினிற் செய்தாய் சிவகுருநாதனாரே.
நாதனும் நீயே நவின்ற இரத்தினநாதனுமாய்ப் பேத மிதில் லெனவே பெருமகன் சங்கரியும் சாதலுரையினிற் சாற்றிய வாறு சகத்தினிலே சாதனை செய்தாய் நினைவிலெம் அஞ்சலி சங்கரர்க்கே.
பாவாக்கம் : பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் 0 13.09.2003 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற மறைந்த கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் கலாசூரி இசிவகுருநாதன் அவர்களின் நிழற்படத்திறப்பு விழா அஞ்சலிக்கூட்டத்தில் படிக்கப்பெற்றது.
U63d 13 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 9
முதன் முதலாக 1993ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாரதியாரின் நூற்றிப் பதினொராவது பிறந்த தினத்தன்று கவிராஜன் கதை என்ற தலைப்பிலான வில்லிசை மூலம் அறிமுகமான சோக்கல்லோ சணிமுகம் வில்லடிப் பாட்டுக் குழுவினர் கரகம், காவடி, பொய்க்கால்குதிரையாட்டம் பாம்பு நடனம் மயில் நடனம், குறத்தி
நடனம் போன்ற பாரம்பரியக் கலைவடிவங்களையும்
அருகிவிடாது பேணி வளர்த்துப் பாதுகாத்து வருபவர்கள்.
田afJT阻5位
(56O),
சோக் கல்லோ சண்முகம் குழுவின 'கவிராஜன் கதை' என்ற வில்லடிப் ாட்டு நிகழ்ச்சி 149.2003 ஞாயிறு இரவு 15 - 9.15 மணி வரை கொழும்பு தமிழ் சங்கத்தில் பாரதி விழாவையொட்டி நடைபெற்றது. எட்டயபுரத்தில் பிறந்த பாரதியின் வரலாறை ஒரு மணித்தியாலத்திற்குள் சொல்லி முடித்த வில்லுப்பாட்டு குழுவினரின் திறமையைப் பாராட்ட வேண்டும். 39 ஆண்டுகளே வாழ்ந்த பாரதியின் கதையை 'கவிராஜன் கதை' என்று மகுடம் இட்டு 60 நிமிடங்களிற்குள் சொல்லி முடித்தார்கள். பாரதியினுடைய அருமையான பாடல்களையும், மிகச்சிறந்த வாத்திய கலைஞர்களுடைய ஒத்துழைப்போடு அருமையாகத் தந்த பாடகர்களை வாழ்த்தாமல் இருக்க முடியாது. இந்த வில்லடிப்பாட்டுக் குழுவில் 4 பெண்களும் சேர்ந்து கதையை மிக லாவகமாக நகர்த்திச் சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. பாரதியினுடைய துன்பங்கள், துயரங்கள், அவர் சமுதாய சீர்திருத்தங்களுக்கு சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் வில்லிசையிலே தரப்பட்டது. சோக் கல்லோ சண்முகம் வில்லடிப்பாட்டு குழுவினர் கவிராஜன் கதையை கடந்த 10 ஆண்டுகளாக வடக்கு மாகாணம், மலையகம், கொழும்பு என இலங்கையின் பல பாகங்களில் நிகழ்த்திக் காட்டி இருக்கின்றார்கள். குழுவின் தலைவராக சோக்கல்லோ
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) U650 14
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சண்முகம் அவர்களும் மற்றும் திருமதி.சுலோசனா பாலசுப்பிரமணியம், ஜெயந்தி அப்புக்குட்டி, மணிமேகலை இராமநாதன், இளம் கலைஞர் துர்க்காயினி பாலசுப்பிரமணியம், கலாபூசணம் சிதம்பரம், நவகம்புர கணேஸ், கந்தப்பு சிவராஜா, R.பிரம்மநாயகம், K.சிவபாலரட்னம் ஆகிய கலைஞர்கள் பங்கு பற்றினார்கள்.
கவிராஜன் கதையுடன் சக்தியின் மகிமை, கண்மணியாள் காதை, பகவான் இராமகிருஸ்ணர், சுவாமி விபுலானந்தர், தமிழ்க் கிழவி. கம்பன் என்றோர் மானுடன், இராமலிங்க வள்ளலார், பாரதிதாஸன், காரைக்கால் அம்மையார் ஆகியவை இவர்கள் சொல்லிவரும் கதைகள் ஆகும். தமிழ் மக்களுடைய பாரம்பரியக் கலையான வில்லிசையை முன்னெடுத்துச் செல்வதும் வில்லிசையிலே புதுமையைப் புகுத்துவதும் எமது நோக்கமென்று சோக்கல்லோ சண்முகம் அவர்கள் என்னிடம் தெரிவித்தார்.
இலங்கையின் வில்லிசையின் பிதாமகன் கிழக்கிலங்கையைச் சேர்ந்த மாஸ்ரர் சிவலிங்கம் ஆவார். மற்றும் திருப்பூங்குடி ஆறுமுகம், லடீஸ் வீரமணி. வில்லிசை வேந்தன் சின்னமணி, பூரீதேவி வில்லிசைக்குழு, உடப்பு சோமாஸ்கந்தர், காயத்திரி அம்மா ராஜம் புஸ்பவனம், ஆகியோரையும் கலைஞர் சண்முகம் எமக்கு நினைவுபடுத்தினார். இந்த வில்லிசைக் குழுவினர் பல்வேறு சிறப்புக்களைப் பெற வேண்டுமென்று நாமும் வாழ்த்துகின்றோம்.
வெட்டிரும்பு
தமிழ் அறிஞர்களுக்கு அஞ்சலி
அண்மையில் மறைந்த பிரம்மறl வீரமணி ஐயர், கலைப் பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை, உடப்பு பெரி.சோமஸ்கந்தர், க.தியாகராஜா (மட்டக்களப்பு - வடகிழக்கு மாகாண கல்வி விளையாட்டுத் துறை அமைச்சின் முன்னாள் செயலாளர்), பேராசிரியர் சமுத்துலிங்கம், பேராசிரியர் அருட்பிரகாசம், எழுத்தாளர் பஞ்சாட்சர சர்மா (யாழ்ப்பாணம்), கவிஞர் அன்பு முகையதின் (கல்முனை), அன்ரனி டேவிட் இராசையா ஆகியோருக்கு 19.10.2003 அன்று நடைபெற்ற சங்க ஆட்சிக்குழுக் கூட்டத்தில் இருநிமிட மெளனாஞ்சலி செலுத்தப்பட்டது.
Ué9ú 15 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 10
கலாபூஷணம்.ஏ.இக்பால்
அல்ஹாஜ் ஏ.ஸி.எஸ்.ஹமீத் அவர்கள் வெளிநாட்டமைச்சராக இருந்த காலத்தில் உலகைச் சுற்றி எந்நேரமும் ஒடியாடிக் கொண்டேயிருந்தார். 1987களில் ஒருநாள் தர்கா நகர் தபாற் கந்தோரிலிருந்து ஒரு பீயோன் காலை பத்து மணியளவில் அவசரமாக எனது வீடு வந்தார். "வெளிநாட்டமைச்சர் அவர்கள் ஏ.இக்பால், ஹிபாயாமன்ஸில் தபாற்கந்தோரிலிருந்துதுரமா? எனக் கேட்டார். இல்லை அண்மையில்தான் உண்டு என்றதும், இன்று பிற்பகல் 5 மணிக்கு வெளிநாட்ட மைச்சுக்கு உடனடியாக வந்து அமைச்சரைச் சந்திக்குமாறு சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார்" எனக் கூறிச் சென்றார்.
நானும் அழுத்கமயிலிருந்து பி.ப. 2 மணிக்கு கொழும்பு பஸ்ஸில் ஏறினேன். சொன்னபடி பி.ப. 5 மணிக்கு கோட்டையிலிருக்கும் வெளிநாட்டமைச்சின் வாசலுக்குச் சென்றுவிட்டேன். கொடூரமான யுத்தச் சூழல் காலமது. பட்டாளத்தின் காவல் கெடுபிடி கடுமையாகவிருந்தது. வாசலருகில் கலைவாதிகலிலும் நின்றார். வாசலில் நின்ற காவலாளியிடம் விஷயத்தைச் சொன்னோம். கையிலிருந்த குறிப்பொன்றைப் பார்த்து எங்களிருவரதும் பெயர்களைக் கூறி, அடையாள அட்டையைப் பார்த்து உள்ளே செல்லுமாறு வேண்டினார். உள்ளே சென்றதும் குளிரூட்டப்பட்ட காத்திருக்கும் அறைக்கு எங்களை ஒருவர் கூட்டிச் சென்றார். அங்கே, மரமுந்திரிகைப் பருப்பு, வெளிநாட்டுபிஸ்கட், திராட்சைப்பழமெல்லாம் தந்து உபசரித்தனர். இருபத்தி நான்கு மணித்தியாலமும் திறந்திருக்கும் அமைச்சு அது. உலகில் இருபத்தி நான்கு மணித்தியாலமும் எங்கேயோ பகலாக இருக்கும் நாட்டின் தொடர்பு இந்த அமைச்சுக்குண்டு. பிற்பகல் 5.30 க்கு அமைச்சர் வந்தார். இரண்டொரு. வர் உள்ளே சென்று வந்தனர். வெளிநாட்டவர்களும் அமைச்சரைச் சந்தித்தனர். அவரது தொகுதியிலிருந்து வந்தவர்களை ஆறுதலாகச் சந்திப்பதாகக் கூறி. வேறொரு அறைக்கு அனுப்பினார்கள். அதன்பின், இரவு 7 மணியளவில் எங்கள்ை அழைத்தார்.
குதுகலமாகக் காட்சி தந்த அமைச்சர், எங்களைப் பற்றி விசாரணை செய்தார். பின், "நாங்கள் ஒரு தமிழ்ச் சஞ்சிகை 'ஆனந்த விகடன்" அளவு வெளியிட வேண்டும். அதற்குரிய யோசனையைக் கேட்பதற்காகவே
é é
ஓலை" - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) (Uá9ú 16
 
 

உங்களை அழைத்தேன்" என்றார். மாதாந்தச் சஞ்சிகை, முன்கூட்டியே அடுத்தடுத்த மாதங்களுக்கான ஆயத்தம், மாதச்சஞ்சிகைக்கான சுடச் சுட ச் செய்திகள், ஆலோசனை பெற உயர் சிந்தனையாளர்கள், செயற்படும் இடம், அச்சியந்திரசாலைத் தொடர்பு இவற்றையெல்லாம் பற்றி நானும் கலிலும் அளந்து கொட்டினோம்.
செலவு, விற்பனை பற்றிய யோசனையை இறுதியாகக் கூறியபோது, திடமான பதிலை அமைச்சர் தந்தார். "சஞ்சிகை கனமாகத்தான் வரும். இஸ்லாம். தமிழ், தேசியம், இலக்கியம், உலகத் தொடர்பு, மனிதத்துவம் சார்ந்ததுதான் இந்தச் சஞ்சிகை. எவ்வளவு செலவானலும், அதைச் செய்ய முடியும். ஆனால், மக்களுக்கு ஒரு ஐந்து பத்து ரூபாவுக்கே கொடுக்க வேண்டும்" என்பதே அவர் பதிலாக இருந்தது. "காரியாலயம் அமைத்துத் தருவேன். அதன்பின், தேவைகளை நீங்கள்தான் கூறுவீர்கள்" என்று அதிகம் கதைத்து அளந்து பின், மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் என்ற முடிவுடன் கலைந்தோம்.
ஒருவாரம் கழிந்த பின், மீண்டும் அமைச்சர் ஹமீத் எங்களை அழைத்தார். இருவரும் சென்றோம். அதே வரவேற்பு, அதே கதைகள். அற்புதமாகச் சஞ்சிகையை எப்படி அமைப்பது? பற்றிப் பேசினார். நாங்களும் கேட்டுக் கொண்டிருந்தோம். மீண்டும் நான் அறிவிப்பேன். அதன்பின், எல்லா ஒழுங்குகளும் நடைபெறும், என்றதும் வந்த வழியே திரும்பினோம்.
இப்பொழுது அமைச்சர் ஹமீத் நாட்டிலில்லை. மாதங்கள் இரண்டு பறந்தன. அமைச்சர் இலங்கைக்கு வந்துவிட்டார். சந்திக்கும்படி அழைப்பு வந்தது. சந்திப்பு பிற்பகல் இரவின் முற்பகுதியாக இருந்தது. அமைச்சுக்குச் சென்றோம். அதே கதைகள், மாதச் சஞ்சிகையின் அழகிய அமைப்பு, அதன் பிரபல்யம், மக்கள் மத்தியில் அதற்குரிய மதிப்பு, உலக உயர்வுடன் அது வெளிவரும் என்றெல்லாம் மிகைப்படுத்திக் கூறினார். கேட்டுக் கொண்டிருந்த நான், கதையை வளரவிட்டால் இரவில் பயணம் சென்று கஷ்டப்பட வேண்டும் என்பதால் உடனே குறுக்கிட்டேன். "நீங்கள் கூறுவது போல் அபாரமாக மாதச் சஞ்சிகை வெளிவரவேண்டும். முதலில் காரியாலயமைத்துப் பத்திரிகைக்கு ஒரு பெயரும் சூட்டி, விளம்பரம் செய்வதற்காக எங்களை அழைத்த பின், நிஜமாகவே பத்திரிகை வேலையைத் தொடர வருவோம். அதுவரை நான் இப்பக்கமே வரமாட்டேன்" என்று உறுதியாகக் கூறிவிட்டேன். கதை முடிந்தது. திரும்பிவிட்டேன். அதன்பின்தான், எப்படி இவருக்கு எங்கள் பெயர் தெரிந்தது? என்பதை அறிய முற்பட்டேன்.
அபூதாலிப் அப்துல் லத்திப் பத்திரிகையாளர், படைப்பாளர், புத்திஜீவி சோவியத் தூதுவராலயத்தில் முதல் செயலாளரின் பத்திரிகை ஆலோசகர்
Ué só 17 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 11
இவர், ஏ.ஸி.எஸ்.ஹமீத்தின் ஆங்கில ஆசிரியர். நண்பர். அரசியல் சகா.
அமைச்சரின் சகல அறிக்கைகளையும் தயாரித்துக் கொடுப்பவர். ஆலோ
சனை கூறுபவர். இவர்தான் எங்களை அறிமுகம் செய்திருக்கிறார்.
வெளிநாட்டமைச்சர் ஏ.ஸி.எஸ்.ஹமீத் உலகம் சுற்றும் போது, ஆகாயத்தில்
பறக்கும் வேளை ஏற்படும் யோசனைகளில் ஒன்றுதான் இச்சஞ்சிகை.
ஆகாயக் கோட்டையை நிஜமாகவே அமைக்க அவரெடுத்த முயற்சி ஆகாயக் கோட்டையாகவே முடிந்தது.
உண்மையில் அமைச்சர் ஹமீத் அவர்கள் இலக்கிய ஆர்வம் எழுத்து வன்மையுடையவர். "ஹவுள்ஸ் அன்ட் லோட்டர்ஸ்- ஆந்தைகளும் தாமரை. களும்" எனும் அவரது அற்புத நூல், பதினெட்டு மொழிகளில் பெயர்க்கப்பட்டு உலகளாவியது. அதேபோல், "ஸ்பிறிங்லவ் அன்மேர்ஸி - கருணையிலும் காதலினதும் ஊற்று" எனும் கவிதை நூலும் பிரபல்யமானது. இந்த நூல்களின் பின்னணியில் கூட, அபூதாலிப் அப்துல் லத்தீப் இருக்கின்றார். அமைச்சரைப் பற்றி வந்த அத்தனை கேலிச்சித்திரங்களையும் தொகுத்த "விதேச அமதிதுமா - வெளிநாட்டமைச்சர்" எனும் தொகுப்பும் பிரபல்யமானதே.
வெளிநாட்டமைச்சர் அல்ஹாஜ், கெளரவ கலாநிதிப் பட்டம் பெற்ற ஏ.ஸி.எஸ்.ஹமீத் அவர்கள் அழுத்கம ஸாஹிறாவில்தான் கல்வி கற்றவர். மாத்தளை ஸாஹிறா, கொழும்பு ஸாஹிறாவிலும் கல்வி கற்றிருக்கின்றார் என்பதை பண்ணாமத்துக்கவிராயர் கூறக்கேட்டுள்ளேன். அவர் அக்காலத்தில் எஸ்.எஸ்.ஸி என்னும் சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சையில் தேறியவரா? என்பதில் எனக்குச் சந்தேகம். ஆனால், தேறியவர்தான் என்பது பண்ணாமத்துக் கவிராயர் கூற்று. அவர் ஆசிரியராக இருந்தவர் என்பதும் அனேகர் கருத்து. அது, அவர் ஆரம்பித்த "மாத்தளை வின்சஸ்டர் கொலிஜ்" பிரத்தியேகப் பாடசாலையில், ஆங்கிலம் கற்பித்திருக்கின்றார். அவ்வளவுதான். அவரது ஆங்கில மொழி அறிவுக்கு அபூதாலிப் அப்துல் லத்திபே பிரதான காரண கர்த்தா. அதனால்தான், அப்துல் லத்தீபின் யோசனை. களுக்கு அவர் அதிக மதிப்புக் கொடுத்தார்.
ஜனாதிபதி பிரேமதாஸ் அவர்களின் ஆட்சியில் ஏ.ஸி.எஸ்.ஹமீத் நீதியமைச்சராக இருக்கும் காலம் ஒருநாள், அழுத்கம பொலிஸ் பொறுப்பதி. காரி எனது வீடு வந்து என்னைத் தேடியிருக்கின்றார். வீட்டுக்கு நான் வந்த போது, மனைவி பயத்துடன் இதைக் கூறியதும் உடனே அழுத்கம பொலிஸ் நிலையம் சென்றேன். பொலிஸ் பொறுப்பதிகாரியைச் சந்தித்தபோது, "உங்களுக்கு அகில இலங்கைச் சமாதான நீதவான் நியமனம் கிடைக்கப் போகிறது. அதுபற்றி விசாரித்து அறிக்கை அனுப்ப வேண்டியதால், சந்திக்க வந்தேன். அநேகமாக விசாரித்து அறிந்தும் கொண்டேன். அதை நாளை
‘ஓலை’ - 21 டிச்,நவம்.டிசம்பர்2003) Uésó 18

தயாரித்து அனுப்புவேன்" என்றார். உடனே நான், "அவ்வறிக்கையின் கீழ் குறிப்பிட்ட நபர் இந்நியமனத்தை ஏற்க மறுக்கிறார் என்பதையும் எழுத வேண்டும்" என்றேன். பொறுப்பதிகாரி ஆச்சரியப்பட்டார். "ஏனிந்த முடிவு?" எனவும் கேட்டார். "அரசியல்வாதி ஒருவரின் சிபாரிசுதான் இது. அப்படிштво Тбu. இப்பட்டத்துக்குரியவர் அரசியல் சார்ந்தோராய் இருப்பார். அந்த அடையாளத்தைப் பெற நான் விரும்பவில்லை. இன்னும் காரணங்கள் உண்டு" என முடித்துக் கொண்டேன்.
அபூதாலிப் அப்துல் லத்தீப் எழுத்தாளர்கள் பட்டியல் ஒன்றைக் கொடுத்து, இவர்கள் அனைவருக்கும் அகில இலங்கைச் சமாதான நீதவான் பட்டம் கொடுக்க வேண்டுமென நீதி அமைச்சரான ஏ.ஸி.எஸ்.ஹமீத் அவர்களை வேண்டியிருக்கின்றார். அதன் விளைவுதான் இந்தச் சமாதான நீதவான் விவகாரம்.
தொடரும்
&\NS)
அஞ்சலி
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழுச் செயலாளரும் 'ஒலை மாதாந்த மடலின் ஆசிரியருமான திரு. த.கோபாலகிருஷ்ணன் அவர்களின் தாயார் திருமதி.கனகம்மா தம்பியப்பா அவர்கள் 14.11.2003 அம்பாறை மாவட்டம், பொத்துவிலில் காலமானார். அன்னாருக்கு 'ஒலையின் அஞ்சலிகள். 17.11.2003 அன்று நடைபெற்ற சங்க ஆட்சிக் குழுக் கூட்டத்தில் மெளனாஞ்சலி செலுத்தப்பட்டது.
பக்கம் 19 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 12
சங்கப்Uலகை
பேருரைத் தொடர்
கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகக்குழுவின் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழர்: வாழ்வும் வகிபாகமும் என்ற தலைப்பிலான பேருரைத் தொடரின் எட்டாவது நிகழ்வு04.10.03 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.க.நீலகண்டன் அவர்கள் தலைமையில் குமாரசுவாமிவிநோதன் கருத்தரங்கக் கூடத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான திரு.த. சிவராம் அவர்கள் மட்டக்களப்பு வரலாறு (மட்டக்களப்பு வரலாற்றைக் கற்பதற்கான மூலங்கள்) என்ற தலைப்பில் பேருரை ஆற்றினார்.
தமிழ் உலகு வெளியீடு கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகக்குழுவின் ஏற்பாட்டில் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி திருமதி. அம்மன்கிளி முருகதாஸ் அவர்களை ஆசிரியராகவும், திரு.க.குமரன் அவர்களை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு. ஈழத்துத் தமிழ்ப்புலமையை மையமாகக் கொண்டு தமிழ் கூறும் நல்லுலகின் புலமைப் பெறுபேறுகளை ஒருங்கிணைக்கும் ஆய்விதழாக எமது சங்கம் வெளியிடும் தமிழ் உலகின் முதலாவது இதழ் வெளியீட்டு நிகழ்வு 11.10.2003 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குக் கொழும்புத்
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) பக்தம் 20
 
 
 

தமிழ்ச்சங்கத் தலைவர் க.நீலகண்டன் அவர்கள் தலைமையில்குமாரசுவாமி விநோதன் கருத்தரங்கக் கூடத்தில் இடம் பெற்றது. வெளியீட்டுரையை பேராசிரியர் கா.சிவத்தம்பி நிகழ்த்தினார். இதழாசிரியர் கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் அறிமுக உரையை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் கலாநிதி செ.யோகராசா அவர்கள் "ஈழத்துத் தமிழியல் சார் தமிழ் ஆய்விதழ்கள் - ஒரு கண்ணோட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மாதாந்த இசை நிகழ்ச்சி கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் மாதாந்த இசை நிகழ்வின் 23வது நிகழ்வு 25.10.2003 சனிக்கிழமை பி.ப.6.00 மணிக்கு சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பின்வருவோர் பங்குபற்றினர்.
திரு.எஸ்.சம்பத் வீணை திரு.ஏ.ரகுநாதன் - மிருதங்கம் திரு.ஏ.ஜிசுவாமிநாத சர்மா - கஞ்சிரா
ஒலை 18வது இதழ் (யூன் 2003) 25.10.03 அன்று மாலை 6.00 மணிக்கு 18வது மடல் வெளியீட்டுவிழா கொழும்புத்தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம் பெற்றது. தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் புலவர் த.கனகரட்னம் அவர்கள் வெளியிட்டு வைக்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.டபிள்யூ.எஸ்.செந்தில் நாதன் அவர்கள் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
சுகாதாரக் கருத்தரங்கு நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ வழிசமைத்தல், சமூகவிழிப்புணர்ச்சி ஏற்படுத்தல் எனும் பொருளில் சுகாதாரக் கருத்தரங்கு 26.10.003 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்குக் கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.க.நீலகண்டன் அவர்கள் தலைமையில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பின்வரும் நிகழ்வுகள் இடம் பெற்றன.
- தமிழ் வாழ்த்து - கருத்தரங்கின் நோக்கம் -திருதசிவஞானரஞ்சன்-கல்விக் குழுச் செயலாளர்.
a.- Laŭ
- உடல் ஆரோக்கியத்தின் அவசியம் (எளிமையான உணவு - உழைப்பு - புகைத்தல், மதுபோதை தவிர்த்தல் முதலியன"
டாக்டர் எம்.யோகவிநாயகம் - வைத்திய அதிகாரி, சுகாதாரக்
கல்விப் பணியகம், - சுகாதார அமைச்சு
(Uá4ú 21 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 13
சமூகத்துடன் இணைந்து வாழ்தல் - அதன் அவசியம்
திருமதிரிவிநாயகமூர்த்தி - பிரதி அதிபர், தாதிகள் பயிற்சிக் கல்லூரி. யாழ்ப்பாணம்
- ஆரோக்கிய வாழ்வில் ஆத்மீகத்தின் பங்கு
திரு.காவைத்தீஸ்வரன் - உளவள ஆலோசகர் கலந்துரையாடல் மேலும் இந்நிகழ்வில் பங்குபற்றியோர்க்கு எளிமையான ஆரோக்கிய உணவுகளும் வழங்கப்பட்டன.
அறிவோர் ஒன்று கூடல் இலக்கியச் சொற்பொழிவு
திகதி விடயம் நிகழ்த்தியவர்
0.10.2003 அடைக்கலக்காதை ணவிச் j தியாக
(224) (சிலப்பதிகாரம்) AJTIT ததகா மு.தயாகராசா 08. O.2003 கண்ணகி வழிபாட்டுத் மட்டுவில் ஆநடராசா
(225) தெய்வம்
5. O.2003 கண்ணகி வழிபாட்டுத் r.
(226) தெய்வம் (தொடர்ச்சி) மட்டுவில்.ஆ.நடராசா
22. 10.2003 உளம் நிறைந்த இறுதி o
(227) 9 60)Ти тL60 புராணவித்தகர் மு.தியாகராசா
(சிலப்பதிகாரம்)
நால்நயம் காண்போம். 05.05.2000இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30மணிக்கு நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் இலங்கை எழுத்தாளர்களது நூல்கள் நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி நூலின் பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
03.10.2003 ஈழவரின்
(118) இருபத்தியேழு எஸ்.செல்வக்குமார்|எஸ்.எழில் வேந்தன்
சிறுகதைகள் (தொகுப்பாசிரியர்)
சங்கப்பலகை தயாரிப்பு : சி.சரவணபவன் (ஆட்சிக்குழு உறுப்பினர்)
‘ஓலை’ - 21 டிசிரவம்.டிசம்பர்2003) பச்சம் 22
 
 

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கெல்லைக் கிராமமாகிய துறைநீலா வணையைச் சேர்ந்தவரும், காத்தமுத்து ஜோஜ் ஜீவ ரத்தினம் எனும் இயற்பெயர் கொண்டவருமான அமரர் | கவிஞர் ஜீவா ஜீவரத்தினம் நினைவாக இக்கட்டுரை இடம் பெறுகிறது. ஆசிரியராகத் தொழில்புரிந்து அதிப ராக ஒய்வு பெற்ற அமரர். கவிஞர் ஜீவா ஜீவரத்தினம் நாடறிந்த நல்ல தமிழ்க்கவிஞர். கல்முனைப் பிரதேசத்தின் காத்திரமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர். 1956 முதல் இறக்கும்வரை ஈழத்து இலக்கிய உலகில் பிரகாசித்தவர். அவரது ரூபாய் பத்தாயிரம் பரிசு பெற்ற கவிதையொன்றும் இங்கு பிரசுரம் பெறுகிறது.
23.11.395-2010.97
கவிஞர் ஜிவா ஜீவரத்தினத்தின் கவிதைகள் தற்காலக் கவிதைக்கு அணி செய்துள்ளன
- மு.சடாட்சரன்
கிவிஞர் ஜீவா ஜீவரத்தினம் எமது இலக்கிய உலகில் பதித்த சுவடுகள் ஆழமானவை. நேர்த்தியானவை. அறுபதுகளில் பிரகாசித்த கவிஞர்களில் ஜீவா - முக்கியமான ஒருவர். இதனை நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இது யாவரும் அறிந்த சங்கதியே.
கவிஞர் ஜீவாவை ஊன்றிக் கவனிக்கின்ற போது அவர் எந்தப் போக்கிலும் சிக்காது தனக்கென ஒரு நேர்த்தியான இலக்கியப் பாதையை அமைத்துக் கொண்ட மூத்த கவிஞர்களில் ஒருவராக விளங்குகின்றார். ஓர் இலக்கியப் படைப்பாளி தனது ஆக்கங்களினூடாக சமூகத்திற்கு எதையோ சொல்கின்ற போது தன்னையும் யாரென்று இனம் காட்டிக் கொள்கின்றான் என்பதற்கமைய அரிய பல கவிதைகளைத் தந்து தன்னை விளங்க வைத்தவன் ஜீவா.
ஜிவா ஜீவரத்தினம் ஓர் அதீத கற்பனாவாதியாக ஆகாயக் கோட்டை கட்டியவன் அல்லன். எமது மண்ணிலே நடந்து திரிந்தவன். மக்களோடு ஒட்டி உறவாடியவன். மண்ணின் அவலங்களைக் கண்டு மனம் வெதும்பி நொந்தவன். மனக் குமுறல்களைச் செஞ் சொற் கவிதைகளாகப் படைத்தவன். அவற்றை ஒட்டுமொத்தமாகச் சுவைக்கவோ கணிப்பீடு செய்யவோ முடியாதநிலையே தற்போது உள்ளது. வார இதழ்கள், சஞ்சிகைகள், வானொலி என்பவற்றில் வெளி. யாகியவற்றை வைத்துக் கொண்டு யாரையும் ஆய்வு செய்யுமாறு கூறுவதும் பொருத்தமாகாது. ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்பு வெளிவந்த
பக்தம் 23 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 14
"வாழுங்கவிதை" என்னும் ஒரு சிறிய தொகுதியை - அதுவும் யாரிடமும் கைவசமில்லாத ஒரு தொகுதியை நினைவில் கொண்டு கருத்துக் கூறுவதும் சிரம சாத்தியமானதாகும்.
என்றாலும் ஜீவா ஜீவரத்தினம் என்னும் கவிஞனோடு நீண்ட காலம் நெருங்கிப் பழகிய ஒரு நண்பன் என்ற முறையிலே என் மனக் கிடக்கையை இலக்கிய ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ள முனைகிறேன்.
ஈழத்திலக்கியப் படைப்புகளை தமிழ் கூறும் நல்லுலகம் மிகுந்த அக்கறையோடு உன்னிப்பாக அவதானிக்கின்ற காலகட்டம் தற்போது ஆதலால் எமது எழுத்தாளர்களின் பேனை பெறுமதிமிக்க ஒர் ஆயுதமாகும். இவ்விதம் பெறுமதி வாய்ந்த எழுதுகோல் ஒன்று துறைநீலாவணையில் மீளாத்துயில் கொண்டு பல வருடங்கள் கடந்து விட்டன.
புதுக்கவிதை புதிய பரிணாமங்களைப் பெற்றுப் பொலிவோடும் அழகோடும், எளிமையாகவும், இயல்பாகவும், பல்கிப் பெருகிப் பயன் தருகின்ற இக்காலத்திலே, மரபுக் கவிதை உதவாது என்றோ, அல்லது ஏலாது என்றோ தட்டிக்கழிப்பது இலக்கிய வளர்ச்சிக்கு வழிகோல மாட்டாது. இயன்றவர்கள் இயலுமான, வழியிலே கைவரப் பெற்ற துறையிலே அவர்களின் பங்களிப்பை வழங்கட்டும். அவை கலைநயம் மிக்கவையாக - புதியனவாக-தேவையானவையாக இருக்குமானால் நாம் வரவேற்போம். இருகரம் நீட்டி ஏற்றுக் கொள்வோம்.
தமிழ்ப்புலமையும் இலக்கியப் பரிச்சயமும் இல்லாதவர்கள் கவிதை என்று எதையோ எழுதுகிறார்கள். அவை கால வெள்ளத்துக்கும் விமர்சனச் சூறாவளிக்கும் தாக்குப்பிடிக்க மாட்டாது. மக்களின் இதயங்களை வென்று இலக்கிய அந்தஸ்தும் பெற முடியாது. இப்படிக் கையாலாகதவர்களின் கவிதைகளைக் கண்டே பலர் கவிதைகளை வெறுக்கும் மனப்பான்மையுள்ளவர்களாக மாறியிருக்கிறார்கள். அனால் ஜீவா ஜீவரத்தினம் அதற்கு நேர்மாறானவர். மரபை அறி. ந்து அதனை ஏற்றுக் கொண்டு அதன் எல்லைகளுக்கு அப்பாலும் தன் பார்வையைச் செலுத்தி தனித்துவம் மிக்க கவிதைகளைத் தந்தவர் என்பது உண்மை.
இவ்வேளையில் ஜிவா ஜீவரத்தினம் எழுதி இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற 'மானம்' என்னும் பாநாடகம், 'மலையுதிர் மணிகள்" எனும் மலைப்பிரசங்க- வெண்பாக்கள், பல கவியரங்கக் கவிதைகள், தனிக்கவிதைகள் என்பன இன்னும் நூலுருப் பெறாமலே உள்ளன. இன்னும், 'மனக்கண்ணாடி" என்னும் தொடர் கட்டுரைகள் போன்றவையும் அவரை நிலைநாட்டும் படைப்புக்கள் தான். பழகுவதற்கு மிகவும் இனிமையான ஜீவா எல்லோரது அன்புக்கும் பாத்திரமான ஒருவர். ஆங்கிலத்திலும் மிகவும் புலமை வாய்ந்த அக்கவிஞனின் கவிதைகள் காலத்தின் கண்ணாடியாகவே மிளிர்கின்றன என்றால் மிகையில்லை.
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) பக்கம் 24

ஜீவாவின் இறுதிக் காலகட்டத்திலே கவிதை எனது ஆயுதம்' என்று ஒரு கவிதை எழுதியுள்ளார். அதில் ஒரு பகுதி
"கொடுமை என்றால் குமுறியெழும் கொள்கை தானென் வாழ்வாகும். கடுமை எனது தணர்டனைகள் கசையாய் விழுமென் கவிதைஅடி! அடிமை எவர்க்கும் நானல்லேன் அறிவீர்! என்றும் நல்லறிவுக் குடியன்! எவரும் குறைகூறின் கொலையும் புரிவேன் கவிவாளால்!" என்று தன்னைச் சரிவர இனம் காட்டுகின்றார். ஆற்றொழுக்குப் போன்ற இயல்பான சொற்கள், தெளிவான சிந்தனை, ஆழமான கருத்துக்கள் அழகியல் நடை. இவை அனைத்தும் கைவரப் பெற்ற கவிஞன் ஜீவா - ஜீவரத்தினத்தின் கவிதைகள் தற்காலத் தமிழ்க் கவிதைக்கு மிகவும் அணி செய்துள்ளன என்பது உணரப்பட வேண்டிய ஒன்றாகும்.
சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி 1996இல், கல்வி உயர்கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட தமிழ்க்கவிதைப் போட்டியில் முதலாவது பரிசு பெற்ற கவிதை
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்.
-ஜீவா ஜீவரத்தினம்
மேலையடி வானத்தில் குருதி யாறு விசைவிசையாய்ப் பரவுகின்ற அந்தி மாலை; பாலையெனக் காய்ந்திருந்த மூங்கில் ஆற்றின் பட்டுவெளிர் மணற்கரையில் எங்கள் ஐயா காலைநிமிர்த் திட்டபடி, களைப்புத் தீரக் கையிரண்டைத் தலையின்கீழ் வைத்த வாறு ஆலிலைமேற் பாலகனாய் அயர்ந்து தூங்கும் அக்காட்சி, ஐயையோ அவலக் காட்சி! முத்தையா மாஸ்டர்ெங்கள் நெஞ்சை என்றும் முழுமையாய் ஆளுகின்ற உயர்பே ராசான். பத்திரிகைச் செய்திகளைச் சொல்வார்; நாட்டில் பயில்கின்ற செயல்களையும் விரித்துச் சொல்வார்.
பக்கம் 25 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 15
சித்தமுவந் தெம்மூரைச் சிறக்க வைக்கச் சீர்திருத்தப் பணிச்ெய்ய முன்னால் நிற்பார். செத்தைக்குள், குடிசைக்குள் வாழும் நாங்கள் தெய்வம்போல் அன்னாரைச் சிந்தை கொள்வோம்! வெள்ளியிலே 'வீட்டுக்குச் செல்வார். மீண்டும் விரைந்திங்கு ஞாயிற்றுக் கிழமை மீள்வார். சொல்லரிய ஒற்றையடிப் பாதை, ஏதும்
சுகமான பிரயாண வசதி யில்லை!
துள்ளுநடை போடுகின்ற நீரோ டைகள் துவசம்செய் வனவிலங்கு, பாம்பின் சீறல். உள்ளத்தில் திகிலூட்டும்! எனினும், ஐயா ஒர்மித்துச் சென்றிடுவார்; மீள்வார் மீண்டும்! எத்தனையோ ஆசிரியர் இங்கு வந்தார்; இருப்பார்கள் சிலநாட்கள் சடுதி யாகச் சத்தமெது மில்லாமல் சறுகிச் செல்வார் செளகரிய மானபெருங் கல்லூ ரிக்கு! வித்தகராய் வாராத போதும், நாலு விடயமெனும் அறிதற்காய் அங்ச லாய்க்கும் புத்துலகச் சிற்பிகளெம் புதல்வ ரெல்லாம் போய்ப் படிக்க இடமின்றிப் புழுங்கி நோவார்!
“காட்டுக்குள் ஏனப்பா பள்ளிக் கூடம்” கண்கெட்ட அரசாங்கம்! எம்போன் றோர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள நல்ல வித்தியா சாலைகளில் கடமை யாற்ற மாட்டாமல் விரட்டுகின்றார் காட்டுக் குள்ளே! மாட்டுக்குப் பின்னாலே திரியும் பிள்ளை மாகல்வி மானாக வருவ துண்டோ?” இப்படியும் ஆசிரியர் சிலர்சொன் னார்கள்; இதயத்தில் எறிவேலைப் பாய்ச்சி னார்கள்! எப்படியோ செல்வாக்கைப் பிரயோ கித்து இடமாற்றம் பெற்றிவர்கள் போய்விட் டார்கள்! “செப்பரிய குழந்தைகளின் திருமு கத்தில் தெய்வத்தைக் காணுங்கள்” என்று கற்றோர் துப்பரவாய் அதைநெஞ்சில் கொண்டி டாமல் துரசாகப் பிள்ளைகளை இகழ்தல் நன்றோ?
ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) Úő5ú 26

எத்தனையோ ஆசிரியர் வந்தார், போனார், இடைக்கிடையே மூடுவிழா நடந்த துண்டு! சித்தமுவந் தெமதுசிறார் நலனைப் பேணும் தியாகமனம் படைத்ததொரு நல்லா சானை அத்தனே எமக்கனுப்பி வைக்க வேண்டும்! அவனருளால் உயர்வெமக்குக் கிட்ட வேண்டும்! இத்தனைக்கு மிடையினிலே எதிர்பா ராமல் எழுந்தவெடி குண்டுகளால் அகதி யானோம்!
மீளவந்து குடியமர்ந்தோம், மிச்ச சொச்சம் வெந்தழலில் கருகுண்ட காட்சி கண்டோம்! வாழவழி என்ன இனி? என்று சிந்தை வயப்பட்டு நானிருந்த வேளை, ஏதோ ஆளரவம் கேட்டு, விழி நிமிர்ந்து பார்த்தேன்; அருள்வழியும் முகமொன்றை ஆங்கு கண்டேன்! “மூளையை விடவேண்டாம் தம்பி, நான்தான் முத்தையா மாஸ்டர்” என்று முறுவ லித்தார்!
மறுநாளே வகுப்புகளை ஆரம் பித்தார்; மாணவரும் ஒழுங்காக வந்து கற்றார். அறிவாளி முத்தையா மாஸ்டருக்கு ஆங்கிலத்தில் புலமையுண்டு கவிதை யாளன்! வறியவர்தான் என்றாலும் வருடம் ஐந்தாய் வருத்தத்தைப் பாராது சேவை செய்து அரியபெருஞ் சாதனைகள் புரிந்து, மக்கள் அனைவர்க்கும் தெய்வமெனத் திகழுகின்றார்!
:k :k sk
சலசலத்துப் பாய்கின்ற மூங்கில் ஆற்றைச் சட்டென்று நீந்திவந்து, ஐயாவை எனி பலமான தோள்களிலே சுமந்து சென்று படிக்கரையில் இறக்கிவிட்டேன். சொன்னார். “தம்பி, உலகிற்குச் சேவைசெய்யப் பிறந்தோம்; ஆனால், உள்ளத்தால் பொய்யாமல் செய்யும் சேவை நிலையான பயன்சேர்க்கும் அதனால் நானும் நீடிப்பைப் பெற்றுவந்தேன், சேவை செய்வோம்!
ং২১
Uśøó 27 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 16
உதயம்
உயரிய திங்கள் வெளியீடு
கெளரவ ஆசிரியர் திரு.வை.அநவரத விநாயகமூர்த்தி (இணுவை மூர்த்தி)
fழநாட்டில் தமிழ் பேசும் மக்களிடையே. தமிழ்ப் பண்பாடு. கலாசாரம் முதலியவைகளைப் பரப்புவதற்கும் காலத்திற்கேற்ப புதிய கருத்துக்களைக்g கொண்ட இலக்கியங்களைச் சிருஷ்டித்து அமிழ்தினுமினிய தமிழ்மொழிய்ை" வளர்ப்பதற்கும் இலக்கிய சஞ்சிகைகள் குறைவாக இருந்த காலத்தில் அக்குறையை நீக்கி செந்தமிழ் வளர்க்கும் பணிக்காக "உதயம்' என்னும் இலக்கிய சஞ்சிகை உருவாக்கப்பட்டது.
இச்சஞ்சிகை, தமிழனின் தனிப்பெரும்பண்பை, அவனது கலாசாரத்தை, அவனது இளமை மாறா இலக்கியச் செல்வத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டி தமிழ் வாழ வேண்டும் - தமிழன் வாழ வேண்டும் என்ற இலட்சியப்பாதையில் தனது கடமையைச் செய்ய இலக்கிய வானில் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் (ஜய வருஷம் சித்திரை மாதம்) பவனி வரத் தொடங்கியது. 1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இச்சஞ்சிகை மாதந்தோறும் தமிழ் இலக்கிய வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு இலக்கியம், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள். நகைச் சுவைப் பகுதி, பாலர் மன்றம், மாதர் பகுதி முதலிய பல்வேறு அம்சங்களைக் கொண்டு வெளிவந்தது. அத்துடன் இந்தக் காலப்பகுதியில் செந்தமிழ் மணம் கமழும் இரண்டு ஆண்டுமலர்களை தமிழ் மக்களின் கரங்களில் புத்தாண்டின் அன்புப் பரிசாக அளிக்கக்கூடியதாக இருந்தது.
'உதயம், ஈழத்தில் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கியதோடு அமையாது சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டிகளை ஏற்படுத்தி எழுத்தாளர். கள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியைத் தூண்டி விட்டது. உதயத்தின் இலக்கியப் பணியைத் தமிழ் நாட்டு சஞ்சிகைகளும், ஈழத்து சஞ்சிகைகளும் திறம்படப் பாராட்டின. உதாரணத்துக்கு சில பத்திரிகைகளின் அபிப்பிராயங்களைக் கீழே தருகிறோம்.
கல்கி - (சென்னை) --15.0854
சேய் நாடாகிய இலங்கையிலிருந்து வெளியாகும் உதயம் (மாதப்
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) பத்தம் 28
 
 
 

(Uá4ú, 29
Zമ.6
அன்று வி தன் . 11 1. ஸ் ' 11ன் விழிகரைக் தம், k க்க'ல ருமே 1ந் நக்கும். அ + க ஒப்ட்ெடுக் 1. விiள் பலவற்றைப் பு?னங்கள், ஆல்ை இன் 3 y
* : - ܖ- ܀ -- .. ܟ . . . ,'; »፡,፥•.፡ n " /, .” , ,ነ‛ J. ̇ ኣ` ,ሤ ገ ፡ ' { • •ኝነ፡ ሓ ·ነ፡ “` ' ` ነ` ' ,፥ሖt" " ﷽`›፡ ፡ሠ፡ b ,ነ፣; f፡ ዳ»
. . . “. ל") • ܝ ܐ܂ " : ^ 、、: i, 1,9 ,۱) i , , , ') f, Ꮒ, , XXM 3xx}}) , எரு 3f b .آرډو | *,りh ,",功/a J),ሓ
aw - . مه « س ه ۸۷۱ ܀ ܐ ܝ . ܫ )ை பின் வலப்டேலர், ந்கத் து விட்டுப், ய்யபமாக
ந ப.கிம் கட்சியை ந1. து சிக்கி 1, 11 கேரில் பார்க் து
* விட்டு கேலிச் சித்திரமாகத் தீட்டிக்கல்கிருக்கி yi.
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 17
பத்திரிகை) தமிழ் இலக்கிய வளர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டிலிருந்து வருகிறது. வித்துவான் பண்டிதர் கா.பொ.இரத்தினம் எம்.ஏ. பி.ஓ.எல் அளிக்கும் இலக்கிய விருந்தில் வள்ளல் பாரியைப் பற்றிய கட்டுரை சுவைமிகு தமிழில் தீட்டப்பட்டு இலக்கிய மணம் வீசுகிறது. சாஸ்திரப் பகுதியில் கானல்நீரைப்பற்றி ஒரு சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருக்கிறார் அறிஞர் இ.அம்பிகைபாகன்.
விந்தியா (பம்பாய்) - ஜூலை 1954
தமிழ் வருடப்பிறப்பிலிருந்து'உதயம்' வெளிவரத் தொடங்கியுள்ளது. முதல்
இதழில் பூரீ பி.கோதண்டராமன், திரு.கா.பொ.இரத்தினம், பூரீவைஅநவரத
விநாயக மூர்த்தி முதலியோர் நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
வீரகேசரி (கொழும்பு)
இலங்கையில் வெளிவந்த மலர்களில் ஒரு தனி ஸ்தானத்தை உதயம் ஆண்டு மலர் பெறுகின்றது.
சுதந்திரன் (கொழும்பு) - 10.07.1955
"இணுவை மூர்த்தி" அவர்களின் இடையறாத முயற்சியால் வத்தளை என்ற இடத்திலிருந்து, கடந்த ஒராண்டு காலமாக திங்கள் தோறும் உதயமாகி வந்து கொண்டிருக்கும் உதயத்தின் ஆண்டு மலரைப் பார்த்ததும் தமிழர்களின் இதயங்களில் நீங்காத ஒர் இடத்தை "உதயம்' பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை புலப்படுகிறது. கவிதைகளாலும், கவர்ச்சிகரமான சித்திரங்களாலும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் வகையில் சிறப்பாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. உதயம் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற திரு.கே.டானியல் எழுதிய 'காளி சிலை' என்ற சிறு கதையும், இரண்டாவது பரிசு பெற்ற செல்வி.எஸ்.தியாகராசாவின் மலையும் மடுவும்' என்ற சிறுகதையும் முதலாவது ஆண்டு மலரில் இடம் பெற்றிருந்தன. இரண்டாவது ஆண்டு மலரில் முதற் பரிசு பெற்ற எஸ்.சரவணபவனின் (சிற்பி) 'மறுமணம்' என்ற சிறுகதையும் இரண்டாவது பரிசு பெற்ற "கச்சாயில் இரத்தினம்" எழுதிய நரகம்' என்னும் சிறுகதையும் இடம் பெற்றிருந்தன. இந்த சிறுகதைப் போட்டிகள் இணுவில், இயற்றமிழ் ஆசிரியர் பூரி.அ.க. வைத்தியலிங்கபிள்ளை அவர்களின் நினைவாக நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உதயம் சிறுகதைப் போட்டிக்கு பின் வருவோர் மத்தியஸ்தர்களாக விளங்கினார்கள்.
திரு.எஸ்.ரி.சிவநாயகம், ஆசிரியர், சுதந்திரன்' திரு.சில்லையூர் செல்வராசன், உதவி ஆசிரியர், வீரகேசரி . திரு.செ.வேலாயுதபிள்ளை, B.A. (Hons)
திருமதி செளந்தரி இராமசாமி, 'உதயம்' மாதர் பகுதி ஆசிரியை . திரு.இணுவை மூர்த்தி, கெளரவ ஆசிரியர், உதயம்
சஞ்சிகையின் வளர்ச்சி வெறும் சொல்லோவியங்களால் மட்டும் அமைந்து விடுவதில்லை. சிறந்த உயிர்ச்சித்திரங்களும் அதன் வளர்ச்சிக்கு இன்றியமையாத சாதனமாகும். இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்டு
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) UőSaó 30

சிறந்த சித்திரக் கலைஞர்களான சிவஞான சுந்தரத்தையும் (சிவாஜி - சிரித்திரன் சுந்தர்) அம்பிகைபாகனையும் உதயத்தின் இலக்கியப் பணியில் நிர்வாகத்தினர் சேர்த்துக் கொண்டனர். சித்திரக்காரர் சிவாஜி தீட்டிய கேலிச்சித்திரங்கள் (Cartoons) வாசகர்களுடைய சிந்தனைக்கு விருந்தாக அமைந்து அவர்களுடைய பாராட்டுக்களையும் பெற்றன. பிரபல தென்னிந்திய நாடகக் கலைஞர்களான டி.கே.சண்முகம், டி.கே.பகவதி, ஹாஸ்யநடிகர் பிரன்ட் ராமசாமி முதலியோர் கொழும்புக்க வந்திருந்த போது 'சிவாஜியின் அபார திறமையைப் பாராட்டினார்கள்.
"பசும் பொற்தாலி பாவைக்கா! பணமுடிச்சுக்கா", "குதிரையின் வாலும் கோதையின் கூந்தலும்:, "நாகரிகம் போகிற போக்கு" போன்ற தலைப்புக்களில் வெளிவந்த அவரது கேலிச்சித்திரங்கள் வாசகர்களது உள்ளங்களைக் கொள்ளை கொண்டன.
"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" என்ற மெய்க்காதலின் தத்துவத்தை விளக்கும் இந்தக் காட்சியைக் கவிதை, மூலமாக கவிச் சக்கரவர்த்தி கம்பர் இராமயணத்தில் சித்திரித்துக் காண்பித்துள்ளார். மேற்குறித்த இந்த இன்பக் காட்சியினை சித்திரக் கலைஞர் அம்பிகை பாகன் (பாகன்) தத்ரூபமாக வரைந்துள்ள ஒவியம் உதயம் இரண்டாவது ஆண்டு மலரில் அட்டைப்படமாக வெளிவந்து இலக்கிய ரசிகர்களது பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. சித்திரம் தீட்டுவதில் இவருக்குள்ள அபார திறமையை அட்டைப்படமே நன்கு எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வாறு சீரும் சிறப்புமாக வளர்ச்சியடைந்து வந்த இந்தச் சஞ்சிகை, பொருளாதாரக் கஷ்டத்தினால் 1956ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் தொடர்ந்து வெளிவரமுடியாது நின்று விட்டமை பெரிதும் கவலையளிப்பதாகும்.
'உதயம்' இலக்கியத் திங்கள் வெளியீட்டில், வெளிவந்த குறிப்பிடத்தக்க ஆக்கங்கள் பற்றிய விபரங்களைக் கீழே தருகிறோம்.
'உதயம்' இலக்கியத் திங்கள் வெளியீட்டில் வெளிவந்த குறிப்பிடத்தக்க ஆக்கங்களின் விபரங்கள்
இலக்கியம் எழுத்தாளர் பெயர் ஆக்கம் வெளிவந்த இதழ் வித்துவான், பண்டிதர் கா.பொ.
3JgBg560Tib, M.A.B.O.L. 1.இலக்கியவிருந்து
i. கபிலர் 1954- ஏப்ரல் i.இளங்கோஅடிகள் 1954 -மே i. கொங்கு வேளிர் 1955- ஏப்ரல் 2. பட்டினப்பாலை 1956 - ஏப்ரல் வித்துவான் க.கி.நடராஜன்
B.O.L 1. இளங்கோவடிகளும் அவர் ஈந்த
சிலம்பும் 1955 - ஏப்ரல்
Uá6ú 31 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 18
வை.சுப்பிரமணிய சிவம்
வித்துவான் FX.C.நடராசா லஷமி வேலுப்பிள்ளை இணுவை மூர்த்தி
செ.வேலாயுதபிள்ளை
மஹாகவி
முருகையன்
đ6).6)IT.ệgã5j5{BTg56öI (M.A.) 'விடிவெள்ளி
பரமஹம்ஸதாசன்
நாவற் குழியூர் நடராசன் செ.வேலாயுபிள்ளை
சில்லையூர் செல்வராசன்
ஈழத்துச் சோமு அ.ந.கந்தசாமி தேவன் - யாழ்ப்பாணம் கச்சாயில் இரத்தினம்
கூடல் இழைத்துக் கூடப் பெறா காரிகை -
எது இலக்கியம் புதுமைப் பெண் i. அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
ii பொதியமலைத்தலைவன்
வள்ளல் ஆய்
கவிதையின் பயன் என்ன
கவிதை
i யாழோசை
i வள்ளி
iவருவதாகச் சொன்ன கவிஞன் iv செத்துப் பிறந்த சிசு 1 தீபரவட்டும் i மேன்மைதான் மிச்சம் உண்டு
உதய இளங்கன்னி
உதய பஞ்சகம் i விக்கிரகம் சொன்ன விளக்கம் ii புத்த ஞாயிறு பூத்தது
கவிக் கற்பரசி ஊடல்
சிறுகதை
1 அகமும் புறமும் i எல்லாம் தெரிந்தவன் iபூலோக சுவர்க்கம்
கற்புத் தீ
புதுப்புனல்
அமரருலகிலே i நாக தீவு i அணையாத ஜோதி
‘ஓலை’ - 21 டிச்ரவம்.டிசம்பர்2003)
1955- ஜனவரி
1955 - ஜனவரி 1955 -நவம்பர் 2வது ஆண்டு
O6)
1956 ஏப்ரல்
1954- ஏப்ரல்
1955 செப்ரம்பர்
1954-நவம்பர் 1955- ஜனவரி
1955-ஏப்ரல்
1956 - ஏப்ரல்
1955 ஜூலை
1955 -மே
1955-ஏப்ரல்
1956 -ஏப்ரல்
1955- ஏப்ரல்
1956 ஏப்ரல்
1955 -(8up
1956 ஏப்ரல்
1954 -ஏப்ரல்
1954 -gూ6 1954 நவம்பர் 1955 நவம்பர் 1955-நவம்பர்
1956 -ஏப்ரல்
1955 ஜூலை 1955-G9í Gym Jiř
Uású 32

தாழையடி சபாரத்தினம் கிழவனின் கதை 1955-ஏப்ரல் கே.டானியல் காளி சிலை 1955 -ஏப்ரல்
செல்வி.எஸ்.தியாகராசா மலையும் மடுவும் 1955-ஏப்ரல்
நா.வேந்தன் துறவியின் காதலி 1956 -ஏப்ரல்
விஞ்ஞானம்
இ.அம்பிகைபாகன் i கானல் நீர் 1959-ஏப்ரல்
i வானவில் 1954-மே
கட்டுரை
பிகோதண்டராமன் மக்கட் செல்வம் 1954 -மெ
சில்லையூர் செல்வராசன் புரட்சிக்கு வித்து 1954 -றே
i பத்திரிகை உலகத்து பாரதி 1954-செப்ரெம் ஈழத்துச் சோமு i சிறுகதை உலகில் ஒரு பெருந்
தாரகை புதுமைப்பித்தன் 1955 ஜூலை பேராசிரியர் கே.கைலாசபதி பாரதி பரம்பரையினரும் தமிழர்
சமுதாயமும் 1955-ஏப்ரல் பண்டிதர் திரு.பொ. கிருஷ்ணபிள்ளை இல்லார்க்கு இல்லாதன இல்லை 1954-மே
செ.வேலாயுதபிள்ளை i கவிதை என்றால் என்ன 1954-செப்ரம்பர்
iநாணின்மை செய்த நங்கை 1955-ஏப்ரல் வை.சுப்பிரமணியசிவம் நட்பின் பெருமை 1955-ஏப்ரல்
லஷ்மி வேலுப்பிள்ளை மன்னர் பெண் கொளலொக்குமோ 1956-மார்ச் புதுமைப்பிரியை' குழந்தையும் அழகும் 1956-ஏப்ரல் வை.அநவரத விநாயகமூர்த்தி 1 வள்ளுவள் தந்த தமிழ் மறை 1955 -(8up (இணுவை மூர்த்தி) iநற்றமிழ் வல்ல நாவலர் 1955-டிசம்பர்
iசெந்தமிழ் வளர்த்த சின்னதம்பிப்
ണ്ഡബf 1954-செப்ரெம்பர்
ivராவ்பகதுர் சி.வை.தாமோதரம்
பிள்ளை 1955 -ஜனவரி
நாடகம்
அன.கந்தசாமி மனமாற்றம் { 1955 மே
U 1955 ஜூலை
இணுவை மூர்த்தி
பக்கம் 33 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 19
சன்னந் துளை கன்னம் - அதில் பென்னம் பெரு பள்ளம்! இன்னும் பல சின்னம் - உயிர் இல்லை அது திண்ணம்!
புல்லின் இடை புள்ளின் - அதைச் சில்லின் எடை தள்ளின், விள்ளின் மனம் கொள்ளின் துயர் அள்ளும் களி கொல்லும்!
மாங்கா யுரு மண்ணில் -மிகத் தீங்காய் நிகழ் வெண்ணில், தூங்கா விழி வீங்கும்! -மனம் நீங்கா விடர் தேங்கும்!
தூண்டா தடு அண்டை! தீண்டா தெனில் யுத்தம் - ஒளி தூண்டா மணி நித்தம்!
வேண்டாம் இனிச்சனன்டை
வேண்டா மினிச் சண்டை! -அதைத்
* சுற்றுக் களை விட்டு -பொய் மொட்டுக்களை வெட்டு! துட்டுக் களைப் பெற்று - வளம் கொட்டும் படி கட்டு!
அரசும் பகை மன்றும் -பிறர் அணையும் படி நின்றும், உரசும் பழி வென்றும் -வெறி விரசும்படி சென்றும், சரசும், லதா மர்யம் - பகை சரியும் செயல் கொண்டும், சாந்தன், சலிம், பண்டா -கரம் கோர்ப்பின் அழிவுண்டா?
- ஏறாவூர் தாஹிர்
* 6ம், 7ம் சுற்று சமாதானப் பேச்சுவார்த்தைகள்
6 6.
ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003)
 

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 98வது வெளியீடான வேப்பமரம் சிறுகதைத் தொகுதி யின் நூலாசிரியர் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினரும் கவிஞருமாகிய திரு.சத்திய குமாரன் (மாவை வரோதயன்) அவர்களாவர். இந்நூல் வெளியீடு 19.11.2002 அன்று கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஸன் விரிவுரை மணிடபத்தில் மூத்த எழுத்தாளர் வேல் அமுதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
வேப்பமரம் - ஓர் அறிமுகம்
- கமலினி செல்வராசன்
தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிட்டுள்ள மாவை வரோதயனின் வேப்பமரம்' என்ற சிறுகதைத் தொகுதியில் பன்னிரண்டு கதைகள் இடம் பெற்றுள்ளன. அவை, எண்பதுகளின் பின் நம் நாட்டில் இடம்பெற்ற உள்ளுர்ப் போரி. னால் வடக்கு - கிழக்கு மலையகப் பிரதேசங்களிலும், புலம்பெயர்ந்தவர்களிடமும் ஏற்படும் சூழல் மற்றும் மனப்பான்மைகளைப் பிரதிபலிப்பனவாக உள்ளன.
பன்னிரண்டு கதைகளுள் ஒன்று வேப்பமரம்'. இந்தியா - இலங்கை போன்ற தென்ஆசியா நாடுகளில் இயற்கையாக வளர்வதாக - ஒவ்வொரு பகுதியும் மிகமிக உபயோகமானதாகவும் இருக்கும் வேப்பமரத்தின் காப்புரிமையை மேல்நாட்டவர்கள் தமது உரிமையாக்கியதும், இந்தியா பின்பு போராடி வாதாடி அந்தக் காப்புரிமையைப் பெற்றுக் கொண்டதும் கூட சுவையான தகவல்,
வேப்பமரம்' என்ற கதை இலங்கைத் தமிழரின் முக்கியமான ஒரு குணத்தைக் காட்டும் கதை. வேப்பமரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயன்தருவது போல, இலங்கைத் தமிழர் கல்விக்காக நாடும் பாடசாலைகளின் நலம் பற்றியும் 'தேவை' பற்றியும் கூறுகிறது. போரினால் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட பாடசாலைகள் ஏராளம். அப்படி ஒரு பாடசாலை வேறொரு இடத்தில் வேரூன்றி வளர்வதையும் -அதை வளர்க்கப் பாடுபடும் அதிபர் சிவசக்தி சோமசுந்தரம் அவர்களது அயராத உழைப்பையும் காட்டுகிறது. தன்னை முழுமையாக மக்களின் கல்விக்காக பாடசாலையை உருவாக்க முனைந்த அவரே வேப்பமரம் போன்றவராகிறார் என்று காட்டும் கதை.
மாவை வரோதயன் நல்ல கவிஞர். அதனால் அவர் கதைகளில் கவித்துவ விபரிப்புக்களைக் காண முடிகிறது. ஒற்றைத்திருக்கல்' என்ற கதையின் ஆரம்பம் இப்படி.
'காலிமுகத் திடலைச் சூரியன் மஞ்சள் மயப்படுத்திக் கொண்டிருக்கிறான். செக்கச் செவேல் என தனியொரு செந்நிறப் பறவைப் பந்து போல், சிறுவர்கள் விளையாட்டாக அடித்துவிட்ட பந்து வானத்தில் தொங்கிக் கொண்டுவிட்டது.
cJá4ú 35 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 20
குளிக்கத் தயங்கும் ஒரு சிறுவனைப் போல் கடலுக்குள் இறங்கவா விடவா என்று தயங்கி மெல்ல ஒவ்வொரு மில்லி மீற்றராக இறங்கிக் கொண்டிருக்கிறான்.
இந்த விபரணம் போலவே சில சொற்றொடர்களும் அழகுற அமைந்திருக்கின்றன. உதாரணமாக உள்ளவயல்' கதையில் அம்மா தந்த படங்களில் ஒரு பெண்ணின் முகம் பிடித்துவிட்டதாய் அம்மாவுக்குச் சொல்ல அம்மா சாதகக் கட்டுகளில் அந்தச் சாதகக் குறிப்பை எடுத்துக் கொண்டுவர ராகுகாலம்' வந்துவிட்டது. அதுதான் பக்கத்துவிட்டுப் பவளம் மாமி வந்துவிட்டா' என்று சொல்லியிருப்பது கதையை வாசிக்கும் போதே ரசிக்க முடிகிறது. வந்த மாமி அந்தப் பெட்டை'யைப் பற்றிக் கண்டபடி சொல்வதை இப்படிச் சொல்கிறார். அக்கம் பக்கம் பார்த்து வார்த்தைகளின் வேகத்தை ஏற்றி இறக்கிப்பவளம் மாமி சுழற்பந்து வீச்சு எனது விக்கற்றுக்குத்தான் குறி பார்க்கப் பட்டது. ஆனால் முதலில் விழுந்தது அம்மாதான்'
கடைசியில் கதாநாயகன் என்ன செய்தான் என்பது சுவையான திருப்பம். இந்தப் பன்னிரண்டு கதைகளில் பல கதைகள் என் மனதைத் தொட்டன. ஆனால் 'உரித்துகள்' என்ற கதை, வாசித்து எத்தனையோ நாள் ஆன பின்னரும் கூட என்மனதில் சிந்தனை அலைகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறது. ஒரு மரண விசாரணை -ஒரு புலனாய்வு செய்து முடிக்கப்படாத ஒரு நிகழ்வை 3 போட்டு முடிவு தெரியாத கட்டாகப் புலனாய்வாளர்கள் போட்டுவிடுவது போல 'அப்படி இருக்குமா' இல்லை இப்படி இருக்குமா என்று சிந்திக்க வைக்கிறது. நுட்பமாக எழுதப்பட்ட சிறுகதை,
கதை சொல்பவரின் பெரியப்பா வெள்ளைக்காரர் ஆட்சியில் பி.டபிள்யூடியில் (பொது வேலைகள் திணைக்களம்) 'றோலர் ஒட்டுனராக இருந்தவர். வவுனியா ரவுணில் இருந்து காங்கேசன் துறை வெளிச்ச வீட்டடி வரை தான் தான் றோட்டுப் போட்டதாகச் சொல்லுவார்" என்று சொல்வதும், பின்பு -"பெரியப்பாவின் மனைவி மகள் இரண்டு மகன்மார் எல்லோரும் ஜேர்மனியில். பெரியப்பா மட்டும்தான் இலங்கையில்" என்று குறிப்பிடுவதும். தொடர்ந்து "சிலகாலமாவது மனைவி பிள்ளைகளுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் என்றும் குறிப்பிடும் கதை சொல்பவர் மற்றொரு சுவையான விடயத்தை நாசூக்காகச் சொல்வது ரசிக்க முடிகிறது.
"பெரியப்பாவின் முரசுமோட்டை வயலில் ஒரு குடும்பம் இருக்கிறது. தனது வயலைப் பராமரிக்கவென்று இருத்தப்பட்ட குடும்பம் என்றுதான் பெரியப்பா சொல்வார். ஆனால், ஊரில் பெரியப்பாவுக்கு முரசுமோட்டையில் வேறு மனைவியும் மகளும் இருப்பதாகச் சொல்லுவார்கள்"
பின்பு முரசுமோட்டையில் அவர் காலமாகி விடுவதும், ஜெர்மனியிலிருந்து பிள்ளைகள் கதை சொல்பவருக்கு விசயத்தைச் சொல்ல அவர் முரசுமோட்டை போகிறார். அங்கே நடப்பதை சொல்வதைப் பாருங்கள்.
"ஓர் இளம் பெண், இருபத்தைந்து வயதிற்கள் இருக்கும். திருமணம் செய்தவள் போலப் படுகின்றது. முகத்தைப் பார்த்தால் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்ற முகச்சாயல் தெரிகிறது. ஆனால் சற்றுக் கறுப்பு" என்று
é é
ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) U55ó 36

விபரிக்கும் போது பெரியப்பாவுக்கு முரசுமோட்டைக் குடும்பத்தின் தொடர் எப்படி என்பதை நிரூபிக்கிறது. A.
ஜெர்மனியிலிருக்கும் பெரியப்பா மகள் சொத்துகள் பற்றி - உறுதிகள் பற்றி விசாரிக்கிறார். அதற்கு இவர் சொல்வதாக அமையும் பதில் மீண்டும் மீண்டும் இந்தக் கதையைப் படித்துப் புலனாய்வு செய்யவேண்டும் என்ற துறுதுறுப்பை நமக்கு ஏற்படுத்துகிறது.
"அவை உறுதியைக் காட்டினவை. எல்லா உறுதியளும் அவையளிட்ட இருக்கு எல்லாம் அவற்ற முரசுமோட்டை மகளின்ர பெயரில எழுதியிருக்கு. எல்லாம் பெரியப்பாவின்ர பெருவிரல் அடையாளத்தோடை இருக்கு. நான் சொல்லி முடிக்கு முன் தொலைபேசிஇணைப்புத் துண்டிக்கப்பட்டுவிட்டது" என்று முடிகிறது கதை.
ஆனால் அந்த இடத்திலிருந்து வாசகன் துப்பறிகிறவராகப் புலனாய்வாளனாக மாற வேண்டியிருக்கிறது. பெரியப்பா வெள்ளைக்கார ஆட்சியில் பி.டபிள்யூடியில் வேலை பார்த்தவராயின் அவருக்குக் கையெழுத்துப் போடத் தெரிந்திருக்கும். அப்படியானால் உறுதிகளில் பெருவிரல் அடையாளம் இருப்பது ஏன்? அவருக்குக் கையெழுத்து வைக்கத் தெரியாதா?சொத்துக்களை இறக்கு முன்னர் எழுதிவிட்டாரா? மரணம் எப்படி நேர்ந்தது? இப்படி பல கேள்விகள் மனதில் 679, கதையைத் திருப்பித் திருப்பிப் படித்து விடை தேட வேண்டியிருந்தது.
வேப்பமரம்' தொகுதியின் ஏனைய கதைகளும் நம்மைப் பல விதத்தில் சிந்திக்க வைக்கின்றன. வாசித்துப் பாருங்களேன். ( 旅 7。 O N
ஈழத்து எழுத்தாளர்களே! ஈழத்து எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளை ஆவணப்படுத்தும் பொருட்டு பின்வரும் விவரங்களை (01.01.2004) இலிருந்து 'ஒலைக்கு அறியத்தருமாறு தயவாய்க் கேட்டுக் கொள்கிறோம். முடியுமானால் அவற்றின் ஐந்து பிரதிகளை அனுப்பி வைத்தால் 'நூல் நயம் காண்போம்' நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளப்படும். அதில் இரு பிரதிகளைத் தமிழ்ச்சங்க நூல் நிலையத்திற்குப் பெற்றுக் கொண்டு அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படும்.
நூலின் பெயர் நூலின் வகை
நூலாசிரியர் பெயர் :
நூலாசிரியர் முகவரி: தொலைபேசி நூல் வெளியீடு நடந்த இடமும் திகதியும்:
வெளியீட்டாளர் / பதிப்பகத்தின் பெயர்: வெளியீட்டாளர் / பதிப்பகத்தின் முகவரி :
நூலின் விலை :
NS ク
(Jású 37 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 21
இருநூல்கள் வெளியீடு 07.11.2003 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.க.நீலகண்டன் அவர்கள் தலைமையில், கொழும்புத் தமிழ்ச் சங்கப் பதிப்புத்துறையின் வரிசையில் திரு.இ.அம்பிகைபாகன் எழுதிய "மாணிப்பாய் டாக்டர் கிறீன் வாழ்வும் எழுத்துப் பணியும்" என்ற நூலும், கலாநிதி செ.யோகராசா எழுதிய "ஈழத்துத் தமிழியல் சார் தமிழ் ஆய்விதழ். கள் - ஒரு கண்ணோட்டம்" என்ற நூலுமாக இரு நூல்களின் வெளியீட்டு விழா குமாரசுவாமி விநோதன் கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மேற்படி நூல்களின் அறிமுக உரையை முறையே பேராயர் கலாநிதி எஸ்.ஜெயநேசன் அவர்களும் திரு.க.சண்முகலிங்கம் அவர்களும் நிகழ்த்தினார்கள்.
இணையத்தள மீள் ஆரம்பம் 07.11.2003 வெள்ளிக்கிழமை தமிழ்ச்சங்க இணையத்தளம் மீண்டும் புதுப்பொலிவுடன் சங்கத் துணைக்காப்பாளர் திரு.மா.தவயோகராசா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இணையத்தள முகவரி
www.colombotamilsangam.org
‘ஓலை’ - 21 ஒர்.நவம்.டிசம்பர்2003) பக்தம் 38
 
 

அஞ்சலிக்கூட்டம் 08.11.2003 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மறைந்த பேராசிரியர் ச.முத்துலிங்கம் அவர்களது அஞ்சலிக் கூட்டம் சங்கத் தலைவர் திரு.க.நீலகண்டன் அவர்கள் தலைமையில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம் பெற்றது. பேராசிரியரது உருவப்படத்தை பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்கள் திரைநீக்கம் செய்து மலர்மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
மெளனாஞ்சலி
வரவேற்புரை : திருதிகணேசராஜா (நிதிச் செயலாளர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
அஞ்சலி உரைகள்
- பேராசிரியர்.சோ.சந்திரசேகரம்
(துணைக்காப்பாளர், கொழும்புத் தமிழ்சங்கம்) - கலாநிதி.ஏ.ஜி.ஏச்.இஸ்மாயில்
(உபவேந்தர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) - திருஇ.சுந்தரலிங்கம்
(துணைத்தலைவர். கொழும்புத் தமிழ்ச்சங்கம்) - திரு.என்.நடராசா
(கல்விப் பணிப்பாளர். தமிழ்மொழிப்பிரிவு. கல்வி அமைச்சு) - திரு.ஆர்.எஸ்.நடராசா
(முன்னாள் அதிபர், ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை) - ஜனாப்.எம்.எஸ்.ஏ.எம்.முக்தார்
(பிரதிக் கல்விப் பணிப்பாளர். மேல் மாகாண கல்வித்திணைக்களம்) - திரு.மா,கணபதிப்பிள்ளை
(தமிழ்த்துறைத் தலைவர். றோயல்கல்லூரி, கொழும்பு) - திரு.பெ.விஜயரட்ணம்
(துணைத்தலைவர். கொழும்புத் தமிழ்ச்சங்கம்) நன்றியுரை - திரு.ஆ.இரகுபதி பாலழறிதரன்
(பொதுச்செயலாளர். கொழும்புத்தமிழ்ச்சங்கம்)
சிறப்புரை 21.11.2003 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்குக் கொழும்புத் தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் திரு.இ.சுந்தரலிங்கம் அவர்கள் தலைமையில் அவுஸ்த்திரேலியாவில் இருந்து வருகை தந்த எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்களினால் 'உலகத்தமிழர் என்ற பொருளில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
பக்தம் 39 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 22
வார்த்தைக்குள் அப்பாவின் ஒழிந்திருக்கிறது மறைவிற்கு பிறகு கவிதை. பாழாய்ப் போனது .LQ பள்ளிப்படிப்பு/9یک
(pt) அறை முழுவதும் சண்டை சுகந்தம் ஆதியிலிருந்தே அமைதியாய் இருக்கிறது. ஊதுபத்தி.
சாக்கடை மனக் கூண்டிலிருந்து சுகம் பறப்பதற்கு எத்தனித்த பன்றிகளுக்கு. LID606),60)L
துரங்கும் போதும் கூண்டுக்குள்ளேயே வைத்தேன்.
குழந்தைகள் அழகாய்த்தான் - குறிஞ்சி இளந்தென்றல் இருக்கின்றன.
நன்றி
கொழும்புத் தமிழ்ச்சங்கத்திற்குப் பின்வரும் அன்பளிப்புக்களை வழங்கியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
1. இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு
- நடராஜர் சிலை கொள்வனவிற்காக 80,000 ரூபா
2. திரு.த.வாமதேவன் (அவுஸ்திரேலியா)
- பித்தளைப் பூச்சாடிகள் பூக்கள் உட்பட
3. திரு.இ.சர்வானந்தன் (இலண்டன்)
- புகைப்படக்கருவி
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) பக்தம் 40
 

சிறுகதை
GHGIEGLI f'solub
ச.முருகானந்தன்
நண்பன் சிறீகாந்தன் ஷெல் அடிபட்டு கடந்த மூன்று வாரமாய் காய வாட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறான். அவனைப் பார்த்துவிட்டுத் திரும்பிய போது தான் பிரதிபன் அவரைக் கண்டான். முற்றிப் பழுத்த கனி.
வைத்தியசாலைக்கு முன் நின்ற பாலை மரத்தின் கீழ் முதியவர் அழுக்கு உரப்பை ஒன்றுக்குள் கொண்டு வந்திருந்த தனது உடமைகளில் தலை வைத்துக் கொண்டு படுத்திருந்தார். எண்பது எண்பத்தியைந்து வயதாவது இருக்கலாம். ஒட்டிய வயிறு, எலும்புகள் எண்ணக்கூடிய மார்பு இடிந்து போன கன்னத்தில் எலும்புகள் மட்டும் துருத்திக் கொண்டிருக்கிறது. குழிவிழுந்த கண்கள். இரண்டு மூன்று மாதம் மழிக்கப்படாத தாடி. மிகவும் அயர்ந்து சோர்ந்து போயிருந்தார்.
பிரதிபன் ஒருகணம் தடுமாறினான். 'கிழவர் உயிரோடு இருக்கிறாரோ, இல்லையோ? என்ற சந்தேகம் பொறி தட்டியது. மனதிலே இன்னமும் தொலைந்து போகாமலிருந்த மனித நேயம் கிழவரை நோக்கித் தள்ளியது.
கிழவரின் அருகே வந்த பிரதீபன் அப்பு' என்று அழைத்தான். சிறு சலனம். முடியும் மூடாத கண்களால் உற்று நோக்கியபடி முதியவர் தலையசைத்தார்.
பிரதீபனுக்கு இறந்து போன தன் பாட்டனின் நினைப்பு வந்தது. அப்பு' என்று ஆதரவாக மீண்டும் அழைத்தான். கண்கள் பிரகாசிக்க, பற்றிக் கொள்ள ஒரு துரும்பு கிடைத்த நம்பிக்கையுடன் இருகரம் கூப்பினார் முதியவர்.
"அப்பு" சாப்பிட்டனியளே?" என்று கேட்ட பிரதீபன் அவரது பதிலுக்குக் காத்திராமல் அருகிலிருந்த கடைக்குச் சென்று பணிசும் தேநீரும் வாங்கி வந்தான்.
கிழவர் விழிகளைக் கூசி வெட்டி மெதுவாக அவனைப் பார்த்துவிட்டு, கைகளை ஊன்றி எழுந்திருக்க முயன்றார். பிரதீபன் எழுந்திருக்க உதவியபடி சாப்பிடும் படி கூறினான்.
பசி கிடந்த வயிறு. ஒரு துண்டு பணிஸ் போனதும் விக்கல் எடுத்தது. அவன் தண்ணிரைப் பருக்கினான். கிழவர் நெஞ்சைத் தடவியபடி பணிசைக் கடித்தார். இரண்டு நாளா சாப்பிடயில்லைத் தம்பி. கண்கள் பனித்தன.
அவன் அன்போடு அவரை நோக்கினான். 'உங்களுக்கு ஒருத்தரும் இல்லையே அப்பு?
"ஏன் இல்லை?லண்டனிலை, பாரிசிலை , சுவிசிலை, கனடாவிலை எல்லாம்
Uásó 41 ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 23
வாரிசுகள் இருக்கினம். .இருந்தும் இல்லை.
எமது இனம் என்னமாய் மாறிப் போய்விட்டது என்று நினைத்தான் பிரதீபன். நாங்கள் கோப்பாய் மேனை. மூத்தவனோட தான் இருந்தனான். இடம் பெயர்ந்து வன்னிக்கு வரும் போது தவற விட்டுட்டன். உன்னைப் போல ஈவிரக்கமுள்ள பொடியள் தான் வள்ளத்திலை ஏற்றி கடலுக்காலை இங்கா, கொண்டு வந்து விட்டதுகள்" மீண்டும் கைகளைக் கூப்பினார் கிழவர்.
அவன் பரிதாபமாக அவரை நோக்கினான். "ம்.இவ்வளவு கஸ்டப்பட்டு கடலுக்காலை வந்தும் இருக்க ஒரு இடமில்லை. ஆதரிக்க ஒருத்தருமில்லை. ஊரோடை வீட்டோடை நின்று அங்கேயே செத்துப் போயிருக்கலாம். இத்தனை வயசுக்குப்பிறகு இருந்தென்ன செத்தென்ன. கிழவர் விரக்தியுடன் கூறியபோது அவனுக்கு நெஞ்சை அடைத்தது. ஒரு காலத்திலை எவ்வளவு சிறப்போடு வாழ்ந்திருப்பார்.
'அப்பு. இன்னொரு பணிஸ் வாங்கிவரட்டே? கிழவர் அன்போடு அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தார். பிள்ளை. களுக்கு, பேரர்களுக்கு, உற்றவர்களுக்கு இல்லாத அன்பு இவனிடம் சுரப்பது அவரது மனதை நெகிழ வைத்தது.
எதையோ மனதிற்குள் நினைத்துக் கண்களை மூடியவர். அதை வெளிச் சொல்ல முடியாத தவிப்புடன் மனக் கூட்டுக்கள் புதைத்துவிட்டு மறுபடியும் கண் திறந்து அவனை நோக்கினார். 'கடைசி நேரத்திலை என்ன, இனசனத்தோட இருந்து கண்ணை மூடி, மகன்ர கையால கொள்ளி போட வேணுமென்ற ஆசை. அதுவும் முடியாமல் ஊரோட ஒத்தபடி அறுந்துபோன ஆமிக்காரன் கலைச்சுப் போட்டான, அந்த நாளயில சுடலை மடம் கட்ட நூறு ரூபா கொடுத்தனான். வண்டில் செய்ய இருபது ரூபா கொடுத்தனான். ஐந்து சதத்திற்குத் தேத்தண்ணி குடிச்ச காலம். ம். எல்லாம் தலைகீழாகப் போச்சு. உற்றவரும் பிரிஞ்சு, உடமைகளும் இழந்து, ஊரையும் துறந்து.' கிழவர் விரக்தியுடன் சிரித்தார்.
இங்க உங்களுக்குத் தெரிஞ்சவை ஒருத்தரும் இல்லையே?. வேணுமெண்டால் நான் கொண்டு போய் விடுறன் அப்பு.
ஆரார் எங்கெங்கை இருக்கினமோ தெரியாது. இருந்தாலும் குடிசைகளிலையும், கூடாரங்களிலையும் தான் இருப்பினம். எல்லாத்தையும் இழந்திட்டு வறுமையோட போராடிக் கொண்டிருப்பினை. மரம் பழுத்த காலத்திலை எண்டாலும் யாரும் வைச்சுப் பார்ப்பினை. இப்ப பழுத்த மரமாய்ப் போயிட்டன். படுக்க எடுக்க பிள்ளை குட்டியளே இல்லையாம். மற்றதுகள் பார்க்கப் போகினமே?
முதியவரின் கூற்றிலுள்ள நியாயம் அவனுக்குப் புரிந்தது. எனினும் அவரை அப்படியே விட்டு விட்டுப் போக மனம் வரவில்லை. பலவாறாக யோசித்தான் பிரதீபன். மனதிலே மின்னல் கீற்று ஆஸ்பத்திரியிலை சேர்த்துவிடட்டே அப்பு?" "நான் முயன்று பார்த்துக் களைச்சுப் போனன். அங்கே வருத்தக்காரர் படுக்கவே இடமில்லையாம். அகதி முகாமுக்குப் போகட்டாம். அங்கேயும்
‘ஓலை’ - 21 ஒக்ரவம்.டிசம்பர்2003) U55ú 42

போனேன் இடமில்லை."
பிரதீபன் மீண்டும் யோசித்தான். முதியோர் இல்லத்திலை சேர்த்துவிடட்டே அப்பு.?
"கோடி புண்ணியம் கிடைக்கும். அதைச் செய்து விடு மேனை." மீண்டும் முதியவர் கைகூப்பினார்.
ஒரு முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்ற போது, அது தனியார் முதியோர் இல்லம் என்றும், மாதம் ஐயாயிரம் என்றும் கூறினார்கள். இன்னொரு அநாதரவான முதியோர்களின் இல்லத்திற்குச் சென்ற போது இது உங்களுக்கான முதியோர் இல்லம் அல்ல என்று கை விரித்தார்கள். அரசாங்க முதியோர் இல்லம் ஏதும் இங்கே இல்லையா? என அவன் விசாரித்த போது, அதெல்லாம் வன்னியில இல்லை. சிங்களப் பகுதிகளிலை தான் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் இருக்கு' என்றார்கள். பாதிரியார் ஒருவர் நடாத்திவரும் இல்லத்திற்குச் சென்ற போது, இடமில்லை, இப்போது சிறுவர்களை மட்டும் தான் உள்வாங்குகிறோம்' என்று சொன்னார்கள்.
பிரதீபன் களைத்துப் போய்விட்டான். 'வன்னேரிக்குளத்தில் யோக சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லம் இருக்கும். அங்கே விசாரிச்சுப் பாருங்க" என்று ஒருவர் கூறினார்.
அங்கே சென்றபோதும் வழமையான பதில்.
"இடமில்லை" தெருவில அநாதரவாகக் கிடந்த வறிய முதியவர்' என பிரதீபன் எடுத்துரைத்தான்.
'ஒரு படிவம் தாறம். இதை நிரப்பி கிராமசேவையாளரின் பரிந்துரையுடனும், அரசாங்க அதிபரின் சிபாரிசுடனும் கொண்டு வந்து தாங்கோ. இடம் வரும்போது அறிவிக்கிறம், கூட்டி வாருங்கோ.
பிரதீபனுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.
"இவரைப் பார்க்கவே ஏழை; அநாதரவான முதியவர் என்று தெரிகிறது. அப்புறம் ஏன் சிபாரிசு கேட்கிறீர்கள்? கோபமாகக் கேட்டான் பிரதீபன்.
"தம்பி பதட்டப்படாதேயும். உங்களை விட மனிதாபிமானம் எங்களுக்கும் இருக்கு. அதனாலதான் எத்தனையோ பேரின் உதவியை இரந்து வேண்டி, இந்த முதியோர் இல்லத்தை நடத்திறம். இங்கே 65 பேர் தங்கத்தான் வசதி இருக்கும். ஆனால் 87 பேரை வைச்சுப் பராமரிக்கிறம். மனிதநேயநம்பிக்கை நிதியம், தமிழர் புனர் வாழ்வுக்கழகம், மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள தர்மசிந்தனை உள்ளவர்கள் என்று பலரது உதவியைப் பெற்றுத்தான் நடத்திறம்." இல்லச் செயலாளர் விளக்கிக் கூறிக் கொண்டிருந்தார்.
அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த போதே இல்லத்தலைவர் கந்தசாமி ஐயா வந்து சேர்ந்தார். எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்க, அதேநேரம்
U55ó 43 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 24
இளைஞரைப் போல கம்பீரமான தோற்றம், வெண்பஞ்சு போன்ற மேனி, இழுத்த தலைமுடி. கனிவான நம்பிக்கையளிக்கும் பார்வை.
செயலாளர் அவரிடம் விசயத்தைக் கூறினார். அவர் முதியவரை ஒரு கணம் நோக்கினார். ஒட்டியுலர்ந்த அவரது தோற்றம் அவரது மனதை நெகிழ வைத்தது.
"தம்பி, நீர் இவருக்கு ஆர்?" "உறவில்லை. தெருவில் கண்டு அழைத்து வந்தேன். இப்போது உங்கள் சிரமம் புரிகிறது." என்றான் பிரதீபன்.
"ஒரு வழிப்போக்கனான, இளைய தலைமுறையைச் சேர்ந்த உமக்கு இருக்கிற மனித நேயத்தை மதித்து இந்த முதியவரை உள்வாங்கிறன். இங்கே எங்களிடம் வசதிகள் குறைவுதான். ஆனால் அன்பாகப் பராமரிப்போம். ஆனால் நீர் ஒரு பணியைப் பொறுப்பெடுக்க வேணும். இவருடைய படிவத்தை நிரப்பிசிபா. ரிசு பெற்றுக் கொண்டு வந்து தரவேணும். ஒரு சட்டத்தை நாங்களே உருவாக்கிவிட்டு, அதை நாங்களே மீறக்கூடாது. உண்மையான அநாதரவானவர் என்பதை உறுதிப்படுத்தத் தான் இந்த நடைமுறைகள். யாரும் அணைவில் இங்கே உள்வாங்கப்படக்கூடாது." கந்தசாமி ஜயாவைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும் போலிருந்தது பிரதீபனுக்கு. ク
முதியவரையும் அழைத்துக் கொண்டு இல்ல விடுதிக்குள் நுழைந்த போது, ஒரு அமைதியான ஆச்சிரமத்தில் நுழைவது போலிருந்தது. இருமருங்கிலும் அழகான பூமரங்கள், சூழவுள்ள காணியில் பயன்தருமா, பலா, தென்னை, வாழை மரங்கள், கீற்றுக் கொட்ட கையானாலும் சுத்தம் பேணப்பட்டு, அழகாக ஒழுங்கமைக்கப்பட்ட விடுதிகள். ஏதோ ஒரு மனநிறைவுடன் சிரித்த முகத்துடன் பவனி வரும் மூதாளர்கள்.
பிரதீபனுக்கு உண்மையிலேயே புல்லரித்தது. கோயில்களில் திருவிழா, வேடிக்கை என்று லட்சக்கணக்கில் செலவிட்டு காசைக் கரியாக்கும் எமது மதத்தினிரிடையே இப்படி ஒரு இல்லமா? ஏழையின் சிரிப்பில் தான் இறைவனைக் காணலாம் என்ற உண்மையை இங்கே தான் அவன் கண்டான்.
கந்தசாமி ஐயா,"தம்பி. எமது சைவ சமயத்தில் தொண்டு மனப்பான்மை குறைஞ்சு போச்சு. எல்லாம் வெறும் ஆடம்பரமாகவும், பெயருக்கும் புகழுக்குமாக என்று மாறிப் போச்சு. எங்களது கோயில்களும் சமய நிறுவனங்களும் சமூகப் பணிகளிலை இறங்க வேணும். இந்த யுத்த காலத்தில் மதமாற்றங்களும் அதிகம் நடக்குது. பாதிக்கப்பட்டவர்களைத் தேடி உதவி செய்யுற மற்ற மதங்களில மக்களுக்கு நாட்டம் வாறது சகஜம் தானே? ஆயிரம் கோயில்களைக் கட்டுவதிலும் பார்க்க ஒரு அநாதை இலலத்தைக் கட்டுறது எவ்வளவு மேல்" என்றார்.
பிரதீபனுக்கு கந்தசாமி ஐயாவின் கூற்றிலுள்ள நியாயம் புரிந்தது. பெரியவர் ஒரு மகான்தான் என்று நினைத்துக் கொண்டான். கந்தசாமி ஐயாவோடு உரையாடிய பிரதீபனின் மனதில் பல கேள்விகள் உருவாகின. அவரோடு தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது.
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) பக்தம் 44

"அதுமட்டுமில்லைத் தம்பி, எங்கட சமய தத்துவங்களை பலர் புரிஞ்சு கொள்ளவில்லை. இந்து மதம் என்ற பொதுப்பெயருக்குள்ளே, சைவ சமயம் அமுங்கிப் போச்சு. எங்கட முழுமுதற் கடவுள் சிவன் என்பதை நாம் மறந்திட்டம். அவரது அவதார தெய்வ வடிவங்களை முதன்மைப்படுத்தி இறைவன் ஒருவன் என்ற கூற்றையும் பொய்யாக்கி விட்டோம். ஏகன், அனேகன் என்ற கூற்றுக்கள் வேற. அதுமட்டுமில்லை. எங்களிடையே சாதிப்பாகுபாட்டை ஆரியர் திணித்து விட்டார்கள். சாதிப்பாகுபாடு பார்க்கிறதும் கூட எங்கட ஆக்களின்ற மதமாற்றத்திற்கு ஒரு காரணம். நாம் தமிழர் என்ற அணியில நின்று போராடி, வெற்றிப் பாதையில் செல்லுகிற இன்றைய காலகட்டத்தில கூட சாதிப்பாகுபாடுநீறுபூத்த நெருப்பு போல இருக்கிறது."
"ஒம் ஐயா. நீங்கள் சொல்லுறது சரிதான்." "எங்கட மதம் உருப்பட வேண்டுமானால் வெறும் சடங்கு சம்பிரதாயங்களிலையிருந்துவிடுபட்டு, மதத்தின் தத்துவங்களைப்புரிஞ்சு கொள்ள வேணும். சமூகப் பணிகள் செய்ய வேணும். தொன்மையான, சிறப்பான எமதுமதம் உருப்பட அதுதான் வழி. எங்கட மதம் மட்டும் இல்லை. மொழியும் கூட சிதைவடையுது. இன்னும் 50 வருடங்களிலை தமிழ் மொழி அழிஞ்சிடும் என்று யுனஸ்கோ மதிப்பிட்டுள்ளது. இன்றைய தென்னிந்தியச் சினிமாக்களும், தொலைக்காட்சியும் தமிழைக் கொலை செய்து வருவது யாருக்கும் புரியவில்லை. பெயர்கள், பாடல்கள், பண்பாடு, கலாசாரம், உரையாடல் எல்லாமே தடம் புரண்டு காண்பிக்கப்படுகிறது. ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுதல் தான் நாகரீகம் என்று கருதுவதால் தான் தமிழ் மொழி பாதிப்படைகிறது. இவை பற்றி புதிய தலைமுறையினர் சிந்திக்க வேணும். உன்னைப் போன்ற இளைஞர்களாலை தான் எமது மதத்தையும், மொழியையும் காப்பாற்ற முடியும். நான் இன்னும் கொஞ்ச நாளையில மேல போக விசாவுக்குக் காத்திருக்கிறன். உம்மை மினைக்கெடுத்திப் போட்டன்." கந்தசாமி ஐயா கரம் குவித்தார்.
விடைபெற்றுச் சென்ற பிரதீபன், மறுமுறை முதியோர் இல்லத்திற்கு வந்தபோதுகந்தசாமி ஜயா மறைந்த சேதி கேட்டு அதிர்ந்தான். அவன் கொண்டு வந்துவிட்ட முதியவர் நலமே இருந்தார். (ID
நன்றி எமது சங்கக் கட்டிடத்தை - குறிப்பாக எமது நூலகத்தையும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் சுமார் 30,000 நூல்களையும் பாதுகாக்க வேண்டியது கடமையாகிறது. அதற்கு மிகவும் அவசியமான தீயணைப்புக் கருவி புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளது. எமது சங்கத்துணைக் காப்பாளர் திரு.மா.தவயோகராசா செய்த தாராளமான நிதி உதவி மூலம் இது சாத்தியமாக்கப்பட்டதை நன்றியுடன் அறியத்தருகின்றோம்.
Uá5ó 45 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 25
பல்தறை இலக்கியப் பரிசு பெற்றார்
வடக்கு கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சினால் வருடாந்தம் நடாத்தப் பெறும் இலக்கியப் பரிசுப் போட்டியில் 2002ம் ஆண்டிற்கான பல்துறை இலக்கியம் சூழலியற்கான பரிசு திரு.எஸ்.பேராசிரியன் எழுதிய 'கருகும் பசுமை' என்னும் நூலிற்குக் கிடைத்திருக்கிறது.
வடக்கு, கிழக்கு எழுத்தாளர்களது. நூற்றுக்கு மேற்பட்ட இலக்கியங்கள். அமைச்சின் இலக்கியத் தெரிவுக் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு 'கருகும் பசுமை'பரிசுக்குரிய தரமான நூலாகத் தெரிவு செய்யப்பட்டு, இதை ஆக்கிய இலக்கிய கர்த்தா எஸ்.பேராசிரியன், கடந்த அக்டோபர் மாதம் (19.10.2003) வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இலக்கியப் பெருவிழாவில் கெளரவிக்கப்பட்டார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் மூத்த ஆயுள் உறுப்பினராகிய திரு.எஸ்.பேராசிரியன், கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியும், FRSC (இலண்டன் FI.Chem C முதலிய பட்டங்களைப் பெற்றவரும் பட்டய இரசாயனவியலாளரும் ஆவர். கடந்த பல தசாப்த காலமாக இவர் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கப் பிரச்சாரக் குழுத் தலைவராகவும், பத்திராதிபர், ஆட்சிக்குழு உறுப்பினர் முதலிய பல்வேறு கெளரவ பதவிகளை வகித்து பாமர மக்களிடையே அறிவியலைப்பரப்ப பகிரத முயற்சி எடுத்து வருகிறார். மேலும் றோயல் இரசாயனக் கழகம் (இலங்கைக் கிளை) செயலாளராகவும், இலங்கை பட்டய இரசாயனவியலாளர் சங்க கவுன்சில் உறுப்பினராகவம் பணிபுரிந்துள்ளார். இவர் பல்வேறு செய்தி வார மலர்களில் நவீன அறிவியல் ஆராய்ச்சிகளின் விளைவுகளைத் தமிழ் மொழியில் எழுதிவரும் பிரபல அறிவியல் எழுத்தாளருமாவார்.
அவரை 'ஒலை பாராட்டி மகிழ்கிறது.
●
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) обла) 46
 

பழைய நாபகம்
அதிகாலைப் பொழுது, அங்கலாய்க்குது இரவல் கூட்டில், காகம் கொக்கரிக்குது.
கனவிலுமில்லை - ஏனெனில், தூக்கமுமில்லை.
காலாற நடக்கிறேன், வயல்பக்கம். பூவோடையில், நடைபயிலும் ஞாபகம்.
எண் மனவுணர்வு, எங்கும் பசுந்தளிர்கள். பூவரச மிலை பிடுங்கி களை யோடு சுவைக்கின்ற, தேனமுதம்.
ஊரை நினைத்துப் படுத்தேனி.
பழஞ்சோற்று திரளையிலே, பசிமறப்போம் நாள்முளுக்க, பிசைந்துறுட்டி குழைக்கையிலே, தேன் சொட்டும் பாசத்திலே,
மாலைச்சூரியன் மடி மயங்க, உழைத்தவர் கால் பட்டு, வாய்க்கால் வரம்பெல்லாம், உரமேறும் மணி.
வெய்யில் குளித்து, முறுகேறிய கருந் தேகம், அறுகம்புல் வரம்பில் நடை பயிலும்.
- இணுவை சக்திதாசன்,
டென்மார்க் |
இ.மயூரநாதன், கொழும்பு
க.சிவப்பிரகாசம் (U.S.A.) சு.யோகரட்னம் (பிரான்ஸ்)
உதவும் கரங்கள்
ஒலை ஓங்கி வளர்வதற்காக உதவிக் கரங்கள் வழங்கிய இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்
தமிழினி குலேந்திரன் (லண்டன்)
S.மனோகரன் (அவுஸ்திரேலியா)
17,758.68
5,000.00 4,000.00 2,500,00
2,000, ()()
υββώ 47
‘ஓலை’ - 21 டிச்,நவம்.டிசம்பர் 2003)

Page 26
'S.I.V.இராஜகுமார், கொழும்பு 2,000,0() இ.வாசவன் (லண்டன்) 2,000.00 மு.தயாநிதி (அவுஸ்திரேலியா) 2,000.0() திருமதி புண்ணியவதி சிவராஜலிங்கம், நீர்கொழும்பு 1,500.00 சி.இராஜதுரை (சின்மயாமிஸன், கொழும்பு) 1,500.00 ஆபூபதி பாலவடிவேற்கரன் (ஜேர்மனி) I.00.00) இ.சிறிதவராசா (லண்டன்) 1,000.00 செல்வி.மகேஸ்வரி வேலாயுதம், கொழும்பு -05 ()()0.00 வி.சண்முகநாதன், பாண்டிருப்பு. கல்முனை 500.00 வ.இராசையா, கொழும்பு -06 500.00 திருமதி.கயிலாயநாதன் 500.00 பாலேஸ்வரக் குருக்கள் 500.00 ஆ.சண்முகராஜா, கொழும்பு-11 500.00 M.கனகசுந்தரம் - 500.00
திருமதி.S.வேதநாயகம் - 500.00 க.ஜெயபாலரட்னம், உரும்பிராய், யாழ்ப்பாணம் 300.00 சாயிகணேசா, கொழும்பு 300.00 சரஸ்வதி லொட்ஜ், கொழும்பு . . 300.00 சி.கணேசனாந்தன் 300.00 சுமதி அற்புதராஜா, மட்டக்களப்பு 300.00 ஏ.சி.எஸ்.இஸ்மாயில் 300.00 பெ.விஜயரத்தினம் 273.00 பொ.ச.ஞானசீலன் (மொறட்டுவ) 200.00 உடப்பூர் வீர சொக்கன் 200.00 K.சபாரட்ணம் 200.00 புஸ்பாயோகேந்திரன் - - 200.00 வ.வீரசிங்கம் 200.00 S.துரைராசா 200.00 ஒலுவில் அமுதன் 200.00
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) cJá4ú 48

> ஓலை 15 இல் (படத்துடன்) எனது "கடுகு வந்தது. மன்னாரிலிருந்து
பாராட்டும் (கவிஞர்.செ.ஞானராசா) வந்தது. நன்றி ஐயா. 'ஒலையின்
வளர்ச்சி வியக்கத்தக்கது. கண்படாதிருக்கட்டும். தமிழுக்கே தன்னைத் தரட்டும். வாழ்க்
திரு.சோ.இராசேந்திரம். (தாதீ)
18.08.03 ஈச்சந்தீவு - கிண்ணியா
> நீங்கள் தொடர்ந்து அனுப்பிவரும் ஒலை கிடைக்கின்றது. இதுவரை வெளிவந்த இதழ்களில் -12வது இதழ் மட்டுமே படித்துப் பத்திரப்படுத்தும் படியாயுள்ளது. கவிஞர்.நீலாவணன் பற்றிய அவ்விதழ் உண்மையில் ஒரு காத்திரமான முயற்சிதான். −
S.H.Arafath Salhwi ஒட்டமாவடி - அரபாத் 71, Basheer Street, Mavadichenai Valaichenai -30400 10.09.2003
D ஒலை 10ல் இருந்து ஒலை 16வரை கிரமமாகக் கிடைத்துள்ளன. நன்றிகள் நல்வாழ்த்துக்கள். ஒலை தொடர்ந்து வர உதவுவோரில் நானும் தொடர்ந்து வர இறை அருளை வேண்டி நிற்கின்றேன்.
பிரமாதம், பிரமாதம், தமிழ் வளர்ப்பில் ஊடகங்கள் விழித்துக் கொண்டுள்ளன. அவற்றையும் தாண்டி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பணி பாராட்டுக்குரியதாக பவனி வருகின்றது. புதுப்புது அம்சங்கள் இணைக்கப்படுகின்றன. திறமையுடன் தமிழுக்கு உழைத்த பழைமையான அறிஞர்களின், கலைஞர்களின் பணிகள் தூசு தட்டிப்பார்க்க பாலமாய் அமைந்துள்ளது இந்த ஒலை. பலே, பலே,
அரசடி றோட் மாவடிப்பள்ளி மாவடிப்பள்ளி. காரைதீவு A.Mமஸ்ஹது லெவ்வை (பி.ஏ.) ஜே.வி (கிமா)
11.09.2003
பக்தம் 49 ‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 27
தங்களின் ஒலை-16 இதழ்கிடைத்தது. எனது அன்பு கலந்த நன்றி. இவ் ஒலை ஒவ்வொன்றையும் பெற்றுக்கொள்ள அவா. கிரமமாக அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
ஒலையின் ஆக்கங்கள் அனைத்தும் பெறுமதியானவை. "சொல்வளம் பெருக்குவோம்" என்ற பன்மொழிப் புலவர் த.கனகரத்தினம் என்பவரது ஆக்கம் காலத்தின் தேவை. "ஒலை" இதழ் தமிழ் வழங்கும் தெருவெங்கும் மணம் பரப்ப நல்வாழ்த்துக்கள்.
நாகர் கோவில் மேற்கு பொ.தேவகி
நாகர் கோவில் 10.10.2003
'ஒலை 15, 16 கிடைக்கப் பெற்றேன். அனுப்பி உதவியதற்கு நன்றி.
'ஒலை இதழ் மூலம். இலங்கையில் நிகழ்கிற இலக்கிய நிகழ்வுகள், புதிதாக வெளிவரும் புத்தகங்கள் பத்திரிகைகள் முதலியன பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள் ரசனைக்கு விருந்து ஆகின்றன.
'ஒலை 15, 16 இதழ்களில் வெளிவந்துள்ள கலாபூஷணம் ஏ.இக்பால் நினைவுகூரும் இலக்கிய வாழ்வில் இடறிய் சம்பவங்கள் பயனுள்ள தகவல்களைக் கொண்டிருக்கின்றன.
'ஒலை 15ல் இடம் பெற்றுள்ள நீ.பி.அருளானந்தம் சிறுகதை 'அவர்களுக்குள்ளும் வாழ்க்கை யதார்த்தங்களை, உள்ளன உள்ளபடி சித்திரிப்பதுடன், மனித நேயப் பார்வை கொண்ட நல்ல முடிவை பெற்றிருக்கிறது.
'சர்வதேச தரத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய தகுதி வாய்ந்த ஆக்க இலக்கியங்கள் இக் காலத்திலும் எதிர்காலத்திலும் தமிழில் படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான திறனைப் பெற வேண்டியதன் அவசியத்தையும், இளந்தலைமுறையினரை உரிய முறையில் வழிநடத்திட வேண்டிய பொறுப்பு மூத்த தலைமுறையினருக்கு இருப்பதையும் சுட்டிக்காட்டி தலையங்கக் குறிப்பு எழுதப்பட்டிருப்பது வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.
வாழ்த்துக்கள்
10, Vallalar Flats, New St. Lioyds Rd, வல்லிக்கணர்ணன் Chennai -600005
Tamil Nadu, S.India 03.11, 2003
‘ஓலை’ - 21 ஒக்,நவம்.டிசம்பர்2003) பக்தம் 50

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு - 2008/2004 30.11.2003 ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு சங்கத் தலைவர் திரு. க.நீலகண்டன் தலைமையில்நடைபெற்ற கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 61வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நடப்பு வருடப் (2003/2004) பதவியாளர்களாகப் பின்வருவோர் தெரிவாகினர்.
காப்பாளர் பேராசிரியர் கா. சிவத்தம்பி துணைக்காப்பாளர்கள் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் பேராசிரியர் இரா. வை. கனகரத்தினம் சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா பண்டிதர் சு. வடிவேல் கனகசபாபதி நாகேஸ்வரன் ஒம்படைச் சபை (நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை) திரு. இ.நமசிவாயம் திரு. ஜே. திருச்சந்திரன் திரு. நா. வீரசிங்கம் திரு. அ. திருநாவுக்கரசு
தலைவர் - திரு. பெ. விஜயரெத்தினம் துணைத் தலைவர்கள் - திரு. இரா. சுந்தரலிங்கம்
திரு. ஆ. இரகுபதி பாலழறீதரன் திரு. ஆ. குகமூர்த்தி திரு. கு. சோமசுந்தரம் திரு. மு. கதிர்காமநாதன்
செல்வி சற்சொரூபவதி நாதன் பொதுச் செயலாளர் - திரு. ஆ. கந்தசாமி துணைப் பொதுச் செயலாளர் - திருமதி. அ. புவனேஸ்வரி நிதிச் செயலாளர் - திரு. கா. வைத்தீஸ்வரன் துணை நிதிச் செயலாளர் - திரு. சி. சரவணபவன்
பக்கம் 51 ‘ஓலை’ - 2) (ஒக்,நவம்.டிசம்பர் 2003)

Page 28
உறுப்புரிமைச் செயலாளர் - திரு. சி அமிர்தலிங்கம்
நிலையமைப்புச் செயலாளர் - திரு. மா. சடாட்சரன் நூலகச் செயலாளர் - திரு. தி. கணேசராஜா கல்விக்குழுச் செயலாளர் - திரு.த. சிவஞானரஞ்சன் இலக்கியக்குழுச் செயலாளர் - திரு. த. கோபாலகிருஷ்ணன்
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் - திரு. சோ. தேவராஜா
திரு. சி. எழில்வேந்தன் திரு. உடம்பூர் வீரசொக்கன்
திரு. க. குமரன் திரு. ஆ. சடகோபன் திரு. வ.சிவஜோதி திருமதி. பத்மா சோமகாந்தன் திரு. ச. இலகுப்பிள்ளை திரு. வெ. சபாநாயகம் திரு. சு. கருணானந்தன் திரு. க. க. உதயகுமார் திரு. ச. பாலேஸ்வரன் திரு. சி. பாஸ்கரா திரு. மா. தேவராஜா திரு. மா. கணபதிப்பிள்ளை திரு. வி. ஏ. திருஞானசுந்தரம் திரு. அ. பற்குணன் திரு. க. ச. இரத்தினவேல் திரு. ச. சரவணமுத்து
உள்ளகக் கணக்காய்வாளர்கள் - திரு. நா. பஞ்சாட்சரம்
திரு. கு. சிவகுமாரன்
‘장606)’- 9 (ஒக்நவம்.ழசம்பர்2003J Uóćњђ 52

ബ
ട}
ഗ്രി
፲-ጫፍç
r
\ો
()
s
தமிழ்ச் சங்கத்தின் குரலாய் ހ.
தரணி எங்கும் ஒலிக்க ஒலை ஒயாமல் வர வளர எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !
flõib õõGUGUu உருத்திரா மாவத்தை belisirstGujang 23638 : 6gTanau Luff ܓ݁ܶܐ
N _୩୪୩
صعصعد
s
羅 Sv